Powered By Blogger

Monday, March 30, 2020

நாயகர் பேச நினைப்பதெல்லாம்.....!

நண்பர்களே,

வணக்கம். அத்தியாவசியப் பணிகளில் பிஸியானதொரு precious, சிறு அணி களத்திலிருக்க, அதனில் அல்லாத பெரும்பான்மை, வீட்டில் குந்தியபடியே WFH தவிர்த்த மற்ற நேரங்களில் tiktok & வாட்சப் ஆய்வுகளில் பூமியைத் தாங்கிப் பிடிப்பதில் ஒரே பிஸி என்பது புரிகிறது ! இடைப்பட்ட அவகாசங்களில், கறி காய் நறுக்கும் கலைகள் ; துடைப்பத்தின் மறு முனையோடு பரிச்சயமிருக்க, இப்போதோ சரியான முனையைப் பிடிக்கக் கற்றிடல் ; 'வசந்தகால நதிகளிலே' என்று உள்ளுக்குள் தலீவர் பட டியூனை இசைத்துக் கொண்டே வீட்டின் கூடங்களை mop செய்திட முனைதல் என்று ஆங்காங்கே புதுப் புதுக் கற்றல்களும் அரங்கேறுவது புரிகிறது !! Never too old to learn என்று சும்மாவா சொன்னார்கள் ?! வாழ்க்கைப் பாடங்களின் இன்னொரு பக்கம் !! 

எது எப்படியோ - வியாழன் + ஞாயிறின் பதிவுகளுக்கு மாங்கு மாங்கென்று எழுதியவன் சற்றே ஓய்வெடுக்க, இனி நீங்கள் கொஞ்சம் எழுதிடலாமே ?

இதோ உ.ப.வுக்கென ஒரு caption போட்டி !! அதிகாரி மீதான துவேஷத்தையோ ; பட்டாளத்தில் பிகில் ஊதும் அண்ணாச்சி மீதான கடுப்சையோ வெளிக்காட்டிட இதனை ஒரு வாய்ப்பாக்கிக் கொள்ளாது, இந்த iconic நாயகர்களை தரமான நகைச்சுவை வரிகளோடு கலகலக்க விட முயற்சித்திடலாமே guys ? வெற்றி பெரும் ஒவ்வொரு கேப்ஷனுக்கும், ஒரு ஜம்போ சீசன் 3 சந்தா பரிசு - நம் அன்புடன் !! 


Bye all !! Stay home....Stay Safe !! See you around !!

பி.கு : இவை எல்லாமே படைப்பாளிகள் ஏதேதோ தருணங்களில் உருவாக்கிய பகடிகளே !! 

Sunday, March 29, 2020

பாரிஸ் படலம் !

நண்பர்களே,

வணக்கம். சிரமமான நாட்களே ; சந்தேகமே கிடையாது ! பொம்மை புக்குகள் ;  அவை சார்ந்த ஜாலி அரட்டை என்பனவெல்லாமே இப்போதைக்கு ரொம்ப ரொம்பத் தொலைவில் இருந்திட வேண்டிய சமாச்சாரங்களாய்த் தோன்றினால் நிச்சயம்  அதனில் தப்பில்லை தான் ! So இந்நேரத்துக்கு இங்கே ஆஜராகவில்லையா ? என்று கேட்பது குடாக்குத்தனம் என்பது புரிகிறது ! ஆனால் சும்மாவேனும் ஒருவாட்டி இங்கே தலைகாட்டி விட்டு ஒரு அட்டெண்டன்ஸ் போட்டுவிட்டுப் போனால்,`` அனைவரும் நலமென்ற சந்தோஷம் அனைவருக்கும் கிட்டும் தானே ? Please guys ?

அப்புறம் இந்தப் பதிவு, சில நாட்களுக்கு முன்பான பதிவின் தொடர்ச்சி என்பதை, புதிதாய் எட்டிப் பார்த்திடும் நண்பர்களுக்கு நினைவூட்டி விடுகிறேன் ! இங்கிருந்து வாசிப்பைத் துவக்கிடும் பட்சத்தில், வழக்கத்தை விடவும் கொஞ்சம் ஜாஸ்தியாய்க் குழப்பிடக்கூடும் ! இருக்கும் நோவுகள் போதாதென்று, நான் என் பங்கிற்குப் படுத்தியது போலாகிடக்கூடாதல்லவா ? ரைட்டு...இனி விட்ட இடத்திலிருந்து தொடர்கிறேன் :

அயல்நாடெனும் சமுத்திரத்தில் முதல் தபா பச்சைப் பிள்ளையாய் தவித்தது என்னவோ நிஜம் தான் ; ஆனால் ரொம்பச் சீக்கிரமே காலை ஊன்றிக்கொள்ளப் படித்திருந்ததால் சமாளித்து விட்டிருந்தேன் ! ஆனால் இரண்டாம் ஆண்டோ சற்றே வித்தியாசப்பட்டிருந்தது ! டின்னில் வரும் கொக்கோ -கோலாவை வாங்கிப்புட்டு அதை உடைக்கக் கூட வழி தெரியாமல் முழிபிதுங்கி நின்றது தான் 1985-ன் அனுபவமெனில், மறு வருஷமோ, கொக்கும், பெப்புசியுமாய்த் தான் தொழிலதிபர் வலம் சென்று கொண்டிருந்தார் !  என்னமோ அருணாக்கயிறு கட்டிய நாளிலிருந்தே கோட்டையும், சூட்டையும் போட்டுக் கொண்டு, ஆறடி உசர வெள்ளைக்காரர்களுடன் தொழில் பேசியவன் போலொரு தெகிரியம் தொற்றி விட்டிருந்தது ! புதுசு புதுசாய்க் கான்டிராக்ட் போடுவதெல்லாம் ஆமை வடையும், கெட்டிச் சட்னியும் வாங்குவதற்குச் சமானம் என்பது போலொரு துள்ளல் வந்திருந்தது நடையில் ! ஜெர்மானியர்களின் ஆங்கில உச்சரிப்பு ; பிரெஞ்சு தேசத்தவர்களின் பேச்சு முறை ; பிரிட்டிஷார் / அமெரிக்கர்கள் / இத்தாலியர்கள் இங்கிலீஷ் பேசும் பாணிகள் என சகலத்தையும் கேட்டுக் கேட்டு, அண்ணாச்சியின் இங்கிலீபீஸிலும் ஒரு மாற்றம் குடிகொண்டிருந்தது ! பற்றாக்குறைக்கு 1986-ன் பிராங்கபர்ட் புத்தக விழாவினில் பணிகள் எல்லாமே செம்மையாய் நடந்தேறியிருக்க, மண்டைக்குள்ளே கலர் கலராய்க் கனவுகள் ஓடிய வண்ணமிருந்தன !! "ஊருக்குப் போறோம்....ஜூனியர் லயன் காமிக்ஸ்ன்னு கார்டூனா போட்டுத் தாக்குறோம் ; புதுசா வாங்கியுள்ள கதைகளை லயனிலே கொஞ்சம், திகிலிலே கொஞ்சம்னு போட்டுத் தாக்குறோம் ; அப்புறம் ரொம்பவே முக்கியமா - 'வாங்கோ சார்....வாங்கோ சார்...இனி நம்மகிட்டேயும் ஒரு இரும்புக்கைப் பார்ட்டி இருக்காரு ; வந்து பழகிப் பாருங்க' என்று ஏஜெண்ட்களுக்கு ஓலை அனுப்பணும்" என்று அத்தனையும் மகிழ்வான எண்ணத்தோரணங்கள் ! உள்ளுக்குள் உற்சாகம் துள்ளும் போது நடையிலும் துள்ளல் சேர்ந்து கொள்வதில் வியப்பேது ? திகட்டத் திகட்ட சந்தோஷத்தை வழங்கிய ஜெர்மனிக்கு மனசுக்குள் விடை தந்தது மட்டுமே கொஞ்சம் வருத்தத்தைத் தந்து கொண்டிருந்தது ! காத்திருக்கும் பாரிஸ் என்ன மாதிரியாய் இருக்குமோ ? என்ற மெல்லிய பயமும் தொற்றிக் கொண்டிருந்தாலுமே,  எதையும் முகத்தில் காட்டிக் கொள்ளாது -  'அன்பே வா' தலைவரைப் போலொரு பிரீஃப் கேஸை கையில் பிடித்துக் கொண்டு, பாரிஸ் செல்லவிருந்த விமான கேட்டினில் பார்வையை ஓடவிட்டேன் ! அங்கொன்றும், இங்கொன்றுமாய், ஓரிரண்டு  சீட்டுகளைத் தவிர்த்து பாக்கி எல்லாமே full ! 'ஒரு தொழிலதிபருக்கு பாரிஸ் போக ஜோலி இருக்கும் சரி ; இப்டி கும்பலா உங்களுக்குலாம் அங்கே என்னங்கடா வேலை அப்ரசிடிக்களா ?' என்று கேட்கணும் போலத் தோன்றியது ! கோட்டின் பொத்தான்களைத் திறந்துவிட்டபடிக்கு கண்ணாடித் தடுப்புகளை ஒட்டிய முதல் வரிசையின் ஓரத்திலிருந்த சீட்டில் போய் குந்தினேன் !

'ஹலோ' என்றொரு குரல் ரொம்பவே ஸ்நேகமாய்க் கேட்க - "இது யாருடா ?" என்று பார்த்தேன் ! என்னருகே அமர்ந்து இருந்ததொரு ஆறடி உசர டிப்டாப்பான பிரவுண் நிற ஆசாமி தான் கையை நீட்டிக்கொண்டிருந்தார் ! சருமத்தின் நிறத்தைக் கொண்டு மக்களை வெவ்வேறு அடையாளங்களுக்குள் நுழைக்க முயற்சிக்கும் போது 3 ரகங்கள் பலனாகிடுகின்றன ! வெள்ளைத் தோல் மக்களாய் ஐரோப்பியர்கள் ; அமெரிக்கப் பெரும்பான்மை ; ஆஸ்திரேலியர்கள் என்று சொல்லலாம் ! கறுப்பின மக்களாய் ஆப்பிரிக்க நாட்டவர் ; மேற்கிந்தியத் தீவினர் போன்றோர் ! மத்திய கிழக்கத்தவர்கள் ; தெற்காசியர்கள் ; வட ஆப்ரிக்காவின் சில நாட்டவர்கள் ; மெக்சிக்கன்கள் போன்றோரை இந்த "பிரவுண் அணி" எனலாம் ! என்னருகே அமர்ந்திருந்தவரோ வட ஆப்ரிக்கர் என்பதை அவரது உடல்வாகு...அந்தக் குட்டிக்குட்டியான கேசம் ; தடிமனான உதடுகள் & அந்தக் கனத்த உச்சரிப்பு பாணி பறைசாற்றியது ! (கிட்டத்தட்ட சிங்கம் 2 படத்தில் வந்த டேனி மாதிரி என்று வைத்துக் கொள்ளுங்களேன் !) லேசான தயக்கத்தோடு நானும் 'ஹல்லோ' என்றபடிக்கே கையைக் கொடுக்க ; கரும்பு பிழியும் மிஷினுக்குள் புகுந்து வெளிப்படும் ஆலைக்கரும்புகள் என்ன பாடு படுமென்பதை உணர முடிந்தது ! "From India ?" என்ற கேட்ட மனுஷனின் முகத்தில் ஒரு விசாலமான புன்னகை ! அந்த நாட்களிலெல்லாம் இந்த software boom-ம் கிடையாது ; கொத்தவால்சாவடிக்குப் போய் வரும் லாவகத்தில் இந்தியர்கள் உலகத்தைச் சுற்றுவதும் கிடையாது ! So இந்தியாவுக்கு வெளியே, நம்மவர்களை சந்திப்பதும் சரி ; நாட்டைப் பற்றி பேசுவதும் சரி, செம உற்சாகமான சமாச்சாரம் ! "Yes ...yes ...I'm from India " என்றேன் ! முதுகில் ஒரு தட்டு தட்டியபடியே இந்தியாவைப் பற்றி சிலாகிக்க ஆரம்பித்த மனுஷன், வியாபார விஷயமாய் சில வருஷங்களுக்கு முன்னே தான் பெங்களூருக்கு விசிட் அடித்துள்ளதாகவும் சொல்ல - "ச்சே...ரெம்போ சின்ன உலகம் தான்டா சாமீ !!" என்று நினைத்துக் கொண்டேன் ! இரும்பு சம்பந்தப்பட்ட ஏதோவொரு தொழிலில் இருப்பதாகவும், ஐரோப்பாவுக்கு அடிக்கடி விசிட் அடிப்பதுண்டு என்றும் சொன்னவர், நான் என்ன செய்கிறேன் என்று வினவினார் ! ஒரு தொழிலதிபரிடம் இப்படியொரு கேள்வியைக் கேட்ட பிற்பாடு விளக்கிடாது இருக்க முடியுமா - என்ன ? குலம் , கோத்திரம், கோச்சார பலன்கள் நீங்கலாக பாக்கி அனைத்தையும் புட்டுப் புட்டு வைத்தேன் ! 'பாரிசில் எத்தனை நாள் ?" என்று அவர் கேட்க, "2 நாட்கள் ; அப்பாலிக்கா சுவிட்சர்லாந்த்" என்று பதில் சொன்னேன் ! ரொம்ப நாள் பழகியவர் போல ஐந்தே நிமிடத்துப் பரிச்சயத்தில் மனுஷன் நெருங்கி விட, "பாரிசில் எங்கே ஜாகை ?" என்று கேட்ட போது எனக்குத் திரு திருவென்று முழிக்க மட்டுமே முடிந்தது ! அந்த பாரிஸ் பயண கைடில் வாசித்த ஏதோவொரு ரயில்வே ஸ்டேஷனின் பெயரைச் சொல்லி, "அதற்குக் கிட்டே ஏதாச்சும்  போய்த் தான் பாக்கணும் !" என்றேன் ! "ஓஹோ..." என்ற மனுஷன் விமானத்தில் எனது சீட் நம்பர் என்னவென்று கேட்டார் !  முடிந்தால் ஸ்டாண்டிங்கில் கூட வரத்தயாரான கேஸ் அல்லவா - நாமெல்லாம் ?! எகானமி வகுப்பிலான என் சீட் நம்பரைச் சொன்னேன் ! அவரோ பிசினஸ் க்ளாசில் பயணிக்கும் ரகம் என்பது அப்புறம் தான் தெரிந்தது ! என் போர்டிங் பாஸை டக்கென்று வாங்கி கொண்டு விறு விறுவென்று Lufthansa டெஸ்குக்குப் போனவர் பிரெஞ்சில் என்னவோ பேசிட ; அவர்களும் ஏதோ பதில் சொல்லிட, கொஞ்ச நேர மல்லுக்கட்டலுக்குப் பின்னே திரும்பி வந்து போர்டிங் பாஸை என்னிடமே ஒப்படைத்தார் ! பிசினஸ் வகுப்பிற்கு எனது டிக்கெட்டை upgrade செய்திட வழியிருந்தால், அவரோடே பயணம் செய்திடலாமென்ற நினைப்பில் முயற்சித்துப் பார்த்ததாகவும், பிசினஸ் கிளாஸ் கூட அந்த பிளைட்டில் full என்பதால் சாத்தியப்படவில்லை என்றார் ! எனக்கு பக்கோ என்றாகிப் போனது - இந்தக் கலியுகத்தில் இப்படியுமொரு உத்தமரா என்று !! ஐந்தே நிமிடப் பழக்கத்துக்காக கைக்காசைச் செலவிடத் தயாராக இருக்கிறாரே என்று நினைத்துக் கொண்டேன் !

அதற்குள் பிளைட் புறப்படத் தயாராகிட, கேட்டைச் சுற்றி அமர்ந்திருந்த அத்தினி அப்ரசிடிக்களும் , மொய்யென்று விமானத்தினுள் புகுந்தனர் ! தொடர்ந்த ஒரு மணி நேர பயணத்துக்குப் பிற்பாடு பாரிஸின் விமான நிலையத்தில் தரையிறங்கினோம் ! "47 நாட்கள்" படத்தில் பார்த்த அதே அழுக்கு வடிந்த ஏர்போர்ட் கண்முன்னே 'பப்பரக்கா' என்று விரிந்து தெரிந்தது ! பிராங்கபர்ட்டின் அந்தப் பள பள பாங்கு மிஸ்ஸிங் & பாட்டுப் படிப்பது போலான உச்சரிப்பில் பிரெஞ்சில் ஓயாமல் ஏதேதோ அறிவிப்புகள் ஓடிக்கொண்டிருந்தன ! எனக்குள் இருந்த மெல்பதட்டமானது இப்போது ஒரு மிடறு கூடியிருந்தது ! பெட்டிகளை மீட்க அந்த ரெங்க ராட்டின baggage claim-ல் போய் நான் நிற்கும் நேரத்துக்கு எனது புது நண்பரும் அங்கே வந்திருந்தார் ! கைக்கு அடக்கமாய் ஒரு சூட்கேஸ் & ஒரு பிரீஃப்கேஸ் மட்டுமே வைத்திருந்தார் என்பதால் அவற்றை செக்கின் செய்யாது, கையோடு கொணர்ந்திருந்தார் என்பதைக் கவனித்தேன் ! 'சரி..நீங்கள் வேண்டுமானால் கிளம்புங்கள் சார் ! என் லக்கேஜ் வர நாழியாகுமோ - என்னவோ !" என்றேன் ! "No ..no ..we are going together !!" என்றார் ! 'அட, பாரிசில் கூட பரமாத்மா இப்படியொரு உதவியாளரை அனுப்பி வைத்து நம்மைக் கரை சேர்க்கிறாரே !!' என்று உள்ளுக்குள் மத்தாப்பூ தெறித்தது !

மொக்கைத்தண்டிக்கான எனது பெட்டியும் வந்தது, அதை உருட்டிக் கொண்டே நடந்தோம் - வாயிலை நோக்கி ! பஸ்ஸில் போக நினைத்துள்ளேன் நான் என்று சொன்னேன் ; அவரோ - "No ..no ..we go in a taxi & you can stay in the same hotel with me !!" என்றார் ! ஒற்றை நொடியில் எனது சிக்கல்கள் சகலத்துக்கும் விடை கிட்டி விட்டது போல் எனக்குள் ஒரு உற்சாகம் ஓட்டமெடுத்தது ! இப்படி ஒரு மனுஷனை கண்ணில் காட்டியதற்கு நன்றி சொல்லிக்கொண்டேன் கடவுளுக்கு ! அதே சமயம் "தெய்வமே...பகுமானமாய் போய் இறங்கிய பின்னே மீட்டரில் பாதி-பாதி என்று மனுஷன் காசு கேட்காத வரைக்கும் சரி தான் ! "என்றும் ஒரு வேண்டுதலைப் போட்டு வைத்துக் கொண்டேன் !

