நண்பர்களே,
வணக்கம். மாதத்தின் ஆரம்ப வாரங்களில் வாழைப்பழம் வாங்கி வரப் போகும் செந்திலைப் போல முகம் பிரைட்டாக இருப்பதும் – மூன்றாம் வாரத்திலிருந்தே கடுப்பிலிருக்கும் கவுண்டரைப் போல முகரை கடுகடுவென்றிருப்பதும் சமீப வருடங்களாய்ப் பழகிப் போய்விட்டதொரு routine ! அந்தந்த மாதத்து இதழ்களைத் தயார் செய்து முடித்த கையோடு – 'ஹை… ஜாலி !' என்ற சன்னமான உற்சாகமும் ; இன்னுமொரு பத்து நாட்களுக்காச்சும் ராக்கூத்தடிக்காது தூங்கலாமே என்ற சந்தோஷமும் அலையடிக்கும் ! தேதிகளைக் கிழிக்கக் கிழிக்க – ‘வேலைகளுக்குள் நுழையற வழியைப் பாருலே… போன மாசம் மாதிரியே கடைசி வரைக்கும் ஜவ்வுமிட்டாய் இழுக்காதேலே !!‘ என்று ஒரு குரல் உள்ளாற ஒலிக்கத்தான் செய்யும் ! ஆனால் ‘இன்னும் 20 நாள் இருக்குல்லே… பார்த்துக்கலாம் !‘ என்றபடிக்கே மாடு மேய்த்துத் திரியும் routine-ல் தொடர்ந்திடுவது வாடிக்கை ! மாதத்தின் 15 தேதியைக் கடக்கும் போதே ஊசிப் போன உளுந்து வடையை உள்ளே தள்ளிய effect-க்கு வயிறு லேசாய்க் கலக்க ஆரம்பிக்கும் வேளையில், மைதீனும் மண்டையைச் சொறிந்தபடிக்கே நிற்பது தெரியும் – ‘ப்ரிண்டிங் ஆரம்பிக்க எப்போ ரெடியாகும் அண்ணாச்சி ?‘ என்ற கேள்வியோடே! அப்போது தான் மேஜையில் குவிந்து கிடக்கும் டெக்ஸின் 220 பக்க சாகஸம் அசுரத்தனமான எடை கொண்டிருப்பதாய்த் தோன்றத் துவங்கும் ; கிராபிக் நாவல்கள் சகலமும் தண்டுவடத்தின் உறுதியைப் பரிசோதிக்கக் காத்திருக்கும் பயிற்சிகளாயத் தோன்றத் துவங்கும் ; கார்ட்டூன்கள் நீங்கலாய், பாக்கி எல்லாமே மலைப்பைத் தரும் மலைச்சிகரங்களாய் தென்படும் ! And has been no different this month too!
‘ஹை... மாடஸ்டி மறுபதிப்புத் தான் !‘ என்ற ஜாலியில் அதனில் பெரிசாய் மெனக்கெட அவசியமின்றி அச்சுக்கு அனுப்பி விட்டிருந்தேன் ! “வஞ்சம் மறப்பதில்லை” தடதட ஆக்ஷன் + நேர்கோட்டுப் பயணம் என்றிருந்ததால் தஸ்ஸு-புஸ்ஸென்று மூச்சுவிட்டுக் கொண்டே அதனுள் புகுந்து முக்கால்வாசிப் பணிகளையும் முடித்தாச்சு ! ஒரு மாதிரியாய் வெள்ளியிரவு மீதமிருந்த மொழிபெயர்ப்பை முடித்துக் கொடுத்த கையோடு சுடச் சுட டைப்செட்டிங் & பிராசசிங் அரங்கேறிட - நேற்றைக்கு பிரிண்டிங்கும் துவங்கிவிட்டது ! I have said this before too - and I 'll repeat it too : முந்தைய ராப்பொழுது வரைக்கும் பேப்பரில் கோழி கீச்சலான மொழிபெயர்ப்பாய் நின்றிடும் சமாச்சாரத்தை ஒற்றை நாள் கழித்து அச்சில் பார்ப்பது என்பது இன்னமுமே ஒரு செம த்ரில்லான அனுபவமாய்த் தொடர்ந்திடுகிறது ! And அந்த washdrawing சித்திரப் பக்கங்கள் வண்ணத்தில் மிரட்டுவதையும் சேர்த்தே ரசிப்பது கூடுதல் fancy !!
