Powered By Blogger

Saturday, September 24, 2022

கார்சனுக்கொரு கேள்வி ?!

 நண்பர்களே,

வணக்கம். வாயால் சுட்ட வடை பருப்பு வடையாய் ஆகாதே ..! வடையாகும் ஆட்டுக்கல்லில் அரைத்துச் சுட்டதே ! முட்டைக்கண் புலவன் அடங்க மாட்டானோ ? என்ற உங்களின் மைண்ட்வாய்ஸ் கேட்கிறது !!  So நம்ம ஹைக்கூவின் (!!!) காரணத்தைச் சொல்லியாக வேண்டுமல்லவா ? கெத்தாய்ச் சொல்லியாச்சு : TEX தீபாவளி மலர் & ஸாகோர் ஸ்பெஷல் இந்த மாசம் பட்டையைக் கிளப்ப வருகிறதென்று !! ஆனால் பணிகளோடு கட்டிப் புரளும் போது தான் புரிகிறது - சுமார் 900 பக்கங்கள் கொண்ட 2 ஹார்ட் கவர் இதழ்களைக் கரை சேர்க்கும் பிரயத்தனம் என்னவென்று !! அதிலும் ஸாகோர் முதல் 4 பாகங்களில் உரித்த வாழைப்பழம் சாப்பிட்ட அனுபவத்துக்குப் பின்னே - பாகம் 5-ல் கதாசிரியர் போட்டுள்ள அடுத்த கியருக்கு ஈடு கொடுக்க வண்டி செம திணறு !! கொஞ்சம் செவ்விந்தியப் புராதன இதிகாச இணைப்புகள் ; நம்பிக்கைகள் என்றெல்லாம் இழையோட, நாக்குத் தொங்கி விட்டது ! ஒரு பக்கம் அமேசானில் ஓடிக்கொண்டிருக்கும் மெகா சேலில் மைக்ரோஸ்கோப்களும் விற்பனைக்கு உள்ளன என்ற தகவல் தெரிந்த போது, ராக்கோடங்கி வேலையை கூடுதல் வேகத்தில் தொடர வேண்டிப் போனது ! இதோ ஸாகோரின் முதல் 4 & இறுதி அத்தியாயம் ஒரு பக்கம் அச்சாகிக் கொண்டிருக்க, இடைப்பட்டுள்ள பாகம் 5-ல் எனது அந்தர்பல்டிக்கள் தொடர்ந்து வருகின்றன ! So இக்கட 'நீளமாய்ப் பதிவு போடுறேன் பேர்வழி' என எதையேனும் மொக்கை போட்டுத் திரிந்தால் - கத்தி மேல் நடக்கும் இந்த schedule சொதப்பிடும் ! ஆகையால் ஒரு மினி ; yet சுவாரஸ்யப் பதிவு மாத்திரமே இந்த வாரம் ! 

And in many ways - சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொள்ளும் முயற்சியும் கூட இது என்பது தெரியாதில்லை ! சும்மாவே தூக்கிப் போட்டு மொத்திப் பழகுவோர்க்கு நானே வலிய "வாங்க...வாங்க அண்ணாச்சி...வந்து பழகிப் பாருங்க !" என்ற வாயிலைத் திறந்து வைக்கிறேன் என்பது புரிகிறது ! But நமக்குத் தான் குசும்பும், கொழுப்பும் சம விகிதத்தில் விரவி நிற்கின்றதே ? So here goes :

"டெக்ஸ் கதைகளில் கார்சனை கலாய்ப்பது சுகப்படவே இல்லே ; மொக்கை போடுது !" என்று சமீபப் பதிவினில் நண்பர்களின் சில குரல்கள் ஒலிக்கக் கேட்டிருந்தேன் ! பொதுவாகவே விமர்சனமின்மையை நம்மோடு ஒத்துச் செல்லும் பாங்காய் நான் எடுத்துக் கொள்வேன் ; but குறைகளை ஒப்பிக்கும் குரல்களில் - merit கீதா - இல்லியா ? என்ற வினவல் என்மட்டிற்காவது முக்கியமாகிடுவதுண்டு ! So பின்னாடியே மேற்கொண்டு கொஞ்ச நண்பர்களும், "no to கலாய்ப்பு"  என்ற ரீதியில் பதிவிட்டிருக்க, மிகச் சரியாக TEX சாகசமான "பருவத்தே கொலை செய்" ஆல்பத்தினில் பணியாற்றிக் கொண்டிருந்த நான் பேனாவை கொஞ்சம் ஓரம் கட்டி விட்டு, யோசனைக் குல்லாயை சிரத்தில் மாட்டிக் கொண்டு மல்லாக்கப் படுத்தே யோசித்தேன் ! "Maybe இந்த எக்ஸ்டரா நம்பர் படலமெல்லாம்  தேவையில்லா ஆணி பிடுங்கல் தானோ ? மருவாதையாய் ஒரிஜினலில் உள்ளதோடு அடக்கி வாசித்து விடலாமோ ?"  என்ற சிந்தனை வலுப்பெற்றது ! இதை தலைக்குள் போட்டு ரொம்பவே உருட்டிக் கொண்டிருக்க அவகாசம் இல்லையென்றதால் ஏதேனும் ஒரு திக்கில் தீர்மானிக்க வேண்டியிருந்தது ! ரைட்டு...இந்தக் கதையின் பின்பகுதியிலாவது (நான் பிரேக் போட்ட வேலையினில் பணியாற்றிக் கொண்டிருந்த இடம் அது தான்) ஒரிஜினலில் உள்ளதற்கு நெருக்கமாகப் பயணித்தே விடலாம் என்று fix ஆகினேன் ! So தொடர்ந்த பக்கங்களில் உள்ளதை உள்ளபடிக்கே அமைத்து மின்னலாய் அச்சுக்கு கொண்டு செல்லும் வழியைப் பார்த்தேன் ! And வெள்ளியன்றே அச்சும் முடிந்தது !

ஆனால், இதோ அடுத்த TEX பணியானது மேஜையின் கோடியில் கிடக்க, தொடரவுள்ள காலங்களில் அவற்றிற்கான treatment எவ்விதம் இருத்தல் அவசியமோ ? என்ற கேள்வி எழுந்தது ! அப்போதே தீர்மானித்தேன் - ஏதேனும் ஒரு சாவகாசப் பொழுதினில் இந்த வினாவை உங்கள் முன்னே சமர்ப்பித்தே தீர வேண்டுமென்று ! And இந்த வாரயிறுதி செம rush ஆனதொன்றாக அமைந்திட, அந்தக் கேள்வியினை உங்களிடம் சிம்பிளாக ஒப்படைத்த கையோடு ஸாகோருக்குள் புகுவது மதி ! என்றுபட்டது ! இதோ தொடரவுள்ளவை காத்திருக்கும் தீபாவளி மலர் ஆல்பத்தின் 3 பக்கங்கள். முதலில் உள்ளவை நீங்கள் புக்கில் வாசிக்க உள்ளவை ! இரண்டாவதாய், ஆங்காங்கே சிகப்பில் மார்க் செய்யப்பட்டுள்ள டயலாக்களுடன் இருப்பவைகளோ - நான் ஒரிஜினலாய் எழுதியவை - கார்சன் கலாய்ப்புடன் ! கலாய்ப்ஸ் குறித்த கலவையான எண்ணங்கள் பகிரப்பட்ட பின்னே, சிகப்பில் உள்ள அந்த வரிகளை மாத்திரம் ஒரிஜினலுக்கு அருகாமைக்கு மாற்றி விட்டேன் !

இரண்டையும் ஜாலியாய்ப் படித்துவிட்டு, முடிந்தால் இரண்டையும் கழுவி ஊற்றாது, எது தேவலாம் ? என்று சொல்லுங்களேன் guys ? All Black-ஆ ? அல்லது கறுப்பு & சிகப்பா ? நான் பாட்டுக்கு - "இது சூப்பரப்பு ! " என்ற எண்ணத்தில்  டாரான பட்டாப்பட்டியோடு நடுரோட்டில் வாக்கிங் போயிடப்படாதல்லவா ? So இந்த விஷயத்தினில் ஒரு course correction  அவசியமெனில், என்னளவிற்கு ஓ.கே. !  AND NOW WITH THE கலாய்ப்ஸ் :

PLEASE NOTE : கூட்டத்தினர் வடிவேலை மொத்தியெடுக்கும் போது, சந்தடிசாக்கில் தானும் வெளுத்து வாங்கும் ஆத்துக்காரம்மா ரேஞ்சுக்கு - ஒட்டு மொத்த மொழிபெயர்ப்பு சார்ந்த கும்மிகள் இப்போதைக்கு வேண்டாமே - ப்ளீஸ் ? அவசியப்படும் பட்சத்தில், ஒரு சாவகாசமான சந்திப்பின் போது அதனை வைத்துக் கொள்வோமே ? காலில் சுடுதண்ணீரை ஊற்றிக் கொண்டு திரிய எனக்கு அவசியமாகிடும் இந்த வேளையில் வேண்டாமே ?! 

அதே போல "402 பக்கத்தில் ஆறாது பலூனில், மூணாவது ஆள் பேசுற ஐஞ்சாவது வஜனம் ஓ.கே. ; 404-லே மூணாவது கட்டத்திலே ரெண்டாது ஆள் பேசுற டயலாக் not ok !" என்ற ரீதியிலான ஆழ்கடல் ஆராய்ச்சிகளும் ; "நாலே முக்கால் வருஷங்களுக்கு முன்னே அந்த டெக்ஸ் கதையிலே இந்த வரியில் சொதப்பிப்புட்டே !!" என்ற தொல்பொருள் ஆராய்ச்சிகளும்  not here ; not now please !

YES to கலாய்ப்ஸா   ; or NO to கலாய்ப்ஸா ? என்ற கேள்வி மாத்திரம் இந்த நொடியின் தேடல் !! So இயன்றளவிற்கு சின்னத் துடைப்பங்களைக் கொண்டு வாங்கோ folks - மூ.ச. பக்கமாய் வருகை தரும் போது ?!