பாரிஸ் விமான நிலையம் ஊருக்குள்ளிருந்து 25 கிலோமீட்டருக்கு கூடுதல் என்பதால் டிராபிக்கில் கிட்டத்தட்ட 1 மணி நேரம் பிடிக்குமென்று வாசித்திருந்தேன் !  போக வேண்டிய இடத்தைச் சொல்லி விட்டு சாவகாசமாய் மனுஷன் அமர, அவரது ஆஜானுபாகுவான உருவத்துக்கே பின்சீட்டின் பாதிக்கு மேலே தேவைப்பட்டது ! நான் ஆர்வத்தோடு வெளியே பராக்குப் பார்த்துக் கொண்டே வர, இவர் ஏதேதோ பேசிக் கொண்டேயிருக்க, மரியாதை நிமித்தம் 'ஊம்' கொட்டிக் கொண்டேயும் சென்றேன் ! மீட்டருக்கு காசு கேட்டுவிடுவாரோ என்ற பயம் ஒரு பக்கமெனில், இன்னொரு பயமும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தது கிளம்பிய சற்றைக்கெல்லாம் ! இவரோ குளிக்கப் போகும் போது கூட கோட்டும், சூட்டும் போடும் பிசினஸ் க்ளாஸ் மேட்டுக்குடி எனும் போது, மனுஷன் வாடிக்கையாய்த் தங்கும் ஹோட்டலும் உசத்தியான ரகமாய் இருந்து விட்டால் என்ன செய்வது ?" என்ற பீதி தலைதூக்கியது ! அங்கே போன பிற்பாடு - "இது எனக்குக் கட்டாது !" என்று சொல்லவும் சங்கோஜமாக இருக்கும் ; அதே சமயம் பணம் ஜாஸ்தியெனில் நமக்கு தாக்குப்பிடிக்கவும் செய்யாதே !

மெதுவாய் நாம் செல்லவுள்ள ஏரியா எது என்றும் ; ஹோட்டல் பெயர் என்னவென்றும் கேள்வியைக் கேட்டு வைத்தேன் ! அவரோ அந்நேரத்துக்குள் செம ஜாலி மூடுக்குச் சென்றிருந்தார்   ! எல்லாவற்றுக்கும் ஒரு உரத்த வெடிச் சிரிப்பு ; முதுகில் ஷொட்டு ; தொடையில் தட்டு என்று வர, எனக்கு லைட்டாக உள்ளுக்குள் ஜெர்க் அடிக்கத் துவங்கியிருந்தது ! பத்தொன்பது வயது தான் என்றாலுமே, என்னருகில் டாக்சியினுள் இருந்த மனுஷனுக்கும், விமான நிலையத்தில் நான் சந்தித்த மனுஷனுக்குமிடையே ஒரு வேறுபாடு எழுந்திருப்பதைப்  புரிந்திடாது போகுமளவுக்கு குழந்தைப் பையனாக நானிருக்கவில்லை ! அளவுக்கு மீறி உரிமை எடுத்துக் கொள்வது போலவும், தேவைக்கு அதிகமாய் தொட்டுத் தொட்டுப் பேசுவது போலவும் எனக்குள் உறைக்கத் துவங்கிய போதே வயிற்றுக்குள் பயம் ஒரு பந்தாய் சுருள்வதை உணர முடிந்தது ! ஏதோ சரியில்லை என்பதும் ; இந்த மனுஷனின் சகவாசம் சரிப்படாது என்பதையும் தொடர்ந்த நிமிடங்களில் என் மண்டை உரக்கச் சொல்லத்துவங்கிட - நீண்டு கொண்டே சென்ற டாக்சியின்பயணமானது ஒரு யுகமாய்த் தோன்றத் துவங்கியது !

பாரிஸின் ரம்யமான சில வீதிகளையெல்லாம் தாண்டிப் போய்க் கொண்டேயிருந்த வண்டி, கொஞ்சம் கச கசவெனத் தோற்றம் தந்த பகுதிக்குள் புகுந்திருந்தது ! அவ்வளவும் பிரென்ச் அல்லாத வேற்று மொழிப்பெயர் பலகைகளாய்க் கண்ணில்படத் துவங்கிய போதே இது நிச்சயமாய் நகரின் மையமாய் இருக்க வாய்ப்பில்லை என்பது புரிந்தது ! ஒவ்வொரு பெருநகரிலும் அந்தந்த மக்கள் பிரதானமாய் வசிக்கும் ஏரியாக்கள் இருப்பதுண்டு ! சிங்கப்பூரில் லிட்டில் இந்தியா ; லண்டனில் சௌதால் போன்ற பகுதிகள் நம்மவர்களின் பேட்டைகள் !! ஒவ்வொரு ஊரிலும் சீனர்கள் மிகுதியான சைனாடவுன் ஒன்று இருக்காது போகாது ! இத்தாலியர்கள் ஜாஸ்தியாக இருக்கக்கூடிய Italian quarters ஏகப்பட்ட ஊர்களில் உண்டு ! அதே போல இது  வட ஆப்ரிக்க மக்களின் பிரதான ஏரியா என்பதும் ; செழிப்புக்கும் இந்தப் பகுதிக்கும் ஏழாம் பொருத்தம் என்பதும்  அப்பட்டமாய்த் தெரிந்தது ! பொதுவாய் புதுசாயொரு நகரினில் காலூன்றும் வரையிலும் கொஞ்சம் கலகலப்பான, பத்திரமான பகுதிகளில் புழங்குவது தான் தேவலாம் என்பதை அனுபவத்தில் உணர்ந்திருந்தவனுக்கு, அழுது வடியும் அந்த ஏரியா வயிற்றைக் கலக்கிக் கொண்டிருந்தது ! என்னருகே ஆரம்பத்தில் அம்பியாய் அமர்ந்திருந்தவரோ, ரெமோவாய் மாறியிருந்ததில் எனக்குக் குமட்டிக் கொண்டு வந்தது ! டங்கு டங்கென்று நெஞ்சு அடித்துக் கொள்ள - நினைவு தெரிந்த நாள் முதலாய் நான் போன அத்தனை கோவில்களையும் ; அத்தனை சாமிகளையும் நினைத்துக் கொள்ளத் தோன்றியது !  சுத்தமாய் எதுவும் தெரியாததொரு புது பெருநகரில், தப்பான ஆளின் சகவாசத்தில், வகையில்லாமல் மாட்டித் தொலைத்திருக்கிறேன் என்ற புரிதல் தொண்டையை எல்லாம் அடைக்கச் செய்தது !  பேசும் போது தொடையில் கை வைத்த மனுஷன் கையை அகற்றவில்லை எனும் போதே எனக்குள் இருந்த கொஞ்ச நஞ்ச சந்தேகங்களும் அகன்று விட்டன - இந்தாளின் நோக்கம் என்னவாக இருக்கக்கூடும் என்பது குறித்து ! பட்டென்று கையைத் தட்டி விட்ட போது ஒரு பழைய காலத்து வீடு மாதிரியானதொரு  ஹோட்டலின் முன்னே டாக்சி நின்றது !

நான் பெட்டியைத் தூக்கிக் கொண்டு இறங்குவதற்குள் காசைக் கொடுத்து செட்டில் செய்துவிட்டு விடு விடுவென்று ரிசப்ஷனுக்கு நடந்து போன மனுஷனை அங்கிருந்த கிழம் உற்சாகமாய் வரவேற்ற போதே இந்தாள் இங்கே ரெகுலராய்த் தங்குபவன் என்பது புரிந்தது ! இந்நேரத்துக்கு ரிசப்ஷனில் என்ன சொல்லியிருப்பான் என்பதை யூகிக்க எனக்குச் சிரமமே இருக்கவில்லை ! நேராய் அந்தக் கிழத்திடம்  போய் எனக்கொரு தனி ரூம் வேண்டுமென்றேன் ! "No..no..already booked a double room ; you stay with me !!" என்று என்னுடன் பயணித்திருந்த பிரவுண் மனுஷன் சொல்ல, நான் அதைக் காதிலேயே வாங்கியதாய்க் காட்டிக்கொள்ளவில்லை ! 'தனி ரூம் இல்லாங்காட்டி நான் நடையைக் கட்டப்போறேன்..." என்று நான் உறுதியாய்ச் சொல்ல, ரிசப்ஷன் கிழம் அந்தாளைப் பார்த்தது - "என்ன செய்ய ?" என்பது போல ! இவன் பிரெஞ்சில் ஏதோ சொல்ல, எனக்கொரு தனி ரூம் தந்தனர் - அதே தளத்தில், எதிர் எதிரே இருக்கும் விதமாய் ! கட்டணம் ரொம்பவே குறைச்சலாயிருக்க, என் பணத்தை டக்கென்று எடுத்து முதல் நாள் வாடகையை நானே கொடுத்து வைத்தேன் - "வேண்டாமே !" என்ற பிரவுண் பூதத்தின் மறுப்பினைக் கண்டு கொள்ளாது ! என் பெட்டியைத் தூக்கிக் கொண்டு ரூம் பாய் மேலே படியேறி வர, அதனை தனது ரூமிலேயே வைக்கச் சொன்னான் ; நானோ, பெட்டியைப் பிடுங்காத குறையாய் வாங்கி கொண்டு, எனக்கான அறைக்குள் கொண்டு போய் வைத்து விட்டு, தாழிட்டுக்   கொண்டேன் ! "சீக்கிரம் வா ; கீழே பாருக்குப் போவோம் !" என்று கதவுக்கு மறுபுறமிருந்து அந்த பிரவுண் பூதம் சத்தம் கொடுக்க - "நான் குளிக்கணும் ; ஒரு மணி நேரம் ஆகும் !" என்று உள்ளிருந்தபடிக்கே சத்தமாய்ப் பதில் சொல்லிவிட்டு எனது அறையை நோட்டமிட்டேன் ! கட்டிட பாணி ; கண்ணை உறுத்தும் கலரில் பெயிண்ட் ;   ஒரு சோபா ; ஒரு கிழட்டுக் கட்டில் ; சன்னமான குளியலறை ; ஒரு குறுகிய சந்தை நோக்கிய ஜன்னல் என்று கண்ணில்பட்ட சகலமுமே ரெங்கா ராவ் காலத்து சினிமாக்களில் வரும் செட்டிங்கை ஞாபகப்படுத்தின ! இந்த அறையில் ; இந்த ஹோட்டலில் ; இந்தத் தடித்தாண்டவராயனின் சகவாசத்தில், சத்தியமாய் 2 நாட்களை செலவிடுவது ஆகாத காரியம் என்பது புரிந்தது! எங்கெங்கோ இருந்த எரிச்சலெலாம் அந்த ஊரின் மீதே மையல் கொண்டது - "என்ன கண்ராவி ஊர்டா இது ?" என்று ! வெளியே நின்று குரல் கொடுத்துக் கொண்டே இருந்தவன் , நான் கதவை இப்போதைக்குள் திறப்பதற்கு இல்லை என்று புரிந்த பின்னே தனது அறைக்குள் போய் டமாலென்று கதவைச் சாத்திக் கொள்வதை சாவி துவாரத்தின் வழியே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த எனக்குத் தெரிந்தது ! மறு நொடியே, பாஸ்போர்டையும், பணத்தையும் மட்டும் அவசரம் அவசரமாய்ப் பைக்குள் திணித்துக் கொண்டு, ஓசையே எழாத மாதிரி மொள்ளமாய் எனது அறைக் கதவைத் திறந்து வெளியே வந்தவன் பூனை போல அடியெடுத்து வைத்து படிகளில் விறு விறுவென்று இறங்கி ஹோட்டலிலிருந்து வெளியேறினேன் ! ரிசெப்ஷனில் இருந்த கிழம் என்னமோ பிரெஞ்சில் சொல்ல, 'ரெண்டு பேருமா ஏதாச்சும் ஆழமான கிணறாப் பார்த்து கல்லைக்கட்டிக்கிட்டுக் குதிச்சிக்கோங்கடா டேய் !!' என்று மனசுக்குள் நினைத்துக் கொண்டே நில்லாமல் ஓட்டமெடுத்தேன் !

வெளியே சாலைக்கு, நண்பகலில் வந்த பொழுது என் பதட்டம் குறைந்திருக்கவில்லை ! இந்தப் பகுதியிலிருந்து ஜல்தியாய் நடையைக் கட்டி, கொஞ்சமேனும் மனசுக்குத் தெம்பு தரும் பத்திரமான பாரிசைப் பார்த்திட வேண்டும் ; கூப்பாடு போட்டு வரும் வயிற்றுக்கும் ஏதாச்சும் போட  வேண்டுமென்பது புரிந்தது ! வெக்கு வெக்கென்று நடக்க ஆரம்பித்தேன் - அவ்வப்போது திரும்பிப் பார்த்துக் கொண்டே ! பூதம் பின்தொடரக் காணோம் என்ற போது சன்னமாய் நிம்மதி பிறந்தது ! பாரிசினுள் பயணிக்க அதன் பிரமாதமான தரைக்கடி மெட்ரோ தான் லாயக்கு என்று வாசித்திருந்ததால், எங்கேனும் M என்ற அந்தக் குறியீடு கண்ணில் படுகிறதா ? என்று தேடினேன் ! எல்லாப் பகுதிகளிலும் மிஞ்சிப்  போனால் 10 நிமிட நடையில் ஒரு ஸ்டேஷன் இருக்கும் என்ற விஷய மெய்யாகிட - இரண்டாமூழக யுத்தத்தின் போது கடைசியாய் பெயிண்டைப் பார்த்திருக்கக் கூடியதொரு ஸ்டேஷனின் படிகளில் கீழே இறங்கியவனுக்கு குப்பென்று மூத்திரத்தின் வீச்சம் நாசியைத் துளைத்தது !! அரைச் சீவனில் எரிந்து கொண்டிருந்த மஞ்சள் பல்புகள் வெளிச்சத்தில் பார்த்தல் ஒரு தம்மாத்துண்டு டிக்கெட் ஆபீஸ் தெரிந்தது ! அப்போது தான் 'போவது எங்கே ?' என்ற கேள்வி தலைக்குள் ஓடியது ! பாரீஸ் என்ற உடனே அத்தினி பேருக்கும் நினைவுக்கு வரும் அதே ஐபெல் கோபுரம் தான் எனக்கும் நினைவுக்கு வந்தது ! சரி, அங்கே போகலாம் என்ற நினைப்பில், எனது பாரிஸ் கிடைப் புரட்டினேன் ! அதன் அருகாமையில் இருந்த Trocadero என்றதொரு ஸ்டேஷனுக்கு போக டிக்கெட் ஒன்றை வாங்கிக் கொண்டேன் ! "காற்றில் கரைந்த  கப்பல்கள்" கதையில் வரும் குகைப் பாதை போல ரயில் தடங்களுக்கு இட்டுச் செல்லும் பாதை இருண்டு, நீண்டது ! எதிர்ப்படும் ஒன்றிரண்டு பேருமே, தைரியத்தை உண்டுபண்ணும் விதமான ஆட்களாய் இருக்கவில்லை ; நான் யாரையும் ஏறெடுத்துப் பார்க்காது ஓட்டமாய் ஓடினேன் ! உலகப் போரின் போது ஜெர்மானிய குண்டு வீச்சு நிகழும் தருணங்களில், பதுங்கிடும் shelter களாகவும் பாரிஸின் மெட்ரோக்கள் செயல்பட்டதாய்க் கேள்விப்பட்டிருந்தேன் ! அநேகமாய் அப்போது ஏதேனுமொரு அடையாளத்தைப் போட்ட கையோடு, யாரேனும் மூக்கைச் சிந்தி, சுவற்றில் இழுவி விட்டிருக்கும் பட்சத்தில், அதே ஆசாமி 45 வருஷங்களுக்குப் பிற்பாடு அங்கே வந்திருப்பின் துளிச் சிரமமின்றி அந்தப் "பொக்கிஷத்தைக்" கண்டு பிடித்திருக்க முடியும் தான் ! அழுக்கும், இருளுமாய் அந்த ஸ்டேஷனை அப்படி ஆக்ரமித்துக் கிடந்தது ! ஒரு தினுசான சங்கு ஊதும் சத்தத்தோடு, பச்சை நிறத்திலான ரயில் குதித்துக் குதித்து வந்து சேர்ந்தது ! பார்த்தால் ஒவ்வொரு சக்கரத்துக்கும் அடியில் ரப்பர் டயர்கள் !! 'அட..இது கூட நல்லாத் தான் இருக்கே" என்றபடிக்கே உள்ளே எறியவன் டிக்கெட்டோடு சேர்த்து என்னிடம் தரப்பட்டிருந்த மெட்ரோ மேப்பை நோட்டமிட்டேன் ! குளவிக் கூடு போல கொய்யென்று ஸ்டேஷன் ஸ்டேஷனாய் குறிக்கப்பட்டு, கலர் கலராய் வெவ்வேறு லைன்களின் பெயர்கள் இருக்க, நான் போக வேண்டிய ஸ்டேஷனுக்கு எங்கேயோ மாறிட வேண்டும் என்பது புரிந்தது ! அந்த பெட்டிக்குள் ரொம்பக் குறைச்சலான பயணிகள் மட்டுமே இருக்க, எனக்கோ அத்தினி பேரையும் பார்த்தால், அந்தக்காலத்து நம்பியாரையும், மனோஹரையும் , அசோகனையும் பார்த்த மாதிரியே ஒரு பீலிங்கு ! கதவுக்கு அருகிலான சீட்டில் பல்லி போல குந்தியிருந்தேன் ; நான் மாற வேண்டிய ஸ்டேஷனை எதிர்கொண்டு ! அந்த ஸ்டேஷனும் வந்த போது, திபு திபுவென்ற ஜனதிரளும் சேர்ந்தே வந்தது ! கூட்டத்தைப் பார்த்த பிற்பாடே எனக்கு லேசாய் தெம்பு திரும்பியது ! அங்கே இறங்கி, நான் போக வேண்டிய Trocadero ஸ்டேஷனுக்கு எந்த திக்கில் ரயிலைப் பிடித்தாக வேண்டுமென்று கண்டு பிடிக்கத் தெரியாமல் பேந்தப் பேந்த முழித்து நின்றேன் ! யாரிடமும் கேட்கவும் பயமாக இருந்தது - பாரிஸுடனான எனது முதல் பரிச்சயமே ஒரு மாதிரியாய் இருந்து விட்டதன் பொருட்டு ! 'என்ன கன்றாவியாக இருந்தாலும் சரி, எந்தப் பயல்கிட்டேயும் எதையும் கேட்கப்படாது !' என்று நினைத்துக் கொண்டே ஒரு மாதிரியாய்த் தீர்மானித்தேன் - எந்தத் திக்கில் நடப்பதென்று ! To cut a long story short - ஒரு மாதிரியாய் போய் சேர வேண்டிய இலக்கை எட்டிட , படிகளிலிருந்து மேலேறி, பாரிஸின் வீதிகளில் அசுவாரஸ்யமாய் நின்றேன் - இங்கே என்ன லட்சணத்தில் இறுக்கப் போகிறதோ ? என்ற நினைப்பில் ! ஆனால் தொடர்ந்த 6 மணி நேரங்களுக்கு என் கண்ணில் பட்ட காட்சிகள் சகலமும் இத்தனை காலமாய் போட்டோக்களிலும், சினிமாக்களிலும் மட்டுமே பார்க்க சாத்தியப்பட்டிருந்த பாரிஸின் ரம்யங்கள் தான் ! அலை அலையாய் டூரிஸ்டுகள், கூட்டம் கூட்டமாய் சாலைகளை நிறைத்திருக்க, உள்ளுக்குள் ஜிவ்வென்று சந்தோஷம் பொங்கியது ! தூரத்தில் ராட்சச உருவமாய் ஐபெல் கோபுரமும் காட்சி தர அதையே வழிகாட்டியாய்க் கொண்டு நடந்தேன் கணிசமான தூரத்தை ! ஒரு மாதிரியாய் அந்த iconic landmark முன்னே நின்ற போது பிரமிப்பாக இருந்தது ! அதனுள் சென்று உச்சியைப் பார்க்க லிப்ட் இருக்க, அதற்கு டிக்கெட் வாங்கி விட்டு கூட்டத்தோடு கூட்டமாய் முண்டியடித்தேன் ! நம்மூர் லிப்ட்கள் போலவே கொட கொடவென்று சத்தம் போட்டுக் கொண்டே முக்கி முனகி மேலே பயணித்த  லிப்ட்டில், நிறைய நேரம் களைத்து  மூன்றாவது நிலையில் இறங்கிய போது கோபுரத்தின் உச்சியிலிருந்து பாரிஸின் முழுமையையும் தரிசிக்கும் அசாத்திய view  கண்முன்னே விரிந்து கிடந்தது ! இந்த நகரம் மெய்யாலுமே எத்தனை பெரிது என்பதும், எத்தனை யௌவனமானது என்பதும் அந்த நொடியில் தான் புரிந்தது ! ஒரு தப்பான ஆசாமியைப் பார்த்துத் தொலைத்ததால் தான் அது வரைக்கும் அந்த நகரம் மீது துவேஷம் மேலோங்கி நின்றது என்பதை புரிந்து கொள்ள முடிந்தது ! தொடர்ந்த 6 மணி நேரங்களுக்கு பாரிசுக்கு வரும் அத்தனை டூரிஸ்ட்களும் செய்திடக்கூடிய அத்தனை பணிகளையும் நானும் ஒன்று பாக்கியின்றிச் செய்தேன் ! மோனா லிசா ஓவிய மியூசியத்துக்கு ; Champs de Elysee என்ற அட்டகாச வீதிகளுக்கு ; அங்கிருந்த நெப்போலியன் உருவாக்கிய நினைவுச் சின்னத்துக்கு என ரவுண்டோ ரவுண்டு அடித்தேன் ! பாரிஸின் மெட்ரோவுமே இந்நேரத்துக்கு என்னோடு ரொம்பவே நட்பாகி விட்டிருக்க, 'எந்த ஊரிலே கப்படிக்கலை  ? ஏதோ சின்னப் பசங்க அவசரத்தில் மூச்சா போயிருப்பாங்க !" என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன் !இந்த ஊர் சுற்றும் படலத்தில் என்னுள் நிரம்பவே குஷி குடியேறியிருக்க, ரூமுக்குத் திரும்பினால் ராட்சஸன் காத்திருப்பானே என்ற நினைப்பே வெகு நேரத்துக்கு எழாது போயிருந்தது ! மணி ஆறை தொடத் துவங்கி, லேசாய் இருள் கவிழத் துவங்கிய போது தான் லேசாய் கிலேசம் குடிகொள்ள ஆரம்பித்தது ! பெட்டியைத் தூக்கிக் கொண்டு வேறு இடத்துக்குப் போய் விடலாமா ? என்ற கேள்வி உள்ளுக்குள் எழுந்த போது, முழுசாய் ஒரு நாள் வாடகையாய் மூவாயிரமோ, என்னவோ தந்து விட்டிருந்தது நெருடியது ! காசைக் கொடுத்து விட்டாச்சு ; இன்னிக்கு ராப்பொழுதை மட்டும் இங்கே கடத்தி விட்டு காலம்பற இடத்தைக் காலி பண்ணி விடலாம் !" என்ற நினைப்போடு ரூமுக்குத் திரும்பிய போது மணி ஏழு இருந்திருக்கும் . ரிசெப்ஷனில் அதே கிழம் ஏதோ பிரெஞ்சில் என்னிடம் சொல்ல - "போயா யோவ் !" என்று தமிழில் சொல்லி விட்டு மாடிப் படியேறி ரூமுக்குள் போய் அடைக்கலமானேன் !

