நண்பர்களே,
வணக்கம். நாட்கள் தட தடக்கின்றன ; தூரத்துப் புள்ளியாய்த் தெரிந்ததொரு நாள் கிட்டே நெருங்க நெருங்க. 'லப் டப்'களுமே தட தடக்கத் துவங்கி விட்டன ! And நவம்பர் 30 ஜுனியரின் திருமண தினமாக மாத்திரமன்றி , நமது டிசம்பர் வெளியீடுகள் தயாராகிடும் தருணமாகவும் இருந்திடவுள்ளது என்பதும் - adds to the fun ! அடிக்கின்ற குட்டிக் கரணங்களோடு கூடுதலாய் ஒன்றை சேர்த்து அடித்து வைத்து, ஒரு நாள் முன்பாக இதழ்களைத் தயார் செய்திட ஆன மட்டிலும் முயன்று வருகிறோம் ! நீலப் பொடியர்களின் அச்சு வேலைகள் மாத்திரமே பெண்டிங் இருக்க, இதர இதழ்கள் சகலமும் பைண்டிங்கில் மையம் கொண்டுள்ளன !
And இம்மாதத்தின் most expected இதழாய் இருக்கப் போகும் "கேப்டன் பிரின்ஸ் ஸ்பெஷல்" வண்ணத்தில் சும்மா கண்ணைப் பறிக்கிறது ! பற்றாக்குறைக்கு கமான்சேவின்வண்ணப் பக்கங்களும் அடர் கலரிங்கோடு டாலடிக்கின்றன ! அவ்வப்போது ஆபீஸ் பக்கமாய் எட்டிப் பார்க்கும் தருணங்களில் - ஓவியர் ஹெர்மனின் ஒட்டு மொத்தப் பரட்டைப் பார்டிகளும் ஒன்றிணைந்து நமது அச்சுக் கூடத்தை ஒரு கலக்கலான ரங்கோலியாய் மாற்றி வருவதை பார்க்கும் போது - ஜீனியஸ் smurf போல ஆட்காட்டி விரலை உசத்திக் கொண்டே - "கலர்லே கலக்கலாப் பொடியுறது நல்லது !! " என்று சொல்லிப் பார்க்கும் ஆசை உள்ளுக்குள் கொப்பளிக்கிறது !

So சூப்பர் 6-ன் இறுதி இதழும், நல்லதொரு முகாந்திரத்தின் பொருட்டு நினைவில் நிற்கும் ஒரு இதழாய் அமையுமென்ற நம்பிக்கை இப்போது நிறையவே எனக்குள் ! 12+ மாதங்களுக்கு முன்பாய் "சூப்பர் 6" என்றதொரு தடத்தை நிறுவ முயன்ற நாட்களையும். ; அன்று என்னுள் நிலவிய சன்னமான பயத்தையும் ; உங்களிடையே இழையோடிய மெல்லிய அவநம்பிக்கையையும் இப்போது நினைவுகூர்ந்திடும் போது - இந்தத் தடத்தின் மீதான பயணத்தின் த்ரில் எத்தகையதாக இருந்துள்ளதென்பதை முழுசாய் உணர்ந்திட முடிகிறது ! தொடரவிருக்கும் புத்தாண்டினில், இந்த "சுவாரஸ்ய new look மறுபதிப்புகள் பாணி" நமது சந்தா D-ல் தொடர்கிறதென்றாலும் - இந்த "பழசு + புதுசு" limited edition பாணிக்கு ஒரு விசால எதிர்காலமுண்டு என்ற எண்ணத்தைத் தவிர்க்க இயலவில்லை ! பார்ப்போமே - காத்திருக்கும் காலங்கள் நமக்கு என்ன வழங்கவிருக்கின்றன என்று !
