நண்பர்களே,
வணக்கம். நிறைய இன்டர்நெட் பேலன்ஸும், நிறைய-நிறையப் பொறுமையும், உங்களிடம் உள்ளனவாயென்று இந்தப் பதிவினில் புகுந்திடும் முன்பாக சோதித்துக் கொள்ளுங்களேன் - ப்ளீஸ் !!
ஆண்டின் ‘அந்த வேளை‘ ஒரு வழியாய்ப் புலர்ந்து விட்டது !புதுசாய் ஓராண்டுக்கான அட்டவணையைத் தயாரிக்கிறேன் பேர்வழியென்று வண்டி வண்டியாய்க் கதைகளைத் தேடிப் பிடித்துப் படித்துப் பார்த்து என்னையே நிறையக் குழப்பிக் கொள்வது ; ‘இது உண்டா ? இது இல்லியா?‘ என்ற யூகங்களோடு உங்களை மண்டை காயச் செய்வது ; அவ்வப்போது பில்டப்பாய் விடுவது ; என்ற அந்தப் பரிச்சயமான கண்ணாமூச்சியாட்டம் இந்த முறை சற்றே சீக்கிரமே ஆரம்பித்து விட்டது ! அதன் பலனாய் செப்டெம்பர் இறுதியிலேயே தொடரும் ஆண்டுக்கான டைம்-டேபிளை ஒப்படைக்க முடிந்துள்ளது ! நிறைய நாயக / நாயகியர் ; நிறைய ஆர்வங்கள் / எதிர்பார்ப்புகள் ; ஆளுக்கொரு தேர்வு ; ரசனை என்றதொரு சூழலில் அனைவரையும் சந்தோஷப்படுத்த எங்களால் ஆன சகல குட்டிக்கரணங்களையும் அடிக்க முனைந்திருக்கிறோம் ! ஆனால் நூற்றுக்கு நூறென்பதெல்லாம் ரசனைகள் சார்ந்த தேர்வுகளில் சாத்தியம் லேது ! எனும்போது சிற்சிறு மாற்றுக் கருத்துக்கள் இருந்திட வாய்ப்புகளுண்டு என்பதை நாங்கள் அறியாதில்லை ! So உங்கள் 'ஆதர்ஷர்களுள்' யாரேனும் பட்டியலுக்குள் இடம் பிடிக்காது போயிருப்பின், இடமின்மையோ ; விற்பனைகளில் அவர்கள் கண்ட சுணக்கமோ காரணமாக இருந்திடக் கூடுமென்ற அனுசரணையான புரிதலுக்கு எங்களது முன்கூட்டிய நன்றிகள்! இனியும் பில்டப்களுக்கு வேலையுமில்லை ; வேளையுமில்லை என்பதால் - here goes !
நடப்பாண்டின் அட்டவணையில் நாம் செய்த பிரதானமான நல்ல விஷயம் - சந்தா முறைகளை genre-களின் அடிப்படையில் உத்தி பிரித்ததே என்பேன் ! லார்கோவையும், லக்கி லூக்கையும் ஒரே கோட்டில் அணிவகுக்கச் செய்வதை விடவும், லார்கோவுக்கு ஷெல்டனையும், லக்கிக்கு, டாக் புல்லையும் துணை நிற்கச் செய்வதில் நிறைய நலன்கள் இருப்பதாகத் தோன்றுவதால் அதே பாணி காத்திருக்கும் ஆண்டிலும் தொடர்ந்திடவுள்ளது ! ஒரே மாற்றம்- சந்தா பாணிகளின் எண்ணிக்கையில் மாத்திரமே ! A, B, C, D, க்குத் துணையாக சந்தா E-ம் 2017-ல் களம் காண்கிறது!
ஆண்டின் ‘அந்த வேளை‘ ஒரு வழியாய்ப் புலர்ந்து விட்டது !புதுசாய் ஓராண்டுக்கான அட்டவணையைத் தயாரிக்கிறேன் பேர்வழியென்று வண்டி வண்டியாய்க் கதைகளைத் தேடிப் பிடித்துப் படித்துப் பார்த்து என்னையே நிறையக் குழப்பிக் கொள்வது ; ‘இது உண்டா ? இது இல்லியா?‘ என்ற யூகங்களோடு உங்களை மண்டை காயச் செய்வது ; அவ்வப்போது பில்டப்பாய் விடுவது ; என்ற அந்தப் பரிச்சயமான கண்ணாமூச்சியாட்டம் இந்த முறை சற்றே சீக்கிரமே ஆரம்பித்து விட்டது ! அதன் பலனாய் செப்டெம்பர் இறுதியிலேயே தொடரும் ஆண்டுக்கான டைம்-டேபிளை ஒப்படைக்க முடிந்துள்ளது ! நிறைய நாயக / நாயகியர் ; நிறைய ஆர்வங்கள் / எதிர்பார்ப்புகள் ; ஆளுக்கொரு தேர்வு ; ரசனை என்றதொரு சூழலில் அனைவரையும் சந்தோஷப்படுத்த எங்களால் ஆன சகல குட்டிக்கரணங்களையும் அடிக்க முனைந்திருக்கிறோம் ! ஆனால் நூற்றுக்கு நூறென்பதெல்லாம் ரசனைகள் சார்ந்த தேர்வுகளில் சாத்தியம் லேது ! எனும்போது சிற்சிறு மாற்றுக் கருத்துக்கள் இருந்திட வாய்ப்புகளுண்டு என்பதை நாங்கள் அறியாதில்லை ! So உங்கள் 'ஆதர்ஷர்களுள்' யாரேனும் பட்டியலுக்குள் இடம் பிடிக்காது போயிருப்பின், இடமின்மையோ ; விற்பனைகளில் அவர்கள் கண்ட சுணக்கமோ காரணமாக இருந்திடக் கூடுமென்ற அனுசரணையான புரிதலுக்கு எங்களது முன்கூட்டிய நன்றிகள்! இனியும் பில்டப்களுக்கு வேலையுமில்லை ; வேளையுமில்லை என்பதால் - here goes !
நடப்பாண்டின் அட்டவணையில் நாம் செய்த பிரதானமான நல்ல விஷயம் - சந்தா முறைகளை genre-களின் அடிப்படையில் உத்தி பிரித்ததே என்பேன் ! லார்கோவையும், லக்கி லூக்கையும் ஒரே கோட்டில் அணிவகுக்கச் செய்வதை விடவும், லார்கோவுக்கு ஷெல்டனையும், லக்கிக்கு, டாக் புல்லையும் துணை நிற்கச் செய்வதில் நிறைய நலன்கள் இருப்பதாகத் தோன்றுவதால் அதே பாணி காத்திருக்கும் ஆண்டிலும் தொடர்ந்திடவுள்ளது ! ஒரே மாற்றம்- சந்தா பாணிகளின் எண்ணிக்கையில் மாத்திரமே ! A, B, C, D, க்குத் துணையாக சந்தா E-ம் 2017-ல் களம் காண்கிறது!
