வணக்கம். விடுமுறைகள் நிறைந்ததொரு மாதம் நிறைவை நோக்கி நகர, புத்தாண்டும், தைத்திருநாளும், குடியரசு தினமுமே ஏக்கப் பெருமூச்சுகளை வரவழைக்கும் நினைவுகளாய் மட்டுமே தங்கியுள்ளன ! And அதே கதை தான் - நடந்து முடிந்துள்ள சென்னைப் புத்தக விழாவிற்குமே !! வாசிப்பின் ஜீவன் இன்னமும் அணைந்திடவில்லை என்பதை அழுந்தப் பதிவு செய்திடும் அந்த ஜனத்திரளை எண்ணி நெடும் பெருமூச்சே வெளிப்படுகிறது ! நானங்கு இருந்தது என்னவோ ஒன்றரை நாட்களுக்கு மாத்திரமே என்றாலும், அந்தப் பரபரப்பை இன்று வரைக்கும் உணர்ந்திட முடிகிறது ! Back to the grind ; மீண்டும் பணிகள். பொறுப்புகள் என்று சக்கரம் சுழலத் துவங்கிவிட்டிருந்தாலுமே, புத்தக விழா சார்ந்த எண்ணங்கள் நிழலாடுவது மட்டுப்படவில்லை இன்னமுமே !! And சமீபத்து வழக்கப்படி புத்தக விழாவின் விற்பனைகள் ; சொதப்பல்கள் ; ,மிதங்கள் ; உச்சங்கள் என்று சகலத்தையும் கணக்கெடுத்து ஒப்படைத்தனர் நம்மவர்கள் ! அதை பார்க்கும் போது புலப்பட்ட சுவாரஸ்யத் தகவல்களை உங்களோடு பகிர்ந்திடத் தோன்றியது ! So இந்த ஞாயிறின் அலசல் - சென்னை 2018-ன் விற்பனைகள் பற்றியே !
Of course - 200+ தலைப்புகளை நமது ஸ்டாலில் முதன்முறையாகப் பார்க்க நேரிடும் ஒரு புது வரவுக்குள் ஓடக்கூடிய பரபரப்பையும், அந்நேரத்தில் தோன்றிடக் கூடிய impulsive buying பாணியையும் ரசனைகளின் வெளிப்பாடாய்ப் பார்த்திட முடியாது தான் ! அட்டைப்படமோ ; தலைப்போ ; முதல் புரட்டலில் ஈர்க்கும் ஏதோவொரு விஷயமோ ; விலையோ ; தயாரிப்புத் தரமோ ; நோஸ்டால்ஜியாவோ அவர்களது கொள்முதல்களுக்குக் க்ரியாவூக்கிகளாய் இருந்திடக்கூடும் தான் ! So தொடரும் 'ரமணா' பாணிப் புள்ளிவிபரங்களை ஒரு ஒட்டு மொத்த statement ஆக நான் வெளிப்படுத்த முனைந்திடவில்லை ! மாறாக - ஒரு மேலோட்டமான பார்வையாக மாத்திரமே ! Here goes :
புத்தக விழாவின்
TOPSELLER-லிருந்து ஆரம்பிப்பது நலமென்பேன் & அந்த மெடலைத் தாங்கிக் கொள்ளும் நெஞ்சானது யாருடையது என்பதைக் கேட்டால் சில பல 'பணால்'கள் நேரிடலாம் ஆங்காங்கே !! அது வேறு யாருமில்லீங்கோ - தலைகீழ் சிரசாசன SMS புகழ் இஸ்பய்டர் சாரே ! அவரது ஜனவரி இதழான "
விசித்திரச் சவால்" தான் இந்தப் புத்தக விழாவினில் நமது bestseller !! அந்த செம cute பாக்கெட் சைசின் பங்கு தான் இதன் பின்னணி என்று எனக்குப் பட்டாலும் - தானைத் தலைவரின் diehard fans நிச்சயமாய் மாற்றுக கருத்துக்கள் கொண்டிருப்பது உறுதி ! எது எப்படியோ - சின்னதொரு மார்ஜினில் மாயாவியாருக்கு டேக்கா கொடுத்து விட்டு முதலிடம் பிடிக்கிறார் நமது லயனின் big boss !!
