Powered By Blogger

Saturday, September 25, 2021

கடைசி க்வாட்டர் '21...!

 நண்பர்களே,

வணக்கம். செப்டெம்பரின் முக்கால்வாசி கடந்து சென்றிருக்க, ஆண்டின் கடைசிக் க்வாட்டர் நம் முன்னே !! ("கடைசிக் க்வாட்டர்" என்றவுடனே ஒரு சில பல்லடத்து இல்லங்களில் உஷ்ணக்கொதிப்பு அதிகமாயின் அதற்கு  கம்பெனி பொறுப்பாகிடாது !!)  ஆனால் கொதிப்புகள் எங்கெங்கே ; எதன் பொருட்டு ; எவ்விதம் இருப்பினுமே, அவற்றை சரி பண்ணும் ஆற்றல் கொண்ட ஒரு மனுஷன் இந்த அக்டொபரில் ஆஜராகத் தயாராகி வருகிறார் ! "TEX" என்ற பெயருக்கு பதில் சொல்லும் அந்த மஞ்சள் சட்டைக்காரர் போட்டிருக்கக்கூடிய ஓவர்கோட் இம்முறை (நமது அட்டைப்படத்தினில்) வேறு நிறத்தில் இருந்தாலுமே - அவர் காட்டிடவுள்ள ஜாலங்களில் மாற்றமே இருக்கப் போவதில்லை தான் ! இதோ - போன வருஷமே வந்திருக்க வேண்டிய அந்த 224 பக்க ஆல்பத்தின் அட்டைப்பட first look :


முன்னட்டை & பின்னட்டைகள் - ஒரிஜினல் சித்திரங்களே ; பின்னணி வண்ண சேர்க்கையினில் மட்டுமே மாற்றங்களுடன் ! And கதாசிரியர் மௌரோ போசெல்லி !! 

டெக்சின் கதைவரிசைகளின் மொத்தத்திற்கும் பொறுப்பேற்றுப் பயணித்து வரும் போசெல்லி - ஒவ்வொரு வாய்ப்பிலுமே 'தல' & டீமின் எல்லைகளை விரிவாக்கம் செய்வதில் முனைப்பாக இருப்பதை கொஞ்ச வருஷங்களாகவே பார்த்திருக்கிறோம் தான் ; and இந்த சாகசமும் அதற்கொரு ஊர்ஜிதமே ! மாமூலான அதே வன்மேற்குக்குள்ளும், புதுசு புதுசாய் களங்களை உருவாக்கி, ஏதேனும் வித்தியாசங்களைக் காட்டிடும் அவரது லாவகம் yet again on show !! ஆள் அரவமே இல்லாததொரு பேய் நகரில் துவங்கும் கதையினுள் எடிட்டிங்குக்கென இன்று காலை தான் புகுந்துள்ளேன் ; so அந்த ஆரம்பமே வாடிக்கையான டெக்ஸ் பாணிகளிலிருந்து விலகியிருப்பதைக் கவனிக்க முடிந்தது ! And 'தல' தலைகாட்டுவது பக்கம் 25 முதலே எனும் போது, அதற்கு முன்னமே கதைக்கான ஆடுகளத்தை அம்சமாய் போசெல்லி செட் பண்ணிட அவகாசம் கிட்டியுள்ளது ! ஓவியர் Alfonso Font நமக்குப் புதியவரே அல்ல தான் என்றாலும், அவரது சற்றே வித்தியாச பாணிக்குப் பழகிக் கொள்ள மட்டும் கொஞ்சம் நேரம் எடுக்கிறது ! Maybe ..just maybe சிவிடெல்லி போலான (நமக்கான) ஆதர்ஷ ஓவியர் யாரேனும் இங்கு பணியாற்றியிருப்பின் இன்னமும் பிரமாதமாக இருந்திருக்கக்கூடும் ! Anyways - ஆளே இல்லாத துவக்கத்திலிருந்து இதோ ஒரு பக்கம் ! கதைக்குள் நான் பயணிக்க ஒரு வண்டித் தொலைவு காத்துள்ளது தான் ; but so far so good !! நடப்பாண்டில் 'தல' அடித்துள்ள சிக்ஸர்களின் எண்ணிக்கையினை இதுவும் கூட்டிடுமென்ற நம்பிக்கையோடு ஆக்டொபரின் அடுத்த ஆசாமியின் பக்கமாய்ப் பார்வையினை ஓடச் செய்கிறேன் ! 

And அங்கே தென்படுவதோ பத்து கிலோ மீசையும், முப்பது கிலோ பாடியுமான நம்ம க்ளிப்டன் !! பிரிட்டிஷ் மகாராணியாரின் ஊழியத்தில், கடமை தவறாது வலம் வரும் இந்த கேரட் மண்டைக்காரர் - ஒரு 40 பக்க சாகசம் + 6 பக்க மினி சாகசம் என இம்முறை ரவுசு செய்கிறார் ! இங்கிலாந்தவர்களின் சற்றே வித்தியாசமான குணங்களையும் ; அவர்களது வறண்ட நகைச்சுவையுணர்வுகளையும் இந்த MI 5 முன்னாள் ஏஜெண்டின் மூலமாய் பகடி செய்வதே கதாசிரியரின் இலக்கு என்பதை இந்த ஆல்பமுமே உறுதி செய்கிறது ! என்ன - "கார்டூன்னாக்கா - பக்கத்துக்குப் பக்கம், பிரேமுக்கு பிரேம் எனக்கு கிச்சுகிச்சு மூட்டிக்கினே இருக்கணும் !!" என்பது நண்பர்களின் கணிசமான எதிர்பார்ப்பெனும் போது தான் க்ளிப்டன் உதை தின்ன நேரிட்டு விடுகிறது ! இவருமே ஜில் ஜோர்டனைப் போலொரு ஆக்ஷன் நாயகரே ; கார்ட்டூன் பாணியிலான கதை சொல்லலில் ! ஆனால் அங்கும் சரி, இங்கும் சரி - அந்தக் குசும்பான சித்திர ஸ்டைலில் நமது எதிர்பார்ப்புகள் குழம்பிப் போய்விடுகின்றன என்று தான் சொல்ல வேண்டும் ! கடந்த 6 ஆண்டுகளாய் ஆண்டுக்கொரு ஸ்லாட் என்று வண்டியோட்டி வரும் இந்த பிரிட்டிஷ்காரருக்கு இதுவொரு பரீட்சார்த்த வேளையே !!  கிடைத்திருக்கும் கடைசி வாய்ப்பினில் மேக் & ஜாக் பாணியில் சிக்ஸர் அடித்தாரெனில் ஜாலி ; இல்லையேல் காலி ! So இம்மாதம் இவரது ஆல்பத்தின் அலசல்களுக்கு (என்மட்டிலாவது) ஆர்வம் ஒரு மிடறு தூக்கலாக இருந்திடும் ! Her Majesty Save Clifton !!

இதோ - ஒரிஜினல் அட்டைப்படம், நமது கோகிலாவின் கைவண்ணத்தில் ! And உட்பக்க preview கூட :


 

இம்மாதத்தின் இதழ் # 3 பக்கமாக தொடரும் நாட்களில் தான் புகுந்திட வேண்டி வரும் என்பதால், "உலகத்தின் கடைசி நாள்" preview அடுத்த வாரப்பதிவினில்  ! 

Moving on, முத்துவின் ஆண்டுமலர் 50 பணிகளின் பெரும்பகுதி நிறைவுற்று விட்டாச்சு ! இன்னும் ஒரு 46 பக்க ஆல்பமும், filler pages-களுமே பாக்கி ! And அங்கே தான் உங்களின் பங்களிப்புகள் முக்கியமாகின்றன ! 

ஒரு மைல்கல் இதழினில் உங்களின் அடையாளங்கள் ஏதேனுமொரு விதத்தினில் இருந்தால் நன்றாக இருக்குமே என்று பட்டது எனக்கு ! FB பக்கங்களில் கூட 2 நாட்களுக்கு முன்பிலிருந்து தினமும் ஒரு குறும்பதிவு என்று போட்டு வருகிறேன் - அவரவரது துவக்க நாட்களின் இதழ்களின் சேகரிப்புகளின் போட்டோக்களைக் கோரி ! ஆனால் 1972 முதலே முத்து காமிக்ஸை வாசித்திருந்தால் மட்டுமே ஆச்சு என்றில்லை தான் ; நடுவே புகுந்தோர் ; சமீபமாய்ப் புகுந்தோருக்குமே இந்த இதழினில் நிச்சயம் இடமுண்டு ! Maybe .... மாவட்டவாரியாய் நண்பர்களின் முகவரிகளோடும், நமது இதழ்கள் சகிதமான போட்டோக்களோடுன் ஒரு வாசக டயரி போல எதையேனும் உருவாக்கிட முனைந்திடலாமா ?  அதன் சாதக-பாதகங்கள் என்னவாக இருக்குமோ ? Your thinking caps on ப்ளீஸ் ?

அப்புறம் வழக்கமான அந்த TOP இதழ்களின் தேர்வுகளும் இல்லாதொரு சிறப்பிதழ் இருக்க முடியுமா - என்ன ? இம்முறையோ - 50  வருஷங்களுக்கு மத்தியிலான சுமார் 455  இதழ்களிலிருந்து தேர்வு செய்திட வேண்டி வரும் என்பதால் உங்களின் TOP 10 இதழ்களினைத் தேர்வு செய்திடும் வாய்ப்பினை வழங்கிட நினைத்தேன் ! வரிசைக்கிரமமாய் 10 இதழ்களை லிஸ்ட் செய்திட சாத்தியப்பட்டாலும் ஓ.கே. ; இல்லாங்காட்டி TOP 3-ஐ மட்டும் வரிசைப்படுத்தி விட்டு, மீத 7 இதழ்களை எவ்விதக் குறிப்பிட்ட வரிசையிலும் இல்லாதே தெரிவிக்கவும் செய்யலாம் ! Needless to say - the most சுவாரஸ்ய அலசல்கள் & தேர்வுகள் ஆண்டுமலரினில் இடம்பிடித்திடும் ! எல்லா என்ட்ரிகளோடும் உங்களின் போட்டோக்கள் ப்ளீஸ் !

And for those who hadn't seen my brief post on நூற்றிப் பதினெட்டாவது "இரத்தப் படலம்" - இதோ ஒரு copy - paste மறுக்கா !! 

//உங்களுக்குத் தேவையான "இரத்தப் படலம்" பிரதிகளின் எண்ணிக்கையினைக் குறிப்பிட்டு lioncomics மின்னஞ்சலுக்கு மெயில் ஒன்றைத் தட்டி விடுங்கள் - முழு முகவரி + செல் நம்பருடன் ! அடுத்த 30 நாட்களுக்குள் எத்தனை பேருக்கு, என்ன தேவைப்படுகிறதென்பதை பார்த்தான பின்னே - என்ன செய்திட இயலுமென்பதை அறிவிக்கிறேன் ! மொத்தமே பத்தோ, இருபது பேரோ மட்டுமே தான் இந்தத் தேடலில் இருக்கும் பட்சத்தில், தற்சமயம் அரங்கேறி வரும் கூத்துக்களின் முழுப் பரிமாணமும் புரிந்து விடும் ! மாறாக, மெய்யாலுமே புதுசு புதுசாய் எக்கச்சக்க XIII காதலர்கள் எழுந்திருக்கும் பட்சத்தில், "உலகத் தொலைக்காட்சிகளில், முதன்முறையாக, செக்கு மாடு சிறப்பாய்ச் சுற்றி வருவதை" புத்தம் புது ஈஸ்ட்மேன் கலரில் இன்னொரு தபா வெள்ளித்திரையில் அரங்கேற்றிப்புடுவோம் ! //

இன்னும் 29 நாட்களின் அவகாசமுள்ளது guys - உங்களின் ஆர்வங்களைப் பதிவு செய்திட ! முப்பதாவது நாளினில் தேறியிருக்கும்  எண்ணிக்கையினைப் பொறுத்து, என்ன செய்யச் சாத்தியப்படுமென்று அறிவித்த கையோடு, project ஓ.கே. ஆகிடும் பட்சத்தில் சூட்டோடு சூடாய் பணம் அனுப்பிடக் கோரிடுவோம் ! So அதற்குத் தயாராக இருக்கும் பட்சத்தில் மட்டுமே ஆர்வங்களைப் பதிவிடுங்கள் - ப்ளீஸ் ! If all goes well - புராஜெக்ட் நடைமுறை காணும் நாளிலிருந்து 60 நாட்களுக்குள் புக்ஸ் உங்கள் கைகளில் இருந்திடும் ! இனி முழுக்கவே உங்கள் தரப்பில் தான் இந்த ஆட்டத்தின் தலைவிதியானது ! 