கையில் வாங்கி வந்திருந்த பர்கரை விழுங்கி விட்டு, மறு நாள் சந்திக்க வேண்டிய பதிப்பகத்தின் மீது சிந்தனைகளை ஓடவிட்டேன் ! நமது கராத்தே டாக்டர் ; மறையும் மாயாவி ஜாக் ; பைலட் டைகர் (??) போன்ற கதைகளை உருவாக்கிய நிறுவனம் அது ! அவர்களை பற்றி ; ஏர்மெயிலில் கிட்டிய அவர்களது கேட்லாக்கை தலைமாட்டில் வைத்துக் கொண்டு நான் சிலாகித்த நாட்களை பற்றி ஏற்கனவே "சி.சி.வ' தொடரில் எழுதியிருந்தது நினைவிருக்கலாம் ! சீக்கிரமே எழுந்து, கிளம்பி, வேறு லாட்ஜை தேடிப் பிடித்த கையோடு அந்தப் பதிப்பகத்துக்குச் செல்வது என்ற தீர்மானத்தோடு தூக்கத்துக்குள் புகுந்தேன் எட்டரை மணி சுமாருக்கு ! படுக்கப் போகும் முன்னே சாவி ஓட்டை வழியாய் எட்டிப் பார்த்த போதும், எதிர் அறையில் சத்தமே இல்லை ! 'சரி..பூதம் நம்மை கைகழுவியிருக்கும் !' என்ற நினைப்பில் ஆசுவாசப்படுத்திக் கொண்டே லைட்டை அனைத்து விட்டுப் படுத்தேன்  !

எப்படியென்று தெரியாது - ஆனால் அடிமனசில் மெல்லிய பயமும், மிரட்சியும் குடியிருந்தால் தான் தூக்கத்தின் மத்தியிலும் அந்தச் சத்தம் கேட்டிருக்க வேண்டும் எனக்கு ! கடிகாரத்தைப் பார்த்தால் பதினொன்றரை என்று சொல்லியது ; எனது அறையின் கதவை திறக்க யாரோ முயற்சிப்பது போலொரு சத்தம் கேட்டது ! மறு கணமே லைட்டைப் போட்டு எழுந்து பார்த்தால், மறுபக்கமிருந்து இன்னொரு சாவியை நுழைத்து கதவைத் திறக்க யாரோ முயற்சிப்பது புரிந்தது ! எனது சாவி உள்பக்கத்தில் கதவிலேயே இருந்ததால் வெளியிருந்து முயற்சித்தது சாத்தியப்படவில்லை ! நான் லைட்டைப் போட்ட மறு கணமே வெளியிலிருந்து அந்த பூதம் கூப்பாடு போடத் துவங்கியது ! நல்ல குடிபோதை என்பது புரிந்தது ;  காதில் வாங்கவே கூசும் எதை எதையோ இங்கிலீஷில் கத்திக்கொண்டே, பிரெஞ்சிலும் என்னவோ அனற்ற ஆரம்பித்தான் ! எனக்கோ ரத்தம் தலைக்கேறி உடம்பெல்லாம் வியர்த்து விறு விறுத்துப் போய்விட்டது ! சத்தியமாய் இத்தனை ஆக்ரோஷமாய் அந்த மலைக்குரங்கு அவதாரமெடுக்குமென்று நான் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை ! நெஞ்சு அடிக்கும் அடியில், பதில் பேசக்கூட திராணியில்லை எனக்கு !! "கதவைத் திற..திற !!" என்பது தான் அவனது காட்டுக்கத்தலாக இருப்பது புரிந்தது ! பற்றாக்குறைக்கு அவனோடு இன்னொரு ஆசாமியும் இருந்திருக்க வேண்டும் ; இன்னொரு குரலும் 'டம் டம்மென்று' கதவை அறையும் ஓசைக்கு மத்தியில் கேட்டது ! ஒரு கம்பியைப் போல எதையோ நுழைத்து உட்பக்கமிருந்த எனது சாவியைக் கீழே தள்ள முயற்சிப்பது தெரிந்த நொடியில் உறைந்தே போய் விட்டேன் !! உட்பக்கமாய்த் தாழிட latch எதுவும் இல்லை என்பதை அந்த நொடியில் தான் கவனித்தேன் !  மூளை தறி கெட்டு ஓடத்துவங்கியது ! வேகமாய் ஜன்னலருகே போய் நின்றவன், முதல் மாடி எத்தனை உயரமிருக்கும் ?  ஏதேனுமொரு தவிர்க்க இயலா நெருக்கடியில் கீழே குதிப்பதாயின் கை கால் நொறுங்கிடுமா  ? என்றெல்லாம் யோசிக்கத் தோன்றியது ! கதவை உடைத்துக் கொண்டு உள்ளே இவர்கள் புகுந்து விட்டால், தயங்காமல் குதித்து விடுவது என்ற தீர்மானத்துக்கே வந்திருந்தவனின் கண்ணில் ரூமிலிருந்த சோபா கண்ணில்பட்டது ! பிடாரியாய்க் கனத்த அதனை தம் கட்டித் தள்ளிப் போய் கதவுக்குப் பின்னால் தாக்கான் கொடுத்து நிறுத்தினேன் - நெட்டுவாக்கில் ! கதவில் வேறு சாவியை நுழைத்து திரும்பியே விட்டாலும், இந்த சோபாவின் தடையைத் தாண்டிக் கதவைத் திறக்க சாத்தியமாகாது என்பது புரிந்த நொடியில் தான் மூச்சே திரும்பியது !

தொடர்ந்த 45 நிமிடங்கள் நரகத்தில் இருந்த உணர்வே எனக்கு !  கதவைத் தட்டுவது ; படு அசிங்கமாய்ப் பேசுவது ; சத்தம் போட்டுச் சிரிப்பது ; அங்காரத்தில் கூச்சலிடுவது என மாறி, மாறி அத்தனையும் நடந்தேறின ! நான் கதவுக்கு அடை கொடுத்து நிறுத்தியிருப்பது புரிந்த போது இன்னும் உக்கிரமாய்க் கூச்சலிட்டான் ! நான் பதிலே பேசவில்லை ! அவசரம் அவசரமாய் பெட்டியை பேக் செய்து விட்டு, டிரஸ் பண்ணிக் கொண்டு - பாக்கெட்டினுள்பாஸ்போர்ட் & பணத்தை வைத்துக் கொண்டு - குடாக்குத்தனமான கணக்குகளில் ஈடுபட்டிருந்தேன் ! 2 தலையணைகளை ஜன்னல் வெளியே முதலில் கடாசி விட்டு, அப்புறமாய் நாமும் சரியாகக் குதித்தால் அவற்றின் மீது land ஆகிட்டால் - கால் முறியாது தப்பி விடலாமா ? என்ற நினைப்பெல்லாம் ஓடியது ! ஒரு மாதிரியாய் ஓய்ந்து போனவன் அலுத்துக்கிளம்பி விட்டான் என்று நான் லேசாய் மூச்சு விட துவங்கியிருந்த போது மணி ஒன்றரை ! ஆனால் கீழேயிருந்த பாரில் போய் அடுத்த ரவுண்டை ஏற்றிக் கொண்டு இன்னும் ரௌத்திரமாய் ஆடித்தொலைக்கவே இந்த இடைவெளி என்பது அப்புறமாய்த் தான் புரிந்தது ! மறுபடியும் கதவுக்கு வெளியே ருத்ர தாண்டவமே ஆடினார்கள் ; இம்முறையோ நான் GET LOST !! GET LOST !! என்று கூச்சலிடும் தைரியத்தைப் பெற்றிருந்தேன் ! கொஞ்ச நேரம் கத்த வேண்டியது ; அப்புறம் தங்கள் அறைக்குப் போக வேண்டியது ; மறுபடியும் வந்து ஆடித் தொலைய வேண்டியதென அந்த  முடியா இரவு ஒரு யுகமாய்த் தொடர்ந்திட, மூன்று மணி சுமாருக்கு எல்லாமே அடங்கிப் போனது ! ஆனால் நானோ கண்ணசரத் துணிவின்றி, விடியும் வரையிலும் கோட்டானைப் போல விழித்தே இருந்தேன் !

கதிரவனின் முதல் ரேகைகள் கண்ணில் பட்டபோது மணி ஆறு ! சோபாவில் ஏறி, சாவி துவாரம் வழியே பார்த்த போது வெளியே ஈ-காக்காய் கூடாக கண்ணில் படவில்லை ! சத்தமே போடாது சோபாவை பின்னுக்குத் தள்ளி விட்டு, என் பெட்டியை தூக்கிக் கொண்டு வெளியே வருவதற்குள் ஒரு நூறு முறை செத்துப் பிழைத்திருப்பேன் ! அந்தக் குளிர் காலையிலும் எனக்கு சலவையாய் வியர்த்திருந்தது! சத்தமே போடாது படிகளில் இறங்கி, கீழே ரிஸப்ஷனுக்குப் போன போது அந்தக் கிழம் இல்லாது, வேறொரு பையன் breakfast க்கு டேபிள்களை தயார் செய்து கொண்டிருந்தான் ! நான் சீக்கிரமே அசாப்பிட வந்துவிட்டேன் போலுமென்ற நினைப்பில் - "another 15  minutes monsieur " என்றான் ! போங்கடா டேய்...சாப்பாடு ஒண்ணு தான் இப்போதைக்கு கேடு ! என்றபடிக்கே "I checkout " என்று மட்டும் கத்தி விட்டு வீதியில் கால் வைத்தேன் ! பாரிஸின் இதமான காலைக் காற்று என் வியர்வைக்கு ஒத்தடம் தர, வேகா வேகமாய் நடந்தபடிக்கே அண்ணாந்து பார்த்தேன் - முதல் மாடி எத்தனை உயரமென்று கணிக்க ! குதித்திருந்தால் சத்தியமாய்ச் சங்கு தான் என்பது மட்டும் புரிந்தது !! ஓட்டமும் நடையுமாய் மெட்ரோவுக்குப் போனது ; பிசாசாய் கனத்த பெட்டியையும் தூக்கிக் கொண்டு எங்கோ சென்றது ; கண்ணில்பட்ட முதல் டீசென்ட் லாட்ஜில் ரூம் எடுத்து , உள்ளே போய் பூட்டிக் கொண்டு அமர்ந்த போது அத்தனை நேரம் அடக்கி வைத்திருந்த  அழுகையை  சமாளிக்க முற்பட்டது என அத்தனையுமே fast forward-ல் நிகழ்ந்தது ! அன்றைய பொழுதினில் அப்புறமாய்ப் பதிப்பகத்துக்குச் சென்றது ; லக்கி லூக்கை வெளியிடும் Dargaud பதிப்பகத்தினை சந்தித்தது என்று ஏதேதோ செய்தேன்! ஆனால் எத்தனை பெரிய கண்ராவியிலிருந்து தப்பியிருந்தேன் என்ற புரிதல் என்னை உலுக்கி எடுத்திருந்தது ! மறுநாள் Zurich செல்லும் விமானத்தைப் பிடிக்க ஏர்போர்ட்டுக்குப் போன போது வாழ்க்கை எனக்கொரு பெரும் பாடத்தைக் கற்பித்திருந்தது புரிந்தது !

மறுபடியும் கேட் நிறைய கூட்டம் ; மறுபடியும் ஒன்றிரண்டு இருக்கைகள் மாத்திரமே காலியாக இருந்தன ; ஆனால் உட்காரலியே....!! நான் உட்காரலியே !!! Phew !!!

இன்றைக்கு நினைத்தால் அன்றைய எனது பயங்கள் சற்றே ஓவரோ ? என்று தோன்றிடும் தான் ! ஆனால் 19 வயது ; புது ஊர் ; பாஷை தெரியாத இடம் ; முற்றிலும் தப்பான ஜாகை  ; முற்றிலும் தவறான ஆட்களின் சூழல் என்றிருக்கும் போது வேறு விதமாய் ரியாக்ட் செய்திட ஜாக்கி சானுக்கோ ; ப்ரூஸ் லீக்கோ தானே சாத்தியப்பட்டிருக்கும் ?! பயணங்கள் தந்த பாடங்களில் இதுவும் ஒன்றாய் நினைத்துக் கொள்வேன் !

Bye guys ....see you around !! Stay home !! Stay safe !!! 
1985-ல்....லண்டனின் டிரபால்கர் சதுக்கத்தில்..தொழிலதிபர் !! மெய்யான கேசத்துடனே !! 

Thursday, March 26, 2020

நில்..கவனி...திரும்பிப் பார் !

நண்பர்களே,

வணக்கம். ஒரேயொரு ஞாயிறு அக்கடாவென்று ஓய்ந்து கிடக்க வாய்ப்புக் கிடைத்தால் - அடடா...சொர்க்கமாய் இருக்காதா ? என்று நினைத்துப் பெருமூச்சு விட்ட நாட்கள் ஏராளம் ; ஆனால் இதோ - அடுத்த மூன்று வாரங்களுக்கு பிட்டம் முழுக்க பெவிகாலைத் தடவிக்கொண்டு வேலைக்குப் போகும் அவசியங்களின்றி வீட்டுக்குள்ளே சோம்பல் முறிக்க ஒரு சந்தர்ப்பம் அமைந்துள்ளது - ஆனால் surprise..surprise....இந்த ஓய்வினில் சும்மா கிடக்க  மனசு சண்டித்தனம் செய்கிறது !! நித்தமும் வேலைக்குப் போய், அங்குள்ள பிடுங்கல்கள் ஒரு நூறுக்கும் பதில் சொல்லிவிட்டு,கிடைத்த ஐநூறையோ, ஆயிரத்தையோ பைக்குள் திணித்த கையோடு உராங்குட்டான் போல மூஞ்சை வைத்துக் கொண்டே ஸ்கூட்டரில் வீடு திரும்பி, மேஜையில் காத்திருக்கக்கூடிய உப்மாவையோ ; கிச்சடியையோ மூச்சைப் பிடித்துக் கொண்டே அவசரம் அவசரமாய் விழுங்கிவிட்டு, சங்கு மார்க்கோ ; நண்டு பிராண்டோ - ஏதேனும் ஒன்றுக்குள் காற்றோட்டமாய்ப் புகுந்து கொண்டே, வாட்சப் எனும் மாய லோகத்தினுள் நுழைந்து, பெயரைத் தாண்டி பாக்கி எதுவும் அவ்வளவாய் நினைவில்லாத நண்பர்களிடம் கூட -  "என்ன பிழைப்புடா சாமீ இது ?" என்று புலம்பும் அந்த வாடிக்கைகளின் அருமை மல்லாக்கப்படுத்து விட்டத்தை முறைக்கும் இன்றைக்குத் தான் புரிகிறது !! ஆனால் மாண்புமிகு பிரதமரின் அதி முக்கிய அறிவிப்பு நம் நலனும், நாட்டின் நலனும் கருதியுமே எனும் போது அதைக் கிஞ்சித்தும் மீறாது, வீட்டில் தவம் செய்வது நமது தலையாய கடமையாகிப் போகிறது ! Let's Stay Home...and Stay Safe folks ! எனக்கோ மளிகைக்கடையில் பெவிஸ்டிக் கிடைத்தால், ஒரு டஜனை சேர்த்துப் போட்டு வாங்கி வரத் தீர்மானித்துள்ளேன் !!

