Powered By Blogger

Saturday, October 28, 2023

தி லயன்-முத்து யுனிவெர்ஸ் !!

 நண்பர்களே,

வணக்கம். 2011-ன் ஏப்ரல் மாதம் அது! தேசமே ஆரவாரமாய் டி.வி. ‘பொட்டிகளின்‘ முன்னே தவமிருந்த நாட்களவை! ஒரு மறக்க முடியாத மும்பை இரவில் மகேந்திர சிங் தோனி ‘பொளேர்‘ என சிக்ஸர் ஒன்றைச் சாத்திய கையோடு, பேட்டை கக்கத்துக்குள் செருகியபடியே நடையைக் கட்ட – இந்தியாவே ஆர்ப்பரித்தது – கிரிக்கெட் உலகக் கோப்பையை இரண்டாவது முறையாக வாரிய சந்தோஷத்தில்! இப்போ அப்டியே ‘கட்‘ பண்ணி ஒரு டஜன் ஆண்டுகளுக்குப் பிற்பாடான இந்தியாவிலேயே மறுக்கா land ஆனாக்கா – இன்னொரு 50 ஓவர் உலகக் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிகள் இப்போதும் நடந்து வருவது தெரிகிறது ! செம form-ல் செட் ஆனதொரு இந்திய அணி எதிர்ப்படுவோரை சப்பளித்துப் போய்க் கொண்டேயிருக்கிறது & கோப்பை # 3 நமக்கே நமக்குத் தான் என்ற நம்பிக்கை நாடு முழுவதிலும் ரீ்ங்காரமிட்டு வருகிறது! ஆனால் நம்ம ‘ஜும்மை” இன்னும் சித்தே tight க்ளோஸ்-அப்புக்குக் கொண்டு போய்ப் பார்த்தால் – ‘இன்னா மேன் நிறைய மேட்ச்களில் சீட்ஸ்  காலி-காலியா கீது?” என்ற கேள்வி எழுகிறது! 12 ஆண்டுகளுக்கு முன்பாய் இமை தட்டாது 50 ஓவர்களையும் பார்த்து ரசித்து வந்த நாமளே, அப்பப்போ டிஸ்னி ஹாட்ஸ்டாரில் மேட்சை மேலோட்டமாய் highlights பார்த்துப்புட்டு, “ஆங்... மாப்பு... இன்னா அடி தெரியுமா?” என்று நட்பு வட்டத்தில் அள்ளி விட்டுக் கொண்டிருக்கிறோம்!! கிரிக்கெட் மீதான மோகம் இன்னமும் உள்ளது தான்; கோலியின் கவர் ட்ரைவைப் பார்க்கும் போது டையடிச்ச தலைமுடியெல்லாம் நட்டுக்கிறது தான்... ஆனால்... ஆனால்... இன்னிக்கு நம் வசம் நேரம் மட்டும் முன்போல் இல்லையே! 

இதை முன்கூட்டியே எதிர்பார்த்த உலக கிரிக்கெட் நிர்வாகிகள் என்ன செய்கிறார்கள்? “நோக்கு 50 + 50 ஓவர்களை நாள் முழுக்கப் பார்க்கத் தானே தீரலை அபிஷ்டூ? நோ ப்ராப்ளம்! 20 + 20 ஓவர்களில் எண்ணி நாலே மணி நேரத்திலே மேட்சை முடிச்சுக் காட்டறேன்டா! பற்றாக்குறைக்கு ஆஃப் ட்ராயர் போட்ட அமெரிக்க சியர் லீடர் பார்ட்டிகளையும் ஸ்டேடியத்துக்கே இட்டாந்திடறேன்! ஜமாய்!! என்றபடிக்கே T20 என்ற போட்டிகளை அறிமுகம் செய்து விடுகிறார்கள்! IPL; BPL; CPL – என்றும் தேசத்துக்கு தேசம் இந்தச் சுருக்கப்பட்ட கிரிக்கெட் போட்டிகள் வேரூன்றி நமது இன்றைய சூழலுக்கேற்ற என்டர்டெயின்மென்டைத் தரத் துவங்கி விட்டன!

கிட்டத்தட்ட ஒரு டஜன் ஆண்டுகளுக்கு முன்பாய் நாம் உலகக் கோப்பையை தட்டிய அதே காலகட்டம் தான் நமது இரண்டாவது இன்னிங்ஸின் துவக்கப் புள்ளியுமே! அன்று சக்கை போடு போட்டு வந்த 50 ஓவர் மேட்ச்களைப் போல நாமும் வண்டி வண்டியாய் பெரிய இதழ்கள்; குண்டு புக்ஸ், கதம்பக் கூட்டணிகள் என்று இப்போது வரை தாக்கி வந்து கொண்டிருக்கிறோம்! அட இந்த நடப்பாண்டு 2023 நிறைவு கண்டிருக்கும் போது, நாமே இனியொரு தபா கற்பனை கூட பண்ணிப் பார்த்திட இயலா ஒரு நம்பரோடு ஆண்டுக்கு ‘சுபம்“ போட்டிருப்போம்! சின்னதாய் ஒரு கணக்குப் போட்டுப் பார்த்தோம் ஆபீஸில்!

- 67 இதழ்கள்

- 8856 பக்கங்கள் 

என்பதே இந்த 2023-ன் நமது ‘பொம்ம” புக் உற்பத்தி stat ஆக இருந்திடும்! ஆக மாதம் ஒன்றுக்கு 750 பக்கங்களுக்கு கொஞ்சமே கொஞ்சம் குறைச்சலான எண்ணிக்கையிலான வாசிப்பை உங்களுக்கு தந்து வந்திருக்கிறோம்! And அதுவும் இந்த T20 யுகத்தினில்! திரும்பிப் பார்க்கையில் எனக்கே மலைப்பாக உள்ளது - இத்தனை பெரும் பளுவை துளியும் முகச்சுளிப்புகளின்றி நீங்கள் இந்த ஆண்டு முழுவதிலும் சுமந்திட சம்மதித்தமையைக் கண்டு! வேறு எதைப் பற்றியும் எழுதவோ – அலசவோ – அறிவிக்கவோ முற்படுவதற்கு முன்பாய் இந்த பாகுபலி பொறுமைகளுக்கு எங்களது மெகா சல்யூட் செய்வது எங்களது கடமையாகிறது folks! ஒரு கோடி நன்றிகள் all! You have been simply incredible! அதே சமயம் இந்த 8856 பக்கங்களில் பாதியையாவது வாசித்திருக்கும் நண்பர்களின் எண்ணிக்கை என்னவாக இருக்குமென்று அறிய ஒரு குறுகுறுப்பு !! 

நமது இதே வேகமோ; இதே பாணியோ தொடரும் ஆண்டுகளிலும் தொடர்ந்தால் – ஆங்காங்கே உள்ள பரண்களும், பீரோக்களும் நிரம்பி வழியத் தொடங்குவதோடு நாம் நேசிக்கும் இந்தச் சித்திரக் கதை உலகின் மீதே ஒரு அயர்வும் எழுவது தவி்ர்க்க இயலா சங்கதியாகிப் போகுமோ என்ற மெல்லிய பயம் எழுகிறது ! And அது மாத்திரமின்றி, எனது தேடல்கள் என்னைக் காடு மேடெல்லாம் இட்டுச் சென்றாலுமே, இறுதியில் நான் திரும்பிட வேண்டியது நமது ஆபீஸிக்கும் கிட்டங்கிக்குமே என்ற புரிதலும் முன் எப்போதையும் விட இம்முறை அதிகமாய் நெருடுகிறது! Simply becos – கிட்டங்கியானது பகாசுரனின் வயிற்றைப் போல ரொம்பத் துவங்கி விட்டது! So கடந்த 12 ஆண்டுகளாய் எனது ரசனைகளோ; ஆசைகளோ; உங்களின் அவாக்களோ தீர்மானித்து வந்த அட்டவணையினை நிர்ணயம் செய்வதில் இம்முறை திருவாளர் கிட்டங்கியும் ஒரு முக்கியக் குரலாகிடுகிறார்!

- அள்ளியடித்து மாதம்தோறும் எக்கச்சக்க புக்ஸைத் திணித்தாலும் – வாசிக்க உங்களிடம் உபரியாக உள்ள நேரம் குறைச்சலே என்பது கண்கூடு! Fact of life!

- புதுசாய் வாசகர்கள் உட்புகுவது இருந்தாலுமே நமது முதுகெலும்பே தற்போதைய இந்தக் காமிக்ஸ் காதல் மிகுந்த சிறுவட்டமே என்பதை தலீவரின் பட்டாப்பெட்டி மீது பிரமாணமாய் சொல்வேன்! இந்தச் சிறுவட்டத்தினை தெடர்ந்து கட்டுண்டு வைத்திருப்பதே தலையாய கடமை ! Fact of a பட்டாப்பெட்டி!

- கிரிக்கெட் காதல் இன்னமும் உயிர்ப்போடு உள்ளது தான்! காமிக்ஸ் காதலுமே தான்! ஆனால் 12 ஆண்டுகளின் ஓட்டமானது – நமது தொந்திகளையும், பொறுப்புகளையும் அதிகமாக்கியுள்ளன ! So மாறி வரும் சூழலுக்கேற்ப நமது பயண பாணியை சற்றே tweak செய்து கொள்வது மாத்திரமே முன்செல்லும் தாரக மந்திரம் என்பது புரிகிறது!

- இங்கே ஜுனியர் எடிட்டரின் அந்த V காமிக்ஸ் பாணி சுவாரஸ்யமாய்த் தென்பட்டது! Oh yes – ஜம்பிங் பேரவையின் நாயகரது டார்க்வுட் நாவல்ஸ் இன்னும் சற்றே better ஆக இருந்திருக்கலாம் தான்; ஆனால் அவை தவிர்த்த ஏஜெண்ட் ராபின் கதைகள்; மிஸ்டர் நோ சாகஸம்; ஸாம் வில்லர் ஆல்பம்; ஸாகோர் Vs இளம் டெக்ஸ் அதிரடி என்று crisp வாசிப்புகள் இந்த T20 யுகத்துக்குப் பொருந்திடுவதாய்பட்டது! அதற்காக ஒற்றை நாளிரவில் சீரியஸ் ஜானர்களை ஜன்னல் வழியே கடாசி விட்டு ஜாலியான கதைகளை மட்டுமே களமிறக்கப் போகிறோம் என்றெல்லாம் இல்லை ! மாறாக, குறைந்து வரும் உங்களின் வாசிப்பு மணித்துளிகளுக்கேற்ப வாகான இதழ்களுக்கு முன்னுரிமை தருவது என்பதே இந்தாண்டு முதலான நமது பார்முலாவாக இருந்திடவுள்ளது ! 

- தயக்கங்களேயின்றி அனைவரும் வாங்கவும் சரி, வாசிக்கவும் சரி, தோதான ஆல்பங்கள் மட்டுமே மெயின் சந்தாவினில் இடம் பிடித்திடும்! “The UNIVERSAL சந்தா” என்ற இந்தத் தடத்தின் இதழ்கள் சகலமும் உங்களை வாசிக்கத் தூண்டுபவைகளாகவும்; உங்களிடம் கொள்ளை நேரங்களை டிமாண்ட் செய்திடாதவைகளாகவும் இருந்திடும்! மதில் மேலான பூனைகள் யாருக்குமே இங்கு இடமிராது !

- அதே நேரம், தீவிர காமிக்ஸ் ஆர்வலர்களை மாத்திரமே ரசிக்கச் செய்யும் தொடர்கள் / ஆல்பங்கள் மெயின் சந்தாத் தடத்தில் இடம் பிடித்திடாமல். “M.Y.O.M.S” என்ற பிரத்தியேகத் தண்டவாளத்தில் இனி சவாரி செய்வார்கள்! நிஜமாகவே இந்த முடிவெடுப்பது எனக்கு எட்டிக்காயாய் கசக்கிறது தான் ; ஆனால் சுடுகிறதென்பதற்காக நிஜத்தை போர்வை போட்டு மூடி விடுவதில் ஆதாயம் ஏதுமில்லையே ? விற்பனையின் முகங்கள் நான்கு நம்மைப் பொறுத்தவரை ! பிரதானமாய் சந்தாக்கள் ; அடுத்தது ஆன்லைன் ஆர்டர்ஸ் ; மூன்றாவது ஏஜெண்ட் விற்பனை & நான்காவது புத்தக விழா விற்பனைகள் ! வெளியாகிடும் சகலத்தையும் வாங்கிடும் சந்தா நண்பர்கள் எல்லா இதழ்களுக்கும் துணை நிற்பது obvious ! ஆனால் ஆன்லைன் ஆர்டர் செய்திடும் நண்பர்களும் சரி, முகவர்களிடம் வாங்கிடும் நண்பர்களும் சரி, ரொம்ப ரொம்ப தேர்வு செய்தே selective ஆக வாங்கிடுகின்றனர் ! டெக்ஸ்சா ? ரைட்டு... லக்கி லூக்கா ? ரைட்டு...! க்ளாஸிக் நாயகர்களா ? ரைட்டு ....கிராபிக் நாவலா ? வாணாம் ! சோடாவா ? வாணாம் ! கார்டூனா ? ஊஹூம் ! என்று filter செய்து விடுகிறார்கள் ! அவ்விதம் பில்டர் ஆகிடும் இதழ்கள் அடுத்த ஏழோ - எட்டோ வருஷங்களுக்கு கிட்டங்கிகளில் கிடந்த லோல்படுகின்றன ! அடுத்தடுத்து புக்ஸ் வெளியாகிடும் போது இவை உள்ளுக்குள் புதைந்து விடுகின்றன and புத்தக விழாக்களில் யாரேனும் புண்ணியவான்கள் வாங்கினால் மாத்திரமே ஏதாச்சும் கரை சேருகிறது ! So என்ன தான் மாறுபட்ட பாணிகளில் புதியவர்கள் களமிறங்கினாலுமே அதி தீவிர வாசக வட்டத்தைத் தாண்டி அவர்களால் அடுத்த சுற்று வாசகர்களை ஈர்க்க முடியவில்லை ! இது தான் கொஞ்ச வருஷங்களாகவே இருந்து வரும் நடைமுறை ! இதற்கு மேலும் நமது பாணியினில் மாற்றம் கொணராவிட்டால் திருமலை நாயக்கர் மஹாலை வாடகைக்கு கேட்டுப் பார்ப்பதைத் தாண்டி வேறு வழியே இராது !

M.Y.O.M.S – Make Your Own Mini Santha

இங்கே இடம்பிடிக்கும் நாயக / நாயகியரின் ஆல்பங்களுக்கு சந்தா நம்பருக்கேற்ற ப்ரிண்ட்ரன் மட்டுமே இருந்திடும்! So விலைகள் சற்றே கூடுதலாகிடுவது தவிர்க்க இயலாது போகும்! ஆனால் இவை கடைகளிலும், கிட்டங்கிகளிலும் கிடந்து சீரழிந்திடாது! "எனக்கு நேரத்துக்குப் பஞ்சமில்லை! இத்தனை காலமாய் ரசித்தும், பழகியும் வந்த variety எனக்குத் தொடர்ந்திடவே வேண்டும்!" என்று கருதிடும் நண்பர்களுக்கான Super exclusive தடமாக M.Y.O.M.S இருந்திடும்!

