நண்பர்களே,
வணக்கம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சில பல படைப்பாளிகள் தத்தம் நகங்களைக் கடித்து, விரல் வரையிலும் ரணமாக்கிக் கொள்வதுண்டாம் நமது கோலிவுட்டில் - simply becos இப்பொதெல்லாமே முக்கால்வாசிப் புதுப் படங்கள் ரிலீஸ் காண்பது வெள்ளியன்றே !! அந்த முதல் நாள் - முதல் ஷோவின் ரசிக அபிப்பிராயங்களே அந்தப் படத்தின் தலைவிதியை தீர்மானிக்கும் எனும் போது, முதல்போட்டவரின் ஆதங்கங்களும் சரி ; படைப்பாளிகளின் நடுக்கங்களும் சரி - totally understandable !! கோலிவுட்டுக்கு வெள்ளிகளெனில், நமக்கோ மாதத்தின் முதல் வாரங்கள் - அந்த 'டிக்.டிக்.டிக்' பொழுதுகளை கொணரும் judgement days !! இந்த ஆகஸ்டிலோ ஒன்றல்ல, இரண்டல்ல - அரை டஜன் இதழ்களெனும் போது,உள்ளுக்குள் கொஞ்சம் கணிசமாகவே 'டர்ர்ர் factor ' உலா வருகிறது !! And இதோ இந்தப் பதிவை நீங்கள் சுடச் சுட வாசித்துக் கொண்டிருக்கும் பட்சத்தில் - இதே நொடியில் ஈரோட்டில் ஒவ்வொன்றாய் ஸ்பெஷல் இதழ்கள் நான்கையும் unveil செய்து கொண்டிருப்போம் !! அங்கு கலந்து கொள்ளவியலாது போன நண்பர்களின் பொருட்டு இந்தப் previews !!
'தி ஈரோடு எக்ஸ்பிரஸ்' கோச் 1 & 2 பற்ற நிறையவே விளம்பரங்களைக் கண்ணில் காட்டியிருப்பதால் - அவற்றினில் என்ன எதிர்பார்ப்பதென்று கொஞ்சமேனும் நீங்கள் யூகித்திருக்க முடியும் ! அதே சமயம் - கோச் நம்பர் 3 & 4 - "TEX + கார்ட்டூன்" என்று மொட்டைக் கட்டையாய் மட்டுமே சொல்லி வைத்துவிட்டு, பிடிவாதமாய் வாய் நிறைய பெவிகாலைப் பூசித் திரிந்ததால் - அக்கட curiosity ஒரு மிடறு ஜாஸ்தி என்று சொல்லலாம் ! In fact - கடந்த 15 நாட்களில் நமது அலுவலகப் பணிப்பெண்களின் வாயைக் கிளறி - அந்த 2 "சஸ்பென்ஸ் இதழ்கள்" பற்றிய தகவல்களைக் கிரகிக்க நடந்த டெலிபோன் முயற்சிகள் நிச்சயமாய் 150 க்குக் குறையிராது !! 'அடிச்சும் கேட்பாக....எதையும் சொல்லிப்புடாதீங்க !!' என்று நான் அவர்களுக்குச் சொல்லி வைத்தது பற்றாதென்று மேற்படி 2 புக்குகளையுமே அவர்களின் கண்களிலேயே காட்டவில்லை !! பைண்டிங்கிலிருந்து மொத்தமாய் புக்குகளை ராவோடு ராவாய்த் தூக்கியாந்து - மொத்தத்தையும் மாடியிலுள்ள குடோனுக்குள் அடுக்கி ஒரு மூடாக்கையும் போட்டு வைக்கச் செய்தேன்! So உள்ளபடிக்கே பணியாட்களுக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை எனும் போது, நிறைய வாசக எரிச்சல்களை அவர்கள் வாங்கிக் கட்டிக் கொண்டதே மிச்சம் !! இந்த 'சஸ்பென்ஸ்' ; சுண்ணாம்பு எல்லாமே - ஈரோட்டிற்குப் பயணிக்க மெனக்கெடும் நண்பர்களின் புருவங்களை ஒற்றை நொடிக்கேனும் 'அட !' என உயரச் செய்யும் ஆர்வத்தின் பொருட்டே எனும் போது - இதர வாசகர்களிடம் ஒரு sorry சொல்லும் கடமை நமக்குண்டு !! ஏதாச்சுமொரு விதத்தில் உங்கள் ஆர்வங்களை உயிர்ப்போடு வைத்திருக்கும் அவாவின் விளைவே இந்தக் குரங்குச் சேட்டைகள் என்று புரிந்து கொண்டால் மகிழ்வேன் !! தவிர, இந்த 2 இதழ்களையுமே under wraps வைத்திருக்க நான் பிரயாசை மேற்கொண்டதற்கு இன்னொரு காரணமும் இல்லாதில்லை - ஆனால் அதைப் பற்றி லொட லொடக்கும் முன்பாய் இதழ்களைக் கண்ணில் காட்டி விடுகிறேனே ?
