நண்பர்களே,
வணக்கம். இன்னமும் தாமதித்தால் காதில் தக்காளிச் சட்னி, கொத்தமல்லிச் சட்னி, என்று சகல நிறங்களிலும் கவிஞர் பிரவாகமெடுக்கச் செய்து விடுவார் என்பதால் "பெயர் சூட்டல் விழாவினை" நிறைவுக்குக் கொணர நினைக்கிறன் ! நண்பர்கள் எக்கச்சக்கமாய் நேற்றைக்கு கீ-போர்டுகளை தட்டித் தள்ளியிருந்தும், பற்றிக் கொள்ளும் விதமாய் கண்ணில்பட்ட பெயர்கள் வெகு சொற்பமே ! And அதனை பரிந்துரை செய்த நண்பர்களுமே மறுக்க மாட்டார்கள் என்றும் தோன்றுகிறது எனக்கு ! சில நாட்களில் மோட்டைப் பார்க்கும் மூணாவது நிமிடத்தில் ஒரு பெயர் உதிப்பதுமுண்டு ; பல நாட்களில் தவமே கிடந்தாலும், பல்லியின் நடமாட்டம் மட்டுமே தென்படுவதும் உண்டு ! So no problems on that guys !!
வந்திருந்த தேர்வுகளில் கீழ்க்கண்டவை மட்டும் கொஞ்சம் பளிச்சென்று sound செய்தன :
FABULOUS FIFTY ஸ்பெஷல் - (சத்யாவுக்கு கால்வினும் பிடிக்கும் ; காமிக்ஸும் பிடிக்கும்) -FFS-1
MUTHU MAGNIFICENT SPECIAL - MMS (P .கார்த்திகேயன், பாண்டி )
நண்பர் அனுப்பியிருந்த "MUTHU MILESTONE SPECIAL" கூட நன்றாகவே இருந்தது தான் ; ஆனால் ஏனோ தெரியலை - milestone என்பதும் tombstone என்பதும் கிட்டக்க,கிட்டக்க இருக்கும் வார்த்தைகள் என்பதாக எனக்கு தோன்றியது ! So அந்தப் பெயரினை இங்கே shortlist செய்திட தயக்கமே மேலோங்கியது !
இவற்றுள் ஒன்றை இறுதி செய்திடும் முன்பாய் நேற்றிரவு எனக்குத் தோன்றிய பெயரையும் இங்கே தருகிறேன் & மூன்றில் ஏதேனும் ஒன்றை இங்கி-பிங்கி -பாங்கி போட்டுத் தேர்வு செய்திடுங்களேன் guys ?
எனக்குத் தோன்றியது :
"The FIFTY & FOREVER ஸ்பெஷல் !!" (FFS -2)
"ஐம்பதாவது ஆண்டின் மைல்கல் இதழ் மட்டுமன்றி, தொடரும் காலங்களுக்குமான இதழ்" என்பதான பொருள் இதனில் சுகப்படுவதாய் பட்டது !
ஆனால் பெயர் வைப்பதையும், விளம்பரங்களில் அதனை நுழைப்பதையும் தாண்டி, அடுத்த பணிகளுக்குள் புகுந்திட நான் போயிருப்பேன் ; பச்சே சூட்டப்படும் பெயரினை காலத்துக்கும் உச்சரித்திருக்கப் போவது நீங்களே எனும் போது - உங்களுக்கு இதனில் எது ரசிக்கிறதோ, அதுவே பெயராகிடும் ! So 'மானாட..மயிலாட' டான்ஸ் போட்டியிலே வாத்தியே இறங்கிப்புட்டாப்புலே' என்ற நோவுகளுக்கு இடம் தராது, இறுதி செய்திடும் பந்தை உங்கள் பக்கமே தூக்கிப் போட்டாச்சு ! இனி உங்க பாடுங்க மக்களே ! இந்த மூன்றில் எதைத் தேர்வு செய்யச் சொல்லி நீங்கள் பரிந்துரைத்தாலுமே ஓ.கே. தான் ! ஆனால் இதுக்கு அது ஏன் குறைச்சல் ? அதை விட இது ஏன் உசத்தி ? என்ற கேள்விகள் வேண்டாமே - ப்ளீஸ் !
Maybe சீனியர் எடிட்டருக்கும் இங்கொரு வோட்டு கொடுத்திடலாம் தான் ! What say guys ?
And maybe இந்தப் பெயர்களை உங்களின் FB அல்லது வாட்சப் க்ரூப்களில் ஏதேனும் ஒன்றிலோ, இரண்டிலோ போட்டு விட்டும் பாருங்களேன் - இங்கு ஆஜராகா நண்பர்கள் என்ன அபிப்பிராயம் கொள்கிறார்கள் என்று மேலோட்டமாய்த் தெரிந்து கொள்ளும் பொருட்டு ?
Bye for now...stay home please ! See you around !
And by the way - இங்கே இது நமது 750-ம் போஸ்ட்டாம் !! Blogger சொல்கிறது !! அப்புறம் இந்த மே மாசத்தின் 22 -வது பதிவாம் இது !! ஹிக்க் !!
ITS me!!
ReplyDeleteOh... Yes... ஆலமரத்துக்கு அடியிலே ஒருத்தர் குடி இருந்தாரே ? ஆளைக் காணவில்லை ?
Deleteபின் விளைவுகள் தெரியும்ல. அதான் பாயை சுருட்டி கக்கத்தில் வெச்சிகிட்டு கிளம்பிட்டாரு😉
Deleteபஞ்சாயத்து நல்லபடியாக முடிந்தது.. கிளம்பியாச்சு.. இதுல என்ன தலைவரே பின்விளைவுகள்..??
Deleteஇங்கயே குந்தி கெடந்தா சகோதரி வெளுத்து விட்டுடும்ல...!!
Deleteவீட்டுக்கு வீடு வாசப்படி தானே!😎
அனுபவமே பாடம் நண்பரே...😃😃😃😃
DeleteWowwww
ReplyDeleteவணக்கம் நண்பர்களே!