- இந்த இரண்டு மட்டுமே முக்கிய சந்தாத் தடங்களாக இருந்திட, சின்னதாய் ஒரு உட்பிரிவுச் சந்தாவும் இருந்திடும் – தாத்தாஸ் போன்ற niche கிராபிக் நாவல்களை உள்ளடக்க! தாத்தாஸ் கதைகள் டாப் க்ளாஸ் தான்; சந்தேகம் லேது தான்! ஆனால் எப்படி நமது ஸ்மர்ஃப்களை ரசிக்கவே இயலவில்லை என நண்பர்களின் ஒரு சாரார் மிரண்டார்களோ, அதே போல தாத்தாக்களைக் கண்டால் தெறித்தடித்து ஓடும் ‘யூத்‘களும் உண்டு! அவர்களை சிரமப்படுத்தாமல் இருக்க “The கி.நா. சந்தா” உதவிடும்! இவற்றை வாங்குவதோ- தவிர்ப்பதோ உங்களது choice ஆகவே இருந்திடும்!

- And இறுதியாக ஜுனியரின் V காமிக்ஸ் சந்தா! நடப்பாண்டை விடவும் - 2024-க்கென V-ல் தேர்வாகியுள்ள ஒவ்வொரு இதழும் ஒரு மினி டைனமைட் ரகமாய் எனக்குப்படுகிறது! இங்கே நாம் கோரிடப் போவதோ ஜனவரி to ஜுன் 2024 முடிய 6 மாதச் சந்தாத் தொகையினையே! கடைசி 6 மாதங்களுக்கான இதழ்கள் சார்ந்த அறிவிப்பும், சந்தாத் தொகையும் ஏப்ரல் 2024-ல் வந்திடும்!

- Ditto with வேதாளர், மாண்ட்ரேக், சார்லி, ரிப் கிர்பி, காரிகன் etc! சுப்ரீம் `60s தடமானது மார்ச் 2024ல் தான் நிறைவுறும் என்பதால் அதற்கடுத்த க்ளாஸிக் நாயகர் சீஸன் ஏப்ரல் 2024ல் தான் அறிவிக்கப்படும்!

- இவையே அறிவிப்புகளுக்கு முன்பான பொதுவான premises! இதுவே ஒரு முழுப் பதிவு நீளத்துக்கு ஓட்டமெடுத்திருப்பதால் - இதற்கு மேலும் நீட்டி முழக்காது அறிவிப்புகளுக்குள் நுழையலாமா guys?

Here we go!


- "The Universal சந்தா" என்றான நொடியில் இதற்குள் டைரக்டாக entry பெற வேண்டிய நாயகப் பெருமக்கள் யாரென்று யோசிக்க பெருசாய் தேவையிருக்கவில்லை ! காத்திருப்பது நமது லயனின் 40-வது ஆண்டெனும் போது, மாதம்தோறும் ஜாலியான இதழ்களாய் ரவுண்டு கட்ட வேண்டுமென்று எண்ணினோம்!

So முதல் 3 சீட்களை தமதாக்கிட்டோர் 3 சர்வதேச ஜாம்பவான்கள்! அவர்களின் முதலாமவரை ”டின்டின்..........டின்டின்” என்று உலகெங்கும் கொண்டாடுகிறார்கள். 94 ஆண்டுகளாய், உலகெங்கும் கோடிகளில் விற்பனை கண்டுள்ள இந்த சாகஸ வீரர் - 2024-ன் நமது highlight-களில் பிரதானமானவராக இருந்திடப் போகிறார்! டின்டின் உலகினுள் தலைநுழைப்பது தான் நமக்குப் பிரம்மப் பிரயத்தனமாய் இருந்ததென்றால் - அதன் பின்பாய் இந்த சூப்பர் ஸ்டாரைத் தமிழ் பேசச் செய்வதென்பது ராட்சஸப் பிரயத்தனமாக இருந்து வருகிறது ! Anyways - “திபெத்தில் டின்டின்” என்ற அதகள சாகஸத்தோடு டின்டினின் பயணம் நம்மோடு துவங்கிடுகிறது! இவரது 3 ஆல்பங்களையும் ஒரு தனித்தடமாகக் கொண்டு செல்லும் சபலம் தலைதூக்கியது தான்; ஆனால் உலகே கொண்டாடும் ஒரு சூப்பர் ஸ்டாரைத் தனித்தடத்துக்குக் கொண்டு சென்று தனிமைப்படுத்த எனக்குப் பிடிக்கவில்லை. "Universal ஆக சிலாகிக்கப்படும் ஒரு நாயகர் இல்லாமல் என்ன புடலங்கா Universal சந்தா?” என்று என் மண்டை சொல்ல, 2024ன் முதல் பயணியாகிறார் டின்டின்.And more than anything else, அனைவருமே இந்த நாயகரோடு கரம் குலுக்க வேண்டும் என்பது எனது அவா ! So-

- 1 x சிங்கிள் ஆல்பம் 

- 2 x சிங்கள் ஆல்பம்ஸ் (ஒரே கதை - 2 அத்தியாயங்களில்)

என்பதே இவருக்கான ஒதுக்கீடு! MAXI சைஸில்; முழு வண்ணத்தில்; உலகெங்கும் நாம் வெவ்வேறு மொழிகளிலும் பார்த்திடும் டின்டின் இதழின் அச்சு அசலான வார்ப்பாய் நமது தமிழ் பதிப்புகளும் இருந்திடும்! காலத்தை வென்ற இந்தத் தொடரை லயனின் ஒரு மைல்கல் ஆண்டில் கொண்டு வருவது பெரும் தேவன் மணிடோவின் வரமன்றி வேறில்லை! God be with us!!


- தி Universal சந்தாவின் பயணி # 2 நமது தலைமகன் TEX! நம்மோடு 39-வது ஆண்டாய் பயணம் செய்திடப் போகும் டெக்ஸ் & டீமுக்கு சந்தாவில் உள்ள ஸ்லாட்ஸ் மொத்தம் 9. ஆன்லைன் புத்தக மேளாவின் போது மேற்கொண்டு 1 ஸ்லாட்; V காமிக்ஸின் July-Dec சந்தாவில் இன்னொரு ஸ்லாட் என்ற கணக்குப் போட்டிருக்கிறேன்! So லட்சியம் 11... நிச்சயம் 10!

And இம்முறையுமே லயன் தீபாவளி மலரில் டெக்ஸ் & டீமுமே மிரட்டுகிறார்கள் - ஒரு 4 பாக ஆக்ஷன் அதகளத்தில்! நடப்பாண்டு நம்மவரின் 75-வது பிறந்தநாள் ஆண்டென்பதால் டாப் கியர்; பாட்டம் கியர் என்று சிக்கிய சிக்கிய கியர்களையெல்லாம் போட்டு சில ஆயிரங்களில் டெக்ஸுக்கு மட்டுமே பக்கங்களைத் தந்திருக்கிறோம்! ஆனால் பாதாம் அல்வாவாகவே இருந்தாலும் திகட்டிட அனுமதிக்கலாகாது அல்லவா guys? So நிறைய க்ரிஸ்பான டெக்ஸ் சிங்கிள் / டபுள் / கலர் ஆல்பங்கள் 2024-ன் தேர்வில் இருந்திடும்! தவிர டெக்ஸுக்கென பட்ஜெட் எகிறிடும் பட்சத்தில் மற்ற ஹீரோக்களுக்கு ஸ்லாட்ஸ் குறைந்து கொண்டே போகவும் நேர்கிறது ! So டெக்ஸுக்கு ரெகுலர் தடத்தில் ஒரு மிடறு குறைவாகவே பட்ஜெட் ஒதுக்கியுள்ளோம் - ஆனால் "கார்சனின் கடந்த காலம்" போல out of the blue இதழ்கள் இராதென்று சொல்ல மாட்டேன் ! அதிலே மோரிஸ்கோ வருவாரா - வர மாட்டாரான்னும் சொல்ல மாட்டேன் ! 


 

- மெயின் சந்தாவிற்குள் ராயலாக நுழையும் மூன்றாம் பயணி நமது ஒல்லி நாயகர் லக்கி லூக் தான்! 1987-ல் அறிமுகமான நாள் தொட்டு இன்று வரையிலும் நம்மோடு ஜாலியாய் ஜாலி ஜம்பரோடு பயணித்து வரும் இந்த ஜாம்பவான் as usual - ஆண்டு மலரின் முதல் புக்கில் இடம் பிடித்திடுகிறார்! And வழக்கம் போல 2 புத்தம் புது லக்கி சாகசங்கள் இதனில் இடம் பிடித்திருக்கும் !


- லயனின் 40-வது ஆண்டுமலரின் புக் # 2 - டெக்ஸின் கலர் சாகஸம் தான்! போன மாதம் - ‘தல‘ 75-வது anniversary-க்கென போனெலி வெளியிட்ட முழு நீள கலர் அதிரடியே இது! டெக்சின் மனைவி லிலித் இந்தக் கதையோட்டத்தில் ஒரு முக்கிய பங்கெடுக்கிறார் ! And சித்திரங்களில் ஓவியர் க்ளாடியோ வில்லா சும்மா அதகளம் செய்துள்ளார் ! And கதை நெடுக முழு டீமும் பயணிப்பது செம ப்ளஸ் ! அதிலும் கார்சன் அடிக்கும் லூட்டி A 1 ரகம் !

- And லயன் 40-வது ஆண்டுமலரின் புக் # 3 - நமது துவக்கப் புள்ளியின் flagship நாயகருக்கான ஒரு tribute! இந்தத் தேர்வானது கணிசமான புருவங்களை உசத்திடப் போகிறதென்பதில் எனக்கு சந்தேகமே இல்லை ! ஆனால் எனக்கோ இது natural ஆன தேர்வாகத் தென்படுகிறது ! ஸ்பைடரும் அவர் கொணர்ந்த வேகமும், விறுவிறுப்பும், விற்பனையும், வெற்றியும் மட்டும் இல்லையெனில் - 1984-ஐ நாம் கடந்திருக்க மாட்டோம் என்பதே வார்னிஷ் பூசா நிஜம்! ஒரு கட்டத்தில் லயன் காமிக்ஸ் என்றாலே "ஸ்பைடர்" தான் அடையாளம் என்றிருந்ததை யாரும் மறக்க இயலாது ! வருடங்கள் 40 ஓடிவிட்டிருக்க, நமது ரசனைகளில் ஏகப்பட்ட மாற்றங்களும் நிகழ்ந்திருப்பது கண்கூடு! ஆனால் - ஒரு landmark தருணத்தில், நமக்கான ஏணியாய் செயல்பட்டதொரு ஜாம்பவானுக்கு சீட் தர மறுத்தால் தாத்தாக்களுக்கு ஸோஃபி செய்தது போலான முட்டை அபிஷேகத்தை எனக்கும் செய்து விடுவார்கள் க்ளாஸிக் லயன் காதலர்கள்! So - நமது குற்றச்சக்கரவர்த்தி மீண்டும் வலம் வரவிருக்கிறார் - தெறிக்கும் முழு வண்ணத்தில்; MAXI சைஸில்! And guess what? “விண்வெளிப் பிசாசு” தான் அந்த அதிரடி ஆல்பம்!

“போச்சுடா!” என்று புதுயுகக் கதைக்காதலர்கள் முகம் சுளிக்க அவசியமே நஹி; Simply becos இந்த ஸ்பைடர் ஆல்பமானது மெயின் சந்தாவினில் அங்கமாக இருப்பினும், இதை வேண்டாமென்று நினைப்போர் - ரூ.250 கழித்துக் கொண்டே பணம் அனுப்பலாம்

And “சினிஸ்டர் 7” மொழிபெயர்ப்புப் பொறுப்பேற்றுக் கொண்ட பிற்பாடு கன்னத்தில்; மூக்கில்; காதில் என்று சிக்கிய காலியிடத்திலெல்லாம் மருக்களை ஒட்டிக் கொண்டு ஜார்க்கண்ட் ரயிலைப் பிடித்த நமது கரூர் டாக்டர் சார் ”விண்வெளிப் பிசாசு”க்குப் பேனா பிடிப்பார்! ஜார்கண்டுக்கே மைதீனை அனுப்பி டாக்டரை மடக்கிவிடத் திட்டமிட்டுள்ளோம்! இது அவருக்கே தெரியாத தகவல்!

- Universal சந்தாவின் அடுத்த direct தேர்வு - நமது மறதிக்கார நண்பரின் லேட்டஸ்ட் ஆல்பம்! இந்த இரண்டாம் சுற்றின் இறுதிக்கு முன்பான ஆல்பமென்று சொல்லப்படும் “நதிமூலம் க்யூபா” ஏப்ரல் அல்லது மே 2024ல் வெளிவந்திடும்! XIII என்றாலே நினைவுக்கு வருவது நண்பர் பழனிவேல் தான் எனும் போது, அவரது குடும்பத்துக்கு ஆண்டுதோறும் நாம் செய்வதாய் வாக்களித்திருக்கும் சிறு உதவியானது இந்த ஆல்பத்தின் விற்பனையிலிருந்தும்  சென்று சேர்ந்திடும்! And இது XIII வரிசையின் ரெகுலர் கதையே என்பதால் கி.நா. சந்தாக்கு சென்றிடாது மெயின் தடத்திலேயே பயணம் பண்ணும்!

- அவரது டிக்கெட்டை ‘டிக்‘ அடித்து விட்டு நிமிர்ந்தால் இன்னொரு செம்பட்டைத் தலையர் தென்பட்டார் - மலர்ந்த முகத்தோடும், கம்பீரமான வதனத்தோடும்! நானாகத் தீர்மானித்திருந்தால் - கறுப்பு அங்கிப் “பாதிரி பாதி / போலீஸ் மீதி“ என்று கானம் பாடுபவரை இந்த சீட்டில் ஏற்றியிருப்பேன்! ஆனால் உங்களின் வாக்கெடுப்பின் அனுகூலம் ரிப்போர்ட்டர் ஜானிக்கே சாதகமாகியிருக்க, மரியாதையாய் அவருக்கொரு ஜன்னலோர சீட் போட்டுத் தந்தாயிற்று! And இந்த நாயகரின் நம்முடனான 38 ஆண்டுப் பயணம் மேற்கொண்டும் தொடர்வதில் எனக்கு வேறொரு விதத்தில் சந்தோஷமே! அதைப் பற்றி கொஞ்சம் பின்னே எழுதுகிறேன் guys! மறந்து - கிறந்து தொலைத்து விட்டேனெனில் நண்பர் சேலம் குமார் சிண்டைப் பிடித்து நினைவூட்டி விடுவார் என்பது தெரியும்! So no worries! 

- அடுத்ததாய் ”நானு... நானு... நானு...? நானு....?” என்று ஒன்றுக்கு நான்காய் குரல்கள் கேட்க - யாரென்று பார்த்தால் உட்சிட்டியின் சிறப்பு + சிரிப்பு போலீஸார் மலர்ந்த முகங்களோடு காத்துள்ளனர்! டாக்புல் & கிட் ஆர்டின் முன்னிலை வகிக்க, ஆளுக்கொரு பொட்டலம் மிக்சரோடு சிக் பில்லும், குள்ளனும் தம் கடமைகளை ஓரமாய் நின்றபடிச் செய்து முடிக்க, “கடமையைக் கைவிடேல்” கலக்கிடக் காத்துள்ளது!

- ”ஆரானோ நெக்ஸ்ட் சேட்டா?” என்று பார்த்து நின்றால் - ”உர்ர்ர்ர்” என்று உறுமல் சத்தத்தோடு ஒரு முரட்டு உருவமும், ஒரு செம்பட்டைத் தலையரும் கோச்சுக்குள் ஏறிக் கொண்டிருப்பது தென்படுகிறது! அது வேறு யாருமல்ல, மர்ம மனிதன் மார்டினும், அவரது விசுவாச சகா ஜாவாவுமே! Crisp ஆனதொரு black & white சாகஸத்தில் - ‘பர பர‘ வாசிப்பு தரக் காத்துள்ளனர்!

