Powered By Blogger

Saturday, September 28, 2024

அழைக்குது அக்டோபர்!

 நண்பர்களே,

வணக்கம். ஒரு தெறி பிஸி அக்டோபர் கூப்பிடு தொலைவில் காத்திருக்க இப்போவே பேஸ்மெண்டெல்லாம் டான்ஸ் ஆடத் தொடங்கியாச்சு! இன்னான்றீங்களா?

- 440 பக்கங்களுக்கு டெக்ஸ் தீபாவளி மலர் ‘24!

- 104 கலர் பக்கங்களில் வேட்டையன் ஜாரோப்புடன் முத்து காமிக்ஸ் தீபாவளி ஸ்பெஷல் ‘24!

- 192 பக்கங்களில் மிஸ்டர் நோவுடன் நம்ம V காமிக்ஸின் தீபாவளி மலர்!

ஆக 736 பக்கங்களின் பணியானது “ரா...ரா... சரசுக்கு ரா... ரா...” என்று மிரட்டலாய் பாட்டுப் பாடிக் கொண்டிருக்கிறது! And இதிலொரு அழகான பின்புல ஒற்றுமையும் இல்லாதில்லை! 

நமது தற்போதைய மொழிபெயர்ப்பு டீமில் ஒன்றுக்கு, மூன்றாய் செம fresh யுவதிகள் இடம்பிடித்திருக்கின்றனர்! ஓசையின்றி எக்கச்சக்கமான பின்புலப் பயிற்சிகளுக்குப் பின்பாய் இந்த மூவரணி நமக்காக இப்போது பேனா பிடித்து வருகின்றனர்! Of course “பூ“ என்று அவர்கள் எழுதியிருப்பதை “புய்ப்பம்” என்று திருத்தி எழுதும் எனது திருகுதாளங்களும் உண்டு தான் ; இன்னமும் கணிசமான திருத்தங்களின்றி அவர்களது ஸ்கிரிப்ட்களைக் களமிறக்கச் சாத்தியமில்லை தான்! ஆனால் துள்ளிக் குதித்து வரும் நம்ம “இயமை” நிரந்தரமானதல்ல எனும் போது, ஒரு backup டீமை தயார் பண்ணிடும் அவசியம் ஜிங்கு ஜிங்கென்று முன்னே நின்று டான்ஸ் ஆடி வருகிறது! And மேலே நான் குறிப்பட்டுள்ள 3 தீபாவளி மலர்களும், ஒவ்வொரு அம்மணியின் கைவண்ணமென்பதால் அவற்றுள் புகுந்திட செம ஆர்வமாய் வெயிட்டிங்! 

அதுவும் அந்த டெக்ஸ் 4 பாக மெகா சாகஸமானது இப்போது நமக்கு நிரம்பவே பரிச்சயமாகிப் போயிருக்கும் எஸ்கிமோக்களின் இன்யூட் பூமியில் அரங்கேறிடும் த்ரில்லர்! இந்த 4 பாகங்களுக்கும் 4 தெறி அட்டைப்படங்கள் ஒரிஜினலில் போனெலி போட்டுத் தாக்கியிருக்க, அவற்றில் எதையுமே ஓரம்கட்ட மனசு கேட்கவில்லை! So நான் முன்னே குறிப்பிட்ட economy slipcase இந்த நவம்பரில் டெக்ஸுடன் களம் காண்கிறது! 224 பக்கங்கள் வீதம் 2 ஆல்பங்கள் & அவற்றை இந்த slip case-க்குள் வைத்து compact ஆக வழங்கவிருப்பதால் - ஆல்பங்களின் முன்னட்டைகளில் தலா 2 டிசைன்கள் + ஸ்லிப் கேஸின் front & back-ல் 2 டிசைன்கள் - என 4 போனெலி ராப்பர்களையும் உங்கள் கண்முன்னே படைத்த திருப்தி கிட்டிடும் என்பதே திட்டமிடல்!

மற்ற கதைகளுக்குக் கூட மகளிரணி பேனா பிடித்து விடலாம் தான்; ஆனால் ‘தல‘ சாகஸங்களுக்கு அது அத்தனை சுலபச் சமாச்சாரமே நஹி! So டெக்ஸுக்கெனவே பிரத்தியேகமாய் ஒருத்தரை earmark செய்து - கிட்டத்தட்ட 40 டெக்ஸ் கதைகளை வாசிக்கும் அவசியத்தை அவருக்கு ஏற்படுத்தினேன்! “இவரு அவருக்கு தோஸ்த் ; அவரு இவருக்கு மச்சான் முறை... அந்தாளுக்கு, இந்தாளு சித்தப்பு!... So அவுக இப்படிப் பேசிக்கணும்; இவுக அப்படிக் கதைச்சிக்கணும்” என்று கிட்டத்தட்ட முக்கால் வருஷத்துக்குப் பாடமெடுத்து பாடாய்ப்படுத்தி எடுக்க - சகலத்துக்கும் எவ்வித எரிச்சலின்றி தலையாட்டினார். அதே சமயம் அவரவரது ஒரிஜினல் எழுத்து பாணிகளுக்கு தடா போட்டுப்புட்டால், அம்புட்டுப் பேரும் எனது clone-களாக மாறி - “புளகாங்கிதம் அடைந்தார்; “புழுக்கடிக்கு சொறிஞ்சார் என்று ஒரேமாதிரி எழுத ஆரம்பித்து விடுவரோ என்ற பயமும் இருந்தது! So அந்தந்தக் கதைகள் / நாயகர்கள் / தொடர்களுக்கென, நாம் இது நாள் வரை set செய்து வைத்திருக்கும் template-களை மதித்திடும் அவசியங்களை மட்டும் வலியுறுத்தினேன்! And here we are!! 

இந்தப் பயிற்சிப் பட்டறைகளின் பலனே போன மாதத்து டிடெக்டிவ் ரூபின் சாகஸத்தின் மொழிபெயர்ப்பு! ஒரு லேடி ஈரோயினிக்கு ஈ குஞ்சாகோபன் அவ்வை ஷண்முகயியாய் மாறி, பேனா பிடிப்பதைக் காட்டிலும் ஒரு ஒரிஜினல் ஸ்தீரியே பேனா பிடித்தால், வல்லியதொரு ஸ்க்ரிப்ட் சாத்தியமாகிடும் என்ற எண்ட சொப்பனம் மெய்யாகிப் போயீ! So வரும் நாட்களில் lady power புதுப்புது வாசிப்பு அனுபவங்களை - எனது திருத்தங்களுக்கு அவசியங்களின்றிப் படைக்கச் செய்தால் , ஞான் சிறப்பாய் ரண்டு நாட்களுக்கொரு ரீல்ஸ் போட்டுக்கினே குஜாலாய் பொழுதுகளை நகர்த்தும்! எண்ட குருவாயூரப்பா... ஆ நாள் சீக்கிரமே புலரட்டும்!

டெக்ஸின் அடுத்த மாத சாகஸம் காத்திருப்பது எஸ்கிமோ பூமியில் என்றால் - இதோ அக்டோபரிலேயே நம்மை அந்தப் பனிபடர்ந்த பூமிக்கு இட்டுச் செல்ல கமாண்டர் ப்ரூனோ ப்ரேஸில் தனது 2.0 அவதாரில் காத்திருக்கிறார்! முதல் சுற்றிலான ப்ரூனோ ப்ரேஸில் கதைகள் உருவாக்கப்பட்டது ஜாம்பவான் ஜோடியான Greg & Vance-ன் கைவண்ணங்களில் தான்! And நிஜத்தைச் சொல்வதானால் - இந்தத் தொடர் அந்நாட்களில் பதிப்புலகையும், வெள்ளித்திரைகளையும் ஆண்டு கொண்டிருந்த ஜேம்ஸ் பாண்ட் 007-ன் ஒரு பாலிஷான வார்ப்பே! ஸ்டைலிஷான ஒரு நாயகர்; சும்மா பந்தாவான கோட்-சூட் என்று முதல் ஆல்பத்தில் வலம் வந்த ப்ரூனோ, தொடர்ந்த ஆல்பங்களில், முதலைப்பட்டாளத்தின் இதர அங்கத்தினர்களையும் இணைத்துக் கொண்டார்! இந்தக் கதைகள் ஒரிஜினலாய் உருவான 1967-ல் - அமெரிக்கா தான் உலகத்தின் மேய்ப்பராக அம்புட்டுப் பொழுதுபோக்கு ஊடகங்களிலும் சித்தரிக்கப்பட்டு வந்தனர். ரஷ்யர்கள், மற்றும் கம்யூனிஸ்ட் தேசங்கள் சகலமும், லோகத்தை நாசம் பண்ணப் பிறந்தோர் என்பதாகவும், அமெரிக்க இரகசிய ஏஜெண்ட்கள் தான் பூமியையே உருப்படியாய் சுழலச் செய்து கொண்டிருந்தனர் என்பதாகவும் படங்கள், நாவல்கள், காமிக்ஸ்கள் ரவுண்டு கட்டி அடித்து வந்தன! அந்தக் காலகட்டத்தின் உலக அரசியல் அரங்கிலும் Cold War ஒரு அதிமுக்கிய அம்சமாக இருந்து வந்ததால் - மேற்கத்திய வாசகர்கள் இந்த மாதிரியான படைப்புகளை செம ஆர்வமாய் ரசித்து வந்தனர். So அந்த நாட்களின் வெற்றிக்கான formula-வினை கதாசிரியர் Greg-ம் கையிலெடுத்திருந்தார் - ப்ரூனோ ப்ரேசில் தொடரின் வாயிலாக! 1969-ல் முதல் ஆல்பம்; 1971-ல் இரண்டாவது; அதன் பின்பாக 1977 வரைக்கும், ஆண்டுக்கொரு ஆல்பம் என வெளிவந்து கொண்டிருந்த தொடரானது ‘பச்சக்‘ என அத்தோடு படுத்து விட்டது! அதன் பின்பாய் 1995ல் ஒரேயொரு ஆல்பம் & அதன் பின்னர் பரணே ஜாகையாகியிருந்தது - முதலைப்பட்டாளத்துக்கு!

