Powered By Blogger

Saturday, December 10, 2016

இன்று ஒரு புது நாள்....

நண்பர்களே,

வணக்கம். எல்லாம் கடந்து போகும் என்பதை கடந்த சில “இயல்புக்குத் திரும்பும் நாட்கள்” சுட்டிக் காட்டும் போது, நாமும் அதற்கொரு விதிவிலக்காக முடியுமா ? So - இதோ தொடர்வோம் பாதியில் நின்று போன டிசம்பர் மாதத்து அலசல்களை ! இந்த வாரத்தின் துவக்கத்தில் ஒரு மின்னஞ்சல் கிட்டியிருந்தது - 2016-ன் அதிரடிப் புது வரவான ஜேஸன் ப்ரைஸைப் பற்றி ! அதனை உங்களோடு பகிர்வதில் சுவாரஸ்யம் இருக்குமென்று பட்டதால் - here it is:

பார்க்க ‘பிதாமகன்‘ விக்ரம் போலிருக்கும் இந்த டிடெக்டிவ் எத்தனை முடிச்சுகளைத் தான் கடைசி பார்டில் அவிழ்க்கப் போகிறார் ? எனக்கு நினைவு தெரிய நம் புக்ஸில் இது போல் ஒரு செம சஸ்பென்ஸ் த்ரில்லர் வந்ததே கிடையாது ! க்ளைமேக்ஸில் இத்தனை தொங்கிக் கொண்டிருக்கும் முடிச்சுகளையும் கதாசிரியர் எப்படித் தான் சரிசெய்யப் போகிறாரோ ? பாவம் !”

இரண்டாவது பாகத்தை எழுதி முடித்து விட்டு பேனாவை மூடும் முன்பாக எனக்குள் தோன்றியதும் கனகச்சிதமாய் இதே உணர்வுகள் தான் ! காத்திருக்கும் (இறுதி) 46 பக்கங்களுக்குள் கதாசிரியர் வெளிச்சமிட்டுக் காட்ட வேண்டிய மர்மங்களின் பின்னணிகள் தான் எத்தனை- எத்தனை ? என்பதை நினைத்துப் பார்க்கும் போதே மலைப்பாக இருந்தது ! ‘பர பர‘வென்று க்ளைமேக்ஸ் பாகத்தினை வாசிக்கத் தோன்றினாலும் - அதன் மீது பணியாற்றும் வேளை புலரும் வரைக்கும் சஸ்பென்ஸ் தலைக்குள் தொடரட்டுமே, என்று தீர்மானித்தேன் ! மூன்று பாகங்கள் கொண்ட இந்தக் கதைத் தொடரை ஒற்றை ஆல்பமாய் இணைத்து வெளியிடாது- பாகம் பாகமாய் வெளியிட்டதன் பின்னணி கூட இதுவே தான்!
Whodunit ரகக் கதைகளை (அதாவது- குற்றங்களுக்குக் காரணகர்த்தா யார்? என்ற ரீதியிலான மர்மக் கதைகள்) வெற்றி கொள்ளச் செய்வதாயின் வாசகர்களின் ஆர்வமான பங்களிப்பும் அவசியம் என்பது பதிப்புலகின் எழுதப்படாத விதி ! So “எழுதப்பட்ட விதி”யில் துவங்கிய இந்தச் சிறு பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் நிறையவே சிந்திக்க, பாயைப் பிறாண்ட கதாசிரியர் ஏற்பாடு செய்து தந்திருக்கும் முகாந்திரங்களை நாமும் சிறுகச் சிறுக மனதில் ஊறப் போட்டு - கதையின் பின்னணி என்னவாகயிருக்குமென்று யூகிக்க முயல்வதும் இந்த “ஜேஸன் ப்ரைஸ் அனுபவத்திற்கொரு” முக்கிய அங்கமாக இருக்குமென்று பட்டது ! ஒரே இதழாய் மூன்று பாகங்களையும் வெளியிடும் பட்சத்தில் ‘கட கட‘வென்று படித்து முடித்து விட்டு, அடுத்த மாதம் மறந்து விடுவோம் ! ஆனால் இப்போதோ இந்த லயிப்பு மனுதுக்குள் ஓரிரு மாதங்களுக்காவது ரீங்காரமிடுவது ஒரு மாறுபட்ட அனுபவம் தானே ? தவிர, ஒரே ஆல்பமாய் – கூடுதல் விலையில் ஒரு புது நாயகருடன் வெளிவரும் “புது பாணிக் கதை” என்ற மறுநொடியிலேயே வாசகர்களுள் ஒருசாரார் க்ளிசரின் இல்லாமலேயே தாரை தாரையாய் (!!) கண்களில் ஜலப்பிரவாகத்தை ஓட விடுவதும் possible என்று பட்டது ! வாய்ப்பளிக்காமலே இதனை மூலை சேர்த்து விடுவார்களோ என்ற பயம், பாகம் பாகமாய்ப் பிரித்து வெளியிடும் தற்சமயம்  தவிர்க்கப்பட்டதாக நினைத்தேன் ! எல்லாவற்றிற்கும் மேலாய் - “மறைக்கப்பட்ட நிஜங்கள்” இதழில் ஆங்காங்கே மௌனமாய் விரவிக் கிடக்கும் முடிச்சுகள் தான் எத்தனை ? என்று யோசித்துப் பார்ப்பதே ஒரு த்ரில்லான காரியம் என்பேன்! இதோ- மேஜரான கதை knot நீங்கலாக ஆங்காங்கே எழுப்பப்பட்டிருக்கும் சன்னமான கேள்விக் கணைகளின் பட்டியல் :

1. யார் அந்த ராய் ஃபேகண்டம் கதாப்பாத்திரம் ? மார்கன் ஃபாடாய் எழுதிய நாவல்களில் அவனுக்கு அடிக்கடி தலைகாட்ட என்ன ஜோலி ?

2. பழைய போலீஸ் குறிப்புகளைத் தேடிப் பார்க்கும் போது 4 ஆண்டுகளுக்கு முன்பாக இரு மர்மக் கொலைகள் நடந்ததாகவும் ; அந்த சடலங்கள் மீது விநோதமான சில சடங்குகள் செய்யப்பட்ட அடையாளங்கள் இருப்பதாக வருகிறது ! அதற்கும் தற்போதைய நிகழ்வுகளுக்கும் சம்பந்தம் என்னவாக இருக்க முடியும் ?

3. கஞ்சாக் கூடத்திலிருக்கும் இந்த ஜடாமுடி ஆசாமி யார் ? இலண்டன்... கெய்ரோ... ஸ்காட்லாந்த் என அவன் வலம் வருவது ஏனோ ?

4. அவன் கழுத்தில் தொங்கும் வட்ட வடிவிலான தாயத்து ; எகிப்தியக் கல்லறைத் தேடல்கள்... இவற்றின் முக்கியத்துவங்கள் என்னவாக இருக்கும் ?

5. கறுப்பழகி க்ளோவின் மகனான சிறுவன் ஜெஃப்ரியை உள்ளுர் ரௌடிகள் ரவுண்ட் கட்டுகின்றனர் ! தொடர்ந்து நிகழ்வது என்ன ? அந்த முரடன்கள் இரத்தக்களரியாகி செத்துக் கிடப்பது ஏன் ? எவ்விதம் ?

6. அந்த ஆளரவமிலா ஸ்காட்லாந்துத் தீவில் வீடு முழுக்க உள்ள கிறுக்கல்களின் அர்த்தமென்ன ? எல்லாவற்றிற்கும் சிகரமாய் ஜேஸன் ப்ரைஸ் பற்றிய புத்தகங்கள் அங்கே எழுதிக் கிடப்பது எவ்விதம் ? நம்மூரின் நம்பிக்கைகளான நாடி ஜோதிடம் ; ஏடு... போன்றவற்றின் தழுவலா இது ?

7. அந்தத் தீவில் பதுங்கிக் கிடந்து ஜேஸனை எதிர்பார்த்துக் காத்திருப்பது யார் ?
முதலிரு பாகங்களையும் கையில் வைத்துக் கொண்டே- க்ளைமேக்ஸ் பாகத்தை வாசிப்பது நிச்சயமாய் நமக்கொரு த்ரில்லான அனுபவமாய் இருக்குமல்லவா ? அதையும் தான் ரசித்துப் பார்ப்போமே ? 2008-ல் முதல் பாகம்; ‘09-ல் பாகம் # 2 & 2010-ல் இறுதிப் பாகமென மூன்றாண்டுகள் பிரயாணம் செய்ததொரு த்ரில்லரை நாம் மூன்றே மாதங்களுக்குள் பூர்த்தி செய்வது நிச்சயம் மோசமில்லை என்றே நினைத்தேன் !
டிசம்பரின் இன்னுமொரு சுவாரஸ்யமான இதழாக நான் பார்த்தது டெக்ஸின் “நீதிக்கு நிறமேது?” இதழையே ! ஜேஸன் ப்ரைஸ் பாணியில் இங்கே அதிரடிகளோ, ஆச்சர்யங்களோ கிடையாது ; நேர்கோட்டுக் கதை சொல்லலே என்றபோதிலும் இதனிலொரு முக்கிய வித்தியாசம் உள்ளதென்று சொல்வேன் ! பொதுவாய் இரவுக்கழுகாரின் கதைகளில் ஒருவிதமான வெறுமை இருப்பதில்லை ! அநீதி ஆசாமிகளை அடித்து துவம்சம் செய்து நல்லவர்களைக் காப்பாற்றுவார் நம்மவர் ! ஆனால் இம்முறையோ அந்த நீக்ரோ கைதியும் சரி, சூதாடி டாய்லும் சரி, செத்துப் போய் விடுகிறார்கள் – டெக்ஸின் முன்னேயே ! அந்தக் கைதிக்கொரு நியாயமான விசாரணை அவசியமென்ற ஆர்வத்தினாலேயே தன் உற்ற தோழனையும், ஊர் மக்களையுமே எதிர்த்து நிற்கும் டெக்ஸால் கூட அந்த tragedy-ஐத் தவிர்த்திட முடியாது போவதாய் கதையமைக்கப்பட்டிருப்பது சற்றே வித்தியாசமாய்ப் பட்டது. அதுமட்டுமன்றி, இறுதியாக வில்லனுக்கான தண்டனையைத் தருவதும் ‘தல‘ அல்ல ; சவுக்கடி பட்டதொரு கறுப்பின ஆசாமி என்பதைக் கவனியுங்களேன் ! எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல – டெக்ஸ் & கார்சன் கசப்போடு அந்த நகரை விட்டுப் புறப்படும் இறுதிப் பக்கம் - மாமூலான happy ending கிடையாது ! உற்ற நண்பனோடு மோத வேண்டிய நிர்ப்பந்தம் ; படுகாயத்தோடு படுக்கையில் கிடக்கும் நிலையில் அவனை விட்டுப் புறப்படுவது ; காப்பாற்ற எண்ணிய கைதி அநியாயமாய் மாண்டு போன விதத்தில் தோல்வி ; நிறவெறி தலைவிரித்தாடும் அந்தப் பகுதியில் மாற்றங்களென எதுவுமே நிகழவில்லையே என்ற ஆதங்கம் - என்று பல சங்கடங்கள் மனதை அரிக்க நாயகர் விடைபெறுவது டெக்ஸ் கதைகளில் அடிக்கடி நாம் காண்பதல்ல ! கதைகள் # 200-300 வரையிலான படைப்புகளில் இது போன்ற மெல்லிய கசப்பு சுவை விரவிக் கிடப்பதைக் காணலாம் என்று இத்தாலிய ரசிகர்கள் சொல்கிறார்கள் ! இறுதியில் வென்றது நீதியல்ல... முரட்டுத்தனமும், பழிவாங்கும் வேட்கையுமே என்ற theme நம்மவருக்கு தினசரி நிகழ்வில்லையே ?! So 2016-ன் துவக்கம் ஒரு மாமூலான கதையோடு என்றால் - அதன் இறுதியோ ஒரு off beat கதையோடு !

அப்புறம் அந்த 2016-ன் ரிப்போர்ட் கார்டைப் பூர்த்தி செய்து, ஃபோட்டோ எடுத்து நமது அலுவலக மொபைலுக்கு வாட்சப்பில் அனுப்பவாவது செய்யலாமே ? இதுவரையிலும் அந்தப் படிவத்தை விட்டுத் தர யாருக்கும் மனம் ஒப்பவில்லை போலும் - கடுதாசிகள் வருகின்றனவா என்று போஸ்ட்மேன் வரவை எதிர்நோக்கிக் காத்திருந்ததே மிச்சம்! Please do share your thoughts folks! ஆண்டுக்கு ஒரு முறை இது போன்ற தருணங்களிலாவது மௌனங்களைத் கலைக்க நீங்கள் மெனக்கெடாது போயின், நிச்சயமாய் ரசனைகளின் அளவுகோல்களில் நாம் அனைவருமே ஒரே பக்கத்தில் தானிருக்கிறோமா - இல்லையா ? என்பதே ஜேஸன் ப்ரைஸ் மர்மமாகிவிடக் கூடும் !

புத்தாண்டும்... சென்னைப் புத்தக விழாவும் கூப்பிடு தொலைவில் காத்திருப்பது தெரிகிறது ! வழக்கம் போல நம்பிக்கையைத் துணைக்கு அழைத்துக் கொண்டு BAPASI -ன் இந்த விழாவுக்கு விண்ணப்பித்துள்ளோம் ! துவக்க ஒன்றிரண்டு ஆண்டுகளில் எழுந்த, நம் மீதான புகார்களைத் - தொடரும் ஆண்டுகளில் தவிர்த்துக் கொள்ள நாம் முயற்சித்து வெற்றி கண்டோம் என்பதால், அமைப்பாளர்களின் கருணைப் பார்வை நம் மீது விழுமென்ற நம்பிக்கையோடு காத்துள்ளோம் ! All fingers crossed in all angles ! அவ்விதம் ஸ்டால் கிட்டிவிடும் பட்சத்தில் முதல் வாரத்து சனியும், ஞாயிறின் பகல் பொழுதிலும் ஸ்டாலில் டேரா போட்டிருப்போம் ஜுனியரும், நானும் ! புது டெல்லிப் புத்தக விழா கூட அதே வேளையில் தான் துவக்கம் காண்கிறதென்பதால் ஞாயிறு மாலை அங்கே தலைகாட்டுவதாய் உத்தேசம் ! So சனி & ஞாயிறில் நமக்கென நேரம் ஒதுக்கிட முயற்சிக்கலாமே folks ?! ரூபாய் நோட்டுப் பிரச்சனை தலைதூக்கிய நாள் முதலாய் - புத்தகக் கடைகளில் நிகழ்ந்திடும் பொதுவான sales ரொம்பவே உதைக்கிறதாய் முகவர்கள் சொல்லி வருகின்றனர் ! புது மாதம் - புது ஆண்டு – அரசின் இறுக்கத் தளர்வுகளுக்கும், கொஞ்சம் சுலபமான சூழலுக்கும் வழிவகுக்குமென்ற நம்பிக்கையோடு புத்தக விழாவை எதிர்நோக்குகிறோம். சீக்கிரமே PayTm ஜோதியிலும் ஐக்கியமாகத் தீர்மானித்துள்ளோம் - மாறுகின்ற தருணங்களுக்கு நியாயம் செய்யும் விதமாய் !
ஜனவரியின் வண்ண இதழ்களின் பணிகள் 70% நிறைவடைந்துள்ள நிலையில், தொடரும் வாரத்தில் அச்சுக்குச் செல்லத் தயாராகி வருகிறோம் ! புது வரவு ட்யுராங்கோ ஒரு ‘அக்மார்க் கௌபாய்‘ என்பதை தினமும் எனக்கு உணர்த்தி வருகிறார் ! டெக்ஸ் வில்லருக்கும், கேப்டன் டைகருக்கும் மத்தியில் தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்வார் இந்த மனுஷன் என்பது எனது எதிர்பார்ப்பு ! `Good ol` Westerns' – என்ற classic பாணிக்கு 100% நியாயம் செய்திடப் போகும் இந்தக் கதைகள் ஒவ்வொன்றின் தலைப்புமே ஒரு template-ல் அமைத்துள்ளோம் ! இதழ் வெளி வந்து, அதனை நீங்கள் வாசிக்கும் வேளையில் அந்தத் தலைப்புகளுக்கான logic நிச்சயம் புரியும் ! And இது நமது முத்துவின் 45-வது ஆண்டுமலரும் கூட என்பதால் உங்களது ‘மலரும் நினைவுகளுக்கென‘ இரண்டு பக்கங்கள் காலியாகக் காத்துள்ளன ! மூத்த வாசகர்கள் மட்டுமன்றி, இடையில் இணைந்து கொண்டோரும் முத்துவுடனான உங்கள் நினைவுகளை இங்கே பகிர்ந்து கொண்டால், அவற்றை இதழுக்குள்ளும் இணைத்து விடுவேனே ? So- contributions please?

