Powered By Blogger

Sunday, May 30, 2021

ஒரு சண்டே ரவுண்டப் !

 நண்பர்களே,

வணக்கம்.  When it rains ..it pours !! 'மழையைக் காணோமே' என்று வானத்தை வெறித்துப் பார்க்கும் நாட்கள் நிறையவே ஓடியிருக்க, திடீரென்று மடை திறக்கும் வானமானது ஊற்றோ ஊற்றென்று ஊற்றித் தள்ளுமாம் ! இல்லீங்கோ...எங்க ஊருக்கு மட்டும் தனிப்பட்ட முறையில் புயல், கியல் எதுவும் உருவாகியிருக்கவில்லை ; ஆகையால் நான் பெனாத்துவது வானம் வழங்கும் H2O கொடையினைப் பற்றியல்ல ; அதே வானத்தில் வசிக்கும் புனித தேவன் மனிடோ அருளும் காமிக்ஸ் மழையினைப் பற்றி !! Let me explain !!

"போன வருஷத்து லாக்டௌன் அனுபவம் இம்முறையும் தொடரலாகாது ; சோம்பேறியாய் உறங்கித் திரியாது , கிடைத்துள்ள அவகாசத்தினில் நடப்பு ஆண்டின் பணிகளை முன்கூட்டியே முடித்து வைக்கணும் ; இத்யாதி..இத்யாதி.. "என்ற தீர்மானங்களை என்ன தான் ஆவேசமாய் எடுத்திருப்பினும் - ஊடகங்களிலும், வாட்ஸப்பிலும் வந்து குவியும் ஊர் நடப்புகள் பணியின் மீது பெரிதாய் மையல் கொள்ள அனுமதிக்க மறுக்கின்றன ! இந்தக் கொடூரங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி விழும் வரையிலும் வேறெதிலும் concentrate செய்வது சுலபமே அல்ல என்பது புரிகிறது ! பற்றாக்குறைக்கு 1 மாத முழு அடைப்பு எனும் போது - அந்தப் பணிகளின் முனைப்பானது குட்டிக்கரணம் போட்டாலும் வர மறுக்கிறது ! பற்றாக்குறைக்கு இங்கே 3 வாரங்களாக பதிவுப் பக்கத்தினில் அடிக்க முடிந்துள்ள லூட்டிகள் ; பஞ்சாயத்துக்கள் செம ஜாலியாய் இருந்திருக்க, சோம்பேறி சொக்கப்பானாக வலம்வந்திட கூடுதலாயொரு காரணமும் ஆகிப் போச்சு !

ஆனால் இந்த ஓய்வினில் ஒரு silver lining இல்லாமலும் இல்லை ! வாசித்து வருகிறேன்...வாசித்து வருகிறேன்...வண்டி வண்டியாய் வாசித்து வருகிறேன் ! கோரி வருகிறேன்..கோரி வருகிறேன்...காமிக்ஸ் மாதிரிகளை மலை மலையாய்க் கோரி வருகிறேன் ! அவர்களும் சளைக்காது மெயிலில் நான் கேட்பனவற்றையெல்லாம் அனுப்பித் தர, வீட்டுக்குக் கொண்டு வந்து மாட்டி வைத்திருக்கும் பிரிண்டர் கண்ணீர் வீட்டுக் கதறும் வரையிலும் துவை துவையென்று துவைத்து எடுக்கிறேன் ! இது பீற்றலுக்கானதொரு statement அல்ல guys - ஆனால் நமது சேகரிப்பில் உள்ள கதைகளின் மாதிரிகளைக் கொண்டே அடுத்த 5 ஆண்டுகளுக்கு கண்ணை மூடிக்கொண்டே அட்டவணை போட்டு விடலாம் தான் ! Phew...!!  அந்த வாசிப்பினில் கிட்டிய புதையல் பற்றியே இந்த ஞாயிறின் குட்டி மொக்கை !

அது பற்றிப் பேசும் முன்பாய் - அதற்கு முன்னோடியாய் அமைந்திட்ட நிகழ்வு(கள்) பற்றி முதலில் ! முத்து காமிக்ஸ் ஆண்டுமலர் # 50 பற்றி கடந்த சில பதிவுகளில் செம அலசு அலசியிருந்தோம் அல்லவா ? அதன் முடிவில் உங்களில் கணிசமானோர்க்கு முழுசாய் திருப்தி நஹி ; ஒரு சிலருக்கு downright ஏமாற்றம் ; இன்னும் சிலருக்கோ - "இம்புட்டு தானாக்கும் ? இதுக்கு எதுக்குப்பு இந்த பில்டப் ?" என்ற கடுப்ஸ் என்று அழகாய்ப் புரிந்திருந்தது ! இந்த அலசல் இப்போ எதுக்கு ? என்ற ரீதியில் விசனங்களுமே விரவியிருந்ததை நான் கவனிக்கத் தவறிடவில்லை ! 

அந்தப் பதிவின் நோக்கங்கள் என்னளவில் இரண்டு !  யதார்த்தங்களின் வரையறைகளை ; தற்போதைய கதைகளின் தன்மைகளை ; அவற்றினுள் வூடு கட்டியடிப்பதன் சிக்கல்களை விளக்குவதும், உங்களின் வானளாவிய எதிர்பார்ப்புகளை சித்தே மட்டுப்படுத்திட முனைவதுமே  நோக்கம் # 1 ஆக இருந்தது ! நோக்கம் # 2 - எனக்குள் ஒரு லேசான ப்ளூபிரிண்டாக உருவாகியிருந்த இதழின் template குறித்து உங்களின் எண்ணங்களை புரிந்திட முயற்சிப்பதே ! உத்தேசமாய் சில கதைகள் ; சில கூட்டணிகள் என்று ஒரு பென்சில் ஸ்கெட்ச் போட்டிருந்தேன் & உங்களின் அங்கீகாரங்கள் கிடைத்திடும் பட்சத்தில் அதனை சற்றே develop செய்து வர்ணமூட்டி, மெருகேற்றிட எண்ணியிருந்தேன் ! ஆனால் அன்றைய ரவுசுகளில் எனது 2 நோக்கங்களுக்குமே கிடைத்திருந்தது என்னமோ ஷெரிப் டாக்புல்லின் பாணியிலான கும்மாங்குத்துக்கள் தான் !!

