Powered By Blogger

Monday, April 24, 2023

மே = மேளா !

 நண்பர்களே,

வணக்கம். மெய்யாலுமே மிரண்டு கிடக்கின்றோம் - உங்களின் ஆர்வப் பிரவாகத்தினைக் கண்டு !! 2 நாட்களாக வாட்சப்பிலும், போனிலும் நீங்கள் பறக்க விட்டிருக்கும் ஆர்டர்களை சமாளிக்கவே HULK ; ஸ்பைடர்மேன் ; X MEN என்று யாரையாச்சும் ஒத்தாசைக்குக் கூப்பிடலாமா ? என்று யோசித்துக் கொண்டிருந்த நிலையில் - இன்றைக்கு (திங்கள்) காலையில் ஆன்லைன் சைட்டை திறந்தால் phewwwwww !! சுனாமியாய் ஆர்டர்களின் குவியல் அங்கேயும் !! சர்வ நிச்சயமாய் இவற்றை மொத்தமாய் க்ளியர் செய்திட கொஞ்சமாய் அவகாசம் அவசியமாகிடும் guys !! பேக்கிங் பணிகளுக்கென கூடுதலாய் ஆட்களை ஏற்பாடு செய்தும் உள்ளோம் ; so பெண்டிங் உள்ள சில இதழ்கள் பைண்டிங் முடிந்த வந்த கையோடு 'ஏக் தம்'மில் அனுப்பி விடுவோம் !! அது வரைக்கும் நம்மாட்களுக்கு கொஞ்சமாய் மூச்சு விட்டுக் கொள்ள அவகாசம் கோருகிறேன் - ப்ளீஸ் !

And இன்றைக்கும் ஏகமாய் calls ..."ஐயோ ..எங்களுக்கு இந்த ஆன்லைன் மேளா பற்றித் தெரியாதே !!: என்று !! So எதிர்வரும் மே 1-ம் தேதி ஒரு தினத்துக்கு மறுக்கா ஆன்லைன் மேளாவைத் தொடர்ந்திடலாமா guys ? அதே டிஸ்கவுன்ட்ஸ் ; அதே வாய்ப்புகள்....and "இரத்தப் படலம்" புக்ஸ் கூட அதே போல one more time ?

நீங்க ரெடின்னா நாங்களும் ரெடி !! 

P.S : "இரத்தப் படலம்prebooking இயலாது guys ; ஆகையால் இப்போவே துண்டை போட்டு வைக்க வழி லேது ! அன்றைய தினம் பார்த்துக் கொள்ளலாம் ! 

204 comments:

 1. மே மாதம் புதிய புத்தகங்களுடன் என்றால் ஓகே டபுள் ஓகே

  ReplyDelete
 2. ரத்தப் படலம் வேண்டாம் சார்.
  தனித் தனியாக
  கருப்பு வெள்ளையில் தொகுப்பாக
  வண்ணத்தில் 3 புத்தககங்களுடன்
  வண்ணத்தில் 2 புத்தககங்களுடன்
  இன்னும் நாம் போக வேண்டிய தூரம் இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. அவர் ஸ்டாக்கில் இருக்கும் மிக சில புத்தகங்களை சொல்றாருங்க சார்

   Delete
 3. வணக்கம் நண்பர்களே.

  ReplyDelete
 4. மே 1 க்கும் ஆட்டம்போட நாங்க ரெடிங்கோ சார்...😍😃😘😀😃😍😘😀

  ReplyDelete
 5. Delighted to know you lion office is overwhelmed by orders. Wow!

  ReplyDelete
 6. @புன்னகை ஒளிர் ஜி..😍😃

  உங்களுக்காகவே மீண்டும் மேளா...😍😍😃😃😃

  ReplyDelete
 7. ஆசிரியரின் அனைத்துக் கோரிக்கைகளையும் ஆமோதிக்கின்றேன். வரவேற்கின்றேன்.

  ReplyDelete
 8. கண்டிப்பாக சார்.
  இந்த ஆன்லைன் பற்றி இன்னுமே பலருக்கு தெரியவில்லை.
  இப்பவே கூட இன்னும் ஒருவாரம் தொடர்ந்து கன்டினியூ செய்யலாம்.
  மேலும் இ ப கருப்பு வெள்ளையில்
  இருந்தால் ஒன் காப்பி ப்ளீஸ்...

  ReplyDelete
 9. சார் ரத்தபடலம் கருப்பு வெள்ளை எனக்கு வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. Sorry...prebooking இயலாது சார் ; ஏற்கனவே ஆபீசில் நம்மாட்களை பின்னி எடுத்துக் கொண்டிருக்கிறார்களாம் நண்பர்கள் ! Phewwwwww !!

   Delete
 10. பதிவு வந்தாச்சா....
  வணக்கம் சார்...

  ReplyDelete
 11. Ok miss panna x man comics vanganum

  ReplyDelete
 12. மற்றொமொரு நாள் வைத்தால் நன்றாக இருக்கும் ஆசிரியரே
  இந்த இரண்டு நாட்கள் பற்றி தெரியாதவர்களுக்கு பயன்படும்

  ReplyDelete
 13. ஹைய்யா புதிய பதிவு...

  ReplyDelete
 14. புதிய புத்தகங்கள் போடுங்கள் சார்

  ReplyDelete
 15. முகநூல் பக்கங்களில் இது பற்றி நாம் பதிவிடும் போது நிறைய நண்பர்கள் எபபடி வாங்குவது?எங்கே வாங்குவது? என்ற ரீதியாலான கேள்விக் கணைகளை தொடுக்கிறார்கள்..
  அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனிச் செய்தியில் விபரங்கள் தந்து விட்டு நமது லயன் வாட்சப் எண்ணையும் தந்திருக்கிறேன்.
  குறிப்பாக அவர்கள் விசாரித்தது சூப்பர் ஹீரோ டைகர் மீண்டும் வருகிறாரா என்பதே!!!

  ReplyDelete
  Replies
  1. எந்த டைகர் சாரே ? தட்டை மூக்காரா ? அல்லது குட்டி புக்காரா ?

   Delete
  2. மினி காமிக்ஸ் ஹீரோ சார்..

   Delete
  3. அடடே..இவர் அவ்ளோ பாப்புலரா ?

   Delete
 16. கலவர பூமியில் கனவைத் தேடி..


  அழுத்தமான சம்பவங்களின் கோர்வையை முன்னிறுத்தி இரு பெரும் நாயகர்களை அவற்றுடன் பிணைத்து சென்ற கதாசிரியரின் திறமையை அனைவரும் பாராட்டியே தீர வேண்டும்.

  டெக்ஸ் ,ஸாகோர் இருவருக்கும் ஆகச் சிறந்த கதைகளில் இது ஒன்று என்பதில் ஐயமில்லை.

  முதல் பக்கத்தில் துவங்கி அடுத்த பக்கத்தில் முடியும் துன்ப ரசம் ததும்பும் குட்டி காதல் கதையும் உண்டு.

