Sunday, March 01, 2020

ஆனையுமே சிங்கிளாய் வருமே !!

நண்பர்களே,

வணக்கம். ஒரு சோம்பல் முறிக்கும் ஞாயிறின் வணக்கங்கள் ! ஏப்ரலின் பணிகள் ஏற்கனவே பாதிக்கும் மேலாய் நிறைவுற்றிருக்க, ஒற்றை நாளுக்கு deadlines பற்றிய சிந்தனைகளின்றி, மல்லாக்கப் படுத்து விட்டத்தை வெறித்துப் பார்க்கத் தோன்றியது ! மார்ச்சின் இதழ்கள் மசி மணத்தோடு உங்கள் கைகளில் புரண்டு கொண்டிருப்பதால் வேறெங்கும் கவனத்தைத் திருப்பிடல் சுகப்படாது என்பது புரிகிறது ! அதே சமயம் படம் பார்த்தல் ; அட்டைப்படங்களை முறைத்தல் என்பதைத் தாண்டி வேறெதனையும் உங்களின் பெரும்பான்மை செய்திருக்க வாய்ப்பில்லை எனும் போது, கதைகளைப் பற்றி விரிவாய்ப் பேசவும் தயக்கமாயுள்ளது ! ஒவ்வொரு இதழையும் நீங்களே சாவகாசமாய் ரசிக்கும் வேளைவரையிலும் இட்லிக்கே பெவிகால் தான் உகந்த சைட்டிஷ் என்றுபடுகிறது !

Anyways - இம்மாதத்திலேயே பார்வையைத் தக்க வைத்துக் கொண்டும் ; relevant topic -ல் சவாரி செய்யவும் ஒரு வழியுண்டு ! In fact அது தனி வழியுமே..!! சிங்கம் மாத்திரமல்ல - ஆனையுமே சிங்கிளாய்த் தான் சுற்றி வரும் எனும் போது இவ்வாரத்து அலசல் அந்த ஆனை (ஜம்போ) சார்ந்தது !! 

ஜம்போ காமிக்ஸ் !! 24 மாதங்களுக்கு முன்னே இதனை அறிவித்த போது சிலபல உயர்ந்த புருவங்கள் நம்மிடையே இருந்ததில் இரகசியங்களில்லை தான் ! ஏற்கனவே சிங்கம் ; புலி ; பெருச்சாளி லோகோக்களுடன் புக்குகள் வெளியாகிக் கொண்டிருக்கும் போது - புதுசாய் இது எதுக்காம் ? என்று என்னிடமே கேட்டோரும் உண்டு ! "கொஞ்ச காலம் போகட்டுமே ; சொல்கிறேன் !" என்று சமாளித்திருந்தேன் ! இதோ, இன்றைக்கு 2 சீசன்களும், 12 இதழ்களும் நம்பின்னே என்ற நிலையில், ஜம்போவின் காரணம் பற்றிப் பேச முனைகிறேன் ! 

நமது காமிக்ஸ் ரசனைகளை ரொம்பச் சுலபமாகவே ஒரு பொதுவான வரைவுக்குள் ஐக்கியமாக்கிட முடியும் என்பேன் !

1 :ஒரு வலுவான நாயகனோ / நாயகியோ அவசியம் !

2 : அந்த நாயகனின் தொடரினில் நிறையக் கதைகள் அமைதல் அவசியம் ! வருஷத்துக்கு மூன்றோ / நான்கோ போட்டாலும் கூட சிலபல ஆண்டுகளுக்காவது வண்டி நீண்டு ஓடிட வேண்டியது அவசியம் !

3 : அவை முழுநீளக் கதைகளாக இருத்தல் ரொம்ப முக்கியம் ! என்னிக்கோ ஒரு நல்ல நாள் - பொழுதுக்கு துண்டு, துக்காணியாய் அந்த நாயகனின் மினி சாகசம் தலைக்காட்டினால் தப்பில்லை தான் ; ஆனால் முழுநீளக் கதைகளுக்கே 'ஜெ' !!

கி.நா. ; புதுப்பாணிக் கதைகள் என்றெல்லாம் நாம் நிறையவே மாற்றங்களைக் கண்டிருந்தாலும், mainstream சந்தாவில் இடம்பிடிக்கும் ஹீரோ / ஹீரோயின்கள் எல்லோருமே மேற்படி எழுதப்படா விதிகளுக்கு உடன்படுபவர்களே ! காலமாய் நாம் பழகியது இந்த template க்கே எனும்போது அதனோடே தொடர்ந்து பயணிக்க நாம் விரும்புவதிலும் தப்பில்லை தான் ! And இத்தாலிய காமிக்ஸ் உலகிலும் சரி ; பிரிட்டிஷ் உலகிலும் சரி, கிட்டத்தட்ட நமது பாணிகளே எனும் போது நமக்குத் துணைக்குத் தாட்டியமாய் ஆட்களுண்டு !

ஆனால் கடல்போன்ற பிரான்க்கோ-பெல்ஜியப்  படைப்புலகில் கல்லில் அடித்தாற்போன்ற நிலையான பாணிகள் என்று இருப்பதில்லை ! Yes - நமக்கேற்ற மாதிரி தொடராய் சாகசம் செய்யும் நாயகர்கள்  எக்கச்சக்கமே ; அதே சமயம் விதவிதமான கதைக்களங்களைக் கையாளும் oneshots ; 3 / 4 /5 பாகத் தொடர்களும் ஏகம் - சமீபத்தைய "பிஸ்டலுக்குப் பிரியாவிடை" யைப் போல ! கண்ணில் படும் இது போன்ற தொடர்கள் ஒரு வண்டி எனும் போது - அவற்றை உள்நுழைக்க "ஈரோடு ஸ்பெஷல்" ; "கும்முடிப்பூண்டி ஸ்பெஷல்" ; "எட்டையாபுரம் ஸ்பெஷல்" என்று ஏதேனும் தேற்றினால் தானுண்டு என்பதே நிலவரமாய் இருந்தது ! அவற்றை ரெகுலர் சந்தாக்களுக்குள் நுழைப்பதும் சுலபமல்ல - simply becos யாரேனும் ஓரிரு established ஹீரோக்களுக்கு கல்தா கொடுத்தாலே இந்த நீளமான oneshots களை வரவேற்கச் சாத்தியப்படும் ! So ஒரு சுதந்திரமான தனித்தடம் ; அங்கே ஜனவரி-பிப்ரவரி என்று நூல்ப்பிடித்தாற்போல தேதிகளை மதிக்கும் அவசியங்களின்றி இருந்தால் செமத்தியாக இருக்குமே என்று அடிக்கடி நினைப்பேன் ! அந்த ரம்யமான சுதந்திர லோகத்தில் தொடர் நாயகர்களை களமிறக்கலாம் ; one shot களையும் கும்மியடிக்கக் கூப்பிட்டுக் கொள்ளலாம் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்ட போது நினைப்பே இனிக்கச் செய்தது !! ரைட்டு - wishful thinking என்பதை ஒரேயொரு தபா நனவாக்கிப் பார்க்கலாமே ; ஒத்து வந்தால் தொடரலாம் ; இல்லாங்காட்டி - KGB ; Mossad ; FBI என்று யாரையாச்சும் கைகாட்டி, ஒரு காரணத்தைச் சொல்லி மங்களம் பாடிடலாம் என்று தீர்மானித்ததே ஜம்போவின் பின்னணி ! மாமூலான லயனிலோ ; முத்துவிலோ இந்தத் திட்டத்தை நடைமுறையாக்குவதைக் காட்டிலும், ஒரு புது ரயில்வண்டியை அறிவித்து, அதற்கென ஓரமாய் ஒரு தண்டவாளத்தையும் போட்டுக்கொள்வது better impact கொண்டிருக்கும் என்று பட்டது ! அப்புறம் நடந்தவை எல்லாமே தான் உங்களுக்கும் தெரியுமே ? லோகோ ஒன்றை உருவாக்கியதிலிருந்து ஜம்போ on track !

ஆனால் பிள்ளையார் சுழியெல்லாம் போட்டுவிட்ட நிலையில் முழுசுமாய்ப் புரட்சி (!!!) பண்ண தெகிரியம் சித்தே குறைச்சலாய் இருந்தது ! ஓவராய் one shots ; அறிமுகமிலாக் கதைகள் என்று வண்டியை துவக்கத்திலேயே விரட்டினால் சாலையோரப் புளியமரத்தின் மீது செருகி நின்றுவிடுமோ என்ற பயம் மேலோங்கியதால் முதல் சீசனில் சற்றே அடக்கி வாசித்து விட்டு ; அப்புறமாய் கச்சேரியை அடுத்த லெவெலுக்குக் கொண்டு செல்வது உத்தமம் என்று தீர்மானித்தேன் ! "இளம் டெக்ஸ்" அறிமுகமான "காற்றுக்கேது வேலி ?" ஜம்போவின் முதல் இதழாய் இடம்பிடித்ததே அந்தச் சிந்தனையின் நீட்சியாய் தான் ! அந்த முதல் சீசனில் இடம்பெற்ற கதைகளின் பட்டியல் இதோ உங்களின் நினைவுகளை சற்றே உசுப்பிட :

YOUNG TEX - காற்றுக்கேது வேலி ?

ஹெர்லாக் ஷோம்ஸ் - ஒரு குரங்குச் சேட்டை !

JAMES BOND - பனியில் ஒரு பிரளயம்

JEREMIAH - பயணங்கள் முடிவதில்லை 

ACTION SPECIAL - (ஒற்றைக்கண் ஜாக் ; 13-வது தளம் ; மின்னல் மனிதன்)

JAMES BOND - நிழலும்,,நிஜமும்..!

நிஜத்தைச் சொல்வதானால் ACTION SPECIAL & ஹெர்லாக் ஷோம்ஸ் நீங்கலாய் பாக்கி எல்லாமே ரெகுலர் தடத்தில் ஆஜராகியிருக்கக் கூடிய கதைகளே ! ஆனால் எடுத்த எடுப்பிலேயே ரிஸ்க் வேண்டாமே என்ற சிந்தனையின் பலனே அந்த safety first அணுகுமுறை ! 

நிஜமாய் ஜம்போ take off ஆயிட்டது சீசன் 2 முதலே என்பது எனது அபிப்பிராயம் !! And இந்த இரண்டாம் சுற்றின் முடிவில் நிற்கும் தருணத்தில் எனது அபிப்பிராயத்தின் நிறை-குறைகளை சுட்டிக்காட்டாக கூடிய ஜூரிக்கள் நீங்களே ! இளம் டெக்சின் சாகசம் # 2 & ஜேம்ஸ் பாண்டின் "சுறா வேட்டை" நீங்கலாய் பாக்கி 4 இதழ்களும் offbeats in their own rights என்பேன் ! 

*லக்கி லூக்கைச் சுட்டது யார் ?" நிச்சயமாய் ரெகுலர் தடத்தில் இடம்பிடித்திருக்க சான்ஸே இல்லாத இதழ் ! ஜம்போவில் சாதித்துக் காட்டியது !

*தி Lone ரேஞ்சர் !!!   ட்யுராங்கோக்களும் ; டெக்ஸ்களும் ; டைகர்களும் உலவிடும் இரத்த பூமியினில் விரல்களை மாத்திரமே குறிபார்த்துச் சுடும் ஒரு புதியவரை களமிறக்குவது ஆகிற காரியமா ? ஆனால் ஜம்போவில் இவர் அந்நியப்பட்டுத் தெரியவில்லை - at least எனக்காவது !

*மார்ஷல் சைக்ஸ் - One shot !! கி.நா.மாதிரியும் இல்லாத ; முழுநீள மாமூலான கௌபாய்க் கதை மாதிரியும் இல்லாத ஆக்கம் - fitted in seamlessly in ஜம்போ !

*Zaroff - நில்..கவனி..வேட்டையாடு..! இதுவும் ஒரு one shot தான் ! And இதன் வெற்றியோ / தோல்வியோ தொடரும் நாட்களில் தெரிந்திடும் எனும் போது - ஜம்போவின் சீசன் 2-க்கு மார்க்குகளும் போட்டுப்  பார்க்கும் நேரமும் புலர்ந்திருக்கும் !

Anyways - இந்த நொடியில் சீசன் 2 பற்றிய உங்களின் பொதுவான அபிப்பிராயம் folks ? 