ஆனால் க்ளாஸிக் நாயகர்களுக்கு ஒரு புது லுக் தந்திடும் முனைப்பு வேகமெடுத்த போது முதலைப்பட்டாளம் 2.0 சாத்தியமானது! 2019-ல் இந்த முயற்சி ஒரு டபுள் ஆல்பத்தோடு துவங்கிட ; அதற்குப் பின்பாக ஒரு ஒன்-ஷாட் 2022-ல் வெளிவந்தது! இதோ அக்டோபரில் நீங்கள் வாசிக்கவிருப்பது அந்த ஒன்-ஷாட் தான்! 


பனிக்கடலில் முதலைகள் ஒரு புத்தம்புது கிரேட்டிவ் டீமின் கதை / சித்திரம் / கலரிங்கில் அனல்பறக்கச் செய்திடுகிறது - வடதுருவத்துப் பனிப்பூமியில்! இங்கே நாயகர்கள் / நாயகியர் அனைவருக்குமே வயது முதிர்ந்து இருப்பதாய், தயக்கமின்றிக் காட்டிடத் திட்டமிட்டுள்ள கதாசிரியர்  பாராட்டுக்கு உரியவர். அது மட்டுமன்றி ப்ரூனோவுக்கு ஒரு சராசரி மனிதனைப் போலான மெல்லிய உணர்வுகள்; சுக-துக்கங்கள் இருப்பதையும் அழகாய் கதையின் இறுதியில் உட்புகுத்தியுள்ளார்! சித்திரங்களோ முற்றிலும் வேறொரு லெவல்! பனிபூமியும் சரி, அந்த வனாந்திரங்களின் எழிலும் சரி, பனிக்கரடிகளின் மிரட்டலும் சரி - ஓவியர் + கலரிங் ஆர்டிஸ்டின் கைவண்ணங்களில் அதகளம் செய்கின்றன! So ரூ.135 விலைக்கு ஒரு ஆர்டிக் துருவப் பயணச்சீட்டு ரெடி ! இதோ - ஒரிஜினல் ராப்பர் + உட்பக்க previews!! அக்டோபரின் தவறவிடக்கூடாத இதழ்களுள் இதற்கு நிச்சயம் இடமுண்டு என்பேன்!

And மாதத்தின் இறுதி இதழாக இடம்பிடித்திட வேண்டிய ஸ்டெர்னின் “மாயா... எல்லாம் மாயா...” அந்த “மிஸ் பண்ணலாகாது” லிஸ்டில் இடம்பிடிக்கப் போகும் இன்னொரு இதழும் கூட ! இதோ - ஒரு மென்சோகம் நூலிழையாய் இழையோடும் நாயகர் ஸ்டெர்னை ஒரு அட்டகாசமான அட்டைப்படத்தில் ரசித்திடுவோமா? ஒரிஜினல் அட்டையே - நமது மெருகூட்டலுடன்!

கதையைப் பொறுத்தவரை இது நிகழ்வது நியூ ஆர்லியன்ஸ் நகரினில்! அது ஊடூ சூன்யங்களுக்கு பெயர் போன நகரம் எனும் போது, இந்த ஆல்பத்திலும் அதன் தாக்கத்தினைக் கண்டிட இயலும்! தனிமையில் உழன்று வரும் நம்மாளுக்கு ரம்யமாய் ஒரு தோழி இங்கு கிட்டிட, சுறுசுறுப்பாய் மனுஷன் சுற்றி வருகிறார்! நிஜத்தைச் சொல்வதானால் - இந்த வாரத்தின் நடுவாக்கில், அம்மாவின் முதலாண்டு நினைவு நாள் வந்திட்டதால் ரெண்டு நாட்களுக்கு அதனில் பிசியாகிப் போனேன்! And வார இறுதியினில் வெளியூர் பயணம் என்பதாலும் ஸ்டெர்னின் பணிகளை இன்னமும் முடித்தபாடில்லை! கையோடு பக்கங்களையும் கொண்டு வந்திருப்பதால் குட்டிக்கரணம் அடித்தேனும், மொழிபெயர்ப்பினை பூர்த்தி செய்திட வேண்டும். நான் முடித்துத் தந்தால் மீதப் பணிகள் முற்றிலுமாய் மூன்றே நாட்களில் நிறைவு கண்டிடும்! ஜெய் பாகுபலி 💪!

Before I wind up, சிம்பிளான கேள்விகள் :

1.அக்டோபர் இதழ்கள் கைக்கு வந்த பின்னே உங்களின் வாசிப்பு வரிசை எவ்விதம் இருந்திடுமோ?

2.ப்ருனோ பிரேஸில்!! இவரை மெய்யாலுமே நினைவுள்ளதா உங்களுக்கு?

3.ஸ்டெர்ன் : இவரது கி. நா. வினை வாங்குவீர்களா? வாசிப்பீர்களா?

திருச்சியில் புத்தகவிழா அட்டகாசமாய்  ஓடிக்கொண்டுள்ளது and நமது ஸ்டால் நம்பர் : 60. அந்தப் பகுதி நண்பர்கள் ஒரு விசிட் அடிக்க இயன்றால் சூப்பர் 🔥🔥!!

Bye all... See you around! Have a lovely weekend!

Saturday, September 21, 2024

ஒரு breezy பதிவு !

நண்பர்களே,

வணக்கம். விஞ்ஞானத்துக்கே tough தரும் சிலபல வல்லிய கண்டுபிடிப்புகளை அவ்வப்போது தோண்டிப் பிடிக்கும் பாக்கியம் நமக்குக் கிட்டிடுவதெல்லாம் காலத்தின் கட்டாயம் போலும்! நல்லா ஒரு குதிரைக்கு கால்களில் அடிக்கும் ஒரு லாடத்தின் ஷேப்பில் - மண்டே மேலே இருக்கும் கேசம் காணாமல் போக ஆரம்பிப்பதை Male pattern baldness அல்லது Alopecia என்று சொல்வார்கள்! முப்பதுகளிலேயே நம்மள் சிரத்தில் ப்ளாட் போடும் காலியிடங்கள் அப்படித் தோன்ற ஆரம்பிக்க - அதற்கான விஞ்ஞானபூர்வமான ஆதாரங்களைத் தேடிப் பிடிச்சுப் படிக்க முயன்றேன்! 'இந்த ஹார்மோன் சாஸ்தியாவதால் இது ஆகுது; அந்த genetics காரணமாய் பொட்டலாகுது !' என்றெல்லாம் போட்டிருந்தது! ஆனால் விஞ்ஞானத்துக்கே கிஞ்சித்தும் தெரிந்திருக்கா ஒரு அசாத்திய காரணத்தைப் போன வாரத்தில் கண்டுபிடிப்பதில் அடியேனுக்கு ஜெயம்! 

அது வேறொன்றுமில்லீங்க - மண்டையிலே ஆண்டவன் தந்த உரோமங்கள் கொத்துக் கொத்தாய் காணாது போவதன் ஒரு அதிமுக்கிய காரணம் - நம்ம ரிப்போர்ட்டர் ஜானியின் கதைகளை தமிழில் மொழிபெயர்க்கவும் ; கதாசிரியரின் நுணுக்கமான திட்டமிடலை யூகிக்க நாம் செய்திடும் மெனக்கெடல்களுமே என்பது புரிந்தது! கதாசிரியர் எனும் அசாத்தியர் கதைகளில் layer-layer-களாக மர்மங்களைப் புதைத்து வைத்து விட்டு, ஒட்டுமொத்தமாய் இறுதி 2 பக்கங்களில் முடிச்சவிழ்க்கும் மாயாஜாலங்களெல்லாம் maybe ஒரிஜினலாய் ப்ரெஞ்சில் வாசிக்கும் வாசகர்களுக்கு பெரும் பிரயத்தனமின்றிப் புரிந்து விடுமோ - என்னவோ?! ஆனால் french to english & english to tamil என மூன்றாவதாக ஒரு மொழிக்கு மாற்றம் செய்ய ‘தம்‘ கட்டும் நமக்கெல்லாம், கபாலத்தின் இருதரப்புக் கேசங்களையும் பிய்த்துக் கொள்ளவே சாத்தியமாகிறது!

“நள்ளிரவின் நாயகன்”! ரிப்போர்ட்டர் ஜானியின் தொடரின் கதை நம்பர் 77 இது! In fact ஜானியின் க்ளாஸிக் தொடரின் கடைசிக்கு முந்தைய ஆல்பமிது! நம்பர் 78 க்ளாஸிக் தொடரின் இறுதி ஆல்பமாகிட, அதற்குப் பின்பாக ஜானி 2.0 தான் களத்திலுள்ளார்!