ReplyDelete4வது
ReplyDelete//////சார் எழுவத்தெட்டு சூப்பர் பேர் எழுதியாச்சு...இப்படி அவசரப்பட்டுட்டியலே..ஒட்டுக்காக நூறானதும் ஒரே பின்னூட்டத்ல இடைஞ்சலில்லாம அனுப்பலாம்னு இருந்தனே////
ReplyDeleteஸ்டீல் தெய்வமே.....இந்த புக்குக்கு "பெ..பெ..பெ..பெ ஸ்பெஷல்' ன்னு கூட பெயர் வைச்சிட்டு போறேன் - மிடிலே உங்க ரணகளம் !!
இன்னிக்குப் பொழுதை விட்டு வைச்சா மொத்தப் பேரையும் தக்காளிச் சட்னி treatment தந்தே தெறிக்க விட்ருவீங்கன்னு தான் காலங்கார்த்தாலேயே பதிவைப் போட்டுப்புட்டேன் ! போய் டயப்பர் மாத்தி விடற வேலையை இன்னிக்கு சமர்த்தா பாருங்க சாமீ !
Delete😝😝😝
Delete.
ஆமா ஆமா எடிட்டர் ஐயா உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதுனே தெரியலை...
Deleteகாப்பாத்தி வுட்டீங்க....🙏🙏🙏🙏
இன்னோர் வாய்ப்பு வராமலா போகும்...லயன்னு மாத்தி தந்துற மாட்டனா...ஆனா ஒவ்வொன்றாக போட்டு நண்பர்களுக்கு இடைஞ்சல் தரமாட்டேன் சார்..அம்புட்டயும்ம் ஒன்னாதான்
Deleteஅஸ்கு..அஸ்கு....! 2034-லே இதுக்காகவாச்சும் நான் VRS வாங்கியிருப்பேனே !!
Deleteஒவ்வொன்றாக போட்டு நண்பர்களுக்கு இடைஞ்சல் தரமாட்டேன் சார்..அம்புட்டயும்ம் ஒன்னாதான்///
Deleteஒரே பதிவா போட்டாலும் கொறைஞ்சது நூறு""தலை(ப்)பூ ""
வாவது சூட்ட மாட்டிங்க ???? கவிக்கோ.
அதான் ஆசிரியர் பயந்து போய் இருகக்கார்.
ப்ரீயா...வுடுங்க வாத்தியாரே.அவங்க குடுத்து வைச்சது அவ்வளவுதான்.
சார் இந்த பேக் ஐடி மாதிரி, ஒரு பேக் blog இதே மாதிரி உருவாக்கி ஸ்டீலுக்கு மட்டும் குடுத்திடுவோமே ???
Deleteசார் அதெல்லாம் இப்ப எதுக்கு...அட்டகாசக் கதைகள் நமக்காக கொட்டிக் கிடக்கு...நல் முத்துக்களயும்...வேகமான சிங்கங்களயும் தொகுத்தெடுப்போம்...ட்யூராங்கோ இரண்டு புத்தகங்க மட்டுமே வாசிச்ச நிலைல...இந்த லாக்டவுன்ல கடைசி புத்தகத்தின் கடைசிக் கதைல வந்து நின்னுட்டிருக்கேன்...அட்டகாசம் டைகரிஸ் மின்னும் மரணத்த போல இதுவும் அசத்துது...ட்யூரோ போல வேறோர் நாயகன் சொன்னீங்களே...அது வந்தாச்சா...அப்புறம் அந்த ஆயிரம் பக்க கௌபாய் கதய சொன்னீங்களே நினைவிருக்கா...அதே மறந்து விட்டோமே
Deleteஉண்மைதான் நண்பரே தமிழ்காமிக்சுலகுக்கே பேரிழப்பே...ப்ரனேஷ் இங்க மாதிரி இருக்காதே
Delete// சார் இந்த பேக் ஐடி மாதிரி, ஒரு பேக் blog இதே மாதிரி உருவாக்கி ஸ்டீலுக்கு மட்டும் குடுத்திடுவோமே ??? //
DeleteGood idea :-))))
5th
ReplyDeleteவந்துவிட்டேன்.
ReplyDeleteஆறாம் இடம்.
Deleteஉள்ளேன் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼
ReplyDelete.
என்னுடைய ஓட்டு FFS 1 simple & attractive
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteFFS இரண்டு உள்ளதா. எனது ஓட்டு. The Fifty Forever Spl- க்கே.
Delete///சீனியர் எடிட்டருக்கும் இங்கொரு வோட்டு கொடுத்திடலாம் தான் ! What say guys ?///
ReplyDeleteஆமா..ஆமா..சார்..
சீனியர் சாருக்கு 2 ஓட்டுகள்...
1.எங்களோடு நார்மலாக ஒரு ஓட்டு.
2.இன்கேஸ் வாக்கெடுப்பில் சமநிலை வந்து இருப்பின் டிஸைடிங் வாக்கையும் போடப்போவது சீனியர் சார்.
அதே போல, இங்கு shortlist ஆகியுள்ள 2 பெயர்களை எழுதியிருக்கும் 2 நண்பர்களுக்கும் தலா 2 ஓட்டுக்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள் STV ; இறுதியில் அவர்களது personal எண்ணங்களைத் தெரிந்து கொண்டு அவற்றை டோட்டலில் சேர்ப்பித்துக் கொள்ளலாம் !
Deleteஅப்படியே ஆகட்டும் சார்.
Deleteஎன்னுடைய ஓட்டு - MUTHU MAGNIFICENT SPECIAL - MMS (P .கார்த்திகேயன், பாண்டி )
ReplyDelete16
ReplyDeleteFifty and forever special okay sir
ReplyDeleteThe FIFTY & FOREVER ஸ்பெஷல் !!" (FFS -2) செமையாக இருக்கு 👌👌👌
ReplyDeleteNever before special should followed by Forever special.
Deleteஹி..ஹி..!
Delete@கிரி
Deleteஎனக்கும் அப்படித்தான் தோணுச்சு. அதுமில்லாம Forever Special லில் Forever மட்டும் படிச்சா அதில தெறிக்கற நம்பிக்கை, உறுதி Forever Special னு சொல்லும் போது காமிக்ஸை நமக்கு forever special சொல்வது போன்ற பிரியம் காதல் எல்லாம் எனக்கு நெம்பவே பிடிச்சிருந்தது
3 பேருமே நல்லா இருக்கே.... தென்னை மரத்துக்கு ஒரு குத்து. பனைமரத்துக்கு ஒரு குத்து. குறுக்கே ஈச்ச மரத்திலும் ஒரு குத்து குத்துவமா???
