நண்பர்களே,
வணக்கம். இதோ - இரண்டே நாட்கள் தான் ஆகியுள்ளன - அதிரசங்களையும், முறுக்குகளையும் தொந்திக்குள் புகுத்தி! இரண்டே நாட்கள் தான் கடந்துள்ளன பட்டாசைப் போட்டு, தெருவுக்கே ஒரு தேவலோக எஃபெக்ட் தந்து! இரண்டே நாட்கள் தான் நகர்ந்துள்ளன! - ‘தம்‘ கட்டி தொப்பைகளை உள்ளிழுத்து, புதுசாய் வாங்கின ஜீன்ஸ்களை இடுப்பில் நிறுத்த பாடாய்ப் பட்டு! ஆனால் தீபாவளிக்கான நமது மூன்று ஸ்பெஷல்களும் வெளியாகி ஒரு மகாமகமே கழிந்தது போல் தோன்றுகிறது உள்ளுக்குள்! And அந்த மூன்று இதழ்களுமே தத்தம் பாணிகளில் - பண்டிகைப் பொழுதுகளை ஜாலியாக்கிட உதவியுள்ளதில் நாங்கள் செம ஹேப்பி அண்ணாச்சி! So இன்னொரு 350 நாட்களுக்கு அப்பாலிக்கா காத்திருக்கப் போகும் அடுத்த தீபாவளிக்கு இன்னும் ஒரு படி கூடுதலாய்க் கலக்கிட என்ன செய்திடலாமென்ற யோசனையோடே it's back to the drawing board!
ரைட்டு... நவம்பரின் ரெகுலர் இதழ்களும் ஆச்சு! நடப்பாண்டில் டிசம்பரின் batch புக்ஸ் தவிர்த்து வேறு ஏதேனும் உண்டாடா தம்பி? என்ற கேள்வியை நீங்கள் கேட்கிறீர்களோ - இல்லையோ; என்னை நானே கேட்டுக் கொண்டேன்! அடிச்சுப் புடிச்சி தீபாவளி மலர்களை before time ரெடி பண்ணி விட்டதால் கிடைத்திருக்கும் இந்த இக்ளியூண்டு ஓய்வினில், ரெகுலர் தடத்தில் அல்லாத இதழ்களைத் தடதடக்கச் செய்யும் மகாசிந்தனைகள் துளிர் விடத் துவங்கி விட்டன! And இதோ - நபம்பர் 29ல் சேலம் புத்தக விழாவும் தொடங்கிடவிருப்பதால் அதனை அனுசரித்த பொழுதுகளில் அவற்றைக் களமிறக்கினால் சிறப்பு என்று பட்டது! So அந்த 3 ஸ்பெஷல்ஸும் இந்த நவம்பரின் பொழுதுகளை டாலடிக்கச் செய்திடுமென்று எதிர்பார்க்கலாம்!
- Electric '80s தனித்தட புக் # 1 - "The ஸ்பைடர் ஸ்பெஷல்"
- சுட்டிக் குரங்கு கபிஷ் ஸ்பெஷல் - 1!
- ஸ்பைடர் 2.0 - க்ளைமேக்ஸ் பாகம்!
ஆக ‘புலி வருது... வருது‘ என்று மிரட்டிக் கொண்டிருந்த Electric '80s தனித்தடமானது - தனது முதல் ஆல்பத்தில் நம்ம தானைத் தலைவரின் "பாட்டில் பூதம்" + 2 சிறுகதைகள் என்ற காம்போவில் கலக்கவுள்ளது! இங்கொரு முக்கிய தகவல் folks! '90களில் இந்த “பாட்டில் பூதம்” ஒரிஜினலாய் நமது லயனில் வெளியான சமயத்தில் கணிசமாகவே ‘கத்திரி காத்தவராயன்‘ அவதாரில் உங்களது காதுகளை அதீத புய்ப்பச் சரங்களிலிருந்து காப்பாற்றிட முனைந்திருந்தேன்! ஆனால் இன்றைக்கு காமிக்ஸ் சேவை ஆற்றிட ஆவலாய் பறக்கும் ஆர்வலர் பார்ட்டீஸ் - ”விடுபட்ட பக்கங்களோடே பிரிண்ட் போட்டுத் தர்றோம் சார்... வாங்கோ சார்... வாங்கோ மா...!” என்று சபலமூட்டி வருவதால் காத்தவராயன் அவதாருக்கு டாட்டா சொல்லியாச்சு! ஆகையால் இம்மியும் குறைவின்றி - பூதத்தோடு நம்மவர் அடிக்கும் ரகளைகளை இந்த இதழில் பார்த்திடப் போகிறீர்கள்! ஜெய் பாட்டில்மணி!
இதோ - MAXI சைஸிலான இந்த இதழுக்கு நமது அமெரிக்க ஓவியையின் டிஜிட்டல் ரீ-டச்சிங்கில் உருவாகியுள்ள அட்டைப்படம் & உட்பக்க preview!
And நினைவூட்டி விடுகிறேன் மக்களே - இது ELECTRIC `80s தனித்தட சந்தாவுக்கான இதழ் மாத்திரமே! So அதற்கான சந்தா செலுத்தியாச்சா? என்பதை மட்டும் சரிபார்த்து விடுங்களேன் ப்ளீஸ்!!
ஸ்பெஷல் # 3 - நமது தானைத் தலைவரின் 2.0 அவதாரின் க்ளைமேக்ஸ் அத்தியாயம்! ஏற்கனவே மாயாவியோடும், ஆர்ச்சியோடும் துப்பறியும் கம்ப்யூட்டரோடும், ஜேன் பாண்டோடும் ஒரண்டைகளை இரண்டு அத்தியாயங்களில் இழுத்து விட்டிருந்த ஸ்பைடர் ரகளையாய் மூன்றாவது அத்தியாயத்தோடு அந்த சாகஸத்தை நிறைவு செய்திடுகிறார்! க்ளாஸிக் நாயகர்களைத் தட்டி எழுப்புவது போதாதென, அவர்களுக்கான புதுப்புதுக் களங்களையுமே இன்று படைப்பாளிகள் தயார் பண்ணி வருகிறார்கள்! அந்த முயற்சிகளில் ஒன்று தான் இந்த கூட்டணிக் கதம்ப த்ரில்லர்! So “க்ளாஸிக் சூப்பர் ஸ்டார்ஸ் ஸ்பெஷல் - 3” preview இதோ!
