Powered By Blogger

Saturday, September 25, 2021

கடைசி க்வாட்டர் '21...!

 நண்பர்களே,

வணக்கம். செப்டெம்பரின் முக்கால்வாசி கடந்து சென்றிருக்க, ஆண்டின் கடைசிக் க்வாட்டர் நம் முன்னே !! ("கடைசிக் க்வாட்டர்" என்றவுடனே ஒரு சில பல்லடத்து இல்லங்களில் உஷ்ணக்கொதிப்பு அதிகமாயின் அதற்கு  கம்பெனி பொறுப்பாகிடாது !!)  ஆனால் கொதிப்புகள் எங்கெங்கே ; எதன் பொருட்டு ; எவ்விதம் இருப்பினுமே, அவற்றை சரி பண்ணும் ஆற்றல் கொண்ட ஒரு மனுஷன் இந்த அக்டொபரில் ஆஜராகத் தயாராகி வருகிறார் ! "TEX" என்ற பெயருக்கு பதில் சொல்லும் அந்த மஞ்சள் சட்டைக்காரர் போட்டிருக்கக்கூடிய ஓவர்கோட் இம்முறை (நமது அட்டைப்படத்தினில்) வேறு நிறத்தில் இருந்தாலுமே - அவர் காட்டிடவுள்ள ஜாலங்களில் மாற்றமே இருக்கப் போவதில்லை தான் ! இதோ - போன வருஷமே வந்திருக்க வேண்டிய அந்த 224 பக்க ஆல்பத்தின் அட்டைப்பட first look :


முன்னட்டை & பின்னட்டைகள் - ஒரிஜினல் சித்திரங்களே ; பின்னணி வண்ண சேர்க்கையினில் மட்டுமே மாற்றங்களுடன் ! And கதாசிரியர் மௌரோ போசெல்லி !! 

டெக்சின் கதைவரிசைகளின் மொத்தத்திற்கும் பொறுப்பேற்றுப் பயணித்து வரும் போசெல்லி - ஒவ்வொரு வாய்ப்பிலுமே 'தல' & டீமின் எல்லைகளை விரிவாக்கம் செய்வதில் முனைப்பாக இருப்பதை கொஞ்ச வருஷங்களாகவே பார்த்திருக்கிறோம் தான் ; and இந்த சாகசமும் அதற்கொரு ஊர்ஜிதமே ! மாமூலான அதே வன்மேற்குக்குள்ளும், புதுசு புதுசாய் களங்களை உருவாக்கி, ஏதேனும் வித்தியாசங்களைக் காட்டிடும் அவரது லாவகம் yet again on show !! ஆள் அரவமே இல்லாததொரு பேய் நகரில் துவங்கும் கதையினுள் எடிட்டிங்குக்கென இன்று காலை தான் புகுந்துள்ளேன் ; so அந்த ஆரம்பமே வாடிக்கையான டெக்ஸ் பாணிகளிலிருந்து விலகியிருப்பதைக் கவனிக்க முடிந்தது ! And 'தல' தலைகாட்டுவது பக்கம் 25 முதலே எனும் போது, அதற்கு முன்னமே கதைக்கான ஆடுகளத்தை அம்சமாய் போசெல்லி செட் பண்ணிட அவகாசம் கிட்டியுள்ளது ! ஓவியர் Alfonso Font நமக்குப் புதியவரே அல்ல தான் என்றாலும், அவரது சற்றே வித்தியாச பாணிக்குப் பழகிக் கொள்ள மட்டும் கொஞ்சம் நேரம் எடுக்கிறது ! Maybe ..just maybe சிவிடெல்லி போலான (நமக்கான) ஆதர்ஷ ஓவியர் யாரேனும் இங்கு பணியாற்றியிருப்பின் இன்னமும் பிரமாதமாக இருந்திருக்கக்கூடும் ! Anyways - ஆளே இல்லாத துவக்கத்திலிருந்து இதோ ஒரு பக்கம் ! கதைக்குள் நான் பயணிக்க ஒரு வண்டித் தொலைவு காத்துள்ளது தான் ; but so far so good !! நடப்பாண்டில் 'தல' அடித்துள்ள சிக்ஸர்களின் எண்ணிக்கையினை இதுவும் கூட்டிடுமென்ற நம்பிக்கையோடு ஆக்டொபரின் அடுத்த ஆசாமியின் பக்கமாய்ப் பார்வையினை ஓடச் செய்கிறேன் ! 

And அங்கே தென்படுவதோ பத்து கிலோ மீசையும், முப்பது கிலோ பாடியுமான நம்ம க்ளிப்டன் !! பிரிட்டிஷ் மகாராணியாரின் ஊழியத்தில், கடமை தவறாது வலம் வரும் இந்த கேரட் மண்டைக்காரர் - ஒரு 40 பக்க சாகசம் + 6 பக்க மினி சாகசம் என இம்முறை ரவுசு செய்கிறார் ! இங்கிலாந்தவர்களின் சற்றே வித்தியாசமான குணங்களையும் ; அவர்களது வறண்ட நகைச்சுவையுணர்வுகளையும் இந்த MI 5 முன்னாள் ஏஜெண்டின் மூலமாய் பகடி செய்வதே கதாசிரியரின் இலக்கு என்பதை இந்த ஆல்பமுமே உறுதி செய்கிறது ! என்ன - "கார்டூன்னாக்கா - பக்கத்துக்குப் பக்கம், பிரேமுக்கு பிரேம் எனக்கு கிச்சுகிச்சு மூட்டிக்கினே இருக்கணும் !!" என்பது நண்பர்களின் கணிசமான எதிர்பார்ப்பெனும் போது தான் க்ளிப்டன் உதை தின்ன நேரிட்டு விடுகிறது ! இவருமே ஜில் ஜோர்டனைப் போலொரு ஆக்ஷன் நாயகரே ; கார்ட்டூன் பாணியிலான கதை சொல்லலில் ! ஆனால் அங்கும் சரி, இங்கும் சரி - அந்தக் குசும்பான சித்திர ஸ்டைலில் நமது எதிர்பார்ப்புகள் குழம்பிப் போய்விடுகின்றன என்று தான் சொல்ல வேண்டும் ! கடந்த 6 ஆண்டுகளாய் ஆண்டுக்கொரு ஸ்லாட் என்று வண்டியோட்டி வரும் இந்த பிரிட்டிஷ்காரருக்கு இதுவொரு பரீட்சார்த்த வேளையே !!  கிடைத்திருக்கும் கடைசி வாய்ப்பினில் மேக் & ஜாக் பாணியில் சிக்ஸர் அடித்தாரெனில் ஜாலி ; இல்லையேல் காலி ! So இம்மாதம் இவரது ஆல்பத்தின் அலசல்களுக்கு (என்மட்டிலாவது) ஆர்வம் ஒரு மிடறு தூக்கலாக இருந்திடும் ! Her Majesty Save Clifton !!

இதோ - ஒரிஜினல் அட்டைப்படம், நமது கோகிலாவின் கைவண்ணத்தில் ! And உட்பக்க preview கூட :


 

இம்மாதத்தின் இதழ் # 3 பக்கமாக தொடரும் நாட்களில் தான் புகுந்திட வேண்டி வரும் என்பதால், "உலகத்தின் கடைசி நாள்" preview அடுத்த வாரப்பதிவினில்  ! 

Moving on, முத்துவின் ஆண்டுமலர் 50 பணிகளின் பெரும்பகுதி நிறைவுற்று விட்டாச்சு ! இன்னும் ஒரு 46 பக்க ஆல்பமும், filler pages-களுமே பாக்கி ! And அங்கே தான் உங்களின் பங்களிப்புகள் முக்கியமாகின்றன ! 

ஒரு மைல்கல் இதழினில் உங்களின் அடையாளங்கள் ஏதேனுமொரு விதத்தினில் இருந்தால் நன்றாக இருக்குமே என்று பட்டது எனக்கு ! FB பக்கங்களில் கூட 2 நாட்களுக்கு முன்பிலிருந்து தினமும் ஒரு குறும்பதிவு என்று போட்டு வருகிறேன் - அவரவரது துவக்க நாட்களின் இதழ்களின் சேகரிப்புகளின் போட்டோக்களைக் கோரி ! ஆனால் 1972 முதலே முத்து காமிக்ஸை வாசித்திருந்தால் மட்டுமே ஆச்சு என்றில்லை தான் ; நடுவே புகுந்தோர் ; சமீபமாய்ப் புகுந்தோருக்குமே இந்த இதழினில் நிச்சயம் இடமுண்டு ! Maybe .... மாவட்டவாரியாய் நண்பர்களின் முகவரிகளோடும், நமது இதழ்கள் சகிதமான போட்டோக்களோடுன் ஒரு வாசக டயரி போல எதையேனும் உருவாக்கிட முனைந்திடலாமா ?  அதன் சாதக-பாதகங்கள் என்னவாக இருக்குமோ ? Your thinking caps on ப்ளீஸ் ?

அப்புறம் வழக்கமான அந்த TOP இதழ்களின் தேர்வுகளும் இல்லாதொரு சிறப்பிதழ் இருக்க முடியுமா - என்ன ? இம்முறையோ - 50  வருஷங்களுக்கு மத்தியிலான சுமார் 455  இதழ்களிலிருந்து தேர்வு செய்திட வேண்டி வரும் என்பதால் உங்களின் TOP 10 இதழ்களினைத் தேர்வு செய்திடும் வாய்ப்பினை வழங்கிட நினைத்தேன் ! வரிசைக்கிரமமாய் 10 இதழ்களை லிஸ்ட் செய்திட சாத்தியப்பட்டாலும் ஓ.கே. ; இல்லாங்காட்டி TOP 3-ஐ மட்டும் வரிசைப்படுத்தி விட்டு, மீத 7 இதழ்களை எவ்விதக் குறிப்பிட்ட வரிசையிலும் இல்லாதே தெரிவிக்கவும் செய்யலாம் ! Needless to say - the most சுவாரஸ்ய அலசல்கள் & தேர்வுகள் ஆண்டுமலரினில் இடம்பிடித்திடும் ! எல்லா என்ட்ரிகளோடும் உங்களின் போட்டோக்கள் ப்ளீஸ் !

