Powered By Blogger

Saturday, July 13, 2024

வெசம்?

நண்பர்களே,

வணக்கம்.  தடதடக்கும் சனிக்கிழமைகளின் yet another episode – இதோ நம் முன்னே! டின்டின்னோடு வருஷத்தை ஆரம்பித்தது நேற்றைக்குப் போலிருக்க, அடுத்தாண்டுக்கான டின்டினின் தயாரிப்புப் பணிகள் துவங்கி விட்டன! நாட்களும், பொழுதுகளும் மின்னல் மோஹினிகளாய் எடுக்கும் ஓட்டங்களின் துரிதம் மட்டுப்படவே செய்யாது போலும்!

And இதோ – ஈரோட்டுச் சந்திப்புக்கான countdown-ம் ‘மளமள‘வென்று நெருங்கிக் கொண்டேயிருக்க, லேட்டஸ்டாய் தோன்றிதொரு மகாசிந்தனையினை மறக்கும் முன்பாகச் சொல்லிட நினைக்கிறேன்!

- ஐந்தே – நிமிட அவகாசத்தில் ஆகக் கூடுதலான ரவுண்டு பன்களை அமுக்கக் கூடிய ஜாம்பவான் யாரென்று கண்டுபிடிக்க முனையலாமே? மகாலில் உள்ள அம்புட்டுப் பேரும் போட்டிக்குக் கையைத் தூக்கிப்புட்டால் சிவகாசி காரனேஷன் பேக்கரியே கோவிந்தாவாகிப்புடும் தான்! So ஒரு டஜன் போட்டியாளர்களிடையே செமத்தியான “பண்பாளர்“ யாரென்று கண்டுபிடிக்க முனைந்திடலாம்! அந்தப் “பன் பன்னிரெண்டு” முதலில் மின்னஞ்சலில் விண்ணப்பிக்கும் 12 பேராக இருப்பர்!

- இப்போ வரைக்கும் வந்துள்ள (சொற்ப) வீடியோக்களைக் கொண்டு நம்ம டீம் ஈரோடு ஒரு மினி குறும்படத்தை தயார் பண்ணி வருகின்றனர். தொலைவிலிருக்கும் லயன் 40-ல் இருந்திட வேண்டுமென்று எண்ணிடும் பட்சத்தில், இந்த வாரமே - ப்ளீஸ்?!

ரைட்டு... பதிவுக்குள் புகுந்திடலாமென்றால் ஜுலை இதழ்கள் இன்னமும் fresh ஆக இருந்திடும் வேளையில் ஒளிவட்டத்தை வேறெங்கேணும் பாய்ச்சிட நெருடுகிறது! அதே சமயம் – ஜுலையின் நான்கு இதழ்களையும் போட்டுத் தாக்கி முடித்திருக்கும் நண்பர்களுக்கு What next? என்ற கேள்வி முன்நிற்கும்!கேள்விகளுக்குக் கேள்விகளையே பதிலாக்குவது தானே நம்ம லொடுக்ஸ் பாண்டி ஸ்டைல்?

சிலபல பதிவுகளுக்கு முன்பாக ”The மேஜிக் மொமண்ட்ஸ் ஸ்பெஷல்” – என்றதொரு சிறப்பு இதழை முன்மொழிந்திருந்தீர்கள்! நம்ம பதிவுப் பக்கத்தினில் ஆயிரம் பதிவுகளைத் தாண்டியதைக் கொண்டாடிட வேண்டிய சிறப்பிதழ் அது! And வரும் டிசம்பரில், ரெகுலர் சந்தாத் தடத்திலேயே கொஞ்சம் பட்டி-டிங்கரிங் பார்த்து – ஒரு டெக்ஸ் கலர் சாகஸத்தை உட்புகுத்தி ரகளை பண்ணிட முஸ்தீபுகள் துவங்கியாச்சு!

இதனோடே இன்னொரு ”ஆயிரம்” சார்ந்த celebration பற்றிய பேச்செடுத்திருந்தோம்; and அது இன்னமும் take-off ஆகியிருக்கவில்லை! அது தான் நம்ம Owl eyed –ன் மேற்பார்வையில் ஆயிரம் இதழ்களைக் கடந்து வண்டி ஓடிக் கொண்டிருப்பதை சிறப்பிக்கும் இதழ்! And இதனில் வெளியிட மூன்று கதைகளை உங்களது தேர்வுக்குத் தந்திருந்தேன்!

- 5 பாக வெஸ்டர்ன் த்ரில்லர் – “விஷம்

- ரூட் 66 – 5 பாக க்ரைம் த்ரில்லர்

- “பயணம்” – மிரட்டலான b&w கிராபிக் நாவல்!

மேற்படி மூன்றுமே மோதிக் கொண்டதொரு tough fight-ன் இறுதியில் “விஷம்” என்ற கௌபாய் த்ரில்லரே உங்களது சாய்ஸாக அமைந்திருந்தது! 


இப்போது எனது கேள்விகள் இவையே :

- இந்த மெகா நீள சாகஸம் – ஒரிஜினலாக 5 பாகங்களாக; 5 தனித் தனி ஆல்பங்களில்; 5 ஆண்டுகளில் வெளியாகியுள்ளது!

- நாமுமே அதே பாணியில் – 5 தனித்தனி ஆல்பங்களாய் – அடுத்தடுத்த 5 மாதங்களில் இந்த 235+ பக்க சாகஸத்தைக் கையாண்டால் என்ன?

- ஒவ்வொரு அத்தியாயத்திலும் கதையின் மையமான பழிவாங்கும் அழகி புதிதாய் ஒரு பயணத்தோடு, புதிதாய் ஒரு காவு வாங்கிடக் கிளம்புகிறாள்! So 5 தனித்தனி இதழ்களுக்கு இது அழகாய் set ஆகிடச் செய்யும்!

- ‘ஏக் தம்மில்‘ வெளியிடுவதாயின் விலையில் மாற்றங்கள் இராது தான் – ஆனால் 5 அத்தியாயப் பெருங்கதைகளை வாசிக்கும் பொறுமைகள் இன்று நம்மில் எம்புட்டுப் பேரிடம் உள்ளதென்பதே கேள்விக்குறி!

- So “மணந்தால் மகாதேவியே” என்று பெட்ரோமேக்ஸ் லைட்டையே தேடிப் பிடிச்சு வாங்கியாந்த பிற்பாடு, அவை டப்பி உடைக்காமல் பரணில் துயில் பயிலும் ரிஸ்க் எடுப்பதா ? அல்லது – “மாற்றம் – முன்னேற்றம் – 5 இதழ்கள்” என்று தகிரியமாய் முயற்சித்துப் பார்ப்பதா?

- உங்கள் தீர்மானங்கள் + அவற்றிற்கான காரணம் ப்ளீஸ்?!

- அப்பாலிக்கா இந்த ஸ்பெஷல் இதழுக்கு நல்லதாயொரு பெயரை இம்முறையேனும் சூட்டி வைத்தால் – வண்டியை ஸ்டார்ட் எடுக்கச் செய்திட உதவுகிறதா? என்று பார்த்து விடலாம்! So ஒரு பொருத்தமான – ‘நச்‘ பெயர் ப்ளீஸ்?!

- இந்தத் திட்டமிடல் எப்படியிருந்தாலுமே 2025-ல் தான் நடைமுறை கண்டிட முடியும்! So அட்டவணை தயாரிப்பின் பிஸியில் உள்ள இந்தத் தருணத்தில் when? where & how to fit the book(s) என்பது பற்றி எனக்குள் தெளிவு கிட்டினால் நலமென்பேன்! So உங்களது inputs ப்ளீஸ்?!

தோள்பட்டை சிகிச்சை தொடர்ந்து வர, ஏற்கனவே சொன்னது போல, வாரயிறுதிகள் பட்டினத்தில் கழிந்து வருகின்றன! அக்குபஞ்சரிலும், உடற்பயிற்சிகளிலும் தொங்கிக் கிடக்கும் நாக்கோடும், புஜங்களோடும் நீளமாய் பதிவை எழுத / டைப்ப ‘தம்‘ லேது என்பதால் இந்த வாரம் எச்சூஸ் ப்ளீஸ்!

Bye all... See you around! Have a fun Sunday!

And இதோ ஒரு கொசுறு trivia கேள்வி :

அல்லது - இவை எவையுமே அல்லாத வேறொன்றாய் எது?

263 comments:

  1. வணக்கம் காமிக்ஸ் உறவுகளே 💐😍

    ReplyDelete
  2. அனைவருக்கும் வணக்கம்...

    ReplyDelete
  3. வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  4. Replies
    1. 5 தனித் தனி புத்தகங்களாக ஒரே பாக்ஸ் இல் வைத்து தரலாம் சார்...
      கஷ்டம் எனில்,
      3+2 ஆக இரண்டு மாதங்களில் போட்டு விடலாம் சார்👍

      Delete
  5. என்னுடைய சாய்ஸ்


    மின்னும் மரணம்.

    ரத்தப் படலம்.

    ReplyDelete
  6. ஆளில்லா தீவில் நீண்ட நேர வாசித்தல் காரணமாய் நிச்சயம் எடுத்து போக கூடிய புத்தகம் "மின்னும் மரணம்" இருக்கும்

    ReplyDelete
  7. இரத்தப்படலம் or மின்னும் மரணம்.. நாள் கணக்காய் வெச்சு படிக்கவும், போர் அடிக்காமல் மீண்டும் மீண்டும் படிக்கவும் நல்ல சாய்ஸ்..

