நண்பர்களே,
உஷார் :
1 .இன்னொரு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் இது !
2.போன பதிவு : ஆந்தையன் - the traveler-ன் பதிவென்பதால் சற்றே கெக்கேபிக்கே ரகமாக இருந்திருக்கலாம் ! இதுவோ ஆந்தையன் - the editor-ன் பதிவென்பதால் has to be businesslike ! So இது அதுவல்ல....அது இதுவல்ல..!
வணக்கம் . முதல் பாகம் நன்றாக அமைந்து விட்டால், இறுதிப் பாகம் அதே அளவினில் அமைவதில்லை என்பதொரு பொதுவான jinx ! பார்க்கலாமே - இந்த ப்ராங்க்பர்ட் டயரியின் இறுதிப் பாகம் அந்த நியதிக்குக் கட்டுப்படுகிறதா- விதிவிலக்காகிறதா என்று!
அக்டோபர்...20...! மப்பும், மந்தாரமுமான அந்த ஜெர்மானியக் காலைப் பொழுதினில் புத்தக விழாவின் வாயிலில் நின்றபடிக்கே என் கையிலிருந்த காகிதத்தை வாசிக்கலானேன் - யாரை ? எத்தனை மணிக்குச் சந்திக்க அப்பாயிண்ட்மெண்ட் உள்ளதென்று ! இளம் குளிருக்கு ஆளாளுக்கு மப்ளர்களுக்குள்ளும், கோட்களுக்குள்ளும் புதைந்து கிடக்க, நானோ “அபியும்... நானும்” படத்து பிரகாஷ்ராஜ் போல, ஒரேயொரு மெல்லிசான ஸ்வெட்டரை போட்டுக்கினு- ”குளிரலியே... எனக்குக் குளிரலியே...” என்பதாய் சீன் போட்டுக் கொண்டிருந்தேன்! 2020-க்கு முன்னே வரையிலும், பையைத் தூக்கிக் கொண்டு தேசாந்திரம் போவதெல்லாம் அடிக்கடியான நிகழ்வுகளாக இருந்து வந்ததால் -'இந்த மாசத்துக்கு ; இந்த ஊருக்கு ; இந்த ட்ரெஸ் தோதுப்படும் ; இதை-இதை எடுத்துப் போகணும்' - என்பதெல்லாம் அத்துப்படியாக இருந்து வந்தது ! ஆனால் கொரோனா புண்ணியவானின் உபயத்தில் வீட்டிலேயே கிட்டத்தட்ட 36 மாதங்களாய்க் குப்பை கொட்டிக் கொண்டதன் பலன் - துணிகளையும் காணலை ; கண்ணில் படுபவைகளோ தொந்திக்கும் சேரலை ! வாசலிலேயே நின்றிராமல், உள்ளே புகுந்தால் ஊதைக் காற்று படுத்தாது என்பதால் உள்ளுக்குள் புகுந்தேன் - முதுகில் செமையாய் உப்புமூட்டை நமது காமிக்ஸ் மாதிரிகளுடன் ! அதிலும் எனது முதல் சந்திப்பே போனெலியுடன் எனும் போது, அவர்களுக்கென கொண்டு சென்றிருந்த டெக்ஸ் ஹார்ட்கவர் இதழ்களெல்லாம் பிசாசுகளாய்க் கனத்தன !
ஆளாளுக்கு செல்போன்களில் வைத்திருந்த டிக்கெட்களை வாயிலில் நீட்ட - “ப்ளியாங் ... ப்ளியாங்”! என்ற ஓசைகளோடு அவற்றைச் சரிபார்த்து உள்ளே அனுமதித்துக் கொண்டிருந்தனர். எனக்கோ என் முறை வரும் வரை படபடப்பு - 'இல்லியே... இந்த மூஞ்சியைப் பார்த்தால்லாம் பத்திரிகையாளனாட்டம் தெரியலியே ! போயி உண்டான டிக்கெட்டை வாங்கிட்டு வா!' என்று மூக்கில் குத்தி திருப்பியனுப்பிவிடுவார்களோ - என்று! ஆனால் எனக்கும் ஒரு 'ப்ளியாம்'... ஒரு புன்னகை... and I was into the Fair !
காகிதத்தில் கிறுக்கியிருந்த அட்டவணையில், போனெலியின் பிரதிநிதிகளுடனான சந்திப்பு காலை 10-30க்கு என்றிருந்தது ! அவர்களோ புத்தக விழாவினில் ஸ்டால் எடுத்திருக்கவில்லை ! மாறாக - புத்தக விழா க்ரவுண்டுடனே இணைக்கப்பட்டிருந்த ஒரு சொகுசு ஹோட்டலில் தங்கி, அங்கே முதல் மாடியில் இருந்த ஹாலை 2 நாட்களுக்கு வாடகைக்கு எடுத்திருந்தனர். So அவர்களைச் சந்திக்க Hotel Maritim என்ற அந்த இலக்கைத் தேடி நடக்க ஆரம்பித்தேன்! பொதுவாகவே வழி கண்டுபிடிப்பதில் நான் நயம் புளி! கூகுள் மேப்பைப் போட்டுக் கொண்டாலும் சரி, GPS-ஐ ஆன் செய்து பயணித்தாலும் சரி, கனகச்சிதமாய் தப்பான ரூட்டில் போவது எனக்குக் கைவந்த கலை! So புலிக்கேசி பாணியில் “இப்டிக்கா போனா பாதாளக் கிணறு ; இது தான் வந்த பாதை!” ! என்று சுற்றிச் சுற்றி வந்தேன் ! மணி வேறு பத்தேகால் ஆகியிருக்க, பதட்டமும் தொற்றிக் கொண்டது! ஒருவழியாய் இரண்டு தப்பான மாடிகளையும், இரண்டு தவறான கட்டிடங்களையும் கடந்த பிற்பாடு, ஹோட்டலுக்கான இணைப்பு இடத்தைக் கண்டுபிடித்து விட்டேன்! உசரமான கண்ணாடிக் கதவுகள் சாத்தி நிற்க, அவற்றைப் பிடித்து தள்ளிப் பார்த்தால்... ஊஹும்...'கிச்'சென்று பூட்டிக் கிடப்பது புரிந்தது ! இது ஆகுறதுக்கில்லே...! மரியாதையாய் வெளியே போய், கொஞ்சம் சுற்றி என்றாலும் ஹோட்டலுக்கு சாலை வழியாகவே போய்விடலாமென்று தீர்மானித்தேன் ! உள்ளே புகுந்த வேகத்தை வி்ட இரட்டிப்பு துரிதத்துடன் நான் வெளியேறுவதைப் பார்த்த வாயிலில் இருந்த பெண்ணுக்கோ வியப்பு! கவுண்டரின் அந்த ரொ-மா-ன்-டி-க் புன்னகையை அந்தத் திக்கில் உதிர்த்தபடிக்கே, ஓட்டமும், நடையுமாய்ப் போனவன் மூன்றே நிமிடங்களில், Maritim என்ற கம்பீரமான கண்ணாடி முகப்புடனான ஹோட்டலை எட்டி விட்டேன்! “இதுக்கு பேரு தான் பேலஸு!” என்ற வடிவேலுவின் டயலாக் தான் நினைவுக்கு வந்தது - உள்ளாற கால்வைத்த நொடியிலேயே ! திரும்பும் திக்கிலெல்லாம் செல்வச் செழிப்பின் அடையாளங்கள் விரவிக் கிடக்க, வேகமாய் ரெஸ்ட்ரூமைத் தேடிப் போனேன் - காற்றில் திசைக்கு ஒன்றாய் நட்டுக் கொண்டிருந்த கேசத்தோடு சமாதானம் பேசி, லேசாய்ப் படியச் செய்ய! ஒரு மாதிரியாய் அவர்களது மீட்டிங் ஹாலைத் தேடிப்பிடித்துப் போய் விசிட்டிங் கார்டை நீட்டினால் - நிறையப்பேர் ஓவர் கோட், கைகளில் பெட்டிகள் என்று நிற்பது தெரிந்தது ! “இன்ன மெரி...இன்ன மெரி, நான் இந்தியாவிலேர்ந்து வர்றேன்... இன்ன மெரி..இன்ன மெரி....மேடம் xxx-கிட்டே எனக்கொரு அப்பாயிண்ட்மெண்ட் உள்ளது !" என்று டேபிளின் நின்று கொண்டிருந்த யுவதியிடம் சொன்னேன் ! அவர் என்னை ஒரு தினுசாய்ப் பார்த்தார்! 'ஒரு வேளை படிய வச்சது மறுக்கா நட்டுக்கிச்சோ? ... அல்லது ஒரு வேளை, அப்பாயின்ட்மெண்டை தப்பாகக் குறித்துக் கொண்டு லேட்டாகவோ ; சீக்கிரமாகவோ வந்து தொலைத்து விட்டேனோ?' என்ற யோசனையோடே மீட்டிங் ஹாலுக்குள் நுழைந்தேன் ! குறைந்தது ஒரு டஜன் தனித் தனி மேஜைகள் & ஒவ்வொன்றிலும் 4 நாற்காலிகள் என்று ஜம்மென்று காட்சியளித்தது ! ஓரங்களிலோ கொஞ்சமாய் காமிக்ஸ் இதழ்கள் நின்று கொண்டிருந்தன !