பணி # 3 ஆக கையிலெடுத்தது நமது சிகப்புச் சட்டை நண்பர் ட்ரெண்டை ! நமது கருணையானந்தம் அவர்கள் இந்த ஆல்பத்திற்குப் பேனா பிடித்திருக்க – வழக்கம் போல கொஞ்சம் மாற்றங்கள் ; முன்னேற்றங்கள் என்று எடிட்டிங் செய்திட உட்புகுந்தேன் ! ஒன்றுக்கு இரண்டாய் ‘ஹிட்‘ மாதங்கள் ஆகஸ்டிலும், செப்டம்பரிலும் அமைந்திருக்க அந்த momentum-ஐத் தக்க வைத்துக் கொள்ள அக்டோபரின் ட்ரெண்டும் ஒத்துழைக்க வேண்டுமே என்ற படபடப்பு லேசாயிருந்தது ! சென்றாண்டின் பிற்பகுதியில் இதன் ஆங்கில Cinebook ஆல்பத்தைப் படித்தது நினைவிருந்தாலும் – கதையின் outline-ஐத் தாண்டி வேறெதுவும் ஞாபகத்தில் நஹி ! So வேக வேகமாய்க் கதைக்குள் புகுந்தேன் ! “சாலையெல்லாம் ஜுவாலைகளே” கதையினில் – காதலி ஆக்னெஸ் தரும் நயமான பல்பை வாங்கியிருந்த பாவப்பட்ட ட்ரெண்ட் இம்முறை என்ட்ரி தந்திட்டதே கணிசமான பக்கங்களுக்குப் பிற்பாடு தான் ! கதை நெடுக மெதுமெதுவாய் கதாசிரியர் செய்திட்ட ‘திகில்‘ பில்டப்பானது ட்ரெண்ட் களமிறங்கிய பிற்பாடு இன்னமும் வேகமெடுக்க, அந்த clean சித்திர பாணிகளோடு பயணிப்பது அத்தனை அட்டகாசமான அனுபவமாகயிருந்தது ! வசனங்களில் ஆங்காங்கே தென்பட்ட புராதனத்தை மட்டும் மாற்றியெழுதியபடியே தடதடத்ததால், க்ளைமேக்ஸைத் தொட்டு நின்றேன் – இரண்டே மணி நேரங்களில் ! And இம்முறையுமே கடைசி 2 பக்கங்களில் கதாசிரியர் நம்மை மெலிதான உணர்வுகளால் கட்டிப் போடும் பாணி தொடர்கிறது ! அந்த இறுதிப் பக்கங்கள் இரண்டையுமே மொத்தமாய் மாற்றி எழுதிவிட்டு, கதையை மீண்டுமொரு முறை படித்த போது இந்த டீமின் படைப்பாளிகளைப் பார்த்தொரு நமஸ்காரம் பண்ணிடத் தோன்றியது ! அதிர்ந்து பேசத் தெரியா ஒரு ஹீரோ ; அதிரடிகளை அடையாளமாய்க் கொண்டிரா ஒரு கதை பாணி ; இதன் மத்தியிலும் கொஞ்சம் வரலாறு ; கொஞ்சம் திகில் ; கொஞ்சம் ஆக்ஷன் ; கொஞ்சம் ட்விஸ்ட் ; கொஞ்சம் மெல்லிய உணர்வுகளென்று கலவையாய்த் தூவி, சுவையாய் ஒரு படைப்பை நேர்கோட்டில் உருவாக்குவதென்பது சாமான்யக் காரியமல்லவே !! Of course – நம்மிடையே உள்ள அதிரடிப் பிரியர்களுக்கு இந்த சிகப்புச் சட்டைக்காரர் கடைப்பிடிக்கும் மென்மையான பாணி மீது