ReplyDeleteயோசித்திட்டு வர்றேன்.
@ ALL : Maybe இந்தப் பெயர்களை உங்களின் FB அல்லது வாட்சப் க்ரூப்களில் ஏதேனும் ஒன்றிலோ, இரண்டிலோ போட்டு விட்டும் பாருங்களேன் - இங்கு ஆஜராகா நண்பர்கள் என்ன அபிப்பிராயம் கொள்கிறார்கள் என்று மேலோட்டமாய்த் தெரிந்து கொள்ளும் பொருட்டு ?
ReplyDeleteஆகட்டும் சார்.
DeleteAnd இன்றைய பொழுதுக்குள் கிட்டும் ஓட்டுக்களை மட்டும் கணக்கிட முனைவோம் ! எதுவாகயிருந்தாலும் இன்னிக்கே தீர்மானம் செய்யாங்காட்டி, ஆர்மோனியப் பொட்டியை கோவையிலே மறுபடிக்கும் உருட்ட ஆரம்பிச்சிருவாப்டி ! தாங்காது !
Deleteமுத்து காமிக்னுடைய தன்னிகரற்ற ஹீரோ "டைகர்""தான்.
ReplyDeleteசார்லியருடைய படைப்புகள் முடிந்து விட்டது.
அடுத்த நாயகன் லார்கோ வின்சன்
அந்த தொடரும் நிறைவடைந்தது.
நட்சத்திரங்களின் புதல்வன் தோர்கல் தொடர் மட்டும் அட்டவணையில் தொடர்கிறது.
வான்ஹம் அவர்கள் எழுதிய தோர்கல் தொடரை ஒட்டுமொத்த தொகுப்பாக செட்டப் பாக்ஸ்ல் வெளியிடுவதுதான் இதுபோன்ற தருணத்தில் இருந்திருக்க வேண்டும்.
அல்லது இளம் தோர்கல் தொடர் அனைத்து பாகங்களையும் உள்ளடக்கிய தொகுப்பாக வெளியிட கேட்டிருக்கலாம்.
Muthu Mega Special- வந்திருக்கும்.
கதைத் தேர்வுகள் என்னவென்று தெரியாமல் பெயர் வைப்பது சற்று சிரமம்.
லயன் காமிக்ல் மேக்னம் ஸ்பெஷல் வந்துவிட்டது.
LMS.
முத்துவிலும் ஒரு மேக்னம் ஸ்பெஷல் வர வேண்டும்.
அதில் ஒரேயொரு முத்து காமிக்ஸ்ன் எதிர்கால நாயகர் ஒருவர் இடம்பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
SODA-போல் ஒரு நாயகரின் ஒன்ஷாட் கதையொன்றை அறிமுகம் செய்ய வேண்டும்.
முத்து மேக்னம் ஸ்பெஷல்.
MMS.
கதைத்தேர்வுகள் சார்ந்த எண்ணப் பகிரல்களில் திளைக்கத் திளைக்க ஈடுபட்டாச்சு ; இனி அங்கு களமாட என்னை அனுமதியுங்கள் !
Deleteசூட்டவுள்ளது ஒரு பொதுவான பெயரே எனும் போது ,வரவுள்ள கதைகளுக்கும், அந்த டைட்டிலுக்கும் எவ்வித சம்பந்தமும் கொண்டிட வேண்டியதில்லையே ?!
அருமையான கருத்துக்கள் ஶ்ரீ.
DeleteFABULOUS FIFTY ஸ்பெஷல் - (சத்யாவுக்கு கால்வினும் பிடிக்கும் ; காமிக்ஸும் பிடிக்கும்) -FFS-1
ReplyDeleteமுதல் சாய்ஸ் 👆🏼
"The FIFTY & FOREVER ஸ்பெஷல் !!" (FFS -2)
இரண்டாவது சாய்ஸ் சார் 🙏🏼🙏🏼🙏🏼
.
எனது வோட்டு MMS ஸ்பெஷல் க்கு தான். Muthu Magneficent Special.
ReplyDeleteThe fifty forever spl
ReplyDeleteMagnificent spl
ரெண்டுமே நல்லாருக்கு...
என்னோடதயும் ஒரு பார்வை பாத்துருக்கலாம்
"பூமெக்ஸ் பனியன் ஸ்பெஷல்"ங்கிற தலைப்பையா ஸ்டீல் ?
DeleteFABULOUS FIFTY ஸ்பெஷல் - என்னுடைய தேர்வு!!
ReplyDeleteMUTHU MAGNIFICENT SPECIAL - இதுகூட நல்லாத்தான் இருக்கு.. ஆனா Magnificentஐ உச்சரிக்கும்போது நாக்கு ஓவரா ரோலிங் ஆகறதால கொஞ்சம் தயங்கவேண்டியதா இருக்கு!😝😝😝
MUTHU MILESTONE SPECIAL - எல்லாவகையிலும் பொருத்தமான & எளிமையான உச்சரிப்புக் கொண்ட தலைப்பு! ஆனால் அதான் ரிஜிட் பண்ணிட்டீங்களே!!
31st
ReplyDeleteFABULOUS FIFTY ஸ்பெஷல் - (சத்யாவுக்கு கால்வினும் பிடிக்கும் ; காமிக்ஸும் பிடிக்கும்) -FFS-1
ReplyDeleteJust Fabulous Fifty... That’s All...
@ ALL : And by the way - இங்கே இது நமது 750-ம் போஸ்ட்டாம் !! Blogger சொல்கிறது !!
ReplyDeleteஅப்புறம் இந்த மே மாசத்தின் 22-வது பதிவாம் இது !! ஹிக்க் !!
Deleteஅட்டகாசம் சார்.. இதுக்கு ஒரு ஷ்பெசல் புக் கேட்க சொல்லி கோவை கவிஞர் வந்து கொண்டு இருக்கிறார்...