என்னைப் பார்த்தவுடனே 'ஓ... மை காட்!' என்றபடிக்கே வந்தார் – நான் சந்திக்கவிருந்த நிர்வாகி ! அவருமே ஓவர் கோட்... கையில் பிரயாணத்துக்கான பெட்டி சகிதம் நிற்க, எனக்கு ஏதோ உதைத்தது! “ரொம்ப சாரி ... ரொம்ப சாரி” என்றபடிக்கே அவர் என் கையைக் குலுக்க, நான் நம்ம ட்ரேட்மார்க் முழியை முழித்து வைத்தேன்! தொடர்ந்த 2 நிமிடங்களில் அவர் பொரிந்ததன் சாராம்சம் இது தான் : 19 & 20 ஆகிய இரு தேதிகளுக்கு மாத்திரமே ப்ராங்பர்ட் புரோகிராம் அவர்களுக்கு! அன்று மாலை இத்தாலிக்குத் திரும்ப ஜெர்மானிய ஏர்லைன்ஸான Lufthansa-வில் அவர்களுக்கு டிக்கெட்! ஆனால் அன்று Lufthansa -வின் சார்பு நிறுவனமான German Wings என்ற குறைந்த கட்டண சர்வீஸின் பணியாட்கள் திடீரென்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பார்கள் போலும்! அவர்களுக்குத் தோள்தர Lufthansa பணியாட்களில் ஒரு பகுதியினருமே முன்வர, அன்றைக்கு மதியம் முதலாய் பிராங்க்பர்டிலிருந்து கிளம்பும் நிறைய விமானங்கள், காலவரையின்றி ரத்தாகிடும் அறிவிப்பு வந்துள்ளது போலும்! So நின்ற நிற்பில், அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஸ்ட்ரைக் முடியும் வரை ஊருக்குத் திரும்ப முடியாது என்பது அவர்களது இக்கட்டு ! தவிர, அடுத்த சில நாட்களிலேயே இத்தாலியில், லூக்கா நகரில் ஐரோப்பாவின் பிரம்மாண்டமான காமிக்ஸ் திருவிழா அரங்கேறவிருந்த நிலையில், அதன் டாப் பங்கேற்பாளர்களான போனெலி முன்நின்று ஏகமாய் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டிய சூழல் ! So இந்த எதிர்பாரா வேலைநிறுத்தத்தால் , புத்தக விழாச் சந்திப்புகள் சார்ந்த திட்டமிடல்கள் நிறையவே சொதப்பிவிட்ட தாளா வருத்தம் அவர்களுக்கு ! And அவசரமாய்க் கிளம்பி, ஏர்போர்ட்டுக்கு ஓட்டமாய் ஓட வேண்டியுள்ளது என சங்கடத்தோடு விளக்கினார் ! அவர்களது அன்றாடங்கள் எத்தனை அசாத்திய பிஸியான பொழுதுகள் என்பதை இத்தாலியிலேயே நேரில் பார்த்தவன் என்ற முறையில், அவர்களின் இக்கட்டு எனக்குப் பூரணமாய்ப் புரிந்தது !
'என்னடா இது சோதனை - முதல் அப்பாயிண்ட்மென்டே இப்படி ஆகிப் போய்விட்டதே' என்று உள்ளுக்குள் காற்று பிடுங்கியது போலிருந்து ! ! ஆனால் அவர்களது சங்கடங்களும் புரியாது இல்லை ! So நின்று பேசிக் கொண்டிருந்தால், அவர்கள் அனைவரின் புறப்பாடுமே தாமதப்படும் என்பதால் - “அடுத்த சந்தர்ப்பத்தில் சந்திக்கலாம் !" என்றபடிக்கே விடைபெற்றேன் ! ஏழேகால் கிலோ காமிக்ஸ் பொதியுடன், மறுக்கா விழா நோக்கி நடை ; மறுக்கா அந்த 'ப்ளியாங்' டிக்கெட் பரிசோதனை வாயிலில் க்யூ ; மறுக்கா அதே புன்னகை அம்மணி! 'ஊசிப் போன மசால் வடையைத் தின்னுப்புட்டு, ஓட்டமாய் ஹோட்டலுக்கு ஓடியவன் இப்போது திரும்பி வந்துள்ளான் போலும்!' என்று அம்மணி உள்ளுக்குள் நினைத்திருக்கலாம்; ஆனால் மாறாப் புன்னகையோடு உள்ளே அனுமதித்தார்!
