Powered By Blogger

Wednesday, July 31, 2024

காலை எழுந்தவுடன் காமிக்ஸ் !

 நண்பர்களே,

வணக்கம். பெல்ஜியத்து ஜாம்பவான்கள் கிளம்பி விட்டார்கள் - ஆகஸ்ட்டின் முதல் தேதிக்கு உங்களது இல்லக்கதவுகளையும், உள்ளக்கதவுகளையும் தட்டிட ! 2 பாக டின்டின் ஆல்பங்களுக்குத் துணையாக தாத்தாஸ் கூட்டணியும்,  வேதாள மாயாத்மாவும் உடன் பயணித்து வருகின்றனர் ! And விலையில்லா மினி டெக்ஸ் கலர் இதழும் கொசுறாய் ஒட்டிக் கொண்டு வருகிறது - ஆகஸ்ட் ஒரு 'தல'யில்லா மாதம் என்ற முத்திரையைத் தவிர்த்திட ! So ஈரோட்டுக்குப் பயணங்களைத் துவக்கும் முன்பாகவே ரெகுலர் சந்தா இதழ்கள் உங்கள் கைகளில் இருந்திடுமென்று நம்பலாம் ! ஜெய் proffesional கூரியர் !!

ஆன்லைன் லிஸ்டிங்கும் போட்டாச்சு - ஆகஸ்ட் pack ஆகவும், தனித்தனி இதழ்களாகவும் ! Please note : டின்டின் ஒரு டபுள் அத்தியாய சாகசம்  என்பதால், இரு புக்ஸும் சேர்ந்தே விற்பனைக்குக் கிட்டிடும் ! ஆகையால், அவற்றை தனித்தனியாய் ஆர்டர் செய்திட மெனெக்கெட வேணாமே - ப்ளீஸ் ! காலையில் புக்ஸ் கைக்கு வந்தான பின்னே, முதல் பார்வை ரேட்டிங்ஸ் போட மறவாதீர் folks ! 'முதல் பார்வை என்ன - படிச்சு, விமர்சனத்தையே போட்டுப்புடலாம் !' எனும் மிஷின்கன் வாசகர்கள் more than welcome !! டின்டின் பற்றிய உங்களின் எண்ணங்களையும், தாத்தாக்களின் மீதான உங்களின் தீர்ப்பினையும், செம ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருப்போம் !! ஓடின் தேவனே....காத்தருள்வீராக !!

தூரத்தில் சிறு புள்ளியாய் காத்திருந்த ஈரோட்டு விழாவானது, இதோ இந்த வாரயிறுதி என்று பிரம்மாண்டமாய் எதிர்நோக்கிக் காத்து நிற்கின்றது ! "டீம் ஈரோடு" கால்களில் சக்கரங்களைக் கட்டிக் கொண்டு மஞ்சள் மாநகரை தெறிக்க விட்டு வருகின்றனர் ! இதோ - அவர்களின் கைவண்ணத்தில் ஹாலிவுட்டுக்கு இல்லாங்காட்டியும், கோலிவுட்டுக்கு இல்லாங்காட்டியும், ஜாலிவுட்டுக்கு போட்டியாய் உருவாகியுள்ளதொரு குறும்பட teaser ! மீதம் வெள்ளித்திரையில் - ஞாயிறன்று !! ஜிவாஜி சார் ரேஞ்சுக்கும், பத்தமினிம்மா ரேஞ்சுக்கும் நம்மவர்கள் பிழிந்துள்ள நடிப்பு ரசத்தை சுவைத்திட செம ஆர்வமாய் வெயிட்டிங்க்க்க் ! மறக்காம நீங்களும் வந்திடுங்கோ folks !!

https://www.youtube.com/watch?v=4XGpCmFJE_I

இந்த தபா "see you around folks" என்பதற்குப் பதிலாக, "see you in Erode folks " என்றபடிக்கே நடையைக் காட்டுகிறேன் ! இந்த வாரயிறுதி மகிழ்வும், ஒற்றுமையும், காமிக்ஸ் நேசமும் பிரவாகமெடுக்கும் ஒரு அற்புதப் பொழுதாய் அமைந்திட சகல தெய்வங்களும் அருள் பாலிப்பார்களாக !! God be with us all !!

164 comments:

  1. Replies
    1. ஏதோ நடக்க போகுது...
      வாழ்த்துக்கள் அண்ணா.

      Delete
  2. //வரும் ஆகஸ்ட்டில் வேறொரு முழுநீள டெக்ஸ் புது சாகசமொன்று, விலையில்லா இதழாய் உங்களது கூரியர் டப்பிகளில் இடம்பிடித்திடும் !! நமது மன்னிப்புகளுடன் அதனை ஏற்றுக் கொள்ளக் கோருவேன் !!//
    Vijayan Sir any Tex books sent this month?

    ReplyDelete
    Replies
    1. //And விலையில்லா மினி டெக்ஸ் கலர் இதழும் கொசுறாய் ஒட்டிக் கொண்டு வருகிறது //

      Delete
  3. வார்த்தை விளையாடுது தலைப்பில்...

    ReplyDelete
  4. Replies
    1. அவரு என்னக்கியா தூங்கீருக்காரு...பதிவு போடணும்னா நம்மள விட துடிப்பு ஜாஸ்தி அவருக்கு...