  பக்கம் 25-ல் பக் மேல் மையல் கொண்ட புன்னகை முகத்துடன் ப்ராலின் ஹாட்டர்

  அவள் மேல் ஆர்வமில்லாத பக் பன்டேரா நகரில் பயண குழுவை விட்டு பிரிய உத்தேசிக்க 26 -ம் பக்க கடைசி பேனலில் அனைவரும் புன்னகைத்திருக்க கண்ணீர் வழியும் முகத்துடன் ப்ராலின் ஹாட்டர்,
  மகளின் ஒருதலை காதல் உணர்ந்து இறுக்கமான முகத்துடன் பக்குடன் பேசும் ஹாட்டர் .

  கதாசிரியர், ஓவியர் இருவருக்கும் ஷொட்டு. இதைவிட குறுகிய காதல் கதை வருவது கடினமே!

  மிகவும் வித்தியாசமான ,ஆழமான கதை

  9.5/10

  ReplyDelete
  Replies
  1. மௌரோ போசெல்லியின் மேஜிக் சார் !

   Delete
 17. // எதிர்வரும் மே 1-ம் தேதி ஒரு தினத்துக்கு மறுக்கா ஆன்லைன் மேளாவைத் தொடர்ந்திடலாமா guys ? //
  தாராளமாக தொடருங்கள் சார்,ஆன்லைன் மேளா ஹிட் அடித்தது மிக்க மகிழ்ச்சி சார்...!!!

  ReplyDelete
 18. உயிரைத் தேடி கறுப்பு வெள்ளைப் பிரதி கரூர் போய்ச் சேர்ந்து விட்டது..
  வண்ணப் பிரதிக்காகவும்,மற்ற புத்தகங்களுக்காகவும் வெய்ட்டிங்..

  ReplyDelete
 19. @ ALL : "இரத்தப் படலம்" prebooking இயலாது guys ; ஆகையால் இப்போவே துண்டை போட்டு வைக்க வழி லேது !

  அன்றைய தினம் பார்த்துக் கொள்ளலாம் ! And ஏற்கனவே நேற்று XIII வாங்கியுள்ளோர் மறுக்கா முயற்சிக்க வேணாமே - ப்ளீஸ் !

  ReplyDelete
  Replies
  1. அந்த புக் இல்லாதோருக்கு வாய்ப்பு தந்திடுவோமே ?

   Delete
  2. அதுக்கு டிமாண்ட் இன்னுமாயிரமடித்தாலும் குறையாது சார்....முடிஞ்சா பாக்கெட் சைசுல

   Delete
 20. எங்கள் ஏரியாவில் நான்கு புதிய டெக்ஸ் ரசிகர்கள் உருவாகி விட்டார்கள்

  ReplyDelete
 21. அதுவும் இளம் டெக்ஸின் " திக்கெட்டும் பகைவர்கள்" அவர்களிடம் செம ஹிட்

  அவருடைய Intro Scene மிகவும் பிடித்து போய்விட்டது
  ஓவியங்கள் தெறி என்றனர்

  ReplyDelete
  Replies
  1. இளம் டெக்ஸ் எல்லாமே intro scene செம்ம மாஸாக தான் இருக்கும். இந்த கலவர பூமியில் கனவை தேடியிலும் பாருங்களேன் டெக்ஸ் intro சும்மா தாறுமாறு.

   Delete
 22. ////மெய்யாலுமே மிரண்டு கிடக்கின்றோம் - உங்களின் ஆர்வப் பிரவாகத்தினைக் கண்டு ///

  ---தாங்கள் & தங்களது அணியின் இருமாத அசராத உழைப்புக்கு இருநாள் விழா உரிய வரவேற்பை பெற்று தந்ததை இரண்டே வார்த்தைகளில் சொல்லீட்டீங்க சார்...

  வாழ்த்துகள்💐💐💐💐💐

  ReplyDelete
 23. டெக்ஸ் கதை யாரு எழுதுறாங்க, யாரு ஓவியம் வரைறாங்க, எப்படி கதை எழுதுறாங்க

  ஒருவரே ஒருகதை முழுக்எ வரைறாங்களா ஆச்சரிய பட்டாங்க

  இன்னும் நிறைய கேள்விகள்

  ஒரு சிவகாசி தலைமை செயலகத்தை விஸ்ட் செய்து விட வேண்டுமென ஆவலில் உள்ளார்

  ReplyDelete
 24. ////'ஏக் தம்'மில் அனுப்பி விடுவோம் !! அது வரைக்கும் நம்மாட்களுக்கு கொஞ்சமாய் மூச்சு விட்டுக் கொள்ள அவகாசம் கோருகிறேன் - ப்ளீஸ் !///

  மெதுவாக வரட்டும் சார்.....காத்திருந்து படிப்பதும் ஓரு தனி சுகமே!!!

  கலர் உயிரைத்தேடிக்காக வெயிட்டிங்கு.....

  ReplyDelete
 25. ////So எதிர்வரும் மே 1-ம் தேதி ஒரு தினத்துக்கு மறுக்கா ஆன்லைன் மேளாவைத் தொடர்ந்திடலாமா guys///

  நிச்சயமாக சார்.

  நிறைய நண்பர்கள் பங்குபெற காத்துள்ளார்கள்.....!!

  ReplyDelete
 26. // எதிர்வரும் மே 1-ம் தேதி ஒரு தினத்துக்கு மறுக்கா ஆன்லைன் மேளாவைத் தொடர்ந்திடலாமா guys ? //

  Sure. It helps many comics friends.

  ReplyDelete
 27. Godown காலி என்ற செய்தி வரட்டும்

  ReplyDelete
 28. @Edi Sir..😍😘😃

  நமது முன்னாள் நாமக்கல் முகவர்
  "முத்து நாவல் பண்ணை" திரு.முத்துக்குமார் *இரத்தபடலம்*(கலர் ) வேண்டும் என நாமக்கல் புக்ஃபேரின்போதே கேட்டார் சார்..😍😘

  ReplyDelete
  Replies
  1. துண்டு போட்டு வைக்க வழியில்லை சார் !

   Delete
 29. எதிர்வரும் மே 1-ம் தேதி ஒரு தினத்துக்கு மறுக்கா ஆன்லைன் மேளா 👍👍👍

  மீண்டும் ஒரு காமிக்ஸ் திருவிழா 👍🧚🧚🧚

  ReplyDelete
 30. கேப்டன் டைகரின் என் பெயர் டைகர் மற்றும் பரலோக பாதை இரத்த தடம் ரொம்ப நாள் தேடிக் கொண்டு இருக்கிறேன. Reprint செய்தால் மகிழ்ச்சி

  ReplyDelete
  Replies
  1. நண்பரே....மூணரை வருஷங்கள் ஸ்டாக்கில் இருந்த புக்ஸ் அவை !

