நண்பர்களே,
வணக்கம். ஞாயிறு காலை வீட்டுக்குத் திரும்பிய போதே ஒரு பெரும் திருப்பம் நிகழ்ந்திருந்தது & அது என் வலது கழுத்தில் என்பது தான் துயரமே !! ரயிலில் தந்த தலகாணி ரொம்பவே தொத்தல் ரகம் என்பதால் காலையில் எழுந்திருக்கும் போதே கழுத்து ஒரு சைடு லாக் ஆகிப் போயிருந்தது ! ஜன்னல் வழியாய் "ஊர் வந்துடுச்சா ?" என்பதைக் கூட கழுத்தைத் திருப்பிப் பார்த்த பாடில்லை ; about turn என்று முழுசுமாய்த் திரும்பியே பார்க்கும் ஒரு Zombie நிலை ! So "ஆங்குலெம் படலத்தை" சித்தே ஒத்தி வைத்து விட்டு, "அயோடக்ஸ் ஒத்தடப் படலத்துக்குள்" மும்முரமாகிட வேண்டிப் போனது ! இந்த அழகில் கிராபிக் நாவலுக்கு பேனா பிடிக்கும் பணி வேறு காத்திருந்தது !
திருப்பூரில் ஒரு புத்தக விழா & சிவகங்கையில் இன்னொரு புத்தக விழா என ஒரே தேதிகளில் நடப்பதால், நம்மாட்களில் மூவர் ஆங்காங்கே ஜாகை செய்யக் கிளம்பியிருக்க, திங்களன்று ஆபீசுக்குப் போன போது, ஆபீசே காற்று வாங்கிக் கொண்டிருந்தது ! And பிப்ரவரி ரெகுலர் இதழ்களின் பணிகளிலும் சில பல loose ends தொங்கலில் நின்று கொண்டிருந்தன ! ரைட்டு...ஈமு கோழி போல திருகி நிற்கும் இந்தக் கழுத்தின் பாட்டைச் சரி செய்து விட்டு, அப்பாலிக்கா கி.நா.வினை எழுதி முடித்து, அதற்கும் அப்பாலிக்கா அதனை பிரின்டிங் செய்து முடிப்பதற்குள் விடிந்து விடுமென்பது புரிந்தது ! So வேறு வழியின்றி கி.நா.வை சன்னமாய் ஒத்தி வைத்து விட்டு, இம்மாதத்து 2 ரெகுலர் இதழ்கள் + V காமிக்ஸ் இதழுடன் முக்கூட்டணியாய் கூரியர்களைக் கிளப்பியாச்சு ! நாளைக் காலை 3 புக்ஸ் கொண்ட டப்பிக்கள் உங்கள் வீட்டு வாசல்களில் காத்திருக்குமென்று எதிர்பார்த்திடலாம் !
And இண்டிகேட்டரை எங்கோ போட்டுப்புட்டு, வண்டியை புளியமரத்தின் திக்கில் விடும் அந்த பாணிக்கு V காமிக்ஸ் கூட விதிவிலக்காகிடாது போலும் ! என்னவென்கிறீர்களா ? அறிவித்திருந்த MISTER NO கதையினை தமிழாக்கம் செய்திட கையில் எடுத்த போது தான் புரிந்தது - கோப்புகளில் சின்னதொரு குளறுபடி நிகழ்ந்துள்ளதென்பது ! இத்தொடரில் ஒன்-ஷாட் கதைகளும் உண்டு ; நீஈஈண்டு செல்லும் ஆல்பங்களும் உண்டு ! தொடரின் துவக்கத்தில் நெடும் கதைகளும், பின் பகுதியில் சிங்கிள் கதைகளும் இருக்க, நானோ 4 மாதங்களுக்கு முன்னே இவற்றிற்கு ஆர்டர் செய்திருந்த சமயத்தில், துவக்க நம்பர்களுக்கு ஆர்டர் செய்து தொலைத்திருக்கிறேன் ! And போனெல்லியிலும் அதன்படி கோப்புகளை அனுப்பியிருந்திருக்கின்றனர் ! And நம்மாட்கள் சகலத்தையும் டவுன்லோட் செய்து, 2023-ன் டெக்ஸ் ; ஸாகோர் ; மார்ட்டின் கதைகளின் கத்தைகளோடு சேர்த்து hard disk-ல் பத்திரப்படுத்தி வைத்து விட்டனர் !
கிருஸ்துமஸ் & புத்தாண்டு விடுமுறைகள் முடிந்து நமது மொழிபெயர்ப்பாளர்கள் பணிசெய்ய தயாராகித் திரும்பிய ஜனவரியின் முதல் வாரத்தில், இத்தாலிய மொழிபெயர்ப்புக்கென எடிட்டர் # 900 இந்தக் கதையினை வெளியில் எடுத்த போது தான்,நான் சொதப்பியிருந்த சமாச்சாரமே புலனானது ! என்ன நானே தலையில் குட்டிக் கொள்வதைத் தாண்டி வேறென்ன செய்வதென்று தெரியவில்லை ! ரைட்டு...முட்டுச் சந்தில் எப்போது வேண்டுமானாலும் என்னைக் குமுறிக் கொள்ள உங்களுக்கான வாய்ப்புகளைத் தந்து கொள்ளலாம் தான் ; ஆனால் திடுமென எழுந்துள்ள வெற்றிடத்தினை எவ்விதம் ரொப்புவது ? என்ற கேள்வியோடு எடிட்டர் # 900-ஐ சந்தித்தேன் ! நிரம்பவே தயங்கியபடியே 'V காமிக்ஸின் நான்காவது இதழினை fasttrack செய்து இரண்டாவது இதழாக்கிடுவோமே ? ; இரண்டுமே ஒரே பக்க எண்ணிக்கை தான் ; ஒரே விலையும் தான் !' என்ற அவனது பரிந்துரை எனக்கு ஓ.கேவாய்ப்பட்டது ! And திட்டமிடப்பட்டிருந்த அந்த ஏப்ரல் இதழின் நாயகர் நமது ராபின் 2.0 தான் !
மிகச் சரியாக 200 இதழ்களோடு 'சுபம்' கண்டிருந்த ராபின் தொடரினில், சமீபமாய் ஒரு புதியதொரு creative டீமின் திட்டமிடலில், செம crisp ஆன கதைகள் உருவாகியிருந்தன, with stunning new artwork & அவையுமே நமது பீரோவின் residents ! V காமிக்ஸ்க்கென crisp ஆன கதைகளை எடிட்டர் # 900 கோணியில் பேக் செய்த போது, ராபினையும் தன் பொறுப்பில் எடுத்துக் கொள்வதாகச் சொல்லியிருக்க, நானும் மண்டையை ஆட்டி வைத்திருந்தேன் ! And ஏப்ரல் '23 க்கு முதல் சாகசமான "ப்ளாக்மெயில் பண்ண விரும்பு" வந்திருக்க வேண்டியது ! But எனது கூமுட்டைத்தனத்தின் பலனாய் அது பிப்ரவரிக்கு 'ஜம்ப்' பண்ண அவசியமாகிப் போனது !
So அடித்துப் பிடித்து, அந்தக் கதையினை ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்து எடிட்டர் # 900 வாங்கித் தர, இரண்டே நாட்களில் அதனை எடிட்டர் # 899 தமிழாக்கம் செய்திடும் நேரத்திற்குள், ராபினின் அட்டைப்படப் பணிகளுக்குள் Team V பிஸியாகிட, பொங்கல் விடுமுறைகளில் போது அரங்கேறிய கூத்துக்கள் இவையே ! ஏற்கனவே வெளியீடு நம்பர் 2 ; bar code எல்லாம் போட்டு அச்சாகியிருந்த MISTER நோ ராப்பர் ஒரு பக்கம் மிளிர்ந்து கொண்டிருக்க, 'ஸ்டிக்கரே சரணம்' என்று உள்ளுக்குள் சொல்லிக்கொண்டேன் ! இதோ - V காமிக்ஸ் டீமின் நான்கே நாட்களின் தயாரிப்பின் அட்டைப்பட first look & உட்பக்க previews ! இங்கே பார்ப்பதைக் காட்டிலும், நேரில் செம தீயாய் தெரிகிறது !
