Powered By Blogger

Saturday, April 29, 2023

ஒரு நெடும் வாரயிறுதியில்....

 நண்பர்களே,

வணக்கம். 'வந்தே பாரத்' ரயில் பெட்டிகளாட்டம் பணிகள் ஒன்றன் பின் ஒன்றாய்ப் படையெடுக்க - இந்த வாரமானது புலர்ந்ததும் தெரியக் காணோம் ; முடிவுக்கு வந்திருப்பதும் புரியக் காணோம் !! For that matter, ஒரு மாதத்துப் பணிகள் நிறைவுறுவது எப்போது ? ; அடுத்த மாதத்தின் வேலைகள் துவங்கிடுவது எப்போதென்றே தெரியாததொரு நிலையில் "உயிரைத் தேடி" கதையில் ஆங்காகே வலம் வரும் அந்த ஸோம்பிக்களைப் போலவே சுற்றி வருகின்றேன் ! பற்றாக்குறைக்கு இதுவொரு நெடும் வாரயிறுதி எனும் போது - காத்துள்ள மே தினத் திங்களின் ஆன்லைன் மேளாவுக்கும், அன்றைக்கான ஜாலி பதிவுக்கும் தயார் ஆகிக்கின வேண்டி கீது ! படா டமாஷ் தான் வாத்தியாரே ! இதன் மத்தியில் மே மாத புக்ஸ் மூன்றும் ரெடியாகி எனது மேஜையில் 'தேமே' என உறங்கிக் கொண்டிருக்கின்றன ! நல்ல காலத்துக்கு மூன்றிலுமே எனக்கான பணிகள் மித ரகமே என்பதால் அடுத்த சில நாட்களில் I should be able to breeze through them - hopefully !

And இப்போவே சொல்லிக்கிறேன் guys - மே மாதத்தின் ரெகுலர் இதழ்கள் உங்களை மே 10 தேதிவாக்கிலேயே வந்து சேரும் ! பைண்டிங்கில் தொடர்ந்து பணிமழை பொழியச் செய்துள்ளோம் எனும் போது , அவரும் கொஞ்சம் மூச்சு விட அவகாசம் கோரியுள்ளார் ! So "ஏப்ரலில் மே உண்டா நைனா ?" என்ற கவித்துவக் கேள்விகள் வாணாமே - ப்ளீஸ் ? ஆன்லைன் மேளாவின் புக்ஸ் despatch விடுமுறை முடிந்த மறுநாள் துவங்கிடும் என்பதுமே இங்கே கொசுறுச் சேதி ; தொடர்ந்து இந்த வாரம் முழுக்கச் சாத்தி வந்து கொண்டிருக்கும் மதிய / மாலை மழைகள் பைண்டிங் வேலைகளுக்கு செம இடையூறாகி வருகின்றன ! இதோ, இந்தப் பதிவினை டைப்பும் இந்த வேளையில் கூட வர்ண பகவான் வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார் ! கோடையில் வருண பகவானின் கொடையானது கொஞ்சமே கொஞ்சமாய் தாமதமாகிடும் பட்சத்தில், ஹார்ட் கவர் இதழ்கள் நன்றாகக் காய்ந்து விடவும், உங்களை எட்டிப்பிடித்திடும் வேளைகளில் கேக் டப்பிக்களைப் போல 'ஜம்'மென்று இருக்கவும் உதவிடும் ! Fingers crossed ! 

"மே 1 ஒரு நாளுக்கான ஆன்லைன் மேளா நீட்டிப்புக்கோசரம் புச்சா பொஸ்தவம் ஏதாச்சும் இல்லீங்களா ?" என்ற வினவல்களும் ஆங்காங்கே கண்ணில் படாதில்லை தான் ! ஏற்கனவே தயார் செய்திருக்கும் "பரபர 10" க்கே நாக்கு, மூக்கு, முழியாங்கண் என்ற சகல அவயங்களும் திசைக்கு ஒன்றாய்த் தொங்கி நிற்க, இது போதாதென இன்னும் புதுசாய் இழுத்து விட்டால், நம்மாட்கள் சொல்லாமல் கொள்ளாமல் சந்நியாசம் வாங்கிப்புடுவாங்க ! So ஜாலி பதிவைக் கொண்டு அந்த விடுமுறை நாளை அஜீஸ் பண்ணிக்கோங்க guys ! And இந்த நொடியில் இங்கொரு அன்பின் அடையாளத்தினை பகிர்ந்திடாது இருக்க இயலவில்லை ! சென்னையைச் சார்ந்த நண்பர் ; காமிக்ஸை செமத்தியாக லவ்வுபவர் - ஆன்லைன் மேளாவின் பொருட்டு நம்மாட்கள் திணற திணறப் பணியாற்றியுள்ளதற்குத் தனது பாராட்டினைத் தெரிவிக்கும் விதமாய், கிருஷ்ணா ஸ்வீட்சிலிருந்து மிரளச் செய்யும் தொகைக்கான இனிப்புகளையும், காரங்களையும் வாங்கி கூரியரில் அனுப்பியுள்ளார் ! நம் வீட்டுக்கு வாங்கவே நிர்மலா சீதாராமன் மேடம் ரேஞ்சுக்கு யோசித்து பட்ஜெட் போட அவசியமாகிடும் இந்நாட்களில், நண்பரின் இந்தப் பெரிய மனசு மலைக்கச் செய்கிறது ! டீம் சார்பில் பதினோறாயிரம் நன்றிகள் சார் !  இத்தகைய அசாத்தியங்களெல்லாம் நம்மூர்களின் வெகுஜனப்  பத்திரிகைகளின் எடிட்டர்களுக்கு கூட அனுபவிக்கக் கிடைக்குமா ? என்ற கேள்வியே என்னுள் இந்த நொடியில் ஓடிடுகிறது ! Truly blessed !

ரைட்டு...மே புலர சொற்ப இடைவெளியே உள்ள தருணத்தினில் அவற்றின் previews-க்குள் நுழையலாமுங்களா ? 

To start off - மே மாதத்தின் பிரதம நாயகர் நமது இரவுக் கழுகாரே தான் ! வெள்ளி முடியாரும் உடனிருக்க, பரந்த புல்வெளிகளில் ஒரு காதல் யுத்தத்தில் பஞ்சாயத்துப் பண்ணும் பொறுப்பேற்கிறார்கள் - தெறிக்கும் ஆக்ஷனுடன் ! இது உருவாக்கப்பட்டதே கலரில் என்பதால், செம அழகான வர்ணங்களில் பக்கங்கள் மிளிர்கின்றன ! எனது ஞாபகம் சரியாக இருக்கும் பட்சத்தில் இந்த ஆல்பம் பற்றி நாம் முதலில் பேசியது 2021-ன் (இரண்டாம்) லாக்டௌன் சமயத்தில் ! "தினத்துக்குமொரு பதிவு" என்று ஏதேதோ லூட்டியடித்த அந்த நாட்களின் போது shortlist செய்யப்பட கதை இது ; கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்குப் பின்பாய் வெளிச்சத்தைப் பார்த்திடவுள்ளது !  எங்கோ வாசித்த நினைவுள்ளது - "கொரியன் சினிமாக்கள் அப்படியே நமது சென்டிமென்ட்ஸ் ; நமது உணர்வுகளைப் பிரதிபலிக்கும் விதமிருப்பதால் தான் நம்மாட்கள் அங்குள்ள சீரியல்களை, திரைப்படங்களை inspiration ஆக அடிக்கடி எடுத்துக் கொள்கின்றனர்" என்று ! Maybe டெக்சின் உலகமுமே பல விதங்களில் நம்ம கோலிவுட் படைப்பாளிகளுக்கான inspiration ஆக இருந்திடுமோ - என்னமோ ; சூப்பராய் நாலு பாட்டு, ஐட்டம் டான்ஸ் என்று மட்டும்  இக்கதையுடன் சேர்த்து ரெடி பண்ணினால், சில்வர் ஜூப்ளி confirmed ! இதோ - இந்த கலக்கல் கலரிலான ஆல்பத்தின் preview : 

ஒரிஜினல் அட்டைப்படமே ; சின்னதான வர்ண மெருகூட்டலோடு ! And அந்த எழுத்துரு - உபயம் நண்பர் ஜெகத் !

And புதியதொரு ஓவிய பாணியில் உட்பக்கங்கள் செம தெளிவாய் இருப்பது, தெளிவான இந்தக் கதையோட்டத்துக்கு உரம் சேர்ப்பதாய் நினைத்தேன் ! இதோ - பாருங்களேன் :



So கண்களுக்கு இதமானதொரு 'தல' சாகசம் உங்களுக்கு வெயிட்டிங் ! 

Moving on, மே மாதத்து புக் # 2 கூட ஒரு வன்மேற்கின் ரகளை தான் ! ஆனால் இம்முறையோ - ரொம்பவே அழகான பாணியில், வன்மேற்கின் யதார்த்த முகத்தை அங்கே குடிபெயர ஐரோப்பாவிலிருந்து புலம்பெயர்ந்திடும் ஒரு குடும்பத்தின் பயணத்தோடு சொல்லியுள்ளனர் ! வன்மேற்கின் அத்தியாயம் - 1 என்ற tagline சகிதம் வரக்காத்துள்ள இந்தத் தொடரானது இத்தாலியில் செம popular ! இங்கே நம் மத்தியிலும் இதற்கு அழகானதொரு வரவேற்பு கிட்டினால் இது நம் மத்தியில் ஒரு நிரந்தரமாகிடக் கூடும் என்பேன் ! இதோ - ஒரிஜினல் அட்டைப்படமும், உட்பக்க பிரிவியூவும் :


மொழிபெயர்ப்பு நமது கருணையானந்தம் அவர்கள் என்பது அந்த பிரிவியூ பக்க வாசிப்பிலேயே புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் ! க்ளாஸிக் கதைக்கு ஏற்ற க்ளாஸிக் பாணி !

மே மாதத்தின் ஒரே black & வைட் இதழாக ஆஜராகவுள்ளது நமது V காமிக்சின் "தப்புத் தப்பாய் ஒரு தப்பு !" ஏஜெண்ட் ராபினின் அந்த 2.0 அவதார் தொடர்ந்திட, செம crisp ஆக இந்த இரண்டாம் சாகசமும் அமைந்துள்ளது ! மார்வின் மற்றும் முழு டீமும் ஆஜராகிட, நியூயார்க்கின் குற்ற முகத்தினை ராபினோடு பார்த்திடக் காத்திருக்கிறோம் ! As always மின்னலாய் பறக்கவுள்ளதொரு வாசிப்பை வழங்க V வெயிட்டிங் ! இதோ - yet another ஒரிஜினல் அட்டைப்படத்துடனான ஆக்கம் : 



So காத்துள்ளது ஒரு செம விறுவிறுப்பான மாதம் guys ! அவற்றின் பணிகளை நிறைவு செய்திடப் புறப்படும் கையோடு சின்னச் சின்னதாய் சில updates :

1 .தானைத் தலைவர் இங்கிலாந்தில் மறுக்கா பட்டையைக் கிளப்பி வருகிறார் போலும் - "விண்வெளிப் பிசாசு" நெடும் ஜாகஜம் மறுபதிப்புக் கண்டுள்ளது ! நமது டாக்டர் சாரிடம்  ஒரிஜினல் மொழிபெயர்ப்பினை மேம்படுத்தக் கோரி விட்டு இதனை களமிறக்கிப்புடலாமா கவிஞரே ? 


2. தலைவரைப் போலவே இரும்புக்கையாருமே அங்கே doing well போலும் ! வரிசையாய் கதைகளைத் தேர்வு செய்து, அட்வொர்க் மேம்படுத்தல் செய்து வெளியிட்டு வருகிறார்கள் ! சீக்கிரமே "பறக்கும் பிசாசு" & "ஒற்றைக்கண் மர்மம்" வரலாம் போலும் ! 


3.நமது ப்ளூ ஜீன்ஸ் பில்லியனரின் புது சாகசத்தை க்ளைமாக்ஸ் பாகம் இந்தாண்டின் இறுதியில் வெளி வரவுள்ளது ! அதன் மத்தியில் லார்கோவின் திரை அவதார் மறுக்கா  வேகமெடுத்துள்ளது ! "டாலர் ராஜ்ஜியம்" என்ற பெயரில் நாம் வெளியிட்ட ஆல்பத்தின் ஒரிஜினலைத் தழுவி படப்பிடிப்பு பால்கெரியாவில் துவங்கியுள்ளதாம் ! தொடர்ந்து தாய்லாந்திலும், பெல்ஜியத்திலும் ஷூட்டிங் காத்துள்ளதாம் !


4.புதியதொரு ஹாரர் சிறுகதைத் தொடரின் உரிமங்கள் வாங்கிட ரெடியாகி வருகிறோம் ! ஹாரர் உங்களுக்கு ரசிக்குமா guys ? ஒன்றிலிருந்து பத்து வரைக்குமான ஸ்கேலில் மார்க் போடுவதாயின் ஹாரர் ஜானருக்கு உங்களின் மதிப்பெண்கள் என்னவாக இருக்குமோ ?

5.அதே போல, கீழ்க்கண்ட சமீப வரவு நாயகர்களுக்கும் மார்க்ஸ் போட ரெடியா folks ?
  • SODA - ? /10 
  • டேங்கோ - ?/10 
  • ஏஜெண்ட் சிஸ்கோ : ?/10 
😀😎Bye all...திங்களன்று ஜாலியான புதுப்பதிவில் மறுக்கா சந்திப்போமா ? And சின்னதொரு reminder கூட : மே 1-ம் தேதி மாத்திரம் நமது ஆன்லைன் புத்தக மேளா தொடர்ந்திடவுள்ளது !  See you around....have a cool long weekend !

Monday, April 24, 2023

மே = மேளா !

