Powered By Blogger

Sunday, March 29, 2020

பாரிஸ் படலம் !

நண்பர்களே,

வணக்கம். சிரமமான நாட்களே ; சந்தேகமே கிடையாது ! பொம்மை புக்குகள் ;  அவை சார்ந்த ஜாலி அரட்டை என்பனவெல்லாமே இப்போதைக்கு ரொம்ப ரொம்பத் தொலைவில் இருந்திட வேண்டிய சமாச்சாரங்களாய்த் தோன்றினால் நிச்சயம்  அதனில் தப்பில்லை தான் ! So இந்நேரத்துக்கு இங்கே ஆஜராகவில்லையா ? என்று கேட்பது குடாக்குத்தனம் என்பது புரிகிறது ! ஆனால் சும்மாவேனும் ஒருவாட்டி இங்கே தலைகாட்டி விட்டு ஒரு அட்டெண்டன்ஸ் போட்டுவிட்டுப் போனால்,`` அனைவரும் நலமென்ற சந்தோஷம் அனைவருக்கும் கிட்டும் தானே ? Please guys ?

அப்புறம் இந்தப் பதிவு, சில நாட்களுக்கு முன்பான பதிவின் தொடர்ச்சி என்பதை, புதிதாய் எட்டிப் பார்த்திடும் நண்பர்களுக்கு நினைவூட்டி விடுகிறேன் ! இங்கிருந்து வாசிப்பைத் துவக்கிடும் பட்சத்தில், வழக்கத்தை விடவும் கொஞ்சம் ஜாஸ்தியாய்க் குழப்பிடக்கூடும் ! இருக்கும் நோவுகள் போதாதென்று, நான் என் பங்கிற்குப் படுத்தியது போலாகிடக்கூடாதல்லவா ? ரைட்டு...இனி விட்ட இடத்திலிருந்து தொடர்கிறேன் :

அயல்நாடெனும் சமுத்திரத்தில் முதல் தபா பச்சைப் பிள்ளையாய் தவித்தது என்னவோ நிஜம் தான் ; ஆனால் ரொம்பச் சீக்கிரமே காலை ஊன்றிக்கொள்ளப் படித்திருந்ததால் சமாளித்து விட்டிருந்தேன் ! ஆனால் இரண்டாம் ஆண்டோ சற்றே வித்தியாசப்பட்டிருந்தது ! டின்னில் வரும் கொக்கோ -கோலாவை வாங்கிப்புட்டு அதை உடைக்கக் கூட வழி தெரியாமல் முழிபிதுங்கி நின்றது தான் 1985-ன் அனுபவமெனில், மறு வருஷமோ, கொக்கும், பெப்புசியுமாய்த் தான் தொழிலதிபர் வலம் சென்று கொண்டிருந்தார் !  என்னமோ அருணாக்கயிறு கட்டிய நாளிலிருந்தே கோட்டையும், சூட்டையும் போட்டுக் கொண்டு, ஆறடி உசர வெள்ளைக்காரர்களுடன் தொழில் பேசியவன் போலொரு தெகிரியம் தொற்றி விட்டிருந்தது ! புதுசு புதுசாய்க் கான்டிராக்ட் போடுவதெல்லாம் ஆமை வடையும், கெட்டிச் சட்னியும் வாங்குவதற்குச் சமானம் என்பது போலொரு துள்ளல் வந்திருந்தது நடையில் ! ஜெர்மானியர்களின் ஆங்கில உச்சரிப்பு ; பிரெஞ்சு தேசத்தவர்களின் பேச்சு முறை ; பிரிட்டிஷார் / அமெரிக்கர்கள் / இத்தாலியர்கள் இங்கிலீஷ் பேசும் பாணிகள் என சகலத்தையும் கேட்டுக் கேட்டு, அண்ணாச்சியின் இங்கிலீபீஸிலும் ஒரு மாற்றம் குடிகொண்டிருந்தது ! பற்றாக்குறைக்கு 1986-ன் பிராங்கபர்ட் புத்தக விழாவினில் பணிகள் எல்லாமே செம்மையாய் நடந்தேறியிருக்க, மண்டைக்குள்ளே கலர் கலராய்க் கனவுகள் ஓடிய வண்ணமிருந்தன !! "ஊருக்குப் போறோம்....ஜூனியர் லயன் காமிக்ஸ்ன்னு கார்டூனா போட்டுத் தாக்குறோம் ; புதுசா வாங்கியுள்ள கதைகளை லயனிலே கொஞ்சம், திகிலிலே கொஞ்சம்னு போட்டுத் தாக்குறோம் ; அப்புறம் ரொம்பவே முக்கியமா - 'வாங்கோ சார்....வாங்கோ சார்...இனி நம்மகிட்டேயும் ஒரு இரும்புக்கைப் பார்ட்டி இருக்காரு ; வந்து பழகிப் பாருங்க' என்று ஏஜெண்ட்களுக்கு ஓலை அனுப்பணும்" என்று அத்தனையும் மகிழ்வான எண்ணத்தோரணங்கள் ! உள்ளுக்குள் உற்சாகம் துள்ளும் போது நடையிலும் துள்ளல் சேர்ந்து கொள்வதில் வியப்பேது ? திகட்டத் திகட்ட சந்தோஷத்தை வழங்கிய ஜெர்மனிக்கு மனசுக்குள் விடை தந்தது மட்டுமே கொஞ்சம் வருத்தத்தைத் தந்து கொண்டிருந்தது ! காத்திருக்கும் பாரிஸ் என்ன மாதிரியாய் இருக்குமோ ? என்ற மெல்லிய பயமும் தொற்றிக் கொண்டிருந்தாலுமே,  எதையும் முகத்தில் காட்டிக் கொள்ளாது -  'அன்பே வா' தலைவரைப் போலொரு பிரீஃப் கேஸை கையில் பிடித்துக் கொண்டு, பாரிஸ் செல்லவிருந்த விமான கேட்டினில் பார்வையை ஓடவிட்டேன் ! அங்கொன்றும், இங்கொன்றுமாய், ஓரிரண்டு  சீட்டுகளைத் தவிர்த்து பாக்கி எல்லாமே full ! 'ஒரு தொழிலதிபருக்கு பாரிஸ் போக ஜோலி இருக்கும் சரி ; இப்டி கும்பலா உங்களுக்குலாம் அங்கே என்னங்கடா வேலை அப்ரசிடிக்களா ?' என்று கேட்கணும் போலத் தோன்றியது ! கோட்டின் பொத்தான்களைத் திறந்துவிட்டபடிக்கு கண்ணாடித் தடுப்புகளை ஒட்டிய முதல் வரிசையின் ஓரத்திலிருந்த சீட்டில் போய் குந்தினேன் !

'ஹலோ' என்றொரு குரல் ரொம்பவே ஸ்நேகமாய்க் கேட்க - "இது யாருடா ?" என்று பார்த்தேன் ! என்னருகே அமர்ந்து இருந்ததொரு ஆறடி உசர டிப்டாப்பான பிரவுண் நிற ஆசாமி தான் கையை நீட்டிக்கொண்டிருந்தார் ! சருமத்தின் நிறத்தைக் கொண்டு மக்களை வெவ்வேறு அடையாளங்களுக்குள் நுழைக்க முயற்சிக்கும் போது 3 ரகங்கள் பலனாகிடுகின்றன ! வெள்ளைத் தோல் மக்களாய் ஐரோப்பியர்கள் ; அமெரிக்கப் பெரும்பான்மை ; ஆஸ்திரேலியர்கள் என்று சொல்லலாம் ! கறுப்பின மக்களாய் ஆப்பிரிக்க நாட்டவர் ; மேற்கிந்தியத் தீவினர் போன்றோர் ! மத்திய கிழக்கத்தவர்கள் ; தெற்காசியர்கள் ; வட ஆப்ரிக்காவின் சில நாட்டவர்கள் ; மெக்சிக்கன்கள் போன்றோரை இந்த "பிரவுண் அணி" எனலாம் ! என்னருகே அமர்ந்திருந்தவரோ வட ஆப்ரிக்கர் என்பதை அவரது உடல்வாகு...அந்தக் குட்டிக்குட்டியான கேசம் ; தடிமனான உதடுகள் & அந்தக் கனத்த உச்சரிப்பு பாணி பறைசாற்றியது ! (கிட்டத்தட்ட சிங்கம் 2 படத்தில் வந்த டேனி மாதிரி என்று வைத்துக் கொள்ளுங்களேன் !) லேசான தயக்கத்தோடு நானும் 'ஹல்லோ' என்றபடிக்கே கையைக் கொடுக்க ; கரும்பு பிழியும் மிஷினுக்குள் புகுந்து வெளிப்படும் ஆலைக்கரும்புகள் என்ன பாடு படுமென்பதை உணர முடிந்தது ! "From India ?" என்ற கேட்ட மனுஷனின் முகத்தில் ஒரு விசாலமான புன்னகை ! அந்த நாட்களிலெல்லாம் இந்த software boom-ம் கிடையாது ; கொத்தவால்சாவடிக்குப் போய் வரும் லாவகத்தில் இந்தியர்கள் உலகத்தைச் சுற்றுவதும் கிடையாது ! So இந்தியாவுக்கு வெளியே, நம்மவர்களை சந்திப்பதும் சரி ; நாட்டைப் பற்றி பேசுவதும் சரி, செம உற்சாகமான சமாச்சாரம் ! "Yes ...yes ...I'm from India " என்றேன் ! முதுகில் ஒரு தட்டு தட்டியபடியே இந்தியாவைப் பற்றி சிலாகிக்க ஆரம்பித்த மனுஷன், வியாபார விஷயமாய் சில வருஷங்களுக்கு முன்னே தான் பெங்களூருக்கு விசிட் அடித்துள்ளதாகவும் சொல்ல - "ச்சே...ரெம்போ சின்ன உலகம் தான்டா சாமீ !!" என்று நினைத்துக் கொண்டேன் ! இரும்பு சம்பந்தப்பட்ட ஏதோவொரு தொழிலில் இருப்பதாகவும், ஐரோப்பாவுக்கு அடிக்கடி விசிட் அடிப்பதுண்டு என்றும் சொன்னவர், நான் என்ன செய்கிறேன் என்று வினவினார் ! ஒரு தொழிலதிபரிடம் இப்படியொரு கேள்வியைக் கேட்ட பிற்பாடு விளக்கிடாது இருக்க முடியுமா - என்ன ? குலம் , கோத்திரம், கோச்சார பலன்கள் நீங்கலாக பாக்கி அனைத்தையும் புட்டுப் புட்டு வைத்தேன் ! 'பாரிசில் எத்தனை நாள் ?" என்று அவர் கேட்க, "2 நாட்கள் ; அப்பாலிக்கா சுவிட்சர்லாந்த்" என்று பதில் சொன்னேன் ! ரொம்ப நாள் பழகியவர் போல ஐந்தே நிமிடத்துப் பரிச்சயத்தில் மனுஷன் நெருங்கி விட, "பாரிசில் எங்கே ஜாகை ?" என்று கேட்ட போது எனக்குத் திரு திருவென்று முழிக்க மட்டுமே முடிந்தது ! அந்த பாரிஸ் பயண கைடில் வாசித்த ஏதோவொரு ரயில்வே ஸ்டேஷனின் பெயரைச் சொல்லி, "அதற்குக் கிட்டே ஏதாச்சும்  போய்த் தான் பாக்கணும் !" என்றேன் ! "ஓஹோ..." என்ற மனுஷன் விமானத்தில் எனது சீட் நம்பர் என்னவென்று கேட்டார் !  முடிந்தால் ஸ்டாண்டிங்கில் கூட வரத்தயாரான கேஸ் அல்லவா - நாமெல்லாம் ?! எகானமி வகுப்பிலான என் சீட் நம்பரைச் சொன்னேன் ! அவரோ பிசினஸ் க்ளாசில் பயணிக்கும் ரகம் என்பது அப்புறம் தான் தெரிந்தது ! என் போர்டிங் பாஸை டக்கென்று வாங்கி கொண்டு விறு விறுவென்று Lufthansa டெஸ்குக்குப் போனவர் பிரெஞ்சில் என்னவோ பேசிட ; அவர்களும் ஏதோ பதில் சொல்லிட, கொஞ்ச நேர மல்லுக்கட்டலுக்குப் பின்னே திரும்பி வந்து போர்டிங் பாஸை என்னிடமே ஒப்படைத்தார் ! பிசினஸ் வகுப்பிற்கு எனது டிக்கெட்டை upgrade செய்திட வழியிருந்தால், அவரோடே பயணம் செய்திடலாமென்ற நினைப்பில் முயற்சித்துப் பார்த்ததாகவும், பிசினஸ் கிளாஸ் கூட அந்த பிளைட்டில் full என்பதால் சாத்தியப்படவில்லை என்றார் ! எனக்கு பக்கோ என்றாகிப் போனது - இந்தக் கலியுகத்தில் இப்படியுமொரு உத்தமரா என்று !! ஐந்தே நிமிடப் பழக்கத்துக்காக கைக்காசைச் செலவிடத் தயாராக இருக்கிறாரே என்று நினைத்துக் கொண்டேன் !

அதற்குள் பிளைட் புறப்படத் தயாராகிட, கேட்டைச் சுற்றி அமர்ந்திருந்த அத்தினி அப்ரசிடிக்களும் , மொய்யென்று விமானத்தினுள் புகுந்தனர் ! தொடர்ந்த ஒரு மணி நேர பயணத்துக்குப் பிற்பாடு பாரிஸின் விமான நிலையத்தில் தரையிறங்கினோம் ! "47 நாட்கள்" படத்தில் பார்த்த அதே அழுக்கு வடிந்த ஏர்போர்ட் கண்முன்னே 'பப்பரக்கா' என்று விரிந்து தெரிந்தது ! பிராங்கபர்ட்டின் அந்தப் பள பள பாங்கு மிஸ்ஸிங் & பாட்டுப் படிப்பது போலான உச்சரிப்பில் பிரெஞ்சில் ஓயாமல் ஏதேதோ அறிவிப்புகள் ஓடிக்கொண்டிருந்தன ! எனக்குள் இருந்த மெல்பதட்டமானது இப்போது ஒரு மிடறு கூடியிருந்தது ! பெட்டிகளை மீட்க அந்த ரெங்க ராட்டின baggage claim-ல் போய் நான் நிற்கும் நேரத்துக்கு எனது புது நண்பரும் அங்கே வந்திருந்தார் ! கைக்கு அடக்கமாய் ஒரு சூட்கேஸ் & ஒரு பிரீஃப்கேஸ் மட்டுமே வைத்திருந்தார் என்பதால் அவற்றை செக்கின் செய்யாது, கையோடு கொணர்ந்திருந்தார் என்பதைக் கவனித்தேன் ! 'சரி..நீங்கள் வேண்டுமானால் கிளம்புங்கள் சார் ! என் லக்கேஜ் வர நாழியாகுமோ - என்னவோ !" என்றேன் ! "No ..no ..we are going together !!" என்றார் ! 'அட, பாரிசில் கூட பரமாத்மா இப்படியொரு உதவியாளரை அனுப்பி வைத்து நம்மைக் கரை சேர்க்கிறாரே !!' என்று உள்ளுக்குள் மத்தாப்பூ தெறித்தது !