    ReplyDelete
  8. "மின்னும் மரணம்" கையில் இருந்தால் ஒரு வாரம் என்ன ஒரு வருடம் கூட அங்கயே தங்கலாம்....

    ReplyDelete
  9. சர்வமும் நானே எனது சாய்ஸ்

    ReplyDelete
  10. லயன் சூப்பர் ஸ்பெஷல் எடுத்து செல்வேன்...

    ReplyDelete
  11. ஒரே புக் என்றால் மின்னும் மரணம் தான்

    ReplyDelete
    Replies
    1. அப்போ.. !! கார்சனின் கடந்த காலம்.. தின் கதி???

      Delete
  12. தொடராக வாசிக்கும் பொறுமையும் இல்லாததால் ஒரே குண்டு புக். அல்லது ஒரு பாக்ஸ் செட்

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் அதே

      Delete
    2. ஆம்.. உண்மை... அழகிய, அட்டகாசமான ஒரு தொகுப்பாய் இருக்கும் மஹேந்திரன்...5 பாகமும்
      ஒன்றாய்... அதுவே ஏன் ஆவலும்.. ❤️❤️👍..

      Delete
  13. @Edi Sir..😍😘

    ஆளில்லாத தீவில்..
    ஒரு வாரம்..
    படிக்க எடுத்து செல்வது..

    வேற எந்த வேலையும் தொந்தரவும் இல்லாமல் ப்ரீ என்றால்..

    மின்னும் மரணம்..😘
    இரத்தப்படலம்..😍

    மட்டும் பத்தாதே..

    All 9 -books ம் எடுத்துகிட்டு போனாக்கூட பத்தாதே..

    எல்லாத்தையுமே எடுத்துட்டு போக வாய்ப்பு கொடுங்க சாரே..😃😃

    ReplyDelete
  14. ஒன்பது புத்தகங்களில் ஒன்றை மட்டும் எடுத்துச் செல்லலாம்.

    மற்ற எட்டு புத்தகங்களையும் எட்டு நண்பர்களுக்கு கொடுத்து விட வேண்டும் என நிபந்தனை இருந்தால் அப்பொழுதும் எனது தேர்வு லயன் சூப்பர் ஸ்பெஷல் தான் மற்ற புத்தகங்களை ஏதேனும் ஒரு வகையில் பெற்று விடலாம் இதை பெறுவது சற்று கடினம் என்ற சிறப்பு காரணமும் உண்டு.

    ReplyDelete
  15. //அல்லது - இவை எவையுமே அல்லாத வேறொன்றாய் எது? ///

    New Look Special

    ReplyDelete
  16. ஒன்பது புத்தகங்களில் ஒன்று எனில்..
    என்னுடைய சாய்ஸ்..

    LMS
    (இரண்டு புத்தகங்களும் சேர்ந்ததுதானே..?)

    ReplyDelete
  17. ///மேற்படி மூன்றுமே மோதிக் கொண்டதொரு tough fight-ன் இறுதியில் “விஷம்” என்ற கௌபாய் த்ரில்லரே உங்களது சாய்ஸாக அமைந்திருந்தது! ///

    பிரச்சாரம் அப்படி..💪💪💪


    (ஹூம்... வாக்காளர் உரிமைத்தொகைல்லாம் குடுத்து ஜெயிக்கவைக்க வேண்டியிருந்தது...!)

    ReplyDelete
    Replies
    1. பிரியாணி பார்சல் இன்னும் வர்லே....😉😉😉

      Delete
  18. மின்னும் மரணம்..

    ReplyDelete
  19. நாமுமே அதே பாணியில் – 5 தனித்தனி ஆல்பங்களாய் – அடுத்தடுத்த 5 மாதங்களில் இந்த 235+ பக்க சாகஸத்தைக் கையாண்டால் என்ன?

    போடுங்க.. போட்டு பாருங்க..

    ReplyDelete
  20. ///So “மணந்தால் மகாதேவியே” என்று பெட்ரோமேக்ஸ் லைட்டையே தேடிப் பிடிச்சு வாங்கியாந்த பிற்பாடு, அவை டப்பி உடைக்காமல் பரணில் துயில் பயிலும் ரிஸ்க் எடுப்பதா ? அல்லது – “மாற்றம் – முன்னேற்றம் – 5 இதழ்கள்” என்று தகிரியமாய் முயற்சித்துப் பார்ப்பதா?///


    5 தனித்தனி பாகங்களாய்... 5 இதழ்கள்.. ஆனால் ஒரே நேரத்தில்.. ஸ்லிப் கேஸில்...

    சூப்பராக இருக்கும் சார்..!

    ஆதரவு தெரிவியுங்கள் நண்பர்களே..!!

    ReplyDelete
    Replies
    1. ஆனா அஞ்சு புக்லயும் அட்டைல அந்த அம்மிணி தான் இருக்கனும். வேறெந்த மொட்டைப்பசங்களும் வரக்கூடாது

      Delete
    2. ஆமா @KID ஆர்டின்..
      நல்ல ஐடியா,முதல்ல ஒரு பாகம் போட்டு,கதை நல்லா இருந்தாலும் கழுவி ஊத்தினா மீதி பாகங்களும் அம்பேல்.
      ஒரே செட்டா தந்துடலாம்.
      என்ன பட்ஜெட் இடிக்கும்.

      Delete
    3. //5 தனித்தனி பாகங்களாய்... 5 இதழ்கள்.. ஆனால் ஒரே நேரத்தில்.. ஸ்லிப் கேஸில்...

      சூப்பராக இருக்கும் சார்..!//


      +9

      Delete
    4. //ஆனா அஞ்சு புக்லயும் அட்டைல அந்த அம்மிணி தான் இருக்கனும். வேறெந்த மொட்டைப்பசங்களும் வரக்கூடாது//

      😁😁😁👍👍👍👍

      Delete
    5. 5 தனித்தனி பாகங்களாய்... 5 இதழ்கள்.. ஆனால் ஒரே நேரத்தில்.. ஸ்லிப் கேஸில்..

      ஆனா அஞ்சு புக்லயும் அட்டைல அந்த அம்மிணி தான் இருக்கனும். வேறெந்த மொட்டைப்பசங்களும் வரக்கூடாது

      Delete
  21. ///அப்பாலிக்கா இந்த ஸ்பெஷல் இதழுக்கு நல்லதாயொரு பெயரை இம்முறையேனும் சூட்டி வைத்தால் – வண்டியை ஸ்டார்ட் எடுக்கச் செய்திட உதவுகிறதா? என்று பார்த்து விடலாம்! So ஒரு பொருத்தமான – ‘நச்‘ பெயர் ப்ளீஸ்?!///


    The Thousand Special

    ReplyDelete
  22. @Edi Sir..😍😘

    01.June-ல் எனது பதிவு சாரே...😍👍

    1)1000-மாவது பதிவுக்கு "The 1000 வாலா ஸ்பெஷல்" என நாமகரணம் சூட்டுகிறேன் சாரே. 👍✊👌
    (மறக்காம The போட்டிருக்கேன்)😃


    2) விஷத்தை எப்ப கொடுத்தாலும் ஏக்தம்ல ஒண்ணாவே கொடுத்துடுங்க சாரே😃😍

    மாசாமாசம் தவணையில சாப்பிட்டா விஷம் ஏறவே ஏறாது..
    😃😃😃


    அதனால.. ஏக் தம்ல ஒரே புக் செட்டா கொடுத்திருங்க சார்..👍✊👌

    நம்ம மக்கள் கட்டட்டாயம் படிச்சிருவாங்க..😃

    வேணுமின்னா..
    பத்து பக்கம்படிச்சவுடனே..
    கேட்கிற பத்து கேள்விக்கு..
    சரியான பதில் சொன்னால் ..
    ரவுண்டு பன்னு பரிசுன்னு அனவுன்ஸ் பண்ணிடுவோம்.. 😍👍👌✊

    ReplyDelete
    Replies
    1. ///2) விஷத்தை எப்ப கொடுத்தாலும் ஏக்தம்ல ஒண்ணாவே கொடுத்துடுங்க சாரே😃😍

      மாசாமாசம் தவணையில சாப்பிட்டா விஷம் ஏறவே ஏறாது..///

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

      Delete
  23. இரத்தப்படலம் கலெக்ஷனே என் சாய்ஸ்..

    ReplyDelete
  24. 5 பாகமும் முழுசா வரும்னா மாசா மாசம் ஓகே தான் சார். ஆனா கிட்டங்கிய காரணம் காட்டி பாதியிலேயே நிக்க வாய்ப்பிருந்தா not okay sir

    ReplyDelete
  25. 'விஷம் - ஒரே பாகமாக வருவதையே விரும்புகிறேன். நாளைக்குப்பின்னே 'இரண்டாம் பாகத்தைக் காணோம்.. மூனாம் பாகத்தைக் காணோம்னு கிடந்து அல்லாடக்கூடாது பாருங்க?!!

    ReplyDelete
    Replies
    1. இதுலே இப்படி ஒரு மேட்டர் கீதா.
      10 ரூவாவில் வந்த, டெக்ஸ் -ன் தொடர் அத்தியாயங்களில்,
      அங்க இங்க சில மிஸ்ஸிங்.

      இதனாலேயே,
      லட்டு Ok.
      பூந்தின்னா அலர்ஜிதா.