- உங்களின் ஆசிகளோடு ஜன்னலோர சீட்டில் ஒய்யாரமாய் அமர வந்திடும் அடுத்த நபர் ஒரு க்ரைம் த்ரில்லர் ஸ்பெஷலிஸ்ட்! இவருக்குமே கேசம் ஒரு வித்தியாசமான நிறத்திலானது தான்! Enter டிடெக்டிவ் ரூபீன்! இரண்டே சாகஸங்களில் இவரை இதுவரை சந்தித்துள்ளோம் & இரண்டிலுமே அவரது ஸ்கோர் ரொம்பவே impressive! அந்த செமி-கார்ட்டூன் பாணிச் சித்திரங்கள் - கதைக்களம் காமெடியானதோ ? என்று எண்ணச் செய்தாலும், உட்புகுந்த இரண்டாவது நிமிடமே புரிந்து விடும் இதுவொரு க்ரைம் த்ரில்லர் என்பது! இதுவரையிலும் கூட்டணி இதழ்களில் களமிறங்கியுமே கவனத்தை ஈர்த்தவர் - ஸோலோவாக ஒரு சிங்கிள் ஆல்பத்தில் ஆவர்த்தனம் செய்திட உள்ளார்! “மங்களமாய் மரணம்” - போட்டுத் தாக்கவிருக்கும் தெறி சாகஸம்!

- அம்மணிக்கு இருக்கையினை உறுதி செய்த கையோடு இவருடனே அறிமுகம் கண்ட இன்னொரு சமகாலத்து நாயகரின் பெயரையும் பரிசீலனைக்கு எடுத்தோம்! “லோன்ஸ்டார் டேங்கோ” ஒரு மந்தகாசப் புன்னகையோடு தென்னமெரிக்காவின் ஏதோவொரு மூலையிலிருந்து நம் திக்கில் கைகாட்டுவது தெரிந்தது! “எக்வெடோ என்ற நாட்டின் வழியாய் பயணம் போய்க்கிட்டிருக்கேன்... வரட்டுமா?” என்று அவர் கேட்க, “ஓடியாங்க சாமி... “தவணையில் துரோகம்” காத்திருக்குது!" என்று தூது சொல்லியனுப்பினோம்! ரொம்பவே வித்தியாசமான கதைக்களம்... ஒவ்வொரு ஆல்பத்திலும் ஒவ்வொரு தென்னமெரிக்க தேசம்... மூச்சிரைக்கச் செய்யும் சித்திரங்கள்... யதார்த்தமான, சமகாலக் கதைபாணி.. என்று இவரது தொடரில் கணிசமான ப்ளஸ்கள் இருப்பதால் ’டிக்’ அடித்தோம் ’டக்’கென்று! 

“சமகாலமே சாகஸக்களமும்” என்ற தாரக மந்திரத்தை இன்னும் கொஞ்சம் அழுந்த தலையில் ஏற்றிக் கொண்டு சுற்றுமுற்றும் பார்வைகளை ஓடவிட்ட போது ஒரு பரிச்சயமான முகம் தென்பட்டது – ஆனால் லேட்டஸ்டானதொரு அவதாரில்! இவரது தொடரின் ஒரிஜினல் கதைகளெல்லாம் 35 ஆண்டுகளுக்கு முன்னான காலகட்டத்தில் நமக்கு லட்டுகளாய்த் தித்தித்தவை; ஆனால் சமீப நாட்களில் அவற்றைப் புராதனச் சின்னங்களாகவே பார்த்து வந்தோம்! படைப்பாளிகளுக்கே அந்த நெருடல் தோன்றியிருக்குமோ என்னவோ – அந்த நாயகரையும் அவரது டீமையும் ’ஜில்’லென்று புது அவதாரில், அட்டகாசமான ஆக்ஷன் கதைகளில் தெறிக்க விட்டுள்ளனர்! Enter ப்ரூனோ ப்ரேசில் 2.0 & முதலைப்பட்டாளம் 2.0! 1986-ல் திகிலில் அறிமுகமான இந்த ஸ்டைலிஷ் நாயகர் கடந்த நான்கு ஆண்டுகளாய் இந்த makeover சகிதம் கலக்கி வருகிறார்! So பழகிய முகம்... புது பாணியில்! “பனிக்கடலில் முதலைகள்” 2024-ன் highlight ஆக இருந்திடும்!

“ரொம்பவே சமகாலத்திலேயே பயணம் பண்ணிக்கிட்டுத் திரிஞ்சா நாங்கள்லாம் சுண்டல் சாப்பிடறதா?” என்ற குரல் ஆஜானுபாகுவான அழகனிடமிருந்து வர – திரும்பிப் பார்த்தால் நின்று கொண்டிருந்தது பிரபஞ்சத்தின் புதல்வரான தோர்கல் தான்! பிரமாதமான fantasy தொடர் தான்; ஜாம்பவான் வான் ஹாமின் கலக்கலான உருவாக்கம் தான்; கடந்த பத்தாண்டுகளாய் ரெகுலராய் நம்மோடு பயணித்து வருபவர் தான் ! இந்நேரத்துக்கு மனுஷன் ஒரு லக்கி லூக்கைப் போல; டெக்ஸ் வில்லரைப் போல, நமது பயணத்தின் இன்றியமையா தேர்வாகியிருக்க வேண்டியவரே தான்! ஆனால்... ஆனால் வாழ்க்கையின் சில புதிர்களுக்கு எல்லாத் தருணங்களிலுமே விடைகள் அத்தனை சுலபத்தில் கிட்டிடுவதில்லையே?! அத்தகையதொரு enigma தான் தோர்கலோடும்! நிஜத்தைச் சொல்வதானால் இவரை “M.Y.O.M.S” சந்தாவிற்குள் புகுத்திடவே எனக்குத் தோன்றியது! ஆனால் ஏற்கனவே கடைசியில் வந்த தோர்கல் இதழுக்கு அட்டைப்படம் சொதப்பல் என்ற காரணத்தால் மத்தளம் கொட்டிய ரசிகக் கண்மணிகள் படுக்கப் போட்டு ரோடு ரோலரையே மேலே உருட்டி விடுவார்கள் என்றுபட்டது! So தோர்கல் ரெகுலர் தடத்திலேயே பயணமாகிறார் – விற்பனையில் இனி மேற்கொண்டாவது கூடுதல் உத்வேகம் காட்டிடுவாரென்ற நம்பிக்கையில்!

- தோர்கல் அளவிற்கு அடுத்த நாயகர் காலத்தில் பின்நோக்கிப் பயணிப்பாரெல்லாம் கிடையாது தான்; ஆனால் மனுஷன் 1800-களின் பிரதிநிதியே! போன வருடமே அறிவிப்பில் ஆஜரான Badass பார்ட்டியான பௌன்சர் தான் இம்முறை ரெகுலர் களத்திலேயே களமிறங்குகிறார் – ஒரு riveting வெஸ்டர்ன் சாகஸத்துடன்! இந்த சாகஸத்தில் விரசமோ? பப்பி-ஷேம் சீன்களோ இராது; raw ஆன ஆக்ஷன் மாத்திரமே இடம்பிடித்திடும் என்பதால் இதனை கி.நா. சந்தாப் பக்கமாகவும் பந்தாடும் அவசியம் எனக்குத் தோன்றவில்லை! Of course – “இதை வன்மையாய் கண்டிக்கிறேன் யுவர் ஆனர் !” என்று கறுப்புக் கோட்கள் போடாமலே நண்பர்களில் ஒரு அணியினர் வசை பாடுவர் என்பது பச்சைக் குழந்தைக்கே தெரியும் தான்! But நமது target audience யாரென்ற யதார்த்தங்களை மறந்திட நான் தயாரில்லை என்பதால் “சாபம் சுமந்த தங்கம்” வழக்கமான தடத்திலேயே பயணமாகிடும்!

கௌபாய் தேசத்தில் travel செய்யும் நொடியினில் ஒரு லேண்ட்மார்க் தருணத்தை – ஒரு லேண்ட்மார்க் இதழோடு கொண்டாடும் வாய்ப்பை மறக்கலாகாது தானே! So முத்து காமிக்ஸின் 52-வது ஆண்டுமலரை அலங்கரிக்கவுள்ளதும் ஒரு extraordinary கௌபாய் களமே!

- 17 படைப்பாளிகள்!

- 14 அத்தியாயங்களில் தடதடக்கும் கதைக்களம்!

- 175 ஆண்டுகளாய் பரவிப் படரும் கதைப்பின்புலம்!

- ஒற்றைச் சங்கிலியில் travel ஆகிடும் ஆக்ஷன் அதிரடி!

மேற்கே போ மாவீரா!” என்ற தலைப்பில் வரக்காத்துள்ள ஹாலிவுட் கௌபாய் படம் போலான இந்த ஆலபத்துக்குத் தான் மேற்படி அடையாளங்கள் சகலமும்! ரொம்பவே வித்தியாசமான பாணிகளில்; நெட்ப்ளிக்ஸில்; அமேசான் ப்ரைம்; ஹாட்ஸ்டார் போன்ற தளங்களில் வெளியாகிடும் “ஒரே ரசனை; but வெவ்வேறு படைப்பாளிகளின் கைவண்ணம்” என்ற பாணியினை ப்ராங்கோ-பெல்ஜியப் படைப்பாளிகளுமே கையிலெடுத்து உருவாக்கியுள்ள முதல் ஆல்பமிது! ஜனவரியில் முத்துவின் ஆண்டுமலரில் இந்த அதிரடி களமிறங்குகிறது!

Honestly இந்த ஆண்டுமலர் ஸ்லாட்டில் நமது ப்ளூஜீன்ஸ் பில்லியனரான லார்கோ வின்ச்சின் லேட்டஸ்ட் ஆல்பத்தை இறக்கிடவே எண்ணியிருந்தேன்! ஆனால் அந்த 2 பாகப் படைப்பின் க்ளைமேக்ஸ் அத்தியாயம் ப்ரெஞ்சு மொழியிலேயே நவம்பரில் தான் வெளிவரவுள்ளது! So ஒரு செம ஹிட் தொடரின் ஒரிஜினல் படைப்பு அங்கே ரிலீஸ் ஆன பிற்பாடே நமக்கு அனுமதி தருவார்கள் ! நமது அட்டவணையோ அதற்கு முன்பே தயாராகிடும் சமாச்சாரம் என்பதால் சற்றே பொறுமை காக்க வேண்டியுள்ளது ! In any case - ஆண்டுமலர் ஸ்லாட்டில் இல்லாங்காட்டியும் - கோடை மலர் ஸ்லாட்டில் லார்கோ புது டபுள் ஆல்பத்தில் ஜொலிஜொலிப்பார் ! "இரவின் எல்லை' டிரெய்லரை பார்க்க நேர்ந்த போது, கதாசிரியர் வான் ஹாமின் பிரிவுக்குப் பின்னேயும் இந்தத் தொடருக்கு ஜீவன் இருக்கிறது தான், என்பதை புரிந்து கொள்ள முடிகிறது ! தெறிக்க விடும் சித்திரங்கள் ; மிரளச் செய்யும் கலரிங் என ஆல்பம் முழுசும் அசாத்திய அழகு ! And of course - கண்ணுக்குக் குளிர்ச்சியோ-குளிர்ச்சியும் வெயிட்டிங் !!

குளிர்ச்சி எனும் போது ஜிலீரிடும் பனிமண்டலத்தில் அரங்கேறிடும் ஒரு ஜீவ மரணப் போராட்டத்தை ரசிக்காமல் விட்டால் எப்படி ? ZAROFF !! "நில்...கவனி..வேட்டையாடு" ஆல்பத்தில் தெறிக்க விட்ட அந்த வேட்டையனையோ ; அந்தச் சித்திர அதகளத்தையோ அத்தனை சீக்கிரத்தில் யாரும் மறந்திருக்க இயலாது ! அந்தத் துவக்கம் அமேசான் கானகத்தினில் எனில், இந்த இரண்டாம் அத்தியாயம் தடதடப்பது ரஷ்யாவில் ! அசாத்திய வேகத்தில் பயணிக்கும் இந்த ஆல்பம் முத்து காமிக்சின் தீபாவளி மலராக தெறிக்க விடவுள்ளது ! 

அப்புறம் யாராச்சும் ஒரு புது அறிமுகம் இல்லாமல் தடத்தில் சுவாரஸ்யம் குறைந்திடக்கூடுமே ? அது மட்டுமன்றி கார்ட்டூன் ஜானரில் கடும் வறட்சி நிலவும் வேளையில் ஒரு வித்தியாசமான சிரிப்பு டீமை களமிறக்கி விட்டாலென்ன என்றுபட்டது ! So இதோ வருகின்றனர் நியூ யார்க் போலீஸ் டிபார்ட்மெண்ட்டின் 2 மொக்கை போல்ஸ்கார்ஸ் - ஸ்பூன் & ஒயிட் !! மட்டமான இந்த இருவருக்கும் வாழ்க்கையின் லட்சியம் ஒன்றே ஒன்று தான் - அது வாளிப்பான டி-வி தொகுப்பாளினியான கோர்ட்னி பால்கனியின் காதலனாகிட வேண்டும் என்பதே ! இத்தனை உயர்ந்த லட்சியத்தோடு இவர்கள் நியூயார்க் நகரத்தைக் காப்பாற்றும் அழகை செம கார்ட்டூனி ஸ்டைலில் போட்டுத் தாக்கியுள்ளனர் ! ரொம்பவே ஜாலியான கதைக்களமாக இருப்பது மாத்திரமன்றி சமகாலக் கதையாகவும் இருப்பதால் நம் மத்தியில் செட் ஆகிடுவார்கள் என்றே தோன்றுகிறது ! Fingers crossed tight !! 

இதே ஜோரில் – நேரடியாய் confirmed டிக்கெட் கிடைத்திருக்கும் ஒரு பிரத்யேக வகுப்பில் அமர்ந்துள்ள பயணிகளையும் பார்த்து விடலாமா?

1. The தெறி தாத்தாஸ்:

எனது பார்வையிலாவது நமது சமீபத்தைய அணிவகுப்பின் Knights in Shining Armor – இந்தக் குசும்புக்கார பெருசுகளே! மூன்று தாத்தாக்கள்! ஆளுக்கொரு ப்ளாஷ்பேக்! And ஒவ்வொன்றும் விரிய விரிய, கதாசிரியர் லுபானோ போட்டு வைத்திருக்கும் மெகா ப்ளானின் ஒவ்வொரு பரிமாணமும் கண்முன்னே முடிச்சவிழ்கின்றன! சமீப காலங்களில் “இது பொங்கல் – மெதுவடை யுனிவர்ஸ்”; “அல்வா & மிக்சர் யுனிவர்ஸ்” என்றெல்லாம் சொற்பிரயோகங்களைப் பார்த்து வருகிறோம்! If ever there was a creation that deserved the “UNIVERSE” tag – அது கதாசிரியர் “லுபானோவின யுனிவர்ஸ்” தான் என்பேன்! காத்திருக்கும் நான்காவது ஆல்பம் – பேத்தி ஸோஃபியா மீது ஒளிவட்டத்தைப் பாய்ச்சி நகர்ந்திடவுள்ளது!