      Delete
  5. வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  6. அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே....

    ReplyDelete
  7. வரவேற்பு August இதழ்களுக்கு....
    காத்திருப்பு LION 40 years and still marching like a young soldier..... and icing on the cake... Erode Book Fair.... 2024.😍🥰💐💓

    ReplyDelete
  8. வணக்கம் நண்பர்களே.

    ReplyDelete
  9. நானும் உள்ளேன் ஐயா..

    ReplyDelete
  10. Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. ஓய்...கால்ல வெந்நீர ஊத்தி கிட்டு ஈரோட்டுக்கு வரப்டாது சொல்லிப்டேன்

      Delete
    3. தாங்கள் பாடாமல் இருந்தால் வந்துருவாருங்க 😉

      Delete
  11. Replies
    1. ம்க்கும்...விடிஞ்சிருச்சி...

      Delete
  12. ரம்யா...டாக்டரம்மாவா....

    சொல்லவேயில்ல...

    ReplyDelete
    Replies
    1. அவங்க டாக்டருன்னு அவங்களுக்கே தெரியாது...😃😃😃😀😀😀😀

      Delete
  13. Sir - for Erode books, can we send money now? How much for subscribers?

    ReplyDelete
  14. Friends,

    Found this on you tube. Enjoy:

    https://www.youtube.com/watch?v=Ml5lV3NhZGs

    ReplyDelete
  15. கதவை தட்டி விட்டார்கள் சார....ஆனால் நான்தான் அலுவலகத்தில் மாட்டிக்கொண்டேன்..நாளை தான் பார்சலை பார்வையிடவும் ,வாசித்திடவும் முடியும்...

    ReplyDelete
  16. I will be there virtually. Thanks for sharing the YouTube link in advance.

    ReplyDelete
  17. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  18. ஆகஸ்ட் பொக்கிஷங்களை கைப்பற்றியாச்சி,முதலில் கண்ணை கவர்ந்து இழுத்தது டின்டின் தான்,கதிரவனின் கைதிகள் அட்டையை விட ,மாயப் பந்துகள் அட்டை ஈர்க்கிறது...
    வர்ணச் சேர்க்கைதான் காரணமோ...
    சூறாவளியின் தடத்தில் டெக்ஸ் மினி கலக்கலா இருக்கு...
    அதிர்ஷ்ட்டத்தைத் தேடி வேதாளர் ஈஸ்ட்மென் கலரில் பயணிக்கிறார்...
    தாத்தாக்களும் தன் பங்குக்கு ஏதோ ஆராய்ச்சி செய்வதுபோல அட்டையில் லுக் விடுகின்றனர்...

    ReplyDelete
  19. பார்சலை கைப்பற்றிய ஆச்சு. வேலை பளு காரணமாக பார்சலை இன்னும் உடைக்கவில்லை. சாப்பிட்டபின் பார்சலை பிரிக்க வேண்டும்

    ReplyDelete
  20. எனக்கும் புத்தகம் வந்து விட்டது. வீட்டுக்கு போன உடன் முதல் வேலையாக புதையலை கைப் பற்ற வேண்டும்.

    ReplyDelete
  21. Vijayan sir,
    Received books, ultimate quality, missing hot line and next month previews, pls post it here.

    ReplyDelete
  22. ஈரோட்டில் மேன்ட்ரக்கை வரவேற்போம்

    ReplyDelete
  23. அதிர்ஷ்டத்தை தேடி வேதாள மயாத்மா வந்துவிட்டார்

    ReplyDelete
  24. Courier reached my home. அக்டோபர் 2 வரை காத்திருக்கணும்.

    ReplyDelete
  25. பெரிய பார்சல் அட்டகாசமாய் வந்து விட்டது...சும்மா ஜொலிக்குது 5கதைகளும்....டின் டின் அட்டைப்படம் பச்சை நிறமே பச்சை நிறமேன்னு பாடியசத்த...வேதாளம் உள்ள திறந்தது மே மகிழ்ச்சி....பெரிய கட்டங்களை விட இந்த பேனல் அசத்த...அந்தக்கால கதைகளை நினைவுபடுத்த...துவக்கமே இரட்டை தலை ஆட்டையும் ...சாலமன்னு தூள் கிளப்ப....வரிகள் நிறைந்து படிக்க உற்சாகம் உறுதிபட...டெக்சும் துவக்கமே அதிரடியாக...தாத்தாக்கள் சும்மா தூள் கிளப்புமென பட எல்லாத்தையும் தேடுனா ...ஹாட் லைன் காணம்...அடுத்த மாத வெளியீடுகள் காரணம்....டின்டின்னோடு போட்டி போடுது வேதாளர்....சூப்பர் சார்

    ReplyDelete
  26. Tintin . What a great quality. Have to read
    Mini tex. New type climax
    Thaathaas-athiradi as usual
    Reading vedhalar now.