"நிலவரங்கள் புரியுது ; கஷ்டங்கள் மன்சிலாயி ; சிக்கல்கள் செசுகொண்டி ; ஆனா "நீ என்னமோ பண்ணிக்கோ ; எதுவோ பண்ணிக்கோ - ஆடலும் பாடலும் போட்ட்டட்டே தீரணும் !!" என்ற உங்களின் எண்ணங்கள் வெளிப்பட்ட போதே எனது நோக்கம் # 1 பப்படமாகி இருந்தது ! ரைட்டு....அட்டவணையில் வேறு எங்காச்சும் கொஞ்சம் கைவைத்து இங்கே நிரவல் செய்ய முயற்சிக்கலாமென்று நினைத்துக் கொண்ட போது விழுந்த ரெண்டாம் கும்மாங்குத்து தாடையைச் சுளுக்கிக்க வைத்தது ! நான் மனதில் கொண்டிருந்த கதை சார்ந்த அவுட்லைன் நிறைய ; நிறையவே மெருகூட்டிடப்பட வேண்டுமென்பதை "குத்தடி குத்தடி...சைலக்கா.....குமட்டிலே குத்தடி சைலக்கா !" என்ற உங்களின் தாண்டவங்கள் புரியச் செய்தன ! மூக்கில் ஒழுகிய தக்காளிச் சட்னிகளை துடைக்க தலீவரின் அந்நாட்களது கடிதக் கணைப் பேப்பர்களைச் சுருட்டி எடுத்துக் கொண்டிருக்கும் போதே 'கெக்கே பிக்கே'வெனச் சிரிப்பு தான் எழுந்தது எனக்கு  ! "ஆத்தி....ஆறு மாசம் முன்னமே வெறும் வாயாலே சுட்ட வடைக்கே இந்தச் சாத்து ; நான்பாட்டுக்குக் கமுக்கமா என்னோட ப்ளூபிரிண்டை நடைமுறைப்படுத்துறேன் பேர்வழின்னு ஒரு ஏப்ப சாப்பையான புக்கை மட்டும் ஜனவரி 2022-ல் இறக்கி விட்டிருந்தால்  - கார்சன் நள்ளி எலும்பைக் கடிக்கிறது போல ஆளுக்கு அரை கிலோவைக் கடித்திருப்பார்களே !! "என்பதை நினைத்தேன் - சிரித்தேன் !! 


ஆக, ஒரு அவசர திசை திருத்தம் செய்திடாவிட்டால், ஜனவரியில் கப்பலானது மடேரென எங்கயாச்சும் முட்டிக்கிடக்கும் என்பது ஸ்பஷ்டமாய்ப் புரிந்தது ! அது புரிந்த நொடியிலேயே நான் பொதுவெளிக்கு அத்தனையையும் கொண்டு வந்து அலசியதன் புண்ணியமுமே புரிந்தது ! So ரொம்பவே தெளிந்த மண்டையோடு புதிதாயொரு ரூட்டில் பயணிக்க போட்ட ஸ்கெட்சின் முதல் படி தான் அந்த வாசித்தல் & வாசித்தல் & more வாசித்தல் ! அந்த வாசிப்பினில் கண்ணில்பட்ட இன்னொரு தொடரே இந்தப் பதிவின் முதல் வரிக்கான அச்சாரம் ! 

ஐம்பதாவது ஆண்டு மலருக்கென ஏற்கனவே 2 ஆக்ஷன் / spy த்ரில்லர்ஸ் பாணியிலான கதைகள் கண்ணில்பட்டிருப்பதை விவரித்திருந்தேன் ! And 2 நாட்களுக்கு முன்பான வாசிப்பினில் கண்ணில்பட்ட இன்னும் இரு அதகள ஆக்ஷன் blocks செமத்தியாய் மெர்சலூட்டின !! அவற்றுள் முதல் தொடரானது ஒரு விதத்தில் எனக்கு முற்றிலும் புதிதல்ல தான் ; ஏற்கனவே  பரிசீலனைக்கு மேஜை வந்து, அன்றைய சூழலில் "ஸ்லாட் காலி இல்லையென்ற" காரணத்தினால் waiting list-ல் அமைதி காத்து வரும்  ஆக்கம் அது ! திரும்பவும் அதனைத் தோண்டி எடுத்து இம்முறை black & white பிரிண்ட்அவுட்களில் அல்லாது - கலரில், கம்பியூட்டர் ஸ்க்ரீனில் பார்த்த போது பிட்டம் நாற்காலியில் தங்கிட மறுத்தது !! முதல் பக்கத்தில் ஆரம்பிக்கும் ஆக்ஷன் ஐரோப்பாவின் சில பல அசாத்திய அழகிலான தலைநகரங்கள் வழியாய் "மின்னும் மரணம்" முன்பதிவு எக்ஸ்பிரஸின் அசாத்திய வேகத்தில் தட தடக்கிறது ! அசாத்திய சித்திரத் தரம் ; பின்னியெடுக்கும் கலரிங் ; ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்தின் பாணியிலான ஆக்ஷன் ; பிரமிப்பூட்டும் வேகம் என்று ரவுண்டு கட்டி அடிக்கிறது ! பற்றாக்குறைக்கு கதை நெடுகிலும் கண்களுக்குக் குளிர்ச்சியோ - குளிர்ச்சி ; அப்படியொரு குளிர்ச்சி ! இது வெளியாகிடும் நாளில் சிலபல "இளவரசிப் பேரவைகள்" ராவோடு ராவாய் அஸ்தமனம் கண்டு ;  இங்கே லைனாக டாக்டர்கள், தொழிலதிபர்கள் ; செயலர்கள் ; சிஷ்யர்களென்று நிற்கவிருப்பது உறுதி ! And கதை !! லார்கோ sagas மிரட்டல் ரகமென்று எண்ணியிருந்த நம்மையெல்லாம் பார்த்து "ஹைய்யோ..ஹையோ..!!" என்று கெக்கெலி செய்கிறது இந்த stunner ! நாயகனோ - அகிலத்தையும் அடித்து, உடைத்து, துவம்சம் செய்திடும் ஆல்-இந்த-ஆல் தெரிந்த அழகேசன் அல்லவே அல்ல ; ஆனாலும் நம்மை தன்னோடு கட்டியிழுத்துப்  பயணிக்கும் சூட்சமத்தைத் தெரிந்து வைத்திருக்கிறார் ! கதையைப் படித்து முடித்த வேளையில் என் முன்னே ஒரு கிழிந்த காகிதக் குவியல் இருப்பது தென்பட்டது ! அது வேறென்னவும் இல்லை ; இதற்கு முன்பாக நான் போட்டு வைத்திருந்த ப்ளூபிரிண்ட்களை என்னையும் அறியாமலே, கதையின் வாசிப்பினூடே கிழித்திருந்ததன் பலன் !! என்ன ஒரே சிக்கல் - கதையின் ஓட்டமும் சரி, வசன நடையும் சரி - செம contemporary ! இங்கே மொழிபெயர்ப்பில் குறுக்கு கழன்று விடுமென்பதில் இம்மியும் ஐயமில்லை எனக்கு ! தொடரும் நாட்களில் இதற்கான உரிமைகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டியது முதல் வேலை ; அப்புறமாய் இந்தப் பணியின் தீவிரத்தை எண்ணி இப்போதிலிருந்தே உதறும் வலது  புஜத்தை சித்தே தாஜா செய்திட வேண்டும் ! Is going to be a mountain to climb for sure !!

ரொம்ப ரொம்ப காலம் ஆகி விட்டது - ஆற்றல் நிறைந்த ஆக்ஷன் / spy த்ரில்லர் ரக நாயகர்களைப் பார்த்து ; ஆனால் இங்கு சமீபத்தில் எனக்கோ ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று பேர் கண்ணில் பட்டுள்ளனர் எனும் போது -அடை மழையோடு ஒப்பிடுவதில் தப்பில்லைதானுங்களே ? 