And இதோ - டிசம்பரின் பொடியர் பட்டாளத்தின் அட்டைப்பட முதல் பார்வை :
எப்போதும் போலவே - அட்சர சுத்தமாய் ஒரிஜினல் டிசைனேயே பயன்படுத்தியுள்ளோம் - படைப்பாளிகள் உருவாக்கித் தந்திருக்கும் அந்த ஸ்மர்ப்ஸ் லோகோவுடன் ! கதையைப் பொறுத்தவரைக்கும் நான் பெரியதொரு பில்டப் எல்லாம் தரத் தேவையிராதென்று நினைக்கிறேன் - simply becos இந்த நீலப் பொடியர்களின் சமாச்சாரத்தில் இரண்டே அணிகள் நம்முள் ! ஒன்று : "ச்சை...எனக்கு ப்ளூ கலரே புடிக்காது ; அதிலும் சுண்டுவிரல் பொடியர்களே புடிக்காது !" என்று சொல்லக்கூடிய அணி ! இரண்டாவதோ - "ஹை...சூப்பரப்பு ! கார்டூனே ஜாலி ; இதில் smurfs என்றால் ஜாலியோ ஜாலி !" என்றிடும் அணி ! So நான் பில்டப் தந்தாலும் சரி, தராது போனாலும் சரி - அவரவரது நிலைப்பாடுகளை பெரிதாய் மாற்றிக் கொள்ளப் போவதாய் எனக்குத் தோன்றவில்லை ! ஆனால் என்னளவிற்குத் தோன்றும் விஷயம் ஒன்றே : இந்தச் சுண்டுவிரல் ஆசாமிகளைக் கொண்டு வாழ்க்கையின் அழகான விஷயங்கள் ஒரு நூறை நாம் புதிதாய் ரசிக்கலாம் போலும் ! And "விண்ணில் ஒரு பொடியன்" - SMURFS கதைகளுள் முற்றிலும் ஒரு புது உச்சம் என்பேன் ! செமத்தியான கதைக் களம் ; பற்றாக்குறைக்கு "பொடி" பாஷைக்குப் போட்டியாய் ஒரு சமாச்சாரமும் இருப்பதைக் காணப் போகிறீர்கள் ! கொஞ்சமே கொஞ்சமாய் இந்தப் பொடியர்கள் உலகினை ரசிக்க நேரமெடுத்துக் கொள்ள முடிந்தால் - ஒரு அற்புத வாசிப்பு நிச்சயம் என்பேன் ! Give it a try guys ?
தொடரும் ஆண்டினில் இவர்களுக்கு slots மிகக் குறைவே என்பதால் - காத்திருக்கும் இந்த இதழினை நீங்கள் ரசிக்கும் பாங்கைப் பொறுத்து அதன் மறு ஆண்டினில் நீலர்களின் பங்கீடுகளைச் செய்திட வேண்டி வரும் ! So இது நிரம்பவே முக்கியத்துவம் கொண்ட இதழ் என்பேன் !
நடப்பாண்டினில் எஞ்சி நிற்பது "நிஜங்களின் நிசப்தம்" கிராபிக் நாவல் மட்டுமே என்பதால் - effectively 2017-ன் main stream அட்டவணையினைப் பூர்த்தி செய்திடுகிறோம் ! ட்யுராங்கோவோடு வருஷத்தைத் துவக்கியது நேற்றைக்குப் போலிருப்பினும், மாதங்கள் 12 அசுர கதியில் பயணத்திருப்பது புரிகிறது ! கிர்ரென்று சுற்றிக் கொண்டிருக்கும் தற்போதைய எனது தலைக்கு - வீட்டுக்குப் போகும் பாதையே சரியாய் நினைவில் இல்லையெனும் பொழுது - நாம் தாண்டி வந்துள்ள ஒரு வண்டி ஆல்பங்களை நினைவு கூர்ந்திடக் கோரினால் "பிதாமகன்" விக்ரம் போல முழிக்க மட்டுமே முடிகிறது ! ஆனால் மெது மெதுவாய் நிதானமும், இயல்பு வாழ்க்கையும் திரும்பிடும் ஒரு நேரத்தில் -2017 ன் ்இந்தப் பயண