And yes/ இந்த இதழுமே ஒரு புத்தக விழா ஸ்பெஷல் தான்!
Moving on, நமது 2025 சந்தா சார்ந்ததொரு செம சுவாரஸ்ய தகவல்!! இதுவரைக்கும் கிட்டியுள்ள சந்தாக்களில், மொத்தம் இரண்டே நண்பர்கள் தான் - சந்தா LITE பிரிவினை தேர்வு செய்துள்ளனர்! பாக்கி அனைவருமே ரெகுலர், full சந்தாவில் தான் இடம் போட்டுள்ளனர்!! நமது 2025-க்கான பயணத்தினில் almost அனைவருமே ஒரே சந்தாப்பிரிவில் பயணிப்பர் எனும் போது - நம்ம front desk அம்மணியர் நிச்சயம் நிம்மதிப் பெருமூச்சிடுவர்! And தீபாவளிக்குப் பிற்பாடு சந்தாக்கள் வேகமெடுப்பது வழக்கம் ; இம்முறையும் அது தொடருமென்ற நம்பிக்கையில் காத்திருக்கிறோம்! இதோ - சின்ன நினைவூட்டலாய் சந்தா விபரங்கள் :
Before I sign out - இரு கேள்விகள் :
1.ஸ்பைடர் ஸ்பெஷல் : வாசிப்புக்கா? சேமிப்புக்கா?
https://strawpoll.com/XOgOV8QbQn3
2.2025-ன் ஏதாச்சும் ஒற்றை இதழை ஜனவரியிலேயே பார்க்க விரும்புவீர்கள் எனும் பட்சத்தில் what will be that?
Bye all... See you around! Have a great weekend!
P. S : நம்ம Youtube சேனலில் அடியேன் போட்டிருக்கும் லேட்டஸ்ட் மொக்கை : https://youtu.be/inP9Stj7yVY?si=swwwLOPYHrbj6m59
வணக்கம்
ReplyDeleteமீ பர்ஸ்ட்
Deleteஅடடே வாழ்த்துக்கள் சகோதரி...
Deleteபோட்டு தாக்குங்க ரம்யா 🙂☺️
Deleteநன்றிகள் சகோ 😊
Deleteதூங்க போகுமுன் ஒரு தடவை செக் பணெணலாம்னு வந்தேன் 😂😂😂
வாழ்த்துக்கள் ரம்யா
Deleteநன்றிகள் தோழரே
Deleteநன்றிகள் பரணி சகோ
Deleteவாழ்த்துக்கள் சகோதரி...
DeleteSuper Ramya sis👏👏👏
Deleteவாழ்த்துக்கள் சகோ 💐
Deleteநன்றிகள் ரகு சகோ
Deleteநன்றிகள் JSVP சகோ
Deleteநன்றிங்க தம்பி 😊
Deleteவணக்கம்
ReplyDeleteவந்துட்டேன்...
ReplyDeleteவாங்கோ
Deleteவாங்கோ வாங்கோ ☺️
Deleteமகிழ்ச்சி நண்பர்களே.
DeleteHi
ReplyDelete10 குள்ளே முதன் முறையா
Deleteமகிழ்ச்சி
Delete:-)
Deleteவணக்கம்
ReplyDeleteவந்துட்டேன்
ReplyDelete10க்குள்ள..!
ReplyDelete2025 சந்தா செலுத்திவிட்டேன் ☺️
ReplyDelete😘🥰😍❣️
Delete@Edi Sir🥰😘
ReplyDeleteMe in.. 👍🧨🧨🧨🧨
3புக்கும் சேர்த்து எவ்வளவு னு யாராவது கூறுங்கள்
ReplyDelete360₹
Delete:-)
Deleteபதிவு போராட்ட குழுவின் தலைவர் குமார் மற்றும் செயலாளருக்கு ரம்யா வாழ்த்துக்கள் ☺️
ReplyDeleteஹிஹிஹி
Delete😁😁😁
DeleteHi
ReplyDelete//ஸ்பைடர் ஸ்பெஷல் : வாசிப்புக்கா? சேமிப்புக்கா?//
ReplyDeleteவாங்கும் ஐடியா இல்லைங்க, ஆசிரியரே
//2.2025-ன் ஏதாச்சும் ஒற்றை இதழை ஜனவரியிலேயே பார்க்க விரும்புவீர்கள் எனும் பட்சத்தில் what will be that?//
ப்ளுகோட்ஸ்
// கபிஷ் ஸ்பெஷல் 1 (ரூ.100)
ReplyDelete+
க்ளாஸிக் சூப்பர் ஸ்டார்ஸ் ஸ்பெஷல் 3 (ரூ.60) //
பணம் செலுத்தி விட்டேன் சார்
தூள் சார்!!👍👍
DeleteHi..
ReplyDeleteஇன்று தீபாவளி மலர்களை பார்த்தாச்சு
ReplyDeleteநாளை ஒரு புத்தகம் ஆரம்பித்து விடுவேங்க, ஆசிரியரே
ஐயகோ... சிவாஜி சார் இறந்துட்டாரா?
Deleteசார் ROFL...
Delete😂😂😂😂😂
Deleteஎன்ன செய்வதுங்க ஆசரியரே
Deleteநானோ திருச்சியில், புத்தகங்களோ கோவையில்
கோவைக்கு இந்த தடவை சீக்கிரமா திரும்பி வர, தீபாவளி புத்தகங்களும் ஒரு காரணம்
வேய்ன் ஷெல்டன் சாய்கான் புதையல் (நரை முடிக்காரரை பார்த்து ரொம்ப நாளாகின்றதால்) ஜனவரியில் பார்க்க விரும்புகிறேன்
ReplyDeleteSir - wonderful news and Kudos to Rafiq Raja as well for the efforts. Remembering the days when Poonthalir published two Kapeesh collections (yellow qnd white :-)).
ReplyDeleteBTW what would be the price for all three classic specials together sir? (He He - box-lerundhu pirikkanum - thedanum !!)
Rs. 400 for Tamilnad sir..