   Delete
  2. ஆன்லைன் போன நவம்பர் மாதம் முதல் தான் சார் தெரியும். அதுவரை எதாவது கடையில் கிடைக்கும் காமிக்ஸ் தான். சரி சார் அது எப்போது re-print செய்கிறீர்களோ அப்போது வாங்கி கொள்கிறேன்

   Delete
  3. பரலோக பாதை இருக்கிறது இரத்த தடம் தான் தேடிக் கொண்டு இருக்கிறேன. இரண்டையும் சேர்த்து maxi ஆக கிடைத்தாலும் நன்று.

   Delete
 31. இரத்த படலம் கொஞ்சம் நாள் ஆன்லைனில் இருந்தால் நல்லது

  ReplyDelete
  Replies
  1. 20 மாதங்கள் இருந்தன நண்பரே !

   Delete
  2. ஆன்லைன் போன நவம்பர் மாதம் முதல் தான் சார் தெரியும். அதுவரை எதாவது கடையில் கிடைக்கும் காமிக்ஸ் தான்

   Delete
 32. வந்துட்டேன் நானும் வந்துட்டேன்.

  ReplyDelete
 33. மே 1 ஒரு நாள் ஆன்லைன் மேளாவுக்கு double ok Sir

  ReplyDelete
  Replies
  1. அப்ப அந்த விடுமுறை சமயத்துக்கான ஸ்பெசல் அறிவிப்பு மே 1ந்தேதி வந்துரும்.

   Delete
  2. // அப்ப அந்த விடுமுறை சமயத்துக்கான ஸ்பெசல் அறிவிப்பு மே 1ந்தேதி வந்துரும். // நான் அடுத்து சொல்ல வந்த விசயத்தை கன கச்சிதமாக சொல்லிவிட்டீர்கள். நன்றி நன்றி நன்றி அமெரிக்க மாப்பிள்ளை அவர்களே.

   Delete
  3. தெய்வங்களா....மே மாத புக்குகளுக்குள் இனிமே தான் நுழையவே செய்யணும் நான் !

   Delete
  4. நாங்க புக்கெல்லாம் எதும் கேக்கலைங்க சார். அறிவிப்பு பத்தி மட்டுந்தான் கேக்கறோம்.

   Delete
  5. கேளுங்க மகி...இன்னும் கொஞ்ச நேரம் கட்டை விரல் வாய்குள்ளயேருக்கட்டுமே

   Delete
  6. // நாங்க புக்கெல்லாம் எதும் கேக்கலைங்க சார். அறிவிப்பு பத்தி மட்டுந்தான் கேக்கறோம். // Exactly நீங்க 10 தேதி வாக்கில் மே மாத புத்தகங்கள் அனுப்புங்க சார். மே 1 அந்த ஸ்பெஷல் சூப்பர் டூப்பர் அறிவிப்பு மட்டும் போடுங்க போதும்.

   Delete
 34. Online mela..... Sure editor sir. Waiting eagerly for the SUMMER SMASHER OFFER. 🥰

  ReplyDelete
 35. மே 1 ஆன்லைன் மேளா Ok சார். இரத்தபடலம் கருப்பு வெள்ளை எத்தனை புத்தகம் விற்பனைக்கு வைக்கப்படும்? ஆன்லைன் மேளா துவங்கும் நேரம் தெரியப்படுத்துங்கள்?

  ReplyDelete
 36. // எதிர்வரும் மே 1-ம் தேதி ஒரு தினத்துக்கு மறுக்கா ஆன்லைன் மேளா /:

  One special book for this OBF sir -:)

  ReplyDelete
  Replies
  1. பரணி என்ன man இப்படி ஆய்ட்ட? ஹிஹிஹி

   Delete
  2. இப்போ நாம் படுத்திய பாட்டுக்கே கன்னத்தில் ஒட்டிய மருவோடு சிவகாசியில் இருந்து ஒருவர் ஜார்கண்ட் ரயில் ஏறி விட்டதாக கேள்வி.

   Delete
  3. இதெல்லாம் "படுத்தல்கள்" அல்ல சார் - கொடுப்பினை !

   எத்தனை பேருக்கு இந்த அன்பும், நட்பும் அன்றாடம் கிடைக்கும் என்று சொல்லுங்களேன் ? அவற்றின் பொருட்டு என்ன குட்டிக்கரணம் அடிக்க அவசியப்பட்டாலும் தப்பே இல்லை சார் !

   Delete
  4. // எத்தனை பேருக்கு இந்த அன்பும், நட்பும் அன்றாடம் கிடைக்கும் என்று சொல்லுங்களேன் ? அவற்றின் பொருட்டு என்ன குட்டிக்கரணம் அடிக்க அவசியப்பட்டாலும் தப்பே இல்லை சார் ! //

   Thank you sir. Feeling very (emotional) happy after reading your reply.

   Kumar @ ha ha. Our editor might be planned one already:-)

   Delete
  5. // எத்தனை பேருக்கு இந்த அன்பும், நட்பும் அன்றாடம் கிடைக்கும் என்று சொல்லுங்களேன் ? // உண்மை தான் சார்.

   Delete
 37. 23-ம் தேதி முகூர்த்த நாள் நாள் என்பதால் நான் இரண்டு நாட்களும் வேலையாக இருந்தேன். ஆன்லைன் புக்பேரை மிஸ் செய்துவிட்டேன். மீண்டும் மே -1 வருவது மகிழ்ச்சி.

  ReplyDelete
 38. சூப்பர் சார்.....மே 1 ம் தேதி நாங்க ரெடி பன்னென்டுல மீதமுள்ள நான்கு புது புக்க விட நீங்க ரெடியா...
  ஏதாவது கம்யூனிச புத்தகம்...இந்த 12 மணி நேர போராடு களத்தில் நாமும் சிவப்பானால் மே ஃப்ளவரோடு போட்டி போட்டதாருக்குமே

  ReplyDelete
  Replies
  1. பையன் உங்களுக்கு கதை சொல்லணுமாம் ஸ்டீல் - கூப்பிடுறான் பாருங்க !

   Delete
  2. செம்ம சார் ROFL...

   Delete
  3. Yeley rendavathu paiyan diaper maatha koopidu kiraan seekiram poley:-)