Before I sign out - சின்னதாய் இன்னொரு முயற்சியுமே !! சமீப பொழுதுகளில் ஸ்ரீ லங்காவில் பொதுவான சூழல் அத்தனை சுகமில்லை என்பதால் நமது இதழ்கள் அங்கு சரி வர அனுப்பிட இயலாச் சூழல் ! So நிலவரம் கொஞ்சம் சகஜமாகிடும் வரைக்கும் அவசியமாகிடும் புக்ஸ்களை அங்குள்ள நமது நண்பர்கள் நம்மிடமிருந்தே தருவித்துக் கொள்ளலாம் ! இதோ - அதற்கென சில திட்டமிடல்கள் !! மேற்கொண்டு விபரங்கள் தேவைப்படும் பட்சத்தில் please call our front desk - வாரநாட்களில் !! 

Bye all.. see you around !! Have a fun weekend !!

216 comments:

 1. ஹைய்யா புதிய பதிவு...

  ReplyDelete
 2. Replies
  1. இது எல்லாம் போங்காட்டம் 😃😆

   Delete
 3. ஏதோ ஒண்ணு…ஆனா உள்ளே வந்துட்டமில்லே

  ReplyDelete
 4. 3 ப்பு பாசாயிட்டேன் 😍😇😍

  ReplyDelete
 5. யெஸ் டு கலாய்ப்ஸ் 😇😇

  ReplyDelete
 6. Edi Sir..
  Yes to கலாய்ப்ஸ்..
  கார்சனை கலாய்ப்பது தொடரட்டும்.😃

  இதுதான் படிக்க ஜாலியாக உள்ளது.😍😘

  நீங்கள் உங்கள் பாணியிலேயே தொடருங்கள். 👍

  ReplyDelete
 7. a big YES to கலாய்ப்ஸ்..!

  (நண்பர்களை நெருக்கமாக்குவதே கலாய்ப்ஸ்தான்.. பரஸ்பர கலாய்ப்ஸே நட்புக்கு ஆகாரம்)

  ReplyDelete
 8. Yes to கலாய்ப்ஸ்.. அது இல்லாமல் கார்சன் வேறு யாரோ அங்கிள் போல் இருக்கிறார்.

  ReplyDelete
 9. கறுப்புதான் எனக்குப் புடிச்ச கலரு..
  :-)

  ReplyDelete
 10. YES to கலாய்ப்ஸ். Black and red please

  Reply

  ReplyDelete
 11. Yes to கலாய்ப்ஸ்

  இங்கே சிகப்பில் இருப்பது 100% கலாய்ப்பு இல்லை. ஹாஸ்யம்

  ReplyDelete
 12. பெரிசு கிழவா வார்த்தைகளை மட்டும் ஓமிட் செய்து ஜாலியாக பேசுவதை தொடரலாம்... உதாரணம் "பழிக்கு பழி" கோடைமலர் 1987

  ReplyDelete
 13. // இரண்டாவதாய், ஆங்காங்கே சிகப்பில் மார்க் செய்யப்பட்டுள்ள டயலாக்களுடன் இருப்பவைகளோ - நான் ஒரிஜினலாய் எழுதியவை - கார்சன் கலாய்ப்புடன் ! //
  இதே நல்லாதான் சார் இருக்கு,கொஞ்சம் நக்கல்,கொஞ்சம் நையாண்டி மிதமாய் இருப்பது ஓகேதான்...வாசிக்கவும் கொஞ்சம் நல்லா இருக்கு...
  YES to கலாய்ப்ஸ்...

  ReplyDelete
 14. செப்டம்பரில் அக்டோபர் உண்டாங்க சார்?

  ReplyDelete
  Replies
  1. ஏங்க அவரே அவ்வளவு பக்கங்களுடன் முட்டி மோதிக்கொண்டிடுகிறேன் என்று சொல்கிறார் அவரிடம் இப்படி கேட்கலாமா 😂

   Delete
  2. ஹி....ஹி....ஹி .சும்மா ஒரு ஆசைக்குத் தான் ஜி. அதுவும் ZAGOR வருகையை நீண்ட வருடங்களாக தமிழில் எதிர்பார்த்துக் கொண்டே இருந்ததால் தான் நண்பரே.

   Delete
  3. பரவாலீங்க அவராவது அப்படி கேட்டாரு நானா இருந்தா நாளைக்கா நாளானிக்கா சார் கொரியர் வருதுன்னு கேட்டு இருப்பேன்..

   Delete
  4. 😂😂😂😂 எப்படி கேட்டால் என்ன வந்தால் சந்தோசம் தான்

   Delete
 15. அவர்களுக்கிடையேயான சம்பாசனைகளை அவ்வாறே படித்துவிட்டு இப்பொழுதைய மாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை சார். சிவப்பு அல்லாத வசனங்கள் ஒரு மெக்கானிக்கல் சம்பாசனைகளாக எனக்கு தோன்றுகிறது பிடிக்கவும் இல்லை.

  ஒரு வித கலாய்ப்பு இருந்தாலும் அவ்வாறு பேசும் போது அவர்கள் ஒருவருக்கு ஒருவர் இருக்கும் பந்தம் தெரிகிறது. அப்படி இருக்கும் போது தான் பல கதைகளில் டெக்ஸ் க்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்ற பதட்டத்தை கிட் காண்பிக்கும் போது நமக்கு ஒரு நம்பகத்தன்மை வருகிறது.

  இவ்வளவு காலம் அவர்களுடன் அவ்வாறே பிரயாணம் செய்துவிட்டோம் இனி மாற்றம் ஏற்றுக்கொள்ள முடியவில்லை சார்.

  ReplyDelete
  Replies
  1. வரிக்கு வரி வழிமொழிகிறேன் கிருஷ்....

   கலாய்ப்பே தோழமையை நெருக்கமாக்கிறது...

   Delete
  2. கிருஷ்ணாவின் கருத்துகளே என்னதும்!

   Delete
  3. It is all in our minds. முன்பு நவஜோ என்று எழுதிவிட்டு அப்புறம் நவஹோ என்று எழுதிய பொழுது இது சரி இல்லை சார் என்ற குரல்கள் ஒலித்தது. அப்புறம் பழகி விட்டது. அது போல இதுவும் பழகி விடும்.

   @எடிட்டர்,

   ஒரிஜினல் பதிப்பாளர்களுக்கு இவ்வகை கலாய்ப்புக்கள் OK என்னும் வரையில் இங்கே பெரும்பாலோர் தேர்வுக்கு செவிமடுப்பதில் தவறில்லை சார். ஆனால் ஒரிஜினல் பதிப்பாளர்கள் ஒரு ஏஜென்ட்ஐ வைத்து மொழி பெயர்த்து 'இப்படி வேண்டாமே' என்று சொல்லும் நாளில் நாம் யோசிக்க வேண்டி வரலாம் சார்.

   Delete
  4. நவஜோ என்று எழுதிவிட்டு அப்புறம் நவஹோ என்று எழுதிய பொழுது இது சரி இல்லை சார் என்ற குரல்கள் ஒலித்தது. அப்புறம் பழகி விட்டது. அது போல இதுவும் பழகி விடும்

   ####

   எனக்கு இன்னமும் அது தூரமாகவே தெரிகிறது சார்..:-(

   Delete
  5. நண்பர் கிருஷ்ணாவின் கருத்தை வழிமொழிகிறேன்..

   Delete
  6. @agree Raghavan ji. Mind matters and i couldn't take this change from my mind and heart. May be we might be forced read with the change but the feel will not be same as before 😔

   Delete
  7. அதுக்கு எஜென்டலாம் அவசியமே கிடையாது சார் ; நமது "நலவிரும்பிகள்" அதையெல்லாம் பல்வேறு தருணங்களில் கர்மசிரத்தையாய் செய்துள்ளனர் ! இங்குள்ள டெக்ஸ் ஆராதிப்பின் ஆழம் போனெல்லிக்கு நன்கு தெரியும் ; ஆகையால் they see the funny side of it !

   கலாய்ப்சை வரும் காலங்களில் maybe சற்றே tone down செய்திடப் பார்ப்போம் சார் !

   Delete
 16. NO to கலாய்ப்S !!

  Kalaaips is making it a different story ;-) :-) :-p

  ReplyDelete
 17. Lethal Weapon- 4 பார்ட்டுகள் வந்துச்சு. I am too old for this sh** என்னும் வசனம் ரொம்ப பேமஸ். ரிச்சர்ட் டான்னர் நடித்த படம். இதுல கிப்சன், டான்னரை் படம் முழுக்க கலாய்ப்பார். இது முழுக்க முழுக்க அவர்களுக்கிடையே உள்ளே நட்பின் புரிதலின் அடிப்படையில் விளைந்தது. இருவரின் குடும்பமே நட்போடு இருக்கும்.

  படத்தில் மட்டுமல்ல நிகழ்வாழ்விலும் நடக்க வாய்ப்பு உண்டு என்பதற்கு நானும் என் மச்சானுமே (இவரு தான் கார்சன்) சாட்சி. நானும் என் தலீவருமே (இவரு கார்சனை விட ஓல்டு பீஸ்) சாட்சி. நானும் என் மாம்சுமே (இது ஸ்டோன் ஏஜ் பார்ட்டி) சாட்சி. இவங்கெல்லாம் என்னை விட ரொம்ப முதியோர்னாலும் நான் இவங்களை ஓட்டறதை நட்போட தான் பாக்கறாங்க. கார்சரும் டெக்சை அவ்வாறே பார்ப்பார் என நம்புவோமாக.

  சோ நட்போடு கலாய்ப்பதை போற்றுவோம்.

  ReplyDelete
  Replies
  1. ///நட்போடு கலாய்ப்பதை போற்றுவோம்///+100000

   Delete
  2. நானும் என் தலீவருமே (இவரு கார்சனை விட ஓல்டு பீஸ்) சாட்சி

   #####

   மிஸ்டர் ஷெரீப் ..பஸ் ஏறி அமெரிக்கா வந்து மண்டைல கொட்ட மாட்டேன்னு ஒரு தைரியம் அதானே..

   திரும்ப இங்கு வரணும்டி சாக்ரதை..