மொக்கைத்தண்டிக்கான எனது பெட்டியும் வந்தது, அதை உருட்டிக் கொண்டே நடந்தோம் - வாயிலை நோக்கி ! பஸ்ஸில் போக நினைத்துள்ளேன் நான் என்று சொன்னேன் ; அவரோ - "No ..no ..we go in a taxi & you can stay in the same hotel with me !!" என்றார் ! ஒற்றை நொடியில் எனது சிக்கல்கள் சகலத்துக்கும் விடை கிட்டி விட்டது போல் எனக்குள் ஒரு உற்சாகம் ஓட்டமெடுத்தது ! இப்படி ஒரு மனுஷனை கண்ணில் காட்டியதற்கு நன்றி சொல்லிக்கொண்டேன் கடவுளுக்கு ! அதே சமயம் "தெய்வமே...பகுமானமாய் போய் இறங்கிய பின்னே மீட்டரில் பாதி-பாதி என்று மனுஷன் காசு கேட்காத வரைக்கும் சரி தான் ! "என்றும் ஒரு வேண்டுதலைப் போட்டு வைத்துக் கொண்டேன் !

பாரிஸ் விமான நிலையம் ஊருக்குள்ளிருந்து 25 கிலோமீட்டருக்கு கூடுதல் என்பதால் டிராபிக்கில் கிட்டத்தட்ட 1 மணி நேரம் பிடிக்குமென்று வாசித்திருந்தேன் !  போக வேண்டிய இடத்தைச் சொல்லி விட்டு சாவகாசமாய் மனுஷன் அமர, அவரது ஆஜானுபாகுவான உருவத்துக்கே பின்சீட்டின் பாதிக்கு மேலே தேவைப்பட்டது ! நான் ஆர்வத்தோடு வெளியே பராக்குப் பார்த்துக் கொண்டே வர, இவர் ஏதேதோ பேசிக் கொண்டேயிருக்க, மரியாதை நிமித்தம் 'ஊம்' கொட்டிக் கொண்டேயும் சென்றேன் ! மீட்டருக்கு காசு கேட்டுவிடுவாரோ என்ற பயம் ஒரு பக்கமெனில், இன்னொரு பயமும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தது கிளம்பிய சற்றைக்கெல்லாம் ! இவரோ குளிக்கப் போகும் போது கூட கோட்டும், சூட்டும் போடும் பிசினஸ் க்ளாஸ் மேட்டுக்குடி எனும் போது, மனுஷன் வாடிக்கையாய்த் தங்கும் ஹோட்டலும் உசத்தியான ரகமாய் இருந்து விட்டால் என்ன செய்வது ?" என்ற பீதி தலைதூக்கியது ! அங்கே போன பிற்பாடு - "இது எனக்குக் கட்டாது !" என்று சொல்லவும் சங்கோஜமாக இருக்கும் ; அதே சமயம் பணம் ஜாஸ்தியெனில் நமக்கு தாக்குப்பிடிக்கவும் செய்யாதே !

மெதுவாய் நாம் செல்லவுள்ள ஏரியா எது என்றும் ; ஹோட்டல் பெயர் என்னவென்றும் கேள்வியைக் கேட்டு வைத்தேன் ! அவரோ அந்நேரத்துக்குள் செம ஜாலி மூடுக்குச் சென்றிருந்தார்   ! எல்லாவற்றுக்கும் ஒரு உரத்த வெடிச் சிரிப்பு ; முதுகில் ஷொட்டு ; தொடையில் தட்டு என்று வர, எனக்கு லைட்டாக உள்ளுக்குள் ஜெர்க் அடிக்கத் துவங்கியிருந்தது ! பத்தொன்பது வயது தான் என்றாலுமே, என்னருகில் டாக்சியினுள் இருந்த மனுஷனுக்கும், விமான நிலையத்தில் நான் சந்தித்த மனுஷனுக்குமிடையே ஒரு வேறுபாடு எழுந்திருப்பதைப்  புரிந்திடாது போகுமளவுக்கு குழந்தைப் பையனாக நானிருக்கவில்லை ! அளவுக்கு மீறி உரிமை எடுத்துக் கொள்வது போலவும், தேவைக்கு அதிகமாய் தொட்டுத் தொட்டுப் பேசுவது போலவும் எனக்குள் உறைக்கத் துவங்கிய போதே வயிற்றுக்குள் பயம் ஒரு பந்தாய் சுருள்வதை உணர முடிந்தது ! ஏதோ சரியில்லை என்பதும் ; இந்த மனுஷனின் சகவாசம் சரிப்படாது என்பதையும் தொடர்ந்த நிமிடங்களில் என் மண்டை உரக்கச் சொல்லத்துவங்கிட - நீண்டு கொண்டே சென்ற டாக்சியின்பயணமானது ஒரு யுகமாய்த் தோன்றத் துவங்கியது !

பாரிஸின் ரம்யமான சில வீதிகளையெல்லாம் தாண்டிப் போய்க் கொண்டேயிருந்த வண்டி, கொஞ்சம் கச கசவெனத் தோற்றம் தந்த பகுதிக்குள் புகுந்திருந்தது ! அவ்வளவும் பிரென்ச் அல்லாத வேற்று மொழிப்பெயர் பலகைகளாய்க் கண்ணில்படத் துவங்கிய போதே இது நிச்சயமாய் நகரின் மையமாய் இருக்க வாய்ப்பில்லை என்பது புரிந்தது ! ஒவ்வொரு பெருநகரிலும் அந்தந்த மக்கள் பிரதானமாய் வசிக்கும் ஏரியாக்கள் இருப்பதுண்டு ! சிங்கப்பூரில் லிட்டில் இந்தியா ; லண்டனில் சௌதால் போன்ற பகுதிகள் நம்மவர்களின் பேட்டைகள் !! ஒவ்வொரு ஊரிலும் சீனர்கள் மிகுதியான சைனாடவுன் ஒன்று இருக்காது போகாது ! இத்தாலியர்கள் ஜாஸ்தியாக இருக்கக்கூடிய Italian quarters ஏகப்பட்ட ஊர்களில் உண்டு ! அதே போல இது  வட ஆப்ரிக்க மக்களின் பிரதான ஏரியா என்பதும் ; செழிப்புக்கும் இந்தப் பகுதிக்கும் ஏழாம் பொருத்தம் என்பதும்  அப்பட்டமாய்த் தெரிந்தது ! பொதுவாய் புதுசாயொரு நகரினில் காலூன்றும் வரையிலும் கொஞ்சம் கலகலப்பான, பத்திரமான பகுதிகளில் புழங்குவது தான் தேவலாம் என்பதை அனுபவத்தில் உணர்ந்திருந்தவனுக்கு, அழுது வடியும் அந்த ஏரியா வயிற்றைக் கலக்கிக் கொண்டிருந்தது ! என்னருகே ஆரம்பத்தில் அம்பியாய் அமர்ந்திருந்தவரோ, ரெமோவாய் மாறியிருந்ததில் எனக்குக் குமட்டிக் கொண்டு வந்தது ! டங்கு டங்கென்று நெஞ்சு அடித்துக் கொள்ள - நினைவு தெரிந்த நாள் முதலாய் நான் போன அத்தனை கோவில்களையும் ; அத்தனை சாமிகளையும் நினைத்துக் கொள்ளத் தோன்றியது !  சுத்தமாய் எதுவும் தெரியாததொரு புது பெருநகரில், தப்பான ஆளின் சகவாசத்தில், வகையில்லாமல் மாட்டித் தொலைத்திருக்கிறேன் என்ற புரிதல் தொண்டையை எல்லாம் அடைக்கச் செய்தது !  பேசும் போது தொடையில் கை வைத்த மனுஷன் கையை அகற்றவில்லை எனும் போதே எனக்குள் இருந்த கொஞ்ச நஞ்ச சந்தேகங்களும் அகன்று விட்டன - இந்தாளின் நோக்கம் என்னவாக இருக்கக்கூடும் என்பது குறித்து ! பட்டென்று கையைத் தட்டி விட்ட போது ஒரு பழைய காலத்து வீடு மாதிரியானதொரு  ஹோட்டலின் முன்னே டாக்சி நின்றது !

நான் பெட்டியைத் தூக்கிக் கொண்டு இறங்குவதற்குள் காசைக் கொடுத்து செட்டில் செய்துவிட்டு விடு விடுவென்று ரிசப்ஷனுக்கு நடந்து போன மனுஷனை அங்கிருந்த கிழம் உற்சாகமாய் வரவேற்ற போதே இந்தாள் இங்கே ரெகுலராய்த் தங்குபவன் என்பது புரிந்தது ! இந்நேரத்துக்கு ரிசப்ஷனில் என்ன சொல்லியிருப்பான் என்பதை யூகிக்க எனக்குச் சிரமமே இருக்கவில்லை ! நேராய் அந்தக் கிழத்திடம்  போய் எனக்கொரு தனி ரூம் வேண்டுமென்றேன் ! "No..no..already booked a double room ; you stay with me !!" என்று என்னுடன் பயணித்திருந்த பிரவுண் மனுஷன் சொல்ல, நான் அதைக் காதிலேயே வாங்கியதாய்க் காட்டிக்கொள்ளவில்லை ! 'தனி ரூம் இல்லாங்காட்டி நான் நடையைக் கட்டப்போறேன்..." என்று நான் உறுதியாய்ச் சொல்ல, ரிசப்ஷன் கிழம் அந்தாளைப் பார்த்தது - "என்ன செய்ய ?" என்பது போல ! இவன் பிரெஞ்சில் ஏதோ சொல்ல, எனக்கொரு தனி ரூம் தந்தனர் - அதே தளத்தில், எதிர் எதிரே இருக்கும் விதமாய் ! கட்டணம் ரொம்பவே குறைச்சலாயிருக்க, என் பணத்தை டக்கென்று எடுத்து முதல் நாள் வாடகையை நானே கொடுத்து வைத்தேன் - "வேண்டாமே !" என்ற பிரவுண் பூதத்தின் மறுப்பினைக் கண்டு கொள்ளாது ! என் பெட்டியைத் தூக்கிக் கொண்டு ரூம் பாய் மேலே படியேறி வர, அதனை தனது ரூமிலேயே வைக்கச் சொன்னான் ; நானோ, பெட்டியைப் பிடுங்காத குறையாய் வாங்கி கொண்டு, எனக்கான அறைக்குள் கொண்டு போய் வைத்து விட்டு, தாழிட்டுக்   கொண்டேன் ! "சீக்கிரம் வா ; கீழே பாருக்குப் போவோம் !" என்று கதவுக்கு மறுபுறமிருந்து அந்த பிரவுண் பூதம் சத்தம் கொடுக்க - "நான் குளிக்கணும் ; ஒரு மணி நேரம் ஆகும் !" என்று உள்ளிருந்தபடிக்கே சத்தமாய்ப் பதில் சொல்லிவிட்டு எனது அறையை நோட்டமிட்டேன் ! கட்டிட பாணி ; கண்ணை உறுத்தும் கலரில் பெயிண்ட் ;   ஒரு சோபா ; ஒரு கிழட்டுக் கட்டில் ; சன்னமான குளியலறை ; ஒரு குறுகிய சந்தை நோக்கிய ஜன்னல் என்று கண்ணில்பட்ட சகலமுமே ரெங்கா ராவ் காலத்து சினிமாக்களில் வரும் செட்டிங்கை ஞாபகப்படுத்தின ! இந்த அறையில் ; இந்த ஹோட்டலில் ; இந்தத் தடித்தாண்டவராயனின் சகவாசத்தில், சத்தியமாய் 2 நாட்களை செலவிடுவது ஆகாத காரியம் என்பது புரிந்தது! எங்கெங்கோ இருந்த எரிச்சலெலாம் அந்த ஊரின் மீதே மையல் கொண்டது - "என்ன கண்ராவி ஊர்டா இது ?" என்று ! வெளியே நின்று குரல் கொடுத்துக் கொண்டே இருந்தவன் , நான் கதவை இப்போதைக்குள் திறப்பதற்கு இல்லை என்று புரிந்த பின்னே தனது அறைக்குள் போய் டமாலென்று கதவைச் சாத்திக் கொள்வதை சாவி துவாரத்தின் வழியே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த எனக்குத் தெரிந்தது ! மறு நொடியே, பாஸ்போர்டையும், பணத்தையும் மட்டும் அவசரம் அவசரமாய்ப் பைக்குள் திணித்துக் கொண்டு, ஓசையே எழாத மாதிரி மொள்ளமாய் எனது அறைக் கதவைத் திறந்து வெளியே வந்தவன் பூனை போல அடியெடுத்து வைத்து படிகளில் விறு விறுவென்று இறங்கி ஹோட்டலிலிருந்து வெளியேறினேன் ! ரிசெப்ஷனில் இருந்த கிழம் என்னமோ பிரெஞ்சில் சொல்ல, 'ரெண்டு பேருமா ஏதாச்சும் ஆழமான கிணறாப் பார்த்து கல்லைக்கட்டிக்கிட்டுக் குதிச்சிக்கோங்கடா டேய் !!' என்று மனசுக்குள் நினைத்துக் கொண்டே நில்லாமல் ஓட்டமெடுத்தேன் !