அனுபவத்தை நிதானமாய் அசை போட்டுப் பார்க்கும் ஆசை ததும்புகிறது எனக்குள் ! ஒவ்வொரு ஆண்டும் நிறைய குட்டிக்கரணங்கள் போட்டது போலவே தோன்றுவது வாடிக்கை தான் ; ஆனால் இம்முறை ஆண்டின் 'ஹிட்' எண்ணிக்கை வழக்கத்தை விட சற்றே அதிகம் என்ற உணர்வு தலைதூக்குகிறது ! உங்கள் பார்வைகளில் தென்படும் கருத்தே பிரதானம் எனும் பொழுது - டிசம்பரின் நடுவாக்கில் உங்களைக் கருத்துச் சொல்லக் கோரிட நினைத்தேன் ! "தொடரும் ஆண்டின் அட்டவணை ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் - தற்போதைய performance பற்றிய அபிப்பிராயங்களால் பெருசாய் என்ன பிரயோஜனம் இருக்கப் போகிறது ?" என்ற கேள்வி எழலாம் தான் ! ஆனால் கதைத் தேர்வுகள் என்ற பரீட்சையில் நான் வாங்கியுள்ள மதிப்பெண்களைத் தெரிந்து கொள்ளும் ஒரு இக்ளியூண்டு ஆர்வமும் ; உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு எத்தனை தூரம் நியாயம் செய்துள்ளோம் என புரிந்து கொள்ளும் உத்வேகமும் என்று வைத்துக் கொள்ளுங்களேன் ! So டிசம்பரில் ஒரு வண்டிக் கேள்விகளோடு உங்கள் குடல்களின் நீள, அகலங்களை ஆராய்வதாய் உத்தேசம் ! தயாராகிடுங்களேன் ப்ளீஸ் ? (ஏதேனும் மணிப்பூர் , மிசோரம் பக்கமாய் டிரிப் அடிக்கும் எண்ணங்கள் இருப்பின் - டிசம்பர் அதற்கொரு உருப்படியான பொழுதாய் அமைந்திடலாம் ! )
புத்தாண்டைப் பற்றி ; புதிய திட்டமிடல்களைப் பற்றி நிறைய பேசவுள்ள போதிலும், அவற்றை தொடரும் வாரங்களுக்கென வைத்துக் கொள்வோமே என்று நினைத்தேன் ! இப்போதைக்கு என் முன்னே நிற்கும் ஒரு அழகான மெகா பொறுப்பை செவ்வெனே நிறைவேற்றிட ஆண்டவனின் ஆசிகளும், உங்களின் வாழ்த்துக்களும் அவசியம் என்பதால் - அவையிரண்டின் பொருட்டும் கைகூப்பி நிற்கிறேன் ! உங்கள் முன்னே வளர்ந்த பிள்ளையை நேரிலோ, தொலைவிலிருந்தே மானசீகமாயோ வாழ்த்தவிருக்கும் ஒவ்வொரு அன்புள்ளத்துக்கும் எனது அட்வான்ஸ் நன்றிகளும் ! And சின்னதொரு அட்வான்ஸ் வேண்டுகோளும் : தயைகூர்ந்து திருமண விழா சார்ந்த புகைப்படங்களை FB-ல் ; வலைப் பதிவுகளில் ; வாட்சப் க்ரூப்களில் என்று பகிர்ந்திட வேண்டாமே ப்ளீஸ் ? மணமக்களின் privacy & குடும்பத்தினரின் privacy மதிக்கப்பட வேண்டியதொன்று என்பது, எனது மற்றும் சீனியர் & ஜுனியர் எடிட்டரின் அவாக்களுமே ! Hope you understand folks !!
மீண்டும் சந்திப்போம் !! Have a great weekend !!
P.S : சமீபமாய் கண்ணில் பட்டதொரு படமிது ! பார்த்த உடனே உங்களின் பேனாக்களுக்கு வேலை கொடுக்கத் தோன்றியது ! சுவாரஸ்யமாய் ஒரு கேப்ஷன் எழுதுங்களேன் !