Artwork standards மிரட்டல் ரகத்தில் முன்னேறியிருப்பதை நாளெல்லாம் பார்க்கலாம் போலும் - ஒவ்வொரு ப்ரேமும் ஒரு கேமரா அங்கிள் போலிருப்பதைப் பாருங்களேன் ! And கதையைப் பொறுத்தவரைக்கும் ஒரு மொழிபெயர்ப்பாளன் என்ற வகையில் ஒற்றை வார்த்தையோடு முடித்துக் கொள்கிறேன் - 'தெறி' 💥💥 !
Finish ஆன புக்கை இன்றைக்கு எடிட்டர் # 900 என் கையில் தர, கோணல் கழுத்தோடு அதை பார்த்த கணத்தில் எனக்கே லைட்டாய் ஒரு 'டர்' - அத்தனை fresh & compact look ! இனி வரும் காலங்களில் இது போலான crisp இதழ்களே உங்கள் மத்தியில் வாசிப்புச் சுலபங்களில் ஸ்கோர் செய்திடுமோ ? என்று பயந்து பயந்து வருது ! Looks & reads fantastic - at least to me !
தொடரும் மாதங்களில் "டீம் V" என ஒரு குட்டி அணி ரெடியாகி வருவதால், கொஞ்சம் சிக்கலான மொழியாக்கங்கள் நீங்கலாய் பாக்கி சகலமுமே ஜூனியரின் & his team பொறுப்பினில் இருந்திடவுள்ளது ! So ரொம்பச் சீக்கிரமே - "மேற்பார்வை : முழியாங்கண்ணன்" என்ற பதாகை மாத்திரமே V காமிக்சில் இருக்குமென்று எதிர்பார்க்கலாம் ! And பிப்ரவரியின் V காமிக்ஸ் முதல் பக்கத்தைப் புரட்டும் போதே நீங்கள் பார்த்திடவுள்ளது செம அழகானதொரு ; வித்தியாசமானதொரு முதற்பக்கத்தை ! Youth !!
மீண்டும் சந்திப்போம் all ; இவ்வார இறுதிக்கு ஆங்குலெம் இறுதிப் பாகமும், போட்டோக்களும், வீடியோக்களும் அரங்கேறிடும் என்பதால், அதற்கு நேரம் ஒதுக்கக் கிளம்புகிறேன் ! Bye for now ....See you around !
P.S : MISTER நோ இடம்பிடிக்காது போனதில் கணிசமான வருத்தம் இருக்குமென்பதை யூகிக்க முடிகிறது ! "3 மாதச் சந்தா செலுத்தியதே பிரதானமாய் அவருக்கோசரம் தான் !" - என்ற எண்ணம் கொண்டிருக்கக்கூடிய நண்பர்களுக்கு எனது தனிப்பட்ட apologies !
இம்மாதத்து ராபினை வாசியுங்கள் ப்ளீஸ் ; பிடித்திருந்தால் சூப்பர் ! Just in case - 'இல்லே....இது ரசிக்கலை...பெட்ரோமாக்ஸ் லைட்டாகவே இருந்தா தேவலாமே ?!' என்று feel ஆகும் பட்சத்தில், MISTER நோ இதழ் வெளிவரும் மாதத்தில் அதனை உங்களுக்கு நமது அன்புடன் அனுப்பிடச் செய்கிறேன் ! இது முழுக்கவே எனது பிழை என்பதால், அதனை நிவர்த்திப்பது அவசியமென்று எண்ணிடும் நண்பர்களிடம் நிச்சயமாய் தர்க்கம் செய்து நிற்க மாட்டோம் ! So ரசித்தால் ராபின் ; "நோ" என்றால் Mister NO ! Chill !!
வந்தாச்சு
ReplyDelete2.
ReplyDeletePresent sir
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteவணக்கம் சார்.
ReplyDeleteTake care of your health sir
ReplyDelete🙏
Deleteகழுத்து வலி? திருஷ்டி கழிஞ்சது. எதுக்கும் ஒருக்கா சுத்திப் போட்டுடுங்க.
ReplyDeleteஅட நீங்க வேற சார்...? நம்ம இந்திய ரயில்வேஸ் மகிமை !!
Deleteஏற்கனவே நானொரு spondylitis பார்ட்டி - கடந்த 16 ஆண்டுகளாய் !
Delete///கழுத்து வலி? திருஷ்டி கழிஞ்சது. எதுக்கும் ஒருக்கா சுத்திப் போட்டுடுங்க.///
Deleteஏற்கனவே கழுத்து வலி... அதுமேல சுத்தியப் போட்டா இன்னமும் வலிக்குமே பரணி..?
சாதாரண சுத்திய போட்டாத்தான் வலிக்கும்.
Deleteஇது திருஷ்டி சுத்தி.
So, வலிக்காது. மயிலிறகால்
தடவிவிட்ட மாதிரி இதமா இருக்கும்.
KOK அது நம்ம ஷெரீஃப். எனக்கும் நிறைய நேரம் இந்த confusion உண்டு. இந்த profile photo பார்த்து.
Deleteபத்து சார் நல்ல பதில்.
டி பி ய மாத்துங்கப்பா...!
Deleteஅறியாப் பசங்க கன்ப்யூஸ் ஆகுறோமில்ல..!
அறியாப் பசங்களா? இல்லே கண்ணுத் தெரியா கிழங்களா?
Delete//இல்லே கண்ணுத் தெரியா கிழங்களா?//
Deleteஇதுதான் உண்மை 😂😂😂
நான் சில நேரங்களில் குழப்பம் அடைந்து உள்ளேன்.... ஆனால் பெயரை பார்ப்பேன்
உள்ளேன் ஐயா..!!
ReplyDeleteவணக்கம் அனைவருக்கும்
ReplyDeleteTake care .Get well soon sir.
ReplyDeleteநன்றி சார் ; பிஸியோதெரபிய நம்பினோர் கைவிடப்படேல் ! கொஞ்சம் கொஞ்சமாய் நிவாரணம் கிட்டி வருது !
DeleteAs a Robin fan Feb looks to be a loot for me ;-)
ReplyDeleteஅந்தச் சித்திரங்களுக்கே சொத்தெழுதித் தரலாம் சார் ! Simply stunning !
Deleteஉண்மை சார்...அழகு
Deleteஆட்டுக்கால் சூப் அடிச்சா கழுத்துவலிலாம் பறந்துடாதுங் சார்???😉
ReplyDeleteஉள்ளூரில் அம்மன்கோவில் கும்பாபிஷேகம் சார் ; ஆடு...சூப் ...என்று ஆரம்பித்தால் நம்மளை சூப் போட்டுப்புடுவாங்க !
Deleteராபினை வரவேற்கிறேன்....
ReplyDeleteதீபாவளி ராபின் செம கதை...!! திடீர் நூடுல்ஸ்கள் கூட சமயத்தில் பலே போட வைக்கும்....! இம்முறையில் எப்படினு பார்த்துடலாம்!
இந்த முறை எப்படி என்று பார்த்து விடலாம்.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteராபின் நிச்சயம் சாதிப்பார் என நம்பலாம் சித்திரங்கள் அருமை
ReplyDeleteவணக்கம் நண்பர்களே 🙏
ReplyDelete////Artwork standards மிரட்டல் ரகத்தில் முன்னேறியிருப்பதை நாளெல்லாம் பார்க்கலாம் போலும் - ஒவ்வொரு ப்ரேமும் ஒரு கேமரா அங்கிள் போலிருப்பதைப் பாருங்களேன் ! ////
ReplyDeleteராபின் 2.0 சித்திரங்களின் சாம்ராட்டாக இருப்பார் போலிருக்கே...