வெளியே சாலைக்கு, நண்பகலில் வந்த பொழுது என் பதட்டம் குறைந்திருக்கவில்லை ! இந்தப் பகுதியிலிருந்து ஜல்தியாய் நடையைக் கட்டி, கொஞ்சமேனும் மனசுக்குத் தெம்பு தரும் பத்திரமான பாரிசைப் பார்த்திட வேண்டும் ; கூப்பாடு போட்டு வரும் வயிற்றுக்கும் ஏதாச்சும் போட  வேண்டுமென்பது புரிந்தது ! வெக்கு வெக்கென்று நடக்க ஆரம்பித்தேன் - அவ்வப்போது திரும்பிப் பார்த்துக் கொண்டே ! பூதம் பின்தொடரக் காணோம் என்ற போது சன்னமாய் நிம்மதி பிறந்தது ! பாரிசினுள் பயணிக்க அதன் பிரமாதமான தரைக்கடி மெட்ரோ தான் லாயக்கு என்று வாசித்திருந்ததால், எங்கேனும் M என்ற அந்தக் குறியீடு கண்ணில் படுகிறதா ? என்று தேடினேன் ! எல்லாப் பகுதிகளிலும் மிஞ்சிப்  போனால் 10 நிமிட நடையில் ஒரு ஸ்டேஷன் இருக்கும் என்ற விஷய மெய்யாகிட - இரண்டாமூழக யுத்தத்தின் போது கடைசியாய் பெயிண்டைப் பார்த்திருக்கக் கூடியதொரு ஸ்டேஷனின் படிகளில் கீழே இறங்கியவனுக்கு குப்பென்று மூத்திரத்தின் வீச்சம் நாசியைத் துளைத்தது !! அரைச் சீவனில் எரிந்து கொண்டிருந்த மஞ்சள் பல்புகள் வெளிச்சத்தில் பார்த்தல் ஒரு தம்மாத்துண்டு டிக்கெட் ஆபீஸ் தெரிந்தது ! அப்போது தான் 'போவது எங்கே ?' என்ற கேள்வி தலைக்குள் ஓடியது ! பாரீஸ் என்ற உடனே அத்தினி பேருக்கும் நினைவுக்கு வரும் அதே ஐபெல் கோபுரம் தான் எனக்கும் நினைவுக்கு வந்தது ! சரி, அங்கே போகலாம் என்ற நினைப்பில், எனது பாரிஸ் கிடைப் புரட்டினேன் ! அதன் அருகாமையில் இருந்த Trocadero என்றதொரு ஸ்டேஷனுக்கு போக டிக்கெட் ஒன்றை வாங்கிக் கொண்டேன் ! "காற்றில் கரைந்த  கப்பல்கள்" கதையில் வரும் குகைப் பாதை போல ரயில் தடங்களுக்கு இட்டுச் செல்லும் பாதை இருண்டு, நீண்டது ! எதிர்ப்படும் ஒன்றிரண்டு பேருமே, தைரியத்தை உண்டுபண்ணும் விதமான ஆட்களாய் இருக்கவில்லை ; நான் யாரையும் ஏறெடுத்துப் பார்க்காது ஓட்டமாய் ஓடினேன் ! உலகப் போரின் போது ஜெர்மானிய குண்டு வீச்சு நிகழும் தருணங்களில், பதுங்கிடும் shelter களாகவும் பாரிஸின் மெட்ரோக்கள் செயல்பட்டதாய்க் கேள்விப்பட்டிருந்தேன் ! அநேகமாய் அப்போது ஏதேனுமொரு அடையாளத்தைப் போட்ட கையோடு, யாரேனும் மூக்கைச் சிந்தி, சுவற்றில் இழுவி விட்டிருக்கும் பட்சத்தில், அதே ஆசாமி 45 வருஷங்களுக்குப் பிற்பாடு அங்கே வந்திருப்பின் துளிச் சிரமமின்றி அந்தப் "பொக்கிஷத்தைக்" கண்டு பிடித்திருக்க முடியும் தான் ! அழுக்கும், இருளுமாய் அந்த ஸ்டேஷனை அப்படி ஆக்ரமித்துக் கிடந்தது ! ஒரு தினுசான சங்கு ஊதும் சத்தத்தோடு, பச்சை நிறத்திலான ரயில் குதித்துக் குதித்து வந்து சேர்ந்தது ! பார்த்தால் ஒவ்வொரு சக்கரத்துக்கும் அடியில் ரப்பர் டயர்கள் !! 'அட..இது கூட நல்லாத் தான் இருக்கே" என்றபடிக்கே உள்ளே எறியவன் டிக்கெட்டோடு சேர்த்து என்னிடம் தரப்பட்டிருந்த மெட்ரோ மேப்பை நோட்டமிட்டேன் ! குளவிக் கூடு போல கொய்யென்று ஸ்டேஷன் ஸ்டேஷனாய் குறிக்கப்பட்டு, கலர் கலராய் வெவ்வேறு லைன்களின் பெயர்கள் இருக்க, நான் போக வேண்டிய ஸ்டேஷனுக்கு எங்கேயோ மாறிட வேண்டும் என்பது புரிந்தது ! அந்த பெட்டிக்குள் ரொம்பக் குறைச்சலான பயணிகள் மட்டுமே இருக்க, எனக்கோ அத்தினி பேரையும் பார்த்தால், அந்தக்காலத்து நம்பியாரையும், மனோஹரையும் , அசோகனையும் பார்த்த மாதிரியே ஒரு பீலிங்கு ! கதவுக்கு அருகிலான சீட்டில் பல்லி போல குந்தியிருந்தேன் ; நான் மாற வேண்டிய ஸ்டேஷனை எதிர்கொண்டு ! அந்த ஸ்டேஷனும் வந்த போது, திபு திபுவென்ற ஜனதிரளும் சேர்ந்தே வந்தது ! கூட்டத்தைப் பார்த்த பிற்பாடே எனக்கு லேசாய் தெம்பு திரும்பியது ! அங்கே இறங்கி, நான் போக வேண்டிய Trocadero ஸ்டேஷனுக்கு எந்த திக்கில் ரயிலைப் பிடித்தாக வேண்டுமென்று கண்டு பிடிக்கத் தெரியாமல் பேந்தப் பேந்த முழித்து நின்றேன் ! யாரிடமும் கேட்கவும் பயமாக இருந்தது - பாரிஸுடனான எனது முதல் பரிச்சயமே ஒரு மாதிரியாய் இருந்து விட்டதன் பொருட்டு ! 'என்ன கன்றாவியாக இருந்தாலும் சரி, எந்தப் பயல்கிட்டேயும் எதையும் கேட்கப்படாது !' என்று நினைத்துக் கொண்டே ஒரு மாதிரியாய்த் தீர்மானித்தேன் - எந்தத் திக்கில் நடப்பதென்று ! To cut a long story short - ஒரு மாதிரியாய் போய் சேர வேண்டிய இலக்கை எட்டிட , படிகளிலிருந்து மேலேறி, பாரிஸின் வீதிகளில் அசுவாரஸ்யமாய் நின்றேன் - இங்கே என்ன லட்சணத்தில் இறுக்கப் போகிறதோ ? என்ற நினைப்பில் ! ஆனால் தொடர்ந்த 6 மணி நேரங்களுக்கு என் கண்ணில் பட்ட காட்சிகள் சகலமும் இத்தனை காலமாய் போட்டோக்களிலும், சினிமாக்களிலும் மட்டுமே பார்க்க சாத்தியப்பட்டிருந்த பாரிஸின் ரம்யங்கள் தான் ! அலை அலையாய் டூரிஸ்டுகள், கூட்டம் கூட்டமாய் சாலைகளை நிறைத்திருக்க, உள்ளுக்குள் ஜிவ்வென்று சந்தோஷம் பொங்கியது ! தூரத்தில் ராட்சச உருவமாய் ஐபெல் கோபுரமும் காட்சி தர அதையே வழிகாட்டியாய்க் கொண்டு நடந்தேன் கணிசமான தூரத்தை ! ஒரு மாதிரியாய் அந்த iconic landmark முன்னே நின்ற போது பிரமிப்பாக இருந்தது ! அதனுள் சென்று உச்சியைப் பார்க்க லிப்ட் இருக்க, அதற்கு டிக்கெட் வாங்கி விட்டு கூட்டத்தோடு கூட்டமாய் முண்டியடித்தேன் ! நம்மூர் லிப்ட்கள் போலவே கொட கொடவென்று சத்தம் போட்டுக் கொண்டே முக்கி முனகி மேலே பயணித்த  லிப்ட்டில், நிறைய நேரம் களைத்து  மூன்றாவது நிலையில் இறங்கிய போது கோபுரத்தின் உச்சியிலிருந்து பாரிஸின் முழுமையையும் தரிசிக்கும் அசாத்திய view  கண்முன்னே விரிந்து கிடந்தது ! இந்த நகரம் மெய்யாலுமே எத்தனை பெரிது என்பதும், எத்தனை யௌவனமானது என்பதும் அந்த நொடியில் தான் புரிந்தது ! ஒரு தப்பான ஆசாமியைப் பார்த்துத் தொலைத்ததால் தான் அது வரைக்கும் அந்த நகரம் மீது துவேஷம் மேலோங்கி நின்றது என்பதை புரிந்து கொள்ள முடிந்தது ! தொடர்ந்த 6 மணி நேரங்களுக்கு பாரிசுக்கு வரும் அத்தனை டூரிஸ்ட்களும் செய்திடக்கூடிய அத்தனை பணிகளையும் நானும் ஒன்று பாக்கியின்றிச் செய்தேன் ! மோனா லிசா ஓவிய மியூசியத்துக்கு ; Champs de Elysee என்ற அட்டகாச வீதிகளுக்கு ; அங்கிருந்த நெப்போலியன் உருவாக்கிய நினைவுச் சின்னத்துக்கு என ரவுண்டோ ரவுண்டு அடித்தேன் ! பாரிஸின் மெட்ரோவுமே இந்நேரத்துக்கு என்னோடு ரொம்பவே நட்பாகி விட்டிருக்க, 'எந்த ஊரிலே கப்படிக்கலை  ? ஏதோ சின்னப் பசங்க அவசரத்தில் மூச்சா போயிருப்பாங்க !" என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன் !இந்த ஊர் சுற்றும் படலத்தில் என்னுள் நிரம்பவே குஷி குடியேறியிருக்க, ரூமுக்குத் திரும்பினால் ராட்சஸன் காத்திருப்பானே என்ற நினைப்பே வெகு நேரத்துக்கு எழாது போயிருந்தது ! மணி ஆறை தொடத் துவங்கி, லேசாய் இருள் கவிழத் துவங்கிய போது தான் லேசாய் கிலேசம் குடிகொள்ள ஆரம்பித்தது ! பெட்டியைத் தூக்கிக் கொண்டு வேறு இடத்துக்குப் போய் விடலாமா ? என்ற கேள்வி உள்ளுக்குள் எழுந்த போது, முழுசாய் ஒரு நாள் வாடகையாய் மூவாயிரமோ, என்னவோ தந்து விட்டிருந்தது நெருடியது ! காசைக் கொடுத்து விட்டாச்சு ; இன்னிக்கு ராப்பொழுதை மட்டும் இங்கே கடத்தி விட்டு காலம்பற இடத்தைக் காலி பண்ணி விடலாம் !" என்ற நினைப்போடு ரூமுக்குத் திரும்பிய போது மணி ஏழு இருந்திருக்கும் . ரிசெப்ஷனில் அதே கிழம் ஏதோ பிரெஞ்சில் என்னிடம் சொல்ல - "போயா யோவ் !" என்று தமிழில் சொல்லி விட்டு மாடிப் படியேறி ரூமுக்குள் போய் அடைக்கலமானேன் !

கையில் வாங்கி வந்திருந்த பர்கரை விழுங்கி விட்டு, மறு நாள் சந்திக்க வேண்டிய பதிப்பகத்தின் மீது சிந்தனைகளை ஓடவிட்டேன் ! நமது கராத்தே டாக்டர் ; மறையும் மாயாவி ஜாக் ; பைலட் டைகர் (??) போன்ற கதைகளை உருவாக்கிய நிறுவனம் அது ! அவர்களை பற்றி ; ஏர்மெயிலில் கிட்டிய அவர்களது கேட்லாக்கை தலைமாட்டில் வைத்துக் கொண்டு நான் சிலாகித்த நாட்களை பற்றி ஏற்கனவே "சி.சி.வ' தொடரில் எழுதியிருந்தது நினைவிருக்கலாம் ! சீக்கிரமே எழுந்து, கிளம்பி, வேறு லாட்ஜை தேடிப் பிடித்த கையோடு அந்தப் பதிப்பகத்துக்குச் செல்வது என்ற தீர்மானத்தோடு தூக்கத்துக்குள் புகுந்தேன் எட்டரை மணி சுமாருக்கு ! படுக்கப் போகும் முன்னே சாவி ஓட்டை வழியாய் எட்டிப் பார்த்த போதும், எதிர் அறையில் சத்தமே இல்லை ! 'சரி..பூதம் நம்மை கைகழுவியிருக்கும் !' என்ற நினைப்பில் ஆசுவாசப்படுத்திக் கொண்டே லைட்டை அனைத்து விட்டுப் படுத்தேன்  !