    ReplyDelete
  27. மினி டெக்ஸ், வேதாளர் ஓவர் ஓவர். இரண்டுமே அருமை. 10/10

    ReplyDelete
  28. "டின் டின்". பிறபுத்தகங்களின் அட்டையை விட அதிக குவாலிட்டியாக ஒவ்வொரு பக்கமும்.உலக தரத்தில் ஒரு காமிக்ஸ் புத்தகம்தமிழில்.வர்ண சேர்க்கையோ சொக்க வைக்கிறது.

    ReplyDelete
  29. அனைவருக்கும் வணக்கம்...

    ReplyDelete
  30. இந்த வருடத்தில் வேதாளரின்.. அதிர்ஷ்டத்தை தேடி.. கதை அருமை. வண்ணங்களும் நேர்த்தியாக.

    ReplyDelete
  31. வேதாளரின் அதிர்ஷ்டத்தை தேடி ..இந்த கதையிலும் அந்தப்புர உப ராணிகளுக்கு கருப்பு உடை...

    ReplyDelete

  32. மாயம் இல்லை மந்திரம் இல்லை

    கதை நல்ல ஒயின் மாதிரி நாளுக்கு நாள் மெருகேறிக் கொண்டே போகிறது.

    பாரிசில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து கொண்டிருக்கலாம். சிவகாசியின்LIONLYMPICS-ல் தாத்தாக்கள் ஆகஸ்ட் மாதம் மட்டுமல்ல இந்த வருடத்தின் 100 மீட்டர் ஈவென்டின் சாம்பியன்கள் தான். அழுத்தமான கதைக்கரு, சம்பவக் கோவைகளின் பிணைப்பு தலை சிறந்த வாசிப்பு அனுபவத்தை வழங்குகிறது.

    ஸ்பாய்லர் கருதி வேறு எதுவும் எழுதவில்லை. ஆனால் எழுத நிறைய இருக்கிறது. படித்த மற்றவர்கள் எழுதுவதை வாசிக்க ஆவலுடன் இருக்கிறேன்.

    9.7/10

    ( மொழிபெயர்ப்பு வேற லெவல்)

    ReplyDelete
    Replies
    1. // ஸ்பாய்லர் கருதி வேறு எதுவும் எழுதவில்லை //

      நீங்கள் எழுதுங்கள் நான் தாண்டி செல்கிறேன் 😄

      Delete
  33. சூறாவளியின் தடத்தில்
    பரவாயில்லை ரகம்.

    8.5 / 10

    ReplyDelete
  34. புத்தகங்கள் இன்று கிடைத்தன 😊 நன்றி சார்.

    ReplyDelete
  35. ஈரோட்டில் சந்திப்போம் நண்பர்களே.

    ReplyDelete
  36. Read tintin both volumes. He never gives up. It's not a great detective story but am adventure story. Breezy read

    ReplyDelete
  37. சார் இன்று பதிவுக் கிழமை...

    ReplyDelete
  38. Vedhalar-not bad story
    Read last month Robin- artwork Vera level. Showed Newyork in front of us. Sad story too. And sad climax

    ReplyDelete
  39. நேற்று இதழ்களை கைப்பற்றி சிலமணித்துளிகள் ரசித்து நான்கு இதழ்களை வாசித்தும் ஆயிற்று சார்...

    *சூறாவளியின் தடத்தில்*

    இம்மாத டெக்ஸ் இல்லா குறையை இந்த விலையில்லா மினி டெக்ஸ் இதழ் தீர்த்து உள்ளது எனினும் ஒரு குண்டு டெக்ஸ் வாசிப்பு இதழுக்கான சந்தோஷத்தை முழுமையாக தந்திடவில்லை என்பதும் உண்மையே... வில்லனை கதை ஆசிரியர் வில்லனை தீயவனாக சித்தரித்தும் ,மாவீரன் போல் சித்தரித்து உள்ளதும் டெக்ஸின் பங்கை குறைத்து விடுகிறது..மற்றபடி சித்திரங்கள் சிறப்பு...டெக்ஸை பொறுத்தவரை மாதம் ஒரு முறை ஓர் அரைமணி நேரத்திற்கும் மேல் அவருடன் உலவ வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் சார்...அடுத்த வருடம் ஆவது மாதம் ஒரு டெக்ஸ் என்பது முழுமையாக அமைய வேண்டும் என்பதே எனது விருப்பம்...


    *******

    அதிர்ஷ்டத்தை தேடி....


    வேதாளரின் அழகான அட்டைப்படம்..கதையும் இந்த முறை சிறப்பு ..வண்ணங்களும் போன முறையை விட இந்த முறை சிறப்பு..ஒரு முழு நீள வேதாளரை சந்தித்த திருப்தி ஓகே..நமது பழைய வேதாளர் இதழ்களில் அவரின் சிறப்பே அந்த கானக பழமொழிகள் தான் சார்...இந்த சிறிது நீளமான சாகஸத்தில் கூட ஒரே ஒரு கானக பழமொழி தான் இடம் பெற்று உள் ளது...அது அதிகமாக இல்லை எனினும் மிதமாக இடம் பெறுவது போல் இனி அமைந்தால் இன்னும் சிறப்பு சார்...ஒரு அரைமணி நேர பொழுது போக்குக்கு வேதாளர் உறுதி தருகிறார்...நன்று..

