Powered By Blogger

Saturday, February 25, 2023

மந்தி # 1

 நண்பர்களே,

வணக்கம். மந்தியாட்டம் மரத்துக்கு மரம் தாவும் மனசுகளுக்கு மத்தியில்  ஒரு போட்டி மட்டும் வைத்தால், கோப்பையை சந்தேகமே இன்றி ஒரு முழியாங்கண்ணன் கையில் ஒப்படைத்து விட்டுப் போய்க்கினே இருக்கலாம் ! ஏனென்கிறீர்களா ? பெண்டு நிமிரும் அளவுக்கு வேலைகள் இருக்கும் போது - "ச்சே...கொஞ்சமாச்சும் பிரேக் கிடைச்சா எப்டி  இருக்கும் ?" என்று மனசு ஏங்கும் ! அதே மனசானது, நாலு நாள் அக்கடாவென ஓய்விலிருந்தால் - 'போச்சா சோணமுத்தா ? ரிட்டையர் ஆகிப்புட்டா இப்டி தான் சொரிஞ்சிக்கினு இருக்கணுமா ?' என்று அல்லாடும் ! And இதுவாச்சும் தேவலாம் போலும் - புல் பிசியில் பணிகள் ஓடிக்கொண்டிருக்கும் சமயத்திலேயே திடீரென வேதாளமாய் முருங்கை மரங்களைத் தேடி ஓட்டமெடுக்கிறது ! "ஏனு சமாச்சாரமோ நயினா ?" என்று அதனைக் கேட்டால் என்ன சொல்லுகிறது தெரியுமோ ? "பிசியா இருக்கோம் தான் ! ஆனாலும் குறுக்காலேகூடி இன்னும் ஏதாச்சும் த்ரில்லா திட்டமிட்டு , திரி கொளுத்திப் போட்டாக்கா, செம ஜாலியா இருக்கும்லே ? மொத்த ஆபீசே அல்லோலம் + கல்லோலம் படுமில்லியா ?" என்று சொல்லிவிட்டு பல்லைக் காட்டுகிறது ! இப்போது சொல்லுங்களேன் - மந்தி # 1 பரிசு நமக்குப் பொருத்தமா - இல்லையா என்று ? 

பொதுவாகவே எதையாச்சும் நான் கோக்குமாக்காய் திட்டமிடுவதன் முதற்காரணமே - என்னை நானே தட்டி எழுப்பிக் கொள்ளும் பொருட்டாகவே இருப்பதுண்டு ! கொட்டாவி கிழிந்து கொண்டிருந்ததொரு பின்மதியப் பொழுதினில் என்னை நானே உலுக்கிக் கொள்ளத் திட்டமிட்டது தான் - "மெகா ட்ரீம் ஸ்பெஷல்" ! பாட்டரியில் சார்ஜ் தக்கனூண்டு குறைவது போலாய்த் தோன்றிய தருணத்தில் உதித்தது தான் "ஜாலி ஸ்பெஷல்" ! இரண்டாவது இன்னிங்சில், ஒரு மிடறு கூடுதல் உத்வேகத்தோடு, வீரியமாய்ப் பணியாற்ற என்னை நானே பிட்டத்தில் உதைத்துக் கொள்ளப் பயன்படுத்தியது தான் NEVER BEFORE SPECIAL ! ஆனால் - ஆனால் - முழி பிதுங்கும் லெவலுக்கு வேலைகள் குவிந்து கிடக்கும் பொழுதிலும், இன்றைக்கு ஒரு extra கிக் தேடும் இந்தப் பிராந்தனை என்னவென்பது ? So இதோ, அடுத்த 40+ நாட்களை எங்களுக்கே ஒரு மெகா சவாலாக்கிக் கொள்ள முனைந்திட ஒரு முகாந்திரமாய் - ஆன்லைன் புத்தக மேளா '23 !!

1987-ல் ஒரு தலையணை பருமனில் "தீபாவளி சூப்பர் ஸ்பெஷல்" என out of the blue எட்டோ, பத்தோ கதைகளுடன் ஒரு மெகா இதழின் அறிவிப்பை வெளியிட்ட நாட்களுக்கும், இப்போதைய பொழுதுகளுக்கும் இடையிலுமே கொஞ்சம் ஒற்றுமைகள் இல்லாதில்லை ! பார்த்த கதைகளை எல்லாம் பிசாசாய் வாங்கிக் குவித்திருக்க, அவற்றுள் முடங்கிக் கிடக்கும் டப்பு ரிலீஸ் ஆனால் தேவலாமே என்ற எண்ணம் ஒரு கட்டத்தில் மேலோங்கிய போது பிறந்தது தான் அந்த 1987-ன் மைல்கல் இதழ் ! இன்றைக்கும் கூட அது போலானதொரு சூழல் எனலாம் ! அன்றைக்கு கதைகளால் பீரோ நிறைந்து கிடந்ததெனில், இன்றைக்கு எனது லேப்டாப்பின் hard disk கதைக்கோப்புகளால் நிறைந்து ஓடுகிறது ! 

அப்போதெல்லாம் சாம்பார் ; ரசம், மோர் குழம்பு ; வத்தல் குழம்பு - என சகலத்தையும் ஒரே சட்டியில் கவிழ்த்து சுவையான சுண்டக்குழம்பு பண்ணிட அனுமதி இருந்தது - and ஒரே புக்கில் அல்லாரையும் திணித்திருந்தோம் ! ஆனால் இன்றைக்கோ அது சாத்தியமல்ல எனும் போது - தனித்தனியாய் தான் திட்டமிட்டாக வேண்டியுள்ளது ! So ஏப்ரல் 15 & 16 தேதிகளில் (சனி & ஞாயிறு) நமது ஆன்லைன் புத்தக விழாவினில் ஒரு டிப்பர் லாரி லோடுக்கான புக்ஸை இறக்கிட உத்தேசித்துள்ளோம் !!

*உயிரைத் தேடி - black & white இதழ் !

*உயிரைத் தேடி - கலர் இதழ்

*MINI COMICS - சின்ன விலையில் - பாக்கெட் சைஸ் இதழ்கள் - இரண்டோ / மூன்றோ / நான்கோ ?!

*ஒரு black & white கி.நா.

*ஒரு கலர் டிடெக்டிவ் ஜாகஜம்

*ஒரு க்ளாஸிக் மறுபதிப்பு 

*ஒரு கார்ட்டூன் 

*ஒரு 'தல' க்ளாஸிக் 

*ஒரு எது மாதிரியும் இல்லாத புது மாதிரி 

என்று மொத்தம் ஒரு டஜன் இதழ்களைத் திட்டமிட்டுள்ளோம் ! And please note : "உயிரைத் தேடி" கலர் இதழ் நீங்கலான பாக்கி புக்ஸ் அத்தனை பெரிய விலைகளில் இருந்திடாது ! So கவிஞர் எதையாச்சும் அள்ளி விட்டால், a pinch of salt ப்ளீஸ் !

லட்சியம் ஒரு டஜன்...நிச்சயம் at least முக்கால் டஜன் !! 

என்பதே இந்த புத்தக மேளாவின் அடையாளமாக இருக்கப் போகிறது ! Of course - கையிருப்பில் உள்ள இதழ்களை அதிரடி டிஸ்கவுண்ட்களில், அந்த 2 நாட்களிலும் விற்பனை பண்ணிடவும் உள்ளோம் தான் ! 

So இடத்தைக் காலி பண்ண முனையும் அதே மூச்சில், கிட்டங்கிக்குப் புதியவர்களை ரெடி செய்திடும் மஹா சிந்தனையில் எடிட்டர் # 899 இருக்கான் ; நிம்பள் இந்த மேளாவை support செய்து, நம்பள் மூஞ்சி மேலே சாஸ்தி கரி அப்பாது காப்பாத்துறான் ! முறைச்சிக்கினு நிற்கும் எடிட்டர் # 900 குச்சியை கொண்டு நம்பள் நடுமண்டையிலே ஒரு போடு போடாமலும் நிம்பள் காப்பாத்தறான் !Please !!

Jokes apart, இந்த இதழ்களினில் சகலத்தையும் நீங்கள் வாங்கிட வேண்டுமென்றெல்லாம் நாங்கள் எதிர்பார்த்திருக்கவில்லை ! உங்கள் ஆர்வங்களுக்குத் தீனி போடுபவற்றை மட்டும் இந்த 2 தினங்களில் வாங்கிக் கொண்டு, பாக்கியினை உங்கள் ஊர்ப் பக்கமாய் நமது புத்தக விழா கேரவன் ஜாகை போடும் தருணங்களில் வாங்கிக் கொள்ளவும் செய்யலாம் ! இதோ இப்போது கூட book fair சக்கரங்கள் சுழல ஆரம்பித்து விட்டன - நெல்லையில் பிப்ரவரி 25 to மார்ச் 7 & நாமக்கல்லில் பிப்ரவரி 28 to மார்ச் 10 தேதிகளில் நம்மாட்கள் காத்திருப்பர் அந்தந்த புத்தக விழாக்களில் ! 

புத்தக விழாக்களின் விற்பனைகளுக்கும் உரம் சேர்த்திடவுள்ள இதழ்களாகவும், கையிருப்பில் உள்ள கதைகளைக் கொஞ்சமாய் இறக்கி விடுமொரு முயற்சியாகவும் இந்த திடீர் திட்டமிடல் அமைந்திடும் ! And let's have some fun along the way folks !!

இதற்கென திட்டமிட்டுள்ள தேதிகள் : 

ஏப்ரல் 1 & 2 

(அல்லது)

ஏப்ரல் 15 & 16 

அந்நேரத்து பப்பாசி புத்தக விழாக்களின் அட்டவணைகளுக்கேற்ப, நமது மொட்டைமாடி மேளாவின் தேதிகளை finalize செய்திடுவோம் ! So ஆட்றா ராமா...தாண்ட்றா ராமா all over again !! 

Bye all...see you around ! Have a fun weekend !


நமது நெல்லை புத்தக விழா அரங்கில் !!


Saturday, February 18, 2023

பகலிலொரு சிவராத்திரிப் பதிவு !

 நண்பர்களே,

வணக்கம். இன்னொரு வாரயிறுதி + நெருங்கும் இன்னொரு மாதயிறுதி = வழக்கம் போல் காலில் சுடுதண்ணீரைக் கொட்டிக்கிட்டு கதக்களி ஆடும் வேளை ! So பெருசாய் பதிவில் டீ ஆற்ற நேரம் நஹி ! பற்றாக்குறைக்கு இப்போதெல்லாம் நண்பர்களின் பெரும்பான்மைக்கு சாயா பருகவே நேரம் குறைச்சலாக இருப்பது கண்கூடு ; தளத்தின் பார்வைகள் குறைந்திடவில்லை - but பதிவாகிடும் பின்னூட்டங்கள் ரொம்பவே குறைவு எனும் போது, in general பொறுமை + நேரம் at a premium என்பது புரிகிறது ! நமது நண்பர் டாக்டர் ஹரிஹரன் சார் சொல்வது போல, time to move on I guess ! இனி வரும் வாரங்களில் முக்கிய தகவல்களை மாத்திரம் பதிவினில் போட்டுத் தாக்கி விட்டு, இந்த previews ; டிரெய்லர்களையெல்லாம் YouTube-க்குக் கொண்டு செல்லப் பார்க்க வேணும் போலும் ! எண்ட குருவாயூரப்பா....எண்ட முகரையை நீங்கள் அடிக்கடி பார்க்க வேண்டி வருமே என்பதை நினைக்கும் போது தான் பயந்து பயந்து வருது ! But இன்றைய உலகம் எந்தத் திக்கில் நடை பயில்கிறதோ - அதுவே நமது பாதையாகவுமே இருந்திட வேண்டும் போலும் ! இதோ, காத்திருக்கும் மார்ச் மாதத்தினில் நமது புது வரவு ஒருவர் நம்மை இட்டுச் செல்லவுள்ளதொரு பயணம் கூட something completely different !!