And group admins : உங்களின் க்ரூப்களுக்குள்ளும் தகவலைச் சுற்றில் விடுங்களேன் - ப்ளீஸ் ! 

விழி பிதுங்கப் பணிகள் காத்திருப்பதால் இப்போதைக்குக் கிளம்புகிறேன் guys Bye for now ! Have a fun weekend !! See you around !!

Friday, September 24, 2021

தெரியலீங்களே ?!

 நண்பர்களே,

வணக்கம். பலப்பல கழுதைங்கோ வயசான பிற்பாடுமே நிறைய விஷயங்கள் தெரியலீங்களே ?! ப்ளீஜ் எல்ப் !

தெரில # 1 : பெருமைப்பட்டுக்கிடணுமா - மூவாயிரத்துக்குக் குறைவான விலையிலான நமது புக், வெளியான ஒண்ணரை மாதத்திலேயே கூரையைப் பிய்க்கும்  விலைக்கு போணியாகிறதென்று ? 

தெரில # 2 : அல்லது - "வாசிப்பாது..... புண்ணாக்காவது ?!! சூட்டோடு சூடாய் கிடைக்கிறதை வாங்கிப் போட்டு பிசுனசை டெவலப் பண்ணுவியான்னு  ?!" தென்படும் அந்த அப்பட்ட வியாபார முனைப்பினைப் பார்த்து நொந்து கொள்ளணுமா ?

தெரில # 3 : ஒண்ணேகால் ஆண்டுகளாய் ஹோட்டல் வாசல்களில் நின்று யாசகம் கேட்போருக்கு  இணையாய் முன்பதிவுகளுக்கெனக் கெஞ்சிக் கூப்பாடு போட்டுக் கொண்டிருந்த வேளைகளிலெல்லாம் அரூபமாயிருந்த நண்பர்கள் இன்றைக்கு மூச்சிரைக்க புக் தேடி தெற்கேயும், வடக்கேயும் ஓட்டமெடுக்கும் மாயம் தான் என்னவோ ?

தெரில # 4 : யாருமே படிக்காத கதையே அல்ல தான் ; ஓட்டங்களே வாழ்க்கையாய் ஆகிப் போயுள்ள இன்றைய பொழுதினில், இதனைப் புதுசாய் ஒருவாட்டி படிக்கும் முனைப்பும், அவகாசமும் ஆண்டவனுக்கு இருந்தாலே அதிசயம் என்பதே யதார்த்தம் ! இருந்தாலும் 'அதனைச் சும்மானாச்சும் வீட்டு அலமாரிலே அடுக்கிப்பேனே' - என்ற ஆதங்கத்தினில்  இத்தனை தடுமாற்றம் கொள்ள வேணும் தானா - என்ன ? 

தெரில # 5 : சின்னஞ்சிறு வட்டமே ; மண்டை காட்டிக் கொடுக்காவிட்டாலும், கொண்டை காட்டிக் கொடுத்து விடும் என்பதே யதார்த்தம் ! ஆனாலும் "யார் என்ன நினைச்சுக்கிட்டாலும் பரவால்லே ; இது என் புக் - இது என் கல்லா !!" என்ற சிலரது எண்ணப்போக்கினை எவ்விதம் பார்ப்பதோ ? For sure - 'நான் காசு பாக்காங்காட்டி, வேற யாருமே இதிலே பாக்கலாகாது !' என்பதல்ல எனது பார்வை ! ஆனால் அபத்தங்களின் உச்சங்களை விலைகளாக்கி விட்டு, யார் வயிதெரிச்சலை வாங்கிக் கட்டிக்கிட்டாலுமே பரவால்லே ; என் கல்லா நிரம்பினால் போதுமென நினைக்கும் அளவிற்கு இங்கே பணம் பண்ணியுள்ள முன்அனுபவம் கண்களை மறைக்கின்றதோ ?

தெரில # 6 : Going forward - இது மாதிரியான பஞ்சாயத்துக்களிலேயே என் பொழுதுகளும், முயற்சிகளும் சுவாஹா ஆகின், பழசு எனும்  மாயைக்குள்ளேயே நானும் நித்தமும் சிக்கித் திரிவதாயின், அடுத்த 5 ஆண்டுகளுக்கு மேலாய் இங்கு நமக்கொரு எதிர்காலம் இருப்பதாய் யாருக்கேனும் தோன்றுகிறதா ? தாண்டிவிட்ட  தத்தம் பால்யங்களை மீட்டெடுக்கும் தேடல்களிலேயே இந்த காமிக்ஸ் வாசிப்பினை நீட்டிப்பதாயிருப்பின், என்னிடத்தினில் ஒரு ஜெராக்ஸ் கடை முதலாளி குந்தியிருந்தாலே போதுமாகி விடாதா ? 

தெரில # 7 : ஒரே ஒரு வருஷம்...பன்னிரெண்டே மாதங்களுக்கு...365 நாட்களுக்கு மட்டுமாவது, என்றைக்கோ ஊசிப் போய்விட்ட  உப்மாக்களை தேடும் படலத்துக்கு தற்காலிக முற்றுப்புள்ளி வைத்து விட்டு - நிஜங்களோடு கை குலுக்கத் தான் முயற்சிப்போமே - ப்ளீஸ் ? "இந்த மறுபதிப்பு போடுவியா ? அதை போடுவியா ?" என்ற கேள்விகளை நீங்கள் கேட்க ; நான் "இல்லீங்க" என்று சொல்ல, அன்றிரவே உள்ளாற இருந்து பதுக்கல் புக்ஸ் கொலைகார விலைகளில் வெளி வர ; அதற்கான கடுப்புகளையும் என்னிடமே ஏதோவொரு ரூபத்தில் நீங்கள் வெளிப்படுத்த ....... இந்தச் சங்கடச் சக்கரச் சுழற்சியினில் தொலைவது காமிக்ஸ் வளர்ச்சி & தழைப்பது க்ரே மார்க்கெட் கல்லாக்கள் என்பதைப்  புரிவது அத்தனை கடினம் தானா folks ? 

தெரில # 8 : ஒரேயொரு வருஷம் மட்டும் இந்தப் பழசை தலை முழுகி விட்டு, புதுசுக்குள் பயணித்துத் தான் பாருங்களேன் ? அதற்காக மறுபதிப்புகளே இல்லை என்று கதவைச் சாத்தச் சொல்லவில்லை ; ஏதேனும் ஆன்லைன் புக் பேர் ; ஆப்பாயில் புக் பேர் என்று ஆண்டுக்கு இரு முறைகளாவது நடத்தும் கட்டாயத்தினோடு, இந்த மறுபதிப்புகளை தோணாது நுழைத்து விட்டுப் போகிறேனே ? பழசுக்கென கண் மண் தெரியாது க்ரூப் க்ரூப்பாய்த் தேடித் திரிவதை ஒரேயொரு வருஷத்துக்கு மட்டுமே PAUSE பண்ணலாமே ? கொஞ்சமாய் நிதானம் நம் எல்லோருக்குமே நல்லதாகிடும் தானே ? 

தெரில # 9 : "இரத்தப் படலம்" இல்லாட்டி இந்த ஜென்ம சாபல்யம் சாத்தியமே அல்ல என்று எண்ணிடும் நண்பர்கள், இன்று முதலாய் ஒரேயொரு உதவி செய்திடுங்களேன் - ப்ளீஸ் : உங்களுக்குத் தேவையான "இரத்தப் படலம்" பிரதிகளின் எண்ணிக்கையினைக் குறிப்பிட்டு lioncomics மின்னஞ்சலுக்கு மெயில் ஒன்றைத் தட்டி விடுங்கள் - முழு முகவரி + செல் நம்பருடன் ! அடுத்த 30 நாட்களுக்குள் எத்தனை பேருக்கு, என்ன தேவைப்படுகிறதென்பதை பார்த்தான பின்னே - என்ன செய்திட இயலுமென்பதை அறிவிக்கிறேன் ! மொத்தமே பத்தோ, இருபது பேரோ மட்டுமே தான் இந்தத் தேடலில் இருக்கும் பட்சத்தில், தற்சமயம் அரங்கேறி வரும் கூத்துக்களின் முழுப் பரிமாணமும் புரிந்து விடும் ! மாறாக, மெய்யாலுமே புதுசு புதுசாய் எக்கச்சக்க XIII காதலர்கள் எழுந்திருக்கும் பட்சத்தில், "உலகத் தொலைக்காட்சிகளில், முதன்முறையாக, செக்கு மாடு சிறப்பாய்ச் சுற்றி வருவதை" புத்தம் புது ஈஸ்ட்மேன் கலரில் இன்னொரு தபா வெள்ளித்திரையில் அரங்கேற்றிப்புடுவோம் ! இன்று மாலை தான் பார்த்தேன் - ஜெக ஜோதியாய் ரூ.20000-க்கு ஒரு "இ.ப. combo pack" லிஸ்டிங்கை !! ஆமாங்கோ - இருபதினாயிரம் ஓவாயே தான் !!  கூடிய சீக்கிரத்தில் ஆளாளுக்கு கிட்னிக்களை அடமானம் வைக்கும் நிலை புலரும் முன்னமாய் ஏதேனும் செய்திடுவோம் !

And "இந்தவாட்டியும் மிஸ் பண்ணிட்டேன் !!" - என்று அதற்கடுத்த மூன்றாவாது மாசத்திலேயே காதில் தக்காளிச் சட்னி கசியச் செய்யும் குரல்கள் கேட்டால், மேற்படி வரிகளையே இன்னொருவாட்டி cut & paste போட்டு விடலாம் தான் ! Pheww !!

தெரில # 10 : மெய்யாலுமே கண்ணாடியில் என்னை நானே பார்த்துக் கொள்ளும் போது ஒரு பேப்பயல் தான் பிம்பத்தில் தென்படுகிறான் ! 'சிவனே' என்று சொகுசாய் அமர்ந்து கொண்டு, ஒரு டஜன்  டெக்ஸ் வில்லர் கலர் மறுபதிப்பு ; நாலு "இ.ப" editions ; நாலு டைகர் கலர் மறுபதிப்பு என்று போட்டு விட்டு, சில்லறையைப் பார்த்த கையோடு, கட்டையைக் கிடத்தாமல், ஏர்வாடி கேசாட்டம் ஓடு ஓடு என்று ஓடுவது ஏனென்ற கேள்வி இப்போதெல்லாம்  எழுகிறது !! ஆருக்காச்சும்  பதில் தெரிஞ்சா சொல்லுங்கண்ணா - ப்ளீஸ் !

நான் இப்போதைக்கு Clifton கூட குப்பை கொட்ட கிளம்பறேன் !! Bye all ! See you around !! 

And yes, 99 more days to go !!

Thursday, September 23, 2021

காத்திருக்கும் 100 !!

 நண்பர்களே,

வணக்கம். நூறே நாட்கள் எஞ்சியுள்ளன - புத்தாண்டுக்கும், நமது முத்து காமிக்சின் 50 வது ஆண்டுமலருக்கும் !! So எனக்கு நானே - "on the double" என்று சொல்லிக் கொண்டு உசைன் போல்ட்டுக்கு ஒண்ணு விட்ட பெரியப்பா மாதிரியாவது பணிகளில் வேகமெடுக்க, இந்த நாளையும் சரி, தொடரவுள்ள தொண்ணூற்றி ஒன்பதையும் பயன்படுத்திட நினைக்கின்றேன் ! எப்போதுமே கழுதைக்கு முன்னே இலக்கென்றொரு   கேரட் தொங்கும் போது, ஓட்டத்தில் ஒரு ஜூவாரஸ்யம் ஏறிடுவதை அனுபவத்தில் உணர்ந்தவன் நான் ! இம்முறையும் அதனில் மாற்றமிராதென்றே நம்புவோம் !