பணிகளின் போது என்னளவிற்கு இந்த 6 இதழ்களுமே ஒவ்வொரு பாணியில் சந்தோஷத்தைக் கொணர்ந்தன என்பதால் இந்த அரை டஜனுமே எனக்கு ஆதர்ஷமானவை ! And காத்திருக்கும் சீசன் 3 -ஜம்போவின் நிஜ..முழு அவதாரைக் கண்ணில் காட்டிடவுள்ளது என்பேன் !! ஜேம்ஸ் பாண்டின் அடுத்த ஆல்பம் + தி Lone ரேஞ்சரின் oneshot தொகுப்பினைத் தாண்டி பாக்கி நாலு இதழ்களுமே செம வித்தியாசமானவைகள் !!

ஏதேனும் ஒரு தூரத்துப் பொழுதில் ஆண்டுக்கு 12 ஜம்போக்கள் களமிறங்கும் நாள் புலரின் - this woud have been a worthy decision !! குறுக்கிய விரல்களோடு கிளம்புகிறேன் guys ! 

Have a relaxed Sunday !! See you around !! Bye for now !!

238 comments:

 1. Replies
  1. அப்பாடா ஒரு வழியாக பதிவு வந்து விட்டது. சந்தோஷம்.

   Delete
  2. ஆமாம் பரணி மிக்க சந்தோசம்.

   Delete
 2. ஜம்போவில் எனக்கு அத்தனை காமிக்ஸ் களும் பிடித்து இருந்தது.

  தாராளமாக இரண்டாவது சுற்றை ஆரம்பிக்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. மூன்றாவது சுற்று கணேஷ்.

   Delete
 3. ஜம்போ சீசன் 2 வின் மார்க் தானே சார்

  டெக்ஸ் 10/10
  பாண்ட் 10/10
  தனி ஒருவன் 10/10
  Sykes 10/10
  Lucky Luke 10/10
  Zaroff மட்டும் இன்னும் படிக்க வில்லை சார்
  வியாழன் அன்று சொல்கிறேன்.

  நீங்கள் குறிப்பிட்டது போல டாப் கிளாஸ் தான். அனைத்துமே ஜனரங்கமான கதைகளும் கூட.

  ஜம்போ சீசன் 3 க்கு வெயிட்டிங்.

  ஜம்போ சீசன் 4 இல் இருந்து ஜேம்ஸ் பாண்ட் மற்றும் தனி ஒருவன் இருவரையும் ரெகுலர் சந்தா வுக்கு நகர்த்திவிட்டு 6 கதைகளையும் off beat ஆக வழங்குவீர்கள் என்று எதிர் பார்க்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தனியொருவன் வேறு கதைகள் கிடையாது என நினைக்கிறேன். ஜம்போ சீசன்-3 உடன் முடிகிறது என நினைக்கிறேன் குமார்.

   Delete
  2. இல்லை பரணி தனி ஒருவன் இன்னும் நிறைய கதைகள் உண்டு பாண்ட் 2.0 போலவே

   Delete
 4. விஜயன் சார், ஜம்போ சீசன் 1 & 2 கதைகள் இரண்டும் அருமை. மிகவும் ரசித்தேன். ஆக்சன் ஸ்பெஷல் மட்டும் சோதித்து விட்டது.

  ஜம்போ சீசன்-3 கதைகள் பற்றி கொஞ்சம் சொல்லலாமே? குறைந்த பட்சம் அந்த ஆறாவது கதை என்ன என்று மட்டும் சொல்லலாமே?

  அப்புறம் ஜம்போ பெயரின் காரணத்தை சொல்லாமல் விட்டு விட்டீங்க. அதையும் சொல்லி விடுங்கள்.

  பதிவு மிகவும் சிறியதாக உள்ளது மனதை ஏதோ செய்கிறது.

  ReplyDelete
  Replies
  1. 6 வது கதை பற்றி சொல்லுங்கள் சார்?

   Delete
 5. ஞாயிறு வணக்கம் சார்
  நண்பர்களே 🙏🏼
  .

  ReplyDelete
 6. உள்ளேன் ஐயா..!!

  (இது ஷெரீப்பின் உள்ளேன் ஐயா. அவரால் இப்போதைக்கு கமெண்ட் போட முடியவில்லையாம்.)

  ReplyDelete
 7. உள்ளேன் ஐயா..!

  (இது தலைவருடையது..அவராலும் முடியவில்லையாம்..):-)

  ReplyDelete
  Replies
  1. அவருக்கு என்னிக்கிதான் 🤷🏻‍♂️🏃🏻‍♂️🏃🏻‍♂️🏃🏻‍♂️
   .










   பதுங்குகுழியில இருந்து வராரு 🤷🏻‍♂️😇
   .

   Delete
 8. ஹைய்யா புதுப் பதிவு......

  ReplyDelete
 9. வணக்கம் நண்பர்களே!

  ReplyDelete
 10. அடுத்த சுத்தில JB2.0 ஒரே புக்கு தான் தட்டுப்படுது.. ஒத்துக்க முடியாது.. செல்லாது.. செல்லாது..

  ReplyDelete
  Replies
  1. +1

   எனவே ஜம்போ சீசன்-3 கதைகளின் எண்ணிக்கையை 7ஆக மாற்றுங்கள்; ஆறாவது கதை என்ன என்பதையும் விரைவில் சொல்லவும்.

   Delete
 11. சார் 3/4/5/பாக கவ்பாய் கதைகளை ஈரோடு புத்தக விழாவில் வெளியீடுகள் சார்

  ReplyDelete
  Replies
  1. தன்னுடைய முயற்சியில் சற்றும் மனம் தளரா விக்கிரமாதித்தன் ......

   Delete
 12. சார் மில்லியன் ஸ்பெஷல் எதாவது ஒன் ஷாட் கவ்பாய் கதைகளை வெளியீடுகள் சார்

  ReplyDelete
  Replies
  1. டெக்ஸ் மெபிஸ்டோ கதையை போட்டுடாலாம் எடி ஜீ.

   Delete
 13. அடுத்த மாதம் வரவுள்ள புத்தகங்கள் எவை என சொல்ல முடியுமா நண்பர்களே?

  ReplyDelete
  Replies
  1. 1.பிரிவோம் சந்திப்போம் ஜம்போ சீசன் 3
   2. வானவில்லுக்கு நிறம் ஏது? டெக்ஸ்
   3. பனியில் ஒரு குருதிப்புனல் கி நா
   4. அலை கடலில் அதகளம். Diabolik

   Delete
  2. நன்றி குமார்.

   கார்ட்டூன்?

   Delete
  3. ஏப்ரல் மாதத்தில் கார்ட்டூன் இல்லை பரணி

   Delete
  4. // ஏப்ரல் மாதத்தில் கார்ட்டூன் இல்லை //

   :-( என்ன கொடுமை. கார்ட்டூன் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை தானா? :-(

   Delete
 14. மகிழ்ச்சியான மொமெண்டுகளை ஜம்போ கொணர்ந்ததில் நிறைய நிறைய நிறைய சந்தோஷமே...ஜெய் ஜம்போ..

  ReplyDelete
 15. வலேரியன்&லொரைன்..கொஞ்சம் யோசியுங்களேன்..

  ReplyDelete
  Replies
  1. சார், பலமாக யோசிக்காமல் இவைகளை வெளியிடுங்கள்.

   Delete
 16. டைகர் ஸ்பெஷல் அதிகாரபூர்வ அறிவிப்பு வரவில்லையே.

  ReplyDelete
 17. ஜம்போ பொது பார்வை
  ஆக சிறந்த என்டர்டைனர் .. சுறாவேட்டை

  சி ..சி ..வயதில் ..இரண்டாவதாக ..வலிமையான கதை சொல்லல் கூடுதல் பலம்
  ல லூவை சுட்டது யார் ..?? லக்கியின் வழக்கமான அடையாளங்கள் கொஞ்சம் மிஸ்ஸிங் ...இருப்பினும் யானை படுத்தாலும் குதிரை மட்டம்

  தனிஒருவன் ....ஏற்படுத்திய தாக்கங்கள் குறைவு
  அ.ஒ அத்தியாயம் ...ஜம்போவில் இதை எதிர்பார்க்கவில்லை ...தத்துவார்த்தங்கள் மனதை ஊடுருவவில்லை ...அதாவது அதற்கான அவகாசத்தை கதைப்போக்கு கொடுக்கவில்லை
  நில் கவனி ..வேட்டையாடு ..இன்னும் புத்தகம் வரவில்லை

  இதுவரை

  ஒட்டு மொத்தமாக ஜம்போ இரண்டாம் சீசன் பெரும் மதிப்பெண்கள்
  7/10
  ஜம்போவை பொருத்தமட்டில் எதிர்பார்ப்புகள் அதிகம்
  இதில் மறுபதிப்புகள் ஏதுமில்லை என்பதாலேயே இன்னும் இரண்டு மதிப்பெண்கள் சேர்த்து கொள்ளலாம்.....


  ReplyDelete
  Replies
  1. அருமையான விமர்சனம் செல்வம் அபிராமி சார்

   Delete
 18. ஜம்போ சீசன்-3ன் முதல் கதை அடுத்த மாதம் வரும் நிலையில் ஜம்போவின் ஆறாவது கதையை பற்றி சொல்லுங்கள் சார். இன்னமும் பொறுமை காக்க முடியாது யூவர் ஆர்னர். :-) அல்லது அந்த ஆறாவது slotஐ பாண்ட்க்கு கொடுத்து விடுங்கள்:-)

  ReplyDelete
 19. விஜயன் சார், உங்களின் இந்த பதிவில் உங்களின் வழக்கமான நகைச்சுவை எழுத்து நடை மிஸ்ஸிங்.

  ReplyDelete
  Replies
  1. வெரிகுட் அப்சர்வேசன் PfB!

   Delete
  2. //ஒத்து வந்தால் தொடரலாம் ; இல்லாங்காட்டி - KGB ; Mossad ; FBI என்று யாரையாச்சும் கைகாட்டி, ஒரு காரணத்தைச் சொல்லி மங்களம் பாடிடலாம் என்று தீர்மானித்ததே ஜம்போவின் பின்னணி//

   இது ஒண்ணு போதாது???

   இதுக்கே வாய்விட்டு சிரித்து கொண்டு இருந்தேன்..

   Delete
  3. இல்லை செல்வம் அபிராமி.

   Delete
 20. மார்ஷல் சைக்ஸ் கதை பயணித்தவிதம் என்னளவில் ஒப்பவில்லை சார்!!!

  ReplyDelete
  Replies
  1. என்னளவில் அது ஒப்போ ஒப்பென்று ஒப்பியிருக்கிறது!

   Delete
 21. Lone ranger, James Bond 2.0 போன்ற கதைகளை ரெகுலர் சந்தாவில் சேர்த்துவிட்டு ஜம்போ முழுவதுமாக 6 ஸ்பெஷல் மற்றும் ஒன் ஷார்ட் கதைகளாக இருந்தால் நன்றாக இருக்கும்

  ReplyDelete
 22. மேலும், horror, adventure, ghost stories போன்ற கதைக்களத்தை கொண்ட புத்தகங்களையும் வெளியிட முயற்சி செய்யுங்கள்

  ReplyDelete
  Replies
  1. ////horror, adventure, ghost stories போன்ற கதைக்களத்தை///

   நண்பர் நல்ல குடும்பக் கதைகளாகக் கேட்கிறார் போலிருக்கே?!! :P

   Delete
 23. தரமான வேற்றுக்கிரக alien கதைக்களம் கொண்ட புத்தகத்தையும் முயற்சி செய்யுங்கள்

  ReplyDelete
  Replies
  1. +1000

   வருஷம் ஒன்னாவது இதுமாதிரி முயற்சிப்பதிலும் தவறில்லை தான்!

   Delete
 24. Survival adventure கதைகளை எதிர்பார்க்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. ///
   Survival adventure கதைகளை எதிர்பார்க்கிறேன்///


   +100000

   ஆமாம் எடிட்டர் சார்!! இதுமாதிரி கிடைச்சா போடுங்களேன்.. படிக்க படுசுவாரஸ்யமா இருக்கும்!