இறுக்கமானதொரு வாரத்தைத் தாண்டியிருக்கும் வேளையில் - இதோ இந்த வேளையை கொஞ்சமாய் ஜாலியாக்கிடவொரு caption போட்டி! வெற்றி பெறும் நண்பருக்கொரு Super 6 சந்தா அன்பளிப்பு ! Get cracking guys ! 

Before I sign off, சந்தா 2017-ன் ஒரு நினைவூட்டலும் கூட !!காத்திருக்கும் புதுப் பயணத்தினில் இணைந்து கொள்ள இன்றே சந்தாத் தொகைகளை அனுப்பிடலாமே - ப்ளீஸ் ? மீண்டும் சந்திப்போம் !

P.S : முத்து காமிக்ஸ் 45 !! - இது அவசரமான தேவை folks ; இயன்றமட்டிலும் துரிதம் ப்ளீஸ் ?

243 comments:

 1. குறள் பால்:அறத்துப்பால்.குறள் இயல்:துறவறவியல்.அதிகாரம்:தவம்
  குறள் 270:
  ‘’இலர்பல ராகிய காரணம் நோற்பார்
  சிலர்பலர் நோலா தவர்.’’

  மு.வ உரை:
  ஆற்றல் இல்லாதவர் பலராக உலகில் இருப்பதற்குக் காரணம் தவம் செய்கின்றவர் சிலராகவும், செய்யாதவர் பலராகவும் இருப்பதே ஆகும்.

  பரிமேலழகர் உரை:
  இலர் பலர் ஆகிய காரணம் - உலகத்துச் செல்வர்கள் சிலராகநல்கூர்வார் பலராதற்குக் காரணம் யாது எனின், நோற்பார் சிலர் நோலாதார் பலர் -தவம் செய்வார் சிலராக, அது செய்யார் பலராதல். (செல்வம் நல்குரவு என்பனஈண்டு அறிவினது உண்மை இன்மைகளையும் குறித்து நின்றன, என்னை? நுண்ணுணர்வுஇன்மை வறுமை, அஃதுடைமை பண்ணப் பணைத்த பெருஞ் செல்வம் (நாலடி.251) என்றார்ஆகலின். 'நோற்பார் சிலர்' எனக்காரணம் கூறினமையான், காரியம் வருவித்துஉரைக்கப்பட்டது. தவம் செய்யாதார்க்கு இம்மை இன்பமும் இல்லை என இதனால் அவரதுதாழ்வு கூறப்பட்டது.).

  மணக்குடவர் உரை:
  பொருளில்லாதார் உலகத்துப் பலராதற்குக் காரணம் தவஞ்செய்வார் சிலராதல்; அது செய்யதார் பலராதல்.

  ReplyDelete
 2. மாலை வணக்கம் சார்...
  வணக்கம் நண்பர்களே...
  3வது....

  ReplyDelete
  Replies
  1. தகவலுக்கு நன்றி மாம்ஸ் _/\_
   .

   Delete
 3. Super sir. I will be missing the book fair. Advance happy christmas and new year 2017 to all.

  ReplyDelete
 4. மாலை வணக்கம் சார்...
  வணக்கம் நண்பர்களே... _/\_
  .

  ReplyDelete
 5. எடிட்டர் சார், புத்தகத் திருவிழாவில் நம் ஸ்டாலில் இம்முறை ஸ்வைப் மெஷின் இல்லாவிட்டால் போணியாவது ரொம்பவே சிரமம்! ஐடியா இருக்குதானுங்களே?

  ReplyDelete
  Replies
  1. ஸ்வைப் மெஷின் இனிவரும் புத்தக திருவிழாகளுக்கு மிகவும் அவசியம். உடனே தயார் செய்யவும்!

   Delete
 6. அனைவருக்கும் இரவு வணக்கம்.

  ReplyDelete
 7. ஜேசன்
  என்ற பெயர் வைத்திருந்தாலே பல

  திடுக்கிடும் திருப்பங்கள்
  திடுக்கிடும் நிகழ்வுகள்

  இவற்றுக்கு சொந்தக்காரராக இருப்பாங்களோ

  ஜேசன் ப்ளை
  ஜேசன் பார்ன்
  ஜேசன் ப்ரைஸ் :)

  இரண்டாம் பாகம் கலக்கல் சார்

  மூன்றாவது பாகத்துக்காக ஆவலுடன் வெயிட்டிங் சார்
  .

  ReplyDelete
 8. ரொம்ப நாளைக்குப் பிறகு சனிக்கிழமை மாலையே எதிர்பாராமல் வந்த பதிவு...

  டெக்ஸ் இம்மாத இறுதி இதழ் வித்தியாசத்தை அழகாக ஒரு மூத்த ரசிகரின் பாணியில் விவரித்து உள்ளீர்கள் சார்... சூப்பர்...

  ReplyDelete
 9. // தாரை தாரையாய் //
  தலைவரும் செயலாளரும் இதனை கவனிக்கவில்லையா!!

  ReplyDelete
 10. இப்போது எல்லாம் மலரும் நினைவு (அ) பசுமையான நினைவு அந்த நினைவு இந்த நினைவு எந்த நினைவு என்றாலும் முத்து & லயன் காமிக்ஸ்தான்!

  எனக்கு சரியா எழுதவராது அதனால இந்த மலரும் நினைவு ஆட்டத்துக்கு நான் வரல! முடிஞ்சா 50வது ஆண்டு மலருக்கு முயற்சிக்கிறேன்! (இல்லைனாலும் நான் ரொம்ப எழுதி கிழிக்கிற மாதிரி :-))

  ReplyDelete
 11. Replies
  1. B: இதுவரை நான் எழுதின captionனுக்கு ஆசிரியர் பரிசு ஏதும் கொடுக்கல, யாரும் ஒரு லைக் போடல, அது ஏன் ஒரு +1 கூட போடல அதனால இனி caption போட்டியில் கலந்துகவேண்டாம்ன்னு முடிவு எடுத்திருக்கேன்!

   A: துப்பாக்கிய எடுத்தமா, சுட்டமா, ரெண்டு பஞ்ச் டயலாக் பேசுனோமான்னு இருக்கமா! caption போட்டியில் கலந்துகிறேன்னு சொல்லி நம்ப ரசிகர்கள நீ கடுப்பு எத்துனதுதான் மிச்சம். புது வருஷத்தில் இருந்தாவது caption போட்டியில் கலந்து கொள்ளாம இருந்து நம்ப வாசகர்களை நிம்மதியா இருக்க விட சொல்லி இந்த பரிச நம்ப எடிட்டர் உனக்கு கொடுத்துள்ளார்!

   Delete
 12. விஜயன் சார், டிசம்பரில் ஜனவரி என்று பதிவு வர ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறேன்! அப்படியே அந்த (ஜெ)ராமையாவையும் சேர்த்து அனுப்பிவையுங்கள்!

  ReplyDelete
 13. மறைக்கப்பட்ட நிஜம்கள்: முதல் பாகத்தில் ஆரம்பித்த அதே வேகத்தோடு, மேலும் பல புதிய கேள்விகளை மனதில் எழுப்பிவிட்டு, நமது தூக்கத்தை கெடுத்துவிட்டு இந்த பாகம் முடிந்தது என்றால் அது மிகையில்லை! அதுவும் பல இடம்களில் வசனம் இல்லாமல் சித்திரம் முலம் கதை சொல்வது, இளையராஜாவின் பிண்ணனி இசை முலம் திரைபடத்தின் காட்சியை/கதையை சொல்லுவது போல் இருந்தது. நீண்ட நாட்களுக்கு பின் சித்திரம்களை ரசிக்க செய்த கதை.

  புத்தகத்தின் அட்டை முதல் கதையின் அனைத்து சித்திரம்களும் அதன் வண்ணம்களும் மிகவும் நன்றாக உள்ளது. கதையின் ஓவியருக்கு எனது வாழ்த்துக்கள். அதுவும் அந்த சந்தையை அதில் உள்ள கடைகள் அதில் வந்து செல்லும் மனிதர்களை, அதே இடத்தில் குதிரையில் வரும் மனிதனை கண்டு அந்த சந்தையில் உள்ள ஒவ்வொருவரின் மனநிலையை பிரதிபலிப்பது! இயல்பான பாலைவன காட்சி, அவர்கள் பயணத்தை ஆரம்பிக்கும் போது அந்த பெரிய சந்தையை விட்டு வெளி வருவது, அடுத்த கட்டத்தில் பாலைவனம் நடுவில் இருப்பது போல், அடுத்து அவர்கள் அதிக தூரம் சென்றுவிட்டதை காண்பிக்க அவர்களை சிறியதாக வரைந்து இருப்பது... இப்படியே ஒவ்வொரு பக்கத்தையும் சொல்லிக்கொண்டே போகலாம்!

  ReplyDelete
  Replies
  1. ///மறைக்கப்பட்ட நிஜம்கள்: முதல் பாகத்தில் ஆரம்பித்த அதே வேகத்தோடு, மேலும் பல புதிய கேள்விகளை மனதில் எழுப்பிவிட்டு, நமது தூக்கத்தை கெடுத்துவிட்டு இந்த பாகம் முடிந்தது என்றால் அது மிகையில்லை! ///

   அஃதே..அஃதே..!!

   Delete
 14. எழுதப்படாத இன்னும் ஏழு கேள்விகளின் விடையை தேடி, மூன்றாம் பாகம் எதிர்பார்த்து பிப்ரவரி மாதத்திற்காக நானும் காத்திருக்கிறேன்.!

  8. மார்க்கின் புதிய நாவலில் அப்படி என்ன அதிர்ச்சியான (31 பக்கம்) நிகழ்ச்சி மையமாக எழுதப்பட்டிருந்தது ?

  9. ஜேசன் ப்ரைசின் மேஜையில் உள்ள குறிப்புகள் (30 பக்கம்) மீது கறுப்பழகி ஆர்வம் கொள்ள என்ன காரணம்? அவளுக்கும் நடக்கும் சம்பவத்திற்கும் என்ன தொடர்பு ?

  10. புதிய நாவலை கொடுக்கும் மூத்தபத்திரிக்கையாளர் (35 பக்கம்) கொலைக்கு யார் காரணம் ? அவரை சந்திக்க வந்த நபர் யார்? ஜேசனை அங்கு தாக்கியது யார்?

  11. ஜேசன் ப்ரைஸ் பயமாக இருக்கிறது (29 பக்கம்) என தடுமாறும் அளவிற்கு அவன் கனவில் வரும் கொடூரம் என்ன?

  12. முதல் பாகத்தில் (33 பக்கம்) ஜேசன் ப்ரைஸ் மயானத்தில் யாருக்கு அஞ்சலி செலுத்துகிறான் ?

  13. மூத்தபத்திரிக்கையாளர் கொலையில் கிடைத்த (56 பக்கம்) தடயம் என்ன ? அது ஜேசன் ப்ரைஸுக்கு எதிரானதா ? அல்லது அவர் தேடும் புதிரை அவிழ்க்கும் தடயமா ?

  14.பூங்காவில் திடிரென ஜேசன் வெறிகொண்டு தாக்கும் அந்த கணம் (17 பக்கம்) நமக்கு எதன்மறுபக்கத்தை காட்டும் காட்சி ?


  ReplyDelete
  Replies
  1. மாயாவிகாரு,

   இவைமட்டுமல்ல
   இன்னமும் இருக்கின்றன கேள்விகள் .!
   எப்போது வரும் பிப்ரவரி
   எப்போது விலகும் திரையென நானும் காத்திருக்கிறேன்.!

   Delete
  2. அடடே நீங்க தானே அந்த
   சேலம் மாயாவி சிவாஜி
   வார்ம் வெல்க

   Delete
  3. மாயாவி ஜி சேலத்தில் 4 ,5,ம் தேதிகளில் உங்களை தொடர்புகொள்ள கடும் முயற்சி செய்தேன்

   Delete
  4. பதில் சொல்ல வேண்டியவக எல்லாம் இப்படி கேள்வியாக் கேட்டுக்கிட்டுக் கிடந்தா ( அதுவும் போல்டு லெட்டர்ஸ்ல வேற!) நாங்கல்லாம் எங்கபோய் முட்டிகிறதாம்!

   எடிட்டராவது பதில் சொல்லுவாருன்னு பாத்தா... அவரும் போல்டு லெட்டர்ஸ்ல கேள்விகள அடுக்கிட்டு அவசர அவசரமா எஸ்கேப் ஆகிட்டாரு!

   இப்போ நானும் கேட்கறேன் :
   289. இன்னும் இரண்டு மாதங்களில் இந்தக் வினாவுக்கெல்லாம் விடை தெரியலேன்னா ஈனாவினாக்கு பைத்தியம் பிடிக்குமா இல்லையா?