And most importantly, இந்த "100 DAYS TO GO" பயணத்தின் ஒவ்வொரு நொடியினிலும்  உங்கள் ஒவ்வொருத்தருக்குமே பங்கிருப்பதாய் எனக்குப்படுகிறது :  

 • இன்றைக்கு முதலாய் நமது Facebook பக்கத்தினிலும் ; Insta பக்கத்தினிலும் - அடுத்த 100 நாட்களுக்கு தினசரி, சின்னச் சின்னதாய், ஏதேனுமொரு முத்து காமிக்ஸ் இதழ் பற்றிய பதிவிருந்திடும் ! 
 • அவை  முந்தைய இதழ்கள் பற்றிய குட்டியூண்டு நினைவுப் பகிரல்களாய்  இருக்கலாம் ; உங்களுக்கான கேள்விகளாய் இருக்கலாம் ; ஏதேனும் quiz ஆக இருக்கலாம் ; அல்லது முன்னாட்களது சுவாரஸ்ய நிகழ்வு பற்றிய பதிவாகவும் இருக்கலாம் ! Whatever they are - they will be short n ' crisp !
 • அவற்றினில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கலந்து கொண்டு, உங்களின் "முத்து best moments" பற்றி ; முத்துவுடனான உங்களின் முதல் பரிச்சயம் பற்றி ; நாம் கோரிடும் கேள்விகளுக்கான பதில்கள் பற்றி ; உங்களிடமுள்ள "முத்து சேகரிப்பு" பற்றியெல்லாம் எழுதிடலாம் ! 
 • தவிர, இந்த மைல்கல் ஆண்டுமலருக்கு மெருகூட்ட ; காத்திருக்கும் ஆண்டுக்கு சிறப்பு சேர்க்க உங்களின் ஆலோசனைகளும் most welcome ! அவை சுவாரஸ்யமான முன்மொழிவுகளாய் இருந்து ; நடைமுறை சாத்தியங்களுக்குள்ளும் இருந்து, அனைவருக்கும் ஏற்புடையதாய் அமைந்திடும் பட்சத்தினில், நிச்சயமாய் நிறைவேற்றப்படும் ! 
 • இங்கே நமது ப்ளாகிலோ ; அல்லது FB பக்கத்தினிலோ நீங்கள் பதிவிடும் அழகான நினைவலைகள் ; அலசல்கள் ; போட்டோக்கள் - முத்து ஆண்டு மலர் 50-ல் இடம் பிடித்திடும் ! So ஒரு மறக்கவியலா தருணத்தினில் உங்களின் முத்திரைகளைப் பதிக்க காத்திருக்கும் இந்த 100 நாட்கள் பிரயோஜனப்படக்கூடும் !
 • உங்கள் கரம் பிடித்தபடிக்கே நாற்பத்தியொன்பதுச் சொச்ச ஆண்டுகளைக் கடந்திருக்கும் நமக்கு, அடுத்த 100 நாட்களின் ஓட்டத்தினில் உங்களின் வழிகாட்டல்கள் முன்னெப்போதையும் விட ரெம்பவே அவசியம் என்பேன் ! So அடுத்த 2400 மணி நேரங்களில் நமக்காகவும் சிந்திக்கக் கொஞ்சம் மெனெக்கெடுங்களேன் - ப்ளீஸ் folks ? 
To kickstart things - இதோ, நமது ஐம்பதாவது ஆண்டின் ஸ்பெஷல் லோகோவுக்கென இது வரைக்கும் நம்மவர்கள் போட்டுப் பார்த்து வரும் டிசைன்கள் !! இவை எதுவுமே இன்னமும் இறுதி பெற்றிருக்கவில்லை ; these are just some attempts !! குறிப்பாய் அந்த கிரீடம் போல "M" மேலே குந்தியிருப்பதை அகற்றச் சொல்லியுள்ளேன் !


 • இவற்றுள் ஏதேனும் அழகாய்த் தென்பட்டு, இன்னும் கொஞ்சம் மெருகூட்டினால் தேறிடும் என உங்களுக்குத் தோன்றும் பட்சத்தில் - அதனைச் சுட்டிக்காட்டிப்  பதிவிடலாம் ! 
அல்லது 
 • உங்களின் கைவண்ணங்களில் ஏதேனும் புதுசாய் உருவாக்கிட இயலுமெனில், sure - give it a try guys !! உங்களின் படைப்பு அழகாய் அமைந்து தேர்வாகிடும்  பட்சத்தினில் - 2022-ன் முழுமைக்கும் அது நமது இதழ்களினில் பயன்படுத்தப்படுவதோடு - ரூ.2000 சன்மானத்தினையும்  ஈட்டித் தந்திடும் உங்களுக்கு !  

And ஆங்காங்கே க்ரூப்களை ; FB பக்கங்களை நிர்வகித்து வரும் நண்பர்கள் நோக்கியோரு வேண்டுகோளும் : 

நமது தினசரிப் பதிவுகளில் உங்களுக்குத் பிடித்தவற்றைத் தூக்கி உங்களது பக்கங்களிலும் போட்டுத் தாக்கலாம் ! Ultimate aim - "சிவாஜி செத்துப் போயிட்டாரா ?" என்ற ரீதியில் தகவல் பரிமாற்றத்தில் இடைவெளி விழுந்து போயிடாது பார்த்துக் கொள்வதே !! 

இதோ - கண் முன்னேயே அதற்கான உதாரணத்தைப் பார்க்கிறோமே ?! ஒண்ணேகால் ஆண்டுகளாய் நாம் கூவிக் கூவி "இரத்தப் படலத்தை" விற்க தம் கட்டிக் கொண்டிருந்த போதெல்லாம் பிசியாக இருந்து விட்டு, இன்றைக்கு புக் வெளியான ஒண்ணேகால் மாதத்திலேயே கூசாது ரூ.10,000 கோரும் "ஆர்வலர்கள்" போடும் லிஸ்டிங்குகளை கண்கள் வியர்க்கப் பார்த்து வரும் நண்பர்களுக்கா பஞ்சம் ??  A piece of advice guys : இந்த "6000 ; 10000 ; multiple copies available" கூத்துக்களைப்  பார்த்து பணங்களை விரயம் செய்யாதீர்கள் ! நியாயமான விலைகளெனில் வாங்குங்கள் ; இல்லாத பட்சங்களில் சற்றே பொறுமை ப்ளீஸ் : இதெற்கென ஒரு ஏற்பாடு செய்து விடுவோம் !  So - hold on to your money !!

ஆங்காங்கே கையில் உள்ள பழைய இதழ்களை premium விலைகளுக்கு விற்பதில் எனக்கு எவ்வித ஆட்சேபணைகளும் லேது ; உலகெங்கும் காமிக்ஸ் சேகரிப்பின் ஒரு அங்கமது என்பது தெரிந்தது தானே ?! ஆனால் புக் வெளியான மறு மாதங்களிலேயே அபத்த விலைகளில் விற்பதற்கென்றே வாங்கிப் பதுக்கும் :தொழில்களை" செழித்திட அனுமதிப்பதென்பது - long term-ல்  ஒட்டு மொத்தமாய் காமிக்ஸ் மீதே வெறுப்பினை உருவாக்கக் கூடிய விஷப் பழக்கமாய்த் தோன்றுகிறது ! So this will not find favor with us ! 

அதே போல டெக்ஸ் வில்லர் இதழ்களையுமே அர்த்தம் கெட்ட விலைகளில்  வாங்கிடவும் வேகம் காட்டாதீர்கள் நண்பர்களே !   காத்திருக்கும் ஜனவரியில், சென்னைப் புத்தக விழாவோ ; நமது ஆன்லைன் புத்தக விழாவோ - ஏதோவொன்றின் பெயரைச் சொல்லி சமீப out of stock டெக்ஸ் இதழ்களை மறுக்கா ரெடி பண்ணிடவுள்ளோம் ! And அதன் முதல்கட்டமாய் நடப்பாண்டில் வெளியாகி, வெளியான வேகத்துக்கே சில பல வளைகளுக்குள் பதுங்க நேரிட்டிருக்கும் 3 இதழ்களுமே அக்டொபரின் மத்தியில் நம்மிடம் ஸ்டாக்கில் இருக்கும் ! And அவை முகவர்களுக்கும் அனுப்பிடப்படும் என்பதால், கடைகளிலேயே கூட நீங்கள் வாங்கிட வசதிப்படும் ! So relax please !!

"தொழில்" பாதிக்கும் முதல் நொடியினில் நம்மளுக்கு "முதல் மருவாதை" செய்திட ஆங்காங்கே முனைப்பு தலையெடுக்கும் என்பது தெரியாதில்லை தான்  ; ஆனால் என்றைக்கு நமக்குக் கிரீடம் காத்திருந்தது - இன்றைக்கு விளக்குமாற்றைக் கண்டு அஞ்சிட ? So கொஞ்சம் ப்ளீச்சிங் பவுடரையும், சானிடைசரையும் கையில் வைத்துக் கொண்டால் போச்சு - மு.ச.க்களை எதிர்நோக்கி !  

Bye all....செப்டெம்பரின் அலசல்கள் தொடரட்டும் &!

And மறவாதீர்கள் ப்ளீஸ் - நூறே நாட்கள் !! Just 100 days to go !!

And before I sign out : 😀😀😁😁

MEMES by : MKS !!

Saturday, September 18, 2021

ஒரு மாதத்தின் பின்னே...

 நண்பர்களே,

"அன்பே ஜெயம்" ! உங்களின் வோட்டுக்களின் கணிசமான பெரும்பான்மை Love All அணிக்கே விழுந்திருக்க, 'தல' புதியதொரு கலர் சாகஸத்தில் தலை காட்டுவது உறுதி என்றாகி விட்டது ! ஆனால் ஒரு twist இல்லாதில்லை - இந்த Save A Child ஸ்பெஷலின் திட்டமிடலில் ! நண்பர்களின் கொடைகள் ; இணையம் வழியாய் இளகிய மனம் கொண்டோரை தொடர்பு கொண்டு நிதி திரட்டும் பணிகள் - என ஒரு பக்கம் முயற்சிகள் நடந்து வர, பாபுவின் குழந்தைக்கு பூரண உதவி கிடைக்கும் வாய்ப்பொன்று இன்னொரு திக்கிலிருந்து எழுந்துள்ளது போலும் ! மாதா அமிர்தானந்தமயி மருத்துவமனையினில் குழந்தையினைப் பரிசீலனைகள் செய்து விட்டு, எல்லாம் ஓ.கே.வெனில், தொகுதி MLA-வின் நிதியிலிருந்து அறுவை சிகிச்சை செய்திட வாய்ப்பெழுந்துள்ளது என்று அறிகிறேன் ! இதன் சாத்தியங்கள் தொடரும் வாரத்தினில் தெரியும் ! குழந்தை பூரண நலம் பெறுவதே நம் அனைவருக்கும் பிரதானம் எனும் போது - அதற்கான வழி எங்கிருந்து பிறந்தாலென்ன ? So பாபு இந்த வாய்ப்பின் சாத்தியங்களைப் பின்தொடரும் வேளைதனில், இதர முயற்சிகள் திட்டமிட்டபடியே தொடர்ந்திடும் ! In case நமது பங்களிப்புகள் இல்லாமலேயே சிகிச்சை வெற்றி காணும் பட்சத்தில், நண்பர்களின் இதுவரையிலான நன்கொடைத் தொகைகள் பத்திரமாய்த் திரும்ப அனுப்பிடப்படும் ! 

ஆனால் ...ஆனால்...நாம தான் முன் வைச்ச காலை குரல்வளைக்குள் திணித்தாலும் திணிப்போமே தவிர்த்து, பின்னுக்கு வைக்க மாட்டோமல்லவா ? So திட்டமிட்ட நமது இந்த ஸ்பெஷல் இதழானது - நிச்சயம் வெளி வந்திடும் - "LOVE ALL ஸ்பெஷல்" என்ற பெயருடன் ! விலையோ ; வடிவமைப்போ இன்னமும் இறுதி கண்டிருக்கவில்லை என்பதால் - பாபுவின் தேவைகளுக்கோ ; தேவையின்மைகளுக்கோ ஏற்ப நமது திட்டமிடல்கள் அமைந்திடும் ! இப்போதைக்கு இதழின் இத்தாலிய மொழி to இங்கிலீஷ் மொழிபெயர்ப்புப் பணிகள் துவங்கியுள்ளன ! அந்தப் பணி நிறைவுறும்  பொழுதுக்குள் பாபுவுக்குமே ஒரு தெளிவு பிறந்திருக்கும் என்பதால், அதற்கேற்ப நாம் தீர்மானித்துக் கொள்வோம் ! So தல அதிரடிகள் + பின்புலத்தினில் ஒரு காதல் கச்சேரி என்ற இந்த இதழையும் நமது குறுகிய காலத்து ரேடாருக்குள் கொணர்ந்தாச்சு ; அதன் போக்கினை ; பிரயோஜனத்தினை இனி இறைவன் தீர்மானிக்கட்டும் !