இந்தத் திட்டமிடலுக்குள் நான் தீவிரமாய்ப் புகுந்த முதல் கணத்தில் தீர்மானிக்க வேண்டியிருந்தது ஆண்டின் மொத்த இதழ்களின் எண்ணிக்கையினையே ! மறுபதிப்புத் தடத்தில் 12 இதழ்கள் + Popular டெக்ஸ் தடத்தில் 12 இதழ்கள் என்று 2016-ல் போட்டுள்ள template-ஐ அட்சரசுத்தமாய் 2017-க்கும் தொடரும் பட்சத்தில் - புது வரவான சந்தா E-க்கென குறைந்த பட்சமான இதழ்களை இணைத்தாலே - மொத்த count 50-ஐத் தாண்டி விடுமென்று புரிந்தது. ஏற்கனவே 48-ல் பட்ஜெட்டும் எகிறிடுகிறது ; வாசிப்பில் பலருக்கும் தேக்கம் நேர்கிறது என்பதில் இரகசியமேது ? தீவிர நண்பர்கள் இதனை மறுப்பார்களெனினும் நிஜம் அதுவே என்பதில் எனக்கு ஐயமிருக்கவில்லை. So வழக்கமான 48+ சந்தா E+ Super 6 என்ற பட்டியல் – 2017-ன் நடைமுறையில் இருப்பின் அதுவே நயமான வாத்து பிரியாணிக்கான recipe ஆகிப் போகுமென்று பட்டதால் - நடைமுறையிலுள்ள ஒவ்வொரு சந்தாக்களிலும் தலா 2 இதழ்களைக் குறைத்திடுவதே வழியென்று புரிந்தது ! ஆக சந்தா A+B+C+D = 40 என்று எழுதிக் கொண்டான பின்பே கதைத் தேர்வுக்குள் புகுந்தேன்! இன்னும் சொல்லப் போனால் - ரெகுலர் சந்தாக்களில் தலா 9 இதழ்கள் என்ற திட்டமிடலோடு - 4 x 9 = 36 + சந்தா E 6 = TOTAL 42 இதழ்கள் என்ற கணக்கையும் போட்டுப் பார்த்தேன்தான் ! ஆனால் ரொம்பவே நாயகர்கள் அடி வாங்குவது போல் தோன்றியதால் அந்தத் திட்டத்தை மூட்டை கட்டிவிட்டேன் !
சந்தா A-ன் பட்டியலுக்குள் பெரிய சிரமங்களின்றி கீழ்க்கண்ட ‘ரெகுலர்களின்‘ பெயர்களை டிக் அடிக்க முடிந்தது !
- லார்கோ வின்ச்
- வேய்ன் ஷெல்டன்
- கமான்சே
- ரிப்போர்ட்டர் ஜானி
- ஜேசன் ப்ரைஸ் (இறுதி பாகம் காத்துள்ளதல்லவா ?)
என்று 5 பெயர்கள் தானாய்த் தேர்வாகிக் கொள்ள, பாக்கி 5 பற்றி மாத்திரமே நான் சிந்திக்க வேண்டி வந்தது ! நடப்பாண்டுக்கும், புத்தாண்டுக்குமிடையே வேறுபாடு காட்டிடல் அவசியமென்று நினைத்தேன் ! So கொஞ்சமேனும் புது இரத்தம் அவசியமென்று தோன்றியதால் எனது தேடல்கள் புது நாயக / நாயகியர் திசையில் ஓடத் தொடங்கியது ! ஏகப்பட்ட மொழிகளின், ஏகப்பட்ட ஹீரோக்களை அலசினேன்... உருட்டினேன் ! ஆனால் புதுவரவுகளுக்கு நம்மால் வழங்கக் கூடிய slot-களின் எண்ணிக்கையில் வந்து நின்ற போது நிறையத் தொடர்கள் அடிவாங்கின ! BATMAN ; வேதாளன் போன்ற popular தேர்வுகளுக்கும் ‘மடியில் 2 இடங்கள்; மனதில் பாக்கி இடங்கள்‘ என்ற டயலாக்கை நான் எடுத்து விட்டால் - "முன்வாசல் அங்கே...பின்வாசல் இங்கே.....! அண்ணாச்சிக்கு வசதி எப்படியோ ? " என்று படைப்பாளிகள் பதில் கேள்வி கேட்கும் ஆபத்துண்டு என்பதால் அந்த முயற்சிகளை நான் துவக்கவேயில்லை ! எஞ்சி நிற்கும் 'என்றும் பசுமையான' ரிப் கிர்பி ; காரிகன் ; சார்லி ; ஜார்ஜ் ஆகியோரைக் கொண்டு நான் பட்டியலமைத்தால் கொட்டாவிகளுக்குப் பஞ்சமேயிராது என்பதிலும் எனக்கு சந்தேகம் இருக்கவில்லை ! பழமையில் நிலைகொண்டு நிற்கும் நண்பர்கள் இதனில் வன்மையாய் மாறுபடலாம் ; ஆனால் காலத்துக்கு ஒவ்வாக் கதைகள் காவியங்களாகவே சில அளவுகோல்களில் காட்சியளிப்பினும் - அவற்றிற்கு முன்னுரிமை வழங்குவது முன்செல்லும் பயணத்துக்கு உகந்ததல்ல என்பதில் எனக்குள் குழப்பமில்லை ! So நூற்றுக்கணக்கான / ஆயிரக்கணக்கான கதைகள் என்ற excess baggage இல்லாத, – நமது தற்போதைய ரசனைகளுக்கு நியாயம் செய்திடக் கூடிய தொடர்கள் பக்கமாய் பார்வையை ஓடவிட்ட போது shortlist ஆனோர் 5 நாயக / நாயகியர் ! அவர்களது தொடர்களைப் பொறுமையாய் பரிசீலிக்கத் துவங்கியதே எனது அடுத்த பணியாக இருந்தது. நாம் பரிசீலித்தால் மாத்திரம் போதுமா ? படைப்பாளிகளின் எதிர்பார்ப்புகளை நம்மால் பூர்த்தி செய்திட முடிந்தால் மட்டும் தானே தேர் எல்லையை விட்டு நகரும் ? So அவர்களது ராயல்டி அளவுகோல்களில் நாம் அடிவாங்கும் தருணங்களில் – “சீச்சீ... எனக்கு ஜல்ப்பு புடிச்சிருக்கு... புளிப்பான இந்தப் பழம் தொண்டையைப் பதம் பார்த்து விடுமே !!” என்று கெத்தாக சுனா.பானா பாணியில் ஜகா வாங்கிடவும் அவசியமானது !
To cut a long story short – LADY S தொடரானது நமது திட்டங்களுக்கு ரொம்பவே வாகான தேர்வாய்த் தோன்றியது ! டாப் கதாசிரியர் வான் ஹாம்மேவின் ஆக்கம் ; இன்றைய நவீன உலகைச் சார்ந்த (புராதனமிலாக்) கதைக்களம் ; அதே சமயம் தொடரில் இதுவரையுள்ளதே சுருக்கமான கதையெண்ணிக்கை (14 ஆல்பம்கள்) என்று நமக்கு சாதகமான சகல பெட்டிகளையும் டிக் அடிக்க LADY S-க்கு சாத்தியமானதால் அவருக்குத் தலையசைத்தேன் ! துவக்கக் கதை – 2 பாகங்கள் கொண்டதென்பதால் ‘விடைகொடு ஷானியா‘ டபுள் ஆல்பமாகத் திட்டமிட்டேன் ! தொடரும் சாகஸம் one shot சிங்கிள் ஆல்பம் என்பதால் ‘சுடும் பனி‘ fix ஆகிப் போனது. ஆக 5+2 என 7 இதழ்கள் உறுதியான நிலையில் - நமது fantasy நாயகர் ஆஜானுபாகுவாய் என் முன்னே நின்றார் மிரட்டலாய் ! 2016-ல் சந்தா Z-ல் தோர்கலை இணைக்கலாம் என்ற எண்ணத்தில் mainstream சந்தாவில் அவருக்கு இடம் தராது போக ; பின்னர் சந்தா Z டீலில் விட்டுப் போக - 2016-ல் இந்த lovable நாயகருக்கு இடமின்றிப் போனது ! அந்தத் தவறை திரும்பவும் செய்திட வேண்டாமென்ற முன்ஜாக்கிரதையில் இன்னொரு சிங்கிள் ஆல்பம் + டபுள் ஆல்பம் என்ற தொகுதி உடன்படிக்கை போட்டு விட்டேன் - தோர்கலோடு ! ஆக 7+2 = 9 இடங்கள் பூர்த்தியான நிலையில் எஞ்சியது ஒரே ஸ்லாட் தான்! அந்த வெற்றிடத்தை நிரப்பிட வருகிறார் ட்யுராங்கோ! இவருமொரு ப்ராங்கோ- பெல்ஜியக் கௌபாயே ! ஒற்றைக் கழுகு....குறைவாய்ப் பேச்சு / நிறைவாய் செயல் என்பதில் நம்பிக்கை கொண்டவர் ; இவருக்குமே ஒரு கை செயலற்றுப் போக - இடதுகையே இவரது சாதிக்கும் கரம் ! THE GREAT SILENCE என்றதொரு இத்தாலிய கௌபாய் திரைப்படத்தை சார்ந்த முதல் ஆல்பத்தோடு துவங்கும் இந்தத் தொடர் - The Good, the Bad and the Ugly ; "Once Upon a Time in the West" போன்ற 'ஹிட்' ஹாலிவுட் திரைப்படங்களை ஆங்காங்கே தொட்டுச் செல்லுமொரு கிளாசிக் western ! பிரபல ஓவியர் Yves Swolfs-ன் கைவண்ணத்தில், வண்ணத்தில் மிளிரும் இந்தத் தொடரில் 17 ஆல்பங்கள் மட்டுமே உண்டு என்பதால் ஆண்டாண்டு காலமாய் இவரைக் கொண்டு ஜவ்வு இழுக்கப் போவதில்லை நாம் ! அது மட்டுமன்றி - முத்து 45-வது ஆண்டுமலரின் பொருட்டு ஏக் தம்மில் இவரது முதல் 4 ஆல்பங்களும் ஒரே edition ஆக வரவுள்ளது ! So அறிமுகமே 4 சாகசங்கள் ஒன்றிணைந்ததொரு அதிரடி ஆல்பத்தில் ! ‘சத்தமின்றி யுத்தம் செய்‘! 2017-ன் முதலிதழ் ஆன பின்னணி இதுவே ! So இதழ்களின் எண்ணிக்கையானது 10-ல் நின்றாலும், கதைகளின் எண்ணிக்கையில் வழக்கமான 12-ஐத் தாண்டியிருக்கும் 2017-ன் சந்தா A -வினில் ! Here are the visuals !