   Delete
  3. நீங்க அதுக்கெல்லாம் சரிப்பட மாட்டீங்க தல…

   Delete
  4. அது ரிச்சர்ட் டொனர் கிடையாது,, டேனி கிளாவர்

   Delete
  5. ஆமாங்க. டான்னர் டயரடக்கர். நீங்க சொன்னது தான் கரீக்ட்

   Delete
  6. @ கிரிதரசுதர்ஸன்

   அதுல பாருங்க கிரி! ஷெரிஃப் - க்கு தெரியாதா ரிச்சர்ட் டானர் டைரக்டர்னு? மெல் கிப்ஸன் - டேனி கிளாவர் னுதான் அவரு எழுத நினைச்சாரு..அவசரத்துல அப்படி வந்துடிச்சு.இந்த சின்ன தவறை நீங்க சுட்டிக் காட்ட நினைச்சிங்களே அது காமிரேட்ஷிப்.

   நேத்திக்கு பாருங்க..நண்பர் காசோவுக்கு - ஐடி துறையில் 25 வருடங்களாக பணிபுரியும் ஞானஸ்தர் - அவர் பாஷையிலேயே பைனரி கோடில் பதில் சொல்ல முயற்சி பண்ணி ROFL டைப் பண்ண பாத்தேன். அவசரத்துல AOFL - னு
   தப்பா டைப் பண்ணிட்டேன்.இ.சி.ஈ. இளவரசர் டெலிகம்யூனிகேஷன் பொறியாளர் அல்லவா? பைனரி கோடுல பதில் சொல்ல முயன்றிருக்கும் புதிய சிந்தனையைபாராட்டி ' வாவ்! அட்டகாசம் ' எனச் சொல்லாமல் மென்மையாக' இது இப்படி வந்திருக்க வேணுமே செனா ' எனச் சொன்னார்.இது ஃப்ரெண்ட்ஷிப்.

   ஆக அவசரத்தில் ஏற்படும் பிழைகளை மென்மையாச் சுட்டி காண்பிக்க நினைப்பவர்கள் ஆன்டகோனிஸ்ட் என இருக்க வேண்டிய அவசியமில்லை. நண்பர்களாகவே இருக்கலாம்.

   Delete
  7. ///படத்தில் மட்டுமல்ல நிகழ்வாழ்விலும் நடக்க வாய்ப்பு உண்டு என்பதற்கு நானும் என் மச்சானுமே (இவரு தான் கார்சன்) சாட்சி. ///

   ஓஹோ...!
   நான் கார்சன்..? அப்போ.. நீ டெக்ஸ்..! அப்படின்னு நாங்க சொல்லணும்.. அதுக்குத்தானே இம்மாம்பெரிய பிட்டை போட்டு வெச்சிருக்க..?

   மச்சான்.. வீட்ல ரிப்பன் ஏதாச்சும் இருந்தா, எடுத்து தலையில கட்டிக்கோ.. வாத்து, கோழின்னு அக்கம்பகக்த்துல ஏதாச்சும் மேஞ்சிகிட்டு இருந்தா அதுகளோட பட்டக்ஸ்ல இருந்து பத்துஇருபது இறகுகளை பறிச்சி, தலையில கட்டியிருக்குற ரிப்பன்ல சொருகிக்கோ..!
   அப்புறம் நெயில் பாலிஸ் இருந்துச்சின்னா எடுத்து கண்ணுக்கு கீழ.. நெத்தியில.. தாடையில கோடுகோடா பூசிக்கோ..! இப்போ போய் கண்ணாடியில பாரு.. யாரு தெரிவாங்க..!?
   நவஹோ கிராமத்து மாந்தீரீக கிழவனார் தெரிவாரு..!

   (இதையெல்லாம் செய்யாமலே நீ அப்படித்தான் இருப்பேன்னு பழைய காமெடி பண்ணிக்கிட்டு இருக்காதே.)

   Delete
 18. Ye கலாய ப் ப்ஸ் வேன்டும்.
  அதேசமயம் பூகோள ரீதியான உண்மைகளும் வேண்டும் உதாரணமாக மெக்சிகோவில் நீர் வெதுவெதுப்பாக இருக்கும் என்பது பொது அறிவு.
  இது போன்ற இடங்களில் அப்படியே பயன்படுத்தவும் .பொது அறிவு கிடைத்த மாதிரி இருக்கும் ஸார்.

  ReplyDelete
 19. Replies
  1. அது வேறு தளம் Doctor - சவிதா பாபி என்று பெயர் :-)

   Delete
  2. என்னா பெரிய சவீதா பாபி.. வேலம்மா தெரியுமா.? :-)

   Delete
  3. யெஸ்ஸுங்க..!

   எனக்கு அதைத் தந்தருளியவர் விஜயராகவர்..!

   Delete
 20. முதல் ஆளா வந்துட்டனே...


  ( என்னில் இருந்து கணக்கில் கொள்ளவும்..)

  ReplyDelete
 21. கலாய்ப்பது சுவாரஸ்யமாகத்தான் இருந்தது.

  ReplyDelete
 22. எனக்கு என் நண்பர்களுடன் நீண்ட வருடங்களாக பணி செய்யும் வாய்ப்பு அமைந்துள்ளது - சிலருடன் 17-18 வருடங்கள் அண்ட் ரன்னிங். இவர்களுடன் பணியில் மரண கலாய்கள் உண்டுதான் - மறுக்கவில்லை. ஆனால் தினமும் ஒரு முறை - வாரம் சில முறை அன்று இருக்கும். பெரும்பான்மையான பானெல்களில் அதிக கலாய்ப்புக்கள் வருவது - looks not natural. 4-5 பக்கங்களுக்கு ஓரிரு முறை என்றால் very practical.

  ReplyDelete
  Replies
  1. இதைத்தான் நானும் வலியுறுத்துகிறேன்...

   Delete
 23. No சார்,

  At the same time, இந்த comparison pages எல்லாம் கண்டிப்பா தேவை இல்லை சார்.

  Reality is Some readers feel, over the years making fun of Kit has become little overdose. அவ்வளவு தான் சார்.

  ReplyDelete
  Replies
  1. Absolutely - there is a respect that is reserved for a experienced colleague-cum-friend who is a renowned superstar of his own.

   Delete
  2. சம வயதுள்ள ஒரு நண்பனையோ சற்றே இளையவனையோ எப்போதும் கலாய்க்கலாம். ஆனால் நம்மை விட வெகு சீனியர் ஆன - தானே ஒரு சூரப்புலி என்று நிரூபித்த ஒருவரை panel by panel கலாய்ப்பது ஏற்புடையதில்லை. அவருக்கென்று ஒரு மதிப்பு மரியாதை கவுரவம் உண்டு. 10 பக்கங்களுக்கு ஒரு முறை கொஞ்சம் கலாய்ப்ஸ் இருக்கலாம்.

   Delete
  3. I have been noticing that Tex has been making Carson increasingly a dummy piece - which is the result of panel by panel needling by Tex.

   Delete
  4. In recent stories Carson is made to be mostly bothered about resting and focussed on chukka roast. கார்சன் ஒரு சோற்று மூட்டை ஆக்கப்பட்டுள்ளதான உணர்வு மேலிடுகிறது..

   Delete
  5. ராகவன் சார்,

   இதை ஈடுகட்ட கார்சனின் கடந்த காலம் போல் ஒரு குண்டு புக் வெளி வந்தால் நன்றாக இருக்கும் இல்லையா?

   Delete
 24. கலாய்ப்பு தான் நட்பை நெருக்கமாக்கிக் காட்டும். கலாய்ப்பு தொடரட்டும்.

  ReplyDelete
 25. கலாய்ப்ஸ் தாங்க சார் வசனங்களுக்கு ஜீவநாடி....

  கலாய்ப்பஸ் இல்லைனா பத்தியசோறு மாதிரி இருக்கும்....

  காமிக்ஸில எதுக்குங்க பத்தியம்...??

  ப்ரியா கலாய்ங்க...

  டெக்ஸ்& கார்சனை இயல்பாகவே நடமாட விடுங்க சார்...


  கலாய்ப்பை குறைக்கிறேன்னு சுவாரயஸ்யம் போய்ட போகுது...

  ReplyDelete
 26. எஸ்.கலாய்ப்...


  இது பற்றி பலவருடங்களுக்கு முன் இங்கே ஏற்கனவே பகிர்ந்து இருந்தேன்..டெக்ஸ் ,கார்ஸன் கலாய்ப்பு என்பது நெருக்கமான அவர்களின் நட்பை பிரதிபலிக்கிறது...அந்த நெருக்கம் நம்மையும் அவர்களுடன் இன்னமும் நெருங்க வைக்கிறது..அவர்களுக்குள் மரியாதை வந்தால் ஒரு அதிகாரியும் ,சிப்பாயும் இணைந்து வருவது போல தான் நமக்கு தோன்றுமே தவி ர அவர்களின் நட்பு நமக்கு புரியாது போய்விடும்..கதையில் நமக்கு ஏற்படும் புன்சிரிப்பும் குறைந்து விடும் ..

  எனவே தயவு செய்து எஸ் கலாய்ப்பு


  என்பதே எனது தீர்ப்பு சார்..

  ReplyDelete
 27. சிவப்பு தான் தேவை
  கலாய்ப்பு கண்டிப்
  - பாக தேவை Sir

  ReplyDelete
 28. எஸ்.கலாய்ப்...


  இது பற்றி பலவருடங்களுக்கு முன் இங்கே ஏற்கனவே பகிர்ந்து இருந்தேன்..டெக்ஸ் ,கார்ஸன் கலாய்ப்பு என்பது நெருக்கமான அவர்களின் நட்பை பிரதிபலிக்கிறது...அந்த நெருக்கம் நம்மையும் அவர்களுடன் இன்னமும் நெருங்க வைக்கிறது..அவர்களுக்குள் மரியாதை வந்தால் ஒரு அதிகாரியும் ,சிப்பாயும் இணைந்து வருவது போல தான் நமக்கு தோன்றுமே தவி ர அவர்களின் நட்பு நமக்கு புரியாது போய்விடும்..கதையில் நமக்கு ஏற்படும் புன்சிரிப்பும் குறைந்து விடும் ..