      Delete
    2. காமன்சே" கதை தா,
      இதுல மெகா ஹிட்டு.
      ஒரு கதை கருப்பு/வெள்ளை.
      அது கலர் ரீ பிரிண்டு வருமா தெரியாது.
      மிச்ச எபிசோடுக்கு
      விடிவு உண்டா அதுவு தெரியாது.
      ..

      Delete
  26. // 5 பாக வெஸ்டர்ன் த்ரில்லர் – “விஷம்” //

    5 தனித்தனி இதழ்களாக 5 மாதங்கள் காத்திருந்து படிக்கும் பொறுமை இல்லை.
    5 ஆல்பங்களையும் ஒரே புத்தகமாக பெற்று ஆர்வத்தை பூர்த்தி செய்து கொள்ள நினைத்தாலும்...

    // உங்கள் தீர்மானங்கள் + அவற்றிற்கான காரணம் ப்ளீஸ்?! //

    ஒரு கதை நினைவுக்கு வந்தது ...

    அடுப்பில் சூடாக உள்ள பாலை குடிக்க முற்பட்டு நாக்கினை சுட்டுக் கொண்ட பூனை , அடுத்த முறை குளிர்ந்த மோரை கூட ஊதி ஊதி குடித்ததாம்.

    3+2 என இரண்டு அடுத்தடுத்த மாதங்களில் வெளிவந்தால் படிப்பதற்கும் இலகுவாக இருக்கும்.

    அதிக நாட்கள் காத்திருக்க இருக்காது.

    அனைத்து தரப்பு நண்பர்களும் வாங்கக்கூடிய விலைகளில் இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. இது Ok தான்.
      வேணா இப்படி மாத்திக்கலாம்.
      2+3 .
      இரண்டே ஷாட்ல
      இரண்டே மாசத்துல
      மேட்டர் கீளியர்.

      ஊகூம்
      இது சுகப்படலேன்னு சொன்னா,
      பூந்தியா தா வருவேன்னா,
      அஞ்சு மாசம் முடிஞ்ச பிறகு,
      மொத்தமா
      எடுத்து ஒரே மூச்சுல படிக்க வேண்டியதுதான்.

      Delete
  27. மின்னும் மரணம் :) என்றாவது ஒரு நாள் கார்சனின் கடந்த காலம் போல மேக்ஸி சைஸில் 5 பாகங்களாக வரத் தகுதியான கதை :)

    ReplyDelete
  28. ஐந்து மாதங்களுக்கும் சுவாரஸ்யத்தை நீட்டிக்க ஆவல்தான் சார்..
    மை சாய்ஸ் தலைப்புகள்
    பழிவாங்கும் பயணம்
    பலிகேட்ட பயணம்
    தேடித் தீர்த்து விடு
    தீரா வஞ்சப் படலம்
    கொன்று விடு கண்மணி

    ReplyDelete
  29. மின்னும் மரணம்...

    (எங்கேயும்..எப்போதும்)

    ReplyDelete
  30. தனித்தனி பாகங்களாக வரலாம் சார்... வன்மேற்கு சீரிஸ் வந்தது போல

    ReplyDelete
  31. விஷத்தை ஒரேடியாக போடலாம் சார்.

    ReplyDelete

  32. The Venom..
    தலைப்புகள்..

    1)விஷமல்ல நிசம்..

    2)மனசெல்லாம் விஷம்..


    ReplyDelete
  33. // நாமுமே அதே பாணியில் – 5 தனித்தனி ஆல்பங்களாய் – அடுத்தடுத்த 5 மாதங்களில் இந்த 235+ பக்க சாகஸத்தைக் கையாண்டால் என்ன?

    - ஒவ்வொரு அத்தியாயத்திலும் கதையின் மையமான பழிவாங்கும் அழகி புதிதாய் ஒரு பயணத்தோடு, புதிதாய் ஒரு காவு வாங்கிடக் கிளம்புகிறாள்! So 5 தனித்தனி இதழ்களுக்கு இது அழகாய் set ஆகிடச் செய்யும்! //

    தனித்தனியாக வெளியிட எனது ஆதரவு :-)
    குண்டு புத்தகங்கள் படிக்க நேரம் இல்லை. விரைவான வாசிப்புக்கு தனி இதழ்கள் நன்றாக உள்ளது. இந்த வருடம் இதுவரை வந்த புத்தகங்கள் அனைத்தும் படித்து விட்டேன் அதுவும் அந்த அந்த மாதங்களிலேயே 😊

    ReplyDelete
  34. ரவுண்டு பன்னு போட்டி வேண்டாம் என்பது என் தாழ்மையான கருத்து எடிட்டர் சார்! பொதுவாகவே பன் சமாச்சாரங்கள் எந்த அவசரமுமின்றி சாப்பிடும்போதே கார்க் போல தொண்டையில் அடைத்துக்கொள்ளும் ரகத்தைச் சார்ந்தவை என்பதை பல நூறு (அவையடக்கம் கருதி 'நூறு') பன்னுகளை சாப்பிட்டவன் என்ற முறையில் இங்கே தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.😰 அதிகம் பன் சாப்பிட்டால் அன்றே அடைத்துக்கொள்ளுமோ இல்லையோ .. அடுத்த நாள் அடைத்துக்கொள்ளும் என்பது சர்வ நிச்சயம்! 😅
    தவிர, பன்னுகளை ஆறஅமர உட்கார்ந்து சாப்பிடுவதே சுகம்.😋

    ReplyDelete
  35. Replies
    1. யாருக்கு சொன்னீங்க பரணி. E.V. க்கா, இல்லே எடிக்கா?

      Delete
  36. மின்னும் மரணம்

    விஷம் முழுமையாக வேண்டும். ஒரே இதழாக ஹார்ட் பவுண்ட். அல்லது (ஒரே சமயத்தில் 5 தனித்தனி இதழாக ஸ்லிப் கேஸில் வந்தாலும் ok தான்)

    ReplyDelete
  37. ///அப்பாலிக்கா இந்த ஸ்பெஷல் இதழுக்கு நல்லதாயொரு பெயரை இம்முறையேனும் சூட்டி வைத்தால் – வண்டியை ஸ்டார்ட் எடுக்கச் செய்திட உதவுகிறதா? என்று பார்த்து விடலாம்! So ஒரு பொருத்தமான – ‘நச்‘ பெயர் ப்ளீஸ்?!///


    " விஷம் "

    இதுவே நல்லாதானே இருக்கு சார்...!

    ReplyDelete
  38. சிதைக்கபட்டவளின் கதை இது.😳.

    சிதைக்க பட்டவள்
    சிதைந்து கிடப்பாள்.. என்று எண்ணாதீர்கள்..

    சீறி துணிந்தால்
    சிதைத்தவர்களின் கதி என்னாகும்..

    சிதைத்த சீர்மிகு கயவர்களை மண்ணொடு மண்ணாக்கிய மங்கையின் கதை இது..

    The Venom..💀👽
    விஷமங்கை..🐍

    ReplyDelete
  39. இரத்தப்படலம் 4 ல் கீழே உள்ளவாறு ஒரு வசனம் வரும்.. "ஆனால் ஜேஸன் ப்ளையோ ஆளற்றதொரு தீவில் அக்கடா என்று இருந்தான்!" என்று.

    XIII க்கு வாய்த்த மாதிரி ஒரு சந்தர்ப்பம் வாய்ப்பின்.. நான் எடுத்து வைக்கும் புத்தகம்

    *மின்னும் மரணம்!*

    ReplyDelete
  40. முத்து 50 இன் கிடங்கி நிலை தேக்கம். எனக்கு தனிப்பட்ட முறையில் மிகுந்த வருத்தம்.

    புத்தக விழாக்களிலும் அதன் விலையின் காரணமாக புதிய வாசக நண்பர்கள் தேர்ந்தெடுப்பதில்லை.

    புதிய வாசகர் விலையினையும் பார்க்கிறார்.

    ஒவ்வொரு கதையும் அனைத்து நண்பர்களையும் சென்றடைய கூடிய வழி எதுவாயினும் அதற்கு எனது ஓட்டு எப்பொழுதும் உண்டு.

    ReplyDelete
    Replies
    1. நண்பரின் கூற்றை வழி மொழிகிறேன்.. க்ளாசிக் ஷகதைகளோ, அல்லது டெக்ஸ் வில்லர் கதைகளோ குண்டு புக்காயின் விற்பனையில் சாதிக்கும்.. புதுக் கதைகள் எனும் போது குண்டு புக்கை விலை கருதி நிறைய வாசகர்கள் நிராகரிக்க வாய்ப்புண்டு.. ஆகவே தனித் தனி இதழ்களாக வருவதே நன்று 🙏🏻

      Delete
    2. ஆனா அதுதானே அட்டகாசமான கதைய இருக்கு குணா சார்.
      வாசகர்கள் ரெகுலர் ஹீரோக்கள் தாண்டி கொஞ்சம் இந்த மாதிரி தனிப்பட்ட கதைகளையும் முயற்சி செய்ய வேண்டும், செய்தால் இன்னும் நிறைய புதிய படைப்புக்கள் நமக்கு கிடைக்கும்.

      Delete
  41. 1. நெஞ்சில் ஒரு நஞ்சு...
    2. நெஞ்சமெல்லாம் நஞ்சு...
    3. விஷம் அன்றி வேறு இல்லை.
    4. விஷம் இங்கு இலவசம்.
    5. குருதியெல்லாம் விஷம்.