- இருப்பதே 10 இடங்கள் ; இதனில் இரவுக்கழுகாருக்கு எத்தனை ?
- இதர போனெல்லி crew-க்கு எத்தனை ?
- சமீபமாய் சாதித்த மர்ம மனிதன் மார்ட்டினுக்கு என்ன கௌரவம் ?
- மெகா சைஸில் ஏதேனும் ?
- டெக்ஸ் கதைகளில் சிங்கிள் எத்தனை ?டபுள் எத்தனை ?
- 650 + கதைகள் கொண்ட டெக்ஸ் தொடரில் எதைத் தேர்வு செய்வது ?
என்று எக்கச்சக்கப் பாய்ப்பிறாண்டல்கள் இங்கே அவசியமாயின ! படித்தேன்... புரட்டினேன்... பக்கம் பக்கமாய் ஒரு லோடுக் கதைகளை ! இறுதியாய் ஒரு தீர்மானத்துக்கு வந்த போது - இரவுக் கழுகாருக்கென 8 ஸ்லாட்கள் & 9 கதைகள் ஒதுக்கிட முடிந்திருந்தது ! அவற்றுள் போனெல்லியின் நாவல் காமிக்ஸின் பிரதிநிதிகளாக ‘ஒரு தலைவன் ... ஒரு சகாப்தம்‘ + ‘Frontiera‘ வண்ணத்தில் – மெகா சைஸில் ஒரே இதழாகக் கைகோர்க்கின்றன- தீபாவளி மலராக ! ("மெகா சைஸ்" எனும் போது- அது ‘தலையில்லாப் போராளியின்‘ அளவென்பதை நினைவு கூர்க!) Tex கதைத் தேர்வுகளுக்குள்ளேயும் இயன்றளவு variety காட்டிட முனைந்திருக்கிறேன் ! புதுயுகக் கதாசிரியர்களின் கதைக்களங்கள் ; golden era -விலிருந்தும் சரிசமமான தேர்வுகள் என்று ‘தல‘ தாண்டவத்தின் பொருட்டு என் தலையை இயன்றமட்டிலும உருட்டியுள்ளது ஆண்டின் போக்கின் போது நிச்சயம் புரியும் ! சந்தா D-ன் மறுபதிப்புப் பட்டியலில் ஓரிடத்தை ‘மரணத்தின் நிறம் பச்சை‘க்கெனவும் ஒதுக்கியிருப்பதால் - 9+1=10 என்றாகிறது இரவுக்கழுகின் கதை எண்ணிக்கை ! ஏற்கனவே Super 6-ல் உள்ள ‘டிராகன் நகரத்தையும்‘ சேர்க்கும் போது total 11 எனும் போது - 2017-லிலும் பிரத்யேக Tex தடம் தொடர்வது புரிந்திடும் ! மர்ம மனிதன் மார்ட்டினுக்கொரு Mystery Special – 2 கதைகளுடன் ; டைலன் டாக்கிற்கொரு இடம் ; ஜுலியா & ராபினுக்கு லயன் # 300-ல் இடங்கள் என இதர போனெல்லி பெருமக்களை இங்கும், அங்குமாய் நுழைக்க எத்தனித்திருக்கிறேன் ! நமது ‘தல‘ வழிவிட்டாலன்றி மற்றவர்களுக்கு அதிக இடஒதுக்கீடுகள் சாத்தியமாகாது என்பது நிச்சயம் உங்களுக்கும் புரிந்திருக்குமென்று நம்புகிறேன் folks ! Maybe 2018-ல் நமது மஞ்சள் சட்டை மாவீரரை சற்றே cool off செய்திட ஏகோபித்த அனுமதி கிடைப்பின் - ஓரளவுக்கு சமவிகிதப் பங்கீட்டைப் பரிசீலனை செய்திடலாம் ! ஆனால் ஜெயிக்கும் குதிரைக்கு ஓய்வளிக்க இப்போதைக்கு அவசியம் தோன்றிடவில்லை என்பதால் Tex rocks on ! இறுதியாய் இருந்ததொரு இடத்திற்குள் தலைநுழைக்க ஜடாமுடி மேஜிக் விண்டுக்கும் - நமது இளவரசிக்குமிடையே தான் போட்டியிருந்தது ! விற்பனையில் கடைசியிடம் பெற்ற dubious distinction மேஜிக் விண்டிற்கு எதிராகச் சதி செய்திட- கல்தா அவருக்கும் ; சீட் இளவரசிக்கும் கிடைக்கிறது ! அதுமட்டுமன்றி, நமது லயனின் பயணத்தைத் துவக்கி வைத்த இளவரசி – 300-வது இதழ் எனும் மைல்கல்லிலும் இடம்பிடிப்பது ஒரு விதத்தில் பொருத்தமே என்று பட்டதால், இத்தாலியக் கூட்டத்தோடு நமத பிரிட்டிஷ் இளவரசியையும் கரம் கோர்க்கச் செய்ய நினைத்தேன் ! So மாடஸ்டியின் ‘சிறையில் ஒரு சிட்டுக்குருவி‘ மடிப்பாக்கத்திலும், இன்னபிற மா.மு.க. தொகுதிகளிலும் மைசூர்பாகு விநியோகத்துக்கு வழிவகுக்கும் வாய்ப்பு உருவான கதை இதுதான் ! மேஜிக் விண்டைப் பொறுத்தவரை இது end of the road அல்ல ! சின்னதொரு இடைவெளிக்குப் பின்பாக மீண்டு(ம்) வருவாரென்று எதிர்பார்க்கலாம்!
Next Stop – சந்தா C ! எனது ஆதர்ஷக் கதைக்களங்கள் துளி கூடச் சிரமம் தராது தம்மைத்தாமே தேர்வு செய்து கொண்டன ! எப்போதுமே விற்பனையில் உச்சத்தில் நிற்கும் ஒல்லிப் பிச்சான் லக்கி லூக்குக்கு 2 இடங்கள் என்று ஆரம்பித்த பட்டியல் கீழ்க்கண்டவாறு ஓடியது!
