வணக்கம். கடந்த 3 மாதங்களாய் என்னைச் சுற்றி DTS சவுண்ட் effect -ல் நடிகர் தனுஷின் earthy குரலில் ஒரே பாடல் திரும்பத் திரும்ப ஒலிப்பது போலவே ஒரு பிரமை.. !
ஆண்டின் கடைசி மூன்று மாதங்கள் வரைத் தள்ளிச் சென்ற மறுபதிப்புகள் ; +6 இதழ்கள் ; புது வெளியீடுகள் என சகலமும் ஒட்டு மொத்தமாய் முறைக்க - ஒன்றன் பின் ஒன்றாய் அவற்றிற்குக் கதவுகளைத் திறந்தாகும் பணியில் திருவாளர் நாக்கார், நண்பர் தரையாரைக் குசலம் விசாரிக்காத குறை தான் ! முடிக்க, முடிக்க முளைத்துக் கொண்டே வரும் வேலைகளைச் செய்திடுவது ஒரு பக்கமெனில் - திருவாளர் சலவை நோட்டாரை மொத்த மொத்தமாய்ப் புரட்டுவதென்பது மறு பக்கத்து பூதாகரமான சவாலாய் நின்றது ! ராயல்டி பணங்களைக் கடைசி நொடியில் செலுத்தினாலும் முகம் சுளிக்காத படைப்பாளிகளும் ; நம் வார்த்தைக்கு மதிப்புத் தந்து - சின்ன அவகாசத்திற்குக் கடனில் பேப்பர் சப்ளை செய்த நிறுவனங்களும் கை கொடுக்க, கொடுத்த வாக்கை எப்படியும் நிறைவேற்றியாக வேண்டுமென்ற நமது வைராக்கியம் சொதப்பிடாது தப்பியது !'All's well, that ends well' என்பதற்கேற்ப - 2013-ன் இந்த ஓட்டப் பந்தயத்தின் முடிவினில் மூச்சிரைக்க எல்லைக்கோட்டில் நிற்க நேரிட்டாலும், ஒட்டு மொத்தமாய் 4 இதழ்களை இன்று நம் பணியாளர்கள் despatch செய்திடுவதைப் பார்வையிட முடிந்த போது மனதுக்குள் ஒரு சின்ன ரம்யம் நிலவியது ! ஒரு கௌபாய் கதை ; ஒரு கார்ட்டூன் கலாட்டா ; ஒரு டிடெக்டிவ் தொகுப்பு ; ஒரு ஆக்ஷன் ஹீரோ சாகசமென டிசம்பர் நமக்குத் தயார் செய்துள்ள இந்த அட்டகாச combo நாளைக் காலை உங்கள் அனைவரையும் எட்டிட வேண்டும் - கூரியர் நண்பர்களின் கடாட்சத்தோடு ! இதோ - இந்தாண்டின் இறுதி மறுபதிப்புத் தொகுப்பின் அட்டைப்படம் :
ஏராளமான குளறுபடிகளைச் சந்தித்த சிக் பில் கதை வரிசைகள் பற்றி ஏற்கனவே நிறைய எழுதி விட்டேன் என்பதால் - மீண்டும் முதலில் இருந்து blade போடுவதைத் தவிர்த்திடப் போகிறேன் ! So முதன் முறையாக நம் Top Comedy Cowboys இணைந்து ஒரே இதழில் அட்டகாசம் செய்கிறார்கள் - புரட்சித் தீ + விற்பனைக்கு ஒரு ஷெரீப் மார்க்கமாய் ! (For obvious reasons - இது தவிர்க்க இயலாக்கூட்டணி என்பதால் இதன் பொருட்டு மீண்டுமொருமுறை கேள்விகள் வேண்டாமே - ப்ளீஸ் ?! )அட்டைப்படங்கள் இரண்டுமே (முன் + பின்) ஒரிஜினல் டிசைன்கள் - துளியும் மாற்றங்களின்றி ! லக்கி லூக் கதைகளை நாம் வெளியிட்டு வந்த நாட்களில் சிக்சர் அடித்த கதைகளுள் ஒரு முக்கிய இடம் "புரட்சித் தீ"க்கு உண்டு ; இத்தனை காலம் பின்னே அழகாய், பெரிய சைசில் அந்தக் கதையினை திரும்பப் படிக்க நேரிட்ட போது என்னுள் ஏராளமான flashbacks ! கூடவே சின்னதாய் 2 நெருடல்களும் தான்..!தற்போது இது போன்ற கதைகள் கிடைப்பதில்லையே என்பது நெருடல் # 1 என்றால் ; இதே கதையினை தற்போது மொழியாக்கம் செய்திட நேரம் கிட்டிடும் பட்சத்தில் இன்னமும் பிரமாதப்படுத்தி இருக்கலாமே என்பது நெருடல் # 2 ! ஆனால் நம்மில் பெரும்பான்மைக்கு - படித்துப், பழகிப் போன அதே பழைய ஸ்கிரிப்ட் தான் ரசிக்கின்றதெனும் போது என் முன்னே உள்ள choices மிகக் குறைவாகிப் போகின்றன ! Anyways , அற்புதமானதொரு கதை - so let's make the most of it !