    ReplyDelete
  42. This comment has been removed by the author.

    ReplyDelete
  43. ”The மேஜிக் மொமண்ட்ஸ் ஸ்பெஷல்” இதழில் வரும் டெக்ஸ் கதை 5 பாகம் கொண்டது என்பதாய் கேள்வி...? இப்போது 2 என்றால் அடுத்த பாகங்கள் எப்போது சார் வரும்? (இந்த 5 பாகங்கள் கொண்ட கதைக்கு 2 தனித்தனி ஓவியர்கள் பணியாற்றியுள்ளனர் என்பது சிறப்பு சார்)

    ReplyDelete
  44. சூப்பர் சார்..,முதலட்டை விஷம் கலக்குது....தலைப்பு பாத்ததும் ஈரோடு ஸ்பெசலோன்னு துள்ளி குதிச்சு என்னை 2025தலையில் தட்டி...மணந்தால் மகாதேவி தான் ...குண்டுதான் வசப்படும்னு தோண....காரணம் ஒரே சுக்கான் தூக்கிப் போதும்னு நாளை ஒரு தேர்வு வந்தா வசதியாருக்குமேங்ற எண்ணமில்லாம ...அந்த குண்டுன்னா காரணம் சொல்லவே இயலாத ஈர்ப்பு துவக்கிய கோடை மலர்கள் நன்றி கலந்த அன்போடு மனதால் நினைத்து...அந்த இருப்பதிலே குண்டான இரத்தப் படலம் தானே நான் தூக்க தனிமைத் தீவுக்கு தனியா வருமெனுமென்னம்...மிச்ச மூனு கதையும் அதாவது பயணம்...ரூட்66மூனயும் இணைத்து மெகா குண்டா வந்தா இரத்தப் படத்துக்கு பதிலாக அத தூக்கி சுமக்க மனமேங்குமோ என்னவோ

    ReplyDelete
    Replies
    1. அப்புறம் இப மூனு புக்குங்றதால கலர்ல போடலயோ....ஒரே புக்கா வருமானங்ற மேலான சிந்தனை மேலோங்குவதயும் தவிர்க்க இயலவில்லை....ஆளில்லா தீவுக்கு தூக்கிச் செல்ல வசதியாத்தான்...அதுவே அந்த 13விடுபட்ட மர்மத்தயும் இணைப்பாக தொகுப்பிலே ஒட்டி விட்டா ஜோராதானிருக்கும்...ஒரு புக்கத்தான தூக்க முடியும் அதான்...இந்த தொகுப்பில் அதாவது காட்டிய குவியலில் வேறு ஏதாவதுங்ற கேள்விக்கான பதில் கணைதானிது

      Delete
    2. அதுவும் ஸ்பைடரின் விண்வெளிப் பிசாசு சைசுல இருந்துட்டா தனிமைங்ற சுமை தோணுமா என்ன இந்த சுகமான துணையின் சுமையால்

      Delete
  45. வணக்கம் நண்பர்களே.. 🙏🏻🙏🏻🙏🏻

    ReplyDelete
  46. ஒன்பதில் ஒன்று தேர்வென்றால் லயன் சூப்பர் ஸ்பெஷல்..

    ReplyDelete
  47. விஷம் தனித் தனி இதழ்களாக வருவதே சிறப்பு.. புக் ஃபேர் ஸ்பெஷல் இதழ்களே வரிசை கட்டி நிற்கும் போது குண்டு புக்கிற்கான இன்னுமொரு தொகை காக்கைத் தலையில் பனம் பழம்!

    ReplyDelete
  48. தங்கள் உடல்நலம் தேற வர இறைவனை வேண்டுகிறேன்.
    முதலில் உடம்பை நன்கு கவனியுங்கள் சார், உங்கள் நலனே எங்களுக்கு முக்கியம்.

    *"சென்ற வாரம் யங் டெக்ஸ் தொடர் வெளியிடுவது பற்றி கேட்டீர்கள் அது பற்றி ஏதாவது அறிவிப்பு வரும் என எதிர்பார்த்தேன்.

    **இறுதியில் “விஷம்” என்ற கௌபாய் த்ரில்லரே உங்களது சாய்ஸாக அமைந்திருந்தது!**
    🌹"மீதி 2 கதைகளுக்கு நாம் மெனக்கெட வேண்டியதில்லை, எப்படியும் ஆசிரியரே அதை வெளியிட பெரும் வாய்ப்பு இருக்கிறது,
    ஆனால் லேடி கெளபாய் கதையை விட்டால் பின்னாளில் மீண்டும் கிடைக்கும் வாய்ப்பு குறைவு,
    ஆகவே "விஷம்"கெளபாய் கதைக்கு உங்களது பொன்னான வாக்குக்களைத் தரவேண்டும் "
    என நண்பர் @கண்ணன் ரவியின் யோசனைப்படி பெருவாரியான வாசகர்கள் தேர்ந்தெடுப்பில் "விஷம்" கிடைத்துள்ளது மிக்க மகிழ்ச்சி.
    வாசகர்கள் சார்பாக @கிட்ஆர்டின் கண்ணன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
    (ஓட்டெடுப்பு குறைவென மீதி இரண்டு கதைகளையும் போடாமல் இருந்துடாதீங்க சார், ஏதாவது செய்து அதையும் கொடுங்க.)

    *அடுத்தடுத்த 5 மாதங்களில் இந்த 235+ பக்க சாகஸத்தைக் கையாண்டால் என்ன?*
    🌹:- கண்டிப்பாக சார், தள்ளி தள்ளி வெளியிடுவதை விட, ஒரு தொடரை ஒரே மூச்சில் வெளியிடுவது நல்லது.

    when? where & how to fit the book(s)..
    🌹வெளியீடு 2025 எனும் போது,
    சென்னை புக் ஃபேர் ஸ்பெஷல் -2,
    ஆன்லைன் புக் ஃபேர் ஸ்பெஷல் -2,
    கோவை புத்தக திருவிழாவில் -1.

    "பெட்ரோமேக்ஸ் லைட்டையே தேடிப் பிடிச்சு வாங்கியாந்த பிற்பாடு, அவை டப்பி உடைக்காமல் பரணில் துயில் பயிலும் ரிஸ்க் எடுப்பதா ? அல்லது – “மாற்றம் – முன்னேற்றம் – 5 இதழ்கள்” என்று தகிரியமாய் முயற்சித்துப் பார்ப்பதா?...

    🌹இந்த கதையை மட்டுமல்ல பல புத்தகங்களையும் உடனுக்குடன் வாசிக்கும் வாசக நண்பர்கள் இங்கு ஏராளம் உண்டு அல்லது அவரவர் சூழ்நிலைக்கேற்ப பொறுமையாக வாசிக்கும் வாசகர்களும் உண்டு,
    "எப்ப படிக்கறமோ அப்ப படிப்போம் இப்போதைக்கு வாங்கி வைத்துக்கொள்வோம்" என வாங்கி வைத்து, பல மாதம் கழித்து படிப்பவர்களும் உண்டு, ஆக மொத்தம் வாங்கி வைக்கும் புத்தகங்களை அவரவர் நேரத்திற்கு ஏற்ப படித்துக் கொள்வார்கள் சார்.
    அவர்களை கருத்தில் கொள்ளாமல், ஆர்வமாக படிக்க நினைக்கும் வாசகர்களை கருத்தில் கொண்டு புதிய கதைகளையும், குண்டு புத்தகங்களையும் நீங்கள் தாராளமாக வெளியிடலாம்.
    "படிப்பாங்களா? படிக்க மாட்டாங்களா ?" உன் தயங்கி, தள்ளிக்கொண்டு போனால் காத்திருப்பவர்களுக்கு ஏமாற்றமே.
    ஒவ்வொரு கதையையும் ஆர்வமாக படிக்க நினைக்கும்போதே அதை வெளியிட்டு விடுவதே நல்லது சார்.

    "ஆளில்லா தீவில் ஒரு மாசத்துக்கு...
    🌹- கண்டிப்பாக"லயன் சூப்பர் ஸ்பெஷல்"".

    தாங்கள் விரைவில் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  49. விஷம், ஒரே குண்டு புக்காக வருவதே சரியாக இருக்கும் சார்.
    மாதம் ஒரு பாகமாக வரும் போது ஏதாவது ஒரு பாகம் கொஞ்சம் சுமார் என்று வாசகர்கள் கருதினால், மீதமுள்ளவை வெளிவராமல் பரணிற்கு போகும் அபாயம் உண்டு.
    கதையும் தொங்கலில் நின்றுவிடும். எனவே ஏக் தம்மில் ஒரே குண்டு புத்தகமாக வெளியிடுவதே நல்லது.

    ReplyDelete
  50. ஐந்தும் ஒரே பாகமாய் வர வேண்டும். ஏனெனில் மாதம் மாதம் காத்திருப்பது கஷ்டம். மொத்தமா வந்த பிறகு மொத்தமா போடுவது தான் சாலச் சிறந்தது.

    ஒரு புத்தகம் எனில் அது மின்னும் மரணம் தான்.
    அதனுடன் ஒளித்து வைத்து கொண்டு சூப்பர் சர்க்கஸ் எடுத்துக் கொள்வேன்.

    ReplyDelete
  51. ஆமா,
    இதொன்னு மறந்து போச்சு,
    முதல் பாகத்த போட்டு, கதை நல்லா இருந்தாலுமே நம்மாளுங்க சிலர் மீதி பாகங்கள் வராம ஊத்திமூட வாய்ப்பிருக்கு.
    ஒரே செட்டாவே கொடுத்துருங்க விஜயன் சார்.