  எனவே தயவு செய்து எஸ் கலாய்ப்பு

  ReplyDelete
  Replies
  1. இங்கு டெக்ஸ் கார்சனை கருப்பு வெள்ளை பேனலில் கூட பெருசு என்று கலாய்த்துள்ளார். கருப்பு வெள்ளையா? கலரா? எந்த நடை பிடித்துள்ளது என்பதே editorin கேள்வியாக இருக்கக்கூடும்.

   Delete
 29. No to கலாய்ப்ஸ்...
  உண்மையில் எனக்கு கருப்பு வெள்ளையில் உள்ள நடையே படிக்க சரளமாக உள்ளதாக தோன்றுகிறது... பசுபதி டயலாக் ஒன்னு வருமே... நீங்க நம்பலனாலும் அதான் நெசம்... மற்றபடி யார் மனதையும் புண்படுத்தும் எண்ணம் இல்லை...
  எடிட்டர் ரெட் மார்க் கொடுக்கலனாலும் கூட அது எடிட்டர் touch என்று எல்லோராலும் கண்டு பிடிக்க முடியும்... பெரும்பாலானோர் அதைத்தான் விரும்புகின்றனர் எனில்.. 'அடுத்த டெக்ஸ் book என்னங்க?!!!!!'.

  ReplyDelete
  Replies
  1. ///பெரும்பாலானோர் அதைத்தான் விரும்புகின்றனர் எனில்.. 'அடுத்த டெக்ஸ் book என்னங்க?!!!!!'.///

   ஆங்! இது பேச்சு!

   Delete
 30. கருப்பில் இருப்பது பயங்கர Dry ஆக இருக்குறது. சிவப்பில் இருப்பது ரிலாக்சிங் ஆக இருக்கிறது.

  ReplyDelete
 31. a big no :(

  என்னைப் பொறுத்தவரை இது எப்படி இருக்கிறது என்றால் - ஃபாரின் பர்கர்க்கும் ; உள்ளூர் பர்கர்க்கும் உள்ள வித்தியாசம் போலவே உணர்கிறேன்!

  லோக்கல் பர்கர் பற்றி தெரியாத நண்பர்களுக்கு - ஒரு பிரஷ்ஷான ரவுண்டு பண்ணில், நட்ட நடுவாக்கில் இரண்டாக வெட்டிப் பிளந்து - நட்ட நடுவே ஒரு உருண்டையான கிழங்கு போண்டாவை வைத்து - ஆயிரம் போண்டாவை, பண்ணிற்கு நடுவில் வைத்து, ஒரே அமுக்காக அமுக்கிய அதே கையில் - மீண்டும் ஒரு முறை, ஏ அஜால் குஜால் ; ஏ அமுக்கு டுமுக்கு என்று அழுத்தி, அமுக்கி, அழுத்தி உள்ளூர் பர்கரை கையில் திணிப்பது போல் உள்ளது !

  நன்றி! என் மனதில் சட்டென்று தோன்றியதைத் தெரிவித்து விட்டேன்!

  ReplyDelete
  Replies
  1. Veg hamburger என்று பல பேக்கரிகளில் இருப்பது போல

   Delete
 32. @ALL : ஒரிஜினலில் "டெவில்" என்ற வாரத்தைப் பிரயோகம் நண்பர்களுக்கு மத்தியில் ரொம்பவே அடிக்கடி உண்டு ! "ஷைத்தானே " என்றோ "சைத்தான் கி பச்சா " என்றோ அதனை இங்கே
  எழுதுவதற்குப் பதிலாகத் தான் "பெருசு " என்றோ "தம்பி" என்றோ எழுதுகிறேன் ! ஒரிஜினலிலும் கணிசமாய் கலாய்கள் உண்டு ; கார்சனின் முகத்தைப் பார்க்கும் போதே அது எந்த பிரேம்களின் என்பது புரியும் !

  ReplyDelete
  Replies
  1. விளக்கத்திற்கு நன்றி சார்.Agreed.

   Delete
  2. அப்படியென்றால் 'சைத்தான் சாம்ராஜ்யம்' தலைப்பை நீங்கள் ஏன் 'பெருசு சாம்ராஜ்யம்' என்றோ, 'தம்பி சாம்ராஜ்யம்' என்றோ வைக்கவில்லை எடிட்டர் சார்?

   Delete
  3. எடிட்டரையே கலாய்ச்சிட்டிங்களே.. செம்ம..

   Delete
  4. துள்ளுவதோ கொடுமை யையே ரசிச்சு தள்ளலையா. அப்புறமா அந்த 3rd ebi - எப்போ

   Delete
 33. இன்னிக்கு ட்ராஃபிக் கொஞ்சம் ஜாஸ்தியா இருக்காப்ல தெரியுதே..! 😜

  ReplyDelete
  Replies
  1. தெரியட்டும்...தெரியட்டும்.

   Delete
  2. லைட்டா....

   டெக்ஸ் கார்சன் மேல்லாம் பலருக்கும் பாசம் கரைபுரண்டு ஓடுதே.... ஆச்சர்யமா இருக்கு..

   டெக்ஸை குறை, அதிகமாக வர்றாரு, வருதேனு வாங்குறோம் வாசிக்கிறதுலாம் இல்லைனு சொன்ன பலருக்கும் டெக்ஸ் பாசம் திடிர்னு தோண என்ன காரணும்னே புரியலயே!!!!

   Delete
 34. YES TO கலாய்ப்ஸ்
  காலம் காலமாக நவஜோ என்று இருந்ததை நவஹோ என்று மாற்றியதையே என்னால் இன்றுவரை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நான் இப்போதும் நவஜோ என்று தான் படித்துக் கொண்டிருக்கிறேன்.
  கார்சன் உரையாடல்கள் பக்கத்திற்கு பக்கம் இல்லாமல் கலாய்ப்புகள் இருக்கலாம் தப்பில்லை.

  ReplyDelete
  Replies
  1. ///நான் இப்போதும் நவஜோ என்று தான் படித்துக் கொண்டிருக்கிறேன்.///

   :))))

   Delete
 35. உலகத்துக்கான நேரடியான , மொழிபெயர்ப்பை விட தமிழகத்துக்கான உங்களின் மொழிபெயர்ப்பை , நெருடல் இன்றி தொடருங்கள் எடி சார் இவ்வளவு காலம் உங்களை நம்பி தொடர்ந்து வரும் எங்களுக்காக

  ReplyDelete
 36. இயல்பான வசளங்களுடன், ஒரே ஒரு புத்தகமாவது டெக்ஸ்-ஐ வெளியிடுங்கள். அதுவே எங்களுக்கு போதுமானது. (கருப்பில்) . ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்று அதை பொக்கிசமாக வைத்துக் கொள்கிறோம் எடிட்டர் சார்.

  ReplyDelete
 37. அதிகாரிய கலாய்க்கலாம்ல...!
  அதுக்கு ஒண்ணும் தடையில்லையே...!
  😆😆😆

  ReplyDelete
  Replies
  1. அதிகாரி கதைய பொருத்தமட்டில் முதல் ஐந்தாறு பக்கங்கள் உண்மையிலேயே சுவாரஸ்யமாய் இருக்கும்...!
   ஏன்னா அந்த ஐந்தாறு பக்கங்கள் மட்டும் தான் அதிகாரி இருக்கமாட்டார்...!

   Delete
  2. மாடஸ்காவுக்கு ரிப்போர்ட் அடிச்சவங்க தூங்கி போயிட்டிங்களா.? இல்லை.. காமிக்ஸ் படிக்கிறதையே நிறுத்திட்டிங்களா..?

   Delete
  3. டெக்ஸ் கோயிலுக்கு நேத்து விட்ட ஆடு அதனால யார் வேணும்னாலும் கிண்டல் பன்னலாம் ஆனா மத்த ஹீரோ ஹீரோயின்களை கிண்டல் பன்னுனா மட்டும் வருத்தம் நேரிடும் கண்ணீர் வரும் மனசு புண் படும் அந்த வருத்தத்துல ரத்தம் ரத்தமாக கக்குவாங்க
   டெக்ஸ் ரசிகருன்னாவே இளிச்சவாயன் தானே ஆபிசர்

   Delete

  4. "கோயிலுக்கு நேர்ந்துவிட்ட ஆடு"

   தவறான உதாரணம் போலத் தெரிகிறதே சத்யா! நேர்ந்துவிட்ட ஆட்டை யாரும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள். பயிரைத் தின்றால் கூட விரட்டத் துணிய மாட்டார்கள்.

   திருடிய ஆட்டை " நேர்ந்துவிட்ட ஆடு"என பத்திரிக்கை மூலம் அறிந்து சுடலை ஆண்டவர் கோயிலிலேயே திருடிய ஆட்டை திரும்பி கொண்டு வந்துவிட்ட சம்பவம் நெல்லையில்
   நடந்தது உண்டு.

   Delete
  5. ///"கோயிலுக்கு நேர்ந்துவிட்ட ஆடு"

   தவறான உதாரணம் போலத் தெரிகிறதே சத்யா! நேர்ந்துவிட்ட ஆட்டை யாரும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள். பயிரைத் தின்றால் கூட விரட்டத் துணிய மாட்டார்கள்.///

   உண்மைதான் செனா..! நேர்ந்துவிட்ட ஆடு சாமிக்கு சமம்.! செந்தில் உவமானத்தை மாற்றிச் சொல்லிவிட்டார்..! இப்போ நான் சரியாகச் சொல்கிறேன் பாருங்கள்..!

   பழங்கால கிராமங்களில் ஊருக்குப் பொதுவாய் ஒரு உரல் இருக்கும்.. அதில் யார் வேண்டுமானலும் நெல் குத்திக்கொள்ளலாம்.. யாரும் கேட்கமட்டார்கள்..! அந்த உரலுக்கு குந்தாணி என்றும் பெயர்.. அனைவரும் இலவசமாக நெல்குத்திக் கொள்ளலாம்.. கேட்பரில்லை என்பதால்.. தர்ம குந்தாணி என்று சொல்வார்கள்..!
   அதைப்போவே..டெக்சும் தர்ம குந்தாணி..!

   இப்போ சரியா இருக்குங்களா..😛

   Delete
  6. 'குந்தாணி'ன்னா என்னன்னு இன்னிக்குத்தான் தெரிஞ்சுக்கிட்டேன் கிட்!