   Delete
  2. //Survival adventure கதைகளை எதிர்பார்க்கிறேன்///

   ஸ்பைடர்,ஆர்ச்சி கதைகளை படிக்கற "சில" ரசிகர்களின் வாழ்க்கையை பத்தி சொல்ல வர்றாருன்னு நினைக்குறேன்..:)

   Delete
  3. செனா அனா...

   செம்ம!! :)))))))

   Delete
  4. மாடஸேடி கதைகளா இருக்கும்ணே..!!:-)

   Delete
 25. ஜம்போ இதழ்களில் ஆக்‌ஷன் ஸ்மெஷல் இதழ் மட்டுமே என்னை அதிகம் கவரவில்லை எனலாம்..:-)

  ReplyDelete
 26. நில். கவனி, வேட்டையாடு. ஜம்போ சீசன் 2. புக் 13. என ஸ்டிக்கர் ஒட்டியிருப்பது ஏன்? புரியவில்லையே. சீசன் 2 க்கு 6 புக் தானே?

  ReplyDelete
  Replies
  1. ஜம்போ சீசன்2ல் முதலில் வருவதாக இருந்த "காலவேட்டையர்கள்" பிரிண்ட் ஆன பிறகு கைவிடப்பட்டது. அதற்கு புக் எண்7 கொடுக்கப்பட்டு விட்டது போல. ஜம்போ-2 7க்கு பதலாக 8ல் இருந்து தொடங்க பட்டுள்ளது. இப்போதைய ஜம்போ 2வின் புக் எண்கள் 8டூ13வரை இருக்கிறது. அந்த புக் எண்"7" என்றாவது வரக்கூடும்!

   Delete
 27. ஜம்போ சீஸன்-2வில் இன்னும் படிக்காத 'நில் கவனி வேட்டையாடு' தவிர்த்து மீதமுள்ள 5 கதைகளை எடுத்துக்கொண்டோமானால் 'லோன் ரேஞ்சர்' தவிர மீதமுள்ள 4 கதைகள் அனைத்துமே என்னளவில் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட கதைகளே! அனைத்துக்குமே என்னுடைய மதிப்பெண்கள் கிட்டத்தட்ட 10/10 தான்!

  ஒருவேளை 30 வருடத்திற்கு முன்பே இக்கதைகளைப் படித்து நான் மார்க் போட்டிருந்தால் பின்வருமாறு இருந்திருக்கக்கூடும் :

  தனியொருவன் = 10/10 (ப்பா!! என்னவொரு ஹீரோ!! கண்ணில் அந்தக் கருப்புப் பட்டையும், உள்ளங்கையை மட்டுமே குறிவைத்துச் சுடும் பண்பும்! சுறுக்குக் கயிறில் தொங்கவிட்டு பத்து நிமிடத்திற்குப் பிறகும் அலேக்காக பல்டியடித்துத் தப்பிக்கும் அந்த வீரதீரமும்!! ப்பா வாழ்ந்தா இவர் மாதிரி வாழணும்யா!)

  சி.சி.வ = 10/10 (இன்றைய மனநிலையே அன்றைக்கும் - அட்ராசக்கை!!)

  லக்கியை சுட்டது யார் = 6/10 (ஙே!! இது லக்கிலூக்கே இல்லை.. நான் நம்பமாட்டேன்.. எ எனக்கு இந்த லக்கியை புடிக்கலை!)

  அந்தியின் ஓர் அத்தியாயம் = 6/10 (என்னமோ வித்தியாசமா இருக்கு.. ஆனா இன்னும் கொஞ்சம் புரியராப்ல கதை சொல்லியிருந்தா நல்லாருக்கும்! ஒருவேளை எடிட்டிங்ல சொதப்பிட்டாங்களோ?!!)

  ReplyDelete
 28. //Anyways - இந்த நொடியில் சீசன் 2 பற்றிய உங்களின் பொதுவான அபிப்பிராயம் folks ?//

  நன்றாக இருந்தது!! ஆனால் நீங்களே சொன்னது போல் சில இதழ்கள் ரெகுலர் சந்தாவிலயே இடம் பிடிக்க கூடியவையே!! அதனால் சீசன் 3 ம் , இதற்கு பிறகு வருபவைகளும் நீங்கள் கூறியபடி முற்றிலும் வித்தியாசமான தளங்களில் வந்தால் அபாரமாக இருக்கும்!!

  //ஏதேனும் ஒரு தூரத்துப் பொழுதில் ஆண்டுக்கு 12 ஜம்போக்கள் களமிறங்கும் நாள் புலரின்//
  அந்த நாள் அடுத்த சீசனிலேயே புலர்ந்தால் டபுள் மகிழ்ச்சி

  ReplyDelete
 29. ஆமா. அந்த டாப் 200 subscribers பட்டியல் இந்த பதிவில் இருக்கும்னு ஆசிரியர் சொன்னதா ஞாபகம். இல்ல நான்தான் தப்பா புரிஞ்சுட்டேனா?

  ReplyDelete
 30. Jumbo சீசன் 1 சந்தா செலுத்தி இருந்ததால் அனைத்தும் படித்து விட்டேன்.
  அவற்றில் ஆக்சன் ச்பெஸல் ரசிக்கவில்லை. அதேபோல் ஷெர்லாக்.
  கா.வேலி 10/10
  பாண்ட் 10/10
  சீசன் 2
  சி.சி.வ 10/10
  பாண்ட் 10/10
  மனித வேட்டை படிக்கவில்லை ஆனாலும் அது 10/10

  ReplyDelete
 31. சீசன் 3ல் டெக்ஸ் இளம் டெக்ஸ் இல்லாத காரணத்தால் சந்தா செலுத்தவில்லை.

  ReplyDelete
 32. பட்ஜட் காரணமாக பொது வெளியில் வரும் நல்ல விமர்சனங்கள் படித்த பிறகே வாங்குகிறேன்.
  டெக்ஸ் எது இருந்தாலும் ஓக்கே.
  லேட்டானாலும் படித்து விடுவேன்.

  ReplyDelete
 33. டெக்சுக்கு அடுத்து பாண்ட் ஜேம்ஸ் பாண்ட்.

  ReplyDelete
 34. ஜம்போவில் ஷெர்லாக்,ஜேம்ஸ் பாண்ட் ,இளம் டெக்ஸ் நல்லதேர்வு.
  ஷெர்லாக் பலமுறை வாசிக்க முடிந்தது.இந்த தொடரில் இன்னும் எத்தனை கதைகள் உள்ளது என்பது தெரியவில்லை.
  ஜேம்ஸ் பாண்ட் 2.0 மிரட்டலான கதைத்தொடர்.
  சிங்கத்தின் சிறு வயதில் ஜம்போவிலும் டெக்ஸ் வில்லரா என்று முதலில் சலிப்பை ஏற்படுத்தினாலும்,ஜம்போவிற்கு ஏற்ற தரமான கதைத் தேர்வு.
  ஜெரோமியா இலக்கியத் தரம் மிக்க கதைத்தொடர்தான்.வெகு ஜன இரசனைக்கு ஒத்துவராத தொடர்களுல் இதுவும் ஒன்று என ஒதுக்கப்பட்டுவிட்டது.
  நிஜங்களின் நிசப்தம்,நீரில்லை..நிலமில்லை போல் அதிக கவனத்தை ஈர்க்கும் படைப்புகளாக இவைகள் அமையாதது வருத்தம் தருகிறது.
  ஜம்போவில் கூடுதல் வெளியீடுகள் அமைந்தால் மகிழ்ச்சி.நிறைவான திட்டமிடல்.

  ReplyDelete
  Replies
  1. //ஷெர்லாக் பலமுறை வாசிக்க முடிந்தது.இந்த தொடரில் இன்னும் எத்தனை கதைகள் உள்ளது என்பது தெரியவில்லை.//

   திருத்தம் சார் : அவர் "ஹெர்லக் ஷோம்ஸ்" ! ஷெர்லாக் ஹோல்ம்ஸ் அல்ல !! மொத்தமே இன்னமும் 4 புதுக் கதைகளே எஞ்சியுள்ளன இந்தத் தொடரில் !

   Delete
 35. சார்,நிறைய கௌபாய் கதைகளில் தவறாமல் இடம்பெறும் "பிங்கர்டன் டிடெக்டிவ் ஏஜென்ஸி" யை பற்றிய ஏதேனும் கதைகள் வந்துள்ளதா? ஒன்ஷாட் அல்லது தொடர்? அப்படியிருந்தால் அதனை வெளியிடலாமே சார்.ஒரு புதுவித டிடெக்டிவ் கௌபாய் கதையாக கிடைக்குமே? மின்னும் மரணம்-புயல் தேடிய புதையல் கதையில்கூட இவர்கள் இடம்பெற்றிருப்பார்கள்

  ReplyDelete
  Replies
  1. சார்..பின்கர்ட்டன் ஏஜென்சி - நாம் படிக்கும் கௌபாய் கதைகளில் ஏதோ அந்நாட்களது FBI போன்ற இமேஜ் கொண்டு உலவுவது வளமான கற்பனைகளின் பலனாகவே ! அவர்களது நிஜ முகம் வேறு விதமானது !!

   Delete
 36. ஜம்போ சீசன் 2ல் தரவரிசை....

  1.சிங்கத்தின் சிறுவயதில்-10/10
  2.தனி ஒருவன்-8/10
  3.லக்கி லூக்கை சுட்டது?-7/10

  மற்ற 3ன் ரேங் பின்னர்! சீசன் 1ஐ விட சீசன்2 பெட்டர். சீசன் 3 இன்னும் சிறப்பாக இருக்கும் போல தெரிகிறது! சீசன்3ன் 6வது இதழ் கார்டூன் இதழாக இருக்க என்னுடைய வாக்கு!

  ReplyDelete
 37. டெமக்லீஸ்...பிழையிலா மழலை...

  உண்மையை சொன்னால் இந்த குழுவின் முதல் சாகஸம் என்னை பொறுத்தவரை சுமாராகவே காணப்பட்டது..எனவே தான் பொறுமையாய் நேரம் கிடைத்த இந்த சந்தர்ப்பத்தில் டெக்ஸின் வண்ண மினி இதழை கூட படிக்க தேர்ந்தெடுக்காமல் முதலில் இந்த "பிழையிலா மழலை" யை வாசிக்க தேர்ந்தெடுத்தேன் இந்த முறையாவது என்னில் இந்த குழு ஒன்றுமா என...!?


  ஆச்சர்யம்..ஓர் அதிரடி சாகஸ கதை ஓர் மென்மையான பாதையில் பயணிப்பது போல மனதை வெகுவாகவே கவர்ந்து விட்டது..முதல்பாகத்தில் குழுவினர் பலரும் மனதில் ஒன்றாத போல ஓர் தோற்றம் இந்த முறை குழுவில் இருந்த அனைவருமே வெகு சிறப்பாக குடிபுகுந்து கொண்டனர்..இறுதியில் முடிவு கொஞ்சம் சோகத்தை காட்டினாலும் அதுவே இந்த கதையை இன்னும் என்னுள் நெருங்கி விட்டதோ எனவும் தோன்றாமல் இல்லை.இடைஇடையே வரும் கவர்ச்சிகள் காலகட்டமும் ,கதை செல்லும் பாங்கும் அதனை குறையாகவோ ,கிளர்ச்சியாகவோ பார்க்க செய்யவில்லை...எனினும் அட்டையில் காணப்படும் ரசனையில் முதிர்ந்தோருக்கு எனும் அறிவிப்பு இது போன்ற கதைகளில் தவறாமல் வெளியிடுவது சரியான ஒன்று...அட்டைப்படமும் சரி..உட்பக்க சித்திரங்களும்,மொழிஆக்கமும் கதையை போலவே சிறப்பு ,வெகு சிறப்பு..

  எனக்கு என்னவோ மீண்டும் இதன் முதல் சாகஸத்தையும் ,இந்த இரண்டாம் சாகஸத்தையும் இணைந்து படித்தால் இன்னும் சிறப்பான அனுபவம் கிடைக்கும் என்பது உண்மை..உண்மையாக நேரம் கிடைப்பின் இம்மாத மற்ற இதழ்களை படித்து விட்டு இதனை செயல்படுத்திட முனைவேன்..


  மொத்தத்தில் பிழையிலா மழலை - பிழையிலா சாகஸம்..