   Delete
  4. பையர்ர்ர்ர்ர்ர்

   Delete
 39. உயிரைக் தேடி ....எங்காவது சிறுவர் மலர் கிடைக்கையில் வாசித்ததுண்டு....எங்க பழய பேப்பர் கடைலயும்....சில நேரங்கல்ல என்னவாகுமோன்னு தேடியதுமாய் அரசல் புரசலாய் நினைவில்....சில நேரங்களில் பேப்பரைவெள்ளியன்று இதற்காக காசு கொடுத்துப் வாங்கியதுண்டு ....தொடர்ச்சியாய் வாங்கவில்லை...தினமணி வந்த சூப்பர் தும்பி ஸ்பைடர் போல பறக்கானேன்னு வாங்கியதுண்டு...இவைகளை வாங்க பணம் போதாதென கைவிட்டதுமுண்டு...ஏன்னா லயன். முத்து திகில் மினி ஜுனியர் ராணி ஜேம்ஸ்பாண்ட் இல்லா வாரத்தில்ல் பொன்னி மினிபொன்னி அசோக் பழய கடைகளில் வீரப்பிரதாபனின் அணில் அண்ணா மாயாஜாலகதைக அம்புலிமாமா ரத்னபாலா பாலமித்ரா கோகுலம் பூந்தளிர்....இதுகளுக்கு காசு புரட்டனுமே...உயிரைத் தேடி பெட்ரோல் பங்க் என சில ஞாபகம்...ஏதாச்சும் ஞாபகமிருக்கான்னு திறந்தா முதல் பக்கம் நினைவிலில்லை....இதை படித்தனோ இல்லையோ....
  ஆனா பக்கத்தையும் தீட்டிய ஓவியமும் சூப்பர் சார் சொல்லிப் படிக்க வசனங்களோ வேற லெவல்....முதல் இரண்டு பின் கடைசி மூன்று பக்கங்களும் அதகளம்....வண்ணத்தில் வந்ததும் படிப்போம்னு அடக்கி வைக்கிறேன்....என்னா உலகம் சார்....சத்தியமா அன்னைக்கு மட்டும் விட்டிருந்தியலோ பயத்துலயே செய்திருப்போம்....அன்று இது போல் நடக்குமான்னு எள்ளி நகையாடிய கதை இது போல் வந்தான்னு நம்மைப் பார்த்து துள்ளி நகையாடுவது போலுல்லது...நிச்சயம் கார்சனின் கடந்த காலம்... 13 ...மின்னும் மரணம் வரிசையில் ஓர் குறிஞ்சி மலராவதுறுதி

  ReplyDelete
  Replies
  1. அந்த அட்டைப்படம் பொருத்தமா இருந்தாலும் இன்னும் எஃபக்டா இருந்தா இன்னும் நல்லாருக்குமேன்னு தோனியது....ஆனா நேரில் சும்மா மிரட்டுவது வலையில் சிக்கியதாய் ....சூப்பர் சார்....டஸ்ட் ஜாக்கட் படம் சூப்பர்....வண்ண புத்தகத்துக்குதான் டஸ்ட் ஜாக்கட்டா....பெரிதும் எதிர்பார்ப்பது அதன் தரிசனத்தையும்...படிக்கலாம்னு போனா பன்னென்டு பக்கம் என் உயிரை இழுக்க தப்பித்து வந்துவிட்டேன் வண்ணத்தில் கெத்தா நரகத்த பாத்து பயப்போம்னு...முடில சார் ஆளை முழுங்கும் இக்கதை நம்மை எங்கோ கொண்டு செல்வதுறுதி....மிரட்டல் ...வடிவமைப்பு...தாளின் தரம்... அச்சின் தரம் டாப்பான சென்ற வி காமிக்சுக்கே டாப்...காலத்துக்கும் பிக்கப் போகும் பொக்கிஷம் தஞ்சை பெரிய கோயிலாய்...வியாழன் வண்ணம் கிட்டிடுமல்லவா சார்

   Delete
  2. 'அந்த நாள்...ஞாபகம்...
   நெஞ்சிலே வந்ததே.....
   வந்ததே....நண்பனே...நண்பனே'

   என்று ஒரு சிவாஜி பாட்டு....TMS வாய்ஸ் !

   ஆரம்பிக்கும் போது மூச்சிரைப்பது போலொரு effect கொடுத்திருப்பார் ! உங்க பின்னூட்டங்களைப் படிக்கும் போதெல்லாம் சேம் பீலிங்கு ! Why ஸ்டீல் ?

   Delete
 40. மே 1 ஆன்லைன் புத்தக மேளாவை வரவேற்கிறோம்
  ஆனாலும்
  அந்த தேதியிலும் எங்களுக்கு புதிய வெளியீடுகள் தேவை

  ReplyDelete
 41. மே=மேளா கற்றது இதுக்கும் மேலான்னு தெரிவது நம் அனைவருக்கும் போல ஆசிரியருக்குமா

  ReplyDelete
  Replies
  1. ஆஹா கிளம்பிட்டாங்க அய்யா கிளம்பிட்டாங்க

   Delete
 42. எனக்கு உயிரைக் தேடி வந்துவிட்டது.இந்திய அஞ்சல் துறையின் துரித சேவை.நம்பவே முடியவில்லை.

  ReplyDelete
  Replies
  1. சூப்பர் சார்.

   Delete
  2. நிஜமே சார் - மின்னல் வேகம் இப்பொதெல்லாம் !

   Delete
 43. உயிரைக் தேடி மேக்கிங் அற்புதம் பத்து புத்தகங்கள் தயாரிப்புபணி தலைக்குமேல் ,வீட்டில் பெரியவர்களுக்குஉடல்நிலைசரியில்லைஇதுபோன்ற சிரமமான சூழ்நிலையில்யாராக இருந்தாலும் தொழிலில் ஈடுபாடு குறையவே செய்யும்.ஆனால் இங்கோஉயிரைத்தேடி உலகத்தரம்.சார் பாராட்ட வார்த்தைகளில்லை.புத்தகத்தின்பிரதிக ளை ( fleetway)தயாரிப்பாளர்களுக்கு அனுப்புங்கள்சார்.அவர்களது கருத்துக்களை அறிய ஆவல்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி சார்...! அதுவொரு கடமை என்றால் ....இதுவுமே ஒரு கடமை தானே ? இரண்டையும் சமாளிக்க ஆண்டவன் ஆற்றல் தருவாரென்ற நம்பிக்கையில் வண்டியை ஓட்டுவோம் சார் !

   Delete
  2. சூப்பர் சார்....பல விசயங்களை பாடமாகவே வாழ்ந்து காட்டுகிறீர்கள்....செந்தூரானருள் என்றென்றும் துணை நிற்கட்டும்

   Delete
  3. ராஜசேகர் சார் வரிக்கு வரி பிளசோ பிளஸ்....

   Delete
 44. மே 1 ல், புது புத்தகங்கள் ஏதும் கிடைக்குமா? அறிவித்தால் அகமகிழ்வோம்..

  ReplyDelete
  Replies
  1. அச்சச்சோ...அப்புறம் முன்னோர்கள் சொல்லி வைச்சதை மீறின மாதிரி ஆகிப் போகும் சார் !

   Delete
 45. 100 வது கமெண்ட் நம்மது. 🥰

  வாழ்த்துகள் அமோக ஆன்லைன் விற்பனைக்கு. மே 1 உழைப்பாளர் விடுமுறை தினம் என்பதால் நம் குழுவிற்கு ஓகே வென்றால், அமர்க்களபடுத்தி விடலாம் 👍

  ReplyDelete
 46. ஏப்ரல் 29 & 30 மற்றும் மே 1 ஆகிய மூன்று நாட்கள் நடத்தலாம் சார்.
  விடுமுறை நாட்கள் என்பதால் வாங்காதவர்கள் வாங்க நேரமிருக்கும்.