    ReplyDelete
  40. இம்மாத சிறப்பே டின்டின் தான் என்பதே சொல்லவும் வேண்டுமா என்ன...முதல் இதழை போலவே அதே தரம் ,அதே பிரமிப்பு ,அதே அட்டகாசம்...முதல் பாகமான மாயப்பந்துகள் 7 அட்டைப்படம் சிறப்பு...இரண்டாவது பாக அட்டைப்படம் அதை விட சிறிது சுமாரே ஆனாலும் அதுவே ஒரிஜினல் என்பதும் நம்மால் மாற்ற முடியாது என்ற நிலை இருக்கும் பொழுது நாம் ஏதும் செய்ய முடியாது தான்..

    முதல் பாகத்தை மட்டும் முதலில் படித்து விடலாம் என நினைத்து வாசிக்க தொடங்கி அதன் விறுவிறுப்பும்..நகைச்சுவையும் முடித்த அடுத்த நிமிடமே "கதிரவனின் கைதிகளையும்" எடுத்து வாசிக்க வைத்து விட்டது ஒரே மூச்சில்...

    உண்மையை சொல்ல போனால் சிறிது மனச்சோர்வுடன் இந்த இதழை வாசிக்க எடுக்கும் பொழுது இந்த மனநிலையில் இதழை வாசிக்க வேண்டுமா இப்பொழுது வாசித்தால் முழுதாக மனதில் ஒட்டுமா ரசிக்கத்தான் முடியுமா நாளை பார்த்து கொள்ளலாமா என்று நினைத்தாலும் பரவாயில்லை சிறிது வாசித்து பார்க்கலாம் என வாசிக்க தொடங்கினேன்..மற்ற மனச்சூழல்களை புறம் தள்ளியதுடன் பல இடங்களில் என்னை வாய்விட்டு சிரிக்க வைத்தது இந்த இரு தொகுப்புகளும்...இந்த முறை டின்டின்னை விட கேப்டன் தான் நிரம்ப ரசிக்கவும் ,சிரிக்கவும் வைத்து விட்டார் எனில் டின்டின்னின் நாலு கால் நண்பனும் பட்டைய கிளப்பி விட்டான்..ஓர் துப்பறியும் கதையை படிப்பது போல் விறுவிறுப்பு ..லக்கி ,சிக்பில் போல நகைச்சுவையிலும் சிறப்பு என இரு தடங்களுமே இணைந்து ரயில் பாதை போல் இணைந்தே ரசிக்க வைத்தது ..வெகு அட்டகாசம்...டெக்ஸை வாசித்தவுடன் அடுத்த டெக்ஸ் எப்பொழுது என மனம் நினைப்பது போல் இப்பொழுது இரண்டு பாக டின்டின்னை வாசித்தவுடன் மீண்டும் டின்டின் எப்பொழுது என ஏங்க வைத்து விட்டார் இந்த டின்டின்..


    அருமை... அட்டகாசம்.....

    ReplyDelete
  41. தாத்தா இதழையும் வாசித்து விடலாம் என நினைத்த பொழுது ஆசிரியர் முன் பாக இதழ்களை வாசித்தால் இன்னும் சிறப்பு என கூறியபடியால் பழைய மூன்று இதழ்களையும் எடுத்து வைத்து விட்டேன்...ஒட்டுமொத்தமாக ஒரே மூச்சில் நான்கு இதழ்களையும் வாசித்து விடலாம் என தாத்தாக்கள் இன்றைய நேரத்திற்காக காத்திருக்கிறார்கள்..நானுமே...


    பின்குறிப்பு...

    நமது இதழ்களில் எப்பொழதும் "மாற்றம்" சிறப்பாகவே அமையும் ..ஆனால் இந்த முறை "மாற்றம் " ஏமாற்றமாகவே அமைந்து உள்ளது.ஐந்து இதழ்கள் வந்து இருந்தாலும் ஒரு இதழில் கூட ஆசிரியர் பக்கம் இல்லை...அடுத்த வெளியீடு விளம்பரம் இல்லை ( வி காமிக்ஸ் நீங்கலாக),வாசகர் பக்கம் இல்லை என பல இல்லைகள்...


    இந்த மாற்றம் ஏமாற்றமே இந்த ஏமாற்றம் இனி வரும் மாதங்களில் வேண்டாம் சார் என்ற கோரிக்கையோடு....

    ReplyDelete

  42. அதிர்ஷ்டத்தைத் தேடி

    டிஸ்னி ஹாட் ஸ்டார் இல் இந்த வாரம் நீ நான் காதல் தொடரை சிறிது நேரம் பார்க்க நேர்ந்தது. அதில் ஒரு பெண்ணுக்கு சாமி வந்து ஆடுவது போல காட்சி அமைந்திருந்தது. அடியில்" இது முழுக்க முழுக்க கற்பனை கதை. மூடநம்பிக்கைகளை ஊக்குவிப்பது எங்கள் நோக்கம் அல்ல என டிஸ்க்ளைமர் ஓடிக் கொண்டே இருந்தது ". அதிர்ஷ்டத்தைத் தேடி புத்தகத்தில் அப்படி போடுவதாக இருந்தால் பக்கத்துக்கு பக்கம் அப்படி போட வேண்டியதாக இருக்கும் 😂.