இரண்டாமிட நாயகர் முதல் பெயரை "லூயி" என்றும் இரண்டாம் பெயரை "கிராண்டேல்" என்றும் கொண்டிருக்கும் ஆசாமி ! Oh yes - எண்ணிக்கையில் slot # 2 பிடித்து நிற்பது சமீப மறுபதிப்பான "
மர்மத் தீவில் மாயாவி" தான் ! இதழ் புராதனத்திலானது என்றாலும், மறுபதிப்பாய் இது வெளியானது வெகு சமீபத்தில் என்ற விதத்தில் இதுவொரு recent இதழே என்பதாலோ என்னவோ, மக்கள் வாஞ்சையோடு வாங்கியுள்ளனர் ! இந்த இதழின் ராப்பருமே விற்பனைக்கு உதவிய முக்கிய விஷயம் என்று சொல்லத் தோன்றுகிறது ! தொடர்ந்த இடங்களில் வந்திருப்பது "
நாச அலைகள்" & "
பாம்புத் தீவு" ! மாயாவியின் விற்பனை ஒரு மைல் தொலைவில் எனில், ஜானி நீரர் மூன்றாமிடத்திலும் ; லாரன்ஸார் & டேவிடர் இறுதியிடத்திலும் உள்ளனர் - மறுபதிப்புத் தரவரிசையில் ! ""
தங்கவிரல் மர்மம் " & "
தலை கேட்ட தங்கப் புதையல் " அவரவரது தொடர்களுள் அதிக விற்பனை கண்டுள்ள இதழ்கள் !!
இந்த "எழுபதுகளின் பிள்ளைகளை" இன்றைக்கும் முன்னணியில் நிற்கச் செய்யும் இந்த 'நோஸ்டால்ஜியா'வை எண்ணி வியாக்காது இருக்க இயலவில்லை ! நிறைய முறைகள் இந்த அலசல்களுக்குள் புகுந்து வெளியேறி இருக்கோம் என்பதால் - இன்னுமொரு repeat தேவையில்லை தானே ?
"மாமு....நீ கிராபிக் நாவலை போட்டுக்கோ ; விண்வெளிக்கு ராக்கெட் விட்டுக்கோ ; சிக்கின குதிரைப் பையன்களையும் அழைச்சுக்கோ - ஆனால் கில்லி நாங்க தான் !!" என்று இந்த நொடியில் மும்மூர்த்திகள் என் திசையில் பழிப்புக் காட்டுவது போலொரு பீலிங்கைத் தவிர்க்க இயலவில்லை ! கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே மறுபதிப்புகள் மெதுநடை தான் போட்டு வந்து கொண்டிருக்க - ஒரு மாதிரியாய் அந்த மோகம் மட்டுப்பட்டுவிட்டதாய்த் தான் நினைத்திருந்தேன் ! ஆனால் இந்தப் புத்தக விழாவில் தென்பட்டிருக்கும் வேகத்தை என்னவென்று classify செய்திடவோ - தெரியவில்லை ! அதற்காக 2015-ன் தொடக்கத்தில் அலையடித்த அதே விறுவிறுப்பு இப்போது மறுபிரவேசம் செய்துள்ளது என்றெல்லாம் சொல்ல மாட்டேன் ; "
நயாகராவில் மாயாவி" வெளியான அந்த ஜனவரியில் இருந்ததோ முற்றிலுமாய் வேறொரு லெவெலிலான அதகள உத்வேகம் !! Nowhere close to that - but still beating the others !!