    ReplyDelete
  52. சார் விஷம் ஒரே குண்டு புக்காகவோ அல்லது தனித்தனியாக ஒரே ஸ்லிப் கேஸில் வைத்து கொடுத்து விடுங்கள் சார் ஏற்கனவே கண்ணீருக்கு நேரமில்லை பாதியில் நிற்கிறது சகோதரியின் சகாப்தம் பாதியில் நிற்கிறது தாத்தாக்கள் பாதியில் நிற்கிறது ரத்த படலம் பாதியில் நிற்கிறது தோர்கல் பாதியில் நிற்கிறது மேகி கரிசன் பாதையில் இருக்கிறது புதிய கதை வரும்போது பழைய கதை மறந்தே போய்விடுகிறது சார்

    ReplyDelete
  53. மின்னும் மரணம்

    ReplyDelete
  54. தனியாக சென்று படிக்க விரும்பும் கதைகள்:
    In the syllabus - இரத்தப்படலம் & மின்னும் மரணம்.
    Out of syllabus - ஒற்றை நொடி ஒன்பது தோட்டாக்கள் & கென்யா

    விஷம்
    தனி தனியாக 5 புத்தகங்களாக ஒரே slip case ஆக ஒரே மாதத்தில் கொடுத்து விடுங்கள். அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப, நேரத்துக்கு ஏற்ப படித்து கொள்ளட்டும். பிரித்து மாத, மாதம் போட வேண்டாமே

    ----- தலைப்புகள் ----
    தேடி வரும் சாபம்
    விரட்டும் விதி
    விரட்டும் விஷம்
    ஓடவும் முடியாது, ஒழியவும் முடியாது
    பழி வாங்க ஒரு பயணம்
    தேடி வரும் மரணம்
    துரத்தும் சாபம்
    ஒரு பயணம் ஒரு கொலை



    ReplyDelete
  55. டியர் விஜயன் சார்,தங்களின் உடல்நலம் பழையபடி தேறி வர எல்லாம்வல்ல இறையை இறைஞ்சுகிறேன்...

    யாருமில்லாத தீவில் நானும் தனிமையும்மட்டும் இருக்கும்போது அதில் எனக்கு துணையாக தேர்ந்தெடுப்பது யங் டெக்ஸ் ஸீரிஸையே..
    ஒருபுறம் சட்டத்தின்துணையோடு மலைமாடுகள் டெக்ஸை வேட்டையாடும்போதும் போகுமிடமெல்லாம் நல்லதையே விதைத்து செல்லும் யங்டெக்ஸ் எனக்கு மிகவும் பிடித்துள்ளது.
    யங் டெக்ஸை நீங்கள் ஆப்சனில் கொடுக்காததால் டெக்ஸின் டிராகன் நகரம் என்னுடைய சாய்ஸ்..
    வெடி வெடிக்கும்போது லட்சுமி வெடி தீர்ந்துவிட்டால் ஓலைப்பட்டாசை வைத்து சமாளிப்பதில்லையா.. அதனைபோல யங் டெக்ஸீக்கு பதில் நம்ம நார்மல் டெக்ஸை தேர்ந்தெடுத்துகொள்கிறேன்:-)

    ReplyDelete
    Replies
    1. யோவ் சுந்தரா நேர்ல மாட்டுவாய் தானே அப்ப இருக்கு உனக்கு... ட்ராகன் நகரம் ஓலைப்பட்டாசா உனக்கு👊😉

      Delete
  56. விஷத்தை ஒரே தடவயில் விழுங்கவே விருப்பம் :-)
    ஏற்கனவே பல புத்தகங்கள் பெரிய அளவில் வந்ததால் எங்களுக்கும் உங்களுக்கும் சிரமம் இராது. ஒரே மூச்சில் படிக்கவே விருப்பம்

    ஒரே

    ReplyDelete
  57. இனிய காலை வணக்கங்கள் 💐💐💐

    ReplyDelete
  58. 5 பாகங்களும் சேர்த்து மொத்தமே 234 பக்கங்கள் எனில், "சென்னை புக் ஃபேர் ஸ்பெஷல்" லில் தந்துடுங்க சார்.

    ReplyDelete
  59. மின்னும் மரணம்,

    விஷம் ஒரு
    முழுமையான
    இதழாக வேண்டும்,

    ReplyDelete
  60. சார் இந்த குண்டு புத்தகங்க....அதாவது கோடை மலர்கள்...தீபாவளி மலருங்க எல்லாத்தையும் ஒரே நாள்ல தற்போதய தாளின் தரத்துல...அப்போதைய பாக்கெட் சைசில் திறத்துல ஒன்னா ஒரே சமயம் வெளியிட வாய்ப்பிருக்கா...இந்த படத்ல காட்டுற மாதிரி ஒரே கொத்தாக...எவ்ளோ அழகாருக்கும்

    ReplyDelete
  61. தலைப்பை மொறுத்தவரையில் நான் எப்போதும் உண்மையான தலைப்பையே விரும்புவேன்.



    ReplyDelete
  62. 235 பக்கங்களெல்லாம் ஒரு குண்டா சார்..? இதையெல்லாம் குண்டு புக்கு லிஸ்ட்ல சேத்தி குண்டு புக்ஸை அவமானப்படுத்தாதிங்க சார்..!

    ஒரே புத்தகமா போடுங்.. இல்லேன்னா ஸ்லிப்கேஸ்ல 5 பாகங்களையும் தனித்தனியா போட்டு ஒண்ணாக் குடுங்க..!

    மாசம் ஒரு புக்குன்னு முடிவெடுத்திங்கன்னா...


    ஈரோடு விஜய் உண்ணாவிரதம் இருப்பாரு.!

    ReplyDelete
    Replies
    1. அதே அதே மாமா.... 235லாம் யானைபசி சோளப்பொறி..


      ஆனா அந்த கடைசி லைனு..செம... சாதகபறவை காற்றை உண்டே வாழுமாம்.. நம்ம ஈவி உண்ட பன்னுக்கு இன்னும் பல போராட்டங்களில் உண்ணாவிரதம் இருக்கலாம் அவரு😉🤣

      Delete
    2. அவரு உண்ணாவிரதம் இருக்க நீங்கள் பந்தலுக்கு பின்புறம் வழியாக பிரியாணி வாங்கி கொடுப்பீர்கள் 😀 what a plan 😂

      Delete
  63. தலீவரை தீக்குளிக்க சொல்லலாமா?

    ReplyDelete
    Replies
    1. தலைவரோட தொண்டர் ஆன நீங்கள் முதல தீ குளிங்க 😁

      Delete
  64. வணக்கம் நண்பர்களே!!

    ReplyDelete
    Replies
    1. ஒரு வாரம் என்றால் மின்னும் மரணம் தான். கூட இன்னொன்று எடுத்துச் செல்லலாம் என்றால் இரத்தப்படலம்.

      Delete
    2. விஷம்!
      நீங்கள் சொல்வது போல மாதமொரு ஆல்பம் படித்து ரசிக்க ஆசைதான். ஆனால் அதற்காக காத்திருப்பதுதான் ரொம்ப கஷ்டம்.

      இந்த தாத்தாஸ் இரண்டு மாதம் தள்ளி போனதே முடியலை...

      குண்டு புக்கோ, ஸ்லிப் கேசோ... ஒன்னாவே போட்டிரலாம் சார்

      Delete
  65. வெசம்...

    ஐந்து பாகங்கள் ஒன்றாய்....

    ஏக் தம்மில் படிக்க நன்றாக இருக்கும்...


    தலைப்பு:

    "விஷத்தின் வேஷம்"


    ஆளில்லாத் தீவில் படிக்க ஒரே காமிக்ஸ்...


    ஒற்றை நொடி ஒன்பது தோட்டா

    ReplyDelete
    Replies
    1. இன்னும் சில விஷ தலைப்புகள்


      விஷமே ஜெயம்
      விஷக் கன்னி
      சர்வ நிச்சய விஷம்
      சம்பூர்ண விஷம்
      உன் விஷம் என் கையில்
      ரெடி ஸ்டார்ட் மரணி
      விந்தையான விஷங்கள்
      விஷ வித்தை
      தரத்திற்கொரு விஷம்
      தத்தையின் வித்தை
      தவமாய் ஒரு விஷம்
      தகிக்கும் விஷம்
      உனக்கென்று ஒரு விஷம்
      தாராளமாயொரு விஷம்
      விஷ விஷயங்கள்
      விடிந்தால் முடிவு
      தேடுவது விஷம்
      முடிவாக ஒரு விஷம்
      கில் விஷம்
      பாய்சன் பாய்ண்ட்
      முடிவாக ஓரிரு மரணங்கள்
      தீர்வே விஷம்
      முத்தாய்பாய் ஒரு விஷயங்களை
      கைங்கரிய விஷம்
      விஷக் கயிறு
      எமனாயொரு மங்கை
      ஏனிந்த விஷங்கள்

      Delete
    2. கோட்டை சாமி எழுந்துக்கோ... ஆசிரியர் பெயர் வைக்க சொன்னது கதைக்க அல்ல... அந்த இதழுக்கு...

      இன்னும் பல நூறு கதைகளுக்கு பெயர் சூட்டும் கற்பனை வலிமையில் நிறைவாகவே உள்ளார் ஆசிரியர் சார்....