 நண்பர்களே,

வணக்கம். மெய்யாலுமே மிரண்டு கிடக்கின்றோம் - உங்களின் ஆர்வப் பிரவாகத்தினைக் கண்டு !! 2 நாட்களாக வாட்சப்பிலும், போனிலும் நீங்கள் பறக்க விட்டிருக்கும் ஆர்டர்களை சமாளிக்கவே HULK ; ஸ்பைடர்மேன் ; X MEN என்று யாரையாச்சும் ஒத்தாசைக்குக் கூப்பிடலாமா ? என்று யோசித்துக் கொண்டிருந்த நிலையில் - இன்றைக்கு (திங்கள்) காலையில் ஆன்லைன் சைட்டை திறந்தால் phewwwwww !! சுனாமியாய் ஆர்டர்களின் குவியல் அங்கேயும் !! சர்வ நிச்சயமாய் இவற்றை மொத்தமாய் க்ளியர் செய்திட கொஞ்சமாய் அவகாசம் அவசியமாகிடும் guys !! பேக்கிங் பணிகளுக்கென கூடுதலாய் ஆட்களை ஏற்பாடு செய்தும் உள்ளோம் ; so பெண்டிங் உள்ள சில இதழ்கள் பைண்டிங் முடிந்த வந்த கையோடு 'ஏக் தம்'மில் அனுப்பி விடுவோம் !! அது வரைக்கும் நம்மாட்களுக்கு கொஞ்சமாய் மூச்சு விட்டுக் கொள்ள அவகாசம் கோருகிறேன் - ப்ளீஸ் !

And இன்றைக்கும் ஏகமாய் calls ..."ஐயோ ..எங்களுக்கு இந்த ஆன்லைன் மேளா பற்றித் தெரியாதே !!: என்று !! So எதிர்வரும் மே 1-ம் தேதி ஒரு தினத்துக்கு மறுக்கா ஆன்லைன் மேளாவைத் தொடர்ந்திடலாமா guys ? அதே டிஸ்கவுன்ட்ஸ் ; அதே வாய்ப்புகள்....and "இரத்தப் படலம்" புக்ஸ் கூட அதே போல one more time ?

நீங்க ரெடின்னா நாங்களும் ரெடி !! 

P.S : "இரத்தப் படலம்prebooking இயலாது guys ; ஆகையால் இப்போவே துண்டை போட்டு வைக்க வழி லேது ! அன்றைய தினம் பார்த்துக் கொள்ளலாம் ! 

Sunday, April 23, 2023

ஞாயிறையும் தெறிக்க விடலாமா ?

 நண்பர்களே,

வணக்கம். உலக புத்தக தினத்தன்று நமது ஆன்லைன் புத்தக மேளா தெறிக்க விட்டுக் கொண்டிருப்பது செம coincidence என்பேன் ! And ஆன்லைன் மேளாவின் முதல் நாளான நேற்றைக்கு சும்மா பட்டையைக் கிளப்பி விட்டிருக்கிறீர்கள் guys !! மாலை 6 க்கு போனை ஆப் செய்யும் முன்பாய் ஆளுக்கு 100 பேருக்குக் குறையாது பேசியிருப்பார்கள் !! And இன்னும் திறக்கப்படா வாட்சப் மெசேஜ்கள் கிட்டத்தட்ட 150 உள்ளன !! Phew !!!!! ஒரு கோடி நன்றிகள் people !! நேற்றைக்கின் வேகம் இன்றும் தொடர்ந்திடும் பட்சத்தில் அடுத்த ஒரு வாரத்துக்கு நம்மாட்கள் பெண்டு கழற்வது சர்வ நிச்சயம் ! 

And சொன்னது போலவே இன்று focus on இங்கிலீஷ் புக்ஸ் !

*நம்மிடம் கைவசமுள்ள சகல லக்கி லூக் ; தோர்கல் ; ஆஸ்டெரிக்ஸ் & இன்ன பிற இறக்குமதி செய்யப்பட இங்கிலீஷ் இதழ்களுக்கு, இன்றைய ஒரு நாள் மட்டும் 20% டிஸ்கவுண்ட் உண்டு !!

*அதே போல கொஞ்ச காலத்துக்கு முன்பாய் சென்னை புத்தக விழாவினில் நமது ஸ்டாலில் விற்கும் பொருட்டு வாங்கிய கலந்தடித்த இங்கிலீஷ் காமிக்ஸ் இதழ்களும் இன்று விற்பனைக்கு இருந்திடும் ! Agatha Christie ; Gotham Comics (வெறும் 15 ரூ.விலை !!!!) ; Phantom ; Campfire Comics என்ற கலவை அது ! நம்மிடமுள்ள இறக்குமதி செய்யப்பட இங்கிலீஷ் காமிக்ஸ் வாங்கிடும் நண்பர்கள் இவற்றுள் உள்ளவற்றை வாங்கிட இயலும் ! 

Please note : இவற்றை மட்டுமே தனியாக வாங்க வாய்ப்பு நஹி !


*அப்புறம் சமீபமாய் கிட்டங்கியைக் கொஞ்சம் ஒதுக்கிய போது நமது சமீபத்தைய back issues சில தேறின...they will be on sale too !

*அப்பாலிக்கா - வழக்கம் போல இரத்தப் படலம் மறுக்கா விற்பனைக்கு இன்று ஒரு நாள் மாத்திரம் வருகிறது !

$$$$$. 2007-ல் வெளியான black & white தொகுப்பில் 5 பிரதிகள் மட்டும்  விற்பனைக்கு இருக்கும். இதன் ஒரிஜினல் விலை - ரூ.200 ; ஆனால் இன்றைய தினம் அவை ரூ.1000 வீதம் விற்பனை செய்திடவுள்ளோம் - அதன் தொகை முழுவதும் நண்பர் பழனியின் குடும்பத்துக்குப் போய்ச் சேர்ந்திடும் பொருட்டு !

$$$$$.சமீபமாய் வெளியான கலர் தொகுப்புகளில் 2 பிரதிகள் மட்டும் விற்பனைக்கு இருக்கும். And அவை தலா - ரூ.4000 விலைக்கு விற்கப்படும் ; இந்தப் பணமும் மொத்தமாய் பழனியின் குடும்பத்துக்கு !

ரூ.5000 - black & white இதழ்களிலிருந்து 

&ரூ.8000 - கலர் இதழ்களிலிருந்து 

ஆக - Total : Rs.13,000 = நண்பர் பழனியின் ஆதர்ஷ நம்பரிலான தொகை இது ! 


Happy shopping all !! Happy reading too !



Friday, April 21, 2023

பத்துக்குள்ளே நம்பர் ஒண்ணு சொல்லு...!

நண்பர்களே,

வணக்கம். இப்போதெல்லாம் படம் சோபிக்குதோ, இல்லியோ - அதன் டீசர்களும், டிரெய்லர்களும், ஆடியோ லான்ச்களும் ரகளை செய்யத் தவறுவதே இல்லை ! F.M. ரேடியோக்களில் ; டி-வி நிகழ்ச்சிகளில் ; நேரடி லைவ் நிகழ்வுகளில் ; பிரிண்ட் மீடியாவில் என ரவுண்டு கட்டி அடிக்கும் பப்லிசிட்டி exercises,படத்தையே விஞ்சும் entertainment ஆக இருக்கத் துவங்கியுள்ளன !  அந்த பாணியினை நீங்களும் 'பச்சக்' என்று பிடித்துக் கொண்டுள்ளது ஸ்பஷ்டமாய்ப் புரிகிறது - கடந்த சில நாட்களாய் நீங்கள் நடத்தி வரும் கலாய் மேளாக்களில் ! தெறிக்கும் மீம்ஸ் ; அசரடிக்கும் FB க்ரூப் ரகளைகள் ; வாட்சப் ரவுசுகள் என்று நீங்கள் அடித்து வரும் கூத்துக்களை அவ்வப்போது நண்பர்கள் லைட்டாய் பகிரும் போதே சிரித்து மாளலை ; முழுசாய் பார்க்க முடிந்திருந்தால் வேற லேவலாக இருந்திருக்குமென்பது திண்ணம் ! இந்த ஆன்லைன் மேளா எவ்விதம் ஜொலிக்கிறதோ - இல்லையோ ; அதற்கான உங்களின் பில்டப் ரகளைகள் சும்மா தெறி மாஸ் தான் ! And உங்களின் எதிர்பார்ப்புகளின் மீட்டர்கள் LIC கட்டிட உசரத்துக்குக் கன்னா பின்னாவென்று எக்கிக் கொண்டு போகப் போக, இங்கே எனக்கு வயிற்றில் கரைந்த புளியைக் கொண்டு ஒரு கல்யாண விருந்துக்கே புளியோதரை பண்ணியிருக்கலாம் ! 

எல்லாமே ஆரம்பித்தது, வழக்கம் போலவே தான் ! என்றென்றுமே இந்தப் பயணத்தின் வேகத்தையோ, மந்தத்தையோ நிர்ணயிப்பது உங்களின் உற்சாகங்கள் மாத்திரமே என்பது தெரிந்ததே ! நீங்கள் ஒரு high-ல் இருக்க நேர்ந்தால், இங்கே 'ஆட்றா ராமா-தாண்ட்றா ராமா' என ஒரு சட்டியைத் தூக்கிக் கொண்டு நானாகவே குஷியில் குட்டிக்கரணம் போட ஆரம்பித்திருப்பேன் ! அதே சமயம் நீங்கள் ஒரு ஆழ்உறக்க mode-ல் இருந்தால், உங்களை உசுப்பி விட எந்தக் கோவில் மணியை ஒலிக்கச் செய்யலாம் ? என்றோ ; எந்தக் கோமாளி வேஷத்தைக் கட்டிக்கொண்டு உங்களுக்குக் கிச்சு கிச்சு மூட்டலாம் ? என்றோ மகா சிந்தனைக்குள் மூழ்கிடுவேன் ! And சமீப பொழுதுகளில், நாயர் டீ கடையில் 'ஜிலோ'வென்று காற்றாட, புதியதொரு மகா சிந்தனை முளை விட்டது - "ஆன்லைன் மேளா with a bunch of books" என்று ரவுசு விட்டால் என்னவென்று ?! பொதுவாய் கதையை எழுதி விட்டு, அப்புறமாய் வசனங்கள், பன்ச் டயலாக்கள் என்று மெருகூட்டுவது தான் வாடிக்கை ! ஆனால் நமக்குத் தான் சகலத்தையும் குப்பறடிக்கச் செய்வதில் தானே குஷியே ? So அந்த tagline ஒன்றை பந்தாவாய் போட்டாச்சு - "லட்சியம் 1 டஜன் ; நிச்சயம் 3/4 டஜன் " என்று ! And அதன் பின்பாய் அடிக்க ஆரம்பித்த கூத்துக்கள் தான் இந்த மேளாவின் கதையே ! 

Truth to tell - சிறுநகர புத்தக விழாக்களில் வரிசை கட்டும் பள்ளி மாணாக்கரின் சின்ன பட்ஜெட்களுக்கு ஒத்துப் போகக்கூடிய சின்ன புக்ஸ் ரெண்டோ-மூணோ வெளியிட்டுப்புட்டு, அவற்றோடு "உயிரைத் தேடி" கலர் & black & white இதழ்களையும் கோர்த்து விட்டுப்புட்டு, மங்களம் பாடி விடலாம் என்பதே எனது ஆரம்பத்து யோசனையாக இருந்தது ! ஆனால் "I want more emotions" என்று நீங்கள் சொல்வதாய் எனக்கு கபாலத்துக்குள் ஒரு குரல் ஒலித்துக் கொண்டே இருக்க, திட்டமிடல்களும் விசாலமாயின ; டிரவுசர்கள் கிழிபடுவதும் அன்றாடங்களாகின !  

But பட்டாப்பட்டி என்ன பிட்டமே பொத்தலாகி இருந்தாலும், இலக்கைத் தொட்டிருப்போம் தான் - அப்பாவின் எதிர்பாரா சுகவீனப் படலம் மட்டும் குறுக்கிட்டிருக்கா பட்சத்தில் ! கிட்டத்தட்ட ஒரு மாதமாக ஆஸ்பத்திரிகளிலும், கோவில்-குளங்களிலும் பொழுதுகள் கரைந்திருக்க, எத்தனை முயன்றும் பணிகளுக்குத் தேவையான கவனங்களையும், அவகாசங்களையும் தந்திட வழியின்றியே போனது ! ஏற்கனவே கொஞ்ச காலமாகவே அம்மாவின் ஆரோக்கியம் 'ஆஹா-ஓஹோ' ரகத்தில் இல்லை and அப்பாவுமே திடு திடுப்பென முடங்கிப் போயிட, சமாளிக்க ரொம்பவே தடுமாறி வருகிறோம் ! But எது எப்படியாயினும், சக்கரங்கள் சுழன்று கொண்டே இருந்தாக வேணும்....the show must go on....என்ற எண்ணம் மட்டும் தலைக்குள் ஒரு பக்கம் வேரூன்றி நின்றது ! So பல்டிக்களின் எண்ணிக்கையினை சற்றே அதிகரித்ததன் பலனாய் ஆன்லைன் மேளாவிற்கு 10 இதழ்கள் என்பது சாத்தியப்பட்டுள்ளது ! 