    பல வருடப் பயிற்சிகளுக்கு பிறகு கடுமையான உழைப்பிற்கு பின் பலனை அனுபவிப்பதற்கு பாரிசில் உலகமெங்கும் வீரர்கள் குவிந்து கிடக்க இங்கு அதிர்ஷ்ட சிலை 😄.

    இவற்றையெல்லாம் தள்ளிவிட்டு தயாரிப்பு, வண்ணச் சேர்க்கை என்று பார்த்தால் அருமையாக தான் உள்ளது.

    8.5/10

    ReplyDelete

  43. மற்ற எல்லா வருடங்களையும் விட இந்த வருட ஈரோடு புத்தக விழாமிகவும் சிறப்பு வாய்ந்தது..
    அற்புதமான கொண்டாட்ட தருணம். உடல்நிலை சீராகி விட்டபோதிலும், இழந்த உடல் எடையை மீட்டு விட்டபோதிலும் mass gathering- உள்ள எந்த இடத்துக்கும் இந்த வருடம் முழுவதும் வீட்டில் அனுமதி இல்லை. 😔.

    ஈரோடு செல்லும் நண்பர்கள் அனைவருக்கும் சந்தோஷம் நிறைந்த வாழ்த்துகள். கொண்டாடி மகிழுங்கள். 💐👍

    ReplyDelete
  44. சார், இன்று பதிவு (சனி ) கிழமை சார்.
    குமார் ரொம்ப பிஸியா 😊

    ReplyDelete
  45. All are welcome to Erode..😍😘


    இடம்: ஓட்டல் ஓயாசிஸ்,ஈரோடு

    நாள்:4.8.2024- காலை 9.00 மணி முதல்


    எடிட்டர் அழைக்கிறார்..😍😘

    லயன்40 கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளுங்கள் நண்பர்களே..😍😘

    தவற விடாதீர்கள் ..😍🙏

    நம் அன்பு எடிட்டர் பெருமக்களை நேரில் சந்திக்க ஒரு அறிய வாய்ப்பு..❤💛

    காமிக்ஸ் நண்பர்களை
    நேரில் சந்தித்து அளாவளாவலாம்..😃😀😍😘

    வாருங்கள் ஈரோடுக்கு..🙏


    ReplyDelete
  46. பேத்தி லூசெட்டின் கர்ப்பத்துக்கு காரணமானவர் யாருனு இதிலே தெரிய வந்திருச்சு ."மாயமில்லே மந்திமில்லே"

    ReplyDelete
    Replies
    1. அது யார் என்று யாருகிட்டயும் சொல்லாதீங்க 😂

      Delete
  47. பரணி ஜி .ஸ்பாய்லர் கருதியே யாரில்லைங்கறதை நான் சொல்லலை.

    ReplyDelete
    Replies
    1. ஏதா இருந்தாலும் யாருகிட்டயும் சொல்லாதீங்க 😃

      Delete
  48. ஆமாங்க .முதலில்யாரில்லைனு பதிவு டைப்பிட்டு அழிச்சிட்டேன்.

    ReplyDelete
  49. விடிந்தால் கொண்டாட்டம் ஆரம்பம்.

    ReplyDelete
  50. இன்று பதிவு உண்டா சார்?

    ReplyDelete
  51. வேதாளரின், அதிர்ஷ்டத்தை தேடி..!

    எப்ப பார்த்தாலும் அவசர வேலை உள்ளது என சொல்லும் ஆண் வர்க்கத்திற்கு...
    63 ஆம் பக்கத்தில் அந்தப்புர ராணிகள், மாயாத்மாவிற்கு தரும் சுளிரென்ற பதில் சரியான சவுக்கடி.. சபாஷ்.

    ReplyDelete
  52. ரகு ஜி ஒரு கொண்டாட்டமான மனநிலை ல இருக்கீங்க போல . அப்படியே இதே எனர்ஜியோட இன்னைக்கி ஹீரோவா ஒரு கலக்குகலக்கனுங்க நீங்க.

    ReplyDelete
  53. வேதாளரின் "அதிர்ஷ்டத்தை தேடி" செமயா இருக்கும் போல.உங்க பதிவுல கொண்டாடறீங்க.

    ReplyDelete
    Replies
    1. இந்த வருடம் V காமீக்ஸில் வந்த மூன்று வேதாளர் கதைகளில் இந்த கதை டாப் சார்..

      Delete
  54. ஹொய்யா.ஹொய்யர ஹொய்யா ஹொய்யா
    ஹொய்யா.ஹொய்யர ஹொய்யா ஹொய்யா (ஒய் ஒய்)
    ஹொய்யா.ஹொய்யர ஹொய்யா ஹொய்யா (ஒய் ஒய்யா)
    ஹொய்யா.ஹொய்யர ஹொய்யா ஹொய்யா (ஒய் ஒய்யா)
    ஹொய்யா.ஹொய்யர ஹொய்யா ஹொய்யா (ஓ ஓ ஓ)
    ஹொய்யா.ஹொய்யர ஹொய்யா ஹொய்யா(ஓ ஓ ஓ)
    ஹொய்யா