And இதில் கொடுமை இன்னமும் பாக்கியுள்ளது ! புதிதாய் உருவாகி வரும் ஒரு ஆக்ஷன் த்ரில்லரின் advance preview files என இன்னொரு ஆல்பத்தின் பக்கங்களும் 2 வாரங்களுக்கு முன்னே வந்திருந்தன ! And அதுவும் கிஞ்சித்தும் சளைக்கா அதிரடி ரகம் ! நாம் அதிகம் பார்த்திரா ஒரு தேசத்தின் canvas தான் இந்த ஆல்பத்தின் பின்னணி ! புது நாடு ; புது ஜனம் ; புது ஆக்ஷன் ; புது கதையோட்டம் ; புதுச் சித்திர பாணி ; புது எல்லாமே இங்கே !! முதல் பாகம் மட்டுமே வந்திருக்க, அதனைப் பராக்குப் பார்த்ததிலேயே ஒரு பிஸ்லெரி பாட்டில் ஜொள் ஓடியிருக்க, அவசரமாய் ரெண்டு லிட்டர் பாட்டிலுக்கும், இரண்டாம் பாகக் கோப்புகளுக்கும் கோரிக்கையினை வைத்துள்ளேன் ! அவை வந்தான பின்னே ; பரிசீலித்த பின்னே - மறுக்கா ப்ளூபிரிண்ட் போடணும் - புதிய திக்கினில் ! "அட்டவணை போடறேன்" என்று வருஷா வருஷம் கிழிக்கும் காகிதம் ஒரு பக்கமெனில், இப்போது புதிதாய் இந்தத் திட்டமிடலும் சேர்ந்து கொள்ள - சீக்கிரமே TNPL மில்லில் உற்பத்தி வேகத்தைக் கூட்டினார்களென்றால் தமிழகம் தப்பிக்கும் என்று மட்டுமே தோன்றுகிறது !! It simply pours !!!

இவை தவிரவும், இன்னமும் வாசிப்புக்கோசரம் லைனில் உள்ள கதைகள் கத்தையாய்க் காத்திருக்க, தொடரும் நாட்களில் இன்னும் என்னவெல்லாம்  காத்துள்ளனவோ - தாவாங்கட்டைக்குக் கீழே பிஸ்லெரி பாட்டில்களோடு வெயிட்டிங் !! So இன்னமும் என்ன காத்துள்ளது நமக்கு ? கதைகளின் கூட்டணியானது எவ்விதமிருக்கும் ? விலை என்னவாக இருக்கும் ? இறுதி காணவுள்ள கதைகள் எவையோ ? என்பதையெல்லாம் தொடரும் நாட்களிலும், வாரங்களிலும் - சிறுகச் சிறுக இறுதி செய்திட முனைவேன் ! Still miles & miles & miles to go in the planning !!

இந்த நொடியில் இன்னொருக்கா தரையில் உருண்டு புரண்டு சிரிக்கத் தோன்றுகிறது - "எல்லாமே டிராமா ; முன்கூட்டியே எடுத்த முடிவுகளைக் கொண்டு ஆடும் பொம்மலாட்டங்கள் !" என்ற ரீதியிலான விஞ்ஞானபூர்வக் கண்டுபிடிப்பினை எண்ணி ! இந்த நொடியில் "சுட்டீஸ் கார்னர்" பகுதியைத் தாண்டி வேறெந்தப் படைப்புமே தனக்கான இடத்தை துண்டு போட்டுப் பிடித்திருப்பதாக யாருக்கேனும் உறுதிபடத் தோன்றினால், அவர் nostradamus-க்கு சவால் விட்டுக் கொண்டிருக்க வேண்டியவர் ! யார் நம்பினாலும் சரி, நம்பாது போனாலும் சரி - சாயம் பூசா நிஜமிதுவே ! 

இந்தப் பயணத்தில் நான் எப்போதுமே மனதில் தோன்றுவதை அப்படியே செயலாக்கி விட்டு, அப்பாலிக்கா தான் அதன் சாதக-பாதக விளைவுகளை எண்ணி சந்தோஷம் கொள்வதோ, மண்டையைச் சொரிவதோ உண்டு ! Has been no different this time ; ஆனால் இம்முறையோ ஒரு மெகா நிம்மதிப் பெருமூச்சு என்னுள்ளே !  ஓட்டைவாய் உலகநாதனாய் ; நீண்ட பதிவு நித்தியானந்தனாய் இம்முறை இருந்துள்ளமையை எண்ணி நிச்சயமாய் நான் சந்தோஷம் கொள்கிறேன் !! ஜெய் கைலாஷா !!

சகலமும் இறுதி கண்ட பின்பாய், நவம்பரின் மத்தியிலிருந்து முத்துவின் இந்த ஸ்பெஷல் இதழின் டிரெய்லர்களை ஒன்றன் பின் ஒன்றாய்க் களமிறக்க எண்ணியுள்ளேன் ! So அக்டோபர் முதலாய் நமது IT அணியினை பிசியோ பிசியாக்கிட உத்தேசம் ! And இதோ பாருங்களேன் - நம்மள் கி லேட்டஸ்ட் IT அணியின் ஜாயிண்ட் !! மேலுள்ளவையும், கீழே தொடர்பனவும் யாருடையதென்றெல்லாம் நான் சொல்ல மாட்டேன் ; அவருக்கும் விளம்பரங்களே பிடிக்காதென்பதால் memes-களில் பெயரெல்லாம் போட்டிருக்க மாட்டார் தான் ; அகஸ்மாத்தாய்  ABC எழுதிப் பழகும் முனைப்பில் சில பல எழுத்துக்களை இனிஷியல் போல ஆங்காங்கே பதிந்திருந்தால் அது அகஸ்மாத்தாயே அணுகிடப்பட வேண்டிய விஷயம்  மட்டுமே என்று சொன்ன கையோடு கிளம்புறேனுங்கோ ; reading waiting !!Bye all !! See you around !! Safe days ahead !!

131 comments:

 1. படிச்சிட்டு வருவோம்..

  ReplyDelete
 2. 50 வது ஆண்டு மலர் மிகவும் சிறப்பாக இருக்க போகிறது..எதிர்பார்ப்பு எக்கச்சக்கம்..

  ReplyDelete
 3. நீங்க புதுசு புதுசா புக்கு படிக்கிரீங்கன்னு கெக்க ரொம்ப பொறாமையா இருக்கு... கூடிய சீக்கிரம் எங்க கைல கொண்டு வந்து சேருங்கள் சார்

  ReplyDelete
 4. TNPL மில்லில் உற்பத்தி வேகத்தைக் கூட்டினார்களென்றால் தமிழகம் தப்பிக்கும் என்று மட்டுமே தோன்றுகிறது !! It simply pours !!!//

  நாங்க தயார் ஆசானே... அனைத்துமிஷினும் செம ரன்னிங் ம்ம்னு சொல்லுங்க மார்க்கெட்டிங் ல பேசிருவோம்....