இந்த நம்பர் கொஞ்சம் ஜாஸ்தியா ? ரொம்பவே ஜாஸ்தியா ? என்றெல்லாம் எனக்கு இந்த நொடியில் சொல்லத் தெரியவில்லை ; simply becos we are still in the moment ! இன்னமும் ஓரிரு இதழ்கள் இந்த சனிக்கிழமை கூட அச்சில் தான் உள்ளன & சில புக்ஸ் இன்னமும் பைண்டிங்கில் உள்ளன ! ஒட்டு மொத்தமாய் பணிகள் நிறைவுற்று இந்தப் "பரபரக்கும் பத்தும்" டெஸ்பாட்ச்சுக்கு ரெடியாகிட, குறைந்த பட்சமாய் நாலைந்து நாட்கள் எடுக்கக் கூடும் ! So ஏப்ரல் 22 & 23 தேதிகளுக்கென்ற ஆன்லைன் மேளாவின் திட்டமிடலை ஒரு வாரம் பின்னே நகர்த்தினால், கண்ணாலம் கட்டிக்கின பிற்பாடு ஓடிப் போனா மெரி முறையா, சுகுரா இருக்குமே என்ற சபலம் ஸ்டீலின் கவிதை போல தலைவிரித்தாடியது தான் ! ஆனால் "தாலிய 4 நாள் கழிச்சு கூடக் கட்டிக்கிலாம் ; முதல்லே ஓடிப் போற வழியைப் பாக்கலாம் மாமெ ; டெம்போல்லாம் வெயிட்டிங் !" என்ற நியாயஸ்தன் நித்தியானந்தாவின் சிந்தனையே வென்றிட - here we are !! இனி இந்த SUPER 10 என்னென்ன என்பதை பார்க்கலாமா folks ?

# 1 & 2 : சாகாவரம் பெற்றதொரு சாகச இதழ் - in black & white & color : 

"உயிரைத் தேடி" !! நிரம்பவே பரிச்சயமானதொரு பெயர் இது ! In fact எனக்கு இதன் நதிமூலத்துடன் இருந்த அந்நியோன்னியத்தை விடப் பன்மடங்கு அதிக நெருக்கம் உங்களுக்குத் தான் ! Becos இந்த நெடும் கதையானது தினமலர் சிறுவர்மலரில் தொடர்கதையாக வெளிவந்த late '80s-களில் பட்டை போட்ட குதிரையாட்டம், நமது குழும வெளியீடுகள் தவிர்த்த இதர தமிழ் காமிக்ஸ் வெளியீடுகளின் பக்கம் மருந்துக்குக் கூடத் தலை வைத்துப் படுத்ததில்லை நான் ! Of course - இந்தக் கதை பற்றி எனக்குத் தெரிந்திருந்தது தான் ; நாம் கொள்முதல் செய்து கொண்டிருந்த அதே டில்லி ஏஜெண்ட் மூலமாகவே தினமலரும் தருவித்து வந்தனர் என்பதால் டில்லி போகும் தருணங்களில் இந்தக் கதையின் பக்கங்களை பார்க்க முடிந்திருந்தது ! ஆனால் "ஐயே...இது புளிக்கிற பழமாச்சே ?! என்ன இருந்தாலும் நம்ம தானைத் தலைவர் ஸ்பைடரின் கால்தூசுக்கு இது சமமாகுமா ?" என்று எனக்கு நானே சொல்லிக் கொள்வேன் ! நாட்களின் ஓட்டத்தில் இது சுத்தமாய் மறந்தேவும் போயிற்று...ரொம்ப ரொம்ப காலம் பின்னே இதன் pdf தொகுப்பு சுற்றில் இருப்பதாய் நண்பர்கள் சிலர் எனக்குச் சொன்ன வரைக்கும் ! பற்றாக்குறைக்கு, ஈரோட்டு மரத்தடி மீட்டிங்கின் ஏதோவொரு பொழுதில் - "உயிரைத் தேடி" போட நமக்கு சாத்தியமாகுமா ? என்று நண்பர்கள் செம ஆர்வமாய்க் கேட்டதும் ஒரு நினைவூட்டலாகியது ! 

So மூன்றாண்டுகளுக்கு முன்பான அந்த முதல் கொரோனா லாக்டௌன் நாட்களின் சோம்பலானதொரு வேளையில், இதற்கான உரிமைகளை கோரிடும் பணிக்கு பிள்ளையார் சுழி போட்டு வைத்தோம் ! இவற்றின் உரிமைகள் இருந்ததோ Fleetway கதைச்சமுத்திரத்தின் ஒரு சின்னப் பகுதியினை மட்டும் சொந்தம் கொண்டாடிடும் Dan Dare Corporation நிறுவனத்திடம் ! அவர்களிடம் உரிமைகள் மாத்திரமே இருந்தனவே தவிர, டிஜிட்டல் கோப்புகள் இருந்திடவில்லை ; so அவற்றை நாமே ஏற்பாடு செய்து கொள்ள இயன்றிடும் பட்சத்தில், SURVIVAL என்ற பெயர் கொண்ட இந்த நெடும் கதைக்கு உரிமைகள் தந்திடலாம் என்று சொல்லியிருந்தனர் ! கூகுளும், இன்டர்நெட் உலகமும் கரம் கோர்க்கும் போது, நிலாவில் பாட்டி சுடும் வடையைக் கூட வாங்கிட இயலும் நாட்களிவை எனும் போது, இந்தக் கோப்புகளைத் திரட்டுவது அத்தனை பெரிய கம்பு சுற்றும் சாகசமாகவா இருந்திருக்கும் ? - 'லொஜக்' என ஒரு ஸ்பானிஷ் காமிக்ஸ் ஆர்வலக் குழுவின் சேகரிப்பில் மொத்தப் பக்கங்களையும் தேடிப் பிடிக்க சுலபமாய் சாத்தியப்பட்டது ! எண்பதுகளில் இக்கதை ஸ்பானிஷ் மொழியிலும் தொடராக வெளியாகியுள்ளது Superviente என்றதொரு காமிக்ஸ் இதழில் & அங்கேயும் இது செம ஹிட் போலும் ! So ஆர்வமாய் அங்குள்ளதொரு வாசகக் குழுவினர் இதனை பின்னாட்களில் சேகரித்து, தொகுத்து, file-களை க்ளீன் செய்தும் வைத்திருந்திருக்கின்றனர் ! ரொம்ப உயர்தர கோப்புகள் இல்லை தான் என்றாலும், decent தரம் என்பதால் - 'இதை கொண்டே துபாய் வரைக்கும் பயணம் பண்ணிப்புடலாமே !!' என்பது உறுதியானது ! அதன் பின்பாய் உரிமைகளை வாங்கிடுவது சுலபப் பணியாகிட, நமது பீரோவுக்குப் புது வரவாகினர் இந்தக் கதைமாந்தர்கள் ! 

2021-ல் கொரோனா இரண்டாம் சுற்று சுழன்றடித்துக் கொண்டிருக்க, இந்த நெடும் தொடரை எப்போது உள்நுழைக்கலாம் ? என்று தெரியாமல் அந்த 2nd லாக்டௌன் நாளை நான் ஒப்பேற்றிக் கொண்டிருந்த பொழுதினில் எதிர்பாரா ரூபத்தில் இதன் அறிவிப்பு களம்காணும் ஒரு சூழல் பிறந்தது ! So "முன்பதிவுக்கான இதழாய் இதை அறிவிக்கவுள்ளோம் !" என்று மட்டும் அந்த வேளையில் சொல்லி வைத்து விட்டு, இதன் மொழிபெயர்ப்புப் பணிகளுக்குள் புகுந்தோம் ! கொடுமை என்னவென்றால் நம்மிடம் இருந்த சகலமும் ஸ்பானிஷ் மொழிக் கோப்புகள் தான் ; அல்லது தமிழில் தினமலர் வெளியிட்டிருந்த பக்கங்களை pdf ஆக்கி இங்குள்ள ஆர்வலர்கள் வேக வேகமாய்ச் சுற்றில் விட்டிருந்தது மட்டும் தான் - we just had none in English ! So இங்கிலீஷில் வெளியானதொரு தொடரை ஸ்பானிஷ் மொழியிலிருந்து மொழிமாற்றம் செய்யும் கூத்துக்கள் அரங்கேறின ! ஸ்பானிஷ் to ஆங்கில ஸ்கிரிப்ட் ரெடியான பிற்பாடு அதனிலிருந்து தமிழாக்கம் செய்திட ஆள் தேடிய போது கிட்டியவர் தான் திருமதி லாவண்யா ! மேற்கு மண்டலத்தைச் சார்ந்தவர், காமிக்சுக்கு புதியவரே and அந்த இரண்டாம் முழு லாக்டௌன் பொழுதுகளில் நமக்குத் பரிச்சயம் ஆகியிருந்தார் ! இந்த ஆல்பத்திற்குப் பேனா பிடிக்க ஆரம்பிக்கும் முன்பாய் கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்களுக்கு, அவரது குடலின் நீள, அகலங்களை ஆராய்ந்திருப்பேன் ! அவரிடம் ஒரு சிம்பிளான down to earth எழுத்து பாணி இருந்தது தான் ; ஆனால் நமது தேவைகளுக்கேற்ப அதனை finetune செய்திட நிரம்பவே முயற்சிகள் அவசியப்பட்டன ! To her credit - நான் அடிக்கச் செய்த அத்தனை பல்டிக்களையும் துளியும் முகச்சுளிப்பின்றிச் செய்தார் ! So எவ்வித deadline ப்ரெஷருமின்றி எழுதச்  செய்தோம் - ஒவ்வொரு 20 பக்கமும் தயாரான பிற்பாடு எனக்கு ஒப்புதலுக்கு அனுப்பிட வேண்டுமென்ற கண்டிஷனுடன் ! அவர் ஏதோவொரு தேர்வுக்குப் படித்துக் கொண்டும் இருந்த நாட்களவை என்பதால், சாவகாசமாய், கிட்டத்தட்ட 5 மாத அவகாசம் எடுத்துக் கொண்டே எழுதியிருந்தார் ! வழக்கம் போல நான் மேலோட்டமாய்ப் பார்த்துப்புட்டு, புக் வெளியாகும் பொழுதில் மீதத்தைப் பாத்துக்கலாம் என்று அந்த தமிழ் ஸ்கிரிப்ட்டை நமது DTP டீமிடம் தந்து விட்டதோடு மறந்தே போய்விட்டேன் ! 184 பக்க நெடும் கதை....அடுத்த 1 மாதத்துக்குள் டைப்செட் செய்யப்பட்டு என் மேஜைக்குக் குடிபெயர - ஒரு ஓரமாய் உறங்கிக் கொண்டிருக்க அனுமதித்தேன், லாக்டௌன் களேபரங்களின் நடுவே இதனை எங்கே ? எப்போது ? எவ்விதம் நுழைப்பது ? என்பதறியாமல் ! தவிர இந்தக் கதையின் அடித்தளமே ஒரு வைரஸால் நிர்மூலமாகிடும் உலகினில் எஞ்சி நிற்கும் சிறுவர் கும்பலொன்று உயிர் பிழைக்க, சக உயிர்களைத் தேடி ஓடிட முனைவதே ! இங்கு நமது நிஜ உலகினிலோ கொத்துக் கொத்தாய் கொரோனா காவு வாங்கி வந்து கொண்டிருந்த அந்த 2021-ல் இப்படியொரு கதையுடனான புக்கை வெளியிடுவது அத்தனை உசிதமாகாது என்றும் மனசுக்குப்பட்டது ! If you remember, 'கொஞ்ச காலத்துக்காச்சும் அழுகாச்சிக் கதைகளே வாணாமே ?" என்ற கருத்தும் நம் மத்தியில் ஏகோபித்து நிலவிய தருணம் அது ! So 2022 வரைக்கும் நெடும்துயில் தொடர்ந்தது & ஒரு வழியாக ஸாகோர் அறிமுக வண்ண இதழ் + உயிரைத் தேடி black & white பதிப்பு - முன்பதிவுகளுக்கு என்று அறிவிக்கும் வேளையும் புலர்ந்தது ! 

செம விறுவிறுப்பான முன்பதிவுகளைத் தொடர்ந்து ஸாகோர் வெளியாகியதை நாமறிவோம் & அடுத்த மாதத்திலேயே "உயிரைத் தேடி" இதழும் வெளிவந்திருக்க வேண்டும் தான் ! ஆனால் அதற்கு மத்தியில் புதிதாயொரு நிகழ்வு துளிர் விட்டது - உரிமைகளைக் கொண்டிருந்த Dan Dare நிறுவனத்திடமிருந்து ! "உயிரைத் தேடி" இதழை கலரில் வெளியிட உரிமைகள் கோரி உங்க மொழியிலிருந்தே இன்னொரு கோரிக்கை வந்துள்ளது ; நீங்களே ஒரு கலர் பதிப்பையும் திட்டமிட்டாலென்ன ?" என்று வினவியிருந்தனர் ! "கலரில் இதனை வெளியிடலாமே ?" என்ற கோரிக்கையினை ஏற்கனவே இங்கு நீங்களும் அழுத்தமாய் முன்வைத்திருந்தது தெரிந்த சமாச்சாரம் தானே - so "ரைட்டு - கலரிலும் திட்டமிட்டு விடலாம்" என்று அவர்களிடம் சொன்ன கையோடு இங்கே கலரிங் பணிகளுக்குள்ளும் புகுந்திட ரெடியானோம் ! And அதற்கான அறிவிப்பை வெளியிட்ட நொடியே, black & white எடிஷனை தாமதப்படுத்தி கலர் + கருப்பு-வெள்ளை பதிப்புகள் ஏக சமயத்தில் வெளியிடுவதென்று தீர்மானித்தோம் ! Next in line was the coloring process & அங்கே நமக்கு உதவிட முன்வந்தோர் - நண்பர் சென்னை உதயகுமார் (டிஜிட்டல் ஆர்ட்டிஸ்ட் ) + நண்பர் ரபீக் ராஜா ! நண்பர் ரபீக் ஒரு "உயிரைத் தேடி" fanatic என்பது தெரிந்த போதே அவருடன் அவ்வப்போது இது சார்ந்த updates-களைப் பகிர்ந்திடுவேன் & கலரிங் பணிகளின் ஒருங்கிணைப்பை அவர் பார்த்துக் கொள்ள, எடிட்டிங் வேலைகளையுமே அவர் தலையில் கட்ட முயற்சித்தேன் ! But இதனில் காத்திருந்த பணிகள் நிச்சயமாய் மலைக்கச் செய்யும் பரிமாணம் என்பதால் - கலரிங் நிறைவுறும் தருவாயில் நானே கையில் எடுத்துக் கொள்வதெனத் தீர்மானித்தேன்  ! 184 பக்கங்களுக்கு வர்ணமூட்டுவதென்பது மேகி நூடுல்ஸ் போடும் வேலையாக இராதென்பது தெரிந்ததால் - இங்கேயும் எவ்வித deadline பிரெஷர் இருந்திட நாம் இடம்தரவில்லை ! "சென்னைப் புத்தக விழாவுக்கு ரெடி செய்திட இயன்றால் விற்பனை களைகட்டுமே !" என்பது சபலமூட்டியது என்றாலும் அதற்கான வாய்ப்புகள் பூஜ்யத்துக்கும் குறைவு என்பதை அறிந்திருந்தேன் ! So வாயில் பசையைப் போட்டுப்புட்டு - சென்னை விழா இல்லாங்காட்டி என்ன ? - இது ரெடியாகும் சமயத்தில் நாமே ஒரு ஆன்லைன் விழாவை போட்டுத் தாக்கிக் கொள்ள வேண்டியது தானே ? என்று தீர்மானித்தேன் ! And அந்த நொடி தான் இன்று !!  