    ஆ: ஈ ரோட்டுலதான்.
    குழு: ஹொய்யா
    ஆ:லயன் ரூட்டுலதான்
    கொண்டாடும் வெள்ளி விழாவு
    குழு: ஹொய்யா ஹொய்யா ஹொய்யா
    ஆ: இந்த பூத்திரியில்
    குழு: ஹொய்யா
    ஆ:ஒரு யாத்திரையில் நாப்பதோடு லயனும் வருது
    குழு: ஹொய்யா ஹொய்யா
    ஆ: முத்தெங்கே சென்றாலும்
    லயன் பின்னால் வராதா
    நீ வேண்டாமென்றாலும்
    வி வட்டமிடாதா ஹோய்...
    குழு: ஹொய்யா
    ஆ: புது ரூட்டுலதான்
    குழு: ஹொய்யா
    ஆ: நல்ல ரோட்டுலதான்
    நின்றாடும் வெள்ளி நிலவு...
    குழு: ஹொய்யா ஹொய்யா ஹொய்யா
    ஆ; இந்த பூத்திரியில்
    குழு: ஹொய்யா
    ஆ:ஒரு யாத்திரையில் பநாப்பதோடு லயனும் வருது
    குழு: ஹொய்யா ஹொய்யா




    ஆ: பூத்திருக்கும் வைரமணி கதைகளத் தான்
    குழு: ஹொய்யா
    ஆ: என்பதினில் கேட்டதுமுண்டோ
    குழு: ஹொய்யா ஹொய்யா..
    ஆ:காத்திருக்கும் ராக்குருவி
    சனியுறங்காமல்
    குழு: ஹொய்யா
    ஆ: நெட்டிசைக்க கேட்டதுமுண்டோ
    குழு: ஹொய்யா ஹொய்யா...
    ஆ: நீ வாழ்ந்து வளர்ந்த லயன் ~*~*__வேரு__*~*~
    ஆஸ்ட்ரிக்ஸ் நாளை தருவாரு
    நீ இன்று நடக்கும் தடம் வேறு
    லயனின்றி நமக்கு துணை யாரு
    நீ தடுத்தாலும்

    குழு: ஹொய்யா
    ஆ: யார் தடுத்தாலும்
    குழு: ஹொய்யா
    நாள் முடிக்க டின்டின் ஸ்னோயி தானே ஹோய்

    குழு: ஹொய்யா
    ஆ: ஈ ரோட்டுலதான்
    குழு: ஹொய்யா
    ஆ: லயன் ரூட்டுலதான்
    கொண்டாடும் வெள்ளி விழாவு...
    குழு: ஹொய்யா ஹொய்யா

    ஓ ..என்குடிசை வாசலிலே...
    ஸ்பைடர்தா விடிவிளக்கு...
    வலை மடிதான் பஞ்சு மெத்த..
    கண்மணியே நீ உறங்கு.....





    ஆ: முத்து வரும் வியும் வரும் கூட
    நம்மோடு
    குழு: ஹொய்யா
    ஆ: கிநா வந்தால் என்னடியம்மா
    குழு: ஹொய்யா ஹொய்யா
    ஆ: பதிமூனை சேரும்வரை டெக்ஸ் துணையாக
    குழு: ஹொய்யா
    ஆ: லார்கோ தன்னை ஏற்றுக்கொள்ளம்மா
    குழு; ஹொய்யா ஹொய்யா
    ஆ: பிரிக்காதே குண்டத தனியாக
    ஏதேனும் தவறும் தவறாக
    ஊர் கேட்டு தவிக்கு பொதுவாக
    ஒன்றாக படிப்போம் மெதுவாக
    காலடி நோக

    குழு: ஹொய்யா
    ஆ: நாலடி போக
    குழு : ஹொய்யா
    ஆ: பாதையிலே வலைவிரிப்பேன் நானே ஹோய்
    குழு: ஹொய்யா
    ஆ: ஈ ரோட்டுலதான்.

    குழு: ஹொய்யா
    ஆ: லயன் ரூட்டுலதான்
    கொண்டாடும் வெள்ளி விழாவு...
    குழு: ஹொய்யா ஹொய்யா ஹொய்யா
    ஆ: இந்த பூத்திரியில்
    குழு: ஹொய்யா
    ஆ:ஒரு யாத்திரையில் நாப்பதோடு லயனும் வருது
    குழு: ஹொய்யா ஹொய்யா
    ஆ: முத்தெங்கே சென்றாலும்
    லயன் பின்னால் வராதா
    நீ வேண்டாமென்றாலும்
    வி வட்டமிடாதா ஹோய்...
    குழு: ஹொய்யா
    ஆ: ஈ ரோட்டுலதான்
    குழு: ஹொய்யா
    ஆ: லயன் ரூட்டுலதான்
    கொண்டாடும் வெள்ளி விழாவு..
    குழு: ஹொய்யா ஹொய்யா
    ஆ: இந்த பூத்திரியில்
    குழு: ஹொய்யா வஸ்து
    ஆ:ஒரு யாத்திரையில் நாப்பதோடு லயனும் வருது
    குழு: ஹொய்யா ஹொய்யா

    ReplyDelete
  55. Last year saw muthu 50 via youtube fully. Today Attended lion 40 with my wife. Met steel claw, Chinnamanur saravanan, erode Vijay, paranitharan, Ramya. Briefly taked with editor and Vikram

    What a great event. It was organised like a marriage. Food was perfect. They had tea and vada counter all day. And mineral water bottle, selfie points and many things.