அமெரிக்க  I.R.$......!! அதாவது INTERNAL REVENUE SERVICE .....அதாவது வரி நிர்ணயிப்புகளுக்கும், வரி வசூல்களுக்கும் சட்டங்கள் இயற்றி, அவற்றை நடைமுறைப்படுத்திடும் அமெரிக்க அரசுத்துறை அமைப்பு ! சுருக்கமாய்ச் சொல்வதானால் - வருமான வரி ஆபீஸ் ! எல்லா தேசங்களிலும் வருமான வரித்துறைகள் கெடுபடியாய் இருப்பதில் வியப்புகளில்லை தான் ; but அமெரிக்காவில் I.R.S. செம ஹை-டெக் & செம ஸ்ட்ரிக்ட் போலும் ! நாம் சந்திக்கவுள்ள புது நாயகரும் இந்த IRS அமைப்பினில் பணியாற்றும் ஒரு ஸ்பெஷல் ஏஜெண்ட் தான் ! லேரி B.மாக்ஸ் என்பது அவரது பெயர் & நூதனமாய் வரி ஏய்ப்பு செய்வோரையும், கறுப்புப் பணங்களோடு சல்சா ஆடுவோரையும் சுளுக்கு எடுப்பதே இந்த blonde சார்வாளின் உத்தியோகம் ! சுருக்கமாய்ச் சொல்வதானால் கொஞ்சமாய் லார்கோவையும், கொஞ்சமாய் ஜேம்ஸ் பாண்டையும் இவரிடம் நாம் காணலாம் ! And கதை வரிசையின் பாணியிலுமே கொஞ்சம் லார்கோ ஸ்டைலை நாம் பார்த்திடலாம் - becos அங்கு போலவே இங்கும் ஆண்டுக்கொரு ஆல்பம் & 2 ஆல்பங்கள் சேர்ந்து ஒரு முழுநீள சாகசம் ! So 1999-ல் துவங்கிய இத்தொடரானது இன்னமும் going ஸ்ட்ரோங், கனகச்சிதமாய் வருஷத்துக்கொரு ஆல்பம் வீதம் ! தற்சமயம் இதழ் # 24-ஐ தொட்டு  நிற்கின்றது எண்ணிக்கை எனும் போது, உத்தேசமாய் 12 முழுநீள சாகசங்கள் இங்கே ரெடி ! லார்கோவைப் போலவே இங்கே உலகமே கதைக்களங்களாகிடும் அழகை ரசிக்கலாம் ! அமெரிக்காவில் துவங்கும் பிள்ளையார் சுழிகள் உலகின் ஒவ்வொரு கோடிக்கும் நம்மை விரல்பிடித்து இட்டுச் செல்லும் ரகங்கள் ! And சித்திரபாணிகளும் சரி, கலரிங்கும் சரி - செம மாஸ் ! 

எல்லாம் ரைட்டு - சாமுத்ரிகா லட்சணங்கள் சகலமும் பொருந்திய இந்த அம்பியை முன்னமே கண்ணில் காட்டியிருக்கலாமே ? என்கிறீர்களா ? காட்டியிருக்கலாம் தான் ; ஈரோட்டில் மரத்தடி சந்திப்புகளின் சமயமாய் நண்பர்கள் இதே கேள்வியைக் கேட்கவும் செய்திருந்தார்கள் தான் ! But வாசிப்பு ரசனை எனும் வானில் நாம் சிறகுகளை விரிப்பது சிற்சிறு தயக்கங்களோடு தான் எனும் போது - கொஞ்சம் கொஞ்சமாய் முன்னேறுவது தேவலாமென்று நினைத்தேன் ! 1990-ல் துவங்கிய லார்கோவை 2012-ல் கண்ணில் காட்டிய சமயம் we were perfectly ready for him ! 1987-ல் துவங்கிய SODA-வை 2018-ல் கண்ணில் காட்டிய போது அந்த பாணிக்கு we were ready ! So "வருமான வரி ஆபீசரை வைச்சு கதையா ? இன்னா மேன் சுத்த நான்சென்ஸா கீதே ?" என்று விமர்சனங்கள் எழுந்திடாது என்பது உறுதியான ஒரு பொழுதில் I.R.S அறிமுகம் இருந்திடட்டும் என்று எண்ணினேன் ! Of course - 'எங்க ரசனையை குறைச்சலா நீ மதிப்பிடறியா ? கொழுப்பு மேன் உனக்கு !' என்ற விமர்சனங்கள் எழலாம் தான் ; so be it ! ஆனால் இந்தப் பயணமானது, ரசனை எனும் வானவில்லின் சகல முனைகளிலும் உள்ளோருக்கானது எனும் போது, கொஞ்சம் நிதானம் தப்பில்லை என்பதே எனது எண்ணம் ! என்ன - இந்த கொரோனா கொயப்பங்களால் லேரி மாக்ஸ் ஓராண்டு கூடுதலாய்க் காத்திருக்க வேண்டிப் போனது தான் சங்கடமே ; ஒண்ணேமுக்கால் வருஷங்களுக்குக் கிட்டக்க in hibernation !  But லேட்டாய் வந்தாலும், லேட்டஸ்ட்டாக வந்திருக்கும் இந்த அதிரடிப் பார்ட்டியின் அட்டைப்பட முதற்பார்வை + உட்பக்க preview இதோ ! 


ஒரிஜினல் டிசைன் முன் + பின் அட்டைப்படங்களில் ; வழக்கம் போல நமது DTP கோகிலாவின் மெருகூட்டலோடு + ஜெகத்தின் எழுத்துருக்களோடு !! கதையைப் பொறுத்தவரை, ரொம்ப காலத்துக்கு  முன்னே இதனை இங்கிலீஷில் படித்திருந்த ஞாபகம் சன்னமாய் இருந்தது ; but பேனா பிடிக்க ஆரம்பித்த பிற்பாடு தான் இதன் முழு வீரியமும் புலப்பட ஆரம்பித்தது ! நியூயார்க்கின் வீதிகளில் அரங்கேறிடும் அனல்பறக்கும் action sequences ஒவ்வொன்றையும் பார்க்கும் போது ஓவியரின் பங்களிப்பும் எத்தகையது என்பது புரிய ஆரம்பித்தது ! சரி, கதைக்கான கற்பனையாக ஒரு knot கையில் எடுக்கப்பட்டுள்ளது போலும் என்றபடிக்கே எழுதிக் கொண்டே போனவனுக்கு லைட்டாக பொரி தட்ட ஆரம்பித்தது - "ஆஹா..இதனில் மிளிரும் பல சமாச்சாரங்கள் ஏதோ நிஜ சம்பவங்களை சார்ந்திருப்பது போலுள்ளனவே !" என்று !! அவசரமாய் கூகுள் பண்ணிப் பார்த்தால் - bingo !! மெய்யாலுமே நிகழ்ந்துள்ளதொரு சர்வதேச "Operation ஆட்டையைப் போடுதல்" தான் இந்த டபுள் ஆல்பத்தின் முதுகெலும்பே ! அமெரிக்காவில் துவங்கும் அதிரடி, ஸ்விட்சர்லாந்துக்கு பயணிக்கின்றது இரண்டாம் அத்தியாயத்தினில் ! எச்சில் விழுங்கக்கூட அவகாசம் தராது லேரி பட்டையைக் கிளப்பி வருவதால் - இந்த ஆல்பத்தை 'ஏக் தம்'மில் வாசிக்க ஒரு 45 நிமிடங்களை ஒதுக்கிக் கொண்டு அமருங்களேன் folks - மின்னல் வேகத்தில் உங்களை ஒரு transcontinental பயணம் முடித்து ஊட்டுக்கே பத்திரமாய்க் கொண்டு வந்து லேரி டிராப் பண்ணி விடுவார் ! லார்கோவைப் போலவே நமது இந்த ஆபீசரும் கொஞ்சம் ஜாலிலோ ஆசாமியே என்பதால், ஆங்காங்கே அழகான பட்டாம்பூச்சிகளும் குறுக்கும் மறுக்குமாய்ப் பறக்க நேர்வதை பார்த்திடலாம் ! அனைவருக்கும் இந்தப் புது வரவு ரசித்திடும் பட்சத்தில், நமது அட்டணவைக்கொரு நிரந்தரர் கிட்டியிருப்பார் - fingers crossed !!

போன வாரமே வெறும் அட்டைப்பட தரிசனத்தோடு கிளம்பியிருந்த SODA தான் இம்மாதத்து இரண்டாம் கலர் இதழ் ! ஏற்கனவே இந்த மனுஷனை ; அவரது பாஸ்டர் / போலீஸ் இரட்டை வாழ்க்கையினை நாமறிவோம் தான் ! And ஒருவித dark shades சகிதமான கதையை, கார்ட்டூன் பாணிச் சித்திரங்களில் நகர்த்திட முனையும் அந்த வித்தியாசமான சிந்தனையுமே நமக்கிப்போது familiar ! "தப்பிச் சென்ற தேவதை" இந்தத் தொடரின் முதல் ஆல்பம் ! மாமூலை விடவும் சற்றே funky ஆன சித்திரங்கள் ; ஆனால் தெறிக்கும் அதே வேகம் என்பதே இந்த இதழின் template ! இது போலான கதைகளின் டயலாக்களில், கதாசிரியர்  கொண்டு வர விழையும் ஒருவித இருண்ட நகைச்சுவைகளை பிசிறின்றி தமிழுக்குக் கொண்டு வருவது தான் சவாலே ; and தற்போதைய பொழுதுகள் அந்தச் சவாலோடே பயணித்து வருகின்றன ! இதோ - ஒரு சின்ன சாம்பிள் : 


இம்மாதத்தின் V காமிக்ஸ் - நம்மள்கி "யூத் பேரவை" குதித்துக் கொண்டாடிடும் ஜம்பிங் ஸ்டார் ஸாகோரின் சாகஸமே ! டார்க்வுட் நாவல்ஸ் வரிசையில் கதை # 2 - "புரவிகளின் பூமி" ! As usual மிரட்டும் சித்திரங்களுடன், 64 பக்க 'நச்' வாசிப்புக்கு ஸாகோர் செமத்தியாய்த் தீனி போட்டுள்ளார் ! படிக்க அவகாசமின்றித் தடுமாறும் நட்புக்களுக்கு இந்த V காமிக்ஸ் template ரொம்பவே ரசிக்குமென்பது புரிகிறது - becos 'எடுத்தோம்-படித்தோம்' என்று முடிக்கக்கூடிய நேர்கோட்டுக் கதைகள் ; அதுவும் ரொம்பவே crisp கதை சொல்லல்களோடு எனும் போது, இந்த நொடியின் தேவையினை அது பூர்த்தி செய்வதாகவே எனக்குப்படுகிறது ! இம்மாதமும் நிறைய நண்பர்களின் முதல் வாசிப்பு V ஆக இருப்பின், வியப்பே கொள்ள மாட்டேன் ! இதோ - அட்டைப்பட first look + previews :  


யூத்தான தலைவரும், இயமையான சங்கத்தினரும் ஜம்பிங் ஸ்டார் பேரவையினை துடிப்போடு இங்கே முன்னெடுத்துச் செல்ல - அக்கட தேசமான இத்தாலியில் உள்ள ஸாகோர் ரசிகர் மன்றத்தினர் துளியும் சளைத்தவர்களாக தெரியவில்லை ! இதோ - அவர்களின் கைவண்ணங்கள் :


வரும் காலங்களில் இன்னமும் துடிப்புடன் சங்கத்துக்கு ஆள் சேர்த்து ஜம்பிங் ஸ்டார் பேரவை இப்படி ரவுசுகளை அரங்கேற்றும் என்று எதிர்பார்க்கலாமா - விவாதிப்போம் !!

Before I sign out - சில ஜாலி updates :

1.போன பதிவினில் குறிப்பிட்டது போல - குறைவான விலைகளில் பள்ளி மாணாக்கருக்கு புத்தக விழாக்களில் விற்பனை செய்திட இதழ்கள் தட தடவென ரெடியாகி வருகின்றன ! பாக்கெட் சைசில் ; பாக்கெட்டைப் பதம் பார்த்திடா விலைகளில் MINI COMICS இருந்திடும் - black & white நேர்கோட்டுக் கதைகளுடன் ! அந்த வரிசைக்கென உத்தேசமாய் உருவாக்கியுள்ள லோகோ இதுவே ; இதனை மெருகூட்டிட நண்பர்கள் முன்வந்தால் most welcome !

2."மினி காமிக்ஸில்" இடம்பிடிக்கவுள்ளவொரு நாயகர், உங்களுக்கு ஏற்கனவே பரிச்சயமானவரே ; கொஞ்சம் ஜேம்ஸ் பாண்ட் பாணியில் அதிரடி காட்டும் ஆசாமி ! அவர் யாரென்று any guesses ?

3.இந்த மினி காமிக்ஸ் வரிசையில் கொஞ்சம் புக்ஸ் + "உயிரைத் தேடி" கலர் + black & white புக்ஸ் + இன்னும் ஓரிரு வரவுகளுடன் ஒரு ஆன்லைன் புத்தக விழாவினை மார்ச் இறுதியினில் - or ஏப்ரல் துவக்கத்தில், போட்டுத் தாக்கிடலாம் ! அந்தத் தருணத்தினில் ஒரு சூப்பர்-டூப்பர் செய்தியினையுமே பகிர்ந்திடவுள்ளேன் ! Stay tuned folks !