இக்கட ஒரு கொசுறு நியூஸ் சொல்லாங்காட்டி எனக்கு மண்டை பணலாகிப் போகும் ! 'தல' பராக்குப் பார்க்க, புல்வெளியினில் லவ்ஸ் அரங்கேறுவது ஒரு பக்கமெனில், தலயே அந்த லவ்சினில் ஐக்கியமாகிடும் சேதி தெரியுமோ ? சமீபப் பதிவினில் நான் குறிப்பிட்டிருந்த அந்த டெக்ஸ் கிராபிக் நாவலான "ஸ்னேக்மேன்" இதழினிலிருந்து இது : 

Snakeman - Tex graphic novel

இங்கும் கதாசிரியர் மௌரோ போசெல்லி தான் ; மனுஷன் ஓசையின்றி கதாப்பாத்திரங்களுக்கு கூடுதலாய் layer-களை உருவாக்கி வருகிறாரென்றே எனக்குத் தோன்றுகிறது ! 

Moving on, செப்டெம்பர் இதழ்களின் உங்கள் அலசல்கள் தொடர்ந்திட வேண்டிய வேளை இது ! திடு திடுப்பென 'தல' இடையில் புக வேண்டிய அவசியம் நேராது போயிருப்பின், டிரெண்ட் பத்தியும், மேக் & ஜாக் பத்தியும் ; டெட்வுட் தம்பி பற்றியும் பேசிக் கொண்டிருந்திருப்போம் ! Anyways - இந்த கூடுதல் அவகாசத்தினில் இதழ்கள் நான்கையும் கொஞ்சமேனும் புரட்ட உங்களுக்கு அவகாசம் கிட்டியிருக்குமென்ற நம்பிக்கையினில், இந்த இதழ்களின் behind the scenes பக்கமாய் வண்டியை விடுகிறேன் !

டிரெண்ட் தான் துவக்கப் புள்ளி ! பொதுவாய் கொஞ்சம் அழுகாச்சி சாயல்கள் ; கொஞ்சம் தனிமைச் சாயல்கள் கொண்ட கதைகளென்றால் எனக்கு மண்டைக்குள் பல்ப் பிரகாசமாகிடுவதுண்டு !  இது போன்ற ஆல்பங்களில் கதாசிரியர்கள் பிழிந்திருக்கும் சோக ரசத்தை, பேனா பிடிக்கும் வேளைகளில் ஒண்ணு, ரெண்டு தக்காளிகளைக் கூடுதலாகப் போட்டு, நம்ம பங்குக்குப் பிழியோ, பிழி என்று பிழிந்து தள்ளலாமே என்ற எதிர்பார்ப்பு தான் அதன் பின்னணி ! And டிரெண்ட் அதற்கென்றே அளவெடுத்துச் செய்த பார்ட்டி எனும் போது, இந்த சிகப்புச் சட்டை மனுஷனைக் கண்டாலே எனக்கு குஷியாகிப் போகும் ! வாசிக்கும் உங்களுக்கும் அதே குஷியா ? இல்லே கிலியா ? என்பது வேறொரு கதை ! Anyways - இன்னமும் இரண்டே கதைகளே இத்தொடரினில் பாக்கி என்ற போது - இதனை கமான்சே பாணியிலான தொங்கலில் கிடத்திடலாகாதே - என்ற பயமே எனக்கு ! ஆனால் "பகலறியா பூமி" கதையினை சினிபுக்கில் வாசித்த போதே இந்த ஆல்பம் கூரையைப் பிய்க்கும் வெற்றியை ஈட்டாவிட்டாலும், நிச்சயம் குழிக்குள் ஆழ்த்தாதென்று புரிந்தது ! நமக்கு கொஞ்சமே கொஞ்சமாய்ப் பணியாற்றிய புது மொழிபெயர்ப்புப் பெண்மணியிடம் இதனை எழுத ஒப்படைத்திருந்தேன் ; and அவர் எழுதி அனுப்பிய  ஸ்கிரிப்ட் வழக்கம் போல் டைப்செட் செய்யப்பட்டு என்னை வந்து சேர்ந்தது ! குருவி தலையில் பெரும் சுமையை ஏற்றியிருந்ததை "புத்தம் புது பூமி வேண்டும்" ஆல்பத்தினில் உணர்ந்திருந்தேன் ; and இங்கும் அதே எண்ணமே மேலோங்கியது ! சகோதரிக்கு இன்னும் கணிசமாய்ப் பயிற்சி தேவை என்பது புரிந்ததால், சத்தமே போடாமல் பேனாவைத் தூக்கிக் கொண்டு 5 நாட்களைச் செலவிட்டேன் - முழுசையும் redo செய்திட ! எனது அவசரத்தில் புளியும், தக்காளியும் சித்தே கூடுதலாகிப் போச்சோ ? என்ற பயம் மேலோங்காமல் இருக்கவில்லை தான் ; ஆனால் இன்னும் நிறுத்தி, நிதானித்துப் பணியாற்ற நேரம் நஹி எனும் போது, நீங்கள் அஜீஸ் பன்ணிப்பீங்க - என்ற நம்பிக்கையில் பணிமுடித்தோம் ! And yes - அந்தச் சித்திர + கலரிங் ஜாலங்கள் எனது பிசகுகளைப் பூசி மெழுகி விடுமென்ற நம்பிக்கை கணிசமே ! இதுவரைக்குமான உங்களின் அலசல்களைப் பார்க்கும் போது - தப்பித்தது டிரெண்டின் தலை மட்டுமல்ல ; என்னதுமே என்று தென்படுகிறது ! But of course இன்னும் கணிசமான நண்பர்களின் அலசல்கள் காத்துள்ளன எனும் போது - இப்போவே பீப்பீ smurf ஆகிடல் சுகப்படாது தான் ! However உங்களின் இனி வரக்கூடிய விமர்சனங்கள் எவ்விதம் இருப்பினுமே, ஒரு விஷயம் ஊர்ஜிதம் கண்டுவிட்டுள்ளது - and அது தான் டிரெண்டின் (நம் மத்தியிலான) எதிர்காலம் ! 

சொல்லப் போனால் இந்த மாதத்தினில் 3 பேர்களது தலைவிதிகள் were on the line !! இந்த ஆல்பம் மட்டும் சொதப்பி இருப்பின், சிகப்புச் சட்டைக்காரர் ஆக்னெஸைக் கரம் பிடிக்கும் வைபவம் நிச்சயமாய் 2022-ல் நிகழ்ந்திராது - நம் மத்தியினிலாவது ! அட்டவணையினை அச்சுக்குக் கொண்டு செல்லாது நிறுத்தி வைத்திருந்ததன் முதல் காரணம் இவரே ! இப்போது உறுதியாகி விட்டாச்சு - 2022 எக்ஸ்பிரஸினில் ஒரு கண்ணால ஆல்பம் உண்டென்று !!

(மைண்ட் வாய்ஸ் : கார்சனுக்கு கபி கபி ; டெக்ஸுக்கு இக்ளியூண்டு ; அடுத்து டிரெண்டுக்கு கண்ணாலம், காட்சி - இன்னா நடக்குதுங்கோ இங்கே ? போற போக்கிலே நம்ம ஷெரீபுக்குக் கூட ஒரு நல்லது நடந்திடுமோ ? ஹோல்டான்...ஹோல்டான்....நான் குறிப்பிடுவது நம்ம ஷெரீப் டாக்புல்லை !! தப்பிதமா அர்த்தம் பண்ணிக்கிட்டு எங்கயாச்சும், யாராச்சும் குஷியில் கூரை வரைக்கும் குதிச்சுக் கூப்பாடு போட்டு கபாலத்துக்கு சேதம்  வரவழைச்சுக்கிட்டா அதுக்குக் கம்பெனி பொறுப்பேற்காது ! )

டெட்வுட் டிக் ! கொஞ்சம் நிறையவே பேசியாச்சு இந்த கெட்ட பையன் + நல்ல பையன் அவதார் பற்றி ! Oh yes - இங்கே கதாசிரியர் ரொம்பவே யதார்த்தமாய் கதையை நகர்த்தி இருந்தாலும், பார்க்க செம கெட்ட பயலாட்டம் தெரிந்த அந்த ஹீரோ ஒரு தெனாவட்டான டியுரங்கோவாய் இருப்பான் என்பதே கதைத்தேர்வின் போதான எனது அபிப்பிராயமாய் இருந்தது ! And இங்கே எனக்கு நேர்ந்த சிறு தயக்கமே - சொல்லிக் கொள்ளும் விதமாய் ஆக்ஷன் படலம் ஏதுமில்லையே என்பது தான் !  பயபுள்ளை யதார்த்தமாய் ஊரை விட்டு ஓடுறான் ; யதார்த்தமாய் புதர் மறைவில் குத்த வைச்சு மணம் பரப்பி வரும் சகக் கருப்பினனைப் பாக்குறான் ; கைகுலுக்கிக்காம சேர்ந்தே போறாங்க - அவ்வப்போது தத்துவமா பேசிண்டு ; போய்ப் பட்டாளத்தில் சேருறாங்க ; திங்குறாங்க ; ரோந்து போறாங்க ; செவ்விந்தியனுங்க கிட்டே சிக்கி சிதைஞ்சு போன பட்டாளத்தில் இவனுங்க மட்டுமே மிஞ்சுறாங்க, அப்புறமா சுபம்னு திரையைப் போடுறாங்க ! இதை நீங்கள் எவ்விதம் எடுத்துக் கொள்வீர்களோ ? என்ற சின்ன சந்தேகம் எனக்குள் புகுந்த போது - இந்தக் கதையின் பாணிக்கென பேனா பிடிப்பதுமே மூச்சுத் திணறச் செய்து கொண்டிருந்தது ! முத்து ஆண்டுமலரின் 2 வெவ்வேறு கதைகளுக்கென ஒரு பக்கம் ரெகுலர் பாணியினில் வேலைகள் ; அப்புறம் டெட்வுட் டிக் இன்னொரு பக்கம் இந்த கரடு முரடு தொனியினில்  - எனும் போது ஒரு ஸ்டைலிலிருந்து இன்னொன்றுக்குத் தாவிக் கொண்டே இருப்பது இல்லாத கேசத்தையும் கொட்டச் செய்து கொண்டிருந்தது ! So இந்த புது வரவினை நீங்கள் ஏற்றுக் கொள்வது குறித்த லேசான யோசனை எழுந்த முதல் நொடியிலே...."ஆமா...மா.. கேட்டுட்டு தான் தொடரணும் ; ரெண்டாவது அத்தியாய கதையை இன்னொரு புக்கா போட்டுக்கலாம் ; அட்டையில் ஸ்டிக்கரைப் போடுங்கப்பா !!" என்று கரடு முரடுக்கான பேனாவை மூடி வைத்து விட்டு ஜூட் விட்டேன் ! Maybe பணிகளின் அழுத்தம் இத்தனை இல்லாது ; சாவகாசமாய் இருக்க சாத்தியப்பட்டிருப்பின், டெட்வுட்டின் அத்தியாயம் இரண்டுமே இந்நேரம்  உங்களிடம் கரை சேர்ந்திருக்கக்கூடும் ! பெரிதாய் அதிரடிகள் செய்யாவிடினுமே இந்த நாயகனோடு ஒன்றிட நமக்குப் பெரிதாய் சிரமங்கள் இராதென்று நம்பினேன் தான் ; but still - லொட லொடவென பேசித் திரியும் இந்த ஆசாமிக்கு முறையான (வாசக) அங்கீகாரம் இருப்பின், much better & safer என்று தோன்றியது ! தவிர, செப்டெம்பரின் அத்தனை இதழ்களும் தற்செயலாய் என் பணிகளாகவே அமைந்து போக, கொஞ்சமாய் டர்ராகிப் போனது - எல்ல நாயகர்களின் பின்னேயும் எனது குரலாகவே ஒலிப்பது என்ன மாதிரியாய் இருக்குமோவென்று ! டெட்வுட்டின் கதையும் வாகாக 2 தனித்தனி அத்தியாயங்களாய் அமைந்து போக, கேக்கை நடுப்பாதியாய் அறுத்து, வேலையை சுலபமாக்கிக் கொண்டேன் ! Of course - இந்தப் புது வரவுக்கும் 2022-ல் இடமிருக்கும் - உங்களின் ஏகோபித்த thumbs up காரணமாய் ! Maybe ..just maybe - நீங்கள் இந்த ஆல்பத்தை மொத்தியிருந்தால், 'உலகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக" ஆன்லைன் புக் பேர் ரிலீஸ் என்ற ரூட்டில் போயிருக்க வேண்டி இருந்திருக்கும் ! இப்போது அவ்வித நோவுகள் நஹி !!