   Delete
  5. 8வது கேள்விக்கு ஓரளவு விடை உள்ளது. (பக்கம் 44 ல்)இதுவரை ஜெஸன் பிரைஸ் வாழ்க்கையை கதையாக எழுதி உள்ளார்.(44ம் பக்கம் கடைசியாக இடது பக்கம் உள்ள சித்திரத்தை பார்க்கவும்)

   Delete
  6. Erode VIJAY @ என்னோட கேள்வி

   ஈனாவினாக்கு இன்னும் பைத்தியம் பிடிக்கவில்லையா? :-)

   Delete
  7. ////ஈனாவினாக்கு இன்னும் பைத்தியம் பிடிக்கவில்லையா? ////

   என்னைப்பத்தி நல்லா தெரிஞ்சு வச்சிருக்கீங்கன்னில்ல நினைச்சுக்கிட்டிருந்தேன்?! ;)

   Delete
  8. Erode VIJAY @ உங்கள் பதிலை படித்தவுடன் தோன்றிய கேள்வி, அப்ப எந்த மருத்துவமனை? :-)

   Delete
 15. ஆசிரியருக்கும் & நண்பர்களுக்கும்
  சிரம் தாழ்ந்த வணக்கங்கள்

  ReplyDelete
 16. முத்து காமிக்ஸ் 45 (நானும் முத்துவும்)

  ஆறாம் வகுப்போ ஏழாம் வகுப்போ படித்துக்கொண்டிருந்த போது என்னுடைய தந்தையார் புத்தக பரிமாற்றம் வாயிலாக வாங்கி வந்திருந்த இரண்டு டஜன் புத்தகங்களில், நாவல்களுக்கு இடையே கைக்கு அடக்கமான சைசில் இருந்த ஒரு படக்கதை புத்தகம் என் கவனத்தை ஈர்த்தது.
  அது நயாகராவில் மாயாவி என்ற முத்து காமிக்ஸ். அட்டை சிதைந்து மூலைகள் மடிந்து பல கைகள் மாறி வந்திருந்த புத்தகம் என்றாலும், மற்றவற்றில் இல்லாத ஒரு வசீகரம் அந்த புத்தகத்தின்பால் இருப்பதாய் எனக்கு அன்று தோன்றியது. (இன்றுவரை காமிக்ஸ் மீதான வெறித்தனமான ஆர்வத்தின் ஆரம்பப்புள்ளி அதுதான்.)
  முதல் பக்கத்திலேயே இரும்புக்கை மாயாவி மற்றும் நிழல்படை யின் அறிமுகத்தை படித்தவுடன் ஆர்வம் தொற்றிக்கொள்ள வீட்டின் பின்புறம் இருந்த கொடுக்காப்புளி மரத்தடியில் அமர்ந்து படித்தது இன்னும் நினைவிருக்கிறது. படித்தேன் என்பதைவிட மாயாவியுடன் சேர்ந்து பயணித்தேன் என்பதே சரி. இன்று அந்த பழைய வீடும் இல்லை கொடுக்காய்ப்புளி மரமும் இல்லை. ஆனால் மாயாவி இருக்கிறார் என்னுடன். .!!
  தொடர்ந்து என்னுடைய தந்தையாரை நச்சரித்ததில் அவர் தேடிப்பிடித்து நிறைய காமிக்ஸ் கொண்டுவர ஆரம்பித்தார்.

  பரிமாற்றத்திலும் இரவலிலும் படித்துக் கொண்டிருந்தது திருப்தியளிக்காமல் போகவே operation own bookஐத் திட்டமிட்டேன். திண்பண்டம் வாங்கி சாப்பிடச்சொல்லி வீட்டுப் பெரியவர்களும், உறவினர்களும் தந்த சில்லறைகளைச் சேர்த்து கடைக்குப்போய் ஒவ்வொன்றாய் வாங்கத் தொடங்கினேன். (லயன் காமிக்ஸ், திகில், மினி எல்லாமே வந்து கொண்டிருந்த காலகட்டம் அது) . ஏதோ ஒன்று வாங்கிவிட்டு அடுத்ததுக்கு காசு சேர்க்க ஆரம்பித்தேன். போதாக்குறைக்கு பழைய புத்தகங்களும் விலைக்கு கிடைத்தன. (பட்ஜெட் பற்றாமல் போகவே, உண்டியலில் கைவைத்து வீரத்தழும்புகள் வாங்கியதெல்லாம் வேறு கதை) . .!!
  Sslc வந்தபோது அப்பா ரொம்பவும் கண்டிப்புடன் காமிக்ஸூக்கு தடைவிதித்தார். என்னுடைய சிறு சேமிப்பும் (புதுசு பழசு என கிட்டத்தட்ட ஐம்பது புத்தகங்கள்) பழைய பேப்பருக்கு போடப்பட்டது. அழுததை தாண்டி வேறெதுவும் செய்ய இயலாத நிலை. எட்டாத பழம் புளிக்கும் என்ற கதையாய் காமிக்ஸ் எனக்கு ஏழெட்டு வருடங்களுக்கு மேலாய் எட்டாமல் புளித்துப்போனது.
  பின்னர் மில்லேனியம் பிறந்திருந்த புதிதில் சிறையில் ஒரு புயல் முத்து காமிக்ஸ் என்ற பெயரில் தொங்கிய இதழை கடையொன்றில் பார்க்க நேர்ந்த பொழுது, நெடுங்காலம் பிரிந்திருந்த காதலியை கண்டதொரு உணர்வு உள்ளத்தில் பீறிட்டெழ, மீண்டும் தொடர த் தொடங்கிவிட்டது காமிக்ஸ் காதல்.( இழந்த, தவறவிட்ட பழைய முத்துக்களையும் முடிந்தவரை சேர்த்தும்விட்டேன்)
  ஆக, என்னுடைய காமிக்ஸ் வாசிப்பின் துவக்கமும் சரி, இடைவெளிக்கு பின் மீண்டும் வாசிப்பு துவங்கியதும் சரி, இரண்டுமே முத்து காமிக்ஸ் வாயிலாகத்தான்.!
  இரும்புக்கை மாயாவியில் தொடங்கி, லாரன்ஸ், ஜானி நீரோ, ரிப் கிர்பி, மாண்ட்ரேக் போன்ற பல ஹீரோக்களுடன் பயணித்து, கேப்டன் டைகர் என்றொரு அதகள நாயகருடன் உச்சம் தொட்டு இன்று லார்கோ வின்ச், வேய்ன் ஷெல்டன் என்று நாகரீக ஆடையணிந்து கொண்டு அட்டகாசமாய் வலம் வந்து கொண்டிருக்கும் முத்து காமிக்ஸுக்கு என்னைவிட வயது அதிகம் என்றாலும் என்றும் பதினாறாய் இன்றும் இளமையுடனேயே காட்சியளிக்கிறது. நாற்ப்பத்தைந்து ஆண்டுகளைத் தொட்ட முத்து காமிக்ஸ் நானூற்றைம்பது ஆண்டுகளைக் கடந்தும்கூட இளமையும் பொலிவும் மாறாமல் வீறுநடை போடவேண்டும் என்று எல்லாம் வல்ல இறையை வேண்டிக்கொள்கிறேன்..!!

  கண்ணிலும் கருத்திலும் காமிக்ஸ் காதலுடன்

  KiD ஆர்டின் KannaN.

  ReplyDelete
  Replies
  1. ///நாற்ப்பத்தைந்து ஆண்டுகளைத் தொட்ட முத்து காமிக்ஸ் நானூற்றைம்பது ஆண்டுகளைக் கடந்தும்கூட இளமையும் பொலிவும் மாறாமல் வீறுநடை போடவேண்டும் என்று எல்லாம் வல்ல இறையை வேண்டிக்கொள்கிறேன்..!!

   கண்ணிலும் கருத்திலும் காமிக்ஸ் காதலுடன்

   KiD ஆர்டின் KannaN.///

   கடேசியா இருக்கும் பேர மட்டும் தூக்கிட்டு, அதுல என்ர பேரைப் போட்டுக்கோங்க எடிட்டர் சார்! :)

   Delete
  2. // இளமையும் பொலிவும் //
   +1112

   Delete
  3. பின்புறம் இருந்த கொடுக்காப்புளி மரத்தடியில் அமர்ந்து படித்தது இன்னும் நினைவிருக்கிறது. படித்தேன் என்பதைவிட மாயாவியுடன் சேர்ந்து பயணித்தேன் என்பதே சரி. இன்று அந்த பழைய வீடும் இல்லை கொடுக்காய்ப்புளி மரமும் இல்லை. ஆனால் மாயாவி இருக்கிறார் என்னுடன். .!!

   Super and very touching

   Delete
  4. // பழைய வீடும் இல்லை கொடுக்காய்ப்புளி மரமும் இல்லை. ஆனால் மாயாவி இருக்கிறார் என்னுடன். .!! //

   மனதை தொடும் வரிகள்!

   Delete
 17. ஆசிரியருக்கும் & நண்பர்களுக்கும்
  சிரம் தாழ்ந்த வணக்கங்கள்

  ReplyDelete
 18. மன்ன்னிக்கவும் எடிட்டர் சார்.report cardல் உள்ள நிறைய காமிக்ஸ் நான் வாங்ககவில்லை.TeX,largo and xiii,Martin தவிர்த்து. என்னவே நான் ரிபோர்ட் card அனுப்ப இயலவில்லை.sorry sir.

  ReplyDelete
  Replies
  1. இப்படி நிறைய சப்ஜெக்ட்டுல அரியர்ஸ் வச்சுக்கிட்டிருந்தா எப்படிங்க Sridhar அவர்களே? அடுத்த வருசமாச்சும் படிச்சுப் பாசாகிற வழியப் பாருங்க! ;)

   Delete
 19. This comment has been removed by the author.

  ReplyDelete
 20. Caption ..

  சான்டா க்ளாஸ் : கிறிஸ்த்மஸ் பரிசாக உங்களுக்கு ஒரு ரைபிளும், கார்சனுக்கு ஒரு வின்செஸ்டரும் ஒரு ரெமிங்க்டனும், கிட்டுக்கு ஒரு கோல்ட்டும், டைகர் ஜாக்கிற்கு கத்தியும் அத்தோடு அனைவருக்குமாய் ஒரு பெட்டி டைனமைட்டும் கொண்டு வந்திருக்கிறேன். .

  டெக்ஸ் : இவரென்ன சான்டா க்ளாஸ் மாதிரியே பேசமாட்டேங்கிறாரே!? , ஏதோ வெப்பன் சப்ளையர் மாதிரியே லிஸ்ட் சொல்றாரு , அதுவும் கார்சனுக்கு மட்டும் பரிசு பெருசா இருக்கே? ஏதாச்சும் உள்குத்து இருக்குமோ!?

  ReplyDelete
 21. Caption ...

  சான்டா க்ளாஸ் : வன்மேற்கின் ஒப்பற்ற மாவீரரும் , கட்டழகிகளின் கனவுக்கண்ணனும் ஈடிணைய்ற்ற இளஞ்சிங்கமுமான கீர்த்திமிகு கிட் கார்சன் அவர்களுக்கு பரிசு கொண்டு வந்திருக்கிறேன். அவர் இங்கே ஒரு நவஜோ கிராமத்தில் யாரோ டெஸ்க் வில்லரோ பென்ச் வில்லரோ என்றொரு நபருடன் இருப்பதாக கேள்வி. அந்த கிராமத்திற்கு போக வழி சொல்லுங்களேன்.!

  டெக்ஸ் : கார்சனை இந்த அளவுக்கு புகழ்ந்து பேசக்கூடிய ஒரே நபர் கார்சனாக மட்டுந்தான் இருக்க முடியும். என்னை மட்டம் தட்டி பேசியதை வைத்தும், வந்திருப்பது கார்சன் என்பது தெளிவாகத் தெரிகிறது. இருந்தாலும் போட்டிருக்கும் வேடம் புனிதமாக இருப்பதால், முகவாய்க்கட்டையை பதம் பார்க்க துடிக்கும் முஷ்டியை அடக்கிவைக்கத்தான் வேண்டும்.

  ReplyDelete
 22. Jason Briceன் இரு தொடர் களில் மலைக்க செய்தது சிததிரங்களின் இரவு வண்ணங்கள்!

  ReplyDelete
 23. A:ஏம்ப்பா டெக்ஸ் எங்க கார்சனை?ரொம்ப நேரமா தேடிக்கிட்டு இருக்கேன்.கிறிஸ்துமஸ் பரிசா புது பிஸ்டல் தரலாம்னு இருக்கேன்.நீ பாத்தியா?
  B:கார்சன் அங்க ரூம்ல சிக்கன் வறுவல் இல்லைனு சாப்பிடாம கோவதுல இருக்கும் போது, இவர் அங்க போன அதே பிஸ்டல வச்சு இவர் தலை ல ஒரே போடா போட போரான்.

  ReplyDelete
 24. December இதழ்களில் best இதழ் மறைக்கப்பட்ட நிஜங்கள்!

  ReplyDelete
 25. இரண்டாவது இடத்தில் Lucky luke classics

  ReplyDelete
 26. ஆசிரியரே நான் ரிப்போர்ட் கார்டை சனியன்றே போஸ்ட் செய்து விட்டேன் இன்னுமா கிடைக்கவில்லை யப்பா என்ன ஸ்பீடு தபால் துறை

  ReplyDelete
 27. Dear Sir,
  I want to pay the subscription in two installments. If that is the case what will be the 1st installment amt and second one with in which date I need to pay? All this because of current situation I did not got my payments in time.

  ReplyDelete
 28. ///புது வரவு ட்யுராங்கோ ஒரு ‘அக்மார்க் கௌபாய்‘ என்பதை தினமும் எனக்கு உணர்த்தி வருகிறார் ! ///

  அப்படீன்னா, அட்டையில ஒரு ISI முத்திரையையும் போட்டுடுங்க எடிட்டர் சார்! ;)

  ReplyDelete
 29. ///ஒரே இதழாய் மூன்று பாகங்களையும் வெளியிடும் பட்சத்தில் ‘கட கட‘வென்று படித்து முடித்து விட்டு, அடுத்த மாதம் மறந்து விடுவோம் ! ஆனால் இப்போதோ இந்த லயிப்பு மனுதுக்குள் ஓரிரு மாதங்களுக்காவது ரீங்காரமிடுவது ஒரு மாறுபட்ட அனுபவம் தானே ?///

  உண்மை தான் எடிட்டர் சார்... உண்மைதான்! 'லயிப்பு'ன்னா 'கேள்விகள்' தானுங்களே? அது ரீங்காரமிடலீங்க; ஓங்காரமிடுது!

  ReplyDelete
 30. என்னுடைய ரிப்போர்ட் கார்டு - மார்க்குப் போடப்பட்டு, டோட்டல் சரிபார்க்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இன்றோ, நாளையோ அனுப்பிவைக்கப்படும்!

  ReplyDelete
 31. "மறைக்க பட்ட நிஜம்" இறுதி பாகம் இதே விரியோமோடு இருக்கும் என்று நம்புகிறேன்.
  போன வெள்ளி கிழமை office friendக்காக இரண்டு பாகத்தையும் order செய்துள்ளேன்.
  Online account சரியாக தனக்கு create ஆக வில்லை என ஓரு நண்பர் புகார் கூறினார்.(லயன்முத்து எஜன்ட் டாவே officeல என்ன மத்திட்டாங்க) மேலும் online முதல் பாக்கதை இன்னும் கவர்ச்சியாக நேர்த்தியாகவும் வடிவமைக்கலாம்
  இந்த வருடம் புத்தக திருவிழா எப்படி இருக்கும் என கவலையாக உள்ளது. Swipe machine இல்லை என்றால் மிகவும் கடினம்.

  ReplyDelete
 32. ///புது டெல்லிப் புத்தக விழா கூட அதே வேளையில் தான் துவக்கம் காண்கிறதென்பதால் ஞாயிறு மாலை அங்கே தலைகாட்டுவதாய் உத்தேசம் ! ///

  புரியவில்லையே!! டெல்லியிலும் நாம் ஸ்டால் போடுகிறோமா சார்?

  ReplyDelete
  Replies
  1. அதானே..!!
   டிக்கெட்டை சென்னைக்கு போடணுமா இல்லே டெல்லிக்கு போடணுமா..??
   (அவங்க அவங்களுக்கு போட்டுக்கணும்னு ஆராச்சும் மொக்கை போட்டிங்க... க்ர்ர்ர்.)