வரிசையாய் 20 & 21 தேதிகளில், நமது பல்வேறு படைப்பாளிகளுடன் சரம் கோர்த்த மாதிரியான சந்திப்புகள் இருந்தன ! முதலாவதாய் நான் சந்திக்கவிருந்தது நமது Lombard நிறுவனமே ! கேப்டன் பிரின்ஸ் ; ரிப்போர்ட்டர் ஜானி ; தோர்கல் ; ரோஜர் ; சிக் பில் என்று எண்ணற்ற கதை வரிசைகளை நமக்கு வழங்கியுள்ள இந்த ஜாம்பவான்களிடம் எனக்கு எப்போதுமே ஒரு மிடறு வாஞ்சை அதிகம் ; simply becos, வாழ்க்கையில் முதன்முறையாய் ஒரு கான்டிராக்ட்டில் கையெழுத்து இடும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது Lombard நிறுவனத்துடன் தான் ! கொயந்தபுள்ளையாய் 1985-ல் பிராங்பர்ட்டில் புத்தக விழாவில் சந்தித்து, கேப்டன் பிரின்ஸ் கதைக்கு டிக் அடித்த கையோடு, அடுத்த சில நாட்களிலேயே பிரஸ்ஸல்ஸ் நகரினில் அவர்கள் குடலை உருவ, அவர்களது ஆபீசில் ஆஜராகியிருந்தேன் ! அப்போது பொறுப்பிலிருந்த நிர்வாகிக்கோ என்னை விடவும் மூன்று மடங்கு வயது ஜாஸ்தியிருக்கும் ! முகம் முழுக்கப் புன்னகையோடு, எனது குழந்தைத்தனமான அவசரங்களை சகித்துக் கொண்டு, கான்டிராக்டை ரெடி செய்து, அங்கேயே என்னைக் கையெழுத்திட வாய்ப்பேற்படுத்தித் தந்தார் ! பொதுவாய் புத்தக விழாக்கள் முடிந்து ஊர் திரும்பியான பிற்பாடு, அவர்களின் ரெகுலர் பப்ளீஷர்களுக்கான கதைகளையும், கான்டிராக்ட்களையும் ரெடி செய்திடவே ஒரு மாதத்துக்கு மேலாகி விடும் ! அன்றைக்கு நாமோ, முகமில்லா அனாமதேயங்கள் ; கை நிறைய பட்டாணிச் சுண்டல் வாங்க அவசியமாகிடக்கூடிய ராயல்டியினை மாத்திரமே தர முன்வந்திருந்தோம் & இந்தக் கொள்ளையில் "ஊருக்குத் திரும்புறச்சே, கையில் ஒரு கான்டிராக்டையாச்சும் கொண்டு போகாவிட்டால் கவுரத பிரச்சனையாகிப் போகும் !" என்ற வேண்டுகோளுடன் நின்றிருந்தேன் ! அத்தனைக்குமே சம்மதித்து, என் கையில் "பனிமண்டலக் கோட்டை" கான்டிராக்டைத் தந்து Good luck என்று வழியனுப்பினார் அன்றைய நிர்வாகி ! So எப்போதுமே அந்த நிறுவனத்தின் மீது நமக்கொரு லெவல் கூடுதலாய் நேசம் !
Cut to the present : அங்கே ஏற்கனவே பொறுப்பில் இருந்த லேடியோ கொரோனா ப்ரேக் சமயத்தில் விலகியிருந்தார் ! So அவரிடத்தில் பொறுப்பிலிருந்த புதியவரோடு நமக்கு மின்னஞ்சல் பரிச்சயம் மாத்திரமே! பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்த அவர்களது ஸ்டாலில் நான் போய் நின்ற நொடியே அவர் அடையாளம் கண்டுகொண்டார்- இந்தியாவிலிருந்து அடிக்கொருதரம் ஈ-மெயிலில் உசிரை வாங்கும் மலைமாடு இது தானென்று ! முகம் நிறையப் புன்னகையோடு என்னை அமரச் செய்து நலம் விசாரித்தபடிக்கே பேச ஆரம்பித்தார் ! நாம் சமீபங்களில் புதிதாய்ப் பரிச்சயம் ஏற்படுத்திக் கொள்ளும் நிறுவனங்கள் தவிர்த்த பாக்கி அனைவருமே, நமக்குப் பத்தோ - இருபதோ - முப்பதோ ஆண்டுகளாய்த் தெரிந்தவர்களே என்பதால் இந்தச் சந்திப்புகள் எல்லாமே அந்த நட்புகளை உரப்படுத்திக் கொள்ளும் பாணியிலானவை மட்டுமே! தவிர, என்ன வேண்டுமானாலும் ஒரு மின்னஞ்சலைத் தட்டி விட்டால் விபரங்கள்; கதைக் கோப்புகள் கிட்டி விடும் எனும் போது, அவர்கள் முன்னே ஆஜராகி, பூமியைப் புரட்டிப்போடவல்ல காரியங்களைச் சாதிக்க வேண்டிய நிலைமையினில் இல்லை தான் ! So புதிதான கதை வரவுகள் ; திட்டமிடல்களில் உள்ள சமாச்சாரங்கள் ; சில பல முந்தைய தொடர்களின் புனர்ஜென்மங்கள் சார்ந்த வினவல்கள் என்பனவே நமது படைப்பாளிகளிடம் நான் வாயைப் பிடுங்க எத்தனித்தவை ! And அவற்றின் பலன்களைக் கீழே தொகுத்துள்ளேன் - நமக்கு சுவாரஸ்யம் தரும் விதமாய் :
1. நமது செம்பட்டைத் தலை ஜேம்ஸ் ... அது தான் முதலைப்படையின் கமாண்டர் ப்ரூனோ ப்ரேசில் இருக்கிறார் அல்லவா? அவரது version 2.0 மூன்றாண்டுகளுக்கு முன்பாகவே இரு பாக ஆல்பம் வாயிலாக அறிமுகம் கண்டுள்ளது ! And அவரது ஆல்பம் # 3 ரொம்பச் சமீபமாய் வெளியாகியிருக்க, அங்கே பிராங்பர்ட்டில் அதன் ஹார்ட்கவர் ஆல்பம் கம்பீரமாய் ஷெல்பில் அமர்ந்திருந்தது! ஆர்வமாய் எடுத்துப் புரட்டினேன்; அட்டகாசமான சித்திரங்கள்... கலரிங் பாணி !! அது பற்றியும், தொடரின் எதிர்காலம் பற்றியும் கேட்டுக் கொண்டேன் ! Sounded very promising !!
My கேள்வி # 1 to you :
What say Folks - முதலைப் பட்டாளத்தின் இரண்டாவது சுற்றுக்கு நாம் தயாராகிக்கலாமா ? காத்திருக்கும் ஆண்டினில் முதலைப்பட்டாளத்தை மறுக்கா ரசிக்க ஆரம்பிக்கலாமா ?
2. கொரோனா லாக்டவுனிற்கு ஓரிரு வாரங்கள் முன்னே வெளியான வெளியான
ZAROFF நினைவில் உள்ளாரா ? தென்னமெரிக்காவின் அமேசான் காடுகளில் நடந்த அந்தத் 'தெறிக்கும்' ஜீவமரண போராட்டம் - “
நில் ... கவனி ... வேட்டையாடு” ஆல்பத்தை சூப்பர் ஹிட்டாக்கியிருந்தது. ப்ரெஞ்ச்சிலும் இவருக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளதால்
Zaroff இன்னொரு ஒன்-ஷாட்டில் களமிறங்கவுள்ளாராம் & ஆட்டகளம் இம்முறை மாஸ்க்கோவாம் ! 2023-ல் ஏப்ரல்வாக்கில் இந்த ஆல்பம் ரெடியாகுமாம்!
My கேள்வி #2:
ஹீரோவாய்ப் பார்ப்பதா ? வில்லனாய்ப் பார்ப்பதா இந்த மனஷனை ? இவரது இரண்டாவது ஆல்பத்துக்கும் நம் மத்தியினில் ஆர்வங்கள் சேஸ்தானு ? இவருக்கும் 'ரைட்' சொல்லி வண்டியில் தொற்றிக் கொள்ளலாமா நாம் ?