And for those who hadn't seen my brief post on நூற்றிப் பதினெட்டாவது "இரத்தப் படலம்" - இதோ ஒரு copy - paste மறுக்கா !! 

//உங்களுக்குத் தேவையான "இரத்தப் படலம்" பிரதிகளின் எண்ணிக்கையினைக் குறிப்பிட்டு lioncomics மின்னஞ்சலுக்கு மெயில் ஒன்றைத் தட்டி விடுங்கள் - முழு முகவரி + செல் நம்பருடன் ! அடுத்த 30 நாட்களுக்குள் எத்தனை பேருக்கு, என்ன தேவைப்படுகிறதென்பதை பார்த்தான பின்னே - என்ன செய்திட இயலுமென்பதை அறிவிக்கிறேன் ! மொத்தமே பத்தோ, இருபது பேரோ மட்டுமே தான் இந்தத் தேடலில் இருக்கும் பட்சத்தில், தற்சமயம் அரங்கேறி வரும் கூத்துக்களின் முழுப் பரிமாணமும் புரிந்து விடும் ! மாறாக, மெய்யாலுமே புதுசு புதுசாய் எக்கச்சக்க XIII காதலர்கள் எழுந்திருக்கும் பட்சத்தில், "உலகத் தொலைக்காட்சிகளில், முதன்முறையாக, செக்கு மாடு சிறப்பாய்ச் சுற்றி வருவதை" புத்தம் புது ஈஸ்ட்மேன் கலரில் இன்னொரு தபா வெள்ளித்திரையில் அரங்கேற்றிப்புடுவோம் ! //

இன்னும் 29 நாட்களின் அவகாசமுள்ளது guys - உங்களின் ஆர்வங்களைப் பதிவு செய்திட ! முப்பதாவது நாளினில் தேறியிருக்கும்  எண்ணிக்கையினைப் பொறுத்து, என்ன செய்யச் சாத்தியப்படுமென்று அறிவித்த கையோடு, project ஓ.கே. ஆகிடும் பட்சத்தில் சூட்டோடு சூடாய் பணம் அனுப்பிடக் கோரிடுவோம் ! So அதற்குத் தயாராக இருக்கும் பட்சத்தில் மட்டுமே ஆர்வங்களைப் பதிவிடுங்கள் - ப்ளீஸ் ! If all goes well - புராஜெக்ட் நடைமுறை காணும் நாளிலிருந்து 60 நாட்களுக்குள் புக்ஸ் உங்கள் கைகளில் இருந்திடும் ! இனி முழுக்கவே உங்கள் தரப்பில் தான் இந்த ஆட்டத்தின் தலைவிதியானது ! 

And group admins : உங்களின் க்ரூப்களுக்குள்ளும் தகவலைச் சுற்றில் விடுங்களேன் - ப்ளீஸ் ! 

விழி பிதுங்கப் பணிகள் காத்திருப்பதால் இப்போதைக்குக் கிளம்புகிறேன் guys Bye for now ! Have a fun weekend !! See you around !!

394 comments:

  1. ஞானோ டீ ஆத்திங் 1st.குஞ்சாகோபன் ?

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி ஜஸ்ட் மிஸ் ல இந்த குமாரன் வந்து விட்டான்.

      Delete
  2. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  3. தமிழ் காமிக்ஸ் வரலாற்றிலே முதல்முறையாக…வெளியே வந்த சில தினங்களுக்குள்ளாகவே …😢

    ReplyDelete
  4. Super Edi Sir..
    எங்க தல Tex ஐ வரவேற்க இப்பவே ரெடி ஆயிட்டேன்.

    ReplyDelete
  5. // முத்துவின் ஆண்டுமலர் 50 பணிகளின் பெரும்பகுதி நிறைவுற்று விட்டாச்சு ! இன்னும் ஒரு 46 பக்க ஆல்பமும், filler pages-களுமே பாக்கி ! And அங்கே தான் உங்களின் பங்களிப்புகள் முக்கியமாகின்றன ! // இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே

    ReplyDelete
    Replies
    1. அப்பறம் சார் அந்த preview அட்டவணையில் வருமா சார்?

      Delete
    2. ஆஹா ஆஹா தன்யனானேன் சார்.

      Delete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. // Maybe .... மாவட்டவாரியாய் நண்பர்களின் முகவரிகளோடும், நமது இதழ்கள் சகிதமான போட்டோக்களோடுன் ஒரு வாசக டயரி போல எதையேனும் உருவாக்கிட முனைந்திடலாமா ? // முனைந்திடலாம் சார். நிறைய நண்பர்களை பற்றி அறிய ஒரு வாய்ப்பு கிடைக்கும்.

    ReplyDelete
  8. // ஆளே இல்லாத துவக்கத்திலிருந்து இதோ ஒரு பக்கம் ! //
    கொஞ்சம் கி.நா வாடை அடிக்கற மாதிரி இருக்குதே...!!!

    ReplyDelete
    Replies
    1. இது போன வருடமே வந்திருக்க வேண்டியது. நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

      Delete
    2. வரட்டும்,வரட்டும்...!!!

      Delete
  9. பதிவின் தலைப்பு தினமும் கேட்கிற வாக்கியம் மாதிரியே இருக்குங்க..ஆனா உள்ளே இருக்குற விசயம் எல்லாமே தெற்க்கு தெரு மச்சான் சமாச்சாரமா இருக்குதுங்களே..இருங்க ஒரு செவப்பு துணியை எடுத்துட்டு வந்துரேங்க..

    ReplyDelete
  10. // இதோ - போன வருஷமே வந்திருக்க வேண்டிய அந்த 224 பக்க ஆல்பத்தின் அட்டைப்பட first look //
    அட்டைப்படம் செம கலக்கலாய் உள்ளது...!!!

    ReplyDelete
  11. // "உலகத்தின் கடைசி நாள்" preview அடுத்த வாரப்பதிவினில் ! //
    மிக ஆவலுடன்...!!!

    ReplyDelete
  12. // புராஜெக்ட் நடைமுறை காணும் நாளிலிருந்து 60 நாட்களுக்குள் புக்ஸ் உங்கள் கைகளில் இருந்திடும் ! இனி முழுக்கவே உங்கள் தரப்பில் தான் //

    மறுபடியும் முதல்ல இருந்தா......!!!!!!

    ReplyDelete
    Replies
    1. போதுமான அளவிற்கு வாங்கி விட்டதால். I'll give it a pass this time.

      Delete
  13. /// புத்தம் புது ஈஸ்ட்மேன் கலரில் இன்னொரு தபா வெள்ளித்திரையில் அரங்கேற்றிப்புடுவோம் ! ///

    மறுபடியும் மொதல்லேர்ந்தா?...

    ReplyDelete
  14. /* உங்களுக்குத் தேவையான "இரத்தப் படலம்" பிரதிகளின் எண்ணிக்கையினைக் குறிப்பிட்டு */

    ஆத்தீ .. மறுபடியும் வீங்கிட போவுது சாரே !! :-) :-)

    ReplyDelete
    Replies
    1. நேற்றைய பதிவின் copy paste தானே சார் - "இ.ப" தகவல்கள் எல்லாமே !

      Delete
    2. Thats why I said sir :-) குடுமி மாமாவும் மறுபடி சாமியாடிட போறாரு :-p 

      Delete
    3. ///குடுமி மாமாவும் மறுபடி சாமியாடிட போறாரு ///

      :))))

      சேச்சே! அதான் 'மிஷன் அக்கம்பளிஷ்டு'னு சொல்லிட்டு போய்ட்டாரே.. மறுபடியும் அக்கிரமங்கள் தலைதூக்கும் போதுதான் இங்கே வருவார்! :P

      Delete
  15. Top 50 should include the first Bluecoats album as well as the Muthu Special of 90 Editor Sir. Flight 731(?) for sure !

    ReplyDelete
    Replies
    1. Was the bluecoats title "AAGASATHTHIL ATTAGAASAM?" - till date the most hilarious Bluecoats album !!

      Delete
    2. மொத்த லிஸ்டில் எந்த இடம் பிடிக்குமென்று சொல்லத் தெரியலை சார் ; but ப்ளூகோட்ஸ் தொடரினை tops for sure !

      Delete
    3. It's a post modern Muthu Classic sir ! (Ipdi naamalE yedhAvathu solli viduvom ...)

      Delete
  16. சுஜாதாவின் ஒரு சிறுகதையில் ஆரம்பம் இப்படி இருக்கும். " இந்தக் கதையை படிப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை. இது ஒரு மாயச்சுழல். வெளியே வர முடியாது" என்று.
    அது போல் ஆகி விட்டது இ.ப. நிலவரம்.

    ReplyDelete
  17. முதல் இடம் சந்தேகமின்றி தங்கக் கல்லறைக்கு தான்.

    ReplyDelete
    Replies
    1. முத்துவின் பெஸ்ட் பிற்காலத்தில் இருந்து இன்றுவரை தங்க கல்லறை தான்

      Delete
  18. Sir,

    What is the probable date of Oct releases? Around 10th?

    ReplyDelete
  19. முதல் இடம் இரும்புக்கை மாயாவி.
    இரண்டாவது மின்னும் மரணம்.
    மூன்றாவது NBS.



    ReplyDelete
  20. சார் டெக்ஸ் அட்டைப்படம் அட்டகாசம்!! தலயோடு சேர்ந்து நாமும் அந்த மலைமுகட்டிலிருந்து பாழடைந்த சிற்றூரைப் பார்க்கும்போது வயிற்றில் லேசாய் புளியைக் கரைப்பது போலிருக்கிறது! திரளும் அந்தக் கருமேகங்களும் ஏதோ ஒரு அமானுஷ்யத்தை உறுதிப்படுத்துவது போலவே இருக்கிறது! ய்ய்யீஈஈஈஈக்க்!!!