  ReplyDelete
 47. @ஸ்ரீ ஜி..😍😃😘

  I accept ji..👍👌

  ReplyDelete
 48. மே தேதியே விடுமுறை நாள்...நம்முளுக்காக அவங்க வேலை செய்ய போறாங்க
  திருப்பி இந்த ஞாயிறும் ரெஸ்ட் இல்லாம வேலை செய்தால் கஷ்டங்க
  அப்புறம் மூணு நாட்களில் காமிக்ஸ் சகோதரர்கள் ஏகப்பட்ட ஆர்டர் போட்டங்கான...ரெண்டு வாரத்திற்கு அப்புறம் அவங்க அரோகரா தான்


  எல்லாருக்கும் விடுமுறை இருக்கும் அதனால் தான் அவர் மே 1 தேதி தேர்வு செஞ்சு இருக்கார்...ஆகையால் இப்போதைக்கு ஒருநாள் போதும்

  ReplyDelete
  Replies
  1. அருமை சகோதரி...

   Delete

  2. இது ஸ்டாக் காலியாவதற்கு எடுக்கப்படும் முயற்சி.
   Work from home என்று லீவு நாளில் செய்யலாம். Or சுழற்சி முறையில் வார நாட்களில் அவர்களுக்கு விடுமுறை அளிக்கலாம்.

   Delete
  3. அப்படியல்ல கடல் யாழ்....
   விட்டுபோன புத்தகங்கள் வாங்க வாசகர்களுக்கு ஈஸியாக இருக்கும்,
   ஸ்டாக் புக்ஸ் காலியாகும்,
   புதிய சந்தாக்கள் வரலாம்,
   கூடுதலாக புக்ஸ் விற்பனையாகும்,
   ஊழியர்களுக்கு லீவு இருக்காதுதான்,ஆனா புத்தக விற்பனை இந்த சிரமங்களை போக்கும். வருடத்தில் 2 நாள் தானே? . இடையில் வேண்டுமானால் லீவு எடுக்கலாம்.

   Delete
 49. உயிரை தேடி அட்டை படம் மிக மிக அருமை
  Awesome making...Love it  கூடவே அனுப்புனா கலர் நோட்டீஸ் ஆவலை தூண்டியதால் கலர்க்கு ஆர்டர் போட்டு வெயிட்டிங்

  ReplyDelete
 50. உயிரைத் தேடி
  வந்து சேர்ந்த தகவல்
  என்னைத் தேடி
  வந்து சேர்ந்தது.

  ReplyDelete
 51. @Edi Sir...😃😃😃😀😍😘

  இன்னைக்கும் இதுவரைக்கும் *உயிரைத்தேடி B&W* எனக்கு கிடைக்கவில்லை.😃😀

  மாலை வரை காத்திருக்கிறேன்.😍😃

  ST courier ரசீது எண் கிடைத்தால் Courier office லும், ஆன்லைனிலும் check செய்துவிடுவேன் சார்..😃😃😃

  (😃= இடுக்கண் வருங்கால் நகுக)

  சங்கடப்பட்டு வருத்தப்பட்டு என்னாக போகுது..😃

  ReplyDelete
  Replies
  1. ///சங்கடப்பட்டு வருத்தப்பட்டு என்னாக போகுது..😃//-- ஐ லைக் த ஆட்டி டூயூட் ஜம்பிங் தல💓

   Delete
 52. இனி வருங்காலங்களில்
  Postal dept மூலமே அனுப்பிவைத்தால் பரவாயில்லை என்பேன்..😃😃😃

  ReplyDelete
 53. உயிரை தேடி..

  பல வருடங்களுக்கு முன் தினமலர் சிறுவர்மலரில் அவ்வப்பொழுது மட்டுமே இந்த தொடரை வாசித்து உள்ளேன்..முழுவதுமாக தொடர்ந்து அல்ல..ஆனால் சிறு பகுதியை படித்த பொழுதுமே அப்பொழுது ஐயோ அடுத்து என்ன ஆச்சோ என்ற அச்சமும் மனதில் எழுந்து அலைமோதியது இப்பொழுதும் நினைவில்..அந்த "உயிரை தேடி" கதையினை மீண்டும் முழுவதுமாக வாசிப்பேன் என்று கனவில் கூட நினைத்தது இல்லை..ஆனால் முழுவதுமாக இப்படி ஒரு தரத்தில் அட்டகாசமான அளவில் சிறிய விலையில் மீண்டும் வாசித்து அச்சப்படுவேன் என்றும் நினைத்தது இல்லை..அடேங்கப்பா கதையை படிக்க ,படிக்க இந்த கொரானா காலத்தை அப்படியே மனதில் கொண்டு வந்தது கதை ..இது போல் தானே நடக்க இருப்பதாக வதந்திகளும் பரவி கொண்டு இருந்தது.. நல்ல வேளை இந்த அளவுக்கு போகாமல் உலகம் பிழைத்தை எண்ணி இப்பொழுது மகிழ்கிறேன்..அன்று அவ்வப்பொழுது இந்த கதையை வாசிக்கும் பொழுது இந்த சிறுவர் குழாம் எப்படிதான் பிழைப்பார்கள் இதன் முடிவு என்னதான் ஆகும் என்று மனம் தள்ளாடியது உண்மை ..அந்த முடிவினை இப்பொழுது அறிய வைத்த ஆசரியருக்கு நன்றி ..நல்ல வேளை சார் நீங்கள் சொன்னது போல கொரானா காலத்தில் தாங்கள் இதை வெளியிட வில்லை ..அந்த சமயத்தில் இதனை வெளியிட்டு இருந்தீர்கள் என்றால் கொரனா அச்சத்தை விட அதிக அச்சத்தை இந்த உயிரை தேடி அளித்து இருக்கும்..

  கருப்பு வெள்ளையிலியே மிக அட்டகாசமாக இதழ் அமைந்து உள்ளது எனில் வண்ணத்தில் எப்படியோ...ஆனால் எனக்கு பிடித்து கருப்பு வெள்ளையே..

  கனவு இதழை கனவாக போகாமல் தேடி வெளியிட்ட ஆசிரியருக்கு மனம் கனிந்த நன்றிகள்..

  ReplyDelete
 54. சார்லி ஸ்பெஷல்...

  பழமை நெடி கண்டால் முகம் சுளிக்கும் எனக்கு "பனியில் ஒரு பித்தலாட்டம்" ஆச்சர்யம் அளித்தது.
  சுமார் 40 பக்கங்கள் போனதே தெரியவில்லை. உருவாகி இவ்வளவு காலம் கழிந்தும் சஸ்பென்ஸை கதை தக்க வைத்திருப்பது பெரு மகிழ்வை அளித்தது.

  உயிரைத் தேடி இதுவரை நான் படித்ததில்லை. அந்த புக் கைக்கு வந்து சேர்ந்தபின்னும் சார்லியைத் தேர்ந்தெடுக்க காரணம் புக்கின் வடிவமைப்பு மற்றும் புக்கினை இலகுவாக கையாள முடிவதே.