எது எப்படியோ - எனது பணிகளின் பெரும்பான்மை எங்கிருந்துமே செய்திடக்கூடியது எனும் போது - நாட்கள் பிஸியாகவே நகர்ந்து வருகின்றன ! கை கடுக்கும் வரையிலும் "ஒற்றை நொடி..ஒன்பது தோட்டாவின்" மூன்றாம் பாகத்தில் பணி......அப்புறமாய் தோர்கல் (கோடை மலர்) இதழ்களில் கொஞ்ச நேரம் ஜாகை ; பின்னே நமது படைப்பாளிகளின் குடல்களையும் இயன்றமட்டுக்கு உருவி, லேட்டஸ்ட் கதைகள்  சார்ந்த  அளவளாவலை  நடத்திடுவது  ; அதன் பலனாய்க் கிட்டி வரும் புதுப் புதுக் கதைகளைப் படம் பார்ப்பது - என ஓட்டமெடுத்து வருகின்றன ! பற்றாக்குறைக்கு ஏப்ரலில் வரவிருந்த "5 நிமிட வாசிப்பு" புக்கின் ஓவியையோடு மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும் ஒரு சந்தர்ப்பம் அமைய, நமக்கென பிரேத்தியேகமாய் நாலு வரிகளில் ஒரு "ஹலோ" message அனுப்பியுள்ளார் ! அதுவும் அந்த புக்கில் இடம் பிடித்திடும் - whenever that happens !

அப்புறம் நாம் இங்கிருந்து இத்தாலிய, பிரெஞ்சு, பிரிட்டிஷ் படைப்பாளிகளிடம் நலம் விசாரித்த காலங்கள் மலையேறி, அவர்கள் இப்போது நாம் ஓ.கே.வா ? என்று விசாரித்து வருவதற்கும் பொறுப்பாய்ப் பதில் போட்டு வருகிறேன் !! "அநேகமாய் மே 4 வரையிலுமே எங்க பிழைப்பு இப்டி தான் போலும் " என்று சொல்லும் ஒரு பிரெஞ்சு நிறுவனத்து அதிகாரி, வீட்டிலிருந்தே பணி செய்வதால் - நமக்கு வித விதமான கதைகளின் மாதிரிகளை அனுப்பி உதவி வருகிறார் ! So பலவிதங்களில் மிஷின்களாய் மாறிப் போயிருந்த நாமெல்லாம் இழந்த பலவற்றை மறுபடியும் மீட்டெடுக்கும் வேளையோ - என்னவோ இது ?!ரைட்டு...நான்லாம் ஓவராய் சித்தாந்தம் பேசித் திரிந்தால் சிரிப்பாய் சிரிச்சுப் போயிடும் என்பதால் வேறு பக்கமாய் வண்டியை விடலாமா ?

இன்றைக்கு கண்ணுக்குத் தெரியா ஒரு வைரஸைக் கண்டு ஆளாளுக்குத் தெறித்து ஓடிவரும் சூழலில், 34 ஆண்டுகளுக்கு முன்னேயே நான் இதே போலொரு ஓட்டம் எடுத்த தருணம் தான் இன்றைக்கு நினைவுக்கு வருகிறது ! அதே சமயம் இந்த அனுபவத்தை ஏற்கனவே பகிர்ந்து விட்டேனா - இல்லியா ? என்ற சந்தேகமும் உள்ளுக்குள் லைட்டாக உள்ளது - becos நிறையவாட்டி இதை பற்றி எழுத நினைத்திருக்கிறேன் - ஆனால் கடைசி நிமிடத்தில் 'சிரிப்பாய் சிரிச்சுப் போயிடும்' என்ற பயத்தில் பின்வாங்கவும் செய்திருக்கிறேன். Maybe....just maybe இதுவொரு மறு ஒலிபரப்பாகவும் இருந்திடக்கூடும் தான் ; அவ்விதமிருப்பின் காமிக்ஸ் மறுபதிப்புகளைப் போல இதுவொரு "பதிவு மறுஒலிபரப்பு" என்று எடுத்துக் கொள்ளுங்களேன் ப்ளீஸ் ?

வாழ்க்கையின் இரு ஆண்டுகள் எனக்கு  திளைக்கத் திளைக்க சந்தோஷங்களும், வெற்றிகளும் வாரி வழங்கின என்றால் அது 1985 & 1986 தான் ! அதன் பின்பாய் சொந்த வாழ்வில், பணம் ஈட்டலில் ; நமது காமிக்ஸ் முயற்சிகளில் என்று நிறைய highlight தருணங்களை தாங்கிய வருஷங்கள் வந்து போயிருக்கின்றன ;  ஆனால் '85 & '86 முற்றிலுமாய் வேறொரு லெவல் ! ஒற்றை வருஷத்துக்கு முன்பு வரை அடையாளம் ஏதுமின்றி, கையில் பத்தணாவுமின்றி, எதிர்காலம் குறித்து துளியும் நம்பிக்கையின்றித் திரிந்தவனுக்கு, எங்கிருந்தோ சகலத்தையும் ஏக் தம்மில் பெரும் தேவன் வழங்கி திக்குமுக்காடச் செய்திருந்தார் ! அதன் ஒரு ரம்யமான உச்சத்தை ரசித்துக் கொண்டிருந்த 1986 -ன் செப்டெம்பர் மாதம் அது !

லயன் காமிக்ஸ் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்க, திகில் காமிக்ஸ் துவக்கத்துத் தடுமாற்றத்துக்குப் பின்பாய் சற்றே நிதானம் கண்டிருந்த நாட்களவை ! புது சைஸ் ; ரூ.2 .25 விலை (!!) ; ஜூனில் XIII ; ஜூலையில் சாகச வீரர் ரோஜரின் "மர்மக் கத்தி" ; ரிப்போர்ட்டர் ஜானியின் "இரத்தக் காட்டேரி மர்மம்" ஆகஸ்டிலும் ; "சைத்தான் வீடு" செப்டெம்பரிலும் என்று வெளியாகி விற்பனையை ஓரளவுக்குத் தாங்கிப் பிடித்திருந்தன ! தொடரும் மாதங்களில் கேப்டன் பிரின்சின் "பனிமண்டலக் கோட்டை"  ; ப்ருனோ பிரேசிலின் மர்மச் சவப்பெட்டிகள்  என்று பிரான்க்கோ-பெல்ஜிய அட்டகாசங்கள் சார்ந்த தட புடத் திட்டமிடல் கையிலிருந்ததால், உலகமே ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவைப் போல இனிப்போ இனிப்பாய்த் தென்பட்டதில் வியப்பில்லை தான் !  லயனில் ஸ்பைடர் ; ஆர்ச்சி ; இரட்டை வேட்டையர் ; இளவரசி ; இரும்புக்கை நார்மன் என்று பிரிட்டிஷ் track ஓடிக்கொண்டிருந்தது ! So நிஜத்தைச் சொல்வதானால் மாதம் 2 இதழ்களென்ற அந்நாட்களது நமது அட்டவணைக்கு, அடுத்த 10 வருஷங்களுக்காவது கதைப்பஞ்சம் நேர்ந்திட வாய்ப்பே கிடையாது தான் ! ஆக வீட்டிலிருந்து ஆபீஸ் ; ஆபீசிலிருந்து வீடு என்ற routine-ல் வண்டி நிம்மதியாய் ஓடிக்கொண்டிருந்தது ! ஒரே மாற்றம் - ஹெர்குலிஸ் சைக்கிளுக்குப் பதிலாய் Ind -Suzuki என்றதொரு 100 cc பைக்கில் சவாரி (ஒன்பதாயிரத்துக்குக் கொஞ்சம் கம்மிங்கோ - புத்தம் புது வண்டி !!)

எனது தாத்தாவுக்கு என் தாயார் ஒரே பிள்ளை என்பதால், 1983 -ன் இறுதியில் பாட்டி காலமான பிற்பாடு எங்களோடே வசிக்கத் துவங்கியிருந்தார் ! எனக்கு நிதியுதவி ; மதியுதவி என சகலமும் அவரே ; and வீட்டிலிருக்க போரடிக்கும் என்பதால் ரெகுலராய் என்னோடு ஆபீசுக்கு வந்து விடுவது வழக்கம் ! அங்கே பகல் பொழுதில் நான் செம பிசியாக இருக்கும் வேளைகளில் தாத்தா எனக்கெதிரே ஒரு சேரைப் போட்டு அமர்ந்தபடிக்கு நடப்புகளை வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருப்பார் ! அவரது அச்சு இயந்திரத்தையும் என்னிடம் ஒப்படைத்திருக்க, அப்போதைய சிவகாசியின் நடைமுறைக்கேற்ப 2 ஷிப்ட்டில் விடிய விடிய வேலைகள் ஓடிக்கொண்டிருக்கும் ! So ஞாயிறு மதியம் வரைக்குமே ஆபீஸ் 'ஜே-ஜே ' தான் ! மாலைகளில் ஆபீஸின் வாசலில் அக்கடாவென இரு சேர்களை போடச் செய்து - "போதும்டா வேலை பார்த்தது ; வா - வந்து உட்கார்!!" என்று ஏதேனும் பேசிக் கொண்டிருப்பார் ! வண்டி இந்த routine-ல் ஓடிக்கொண்டேயிருந்தது ஆகஸ்டில் கடைசி வரையிலும். செப்டெம்பர் பிறந்த போதே விண்ணஞ்சலில் கடுதாசிகள் வரத்துவங்கின - ஐரோப்பாவிலிருந்தும், இங்கிலாந்திலிருந்தும் ! (இன்டர்நெட் ; செல்போன் ; பேக்ஸ் ; என்று எதுவுமே இல்லாத அந்த வேளைகளில் கடுதாசிகளில் தான் தகவல் பரிமாற்றங்களே !!)

"போன வருஷம் (1985) பிராங்பர்ட் புத்தக விழாவுக்கு வந்திருந்தாயே....இந்த வருஷமும் வருவாய் தானே ? உறுதி செய்தால் அப்பாயிண்ட்மெண்ட் தருகிறோம் !" என்று அந்தக் கடுதாசிகள் அனைத்துமே சொல்லின ! அந்நாட்களில் எனது பணியின் நிமித்தம் மிஞ்சிப்போனால் ஆண்டுக்கு ஒருவாட்டி டில்லிக்கோ ; மும்பைக்கோ போவதைத் தாண்டி பெருசாய் வெளியூர்களுக்குப் போகும் அவசியங்கள் இருந்ததில்லை ! So ஊரைச் சுற்றியே ; வீடு-ஆபீஸ் கூட்டணியைச் சுற்றியே - நாட்கள் ஓடிய வேளைகள் அவை ! திடு திடுப்பென இந்தக் கடுதாசிகள் வந்த சேர்ந்த போது மறுக்கா புத்தக விழாவின் பெயரைச் சொல்லி ஐரோப்பாவுக்கு ட்ரிப் அடிக்கும் ஆசை மெது மெதுவாய்த் துளிர் விட்டது மண்டைக்குள் ! அப்போதெல்லாம் விசா எடுப்பது ; ரிசர்வ் வங்கியிடம் அனுமதி பெற்று செலவுக்கு டாலரோ ; பிராங்கோ ; மார்க்கோ வாங்குவது என்பதெல்லாம் பிராணனை வாங்கும் வேலைகள் ! So ஒரு மாதம் முன்கூட்டியே திட்டமிடல்களை ஆரம்பிக்கா பட்சத்தில் எதுவும் தேறாது ! வீட்டினில்  அலமாரிக்குள் தூங்கி கொண்டிருந்த 2 கோட்-சூட்களும் சரி, பிடாரி சைசிலானதொரு சூட்கேஸும் சரி, என்னைப் பார்த்துக் கண்ணடித்து போலவே தோன்ற, அவற்றை மறுபடியும் உபயோகத்திற்கு கொணர ஆசை ஆசையாய் இருந்தது ! என் தந்தைக்கு உலகம் சுற்றுவதென்பது ஜாங்கிரி சாப்பிடுவது போலான விஷயம் ; விட்டால் இன்றைக்குமே எங்கேயேனும் கிளம்பத் தயாராகி விடுவார் ! So அவரிடம் "இன்னொருவாட்டி பிராங்பர்ட் போக நினைக்கிறேன் " என்று சொல்வதில் சிக்கல் இராதென்பது எனக்குத் தெரியும் ! ஆனால் அந்தக்காலத்து ஆளான என் தாத்தாவுக்கு விமானப் பயணங்கள் ; அயல்நாடுகள் என்றாலே சுத்தமாய் ஆகாது ! "இவையெல்லாமே ஆபத்தான சமாச்சாரங்கள் ; தூர விலகி நிற்பதே சாலச் சிறந்தது !" என்பதே அவரது அபிப்பிராயம் ! ஆகையால் நிச்சயமாய் அவருக்கு இதனில் உடன்பாடிராது என்பதை யூகிக்க முடிந்தது ! முதலீடு முழுக்கவே அவரது பணம் தானென்றாலும், எதுவானாலும் "என்னைக் கேட்டுக் கொண்டு தான் செலவழிக்கணும்" என்ற ரீதியில் அவர் ஒரு நாளும் முட்டுக்கட்டை போட்டதே கிடையாது ! "சிக்கனமாய் ; சரியாய்ச் செலவிட்டுக் கொள்" என்பதைத் தாண்டி எனக்கு வேறெந்த கட்டுப்பாடுகளும் இருந்ததில்லை ! இருந்தாலும், அவரை எப்படியேனும் சம்மதிக்க வைத்து விட்டுப் பயணம் போவதே எனக்கு சரியென்றுபட்டது !

என்ன சொல்லி சம்மதிக்கச் செய்யலாமென்று யோசித்துப் பார்த்த போது, இரும்புக்கை தான்  என்னைக் கைதூக்கி விட்டது !! ஆனால் இதுவோ நம்ம லூயி கிராண்டேல் அல்ல ! மாறாக - இரும்புக்கை உளவாளி என்ற பெயரில் நாம் வெளியிட்ட DC Thompson பதிப்பகத்தின் ஏஜெண்ட் வில்சனின் இரும்புக்கையே ! சமாச்சாரம் என்னவென்றால், இரும்புக்கை மாயாவி அந்நாட்களில் முத்து காமிச்சிலேயே தான் இருந்தார் & அந்நேரத்துக்கு முத்து காமிக்ஸ் என் பொறுப்பாகி இருக்கவில்லை ! So போட்டிக் கம்பெனியின் flagship hero என்ற கடுப்போடே தான் மாயாவியை நான் பார்த்திடுவதுண்டு ! ஸ்பைடர் ; ஆர்ச்சி ; ரிப்போர்ட்டர் ஜானி என்று என்ன தான் நான் கர்ணம் போட்டாலும் - "இரும்புக்கை" என்ற பெயரைக் கேட்டவுடனேயே முகவர்கள் முத்து காமிக்ஸுக்குப் படையெடுப்பதுண்டு ! And அங்கே ஆர்டர் செய்து விட்டுத் திரும்பும் போது அடுத்த வாசலான நமது ஆபீசுக்கு வந்து "முத்து காமிக்ஸுக்கு ஆர்டர் குடுக்க வந்தேங்க சார் ; நல்லா இருக்கீங்களா ?" என்று குசலம் விசாரித்துப் போக, எனக்கோ யாரையாவது நடு மூக்கில் அதிகாரியின் ஸ்டைலில் குத்தணும் போலிருக்கும் ! தாத்தாவுக்கும், காமிக்ஸ் வாசிப்புக்கும் தூரம் ஜாஸ்தி என்ற போதிலும், விற்பனை சமாச்சாரங்களில் இரும்புக்கை சாதித்து வருவதை நன்கு அறிவார் தான் ! ஏற்கனவே DC Thomson காமிக்ஸ் நிறுவனத்திலிருந்து அந்த இரும்புக்கை ஏஜெண்டை வாங்கிட நான் போட்ட மொக்கைகளும் அவருக்கு நன்றாகவே தெரியும் ! So இரண்டாவது தபா ஜெர்மனிக்குப் பயணம் போயிட அந்த "இரும்புக்கை" மேட்டரையே மூலதனமாக்கிடத் தீர்மானித்தேன் !

"இந்த வருஷம் பிராங்பர்ட் புத்தக விழாவுக்கு போய் சந்தித்துப்  பேசினாக்கா அந்த உரிமைகளை வாங்கிடலாம் போலத் தெரியுது தாத்தா !!" என்று ஒரு சாயந்திர அரட்டையில் போது  மெதுவாய் பிட்டைப் போட்டேன் ! "இங்கிருந்தபடிக்கே முடியலியோடா ?" என்று கேட்க, "முடியலியே !!" என்று பஞ்சப்பாட்டொன்றைப் பாடினேன் ! அப்புறமென்ன ..? "சரி..போனவாட்டி போல 22 நாள்லாம் வேணாம் ; போயிட்டு சீக்கிரமா திரும்பிடணும் !" என்றபடி கேட்டைத் திறந்து விட, 'அத்துச்சாம் கழுதை ; எடுத்துச்சாம் ஓட்டம்' என்ற ரீதியில் மட மடவென்று விசா & இன்ன பிற பணிகளைத் துவக்கினேன் ! அந்நேரத்துக்கு முந்தைய ஆண்டின் பயண அனுபவம் இருந்ததால்,  எல்லாமே சுலபமாய் நடந்தேறின ! முதல் வருடம் ஜெர்மனி ; பெல்ஜியம் & லண்டன் என்று சுற்றியிருக்க, இந்தவாட்டி ஜெர்மனியிலிருந்து பிரான்ஸ் போய்ட்டு வரும் ஆசை தலை தூக்கியது !

அந்நாட்களில் பாரிஸ் என்பது செம exotic இலக்கு அனைவருக்குமே !! ஐபெல் டவர் ; மோனா லிசா ; இன்ன பிற உலகப்பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தளங்களும் புக்குகளில் ; சினிமாக்களில் அட்டகாசமாய்க் காட்சி தருவதுண்டு ! பற்றாக்குறைக்கு Berlitz Guide to Paris என்றதொரு சின்ன புக்கை எங்கேயோ வாங்கியிருக்க, அது பாரிஸின் ஒவ்வொரு மார்க்கெட் ; ஒவ்வொரு வீதி என்று விளக்காத குறை தான் ! So "இம்மாம் தொலைவு போறச்சே அங்கேயும் எட்டிப் பார்த்திடுவோமே !" என்ற ஆசைக்கு அங்கே நமது முக்கிய படைப்பாளிகள் இருவர் இருப்பதும் உரமூட்டியது ! So அவர்களை நேரில் சந்திக்கும் திட்டத்தையும் ஊர்ஜிதம் செய்து கொண்டு பிரெஞ்சு விசாவும் போடச் செய்தென் ! அதற்குள் நண்பன் எவனோ, "ஸ்விட்சர்லாந்து போகாமே திரும்பினாக்கா புளிய மரத்துக்கும், முருங்கை மரத்துக்கும் தான் பின்னாளில் படையெடுக்க நேரிடும் !!" என்று திரிக்கொளுத்திப் போட, 3 நாள் ஜெர்மனி ; மூணு நாள் பிரான்ஸ் ; ஒன்றரை நாள் சுவிட்சர்லாந்த் என்று திட்டமிட்டுக்கொண்டேன் !