மறுபதிப்புகளின் மீதான லயிப்புக்குப் பின்னே அடுத்த "கவனக் கோரர்" நமது இரவுக் கழுகாரே !! கணிசமான இவரது titles நம்மிடம் சேர்ந்து விட்டபடியால் - "
TEX" என்று தேடி வருவோருக்கு நல்லதொரு சாய்ஸ் சாத்தியமாகிறது ! And இம்முறை முதலிடத்தில் நிற்பது "
இரும்புக் குதிரையில் ஒரு தங்கப் புதையல்" தான் !! கடந்த 2 ஆண்டுகளாய் விடாப்பிடியாய் முத்லிடத்தைத் தக்க வைத்திருந்த "
நில்..கவனி..சுடு" இம்முறை காலி என்பதால் கையிருப்பில் கடைசி 25 பிக்குகளும் சென்னையில் தீர்ந்தே விட்டன ! And சென்னையில் 'டாடா - பை-பை' சொன்ன இன்னொரு TEX இதழானது "
டிராகன் நகரம்" தான் ! இது SUPER 6 limited edition என்பதால் அச்சிடப்பட்டதே சொற்பப் பிரதிகள் ; and இதனில் "
போட்டோ போட்டோம் ; கோட்டை விட்டோம்" என்று ஏதேதோ ரவுசுகள் அரங்கேறியதன் புண்ணியத்தில் அப்போதே online-ல் நிறைய விற்றுத் தீர்ந்திருந்தது ! எஞ்சியிருந்தவை புத்தக விழாவில் காலி !! And TEX ஷாப்பிங்கில் எப்போதும் போல "
நிலவொளியில் நரபலி" அடித்து ஆடியிருந்தது என்பது கொசுறுச் சேதி !!
As usual - டெக்சின் வாலைப் பிடித்துக் கொண்டே அடுத்தயிடத்தில் நிற்பது நமது
லக்கி லூக் ! அந்த மனுஷனுக்கும் டெக்ஸைப் போலவே ஆண்கள் / பெண்கள் ; சிறார் / பெரியோர் என அனைத்துத் தரப்போடும் ஒருவித chemistry நிலவுவது கண்கூடு !! இம்முறை முதலிடம் "
ஒரு பட்டாப் போட்டி" இதழுக்கே ; followed by "
ஒற்றைக்கைப் பகாசுரன்" !!
இந்தப் புத்தக விழாவின் நிஜமான surprise என்று சொல்வதாயின் - அது நமது உடைந்த மூக்காரின் ஆல்பங்களின் விற்பனையில் தென்பட்டிருக்கும் ஒரு சுறுசுறுப்பு !! கடைசி 3 ஆண்டுகளாய் டைகரும் சரி ; கமான்சேவும் சரி, ஊர் ஊராய்ப் புத்தகவிழாக்களின் பெயரைச் சொல்லி சுற்றுப் பயணம் அடித்துவிட்டு பத்திரமாய் நமது கிட்டங்கிக்கே திரும்பிடும் வித்தைக்காரர்களாகவே இருந்து வந்தனர் ! ஆனால் இம்முறையோ - "
இரத்தக் கோட்டை" தந்த boost-ன் காரணமாகவோ , என்னவோ - கேப்டன் டைகரின் விற்பனை has not been bad at all !! வழக்கம் போல "
தங்கக் கல்லறை"-க்கு நல்ல வரவேற்பு !
ஆச்சர்யங்கள் ஓய்ந்த பாடில்லை - இம்முறையோ நம்பரையே பெயராகக் கொண்ட மனுஷனின் புண்ணியத்தில் ! புத்தக விழாக்களில் "இரத்தப் படலம்" பெரும்பாலும் நமக்கு "சோகப் படலங்களாக" மட்டுமே இருந்து வந்துள்ளன ! ஆனால் இம்முறை நண்பர் கணேஷ், கன்னத்தில் மருவை ஒட்டிக்கொண்டு வந்து மொத்தமாய் வாங்கி யாருக்கேனும் விநியோகம் செய்தாரா என்று தெரியவில்லை ; கொண்டு சென்ற XIII-ன் இதழ்களில் பெரிதாயொரு மிச்சம் இருக்கவில்லை ! And மொத்தம் 12 முன்பதிவுகள் சென்னையில் நடந்துள்ளதையும் சேர்த்தால் தற்போதைய "
இரத்தப் படலம்" முன்பதிவு நம்பர் : 402 !!!