இம்மாதத்து "கழுத்துக்கு மேலே கத்தி # 3" கேஸ் - நமது மேக் & ஜாக் தான் ! ஏனோ தெரியலை ; கார்ட்டூன்களில் மட்டும்  உங்களின் நாடித் துடிப்புகளை என்னால் கணித்திட முடிய மாட்டேன்கிறது ! என் கண்ணுக்கு ரகளையான படைப்பாய்த் தென்பட்ட மதியில்லா மந்திரியை துபாய்க்கு தாண்டி ஒட்டகம் மேய்க்க அனுப்பிட நேர்ந்தது   ; ஆசை ஆசையாய் தேடிப் பிடிச்சாந்த Smurfs பசங்களை கள்ளத்தோணியிலே ஏத்தி ஜார்கண்ட் பக்கமா அனுப்ப வேண்டிப் போனது ; சுட்டிப் பொடியன் பென்னியும், சோன்பப்டி தாடித் தாத்தா லியனார்டோவும் வந்த ரயிலிலேயே ஊரைப் பார்த்துக் கிளம்ப டிக்கெட் போட்டுக் கொடுத்து விட்டோம் ! And  சிகாகோவில் வித்தியாசமான டிடெக்டிவ்களாய் சுற்றி வந்த இந்த மேக் & ஜாக் ஜோடியையுமே அரைபாடி லாரியில் ஏத்தி அரேபியா அனுப்புவது தான் திட்டமாக இருந்தது !! இம்மாதத்தினில் நீங்கள் 'பளிச்' என்று மார்க் போட்டிருப்பதால் அரைபாடி வண்டி டிரைவரை ஒரு டீ குடிச்சிட்டு வரச் சொல்லி வைத்துள்ளோம் ! மீத நண்பர்களும் 'thumbs up' தந்திடும் பட்சத்தில், இந்த நெட்டை + குட்டை ஜோடியினை லாரியிலிருந்து இறக்கி, நமது எக்ஸ்பிரஸில் ஏற்றிக்கலாம் ! Last call folks !! இதனில் பணியைப் பொறுத்தவரையிலும் no சிக்கல்ஸ் or விக்கல்ஸ் !! நேர்கோட்டுக் கதை ; ஆதர்ஷ கார்ட்டூன் ; and மாறுபட்ட பின்புலம் எனும் போது சிரமங்களுக்கு முகாந்திரங்களே இருக்கவில்லை ! ஆனால் போன 2 ஆல்பங்களின் அளவுக்கு இதனில் ஹ்யூமர் இல்லியே என்பது மட்டும் லைட்டாய் நெருடியது ; உங்களின் விமர்சனங்கள் எல்லாமே பாசிட்டிவாக அமைந்திட, கொஞ்சமாய் மூச்சு விட்டுக் கொண்டேன் ! 

ஜம்போ : "சித்திரமும் கொலைப் பழக்கம்" : 

உங்களின் அலசல்கள் 'சூப்பர்' என்றும் ; 'சொதப்பல்' என்றும் ஊசலாடுவதில் நிஜமாக எனக்கு ஆச்சர்யங்கள் இல்லை தான் ! இந்த ஆல்பத்தின் ப்ரிவியூ பார்த்தல் ; இதன் இன்டர்நெட் அலசல்கள் என்றெல்லாம் நான் செய்த சமயத்தில், இது ஒருவித dark க்ரைம் த்ரில்லர் என்பதாகவே எனக்குத் தோன்றியது ! அந்த நம்பிக்கையில் தான் இதனை ஜம்போவினில் ஸ்லாட் செய்திருந்தேன் ; இல்லாவிடின் இது லயன் கிராபிக் நாவலுக்குள் புகுந்திருக்கும் ! அந்த கதை சொல்லும் voice over பாணி சிலருக்குப் புதுசாகவும், சிலருக்கு மொக்கையாகவும் தென்படும் என்பது எழுதும் போதே புரிந்தது தான் ! தவிர, டப்பிக்குள் ஒரேயொரு பீட்சாவை வைத்தே பாரிஸ் போலீசுக்கு தண்ணி காட்டுவதை ; லாலா கடைகளிலும், இருட்டுக் கடைகளிலும் கலர் கலரான அல்வாக்கள் பல பார்த்த நாமெல்லாம் எவ்விதம் எடுத்துக் கொள்வோமோ ? என்ற கேள்விக்குறி எழாதில்லை தான் ! தவிர, கதையை இன்னும் கொஞ்சம் ட்ரிம் செய்து, இன்னுமொரு 20 பக்கங்கள் குறைவாய் உருவாக்கியிருப்பின் maybe இன்னமும் வீரியமாய் இருந்திருக்குமோ ? என்ற எண்ணமும் தலைதூக்கியது ! But still - அந்த intense களம் ; அந்தச் சித்திர பாணி ; புது யுக கலரிங் பாணி ; பாரிஸின் பின்புலம் என ரசிக்க விஷயங்கள் நிறைய தென்பட்டதால், கி.நா.பாணிகளின் ரசிகர்கள் நிச்சயமாய் இங்கே இதனைத் தாங்கிப் பிடிப்பார்கள் என்ற எனது நம்பிக்கை பொய்க்கவில்லை !! 

So நிறைய விதங்களில் விடைகள் பல தெரிந்து கொள்ள வழி ஏற்படுத்திய  செப்டெம்பரின் இதழ்கள் என்னளவிற்கு திருப்தியானவைகளே ! Doubtless - இதனில் மாற்றுக் கருத்துக்கள் இராது போகாது தான் ; but ரசனை சார்ந்த விஷயங்களின் பிரத்யேகமே அந்த பன்முகத்தன்மைகள் தானே ? Carry on with the அலசல்ஸ் folks !! அக்டொபரின் "கண்ணே கொலைமானே" அழைக்கின்றது என்னை ! Bye for now !! See you around !!

P.S : பழைய டெக்ஸுக்கு கொடி பிடித்திருந்த OLD IS GOLD அணியினரே - 'ஆணியே பிடுங்க வேணாம் !' என ஓட்டெடுப்பு சொல்லியதில் மனம் தளர வேணாம் ; குழந்தைக்கு சிகிச்சை நடந்து அவன் நலம் பெறட்டும் ; அதனைக் கொண்டாட ஒரு கலர் டெக்ஸ் மறுபதிப்பினை ரகளையாய் ரெடி பண்ணிடலாம் !! ஒரு நல்ல விஷயத்துக்கு மனமுவந்து உதவிட முன் வந்த நீங்கள் ஒவ்வொருவரும் நம் ஆதர்ஷங்களுக்கு உரியோரே ; so உங்கள் ரசனைகளுக்கும் மதிப்பின்றிப் போகாது ! Cheers !!

Wednesday, September 15, 2021

அவசரமாயொரு தேர் இழுப்போமா ?

 நண்பர்களே,

வணக்கம். செப்டெம்பரின் வண்டி "பெரிய தலக்கட்டு" இல்லாமலும் தடதடத்து வருவதைப் பார்க்கக் குஷியாக உள்ளது ! அமைதியாய் ஸ்கோர் செய்யும் டிரெண்ட் ஒருபக்கமெனில், பேசியே ஆளைக் கவிழ்க்க புதுவரவு டெட்வுட் டிக் இன்னொரு பக்கம் ! And சிகாகோவின் நெட்டை-குட்டை ஜோடியுமே இந்த தபா தேறி விடுவார்கள் என்ற நம்பிக்கை பிறக்கச் செய்கிறது உங்களின் இம்மாத மேக் & ஜாக் இதழுக்கான initial ரியாக்ஷன்ஸ் ! Of course - the jury's still out on "சித்திரமும் கொலைப் பழக்கம் ! " காத்திருப்போம் - தொடரும் நாட்களில் உங்களின் அலசல்கள் அக்கட சொல்லவுள்ள சேதி என்னவென்பதை !! எது எப்படியோ - ஒரு ஜேம்ஸ் பாண்ட் பாணியிலான உளவாளியோ, சைரன் அலறும் கார்களில் பறக்கும் டிடெக்டிவோ, மொட்டைப் பாலைவனத்தில் அதகளம் செய்யும் குதிரைக்கார நீதிக்காவலர்களோ இல்லாமலுமே கரை சேர மார்க்கம் இருப்பதை இம்மாதம் சுட்டிக் காட்டியிருப்பது நிச்சயமாய் எனக்கொரு highlight தான் !

"கரை சேரலைப்" பற்றிய தலைப்பினில் இருக்கும் போது, ஒரு மெய்யான, மகத்தான கரைசேரலை எதிர்நோக்கிக் காத்திருக்கும் ஒரு குடும்பத்தையும், இந்த நொடியில் அவர்கள் பட்டுக் கொண்டிருக்கக்கூடிய ரணங்களையும் எண்ணித் தடுமாறாது இருக்க இயலவில்லை ! தனது 3 வயதுப் பையன் மொஹமத் ஷஹாபானின் இருதய சிகிச்சைகளுக்கென அல்லாடிக் கொண்டிருக்கும் நமது பிளைசி பாபுவின் சிரமங்களைப் பற்றியே குறிப்பிடுகிறேன் என்பது புரிந்திருக்கும் ! தனது சுகவீனம் பற்றித் துளியும் அறிந்திருக்காமல், சராசரிக் குழந்தையாய் விளையாடிக்கொண்டிருக்கும் அந்தப் பிஞ்சைக் காப்பாற்றிட, இரண்டு கட்டங்களாய் நடந்திட வேண்டிய இதய சிகிச்சைகளுக்கென லட்சங்களில் பணம் அவசியமாகிறது ! இயன்ற மார்க்கங்களிலெல்லாம் பணம் திரட்ட நண்பர் பாபு முயற்சித்து வருவதும் ; இதன் பொருட்டு ஏற்கனவே crowdfunding மூலமாய் பணம் ஏற்பாடு செய்ய அமெரிக்காவிலிருக்கும் மஹிஜி முயற்சித்து வருவதும், வாட்சப் க்ரூப்களில் உள்ள அனைவருக்குமே தெரிந்திருக்கும் தான் ! அதே பாணியிலான crowd funding முயற்சியினை இங்கே இந்தியாவிலும் செய்திடச் சொல்லி வலியுறுத்தியிருந்தேன் என்றாலும், அத்தோடு ஒதுங்கி கொள்ள மனசு கேட்கவில்லை ! 

"ஒரே வாசகக் குடும்பம்" என்று ஒரு நூறு தடவை பீற்றிக் கொண்டு விட்டு, அந்தக் குடும்பத்தின் ஒரு அங்கம் இன்றைக்கு ஒரு மெய்யான நெருக்கடியில் அல்லாடித் தவிப்பதைப் பார்த்துக் கொண்டு வாளாவிருக்க ஒரு எடிட்டராகவும் முடியவில்லை ;  தகப்பனாயும் முடியவில்லை !  So நம் பங்குக்கு ஏதாச்சும் செய்தாக வேண்டுமே என்ற குடைச்சல் எனக்குள் ! 

And நமக்குத் தெரிந்த ஒரே விஷயம் இந்த 'பொம்ம புக்' தான் எனும் போது - பாபுவுக்கு உதவிட அதனைத் தவிர்த்து நமக்கேது வழி ? நீட்டி முழக்க  இது நேரமல்ல எனும் போது - நேரடியாய் விஷயத்துக்கு வருகிறேனே ? 