Delete@Edi Sir.. 🥰😘
ReplyDeleteசேலம் புத்தகவிழா ஸ்பெஷல்ஸ் Rs. 160/- gpay பண்ணியாச்சுங்க சார்.. 🥰😘👍🧨🧨🧨
சூப்பர் தல 💪
Deleteஅப்படியே நாலஞ்சு groups ல details போஸ்ட் பண்ணியாச்சு Sir.. 🥰🥰😘😘💐😄
DeleteSpider special அட்டைப்படம் தெறி 😃👌
ReplyDeletePresent sir
ReplyDeleteநன்றி ரபீக் ☺️
ReplyDeleteவணக்கம் நண்பர்களே..
ReplyDeleteவணக்கமுங்க!!
ReplyDeleteஅனைவருக்கும் வணக்கம் நண்பர்களே
ReplyDelete41st
ReplyDeleteஸ்பைடரின் பாட்டில் பூதம் அற்புதமான கதை. 90களில் கடைசியாக வந்த ஸ்பைடர் முழுநீளக்கதை..!
ReplyDeleteஇன்றும் கூட சேகரிப்பாளர்களுக்கு தண்ணீர் காட்டும் இதழ்! இப்போது மறுபதிப்பாக வருவதில் மகிழ்ச்சி!
ஒரே ஒரு குறையேன்றால், ஸ்பைடருக்கு தண்ணீர் காட்டும் பூதம், பெயரளவில் கூட அட்டையில் இடம் பெறாதது தான்!
வாய்ப்பு கிடைத்தால் முதல் பதிப்பை எடுத்து அட்டைகளை பாருங்கள்! இன்றைக்கு வந்திருக்கும் வெளிநாட்டு டிசைனை விட, முதல் பதிப்பின் அட்டையே என்னளவில் சிறப்பாக தோன்றுகிறது.
YES, OLD WRAPPER CAN ADDED AS BACK COVER
ReplyDeleteஅனைவருக்கும் வணக்கம்...
ReplyDeleteCaptain prince
ReplyDelete1. கண்டிப்பாக வாசிப்புக்கு தான் சார்👍
ReplyDelete2. இளம் தளபதி ஸ்பெஷல்🐯
ஜனவரியில் நான் பார்க்க விரும்பும் இதழ்கள்
ReplyDelete1. டின்டின்
2. வேதாளர்
3. லார்கோ
4. டெக்ஸ்
ஆனால் இந்த வருடம் போலவே அடுத்த வருடமும் இவை நான்கும் ஜனவரியில் வரும் என்றால் நான் ரொம்ப ஹேப்பி
Deleteஇவை அனைத்தையும் விட நான் எதிர்பார்ப்பது யங் டெக்ஸ் ஆனால் அது கோடை மலர்
Deleteஅடுத்து வதம் செய்வோம் வேங்கைகளே
Deleteஅடுத்து புது முகம் குருதியில் பூத்த குறிஞ்சி மலர்
Deleteடேங்கோ வேட்டை மறக்கா வல்லூறுகள்
Deleteஅல்லது ஸாகோர் தோன்றும் சிரிக்கும் விசித்திரம்.
Deleteநானும் 160 Gpay பண்ணிட்டேன்
Delete//வதம் செய்வோம் வேங்கைகளே//
Delete+1
மிச்சம் 22 புக்கு தான் இருக்குங்க குமார்.
Deleteகபீஸ் மீண்டும் வெளிவர..
ReplyDeleteரஃபிக் அவர்களின் சீரிய முயற்சிக்கும், ஒத்துழைப்புக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்..
சேலத்தில் கபீஷ முக்கியம் பிகில (குமாரு)
ReplyDeleteDefinitely definitely பரணி.
Deleteகண்டிப்பாக ஜனவரியில் டைகர் வந்தால் நன்றாக இருக்கும்
ReplyDeleteசார்,
ReplyDelete2024 V காமிக்ஸ் சந்தா அட்டவணையில் இடம் பெற்ற பிரின்ஸ் கதை என்னவாயிற்று. கடைசி வரை விளம்பரம் செய்யப்பட்டு இப்போது அது குறித்து எந்த தகவலும் இல்லையே.
தரைக்கு வந்த வானம் கிராபிக் நாவலுக்கும் இதே நிலை தான்.
மேற்கே போ மாவீரா இதையும் சேர்த்து கொள்ளுங்கள்.
இந்த மூன்று இதழுக்குமான update கிடைக்குமா
Spider கதை சேகரிப்புக்குதான். ஆனால் படிக்காமலும் இருக்க மாட்டேன். கடைசியாக படிப்பேன்
ReplyDeleteஜனவரி என்றாலே இனி டின் டின் தான். எப்படி ஜூலையில் லக்கி லூக் மற்றும் தீபாவளிக்கு டெக்ஸ் கதைகளோ. இனி ஜனவரியில் எதிர்பார்ப்பது டின் டின்னைத்தான்
கரெக்ட் ஜனவரி என்றால் இனி லயனில் டின்டின் தான். Shooting star. சென்னையில் அட்டகாசமாக போகும்.
DeleteTrue
Delete🙏🙏
ReplyDeleteவருடத்தின் முதல் மாதம் ஆன ஜனவரியில் ஏதாவது ஒரு கார்டூன் கதை வந்தால் மிகவும் நன்றாக இருக்கும் சார். 🙏
ReplyDeleteசூப்பர் சார்...இது வரை வந்த அட்டைகள்லயே டாப் ஸ்பைடர்தான்னு நெனச்சா கீழ கபீசும் நானும் போட்டிலருக்கேன்னு விடாப்பிடியாக தொங்குது...
ReplyDeleteநேர்ல பாப்போம்...சூப்பர் சார்...சேலம் புத்தக விழா என்னைக்கோன்னு நெனச்சா இம்மாதமேன்னு பாலை வார்த்துள்ளீர்கள்
நான்
ReplyDeleteவேங்கை உறங்காது: தீபாவளி இதழ்களில் நான் ரொம்ப ஆர்வமா முதலில் படிச்ச புக் இதுதான்.