And yes – சுவையாக இருந்தாலுமே கடுங்காப்பியை அத்தனை பேரும் ரசித்து ’மடக்... மடக்’ என்று குடித்து வைப்பதில்லை தானே? ரிலாக்ஸ்டாய் பொழுதுபோக்கிற்கென காமிக்ஸை நாடும் நண்பர்களுக்கு தாத்தாக்கள் ருசிப்பதில்லை என்பதால் அவர்களை ஒரு பிரத்யேகப் பெட்டியில் பயணிக்கச் செய்யத் திட்டமிட்டுள்ளோம்! So “மாயமில்லே... மந்திரமில்லே” – தாத்தாக்களின் ரவுசு – The கி.நா. யுனிவர்ஸில்!

2. அடுத்த சீட்டில் தெனாவட்டாய் வந்து அமர்வதோ வன்மேற்கின் இன்னொரு badass பார்ட்டி! And yes – அது போனெலியின் டெட்வுட் டிக் தான்! கறுப்பினச் சிப்பாயாக வலம் வந்த இந்தக் கெட்ட பயலின் இறுதி சாகஸம் இது! 18+ வயதிலான வாசகர்களுக்கான படைப்பிது என்பதால் “தென்றல் வந்து என்னைக் கொல்லும்” நேரடியாக இந்தக் கி.நா. யுனிவர்ஸின் அங்கமாகிறது!

3. ஸ்லாட் # 3 தான் என்னளவில் மண்டை காயச் செய்து வருகிறது! இருப்பது ரூ.500-க்குள்ளான பட்ஜெட் மட்டுமே – ஆனால் அந்த ஒற்றை ஸ்லாட்டுக்கென கரம் தூக்கி நிற்கும் ஆல்பங்கள் இரண்டு!

- நாகரீக வெட்டியான் ஸ்டெர்ன்

(or)

- துணைக்கு வந்த மாயாவி! (கமர்ஷியல் கிராபிக் நாவல்)

இரு கதைகளுமே நம்மிடம் உள்ளன... அவற்றுள் ஏதேனும் ஒன்றை கி.நா.யுனிவர்ஸிலும் அங்கமாகிடத் தயாராகவுள்ள நண்பர்கள் தேர்வு செய்து தந்தால் இந்த மினி யுனிவர்ஸ் நிறைவு கண்டிடும்! 

இதோ – இந்த ஒற்றை ஸ்லாட்டுக்கு உங்கள் தேர்வைத் தெரிவிக்க வோட்டுப் போடும் லிங்க்: https://strawpoll.com/YVyPmK5KknN

I repeat – “நான் கி.நா.க்களுக்குச் சந்தா கட்டப் போறதில்லே!” எனும் நண்பர்கள் இந்த ஓட்டெடுப்பில் கலந்திட வேணாமே – ப்ளீஸ்?

ரைட்டு... டிக்கெட் confirm ஆனோரைப் பார்த்த கையோடு, V காமிக்ஸின் அணிவகுப்பைப் பார்த்திடலாமா? இனி தொடரும் பத்திகள் – நம்ம ’V-ன் எடிட்டரின்  எழுத்துக்களில்!

====================================================================

வணக்கம் பாஸ்!

நம்ம V காமிக்ஸின் முதல் வருஷம் இன்னமும் not over தான் ; என்னைக் கேட்டால் இப்போது போலவே மூன்று-மூன்று மாதங்களுக்கான புக் அறிவிப்பு + மினி சந்தா என்றே continue செய்ய நினைப்பேன் ! So இப்போதே அவசரம் ஏன் ? என்று நினைத்தேன் ! ஆனால் வருஷத்துக்கு 4 முறை பணம் அனுப்புவது சிரமமாக உள்ளது என்று நீங்களும் சொல்லியிருக்கிறீர்கள்; நமது டெஸ்பாட்ச் டீமும் சொல்கிறார்கள் ! அதனால் 6 மாத இதழ்கள் ப்ளானிங் + 6 மாத சந்தா என்ற ஃபார்முலா 2024-ல் try பண்ணுவதாக இருக்கிறோம் ! அது மாத்திரமன்றி ஒரே நேரத்தில் 12 புக்ஸையும் லயன் – முத்து ஸ்டைலில் இறக்கி விட எனக்கு இன்னும் கொஞ்சம் அனுபவம் தேவை என்று நினைக்கிறேன். இந்த split up சந்தா முறையில் உள்ள பெரிய வசதியே - புதுசாய் ஏதாச்சும் கதைகள் கிடைத்தால் அதை நமது schedule-ல் நுழைக்கவும் ஈஸியாக இருக்கும். So ஜனவரி 2024 to ஜுன் 2024 புக்ஸ் லிஸ்ட் இதோ!

கடிக்கக் கஷ்டமான கமர்கட்களை லயனுக்கு ஒதுக்கி விட்டு, லைட்டான, க்ரிஸ்பான கடலைமிட்டாய்களை மட்டும் V காமிக்ஸ் புக்ஸாக செலக்ட் பண்ணியிருக்கிறோம்! எடுத்தோமா - அரை மணி நேரத்துக்குள் படிச்சு முடிச்சோமா என்ற மாதிரியே இந்த முறையும் V இருக்கப் போகிறது என்று நினைக்கிறேன்!

1. வேதாளர் – in full கலர்!

இரண்டு வருஷங்களுக்கு முன் Smashing 70’s முதல் இதழாக Phantom வெளியாகி சூப்பர் ஹிட் போட்ட நேரத்திலேயே எனக்குக் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது - நான் படித்திருந்த Phantom கதைகள் எல்லாமே கலரில் இருந்தவை ! So வேதாளரை கலரில் போட முடியும்னா V காமிக்ஸில் அவரைக் கடத்திக் கொண்டு போகிறேன் ! என்று சொன்னேன். கொஞ்சம் யோசித்து விட்டு, black & white வேதாளரை முத்து காமிக்ஸில் வைத்துக் கொள்வது ; கலர் கதைகளை V-ல் வெளியிடலாம் என்று அப்பா சொன்ன அந்த டீலிங் எனக்குப் பிடித்திருந்தது ! So கதையும், “வீரனுக்கு மரணமில்லை” என்ற ஒரு title-ம் கொசுறாய் சேர்த்தே கிடைக்க – ஜனவரி 2024-ல் Phantom கலரில் கலக்குவார்! லேட்டஸ்டாய் உருவான கதைகளிலிருந்து வேகமான கதைகளையும், க்ளாஸிக் சூப்பர்ஹிட் கதைகளிலிருந்து கொஞ்சத்தையும் கலரில் போடப் போகிறோம். And நம்ம  V காமிக்ஸின் வழக்கமான சைஸிலேயே தொடரும்.

2. மாடஸ்டி பிளைஸி:

இங்கேயும் இன்னொரு கடத்தல் ! ரெகுலர் schedule-ல் நிறைய ஹீரோஸ் வெயிட்டிங் லிஸ்டில் இருப்பதை லயன்-முத்துவின் ப்ளான்னரில் பார்த்தேன். அண்ணா யுனிவர்சிடியில் சேர லைனில் நிற்கும் எக்கச்கக்க ஸ்டூடண்ட்ஸ் போல, அங்கே ஒரு வண்டி ஹீரோஸ் இருக்கும் போது, எல்லோருக்கும் சீட் கிடைக்கிறது கஷ்டம். So அங்கே தடுமாறிக் கொண்டிருந்த லயனின் first ஹீரோயினை நம்ம V காமிக்ஸில் சந்தோஷமாய் சேர்த்துக் கொண்டோம். லேபில் மட்டும் மாறியிருக்கும்; ஆனால் தனது முதல் ஹீரோயி்னுக்கு அப்பாவே தான் translation செய்யப் போகிறார். அப்புறம் அந்தப் பெயரைப் பார்க்கும் போதே – title உபயமும் அப்பா தான் என்பது புரிந்திருக்கும் . “படலம்” என்ற வார்த்தையை நான்லாம் கேள்விப்பட்டதே நம் காமிக்ஸில் இருந்து தான்!

3. ஸாகோர்:

இந்த 2023-ல் ஸாகோருக்கு நிறையவே ஸ்லாட்ஸ் தந்திருந்தோம். டார்க்வுட் நாவல்ஸ் என்ற அந்த மினி தொடர் லைட் ரீடிங்குக்கு நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் ரொம்ப ரொம்ப லைட்டான ரீடிங்காக அவை அமைந்து போனதால் மீதம் இருக்கும் டார்க்வுட் நாவல்ஸ் 5 & 6 ஐ இப்போதைக்கு மறந்து விட்டு, ஸாகோர் மெயின் தடத்தில் இருந்து ஒரு 132 பக்க ஆக்ஷனை தேர்வு செய்திருக்கிறோம். “வஞ்சத்திற்கொரு வரலாறு” ஸாகோரின் செகண்ட் இன்னிங்ஸை சிறப்பாக ஆரம்பிக்கும்.

4. கேப்டன் ப்ரின்ஸ்:

கட்டக் கடைசியாய் இன்னொரு கடத்தலுமே! இவரும் ஒரு லயன் family-ன் க்ளாஸிக் ஹீரோ தான்! கேப்டன் ப்ரின்ஸ் தொடரில் ஒரேயொரு ஆல்பம் மட்டும் லயனில் போடாமல் இருந்தது. அந்த ஆல்பத்துக்கான காப்பிரைட்டில் ஏதோ internal சிக்கல் என்பதால் அதை தராமல் இருந்தார்கள். சமீபமாய் அந்த problem தீர்ந்து விட்டது என்பதால் நான் தற்செயலாகக் கேட்டவுடன் ஓ.கே. சொன்னார்கள். So கேப்டன் ப்ரின்ஸ் & உதவியாளர் பார்னே நம்ம V-ல் ஒரு புது adventure-ல் கலரில் வரப் கோகிறார்கள். இந்த புக் மட்டும் லக்கி லூக் வெளியாகிடும்  அதே சைஸில் இருக்கும்.

5. மிஸ்டர் நோ:

இந்த வருஷம் ரொம்ப recent அறிமுகமான ஹீரோ! க்ரிஸ்பான வாசிப்புக்கு இவரது ஸ்டைல் ரொம்பவே ஒத்துப் போவதைப் பார்க்க முடிந்தது. அமேசான் காடு என்ற உடனே நிறைய நிறைய adventures-க்கு ஒரு ஜன்னல் திறந்த மாதிரியிருக்க, சூப்பர் சூப்பரான ஒன்-ஷாட் கதைகள் கிடைக்கின்றன. “பாலையில் ஒரு போராளி” ரொம்ப நீட் டிராயிங் ஸ்டைலில் உருவானது என்பதால் அது கூடுதல் ப்ளஸ்ஸாகிறது!

6. ஏஜெண்ட் ராபின் 2.0

New age ராபின் ! ப்ளாஷ்பேக்கிலும், நிஜத்தில் அப்போது நடக்கும் சம்பவங்களிலும், Big Apple-ன் க்ரைம் முகத்தை நமக்குக் காட்டி வருகிறார். 96 பக்கங்கள் தான் எனும் போது வாசிக்க இங்கே கஷ்டமே இருக்காது என்று நினைக்கிறேன்.

So இந்த 6 தான் நம்ம V காமிக்ஸின் முதல் 6 மாத இதழ்கள்! 2023-ல் செய்த தப்புகளிலிருந்து பாடம் படித்து, கதை செலக்ஷனில் more கவனம் தந்திருக்கிறோம். அவை உங்களை திருப்திப்படுத்தும் என்ற நம்பிக்கையோடு புறப்படுகிறேன். லயன்-முத்து க்ரூப்பின் புக்ஸ் என்ற அடையாளத்தையும் தாண்டி V-க்கென ஒரு எதிர்பார்ப்பை create செய்ய உங்கள் ஆதரவு தேவை ப்ளீஸ்! 

See you again in April / May 2024.

======================================================================

ரைட்டு...

- UNIVERSAL சந்தா  - 30   புக்ஸ் (3 கி.நா. சேர்த்து) 

- சந்தா ‘V’                   –   6 புக்ஸ் (January to June'24)

Total -                                  36 புக்ஸ்

- இவையே 2024ன் முதுகெலும்பாய் இருந்திடவுள்ளன! V காமிக்ஸின் ஜுலை to டிசம்பருக்கான 6 இதழ்களையும் சேர்த்தோமெனில் புக்ஸின் எண்ணிக்கை 42-ஐ தொட்டு நிற்கும்!

- And of course - க்ளாஸிக் நாயகர்களான வேதாளர், மாண்ட்ரேக், ரிப் கிர்பி, சார்லி, காரிகன், விங் கமாண்டர், ஜார்ஜின் black & white சாகஸங்கள் Smashing '70s & Supreme '60s பாணிகளில் அல்லாது சற்றே மாறுபட்ட templateல் 2024ன் பிற்பகுதியினில் துவக்கம் காணும்! காத்திருக்கும் அந்த க்ளாஸிக் தடத்தில் வண்டி வண்டியாய் புக்ஸ் இராது; there will be just a handful ! ஆனால் உங்களது தேடல்களில் உள்ள வைரஸ் X ; மடாலய மர்மம் ; போன்ற க்ளாஸிக் ஹிட்ஸ் அவற்றில் இடம் பிடித்திடவுள்ளன ! அது பற்றி ஏப்ரல் அல்லது மே மாதத்தில் அறிவிப்பு வந்திடும்! So அந்த க்ளாசிக்ஸ் வரிசையில் வெறும் 3 புக்ஸ் என்று வைத்துக் கொண்டால் கூட, 2024-ன் output 45 புக்ஸ்களென்று இருக்கும் ! நிச்சயமாய் ஒரு டீசென்ட் நம்பரே !

டிக்கெட் உறுதியான பார்ட்டிகள் சகலரும் ‘ஜம்‘மென்று ஏ.ஸி. கோச்சுகளில் ஏறியமர்ந்து வூட்டிலிருந்து கொணர்ந்த பிரியாணிகளையும் தயிர் சாதங்களையும் பிரித்துக் கொண்டிருக்கும் வேளைதனில் வெயிட் லிஸ்டில் உள்ளோரைப் பரிவோடு பார்த்திடலாமா? இந்த லிஸ்டில் உள்ளோரின் பெரும்பான்மை சமீப வரவுகளே & சமகால சாகஸக்காரர்களே! ஆனால் எத்தனை தான் தலைகீழாய் நின்று அவர்கள் தண்ணீர் குடித்தாலும், எத்தனை தான் ‘தம்‘ கட்டி முட்டுத் தர நான் முற்பட்டாலும, சந்தா வட்டத்து நண்பர்களைத் தாண்டி கடைகளிலும் ஆன்லைனிலும் வாங்கிடுவோரைப் பெரிதாய் reach செய்ய முடியவே இல்லை என்பது தான் bottom line! டேங்கோவைப் போல, ரூபீனைப் போல, தாத்தாக்களைப் போல் புதுசாய் வந்து உங்களது துரித அங்கீகாரங்களையும் பெற்றிடும் வரம் எல்லோருக்கும் வாய்க்க மாட்டேன்கிறது! So ஒரு சிறு சந்தா வட்டத்திடம் விற்றது போக பாக்கி கிடக்கும் பிரதிகளை ஆண்டாண்டு காலங்களுக்குச் சுமந்து திரிய நான் முகம் சுளிக்காது போனாலுமே, நமது கிட்டங்கிகளும், ரேக்குகளும் பளுவில் முக்குவது காதில் கேட்கிறது! So இனி வரும் காலங்களில் - ஏகோபித்த விற்பனைத் தேர்வுகளாக அல்லாதோர் அனைவருமே இந்த Make My Own Mini Santha-வில் தான் இடம்பிடிப்பர்! 