   Delete
 33. ///நீக்ரோ கைதியும் சரி, சூதாடி டாய்லும் சரி, செத்துப் போய் விடுகிறார்கள் – டெக்ஸின் முன்னேயே ! அந்தக் கைதிக்கொரு நியாயமான விசாரணை அவசியமென்ற ஆர்வத்தினாலேயே தன் உற்ற தோழனையும், ஊர் மக்களையுமே எதிர்த்து நிற்கும் டெக்ஸால் கூட அந்த tragedy-ஐத் தவிர்த்திட முடியாது போவதாய் கதையமைக்கப்பட்டிருப்பது சற்றே வித்தியாசமாய்ப் பட்டது. அதுமட்டுமன்றி, இறுதியாக வில்லனுக்கான தண்டனையைத் தருவதும் ‘தல‘ அல்ல ; சவுக்கடி பட்டதொரு கறுப்பின ஆசாமி என்பதைக் கவனியுங்களேன் ! எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல – டெக்ஸ் & கார்சன் கசப்போடு அந்த நகரை விட்டுப் புறப்படும் இறுதிப் பக்கம் - மாமூலான happy ending கிடையாது ! உற்ற நண்பனோடு மோத வேண்டிய நிர்ப்பந்தம் ; படுகாயத்தோடு படுக்கையில் கிடக்கும் நிலையில் அவனை விட்டுப் புறப்படுவது ; காப்பாற்ற எண்ணிய கைதி அநியாயமாய் மாண்டு போன விதத்தில் தோல்வி ; நிறவெறி தலைவிரித்தாடும் அந்தப் பகுதியில் மாற்றங்களென எதுவுமே நிகழவில்லையே என்ற ஆதங்கம் - என்று பல சங்கடங்கள் மனதை அரிக்க நாயகர் விடைபெறுவது டெக்ஸ் கதைகளில் அடிக்கடி நாம் காண்பதல்ல !////


  கதையை நல்லா கவனிச்சுப் படிச்சிருக்கீங்க எடிட்டர் சார்! :)

  ReplyDelete
  Replies
  1. ///கதையை நல்லா கவனிச்சுப் படிச்சிருக்கீங்க எடிட்டர் சார்! :)///

   ஹாஹாஹா :):)

   ஆனாப் பாருங்க, இனிமே நாம இந்த கதையைப்பத்தி சொல்ல எதுவுமே மிச்சமில்லை. .!!
   இனிமே உடனுக்குடனே விமர்சனம் பண்ணிடனும்..! :-)

   Delete
 34. ///புது வரவு ட்யுராங்கோ ஒரு ‘அக்மார்க் கௌபாய்‘ என்பதை தினமும் எனக்கு உணர்த்தி வருகிறார் ! டெக்ஸ் வில்லருக்கும், கேப்டன் டைகருக்கும் மத்தியில் தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்வார் இந்த மனுஷன் என்பது எனது எதிர்பார்ப்பு ! ///

  இப்படி ஒரு நபரைத்தான் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் சார்.

  அடையாளம்னா, பங்ச்சர் மூக்கு மாதிரியா சார்..?? :-)

  ReplyDelete
  Replies
  1. யோவ்...!!!
   கொளபாய்களை பற்றி ஏதாச்சும் பழிச்சு சொன்னா, என்னையும் சக கொளபாய் ரசிகர்களையும் பழிச்சதாகவே ரியாக்சன் தரப்படும் என அன்பான எச்சரிக்கை விடுக்கிறேன்...

   Delete
  2. கூட்டமா நின்னு முறைச்சி பாப்பிங்களோ..!!!

   Delete
  3. ////கூட்டமா நின்னு முறைச்சி பாப்பிங்களோ..!!!////

   :)))))

   Delete
 35. டெக்ஸ்::சான்டா 2000/-க்கு சில்லரை
  இருக்குமா???
  சான்டா;;;ஏம்பா டெக்ஸு அத தவிர வேற
  எது வேணும்னாலும் கேளேன்

  ReplyDelete
  Replies
  1. சான்டா:ரெண்டு ஆயிரம் ரூவா நோட்டா தரட்டுமா டெக்ஸு!!!

   Delete
 36. நான் முதன் முதலில் படித்தது "கண்ணீர் தீவில் மாயவி" எத்தனை முறை படித்தேன் என்று நினைவில்லை. நான் LM மை ரெகுலராக படிக்க வில்லை. எனென்றால் நான் இருந்த திருச்சி பொன்மலைபட்டி எரியாவில் LM கிடைக்காது. ஆனால் ராணி காமிக்ஸ் ரெகுலரக படிப்பேன். எங்கள் வீட்டில் எவ்வளவு புத்தகம் பாடித்தாலும் படிக்கதே என்று கூறியது கிடையாது. படித்ததை தடுத்ததும் கிடையாது. காமிக்ஸ் வகையாறவில் மட்டும் ஆங்கிலத்தில் "TINTIN" "BOB AND BOBBITTY" INZIGOWD" "ASTRIX" "TINKLE" இவ்வளவு வெரைடியில் இருக்கிறது.
  எப்போது தெல்லாம் திருச்சி சிங்கார தோப்பு எங்க அம்மா போகும் போது மறக்காமல் LM வாங்கி வந்து விடுவார். அப்படி ஓரு நாள் வாங்கி வந்தது தான் பிரம்பிப்பிற்கே பிரமிப்பு எற்படுத்தும் "தங்க கல்லறை". நான் அதை படித்தேன் என்று கூற முடியாது அதோடு வாழ்தேன் என்று கூற முடியும். TINTIN நிகறாக ஓரு காமிக்ஸ் படித்தேன் என்றால் அது "தங்க கல்லறை" மட்டுமே.
  ஆனால் விதி வசத்தால் நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது என் அம்மா குனபடுத்த முடியாத நோயால் பாதிக்க பட்டார். நான்கு வருடம் நோயோடு போராடிய காலத்தில் நான் எந்த ஓரு காமிக்ஸ்ம் படிக்கவில்லை.
  1995 அப்புறம் எப்போதாவது LM எதாவது ஓரு கடையில் கண்ணில் படும் நான் வாங்கி படிப்பேன். நான் 2006 Hyderabad சென்ற பிறகு அதுவும் தடைபட்டது. 2014 ம் ஆண்டு இனையத்தில் LM கலரில் வருகிறது என்று தெரிய வர. TINTIN மாதிரியான தரத்தில் தமிழ் காமிக்ஸ?. நான் கனவில் கூட நினைக்காத ஓரு நிகழ்வு. Online ஆர்டர் செய்து வாங்க பொறுமை இல்லை. நேரடியாக சிவகாசி சென்றேன். முதலில் ஓரு 5000 ரூபாய்க்கு வாங்கி விட்டு. அதற்க்கு அடுத்த மாதம் மறுபடியும் சிவகாசி சென்று 6000 ரூபாய்க்கு மீதி உள்ள அனைத்து இதழ் களையும் வாங்கி விட்டேன்.
  அப்போது ஆரம்பித்து இப்போது வரையில் ஓரு இதழை கூட மிஸ் பன்னுவது இல்லை.

  ReplyDelete
  Replies
  1. ///Online ஆர்டர் செய்து வாங்க பொறுமை இல்லை. நேரடியாக சிவகாசி சென்றேன். முதலில் ஓரு 5000 ரூபாய்க்கு வாங்கி விட்டு. அதற்க்கு அடுத்த மாதம் மறுபடியும் சிவகாசி சென்று 6000 ரூபாய்க்கு மீதி உள்ள அனைத்து இதழ் களையும் வாங்கி விட்டேன்.
   அப்போது ஆரம்பித்து இப்போது வரையில் ஓரு இதழை கூட மிஸ் பன்னுவது இல்லை.///


   அருமை!!!

   Delete
 37. முத்துவும் நானும்
  1972 or1973 என்று நினைக்கிறேன்
  முத்துவுடன் இரும்புக்கைமாயாவியின்
  சிறிய அழகிய காலண்டர் ஒன்று
  இலவச இணைப்பாக வழங்கப்பட்டது
  அதில் மாயாவி கையில் துப்பாக்கியுடன்
  ஜேம்ஸ்பாண்ட் போல் பந்தாவாக
  போஸ் கொடுத்தது எனது மனதில்
  பசுமையாக உள்ளது

  ReplyDelete
 38. விஜயன் சார் நீங்கள் கதாசிரியரை பாவம் என்கிறிர்கள் எனக்கு உங்களை நினைத்தால் பாவமாக இருக்கிறது
  மொழி பெயர்ப்பு
  முழி பிதுங்க செய்யப்போகிறது ஆனாலும் நீங்கள் வல்லவர் சமாளித்து விடுவிர்கள்

  ReplyDelete
 39. என்னுடைய ரிப்போர்ட்டர் கார்டு ஏற்கனவே முத்திரை குத்தி பத்திரபடுத்த பட்டு இருந்து இன்று தான் தபால் நிலையத்தை நோக்கி செல்கிறது சார் ...

  அந்த ரிப்போர்ட்டர் கார்டில் உள்ள அனைத்து கதைகளிலும் ஒன்றே ஒன்று இன்னமும் படிக்காமலே மதிப்பெண் அளிக்க பட்டு விட்டது சார் ...அது இந்த மாதம் வந்த நீங்கள் ஜேசன் கதையே ..அதன் முதன் பாக தரத்தையும் ...சித்திரதரத்தையும் ...இம்முறை வந்த நண்பர்களின் விமர்சனங்களையும் கொண்டே மதிப்பெண் அளித்துள்ளேன் ..காரணம் இந்த சஸ்பென்ஸ் தாங்க முடியுமா ..இல்லை க்ளைமேக்ஸ் இதழ் வந்தவுடன் மீண்டும் முதல் பாகத்துடன் ஒட்டுமொத்தமாக படித்து கொள்ளலாமா என்ற குழப்பத்தில் தவிப்பதால் அந்த இதழ் மட்டும் காத்து கொண்டு இருக்கிறது .

  ReplyDelete
 40. Replies
  1. ஏதாவது மெளனவிரதமா குணா அவர்களே? ;)

   Delete
 41. முத்து காமிக்ஸ் பெருமைக்கு குறைவேது நினைவு தெரிந்த நாளிலிருந்து காமிக்ஸுடன் தான் வாழ்கிறேன் இன்று வரை சாப்பிடும் போது காமிக்ஸ் புத்தகத்தை ஒரு கையில் எந்தி படித்துக்கொண்டு சாப்பிடும் பழக்கம் என்னை விடவில்லை (இதில் கல்யாண சாப்பாடுகள் விதிவிலக்கு) சிறுவயதில் எப்போதும் காமிக்ஸ் படித்து கொண்டே இருந்ததால் கடைக்கு கூட போக மாட்டேன் எனக்கு காமிக்ஸ் படிக்க கற்றுக்கொடுத்த என் தாயே உன்னை காமிக்ஸ் படிக்க சொன்னது தப்பாகி விட்டதே என்று சலித்துக்கொள்வார் ஆனால் காமிக்ஸ் வாங்கித்தருவதை நிறுத்தவே இல்லை என்னை யாரும் என்ன படிச்சி கிழிச்சே என்று சொல்ல முடியாது ஏனென்றால் நான் படித்து கிழித்தது முத்து காமிக்ஸில் வந்த மெகா ஹிட் தலை கேட்ட தங்க புதையல் தான் எத்தனை முறை படித்திருப்பேன் என்கிற கணக்கு தெரியாது லயன் என்றால் யார் அந்த ஜீனியர் ஆர்ச்சி புத்தகத்தை கணக்கு வைத்துக்கொள்ள முடியாத அளவுக்கு படித்திருக்கிறேன் காமிக்ஸோடு வளர்ந்தேன் காமிக்ஸோடு வாழ்ந்தேன் காமிக்ஸோடு மறைவேன்
  என்றும் காமிக்ஸ்
  எதிலும் காமிக்ஸ்
  எப்போதும் காமிக்ஸ்
  முத்துப்போல் சிரிப்பதற்க்கு முத்து காமிக்ஸ் இதற்கு மேல் உங்களை அறுக்க விரும்பவில்லை வாழ்க காமிக்ஸ் வளர்க காமிக்ஸ்

  ReplyDelete
  Replies
  1. ///
   காமிக்ஸோடு வளர்ந்தேன் காமிக்ஸோடு வாழ்ந்தேன் காமிக்ஸோடு மறைவேன்
   ///

   அருமை!!

   Delete
  2. \\கல்யாண சப்பாடு விதிவிலக்கு\\
   ஹஹஹஹ

   Delete
  3. செயலாளர் & கணேஷ் குமார்
   நன்றிகள் நண்பர்களே
   என் உளறளை படித்ததற்க்கு

   Delete
  4. /காமிக்ஸோடு வளர்ந்தேன் காமிக்ஸோடு வாழ்ந்தேன் காமிக்ஸோடு மறைவேன் //
   செம்ம நண்பரே !

   Delete
 42. சென்னை புத்தக காட்சி தேதி ..உங்கள் வருகை அனைத்தும் அறிவித்து விட்டீர்கள் மிக்க சந்தோசமாக இருப்பினும் ஹால் ...மீட்டிங் ..உரையாடல் என அமையும் பொழுது சிற்சில நண்பர்களால் சிற்சில சின்ன குறைகளே பெரிது படுத்த படுகிறது ..பேசாமல் வழக்கம் போல புத்தக அரங்க இடைவெளி இடத்திலியே நண்பர்கள் உங்களுடான உரையாடல் வைத்தாலே போதுமானது என்பது என் கருத்து ..செலவு செய்து மனம் வலிக்க வேண்டுமா என்ன..?

  ReplyDelete
  Replies
  1. \\செலவு செய்து\\
   எனக்கு டெக்ஸ் பிடிக்க வில்லை. என் ஓருவனுக்காக டெக்ஸ் வெளியிட்டை நிறுத்தி விடலாமா?
   சிற்சில குறை கானும் நண்பர்களுக்காக மெஜரிட்டி நண்பர்களின் விருப்பத்தை புறக்கனிக்கலாமா???

   Delete
  2. ///சிற்சில குறை கானும் நண்பர்களுக்காக மெஜரிட்டி நண்பர்களின் விருப்பத்தை புறக்கனிக்கலாமா???///+++100.

   அதானே அப்படி போடுங்க கணேஷ்.

   Delete
  3. //சிற்சில குறை கானும் நண்பர்களுக்காக மெஜரிட்டி நண்பர்களின் விருப்பத்தை புறக்கனிக்கலாமா?? //

   +1

   Delete
  4. நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மைதான் கணேஷ் சார் ..எனக்கும் எந்த தொந்தரவும் குறுக்கிடாத ஒரு தனி இடத்தில் அனைத்து காமிக்ஸ் நண்பர்களும் இனைந்து ஆசிரியருடன் உரையாடுவதில் உள்ள சுகமே தனிதான் ..ஆனால் இதிலும் அது சரியில்லை ..இது சரியில்லை எனும் விமர்சனம் வரும் பொழுது மனம் ஆதங்கமாகிவிடுகிறது ..:-(

   Delete
 43. புத்தககாட்சி போனமுறை போல் சிறிது தள்ளி வந்து இருக்க கூடாதா என்று எனக்கு மட்டும் சின்ன வருத்தம் ( அடிக்க வராதீங்கப்பா ..)காரணம் ஐனவரி மாதம் முழுவதும் சில தவிர்க்க முடியா பணி சூழல்களால் என்னால் எங்கும் நகர முடியாத நிலை ..சேந்தம்பட்டி நண்பர்களின் அழைப்புகள் ..பயண ஏற்பாடுகள் இப்பொழுது இருந்தே சூடு பிடிப்பதை முழு மகிழ்ச்சியுடனும் கொஞ்சூண்டு ஏக்கத்துடனும் கண்டு கொண்டு இருக்கிறேன் ..