கலரிங் ஓடிக்கொண்டிருந்த பொழுதினில் எடிட்டிங் பணிகளுக்குள் புகுந்தேன் ; and வழக்கம் போல கிறுகிறுக்கச் செய்து விட்டது ! ஒரு ஸ்கிரிப்ட் மேலோட்ட வாசிப்பில் ஓ.கே.வாகத் தென்படுவதும், உள்ளே இறங்கிப் பணியாற்றிப் பார்க்கும் போது பெண்டை நிமிர்த்துவதும் நமக்குப் புதிதே அல்ல தான் ; ஆனால் இது போலான செம நெடும் கதைகளுக்குள் புகுந்து பட்டி-டிங்கரிங் செய்வதென்பது நாக்கைத் தொங்கச் செய்யும் பணி எனும் போது - கிட்டத்தட்ட இரண்டரை வாரங்களை முழுசாய் சுவாஹா செய்து விட்டது ! மாற்றி எழுதியது ஒரு வண்டி எனில் ; சிறுவர் மலர் தொடரினில் நீங்கள் ரசித்திருந்த continuity கெட்டிடாது பார்த்துக் கொள்ள அவசியப்பட்ட ரிப்பேர் வேலைகள் இன்னொரு வண்டி ! இதையெல்லாம் தலையில் கட்டிப்புட்டிருந்தேன் என்றால் அலுவலகப் பணி நிமித்தம் அமெரிக்கா போயிருந்த நண்பர் ரபீக் அக்கடயே செட்டில் ஆகியிருப்பார் என்பது உறுதி ! சரி, ஒரு இந்தியக் குடிமகனை அநியாயமாய் நாடு கடத்திய பாவம் நமக்கு வாணாமே என்ற மஹா தயாள சிந்தனையுடன் எடிட்டிங் பணிகளை நானே ஒரு மாதிரியாய் செய்து முடித்திருந்த தருணத்தினில் கலரிங் முடிந்த கோப்புகளும் நம்மிடம் வந்து சேர்ந்திருந்தன ! And அங்கே துவங்கியது பணிகளின் அடுத்த கட்டம். ஏற்கனவே நாம் வெளியிட்டிருந்த கலர் செய்யப்பட்டிருந்த ஒரு சில பக்கங்களின்  ப்ரிவியூக்களைப் பார்த்து விட்டு டிசைனர் நண்பரொருவர் கணிசமான குறைகளை சுட்டிக் காட்டியிருந்தார் ! And in any case நாமுமே கோப்புகளை முழுமையாய் டிஜிட்டல் ப்ரிண்ட் போட்டு சரி பார்ப்பதென்ற எண்ணத்தில்  தான் துவக்கம் முதலே இருந்திருந்தோம்  !  So கலர் பக்கங்களை கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு சரி பார்க்கும் படலம்  துவங்கியது ! சரியாக இந்த வேளையில் தான் அப்பாவின் ஆஸ்பத்திரி வாசமும் துவங்கிட, literal ஆகவே நாக்குத் தொங்கிப் போனது ! 

To cut a long story short, போட்டோம்..போட்டோம்..பிரிண்ட்கள் ஒரு செட்..இரண்டாம் செட்..மூன்றாம் செட்...நான்காம் செட் என்று போட்டுக் கொண்டே போனபடிக்கு, இயன்ற மெருகூட்டலையும், சிற்சிறு திருத்தங்களையும் செய்திட முனைந்தோம் ! Of course எந்தவொரு கலைஞனுக்கும் தனது பணியில் அடுத்த நபர் கைவைப்பதில் பிடித்தமிராது தான் ; ஆனால் சின்னதொரு சன்மானத்துக்கே நண்பர் பணியாற்றியிருக்கும் நிலையில், திருத்தங்களைச்  சொல்லி அவரை மேற்கொண்டும் நோகச் செய்ய மனதில்லை எங்களுக்கு ! And இந்தத் திருத்தப் படலமும் கண்முன்னே கம்பியூட்டர் ஸ்க்ரீனைப் பார்த்தபடிக்கே, ஆங்காங்கே செய்திட வேண்டியிருந்த  பணியெனும் போது, உள்ளேயே நம்மாட்களைக் கொண்டு செய்வதைத் தவிர்த்து வேறு மார்க்கம் தெரியவில்லை எனக்கு ! So அரை டஜன்  ரெகுலர் இதழ்களுக்குத் தந்திட அவசியமாகிடக்கூடிய உழைப்பு இந்த 2 இதழ்களுக்குள், மொழியாக்கத்தில் ; எடிட்டிங்கில் ;  கலரிங்கில் ; திருத்தங்களில் ; அச்சில்  என மொத்தமாய்ப் போயுள்ளன என்று சொன்னால் மிகையாகாது ! And அச்சில் கலர் இதழைப் பார்த்த போதே 'ஜிவ்'வென்றிருந்தது -  பட்ட பாடுகளுக்கு பலன் தெரிகிறதே என்று ! இடையே ஒரு 16 பக்கங்களை பிரிண்ட் செய்தான பின்னே, மூன்றோ, நான்கோ பக்கங்களில் கலரிங் சோபிக்காதிருப்பதைப் பார்த்து விட்டுத்  திருப்தி இன்றிப் போனதும், அச்சிட்டதைக் கடாசிப்புட்டு, மறுக்கா, fresh-ஆகக் கலரிங் செய்து, 3 நாட்களுக்கு முன்னர் கடைசி நிமிடத்தில் அதனை அச்சிட்ட கதையெல்லாம் தனி ! Oh yes - புக் உங்கள் கைகளை எட்டிய பிற்பாடு - 'போவியா.....இதென்ன பீத்தல்-பிரமாதம் ? இங்கே சொத்தை...அங்கே ஓட்டை !' என்ற குஜாலான குரல்கள் ஆங்காங்கே ஒலிக்காது போகாதென்பது சர்வ நிச்சயம் ! அதனால் தான் - இந்த ஆன்லைன் மேளா இதழ்களின் வருகையினைத் தொடர்ந்து நமக்கு செம entertainment காத்துள்ளதென்று நான் சொல்லி வந்தேன் ! எது எப்படியோ - இயன்றதை ; இயன்ற ஆற்றல்களுக்குட்பட்டு தந்துள்ளோம் - உங்களுக்குப் பிடிக்குமென்ற நம்பிக்கையுடன் ! புனித மனிடோ துணை நிற்பாராக ! 

அட்டைப்படங்களின் கதையைச் சொல்ல ஆரம்பித்தால், அதற்கென மேற்கொண்டு ரெண்டு செட் தோசை சாப்பிட வேண்டியிருக்கும் என்பதால் இத்தனை மட்டும் சொல்லிக் கொள்கிறேன் : black & white இதழுக்கும் சரி, வண்ண ஆல்பத்துக்கும் சரி, நாம் செய்திருக்கும் நகாசு வேலைகளை ஸ்டீலின் கவிதைகளின் நீளத்துக்குச் சொல்லலாம் ! And இங்கு பார்ப்பதைக் காட்டிலும், நேரில் இரண்டிலுமே effects தெறிக்கும் ! சரி, ரைட்டு - பைண்டிங் பணிகள் நிறைவுற்றால் நம்ம தரப்பில் "சுபம்" போட்டுப்புட்டு, அடுத்த இதழ்களின் வேலைகளுக்குள் புகுந்திடலாமென்று பார்த்தால் - ஒரு எதிர்பாரா டிசைனரின் கைவண்ணத்தில் ஒரு எதிர்பாரா டிசைன் வந்து சேர்ந்திருந்தது - "உயிரைத் தேடி" இதழுக்கு !! Oh yes - தற்போது திக்கெங்கும் தெறிக்க விட்டுக்கொண்டிருக்கும் AI எனும் artificial intelligence புண்ணியத்தில் உருவான டிசைன் அது ! அதைப் பார்த்த மறுநொடியே மண்டைக்குள் மின்னலடிக்க, விடாதே-பிடி என்று கடந்த 2 நாட்களாய் அதற்கு வண்ண மெருகூட்டி, தெறிக்க விடும் டிசைனாக்கிட முனைந்தோம் ! End result செம டெரராய் இருப்பது போல் எனக்குத் தோன்றிட, இதையும் இப்போதைய ஜோதியிலேயே ஐக்கியமாக்கணுமே ? என்ற உந்துதல் சுழன்றடித்தது ! 'மைதீன்ன்ன்ன்ன்ன்...'.என்று மறுக்கா ஆரம்பித்தேன் - விளைவு : "உயிரைத் தேடி" இதழுக்கொரு dust jacket !! NBS இதழுக்குச் செய்ததைப் போலவே ; மின்னும் மரணம் இதழுக்குப் பண்ணியது போலவே "உயிரைத் தேடி" வண்ண எடிஷனுக்குமே அட்டைக்கு மேலாய் இந்த jacket ரகளை செய்திடும் ! 

So இது தான் இந்த ஆன்லைன் மேளாவின் star attraction-ன் பின்கதை ; சைடு கதை ; பக்கவாட்டுக் கதை எல்லாம் ! இதைப் படிப்பதற்குள் உங்கள் காலைகள் மதியங்களாக மாறியிருந்தால் wont blame you for sure ! கிட்டத்தட்ட ஒன்பது-பத்து மாதங்களுக்கு முன்பாய் புக்கிங் செய்திருந்த நண்பர்களுக்கு நேற்றைக்கு (வெள்ளி) "உ.தே." black & white எடிஷன்களை அனுப்பி விட்டோம் ! இரு எடிஷன்களிலுமே நாம் பிரிண்ட் செய்திருப்பது சுருக்கமான பிரதிகளை மட்டுமே ! இன்றைக்கான காஸ்டிங்கில் இந்த black & white பதிப்பினை ஹார்ட்கவரில் இந்த விலைக்குத் தருவதென்பது கிறுகிறுக்கச் செய்யும் சமாச்சாரம் ; but தாமதத்திற்குக் காரணம் நீங்களல்ல எனும் போது, விலையேற்றம் என்ற தண்டத்தை உங்கள் தலைகளில் சுமத்த மனது ஒப்பவில்லை ! So பிரிண்ட் பண்ணுவதையே குறைச்சலான எண்ணிக்கையில் செய்து விட்டு, கிட்டங்கிக்கு பழுவேற்ற வேண்டாமே என்று நினைத்தேன் ! காலங்கார்த்தாலே பால் பாக்கெட் வாங்கப் போகும் இடத்தில் பதிவுகளை வழக்கமாய்ப் படிப்பவராக நீங்கள் இருக்கும் பட்சத்தில், பதிவின் இந்தப் பகுதியினை வாசித்து முடிக்கும் வேளைக்குள் அது பாக்கெட் தயிராக மாறியிருந்தாலும் no surprises ! So நகர்வோமா அடுத்த இதழின் திசையினில் ?



# 3 : லக்கி லூக்குக்கு கல்யாணம் :

ஏற்கனவே நான் சொல்லியிருந்தேன் - இந்த ஆன்லைன் மேளாவின் இதழ்களின் ஒரு பிரதான நோக்கம், நமது ரெகுலர் புத்தக விழாக்களின் விற்பனைக்கு உதவிடும் இதழ்களை மறுபதிப்பு ரூபங்களில் கொணர்வதென்று ! And அங்கே நமக்குப் பெரிதும் கை கொடுப்போர் - டெக்ஸ் ; மாயாவி & லக்கி லூக் - in that order ! So லக்கி லூக்கின் மறுபதிப்பு இங்கே இடம் பிடிப்பதில் no surprises என்பேன் - அந்தக் கதைத் தேர்வு நீங்கலாக ! நிறையவே இதழ்களை முன்மொழிந்திருந்தீர்கள் - லக்கியின் மறுபதிப்புகளுக்கென ! அவற்றுள் ஒன்றான "ஜேன் இருக்க பயமேன் ?" தான் இங்கே இடம் பிடித்திருக்க வேண்டியது ; துரதிர்ஷ்டவசமாக அதன் கோப்புகள் கொஞ்சம் லேட்டாய் வந்து சேர்ந்ததால் "லக்கி லூக்குக்கு கல்யாணம்" அந்த இடத்தினைப் பிடித்துக் கொண்டுள்ளது ! இது ஒரிஜினலாக நம் மத்தியில் வெளிவந்து சுமார் 20+ ஆண்டுகளாவது இருக்கும் என்பது போலான ஞாபகம் எனக்கு ! So நிச்சயமாய் கலரில், உயர் தரத்தில் மீள்வாசிப்புக்கு சோடை போகாதென்ற நம்பிக்கையில் ஆன்லைன் மேளாவின் லிஸ்ட்டில் இடம்பிடிக்கிறது ! 