சிக்பில் – 1
க்ளிப்டன் – 1
மதியில்லா மந்திரி – 1
பென்னி – 1
ரின்டின்கேன் – 1
2016-க்கு ஆட்டத்தில் சேர்க்கப்பட்டிரா ப்ளுகோட் பட்டாளத்தின் பட்டையைக் கிளப்பும் சாகஸமொன்றும் இம்முறை தயாராக நிற்க - பட்டியலின் எண்ணிக்கை 8-ஐத் தொட்டது - அவர்களது இணைப்போடு ! நமது நீலப் பொடியர்கள் SMURFS-க்கு மீதமிருந்த 2 இடங்களையும் ஒப்படைத்த போது சுலபமாய் ‘சுப மங்களம்‘ போட முடிந்தது கார்ட்டூனின் கதைத் தேர்வுகளுக்கு ! நவம்பரில் வரவிருக்கும் லியனார்டோ தாத்தா சூப்பராய் ஸ்கோர் செய்திடும் பட்சத்தில் ஸ்மர்ப்ஸ் -1; லியனார்டோ -1 என்று பங்கு பிரித்திடலாம் ! தாத்தாவின் செயல்பாடு so so என்றிருப்பின் ஸ்மர்ப்ஸ்கள் 2 இடங்களைத் தக்க வைத்துக் கொள்வார்கள் ! இவர்கள் தவிர, இன்னமும் 2 கார்ட்டூன் தொடர்களையும் தீவிரமாகவே பரிசீலனை செய்தேன் ! ஆனால் கிட்டத்தட்ட 80 கதைகள் கொண்ட லக்கி லூக் தொடர் ; 70 கதைகள் கொண்ட சிக் பில் ; 35+ ஆல்பம்கள் கொண்ட க்ளிப்டன் ; 67 ஆல்பம்கள் கொண்ட ப்ளுகோட் பட்டாளம் என்ற நடப்பு நாயகர்களுக்கிடையே மேற்கொண்டும் புதுசாய் 30/40 கதைகள் கொண்ட தொடர்களை கோர்த்து விட மனம் ஒப்பவில்லை ! So சந்தா C தொடர்கிறது அதே நாயகர்களோடு – ஆனால் அட்டகாசமான கதைகளோடு ! Here they are...!
- மின்சாரக் கையாருக்கு – 2
- மொட்டைத்தலை சகா கொண்டவருக்கு – 2
- பூப்போட்ட Jockey போட்டவருக்கு – 2
- முதுகில் சதாகாலமும் ஆக்சிஜென் டாங்கைச் சுமந்தே செல்லும் அழகு சுந்தரருக்கு – 2
என்று பிரித்துக் கொடுத்து விட்டேன் ! இடம் # 9 – டெக்ஸின் வண்ண மறுமதிப்புக்கென ஏற்கனவே வாக்குக் கொடுத்திருக்க - இடம் # 10-ல் ஜான் சில்வரைப் போடலாமாவென்ற எண்ணம் எழுந்தது - சமீபமாய் அவரது முந்தைய இதழைப் பார்த்த போது ! So இவரது அறிமுக சாகஸமான ‘ஆகாயக் கல்லறை‘ + இன்னுமொரு புதுக்கதையும் இணைந்தொரு “சில்வர் ஸ்பெஷல்“ 2017-ன் பட்டியலில் இடம் பிடித்தது ! இவரை நீங்கள் நிச்சயமாய் reject செய்திட மாட்டீர்களென்ற நம்பிக்கையோடே அட்டவணையை அச்சடித்தும் விட்டோம் ! நீங்கள் மட்டும் அவருக்கு ஞாயிறுப் பதிவில் thumbs down தந்திருப்பின்- ‘அழகாய் அசடு வழிவது எப்படி?‘ என்ற புத்தகத்திற்கு நான் அவசரமாய் ஆர்டர் போட வேண்டி வந்திருக்கும் ! தப்பிச்சேன்டா சாமி ! These are the reprint selections !
ஆக சந்தாக்கள் 4 & இதழ்கள் 40-ம் தீர்மானமாகி விட்ட நிலையில் காத்திருந்தது சந்தா E தேர்வுகள் மட்டுமே ! இங்கேயும் 10 இதழ்கள் என்று நான் அறிவித்து விட்டால் பட்ஜெட்டிலும் சரி ; பணிச்சுமைகளிலும் சரி - அழுத்தம் பன்மடங்கு கூடிப் போய் விடுமென்று புரிந்தது ! அந்த முன்ஜாக்கிரதையில்தான் முன்கூட்டியே இங்கே 6 இதழ்கள் மட்டுமே என்று ஒரு மாதத்திற்கு முன்பாகவே அறிவித்திருந்தேன் ! அந்த 6 இதழ்களும் கூட ரொம்பவே கூடுதல் பட்ஜெட்டுடன் இருந்திட வேண்டாமே என்ற எண்ணமும் எனக்குள் விதை விட்டிருந்தது ! 'விலை ஜாஸ்தி' என்று ஆரம்பத்துச் செக்போஸ்டிலேயே புது வண்டியானது ஆட்டம் கண்டுவிடக் கூடாதென்பதால் நீளமான கதைத்தொடர்களை ; பருமனான தொகுப்புகளை நெருங்கிடவேயில்லை ! 4 பாகம் கொண்டதொரு கதையை ஒரே இதழாய் வெளியிடுவதென்றாலே விலை 300 / 400 என்று எகிறிவிடுமென்பதால் – அத்தகைய ஆக்கங்களுக்கு தூரத்திலிருந்தே சலாம் போட்டு விட்டேன் ! இதன் பொருட்டு சிலபல ருசிகரமான தொடர்களை (இப்போதைக்கு) பரிசீலனை செய்யும் வாய்ப்புகளை நாம் இழந்திருக்கலாம் தான் ; ஆனால் ஆரம்பத்திலேயே டாப் கியர் போடுவதை விடவும் சிறுகச்சிறுக வேகம் கூட்டிக் கொள்ளலும் விவேகமே என்றுபட்டது! So ஏகப்பட்ட அலசல்கள் ; ஆராய்வுகள் ; மண்டை நோவுகள் தொடர்ந்தன - சுத்தமாய் ஒரு மாதத்திற்கு ! எங்கெங்கோ- எப்போதெல்லாமோ நான் பார்த்திருந்த / கேள்விப்பட்டிருந்த தொடர்களையெல்லாம் பொறுமையாய் வரவழைத்து, ஆராய ஆராய- எனது தலைசுற்றல்கள் கூடியதே தவிர - விடைகள் கண்ணில்பட்ட பாடைக் காணோம் ! ஏற்கனவே நான் பதிவிட்டிருந்தது போல இம்முறை - ‘கிராபிக் நாவல்கள்‘ என்று அறிவித்தாலே அந்நாட்களில் காலராத்தடுப்பூசி போட வரும் ஆபீசரைப் போல டெரராய் யார் கண்களுக்கும் நான் தெரிந்திடக் கூடாதென்பதே எனது பிரதான இலக்காக இருந்தது ! மாறுபட்ட களங்கள் ; அதே நேரம் ரசிக்கக் கூடிய கதைகளாக அமைந்திட வேண்டுமென்ற வேட்கையில் தொடர்ந்தேன் ! அதன் பலனாய் கிட்டிய 6 கதைகளின் பட்டியல் இதோ!
* “பணமென்றால்...!“ – அறிமுகம் - ‘தி அண்டர்டேக்கர்‘ ! கொஞ்சம் திகில் ; கொஞ்சம் அதிரடி; நிறைய ஆக்ஷன்; நிறைவான கௌபாய் களம் ; முழு வண்ணத்தில் ! விரசமிலா ஒரு பெளன்சரின் பாணி என்று வைத்துக் கொள்ளுங்களேன் ?