Without more ado - இதோ "அந்த" TEX இதழின் முதற்பார்வை !!
ஒரு 360 டிகிரி all round வாசக அபிமானத்தைத் தனதாக்கியிருக்கும் மாஸ் நாயகரைக் கொண்டு "வேணும்னா வாங்கிக்கலாம் ; வெளியான அப்பாலிக்கா பாத்துக்கோங்க !" என்ற ரீதியில் நானொரு இதழைத் திட்டமிடும் நொடியே அதுவொரு மறுபதிப்பாய் மாத்திரமே இருக்க முடியும் என்று உங்களில் நிறையப் பேர் யூகித்திருக்கலாம் ! புது இதழாய் இருக்கும் பட்சத்தில் - TEX போன்ற அசுரர்கள் ரெகுலர் சந்தாவினில் மட்டும் தானே ஜாலியாய் உலா வருவார்கள் ? So இதுவொரு மறுபதிப்பாய்த் தானிருக்குமென்று நீங்கள் யூகித்திருப்பின், உங்களையே முதுகில் ஒருவாட்டி தட்டிக் கொடுத்துக் கொள்ளுங்களேன் ?! 'அது சரி - மாமூலாய் வெளியாகும் ஒரு மறுபதிப்பில், எங்களை புதுசாய் சுவாரஸ்யப்படுத்தக்கூடிய மேட்டர் என்னவோ ?' என்று கொட்டாவியோடு கேட்கிறீர்களா ? புக்கை நேரில், கையில் ஏந்திப் பார்த்தால் மாத்திரமே அதற்கான பதில் புரிபடும் உங்களுக்கு !
Becos - இந்த இதழானது - "தலையில்லாப் போராளி " ; "ஒரு தலைவன் - ஒரு சகாப்தம்" வெளிவந்த அதே மெகா சைசில் வண்ணத்தில் வெளிவந்துள்ளது ! 'தலையிலாப் போராளி" இதழினில் - ரெகுலர் சித்திரங்களை அப்படியே பெரிதாக்கி வெளியிட்டிருந்தோம் ! "ஒரு தலைவன்...ஒரு சகாப்தம்" இதழினிலோ - ஓவியர் Serpieri மெகா சைசில், பிரான்கோ-பெல்ஜிய பாணியில் உருவாக்கியிருந்த பக்கங்களை அப்படியே ஈயடிச்சான் காப்பி செய்திருந்தோம் ! ஆனால் இங்கோ - நமது ரெகுலர் சைசிலான TEX பக்கங்களில் ஏகமாய் பணியாற்றி, மெகா சைசுக்கு convert செய்துள்ளோம் ! ரெகுலர் சைசின் 2 பக்கங்கள் இங்கே 1 மெகா பக்கமாய் உருமாற்றம் கண்டுள்ளன - துளி கூட சித்திரச் சிதைவுகளின்றி !! டெக்சின் 70+ ஆண்டு கால சகாப்தத்தினில் - ஏதேதோ ரூபங்களில், பாணிகளில் அவரது ஆல்பங்கள் உலகெங்கும் வெளியாகியிருக்கும் தான் ; ஆனால் நாமிப்போது கையிலெடுத்திருக்கும் இந்த MAXI format இதுவரையிலும் யாரும் முயற்சித்திரா ஒரு பாணி என்று நினைக்கிறேன் !! இதற்கென போனெல்லியில் சம்மதம் கோரிப் பெற்று, பொறுமையாய் பணியாற்றி இதோ MAXI LION என்றதொரு வரிசையில் களமிறக்கியுள்ளோம் !! And இதோ - உட்பக்கங்களின் previews :