4.Before I sign out - ஒரு ஜாலியான கேப்ஷன் போட்டி !! கீழுள்ள சித்திர நாயகி   மெய்யாலுமே இருக்கும் பட்சத்தில் - அம்மையாருக்கு நீங்கள் வைக்கக்கூடிய பெயர் என்னவாக இருக்கும் ? ("ஸாகோரினி" என்ற பெயர் மீது நான் துண்டை விரித்து வைத்துள்ளேன் - so வேறு ஏதாச்சும் ?) அப்புறம் விரசமின்றி, இந்தப் படத்துக்குப் பொருத்தமானதொரு கேப்ஷன் ப்ளீஸ் !! I repeat : நோ விரசம் ப்ளீஸ் !! வெற்றி பெரும் கேப்ஷனுக்கு "ஸாகோர்" கலர் ஸ்பெஷல் இதழ் வெளியாகிடும் வேளையில் நம் அன்புடன்


மாலை முதலே சிவன்கோவில்களுக்கு படையெடுக்க ஆரம்பித்து விடுவோம் என்பதால் முந்திக் கொண்டுள்ளேன்  - பதிவுடன் ! Bye all....have a great weekend ! See you around !

Saturday, February 11, 2023

முன்னே..பின்னே....!

 நண்பர்களே,

வணக்கம். 2 வாரங்களுக்கு முன்னமே வந்திருக்க வேண்டிய பதிவிது - ஆனால் ஆங்குலெம் ; மில்லிமீட்டர் ; சென்டிமீட்டர் என்ற ஏதேதோ சமாச்சாரங்கள் குறுக்கிட்டதால் கொஞ்சம் தள்ளிப் போய்விட்டது ! So here it is finally & அது நமது சமீபத்தைய புத்தக விழா சார்ந்த விற்பனைத் தகவல்களும் ; அவை சொல்லக்கூடிய சில சேதிகளையும் பற்றிய பதிவே : 

புத்தாண்டைத் துவக்கித் தந்த சென்னை விழாவின் அதிரடிகளே இங்கே பிரதானமாய்ப் பேசப்படும் simply becos - சென்னை கண்ணில் காட்டியிருந்த நம்பர்கள் அந்த ரகம் !! And ஏற்கனவே கோடிட்டுக் காட்டியிருந்தது போல, இந்தாண்டின் சென்னை தாதா - 'தல' டெக்ஸ் அல்ல ; முகமூடி வேதாளரும் அல்ல ; ஒல்லியார் லக்கியும் அல்ல - it was இரும்புக்கை மாயாவி all the way ! இந்த evergreen நாயகரின் ஆல்பங்களில் நம்மிடம் இரண்டே titles மட்டும் தான் டிசம்பர் 2022-ல் கூட ஸ்டாக்கில் இருந்தன & மேற்கொண்டு மறுபதிப்பிடும் எண்ணங்களெல்லாம் எனக்கு இருந்திருக்கவே இல்லை தான் ! In fact இப்போதெல்லாம் ஏதேனுமொரு title ஸ்டாக் காலியாகிறதென்றால் - "ஹை..ஜாலி..! ஜாலி !" என்று குதூகலிப்பதோடு அடுத்த வேலைக்குள் மூழ்கி விடுகிறேன் ; மறுக்கா அதனை அச்சிட்டு காலியானதை ரொப்பிடும் எண்ணங்கள் பெரிதாய் தோன்றிடுவதில்லை ! ஆனால் நவம்பரிலும், டிசம்பரிலும் சேலம் ; கள்ளக்குறிச்சி ; காஞ்சிபுரம் புத்தக விழாக்கள் என்று பயணித்திருந்த நம்மாட்கள் சொன்ன ஏகோபித்த சேதி - "மாயாவி ஸ்டாக் இல்லை என்றால் திட்டுறாங்க சார்" என்பதே ! 'ஆஹா...சின்ன ஊர்களில் திட்டோடு போச்சு ; தலைநகரில் வெளுத்துப்புடுவாங்களே ?!'' என்ற பீதி தலைதூக்க, அவசரம் அவசரமாய் மேற்கொண்டு 4 மாயாவி டைட்டில்களை மறுபதிப்பிட ஏற்பாடுகளை செய்தோம் & in hindsight - சென்னையில் அது தான் நம் தலை தப்பிக்கச் செய்துள்ள பிரதான சமாச்சாரம் ! 

தலையில் நரையும், கண்களில் ஒரு புது உற்சாகமும் இழையோட, நம் ஸ்டால் பக்கமாய் வந்தோரின் பெரும்பான்மை - ஏதோவொரு மாமாங்கத்தில் மாயாவியோடு சந்தோஷமாய் அன்னம் தண்ணீர் புழங்கிய முன்னாட்களின் வாசகர்கள் என்பதில் சந்தேகங்களே இருக்கவில்லை ! And ஏதோ நெடு நாள் தொலைத்த பிள்ளையை மறுக்கா சந்திக்கும் வாஞ்சையோடு, மாயாவியின் 4 black & white இதழ்கள் + கொரில்லா சாம்ராஜ்யம் கலர் இதழினை அள்ளிக்கொண்டனர் ! ஊட்டாண்ட போனவுடன், "பாத்தியா...பாத்தியா...? நான் கொயந்தையா இருந்தச்சே படிச்ச பொஸ்தவம்மா !" என்று ஆத்துக்காரம்மாவையும், பிள்ளைகளையும் உசுப்பி விடுவதே இந்தக் கொள்முதல்களின் பயன்களாக இருந்திடுமென்பதில் ஒற்றை இம்மி கூட சந்தேகமில்லை ; ஆனால் nostalgia எத்தனை விலைமதிப்பற்றது என்பதற்கு நடப்பாண்டின் விற்பனைப் புள்ளிவிபரங்கள் சான்று என்பேன் ! And விற்பனையான பிரதிகளின் எண்ணிக்கையின்படிப் பார்த்தால் - இந்தாண்டின் டாப் performer "கொரில்லா சாம்ராஜ்யம்" தான் ! இரண்டாமிடம் : நாச அலைகள் ! மூன்றாமிடம் : "இமயத்தில் மாயாவி" ! And சொல்லவும் வேணுமா - நான்காமிடம் "நயாகராவில் மாயாவி" என்பதை ? டிசம்பரின் இறுதி நாட்களில் நாம் அடித்துப் பிடித்து அச்சிட்டிருந்த 4 டைட்டில்களில் கிட்டத்தட்ட பாதிக்கும் மேல் அதற்குள் காலி - திருப்பூரில், சிவகங்கையிலுமே மாயாவி mania தொடர்ந்திட்டதால் ! 

சில நேரங்களில்  எனக்கே என்னைக் கண்ணாடியில் பார்க்கும் போது, கிட் ஆர்டினுக்குப் போட்டி தரவல்லதொரு கோமாளியே தெரிகின்றான் ! 'தம்' கட்டி, ஏதேதோ கூத்தெல்லாம் கட்டி, டிசைன் டிசைனாய் புக்ஸை ரெடி பண்ணி வைத்துக் கொண்டு ஈயோட்டிக் கொண்டிருக்கும் நேரத்துக்கு, மாயாவியையும், டெக்ஸ் வில்லரையும், லக்கி லூக்கையும், வேதாளரையும் மட்டும் வருஷத்துக்கொரு பாணியில் வெளியிட்டு விட்டு கல்லா கட்டிவிட்டுப் போயிடலாமோ ? என்று தோன்றும் ! And நமது இரண்டாவது இன்னிங்சில் கிட்டத்தட்ட 11 ஆண்டுகளும், 500 இதழ்களும், எண்ணற்ற நாயகர்களும், ஜானர்களும் கடந்திருக்கும் வேளையிலும் கூட, ஒரு 51 ஆண்டுக்கு முந்தைய பெரியப்பா சாரோடு போட்டி போட இயலாது தடுமாறுவதை என்ன சொல்லி விளக்குவது ? என்று சத்தியமாய்த் தெரியலை guys ! Rest assured, தொடரும் நாட்களில் மாயாவி நமது கிட்டங்கிகளின் நிரந்தர அங்கத்தினராவார் ! அதுமட்டுமல்லாது இனி ஒவ்வொரு மேஜர் புத்தக விழாவின் போதும் ஸார்வாள் ஏதாச்சுமொரு புது அட்டைப்படத்துடன் ஆஜராவார் ! காலத்தின் கட்டாயம் moment #

க்ளாஸிக் புராணத்தில், ஒரு பக்கக் காதில் தக்காளி சட்னி கசியுதா ? கவலையே வேணாம் - ரெண்டு பக்கமுமே வழியப் பண்ணிவிட்டால் ஒன்று போலாகி விடுமல்லவா ? So அடுத்த தகவல் - 'அண்ணன் ஆர்ச்சியார்' சார்ந்ததே ! வெளியான போது கூட செம கலாய் மட்டுமே ஈட்டியிருந்த நமது சட்டித்தலையன், இம்முறை சென்னையில் வீறு கொண்டு பொங்கி எழுந்துள்ளான் ! Of course ஆர்ச்சி இதழ்களின் விலைகள் சல்லிசு என்பதும் ஒரு காரணமாய் இருந்திருக்கலாம் தான் - but all the same பயல் ஏகப்பட்ட புது வீடுகளுக்குப் பயணித்திருப்பது கண்கூடு !

தக்காளிச் சட்னிப் பிரவாகம் தொடர்கிறது - இம்முறை நமது தானைத் தலைவரின் பெயரைச் சொல்லி ! ரொம்ப காலமாய்ப் புத்தக விழாக்களில் ஸ்டைலாக தனது வலைப்படுக்கையில் மட்டையாகியே பொழுதைக் கழித்திருந்த ஸ்பைடர் சார் இந்தமுறை சென்னையில் amongst the top performers ! அதிலும் "டாக்டர் டக்கர்" எகிறியடித்துள்ளதை "ங்ங்ங்கிங்ஙனங்.." என்றபடிக்கே பராக்குத் தான் பார்த்து நிற்கிறேன் ! 

தெறிச்சு ஓடிடாதீங்கோ - still have more - இளவரசி மாடஸ்டியின் அதிரடிகளின் ரூபத்தில் ! இங்கேயும் விலைகள் ஒரு பிரதான factor-ஆ ? என்று சொல்லத் தெரியவில்லை ; ஆனால் மாடஸ்டி இதழ்களில் இம்முறை சாத்தியப்பட்டுள்ள விற்பனை நம்பர்களைப் பார்த்து "ஆ" என்று வாய்திறந்து நிற்கிறேன் ! அதிலும் recent இதழான "சிரித்துக் கொல்ல வேண்டும்" has been a blast !! அதைக் கவனிக்கும் போது - வாங்கியுள்ளோரெல்லாமே casual readers தான் ; விலை குறைவு என்பதால் சிக்கியதை வாங்கியுள்ளார்கள்" என்று எடுத்துக் கொள்ள முடியவில்லை ! தெளிவாக மாடஸ்டி தொடரினைப் பின்தொடர்ந்து வருகின்றனர் & அதனில் லேட்டஸ்ட் ரிலீஸ் பற்றியெல்லாம் கூட அறிந்து வைத்துள்ளனர் எனும் போது -  கையில் சிக்கியதை வாங்கிடும் spur of the moment கொள்முதலாய் இதனைப்  பார்த்திட இயலவில்லை ! எண்ட குருவாயூரப்பா !

'மிடிலே' என்கிறீர்களா ? அவ்ளோ லேசுக்குள் உங்களை ஓட அனுமதிக்க முடியாதே - SMASHING '70s க்ளாஸிக் நாயகர்களின் காலட்சேபம் காத்துள்ளதால் !! And surprise ...surprise ..... வேதாளர் ஸ்பெஷல்-1 இரண்டாம் தினத்திலேயே காலியாகிப் போயிருக்க, மீதமிருந்த மூவருள் பின்னியெடுத்துள்ளவர் நமது மாயாஜால மன்னனே ! Oh yes - "மாண்ட்ரேக் ஸ்பெஷல்" கண்டுள்ள அதிரி புதிரி வெற்றிக்கு விளக்கம் சொல்ல முயன்றால் டைகர் ஜாக் பாணியில் "வோ" என்பதைத் தாண்டி வேறெதுவும் வெளிப்பட மாட்டேன்கிறது ! And அடுத்தபடியாக ஊடு கட்டி அடித்திருப்பது "ரிப் கிர்பி ஸ்பெஷல் - 1" தான் ; கைவசம் இன்னும் கொஞ்சம் பிரதிகள் இருந்திருப்பின், நிச்சயமாய் மாண்ட்ரேக்குக்கு நமது ஜென்டில்மேன் டிடெக்டிவ் செம tough தந்திருப்பார் தான் ! கட்டக் கடைசியிடம் amongst the Smashing 70s நாயகர்கள் - காரிகனுக்கே ! In fact அவரது மித விற்பனை & வரவேற்பு, சீரியஸாய் நெருடுகின்றது ! இந்திய அணியில் உள்ள K.L. ராகுலைப் போல இவரது நிலைமை தொங்கலில் இருப்பதை மறுப்பதற்கில்லை தான் !! Sad ..but true !! 