ReplyDeleteஸாரோஃப் அறிமுக காட்சி தவிர எதுவுமே அவ்வளவு சுறுசுறுப்பாக நகரலை. நிறைய வளவளன்னு பேசிக்கொண்டே காட்சிகள் போய்க் கிட்டு இருந்தது. ஒரு கட்டத்தில எவன் எவன சுடறான்னே தெரியல.. அதை கதையிலயே ஒரு கேரக்டர் சொன்னதுதான் Ultimate Comedy. அந்த பாதிக்கப்பட்ட பொண்ணு ஸாரோஃப்ப எப்ப பார்த்தா? அப்படியே பார்த்தாலும் அவர் இவனுங்களை கொல்லதான் வந்தார்னு அவ சொல்றதெல்லாம் தமிழ் படங்களில் இன்டர்வெல் முன்னாடி ஹீரோவுக்கு பில் டப் கொடுக்கிற மாதிரி ரொம்பவே அந்நியமா ஃபீல் ஆச்சு. கடைசியில இவர் மேல வன்மத்தைக் கொட்டிக்கிட்டு இருந்த ஒருத்தனை அவர் காப்பாத்திட்டு வந்ததெல்லாம் அவர் கேரக்டரோட ஒத்தே போகலை..
என்னோட ரேட்டிங் - 5/10
அந்த கண்ணாடில தெரியும் பாருங்க ஜாரோஃப் உருவம்
Deleteபுகழ் பெற்ற ரஷ்ய வேட்டையன்தான
Deleteசந்தோஸ்... குறை சொல்லும் முன்பு நன்றாக
Deleteஒரு விசயத்தை கவனியுங்கள்... இல்லையென்றால் நீங்கள்
சொல்வது நகைப்புக்கிடமாகிவிடும்...😄❤️
நான் தான் அப்படியே பார்த்தாலும்னு அடுத்த லைன் போய்ட்டனே ப்ரோ. நான் குறை சொல்லலை, என்னோட விமர்சனத்தை முன் வைக்கிறேன். உங்களுக்கு சிரிப்பு வந்தா சிரிச்சுக்கோங்க ப்ரோ
Deleteவிமர்ச்சிக்கும் முன்பு நன்றாக ஓவியங்களையும், கதையின் போக்கையும் கவனியுங்கள் என்றுதான்
Deleteநானும் சொல்கிறேன் bro..
அந்த பெண் ஜாரோப் பின்
தழும்புகள் கொண்ட முகத்தை கண்ணாடி ஜன்னல் வழியாக பார்த்துவிட்டே அவன் யார் என்று அறிந்தேன்.. நீக்க எல்லாம் சாகப் போறது உறுதி " என்கிறாள்.. ஒருவனை உயிரோடு பிடித்துக்கொண்டு போவது
தன் மருமகள் வேட்டையாடி பழக... 😄😄❤️👍
2024லேயே பார்க்க விருப்பம் ஷெல்டன். ஸ்பைடர் வாசிக்க சேமிக்க . 80களில் ஸ்பைடரின் ரசிகன்(2012 கம் பேக்கிற்கு பிறகு ஸ்பைடர் விருப்பமில்லாமல் இருந்தேன் ) ஆனால் தற்போது ஸ்பைடர் படிக்க நன்றாகவே உள்ளது..ராஜ சேகரன் .கரூர்
ReplyDelete"பாட்டில் பூதம்" இதுவரை படிக்காத கதையென்பதால் ஆவலுடன் வெய்ட்டிங்.
ReplyDeleteஅட்டைப்பட பிரிவ்யூ வர்ணஜாலம்.
1) படிக்க/சேமிக்க.
2)ப்ளூகோட் பட்டாளம்.
ஹைய்யா புதிய பதிவு...
ReplyDeleteகானகத்தில் கறுப்பு நிழல்,
ReplyDeleteவேட்டையன் ஜாரோப் பனிபொழியும் ரஷ்யாவிற்கு போயிட்டார்னு தெரிஞ்சதும் வேட்டைக்கு மிஸ்டர் நோ களமிறங்கிட்டார்...
மிரட்டும் புலியும்,கறுப்பு ராட்சஸனாய் ஜாகுவாரும் (பேந்தீரா ஒன்கா) கொஞ்சம் முதுகுத் தண்டை சில்லிட வெச்சிடுச்சின்னு சொன்னா அது மிகையில்லை...
அதிலும் ஒரு பேனலில் ஜாகுவார் மரத்தின் பட்டையில் க்ரிக்,க்ரிக் என நகத்தில் பிறாண்டி அடையாளம் இட்டுச் செல்வது செம கெத்து...
ஒருபக்கம் லோலாவின் அதீத புகைப்பட ஆர்வம்,அரியவகை உயிரினத்தின் மீதான அக்கறை,இன்னொருபுறம் வேட்டையில் வெறியாட்டம் போட்டு மனதளவில் தாகச்சாந்தி அடையும் வேட்டையன் பெசோவா,மறுபுறம் தன்னை நல்லதொரு வேட்டையாடியாய் நிலைநிறுத்திக் கொள்ளும் ஆர்வத்திலிருக்கும் மிஸ்டர் வே,இதெல்லாம் போதாதுன்னு அச்சுறுத்தும் அமேஸானில் வாழும் செவ்விந்தியர்கள் கூட்டம்னு கதைநகர்வு அழகாய் பின்னப்பட்டுள்ளது...
மொத்தத்தில் கானகத்திலொரு அபாரமான வேட்டை...
அனல்பறக்கும் வேட்டையைப் போல கதைக்களத்திலும் அனல் பறக்கிறது...
Super
Deleteமிகச் சரியான விமர்சனம் அண்ணா. இதற்கு தான் நீங்கள் விமர்சனம் எழுத வேண்டும் என்பது. நான் கதையை படிக்கும் போது உணர்ந்ததை அப்படியே வார்த்தைகளில் கொண்டு வந்து இருக்கீங்க
Deleteசிறப்பு...
Deleteவேங்கை என்றும் உறங்காது,
ReplyDelete"பொறியிலிருந்து தப்பி விட்டதாகக் கருதும் எதிராளி தனது முன் ஜாக்கிரதைகளைத் தளர்த்திக் கொள்ளும் நொடியில் முதல்பொறி முடுக்கி விடும் தொடர்பொறிகள்"
-செம டயலாக்,மாஸ் Entry ஜாரோப்...
நீயொரு சேடிஸ்ட் என்ற கேப்டனின் குற்றச்சாட்டிற்கு "நோ நானொரு வேட்டைக்காரன் அது மட்டுமே எனது அடையாளம்" என்பதாகட்டும்...
