நண்பர்களே,
வணக்கம். புதிரின் பல துண்டுகளை இணைக்கும் ஆட்டத்தை, புனித மனிடோ அவ்வப்போது நம்மோடு ஆடுகிறாரோ என்ற கேள்வி எனக்குள் அடிக்கடி எழுவதுண்டு ; and இதோ அதனை ஊர்ஜிதப்படுத்தும் லேட்டஸ்ட் அத்தியாயம் - இந்த அக்டொபரில் காத்துள்ளது ! கிட்டத்தட்ட ஒன்னரை ஆண்டுகள் பீரோவுக்குள் துயின்றவர் - இத்தாலியத் 'தனி வேங்கை' ZAGOR !! And கிட்டத்தட்ட அதற்கு நிகரான அதே அவகாசத்தை, அதே பீரோவுக்குள், செலவிட்டவர் அதே இத்தாலியைச் சார்ந்த 'சின்னத் தல' இளம் டெக்ஸ் ! ஒற்றுமைகள் அத்தோடு முடிஞ்ச பாடுமில்லை :
***ஸாகோரின் (இந்த லேட்டஸ்ட்) ஆக்கத்தின் பின்னணி முழுக்க முழுக்க திரு மௌரோ போசெல்லி ! Guess what - 'இளம் டெக்சின்' இந்த சாகசத்தின் கதாசிரியருமே சாட்சாத் போசெல்லியே தான் !
***And இரு இளைஞர்களுமே போனெல்லி குழுமத்தின் flagship நாயகர்கள் என்ற விதத்தில் ஒற்றுமைகள் தொடர்கின்றன !
***இளம் டெக்ஸை தீபாவளிக்கு களமிறக்குவது என்பதை போன வ்ருக்ஷத்தைய அட்டவணையிலேயே அறிவித்திருந்தோம் எனும் போது no surprises there !! ஆனால் ஸாகோரை பொங்கலுக்குப் போடுவோமா ? கோடை விடுமுறைகளுக்குப் போடுவோமா ? ஈரோட்டுக்குப் போடுவோமா ? என்ற ஊசலாட்டம் தொடர்கதையாகிட, இறுதியில் அதே அக்டொபருக்கு ; அதே தீபாவளி தருணத்தில் !!
***அதே முழுவண்ணத்தில் ; அதே ஹார்ட்கவரில் and அதே விலையிலும் !!
இந்த simultaneous களமிறங்களெல்லாம் நிச்சயமாய் நம்மளவின் பெரும் திட்டமிடல்களின் பலனெல்லாம் நஹி ! 2023-ன் அட்டவணையினை நவம்பர் முதல் தேதி இதழ்களோடு உங்களிடம் ஒப்படைத்தாக வேண்டும் எனும் போது, இந்த ஸாகோர் மனுஷனை அதற்கு முன்பாகவே களமிறக்கிவிட்டு வெள்ளோட்டம் பார்ப்பது அவசியமென்றாகிறது ! So இந்த நொடி - புது நாயகரின் அறிமுகத்துக்கு tailormade என்று நினைத்தேன் !! அவரோடு போன பதிவிலேயே லைட்டாகப் பழகிப் பார்த்தாச்சு எனும் போது - its time now for the one & only TEX !!