3. அப்புறம்
தோர்கல் பற்றி!! ஏற்கனவே இளம் தோர்கல் தனித்தடம் ஓட்டமெடுத்து வர, இப்போது “
THORGAL SAGA” என்று புதியதொரு மினித்தடம் உருவாகி வருகிறதாம்! இப்போதைய திட்டமிடல் - மொத்தம் 4 ஆல்பங்கள் என்பதே ! 2023-ல் துவங்கி, ஆண்டுக்கு ஒன்று வீதம் வெளியாகிடவுள்ளதாம் ! ஒவ்வொரு ஆல்பமும் 112 பக்கங்களில் இருக்க ; 4 வெவ்வேறு ஓவியர்கள் இதனில் பணியாற்றுவராம் ! இந்தத் தொடரின் கதைக்கருவைப் பற்றிச் சொன்னார்கள் - '
WOWWW' என்று தான் சொல்லத் தோன்றியது எனக்கு! முதல் ஆல்பம் ஜனவரி '23-ல் வெளிவரவுள்ளதாம்! So அந்தப் preview ரெடியாகும் சமயமாய் கதை பற்றிய பகிர்ந்திடலாம் folks!
My கேள்வி #3:
இந்தத் தனித்தடத்தின் முதல் ஆல்பம், அநேகமாய் டிசம்பரில் நமக்குக் கிட்டிவிடும்! படித்துப் பார்த்து விட்டு ரம்யமாய்த் தெரியும் பட்சத்தில், இதனுள்ளேயும் மூக்குகளை நுழைக்க ஓ.கே.வா ?
4. LONESOME !! ட்யுராங்கோவின் பிதாமகரான Yves Swolfs உருவாக்கியுள்ள இன்னொரு கௌ-பாய் தொடர் இது! ட்யுராங்கோ பாணியில் சித்திரங்கள் இருந்தாலும், கதை பாணியில் இது மாறுபட்டது! 4 ஆல்பங்களில் முதல் சுற்று & ஜுலை 2023-ல் க்ளைமாக்ஸ் ஆல்பம் வெளியாகிடவுள்ளது ! And இரண்டாம் சுற்றில் தொடர் தொடரும் போலும் - been a huge hit there already !!
My கேள்வி # 4:
இந்தத் தொடரின் காண்டிராக்ட் நம்மிடம் கொஞ்ச காலம் முன்னிருந்தே உள்ளது ! முதல் சுற்றின் முற்றுப்புள்ளி கண்ணில் தெரியும் வரையிலும் 'தேமே' என்றிருப்போம் என்ற எண்ணத்தினில் இருந்தேன் ! Now that the climax is in sight - ட்யுராங்கோ பாணியில் நாலு அத்தியாயங்களையும் ஏக் தம்மில் 2024-ல் களமிறக்கி விடலாமா? ? அல்லது அடுத்தடுத்த மாதங்களில் சிங்கிள் ஆல்பங்களாகவா ?
5.
ட்யுராங்கோ பற்றிய Topic-ல் இருக்கும் போதே-
இளம் ட்யுராங்கோ பற்றியுமே பேசிப்புடலாமா ? இது என்ன- புது மேட்டரா கீதே ? என்கிறீர்களா? Oh Yes - 4 பாகத் திட்டமிடலில், ட்யுராங்கோவின் இளமை நாட்களைச் சித்தரிக்க படைப்பாளிகள் ரெடியாகி விட்டனர் ! இதோ- இம்மாதமே அதன் முதல் ஆல்பம் ரிலீஸாகிறது… and 2023-ன் இறுதிக்குள் முதல் சுற்று பூர்த்தி காணவுள்ளது !
My கேள்வி #5:
இளம் ட்யுராங்கோ காலத்தின் கட்டாயாமா folks - நமது அணிவகுப்புகளில்? Again - ஒரே தொகுப்பா ? அல்லது சிங்கிள் இதழ்களிலா ?
6.
ரிப்போர்ட்டர் ஜானி 2.0இந்தப் புது வரிசையில் ஆல்பம் # 6 வெளியாகி உள்ளது & ப்ராங்க்பர்ட்டில் அதனைப் பார்க்கவும் செய்தேன்! செம அழகாய் இருந்தது! ஒரு வருஷம் க்ளாஸிக் பார்ட்டி ; மறுவருஷம் version 2.0 ஜானி எனப் பயணித்தால் அயர்வின்றியிருக்குமென்று மனசுக்குப் பட்டது!
My கேள்வி #6:
ஏற்கனவே துடைப்பத்தால் சாத்தி, பதிலும் சொல்லியுள்ளீர்கள் தான் ; but still இந்தக் கேள்வியினைக் கேட்காது இருக்க இயலவில்லை ! மாற்றங்களைக் கண்டாலே ஒய் திஸ் கொலவெறி guys? 'வேணவே வேணாம்' என்று அடம்பிடிக்கும் அளவுக்கு இந்த ஜானி 2.0 மோசமும் இல்லை & 'மணந்தால் மகாதேவி தான்!' என்று பிடிவாதம் பிடிக்கும் அளவுக்கு க்ளாஸிக் ஜானி ஒரு அசாத்தியமும் அல்ல என்பது எனது அபிப்பிராயம் ! பெட்ரோமேக்ஸ் லைட்டை அவ்வப்போது மாற்றித் தான் பார்ப்போமே ?
7. நிஜத்தில் அரங்கேறிய சில க்ரைம்களைப் பற்றியதொரு தொடரை சமீபமாய் உருவாக்கியுள்ளனர் படைப்பாளிகள் ! நிகழ்ந்த அந்தப் புதிரான கொலைகள் ; அது சார்ந்த புலனாய்வின் கட்டங்கள் ; விசாரணைகள் ; முடிச்சவிழ்ப்புகள் பற்றியெல்லாம் பதிவிட்டு 150+ பக்க நீளத்துக்கு ஆல்பங்கள் உருவாக்கியுள்ளனர்! நிஜ சமாச்சாரங்கள் எனும் போது maybe இங்கே மிகைப்படுத்தப்பட்ட
டமால்-டுமீல்-ணங் சமாச்சாரங்கள் இல்லாது போகலாம்; ஆனால் நிஜமான புலனாய்வுகள் பொதுவாய் இந்த சினிமா பாணியில் இருப்பதில்லை தானே?!
My கேள்வி #7:
டமால்-டுமீல்-ணங் இல்லாங்காட்டியும் ரசிக்க ஓ.கே.வா guys? அல்லது இதை கி.நா. அணிக்குள் தள்ளி விடுவதே உசிதமாகிடுமா ?
8. நாகரிக வெட்டியானின் ஆல்பம் # 5 ஏப்ரல் 2023-ல் வெளிவரவுள்ளது. ஸ்டெர்னின் பயணம் ப்ரெஞ்சில் ரொம்பவே ரசிக்கப்பட்டு வருகிறதாம் !
My கேள்வி #8:
நம் மத்தியில் ஸ்டெர்ன் வேரூன்றியிருப்பது கண்கூடு ! ஆண்டுக்கொரு ஸ்லாட் இனி இவருக்கு உறுதிப்படுத்தி விடலாமா ? அல்லது முன்பதிவுகளில் "விரும்புவோர் வாங்கட்டும்" என்பதே சுகப்படுமா ?
9. ஒரிஜினல் வெட்டியானின் (THE UNDERTAKER) ஆல்பம் # 7 இரு அத்தியாயக் கதையாக, வழக்கம் போல் வெளிவருகிறதாம் ! சுற்றின் முதல் கதை செப்டம்பர் 2023-ல் வெளிவரவுள்ளதாம் ! அதன் க்ளைமேக்ஸ் பாகமும் வெளியான பிற்பாடு ஒன்றிணைத்துப் போட்டு விடலாம் ! ஓ.கே. தானே guys?