  பின்குறிப்பு :

  நண்பர் சிவக்குமார் அவர்கள் ,

  சிரிக்கும் ,வாந்தியெடுக்கும் ,இரவு முழுவதும் தூங்காமல் அலறிக் கொண்டு இருக்கும் குழந்தைகள் தான் பூமியிலேயே அழகான சமாச்சாரமாக்கும் என்ற வசனத்திற்கும் ,ஓர் உயிர் ஜனிக்கும் அற்புதத்தை அரசியல் மேடை பேச்சு போல இவர்கள் கையாள்வதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை என்ற வசனத்திற்குமான இடைவெளியில் நாயகியின் மனமாற்றத்திற்கான காரணமென்ன என்ன வினவியிருந்தார்..என் அளவில் இதில் எந்த குறைபாடுமே இல்லை என்பது தான் .முதல் வசனம் பிறந்த குழந்தையின் வளர்ப்பை ,அவ்வயது குழந்தையின் சேட்டையை நினைத்து பேசும் வசனம்..இரண்டாவது வசனமோ அந்த குழந்தை ஜனிக்கும் அற்புதத்தை நினைத்து பேசும் வசனம்..இரண்டிற்கும் பலத்த வேறுபாடு உள்ளதே நண்பரே..அதுவும் இல்லாமல் அந்த முதல் வசனத்திற்கு அடுத்த பக்கமே ஏவா எல்லியிடம் தனியாக இப்பொழுது இருப்பதற்கும் ,சிறிது காலத்திற்கு பிறகு நீ தனியாக இருந்தால் எப்படி இருக்க போகிறாய் என்றும் பாடம் நடத்துவதிலியே அவள் வெறுத்து போனாலும் அவள் யோசிப்பதும் வாசிப்பில் தெரிகிறதே..எனவே இதில் எனக்கு எந்த குறையோ..நெருடலோ எதுவும் தோன்றவில்லை என்பதே உண்மை.

  ReplyDelete
  Replies
  1. படிக்கட்டு சம்பவம்தான் பாடம் கற்றுக் கொடுத்தாக அல்லவா நினைத்தேன்.

   Delete
  2. இந்த வசனங்களுக்கு பாடமே இல்லை என்பது தான் எனது கருத்து நண்பரே..:-)

   Delete
  3. சிவா....சிம்பிளாய் இப்படி யோசியுங்களேன் :

   ஒரே உறவான அப்பாவை இழந்த சோகம் .... ஆத்ம நண்பன் கோமாவில் கிடக்கும் வேதனை ; வாட்டும் தனிமையின் கொடுமை ; தோழியின் குஜால் வாழ்க்கையின் மீதான பொறாமை / கடுப்பு ; தன் சொந்த வாழ்க்கையில் காதல் ; அன்னியோன்யம் ; குழந்தைகள் என்று எதற்குமே இடமில்லை என்ற ஆற்றமாட்டாமை ; பணியிடத்தில் முட்டல்-மோதல்....

   இவை சகலத்தையும் ஒற்றை மனுஷியாய்ச் சமாளிக்கும் ஒரு நவநாகரீக யுவதி - பொறுமையாய் ; நிதானமாய் ; அன்பாய் ; அனுசரணையாய் வாழ்க்கையை எதிர்நோக்குவாள் என்று எதிர்பார்ப்பது நடைமுறை சாத்தியமா ?

   "எல்லாமே போலி - எல்லாமே மோசடி" என்ற ஒருவித cynical thought process எல்லி இருக்கும் நிலையில் இயல்பு தானே ? So அவள் நார்மலாய் ; லாஜிக்கால் உந்தப்பட்ட தீர்மானங்களாய் எல்லா நேரங்களிலும் எடுப்பாளா ?

   Delete
  4. எல்லி யின் இடத்தில் உங்களை இருத்திப் பாருங்க நண்பரே....

   நிதர்சனம் புரியும்....

   Delete
  5. எப்படி..‌ தலைவர் பலருடைய டவுட்டை clear செய்கிற அளவுக்கு காமிக்ஸ் அறிவாளியாகிவிட்டார். :-)

   Delete
 38. இனி எங்கள் " தலயை " ரசித்து விட்டு...:-)

  ReplyDelete
 39. இது ஒரு சங்கடமான வேலை.
  ஒவ்வொரு கதையும் ஒன்றை ஒன்று மிஞ்சும் வகை.

  முதலில் கதைகளை பற்றி பாப்போம் .


  1. நில் கவனி வேட்டையாடு
  கதைக்களம் ஒரு சாதாரண மனித வேட்டை.
  சித்திரங்களும் கதையும் மிக அருமை.
  அதை வண்ணத்தில் செதுக்கி இருப்பார்கள்.
  பல்வேறு சூழ்ச்சிகள், சண்டைகள், துரோகங்கள், அதிரடிகள்.
  பக்கத்திற்கு பக்கம் விறுவிறுப்பு.

  பார்க்க பக்கம் 37 மேலே உள்ள மூன்று படங்களில் ஒருவர் கோடு போட்ட பேண்ட் ஷர்ட் அணிந்து இருப்பார்.

  அவர் முதுகில் அம்பு தாக்கி இறந்திருப்பார்.
  பக்கம் 41 ல் இறந்தவர் முதுகிலிருந்து ஜெரோப் அம்பினை எடுப்பார்.

  பக்கம் 45 இல் கோடு போட்ட பேண்ட் சட்டை அணிவார்.
  ஒவ்வொரு படமும் படு நேர்த்தியாக இருக்கும்!

  பக்கம் 76 77 உள்ள கேத்தரினா உடலை பல கோணங்களில் காணலாம்.

  வில்லனாய் இருந்து ஹீரோவாய் மாறும் வேட்டைக்காரன் நம்பர் 1.


  2. சிங்கத்தின் சிறு வயதில்
  டவுசர் பாயாக அறிமுகம் ஆகும் டெக்ஸ்.
  சண்டையிட,
  துப்பாக்கி பிடிக்க கற்றுக் கொள்ளும் டெக்ஸ் கதை.

  3. லோன் ரேஞ்சர்

  கதை இன்னும் முடியவில்லை.
  இதுவரை இவர் மற்ற கௌபாய் போல சாதாரணமாக ஆரம்பித்து , பின்னர் மெதுவாக அதகளப்படுத்தியிருப்பார்.


  4. அந்தியின் ஒரு அத்தியாயம் அதிரடியாய் ஆரம்பித்து ஏதோ செய்யப் போவதாய் ஆரம்பித்து சட்டென செத்து போகும் ஒரு மார்ஷலின் கதை படங்கள் அற்புதமாய் இருக்கும்.
  கதையும் நன்றாகவே இருக்கும்.

  5. லக்கியை சுட்டது யார் ?

  நகைச்சுவை இல்லாது கொஞ்சம் சீரியஸ் கதை சித்திரங்களும் புதுப் பாணியில் இருக்கும்.

  6. James Bond
  Action.
  Action.
  Action.

  ReplyDelete
  Replies
  1. ஐயஹோ.....ஜேம்ஸ் பாண்ட் கட்டக் கடைசியிலா ?

   Delete
 40. கதை சுருக்கம் உள்ளது..
  கதை படிக்காதவர்கள் கடந்து விடவும்..

  கயல் கன்னழகி,
  இரு விழிகளால் கட்டிளங்காளையரை மட்டுமல்ல காவு வாங்கிடும் காவாலி பயல்களை கூட கண் மையினால் சாய்த்திடுவாள் எங்கள் இளவரசி..

  வழக்கம் போல பண்ணை வீட்டில் ஓய்வெடுத்து விட்டு விடை பிரியும் நேரத்தில் இளவரசியின் ஆண் நண்பர் அடுத்து தான் விற்கவுள்ள பொருளை பற்றிய ஒரு விளக்கம் கேட்கிறார்...
  முதன்முறையாக கார்வின் மினி கம்ப்யூட்டராக மாறி கணக்கின் விடை தீர்க்கிறார்..
  அவர் விற்கும் பொருளை பற்றி முன்பே கூறாமல் ரகசியம் காத்ததால் சிறு ஊடல் கொள்கிறார்கள் இளவரசியும் கார்வினும்..
  பின் நண்பரின் மன்னிப்பை ஏற்று அவரின் பாதுகாப்புக்கு தொலைவிலிருந்து கண்காணிக்க ஒப்பு கொள்கிறார்கள்..
  கண்காணிக்கும் பணியிடையே வில்லனின் கையாள் அவர்களை அடையாளம் கண்டு அழிக்க முற்பட செமத்தியாக கொடுத்து அனுப்பி விட்டு பொருள் விற்கும் நண்பருக்கு எச்சரிக்கை விடுக்கின்றனர்..
  நண்பரும் வாடிக்கையாளரிடம் அனுமதி கேட்டு இருவரையும் எஸ்டேடிற்க்கு வர சொல்லி அழைக்கிறார்..
  அங்கே சென்ற பின் டெலிபோர்ட் எனும் டைம் டிராவல் பற்றிய நம்பும்படியான கட்டுகதை அவிழ்த்து விடப்படுகிறது.. அங்கே நடப்பது வியாபாரம் அல்ல பழிவாங்கும் ஏமாற்று வேலை என கண்டுபிடித்து நண்பரையும் காப்பாற்றுகின்றனர்..
  பழிவாங்கும் செயலில் உள்ள நியாயத்தை புரிந்து கொண்டு அறப்பணிக்கு ஆதரவு தருகின்றனர்..

  சீரியஸான கதையில் கார்வினின் வசனங்கள் ரசிக்க வைக்கிறது ..

  ஒரு விஷயத்தின் உண்மை தண்மையை ஆராயும் திறன்..

  பிரச்சினை உண்டாணால் சமயோஜிதமாக தீர்க்கும் விதம்..

  கடைசி நேரத்தில் கூட பதட்டப்படாமல்
  காரியத்தை முடிக்கும் கச்சிதம்..

  நிராகரிக்கப்பட்ட அன்பின் வேதனையை புரிந்து கொள்ளும் பக்குவம்..

  இளவரசிக்கு நிகர் இளவரசியே..

  கிளாசிக் கதையென்றாலும் கூட முத்திரை பதிக்கும் எங்கள் இளவரசியின் எதிர்காலம் பிரகாசமாகத்தான் இருக்கிறது என கூறிகொண்டு ஆண்டிற்கு இரண்டு ஸ்லாட்கள் ஒதுக்குமாறு தங்க தாரகை ரசிகர்கள் சார்பாக கோரிக்கை வைக்கிறோம்..

  ReplyDelete
  Replies
  1. "ஜெ' சார்....சித்தே இங்கே வாங்களேன் !

   Delete
  2. அவரும் இளவரசியின் ஆதரவாளரா மாத்துற உங்கள் திட்டம் புரியுது ஆசிரியரே..
   ஆனால் அவர் ஏற்கனவே தீவிர ரசிகர் என்பதை கூறிகொண்டு...
   கொண்டு...
   டு..
   .

   Delete




  3. வந்துட்டேன் சார்....



   .ஆ..அய்யய்யோ....


   ஏற்கனவே அந்த கதையை படிச்சி-பிச்சி கிட்ட தலய இன்னமும் நேர் பண்ண முடியல...

   எதோ இளவரசின்னீங்களேன்னு படிச்சா....
   வச்சு செஞ்சுட்டாங்கேடாங்குற மாதிரி," ஙே"ன்னு ஆயிருச்சு...

   டைம் டிராவல் னு டெலிபோர்ட் பண்ண போறாங்கேன்னு பாத்தா...அய்யோ ராமா...டீச்சர்ஸ் ஸயும் காணோம்--- டைமும் டிராவல் ஆக மாட்டேன்றுச்சு ---

   ஆனாலும் இது --- ஸ்பைடர்-ஆர்ச்சி ய விட ஓவர் பூச்சுற்றல் ....
   காதுல பூ சுத்தல....
   நிக்க வச்சி கண்ணு மூக்கோட சேத்து கட்டி ---கஞ்சி குடிக்க வச்சிட்டாங்கே.

   அப்புறம்...என்ன...




   அப்புறம்
   எடிட்டரோட குடேன் ஃபில்லர் ரெடி....



   பேப்பருக்கு பஞ்சமா இருக்குற இந்த நேரத்துல இந்த மாதிரி...அதிரி புதிரி
   சாகசம்!!!!!

   "RIP வாணாம் விக்கல்"

   Delete
 41. இருளோடு யுத்தம்...