இம்மாத 2 நூறு ரூபாய் இதழ்களுமே மறுபதிப்புகள் தான் என்ற போதிலும், அவற்றினுள் நமக்கு அதீத ஆவலைத் தூண்டிடும் 2 கூடுதல் சங்கதிகள் புதைந்துள்ளன ! சில மாதங்களுக்கு முன்பாய் நடந்த நமது KBT -3 போட்டியில் - இரு லக்கி லூக் சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு வாய்ப்பு நண்பர்களுக்குத் தரப்பட்டிருந்தது அல்லவா ? ஒரு வழியாய் அப்போட்டியின் முடிவுகள் அரங்கேறும் நேரம் இப்போது நெருங்கி விட்டது ! அதற்கு முன்பாக போட்டிக் களத்தினில் காத்திருந்த 2 கதைகளின் தன்மையைப் பற்றி இங்கு நான் சொல்லியாக வேண்டும் ...! இரண்டுமே மாமூலான லக்கி லூக் சிறுகதைகள் தான் என்ற போதிலும், இரண்டிலுமே வரும் பிரதான பாத்திரங்கள் வழக்கமான கௌபாய் ரகத்தினர் கிடையாது ! முதல் கதையில் லக்கியோடு குப்பை கொட்டுவது ஒரு இடுங்கிய கண் கொண்ட சீன ஆசாமி ; கதை # 2-ல் வருவதோ ஒரு அராபிய நாட்டவன். So இரு கதைகளிலுமே வசன நடை தென் துருவம்-வட துருவம் போல் துளியும் தொடர்பில்லா வகைகள் ! இவற்றை கையாள்வதென்பது ஒரு பெரும் சவாலான விஷயம் என்பதில் துளியும் சந்தேகம் கிடையாது ! அதனைக் கருத்தில் கொண்டு பார்க்கும் போது - போட்டியில் கலந்து கொண்ட நண்பர்கள் அனைவருமே தூள் கிளப்பியுள்ளார்கள் ! Hats off guys - you have all given it an awesome shot ! அதே சமயம் போட்டி என்று வரும் போது சின்னச் சின்ன விஷயங்களையும் கண்ணில் விளக்கெண்ணை ஊற்றிப் பார்க்கும் கட்டாயம் நேர்வதால் - நிறைய சிந்தனைக்குப் பின்னே ; நிறைய வாசிப்புக்குப் பின்னே - ஒன்றுக்கு இரண்டாய் வெற்றியாளர்களைத் தேர்வு செய்துள்ளேன் ! Yes, we have 2 winners this time !
சீன ஷெரீப் கதையினை அமர்க்களமாய் எழுதி வெற்றியைத் தட்டிச் செல்வது வேறு யாருமல்ல - நமது நாலு கால் + ஒரு புசு புசு வால் கொண்ட மட்டன் பிரியாணிப் பிரியரான ஈரோடு விஜய் தான் ! இந்தப் பூனை பால் குடிக்கும் பூனை மட்டுமல்ல - பாயசம் செய்யத் தெரிந்த பூனையும் கூட என்பதை ரிப்போர்டர் ஜானி ஸ்பெஷல் இதழில் வெளியாகியுள்ள "ஒரு சீன ஷெரீப்பின் கதை" வெளிச்சம் போட்டுக் காட்டக் காத்துள்ளது ! இதோ அதன் முதல் பக்கம்...!!
Great Show Vijay !! சின்னதாய் ஒன்றிரண்டு எழுத்துப் பிழைகள் இக்கதையின் proof reading -ல் தலை காட்டுவது ஒரு சிறு நெருடல் !! Sorry in advance !