This is how MYOMS will work:

- ரெகுலர் தடத்தில் இடம்பிடிக்கப் பலம் குறைவானவர்கள்! அதே சமயம் பொதுவெளிகளில் - “யாரு அவரா? பயங்கரமானவராச்சே?!” என்று உங்களால் பேசப்படுவோர் இனி பரண்களுக்கு பேக்-அப் ஆகிடவும் மாட்டார்கள்; வம்படியாய் ரெகுலர் தடத்தின் அங்கமாகி கைக்குள்ளும், காலுக்குள்ளும் கிடந்து லோல்படவும் மாட்டார்கள்!

- மாறாக - ஒவ்வொரு வருடமும் அவர்களது ஆல்பங்களை நமது அட்டவணைகளில் விலைகளை மட்டும் குறிப்பிடாது விளம்பரப்படுத்திடுவோம்! அவை சகலத்தையுமே அந்த ஆண்டே வெளியிட்டாக வேண்டுமென்று அல்லாது - அவற்றிலிருந்து ஏதேனும் நான்கு ஆல்பங்களைத் தேர்வு செய்யும் option-ஐ உங்களிடம் ஒப்படைத்து விடுவோம். I repeat - நீங்கள் தேர்வு செய்திட வேண்டியது 4 ஆல்பங்களை மட்டுமே !

- அவ்விதம் தேர்வாகும் இதழ்களை மட்டும் கொண்டு ஒரு முன்பதிவினை பிப்ரவரியில் அறிவித்திடுவோம் !

- குறைந்தபட்ச முன்பதிவு நம்பர்களைத் தொட்டான பின்னே - அந்த 4 இதழ்களும் சீரான இடைவெளிகளில் தயாராகி வெளிவந்திடும்!

- இவை முன்பதிவுகளுக்கு மாத்திரமே என்பதால் மிகச் சரியாக அந்த எண்ணிக்கைக்கான பிரிண்ட்ரன் மட்டுமே இருந்திடும்! Which means - இதழ்களின் விலைகள் நார்மலை விட அதிகமாகவே இருக்கும் & இவை முன்பதிவில் இணைந்து கொள்ளும் முகவர்களைத் தவிர்த்து மற்ற கடைகளில் கிடைத்திடாது!

- So in effect - இவை பிரத்தியேகமாய் உங்களுக்கே உங்களுக்கென மட்டுமே உருவாகிடும் புக்ஸாக இருந்திடும்!

- ஒருக்கால் குறைந்த பட்சமாய் 400 என்ற நம்பரை நல்லதொரு அவகாசத்திற்குள்ளும் எட்டிப்பிடிக்க இயலாது போயின், வெயிட்டிங் லிஸ்டில் உள்ள இதே நாயக / நாயகியர் காலம் கனியும் வரை காத்திருக்கவே வேண்டி வரும்! And of course - பணம் அனுப்பியிருக்கக்கூடிய நண்பர்களுக்கு refunds செய்திடப்படும் ! 

2024ல் உங்கள் சம்மதம் கோரி நிற்கும் நாயகப் பெருமக்கள் இதோ:

1. C.I.A. ஏஜெண்ட் ஆல்பா:

இவரது சிங்கள் ஆல்பங்கள் விற்பனையில் ரொம்பத் தடுமாறவில்லை தான்! ஆனால் டபுள் ஆல்பங்கள்; ரூ.200; ரூ.250 என்ற விலைகௌனில் - லக்கி லூக் தவிர்த்த பாக்கி ஈரோ சார்களுக்கெல்லாமே டாஸ்மாக் காதலர்களைப் போல கால்கள் குளறுவதே நடைமுறை என்றாகி விட்டது! இன்றைய சிங்கிள் ஆல்பங்களின் விலைகளைக் காட்டிலும் 10 வருஷங்களுக்கு முன்பான லார்கோ டபுள் ஆல்பங்களோ, ஷெல்டன் டபுள் ஆல்பங்களோ விலை குறைச்சலே என்பது கொடுமை! But yet - அவை இன்னமும் தேங்கிக் கிடப்பது கொடுமைஸ் ஆஃப் சிவகாசி!

So ஆல்பாவின் அடுத்த ஆல்பம் ஒரு டபுள் டமாக்கா என்ற ஒரே காரணத்தால் அவருக்கு ரெகுலர் சந்தாக்குள் இடமின்றிப் போயுள்ளது! ”தீதும்... துரோகமும் பிறர் தர வாரா...!” ஆல்பாவின் career-ல் ஒரு முக்கிய திருப்பத்தை உருவாக்கிடும் சாகஸம்! தேர்வாவாரா இந்த ஸ்டைலிஷ் நாயகர்? விடை உங்கள் விரல்களில்! இதோ - வோட் போடும் லிங்க் : _______________________

2. I.R.$:

பரபரப்பான ஆக்ஷன் அறிமுகம்; முதல் ஆல்பத்தில் செம decent ஆக சாகஸமும் செய்திருந்தார் தான்! ஆனால் அந்த டபுள் ஆல்பம் Syndrome காரணமா - என்னவென்பது தெரியவில்லை; கடைகளிலும், புத்தக விழாக்களிலும் பெருசாய் அவர் கவனத்தை ஈர்த்த பாடைக் காணோம்! And yes - ஒரே வாய்ப்போடு ஒரு புது வரவுக்குத் தீர்ப்பெழுதுவது knee jerk reaction போலத் தென்படலாம் தான்! ஆனால் I.R.$ கதைகள் சகலமுமே டபுள் ஆல்பங்களே எனும் போது 2035 வரை இவரது புக்ஸை கிட்டங்களிலும் நிறைத்துக் கொண்டு ஊர் ஊராய்த் தூக்கித் திரிய ‘தம்‘மில்லை!

I repeat - இந்த வெயிட்டிங் லிஸ்டில் உள்ள நாயக / நாயகியருக்கு வெகுஜன appeal கிட்டாமல் போயுள்ளது வாழ்க்கையின் புதிர்களில் ஒன்றே தவிர, இவர்களது தரங்கள் மீதான பிரகடனமே அல்ல! So இன்னமும் பந்து உங்கள் தரப்பில் folks!

3. SODA:

நிஜத்தைச் சொல்வதானால் - பெர்சனலாக எனது favourite-களுள் இந்தத் தொடருக்கு ஒரு உச்ச இடமுண்டு! ஆனால் ரூபீனா? ரிப்போர்டர் ஜானியா? SODA-வா? என்ற மும்முனைப் போட்டியில் இவருக்கு நீங்கள் தந்திருந்தது கடைசி இடத்தையும், குருவி ரொட்டியையுமே ! Frankly எனக்கு அதனில் பெரும் நெருடலே! ஆனால் இந்த “போலீஸ் பாதி - பாஸ்டர் மீதி” என்ற நாயகரின் dark பாணிகள் நம்மில் சிலருக்கு டார்க் சாக்லேட் போலவே படுவதை நான் மதித்தாக வேண்டியுள்ளது!

But still, இன்னமும் குடி முழுகிடவில்லை! “கரமெல்லாம் குருதி” சோடாவின் தொடரில் 2023-ல் உருவான செம லேட்டஸ்ட் த்ரில்லர்! சித்திரங்களும் கலரிங்கும் அள்ளுது! ரொம்பவே offbeat ஆன இந்த நாயகரை 2024-ல் ஒரு wildcard entry ஆகப் பார்க்க முடிந்தால் சூப்பராயிருக்கும்!

4. ஏஜெண்ட் சிஸ்கோ:

மறுக்கா அந்த டபுள் ஆல்பம் சமாச்சாரமே! குண்டூ புக்; பெரிய கதைகள் என்றெல்லாம் நாம் மெய்மறந்து ரசித்த நாட்கள் மலையேறிக் கொஞ்ச காலம் ஆகிவிட்டதென்பதை உதட்டளவில் மறுத்தாலும் உள்ளுக்குள் நிலவரத்தை நாமறிவோம்! So ஒரு லார்கோ போலவோ; ஒரு லக்கி லூக் போலவோ ஜாம்பவான்களாக இருந்தாலன்றி டபுள் ஆல்பங்கள் சோபிக்கத் திணறுவதை தவிர்க்க எண்ணியே இந்த ப்ரெஞ்ச ஏஜெண்டை "MYOMS" சந்தாவினுள் புகுத்தியிருக்கிறோம்.

5. ப்ளூகோட் பட்டாளம்:

அப்படியே SODA பற்றி நான் எழுதிய சகலத்தையும் இங்கேயும் copy-paste செய்து விடலாம் தான்! ஏற்கனவே கழுதை தேய்ந்து கட்டெறும்பாகிப் போய் காட்சி தரும் கார்ட்டூன் களங்களில் ப்ளூகோட்ஸ் கொஞ்ச காலமாகவே தள்ளாடி வருவது தான் கசப்பான நிஜம்! யுத்தம்; அதில் நிகழும் இழப்புகள் என்று ஒருவிதமான நெகடிவ் பாணி நம்மில் கணிசமானோருக்குப் பிடிக்கவி்ல்லையோ; என்னவோ இந்தத் தொடருக்கு சொல்லிக் கொள்ளும் அளவில் வரவேற்பில்லை! இந்தாண்டின் சென்னைப் புத்தக விழா துவங்கி மற்ற விழாக்களிலும் சரி, நமது ஆன்லைன் ஸ்டோரிலும் சரி ப்ளூகோட்ஸ் புக்ஸ் என்ன விற்றுள்ளதென்பதை இங்கே போட்டுடைத்தால் சங்கடமாயிருக்கும்!

So இந்த ஸ்கூபி-ரூபி ஜோடியின் எதிர்காலம் இந்த MYOMS தடங்களிலேயே !! கருணை for கார்ட்ரூன் #

6. நெவாடா:

இவர் அறிமுகமானது ஒற்றை ஆல்பத்தில் தான்! And படிக்கவும் அலுப்புத் தட்டாமல் போனதாகவே எனக்குப்பட்டது. சித்திரங்களும் சரி, அந்த 1930-ஸ் ஹாலிவுட் சார்ந்த அமெரிக்க மேற்கின் களமும் சரி, ரொம்பவே fresh ஆக இருந்ததாகவும்பட்டது. ஆனால் நம்மில் நிறையப் பேர் பீரோக்களிலிருந்து ப்ளூ சட்டைகளை உருவியெடுத்து அவசரமாய் அணிந்தபடிக்கே “இவர் வந்து மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் அடிக்கிற காசுக்கு நாலு வடையும், பன்னும் மொசுக்கிட்டு வூட்டிலேயே குந்தினால் அவருக்கும் நல்லது; புக் படிக்க நினைக்கிற நமக்கும் நல்லது!" என்று அலசிவிட்டதால் மனுஷனை இங்கே மாற்றம் பண்ணியாச்சு!

நெவாடா - நீ வாடா” என்று நீங்கள் அழைத்தால் துள்ளிக் குதித்து வரக் காத்திருப்பார்!

7. மேகி கேரிஸன்:

துவக்கம் முதலே ரெகுலர் தடங்களில் இடம்பிடிக்காதவர் தான்; ‘டிடெக்டிவ்‘ என்று சொன்னால் துப்பறியும் சாம்புவே சிரிச்சுப் போடுவார்  தான்! ஆனாலும் அந்த laid back பப்ளிமாஸ் அம்மணியோடு லண்டனை வலம் வருவது எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது! இன்னும் ஒரேயொரு ஆல்பத்தோடு மினி தொடர் பூர்த்தி காண்கிறதெனும் போது “இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரி?” என்ற கேள்வியோடு அம்மணி நிற்கிறார்!

8.நாற்பதில் நோஸ்டால்ஜியா Special !!

உங்களின் ரொம்ப காலக் கோரிக்கைகளுள் ஒன்று !! 1985 & 86 காலகட்டத்தில் லயனில் அதகளம் செய்த பல நாயகர்களுக்கிடையே தமக்கென ஒரு தனித்துவ இடம் பிடித்திருந்த CID ஜான் மாஸ்டரும் ; இரட்டை வேட்டையரும் மறக்க இயலா ஹீரோஸ் ! இதோ - அவர்களின் 2 க்ளாஸிக் சாகசங்கள் கொண்டதொரு பாக்கெட் சைஸ் காம்போ இதழ் !! இதனையும் வாக்கெடுப்பில் இணைத்தாச்சு !  

தீர்ப்பு as always உங்கள் கைகளில். இதோ - மேலுள்ள எட்டிலிருந்து ஏதேனும் நான்கைத் தேர்வு செய்யும் லிங்க்  : https://strawpoll.com/e7ZJGKeK5y3

ரைட்டு... வழக்கம் போலவே அட்டவணையினைப் பார்த்த நொடியில் கலவையான ரியாக்ஷன்கள் இருக்குமென்பதை யூகிக்க முடிகிறது !

- தவறாமல் மாதம்தோறும் ‘பொம்ம புக்‘களுக்கு நேரமும், ஆர்வமும் தந்திடும் நண்பர்களின் வதனங்கள் இந்த நொடியில் இப்படியிருக்கக்கூடும்!


- தவறாமல் மாதம்தோறும் கூரியர் டப்பிகளைப் பிரித்தோ, பிரிக்காமலோ கர்ம சிரத்தையாக ஷெல்ப்களில் அடுக்கி விட்டு, அடுத்த வேலையைப் பார்க்க கிளம்பும் நண்பர்களின் கொட்டாவிகள் இந்த நொடியில் விட்டம் வரை இப்படி விரிந்து கொண்டிருக்கும்!


- “ஆங்... இதிலே உப்பில்லே... அதிலே காரமும் இல்லே!” என்று பொங்கிடும் நக்கீர நண்பர்களின் முகங்களில் இந்த expression ஓடிடலாம்!

- “எல்லாப் பாதைகளும் இட்டுச் செல்வது ரோமுக்கே” என்று ரோமாபுரியின் உச்ச நாட்களில் சொல்லிக் கொள்வார்களாம்! நம்மளவிற்கு அதை லைட்டாக tweak செய்து “எல்லாப் பாதைகளும் இட்டுச் செல்வது மூ/மு. சந்துகளுக்கே” என்று புரிந்து வைத்திருப்பதால் விஜயானந்தாவின் மூஞ்சி மேலே இருக்கக்கூடிய expression இதுவாக இருக்கலாம்!எது எப்படியோ - வழக்கம் போல நீங்கள் கேட்பதற்கு முன்பாகவே பதில்களோடு ஆஜராகி விடுகிறேனே! தேசத்தை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்ல இது உதவப் போவதெல்லாம் லேது தான்; ஆனால் சமூக வலைத்தளங்களில் நாம் active ஆக இருப்பதில்லை என்ற காரணத்தால் சிக்கிய சிக்கியதையெல்லாம், அள்ளி "யெஸ்..யெஸ்...bomb ப்ளாஸ்ட் பத்தி ஜார்ஜ் புஷ்ஷுக்கு பர்ஸ்ட் சொன்னதே நான் தான்" என்ற ரீதியில் தாளித்து வி்டும் சிலபல பிரதர்களுக்கு முன்கூட்டிய answer-களாக இவை இருந்துவிட்டுப் போகட்டுமே? So here goes: 

The கேள்வீஸ் & பதில்கள் Universe :

1. சந்தாவிலே புதுசாய் ஆரேனும் காணோமேடா சேட்டா? எவ்விட போயி?

- பிரதான பிரமுகர் டின்டின் ஒரு ground breaking அறிமுகம் தானே ? ப்ருனோ பிரேசில் 2.0 வும் தானே ?! Spoon & White ?