1986 முதலாய் “இரத்தக் காட்டேரி மர்மம்” வாயிலாக நமக்கு அறிமுகமான இந்தப் புன்னகை இளவரசர் அன்றிலிருந்தே மொழிபெயர்ப்பாளரின் டெரராகவே இருந்து வந்திருக்கிறார்! அந்த முதல் ஆல்பத்தை எடிட் செய்யும் முனைப்பில் நான் போட்ட மொக்கைகள் 38 ஆண்டுகள் கழிந்தும் மனதில் பசுமையாக உள்ளன! And அந்த மொக்கை போடும் படலங்கள் இத்தனை காலத்தில் இம்மியும்  குறைந்தபாடில்லை என்பது தான் களேபரமே! கதையில் கணிசமான மாந்தர்கள்; அவர்களின் மத்தியில் ஒரு குற்றம்; கும்பலிலுள்ள அம்புட்டுப் பேர் மீதும் சந்தேக நிழல் படிய முகாந்திரங்கள் & இறுதியில் சரசரவென அத்தனை முடிச்சுகளையும் கமிஷனரோடு சேர்ந்து முடிச்சவிழ்ப்பது என்பது தான் தொன்றுதொட்ட ஜானியின் template என்பதை நாமறிவோம்! And தொடரின் இறுதிப் பகுதியிலான இந்த ஆல்பத்திலும் அது துளி கூட மாறிடவில்லை! இன்னும் சொல்லப் போனால், இது முந்தைய இடியாப்பங்களை விடவும் எக்கச்சக்க நெளிவுகளைக் கொண்டதொரு பதார்த்தம்! And இதை யதார்த்தமாய் கருணையானந்தம் அங்கிளின் தலையில் நான் சுமத்தியிருக்க, இயன்றமட்டுக்கு அவரும் முயற்சித்திருந்தார் தான்! ஆனால் சொக்காயைக் கிழித்தால் தவிர இந்த ஆல்பத்துக்கு நியாயம் செய்திட இயலாதென்பதை எடிட்டிங்கின் போது போன மாதமே புரிந்திருந்தேன்! So ரூபின் அம்மணிக்கு ஒற்றை மாத புரமோஷன் கிடைத்ததுமே அதன் பொருட்டுத் தான்! ஆனால் கண்ணிமைக்கும் நொடிக்குள் மாதமொன்று ஓட்டம் எடுத்திருக்க - ஜானியாரை இதற்கு மேலும் ஒத்திப் போட இடமில்லை! So ‘தம்‘ கட்டியபடியே பணிக்குள் இறங்க, கிட்டத்தட்ட முக்கால்வாசியை மாற்றி எழுத அவசியப்பட்டது ; and அந்த முயற்சியினில் தான் முதல் பத்தியில் நான் குறிப்பிட்ட விஞ்ஞான உண்மைகள் நடைமுறை கண்டதை உணர முடிந்தது! Phewwww... இந்தக் கதாசிரியரின் ஆற்றல்களுக்கு ஒரு மெகா சல்யூட் வைத்தபடியே காலுக்குள் கொட்டிக் கிடக்கும் கற்றைகளை கூட்டி அள்ளி மண்டையில் மறுக்காவும் ஒட்டிட பெவிகால் ஏதாச்சும் கிடைக்கிறதா? என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன்! An absolute Johnny classic! இதோ - அதன் ஒரிஜினல் அட்டைப்படம் ப்ளஸ் அதன் உட்பக்க preview!



இந்த அக்டோபரில் எனக்கு ஒரு குஷியான சமாச்சாரத்தினையும் கவனிக்க இயன்றது! And அது தான் - நம்ம ஜானியின் செட்டான ப்ரூனோ ப்ரேசிலும் இதே மாதத்தில் ஆஜராகிடவிருப்பது!

- XIII

- ரிப்போர்ட்டர் ஜானி

- கேப்டன் ப்ரின்ஸ்

- ப்ரூனோ ப்ரேசில்

- சாகஸ வீரர் ரோஜர்

இந்த ஐந்து ஜாம்பவான்களுமே 1986-ல் ஒட்டுமொத்தமாய் debut செய்தவர்கள்!!

- 1986 ஜுன் மாதத்தில் XIII

- 1986 ஜுலை மாதத்தில் “மர்மக் கத்தியோடு” ரோஜர்

- 1986 ஆகஸ்ட் மாதத்தில் ரிப்போர்ட்டர் ஜானி

- 1986 நவம்பர் மாதத்தில் “பனிமண்டலக் கோட்டை”யுடன் கேப்டன் ப்ரின்ஸ்

- 1986 டிசம்பரில் “மர்மச் சவப்பெட்டிகள்” இதழோடு ப்ரூனோ ப்ரேசில் !

என பட்டாசாய் “திகில்” பொரிந்து தள்ளிய நாட்கள் அவை! And அந்த ஐவர் அணியில் XIII-ன் கதைகளை போட்டு முடித்து விட்டோம்; ப்ரின்ஸ் தொடருமே அவ்விதம் & ப்ரூனோ ப்ரேசில் தொடரிலும் ஆல்பங்கள் பாக்கியில்லை! ரோஜர் கதைகள் அத்தனை சோபிக்காது போனதால் - அவருக்கு மட்டும் தற்காலிகமாய் break தந்திருந்தோம்! And இதோ ப்ரூனோ ப்ரேசிலின் முதலைப் பட்டாளம் அவதார் 2.0ல் களமிறங்கியிருக்க இந்த அக்டோபரில் அவர்களையுமே பார்த்திடலாம்! அவர்களது preview அடுத்த பதிவில்!

மேலேயுள்ள இந்த 5 சூப்பர்ஸ்டார்களுள் உங்களது favorite யாரோ ? 

And 1986-லேயே இந்த நாயகர்களை சந்தித்தோர் யாரேனும் இங்குண்டோ ? 

And இதோ - ஒரு 110 பக்க crisp த்ரில்லரில் இரவுக் கழுகாரும், வெள்ளி முடியாரும் நம்ம V காமிக்ஸில் போட்டுத் தாக்கிடும் “இறுதி ஆட்டம்” ஆல்பத்தின் அட்டைப்பட முதல் பார்வை!



Yet another புது ஓவியர் உட்பக்க சித்திரங்களைப் போட்டு தந்திருக்க, பக்கத்துக்குப் பக்கம் மிரட்டலானதொரு அனுபவம் காத்துள்ளது! And நிஜத்தைச் சொல்வதானால் - போன மாதத்து “சினம் கொண்ட சின்னக் கழுகு” போலான heavy சாகஸத்துக்குப் பின்பாக, இந்த இலகுவான ஆக்ஷன் த்ரில்லர் ஜாலியான வாசிப்புக்கு உரமிடுகிறது! Don't miss it please !!

  • ரிப்போர்ட்டர் ஜானி பணிகள் முடிந்து - வரும் வாரத்தில் ப்ரிண்டிங் புறப்படுகிறார்.
  • டெக்ஸ் கூட வரும் செவ்வாயன்று ப்ரிண்டிங்குக்கு ரெடியாகிடுவார்.
  • இதோ - ஞாயிறுக்கு ப்ரூனோ ப்ரேசில் எடிட்டிங் முடிப்பதென்ற target-ஐ பூர்த்தி செய்து விட்டேனென்றால், அடுத்த வாரத்தில் ஸ்டெர்னின் மொழிபெயர்ப்பினை பூர்த்தி செய்யும் பணி மாத்திரமே பாக்கியிருக்கும்! 

இடையிடையே கம்யூனிட்டியில் ஏதாச்சும் posts; நம்ம Youtube சேனலில் வீடியோப் பதிவுகள் என்றும் கூத்தடித்து வருவதால் திட்டமிடலில் கொஞ்சம் தாமதங்கள் தலைதூக்குகின்றன! But அங்கேயும் உற்சாகமாய் பொழுதுகள் ஓட்டமெடுப்பதால் அதன் பொருட்டும் நேரம் ஒதுக்குவதில் தப்பில்லை என்றே படுகிறது !! இதோ - சமீபமாய் போட்ட 2 ஜாலி வீடியோக்களின் லிங்க்ஸ் !! இரண்டுமே கணிசமான பார்வைகளை பெற்றிருப்பதில் எனக்கே கொஞ்சம் ஆச்சர்யம் தான் : 

ஸ்பைடர் கா ஹுக்கூம் 💪

கல்கண்டு ad பற்றி ஒரு flashback😁

ஸ்டெர்னில் ஏற்கனவே கால்வாசி எழுதியாச்சு என்பதால் மீத முக்கால் பாகத்தை வரும் வார மத்திக்குள் முடித்து விடலாமென்ற நம்பிக்கையில் உள்ளேன்! Fingers crossed!

இன்னொரு பக்கமோ அடுத்தடுத்து வரவிருக்கும் ரெகுலர் அட்டவணையில் அல்லாத இதழ்களின் பணிகளும் வேகமெடுத்து வருகின்றன!

- கலரில் கபிஷ்

- ஸ்பைடரின் “பாட்டில் பூதம்”

- அந்த ஸ்பைடர் 2.0 தொடரின் இறுதி (color)  இதழ்

என கலந்து கட்டி பணிகள் ஓடி வருகின்றன! And சென்னைப் புத்தக விழா maybe டிசம்பர் மத்தியிலேயே துவக்கம் காணக்கூடுமென்ற தகவல்களும் உலவி வருவதால், அதற்கான முஸ்தீபுகளுமே இன்னாரு பக்கம் going on! பற்றாக்குறைக்கு - “யார் அந்த மினி-ஸ்பைடர்?” ; Replica மறுபதிப்புகள் என்ற திட்டமிடல்களுமே !!

And by the way, சமீபத்தில் நடந்து முடிந்த மதுரைப் புத்தக விழா பற்றியும் இங்கே நான் குறிப்பிடாது விட்டால் அது பெரும் தப்பாகிப் போகும்! பொதுவாய் மதுரை, திருச்சி, நெல்லை போலான நகரங்களது விழாக்கள் விற்பனை நம்பர்களில் கொஞ்சம் பின்சீட்டில் இருப்பதே வழக்கம். ஈரோடு; சென்னை; சேலம் போன்ற பெரிய ஆட்டக்காரர்களுக்கு வழிவிட்டு விடுவது  இதுவரையிலுமான வாடிக்கை! ஆனால் போன ஆண்டு திருப்பூர் காட்டிய அதே அதிரடியை இந்தவாட்டி மதுரையும் கண்ணில் காட்டியுள்ளது! And மதுரையில் நமக்கான விற்பனையில ஒரு புது ரெக்கார்ட் ஏற்படுத்தியுள்ளது! ஆக “நாங்களும் சண்டியர் தான்வே” என்று மதுரை, திருப்பூர் நகரங்களும் மார் தட்டுகின்றன இப்போது! பார்க்க வேணும் - அடுத்த வாரம் துவங்கவிருக்கும் திருச்சி என்ன கெத்து காட்டக் காத்துள்ளதென்று! Not to forget, எங்க ஏரியாவிலான விருதுநகர் விழாவுமே அடுத்த வாரம் துவங்கிடவுள்ளது !

இம்மாதப் பணிகள் முடித்த கையோடு, அட்டவணைப் பதிவுக்கான நெடும் பதிவினை தொடங்கியாகணும் !! ஒவ்வொரு வருஷமும் அட்டவணையினை தயாரிக்கும் அவகாசத்துக்கு நிகரான நேரமெடுப்பது அது குறித்த பதிவும் தான் !! தீபாவளிக்கு முன்பாக அட்டவணையினை unveil செய்திட வேணும் எனும் போது, இப்போதிலிருந்தே சன்னம் சன்னமாய் எழுத ஆரம்பித்தால் தேவலாமென்றே தோன்றுகிறது ! அல்லாங்காட்டி, அட்டவணையினையும் வீடியோ பதிவாய் செய்திட சாத்தியமானால் எனக்கு வேலை ரெம்போ ஈசி ! What say மக்களே ?   