* “என் சித்தம் சாத்தானுக்குச் சொந்தம்“ – One Shot ! காதல் ; காமம் ; வசீகரம் கலவையாகிடும் போது அதனை நிராகரிக்கும் வலிமை நிறையப் பேருக்கு இருப்பதில்லை என்பதை black & white-ல் அதிரடியாய் சொல்லுமொரு ஆக்ஷன் த்ரில்லர்!
* “ஒரு முடிவிலா இரவு“ – சில துவக்கங்களுக்கு முடிவுரை எழுதும் வாய்ப்புகள் காணாமல் போய் விடும் போது சில பல பிரளயங்கள் நிகழலாம் ! அத்தகையதொரு இரவின் நிகழ்வுகளே இந்த சைக்கோ த்ரில்லர் ! Black & white!
* “கனவுகளின் கதையிது“ – எல்லாக் கனவுகளும் காலையானால் கலைந்து போவதில்லை ! கனவுகள் கற்பனையின் வெளிப்பாடாகவும் எல்லா நேரங்களிலும் இருந்திடுவதில்லை ! நேற்றைய மனிதர்கள் இன்றைய உலகுக்கு சேதி சொல்ல இதுவொரு பாலமானால்...? படித்துப் பாருங்களேன் இந்த one shot த்ரில்லரை !
* “நிஜம் நிசம்பதமாகிறது“ – ஒரு அசாத்தியச் சித்திர அதகளம் ! மனிதனின் துவேஷங்கள், புதியவர்களை ஏற்க மறுக்கும் பகையுணர்வுகள் ; யுத்தத்தின் வலிகள் ; தனிமையின் பயங்கள் என்று ஏராளமான உணர்வுகளைச் சொல்லும் ஒரு powerful நாவலின் காமிக்ஸ் ஆக்கமிது ! மிரளச் செய்யும் படைப்பிது - மிக வித்தியாசமான சைஸில் ! Black & white !
* காலம் தவறிய காலன் : SCI-FI ஆக்ஷன் த்ரில்லர் ; அதிரடிக்கு கதைக்களம் ; மிரட்டும் சித்திரங்கள் !! Again in b&w !
உங்களை ரூம் போட்டு அழச் செய்யும் ரகக் கதைகளல்ல இவை எதுவுமே ! எல்லாமே ஒரு விதத்தில் commercial ஆகவும், இன்னொரு பார்வையில் ஆழமாகவும் தென்படக்கூடிய படைப்புகளே ! இன்னமும் அமானுஷ்யம் ; Zombies ; Apocalypse ; எதிர்காலக் கதைகள் ; காதல் கதைகள் ; நிஜ வாழ்க்கைக் கதைகள் என ஏகப்பட்ட ரகங்கள் நமக்கென காத்துக் கிடக்கின்றன ! So இந்த முதல் சுற்றில் இந்த மாறுபட்ட வாசிப்புகளுக்கு நாம் தந்திடக்கூடிய வரவேற்புகளோ / விமர்சனங்களோ தான் இந்த வழித்தடத்தின் எதிர்காலத்தை நிர்ணயம் செய்திடும் !
இந்த 6 இதழ்களின் தேடலின் பொருட்டு நான் சுற்றி வந்திருக்கக் கூடிய கதைத் தொடர்களின் எண்ணிக்கை எக்கச்சக்கம் ! அவற்றையெல்லாம் பார்க்கும் போது தான் - இன்னமும் எத்தனை அற்புதங்களை நாம் தவற விட்டுக் கொண்டிருக்கிறோம் என்பது புரிகிறது ! இந்த நிலையில்- பால்ய நினைவூட்டல்களை மட்டுமே செய்திடக்கூடிய புராதனங்களை தொடர்ந்து விரட்டிச் செல்வது அத்தனை உற்சாகம் தரும் விஷயமாய்ப்பட மறுக்கிறது ! நாம் நேரத்தையும், முயற்சிகளையும், செலவிடும் ஒவ்வொரு ரிப் கிர்பிக்கும், காரிகனுக்கும்,, சார்லிக்கும் பன்மடங்கு ஈடாகக் கூடிய ஒரு நூறு கதைகள் காத்துள்ளன folks ! பழமையைப் போற்றுவோம் – ஆனால் பழமையே இலக்கென்று நமக்கு நாமே கால்கட்டுக்கள் போட்டுக் கொள்ள வேண்டாமே ? எல்லையில்லாக் கற்பனைகள் சிறகடிக்கும் ஒரு புதுவானத்தைப் பார்த்த பரவசத்தின் முன்பாய் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கு முன்னர், அரை நிஜார்களோடு நாம் திரிந்த நாட்களை நினைவுபடுத்தித் தரும் அடையாளாச் சின்னங்களை ஒரு அளவுக்கு மேல் ஒப்பிடல் அபத்தமாய்ப்படுகிறது ! நம் எல்லைகளை - பழமையின் தேடலில் நாமே சுருக்கிக் கொள்ள வேண்டாமே ? எனது தேடல்கள் நாள் 1 முதலாகவே 100/100 வாங்கிடாது போகலாம்தான் ; இந்தப் புது பாணிகளுக்கு பரிச்சயம் வளர்த்துக் கொள்ளல் நேரமெடுக்கும் சமாச்சாரமாகிடலாம் தான் ! 'அட....எனக்கெதற்கு இந்த கனமான வாசிப்புகளெல்லாம் ?' என்ற கேள்விகள் தோன்றிடலாம் தான் ! God willing இந்தப் பொறுப்பில் எனக்கிருக்கும் 120 மாத அவகாசத்துக்குள் இந்தப் புதிய பூமிகளையும் ஆராய வாய்ப்புக் கிட்டின், நிச்சயமாயொரு மறக்க இயலா அனுபவம் காத்திருக்கும் என்றுபடுகிறது ! அதற்காக ஒட்டுமொத்தமாய் இதனுள் குதிக்கச் சொல்லவில்லை நான் ; வழக்கமான entertainment தடங்கள் அதே வேகத்துடனும், உற்சாகத்துடனும் தொடரட்டும் ! ஒரேயொரு ஓரத்து வண்டிப்பாதையினை மட்டுமேனும் - புதுக் தேடல்களுக்கென ஒதுக்கிடுவோமே ? ஒவ்வொரு ஆண்டும் நான் ஒப்பிக்கும் அதே ராகமாய் இது தோன்றிடலாம்தான் ; ஆனால் இம்முறை சந்தா E என்ற தடம் நனவாகிறது எனும் போது - we are not kidding any longer !
சந்தா E தொடர்பாய் சின்னதொரு முக்கியத் தகவலும் கூட! ஏற்கனவே ரெகுலர் சந்தாக்களுக்கான இதழ்களை சப்ளை செய்து ஏஜெண்டுகளிடம் பணம் வசூலிக்கத் திண்டாடி வரும் வேளைகளில் இந்தப் புதுக் கத்தையினையும் கடனுக்கு அனுப்பி பளுவை ஏற்றிக் கொள்வதாக இல்லை ! So சந்தா நீங்கலாக மிஞ்சிப் போனால் 200 அல்லது 250 பிரதிகள் மட்டுமே அச்சிடவுள்ளோம் (of course ஏஜண்ட்கள் முன்பணம் தந்து ஒத்துழைத்தால் எண்ணிக்கை கூடிடும் தான் ) இந்தத் தம்மாத்துண்டு பிரிண்ட்ரன்- விலைகளை எசகுபிசகாக ஏற்றிவிடும் தான் ; ஆனால் இந்த ஒரேயொரு முறை மட்டும் இந்தப் பரீட்சார்த்த முயற்சியில் நஷ்டமே எழுந்தாலும் அதனை நாமே சமாளிப்பது என்ற தீர்மானத்தில் விலைகளை நிதானமான அளவுகளுக்கே அமைத்திடுகிறோம் ! So 2017-ன் இதழ்கள் ஒவ்வொன்றும் ஒரு தனி ரகமாய் இருக்குமென்பதால் பொதுவான விலை சார்ந்த ஒப்பீடுகள் இல்லாதிருப்பின் மகிழ்வோம் ! “கட்டாயம் சந்தா கட்டச் செய்ய இதுவொரு யுக்தி !“ என்ற விமர்சனங்கள் இங்கே எழலாம் தான் ; “குறைவான எண்ணிக்கையெனில் இது க்ரேமார்கெட்டை ஊக்குவிக்கும் !“ என்ற எச்சரிக்கைகளும் எழலாம் தான் ! ஆனால் நமக்குள்ள சிரமங்கள் நமக்கே பிரத்யேகமானவை எனும் போது - அவற்றைச் சமாளிக்கும் தீர்மானங்களும் நமதாகவே இருக்க வேண்டிப்போகிறது ! So சந்தா E-க்கு மட்டுமாவது subscribe பண்ணுவதா ? அல்லது உங்கள் நகர ஏஜெண்டை தாஜா செய்து முன்பணம் அனுப்பச் செய்வதா ? அல்லது அப்போதைக்கு ஆன்லைனில் பார்த்து வாங்கிக் கொள்வதா ? என்ற தீர்மானத்தை உங்களிடமே விட்டு விடுகிறேன் !