  மினி டெக்ஸ் எப்பொழுதும் போலவே கலக்கி விட்டார்..அதுவும் மாயாஜால மன்னர் மோரிஸ்கோவை அவ்வப்பொழுது சந்தித்து வருவதால் அவருமே ஓர் டெக்ஸ் குழுவில் ஓர் அங்கம்தானே என்ற எண்ணம் மனதில் உருவாகிவிட்டபடியால் அவர் இணைந்தாலும் ஓர் வித்தியாசமான டெக்ஸ் சாகஸத்தை படிக்க போகிறோம் என்ற துள்ளல் மனதினுள் ஏற்பட்டு விடுகிறது..இந்த மினி சாகஸத்திலும் டெக்ஸ் உடன் இனைந்து ஓர் வேறுபட்ட சாகஸத்தை அளித்து கலக்கி விட்டார்கள்..என்னை கேட்டால் இதுபோன்ற டெக்ஸ்ன் மாறுபட்ட சாகஸமும் காதில் பூ சுற்றினாலும் இந்த சுற்றும் ஒரு வேறுபட்ட ரசனையை ஏற்படுத்தி சுவையூட்டுகிறது..

  எனவே அந்த நீண்ட மெபிஸ்டோ கதையை விரைவில் களம் இறக்கினால் மிக்க மகிழ்ச்சி அடைவோம்..

  ReplyDelete
  Replies
  1. ரம்மி...சித்தே இங்கே வாங்களேன்...!

   Delete
  2. எங்கள் ஸ்லீப்பர் எங்களுக்காக போராடுவார் சார்..மறைமுகமாகவேணும்..

   Delete
  3. கூடிய‌ சீக்கிரம் போட்டுடுவார் ஜீ. கவலை வேண்டாம் சகோ. ₹750 விலையில் மினி டெக்ஸ் சைஸில் ஹார்ட் பவுண்டில் போட்டால் நல்ல விற்பனை ஆகும் என்பது என் கணிப்பு.பார்ப்போம் கனவு நிஜமாகிறாதா என்று.

   Delete
  4. பொதுவான பணப்புழக்கம் வெகு மந்தமாகவுள்ள நிலையில் 750 ; 850 என்ற விலைகளெல்லாம் தற்போதைக்குச் சாத்தியமாகாது சார் !

   'தல'யின் 70-வது பிறந்த ஆண்டு என்றே ஒரே காரணத்தினால் டைனமைட் ஸ்பெஷல் இதழினை ரூ.700 என்ற விலைக்கு 2018 -ல் களமிறக்கினோம் ! இனி 'தல 75 ' தான் அடுத்த லாஜிக் சார்ந்த target - ஒரு மெகா இதழுக்கு !

   Delete
 42. சிங்கத்தின் சிறு வயதில் - ஓகே ரகம் 7/10
  லக்கி லூக் - எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை - 5/10
  சுறா வேட்டை - படம் பார்த்த திருப்தி 9/10
  அந்தியின் ஒரு அத்தியாயம், நில் கவனி வேட்டையாடு - மிகச் சிறப்பு 10/10

  ReplyDelete
  Replies
  1. லுக்கி லூக்கை கார்ட்டூன் நாயகராகவே ; ஜனரஞ்சக ஹீரோவாகவே எதிர்பார்த்திருப்பின் ஏமாற்றமே மிஞ்சியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை சார் ! வெளியாகியுள்ள சகல மொழிகளிலும் இது மரண மாஸ் ஹிட் !!

   Delete
 43. நில், கவனி, வேட்டையாடு. செம திரில்லான கதை. ஆங்கிலப்படம் பார்த்தது போன்ற உணர்வு. NBS ல் வெளிவந்த காரிகனின் கதை. மற்றும் இரத்தப்படலத்தில் இரினா ஸ்வெட்லநோவாவின் ஆட்களால் ஹீரோ XII தீவில் வேட்டையாடப்படும் பகுதி இரண்டையும் இந்தக் கதை நினைவூட்டுகிறது.

  ReplyDelete
 44. ஜம்போ சீசன் 2ன் இறுதிக்கு அற்புதமான தேர்வு.

  ReplyDelete
  Replies
  1. ஒற்றை வரிக் கதையை ஓவியரும், கலரிங் ஆர்டிஸ்டுமாய் வேறொரு லெவலுக்குக் கொண்டு சென்றுள்ளனர் சார் ! இந்த visual விருந்தினை நாம் ரசிக்காது விடக்கூடாது என்ற அவாவின் விளைவே இந்தக் கதைத் தேர்வு !

   Delete
  2. உண்மை சார். முதலைகளிடம் அவர்கள் மாட்டிக் கொண்டு, முதலைகள் அவர்களை கபளீகரம் செய்யும் காட்சிகள் சித்திரத்தின் உச்சம்.

   Delete
 45. ஜம்போவின் ஹை லைட்டே ஜேம்ஸ் பாண்ட் தான் ... இது வரையில் ஜம்போவில் நான் சந்தித்த ஒரே ஏமாற்றம் போன அந்தீயின் ஒரு அத்தியாயம் புக் வரலை..

  ReplyDelete
  Replies
  1. அட...ஒரு போன் அல்லது ஒரு மின்னஞ்சல் மூலம் தகவல் சொல்லியிருந்தால் அனுப்பியிருப்பார்களே ?

   Delete
 46. "மாடஸ்டி பிளைஸி " -யை துப்பாக்கியுடன் "ஆக்ஷன்" போஸில் பார்த்த்துவிட்டு _ வழக்கமான மாLஸ்டி - சாகசத்தை எதிர்பார்த்தால் " பூமிக் கொரு ப்ளாக் மெயில்' - போல் வித்தியாசமான கதை கரு.
  எங்களுக்கு இதுதான் சார் - "கிராபிக் நாவல்"
  மாட ஸ்டி -மேல் ஈர்ப்பு ஏற்படுத்துவதற்கு பல இடங்கள் கதாசிரியரால் சிறப்பாகவே கையாளப்பட்டிருக்கிறது - (ஓவியரின் கவர்ச்யையும் தாண்டி.) கடைசியில் கதையை முடிக்க எழுதப்பட்ட வசனமும் அருமை. "
  என்னைப் பொறுத்தவரை மாட ஸ்டி - ரசிக்கக் கூடிய கதாபாத்திரம் தான்.

  ReplyDelete
  Replies
  1. //கதையை முடிக்க எழுதப்பட்ட வசனமும் அருமை. "//

   "நூடுல்ஸ்" வசனமும், "கைப்புள்ளை" வசனமும் எழுதியது நினைவுள்ளது சார் ; ஆனால் கதை முடிவில் அப்படி என்ன எழுதினேன் என்று ஞாபகம் இல்லியே & வீட்டில் புக்கும் இல்லியே ?!!

   Delete
  2. ///கதை முடிவில் அப்படி என்ன எழுதினேன் என்று ஞாபகம் இல்லியே & வீட்டில் புக்கும் இல்லியே ///

   சார் மாடஸ்டி புக்கு வீட்ல இல்லைன்னா நம்ப முடியலீங்களே...!!! எதுக்கும் தலகாணிக்கு அடியில ஒருதரம் செக் பண்ணிப் பார்த்துடுங்களேன்?!! :D

   Delete
  3. அது வந்து...என்ன சொல்ல வர்றேன்னா....I mean ...AXA வூட்டிலே உள்ளது தான்....!!

   Delete
 47. இந்த மாத மினி டெக்ஸ் வெளியீடு எண் இல்லாமல் வந்துள்ளது போல......

  ReplyDelete
  Replies
  1. @Arivarasu Anna

   நானும் புக் எல்லா பக்கமும் புரட்டி புரட்டி பார்த்தேன் வெளீயீடு எண் இல்லாமல்தான் இருக்கிறது..

   Delete
  2. அதைத் தேடிப் பொழுதைச் செலவிடாதீர்கள் சார் ; இந்த விலையில்லா இணைப்புகளுக்கு இனி நம்பர்கள் இராது ! இவற்றின் ஒட்டுமொத்தத் தொகுப்புகள் மாத்திரமே நம்பரைத் தாங்கி வரும் !

   Delete
 48. அயர்ச்சியூட்டும் தேர்வுப் பணிகளால் இதழ்களை தாமதமாக இன்றுதான் கைப்பற்ற முடிந்தது......
  முதல் புரட்டலில் இதழ்கள் அனைத்தும் சிறப்பு.....
  இனி மினி அணுகுண்டை முதலில் வாசிக்க வேண்டும்.......

  ReplyDelete
 49. **** இருளோடு யுத்தம் *****

  ம்ஹூம்.. பேயோ, பிசாசோ, ஆவியோ, அமானுஷ்யமோ - ஒரளவுக்காவது நம்புகிற மாதிரி இருக்கணுமில்லியா?! இதுமாதிரி நிழல்களோடும் அரூபங்களோடும் ஓடிப்பிடித்து விளையாடுவதை விட, ரத்தமும் சதையுமான எதிரிகளின் முகரையைப் பெயர்ப்பதே டெக்ஸுக்கு அழகு எ.எ.க!

  எனக்கென்னமோ டைலன்டாக்குக்காக உருவாக்கப்பட்ட சுமாரான கதை ஒன்றை கதாசிரியர் போசெல்லி ஒரு புது ஓவியரின் கையில் கொடுத்து "எங்கே.. இதிலே டைலன்டாக்குக்குப் பதிலா டெக்ஸ் படங்களை வரைஞ்சு கொடுத்துடு உன் திறமையைக் காட்டு பார்ப்போம்" என்று டெஸ்டு வச்சிருப்பாரோ என்னவோ?!!

  ஓவியர் பாஸாகிட்டாரு! கதை ஃபெயிலு!



  ReplyDelete
  Replies
  1. ஒரு சில உண்மையான விமர்சனங்களில் ஒன்று. அருமை EV

   Delete
  2. //ஒரு சில உண்மையான விமர்சனங்களில் ஒன்று. //

   இவ்ளோ மெனெக்கெட்டும் அந்த பாடிசோடா கொண்டையை மறைக்க முடியலை போலுள்ளதே !! சங்கத்துக்கு வந்த சோதனை !!

   Delete
 50. கிட் ஆர்ட்டின் .. என்னடா எப்பொழுதும் கதை ஆரம்பித்தவுடன் நம்ம வுட்சிடி நகரமோ ,சிக்பில் குழுவோ தலைகாட்டி விடுவார்களே இதில் இரண்டு பக்கம் தாண்டியும் யாரையுமே காணோமே வித்தியாசமா போவுதே என்று நகைத்தபடியே போகும் பொழுது வுட்சிடியும் தலைகாட்டி ,ஷெரிப்ம் தலைகாட்டி அப்படியே மெல்லிய நகைச்சுவையை ,பலமான நகைச்சுவையாக மாற்றி படுவேகமாக பறக்க செய்கிறார்கள் ரைபிளை எடுத்து கொண்டு பறக்கும் ஷெரீப் டாக்புல் போல..

  நன்று...

  சிக்பில் குழுவின் சாகஸம் வெற்றி அடைவது ஆச்சர்யமே கிடையாது.ஆனால் இவர்கள் ஏன் தேங்குகிறார்கள் எனபது புரியாத புதிர்..

  ReplyDelete
  Replies
  1. ஆக என்ன நடக்குதென்றே தெரியவில்லையே புனித மானிடோ

   Delete
 51. இருளோடு யுத்தம் !
  வில்லரின் நண்பரான செனட்டர் ஃபால்க்னர் ஓர் அமானுஷ்ய இக்கட்டில் மாட்ட வில்லர் & கோ மற்றும் மரணமுள் புகழ் மோரிஸ்கோ கூட்டணியும் இணைந்து செனட்டரை அமானுஷ்ய சக்தியிடம் இருந்து விடுவிக்க முயல்வதே கதையின் களம்.....
  மிக மிக சுவாரஸ்யமான களம்,சுருக்கமான கதை என்பதாலோ என்னவோ வில்லர் & கோவின் பங்களிப்பு சற்றுக் குறைவாக இருப்பதாக தோன்றுகிறது......
  செனட்டரின் எதிரி ப்ரூஸ் சாங்ஸ்டனை டெக்ஸ் &கோ சந்திக்கும் நிகழ்வுகள் சுவராஸ்யத்தை கூட்டுகின்றன.....
  சிலருக்கு கொஞ்சம் காதில் பூ தோன்றும் இரகம் என்றாலும் எனக்குப் பிடித்தே உள்ளது......
  நிதர்சன வாழ்வில் எத்தனையோ புதிர்கள் விளக்கப்படாமல்,விடை தெரியாமல் உள்ளன....
  அதே போல் கதைக் களத்தில் வரும்போது இதையும் ஏற்றுக் கொள்வதில் எந்த பிரச்சனையும் இல்லை......
  கதை சுவராஸ்யத்தை கொடுக்கிறதா என்பதே முக்கியம்.....
  அந்த வகையில் இந்தக் களம் நிறைவை கொடுக்கிறது.....
  வெகுவிரைவில் வில்லர் நீண்டதொரு அமானுஷ்யக் களத்தில் நம்மைச் சந்திப்பார் என்ற நம்பிக்கையுடன்.......
  எமது ரேட்டிங்-9/10.