Deleteஅப்புறம் இந்த மே மாசத்தின் 22-வது பதிவாம் இது !! ஹிக்க் !!//
Deleteஎப்படியாவது இன்னும் 8 பதிவுகள் நம்ம ரெக்கார்ட நாமளே முறியடிப்போமே...ஆசானே..
கீழ தண்ணிலவன் பாலைவனத்துல குதிரைவளோட மேஞ்ச நமக்கு தண்ணி காட்றாரு...போய் குடிங்க...அப்புறம் இன்னுமேழுபதிவுக்கு மேல கடக்கலன்னாதான் ஆச்சரியம் பழனி...
DeleteFabulous fifty & Forever special நன்றாக உள்ளது sir.
ReplyDeleteநான் தெரிவித்த இரண்டு பெயர்களை (Muthu Milestone Special & Muthu Magnificent Specual) பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டதற்கு நன்றிகள் சார். இதுவே எனக்கு பெருமை தரும் விஷயமே. மீண்டும் எனது நன்றிகள்.
ReplyDeleteMUTHU MAGNIFICENT SPECIAL//
ReplyDeleteஎனது தேர்வு ஆசானே...
The FIFTY & FOREVER ஸ்பெஷல் !!" My vote for this name sir
ReplyDeleteஆசானே....இரத்தப்படல முன்பதிவு தேதி முடிய இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் எங்க தலைவருக்கு ஒரு ஸ்பெசல் பதிவு போடுங்க ஆசானே....
ReplyDeleteமேலும் அலுவலகத்தையும் தொடர்புகொள்ளமுடியாத காரணத்தால்..முன்பதிவு செய்யவேண்டிவர்கள் செய்ய வேண்டிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை கூறினால் நல்லாயிருக்கும் ஆசானே...
எதுவும் பண்ண வேணாம் பழனி ; ஊரடங்கும், இந்த ஊழித் தாண்டவமும் முடியும் வரைக்கும் வீட்டில் பத்திரமாக இருந்தாலே போதும் ! இந்த வாரயிறுதிக்குப் பின்னேயும் ஊரடங்கு நீடிக்குமா ? என்றைக்கு ஆபீஸ் திறக்க சாத்தியப்படுமென்றெல்லாம் இந்த நொடியில் யாருக்கும் எந்தத் தெளிவுமில்லை எனும் போது - நான் பதிவைப் போட்டு ஆகப் போவது எதுவுமில்லை ! முதலில் ஆபீஸைத் திறக்க வேளை பிறக்கட்டும் !
Deleteஅப்போ முன்பதிவு தேதி தொடர்கிறதுதானே ஆசானே....??
Deleteஏனென்றால் மே31 க்கு பிறகு பண்ணமுடியாமல் போனால் என்ன செய்வது என நண்பர்கள் கேட்கிறார்கள் ஆசானே அதனால்தான்...
The FIFTY & FOREVER Special
ReplyDeleteஇங்கே இது நமது 750-ம் போஸ்ட்டாம்//
ReplyDeleteகொண்டாடவேண்டிய தருணம் ஆசானே...
ஏதாவது ஒரு ஸ்பெசல் அறிவிப்பு..🎉🎉🎊🎊😍😍😍
The FIFTY & FOREVER ஸ்பெஷல் !!" (FFS -2)
ReplyDeleteவிஜயன் சார், 750 aavathu போஸ்ட் ஸ்பெஷலாக அந்த சினிஸ்டர் செவன போடுங்க.
ReplyDeleteஆஹா பாலைவனத்திலோர் சோலைவனம்
DeleteThe FIFTY & FOREVER ஸ்பெஷல்
ReplyDeleteஎனது ஓட்டு
Fabulous Fifty Special
ReplyDeleteThe Fifty & forever special
இரண்டுமே நல்லாயிருக்கு சார்.!
இல்ல.. ரெண்டையும் கலந்து Fabulous Fifty & Forever Special னு வெச்சாலும் செம்மயா இருக்கும்..!
ஹூம்ம்ம்.. நான் சொன்னமாதிரி நச் ஷ்பெசல்னே வெச்சிருக்கலாம்..!
ஹூம்ம்ம்.. நான் சொன்னமாதிரி நச் ஷ்பெசல்னே வெச்சிருக்கலாம்..!
ReplyDeleteஇச்..இச்.ஸ்பெசல்னு வைக்கலாம் மாமா...
MMS நல்லாயிருக்கு.
ReplyDeleteFabulous Fifty Special
ReplyDeleteThe fifty and forever special is my choice sir...
ReplyDeleteThe Fifty & forever special
ReplyDeleteFABULOUS FIFTY FOREVER (3FSPECIAL)
ReplyDeleteஅண்ட் வேணாம்...சூப்பர்
DeleteMy vote is for FFS
ReplyDelete// The FIFTY & FOREVER ஸ்பெஷல் !!" (FFS -2) //
ReplyDeleteUser Friendly மாதிரி உச்சரிக்க எளிதா இருக்கு...
இது ஓகே...
// இது நமது 750-ம் போஸ்ட்டாம் //
ReplyDeleteஎன்னதான் ஸ்பெஷலா ஊத்தப்பம்னு வடிவேல் மாதிரி ஆர்டர் சொன்னாலும்,கடைசியில் அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம்னு சாதாரணமாத்தான் முடியப் போகுது...
ஏன் சார் உசுப்பேத்தறிங்க...
புளிச்ச மாவிலே ஆறு கரண்டி நெய் ஊத்தி ; பொன்முறுவலா வேணும்னு கேட்கவும், மெனுவைப் பாத்திட்டே - பாத்திட்டே மட்டுமே இருந்திட்டு "ஒண்ணும் செரி இல்லய்யே"ன்னு விசனம் கொள்ளவும் அணிகள் இருந்தால் 'அண்ணனுக்கொரு ஊத்தப்பம் ' தானே பலனாகிடும் சார் ?
Deleteநல்லா ஹாலிவுட் பட கணக்கா Furious Fifty Special னு போட்டு விட்டா ராவா இருக்கும்.. மேலே உள்ளதில் இருந்து மட்டும் சொல்ல வேண்டும் என்பதால் Fabulous Fifty ..