சந்தா E தொடர்பாய் சின்னதொரு முக்கியத் தகவலும் கூட! ஏற்கனவே ரெகுலர் சந்தாக்களுக்கான இதழ்களை சப்ளை செய்து ஏஜெண்டுகளிடம் பணம் வசூலிக்கத் திண்டாடி வரும் வேளைகளில் இந்தப் புதுக் கத்தையினையும் கடனுக்கு அனுப்பி பளுவை ஏற்றிக் கொள்வதாக இல்லை ! So சந்தா நீங்கலாக மிஞ்சிப் போனால் 200 அல்லது 250 பிரதிகள் மட்டுமே அச்சிடவுள்ளோம் (of course ஏஜண்ட்கள் முன்பணம் தந்து ஒத்துழைத்தால் எண்ணிக்கை கூடிடும் தான் ) இந்தத் தம்மாத்துண்டு பிரிண்ட்ரன்- விலைகளை எசகுபிசகாக ஏற்றிவிடும் தான் ; ஆனால் இந்த ஒரேயொரு முறை மட்டும் இந்தப் பரீட்சார்த்த முயற்சியில் நஷ்டமே எழுந்தாலும் அதனை நாமே சமாளிப்பது என்ற தீர்மானத்தில் விலைகளை நிதானமான அளவுகளுக்கே அமைத்திடுகிறோம் ! So 2017-ன் இதழ்கள் ஒவ்வொன்றும் ஒரு தனி ரகமாய் இருக்குமென்பதால் பொதுவான விலை சார்ந்த ஒப்பீடுகள் இல்லாதிருப்பின் மகிழ்வோம் ! “கட்டாயம் சந்தா கட்டச் செய்ய இதுவொரு யுக்தி !“ என்ற விமர்சனங்கள் இங்கே எழலாம் தான் ; “குறைவான எண்ணிக்கையெனில் இது க்ரேமார்கெட்டை ஊக்குவிக்கும் !“ என்ற எச்சரிக்கைகளும் எழலாம் தான் ! ஆனால் நமக்குள்ள சிரமங்கள் நமக்கே பிரத்யேகமானவை எனும் போது - அவற்றைச் சமாளிக்கும் தீர்மானங்களும் நமதாகவே இருக்க வேண்டிப்போகிறது ! So சந்தா E-க்கு மட்டுமாவது subscribe பண்ணுவதா ? அல்லது உங்கள் நகர ஏஜெண்டை தாஜா செய்து முன்பணம் அனுப்பச் செய்வதா ? அல்லது அப்போதைக்கு ஆன்லைனில் பார்த்து வாங்கிக் கொள்வதா ? என்ற தீர்மானத்தை உங்களிடமே விட்டு விடுகிறேன் !
ஆக, இது தான் 2017-ன் பயணத் திட்டம் ! நிதானமாய் எல்லாவற்றையும் பரிசீலித்தான பின்பு எனது சிந்தனைகள் பயணித்த பாதையினை நீங்களும் கண்டுகொள்ள சாத்தியமாகின் all will be well !
எனது "விஞ்ஞானபூர்வ விளக்கப் படலத்துக்குப்" பின்னேயும் உங்களுள் சிலருக்கு எழக்கூடிய சிலபல கேள்விகள் என்னவாகயிருக்கும்? என்று யூகிப்பதிலும் சிரமமில்லை என்பதால் - இதோ முன்ஜாக்கிரதை முத்தண்ணாவின் முன்கூட்டிய கேள்வி-பதில்கள் :
எனது "விஞ்ஞானபூர்வ விளக்கப் படலத்துக்குப்" பின்னேயும் உங்களுள் சிலருக்கு எழக்கூடிய சிலபல கேள்விகள் என்னவாகயிருக்கும்? என்று யூகிப்பதிலும் சிரமமில்லை என்பதால் - இதோ முன்ஜாக்கிரதை முத்தண்ணாவின் முன்கூட்டிய கேள்வி-பதில்கள் :
* 40 ரெகுலர் இதழ்கள் மட்டுமே என்பது ரொம்பவே குறைவி்ல்லையா?
எண்ணிக்கைகள் 40-ல் நின்றால் கூட – 2017-ன் பக்க எண்ணிக்கை கணிசமானதொரு நம்பர் ! ‘ட்யுராங்கோ‘ 4 பாகம் கொண்டதென்பதை மறந்து விட வேண்டாமே ! And 2016 -ல் டபுள் ஆல்பங்கள் மொத்தமே இரண்டு தான் ! ஆனால் 2017-க்கோ மொத்தம் 3 ! தவிர லயன் # 300-ல் – 4 கதைகள் ; தீபாவளி மலரில் 2 கதைகள்; மார்டினுக்கு 2 கதைகள் என்று திட்டமிடப்பட்டிருப்பதையும் கவனியுங்களேன் ! ‘நிறைய இதழ்கள் வருகின்றன - அந்த வேகத்திற்கு ஈடு தந்து படிக்க முடியவில்லை!‘ என்ற புகார்கள் சரிசெய்யப்பட வேண்டியவைகளே என்பதால் இந்தச் சின்ன எண்ணிக்கைக் குறைப்பு முயற்சி !
* தோர்கல் சந்தா A-வில் இடம் பிடிக்கத் தான் வேண்டுமா?
ஒரு அட்டகாசமான பந்தயக் குதிரையினை இனிமேலும் ஓரம்சாரங்களில் ஒண்டச் செய்வதாக இல்லை ! Fantasy கூட ஒரு தவிர்க்க இயலாக் கதைரகமே எனும் போது தோர்கல் நமது திட்டமிடல்களில் ஒரு தவிர்க்க இயலா அங்கமாகிப் போவார் வரும் நாட்களிலும் !
* சாகஸ வீரர் ரோஜர் இல்லாவிட்டால் தமிழகம் மற்றும் தமிழ் பேசும் மக்கள் நல்லுலகில் ‘பந்த்‘ நடைபெறுமே? பரவாயில்லையா?
அவரது கதைகளை வெளியிடக் கூடாதென்ற திட்டமெல்லாம் கிடையாது ! அந்தத் தொடரிலிருந்து உருப்படியான சாகஸங்களைத் தேர்வு செய்வது தான் சிரமமாக உள்ளது ! இப்போது ரோஜரின் இரண்டாம் சுற்று துவங்கியுள்ளது – புதியதொரு அவதாருடன் ! அதன் ஆல்பம் # 2 இந்தாண்டு தான் வெளிவந்துள்ளது ! அது எத்தனை இதழ்களோடு முற்றுப் பெறுகிறது என்பது பற்றித் தெரிந்தான பின்பு – இந்தப் புதுயுக ரோஜரைப் பரிசீலனை செய்யலாமென்றுள்ளேன் !
* டேஞ்சர் டயபாலிக் is gone தானா ?
