நண்பர்களே,
வணக்கம். நடப்பாண்டின் இறுதி பதிவும் ஒரு சந்தோஷப பகிர்வாக அமைந்திடுவது ஒரு வரமென்பேன் ! யெஸ்...."நவம்பரில் டிசம்பர்" சாத்தியமான போது - "டிசம்பரில் ஜனவரி" நிஜமாகிடாதா - என்ன ? இன்றைக்கு 2017 ஜனவரியின் சந்தாப் பிரதிகள் சகலமும் கூரியரில் புறப்பட்டு விட்டன - உங்கள் இல்லங்களைத் தேடி ! (ரசீதுகள் எல்லாமே இரவில் தான் எங்களுக்குத் தருவார்கள் என்பதால் - ட்ராக்கிங் நம்பர்கள் கோரி இப்போதே போன் அடித்தலில் பலன் இராது - ப்ளீஸ் ?)
* சத்தமின்றி யுத்தம் செய் ! - ட்யுராங்கோ
* ஆவியின் ஆடுகளம் - டெக்ஸ் வில்லர்
* நானும் சிப்பாய்தான் ! - ப்ளூகோட் பட்டாளம்
* இயந்திரத்தலை மனிதர்கள் - இரும்புக்கை மாயாவி
Plus
* ஒரு சர்ப்ரைஸ் கிப்ட்
அடங்கிய பார்சல்கள் on the way ! நாளைய காலையில் முதலாவதாக இவற்றைக் கைப்பற்றவிருக்கும் நண்பரே-2017-ன் முதல் வாசகராகிடுவார் !
"ஜனவரிப் பணிகள் முடிந்த மாதிரித் தான் ; பிப்ரவரியில் இருக்கிறேன் ; மார்ச்சில் மிதக்கிறேன் !" என்று அவ்வப்போது நான் அள்ளிவிட்டுக் கொண்டிருந்தாலும் - நடப்பாண்டின் (டிசம்பரின்) இதழ்களை நிறைவுக்கு கொணர்ந்த பின்பாக லேசாயொரு விடுமுறை மூட் தொற்றிக் கொண்டது என்றுதான் சொல்ல வேண்டும் ! So "நீதிக்கு நிறமேது ?" பணிகளை முடித்த கையோடு - ஜனவரியின் இறுதிப் பணிகளுக்குள் பாய்ந்திடாது கொஞ்சம் ஜாலியாய் சுற்றித் திரிந்தேன் ! கண்ணிமைக்கும் வேளைக்குள் டிசம்பரின் பாதியைக் காணோம் ! அதன் பின்பாக,அடித்துப் பிடித்து ட்யுராங்கோவின் final touches-க்குள் மூழ்கிட - 4 கதைகள் கொண்ட இந்த ஆல்பத்தின் பணிகள் ஒன்றன்பின் ஒன்றாய் குவிந்து கொண்டே இருந்தன ! அட்டைப்படம் - முத்து காமிக்சின் ஒரு முக்கிய தருணத்துக்கு நியாயம் செய்வதாகவும் இருக்க வேண்டும் ; ஆண்டின் முதல் மெகா இதழுக்கான தோரணையுடனும் அமைந்திட வேண்டுமென்ற ஆர்வத்தில் - நமது டிசைனரை ஒரு வழி பண்ணி விட்டேன் ! இதனில் முக்கிய கண்டிஷன் - ஒரிஜினல் டிசைனையே பயன்படுத்திட வேண்டுமென்ற படைப்பாளிகளின் கட்டளை சார்ந்ததாகிப் போனதால் - ஓவராக மாற்றங்கள் / நகாசு வேலைகளை செய்திட இடமில்லை ! Without much ado - இதோ 2017 -ன் முதல் ஸ்பெஷல் இதழின் முதல் பார்வை !
ஒரிஜினல் டிசைனையே லேசாக மேம்படுத்தி - வழக்கம் போல நமது ஹார்ட்கவர் இதழ்களுக்கான வேலைப்பாடுகளோடு உருவாக்கியுள்ளோம் ! முடித்த இதழைக் கையில் ஏந்திப் பார்க்கும் போது அட்டகாசமாய் இருப்பது போல் எனக்குத் தோன்றியது !! But of course - இதனில் உடன்பாடும் இருக்கக் கூடும் ; மாற்றுக கருத்து இருந்திடலும் சாத்தியமே என்பதால் - all yours to rate ! கதை / தயாரிப்பு / அச்சு என எல்லாமே ஒரு புதுப் பரிமாணத்தில் இருப்பதாகவும் எனக்குத் தோன்றியது ! "விடுதலையே உன் விலை என்ன ?" கூட பிரமாதம் என்று சொன்னவன் தானே சாமி நீ ? " என்ற மைண்ட் வாய்ஸ்க்கும் இங்கே வாய்ப்புகள் உண்டு எனும் போது - மார்க் போடும் பொறுப்பை உங்களிடமே விட்டு விடுகிறேன் ! So ஆண்டின் ஆரம்பத்தை ட்யுராங்கோ with a bang துவக்கித் தந்துள்ளார் எனும் போது - ஒரு முழுமையான ரேட்டிங் பொறுப்பு உங்கள் முன்னுள்ளது !