Last but not the least - CID லாரன்ஸ் & டேவிட்டின் "மஞ்சள்பூ மர்மம்" ! Has been a stunner !! கொஞ்ச காலம் முன்பாய் யூடியூப் சேனலில் "சாய் with சித்ரா" என்ற புரோகிராமில் இந்த குறிப்பிட்ட ஆல்பம் பற்றி தமிழ் டைரக்டர் ஒருவர் நிறையவே பேசியிருந்தார் என்பதை நண்பர்கள் எனக்குச் சொல்லியிருந்தனர் ! அதன் தாக்கமா ? அல்லது உள்ளபடிக்கே nostalgia நண்பர்களின் நினைவுப் பேழைகளில் தங்கிய சூப்பர் ஹிட் இதழ் என்ற விதத்தில் இது விற்பனையில் சாதித்துள்ளதா ? என்று தெரியலை - but அதிரடி விற்பனை !

மேலே சொல்லியுள்ள க்ளாஸிக் பார்ட்டிக்களின் ஒட்டுமொத்த பங்களிப்பானது - சென்னைப் புத்தக விழாவின் மொத்த விற்பனையில் கிட்டத்தட்ட 23% எனும் போது மெய்யாலுமே மிரட்டுகிறது ! "ஆங்...இதெல்லாம் சோப்புக் குமிழி மாதிரி....சீக்கிரமே தெறிச்சிடும்" என்று புறம்தள்ளுவோர் அணியினில் கொஞ்ச காலம் நானுமே இருந்தவன் தான் ! ஆனால் கவாஸ்கரைப் பார்த்து ; அஸாருதீனைப் பார்த்து ; சச்சின் டெண்டுல்கரைப் பார்த்து ; விராட் கோலியைப் பார்த்து ; இப்போது ரிஷாப் பண்டையும் பார்த்து விட்ட பிறகும் கம்பாய் நிற்பது நமது க்ளாஸிக் அணியே ! ஆனால் 'குறுக்கு பிடிக்கி ; தோள்பட்டை வலிக்கு ; உப்புக்குத்தி கஷ்டப்படுத்தி' - என்று மூப்பின் புலம்பல்களை வெளிப்படுத்தும் நமக்குத் தான் (at least எனக்கு) வயசாகுதே தவிர, என்றும் மார்க்கண்டேயர்களான இவர்கள் அன்றைக்குப் போலவே இன்றைக்கும் ரவுசு பண்ணி வருகிறார்கள் ! Of course - போன பதிவினில் கூட உலகமே மங்கா திக்கிலும், கி.நா.திசையிலும் தடதடத்து வருவதைப் பற்றியும், நாம் மாத்திரம் 'ரிங்கா ரிங்கா ரோஸஸ் ஆடி வருகிறோமோ ?' என்ற நெருடலை வெளிப்படுத்தவும் செய்திருந்தேன் தான் ! இந்த விற்பனைப் புள்ளி விபரங்களே எனது அந்தப் புலம்பலுக்கு வலு சேர்த்தவை ! Phewww !! ஆராச்சும் ரெண்டு மாயாவி மங்காவும், மூணு வேதாள கி.நா.வும் போடுங்களேம்பா....உங்களுக்குப் புண்ணியமாப் போகும் !! 

'அட..ப்ரீயா விடும் ஓய்...இதெல்லாம் வருஷத்துக்கு ஒருக்கா நிகழும் கூத்துக்கள் மட்டும் தானே ?' என்ற உங்களின் மைண்ட்வாய்ஸ் கேட்கிறது folks ! ஆனால் யதார்த்தங்களில் சின்னதொரு மாற்றம் !! கொரோனா பின்சீட்டுக்குப் போயானதைத் தொடர்ந்து, மாவட்டங்கள்தோறும் புத்தக விழாக்கள் ரெகுலராய் நடத்திட வேண்டுமென்று அரசிடமிருந்து ஆட்சியர்களுக்கு வழிகாட்டுதல் போயிருக்க, இப்போது மாதத்துக்கு மூன்று விழாக்களாவது ஆங்காங்கே நடக்க ஆரம்பித்துள்ளன - கடந்த 6 மாதங்களாகவே ! நாமே தருமபுரி ; ஓசூர் ; ஈரோடு ; கோவை ; கரூர் ; திருச்சி ; மதுரை ; விருதுநகர் ; கள்ளக்குறிச்சி ; சேலம் ; காஞ்சிபுரம் ; சென்னை ; திருப்பூர் ; சிவகங்கை ; காரைக்குடி என கிட்டத்தட்ட 15+ விழாக்களில் தலை காட்டிவிட்டோம் - கடந்த 7 மாதங்களில் ! And இதோ பிப்ரவரி இறுதியில் திருநெல்வேலி ; கடலூர் & திருவள்ளூர் நகர்களில் விழாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன ! ஏதேனும் ஒன்றில் நாமும் பங்கேற்கவுள்ளோம் எனும்போது, தொடரவுள்ள மாதங்களில் / ஆண்டுகளில் இந்த bookfair circuit ஒரு ரெகுலர் நிகழ்வாகவே ஆகிவிடும் போலும் ! So நிறையவே Tier 2 சிறுநகரங்களுக்குச் செல்லும் போது - நாம் அடுக்கிடும் "கபாப்...ஸ்பிரிங்ரோல்..டக்கிலோ...லார்கோ...வெய்ன் ஷெல்டன்..Lady S" போன்ற பதார்த்தங்களைக் காட்டிலும், "பரோட்டா கீதாப்பா ? மாயாவி கீறாராப்பா ? "என்ற கேள்விகளே மிகுந்திடும் என்பதை யூகிக்க முடிகிறது ! அதுவே என்னை இப்போது மண்டையை சொரியச் செய்யும் சமாச்சாரம் ! 

வருஷத்தின்மிகக் கணிசமான நாட்களில், மக்களைத் தேடிச் சென்று கடைவிரிக்கும் வாய்ப்புகள் காத்திருக்கும் போது - அவற்றை பயன்படுத்திக் கொள்ளாது இருப்பதென்பது ஒரு முட்டாள் வியாபாரியின் அடையாளமாகிடக் கூடுமன்றோ ? So இந்த க்ளாஸிக் நாயகர்களை, சென்னையில் மட்டுமே வித்தை காட்டவல்ல வித்வான்களாய் முன்போல  பார்த்திடல், ஆகப் பெரிய பிழையாகிப் போகும் போலும் ! இந்த சிக்கல் ஷண்முகசுந்தரர்களை இனிமேல் உதாசீனம் செய்வது, சிக்கலுக்கு வழிவகுத்திடும் - for sure !! 

So புத்தக விழாக்களுக்கெனவே இனிமேல் தனியாய் ஒரு track ; தனியாய் ஒரு திட்டமிடல் ; தனியாய் சில விலைகள் என்ற சிந்தனை மண்டைக்குள் ஓட்டமெடுத்து வருகிறது ! Moreso because இந்த சிறுநகர விழாக்களுக்கு பள்ளிகளிலிருந்து அழைத்து வரப்படும் மாணாக்கர்களின் கைகளில் இருப்பது இருபதோ ; இருபத்தைந்து ரூபாய்களோ மாத்திரமே ! அவர்களை வெறும் கைகளோடு இனியும் அனுப்புவதாக இல்லை ! வரும் ஏப்ரல் முதலாய் பள்ளிப்பசங்களின் பட்ஜெட்டுக்கு நம்மிடம் புக்ஸ் இருந்திடத் துவங்கும் ! 

Having said that , சமீபமாய் முடிந்துள்ள திருப்பூர் புத்தக விழாவின் போது நண்பர் பல்லடம் சரவணகுமார் முன்னெடுத்துள்ள முயற்சிகளைப் பற்றிச் சொல்லியாக வேண்டும் ! தனது பள்ளிக்கு ஒரு குறிப்பிட்ட தொகைக்கு நமது இதழ்களை வாங்கியதோடு நிறுத்திக் கொள்ளாது, தனக்குப் பரிச்சயமுள்ள பள்ளிகளிலும் நம்மைப் பற்றிச் சொல்லி, அந்தந்த நூலகங்களுக்கென அவர்களையும் ஆர்டர் செய்திடச் செய்துள்ளார் ! ஒட்டு மொத்தமாய் ஆர்டர்களைத் திரட்டித் தந்ததோடு நிறுத்திக் கொள்ளாது, அவரவர் பணம் அனுப்பிடவும் தேவையான ஒத்தாசைகள் செய்து அசத்தியுள்ளார் ! ஊருக்கொரு ஆசிரியர் நமது காமிக்ஸ் வாசகராய் மட்டும் இருப்பின், ஆங்காங்கே ஒரு காமிக்ஸ் பட்டாளமே வெகு விரைவில் உதயமாகிடும் எனலாம் !  

And இங்கே இன்னொரு சுவாரஸ்ய நிகழ்வுமே - this time from சிவகங்கை ! என்றைக்குமே நமக்கு ரொம்பவும் பரிச்சயமெல்லாம் இல்லாத பகுதி தான் சிவகங்கைச் சீமையும், சுற்றியுள்ள செட்டிநாட்டுப் பகுதிகளும் ! ஊருக்கொரு ஏஜெண்ட் இருந்து நூறு, இருநூறு என்றெல்லாம் விற்பனைகள் அரங்கேறிய காலங்களிலேயே இந்தப் பகுதிகளில் நமக்கு பெருசாய் வரவேற்பு இருந்ததில்லை ! இன்றைக்கோ அந்தப் பக்கங்களில் மருந்துக்கும் நமக்கு விற்பனை முகவர் லேது ! இந்தப் பின்னணியில் சிவகங்கை புத்தக விழாவினில் நாம் ஸ்டால் போட்டிருக்க, முதல் சில நாட்களுக்கு நம்மை ஏதோ லெமூரியா கண்டத்திலிருந்து வந்துள்ள புதிர் பிறவிகளாய் மக்கள் பார்வையிட்டனர் ! "அட...இது தான் காமிக்சா ?" என்று வியக்காத குறை தான் ! காலைகளில் பள்ளிகளிலிருந்து அழைத்து வரப்படும் மாணாக்கர் மட்டும் கும்பல் கும்பலாய் நமது ஸ்டாலுக்கு வந்து புக்ஸை செம ஆர்வமாய்ப் புரட்டுவதும், போவதுமாய் இருந்தனர் ! சிறுகச் சிறுக அவர்களுள் ஓரிருவர் வாங்கிப் போக, அவற்றைப் படித்து விட்டு தங்கள் நண்பர்களிடம் சொல்ல, மறு நாள் அந்தப் பசங்கள் செம ஆர்வமாய் வந்து மேற்கொண்டு எதையாச்சும் வாங்கிப் போக ; அது பற்றி வீட்டில் உள்ளோரிடமும் சொல்ல ; அவர்களும் அதன் பின்பாய் வந்து பிள்ளைகளுக்கென கொஞ்சமாய் வாங்கிப் போக - ஒரு fascinating புது / சிறு வட்டம் அங்கு உருவாகியுள்ளது ! மொத்த விற்பனை என்னவாக இருந்தாலும் சரி, வரவுகள்-செலவுகளைத் தாண்டி இது போலான புது உறவுகளை நமது வாசகக்குடும்பத்தினுள் வரவேற்பதே பிரதானம் என்பதால் செம ஹேப்பி !! 

Other highlights from Chennai - in a nutshell :

1.இந்த முறை கார்ட்டூன்கள் have done much better ! 

*லக்கி லூக் எப்போதும் போல பிரித்து மேய்ந்திருக்கிறார் ! நம்மிடம் லக்கி வரிசையில் கையிருப்பு ரொம்ப ரொம்ப சொற்பம் என்றாகி விட்டதால், சில மறுபதிப்புகளை சீக்கிரமே எதிர்பார்க்கலாம் ! உங்களின் பரிந்துரைகள் ப்ளீஸ் ?

*சிக் பில் : இம்முறை சிரிப்பு போலீஸ் - சிறப்புப் போலீஸாகவும் இருந்துள்ளதில் சந்தோஷம் அண்ணாச்சி ! லக்கி லூக் ரேஞ்சில் எல்லாம் இல்லை தான் ; ஆனால் முன்னைவிட better !

*ப்ளூகோட்ஸ் : ம்ம்ம்....average performers தான் ! சொல்லிக்கொள்ளும் விதத்தில் இல்லை !

*க்ளிப்டன் : ஓ.கே. என்று சொல்லலாம் - மீசைக்காரரை ! மரியாதையைக் காப்பாற்றிக் கொண்டு விட்டிருக்கிறார் !