எப்படியென்று தெரியாது - ஆனால் அடிமனசில் மெல்லிய பயமும், மிரட்சியும் குடியிருந்தால் தான் தூக்கத்தின் மத்தியிலும் அந்தச் சத்தம் கேட்டிருக்க வேண்டும் எனக்கு ! கடிகாரத்தைப் பார்த்தால் பதினொன்றரை என்று சொல்லியது ; எனது அறையின் கதவை திறக்க யாரோ முயற்சிப்பது போலொரு சத்தம் கேட்டது ! மறு கணமே லைட்டைப் போட்டு எழுந்து பார்த்தால், மறுபக்கமிருந்து இன்னொரு சாவியை நுழைத்து கதவைத் திறக்க யாரோ முயற்சிப்பது புரிந்தது ! எனது சாவி உள்பக்கத்தில் கதவிலேயே இருந்ததால் வெளியிருந்து முயற்சித்தது சாத்தியப்படவில்லை ! நான் லைட்டைப் போட்ட மறு கணமே வெளியிலிருந்து அந்த பூதம் கூப்பாடு போடத் துவங்கியது ! நல்ல குடிபோதை என்பது புரிந்தது ;  காதில் வாங்கவே கூசும் எதை எதையோ இங்கிலீஷில் கத்திக்கொண்டே, பிரெஞ்சிலும் என்னவோ அனற்ற ஆரம்பித்தான் ! எனக்கோ ரத்தம் தலைக்கேறி உடம்பெல்லாம் வியர்த்து விறு விறுத்துப் போய்விட்டது ! சத்தியமாய் இத்தனை ஆக்ரோஷமாய் அந்த மலைக்குரங்கு அவதாரமெடுக்குமென்று நான் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை ! நெஞ்சு அடிக்கும் அடியில், பதில் பேசக்கூட திராணியில்லை எனக்கு !! "கதவைத் திற..திற !!" என்பது தான் அவனது காட்டுக்கத்தலாக இருப்பது புரிந்தது ! பற்றாக்குறைக்கு அவனோடு இன்னொரு ஆசாமியும் இருந்திருக்க வேண்டும் ; இன்னொரு குரலும் 'டம் டம்மென்று' கதவை அறையும் ஓசைக்கு மத்தியில் கேட்டது ! ஒரு கம்பியைப் போல எதையோ நுழைத்து உட்பக்கமிருந்த எனது சாவியைக் கீழே தள்ள முயற்சிப்பது தெரிந்த நொடியில் உறைந்தே போய் விட்டேன் !! உட்பக்கமாய்த் தாழிட latch எதுவும் இல்லை என்பதை அந்த நொடியில் தான் கவனித்தேன் !  மூளை தறி கெட்டு ஓடத்துவங்கியது ! வேகமாய் ஜன்னலருகே போய் நின்றவன், முதல் மாடி எத்தனை உயரமிருக்கும் ?  ஏதேனுமொரு தவிர்க்க இயலா நெருக்கடியில் கீழே குதிப்பதாயின் கை கால் நொறுங்கிடுமா  ? என்றெல்லாம் யோசிக்கத் தோன்றியது ! கதவை உடைத்துக் கொண்டு உள்ளே இவர்கள் புகுந்து விட்டால், தயங்காமல் குதித்து விடுவது என்ற தீர்மானத்துக்கே வந்திருந்தவனின் கண்ணில் ரூமிலிருந்த சோபா கண்ணில்பட்டது ! பிடாரியாய்க் கனத்த அதனை தம் கட்டித் தள்ளிப் போய் கதவுக்குப் பின்னால் தாக்கான் கொடுத்து நிறுத்தினேன் - நெட்டுவாக்கில் ! கதவில் வேறு சாவியை நுழைத்து திரும்பியே விட்டாலும், இந்த சோபாவின் தடையைத் தாண்டிக் கதவைத் திறக்க சாத்தியமாகாது என்பது புரிந்த நொடியில் தான் மூச்சே திரும்பியது !

தொடர்ந்த 45 நிமிடங்கள் நரகத்தில் இருந்த உணர்வே எனக்கு !  கதவைத் தட்டுவது ; படு அசிங்கமாய்ப் பேசுவது ; சத்தம் போட்டுச் சிரிப்பது ; அங்காரத்தில் கூச்சலிடுவது என மாறி, மாறி அத்தனையும் நடந்தேறின ! நான் கதவுக்கு அடை கொடுத்து நிறுத்தியிருப்பது புரிந்த போது இன்னும் உக்கிரமாய்க் கூச்சலிட்டான் ! நான் பதிலே பேசவில்லை ! அவசரம் அவசரமாய் பெட்டியை பேக் செய்து விட்டு, டிரஸ் பண்ணிக் கொண்டு - பாக்கெட்டினுள்பாஸ்போர்ட் & பணத்தை வைத்துக் கொண்டு - குடாக்குத்தனமான கணக்குகளில் ஈடுபட்டிருந்தேன் ! 2 தலையணைகளை ஜன்னல் வெளியே முதலில் கடாசி விட்டு, அப்புறமாய் நாமும் சரியாகக் குதித்தால் அவற்றின் மீது land ஆகிட்டால் - கால் முறியாது தப்பி விடலாமா ? என்ற நினைப்பெல்லாம் ஓடியது ! ஒரு மாதிரியாய் ஓய்ந்து போனவன் அலுத்துக்கிளம்பி விட்டான் என்று நான் லேசாய் மூச்சு விட துவங்கியிருந்த போது மணி ஒன்றரை ! ஆனால் கீழேயிருந்த பாரில் போய் அடுத்த ரவுண்டை ஏற்றிக் கொண்டு இன்னும் ரௌத்திரமாய் ஆடித்தொலைக்கவே இந்த இடைவெளி என்பது அப்புறமாய்த் தான் புரிந்தது ! மறுபடியும் கதவுக்கு வெளியே ருத்ர தாண்டவமே ஆடினார்கள் ; இம்முறையோ நான் GET LOST !! GET LOST !! என்று கூச்சலிடும் தைரியத்தைப் பெற்றிருந்தேன் ! கொஞ்ச நேரம் கத்த வேண்டியது ; அப்புறம் தங்கள் அறைக்குப் போக வேண்டியது ; மறுபடியும் வந்து ஆடித் தொலைய வேண்டியதென அந்த  முடியா இரவு ஒரு யுகமாய்த் தொடர்ந்திட, மூன்று மணி சுமாருக்கு எல்லாமே அடங்கிப் போனது ! ஆனால் நானோ கண்ணசரத் துணிவின்றி, விடியும் வரையிலும் கோட்டானைப் போல விழித்தே இருந்தேன் !

கதிரவனின் முதல் ரேகைகள் கண்ணில் பட்டபோது மணி ஆறு ! சோபாவில் ஏறி, சாவி துவாரம் வழியே பார்த்த போது வெளியே ஈ-காக்காய் கூடாக கண்ணில் படவில்லை ! சத்தமே போடாது சோபாவை பின்னுக்குத் தள்ளி விட்டு, என் பெட்டியை தூக்கிக் கொண்டு வெளியே வருவதற்குள் ஒரு நூறு முறை செத்துப் பிழைத்திருப்பேன் ! அந்தக் குளிர் காலையிலும் எனக்கு சலவையாய் வியர்த்திருந்தது! சத்தமே போடாது படிகளில் இறங்கி, கீழே ரிஸப்ஷனுக்குப் போன போது அந்தக் கிழம் இல்லாது, வேறொரு பையன் breakfast க்கு டேபிள்களை தயார் செய்து கொண்டிருந்தான் ! நான் சீக்கிரமே அசாப்பிட வந்துவிட்டேன் போலுமென்ற நினைப்பில் - "another 15  minutes monsieur " என்றான் ! போங்கடா டேய்...சாப்பாடு ஒண்ணு தான் இப்போதைக்கு கேடு ! என்றபடிக்கே "I checkout " என்று மட்டும் கத்தி விட்டு வீதியில் கால் வைத்தேன் ! பாரிஸின் இதமான காலைக் காற்று என் வியர்வைக்கு ஒத்தடம் தர, வேகா வேகமாய் நடந்தபடிக்கே அண்ணாந்து பார்த்தேன் - முதல் மாடி எத்தனை உயரமென்று கணிக்க ! குதித்திருந்தால் சத்தியமாய்ச் சங்கு தான் என்பது மட்டும் புரிந்தது !! ஓட்டமும் நடையுமாய் மெட்ரோவுக்குப் போனது ; பிசாசாய் கனத்த பெட்டியையும் தூக்கிக் கொண்டு எங்கோ சென்றது ; கண்ணில்பட்ட முதல் டீசென்ட் லாட்ஜில் ரூம் எடுத்து , உள்ளே போய் பூட்டிக் கொண்டு அமர்ந்த போது அத்தனை நேரம் அடக்கி வைத்திருந்த  அழுகையை  சமாளிக்க முற்பட்டது என அத்தனையுமே fast forward-ல் நிகழ்ந்தது ! அன்றைய பொழுதினில் அப்புறமாய்ப் பதிப்பகத்துக்குச் சென்றது ; லக்கி லூக்கை வெளியிடும் Dargaud பதிப்பகத்தினை சந்தித்தது என்று ஏதேதோ செய்தேன்! ஆனால் எத்தனை பெரிய கண்ராவியிலிருந்து தப்பியிருந்தேன் என்ற புரிதல் என்னை உலுக்கி எடுத்திருந்தது ! மறுநாள் Zurich செல்லும் விமானத்தைப் பிடிக்க ஏர்போர்ட்டுக்குப் போன போது வாழ்க்கை எனக்கொரு பெரும் பாடத்தைக் கற்பித்திருந்தது புரிந்தது !

மறுபடியும் கேட் நிறைய கூட்டம் ; மறுபடியும் ஒன்றிரண்டு இருக்கைகள் மாத்திரமே காலியாக இருந்தன ; ஆனால் உட்காரலியே....!! நான் உட்காரலியே !!! Phew !!!

இன்றைக்கு நினைத்தால் அன்றைய எனது பயங்கள் சற்றே ஓவரோ ? என்று தோன்றிடும் தான் ! ஆனால் 19 வயது ; புது ஊர் ; பாஷை தெரியாத இடம் ; முற்றிலும் தப்பான ஜாகை  ; முற்றிலும் தவறான ஆட்களின் சூழல் என்றிருக்கும் போது வேறு விதமாய் ரியாக்ட் செய்திட ஜாக்கி சானுக்கோ ; ப்ரூஸ் லீக்கோ தானே சாத்தியப்பட்டிருக்கும் ?! பயணங்கள் தந்த பாடங்களில் இதுவும் ஒன்றாய் நினைத்துக் கொள்வேன் !

Bye guys ....see you around !! Stay home !! Stay safe !!! 
1985-ல்....லண்டனின் டிரபால்கர் சதுக்கத்தில்..தொழிலதிபர் !! மெய்யான கேசத்துடனே !! 

312 comments:

 1. Replies
  1. கிர்ர்ர்ர்... அடுத்த 17 நாளுக்கும் உங்களுக்கு உப்புமா தான்!!

   Delete
  2. உங்களுக்கு மட்டும் ஒரு ரகசியம். உப்புமா செய்யறதுல ஐயா எக்ஸ்பர்ட்டாக்கும். our entire family like my rava uppuma.

   Delete
  3. MGRக்கு ரவா உப்புமா ன்னு உயிரு - தெரியுமா....

   Delete
 2. @ ALL : யாராச்சும் இந்தப் பதிவைப் படித்து விட்டு 'கெக்கே-பிக்கே'வென சிரித்தால் கம்பெனிக்கு கெட்ட கோபம் வரும் - ஆமா சொல்லிப்புட்டேன் !!

  ReplyDelete
  Replies
  1. பதிவ படிச்சது ஒரு திகில் கதைய படிச்ச மாதிரி இருந்துதுங்கள. நிஜமாலும் சிரிப்பே வரல
   ஆனா... ...

   Delete
  2. என்னுடைய 17 (1985)வயசு போட்டாவ நினச்சேன் சிரிச்சேன்

   Delete
 3. ஹைய்யா புதிய பதிவு....

  ReplyDelete
 4. All are looking very casual including you without Corona fear... Hmm.அது ஒரு அழகிய கனா காலம்,😊

  ReplyDelete
  Replies
  1. பில்டிங் ஸ்ட்ராங்கு..பேஸ்மட்டம் வீக்கு !! நீங்க பார்ப்பது பில்டிங்கை மாத்திரமே நண்பரே !

   Delete
 5. ரொம்ப பெரிய பதிவு... படிச்சு விட்டு மதியம் வருகிறேன்.


  விஜயன் சார், உங்களின் சிறுவயது போட்டோ சூப்பர்.

  ReplyDelete
  Replies
  1. இவ்வளவு பெரிய பதிவை கொடுத்த உங்களுக்கு நன்றி சார். உங்களின் மெனக்கெடலுக்கு special thanks.

   Delete
  2. ரொம்ப காலமாய்ப் பகிர நினைத்த சமாச்சாரம் சார் ! எடிட் செய்து சுருக்கமாய்ச் சொல்லியிருக்கலாம் தான் ; ஆனால் பெருசாய் வெட்டி முறிக்க பணிகள் வேறேதும் இல்லை எனும் போது கை போன போக்கில் போகட்டுமே என டைப்பினேன் !

   Delete
  3. // கை போன போக்கில் போகட்டுமே என டைப்பினேன் ! //
   இதுதான் சார் இயல்பான பதிவு.....

   Delete
  4. மிக இயல்பான பதிவு.

   Delete
 6. // 1985-ல்....லண்டனின் டிரபால்கர் சதுக்கத்தில்..தொழிலதிபர் !! மெய்யான கேசத்துடனே !! // தெலுங்கு பட ஹீரோ மாதிரி இருக்கிங்க சார்.....ஹி,ஹி.........

  ReplyDelete
  Replies
  1. ஆனாலும் இதுக்கு பேர் தான் குசும்போ ? சொல்றது தான் சொல்றீங்க - ஒரு ஹிந்தி பட ஹீரோன்னா ; ஒரு ஹாலிவுட் ஹீரோன்னா சொல்லப்படாது ?

   Delete
  2. // ஒரு ஹிந்தி பட ஹீரோன்னா ; ஒரு ஹாலிவுட் ஹீரோன்னா சொல்லப்படாது ? //
   சொல்லலாம் தான் சார்,ஆனா அந்த மீசை.........!

   Delete
  3. நம்ம பவர்ஸ்டார் மாதிரி.

   Delete
  4. ஆங்...இது பேச்சு !

   Delete
 7. // இந்தக் கலியுகத்தில் இப்படியுமொரு உத்தமரா என்று !! ஐந்தே நிமிடப் பழக்கத்துக்காக கைக்காசைச் செலவிடத் தயாராக இருக்கிறாரே என்று நினைத்துக் கொண்டேன் ! //
  சில பேர் இப்படித்தான் நம்மை ஆச்சரியபடுத்திக் கொண்டு இருப்பார்கள்.......