    கர்னல் க்ளிப்டன் - என்னைக் கவர்ந்த கார்ட்டூன் நாயகர்! இவருடைய கதைகளில் ஆரம்பம் முதல் இறுதிவரை எப்போதும் ஒரு பரபரப்பு இருந்துகொண்டே இருக்கும்! நடுநடுவே அள்ளித்தெளிக்கப்பட்ட நையாண்டி வசனங்களும், கர்னலின் முகபாவங்களும் எனக்கு ரொம்பப் பிடிக்கும்! ஆகவே, கர்னலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்! (இவர் நண்பர்களிடம் அதிகம் சோபிக்காது போனதன் மர்மத்தை இப்போதுவரை என்னால் விளங்கிக்கொள்ளவே முடியவில்லை - அதற்கான காரணத்தை ஒரு யூகமாய் நீங்கள் இப்பதிவிலேயே கொடுத்திருப்பினும்!)

    ReplyDelete
    Replies
    1. I LOVE Leonardao! + அந்த அல்லக்கை உதவியாளர்!

      Delete
    2. எனக்கும் லியனார்டோ தாத்தாவை ரொம்பப் புடிக்கும்! தன்னோட அல்லக்கை கோக்குமாக்கா எதையாச்சும் செஞ்சு வைக்கும்போது வாசகர்களைப் பார்த்து ஒரு முழி முழிப்பாரு பாருங்க.. ஹா ஹா.. அதெல்லாம் வேற லெவல்!!

      Delete
    3. கிளிப்டன் அட்டகாசமாக வந்து உள்ளது. இந்த முறையும் ஹிட் அடித்து இடத்தை தக்க வைத்துக் கொள்வார் என்று நம்புகிறேன்.

      Delete
  21. This comment has been removed by the author.

    ReplyDelete
  22. தங்க கல்லறை தான் #1

    ReplyDelete
    Replies
    1. என்னோட சாய்ஸ்சும் அதேதான் நண்பரே

      Delete
  23. Maybe .... மாவட்டவாரியாய் நண்பர்களின் முகவரிகளோடும், நமது இதழ்கள் சகிதமான போட்டோக்களோடுன் ஒரு வாசக டயரி போல எதையேனும் உருவாக்கிட முனைந்திடலாமா ?//

    நல்ல யோசனை சார்...முடிந்தால் நமது முத்துவின் அனைத்து அட்டைப்பங்கள் கொண்ட தொகுப்பாக இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் சார்...

    ReplyDelete
  24. முத்துவின் ஆரம்ப காலத்தில் வந்த தலைக்கேட்ட தங்க புதையல் மிகவும் மலைத்து படித்த கதை , அதுவும் படிக்கட்டில் புதையலை எடுக்க லாரன்ஸ் செய்யும் ஐடியா; அந்த கதையில் தானா என தெரியவில்லை லாரன்ஸ் ஜெயிலில் அடைக்க கொண்டு வரும்போது அடம்பிடிப்பார், டேவிட் இதனை பார்த்து ஆச்சரியபடுவார், அதன் பின்னர்தான் லாரன்ஸ் தந்திரம் தெரியும்; அதே போல் டேவிட் ஒரு வலுக்கும் இரும்பு கம்பியை பிடித்து கொண்டு சாகசம் செய்வார். முடிந்தால் இந்தவாரம் இந்த கதையை மறுவாசிப்பு செய்யலாம் என உள்ளேன்.

    அதே போல் இவர்களின் காற்றில் கரைத்த கப்பல், மற்றும் விண்ணில் மறைந்த விமானம் போன்ற கதைகள் மிகவும் என்னை கர்த்தாவை.

    ReplyDelete
    Replies
    1. தங்க கல்லறை கருப்பு வெள்ளையில் வந்த போது என்னை அந்த அளவு கவரவில்லை, ஆனால் வண்ணத்தில் படித்த பொதுதான் அந்த கதையின் தாக்கத்தை முழுமையாக உணர முடித்து! எப்பா அந்த வில்லன் லக்னர் (?) மறக்க முடியாத பாத்திரம், அதே போல் ஜிம்மியின் பங்களிப்பு இந்த கதையில் மிக முக்கியமாகபட்டது எனக்கு.

      டியூரங்கோ அமைதி புயல்! மறக்க முடியாத கதைகள் மறக்க முடியாத நாயகன்!

      ப்ளூகோட்ஸ் - கவுண்டமணி செந்தில் காமெடி படங்கள் இப்போது வருவதில்லை என்ற குறையை போக்குபவர்கள் இவர்களே, அதுவும் போரின் அவலத்தை இவர்கள் மூலம் சொன்ன விதம் மனதில் நச் என்று காயத்தை ஒவ்வொரு முறையும் ஏற்படுத்த தவறுவதில்லை! I love ப்ளூகோட்ஸ்.

      Delete
    2. தங்கக்கல்லறை கவெ ஒருவித பயம் கலந்த அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்போடு அடுத்த இதழ் வர இரண்டு மாதம் தாமதம் வேறு..செம அனுபவம் நண்பரே.. எனது சாய்ஸ் கருப்பு வெள்ளையே...

      Delete
    3. எனது சாய்ஸும் கருப்பு வெள்ளை தான்

      Delete
    4. தோர்கல் நமது மீள்வருகைக்கு பிறகு அறிமுகமான கதைகளில் மிகவும் பிடித்தவர் மாயலோகத்தில் எங்களை கட்டிப்போட்டவர்.

      Delete
  25. சந்தேகமின்றி எனது தேர்வுகள்

    1.தங்கக்கல்லறை
    2.மின்னும் மரணம்
    3.ஃபார்முலாX13
    4.தலைகேட்ட தங்கப்புதையல்
    5.இரத்தக்கோட்டை
    6.இயந்திரப்படை
    7.பாம்புத்தீவு
    8.இரும்புக்கை எத்தன் முதல் 2பாகம் மட்டும்
    9.விண்வெளிக்கொள்ளையர்கள் மாயாவி
    10.NBS

    ReplyDelete
  26. ////Maybe .... மாவட்டவாரியாய் நண்பர்களின் முகவரிகளோடும், நமது இதழ்கள் சகிதமான போட்டோக்களோடுன் ஒரு வாசக டயரி போல எதையேனும் உருவாக்கிட முனைந்திடலாமா ? அதன் சாதக-பாதகங்கள் என்னவாக இருக்குமோ ? ////

    சார்.. அட்ரஸோடு கூடவே அவங்ககிட்டே எத்தனை புத்தகங்கள் இருக்கு.. அதை வீட்டிலே எங்கே பதுக்கிவச்சிருக்காங்க.. எப்போ வெளியூர் போவாங்க - போன்ற டீடெய்ல்ஸும் அந்த வாசக டைரியில கொடுத்தீங்கன்னா வசதியா இருக்கும்!

    அப்புறம் இந்த 'வாசகர் டைரி'யை தனி புக்கா கீது போட்றாதீங்க சார்.. அடுத்தமாசமே அஞ்சாயிரம் ரூவாய்னு ஏலத்துக்கு கொண்டுவந்திடப்போறாய்ங்க!

    ReplyDelete
    Replies
    1. மறுக்கமுடியாத உண்மை ஈவி

      Delete
    2. // அப்புறம் இந்த 'வாசகர் டைரி'யை தனி புக்கா கீது போட்றாதீங்க சார். //

      +11111111111

      Delete
  27. நானும் ரவுடிதான் என்று பிறருக்குகாக வாழ்வது ( I am Tex fan tiger fan xlll fan,) பெருமையல்ல. இந்த சிறிய வாழ்க்கையில் நானும் குழந்தைதான் என்று நமக்காக வாழ்ந்து பாருங்கள். உங்களுக்கு Cartoon பிடிக்கும். Smurfs.penny. மாதிரி தொலைந்த Cartoon மீண்டும் வர உதவி செய்யுங்கள். உங்கள் குழந்தைகள் வாழ்வில் புன்னகை பிறக்கட்டும்.

    ReplyDelete
    Replies
    1. // Smurfs.penny. மாதிரி தொலைந்த Cartoon மீண்டும் வர உதவி செய்யுங்கள். //

      +1

      I support this!

      Delete
    2. ///இந்த சிறிய வாழ்க்கையில் நானும் குழந்தைதான் என்று நமக்காக வாழ்ந்து பாருங்கள். உங்களுக்கு Cartoon பிடிக்கும்.///

      அருமை அருமை!! ரொம்ப அழகாச் சொன்னீங்க நண்பரே! லட்சத்தில் ஒரு வார்த்தை!!

      Delete
    3. // இந்த சிறிய வாழ்க்கையில் நானும் குழந்தைதான் என்று நமக்காக வாழ்ந்து பாருங்கள். உங்களுக்கு Cartoon பிடிக்கும் //

      Simply superb. Well said.

      Delete
    4. BTW, இவ்வளவு அழகான கருத்தைச் சொன்னவரின் பெயர் என்னவென்று தெரிந்துகொள்ள ஒரு ஆர்வம் ஏற்படுவதும் இயற்கைதான் இல்லையா?

      Delete
    5. கருத்து நல்லா இருக்கா என பாருங்கள் விஜய் :-)

      Delete
  28. வாசகர் டைரி பக்கத்துக்கு 4 பேர்வச்சாலே 250 பக்கத்திற்க்கு மேல் வருமே சார்....??

    ReplyDelete
  29. முத்துவின் ஆண்டுமலர் 50 பணிகளின் பெரும்பகுதி நிறைவுற்று விட்டாச்சு ! இன்னும் ஒரு 46 பக்க ஆல்பமும், filler pages-களுமே பாக்கி//

    மகிழ்ச்சியான செய்தி சார்..ஆவலுடன்..

    ReplyDelete
  30. /////உங்களுக்குத் தேவையான "இரத்தப் படலம்" பிரதிகளின் எண்ணிக்கையினைக் குறிப்பிட்டு lioncomics மின்னஞ்சலுக்கு மெயில் ஒன்றைத் தட்டி விடுங்கள்///

    சார்.. சிங்கிள் குண்டுவாய் 3D அட்டைப்படம் சகிதம் வருமென்றால் எனக்கொரு காப்பி ப்ளீஸ்!!