இந்த NYPD ஆபீசரின் கதைகளை இத்தனை சித்திர தரத்துடன் வெளியிடப்போகும் V காமிக்ஸ்க்கு நெஞ்சார்ந்த நன்றிகள்..!
V காமிக்ஸ் ரெண்டே மாதங்களில் நம்ம வீட்டு. காமிக்ஸ் ஆகிவிட்டது...😍
// V காமிக்ஸ் ரெண்டே மாதங்களில் நம்ம வீட்டு. காமிக்ஸ் ஆகிவிட்டது...😍 // ஆமாங்க
Delete///ஞாயிறு காலை வீட்டுக்குத் திரும்பிய போதே ஒரு பெரும் திருப்பம் நிகழ்ந்திருந்தது & அது என் வலது கழுத்தில் என்பது தான் துயரமே !!///
ReplyDeleteஜனவரியில இருந்தே சந்தோசமான விசயங்களையே பாத்துக்கிட்டு வந்ததால ஏற்பட்ட கண்திருஷ்டி.. இந்தக் கழுத்து வலியோட சேர்ந்து காணாமப் போயிடும் சார்..!
ராபின் வருவது ரொம்ப சந்தோசங்க சார்.கடைசியா வந்த ரெண்டு ராபினும் செம மாஸ் . கரூர் ராஜசேகரன்
ReplyDeleteவணக்கம் நண்பர்களே!!
ReplyDeleteTake care sir....
ReplyDeleteமேலே நண்பர் சொல்லியபடி கண் பட்றுச்சு போல...திருஷ்டி கழிந்தது சார்...ராபினை வரவேற்கிறேன்..
ராபினின் அட்டைப்படமும் சரி...உட்பக்க சித்திரங்களும் சரி பட்டையை கிளப்புகிறது சார்....உங்கள் கூற்றுப்படி கதையும் பட்டையை கிளப்பும் என உறுதியாக நம்புகிறேன்..ஐயம் வெயிட்டிங்..
ReplyDeleteஅலுவலகம் முடிந்து இன்று மாலை இல்லம் திரும்பும் பொழுது இதழ்கள் காத்திருக்குமா ஆவலுடன் காத்திருக்கிறேன்..
No problem. Send Robin. Take care of ur health sir
ReplyDeleteTake care sir.. ராபின் சித்திரங்கள் அள்ளுகிறது.. மிஸ்டர் நோ வரவில்லை என வருத்தம் எல்லாம் பட மாட்டோம்.. அந்த ஆரம்ப கால series மொத்தமாக எப்போ வரும் என்று தான் கேட்போம் :)
ReplyDeleteநல்ல கேள்வி. ஆமா ஒரு ஸ்பெஷல் புக் போட்டு அதை தொடங்கி விட்டு பிறகு V காமிக்ஸ் இல் Mr. No வரட்டும்.
Deleteநீண்ட நேர விமானப் பயணம் நமக்கு தரும் இலவச இணைப்பு கழுத்து வலி.
ReplyDeleteநான் இங்கிருந்து அமெரிக்கா சென்ற போதும், திரும்பி வந்த போதும் எனக்கு இரண்டு நாட்களுக்கு கழுத்து வலி இருந்தது.
ஜெட் லாக்குடன், நெக் லாக்கும் இணை பிரியா தோழனாக இருந்தது.
Take care சார்.
ReplyDeleteராபின் அட்டைப்படம், உள் பக்க சித்திரங்கள் செம்ம. ஆவலுடன் காத்திருக்கிறேன்.
எப்படியோ புத்தகங்கள் கிளம்பி விட்டன. எனக்கு இந்த மாதம் கிராஃபிக் நாவல் வாரதது தான் வருத்தம் சார்.
ReplyDeleteஎப்படியும் அடுத்த மாதம் வந்து விடும் என்பதால் இப்போதைக்கு இந்த 3 புத்தகங்களை படித்துக் கொள்கிறேன்.
இந்த மாதமும் முதலில் V காமிக்ஸ் தான்.
திருவிழா ஆரம்பம்...
@Edi Sir..😍😘😃
ReplyDeleteஇனிய பிப்ரவரி வணக்கங்கள் 🙏💐
@Edi Sir..😍😘😘
ReplyDeleteவிரைவில் கழுத்துவலி சரியாகி *பழைய பன்னீர் செல்வமா* வர இறைவனை வேண்டுகிறேன்..🙏💐
Hi..
ReplyDeleteவணக்கம் ஆசிரியர் சார்,
ReplyDeleteதிருப்பூர் புத்தகத் திருவிழாவில்
குழந்தைகளுக்கான புத்தகங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
மேலும் "smashing 70s" இருப்பு உள்ளதும்,
அதை சில வாசகர்கள் வாங்கி மகிழ்வதும் மகிழ்ச்சி.
ஆனால், நம் ஸ்டாலுக்கு வருகை தந்த பழைய வாசகர்கள் மிகவும் எதிர்பார்த்தது இந்த வேதாளரையே சார்.
எல்லா காமிக்ஸ் நாயகர்களும் இருக்க, வேதாளர் மட்டும் கிடைக்காதது அவர்களுக்கு வருத்தமும் ஏமாற்றமும். இதில் சில வாசகிகளும் அடக்கம்.
மீண்டும் ஸ்டாக் இல்லாததற்கு நிறைய காரணங்கள் இருக்கலாம்.
அட்லீஸ்ட் நல்ல புத்தகத்திற்கு கிடைக்கும் வரவேற்பை வைத்து, மறுபடியும் ரீ பிரிண்ட் செய்ய வேண்டும் என்பது என் கருத்து.
கோவை, ஈரோடு, சேலம் என அடுத்தடுத்து வரும் புத்தக திருவிழாக்களில் வேதாளரை ஸ்டாக் வைத்து, வேதாளரை எதிர்பார்த்து வரும் பழைய காமிக்ஸ் வாசகர்களையும் திருப்திப்படுத்த வேண்டும்.மேலும்
இரும்புக்கை மாயாவி போலவே வேதாளரையும் சிறு புத்தகங்களாக போட்டால், முத்து காமிக்ஸில் வேதாளர் இல்லாத குறை நிரந்தரமாக நீங்கும். கண்டிப்பாக வரவேற்பும் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. பரிசீலிக்கவும் சார்.
//இரும்புக்கை மாயாவி போலவே வேதாளரையும் சிறு புத்தகங்களாக போட்டால், முத்து காமிக்ஸில் வேதாளர் இல்லாத குறை நிரந்தரமாக நீங்கும். கண்டிப்பாக வரவேற்பும் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. பரிசீலிக்கவும் சார்.//
DeleteYes, Sir!
// இரும்புக்கை மாயாவி போலவே வேதாளரையும் சிறு புத்தகங்களாக போட்டால், முத்து காமிக்ஸில் வேதாளர் இல்லாத குறை நிரந்தரமாக நீங்கும். கண்டிப்பாக வரவேற்பும் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. பரிசீலிக்கவும் சார். //
Delete+1
// இதில் சில வாசகிகளும் அடக்கம். //
DeleteWow! Super! வேதாளர் Rocks!!
Sir online listings please......
ReplyDelete51st
ReplyDeleteவிஜயன் சார்,
ReplyDeleteகுட்டி கரணங்களுக்கு V காமிக்ஸும் விதிவிலக்கல்ல என்பதை பதிவை படித்தவுடன் புரிந்து கொண்டேன்! ஆனால் உங்களின் இந்த திடீர் குட்டி கரணங்களை மிகவும் ரசிக்கிறேன், ஆமாம் ஒவ்வொரு முறையும் இது போல நீங்கள் குட்டி கரணங்கள் அடிக்கும் போது மிகவும் சிறந்த புத்தகங்களே வந்துள்ள; இந்த முறையும் அதுவே நடக்கும் என்ற ஆவலுடன்.