  ReplyDelete
 5. எல்லாமே புதுசு தான் வேனும் சார்..
  அதிலே ஒரு கார்ட்டூன் கண்டிப்பாக வேண்டும் சார்..
  ஆமாஞ் சொல்லிட்டேன் பாத்துக்கோங்க...

  ReplyDelete
 6. சூப்பர் பதிவு சார். அந்த 3 புது வரவுகளை சந்திக்க ஆவலுடன் காத்து இருக்கேன். மீண்டும் பழைய ஃபார்ம் க்கு திரும்பி விட்டீர்கள் சார். நல்ல பாஸிட்டிவ் ஆன பதிவு.

  ReplyDelete
 7. முதல் பக்கத்தில் ஆரம்பிக்கும் ஆக்ஷன் ஐரோப்பாவின் சில பல அசாத்திய அழகிலான தலைநகரங்கள் வழியாய் "மின்னும் மரணம்" முன்பதிவு எக்ஸ்பிரஸின் அசாத்திய வேகத்தில் தட தடக்கிறது ! அசாத்திய சித்திரத் தரம் ; பின்னியெடுக்கும் கலரிங் ; ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்தின் பாணியிலான ஆக்ஷன் ; பிரமிப்பூட்டும் வேகம் என்று ரவுண்டு கட்டி அடிக்கிறது ! பற்றாக்குறைக்கு கதை நெடுகிலும் கண்களுக்குக் குளிர்ச்சியோ - குளிர்ச்சி ; அப்படியொரு குளிர்ச்சி ! இது வெளியாகிடும் நாளில் சிலபல "இளவரசிப் பேரவைகள்" ராவோடு ராவாய் அஸ்தமனம் கண்டு ; இங்கே லைனாக டாக்டர்கள், தொழிலதிபர்கள் ; செயலர்கள் ; சிஷ்யர்களென்று நிற்கவிருப்பது உறுதி !


  உடனே கிட்னா பண்ணுங்க..

  ReplyDelete
 8. அந்த வடிவேலு Template தலையை ஓவரா கலாய்குது ...காமெடில வடிவேல் சாரை Pack பன்னி தூக்குனமாதிரி Lucky yum தூக்குனா தேவலை ....

  ReplyDelete
 9. எது மாதிரியும் இல்லாத புது மாதிரி யாக 50 வது ஆண்டு மலர் அமையும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்...

  ReplyDelete
 10. எது மாதிரியும் இல்லாத புது மாதிரி யாக 50 வது ஆண்டு மலர் அமையும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்...

  ReplyDelete
 11. 50வது ஆண்டு மலர்
  ————————-

  காமிக்ஸ் மேலே Faith உம் உங்க மேலே Trust உம் இருக்கு. அடிச்சு ஆடுங்க சார். பாத்துக்கலாம்.

  ReplyDelete
 12. எது மாதிரியும் இல்லாத புது மாதிரி யாக 50 வது ஆண்டு மலர் அமையும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்...

  ReplyDelete
 13. எது மாதிரியும் இல்லாத புது மாதிரி யாக 50 வது ஆண்டு மலர் அமையும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்...

  ReplyDelete
 14. அகஸ்மாத்தாய் ABC எழுதிப் பழகும் முனைப்பில் சில பல எழுத்துக்களை //

  மீம்ஸ் எல்லாம் கலக்கல்.

  ஒரு வேளை 50 வயசாயிடுச்சுன்னா FFS, MMS மாதிரி இனிசியல் போட்டுக்கனும்னு KOK ன்னு போட்டுட்டியா மச்சான்.

  ReplyDelete
  Replies
  1. மச்சானுக்கே 50னா உமக்கு 55ங்களானு கேட்க சொன்னாருங்கோ!!!

   Delete
  2. ஒரு 22 வயசு மச்சினானைப் பாத்து இப்படியெல்லாம் கேக்கக் கூடாதுன்னு புத்தி சொல்லு மாம்ஸ்.

   Delete
  3. சின்னவயசுல (ஒரு ரெண்டுவருசத்துக்கு முன்னதான்) வாரப்பத்திரிக்கைகளில் வரும் நடிகைகளின் போட்டோக்களுக்கு மீசை வரைஞ்சிட்டு.. ரவிவர்மா ரேஞ்சுச்கு கீழ பேர் எழுதிய பழக்கம் மச்சான்.. அதான் ..!

   ///ஒரு 22 வயசு மச்சினானைப் பாத்து இப்படியெல்லாம் கேக்கக் கூடாதுன்னு புத்தி சொல்லு மாம்ஸ்.///

   இன்னமும் சிரிச்சிக்கிட்டே இருக்காப்லயாம்..!!

   Delete
 15. //வாசித்து வருகிறேன்...வாசித்து வருகிறேன்...வண்டி வண்டியாய் வாசித்து வருகிறேன் ! கோரி வருகிறேன்..கோரி வருகிறேன்...காமிக்ஸ் மாதிரிகளை மலை மலையாய்க் கோரி வருகிறேன் ! அவர்களும் சளைக்காது மெயிலில் நான் கேட்பனவற்றையெல்லாம் அனுப்பித் தர, வீட்டுக்குக் கொண்டு வந்து மாட்டி வைத்திருக்கும் பிரிண்டர் கண்ணீர் வீட்டுக் கதறும் வரையிலும் துவை துவையென்று துவைத்து எடுக்கிறேன் // அருமை சார் ...சிறந்த புது முகங்கள் அடுத்த ஆண்டு ருவார்கள் என நம்புவோம்

  ReplyDelete
 16. உள்ளேன் ஐயா!

  வாசித்துட்டு வந்துடறேன்.

  ReplyDelete
 17. ஆஹான்

  ஆர்வத்தை கிளப்புறீங்களே சார் 🥰😍
  .

  ReplyDelete
 18. வணக்கம் நண்பர்களே!

  ReplyDelete
 19. இதற்கு நிகர் எதுவுமில்லைங்கறமாதிரி புதத்தகம் வர வேண்டும்என்றமுனைப்பில் நீங்கள். உங்களுடன் நாங்கள். கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
 20. மீம்ஸ்கள் எல்லாம் கலக்குது...

  அந்த பெயர் குறிப்பிட விரும்பாதவருக்கும்,
  இன்னொரு தம்பிக்கும் வாழ்த்துகள்💐💐💐💐

  ReplyDelete
 21. ஆனா பதிவுகளின் கன்டெண்டுகளுக்கு ஏற்றவாறு ஆங்காங்கே மீம்களை கணகச்சிதமாக பொருத்தி உள்ளீர்கள் சார்...

  செம... அதும் அந்த எலும்பு கடிக்கும் மீம்...செம மேட்சிங்....!!!!