10. நமது மறதிக்கார XIII-ன் ஆல்பம் # 28 இம்மாதம் ரிலீஸ் ஆகிடுகிறது & அதன் ஹார்ட்கவர் ஆல்பமும் அங்கே ஸ்டாலில் கண்ணில்பட்டது ! ப்ரெஞ்சில் இருந்தாலும், படம் பார்க்க அதை எனக்குத் கோரினேன் & மறுநொடியே தந்து விட்டார்கள் ! க்யூபாவில் ஓட்டமெடுக்கும் இந்தக் கதை - அடுத்த ஆல்பத்தோடு நிறைவு காணவுள்ளதாம் ! அதாவது ஆல்பம் #29 will wind up Cycle # 2. மாஸ்கோவில் பயணிக்கும் இந்த இறுதி ஆல்பத்தில், மேற்கொண்டான சுற்றுக்களுக்கு வாகான கொக்கிகளைப் போட்டே வைத்திருப்பார்கள் என்பது எனது நம்பிக்கை! ஆனால் இப்போதைக்கு சுற்று # 3 பற்றிப் பெரிதாய்த் திட்டமிடல்கள் எதுவும் இல்லையாம் !
11. இரத்தப் படலம் மெயின் தொடரில் பெரிதாய் ஆக்ஷன் இப்போதைக்கு இல்லையெனினும், முக்கியக் கதாப்பாத்திரமான லெப்டினெண்ட் ஜோன்ஸ் பிஸியாகவே இருந்திடவிருக்கிறார் ! Because இவருக்கெனவொரு பிரத்தியேக 3 பாக தனித்தடம் தயாராகி வருகிறது! 2023-ல் ஆரம்பித்து, ஆண்டுக்கொன்று என 2025 வரையிலும் இந்தத் தொடர் உருவாக்கம் கண்டிடவுள்ளதாம்! XIII spin-offs வரிசையில் ஏற்கனவே ஜோன்ஸுக்கு ஒரு ஆல்பம் உண்டெனினும், அவரை ஒரு முப்பாகத் தொடருக்கு நாயகியாக்கிட முன்வந்துள்ளனர் இம்முறை ! இது 2025-ல் தான் நிறைவுறும் என்பதால் நிறையவே அவகாசம் உள்ளது நமக்கு - இதைப் பற்றித் தீர்மானிக்க!
12. அப்புறம் ஒரு ஜாம்பவான் கதாசிரியரின் முன்நாட்களது கௌபாய் தொடரானது புதுப்பிக்கப்பட்டு 2023-ன் மத்தியில், புது கலரிங் சகிதம் களம் காணவுள்ளது! மொத்தம் 6 அத்தியாயங்கள் கொண்ட இந்தத் தொடரின் சுற்று 2023-ன் இறுதிக்குள்ளேயே நிறைவும் காணவுள்ளதாம்!
My Question #9:
கதாசிரியர் ஒரு செம ஆற்றலாளர் என்பதற்காகவே இந்தத் தொடரினை நாம் பரிசீலனை செய்திடலாமா ? அல்லது - காது வழியே cowboys வெளிப்படும் அளவுக்கு ரொம்பவே திகட்ட ஆரம்பித்து விட்டது சாமீ என்பீர்களா ?
13. கௌபாய்களின் கரடுமுரடான உலகிலிருந்து நேராய்க் கோடீஸ்வரக் கோமகனின் `W` சாம்ராஜ்யம் பக்கமாய்ப் பயணித்தால் - 2023-ன் இறுதியில் லார்கோ வின்ச்சின் புதிய ஆல்பத்தின் க்ளைமேக்ஸ் ஆல்பம் வெளியாகுமென்று அறிய வருகிறோம்! So 2024-ல் லார்கோ நம் மத்தியில் இருப்பாரென்று எதிர்பார்க்கலாம்!
கதாசிரிய ஜாம்பவான் வான் ஹாம் இந்தத் தொடரிலிருந்து விடைபெற்றான பின்னே விற்பனைகள் எவ்விதம் உள்ளன? என்று கேட்டு வைத்தேன்! வான் ஹாமின் உச்சத்தின் போது 'லார்கோ ஆல்பங்கள்' தலா 4 இலட்சம் விற்பனையாகினவாம்! இன்றைக்கு அத்தனை இல்லை என்ற போதிலும் செம decent ஆனதொரு விற்பனை எண்ணிக்கையைக் குறிப்பிட்டார்கள்! நாமளோ 10 வருஷங்களாய் ப்ளு ஜீன்ஸ் பில்லியனரின் கையிருப்பைக் கரைக்க கதகளி ஆடி வருகிறோம்! Phew!!
14. Last but not the least - தங்கத்தலைவனின் புது தடம் ஒன்றினை புதுப் படைப்பாளிகளுடன் துவக்கியிருந்தனர் 2019-ல் ! அதன் க்ளைமாக்ஸ் பாகம் 'புலி வருது..புலி வருது' கதையாய் ஜவ்வு இழுத்து வந்தது ! Finally அது 2023-ன் இரண்டாம் பாதியில் வெளியாகிடுமாம் ! So அடுத்தாண்டினில் ஒரு புது டபுள் ஆல்பம் கிட்டியிருக்கும் தளபதியின் ரசிகர்களுக்கு ! Fingers crossed !
இங்கும் அங்குமாய் மந்தியாட்டம் சுற்றிச் சுற்றி நமது பல்வேறு பதிப்பகங்களிடமிருந்து சேகரிக்க இயன்ற சேதிகள் இவையே! இவை தவிர்த்து, புதுசு புதுசாய் ஏகப்பட்ட தொடர்களைக் கண்ணில் காட்டிட, அவற்றின் கோப்புகளை அனுப்பச் சொல்லியுள்ளேன்! And அந்தக் குவியலைப் பார்க்கும் போது , இப்போதே இன்னொரு அட்டவணையினை போட்டாலென்ன என்ற பேராசை பொங்காத குறை தான்! ஆனால் ஓவர் ஆசை உடம்புக்கு ஆகாது என்பதால், ஒரு பெருமூச்சோடு கதைகளை எனது டயரியில் குறித்துக் கொண்டு, இப்போதே 2024 பக்கமாய் கோழி எப்போது கூவுமென்று காத்திருக்கிறேன்!