ReplyDelete79வது
ReplyDeleteFFS-1
ReplyDeleteMy choice -- FFS 2
ReplyDeleteThe FIFTY & FOREVER ஸ்பெஷல் !!" (FFS -2) :)
ReplyDelete750 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் ஆசிரியரே
ReplyDeleteI go with!
ReplyDeleteThe FIFTY & FOREVER ஸ்பெஷல் !!" (FFS -2)
FFS-2 என்பதே சரியாக இருக்கும் என்று தோன்றுகின்றது. அது ஏன் -2 என்பதை நண்பர்கள் யாரேனும் கூறுங்கள்.
ReplyDeleteமுதலில் நண்பர் ///FABULOUS FIFTY ஸ்பெஷல் - (சத்யாவுக்கு கால்வினும் பிடிக்கும் ; காமிக்ஸும் பிடிக்கும்) -FFS-1/// கால்வின் சத்யா வைத்த பெயர்FFS1 என உள்ளதால்.. எடிட்டர் வைத்த பெயர் FFS2 ஆகிட்டது பிரபா ஜி.
Deleteஆ ஓகே ஓகே. நன்றி ஜி!
DeleteWOW 750 பதிவுகள்.மிகப் பெரிய சாதனை.
ReplyDeleteவாழ்த்துகள் சார்.
FFS 2 OK sir.
ReplyDeleteமே மாதத்தில் 22 பதிவுகள் எழுதிய ஆசிரியருக்கு ஒரு big royal salute.
ReplyDeleteநன்றிகள் சார்.
அனைத்துச் சாதனைகளுக்கும் பெருமைகளுக்கும் உரியவர் தாங்களே.
நன்றி.வணக்கம்.
Dear EDI,
ReplyDeletemy choice MMS... gives an ode to the old ways of SMS/MMS.
Ragini MMS2 சன்னி லியோன் படமும் கூட
Deleteஇரத்தப் படலம் இதுவரை முன்பதிவுகள் எத்தனை சார்?
ReplyDeleteநமது இலக்கை எட்டிவிட்டோமா
No
DeleteFabulous Fifty Special
ReplyDeleteM M S - MUTHU MAGNIFICENT SPECIAL. இந்த டைட்டில் நன்னா இருக்கு.
ReplyDeleteMuthu Golden Jublee Edition
ReplyDelete100
ReplyDelete100 பதிவுகளில் FFS-2 அதிக ஓட்டுகள் பெற்று முன்னிலையில் உள்ளது, அடுத்த FFS-1ம், 3 வது இடத்தில் MMS உள்ளது
ReplyDelete2 ஓட்டுகள் தென்னைமரத்துக் ஒரு குத்து பனமரத்துக்கு ஒரு குத்து
FFS1 Fabulous Fifty Special
ReplyDeleteThis 50 years journey is Golden Jubilee for Muthu Comics.
🙏🙏
ReplyDeleteFFS 2
ReplyDeleteFABULOUS FIFTY ஸ்பெஷல் 👌👌👌
ReplyDeleteFabulous 50 special
ReplyDeleteFABULOUS FIFTY FOREVER
ReplyDeleteTriple F Special, Super sir!
Delete2pm நிலவரம்.....
ReplyDeleteThe Fifty & Forever Special-FFS2= 15வாக்குகள்.
Fabulous Fifty Special-FFS1= 11வாக்குகள்
Muthu Magnificent Special-MMS= 6வாக்குகள்.
இரு சாய்ஸ் அளித்துள்ள KOK and ஸ்டீல்க்ளா ஒரே வாக்களித்து உங்க வாக்கை செல்லும் வாக்காக மாற்றங்கள்.
Ffs2 நண்பரே
DeleteOK ஸ்டீல்.
Deleteஆசிரியர் சார்@
ReplyDelete"FABULOUS FIFTY FOREVER Special "
என டாக்டர் AKK & KOK---- ffs1& ffs2 என இரு பெயர்களில் இருந்து எடுத்து இணைத்து முன்மொழிந்துள்ள பெயரும் நன்றாக உள்ளது.
க்ரான்ஸ்லாம் டென்னிஸ் டோர்னமென்ட்களில் உள்ளதுபோல இதற்கு ஏதேனும் Wild Card entry உள்ளதா??
Triple F Special (Fabulous Fifty Forever Special)
Deleteஇதுவும் நல்லாத்தான் இருக்கு!
"ஐம்பதுக்கும் ; அப்பாலுக்கும்" என்பதாக FFS 2 பொருள் தரும் ...ஆனால் FFFS எனும் போது 'ஐம்பதிலேயே எப்போதைக்கும்"என்பது போல அர்த்தமெடுக்கத் தோன்றும் சார் ! ஊகூம் !
DeleteMMS -நன்றாக உள்ளது.
Deleteஇன்னொரு தருணத்தில் பயன்படுத்தி கொள்ளலாம்.
ஐம்பதாம் ஆண்டையும் நினைவு படுத்துவது போல் FFS 2 பொருத்தமாக இருப்பது போல் தோன்றுகிறது.ஐம்பதுக்கும்........அப்பாலுக்கும்......அர்த்தமுள்ளதாக படுகிறது.
F என்ற எழுத்து அவ்வளவாக ஈர்ப்போடு இல்லை என்பது போல் தோன்றுகிறது.
FFS 2 க்கு என் வாக்கினை செலுத்துகிறேன்.
(Fun with fifty , forever special) இது பிடித்திருந்தாலும் பயன்படுத்திக் கொள்ளுங்கள் எசமான். Credit லாம் கேட்கமாட்டேன்.
ஓகே சார்..🙏
Deleteபாயிண்ட் நோட் பண்ணியாச்சி...!!
ஒன்லி 3 இன் த ரேஸ்!
ஸ்ரீ@ yes.. MMS- ரொம்ப நன்றாகயிருக்கு...!!!
Deleteமேபி.. முத்து 500க்கு அல்லது முத்து55 க்கு.. நினைவூட்டலாம்.
Ffs எடுத்துக்கங்க stvr
Delete//ஐம்பதிலேயே எப்போதைக்கும்"என்பது போல அர்த்தமெடுக்கத் தோன்றும் சார் ! ஊகூம் !//
Deleteஆமாம் சார், விட்டு விடலாம்!