# 4 & 5 : ஏஜெண்ட் டைகர் - மினி புக்ஸ் x 2 :

And here are the promised குட்டி புக்ஸ் ! புத்தக விழாக்களில் மாணவர்களின் படையெடுப்பு தொடர்கிறது தான் - ஆனால் அவர்களது சுலப வாசிப்புகளுக்கும், சின்ன பட்ஜெட்களுக்கும் பொதுவாய் நம்மிடம் சரக்கு இருப்பதில்லை ! வேறு வழியின்றி பசங்கள் மாடஸ்டியின் குறைந்த விலை இதழ்களையும், கைக்கு சிக்கிடும் கம்மி விலை இதழ்களையும் வாங்கிச் செல்வது நடந்து வருகிறது ! அதனை நிவர்த்திக்க மினி காமிக்ஸ் விரைவில் - என்று அறிவித்திருந்தது மாத்திரமன்றி, அதற்கான லோகோவையும் shortlist செய்து வைத்திருந்தது நினைவிருக்கலாம் ! புக்ஸ் திட்டமிட்டபடியே களம் காண ரெடியாகின தான் ; but மினி-காமிக்ஸ் என்ற அந்த லோகோவை போட நினைக்கும் சமயத்தினில் தான், அதனில் உள்ள சிங்கமானது காப்பிரைட்டால் பாதுகாக்கப்பட்டதொரு இமேஜ் என்று சொல்லி நண்பர் கிஷோர் மின்னஞ்சல் அனுப்பி இருந்தார் ! And சரியாக அதே வேளையில் தான் - நமது கம்பேக்குக்குப் பின்பான 500 இதழ்கள் பற்றியதொரு விளம்பர இமேஜை நண்பர் கிரி உருவாக்கி அனுப்பியிருந்தார் ! அதனில் பார்த்த போது - லயன் காமிக்ஸ் ; முத்து காமிக்ஸ் ; லயன் கிராபிக் நாவல் ; சன்ஷைன் லைப்ரரி ; ஜம்போ காமிக்ஸ் ; V காமிக்ஸ் & இன்னமும் ஏதோவொரு லோகோ சகிதம் நாம் பயணித்து வருகிறோம் என்பது உரைத்தது ! இந்த அழகில் "மினி காமிக்ஸ்" என்று புதுசாய் இன்னொன்றை உட்புகுத்த தான் வேண்டுமா ? என்று எனக்கே தோன்ற ஆரம்பித்தது ! அது தான் அட்டவணையில் இடம் பிடித்திடா இதழ்களுக்கென லயன் லைப்ரரி தனித்தடம் உள்ளதே....அதனாலேயே இந்த குட்டி புக்ஸையும் போட்டுத் தாக்கிடலாமே ? என்று பட்டது ! So மாப்பிள்ளை அவதார் ரெடியானது - சொக்காய் மாத்திரம் இருப்பதே போதுமென்று !  

கதைகளைப் பொறுத்தவரை - அந்த 10 to 16 வயதிலான பசங்களுக்கு to start with சுலப நேர்கோட்டுக் களங்களே சுகப்படும் என்று தீர்மானித்தேன் ! Of course இதனில் மாற்றுக் கருத்துக்கள் இருக்கலாம் தான் ; but தமிழில் வாசிப்புகளுக்கும், தமிழில் காமிஸ்களுக்கும் புதியவர்களுக்கே எனது இப்பரிந்துரை ! நேர்கோட்டுக் கதைகளெனும் போதே மனதுக்கு வந்த முதல் சமாச்சாரம் Fleetway கதைகள் ! நாம் அனைவருமே காமிக்ஸ் எனும் ரசனையை வளர்த்துக் கொண்டது இந்த பிரிட்டிஷ் ஜாம்பவானின் படைப்புகளிலிருந்தே எனும் போது - young teen-களின் வாசிப்புக்கும் இவையே துவக்கப் புள்ளியாய் இருந்தாலென்னவென்று பட்டது ! இந்தச் சின்ன விலை புக்ஸ் பாக்கெட் சைசில் தான் இருந்திடவுள்ளன என்பதைத் துவக்கம் முதலே தீர்மானித்திருந்தேன் ! And 48 பக்கங்கள் - ரூ.30 விலைக்கு என்ற template-ம் decide ஆகியிருந்தது ! So பக்கத்துக்கு 2 படங்கள் என்ற பாக்கெட் சைஸ் எனும் போது நெடும் கதைகள் இங்கே வேலைக்கு ஆகாது என்பது புரிந்தது ! அப்போது தான் நண்பர் ரபீக் ராஜா - ராணி காமிக்சில் அந்நாட்களில் வெளிவந்து சக்கை போடு போட்ட ஏஜெண்ட் டைகர் கதைகள் பற்றி எனக்கு சொல்லியிருந்தார் ! Truth to tell - இந்தக் கதைகளை நான் ராணியில் பார்த்தது கூடக் கிடையாது தான் ; ஆனால் Fleetway ஆக்கமெனும் பட்சத்தில் நிச்சயமாய் நமது purpose-க்கு பயன்படுமென்ற நம்பிக்கை இருந்தது ! LORD NELSON என்ற பெயரில் இங்கிலாந்தில் வெளியான இந்தக் கதைகள் ஒவ்வொன்றுமே ஒரிஜினலில் ஐந்தோ-ஆறோ பக்கங்களில் நிறைவுறும் குட்டி அதிரடிகள் என்பதை பார்த்த போது நமக்கு சின்ன புக்குகளில் போட இவை தோதுப்படும் என்றுபட்டது ! ஜேம்ஸ் பாண்ட் போலான ஹீரோ - தினுசு தினுசான gadgets சகிதம் செய்யும் சாகசங்கள் அந்த வயது வாசகர்கட்கு ரசிக்குமென்று எண்ணினேன் ! அப்புறமென்ன - உரிமைகளை வாங்கிய கையோடு பாக்கெட் சைசுக்கு மாற்றினோம் ! துவக்கத்தில் 2 புக்ஸ் ; தொடரவுள்ள ஏதேனுமொரு பெரிய நகர் புத்தக விழாவினில் அடுத்த 2 புக்ஸ் and so on என்றான பின்னணித் திட்டமிடலுடன் ! கைக்கு அடக்கமான சைசில் ரெடியாகி வரும் இந்த புக்ஸை ரெகுலர் விழாக்களில் பள்ளிச் சீருடையில் வரும் மாணாக்கருக்கு ரூ.25 விலைகளில் விற்பனை செய்திடவுள்ளோம் ! 

சின்னதாயொரு disclaimer folks : இந்தக் கதைகளின் target audience அக்மார்க் டீனேஜ் வாசகர்களே ! தொப்பைகளை உள்ளே இழுத்துக் கொண்டு, ஐப்ரோ பென்சிலால் மீசைக்கும், கிருதாக்களுக்கும் டச்-அப் பண்ணிக்கினு நானும் யூத்து தான் என்று வளம் வரும் pseudo யூத் அல்ல ! ஆகையால் இதற்கு விமர்சனப் பார்வைகள் என்ற அலப்பறைகள் வேணாமே - ப்ளீஸ் ? 


புக் # 6 - சிறுத்தை மனிதன் : 

இதுவுமே அந்த "சின்ன விலையில் - சிக் கதைகள்" template-ல் கொடி பிடித்திடும் புக் ! Again பாக்கெட் சைஸ்...இங்கேயும் ஒரு Fleetway சூப்பர் ஹீரோ....and விலை அதே ரூ.30 தான் ! ஆனால் இந்த ஒற்றை இதழில் மட்டும் 64 பக்கங்கள் இருந்திடும் ! இதோ - அதன் நாயகன் "சிறுத்தை மனிதன்" !! The Leopard from Lime Street என்ற பெயரில் இங்கிலாந்தில் அந்த நாட்களில் சக்கை போடு போட்ட சூப்பர் ஹீரோவின் கதை இது ! ஒரு பள்ளி மாணவனான 13 வயது பில்லி தான் இங்கே ஹீரோ ! கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்டதொரு சிறுத்தை பில்லியை சிராயத்திட, அதன் பின்பாய் பில்லிக்கு சிறுத்தையின் ஆற்றல்கள் வாய்க்க நேரிடுகிறது ! புதுசாய்க் கிட்டிய இந்த சக்தியுடன் தன்னைச் சுற்றி நடக்கும் அநியாயங்களை பில்லி தட்டிக் கேட்பதே இந்த சூப்பர்-ஹிட் தொடரின் பின்னணி ! ஒரு சமயத்தில், ஸ்பைடரைப் போல ; ஆர்ச்சியைப் போல - இந்த சிறுத்தை மனிதனும் அங்கே செம famous ! அதன் காரணமாகவே இப்போது 3 மெகா தொகுப்புகளை இங்கிலாந்தில் செம அழகாய் வெளியிட்டுள்ளனர் ! அதன் முதல் ஆல்பத்திலிருந்தே நாமும் துவங்கியுள்ளோம் - பாக்கெட் சைசில் ! ஒரே சிக்கல் என்னவெனில் இங்கே கதைகள் சற்றே நீளம் கூடுதலாய் உள்ளன ! So முதல் சாகசத்தை நிறைவு செய்திட பாக்கெட் சைசில் கிட்டத்தட்ட 62 பக்கங்கள் தேவைப்பட்டன ! இந்த முயற்சியின் முதுகெலும்பே "சின்ன விலைகளில் புக்ஸ்" - என்பதே எனும் போது, விலையை கூட்ட இங்கேயும் மனம் ஒப்பவில்லை ! "யார் அந்தச் சிறுத்தை மனிதன் ?" பசங்களை கவருவானென்ற நம்பிக்கையில் - இதோ : 


 புக் # 7 : குற்ற நகரம் கல்கத்தா :
 

கிராபிக் நாவல் - without அழுகாச்சி ! ஒற்றை வரியில் இந்த போனெல்லி ஆக்கத்தை விவரிப்பதெனில் இதைத் தான் சொல்லிடுவேன் ! இந்தக் கதையைத் தேர்வு செய்து வாங்கிய போது என்னை கவர்ந்திழுத்தது இதன் அசாத்திய சித்திரத் தரம் தான் ! தவிர, கதை நிகழ்வது விடுதலைக்கு முன்பான பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பிலான கல்கத்தாவில் என்பதுமே சுவாரஸ்யமூட்டியது ! இதனை ஆன்லைன் விழாவுக்கென shortlist செய்து வேலைக்கு எடுத்த போது எப்போதும் போலவே  மொழிபெயர்ப்பினில் நனைத்துச் சுமக்கும் படலம் இங்கேயும் தொடர்ந்தது ! நமது மொழிபெயர்ப்பு டீமுக்கு ஒரு சமீப வரவான அம்மணியிடம் இதனை ஒப்படைத்திருந்தேன் & முதல்வாட்டியின் அவரது முயற்சி அத்தனை சோபிக்கவில்லை என்று சொல்லி, முழுசையும் மறுக்கா எழுதிடவும் செய்திருந்தேன் ! DTP செய்து கிடந்த குவியலுக்குள் வழக்கம் போல எடிட்டிங்குக்கென புகுந்து, வழக்கம் போல மொக்கை போட்டு, வழக்கம் போலவே முழுசையும் புதுசாய் எழுத நேர்ந்தது ! But அந்த ராக்கூத்துக்களின் போது தான் புரிந்தது - இந்தியாவை upclose புரிந்து கொள்ள இந்தப் படைப்பாளி டீம் நிரம்பவே மெனெக்கெட்டிருப்பது ! பொதுவாய் இந்தியா என்ற உடனே மகாகாளியை வணங்கும் வெறியர்கள் ; பாம்புகளைக் கொண்டு வித்தை செய்யும் மீசைக்காரர்கள் ; பசுமாட்டை வணங்கும் இல்லத்தரசிகள் ; ராஜா ; ராணி ; என்று கதையோட்டத்தை அமைப்பது மேலைநாட்டு காமிக்ஸ் படைப்பாளிகளுக்கொரு ஆதர்ஷமான பொழுது போக்கு ! நிஜமான இந்தியாவை சித்தரிக்கிறோமா ? இல்லையா ? என்ற கேள்விகள் அவர்கட்கு எழுந்திடவே செய்யாதா ? என்று பல நேரங்களில் எனக்குத் தோன்றுவதுண்டு ! But இம்முறை அவ்வித நெருடல்கள் நஹி ! ஒரு வரலாற்று நிகழ்வினை கோலத்தின் புள்ளிகளுள் ஒன்றாக எடுத்துக் கொண்டு, அழகானதொரு க்ரைம் த்ரில்லரை உருவாக்கியுள்ளனர் ! கொஞ்சம் செண்டிமெண்ட் ; கொஞ்சம் காதல் ; கொஞ்சம் ஆக்ஷன் என்ற பொரியல்களும் இணைந்து ருசியானதொரு பந்தியில் அமர்ந்த திருப்தியை நமக்குத் தருகிறது ! ரொம்ப கனமான களமென்றோ ; அழுகாச்சிக் காவியமென்றோ பயந்திடத் தேவை இல்லை ; செம breezy read ! 


புக் # 8தீதும், நன்றும் பிறர் தர வாரா !