இன்றைக்கு யோசித்தால் அந்நாட்களில், அந்த வயதில், வருமான வரி கட்டுவதென்றால் வீசம்படி எவ்வளவு ? என்ற தொழில் பின்னணியுடனான எனக்கு, ஐரோப்பியத் தூதரகங்கள் விசாக்களை எப்படித் தான் வழங்கினார்களோ ? என்று மலைப்பாக உள்ளது ! இன்றைக்கு ஒரு வண்டி பேப்பர்கள் ; ஒரு வண்டி Income Tax காகிதங்கள் என்று ஒப்படைத்து விட்டும் "வரும்...ஆனா வராது" என்று காத்திருப்பதே நடைமுறை ! ஆனால் அந்நாட்களில் என் முகரையைப் பார்த்து "இவனும் ஒரு எடிட்டர் தான் !" என்று சில மகானுபாவர்களுக்குத் தென்பட்டிருக்கிறது போலும் ; பெரிய மனது பண்ணி விசா வழங்கியிருந்தனர் !

So அக்டோபர் 9 1986-க்கு புத்தக விழா துவங்கிட, அந்நேரத்துக்கு ஆஜராகியிருந்தேன் ! சென்றாண்டு தங்கிய அதே ஊருக்கு வெளியிலான ஹோட்டல், இம்முறையோ ரொம்பச் சுலபமாய் எட்டிட முடிந்தது போலப்பட்டது ! பிராங்கபர்ட்டுக்கு இரும்புக்கை  உளவாளியைக் காரணம் காட்டிய கையோடு பயணம் செய்திருந்தேன் என்பதால், அவர்கள் கையில், காலில் விழுந்தாவது உரிமைகளை வாங்கிடும் முனைப்பிலிருந்தேன் ! So D.C.Thompson அப்பாயிண்ட்மெண்ட் இருந்தது ! அதுமட்டுமன்றி BATMAN உரிமைகளுக்கென DC Comics நியூயார்க்கின் சந்திப்புக்கும் நேரம் வாங்கி வைத்திருந்தேன் ! மூன்றே தினங்களில் முக்கிய வேலைகள் அனைத்தையுமே பிசிறின்றி முடித்திட படைப்பாளிகள் அனைவரின் சகாயங்களும் ஏகமாய் உதவியிருந்தன ! "சின்ன பையன் ; எடுத்தேறி இத்தினி தொலைவு வந்திருக்கான் ; பிழைச்சுக்கட்டும் !" என்ற ஒற்றை சிந்தனையைத் தாண்டி, அவர்கள் யாரிடமும் வியாபார அணுகுமுறை கிஞ்சித்தும் இருந்ததில்லை என்பதில் சந்தேகமே கிடையாது ! அந்த தயாளமும், பெருந்தன்மையும் மாத்திரமில்லாது போயிருப்பின், சுட்டிக்குரங்கு கபிஷ் ; ராமு & சோமு என்ற ரேஞ்சைத் தாண்டிய புக்ஸ் எதுவுமே எனக்குச்  சாத்தியப்பட்டிராது !

எல்லாமே அட்டகாசமாய் நடந்தேறிய சந்தோஷத்தை ஊருக்கு போன் செய்து பகிர்ந்த கையோடு, பிராங்கபர்ட்டுக்கு டாட்டா சொல்லிவிட்டு பயணத்தின் அடுத்த கட்டத்துக்குத் தயாராக துவங்கினேன் ! அந்நேரத்துக்கு பிராங்பர்ட் நம்ம உசிலம்பட்டி ரேஞ்சுக்கு நட்போடு காட்சி தந்து கொண்டிருக்க, சிரமங்கள் ஏதுமின்றி, பாரிஸ் போகும் காலை விமானத்தைப் பிடிப்பதற்கோசரம் சீக்கிரமே ஏர்போர்ட்டுக்குக் கிளம்பிவிட்டேன் ! அதிகாலை முதலே உள்ளுக்குள் ஒரு விதப் பட படப்பும், மெல்லிய பயமும் துளிர் விட்டிருப்பதை உணர முடிந்தது ! ஜெர்மனியும் ஒரு மேற்கத்திய ஐரோப்பிய தேசமே ; பிரான்சும் அதுவே என்ற போதிலும் இரண்டுக்கும் மத்தியில் ஏகப்பட்ட கலாச்சார வித்தியாசங்கள் ; மொழி பேசுவதில் சிக்கல்கள் ; ஊருக்குள் பயமின்றிச் சுற்றி வருவதில் சில வேறுபாடுகள் இருப்பதாகவே ஒவ்வொரு பயண கைடும் சொல்லியது ! "பிரான்சில் பல தேசத்து ; பல இனத்து மக்கள் வசிப்பதால் இக்கட சூதானமா இருந்துக்கோ தம்பி" என்று எனது டிராவல் ஏஜெண்டுமே சொல்லியிருந்தது காதில் ஒலித்துக கொண்டிருந்தது ! இன்டர்நெட்டுக்கு முந்தைய காலங்களில் முன்னே பின்னே போயிரா ஊர்களில் ஒரு ஹோட்டல் ரூம்  புக் செய்வது என்பது ரொம்பவே கம்பு சுற்றும் வேலை தான் ! பாரிஸ் ஏர்போர்ட்டிலிருந்து ஊருக்குள் போவது எப்படி ? என்று அந்தக் கையேட்டில் பார்த்தால் "டாக்சி தான் தேவலாம் ; சுலபம் ; அதற்கான கட்டணம் இத்தனை " என்று இருந்தது ! ஆயிரம் ரூபாய் சுமாருக்கு போடப்பட்டிருந்த  அந்தக் கட்டணத்தைப் பார்த்து மிரண்டு போனேன் ! "எங்க ஊரிலேர்ந்து இவ்ளோ தூரம் வந்து போறதுக்கே ஒன்பதாயிரம் தான் ; உங்க ஊர் டேக்சிக்கு மட்டுமே இவ்ளோவா ?" என்ற கடுப்பில், பஸ்ஸைக் கிஸ்ஸைப் பிடித்து ஊருக்குள் போய் விட வேண்டியது தான் என்று தீர்மானித்துக் கொண்டேன் ! அந்நாட்களில் பாரிஸ் விமான நிலையத்திலிருந்து நகரின் மையத்துக்கு பயணமாகிட ரயில் இருந்ததாயும் எனக்குத் தோன்றவில்லை ; so பஸ்ஸே மார்க்கம் என்ற தீர்மானத்துக்கு வந்திருந்தேன் ! ஊருக்குள் போன பிற்பாடு  எந்தப் பகுதியினில் தங்குவது என்று பெரிதாய் ஐடியா ஏதுமில்லை ! பொதுவாய் ரயில் நிலையத்தின் அருகே பட்ஜெட் ஹோட்டல்கள் நிரம்ப இருக்குமென்பது எனது அனுபவப்பாடம் ! ஆனால் அந்த தயாளப் பிரபுக்களின் ஊரிலோ சல்லிசாய்க் கொத்தனார்களும், தண்டவாளங்களும் கிடைத்ததாலோ, என்னவோ - மொத்தம் ஆறோ, ஏழோ ரயில்வே ஸ்டேஷன்களை கட்டி விட்டிருந்தனர் ! So  அதிலும் செம குழப்பம் ! ஆனால் வெளியே எதையுமே காட்டிக்கொள்ளாமல் கோட் சூட் போட்ட  லார்ட் லபக்தாஸ் ரேஞ்சுக்கு, பிராங்பர்ட் விமான நிலையத்தினில் எனது பெட்டிகளை செக்கின் செய்து விட்டு, பாரிஸ் செல்லும் விமான கேட்டுக்கு நடையைக் கட்டிய போது காலை எட்டரை தான்  !

முக்கால் மணி நேரமோ - என்னவோ தான் பாரிசுக்கான பயண நேரம் எனும் போது "இன்னும் கொஞ்ச நேரத்திலேயே பாரிசில் மொக்கை போடும் படலம் ஆரம்பிச்சிடுமோ ?" என்ற பயம் உள்ளுக்குள் குடைந்து கொண்டிருந்தது ! விமானத்துக்கான கேட்டைச் சென்றடைந்த போது நல்ல கூட்டம்...! கண்ணாடித் தடுப்புக்கு மறு பக்கம் முரட்டு முரட்டு Lufthansa விமானங்கள் நின்று கொண்டிருக்க - அதையொட்டிய வரிசையில் ஒரேயொரு சீட் மட்டுமே காலியாய் இருந்தது ! விதியானது அடியேனின்  பிட்டத்தில் தரவிருந்த முரட்டுக் குத்தலுக்கு அது தான் முதற்படி என்பதை அந்நேரம் அறிந்திருக்க வழியேது ? ஸ்டைலாய்ப் போய் அங்கே அமர்ந்தேன்....!

தூக்கத்தில் செருகும் கண்ணிமைகளும் , டைப்படித்தே நோவும் விரல்களும் ஓய்வினைக் கோருவதால் பின்னே தொடர்ந்த நிகழ்வுகள் பற்றி...........அடுத்த பதிவினில் எழுதுகிறேனே guys !! Bye for now !! See you around !!

Sunday, March 22, 2020

ஒரு கைதட்டிய ஞாயிறு !!

நண்பர்களே,

வணக்கம். தெருவே கைதட்டி சந்தோஷத்தையும், நன்றியையும் வெளிப்படுத்திய அழகை உடனிருந்து, பங்கேற்று, ரசித்த பிற்பாடு இந்த உ.ப.வினை டைப்ப முனைகிறேன் ! அங்கும் சரி, இங்கும் சரி, ஆஜராகிடும் போது உள்ளுக்குள் ஒரு பலம் தெரிவது போலொரு உணர்வு  - "நாம் தனித்தில்லை" என்று !! இந்த வைரஸ் அசுரன் எதற்கு பயன்பட்டுள்ளதோ - இல்லையோ ; ஒரு தேசத்தையே ஐந்து நிமிடங்களுக்கேனும் ஒன்றென உணரச் செய்த புண்ணியத்தைச் சம்பாதித்துள்ளது ! வேறேதேனும் ஒரு ஆளில்லா கிரகத்துக்குப் போய் இந்தப் புண்ணியத்தின்  பலன்களை கொண்டாடிக்கோ கொரோனா !

இதோ ஏப்ரலுக்கென தயாரித்துள்ள இதழ் # 2-ன் முன்னோட்டம் ! And in fact இது ஜம்போவின் சீசன் # 3-ன் முதல் இதழும் கூட ! 
எண்பதுகளில் துவங்கியதொரு திரைப்பட trend எனக்கு ஞாபகத்துக்கு வருகிறது ! ஒரு படத்துக்கு பாடல்கள் செமையாய் அமைந்துவிட்டாலே, மித ஹீரோவாக இருந்தால் கூட ஹிட்டடித்துவிடுவார் !! அதே போல ஒரு காமிக்ஸ் ஆல்பத்துக்கு சித்திரங்கள் அற்புதமாய் அமைந்து போனால் கதை எவ்விதமிருப்பினுமே தேறி விடுமென்பது யதார்த்தம் ! இதோ இம்மாதத்து "நில்..கவனி..வேட்டையாடு.." அதற்கொரு prime example தானே ! இதனை ஆங்கிலத்தில் படித்த போது கதையின் தாக்கம் மீதம் ; சித்திர ஜாலம் அசாத்தியம் என்பதே எனது notes ஆக இருந்தது ! ஆனால் நொடி கூடத் தயங்காது இக்கதைக்கு இசைவு சொன்னேன் - simply becos அந்த அமேசானின் பின்னணியையும், மெர்சலாக்கும் சித்திரங்களையும் நாம் தவறாது ரசித்திட வேண்டுமென்ற ஆசையில் ! அந்த பாணியிலேயே நான் தேர்வு செய்த இன்னொரு ஆல்பம் தான் "பிரிவோம்..சிந்திப்போம்..!

பானைச் சோற்றுக்கு ஒரு சோறே பதம் எனும் விதமாய் முன் + பின் அட்டைகள் போதுமென்பேன் இந்தப் படைப்பின் தரத்தைப் பறைசாற்ற !! ரொம்பவே சமீபமாய் ; நான்கே  மாதங்களுக்கு  முன்னே பிரெஞ்சில் வெளியான படைப்பு இது ! வெளியான மறு வாரமே அதிர்ஷ்டவசமாக என் கண்ணில் பட்டிட, நமக்குப் புதியவர்களான இந்தப் படைப்பாளிகளின் கதவைத் தட்டினேன் ! நம் நல்ல நேரமோ, என்னவோ இவர்களை முன்னமே சந்தித்திருந்தேன் ஏதோவொரு புத்தக விழாவினில் ! ஆனால் அந்நேரம் நமக்கு சுவாரஸ்யமூட்டக்கூடிய கதைகளாய் எதையும் அவர்களது கேட்லாக்கிலிருந்து தேடிப் பிடிக்க எனக்கு முடிந்திருக்கவில்லை ! ஆனால் அந்தப் பரிச்சயத்தை நினைவில் அவர்கள் கொண்டிருக்க, சீக்கிரமே "பிரிவோம்...சிந்திப்போம்" தமிழுக்கு ஆஜராகிடும் ஏற்பாடுகள் நடந்தேறின !! 

கதையைப் பொறுத்தவரை yet another cowboy one shot ! ஒன்-இதுவரையிலுமான எல்லா கௌபாய் ஒன்-ஷாட்களுமே நம்மிடையே அழகான வரவேற்பையே பெற்றுள்ளன எனும் போது, இதுவும் அதே template-ல் பயணிக்குமென்று நம்புவோம் !! இது போன்ற கதைகளில் ஹீரோ என தூக்கி வைத்து சிலாகிக்கும் அவசியங்கள் கதாசிரியருக்குக் கிடையாதென்பதால், யதார்த்த மனிதர்களை, அவர்களது நிறை-குறைகளோடே சித்தரிக்கும் வாய்ப்பு அமைந்து விடுகிறது ! இங்கும் அதுவே பாணி ! சிம்பிளான கதைக்களம் ; ஆனால் அதைச் சொல்லியுள்ள விதமும், அதற்கென வரைந்துள்ள சித்திரங்களும் simply awesome !! கைவசம் இதன் டிஜிட்டல் கோப்புகள் தற்சமயமாய் இல்லை என்பதால், வீட்டில் கிடைக்கும் அச்சான தாளிலிருந்து எடுத்த போட்டோவை இங்கே upload செய்துள்ளேன் ; காலையில் இதனிடத்தில் டிஜிட்டல் பக்கமிருக்கும் !! கரடு முரடான மக்களின் பின்புலத்தில் சொல்லப்பட்டிருக்கும் கதை என்பதால், இதற்கான நமது கருணையானந்தம் அவர்களின் கிளாசிக் மொழிபெயர்ப்பினை நிறையவே மாற்றியமைக்க வேண்டியிருந்தது ! "ஐயோ...தெய்வமே..லேட் ஆகுதே !!" என்ற பீதியோடே அந்தத் திருத்தங்களைப் போட்டவன், இன்றைக்கு அடித்துப் பிடித்து புக்கை அச்சிட்டு விட்டு இப்போது காலாட்டிக் கொண்டிருக்க நேர்ந்திருப்பதே கொடுமை ! 
நாளின் பெரும்பகுதிக்கு வேறு வேலை என்று ஏதுமிருக்கா இந்நாளில் -  "ஒற்றை நொடி..ஒன்பது தோட்டா" அத்தியாயம் 2-ல் பேய் போலப் பணியாற்ற முடிந்துள்ளது ! முதல் அத்தியாயம் தான் tough ஆக இருக்கும் ; தொடர்வன சற்றே இலகுவாய் இருக்குமென்று எந்த மதிகெட்ட வேளையில் எழுதினேனோ , தெரியவில்லை - இந்த அத்தியாயம் 2-ன் துவக்கமே நாக்குத் தொங்க வைத்து விட்டது ! நாயகனோ டிபார்ட்மெண்ட்டையே  தெறிக்க விடும் ஒரு மத யானை ! சட்ட திட்டங்களுக்கோ ; சம்பிரதாயங்களுக்கோ தலைமுடிக்குத் தரும் முக்கியத்துவத்தைக்கூட தராத அதிரடிப் பார்ட்டி ! அவரும் சான் பிரான்சிஸ்கோ போலீஸ்துறையின் தலைவரும் பேசிக் கொள்ளும் (மோதிக் கொள்ளும்) sequence-களை எழுவதற்குள் ஒரு வழியாகிப் போனேன் ! ஆனால் படிக்கும் போது நன்றாகவே இருப்பதாய்ப்பட்டது ! And இங்கோர் முக்கிய குறிப்பு guys : ஸ்கிரிப்டில் ஏகப்பட்ட நுணுக்கமான விஷயங்களைக் கதாசிரியர் சொல்லியிருப்பதால், அவற்றுள் எதையும் விழுங்கிடக்கூடாதே என அந்தப் பின்னணிகளையெல்லாம் நிறைய கூகுள் செய்து தமிழாக்கம் செய்து வருகிறேன் ! So  புலனாய்வின் பின்னணிகளை கதைக்குள் விதைத்திடும் வரையிலும் நிறையவே வசனங்கள் உண்டு ஒரிஜினலிலும் ! அதனால்  தமிழிலும் அந்தப் பகுதிகளில் வசனங்கள் மிகுந்தேயிருக்கும் ! இந்த ஒற்றை ஆல்பத்தைப் படிக்கும் போது சோம்பலைக் கடாசிவிடுங்கள் folks - ஏனெனில் காத்திருப்பது ஒரு கதாசிரியரின் masterpiece ! ஆகையால் "வசனம் ஓவர் ; இவ்ளோ தேவையில்லை !" என்று பொத்தாம்பொதுவாக comments வேண்டாமே ப்ளீஸ் என்பதை இப்போதே பதிவிட்டு விடுகிறேன் ! ஆக்ஷன் blocks ஆரம்பிக்கும் போது, கபாலத்தில் எஞ்சியிருக்கும் கேசம் நட்டுக்க நிற்காத குறை தான் !! Phew .....!! 

இன்றைக்கு கொஞ்சமே கொஞ்சமாய் ராக்கூத்தடிப்பின் 54 பக்கங்கள் கொண்ட பாகம் 2-ஐ முடித்திருப்பேன் !! இந்த முனைப்பு மட்டும் தொடர்ந்திடும் பட்சத்தில் - ஆகஸ்டா...? Oh yes ....அதற்கு ரொம்ப முன்னமே கூடத் தயாராகிடுவோம் !! தெய்வமே...இந்த தற்காலிக இடர்களை மட்டும் களைந்திடுங்கள் !! Bye folks...see you around !! And STAY SAFE !!

P.S : ஜம்போவின் இரண்டாம் சுற்று நிறைவுற்று விட்டது guys ; மூன்றாம் சீசனுக்கு சந்தாக்களைப் புதிப்பித்திருக்கா பட்சத்தில், இந்த இதழ் ஏப்ரலின்  கூரியரில் இடம்பிடிக்காது என்பதை நினைவூட்டி விடுகிறேனே !! போனில் அப்புறமாய் நம்மவர்கள்  உங்களிடம் டோஸ் வாங்க வேண்டாமே என்ற ஆர்வத்தில்  தான் இந்த நினைவூட்டல் !  

Saturday, March 21, 2020

இதுவும் கடந்து போகணும்...!!