  ReplyDelete
  Replies
  1. நிதர்சன வாழ்வில் எத்தனையோ புதிர்கள் விளக்கப்படாமல்,விடை தெரியாமல் உள்ளன....////
   அந்த துப்பாக்கியில் மட்டும் எப்படி தோட்டா தீர்ந்து போவதேயில்லை என்பது போலவா??

   Delete
  2. //வெகுவிரைவில் வில்லர் நீண்டதொரு அமானுஷ்யக் களத்தில் நம்மைச் சந்திப்பார் என்ற நம்பிக்கையுடன்....//

   பாவம் சார் அதிகாரி....சிவனேன்னு சுற்றி வந்து கொண்டிருக்கிறார் ! அவரை டாக்புல் ரேஞ்சுக்கு கொண்டு சொல்வானேன் ?

   Delete
 52. ஒரு தரமான, சுவாரசியமான கதைக்கு பக்க எண்ணிக்கை முக்கியமில்லை என நிரூபித்த கதை..
  கடுகு சிறுசானாலும் காரம் கடுசு என்று கட்டியம் கூறும் கதை...
  நட்புக்காக எந்த வித அபாயங்களையும் சந்திக்க துணியும் நண்பர்களின் கதை..
  சாமானிய மனிதர்களுக்கு குழப்பம் விளைவிக்கும் ஒரு சமாச்சாரத்தை சாமர்த்தியமாக கையாளும் புத்திசாலி தனத்தை கூறும் ஒரு கதை..
  அமானுஷயத்தையே அட்டகாசமாக சமாளிக்கும் தைரியசாலிகளின் கதை..
  நல்ல எண்ணத்திற்காக தர்ம படி எது சரியோ அதை முடிவாக கொண்ட கதை...

  வயதான மருத்துவர்களின் வரிகளில் சொல்ல வேண்டுமானால்.. யானை படுத்தலுமே குதிரை மட்டம் என்பதே ..

  மொத்தத்தில் எதிர்காலம் எனதே இந்த வருடத்தின் டாப் கதை.. மாடஸ்டி & கார்வினின் அட்டகாசமான ஆக்ஷன் கதை..

  ReplyDelete
  Replies
  1. ஒரே குறை.. வசன பலூன்களின் placement .. ஓவியங்களை சரிவர ரசிக்க முடியாத படி ஒரு இடைஞ்சல் ...

   Delete
  2. எம்மாவின் டியூப்பை கடன் வாங்கிட்டு கி.பி.2488க்கு ஒரு "டெலிபோர்ட்" பண்ணி பார்த்துட்டு வந்து சொல்லுங்க ரம்மி! அப்பாவாச்சும் "ஓவியங்கள்" ஒரிஜினல் ஆக ரசிக்க விடறாகளானு.....!!!!! "எம்மா"-- கறுப்பு வெள்ளையிலேஏ "சும்மா"!!! கலரில்....?????

   Delete
  3. எனக்கு பஞ்சாயத்து தலீவர் சங்கிலி முருகன் ஞாபகம் ஏனோ வந்து வந்து போகுது !!

   Delete
 53. இருளோடு யுத்தம்

  அடிதடி ஆக்ஷன் நாயகரான அவருக்கும் ஆயிரம் ஜென்மங்கள் ,அதிசயப்பிறவி உண்டு

  பகுத்தறிவு பாதையில் செல்லும் பரமக்குடியாருக்கும் கல்யாணராமன்கள் உண்டு ...

  யதார்த்த வாழ்வை படம் பிடிக்கும் அவ்வியக்குனருக்கும் நெஞ்சம் மறப்பதில்லை உண்டு
  விஞ்ஞான சிறுகதைகள் மட்டுமே இரு தொகுதிகள் எழுதியுள்ள ஸ்ரீரங்கத்தாருக்கும் அமானுஷ்யமா ,பௌதீகமா என்பதை வாசகரே தீர்மானிக்கட்டும் என்று விட்ட கொலையுதிர்காலம் உண்டு

  இயற்கை விதிகளை மீறி நடக்கும் விஷயங்களை பற்றி அறிந்து கொள்ள- எல்லாருக்கும் –அவற்றில் நம்பிக்கை இல்லாதாருக்கும் கூட –ஆவல் கிளர்ந்து எழுவது இயல்பே ..

  மனதை படித்தறியும் ஆற்றல் twilight saga-வில் Edward Cullen –க்கு உண்டு என்பதை ஏற்று கொள்ளும் மனம்
  மற்றோர் மனதின் எண்ண அடுக்குகளை ஊடுருவி அவற்றை அறியும் ஆற்றல்-லெஜிலிமன்ஸ்- ஹாரி பாட்டரில் வால்டிமோர்ட் ,ஸ்நேப் ஆகியோருக்கு உண்டு என்பதை ஏற்று கொள்ளும் மனம்
  குருதியை சுவைப்பதின் மூலம் நினைவுப் பேழைகளை திறந்து அவற்றை அறியும் திறன் மார்க்கஸ் –க்கு உண்டு என அண்டர்வேர்ல்ட் சொல்வதை ஏற்று கொள்ளும் மனம்

  சாங்ஸ்டன் –க்கு மனம் படிக்கும் ஆற்றல் உண்டு என்பதையும் ஏற்று கொள்ளத்தான் செய்கிறது

  ஏழு கடல் ,ஏழு மலை தாண்டி உள்ள குகையில் வண்டிடம் ஒற்றைக்கண் அரக்கன் உயிர் உள்ளது, ஸ்னோ ஒய்ட் மற்றும் ஏழு குள்ளர்கள் ,கடல் பயணத்தில் கட்டை விரல் மனிதர்கள், ஆலிஸ் ,சின்டெரெல்லா கடந்து வந்த மனதுக்கு நிழல் அரக்கனை ஏற்று கொள்ள தயக்கமில்லை ...

  ‘’பலியாடே டுரானிய மாந்த்ரீக எழுத்துகளை வாசிக்க வேண்டும் ‘’- கதையின் செம ட்விஸ்ட் ....

  அரை மணிக்குள் ஆறு சிகரெட்டுகளை புகைக்கும் சாங்ஸ்டனை கொல்ல நிழல் அரக்கன் வேண்டுமா என்பது என் தனிப்பட்ட எண்ணம்

  டெக்ஸ் ஆர் நாட் ..இருளோடு யுத்தம் –வெற்றி சத்தம்

  9/10

  ReplyDelete
  Replies
  1. அதிகாரிக்காக மற்றவர்களை எல்லாம் கட்டிலில் தள்ளி விடும் பாக்கியராஜ் வேலை...

   Delete
  2. கதையின் வெற்றிக்குக் காரணமே அந்த நறுக்.. சுருக்கென்ற 32 பக்க நீளம் தான்... இதையே நீட்டி முழக்கி இருந்தால் இன்னொரு கியூபா படலம் ஆகி இருக்கும்... இது போன்ற சிங்கிள் ஆல்பங்கள் (வித் மோரிஸ்கோ) கண்டிப்பாக முயற்சிக்கலாம்.

   Delete
  3. //இதையே நீட்டி முழக்கி இருந்தால் இன்னொரு கியூபா படலம் ஆகி இருக்கும்//

   +1

   Delete
 54. *நில் கவனி வேட்டையாடு*

  ஒரு பஸ் டிக்கெட்டை இரண்டாகக் கிழித்து அதன் பின்புறத்தில் கதையை எழுதி விடலாம். அதை எழுதி முடிக்கும் முன் கதையை படித்து முடித்து விடலாம். அவ்வளவு வேகம்.

  கதாசிரியரின் கற்பனையை அற்புதமாக ஓவியங்களிலும் கலரிங்கிலும் கொண்டு வந்திருக்கிறார்கள். ஸ்பாய்லர்களை அள்ளிவிட்டு விடக் கூடாது என்பதற்காக நிறய சொல்ல முடியவில்லை. சாவதற்கு கூட நேரம் தராத மனித வேட்டை. நடப்பது அடர்ந்த காட்டில். இடைவெளியில்லாத இந்த துரத்தலில் கூடவே காடு மலை சதுப்பு ஏரிகளில் நாமும் பயணம் செய்த உணர்விருந்தாலும் எங்கும் பயண அலுப்பு மட்டும் இல்லை. அட்ரினலின் அழுத்தத்தில் வீட்டில் கையை ஓங்கி கட்டுப் போட நேர்ந்தால் கம்பெனி பொறுப்பேற்காது.

  இங்கு மொழிபெயர்ப்பை குறிப்பிட்டே ஆக வேண்டும். இந்த மாதிரியாக கதைகளில் வசனங்கள் கவனமாக செதுக்கப்பட வேண்டும். எந்த இடத்திலும் வேகத்தை மட்டுப்படுத்தக் கூடாது. அதே சமயம் வேகத்தை உணர செய்யவும் வேண்டும். அந்த உணர்வு கடத்தலை மொழிபெயர்த்தவர் சரியாக செய்திருக்கிறார்.

  வாசகர்களின் மனதை வேட்டையாடும் மனித வேட்டை.

  10/10

  ReplyDelete
  Replies
  1. ஷெரீஃப் @ பட்டை கிளப்புறீங்க! தெறிக்கும் விமர்சனங்கள்! தொடருங்கள்!

   Delete
  2. செம்ம ஷெரீஃப் செம்ம. நான் மிகவும் ரசித்து சிரித்த இடம் // அட்ரினலின் அழுத்தத்தில் வீட்டில் கையை ஓங்கி கட்டுப் போட நேர்ந்தால் கம்பெனி பொறுப்பேற்காது. // ROFL

   Delete
  3. Reg : Translation :

   On the contrary - இது சிரமங்கள் ஏற்படுத்தா பணி சார் ! இங்கே ஓவியரும், கலரிங் ஆர்டிஸ்டும் செய்துள்ள அதகளத்தில் வாய் பிளந்தபடிக்கே "ஆமாஞ்சாமி ; ரைட்டு சாமி !!" என்று ஒத்து ஊதிக் கொண்டே வண்டியை ஓட்ட முடிந்தது !

   Delete
  4. என்ன மகி, இந்த மாத புத்தகங்கள் அதுக்குள்ள கிடைச்சிடுச்சா ? !!

   Delete
  5. இல்ல. அவசர வேலையாக இந்தியா வருகை. அப்படியும் இந்த ஜம்போ மட்டுந்தான் கிடைச்சுது. இன்னிக்கு மீதியும் கிடைச்சிடும்.

   Delete
 55. நில் கவனி வேட்டையாடு

  பராகுடாவிற்கு பிறகு சிறந்த காமிக்ஸ் இதுவே.

  என்ன ஒரு பரபரப்பு. ஓவியங்கள். வாவ்.

  இது போன்ற முத்துக்களை தேடிக் கண்டுப்பிடித்து வெளியிட்ட ஆசிரியருக்கு நன்றி. மொழிபெயர்ப்பும் கதையின் வேகத்திற்கேற்ப இருந்தது. அட்டைப்படம் செம. 11/10 மார்க்ஸ்

  ReplyDelete
  Replies
  1. நிஜத்தைச் சொல்வதானால் இந்தத் தேர்வு ரொம்பவே சுலபமானது சார் ! அந்தச் சித்திரங்கள் + கலரிங் என்னை நொடிப்பொழுதில் சாய்த்து விட - கதை எவ்விதம் இருந்தாலுமே, சமாளித்துக் கொள்ளலாம் என்ற தைரியம் துளிர்விட்டது !