அத்தனை பிடித்தமிராது போகலாம் தான் ! "இந்த முழியாங்கண்ணன் பண்ற பில்டப் ரவுசுக்கு ஒரு வரைமுறையே இல்லாது போச்சுப்பா ! இன்னும் விச்சு & கிச்சுவுக்குத் தான் பதிவு போடாம இருக்கான் !!" என்று மனதுக்குள் உரக்கவே நினைத்தும் கொள்ளலாம் தான்! ஆனால் trust me guys – ஆர்ப்பரிக்கும் அருவிகள் ஒரு பிரம்மாண்டமெனில், விசையோடு ஓடும் தெளிந்த நீரோடையுமே ரசனைக்குரியதே ! மொத்தமுமே 8 ஆல்பங்கள் தான் ட்ரெண்ட் தொடரினில் ! நாமிப்போது தொடவிருப்பது ஆல்பம் # 4 ! So எஞ்சியிருப்பன அடுத்த ஓரிரு ஆண்டுகளுக்கு தாக்குப்பிடித்திடும் எனும் போது – இருக்கும் வரை சிலாகித்துக் கொள்வோமே ? இதோ ட்ரெண்டின் அட்டைப்பட முதல் பார்வை !
வழக்கம் போலவே ஒரிஜினல் டிசைன் தான் – கொஞ்சமாய் நமது நகாசு வேலைகளுடன்! And இதோ – உட்பக்கங்களின் preview-ம் !
இன்றைக்கு 79 வயதைத் தொட்டு நிற்கும் பிரேசிலிய ஓவியரான லூயி எடுவர்டோ டி ஒலிவியரா (Leo) தான் இந்தத் தொடருக்கு சித்திர ஜாலங்கள் செய்திடும் ஆற்றலாளர் !! மெக்கானிக்கல் எஞ்சினியரான மனுஷன் காமிக்ஸ் கரையிரமாய் ஒதுங்கியது நமது அதிர்ஷ்டம் எனலாம் ! இவரைப் பற்றி இன்னொரு சேதியுமே : GANDHI - The Pilgrim of Peace என்றதொரு நம் தேசப்பிதா பற்றியான பிரெஞ்சு கிராபிக் நாவலுக்கும் சித்திரங்கள் போட்டுள்ளார் !!
ஓவியர் செய்யும் அதகளம் ஒருபக்கமெனில், கலரிங் ஆர்டிஸ்டின் பங்களிப்பும் இங்கே கொஞ்சமும் சளைத்ததல்ல ! இதோ - அதற்கான பணியாற்றிய பெண்மணி இவர் தான் (Marie Paul Alluard) :
ஒரு நிசப்த மழையிரவில் இந்த ஆல்பத்தைப் படித்துப் பாருங்களேன் – செம ரம்யமாய் தென்படக்கூடும் ! Thus ends the பில்டப் பரமசிவம் அவதார் yet again for ட்ரெண்ட் !
அக்டொபரில் தொடர்வது பில்டப்களுக்கெல்லாம் அப்பாற்பட்டதொரு அசகாயரின் ஆல்பமே (TEX - புதைந்து போன புதையல்) என்பதால் அவரை preview செய்திடும் படலத்தை அடுத்த ஞாயிறுக்கென வைத்துக் கொண்டு, இப்போதைக்கு வேறொரு திக்கில் வண்டியைத் திருப்பிட நினைத்தேன் ! அது தான் இந்தாண்டின் புத்தக விழா கேரவன் சார்ந்த சிலபல சேதிப் பகிர்வுகள் ! Nothing earth shattering, but still....!