மாஸ்கோவின் வேட்டையில்-" ஒப்பற்ற மனிதன் தனக்குரியதை தன்னிடமே கோருவான்" எனச்சொல்லி கெத்தாய் விமானத்தில் இருந்து குதிப்பதாகட்டும்...
உயிரை உருக்கி எடுக்கும் பனியில் அசராமல் மார்க்கஸ் ஒளரெலியஸின் பொன்மொழியை உதிர்ப்பதாகட்டும்...
கன்னிவெடிகளில் இருந்து சூசகமாய் நகர்ந்து குழுவை நடத்தி செல்வதாகட்டும்...
அயற்சியே இல்லாமல் ஓய்வில்லா ராட்ஸனாய் நடந்து கொண்டே இருப்பதாகட்டும்...
முன்னாள் காதலி லெட்மிலாவை சந்திக்கும் வேளைதனில் சற்றே இழையோடும் புன்னகையும்,நெகிழ்வான உடல்மொழியாகட்டும்...
கையாள முடியாத எந்தவொரு சூழலுக்கும்,இயற்கை மனிதனை ஆட்படுத்துவதில்லை என கெத்தாய் சொல்லி சரண்டர் ஆவதிலாகட்டும்...
இரை கொல்லப்படுவதை ரசித்து இன்பமும்,மனநிறைவும் பெறும் நாம் இருவரும் ஒரே ஜாதிதானே எனும் கர்னல் விட்மேனிடம் "வேட்டை நியதிகளின்படி இரைக்கு தப்பிக்கும் வாய்ப்பொன்று கொடுத்தாக வேண்டுமென்பது நியதி,நீ பெண்கள், குழந்தைகளை அழித்தொழிக்கும் கோழை என விட்மேனை எள்ளி நகையாடுவதாகட்டும்...
உனக்குள் ஒட்டிக் கொண்டிருந்த கொஞ்சநஞ்ச மனிதநேயமும் செத்துவிட்டதா மம்மின்னு பஞ்ச் அடித்து மம்மியைப் பொழப்பதாகட்டும்...
அனாஸ்டாஸியாவிற்கு நன்றி சொல்லி தனக்கு இணையான ஒரு வேட்டையாடியாய் வளர்த்தெடுப்பதாகட்டும்...
-ஜாரோப் கேரக்டரின் டிசைன் அற்புதமான வடிவமைப்புதான்...
இறுதியாய் ஒரு கேள்வி நம் மனதில் எழாதிருப்பின் வியப்பே "ஜாரோப் நீங்க நல்லவரா ?! கெட்டவரா ?!"...
" எதிரியைப் பழிவாங்கச் சிறந்த வழி,அவனை ஒத்திராதிருப்பதே"...
"கோபத்திற்கான காரணங்களைக் காட்டிலும் பன்மடங்கு கொடூரமானவை அதன் விளைவுகள்"
- மார்க்கஸ் ஓளரெலியஸின் சிந்திக்கத் தூண்டும் வரிகள்...
வசனங்கள் கதைக்கு பெரும் பலம்...
ஓவியங்கள் சிறப்பு, வர்ணச் சேர்கைகள் சிறப்பாய் இருப்பினும் சில இடங்களில் காட்சியமைப்புகள் கொஞ்சம் இருள் பிண்ணனியில் இருப்பதாலோ என்னவோ புரிந்துக் கொள்ள சற்றே கடினமாய் இருந்தது...
-ஜாரோப் மாஸ்கோ சாகஸத்திலும் அசத்திட்டார்தான் சொல்லனும்...
அபாரமான கதைநகர்வு,அருமையானதொரு வாசிப்பானுபவம்...
ரசித்து படித்து இருக்கீங்க
Deleteஆமாம் பரணி. ரசித்து ரசித்து படித்திருக்கிறார்.
Deleteசூப்பர் நண்பரே
Deleteஉங்களுடைய விமர்சனம் கதையை வேறொரு லெவலில் சொல்கிறது அறிவரசு ஐயா!
Deleteஅடேங்கப்பா லேட் ஆக விமர்சனம் போட்டாலும். உங்கள் பார்வையில் மீண்டும் என்னை ஒரு தடவை புத்தகத்தை படிக்கத் தூண்டும் விமர்சனம். அருமை அண்ணா
Deleteநன்றி தம்பி...
DeleteDiscoverpoo, மெட்டுகளின் தொகுப்பாளர் க்ளா,கணேஷ் ஜி,PFB...
Deleteநன்றிகள் நண்பர்களே...
பனி மண்டலப் போராளிகள் முதல் இதழ் முடிச்சிட்டு இரண்டாம் இதழ் வாசிப்பில் சிறப்பா போய்கிட்டு இருக்கு...
ReplyDeleteதீபாவளி சிறப்பிதழ்களின் மூன்று ஸ்பெஷல்களின் களமுமே ஒரு காடும்+வேட்டைக்களமுமாய்,
ReplyDeleteபனியும்+போரும்+வேட்டைக்களமுமாய்,
பனியும்+தேடுதலும்+வேட்டைக்களமுமாய்....
செம சம்பவங்களா இருக்கு...
ஆமா இந்த முறை தீபாவளி நமக்கெல்லாம் புத்தகம் கையில் கிடைத்த போதே தொடங்கி விட்டது. செம்ம தீபாவளி மலர்கள்.
Deleteயெஸ்...
Deleteபிரின்ஸ் கதை எப்போது வருங்க, ஆசிரியரே
ReplyDeleteஅம்மாவுக்கு பிடித்த ஹீரோ, எங்க இன்னும் காணோம் என்று கேட்டார்
அம்மா மாதம் மாதம் எல்லாம் கதைகளையும் படித்து விடுபவர்
கோப்புகள் இன்னமும் அங்கே டிஜிட்டலில் ரெடியாகலை ரம்யா!
Deleteநன்றிகள் ஆசிரயரே 💐💐💐
Delete// அடுத்த தீபாவளிக்கு இன்னும் ஒரு படி கூடுதலாய்க் கலக்கிட என்ன செய்திடலாமென்ற யோசனையோடே //
ReplyDeleteஇந்த ஸ்லிப்கேஸ் ஐடியா சிறப்பா இருக்கு சார்,அடுத்த தீபாவளிக்கும் இதேபோல் பின்பற்றலாமே,ஆண்டிற்கு ஒருமுறையாவது ஸ்லிப்கேஸில் பெரியதொரு டெக்ஸ் சாகஸம்...