ரைட்டு...ப்ருனோ பிரேசிலை நலம் விசாரிக்கக் கிளம்புகிறேன் இப்போது ; you have a fun Sunday all !! See you around !! Bye for now !!

Saturday, September 14, 2024

வரணும்...பன்னீர்செல்வமாயிட்டு வரணும் !

 நண்பர்களே,

வணக்கம். இப்போதெல்லாம் இங்கே வாரயிறுதியில் பதிவிட்ட கையோடு, வார நாட்களில் நமது வாட்சப் கம்யூனிட்டியில் போஸ்ட் போடுவது; polling போடுவது என ஏதாவது கும்மியடித்து வருவதால், ஒரு தினுசாய் வாரம் முழுக்க ‘டச்‘சில் இருப்பது போலவே ஒரு பீலிங்! பெருசாய் பூமியைப் புரட்டிப் போடும் அறிவிப்புகளை அங்கே போடுவதில்லை தான் - yet அங்கே கடந்த வாரத்தில் செய்துள்ள அறிவிப்புஸ் பற்றி இங்கொரு தபா! Just in case அங்கே உள்ள நெருக்கடிகள் உங்களுக்கு ரசிப்பதில்லை எனும் பட்சத்தில்!!

And அங்கே மேலோட்டமாய் மட்டுமே என்னாலும் பதிவிட முடிவதால் - அவற்றை சற்றே elaborate செய்கிறேனே இங்கே:

Topic # 1:

யார் அந்த மினி-ஸ்பைடர்?” உட்டாலக்கடி சமாச்சாரம்!

காவேரியில் நீர் வற்றிப் போகலாம்; வைகை வறண்டு கிடக்கலாம் - ஆனால் சிலபல ஆர்வங்ஸ்கோ பார்ட்டிகளின் “காமிக்ஸ் சேவை தாகம்” என்றென்றும் வற்றுவதில்லை! And சேலத்திலிருந்து இந்தச் சேவையை கர்ம சிரத்தையாய் செய்து - அதனை முழுக்கவே நண்பர்களின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்பதாய் அள்ளி விட்டு வரும் ஆர்வலர், லேட்டஸ்டாக ரூ.900 விலையில் ”யார் அந்த மினி-ஸ்பைடர்?” ஆல்பத்தினை விளம்பரப்படுத்தியுள்ளார். ஏற்கனவே 2021 லாக்டௌன் சமயத்தில் இதே வேலையை மனுஷன் செய்திட, அப்போதே போனில் பேசவும் செய்திருந்தேன் தான்! ஆனால் அந்தக் "கலைச்சேவை நமைச்சல்" விட்டபாடில்லை எனும் போது - இது தொடர்பான தகவல்களை அவர் நடத்தும்  க்ரூப் நண்பர்களே நமக்கு அனுப்பி வர, அவற்றை சம்பந்தபட்டோருக்கு forward செய்துள்ளோம். அதில் மேற்கொண்டு எது செய்வதாக இருந்தாலும் அவர்களது பாடு!

நம்மைப் பொறுத்தவரையோ அதே ”யார் அந்த மினி-ஸ்பைடர்? இதழை ரூ.200 விலையில், அட்டகாசமான art paper-ல் சீக்கிரமே வெளியிடவுள்ளோம். 

அது மட்டுமன்றி - தலைகீழாய் நின்று தண்ணீர் குடித்துப் பார்த்தாலுமே, ஒரு கணிசமான அணியினருக்கு, இந்தப் பழசு மீதான மோகங்களிலிருந்து வெளிப்படும் சாத்தியங்கள்  கிடையாது என்பது புரிகிறது! And அவர்களே இந்த கலை சேவகர்களின் prime targets! எத்தனை பிரயத்தனம் செய்து புதுசாய் கதைகளைத் / தொடர்களை அறிமுகம் செய்ய குட்டிக்கரணங்கள் போட்டாலுமே - “பறக்கும் பிசாசு” போடலாம்லே? “பறக்காத பூதம்” போடலாமில்லே?” என்ற ரீதியிலான கேள்விகள் பிரதானப்பட்டு வருவது தொடரவே செய்கிறது ! “அதே புளிய மரத்தை, அதே போல மறுக்கா மறுக்கா சுற்றி வருவதில் நாம் சாதிக்கப் போவது தான் என்ன?” என ஒரு நூறு தபா நான் குரல் கொடுத்தாலும் - எதுவும் மாறிய பாட்டைக் காணோம் தான்! So if you can't beat them, join them என்று தீர்மானித்துள்ளோம்! So-

- டெக்ஸின் ”நடுநிசி வேட்டை” தான் வேணுமா? ரைட்டு - அதையே அன்னிக்குப் போலவே போட்டுப்புடுவோம்!

- “கத்தி முனையில் மாடஸ்டி” அதே சைஸில், அதே அட்டையோடு அச்சுக்கா - அசலுக்கா  அப்டியே வேணுமுங்களா - பேஷாய் போட்டுத் தாக்கிப்புடலாம்!

- மாயாவி மாமாவின் “ப்ளாக்மெயில்” அதே டபுள் கலரில், அதே அட்டைப்படத்தோடு பார்த்தா தான் மனசு குளிருமா? ஒண்ணும் பிரச்சனையே இல்லீங்கோ - ஒரு whirlpool ப்ரிட்ஜையே மனசுக்குள்ளாற இறக்கிப்புடலாம்!

And rest assured - இவை சகலமுமே கலைச் சேவைகளின் ரூ.900/- விலை ரேஞ்சுகளில் இருக்கவே இருக்காது. And இவற்றிற்கென சந்தா, சாந்தா, சாதனா - என எவ்வித தனித்தடங்களோ, முன்பதிவுகளோ இராது! வாகான சந்தர்ப்பத்தில், ஏதேனுமொரு சிறுநகரப் புத்தக விழாவின் தருணத்தில் இந்த புக்ஸ் வெளிவரும் - நமது ப்ளாக்கிலும், FB-யிலும், வாட்சப்பிலும் ஒரு அறிவிப்போடு! So அவற்றை உங்கள் தலைகளில் வலுக்கட்டாயமாய் திணிக்கும் அவசியங்களெல்லாம் இருக்கவே இராது!

தவிர, இந்த segment-க்கென நான் பெருசாய் மெனக்கெடுவதாகவும் இல்லை! சகலமும் மறுபதிப்பு மேளாக்களே எனும் போது, அந்தக் காலத்து ‘


களை இந்த நாட்களது “லை‘களாக மாற்றுவதைத் தாண்டி பெருசாய் ஜோலிகள் இருக்காது! பற்றாக்குறைக்கு “அதே ராப்பர்; அதே replica பதிப்புகள்” என்றும் நீங்கள் அன்போடு நம்மள் கி பொறுப்புகளை சுலபமாக்கி வருவதால் - இயலும் சந்தர்ப்பங்களில் பரணுக்குப் போறோம்; தூசு தட்டறோம்; பழைய பெயண்டிங்களையே மறுக்கா ஸ்கேன் பண்ணி டிஜிட்டலில் பிரிண்டைப் போடறோம்! And வண்டி வண்டியான எண்ணிக்கைகளில் பிரிண்ட் பண்ணி, கிட்டங்கிகளை ரொப்பிக் கொள்வதாகவும் ஐடியா லேது! சிக்கனமான நம்பர்கள்; விற்றால் அப்பாலிக்கா அடுத்த title என்று ஜாலி பாலையாவாய் பயணிக்க உத்தேசித்திருக்கிறோம். இங்கே எவ்வித அட்டவணைகளோ, deadlines-களோ இருந்திடவும் செய்யாது! So “வாழைப் பழம் வேணும்” என்போருக்கு ட்ராகன் ப்ரூட்டைத் தந்து, “இதை சாப்பிட்டுப் பாருங்க நைனா” என இனியும் வம்பு பண்ண மாட்டோம்! “வாயப்பயம் தானுங்களே - எத்தினி சீப்பு?” என்று கேட்க மாத்திரமே செய்வோம்! 

Topic # 2:

”முத்தக் கதைகள்” (ரொமான்ஸ்) போட்டுப் பார்க்கலாமா - அட்டகாசமான சித்திரங்களுடன்? அல்லாங்காட்டி ”யுத்தக் கதைகள்”?

- முதல் ரகத்துக்கு (ரொமான்ஸ்) ”வாணவே வாணாம்டா சாமி!” என்ற பதில்!

- யுத்தக் கதைகள் ஆப்ஷனுக்கு - “பார்ப்போம்டா தம்பி” என்ற ரீதியிலான மித response!

இங்கே எனக்குள் கலவையாய் ஓட்டமெடுக்கும் சிந்தனைகளை உரக்க ஒலிக்கச் செய்வதில் தப்பில்லை என்றே தோன்றுகிறது! Of course வாண்டனாக மூத்திரச் சந்துக்கான கேட்டைத் திறந்து கொண்டு, நானாகவே உள்ளாற போய் நிற்கவும் மெனக்கெடுகிறேன் என்பது ஸ்பஷ்டமாய்ப் புரிகிறது தான்! ஆனால் மனதில் இழையோடும் விஷயங்களைப் பொதுவில் பகிர்வதொன்றும் நமக்குப் புதுசில்லியே?! So எனது சிந்தனைகளை உங்களுக்குக் கடத்தும் விதமாய் இதோ - சில வினாக்கள் folks:

1. கடைசியாய் ஒரு புது நாயகரையோ / தொடரையோ நாம் சிகப்புக் கம்பளம் விரித்து வரவேற்றது எப்போதோ?

2. ஒரு புது ஜான்ராவை நாம் ஆரவாரமாய் எதிர்பார்த்து குதூகலித்தது கடைசியாய் எப்போது folks ?

3. ஒரு மெய்யான குண்டு புக்கை நாம் கையிலேந்தி, சூட்டோடு சூடாய் (சு)வாசிக்க நேரம் ஒதுக்கியது தான் எப்போது?

4. படிக்கத் தூக்கும் ஆல்பத்தையும் ஒரு விமர்சகப் பார்வையில் அணுகிடாது, ஜாலியா வாசகப் பார்வையில் ரசிக்க விழைந்த கடைசித் தருணம் எது ? என்று நினைவுள்ளதா?