  ReplyDelete
 22. ///ஐம்பதாவது ஆண்டு மலருக்கென ஏற்கனவே 2 ஆக்ஷன் / spy த்ரில்லர்ஸ் பாணியிலான கதைகள் கண்ணில்பட்டிருப்பதை விவரித்திருந்தேன்...///

  அந்த களேபரத்தில் விடிகாலையில் கம்பியூட்டரை உருட்டி சரிபார்த்ததாக குறிப்பிட்டு இருந்தீர்கள் சார்.

  இவற்றின் விவரங்களை நாளைய பதிவில் எதிர்பார்க்கலாமா??

  ReplyDelete
 23. ////அசாத்திய வேகத்தில் தட தடக்கிறது ! அசாத்திய சித்திரத் தரம் ; பின்னியெடுக்கும் கலரிங் ; ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்தின் பாணியிலான ஆக்ஷன் ; பிரமிப்பூட்டும் வேகம் என்று ரவுண்டு கட்டி அடிக்கிறது ! பற்றாக்குறைக்கு கதை நெடுகிலும் கண்களுக்குக் குளிர்ச்சியோ - குளிர்ச்சி ; அப்படியொரு குளிர்ச்சி ! //.


  --- இந்த கச்சேரியவே புக்கு பண்ணிபுடலாமுங்க எடிட்டர் சார்.

  நமக்க ரொம்ப தோதான சமாச்சாரமா இருக்குதுங்களே!😍

  முத்து 50ல இல்லைனாலும் அட்டவணை 2022ல இடம் கொடுத்து விடலாம்...ஹி..ஹி!!!

  007தான் நமக்கு காமிக்ஸ் உலக விசா கொடுத்தவரு, அவர் பாணிங்கும் போது டிக்கு பண்ணிடனும் பாருங்க...!!!

  ReplyDelete
 24. ////சகலமும் இறுதி கண்ட பின்பாய், நவம்பரின் மத்தியிலிருந்து முத்துவின் இந்த ஸ்பெஷல் இதழின் டிரெய்லர்களை ஒன்றன் பின் ஒன்றாய்க் களமிறக்க எண்ணியுள்ளேன்///

  ---அட்டவணை+ முத்து 50 விவரங்கள் ஒன்றாக தெரியவரும் நாளை நோக்கி ஆர்வமுடன்...!!!

  ReplyDelete
 25. ஆஹா...எதிர்பார்ப்பு எகிறி அடிக்கிற விதத்தில் பதிவு அட்டகாசப்படுத்துகிறது...


  வெகு வெகு வெகு ஆவலுடன்...

  ReplyDelete
 26. மீம்ஸ் எல்லாம் செம கலக்கல் ..அந்த பெயர் தெரியா நண்பருக்கு மனமார்ந்த பாராட்டுகள்..அட்டகாசம்..

  ReplyDelete
 27. //// கதையைப் படித்து முடித்த வேளையில் என் முன்னே ஒரு கிழிந்த காகிதக் குவியல் இருப்பது தென்பட்டது ! அது வேறென்னவும் இல்லை ; இதற்கு முன்பாக நான் போட்டு வைத்திருந்த ப்ளூபிரிண்ட்களை என்னையும் அறியாமலே, கதையின் வாசிப்பினூடே கிழித்திருந்ததன் பலன் !! ////

  😁😁😁😁 இன்னும் எத்தனை ப்ளூபிரின்ட்ஸ் கிழியப்போகுதோ!! 😁😁

  ReplyDelete
 28. மீம்ஸ் எல்லாம் அட்டகாசம்!! அந்தப் பெயர் வெளியிட விரும்பா மேச்சேரி நபருக்கு பாராட்டுகள்!!

  ReplyDelete
  Replies
  1. மீம்ஸ்களை பதிவின் போக்குக்கு ஏற்ற இடங்களில் அழகாய் பொருத்தி சிரிக்க வைத்த எடிட்டருக்கும் பாராட்டுகள்!!

   Delete
  2. // மீம்ஸ்களை பதிவின் போக்குக்கு ஏற்ற இடங்களில் அழகாய் பொருத்தி சிரிக்க வைத்த எடிட்டருக்கும் பாராட்டுகள்!! //

   +1

   Delete
 29. முன்னோட்டங்கள் - அட்ரா சக்கை அட்ரா சக்கை

  மீம்ஸ் - சூப்பரப்பு

  ReplyDelete
 30. மீம்ஸ் எல்லாமே அருமை. சிங்கத்தோட குகையில இருந்துட்டே சிங்கத்தை சீண்டி பார்க்கிறீங்களே... நீஙக கில்லிண்ணே...

  ReplyDelete
  Replies
  1. ஹைய்யய்யோ... ஓடீர்ர்ர்ரா கைப்புள்ள...!

   Delete
  2. கன்ஃபார்ம்.. கன்ஃபார்ம்..

   Delete
 31. மீம்களை அனைத்தும் அருமை! அந்த நண்பருக்கு எனது வாழ்த்துக்கள்!

  Just a doubt:
  KOK மீம்களில் என உள்ளதை பார்த்தால் கிட் ஆர்ட்டின் கண்ணன் என நினைக்க தோன்றுகிறது! இது நீங்கள் தயார் செய்ததா?

  ReplyDelete
  Replies
  1. ஆரோ என்ர பேரை மிஸ்ஊஸ் பண்ணியிருக்காங்க பரணி.! :-)

   Delete
 32. Vijayan sir,

  புதிய கதைகள் கதைக்களங்களை நீங்கள் முழுவதும் தேர்வு செய்த பிறகு முத்து 50வது ஆண்டு மலர் கதைகளை பற்றி இங்கு முன்னூட்டம் போட்டால் போதும் சார்! உங்கள் காமிக்ஸ் தீராத காதல் மற்றும் உங்கள் மேல் என்றும் குறையாத நம்பிக்கை உள்ளது! எனவே கட்டுப்பாடுகள் அற்ற ரின் டின் கேன் போல் புகுந்து விளையாடுங்கள்!

  ReplyDelete
 33. மீம்ஸ்கள் - செம. அதுவும் தங்கள் பதிவோடு “நச்” சென உள்ளன. தங்களின் கண்ணில்பட்ட அந்த. அதகள ஆக்‌ஷன் தொடரை நானும் தரிசிக்க ஆவலாகவுள்ளேன். நீங்கள் விபரிப்பதே ஆவலைத் தூண்டுகின்றது.

  ReplyDelete
 34. “நம்மகிட்ட ஹெவியா எதிர் பாக்கிறாங்க போலிருக்கே” என்று வடிவேல் மாடுலேசனில் உள்ள மீம்ஸ் - அருமை- இதைத்தான் பிளைக் ஹீயுமர் என்பார்களோ.

  ReplyDelete
 35. சார் மீண்டுமோர் அற்புதப் பதிவு...திகட்டத் திட்டக் காத்திருக்கும் கதைக் கடலில் முத்தெடுத்துக் கொண்டிரூக்கிறீர்கள் போலும் முத்துவுக்காக...அடுத்த ஐந்து வருடத்துக்கான கதைகள் என்பது கூடுதல் மகிழ்ச்சி..உங்க உற்ச்சாகம் இங்கும் பரவுவது...
  //இம்புட்டு தானாக்கும் ? இதுக்கு எதுக்குப்பு இந்த பில்டப் ?"//
  கதைகளை அதிகரிக்கத் திட்டமோ!?
  மகிழ்ச்சி...மட்டற்ற மகிழ்ச்சி...
  இதோ காத்திருக்கும் வசந்த விழா மனம் வீசத் துவங்கிற்று..