    ReplyDelete
    Replies
    1. சிங்கிள் குண்டு
      3D அட்டைப்படம்
      தலையில்லா போராளி சைஸ்

      - இப்படிப் போட்டீங்கன்னா எல்லா இ.ப தீவிரவாகளிடமிருந்தும் ( +1 ஐயாம்) ஆளுக்கு ரெண்டு புக்கு கன்பார்முடு!

      என்ன சொல்றீங்க சார்?


      Delete
    2. அது கார்த்திகைக்கு ! இது புரட்டாசிக்கு !

      Delete
    3. சூப்பர்ங்க சார்!
      புரட்டாசி சமயத்துல இரத்தப்பொறியல் வேணா கிடைக்காம இருக்கலாம்.. ஆனா இரத்தப்படலம் உறுதியாக் கிடைக்கும்னு ப்ரூ பண்ணிட்டீங்க! :)

      Delete
    4. தலையில்லா போராளி சைஸ் இ.ப Black and White - Single Hard Bound - won't it be wonderful? Must get it from him before Editor retires !

      Delete
    5. ///தலையில்லா போராளி சைஸ் இ.ப Black and White - Single Hard Bound///

      அனேகமா இது மார்கழிக்குன்னு நினைக்கறேன்!
      am i right sir?!! :D

      Delete
    6. அப்போ அது மார்கழிக்கு ! அதுக்குள்ளாறல்லாம் ரிட்டையர் ஆகில்லா !

      Delete
    7. ///Must get it from him before Editor retires !///

      நோ நோ! 17வது மறுமறுக்காவிலேயே வாங்கறோம் - அதுவும் அடுத்த வருசத்துக்குள்ளாவே!

      எடிட்டர் ரிடையர் ஆகும்போது கிட்டத்தட்ட 296வது மறுமறுக்காBஇ.பா வெளியாகியிருக்கும்! ஆனா அப்போ கூட அந்த 296லயும் புக்கிங் பண்ணி வாங்காமல் 'நான் வேற்றுக் கிரகத்திலேர்ந்து இப்பத்தான் வந்தேன்.. எங்கிட்ட இ.ப இல்ல'னு கண்ணை கசக்கிக்கிட்டு கண்டிப்பா ஒரு கோஷ்டி வந்து நிக்கும்! :P

      Delete
    8. அவர் எதுக்கு ரிடையர் ஆகனுங்கறேன். எல்லா வேலையும் ஜூ. எடிட்டர் கிட்ட குடுத்துட்டு பேனா பிடிக்கலாமே? 90 வயசுல ஈஸ்ட்வுட் நடிச்சு இயக்கின படம் வந்துருக்கு. பிடித்தமான வேலையை நிறுத்தினாத்தான் மனசுக்கும் உடலுக்கும் பிரச்னையே

      Delete
  31. Replies
    1. Lion and Muthu Comics mixed up :-) Not counted :-) :-) :-)

      Delete
    2. எனது டாப் 10
      1.தலை கேட்ட தங்கப் புதையல்
      2.இரண்டாவது வைரக்கல் எங்கே
      3.ப்ளைட் 731
      4.கொலைகார கலைஞன்
      5.மாயாவிக்கொரு சவால் ( இதில் இன்னொரு கதையாக வரும் செக்ஸ்டன ப்ளேக் சாகஸம் செம்மையாக இருக்கும்)
      6.தங்கக்கல்லறை
      7.கடத்தல் முதலைகள் & சதி வலையில் மாயாவி
      8.விண்ணில் மறைந்த விமானங்கள்
      9.N.B.S
      10.காணமல் போன் கோடீஸ்வரர்

      Delete
    3. 2.இரண்டாவது வைரக்கல் எங்கே, 6.தங்கக்கல்லறை etc.,super selection

      Delete
  32. //! And 'தல' தலைகாட்டுவது பக்கம் 25 முதலே எனும் போது,//

    வாசகர் ரீயாக்ஷன்

    1. கணேஷ்குமார் சார்-

    அந்த 25 பக்கத்தை மட்டும் தனி புக்கா போட்டுத் தரமுடியுமா?

    2. தலீவர் - சார் ! தல வராத பக்கத்துல எல்லாம் பக்க எண்களுக்கு பதிலா அவரு இமேஜ் -ஐ அதாவது சின்னதா அவரு படத்தை இரண்டாம் பக்கம்னா ரெண்டு டெக்ஸ் படம், நாலாம் பக்கம்னா நாலு டெக்ஸ் படம் இப்படி போட முடியுமா?

    ரம்மி- மீதி இருக்கறது கொஞ்சூண்டு 199 பக்கந்தானே? அதிலேயும் அதிகாரி வர்றாம இருக்கற மாதிரி ஏதாச்சும் பண்ணமுடியாதா?

    வீரன்- டெக்ஸ் எப்ப வேணா வரட்டும்..ஆனா

    கண்ணே கொலைமானே ஒரிஜினல் ப்ரிண்ட் வர்றதுக்கு முன்னாடியே ரீப்ரிண்ட் வந்துடணும்.
    என்னோடதை தர்மத்தின் குரலா எடுத்துக்கிடணும்..

    ReplyDelete
    Replies
    1. செனா அனா ஜி... 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

      எல்லாமே அட்டகாசம்! சிரிச்சு முடியல!! குறிப்பா ரம்மியும், வீரரும் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

      Delete
    2. செனா அனா ஜீ....


      காலையில் வாய்விட்டு சிரிக்க வைத்து விட்டீர்கள்...

      ஆனால் அனைத்தும் உண்மை....:-))))

      Delete
    3. செல்வம் அபிராமி @ செம. மிகவும் ரசித்தேன்.

      Delete
    4. வாசகர் ரியாக்ஷன் :

      செனா அனா : தல தலை காட்டுவது 25ம் பக்கத்தில் என்பது சாதாரண நிகழ்வல்ல! நமது புராணங்களுக்கும் இந்த '25ல் தல'க்கும் ஒரு மிகப்பெரிய தொடர்பு இருக்கிறது. அந்தத் தொடர்பை நமது இத்தாலியப் படைப்பாளிகள் வெகுசாமர்த்தியமாக இக்கதையில் பயன்படுத்தியிருப்பதை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை!

      கையிலாயத்தில் குடிகொண்ட பிரகதீஸ்வரருக்கு 25 தலைகள்! கையிலையில் இவரைச் சூழ்ந்து நிற்கும் மூர்த்திகளின் எண்ணிக்கையும் அதே இருபத்தி ஐந்தே! அதோடு முடிந்ததா என்றால் இல்லை; இவரைச் சூழ்ந்து நிற்கும் ருத்ரர்கள், சித்தர்கள், முனிவர்களின் கூட்டுத்தொகையும் இருபத்தி ஐந்தே!
      பிரகதீஸ்வரரை 25 நாள் தொடர்ந்து வழிபட்டுவர, விஷக்கிருமிகளால் ஏற்பட்ட கடுங்காய்ச்சலையும் வேரோடு களைவார் என்பது ஐதீகம்!
      அவ்வாறே நமது 'தல'யும் பக்கம் 25ல் தலைகாட்டி சில விஷமிகளால் ஒரு நகரத்துக்கு ஏற்பட்ட கடுங்காய்ச்சலை வேரறுப்பதால் இங்கே தல'யை நாம் பிரகதீஸ்வரரின் மறுஉருவமாகக் கொண்டிடலாம்!

      புராணங்களை எடுத்தியம்புவர்களின் கூற்றை நம்பாதவர்களெல்லாம் ரத்தம் கக்கிச் சாவார்கள் என்றெல்லாம் உறுதியாகச் நம்புவதற்கில்லை தான்! ஆனால் அப்படி நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லையே?!! ;)

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. விஜய் @ சூப்பர்.

      நீங்க ஆத்தாவுக்கு கூழ் ஊத்தாதை விட்டுவிட்டீங்க :-)

      Delete
  33. வாசகர் டைரி வந்தால் மிக நன்றாக இருக்கும். மிக அருமையான யோசனை. முகமறியாத பல நண்பர்களை மேலும் தெரிந்து கொள்ளலாம்.ஒரு நினைவுப் பேழையாகவும் திகழும். நண்பர்கள் வாசக டைரிக்கு ஆதரவு தரவேண்டுகின்றேன்.

    ReplyDelete
    Replies
    1. வரட்டும் சரவணன்.

      ஆனால் அது சிறப்பிதழில் இணைந்து வரட்டும். தனிப்புத்தமாக வேண்டாம். இனிவரும் எந்த சிறு புத்தகங்களுக்கு ஏதாவது ஒரு புத்தகத்துடன் இணைந்து வரட்டும். இல்லை என்றால் விஜய் ருக்குவுடன் 60 கல்யாணத்துக்கு 60 வது ஆவது தடவை ரெடியாகி விடுவார் :-)

      Delete
  34. முத்து TOP 10 இதழ்கள் ;
    1.முதல் இதழ் -இரும்புக் கை மாயாவி.
    2.தங்க கல்லறை
    3.NBS.
    4.ஜூம்போ
    5.வைரஸ் X
    6.ரோஜா மாளிகை ரகசியம்.
    7.குரங்கு தேடிய கொள்ளையர் புதையல்.
    8.ரயில் கொள்ளை.
    9.என் பெயர் லார்கோ.
    10.நாடோடி ரெமி

    ReplyDelete
  35. 1) தங்கக் கல்லறை
    2) மின்னும் மரணம்
    3) NBS
    4) தலை கேட்ட தங்கப்புதையல்
    5) என் பெயர் லார்கோ

    ReplyDelete
  36. டெக்ஸ்ன் அட்டைப்படம் செம கலக்கலாக அமைந்துள்ளது சார்...