      Delete
  66. Lion Super Special any day sir - what a bumper bundle of unbridled joy it was to hold aloft !

    And if possible some cakes and barrels of hot chocolate with it ...

    ReplyDelete
  67. பன் சாப்பிட ரெட்ட ரெடி...

    அதுவும் கார்னெஷன் சரக்குன்னா கேக்கவே வேணாம்...

    Applied...

    ReplyDelete
    Replies
    1. வெறும் 12 பன் தானா...

      பத்தாது பத்தாது சாமீ...

      Delete
  68. "பன்" பாளர் யாருன்னு ஒரு வாய் பாத்து புடுவோம்...

    ReplyDelete
  69. பன் சாப்பிடுற போட்டியா..?

    இந்த சாக்கு ரேஸு... கையால தண்ணி அள்ளிக்கிட்டு ஓடி செவன் அப் பாட்டிலை ரொப்புறது.. இதெல்லாம் இல்லையா.?

    ReplyDelete
    Replies
    1. 🤣🤣🤣🤣🤣 செம கேள்வி மாமா..... 15வயசுல விளையாட வேண்டிய பன்னு திண்ணும் போட்டியில் 45வயசு கலந்து கொண்டு கலக்க போகும் இளைஞர்களை காண ஆவலுடன்...


      Delete
    2. லெமன் இன் த ஸ்பூன்.. மியூசிக்கல் சேர் இதிலெல்லாம் நான் சாம்பியன்பா..!


      ஜோக்ஸ் அபார்ட்..

      பன் திங்குறதெல்லாம் டேஞ்சர் சார்ஸ்.. யோசிங்க..!

      Delete
  70. சார், பதிவில் ஒரு சின்ன குழப்பம்...

    The Magic Moments Special - ஆயிரம் இதழ்களை கடந்த தருணத்துக்கான ஸ்பெஷல் இதழ்

    விஷம் - ஆயிரம் பதிவு ஸ்பெஷல் இதழ்
    அல்லவா? But பதிவில் மாற்றி குறிப்பிடப் பட்டு உள்ளது🙄

    ReplyDelete
    Replies
    1. மிக சரியான கேள்வி JSVP.

      ஆசிரியர் சார் தமது ஷோல்டர் வலிக்கு ட்ரீட்மெண்ட் எடுத்து வருவதாலும் சந்தா புத்தகங்களை தேர்வு செய்வதினாலும் நிறைய விசயங்கள் நினைவில வைத்திருக்க இயலவில்லை போல...

      Delete
    2. "MMS..Magic Moment Special "--என்பது ஆசிரியர் விஜயன் சார் தயாரிப்பில் ஆயிரமாவது இதழ் வெளியான தருணம்..

      அதன் அறிவிப்பு இந்த பதிவுல் உள்ளது...

      https://lion-muthucomics.blogspot.com/2024/03/blog-post_24.html?m=1

      Delete
    3. STV சார்🙏
      பதிவிடும் போது எதேச்சையாக மாற்றி type பண்ணி இருக்கலாம்😊

      Delete
    4. இது ஆசிரியர் சாரின் முறையான அறிவிப்பு...


      ////2.அடுத்த இரு பெசல் ஐட்டங்களுமே ஆயிரம்வாலாக்கள் !!

      முதலாவது : "ஆயிரம்" என்ற வெளியீட்டு நம்பரை, இந்த ஆந்தைவிழியன் பொறுப்பேற்ற பிற்பாடு நமது குழுமம் தாண்டியுள்ளதைக் கொண்டாடிட !! போன ஆண்டின் ஏதோவொரு தருணத்தில் இந்த நம்பரைத் தாண்டிப்புட்டு, தற்சமயாய் 1025+ போலானதொரு இலக்கில் பயணித்து வருவதாய் எனக்கு ஞாபகம் ! Anyways - அந்த ஆயிரத்தை தாண்டிய நொடிக்கான ஸ்பெஷலுக்கு - Jus' Like That ஸ்பெஷல் எனப் பெயரிடலாமென்று இந்த topic துவங்கிய 2018-ல் சொல்லியிருந்தேன் ! But அதற்கு நல்லதாய் வேறேதேனும் பெயரிடலாம் என்று தோணும் பட்சத்தில் - போட்டுத் தாக்கிடலாமே guys ? 'எடிட்டர் ஸ்பெஷல்' ; 'ஏட்டய்யா ஸ்பெஷல்' என்ற ரேஞ்சிலான பெயர்களை மட்டும் தவிர்த்து விட்டு - பொருத்தமான பெயர்களை நண்பர்கள் முன்மொழியலாம் ! And அவற்றுள் சிறந்ததை இந்த டாபிக்கை open பண்ணிய நம்ம டெக்ஸ் விஜயராகவனே தேர்வு செய்திடுவார் ! And ஞாயிறு மாலை - அதாவது நாளை மாலைக்குள்ளான பதிவுகள் மட்டுமே consider செய்து, ஒரு பெயரை செலெக்ட் செய்து விடலாம் ! ஓ.கே.வா all ? ///

      ///3.Next in line - நமது இந்தப் பதிவுப் பக்கம், தனது ஆயிரமாவது பதிவினை அடுத்த ஓரிரு மாதங்களில் தொட்டிடக் காத்துள்ளதன் நீட்சி ! So அந்த மைல்கல் தருணத்தினைக் கொண்டாடிடவும் ஏதேனுமொரு ஸ்பெஷல் வெளியீட்டினை பிராமிஸ் செய்திருந்தேன் ! So அதற்குமொரு பெயர் பரிந்துரை ப்ளீஸ் ? இந்த முறையோ - பொருத்தமான பெயரை தேர்வு செய்திடப் போவது, இந்தப் பதிவின் கோவைத் தூணான நம்ம கவிஞரும், நானும் தான் ! கோவை இரும்பார் 3 பெயர்களை shortlist செய்து எனக்குத் தந்திட வேணும் & அவற்றுள் ஒன்றினை நான் செலக்ட் செஞ்சூ ! Again ஓ.கே.வா all ? இக்கட முக்கிய கண்டிஷன் - நடுவர்(கள்) போட்டியில் கலந்துக்குப்படாது என்பதே !! ஓ.கே.வா ஸ்டீல் ?////

      இவைகள் உள்ளது இந்த பதிவில்...

      https://lion-muthucomics.blogspot.com/2024/03/blog-post_30.html?m=1

      Delete
    5. JSVP@ ஆசிரியர் ஆயிரமாவது இதழ் வெளியிட்டது வாழ்க்கையில் ஒரு முறை மட்டுமே வரும் தங்க தருணம்... எத்தனை எடிட்டர்களுக்கு கிடைக்ககூடிய வரம் அது??? நம்ம அன்பு ஆசிரியர் சாரின் ஆயிரமாவது இதழ்கள் தருணத்தை Magic Momentஆக கொண்டாட போவதை மறக்கலாமோ???

      Delete
    6. ///Monday, April 01, 2024
      The M.M.S !!
      நண்பர்களே,

      வணக்கம். பெயரிடும் படலத்தின் முதல் பகுதி நிறைவு பெற்றுவிட்டது - நம்ம STV நேற்றிரவே தனது டாப் 2 தேர்வுகளைக் குறிப்பிட்டு அனுப்பிய நொடியில் ! அந்த இரண்டில் ஒன்றினை கொஞ்ச நேரம் அசை போட்டான பின்னே - The MAGIC MOMENT Special என்ற பெயரினில் இருவருமே freeze ஆனோம் ! ஆகையால் அடியேனின் பொறுப்பிலான ஆயிரமாவது இதழினை கொண்டாடும் ஸ்பெஷலாக வாகானதொரு தருணத்தில் "MMS" வந்திடும் ! இதன் பெயர் உபயம் - JSVP @ Tex Tiger என்ற பெயரில் பின்னூட்டமிட்டு வரும் நண்பர் ! தன்னை அறிமுகம் செய்து கொள்ள அவர் மெனெக்கட்டாரெனில், இதழ் வெளிவரும் சமயம் அதற்கான credit தந்திடலாம் ! So மேடைக்கு வந்திடுங்களேன் நண்பரே ?

      காத்திருக்கும் வலைப்பதிவின் 1000-வது பதிவினை celebrate செய்திட வேண்டிய ஸ்பெஷலுக்கான பெயர் தேர்வினை இன்னமும் பூர்த்தி செய்திட இயலவில்லை ; in any case - அதற்கு இன்னமும் சில மாதங்கள் அவகாசம் இருப்பதால் - we'll take it as it comes/////


      இது நீங்க வெற்றி பெற்றதற்கான அறிவிப்பு வெளியான பதிவுங்க நண்பரே JSVP..

      சில விசயங்கள் தூக்கத்தில் கூட மறக்கப்படாது.. அதில் ஒன்று தான் இந்த MMS.
      😍😍😍😍😍
      ஒரு வாசகனாக, ஆசிரியராக அனைவரும் பெருமைபட்ட தருணம் அல்லவா??