இனி இது சார்ந்த "கேள்வியும் நானே - பதிலும் நானே" கச்சேரி :
கேள்வி 1 .'சிவனே'ன்னு போய்க்கினு இருந்த மறுபதிப்புத் தடத்திலே இந்த புது வண்டியை ஓட்டுவானேன் ? நாங்க எக்ஸ்டரா நம்பர் போடச் சொல்லிக் கேட்டோமா ? "
"அப்புறம் இதை அறிவிப்பா வெளியிடாம அப்டி சஸ்பென்ஸா வைச்சிருக்க என்ன அவசியமாம் ?"
பதில் 1 : "மாற்றம் ஒன்றே மாறாதது !" - at least ஒரு ஆகச் சிறு வட்டத்துக்குள் ஜட்கா வண்டி ஓட்ட முற்படும் நமக்கேனும் !! TEX இதழ்கள் சகலமுமே ஒரே பாணியில், ஒரே format-ல் தொடர்ச்சியாய்ப் பயணிப்பது - நெடும் ஓட்டத்துக்கு சுகப்படாதென்று, தலையின் எங்கோ ஒரு மூலையில் ஒரு பட்சியின் அரைகூவலாய்க் கேட்டு வந்தது ! சில பல மாதங்களுக்கு முன்பாய் ஒரு வியட்நாமிய விமான நிலையத்தில், நானும், ஜூனியர் எடிட்டரும் பொதுவாய்ப் பேசிக் கொண்டிருந்த போது, இந்தத் தலைப்பும் அலசலுக்கு உட்பட - "மெகா சைசில், கலரில், அழகாய் வெளியிட இயன்றால் - கடைகளில் விற்பனைக்கும் 'பளிச்' என்று கண்ணில்பட்ட மாதிரியிருக்குமே !!" என்ற ரீதியில் ஜுனியர் எடிட்டரின் அபிப்பிராயமிருந்தது !! சும்மாவே சாமியாடுபவனுக்கு, வேப்பிலையும் அடித்தால் கேட்கவா வேண்டும் ? ஈரோட்டுக்கான TEX இந்த மெகா சைசில் தான் என்று fix ஆனேன் !!
ஆனால் இந்த புக்கைக் கையில் ஏந்தி, இந்தப் புது format-ல் நிஜத்தில் படித்துப் பார்க்கும் வரையிலும், இவை குறித்து ஒரு சரியான எண்ணவோட்டம் உங்கள் மத்தியில் உருப்பெறுவது சிரமம் என்று எனக்குள் ஒரு எச்சரிக்கை சிக்னலுமே மினுமினுத்தது !! So விளம்பரங்களாய் இந்த சமாச்சாரத்தை முன்கூட்டியே நான் அறிவித்திருந்தால் - "குரங்கு வேலை" ; "விஷப் பரீட்சை !" : "நிச்சயிக்கப்பட்ட சொதப்பல் ; "பூட்ட கேசு " என்று மழைச் சாரலாய் அன்பு பொழிந்திருக்கக்கூடுமென்று நினைத்தேன் !! ஆங்காங்கே வாட்சப் க்ரூப்களில், FB குழுக்களில், பரோட்டா மாவைப் பிசைவது போல என் வழுக்கை மண்டையைப் பிசைந்து தள்ளுவதொரு செம ஜாலியான பொழுதுபோக்காகி இருக்கக்கூடும் என்று தோன்றியதால் - உங்கள் கைகளில் புக்கை ஒப்படைக்கும் நொடி வரைக்கும் பெவிகாலே உத்தமம் என்று தீர்மானித்தேன் !