*பென்னி & Smurfs : வழக்கமான புத்தக விழா பாணியில் கிட்டத்தட்ட அதே நம்பர்களில் விற்றுள்ளனர் ! கூடவும் இல்லை ; குறையவும் இல்லை ! Again - டிஸ்கவுண்ட் கழித்த பிற்பாடு இந்தக் கலர் இதழ்கள் செம bargains என்பதுமே இவை நகன்றதன் பின்னணிகளாக இருக்கலாம் ! 

*ரின்டின் கேன் : ஐயகோ....நம்ம 4 கால் ஞானசூன்யத்துக்கு டின் கட்டிவிட்டார்கள் - சென்னை நண்பர்கள் !! Sad ...! 

*இந்தாண்டின் செம சர்ப்ரைஸ் : ஹெர்லாக் ஷோம்ஸ் & டாக்டர் வேஸ்ட்சன் கூட்டணி தான் ! லக்கி லூக்குக்கு அடுத்தபடியாக ஜாஸ்தி விற்றுள்ளது இவர்களே ! 

2.ரெகுலர் நாயகர்களுள் :

*ரிப்போர்ட்டர் ஜானி - தெளிவான performance இம்முறை ! டிக்கெட் போட்டு ஊருக்குக் கூட்டிச் சென்றதற்கான நன்றி மறக்காது ரிப்போர்ட்டர் சார் பெயரைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார் !

*ஜாகஜவீரர் ரோஜர் : ஊஹூம்.... சிகப்பு மசியில் மார்க் போட்டுள்ளனர் !

*லார்கோ வின்ச் : ஆச்சர்யமாய் இம்முறை கோடீஸ்வரர் மனசிறங்கி புது இல்லங்கள் தேடிச் சென்றுள்ளார் ! இந்த நகர்வு தொடரும் நாட்களில் வேகமெடுக்க புனித ஒடின் அருள்புரியட்டும் !

*பிரெஞ்சு ஏஜெண்ட் SISCO : புது வரவு என்றாலும், ஓரளவிற்கு வாசகர்களின் தோள்களில் கைபோட்டு நட்புப் பாராட்டக் கற்றிருக்கிறார் ! Not bad at all !

*தோர்கல் : Phew ! சோகக்கதையே !! நம்மிடமுள்ள 11 ஆல்பங்களிலுமாய்ச் சேர்த்துமே இரட்டை இலக்க நம்பரில் தான் விற்பனை ! ஒவ்வொன்றிலும் நாலு ; ஐந்து என்ற ரேஞ்சுக்கே விற்பனை ! For sure இனி வரும் நாட்களில் இவர் முன்பதிவுகளின் தடத்தில் தான் பயணிக்க வேண்டியிருக்கும் போலும் ! மெய்யாலுமே நெருடுகிறது இந்தத் தொடரின் தடுமாற்றம் !

*அண்டர்டேக்கர் : செம அதிரடி காட்டியுள்ளார் (சீரியஸ்) வெட்டியான் !

3.மாமன்னரைப் பற்றி பேசாது, சாமான்யர்களைப் பற்றியே பேசியாச்சல்லவா - time now for TEX & team !! 

மொத்தம் 27 ஆல்பங்கள் - 'தல' தொடரினில் நமது கையிருப்பு ! அவை அத்தனையும் வரிசையாய், அழகாய், அடுக்கப்பட்டிருக்க, ஸ்டாலுக்கு வரும் எந்தவொரு வாசகரும் நின்று, நிதானித்து இரவுக்கழுகாரை ரசிக்காது போனதை நான் பார்க்கவே இல்லை ! கண்ணைமூடிக் கொண்டு 27 புக்ஸையும் அள்ளிய நண்பர்கள் நான் பார்த்த 2 நாட்களிலேயே எக்கச்சக்கம் ! And மாயாவி கண்ணில் காட்டிய நம்பர்களுக்கு சவால் விடும் விதமாய் தெறிக்க விட்டுள்ளது டெக்ஸ் மாத்திரமே ! அதிலும் "பகை பல தகர்த்திடு" & "நிழல்களின் ராஜ்ஜியத்தில்" சும்மா தெறி சேல்ஸ் ! இந்த 27 இதழ்களின் கையிருப்பு மட்டும் இல்லாது போயின், நாம் சென்னைக்குப் போனதில் அர்த்தமே இருந்திராது ! தி KING is still தி KING !!! Very much so !! கிட்டத்தட்ட சிவகாசியிலிருந்து சென்னைக்குப் பயணித்த பண்டல்களில் மாக்சிமம் இடம் பிடித்திருந்தோர் மாயாவியும், டெக்ஸும் தான் & ஊருக்குத் திரும்பிய பண்டல்களில் மினிமம் இடத்தைப் பிடித்திருந்தோரும் அதே இருவரே ! முன்னவர் அந்நாட்களது ஜாம்பவான் எனில், பின்னவர் இந்த யுகத்தின் அசகாயர் ! 

4.கி.நா. ??

*ரொம்பவே up & down நம்பர்கள் இக்கட ! பெரிதாய் எதையும் புரிந்து கொள்ள இயலவில்லை தான் ! சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பான "இரவே..இருளே..கொள்ளாதே" & "தேவ ரகசியங்கள் தேடலுக்கல்ல" செமையாக விற்றுள்ளன ; அதே நேரத்தில் சமீபத்து black & white கி.நா.க்கள் தட்டுத் தடுமாறியுள்ளன ! ஒரு சில ஆல்பங்களிலெல்லாம் வெறும் 2 புக்ஸ் தான் மொத்தத்துக்கே விற்றுள்ளன - டிஸ்கவுண்ட்டெல்லாம் போட்டுத் தந்தான பின்னும் ! "அழுகாச்சிகளெல்லாம் வேணாம்டா அம்பி" என்று சொல்லாது சொல்வது போலுள்ளது இங்கே காணக்கிடைக்கும் சேதியினில் ! நான் எக்கச்சக்க யூ-டர்ன் எல்லாம் அடிச்சு, மேஜையைக், கீஜையை உடைச்சி பண்ணினதெல்லாமே வீணா கோப்பால்ல்ல்ல் ??? என்றே கேட்கத் தோன்றுகிறது ! And லோகமே கி.நா. நோக்கிப் பயணித்து வரும் நாட்களிவை !! 

*அதே போல இன்னொரு முரணுமே தென்படுகிறது : கணிசமான டிஸ்கவுண்ட் போட்டுத் தந்தாலாச்சும் சில இதழ்கள் இடம் காலியாகுமென்ற கணக்கெல்லாம் பப்படம் தான் போலும் ! கொஞ்ச ஆண்டுகளாகவே உறங்கி வழியும் சில நாயக / நாயகியர் கிட்டத்தட்ட 35% டிஸ்கவுண்டுக்குப் பின்னுமே நம் மீதான மையலைக் கைவிடக் காணோம் ! So சென்னையைப் பொறுத்தவரைக்குமாவது - டிஸ்கவுன்ட்ஸ் பெருசாய் ஆணிகள் எதையும் பிடுங்கித் தர உதவிடாது போலும் ! 

5.Last but not the least - ஜம்பிங் ஸ்டார் ஸாகோர் ?

டி-வி.யில் வருஷா வருஷம் காட்டும் அந்த திரைப்பட awards பங்க்ஷனில் "சிறந்த புது வரவு" என்றதொரு பிரிவை ஏற்படுத்தி பரிசு தருவார்களல்லவா ? அவ்விதமோரு category நம் மத்தியினில் இருக்குமெனில் இம்மி சந்தேகமுமின்றி அதனைத் தட்டிப் போகிறவர் நமது ஜம்பிங் ஸ்டார் ஸாகோராகவே இருந்திட முடியும் ! அவர் அறிமுகமான அந்த வண்ண hardcover இதழும் சரி ; V காமிக்ஸின் முதல் இதழாய் வெளியான black & white சாகசமும் சரி, டெக்ஸுக்கு அடுத்தபடியான விற்பனை கண்டுள்ளன ! அதிலும் V காமிக்ஸ் 70 ரூபாய் இதழ் மாஸ் விற்பனை ! ஜம்பிங் பேரவை தொடர்ச்சியாய் இதே எழுச்சியோடு பயணத்தைக் தொடர்ந்தால், பாக்கி நடுமட்ட ஈரோக்களுக்கு "வாய்ப்பில்ல ராஜா...!" என்று டாட்டா காட்டுவது பெரியதொரு கம்பு சுத்தும் கஷ்டமாகவே இராது தான் ! NEWCOMER OF THE YEAR - சந்தேகங்களே இன்றி ZAGOR !!

That winds up my report for CBF'23 folks ! 

இங்கு கற்றுள்ள பாடங்களை ஒற்றை ராத்திரியிலே நடைமுறைக்கு கொண்டு வந்திடவெல்லாம் இயலாது தான் ; ஆனால் in the long run இவற்றை உதாசீனப்படுத்துவது நமக்கு நாமே சூன்யம் வைத்துக் கொள்வதற்கு சமானமாகிடலாம் ! முன்னேயும் போயாகணும் ; ரிவர்ஸ் கியரையும் போட்டுக்கினே இருக்கணும் ; புளிய மரத்தில் வண்டியை டப்பி சாத்திடவும் கூடாது !! யாராச்சும் இதுக்கு ஏற்ற மாடல் வண்டியை கொஞ்சம் பரிந்துரை பண்றீங்களா - ப்ளீஸ் ? 

ரைட்டு...SODA ஒருபக்கமும் I.R.$ இன்னொரு பக்கமும் காத்துள்ளதால் இப்போதைக்கு கிளம்புகிறேன் ! See you around folks ! Have a fun Sunday ! Bye for now ! Sunday, February 05, 2023

Part 2

 நண்பர்களே,

வணக்கம். ஆங்குலெம் புராணத்தின் இறுதி பாகத்தை ஓவர் வள வள இன்றி முடிக்க முயற்சிப்போமா ? In some ways அது சுலபமே - becos விழா துவங்கிய நாட்களின் முழுமையிலுமே, நமது படைப்பாளிகளுடனான சந்திப்புகளில், பிரெஞ்சு வாசக உத்வேகங்களை தரிசிக்கும் முனைப்பினில் தான்  லயித்துக் கிடந்தேன் ! So "மாங்காய் பறிச்சேனா ? தேங்காய் உடைச்சேனா ?" என்று கதை விட்டுத் திரிய இக்கட வாய்ப்புகளும்,அவசியங்களும் சொற்பம் ! So நேரம் பிரீமியத்தில் உள்ள நண்பர்களுக்கு இங்கே பெருசாய் உதைக்காதென்ற நம்பிக்கையுடன் here goes :

நமக்கான பூத்தில் நமது "லயன்" சூப்பர் ஷார்ப்பாக என்னைப் பார்த்துப் புன்னகைத்து நிற்க எதிர்வரிசை பூத்களில் யாருமே வந்திருக்கவில்லை ! ஒவ்வொரு பதிப்பகத்தின் பெயர் கொண்ட பதாகைகள் மட்டும் கண்ணில் பட்டன & ஒவ்வொரு ஸ்டாலின் முன்னேயும் புத்தக பார்சல்கள் உடைக்கப்படாது கிடந்தன ! சரி, அவர்கள் வருவதற்குள் இங்கே 10 பேர் கொண்ட எங்களது "பிரமுக"அணியினில் இருக்கக்கூடிய மீதப் பேரை தெரிந்து கொள்ள நினைத்தேன் ! And ஒவ்வொருவரையும் தெரிந்து கொள்ளும் சமயம் ஒரு ஆச்சர்யமே மிஞ்சியது - becos நம்மையும், இன்னும் ஒரேயொரு பதிப்பகத்தையும் தவிர்த்த பாக்கி எட்டுப் பேருமே கிராபிக் நாவல் ஸ்பெஷலிஸ்ட்ஸ் ; அல்லது manga ஸ்பெஷலிஸ்ட்ஸ் ! அதிலும் "கி.நா." என்றால் நாம் பரிச்சயப்பட்டிருக்கும் ரகத்திலான dark கதைகள் ; அழுகாச்சி காவியங்கள் மாத்திரமே என்றில்லை ! தினுசு தினுசாய் ஜானர்கள் உள்ளன & நானும் , நம்ம கோவைக் கவிஞரும் படம் வரைந்தால் எவ்விதமிருக்குமோ - அத்தகைய சித்திரங்களுடனுமே ஜெயித்து வருகிறார்கள் ! In fact இந்தாண்டின் ஆங்குலெம் பரிசு வென்றுள்ள ஆல்பம் கூட இது போலான drawings சகிதமே இருந்தது ! And நாம் பழகியிருக்கும் கதை பாணிகள் ; யதார்த்த நிகழ்வுகள் ; நிஜ சம்பவ விவரிப்புகள் என்பது போலான வரையறைகளுக்குள் அடைபட்டுக் கொள்ளாமல், சிக்கிய டாபிக்கிலெல்லாம் கி.நா.க்களை போட்டுத் தாக்குகிறார்கள் ! இங்கே ஒரு இடைச்செருகலாய் ஒரு தகவல் - நாம் வாய் பிளக்க !! 