  ReplyDelete
  Replies
  1. கவலை வேணாம் துணைக்கு நானும் உண்டு...

   பணம் மதிப்பிழந்ததால் முடங்கிப் போன வியாபாரத்தை சரி செய்யவும், பொங்கலுக்கு முந்தைய வாரத்தில் வரும் கணிசமான வியாபாரத்தை கவனிக்கவும் இருப்பதால் , சென்னை ஆட்டத்தில் இம்முறை நானும் இல்லை...

   எல்லாம் சீரானால் ஜூனில் வரும் 2வது புத்தகவிழாவில் பங்கேற்க முயலலாம் அய்யா...

   Delete
  2. ஙே...தாங்களும் கிடையாதா ..:-(

   Delete
  3. ரெண்டு விக்கெட்டு அவுட்டு! :(

   Delete
 44. எனது ஞாயிறு வணக்கங்கள் ஆசிரியரே :)
  ஞாயிறு வணக்கங்கள் காமிக்ஸ் நண்பர்களே :)
  ஒரு மாதம் கழித்து வெள்ளி அன்று தான் நெட் கனெக்ஷன் கிடைத்தது
  இனிமேல் எல்லா ஞாயிறு களும் தவறாமல் இங்கு ஆஜர் :)

  ReplyDelete
 45. காட்டுக்குள்ளே இருக்கிற தீவிரவாதிகளை பிடிக்க எனக்கு எதுக்கு சாண்டகிளாஸ் வேஷம் டெக்சு ?
  ரெண்டாயிரம் ரூபாய்நோட்டுக்கு சில்லறை வேணும்ங்கிறவங்கள்லாம் வரலாம்னு ஒரு குரல் கொடு கார்சன் எல்லாப் பயல்களும் விழுந்தடிச்சு வருவாங்க பாரேன் ..

  ReplyDelete
 46. வருசா வருஷம் புகைபோக்கி வழியா உங்க வீட்டுக்கு வந்து பரிசு குடுப்பேனே டெக்ஸ் ..இந்த வருஷம் ஏன் வரவேணாம்னு சொல்றே ?
  சில்லறை தட்டுப்பாடுதான்..பத்து ரூபாய் பரிசை கொடுக்க புகை போக்கியை உடைச்சிட்டு ஆயிரம் ரூபாய் செலவு இழுத்து வைப்பீங்க ..வேண்டவே வேண்டாம் .

  ReplyDelete
  Replies
  1. ////பத்து ரூபாய் பரிசை கொடுக்க புகை போக்கியை உடைச்சிட்டு ஆயிரம் ரூபாய் செலவு இழுத்து வைப்பீங்க///

   ஹா ஹா ஹா! :)))))

   Delete
 47. கார்சன் என்ன இது வேஷம் ?
  இப்படி போனாலாவது ATM வரிசையிலே முதல்லே விடுவாங்களான்னுதான் ..

  ReplyDelete

 48. முத்து காமிக்ஸ்:-

  *1990களின் ஆரம்பத்தில் எதிர்பாராமல் காமிக்ஸ் எனும் கனவுலகில் சஞ்சரிக்கும் வாய்ப்பு வாய்த்தது.

  "காமிக்ஸ்னா டெக்ஸ்...!!!
  டெக்ஸ்னா காமிக்ஸ்...!!!"
  -----என்ற காமிக்ஸ்மந்திரமே வேதாகமம் எனக்கு.

  *முத்து காமிக்ஸ்ல டெக்ஸ் கதைகள் வந்துள்ளனவா??? என்பதே என் முதல் கேள்வி- அப்போது அறிமுகமான சூப்பர் சீனியர் நண்பர்களை நோக்கி.
  என்னை ஏதோ விசித்திர ஜந்து மாதிரி பார்த்தனர் அவர்களில் சிலர். "சிஸ்கோ கிட்னு ஒரு கொளபாய் மட்டுமே முத்துவில் உலாவுவாரு, அவரும் ரொம்பவே ஸ்லோவான கதைகளின் சொந்தக்காரர் " என கிட்டிய பதில்கள்- எனக்கு முத்துனா திரைப்படங்களில் வரும் "சின்னம்மா" என்ற அபிப்ராயத்தை தந்தது.

  *நாம உண்டு நம்ம டெக்ஸ் உண்டுனு பயணித்து வந்த நாட்களில் ஆசிரியர் அறிவிப்பு , --\\புதிய கொளபாய் "கேப்டன் டைகர்" முத்துவில் அறிமுகம்.//
  அட டே என்ற எதிர்பார்ப்பை கிளற, வந்தது தங்க கல்லறை"-என்ற பொக்கிசம். அதுவே என் முதல் முத்து அனுபவம். அதற்கு பிறகு தொடர்ந்த டைகரின் இரும்புக் கை எத்தன், பரலோகப் பாதை, மின்னும் மரணம், சிறையில் ஒரு புயல், திசை மாறிய தோட்டா-போன்ற முத்துக்களையும் அவ்வப்போது ரசிக்க இயன்றது.

  *இந்த சமயத்தில் வந்த யானைக்கல்லறை, சில ராபின் கதைகள், மார்டினின் சரித்திரத்தை சாகடிப்போம் போன்றவையும் வித்தியாசமான களங்களில் நன்றாகவே இருந்தன. இரத்தக்கோட்டை சீரியஸ்ம், அதன் இடையே வந்த புதையல் பாதையும் முத்துவுக்கென நல்ல அபிப்ராயத்தை என் மனதில் ஏற்படுத்தின.

  *உச்சகட்டமாக வந்த முத்து 300-"புயல் தேடிய புதையல்"- காமிக்ஸ் வானில் மற்றொரு நட்சத்திரமாக ஜொலித்தது. தொடர்ந்த சுமாரான கதைகளின் வாயிலாக முத்து தள்ளாட ஆரம்பித்தது. உச்சமாக "நொறுங்கிய நாணல் மர்ம"த்தின் சகாயத்தால் என் மனதில் இருந்து நொறுங்கியும் விழுந்தது. வீழ்ந்த நாணல் , "முத்து சர்ப்ரைஸ் ஸ்பெசல்" என்ற வீரிய விதையின் வாயிலாக நான்காண்டு கழித்து முளைத்தது.

  *வண்ணம், பெரிய சைஸ், அட்டகாசமான கதைத் தொடர்கள், பட்டாசான ஹீரோக்கள், மாதா மாதம் தவறாமல் வருவது- என்ற காரணிகளால் மீண்டும் வளர ஆரம்பித்தது முத்து. "NBS" என்ற பிரம்மாண்டமான விருட்சமாக வளர்ந்து நின்ற முத்துவை பார்த்து அதிசயித்துப் போனேன் என்றால் மிகையில்லை. அந்த NBS என்ற விருட்சத்தை பார்த்த போது, முத்துவை துவக்கிய மூத்த ஆசிரியர் அய்யா செளந்திரபாண்டியன் அவர்களின் மகிழ்ச்சியை கேட்டறிய ஆவல்.

  *முத்துவோடு வளரும் பாக்கியம் வாய்க்க வில்லை என்றாலும்கூட , அதன் தற்போதைய பயணித்தில் நானும் தொற்றிக் கொண்டது எனக்கு கிடைத்த வரமே...!!! நன்றிகள் கோடி ஆசிரியர் சார்!!!.

  ReplyDelete
 49. Dear Editor, I didnt get feedback form along with my subscription copy. If possible please upload PDF version of it

  ReplyDelete
 50. SANTA;
  டெக்ஸ் இந்தியாவில் தமிழில் ஏதோ லயன்காமிக்ஸாமே நம்மவர் கதைகளை வெளியிட்டு தூள்பரத்துகிறார்களாமே அவர் பெயர் கூட விஜயன் ஸாராம்.முகவரி கொடுங்கள் கிறிஸ்துமஸ் பரிசு கொடுக்கபோகனும்.

  TEX;
  (மனதிற்குள்)அவர் ஒழுங்காக ராயல்டி கட்டணம் மட்டும் கட்டிவிடுகிறார்.என் கதை மட்டும் மாதம் ஒன்று வெளியிடுகிறார் கமிஷன் கிமிஷன் என்று என்னை கவனிப்பதே இல்லை.சரியான முகவரி கொடுக்கக்கூடாது.

  ReplyDelete
 51. Caption ...

  சான்டா க்ளாஸ்(A) : ஏம்பா ..! ஒரு பெரிய மனுசன் எவ்வளவு நேரமா பேசிகிட்டு இருக்கேன். கொஞ்சங்கூட மட்டு மரியாதை இல்லாமே பதிலும் சொல்லாமே தம் அடிச்சிட்டு இருக்கியே..! நீ என்ன சிலையா??

  சான்டா க்ளாஸ் (B) : (மைண்ட் வாய்ஸ்) தம்மிலே புகையே வரக்காணோமே. .! (உற்றுப்பார்த்துவிட்டு) அடப்பாவமே.. மனுசன்னு நினைச்சி இவ்வளவு நேரமும் மெழுகுச்சிலை கிட்டதான் பேசிட்டு இருந்தேனா..!!??

  ReplyDelete
 52. டெக்ஸ் இதழுக்கான விமர்சனம் விரிவாக ஆசிரியர் விவரித்து விட்டு இருந்தாலும் எனது கருத்தை இன்னும் சொல்ல வில்லையே என்பதற்காக மட்டும் ஒரு வரியில் ....


  நீதிக்கு நிறமேது.....சூப்பர்... நன்று ...பரவாயில்லை.....சுமார் என்ற வரிசை மதிப்பெண்ணில் அது பெறுவது ..  அபாரம் ...

  ReplyDelete
 53. இஸ்கூல்ல படிக்கிறப்போ ரிப்போர்ட் கார்டை அப்பாகிட்ட காட்டிக் கையெழுத்தும் வாங்கிட்டு வரச் சொல்லுவாய்ங்க. நான் என்னிக்குமே எங்க டாடியை கஷ்டப்படுத்தினது கிடையாது. அதனால பயபக்தியோட நானே கையெழுத்தைப் போட்டுக் கொண்டுபோய் கொடுப்பேன்...

  அதேமாதிரி இந்த ரிப்போர்ட் கார்டுலயும் கையெழுத்து வாங்கி அனுப்பனுமுங்களா? ;)

  ReplyDelete
 54. "முத்து காமிக்ஸ்"
  முதல் இதழ் 1972ல் வெளியான போது எனக்கு பதினோரு வயதுள்ள பள்ளி மாணவன் நான். அந்த வருடத்தில் அந்த மாதத்தில் அன்றைய தினத்தில் நடந்த எதுவுமே நினைவில் இல்லை. ஆனால் நமது காமிக்ஸ்களை வாங்கிய நிகழ்வுகளை நேற்று நடந்தது போல் ஒன்றுவிடாமல் கூற முடியும். காரணம் நமது காமிக்ஸ் என் இதயத்தில் இடம் பிடித்ததுதான்.
  எனது வாழ்நாளில் எத்தனையோ புத்தகங்களை படித்திருக்கிறேன்.பின்பு மறந்துமிருக்கிறேன். இன்றும் மறக்க முடியாதது முத்து காமிக்ஸ்களைத்தான்.
  முதல் இதழ் "இரும்புக்கை மாயாவி " என் பார்வையில்பட்ட தினம் ஞாயிறு காலை.கையில் தொன்னூறு பைசா முழுவதாக இல்லை. ஆறடி உயரத்தில் தொங்கும் பல புத்தகங்களுக்கு இடையில் காட்சியளித்தது. அது என்ன புத்தகம், உள்ளே எப்படியிருக்கும் எதுவுமே தெரியாது. ஆனால் இனம் புரியாத ஈர்ப்பு. என் இறப்பு வரை கூட வரப்போவதால்தானோ அந்த ஈர்ப்பு? அன்றைய தினம் கடைக்காரரிடம் ஒருமணி நேரத்திற்கும் அதிகமாக வாசலிலேயே நின்று தயங்கி என்ன புத்தகம் என பார்க்க கேட்டு அவர் தராததால் பாதிபணம் தருகிறேன். மாலை மீதியை கொடுத்து புத்தகத்தை வாங்கிகொள்கிறேன் என்று சொல்வதற்குள் பயத்தில் மூச்சு
  திணறிவிட்டது. கடைக்காரர்
  மற்றும் பக்கத்தில் டீகடை நடத்திய அவரின் தம்பி இருவரும் கருப்பு விருமாண்டிகள்.
  அவர்களின் பெரிய மீசையும், வஞ்சனையின்றி வளர்ந்த வயிறும், கரகரவென குரலும் என்னை நடுங்க வைக்க என்கேள்வியில் என்ன தவறென தெரியவில்லை. டீ கடையில் இருந்த சுடுதண்ணீரை பிடித்து அவர் தம்பி என்மேல் ஊற்றியதை இன்றும் மறக்க இயலவில்லை. பின்பு வீட்டுக்குபோய் முழு பணத்தை! தயார்செய்து மாலை நண்பனை அழைத்து போய் அவனை விட்டே வாங்கி பிரித்தால்......
  ஆ..ஆ...ஆ...ஆ....ஆ....ஆ...வென திறந்த வாய் மூடாமல் இன்ப அதிர்ச்சியில் உறைந்துவிட்டேன்.வாழ்நாளில் முதன் முறை இப்படி ஒருபுத்தகம் எனக்கு சொந்தமாகியது அந்த நேரத்தில் லட்சம் ரூபாய் கிடைத்திருந்தால் கூட அந்த சந்தோஷம் கிடைத்திருக்க
  வாய்ப்பில்லை. தொடர்ந்த மாதங்களில் வரிசையாக மும்மூர்த்திகள் படையெடுக்க, ஒவ்வொரு மாதமும் புத்தகத்தை வாங்க பட்ட இன்ப அவஸ்தைகளும், பின் முத்து பல சைஸ்களில் எடுத்த அவதாரங்களுமாய் உல்லாசமாய் போன நாட்கள் அவை.ரிப்கெர்பி, காரிகன், சார்லி, வேதாளர், கிஸ்கோகிட் என்று புதிய நாயகர்கள் களத்தில் இறங்க மாயாவியின் வருகை குறைந்தது. (தொடரும்)