  இந்த சைஸை தொடர கையை உயர்த்தியிருக்கும் நூற்றுக்கணக்கானவர்களோடு நானும் இணைகிறேன்.

  9/10

  ReplyDelete
  Replies
  1. 2வது கதை இன்னும் செம பொருளாலர் ஜி......
   தங்கள் துறை ரீதியாக நிறைய விசயங்கள் வருது....

   சரசரனு ஓடும் த்ரில்லர்...

   இத்தனை என்ஜாயபிளாக ஒரு பழமையான நாயகரின் இதழ் அமையும் னு கனவில் கூட நினைத்தது இல்லை.....!!!

   போன மாசம் ஆசிரியர் சாரே "இந்த புக் உங்களை அசத்திடும் STV",--னு சொல்லி இருந்தாலும் நம்பியிருக்க மாட்டேன்

   த மேக்பிங் மேக்ஸ் இட் தட் மச் லைக்கபிள்....

   ஆசிரியர் சாருக்கு ஆயிரம் பூங்கொத்துகள்....

   நம்மாளு ரிப் கெர்பியோடது இப்படி வந்தா ஆஹா...

   Delete
  2. // சார்லியைத் தேர்ந்தெடுக்க காரணம் புக்கின் வடிவமைப்பு மற்றும் புக்கினை இலகுவாக கையாள முடிவதே. //
   அதே,அதே...

   Delete
  3. வயசாயிருச்சுன்னு நெனைக்கிறேன்..

   Delete
 55. ஆன்லைன் புக்ஸ் நாளை கிளம்ப வாய்ப்பு உண்டுங்களா சார் ?!

  ReplyDelete
 56. ஆசிரியர் சார்@ தங்களின் ஆன்லைன் விழா2023யின் திட்டமிடலில் வந்திட்டவை...

  ////*உயிரைத் தேடி - black & white இதழ் !✅

  *உயிரைத் தேடி - கலர் இதழ்-✅

  *MINI COMICS - சின்ன விலையில் - பாக்கெட் சைஸ் இதழ்கள் - இரண்டோ / மூன்றோ✅ / நான்கோ ?!

  *ஒரு black & white கி.நா.✅

  *ஒரு கலர் டிடெக்டிவ் ஜாகஜம்✅

  *ஒரு க்ளாஸிக் மறுபதிப்பு✅

  *ஒரு கார்ட்டூன்✅

  *ஒரு 'தல' க்ளாஸிக்✅

  *ஒரு எது மாதிரியும் இல்லாத புது மாதிரி

  பெண்டிங் உள்ள இந்த,

  1.மினி காமிக்ஸ்
  2.ஒரு எதுமாதிரியும் இல்லாத புது மாதிரி

  ----இரண்டும் மே1 நீட்டிக்கப்பட்ட சிறப்பு விழா தினத்தில் வெளியிடப்படுமாங் சார்???

  அந்த 4வது மினி காமிக்ஸில அந்நாளைய உளம் கவர் கபீஷ் இருப்பாரோனு ஒரு ஆவல்!

  அந்த "எது மாதிரியும் இல்லாத புது மாதிரி" என்ன மாதிரியான காமிக்ஸ் ஜானர்னு மதிய தூக்கத்தில் கூட கனவாக வந்து போகுது....!!!

  ReplyDelete
  Replies
  1. இன்னா மேன்? எங்களை மாரியே நீயும் ஆயிட்டே?

   Delete
  2. @STV இது என்ன மாயம்????

   @ஷெரீஃப் ஆமா ஆமா What is this?

   Delete
  3. க்ளா@ தேங்ஸ் யா..

   ஷெரீப் & KS@ நண்பர்கள் விருப்பத்தை கேட்டு வாங்கித் தரவேண்டியும்; சரித்திர சாதனையான 1டஜன் இதழ்கள் ரீலீஸ் மேளா என்ற பெருமையைக் காணவேண்டியும்.....!!!

   Delete
 57. மிகவும் வெற்றிகரமான துவக்கத்திற்காக நல் வாழ்த்துக்கள்
  Aldrin Ramesh From Muscat, Oman

  ReplyDelete
  Replies
  1. எங்கே சார் ரொம்ப நாளாக ஆளை காணோம்?

   Delete
 58. நம்ம காமிக்ஸ் பிதாமகருக்கு விழாவெடுக்க முதல் குரல் தரப்போகிறேன் ....

  ReplyDelete
 59. போற்றிப் பாடடி பொண்ணே
  சௌந்தரார் காலடி மண்ணே.
  தெக்கு திசை கண்ட
  அச்சர் இனம்தான் ஹோய்
  முத்தலைமுறை தேர்ந்த
  காமிக் ஆசான்தான் ஹோய்

  போற்றிப் பாடடி பொண்ணே
  சௌந்தரார் காலடி மண்ணே.
  .

  என்ன சொல்ல முத்தின் வளம்.
  டிங் டாங் டிங் டாங் டிங் டாங் டோ
  ராணிங்க கண்ணு படும்
  டிங் டாங் டிங் டாங் டிங் டாங் டோ

  என்ன சொல்ல முத்தின் வளம்
  ராணிங்க கண்ணு படும்
  அந்த கதை இப்ப உள்ள
  சந்ததிங்க கேட்டு வரும்

  நம்முயிர்க்கு மேல
  இரும்புக் கைதாங்க
  அச்சிலது வந்தாலே கடையிலது தங்காதே
  அறுவதெழுவது வந்தாங்க
  கண்டபடி வித்தாங்க
  தரத்தால் கதையால்
  முதல் ஆள் ஆனாங்க

  போற்றிப் பாடடி பொண்ணே
  சௌந்தரார் காலடி மண்ணே.
  ஹேய்
  தெக்கு திசை கண்ட
  அச்சர் இனம்தான் ஹோய்


  போற்றிப் பாடடி பொண்ணே
  சௌந்தரார் காலடி மண்ணே.

  முன்னோருக்கு முன்னோரெல்லாம்..
  டிங் டாங் டிங் டாங் டிங் டாங் டோ
  இன்னாருன்னு கண்டு கொள்ள
  டிங் டாங் டிங் டாங் டிங் டாங் டோ

  முன்னோருக்கு முன்னோரெல்லாம்
  இன்னாருன்னு கண்டு கொள்ள
  ஏடெடுத்து எழுதி சொல்ல
  ஒண்ணு ரெண்டு மூணு அல்ல

  மும்மூர்த்தி கதைவளுந்தேன்
  முத்து முத்தாய் கண்டெடுத்ததேன்?
  எக்காலமும் வாழ்த்து சொல்லும்
  உங்களுக்கு எக்காளம்தேன்
  அழகான சரிஜோடி
  லயனோட வியாச்சு
  கணக்கா வழக்கா கடல்போல் ஏராளம்

  போற்றிப் பாடடி பொண்ணே
  சௌந்தரார் காலடி மண்ணே.
  தெக்கு திசை கண்ட
  அச்சர் இனம்தான் ஹோய்
  முத்தெடுத்து சேர்ந்தச
  காமிக்ஸ் ஆசான்தான் ஹோய்

  போற்றிப் பாடடி பொண்ணே
  சௌந்தரார் காலடி மண்ணே..