5. மாதா மாதம் பீரோவுக்குள் தேங்கிச் செல்லும் ஆல்பங்களை ஒருவித குற்றவுணர்வோடு பார்ப்பது இப்போதெல்லாம் அடிக்கடி அரங்கேறுகிறதா?

6. ”நோஸ்டால்ஜியா மோகம்” ; “பழசை மறுபடியும் காதலிக்கும் அந்த உத்வேகம்” என்பதெல்லாமே - அவற்றைப் படிக்கும் அவசியங்கள் கிடையவே கிடையாது என்றதொரு ஆழ்மனது நிம்மதியின் பலனான கோரிக்கைகளா?

"புது புக்னா அதைப் படிக்க வேணும்; இதுவோ அந்தக் காலத்திலேயே படிச்சு முடிச்ச உப்மா தானே? ஜாலியாய் படம் பார்த்துப்புட்டு நிம்மதியாய் உள்ளாற வச்சுப் பூட்டிப்புடலாங்கிற ஒரு அவாவின் நாசூக்கான வெளிப்பாடா - கூடிப் போயுள்ள நோஸ்டால்ஜியா கோரிக்கைகள் ?

எனக்கு நினைவு சரியாக இருக்கும் பட்சத்தில் ரொம்ப, ரொம்ப காலத்துக்குப் பின்பாய், துரிதமாய் நம் மத்தியில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் இரு புது ஆல்பங்கள் / தொடர்கள்:

1. ரூபின்

2. ஸ்பூன் & ஒயிட்

மட்டுமே!

- கணிசமான depth இருந்தும் C.I.A. ஏஜெண்ட் ஆல்பா கதைகளில் "வஜனங்கள் சாஸ்தி" என்று ஓரம் கட்டி விட்டோம்!

- “உள்ளதுக்கே நேரமில்லே - இதிலே இவன் யாரு புதுசா?” என்றபடிக்கே IR$-ஐ மூட்டைகட்டி விட்டோம்!

- ஒரு cult classic ஆகியிருக்க வேண்டிய “ஒற்றை நொடி... ஒன்பது தோட்டாக்கள்” இதழினை அதன் நீளத்தைக் கண்டு பம்மி ஓரமாய் சாத்திவிட்டோம்.

- அட அவ்வளவு ஏனுங்கோ - நம்மளையெல்லாம் ஆர்வத்தில் அநாட்களில் சட்டையைக் கிழிக்கச் செய்த XIII தொடரின் லேட்டஸ்ட் அத்தியாயங்களையே இன்னமும் புரட்ட முனையாதோர் ஒரு வண்டி!!

வார்னிஷ் இல்லா நிஜத்தை செப்புவதாயின் இன்றைக்கு ; இன்றைய நமது mindset-க்கு “இரத்தப் படலம்” கதை இப்போது அறிமுகமாகியிருக்கும் பட்சத்தில் எவ்விதமாய் ரியாக்ட் செய்திருப்போமோ? “இவன் யார்டா திருட்டு முழி முழிச்சிக்கினு வண்டி வண்டியான வசனங்களுக்கு மத்தியிலே மொக்கை போட்டுக்கிட்டு? ஞாபகமறதின்னா வல்லாரைக் கீரையைத் தின்ன வேண்டியது தானே?” என்று மண்டையில் XIII-ஐ தட்டியிருப்போமோஎன்ற சந்தேகம் எனக்கு !?

In a nutshell - கூடி வரும் பொறுப்புகளும், மாறி வரும் பொழுதுபோக்கு அம்சங்களும், post covid lockdowns - நமது வாசிப்புகளுக்கு சங்கிலிகளைப் போட்டு விட்டுள்ளன என்பதே யதார்த்தம்! இன்றைக்கு நமது பொழுதுகளை எதைக் கொண்டு நகர்த்துவது? என்பதையே நாம்  தீர்மானிப்பதில்லை என்பது எனக்குள் உள்ளதொரு குட்டியான சந்தேகம்! நுண்ணறிவும், அதன் algorithm -களுமே அடுத்தடுத்து FB-யில் நமக்கு எதைக் காட்ட வேண்டும்? Youtube-ல் எந்த shorts-ஐ காட்சிப்படுத்த வேண்டும்? இன்ஸ்டாவில் எந்த ரீல்ஸை முன்னிலைப்படுத்த வேண்டுமென தீர்மானிக்கின்றன அல்லவா ?! And நாமோ, குஷியாய் அவற்றின் விரல் பிடித்தபடிக்கே ஜாலியாய் பயணித்து வருகிறோம் - அல்லவா ?! ஆனால் இங்கேயோ - “நீர்மோர் சாப்பிடுங்கண்ணா.. தினை லட்டு  சாப்பிடுங்கண்ணா... மில்லெட்ஸ் உப்மா நல்லதுங்கண்ணா” என்ற ரீதியில் நாம் பரிமாறுவது சற்றே அயர்ச்சியூட்டுகின்றனவோ - என்னவோ? 

ஆனால் சமீப நிகழ்வுகளில் நான் கவனித்த / கிரகித்த ஒரு விஷயம் மனசை குஷியாக்கத் தவறவில்லை! And அது இம்மாதத்து 2 இதழ்கள் சார்ந்ததே!

- Maybe ரூபின் கதை on its own உங்களை பாராட்டச் செய்யவும் பண்ணியிருக்கலாம் தான்! ஆனால் ரூபின் நம்மோடு 3-வது ஆண்டாய் அன்னம், தண்ணீர் புழங்கி வருகிறார் தான்! And இதற்கு முன்பான 2 சாகஸங்களுமே செம விறுவிறுப்பானவைகளே! ஆனால் அந்த இரண்டையும் இந்த மாதத்துக்கு முன்பாக வாசித்திருப்போரை count பண்ணுவதாக இருந்தால் ஒரு மினி பஸ்ஸின் புட்போர்டில் மட்டுமே நிரப்பி விடலாம் என்பது எனது யூகம்! So how come ரூபின் scored just this month?

- Spoon & White கூட அண்ட சராசரங்களை சிரிப்பலைகளால் அதிரச் செய்யும் ஆற்றல் கொண்ட அசகாயர்கள் அல்ல தான்! Yet அவர்களை இம்மாதம் நாம் சிலாகித்து ஏற்றுக் கொள்ள முடிந்தது எவ்விதமோ?

இரண்டு கேள்விகளுக்குமே என்னைப் பொறுத்த வரை ஒரே பதிலே:

நமது வாட்சப் கம்யூனிட்டியில் இவற்றைப் பற்றி தொண தொணவென உங்கள் முகங்களுக்கு முன்னே கொசுவாட்டம் பாட்டுப் படித்தபடியே நின்று வந்தேன்! And இந்த கம்யூனிட்டி தரும் ஒருவித அண்மையும், அந்நியோன்யமும் - “சரி, நம்ம கோமுட்டித் தலையன் வுடாம கேட்கிறானில்லே - படிச்சுத் தான் போடுவோமே” என்று ரொம்ப காலம் கழித்து உங்களை எண்ணச் செய்திருக்கலாம்! படிச்சதைப் பகிர்ந்துக்கவும் கம்யூனிட்டி விரல்நுனியில் காத்திருக்க, அந்த உற்சாகம் தொற்றிக் கொள்ள - இம்மாத வாசிப்பு வேகமெடுக்க; வாசிப்பின் கலப்படமில்லாத மகிழ்வுகளும் நம்மைத்  தொற்றிக் கொண்டுள்ளன! And அகஸ்மாத்தாய் அட்டைப்படங்கள் கலரிங்; அச்சு - என எல்லாமே அழகாய் மிளிர - "அட...இது நல்லா தான் இருக்கேப்பா !!" என்ற பீலிங்கு மேலோங்கியிருக்கலாம் ! So இம்மாதத்து இருவர் மாமூலான விமர்சக கண்ணி வெடிகளில் கால் பதிக்காது தப்பி விட்டனர் என்பதே எனது யூகம்!

Of course - இது முழுக்க எனது மன விஸ்கி; பிரமை; கற்பனையாகவோ இருக்கலாம் தான்! ஆனால் நிதானமாய் நீங்களே யோசித்துத் தான் பாருங்களேன் folks! ஜாலியாய், ஒரே அணியாய், பழைய பன்னீர்செல்வங்களாய் நாமெல்லாம் வாசிப்புக்கு நேரம் தர மட்டும் மெனெக்கெட்டால் - ஜான்ராக்கள் பேதங்களின்றி ; குழப்பங்களுமின்றி வாசிப்பின் sheer joy-தனை ரசித்திட சாத்தியப்படுகிறது ! 

And if that can happen on a consistent basis  -

- இதிலே முடிவு சுபமா கீதுமா? சோகமா கீதுமா?

- பொண்ணுங்களை இங்கே போற்றுவாங்களா? போஸ்டாபீஸ்லே இறக்கி விட்டுடுவாங்களா?

- இது “பெருச்சாளிப் பாஷாணம்” ரேஞ்சுக்கு இருக்குமோ?

- ரோமான்ஸா? ரோட்டோர பானி பூரியே இப்போதான் ரசிக்க ஆரம்பிச்சிருக்கு... போவியா?

போன்ற ரியாக்ஷன்கள் புது வரவுகளை நோக்கி எழுவது மட்டுப்படக் கூடும்! "அட ருசித்துத்தான் பார்ப்போமே - புடிச்சா தொடரலாம்!" என்ற பழைய நம்பிக்கைகள் மறுக்கா துளிர் விடலாம் ! I agree habits ஆயுட்காலப் பரிச்சயங்களே! அவற்றை மீறுவது சுலபமே அல்ல தான்! 

-Yet கடுதாசி போட்டுக் கொண்டிருந்த நாமெல்லாம் இன்று voice notes பரிமாறிக் கொள்வதில்லையா? இல்லே, நான் அன்னிக்கி மெரியே போஸ்ட்கார்டு தான் போடுவேன் - என அடம் பிடிப்பதில்லை தானே ?