தவிர, புதுசின் பின்னே விடிய விடிய நான் தேடி ஓடினாலும், “நான்லாம் “ஒற்றை நொடி... ஒன்பது தோட்டாவை” புரட்டக் கூட இல்லை தெரியுமா?” “அர்ஸ் மேக்னாவை அட்டையைத் தாண்டிப் புரட்டலை- தெரியுமா?” என்று கெத்தாக வாசிப்பின் களங்களை பரிச்சயப்பட்ட நாயக / நாயகியரோடே நிறுத்திக் கொள்வது கண்கூடு! புதியவர்கள் அனைவருமே டெக்ஸ் வில்லர்களாகவோ, லக்கி லூக்களாகவோ, கேப்டன் டைகர்களாகவோ இருத்தல் எல்லா வேளைகளிலும் சாத்தியமாகிடுவதில்லை எனும் போது, நமது அணிவகுப்பின் ஆகிருதியைக் கூட்டிக் கொண்டே போய் விட்டு, அப்புறமாய் வெயிட்டிங் லிஸ்டில் இடநெருக்கடியை ஏற்படுத்துவானேன்?

- இதோ இப்போது கூட ஒரு ஆர்வத்தில் புதுசாய் ஒரு டார்க்கான anti-hero-வின் கதைகளை வாங்கியுள்ளோம் ! கைவசம் காத்திருக்கிறார்! Black & White-ல் !

- ஒரு Cold War யுகத்தின் உளவாளியுமே வெயிட்டிங்! Again Black & White-ல் !

நடப்பாண்டின் crisp வெளியீடுகள் உங்களுக்கு மேற்கொண்டும் வாசிக்க நேரத்தை வழங்கிடும் பட்சத்தில் இவர்களைக் களமிறக்கி விடலாம்!

2. "The Supremo Special" மாதிரி முரட்டு இதழாய் எதையும் காணோமே? ஏனி மேட்டரூ?

- இது காலமாய் நாம் பார்த்திரா ஒரு அசாத்தியப் பக்க எண்ணிக்கையினை நடப்பாண்டினில் உருவாக்க முடிந்துள்ளது தான்! ஆனால் இந்த ஆண்டின் இதுவரைக்குமான பொழுதுகளிலாவது, தனிப்பட்ட முறையில் ஏகப்பட்ட இடர்களுக்கு மத்தியில் தான் பணியாற்றி வந்துள்ளேன் !  அம்மா-அப்பாவின் சுகவீனங்கள்; அம்மாவின் மறைவு; வேறு சில இடர்கள் என்று இந்தப் பத்து மாதங்களிலுமே டை்டோ டைட்டான பணி்ச்சுமைகளோடே டான்ஸ் ஆடி வந்திருக்கிறேன். இதோ, இந்தப் பதிவை நான் எழுதுவது கூட செம வைரஸ் காய்ச்சலின் மத்தியில் 3 பாட்டில் ட்ரிப்ஸ் போட்டுவிட்டுத் திரும்பிய கூத்தின் நடுவாக்கில் தான் ! ஆனால் இந்த சர்க்கஸ் வேலைகளெல்லாம்  காலத்துக்கும் இப்படியே சாத்தியமாகாது என்ற யதார்த்தம் புரிகிறது! அது மட்டுமன்றி உங்களி்ல் நிறையப் பேருக்குமே மெகா வாசிப்புகளுக்கு அவசியமாகிடக் கூடிய பொறுமைகள் ஒரு எட்டாக்கனியாகி வரும் சூழலில் - breezy reading will be the New King!

3. லயனின் 40-வது ஆண்டு மலருக்கு கதம்ப-குண்டு புக் லேதா? ஏனோ ஏமண்டி?

முத்துவின் 50-வது ஆண்டுமலரில் படித்த பாடம் என்பேன்! செம மிரட்டலாய் இரண்டு ஹார்ட் கவர் இதழ்கள்; ஆல்பாவின் 3 பாக அதிரடி; சிஸ்கோவின் 2 பாக அறிமுகம்; டேங்கோவின் ஸோலோ ஆல்பம், etc... etc... என்றும் 5 அத்தியாயங்களுடனான “ஒற்றை நொடி ஒன்பது தோட்டாக்கள்” ஆல்பமும் களமிறங்கின! ஆனால் அவர்கள் ஏற்படுத்திய தாக்கத்தை விட மும்மடங்கு bang நிகழ்ந்தது - வேதாளரின் MAXI ஆல்பம் வெளியான சமயத்தில்! வரலாறு காணா சந்தாச் சேர்க்கை; சட்டையைக் கிழிக்கும் விற்பனை; ஆரவாரமான அலசல்கள் என்று முகமூடி மாயாத்மாவின் ரகளை பின்னியெடுத்தது!

So கூட்டணி இதழ்களுக்கு இப்போதெல்லாம் சம்மதிக்கத் திட்டவட்டமாய் மறுத்திடும் படைப்பாளிகளிடம் கையில், காலில் விழுந்து சம்மதம் வாங்கி, ஒரு பப்ளிமாஸ் புக்கை தயார் செய்வதற்குள் நாக்கெல்லாம் காலுக்கு வந்து, நீங்களும் காசைப் போட்டு அதை வாங்கி, பத்திரமாய் பீரோக்களுக்குள் அடுக்கிடுவதில் யாருக்குமே ஆதாயம் லேதே? ஆகையால் இன்றைய நமது டாப் நாயகர்களான டெக்ஸ் & லக்கி லூக்குடன் க்ரிஸ்பாக 2 கலர் ஆல்பம்ஸ் ; அப்புறம் கூர் மண்டையரோடு ஒரு கலர் கலக்கல் அதிரடி என்ற திட்டமிடல் should be good என்று  நினைத்தேன்! 500 பக்கம்...ஆயிரம் பக்கம் என்பதெல்லாம் கூட்டணி கதம்ப இதழ்களாய் இனி சாத்தியமே இல்லை என்றாகி விட்டது ! So ஒரே நாயகரின் பல கதைகளை இணைத்தால் மாத்திரமே ஒரு புஷ்டியான இதழ் சாத்தியம் ! அது ஒரு கட்டத்துக்கு மேல் அயர்வை உருவாக்கிடாதா ?

அப்புறமாய் "நாற்பதில் Nostalgia “ஸ்பெஷல்” என்று ஒரு black & white பாக்கெட் சைஸ் அதிரடியுமே அரங்கேறிட வாய்ப்புள்ளது ! அது பற்றிய விபரங்கள் / விளம்பரங்கள் மேலே பார்த்திருப்பீர்கள் ! வோட்டிங்கில் அதற்கு ஜெயமெனில் லயனின் ஆண்டுமலர் தருணத்தில் கூடுதல் 'ஜிலோ' தான் ! 

3. ஆங்... வேகமாய் ஓடிய வண்டி இப்போ திடீர்னு ஸ்பீடைக் குறைக்கிறதா மாதிரித் தோணுதே?

ரசனைகள் என்றைக்குமே நீரோட்டங்களைப் போலானவை தானே? மழைக் காலங்களில் ஓட்டம் வேகமெடுக்கும்; வெயில் காலங்களில் வேகம் மட்டுப்படும்! இங்கே அரங்கேறி வருவதுமே something similar guys! இன்று நம்மைச் சுற்றி ஒரு நூறு OTT தளங்கள் ஓயாத பொழுதுபோக்குக்கென படங்களையும், டி.வி.சீரியல்களையும், கிரிக்கெட் / புட்பால் மேட்ச்களையும் போட்டுத் தாக்கி வருகின்றன! YouTube-க்குள் தலை நுழைத்தாலோ - shorts பார்த்தே நாளை ஓட்டி விடலாம் போலுள்ளது! இத்தனையும் கோவிட் நாட்களுக்கு அப்புறமான வரவுகள் எனும் போது, ‘பழைய நினைப்புடா பேராண்டி‘ என்று நமது திட்டமிடல்களை மாற்றங்களேயின்றி பழைய மாதிரியே தொடரச் செய்வது விவேகமாய்ப் படவில்லை எனக்கு! செம வீரியமான இத்தனை பொழுதுபோக்கு option-களுக்கு மத்தியில் நமக்கென நண்பர்கள் நேரம் ஒதுக்குவதே எம்பிரானின் புண்ணியம்; So அதனைக் கருத்தில் கொண்டிட / கொண்டாடிடத் தவறலாகாதென்பதே தென்பதே bottom line!

4. கார்ட்டூன் கடையை இழுத்து மூடியாச்சு போல் தெரிகிறதே?

நிறையவே எழுதியாச்சு இது பற்றி! லக்கி லூக் தவிர்த்து விற்பனையில் ‘பரவால்லே‘ என்ற ஸ்லாட்டைப் பிடிப்பது சிக் பிக் & கோ மாத்திரமே.

- க்ளிப்டனைக் கொண்டு வந்தோம் - ‘ஊஹும்‘ என்று விட்டீர்கள்!

- மதியில்லா மந்திரியாருக்கு - டாட்டா... குட்டு பை! என்றீர்கள்!

-லியனார்டோவுக்கு - ‘ஓடியே யோயிடும் பெருசு‘ என்று அன்பான வழியனுப்பும் படலம் அரங்கேறியது!

- SMURFS - ‘தாங்கலைடா சாமி‘ என்றீர்கள்!

- சுட்டிப் பயல் பென்னி - "Not at all funny" என்றீர்கள்!

- மேக் & - ஜாக் - ‘ஹாவ்வ்வ்‘ என்று கொட்டாவி விட்டீர்கள்!

- ப்ளூகோட் பட்டாளத்துக்கு - "சிரிப்பே வரலியேப்பா தம்பிகளா" என்றீர்கள்!

- ரின்டின் கேனை - “ச்சூ... ஓடிடு!” என்று துரத்தியாச்சு!

சட்டையைக் கிழிக்காத குறை தான் - இவையெல்லாம் உலகெங்கும் கொண்டாடப்படும் வேளைதனில் இங்கு மட்டும் தர்மஅடி வாங்குவது ஏனென்று புரிந்து கொள்ள! நமது கையிருப்பு லிஸ்டைப் பார்த்தீர்களெனில் லக்கி லூக் தவிர்த்த பாக்கி சிரிப்புப் பார்ட்டிகள் அத்தனை பேரது இதழ்களும் இன்னமும் ஸ்டாக்கில் இருப்பது புரியும்! தக்கி முக்கி, புத்தக விழாக்களில் ஆகிய போணிகளில் Smurfs-ல் சில டைட்டில்கள் மட்டுமே காலி!

அட, "கதை சொல்லும் காமிக்ஸ்" - fairy tale முயற்சியுமே புஸ்வாணமாகிப் போச்சு! அதிலுமே நமது மாமூலான விமர்சனப் பார்வைகளைப் பொருத்தி்ட முனையும் போது, அடுத்த தலைமுறைகளை ‘பொம்ம புக்‘ லோகத்தினுள் நுழைத்திடக்கூடிய சுலப வாய்ப்புகளையும் இழந்ததே பலனாகியது! இதோ - பெரும் தேவன் மனிடோவை வேண்டிக் கொண்டு புது சிரிப்பு டீமான ஸ்பூன் & ஒயிட் களம் காணவுள்ளார்கள் ! இவர்களையாச்சும் ஏற்றுக் கொள்கிறீர்களா என்பதை பார்த்தாக வேண்டும் !

5. TIN TIN கார்ட்டூனா?

Not at all! ‘டின்டின்‘ ஒரு ரிப்போர்ட்டர்! பத்திரிகை ஆபீஸுக்குப் போகிறாரோ இல்லையோ, உலகமெல்லாம் பணி நிமித்தம் சுற்றி வருபவர்! அட- சந்திர மண்டலத்துக்கே போகும் 2 பாக சாகஸமும் கூட உண்டு! அற்புதமான ஆக்ஷன் கதைகள்... கலவையாய் சில நகைச்சுவை பாத்திரங்களோடு - என்பதே இந்தத் தொடரின் template! 94 ஆண்டுகளுக்குப் பின்னேயும் இவரது தொடரில் புராதன நெடி துளியும் கிடையாதென்பதே இந்தத் தொடரின் தரத்துக்கு ஒரு சான்று! உலகெங்கும் மறுவாசிப்பிலும் ஸ்கோர் செய்திடும் சொற்பமான தொடர்களில் டின்டின்னுக்கு ஒரு டாப் ஸ்லாட் என்பது இன்னுமொரு ப்ளஸ்! சாகஸ வீரர் டின்டின் - ஜாலியான சக கதாப்பாத்திரங்களோடு!

6. “ரிப்போர்ட்டர் ஜானி தொடர்வதில் ஒரு விதத்தில் கூடுதல் மகிழ்ச்சி” என்று சொன்னா மேரி இருந்ததே தல! ஏனி மேட்டரூ?

1985ல் நம்ம முதல் ஃப்ராக்ங்பர்ட் விஜயத்தின் தொடர்ச்சியாய் கொணர சாத்தியப்பட்ட பல கதைகளுள் மூன்று ஆக்ஷன் நாயகர்கள் ரொம்ப ஸ்பெஷல்! மூவரையுமே தத்தாரித்துக் கிடந்த “திகில்” காமிக்ஸில் களமிறக்கி ரவுசு பண்ணினோம்! அந்த மூவர்:

- ரிப்போர்டர் ஜானி

- ப்ரூனோ ப்ரேசில்

- கேப்டன் பிரின்ஸ்

பின்நாட்களில் பிரின்ஸ் & ப்ரூனோ ப்ரேசில் தொடர்களில் புதுக்கதைகள் இல்லாத காரணத்தால் ஜானியோடு மட்டும் ஆவர்த்தனம் செய்து வந்தோம்! ஆனால் 2024-ல் இந்த மூவரையும், மூன்று புது சாகஸங்களோடு சந்திக்கவிருக்கும் மகிழ்ச்சியில் தான் அப்படி எழுதத் தோன்றியது! பிரின்ஸ் தொடருமே என்றைக்கேனும் தூசு தட்டப்பட்டு 2.0 version ஆக வெளிவந்தால் தவிர, இந்த மூவரணியை இணைந்து ரசிக்கும் வாய்ப்புகள் பூஜ்யம்! So 2024 அந்த விதத்தில் ஸ்பெஷல்! 

7. வன்மேற்கின் அத்தியாயம் எங்கே காணோம்?

இதோ இந்த நவம்பரில் அந்த முதற் சுற்று நிறைவுறுகிறது folks! அதுவும் வெளியான பின்னால் இந்த 4 பாக மினி சுற்றினை அலசிடலாம்! அதன் இடையே, அடுத்த சுற்று எத்தனை ஆல்பங்களுக்கு நீண்டிடவுள்ளது என்பதையும் நான் தெரிந்து வைக்கிறேன். உங்கள் அலசல்களில் இது பெற்றிடும் மதிப்பெண்களைக் கொண்டு அடுத்த சுற்றைத் துவக்குவது பற்றித் திட்டமிட்டுக் கொள்ளலாம்! இருக்கவே இருக்கிறது - V காமிக்ஸின் ஜுலை to டிசம்பர் ஸ்லாட்கள்!

8. அலிபாபா கார்ட்டூன் தொடர்?

தனிப்பட்ட முன்பதிவு ஒரு பொருத்தமான சமயத்தில் அறிவிக்கப்படும். அதற்கேற்ப 3 தனித்தனி இதழ்களாய் வெளிவரும்.

9. சுஸ்கி & விஸ்கியையும் காணோமே??