புதுசாய் புயல் வீசினாலும் சரி, பொரிகடலை பறந்தாலும் சரி.... தீபாவளியாய் இருந்தாலும் சரி, பள்ளி திறப்பு நாட்களாக இருந்தாலும் சரி ; சந்தோஷ நாட்களாக இருந்தாலும் சரி, கோவிடுக்குப் பயந்து ஊட்டுக்குள்ளாற குந்திக்கிடந்த இருண்ட நாட்களாக இருந்தாலும் சரி, "நான்பாட்டுக்கு வருவேனுங்கண்ணா ; என் வேலையைப் பார்த்துப்புட்டு போய்க்கினே இருப்பேனுங்கண்ணா !" - என்று சொல்லும் ஆற்றல் கொண்ட பொம்ம புக் நாயகர்கள் சொற்பமே !! சொல்வது மாத்திரமன்றி, செயலிலும் காட்டிடக் கூடியோர் அவர்களுள் இன்னும் குறைச்சலே ! And அந்தச் செயல்கள் ஒவ்வொரு முறையுமே ஒரு சாதனையாய்த் தொடர்ந்திடுவது நமது இரவுக்கழுகாருக்கு மட்டுமே கைவந்த கலை என்பேன் ! So without more ado, இதோ - காத்திருக்கும் "தீபாவளி மலர்'22"previews :
இளம் டெக்ஸ் சாகசங்கள் ஒவ்வொன்றுமே தலா 62 பக்க நீளத்து சாகசங்கள் ! (அவற்றைத்தான் மாதமொன்று வீதம் தனித்தனியாய்ப் போட்டுப் பார்க்கலாமா ? என்று 2 வாரங்களுக்கு முன்னே கேட்டு வைத்து முதுகை வீங்கச் செய்து கொண்டேனே ?!) And "மாயனோடு மோதல்" 4 அத்தியாயங்கள் கொண்டதொரு ஆல்பம் ! So ஒரு பட்டாசான பரபர 248 பக்க வாசிப்பு அனுபவம், இந்த தீபாவளி மலரின் முதல் கதையாக வெயிட்டிங் ! இந்த ஆல்பத்தின் பணியினில், செம சுவாரஸ்யமான highlights மூன்று உண்டு !
பொதுவாகவே நீண்டு ஓடும் நேர்கோட்டுக் கதைகள் என்றாலே எனக்கு பேனா பிடிப்பதற்கு மேலெல்லாம் நோவதுண்டு ! இம்முறையும் அது தொடர்ந்திட, புதிதாய் பணியாற்ற ஆர்வம் காட்டியதொரு சகோதரியிடம் தள்ளி விட்டிருந்தேன் ! ஆனால் அது குட்டிக்குருவி தலையில் ஏற்றி வைத்த பூசணியாய் அமைந்து போக, என்னிடமே வந்து சேர்ந்தது வேலை ! தம் கட்டி எழுதிக் கொண்டே போனால் surprise ...surprise...ஒரு வரலாற்று மாமனிதருக்கு தமிழில் குரல் கொடுக்கும் வாய்ப்பும் கிட்டியிருப்பது தென்பட்டது ! ஜெரோனிமோ ; கோச்சைஸ் போன்ற நிஜ செவ்விந்தியப் பெரும்தலைகளை நம் வரிசைகளில் பார்த்துள்ளோம் தான் ; வ்யாட் ஏர்ப் ; டாக் ஹாலிடே போன்ற real life gunslingers கூட குறுக்கும் மறுக்கும் உலாற்றியுள்ளனர் நம்மூடே ! ஆனால் இம்முறை இளம் டெக்ஸோடு டிராவல் செய்திருப்பது அமெரிக்க ஜனாதிபதி ஆபிரஹாம் லிங்கன் ! கெத்தாய், ஜனாதிபதியாய், வெள்ளை மாளிகையில் போஸ் கொடுக்கும் set property போல கதையினில் உலவிடாது, அழகாய் மேடைகளில் உரையாற்றும் வளர்ந்து வரும் ஒரு அரசியல்வாதியாய் ; கடி ஜோக் சொல்லிவிட்டு சுற்றியிருப்போரை மிரளச் செய்யும் ஜாலி மனுஷனாய் ; மேடையில் உறங்கி விட்டேனென்று அசடு வழியும் சாமான்யராய் ; ஏலேலோ ஐலசா என்று படகோட்டிடும் உழைப்பாளியாய் கதையின் கணிசமான பகுதியினில் இடம்பிடிக்கின்றார் ! நிஜத்தில் அவர் எவ்விதமோ - no clue ; ஆனால் கதாசிரியர் மௌரோ போசெல்லியின் பார்வையில் இந்த வரலாற்று நாயகர், ரொம்பவே ரசிக்கச் செய்திடும் man next doors !! And அவருக்கான வரிகளை எழுதுவதென்பது செம ஜாலி அனுபவமாக இருந்தது ! அமெரிக்காவின் உள்நாட்டு சித்தாந்த மோதல்களுக்கு (அடிமைத்தனம் vs கறுப்பினத்தவருக்கும் சுதந்திரம்) நிறையவே இங்கே இடமுள்ள போதிலும், அவற்றை வள வளவென்று இஸ்திரி கிளாஸாக்கிடாது, கதையோடு அம்சமாய் இணைத்துக் கொண்டு சென்றுள்ள அந்த லாவகத்தில் போசெல்லி touch கண்கூடு !