  ReplyDelete
 60. @Edi Sir..🙏

  எனக்கு இன்னுமே உயிரைத்தேடி B&W வரலிங்க..😓

  *ST courier ரசீது நம்பர்* கொடுத்தீங்கன்னா Trace out பண்ண வசதியாக இருக்கும்..🙏

  ReplyDelete
 61. Same sir, not yet received uyirai thedi bw

  ReplyDelete
 62. மொழிபெயர்ப்பு - ஒரு மேற்கோள்!

  சார்லியில் பக்கம் 12-ல் " வராக விளிப்பவர் " எனும் சொற்கள் இடம் பெற்றுள்ளன.

  Hog-caller என்பதே இப்படி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

  இப்போதும் விவசாயிகள், பன்றி பண்ணைகள் வைத்திருப்போர் hog calling எனும் போட்டியை அமெரிக்காவில் நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

  இப்போட்டியில் பன்றிகளைப் போல் ஓசையிட்டு அவற்றை அழைக்க வேண்டும்

  சண்டைக்காக ஆண் பன்றிகளை அழைப்பது

  மேட்டிங் - க்கு என ஆண்/ பெண் பன்றி போல் அழைப்பது

  உணவுக்காக பன்றிகளை அழைப்பது

  குட்டி பன்றி ஆபத்தில் இருந்து அபயக் குரல் எழுப்புவது போல் அழைப்பது

  என பலவகை உண்டு.

  ஆனால் பதிவு hog calling எனும் பதம் நாசூக்காக கையாளப்பட்டு இருப்பதை பற்றியது. விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்று என்ற போதும் " பன்றி" எனும் சொல் சமூக வழக்கில் ஒரு அவமரியாதை சொற் பிரயோகமாகவே கருதப்படுகிறது.

  நாகரிகம் கருதி hog வராகம் என மொழிபெயர்க்கப் பட்டிருப்பதும் calling விளித்தல் என மொழிபெயர்க்கப்பட்டிருப்பதும் திறமையான மொழிபெயர்ப்புக்கு சான்று. ஒரு வடமொழி வேர்ச்சொல்லும் அடுத்து ஒரு தூய தமிழ்ச் சொல்லும் வருவது வித்தியாசமானது.

  அதே பக்கம் அதே வரிக்கு மேல் நம் பக்கம் "பெரு விவசாயி", "நிலக்கிழார் " எனப் பொருள்படும்படி " வேளாண் மகன்" என மொழிபெயர்ப்பு செய்திருப்பது சிறப்பு .மிக நன்று.

  யார் கைவண்ணமாயிருப்பினும் அவர்களுக்கு பாராட்டுக்கள்!!!

  ReplyDelete
  Replies
  1. அருமையான விளக்கம் செனா.அனா ஜி..😃😍

   நான்கூட படித்துவிட்டு ஏதோ எழுத்துபிழை (வழக்கம்போல)..😃
   என்று கடந்து சென்றுவிட்டேன்.

   ஆனால் இப்போதுதான் தெரிகிறது.. இப்படி *வராக விளிப்பது* என்ற போட்டி (Hog-caller) வெளிநாடுகளில் உண்டு என்பதை தெரிந்து கொண்டேன்.😍

   தகவலுக்கு நன்றி..😍😃

   Delete
  2. செனா அனா ஜி@ அருமையான விளக்கம் ஜி... நன்றிகள்...
   அது என்னானு தெரியாமலேயே வாசித்து முடிச்சாச்சி... இப்ப தெளிவாக புரிகிறது...

   Delete
  3. செம்ம செம்ம சார். என்ன ஒரு விளக்கம் என்ன ஒரு ஆராய்ச்சி.

   Delete
  4. "எழுத்துபிழை"யிலேயே ஒரு எழுத்துப்பிழை. என்ன ஒரு நகைமுரண் :-) ஜம்பிங் ஜி ! சும்மா ஒரு ஜாலிக்காண்டி

   Delete
 63. ("வராக விளிப்பு".)நன்றிங்க செனா.அனா.ஜி.சிறந்த மொழிபெயர்ப்பாளர் எங்கள் ஆசிரியராக அமைந்துள்ளதும்சிறந்தவாசிப்பாளர்கள் சீனியர் வாசகர்களாக அமைந்துள்ளதும் என்னைப்போன்ற சாதாரணர்கள் வாழ்நாள் சாதனையாக பெருமைப்படும் விசயம்.கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
 64. I subscribed all for last week I couldn't able to pay 300 for v comics that's why I paid 400.....later ordered 10 comics I asked for that discount..only g pay that discount applicable...

  ReplyDelete
 65. @Edi Sir..😃😍

  இப்ப வரைக்கும் உ.தே. (B&W) வரவில்லை.😃

  எனக்கு அனுப்பி வைச்சாச்சான்னு ஒரு தடவை check பண்ணிக்கோங்க..😃😃😃

  ஸ்ரீபாபு,
  நாமக்கல்..😎
  9486785447
  9486020487

  ReplyDelete
  Replies
  1. //(😃= இடுக்கண் வருங்கால் நகுக)//விடுங்க நாளை எல்லாமே ஒட்டுக்காவரப்போகுது நண்பரே.....

   Delete
 66. சார் புத்தகங்க கிளம்பியாச்சா....
  (😃= இடுக்கண் வருங்கால் நகுக)
  உபயம் அபயம்....ஜம்பிங்கார்

  ReplyDelete
 67. சார்லி மூன்றாம் கதை செம சார்....அட்டகாசமாக துப்பு துலக்க வில்லியோ துள்ளிப் பாயுறார்....இவர்கள் மோப்பம் பிடித்ததறிந்து

  ReplyDelete
 68. மேகி காரிஸன் புதியது யாருக்கும் வந்ததா?

  ReplyDelete
 69. உயிரை தேடி.. படித்து முடித்தாயிற்று சார்... மற்றும் ஒரு அதிகாரி கதையை படித்து முடித்த பீலீங்.. மொழி பெயர்ப்பு சூப்பர்...
  அப்புறமே தனலட்சுமி நியாபகமும், வந்து போனதை மறைக்க முடியாது...

  ReplyDelete
 70. Sorry to be a party spoiler. except for the first story, i kind of feel like Zagor in vcomics is boring.

  ReplyDelete
  Replies
  1. Same feeling here. But the color Zagor was good. The V comics Zagor albums are turning out to be ... hee hee .. Oru Sippaayin Suvadugal ;-)

   Delete
 71. உயிரைத் தேடி B/ W தவிர மற்ற புத்தகங்களுக்கு எவ்வளவு அனுப்ப வேண்டும்

  ReplyDelete
 72. 🌹🌹🌹🌹🌹🌹🌹பழகுவதில் மென்மையானவர், பேசுவதில் இனிமையானவர், காமிக்ஸ் காதலர், மாடஸ்தி நேசர், ப்ளூபெர்ரி ப்ரியர், அன்பு நண்பர், மருத்துவர் AKK ராஜா அவர்களுக்கு இனிய இனிப்பான பிறந்தநாள் நல்வாழ்த்துகள்💐💐💐💐💐💐🎂🎂🎂🎂🎂🎂

  ReplyDelete
 73. டாக்டர் சாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 74. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பரே.....ஸ்பைடரின் சினிஸ்டர் செவன் போல பல ஸ்பைடர் கதைகளை மொழி பெயர்த்து வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்

  ReplyDelete
 75. This comment has been removed by the author.