    செம மாஸ் ...:-)

    ReplyDelete
  37. டெக்ஸ் இது வர வந்ததிலே டாப் இதான்...பின்னணி அந்த மேகமிருந்திருக்கலாம்...இந்த அட்டைப்படம் என்னை கை பிடித்தழைத்து செல்வது போல உள்ளது...அந்த கோட்டின் நிறம் டாப்....இது போல் மனதோடு பேசும் அட்டைகள் சிலதே...டாப் சார்....அருமை....ஏதோ இனம் புரியாத ஈர்ப்பு

    ReplyDelete
    Replies
    1. நீ இதுவரை போட்ட கமெண்ட் இது தான் டாப் பட்டயகிளப்பிட்டலே மக்கா :-)

      Delete
  38. செ. அனா. ஜீ தர்மத்தின் குரல் ஓங்கி ஒலிக்கட்டும் கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  39. கார்சனின் கடந்த காலம் மறுபதிப்பு செய்வீர்களா

    ReplyDelete
  40. முத்து TOP 10 இதழ்கள்:

    1.மின்னும் மரணம்
    2.தங்க கல்லறை
    3.ரத்த கோட்டை
    4.NBS (ALL STORIES ARE GOOD IN IT .. SHELDON STORY WAS TOP EVEN THOUGH ITS FROM LION ..)
    5.லார்கோ (EXCEPT LAST ONE)
    6.தோர்கல்
    7.சிக் பில் (பெரும்பாலான கதைகள்)
    8.ரிப்போர்ட்டர் ஜானி 1.0(பெரும்பாலான கதைகள்)

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் தம்பி எனக்கு வரிசை படுத்தும் வேலையை மிச்சப் படுத்தியதுக்கு. ஒன்றும் இரண்டும் மட்டும் interchange செய்து கொள்கிறேன்.

      Delete
  41. Top 3 :

    1. வைரங்கள் 23 + என் பெயர் டைகர்
    2. All டாக்புல் கிட்ஆர்டின்
    3. லார்கோ அன் கோ

    ReplyDelete
    Replies
    1. வைரங்கள் 23 யார் கதை?

      Delete
    2. டைகரின் 23 கதைகளை சொல்றாரு...

      இரத்தகோட்டை-5
      தோட்டாதலைநகரம்-1
      இரும்புக்கை எத்தன்-4
      தங்க கல்லறை-2
      மின்னும் மரணம்-11

      Delete
  42. //எனிக்கி ஒரு சந்தேகம் நம்ம லக்கிலூக் சுட்டு இதுவரை யாராவது செத்திருக்காங்களா? எந்தக்கதையிலையாவது.// யாராச்சும் யோசிச்சுச் சொல்லுங்களேன். கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  43. கிட்டத்தட்ட இவ்வருடம் முழுவதும் covid இறுக்கங்களுக்கு மாற்றாக கமர்சியல் கதைகள் வரிசையாய் வந்து வெடித்து தள்ள, ஓசையின்றி இன்னும் பெரிதாய் வெளிச்சத்துக்கு வராமல் ஆரம்பகட்டத்திலேயே அமுக்கப்பட்டிருக்கும் ஒரு சத்தமில்லா, ஆனால் வீரியத்தில் சற்றும் சளைக்காத கன்னி வெடி தான்

    "சித்திரமும் கொலைப்பழக்கம்"

    சிரிப்பிலும், சீரியசிலும், ஆக்சனிலும் திரும்பிய பக்கம் எல்லாம் வன்மேற்கே கோலோச்ச, கொஞ்சம் மாற்றாக அழகிய பாரீஸ் நகரில் ஒரு நீதிமன்றத்தில் துவங்குகிறது கதை. நீதிமன்ற வழக்கு, குற்றவாளிகளை படம் வரையும் நாயகன், அவன் பார்வையில் சொல்லப்படும் கதை என நாம் இதுவரை காணாத களம் தென்பட, சட்டென்று மூளை சுறுசுறுப்பாகி ஆவலுடன் பக்கங்களை புரட்டினேன். வருடகணக்கில் குற்றவாளிகளின் முகங்களையும், அவர்களின் ஈன செயல்களையும் கண்டு மனம் வெறுக்கும் ஒரு இருண்ட தனிமனித (தனிமை) வாழ்க்கை. விட்டு விலகிட நினைத்தாலும் பழகிப்போன முகங்களின் குரூரம் வசியப்படுத்த, பலன் அவர்களையே வேட்டையாட நினைக்கிறது மனம். செய்யும் குற்றத்துத்து நியாயம் தேட பிறந்தவள் தான் கேரல்.

    கற்பனைக்கதாப்பாத்திரமே என்றாலும் அதன் மேல் நாயகன் வைத்திருக்கும் பாசம் நெகிழவைக்கிறது. தனியாக வாழும் வாழ்க்கையில், குரூரமும் சேர்ந்து கொள்ள, மன உளைச்சளுக்கு மருந்தாகிறது கொலைகள். மனநல மருத்துவமனைக்கு சென்று தன்னை விட அதிகம் பாதிக்கபட்டவர்களின் கதறள்களை கண்டு ஓடி வருவது, போலீஸுடன் ரொமான்ஸ் என்று முற்றிலும் சைக்கோ ஆகாமல் இருவேறு முகங்களுடன் மனிதன் தத்தளிப்பது கதை முழுதும் தெரிகிறது. வள வள என்று கதை சொல்லும் பாணி ஆங்காங்கே இருந்தாலும், பிரயோகித்த வார்த்தைகளையே மீண்டும் மீண்டும் பயன்படுத்தினாலும், அந்த கேரக்டரின் குணாதிசியத்தையே வெளிப்படுத்துகிறது. புரிந்து கொள்ளவும் முடிகிறது. மேலும் நார்மலான மனிதர்களிடம் தான் லாஜிக் எல்லாம் எதிர்பார்க்க முடியும். பெரிய வாளுடன் துப்பாக்கிக்கு எதிராக வரும் சைமனாகட்டும், அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பி காவல் தலைமையகத்துக்கே சென்று கொலை செய்ய துணியும் நமது நாயகனும் சராசரி மனிதர்கள் அல்லவே.

    இறுக்கமாகவே கதை நகர்ந்தாலும் ஒன்றி படித்ததால் அயர்ச்சிக்கு பதில் அடடே தான் போட வைத்தது. காரணம்: போலீஸ் அதிகாரிதான் நாயகியின் காதலி என தெரிய வரும் தருணம், அதன் பின் நடக்கும் ஆடு புலி ஆட்டம், மருத்துவமனையில் நாயகனை முந்திக்கொண்டு கொலை செய்ய, செய்தது துணை அதிகாரி தான் என்றும் அதன் காரணம் பதவி ஆசையே எனும்போதும், காதலனிடம் அறை வாங்கினாலும், குற்றவாளியாக இருப்பினும் அவனுக்காக கண்ணீர் சிந்தும் நேர்மையான போலீஸ் அதிகாரியின் தவிப்பு என அடுக்கிகொண்டே போகலாம்.

    மருத்துவமனைக்கு செல்லும் போது, தன் மகள் ஊஞ்சளில் இருந்து விழுந்த வலியை நினைவு கூர்வதும், பின்பு நிஜமாகவே சைமனிடம் அடிபட்டு விழும்போது இன்று ஊஞ்சளில் இருந்து விழுந்தது நானாகவே உணர்கிறேன். வலிக்கிறது எனக்கு என கூறுவதும் நிழல் மற்றும் நிஜ சமபவங்களுக்கான ஒரு எடுத்துக்காட்டு. மேலும் இக்கதைக்கு பேனா பிடித்த நமது ஆசிரியரின் மெனக்கெடலுக்கும் ஓர் உதாரணம். சைமன் உடனடியாக கொல்லாமல் தான் எவ்வாறு கண்டுபிடித்தேன் என்று விளக்கி கொண்டிருக்க, அங்கிருந்து தப்பி ஓடும் போது காப்பாற்றிய காவலர் தன் நியாத்தை எடுத்து விட, "இன்று நான் சந்திக்கும் ஆட்கள் எல்லாம் பட்டிமன்ற பேச்சாளராக இருப்பது ஏனோ". " எப்படியோ இவன் முடிக்கும் வரை என் உயிர் கூட்டை விட்டு பிரியாது" போன்ற வசனங்கள் இறுக்கமான கதையிலும் புன்னகையை கொணர்ந்த தருணங்கள். special பொக்கே சார்.

    ReplyDelete
    Replies
    1. தாங்க சார்..தாங்க...சார் ! குட்டுப்பட்ட மண்டைக்கு பொக்கே ஒரு ஸ்டைலான தொப்பியாய் இருந்துவிட்டுப் போகட்டும் !

      Jokes apart, இந்தக் கதையின் லேபலிங் மட்டும் ஜம்போ என்றிராது - LGN என்று அமைந்திருப்பின், இந்த மட்டிற்கு மொத்து வாங்கியிராதென்பது எனது எண்ணம் ! Moreso இந்த இறுக்கமான தருணங்களில் வெளி வந்திராமல் - சற்றே நார்மலான நாட்களில் இது வெளிச்சத்தைப் பார்த்திருப்பின் - might just have fared better too !

      நிறைய லாஜிக் ஓட்டைகள் உண்டு தான் ; அதுவும் அந்த பாரிஸ் போலீஸ் தலைமையகத்தினுள் பீட்சா டெலிவரி பாயாக ஜாலியாய் நுழைந்து, ஒரு கொலையையும் பண்ணிய கையோடு - 'பலீன் சடு குடு..குடு..' என்று போலீசாருக்கு பெப்பே காட்டும் sequence செம காமெடியே ! அதிலும் ஒரு பிஸியான ஐரோப்பிய போலீஸ் தலைமையகம் அர்த்த ஜாமத்தில் கூட என்னமாய் அதிர்ந்து கொண்டிருந்ததென்பதை நேரில் பார்த்தவனுக்கு கதையின் அந்த passage நெருடோ நெருடென்று நெருடியது !