And Surprise # 2 - நம்ம 'சின்னத் தல' கேரெக்டர் !! கதை நெடுக, செம breezy ! வயசுக்கேற்ற விடலைத்தனம் ; துடுக்குத்தனம் ; ஒன்றுக்கு இரண்டாய்க் கதையினில் வலம் வரும் ஜில்பான்ஸ்களோடு யதார்த்தமாய் ஒளிவட்டத்தைப் பகிர்வது ; ஓவரான சூப்பர் ஸ்டார் பந்தாவெல்லாமின்றி, வயசுக்கேற்ற ஜாலி போக்கிரிப் பார்ட்டியாய் இளம் டெக்ஸுக்கு ரோல் தந்து பின்னி பெடலெடுத்துள்ளார் கதாசிரியர் ! சொல்லப்போனால் இந்த ஆல்பத்தை நமது பாயாசக் காதலருமே கூட வெளிப்படையாகவே ரசிக்க இயன்றிடும் என்பேன் ! என் பங்குக்கு - ஒரு மகா நாயகன் டெக்ஸுக்கு வஜனம் எழுதுவதான நினைப்புகளின்றி, ஒரு வளர்ந்து வரும் ஹீரோவுக்கு பேனா பிடிக்கவே முயற்சித்துள்ளேன் !
And இந்த ஆல்பத்தின் சர்ப்ரைஸ் # 3 - again கதாசிரியரின் உபயத்தில் - மெபிஸ்டோவின் பாத்திரப்படைப்பே ! நமக்குப் பரிச்சயமான அந்த டெர்ரர் வில்லனாகிடும் முன்பான ஒரு மேடை மாயாஜாலக்காரனாய் ; போசெல்லி மெபிஸ்டோவுக்குத் தந்திருப்பது இங்கே ஒரு subtle role தான் ! ஆகையால் அந்தப் பூச்சாண்டி காட்டும் விட்டலாச்சார்யா வில்லனை எதிர்பார்த்திட வேண்டாமே யுவா ?! வசியமறிந்த மொள்ளமாறியாய் அவனது ஆரம்பம் அமைந்திட, போகப் போக அவன் எவ்விதம் விஸ்வரூபம் எடுக்கிறான் ? என்பதைத் தான் நடப்பாண்டினில் போசெல்லி புத்தம்புதுக் கதைகளில் மிரட்டலாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார் - இத்தாலிய வாசகர்கட்கு !! So வில்லனும் விடலை ; நாயகரும் விடலை ; (இந்தக் கதையினில்) அரசியலில் ஆபிரகாமும் விடலை ; பக்கத்துக்குப் பக்கம் மிரட்டும் சித்திரங்கள் ஏற்படுத்தும் ஈர்ப்பும் நம்மை விடலை ; வண்ணத்தில் செய்துள்ள அதகளங்களின் மிரட்சியும் என்னை இன்னும் விடலை !
And 'தல' புராணமும் இன்னமும் விடலை !!