எப்போதுமே ஆண்டின் துவக்கம் சென்னைப் புத்தக விழாவோடு டாப் கியர் போட்டாலுமே, தொடர்ந்திடும் பிப்ரவரி & மார்ச் மாதங்கள் புத்தக விழாக்களுக்கு உகந்த பொழுதுகளாய் எங்குமே அமைவதில்லை ! அப்பாலிக்கா ஏப்ரல் & மே மாதங்கள் கோடையின் உக்கிரத்தின் முன்பாக அத்தனை பேரும் தெறித்தடித்து ஓடி ஜகா வாங்கிடும் பொழுதுகளாகிப் போகின்றன ! ஜுன் மாதம் பள்ளி அட்மிஷன்களின் பொழுதெனும் போது, யார் பைக்குள் கை விட்டாலுமே கணிசமாய் காற்றை மட்டுமே துளாவிட முடிவது வாடிக்கை ! So ஒரு மாதிரியாய் ஜுலையில் துவங்கிடும் புத்தக விழாக்களின் சுற்றானது, நெய்வேலியில் துவங்கி, கோவையில் சூடு பிடித்து; ஈரோட்டில் சாகஸம் செய்து ; மதுரையில் சுப மங்களம் போடுவது வாடிக்கை! இம்முறை நடுவே தஞ்சாவூர் விழாவிலும் நமக்கு இடம் கிடைக்க, தொடர்ச்சியாய் 5 ஊர்கள் ; தொடர்ச்சியாய் சுமார் 75 நாட்கள் on the road என்றாகியிருந்தது !
சமீப ஆண்டுகளில் தமிழகமெங்கும் புதியதொரு trend நடைமுறையிலுள்ளது உங்கள் கவனத்திலிருந்து தப்பியிராது தான் ! சகல Tier 2 நகர்களிலும் இப்போதெல்லாம் ரெகுலராய் நடந்து வரும் புத்தக விழாக்கள் ஒரு வெகு சமீப நிகழ்வே ! வாசிப்பைப் பரவலாக்கிட ; மலையைத் தேடி முகமது செல்லா பட்சத்தில் முகமதைத் தேடி மலையே பயணமாகும் ஒரு முயற்சியிது ! பெரம்பலூர்; ராம்நாட்; காரைக்குடி; அரியலூர்; மேட்டுப்பாளையம்; புஞ்சைபுளியம்பட்டி; ஆரணி; ஹோசூர் ; கும்பகோணம் etc என்று ஆண்டின் புத்தகவிழாப் பட்டியல் இப்போதெல்லாம் எனது நீட்டி முழக்கும் பதிவுகளை விடவும் நீளமானதே ! On the flip side இவற்றின் தாக்கங்கள் பெருநகர விழாக்களின் விற்பனைகளில் ஓரளவு பிரதிபலிப்பதையுமே சமீபமாய்ப் பார்த்திட முடிகிறது ! எது எப்படியோ – விற்பனை; வருவாய் – என்ற நம்பர்களைத் தாண்டி, புதுப்புது ஊர்களிலுள்ள வாசகர்களை எட்டிப் பிடிக்க இயலும் வாய்ப்பானது, வரவு-செலவு கணக்குகளுக்கு அப்பாற்பட்டதே ! என்ன ஒரே சிக்கல், இந்த bookfair cycle கிட்டத்தட்ட தொடர்ச்சியாய் ; ஒன்றன்பின் ஒன்றாய் அமைந்து விடும் போது நம் பணியாட்களுக்கு ஓய்வானது குதிரைக்கொம்பாகிப் போகிறது ! So ஒரு கட்டத்தில் ஒரு சில விழாக்களிலிருந்து ஜகா வாங்கிட வேண்டிப் போகிறது ! Anyways – இதோ இந்த ஆண்டின் 5 ஊர் கேரவன் பயணத்தின் சிலபல highlights :