மிஸ்டர் நோவின் பெரிய கதைகள் இருக்கிறது என்றால் அவைகளை மைக் கதைகளுக்கு பதில் வெளி இட முடியுமா? கடந்த மாதம் வந்த மைக் கதை எனக்கு பிடிக்கவில்லை! இதனை சொல்லுவதற்கு வருந்துகிறேன்!
"ப்ளாக்மெயில் பண்ண விரும்பு" அட்டைப்படம் அருமை! ஆனால் கதையின் தலைப்பை இன்னும் சிறப்பாக வேறு எழுத்துரு கொண்டு எழுதி இருக்கலாம்!
உடம்பை நன்றாக கவனித்து கொள்ளுங்கள் சார்! நன்றாக ஓய்வூ எடுத்துவிட்டு புத்துணர்வுடன் திரும்பி வாருங்கள் சார்!
// டீம் V" என ஒரு குட்டி அணி ரெடியாகி வருவதால், கொஞ்சம் சிக்கலான மொழியாக்கங்கள் நீங்கலாய் பாக்கி சகலமுமே ஜூனியரின் & his team பொறுப்பினில் இருந்திடவுள்ளது ! So ரொம்பச் சீக்கிரமே - "மேற்பார்வை : முழியாங்கண்ணன்" என்ற பதாகை மாத்திரமே V காமிக்சில் இருக்குமென்று எதிர்பார்க்கலாம் //
சூப்பர்! நல்ல செயல்!
ப்ளைட்ல பக்கத்து வரிசையில உக்காந்திருந்தவங்க ரொம்ப அழகான பொண்ணா இருந்திருக்கலாம்தான். ப்ரான்ஸ்ல ஆரம்பிச்சு துபாய் வரைக்கும் அசையாம கொள்ளாம பாப்பானேன்?
ReplyDeleteஇப்ப கழுத்து வலின்னு அவஸ்தைப்படுவானேன்?
;-)
டேக் கேர் ஸார்!
ராபின் ஓகேதான்!
அக்காங். இது தான் விசயமா.
DeleteTake care sir
ReplyDeleteராபின் அட்டைப்படம் அழகாக உள்ளது.சமீப சுமார் ரக ராபின் கதைகளுக்கு நல்லதொரு நிவாரணமாக புது டீம் கதைகள் அமையும் என எதிர்பார்க்கிறேன்.
ReplyDeleteஅருமையாக உள்ளது GP படித்து விட்டு சொல்லுங்கள்.
Deleteடியர் விஜயன் சார்,
ReplyDeleteஅட்டகாஷ்!!!
V காமிக்ஸ் அட்டை டூ அட்டை மனதை அள்ளுகிறது...
பார்சலை பிரித்தவுடனே டெக்ஸ் வரும் மாதங்களில் எல்லாம் முதலில் டெக்ஸை படித்துவிட்டுதான் பிற காமிக்ஸை திரும்பி பார்ப்பேன்..
ஆனால், தொடர்ச்சியாக இரு மாதங்களாக பார்சலை பிரித்தவுடன் முதலில் படிப்பது நம்ம V காமிக்ஸ் தான்..
V for victory...
சொல்லி அடித்த கில்லி..
பாராட்டுகள் V காமிக்ஸ் எடிட்டருக்கு...
உண்மையே சகோ
Delete60.
ReplyDeleteசார் அடுத்த மறுபதிப்பு லிஸ்ட்ல ராபின் நோட் பண்ணி வச்சுக்குங்க .முன்பதிவுக்கு ஒரு ராபின் குண்டு புக்o.k.சொல்லுங்க.ப்ளீஸ்..கரூர் ராஜ சேகரன்
ReplyDelete""""'''ராபினை வாசியுங்கள் ப்ளீஸ் ; பிடித்திருந்தால் சூப்பர் ! Just in case - 'இல்லே....இது ரசிக்கலை...பெட்ரோமாக்ஸ் லைட்டாகவே இருந்தா தேவலாமே ? "'''''''
ReplyDeleteஎன்ன இப்படி சொல்லிடீங்க எடிட்டர் சார்.
நாம இப்படியா பழகிருக்கோம்.
ராபின் எங்களுக்கு இன்ப அதிர்ச்சி.
எங்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்ததால உங்களுக்கு பனிஷ்மெண்ட்...
இதுக்கு பதிலா மிஸ்டர் நோ வர்றப்ப ரவுண்டு பன் அனுப்புறீங்க. டீலா.
பொக்கிஷ பெட்டி வந்தே விட்டது.
ReplyDeleteமுதலில் படித்தது டிடெக்டிவ் ராபின் தான் அட்டகாசமான கதை. ராபின் 2.0 ஆர்ட் வொர்க் ரொம்பவே நன்றாக இருக்கிறது. கதையும் அருமை,ஜெட் வேகத்தில் பயணிக்கிறது இந்த முறை.
புத்தக உருவாக்கம், அட்டை எல்லாமே அமர்க்களம். நிறைய ஹீரோக்களுக்கு இந்த V காமிக்ஸ் வாய்ப்பு தருகிறது. அதற்காகவே V காமிக்ஸ்க்கு ஜே ஜே.
மொழிபெயர்ப்பு வேறு மாதிரி இருக்கிறது. போகப் போக இதுவும் பழகிவிடும் என்று நினைக்கிறேன்.
ஆக மொத்தத்தில் அருமை.
எனது மதிப்பெண் 9.5/10.
Exactly சார் ; இந்த crisp கதைவரிசைகளோடு sync ஆகும் சுலப பாணியில் தமிழாக்கம் இருந்திட வேண்டுமென்பதில் கவனமாக இருந்தேன் ! No நீட்டி முழக்கல்ஸ் ; நோ க்ளாசிக் நடைஸ் !
Deleteராபின் ஓவியங்கள் முன்பை விட அழகு. வித்தியாசம் தெரிகிறது.
ReplyDeleteராபின் 2.0 இலும் மார்வின்,ஜிம்மி உட்பட எமக்கு பரிச்சயமான அதே டீம் தான் களமிறங்குகிறார்களா சார் ?
Yes நண்பரே..!
DeleteThx sir
DeleteV காமிக்ஸியில் எனது அபிமான ராபின் வருகிறாரா?
ReplyDeleteசந்தோசம் மிகவும் சந்தோஷம். அதுவும் இரட்டிப்பு சந்தோசம்.
மிஸ்டர் நோவுக்காக என் ராபினை நோ என்று சொல்லுவனா? நெவர்
Sir,
ReplyDeleteI think staff have forgotten to send YELLAAM AZHAGE to subscribers. I am a double subscriber and am awaiting two copies.
No sir...Snow White & Yellam Azhage are traveling together this Saturday in a separate courier !
DeleteHi sir
DeleteHow to buy Snow White? Other than subscription?
சமீபத்திய ராபினின் கதைகள் எதுவுமே சோடை போகவில்லை.இந்தக் கதையும் அப்படியே.50வயதைத்தாண்டியராபினின் ஃப்ளாஷ் பேக்காக விரிகிறதுகதை.ஒரு குற்றத்தை புலனாய்வு நடத்தும்ஒருகாவல்துறைடீமின் செயல்பாடுகளையும்குற்றவாளியை மெல்ல மெல்ல நெருங்குவதையும்நேர்த்தியாக மிக அருமையான சித்திரங்களின்மவழியாகக் கண்முன் கொண்டுவரும் இந்தக்கதை v.காமிக்சின்மற்றுமொருசூப்பர் சித்திரவிருந்து.கரூர் ராஜசேகரன்
ReplyDeleteஇன்னொரு சூப்பர் ஹிட். அருமை ராஜசேகர் சார்.
Deleteபறக்க மறந்த பறவைகள்...
ReplyDeleteஅடடே அட்டகாசம் அருமை அற்புதம் என்னனென்ன superlatives இருக்கோ அதை எல்லாம் போட்டுக் கொள்ளுங்கள்.