நண்பர்களே,

வணக்கம். ஒரு கொடுங்கோல கொரோனாவினால் உலகையே மண்டியிடச் செய்ய முடியும் எனும் போது - அதன் கொடுங்கரங்களுக்கு அஞ்சிடாதிருக்க நாமெல்லாம் ஒரு விதிவிலக்காகிட இயலுமா - என்ன  ? ஏப்ரலின் இதழ்களை வழக்கம் போல் தயாரித்து வருகிறோம் - நிலவரம் எப்போது தேவலாமென்று ஆகிடுகிறதோ, அப்போது அனுப்பலாமென்ற உத்தேசத்தினில் ! அது மார்ச் 31-ம் தேதியாக இருக்குமா ?  அல்லது ஏப்ரலில் இருக்குமா ?என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம் ! But இந்தியாவின் முழுமையிலும் எங்கும், எந்தவொரு ஊடகமும் இப்போது வரையிலும் கடை மூடவில்லை எனும் போது, நமக்கும் அவ்விதமொரு நிலை நேராதென்றே வேண்டிக்கொள்ளுவோம் ! So மாமூலாய்ச் சொல்லும் தேய்ந்த அந்த வார்த்தைகளை இம்முறை ரொம்பவே பயபக்தியோடு உச்சரிக்கிறேன் : Fingers Crossed !!!!!

திரும்பின திக்கெல்லாம் வயிற்றில் புளியைக் கரைக்கும் சேதிகளாய்ப் பிரவாகமெடுத்திடும் நிலைமையில் நாமும் ஒரு முகாரியை 'டொய்ங் டொய்ங்' என இசைப்பதில் எனக்கு இசைவில்லை ! இதைப் படிக்கும் சொற்பப் பேராவது கொஞ்ச நேரத்துக்கேனும்  ஜாலியாக இருப்பின், அந்த சந்தோஷமே நமக்குப் பெட்ரோல் ஆகிடும் ! So 'இத்தினி அமளி துமளியிலும் உனக்கு மிக்சர் சாப்பிட்டே தீரணுமா ?" என்ற விமர்சனங்கள் எழும் பட்சத்தில் - sorry guys ; முந்தைய வரியினை மறுக்கா படியுங்களேன் என்று மட்டுமே சொல்லுவேன் !

வாழ்க்கைகளே இந்த வைரஸுடனான போராட்டத்தில் மூழ்கிக் கொண்டிருக்க, இந்த தம்மாத்துண்டு 'பொம்மை புக்' துறையிலிருக்கும் நமக்கு முன்னே இருப்பனவோ இரண்டே options : 

முதலாவது - "ஐயோ..தெய்வமே...இது எங்கே போய் முடியப்போகிறதோ....தெரியலியே...?! அறிவித்த இதழ்களை மருவாதையாய் வெளியிட்டுக் கரைசேர்ந்தாலே  புனித தேவனின் புண்ணியம் !" என்று ஷட்டர்களையும், டிக்கிகளையும் மூடிக்கொண்டு பத்திரமாய் ஆட தேர்வு செய்திடலாம் ! 

இரண்டாவதோ : "இருக்கும் நோவுகளுக்கு மத்தியில் நாமுமொரு முகாரி ராகம் பாடுவானேன் ? நமக்கிருப்பதெல்லாம் பல்லாயிரத்திலோ, லட்சங்களிலோ ஆனதொரு வட்டம் அல்ல ! இருக்கும் இக்ளியூண்டு ஜனத்தையாவது நம்மால் இயன்ற விதத்தில் குஷிப்படுத்திட முற்படுவோமே ?!" என்ற (அசட்டுத்) தைரியத்தோடு எப்போதும் போல் தொடர்வதே ! 

இந்த இரண்டுள் நமது தேர்வு என்னவாக இருக்குமென்பதை யூகிக்க நிச்சயமாய் ராக்கெட் விஞ்ஞானத்துக்கு அவசியமிராது தான் !! Knowing us -  ஆண்டவன் அனுமதித்தால் நமது தேர்வு Option # 2 ஆகத் தானே இருந்திடும் guys  ?! And without more ado - இதோ இந்திய வரலாற்றில் இடம்பிடிக்கவுள்ளதொரு மைல்கல் பொழுதுக்கு அருகாமையினில், இந்தாண்டின் ஸ்பெஷல்களுக்கான அறிவிப்பு :
"இங்கே ரணகளமே அரங்கேறிக் கொண்டிருக்கும் சூழலில், உனக்கு கல்லா கட்டும் இந்த கிளுகிளுப்பு தேவை தானா ?" என்ற கேள்விகள் பகீர் பகீரென்று எழும் என்பதில் துளியும் ஐயமில்லை எனக்கு  ! கேள்வி எழுப்புவோரை துண்டை உதறித் தோளில் போடும் வேகத்தைச் சற்றே மட்டுப்படுத்திக் கொண்டு பதிவின் மீதத்தையும் பொறுமையாய் படிக்கக் கோருவேன் ! வீடு பற்றியெறிந்து கொண்டிருக்கும் நிலையினில், அந்த வெப்பத்தில் குளிர்காயும் சின்னப்புத்தி சத்தியமாய் நமக்குக் கிடையாது ! 

"சரி...ரைட்டு...போன வாரம் அறிவிச்சதை (ஒற்றை நொடி..ஒன்பது தோட்டா இந்த வாரம் ஊர்ஜிதம் பண்றியாக்கும் ? நடத்து..நடத்து...!" என்ற உள்ளக்கிடக்குகளின் ஓசைகள் (அட நம்ம மைண்ட்வாய்ஸ்!!) ஒலிப்பதை கேட்க முடிகிறது ! ஆனால் என்ன தான் எனது இந்தக் கதைத் தேர்வின் அதகள merits பற்றி நான் மேடை போட்டுக் கூவினாலுமே - "என்ன இருந்தாலும் எங்க கென்யா பெட்ரோமாக்ஸ் மேரி வருமா நைனா ? சும்மா பளீச்சுன்னு அடிச்சு கிளப்பும் தெரியுமா ?" என அந்தக் கதையைப் படித்தோரும், படிக்காதோரும் மோவாயை வெட்டுவதும் புரிகிறது தான் ! So கொஞ்சமே கொஞ்சமாய் யோசித்த போது ஒரு மகாசிந்தனை தோன்றியது !! இண்டிகேட்டரையும் போட்டுக்கினு, கையையும் காட்டிக்கினு, வண்டிய நேரா தான் விடணுமா ? அப்டியே ஜேம்ஸ் பாண்ட் படங்களது பாணியில் 'ஜொய்ங்க்' என்று take off ஆகவும் செய்யலாம் தானே ? என்று பட்டது ! அப்புறமென்ன ? இதோ அறிவிப்பு # 2 ! 
Oh yes - ஆண்டவன் மனது வைப்பின் நடப்பாண்டின் ஈரோடு ஸ்பெஷலாய் இரு மெகா இதழ்களுமே ஆஜராகவுள்ளன - உங்கள் ஆசைகளுக்கு நியாயம் செய்திடவும், எனது தேர்வினையுமே களத்தில் இறக்கிடும் பொருட்டு ! And ஏற்கனவே அறிவித்த "ஒரு புதையலின் பாதையில்..." (ARS MAGNA) ஜனவரி 2021-ல் காத்துள்ள 2 மைல்கற்களுள் ஒன்றின் இடத்தைப் பிடிக்கவுள்ளது !

By now, எனது தீர்மானங்களுக்கு நீங்கள் எவ்விதமாய் ரியாக்ட் செய்வீர்களென்ற யூகங்களுக்குள்ளெல்லாம் நான் போகவே தயார் நஹி ! கபாலத்தை பிளக்கப் போகிறீர்களோ ? என்று பயந்து கிடந்த "எதிர்காலம் எனதே" இதழினை இந்தாண்டின் topseller பட்டியலுக்கு பூஸ்ட் செய்துள்ளீர்கள் எனும் போதே நீங்களும் இந்த பலதிக்கில் வண்டியை விடும் கலைகளில் விற்பன்னர்கள் ஆகிவிட்டிருப்பது புரிகிறது ! So தற்போதைய எனது இந்த டபுள் டமாக்காவினை நீங்கள் கீழ்கண்ட விதங்களில் அணுகிடுவீர்களென்று எதிர்பார்க்கலாம் தான் :

1 "ஏ......சூப்பரப்பு...சூப்பரப்பு..! ஏக் கல்லிலே தோ மாங்காயா ? அடி தூள் !!"

2 "Ars Magna-ன்னு அறிவிச்சிட்டு இப்போ அரிசிகிட்டங்கிக்குப் போவோமான்னு கேட்கிறியே...? ஊஹூம்...அறிவிச்சபடியே Ars Magna இப்போவே வராங்காட்டி தலீவருக்கு வேப்பிலைகளை மட்டுமே கட்டி விட்டு இங்கே விடிய விடிய குத்து டான்ஸ் போடச் செய்வோம் !! ஜும்பாலக்க...ஜும்பாலக்க ...ஜும்பால..ஜும்பா லே....!

3 "உனக்குன்னு சொந்தமா மண்டைக்கு வெளியே தான் ஏதும் கிடையாதுன்னா - உள்ளாறவுமா ?கேட்குறதுக்குலாம் மண்டைய மண்டைய ஆட்டுனா பூம் பூம் மாடுன்னு நினைச்சிடுவாங்கப்பு"

4 "இன்னிக்கு இருக்கிற நிலவரத்திலே இதுலாம் தேவையா ? ஒரு புக்கை வாங்க டப்பை புரட்டினாலே அது பெரிய விஷயம் ; இதிலே ரெண்டா ? இப்போவே கண்ணைக் கட்டுதே !!"

நீங்கள் ரியாக்ஷன் # 1-க்குச் சொந்தக்காரரெனில் எனது ரியாக்ஷன் இதுவே : 
நீங்கள் ரியாக்ஷன் # 2-க்குச் சொந்தக்காரரெனில் எனது ரியாக்ஷன் இதுவே :
நீங்கள் ரியாக்ஷன் # 3-க்குச் சொந்தக்காரரெனில் எனது ரியாக்ஷன் இதுவே : 
நீங்கள் ரியாக்ஷன் # 4-க்குச் சொந்தக்காரரெனில் எனது ரியாக்ஷன் இதுவே : 
BUY ONE...OR BUY THEM ALL !! இந்த சலுகை இம்முறை உங்களின் முன்பதிவுகளுக்கு உண்டு !

*இஷ்டப்பட்டால் 2 தெறிக்கும் த்ரில்லர்களையும் ஒரே நேரத்தில் முன்பதிவு செய்திடலாம் ! THE TWIN DEAL !!

*ஏதேனும் ஒன்று போதுமெனில், அதன் பெயரைக் குறித்தொரு மின்னஞ்சலைத் தட்டி விட்டு, ஒன்றினை மாத்திரமே (இப்போதைக்கு) வாங்கிக்கொள்ளலாம் ! THE SINGLE DEAL !

*இரண்டுமே வேண்டும் ; ஆனால் இப்போது பணத்தை முழுசாய்  அனுப்ப சிரமமெனில் இரு தவணைகளாகவும் பணம் அனுப்பிடலாம் !

ஆக இதுவே திட்டமிடல் இந்தாண்டின் தொங்கலிலிருந்த இதழ்களுக்கு !

ஏற்கனவே சொன்னது போல - "கென்யா" எனும் கொழு கொழு பாப்பாவின் மொழிபெயர்ப்பு ரெடியாக உள்ளதால் - அடுத்த ஒன்றரை மாதங்களுக்குள் அதனை அச்சக்குத் தயார் நிலைக்குக் கொணர்ந்திட இயலும் ! உடன் வந்திட வேண்டிய அடுத்த கொழு கொழு பாப்பாவான "ஒற்றை நொடி.ஒன்பது தோட்டா" வினில் பிசாசுகள் உலா செல்லும் வேளைகளில், பிசாசாய் வண்டி ஓடிக்கொண்டுள்ளது ! ஒரு மோட்டைப் பார்த்துக் கிடந்த பொழுதில் துவங்கிய மொழிபெயர்ப்பினில், முதல் அத்தியாயம் கதம் - சரியாய் ஒரே வாரத்தில் ! பொதுவாய் ஒரு நெடும்தொடரினுள் தலைநுழைக்கும் துவக்க பாகமும், முடிச்சுகள் அனைத்திற்கும் விடை சொல்ல முயலும்  க்ளைமாக்ஸ் பாகமும் தான் பணியாற்ற maximum சிரமங்களை முன்வைப்பது வாடிக்கை ! இந்த ஆல்பமும் அவ்வகையில் விதிவிலக்கல்ல தான் - ஆனால் ஏதோவொரு வைராக்கியத்தில் எழுதத் துவங்கிட - செமையாய் ஸ்பீட் அமைந்து போய் விட்டது ! So இதே வேகத்தைத் தக்க வைத்துக் கொள்ள இயலின் ஆகஸ்டின் முதல் தேதிக்கு தயாராகியிருப்போம் - புனித தேவன் இந்த கொரோனாவை மட்டும் காலாவதியாக்கியிருக்கும் பட்சத்தில் !!

ஆனால்..ஆனால்...ஏதேனுமொரு துரதிர்ஷ்ட சூழலில் தொழிற்கூடங்களையும் நெடும்காலத்துக்குப் பூட்ட வேண்டிய நிர்பந்தம் நம் தேசத்திற்குமே ஏற்பட்டுப்போயின் - எல்லாமே இடியாப்பச் சிக்கலே !! So it will all ultimately boil down to our fight against this demon !! நிச்சயமாய் சகலத்தையும் தள்ளிப்போட்டு விடுவோம் - ஆகஸ்டினில் கூட நிலவரம் நார்மலாகியிருக்கும் நம்பிக்கை இல்லாது போயின் !  !  

So ஸ்திரமாய் எதையும் கணிக்க இயலா இச்சூழலில், உங்களிடம் உண்டியலை ஏந்தி நிற்க வேண்டாமென்று தான் விலைகள் சகலத்தையும் இப்போதைக்கு blank செய்து விட்டேன் ! தொடரும் நாட்கள் / வாரங்கள் நமக்குச் சொல்லவுள்ள (நற்)செய்திகளைக் கொண்டே இந்த முயற்சியின் தலைவிதியை நிர்ணயிக்கவுள்ளேன் ! So இப்போதைக்கு பணம் ஏதும் உருட்டுப் பொதியாகக் கூட அனுப்பிட வேண்டாமே - ப்ளீஸ் ?  ஆனால் வாசிப்பின் அருமை முன்னெப்போதையும் விட இந்தாண்டினில் பிரதானப்பட்டு நிற்குமென்ற நம்பிக்கையும், இரு ஆல்பங்களின் தெறிக்கும் கதைக்களங்களும், இந்த முயற்சிக்கு முதுகெலும்பாகி ஏதோவொரு வகையினில் நமக்கு தைரியம் தந்து நிற்கின்றன ! God be with us all !!

"சரி, நிலையற்ற இந்த நிலவரத்தில் கொள்ளை போகுதுன்னு அறிவிப்பு மட்டும் ஏதுக்கோசரம் ? புக் வருவது உறுதி - என்ற சமயத்தில் அறிவித்துக் கொள்ளலாமே ?" என்ற கேள்வி எழலாம் தான் ! The answer is simple : இதோ இந்த நொடியினில் கூட ஏப்ரல் 15-க்கு தமிழகத்தில் பத்தாம் வகுப்புத் தேர்வுகளும், +2 தேர்வுகளும் துவங்கவுள்ளதாய் முதலமைச்சர் அறிவித்துக் கொண்டிருக்கிறார் சட்டமன்றத்தில் ! So நம்பிக்கையே வாழ்க்கை ; சூழல் சீராகாது போயின் மறுதிட்டமிடல் செய்து கொள்ளலாம் - என்ற அதே லாஜிக் தான் இங்கேயும் ! தவிர, முறையாய் அறிவிப்பென்று செய்திடாது, "அப்போது பார்த்துக்கலாமென்று" நாங்களும் இருக்கும் பட்சத்தில் - நிலவரம் சீராகிட்டாலுமே ஸ்பெஷல் இதழ்களுக்கான பணிகளை ஒற்றை ராத்திரியில் நிறைவு செய்தல் சாத்தியமாகாது ! கண்முன்னே ஒரு கேரட் தொங்கிக்கொண்டே இருப்பின் - கழுதை சுறுசுறுப்பாய் ஓடிக்கொண்டேயிருக்க முற்படுமல்லவா ? அதே கதைதான் இந்த 'எழு கழுதைக்கும்'(!!) ...! அக்கடாவென கொஞ்ச நேரம் கட்டையைக் கிடத்தினால், அதுவே பழக்கமாகிப் போய்விடுமோ என்ற பயம் எனக்குண்டு ! ஒன்றன்பின் ஒன்றாய் இலக்குகளை நிர்ணயம் செய்து கொண்டேயிருப்பேன், சோம்பல் எனும் அரக்கன் அண்டாது விடுவான் என்பது எனது நம்பிக்கை ! So இந்த அறிவிப்பு as much for me ; as it is for you guys !!

ரைட்டு....4 மாதங்களுக்கு அப்பாலிக்கா காத்துள்ளதொரு இலக்குக்கான திட்டமிடலைப் பார்த்தாச்சு ; இதோ பத்தே  நாட்களின் தூரத்தில் நிற்கும் ஏப்ரலின் இதழ்கள் பற்றிய preview களுக்குள் புகுந்திடலாமா இனி ?

காத்துள்ளது ஒரு "5 இதழ் மாதம்" என்பதே முதல் highlight ! சில பல ஆண்டுகளுக்குப் பிற்பாடு மறுவருகை செய்யக் காத்திருக்கும் "டேஞ்சர் டயபாலிக்" இந்த மாதத்தின் நாயகர்களுள் பிரதானமானவர் என்பது இன்னொரு highlight ! வழக்கமாய் உலகெங்கும் இவரது சாகசங்கள் வெளியாவது அந்த மாமூலான - பக்கத்துக்கு 2 panel பாணியில் தான் ! ஆனால் டயபாலிக்கின்  தற்போதைய ஆடுகளமான நமது சந்தா D வெளிவருவது பெரிய சைசில் என்பதால், மண்டைக்குள் குடைச்சல் எனக்கு ! ஒரே சீராய் ; ஒரே (பெரிய) சைசில், தொடர்ந்து எல்லா மாதங்களும் இந்த முயற்சி தொடர்ந்திட்டால் தேவலியே என்பதே அந்த குடைச்சல் ! டயபாலிக்கை மட்டும் சின்ன சைசுக்கு கொண்டு போனால், கடைகளில் அந்த புக் கண்ணில்படும் வாய்ப்புகளும் குறைந்து போகுமே என்று பயந்தேன்! விளைவு ? முகமூடிக்காரரின் கதையையும் நமது தற்போதைய அளவுக்கேற்ப ரீசைஸ் செய்து பார்த்தால் என்னவென்று தோன்றியது ! அவ்விதம் செய்து பார்த்த போது - "அட..இதுகூட நல்லாத்தான் இருக்கே !!" என்று தோன்றியது ! ஆனால் படைப்பாளிகளின் சம்மதங்களின்றி ஒரு ஆணியும் பிடுங்க சரிப்படாதென்பதால், மாற்றியமைக்கப்பட்ட அந்த மாதிரிப் பக்கங்களை சற்றே தயக்கத்தோடு மின்னஞ்சலில் இத்தாலிக்கு அனுப்பிவிட்டு, "இது சுகப்படுமா ?" என்று வினவி வைத்தேன் ! அடுத்த 15 நிமிடங்களுக்குள் கிட்டிய உற்சாகத் துள்ளலுடனான பதிலைப் படித்த போது வாயெல்லாம் பல்லாகியது எனக்கு !! அமர்க்களமாக உள்ளது !! இந்த புது சைசுக்கு ஓ.கே. !! அப்புறம்  reset செய்த கோப்புகளை எங்களுக்கும் அனுப்பி வையுங்கள் !!" என்றிருந்தது அந்த மின்னஞ்சல் !! பிறகென்ன - தட தடவென பணிகள் நடந்தேறியது "அலைகடலில் அதகளம்" இதழினில் ! இதோ அதன் (ஒரிஜினல்) அட்டைப்பட முதல் பார்வை :
கதைத் தேர்வின் போது நான் முதலில் நோட்டமிட்டது, எங்கேனும் ''இன்னிக்குச் செத்தால்..இன்னிக்கே பால்' ரகக் கிழவிகள் உலா வருகிறாள்களா என்பதையே ! புண்ணியத்துக்கு அவ்விதம் யாருமில்லை & கதையும் செம crisp ! So சென்ற முறையின் விமர்சனங்கள் இம்முறை டயபாலிக்காரைத் தாக்கிடாதென்ற நம்பிக்கை நிறையவே உள்ளது எனக்கு ! இதோ உட்பக்கப் preview :
And வழக்கம் போல் இத்தாலியிலுள்ள 'டயபாலிக் வாசக வட்டம்' 40 புக்குகளுக்கு ஆர்டர் தந்துள்ளது ! நாம் படைப்பாளிகளோடு காண்டிராக்ட் போட்ட மறுவாரமே அவர்களுக்கும் தகவல் தெரிந்திருக்க, அப்போதே விசாரித்து விட்டார்கள் - "எங்காளை எந்த மாதத்தில் களமிறக்க உத்தேசம் ?" என்று !! "ஏப்ரல்" என்று நான் ஏற்கனவே சொல்லி வைத்திருக்க, அதனை ஞாபகம்  வைத்திருந்து இத்தாலியின் தற்போதைய சிரம நிலையிலும் ஆர்டர் செய்துள்ளனர் ! டயபாலிக்கின் தீராக் காதலர்கள் !!