FFS -2
ReplyDeleteThe FIFTY & FOREVER ஸ்பெஷல் !!" (FFS -2)
ReplyDeleteFifty & Forever Special!
ReplyDeleteFFS-1
ReplyDelete
ReplyDeleteHope you have noted my comments :)
v.saravanan25 May 2021 at 19:31:00 GMT+5:30
Muthu magnificent special - silver jubilee edition
P.Karthikeyan26 May 2021 at 07:19:00 GMT+5:30
Muthu Magnificent Special (MMS)
My choice is
ReplyDeleteThe FIFTY & FOREVER ஸ்பெஷல் !
The FIFTY & FOREVER ஸ்பெஷல் !!"
ReplyDeleteஎன்னுடைய செலக்ஷன்...
ReplyDeleteNBS, LMS...வரிசையில் MMS...!!!
அந்த Forever என்கிற வார்த்தைல இருக்கிற உறுதியும், நம்பிக்கையும், உற்சாகமும், காதலும் எனக்கு நெம்ப பிடிச்சிருக்கு.
ReplyDeleteFFS 2
அப்படி சொல்லுங்க, அதுலதான் எனர்ஜி Flow ஆகுது.
Deleteஇது 750 வது பதிவு ... வாழ்த்துக்கள் சார்.
ReplyDelete💐💐💐💐💐💐💐💐
சிறப்பு பதிவு ஒன்று
My vote is for:
ReplyDelete'Fabulous Fifty Special'
FFS2
ReplyDeleteM. M. S. O. K. Lmsஞாபகப்படுத்துவதால். மேக்னிபிஷண்ட்டோ இல்லைமேக்னமோmmsசுலபமான பெயர்ffsகொஞ்சம் பல் சுழுக்குது.. கரூர் ராஜ சேகரன்
ReplyDeleteவிழுந்த 50 ஓட்டுகளில் - 25 FFS2 ku
ReplyDeleteFFS 2. இதற்கு ஆசிரியர் கூறிய காரணமும் ஒரு காரணம்..( தொடரும் காலங்களுக்கும் ஆன இதழ் ❤❤❤❤❤❤)
ReplyDeleteMMS முத்து வருதுல்ல
ReplyDeleteMMS
ReplyDeleteஇது நல்லா இருக்குங்க டியர் எடி .. 💛💙💜
Second option : FFS
ReplyDeleteFFS 1 - Fabulous Fifty Special
ReplyDeleteThe FIFTY & FOREVER ஸ்பெஷல் !!" (FFS -2)
ReplyDeleteஎனது ஓட்டை ஃபிஃப்டி ஃபாரெவர் ஸ்பெசல்
ReplyDeleteக்கு அளிக்கிறேன்
Deleteஓகே...ஓகே.. எண்ணியாச்சி!
Delete7pm நிலவரம்.....
ReplyDeleteThe Fifty & Forever Special-FFS2= 24வாக்குகள்.
Fabulous Fifty Special-FFS1= 15வாக்குகள்
Muthu Magnificent Special-MMS= 10வாக்குகள்.
49வாக்குகளில் சரிபாதி பெற்று forever special நல்ல லீடிங்ல முந்துகிறுது...
5மணி நேரங்களே உள்ளன....
சேலம் டெக்ஸ்,
Deleteதிருப்பி எண்ணுங்க முதலில் இருந்து.
ஆகட்டும் சார்...!!!
Deleteகிராஸ் செக் பண்ணிடலாம்.
ஓவ்.. நீங்கள் மேலே சென்று வாக்களித்து உள்ளீர்கள்....!! உங்கள் வாக்கு ஆட் பண்ணனும்
Delete7pm நிலவரம்.....
ReplyDeleteThe Fifty & Forever Special-FFS2= 28வாக்குகள்.
Fabulous Fifty Special-FFS1= 15வாக்குகள்
Muthu Magnificent Special-MMS= 11வாக்குகள்
The FIFTY & FOREVER ஸ்பெஷல் !!" (FFS -2)
ReplyDeleteFFs-2 இல் Muthu இல்லாத்து ஒரு குறைவாய் படுகிறது.
DeleteMuthu Forever Special என்று தலைப்பு இருந்து, அதன் Background -ல் 50 Years என்று போடலாமா எடிட்டர் சார்.
புன்னகை ஒளிர் @ நீங்கள் நினைப்பது போல் முத்து என்பது இருக்கும். முத்துவிற்கு தானே இந்த கொண்டாட்டமே.
Deleteபுன்னகை ஒளிர் சார்@
ReplyDeleteஇப்ப வரை கவுன்டிங்
9.40pm நிலவரம்.....
The Fifty & Forever Special-FFS2= 28வாக்குகள்.
Fabulous Fifty Special-FFS1= 15வாக்குகள்
Muthu Magnificent Special-MMS= 10வாக்குகள்.
53 வாக்குகள் பதிவாகி உள்ளது....
சூப்பர் சேலம் டெக்ஸ் .
Deleteடைட்டில் போட்டியில் வெற்றி பெற்ற எடிட்டர் சாருக்கு வாழ்த்துகள்!
ReplyDelete🤣🤣🤣👏👏👏
Deleteஅனைத்தும் முன்கூட்டியே திட்டமிட்டு முடிவு செய்த பின்புதான் blog க்கிற்கு வருகிறது.
Deleteஇவற்றை எல்லாம் உணர்ந்திருந்தாலும் ,சும்மா ஜாலிக்காகத்தான் இந்த பாசங்குகளோடு கலந்து கொள்கிறோம்.
கிராமத்தில் ஒரு சொல்வழக்கு உண்டல்லவா ""குழந்தையையும் கிள்ளிவிட்டு ,தொட்டிலையும் ஆட்டுவது""என்பதாக.
சின்ன சின்ன நாடகங்களாக இருந்தாலும் தளம் சுவாரஸ்யமாக இருப்பது போல் அமைந்திருக்கிறது.
ஏமாற்றுவது போல் நாடகம் நடத்தப்படும் போது,ஏமாறுவது போல் நடிப்பது ஒன்றும் பெரிதான விசயமாக இருக்காது தான்.