We are there guys !!! கதைகளின் (வண்ண) டிஜிட்டல் கோப்புகள் வந்துவிட்டன ; மாதாந்திரப் பணிகளுக்கு இடைஞ்சலின்றி வேலைகளை முடுக்கி விட வேண்டியது மட்டுமே பாக்கி !! அநேகமாய் ஏப்ரல் இறுதியில் வாசக proof reading டீமுக்கு வேலையிருக்கும் !! தயாராகிக் கொள்ளுங்கள் - சிகப்புப் பேனா சகிதம் !!
அடுத்ததாய்ப் பார்வையில் தட்டுப்படுவோர்
சிக் பில் & ப்ளூ கோட்ஸ் & சுட்டிப்புயல் பென்னி !! இந்த மூன்று கார்ட்டூன் பிரதிநிதிகளுமே - ஓசையின்றி முத்திரை பதித்துள்ளது புரிகிறது - நம்பர்களை அலசிடும் போது ! அதிலும் பென்னி அடித்துள்ளது சிக்ஸர்கள் மட்டுமே - கொண்டு சென்ற 2 அல்பங்களுமே சுத்தமாய்த் தீர்ந்து போன வகையில் ! And "
சிக் பில் ஸ்பெஷல்" - ஸ்பெஷலான கவனத்தை ஈர்த்துள்ளது என்பதில் நிச்சயம் நம்மில் யாருக்கும் வியப்பிராதென்று நினைக்கிறேன் ! Has done decent !!
அழகான விற்பனையில் இரு மாறுபட்ட நாயகர்களும் இடம்பிடிக்கின்றார் - "
ஜேசன் பிரைஸ்" & "
மர்ம மனிதன் மார்ட்டின்" ரூபத்தில் ! நானே நேரில் பார்த்தேன் - மார்டினின் கதைகளுக்கொரு niche வாசக அணி இருப்பதை ! And ஜேசன் ப்ரைஸ் மூன்று பாகங்களுமே சுவாரஸ்யமான விற்பனை கண்டது !! அதே போலவே
LADY S ஆல்பங்களும் நிறைவாக விற்பனை கண்டுள்ளன ! அந்த மதிமுகம் செய்யும் வேலையோ ?
And நம்பினால் நம்புங்கள் ; இந்தாண்டின் பட்டியலில் உயரே நிற்பன - நமது கிராபிக் நாவல்களுமே !! அதிலும் குறிப்பாக
ஜெரெமியா & "
என் சித்தம் சாத்தானுக்கே சொந்தம்" have been toppers !!
நன்றிகள் ஓராயிரம் "குமுதம்" அரசு சார் !! உங்களின் 2 இதழ்களுக்குமான reviews நிச்சயம் இந்த விற்பனையின் பின்னணியில் உள்ளன !! But எல்லாவற்றையும் விட செம சேதியொன்று காத்துள்ளது guys : "
நிஜங்களின் நிசப்தம்" சென்னை விற்பனையில் உச்சங்களோடு போட்டி போடும் இதழ் மட்டுமல்ல ; வெளியான அதே மாதத்திற்குள் விற்றுத் தீர்ந்த முதல் இதழும் கூட !!!
Oh yes - ஜனவரி 1-ல் ரிலீஸ் ஆன இந்த இதழ் ஜனவரி 22-ல் காலி !! சந்தா E சொற்ப பிரிண்ட்ரன் கொண்டதே & இது ரூ.250 விலையிலான இதழ் என்பதால் வழக்கத்தையும் விடக் குறைச்சலாகவே அச்சிட்டோம் !! But இங்கும் சரி, உங்களது whatsapp க்ரூப்களிலும் சரி - இந்த இதழ் சார்ந்த அலசல்கள் கொணர்ந்துள்ள curiosity காரணமாய் ஆன்லைனில் நல்ல விற்பனை !! So ஒரு செம dark கி.நா. தான் புது ரெக்கார்டை உருவாக்கும் அதிசயமும் கண்முன்னே நிகழ்கிறது !! என்ன கொடுமை இது தலீவரே ?!!