தொடரவுள்ள நாட்களில் ஏப்ரலின் இதர இதழ்களை preview செய்திடவுள்ளேன் ! நாளைய பொழுது நமக்குக் காத்திருக்கும் ஊரடங்கின் ரிசல்டினை அறிந்திடும் ஆவலோடு இப்போதைக்கு நடையைக் கட்டுகிறேன் ! நாளைய பொழுது நல்லதாய்ப் புலர்ந்திடவும், நாமிங்கே ஜாலியாய்ப் பொழுதைப் போக்கிடவும் கொடுப்பினை அமைந்தால் - nothing like it !!

Bye all..see you around !! Have a Safe Safe Sunday & more !!

பி.கு. :

# 1 : இத்தாலியிலும், பிரான்சிலும் கொரோனாவின் தாக்கம் ரணகொடூரமாய் இருப்பினும், நமது படைப்பாளிகள் நலமே !! வழக்கம் போலவே அவர்களது படைப்புகள் வெளிவந்த வண்ணமுள்ளன ! நம்மோடு தொடர்பிலிருக்கும் உரிமைகள் சார்ந்த பிரிவினர் மாத்திரம் வீட்டிலிருந்தே பணியாற்றுகின்றனர் ! 

# 2 : I repeatமார்ச் 31-ல் நிலவரத்தின் தன்மையைப் பொறுத்தே ஏப்ரலின் புக்குகளை அனுப்பிடுவது பற்றிய தீர்மானத்துக்கு வருவோம் ! புதுவையில் அறிவிக்கப்பட்டுள்ள மாதயிறுதி வரையிலான  ஊரடங்கு ; தமிழக எல்லை மூடல்கள் போன்றவையெல்லாம் தளர்த்தப்படுவதோ /நீட்டிக்கப்படுவதோ நமக்கொரு வழிகாட்டியாக இருந்திடும் ! So அதன் பொருட்டு மேற்கொண்டு அலசல்கள் வேண்டாமே - ப்ளீஸ் ? 


தீர்மானமே தீர்வு !

நண்பர்களே,

வணக்கம். கொரோனா எனும் இந்த கொடுங்கோலன் தலைவிரித்தாடும் இந்த நாட்களில், தற்காலிகமாய் காமிக்ஸ் அனுப்பும் வாடிக்கைகளுக்கொரு break தாருங்களேன் என்று சமூக அக்கறையின் பேரில் நண்பர்கள் கோரிக்கை வைத்துள்ளனர் ! நிஜமாக சிந்திக்கச் செய்திடும் அபிப்பிராயம் அது !! ஆனால் வாசகர்களிடம் பல லட்சங்களை முன்பணமாக வாங்கி, அதனை கதைகளிலும், காகிதத்திலும் இருப்பாக்கி வைத்திருக்கும் நிலையில் - நானாய் எடுக்கும் ஒரு தீர்மானத்தை எத்தனை பேர் ஏற்றுக் கொள்வார்கள் என்பது anybody 's guess ! இங்கே வருகை தரும் நண்பர்களையும், அவர்களது கனிவான அணுகுமுறைகளையும்  தாண்டி, வாசகர்களின் கோப முகங்களையும் ரெகுலராய்ப் பார்த்திடும் துரதிர்ஷ்டம் உண்டு எங்களுக்கு ! ஒரு கூரியர் கிடைக்காது போனால் கூட "consumer கோர்ட்டுக்குப் போகப் போகிறேன் !" என்று கண்சிவப்போர் கணிசம் !  ஒரேயொரு புக் மாறிப் போனாலும், போனில் நம்மவர்களைக் காட்டுக்கத்தலோடு காய்ச்சி எடுப்போரும் எக்கச்சக்கம் ! So ஒரு தற்காலிக கடைமூடல் குறித்து நானாய் ஒரு முடிவெடுத்து விட்டு, நம்மாட்கள் நித்தமும் சாத்து வாங்கிடக் காரணமாகிட விரும்பிடவில்லை ! இம்மாத இதழ்கள் ஏற்கனவே அச்சாகி இருக்கும் நிலையில் அவற்றை அடுத்த வாரத்தில் அனுப்பிடுவோம் ! தொடரும் மாதங்களை அணுகிடுவது குறித்து அரசின் வழிகாட்டல்களை பின்தொடருவோம் என்பதே இந்த நொடியில் எனக்குள் தோன்றும் எண்ணம் ! ஆனால் வாசகப் பெரும்பான்மையின் தீர்வு / தீர்மானம் என்னவோ, அதுவே நமதாகவும் இருந்திடும் ! நிச்சயமாய் நாமிப்போது சந்தித்திருப்பது ஒரு சோப்ளாங்கி வில்லனை அல்ல எனும் போது - இயன்ற முன்ஜாக்கிரதைகள் சகலமும் உதவிடும் என்பதில் ஐயமில்லை !  

Given a choice - நிலவரம் சீராகும் வரை அனைத்தையும் hold-ல் போடுவது சரியே என்றே தோன்றுகிறது ; ஆனால் அந்த choice என் கையில் இருப்பதாய் சூழல் இல்லையே என்பதே எனது சிக்கல் ! உங்களின் தீர்ப்பே இப்போதைய தீர்வு guys ! Please do let me know if you are o.k with us announcing a temporary halt to operations ! 

Wednesday, March 18, 2020

ஆராய்ச்சியோடு ஒரு காலை !!

நண்பர்களே,

வணக்கம் ! ரூல்ஸை மதிக்க நினைப்பவன் என்பதால் -பின்னூட்ட  எண்ணிக்கை 300-ஐத் தாண்டிவிட்டதால் உபபதிவோடு  கடும் ஆராய்ச்சிக்கு மத்தியிலும் இதோ ஆஜர் !! "அட...அப்புடி என்னப்பா புண்ணாக்கு ஆராய்ச்சி..? கொரோனா வைரசுக்கு மருந்து-கருத்து கண்டுபிடிச்சிட்டு இருக்கியா ?" என்று தோன்றலாம் தான் ; ஆனால் இதுவோ வேறொரு ஆராய்ச்சி !! அதற்கு முன்பாய் பிறந்த நாள் வாழ்த்துக்களை இங்கும், FB-ல் ; வாட்சப்பில் எனச் சொன்ன / சொல்லவுள்ள / சொல்ல மறக்கவிருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் அநேக நன்றிகள் !! விடிந்து முழித்து போனைப் பார்க்கவே பயமாகயிருந்து வரும் இந்தச் சமீபத்து நாட்களில், காலங்கார்த்தாலே பூங்கொத்துக்களையும், சாக்லேட்களையும், தடித்தடியான கேக்குகளையும் போனின் ஸ்க்ரீனிலாவது  பார்க்க முடிவதில் ஹேப்பி !!

அப்புறம் அந்த ஆராய்ச்சி மேட்டர் ? என்கிறீர்களா ? வேறொன்றுமில்லை guys - "ஏழு கழுதை வயசாச்சு ; இன்னும் என்ன பிறந்தநாள் வேண்டிக்கிடக்கு ?" என்று 'அன்போடு' வினவிடவும் நண்பர்கள் இல்லாது போக மாட்டார்கள் அல்லவா ? அவர்களது அந்த "வாழ்த்துக்களின்" பின்னணியில் இருக்கக்கூடிய விஞ்ஞானபூர்வ உண்மைகளை ஆராய்ந்தால் என்னவென்று நினைத்தேன் !! அது தான் - 'ஒரு கழுதை வயசு என்றால் எவ்வளவு ?' என்பது !! 

நான் கூட கழுதைகள் எட்டோ, பத்தோ ஆண்டுகளில் மண்டையைப் போட்டு விடும் போலும் ; அதனால் தான் '7 கழுதை' வயதென்ற அடையாளத்தை முதுமையோடு சம்பந்தப்படுத்தியிருப்பார்கள் போலும் என்று நினைத்தேன் ! ஆனால் கூகுளில் தேடினால் surprise ..surprise ...!

*காட்டில் வசிக்கும் கழுதைகள் சராசரியை 25 - 30 ஆண்டுகள் ஆயுள் கொண்டவையாம் !

*வீட்டில் வசிக்கும் (அதாவது சிலபல பிறந்தநாள் போஸ்டர்களை விழுங்கியபடியே ஊருக்குள் சுற்றும் பிரகஸ்பதிகள் ) கழுதைகள் சராசரியாய் 30 - 50 ஆண்டுகள் வாழ்வதுண்டாம் ! இவை செழிப்பான தேசத்துப் பிரஜைகளை இருக்கும் பட்சத்தில் !

*அதே கழுதைகள் கஷ்ட ஜீவன தேசங்களில் வசிக்கும் பட்சம் வெறும் 12 - 15 ஆண்டுகளே ஜீவித்திருக்குமாம் !

*இங்கிலாந்தில் இருந்ததொரு கழுதைசார் 55 ஆண்டுகள் வரைத் தாக்குப்பிடித்து உள்சக சாதனை செய்துள்ளாராம் ! அவருக்கு பெயர் கூட சூட்டியுள்ளனர் Eeyore என்று !!

ஆக மேற்படி ஆழமான ஆராய்ச்சியின் பலனாய் நான் அறிந்த தகவல்கள் இதோ :

இந்தியா இப்போது பொருளாதார வல்லரசு ; Yes பேங்குக்கு 'நோ' சொன்னாலும் தாக்குப்பிடிக்கும் தேசம் என்பதால், இங்குள்ள ஈயோரேக்களுக்கு 30-50 ஆண்டு ஆயுள் என்று எடுத்துக் கொண்டால் - So I am only a touch over one கழுதை's வயசு !! ஹை ஜாலி...ஜாலி..!! 

இங்கிலாந்தின் அளவுகோல்களைக் கையில் எடுப்பதாயின் - எனக்கு இன்னும் ஒரு கழுதை வயசு கூட ஆகலிங்க !! மெய்யாலுமே !! சூப்பரப்பு...சூப்பரப்பு..!! So ஷூகர் ஏறப்போகுதுன்னு பயமின்றி இன்றொரு நாளாவது ஜமாய்க்கலாமோ ? Thinking !!

அறிவுச்செறிவூட்டும் இந்த ஆராய்ச்சியில் நீங்களும் பங்கெடுத்து அவரவரது அகவைக் comparison-களை இங்கே பகிர்ந்திடலாமே ?! இனிங்காட்டி யாராச்சும் "ஏழு கழுதை வயசாகுது...இன்னும் பொம்மை புக் படிச்சிட்டிருக்கியே ?!" என்று சொல்லட்டும் - வைச்சுக்கலாம் கச்சேரியை !! சும்மா ரமணா ஸ்டைலில் "கழுதை stats" எடுத்துவிட்டால் சப்தநாடியும் ஒடுங்கிப் போகாது கேள்வி கேட்போருக்கு ? யாருகிட்ட ..?

Before I sign out - கொசுறாய் : 

வாசகர்ஜி 1 :  ஹைய்யோ... ஹைய்யோ... நினைச்சாலே சிப்பு சிப்பாய் வருது !!

வாசகர்ஜி 2 : யாரை நினைச்சு..? எதுக்கோசரம் ?

ஜி 1 : வேற யாரை ...? இந்த மொசைக்மண்டை  எடிட்டரை நினைச்சுத் தான் !!

ஜி 2 : இப்போ என்ன புதுசா ?

ஜி 1 : அறிவிக்காத "கென்யா' வராததுக்கே ரவா பாயசம் தேறுச்சே....இதோ ஏப்ரலில் அறிவிச்சதொரு புக்குக்குப் பதிலா, புதுசா ஒரு பொம்மை புக்....அதுவும் ஐஞ்சே நிமிஷத்தில் படிச்சு முடிக்கக்கூடியதைப் போடப் போறாராமே...!! பருப்புப் பாயாசமோ ? சேமியாவோ ? நினைச்சேன்..சிர்ச்சென் !! ஏப்ரல் முதல் தேதிக்கு ரெம்போ தூரமில்லையே...!! 

Bye guys !! See you around !! And thanks again !!


மேற்கண்ட எல்லாமே ஆன்லைனில் / நேரடியாக வாங்கிடலாம் guys !! 

Saturday, March 14, 2020

இது தோட்டாக்களின் வேளை ..!

நண்பர்களே,

வணக்கம். Old habits die hard என்பார்கள் ....! அது யாருக்குப் பொருந்துமோ இல்லியோ - நமக்கு அக்ஷர சுத்தமாய்ப் பொருந்தும் என்பேன் ! So வழக்கம் போல பீச்சாங்கைப் பக்கமாய் இண்டிகேட்டரைப் போட்டுக்கொண்டு, சோத்தாங்கையை காட்டிக்கிட்டு, நேராய் ஜிலோன்னு ஓடுது வண்டி !! By now இதெல்லாம் யாருக்குமே ஆச்சர்யம் ஏற்படுத்தும் சமாச்சாரமாக இருப்பதில்லை என்பதால் - ஈரோடு 2020-ன் இதழ் # 2 பற்றித் தான் பேசுகிறேன் என்பது புரிந்திருக்கும் !! ஒருபக்கம் கரோனாவின் கொடூரம் உலகையே உலுக்கிக் கொண்டிருக்க - நாமோ as normal திட்டமிட்டு வருவதை எண்ணி கொஞ்சம் நெருடுகிறது தான் ; ஆனால் ஆண்டவன் அருளோடு இந்தச் சிக்கல் சீக்கிரமே விலகிப் போகுமென்று நம்புவதைத் தாண்டி வேறெதுவும் செய்திட இயலாதே ?! So the show goes on !!

முதலில் கையைக் கொடுங்கள் guys !! ஏனென்கிறீர்களா ? டெக்சின் அட்டைப்படத் தொகுப்பினை (இப்போதைக்காவது) வேண்டாமென்று சொல்லி வைத்த நீங்கள் ஒவ்வொருவருமே ஒரு குட்டியூண்டு நோஸ்ட்ரடாமஸ் தான் !! நாம் அதை வெளியிடத் தேர்வு செய்திருந்தாலுமே சாத்தியப்பட்டிராது போலும் - simply becos மிலன் நகரிலிருந்து செயலாற்றும் போனெல்லி நிறுவனத்திலும் கிட்டத்தட்ட work from home தான் !  ரொம்ப ரொம்ப அத்தியாவசிய வேலைகளைத் தாண்டி வேறெதுவும் அடுத்த கொஞ்ச வாரங்களுக்காவது நடவாது என்பதே சூழல் ! So நாம் எப்படியும் தேடல்களை வேறு பக்கமாய்த் தொடர்ந்திருக்கத் தான் வேண்டிப்போயிருக்கும் ! அந்த மட்டுக்கு உங்களின் பளிச் தீர்ப்புக்கு நன்றி சொல்லிடலாம் !

மாற்றாய் நான் முன்மொழிந்த ஆல்பங்களுள் "கென்யா" வுக்கு கிட்டிய செம ஆதரவு ஒரு pleasant surprise என்றே சொல்லுவேன் ! இங்கே எனது தயக்கங்கள் ஸ்கேன்லேஷனில் சுட்ட வடையின் தரத்தோடு நாம் போட்டியிட இயலுமா ? என்பதே கிடையாது ! As always - நம் பாணியில் ; நம் பணிகள் இருந்திடும் என்ற நம்பிக்கை என்னுள் உண்டு ! ஆனால் ஈரோடு மாதிரியானதொரு உச்ச ஆர்வக்களத்துக்கு அத்தியாவசியப்படக்கூடிய ஒரு freshness factor இங்கே குறைச்சலாகி நிற்குமோ என்ற நெருடலே மாத்திரமே என்னுள்  ! நிஜத்தைச் சொல்வதானால்,  இரத்தப் படல ரிலீஸ் முதலாகவே ஈரோட்டின் மீதான உங்களின் எதிர்பார்ப்புகள் ஒரு  notch உசக்கே சென்றிருப்பது அப்பட்டம் ! So ஆண்டுக்கொரு முறை, ஏகப்பட்ட உற்சாகத்தோடு ஆஜராகும் உங்கள் ஒவ்வொருவரையும் கர்ணங்கள் அடித்தாவது திருப்திப்படுத்த வேண்டுமே என்ற பொறுப்பும் நமக்குக் கூடி நிற்பதாய் என்னுள் ஒரு உணர்வு ! So படு ஆர்வமாய் நீங்கள் "கென்யா"க்கு கைதூக்கி நிற்பினும் ; கதை / மொழியாக்கம் என எல்லாமே ரெடியாக இருப்பினும் - எனது மண்டை மட்டும் வேறெங்கெங்கோ பயணித்துக் கொண்டிருந்தது !! அதற்குக் காரணம் இல்லாதில்லை தான் !! புதுசாய்த் தேடல்கள் துவங்கிய நாள் முதலாய்க் கண்ணில் பட்டு வரும் ஆல்பங்கள் - "ஹை...ஜாங்கிரி...அடடே மைசூர்பாகு...ஹைய்யோ...பால்கோவா ! ; ஆத்தாடியோவ் அதிரசம் .." என்ற ரீதியில் கடைவாயோரம் ஜல ஜாலம் செய்து வர, சபலங்களோடு செம லடாய் ! And without more ado - here we go :

"ஒற்றை நொடி..ஒன்பது தோட்டா...!