Becos இந்த ஆல்பத்தில் காத்திருப்பது ஒரு முழுநீள black & white சாகசமுமே - இம்முறை டெக்ஸ் & கார்சன் சகிதம் ! "பருவத்தே கொலை செய்" ஒரு அக்மார்க் ஆக்ஷன் block and நான் பயணிக்க இன்னமும் 65 பக்கங்கள் காத்துள்ளன- கதையின் இறுதியினை தொட்டிட !! ஆனால் அதற்குள்ளாகவே அனல் பறப்பதில் கதையின் tone புரிகிறது ! கதைக்கான ஓவியர் சற்றே ஜாலி ஸ்டைல் கொண்டவர் எனும் போது, வெள்ளிமுடியாரைப் பார்த்தாலே கலாய்க்கத் தான் தோன்றுகிறது & அதை ஜாலியாய்ச் செய்துள்ளோம் கதைக்கு நெருடல்களின்றி ! இதோ - அந்த b & w ஆல்பத்தின் preview கூட :
அட்டைப்படத்தைப் பொறுத்தவரையிலும் இது ஒரிஜினல் டிசைனின் மீது நமது கோகிலாவின் கைவண்ணம் ! And ஜூனியர் எடிட்டரின் நகாசு வேலைகள் அட்டையை டாலடிக்கச் செய்ய தம் பங்குக்கு உதவியுள்ளன ! In fact இங்கே ஸ்க்ரீனில் பார்ப்பதைக் காட்டிலும், நேரில் செம மிரட்டு மிரட்டுகிறது அட்டைப்படம் ! So பழைய தமிழ் சினிமா வசனம் தான் எனக்கு இந்த நொடியில் ஞாபகத்துக்கு வருகிறது - "சபாஷ்....சரியான போட்டி !!" என்று !! சிகப்புச் சட்டை ஸாகோர் vs மஞ்சச் சட்டை டெக்ஸ் !! May the winner make this a sparkling Deepavali !!
Just curious - இம்மாதத்து இதழ்களுள் உங்கள் வாசிப்பினில் முதலிடம் யாருக்கு இருக்கக்கூடும் guys ? புதியவருக்கா ? சின்னவருக்கா ?
"பருவத்தே கொலை செய்" இன்னும் காத்துக் கிடைப்பதால் நான் இப்போது நடையைக் கட்டினால் தான் சரிப்படும் ! அதற்கு முன்பாய் சில updates :
1.திருச்சி புத்தக விழா ஆரம்பிச்சாச்சூ & அண்ணாச்சி நமது ஸ்டால் # 127-ல் நமது இதழ்களோடு உங்களுக்காக வெயிட்டிங் !! Please do drop in Trichites !!
2 .தொடரும் வாரங்களில் காரைக்குடிக்கு பயணிக்கவுள்ளது நமது காமிக்ஸ் கேரவன் ! நமக்குப் பெரிதாகப் பிடிமானங்கள் இல்லாத பகுதி அது ! Fingers crossed - வரவேற்பு எவ்விதம் இருக்கக்கூடுமோ என்று !
3 2023 அட்டவணையில் ஒரு தெறிக்கும் புது ஆக்ஷன் ஹீரோ துண்டு விரித்துள்ளார் - வாய் பிளக்கச் செய்யும் சித்திரங்களுடன் !! And இன்னொரு தெறிக்க விடும் கிராபிக் நாவலுக்கு உரிமைகள் வாங்கிட முயற்சிகள் on the way !! ரொம்ப...ரொம்ப....I repeat ரொம்ப...ரொம்ப மாறுபட்ட களம் அந்த கி.நா. !! அட்டவணை unveiling-க்கு முன்பாய் அது ஓ.கே. ஆகியிருக்கும் என்பது எனது எதிர்பார்ப்பு !
4 YEAREND ஸ்பெஷல் இதழ்களுக்கான முன்பதிவுகள் செம விறுவிறுப்பு ! ஸாகோரை தீபாவளிக்கு உங்கள் இல்லம் தேடி வரவழைக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்திட மறந்து விடாதீர்கள் - ப்ளீஸ் !
5 And 2023-ன் க்ளாஸிக் நாயகர்களின் தனித்தடம் SUPREME '60s முன்பதிவுமே தூள் கிளப்பி வருகிறது !! இன்னமும் அந்தச் சந்தாவினில் இணைந்திருக்கா பட்சத்தில் no time like now folks !!
Bye all...see you around ! மீண்டும் சந்திப்போம் ! Have a fun weekend !