ஒவ்வொரு ஸ்டாலாய்க் குதித்துக் குதித்து ஒவ்வொரு பதிப்பகத்தோடும் குசலம் விசாரித்த களைப்பில் வயிறு பிறாண்டிய போது சாப்பிட வெட்டவெளியில் அமைந்திருந்த அமைந்திருந்த Food Trucks பக்கமாய் நடையைக் கட்டினேன்! உள்ளே ஸ்டால்களிலும் ; ஒவ்வொரு அரங்கிலும், நடைபாதையிலும் தென்படாத பரபரப்பு - இங்கே சாப்பாட்டுக் கடைகளின் முன்னே தெறித்துக் கொண்டிருந்தது! நம்மூரில் போல முண்டியடித்துக் கொண்டு முன்னே போக இங்கெல்லாம் வழி லேது என்பதால், நெளிந்த பாம்பைப் போல நீண்டு நின்ற க்யூவின் வாலில் போய் நின்று கொண்டேன்! 5 நிமிடங்கள்ஆகியிருக்கும் ; ஆனால் வரிசை இம்மியூண்டு கூட நகர்ந்தது போல் தெரியக்காணோம் ! நமக்குத் தான் பசியில் கண்ணடைக்கிறதா என்று பார்த்தால் - 'இன்னியோட உலகம் முடிஞ்சே போய்விடும்!' என்ற பயம் வந்தவர்களைப் போல, ஆளாளுக்கு ரவுண்ட் கட்டிக் குமுறிக் கொண்டு ஆர்டர் தருவதைப் பார்க்க முடிந்தது ! எனது முறை வர குறைந்தபட்சம் அரை அவராவது ஆகும் போலத் தோன்றியது! “அடப் போங்கைய்யா, உங்க காய்ஞ்ச ரொட்டியைத் தின்ன இவ்வளவு காத்திருக்க முடியாது!' என்றபடிக்கே மறுபடியும் விழா அரங்குக்குள் புகுந்தேன்! அந்த லஞ்ச் வேளையின் அடிபிடிக் கூட்டம் மட்டுப்பட்ட பின்னே, திரும்பப்போய் சாப்பிட்டுக் கொள்வதென்று தீர்மானித்தேன்! அது வரையிலும், புது ஸ்டால்களுக்குப் போய் பராக்குப் பார்த்தபடிக்கே, அவர்களது கேட்லாக்களை வாங்கிக் கொண்டே, விருந்தாளிகளை உபசரிப்பதற்கென வைத்திருக்கும் பிஸ்கெட்களையும், சாக்லெட்டுகளையும் லைட்டாய் ருசி பார்த்தேன் ! So தேசம் தேசமாய் புக்ஸ் & பிஸ்கெட்ஸ் ருசி பார்ப்பதில் எனது மதியம் நகன்றது !
நாம் மாமூலாய் குப்பை கொட்டும் ப்ரெஞ்சு பதிப்பங்களைத் தாண்டி வேற்று காமிக்ஸ் பதிப்பகங்களைத் தேடியபடியே நடக்க, கொரிய; ஜப்பானியப் பதிப்பகங்கள் கண்ணில்பட்டன! நிஜத்தைச் சொல்வதானால் இந்த ஆண்டில் நான் எதிர்பார்த்திருந்த பரபரப்பு ஒரு மிடறு குறைச்சலே ! முன்னெல்லாம் எந்த நேரம், எந்த அரங்கில் நடைபோட்டாலும், ஸ்டாலில் உள்ளோர் பிஸியாக இருப்பதுண்டு ! ஆனால் இம்முறையோ செல்லை நோண்டிக் கொண்டு காலை நீட்டி ஓய்வெடுத்த ஜனம் கணிசமாய்க் கண்ணில் பட்டனர்! And காமிக்ஸ் பதிப்பகங்களின் பங்கேற்புமே குறைவு தான் ! அமெரிக்க ஜாம்பவான்களில் கிட்டத்தட்ட யாருமே வந்திருக்கவில்லை ; ஹாலந்திலிருந்தும் யாருமே கண்ணில்படவில்லை! அதற்கு மீறி வந்திருந்த பதிப்பகங்கள் ஸ்டால் போட்டிருக்காமல்; பொதுவான இடங்களில் சந்திப்புகளை நடத்திக் கொண்டிருந்தனர்! நமது ப்ரெஞ்ச் அல்லாத படைப்பாளிகளில் சிலரைக் கூட இது போல் ஆங்காங்கே இருந்த Coffee ஷாப்களில் தான் சந்திக்க நேர்ந்தது!
இம்முறையின் அரட்டைகளின் போது, பொதுவாகவே அனைத்துப் பதிப்பகங்களும் சொன்னவொரு விஷயம் ரொம்பவே பெருமூச்சிடச் செய்தது என்னை! இந்த இரண்டரை ஆண்டுகால லாக்டௌன் நாட்களில் காமிக்ஸ் விற்பனைகள் ப்ரெஞ்சு மார்க்கெட்களிலும் சரி, அமெரிக்க மார்க்கெட்களிலும் சரி, செம ஏற்றம் கண்டுள்ளனவாம் ! இதுதான்; அது தான் என்றெல்லாம் இல்லாது, எல்லா தேசங்களிலும், எல்லா மொழிகளிலுமே புக்ஸ் செம சேல்ஸ் போலும்! கேட்க ரொம்பவே பிரம்மிப்பாக இருந்த போதிலும், உள்ளுக்குள் லைட்டாக நெருடாமல் இல்லை - நமக்கெல்லாம் எதிர்மாறான தாக்கம் தான் கிட்டியுள்ளதே என்று! அது மட்டுமன்றி, வழக்கத்தை விடவும் ஜாஸ்தியாய் புக்ஸ் விற்று வரும் சூழலில் இருப்போரிடம்; அதுவும் சிலபல இலட்சங்களில் ப்ரிண்ட்ரன் கொண்டிருப்போரிடம் போய் நின்று - “தர்மதுரை… ஆயிரத்துச் சொச்சம் ப்ரிண்ட்ரன்னுக்குப் பார்த்து, ஏதாச்சும் பண்ணிப் போடுங்க எசமான்!” என்று கேட்பதே கூசச் செய்தது தான்! ஆனால் விரல்களில் ஐந்தும், ஐந்து ரகம் என்பதைப் புரிந்திருக்கும் படைப்பாளிகள் - நம்மை யாசகம் தேடுவோராய் ஒற்றை நொடி கூட உணரச் செய்திடாது பார்த்துக் கொண்டது தான் நீ்ங்களும், நாங்களும் செய்த புண்ணியங்களின் பலன்! And இப்போதெல்லாம் தரைமட்டமான ராயல்டிகளை நாமுமே கோருவதுமில்லை; கொஞ்சமேனும் decent ஆனதொரு தொகையாய் இருந்தாலன்றி, விரும்பும் திக்குக்கெல்லாம் படைப்பாளிகளை இழுப்பதென்பது நடவாக் காரியமாகி விடும் என்ற பயம் உள்ளுக்குள்!
ப்ராங்க்பர்ட் புத்தகவிழாவில் தொழில்முறை விசிட்டர்களே முக்கால் பங்கு! உள்ளூர் ஜனம் பராக்குப் பார்க்க வருவதோடு சரி - சர்வதேசப் பதிப்பங்களிடமிருந்து புக்ஸ் எவற்றையும் வாங்கிட இயலாது! ஆனால் ஒரேயொரு முரட்டு அரங்கிலிருந்து உள்ளூர் புள்ளீங்கோ சாரையாய் வெளிப்படுவதும்; ஆளாளுக்குக் கைநிறைய புக்ஸோடு வலம் வருவதையும் பார்க்க முடிந்த போது தான் ஞாபகத்துக்கு வந்தது - ஜெர்மானியப் பதிப்பகங்களுக்கு மாத்திரமே விழாவின் போது விற்பனை செய்திடும் அனுமதி உண்டென்பது!