😄 கிட்டத்தட்ட எல்லா ஊர்களிலுமே இன்னமும் நமது ஸ்டீல்க்ளாவுக்கு மவுசு தொடர்கிறது! (கவிஞரல்ல நான் குறிப்பிடும் ஸ்டீல்க்ளா) இந்த மேம்பட்ட மறுபதிப்புகள் துவங்கிய 2015...2016-ன் craze இன்றைக்கு இல்லை என்றாலும் – இன்னமுமே – மாயாவியை நம்பினோர் கைவிடப்படேல் ! என்றே தொடர்ந்து வருகிறது ! ஆனால் ஒரே நெருடல் என்னவெனில் – மாயாவி ஆர்வலர்கள் மற்ற எந்த இதழ்களையும் சுட்டு விரலால் கூடத் தொட்டுப் பார்க்கவும் தயாரில்லை ! கண்டேன் மாயாவி மாமாவை !!" என்றபடிக்கு அவற்றுள் ஓரிரு பிக்குகளை வாங்கிய கையோடு நடையைக் கட்டிவிடுவது சகஜ நிகழ்வு ! So காமிக்ஸ் சார்ந்த nostalgia தான் இங்கே கோலோச்சுகிறதே தவிர – காமிக்ஸ் நேசமல்ல !
😄 மும்மூர்த்திகளின் பாக்கி இருவரும் சரி, நமது குற்றச் சக்கரவர்த்தி ஸ்பைடரும் சரி – ஊர்ஊராய் போய் சாட்-பூட்-த்ரீ ஆடிவிட்டு பத்திரமாக ஊர் திரும்பியுள்ளனர் ! CID லாரன்ஸ் & டேவிட் ; ஜானி நீரோ என்ற பெயர்களை வாசிக்கும் சிலபல வதனங்களில் பிரகாசம் spark அடிப்பதோடு சரி ! கல்லாப்பெட்டி வரை அந்த மையல் தொடர்ந்திடுவதில்லை !
😄 சந்தேகமின்றி இந்தாண்டின் இந்த 5 புத்தக விழாக்களிலுமே flavor of the season டெக்ஸின் “டைனமைட் ஸ்பெஷல்” தான்! என் ஞாபகம் சரியெனில் போன அக்டோபரில் வெளியான இதழிது ! கடைசிப் பத்துப்-பதினைந்து இதழ்களே இப்போது கையிருப்பு என்ற நிலையைத் தொட்டுள்ளது ! அட்டைப்படத்தில் பச்சைபடர்ந்த டிசைன் ; அந்த 500+ பக்கக் கதையின் சினிமாத்தனம் என விமர்சனங்களைச் சந்தித்த போதிலும் – ‘தல‘ தாண்டவத்தைத் தடைபோட வழியில்லை ! So சமீப சமயங்களின் biggest success story "டைனமைட் ஸ்பெஷல்" தான் என்பேன்!
😄 அதே போல “பிஸ்டலுக்குப் பிரியாவிடை” இந்தாண்டின் ஈரோட்டிலும் சரி, தொடர்ந்த தஞ்சாவூர் & மதுரையிலும் சரி – runaway hit ! கதையின் வலு பற்றி ஆங்காங்கே நீங்கள் செய்துள்ள சிலாகிப்புகள் ; அலசல்களே இந்த வெற்றிக்கு உறுதுணை என்பது நிச்சயம் ! புத்தக விழாக்களில் மட்டுமன்றி சிலபல ஊர்களிலும் “பிஸ்டலுக்குப் பிரியாவிடை” இதழை மட்டுமே மறுக்கா ஆர்டர் செய்துள்ளனர் ஏஜெண்ட்கள் ! The power of positivity !!