   சின்னவயசிலேர்தே நிறையப்பேர் 'குந்தாணி மாதிரி உட்கார்ந்திட்டிருக்காதே'ன்னு சொன்னதன் அர்த்தமும் இப்பத்தான் புரியுது!!

   Delete
  7. எங்கள் பேச்சு வழக்கில் குந்தாணிகளா என்று வயசு பெண்டுகளை அழைப்போம்.

   Delete
 38. கருப்பு வேண்டாம். சிவப்பு தான் வேண்டும். பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேண்டும்.

  ReplyDelete
 39. YES to கலாய்ப்ஸா ; or NO to கலாய்ப்ஸா ?

  நோ கலாய்ப்ஸ்...

  மேலே, ராகவன் சார் சொல்லியுள்ள கருத்துக்கள் தான் என் மனதிலும் கார்சனை கலாய்க்கும் போது ஓடும்.

  எப்போதாவது கதைக்கு அவசியம் என்றால் செய்யலாம். தனக்கு நிகரான மற்றொரு ரேன்ஜெரை பெரிசு, சுக்கா ரோஸ்ட் என ஒவ்வொரு முறையும் சொல்லும் போது, இவர்களெல்லாம் நண்பர்கள் தானா என எண்ண தோன்றும்!

  கார்சனின் கடந்த காலம் கதையில் ஒரு பேனலில் டெக்ஸ் தன் மகன் கிட்டிடம், "இந்த விசயத்தை சொல்லி, கார்சனை கிண்டல் செய்தால், கடும் விளைவு ஏற்படும்" என்று...


  அது போன்ற நச் என்று வரும் வசனங்களே எனது எதிர்பார்ப்பு...

  ReplyDelete
  Replies
  1. //"இந்த விசயத்தை சொல்லி, கார்சனை கிண்டல் செய்தால், கடும் விளைவு ஏற்படும்" என்று...//
   இந்த கதையிலும் டெக்ஸ் தான் ஹீரோ என்றாலும், கார்சனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இது போன்ற வசனம் ஏராளம்...

   சிரியசான கதையில் கடைசி ஒரு பேனலில் கார்சன் பாடுவதை கேட்க என் காதுகள் என்ன பாவம் பண்ணுச்சோ என்கிற நம் மனதை இலகுவாக்கும் கதாசிரியரின் அபார யுக்தி.

   Delete
 40. சாரி, இந்த ஓட்டெடுப்பில் நான் கலந்து கொள்ளவில்லை... இங்கே பிளாகில் ஒரே சார்பான ஒரே மாதிரி template பதில்கள் வரும் என யாவருக்கும் தெரியும் எனும் போது... இது போன்ற வாசகர் அபிப்பிராயம் நிச்சயமாக நியாயமான ஒன்றாக படவில்லை. இங்கே அனைத்து வாசகர்களும் இல்லை....நிச்சயம் பிளாகில் இது போன்று கேள்விகளை தவிர்த்து ஆசிரியரே முடிவெடுத்தல் தான் சரி.

  ReplyDelete
  Replies
  1. சர்வே என்பது அனைத்து a,b,c,d, e என்று அத்தனை வகையான cater களிலும் உள்ள மக்களிடம் கேட்கப்பட வேண்டிய ஒன்று. பிளாகில் பொதுவாக ஒரே வகை அதாவது A,B பிரிவு வாசகர்களே இருப்பது போலவே உள்ளது... ஒரே பிரிவு மக்களிடம் கேள்வி கேட்டு ஐடியா பெறுவது ஒரு தலை பட்சமாக தான் இருக்கும்.

   ஏதாவது ஒரு பொதுவான கூட்டம், அல்லது இது போன்றே சர்வே வலியுறுத்தி திட்டமிட்டு நமது காமிக்சில் வருடாந்திர சர்வே விளம்பரம் செய்து நடத்தி சிறப்பான வாசகர் கருத்து கிடைக்க முயற்சிக்கலாம். ரொம்ப நாளாய் சொல்ல தோன்றியது சொல்லிவிட்டேன்.

   Delete
  2. A'வைச் சுற்றி ரவுண்டு போட்ட வகை மக்களுக்கும் இந்த லிஸ்ட்டுல இடமுண்டுங்களா ப்ரோ?! :D

   Delete
  3. உதய் ஆதி @ cater= cadre.

   Delete
 41. கார்சன் சாகச வீரர் என்பதை பல கதைகளில் டெக்ஸ் தன் மகனுக்கு சொல்வதால் தான் எல்லோரும் தெரிந்துக் கொள்ள முடிகிறது. டெக்ஸ் என்றுமே கார்சனை காமடி பீசாக நினைத்தது இல்லை. அதே சமயம் டெக்ஸை கார்சன் கலாய்பதும் அனைத்து கதைகளிலும் நிகழ்ந்துக் கொண்டே தான் இருக்கிறது. வனமேற்கின் அன்றைய வாழ்வியலை பொருத்திப் பார்த்தால் தான் கலாய்ப்பது ஏன் என புரியும்.

  அது மட்டுமன்றி கார்சன் பல இடங்களில் புலம்புவது போலவே அவரது character வடிவமைக்கப்பட்டுள்ளது. புலம்புவது ஒரு எதிர்மறை எண்ணம்.

  அதை கலாய்ப்பதின் மூலம் ஆசிரியர் நேரமறை எண்ணமாக கடத்துகிறார்.

  ReplyDelete
  Replies
  1. செம பாயிண்ட் ஆஃப் வியூவ் !!!

   Delete
  2. செம சூர்யா.... வன்மேற்கு காலத்தோடு ஒன்றி பயணித்தால் உணரலாம்..

   Delete
  3. ///அது மட்டுமன்றி கார்சன் பல இடங்களில் புலம்புவது போலவே அவரது character வடிவமைக்கப்பட்டுள்ளது. புலம்புவது ஒரு எதிர்மறை எண்ணம்.

   அதை கலாய்ப்பதின் மூலம் ஆசிரியர் நேரமறை எண்ணமாக கடத்துகிறார்.///l

   அருமையான பாயிண்ட்..👌👌👌

   Delete
 42. பேசாம புரபஸர் பெல்ஹாமிடம் சொல்லி ஒரு விசேட கண்ணாடி ரெடி பண்ணச் சொல்லுவோம் சார் .. அதைப் போட்டுகிட்டுப் படிக்கறவங்களுக்கு மட்டும் கலாய்ப்ஸ் வரிகள் மறைஞ்சு, சாதா மொழிபெயர்ப்பு வரிகள் தெரியட்டும்!

  அதில் இன்னொரு பட்டனை அழுத்தினால் நம்ம DTP டீம் பூசிவைக்கும் கருப்பு மசி மறையறாப்ல இருந்தா இன்னும் சூப்பரா இருக்கும்!!

  ReplyDelete
  Replies
  1. ரம்மிக்கு டெக்ஸே மறையற மாதிரி ஒரு கண்ணாடி ப்ளீஸ்!

   Delete
 43. Replies
  1. இந்த பதிவுல உங்களுக்கு வேலை வெக்காம Tex ரசிகர்களே சோலி முடிச்சுக்குறாய்ங்கல்ல ரம்மி :-)

   Delete
 44. டியர் விஜயன் சார்,

  சிறுவர் சிறுமியர் எட்டிப் பார்க்கத் தோதான பள்ளி வளாகங்களில், புத்தக விழாக்கள்  நடைபெற்று வருவது சிறப்பு! அவர்கள் வாசிக்க எளிதான, பக்கங்கள் குறைவான, கவனமாகத் தேர்ந்தெடுக்கப் பட்ட காமிக்ஸ்கள் சிலவற்றை, தனி ரேக்கில் வைத்துப் பார்க்கலாம். நம்முடைய கார்ட்டூன் வெளியீடுகள் யாவும் அவர்களுக்கு ஏற்றவை என்று நிச்சயம் சொல்வதற்கில்லை. வண்ணத்தில் வேதாளர், டெக்ஸ் குறுங்கதைகள் (இருந்தால்), லக்கி லூக், ரிப் கிர்பி (க்ளீன் என்பதால்)கதைகள் - இவற்றை முயற்சிக்கலாம்.

  "சமகால சிறுவர்கள் படிப்பதற்கு ஏற்ற நாயகர்கள்/கதைகள் - யார் யார், எவை எவை?" என்று வேண்டுமானால் இங்கே கருத்துக் கணிப்பு நடத்தலாம்! மற்றபடி, "கார்சனைக் அளவுக்கதிகமாக கலாய்ப்பது டெக்ஸ் அல்ல, நான் தான்" என்று நீங்களே கிட்டத்தட்ட ஒப்புதல் வாக்குமூலம் அளித்து விட்டதால், அது தொடர்பான கருத்துக் கணிப்பை/முடிவை உங்கள் மனதில்தான் நீங்கள் நடத்த/எடுக்க வேண்டும்!

  ஏகப்பட்ட நிபந்தனைகளுடன், நீங்கள் கேட்டிருக்கும் கேள்விக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் என்றால், சச்சின் பட பாணியில் தான் சொல்ல வேண்டும்!

  எடிட்டர் (கார்சன் வசனங்களில்): கிழம் வறுத்த கறியை கொறிக்கும் வேகத்தைப் பாரேன்!

  எடிட்டர் மொழிபெயர்ப்பு ரசிகர்கள்: டெக்ஸ் கார்சனைக் கலாய்ப்பது செம காமெடி! நீங்க போடற பிட்டு, கடல்ல நங்கூரம் மாதி நச்சுனு பொருந்துது! இதே மாதிரி கற்பனை பண்ணி, இன்னும் ஒரு ஏழு எட்டு பிட்டு சேத்துப் போட்ருங்க வாத்தியாரே!

  கார்சன் ரசிகர்கள்: ஏம்பா, என்னப்பா இப்படி கலாய்க்கிறாரு!

  எடிட்டர் மொ.பெ. ர.: அண்ணே.... அது, காமெடின்ணே ... கிக், கிக், கிக்!

  எடிட்டர் (கார்சன் வஜனங்களில்): அடேய் கெழட்டுப் பயலே, வறுத்த கறி கொறிச்சது போதும், உன் கொழுத்த தொப்ப தெரிச்சுடப் போகுது!

