நண்பர்களே,
வணக்கம். 'புதுப்படப் பொட்டி' புறப்பட்டாச்சு சிவகாசியிலிருந்து ! புத்தாண்டின் முதல் நாளன்று உங்களில் பலரும் விடுமுறையில் இருந்திடக் கூடுமென்பதால் கூரியர்களைச் சரிவரப் பெற்றிடுவதில் சிரமம் தோன்றக் கூடுமே என்ற மகா சிந்தனை உதித்த மறுகணமே பைண்டிங் ஆபீஸ் முற்றுகையைத் தொடங்கி விட்டோம் ! நமது பைண்டிங் நண்பரும் சிறுகச் சிறுக வளர்ந்து இன்று அத்தியாவசியமான இயந்திரங்கள் பலவற்றையும் வாங்கி வைத்துள்ளார் என்பதால் - 'இந்தாங்க..புடியுங்க !' என 4 இதழ்களையும் படு ஸ்பீடாய் பட்டுவாடா செய்து விட்டார் !! பின்னென்ன - நேற்று இரவு முதலாய் கைபார்க்கும் படலமும், பேக்கிங் பணிகளும் துவங்கிட - இன்று உங்கள் கூரியர்கள் சகலமும் கிளம்பி விட்டன ! So ஆண்டின் இறுதி நாளிலேயே புத்தாண்டின் புது வரவுகளை உங்களிடம் ஒப்படைத்த ஒரு குட்டித் திருப்தி எங்களுக்கு !
And இதோ ஜனவரியின் இதழ்களுள் நீங்கள் பார்த்திரா மாயாவியாரின் மறுபதிப்பின் அட்டைப்பட first look ! இம்மாதத்து ராப்பர்களின் பெரும்பகுதி bright red -ல் அமைந்துள்ளதொரு தற்செயலான ஒற்றுமையே....! இந்த டிசைனும் நமது ஓவியர் + டிசைனர் கூட்டணியின் தயாரிப்பு ! 45 ஆண்டுகளுக்கு முன்பாக ஸ்பானிஷ் மொழியில் மாயாவியின் "பாம்புத் தீவு" வெளியான சமயம் இதுவே தான் அவர்களது டிசைன் ! அதை பின்னணியாக்கி நமது ஓவியரைக் கொண்டு சிற்சிறு மாற்றங்களோடு புதிதாய் வரைந்து - அப்புறம் கம்பியூட்டரில் வர்ண மெருகூட்டல்களைச் செய்துள்ளோம் ! கதையின் புராதன பாணியிலேயே ஓவியமும் இருப்பதை கவனிக்கத் தவற மாட்டீர்கள் என்பது தெரியும் தான் ; but அதே இரும்புக்கையை ஒவ்வொரு ராப்பரிலும் முன்னிலைப்படுத்துவதை விட - அந்த ஈல் மீன் + மாயாவி action தேவலை என நினைத்தேன் ! Anyways - ராப்பர் அழகாகத் தோன்றினால் நம் ஓவியருக்குப் பாராட்டுச் சொல்லுங்கள் ; சுமாராகத் தோன்றிடும் பட்சத்தில் - என்னை எவ்விடம் எட்டிப் பிடிக்க வேண்டுமென்பது தான் தெரியுமே ?!!
ஜனவரியின் நால்வர் அணியோடு - உங்கள் டி-ஷர்ட்களை எதிர்பார்த்திட வேண்டாமே- ப்ளீஸ் ?! சந்தாக்களின் புதுப்பித்தல்கள் தினமும் நடந்து வரும் நிலையில் இன்னுமொரு 2 வாரங்கள் காத்திருந்து விட்டு - அதன் பின்னே சைஸ்வாரியாக மொத்த ஆர்டர்களைப் பிரித்துக் கொண்டு திருப்பூர் பயணத்தைத் துவக்குவதாக உள்ளோம் ! So 'திருநெல்வேலி ஐட்டத்தை ரெடி பண்ணிட்டான்டா டோய் !!' என்ற பீதிக்கு நிச்சயமாய் அவசியமில்லை ! இம்மாதத்து 4 இதழ்களுமே அழகாய் வந்துள்ளதாய் எனக்குப்பட்டது ; அது தாய் காக்கையின் அனுமானம் மட்டுமேவா ? அல்லது நிஜமும் தானா ? என்பதை நாளைய தினம் சொல்லிவிடுமென்பதால் - எப்போதும் போலவே மூச்சை இழுத்துப் பிடித்துக் காத்திருப்போம் ! அப்புறம் இன்னொரு முக்கிய தகவல் : DTDC கூரியரில் இன்றைய பார்சல் புக்கிங் திகுடுமுகுடாய் பிசியாக இருந்தபடியால் தமிழ்நாட்டுக்குள் அனுப்பிடும் கூரியர்களை ST கூரியரிலேயே புக் பண்ணியுள்ளோம் ! So காலையில் வழக்கம் போலவே உங்கள் நகரத்து STC கதவுகளைப் பதம் பார்த்திடும் சுதந்திரம் உங்களது !