  ReplyDelete
  Replies
  1. // "சீக்கிரம் வா ; கீழே பாருக்குப் போவோம் !" என்று கதவுக்கு மறுபுறமிருந்து அந்த பிரவுண் பூதம் சத்தம் கொடுக்க - "நான் குளிக்கணும் ; ஒரு மணி நேரம் ஆகும் !" என்று உள்ளிருந்தபடிக்கே சத்தமாய்ப் பதில் சொல்லிவிட்டு எனது அறையை நோட்டமிட்டேன் //
   அடக் கொடுமையே............

   Delete
  2. நானும் ஆரம்பத்தில் ரொம்ப நல்லவர் ன்னு நினைச்சேன்..

   ஆனா இவ்வ்ளோ நல்லவரா இருப்பாருன்னு நினைக்கவே இல்லை...:-(

   Delete
  3. அந்த பிரவும் மேனை பிடிச்சி மூஞ்சிலியே நங்,நங்குனு குத்தனும் போல கை பரபரக்குது சார்.........
   என்னோட மைண்ட் வாய்ஸ் “என்ன ஐந்துடா இது”............

   Delete
  4. நீங்க கூட அவசரப்பட்டு சர்டிபிகேட் கொடுத்துபுட்டீங்களே சார் !!

   Delete
  5. சார் உங்களுக்கு பாட்டீம்மாக்கள் மட்டுமல்ல,பிரவுன் மேன்களும் வில்லனாகத்தான் இருந்திருக்கிறார்கள் போலும்........
   போற போக்கை பார்த்தா பாரிஸில் ஒரு திகில் அனுபவங்கள்னு ஸ்பெஷல் எடிஷன் புக் போடலாம் போல..........

   Delete
 8. பதிவை படித்தவுடன் தோன்றியது..
  ஹி..ஹி..

  ReplyDelete
  Replies
  1. அதிகாரிகளின் அன்பர்களுக்கு கம்பெனி விதிமுறைகளை மீறுவதில் அலாதி இன்பமே !! அதிகாரியின் பாணியல்லவா ?

   Delete
 9. சார் அட்டகாசமான ஃபோட்டோ சார். அருமை அருமை

  ReplyDelete
 10. அப்பப்பா என்ன ஒரு பயங்கரமான அனுபவம். அப்படியே ஒரு சைக்கோ த்ரில்லர் படம் பார்த்த அனுபவம். எனக்கும் திக் திக் என்று இருந்தது.

  ReplyDelete
 11. உண்மையாகவே நீங்கள் தப்பி வந்தது பெரிய விசயம் தான். பெரும் தேவன் மானிடோ விர்க்கு தான் நன்றி சொல்ல வேண்டும்

  ReplyDelete
 12. கொஞ்சம் கூட சேதாரம் இல்லாமல் கற்புள்ள ஆண் மகனா இந்தியாவுக்கு திரும்பியிருக்கிங்க.

  ReplyDelete
  Replies
  1. எடிட்டர் தன் எடிட்டங் வேலையைக் காட்டிட்டாரோ என்னமோ!! ;)

   Delete
 13. ,பதிவை படித்தவுடன் சிரிக்க தோன்றவில்லை சார்..திக் திக் அனுபவம் தான்...

  அடேங்கப்பா...

  ReplyDelete
  Replies
  1. சரியாக சொன்னீர்கள் தலைவரே.

   Delete
 14. இளவயதில் நடிகர் பிரேம் நம் எடிட்டர் சார் போல இருந்து இருப்பார்..

  ReplyDelete
  Replies
  1. நேரில் பிரேம்...


   ஆனால் இந்த பதிவின் புகைப்படம் தெலுங்கு பட ஹீரோ தான்..:-)

   Delete
  2. நான் இந்த ஆட்டத்துக்கே வரலீங்கோ !

   Delete
 15. அப்புறம் உங்கள் அந்த சிறுவயது போட்டோ பார்த்தவுடன் சொல்ல தோன்றியதை உடனடியாக ரவி அவர்கள் சொல்லி விட்டார்..


  அப்படியே அந்த தெலுங்கு பட ஹீரோ போலவே இருக்கிறீர்கள்..அவர் பெயரை சொல்ல வில்லை .நான் சொல்லி விடுகிறேன்...

  கோபி சந்த் என்று நினைக்கிறேன்..தெலுங்கு பட ஹீரோ..


  அல்லது ஜெயம் படத்தின் வில்லன் என்றும் சொல்லலாம்...:-)

  ReplyDelete
  Replies
  1. இதுக்கு அவரே தேவலாம் ! ம்க்கும் !

   Delete
  2. // ஜெயம் படத்தின் வில்லன் என்றும் சொல்லலாம். //
   ஒரு ஹீரோவை வில்லனாக்கிட்டிங்களே தலைவரே..........

   Delete
  3. ம்ஹூம்....
   வில்லன் படத்தின் ஜெயம் மாதிரி....
   ஹிஹ்ஹி

   Delete
  4. இதுக்கு அவரே தேவலாம் ! ம்க்கும்

   ####

   :-))))

   Delete
 16. // சத்தமே போடாது சோபாவை பின்னுக்குத் தள்ளி விட்டு, என் பெட்டியை தூக்கிக் கொண்டு வெளியே வருவதற்குள் ஒரு நூறு முறை செத்துப் பிழைத்திருப்பேன் // யப்பப்பா என்னால் உணர முடிகிறது. பக் பக் திக் திக் நொடிகள்

  ReplyDelete
  Replies
  1. ///யப்பப்பா என்னால் உணர முடிகிறது. பக் பக் திக் திக் நொடிகள்///

   என்ன உணரமுடிகிறது..? நீங்களும் உங்க கதையைச் சொல்லலாமே?!! :D

   Delete
  2. காக்க காக்க, கனகவேல் காக்க..

   Delete
  3. // என்ன உணரமுடிகிறது..? நீங்களும் உங்க கதையைச் சொல்லலாமே?!! :D // EV உங்கள் டிரிக் புரிகிறது அடிச்சு கேட்டாலும் சொல்லமாட்டேன்.

   Delete
 17. உலகம் சுற்றிய வாலிபன் ன்னு பதிவோட தலைப்பு வச்சிருக்கலாம்..

  ReplyDelete
  Replies
  1. அது தலைவருக்கு மாத்திரமே சொந்தமான பெயர் சிவா !

   Delete
 18. சார்...இந்த வீட்டு சிறை சிறிய ,பெரிய டெக்ஸ் இதழ்களாக படித்து கொண்டிருப்பதை கொஞ்சம் நிறுத்தி விட்டு ஒரே தொடராக நீண்டு கொண்டு இருக்கும் இதழ்களை ஆரம்பத்தில் இருந்து படிக்கும் சூழல் இனி கிடைக்காது என்பதால்

  இப்பொழுது வாசித்து கொண்டு இருப்பது தோர்கல்..அட்டகாசமாக போய் கொண்டு இருக்கிறது சார்..இரண்டு நாட்களாக ..இன்று தோர்கலை முடித்து விடிவேன்..:-)

  ReplyDelete
 19. நாம் ஒரு காமிக்ஸ் உருவாக்க வேண்டுமென்றால் இந்த பதிவையை கருவாக கொண்டு ஒரு கதையை உருவாக்கினால் அதிரி புதிரி ஹிட் ஆகும் என நினைக்கிறேன்..

  ஒரு த்ரில்லர் ஸ்டோரி...ரெடி..:-)

  ReplyDelete
  Replies
  1. கி.நா.வாத் தான் உருவாகும்...பரால்லியா தலீவரே ?

   Delete
  2. நோ ப்ராபளம் சார்..:-)

   Delete
 20. எடிட்டர் சார்..

  விறுவிறுப்பான, திக்திக்-தடக்தடக் பதிவு!! நடுநடுவே நிறைய கெக்கபிக்கே சமாச்சாரங்கள்!!
  கொரோனாவின் கோர தாண்டவத்தையும் மறந்து மனதை இலேசாக்கிவிட்டது உங்கள் பதிவு!

  இப்போதாவது எங்களிடம் பகிர்ந்து கொள்ளத் தோன்றியதே!! என்னதான் நீங்கள் 'கெக்கபிக்கே வேண்டாமே' என்று கேட்டுக் கொண்டாலுமே கூட, சிரிப்பை அடக்க முடியவில்லை!! ஹோ ஹோ ஹோ..!! நீங்கமட்டும் அந்த ராட்சதனிடம் சிக்கியிருக்கணும்.. ஹோ.. ஹோ..ஹோ! சிரிச்சு முடியலைங்க எடிட்டர் சார்!! :)))))

  அந்த ஃபோட்டோ செம!! திடீர்னு பார்த்தா விக்ரமைப் பார்த்தது போலவே இருக்கீங்க!

  அடுத்ததா 'தொழிலதிபர் இன் நியூயார்க்'னு ஒரு பதிவைப் போடுட்டுத் தாக்குங்க. அங்கேயும் ஏதாவது எசகுபிசகா நடந்திருந்தா கூச்சப்படாம சொல்லுங்க!நாங்க சிரிக்கவேண்டியது இன்னும் நிறைய பாக்கி இருக்கு!!

  ReplyDelete
  Replies
  1. ///நீங்கமட்டும் அந்த ராட்சதனிடம் சிக்கியிருக்கணும்.. ஹோ.. ஹோ..ஹோ///

   😂😂😂🤣🤣🤣 நல்ல ஆசைங்க ஈவி

   Delete
  2. //திடீர்னு பார்த்தா விக்ரமைப் பார்த்தது போலவே இருக்கீங்க//

   திடீர்னு பாத்தாலும், நிதானமாய்ப் பாத்தாலும் அவன் என்னை மாதிரி இருக்கான் என்பதே நிஜம் ஓய் !! Not the other way around !

   Delete
  3. அப்பறம் ஜூனியர் எப்டி....

   அவுரும் எங்கனயாவது மாட்டிகிணாரா....

   இருக்கங்குடி மாரியாத்தா காப்பாத்திட்டா....

   கெடா வெட்னீங்களா....

   ரெட்ட கெடா....

   Delete
 21. என் முதல் பிகார் பயணத்தை நினைவு படுத்திட்டீங்க

  ReplyDelete
  Replies
  1. சொல்லுங்களேன்.. கேட்போம்!! @SURYAJEEVA

   Delete
 22. Sir,how r sending d April issues?

  ReplyDelete
 23. Sorry how r u sending d April issues ?

  ReplyDelete
  Replies
  1. சொல்லுங்களேன் சார்...எப்படி அனுப்பலாமென்று ?

   Delete
  2. // சொல்லுங்களேன் சார்...எப்படி அனுப்பலாமென்று ? //
   ஒரு ஹெலிகாப்டரில் பார்சலை எல்லாம் ஏற்றிக்கொண்டு வந்து,அப்படியே மேலே இருந்து போடுங்க சார்,அழகா கேட்ச் பண்ணிக்கறோம்,நாங்கல்லாம் கிரிக்கெட் பிளேயர்ஸாக்கும்,கப்புன்னு கேட்ச் பிடிப்போம்....ஹி,ஹி......

   Delete
 24. சார்.. பதிவுல கடேசியா இருக்கும் அந்த ஃபோட்டோவை வச்சு நாங்க ஏதாச்சும் கேப்ஷன் எழுதணுமா? :)

  ReplyDelete
  Replies
  1. ஓ..தாராளமாய் எழுதலாமே !! ஊசிப் போகாத ரவுண்டு பன் ஏதாச்சும் கிட்டினால் பரிசாக அனுப்ப கம்பெனி தயார் !

   Delete
 25. பயண அனுபவம் திகில் நாவல் போல் உள்ளது

  ReplyDelete
 26. ஐரோப்பா : உண்மையிலேயே பல பயங்கரமான இடங்களை கொண்ட நாடுகள் நிறைந்தது. அதுவும் இதுபோல்‌ ஏர்போர்ட்,மெயின் ஏரியாக்களில் நாம் சந்திக்கும் ஆட்களும்கூட‌ மோசமான ஆட்களாய் இருப்பார்கள் என்பதற்க்கு இன்னுமொரு உதாரணம். ஆனா அந்த காலத்துலேயே இவ்வளவு மோசமாக இருந்திருக்காங்க என்று நினைக்கும்போது தான்....

  நான் முதன்முதலில்(2004) ஆம்ஸ்டர்டம் போனபோது எனக்கும் மிக மோசமான அனுபவம். போதை மருந்து ஏரியாவில்
  ரூம் எடுத்து, பாஸ்போர்ட்,லேப்டாப் திருடு கொடுத்து போலிஸை சந்தித்தது என மிக மோசமான அனுபவம். இவ்வளவுக்கும் அது ஒதுக்குபுறம்கூட அல்ல. மெயின் ஏரியாவுக்கு பக்கத்திலேயே...

  உலகம் கற்று கொடுத்துக்கொண்டே இருக்கிறது சார்: மனிதர்கள் எங்கு இருந்தாலும் நல்லவன், கெட்டவன்னு இரண்டு பிரிவு என்று....

  ReplyDelete
  Replies
  1. // உலகம் கற்று கொடுத்துக்கொண்டே இருக்கிறது சார்: மனிதர்கள் எங்கு இருந்தாலும் நல்லவன், கெட்டவன்னு இரண்டு பிரிவு என்று.... //
   உண்மைதான் ஹசன்,மேற்கத்திய நாடுகளோ,கீழை நாடுகளோ இதில் பாரபட்சமே இல்லை,பொதுவாக நிறைய பேருக்கு மேற்கத்திய நாடுகள் என்றால் நாகரீகமும்,செல்வமும் தழைத்தோங்கும் இடங்கள் என்ற ஒரு பிம்பம் உண்டு....
   இது போன்ற அனுபவங்களை எதிர்கொள்ள நேரிடும்போது அந்த பிம்பங்கள் களைகின்றன........

   Delete
 27. பாரிஸில் அது எந்த ஏரியா(மெட்ரோ) சார்???

  உங்களின் முதல் ஜாகை எங்கே என்று தெரிந்து கொள்வோமே... ;-)

  ReplyDelete
  Replies
  1. நினைவில்லை சார் ; ஆனால் இன்றைய Chateau Rouge-ல் நான்கில் ஒரு பங்காய் ; பன்மடங்கு கலீஜாய் இருந்தது மட்டும் நினைவுள்ளது !

   Delete
  2. ஓஓஓஓ...
   சேட்டேயூ ரோக்கா....