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப ரொம்ப காலம் ஆகி விட்டது - ஆற்றல் நிறைந்த ஆக்ஷன் / spy த்ரில்லர் ரக நாயகர்களைப் பார்த்து ; ஆனால் இங்கு சமீபத்தில் எனக்கோ ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று பேர் கண்ணில் பட்டுள்ளனர் //
   பிச்சு உதறப் போகிறீர்கள்

   Delete
  2. //ஐம்பதாவது ஆண்டு மலருக்கென ஏற்கனவே 2 ஆக்ஷன் / spy த்ரில்லர்ஸ் பாணியிலான கதைகள் கண்ணில்பட்டிருப்பதை விவரித்திருந்தேன் ! And 2 நாட்களுக்கு முன்பான வாசிப்பினில் கண்ணில்பட்ட இன்னும் இரு அதகள ஆக்ஷன் blocks செமத்தியாய் மெர்சலூட்டின !! //
   இதே இதேதான்

   Delete
  3. புதிதாய் உருவாகி வரும் ஒரு ஆக்ஷன் த்ரில்லரின் advance preview files என இன்னொரு ஆல்பத்தின் பக்கங்களும் 2 வாரங்களுக்கு முன்னே வந்திருந்தன ! And அதுவும் கிஞ்சித்தும் சளைக்கா அதிரடி ரகம் ! நாம் அதிகம் பார்த்திரா ஒரு தேசத்தின் canvas தான் இந்த ஆல்பத்தின் பின்னணி ! புது நாடு ; புது ஜனம் ; புது ஆக்ஷன் ; புது கதையோட்டம் ; புதுச் சித்திர பாணி ; புது எல்லாமே இங்கே //
   அப்ப கோட்ட மொதருந்தே போடுவமா

   Delete
  4. ஐயோ என்ன செய்ய...பொலம்ப விட்டுட்டியே முருகன்....அனைவருக்கும் அடுத்த ஆறு மாதத்துக்குள்ள புதையல் கிடைக்கனும் போல இப்புதையல் ஒட்டா கிடைக்க

   Delete
 36. சித்திரம் பேசுதடி முத்துச் சித்திரம் பேசுதடி – எந்தன்
  புத்தகம் தடிக்குதடி சித்திரம் பேசுதடி – எந்தன்
  புத்தகம் தடிக்குதடி சித்திரம் பேசுதடி – எந்தன்
  புத்தகம் தடிக்குதடி சித்திரம் பேசுதடி

  முத்துச் சரங்களைப் போல்
  முத்துச் சரங்களைப் போல் சித்திரப் புத்தகம் மின்னுதடி
  முத்துச் சரங்களைப் போல் சித்திரப் புத்தகம் மின்னுதடி

  சித்திரம் பேசுதடி – எந்தன் புத்தகம் தடிக்குதடி சித்திரம் பேசுதடி

  முத்து மலர் மேலே
  முத்து மலர் மேலே வீசும் நறுமணம் போலே

  முத்து மலர் மேலே வீசும் நறுமணம் போலே
  கதையுன் அதிகரிப்பே எந்தன் ஆவலைத் தூண்டுதடி
  கதையுன் அதிகரிப்பே எந்தன் ஆவலைத் தூண்டுதடி

  சித்திரம் பேசுதடி – எந்தன் புத்தகம் தடிக்குதடி சித்திரம் பேசுதடி

  என் மனம் நீ அறிவாய் உந்தன் கதைகளும் நானறியேன்
  என் மனம் நீ அறிவாய் உந்தன் கதைகளும் நானறியேன்
  இன்னமும் கிடையாததப் போல் சிக்கனம் ஏனடி முத்து இதழே
  இன்னமும் கிடையாததப் போல் சிக்கனம் ஏனடி முத்து இதழே

  சித்திரம் பேசுதடி – எந்தன் புத்தகம் தடிக்குததடி சித்திரம் பேசுதடி

  ReplyDelete
 37. முத்து 50 wrapper ப்ராஜக்டிற்கு உதவி தேவை. முத்து 14. விண்ணில் மறைந்த விமானங்கள் அட்டைப்படம் இருந்தால் குடுத்து உதவுவவும். விமானங்கள் பறப்பது போல் 2 ரூபாயில் இருக்கும் அட்டைப்படம் மறுபதிப்பில் வந்தது. அது தேவையில்லை.

  அதே போல் முத்து 88 பிரமிட் ரகசியம் & முத்து 101 சர்வாதிகாரி தெளிவான அட்டைப்படங்கள் வேண்டும். என்னிடம் இருப்பது தெளிவாக இல்லை.

  ReplyDelete
 38. நண்பர் டெக்ஸ் சம்பத்தின் தாயார் கொரோனா பாதிப்போடு தொடர்நது போராடிக் கொண்டிருக்கிறார் ! கவலைக்கிடமாக உள்ளவருக்கு நமது பிரார்த்தனைகள் உதவிடட்டுமே all ? விரைவில் அவர் நலம் பெற வேண்டிடுவோமே !

  ReplyDelete
  Replies
  1. எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்..!! 🙏🙏

   Delete
  2. எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்..!! 🙏🙏

   Delete
  3. எனது பிரார்த்தனைகளும் அம்மாவுக்கு

   Delete
  4. என்னுடைய பிரார்த்தனைகளும் அவரது அம்மாவுக்கு...🙏🙏🙏

   Delete
  5. அம்மா விரைவில் குணமடைய கடல்கடந்த உறவுகளின் பிரார்த்தனைகளும்!

   Delete
  6. விரைவில் நலம் பெறட்டும்...

   Delete
  7. நண்பரின் அம்மா பூரண குணமடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
   🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

   Delete
  8. நண்பர் Tex சம்பத் அவர்களின் தாயார் பூரண நலம் பெற்று இல்லம் திரும்பிட இறைவனை மனமார வேண்டுகிறேன்.

   Delete

  9. எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்..!! 🙏🙏

   Delete
  10. எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.அவர் விரைவில் நலம் பெற்று இல்லம் திரும்புவார் !!!!.🙏🙏🙏🙏

   Delete
  11. எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.அவர் விரைவில் நலம் பெற்று இல்லம் திரும்புவார் !!!!.🙏🙏🙏🙏

   Delete
  12. விரைவில் நலம் பெறட்டும்

   Delete
  13. விரைவில் நலம் பெறட்டும்

   Delete
 39. தாயார் விரைவில் பூரண நலமுடன் திரும்பிவர எல்லாம் வல்ல எம்பெருமான் அண்ணாமலையாரை வேண்டுகிறேன்.