* நாயகர் எப்படி ?
* ட்யுராங்கோவின் கதாப்பாத்திரம் எவ்விதம் ?
* கதைபாணி பற்றிய உங்கள் அபிப்பிராயங்கள் ?
* Overall தயாரிப்புப் பற்றி ?
என்று உங்களிடமிருந்து நிறைய சமாச்சாரங்களைத் தெரிந்து கொள்வது எங்களது புத்தாண்டின் எதிர்பார்ப்புகளுக்குள் ஒன்றாக இருந்திடும் ! So படித்து விட்டு please do share your thoughts ? இதழைப் புரட்டிவிட்டு ; படித்து விட்டு மௌனமாய் நீங்கள் நகர்ந்திடும் போதும் "விற்பனை ஆச்சுதானே !" என்று நாங்கள் நினைத்துக் கொள்ளலாம் தான் ; ஆனால் நிறை-குறைகளை அறிந்து கொள்ளும் போதே இந்தப் பணிகளுக்கொரு அர்த்தம் இருப்பது போல் தோன்றிடும் ! So ,இது போன்ற தருணங்களிலாவது மௌனத்துக்கு சிறு விடுமுறை தந்திட்டால் மகிழ்வோம் !
அப்புறம் - நமது இரவுக் கழுகார் & கார்சன் ! எப்போதும் போலவே வண்ண இதழ்களை முதலில் முடித்துவிட்டு, அப்புறமாய் b & w ஐப் பார்த்துக் கொள்ளலாமென்ற நினைப்பில் சுற்றி வந்துவிட்டு, கிருஸ்துமஸ் தினத்தன்று 'மாங்கு மாங்கென்று' எழுதித் தள்ளி "ஆவியின் ஆடுகளம்" பணிகளை நிறைவு செய்தேன் ! ஆண்டின் முதல் 'தல' சாகசம் எவ்விதமென்றும் சொல்லுங்களேன் - ப்ளீஸ் ?
வரிசையில் மூன்றாவதாக ப்ளூகோட் பட்டாளம் ! But நிறைய நண்பர்களின் வாசிப்பினில் முத்லிடத்தைப் பிடிக்கப் போவது இந்த வண்ண விருந்தானது தானிருக்குமென்று நினைக்கிறேன் ! ஓராண்டு break-க்குப் பின்னர் தலைகாட்டும் இந்த ஜோடியின் ஒரு அழகான ஆல்பமிது !
Finally - மாயாவி !! இவரெல்லாம் 'பில்டப்' அவசியங்களுக்கு அப்பாற்பட்ட தனியொருவர் எனும் போது - இதழின் அட்டைப்படத்தை உங்கள் கண்ணில் காட்டுவதோடு முடித்துக் கொள்கிறேன் ! ஆங்காங்கே பற்களை ஆட்டம் கண்ணகி செய்த புராதன வசன கடைகளில் மெலிதான திருத்தங்களைத் தாண்டி இங்கே பெரிதாய் எனக்குக் கம்பு சுழற்றும் பணிகள் இருந்திடவில்லை !
Last but not the least - சின்னதாயொரு gift-ம் கூட, நமது சந்தா நண்பர்களுக்கு ! 2017-ன் ஒவ்வொரு மாதமும் நம் சக்திக்குட்பட்ட சிற்சிறு surprises உங்களது கூறியர்களில் இருந்திடும் என நான் அறிவித்திருந்ததை மெய்ப்பிக்கும் முதல் வாய்ப்பு ! இதன் நிதியுதவி - சீனியர் எடிட்டரின் உபயம் என்பது கொசுறுத் தகவல் ! Gift-ஐப் பார்த்து விட்டு - "ப்பூ...இதுக்குத் தானா ?" என்று நண்பர்கள் என்னிடவும் கூடும் ; "அட !" என்று முகம் மலரவும் கூடும் ! எது எப்படியிருப்பினும் - பதினாறிலேயே (2016 ) பதினேழைச் (2017 ) சாத்தியமாக்கிய சந்தோஷத்துடன் நடையைக் காட்டுகிறேன் ! ஒரு விசாலமான ஆண்டின் பயணத்தை, நமது இதழ்கள் வாயிலாகவும், இந்தப் பதிவின் மார்க்கமாகவும் உங்களோடு பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு ஒரு ஆயுட்கால நினைவாகத் தொடரும் என்னுள் !
ஓட்டமாய் ஓடிக் கொண்டேயிருந்த சமயம் - 52 ஆண்டுகள் கொண்டதொரு ஆண்டினில் எங்களது டீம் உருவாக்கியுள்ளது 58 இதழ்களை (தற்போதைய இதழ்களையும் சேர்த்துக் கொண்டால்) என்பதன் முழு தாக்கத்தையும் புரிந்து கொள்ள நேரமிருக்கவில்லை ! ஆனால் ஒரு வருஷத்தின் ஓட்டத்தை நின்று, நிதானமாய் மனதில் இன்றைக்கு அசை போடும் போது - ஓசையின்றிச் சுழன்றிருக்கும் எங்களது டீமின் ஆற்றல் என்னை அசாத்தியப் பெருமை கொள்ளச் செய்கிறது !