    Documentary was very good and interesting. Editor s speech was so emotional. I realized the importance of Archie and spider now. Without them, lion would have not roared ro 40.

    My special thanks to editor s maternal grandfather.

    ReplyDelete
    Replies
    1. I am glad to meet you Doctor.

      Well said about the event 😊

      Delete
  56. Replies
    1. மதிய உணவு அருமையாக இருந்தது சார்.

      Delete
  57. @Edi Sir..😍😘

    லயன்40- திருவிழா கொண்டாட்டம்..😍😘

    சூப்பர் டூப்பர் ஹிட் சார்..😃😍😘😀👌

    மறக்க இயலாத நினைவுகளுடன்
    வீடு நோக்கி..😍😃👍

    சந்தோஷம்..😍
    சந்தோஷம்..😍😘
    சந்தோஷம் மட்டுமே..
    😍😘😃

    Fully recharged..💐👍👍👍

    ReplyDelete
  58. சார் ஈரோடு வாசகர் சந்திப்பு லயன் 40 பற்றிய பதிவு இன்றா நாளையா??

    ReplyDelete
    Replies
    1. சார் களைப்பாக இருப்பார்.எப்படியும் பதிவு நாளைதான்அவர் நன்கு ஓய்வெடுத்துவிட்டு வரட்டும்.

      Delete
    2. குமார் @ நாளை மாலை வரை காத்திருக்கலாமே 😊

      Delete
  59. வீடு வந்து சேர்ந்து விட்டோம் நண்பர்களே

    ReplyDelete
  60. @Edi Sir..😍😘

    லயன்40- திருவிழா கொண்டாட்டம்..😍😘

    சூப்பர் டூப்பர் ஹிட் சார்..😃😍😘😀👌

    மறக்க இயலாத நினைவுகளுடன்
    வீடு நோக்கி..😍😃👍

    சந்தோஷம்..😍
    சந்தோஷம்..😍😘
    சந்தோஷம் மட்டுமே..
    😍😘😃

    Fully recharged..💐👍👍👍



    .....எனக்கும் கொஞ்ச நாட்களாக சார்ஜ் இல்லா ஃபீலிங்....இதோ லைஃப் புல்லா போதுமான சார்ஜ் ஏத்தியாச்....

    நன்றிகள் ஆசிரியர் மற்றும் நண்பர்களே

    ReplyDelete
  61. ஆசிரியரின் அன்பளிப்பாக அட்டகாச அன்பளிப்பான திகில் லைப்ரரி நிகழ்ச்சியில் சுவை கூட்டியது அன்பான உபசரிப்புகளுடன்

    ReplyDelete
    Replies
    1. Santhalkulla irunthu Vara mudiyathavangalukkum anupi vitturungappaa...

      Delete
  62. This comment has been removed by the author.

    ReplyDelete
  63. This comment has been removed by the author.

    ReplyDelete
  64. திகில் லைப்ரரி அன்பளிப்பு, விழாவிற்கு வந்தவர்களுக்கு மட்டும் தானா, எங்களுக்கெல்லாம் இல்லையா எடிட்டர் சார்...

    ReplyDelete
  65. சார்! "மாண்டிரேக் ஸ்பெஷல்-2 மற்றும் ஸ்பைடர் ஆர்ச்சி ஸ்பெஷல்" புத்தகங்களுக்கு ஆன்லைனில் லிங்க் போடுங்கள் சார்!

    ReplyDelete
  66. மந்திரவாதி மாண்ட்ரேக் ஸ்பெசல் 2 ஒரு அற்புதமான தொகுப்ப.காமிக்ஸ் வாசகர்கள் அனைவரிடமும் இருக்க வேண்டிய உயர்தரமான தொகுப்பு . கரூர் ராஜ சேகரன்.

    ReplyDelete
  67. சார் ஆவலுடன் உங்கள் பதிவை எதிர்நோக்கி....

    ReplyDelete
  68. அந்தக் குறும்படத்தை தனியாக யூடியூப்ல பதிவேற்றுமாறு திரு ஸ்டாலின் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. +1

      Online audio was not working during that time. Please upload and share. Thanks in advance

      Delete
  69. இந்த மாதம் வந்த ஸ்பைடர் ஆர்ச்சி கதையை மிகவும் ரசித்தேன். அடுத்த பாகத்திற்கு waiting.

    ReplyDelete
    Replies
    1. கருப்பு வெள்ளை கதை செம செம 😍

      Delete
    2. ஆர்ச்சி மற்றும் ஸ்பைடர் இடையே ஆனா உரையாடல் அருமை, இருவரையும் அவரது ஸ்டைலில் பேச எழுதிய வசனங்களை மிகவும் ரசித்தேன்!

