நண்பர்களே,
வணக்கம். நாளைய பொழுது நம் உலகக்கோப்பை எக்ஸ்பிரஸின் அதிமுக்கியப் பயண நாளெனும் போது - டி.வி.பொட்டிகளைத் தாண்டி வேறெங்கும் கவனம் தர நேரமோ, முனைப்போ யாருக்கும் இராதென்பது உறுதி ! So இன்றைய பதிவை இயன்றமட்டிற்கு short 'n crisp ஆக்கிட முனைவேன் !!
First things first.... ஜூலை இதழ்கள் சகலமும் திங்களன்று கூரியரில் கிளம்பிடுகின்றன ! இம்முறை ஹார்ட்கவர் இதழின் பைண்டிங்கிற்கு நிறையவே நேரம் எடுத்துக் கொண்டது ஒரு பக்கமெனில், "நீரில்லை..நிலமில்லை.." இதழின் எடிட்டிங் பணிகளிலும் நேரம் ரொம்பவே விரயமாகிப் போனது இன்னொரு பக்கத்து சங்கடம் ! ஒரு மாதிரியாய் எனக்குத் தெரிந்த மாற்றங்களை / திருத்தங்களை கதை நெடுகச் செய்து முடித்து - இதழினை அச்சுக்கு அனுப்புவதில் நேர்ந்த தாமதம் - அதன் பைண்டிங்கிலும் பிரதிபலித்தது ! அடர்வர்ண உட்பக்கங்கள் சகலத்திலும் ஏகமாய் குடிகொண்டிருந்த இங்க் காய்ந்திடவே 2 நாட்கள் காத்திருக்க வேண்டிப் போனது ! So இன்றைக்கு செய்திட எண்ணியிருந்த டெஸ்பாட்ச்சை திங்களுக்கு தள்ளிப் போட்டுள்ளோம் ! Sorry guys !!
வாரநாளில் இதழ்கள் கைக்குக் கிட்டும் போது நம்மில் பலருக்கும், அவற்றை வாஞ்சையாய்ப் புரட்டிப் படம் பார்க்கவே நேரம் பற்றாது என்பதில் இரகசியங்கள் நஹி ! So "வார நாள் பிசி - காமிக்ஸ் வாசிப்புக்கு நேரத்தைத் தேடும் படலம்" என்ற தவிர்க்க இயலாச் சுழலினுள் இம்மாதம் கால்பதித்திருக்க - அதையே இவ்வாரத்து அலசலின் தலைப்பாக்கினால் என்னவென்று நினைத்தேன் !
Light Reading !! சில வாரங்களுக்கு முந்தைய பதிவினில் இது பற்றி மேலோட்டமாய் உச்சரித்திருந்தேன் ! And நீங்களுமே அதற்கு வித விதமாய் ரியாக்ட் செய்திருந்தீர்கள் ! ஒரு சாவகாச நாளில் சற்றே விரிவாகப் பேசிக்கொள்ளலாமே என்ற நினைப்பில் உங்களின் பின்னூட்ட அபிப்பிராயங்களுக்கு பதிலளிக்க நான் முனைந்திருக்கவில்லை ! Maybe அந்த சாவகாச நாள் இன்று தானோ ?
தமிழின் மூத்த அறிஞர் செந்தில் சொன்னது போல "பூவைப் பூன்னும் சொல்லலாம் ; புய்ப்பம்னும் சொல்லலாம் தான் !" So "இலகுரக வாசிப்பு" என்றும் light reading-க்கு அர்த்தம் எடுத்துக் கொள்ளலாம் ; "பருமன் குறைவான இதழ்கள்" என்ற சராசரிப் பொருள் தந்தும் பார்த்துக் கொள்ளலாம் ; "நிறைய ஈடுபாட்டோடு படிக்க அவசியப்படா சுலபக் கதைக்களங்கள் கொண்ட புக்ஸ்" என்றும் எடுத்துக் கொள்ளலாம் ! நீங்கள் எம்மாதிரியாக அர்த்தப்படுத்திக் கொண்டாலும் - அவற்றினூடே இழையோடும் ஒற்றை ஒற்றுமை : "ரிலாக்ஸ்டாகப் படிக்கவல்ல கதைகள்" என்பதாகவே நான் பார்த்திடுகிறேன் ! I might be right...might be wrong too !! But just my two cents !!