  ReplyDelete
 55. மாயாவி என்ற மூன்றெழுத்து மனிதர் இல்லாததால் முத்து காமிக்ஸ் எங்கள் ஊரில் கிடைப்பதே அரிதானது.எங்கள் ஊரில் கடைகளில் புத்தகம் எங்காவது கிடைக்குமா என நண்பர்களை வைத்து தேடுதல் வேட்டை, பின்னர் இருபது வயதுகளில் எங்கள் ஊரில் புத்தகம் கிடைக்காமல் ஞாயிறுகளில் பல ஆண்டுகள் பாண்டிச்சேரிக்கு சைக்கிள் பயணம். பசி, தாகம், வெய்யில், களைப்பு எதுவும் தெரியாது. புத்தகம் கிடைக்க வேண்டுமென்ற ஆசையே மனது முழுவதும் பரவிக்கிடக்கும். "செவிக்கு உணவு இல்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்" என்று படித்திருக்கிறேன். ஆனால் "வயிற்றுக்கு உணவு இல்லாத போதும் நமது காமிக்ஸ் தேடப்படும்" என தேடிய நாட்கள் அவை.
  ஏறக்குறைய நாற்பத்து நான்கு ஆண்டுகள்.காலம் என் உடலில், தோற்றத்தில் முதிர்ச்சியை கொண்டுவந்து என்னை வென்றிருந்தாலும் என் மனதளவில் நமது காமிக்ஸ் மீதுள்ள ஈடுபாட்டை மாற்ற முடியாமல் என்னிடம் தோற்றுப் போய்விட்டது. முதல் புத்தகம் கையில் வந்தபோது கிடைத்த அதே இன்பம் இன்றளவும் மாதாமாதம் பொக்கிஷ பெட்டியை பிரிக்கையில் கிடைக்கிறது. எனக்கு வயதாகிவிட்டது. ஆனால் முத்து காமிக்ஸோ இன்னும் இளமையாகிக் கொண்டே போகிறது. அதற்கு நமது எடிட்டர் மற்றும் அவருடன் பணியாற்றும் தோழர்கள் மட்டுமே காரணம் என்பதால் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். அவர்கள் முயற்சி மட்டும் இல்லாமல் போயிருந்தால்.... நமது காமிக்ஸ்கள் கிடைக்காமல் போயிருந்தால்...
  இன்று நான் சந்திக்கும் போராட்டங்கள், இழப்புகள், துரோகங்கள் இவைகளை எல்லாம் தாங்கும் வலிமை எனக்கு இல்லாமல் போயிருக்கும். இப்படி இங்கு பதிவிடும் நிலையில் என்னால் இருந்திருக்க முடியாது. நமது காமிக்ஸை தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு தன்னம்பிக்கை, தைரியம், விடாமுயற்சி இவையெல்லாம் நமக்கு தெரியாமலே நம்முள் ஐக்கியமாகிவிடும் என்பது என்னுடைய சொந்த அனுபவமே எனக்கு உணர்த்துகிறது.
  என் இறுதி மூச்சு உள்ளவரை நம் காமிக்ஸை படிக்க வேண்டும் என்பது என் நீண்ட கால ஆசை.அந்த ஆசை நிச்சயம் நிறைவேறும்.
  இறுதியாக--
  "முத்து(காமிக்ஸ்) நம் அனைவரின் சொத்து" என்று பெருமையுடன் கூறி முடிக்கிறேன். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. ///எனக்கு வயதாகிவிட்டது. ஆனால் முத்து காமிக்ஸோ இன்னும் இளமையாகிக் கொண்டே போகிறது. ///

   ஒரு எதார்த்தமான உண்மையை இதைவிட அழகாய் சொல்லிவிட முடியாது!

   ////நமது காமிக்ஸை தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு தன்னம்பிக்கை, தைரியம், விடாமுயற்சி இவையெல்லாம் நமக்கு தெரியாமலே நம்முள் ஐக்கியமாகிவிடும் என்பது என்னுடைய சொந்த அனுபவமே எனக்கு உணர்த்துகிறது.///

   நச்!

   Delete
  2. // "செவிக்கு உணவு இல்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்" என்று படித்திருக்கிறேன். ஆனால் "வயிற்றுக்கு உணவு இல்லாத போதும் நமது காமிக்ஸ் தேடப்படும்" என தேடிய நாட்கள் அவை. //
   சூப்பர்!

   Delete
  3. Mr. Rajan
   வணக்கம்!

   தமக்கு வயதாகிவிட்டது என்பதனை நம்பாதீர்கள். இன்றும் இளமைதான் என்று மனதளவில் உறுதியாக நம்புங்கள்.

   Delete
  4. ///தமக்கு வயதாகிவிட்டது என்பதனை நம்பாதீர்கள். இன்றும் இளமைதான் என்று மனதளவில் உறுதியாக நம்புங்கள்.///

   +1

   Delete
  5. வணக்கத்துடன் கூடிய நன்றிகள்
   திரு.Jegang Atq அவர்கள் , திரு.ஈ.வி.அவர்கள், திரு சரவணன் அவர்களுக்கும்.
   காலம் உடலைத்தான் உருக்குலைக்க வைக்கும்.
   ஆனால்
   நம் உள்ளத்திடம் அது தோற்றுத்தான் போகும்.அதுவும் காமிக்ஸ் வாசிப்பு என்பது ஒரு மனநல மருத்துவருக்கு நிகரான காரியத்தை சத்தமில்லாமல் செய்து வருகிறது.
   எவ்வளவுதான் சங்கடங்கள் நம்மை சூழும்போதும், மனது குழப்ப நிலையில் இருந்தாலும் நமது காமிக்ஸை காணுகையில் என் மனது தெளிவடைவதை பலமுறை உணர்ந்திருக்கிறேன்.
   1983 க்கு பின் பல ஆண்டுகள் எங்கள் குடும்பத்தில் பல சங்கடங்கள்.பல நேரம் உணவிருக்காது.அந்த காலகட்டத்தில் ஒருநாள் நான் எழுதி வைத்தது கழுகு மலைக்கோட்டை புத்தகத்தில் உள்ளதை சென்ற ஆண்டு என் கண்ணில்பட்டது.என் தாயாரிடம் பத்திரமாக உள்ள புத்தகம் அது.
   நான் 1983ல் எழுதி வைத்த வாசகம்...
   "பசி வந்திடில் பத்தும் பறந்து போம்.
   ஆனால் காமிக்ஸ் வந்திடில் பசியும் பறந்து போம்."
   என்று எழுதி கையெழுத்து போட்டிருக்கிறேன் இது ஒன்றும் கவிதையில் சேர்த்தி இல்லையென்றாலும் அன்றைய சூழ்நிலையை மறுபடி மனதில் படம் பிடித்து காட்டியது அந்த வார்த்தைகள்.
   எங்கோ துவங்கி எங்கோ சென்றுவிட்டேன்.
   நான் மனதளவில் என்றுமே இளமையாகத்தான் இருந்தேன், இருக்கிறேன், இருப்பேன் என்பதில் உறுதியாக இருக்கிறேன் சார்.

   Delete
  6. ////அதுவும் காமிக்ஸ் வாசிப்பு என்பது ஒரு மனநல மருத்துவருக்கு நிகரான காரியத்தை சத்தமில்லாமல் செய்து வருகிறது.////

   +1

   மாதத்திற்கு ஐந்தாறு முறை நமக்கெல்லாம் ட்ரீட்மெண்ட் கொடுக்கப்படுகிறது என்ற வகையில் எடிட்டரின் இந்த வலைப்பூவும் அதே மருத்துவப் பணியைத்தான் செய்துவருகிறது! அப்படிப் பார்த்தால் நம் எடிட்டர் சமூகம் கூட ஒரு டாக்டர் சமூகம் தானே? ;)

   "Dr.எடிட்டர்"- ஆஹா!! சூப்பரா இருக்கில்லே!

   (ஆனா அதுக்காக "சிவகாசி டாக்டர் சென்னை வருகை - சனவரி 7,8 தேதிகளில் அப்பாயின்மென்ட் பெற்று டாக்டரைச் சந்திக்கலாம்"னு பேப்பர்ல விளம்பரம் கொடுக்க நினைக்கிறதெல்லாம் ரொம்ப ஓவர் சார்!) ;)

   Delete
  7. ///(ஆனா அதுக்காக "சிவகாசி டாக்டர் சென்னை வருகை - சனவரி 7,8 தேதிகளில் அப்பாயின்மென்ட் பெற்று டாக்டரைச் சந்திக்கலாம்"னு பேப்பர்ல விளம்பரம் கொடுக்க நினைக்கிறதெல்லாம் ரொம்ப ஓவர் சார்!) ;)///

   குருநாயரேஏஏஏஏ....!!

   Delete
 56. முத்து காமிக்ஸ்:

  1984 என்று நினைக்கின்றேன். பதிமூன்று வயது எனக்கு.ஸ்கூல் விடுமுறையில், சென்னை மற்றும் பெங்களூரில் இருந்து எங்கள் அத்தை மகன்களும்,மாமன் மகன்களும் நம் ஊரில் டேரா போடுவதை வழக்கமா வெச்சிருந்த இருந்த காலம்.அதில் சென்னை சகோதரர்கள் தமிழ் அறிந்தவர்களாக இருந்ததால் என்னிடம் முத்து காமிக்ஸ் வாங்கி வாசிப்பார்கள்.நானும் கொடுத்து விட்டு அவர்கள் வாசித்து முடிக்கும் வரை,குட்டி போட்ட பூனையாட்டம் அவர்களையே சுற்றிவருவேன்.
  நான் சற்றே அசந்த ஒரு சமயத்தில் என் அத்தை பையன் ஒருத்தன் என்னுடைய நான்கு முத்து இதழ்களுடன் பஸ் ஏறிவிட்டான்.
  அவன் போனது சென்னைக்கு.(அப்போது மெட்ராஸ்)
  மீண்டும் அவன் வரவேண்டுமென்றால் அது அடுத்த ஆண்டு தான் என்கிற நிலை.அதுவரை என் புத்தகத்தை பாதுகாத்து வைப்பானா..? என் சொத்துகளை பறிகொடுத்த சோகத்தில் சோர்ந்து போய்,சரியாக சாப்பிடவில்லை,தூங்கவில்லை என்று இரண்டு/மூன்று நாட்கள் கழித்தேன்.
  விஷயம் அறிந்த என் தாய், சென்னை செல்லும் பஸ் கன்டக்டரிடம் என்னை பூந்தமல்லியில் இறக்கிவிட கேட்டுக்கொண்டு பஸ் ஏற்றினார்கள்.அங்கே என் உறவின்கள் வந்து பிக்கப் செய்வது என்று ஏற்பாடானது.
  குதூகலமாய் முறுக்கு,நிப்பட் என ஏகமாய் கொறித்துக்கொண்டு போய் சேர்ந்தேன்.
  அங்கு என்னை அழைத்து போக வேண்டியவர் சரியான நேரத்திற்கு வராமல் போக, பயத்தில் என் உடம்பு ஆட்டம் கண்டது இன்னும் பசுமையாய் நினைவுள்ளது.எப்படியோ வீடு போய் சேர்ந்தேன்.அங்கு நுழைந்தவுன் முதல் வார்த்தையாய் என் புத்தகங்களை கேட்டது தான் தாமதம்.என் சகோதரன் என்னை பார்த்தானே ஒரு பார்வை...!
  என் முகத்தில் விறியடிக்காத குறையாக எடுத்து கொடுத்தான்.வாங்கி பத்திரப்படுத்திக்கொண்டு, அடுத்த பஸ்லேயே என் ஊர் வந்திறங்கி வீட்டிற்கு போட்டேன் பாருங்க ஒரு நடை....!
  ராஜ நடையில் வீடு போய் சேர்ந்து என்னுடைய அலமாறியில் அடுக்கி அந்த இதழ்களை அழகு பார்த்த அந்த நாட்கள்...!
  என் வாழ்வின் வசந்த காலங்கள்.

  ReplyDelete
  Replies
  1. @ பாட்ஷா ஜி

   அடுத்தமாசம் ஐஞ்சாம் தேதி வாக்குல நான் பெங்களூருக்கு வந்து உங்ககிட்டே இருக்கற முத்து காமிக்ஸுல நாலஞ்சை அபேஸ் பண்ணிக்கிட்டு சென்னைக்குப் போய்டுவேனாம்... நீங்களும் முறுக்கு, நிப்பட் சகிதம் ஏதாவது ஒரு பஸ்ஸைப் பிடிச்சு சென்னைப் புத்தகத் திருவிழாவுக்கு வருவீங்களாம்... நான் முறைச்சுக்கிட்டே புக்கை திருப்பித் தருவேனாம்... நீங்க சிரிச்சுக்கிட்டே வாங்கிப் போவீங்களாம்! சரிதானே? ;)

   Delete
  2. T.K. AHMEDBASHA @ சுகமான பயணம்கள் :-)

   Delete
 57. எனக்கென்னவோ நேத்திக்கு சாயந்திரம் சீக்கிரமாவே பதிவப் போட்டு்ட்டு எஸ்கேப் ஆன நம்ம எடிட்டர் ஏதாவதொரு ATM வாசல்ல தான் இன்னும் நின்னுக்கிட்டிருப்பார்னு தோனுது! ;)

  ReplyDelete
  Replies
  1. Erode VIJAY @ நமது எடிட்டர் இது போன்று சனிக்கிழமை பதிவு போடும் போது எல்லாம் நமது ஆசிரியர் நாளை (Sunday) ஊரில் இருக்கமாட்டார் என நினைத்துகொள்வேன்.

   Delete
 58. நமது முத்து மற்றும் லயன் காமிக்ஸ் சிறுவயதில் இருந்து படித்து வந்தாலும், கல்லூரி படிப்பை முடித்துவிட்டு பெங்களூரில் வேலை செய்ய ஆரம்பித்த போது நடந்த சிலவிசயம்கள் இன்றும் மறக்க முடியாது.

  பெங்களூரில் நமது புத்தகம் KR மார்க்கெட் பகுதியில் கிடைக்கும், அது நான் தங்கி இருந்த இடத்தில் இருந்து சுமார் 22 கிலோமீட்டர். வாரவாரம் சனிக்கிழமை KR மார்க்கெட் சென்று நமது புத்தகம் வருகிறதா என பார்த்து வாங்கி வருவேன், அப்போது எல்லாம் நமது புத்தகம் மாதமாதம் கிடைப்பது இல்லை; பல நாட்கள் மனதில் சோகத்துடன் & வெறும்கையுடன் வீடு திரும்புவேன்!

  பின்னர் ஒருநாள் நமது காமிக்ஸ் அலுவலகத்திற்கு போஸ்ட் கார்டில் எழுதி எனது காமிக்ஸ் காதல் மற்றும் எனது காமிக்ஸ்வெறியை எழுதி இருந்தேன்; மேலும் பெங்களூரில் எங்கு நமது காமிக்ஸ் agent போன் நம்பர் தேவை என எழுதி இருந்தேன், என் பொல்லாத நேரம் முகவரி தவறு என்று அந்த போஸ்ட் கார்டு எனக்கு திரும்பி வந்துவிட்டது. என்னுடன் தங்கி இருந்த நண்பர்கள் என்னிடம் அந்த போஸ்ட் படித்து முக்கியமாக காமிக்ஸ்வெறியன் என்று எழுதியதை படித்து விழுந்து விழுந்து சிரித்து கிண்டல் பண்ணிய நாட்களை மறக்க முடியாது (இத படித்துவிட்டு இன்னும் இங்கு எத்தனை பேர் கிளம்பபோறாங்களோ ).