அப்புறம் சில வாரங்களுக்கு முன்பாக ஜூனியர் எடிட்டரின் முயற்சியினில் ஒரு புது track உருவாகி வருவதாய் நான் எழுதி இருந்தது நினைவிருக்கலாம் ! அது பற்றிய அறிவிப்பினைச் செய்திடவும் இந்தக் குட்டிப் பதிவை பயன்படுத்திக் கொள்கிறேனே...!
ஒவ்வொரு புத்தக விழாவின் போதும் - ஏராளமான பெற்றோர்கள் விறுவிறு வென்று நமது ஸ்டாலுக்குள் நுழைந்து - 'ENGLISH COMICS ?? You have them ?" என்று கேட்பதும் - நாம் 'ஊஹூம் ' என்று உதட்டைப் பிதிக்கியதும் அதே வேகத்தில் நடையைக் கட்டுவதும் வாடிக்கை ! போன வருடம் ஈரோட்டுப் புத்தக விழாவினில் மட்டும் கொஞ்சமாய் ஆங்கில லக்கி லூக் இதழ்களை வைத்திருந்ததோம் ; and அவற்றின் பெரும்பான்மை அங்கேயே விற்றும் விட்டன ! வரும் நாட்களின் போது - நாமே ஆங்கில இதழ்களைக் கொஞ்சமாய் இறக்குமதி செய்து விற்றாலென்னவென்று ஜூ.எ. வினவிய பொழுது நான் ரொம்ப சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை தான் ! ஆனால் காமிக்ஸ் எனும் ஒரு விஷயம் நமது மார்கெட்டில் எந்தவொரு ரூபத்தில் வளர்ச்சி கண்டாலும் கூட நெடும் பயணத்தில் நிச்சயம் நமக்கும் நன்மை தரக் கூடியதே என்ற சிந்தனை மனதின் ஓரத்தில் ஒட்டிக் கொண்டு நின்றது ! தொடர்ந்த நாட்களில் நமது பிராங்கோ - பெல்ஜிய கதைத் தொடர்களின் டாப் இதழ்களை அட்டகாசமாய் ஆங்கிலத்தில் வெளியிட்டு வரும் CINEBOOKS -ன் நமது collection -ஐ ஜூ.எ. பார்த்த பொழுது - "இவற்றையே சிறிதளவில் ஆரம்பத்தில் வரவழைத்துப் பார்ப்போமே ?" என்று திரும்பவும் கேட்டிட - 'வேண்டாம்' எனத் தடை சொல்லத் தோன்றவில்லை எனக்கு ! ஒவ்வொரு பெங்களூரு COMIC CON-க்கும் அதன் அமைப்பாளர்கள் நம்மை அழைப்பதும் - தமிழ் இதழ்களை மாத்திரமே வைத்துக் கொண்டு அங்கு சென்று என்ன செய்வதென்ற தயக்கத்தில் நான் மறுத்து வருவதையும் சுட்டிக் காட்டி - 'ஆங்கில இதழ்களும் நம்மிடம் ஸ்டாக் இருந்தால் COMIC CON களிலும் பங்கேற்கலாமல்லவா ?' என்று ஜூ.எ. கொக்கியைப் போட்ட பொழுது பச்சைக் கொடியை ஆட்டினேன் ! So அப்படித் தொடங்கியது தான் CINEBOOKS இறக்குமதிப் படலம் ! மலையளவு ரகங்களைக் கைவசம் வைத்துள்ள CB நிறுவனத்திடம் கெஞ்சிக் கூத்தாடி ஒரு மித அளவு ஆர்டரினை முன்வைத்து - அதனை நம் கிட்டங்கிக்குக் கொணர்ந்து சேர்க்க பணம் தந்தது மாத்திரமே நான் ; செயலாக்கியது ஜூ.எ. !