Of course - அதற்காக புக்கினைக் கையில் ஏந்திடும் இந்த நொடியில் இந்த முயற்சியினை அத்தனை பேரும் கைதட்டி, வரவேற்று ஏற்றுக் கொண்டு, சிகப்புக் கம்பளத்தை லாண்டரியிலிருந்து வரவழைத்து விரித்து விடுவீர்களென்றெல்லாம் நான் பகற்கனவு காணப் போவதில்லை !! "இது பெருசா கீது ;படிக்க வசதியாவே இல்லை !" ; "விலை இவ்ளோவா ??" "ரெகுலர் சைஸ்லே அது பாட்டுக்கு வந்தது பொறுக்கலியா ?" ; "ஆட்டையைப் போட புது ரூட்டாக்கும் ?" என்றெல்லாம் `முதல் reactions வெகு பாசமாய் இருக்கக்கூடுமென்பது புரியாதுமில்லை !! ஆனால் திட்டிக் கொண்டேனும் இந்த ஒற்றை இதழை முழுசுமாய் வாசிக்க நேரமெடுத்துக் கொண்டால் - இந்தப் புது பாணி ஒரு whiff of fresh air போலிருப்பதை மறுக்கவும் மாட்டீர்கள் என்ற நம்பிக்கை எனக்குள்ளது !! விலையைப் பொறுத்தவரைக்கும் - cover price ரூ.150 என்றிருப்பினும், உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் விலை காத்துள்ளது !! அது பற்றிய விபரம் சித்தே கழித்து...!!
And here you go - அந்த "சஸ்பென்ஸ்" கார்ட்டூன் இதழின் முதற்பார்வையும் இதோ :
அதே மெகா சைசில், முழு வண்ணத்தில், மேம்படுத்தப்பட்ட மொழியாக்கத்தோடு லக்கி லூக்கின் all-time classic கதைகளுள் ஒன்றான "
மனதில் உறுதி வேண்டும்" வெளியாகிறது -
MAXI லயன் இதழ் # 2 ஆக !! இங்கே சித்திரங்களில் resetting பணிகள் ஏதும் இருக்கவில்லை நமக்கு - படைப்பாளிகள் வெளியிடும் அதே ஒரிஜினல் சைசில், அதே அட்டைப்படங்களோடு சிம்பிளாக வெளியிட்டுள்ளோம் - கதையின் பின்னணி பற்றிய 8 கூடுதல்ப் பக்கங்களோடு !! ஆங்கிலத்திலும், பிரெஞ்சிலும் இந்தக் கதைகள் வெளிவந்திடும் ஒரிஜினல் சைஸ் & பாணி இதுவே எனும் போது - ஆயுசில் முதல்வாட்டி - படைப்பாளிகளின் கால்தடங்களை அட்சர சுத்தமாய்ப் பின்பற்றும் வாய்ப்பு கிட்டியுள்ளது ! Moreso இது போன்ற க்ளாஸிக் மறுபதிப்புகளை இந்த மெகா சைசில் ரசிப்பதும், பத்திரப்படுத்துவதும் ஒரு ரம்யமான அனுபவமாக இருந்திடக்கூடுமென்று நினைத்தேன் !! Of course - உங்களது அபிப்பிராயங்கள் மாறுபட்டிடலாம் தான் ! So early days !!
கேள்வி # 2 : ஏண்டாப்பா அம்பி...மறுபதிப்புகள் ரெண்டையுமே இந்த சைசில் போட்டிருக்கியே - ரெகுலர் மறுபதிப்புச் சந்தாலாம் இனிமே எப்டியோ ?