- இட்லியும், ரவா தோசையும்  சாப்பிட்டு வந்தோர், இன்னிக்கி பிரெட்; கார்ன் ப்ளேக்ஸ்  என்ற மாற்றத்துக்கு தடா போடுவதில்லை தானே?

-- டூரிங் டாக்கீஸ்களில் “மெக்கனால் கோல்ட்” படம் பார்த்து வளர்ந்த நாம் இன்றைக்கு ரயிலின் மேல் பெர்த்தில் படுத்தபடியே OTT-ல் படம் பார்ப்பதை “காலத்தின் கட்டாயம்/முன்னேற்றம் ” என்று மட்டும் தானே பார்க்கிறோம்?

Yet காமிக்ஸ் வாசிப்புக்கு மட்டும் ஏன் இத்தனை கம்பிகள்? இத்தனை தழைகள்? இத்தனை கட்டுப்பட்டிக் கட்டுப்பாடுகள்? "இது தான் என்னைப் பொறுத்தவரை காமிக்ஸ் ; இப்டி தான் நான் வளர்ந்துப்புட்டேன் - மாத்த நினைக்கிறது தெய்வ குத்தம் !"என்ற பிடிவாத பிரசன்னாக்களாய் நாமெல்லாம் of late உலவ முனைவது ஏனோ ? படிப்பதெல்லாம் பிடிச்சுப் போவதில்லை தான்; yet பிடிச்சதை மட்டும் தான் படிப்போமென்றால், நம்ம புள்ளைங்களது ப்ராக்ரஸ் கார்டைக் கூடப் படிக்கத் தோன்றாதே?!

சமீபத்தில் FB-ல் ஒரு எழுத்தாளர் பதிவிட்டிருந்ததை வாசித்தது நினைவுக்கு வருகிறது!

- தமிழகத்தில் ஒரு திரைப்படம் ரிலீஸாகும் முதல் நாளில் விமர்சனம் எழுத முன்வரும் amateur எழுத்தாளர்களின் எண்ணிக்கை: 1000

- தமிழகத்தில் ஒரு இலக்கியப் படைப்போ; இன்ன பிறவோ ரிலீஸாகும் முதல் நாளில் விமர்சனம் எழுத முன்வரும் amateur எழுத்தாளர்களின் எண்ணிக்கை: 0

- தமிழகத்தில் ஒரு இலக்கியப் படைப்போ, இன்னபிறவோ ரிலீஸாகிய ஒரு வருஷத்திற்குள் அதற்கு விமர்சனம் எழுத முன்வரும் amateur எழுத்தாளர்களின் எண்ணிக்கை: 0

இதில் நாமெல்லாம் ரொம்பவே தேவலாம் ரகம் தான்; இன்னமுமே இந்தச் சிறிய வட்டம் இயன்றமட்டுக்கு காமிக்ஸ் உலகினைத் தாங்கிப் பிடித்து, உயிர்ப்போடு உலவி வருகிறது தான்! ஆனால் நம்மை அறியாமலே, நமக்கு நாமே சமீப காலங்களில் போட்டு வரும் சங்கிலிகளை உடைக்க இந்த நொடியைப் பயன்படுத்தினால் நாம் ஆராதிக்கும் இந்த காமிக்ஸ்,  நம் பிள்ளைகள் காலத்துக்கும் தழைத்திடும்! இல்லையேல் பாலையாக்களாய் நாம் வாழ்ந்து முடித்த கையோடு, பசங்களுக்கு விட்டுச் செல்லும் சேகரிப்புகளை, முதல் சந்தர்ப்பத்தில் அவர்கள் பேரீச்சம்பழத்துக்குப் போட்டு விடுவார்கள்! ”அட... அவனுக என்ன போடறது? நானே போட்டுட்டுத் தான் போவேன்?!” என்கிறீர்களா - அப்டின்னா பேரீச்சம்பழத்தையாச்சும் பங்கு போட்டுக்கலாம் சார்ஸ்! Iron சத்து நிரம்ப உண்டாமே?!

நீ இப்போ என்ன தான்டாப்பா சொல்ல வர்றே? ஒரு மைய்யமா, “அவரு” பேசறா மேரியே இருக்குதே?!” என்று கலாய்க்க ஆங்காங்கே சகோக்கள் தம் கட்டுவர் என்பதும் புரிகிறது! Simple-ஆகச் சொல்வதானால் :

நம்மையும் அறியாது, நாமே சமீபமாய் சாத்திக் கொண்டிருக்கும் காமிக்ஸ் ஜன்னல்களைத் திறப்போம் folks ? வெளிச்சமும், காற்றும் உட்புகட்டுமே ?வாசிப்புகளுக்கு முன்பு போல் சிறகு கொடுங்கள் please ! மாசம் நாலை வாசிக்கத் துடித்த அந்த நாட்கள் திரும்பப்போவதில்லை தான் - at least ஒன்றையோ, இரண்டையோ உற்சாகமாய், மனநிறைவாய் வாசிக்கவும், ரசிக்கவும் தீர்மானிப்போமே ?   பழைய பன்னீர்செல்வங்களாய் வராங்காட்டியும், இராமநாதபுரத்து பன்னீர்செல்வம் சாராக அல்லாதிருக்க முயற்சிப்போமே?! 

ரைட்டு! மனதில் ஓடியதைப் பகிர்ந்தாச்சு! இனி வைபவங்கள் ஆரம்பிக்கலாமுங்க! மூ.சந்தில் பெட்ரமேக்ஸ் லைட்லாம் போட்டு ரெடியா கீது! "முத்தம்ஸ்" வாணாம்னு ஆகிப் போன பிற்பாடு, ஜாலியாய் மொத்தல்ஸையாச்சும்  ஆரம்பிக்கலாம் இல்லியா ?  Before I sign out -  ஒரேயொரு வேண்டுகோள் மட்டும் :

1.இதை A14 சைசில், font 33-ல் போட்டாலன்றி உருப்படாது !!

2.இதைச் சிதைச்சு, அதை நாசம் பண்ணி, அங்குட்டு சேதாரம் பண்ணிப்புட்டு எது என்னிக்கி உருப்பட ?

3.மாங்கா சீசன் முடிஞ்சிருச்சினாலும் மங்கா சீசன் முடியவே முடியாது ; அதை முயற்சிக்காத வரைக்கும் அன்னபூர்ணா கிரீம் பன் கூட இனிக்காது  !

போன்ற அட்வைஸ்களை மட்டும் வேறொரு தருணத்துக்கு வைத்துக் கொள்வோமே ? அதுக்குப் பதிலா மூத்திர சந்தில் நாலு சாத்து கூட வாங்கிக்க நான் ரெடி ! 

(காமிக்ஸ்) வாசிப்பினை குறுக்கிக் கொண்டே செல்கிறோமோ ? என்ற ஒற்றை agenda மாத்திரமே இந்த நொடியின் அலசல்களுக்கு உட்பட வேண்டியது  !! So என் மீதான கடுப்புகளை, விசனங்களை எப்போன்னாலும் சாவகாசமாய் இறக்கிக்கலாமுங்கோ ; இங்கே, கூப்பிடு தொலைவிலே தானே இருக்கப் போறேன் ? 

Bye all... See you around! Have a fun Sunday !!

And yes - கபிஷ் தொகுப்பு பற்றி :

சேலம் புத்தக விழாவினில் முழுநீள கலர் ஆல்பமாய், ரூ.100 விலையில் இதழ் # 1 வெளிவரவுள்ளது ! ஒரிஜினல் ஓவியரே அட்டைப்படங்கள் போட்டுத் தந்துள்ளார் ! 

இரண்டாம் தொகுப்பு - ஜனவரியில், சென்னைக்கு ரெடியாகிடும் !



Saturday, September 07, 2024

செப்டெம்பர் சல்சா !!

நண்பர்களே,

வணக்கம். இந்த வாரத்தின் ஆரம்பப் பொழுது அது. செப்டம்பர் புக்ஸ் நான்கும் despatch ஆகி உங்கள் கைகளில் மிளிர்ந்து கொண்டிருந்த நேரத்தில் விமர்சனங்களும், அலசல்களும் சன்னம் சன்னமாய் வரத் துவங்கியிருந்த சமயம் அது. பின்னிரவுப் பொழுதில் எனது வாட்சப் தனிச்செய்திக்கு ஒரு மெசேஜ் வந்திருந்தது. இதோ, அதனை இங்கு பகிர்ந்திடுகிறேன் :

=========================================

இந்த கதையின் பெரிய advantage எடிட்டர் அவர்களின் மொழிபெயர்ப்பு double shift பார்த்திருக்கிறார் 

வரிக்கு வரி காமெடி வசனங்கள் தான். எப்படி யோசித்தார் என்றே புரியவில்லை

ஆனால் அவ்வளவு உழைப்பும் இந்த கதையில் வீனானதாக நினைக்கிறேன்.

ஆஸ்டின் powers, ஜானி இங்கிலீஷ் போன்ற spoof போலீஸ்காரர்கlளாக  காட்ட முயற்சிக்கிறார்கள் என நினைக்கிறேன்

ஆனால் அக்கதைகளில் ரத்தம் இருக்காது, தெரியாமல் ஹீரோக்களால் அடிபடும் நல்லவர்கள் மற்றும் கெட்டவர்கள் அடிபட்டு விழுவார்களே தவிர ரத்தம் இல்லாததால் சாகிறார்கள் என்று தோன்றாது

ஆனால் இக்கதையின் பெரிய பிரச்னையாக நான் பார்ப்பது அதீத ரத்தம் தான். பற்றாக்குறைக்கு தற்கொலையை ப்ரதானப்படுத்தும் ஒரு கூட்டம். அவர்களும் மாடியில் இருந்து விழுந்து ரத்தம் தெரிக்க சாகிறார்கள். அதை பார்த்தபின் நமக்கு சிரிக்க தோன்றுமா ? அவர்கள் மட்டும் அல்ல, பலபேர் பலவிதத்தில் சாகிறார்கள், ஒரு போலீஸ் ஜோடி நம்ம ஹீரோ சுட்டு மற்றும் வெடிகுண்டு வெடித்து சாவார்கள்.

நமக்கு ரத்தம் புதிதல்ல.. ஜேம்ஸ் பாண்ட் கதைகளில் காண்பிக்கும் ரத்தத்தை நான் ரசித்தேன் .அது ஆக்சன் கதை என்று தெரிந்து படித்ததால். ஆனால் இது வேறு.