Truth to tell - முதல் ஆல்பத்துக்குக் கிடைத்த மாஸ் வரவேற்பு இரண்டாவது பாகத்துக்குக் கிட்டியிருக்கவில்லை! ஒரு கணிசமான கையிருப்பு தேங்கி நிற்கின்றது ! பழைய கதைகளை மறுக்கா பார்க்கும் அந்த நோஸ்டால்ஜியா factor-ஐ தாண்டி ஒரு வேகம் தென்பட்டிருந்தால் மகிழ்ந்திருப்போம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக கார்ட்டூன்களுக்கும், தற்போதைய நண்பர்வட்டத்துக்கும் உள்ள ஏழாம் பொருத்தம் இங்கும் தொடர்கிறதோ - என்னவோ ! So 2024-ல் ஒரு சின்ன பிரேக் விட எண்ணியுள்ளோம்.

10. ஒரிஜினல் அண்டர்டேக்கர் என்னவானார்?

2 அத்தியாய புதுச் சுற்றில் க்ளைமேக்ஸ் பாகம் இன்னமும் தயாராகவில்லை. 2024-ல் அது ரெடியாகிடும் பட்சத்தில் 2025-ல் அட்டவணையில் இடம் பிடித்திடும்.

11. அந்த LONESOME தொடர் என்னாச்சு?

இங்கேயுமே அதே கதை தான்! க்ளைமேக்ஸ் பாகம் இன்னமும் வெளியாகவில்லை! 2024-ல் ரெடியாகிவிடும்; நம்மிடையே 2025-ல்!

12. ஏதாச்சும் புதுசாய்... அதிரடியாய்...??

ஆசையிருக்கு நிலா வரைக்கும் பயணம் போக!! ஆனால் அடக்கி வாசிக்கும் அவசியமும் இருக்குதே!!

***ஒரு அட்டகாச 5 பாக கௌபாய் தொடர்! மிரட்டும் கதைக்களம் + அட்டகாசச் சித்திரத் தரம்! இதற்கான உரிமைகள் வாங்கியாச்சு! மாதம் ஒரு அத்தியாயம் வீதம் 5 மாதங்களுக்கு இதனை நகர்த்திட இயன்றால் அட்டகாசமாக இருக்கும்! But ஏற்கனவே உள்ள ஈரோக்கள் வெயிட்டிங் லிஸ்டில் தொங்கலில் இருக்க இதனை எவ்விதம் நுழைப்பதென்று தெரியாமல் மண்டையைச் சொரிந்து வருகிறேன்!

***ஒரு black & white கிராபிக் நாவல்!! சித்திரங்கள் பிரமிப்பின் உச்சத்துக்கே இட்டுப் போகின்றன! And கதைக்களமோ ஒரு சர்வதேச விருது பெற்ற நாவலின் கரு! இதைக் கண்ணில் பார்த்த பின்னே வெளியிடாமல் போனால் தலையே வெடித்து விடும் எனக்கு! And இதனை வெளியிடுவதற்கான ஒரு perfect வாய்ப்பினையும் பார்த்து வைத்திருக்கிறேன்! வெறும் நூறே பேர் வாங்கினாலுமே no worries... இது போலான படைப்புகளை வெளியிடும் வாய்ப்புகள் ஆயுசுக்கு ஒருவாட்டியோ - ரெண்டுவாட்டியோ தான் அமையும் ! 

***இதுவுமே ஒரு கி.நா. தான் - but கலரில்! சித்திரங்களிலும், கலரிங்கிலும் ஒவ்வொரு பக்கமும் மிரட்டோ மிரட்டென்று மிரட்டுகின்றது ! இதை 2024-ல் வெளியிட வாய்ப்பு குறைவே! ஆனால் பார்க்கப் பார்க்க உள்ளுக்குள் ஒரு நமைச்சல்...! Phewwww !!

***கடற்கொள்ளையர் ஜானரில் பராகுடா செய்த அதகளம் மறந்திருக்காது! இது அது போலான சற்றே அடல்ட்ஸ் ஒன்லி ரகமாக இல்லாமல் ஒரு அக்மார்க் Ocean adventure ஆக இருந்திடும்! ஆர்ட்வொர்க் சும்மா தீயாய் தகிக்கிறது! இன்னமும் அங்கே வெளியாகியிருக்கவில்லை, நமக்கு preview மட்டும் காட்டியுள்ளனர்! இல்லாவிடின் சர்வ நிச்சயமாய் அட்டவணைக்குள் இந்நேரத்துக்குப் புகுத்தியிருப்போம்! எப்போதென்று தெரியாது - but நிச்சயமாய் வந்திடும் கடற் சாகஸம்!

***ஒரு 2 பாக ஆக்ஷன் த்ரில்லர்! கதை அரங்கேறும் களமோ ஆப்பிரிக்கா! ஆரம்பம் முதலே டாப் கியர் தான்... தெறி ஸ்பீடு! Again இட நெருக்கடி தான் சிண்டைப் பிய்க்கச் செய்கிறது!

ஹ்ம்ம்ம்... இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம் தான்! நீங்கள் அத்தனை பேருமே வரணும் - பழைய பன்னீர் செல்வங்களாய் வரணும்! வாசிப்புக்கு நேரம் வாய்த்த அதிரடிக்காரர்களாய் வரணும்! அந்த நொடியில் ரைட்டுக்கா... லெப்டுக்கா போட்டுச் சாத்திட நாங்களும் தாயராகயிருப்போம்! அது வரை கொஞ்சமாய் அடக்கி வாசிப்போம்!

ஆகட்டும் folks... இதற்கு மேலும் பதிவை இழுத்துக் கொண்டே போனால் சத்தியமாய் வாசிக்க ‘தம்‘ இருக்கப் போவதில்லை உங்களிடம்! டெக்ஸ் சிக்ஸர் ஸ்பெஷலின் எடிட்டிங்கும் அழைக்கிறதால் நடையைக் கட்டுகிறேன்! எப்போதும் போலவே இயன்றமட்டுக்கு அனைவரையும் புன்னகைக்கச் செய்வதே இந்த அட்டவணையின் focus ஆக இருந்திட வேண்டும் என்று முயற்சித்துள்ளோம். தவிர தற்போதைய வாசிப்புச் சூழல்கள், விற்பனைக் கட்டாயங்களும் இதனில் இடம்பிடித்திருப்பதை மறுக்க மாட்டேன்! நிதானமாய் இதழ்களை, அறிவிப்புகளை உள்வாங்கிக் கொண்டு உங்களின் அபிப்பிராயங்களை பதிவிடுங்களேன் ப்ளீஸ்! Of course இது இல்லியா ? அது எதுக்கு ? என்ற ரீதியில் சில கேள்விகள் எழாது போகாதென்பது புரிகிறது ! ஆனால் ஒவ்வொரு தேர்வுக்குப் பின்னும் ஒரு காரணம் இருப்பதை போலவே ஒவ்வொரு தேர்வின்மைக்குப் பின்னேயும் உருப்படியான காரணம் இருக்கும் என்பதை நீங்கள் தைரியமாய் நம்பலாம் !

எப்போதும் போல உங்கள் ஒவ்வொருவரின் துணையுமின்றி இந்தப் பயணம் ஒரு இம்மி கூட முன்செல்லாது எனும் போது - உங்களை 2024 சந்தா எக்ஸ்பிரஸில் செம ஆவலாய் எதிர்பார்த்துக் காத்திருப்போம்!! Please do join in all!

Bye all...see you around ! Have a great weekend !!

Saturday, October 21, 2023

விலகு..விலகு...வேங்கை வெளியே வருது...!!

 நண்பர்களே.

வணக்கம். தமிழ் செப்பும் நல்லுலகிற்கு கவுண்டர் ; வடிவேலார் ; சந்தானம் ; பரோட்டா சூரி போன்ற மூதறிஞர்கள் நிறையவே 'நச்' கருத்துக்களை கல்வெட்டில் பதிக்காத குறையாய் விட்டுச் சென்றுள்ளதை நாமறிவோம் ! "நாகூர் பிரியாணியானது உளுந்தூர்பேட்டையிலிருக்கிற மிஸ்டர் நாயாருக்கு போணும்னு விதி இருந்தாக்கா - அது கிடைக்காம போகாது !" என்பது அந்தப் பொன்மொழிகளில் ஒன்றல்லவா ? அதன் நிஜத்தன்மையை கடந்த 10 தினங்களில் இந்த ஆந்தையன் உணர்ந்து வர்றான் ! 

இந்தப் பொன்மொழிப் புரிதலின் நதிமூலம் கிட்டத்தட்ட ஆறேழு ஆண்டுகளுக்கு முந்தையது ! பிரான்க்கோ-பெல்ஜிய காமிக்ஸ் சாகரத்தின் ஒரு Alltime Top 10-க்குள் இடம்பிடிக்கக்கூடிய தொடர் தான் கேப்டன் டைகரின் (ஒரிஜினல்) தொடர் என்பதை நாம் மட்டுமல்ல - இந்த உலகமே அறியும் ! அத்தனை அசாத்திய உச்சத்தினை கண்ணில் காட்டிய ஒரிஜினல் படைப்பாளிகள் இயற்கை எய்திய பிற்பாடு - ஒரு வெற்றிடம் உருவானதை மறுப்பதற்கில்லை ! சக்கை போடு போட்டு வந்த ஒரு நாயகனை எந்தவொரு பதிப்பகமும் அம்போவென மறந்து விடாதென்பதால் - புதுப் புது creative டீம்களோடு 'தங்கத் தலைவனுக்கு' புதுசாய் ஒரு ஜென்மம் தந்திட முனைந்தனர் - with mixed results ! புதுசாய் ஆட வரும் ஒரு பிள்ளையாண்டனை ஒரு சராசரியான ஆட்டக்காரரோடு ஒப்பிட்டால் தப்பில்லை ; ஆனால் ஒப்பீடுகள் சச்சின் டெண்டுல்கருடன் செய்ய நேரிட்டால், யாராய் இருந்தாலுமே டப்பா டான்ஸ் ஆடத்தானே செய்யும் ?! நடந்ததும் அதுவே ! அதிலும் அந்த 'இளம் டைகர்' தனித்தடத்தினை 1975 to 2015 என்ற முப்பதாண்டு காலகட்டத்தில் வெவ்வேறு கதாசிரியர் / ஓவியர்களைக் கொண்டு 21 ஆல்பங்களுடன் பயணிக்கச் செய்யும்  முனைப்பில் ரொம்பவே தடுமாறியிருந்தனர் ! நாமும் தொடரினை ஆரவாரமாய் ஆரம்பித்து விட்டு, ஆல்பம் நம்பர் ஒன்பதோடு தள்ளாடி நின்று விட்டிருந்தோம் ! 2014-ல் "அட்லாண்டாவில் ஆக்ரோஷம்" டபுள் ஆல்பம் தான் இத்தொடரினில் நாம் வெளியிட்டிருந்த கடைசி ஆல்பம் ! அந்த 'வடக்கு vs தெற்கு' என்ற உள்நோட்டு யுத்தப் பின்னணியிலேயே கதை விடாப்பிடியாய் பயணித்ததில் நீங்களும் சரி, நாங்களும் சரி அடைந்த அயர்ச்சியினில் இளம் த.த.க்கு ஒரு பிரேக் தந்திட எண்ணியதில் no secrets ! ஆனால் அந்த பிரேக் கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு நீடித்திடுமென்று அன்றைக்கு நான் சத்தியமாய் யூகித்திருக்கவில்லை தான் ! Maybe ஓரிரு ஆண்டுகளுக்குப் பிற்பாடாய் வண்டி மறுக்கா புறப்பட்டு விடும் என்றே நம்பியிருந்தேன் ! ஆனால் தொடர்ந்த பொழுதுகளில் த.த.வின் "மின்னும் மரணம்" ; "இரத்தக் கோட்டை" ; "தோட்டா தலைநகரம்" போன்ற க்ளாஸிக் மறுபதிப்புகளில் நாம் பிஸியாகிட, அந்த மும்முரத்தில் கொஞ்ச காலம் ஓடியது ! அப்பாலிக்கா "என் பெயர் டைகர்" & மார்ஷல் டைகர் தொடர்களுக்குள் U-டர்ன் அடிப்பதில் கைப்புள்ள வடிவேலு ரேஞ்சுக்கு என் பச்சைச் சொக்காயெல்லாம் கந்தலாகிட்டதிலும் ஜாலியாய் பொழுது போச்சு ! அந்தப் பின்னணியில் மறுக்கா இளம் டைகர் தொடரினுள் புகுந்திட 'தம்' சுத்தமாய் இருந்திருக்கவில்லை தான் ! பற்றாக்குறைக்கு நமது பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளர் மேடமும் தொடரின் அடுத்த சில ஆல்பங்களைப் படித்துப் பார்த்து விட்டு "ப்ச்" என்று உதட்டைப் பிதுக்கியிருக்க - ஓசையின்றி 'த.த.வுக்கு ஒய்வு தந்திருந்தோம் ! 

கொஞ்ச காலம் கழித்து "தனித்தடத்திலாவது ; only for முன்பதிவுஸ்" என்று வெளியிடலாமே ? என்ற கோரிக்கை வலுப்பெற்ற நாளில் - "ரைட்டு...முயற்சிப்போம் !" என்றபடிக்கே மொழிபெயர்ப்பாளர் மேடமை 'தம்' கட்டி எழுதச் செய்தோம் ! அவருமே கணிசமான நேரம் எடுத்துக் கொண்டாலும், 4 அத்தியாயங்களையும் கத்தையாக முடித்துத் தந்துவிட்டார் ! அதை தமிழாக்கம் செய்திட அப்டிக்கா கருணையானந்தம் அங்கிளுக்கு பார்சல் பண்ணி அனுப்பின இரண்டாவது தினமே, நம் கதவைத் தட்டிக்கொண்டு கூரியர் ரிட்டன் வந்திருந்தது ! 'இல்லேப்பா...கதை ரொம்ப நீளமா போகுது ; செரியா புரியவும் மாட்டேங்குது ! எனக்கு இது தேறாது !" என்று சொல்லிவிட, மலங்க மலங்க முழித்தபடிக்கே அந்த 184 பக்க குவியலோடு அமர்ந்திருந்தேன் ! "ஆங்...நம்மளே எழுதிப்புட வேண்டியது தான் !!" என்றபடிக்கே இங்கிலீஷ் ஸ்க்ரிப்ட்டை தூக்கினால் - சுத்தமாய் ரெண்டு கிலோ தேறக்கூடிய அந்தக் காகிதக்கத்தை கொடூரமாய் முறைப்பது போலிருந்தது ! 

அடிக்கடி நான் சொல்லியுள்ள விஷயம் தான் இது : கதையோட்டத்தில் ட்விஸ்ட்களும், மொழிமாற்றத்தில் பல்ட்டிகளுக்கான அவசியங்களையும் கொண்டிருக்கும் கதைகள் - எப்போதுமே பணிசெய்திட சுவாரஸ்யமானவைகள் - at least என்னளவிற்கு ! ஆனால் நேர்கோட்டுக் கதைகள் ; routine கதைகளுக்குள் என்னை இறக்கி விட்டால், கொரில்லா செல்லுக்குள் அடைக்கப்பட்ட நாய் ஷேகர் போல டான்ஸ் ஆடித் தள்ளிவிடுவேன் ! So ஸ்பஷ்டமாய்த் தெரிந்தது - இந்த மொழிபெயர்ப்புப் பணி எனக்கு சுகப்படவே செய்யாத ஒன்றென்று ! என்ன செய்வதென்று கையைப் பிசைந்து கொண்டே முழித்த வேளையில் தான் "முன்பதிவில் சுரத்தே நஹி சார் ; மொத்தமே முப்பதோ என்னவோ புக்கிங்ஸ் தான் வந்துள்ளன !" என்ற சேதி காதுக்கு வந்தது ! ஒரு புராஜெக்ட் சொதப்பியதைக் கண்டு நான் உள்ளூர நிம்மதிப் பெருமூச்சு விட்டது அன்றைக்குத் தான் ! So கண்ணைக் கசக்கியபடியே உங்களிடம் வந்து, புக்கிங் சொதப்பலின் பின்னணியினைச் சொல்லி விட்டு கழன்று கொண்ட போது...."ஷப்பா...கிரேட் யெஸ்கேப் !" என்று உள்ளுக்குள் ஒலிப்பது புரிந்தது ! 