பட்டியலுக்குள் புகுந்தது முதல் ஆளாய் ; ஆனால் நிறைவுற இன்னும் கொஞ்சமாய் நேரம் பிடிக்கவுள்ள ஆல்பமே புக் # 8 ! போன வருஷம் தனது செம relaxed கதை பாணியில் இலகுவாய் நம் மனங்களில் இடம்பிடித்த மேகி கேரிசனின் "தீதும், நன்றும் பிறர் தர வாரா !" தான் நான் டிக் அடித்த முதல் ஆல்பம் ! இதற்குப் பேனா பிடிக்கும் வேலையையும் போன முறை போல் நானே பார்த்திடுவதென்று தீர்மானமாய் இருந்தேன் ! துரதிர்ஷ்டவசமாக அப்பாவுக்குத் துணையாக ஆஸ்பத்திரி ஜாகைகள் துவங்கியது இந்த சமயத்தில் தான் என்பதால் அம்மணியை கொஞ்சம் லூசில் விட்ட மாதிரி ஆகிப் போனது ! தொடர்ந்த பொழுதுகளில் "உயிரைத் தேடி" இதழ்களின் மெனெக்கெடல்கள் கணிசமோ, கணிசமான நேரத்தை விழுங்கிட, அம்மணி வெயிட்டிங் லிஸ்ட்டிலேயே தொடர்ந்தார் ! அடித்துப் பிடித்து ஒரு மாதிரியாய் மொழிபெயர்ப்பை ரொம்பச் சமீபமாகவே முடிக்க முடிந்தது ! In a couple of days - இந்த இதழும் தயாராகிடும் ! கதையைப் பொறுத்தவரை - முதல் அத்தியாயத்தில் விட்டுச் சென்ற அதே இடத்திலிருந்து தொடர்ந்துள்ளனர் ; அதே டிரேட்மார்க் மேகி பாணியினில் ! அதே சித்திர ஸ்டைல் ; அதே லண்டன் நகர்வலம் ; அதே மேகி பாணி நக்கல் என்று இந்த ஆல்பமும் மேகிக்கு மவுசை ஏற்றுகிறது !  எனது பெர்சனல் தேர்வெது ? என்று கேட்டால் சந்தேகமின்றி இந்தப் பத்தில் நான் கைகாட்டுவது மேகியின் திசையிலாகத் தானிருக்கும் ! 

புக் # 9 : யார் அந்த மாயாவி ?

"நியூயார்க்கில் மாயாவி" மறுபதிப்பு வெளியான சமயமே வெளிவந்திருக்க வேண்டிய இதழ் இது ! அட்டைப்படமும் அப்போதே அச்சானது என்பது - அதிலிருக்கும் சன்ஷைன் லைப்ரரியின் லோகோவிலேயே புலனாகியிருக்கும் ! முத்துவின் இதழ் # 100 ஆக வெளி வந்த சாகசமும், ஆழ்கடல் மாயாவி சாகசமும் ஒன்றிணைந்து இந்த ரூ.100 விலையிலான இதழினில் இடம்பிடிக்கின்றன ! நமது மாயாவி ஆர்வலர்களுக்கென ஒரிஜினல் அட்டைப்படத்தையே நமது சென்னை ஓவியரைக் கொண்டு மறுக்கா வரைந்திருந்தோம் ! பாருங்களேன் : 


புக் # 10 : "மந்திர மண்டலம்"

சும்மாவே டான்ஸ் ஆடும் மாட்டுக்கு சலங்கையைக் கட்டிவிட்டு அதன் முன்னே நின்று, உருமிக்கொட்டை 'நொட்டு..நொட்டென்று' அடித்தால் - அது ஜிங்கு ஜிங்கென்று ஆடாமல் என்ன செய்யும் ? நடந்தது அதுவே தான் ! 'சிவனே' என்று 2 "உயிரைத் தேடி" ஹார்ட்கவர் இதழ்களோடு பெரிய புக்ஸ் பட்டியலுக்கு 'சுபம்' போட எண்ணியிருந்தவனுக்கு - கம்பேக்குக்குப் பின்பாய் இதழ் # 500 வருது..வருது...என்று உசுப்பேற்ற, அந்த நொடியில் தீர்மானித்தேன் "தல' டெக்ஸ் தான் அந்த ஸ்லாட்டுக்கு உகந்தவரென்று ! நாக்குத் தொங்க பணியாற்றினோம் - 304 பக்கங்கள் கொண்ட இந்த இதழினை மிகச் சுருக்கமான அவகாசத்தினில் நிறைவு செய்திட ! மறுபதிப்பு தான் என்றாலுமே 304 பக்கங்களை கலரில் ; ஹார்ட் கவரில் இரண்டே வாரங்களுக்குள் பூர்த்தி செய்வதென்பது பிசாசுகளுக்கான workload ! துரதிர்ஷ்டவசமாக இந்தப் பிசாசிடம் சிக்கியுள்ள நமது பணியாட்கள் விடிய விடிய பணியாற்ற வேண்டிப் போனது !  அதற்காக எதிலும் குறை வைக்கவில்லை - அட்டைப்பட நகாசுகள் உட்பட ! செமையாய் மிரட்டுகிறது இந்த அட்டைப்படம் ! And உட்பக்கத்தில் இதழ் # 500 என்பதை ஊர்ஜிதம் செய்யும் விதமாய் ஒரு ஹாட்லைன் பகுதியும் எழுதியுள்ளேன் ! அச்சு முடிந்து, பைண்டிங்கில் உள்ள இதழிது - so டெஸ்பாட்சுக்கு ரெடியாக நாலைந்து நாட்கள் எடுக்கும் என்பதால் நம்மாட்களை இதன் பொருட்டு குச்சியைக் கொண்டு குத்தாதீர்கள் ப்ளீஸ் folks !!   So thus ends the list of books !!


For sure - மேலுள்ள எனது தேர்வுகளை நீங்கள் யூகித்திருக்க வாய்ப்புகள் குறைவே என்பேன் !  "இரட்டை வேட்டையர் இல்லியா ?" ; "ஜான் மாஸ்டர் இல்லியா ?" "சினிஸ்டர் செவென் இல்லியா ?" என்ற மாமூலான கேள்விகள் இல்லாது போகாதென்பது எனக்குத் தெரியும் ! But எல்லாவற்றிற்கும் ஒரு நேரம் புலராமல் போகாது guys என்பதே எனது பதிலாக இருக்கும் ! For the moment எனது ஒவ்வொரு தேர்வின் பின்னேயும் உள்ள சிந்தனையினை ஒளிவின்றிப் பகிர்ந்துள்ளேன் ! So நாளை காலை நம்மவர்கள், கீழ்க்கண்ட நம்பர்களில் உங்களின் போன்களை எதிர்பார்த்துக் காத்திருப்பர் people ! 

98423 19755
73737 19755

இயன்றால் முதலில் call பண்ணி டிஸ்கவுண்ட் உடனான தற்போதைய ஸ்டாக் லிஸ்டைப் பெற்றுக் கொண்டு, பழசிலும் சரி, இப்போதைய இந்தப் "பரபர பத்திலிருந்தும்" சரி, உங்களின் தேர்வுகளை ரெடி பண்ணிக்கொண்டு, மறுக்கா call செய்து ஆர்டர் தந்திட கோரிடுவேன் - ப்ளீஸ் ! Will save us all time !

And just a நினைவூட்டல் - புதுசின் ஆர்வத்தில் பழசுகளை ஓரம்கட்டிவிட வேண்டாமே - ப்ளீஸ் ? 

அப்புறம் Sunday ஒரு நாள் மட்டும் நம்மிடம் உள்ள ஆங்கில புக்சில் ஒரு ஸ்பெஷல் sale இருந்திடும் !! அதையும் மறந்திட வேணாமே - ப்ளீஸ் ?

Bye all...see you around soon ! Have a fun weekend ! முன்கூட்டிய ரமலான் பெருநாள் வாழ்த்துக்கள் !




Saturday, April 15, 2023

ஒரு ஜாலியான நண்பகல் பதிவு !

 நண்பர்களே,

வணக்கம். முதல் தேதியில் பதிவோடு (தமிழ்) புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்ல எண்ணியிருந்தேன் தான் ; ஆனால் கடந்த 2 வாரங்களாகவே தெருவை பெருக்கி வரும் நாக்கார் ஒத்துழைக்க மறுக்க, பின்னூட்ட வாழ்த்தோடு நேற்று நடையைக் கட்டும்படியாகிப் போனது ! அதனாலென்ன - இதுவுமே புத்தாண்டின் பொழுது தானே ? So உளமார்ந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் all !! நலம் + வளம் + கரை புரண்டோடும் மகிழ்வு - இல்லங்கள்தோறும் குவிந்திடட்டும் ! 

Without a doubt - ஏப்ரல் ஒரு ஸ்மாஷ் ஹிட் மாதமே & அதன் நடுநாயக நாயகர் - ஆப்பிள் கன்னத்து சார்லி தான் ! டெக்ஸ் & ஸாகோர் கரம் கோர்க்கும் landmark இதழ் கூட இரண்டாமிடம் பிடிக்க, ஒரு க்ளாஸிக் நாயகர்.....அதுவும் இக்ளியூண்டு star power கூட இல்லாததொரு நாயகர், புன்னகையோடு உசக்கே குந்தியிருப்பதை வியப்போடே பார்க்கிறேன் ! And கதையின் நாயகரையும்...கதைகளையும் கொண்டாடும் முன்பாகவே அந்த சைசுக்கு கிட்டியுள்ள வரவேற்பானது மெய்யாலுமே மிரட்டல் ரகம் ! அதன் தாக்கம் எதிர்பாரா இடங்களிலெல்லாம் எதிரொலித்திருப்பது தான் கடந்த வாரத்தின்  highlight ! 

"ட்ரிங்..ட்ரிங்...லயன் ஆபீசுங்களா ? சொவமா இருக்கீகளா ? ஏலே இந்த மாசத்து புது பொஸ்தவம் வந்திருக்காமே....அத கொஞ்சம் போட்டு வுடுறியளா ?" - இது ஏஜெண்ட் !

"சார்...அது வந்து.....பழைய பாக்கி 7 மாசத்துக்கு மேலா நிற்குது..... !" என்னமோ நாம் கடன் கேட்பது போல், தயங்கியபடியே இழுப்பது - நம்மாட்கள் !

"தோ...இன்னிக்கி பாத்து போட்டு விடுறோமலே !" - இது ஏஜெண்ட்

"லொஜக்" - இது GPay !

"சார்...பாக்கியில் பாதி அமௌன்ட் அனுப்பி இருக்கார்....புது புக் கேக்குறார்....போட்டு விடவா ?" - இது நம்மாட்கள் - என்னிடம் !

"சார்லி வேண்டாம்...! விலை கூடுதல்  ; திரும்ப பில் ஏறிடும்...! பாக்கி 2 புக்ஸ் மட்டும் போட்டு விடுங்க...!" - இது அடியேன் !

2 நாட்கள் கழித்து மறுக்கா : "ட்ரிங்...ட்ரிங்...ஏ பொஸ்தவ பண்டலிலே குறையுதாமே மக்கா ? இந்த மாசம் மூணு பொஸ்தவமாம்லே ? ரண்டு தான் வந்திருக்கு ?" - இதுவும் ஏஜெண்ட் தான் !

"அது வந்து சார்...அந்த புக் ஸ்பெஷல் புக்...கொஞ்சமா தான் பிரிண்ட் பண்ணியிருக்கோம்...அதனாலே..." - இந்த இழுவையும் நம்மாட்கள் தான் !

"சரி...சரி...இன்னிக்கி முன்பணம் போட்டு வுடுறேன்....இன்னிக்கே டிராவல்ஸிலே அனுப்புங்க !" - again ஏஜெண்ட் !

"சரி சார்..! ஆனா இந்த புக்கில் ரிட்டர்ன் எடுக்க மாட்டோம்...நீங்க எவ்ளோ விக்குமோ - அவ்ளோ மட்டும் வாங்கிக்கோங்க !" - this நம்மாட்கள் !

"அத நான் பாத்துக்குறேன்லே....நீங்க இன்னிக்கே டிராவல்ஸில் போட்டுப்புடுங்க !" - this ஏஜெண்ட் !

பல மாதங்களாய் பணத்தைக் கண்ணிலேயே காட்டியிருக்கா முகவர் கூட "சார்லி" என்ற பெயருக்கோசரம் மறுபடியும் நமது லைனுக்கு வருவார் - என்று யாரேனும் என்னிடம் இந்த ஏப்ரலுக்கு முன்பாக சொல்லியிருப்பின், 'அண்ணாச்சி முன்கூட்டியே ஏப்ரல் fool' பண்றாக !' என்றபடிக்கே நகர்ந்திருப்பேன் ! பொதுவாய் இது போலான நிகழ்வுகளெல்லாம், ஸ்பைடருக்கும் ; டெக்ஸ் வில்லருக்கும் ; XIII-க்கும் மாத்திரமே நடக்கப் பார்த்திருக்கிறோம் ! சென்றாண்டு SMASHING '70s அறிமுகம் கண்ட போது "வேதாளர் ஸ்பெஷல் -1" இது போன்ற வரவேற்பினைப் பார்த்திருந்தது ! அதன் பின்பாய் இது போலானதொரு பரபரப்பு சார்லியின் உபயமே ! 

சார்லி என்ற நாயகனுக்கும், அழகான நேர்கோட்டுக் கதைகளைத் தந்த அதன் பிதாமகருக்கும், பிசிறில்லாத மொழிபெயர்ப்புக்கு நமது கருணையானந்தம் அவர்களையும் தாண்டி அடுத்தபடியாக நான் நன்றி சொல்ல வேண்டியது - இந்த இதழைப் பார்த்த பிற்பாடு கமெண்ட்களால் தெறிக்க விட்ட உங்களுக்குமே தான் ! பாசிட்டிவ் கமெண்ட்களால் இங்கேயும் சரி, FB / வாட்சப் க்ரூப்களிலும் சரி, நீங்கள் போட்டுத்தாக்கியுள்ள பட்டாசுகளை நான் முழுசுமாய்ப் பார்த்திராது போயிருக்கலாம் தான் ; ஆனால் நீங்கள் செய்து வரும்  ஆர்ப்பரிப்புகளின் பலன்கள் விற்பனையினில் ஸ்பஷ்டமாய் பிரதிபலிப்பதை பார்த்தே வருகிறேன் ! 