மேலும் இவ்வளவு ரத்தம் மற்றும் தீமிற்காக கண்டிப்பாக குழந்தைகள் படிக்கக்கூடாது.

இது எனது கருத்துமட்டுமே !!

நெகட்டிவ் ரிவியூ என்பதால் இதனை பொதுவில் பகிரவில்லை சார் ; உங்களுக்கு மட்டும் அனுப்பி இருக்கிறேன். நேரம் கிடைக்கும் போது இது பற்றிச் சொல்லுங்கள்.

=========================================

இந்தக் குறுந்தகவலில் இரண்டு விஷயங்கள் எனக்குப் பிடித்திருந்தன. 

முதலாவது, Spoon & White கதையில் அந்த மானாவரியான தற்கொலைத் தாண்டவம் பற்றிய எனது தனிப்பட்ட அதிருப்தியை நண்பருமே வெளிச்சம் போட்டுக் காட்டியிருந்தார். இரண்டாவது, ஒரு நெகட்டிவ் விமர்சனத்தை நாசூக்காய், தனித்தகவலில் பகிர்ந்த அந்தப் பண்பு !!

புத்தகம் வெளியான ஒற்றை நாளில் அதைப் படித்து, அலசி ஒரு நெகட்டிவ் review-வை பொதுவெளியில் போட்டுத் தாக்குவது ரொம்பவே fashionable தான். And விமர்சன ஜோதிகளில் ஐக்கியமாகிடும் இன்றைய உத்வேகங்களினை குறை கண்டிடவே இயலாதும் தான். ஆனால், வெறும் 120 ரூபாய் சமாச்சாரமாய் மாத்திரமே தன் கையிலிருக்கும் புக்கைப் பார்த்திடாமல், அதன் பின்னே குவிந்து கிடக்கும் உழைப்பையும், லட்சங்களிலான முதலீட்டையும், ஒரு புதுத் தொடரின் தலைவிதி தொங்கலில் இருக்கும் யதார்த்தத்தையும் கருத்தில் கொண்டு, நண்பர் பொதுவெளியில் இதைப் பகிர விரும்பாத அந்தப் பாங்கு மெய்யாலுமே மகிழ்வூட்டியது. Of course காசு கொடுத்து வாங்கும் கஸ்டமர் எப்போதுமே King தான். அவர் விரும்பும் பாணியில், விரும்பும் விதத்தில், விரும்பும் இடத்தில், விமர்சனங்களைப் போட்டுத் தாக்கும் சுதந்திரம் பூரணமாக உண்டுதான். Yet சொல்ல வரும் கருத்தை நயத்துடனும், பாதிப்பு ஏற்படா வண்ணம் வெளிப்படுத்துவதும் கூட, தேவையான தாக்கங்களை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டவை என்ற அந்தப் புரிதலுக்கு  hats-off ! "கொத்துக்கறி போட்டு விட்டீர்கள்", "கோழி குருமா பண்ணி விட்டீர்கள்",என்று நவீன நக்கீரர் அவதார் எடுக்கும் நண்பர்கள் உலாவரும் வேளையில், இந்த practical approach ரசிக்கச் செய்தது. 

அந்தக் குறுந்தகவலுக்கு நான் அனுப்பிய பதில் இதோ!

=========================================

உங்களின் கருத்துக்கு முழுமையாய் உடன்படுகிறேன் xxxxx. இரத்தக் களரியை ஒரு தற்கொலைக் கூட்டம் வாயிலாக முன்நிறுத்தியதில் எனக்கும் உடன்பாடில்லை தான். ஆனால், இது கற்பனையல்ல என்பது தான் ஆச்சரியமூட்டும் விஷயமே! 1990'களில் “The Order of The Solar Temple” என்றதொரு குடாக்குக் கூட்டம் அமெரிக்காவிலேயே வேரூன்றி, எண்ணற்ற நபர்களின் தற்கொலைக்குத் தூண்டுகோலாக இருந்தது தான் நிஜமே. இதோ, இந்த விக்கிபீடியா link-ஐப் பார்த்தீர்களென்றால் புரியும்https://en.wikipedia.org/wiki/Order_of_the_Solar_Temple

So, ‘சிறையில் ஒரு அழகிகதையானது இந்தத் தற்கொலை அமைப்பிற்கு எதிரானதொரு பகடியாகவே சித்தரிக்கப்பட்டுள்ளது.

=========================================

நான் செய்தியை அனுப்பிய சற்றைக்கெல்லாம் நண்பரிடமிருந்து reply வந்தது. 

அடடே! இது எனக்குச் சுத்தமாகத் தெரியாதே சார்! இதைக் கதையோடு சேர்த்து சிறு குறிப்பாக நீங்கள் கொடுத்திருந்தீர்களென்றால் வாசிக்கும் பொழுது கொஞ்சம் வேறு விதமாக இருந்திருக்குமோ என்னவோ?! Anyways, திரும்பவும் நான் வாசிக்கப் பார்க்கிறேன் ! 

என்று தகவல் சொல்லியிருந்தார்.

இந்தக் குறிப்பு, original–ஆக கதையிலும் கதாசிரியர்கள் கொடுத்திருக்கவில்லை தான். ஆனால், இதற்கு பேனா பிடிக்கும் சமயத்தில் எனக்கு மேலோட்டமாக ஒரு சந்தேகம் எழுந்தது - இப்படிப்பட்டதொரு கதைக்கருவினை ஏதேனும் நிஜப் பின்னணியில்லாமல் தைரியமாகக் கையாண்டிருக்க மாட்டார்களே என்ற ரீதியில். So, அந்த 5 கிரகங்கள் நேர்க்கோட்டில் நிற்கும் நிலை ; இத்யாதி... இத்யாதி என்று அந்தத் தற்கொலை மொட்டைச் சாமியார் அள்ளிவிடும் பக்கங்களின் போது நானாக Google-ல் தேடலை நடத்தினேன். அப்போது, கண்ணில் பட்டது தான் இந்த “Solar Temple” தற்கொலைக் குழு பற்றிய தகவல்.

இந்த Spoon & White தொடர் பற்றி பேசும் முன்பாக, இது தேர்வான பின்னணியைப் பற்றி பார்த்திடலாமே?! சமீப ஆண்டுகளாய் கார்ட்டூன் தொடர்களை தேடிப் பிடித்து கொண்டு வருவதும், அதே வேகத்தில், ரைஸ்மில்லுக்கு ஆளெடுக்கும் கவுண்டர் பாணியில் "நீ reject",  "you are unselected" என்று தொடர்களை பரணுக்கு அனுப்பும் வேலைகளையும் நாம் குஜாலாய் செய்து வந்ததில் ரகசியங்கள் ஏது? கார்ட்டூனில் மண்ணைக் கவ்வியவர் பட்டியல் - லியனார்டோ தாத்தாவில் தொடங்கி, நீலப் பொடியர்கள், சுட்டிப்பயல் பென்னி, கேரட் மீசை க்ளிப்டன், சிகாகோ போலீஸ்காரர் மேக் & ஜாக், ரின்டின் கேன் என்று நீண்டு கொண்டு போகும். எனக்கே ஒரு கட்டத்தில் இது ஏன் மல்லுக்கட்டுவானேன் ? பேசாமல், வருஷத்துக்கு லக்கி லூக்கிற்கான slot-களை மட்டும் கூட்டி விட்டால் கார்ட்டூன் கோட்டா தானாகக் கூடியது போலாகிடுமே ? புத்தகவிழா விற்பனையிலும் அது உதவிடுமே ? என்று தோண ஆரம்பித்திருந்தது !  ஆனாலும் variety இல்லாத விருந்து சுவைக்காது என்ற குறளி தலைக்குள் குந்தியிருக்க, தேடல் பயணத்தைத் தொடர்ந்தேன்.

அந்த சமயத்தில் கண்ணில்பட்ட பல க்ளாஸிக் தொடர்களின் மத்தியில் இந்த Spoon & White கொஞ்சம் மாறுபட்டுத் தெரிந்தனர். மேக் & ஜாக்கில் வருவது போலவே ஒரு குட்டை போலீஸ்கார், ஒரு நெட்டை போலீஸ்கார் என்ற காம்பினேஷன் தான் என்றாலும், அந்தப் புராதனம் இங்கில்லை. தவிர, மேலோட்டமான இதன் விமர்சனங்கள் ; தொடரிலுள்ள 7 ஆல்பங்களின் அலசல்கள் ஆகியவற்றைப் பரிசீலனை செய்த போது, இது லைட்டாக தெலுங்கு பட பாலய்யா பாணியில் இருக்கக் கூடும் என்று மனதிற்குபட்டது. So 'எவனா இருந்தா எனக்கென்ன ?' என்று நெற்றிப்பொட்டில் ரத்தத் திலகம் வைக்க யோசிக்காத அந்தக் குள்ள Spoon ஒருவாட்டி நம் மத்தியில் பயணித்துப் பார்ப்பதில் தப்பில்லை என்று பட்டது. Of course சித்திரங்கள் ஒரு தினுசாக இருந்ததைக் கவனித்தேன் தான். ஆனால், அதையும் மீறி, அந்தத் தொடரில் இழையோடிய ஒருவித கோக்குமாக்குத்தனம் எனக்கு ஒரு வித்தியாசமான சமாச்சாரமாக தென்பட்டது. சரி, முயற்சிக்காமலே இதை மூட்டை கட்டுவதைக் காட்டிலும், ஒற்றை ஆல்பத்தைக் களம் இறக்கிவிட்டு, அப்புறமாய் வருவதைப் பார்த்துக் கொள்ளலாம் எனத் தீர்மானித்தேன். And here we are! 