என்ன ஒரு குறைன்னா,ஸ்லிப்கேஸ் ரொம்ப சன்னமா இருப்பதுதான்,கெட்டி ஸ்லிப்கேஸ் தனியா சில மாடல்களில் ரெடி பண்ணி புத்தகவிழாக்களில் விரும்புவோர் வாங்கிக் கொள்ளுமாறு வெளியிட்டால் நன்றாக இருக்குமே சார்,முடிந்தால் சேலம் புத்தக விழாவில் துவங்கலாமே,அதில் ஏதேனும் நடைமுறை சிக்கல்கள் உள்ளனவா ?!
ஒரு டப்பி நூறு ரூபாய் ஆகும் என்பது மட்டுமே சிக்கல் சார் 🤕
DeleteAnd ஒரு கணிசமான quantity க்கு ஆர்டர் தந்தாகணும் என்பது அடுத்த சிக்கல்!
Deleteவிலை ஒரு தடை இல்லை சார்,தரமான பொருள் எனில் அதற்கு நிறைய பேர் ஆதரவு அளிப்பர்,கணிசமான Quantity ஆர்டர் எனில் அதை எப்படி மார்க்கெட்டிங் செய்வது என்று உங்களுக்கு தெரிந்திருக்குமே,வாசகர்களின் கணிசமான ஆதரவு இருப்பின் அது சாத்தியம்தானே...
Delete// பாட்டில் பூதம்" + 2 சிறுகதைகள் என்ற காம்போவில் கலக்கவுள்ளது! //
ReplyDeleteரொம்ப வருஷ எதிர்பார்ப்பு, பாட்டில் பூதம் வருவது மகிழ்ச்சி...
//இங்கே நண்பர் ரபீக்கின் பங்களிப்பு மட்டும் இல்லாது போயின் இந்த இதழே சாத்தியமாகியிராது என்பதே யதார்த்தம்! Thanks a ton Sir! //
ReplyDeleteநன்றிகள் ரபீக் சகோதரரே 💐💐💐💐💐💐💐💐💐
வாழ்த்துக்கள் நண்பரே
Deleteநன்றிகள் ரஃபிக் அவர்களே...
Delete// So “க்ளாஸிக் சூப்பர் ஸ்டார்ஸ் ஸ்பெஷல் - 3” preview இதோ! //
ReplyDeleteஅட்டைப்படத்தில் ஸ்பைடர் இன்னும் கொஞ்சம் கெத்தாய் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்...
// 2.2025-ன் ஏதாச்சும் ஒற்றை இதழை ஜனவரியிலேயே பார்க்க விரும்புவீர்கள் எனும் பட்சத்தில் what will be that? //
ReplyDeleteV காமிக்சில்-மார்ட்டின் அல்லது எட்டும் தூரத்தில் யுத்தம்...
முத்துவில்-டேங்கோ அல்லது ஜானி...
லயனில் உதிரம் பொழியும் நிலவே அல்லது வேய்ன் ஷெல்டன்...
சார் - ஒரு புக் பரிந்துரை கேட்டேன் - அரை டஜனை அடுக்கி விட்டீர்களே 😃
Delete😃😃😃
Deleteஆக El,, 80 -யை ஸ்பைடரில் ஆரம்பிக்கிறீர்கள்..
ReplyDeleteபரவாயில்லை..
ஜனவரி 2025-யில் மாடஸ்டி ஸ்பெஷலை வெளியிடுங்கள்..
(மன்னித்து விட்டு விடுகிறோம்..)
ஸ்பைடர் பார்க்க...படிக்க...காலப்பயணம் போக
ReplyDeleteஸ்லிப் கேசுல தீபாவளி மலர் போல கதம்பக்கதைகள்...ஆல்ஃபா...சிஸ்கோ.....தோர்கள்....அந்த கௌபாய்.....அழகிஃபெலிசிடி...வேய்ன் ஷெல்டன்...முத்து ஆண்டு மலர் ஸ்பெசல்...நெவர் பிஃபோர் போல அதிரனும்
ReplyDeleteஅந்த தலைமாட்டிலே உறங்குற "ஒற்றை நொடி - ஒன்பது தோட்டாக்கள் ' பொஸ்தவத்தை முழுசா முதல்லே படிச்சிட்டு அப்புறமா, அடுத்தடுத்து அதிர வைக்கிறது பத்தி பாத்துப்போம் தெய்வமே!
DeleteSalem Book Fair 2024 📚📖
ReplyDeleteDates 📅: 29 November - 09 December 2024 (11 Days)
Location 📍: Corporation Ground (Near Dr. M.G.R Central Bus Terminus)
Stalls 🚪: 150+
Jointly Organised by Salem District Administration & BAPASI
Okay
Deleteகேப்டன் பிரின்ஸ், இரட்டை வேட்டையர், ஜான் மாஸ்டர் 2025, இடையே எப்படியாவது களம் காண வைத்து விடுங்கள் ஜி
ReplyDelete// 2025-ன் ஏதாச்சும் ஒற்றை இதழை ஜனவரியிலேயே பார்க்க விரும்புவீர்கள் எனும் பட்சத்தில் what will be that? //
ReplyDeleteவேய்ன் ஷெல்டன்
சூப்பர் ஸ்பைடர் அட்டைப்படம் பட்டையை கிளப்புகிறது!
ReplyDeleteகபீஷ் - வண்ணக் கலவைகள் வாவ் சொல்ல வைக்கிறது! முதல் தடவையாக முழு வண்ணத்தில் கபீஷை காணும் வாய்ப்புக்காக காத்திருக்கிறேன்..
இந்த டான்ஸ் போடற ஸ்பைடர் தான் ஈரோட்டில் போட்டோ பூத்தில் கட் அவுட்டாக நின்றார் சார்!
Deleteமுத்து ஆண்டு மலரில் லார்கோ அல்லது தோர்கல் வர வேண்டும் என்பது எனது விருப்பம் சார். They both deserve their spot in Muthu ஆண்டு மலர்.