இரண்டாம் கதையின் மொழியாக்கத்தில் கலக்கி இருப்பது நமக்குப் புதியவர் அல்லவே....! பெங்களூரு கார்த்திக் சோமலிங்காவின் கைவண்ணத்தில் "மேற்கே ஒரு ஒட்டகம்" - "புரட்சித் தீ" இதழினில் அட்டகாசமாக வரவிருக்கிறது ! கதையினைப் படிக்கும் போது இதன் பொருட்டு கார்த்திக் எத்தனை சிரத்தை எடுத்துள்ளார் என்பது தெளிவாய்ப் புரியும் ! பாருங்களேன் - அதன் முதல் பக்கத்தை :
Congrats again Karthik ! வெற்றி பெற்ற நம் நண்பர்கள் இருவருக்கும் நம் வாழ்த்துக்களோடு - ஒரு "நாடோடி ரெமி" இதழ் + "யார் அந்த மாயாவி ?" இதழும் பரிசாக அனுப்பிடப்படும் ! போட்டிகள் ..வாசகர்கள் பங்களிப்புகள் என்ற தலைப்பு ஓடிக் கொண்டிருக்கும் போதே - நமது சன்ஷைன் கிராபிக் நாவலின் லோகோ டிசைன்களையும் கொஞ்சம் பார்த்திடுவோமே என்று நினைக்கத் தோன்றியது ! இதோ பாருங்களேன், நம் நண்பர்களின் கைவண்ணங்களை :
|
Arunachalam's work...
|
|
Srirangam Siva's design |
|
Super Vijay's creation-1 |
|
Karthik Somalinga's effort.. |
|
Ramesh Kumar, Kanchipuram !! |
|
Srirangam Siva again... |
|
Karthik Somalinga with another creation ! |
|
Super Vijay-2 |
நண்பர்களின் ஆர்வம் + ஆற்றல் எனை 'ஆ'வென வாய் பிளக்கச் செய்கிறது ! பள்ளியில் டிராயிங்கில் நூற்றுக்கு நாற்பது மார்க் எடுக்கத் தத்து பித்தென தடுமாறும் என் போன்றோருக்கு இந்த ஆற்றல் பிரவாகம் நிஜமாய் ஒரு அதிசயமாகவே தெரிகிறது ! இப்போது இங்குள்ள படைப்புகளில் இருந்து அழகான ஒன்றினைத் தேர்வு செய்திடும் பொறுப்பையும் உங்களிடமே விட்டு விடப் போகிறேன் ! ஜனவரியில் அரங்கேற்றம் காணவிருக்கும் நமது கிராபிக் நாவல் வரிசைக்கு இதில் எந்த லோகோ தேர்வு செய்வோம் guys ?
திறமைகளின் வெள்ளப்பெருக்கு இன்னும் ஓய்ந்த பாடில்லை...! KBGD -2 போட்டிக்கு நேற்றிரவு தான் நான் டிசைன்களையே அனுப்பி இருந்தேன் ; அதற்கு முன்பாகவே நண்பர் கனகராஜன் (பொள்ளாச்சி) டிசைன் செய்து அனுப்பியுள்ள அட்டையைப் பாருங்களேன்..!
"சைத்தான் துறைமுகம்" கதையினை நாம் மறுபதிப்பு செய்திடும் போது இந்த அட்டைப்படத்தை பயன்படுத்திடலாம் என்று எண்ணத் தோன்றுகிறது ! Real cool work !! திரும்பிய திக்கெங்கும் தென்படும் நண்பர்களின் திறமைகளும், காமிக்ஸ் மீதான அளப்பரிய நேசமும் என்னை நிஜமாய் பிரமிக்கச் செய்கிறது ! இத்தனை காதலுக்கு மத்தியினில் வசிக்கும் இந்த சுகம் எங்களது அந்த மூச்சிரைக்கும் ஓட்டத்தை ஒரு மார்கழி மாதத்து இளம் காலை சுக நடை அனுபவமாய் மாற்றிடுவதில் வியப்பேது ? This is bliss...! Take care folks ! Catch you soon !
P.S: நண்பர்களே, விளம்பர இடைவேளை போலானதொரு (மறு) அறிவிப்பு : உங்களின் 2013-க்கான சந்தாக்கள் தற்போதைய இப்புத்தகங்களோடு நிறைவாகிறது ! மறவாமல் இன்றே 2014-க்கான சந்தாக்களை செலுத்திடலாமே - ப்ளீஸ் ?