2019-ல் கேப்டன் டைகரின் புதிய தொடரொன்று துவங்கியுள்ளதென்றும், அதன் முதல் ஆல்பம் புதியதொரு படைப்பாளி டீமின் கைவண்ணத்தில் வெளி வந்திருப்பதாகவும் சொல்லியிருந்தது நினைவிருக்கலாம் ! இன்னும் சொல்லப் போனால் அந்த ஆல்பத்தின் இறுதிப் பாகம் மறு வருஷமே ரெடியாகி விடுமென்ற நம்பிக்கையில் அதனை நமது அட்டவணையில் அறிவித்து விட்டு, பின்னர் தாமதமாகின்றதென்று கேள்விப்பட்டு ஜகா வாங்க நேர்ந்து நயமாய் பல்ப் வாங்கியிருக்கவும் செய்திருந்தேன் ! இன்று வரைக்கும் அந்த இரண்டாம் பாகம் உருவான பாடில்லை ! "ஏனோ - இத்தனை தாமதம் ?" என்று நடு நடுவே வினவிடும் போதெல்லாம், அந்த புது கதாசிரியர் வேறு ஏதோவொரு முக்கிய புராஜெக்டில் மூழ்கிக் கிடைப்பதாய்த் தகவல் சொன்னார்கள் ! அது என்னது என்பதை போன வாரம் ஆங்குலெமில் தான் பார்த்தேன் -  தலை கிறுகிறுக்கச் செய்திடும் ஒரு புள்ளி விபரத்தோடு ! "முடிவில்லா ஒரு உலகம்" என்றதொரு தலைப்புடன் இந்த கேப்டன் டைகர் புது author உருவாக்கியுள்ள 190 பக்க நீள மெகா கிராபிக் நாவலானது உலகில் (Climate changes) பருவநிலைகளில் நிகழ்ந்து வரும் மாற்றங்களைப் பற்றிச் சொல்கிறது ! And நம்பினால் நம்புங்கள், இதனில் இது வரைக்கும் 7 லட்சம் பிரதிகள் பிரெஞ்சில் மாத்திரமே விற்றுள்ளனவாம் !! நம்மவர்கள் இந்த ஆல்பத்தைக் காட்டி, தகவலையும் சொல்லிய தருணத்தில் 'பெப்பே..பெப்பே.. என்று முழிக்க மட்டுமே முடிந்தது ! 

இது ஒருபக்கமெனில், இன்னொரு திசையில் MANGA எனும் அந்த கார்ட்டூன் பாணிகள் தெறிக்க விட்டுக்கொண்டுள்ளன - கிட்டத்தட்ட உலகின் சகல மூலை முடுக்குகளிலும் ! ஜப்பானிலும், கீழ்த்திசை தேசங்களிலும் துவங்கிய இந்த ரசனையானது இன்றைக்கு காட்டுத்தீயாய் ஐரோப்பாவை உலுக்கி எடுப்பது பற்றாதென்று, ஆர்ஜென்டினா, பிரேசில் என உலகின் ஏதேதோ கோடிகளைக் கூட விட்டு வைத்த பாடைக் காணோம் !! திரும்பும் திசையெல்லாம் MANGA MANIA ! சொல்லப் போனால் - "நாங்க மாங்கா ஊறுகாய்க்குத் தான் ரசிகர்கள் ; அந்த ஸ்டைல் காமிக்ஸுக்கு அல்ல !" என்று நான் சொன்ன போது என்னை பரிதாபமாய்ப் பார்க்காத குறை தான் ! ஓராண்டின் முழுமையிலும் பிரெஞ்சு மொழியினில் உருவாகிடும் டாப் காமிக்ஸ் படைப்புகளை பல்வேறு பிரிவுகளுக்குள் கொண்டு சென்று, பல கட்டத் தேர்வுகளுக்கு உட்படுத்தி, அதன் பின்னே TOP 10 ; அப்புறம் TOP 5 என்று shortlist செய்து ஆங்குலெம் திருவிழாவின் போது - ஸ்பெஷல் ஜூரிக்களைக் கொண்டு வெற்றி எந்தப் படைப்புக்கெனத் தீர்மானிப்பதுண்டு !  இந்தாண்டு ஒட்டு மொத்தமாய்க் வெவ்வேறு பிரிவுகளிலும், அத்தனை பரிசுகளையும் கொண்டு சென்றிருப்பன - கி.நா.க்களும், மங்காவும் தான் ! நாம் ரசிக்கும் க்ளாஸிக் ரகக் கதைகளை உருவாக்கும் சகல பதிப்பகங்களும், ஆளுக்கொரு குருவி ரொட்டியைக் கையில் பிடித்தபடிக்கே ஊர் திரும்பியுள்ளனர் !  

So ஒவ்வொருவரும் தத்தம் மார்க்கெட்களின் அனுபவங்களை என்னிடம் சொல்லும் போது, எனக்குக் கொஞ்சமாய் குழப்பம் ; "அபியும்..நானும்" படத்து பிரகாஷ் ராஜ் போல மாரை நிமிர்த்திக் கொண்டு நடை போடணுமா ? அல்லாங்காட்டி மண்டையை சொரிந்தபடிக்கே நடை போட்டாகணுமா ? என்று ! Becos இத்தனை variety ; இத்தனை ஜானர்கள், இத்தனை பரீட்சார்த்தங்கள் என்பனவற்றிற்கெல்லாம் அப்புறமுமே, இதோ நடந்து முடிந்திருக்கும் சென்னைப் புத்தக விழாவினில், நமது 300+ இதழ்களின் மத்தியினில் top performer - அரை நூற்றாண்டுக்கு முன்னே நமக்குப் பரிச்சயமான அதே மாயாவிகாரு's "கொரில்லா சாம்ராஜ்யம்" தான் ! Old is Gold என்று கம்பாய் நடை போடும் நமது பழமைக் காதலை எண்ணிப் பெருமிதம் கொள்வதா ? அல்லது - உலகமே ஆறுவழிச்சாலைகளில் 'சர்ர்..புர்ரென்று' லேட்டஸ்ட் புகாட்டி ரக கார்களில் பாய்ந்து கொண்டிருக்கும் வேளையினில், நாம் ஸ்டெடியாய் 60 கி.மீ.ஸ்பீடுகளில் பயணித்து வருவதை எண்ணி குழம்பிக்குவதா ? - தெரிலியேம்மா.....!! 

ஆங்குலெமில் MANGA CITY என்றொரு தனி அரங்கு, ஜப்பானிய ஸ்டைலில் நின்று கொண்டிருக்க, பலாப்பழத்தை ஈ மொய்க்காத குறையாய் உள்ளுக்குள் கூட்டம் ! மங்காவின் ஜாம்பவான்கள் என்று ஆளாளுக்கு ஏதேதோ பெயர்களை பயபக்தியோடு உச்சரிக்க, நானோ திருவிழாவில் தொலைந்த ஆடாட்டம் 'பெ' என்று முழித்துக் கொண்டிருந்தேன் ! உள்ளே - மங்கா படைப்பாளிகளின் பெரிய சைஸ் ஒரிஜினல் சித்திரங்கள் எக்கச்சக்கமாய் display-ல் இருந்தன ; and அதன் ஜாம்பவான்கள் ஷிப்ட் போட்டு நேரில் ஆஜராகி, வாசகர்களுக்கு ஆட்டோகிராப் ; அர்ட்டோகிராப் (ஆமாங்கோ...கையெழுத்துக்குப் பதிலாய் படமே வரைந்து தருகிறார்கள் - வாசகர்கள் நீட்டும் பிரதிகளில் !!) என்று போட்டுத் தாக்கிக் கொண்டிருந்தனர் ! 


இன்றைக்கு பிரான்சின் மெகா கோடீஸ்வரர்கள் பட்டியலில் நிறையவே மங்கா ஓவியர்கள் உண்டாம் - மாட, மாளிகை போல வீடுகள் தந்து, கீழ்த்திசை தேசங்களிலிருந்து ஓவியர்களை குடும்பங்களோடு இங்கே நகர்த்திக் கொணர்ந்து தங்கள் மேற்பார்வைகளில் மங்கா படைப்புகளை பிரெஞ்சு பதிப்பகங்கள் உருவாக்கி வருகின்றன - மெகா சம்பளங்களில் ! இதோ - இந்த ஜப்பானிய ஓவியரெல்லாம் இந்தத் துறையில் கிங்காம் ; ஒரு ஹாரர் தொடரை மங்கா காமிக்ஸாக மாத்திரமன்றி, Netflix-ல் கூட வெளியிட்டுள்ளார் போலும் !!  


பிரான்சின் 50 முக்கிய ரயில் நிலையங்களில் ஆங்குலெம் திருவிழா சார்ந்த போஸ்டர்கள் ; விளம்பரங்கள் என இடம்பிடித்திருக்க, அவற்றின் பெரும்பான்மை மங்கா தான் !! இதோ பாருங்களேன் - பாரிசில் ! 

நிஜத்தைச் சொல்வதானால், இன்றைய சர்வதேச காமிக்ஸ் சூழலின் யதார்த்த முகத்தைப் பார்க்கும் போது நாம் கூடுவாஞ்சேரியில் இருப்பது போலவும், மிச்ச ஜனமெல்லாமே கவுஹாத்தியில் இருப்பது போலவும் தோன்றுகிறது ! Of course - அவரவரது ரசனைகளுக்கேற்பவே வாசிக்கிறோம் & மங்கா ; நல்லதங்கா என்ற வாசிப்புகளால் அவர்களெல்லாம் நம்மை விட உசந்து நிற்பதாக நான் எண்ணிடவே இல்லை ! But நம்மைச் சுற்றிய உலகம் வேறொரு ரூட்டில் செம வேகமாய் தட தடத்து வருவதை கருத்தில் கொள்ளாது இருப்பதென்பது தீக்கோழி தரைக்குள் தலையைப் புதைத்துக் கொண்டதற்குச் சமானமாகிடுமோ ? என்ற நெருடல் இல்லாதில்லை ! 

In fact "ஆங்குலெமில் புதுசாய் அதை வாங்கினேன் ; இதை வாங்கினேன்" என்றெல்லாம் நான் பீற்றிட மாட்டேன் - simply becos அங்கே நான் சந்தித்த பதிப்பகங்களின் தொண்ணூறு சதவிகிதம் நமக்கு ஏற்கனவே தெரிந்தவர்களே ! And இரண்டே மாதங்களுக்கு முன்பாகத் தான் அனைவரையும் ஜெர்மனியில் சந்தித்திருந்தேன் ! அது மட்டுமல்லாது, உலகமே இன்றைக்கு Work From Home பாணிக்குப் பழகிப் போயுள்ள நிலையில், முன்னாட்களைப் போல  நேரில் போய் நின்று, கதவைத் தட்டி, காவடி எடுத்துத் தான் கதைகள் வாங்கிட வேண்டுமென்ற நிலவரம் நஹி ! இங்கிருந்தபடிக்கே ஜோ பைடெனுக்குக் கூட யோசனை சொல்ல முடியும் நாட்களல்லவா இவை ?! So ஆங்குலெமில் மறுக்கா பப்லிஷர்களைப் பார்த்து, புதுசாய் ஒரு வண்டிக் கதைகளுக்குள் தலை நுழைத்திட 'தம்' இருந்திருக்கவில்லை ! Moreso because - 2024 க்கான அட்டவணை கிட்டத்தட்ட இப்போதே ரெடி என்பதால் ! (அதுக்காக வெறும்கையோடு திரும்பலாம் இல்லீங்கோ ; இந்தாண்டின்  பயணத்தின் போது நீங்களே சிறுகச் சிறுக உணர்ந்திடுவீர்கள் ! 😉😉) ஆனால் ஆங்குலெம் விழாவினில் எனக்குக் கிட்டிய மிகப்பெரிய பொக்கிஷமாய் நான் நினைப்பது உலக காமிக்ஸ் சார்ந்ததொரு பார்வையே ! கிட்டியுள்ள இந்த திடீர் 'யானைப் பால்' நமக்கு ஒற்றை ராத்திரியில் புதிதாய் போதி மரங்களை எங்கிருந்தாச்சும் பிடுங்கிக் கொண்டு வந்து நம் வாசலில் நட்டி விடுமென்றெல்லாம் நான் சொல்லப் போவதுமில்லை ; எதிர்பார்க்கவுமில்லை ! ஆனால் 51 ஆண்டுகளாய் இந்தத் துறையில் பயணித்து வரும் நாம், நம்மைச் சுற்றிய உலகினை உள்வாங்கிடாது, இன்றைய பாட்டைப் பார்த்தால் போதுமென்று குந்திக் கிடப்பது ஒரு வரலாற்றுப் பிழையாகிடக்கூடும் என்று மட்டும் புரிகிறது ! Maybe எனது ஆங்குலெம் பயணமானது, 10 ஆண்டுகளுக்கு முன்னேயே வாய்த்திருந்தால், அதனில் எனக்குக் கிட்டியிருக்கக்கூடிய அனுபவப் பாடங்களை ஊருக்குத் திரும்பிய முதல் பொழுதிலேயே நான் கடாசியிருக்கக் கூடும் ! ஆனால் இன்றைக்கோ மொழு மொழுவென்ற கபாலத்தின் ஒரு மூலையில் பொக்கிஷமாய்ப் பத்திரப்படுத்தப்படும் ! 