  ஒருவழியாக பெங்களூரில் உள்ள காமிக்ஸ் agent போன் (land line number and to cell phones are not popular at that time) நம்பர் கிடைத்தது, அவரிடம் தொடர்பு கொண்டு நமது புத்தகம்கள் தேவை என்றவுடன் அவர் நமது காமிக்ஸ் தொடர்ந்துவராத காரணத்தினால் நமது காமிக்ஸை தற்போது வாங்குவது இல்லை எனவும், தன்னிடம் விற்பனை ஆகாமல் சில புத்தகம்கள் இருப்தாக சொன்னார், நான் அவைகளை வாங்கிகொள்கிறேன் என்று சொல்லி அவரை சிவாஜி நகரில் சனிக்கிழமை மதியம் 3மணி சந்திப்போம் என்று சொல்லிவிட்டேன். இன்று cell phones இல்லை என்றால் ஒன்றும் செய்ய முடியாது என்ற நிலையில் உள்ள எனக்கு (நமக்கு) முன் பின் தெரியாத இருவர் cell phones அதிகம் உபயோகம் இல்லாத காலத்தில் சந்தித்து புத்தகத்தை வாங்கி கொண்ட விஷயம் இன்றும் எனக்கு மிக பெரிய ஆச்சரியம்.

  ReplyDelete
  Replies
  1. @ காமிக்ஸ் வெறியன் aka PfB

   'முயற்சி திருவினையாக்கும்' என்பதை நிரூபித்திருக்கிறீர்கள்!

   Delete
  2. கிளம்பிட்டா போச்சு !
   காமிக்ஸ் வெறியன்(ர்) pfb !
   வாழ்க வாழ்க ;-)

   Delete
 59. Dear Edi,

  Report Coffee is 70% Out-of-Portion for me... As I have read only quarter of this year's stories. Probably will read them in the holidays and will send over my ratings.

  Will follow up with Muthu 45... For now :)

  ReplyDelete
 60. பெரும்பாலோரின் பதில்களுடன் என்னுடையதை ஒப்பிட்டுப்பார்த்த்தில்
  ஜேஸன்பிரைஸ் ........... எதிர்பாராத சர்ப்ரைஸ்.
  சுட்டி பென்னி..... ரொம்ப ஃபன்னி.
  லியனார்டோ ....... வேண்டோ(ம்).
  ஜூலியா, மாடஸ்டி. .... ஓகே.
  டெக்ஸ்வில்லர் ........... டபுள் ஓகே.
  ரின்டின் ...... ?(லக்கிலூக்குக்கு ஒரு திருஷ்டிப்பொட்டு.
  மறுபதிப்பு நாயகன்....... (ஸ்பைடர்)
  பெட்டி ...... (ஓகே.பட் பெட்டர் லக் நெக்ஸ் டைம்)
  ஸ்மர்ப் .......(நானும் குழந்தை தான்)

  ReplyDelete
 61. சார் ஜேசனின் இந்த பாகமும் அருமை....சிறுவன் முகம் ஜேசன் போலவே தெரிகிறது..பிரமிட் குறித்த முடிச்சுகள் ஈர்க்கின்றன .அடுத்த கதைக்காக ேங்க விட்டு விட்டீர்கள்....நேற்றுதான் படித்தேன்....இன்றய அது குறித்த பதிவும் ஆச்சரியம்...ஜேசனை மறைந்திருந்து பார்ப்பது அந்த கதையின் எழுத்தாளர்தானே..

  ReplyDelete
 62. கதை விதிப்படி நகர்கிறதா...அல்லது விதி ஆசிரியரின் எழுத்துக்களால் நகர்கிறதா...வெகுவாய் இரசித்தேன் அருமை...நீதிக்கு நிறமேது படித்துக் கொண்டிருக்கிறேன்...அட்டகாசமாய் நகர்கிறது....படித்ததும் பகிர்கிறேன்...

  ReplyDelete
 63. //....இது நமது முத்துவின் 45-வது ஆண்டுமலரும் கூட என்பதால் உங்களது ‘மலரும் நினைவுகளுக்கென‘ இரண்டு பக்கங்கள் காலியாகக் காத்துள்ளன !...//

  யாரொருவருடைய மலரும் நினைவுகளினும் சிறந்ததாய் இருக்குமே சீனியர் எடிட்டரின் சிந்தனைகள்...

  ஆகவே இரண்டு பக்கங்களையும் ஒதுக்கிடலாமே அவருக்கு!

  (என்னுடைய பழைய கோரிகைதான் இது... எடிட்டர்தான் மனம் கனிய வேண்டும்)

  ReplyDelete
  Replies
  1. ////யாரொருவருடைய மலரும் நினைவுகளினும் சிறந்ததாய் இருக்குமே சீனியர் எடிட்டரின் சிந்தனைகள்...

   ஆகவே இரண்டு பக்கங்களையும் ஒதுக்கிடலாமே அவருக்கு!
   ////


   +10000000

   Delete
  2. // யாரொருவருடைய மலரும் நினைவுகளினும் சிறந்ததாய் இருக்குமே சீனியர் எடிட்டரின் சிந்தனைகள்... //
   +1

   Delete
  3. நண்பர்களே...!!!

   ஒரு சிறு தகவலை நினைவூட்ட விரும்புகிறேன்.
   முத்து 40வது ஆண்டுமலர் NBSல் மூத்த ஆசிரியர் அவர்களின் காமிக்ஸ் டைம் இடம்பெற்றது.
   இம்முறையும் அவரின் காமிக்ஸ் டைம் இடம்பெற்று இருக்கும் என்பதில் எனக்கு ஐயமில்லை.
   இந்த 2பக்கம் நம் நண்பர்கள் மலரும் நினைவுகளுக்கு இருக்கட்டும்...

   Delete
  4. மாயாசார்@ அந்த NBSல் இடம்பெற்ற அய்யா செளந்திரபாண்டியன் அவர்களின் காமிக்ஸ் டைம் பக்கத்தை ஒரு க்ளிக் போடுங்க... ப்ளீஸ்..

   Delete
  5. This comment has been removed by the author.

   Delete
  6. காமிக்ஸ் டைம்ல வழக்கமாக என்ன இருக்கனுமோ அதை சீனியர் எடிட்டர் அவர்கள் எழுதனும்...
   அந்த 2அதிக பக்கங்களிலும் முத்துவின் ஆரம்ப நாட்கள் அனுபவங்களை சீனியர் எடிட்டரே நமக்காக எழுதனும்...
   சரிதானுங்களே S.V.V. அய்யா...

   Delete
  7. டெக்ஸ்விஜய்... சீனியர் எடிட்டர் NBS காமிக்ஸ் டைமில் அவர், தன்னுடைய எழுதும் ஆவலை நாசுக்காக வெளியிட்டிருப்பதாகவே நினைக்கிறேன்...

   மேலும் வாசகர்கள் கருத்துக்கள் பிளாக்கில், கடிதங்களில், கேப்சன் போட்டிகளில், விழாக்களில் என பல வடிவங்களில் நமக்குக் கிடைக்கிறது...

   ஆனால் நமக்கு நமது சீனியர் எடிட்டரின் பங்களிப்புடன் கூடிய இதழ்களுக்கு இம்மாதிரியான சந்தர்ப்பங்களை தவிர வேறு வாய்ப்பு இல்லை...

   ஆகவே நாட்டாமை அவர்களே, தீர்ப்பை மாற்றிகொள்ளுங்கள்.....

   Delete
  8. @ சேலம் இரவுக்கழுகுகார்

   NBS இதழில் சீனியரின் முகப்புரை பார்க்க... இங்கே'கிளிக்'

   Delete
  9. சூப்பர் மயாசார்...
   நன்றிகள் அனைத்து நண்பர்கள் சார்பில்...
   உங்கள் இங்கே க்ளிக்"-களுக்கு நாங்கள் நண்பர்கள் நிறையபேர் ரசிகர்கள்...
   வேறொரு மிக முக்கியவானவரும் உங்கள் க்ளிக்-களுக்கு ரசிகர்...
   நண்பர்களே அவர் யாரென ஊகிக்க முடிகிறதா???...

   Delete
  10. ///வேறொரு மிக முக்கியவானவரும் உங்கள் க்ளிக்-களுக்கு ரசிகர்...
   நண்பர்களே அவர் யாரென ஊகிக்க முடிகிறதா???.///

   நம் பெருமதிப்பிற்குரிய சீனியர் எடிட்டர்தான் அவர் என்று யாரிடமும் சொல்லமாட்டேன். . அதுவும் ப்ளாக்கில் சொல்லவே மாட்டேன். .என்னை நம்புங்க மாம்ஸ்..!!:-)

   Delete
  11. தோழர்களே. மரியாதைக்குரிய சீனியர் எடிட்டர் அவர்களின் முத்தான எழுத்துக்களுக்கு இரண்டு பக்கம் என்பது ரொம்ப ரொம்ப ரொம்ப குறைவு.
   வரும் புத்தாண்டு முதல் முத்து காமிக்ஸ் இதழ்களில் மாதாமாதம் அவருக்கென்று இடமளித்து அவருடைய பொன்னான கைகளால் "முத்துவின் முத்தான நினைவுகள்" என்று தொடர்ந்து எழுத வாய்ப்பளித்தால் நமக்கெல்லாம் மகிழ்ச்சி இன்னும் கூடுமல்லவா?
   இத்தனை ஆண்டு கால முத்துவின் சாதனைக்கு வித்திட்ட அந்த ஜாம்பவானுக்கு நாம் செய்யும் மரியாதையாகவும், கூண்டிலடைக்கப்பட்ட சிங்கமாக உள்ள அவர் கையால் அவரது பாணி எழுத்தாக்கத்தில் பால்ய நினைவுகளை நம்முடன் பகிர்ந்து கொண்டால் இன்னும் சிறப்பாக இருக்குமல்லவா?
   நம் ஆசிரியரின் சிங்கத்தின் சிறுவயதில் லயனிலும், சீனியர் ஆசிரியர் அவர்களின் முத்துவின் முத்தான நினைவுகள் என்று முத்துவிலும் மாதாமாதம் தொடர இப்போதே கேட்டு நம் ஆசிரியரிடம் கோரிக்கை வைக்க இதுவல்லவா சரியான நேரம்.
   தோழர்கள் ஒன்று சேர்ந்து குரலெழுப்பினால் வரும் ஆண்டில் மாதா மாதம் நமது காமிக்ஸின் சுவை இன்னும் அதிகரிக்க வாய்ப்புண்டல்லவா?
   எனவே நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்கலாமா?

   Delete
 64. கிறிஸ்துமஸுக்குத்தான் இன்னும் நாள் இருக்கே..அதுக்குள்ளே வந்துட்டீங்களே சாண்டாகிளாஸ் ..
  இது ஸ்பெஷல் ஏற்பாடு ..எந்தெந்த ATM லே எப்போ எப்போ பணம் இருக்கும் ங்கிற விவரத்தை நம்ம வாடிக்கையாளர்களுக்கு குடுக்கிறதுக்காக வந்திருக்கேன் ..

  ReplyDelete
 65. Caption : 1
  ஏல! டெக்ஸ் ! இனிமே கார்சனை ஓட்டத்தப்பு! பாரு... நானு gift எதுவும் இல்லன்னா சொன்னப்புறமும் என் முழங்கால் வலிக்கு நல்ல ஆஸ்பத்திரியா கூட்டிகிட்டு போறேன்னு ஒத்த கால்ல நிக்கிறான் ! நானு வேணாம்னு சொன்னாலும் விட மாட்டிங்கறான் !

  (மனதிற்குள்)
  ஆஹா ! கார்சன் இன்னைக்கு அப்போலா ஹாஸ்பிடல் போறேன்னு சொன்னது இதுக்குத்தானா ?

  ReplyDelete
 66. Caption: 2
  A:ஹே டெக்ஸ் !
  என்னோமோ தெரியல! இந்த வருஷம் மக்கள் நான் என்ன கொடுத்தாலும் ஏழைகளுக்கு கொடுக்க சொல்லி எனக்கு ரெண்டு மடங்கா அன்பளிப்பு அள்ளி கொடுக்கறாங்கப்பா !

  B: பூரா ஐநூறு, ஆயிரமா இருக்குமே ?

  A: அட! அது எப்படி கரெக்ட்'ஆ சொல்ற ?

  B: (மனதிற்குள்)
  பாவம்! போன Decemberkku அப்புறம் இப்போதான் வெளிய வராரு போல!
  சரி ! நம்ம ஆளுங்க திருப்பதிக்கே 'லட்டு' கொடுக்குறாங்க !
  இப்போ christimas தாத்தாக்கு 'கேக்' கொடுக்காம இருப்பாங்களா......!

  ReplyDelete
 67. Caption: 3

  A: ஹே டெக்ஸ் !
  கார்சன் தாத்தாவுக்கு christimas gift கொண்டு வந்துருக்கேன் !
  எங்க அவரு ?

  B: ஐ ஐயோ !
  இளவட்ட பசங்க தாத்தான்னு சொன்னாவே பிஸ்டலை தூக்குவானே ?
  இப்போ தாத்தாவுக்கு எல்லாம் தாத்தா, நம்ம christimas தாத்தாவே அவரை(னை) தாத்தான்னு கூப்பிடறதா பார்த்தா..............என்ன ஆகப்போகுதே தெரியலையே ! நம்ம எதுக்கும் வாயே திறக்க வேணாம் !
  ஹ்ம்ம்....ஆனா ஒன்னு....நம்ம இனிமே அவரை மரியாதையா கூப்பிடனும்.........
  ஐ மீன்....
  இனிமே அவரை 'எள்ளு' தாத்தா இல்ல சாண்டா (வுக்கே) தாத்தான்னு கூப்பிடனும்...ஹிஹிஹி....