  ReplyDelete
 76. சார்லி

  இந்த பெயரில் ஓர் கதாநாயகர் வந்துள்ளார் என்பதே s60s இல் வெளியிட்டதால் தெரிந்து கொண்டேன்
  இவரை பற்றி ஒன்றும் தெரியாது
  தேர்வு செய்யலாமா வேண்டாமா என்று இருந்தேன் காமிக்ஸ் சகோதரர்களின் சுவையான நினைவுகளின் பகிர்தலால் இவருக்கு சேர்த்து சந்தா கட்டியாச்சு

  இந்த சைஸ் பிடித்து உள்ளது
  அட்டைப்படம் அருமை

  ReplyDelete
  Replies
  1. பனியில் ஒரு பித்தலாட்டம்"

   நன்றாக இருந்தது
   முதல் கதையாக ஆரம்பித்ததால் சார்லியின் என்ட்ரியை உடனே எதிர்பார்த்தேன்
   அனால் கதையை படித்தபின்பு அவரது என்ட்ரி குடுக்க அமைந்தது குட் ஒன்

   அழகில் மயங்கி இருக்கும் மகன
   அவள்  ஒரு பாலே நடன்காரி என் அறிந்ததும் யோசனையில் ஆழும் தந்தை
   வருகிறார் சார்லி

   அவள் யார், ஏன்  தந்தை வேண்டாம் என்று சொல்கிறார்
   கேள்விகள் நம்மளுக்கு சார்லிக்கும்
   கதைக்குள் போக முடியாது
   ஆகையால்  சார்லி கண்டுபிடிக்கிட்டும்னு விட்டுட்டேன்

   சஸ்பென்ஸ் நன்றாக இருந்தது
   ஏதோ  ஒன்று நடக்க போகிறது என்று மனம் சொல்லி கொண்டு இருக்கும் அல்லவா...எனக்கு தந்தை இறந்ததில் வருத்தமே...சார்லியிடம்  முன்னாடியே சொல்லி இருக்கலாம்...சொல்ல கூடிய விஷயமாக

   Delete
 77. As a gift i won in the quiz held by our organization, i had Received with thanks your autographed uyirai thedi book,

  A lot of thanks again sir.

  ReplyDelete
 78. சார்லி மூன்றாவது கதை காலையில் வாசிக்கத் துவங்கினேன்....சாரி சுவாசிக்கத் துவங்கினேன்....எந்த ஓவியங்கள் பிடிக்காமல் அன்று ஒதுக்கினேனோ அதே ஓவியங்கள் இன்று லார்கோ வை விட அதிகமாக ஈர்க்கக் காரணம் என்ன...அந்த சிரித்த முகங்களா துள்ளிக் குதிக்கும் கதையின் உற்சாகங்களா....அதை விட ஆச்சரியம் ஸ்பைடரை படித்தும் கூட கடத்தலெண்ணம் துளிர் விட்டது கூட இல்லை...அந்த போக்கிரி கேரக்டர் மேல் காதலுடன் கடத்தல் மேல் ஈடுபாடும் வர....இது தவறாச்சே என வாசிக்க...கடைசியில் தவறு செய்தல் தவறுதான் ...அந்த அன்பும் உற்சாகமும் நல்லவன் எனக் காட்டியதாலே இக்கதை மேல் ஓர் காதல்....இதுவரை படித்ததிலே இதான் டாப்....பதிமூனை பிரிய மனமில்லாமல் தொடரும் கதைகளை போல இக்கதையும் இவ்வளோ சீக்கிரமா முடிந்து விட்டதா என பக்கங்களை புரட்டினால் தொடரவில்லை...ஆனால் ஓரமாய் நிற்கும் சார்லியை தொடரத் துடிக்கிறேன்...அடுத்த 60 கள வண்ணத்ல மூனு புத்தகங்க சார்லியோட வரனும்...வேதாளனை விட ஈர்ப்பதாச்சரியமே

  ReplyDelete
  Replies
  1. படிச்சுட்டேன் சகோ
   இந்த கதை எதிர்பாரா திருப்பம்
   Same.. இந்த கதையை படித்த போது ஓவியங்கள் பிடிந்திருந்தது
   தாங்கள் சிறப்பாக சொல்லி வீட்டீர்கள் 😊😊😊

   Delete
 79. மே மாத புக்ஸ்களை சீக்கிரம் கண்ணில் காட்டுங்கள் சார், அட்டைப்படம்.. previews...

  ReplyDelete
 80. என்னது , நாளைக்கு பதிவு கிழமை சார்ன்னு இன்னும் கமெண்ட் வரல.. வர வர நம்ம சங்கத்து ஆளுங்களுக்கு பொறுப்பே இல்லாம போச்சு.. :) :)

  நாமளே ஆர்ம்பிச்சு வைப்போம்...சார் நாளைக்கு பதிவு கிழமை. :)

  ReplyDelete
  Replies
  1. அரை மணி நேரம் கழிச்சு இன்னு பதிவு கிழமை போட திட்டம் போட்டிருந்தோம்

   Delete
 81. இன்னிக்கு பதிவுக்கிழமைங்கோ…

  ReplyDelete
  Replies
  1. சார் இன்று பதிவுக் கிழமை...

   Delete
 82. சார் இன்று பதிவில் மே மாத மேளாவுக்கு வர உள்ள புத்தகம் என்னன்னு சொல்வீங்களா

  ReplyDelete
  Replies
  1. OBF புத்தகங்கள் கிளம்பி விட்டதா சார்?

   Delete
  2. சூப்பர் சூப்பர் அப்போ அடுத்த வாரம் புத்தகம் வந்து விடும்...

   Delete
 83. நாளை ஞாயிறு பழைய (ஒரிஜினல்) வழக்கமான பதிவுக் கிழமை சார்....!!!!

  ---சேலத்தில் அசைவ பிரியர்களுக்கு இந்த ஜோக் எளிதாக புரியும்!😜

  ReplyDelete
 84. சேலத்துக்குப் பக்கத்துல சைவ பிரியர்களுக்கும் புரியற மாதிரி விளக்கமா சொல்லுங்கசார்

  ReplyDelete
 85. இன்று பதிவுக்கிழமை சார்.

  ReplyDelete
 86. ஆஹா....இப்பதா கவனித்தேன்....தேன்..தான்
  யாரந்த மாயாவி பெரிய சைசாமே.....சூப்பர் சார்...

  ReplyDelete