அப்புறம் இம்முறை MAXI சைஸினை நாம் புறக்கணித்ததன் பொருட்டு, கண்கள் எக்கச்சக்கமாய்ச் சிவக்க, "இந்த ஆணி நீ பிடுங்கியிருக்கவே தேவை இல்லாத ஆணி !! இத்தினி இன்ச் நீளத்தில, இத்தினி கனத்தில ; இன்ன நிறத்தில,  இந்த ஆங்கிளிலே ; இன்ன மெரி சுத்தியலைக் கொண்டு தான் ஆணியடிச்சிருக்கணும் நீ !" என்ற விளக்கவுரைகளுடனான பாலபாடங்கள் நமக்கு இன்னொரு பக்கம் எடுக்கப்பட்டதையுமே  நீங்கள் அறிந்திருப்பீர்கள் ! அது சார்ந்த விவாதங்களும், சர்ச்சைகளுமே பரபரப்பையும், விற்பனைகளையும் இன்னொரு ரவுண்டு தூக்கி விட்டதென்பேன் ! பற்றாக்குறைக்கு, "அடுத்து இன்னா திட்டம் கண்ணு ? இதையே பாக்கெட் சைசில் போட்டாக்கா 800 பக்கம் வரும்லே ?" என்ற ரவுசும் எங்கேயோ பதிவாகியிருக்க, "அடங்கொன்னியா....இந்த அகுடியா உனக்கு தோணாம போச்சே ?" என்று என்னை நானே நொந்து கொள்வதும் நடந்தது ! பாடம் எடுக்க விழையும் நண்பர்களின் ஆர்வம் புரிகிறது தான் ; ஆனால் பல்ப்பத்தைக் கையில் தந்து எழுதக் கற்றுத் தரும்  முனைப்பில், சில பல அடிப்படைகளை மறந்து விட்டார்களென்பது தான் சிக்கலே ! "MAXI சைசில் போடாங்காட்டி, வெளங்கவே வெளங்காதென்று தொடை தட்டியபடிக்கே கொடி பிடிப்போருக்கு, சின்னதொரு refresher to memories :

*இது வரையிலுமான 5 க்ளாஸிக் ஆல்பங்களை MAXI சைசில் வெளியிட்டு வந்தவனும் நான் தான் ! இன்னமுமே அந்த சைஸை பார்த்துப் பார்த்துப் பெருமூச்சிட்டு வருபவனும் நான் தான் ! 

*"MAXI சைஸ் வேணாமே ப்ளீஸ் ? படிக்க சுகப்படவில்லை" என்று தொடர்ச்சியாய் நண்பர்கள் கோரிய போதும் அதனைக் காதில் வாங்கிக்கொள்ளாது பிடிவாதம் காட்டியவனும் நானே !   

*பரீட்சார்த்தமாக ஒரேயொரு சார்லி ஸ்பெஷலை மட்டும் இந்த half MAXI சைசில் தயாரிப்பதென்ற எண்ணத்துடன், தொடரவிருக்கும் ரிப் கிர்பி ஸ்பெஷல் இதழினை எப்போதும் போலவே MAXI சைசுக்கென திட்டமிட்டு, அதன் அட்டைப்படத்தையும்  MAXI சைசில் தயார் செய்து வைத்திருப்பதும் நானே !

*அட...அதற்கடுத்த "விங்-கமாண்டர் ஜார்ஜ் ஸ்பெஷலின் 3 கதைகளுமே MAXI கூட சைசில் தயாராகி உள்ளன !  

*இன்றைக்கு நண்பர்களின் almost ஏகோபித்த வரவேற்பினைத் தொடர்ந்து, MAXI அளவிலுள்ள சகலத்தையும் கடாசி விட்டு, மொதல்லேர்ந்து புதுசாய் சார்லி சைசில் பரோட்டா சாப்பிட உத்தேசித்துள்ளதுமே நான் தான் ! 

*ரசனைசார் விஷயங்கள், சலசலக்கும் நீரோடையைப் போல என்றைக்குமே ஓரிடத்தில் நில்லாது பயணித்துக் கொண்டேயிருக்கும் சமாச்சாரம் ! So நேற்றைய ரசனைகளோ, அவை சார்ந்த தீர்மானங்களோ சோழ ராஜ்ஜியங்களின் கல்வெட்டுக்களாய் என்றென்றும் சாஸ்வதமாய் இருத்தல் கட்டாயமல்ல என்பதை உணர்ந்து, எனது பிடிவாதத்தைத் தளர்த்திக் கொள்வது ஒரு தெய்வ குற்றம் ஆகிடாதென்று புரிந்து கொண்டிருப்பதும் நானே ! 

*And  வழக்கம் போலவே "கண்ணாலம் தான் கட்டிக்கிட்டு மூ.ச.போலாமா ? இல்லே மூ.ச. போயி கண்ணாலம் தான் கட்டிக்கலாமா ?" என்று பாட்டுப் பாட வேண்டியிருப்பவனும் நானே  ! 

இந்த "சர்வமும் நானே" விளக்கமானது, தொடரும் நாட்களில் புதிய பல விளக்குமாற்று சாத்துக்களிலிருந்து என்னைக் காத்திடுமென்ற அபத்த நம்பிக்கைகளெல்லாம் நஹி ; சும்மா ஒரு டைம் பாஸுக்கோசரம் சொல்லி வைத்தேன் ! 

Moving on, கிட்டத்தட்ட கடந்த 3 வாரங்களாகவே தொடர்ந்திடும் பெர்சனல் சமாச்சார நோவுகள் ஒரு பக்கமும், ஆன்லைன் புத்தக மேளாவின் ரவுசுகள் இன்னொரு பக்கமும் துவாரபாலகர்களாய் நின்றிட, அவர்களுக்கு மத்தியில் ஒரு வாசலை ; நடைபாதையைக் கண்டு பிடிக்க குட்டிக்கரணங்கள் டஜன்கணக்கில் அரங்கேறி வருகின்றன ! "இலட்சியம் ஒரு டஜன்....நிச்சயம் முக்கால் டஜன்" என்ற tag line கேட்க செமத்தியாய் இருப்பதென்னவோ நிஜம் தான் ; ஆனால் அதனை நடைமுறைப்படுத்துவதற்குள் நம்ம XIII-க்கே பழைய ஞாபகங்களெல்லாம் வந்து விடும் போலும் ! Phewwwwwwwww ! இதில் பிரதான கொடுமையே, குவிந்துள்ள எக்கச்சக்கத்திலிருந்து  - எதைக் களமிறக்குவது என்ற குயப்பம் தான் ! எதையேனும் ஒரு கதையைத் தேர்வு செய்வது ; அதனுள் பணியாற்றத் துவங்குவது ; பேனா பிடிக்கும் போது அது கொஞ்சமாய் ஜவ்வு இழுக்கும் பட்சத்தில், இன்னொன்றைத் தேர்வு செய்து அதற்குள் குப்பை கொட்ட ஆரம்பிப்பதென ஓடிய பொழுதுகளுக்கு ஒரு வழியாய் இப்போது தான் சுபம் போட்டுள்ளோம் ! புக்ஸ் பட்டியலும் ரெடி ; மெயினான இதழ்களுமே (என்னளவிற்கு) இன்னமும் 2 மாத்திரமே பாக்கி ! இன்னும் 2 நாட்கள் கவனத்தைச் சிதற விடாது, பணியாற்றிட இயன்றால், அப்புறம் அச்சு ; பைண்டிங் என work on the ground தான் பாக்கி ! புனித மனிடோ ஆசீர்வதிப்பாராக ! 

அப்புறமாய் உங்களில் பலர் ஏற்கனவே FB / வாட்சப் க்ரூப்களில் பார்த்திருக்கக்கூடியதொரு சமாச்சாரத்தின் மீது நம்மாலான வெளிச்சமுமே :

'தல' டெக்ஸ் நம்மிடையே ஒரு மூத்த சகோதரரைப் போல கடந்த 38 ஆண்டுகளாய் உலவி வருவதில் no secrets ! மாயாவிக்குப் பின்னதாய் இத்தனை நெடும் காலத்துக்கு தனது star power-ஐ தக்க வைத்திடும் ஆற்றல் நமது இரவுக் கழுகாரைத் தவிர்த்து வேறு எந்த நாயகருக்கும் கிடையாதென்பதிலுமே no secrets தான் ! இந்த ஜாம்பவான் நம் மத்தியில் உலவி வந்துள்ள பொழுதுகளை, அவர் முத்திரை பதித்துள்ள இதழ்களையும் பட்டியல் போட்டது மாத்திரமன்றி, டெக்ஸ் & டீம் சாகசம் செய்துள்ள ஒவ்வொரு இதழின் அட்டைப்படத்தையுமே போட்டு அமர்க்களப்படுத்தியுள்ளனர் நண்பர்கள் ! லிஸ்ட் போட்டது சேலம் டெக்ஸ் விஜயராகவன் & அட்டைப்படத் தொகுப்பு : டாக்டர் B.ராஜேஷ்குமார், காஞ்சிபுரம் ! உண்டான வேலையைப் பார்க்கவே மேலெல்லாம் நோவும் இந்தக் காலத்தில் ஒரு காமிக்ஸ் நேசத்தினை சிலாகிக்க நண்பர்கள் எடுத்துள்ள மெனெக்கெடல்கள் மிரட்டல் ரகம் ! தலைவணங்குகிறோம் சார்ஸ் !! 









இந்த Monumental பணி வெளிச்சத்துக்கு வந்திருக்கும் வேளையினில், சில பல டெக்ஸ் கேள்விகளை முன்வைக்காது போகலாமோ ? So here you go guys :

1 .இந்த 154 இதழ் TEX WILLER பட்டியலில் நீங்கள் TOP 3 என்று தேர்வு செய்வதாயின் எவற்றை தேர்வு செய்வீர்களோ ?

2 .TOP 3 அட்டைப்படங்கள் என்று தேர்வு செய்திடக் கோரினால் your choices please ?

3 .இந்த 154-ல் தோராயமாய் உங்களிடம் இருக்கக் கூடியது எத்தனை இதழ்களாக இருந்திடுமோ ?  

4 .(ஒரிஜினல்) டெக்சின் வசீகரம் இத்தனை காலமான பிற்பாடும் தொடர்வதற்கான காரணமென்று நீங்கள் கருதும் சமாச்சாரங்களை ஒரே வரியில்....I repeat .....ஒரே வரியில் சொல்ல முனையுங்களேன் folks ?

Before I sign out - சில ஜாலி updates :

**தல' புராணமாகவே இந்தாண்டு தொடர்ந்திடாது ; நாங்களும் இருக்கோம்லே !!" என்று மார்தட்ட நம்ம டைகரார் தயாராகிப்புட்டாருங்கோ ! ஒரு வழியாக இளம் டைகர் தொகுப்பின் மொழியாக்கம் டெக்ஸாசிலிருந்து சுடச் சுட வந்தாச்சு ! இங்கே நண்பர் மகேந்திரன் பரமசிவத்துக்கு ஒரு ரவுண்ட் செமத்தியான applause தந்திட நாம் கடமைப்பட்டுள்ளோம் ! இந்தத் தொடருக்குப் பேனா பிடிப்பது எத்தனை பகீரதப் பிரயத்தனம் என்பதை நானறிவேன் ! Thanks a ton sir !! (உங்களுக்கான சின்ன சன்மானத்தில் இக்கட கடா விருந்துக்கு ஏற்பாடு செஞ்சுப்புடலாமோ ? மச்சான்காரர்கிட்டே கேட்டுப்புடலாமா  ? ) So நல்லதொரு நாளாய்ப் பார்த்து தட்டை மூக்காரை உள்ளாற இழுத்துக்க all is ready ! ஆரம்பிக்கலாமுங்களா ?

**அப்புறம் புதுசாயொரு கார்ட்டூன் ஜோடி சிக்கியுள்ளனர் ! இவர்களின் பாணியோ சற்றே மாறுபட்டது ! "கார்ட்டூனா.....ஆஆஆ....." என்ற விசனக்குரல்கள் மாத்திரம் உரக்க ஒலிக்காதிருப்பின், இவர்களை ஒரு சுபயோக சுபமாதத்தில் தமிழ் பேசச் செய்திடலாம் தான் ! What say guys ?

**புத்தக விழா கேரவனின் அடுத்த ஸ்டாப் : முத்து நகர் ! தூத்துக்குடியில் ஏப்ரல் 21 முதல் துவங்கும் விழாவினில் நாமும் பங்கேற்கிறோம் guys !

**அப்பாலிக்கா இந்தக் கி.நா. ராப்பர் எப்படியுள்ளது folks ?


Bye all...see you around ! Have a great weekend !

Saturday, April 08, 2023

ஒரு வாசகப் பார்வையில் ஏப்ரல்...!

 நண்பர்களே,

வணக்கம். ஆண்டின் "அந்த வேளை" இது....! தென்மாவட்டங்களின் அத்தனை அம்மன் கோவில்களும் திருவிழாக்கோலம் காணும் கோலாகலப் பொழுது இது ! ஒன்றுக்கு இரண்டாய் மெகா அம்மன்கோவில்கள் உள்ள எங்க ஊருமே அந்த ஜோதியில் அற்புதமாய் ஐக்கியமாகியிருக்க, திரும்பிய திக்கெல்லாம் பக்தியின் பிரவாகம் ! நம் அலுவலகம் இருப்பதே அம்மன்கோவிலின் வாசலில் தான் எனும் போது - பரவசத்துக்கு ஏது பஞ்சம் ? இதோ, சனி மாலை கதவைச் சாத்திக் கிளம்பினால், திருவிழா விடுமுறை முடிந்து இனி புதனன்று தான் ஊரே இயங்கிட ஆரம்பிக்கும் ! So ஏதேனும் புக்ஸ் ஆர்டர் செய்திடுவதாக இருப்பின் ஜல்தி - ப்ளீஸ் ! 