நான்கே பெண்கள் + மைதீன் + நமது மார்க்கெட்டிங் மேனேஜர் என்பதே நமது front office ; back end என சகலமும் !! Of course அச்சுப் பிரிவும் நமக்கு இன்றியமையா அங்கமே - but அதுவொரு commercial பிரிவு எனும் போது, நம் பணிகள் மட்டுமென்றில்லாது, மற்ற அச்சு வேலைகளையும் செய்வதுண்டு ! ஏன் - நானோ, ஜுனியரோ கூட காலையில் ஒரு வேலை ; மதியமொன்று என்று மரத்துக்கு மரம் தாவும் மந்திகள் தானே ?! ஆனால் நமது இந்த 4 + 1 +1 டீமுக்கோ - உலகம் ஆரம்பிப்பதும், முடிவதும் நமது காமிஸ்களோடு தான் ! ஆண்டு முழுக்க உங்களது பார்சல்களை அனுப்புவதிலிருந்து, தோராயமாக சில ஆயிரம் போன் கால்களை, துளியும் சளைக்காமல் புன்சிரிப்போடே கையாளும் ஸ்டெல்லா & வாசுகி ஒரு பக்கமெனில் - மிஷின்கன் வேகத்தில் டைப்செட்டிங் / டிசைனிங் என எதைக் கையில் கொடுத்தாலும் மூன்றே நாட்களில் முடித்துத் தரும் இவாஞ்செலின் & கோகிலா இன்னொருபக்கம் ! போனிலேயே "இந்தக் கதையில் யார் ஹீரோ ? " என்பதில் ஆரம்பித்து ; கைவசமுள்ள 140 இதழ்கள் பற்றியும் ஒரு நூறு கேள்விகளை வாசகர்கள் எழுப்பும் போது, அத்தனைக்கும் பதில் சொல்லும் பொறுமையை எண்ணி நான் எத்தனையோ நாட்கள் வியந்ததுண்டு ! காலை பத்துக்குத் துவங்கி மாலை ஏழு வரை இவர்கள் உலகமே இந்தப் பணிகள் மட்டுமே ! மைதீனுக்கோ ஒன்பதுக்குப் புலரும் பொழுது - இரவு பதினொன்றுக்கு முன்பாய் ஓய்ந்ததில்லை ! And எந்தவொரு பணியும் அவனது எல்லைகளுக்கு அப்பாற்பட்டவையாகாது !! களப்பணிகளே நமது மார்க்கெட்டிங் மேனேஜர் கணேஷுக்கு என்பதால் - ஊர் ஊராய் ; வீதி, வீதியாய் நம் முகவர்களை பொறுமையாய் / திறமையாய்க் கையாள்வது அவரது இலாக்கா ! And புத்தக விழாவினில் நம் ஸ்டாலைப் பார்த்துக் கொள்பவரும் அவரே ! தமிழ் பதிப்புலகில் - இத்தனை சன்னமான - ஆனால் இத்தனை ஆற்றலானதொரு அணியிருக்க சத்தியமாய் வாய்ப்புகள் குறைவு என்பேன் ! Doubtless - ஆங்காங்கே சின்னச் சின்ன குறைபாடுகள் இருந்திடலாம் தான் ; ஆனால் அவர்களின் முன்னே நான் குவித்துப் போட்டிருக்கும் பணிகளின் சுமைக்கு சற்றே அனுசரணையும் நிச்சயம் அவசியமே ! ஆண்டின் இறுதி நாளை நெருங்கும் இந்தத் தருணத்தில், அளவில் சிறிதாயிருப்பினும் ஆற்றலில் அசகாயர்களாக இருக்கும் எனது இந்த டீமை உயர்த்திப்பிடிப்பதும் - இந்தாண்டின் மறக்க இயலா விஷயங்களுள் ஒன்றாக இருக்குமென்பது நிச்சயம் ! Thank you my team !
And before I sign off -சின்னதொரு வேண்டுகோளும் !! இன்னமும் சந்தாப் புதிப்பித்தல்களைச் செய்திருக்கா நண்பர்கள் - இனியும் தாமதிக்க வேண்டாமே - ப்ளீஸ் ? எங்களுக்குச் சுறுசுறுப்பைக் கற்றுத் தந்தவர்கள் நீங்களே ! இன்றைக்கு எங்களோடு தோள் கொடுத்து நிற்க நீங்களில்லாது போனால் ரொம்பவே மிஸ் செய்வோம் !!
புத்தாண்டில் சந்திப்போம் folks - God be with us all ! Happy Reading !! And அட்வான்ஸ் புத்தாண்டு வாழ்த்துக்களும் !