இவற்றை நம் மாநிலத்திலும், நம் வாசக நண்பர்கள் வசிக்கும் அண்டை மாநிலத்திலும் மாத்திரமே விற்றிட முனைந்திடாது - சிறுகச் சிறுக இந்தியாவின் முழுமைக்கும் பரப்பிடுவதே ஜூ.எ.வின் நோக்கம் ! So நமது ஆன்லைன் ஸ்டோரில் இதனை லிஸ்ட் பண்ணிடாது - www.comics4all.in என்றதொரு புதிய தளத்தில் லிஸ்ட் செய்திடவுள்ளோம் ! சுங்கவரி செலுத்தி இதழ்களை வரவழைக்கும் தலைநோவிலேயே நிறைய நேரம் ஓடி விட்டதால் - தளத்தைப் பூரணமாய் வடிவமைக்கும் பணிகள் இன்னமும் முழுமை அடையாது உள்ளன ! அடுத்த ஒன்றிரண்டு நாட்களுக்குள் அந்த வேலைகள் World Mart செய்து முடித்து விடும் ! இப்போதே நாம் வாங்கியுள்ள இதழ்கள் சகலமும் லிஸ்ட் ஆகி விட்டன ; அவற்றை நீங்கள் வாங்கிடவும் முடியும் தான் ! ஆனால் தளம் இன்னமும் கொத்த வேலை பூர்த்தியாகா கட்டுமானம் போலக் காட்சியளிப்பது தான் சிக்கலே ! http://comics4all.in/2850-english-comics என்ற லின்க்கில் இதழ்களின் லிஸ்டிங்கைப் பார்த்திட முடியும் ! வாங்கிடவும் முடியும் !
இதழ்களின் விலைகளைப் பார்க்கும் பொழுது தலைசுற்றல் வந்திடுமென்பது நிச்சயம் ; சகஜமாய் ரூ.500 / 600 / 700 என்றெல்லாம் விலைகள் உள்ளன ! ஆனால் ஐரோப்பிய விலைகள் இவையே எனும் பொழுது நாம் செய்திடக் கூடியது அதிகமிருக்கவில்லை ! இந்தியாவின் எல்லா இடங்களுக்கும் free shipping செய்திடவுள்ளோம் என்பது தான் லேசான ஆறுதல் ! நமது சந்தாதார நண்பர்களுக்கு 10% டிஸ்கவுண்ட் தந்திட உத்தேசித்துள்ளோம் ! அந்த சலுகையினை தளத்திலேயே implement செய்திட வழியில்லை என்பதால் உங்கள் ஆர்டர்களை மின்னஞ்சல் மூலம் நமக்கு அனுப்பி விட்டு - 10% கழித்து தொகையினை அனுப்பிடலாம் ! வரும் நாட்களில் தளத்தினை சற்றே செதுக்கிட அவகாசம் எடுத்துக் கொள்கிறோமே..!
இந்த விலையின் இதழ்களை நமது புத்தக விழாக்களிலும், ஆன்லைனிலும் விற்றுத் தீர்ப்பதென்பது நிச்சயமாய் விளையாட்டுக் காரியமே அல்ல என்பதை என்னை விடவும் ஜூ.எ. தெளிவாகவே உணர்ந்துள்ளார் ; And ஏற்கனவே இன்னும் சில ஆன்லைன் தளங்கள் CB-ன் இதழ்களை விற்பனை செய்து வருவதையும் நாம் அறிந்திடாதில்லை தான் ! But பத்தோடு பதினொன்றாய் காமிக்ஸ்களையும் விற்பனை செய்திடும் தளங்களுக்கும் - காமிக்ஸ் மட்டுமே மூச்சாய் செயல்படும் நம் போன்றோருக்கும் ஒரு குட்டியூண்டு வேறுபாடாவது இருக்குமென்ற நம்பிக்கை மனதின் ஒரு ஓரத்தில் புதைந்துள்ளது ! எங்கே சுற்றினாலும் நாம் திரும்புவது காமிக்ஸ் எனும் தாயின் மடிக்கே எனும் பொழுது - வெற்றியோ - புஸ்வாணமோ - அதனையும் ஒரு சந்தோஷப்பாடமாகவே எடுத்துக் கொள்வோம் ! சின்னதாய் எடுத்து வைக்கும் இந்த அடி - ஏதோ ஒரு தூரத்து நாளில் காமிக்ஸ் இதழ்களை மட்டுமே விற்பனை செய்திடும் மேலை நாடுகளின் COMICS STORES-கள் போன்றதொரு வாய்ப்புக்குக் கதவு திறந்து விடும் சாவியாக அமைந்தால் - we would be delighted !! புதியதொரு பாதையில் - சின்னதாயொரு பயண முயற்சியினை மேற்கொண்டுள்ளோம் - உங்களின் வாழ்த்துக்களுக்கும், ஆதரவுக்கும் ஆவலாய்க் காத்திருப்போம் !