பதில் # 2 : ஐந்தாறு ஆன்டுகளுக்கு முன்பாய் - இதே ஈரோட்டுப் புத்தக விழாவினில் நமக்கு ஸ்டால் மறுக்கப்பட்ட போது தலைவர் திருமிகு.ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் சொன்ன valid காரணம் - "நம்மிடம் போதிய titles இல்லை ; வெறும் 50 இதழ்களோடு ஒரு அரங்கம் அமைப்பது, வருகை தரும் வாடிக்கையாளர்களுக்கு ஏமாற்றத்தைத் தரக்கூடுமென்பதே !!" So சடுதியில் நமது titles கையிருப்பை உசத்துவதே பிரதான குறிக்கோளாயிருந்தது - மறுபதிப்புகளை நாம் முழுமூச்சாய் அரவணைக்கத் தொடங்கிய போது ! அதன் பிற்பாடு ஒவ்வொரு ஆண்டும் REPRINTS ரகங்கள் ஒரு பிரேத்யேகத் தடத்தைத் தமதாக்கிக் கொண்டு வந்துள்ளன ! ஆனால் இன்றைக்கோ நமது titles கையிருப்பு ஆஞ்சநேயர் வாலின் விஸ்தீரணத்தில் காட்சி தரும் நிலையில் - time for a rethink on the reprints என்றுபட்டது !! தவிர, ஒரு மறுபதிப்புச் சந்தா என்று உருவாக்கிய கையோடு அதனை உங்கள் சிரங்களில் வருஷா வருஷம் விடாப்பிடியாய்க் கட்டி வருவது போலவும் தோன்றியது !! So காத்திருக்கும் 2020 முதலாய் இனிமேல் மறுபதிப்புகளுக்கோசரம் தனியாய் ஒரு சந்தாவென்றெல்லாம் இராது !! மாறாக - சென்னை ; கோவை ; ஈரோடு & மதுரை (or) திருப்பூர் என்ற நான்கு புத்தகவிழாக்களின் போது - MAXI LION format-ல் மறுபதிப்புகள் வெளிவந்திடும் ! சென்னை & ஈரோட்டில் தலா 2 இதழ்கள் & இதர விழாக்களில் தலா 1 வீதம் ! நீங்கள் அவற்றை அந்தந்த book-fair களில் வாங்கிக் கொள்ளலாம் - அல்லது நம்மிடமிருந்து நேரடியாகவும் அதே புத்தக விழா டிஸ்கவுண்டுடன், வாங்கிக் கொள்ளலாம் ! புத்தக விழாக்களை நமக்கு சற்றே மெருகூட்டவும், நீங்களங்கு வருகை தந்திடவொரு சன்னமான முகாந்திரமாகவும் இந்த முயற்சிகள் பயன்பட்டால் மகிழ்ச்சியே !! So it will be Exit : Reprint சந்தா & Enter : Buy as you please - MAXI லயன் !!
கேள்வி # 3 : "விலையிலே இன்னா சலுகைப்பா ??"
பதில் # 3 : இந்த 2 இதழ்களையும் "தி ஈரோடு எக்ஸ்பிரஸ்" முன்பதிவிலேயே இணைத்திருப்பின் - 2 தடவைகளாய் வாங்கும் அவசியமும் இருந்திராது தான் & 2 கூரியர் செலவுகளையும் தவிர்த்திருக்கலாம் தான் ! ஆனால் புது பாணி ; புது விலை ; புது format ப்ளஸ் மறுபதிப்புகளே எனும் போது - முழுசாய் தெரிந்து கொள்ளாது முன்பதிவு செய்துவிட்டு, அப்புறமாய் "முட்டைக்கண்ணன் ஏமாத்திபுட்டான்டா மாப்பிளை !!" என்று ஆங்காங்கே விசனப்படும் படலங்களைத் தவிர்க்க எண்ணினேன் ! So எனது எக்ஸ்ட்ரா முன்ஜாக்கிரதையின் பலனான எக்ஸ்டரா கூரியர் செலவினை ஈடு செய்திடும் விதமாய் இந்த 2 இதழ்களையும் ரூ.125 + ரூ.125 = ரூ.250 என்று டிஸ்கவுண்டுடன் விற்பனை செய்திடவுள்ளோம் ! இந்த சலுகை ஈரோட்டுப் புத்தக விழாவிலும் இருக்கும் ; நமது ஆன்லைன் லிஸ்ட்டிங்கிலும் கிட்டிடும் !! So இரட்டிப்புக் கூரியர் கட்டணங்கள் உங்களை ரொம்பவும் பாதிக்காதென்று நம்புவோம் !