ReplyDeleteதோர்கலுக்கு 2025-ல் சிங்கிள் ஆல்பம் தான் சார் 🥴
Deleteஅது தெரியும் சார். கொஞ்சம் சீக்கிரமே அடுத்த வருடம் தோர்கல் வெளியிடலாம் சார். Sacrifice.
Deleteஅறிவரசு ரவி சார் ."ஜாரோப்"வேட்டையனுக்கு அருமையான விமர்சனம் மிகமிக ரசித்து படித்துள்ளீர்கள்
ReplyDeleteநன்றி ஜி...
Deleteஜனவரியில் - முத்து ஆண்டு மலராக லார்கோ விஞ்ச் வந்தால்
ReplyDeleteசிறப்பாக இருக்கும் சார்..
அந்த இதழ் தலைப்புக்காகவே
இதை ஜனவரியில் விரும்புகிறேன்.
கபிஷ் மற்றும் ஸ்பைடர் இரண்டு புத்தகங்களுக்கும் காலையிலேயே Rs.160 பணம் GPay பண்ணி விட்டேன்.
ReplyDelete2025 ஜனவரியின் முதல் இதழாக லார்கோ வருவதை விரும்புகிறேன்.
ReplyDelete+1
Deleteபனி மண்டலப் போராளிகள்,
ReplyDeleteவாசிப்பினிடையே இந்த சாகஸப் பயணத்தில் ஏற்கனவே பங்கேற்றது போலவும்,டெரர்,எரெபெஸ் கப்பல்கள் பெயரை வாசித்தது போலவும் உணர்வு எழுந்தது ஏனோ தெரியலை ?!
ஒருவித தேஜாவு போல...
அப்பப்பா எவ்வளவு பெரிய சாகஸப் பயணம்,எத்தனை நிகழ்வுகள், எத்தனை போராட்டங்கள்,ஏகப்பட்ட டுமீல்கள்,நிறைய நரவேட்டைகள்,உயிர் காக்கும் போராட்டங்கள்,வழி நெடுகிலும் இரத்தக் களறிகள்,மனதை உலுக்கும் உயிரிழப்புகள், நெடியதொரு போரட்டத்தில்
டோர்னுக் அசாத்தியமான வலிமை கொண்ட கதாபாத்திரம்...
கானல் தோற்றம்,டக்குகாக் அசுரக் கரடி,நரமாமிச உண்ணிகள்,கொடிய பனிப்பொழிவு,பயண அயற்சியில் கலக்கம் கொள்ளும் சிந்தனைகள்,பசிக் கொடுமையில் ஏற்படும் அறிவுக் குழப்பங்கள்...
ஒரு கட்டத்தில் கேப்டன் பெய்லீ குழுவிற்கு படகு பயணித்தினிடையே பனியும்,இருளும் சூழ்ந்த பயணத்தில் சூரியஒளி கதிர்களைக் கண்டவுடன் முகத்தில் தென்படும் மகிழ்ச்சி அடடே,அழகாய் உருவகப்படுத்தப்பட்டுள்ளது... இருளுக்கும்,ஒளிக்குமான வித்தியாசமும்,மனித மனநிலையின் வெளிப்பாடும்...
சீரியஸான கதை நகர்வில் கார்ஸனின் பஞ்ச்கள் ஆங்காங்கே ஆசுவாசப்படுத்துகிறது..
"புலம்புவோர் சங்கம் இப்போது ஆரூடம் சொல்வோர் சங்கம் ஆகிப் போச்சா ?!"
கதையோட்டத்தில் டைகர் ஜாக்கின் பங்களிப்பு அபாரம்...
டல்லாஸ்,டாவ்ன் பாத்திரப் படைப்புகளும் தனித்துவம் வாய்ந்தவை...
பெரும்பயணக் களத்தின் கதையோட்டத்தை முழுமையாக புரிந்து கொண்டு சரியாக உள்வாங்கி அழகான மொழிபெயர்ப்பில் கொடுத்ததே மாபெரும் உழைப்பு சார்...
வரலாற்றுக் களத்தில் மாஸ் நாயகர்களை அழகாய் பொருத்தி சரியான கலவையில் ஆக்ஷன்,வரலாற்றுத் தரவுகள்,கொஞ்சம் புனைவுகள்,பழங்குடியினர் நம்பிக்கைகள்,உலவும் மூடச் சிந்தனைகள்,பனிப்படர்ந்த நிலப்பரப்பின் சவாலான வாழ்வியல் சிக்கல்கள் என அழகொனதொரு மாலையை அற்புதச் சரமாய் கோர்த்தெடுத்து கொடுத்த கதாசிரியரைப் பாராட்டித்தான் ஆகவேண்டும்...
டெக்ஸ் எனும் வரலாற்று நாயகனின் மணிமகுடத்தில் மற்றுமொரு வைரக்கல்,டெக்ஸின் டாப் 10 சாகஸத்தில் வைக்க வேண்டிய பொக்கிஷ சாகஸம் என்பது எனது தனிப்பட்ட கருத்து...
பனி மண்டலப் போராளிகள்,
Deleteவாசிப்பினிடையே இந்த சாகஸப் பயணத்தில் ஏற்கனவே பங்கேற்றது போலவும்,டெரர்,எரெபெஸ் கப்பல்கள் பெயரை வாசித்தது போலவும் உணர்வு எழுந்தது ஏனோ தெரியலை ?!
ஒருவித தேஜாவு போல...//
ஒருமுறை ஆர்டிக் அசுரன் மார்ட்டின் கதை படித்து பாருங்கள் ஹரிவரசு சார்.
ஓகே சார்...
Deleteநோ deja vu சார் - போன மார்ட்டின் சாகசத்தின் நினைவலைகள் மட்டுமே! இதே களத்தில் சமகால சாகசம் அது ; டெக்ஸ் & டீமோ 150 ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தில் களமாடுகிறார்கள்!
Deleteஆம் சார்...