Black & white இதழ்களின் பெரும்பான்மையை மறுபதிப்புகளும் ; இரவுக் கழுகாரும் குத்தகைக்கு எடுத்து வைத்திருக்கும் நிலையில் என் கைகள் கட்டப்பட்டுள்ளன என்பதே (வியாபார) நிஜம் ! இன்னும் ஒன்றரையாண்டுகள் பொறுமை காத்தால் இந்த Fleetway மறுபதிப்புகளை ஓரளவிற்கு மங்களம் பாடியிருப்போம் ! அப்போது open out ஆகிடும் வாய்ப்புகளை டயபாலிக் போன்றோருக்குத் தருவது பற்றித் தைரியமாக யோசிக்கலாம் !
* லார்கோ & ஷெல்டன் – தலா ஓரிடம் தானா ?
அவர்களது தொடர்களிலேயே இன்னமும் எஞ்சியிருப்பது தலா ஒவ்வொரு சாகஸமே என்பதால் – 2018 வரை அவர்களைத் தொடரச் செய்ய நினைத்தேன் ! தவிர இவர்களுக்குக் கூடுதலாய் வாய்ப்பளிப்பதாயின் LADY S-ன் கோட்டாவைக் காலி செய்தால் மட்டுமே அது சாத்தியமாகியிருக்கும் ! 2016-ன் அட்டவணைக்கும், 2017-ன் அட்டவணைக்கும் மத்தியில் ‘பளிச்‘ வேறுபாடுகள் இல்லாது போயின் விறுவிறுப்பிற்குப் பஞ்சம் நேரிடக் கூடுமென்பதால் LADY S & ட்யுராங்கோ அறிமுகமாகிறார்கள்!
* டெக்ஸில் ‘அந்த‘ 550+ பக்கக் கதை கிடையாதா? கண்டனப் போஸ்டர்கள் அச்சிடவுள்ளோம் !!!
‘துரோகத்துக்கு முகமில்லை‘ ; (காத்திருக்கும்) ‘சர்வமும் நானே‘!; ‘தற்செயலாய் ஒரு ஹீரோ‘; ‘நீதிக்கு நிறமேது?‘ போன்ற கதைகளைப் படித்தான பின்பு - ‘டெக்ஸ்‘ என்ற இயல்பான நீதிக்காவலர் மீது நமக்கு அதிகமாகிடும் மரியாதையை ஒரு fantasy கதைக்களத்தினுள் இறக்கி விடுவதன் மூலம் மட்டுப்படுத்திக்கொள்ள வேண்டாமேயென்று நினைத்தேன் ! ‘அந்த‘ 550+ கதையானது மாயாஜால மெபிஸ்டோவோடு மோதும் சாகஸம் ! தற்பேதைய Tex எடிட்டர் திரு.மௌரோ போசெல்லியின் தலைமையில் நமது இரவுக் கழுகாரின் கதைகள் இயல்பான; தரமான புதுக்களங்களைத் தேடிப் பயணித்து வரும் போது நாம் இந்த விட்டலாச்சார்யா பாணி Tex=க்கு ‘ஜே‘ போட்டால் பொருத்தமாக இருக்குமா ? பக்க நீளத்தை மட்டுமே பார்க்காது - கதையின் போக்கையும் கவனமாய் பரிசீலனை செய்யும் கடமை எனக்குண்டல்லவா?
* குண்டூ புக்ஸ் இவ்வளவு தானா? இன்னும் நிறைய எதிர்பார்த்தோமே ??
ஒரு புது வரவையும் நமது சாப்பாட்டு மேஜைக்கு அனுமதிப்பதாக இருப்பின், கூடுதலாய் சமைத்திடத் தேவைப்படும் ; அல்லது ஏற்கனவே உள்ளோர் கொஞ்சம் குறைத்துச் சாப்பிட்டாக வேண்டி வரும் ! யதார்த்தம் இது தானே ? So- சந்தா E எனும் புதுவரவை இணைத்தான பின்பும் சந்தாத்தொகைகள் 2016-ன் அளவுகளை ஓவராய் கடந்திடாது இருக்க வேண்டுமெனில் சில பல பத்தியங்கள் நமக்குத் தேவையன்றோ ? ஏற்கனவே “இரத்தக் கோட்டை“யும் காத்துள்ளது 2017-க்கென....! So திட்டமிடல்களில் நமக்குள்ள கட்டுப்பாடுகளைக் காற்றில் பறக்க விட இயலாதே ?
நியாயமாய்ப் பார்த்தால் – நமது கதைத் தேர்வுகள் ; பொருத்தமான விலைகள் என்று எழுதிப் பார்த்து, டோட்டல் போட்டு அந்தத் தொகையையே சந்தாவென்று அறிவித்தாக வேண்டும் ! ஆனால் இம்முறை நான் செயல்பட்டதோ கீழிருந்து மேலாய் ! அதாவது டோட்டலை முதலில் போட்டுக் கொண்டு அங்கிருந்து ரிவர்ஸ் கியரில் பயணத்தைத் தொடங்கினேன் ! So ‘புஷ்டியான புக்குகளின்‘ தேடலை விடவும் ‘ஆரோக்கியமான சந்தாவின்‘ வேட்கைக்கு பிரதானம் தர நேரிட்டது ! Hope I was right !!
*‘தலையில்லாப் போராளி‘ சைஸில் முயற்சிக்கவில்லையா ?
கலரில் முயற்சிக்கிறோம் இம்முறை அந்த மெகா சைஸில் !! டெக்ஸின் நாவல் காமிக்ஸ் # 1 & 2 இணைந்து ஒரே ஆல்பமாய் வண்ணத்தில், அட்டகாசமாய்க் காத்துள்ளது!
‘தலையில்லாப் போராளி‘யை முதல் முறை இந்த மெகா சைஸில் பார்த்த உற்சாகம் அடுத்த (அதே) முயற்சியின் போது ஒரு 25% குறைவான உத்வேகத்தை உண்டாக்கலாம் ! அதனையே வண்ணத்தில் முயற்சித்தால் ? சும்மா அதிராதா ? So இருக்கும் வரையறைக்குள் இயன்ற வேறுபாடுகளைக் காட்ட முயற்சிப்பதே எங்களது லட்சியமாக இருந்திடுகிறது!
* டிடெக்டிவ் கதைகள் அவ்வளவாய் காணோமே? கககபோ !
ரிப்போர்டர் ஜானி ; CID ராபின் நீங்கலாக – டைலன் டாக்கும், மார்டினும் – அசாத்தியங்களைத் தம் பணிகளில் துப்பறியும் ஸ்பெஷலிஸ்டுகள் தானே ? And ஜுலியா ஒரு pure டிடெக்டிவ் என்றில்லாவிடினும், க்ரைம், போலீஸ், மர்மம் என்ற களத்தில் உலா வருபவர் தானே ? பொதுவாகவே டிடெக்டிவ் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது தான் - தற்போதைய காமிக்ஸ் உலகினில் ! சோடாபுட்டிக் கண்ணாடி டிடெக்டிவ் ஜெரோமைப் பரிசீலித்தேன் ; but இடப்பற்றாக்குறையில் மனுஷனுக்கு வாய்ப்பில்லாது போய் விட்டது !
* ஒரு ஜேம்ஸ் பாண்ட் பாணி நாயகரை லபக்கி இருப்பதாகச் சொன்னது என்னாச்சு?
அவரது ஆல்பம் # 3 2017-ல் வெளிவரவுள்ளதாம் ! அது வெளியான பின்பாக மூன்று பாகங்களுக்கும் சேர்த்து ஒரே கான்டிராக்டாகப் போட்டுக் கொள்வோமே என்று படைப்பாளிகள் கேட்ட போது மறுக்க முடியுமா ?
* XIII – இரத்தப் படலம் மர்மம் (spin-offs) எதையும் காணோமே ?
2017-ல் மனுஷனுக்குக் கொஞ்சம் ஓய்வு கொடுப்போமே ? உங்களுக்குச் சுற்றுகிறதோ - இல்லையோ ; எனக்கு ரங்க ராட்டினத்தில் அரை டஜன் தடவைகள் சவாரி செய்த உணர்வு எழுகிறது!