போன மாத டெக்ஸ் படித்த போது ஏற்பட்ட disappointment ஐ துடைத்து எறிந்து விட்டது இந்த மாத இதழ்.
இந்த கதை எனக்கு கவரி மான்களின் கதையை நினைவு படுத்தி விட்டது. சும்மா தெறி மாஸ். ஒரு காதல் ஜோடியை துரத்தும் ஒரு கும்பல் அதை துரத்தும் இன்னொரு கும்பல் அவர்களுக்கு நடுவில் நமது ரேஞ்சர்கள் . நிறைய character அனைத்துக்கும் நிறைவான ரோல். நான் ரொம்ப ஹேப்பி அண்ணாச்சி.
போட்டுகோங்க 10 க்கு 10.
இப்பொழுது தான் சூடு பிடிக்கிறது சார் 2023.
77வது
ReplyDeleteராபின் இரண்டு பக்கங்களும் மலரும் முதல்பேனலே சொல்கிறது. இது வழக்கமான புத்தக அமைப்பு இல்லையென்று.ஒவ் வொரு பேனலுமே தனித்தன்மையுடன் அமைந்துள்ளது.v.காமிக்ஸ்க்கென்றே உருவாக்கப்பட்ட ஓவியங்கள் போன்றே அமைந்துள்ளது தனிச்சிறப்பு.புஷ்பா தங்கத்துரையின் சிங்(துளசிங்கம்)நாவல் ஒன்றை சித்திரக்கதை வடிவில் படிக்கும் உணர்வு ஏற்படுகிறது.டெக்ஸ் எங்கோ உயரத்தில் சிம்மாசனத்தில் இருக்க சாகோரைக்கீழே தள்ளி விட்டு இரண்டாமிடத்தைப்பிடிக்கிறார் ராபின் . கரூர் ராஜ சேகரன்
ReplyDeleteராபினுடன் ஆல்பி இணையும் முதல் கதை.ஆல்பிக்கென்றுஅமைக்கப்பட்டுள்ள டேக் கேர் பாணி வசன நடைஎனக்குரொம்ப பிடிக்கும்.கரூர்ராஜசேகரன்
ReplyDeleteசாகோர். ராபின் மிஸ்டர் நோமிகவும் நேர்த்தியாக அமைந்துவிட்டது வி காமிக்ஸின் வழித்தடம். வி காமிக்ஸ் ஆக்சன்,மற்றும் ரெகுலர் ஹீரோக்களின் கிராஃபிக் நாவலாக வடிவமைகிறது.புதுமை +புத்துணர்வு வெற்றிப் பாதையில் வி காமிக்ஸ் . கரூர் ராஜ சேகரன்
ReplyDeleteமூன்றே புத்தகங்கள் மூன்றும் நேர்கோட்டு கதைகள் .மூன்றுமே அட்டகாசம் பிப்ரவரி மிகவும் திருப்தி யான மாதம்.கரூர்ராஜசேகரன்
ReplyDeleteஹலோ.. வணக்கம்..
ReplyDeleteஹலோ..
Deleteஅதுசரி..நாலைந்து வரி சே ர்த்து எழுதினால் பதிவிடமாட்டேன் கிறதே..
Deleteகாரணம் என்ன..?ii
V காமிக்ஸின் இரண்டாம் இதழ் simply suberp. இரண்டாம் அதிரி புதிரி ஹிட் தான். ராபின் எதிர்பார்க்கவே இல்லை.இருந்தாலும் எதிர்பார்க்காத விருந்து ருசிக்கும் போல. ருசித்தார் ராபின்.
ReplyDeleteஇரண்டாம் இதழும்.
Deleteப்ளூ கோட்ஸ் இன்று காலை படித்து முடித்தேன். ஒரு நிஜ நிகழ்வை நகைச்சுவையுடன் எவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறார்கள்.
ReplyDeleteமொழிபெயர்ப்பு அருமை பல இடங்களில் சிரித்து விட்டேன்.
ஸ்கூபி தெறிக்க விடுகிறான்.
எனது மதிப்பெண் 9/10
இந்த மாத இதழ்கள் மூன்றுமே முத்துக்கள். ரொம்பவே நிறைவான மாதம் சார்.
அடுத்த மாதம் யங் டெக்ஸ், சோடா, IR$, நம்ம ஜம்பிங் ஸ்டார் வாரே வா. இன்னும் ஒரு நிறைவான மாதம் வருகிறது.
ReplyDeleteஎட்டி விடும் தூரத்தில் லயன் 450 மற்றும் முத்து 500 காத்துள்ளது. அதுகுறித்து இப்போது இருந்தே திட்டமிட்டால் தான் சரியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். ஒரு மைல் கல் தருணங்களை கொண்டாட எல்லோரும் தங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.
ReplyDeleteமுத்து காமிகஸ் இதுவரை 474 இதழ் வந்துள்ளது. விரைவில் 500ஐ நெருங்கவுள்ளது. அநேகமாக அடுத்த வருடத்தில் 2024ல் 500வது இதழ் வெளிவர வாய்ப்பு உள்ளது .ஒரு மெகா மகா குண்டுச் சிறப்பிதழை இப்போதிருந்தே கேட்க ஆரம்பிக்கலாமா நண்பர்களே ?
ReplyDeleteகண்டிப்பாக ஜி
DeleteNBS போல் ஒன்று வரவேண்டும்.
சார் புத்தகங்கள் வாங்கியாச்...அனைத்து அட்டைகளும் சூப்பர்....ராபின்...டெக்ஸ் டாப்...
ReplyDeleteவண்ண ஹாட் லைன் போட்டது போல வண்ணத்தில் டாலடிக்கும் இடையிடை பக்கங்களுக்கும் வண்ணம் தர வாய்ப்பிருந்தா தரலாமே
ராபின் புத்தகம் நேற்று மாலை கை பற்றியாச்சு
ReplyDeleteஅட்டைப்படம் அசத்தல்
எடிட்டர் சார்..
ReplyDeleteடிடெக்டிவ் ராபின் தற்போது 'ஏஜென்ட் ராபின்' என்ற சிறிய மாற்றத்துடன் V-காமிக்ஸில் சாகஸம் செய்வது மகிழ்ச்சியே! 'மிஸ்டர் நோ' அமேஜான் காடுகளில் புகுந்து புறப்பட்டு சாகஸம் செய்பவர் என்பதால் கேப்டன் பிரின்ஸ் சாகஸங்களைப் போலவே இக்கதைகளும் இயற்கையோடு ஒன்றிய சாகஸமாக அமையவிருப்பதில் எங்களுக்கும் 'மிஸ்டர் நோ'வின் அறிமுகம் கண்டிட ஆவல் கூடுகிறது!
நேற்றிரவு புத்தக டப்பி கைக்குக் கிடைத்தது! நள்ளிரவில் ஒரு புரட்டுப் புரட்டியதில்
* சிக்கென்ற சிவப்பு நிற அட்டையாலும், மிடுக்கான புத்தகத் தடிமனாலும், உள்பக்க சித்திரங்களின் நேர்த்தியாலும் முதலில் கவனத்தைக் கவருவது - டெக்ஸ்!
* பளபள அட்டை + புத்தக வடிவமைப்பு + உள்பக்க சித்திரங்களோடு நம்ம V காமிக்ஸ் - கிட்டத்தட்ட டெக்ஸ் புக்கிற்கு இணையாகக் கவன ஈர்ப்பைப் பெறுகிறது! ( இதிலேயும் #900 எடிட்டரின் ஹாட்லைனைக் காணோமே?!!)
அப்புறம் அந்த அட்டை+முதற்பக்க
வித்தியாசம் - அட்டகாசம்!! (யூத்துன்னா யூத்துதேன்!)
* ஸ்கூபி-ரூபி - வழக்கம்போலவே அதே தயாரிப்புத் தரத்துடன்!
இன்றிரவு எனக்கு V-காமிக்ஸுடன் கழியுமென்று நம்புகிறேன்!