ஒத்துக் கொள்கிறேன். இங்கே மட்டு மரியாதையில்லாமல் பொட்டு பொட்டென்று போட்டுத் தள்ள நாயகர்கள் தயங்குவதே இல்லை தான். இப்படி logic இன்றி இந்த ஜோடி அடிக்கும் லூட்டி, பொம்ம புக் வாசிப்பிலும் ஒரு ஒழுங்குமுறையைத் தேடிடும் வாசகர்களை எரிச்சலூட்டக்கூடும் என்பதும் புரிகிறது தான். ஆனால், அத்தனை கார்ட்டூன் நாயகர்களையுமே லக்கிலூக்கோடு அளவீடு செய்து, அவர்களுக்கு சரசரவென VRS தந்து வரும் அதே ஸ்டைலில் இந்த Spoon & White ஜோடியை எடைபோட சாத்தியமாகாது என்பதே முக்கிய மேட்டர் என்று தோன்றியது !  இது எதுபோலும் இல்லாததொரு unique தொடர் என்பதால் உங்களுக்குப் பிடித்தால் பிடித்தபடி, பிடிக்காவிட்டால் பரணுக்குக் கடாச வேண்டியது தான். Simple as that !! 

So, தொடரும் வாரம் வரைக்கும் இந்த ஆல்பத்தை படித்து முடிக்க நேரம் எடுத்துக் கொண்டு, இதோ இங்குள்ள ஓட்டெடுப்பில் கலந்து கொண்டு, இந்த கோக்குமாக்கு நாயகர்கள் அடுத்த ஆண்டிலும் தொடரலாமா ? வேண்டாமா ? என்பது குறித்து உங்களின் பதில்களைப் பதிவு செய்யும்படிக் கேட்டுக் கொள்கிறேன் : https://strawpoll.com/NMnQNN6WGg6

என்னைப் பொறுத்தவரை இந்தத் தொடரானது ரொம்பவே casual-ஆக, ரசிக்கும் விதமாய் இருப்பதாகவேபடுகிறது. And my vote will be for them to continue in 2025 !



செப்டம்பரின் இன்னொரு சற்றே off-beat ஆல்பம். நமது கேரட் கேச டிடெக்டிவ் ரூபினின் ‘மங்களமாய் மரணம்‘. இதற்கு முன்பாக வெளியாகி இருந்த 2 ரூபினின் சாகஸங்களுமே, மற்ற நாயகர்களுடன் கூட்டணி இதழ்களில் தான் இடம் பிடித்திருந்தன. So, இந்த முறை solo-வாக தனி ஆல்பத்தில் தலைகாட்டுவதென்பது ஒருவிதத்தில் promotion போலத்தான். C.I.A Agent Alpha, சிஸ்கோ, Soda போன்றோரே வாய்ப்பின்றி வாசலில் காத்திருக்கும் வேளையில் இந்த சிகாகோ டிடெக்டிவிற்கு கிட்டியுள்ள வாய்ப்பு in many ways a surprise தான்.

ஆனால், கிடைத்த வாய்ப்பை அம்மணி கெட்டியாய் பிடித்துக் கொண்டிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும் - இதுவரைக்குமான உங்களின் விமர்சனங்களைப் பார்க்கும் போதாவது ! ரொம்பவே முன்நாட்களில் நடந்த கதைகளாக அல்லாது, தற்போதைய காலகட்டத்தில் சுற்றி வரும் கதைக்களங்களைத் தேர்வு செய்வதே கடந்த சில ஆண்டுகளாய் ஒரு எழுதப்படாத விதியாக பின்பற்றி வருகின்றோம். In fact, b/w-ல் வந்த James Bond கதைகளில் நாசியைத் தாக்கிய புராதனம் "போதுமடா சாமி. It’s time to move on" என்று புரியச் செய்தது.

ரூபின் ரொம்பவே ஒரு current நாயகியே and ஒரு police பணியைப் பெண் பிள்ளையாய் கையாள்வதென்பது எத்தகைய சவால் என்பதை சற்று சுவாரஸ்யமான கோணத்தில் கதாசிரியர் சொல்ல முனைவது இந்தத் தொடரின் ஒரு பலமாக நான் பார்க்கிறேன். I agree, இங்கே வசனங்கள் கொஞ்சம் ஜாஸ்திதான். எழுதும் போது, நமக்கே - "பேச்சைக் குறைங்கடா" என்று சொல்லத் தோன்றும். ஆனால், இந்தக் கதைகளில் கதாசிரியர் Mythic உட்புகுத்தியிருக்கும் நுணுக்கங்களை எதையாச்சும் கத்திரி போட்டுத் தொலைத்து விட்டால், கதையின் ஓட்டத்திற்கும், புரிதலுக்கும் ஆப்படித்தது போலாகி விடுமே என்ற பயத்தில் இம்மியும் குறைக்க முயற்சிப்பதே கிடையாது. இம்மாதத்து ஆல்பமும், அதே template-ல் பயணிப்பதால் கொஞ்சமே கொஞ்சம் பொறுமையோடு வாசித்த கையோடு, ரூபினுக்கு எதிர்வரும் ஆண்டுகளில் ஒற்றை slot-ஐ உறுதி செய்யலாமா அல்லது வாணாமா ? என்ற கேள்விக்கு பதில் பதிவிடக் கோருகிறேன்.

https://strawpoll.com/xVg7113XRyr

இம்மாதத்தின் Surprise Packet என்னைப் பொறுத்தவரையிலும் ஸாகோர் தான். இதுவரையிலும் b/w-ல் மினி சாகஸங்ளில் சுமாராய் சாகசம் செய்ததை  தாண்டி கோடாரி மாயாத்மா பெரிதாய் எதையும் சாதித்திருக்கவில்லை என்பதை ஒத்துக் கொள்கிறேன். கலரில் வந்த ஆல்பங்கள் முற்றிலும் வேறொரு லெவலில் இருந்தன என்றாலும், தினப்படி பிழைப்பான B/w சாகஸங்களில் ஒரு நாயகர் வெற்றி கண்டாலொழிய, அவரது தொடரை காலத்துக்கும் கலரை நம்பியே கொண்டு செல்ல முடியாது. அந்த வகையில் இது ஸாகோருக்கு ஒரு மைல்கல் தருணம் என்பேன். கறுப்பு வெள்ளையில் நமக்கு ரசிக்கத்தக்க கதைகள் இந்தத் தொடரில் உள்ளன என்பதை அழுத்தமாய் ஊர்ஜிதம் செய்கிறது ‘வஞ்சத்திற்கொரு வரலாறு‘. In fact, 2025-ல் காத்துள்ள இன்னொரு b/w சாகஸமான ‘சிரிக்கும் விசித்திரம்‘ இதை விடவும் தெறி வேகத்தில் தடதடக்கும் ஒரு த்ரில்லர். So, ரொம்பச் சீக்கிரமே சின்னத் தளபதி ஸாகோர் பேரவை முழுவீச்சில் களமிறங்கும் என்று எதிர்பார்க்கலாம். (கட்சி கொடி ரெடியா தல ? மாநாட்டுக்கு இடம் பாத்ரலாமா ?

Last but not the least Tex-ன் ‘சினம் கொண்ட சின்னக் கழுகு‘ சற்றே வித்தியாசமான சித்திர பாணி இந்த இதழைப் புரட்டிய மறுகணமே நம்மைக் கவனிக்கச் செய்யும் என்பதை மறுக்க மாட்டேன். இதன் ஓவியர் C.I.D ராபின் தொடருக்கு, சில மார்டின் கதைகளுக்கு சித்திரம் போட்டிருக்கிறார் தான். ஆனால், Tex-ன் ஒரு முழுநீள சாகஸத்திற்கு அவர் தூரிகை தந்திருப்பது இதுவே முதல்முறை. கதாசிரியரோ நமது ஆதர்ஷ மௌரோ போசெலி அவர்கள். "இன்னிக்கு குழாயில் தண்ணி வரும்", "இன்னிக்கு தண்ணி வராது" என்பது போல் - அத்தனை சுலபமாய் அழுத்தமான கதைகளையும், கமர்ஷியல் கதைகளையும் ஒரே நேரத்தில் பிரவாகம் எடுக்கச் செய்யும் அசாத்திய ஆற்றலாளர் இவர். இதோ, இந்தவாட்டி அழுத்தமான கதையை இறக்கினால் போச்சு என்று அவர் தீர்மானித்த தினத்தில் ‘தி ரேஞ்சர்ஸ் of பின்னிகென்‘ என்ற பெயரில் மேக்ஸி டெக்ஸ் தொடரில் இந்த ஆல்பமானது வெளியானது. சற்றே இறுக்கமான ஒரு mood கதை முழுவதிலும் வியாபித்திருப்பதை மறுக்க மாட்டேன். இந்தக் கதைக்களத்திலும் ஏற்கனவே ஆங்காங்கே பார்த்த சாயல்கள் தெரிவதையும் மறுப்பதற்கில்லை தான். இருந்தாலும், ஒவ்வொரு முறையும் ஒரு Cocktail-ஆக கௌபாய் உலகின் அத்தனை அம்சங்களையும் ஒருங்கிணைத்து சிக்ஸர் அடிப்பதென்பது போசெலிக்கு அன்றாட வாழ்க்கை என்றாகி விட்டது. நிதானமாய், வாசிக்கவும்,  சந்தர்ப்பம் வாய்க்கும் போது மீள்வாசிப்பிற்கும் உட்படுத்த நிச்சயமாய் ‘சினம் கொண்ட சின்னக் கழுகு‘ பயன்படும் என்பது எனது நம்பிக்கை. 

ரைட்டு, கிளம்பும் முன்பாய், மதுரை புத்தக விழா நியூஸ் ! நமது ஸ்டால் # 188 and வழக்கம் போல ஒரு வண்டி புக்ஸ் சகிதம் காத்திருக்கிறோம் !! முதல் இரு தினங்களும் டீசென்ட்டான விற்பனை கண்டிருக்க, காத்திருக்கும் நாட்களிலும் அதே உத்வேகம் தொடருமென்ற நம்பிக்கையில் உள்ளோம் !



மதுரை முடிஞ்ச கையோடு திருச்சி & எங்க வூட்டாண்டை உள்ள விருதுநகரில் புத்தக விழாக்கள் ஒரே தேதிகளில் துவங்கிடவுள்ளன ! And இரு இலக்குகளிலுமே நமது ஸ்டால்கள் இருந்திடும் ! So முகமதைத் தேடிய சோம்பேறி மலையின் பயணங்கள் முழுவீச்சில் துவங்கியாச்சு !! Wish us good luck folks !!

Bye all....have a beautiful Sunday ! See you around !