"உச்சமும் இல்லை ; உச்சா போகும் ரகத்திலும் இல்லை" - என்பதே அடுத்த கண்ணோட்டத்தின் subjects !! கீழ்க்கண்ட நாயகர்கள் - இடுப்பில் துணியை இறுக்கமாய் இழுத்துப் பிடித்துக் கொள்ளும் சமயோசிதம் கொண்டிருப்பதால் - we are glad for it !!
- தோர்கல்
- கேப்டன் பிரின்ஸ்
- ரின்டின் கேன்
- ரிப்போர்ட்டர் ஜானி
தோர்கல் இப்போது தான் டாப்கியரைத் தொட்டிடும் தருணம் எனும் பொழுது - நிச்சயமாய் அடுத்த ஆண்டில் விற்பனை இதை விட தேவலாமென்றிருக்கும் என்ற நம்பிக்கை நிறையவே உள்ளது ! இந்தாண்டைப் பொறுத்தவரை just about ok !! அதே கதை தான் கேப்டன் பிரின்ஸ் & ரின்டின் கேன் விஷயத்திலும் !! "மோசமில்லை ; நிச்சயம் மோசமில்லை" என்ற தீர்ப்பு எழுதலாம் !
தொடர்வோர் ஒரு பெரும் பட்டியலை உருவாக்கும் அவசியத்தை ஏற்படுத்துவது தான் கவலையளிக்கும் சமாச்சாரம் ! "உன் குத்தமா ? என் குத்தமா ? யாரை நான் சொல்ல ?" என்று பாடிக் கொண்டே போடுகிறேன் இந்த லிஸ்டை !! அதனிலுள்ள சில பெயர்களை வாசிக்கும் போது ஆச்சர்யத்தில் புருவங்கள் உயரலாம் ; but இம்முறை இதுவே விற்பனைக் காற்று வீசியுள்ள திசை :
- லார்கோ வின்ச்
- வெய்ன் ஷெல்டன்
- CID ராபின்
- கமான்சே
- ஜில் ஜோர்டன்
- கர்னல் க்ளிப்ட
- மதியில்லா மந்திரி
- SMURFS
இந்த லிஸ்டில் இம்முறை லார்கோ தான் surprise package என்பேன் ! ரொம்பவே மித விற்பனை இந்தாண்டு ! And ஏனோ தெரியவில்லை - நமது நீல பொடியர்களுமே இம்முறை விற்பனையில் கோட்டை விட்டுள்ளனர் !! மற்றவர்கள் வழக்கத்தை விட ஒரு மாற்று குறைவாய் இந்தாண்டினில் ! ஒண்ணுமே புரியலே...உலகத்திலே.....!
சரி, "ஒரு சுமாரான விற்பனைப் பட்டியல்" என்று லிஸ்டைப் போட்ட கையோடு கிளம்பலாம் என்று பார்த்தால் - "இன்னொரு பட்டியல் போட்டுட்டுப் போப்பா ஆந்தைக்கண்ணா !!" என்ற உரத்த குரல் கேட்கிறது !! திரும்பிப் பார்த்தால் நிற்கும் அணியானது மெய்யாகவே மூக்கில் குத்தும் ரௌத்திரத்தோடு காத்திருப்பது புரிகிறது ! வெளியே சொல்லச் சங்கடம் தரக்கூடிய விற்பனை கண்டுள்ள ஆல்பங்களின் நாயக / நாயகியர் இவர்கள் எல்லாமே :
- பவுன்சர்
- மேஜிக் விண்ட்
- டைலன் டாக்
- டயபாலிக்
- மாடஸ்டி
- ப்ருனோ பிரேசில்
- சாகச வீரர் ரோஜர்
நிச்சயமாய் நமது ரசனை அளவுகோல்களின் முழுமையான பிரதிபலிப்புகளும் இவையல்ல தான் & இந்தத் தொடர்களின் வீரியம் மீதான விமர்சனமும் இது அல்லவே !! மேஜிக் விண்ட் ; டைலன் டாக் ; மாடஸ்டி ; ரோஜர் என personal ஆக எனக்குப் பிடித்த நாயக / நாயகியர் மேற்படிப் பட்டியலுக்குள்சிக்கியிருப்பதில் எனக்கு வருத்தமே ! But இது முழுக்க முழுக்க விற்பனை சொல்லும் கதைகள் மாத்திரமே !! So no offence meant !!