 • நம் பங்களிப்பாய் பாபுவின் குழந்தையின் சிகிச்சைக்கென ஒரு லட்சம்  ஏற்பாடு செய்வது நமது குறைந்த பட்ச இலக்கு ! 
 • And இதற்கென நன்கொடைகள் தந்திருக்கும் / தந்து வரும் நண்பர்களை இங்கும் நாம் உண்டியல் குலுக்கிச் சிரமங்களுக்கு ஆளாக்கிடப் போவதில்லை !
 • மாறாக - "Save A Child ஸ்பெஷல்" என்ற பெயரினில் தடாலடியாய்,  ஒரு ஸ்பெஷல் இதழினை முழு வண்ணத்தில், வழக்கத்தை விடவும் சற்றே கூடுதலான பிரிண்ட் ரன்னில் - அடுத்த சில வாரங்களுக்குள்ளாக களமிறக்கவுள்ளோம் !! 
 • முன்பதிவோ ; பின்பதிவோ அவசியமே இராது இதன் பொருட்டு ! இதழ் வெளியாகும் வேளையில் ஆன்லைன் லிஸ்டிங் செய்திடுவோம் !இயன்றோர் ஒரு பிரதியும், இன்னும் சற்றே கூடுதல் திறன் கொண்டோர் ஒன்றுக்கு மேற்பட்ட பிரதிகளையும் வாங்கி ஆதரித்தாலே போதும் தான் !! கூடுதல் பிரிண்ட்ரன் எனும் போது அதனை விரைவாய் விற்றிட உங்களின் multiple copies கொள்முதல் பெரிதும் உதவிடும் என்பதில் ரகசியம் ஏது ?
 • "கென்யா" ; "உயிரைத் தேடி" ; லக்கி லுக்  ; சில பல கிராபிக் நாவல்கள் ; சில மறுபதிப்புகள் - என கைவசம், கதைகளின் இருப்பு கணிசமாய் உள்ளது தான் !  ஆனால் "விற்பனை" என்று வரும் வேளையில், ஆயிரம் பாயசங்கள் கண்ட அசாத்தியன் டெக்ஸைத் தாண்டி சாதிக்கும் ஆற்றல் வேறு யாருக்குண்டு ? So இந்த முயற்சிக்கு டெக்ஸையே தேர்வு செய்வதே சாலச் சிறந்தது என்று எனக்குப்பட்டது ! And இது குறித்து ரொம்பவே ஸ்ட்ராங்காய் பரிந்துரை செய்திட்ட நண்பர் ராகவனின் அபிப்பிராயமும் அதுவே ! கலரில் - ஒரு டெக்ஸ் அதிரடி எனில் தெறிக்க விடாதா ? என்று அவர் முன்வைத்த வாதத்துக்கு பதிலில்லை என்னிடம் ! What  say guys ?
 • உங்களுக்கு நினைவிருக்கலாம் - மே மாதத்தின் லாக்டௌனின் போது நித்தமும் ஒரு பதிவிட்டு கூத்தடித்து வந்த நாட்களில் - டெக்சின் தொடரில் கலரில் ஒரு லவ்ஸ் இழையோடும் ஆக்ஷன் மேளா இருப்பதைப் பற்றிச் சொல்லியிருந்தேன் ! And அந்தக் கதையினை ஏற்கனவே வாங்கவும் செஞ்சாச்சு ! So இதனையே இங்கே நமது தேர்வாக்கிடலாம் ! 
 • அல்லது ஏதேனும் க்ளாஸிக் டெக்ஸ் மறுபதிப்பு தான் இதற்கு சுகப்படும்  எனில் - போனெல்லியின் கதவுகளை கோப்புகளுக்கென அவசரம் அவசரமாய்த் தட்ட வேண்டி வரும் ! In fact அந்தக் காரியம் ஏற்கனவே துவங்கவும் செய்து விட்டது ! மறுபதிப்பெனில் என் புஜங்களுக்கு கொஞ்சம் ஒய்வு கிட்டும் ; புதுசெனில் - "ஜெய் பாஹுபலி" தான் அடுத்த ஒரு வாரத்துக்காச்சும் !
 • கதைத் தேர்வை இறுதி செய்த கையோடு, பாக்கி வேலைகளை ஓரம் கட்டிவிட்டு இதனுள் புகுந்திட வேண்டி வரும் ! So ஒற்றை நாளின் அவகாசமே நமக்கு - புதுசா ? பழசா ? என்று  தீர்மானித்திட ! நாளை நள்ளிரவுக்குள் தீர்மானம் செய்றோம் ; இந்த ஸ்பெஷல் தேரை உடனே இழுக்க வடம் பிடிக்கிறோம் ! 
 • பழசே உங்கள் தேர்வெனில், "OLD GOLD" என்று மட்டும் பதிவிட்டால் போதும் - கதைத் தேர்வுகளை விலைகளுக்கேற்ப நான் பார்த்துக் கொள்வேன் ! புதுசே ஓகே ; லவ்ஸ் ஓகே எனில் - "LOVE ALL" என்று பின்னூட்டமிடுங்கள் ... போதும் !!
 • நிலவரத்தின் அவசரத்தினைக் கருத்தில் கொண்டும், இந்த ஸ்பெஷல் இதழ்  விற்பனை முனைகளில் பிசிறின்றிச் சாதிக்க வேண்டி வரும் என்பதை மனதில் கொண்டும் "மஞ்ச கலரே எனக்கு ஆகாது !!" என்று அபிப்ராயப்படுவோருமே இந்த ஒருமுறை கரம் கோர்க்கக் கோருகிறேன் guys ! உங்களின் தனிப்பட்ட விருப்பு-வெறுப்புகளை இந்த ஒற்றைமுறை ஓரம் கட்டிவிட்டு, ஒரு மனதாய் இந்த முயற்சிக்கு உறுதுணை நிற்க வேண்டி வரும் என்பதே இங்கே பிரதானம் ! 
 • இதன் நோக்கமே பணம் பண்ணுவது தான் எனும் போது, ஹார்ட் கவர் ; லொட்டு லொசுக்கென்ற ஆடம்பரங்கள் இராது & "நிலவொளியில் நரபலி" வந்த compact size-ல் இந்த ஒற்றை இதழ் மட்டும் இருந்திடும். Of course in art paper as usual ! ஆனால் இதழின் விலையோ நார்மலான டெக்ஸ் விலையினில் இருந்திடும் ! So இங்கே கிட்டக்கூடிய லாபமாய் ஒரு பாதியும், நமது பங்களிப்பு + சீனியர் எடிட்டரின் தனிப்பட்ட பங்களிப்பு - என ஒன்றிணைந்து லட்சத்துக்கு குறையாது  குழந்தைக்கென சென்றிடும் என்பதே திட்டமிடல் ! So இந்த ஒற்றை தபா மாத்திரம் உங்களின் அளவுகோல்களை சற்றே lenient ஆக்கிடக் கோருவேன் ! அதற்காக இந்த இதழ் எவ்விதத்திலும் சோடையாய் இராது guys ; அது எனது உத்திரவாதம்  !
 • இதழினை அறிவித்த கையோடு நாம் பிராமிஸ் செய்திருக்கும் தொகையினில் பாதியை (Rs.50,000) குழந்தையின் சிகிச்சைக்கென மருத்துவமனையின் பெயரில் D.D எடுத்து தயாராக வைத்திருப்போம் ! இதழ் வெளியாகிடும் வரைக்கும் வெறும் வாயால் வடை சுட்டுக் கொண்டிருக்க வேண்டாமே என ஜூனியர் எடிட்டர் அபிப்பிராயப்பட்டது எனக்கும் சரியெனப்பட்டது ! And மீதமுமே இம்மாத இறுதிக்குள் தயாராகிடும்  - ஜூனியரின் மேற்பார்வையினில் ! இப்போதெல்லாம் நமது வரவு-செலவுகளைப் பார்த்துக் கொள்வது ஜூனியரே என்பது இங்கே உபரித்தகவல் !
 • And of course இந்த இதழ் விற்றாலும், விற்காது முட்டை இட்டாலும், முழுத் தொகைக்கும் நாம் பொறுப்பு ! So "ஒரு லட்சம் இங்கே தயாரென்ற" நம்பிக்கையில் பாக்கிப் பணங்களை புரட்ட பாபுவும், நண்பர்களும்  முயற்சிகளைத் துரிதப்படுத்தலாம் !
இந்த சோதனையான நேரத்தில் நண்பர் பாபு தனித்தில்லை என்பதை அவருக்கு நினைவூட்டிடுவோம் ! And "கனவிலோ, கற்பனையிலோ எண்ணியிருப்பதை விடவும் ஜாஸ்தி விஷயங்கள்  பிரார்த்தனைகளின் பலனில், இந்த பூமியில் அரங்கேறி வருகின்றன !" என்ற வாசகத்தை இங்கே நமக்கு நாமேவும், பாபுவுக்கும் நினைவூட்டிக் கொள்வோம் guys !! நம்புவோம் ; பிரார்த்திப்போம் ; நிச்சயம் நல்லதே நடக்கும் ! God be with the child !! 


Bye for now ! See you around !

Friday, September 10, 2021

கொழுக்கட்டையோடு காமிக்ஸ் !

 நண்பர்களே,

வணக்கம். விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் ! கொழுக்கட்டைகளை கும்மியெடுக்கும் கையோடு, ஆத்தாக்குள்ள கூழ்பாக்கிகளை செட்டில் செய்திடவும் மெனெக்கெட்டால், இன்றைக்கே கூரியர்வாலாக்கள் உங்கள் இல்லக்கதவுகளைத் தட்டும் வாய்ப்புகள் இருக்கக்கூடும் என்பேன் ! Becos நேற்று மதியம் (9th.Sept) செப்டெம்பரின் இதழ்கள் நான்கும் இங்கிருந்து புறப்பட்டு விட்டன ! And நல்ல நாளைக்கே நாழிப் பால் கறக்கும் கூரியரார் - இந்த விடுமுறை வாரயிறுதிக்கென வெவ்வேறு ஆப்ஷன்கள் தந்துள்ளனர் : 

Option A : "புள்ளையார் சதுர்த்தியாச்சுங்களே ....டெலிவரி பண்ண மாட்டோம் ; வந்து வாங்கிக்கிட்டா குடுப்போம் !!"

Option B : "கிட்டக்க இருந்தா பட்டுவாடா பண்ணிப்புடுவோம் !"

Option C : "பச்ச்ச்ச் ....பண்டிகைங்க....!! நாளைக்கு டெலிவரியும் லேது ; புக்கிங்கும் பண்ணில்லா !!"

Option D : "இங்கேர்ந்து கிளம்பற லோடு - மதுரையிலே sorting ஆகுறதைப் பொறுத்துத் தான் சொல்ல முடியுமுங்க !!"

ஆக - பண்டிகை தினமான இன்னிக்கே கிடைக்கலாம் ; நாளைக்குக் கிடைக்கலாம் ;  திங்கள்கிழமை கூட கிடைக்கலாம் ; அட.....ஆயுதபூசைலாம் முடிஞ்சா பின்னே கூடக் கிடைக்கலாம் - என்பதே இங்கு சேகரிக்க சாத்தியப்பட்ட தகவல்கள் ! So மேற்கண்ட நான்கு ஆப்ஷன்களுள் உங்களுக்கு எது பொருந்துகிறது என்பதைப் பார்ப்பதே, அடுத்த சில நாட்களின் பொழுதுபோக்காய் இருக்கவுள்ளது ! எது எப்படியோ - தொடரும் தினங்களில் புக்ஸ் அனைவரையும் எட்டிடும் வரையிலும், நம்மாட்களின் நாக்குகள் தரையைக் கூட்டவுள்ளது மட்டும் உறுதி !

And இதோ, இம்மாதத்து இதழ்களுள் நீங்கள் இன்னமும் பார்த்திரா கார்ட்டூன் இதழின் ப்ரிவியூ :


ஒரிஜினல் அட்டைப்படம் ; பின்னணி வர்ணங்களில் மட்டுமே லேசான மாற்றங்களுடன் ! And உட்பக்கங்கள் வழக்கமான பளீர் '70s கலரிங்கில் ! In fact இம்முறை வழக்கத்தைக் காட்டிலும் கலர்கள் பளீரோ - பளீர் ! கதையைப் பொறுத்தவரைக்கும் வழக்கமான அந்த 1920's ரகளைகள் - இம்முறை கொஞ்சம் அழுத்தமான கதையோடு ! அப்புறம்  இந்த ஆல்பத்தின் தலைப்பு எத்தனை பொருத்தமென்பதையும் ; பன்னிரண்டு மாதங்களுக்கு முன்னமே இதனைத் தேர்வு செய்து பெயர்சூட்டிய பெரும் புலவர் முத்துவிசயனாரின் மேதாவிலாசத்தையும் - ஆல்பத்தை படித்து முடிக்கும் போது உணர்ந்திடுவீர்கள் ! அதை நினைவில் இருத்தியபடிக்கே இம்மாதத்தை நகற்ற முயன்றீர்களெனில் - தலை சன்னமாய்த் தப்பிக்கும் ! 