  எடிட்டர் மொ.பெ. ர.: ஹா ஹா ஹா... ஹோ ஹோ ஹோ...! சிரிச்சே எங்க வயிறெல்லாம் புண்ணாயிடுச்சு வாத்தியாரே!

  எடிட்டர் (கார்சன் வஜனங்களில்): யோவ், முட்டி வீக்கான பெருசு! முந்திரியை அள்ளித் தின்னது போதும், எங்கே டக்குனு எந்திரி பாப்போம்! 

  எடிட்டர் மொ.பெ.ர.: ஹா ஹா ஹா... ஹோ ஹோ ஹோ... ஹா ஹா ஹா... ஹோ ஹோ ஹோ...

  கா.ர.: அய்யோ,வாத்தியாரே! எங்கள் தலைவர் கார்சனை ஓவரா கலாய்க்கிறீங்களே,, இது நியாயமா? 

  எடிட்டர்: நீங்கதான ஏழு எட்டு பிட்டு போடச் சொன்னீங்க அய்யாசாமீஸ்?! நான் எக்கச்சக்க பிட்டு போட்டுட்டேன்! எப்படி நங்கூரம் மாதிரி நச்சுனு பொருந்துதில்ல? இனிமே ஒவ்வொரு டெக்ஸ் கதையிலும், பிட்டு பிட்டா போட்டுர்றேன்?!

  கார்த்திக்: அப்படியில்லை சார்! அளவாக, ரிபீடட் ஆகத் தோன்றாத வரை, ஒன்றிரண்டு பிட்டுகள் ஓகே தான்!

  எடிட்டர் (மைண்ட் வாய்ஸில்): அடேய் அய்யாசாமி, இதை சுருக்கமா முதலிலேயே சொல்லி இருக்கலாம்ல? சச்சின் பட வஜனம்  எல்லாம் போட்டு விளாக்கியே ஆகணுமாக்கும்?!

  கார்த்திக் (மை வாய்ஸில்): அண்ணே.... அது, காமெடின்ணே ... கிக், கிக், கிக்! 
  :)

  ReplyDelete
 45. கார்சனை எந்த கலாய்ப்பது மாதிரி டெக்ஸையும் கலாயுங்கள்

  இப்படிக்கு.
  க.கா.க.போ சங்கம்

  ReplyDelete
  Replies
  1. இதற்காகவே ஒரு மினி எடிட்டர் - ஆனால்- புத்தகத்துக்கு வெளியே இருக்கிறார். பாயாச அண்டாவை கக்கத்தில் வைத்துக் கொண்டே தயாராக இருப்பார்.

   Delete
  2. அடுப்பை பத்த வெச்சிருட்டுங்களா??

   Delete
  3. ///பாயாச அண்டாவை கக்கத்தில் வைத்துக் கொண்டே ///

   ஒரு அண்டாவையே வைக்கமுடியுதுன்னா அவரு கக்கத்தின் அளவை யோசிச்சேன்!!!

   Delete
 46. Yes to கலாய்ப்ஸ் but it should be mutual sir

  ReplyDelete
  Replies
  1. டெக்ஸ் கார்சனை கலாய்க்க..
   கார்சனை டெக்ஸ் கலாய்க்க..
   இப்படி mutualலா...

   Delete
  2. அப்படி தானே இருக்கு..... டெக்ஸ் 4கலாய்னா, கார்சர் 2கலாய் உடுறாரே...

   Delete
 47. பல வருடங்களாக டெகஸ் கார்சனை கிண்டலடிப்பதை படித்து ரசித்திருக்கின்றேன்...

  ஆனால் கார்சன் டெக்ஸை அதே frequencyயில் கிண்டலடிப்பது போல் வருவதில்லை என்பது எனக்கு சிறு வருத்தமே... கார்சனும் டெக்ஸை equalஆக கிண்டலடித்தால் நண்பர்களின் அன்னியோன்யம் மேலும் மிளிரும் என்பது என் எண்ணம்...

  அதே போல் originalல் உள்ள வசனங்களை, வார்த்தைக்கு வார்த்தை, வரிக்கு வரி... மொழி பெயர்க்க வேண்டும் என்ற கோரிக்கை எனக்கு பிடித்தமில்லை... சாராம்சம் மாறாமல் படிக்கும் மக்களின் விருப்பு வெறுப்புக்கு ஏற்ற மாதிரி மொழிபெயர்ப்பு செய்வதே சாலச் சிறந்தது என்னும் கருத்து தமிழகத்தில் நிலவுவது இன்று நேற்றல்ல, கம்பராமாயணமே அதற்குச் சாட்சி....

  நீங்கள் எங்களுக்கு அளித்து வரும் மொழிப்பெயர்ப்பு... Perfect... கார்சனும் வரும் காலங்களில் டெக்ஸை கிண்டலடித்தால்... இன்னும் picture perfect ஆக இருக்கும் என்பது என் கருத்து...

  ReplyDelete
 48. திருச்சி புத்தக விழா அறிவித்த நாட்களில் திருச்சி வரும் எண்ணம் இல்லை, ஆணால் சூழ்நிலை என்னை புதன் காலை திருச்சியில் சேர்த்தது, அதுவே என்னை புத்தக விழா நடக்கும் பக்கம் கூட நெருங்க விடவில்லை. எப்படியோ இன்று மதியம் 3-4 அங்கே சென்றேன். நண்பர் குளித்தலை மணியின் அறிமுகம் கிட்டியது.
  80% பள்ளி மற்றெ மாணவர்கள்.
  சம்பவம் #1
  பள்ளி மாணவன் கையில் கேரட் தாத்தா புக்குடன் வேறு இண்ட்ரஸ்டிங்கான ஆக்ஷன் கதை இருக்கா என்ற தேடலில் இருந்தான். மரண முள் எடுத்து காண்பித்தோம், மிகவும் பிடித்து இருந்தது, ஆணால் அது அவனது பட்ஜெட்டுக்கு வெளியே, நாங்கள் கிஃப்டாக தறுகிறோம் வங்கிக்கொ என்று வற்புரறுத்தி சொல்லியும் அவன் மணம் ஏற்கவில்லை. க்ளிப்டனை மட்டும் வாங்கி சென்றான். நல்லா வருவான் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு.

  சம்பவம்#2
  8ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவனுக்கு பாராகுடா அட்டை படம் மிகவும் ஈர்த்துள்ளது. இது த்ரில்லிங்காக இருக்கும் போல் என்று அதை வாங்க முயற்ச்சித்த போது, இது பிரெஞ்சு , பழைய காலத்து கதைன்னு சொன்னா, பெரெஞ்சு ஹிஸ்ட்ரி கத்துக்குவோம்னு பதில், இது 2 பாகம் விலை ஜாஸ்தி என்று கூறி நாசுக்காக தடுத்து வேறு பக்கம் திருப்பிவிட்டோம், சுத்தி பார்த்துவிட்டு சென்றுவிட்டான் 18+ என்று சொல்ல மனசு வரலை... நான் ஸ்டாலில் இருந்து புறப்படும் நேரம் இன்னொரு நண்பனுடன் வந்து இரண்டு பாகத்தையும் மின்னல் வேகத்தில் வாங்கி சென்றுவிட்டான்.
  நாமும் இந்த வயசில் ஜேம்ஸ் பாண்ட் கதைகளை 18+விசையங்களை தாண்டி ரசித்துள்ளோமே.

  ReplyDelete
  Replies
  1. "அழகியைத் தேடி"யை அட்லஸ் புக்குக்கு உள்ளே வெச்சி வாசித்தோமல்லோ.....🤪

   Delete
 49. டபுள் யெஸ் டூ கலாய்ப்பு...


  ஆனா கலாய்க்கிறது எங்க தலைவர் கார்சராக இருக்க வேண்டும்..

  ReplyDelete
 50. ஹூம்....!

  அஞ்சி வருசத்துக்கு முன்னாடியே இதைச்சொன்னேன்..! கலாய்ப்பு என்பது நட்புக்குள் பரஸ்பரம் இருக்கணும்.. அப்போதான் நல்லா இருக்கும்னு..!
  உடனே தலீவர்.. மாம்ஸ் உள்ளிட்டோர்... நட்புன்னா என்னான்னு தெரியுமா.. தேவான்னா என்னான்னு தெரியுமான்னு அடிக்க வந்தாங்க..!
  இப்போ அதையேதான் எல்லோரும் கேக்குறாங்க..!

  அதுசரி... துபாய்க்கு சரியான வகையில போகத்தெரியாம ஃபிராடுகிட்ட ஏமாந்த பார்த்தீபன்.. சரியானபடி போயி வேலை பார்த்துட்டு வந்த வடிவேலுவை கலாய்ப்பதைத்தானே ரசிச்சி சிரிச்சோம்..!

  நான் ஒரு வாரத்துக்கு பழைய டெக்ஸ் கதைகளை மறுக்கா வாசிப்பு பண்ணிட்டு வாரேன்.. விடு ஜூட்.!

  ReplyDelete
  Replies
  1. ////துபாய்க்கு சரியான வகையில போகத்தெரியாம ஃபிராடுகிட்ட ஏமாந்த பார்த்தீபன்.. சரியானபடி போயி வேலை பார்த்துட்டு வந்த வடிவேலுவை கலாய்ப்பதைத்தானே ரசிச்சி சிரிச்சோம்..!
   ////

   அடக்கடவுளே! இது தெரியாம இத்தனைநாளா ஒரு எழுபது எண்பது தடவை சிரிச்சு வச்சுட்டேனே!!
   எவ்வளவு ஞானம் கிட் உங்களுக்கு - இந்த சின்ன வயசுல!!

   Delete
  2. ///எவ்வளவு ஞானம் கிட் உங்களுக்கு - **இந்த சின்ன வயசுல!!**///

   நீங்க எப்பவுமே உண்மையை மட்டும்தான் பேசுவிங்கன்னு உலகமக்கள் எல்லோருக்குமே தெரியும் குருநாயரே..!

   இப்படியாக.. ஹீரோக்களின் இமேஜை தூக்கி நிறுத்துவதற்காக பயண்படுத்தப்படும் காமெடியன்கள் மத்தியில் ஹீரோக்களையே கலாய்த்து தெறிக்கவிட்ட ஒரே காமெடியன்... தென்னிந்திய மைக்கேல் ஜாக்சன்.. தெற்காசிய புரூஸ்லீ.. அண்ணன் கவுண்டமணி அவர்கள் மட்டுமே... யாரையும் விட்டுவெச்சதில்லை..!