      பாஸ்போர்டைத் தொலைத்த கையோடு போலீசில் புகார் தர பிரஸ்ஸல்ஸ் போலீஸ் தலைமையகத்துக்கு நான் சென்றிருந்த போது நள்ளிரவை நெருங்கும் நேரம் ; ஆனால் அப்போதும் பம்பரமாய் சுழன்று கொண்டிருந்தனர் காவலர்கள் !! And ஒவ்வொருவருமே ரெண்டு ஈரோட்டு இரக்க சிந்தனை இளவரசரின் விஸ்தீரணங்களில் இருந்தனர் ! நானங்கு காத்திருந்த வேளையில், ஏதோ குடி போதை ரகளையில் ஒரு அம்மணியின் கபாலத்தில் தனது பாட்டிலால் ஒத்தடம் கொடுத்த கும்பலை கொத்தாய் உள்ளே அள்ளிக் கொண்டு வந்தனர் ! பெண்மணிக்கு ரத்தம் ஒழுகிக் கொண்டிருக்க, இந்தப் பசங்களில் மொக்கையாக இருந்த ஒருவனோ சலம்போ சலம்பென்று சலம்பிக் கொண்டிருந்தான் !! வெளியிலிருந்து ரவுசு ஓவரான நொடியில் 'கிராக்' என்ற சத்தம் மட்டுமே கேட்டது ; நடுக்கதவு ஒன்றைத் திறந்தபடியே வெளிப்பட்டார் ஒரு மேலதிகாரி !! WWF ஜான் சேனாவின் வாகு ; ஜேம்ஸ் பாண்டின் மிடுக்கு ; ரெண்டாவது மாடி ஜன்னலை தரைத்தளத்தில் நின்றபடிக்கே துடைக்கக் கூடிய உசரம் !! இடுப்பில் கையை வைத்துக் கொண்டு அந்தப் பையன் முன்னே போய் அவர் நின்ற நொடியினில் எனக்கே மூச்சா முட்டுவது போலிருந்தது ; பயலுக்கோ போன வாரம் அடிச்ச சரக்கின் மப்புமே இறங்கியிருக்க வேணும் !! அந்த மாதிரியான ஒரு தோரணை ! உள்ளே அள்ளிக் கொண்டு போன பின்னே என்ன நடந்ததோ தெரியாது ; ஆனால் நம்ம ஆர்ட்டிஸ்ட் பீட்சா டப்பியோடு போய் அல்வா தந்த பாணிப் பாட்சாக்கள் மட்டும் வேகவே செய்திராதென்று மட்டும் சொல்லுவேன் !

      கொஞ்சமே கொஞ்சமாய் இது போன்ற செயற்கையான sequences ; கத்தியைத் தூக்கித் திரியும் சாமுராய் போன்ற பாத்திரப் படைப்புகளை மட்டும் கதாசிரியர் வேறு மாதிரி திட்டமிட்டிருந்தால், இந்த ஆல்பம் டாக்டர் ஹரிஹரனையும் ; நண்பர் திருநாவுக்கரசைத் தாண்டியும் நம்மிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கலாம் ! And நிறைய நண்பர்கள் குறிப்பிட்டிருந்த அந்த க்ளைமாக்ஸ் புஸ்வானம் என்னளவில் not so absurd என்பேன் - ஏனெனில் schizophrenia எனும் மனநோயின் பரிமாணங்களை பற்றி ஒரு சந்தர்ப்பத்தில் படித்திட எனக்கு வாய்ப்புக் கிட்டியிருந்தது ! இல்லாததை இருப்பதாய் உருவகப்படுத்தும் அந்த நோயின் பாங்கு, நாளாசரியாய் அதனையே நிஜமென்று அவர்களுக்குள் ஆழமாய் நம்பிக்கையினை விதைத்தும் விடும் ! So தனிமையில் 30 வருஷங்களாக உழலும் ஒரு நபருக்கு, அதுவுமே தறுதலைகளையாய் தினமும் பார்த்துப் பார்த்தே மரத்துப் போனதொரு நபருக்கு, schizophrenia அல்லது schizoaffective disorder மன நோய் இருக்கும் பட்சத்தில் அந்த க்ளைமாக்சில் விவரிக்கப்பட்டிருக்கும் சம்பவமோ - அல்லது சம்பவின்மையோ absurd ஆகிட வாய்ப்புகள் சொற்பம் என்பேன் ! மனித மனதின் ஆழங்களும், பரிமாணங்களும் நவீன விஞ்ஞானத்துக்கு இன்றளவுக்குமே ஒரு black hole தானே ?

      "காக்காய்.,,பொன் குஞ்சு..." என்றெல்லாம் இந்த நொடியினில் உங்களுக்குத் தோன்றலாம் தான் ; ஆனால் இந்த ஆல்பத்தின் timing & இடையிடையே இழையோடும் லாஜிக் ஓட்டைகள் மட்டும் better ஆக handle செய்யப்பட்டிருப்பின் - நிச்சயமாய் இந்த உதை வாங்கியிராதென்று எனக்குத் தோன்றுகிறது !

      Delete
    2. ஒரு கங்கா, சந்திரமுகி ஆவதும், ஒரு பத்திரிகை போட்டோவிலுள்ள பெயரில்லா துணை நடிகை, கேரலின் ஆவதும் ஒரே process தானே ?

      Delete
  44. சித்திரங்கள் பற்றி கூறாமல் முடித்தால் அபத்தம் ஆகிவிடும். நாயகனின் முகம் நேர்த்தியாக வரையப்பட்டிருக்கிறது. பைக்கில் சுற்றி திரியும் காட்சிகள், ஹாஸ்பிடல் சேஸிங், சைமனிடம் தப்பி ஓடும் காட்சி என் ஓவியத்தோடு ஒவ்வொரு ஏங்கிளும் திரைப்படமாய் நம் கண் முன்னே விரிகிறது. க்ளைமாக்ஸில் தலை துண்டாகி விழும் போது கழுத்திலுள்ள பட்டையும் தெறித்து பறப்பது ஓவிய நுனுக்கத்தை பறைசாற்றுகிறது. கட்டிடங்கள் என்றாளே நமக்கு லார்கோ கதைகள் தான் ஞாபகம் வரும். இனி இக்கதையில் வரும் சிறைச்சாலைகள், காவல் தலைமையகம், ஹாஸ்பிடல்களும் நினைவில் நிற்கும் தனித்தன்மை உடையதாக இருக்கும். மேலும் அட்டைபடம் மற்றும் வடிவமைப்பு வெகுவாக ஈர்க்கிறது. முன் அட்டை அக்மார்க் த்ரில்லருக்கான பொருத்தமான டிசைன்.
    இவ்வருடத்தின் ஆக சிறந்த படப்பு.

    இங்கு ஒரு கருத்தை பகிர ஆசை, காமிக்ஸை நேசிக்கும் ஒருவர் நமக்கு ஆசிரியராக கிடைத்திருப்பது நாம் செய்த பாக்கியம். அவருடைய அனுபவும், நேசமும் எந்த அளவு உள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அப்படி இருப்பவர் இது போன்ற கதையை எதிர்ப்புகளையும் மீறி வெளியிடுகிறார் என்றார் எனில் அதில் ஒரு சாரம் இல்லாமலா இருக்கும். ஏதோ ஒன்று அவரை கவர்ந்ததால் தான், நம்மையும் அது ஈர்க்கும் என்று நம்பி வெளியிட்டுள்ளார். இது போன்ற கதைகள் தான் நம் பன்முக தன்மைக்கு உதாரணம். அவ்வப்போது வரும் இதுபோன்ற முயற்சிகளுக்கு ஆதரவு கொடுத்து ஆசிரியரின் தேடலை விரிவாக்குவோம்.

    இக்கதையை வெளியிட்ட ஆசிரியருக்கு நன்றிகள் பல. இது போன்ற முயற்சிகள் தொடர வாழ்த்துகள். இப்படிக்கு இது போன்ற கதைகளை ரசிக்கும்/வரவேற்கும் டெக்ஸ் ரசிகன்.

    ReplyDelete
    Replies
    1. வாவ்!!!! நான் எதிர்பார்த்ததைவிடவும் அருமையான விமர்சனத்தை - மிக நேர்த்தியான வார்த்தைப் பிரயோகங்களோடு - எழுதி அமர்க்களப்படுத்தியிருக்கிறீர்கள்! வாழ்த்துகள் நண்பரே!!

      ரசிப்புத் தன்மை என்பது நபருக்கு நபர் எவ்விதம் மாறுபடும் என்பதற்கு இந்த விமர்சனமே நல்லதொரு உதாரணம்!! உங்கள் பார்வையிலான இந்த விமர்சனத்தைப் படிக்கும்போது 'அட! அந்தக் கதையை நாமும் இன்னும் கொஞ்சம் ரசிச்சுப் படிச்சிருக்கலாமோ' என்று எண்ணத் தோன்றுகிறது தான்! ஆனாலும் கதையை நகர்த்தியிருக்கும் விதமும், சிலபல லாஜிக் இல்லா சமாச்சாரங்களும் அந்த எண்ணத்தில் போடுகிறது!

      உங்களைப் போலவே இன்னும் பலருக்குப் பிடித்திருந்தால் மகிழ்ச்சிதான்!

      ///அப்படி இருப்பவர் இது போன்ற கதையை எதிர்ப்புகளையும் மீறி வெளியிடுகிறார் என்றார் எனில் அதில் ஒரு சாரம் இல்லாமலா இருக்கும். ஏதோ ஒன்று அவரை கவர்ந்ததால் தான், நம்மையும் அது ஈர்க்கும் என்று நம்பி வெளியிட்டுள்ளார். ////

      அப்படியெல்லாம் அவர் நம்மை முழுசா நம்பிடறமாதிரி வச்சுக்கக் கூடாதுங்க நண்பரே! அப்புறம் நம்ம மேலல்லாம் ஒரு பயம் இல்லாமப் போய்டும்! ;)

      Delete
    2. அபாரம் ..அபாரம்..அட்டகாசமான விமர்சனம்...

      நெஞ்சார்ந்த வாழ்த்துகள் திரு!!!

      கதையை ரசித்தது எழுத்துகளில் உருப்பெற்று உவகையடையச் செய்கிறது.

      கொதிநீரில் முட்டையை ( புரட்டாசி மாசம் .சிவ!சிவ!) இட்டால் அது இறுகி திடமாகும்.

      உருளைக்கிழங்கோ இளகி மென்மையாகும்

      அதே கதைதான் ! பலரை முட்டையாக்குகிறது..வேறு பலரை உருளைக்கிழங்காக்குகிறது..

      உங்களை இளக வைத்த சி.கொ.பழக்கம் இன்னும் பலரையும் இளக வைத்திருக்கலாம்..உங்களைப் போல் அவர்கள் எழுத முன் வராதிருக்கலாம்..