Delete/// படகு பயணித்தினிடையே பனியும்,இருளும் சூழ்ந்த பயணத்தில் சூரியஒளி கதிர்களைக் கண்டவுடன் முகத்தில் தென்படும் மகிழ்ச்சி அடடே,அழகாய் உருவகப்படுத்தப்பட்டுள்ளது... இருளுக்கும்,ஒளிக்குமான வித்தியாசமும்,மனித மனநிலையின் வெளிப்பாடும்...///
ReplyDeleteஇது அனுபவபூர்வமான உண்மை சார். என் மகள் அமெரிக்காவில் டெட்ராய்டில் வசிக்கிறார். அங்கே அக்டோபர் முதல் மார்ச் வரை கடும் பனி நிலவும். தரை இரண்டடி உயரத்திற்கு பனியால் மூடப்பட்டு இருக்கும். சுற்றுப்புறம் எங்கும் பனி மூடி இருக்கும்.காலை 11 மணி வரை வெளிச்சம் இருக்காது. மதியம் 3 மணிக்கு மேல் இருட்டத் தொடங்கிவிடும். அவர்கள் அந்த நாட்களில் சூரிய வெளிச்சம் வந்தால் அவ்வளவு சந்தோஷப்படுவார்கள்.
சரிதான் பத்து சார்,வர்ணங்களுக்கும் மனசிந்தனைகளுக்கும் ஒற்றுமை இருப்பது போல,வெளிச்சத்திற்கும்,மனச் சிந்தனைகளுக்கும் தொடர்பு இருக்கும் போல...
Deleteஉண்மை
Deleteவெளிச்சம் ; இருள், மனித சிந்தனைகள் - செயல்கள் மீது எவ்வித தாக்கங்களை ஏற்படுத்துகின்றன என்பது குறித்து வண்டி வண்டியாய் ஆய்வுகள் உள்ளன சார்! நம்ம செனா அனா சாரை உசுப்பி விடுங்க - விவரிப்பார்!
Delete1. இரண்டிற்கும்தான்...
ReplyDelete2. இளம் டெக்ஸ் அல்லது லார்கோ
சார்! அந்த ஆப்பிரிக்க சதி + மாஸ்கோவில் மாஸ்டர்... மறந்துட்டிங்களே?
நான் மறக்கலை நண்பரே ; டிஜிட்டல் கோப்புகள் தயாராகும் வரை நாம் பொறுக்க வேண்டியிருக்கும் என்பதை நீங்கள் தான் மறந்து விட்டீர்கள்!
Deleteநம் அவசரத்துக்கு அவர்களை துரிதப்படுத்த முடியாதே - ஒரு நூறு பணிகளில் அவர்களுக்கு இதுவும் ஒன்று சார்!
கானகத்தில் கருப்பு நிழல்...!
ReplyDeleteஇந்த முறையும் சோடை போகாத துரத்தலை அமேசான் கானகங்களில் நிகழ்த்தி காட்டியுள்ளார் மிஸ்டர் நோ...!
மனித வேட்டையாடும் புலி, அந்த புலியை வேட்டையாடும் பெசோவா, வனவாசிகள் மற்றும் மிஸ்டர் நோ குழுவினர்.
இவர்களிடமெல்லாம் தப்பிப் பிழைத்து அமேசான் காடுகளுக்குள் வாழ்ந்து வந்த கரும்புலியின் சோகக்கதை இது!
என்னதான் மனிதன் அறிவில் மேம்பட்ட மிருகம் என்றாலும், என்றைக்குமே அவன் பண்பட்ட மிருகமாக இருக்க மாட்டான் என்பது இந்த கதையிலும் உணர்த்தப்படுகிறது.
புலி அதனுடைய இயற்கையான வாழிடத்தில் இருக்கிறது. போட்டோ பிடிக்கப் போகும் மனிதர்களாலும், வேட்டையாடும் மனிதர்களாலும் மற்றும் காட்டுக்குள் கிராமம் அமைத்து குடியிருக்கும் மனிதர்களாலும் அதற்கு தொல்லைகள் ஏற்படும் போது அந்த ஐந்தறிவு ஜீவன் தனக்குத் தெரிந்ததை செய்கிறது.
புலியை கொல்லாமல் மயக்கமடையச் செய்ய விரும்பும் வனவாசிகள், நகர மாந்தர்களை விட இங்கே மெம்பட்டவர்களாக தெரிகிறார்கள்...!
கதையின் முதல் பக்கத்தில் இருந்து, இறுதி பக்கங்கள் வரையிலும் கரும்புலியின் வேகம் ஆர்ப்பரிக்க, கதையும் வேகமாக நகர்ந்தது. மற்றபடி சராசரியான கதையே இது!
மிஸ்டர் நோ - ஏமாற்றவில்லை
8/10!
முதல் பாகத்தில் கெட்டவனாக சித்தரிக்கப்பட்ட ஜாரோப்இரண்டாம் பாகத்தில் அவரது தாயாரைப் பார்க்கும்போது அவரைவிட நல்லவராகவே தெரிகிறார் அடுத்த பாகத்தில் அனாஸ்டாஸியாவைப் பார்க்கும் போது ஜாரோப் இவர்கள் இருவரையும்விடஎவ்வளவோ பரவாயில்லை என்று தோன்ற செய்வார்களோ?
ReplyDeleteயார் கண்டது சார் - ஜாரோப்புக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிக்க தேவைப்படுமோ - என்னமோ?!
Deleteயாரை கொ. ப. செ. வாக போடலாம்னு நீங்களே சொல்லுங்களேன்?!
கொலை பண்ணும் செயலாளரா சார்
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteSir, this needs to be sent to the office please ; they are the ones who can reply on this.
DeleteThorgal அடுத்த மாதம்?
ReplyDeleteஆமாங்க சகோ
Deleteஇந்த மாத தீபாவளி புத்தகங்கள் கிடைக்கப்பெற்றன டெக்ஸ் புக் ஸ்லிப் கேசில் சும்மா பட்டையை கிளப்புகிறது. அருமையான தயாரிப்புத் தரம். European standard. Keep it up sir !
ReplyDelete// டெக்ஸ் புக் ஸ்லிப் கேசில் சும்மா பட்டையை கிளப்புகிறது. //
Deleteஉண்மை, உண்மை...
அடடே... அதுக்குள்ளாற வந்திடுச்சா சார்? சூப்பர்!
Deleteதீபாவளிக்கு ஸ்பெஷல்ஸ் சூப்பர்.... சும்மா அள்ளுது போங்க.... 😍🥰💐💐💐💐💐
ReplyDeleteதேங்க்ஸ் ரபீக் ராஜா சார்
ReplyDelete