  ReplyDelete
 40. இனிமேல், ஒவ்வொரு பதிவிலும் மீம்ஸ் போட்டே ஆகவேண்டும்நண்பர்களே.கலக்கறீங்க வாழ்த்துக்கள். கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
 41. மீம்ஸ்கள் எல்லாம் கலக்குது.. அந்தப் பெயர் வெளியிட விரும்பா நண்பருக்கும்.. உண்மையிலேயே பெயரை வெளியிடாத முத்துமாரியின் அருள்பெற்ற்ற விசால மான ஈரோட்காரருக்கும் வாழ்த்துகள்..!

  ReplyDelete
  Replies
  1. அடடே!! நம்ம மாரிமுத்து விஷாலா?!!

   Delete
 42. /// முதல் பக்கத்தில் ஆரம்பிக்கும் ஆக்ஷன் ஐரோப்பாவின் சில பல அசாத்திய அழகிலான தலைநகரங்கள் வழியாய் "மின்னும் மரணம்" முன்பதிவு எக்ஸ்பிரஸின் அசாத்திய வேகத்தில் தட தடக்கிறது ! அசாத்திய சித்திரத் தரம் ; பின்னியெடுக்கும் கலரிங் ; ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்தின் பாணியிலான ஆக்ஷன் ; பிரமிப்பூட்டும் வேகம் என்று ரவுண்டு கட்டி அடிக்கிறது ! பற்றாக்குறைக்கு கதை நெடுகிலும் கண்களுக்குக் குளிர்ச்சியோ - குளிர்ச்சி ; அப்படியொரு குளிர்ச்சி !///

  😍😍😍😍😍😍😍😍😍

  முத்து 50 எல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்.. முதலில் இதை கவனிங்க சார்..!

  கண்ணுக்கு குளிர்ச்சிங்கிற காரணத்துக்காக கேட்கிறேன்னு நீங்க தப்பா நினச்சிடப்படாது..! ஆக்ஷன்.. கலரிங்..சித்திரத்தரம் இதுக்காகத்தான் கேட்கிறேன்..
  நம்பித்தான் ஆகோணும்.!

  ReplyDelete
  Replies
  1. ஆமா ஆமா!! எனக்கும் கூட இந்த ஆக்ஷன்.. கலரிங்..சித்திரத்தரம்'லாம் ரெம்ம்ம்பப் பிடிக்கும்!

   Delete
  2. இருக்காதா பின்னே..! 😜

   Delete
 43. /// புதிதாய் உருவாகி வரும் ஒரு ஆக்ஷன் த்ரில்லரின் advance preview files என இன்னொரு ஆல்பத்தின் பக்கங்களும் 2 வாரங்களுக்கு முன்னே வந்திருந்தன ! And அதுவும் கிஞ்சித்தும் சளைக்கா அதிரடி ரகம் ! நாம் அதிகம் பார்த்திரா ஒரு தேசத்தின் canvas தான் இந்த ஆல்பத்தின் பின்னணி ! புது நாடு ; புது ஜனம் ; புது ஆக்ஷன் ; புது கதையோட்டம் ; புதுச் சித்திர பாணி ; புது எல்லாமே இங்கே !! முதல் பாகம் மட்டுமே வந்திருக்க, அதனைப் பராக்குப் பார்த்ததிலேயே ஒரு பிஸ்லெரி பாட்டில் ஜொள் ஓடியிருக்க, அவசரமாய் ரெண்டு லிட்டர் பாட்டிலுக்கும், இரண்டாம் பாகக் கோப்புகளுக்கும் கோரிக்கையினை வைத்துள்ளேன் ! அவை வந்தான பின்னே ; பரிசீலித்த பின்னே - மறுக்கா ப்ளூபிரிண்ட் போடணும் - புதிய திக்கினில் ! "///

  பயங்கர ஆர்வத்தை தூண்டுகிறது சார்..! இதுவும் அந்த ரெண்டு லிட்டர் பாட்டிலுக்கு ஆர்டர் கொடுத்ததை படித்ததால் வந்த ஆர்வம் இல்லைன்னு நான் சொன்னா நீங்க நம்போணும்..!

  ReplyDelete
 44. ஹைய்யா புதிய பதிவு...

  ReplyDelete
 45. // ஆனால் நமது சேகரிப்பில் உள்ள கதைகளின் மாதிரிகளைக் கொண்டே அடுத்த 5 ஆண்டுகளுக்கு கண்ணை மூடிக்கொண்டே அட்டவணை போட்டு விடலாம் தான் ! //
  வாவ்...

  ReplyDelete
 46. // புதிய திக்கினில் ! "அட்டவணை போடறேன்" என்று வருஷா வருஷம் கிழிக்கும் காகிதம் ஒரு பக்கமெனில், //
  பேசாம இந்த பதிவுக்கு "ஒரு கிழித்தல் படலம்னு" பேர் வெச்சிருக்கலாம் சார்...

  ReplyDelete
 47. விஜயன் சார் ரத்த படலம் புக்கிங் extend பண்ண வாய்ப்பு இருக்கா..இந்த இரண்டு வாரமா உங்கள் அலுவலகத்தை தொடர்பு கொள்ள இயலவில்லை. ஆன்லைன் 60rs கூரியர் சார்ஜ் காட்டுது நீங்க தமிழகத்துக்குள் டெலிவரி பிரீ என்று அறிவித்தும். please confirm

  ReplyDelete
  Replies
  1. புத்தகம் அச்சிடத் துவங்கும் வரை வாய்ப்புண்டாம்...லாக் டவுன் முடிந்தவுடன் அச்சிடப்படும்..

   Delete
  2. endrumcomiclover @ Please check yesterday post http://lion-muthucomics.blogspot.com/2021/05/blog-post_29.html.

   You will get the answer.

   Delete
  3. Yes I have got the answer Thanks friends. But why there is 60rs courier charge when the shipping was announced free?

   Delete
  4. ஆன்லைன் லிஸ்டிங்கில் உள்ள அனைத்துக்குமே கூரியர் சார்ஜ் தானாக சேர்ந்துவிடடும். சந்தாவிற்கே 40ரூ கேட்கும். சாப்ட்வேர் தவறு. அவர்களால் சரி செய்ய முடியவில்லை. so online transfer NEFT or Gpay மூலம் செய்யலாம்.

   Delete
 48. Dear Editor Sir,
  இரத்தப்படலம் முன்பதிவிற்கான பணம் (3 புத்தகங்கள்) அனுப்பிய விபரம், Lion அலுவலகத்திற்கு email அனுப்பி உள்ளேன். சரிபார்த்துவிட்டு booking number அனுப்பி வைக்கவும்.
  நன்றி,
  Senthil Vinayagam.

  ReplyDelete
 49. இன்று பதிவுக்கு leave'a??

  ReplyDelete
 50. நண்பர்திருப்பூர் சம்பத்அவர்களது தாயார்சீக்கிரமே குணமடைந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப இறைவனை பிரார்த்துக்கிறேன் . கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
 51. லக்கி லூக்கின் டாப் 3 ன்னா சில கதைகளையே திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டு இருக்கிறோம்..! உண்மையில் லல்கியின் அனைத்து கதைகளுமே (விதிவிலக்கான ஒன்றிரண்டை தவிர) டாப் தான்.!