அப்புறம் 52 வாரங்கள் கொண்டதொரு ஆண்டினில் 69 பதிவுகளைப் போட்டு கதிகலங்கச் செய்திருக்கிறேன் என்பதை Posts count சொல்கிறது !! எந்தவொரு ஆண்டிலும் இல்லா இந்த வேகத்தை இப்போது நிதானமாய் பரிசீலித்தால் "ஞே" என்ற குழப்பத் தோரணை தான் மிஞ்சுகிறது ! கொஞ்சம் ஓவர்டோஸ் ஆகிப் போனதொரு உணர்வு தலைதூக்குவது காரணமில்லாதில்லை என்பதும் புரிகிறது ! எனது ஆர்வக் கோளாறு - உங்கள் ஆர்வங்களில் கோளாறை எற்படுத்திடக் கூடாதென்பது தான் முக்கியமென்பதால் - 2015-ன் இந்த ரெக்கார்டை காலத்துக்கும் நிலைத்து நிற்குமொரு எண்ணிக்கையாய் பத்திரமாகப் பேணிக் காத்திடுவோமே !!
புது இதழ்கள் கைக்குக் கிடைத்தான பின்னே, உங்களின் முதல் அபிப்பிராயங்களைப் பற்றியும், கதைகளைத் துரிதமாய்ப் படிக்க முடிந்திடும் பட்சங்களில் - அவற்றின் விமர்சனங்களையும் ஆவலாய் எதிர்நோக்கியிருப்போம் ! So please do write folks !! மீண்டும் புத்தாண்டில் சந்திப்போம் ! அமர்க்களமான, அட்டகாசமான, சந்தோஷ ஆண்டாய் 2016 நம் எல்லோருக்கும் அமைய வேண்டிக் கொள்வோமே..! Bye for now !! See you around soon !
P.S. : ஜனவரி இதழ்களின் ஆன்லைன் லிஸ்டிங் இங்கே : http://lioncomics.in/monthly-packs-december-2015/19863-january-2016-pack.html
அப்புறம் 52 வாரங்கள் கொண்டதொரு ஆண்டினில் 69 பதிவுகளைப் போட்டு கதிகலங்கச் செய்திருக்கிறேன் என்பதை Posts count சொல்கிறது !! எந்தவொரு ஆண்டிலும் இல்லா இந்த வேகத்தை இப்போது நிதானமாய் பரிசீலித்தால் "ஞே" என்ற குழப்பத் தோரணை தான் மிஞ்சுகிறது ! கொஞ்சம் ஓவர்டோஸ் ஆகிப் போனதொரு உணர்வு தலைதூக்குவது காரணமில்லாதில்லை என்பதும் புரிகிறது ! எனது ஆர்வக் கோளாறு - உங்கள் ஆர்வங்களில் கோளாறை எற்படுத்திடக் கூடாதென்பது தான் முக்கியமென்பதால் - 2015-ன் இந்த ரெக்கார்டை காலத்துக்கும் நிலைத்து நிற்குமொரு எண்ணிக்கையாய் பத்திரமாகப் பேணிக் காத்திடுவோமே !!
புது இதழ்கள் கைக்குக் கிடைத்தான பின்னே, உங்களின் முதல் அபிப்பிராயங்களைப் பற்றியும், கதைகளைத் துரிதமாய்ப் படிக்க முடிந்திடும் பட்சங்களில் - அவற்றின் விமர்சனங்களையும் ஆவலாய் எதிர்நோக்கியிருப்போம் ! So please do write folks !! மீண்டும் புத்தாண்டில் சந்திப்போம் ! அமர்க்களமான, அட்டகாசமான, சந்தோஷ ஆண்டாய் 2016 நம் எல்லோருக்கும் அமைய வேண்டிக் கொள்வோமே..! Bye for now !! See you around soon !
P.S. : ஜனவரி இதழ்களின் ஆன்லைன் லிஸ்டிங் இங்கே : http://lioncomics.in/monthly-packs-december-2015/19863-january-2016-pack.html