"குண்டூ புக்ஸ் வேண்டும்....கலந்து கட்டிய ஸ்பெஷல்ஸ் வேண்டும்" என்ற குரல்கள் அவ்வப்போது கேட்டு வருவது நாமறிந்ததே ! ஆனால் மெய்யாகவே கனமான இதழ்கள் வெளியாகும் சமயங்களில், அவற்றினுள் ஏக் தம்மில் மூழ்கிடும் முனைப்பும், அவகாசமும் நம்மில் எத்தனை பேருக்கு இப்போதெல்லாம் உள்ளதென்பதே எனது வினா ! மே மாதம் இதற்கொரு classic example !! பராகுடா ; ட்யுராங்கோ ; தனியொருவன் - என 3 மெகா ஹெவிவெயிட்ஸ் ஒரே மாதத்தில் தற்செயலாய் கூட்டணி போட்டுக் களமிறங்க - கூரியர் டப்பியின் கனமே மிரட்டியது ! முன்னொரு காலத்தில் நீங்களெல்லாம் Annual விடுமுறையில் இருக்கும் பாலகர்களாய் இருக்கும் நாட்களில், இத்தகையதொரு முரட்டு விருந்து பரிமாறப்பட்டிருப்பின் - சும்மா வூடு கட்டி அடித்திருக்க மாட்டீர்களா - என்ன ?! ஆனால் இன்று பள்ளி போகும் பிள்ளைகளைப் பராமரிக்கும் பெற்றோர்களாய் நம்மில் பெரும்பான்மை புரமோஷன் கண்டிருக்க - இதழ்களைத் தடவி, உச்சி மோர்ந்திடத் தானே நேரம் கிட்டியது மே மாதத்தினில் ? Of course காலவோட்டம் நம் கைகளில் திணித்திடும் பொறுப்புகளுக்கு முன்னுரிமை தந்திட வேண்டியது தலையாயம் என்பதில் மாற்றுக் கருத்துக்களே இருக்க முடியாது ! எனது கேள்வியெல்லாம் இது தான் :
*மாயாவியை ரசித்தவர்கள் டெக்ஸுக்குத் தாவினோம் !
*ஜனரஞ்சகத்தை ரசித்தவர்கள் லார்கோவின் பண சாம்ராஜ்யத்தை ரசிக்கும் ஆற்றலைப் பெற்றோம் !
*நேர்கோட்டுக் கதைகளே மார்க்கம் என்றிருந்தவர்கள் XIII-ஐ ஆராதிக்கும் பக்குவம் பெற்றோம்!
*"கி.நா" என்றால் "கிராதக நாவல்" என்று பொருள் சொல்லி நகைத்த நாமே இன்றைக்கு அவற்றிற்கொரு தனித் தடத்தைத் தந்து கொண்டாடுகிறோம் !!
இவை எல்லாமே அகவைகளின் முன்னேற்றத்தோடு கை கோர்க்கும் ரசனைகளின் முன்னேற்றமென்று புரிந்து கொள்கிறோம் ! அதே ரீதியில் பார்த்தால்,வயதுகளின் முன்னேற்றங்களோடு பொறுப்புகள் கூடிப் போகும் தருணங்களில், அதற்கேற்ப கொஞ்சம் light reading-க்கு வகை செய்வதும் அவசியமாகிடாதா என்பதே எனது சந்தேகம் ! "கிழிஞ்சது போ....புக் எண்ணிக்கைக்கு இனிமேல் கத்திரியா ? " ; "கிராபிக் நாவல்களுக்கு இனி பீப்பீபீ தானா ?" "குண்டு புக்ஸ் இனி கோவிந்தா - கோவிந்தா தானா ?" என்ற ரீதியிலான சந்தேகங்களுக்கு இங்கே அவசியமில்லை people ....ஏனெனில் நான் கேட்க முனைவதெல்லாமே - உங்கள் வாசிப்பில் சமீப நாட்களில் எறியுள்ள கனத்தை சற்றே மட்டுப்படுத்திக் கொள்ள வேண்டுமா ? என்ற கேள்வியினை மட்டுமே !!