  அதிகம் பேசப்படாத இந்தக் கதைகளை திரும்ப வாசித்துப் பாருங்களேன்..

  எதிர் வீட்டில் எதிரிகள்..
  வில்லனுக்கொரு வேலி..
  தலைக்கு ஒரு விலை..
  தாயில்லாமல் டால்டனில்லை..
  ஜேன் இருக்க பயமேன்..
  பேய் நகரம்..
  டால்டன் நகரம்..
  மேற்கே ஒரு மாமன்னர்..
  பரலோகத்திற்கு ஒரு பாலம்..
  சூ மந்திரக்காளி..
  ஒரு வானவில்லைத் தேடி..
  பனியில் ஒரு கண்ணாமூச்சி..

  ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்.. அனைத்தும் அமர்களமான ரகம்..

  லக்கிக்கு ஈடு லக்கி மாத்திரமே..!!

  நினைவில் இருந்து சொன்னது சில.. மனதில் பதிந்திருப்பது பல..!


  இப்படி அதிகம் பேசப்படாத உங்களைக் கவர்ந்த லக்கி லூக் கதைகளையும் சொல்லுங்க நண்பர்களே..!

  ReplyDelete
  Replies
  1. மேடையில் ஒரு மன்மதன்
   தரைக்கடியில் தங்கம்

   Delete
  2. // எதிர் வீட்டில் எதிரிகள்..
   வில்லனுக்கொரு வேலி. //

   After our come back: These two are very good one.

   Delete
  3. எதிர் வீட்டில் எதிரிகள்..:

   அந்த காது பெருத்த ஓ ஹாராஸ் குடும்பத்தையும்.. மூக்கு நீண்ட ஓ டிம்மின்ஸ் குடும்பத்தையும் மறக்க முடியுமா.?
   க்ளைமாக்ஸில் ரெண்டு குடும்பங்களும் சம்மந்தம் வெச்சிக்கிட்டு.. அவங்க வாரிசுகள் பெருத்த காதுகளும் நீண்ட மூக்குமாய் கொலாப்ரேசனில் பிறப்பது செம்ம காமெடி..!

   Delete
  4. வில்லனுக்கு ஒரு வேலி..

   மட்டன் மர்டாக்
   சாப்ஸ் சார்லி னு கால்நடை பண்ணை அதிபர்களோட பேர்களே செம்ம காமெடியா இருக்கும்..!

   Delete
  5. Yes yes. எனக்கு மிகவும் பிடித்த கதையிது

   Delete
 52. . ஜூன்மாத வணக்கம். சார். கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
 53. லக்கி லூக்கிற்கு கல்யாணம். ஒருநகரில் ஆண்கள் மட்டுமம் இருக்கிறார்கள்மற்றொருநகரில் பெண்கள்மட்டும் இருக்கிறார்கள். மக்கள்தொகையை சமன் செய்யபெண்களை,ஆண்கள்மட்டும் வசிக்கும் நகருக்கு இடமாற்றம் செய்யமுடிவெடுக்கப்படுகிறது. லக்கியைபாதுகாப்பாளராகக்கொண்டு பெண்கள் குழு கிளம்புகிறது. ஆளில்லாத அத்துவானக் காட்டில்லெப்டில் கைகாட்டிவிட்டு ரைட்டில் வண்டியைஓட்டும் பெண். பூரிக்கட்டையில் ஏற்படும் விபத்தினால்2கணவர்களை இழந்த பெண். எப்பொழுதும்(உப்புமா) ஐரிஷ்உணவு சமைத்து தாக்க வந்த செவ்விந்தியர்களை யே நடுங்க வைக்கும்பெண். சிறையில் இருந்து தப்பி பெண்வேடத்தில் பெண்களுடன்கலக்கிறான்ம் ஒருகைதி. வண்டி முகாமிடும் இடத்திலெல்லாம் வகுப்பறையாக்கி பாடமெடுக்கும் டீச்சர். என பலதரப்பட்டகேரக்டர்களுடன் லக்கிகலக்கும் கதை. அதிரடி நகைச்சுவை. அற்புதம். அட்டகாசம் என்றெல்லாம் சொல்லமுடியாத, ஆனால்மறுவாசிப்பிற்க்கேற்ற கதை. கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
  Replies
  1. அந்தக்கூட்டத்தில் ஒரு திருடனும் பெண் வேடமிட்டு ஊடுருவியிருப்பான்.. அவனை கண்டுபிடிக்கும் லூட்டிகள் நல்லா இருக்கும்..! செவ்விந்தியர்கள் விக்கை மண்டைத்தோலி என்று நம்பி ஏமாந்து அந்த பார்பரை பார்த்து பயப்படுவதும்,. லேடி விக் வைத்து வேடமிட்ட திருடனைப் பிடித்து மண்டைத்தோலியை உரிக்க முயல.. விக் கையோடு வர... அய்யய்யோ இந்த பொண்ணுக்கு ரெட்டை மண்டைடோய் என்று கதறி ஓடுவதும்.. நல்ல நகைச்சுலை கதை லக்கிலூக்குக்கு கல்யாணம்..!

   Delete
  2. இந்த கதையுடைய டெக்ஸ் remake இப்போதான் படித்து முடித்தேன். நிறைய சீன்கள் அப்படியே இங்கும் ஆனால் டெக்ஸ் பானியில்
   1. செவிந்தியர்கள் சண்டை
   2. மலை ஏற்றம்
   3. ஆறு தான்டுதல்
   4. தப்பித்த கைதி
   5. Strong lady

   Delete
  3. @ V Karthikeyan

   கரெக்ட் சார்.!
   ஒரே ஒரு வித்தியாசம்.. கார்ட்டூன் கதையில் உயிர் இழப்பு எதுவும் இருக்காது.!

   Delete
  4. அதே அதே - ரொம்ப ஜாலியா போகும்

   Delete
 54. நண்பர் சம்பத் அவர்களின் தாயார் பூரண நலமடையை என்னுடைய மனமார்ந்த பிரார்தனைகள்..

  ReplyDelete
 55. சனிக்கிழமை ஒரு ரவுண்ட் பன், சண்டே ஒரு ரவுண்ட் பன் தந்த இந்த ஆடிட்டர 2 நாளா காணோம்.

  NB:
  ஆடிட்டர் = ஆசிரியர் + எடிட்டர்

  ReplyDelete
 56. அதானே எடிட்டர் சார் இன்று பதிவு????

  ReplyDelete
 57. இளவரசிப்பேரவை என்றும் இருக்கும் சார். இளவரசிக்கு நிகரான ஒரு ஆக்ஷன் ஹீரோயினியை கண்டுபிடித்துக் கூட்டிவாங்க சார். கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
 58. ஆசிரியரின் புதிய பதிவு தயார்...

  ReplyDelete