   Delete
 56. அருமை அருமை நல்ல விமர்சனம் தளம் கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடிக்கிறது.

  ReplyDelete
 57. ஒரு சந்தேகம்?

  கடந்த tex மினி 'இருளோடு யுத்தம்' இதழின் வெளியீட்டு எண் என்ன?

  நண்பர்கள் தெரிவிக்கவும்.

  - சங்கர்

  ReplyDelete
  Replies
  1. லயன் காமிக்ஸ் "369"- என்ற எண்ணில் புக் வர்ல. இப்போதைக்கு @அதை கொடுத்து விடுங்கள். 369 ஆக இருக்க வாய்ப்பு 50% இருக்கலாம்!

   Delete
  2. 369 - ரெளத்திரம் மற தொகுப்பின் வெளியீட்டு எண்.

   Delete
  3. தகவலுக்கு நன்றி சார். எடிட்டர் சார் தான் இதற்கு உரிய எண்ணை அறிவிக்க வேணும்.

   Delete
  4. ஒரு 3மாசம் தூங்கிட்டு இப்ப விழித்து ஒவ்வொரு புக்காக பார்த்து வர்றேன். அந்த 369 - ரெளத்திரம் மற- என்னுடைய நண்பர்ட்ட காணல! சந்தாவில் வராத காரணம் என தெரிகிறது. வாங்கிடலாம்!

   Delete
  5. அப்புறம் இப்போதைய "இருளோடு யுத்தம்"- பார்த்தேன்! ஹி...ஹி...!!!! நோ கமெண்ட்ஸ்! மெளனம் நல்லது!நல்ல கதைக்கே "விளக்கு" வாங்கும் படலம்னு படம் ஓட்டினாங்க! இதற்கு.......??????

   Delete
  6. நன்றி சேலம் Tex விஜயராகவன் , Saravanakumar

   Delete
  7. அது தான் நல்லா இருக்குனு சொல்லியாச்சே..போன பதிவிலேயே ..

   இருளோடு யுத்தம்...
   அட்டகாசமான அமானுஷ்ய திரில்லர்.. பல இடங்களில் ஜேசன் பிரைஸை நியாபகம் படுத்தியது..
   கார்சனும் அதிகாரியும் சும்மா ஒப்புக்கு சப்பாணிகள் தான்..
   ஆனா.. கண்ணாடியை திருப்பினா எப்பிடி ஆட்டோ ஸ்டார்ட் ஆகும்ன்னு தான் தெரியலை..

   Delete
  8. அதிகாரியோட ஸ்லீப்பர் செல்லே நல்லாருக்குன்னு சொன்னதுக்கப்புறமும் மெபிஸ்டோவையும் யுமாவையும் அணைகட்டி வைப்பதை ஒத்துக்க முடியாது.

   Delete
  9. ///மெபிஸ்டோவையும் யுமாவையும் அணைகட்டி வைப்பதை ஒத்துக்க முடியாது///----ரைட்டு! இன்னும் பல ஆட்டோக்களின் கண்ணாடிகளை திருப்ப சொல்றீங்க! டெக்ஸைம் இளம்புலி ரேங்கிற்கு "தூக்க" விரும்பறீங்க! நடக்கட்டும்...க்கட்டும்...ட்டும்..ம்!!!

   Delete
  10. /// கண்ணாடியை திருப்பினா எப்பிடி ஆட்டோ ஸ்டார்ட் ஆகும்ன்னு தான் தெரியலை..///--ஓவர் டூ எடிட்டர் சார்!

   Delete
  11. //ஒரு 3மாசம் தூங்கிட்டு இப்ப விழித்து ஒவ்வொரு புக்காக பார்த்து வர்றேன்//

   குளிர்கால உறக்கம் முடிந்து மீண்டும் தளத்துக்கு வருகை புரிந்திருக்கும் STV க்கு நல்வரவு.

   Delete
  12. சரவணக்குமார்@ நன்றிகள் சார்!

   Delete
  13. //அதிகாரியோட ஸ்லீப்பர் செல்லே நல்லாருக்குன்னு சொன்னதுக்கப்புறமும் மெபிஸ்டோவையும் யுமாவையும் அணைகட்டி வைப்பதை ஒத்துக்க முடியாது.//

   பொங்கப்பானையை பரணிலிருந்து இறக்கி ஸ்லீப்பர் செல் ரெடி பண்ணி வருவதாய்த் தகவல்.....பெருசாய்ப் பாயசம் போடும் திட்டத்தில் ! சிக்க மாட்டோம்லே !!

   Delete
  14. திட்டம் வெளியே தெரிஞ்சிருச்சே...

   Delete
  15. //கண்ணாடியை திருப்பினா எப்பிடி ஆட்டோ ஸ்டார்ட் ஆகும்ன்னு தான் தெரியலை..///--ஓவர் டூ எடிட்டர்//

   ஆட்டோ புளியமரத்தை குசலம் விசாரிக்க அத்தனை சீக்கிரத்தில் விட மாட்டேன் சார் ; கவலை வேண்டாம் !

   Delete
  16. ///ஆட்டோ புளியமரத்தை குசலம் விசாரிக்க அத்தனை சீக்கிரத்தில் விட மாட்டேன் சார் ; கவலை வேண்டாம் !///---- அப்பாடி வயிற்றில் பாயாசத்தை ச்சே பாலை வார்த்தீர்கள் சார்! இந்த ரீதியான கதைகள் தான் இருக்கு எனில் இந்த பூமா, யமா -லாம் வேணாம் சார். பூமர் பபிள்கமே போதும்! பயந்து வருது!

   Delete
 58. ஜேம்ஸ்பாண்ட் (புதுசு மற்றும் பழசு) நல்லாவும் இருக்கு. படிக்க வேண்டியது நிறயவும் இருக்கு. அதனால ஜேம்சுக்கான கோட்டாவை அதிகரிக்க வேண்டுகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. நடப்பாண்டில் 3 black & white ஜேம்ஸ் பாண்ட் + 1 கலர் 007 என்று உள்ளதே...இதுக்கும் மேலே போனால் overkill ஆகிடாதா ?

   Delete
  2. கலர் 007ம் மூன்று வேண்டும் சார்..

   Delete
  3. அதுக்கு ஆழமான பாக்கெட்கள் தேவை சார் !

   Delete
  4. ///அதுக்கு ஆழமான பாக்கெட்கள் தேவை சார் !///

   எங்களுக்குக் கொடுக்கப்போற டீஷர்ட்டில் அந்த மாதிரி ஆழமான, அகலமான பாக்கெட்டுகள் வச்சுக் கொடுத்துடுங்களேன் சார்?
   சின்னவயசில பாக்கெட் சைஸ் புக்கை டவுசர் பாக்கெட்டில் மறைத்து ஸ்கூலுக்குக் கொண்டு சென்ற சம்பவங்கள் நிகழ்ந்திருக்கிறதே.. அதே மாதிரி இப்ப வர்ற மேக்ஸி சைஸ் புத்தகங்களை பாக்கெட்டில் மறைத்து ஆபீஸுக்கு எடுத்துப்போறா மாதிரி ஏற்பாடு பண்ணிடுங்க!!

   மறைச்சுவச்சுப் படிக்கறதில் அப்படியொரு இன்பம்!!

   Delete
 59. நில் ,கவனி ,வேட்டையாடு.


  முதலில் அட்டைப்படத்திற்கும் ,உள்ளே சித்திரங்களுக்கும் பலத்தை கைதட்டல்கள்..கதை முழுவதும் அடர்ந்த கானகத்தினுள் வாசிக்கும் நாமும் மாட்டிக்கொண்டதான அனுபவத்தை அப்படியே உணரவைக்கிறது.ஆரம்ப முதல் இரு பக்கங்களை படித்தவுடன் ஏனோ பலவருடங்களுக்கு முன் எழுத்தாளர்கள் சுபா எழுதிய " மனித வேட்டை " என்ற நாவலை அப்படியே படம் பிடித்ததான உணர்வு.இதே கதை களத்தில் தான் அப்பொழுது திடுக் ,திடுக் அனுபவத்தோடு அந்த நாவலை பலமுறை வாசித்த அனுபவம் நினைவிற்கு வந்தன.சில பக்கங்களுக்கு பிறகு அதே கதை களம் போல அமைந்தாலும் வேறுபட்டே காணப்பட்டது..ஆனால் அதே திடுக் அனுபவம் மட்டும் குறையவில்ல..ஆனால் நாவலில் வேட்டையில் மாட்டிக்கொண்டவன் நாயகனாகவும் ,வேட்டையாடுபவன் வில்லனாகவும் காணப்பட்டதால் நாயகன் எப்படியாவது தப்பிக்கவேண்டுமே என்ற நாயகனின் பதைபதைப்பு வாசிக்கும் நமக்குமே அந்த பதைபதைப்பை ஏற்படுத்தியது..ஆனால் நில் ,கவனி ,வேட்டையாடு இதழில் இருபக்கத்தில் இருந்தும் வேட்டையாடுபவர்களின் தலைமையின் கதாப்பாத்திரம் எதிர்மறையாக இருப்பதாலும் ,நாயக கதாப்பாத்திரம் இருப்பக்கமும் இல்லாமல் போன காரணத்தால் இந்த வேட்டையில் எவர் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு கதை நெடுக ஏற்பட்டாலும் ,எவர் தப்பித்தால் சிறப்பு ,எவர் வேட்டையில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணமும் ,பதைபதைப்பும் நல்லவர் எனும் நாயகபிம்பம் எவரும் காணப்படாத காரணத்தால் அந்த பதைபதைப்பு வாசிக்கும் வாசகர்களுக்கு ஏற்படுத்தாமல் போவது இந்த விறுவிறுப்பான கதைக்கு சிறிது மைனஸாகவே பார்க்கிறேன்..

  மற்றபடி ஓர் விறுவிறுப்பான ,பரபரப்பான ,ஓர் த்ரில்லர் வாசிப்பை இந்த நில் ,கவனி ,வேட்டையாடு இதழ் ஏற்படுத்தியதும் உண்மை..


  மொத்தத்தில் நில் கவனி வேட்டையாடு - அசுரவேட்டை

  ReplyDelete
  Replies
  1. பின்னி பெடல் எடுக்கும் விமர்சனம்.

   Delete
  2. சொல்ல நினைப்பதை எப்படியாவது வார்த்தைகளால் நிரப்பிப் புரிய வைத்துவிடுவதுதான் உங்கள் ஸ்பெஷாலிட்டி தலீவரே!! பின்னிப்பெடல்!!

   Delete
 60. எதிர்காலம் எனதே...

  இந்த தலைப்பு நமது இளவரசி கூறுவதே போலவே நான் எடுத்துக்கொள்கிறேன்..முதல் இரு பக்கங்கள் செயல்கள் ஏதுமில்லாமல் அனைவரும் பேசிக்கொண்டே இருப்பது போல ஓர் தோற்றம் என்ன சுறுசுறுப்பு பற்றவில்லையே என நினைக்கும் நேரம் பின் பரபரவென பக்கங்கள் நகர்கின்றன.இந்த முறை மாடஸ்தியை பெரிய அளவில் ,தெளிவான சித்திரங்களோடு ரசித்தது அருமை..வருடம் ஒருமுறை மட்டுமே மாடஸ்தி வெளிவந்தாலும் அவரின் பங்கிற்கு எந்த குறைவும் இல்லாமல் சிறப்பு செய்வதால் இளவரசியின் எதிர்காலம் என்றும் சிறப்பாகவே இருக்கும் என பட்சி சொல்கிறது..சில பக்கங்களில் எழுத்து பிழைகள் நாற்பது ரூபாய் இதழ்களில் தொடர்ந்து கொண்டே இருப்பது மாயமானால் இன்னும் சிறப்பாக இருக்கும்..அடுத்த வெளியீடு டேஞ்சர் டயபாலிக் அறிவிப்பு மகிழ்ச்சியை விதைக்கிறது..அதே சமயம் போன டயபாலிக் சாகஸத்தை படித்துவிட்டு டயபாலிக் என்றாலே காத தூரம் ஓடுபவர்களை மீண்டும் தன்னை தேடி ஓடிவர வைப்பாரா..அல்லது ஓட்டம் பிடிக்க வைப்பாரா என்ற ஆர்வம் பல மடங்காக காத்து கொண்டு உள்ளது ..