மற்ற one -shot கதைகள் ; நாயகர்கள் பற்றி நான் அதிகம் மெனெக்கெடப் போவதில்லை - simply becos அவற்றிலிருந்து நாம் அறிந்து கொள்ளக் கூடிய சமாச்சாரங்கள் சொற்பமே என்பதால் !!
So ஒரு 12 நாள் திருவிழாவின் இறுதியில் விற்பனைக் கணக்குகள் ; செலவினங்கள் ; ஒட்டு மொத்த அனுபவங்கள் என்று அசை போட்டு வருகிறோம். ஒற்றை ஸ்டால் தான் என்றாலும், இம்முறை 4 பணியாளர்களைக் கொண்டு செயல்படுவது என்று தீர்மானித்திருந்தோம் ! செலவுகள் அதன் பலனாய் எகிறினாலும், பல நடைமுறைச் சிக்கல்களை அது தவிர்த்துள்ளதென்பதில் சந்தோஷமே !! But ஒரு புரியாப் புதிர் இன்றளவும் தொடர்கிறது !! 2015 -ல் இப்போதிருப்பதில் சரி பாதி titles மட்டுமே இருந்த வேளைதனில் சாத்தியமான அதே விற்பனைத் தொகையினைத் தான் 200 + titles கொண்டிருக்கும் இப்போதும் ஈட்டிட முடிகிறது !! "இவ்ளோ தாண்டா உனக்கான கோட்டா ; அதுக்குள்ளாற வண்டியை ஓட்டிக்கோ" என்று பெரும் தேவன் மணிடோ நிர்ணயம் செய்துவிட்டாரோ என்ற சந்தேகம் ஒவ்வொரு வருடமும் தலைதூக்குகிறது ! சென்னையில் மட்டும்தான் என்றில்லாது - ஈரோட்டில் ; கோவையில் ; மதுரையில் என சகல புத்தக விழாக்களிலுமே ஒரு குறிப்பிட்ட வசூல் வட்டத்துக்குள்ளேயே நாம் சவாரி செய்ய நேரிடுகிறது ! But இதுதான் பதிப்புலக நிதரிசனம் எனும் பொழுது, அரைப் பெடல் அடித்துக் கொண்டே வண்டியை ஓட்டும் கலையைக் கற்றுக் கொண்டே வருகிறோம் ! சென்னை கணேஷ் ; செந்தில் சத்யா ; பூனையார் ; மாயாவியார் போன்ற நண்பர்களின் எதிர்பாரா உதவிகள் கிட்டுவது - மல்லாக்க விழுந்து முழங்காலைச் சிராய்த்துக் கொள்ளும் ஆபத்திலிருந்து நம்மைக் காப்பாற்றிடுகிறது ! Thanks guys & thanks to all those who dropped in !! And a SPECIAL THANKS to BAPASI too !!!
"ஒவ்வொரு தினமும் ஒரு புது அனுபவமே" என்பதற்கு இந்தப் 12 நாட்களை விடவும் பெரியதொரு சான்று இருந்திட முடியாது !! இந்தப் பர பரப்பை ; உற்சாகங்களை மீண்டும் உணர்ந்திடும் வரம் கோரி கை கூப்பிட மட்டுமே தோன்றுகிறது இந்த நொடிதனில் !! மீண்டும் சந்திப்போம் folks !! Happy Sunday !!
p.s :
அந்த கர்னல் க்ளிப்டன் CAPTION போட்டியின் வெற்றியாளரை அறிவிக்க மறந்து விட்டேன் போன வாரம் ! ஞாயிறு (இன்று) பகலில் நிச்சயம் அறிவிப்புண்டு !
|
சுட்டி லக்கி - புது ஆல்பம் ! |