      Delete
    7. கண்டிப்பாக ஆசிரியர் உட்பட நாம் அனைவரும் பெருமைப் படும் தங்க தருணம் தான் STV சார்...🥰😍👑

      Delete
    8. சூப்பர் சகோதரர்களே
      @JSVP
      @சேலம் Tex விஜயராகவன்

      Delete
  71. விஷம் ஒரே தொகுப்பாக வர விரும்புகிறேன்.
    தீவில் படிக்க மின்னும் மரணம்

    ReplyDelete
  72. மின்னும் மரணமே ஆளில்லாத தனி தீவில் துணை

    ReplyDelete
  73. விஷம் தனித்தனி இதழ்கள் வெளிவரட்டும்

    ReplyDelete
  74. சார் ஈரோட்டு புத்தக விழா ஸ்பெஷல் புத்தகங்கள் பற்றி இன்னும் அறிவிப்பு வரவில்லை. Please shine some light on this too.

    ReplyDelete
  75. விஷம் ஒரே புத்தகமாக வெளியிடவும்

    ReplyDelete
  76. ///// So “மணந்தால் மகாதேவியே” என்று பெட்ரோமேக்ஸ் லைட்டையே தேடிப் பிடிச்சு வாங்கியாந்த பிற்பாடு, அவை டப்பி உடைக்காமல் பரணில் துயில் பயிலும் ரிஸ்க் எடுப்பதா ? அல்லது – “மாற்றம் – முன்னேற்றம் – 5 இதழ்கள்” என்று தகிரியமாய் முயற்சித்துப் பார்ப்பதா?////

    விசம் "-ஒரே இதழாக வெளிவருதற்கே என் வாக்கு...

    இலகுரக வாசிப்பு வருடம் முழுதும் சரிதான்..

    ஆனா சாபம் சுமந்த தங்கம் மாதிரி கொஞ்சம் புஜ்டியான இதழ்களும் அவ்வப்போது இருந்தாதான் பயணம் சிறக்கும்...

    ReplyDelete
  77. ///அப்பாலிக்கா இந்த ஸ்பெஷல் இதழுக்கு நல்லதாயொரு பெயரை இம்முறையேனும் சூட்டி வைத்தால் – வண்டியை ஸ்டார்ட் எடுக்கச் செய்திட உதவுகிறதா? என்று பார்த்து விடலாம்! So ஒரு பொருத்தமான – ‘நச்‘ பெயர் ப்ளீஸ்?!///

    ஆசிரியர் சார் @
    இந்த பதிவு பக்கம் ஆயிரம் அதாவது ஆயிரம் பதிவு ஸ்பெசல் இதழுக்கு பெயர் வைக்க சொல்லி ஆல்ரெடி தாங்கள் அறிவித்து அவைகள் வெயிட்டிங்கிலும் உள்ளன..

    தங்களின் அறிவிப்பு.

    ///நமது இந்தப் பதிவுப் பக்கம், தனது ஆயிரமாவது பதிவினை அடுத்த ஓரிரு மாதங்களில் தொட்டிடக் காத்துள்ளதன் நீட்சி ! So அந்த மைல்கல் தருணத்தினைக் கொண்டாடிடவும் ஏதேனுமொரு ஸ்பெஷல் வெளியீட்டினை பிராமிஸ் செய்திருந்தேன் ! So அதற்குமொரு பெயர் பரிந்துரை ப்ளீஸ் ? இந்த முறையோ - பொருத்தமான பெயரை தேர்வு செய்திடப் போவது, இந்தப் பதிவின் கோவைத் தூணான நம்ம கவிஞரும், நானும் தான் ! கோவை இரும்பார் 3 பெயர்களை shortlist செய்து எனக்குத் தந்திட வேணும் & அவற்றுள் ஒன்றினை நான் செலக்ட் செஞ்சூ ! Again ஓ.கே.வா all ? இக்கட முக்கிய கண்டிஷன் - நடுவர்(கள்) போட்டியில் கலந்துக்குப்படாது என்பதே !! ஓ.கே.வா ஸ்டீல் ?////

    இந்த ஸ்பெசல் இதழுக்கு பெயரை நம்ம நண்பர் ஸடீல்களா தேர்ந்தெடுப்பார்னு அறவிச்சிட்டு அதை மறந்த்தே ஏனோ???
    நண்பர் க்ளா அதை தேர்ந்தெடுக்க காத்திருப்பார் அல்லவா??

    நம்ம நண்பர்கள் வைத்துள்ள பெயர்கள் இந்த பதிவில் காத்துள்ளன.. இரு ஆயிரம் இதழ்களுக்கும் பெயர்களை சூட்டினார்கள்.. அங்கே தனிதனியாக குறிப்பிட்டும் உள்ளார்கள்...

    நமது இந்தப் பதிவுப் பக்கம், தனது ஆயிரமாவது பதிவினை அடுத்த ஓரிரு மாதங்களில் தொட்டிடக் காத்துள்ளதன் நீட்சி ! So அந்த மைல்கல் தருணத்தினைக் கொண்டாடிடவும் ஏதேனுமொரு ஸ்பெஷல் வெளியீட்டினை பிராமிஸ் செய்திருந்தேன் ! So அதற்குமொரு பெயர் பரிந்துரை ப்ளீஸ் ? இந்த முறையோ - பொருத்தமான பெயரை தேர்வு செய்திடப் போவது, இந்தப் பதிவின் கோவைத் தூணான நம்ம கவிஞரும், நானும் தான் ! கோவை இரும்பார் 3 பெயர்களை shortlist செய்து எனக்குத் தந்திட வேணும் & அவற்றுள் ஒன்றினை நான் செலக்ட் செஞ்சூ ! Again ஓ.கே.வா all ? இக்கட முக்கிய கண்டிஷன் - நடுவர்(கள்) போட்டியில் கலந்துக்குப்படாது என்பதே !! ஓ.கே.வா ஸ்டீல் ?////

    இவைகள் உள்ளது இந்த பதிவில்...

    https://lion-muthucomics.blogspot.com/2024/03/blog-post_30.html?m=1

    ReplyDelete
    Replies
    1. க்ளாவை பெயர் தேர்ந்தெடுக்க சொல்லிட்டு இப்ப மீண்டும் பெயர் வைங்கப்பா என்பது அத்தனை சரியாக இல்லையே!!!!

      Delete
    2. இதில் நகைப்புக்குரிய விசயம் என்னானா நண்பர்கள் பெயர் சூட்டியுள்ளது..🤣😉

      ஆயிரம் இதழ் என்பதை குறிக்கும் பெயரை வைக்க சொல்லி கேட்டுள்ளார்.மக்கள் "விசம்" ங்கிற கதைக்கு பெயர் வைத்துக் கொண்டு உள்ளார்கள்.

      காலையில் பதிவையும், கமெண்ட்களையும் படிச்சிட்டு நான் தெளிவாகத்தான் உள்ளேனானு எனக்கே யோசனை வந்திட்டது...

      Delete
    3. 😃😃😃

      Hanh over ஆ ஜி..😃😃😄

      Delete
    4. You are correct Vijayaragavan 😊 Steel @ over to you

      Delete
    5. க்ளா தேர்வு செய்த தலைப்பையும் கண்ணிலே அப்டியே காட்டிடுங்களேன்?

      Delete
    6. அவரு அத செய்யவில்லை சார் 😊

      Delete
    7. ஆசிரியர் சார் @ கவிதை இன்னும் நூறு எழுத வேண்டுமா எழுதி தள்ளுவாரு.....

      Delete
    8. சொன்னதை விட்டு சுரைக்காயை புடுங்காத பொன்ராச 😃

      Delete
  78. தனித்தீவில் என்னுடைய சாய்ஸ்..

    இரத்தப்படலம் சார்..

    ReplyDelete
  79. விசம்...

    என்னுடைய சாய்ஸ்..ஒரே தொகுப்பாக வரவேண்டும் என்பது தான் சார்...

    ஏற்கனவே சிலர் மொத்தமாக வந்தால் படிக்க முடிவதில்லை என இளம் டெக்ஸையே பிரித்து போடுவதையே தாங்க முடியவில்லை...சிறப்பு இதழையும் பிரித்து போட வேண்டாம் சார்..

    நேரமில்லை என்பவர்களை நினைத்து பாரக்கும் தாங் கள் உடனடியாக வாசிப்பவர்களையும் கவனத்தில் கொள்ளுங்கள் சார்..


    எனவே என்னுடைய சாய்ஸ்..தொகுப்பு ..ஒரே தொகுப்பு..

    ReplyDelete
  80. ஆளில்லா தீவுக்கு சந்தேகம் இல்லாமல் இரத்த படலம் ஒன்றே சரியான சாய்ஸ் சார்..

    ReplyDelete
  81. For the special book - the first choice would be a box set of five books sir - so that folks can read at-once if they want OR read in a few weeks if that is their choice. Please make it a thick-walled box sir !

    If that is not feasible then one-shot FIVE volumes sir.

    As for those who do not read - they don't bother if it is one book or five sir - they keep aloft either one parcel or 5 seperate ones :-)

    ReplyDelete
  82. விஷம் - 5 பாக ஒரே தொகுப்பு...ஒரு cult comics (eg. உயிரை தேடி )இதழாக இருக்கும் சார்.... பிரித்து போடும்போது...சாதாரணமாக வாசகர்கள் கடந்து போய்விட வாய்ப்புள்ளது

    ReplyDelete
  83. ஒரு வாரம் ஆளில்லா தீவு - இரத்தப்படலம்தான் ஒரு வாரம் தாங்கும் Sir

    ReplyDelete
  84. /////அல்லது - இவை எவையுமே அல்லாத வேறொன்றாய் எது/////

    போட்டோ கேள்விக்கு...

    9ம் இருக்கும்... 9யும் அள்ளிட்டு போயிடுவோம்..எதற்கு மற்றதை விடுவானேன்.. எல்லாமே பிடிச்ச ஹீரோஸ் தானே..