      சக வாசகனாய் மறுபடியும் என் வாழ்த்துகள்!!!!

      Delete
    3. விருமாண்டி மைண்ட் வாய்ஸ் :

      வழுக்குப்பாறையிலே நெறய பெரிய மனுஷங்க இருக்காங்க போலவே !

      Delete
    4. அடேங்கப்பா என்ன ஒரு விமர்சனம். இன்னும் ஒரு தடவை உங்கள் பார்வையில் கதையை படிக்க வேண்டும் போலவே. சூப்பர் திரு உங்கள் விமர்சனத்துக்கு 9/10

      Delete
    5. நல்ல விமர்சனம் திரு. வித்தியாசமான பார்வை.... ரசித்து படித்துள்ளீர்கள்...!!! சில விசயங்கள் நீங்க சொன்னபிறகே ஞாபகம் வருது... வித்தியாசமான ஆட்களின் மனநிலையை வித்தியாசமான கோணத்தில் அனுகியுள்ளீர்கள்...

      Delete
    6. அருமையான விமர்சனம் திரு.சார். பாராட்டுகள்.
      பலவிதங்களிலும் இந்தக் கதை துவைத்து தொங்கப போடப்பட்ட போது மனசில் லேசா feelings of india தலைதூக்கியது. அப்புறம் நமக்கு பிடிச்சா எல்லாருக்கும் பிடிச்சிருக்கணும்னு கட்டாயம் இல்லியே என்று என்னை நானே சமாதானப்படுத்திக்கொண்டேன்.
      இரவே இருளே கொல்லாதேக்கு பிறகு நான் ரசித்த கதை இது.
      கதையை ரசித்து விமர்சித்துள்ளீர்கள். நன்றி.

      Delete
    7. APPADA......ARUMAI...ENAKKU PIDITHA KADHAI..ENAKKU PITITHA VIMERSANAM..
      BARANI

      Delete
    8. மனதார பாராட்டிய ஆசிரியருக்கும், நண்பர்களுக்கும் நன்றிகள் பல. மேன்மேலும் வளரட்டும் இந்த காமிக்ஸ் நேசம்.

      Delete
  45. திருநாவுக்கரசு வழுக்குப்பாறை. உங்களுடைய பல பதிவுகளுக்கு லைக் போட நினைத்திருந்து விட்டுவிட்டேன்ஆனாலும் இந்தபதிவு வெகு சிறப்புடன் தனித்தன்மையுடன் அமைந்துள்ளது.உங்களுக்கு ஒருஸ்பெசல் பொக்கே. அடிக்கடி பதிவிடுங்கள். இதுபோன்றசிறந்தவிமர்சனங்களேநமது ஞாயிறுகளைசிறப்பாக்கும் . கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  46. முத்து Top 10.....

    1.இரத்தக் கோட்டை-கேப்டன் டைகர்

    2.தங்க கல்லறை-கேப்டன் டைகர்

    3.மின்னும் மரணம்-கேப்டன் டைகர்

    4.தோட்டா தலைநகரம்-கேப்டன் டைகர்

    5.என் பெயர் டைகர்-கேப்டன் டைகர்

    6.சிகரங்களின் சாம்ராட்-தோர்கல்

    7.என் பெயர் லார்கோ-லார்கோ

    8.சத்தமின்றி யுத்தம் செய்-டியூராங்கோ

    9.போர் முனையில் ஒரு பாலகன் - ப்ளூகோட்ஸ்

    10.கழுகு மலைக்கோட்டை-மாடஸ்தி

    ---1989-90களில் 13-14 வயசுல தான் காமிக்ஸ் படிக்க வந்தேன்.... அதனால் இரும்புக்கையார் உள்ளிட்ட மும்மூர்த்திகள் & மற்ற ஹீரோக்கள் பாணி நமக்கு செட் ஆகல...!! (பழைய ரசிகர்கள் மன்னிக்கவும்)

    ஆனா டைகரின் பாணி வெகுவாக கவர்ந்துட்டது. தோர்கல், லார்கோ, டியூராங்கோ, ஸ்மர்ஃப்ஸ், ப்ளூகோட்ஸ், சோடா.... என முத்துவின் தற்போதைய பயணித்தில் நானும் தொற்றிக் கொண்டது மகிழ்ச்சி.....!!!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் விஜய்.எனக்கு 1987ல் தான் காமிக்ஸ் படிக்கும் ஆர்வம் வந்தது. எனக்கு இலவசமாக காமிக்ஸ் படிக்கக் கொடுத்த அண்ணா ஒருவர் முத்து காமிக்ஸ்ஸாகவே கொடுத்தார்.அதனால் முத்து மேல் தனிப் ப்ரியம் உண்டு. முகமுடி வேதாளன் , மாயாவி , லா -டே , ஜானி நீரோ மற்றும் காரிகன் , கிர்பி , மாண்ட்ரேக் என நான் ஆராதித்த நாயகர்கள் நிறையவே உண்டு.

      Delete
    2. வணக்கம் சரவணாரே.. எனக்கு கிடைத்தவை இரண்டும் என்றாலும் ஏனோ ஸ்பைடரும், ஆர்ச்சியும், டெக்ஸ்வில்லரும் தான் என்னை ரொம்ப கவர்ந்தார்கள்..... முக்கியமாக அந்த குண்டு புக்குகளில் உள்ள காம்பினேசன் தான் காரணம் போல...

      ஸ்பைடரின் கடத்தல் குமிழியும், உலகப்போரில் ஆர்ச்சியும் ரொம்ப ரொம்ப பிடிக்கும்.... ஆர்ச்சியின் பனிபூதம் & பாட்டில் பூதம் ஆல் சோ ரொம்ப பிடிச்சவை....!!

      பிறகு டெக்ஸ் வில்லர் ஆதிக்கம் செலுத்திட்டாரு முழுமையாய்...

      இதனால் முத்து ஹீரோக்கள் மேல் பார்வையை திருப்ப இயலவில்லை...

      சமகாலத்தில் 1990களின் பிற்பாதியில் டைகர் அறிமுகம்... இன்ஸ்டண்ட் ஹிட் டைகர்... டைகரின் எல்லாத்தொடருமே ஆல்மோஸ்ட் ஃபெண்டாஸ்டிக்....

      சோ, முத்துல டைகரும், லயன்ல டெக்ஸூம் ஃபைனலி அல்டிமேட் ஆக நின்றார்கள்....!! சமீபத்திய முத்து வரவுகள் மட்டுமே டைகருக்கு அடுத்த இடத்தில் மனசில் நின்றார்கள்....!!!

      அதனால் முதல் 5இடங்களை டைகரும், மற்ற இடங்களை சமீபத்திய வரவுகளும் பிடித்து கொண்டார்கள்....

      டைகர் கதைகள் டாப்5 என்றான பின்னே அதில் எந்தெந்த இடங்களை எதுக்கு என ஃபிக்ஸ் பண்ணுவது தான் சிரமமாக இருந்தது....

      மொத 3 இடத்தை அந்த 3 கதைகளை தாண்டி வேற எதற்கும் தர இயலுமா???
      அந்த 3ற்குள் எப்படி வேணா இடத்தை மாற்றிக் கொள்ளலாம்...!!! மெடல் கன்டன்டர்ஸ் அவைகள் தான், என்னைப் பொறுத்து....

      தஸ் மை டாப் லிஸ்ட் ரெடி!

      இனி ஒவ்வொன்று பற்றியும் விரிவாக அவ்வப்போது போட்டுவிடலாம்....

      Delete
  47. 1. THANGA KALLARAI 2. THURATHUM THALAIVITHI 3. EN PAER LARGO 4. MINNUM MARANAM 5. CONCRETE KAANAGAM NEWYORK 6. Sirai meetiya chithra kathai 7. Jumbo

    ReplyDelete
  48. அல்லாருமே யூத்தா ? இல்லாங்காட்டி யூத்தா காட்டிக்கிறதுக்கோசரம் புதுக் கதைகளையா தேர்வு பண்ராங்களா ? அல்லாட்டி ஓவர் பெருசுகளாகிப் போய் பழைய கதைல்லாம் ஆருக்குமே நினைவிலே இல்லியா ?

    புரிலியே ?

    ReplyDelete
    Replies
    1. காமிக்ஸ் படிச்சதில் நான்லாம் ரொம்ப ஜூனியர் தானுங் சார்....!!!

      நான் வரும்போதே முத்து வெளியீடு எண் 200கடந்திருக்கும்....

      வருவாங்க பாருங்க மூத்த ரசிகர்கள் எல்லாம், முத்து100க்கு, 200க்கு கீழே வந்த கதைகளின் தேர்வுகளோட....!!!!

      Delete
    2. // நான் வரும்போதே முத்து வெளியீடு எண் 200கடந்திருக்கும்.... //
      அதே,அதே...
      நாங்க எல்லாம் சிங்கம் மார்க் கம்பெனியாக்கும்...!!!

      Delete
  49. kanamal pona kadal
    manjal poo marmam
    sirai paravaigal
    kolaikara kalainjan
    pambu thheevil mayavi
    pathala nagaram
    thalai ketta thanga puthayal
    largo winch
    marma manithan martin etc.

    ReplyDelete
  50. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. ஆத்தாடி! முதல் இதழைஅவ்வருடத்திலேயே கிட்டத்தட்ட அந்தமாதத்திலேயே படித்திருக்கிறீர்கள்.அப்போது எனக்கு நான்கு வயதுக்கும் குறைவே..

      மாயாவியின் கதைகள் , சிஸ்கோவின் ரயில் கொள்ளை, காற்றினிலே வரும் கீதம், லாரன்ஸ் டேவிட் இன்னபிற கதைகள் அவை வெளிவந்து வெகுகாலம் பின்னரே படித்திருக்க வேண்டும்.

      Delete
    2. எனக்கு அப்போது பத்து வயது செனா ஜி.