ஏப்ரல் புக்ஸ் ஒருவழியாய் அனைவரின் கைகளிலும் இருப்பதில் மகிழ்ச்சி ; இப்போதெல்லாம் கூரியர்களின் சேவை (???!!) மெய்யாலுமே தேவை தானா ? என்ற கேள்வி எழுகிறது ! மரியாதையாய் அஞ்சல் சேவையினை பயன்படுத்திவிட்டுப் போகலாமோ ? உங்கள் காசாவது மிச்சமாகும் ! Anyways - இம்மாதத்து இதழ்கள் மூன்றுமே தத்தம் ப்ளஸ்களை முன்நிறுத்தி  ஒன்றுக்கொன்று tough தருவது புரிகிறது ! உங்கள் இடத்தில் நானிருந்து, இந்தக் கதைகள் எவற்றையுமே படித்திருக்காது ; இந்த முக்கூட்டணி புக் பார்சல் என் முன்னே இருப்பின் - எந்த இதழினை எனது வாசிப்பில் பிரதானப்படுத்தியிருப்பேன் ? என்று ஆரும் கேக்கலை ; so நானாகவே கேட்டுக்குறேன் யுவர் ஆனர்ஸ் ! So தொடர்வது - ஒரு வாசகப் பார்வையில் ஏப்ரல் !

இங்கி-பிங்கி-பாங்கி போடாமலே நான் முதலில் தேர்வு செய்வது லயன் கிராபிக் நாவலின் "எந்தையின் கதை"யாகத்தானிருந்திருக்கும் ! Simply becos இம்மாதத்தின் ஒரே கலர் இதழ் அது தானே ? என்ன தான் நாம் குப்பை கொட்டிய பெரும்பான்மை black & white-ல் தான் என்றாலும், கலருக்கென்றான மவுசே தனி தானே ?  Moreover 56 பக்கங்களில் சிக்கென்று இருப்பதுமே என்னைத் தூண்டியிருக்கும் இரண்டாம் காரணமாக இருந்திருக்கும் ! மேலோட்டமாய்ப் புரட்டினாலே கண்ணுக்கு நோவு தராத இதமான அந்த வண்ணக்கலவையும், அட்டகாசமான சித்திரங்களும் would be the clincher ! "மத்த ஆணியெல்லாம் அப்பாலிக்கா !! பிடுங்க வேண்டிய மொத ஆணி இது தான் !" என்று தீர்மானித்திருப்பேன் ! 

எடிட்டரென்ற முறையினில் இந்த இதழுக்கு நிறையவே பில்டப்பெல்லாம் தந்தாச்சு ! So ஒரு வாசகனாய் என்னை லயிக்கச் செய்ய இதனில் என்ன இருக்கக்கூடுமென்ற கோணத்தில் புக்கை புரட்டுகிறேன் இப்போது ! நானொரு XIII தீவிரன் அல்ல தான் ; for that matter, எந்தவொரு நாயக / நாயகிக்கும் fanboy ஆக இருக்காது  - "இந்தக் கதை நல்லா இருக்கா ? இல்லியா ?" என்ற கோணத்தில் மாத்திரமே அணுகிட நினைத்திடுவேன் ! So ஒரு cult status கொண்ட தொடரின் கிளைக்கதை என்ற முறையில், வாசிக்கும் முன்பாய் மெயின் கதைத்தொடரை லேசாக நினைவூட்டிக் கொள்ள முனைவேன் ! இக்கட "முன்கதைச்சுருக்கம்" என்று ஏதும் இல்லாதது ஒரு குறை என்று உறுத்திடும் முதலில் ! அதிலும் வெண்டைக்காய்களை வேரோடு மேய வேண்டிய நம் மாதிரியான ஞாபக மறதிப் பார்ட்டிகளுக்கு - "இந்த அண்ணாச்சி இன்னார் ; அந்த அத்தாச்சி அன்னார் ; இவுகளுக்கும், அவுகளுக்கும் வாய்க்கா வரப்பு தகராறு..!" என்ற ரீதியில் விபரமாய் ஒரு நினைவூட்டும் பகுதி இருந்திருப்பின் வாசிக்கச் சுலபமாகியிருக்கும் ! ஆனால்... ஆனால்...கிட்டத்தட்ட 1200 பக்கங்களுக்கு ஓட்டமெடுத்திருக்கும் ஒரு மெகா தொடருக்கு, இரண்டோ, மூன்றோ பக்கங்களில் கதைச்சுருக்கம் தந்திடுவதாயின், ஷான் வான் ஹாம் தனது AI software சகிதம் வந்தாலொழிய, சாமான்யர்களுக்கெல்லாம் டிரவுசர் கழன்று விடும்  என்பது புரிவதால், சரி..போனால் போகட்டுமென்று எனது ஞாபகங்களை உருட்டிப் பார்க்க முனைந்திருப்பேன் ! இதர துணைக் கதாப்பாத்திரங்களைக் காட்டிலும் XIII தொடரினில் எனக்கு நினைவில் தங்கியோர் இருவரே ! தோட்டாக்காயத்தோடு கடலில் அடித்து வரப்படும் XIII-ஐ மீட்டிடும் அந்த குண்டு அம்மணி மார்த்தா தான் முதலாமவர் ! முதல் அத்தியாயத்திலேயே மனதைத் தொட்டவர் என்பதாலா ? அல்லது அந்தப் பெண்மணியினைச் சுற்றிய மென்சோகம் எனக்கு ஸ்பெஷலாகத் தெரிந்ததா ? என்று சொல்லத் தெரியலை - but that was a special character to me ! இரண்டாவது நபர் - ஜானதன் பிளை ! 'XIII-ன் பெயர் என்ன ? பின்கதை என்ன ? பூர்வீகம் என்ன ?' என்ற கேள்விகளெல்லாம் உயிர்ப்போடு ஓடிக்கொண்டிருந்த தருணத்தில் - "டாடி" என்ற கதாப்பாத்திரத்தில் உட்புகுந்த ஜானதனை சுவாரஸ்யமாய் அப்போதே ரசித்தவன் நான் ! கையில் ஒரு குட்டி கரடி பொம்மையைக் கொண்டிருக்கும் பாலக ஜேசனை, விரல் பிடித்துக் கூட்டிப் போகும் அட்டைப்படத்தில் (maybe part 6 ? part 7 ??) இடம்பிடித்திருந்த ஜானதன் எனது நினைவுகளிலும் தங்கியிருந்தார் ! So பெருசாய் குழப்பமின்றி வாசிக்க ரெடியாகி இருப்பேன் ! 

கதைக்குள் புகுந்த சற்றைக்கெல்லாம் இந்த spin-off கதையின் கதாசிரியரை எனக்கு நிரம்பவே பிடிக்க ஆரம்பித்திருக்கும் ! XIII தொடரின் அடிநாதமே - அமெரிக்காவின் வெள்ளை supremacy சார்ந்த  வெறி தான் எனும் போது, அந்த பாஸ்டர் கதாப்பாத்திரத்தை லாவகமாய் ஒரு கறுப்பினராய் படைத்திருப்பது 'அட' போட வைத்திருக்கும் ! அதற்கு இன்னொரு காரணமும் இருந்திருக்கும் - becos ஜானதன் பிளையின் மெயின் கதைப் பங்கினில் கு க்ளக்ஸ் க்ளான் கும்பலுக்கும் பிரதான இடமுண்டு ! And அந்த கு க்ளக்ஸ் க்ளானின் பிரதம வைரிகள் கறுப்பினர்கள் தான் ! So கொஞ்சம் கூட நெருடலின்றி கதையின் premises செட் ஆகி இருக்கக் கண்டு ஜரூராய் வாசிப்பினை தொடர்ந்திருப்பேன் ! இளம் பையனாய் ஜேசன் காணும் அறிமுகமும் ; இளமை நாட்களில் அவன் வேண்டாவெறுப்பாக தந்தையோடு கழித்த நாட்களையும் சொல்லும் phase-ல்  கதாசிரியரின் முதுகில் ஒரு மானசீக ஷொட்டு வைக்க எனக்கு நிரம்பவே சபலம் தட்டியிருக்கும் ! அதுவும் அப்பாவின் முதுகில் தழும்புகளைக் கண்டு பதறுவதும் ; டாடி கட்டுப்படுத்த நினைக்கும் தருணங்களில் எல்லாம் அடங்க மறுக்கும் அந்த போர்க்குணமும் - பின்னாட்களது (பெரிய) ஜேசனின் குணாதிசயங்களுக்கு ஒத்துப் போகும் இயல்பான அடித்தளமாய் அமைந்திருப்பதை எண்ணி வியந்திருப்பேன் ! ஊருக்குள் வரும் ஒரு டாம்பீகமான பொதுவெளிப் பிரமுகர் - மெகா புளுகுமூட்டையாய் இருப்பதை பார்த்தாலுமே, அந்தாளை விட்டுக் கொடுக்கத் தெரியாத அப்பாவித்தனம் ; "சும்மா சும்மா என் வாயை அடைக்காதீர்கள் டாடி ; நான் வாத்து மடையனெல்லாம் இல்லை ; எதுவாக இருந்தாலும் புரிந்து கொள்வேன் - நிஜத்தைச் சொல்லுங்கள் !!" என்று பொங்கும் வீரியத்திலும், நமது சிறுவயது நினைவுகளும், அவரவரது தந்தைமார்களுடன் ஏதோ ஒரு சூழலில் எழுந்திருக்கக்கூடிய வாக்குவாதங்களும் நினைவுக்கு வராது போகாதென்பேன் ! 

And ஜானதன் பிளையின் flashback-ல் நிஜம் தொனிக்கும் பாணியில் நிறைய சம்பவங்களை கொணர்ந்து, ரொம்பவே தத்ரூபமான ஒரு காலகட்டத்தைக் கண்முன்னே கொண்டு வர கதாசிரியரும், ஓவியரும், கலரிங் ஆர்டிஸ்ட்டும் போட்டி போட்டிருப்பதை வாய் பிளந்து ரசித்திருப்பேன் ! கதை ஓட்டத்தினில் நிமிஷம் கூடத் தொய்வின்றி நகர்த்திச் செல்வதென்பது ஒரு அசாத்தியக் கலை & அதனில் கதாசிரியர் ப்ரன்ஷ்விக் செம தேர்ச்சி பெற்றிருப்பது கண்கூடு என்பதால் அவருக்கொரு சலாம் போட்டபடியே க்ளைமாக்ஸுக்குள் புகுந்திருப்பேன் ! "முடிவு இது தான் ; இப்படித்தான்" என்பது பிதாமகர் வான் ஹாம் எப்போதோ நிர்ணயித்து விட்டார் என்பதால் ஜானதனின் முடிவு சங்கடமானதாகவே இருக்கும் என்பதில் ரகசியம் இருந்திராது தான் ; ஆனாலும் அந்த மனுஷன் எப்படியாவது தப்பி விட மாட்டாரா ? என்ற ஆதங்கம் உள்ளுக்குள் இருக்கவே செய்தது  ! அதுவும் அந்த FBI சினைப்பன்றி இறுதிப் பக்கத்தில் கூலாக இளம் ஜேசனுக்கொரு offer letter தந்து விட்டுக் கிளம்பும் போது பற்களை நற நறவென்று கடிக்கவே தோன்றியிருக்கும் ! So துவக்கமும் தெரிந்திருக்க ; முடிவும் தெரிந்திருக்க, இடைப்பட்ட மத்தியப் பகுதிக்கு மட்டுமே கதை எழுதி, தலைக்கும் நியாயம் செய்து, வாலுக்கும் நியாயம் செய்திருக்கும் இந்த ஆல்பத்தை நமக்குக் கண்ணில் காட்டக் காரணமாக இருந்த நண்பர் பழனியை நினைத்துக் கொண்டே புக்கை மூடி வைத்திருப்பேன் ! இறுதிக்கு முந்தைய அந்த பிரேமில் நிற்கும் ஜேசனின் close up சித்திரம் மட்டும் புக் மூடிய பிற்பாடுமே என்னுள் நிலைகொண்டிருந்திருக்கும் !! காத்திருப்பது என்னவென்று தெரியாமல் கலங்கி நிற்கும் ஒரு பாலகனை இதை விடவும் மிரட்டலாய், அமரர் வில்லியம் வான்ஸ் தவிர்த்த   வேறொரு ஓவியர் வரைந்திருக்க முடியுமா - நானறியேன் ! 

"எந்தையின் கதை" நிறைவுற்ற பின்னே கொஞ்ச நேரம் அதன் சோகத்தினில் திளைத்திருந்திருப்பேன் - நாமெல்லாமே அவலச் சுவைகளில் ஒருவித மகிழ்வை உணர்ந்திடுவோர் தானே ? அதன் பின்பாய், கொஞ்சமாய் இயல்புக்குத் திரும்பிய பிற்பாடு நான் தூக்கியிருப்பது இட்லிக்கன்னன் சார்லியின் அந்த டைஜெஸ்ட்டாகத் தானிருந்திருக்கும் ! ஏன் ? டிடெக்டிவ் சார்லி ஸ்பெஷல் - 1 ஒரு வாசகனாய் என்னுள் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் ? என்பது நேரம் கிடைக்கும் அடுத்ததொரு தருணத்தில் ! Bye for now guys !!

புறப்படும் முன்பாய், இதோ - ஒரு பரிச்சயமான முகத்தின் தரிசனம் !! எங்கே ? எப்போ ? சொல்கிறேனே guys !! 


Have a wonderful weekend ! See you around !

எந்தையின் கதை - கதாசிரியர் Luc Brunschwig

எந்தையின் கதை - ஓவியர் Ta Duc