பராகுடா மாதிரியானதொரு இதழையே இங்கொரு case study ஆக்கிக் கொள்வோமே ? ரொம்பவே intense ஆன ஆல்பம் அது என்பதில் no doubts at all !! நாக்கார் தொங்க ஆபிசிலிருந்து வீடு திரும்பும் மாலையினில் பராகுடாவைப் பார்த்த கணத்தில் WoW என்று தோன்றிடலாம் ; ஆனால்..ஆனால்... எடுத்துப் புரட்டி அதனுள் ஆரவாரமாய்ப் புகுந்திடும் 'தம்' நம்மில் எத்தனை பேருக்கு இன்றைக்கு சாத்தியப்படுகிறது ? பிள்ளைகளுக்கு ஹோம்ஒர்க் போட ஒத்தாசை செய்திடும் சமயம், புக்கைத் தூக்கி வைத்துக் கொண்டு சத்தமின்றி கீன்-பிலேமையும் ; ராபியின் காதலியையும் 'கலைக்கண்ணோடு' ரசிப்பதைத் தாண்டி வேறென்ன செய்ய முடிகிறது இந்த ஓட்டமோ-ஓட்ட நாட்களில் ? சரி, ஒரு சாவகாச ராவில் படிக்கலாமென்று தலைமாட்டில் புக்கைப் பதுக்கி வைத்தால் - ஏழாம் பக்கத்தைத் தொடும் முன்பாய் எட்டுக் கொட்டாவிகள் விட்டம் வரை விரியும் போது, வென்றிடக் கூடியது பராகுடாவா ? தூக்க தேவதையா ? என்ற பட்டிமன்றம் எழுகிறது ! அட.. பயணங்களின் போது படிக்கலாமே என்று பத்திரமாய் பெட்டிக்குள் புக்கைப் பேக் செய்த கையோடு பஸ்ஸிலோ / ரயிலிலோ ஏறினால், காதில் மாட்டிய earphones வழியே குவிந்து தள்ளும் Youtube வீடியோக்களும், troll-களும் - வேறெதெற்கும் நேரம் தரா கிங்கரர்களாய் கோலோச்சுகின்றன !! இத்தனைக்கும் மத்தியில் நேரம் ஒதுக்கி நமது இதழ்களை படிப்பது மாத்திரமன்றி, அலசவும் இயல்கிறதெனில் அது நிச்சயமாய் உங்களின் காமிக்ஸ் நேசத்துக்கொரு அட்டகாச testimony என்பதைத் தாண்டி வேறென்ன ?!! Take a bow all you busybees !!
அதே நேரம் மேஜையில் கிடக்கும் இதழ் ஒரு crisp டெக்ஸ் வில்லர் கதையாய் இருந்தாலோ ; ஒரு கலர்புல் லக்கி லூக்காய் இருந்தாலோ ; ஒரு ஜாலியான டாக்புல் கூத்தாய் இருந்தாலோ - "சித்த நேரம் ரிலாக்ஸ் பண்ணிக்கிறேனே !!" - என்றபடிக்கு புக்கைப் பர பரவென வாசிக்கும் வாய்ப்புகள் ஜாஸ்தி தானே ? So மாதந்தோறும் உங்கள் வாசிப்பினில் இருக்கும் கனரக இதழ்களின் கோட்டாவை மட்டுப்படுத்தி விட்டு, இலகுரக தேர்வுகளை அதிகப்படுத்துவது ஒரு practical தீர்வாய் இருக்குமா ? என்பதே எனது கேள்வி !! மாதந்தோறும் மூன்றோ / நான்கோ இதழ்கள் எனும் பட்சத்தில் - ஒன்றே ஒன்று மட்டும் அழுத்தமான வாசிப்புக்கென இருந்துவிட்டு, பாக்கி அனைத்தும் ஜாலி reads என்றிருப்பின் உங்கள் பாடுகள் சற்றே லேசாகிடுமோ ?
எனது பார்வையில் (I repeat - எனது பார்வையில் மட்டும்) light reading-க்கு qualify ஆகிடக்கூடிய கதைகள் / தொடர்கள் கீழ்க்கண்டவாறு :
- டெக்ஸ் வில்லர்
- கேப்டன் டைகர் (மார்ஷல் அல்ல !!)
- லக்கி லூக்
- சிக் பில்
- மாயாவி & மும்மூர்த்தியர்
- ஹெர்லாக் ஷோம்ஸ்
- மேக் & ஜாக்
- ட்யுராங்கோ
- ரின்டின் கேன்
- ஜில் ஜோர்டான்
கொஞ்சமாய் மெனக்கெடல் அவசியமாகிடும் medium reading பட்டியல் :
- லார்கோ வின்ச்
- வேய்ன் ஷெல்டன்
- ப்ளூ கோட் பட்டாளம்
- ட்ரெண்ட்
- மாடஸ்டி
- CID ராபின்
- டைலன் டாக்
- ஜேம்ஸ் பாண்ட் 007
- கர்னல் கிளிப்டன்
- லேடி S
- தோர்கல்
நிறைய நேரம் & ஈடுபாட்டோடு கரைசேர்ந்திட வேண்டிய கதைகள் / தொடர்கள் :
- Most கிராபிக் நாவல்கள்
- மர்ம மனிதன் மார்ட்டின்
- Criminologist ஜூலியா
- ரிப்போர்ட்டர் ஜானி
- XIII & spin-offs
- கமான்சே
- Lone ரேஞ்சர்
Point to Ponder # 1 ****இந்தப் பட்டியலின் சாராம்சம் ஓரளவுக்கேனும் ஓ.கே. என்றிருப்பின், ஒரே மாதத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட heavyweights category இதழ்கள் இடம்பிடித்திடக் கூடாதென்று இனி அட்டவணைத் திட்டமிடலின் போது கவனமாயிருந்திட வேண்டுமோ ?!