பதிப்பகங்களின் தொழில்முறைச் சந்திப்புக்கான சிறு அரங்குக்கு கொஞ்சம் தொலைவில் முதல் நாளே ஒரு முரட்டுக் கூடாரம் ரெடியாகி வருவதைக் கவனித்திருந்தேன் ! அங்கே தான் காமிக்ஸ் புக் விற்பனை + படைப்பாளிகள் அட்டவணைகளின்படி வருகை புரிந்து, வரிசையில் நிற்கும் வாசகர்களின் பிரதிகளில் ஆட்டோகிராப்போ ; சித்திரமோ போட்டுத் தரும் வைபவங்கள் அரங்கேறிடும் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது ! நமக்கு தந்திருந்த VIP பேட்ஜானதை கழுத்தில் தொங்க வீட்டுக் கொண்டால் எங்கும் தங்கு தடையுமின்றிப் புகுந்திட முடியுமென்பதை ஏற்கனவே சொல்லியிருந்தார்கள் & அதனை புத்தக விற்பனைத் திருவிழா துவங்கிய தினத்தினில் கண்கூடாய்ப் பார்த்தேன் ! ஆஞ்சநேயர் வால் போல ஒரு நெடும் லைன் நிற்க, சைடில் ஒரு கேட் ஆளின்றி இருந்தது ! தயங்கியபடியே அங்கே போனால், எனது பேட்ஜை பார்த்த கணம் 'லொஜக்'க்கென திறந்து உள்ளே அனுமதித்தனர் ! உள்ளே புகுந்தால்....

'பீரோ புல்லிங்' வடிவேல் வீட்டுக்குள் புகுந்து பீரோவைத் திறந்து பார்த்து கூத்தாடிய காட்சியை வாழ்ந்து பார்க்கலாம் போல் தோன்றியது ! நமது பதிப்பகங்கள் ஒவ்வொன்றும் அவரவர் சக்திக்கேற்ப ஸ்டால்களைப் போட்டு, புக்ஸ்களைக் குவித்து அதகளம் செய்து கொண்டிருந்தனர் ! ஒவ்வொரு ஸ்டாலிலும் ஐந்தாறு பில்லிங் கவுண்டர்ஸ் ; ஸ்டாலின்  வெளிப்புறத்திலோ ஐந்தாறு பூத்கள் - ரேஷன் வாங்குவது போல வாசகர்கள் வரிசையில் நின்று, தடுப்புக்கு மறுபக்கமிருக்கும் படைப்பாளிகளின் கையெழுத்தை வாங்கிட ! And ஒவ்வொரு ஸ்டாலின் முன்னேயும் ஒரு நீளமான display - எந்தெந்த நேரத்துக்கு, எந்தெந்த ஆர்ட்டிஸ்ட் / கதாசிரியர் வருகை தரவுள்ளனர் என்பதை குறிப்பிட்டு ! தொடரும் போட்டோக்கள் இனி கதையினைத் தொடரும் folks :
வந்திருந்த படைப்பாளிகளுள் ரிப்போர்ட்டர் ஜானி தொடரின் புது ஓவியரும் ; லக்கி லுக் தொடரின் புது கதாசிரியரும் தவிர்த்து பாக்கிப் பெயர்களெல்லாம் நமக்கு அந்நியமாகவே இருந்தன ! அங்கேயும் கணிசமான மங்கா படைப்பாளிகளின் பெயர்களே லிஸ்ட்டில் பிரதானமாய் இருந்தன ! கால் கடுக்க அந்தப் புத்தக விற்பனைகளையும், வாசக உற்சாகங்களையும், படைப்பாளிகளின் ஆர்வங்களையும் தரிசித்த பிற்பாடு மீண்டும் நமது பூத்துக்கே திரும்பினேன் - மேற்கொண்டும் சில சந்திப்புகள் இருந்ததால் ! கணிசமான சிறு பதிப்பகங்கள் ; அங்கே ஸ்டால் எடுத்திருக்கா பதிப்பகங்கள் - திடும் திடுமென ஆஜராகி, அவர்களது படைப்புகளை முன்னே நீட்டிய போது கொஞ்சம் கூச்சமாகவே இருந்தது ; 'நாங்கள்லாம் அத்தினி பெரிய ஆளுங்க இல்லீங்கண்ணா !' என்றபடிக்கே அவர்களது புக்ஸைப் பார்த்த போது சகலமும் கிராபிக் நாவல்கள் ! வெவ்வேறு ஜானர்களில் ; வெவ்வேறு தலைப்புகளில், விதம் விதமாய் இருந்த அவற்றுள் நம் ரசனைகளுக்கு ஒத்துச் செல்பன ரொம்பச் சொற்பமே ! So 'ஊருக்குப் போய் கடுதாசி போடறேன்' என்றபடிக்கு அவர்களிடம் விடை பெற்றுக் கொண்டேன் ! நிஜத்தைச் சொல்வதானால், நாம் தற்சமயம் அன்னம் தண்ணீர் புழங்கி வரும் முக்கிய பதிப்பகங்கள் தவிர்த்த அடுத்த நிலைப் பதிப்பகங்களின் ஆக்கங்கள் எவையுமே நமக்கு ஒத்துப் போகும் விதங்களில் கிஞ்சித்தும் இல்லை !  அவர்களின் பட்டியலில் தொண்ணூறு சதவிகிதம் கி.நா.க்களே எனும் போது 'திரு திரு'வென முழிக்க மட்டுமே முடிந்தது ! 

Oh yes - புதிதாய் கதைகளை டிக் செய்துள்ளோம் தான் ; ஏகப்பட்ட அவார்டுகள் வாங்கியுள்ள ஒரு நெடும் ஆல்பம் ; ஒரு அட்டகாச கி.நா. ; யாருமே எதிர்பார்த்திட இயலா ஒரு ஜானரிலான ஆல்பம் ; 1 அதிரடி  கௌபாய் தொடர் ; 1 மிரட்டலான ஹாரர் ஆல்பம் ; 1 செம கூல் கார்ட்டூன் தொடர் ; V காமிக்சுக்கென என crisp ஆல்பங்கள் - என ஷாப்பிங் பை இம்முறையும் நிறைந்துள்ளது தான் ! அவற்றை இனி எங்கே நுழைப்பது என்பது தான் சவாலே !! Truth to tell - எனது லேப்டாப் சத்தியமாய்த் திணறிக் கிடக்கின்றது இந்த கோப்புகளை ; மாதிரிகளை உள்ளடக்க இயலாது !! ஒரு hard disk வாங்கினால் கோப்புகளை அடக்கி விடலாம் தான் ; ஆனால் அவற்றை உங்களிடம் கொண்டு சேர்ப்பது எப்போது ? எவ்விதம் ? என்பது தான் மில்லியன் டாலர் கேள்வியே ! Guys : உங்களின் 'பொம்ம புக் நேசங்களை' இன்னமும் கொஞ்சமாய் தூசு தட்டி freshen up செய்து கொள்ளுங்கள் ; காத்திருக்கும் மாதங்களில் ரவுண்டு கட்டி அடிக்க நாங்க ரெடி !!

மாலை புலர, மறுக்கா பென்ஸ் வேனில் பயணம் ; கோட்டையும், டையையும் கட்டிக்கினு இரவு பார்ட்டிக்குப் போய் ஆளாளுக்கு கோனியாக் மழையினில் நனைந்து, குதூகலிப்பதை கொட்டாவி விட்டபடிக்கே பார்த்தது ; சில பல பிரெஞ்சு டி-வி புரட்யூசர்களுடன் அளவளாவியது ; 2023-ன் முக்கிய படைப்புகளை ஜூரிக்கள் தேர்வு செய்யும் முன்பாக அந்தந்தப் பதிப்பகங்கள் ஐந்தே நிமிடங்களில் தமது படைப்புகளை பற்றி விவரித்தது ; எதிர்பாரா விதமாய் சில மாதங்களுக்கு முன்னே காலமாகியிருந்ததொரு மெகா குழுமத்தின்  நமக்கு ரொம்பவே பரிச்சயமான தலைமை நிர்வாகிக்கு அஞ்சலி செலுத்தியது ;  இன்னதென்றே தெரியாத ; yet சுவையான சில பல வஸ்துக்களை வயிற்றுக்குள் தள்ளி ஏப்பமிட்டது என்று 2 நாட்களும் மின்னலாய் ஓட்டமெடுத்திருக்க, ஊர் திரும்பும் பொழுதும் புலர்ந்திருந்தது ! ஆளாளுக்கு வெவ்வேறு திக்குகளில் புறப்பட வேண்டியிருக்க, "VIP பிரமுக அணி" ஒரு கனவை வாழ்ந்து முடித்த திருப்தியில் விடை பெற்றுக் கொண்டோம் ! ஆங்குலேம் ரயில்வே ஸ்டேஷனுக்கு பெட்டியை தள்ளிக்கொண்டே நடந்த போது, நீல வானம் அந்த காமிக்ஸ் நகரினை புன்னகையோடு போர்த்தியிருந்தது போல் தோன்றியது ! குளிர் மட்டும் பற்களையெல்லாம் திசைக்கு ஒன்றாய் ஆடச் செய்து கொண்டிருக்க, பிளாட்பாரத்தில் ரயிலை எதிர்நோக்கி நின்ற தருணத்தில் மணிக்கட்டைச் சுற்றியிருந்த 2 ஆங்குலெம் அடையாளக் காப்புகள் கண்ணில்பட்டன ! ஒருவித நைலான் போலான துணியில் அச்சிட்டு, ஏதோ ஒருவித பொத்தானையும் அதனில் பொருத்தியிருந்தனர் ! அதைக் கழற்ற முனைந்தால் ஊஹூம்...கழற்ற வழியில்லை ! ரைட்டு...ஊருக்குப் போய் பார்த்துக்கலாம் என்றபடிக்கே, கையில் காப்புக் கட்டியவனைப் போல ரயிலில் ஏறி அமர்ந்து பாரிஸ் விமான நிலையத்தினை சென்றடைந்தேன் !

மறுக்கா பாரிஸ் ; இம்முறை பாரிஸ் to டெல்லி டாட்டா குழுமத்தின் விஸ்தாரா ஏர்லைன்ஸில் பயணம் & அங்கிருந்து சென்னை & அங்கிருந்து சிவகாசிக்கு இரவு ரயில் - என்பதை நினைக்கும் போதே கண்ணைக் கட்டியது ! முந்தைய பதிவை கிடைக்கும் அவகாசங்களிலெல்லாம் டைப்பியே பொழுதை ஒரு மாதிரி ஒட்டி, ஞாயிறு அதிகாலை வீட்டுக்குத் திரும்பிய போது திருவாளர் கழுத்தார் கோபித்துக் கொண்டிருந்தார் ! அதன் பின்னான சமாச்சாரங்கள் தான் உங்களுக்கும் தெரியுமே !! 

வாரமும் புலர்ந்து, பணிகளும் மறுக்கா உள்ளிழுத்துக் கொள்ள, பிப்ரவரி புக்ஸ் ; அடுத்தடுத்த வேலைகள் என்று மெது மெதுவாய் யதார்த்தத்துக்குத் திரும்பியிருந்தேன் ! கையிலிருந்த காப்புகள்  மாத்திரமே ஒரு கனவின்  நினைவூட்டிகளாகத்  தொடர்ந்து கொண்டிருந்தன ! 'ரைட்டு..கத்திரி எடு..கச்சக் என்று வெட்டு' என்று கிளம்பிய நொடியில் போன் 'டிங்' என்றது - புதியதொரு மின்னஞ்சலின் வருகையை உணர்த்தி ! பார்த்தால் ஆங்குலெம் நிர்வாகிகளிடமிருந்து ஒரு ஈ-மெயில் : "விஜயன்....you were an exceptional guest ! thank you !" என்றிருந்தது !! கொஞ்ச நேரத்துக்கு அந்த மின்னஞ்சலையே பார்த்துக் கொண்டிருந்த போது, கனவாய் அந்த 3 ஆங்குலெம் நாட்களும் மனதில் ஓட்டமெடுத்தன ! நம்மை வழிநடத்தும் புனித மனிடோவுக்கும், நம்மைத் தாங்கிப் பிடித்து நிற்கும் உங்களுக்கும் ஒரு மானசீக நன்றியைச்  சொல்லி விட்டு, கையிலிருந்த காப்புக்களை பத்திரமாய் வெட்டியெடுத்து பைக்குள் போட்டுக் கொண்டேன் !  வாழ்க்கைப் பயணமானது நம்மை இங்கிருந்து எங்கே இட்டுச் சென்றாலுமே அந்தக் காப்புகளும், அவற்றின் பின்னுள்ள கதைகளும் நம்மை விட்டு அகலாது தானே - so அடுத்த கனவை எதிர்நோக்கிடும் வேளையினில் இவற்றை வாஞ்சையோடு பார்த்துக் கொள்வேன் ! Bye all...see you around ! Have a relaxed Sunday !Wednesday, February 01, 2023

ஒரு பெரும் திருப்பம் !