நம்மைப் போலவே வேற்றுமொழிப் பதிப்புகளின் உரிமைகளை வாங்கி, ஜெர்மன் மொழியில் பிரசுரிக்கும் ஒரு காமிக்ஸ் நிறுவனத்தை ஏற்கனவே எனக்குத் தெரியும்! ரைட்டு… அவர்களைப் போய் எட்டிப் பார்க்கலாமே என்றபடிக்கு உள்ளே நுழைந்தால் - மூச்சடைக்காத குறை தான்! பொன்னியின் செல்வன் ஷுட்டிங் ஸ்பாட்டில் என்னவொரு திரளும், பரபரப்பும் இருந்திருக்குமோ - அதைக் காட்டிலும் மூன்று மடங்கு தெறி! ஒவ்வொரு பதிப்பகமும் டபுள், ட்ரிபிள் ஸ்டால்கள் எடுத்து புக்ஸை மலை உசரத்துக்கு அடுக்கி வைத்திருக்க, மக்கள் மொய்த்தெடுத்துக் கொண்டிருந்தனர்! நாவல்கள்; காமிக்ஸ்கள், இலக்கியம்; பொது ரசனை என்று புஸ்தக பாணிகள் எதுவாயினும், சகலத்திலும் சொல்லி மாளா ஜனம்! ஒரு பெரும் பப்ளிஷரின் ஸ்டாலிலோ - அழகானதொரு யுவதி முகம் நிறையச் சிரிப்போடு ஒரு உசரமான மேஜையருகே, உசரமான ஹீல்ஸ் அணிந்து நின்றிருக்க, அவருக்கு முன்னே நீளமானதொரு வரிசையில் மக்கள் தேவுடு காத்து நின்றனர்! அனைவரின் கைகளிலும் ஒரே புக்! ஆஹா…. அந்த அழகு அம்மணி தான் அதன் எழுத்தாளர் போலும் ; புக்கை வாங்கிய கையோடு ஆட்டோகிராப் வாங்கிக் கொண்டு, ஒரு ஸெல்ஃபியும் எடுத்துக் கொள்கிறார்கள் என்பது புரிந்தது! அந்த வரிசையில் இளவரசரின் ஆகிருதிகளிலும், ஈரமான கடைவாய்களோடும் சிலர் நிற்பதையும் பார்க்க முடிந்தது! 'இவனுங்களைப் பார்த்தாக்கா இம்மாம்தண்டி புக்குகளைத் தலைக்கு வச்சுப் படுக்கிற பார்ட்டிங்க மாதிரிக் கூடத் தெரியலியே ?' என்று மைண்ட்வாய்ஸ் சொல்லியது! அவர்களும் அம்மணியருகே நின்று, ப்ராங்க்பர்ட்டிலிருந்து ஹாம்பர்க் வரை விரியும் இளிப்புகளோடு selfie எடுத்துக் கொள்வதைப் பார்த்த போது காதுகள் புகை சமிக்ஞைகளை எழுப்பாத தான் ! அதே சமயம் நமது இந்தச் சிறுவட்டத்தின் விதியையும் எண்ணி இளித்துக் கொள்ளாதிருக்கவும் இயலவில்லை ; இங்கெல்லாம் selfie எடுத்தாக்கா டாலடிக்கும் கபாலமும், கோல்ட்பிஷ் கண்களும் தானே வாய்க்கும் !! Poor you folks !!
நடுநாயகமாய் Carlsen Venlag என்றிருந்த காமிக்ஸ் பதிப்பகத்து ஸ்டாலினுள் போனால் கிறுகிறுத்துப் போனேன்! ஒரு ஜெர்மன் காமிக்ஸ் வாசகனுக்கு பூலோக சொர்க்கமென்று ஏதேனும் இருக்குமெனில் – அது அந்த ஸ்டாலைத் தவிர்த்த வேறு ஏதுமாய் இருக்க வாய்ப்பு பூஜ்யமே! நாமெல்லாம் ஓரமாய் நின்று பராக்குத் தான் பார்க்க வேண்டும் - அவர்களது காமிக்ஸ் நாயக / நாயகியரின் அணிவகுப்பின் முன்னே ! 37 ஆண்டுகளுக்கு முன்னமே இதே பிராங்க்பர்ட்டில் அவர்களைச் சந்தித்திருந்தேன் தான்; அன்றைக்கே ரவுண்ட் கட்டி அடித்துக் கொண்டிருந்தனர் தான் ; ஆனால் இப்போதோ முற்றிலுமாய் ஒரு உச்சத்தில் வீற்றிருப்பது புரிந்தது! ஸ்டாலுக்கு நான்கு திக்குகளிலும் வாயில்கள்; எல்லா வாயில்களிலும் கம்ப்யூட்டர் சகிதம் பில் போட பசங்கள் / பிள்ளைகள்! டன் டன்னாய் காமிக்ஸ் இதழ்கள் உள்ளே குவிந்து கிடக்க, ஆளாளுக்கு பில்லிங் கவுண்டர்களில் குமுறிக் கொண்டிருந்தனர்! இன்னொரு பக்கமோ, ஒரு சிறார் பதிப்பகம் - சிறுவர் கதையெழுதும் ஒரு author-ஐ இட்டு வந்து, அவரது கதை பற்றிய முன்னோட்டம் பின்னே இருந்த டி-வியில் ஓடியபடியே இருக்க, சிறுசுகளை அரங்கிலேயே அமர்த்தி, அவரோடு அளவளாவ விட்டிருந்தனர்! அருகே ஒரு அம்மணி அமர்ந்து, அவரது லேட்டஸ்ட் புக்கிலிருந்து நிதானமாய் வாசித்துக் கொண்டே போக, அரை டிக்கெட்கள் அனைத்தும் மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்த காட்சியின் ரம்யத்தை எழுத்துக்களில் கொண்டு வர யாரேனும் பிறந்து வந்தால் தானுண்டு! பொறாமையாக இருந்தது - இந்தத் தலைமுறையில் ஒரு பகுதியினராவது வாசிப்பில் இத்தனை கொண்டிருப்பதைப் பார்க்கும் போது! Phewwww!
பதிப்புத் துறையானது என்றைக்குமே அஸ்தமனம் காணாது என்ற நம்பிக்கையோடு அந்த அரங்கிலிருந்து வெளிப்பட்ட போது, வெளியே மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தது! கொஞ்ச நேரம் பராக்குப் பார்த்துக் கொண்டே இருந்து விட்டு, லேசாக மழை ஓய்ந்த சமயமாய் குடையை விரித்துக் கொண்டு சர்வதேச பதிப்பக அரங்குக்குள் புகுந்தேன்! அடடே- பரிச்சயமான தமிழ் முகங்கள் எதிர்ப்பட வேகமாய் நடை போட்டேன்! அரசின் சார்பினில் சென்னைப் புத்தக விழாவினை சர்வதேசத் தரத்திற்கு உயர்த்தும் நோக்கினில் பயணித்திருக்கும் ஆய்வுக் குழுவினர் என்பதால் அவர்களது முயற்சிகள் எத்தனை மகத்தானது என்பது புரிந்தது! பரபரப்பாய், பம்பரமாய்ச் செயல்பட்டுக் கொண்டிருந்தோரிடம், அதிகமாய்ப் பேச இயலவில்லையென்றாலும், ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பணிக்குப் பிள்ளையார் சுழி போட வந்திருந்தோரைச் சந்தித்ததில் ரொம்பவே மகிழ்ச்சியாக இருந்தது!
அரங்கினுள் தொடர்ந்து நடை போட்டால் நமது நாட்டுப் பதிப்பகங்களின் ஸ்டால்கள் கண்ணில்பட்டன ! முக்கால்வாசிப் பதிப்பகங்கள் டில்லியைச் சார்ந்தவை & சிறுவர் புக்ஸ் வெளியிடும் துறையில் இருப்பது புரிந்தது! சர்வதேசத் தரங்களுக்குப் போட்டி போடும் விதமாய் படைப்புகளும், தரங்களும் இருப்பதை பராக்கு பார்த்தபடிக்கே நடந்தேன்! ஆனால் வழக்கமான எண்ணிக்கையில் இம்முறை இந்திய ஸ்டால்கள் இல்லை என்பதை உணராது இருக்க முடியவில்லை! சிக்கனங்கள் இந்த நொடிகளின் தேவை எனும் போது புரிந்து கொள்ள முடிந்தது தான்!