கேள்வி # 4 : இனி எல்லா மறுபதிப்புகளுமே இதே பாணி தானா ?
பதில் # 4 : ஒரு புது பிளேயரை டீமுக்குள் எடுக்கும் போது அவருக்கு ஒரு குறைந்த பட்ச அவகாசமாவது தந்திடல் அவசியம் தானே ? "தம்பி....முத மேட்சிலேயே செஞ்சுரி போடாட்டி நீ பூட்ட கேசுடி !!" என்று அவர் காதில் ஓதினால் மனுஷன் பதட்டத்திலேயே பணால் ஆகிப் போவது தானே இயல்பு ?! So இந்தப் புதுப் பாணிக்குமே ஒரு குறைந்த பட்ச அவகாசம் - அதாவது ஜனவரி 2020 சென்னைப் புத்தக விழா வரையிலும் தந்திடுவோமே - ப்ளீஸ் ? If all is well - புது சைசில் தொடர்வோம் ! இல்லையேல் அவசியப்படும் திருத்தங்கள் செய்யப்படும் - அவற்றிற்கான உருப்படியான முகாந்திரங்களிருக்கும் பட்சத்தினில் !!
கேள்வி # 5 : "அது இன்னா...சூனியரு பேரு மாத்திரமே புக்கிலே கீது ?"
பதில் # 5 : முதிர்ந்த வயதிலுமே இளைஞர் அணிச் செயலாளர் பதவியோடு சுற்றி வரும் காலங்களெல்லாம் போயே போச்சென்பத்தைத் தான் இன்றைக்குப் பார்க்கிறோமே ? So நாமும் சன்னமாய் அதிலிருந்தொரு பாடம் படித்த மாதிரி இருக்கட்டுமே ? இந்த MAXI லயன் வரிசையின் பொறுப்புகள் ஜூனியரிடமே இருந்திடும் ! மிஞ்சிப் போனால் நானிங்கு பேனா பிடிப்பேன் - மொழிபெயர்ப்பாளனாய் !! மற்றபடிக்கு இவை சார்ந்த திட்டமிடல்கள் ; தயாரிப்புப் பணிகள் எல்லாமே எனது தலையீடின்றி இருந்திடும் ! So "செல்லக் கண்மணிகளே....வாசகச் செல்வங்களே !!" என்ற ரீதியிலான ஹாட்லைன்..கோல்ட்லைன்.. வெது வெது லைனெல்லாம் நிச்சயமிராது ! காது வரை நீளும் வாயானது எனது பிரேத்யேகச் சொத்தென்பதால் - அந்த இம்சைகளின்றி MAXI லயன் தட தடக்கும் !!
கேள்வி # 6 : "அடுத்த MAXI லயன் மதுரையிலேயா ?"
பதில் # 6 : Nopes ...மாதயிறுதியில் துவங்கும் மதுரை விழா too early for another reprint !! இனி அடுத்த MAXI லயன் ஜனவரி 2020-ல் தான் !! Maybe..just maybe அதற்கிடையே திருப்பூரில் புத்தக விழா இருப்பின் - அங்கொரு MAXI முயற்சிக்கலாம் !!
கேள்வி # 7 : அடுத்த TEX reprint என்னவாம் ?
பதில் # 7 : திருப்பூரில் / சென்னையில் சொல்றேனே ?
கேள்வி # 8 : MAXI லயனில் சகலமும் மறுபதிப்புமயம் தானா ?