 நண்பர்களே,

வணக்கம். ஞாயிறு காலை வீட்டுக்குத் திரும்பிய போதே ஒரு பெரும் திருப்பம் நிகழ்ந்திருந்தது & அது என் வலது கழுத்தில் என்பது தான் துயரமே !! ரயிலில் தந்த தலகாணி ரொம்பவே தொத்தல் ரகம் என்பதால் காலையில் எழுந்திருக்கும் போதே கழுத்து ஒரு சைடு லாக் ஆகிப் போயிருந்தது ! ஜன்னல் வழியாய் "ஊர் வந்துடுச்சா ?" என்பதைக் கூட கழுத்தைத் திருப்பிப் பார்த்த பாடில்லை ; about turn என்று முழுசுமாய்த் திரும்பியே பார்க்கும் ஒரு Zombie நிலை ! So "ஆங்குலெம் படலத்தை" சித்தே ஒத்தி வைத்து விட்டு, "அயோடக்ஸ் ஒத்தடப் படலத்துக்குள்" மும்முரமாகிட வேண்டிப் போனது ! இந்த அழகில் கிராபிக் நாவலுக்கு பேனா பிடிக்கும் பணி வேறு காத்திருந்தது ! 

திருப்பூரில் ஒரு புத்தக விழா & சிவகங்கையில் இன்னொரு புத்தக விழா என ஒரே தேதிகளில்  நடப்பதால், நம்மாட்களில் மூவர் ஆங்காங்கே ஜாகை செய்யக் கிளம்பியிருக்க, திங்களன்று ஆபீசுக்குப் போன போது, ஆபீசே காற்று வாங்கிக் கொண்டிருந்தது ! And பிப்ரவரி ரெகுலர் இதழ்களின் பணிகளிலும் சில பல loose ends தொங்கலில் நின்று கொண்டிருந்தன ! ரைட்டு...ஈமு கோழி போல திருகி நிற்கும் இந்தக் கழுத்தின் பாட்டைச் சரி செய்து விட்டு, அப்பாலிக்கா கி.நா.வினை எழுதி முடித்து, அதற்கும் அப்பாலிக்கா அதனை பிரின்டிங் செய்து முடிப்பதற்குள் விடிந்து விடுமென்பது புரிந்தது ! So வேறு வழியின்றி கி.நா.வை சன்னமாய் ஒத்தி வைத்து விட்டு, இம்மாதத்து 2 ரெகுலர் இதழ்கள் + V காமிக்ஸ் இதழுடன் முக்கூட்டணியாய் கூரியர்களைக் கிளப்பியாச்சு ! நாளைக் காலை 3 புக்ஸ் கொண்ட டப்பிக்கள் உங்கள் வீட்டு வாசல்களில் காத்திருக்குமென்று எதிர்பார்த்திடலாம் !  

And இண்டிகேட்டரை எங்கோ போட்டுப்புட்டு, வண்டியை புளியமரத்தின் திக்கில் விடும் அந்த பாணிக்கு V காமிக்ஸ் கூட விதிவிலக்காகிடாது போலும் ! என்னவென்கிறீர்களா ? அறிவித்திருந்த MISTER NO கதையினை தமிழாக்கம் செய்திட கையில் எடுத்த போது தான் புரிந்தது - கோப்புகளில் சின்னதொரு குளறுபடி நிகழ்ந்துள்ளதென்பது ! இத்தொடரில் ஒன்-ஷாட் கதைகளும் உண்டு ; நீஈஈண்டு செல்லும் ஆல்பங்களும் உண்டு ! தொடரின் துவக்கத்தில் நெடும் கதைகளும், பின் பகுதியில் சிங்கிள் கதைகளும் இருக்க, நானோ 4 மாதங்களுக்கு முன்னே இவற்றிற்கு ஆர்டர் செய்திருந்த சமயத்தில், துவக்க நம்பர்களுக்கு ஆர்டர் செய்து தொலைத்திருக்கிறேன் ! And போனெல்லியிலும் அதன்படி கோப்புகளை அனுப்பியிருந்திருக்கின்றனர் ! And நம்மாட்கள் சகலத்தையும் டவுன்லோட் செய்து, 2023-ன் டெக்ஸ் ; ஸாகோர் ; மார்ட்டின் கதைகளின் கத்தைகளோடு சேர்த்து hard disk-ல் பத்திரப்படுத்தி வைத்து விட்டனர் ! 

கிருஸ்துமஸ் & புத்தாண்டு விடுமுறைகள் முடிந்து நமது மொழிபெயர்ப்பாளர்கள் பணிசெய்ய தயாராகித் திரும்பிய  ஜனவரியின் முதல் வாரத்தில், இத்தாலிய மொழிபெயர்ப்புக்கென எடிட்டர் # 900 இந்தக் கதையினை வெளியில் எடுத்த போது தான்,நான் சொதப்பியிருந்த சமாச்சாரமே புலனானது ! என்ன நானே தலையில் குட்டிக் கொள்வதைத் தாண்டி வேறென்ன செய்வதென்று தெரியவில்லை ! ரைட்டு...முட்டுச் சந்தில் எப்போது வேண்டுமானாலும் என்னைக் குமுறிக் கொள்ள உங்களுக்கான வாய்ப்புகளைத் தந்து கொள்ளலாம் தான் ; ஆனால் திடுமென எழுந்துள்ள வெற்றிடத்தினை எவ்விதம் ரொப்புவது ? என்ற கேள்வியோடு எடிட்டர் # 900-ஐ  சந்தித்தேன் ! நிரம்பவே தயங்கியபடியே 'V காமிக்ஸின் நான்காவது இதழினை fasttrack செய்து இரண்டாவது இதழாக்கிடுவோமே ? ; இரண்டுமே ஒரே பக்க எண்ணிக்கை தான் ; ஒரே விலையும் தான் !' என்ற அவனது பரிந்துரை எனக்கு ஓ.கேவாய்ப்பட்டது ! And திட்டமிடப்பட்டிருந்த அந்த ஏப்ரல் இதழின் நாயகர் நமது ராபின் 2.0 தான் ! 

மிகச் சரியாக 200 இதழ்களோடு 'சுபம்' கண்டிருந்த ராபின் தொடரினில், சமீபமாய் ஒரு புதியதொரு creative டீமின் திட்டமிடலில், செம crisp ஆன கதைகள் உருவாகியிருந்தன, with stunning new artwork & அவையுமே நமது பீரோவின் residents ! V காமிக்ஸ்க்கென crisp ஆன கதைகளை எடிட்டர் # 900 கோணியில் பேக் செய்த போது, ராபினையும் தன் பொறுப்பில் எடுத்துக் கொள்வதாகச் சொல்லியிருக்க, நானும் மண்டையை ஆட்டி வைத்திருந்தேன் ! And ஏப்ரல் '23 க்கு முதல் சாகசமான "ப்ளாக்மெயில் பண்ண விரும்பு" வந்திருக்க வேண்டியது ! But எனது கூமுட்டைத்தனத்தின் பலனாய் அது பிப்ரவரிக்கு 'ஜம்ப்' பண்ண அவசியமாகிப் போனது !    

So அடித்துப் பிடித்து, அந்தக் கதையினை ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்து எடிட்டர் # 900 வாங்கித் தர, இரண்டே நாட்களில் அதனை எடிட்டர் # 899 தமிழாக்கம் செய்திடும் நேரத்திற்குள், ராபினின் அட்டைப்படப் பணிகளுக்குள் Team V பிஸியாகிட, பொங்கல் விடுமுறைகளில் போது அரங்கேறிய கூத்துக்கள் இவையே ! ஏற்கனவே வெளியீடு நம்பர் 2 ; bar code எல்லாம் போட்டு அச்சாகியிருந்த MISTER நோ ராப்பர் ஒரு பக்கம் மிளிர்ந்து கொண்டிருக்க, 'ஸ்டிக்கரே சரணம்' என்று உள்ளுக்குள் சொல்லிக்கொண்டேன் ! இதோ - V காமிக்ஸ் டீமின் நான்கே நாட்களின் தயாரிப்பின் அட்டைப்பட first look & உட்பக்க previews ! இங்கே பார்ப்பதைக் காட்டிலும், நேரில் செம தீயாய் தெரிகிறது !Artwork standards மிரட்டல் ரகத்தில் முன்னேறியிருப்பதை நாளெல்லாம் பார்க்கலாம் போலும் - ஒவ்வொரு ப்ரேமும் ஒரு கேமரா அங்கிள் போலிருப்பதைப் பாருங்களேன் ! And கதையைப் பொறுத்தவரைக்கும் ஒரு மொழிபெயர்ப்பாளன் என்ற வகையில் ஒற்றை வார்த்தையோடு முடித்துக் கொள்கிறேன் - 'தெறி' 💥💥 ! 

Finish ஆன புக்கை இன்றைக்கு எடிட்டர் # 900 என் கையில் தர, கோணல் கழுத்தோடு அதை பார்த்த கணத்தில் எனக்கே லைட்டாய் ஒரு 'டர்' - அத்தனை fresh & compact look ! இனி வரும் காலங்களில் இது போலான crisp இதழ்களே உங்கள் மத்தியில் வாசிப்புச் சுலபங்களில் ஸ்கோர் செய்திடுமோ ? என்று பயந்து பயந்து வருது ! Looks & reads fantastic - at least to me ! 

தொடரும் மாதங்களில் "டீம் V" என ஒரு குட்டி அணி ரெடியாகி வருவதால், கொஞ்சம் சிக்கலான மொழியாக்கங்கள் நீங்கலாய் பாக்கி சகலமுமே ஜூனியரின் & his team பொறுப்பினில் இருந்திடவுள்ளது ! So ரொம்பச் சீக்கிரமே - "மேற்பார்வை : முழியாங்கண்ணன்" என்ற பதாகை மாத்திரமே V காமிக்சில் இருக்குமென்று எதிர்பார்க்கலாம் ! And பிப்ரவரியின் V காமிக்ஸ் முதல் பக்கத்தைப் புரட்டும் போதே நீங்கள் பார்த்திடவுள்ளது செம அழகானதொரு ; வித்தியாசமானதொரு முதற்பக்கத்தை ! Youth !! 

மீண்டும் சந்திப்போம் all ; இவ்வார இறுதிக்கு ஆங்குலெம் இறுதிப் பாகமும், போட்டோக்களும், வீடியோக்களும் அரங்கேறிடும் என்பதால், அதற்கு நேரம் ஒதுக்கக் கிளம்புகிறேன் ! Bye for now ....See you around !

P.S : MISTER நோ இடம்பிடிக்காது போனதில் கணிசமான வருத்தம் இருக்குமென்பதை யூகிக்க முடிகிறது ! "3 மாதச் சந்தா செலுத்தியதே பிரதானமாய் அவருக்கோசரம் தான் !" - என்ற எண்ணம் கொண்டிருக்கக்கூடிய  நண்பர்களுக்கு எனது தனிப்பட்ட apologies ! 

இம்மாதத்து ராபினை வாசியுங்கள் ப்ளீஸ் ; பிடித்திருந்தால் சூப்பர் ! Just in case - 'இல்லே....இது ரசிக்கலை...பெட்ரோமாக்ஸ் லைட்டாகவே இருந்தா தேவலாமே ?!' என்று feel ஆகும் பட்சத்தில், MISTER நோ இதழ் வெளிவரும் மாதத்தில் அதனை உங்களுக்கு நமது அன்புடன் அனுப்பிடச் செய்கிறேன் ! இது முழுக்கவே எனது பிழை என்பதால், அதனை நிவர்த்திப்பது அவசியமென்று எண்ணிடும் நண்பர்களிடம் நிச்சயமாய் தர்க்கம் செய்து நிற்க மாட்டோம் ! So ரசித்தால் ராபின் ; "நோ" என்றால் Mister NO ! Chill !!