    ReplyDelete
    Replies
    1. குண்டு புக்க குருப்ல சேல் போட்டுட்டு ஆளில்லா தீவுக்கு வேண்டியது வாங்கிகிட்டு போயிடலாம்

      Delete
    2. ஆமாங்க சரவணன்...😉
      புக்கோடு போற இடமா அது???💞💕💞💕🍾🍷🍹🍺🍻

      Delete
  85. ஒரே விசமாக கொடுங்க Sir, 5 times விசம் எனக்கு செட் ஆகாது 😄

    ReplyDelete
  86. Sir உண்மையில் book நல்ல இருந்தாலும் book கா இருந்த குன்டு / ஒல்லி பிரச்சினையில்ல. நாங்க மின்னும் மரனம், இரத்த படலம், பாரகுடா , கென்யா போன்ற கதைகள் குண்ட இருந்தாலும் ஈசியா படிக்க முடியுது. ஒல்லியா இருந்தாலும் இப்போ எல்லாம் சில டெக்ஸ் கதைகளே படிக்க முடியல. அதே மாதிரி எல்லா கதைகளையும் வசிக்கிற எண்களையும் கணக்கில் எடுக்க வேண்டும். விஷம் ஒரே book அல்லது. பாக்ஸ் செட் சரியான ஆப்ஷன். தீவுக்கு மின்னும் மரணம் தான் best.

    ReplyDelete
  87. 1. மின்னும் மரணம் தான் என் சாய்ஸ்

    2. விஷம் முழுமையாக வேண்டும். ஒரே இதழாக ஹார்ட் பவுண்ட். அல்லது
    (ஒரே சமயத்தில் 5 தனித்தனி இதழாக ஸ்லிப் கேஸில் வந்தாலும் ok தான்)

    3. அதிரடி ஆயிரம்

    ReplyDelete
  88. ஆயிரமாவது இதழுக்கு பெயர் வைக்க சொன்னால் விஷம் கதைக்கு பெயர் வைக்கிறது என்னப்பா நியாயம் 😄 அப்புறம் 1000 இதழுக்கு ஏற்கனவே பெயர் வைக்கும் படலம் ஒரு பதிவில் நடந்து விட்டது என்பதை ஆசிரியர் மறந்து விட்டார் என்பது கொசுறு செய்தி, நண்பர் விஜயராகவன் இதனை "தெளிவாக" எழுதி உள்ளார். அப்புறம் மற்றும் ஒரு கொசுறு செய்தி 1000 பதிவுகளுக்கும் பெயர் வைக்கும் படலம் போட்டியும் நடத்தப்பட்டது ஆனால் இவை இரண்டுக்கும் இன்னும் முடிவு அறிவிக்க படவில்லை :-). ஏம்பா விஜயராகவன் நான் தெளிவாக எழுதி இருக்கேனா 🤩

    ReplyDelete
  89. விஷம் சாப்பிட இப்படி ஒரு போட்டியா 😍 எல்லாம் காமிக்ஸ் செய்யும் மாயாஜாலம் 😎😍

    ReplyDelete
  90. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  91. // ‘ஏக் தம்மில்‘ வெளியிடுவதாயின் விலையில் மாற்றங்கள் இராது தான் – ஆனால் 5 அத்தியாயப் பெருங்கதைகளை வாசிக்கும் பொறுமைகள் இன்று நம்மில் எம்புட்டுப் பேரிடம் உள்ளதென்பதே கேள்விக்குறி! //
    ஒரே குண்டு புக்காய் ஹார்ட் பைண்டிங்கில் வருவதே நல்லது சார்,ஏனெனில் வாசிப்பில் குண்டு புக் தரும் உணர்வுகள் அலாதியானது,அப்புறம் ஒரு புக்கை எப்போ படிக்கிறோம் என்பதை விட எப்படி படிக்கிறோம் என்பது முக்கியம்னு நான் நினைக்கிறேன் சார்...
    அதனால உடனே படிப்போமோ இல்லை தாமதமா படிப்போமோ,ஆனால் படிப்போம்...

    ReplyDelete
  92. // ஐந்தே – நிமிட அவகாசத்தில் ஆகக் கூடுதலான ரவுண்டு பன்களை அமுக்கக் கூடிய ஜாம்பவான் யாரென்று கண்டுபிடிக்க முனையலாமே? //
    பன் போட்டியா ?!
    தொண்டைக்கு கொஞ்சம் ரிஸ்க் ஆச்சே சார்...

    ReplyDelete
    Replies
    1. வவுதுக்குமே சார்... But நம்ம வீரர்கள் அதுக்குலாம் அஞ்சுவார்களா - என்ன?

      Delete
    2. இப்படி எஙகள நல்லாத்தான் ஏத்தி விடரீஙக சார் :-) more risk here.

      Delete
  93. // அல்லது - இவை எவையுமே அல்லாத வேறொன்றாய் எது? //
    மின்னும் மரணம்...

    ReplyDelete
  94. விஜயன் சார் விஷத்தை ஒரே இதழாக வெளியிடுவது தான் சாலச் சிறந்தது. சந்தாதாரர்களுக்கு பிரச்சனை இல்லை. ஆனால் கடைகளில் வாங்கும் நபர்கள் ஒரு புத்தகத்தை மட்டும் மிஸ் செய்து விட்டால் திரும்ப வாங்க முடியாது சூழ்நிலை ஏற்படும். அதுமட்டுமல்ல 5 பாகத்தில் ஒரு பாகம் மட்டும் கிட்டங்கியில் தேங்கி விட்டால் அதை விற்பது இயலாத காரியமாக ஆகிவிடும். ஒன்று ஒரே புத்தகமாக வெளியிடுங்கள் அல்லது தனி தனி புத்தகங்களாக எடுத்து ஸ்லீப் கேஸ் போட்டு வெளியிடுங்கள்.

    ReplyDelete
  95. தனித்தீவுக்கு செல்வதாக இருந்தால் நான் மின்னும் மரணத்தை தான் எடுத்துச் செல்வேன். இப்பொழுது கூட மூன்று மாதத்துக்கு ஒரு முறை மறுவாசிப்பு செய்து கொண்டிருக்கிறேன்

    ReplyDelete
  96. விஜயன் சார் இன்னொரு விஷயத்தையும் சொல்ல மறந்து விட்டேன். கடையில் வாங்குபவர்கள் இந்த தொடர் பிடிக்கவில்லை என்கிற எண்ணத்தில் குறிப்பிட்ட சில பாகங்களை ஸ்கிப் செய்தால் தொடரே நின்று போகக்கூடிய சூழ்நிலை ஏற்படுமே. இதையெல்லாம் மனதில் கொண்டு நீங்கள் முடிவெடுக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்

    ReplyDelete
  97. //அப்பாலிக்கா இந்த ஸ்பெஷல் இதழுக்கு நல்லதாயொரு பெயரை இம்முறையேனும் சூட்டி வைத்தால் – வண்டியை ஸ்டார்ட் எடுக்கச் செய்திட உதவுகிறதா? என்று பார்த்து விடலாம்! So ஒரு பொருத்தமான – ‘நச்‘ பெயர் ப்ளீஸ்?!///

    நண்பர்கள் பெயர் வைத்த பதிவை அலசிய போது கண்ணில்பட்ட பெயர் இதுங் சார்...

    ""The Thunderous Thousand Special -""

    தங்களின் பதிவுகள் ஒவ்வொன்றும் எங்களுக்கு வாரா வாரம் ஒரு Thunderousதான்....

    ஆயிரம் பதிவுகளையும் குறிப்பிடும் இந்த பெயர் வெகு பொருத்தமாக தோணுதுங் சார்... இதையே நானும் முன்மொழிகிறேன்....

    ReplyDelete
    Replies
    1. The Blog Buster SpeciaL
      The Blog and Bloggers Special
      The Blog and Bloggers Milestone Special
      The Thousand Tomes special

      இதல்லாம் கூட நல்லா இருக்கு என்று ஊருக்குள் பேசிக் கொண்டார்கள் சார் ☺️
      பார்த்து செய்யுங்கள் சார் 😊

      அப்புறம் இந்த தலைப்புக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை சார் 😀

      Delete
    2. ஆசிரியர் சார் @

      ஒவ்வொரு பதிவும் எங்களின் மனங்களை மலரச் செய்த மத்தாப்புகளே.... ஆயிரம் மத்தாப்புகளாக ஒளிரும் ...


      ""Twinkling Thousands Special (TTS)
      "

      என்னுடைய 2வது சாய்ஸ்....

      இதுவும் அங்கே நண்பர்கள் சொல்லி இருந்த பெயர்களே...

      Delete
  98. விழம் முழுமையாக ஒரே இதழாக வேண்டும் சார்

    ReplyDelete
  99. விஷம் - எப்படி வந்தாலும் வாங்கி படிப்பேன்.

    எனது தேர்வு மேக்ஸி மின்னும் மரணம். (சீக்கிரம் வெளியிடுங்கள் ஐயா)

    ReplyDelete
  100. This comment has been removed by the author.

    ReplyDelete
  101. விஷம் முழுமையாக வேண்டும். ஒரே இதழாக ஹார்ட் பவுண்ட். அல்லது
    ஒரே சமயத்தில் 5 தனித்தனி இதழாக ஸ்லிப் கேஸில் வந்தாலும் சரி தான் சார்.

    ReplyDelete