  ReplyDelete
 68. முத்துவும் நானும்:

  எனக்கு நினைவு தெரிந்து நான் படித்த முதல் முத்து (அல்லது என்னை பாதித்து நினைவில் நின்றது) ஒரு அட்டை கிழிந்த "கேப்டன் போலிதோ"வின் "காற்றில் கரைந்த கப்பல்கள்" (அ) "திசை மாறிய கப்பல்கள்"!
  இன்னைக்கு எவ்ளோவோ கேப்டன்கள் நமக்கு பிடித்தாலும் அந்த "anti" ஹீரோ...... அந்த கதையை படித்தவங்க நினைவில் நீங்கா இடம் பிடித்திருப்பாருங்கறது உறுதி! ( பின்னாளில் பழைய படங்களை பார்க்கும் போது ஹீரோவுக்கு இணையா சத்தியராஜும், ரகுவரனும் பிடிச்சதுக்கு அவருதான் பிள்ளையார் சுழி போட்டாரோ என்னோமோ !)
  என்னதான் லாரன்ஸ் & டேவிட் இருந்தாலும் அந்த கதை சகா வரம் பெற்றதற்கு காரணம் போலிதோவும் அந்த கார்ல போய் accidentla மாட்டிக்கற அந்த இரு ஜோடிகளும்தான்னா மிகையாகாது !
  அதற்கு பின்பு பெரும்பலான மும்முர்த்திகளின் மறுபதிப்புகளை முடிந்தவரை சேகரித்துளேன் ! (இப்போ வர்றது/வாங்கறது பெரும்பாலும் மூன்று அல்லது நான்காவது கிளாசிக் மறுமறுமறுமறுமறுபதிப்பு ;-) )
  இன்னைக்கும் "இஸ்தான்புல்" "துருக்கி" போன்ற வார்த்தைகளை கேக்கும் போது... அட எங்கயோ கேட்ட மாதிரி இருக்கேன்னு பரபரன்னு நெட்ல தேட காரணம் அம்மும்மூர்த்திகள் தான்னா மிகையாகாது !
  (ஒரு காலத்துல "தேம்ஸ்" நதி ஏதோ நம்ம வீட்டுக்கு பின்னால ஓடற வாய்க்கால் ரேஞ்சுக்கு தோணுச்சுன்னா அதுக்கு இவங்கதான் காரணம் ;-))
  அவங்க காலத்துக்கு பின்னால பெரிய பேர் இல்லாமல் வந்த சில பல கதைகள் "பயங்கர பன்னிரண்டு" "பிளேக் தோன்றிய ஆவி கதைகள்" எல்லாம் நன்றாகத்தான் இருந்தது.... (அதுக்குத்தான் சில பல சமயங்கள்ல இப்போவும் அந்த மாதிரி ஒற்றை கதை surprise ஹீரோக்களும் தேவை என்று தோன்றுகிறது!)
  அது என்னோமோ தெரியல இன்னைக்கு வரைக்கும் நம்ம லயன்ல அவ்ளோவா யாரும் ஊர் சுற்றி காட்டறது இல்ல (நம்ம ஆசிரியரின் சிங்கத்தின் சிறுவயதில் அதுக்குத்தான் வந்துச்சோ என்னமோ !!!) ஆனா முத்து இன்னைக்கு வரைக்கும் உலகம் சுற்றும் வாலிபர்களை சலிக்காம இறக்குமதி பண்ணிகிட்டே இருக்கு.......அன்னைக்கு மும்மூர்த்திகள் உலகம் சுத்துனதை போல இன்னைக்கு wayne ஷெல்டனும் நம்ம கோடீஸ்வர கோமானும் நிறுத்தாம சுத்திகிட்டு இருக்காங்க !
  (on lighter நோட்)
  எல்லாதுக்கும் மேல.... நம்ம டைம்பாஸ்க்காகவே சிங்கத்துக்கு இணையா (அப்படினு நினைச்சுக்கிட்டு கனவு காண...) ஒரு அட்ட்ரக்ட் பண்ணற ஒடஞ்ச மூக்கு புலியை உருவாக்கின பெருமை நம்ம முத்துவையே சேரும் ;-)

  ReplyDelete
 69. இன்று பிறந்தநாள் கானும் இனிய நண்பரும், மாறாப் புன்னகைக்குச் சொந்தக்காரருமான புதுவை செந்தில் அவர்கள் வாழ்வின் எல்லா வளங்களையும் பெற்று நல்லா வாழ வாழ்த்துகிறேன்!

  ReplyDelete
  Replies
  1. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் நண்பரே...

   Delete
  2. புதுவை செந்தில் அவர்களுக்கு
   இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
   வாழ்க வளமுடன்.

   Delete
  3. என்னுடைய வாழ்த்துக்களும் உரித்தாகுக சார் ..:-)

   Delete
 70. இன்று பிறந்தநாள் காணும் நண்பர் திரு புதுவை செந்தில் அவர்களுக்கு ..என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் ..

  ReplyDelete
 71. இப்படியே கிழக்காலே போனா கார்சன் வீடு வருமா?அவருக்கு ஒரு பரிசு குடுக்கணும்..
  அப்படியே மேற்காலே போனா இவ்விடம் நயம் வறுத்த கறி கிடைக்கும்னு போர்ட் இருக்கும்.அதுக்கு அடியிலேதான் கிழவன் தவம் பண்ணிக்கிட்டு இருப்பான் .போய் பாருங்க ..

  ReplyDelete
 72. A.சாண்டாக்ளாஸ் வேடத்திலுள்ள கார்சன்:வர்ரீயா டெக்ஸ் இன்னொரு ரவுண்டு போலாம்

  B.டெக்ஸ் மனதினுள்: அடப்பாவி எங்கவூர்ல எல்லாம் சாண்டாக்ளாஸ்னா குழந்தைகளுக்கு பரிசு கொடுக்கும்.நீ குழந்தைங்ககிட்டயிருந்து சாப்பிடுறஐட்டமா புடுங்கி மூட்டைகட்டுறீயே.இதுல இருக்குற மூட்டை பத்தாதுன்னு இன்னொரு மூட்டை சுமக்குறதுக்கு என்னை கூப்பிடுறியா

  ReplyDelete
 73. முத்துவும் நானும்:

  என்னுடைய பால்யத்தை இனிமையாக்கியதில் முத்து காமிக்ஸின் இரும்புகை மாயாவிக்கு பெரும்பங்கு உண்டு.

  சிறுவயதில் நான் படித்ததில் இப்போதும் நினைவிலுள்ளது களிமண் மனிதர்கள். சாதாரண மனிதர்களின் மேல் கொதிக்கும் களிமண்ணை ஊற்றி அவர்களை களிமண் மனிதர்களாக்கும் கட்டம். அப்பப்பா. அப்போது அதனை படித்து டெரர் ஆனது இப்போதும் நன்றாக நினைவிலுள்ளது.

  இரும்புகை மாயாவியை அடுத்து என்னை கவர்ந்தவர்களில் அடுத்தது கேப்டன் டைகர்தான். தங்க கல்லறை மறக்ககூடிய சாசசமா அது.அந்த பச்சோந்தி லக்னரை மறக்கமுடியுமா என்ன.

  அடுத்து லார்கோ,ஷெல்டன் . ஒற்றை சாகச நாயகி கழுகுமலை கோட்டை மாடஸ்டி எல்லாம் மறக்கமுடியுமா என்ன!!!!

  அதேபோல் யானைகல்லறையில் சாகசம் செய்த வனரேஞ்சர் ஜோ!!!!இரண்டே சாகசம் செய்திருந்தாலும் இரண்டுமே அக்மார்க் அட்டகாசம். பின்னொரு நாள் வண்ண மறுபதிப்புக்கு தகுதியான இதழ்

  இறுதியாக ஒன்று. எனக்குதான் ஆண்டொன்று போனால் வயதொன்று கூடுகிறது. ஆனால் 40வருடங்களை கடந்தும் முத்து காமிக்ஸ் இளமைதுள்ளளோடு பீடு நடைபோட்டு வருகிறது. முத்து காமிக்ஸிற்கு வயதாவதே கிடையாது!!!!

  ReplyDelete
  Replies
  1. ////முத்து காமிக்ஸிற்கு வயதாவதே கிடையாது!!!!////

   45 years young!!

   Delete
 74. பிறந்த நாள் வாழ்த்துகள் புதுவை செந்தில்!!!"

  ReplyDelete
 75. பிறந்த நாள் வாழ்த்துகள் புதுவை செந்தில்!!!"

  ReplyDelete
 76. சை! எனக்கு இந்த கேப்ஷன் போட்டிகளே பிடிக்காது!

  ReplyDelete
 77. வானம் தந்த வரம் :
  ஸ்மர்ஃப் ஸே குட்டி குட்டியாய் கொள்ளை அழகாக இருக்கையில் ஒரு பேபி ஸ்மர்ஃப் இன்னும் குட்டியாக சேர்ந்தால் எப்படி இருக்கும். .!! அழகோ அழகு.
  கதையென்ற ஒரு வஸ்துவே இல்லையென்றாலும், இந்த சின்னஞ்சிறு செல்லங்களை வெறும் சித்திரங்களாக கூட ரசித்துக் கொண்டேயிருக்கலாம். அவ்வளவு அழகு.
  எதுவுமே பொடிக்காத சிடுமூஞ்சி ஸ்மர்ஃப்புக்கே பேபி ஸ்மர்ஃபை பிடித்துப்போக, திருப்பித்ததர விரும்பாமல் சிடுமூஞ்சி செய்யும் சாகசங்கள் அட்டகாசம். சிடுமூஞ்சி ஸ்மர்ஃப் சென்டிமெண்ட் ஸ்மர்ஃப் அவதாரம் எடுக்க கதை நல்லபடியாக முடிகிறது.

  ஸ்மர்ஃபொனி :
  ப்ப்பூபூவாவாவாய்ய்ய்ங்ங்..! காதை மூடிக்கொண்டு கச்சேரி நடத்துவது ஒன்றே மொத்த கதைக்கும் போதும்..!! ப்ப்பூபூவாவாவாய்ய்ய்ங்ங்..!!

  ஸ்மர்ஃப்பொறிகள் :
  தண்ணீரில் குதித்து நீச்சலடித்து தப்பிக்கும் ஸ்மர்ஃபை பிடிக்க தானும் அதே தண்ணீரில் டைவடித்து மூக்குடைபட்டு, ச்சே இதில் நான் எப்படி நீந்த முடியும் என்று கார்கமெய்ல் சலித்துக்கொள்ளும் இடம் செம்ம ரவுசு. . அதே போல தங்ககாசுகளை பொறுக்கிக் கொண்டே போய் பெட்டியில் அடைபடுவதும் நல்ல காமெடி. . ஸ்மர்ஃப்பொறிகள் முழுக்க கார்க்மெய்லின் ராஜாங்கம்தான்..!!

  ஸ்மர்ஃப்ஸ் - என்றும் பச்சை (Evergreen)

  ReplyDelete
  Replies
  1. ////இந்த சின்னஞ்சிறு செல்லங்களை வெறும் சித்திரங்களாக கூட ரசித்துக் கொண்டேயிருக்கலாம். அவ்வளவு அழகு.////

   உண்மை உண்மை உண்மை!

   Delete
 78. சேலம் டெக்ஸ் அவர்களுக்கு,
  ஓர் திறந்த கடிதம்.
  எனது உள்மன வெளிப்பாடு
  காரணமாக, உங்களின் குமுறல் கண்டேன். அதை ஆய்வு செய்ய நான் இங்கு வர வில்லை. எனது அனுபவம் பற்றிய பகிர்வை தான் நான் பதிவு செய்தேன்.அதை விமர்சிக்க முழு உரிமை உங்களுக்கு உண்டு. எனது கருத்தை பற்றிய பல விமர்சனங்களை கண்டேன். ஆனால் உங்களுடைய பார்வை தான் எனக்கு வியப்பை தந்தது. அதில் தெரித்த கிண்டலையும், நையாண்டியையும் ,கேலி பேச்சையையும் கண்டு மகிழ்வு கொண்டேன். என்னை எள்ளி நகையாடுவதால் உங்களுக்கு இன்பம் என்றால் அதை விட இன்பம் ஏது. ஆனால் அந்த பண்பு என்னிடம் இல்லை. உங்களது கருத்து தவறு என்று நான் சொல்ல போவதே இல்லை.அதற்காய் என்னிடம் இருக்கும் பண்புகளை இழக்க நான் தயாராய் இல்லை. உங்களின் கீர்த்தி சிறக்க வேண்டும் என்பதையே நண்பன் என்ற முறையில் நான் அதை விரும்புகிறேன்.இதையும் தாண்டி என்னை நீங்கள் விமர்சிக்க விரும்பினால்,அதை எதிர் கொள்ள நான் தயாராய் இருக்கிறேன்.

  ReplyDelete
 79. காமிக்ஸ் உலகின் முடிசூடா மன்னன் வால்ட் டிஸ்னி. அவரது படைப்புகள் உருவாக்கிய காமிக்ஸ் அற்புதங்கள் தலைமுறைகள் கடந்து உலகம் முழுவதும் கவர்ந்து வருகிறது. ஹாங்காங் டிஸ்னிலேண்ட் நுழைவு கட்டணம் நாள் ஒன்றுக்கு ₹ 4,600/-
  அதே செலவில் ஒரு ஆண்டுசந்தா செலுத்தி உங்கள் இல்லம் தேடி
  காமிக்ஸ் இதழ்களை வரவழையுங்கள் .

  ReplyDelete
  Replies
  1. @ Loknath

   நல்லவேளை செஞ்சிங்க பாஸ்...சந்தா கட்டிடேன்.! இந்த விஷயம் வெளிய தெரியாம பாத்துகங்க..ஹீ..ஹீ..ஹீ..! ஏன்னு தெரிய...இங்கே'கிளிக்'

   Delete
 80. எவ்வளவோ கஷ்டப்பட்டு இந்த கிருஸ்துமஸ் தாத்தாவேஷம் போட்டு உன்னை ஏமாத்த நினச்சேன் எப்படி கண்டுபிடிச்சே டெக்சு ?
  உன்னோட பரிசுப் பொருட்கள் பார்சலோடு பார்சலா ரெண்டு பிளேட் வறுத்த கறி பார்சல் வாங்கி வச்சிருக்கியே அந்த வாடையை வச்சுத்தான் ..கார்சன்

  ReplyDelete
 81. AT Rajan - // ...ஆசிரியரின் சிங்கத்தின் சிறுவயதில் லயனிலும், சீனியர் ஆசிரியர் அவர்களின் முத்துவின் முத்தான நினைவுகள் என்று முத்துவிலும் மாதாமாதம் தொடர ... //

  ராஜன் சார்... இந்த கோரிகையை கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாகவே வைத்தேன். ஆனால் எடிட்டர் மறுத்து விட்டார். அதற்கு அவர் கூறிய காரணம், சீனியர் எடிட்டரின் கண்அறுவை சிகிச்சை என்பதுதான். மறுக்க முடியாத காரணம் என்பதால் யாராலும் பேச முடியவில்லை.

  இப்போது நாம் அ◌ைனவரும் சேர்ந்து கோஷம் போடுவோம்.

  அல்லது கிட்ஆர்டின் கண்ணன் அவர்கள் கூறியது போல கூட்டமாய் நின்று முறைத்துப் பார்க்க வேண்டிதுதான் ஆசிரியரை....

  ReplyDelete
  Replies
  1. ////கிட்ஆர்டின் கண்ணன் அவர்கள் கூறியது போல கூட்டமாய் நின்று முறைத்துப் பார்க்க வேண்டிதுதான் ஆசிரியரை....////

   இந்தப் போராட்டம் நிச்சயம் நடைபெறும் - இது போராட்டக்குழுவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

   Delete
  2. எடுங்கள் ஆயுதத்தை.... புறப்படுங்கள் களத்திற்கு ..

   முத்துவிற்கு இனி மூன்று பக்க புதையல் நமது சீனியர் எடி அவர்களுக்காக ...

   காமிக்ஸ் முழு வரலாறு அவரால் முழுமை பெறட்டும் ...

   Delete
  3. செயலாளரின் போராட்ட அறிவிப்பு...

   தலைவரின் அட்டகாசமான வழிமொழிதல்...

   இனி என்ன? சேந்தம்பட்டி தளபதிகள் தள்ளுவண்டி கட்டிகொண்டு புறப்பட வேண்டியதுதான்...

   எடிட்டரை நினைத்தால் பாவமாய் வருகிறது....

   Delete
 82. CAPTION:

  SANTA CLAUS : என்னப்பா! டெக்ஸ் வில்லர்!! நீயே என்னை பார்க்க வந்துட்ட.?! உனக்கு வெடிமருந்தை பரிசா கொடுக்க நானோன்னும் 'தீபாவளி தாத்தா' கிடையாது. நான் 'கிரிஸ்துமஸ் தாத்தா'. அதை ஞாபகம் வெச்சுட்டு என்ன பரிசு வேணும் கேளு?

  TEX : பரிசெல்லாம் ஒண்ணும் வேண்டாம். நீங்க பைபிள்'லே எந்த பக்கம் வர்ரீங்கன்ணு யாருக்கும் தெரியலை. நானாவது தெரிஞ்சிக்கலாம்னு வந்தேன்.

  ReplyDelete