   நான் ஏன் தானைத்தலைவர் கவுண்டமணிக்கு ரசிகனா இருக்கேன்னா.... 😜

   ( பொறுப்புத்துறப்பு : இந்தப் பதிவின் கேள்வி பதில்களுக்கும்.. என்னுடைய இந்தக் கமெண்டுக்கும் தொடர்பு எதுவுமில்லை.. அது சினிமா.. இது காமிக்ஸ்..!)
   🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

   Delete
  3. ஏங்க. உங்களுக்கு பெட்மாட்ஸ் லைட்டே தா வேணுமா

   Delete
 51. ஏதோ எங்க தலைவர் கார்சர் இருக்கிறதினாலே தான் இந்த அதிகாரி பிழைப்பு கொஞ்சம் ஸ்மூத்தா போயிட்டு இருக்கு.. அவரும் இல்லைனா ஓல்ட் மங்க் ரம்மை மிக்சிங் அன்ட் சைட் டிஷ் இல்லாமல் குடிக்கிற மாதிரி தான் இருக்கும்...

  ReplyDelete
 52. இருக்கும் கூட்டத்தில் கார்சன் தான் இளிச்சவாயன் போல் சித்தரிக்கப்படுவது வருத்தமாகவே உள்ளது 10 வயது மூத்தவராக இருந்தாலும் அவர் டெக்ஸை கலாய்ப்பதை காணோம் ஆனால் தவறாமல் டெக்ஸ் கார்சனை பெருசு கிழவா என்று பேசி தள்ளுவது சற்று முரணாகவே உள்ளது பிடிக்கவும் இல்லை

  ReplyDelete
 53. 20 வயதில் மகனை வைத்திருக்கிற டெக்ஸ் பெருசா இல்லை திருமணமே ஆகாத கார்சன் பெருசா?

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா!! எப்படியெல்லாம் யோசிக்கறாங்க!! :)))

   Delete
  2. எப்பேர்ப்பட்ட உண்மை. ஓர் வாலிபனை ..

   Delete
 54. யாரோ ஒருவர் இங்கு கூறியது போல கார்சன் நண்பனாக தெரியவில்லை மாறாக அல்லகையாகவே ஒவ்வொரு ஃப்ரேமிலும் அறிமுகப்படுத்தப்படுகிறார் .

  கார்சனின் கடந்த காலத்தில் கண்ட மாவீரனை இப்போது பார்க்க முடியவில்லை என்று நொந்து போக வேண்டி இருக்கிறது.

  இப்படிக்கு கட்டழகன் கார்சன் முன்னேற்ற கழக தொண்டன்

  ReplyDelete
  Replies
  1. எனக்கு அழுகை அழுகையா வருது

   Delete
 55. 55 வயதை தொனிக்கும் காரசனுக்கு சித்திரங்கள் 70 வயது ஆனது போல வரையப்படுகிறது

  ReplyDelete
 56. டைகரைத் தவிர வேறு யாரும் கார்சனுக்கு மரியாதை கொடுப்பது போல தெரியவில்லை .பொடியன் கிட் கூட கார்சனை ஏளனமாகவே பேசி வருகிறார்.. கிட்டை வன்மையாக கண்டிக்கிறோம்.🙄

  ReplyDelete
  Replies
  1. யெஸ்!! பொடிப்பயல் கிட் இனியும் கார்ஸனை கலாய்த்துத் தள்ளுவதை அனுமதியோம்!

   Delete
  2. இதை நாங்கள் வழிமொழிவோம்.

   Delete
 57. டெக்ஸை முதன்முதலாக டைகர் சந்திக்கும் பொழுது கிட் பிறந்திருக்கவே இல்லை( காதலும் கடந்து போகும்) ஆனால் இருபது வயதான கிட் 44 வயதான டைகரை அவன் இவன் வா போ என்று ஏக வசனத்தில் பேசி வருவது ஏனோ ?அவர் தலைவர் அல்லவே ,தலைவரின் மகன்தானே. தலைவர் ஏன் மரியாதையோடு பேச கிட்டுக்கு கற்றுக் கொடுக்கவில்லையா ?ஆனால் டைகர், கிட்டை சின்னக் கழு காரே என்று மரியாதையோடு தான் விளிக்க வேண்டும் என்றுஅதிகாரி உத்தரவிட்டா ரோ?

  ReplyDelete
  Replies
  1. அதானே?!! ஒரு மட்டுமருவாதி வேணாம்?!!
   இதையெல்லாம் அப்படியே பொனெல்லிக்கு அனுப்பி நம்ம கண்டனத்தைத் தெரிவிப்போம் சார்!

   Delete
  2. ஒரு மனுசரை ஃபீல் பண்ண விடுங்க குருநாயரே...😂

   Delete
  3. இதுல இம்மா கூத்து இருக்குதா.

   Delete
  4. உண்மை. ஆமோதிக்கிறேன்

   Delete
 58. வெளிநாட்டு பாணியிலேயே கதைகளை படிப்பது ஆங்கில கதைகளுக்கு நல்லாருக்கும். தமிழுக்கு சற்று மாற்றம் தேவை. சில வாக்கியங்கள் புரியாது.
  ரெம்பவுமே அந்நியமாக தெரியும்.

  அதை தமிழில் மாற்றும்போது சில நக்கல் நையாண்டிகள் தேவைதான்.
  ஆங்கில பாணியில் "சாத்தான்" என குறிப்பிடும்போது, நம்மவர்களுக்கு ஏதோ அமானுஷ்ய வார்த்தையாக தோன்றும்.
  அதை விட எளிமையான வார்த்தைகளே தேவை.

  இந்த எளிமைகள் மற்ற கதைகளை விட டெக்ஸ் கதைகளில் கொஞ்சம் அதிகப்படியாகவே இருக்கும்.
  ஆக்சன் காட்சிகள், மற்றும் ஆபத்தான காட்சிகளில் இவ்வித நக்கல்கள் ரசிக்கதோன்றுவதில்லை. மாறாக,
  அடிதடிக்கு முன்போ, அல்லது ஒய்வு நேரங்களிலோ இந்த நையாண்டிகள் ரசிக்க மிக அழகாக இருக்கும்.
  ஆங்காங்கே இந்த நக்கல்ஸ் இருப்பது கதையில் உள்ள உம்மணாமூஞ்சிதனத்தை சற்றே குறைக்கும்.
  அதுவே எல்லா இடங்களிலும் இருந்தால் ரெம்பவுமே போரடிக்கும்.
  இப்ப உள்ள நிலவரத்தில் கொஞ்சம் குறைக்கலாம்.
  அறவே வேண்டாம் என சொல்ல முடியாது.

  ReplyDelete
 59. கிண்டலும், கேலியும் நிறைந்த உரையாடலே படிக்க சுவாரஸ்யத்தை தூண்டும்.

  பல ஹாலிவுட் சூப்பர் ஹீரோ
  திரைப்படங்களில் கூட சண்டைக் காட்சி இடையே நகைச்சுவை வசனங்கள் ரசிக்கவே வைத்து உள்ளது.

  சோ கலாய் நோ பிராப்ளம்.

  ReplyDelete
 60. ஆசிரியர் சார்@

  கார்சனை மிக ரசிக்கும் நம்ம நண்பரது கருத்துகள்......,

  ////நண்பர்களுக்குள் கலாய்ப்பது ஓகே..ஆனால் கார்சன் தீனி திண்பதற்க்கே பிறந்தவர் போலவும், அதிகாரி சாகஸம் செய்யவே பிறந்தவர் போலவும் ஒருவரை பற்றி இன்னொருவரை “பேசவைப்பது” சரியில்லை என்று தோன்றுகிறது..அதுவுமில்லாமல் வயதை வைத்து கலாய்ப்பது சரியா தெரியவில்லை...

  கார்சன் தனிப்பட்ட முறையில் ஒரு சாகச வீரர்..சீனியர்..அவரை இவ்வாறு காமெடி நடிகர்கள் போல ட்ரீட் செய்வது சரியில்லை என்று தோன்றுகிறது...

  கார்சன் பதிலுக்கு பேசினாலும்,

  “உனக்கென்னப்பா இதெல்லாம் ஒரு மேட்டரா”, “உன்கிட்ட வாய கொடுத்த அவன் நேரம் சரியில்ல”, “இப்போ என்ன செய்ய போறியோ”------டைப்ல தான் இருக்கு..This is simply a ploy to downplay a legend by his own right, Kit Carson..🤷🏼‍♂️ /////

  இதற்கு தங்களின் விளக்கத்தை ஆவலோடு எதிர்நோக்கி உள்ளார் நண்பர்!

  ReplyDelete
 61. நன்றி விஜய ராகவன் சார்.

  ReplyDelete
 62. கார்சனுக்கொரு கேள்வி ?!

  அது ஏன் தல, உன்ன மட்டும் இப்படி கலாய்க்கராங்க ?

  ReplyDelete
 63. கார்சன் பத்தி நீங்க ஒரு கேள்வி கேட்டதால, பதிலுக்கு இன்னொரு கேள்வி. ஆக்ஸுவலி வேண்டுகோள். அடுத்த வருஷம் டெக்ஸ்க்கு மட்டும் 75 இல்ல.. கார்சனுக்கும் தான.. அப்போ அவரையும் சிறப்பிக்கறா மாதிரி 'கா ர்சனின் கடந்த காலத்தை' பக்கத்துக்கு 3 வரிசை பேனல்ல ஹார்ட் பௌண்ட்ல போட்டுக் குடுத்தீங்கன்னா நண்பர்கள் ரெண்டு பேரையும் கொண்டாடிரலாமேங்க சார் :)

  ReplyDelete
  Replies
  1. தப்பியோடிக் காணத் துடிக்கிறேன்..
   அந்தச் சின்னப்பெண்ணை..
   நான் பிரிந்துவந்த காதல் தேவதையை..
   பாதையில் தடையாய்.. பாவி செவ்விந்தியர்கள்..