2015-ன் அட்டவணை என்று ஞாபகம் ; இந்த சாகசத்தை ஆர்வக் கோளாறின் மிகுதியில் அறிவித்திருந்தோம் !! In fact அந்தாண்டின் முதல் க்வாட்டரிலேயே கதையை உங்கள் கண்ணில் காட்டிட வேண்டுமென்ற ஆசையில் ஆங்கில மொழிபெயர்ப்பையும் சூட்டோடு சூடாய்ச் செய்து வாங்கியிருந்தேன் !! ஆனால் அது one shot அல்ல - நீளவிருக்கும் ஒரு தொடரின் முதல் பாகம் மாத்திரமே என்பது புரிந்த போது அசடு வழிய ஜகா வாங்கினேன் !! நாம் கிண்டாத ஆர்வக்கோளாறு அல்வாக்களா ? வழியாத அசடுகளா ? என்றபடிக்கே பணிகளுக்குள் மூழ்கிவிட்டிருந்தாலும், இந்தத் தொடர் மீது ஒரு கண் தொடரவே செய்தது !!   ஆண்டுக்கொரு பாகம் வீதம் - இது மூன்றாண்டுகள் ஓட்டமெடுக்கும் என்று படைப்பாளிகள் சொன்னார்கள் ! அப்புறம் திட்டமிடல் மாற்றம் கண்டது ; மூன்று நான்காகி, பின்னே நான்கு ஐந்தாகியது !! So 2018-ல் ஒரு அட்டகாச 5 பாகத் தொடராய் இது நிறைவுற்ற சமயமே எனது ரேடாரினில் இது சல சலத்து நின்றது !! கதையினை முழுமையாய்ப் பரிசீலித்த போது ; இன்டர்நெட்டில் இதற்கான விமர்சனங்களை ஆராய்ந்த போது ; நம் மொழிபெயர்ப்பாளரின் தயவில் கதைச் சுருக்கங்களை தயார் செய்து வாசித்த போது ஒரு டைனமைட் குவியல் கைக்கெட்டும் தொலைவில் பதுங்கிக்கிடப்பது புரிந்தது !! பற்றாக்குறைக்கு அந்த முதல் பாகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பை வாசிக்க நேரம் எடுத்துக் கொண்ட போது - அமெரிக்க ஜனாதிபதி ஜான்.F கென்னெடியின் கொலை விவகாரத்தோடு பயணிக்கும் high voltage த்ரில்லர் கதையில், shades of இரத்தப் படலம் கூட தென்பட்டது போலிருந்தது ! So இந்தத் தொடரை நிச்சயமாய் நம் வாசிப்புகளுக்கு சீக்கிரமே உட்படுத்திட வேண்டுமென்ற குடைச்சல் தலைக்குள் குடியேறிக் கொண்டது !! ஆனால் நமது மொழிபெயர்ப்பாளர் சன்னமாய்த் தந்திருந்த பில்டப் மட்டும் உள்ளுக்குள் பட்டாம்பூச்சிகளையும் கட்டவிழ்த்து விட்டிருந்தது !! "இதுவரைக்குமான கதைகளுள் இந்த வீரியத்தில் ஒரு ஸ்கிரிப்ட் நான் பார்த்ததில்லை ; வசன நடையினை பிரெஞ்சுக் கதாசிரியர் செதுக்கியிருக்கும் பாணி லேசு பாசில்லை !! இயன்றமட்டிலும் நான் பணி செய்துள்ளேன் ; தமிழுக்கு எழுதும் நபரையுமே  ரொம்பவே கவனமாய்க் கையாளச் சொல்லுங்கள் !!" என்பதே அவர் தந்த அட்வைஸ் !! And அந்த முதல் பாகத்தின் ஆங்கில ஸ்கிரிப்டை வாசிக்கும் போதே நமது மொழிபெயர்ப்பாளரின் புலமையும், ஒரிஜினல் பிரெஞ்சுப் பதிப்பின் வீரியமும் பிடரியில் அடித்தார் போல தென்பட்டது ! இதெல்லாமே கிட்டத்தட்ட நாலைந்து ஆண்டுகளுக்கு முன்பே என்னுள் பதிவாகி விட்டிருந்த நினைவு என்பதால் இந்தத் தொடரின் நினைவு எழும் போதெல்லாமே "HANDLE WITH CARE !!" என்ற அட்வைசும் சேர்ந்தே கைகோர்த்து வரும் ! So 2019-ன் ஈரோட்டு ஸ்பெஷல் இதழினை அறிவிக்கவிருந்த சமயம் "ஒற்றை நொடி.ஒன்பது தோட்டா" தான் முதல் தேர்வாகியிருக்க வேண்டியது !! ஆனால் எனது சுகவீனம் ; அதற்கு முன்பாய் பராகுடாவின் கனத்த களத்தின் பணிகள் ; லோன் ரேஞ்சரின் நூற்றிச் சில்லறைப் பக்கங்களின் பணிகள் என்று நாக்குத் தொங்கி அமர்ந்து கிடந்த வேளையில், இந்த டைனமைட்டின் மீது கைவைக்க பயமாக இருந்தது !! So comparatively easier களமான "பிஸ்டலுக்குப் பிரியாவிடை" இதழினைத் தேர்வு செய்ய நேர்ந்தது !! (ஆனால் கொடுமை என்னவெனில் - அதுவும் செம tough பணியாக இறுதியில் அமைந்தே போனது !!) So மொழிபெயர்ப்பினில் ஈடு தந்திடப் பயந்து நான் ஒதுக்கிய இரண்டாவது ஆல்பமாய் "ஒ.நொ.ஒ.தோ" வைச் சொல்லலாம் ! (முதலாவது பற்றி பின்னொரு நாளில்..) So இம்முறை டெக்சின் அட்டைப்பட தொகுப்பெனும் 'நோகா நோன்புக்கஞ்சு'க்கு நீங்கள் "நோ" சொன்ன கணமே - "மாப்பு...செல்லம் கொஞ்சியது போதும் ; மேல் வளைக்கும் நேரம் புலர்ந்து விட்டது !!" என்று உள்ளுக்குள் மணியடித்தது ! So தொடருக்கான உரிமைகளை ஊர்ஜிதம் செய்து கொள்ள இந்த வாரத்தை பயன்படுத்திக் கொண்ட கையோடு - இதோ அறிவிப்போடு ஆஜர் !!
ஓவராய் பில்டப் தருவதைக்காட்டிலும், கதையின் outline பற்றிச்  விளம்பரங்களோடே சன்னமாய் தந்துவிட்டால் வேலை சுலபம் என்று நினைத்தேன் !! So மேலுள்ள விளம்பரத்தோடு கதையின் one liner -ம் இருக்கிறது !! நான் மேற்கொண்டு ஏதேனும் சொல்லிக்கொள்வதானால் - ஒரேயொரு விஷயம் மாத்திரமே இருந்திடக்கூடும் : ஜேம்ஸ் பாண்ட் 2 .0 வண்ண அவதாரத்தில் ஆக்ஷனில் கதக்களி ஆடிடுவதாய் நாமெல்லாம் சிலாகிக்கிறோமல்லவா ? இந்த 5 பாக ஆல்பம் மட்டும் நல்லபடியாய் வெளிவந்து, உங்களை எட்டிடட்டும்,,,,அதன் பின்னே " ஆக்ஷன்.....high voltage த்ரில்லர் " என்ற வார்த்தைகளுக்கு ஒரு புது விளக்கமே நாம் தேட வேண்டி வரலாம் !! முதல் பக்கத்தில் டாப் கியரைத் தொடும் வண்டி, அடுத்த 270 பக்கங்களுக்கும் அமெரிக்காவின் காடு..மேடு...பள்ளம்.. பாலைவனம்...பெருநகரம் என்று தெறிக்க விடுகிறது !! கதையின் ஸ்பீட் அசாத்தியமோ அசாத்தியம் தான் ! அப்புறம் அந்த ஓவியங்கள்.....Ufffffffffff !!சான் பிரான்சிஸ்கோ நகரினை இதுவரையிலும் நேரில் பார்த்திரா நண்பர்கள், இந்த கரோனா வேளைகளிலும், அறுநூறு ரூபாய் செலவில் SFO விற்கொரு ட்ரிப் அடித்து விடலாம் என்பேன் !! நகரின் இண்டு இடுக்கையெல்லாம் சித்தரிக்க அசுரத்தனமாக உழைத்துள்ளனர் - ஓவியரும், கலரிங் ஆர்டிஸ்டும் !! அது மாத்திரமல்ல - அமெரிக்கப் பாலைவனங்கள்; சிறு நகரங்கள் என ஓடிடும் கதையோடு, கையில் ஒரு காமராவோடே ஆர்ட்டிஸ்ட் பயணித்திருப்பாரோ என்னவோ - அப்படியொரு தத்ரூபம் !! As a package - "ஒற்றை நொடி..ஒன்பது தோட்டாக்கள்" - கதாசிரியர் ; ஸ்கிரிப்ட் writer ; ஓவியர் ; கலரிங் ஆர்ட்டிஸ்ட் - என்ற அதகள ஆற்றலார்களின் கைவண்ணமிது ! So பேனா பிடிக்கும் தைரியத்தை வரவழைத்த மறு நொடியே என்னுள் சந்தேகங்களில்லை - இதுவே இந்தாண்டின் ஈரோட்டு highlight என்று !! 

And தொடர்வது உங்களுள் எழக்கூடிய கேள்விகளை யூகித்து பதில் தரும் படலம் - to make it easier for you & on me !!

1 .அமெரிக்க க்ரைம் த்ரில்லர் கொஞ்சம் 'அடல்ட்ஸ் ஒன்லி' கதைக்களத்தோடு இருப்பதால் தயங்குவதாகச் சொன்னியே...அப்புறம் எப்புடி ??

அது இதுவல்ல guys ..and இது அதுவுமல்ல !! நான் குறிப்பிட்ட கதையானது ஒரு அமெரிக்கப் புலனாய்வை மையமாய்க் கொண்டதொரு அமெரிக்கப் படைப்பு !! ஆனால் இதுவோ ஒரு அமெரிக்கப் புலனாய்வை மையமாய்க் கொண்டதொரு பிரான்க்கோ-பெல்ஜியப் படைப்பு !! கதை அரங்கேறும் மண் என்னவோ அமெரிக்கா தான் எனினும், இரு கதைகளுக்கும் மத்தியில் பெருவாரியான வேறுபாடுகள் உண்டு ! And the 'other one' is still on the Wait list !!

2 .Why "ஒ.நொ.ஒ.தோ." ?

ரொம்ப காலமாகி விட்டதல்லவா ஒரு டாப் க்ளாஸ் துப்பறியும் ஆல்பத்தை ரசித்து ? சொல்லப் போனால் - ரிப்போர்ட்டர் ஜானியும், CID ராபினும் தம்மால் ஆன மட்டுக்கு இந்த ஜானரின் ரசிகர்களைத் திருப்திப்படுத்த முனைந்து வந்தாலும் - யானைப் பசிக்கு அவை சோளப் பொரிகளே என்பேன் !! And 270 பக்கங்கள் எனும் போது கிட்டத்தட்ட ஒரு 2 மணி நேர சினிமாவுக்கான screenplay இங்குள்ளது & அமெரிக்க போலீசின் யதார்த்த புலனாய்வு பாணிகளைக் கண்ணில் பார்த்த திருப்தி கிட்டுகிறது !! அப்புறம் இந்த இதழைப் படித்த பின்னே நாம் இருப்பது இந்தியாவில் தான் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள கொஞ்ச நேரம் ஆகிடும் பாருங்களேன் !! 

3 .கென்யா ????

2021-ன் அட்டவணையில் for sure !! யாரேனும் existing நாயகர்களை தற்காலிகமாகவாவது அன்போடு வெளியே நிற்கச் செய்து விட்டு - அந்த இடத்தினில் இந்த 5 பாக ஆல்பத்தை நுழைத்து விடுவோம் !! பணமும், உழைப்பும் நிறையவே அதனுள் துயின்று வருவதால் இனியும் தள்ளிப்போட சாத்தியமாகாது !! So  "கென்யா" வுக்கென குரல் தந்த நண்பர்கள் அனைவருக்கும் மெகா நன்றிகள் & ஒரு வேண்டுகோள் - கொஞ்சமே கொஞ்சமாய்ப் பொறுமை காத்திட !

4.சரி...ஈரோட்டு Specials-க்கான  முன்பதிவு விபரங்களைக் காணோமே ? 

"Ars Magna" (ஒரு புதையலின் பாதையில்...!) + "ஒற்றை நொடி..ஒன்பது தோட்டா" எனில் சுமார் ரூ.900 பட்ஜெட் வந்திடும் !! இந்த டைட்டான தருணத்தில் இது கொஞ்சம் ஓவரோ ? என்ற பயம் தலைதூக்குகிறது ! Maybe 'ஒன்றே நன்று !' என்று நீங்கள் அபிப்பிராயப்படுவீர்களெனும் பட்சத்தில் "Ars Magna"வை ஜனவரிக்கு - 2021 சென்னைப் புத்தக விழாவுக்கு மாற்றல் செய்திடலாம் ! ஜனவரி 2021-ல் இரு செம landmarks காத்திருப்பதால் - ஸ்பெஷல் இதழ்கள் அங்கே பொருந்திடும் இயல்பாய் !! உங்களின் தீர்ப்புகள் ப்ளீஸ் ? 

'ஒன்றே மதி' என்று நினைக்கும் பட்சத்தில் "எண் ஒன்றை அழுத்தவும்" !!

"ஒன்று மட்டும் பற்றாது" என்று எண்ணும் பட்சத்தில் - "1 + 1 = 2 " என்ற விஞ்ஞானபூர்வ பதிலாகப் பதிவிடலாம் ! 

பதில்களுக்கேற்ப பதிவுத் தொகையினை அறிவித்திடலாம் ! So your thoughts please ?

5. ஒய் திஸ் தடுமாற்றம் ? அறிவிப்பில் ஏன் வளவள கொள கொளா ? 

கரோனாவோ இல்லியோ - பொதுவாய்ப் பணப்புழக்கம் செம மந்தமாய் இருப்பது இன்றைய யதார்த்தம் - at least எனக்குத் தெரிந்த மட்டிலாவது ! நமது புத்தக வசூல்கள் மட்டும் தான் என்றில்லை ; நமது அச்சகத்தில் அச்சிட்டுச் செல்லும் இதர பார்ட்டிகள் ; நம்மிடம் மிஷினரி வாங்கிப் போகும் பார்ட்டிகள் ; வேற்றுத் தொழில்களில் இருக்கக்கூடிய நண்பர்கள் என்று ஒருத்தர் பாக்கியின்றி அத்தனை பேருமே முகாரியில் தான் பாட்டுப் படிக்கின்றனர் ! கோவையில் ஒரு பார்ட்டி சிறு அளவிலான பேக்கரிகளுக்கான ரெடிமேட் டப்பாக்களை ஜூனியரின் பொறுப்பில் அச்சிட்டு வாங்கிப் போவார் ; டாணென்று 30 நாட்களில் அடுத்த ஆர்டரோடு தேடி வருவார் ! ஆனால் இப்போதோ  ஜனவரியில் செய்து வாங்கிய டபபாக்களே இன்னும் தேங்கிக் கிடக்கின்றன என்கிறார் !! பொதுவாய் ஜனவரியெனும் போது புத்தாண்டு ; பொங்கல் என பேக்கரிகளிலாவது விற்பனை வேகமாய் இருந்திடுமென்று எதிர்பார்ப்பது இயல்பு தானே ? ஆனால் அதுவே இம்முறை சொதப்பல் என்கிறார் ! இது போல் காதில் விழும் கஷ்ட செய்திகள் கணிசம் ! So இந்த நேரத்தில் கொஞ்சம் அடக்கி வாசித்தல் நலமோ ? என்று நினைக்கத் தோன்றியது !! அவ்வளவே !!


தவிர, இன்னொரு சுயநலக் காரணமும் இல்லாதில்லை !! 270 பக்க மொழிபெயர்ப்பு முழியைப் பெயர்க்கக் காத்துள்ள சூழலில், ARS MAGNA-வின் 145 பக்க ப்ராஜெக்டை நமது கருணையானந்தம் அவர்களிடம் ஒப்படைக்க எண்ணியிருந்தேன் ! அவரோ, 'இது எனக்கு சுகப்படாத பாணி ; நீயே இதை பார்த்துக்கோயேன் !' என்று பந்தை என்னிடமே திருப்பிவிட்டார்  !! So ரெண்டையும் ஒரு சேர கட்டி இழுப்பதன் மலைப்பும் லைட்டாக என்று வைத்துக் கொள்ளலாம் ! ஆகஸ்டுக்கு இன்னமும் நாட்கள் உள்ளன தான் ; ஆனால் இடைப்பட்ட ரெகுலர் இதழ்களோடும் கட்டி உருண்டு கொண்டே இந்த நானூற்றுச் சொச்சம் பக்கங்களோடும் WWF நடத்துவது சுலபமில்லையே !! Of course - நண்பர்களிடம் ஒரு பணியை ஒப்படைக்கலாம் தான் ; ஆனால் "இது இப்டிக்கா வேணும் ; அது அப்டிக்கா வேணும் ; இதில் இது சரியில்லை ; அதில் அதை மாற்றுங்கோ !! இது இப்போவே வேணும் ; அது நேத்திக்கே வேணும் !" என்று நண்பர்களின் குடல்களை உருவுவதும் சரி ;  நீங்கள் ஆண்டாண்டாய்ப் பழக்கப்பட்டுள்ள நடைகளுக்கு நண்பர்களது final ஸ்கிரிப்ட்களை பட்டி-டிங்கரிங் பார்ப்பதும் சரி -  பெண்டைக் கழட்டிடும் பணிகளே  !! So, ஒரு ஆள்பட வேண்டிய சிரமங்களை இருவர் பட்டது போலாகிடுகிறதே என்ற நெருடல் மேலோங்குகிறது ! ஆகையால் ஸ்பெஷல் இதழ்களின் பணிகளுக்கு மட்டுமாவது இந்த இரண்டு கைச்சமையல் வேண்டாமே என்று நினைத்தேன் !! 

Before I sign out, மார்ச் இதழ்கள் வெளியானது ஏதோவொரு யுகத்தில் என்பது போலத் தெரிவது எனக்கு மட்டும் தானா ? என்று தெரியவில்லை ; ஆனால் இம்மாதத்து topsellers லிஸ்டில் "நில்..கவனி..வேட்டையாடு" & "எதிர்காலம் எனதே" இருப்பது மட்டும் தெரியும் !! Modesty - the surprise package !!!! அந்த சைசும், ராப்பரும், சிறிதளவிற்கு உதவியிருக்கக் கூடும் தான் ; ஆனால் சமீப மித வரவேற்புகளை மறக்கடிக்கும் விதமாய் பிளைசி & கார்வின் இம்மாதம் செயலாற்றியிருப்பது 2021-க்கான சீட்டை உறுதி செய்துள்ளது என்பேன் !! காத்துள்ள 2021 தேர்தலில் யாருக்கு சீட்டும், யாருக்கு அல்வாவும் காத்துள்ளதோ தெரியாது ; ஆனால் நம் மட்டில் 1 சீட்டுக்கு டிக் போட்டாச்சு - in emphatic fashion !!  

Bye guys ....have a great weekend !! See you around !!