   அது சோழா செராட்டன்கள் நெறஞ்ச பூலோக நரகமாச்சே...

   Delete
  3. நினைச்சேன் சார்...
   கண்டிப்பாய் அது அந்த ஏரியாக்களாய்தான் இருக்குமென்று..
   வடக்கு பாரிஸ் ஏரியாக்களான பார்பேஸ், சத்தோ ரூஜ் முதல் போர்த் கிளிங்காகூர் வரை இதுபோன்ற நிகழ்வுகள் சகஜம். இன்றும் தொடர்கிறதுதான்...

   Delete
 28. // பயணங்கள் தந்த பாடங்களில் இதுவும் ஒன்றாய் நினைத்துக் கொள்வேன் ! //
  என்ன ஒரு திகிலான அனுபவம் அப்பப்பா...........

  ReplyDelete
  Replies
  1. பொதுவாய் நிறைய பயணம் செய்வோரின் பெரும்பான்மையிடம் ஏதேதோ அனுபவங்கள் இருக்கும் சார் !

   Delete
  2. என் மகன் 6 மாதங்களுக்கு முன்பாக ஆபீஸ் வேலையாக தென்ஆப்ரிக்கா சென்று வந்தான்.அங்கே ரூமுக்குள் துப்பாக்கியுடன் நுழைந்து மிரட்டுவார்களாம். எதைக் கேட்டாலும் கொடுத்து விடுவது என்பதே உயிருக்கு உத்திரவாதமானதாம். வெளியில் தனியாக சுற்றுவது பாதுகாப்பானது இல்லையாம்.

   Delete
  3. தென்னாப்பிரிக்க அச்சு இயந்திர வியாபாரிகள் பலரும் நண்பர்கள் சார் ; வீட்டிலிருந்து வெளியே கிளம்பும் போது துப்பாக்கி இல்லாமல் போவதில்லை என்பார்கள் !

   Delete
 29. காசு! பணம்!! துட்டு..!!

  போயிட்டிருக்கு!!

  ReplyDelete
  Replies
  1. றெக்கை முளைத்து !!

   Delete
  2. ஒரு கத்திரிக்கா 10 ஓவா ரெண்டு நாளிக்கு முந்தி....

   Delete
 30. அது போல் அறிவு உள்ளது அடங்கி கிடக்குது வீட்டிலே!

  அறிவு உள்ளது அடங்கி கிடக்குது வீட்டிலே!

  எதுக்கும் ஆகாத சிலது ஆர்ப்பாட்டம் செய்யுது வெளியிலே!!

  அதாலே மனுசன மனுசன் சாப்புடுராண்டா தம்பிப்பயலே!!!


  என்ன ஒரு தீர்க்க தரிசனம்!!

  ReplyDelete
 31. வந்திட்டேன் சார் 🙏🏼
  .

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ சார்..இக்கட பயமின்றி உலாத்தலாம் !

   Delete
  2. கண்டிப்பாக

   நன்றி சார் 🙏🏼
   .

   Delete
 32. // சும்மாவேனும் ஒருவாட்டி இங்கே தலைகாட்டி விட்டு ஒரு அட்டெண்டன்ஸ் போட்டுவிட்டுப் போனால்,`` அனைவரும் நலமென்ற சந்தோஷம் அனைவருக்கும் கிட்டும் தானே ? Please guys ? //

  உண்மையே சார் 🙏🏼
  .

  ReplyDelete
 33. சார் மீண்டு ஓரட்டகாச பதிவு...முதலில் அட்டகாச காமடியா நகர்ந்த பதிவு ....பின்னர் பக் பக்...திக் திக்தான்....நீங்க ரெண்டாவது அந்த ஹோட்டலுக்கே போனது .. ..நானாருந்தா தப்பிச்சம்டா சாமின்னு அவன் மறஞ்சதுமே பெட்டியோட வேற பக்கம் பாஞ்சிருப்பேன்.....ஆனா திரில்லான அனுபவம்தான்

  ReplyDelete
  Replies
  1. கவிஞரே..இதுக்கொரு பாட்ட போட்டுப்புடாதீங்க ; பூமி தாங்காது !

   Delete
  2. வாழ்க பேட்டரி.

   Delete
  3. எடிட்டர் சார் சொல்ல சொல்ல கேட்காம பாட்டை போட்டு விட்டார். ;)))

   Delete
  4. // நானாருந்தா தப்பிச்சம்டா சாமின்னு அவன் மறஞ்சதுமே பெட்டியோட வேற பக்கம் பாஞ்சிருப்பேன்...// நானும் எந்த தைரியத்தில் நீங்கள் திரும்பி அந்த ரூம் க்கு சென்றீர்?

   Delete
 34. ரொம்ப பெரிய பதிவு...!!! இந்த போட்டோ உங்கள்து தானா சார்???

  ReplyDelete
  Replies
  1. போகஸ் செய்தது என்னை தான் என்பதோடு அந்த polaroid க்கென ஒரு பவுண்டையும் என்னிடம் தான் வசூலித்தார்கள் எனும் போது அது நானாகத் தான் இருக்கும் என்று நினைக்கிறேன் சார் !

   Delete
  2. என் கண்ணாடியை தொடச்சிட்டு உத்து பார்த்தேன் , தாங்கள் தான் சார். எவ்ளோ முடி??? கண்ணே பட்றும்போல! மனிடோவுக்கு சுத்தி போட்டு இருந்தீங்கனா அப்படியே இருந்து இருக்கும்!

   Delete
  3. தல மயிருக்கு ஒரு நாள் செலவு 25000 ஓவா/-

   செய்ய பார்ட்டி - ம நீ ம தலீவரு தெர்யுமா.....

   Delete
  4. அட...இன்னிக்கிருக்கும் சூழலில், முன்மண்டையை மழிச்சிட்டுத் திரிஞ்சால் கொரோனா அண்டாது என யாராச்சும் கொளுத்தி மட்டும் போடட்டுமே, அத்தினி பேருமே நம்ம கட்சியாகிப்புடுவாங்க !

   Delete
 35. ///ஒரு தொழிலதிபருக்கு பாரிஸ் போக ஜோலி இருக்கும் சரி ; இப்டி கும்பலா உங்களுக்குலாம் அங்கே என்னங்கடா வேலை அப்ரசிடிக்களா///---ஹா...ஹா...!!! செம நக்கல் பிடிச்ச இளம் தொழில் அதிபரா இருப்பாரோ???

  ReplyDelete
 36. This comment has been removed by the author.

  ReplyDelete
 37. // "ஊருக்குப் போறோம்....ஜூனியர் லயன் காமிக்ஸ்ன்னு கார்டூனா போட்டுத் தாக்குறோம் ; புதுசா வாங்கியுள்ள கதைகளை லயனிலே கொஞ்சம், திகிலிலே கொஞ்சம்னு போட்டுத் தாக்குறோம் ; அப்புறம் ரொம்பவே முக்கியமா - 'வாங்கோ சார்....வாங்கோ சார்...இனி நம்மகிட்டேயும் ஒரு இரும்புக்கைப் பார்ட்டி இருக்காரு ; வந்து பழகிப் பாருங்க' என்று ஏஜெண்ட்களுக்கு ஓலை அனுப்பணும்" //

  // 'ஹல்லோ' என்றபடிக்கே கையைக் கொடுக்க ; கரும்பு பிழியும் மிஷினுக்குள் புகுந்து வெளிப்படும் ஆலைக்கரும்புகள் என்ன பாடு படுமென்பதை உணர முடிந்தது ! //

  தமாசாக ஆரம்பித்து

  பின்னர்

  ஒரு திகில் திரில்லர் படித்தாற்போல ஒரு உணர்வு

  ஆத்தாடியோவ்

  நீங்க ஏன் அடிக்கடி கட்டைவிரலை எடுத்து வச்சுக்குறீங்கன்னு இப்போ புரியுது சார் 👌🏼👍🏼💪🏼🙏🏼
  .

  ReplyDelete
 38. எடிட்டர் சார்,

  இந்தப் பதிவை படித்த பிறகு, என் நினைவுக்கு வரும் முத்து காமிக்ஸ் தலைப்பு "திகிலூட்டும் நிமிடங்கள்"
  அப்பப்பா பயங்கரமான அனுபவம்

  ReplyDelete
  Replies
  1. 1986-க்கு அப்புறமாய் 1996 வரைக்கும் பாரிஸ் பக்கமாய்த் தலைவைத்துப் படுக்கவே பிடிக்காதிருந்தது சார் ! ஆனால் பின்னாட்களில் தான் பணிகளின் பெரும்பான்மை திரும்பத் திரும்ப என்னை அங்கே இட்டுச் செல்ல, ரொம்பவே பிடித்த ஊர்களில் ஒன்றாகியது !

   Delete
 39. சார், இந்த விதமான திக் திக் அனுபவங்களை பகிரவும் ஒரு தனி தில்லு தேவை. செம்ம தில்லு சார் உங்களுக்கு 🙏👍. Respect 🙏

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப நாளாய் எழுத நினைப்பேன் நண்பரே ; ஆனால் நீண்டு, பெரும் பதிவாய்ச் செல்லும் என்ற சோம்பலில் வேறு தலைப்பைத் தேர்வு செய்திடுவேன் ! இதோ, முழுசாய் வெட்டி ஆபீசராய் இருக்கும் இந்தப் பொழுதினில் எழுத நினைத்த போது ஜாலியாய் வண்டி ஓடியது !

   Delete
 40. // இன்றைக்கு நினைத்தால் அன்றைய எனது பயங்கள் சற்றே ஓவரோ ? என்று தோன்றிடும் தான் ! ஆனால் 19 வயது ; புது ஊர் ; பாஷை தெரியாத இடம் ; முற்றிலும் தப்பான ஜாகை ; முற்றிலும் தவறான ஆட்களின் சூழல் என்றிருக்கும் போது வேறு விதமாய் ரியாக்ட் செய்திட ஜாக்கி சானுக்கோ ; ப்ரூஸ் லீக்கோ தானே சாத்தியப்பட்டிருக்கும் ?! பயணங்கள் தந்த பாடங்களில் இதுவும் ஒன்றாய் நினைத்துக் கொள்வேன் ! //

  அனைவருக்கும் இது ஒரு நல்ல பாடமே. காரணம் இல்லாமல் எந்த அறிமுகமும் இல்லாதவர்களின் உதவியை சிந்திக்காமல் என்றைக்கும் வாங்குவது நல்லது அல்ல என்பது எனது அனுபவ பாடமும்.

  ReplyDelete
 41. உங்களின் மிகப்பெரிய ப்ளஸ் நகைச்சுவையும் படிப்பவர்களை கைகோர்த்து உங்களுடன் பயணிக்க வைக்கும் எழுத்து நடை. மீண்டும் ஒரு அருமையான பயண (அனுபவ) கட்டுரை. நன்றி சார்.

  ReplyDelete
  Replies
  1. அட, ஜாலியாய் எழுத முனைவது மட்டுமே எனது குறிக்கோள் சார் ! மிச்சம் மீதியை உங்கள் அன்புகள் பார்த்துக் கொள்கின்றன !

   Delete
 42. அருமையான பதிவு சார்.. பதிவை படிக்கும் போது மண்டைக்குள் கேரக்டர்கள் கார்டுனா / காமிக்ஸா வருது.. இது எனக்கு மட்டும் தானா.

  ஆனாலும் நம்ம எடிக்கு தகிரியம் கொஞ்சம் சாஸ்திதான்.

  எடிட்டர் இவ்வளவு ஆபத்தான சாகஸங்களை சிறுவயதிலேயே வாசகர்களுக்காக கடந்து காமிக்ஸ் புதையலை அளித்துவரும் நிஜ உலகின் கதாநாயகன்.

  ReplyDelete
  Replies
  1. பயத்தை முழுசாய் உணரக்கூட விபரம் பற்றாத வயசு சார் ; கடப்பாரை நீச்சலடித்தாவது முங்கிடாது தப்ப வேண்டுமென்ற முனைப்பே அந்நாட்களில் வண்டியை ஓடச் செய்த சமாச்சாரம் !

   Delete
 43. அதி பயங்கர பதிவு சார். என்ன தான் நீங்கள் நகைச்சுவை சேர்த்து கூறினாலும் அதன் இடையில் இருந்த திகில் அப்படியே உணர முடிந்தது. ஜன்னல் வழியே வெளியே குதிக்கும் அளவிற்கு யோசிக்க வைத்திருக்கிறதே. நீங்கள் தப்பி வந்தது மகிழ்ச்சியான சுப முடிவாக இருந்தது.

  மேலே கூறியதுபோல் 18+ GN ஆக தான் வெளியிடமுடியும் 😁. படங்களுடன் படிக்க ஆவலுடன் 😉

  ReplyDelete
  Replies
  1. //படங்களுடன் படிக்க ஆவலுடன் 😉//

   ஒய் திஸ் கொலை வெறி ?

   Delete
 44. எனது முதல் அமெரிக்க பயணத்தின் போது bostonனில் இருந்து சைனா பஸ்ஸில் நயகரா செல்ல திட்டமிட்டு இருந்தேன். எனவே அதிகாலையில் Boston வீதிகளில் சைனா பஸ் அலுவலகம் எங்கே என்று தேட ஆரம்பித்தேன். அப்போது ஒரு தெருவில் கறுப்பு இன மக்கள் சிலர் அங்கு வருவோரிடன் பணம் கேட்பது மற்றும் காரில் வருபவர்களை நிறுத்தி பணம் கொடு என்று தகராறு செய்வதை தூரத்தில் இருந்து கவனித்து விட்டேன். சரி இந்த பக்கம் சென்றால் நமக்கு இது மாதிரி அல்லது இதைவிட பெரிய பிரச்சினை என புரிந்தது. எனவே அங்கு உள்ளவர்களிடம் சைனா பஸ் அலுவலகம் செல்ல வேறு வழி இருக்கிறதா என கேட்டு தெரிந்து கொண்டு ஒரு மூத்திர சந்து வழியாக தப்பித்தோம் பிழைத்தோம் என நயகரா போகும் பஸ்ஸைப் பிடித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. ///ஒரு மூத்திர சந்து வழியாக தப்பித்தோம் பிழைத்தோம் என நயகரா போகும் பஸ்ஸைப் பிடித்தேன்.///

   புதுசா யார் வெளிநாடு போனாலும் மூத்திரச்சந்துகள் வழியாத்தான் போயாகணும் போலிருக்கு!! :)

   Delete
  2. காலத்தின் கட்டாயம் !!