😄 “இரத்தப் படலம்” வண்ணத் தொகுப்பு கிடைக்குமா ?" என்ற கேள்வியோடு கடந்த 75 நாட்களது வெவ்வேறு புத்தக விழாக்களிலும், குறைந்தது ஒரு 50 வாசகர்களாவது நடைபோட்டிருப்பார்கள் ! ஓராண்டுக்கும் அதிகமாய் முன்பதிவு செய்திட அவகாசம் இருந்த போதிலும் தவற விட்ட வாசகர்கள் தற்போது தர்மசங்கடமான இந்தக் கேள்வியோடு நம்மை அணுகிடும் போது – கையை விரிப்பதைத் தாண்டி வேறு மார்க்கமில்லை ! ‘மறுக்கா ஒரு முன்பதிவு – மறுக்கா ஒரு edition’ என்பதெல்லாம் நடைமுறை சாத்தியமிலா சமாச்சாரம் என்பதால் “இப்போதைக்கு வாய்ப்பில்லீங்க!” என்று தான் சொல்லிட வேண்டியுள்ளது ! Truly sad...!
😄 எப்போதும் போலவே லக்கி லூக் சகல தரப்பினரின் ஜிகிடி தோஸ்தாக தொடர்ந்திடுகிறார்! அதிலும் லக்கி க்ளாசிக்ஸ்; லக்கி ஆண்டுமலர் ஹார்ட்கவர் இதழ்கள் கண்ணில்படும் நொடியிலேயே புது வாசகர்களைக் கவர்ந்து விடுகின்றன!
😄 TEX அபிமாணிகள் தேடுவது பருமனான; வண்ணமயமான ஆல்பங்களையே ! சர்வமும் நானே; டைனமைட் ஸ்பெஷல்; சைத்தான் சாம்ராஜ்யம் etc...etc... முதல் பார்வைகளிலேயே மக்களை ஈர்த்து விடுகின்றன ! அதே போல Color Tex தொகுப்பான “புனிதப் பள்ளத்தாக்கு” கூட best seller தான்!
😄 பௌன்சர்; கமான்சே & ஜெரெமயா ”மறக்கப்பட்ட மாந்தர்கள்” பட்டியலில் தொடர்வது தான் வருத்தமே ! Extremely cold reception !!
😄 ஈரோடு, தஞ்சை & மதுரையில் MAXI லயனின் 2 இதழ்களுமே massive ஹிட்ஸ் ! அந்தப் பெரிய சைஸா ? அல்லது டெக்ஸ் & லக்கியை வண்ணத்தில் பார்த்த வாஞ்சையா ? - தெரியாது ; ஆனால் இரு மெகா மறுபதிப்புகளுமே best sellers!
😄 சிக் பில் & கோவின் “கொலைகாரக் காதலி” இம்முறை விரும்பி வாங்கப்பட்ட இதழ்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது ! பொதுவாகவே ஹார்ட்கவர் இதழ்களுக்கொரு fancy இருப்பது புத்தக விழாக்களில் தெரிகிறது!
😄 இந்தாண்டின் surprise package மதுரை விழா தான் ! பொதுவாய் இதுவரையிலான மதுரைப் புத்தக விழாக்களில் ‘எங்க ஆத்துக்காரரும் கச்சேரிக்குப் போறார்‘ என்று பீற்றும் விதமாய் மட்டுமே இருந்திடும் நமது விற்பனைகள் ! நிறைய நாட்களில் நாம் காலிபிளவர் பஜ்ஜிக் கடைக்காரர்களை பொறாமையோடு லுக் விட்டிருக்கிறோம் தான் !! ஆனால் இம்முறை எல்லா நாட்களுமே மழைக்கு மத்தியிலும் செம decent ஆன விற்பனை ! Thanks மதுரை!
😄 இந்தாண்டின் கோவை விழாவிலுமே போன வருடத்தை விட better performance தான் ! ஆனால் “ஆண்டுக்கொருவாட்டி இந்த விழாவில் மாத்திரமே காமிக்ஸ் வாங்குவோம்!” என்று சொன்ன குடும்பங்கள் கணிசம்! இதர மாதங்களில் கோவையிலுள்ள நமது பல முகவர்களுள் யாரையேனும் நாடினால் சூப்பராகயிருக்கும் தான் ! ஹ்ம்ம்ம்...!!