இத்தளத்தை விடவும் மிகப்பெரிய நாடேக கம்பேனிகாரங்க கூடவெல்லாம் புழங்கி விட்டுதான் ,இங்கனக்குள்ள ரவுண்ட் வந்துகினு இருக்கோம் வாத்தியாரே.
காது இருக்குதுன்றது,அடுத்தவா பூச்சூட்டி அழகு பார்ப்பதுக்காக இல்லை.
ஜாலியா எடுத்துக்குவோம்.😍😍😍😍😍.
@ Sri ram
Deleteநண்பரே.. 'திட்டமிட்டே நடத்தப்படும் நாடகங்கள்' என்பதெல்லாம் சற்றே அதிகப்படியான & சங்கடப்படுத்திடும்படியான வார்த்தைகள்! வேண்டாமே ப்ளீஸ்?
தேர்ந்தெடுக்கப்பட்ட 3 டைட்டில்களில் வெற்றிபெற்ற டைட்டிலைத் தேர்ந்தெடுத்திருப்பதும் கூட நம் நண்பர்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் தானே?
இங்கே நாம் கருத்தில் கொள்ள வேண்டியது - எடிட்டரும் இப்போட்டியில் கலந்துகொண்டு ஜெயித்திருக்கிறார் - என்பதையே!
தவிர, நம்மில் யாரை விடவும் முதன்மையான காமிக்ஸ் ரசிகர் அவரே என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமேது?
எனக்குக்கூட எடிட்டரின் தலைப்பு அவ்வளவாகப் பிடிக்கவில்லை தான்! நண்பர் கார்த்திகேயன் முன்மொழிந்த 'MUTHU MILESTONE SPECIAL' என்பதே நச் தலைப்பாகத் தோன்றியது! ஆனால் அதற்கு எடிட்டர் சொன்ன காரணம் ஓரளவுக்கு ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவே இருந்ததால் 'சரி விடுங்க' என்று சமாதானமாகிவிட்டேன்!
இங்கே ஆலோசனைகள் கூறவே நாமெல்லாம்! இறுதிமுடிவை எடுக்க எடிட்டரன்றி வேறு யாருக்கு முழு உரிமை இருந்திட முடியும்?!!
கூல்!!
Delete"" நண்பரே 'திட்டமிட்டே நடத்தப்படும் நாடகங்கள்' என்பதெல்லாம் சற்றே அதிகப்படியான & சங்கடப்படுத்திடும்படியான வார்த்தைகள்! வேண்டாமே ப்ளீஸ்?//
இந்த வார்த்தைகள் தளத்தில் சிலராலும் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள்தான் நண்பா.
அது குறித்தெல்லாம் பெரிதாக சங்கடம் கொள்ள தேவையில்லை.
சரியான திட்டமிடலாக இருக்கும் போது அவற்றை பொதுவெளியில் கருத்துக் கேட்புக்காக விடுவதை தவிர்க்கலாம்.
முன்கூட்டியே எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கும் இது பொருந்தும்.
கணிசமான வாக்கு வங்கியை வைத்துக்கொண்டு ""ஓட்டெடுப்பு சனநாயகம்""என்பதை எவ்வாறு புரிந்து கொள்வது என்பது புலப்படவில்லை.
தொடர்ந்து அதிகப்படியாக எழுதலாம்.
உங்களை எந்தவிதத்திலும் சங்கடப்படுத்துவதாக அமைய கூடாது.
மாற்றுக் கருத்துக்கள் உருவாகும் போது அது அவ்விதம் தான் புரிந்து கொள்ளப்படும்.
ஒருதலை பட்சமாக,பக்கச்சார்பாக எழுதுவது அனைத்து நேரங்களிலும் சாத்தியப்படாது தானே.
ஒவ்வொரு வார்த்தைகளையுமே இயல்பாக எடுத்துக் கொள்ளுங்கள்.
உள்ளர்த்தத்தோடு பொருள் படுத்த வேண்டாம்.
சாரே ..ஒரு தீர்மானத்தை எடுப்பதற்கோ ; எடுத்ததை நிலைநாட்டுவதற்கோ முதுகெலும்பை இரவல் தேடும் ஈன அவசியங்கள் எனக்கு என்றைக்கு எழுகின்றனவோ - அன்றைக்கு இந்தப் பொறுப்பில் நான் இருந்திடப் போவதில்லை !
Deleteபொதுவாய் இது போல விரல் நீட்டப்படும் வேளைகளில் நான் மாங்கு மாங்கென்று பதில் சொல்ல முனைவதுண்டு ; ஆனால் இம்முறையோ அதற்கு அவசியமே இருப்பதாய் நான் நினைக்கவில்லை - simply becos என்னையும் சரி, இங்கு பங்கேற்றோரையும் பொய்யர்கள் என கூசாது சொல்லும் உங்களுக்கு நிஜத்தைப் புரிய வைப்பதால் எனது உலகம் மாறி இயங்கப்போவதில்லை ! இல்லாததொரு விஷயம் இருப்பதாய் ஸ்ரீராமுக்கு தேவ பிரசன்னம் கிட்டியிருப்பின், good for you mate ! You stick to your convictions & me to mine !
//ஒருதலை பட்சமாக,பக்கச்சார்பாக எழுதுவது அனைத்து நேரங்களிலும் சாத்தியப்படாது தானே.//
Deleteஆனால் அபத்தங்களை எழுதிட எவ்வித தயக்கங்களும் தேவையே கிடையாது தான் ! எதிரே நிற்பவன் மீது துளியும் நிஜமோ, ஆதாரங்களோ இல்லாத வேளையிலும் சாணியை தெளித்து விட்டு - "வேணும்னா நீயா உன்னை நிரூபிச்சுக்கோப்பா !" என்று நாசூக்காய் எழுதிடவும் தயங்கிடவே தேவை இராது தான் ! என்னவொரு கொள்கைப் பற்று !
இதனை ஃபேஸ்புக்கிற்கும் கூட அனுப்பப் சொன்னாரே
Deleteநான் FB க்கும் ; தனிப்பட்ட குழுக்களுக்கும் அனுப்பக் கோரியதே - இதோ,இது போன்ற கேள்விகளுக்கு இடம் தர வேண்டாமென்பதற்கே !