//அப்புறம் அந்த அட்டை+முதற்பக்க
Deleteவித்தியாசம் - அட்டகாசம்!//
சொல்ல நினைத்து எழுத மறந்த கதை
ராபின்2.0வி.காமிக்ஸில்ரெகுலராக வருமாங்கசார்.அல்லது சிறப்பிதழாக மட்டுமாங்க சார்.((ராபின் இவ்வருடம் இன்னுமொன்று உள்ளதுங்களாசார்) . கரூர் ராஜ சேகரன்
ReplyDeleteOh yes...வருவார் சார் ...!
Deleteஇன்று பெட்டி கைக்கு வந்தது :-)
ReplyDeletehttps://bit.ly/uc-feb-2k3-ennaval
இந்த மாதம் புத்தகங்கள் முடிந்தது
ReplyDeleteராபின் - 9/10
அருமையான கதை. நல்ல கதை. காட்சிகள் சூப்பர்
டெக்ஸ் - 8/10
நல்ல கதை. வழக்கம் போல் டெக்ஸ் தீம்
நீல கோட் - 7/10
கருத்துகள் இல்லை
ஏஜெண்ட் ராபின் - ப்ளாக் மேயில் பண்ண விரும்பு!
ReplyDelete7.5/10 - கம்மி மார்க்குக்கு காரணம், பின் அட்டையில் ஒரு முக்கிய பேன்ல் போட்டு spoil செஞ்சதுக்கு
பக்கா போலீஸ் இன்வெஸ்டிகேஷன் கதை, அருமையான ஓவியங்கள்.
// 7.5/10 - கம்மி மார்க்குக்கு காரணம், பின் அட்டையில் ஒரு முக்கிய பேன்ல் போட்டு spoil செஞ்சதுக்கு // நானும் நோட் செய்தேன்.
Deleteஹா ஹா... அதனால் தான் பின்னட்டை பேனல் தனை நான் பெரிதாக நோட் செய்வதில்லை....
Delete100/100 ஸாகோர்..😘😘😘😘
ReplyDeleteபந்து மேலே போச்சு....கேட்ச் புடிச்சீங்க ....அப்புறம் என்னாச்சு ?
Deleteஇது அடுத்த மாசம் வெளியாகயிருக்கும் ஸாகோர் கதைக்கான ஸ்கோர் சார்!
Delete'ஸாகோர்'னாலே எப்பவும் 100க்கு100ன்னு இந்த உலகத்துக்குத் தெரியப்படுத்தவே இப்படிப்பட்ட செய்தியை (அறிக்கை'ன்னும் சொல்லலாம்) வெளியிட்டிருக்கார் நம்ம ஜம்ப்பிங் தலீவர்!
மற்ற காமிக்ஸ்களின் விலையேற்றம் பரவாயில்லை... V காமிக்ஸ், 70's போன்றவை.... ஆனால் மாயாவி 100 ரூ மிக மிக அதிகம். 50 ரூபாய் இருந்தபோதே வாங்க தயங்கியதுண்டு. ஆனால் இப்போதைய விலை!!!
ReplyDeleteதமிழ்நாட்டில் கரண்ட்டு பில் அதிகரிச்சது தான் காரணமா இருக்குமோ?!!
Delete@ மகேஷ் திருப்பூர் : //மற்ற காமிக்ஸ்களின் விலையேற்றம் பரவாயில்லை...//
Deleteஅப்டீங்களா சார் ?
அதே பேப்பர் ;
அதே பிரின்டிங் ;
அதே அட்டை ;
அதே பைண்டிங் ;
அதே நிர்வாகச் செலவுகள் ;
பற்றாக்குறைக்கு இன்னொருக்க ராயல்டி &
Book fair-க்கு மாத்திரமே என்ற ஆகச் சின்னதொரு பிரிண்ட் ரன் !
இவை தான் மாயாவிக்கான சூழல்கள் ! கொஞ்சமாய்ச் சொல்லுங்களேன் சார் - மற்ற புக்ஸுக்கான விலையேற்றத்துக்கும், மாயாவிக்கான விலையேற்றத்துக்கும் மத்தியில் நீங்கள் காணும் வேறுபாட்டினை ? சொன்னீர்களெனில் நாங்களும் புரிந்து கொள்வோமில்லையா ?
*96 பக்க புக் - Price : ரூ.100 ; Result : ஓ.கே. !
Delete*128 பக்க புக் - Price அதே ரூ.100 ; Result : Not ஓ.கே.விலை "மிக மிக அதிகம்" !
Why ??
விளக்கங்களிற்கு நன்றி. மற்ற விலையேற்றத்தின் காரணங்களை முன்னமே கூறினீர்கள், மற்றும் மன்னிப்பும் கோரினீர்கள். V காமிக்ஸ் நான் (விலை எனக்கு அதிகப்படியாய்த் தெரிவதால்). ஆனால் மாயாவி 50 ரூபாயிலிருந்து அப்படியே 2 மடங்கு ஜம்ப். அதனால் கூறினேன்
Delete** நான் வாங்குவதில்லை
DeleteRead all three books...all are super...cartoon is special, TeX - 4 groups running and their meeting point is the story, Robin as usual. Good month...
ReplyDelete//.cartoon is special//
Deleteசூப்பர் சார் !
@Edi Sir..😍😘😃
ReplyDeleteஇன்று பதிவுகிழமை 😍😘
இன்று பிரமாண்டமாய் மிகபிரமாண்டமாய் பதிவினை எதிர்பார்க்கிறோம்..😍😘😃🙏❤💐
Tex.சுமாரானசித்திரங்களிலேயே நெறி மாஸாக இருக்கும் கதைகள்.இங்கோ சித்திர அதகளம்.105ம் பக்கத்தில் புறக்கணிக்கப்பட்ட பழமையான சுங்கச்சாவடி யை ரேஞ்சர்ஸ் நெருங்குவதையே 6அழகிய பேனல்களில் அங்குலம் அங்குலமாக. நுணுக்கமாக காட்டுகிறார் ஓவியர்.டெக்ஸ் என்னும் ஒரு மாஸ்ஹீரோவுக்கு உரிய முறையில் செலுத்தப்பட்ட ஒரு மரியாதை" பறக்கமறந்த பறவைகள் " . கரூர் ராஜ சேகரன்
ReplyDeleteசாகோரின் கெண்ட்ரா,டெக்ஸின் ஜோசபின்,ராபினின் க்ளோரியா கண்ணரின் வார்த்தைகளில் சொல்வதென்றால்" அழகு பெண்கள் "என்பதை// வசனத்தில் சொல்லாமல் வதனத்தில்// சொல்லியிருக்கிறார்கள்.கரூர்ராஜசேகரன்
ReplyDeleteசார் இன்று ஆங்குலெம் போட்டோஸ் . கரூர் ராஜ சேகரன்
ReplyDeleteஇன்று பதிவுக்கிழமை ஆசிரியர் சார்.
ReplyDeleteசார் இன்று பதிவுக் கிழமை...
ReplyDeleteஅட, இந்த மாசம் புக் பார்சலை உடைக்கவே இன்னும் முக்கால்வாசி நண்பர்களுக்கு நேரம் கிடைத்த மாதிரித் தெரியக் காணோம் சார் ! அவை தான் சார் பிரதானம் ; பதிவு ; பால்கோவா & all அப்பாலிக்கா தானே !
Deleteஅப்போ இந்த வார இறுதியில் பதிவு என்று சொன்னீர்களே கோபால் கோபால்????
Deleteஆளில்லாத கடையிலே ஆத்துற டீயில் திடம், மணம் ,சுவை இருக்காதுன்னு ஒரு கிரேக்க அறிஞர் சொல்லியிருக்காராம் சார் !
Deleteஆசிரியர் வாழ்க. நாளைக்கு ஞாயிறு. லீவுநாள். மெல்லா எந்திருங்கன்னு சொல்லி இருக்காரு. நா நாளைக்கு சாயங்காலம் எந்திருக்கிறேன்.