😄 தஞ்சாவூருமே முதல் முயற்சிக்கு not bad என்ற அனுபவமே நமக்கு ! அந்தப் பகுதிகளில் நமக்கு முகவர் பலம் அத்தனை வலுவாய் கிடையாதெனும் போது – இத்தகைய வாய்ப்புகளை நாம் பயன்படுத்திக் கொண்டால் தானுண்டு!
😄 என்ன தான் கிராபிக் நாவல்கள்; யுத்தகால அனுபவங்கள்; அமெரிக்க அரசியல் சாஸனத் திருத்தங்கள்; கடற்கொள்ளையர் கதைகள் என்று நாம் பயணித்தாலும் – ‘ஆங்... காமிக்ஸா?‘ என்ற எகத்தாளத்தோடு நகர்ந்திடும் ஜனத்துக்கு இன்னமுமே பஞ்சம் நஹி! ‘7 முதல் 77 வரை – அனைவருக்குமான காமிக்ஸ்‘ என்பது நனவாக இன்னும் நிறைய தூரம் போகனும் நாம் ! இயன்றமட்டிலும் உங்களது FB பதிவுகளில், காமிக்ஸ் சார்ந்த எண்ணங்களையும் சுற்றில் விட முயற்சியுங்களேன் guys?
Before I sign off - சன்னமாய் சில updates :
1.வரலாறு முக்கியம் அமைச்சரே !! அடிக்கடி நம் பேச்சுவழக்கில் இடம்பிடித்திடும் வாக்கியமிது !! அதை நடைமுறைக்கும் ஒத்துப் போகிடச் செய்தல் சாத்தியமாகிடுமா folks ? ஏன் கேட்கிறேன் என்றால் - வண்ணத்தில் ஒன்று ; black & white -ல் இன்னொன்று என வரலாற்றை அட்டகாசமான கற்பனையுடன் கலந்து பிரமாதமான கிராபிக் நாவல்களாக்கிடும் முயற்சிகள் சமீபத்தில் கண்ணில் பட்டன ! அவற்றுள் ஒன்று வன்மேற்கைச் சார்ந்தது ! இவை நமக்கு சுகப்படும் என்பீர்களா folks ?
2.இன்னொரு 2 பாக கௌபாய் அதிரடி சாகசமும் கண்ணில் பட்டூ !! எங்கேனும் அதற்கொரு சீட் போட்டு வைக்கலாமா ? இல்லாங்காட்டி காதுலாம் தக்காளிச் சட்னி கசியுதா - தோட்டாச் சத்தத்தில் ?
3.2020 அட்டவணையை கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு முன்பே முடித்து விட்டதாய் நினைத்துக் கொண்டே திரிந்து வந்தேன் ! 'But இன்னும் கொஞ்சம் எமோஷன்ஸ் இருந்தாக்கா தேவலையோ ?' என்ற கேள்வி நாளாசரியாய் உள்ளுக்குள் குடையும் நேரமாய்ப் பார்த்து - புதுசு புதுசாய் சில அதகளங்களைப் படைப்பாளிகளும் கண்ணில் காட்டி வைக்க - கோட்டை அழிச்சுப்புட்டு முதல்லேர்ந்து மறுக்கா புரோட்டா சாப்பிட உத்தேசித்துள்ளேன் !! புரட்டாசி என்பதால் சைவக்குருமா வாளியை இக்கட park பண்ணுங்கப்பா !!
ரைட்டு...“புதைந்து போன புதையலின்” எடிட்டிங்கினுள் புகுந்திட நான் நடையைக் கட்டுகிறேன்! Have a Super Sunday all! Bye for now ! See you around !!