      Delete
  70. பதிவு இன்னும் காணலங்க, ஆசிரியரே

    ReplyDelete
    Replies
    1. போட்டால்தான காணாமல் போகும் ரம்யா 😄😄😄😄 🏃

      Delete
    2. 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

      Delete
  71. "மந்திரவாதி மாண்ட்ரேக் ஸ்பெசல்" தெறிக்க விடுகிறது .அனைத்து கதைகளும். ஒரு பிரபஞ்ச பந்தயம். செம் த்ரில் .வேற்று கிரக வாசிகள் இருவரின் பந்தயம் மாண்ட்ரேக்கின் திறமையை அறிய நினைக்கிறார்கள் .பூமியை இரண்டாக பிளக்கப் போகும் வெடிகுண்டு .ஏழு நாட்கள் அவகாசம் ம ஒரு குறிப்பு வட துருவத்தில் அடுத்த குறிப்பு தென் துருவத்தில் ஆழ்கடலில் ஒன்று எவரெஸ்டில் ஒன்று . தேடி ஓடுகிறார்.மாண்ட்ரேக் இறுதியில் மாண்ட்ரேக்கின் இருப்பிடத்திலேயே குண்டு வைக்கப்பட்டுள்ளது..நொடிக்கு நொடி விறுவிறுப்பு.. 1968ல் உருவாக்கப்பட்ட இந்தக்கதை இன்றும் விறுவிறுப்பாக உள்ளது.ராஜ சேகரன் கரூர்

    ReplyDelete
  72. Replies
    1. ஆமாங்க சார். கையெல்லாம் நடுங்குது. பிளீஸ்

      Delete
  73. ஈரோடு ஸ்பெஷல் புக்ஸ் ஆன்லைன் லிஸ்டிங்கில் வந்துவிட்டது. எனவே, இன்று கொரியரும், பதிவும் நிச்சயம் உண்டு என்று இங்கு அமெரிக்க கழுகு தகவல்.

    ReplyDelete
    Replies
    1. பதிவைப் பற்றி தெரியவில்லை. மாண்ட்ரேக், ஆர்ச்சி பிளஸ் ஸ்பைடர் தாங்கி கொரியர் வந்துவிட்டது. 😊

      Delete
  74. Thigil library yum varala..pathivum varala....weekendum illaa..ooohhh...ooohum

    ReplyDelete
    Replies
    1. அழக்கூடாது பதிவு கண்டிப்பாக வரும் 😃

      Delete
    2. Innaiku vanthudumaa....kandippa vanthudumaa....ematha mattarulla ...kandippa vanthurum la

      Delete
  75. இன்று பதிவு நிச்சயம் வரும் என எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  76. ஆகஸ்ட் first look 
    1. மாயமில்லே மந்திரமில்லை 
    2. சூறாவளியின் தடத்தில் 
    3. அதிர்ஷ்டத்தை தேடி 
    4. டின்டின் (ஏற்கனவே ஆங்கிலத்தில் படித்ததால் ஈர்க்கவில்லை)

    ReplyDelete
  77. சார் நேற்று ஈரோட்டு ஸ்பெசல்கள் வந்து சேர....இரவு சென்று புரட்டினால் மூளையெல்லாம் ஹாட் ஆகுது...இதுலயும் ஹாட் லைன காணம்...அடுத்த வெளியீடுகள் காணம்...புத்தக அட்டை மாண்ட்ரேக் பின்னிபெடலெடுக்க....ஸ்பைடர் ஆச்சரியம்...மூவரையும் அட்டகாசமா கையாள மின்னல் வேக சிறுகதை....வழக்கம் போல ஆர்ச்சி தடுமாற....குற்றவியல் சக்கரவர்த்தியாக ஸ்பைடர் கோலோச்சிய கால கட்ட கதை...ஸ்பைடர் மாக்சின் தந்திரத்தை உணர்ந்து...உணர்வால் மட்டும் வாழ்ந்த மாக்ஸ் உடலைப் பெற்றபின் நடக்கும் அட்டகாசமும்..ஏக்கமும்.......ஸ்பைடர் ஆர்ச்சியால் பிரிக்கப்பட... கடைசியில் வழக்கம்போல தப்பிச் செல்லும் ஸ்பைடர்...மூவரும் அழகாய் கரம் கோர்க்க...அவரவர் ஸ்டைலில் கதை...மூவரின் ரசிகர்களுக்குமே தீனி

    ReplyDelete
  78. மாண்ட்ரேக் துவக்க பக்கங்கள் தூள் கிளப்ப என்பதுளின் ஏக்கங்கள் கண்முன்னே தெரிய அட்டகாசமாய் நுழையப்போகிறேன் இன்றைய வாய்க்கும் ஓய்வுகளில்

    ReplyDelete
  79. ஆசிரியர் பதிவை சரியான நேரத்தில் போடாததால்...
    ஸ்பெஷல் இதழ் ஒன்றை வெளியிட வேண்டும்...

    ReplyDelete
  80. This comment has been removed by the author.

    ReplyDelete
  81. புத்தகங்கள் கிடைத்தன.. ஆனால் திகில் லைப்ரரி வரவில்லை....

    ReplyDelete
    Replies
    1. வர முடியாமல் போய் விட்டது...நந்தாவில் உள்ளவர்களுக்கு ஏதாவது பார்த்து செய்யவும்..
      ..

      Delete
  82. ERODE spl books courier reached my home today.

    ReplyDelete
  83. எடிட்டரின் புதிய பதிவு நண்பர்களே 😍

    ReplyDelete