Becos - இம்மாதத்து ஜம்போ கொணரவுள்ள ரியாக்ஷன்ஸ் பலான பலான மாதிரியிருக்கக்கூடும் என்பது முடித்த இதழாய் அதனைக் கையில் ஏந்திப் புரட்டும் போது தான் புரிகிறது ! ஒரு ஆல்பத்தினில் பணியாற்றும் போதும், அது நிறைவுற்ற பொருளாய்க் கையில் தவழும் போதும், முற்றிலும் மாறுபட்ட  இரு வேறு பரிமாணங்களில் தென்படுவதைப் பல தடவைகள் பார்த்திருக்கிறேன் ; உணர்ந்திருக்கிறேன் ! And இதுவும் அத்தகையதொரு வேளையே ! Content ; கதையினை நகற்றியுள்ள விதம் ; கிளைக்கதைகள் என சகலத்திலுமே நிறைய கி.நா.ஜாடை இருப்பது இப்போது புரிகிறது ! ஆனால் இதனுள் பணி செய்த போதோ நிலவரமே வேறு ! சமீப பொழுதுகளின் அதே routine தான் - இன்னொரு தபா ! எடிட்டிங்குக்கென முந்தைய ஞாயிறன்று க(த்)தையைக் கையில் எடுத்து, மேலோட்டமாய்ப் படித்த போது தான் இதுவொரு க்ரைம் த்ரில்லர் என்பதைவிடவும், 'சைக்கோ-த்ரில்லர்' என்பதே சரிப்படுமென்பது புலனானது ! கதையின் நாயகன் வாய் திறந்து பேசுவதே ஆல்பத்தின் முழுமைக்கும் நஹி ! முழுக்க முழுக்கவே மைண்ட் வாய்ஸ் ; voiceover என்பதான பாணியிலேயே கதையினை நகற்றி இருந்ததைக் கவனித்தேன் ! And ரொம்பவே சம கால time frame-ல் கதை நிகழ்வதாய் இருக்க - என் முன்னிருந்த பக்கக் குவியலுக்கு, கருணையானந்தம் அவர்களின் க்ளாஸிக் நடை சுகப்படாது என்பதை தீர்மானித்த நொடியே புரிந்தது - மறுக்கா ஒரு சாக்கு ரேஸ் ஓட வேண்டியிருக்குமென்று ! To cut a tiring story short - ஒரிஜினலின் 10% ஸ்கிரிப்டை மாத்திரமே இருத்திக் கொண்டு, பாக்கி தொண்ணூறை அடுத்த 4 நாட்களுக்குள் புதிதாய் எழுதி ; புதிதாய் டைப்செட் செய்து ; அப்புறமாய் எடிட்டிங் செய்து - அச்சுக்குத் தயார் செய்வதற்குள் நமது டெஸ்பாட்ச் தேதி நெருங்கி விட்டிருந்தது ! So முழுமையாய் நிதானித்து, அவதானிக்க சாத்தியப்பட்டுள்ளது இன்றைக்கே - கையில் கலரில் மிளிரும் ஆல்பத்துடன் ! Anyways, கதையினில் இழையோடும் வன்முறையினையோ  ; அடல்ட்ஸ் ஒன்லி சமாச்சாரங்களையோ கைவைக்க எனக்கு அதிகாரம் தந்திருக்கவில்லை என்பதால் எனக்கு இன்னும் கொஞ்சம் அவகாசம் இருந்திருப்பினுமே, நான் பெருசாய் பிடுங்கியிருக்கக் கூடிய ஆணி எதுவும் இருந்திராது தான் ! இருந்தாலும் a word of caution people : please make sure this book stays with you ! 

பற்றாக்குறைக்கு ஒரே மாதத்தில் Deadwood Dick & இந்த ஜம்போ என அமைந்து போக, இரண்டிலுமே monologue பாணிகள் பிரதானமாயிருக்க, இரு கதைகளின் ஒரிஜினல் ஸ்கிரிப்ட்களுமே melodramatic ஆகயிருக்க, வழக்கமான வாசிப்பிலிருந்து இந்த 2 இதழ்களின் பாணிகள் சற்றே விலகி நிற்பதை உணர்ந்திடவுள்ளீர்கள் ! அதுவும் Deadwood Dick-ன் ஸ்கிரிப்ட் ரொம்பவே கோக்கு மாக்காக இருந்தாலும், அந்த நாயகரை நமக்கு அறிமுகம் செய்திட கதாசிரியர் எண்ணிடுவது இவ்விதமே என்று புரிந்தது ! So மூக்கை அவர் முன்னூறு சுற்று சுற்றித் தொட்டிருந்தால், நானும் அதே முன்னூறு சுற்றுக்கள் சுற்றியுள்ளேன் ! ஆகையால் இரு இதழ்களுக்கும் தர அவசியப்பட்டுள்ள டீரீட்மென்ட் நாம் பழகி விட்டிருக்கும் மாமூல்களிலிருந்து கொஞ்சம் வித்தியாசமானது ; and அதன் பொருட்டு எனக்குக் காத்துள்ள "ட்ரீட்மெண்ட்" எவ்விதமிருக்கும் என்பதை அறிவதே எனது அடுத்த 2 வாரங்களின் highlight ஆக இருக்கப் போவது உறுதி !! ஒரு முன்ஜாக்கிரதையாய், கண்ணில் தட்டப்படும் முட்டுச் சந்துக்களிலெல்லாம் ப்ளீச்சிங் பவுடரை தூவ  ஆள் அனுப்பியுள்ளேன் ; 'ஸ்வச் பாரத்' முக்கியமில்லீங்களா ? 

அப்புறம் கிளம்பும் முன்பாயொரு reminder !! காலாவதியாகி வரும் நமது கார்ட்டூன் அணிவகுப்பில் தற்சமயம் இடம் பிடித்து நிற்கும் மேக் & ஜாக் ஜோடிக்கு - இது இந்திய அணியினில் அஜின்கிய ரஹானேக்கான எதிர்காலம் மாதிரியான நிலவரம் ! இம்முறை சாதிக்காவிட்டால், சதமடிக்காவிட்டால் - வூட்டாண்ட குப்பை கொட்ட வேண்டிப் போகும் - ரஹானேவும், மேக் & ஜாக்கும் ! என்ன ஒரே வித்தியாசம் - அங்கே ரஹானேயின் இடத்தைக் கபளீகரம் செய்திட லைனாய் ஆட்டக்காரர்கள் வெயிட்டிங் ! இங்கே கண்ணுக்கு எட்டிய தூரம் வரைக்கும் ஈயோ ; காக்காயோ காணோம்  ! So கொஞ்சம் பார்த்து, அனுசரிச்சு மார்க் போடுங்க தர்ம துரைஸ் ; கார்டூனுங்கய்யா,,,,லெமூரியா கண்டமாட்டம் காணாது போய்விடக் கூடுமய்யா !! Fingers crossedங்கய்யா  !!

ஆன்லைன் லிஸ்டிங்ஸ் ரெடி folks !! இந்த வாரயிறுதியினில் ஆர்டர் செய்திட மறவாதீர்கள் ப்ளீஸ் :

https://lion-muthucomics.com/latest-releases/865-september-pack-2021.html

or

https://lioncomics.in/product/september-pack-2021/

Bye all....see you around ! Have a festive long weekend !

Saturday, September 04, 2021

ஒரு சில்லென்ற செப்டெம்பர் !

 நண்பர்களே,

வணக்கம். ஒவ்வொரு மாதமும் அமைந்திடும் கூட்டணிகள் எனக்கே அவ்வப்போது ஆச்சர்யமூட்டும் புதிர்களாகி விடுவதுண்டு ! And இந்த செப்டெம்பர் அதனில் சேர்த்தி ! 

ஓராண்டின் திட்டமிடல் சுலபமே அல்ல என்றால், அந்த அட்டவணையின் இதழ்களுள் எவற்றை எங்கெங்கு place பண்ணுவதென்ற கணக்கு அதற்கு அண்ணன் !  

*டெக்ஸ் இருக்கிற  மாசத்தில், ஏப்பை சாப்பையான பார்ட்டிகள் இருக்கலாகாது !

*ஓவரா கி.நா.பாணிக் கதைகளை ஒரே மாதத்தில் அண்ட விடப்படாது !

 *கார்ட்டூன்களை வருஷத்தின் முழுமைக்கும் நிரந்து விநியோகிக்கணும்  !

*விலை கூடின இதழ்களை வறட்சியான மாதங்களில் கண்ணில் காட்டப்படாது !

*இரண்டாம்நிலை நாயக நாயகியரின் வெளியீட்டு மாதங்களில், வெளிச்சத்தின் வட்டம் அவர்கள் பக்கம் சித்தே தூக்கலாய் இருக்கச் செய்ய வேணும் !

*புத்தக விழாக்களோடு இசைந்து செல்லும் மாதங்களில் கொஞ்சம் பெரிய பட்ஜெட் இதழ்களைக் களமிறக்க வேணும் ! 

*கதைகளோ ; மொழிபெயர்ப்போ தாமதப்படக்கூடிய சூழல்களில், அந்த இதழ்களை இயன்ற மட்டுக்குப் பின்னே தள்ளணும்.  

*சிறு தொடர்களின் முதல் இதழாக இருப்பின், அதனை வருஷத்தின் இறுதிக்குக் கொண்டு போய் விட்டு, தொடரும் வருஷ அட்டவணையினில் பாக்கி இதழ்களுக்கு ஜனவரி / பிப்ரவரியில் இடம் ஒதுக்கிடணும் !  

*ஆண்டுக்கொருவாட்டி மட்டுமே தலைகாட்டும் நாயகர்களெனில், நடப்பாண்டின் அவரது சாகசத்தை ஜனவரியிலும், அடுத்தாண்டில் டிசம்பரிலும் அமைத்தால், கிட்டத்தட்ட 23 மாத கேப் ஆகிப் போகுமெனும் போது, அந்த மெரி தப்புகளைச் செய்யப்படாது !

*ஒவ்வொரு மாசத்தின் மொத்த பட்ஜெட்டும் ஓரளவுக்கு சீராக இருக்க பண்ணனும் !

இது போல இன்னும் கணிசமான எழுதப்படா விதிகளுண்டு & அவற்றின் மத்தியில் தான் இதழ்களை இங்கும் அங்குமாய் பொருத்திட முயற்சிப்பேன் ! சில நேரங்களில் அந்த இங்கி-பிங்கி-பாங்கி ஆட்டம் பிரமாதமாய் செட் ஆகிடுவதும் உண்டு ; சில நேரங்களில் முரட்டு மொக்கையாகவும் சொதப்பிடுவதுண்டு ! லாஜிக்படி மேற்படி கண்டிஷன்களை பவுசாய் நான் போட்டுக்கிட்டாலும், பின்னே ஏதேனும் தயாரிப்பு சார்ந்த காரணங்களினாலோ ; டப்பு புரட்டுவதில் நேரும் தாமதங்களினாலோ - ஆட்டைத் தூக்கிக் குட்டியோடும் ; குட்டியைத் தூக்கிக் குடவுனிலும் போடும் கூத்துக்களும் நிகழ்வதுண்டு !  So அவ்விதமான தட்டாமாலைகளுக்குப் பின்னேயும் சில மாதங்களில் ஏதேனும் சுவாரஸ்யம் நிகழும் போது - 'அட' என்றிருக்கும் ! காத்திருக்கும் செப்டெம்பர் அந்த மாதிரியானதொரு 'அட' மாதம் என்பேன் - for a different reason !! 

இதழ்கள் நான்கும் உங்களை எட்டிப் பிடித்து, நீங்கள் அவற்றை வாசிக்க நேரம் ஒதுக்கி ; அப்பாலிக்கா அலசிட அவகாசமும் எடுத்துக் கொள்ளும் வரையிலும், 'சூப்பரா ? சொதப்பலா ?' என்று தெரிந்திருக்காது தான் ! Moreso becos இந்த மாத நாற்கூட்டணியினில் யாருமே மஞ்சச் சொக்காய் போட்டிருக்கவில்லை ; மூக்கைச் சேதமாக்கி இருக்கவுமில்லை ; சம்மர் அடித்த மண்டையோடு, ஒரு குவியல் பணத்தை முறைத்துப் பார்த்து நிற்கவுமில்லை எனும் போது - நானாய் எவ்விதக் கற்பனைகளுக்குள்ளும் குதிப்பது கூமுட்டைத்தனம் என்பது obvious ! ஆனால் நான் 'அட' போட்டது வேறொரு காரணத்தின் பொருட்டு ! அது இந்த மாத இதழ்களுக்குள் நான் பார்த்ததொரு தற்செயலான ஒற்றுமையினால் & விதிவசமாய் அந்த ஒற்றுமையினைச் சுமந்து நிற்கும் 3 இதழ்களும் ஒரே மாசத்தினில் அமைந்து போனதால் ! 

டிரெண்ட் ! இந்த சிகப்புச் சட்டை கனேடிய காவலர் எப்போதுமே அதிர்ந்து பேசாத ரகம் ! தானுண்டு ; தன் பனிவன வேலையுண்டு ; தன்னோட ஹட்ச் டாக் உண்டு ; ஆக்னெஸ் மீது 'இதயம்' முரளி ரகத்திலான காதலுண்டு - என்று சுற்றி வருபவர் ! So பொதுவாய் அவரது கதைகளில் சள சள வென்று பேசித் திரிய ஆட்கள் நிறைய இருப்பதில்லை ! And கதைகளின் பெரும்பான்மை நிகழ்வது ஆளரவிமில்லாத கனேடிய சிகரங்களில் எனும் போது - டிரெண்ட் தனக்குத் தானே பேசிக் கொள்வது போலவோ ; அல்லது voice over-ல் கதாசிரியரே விவரிப்பினைக் கையில் எடுத்திடுவது போலவோ -  ஒரு monologue பாணியிலேயே நிறையப் பகுதிகள் இருப்பதைப் பார்த்திருப்போம் !  நான் குறிப்பிடும் அந்த "ஒற்றுமை" இந்த monologue பாணி சார்ந்ததே !!