   Delete
 45. பாரிசும் உந்தன் உறவை நாடி வந்த பறவை
  பாரிசும் உந்தன் உறவை நாடி வந்த பறவை
  தேடி வந்த வேளை வேடன் செய்த லீலை
  தேடி வந்த வேளை வேடன் செய்த லீலை
  சிறகுகள் உடைந்ததடி குருதியில் நனைந்ததடி
  பாரிசே... பாரிசே...

  காமிக்ஸ் கதவுகளை திறக்க ஓடி வந்தேன்
  சிறையில் சிக்கிக் கொண்டதேனம்மா
  வலையில் விழுந்த காமிக்ச மீட்க ஓடி வந்தேன்
  வலையில் மாட்டிக் கொண்டேன் நானம்மா
  காமிக்கிஸ் நெஞ்சங்களை கசக்கி பிழிவதிலே
  இனிமை காணுவது விதியம்மா
  அன்பு உள்ளங்களை ரத்த வெள்ளத்திலே
  துவைத்து சிதைப்பது சதியம்மா
  உடல்களை அழித்திட ஊருக்குள் பலருண்டு பாரம்மா
  காமிச பிரிந்திட பாருக்குள் எவருண்டு சொல்லம்மா

  பாரிசு உந்தன் உறவை நாடி வந்த பறவை

  வீணை எரிகிறது விரல்கள் வேகிறது
  நாதம் மீட்டுகிறேன் வாராயோ
  புயலும் வலுக்கிறது கடலும் கொதிக்கிறது
  படகை செலுத்துகிறேன் வாராயோ
  எண்ணெய் இழந்த பின்னும்
  எரிய துடிக்க எண்ணும்
  தீபம் போல மனம் அலைகிறது
  என்னை இழந்த பின்னும்
  காமிக்ச காக்க எண்ணும்
  இதய அரங்கம் இங்கு அழைக்கிறது
  வாழ்வது ஒரு முறை
  உனக்கென வாழ்வது முழுமை என்பேன்
  சாவது ஒரு முறை
  உனக்கென சாவதே பெருமை என்பேன்

  பாரிசும் உந்தன் உறவை நாடி வந்த பறவை
  தேடி வந்த வேளை வேடன் செய்த லீலை
  சிறகுகள் உடைந்ததடி குருதியில் நனைந்ததடி
  பாரிசே... பாரிசே...

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா! அட்காசம்.. அட்டகாசம்!!

   சரி, உண்மையச் சொல்லுங்க ஸ்டீல்!!
   ஒரு ஸ்பெல்லிங் மிஸ்டேக் கூட இல்லையே.. யாரு எழுதிக்கொடுத்தது?

   (இதே சந்தேகத்த போன பதிவுல நம்ம GPயும் கேட்டிருந்தார்..)

   Delete
  2. ஸ்டீல் இன்னும் 16 நாட்கள் உள்ளது.

   Delete
  3. ஒரேயொரு கோரிக்கை ஸ்டீல் : அப்பிடிக்கிப்பிடி தாலாட்டு கீலாட்டு பாடுறேன்னு 'வைதேகி காத்திருந்தாள்' விஜயகாந்த் மாதிரி, வூட்டிலே ஏதாச்சும் ஆரம்பிச்சுப்புடாதீங்க ; ஊரடங்காவது ஒண்ணாவதுன்னு ஆளாளுக்கு தெறிச்சு ஓடப் போறாங்க !

   Delete
  4. தாங்காது குமார்....சார் அப்ப அடுத்த மாத புக்கும் சேர்ந்த குண்டு பார்சலோ...
   சார் ஏனோ டி ஆரு உங்க தவிப்ப அப்பவே பாடிருக்காரு...அவரும் கூட பயணிச்ருப்பாரோ

   Delete
 46. அடியேன் அட் சிங்கபுரா....

  அது 1985 கடைசி...

  சும்மா மெடிக்கல் ஷாப்ப பாத்துட்டு கெடந்தவன உசுப்பேத்திட்டான் நம்ம ஜூனியரு ஒருத்தேன்.
  போன் ஒடனே வேல கெடக்குதுன்னு....
  நல்ல சம்பளம் வேற..‌‌‌

  எங்கப்பாரு ட்ட நானும் போயி சம்பதிக்கிறேன்னு சொல்லி இந்தியன் ஏர்லைன்ஸ் ல ஏறிட்டேன்...

  ஒங்க ஊரு செவகாசி தொழிலதிபரு ....கம் ஜோசியர்.... அடிக்கடி மதுரக்கி போய்ட்டு வர்ற மாதிரி ட்ரிப் அடிப்பாரு....அவர் புடிச்சி பேசி... பரிட்சயம் பண்ணீட்டதனால தெகிரியமா போலாம்னும் - பையன அனுப்பலாம் னும் ஏகோபித்த முடிவு பண்ணி அனுப்பீட்டாங்கே...

  அது ஏங் கேக்குறீங்க...
  அப்பாவுக்கு வேண்டப்பட்ட ரைஸ் மில் அண்ணாச்சி அவுரோட தங்கச்சி மவனுக்கு ரெண்டு ஊறுகா பாட்லு; ரெண்டு உப்புகண்டம் பாட்லு ன்னு என்னோட லக்கேஜ்ல பொதிய கூட்டீட்டாய்ங்கே...

  ReplyDelete
  Replies
  1. இருங்க ஸ்டீல் சொல்லுவாரு! சிங்கப்பூர்லயும் மூத்திர சந்துகள் இல்லாமலா போகும்!! ;)

   Delete
  2. ஹி..ஹி...இந்த ஞாயிறு பற்பல மூத்திரச் சந்துகளை அடையாளம் காட்டும் போலுள்ளதே !!

   சிங்கப்பூரிலும் ஒரு தெறிக்கும் அனுபவம் உண்டு தொழிலதிபருக்கு ! இன்னொரு நாளில் அது பற்றி !

   Delete
  3. "சிங்கப்பூரில் சின்னாபின்னம்"--ம்..ம்..சீக்கிரம்! சந்து கதைய கொட்டுங்க!

   Delete
  4. சூட்கேஸ் ல அந்த ஊறுகா பாட்லு தொறந்து என்னோட பனியன் : ஜட்டி ஊறுகா காரத்தோட - "மச்சினிச்சி வர்ற
   நேரம் மண் மணக்குது

   மனசுக்குள்ள ஊறுகா வர்ண ஜட்டி பறக்குது " பாட்டு...பிடிச்சது தனிக்கதை.

   ஏர் ஹோஸ்டஸ்லாம் அப்சரஸ்ன்னு நெனச்சா... செத்தீங்க...
   நமக்கு வணக்கம் சொன்ன குந்தாணி கெழவிங்கள நெனச்சா இன்னிக்கும் வயிறு எரியும்...அப்ப மதுரை மெடிக்கல் காலேஜ் பார்மசி ஸ்டூடண்ட் டா வலம் வந்ததால- தங்கம் தியேட்டர்ல -' த ஸ்பை ஹூ லவ்டூ மீ ' பாத்து புல்லரிச்சு போயிருந்த வாலிப வயசு வேற...உள்ள போனா இப்ப உட்ருக்குற சூப்பர் புளூ வெள்ள பஸ்ஸூ மாதிரி நீளமா உக்காந்திருந்தாய்ங்கே...என்னோட சீட்டோ நம்ம! பிளேன்ல வால் பகுதி...
   வசதின்னா வசதி...அடிக்கடி ஒண்ணுக்கு போகலாம்...கக்கூஸூ பக்கமான்னு சொல்ல வந்தேன்...போயி உக்காந்தேன்...எனக்கு பக்கத்துல ஒரு க்யூட் கேர்ல் சீட் நம்பர் கேட்டுட்டே வந்து உக்காந்தாங்க...சங்கோஜமாக சிரித்து வைத்தேன்...நடை பாதைக்கி அடுத்து சீட்கள் அடுத்து நடைபாதை.அடுத்து சீட்கள் என ஒண்ணரை பஸ் மாதிரி வச்சுக்கங்க...
   அப்பதான் தலைக்கி மேல் பாத்தேன் லைட் ஏசி ஸ்விட்சுகளை..‌‌‌‌‌‌சரியா ஒர்க் பண்ணுதான்னு செக்பண்ணிகிட்டேன்.சார் ஒங்க பைகள்ஸ தூக்கி மேல் வைங்கன்னு ன்னு ஏர் ஆம்பள ஹோஸ்டஸ் கர்ண கடூரமா உத்தரவு போட, எங்க வைக்கன்னு கேட்டேன்.மேல லக்கேஜ் பாக்ஸ் ல - சீக்கிரம் டேக் ஆஃப் ன்னு சொல்லீட்டே போயிட்டரு... குடுங்க நா வைக்கிறேன்னு அந்த இள மங்கை தான் வாங்கி மேல் இருந்த டிக்கிய தொறந்து பெரிய ஜோல்னா பைய உள்ள வைச்சி மூட முடியாம மூடுனாங்க.பாத்துங்க பிளேன் திரும்புறப்ப தலைல விழுந்துடப் போகுதுன்னு என்னோட ஐக்யூவ காட்டினேன் - (நம்மூரு பஸ்ல எத்தன தடவ மண்டைல விழுந்திருக்கு பக்கத்து சீட்கெழவியோட பையெல்லாம். அக்காங்...நாங்கல்லாம் யாரு...முன்ஜாக்ரதை முன்சாமீஸ்ல..)

   Delete
  5. சிங்கப்பூரில் சின்னாபின்னம்..

   ஹா..ஹா..ஹா..

   Delete
  6. பிளேன் கெளம்பப் போகுதுன்னுட்டு மைக்ல சத்தம் போட்டாங்கே.நடைபாதைல நின்னுட்டு மஞ்சக்கலரு பைய கழுத்துல மாட்டி காட்னாங்கே.குளூக்கோஸ் பாட்லு டியூப் மாதிரி தொங்குனத தூக்கி மூக்குல மாட்னாங்கே. "ஙே"ன்னு முழிச்சிகிட்டே எம்ஜியாரு படம் மாதிரி பாத்ததுதா நா அப்ப செய்ய முடிஞ்சது.அதெல்லாம் அவசரகால முன்னெச்சரிக்கை நடைமுறைகளாம்.அப்புறமா கேட்டு தெரிஞ்சி கிட்டேன்.
   சர்ர்ருன்னு கெளம்பி ஏற ஆரம்பிச்சது நம்ம போயிங்...புள்ளிகளாக தெரிந்த திரிசூலம் டெர்மினலும் ,மெட்ராஸ் ரோடும், நட்சத்திர முகப்பு விளக்கு வாகனங்களும் சடுதியில் பின்னோடி மறைந்தன... வாந்தி வரும்-தலை சுத்தும்னாங்கே..எனக்கு ஒண்ணுக்குதா வந்திச்சி...எவனாவது தூக்கீட்டு போயிடுவானோன்னு எம்பெட்டியையும் பையையும் ரெண்டுகைல புடிச்சிட்டே உக்காந்திருந்ததால (நைட்ஒருமணிக்கி பிளேன் விட்டுட்டோம்னா ) "டாய்லட்ல இந்தியாவோட எதிர்காலம் நம்ம கைல ங்குற " பொன்மொழிகள பாக்க மறந்துட்டேன்.
   ஏறி பறக்க ஆரம்பிச்சதும் (நா பெல்ட் போடல)அல்லாரும் ரிலாக்ஸா ஆனாங்க.ரெண்டு பேரு எந்தரிச்சி பின்னாடி போய்ட்டு வந்தாங்கே.எனக்கு புரிஞ்சி போச்.அதுங்களும் சூட்கேஸ் சூதானங்கள்தான்னு.நானும் பின்னாடி போய்ட்டு வந்தேன்.வெஸ்டர்னு டாய்லட்ல ஏறி உக்காந்து : சூ சூ போனது சரித்திர முக்கியத்துவம்.அதவிட ஃப்ளாஷ் பட்டன அமுக்குனதும் புளூ கலர்ல தண்ணி பாச்சி பாக்காம - நாம் எப்படா புளூகலர்லன்னு பதர்னது தனி...

   Delete
  7. j ji

   ஹா ஹா ஹா!! செம்ம!! :)))))

   Delete
  8. J அண்ணா செம்ம செம்ம

   Delete
  9. ஜனார்த்தனன் @ இது உங்க அடுத்த பட கதையா? காமெடி, சஸ்பென்ஸ் மற்றும் ஆக்சன் என செமையாக இருக்கிறது. :-)

   அருமையான ஆட்டோகிராப். நன்றி.

   Delete
  10. நாமதா எப்பவுமே பதர் சொக்கங்கே தான.பதட்டம் தணிஞ்சி பக்கத்து சீட் இளைஞிகிட்ட பத்து நிமிஷம் கடல போட்டுட்டு தூங்கீட்டேன்.நா கேட்டதவுட அவ என்ன பத்தி கேட்டதுதா ஜாஸ்தி.யாரு என்ன எதுக்கு போறேன்னு வெலாவாரியா ஒளறிவச்சேன்.
   சிங்கப்பூர்ல வெடிகாலைல எறக்கிவிட்டாங்கே.ஏர்போர்ட் உள்ளயே எக்ஸேன்ஜீல நா இருபத்தஞ்ஜாயிரம் நம்ம ரூபாய சிங்கப்பூர் டாலரா மாத்துறத அந்த பொண்ணு பாத்திட்டே இருந்திருக்கா.எனக்கப்பறம் அவ மாத்துனது ஆயிரம் ரூபாய மட்டும்.அது அப்ப எனக்கு ஒறைக்கல.எதார்த்தம்.