Point to Ponder # 2 ****அதே போல - "variety" என்ற ஒற்றைக் காரணத்தின் பொருட்டு மித நாயகர்களை மாதா மாதம் கண்ணில் காட்டுவதற்குப் பதிலாய் - படிக்கும் ஆர்வத்தைத் தூண்டக்கூடிய நாயகர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட slots கொடுத்தாலும் தப்பில்லை என்றும் எடுத்துக் கொள்ளலாமோ ? Maybe அட்டவணையில் கலர் கலராய் ; கலக்கலாய் ; ஏகமாய் நாயகர்கள் தென்படாது போகலாம் ; ஆனால் மாதம்தோறும் கூரியரைப் பிரிக்கும் போது உருவாகிடக்கூடிய உற்சாகம் அதற்கு ஈடு செய்துவிடுமோ ?
Point to Ponder # 3 ****Last but not the least - கலர் டெக்ஸ் இதழ்கள் வெளியாகும் ஒவ்வொரு மாதமும் அவை ஈட்டிடும் வெற்றியின் பின்னே ஒரு சேதி ஒளிந்துள்ளதோ ? வாசிக்கப்படுவதில் முதலிடம் ; சிலாகிக்கப்படுவதிலும் முதலிடம் என்பதன் பின்னணியில் - TEX எனும் ஜாம்பவானின் நிழலைத் தாண்டி அந்தக் கதைகளின் நீளத்துக்கும் ஒரு பங்கிருக்கக் கூடுமோ ? Maybe in the days to come - ஒரு கலர் டெக்ஸ் ; அல்லது அத்தகைய crisp வாசிப்புக்கான மினி புக்ஸ் மாதாமாதம் தலைகாட்டல் அவசியமோ ? 200+ பக்கங்கள் எனும் போது - "இதை படிக்க உருப்படியாய் நேரம் கிடைச்சால் தான் ஆச்சு !" என்ற மெல்லிய தடை மனசில் அனிச்சையாய் உருவாகிடுவது புரிந்து கொள்ளக்கூடியதே ! அதே சமயம் மெகா சீரியல் போலின்றி, 'சிக்'கென்று மினி வெப் சீரிஸ் போலான இதழ்கள் மாதந்தோறும் தலைகாட்டின் - நம் சுலப வாசிப்புக்கு உதவிடக்கூடுமோ ?
இவை சகலமும் எனக்கு ஒற்றை மாதத்து நிகழ்வுகளின் தொடர்ச்சியாய்த் தோன்றிய எண்ணங்களல்ல ! மாறாக - over a period of time உங்களோடு செய்திடும் பயணத்தில் எனக்குப் புலப்பட்ட சமாச்சாரங்கள் என்று சொல்லலாம் ! பதிவின் துவக்கத்தில் சொன்னது போல - I may be right on this...I might be wrong too !! ஆகையால் இவை சகலமும் ஒரு உரத்த சிந்தனையின் சாராம்சமே தவிர்த்து - நாளையே நடைமுறை காணவிருக்கும் தீர்மானங்களின் முதற்புள்ளியாய்க் கருதிட துளியும் தேவையில்லை ! There will be no knee jerk reactions guys ; அதனால் நீங்களும் "நல்லாத் தானே போய்க்கிட்டிருந்தது....? நோண்ட அவசியமென்ன வந்துச்சு ?" என்ற ரீதிகளில் பொங்கிட அவசியமே நஹி ! நிதானமாய்ப் படித்த பின்னே எங்கே என் அபிப்பிராயங்களோடு ஒத்துப் போகிறீர்கள் ? ; எங்கே எனது பார்வைகளோடு மாறுபட்டு நிற்கிறீர்கள் என்று சொல்லிட முனைந்தால் மகிழ்வேன் ! நாயக / நாயகியரை நான் அடைத்துள்ள பட்டியல்கள் சரி தானா ? என்றும் சொல்லலாம் ! புதுசாயொரு ஆண்டுக்கான திட்டமிடலில் fine-tuning செய்திட உங்கள் அலசல்கள் இக்ளியூண்டுக்கு உதவினாலும் ; முன்செல்லும் பாதைக்கு எது உதவிடக்கூடும் என்ற புரிதல் இம்மியூண்டு விசாலப்பட்டாலுமே, அது நமக்கெல்லாம் பலன் தரும் தானே ? So just thinking aloud on a Saturday night !!