  காத்திருக்கிறோம்..

  ReplyDelete
 61. சார்...இனி மார்ச்சில் ஏப்ரல் இதழ்கள் எப்பொழுது கிடைக்கும்..?!

  ReplyDelete
  Replies
  1. ஹிஹிஹி அப்படி கேளுங்க தலைவரே :)))))))

   Delete
 62. நில் .. கவனி.. வேட்டையாடு ..
  உட்புற அடர்த்தியான கலரிங்கை பார்த்து விட்டு வழக்கம் போல ஒரு கனமான , கடைசியில் மண்டைக்கு வேலை வைக்கும் ஒரு கி.நா. போலிருக்கும்.. .. சரி கடைசியில் பார்த்து கொள்ளலாம் என்று நினைத்து விட்டேன்..
  நேற்று இரவு புத்தகத்தை எடுத்து புரட்ட ஆரம்பித்ததும் முதல் ஓரிரு பக்கங்களை தலைவர் கண்ட கி.நா. பாணியிலேயே வாசித்து கொண்டிருதேன்.. எப்போது அந்த கதைக்குள் தொலைந்து போனேன் என்று முழுவதையும் படித்து முடித்து பல நிமிடங்களாகியும் தெரியவில்லை .

  ஜெரோப் முதலில் வில்லனாக தோன்றினாலும் ஒரு விதமான வசீகரம் நம்மை அவருடன் பிணைத்து விடுகிறது. மனித வேட்டையையே பொழுது போக்காக கொண்ட இரு வேட்டையர்களிடையே நடக்கும் ஆட்டம்.. பெட்ரோலில் பற்றிய தீயாக குப்பென்று பற்றிக் கொள்கிறது வேகம் .
  ஜெரோப் மற்றும் குடும்பத்தினர், அவருடைய வேலையாள் இவர்களோடு சேர்ந்து நானுமே அந்த கானகத்தினுள் ஓடிக்கொண்டிருப்பதாய் உணர வைக்கும் சித்திரங்கள். பரபரப்பான சம்பவங்கள்.. அட்டகாசமான ஆக்சன் திரில்லர்..
  வில்லன் வகையறா ஜெரோப்க்கு ஈடு கொடுக்கவில்லையோ என ஒரு சன்னமான சந்தேகம்.. ஆனாலும் கதையின் போக்கில் அது அவ்வளவு பெரிய உறுத்தலாக தெரியவில்லை..
  இன்னொரு மிகப் பெரிய பலம் மொழிபெயர்ப்பு .. கதையின் வேகத்தை எங்கேயும் மட்டுப்படுத்தாமல் கதையின் ஓட்டத்திற்கு பலம் சேர்க்கிறது.. அதிலும் ஆரம்ப பக்கங்களின் வசனங்கள் அருமை..
  இந்த வருடத்தின் சிறந்த கதைகளில் நிச்சயம் இடம்பிடிக்கும் நில்.. கவனி.. வேட்டையாடு..

  இது போன்ற சிறந்த கதைகளை மேலும் அதிகமாக வேட்டையாடி வெளியிட வேண்டுமாய் ஆசிரியர் சமூகத்தை வேண்டி விரும்பி கேட்டு கொள்கிறேன்.

  அநேக நமஸ்கரங்களுடன்
  ரமேஷ் பழனிசாமி
  மல்லேகவுண்டன் பாளையம்,
  பல்லடம் தாலுக்கா
  திருப்பூர் .

  ReplyDelete
  Replies
  1. அதிகாரியின் ஸ்லீப்பர் அவர்களின் விமர்சனமா இது ..அருமை...:-)

   Delete
  2. கலக்கிட்டீங்க ரம்மி!

   Delete
  3. சூப்பர் ரம்மி!

   பின்கோடு மட்டும் விட்டுப்போச்சு! :)

   Delete
 63. // அதுக்கு ஆழமான பாக்கெட்கள் தேவை சார் !//
  எவ்வளவு ஆழம் தேவை என்று சொன்னால் அதற்கு ஏற்றால் போல் பையை ரெடி பண்ணிடலாம் சார்!

  ReplyDelete
 64. Hi sir
  And Hi too everyone...
  After long days I post this comment blog...
  @diabolik akkil
  Which heard after long days in this site...
  Suprisely today march issues are in my doorsteps...
  I really surprised but at the same time
  I think off how sponsor this time??!!
  ...
  After 2019 ends I didn't read any single book...
  I just collect money by going to work...
  (Part time in studio and youtube channel as a photographer and cinematographer)
  And I am in thought of buy all month books in August book fair
  But this surprise really throw to the heavens peak...😻
  And another happy news is
  I bought new DSLR camera
  And day by day increase my skills...
  Definitely on august meet i bring up camera
  We make some awesome memories
  And also from today I actively participate in blog...



  ...by @diabolik akkil

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துகள் அகில்.. காமிக்ஸுக்கும், காமிராவுக்கும்!!

   Delete
  2. வாழ்த்துக்கள் அகில். Looking forward to seeing you in August.

   Delete
  3. Akil @ good move! All the best!

   Your books are sponsored by Comics Lover Raghavan!

   Delete
 65. **** ஆர்டின் ஒரு ஆச்சர்யக் குறி!*****

  புதிதாக பதவியேற்கவிருக்கும் அரிஜோனாவின் கவர்னரிடமிருந்து, அவரது பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள நம் கிட்ஆர்டினுக்கு சிறப்பு அழைப்பு வருகிறது! பொறாமையால் டாக்புல் ஒருபுறம் வெந்து தணிய, கவர்னருக்கான பரிசுப் பொருளோடு வுட்சிட்டி நகரமே கிட்ஆர்டினை வாழ்த்தி வழியனுப்பி வைக்க, அதுவொரு சூழ்ச்சிவலை என்பதைப் புரியாத கிட்ஆர்டினும், டாக்புல்லும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளே - மீதக் காமெடிக் கதை!

  கதையில் இடம் பெறப்போகும் சில முக்கியக் கேரக்டர்களின் குணாதியசம் பற்றி ஆரம்பப் பக்கங்களிலேயே விளக்கப்பட்டிருந்தால் அந்தக்கதையை - ஓரளவுக்காவது 'ஷ்யூர் ஹிட்' என்று கணித்துவிட இயலும்! வழக்கமாக லக்கிலூக் கதைகளில்தான் இதைப்போல - கதாபாத்திரங்களின் குணாதிசயங்களை அவர்களின் குழந்தைப் பருவத்திலிருந்தே - விளக்கிச் சொல்வார்கள்!! சிக்பில் கதைகளிலும் அதே பாணியைப் பின்பற்றியிருப்பது ஆச்சரியமளிக்கிறது!

  வழக்கம்போல தன் முகபாவங்களாலும், "அப்புறம்.. இந்த மொட்டை - நான் சும்மா ஸ்டைலுக்காக அடிச்சுக்கிட்டதாக்கும்" என்ற வசனங்களாலும் நம்மை வயிறுகுலுங்க சிரிக்க வைக்கிறார் ஷெரீப் டாக்புல்!!

  புகை சமிக்ஞை - நமக்குப் பழக்கமானதே! ஆனால் 'சோப்புக் குமிழ் சமிக்ஞை' பற்றித் தெரியுமோ?!! கிட்ஆர்டினிடம் தெரிந்துகொள்ளுங்கள் - குலுங்கும் வயிறோடு!!

  இன்னும் கொஞ்சமும்கூட காமெடியில் அடித்து ஆடியிருக்க முடியும்தான்.. ஆனாலும் 'ஒரிஜினலிலிருந்து ரொம்பவும்தான் விலகியிருக்க வேணாமே' என்ற நினைத்ததாலோ என்னவோ எடிட்டர் சற்று அடக்கியே வசனித்திருக்கிறார்!

  மனதை இலகுவாக்கிட இதைப் படியுங்க!

  என்னுடைய ரேட்டிங் : 9.5/10

  ReplyDelete
  Replies
  1. //
   மனதை இலகுவாக்கிட இதைப் படியுங்க!
   // படித்து விட்டேன். அருமை எனக்கு மிகவும் ரசித்தது.

   இந்த சிறிய வயதில் இருந்தே கதாபாத்திரங்களின் குணாதிசயம் பற்றி கூறி விட்டு தொடங்கும் கதை பற்றிய உங்கள் கருத்து அருமை EV . இந்த கதை கண்டிப்பாக ஹிட் தான்.

   Delete
 66. ஒரு வழியாக புத்தகங்களை கை பற்றி அதில் இரண்டு புத்தகங்களை படித்து விட்டேன்.

  இருளோடு யுத்தம்

  ஒரு off beat Tex கதை நண்பர் சரவணக்குமார் சொன்னது போல மோரிஸ்கோ வரும் கதையில் அவர் தானே ஹீரோ. அமானுஷ்ய கதைகள் ரசிக்க வைக்கும் இதுவும் ரசிக்க வைத்தது. அந்த வில்லனை மடக்கும் டுவிஸ்ட் எனக்கு பிடித்தே இருந்தது. ஓவியங்கள் ஃபர்ஸ்ட் கிளாஸ்.
  எனது மதிப்பெண் 7/10

  ReplyDelete
  Replies
  1. // மோரிஸ்கோ வரும் கதையில் அவர் தானே ஹீரோ.///
   அந்த மாதிரி எந்த கதையும் படித்த நியாபகம் வரலையே சார் ...

   Delete
  2. ஒரு கதை மரண முள். மற்ற கதை பெயர் நினைவில் இல்லை.

   Delete
  3. //மோரிஸ்கோ வரும் கதையில் அவர் தானே ஹீரோ//

   மோரிஸ்கோ ஹீரோவாக வரும் டெக்ஸ் 'சிங்கிள்' ஆல்பங்கள் வருடத்திற்கு ஒன்று போடலாம் சார், ஒரு வித்தியாசமான டெக்ஸ் வாசிப்பு அனுபவத்திற்காக...

   Delete
  4. //ஒரு கதை மரண முள். மற்ற கதை பெயர் நினைவில் இல்லை.//--தலையில்லா போராளி!

   Delete
  5. தலையில்லா போராளி maxi புக் தானே சார், அதில் மோரிஸ்கோ வருவதாக நினைவில்லையே...

   Delete
  6. இருக்கு இருக்கு எனக்கு நினைவு இருக்கு. எப்படி எங்க அண்ணன் டெக்ஸ் விஜயராகவன் வந்து விட்டாரே.

   Delete
 67. இரண்டாவதாக படித்தது நில் கவனி வேட்டையாடு. நிறைய நண்பர்கள் சொன்னது போல சும்மா படம் பார்க்க ஆரம்பித்த நான் என்னை அறியாமல் படிக்க ஆரம்பித்து விட்டேன். இரவு 11 மணிக்கு படிக்க ஆரம்பித்த நான் புத்தகத்தை படித்து முடித்து கீழே வைக்கும் போது நேரம் 11.45.
  டாப் கியரில் ஆரம்பிக்கும் கதை முடியும் வரை அதே வேகத்தில் செல்கிறது. வேட்டயனை வேட்டையாட சென்ற குழு அதன் பின் நடந்தது என்ன என்பது தான் கதை ஒவோரு காட்சியும் அவ்வளவு அழகாக இருக்கிறது. ஜாகுவார் களுடன் நடக்கும் மோதல் அருமை கிளைமாக்ஸ் சண்டை எல்லாம் வேற லெவல். அட்ரினலின் ரஷ் உண்மையிலேயே அபாரம்.
  எனது மதிப்பெண் 11/10

  ReplyDelete
 68. நண்பர்களே!

  டெக்ஸ் கதைகளில் அனைத்து ஜானர்களையும் பெரும்பான்மையினர் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் அந்த இடத்தில் டைகர் அல்லது மற்ற ஹீரோக்களை ஏற்றுக் கொள்ள முடிகிறதா? உதாரணமாக இந்த இருளோடு யுத்தம் போன்ற ஒரு off beat சாகசத்தில் டைகர் இடம்பெற்றால் அதை நாம் எப்படி எடுத்துக் கொள்வோம்?

  தயவுசெய்து சீரியசாக விவாதிக்க வேண்டாமே... ப்ளீஸ்!

  ReplyDelete
 69. ஐ யாம் 200! (காமிக் லவரின் நினைவாக!)

  ReplyDelete