   எங்க தங்கப் போறீங்கன்னா.மாரியம்மன் கோயில் பக்கமான்னேன். பஸ்ல ஏறுறப்பயே டிக்கட் எடுக்கணும்னு தெரியாம முழிச்சி டாலர பேப்பர போட்டு ட்டு டிரைவர் சொன்ன நம்பர் அமுக்கி டிக்கட் வந்ததும் மீதி சில்லறைன்னு கேட்டது இன்னமும் ஞாபகம் இருக்கு.‌மொத டவுண் பஸ்லயே சிங்கப்பூருக்கு மொய்ன்னு நெனச்சி கிட்டேன்..சரியான சென்ட்ஸ் போடணுமாம்.மீதி சில்லறை பாக்கி ...ஹிஹ்ஹி...நஹி ஹை.

   எறங்கி நடந்து விசாரிச்சி 23 ம் மாடில இருந்த செவகாசிகாரரோட அபார்ட்மெண்ட் பெல்ல அடிச்சேன்.புரோட்டா மாஸ்டர் வேலைக்கி வந்திருந்த சீவில்லிபுத்தூரு இளந்தாரி ஒருத்தரு கதவ தொறந்தாரு.அறிமுகமாகிக்கிட்டோம்.ஜோசியரு ஒரு வாரம் கழிச்சி வந்திருவேன்னு என்ட்ட சொல்லீருந்தாரு.பிளேன்ல ஃநைட் 3 மணிக்கு சாப்ட்டா ஆம்லெட்டும் வெஜிடபிள் ரைஸும் ,வெரல் நீள நிலக்கடலயும் கீழ போயிச்சா வயிரு புர்ன்னு உறுமுனது.புரோட்டா நண்பன் கூட சேந்து போயி காரைக்குடி பாய் கடைல புரோட்டா முடிச்சி, மில்க்மெய்ட் + டிகாக்ஷன் காப்பி குடிச்சேன்.
   பெறகு பதினஞ்சி நா அலயோ அலன்னு அலஞ்சி , ஸ்ட்ரெய்ட் டைம்ஸ் (குப்பத்தொட்டில கெடைக்கும்)படிச்சி போன்ல சீனன்ட்ட இன்டர்வியூ ஃபிக்ஸ் பண்ணி , பாஸ் பண்ணி சோச்சூகாங்ல, புராஜக்ட் இன்ஜினீயரா வேல பாத்தது தனிக்கத.

   15 நா விசா முடியறதுக்குள்ள ரெக்க கட்டி பறந்தது மறக்க முடியாதது.எனக்கு கீழ - ஏழு பெங்காலிங்க, மூணு சிலோன்காரங்கே, ஒரு பாகிஸ்தானி, சீனங்கே நெறைய பேரு வேல பாத்தாங்கே.எனக்கு தனி குவார்ட்டர்ஸ் வீடு, செல்போன்,ஜீப்ன்னு வேல.காலைல மூணு மணிக்கு முழிச்சி அஞ்சு மணிக்கு வேலைக்கு போயி .ம்ஹும்....வேல வேல வேல...
   இப்ப நடந்த கதைக்கி வருவோம்.

   ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் நம்மூருக்காரங்கே எல்லாரும் அங்க கூடுவாங்கே.நம்மூரு மாதிரியே தின்னு ,துப்பி, நாசம் பண்ணுவாங்கே. பிளேன்ல கூட வந்தாள்ல அந்தப் பொண்ணு அங்கன என்ன பாத்துட்டா. கூட ஒருத்தன்.அறிமுகப் படுத்தினா.வாங்க சாப்ட்டு போலாம்னு கூப்டுபோனாங்க.நாளக்கி எங்க வீட்டுக்கு வாங்கன்னு அட்ரஸ் குடுத்தா.
   மறுநாள் அங்க போகலாம்னா முடியாம போச்சி.ரெண்டு நா கழிச்சி திடீர்னு ஞாபகம் வந்து அங்க போனேன்.வாங்க வாங்கன்னு வாய் நெறைய பேசி காப்பி குடுத்தாங்க.

   ரெண்டு மூணு பேரு உள்ள போனாங்கே.சட்டைய போட்டு ட்டு சரிபண்ணிகிட்டு வந்தாங்கே.எனக்கு புரிஞ்சி போச்சு.

   காபிகுடிச்சது தல சுத்த ஆரம்பிச்சிருச்சி.

   அப்டியே ஹால் ஷோபால்லயே பிளாட்டாயிட்டேன்.அரைமணி நேரங்கழிச்சி எந்திரிச்சா பேண்ட்பாகெட்ல வச்சிருந்த ஐநூறு சிங்கப்பூர் டாலர் அபேஸ்.அரை மயக்கத்துலயே மாரியம்மங்கோயில் வரைக்கும் கொண்டாந்து விட்டுட்டான் அவளோட மாமா!!!

   கற்ப்போட விட்டாங்களே.இத்தனக்கும் நம்மூருக்காரங்கே.
   நம்ம கற்பு பத்திரமா இருந்திச்சுல .அது போதும்.அக்மார்க் கற்பு.ISI கற்பு.ஐநூறு டாலர் போச்...


   Delete
 47. ஒவ்வொரு பூக்களுமே. சொல்கிறதே..
  வாழ்வென்றால் (இது போல) போராடும் போர்க்களமே.

  ReplyDelete
 48. அன்பு எடிட்டர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் .வீட்டில் இருப்பவவர்களுக்கு நன்றி. நான் பணி புரியும் அரசுத்துறை அத்தியாவிசய(essential) என்று அரசு ஆணை பிறப்பித்துள்ளதால் அலுவலக பணியில் இருக்கவேண்டியுள்ளது.நாங்கள் பரவாயில்லை ,மருத்துவ பணியாளர் ,உள்ளாட்சி பணியாளர்,வருவாய் துறை பணியாளர்கள் பம்பரமாய் சுற்றுகின்றனர்.வீட்டில் இருப்போம் பாதுகாப்பாய் இருப்போம்

  ReplyDelete
  Replies
  1. நிஜமான ஹீரோக்கள் சார் நீங்கள் ஒவ்வொருவருமே ! ஒரு தகவலாய் பதிவிட்டுள்ளமைக்கு நன்றிகள் !!

   Delete
  2. நன்றி சார்.நன்றி சரவணன்

   Delete
  3. வாழ்த்துகளும் நன்றிகளும் செந்தில் மாதேஸ் ஜி!! _/\_

   Delete
  4. வாழ்த்துகளும் நன்றிகளும் நண்பரே...

   Delete
  5. நிஜமான ஹீரோக்கள் நீங்கள் ஒவ்வொருவருமே செந்தில்! கவனமாக இருங்கள்.‌உங்களுடன் எல்லாம் வல்ல இறைவன் துணையிருக்க வேண்டுகிறேன்.

   Delete
  6. நண்பர்கள் அனைவருக்கும் நன்றி

   Delete
 49. சார் வில்லன் ஆக்டர் ரியாஸ்கான் மாதிர்யே சும்மா கட்டுமஸ்தா இரூக்கீங்க.

  ReplyDelete
  Replies
  1. நான் பவர்ஸ்டாராவே இருந்திட்டுப் போயிடுறேன் சார் !

   Delete
  2. கிடைக்கிற ஆஃபரை ஏன் சார் வேண்டாங்குறீங்க.?

   :-)

   Delete
  3. தம்பீ..நீங்க இந்த ட்ரெஸ்ல ச்சும்மா..எம்ஜீயார் மாதிரி தகதகன்னு மின்னுறீங்க..

   Delete
  4. // கிடைக்கிற ஆஃபரை ஏன் சார் வேண்டாங்குறீங்க //

   அதானே. கூச்ச படாமல் ஆஃப்பரை ஓகே சொல்லுங்கள் சார்.

   Delete
 50. 19வயசுல துணிச்சலுடன் சமாளித்து மீண்டு உள்ளீர்கள் சார். உசாராக உங்களது உள்ளுணர்வு காப்பாத்திட்டது! திகில் கதை படித்தமாதிரி இருக்கு! திக்திக்பாரீஸ்!

  ReplyDelete
 51. ஆயிரம் செய்திகளை ஆங்காங்கே மழைச் சாரல் போல தூவிச் செல்லும் பயணக்கட்டுரை சார்.ஆனால்
  கூடவே துளியூண்டு திகிலும் பயணம் செய்தது உண்மையே.எத்தனையோ பயணங்களைப் பார்த்திருப்போம்.இது கொஞ்சம் சீரியஸாகவே இருந்தது சார்..

  ReplyDelete
 52. சார், இத்தாலியின் நிலவரம் நிஜமாகவே மனதை கனக்கச் செய்கிறது! நம் படைப்பாளிகளை தொடர்பு கொண்டீர்களா சார்? அனைவரும் நலம் தானே?

  ReplyDelete
  Replies
  1. நானும் கேட்க நினைத்த வினா..?!

   Delete
  2. போனெல்லி & டயபாலிக்கின் அஸ்டோரினா நிறுவனங்கள் இருப்பது சிக்கலின் நட்ட நடு மையமான மிலன் நகரில் தான் ! ஆனால் ஊடகங்கள், பதிப்பகங்கள் எல்லாமே ஆண்டவன் புண்ணியத்தில் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டே தான் இருந்து வந்துள்ளன ! போனெல்லியில் 'தல' டெக்சின் தில்லு கணிசமாகவே இருக்க, ஒற்றை நாள் கூட விடுமுறையின்றி பணியாற்றி வந்துள்ளனர் ! இடையே 2 வாரங்களாக அவர்களது ஆன்லைன் ஆர்டர்களை பிராசஸ் செய்திடும் கிட்டங்கி மட்டும் பூட்டப்பட்டிருந்தது ! ஆனால் நாளை முதல் அதுவும் திறந்து, வழக்கம் போல் செயல்படத் துவங்கவுள்ளது !

   புதிதாய் பதிவாகும் கேஸ்கள் குறையத்துவங்கி விட்டுள்ளன ; ஆனால் தினப் பலிகள் மிரளச் செய்கின்றன !

   Delete
  3. இவ்வளவு (ம)ரணகளத்திலும் நம் படைப்பாளிகள் தொடர்ந்து பணியாற்றுவது நிஜமாகவே ஆச்சரியப்படுத்துகிறது சார்!! ஆனாலும் கொஞ்ச நாள் முடங்கிக்கிடப்பதுதான் புத்திச்சாலித்தனமோ என்றும் நினைக்கத்தோன்றுகிறது!!

   Delete
  4. மகிழ்ச்சி சார்...:-)

   Delete
  5. // புதிதாய் பதிவாகும் கேஸ்கள் குறையத்துவங்கி விட்டுள்ளன // நல்ல செய்தி

   Delete
  6. // புதிதாய் பதிவாகும் கேஸ்கள் குறையத்துவங்கி விட்டுள்ளன ; ஆனால் தினப் பலிகள் மிரளச் செய்கின்றன ! //

   ஒரு நல்ல செய்தி ஒரு கெட்ட செய்தி.... இனி எல்லாம் நல்ல செய்தியாக வரட்டும்.

   Delete
 53. பாரிஸ் பயங்கரம்.
  உங்கள் நிலை பரிதாபம்.நல்ல வேளை தப்பித்து வந்து விட்டீர்கள்.

  ReplyDelete
 54. சார், தலைவர் ரொம்ப வருசமா வெளிநாடு போக முயற்சி செஞ்சுட்டு இருக்கார்... பார்த்து தலைவரே பத்திரமா போயிட்டு வாங்க.. :)

  ReplyDelete
  Replies
  1. இந்த பதிவை படித்த பிறகும் தலைவர் வெளிநாடு போவர்?

   Delete
  2. அவரு வெளிநாட்டு போக கூடாது என்ற உங்கள் எண்ணம் வாழ்க நாகராஜன். என்ன ஒரு நல்ல எண்ணம் :-(

   Delete
  3. @kumar - தலைவரின் இந்த நேரம் வெளிநாட்டில்தான் இருந்து இருப்பார்.. என்ன செய்ய, எல்லாம் இந்த கொரனா காரணமாக இன்னமும் பதுங்கு குழியிலேயே இருக்கறார்..்்்்்்்்்்

   @parani - தலைவரின் வெளிநாட்டு பயணத்துக்கு ஒரு கைடு தேவைப்படுகிறார்.. தாங்கள் தயாரா ???

   Delete
  4. @parani - ஒரு கொசுறு தகவல்

   தலைவரை எப்படியாவது வெளிநாடு அனுப்பியே ஆக வேண்டும் என்று (கடைசி முயற்சி கள்ளத்தோணி) ஒரு டீமே முயற்சி செய்து கொண்டு இருக்கிறதாம்....

   Delete
 55. தற்போதைய நிலவரங்களை பார்க்கும் போது ஆகஸ்டில் தான் மொத்த புத்தகங்களையும் வாங்க வேண்டி வரும்னு நெனைக்கிறேன்!

  ReplyDelete
  Replies
  1. மே மாத கடைசியில் நிலவரம் கட்டுக்குள் வரும் என்று நினைக்கிறேன்.

   Delete
 56. சார், உங்களது பயண அனுபவங்களை மட்டும் "சிங்கத்தின் சிறு பயணத்தில்" என்ற தலைப்பில் தனியே வெளியிடலாம் ... படிக்க படிக்க அவ்வளவு சுவாரசியங்கள்... ஆனால் இனிமேல் அங்கே போக இருப்பவர்கள் கொஞ்சம் முன்னெச்சரிக்கையாக இருக்க உங்களது அனுபவம் கை கொடுக்கும்...

  ReplyDelete
 57. சார் ஒரு சந்தேகம்:

  இந்த அனுபவங்கள் நமது சீனியர் எடிட்டருக்கு அப்பொழுதே சொல்லி விட்டீர்களா ? இல்லை சொன்னால் அடுத்த முறை வெளிநாடு அனுப்பி வைக்க மாட்டார்கள் என்று சொல்லாமல் விட்டு விட்டீர்களா ?

  (சொல்லாமல் இருந்திருந்தால், இந்த பதிவை படித்த பின்பு சீனியர் எடிட்டரின் ரியாக்சன் என்னவோ சார்?)

  ReplyDelete
 58. போட்டோ போட்டி.

  ஏழு வித்தியாசங்கள்.

  அப்ப - இப்ப

  1) தலை கேசம்
  2) வாட்ச்
  3) கம்பிளிப்பூச்சி மீசை
  4) (அந்த ஃபேமஸ் ஆ...தை) கண்கள்
  5) வாலிப வனப்பு
  6) புறா
  7) நெக்-பனியன்

  ReplyDelete