மாலை 5.30-க்கு எனது கடைசி அப்பாயி்ண்ட்மென்ட் நிறைவுற, அதனையும் முடித்த கையோடு ட்ராமைப் பிடிக்க வெளியேறி வந்தேன்! செம ரம்யமான க்ளைமேட்டைப் பார்த்த போது - அட ... முக்கால் கிலோ மீட்டர் தூரம் தானே ஹோட்டலுக்கு ! நடந்தே போய் விடலாமென்றுபட்டது! தோளிலிருந்த காமிக்ஸ் மாதிரிகளில் டெக்ஸ் நீங்கலாக பாக்கி எல்லாமே அந்தந்தப் படைப்பாளிகள் வசம் தாவியிருந்ததால், பளு போட்டுத் தாக்கவில்லை! சாவகாசமாய் நடக்கலானேன்! மைய ரயில் நிலையத்தைத் தாண்டியே எனது ஹோட்டலுக்குச் சென்றாக வேண்டும் & ரயில் நிலையத்தின் சுற்றுப்புறங்களில் காலங்காலமாய் சரக்கடித்துத் தள்ளாடும் கும்பல் இம்முறை செம அதிகளவில் சுற்றித் திரிவதைப் பார்க்க முடிந்தது! முக்கால்வாசிப் பேர் கஞ்சாவின் போதையில், கண்களெல்லாம் வெறித்து நிற்பதும், தங்களுக்குள் கத்திக் கூப்பாடு போட்டுக் கொள்வதுமாய் இருந்து வந்தனர். அது ஏனோ தெரியவில்லை - எது மாறினாலும் 'நகரின் மையத்தினில் இந்த ஒச்சம் மட்டும் மாற்றம் காணக் காணோம்!
ஒரு மாதிரியாய் ரூமிற்குப் போன பின்னே, மறுநாள் அதிகாலையில் திரும்பும் ப்ளைட்டைப் பிடிக்க வேண்டியிருந்ததால், அழுக்குத் துணியைப் பெட்டிக்குள் திணித்துப் போட்டு விட்டு தயாரானேன்! வியாழன் & வெள்ளி - என 2 நாட்களே ஜெர்மானிய ஜாகை என்ற போதிலும் நாம் பார்க்க வேண்டிய அத்தனை பதிப்பகங்களிடமும் அட்டெண்டன்ஸ் போட்டு வைத்திருந்த திருப்தி விரவிக் கிடந்தது! And எனது குறிப்புகளில் இடம்பிடித்திருந்த புதுக் கதைகளும், தொடர்களும் அடுத்த சில ஆண்டுகளுக்கு நமக்கு வழிகாட்டிடும் என்ற மகிழ்வுமே! காமிக்ஸ் எனும் கனவுலகில் ஆழ்ந்தபடிக்கே தூங்கிப் போனவன் அதிகாலையில் எழுந்து பெட்டியை உருட்டிக் கொண்டு போய் சீக்கிராய் ஏர்போர்ட்டில் குந்திய போது தான் உரைத்தது - ஆஹா இன்று சனிக்கிழமை aka பதிவுக்கிழமை என்று ! ஒரு ஓரமாய் ஒதுங்கியபடியே, விறுவிறுவென எழுத ஆரம்பித்தேன் - ஆபீஸுக்கு வாட்சப்பில் சூட்டோடு சூடாய்ப் பக்கங்களை அனுப்பியபடிக்கே !
சென்னைக்கு ப்ளைட் மாற அபுதாபியில் இறங்கிய போது தான் ஜுனியர் இங்கே பதிவினை upload செய்து கொண்டிருக்க, ஒரு பீட்ஸா சாப்பிட ஆர்டர் தந்த கையோடு, லைனில் நின்றபடிக்கே கண்ணில்பட்ட பிழைகளை என் செல்லிலிருந்தே திருத்திட முயன்று கொண்டிருந்தேன்! கடைக்காரர் சூடு பண்ணித் தந்திருந்த பீட்ஸாவை பதிவினை வாசித்தபடிக்கே வாய்க்குள் திணிக்க, சூட்டில் நாக்கும், மேல் அன்னமும் புண்ணாகிப் போனது! ஆத்தாடியோவ் ... பதிவில் சூடுபடுவது பற்றாதென்று இது வேறயா? என்றபடிக்கே மடக் மடக்கென்று தண்ணீரைக் குடித்து, சென்னை ப்ளைட்டைப் ப்ளைட்டைப் பிடித்து ஞாயிறு அதிகாலையில் நம்மூர் திரும்பிய போது அதிகாலை 3.30. ! அங்கிருந்து மதுரைக்கான ப்ளைட்டை உறக்கத்தில் சாமியாடியபடியே பிடித்து வீடு சென்று போது காலை 9 ஆகிவிட்டிருந்தது & மறுநாள் தீபாவளி ! தொடர்ச்சியாய் 3 தினங்கள் விடுமுறைகள் என்ற குஷியில் ஒரு கெட்டத் தூக்கத்தைப் போடலாமென்று நினைத்தால் - ஊஹும்; காத்திருந்த அட்டவணை சார்ந்த சிந்தனைகள், குறுக்கும், நெடுக்குமாய் ஓட்டம் பிடித்தன! ப்ராங்க்பர்ட் புதுவரவுகளில் எதையேனும் உள்ளே புகுத்தலாமா? அல்லது அட்டவணையினை நோண்டாமல் விட்டு விடலாமா? ! என்ற தர்க்கம் ஓடியது உள்ளுக்குள் ! இறுதியில் இந்தப் புதுவரவுகளை முறைப்படி பரிசீலிக்க அவகாசம் எடுத்துக் கொண்டு, அவற்றிற்கான ஏற்பாடுகளையும் செய்தான பின்னே திட்டமிடலே சிறப்பென்று தீர்மானித்தேன்!
For sure - 2 புதுத் தொடர்கள் பற்றிய அறிவிப்பு சீக்கிரமே இருந்திடும்!
And பாக்கி சகலமும் 2024-க்கே சாத்தியம் என்பதால் நமது பீரோவுக்கு இவை குதூகலமான புதுவரவுகளாகிடும் ! ஏதேனுமொரு கனவு தினத்தில் ஆண்டுக்கு 100 புக்ஸ் போடும் ஆற்றல் நமக்கும், அவற்றை வாங்கிட, வாசித்திட நேரம் உங்களுக்கும் வாய்க்கும் பட்சத்தில் - அட...அடா...அடாாா...ஒரு திருவிழாவையே கண்ணில் பார்த்து விடலாமன்றோ ?! புலரும் ... அத்தகையதொரு பொழுது ஒரு தூரத்து நாளில் புலருமென்ற கனவோடு கிளம்புகிறேன்! Bye all... See you around! Thanks for reading this !!
P.S:
SUPREME '60s
&
ரெகுலர் சந்தா 2023
இரண்டிலுமே இணைந்து கொள்ள எண்ணும் நண்பர்கள், அவசியமாகின் 3 தவணைகளில் பணம் செலுத்தலாம் !