Deleteஆனா அங்கேயும் நான் சரிக்கட்டி வைச்சிருப்பேனோ ? எனக்கே தெரியாம எனக்கு இவ்ளோ ஆற்றல் இருக்கு போலிருக்கே ?
Muthu Magnificent Fifty Special - ரெண்டையும் கலந்து சொல்லி வைப்போம்
ReplyDeleteTHE FABULOUS 50 & FOREVER SPECIAL !!
ReplyDeleteFinal ஆயிடுச்சா சார்?
DeleteTHE 50 & FOREVER SPECIAL !!
Deleteவாட்சப் குழுக்களில் ; அல்லது FB க்ரூப்களில் நண்பர்கள் இது குறித்து ஏதேனும் எண்ணங்களை பதிவு செய்திருந்தார்களா ? என்பதைக் காலையில் கேட்டுத் தெரிந்து கொண்டு, இறுதி செய்து விடலாம் !
Deleteநல்லதொரு தலைப்பு!
Deleteநன்றிகள் சார்!
The name Muthu isn't there sir. Won't it be better with Muthu added to it? This is the first impression I got on seeing the finalized name sir. Anyways Decision is yours. Just shared my thought sir
DeleteMUTHU 50 & FOREVER SPECIAL... "THE" AT THE BEGINNING SEEMS SLIGHTLY DISTURBING SIR THOUGH IT CONVEYS ONE AND ONLY in my opinion
Deleteஎதுவோ மிஸ் ஆவதான ஒரு உணர்வு இருந்தது! நேற்று நண்பர் 'புன்னகை ஒளிர்' தன் கருத்தைச் சொன்னபோது 'ஆங்! அதுதான்.. அதுவேதான்' என்று தோன்றியது! இப்போது நீங்களும் அதே கருத்தை மிகத் தெளிவாக உறுதிப்படுத்தியிருக்கிறீர்கள் புத்தகப்பிரியன்! டைட்டிலில் 'முத்து' என்ற வார்த்தை இடம்பெறாமலிருந்தால் அங்கே ஒரு வெற்றிடம் நிலவுவதைப்போலவே இருக்கிறது!
Deleteப்ரெண்ட்ஸ்,
DeleteNBS அட்டையை எடுத்து பாருங்க, Never Before Special க்கு மேல "முத்து காமிக்ஸ்" என ஆரம்பித்து, முத்து காமிக்ஸ் நெவர் பிபோர் ஸ்பெசல்- னு இருக்கு.... அட்டையில் பார்க்கும் போது முழுமையான லுக் கிடைக்கும்.
முத்து"-வை சேர்த்தினாலும் ஓகே தான்.
STV ji அந்த லோகோ ஒரு லிங்க் கொடுங்கள்
DeleteNever Before Special க்கு மேல "முத்து காமிக்ஸ்" என நச்சுனு இருக்கு ப்ரெண்ட்ஸ். NBS எடுத்து பார்க்க நேரம் இல்லாத நண்பர்கள் இந்த லிங்கில் அதைக் காணலாம்.
Deletehttps://drive.google.com/file/d/1XOWOyokuTBicXd1GqLv22PKK7JXexjl-/view?usp=drivesdk
MMS
ReplyDeleteMuthu magnificent special MMS.இதுவே என் தேர்வு ஆசிரியரே.
ReplyDeleteMy vote is for Fifty & Forever Special sir
ReplyDeleteThe Fifty and forever special better choice for this milestone issue.. "The" "and" make it slightly dull though i understand your intention..
ReplyDeleteMy thoughts..
We could keep Muthu logo with 50 embossed in it and below that simply
Forever special..
And forever special easy to tell and will stick to mind
It would also come out like Muthu Comics Forever Special
I am sure there is a lot more patti tinkering left before the final publication...
Expressing once more. Unable to type with Tamizh fonts now - sorry for that.
ReplyDeleteSir Muthu comics is a classic in Tamizh field.
The name should then be reflective of the classic it is.
MUTHU COMICS PONVIZHAA AANDU MALAR
That should be it simple straight darting and in Tamil sir.
What is all this mega gigs forever fifty - looks like for people aged 50 plus :)
இதுவும் நியாயமாத்தான் படுது!!
Delete+1
Deleteசார் ..."காமிக்ஸ்" என்பதே ஆங்கில வார்த்தை தானே ? எங்கும் தமிழே எனில் - முத்து சித்திரக் கதைகள் !
Deleteலயன் காமிக்ஸ் ??
இல்லாட்டி அந்த தலைப்போட இதையும் சேர்க்கலாம்....ஆனா இது ஆளாளுக்கு சித்திரத்தை திருத்தும் முயற்சியாகி விடவும் கூடாது
DeleteThen Muthu Pon Vizhaa Andu Malar sir .. we know it is comics and you are not gonna sell other magazines ..
DeleteThe Fifty & forever special
ReplyDeleteமுத்துகாமிக்ஸின் 500வது இதழில் முத்து என்ற பெயரும் கட்டாயம் இடம் பெற வேண்டும் ஆசிரியரே.
ReplyDeleteஐம்பதாவது ஆண்டு மலர்
DeleteMuthu Golden Pearl Special
ReplyDeleteMMS
ReplyDeleteசித்திரம் வடமொழி. எனவே அரிமா படக்கதை
ReplyDeleteMMs
ReplyDeleteஐம்பதாம் ஆண்டு மலர் இப்பொழுதே ஆவலைத் தூண்டுகிறது. ஜனவரி மாதம் அந்தா கடேசில இருக்கு.
ReplyDeleteசார் புதிய பதிவு தேவை.
ReplyDeleteSir new post please.
ReplyDeleteசார் இன்றைய பதிவு பிளீஸ்
ReplyDeleteஇன்னும் 220 நாட்களுக்கு..
ReplyDeleteஎன்னென்ன கதைகள் வரப்போகுதுன்னுதான் தெரியாதுன்னு பார்த்தா இப்ப என்ன டைட்டில் வரப்போகுதுன்னும் தெரியாது போலிருக்கே..?!!!
எல்லாமே மர்மமால்ல இருக்கு?!!
200
ReplyDelete201
ReplyDelete