   லினாவோட இந்தப் பாட்டு இருக்கோணும்..!

   Delete
 64. கேலியும் கிண்டலும் புன்னகையை வரவழைக்கும் தான். பெருசு, பெரியவரே இந்த இரண்டில் எது சிறந்தது என்பதை பொறுத்தது.

  ReplyDelete
 65. டெக்ஸ்-ஸின் கலாயை என் நண்பரின் கலாய்ப்பாகத்தான் பார்க்கிறேன்..தேவைக்கேற்ப நான் திருத்திக்கொள்வேன்.
  எனவே, தங்கள் பாணியிலேயே கலாய்ப்புகள் தொடரட்டுமே...

  ReplyDelete
  Replies
  1. சரியே. ஆனால் அதே நண்பர் சபை முன்பாக இப்பிடி பேசுவது நலமாக இல்லை

   Delete
 66. இதே போன்றதுதான் கார்வின் & மாடஸ்தி இடையில் நடக்கும் கலாய்ப்புகளும் - மாடஸ்தி என்னதான் வில்லிகார்வினை- அவர் கேர்ள்பிரண்டை வைத்து கலாய்த்தாலும் - ரொம்ப மரியாதையாகவே பதில் சொல்வார். இதுவும் தங்கள் பாணி - மொழிபெயர்ப்புதானே..

  ReplyDelete
 67. ஒரு காமிக்ஸ் வாசகன் உதயமாகிறான்!

  இடம்: எங்கள் ஊர் புத்தக கண்காட்சி !

  நேரம்: மதி மங்கும் மதியம் கழிந்த சாயந்திரம் !

  பாத்திரங்கள்: காமிக்ஸ் புத்தக விற்பனையாளர்கள், சில டெக்ஸ் வில்லர் காமிக்ஸ் வாசக‌ தன்னார்வலர்கள், புத்தக கண்காட்சி வழிபோக்கர், இந்த உரையாடலை தூரத்தில் இருந்து கவனிக்கும் நான் !

  ReplyDelete
  Replies
  1. ஒரு காமிக்ஸ் வாசகன் உதயமாகிறான்!

   புத்தக கண்காட்சி வழிப்போக்கர் ஒருவர், காமிக்ஸ் விற்பனை செய்யும் கடையின் உள்ளே நுழைகிறார். எவருடைய தொந்தரவும் இல்லாமல் தன் விருப்பப்படி அங்குமிங்கும் சுற்றி நடந்தபடி பார்வையை அலச விட்டு ரசித்துக் கொண்டிருந்தார்!

   ஏகப்பட்ட தலைப்புகளில் ஆயிரக்கணக்கில் காமிக்ஸ் புத்தகங்கள் வரிசைக்கிரமமாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன!

   யாரையாவது கேட்கலாமே என்று சுற்றும் முற்றும் பார்க்க, அவரின் குறிப்பறிந்து டெ.வி.கா.ரெ.வா.த. ஒருவர் அவர் முன்னால் வந்தார்..

   பு.க.வ.: ஸார் மொத மொத ஒரு காமிக்ஸ் புக் வாங்கலாம்னு இருக்கேன், கொஞ்சம் ஹெல்ப் பண்ண முடியுமா?

   டெ.வி.கா.ரெ.வா.த.: கண்டிப்பாக நண்பரே! டெக்ஸ் வில்லர் காமிக்ஸ் தான் உங்களுக்கு ஏத்த புக்கு! வைல்ட் வெஸ்ட் ஜானர் ; அநியாயத்த தட்டிக் கேட்க வந்த அவதார புருஷன் ; கிக் பாக்ஸர் ; நோஸ் அன்ட் மொகர பாக்ஸர் ; நட்புக்கு கர்ணன், கலாய்த்தலக்கு சந்தானம் ; மொத்தத்தில் எல்லாமே நேர்கோட்டு கதைங்க தான் நண்பரே!

   பு.க.வ.: சார் அந்த பாத்திரத்துக்கு என்ன வயசு இருக்கும்?

   டெ.வி.கா.ரெ.வா.த.: வர ஆனி முடிஞ்சு ஆடி வந்தா 75 வயுசு தான் ஆச்சு, ஆனாலும் கிங்கரன் சார் அவரு! அவரொட ஃப்ரெண்ட் கார்சனுக்கு பத்து வயசு தான் அதிகம்..

   பு.க.வ.: என்ன சார் இது :( எல்லாம் வயசான பார்ட்டியா இருக்காங்க?

   Delete
  2. ஒரு காமிக்ஸ் வாசகன் உதயமாகிறான்!

   டெ.வி.கா.வா.த.: அய்யோ நண்பரே, கதையில பாத்திங்கனா டெக்ஸ்க்கு வயசு ரொம்ப கம்மி தான், கார்சனுக்குத் தான் வயசு அதிகம். படிக்கும் போது நீங்களே பாக்கலாம், ஏய் பெருசு, ஏய் கெழம், போயா அவநம்பிக்கை, சந்தேகபுத்தி, தொடநடுங்கி, தீனிபண்டாரம், நரைமுடிக் கிழவா, முட்டி செத்துப் போச்சா, போயா போ.. போஒஓ.. , வருத்தக்கறியும் பீரும் வாங்கி தரன் பொலம்பாம வா - அப்படி இப்படின்னு செம கலாயா இருக்கும்.. ஹா ஹா ஹா :D

   Delete
 68. கதைகளில் கலாய்ப்பு தேவை.

  நிஜவாழ்க்கையில் நண்பர்களை இன்னும் கலாய்ப்பது தொடர்கிறது ஏன் சொத்துக்களையும் கலாய்ப்பது உண்டு ஆனால் வயது சம்பந்தப்பட்ட விஷயங்களை வைத்து கலாய்ப்பது இல்லை, அவை கண்டிப்பாக ஏதாவது ஒரு விதத்தில் காயப்படுத்தும் என்பதால் செய்வது இல்லை. இதனை நமது கதைகளிலும் கடைபிடிக்க முடிந்தால் நன்றாக இருக்கும்.

  டெக்ஸ் கார்சனை பெரிசு & கிழம் கலாய்ப்பது மனதை நெருடுகிறது, இருவர் ஒரே வயது நண்பர்கள் எனும் போது கொஞ்சம் ஏற்றுக்கொள்ள முடியவில்லை இப்படி பார்க்கும் போது அவர்களின் நட்பை விட டெக்ஸ் கார்சனை டாமினேட் செய்வது போல் தெரிகிறது. இதனை மட்டும் மனதில் வைத்து வரும் கதைகளில் கலாய்க்க முடிந்தால் நலம்.

  கார்சன் எனக்கு மிகவும் பிடித்தவர் செம ஸ்டைலிஸ்டான ஆசாமி. அவரால இத சொல்ல முடியாது எனவே நான் இதனை சொல்கிறேன் :-)

  கதைதான் என்றாலும் இவர்கள் எங்களின் நெடுங்கால காமிக்ஸ் நாயகர்கள் சார்.

  ReplyDelete
 69. கலாய்ப்புக்கு ஓகே தான், ஆனால் கதையின் காமெடியனாக அவரை கலாய்க்க வேண்டாம்.
  கலாய்த்தால் சிறிதளவுக்கு இல்லையென்றால் நன்றாக இருக்காது. ஆக "சிகப்புக்கு" ஓகே தான் ஆசிரியரே

  ReplyDelete
 70. டியர் எடி,
  மனதுக்கு பட்டது, ஒரிஜினலின் தமிழ் ஆக்கங்கள் அப்படியே இருந்தால், தேவலம், டெக்ஸ் கதையை பொறுத்தவரை.

  சீரியஸான வன்மேற்கில், காமெடிகள் நக்கல்கள், நையாண்டிகள், இருக்க வேண்டுமானால், அது லக்கிலூக்கில் இருந்துவிட்டு போகட்டும் என்பதே என் விருப்பம்.

  ReplyDelete
 71. அன்பு எடிட்டர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
  கார்சனை கலாய்ப்பதற்க்கு yes

  ReplyDelete
 72. அனைவருக்கும் வணக்கம்...
  YES to கலாய்ப்பு...
  டெக்ஸ்க்கும் கர்சனுக்கும் இருக்கும் நட்பே என்னை பொறுத்தவரை இந்த கலாய்ப்பு மூலம்தான் அழகாக வெளிப்படுது என்பது எனது தாழ்மையான கருத்து...
  வெள்ளிமுடியார் புலம்பலும் தலயின் நக்கல் கலாய் கிண்டல் இல்லாத டெக்ஸ் கதை முழுமையான தல கதை இல்லைங்க... இதுவும் அடியேனுடைய தழைமையான கருத்து... 🙏🏻😇

  ReplyDelete
 73. கார்சனும் டெக்ஸும் ஒருவரையொருவர் கலாய்ப்பது டெக்ஸ் கதைகளில் சுவாரஸ்யமான அங்கங்களில் ஒன்று. அது கதையில் ஆங்காங்கே லேசாக தொடர்வதே சிறப்பாக இருக்கும்.🥰

  எனக்கு ஏற்படும் ஒரே லேசான நெருடல் சில கதைகளில் கிழம், கிழவா என்ற ரீதியில் டெக்ஸ் அழைக்கும் சந்தர்ப்பங்களில் மட்டும் தான். "சக ரேஞ்சர்", "பார்ட்னர்", "உயிர் நண்பர்" என்ற உறவுகளில் இருந்து கொஞ்சம் எல்லை மீறி போய் அவ்வப்போது மேலதிகாரி போல் 15-20 வயது இளையவரான டெக்ஸ் மரியாதையில்லாமல் பேசி விடுகிறாரோ என்று.😓 அதேவேளை கார்சனின் வயதை குறிக்கும் டெக்சின் நகைச்சுவையான வார்த்தைகளில் நெருடல் இருப்பதில்லை.

  வயதில் இளைய கிட் மற்றும் டைகர் முன்பாக கார்சனை டெக்ஸ் அழைக்கும் சந்தர்ப்பங்களில் மட்டும் "பெரியவர், பெரியவரே " என்பது போல் டெக்ஸும் டைகரும், "அங்கிள்" என்று கிட் வில்லரும் அழைப்பது போல் அமைந்தால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து.

  ReplyDelete