* கேப்டன் டைகர் ?
இரத்தக் கோட்டை!
* மேஜிக் விண்டுக்கு துரோகம் செய்த பாவத்துக்கு ஷமானின் சாபங்கள் விரட்டியடிக்கும் !
ஒன்றுக்கு 4 வாய்ப்புகள் கிட்டியும், ஏதோவொரு விதத்தில் வாசக அபிமானத்தை ஈட்டாது போய் விட்டாரே மனுஷன் ! Poorest performer in sales என்று புள்ளி விபரங்கள் பறைசாற்றும் போது, தீர்மானம் என் கைகளிலிருந்து நழுவி விடுகிறதே!
* சந்தா E ?
எனக்குமே இது முற்றிலுமொரு புது அனுபவம் ! கண்களை இறுக்கமாய்க் கட்டிக் கொண்டு யானையைத் தடவிடத் தயாராகி வருகிறேன் ! தும்பிக்கையைப் பிடித்து ஆசி வாங்கிடுவேனா ? தூர்ப்பகுதியைத் துளாவி மணக்க மணக்க சாணத்தைச் சாகுபடி செய்யப் போகிறேனா ? என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம் ! கதைச் சுருக்கங்களின் வாசிப்புகள் ; நிறைய இன்டர்நெட் தேடல்கள் ; சில பல அயல்நாட்டு வாசகர்களின் அபிப்பிராயக் கோரல்கள் என்று எனது தேர்வுகளின் பின்னே ஏகமாய் முயற்சிகள் இருப்பினும் - அவற்றை முழுமையாய் மொழிபெயர்த்து, கதைக்களத்தினுள் இறங்கிடும் வரையில் எனது அனுமானங்கள் மேலோட்டமானவைகளாக மட்டுமே இருந்திட முடியும் ! ஆனாலும் இவை சாதித்துக் காட்டுமென்ற நம்பிக்கையோடு பயணம் புறப்படத் தயாராகிறேன் ! கலப்படமில்லா நிஜமிது folks ! எப்போதையும் விட இப்போது உங்கள் துணை எனக்கு அவசியம் !
* டி-ஷர்ட் உண்டா இம்முறை ?
நோ ! ஆனால் MC-வின் 45வது ஆண்டு; லயனின் இதழ் # 300; முத்து இதழ் # 400; பதிவினில் 25 இலட்சம் பார்வைகள் என ஏராளமான முக்கிய தருணங்களை 2017 தாங்கி நிற்பதால் இந்தாண்டின் 12 மாதங்களிலும் சந்தாதாரர்களுக்கு சிறுசிறு surprises காத்திருக்கும் ! அவை என்னவென்பதை அந்தந்த மாதத்து கூரியர் டப்பாக்களைப் பிரிக்கும் வேளைகளில் மட்டுமே அறிந்து கொள்ள முடியும் ! இந்த சர்ப்ரைஸ்ஸ் வரிசையில் சீனியர் எடிட்டரின் உபயம் ஒன்றும் காத்துள்ளது என்பது கொசுறுச் சேதி ! சந்தாவில் அல்லாத நண்பர்களும் இந்த surprise களை எட்டிட வாய்ப்பு இல்லாது போகாது - ஆனால் அது சற்றே தாமதமாய் ; உரிய விலை தந்து பெறும் விதமாகவே அமைந்திடும் ! “சந்தாதாரர்கள்“; கடைகளில் வாங்குபவர்கள்“ என்ற யதார்த்தத்தைத் தாண்டி சத்தியமாய் எங்கள் பார்வைகளில் எவ்வித ஏற்ற-இறக்கங்களும் கிடையாது ! ஆனால் சந்தாவெனும் பிராணவாயுவைத் தொடர்ந்து நமக்குச் செலுத்தி வரும் நண்பர்களை ஒரு மைல்கல் ஆண்டில் மட்டுமாவது மகிழ்விப்பது எங்களது கடமையென்று தோன்றியது ! அவர்களது உதவிகளின்றிப் போனால் இங்கே நாமிருந்த தடம் கூட மிச்சமிராது ! சந்தாக்களின் பெயரைச் சொல்லிப் போடப்படும் சாலைகளும் ; நட்டப்படும் சாலையோர மரங்களும், விளக்குகளும் பயன் தருவது நம் எல்லோருக்கும் தானே ? So சின்னதொரு ‘தேங்ஸ்‘ சொல்லும் முயற்சி மட்டுமே இது ! ஆகையால் இதனையும் ஒரு வாட்சப் விவாதப் பொருளாக்கிக் கொண்டு குழப்பிக் கொள்ளாதிருப்பின் மகிழ்வேன் !
இதற்கு மேலும் நான் இங்கே தொடர்ந்து கொண்டிருப்பின், படித்து படித்து உங்கள் கண்கள் என்னதைப் போலாகி விடக் கூடும் ! So விடைபெறுகிறேன் guys - என் ஆற்றலுக்குட்பட்ட முயற்சிகளை செய்துள்ளேன் என்ற சிறு திருப்தியோடு ! அதே திருப்தி உங்களுக்கும் தோன்றிடும் பட்சத்தில் – கடந்த சில மாதங்களது மெனக்கெடல்களின் வலி காணாமல் போயே போயிருக்கும் ! இன்னொரு நெடும் பயணம் நமக்கெனக் காத்துள்ளது ! நல்லதொரு துவக்கமாய் இன்றைய பொழுது அமைந்திடும் பட்சத்தில் உசேன் போல்டுக்கு செம சவால் தந்திடுவோம் என்ற திட நம்பிக்கை கொள்ளலாம் அல்லவா ? ஆண்டவனின் ஆசியும், உங்களது ஆதரவும் தொடரும் வரை- அந்த நம்பிக்கை நிச்சயம் பொய்க்காது!
இப்போதைக்கு எனது பணி முடிந்தது 2017-ன் திட்டமிடலைப் பொறுத்த வரைக்கும் ! இனி பந்து உங்களது கோர்ட்டில் தான் ! So தூள் கிளப்புங்கள் !
அப்புறம் ‘அக்டோபர் இதழ்கள்‘ என்றதொரு சமாச்சாரத்தையும் மறந்து விடாதீர்களேன் ப்ளீஸ் ? படிக்க, ரசிக்க, விமர்சிக்க நேரம் ஒதுக்கிட மறவாதீர்கள்! இன்று மதியத்துக்கு முன்பாகவே கூரியர்கள் / பதிவுத் தபால்கள் என சகலமும் புறப்பட்டுவிட்டன ! நாளை தூத்துக்குடி நகரில் துவங்கிடும் புத்தக விழாவினிலும் நமது புது இதழ்களை வாங்கிடமுடியும் - நமது ஸ்டால் நம்பர் 47-ல் ! மீண்டும் சந்திப்போம் ! Bye for now!
P.S : விரல் ரேகைகள் தேயும் அளவுக்கு இந்தப் பதிவில் டைப்போ-டைப்பென்று டைப்பியிருப்பதால் - இந்த ஞாயிறுக்கு இன்னுமொரு புதிய பதிவிட சத்தியமாய் விரல்களில் திராணியிராது ! So ஞாயிறு அவசியப்பட்டால் ஒரு உப பதிவு போட்டுவிட்டு, ஜாலியாய் அரட்டைக்குத் தயாராகிடுவேன் !
P.S : விரல் ரேகைகள் தேயும் அளவுக்கு இந்தப் பதிவில் டைப்போ-டைப்பென்று டைப்பியிருப்பதால் - இந்த ஞாயிறுக்கு இன்னுமொரு புதிய பதிவிட சத்தியமாய் விரல்களில் திராணியிராது ! So ஞாயிறு அவசியப்பட்டால் ஒரு உப பதிவு போட்டுவிட்டு, ஜாலியாய் அரட்டைக்குத் தயாராகிடுவேன் !