இதெல்லாம் அரங்கேறி வருடங்கள் கொஞ்சம் உருண்டோடியான பின்னே - 'த.த.' முயற்சிக்கலாமே ? என்ற கோரிக்கை மறுபடியும் வலுப்பெற -  "தமிழாக்கம் செய்ய ஆளில்லை தெய்வங்களா ; எச்சூஸ் ப்ளீஸ் !" என்று இம்முறை கைகளைத் தூக்கி சரண்டராகியிருந்தேன் ! "நான் எழுதித் தரேன் சாரே !!" என்றொரு குரல் ஒலிக்க, "யாரு...யாரு..யாரந்த ஆபத்பாந்தவன் ?" என்று சுற்றுமுற்றும் பார்த்தால், அசலூரில்லே, அசல்நாட்டிலிருக்கும் நம்மள் கி ஷெரீப்ஜி தான் கைதூக்கி நிற்பது புரிந்தது ! அவர்பாட்டுக்கு மனசு மாறி ரிவர்ஸ் கியரை போட்டுப்புடக்கூடாதே என்று 'பச்சக்' என்று துண்டை தோளில் போட்டு லாக் பண்ணிவிட்டிருந்தோம் ! And சூட்டோடு சூடாய் 2023 அட்டவணையிலும் "The தளபதி ஸ்பெஷல்" என்ற அறிவிப்பை ரெகுலர் தடத்திலேயே போட்டும் விட்டோம் !

கையில் இருந்த, கையால் எழுதப்பட்ட ஸ்கிரிப்ட் முழுசையும் நம்மாட்களைக் கொண்டு ஸ்கேன் செய்யச் செய்து ; படங்களையும் மெகா பைல்களாக இல்லாது compress செய்யச் சொல்லி பாகம் பாகமாய் அமெரிக்காவுக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைத்தோம் ! முதல் பாகம் ஈ.வி.ரவுண்டு பன் சாப்பிடும் வேகத்தில் செம வேகமாய் எழுதி வந்தது ; ரெண்டாவது பாகம், பொழுது சாயத் துவங்கும் சமயத்தில் தலீவர் கொட்டாவி விடும் ஸ்பீடுக்கு வந்தது ; பாகங்கள் மூன்றும், நான்கும் - தலீவரின் வேப்பிலைப் போராட்டத்தின்  வேகத்திலேயே வந்தன ! But எனக்கோ இம்மி கூட அதில் சிக்கலிருக்கவில்லை ! இதழினை நாம் அறிவித்திருந்தது நவம்பர் 2023-க்குத் தான் & எங்களது பக்கப் பரிமாற்றங்களெல்லாம் அரங்கேறியது கணிசமான மாதங்களுக்கு முன்பாகவே ! So அவரது அலுவலக / சமையலகப் பணிகளுக்குக்  குந்தகங்களின்றி, ரிலாக்ஸாக எழுதி அனுப்பிட வேண்டி எவ்வித பிரஷரும் போடவில்லை ! And பணியின் கடுமை குறித்து எனக்குக் கிஞ்சித்தும் ஐயங்களிருக்கவில்லை என்பதால் அவரை தொந்தரவு செய்ய மனம் ஒப்பவுமில்லை !

"ரைட்டு...முன்னக்கூடி எழுதி வந்திருச்சு ; கையிலே கதைக்கான கோப்புகளும் ரெடியாக உள்ளன ; முன்கூட்டியே DTP முடிச்சு ; புக்கையும் நம்மள் சீக்கிரமே முடிக்கிறான்" என்று சொல்லிக்கொண்டேன் ! நம்மாட்கள் DTP வேலைகளை போட்டுத் தாக்கி மூன்றே வாரங்களில் முழுசையும் குவித்து விட, பிழைதிருத்தம் பார்ப்பதில் நமக்கு உதவிக் கொண்டிருக்கும் 2 நண்பர்களுக்கு பக்கங்களை அனுப்பி வைத்தோம் ! நான்கு பாகங்களையும் இருவருமே ரெண்டு தபா பார்த்து முடிக்க, "கரெக்ஷன்லாம் போட்டாச்சு அண்ணாச்சி ; பிரிண்டிங்குக்கு ரெடி பண்ணிடலாமா ?" என்று மைதீன் வினவினான் ! அம்மா இயற்கையோடு கலந்திருந்த வேளை அது என்பதால்,  இம்மாம் நீள கதைக்குள் முழுசாய் புகுந்து எடிட்டிங் செய்யும் 'தம்'மெல்லாம் எனக்கிருக்காதென்று சரியாகவே யூகித்திருந்தான் ! ஒரு கணம் யோசித்தேன் - "சரி...form போட ஆரம்பிக்கச் சொல்லு மைதீன் ; எழுதினதும் நம்மாளுங்கதான்...கரெக்ஷன் பாத்திருக்கதும் நம்மாட்கள் தான் ! பெருசா ஏதும் நோண்ட தேவை இருக்காது...சட்டுன்னு பிரின்டிங் முடிச்சா நல்லது தான் " என்று சொல்லிவிட்டு வந்திருந்தேன் ! உள்ளுக்குள் ஒரு சன்னமான நிம்மதியும் இருந்தது - காலமாய் என்னை மிரட்டிக் கொண்டிருந்ததொரு சிக்கலான பணியினை நண்பரின் சகாயத்தில் இம்மி நோவு கூட இன்றி முடித்து விட்டோமே !! என்று ! ஆனால் ராவில் மோட்டைப் பார்த்துக் கொண்டு படுத்துக் கிடந்த வேளையில் மனசு கேட்கவில்லை ; ஒருக்கா மேலோட்டமாய் வாசிச்சு மட்டும் விட்டுப்புடுவோம் என்று தீர்மானித்தேன் ! காலையில் - "மொத பாகத்தை மட்டும் கொண்டு வா மைதீன்..லைட்டா பாத்திட்டு தந்திடறேன் !" என்று சொல்ல, கொஞ்ச நேரத்தில் 46 பக்கங்கள் என் கைகளில் இருந்தன ! இங்கே லைட்டா scroll செய்து மேலே போய், அந்த "சந்தானப் பொன்மொழியினை" மட்டும் ஒருக்கா வாசியுங்களேன் folks !!  

டைகர் கதைகளில் என்றைக்குமே படங்களும் அதிகம் ; வசனங்களும் அதிகம் ! மின்னும் மரணம் 18 பாகங்களும் கொண்ட முழுக்கதையிலெல்லாம் உள்ள டயலாக் பலூன்களை எண்ணினாலே கிறுக்குப் பிடித்துவிடும் தான் ! And இங்கேயும் அதனில் இம்மியும் மாற்றங்கள் இருக்கவில்லை என்பதை துவக்கப் பக்கங்களே நினைவூட்டின ! பொறுமையாய் மஹிஜி பணியாற்றியிருப்பதை படித்துக் கொண்டே பக்கங்களை மெதுவாய் புரட்டும் போதே, அந்தப் பரிச்சயமான பட்டாம்பூச்சிக் குத்தாட்டம் வயிற்றுக்குள் அரங்கேறுவதை உணர முடிந்தது ! ஆங்காங்கே சில இடங்களில் கதைப் புரிதலில் சிற்சிறு இடைவெளிகள் இருப்பது போல்பட்டது ! மலரை நான் 'புய்ப்பம்' என்று எழுதலாம் ; நண்பர் "பூ" என்று எழுதலாம் - அதனில் இம்மியும் சிக்கல்கள் லேது ! ஆனால் கதையின் புரிதல்களில் சமரசங்கள் சுகப்படாதென்றுபட்டது ! அதிலும் ரொம்பவே பிரயாசைகளுக்குப் பின்பாய் மறுக்கா ஸ்டார்ட் ஆகியிருக்கும் இந்த டைகர் எஞ்சினுக்கு, எனது சோம்பலால் எவ்வித சிறு இடர்களும் இருந்திடலாகாதே என்று நெருட ஆரம்பித்தது ! 

"இங்கிலீஷ் ஸ்கிரிப்ட் இருந்தா அதையும் எடுத்திட்டு வாப்பா...!" என்று மைதீனுக்கு போன் செய்த போதே அவனும் புரிந்து கொண்டான் - 'வேதாளம் முருங்கை மரம் ஏறிப்புடிச்சி ; இந்த மண்டகப்படி இனி அடுத்த 10 நாட்களுக்காவது நீடிக்கும்" என்று ! பாக்கியிருந்த 3 பாகங்களையுமே மொத்தமாய் தூக்கிக் கொண்டு வந்து ஒப்படைத்துவிட்டான் !  வேறு வழியின்றி முழுமூச்சாய் உள்ளுக்குள் புகுந்த போது தான் நண்பரின் பணியின் பரிமாணம் முழுசுமாய்ப் புரிந்தது ! For the sheer length of the dialogues - இந்த 184 பக்கங்களுக்குப் பேனா பிடிப்பதென்பது ஒரு 250 பக்க நார்மலான கதைக்கு சமானம் என்பேன் ! And பொதுவாக இத்தனை பெரிய கதையினில் பணியாற்றும் போது ஒரு சீரான flow கிடைப்பது அரிதென்பது எனக்கு அனுபவத்தில் தெரியும். ஒரு தெளிவான மூடில் இருக்கும் போது வரிகளில் அந்தத் தெளிவு பிரதிபலிப்பதுண்டு ! அதே சமயம் வூட்டிலே பூரிக்கட்டைகள் சந்திராயன்களாய் உருமாற்றம் கண்டிடும் நாட்களில் - பேனாவுமே தடுமாறுவதுண்டு ! So நண்பரின்  ஐந்தாறு மாத உழைப்பெனும் போது, அதனில் சில  ups & downs இருப்பது தவிர்க்க இயலா இடர் என்பது புரிந்தது ! ஆங்காங்கே பட்டி-டிங்கரிங் என்று துவங்கிய எனது படலம், திருத்தங்கள், கொஞ்சமாய் மாற்றி எழுதல், அப்பாலிக்கா மறுக்கா proof reading என்று கடந்த 10 நாட்களாய் தொடர்ந்து வருகிறது & இன்றைக்குத் தான் பாகம் 3-க்கு சுபம் போட முடிந்துள்ளது ! எஞ்சியிருக்கும் 44 பக்கங்களை தக்கி-முக்கி இந்த ஞாயிறுக்குள் முடித்து விட்டால் - நாகூர் பிரியாணியை இந்த சிவகாசி ஆந்தையன் குட்டிக்கரணம் அடித்து முயன்றாலுமே தவிர்க்க வழியே நஹி என்பது மெய்யாகியிருக்கும் ! ஜெய் சந்தான பாஹுபலி !

And கதைக்குள் புகுந்து பணியாற்றிய போது தான் புரிந்தது - இளம் த.த.வை இத்தினி காலம் பரணில் பாய்போட்டுப் படுக்கச் செய்தது பிசகென்று !! ஒரிஜினல் கதாசிரியரின் படைப்புகளோடு ஒப்பீடு செய்யும் தவறை நானுமே செய்திருப்பது மண்டைக்கு உரைக்கிறது ! ஒரு நார்மலான கௌபாய் சாகசமாக மாத்திரமே பார்த்திருப்போமெனில் இந்தக் கதைகள் எப்போதோ கரை சேர்ந்திருக்கும் என்பது obvious ! இப்போவுமே மஹிஜி துணிந்து தண்ணிக்குள் இறங்கியிருக்காவிடின், நானாக இறங்கியிருக்கவும் மாட்டேன் & காலத்துக்கு இளம் டைகர் பரண்வாசியாகவே தொடர்ந்திருப்பார் ! So இந்த முயற்சிக்கொரு துவக்கம் தந்தமைக்கும், இயன்ற best-ஐ தந்துள்ளமைக்கும் thanks a ton மஹிஜி ! இதழ் வெளியாகி நண்பர்களின் கைகளில் தவழும் வேளைக்கே உங்களாலும் பார்க்க முடியாதென்பது ஒரு சிறு நெருடல் தான் - ஆனால் இங்கும், க்ரூப்களிலும் அரங்கேறப் போகும் அலசல்களை எனக்கு முன்பாய் நீங்கள் பார்த்து விடுவீர்களென்பது உறுதி !  

இதோ - அட்டைப்படம் + உட்பக்க previews :
அப்புறம் ஓவிய ஆர்வல அண்ணாஸ் : முன்னும், பின்னும் ஒரிஜினல் ஓவியங்களே ! கலரிங் மாத்திரமே மாற்றியுள்ளோம் ! So ப்ளீஸ் - கொஞ்சம் பாத்து பாஸ் மார்க் போட்டு விடுங்க ! 

So ரொம்ப ரொம்ப காலம் கழித்து ஒரு 'தல vs தளபதி' திருவிழாவுக்கு களம் தயாராகி வருகிறது ! In fact இது "இளம் தல vs இளம் தளபதி" !! தளபதியுடனான பயணம் நாளைக்குள் முடிந்திடும் பட்சத்தில் 'தல' தெறிக்க விடும் சிக்ஸர் ஸ்பெஷல் பக்கமாய் பார்வையினை ஓட விட வேணும் ! And அங்குமே நம்ம ஷெரிஃப்காருவின் பங்களிப்பு வேறொரு விதத்தில் உள்ளது ! அது பற்றி 'சிக்ஸர் ஸ்பெஷல்' பிரிவியூவின் போது !! Bye guys !! அட்டவணைப் பதிவுக்கு ஓக்கே ஓக்க வாரம் தான் என்பதால் டைப்படிக்க இப்போதே விரல்களுக்கு உரம் ஏற்றிக் கொள்ளக்கிளம்புகிறேன் !  See you around ! Have a great long weekend !!

முன்கூட்டிய சரஸ்வதி பூஜை & விஜயதசமி நன்னாள் வாழ்த்துக்கள் ! அக்டோபர் இதழ்களை இன்னமும் வாசிக்க இயன்றிருக்கா நண்பர்கள் இந்த விடுமுறைகளை பயன்படுத்திக் கொள்ளலாமே ப்ளீஸ் ? 

And before I forget - ஒரு அவசரக் கோரிக்கையும் !! இளம் டைகர் தொடரின் முந்தைய பாகம் வெளியாகி கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஆகப் போவதால் முன்கதையினை நினைவுபடுத்திக் கொள்ள ஒரு மினி-கதைச்சுருக்கம் தேவை ! ஒற்றைப் பக்கத்துக்கு மிகாமல் crisp ஆக யாரேனும் எழுதிக் கொடுத்தால் - சிலை வைக்கிறோமோ இல்லையோ ; அரை டஜன் ரவுண்டு பன்களை கூரியரில் அனுப்பிடுவோம் !! Please guys ? இந்த விடுமுறைகளின் போதே இயன்றால் சிறப்பு !