பதில் # 8 : ஆரம்பத்தில் மறுபதிப்புகளில் மாத்திரமே MAXI லயன் கவனம் காட்டிடும் ! காத்திருக்கும் காலங்களில் MAXI நீளம் கொண்ட முன்பதிவிற்கான (புது) ஆல்பங்களும் இதன் ரேடாரில் இடம்பிடித்திடும் வாய்ப்புகள் உண்டு !!
Uffff !! எத்தனை ஹெல்மெட்டுகளை இப்டிக்காவும், அப்டிக்காவும் நான் மாட்டிக்க முற்பட்டாலும், டாலடிக்கும் என் முன்மண்டையில் ஒரு போடு போட ஏதேனுமொரு பாதாள ஆங்கிளில் வழி தேடப்படுவது உறுதி என்பது தெரியாதில்லை ! So ஜாலியாய் அதற்காகக் காத்திருக்கும் கேப்பில் - ஈரோடு எக்ஸ்பிரஸின் கோச் # 1 & 2 பற்றிய அறிமுகங்களைச் செய்திடுகிறேனே ?
இதோ - "பிஸ்டலுக்குப் பிரியாவிடை" இதழின் அட்டைப்பட முதல்பார்வை ! இம்முறை அட்டகாசமான ஒரிஜினல் சித்திரங்களே ஈரோட்டின் 4 ஸ்பெஷல் இதழ்களுக்குமே !! And "பி.பி.வி." ஹார்டகவர் இதழுக்கு ஏகப்பட்ட நகாசுகள் செய்துள்ளோம் ராப்பரில் !! 4 பாகங்கள் கொண்ட இந்த இந்த இதழே இம்மாதத்திய எனது செல்லப்பிள்ளை !! இதுவே உங்களின் ஆதர்ஷப் பிள்ளையாகவும் உருமாறிட்டால் - would be the icing on the erode cake !!
And இதோ - புதியவர்களான DAMOCLES டீமின் தெறிக்கும் ஆக்ஷன் த்ரில்லரின் அட்டைப்படமுமே !! நிறைய ஆக்ஷன் ; கொஞ்சம் காதல் ; கொஞ்சம் செண்டிமெண்ட் என்று நகரும் இந்த ஆல்பமும் நிச்சயமாய் இந்த ஆகஸ்ட்டை அமர்க்களப்படுத்துமென்ற நம்பிக்கை எனக்குள்ளது !! All fingers crossed !!
ஈரோட்டில் நேரில் பெற்றுக் கொள்ள இயலா இதர நண்பர்களின் புக்குகள், கூரியரில் இன்று (சனிக்கிழமை) காலையில் சிவகாசியிலிருந்து கிளம்பிடும் ! திங்களன்று பெற்றுக் கொள்ளும்வரையிலும் பொறுமை ப்ளீஸ் !!
And MAXI லயனின் TEX + லக்கி லூக் மறுபதிப்புகளின் ஆன்லைன் லிஸ்டிங் கூட இன்று ரெடியாகிடும் ! So புது பாணியினை கண்ணில் கண்டிட விரும்பும் நண்பர்கள் ஆன்லைனிலோ ; முகவர்கள் வாயிலாகவோ வாங்கிக் கொள்ளலாம் ! Happy shopping & here's praying that you like them !!
இந்தப் பதிவை வியாழன் ராவினில் டைப்படிக்கிறேன் - வெள்ளியன்று நேரமிராது என்பதால் !! So ஈரோட்டுக்கு உங்களை மீண்டுமொருமுறை வரவேற்கிறேன் folks - காமிக்ஸ் நேசமெனும் ஒற்றைக் குடையினடியே இளைப்பாறி மகிழ்ந்திட !! பெரும் தேவன் மனிடோ நம்மைக் காப்பாராக !!! Adios for now folks !!!
ஈரோட்டில் துவங்கும் புத்தக விழாவினில் நமது ஸ்டால் நம்பர் 4 !!
ஒரு காமிக்ஸ் குவியலோடு உங்களை வரவேற்கக் காத்திருப்போம் !! Please visit us !!