Delete@Edi Sir..😍😘
ReplyDelete3 பேரும் இன்னைக்குதான் ஒரு வழியா வந்து சேந்தாங்க Sir..😄😄
இங்கே ST கூரியரின் கிளையில் கிட்டத்தட்ட ஆட்களே லேது என்ற சூழல் - போன மாதம் & இந்த மாதமும் ! இதே போல தொடரின் - மாற்று ஏற்பாடுகளை பார்க்க வேண்டி வரும் போலும் சார் !
Deleteவேறு எதேனும் உருப்படியான கூரியர் suggestions மக்களே ?
@Edi Sir..
DeleteST couriers எப்பாவாவது கரெக்டா வருவாங்க..
சில சமயம் கரெக்டா வரமாட்டாங்க..
இவிங்க எவ்வளவோ பரவாயில்லிங்க..😄
ஆனா இந்த Professional couriers இருக்காய்ங்களே..
ரொம்ப மோசம்.. ரெஸ்பான்சே இருக்காது..
பேசாம இதையும் வடக்கன்ஸ் கிட்ட கொடுத்துட்டா பர்வாயிலீங்..😌
பெங்களூருவி்ற்கு Professional கூரியர் தமிழ்நாட்டில் இருந்து அடுத்த நாளே டெலிவரி செய்கிறார்கள் so far I don't face any issues. ஆனால் இந்த DTDC கூரியர், சிவகாசியில் இருந்து வரும் நமது பெட்டியை 2 நாட்கள் பெங்கருவிற்குள் சுற்றலில் விட்ட பிறகே டெலிவரி செய்கிறார்கள்.
Delete// இந்த DTDC கூரியர், சிவகாசியில் இருந்து வரும் நமது பெட்டியை 2 நாட்கள் பெங்கருவிற்குள் சுற்றலில் விட்ட பிறகே டெலிவரி செய்கிறார்கள்.//
DeleteTrue. For me they take 4days min. This time I received the books within 2days
க்கும்.... DTDCல சரியா வர்லனு STக்கு மாறலாமோனு நினைச்சி இங்க வந்தா அதன் கொடுமை அதற்க்கு மேலா...!!!
Deleteநம்புள்து இரண்டு நாளாக நம்ம ஏரியா DTDC ப்ராஞ் லீவுனால salem ஹப்பிலயே கெடக்காம்.... திங்களாவது வந்திடும்னு மனிடோவை கும்புடுறேன்.....
ST = சுத்த தண்டம் !
Deleteநீங்க எல்லா பரவா இல்லைங்க. இந்தா இருக்குற மதுரைக்கு பொட்டி வந்து, ஒரு வாரமா ஆபீஸ் மூலையில வச்சுட்டு, ஒரு போன் போட்டு தகவலை சொல்லாம, பொட்டி திரும்பவு சிவகாசிக்கே ரிட்டன் ஆயிடுச்சு. ஒரு ST கொரியர் ஆபிசுல ஸ்டாப் கல்யாணமுன்னு ஒரு நாலு நாளு ஆபீல்ல யாருமே கிடையாது.
Deleteநமக்கும் ஏகப்பட்ட துணை இருக்கும் போலயே.....!🤪
Deleteகி.நா.வுக்குப் போட்டியாய் இங்க ஏகப்பட்ட சோகங்கள் புதைந்து கிடக்கும் போலுள்ளதே ?!
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteTex அட்டகாசமான கத.
ReplyDeleteடெக்ஸ் அட்டகாசமான கதை .யெஸ் கதை முழுதும் இருவரது உரையாடலும் ரசிக்கும்படி உள்ளது.சுவாரஸ்யமான மொழிபெயர்ப்பு.கரூர் ராஜசேகரன்
ReplyDeleteடெக்ஸ் அட்டகாசமான கதை யெஸ் பரணிசார் கதை முழுவதும் டெக்ஸும் கார்சனும் ஒருவரை ஒருவர் கிண்டலடிப்பது மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது.மிகவும் ரசித்து மொழி பெயர்த்துள்ளார்ஆசிரியர் . கரூர் ராஜ சேகரன்
ReplyDelete+1 agreed sir
DeleteST courier punaiyathill innamum book varavillai
ReplyDelete@Edi Sir..😍😘
ReplyDelete*"பின்" விளைவுகள் ஜாக்கிரதை*..படிச்சாச்சு..😄
தெறி மாஸ் சார்..👍❤
அங்கேயும் வடக்கன்ஸ் தெக்கன்ஸ் பிராப்ளம்..😃
What a coincidence..😀
போர்க்களத்தில் பொழுதுபோக்கு என்று தலைப்பு வைத்திருக்கலாம் போல..😄
ஸ்கூபியின் சப்ளையர் அட்ராசிட்டி..😀
ஆர்டர் எடுக்கும் லாவகம்..😃
கடைசியில் தமிழ்பட கிளைமாக்ஸ் போல ஸ்கூபியின் டைமிங் சென்ஸ்..
அதனால் வடக்கன்ஸ்க்கு கிடைக்கும் வெற்றி..😍😘😃😀
சீரோ ஹீரோவான வாவ் கதை..
10/10..😘
அடுத்து அண்ணன் டெக்ஸ்..
*பறக்க மறந்த பறவைகள்*..
தெறிக்குது தோட்டாமழை..👍
"பறக்கும் தோட்டாக்கள்"என்று கூட பெயர் வைத்திருக்கலாம் போல..😍
ஒரே விறு விறு.. சுறு..சுறு..
டமால்..டுமீல்..💪
எடுத்தவுடன் கீழே வைக்க முடியாமல் கதையும், கதைகளனும், சித்திரங்களும் அப்படியே உள்ளிழுத்து விடுகின்றன..💪👍👏👌👌👌😍😘😃😀
20/10...
தாராளமாக தரலாம்..👌
@Edi Sir..😍😃
Delete@V காமிக்ஸ்
ராபின்-*ப்ளாக்மெயில் பண்ண விரும்பு* துரத்தல்..விர்ர்ர்ரூம்..🚓
"ஏஜண்ட் ராபினின் அதகளம் ஆரம்பம்" எனப் பெயர் வைத்திருக்கலாம் போல..👍
நியூயார்க் நகர வீதிகளில் அந்த பைக் கார் சேசிங் 🚲🚗🚓நாமே காரில் துரத்துவதுபோல பீல்பண்ண வைக்கிறது.
ராபின் ரணகளம்😎❤
10/10
(இந்தமாத ப்ளூகோட்டுக்கும் ராபினுக்கும் ஒருகனெக்க்ஷன் உள்ளது..
அங்கே வாஷிங்டனுக்கு துரத்தறோம்..😃
இங்கே நியூயார்க்ல விரட்டறோம்..😍😘😃😀)
கிரேக்க அறிஞர் கருத்துக்கள் எங்களுக்குப்பிடிக்காதுங்க சார். .நம்ம கோவை கவிஞர் கவிதை எதுன்னா படிச்சுட்டு இன்னைக்கு பதிவு போட்டுப்போடுங்கசார் . கரூர் ராஜ சேகரன்
ReplyDeleteபதிவு வந்தவுன இதழ்களின் கருத்தை இடலாம் என்றால். இன்று நோ பதிவா சார்...:-(
ReplyDeleteஎனவே....