"பகலறியா பூமி" !!

டிரெண்ட் தொடரின் ஆல்பம் # 6 ! இன்னமும் இரண்டே கதைகளோடு "சுபம்" போடப்படவுள்ள தொடர் ! நீங்கள் மனசு வைத்தால் அடுத்த ஒன்றோ, இரண்டோ ஆண்டுகளில் கரை சேர்ந்திருப்பார் மனுஷன் !! மாமூலான அதே template-ல் பயணிக்கும் ஆல்பமே இது என்றாலும், இம்முறை இங்கே சுவாரஸ்யமும், சென்டிமென்ட்டும் ஒரு மிடறு தூக்கல் ! And எப்போதும் போலவே சித்திரங்களும் ; கலரிங்கும் வேற லெவெலில் மிரட்டுகின்றன இங்கே ! நவம்பரில் துவங்கி சில மாதங்களுக்கு நித்ய இரவாகவே இருக்கும் வட துருவத்தில் துவங்கிடும் கதையானது,  இருளிலேயே டிராவல் செய்து, சிறுகச் சிறுக கதிரவனைக் காணும் பிரதேசத்துக்கு நகரும் போது ஓவியரும், கலரிங் ஆர்டிஸ்ட்டும் செய்துள்ள ஜாலங்கள் ஷப்பா....breathtaking !!!! பொதுவாய் நாம் பார்த்திருக்க வாய்ப்பே இல்லாத சூழல்களில் அரங்கேறிடும் கதைக்களங்களை நாம் மேலோட்டமாய்த் தாண்டிடுவதுண்டு ! அங்கே ஜாகஜம் செய்யும் நாயகரைக் கவனிப்பதோடு ; கதையினை நோக்குவதோடு நகன்றிடுவோம் ! At least நான் அப்படித்தான் ! ஆனால் இம்முறையோ, எனது curiosity என்னைக் கொஞ்சமாய் மெனெக்கெடச் செய்தது !! மனுஷ நடமாட்டமே இருந்திரா ஒரு இருள் காட்டினில் வாழ்க்கை எவ்விதம் இருந்திருக்குமோ ? மருந்துக்கும் வெளிச்சத்தைப் பார்க்க முடியாத பொழுதுகள் என்ன மாதிரி இருந்திருக்குமோ ? என்று google புண்ணியத்தில் தேடிப் பார்த்தேன் ; பார்க்கப் பார்க்க - படிக்கப் படிக்க, திகைப்பாய் இருந்தது ! பத்து நிமிஷம் கரெண்ட் கட்டானால் - கலாமிட்டி ஜேனை ஒழுக்கசீலியாக்கும் ரகத்தில் வாயில் வார்த்தைகள் பிரவாகமெடுக்கும் நம்மையெல்லாம், நவம்பர் to ஜனவரி வரைக்கும் சூரியனே உதிக்காதெனும் அந்த மண்ணில் கொண்டு போய் விட்டால் என்ன செய்திருப்போமென்று கற்பனை பண்ணிக் கூடப் பார்க்க முடியவில்லை ! Anyways - அந்த மாதிரியானதொரு பின்புலத்தினை தேர்வு செய்த கதாசிரியருக்கு ஒரு சலாம் போட்டுவிட்டு, சுளீரென்று வெயிலடிக்கும் சிவகாசியின் யதார்த்தங்களுக்குத் திரும்பினேன் !! 

கவர் : நமது சென்னை ஓவியர் !

இந்த monologue பாணியில் கதை சொல்லும் யுக்தியானது போன வாரத்து டிரெய்லரில் இடம்பிடித்திருந்த டெட்வுட் டிக் ஆல்பத்துக்குமே பொருந்தும் ! அங்குமே கணிசமான இடங்களில் கதை மாந்தர்கள் தத்தம் அனுபவங்களை ; எண்ணங்களை தாமாய் விவரிப்பதைப் பார்த்திடவுள்ளோம் ! So that makes it # 2 for the month !!

And # 3 கூட உள்ளது - இம்மாதத்து ஜம்போ சீசன் 4-ன் உபயத்தில் !

"சித்திரமும் கொலைப்பழக்கம்" 

இன்னொரு பிரான்க்கோ-பெல்ஜியப் படைப்பு & படைப்பாளிகளின் சிபாரிசோடும் இது வந்திருப்பது - சன்னமான highlight ! ஒரு காது குடையும் தம்மாத்துண்டுச் சீட்டில்  இதன் கதையினை எழுதிடலாம் தான் ; உலக சினிமாக்களையெல்லாம் நெட்ப்லிக்சிலும், இன்ன பிற தளங்களிலும் போட்டுத் தாக்கி வரும் உங்களுக்கு இக்கட கதையினை யூகிப்பதில் பெருசாய் சிரமங்களும் இராது தான் ! ஆனால் காமிக்ஸ்சுக்குப் புதிதானதொரு நாயகர் ; பெரும்பான்மைக்கு monologue கதை சொல்லல் ; பாரிஸ் நகரின் பின்னணியில் அரங்கேறும் சடுகுடு ; கொஞ்சம் அடல்ட்ஸ் ஒன்லி சமாச்சாரம் ; க்ளைமாக்சில் மிரட்டும் வன்முறை - என்று ஒரு முழு நீள க்ரைம் கிராபிக் நாவலாய் இது வித்தியாசமாய்த் தெரிவதாக எனக்குப்பட்டது ! இங்கே நாயகனுக்கு பெயரே கிடையாது & அவர் வாயைத் திறந்து பேசுவதும் சொற்பம் ! So இம்மாதத்தின் monologue பாணி # 3-க்கு இவர் பிரதம வேட்பாளராக்கிடுவதில் வியப்பில்லை தான் ! இதோ - அட்டைப்படம் & சந்திரமுகி பாணியிலான க்ளைமாக்சின் டிரெய்லரும் !!

As always, வன்முறைக்கும், அடல்ட்ஸ் ஒன்லிக்கும் மண்டகப்படிகள் எனக்கு நிகழாது போனால் ஆச்சர்யம் கொள்வேன் ; இங்கே கதையின் அடித்தளத்தோடு அவையிரண்டும் கலந்திருப்பதால் கத்திரி தூக்க எனக்கு வழியிருக்கவில்லை ! Even otherwise - இதனில் கத்திரி போடவோ, தார் டப்பிக்களைக் கையிலெடுக்கவோ எனக்கு அனுமதி இருக்கவில்லை என்பது கூடுதல் தகவல் ! So படைத்தது போலவே பதிப்பு உங்களை எட்டிடவுள்ளது !


Before I sign out - ஒரு சங்கடமூட்டும் சேதி & ஒரு வேண்டுகோள் :

நமது நண்பர்  கோவை பிளைசி பாபுவின் 3 வயது மகனுக்கு வரும் செவ்வாய் கிழமையன்று (7/9/2021)  சிக்கலானதொரு இருதய அறுவைச் சிகிச்சையை எர்ணாகுளத்திலிருக்கும் Lisie hospital-ன் சிறப்பு மருத்துவர் குழுவொன்று மேற்கொள்ளயிருக்கிறது.  இந்த அறுவைச் சிகிச்சைக்கான செலவை கேரளஅரசு/மருத்துவமனை நிர்வாகமே ஏற்றுக்கொண்டு பாபுவின் பொருளாதாரச் சுமையை பெருமளவு குறைக்க இருக்கிறது. என்றாலும், மேற்கொண்டு ஆகும் மருந்து-மாத்திரைகளுக்கான செலவு, வாரக்கணக்கில் அங்கே தங்கியிருக்க ஆகும் செலவு போன்றவற்றைத் தாக்குப் பிடிக்கத் தற்போது பாபுவால் இயலாத நிலைமை!  கொரோனாவுக்கு பின்பான இந்தக் காலகட்டத்தில் கணிசமான வருமான இழப்பைச் சந்தித்துவரும் இவருக்கு நம்மால் இயன்ற சிறு பங்களிப்பும் பெரிதாய் உதவிடும் நண்பர்களே!

சிகிச்சை முடிந்து குழந்தை நலமோடு வீடு திரும்ப வேண்டிக்கொள்வோம் !

**** இயன்றவர்கள் இயன்றதை நேரடியாய்உதவிடுங்கள் நண்பர்களே ****  - please !!🙏 And of course - நமது பிரார்த்தனைகளும் அந்தக் குழந்தையுடன் இருக்கட்டுமே ? 

Babu
ICICI bank
Account number 001601550631
IFS Code ICIC0000016
Coimbatore Branch

GPAY : 9345758702

Moving on to slightly brighter topics - ஆகஸ்டின் ஆன்லைன் புத்தக விழாவின் உபயத்தில் நமது நெடுங்கால tenant ஆன லார்கோ வின்ச்சின் சில இதழ்கள் காலியாகி விட்டுள்ளன ! கோடீஸ்வரக் கோமகனாக இருந்தாலுமே, மனுஷன் கிட்டத்தட்ட ஆறேழு வருஷங்களாய் வாடகை கூடத் தராது நம் கிட்டங்கியின் ஒரு மூலையைத் தனதாக்கியிருந்தார் ! லேசாயொரு பெருமூச்சு விட்டுக் கொள்கிறேன் ! And நமது ப்ளூ ஜீன்ஸ் பில்லியனரின் புதியதொரு ஆல்பம் காத்திருக்கும் நவம்பரில் வெளியாகிட உள்ளதென்பது இங்கே கூடுதல் தகவல் ! ஏற்கனவே நாம் முயற்சித்திரா ஒரு (புது) டபுள் ஆல்பம் இடையே உள்ளது தான் ; ஆனால் அதனில் சட்டையைக் கிழிக்க தம்மின்றி ஓரம் கட்டி விட்டிருந்தோம் ! Maybe இந்தப் புது வரவு கொஞ்சம் மிதமாய் சிண்டைப் பிய்க்க செய்யும் பாணியில் இருப்பின் - 2023 அட்டவணையில் பில்லியனரின் மறுவருகை இருக்கக்கூடும் !!

ஒரு பெரிய நாயகரிடமிருந்து இன்னொரு மெகா நாயகருக்குத் தாவிடுவோமா ? அவர் நம் 'தல'யன்றி வேறு யாராக இருக்க முடியும் ? இங்கே ஒரு மாசத்தில் ஒரேயொரு டெக்ஸ் இதழ் கூடுதலாய் வந்து விட்டாலே கூட ரவுசுகள் செமையாய்க் களை காட்டிடும் வேளையினில் - இத்தாலியில் போனெல்லி சூப்பர் TEX என்ற பெயரில் ஒரு மாதாந்திர 144 பக்க கலர் வரிசையினை அறிவித்துள்ளனர் ! And அதன் முதல் இதழில் நாம் ஏற்கனவே ரசித்துள்ள "ஓக்லஹோமா" ஆல்பத்தின் முதல் பாதி - வண்ணத்தில் வெளியாகிறது ! தொடரவுள்ள பொழுதுகளில் இதனில் கலர் மறுபதிப்புகள் மட்டுமே இடம் பிடித்திடுமா ? அல்லது புதுப் படைப்புகளும் ஆஜராகிடுமா ? என்பது தெரிய வரும் !

அப்புறம் இது போன மாதம் கலரில் மெகா சைசில் வெளிவந்துள்ளதொரு 52 பக்க கலர் டெக்ஸ் நாவல் !!! 

அதே போல, இதழ் # 200-ல் மங்களம் கண்டிருந்த நமது CID ராபின் தொடருக்கும் போனெல்லி ஒரு புதுத் துவக்கம் தந்துள்ளனர் ! And அந்த முதல் இதழுடன் ஒரு New York Police பேட்ஜ் போல ஏதோவொன்று தருகிறார்களாம் !! கலக்கிறார்கள் !!

செப்டெம்பரின் 3 கலர் இதழ்களுள் இரண்டு அச்சாகியாச்சு & பாக்கி 1 & 1 black & white இதழ் திங்களன்று அச்சுக்குச் செல்லும் ! So அடுத்த சில நாட்களில், பைண்டிங் நிலவரத்தைப் பார்த்த கையோடு டெஸ்பாட்ச் செய்யும் தேதி பற்றிச் சொல்லிடுவேன் ! இப்போதைக்கு ஒன்றன் பின் ஒன்றாய் அணிவகுத்து நிற்கும் முத்து ஆண்டுமலர் 50 சார்ந்த பணிகளினைத் தொடர்ந்திடக் கிளம்புகிறேன் guys !! 

 Bye all....see you around ! Have a cool sunday !