ReplyDelete*ப்ளாக்மெயில் பண்ண விரும்பு*
ReplyDeleteஇது வரை ஒரு காமிக்ஸ் நாயகர் ஆரம்பம் முதல் இறுதி ஒரே தோற்றத்தில் போல் தான் சாகஸம் செய்து வருவதை பார்த்து உள்ளேன்..( இளம் டெக்ஸ் ,இளம் டைகர் வேறு பாணி ) ஆனால் அந்த பிரபல நாயகருக்கும் வயதாகி ஆக்ஷன் வாழ்க்கையை விட்டு விலகி சிஐடி ராபின் ...ஏஜெண்ட் ராபினாக மாற்றம் பெற்று சாதாரண அலுவல் வேலையில் ப்ளாஸ்பேக்கை அசைபோட்டு சாகஸம் செய்த இந்த புது பாணி கதை சரியாக புது வி காமிக்ஸில் இடம் பெற்று அட்டகாசம் செய்கிறது..அழகான அளவில் ,மாஸான பழைய லயன் முத்து அட்டைப்பட பாணியில் ,அட்டகாசமான சித்திரங்களோடு ,நாயகர் வயது மாற்றம் பெற்றாலும் அதே ஆக்ஷன் , துப்பறியும் பாணியில் என மி கதை பரபரவென நகர்கிறது ஏற்கனவே அறிந்த குள்ளன் ஆல்பி எப்படி ராபின் இடம் அறிமுகம் பெற்று இன்பார்மாராக பணியாற்ற நுழைந்தான் என்பது இந்த கதையில் அறிய முடிந்தது மகிழ்ச்சி..வி காமிக்ஸ்ன் இரண்டாவது இதழும் பட்டையை கிளப்பி விட்டது ..அடுத்த வெளியீடு விளம்பரங்கள் ,நாயகரின் ஹாட்லைன் என அதகளமாய் வீ காமிக்ஸ் வெற்றி அடைந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது..
வாழ்த்துக்கள்..
பின் விளைவுகள் ஜாக்ரதை...
ReplyDeleteப்ளூ கோட் பட்டாளம் விற்பனையில் எப்படியோ ஆனால் என்னை பொறுத்தவரைக்கும் இதுவரை ஒரு இதழ் கூட ஏமாற்றவில்லை என்பதே உண்மை..அதே போல தான் இந்த முறை வெளிவந்த பின்விளைவுகள் ஜாக்ரதை ..ஒரு தீவிர போர்களன் கதையை காமெடியாக கொண்டு போவது என்பது மிகப்பெரிய கடினமான செயல்..ஆனால் அந்த செயலை ப்ளூகோட் பட்டாளத்தின் கதை ஆசிரியரும் சரி ,ஓவியரும் சரி அட்டகாசமாய் செய்கிறார்கள்..அதன் மதிப்பை நமது மொழிஆக்க குழுவினரும் மிக திறம்பட செயல்படுகிறார்கள் என்பது இந்த கதையை வாசிக்கும் பொழுதும் சிரித்து கொண்டே வாசிக்கும் பொழதுமே உணரமுடிகிறது .
பல இடங்களில் வாய்விட்டு சிரிக்க முடிந்தது உண்மை..ஆசிரியர் இதன் மொழி ஆக்கம் கார்வண்ணர் என பகிரங்கபடுத்தாமல் இருந்தால் லயன் மொழிஆக்கத்திற்கும்..கார்வண்ணரின் மொழி ஆக்கத்திற்கும் சிறிது கூட வித்தியாசத்தை உணரமுடியாது....
மலரும் நினைவுகளாய் கதை மலர்ந்தாலும் காமெடி மலராய் அழகாய் பூத்திருக்கிறது இந்த பின்விளைவுகள் ஜாக்ரதை...
பறக்க மறந்த பறவைகள்...
ReplyDeleteஅழகான அட்டைப்படம்..வழக்கத்தை விட தெளிவான ,அசத்தலான சித்திரபாணி ,வழக்கமான அதே அதிரடி டெக்ஸ் பாணி சித்திரக்கதை..,வித்தியாசமாய் கருப்பு வெள்ளை பக்க சித்திரகதையில் வண்ணங்களில் ஹாட்லைன் ,வண்ணங்களில் அடுத்த வெளியீடு விளம்பரங்கள்..குண்டு பக்கங்கள் என மீண்டும் ஒரு பக்கா கமர்ஷியல் ஹிட் டெக்ஸ்...ஆனால் இந்த கதையில் வரும் கதாபாத்திரங்கள் மிக மிக அதிகமாய் தோற்றம் தருவது போல் ஓர் எண்ணம்..ஆனால் அத்தனை கதாபாத்திரங்கள் வருகை தந்தாலும் எந்த குழப்பமும் இல்லாமல் அதே அதிரடி பாணியில் கதை செல்வது கதாசிரியரின் திறமையே...இம்மாதம் வெளிவந்த ப்ளூகோட் பட்டாளம்,டெக்ஸ் ,ராபின் என மூன்று நாயகர்களின் இதழ்களுமே கொஞ்சம் கூட போரடிக்காமல் அட்டகாசமாய் ,விறுவிறுப்பாய் பட்டையை கிளப்பி உள்ளது...
வாழ்த்துகளுடன் பாரட்டுகள் சார்...
இனி நான் ஆவலுடன் காத்திருப்பது பிப்ரவரியில் மார்ச்..
சார் சின்ன பதிவாவது போடலாமே.....தரைக்கு வந்த வானமாய்
ReplyDeleteIrs. ஜேசன் ப்ரைஸ் ஓவியர்தானேங்கசார் . கரூர் ராஜ சேகரன்
ReplyDeleteபதிவில்லாத ஞாயிறு
ReplyDeleteசுகப்பட வில்லையே ஒருவேளை இன்று ஞாயிற்றுக்கிழமை இல்லையா
ஆமா சத்யா
DeleteToday we will reach 6 Million views - Sir please announce a Tex 75 special to celebrate the same !
ReplyDeleteபின்விளைவுகள் ஜாக்கிரதை
ReplyDeleteஇதுவரை நான் படித்த ப்ளூ கோட் பட்டாளம் கதைகளின் விழுந்து விழுந்து சிரிக்கும் அளவுக்கான நகைச்சுவையாக இந்த கதை இல்லை.
மொத்தத்தில் இது ஒரு நிஜ நிகழ்வை நகைச்சுவையாக சித்தரிக்கப்பட்ட கதை. இந்த கதையில் நடக்கும் ஸ்கூபி ரூபி இடையே ஆனா விஷயங்கள் மட்டுமே கற்பனை போலும்.. மற்றவை அனைத்தும் நிஜத்தில் நிகழ்ந்தவையே.
விக்கிப்பீடியாவில் இந்த போர் குறித்து படித்துக் கொண்டிருக்கும் பொழுது பொது ஜனங்களின் பங்களிப்பு குறித்து கடைசியாகவே தெரிவிக்கப் படுகிறது. அதை படிக்கும் வரை பொது ஜனங்களின் பங்களிப்பு குறித்தும் கற்பனையே என்று தான் நினைத்துக் கொண்டிருந்தேன்..
ஆனால் இந்த கதை லாஜிக் இல்லாமல் நடந்த நிஜ நிகழ்வை அப்படியே பிரதிபலிப்பதால் கதையுடன் ஒன்ற முடியாமல் தவித்தேன். என்னடா இது இப்படியெல்லாம் கூட நடக்குமா என்று யோசித்தபடியே இந்த கதையை படித்ததால் இந்த கதை ஒட்டாமல் பயணித்தது.
ஆனால் நகைச்சுவையே வர முடியாத இடத்தில கூட நகைச்சுவையை வர வைத்தது பல இடங்களில்.. விழுந்து விழுந்து சிரிக்க முடியவில்லை.. ஏறக்குறைய கிரேசி மோகனின் தாக்கம் எழுத்துக்களில் தெரிகிறது.. நண்பர் கண்ணன் தன் தனித்துவ அடையாளத்தை சீக்கிரமே எட்டிப் பிடிப்பார் என்பது உறுதி. அநேகமாக அடுத்த ப்ளூ கோட் பட்டாளம் அவர் கைவண்ணத்தில் இருக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறேன்
10/10 விக்கிப்பீடியாவில் படித்த பிறகு
8/10 விக்கிப்பீடியாவை ஆராயும் முன்பு
ஹைய்யா புதிய பதிவு...
ReplyDeleteஎடிட்டரின் அடுத்த பதிவு ரெடி நண்பர்களே!
ReplyDelete