      Delete
  51. காமிக்ஸ் எனும் மந்திரச் சுழல் (அ) மாய நதி :-
    1972. மாதம் நினைவில் இல்லை. நான் பிறந்து வளர்ந்த திருவண்ணாமலையில் கோவில் அருகில் முத்து ( என்று நினைவு) புத்தக (பெட்டி)க் கடையில் என் அண்ணன் வாடிக்கையாக தி ஹிந்து, குமுதம், என் அப்பாவிற்கு இந்தியன எக்ஸ்பிரஸ், மக்கள் குரல், கல்கி, என் அம்மாவிற்கு கலைமகள்,ஆனந்தவிகடன், என வாராவாரம் வாங்குவார். அந்த வாரம் குமுதம் வாங்கி வர நான் சென்ற போது இரும்புக்கை மாயாவி என்று ஒரு புத்தகம் தொங்க விடப்பட்டிருந்தது. அதைப் பார்த்து இது என்ன என்று கேட்டதற்கு கடைக்காரர், புதிதாக தமிழ் காமிக்ஸ் புத்தகம் வந்திருக்கிறது. 90 பைசாதான் (Note that-point) என்றார்.
    நான் வீட்டிற்கு வந்து என் பெரிய அண்ணனிடம் சொன்னேன். அவர் என்னிடம்
    ஒரு ரூபாய கொடுத்து (10 பைசா எனக்கு கம்மர் கட் மிட்டாய்க்கு) அதை வாங்கி வரும்படி சொன்னார். காமிக்ஸ் புத்தகத்தை வாங்கி அங்கேயே பிரித்து ஒரு ரவுண்ட் பார்த்துவிட்டேன்.(வீட்டிற்கு வந்துவிட்டால என் நான்கு அண்ணன்களும் படித்த பின்பு தான் புத்தகம் என் கைக்கு வரும். Rule is the rule.) சித்திரங்கள் என்னை மிகவும் கவர்ந்து விட்டன.
    வீட்டிற்கு வந்து என் அண்ணன்கள் அனைவரும் படித்து, பின்னர் நான் படித்து முடித்தேன. அற்புதமான மறக்க இயலாத அனுபவம். அதன் பின், வீட்டில் நாங்கள அனைவரும் காமிக்ஸ் ரசிகர்கள் ஆகிவிட்டோம்.
    இரும்புக்கை மாயாவி, உறைபனி மர்மம், நாச அலைகள், பாம்புத்தீவு, பாதாள நகரம், ப்ளைட் 731, விண்ணில மறைந்த விமானங்கள், காற்றில கரைந்த கப்பல்கள், மஞ்சள பூ மர்மம், கொலைகாரக் கலைஞன், தலை கேட்ட தங்கப் புதையல், நடுநிசிக் கள்வன், கொலைக்கரம்,
    என காமிக்ஸ் வரிசையாக வந்து எங்களை பரவசப்படுத்தியது.
    அப்பப்பா...
    எத்தனை அரிய வகை முத்துக்கள். பெயருக்கேற்ப முத்துகாமிக்ஸில் வந்தவை அனைத்தும் தேர்ந்து எடுக்கப்பட்ட நல் முத்துக்களே.
    நாங்கள் அனைவரும் இந்த மந்திரச் சுழலில் விரும்பியே சிக்கினோம்.எத்தனை வகை வகையான சுழல்கள்..இன்று வரை..
    அதன்பின் கொள்ளைக்கார பிசாசு வரை நினைவில் உள்ளது.
    முகமூடி வேதாளன், ஜூம்போ , இருளின் விலை இரண்டு கோடி, மூன்று தூண் மர்மம், ரோஜா மாளிகை ரகசியம், வைரஸ் எக்ஸ் போன்றவை நினைவில் நிழலாடுகின்றன.
    தங்கக் கல்லறை, மின்னும் மரணம், ரத்தப் படலம் போன்றவை சில பாகங்கள் மட்டுமே படிக்க முடிந்தது
    அதன்பின் வாழ்க்கை ஓட்டத்தில் எத்தனையோ வருடங்கள் உருண்டோடிவிட்டன.
    மீண்டும் 2011 இரத்தப்படலம் கம்ப்ளீட் எடிஷன் மூலம் மீண்டும் காமிக்ஸ் உலகில் அடியெடுத்து வைத்தேன்.
    கம் பேக் ஸ்பெஷல் தொடங்கி இன்று வரை சந்தா உறுப்பினராக இருக்கிறேன்.
    கருப்பு, வெள்ளையில் தொடங்கி, சில, பல இதழ்கள வண்ணத்தில் வந்து, இன்று உலகத் தரம் வாய்ந்த அச்சுத்தரத்திலும்,
    ஹார்ட் பவுண்டிலும் நாம் நினைத்துப் பார்க்கவும் முடியாத பல கதைகள் விதவிதமான ஜானர்களில், இன்று நம் கரங்களில் தவழ்கின்றன.
    NBS, மின்னும் மரணம், இரத்தப படலம், டியூராங்கோ , தோர்கல், லார்கோ போன்றவை நம் காமிக்ஸ் உலகின் மைல் கல் இதழ்கள்.
    மாயாவி தொடங்கி, தற்போதைய டெட் வுட் டிக் வரை எத்தனை ஹீரோக்கள்.எத்தனை கதைகள்.
    2012 ல் தொடங்கிய இரண்டாவது இன்னிங்ஸ் வெற்றிநடை போட்டுககொண்டிருப்பதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி.
    மூலவரான சீனியர் எடிட்டர் திரு.செளந்திரபாண்டியன் அவர்களுக்கும்,
    உற்சவரான எடிட்டர திரு.விஜயன் அவர்களுக்கும், பதினாறடி பாயக் காத்திருக்கும் ஜூனியர் எடிட்டர் திரு. விக்ரம் அவர்களுக்கும் வாசகர்கள சார்பில் பல கோடி நன்றிகள்.
    முத்துகாமிக்ஸின் இந்தப் பயணம் தொடர்ந்து 75 ம் ஆண்டு வைரவிழா, அதைத் தொடர்ந்து நூற்றாண்டு விழா என தொடர்ந்து வெற்றி நடை போட்டு காமிக்ஸ் உலகில் முடிசூடா மன்னனாக விளங்க வாழ்த்துகிறேன்

    ReplyDelete
    Replies
    1. அருமையான மலரும் நினைவுகள் பத்து. மகிழ்ச்சி.

      Delete
    2. பத்து சார்...உங்கள் போட்டோ புலீஸ் ! M 50-ல் முதலிடத்தை confirm செஞ்சுட்டிங்கோ !

      Delete
    3. நன்றிகள் சார்..
      ஹைய்யா..நானும் ரௌடிதான்..
      ..நானும் ரௌடிதான்.
      என் தம்பி சிவா இன்று உயிருடன இருந்திருந்தால் மிகவும் சந்தோஷப பட்டிருப்பான். எங்கள அனைவரையும் விட காமிக்ஸ் மீது வெறியாக இருந்தவன அவன். தங்களை ஒருமுறை அவன், திருச்சி நண்பர் விஜயசாரதி, மற்றும் நண்பர் ஹாஜா இஸ்மாயில் ஆகியோருடன் சிவகாசிக்கு வந்து தங்களை அலுவலகத்தில் சந்தித்து உரையாடியிருக்கிறான்.அந்த போட்டோககள் இன்னும் என்னிடம உள்ளன. ஒகேனக்கல்லில் அருவியில தவறிலிருந்து மரணிக்காமல் இருந்திருந் தால், முத்து 50க்கு ஆனந்தக கூத்தாடியிருப்பான்.
      Anyhow என்னை பெருமைப் படுத்தியதற்குமிக்க நன்றி சார்.
      இந்தத் தேரை வடம் பிடிப்பவர்களில் நானும் ஒருவன என்பதில் பெருமகிழச்சி அடைகிறேன்.

      Delete

      Delete
    4. பத்து சார்!! சூப்பர்!!! மனம் திறந்த பதிவு!! ஆத்மார்த்தமாக எழுதி, முத்து-50யிலும் இடம் பெற இருப்பது மகிழ்ச்சி சார்!! என் வாழ்த்துகளும் வணக்கங்களும்!

      Delete
    5. வாழ்த்துக்கள் பத்து :-)

      Delete
    6. Thanks Bharani. All credits goes to editor sir.

      Delete
    7. வணக்கம் பத்து சார்🙏

      முத்து 50ன் முதல் "வாசகமுத்து"---எங்கள் பத்துசார் என்பதில் பெருமகிழ்ச்சி.... வாழ்த்துகள் சார்💐

      அற்புதமான காலத்தை கண் முன்பு காட்டும் மாயச்சுழல் பதிவு!!!!

      தொடர்ந்து கைதட்டும் படங்கள் பலப்பல....👏👏👏👏👏👏👏👏👏

      இன்னும் முத்து நினைவுகளை ஞாபகப்படுத்தி அவ்வப்போது எழுதுங்க சார், காத்திருக்கிறோம்....

      Delete
    8. பத்து சாரை இனிமேல் பத்து அய்யான்னுதான் கூப்பிடனும்...!!!

      பத்து அய்யா,பத்து அய்யா,பத்து அய்யா......!!!!!!

      Delete
    9. கடோசில நம்மள தமிழய்யா ரேஞ்சுக்கு ஆக்கிட்டீகளே ரவி..

      Delete
    10. // NBS, மின்னும் மரணம், இரத்தப படலம், டியூராங்கோ , தோர்கல், லார்கோ போன்றவை நம் காமிக்ஸ் உலகின் மைல் கல் இதழ்கள். //
      உண்மை,2013 துவக்கம் என்பதாக நினைவு,NBS வந்த பார்சலை பிரித்து பார்த்த பிறகு வியப்பில் ஷாக் ஆனது இன்னும் நினைவுள்ளது,நம்ம முத்து காமிக்ஸா இது என அன்றைக்கு முழுக்க அந்த இதழை புரட்டிப் பார்த்துக் கொண்டே இருந்தேன்...!!!

      Delete
    11. // இந்தத் தேரை வடம் பிடிப்பவர்களில் நானும் ஒருவன என்பதில் பெருமகிழச்சி அடைகிறேன். //
      ஆம்,இது சின்னக் கூட்டமா இருந்தாலும் சிங்க கூட்டமாக்கும்...!!!

      Delete
  52. டெக்ஸ் & கிளிப்டன் பிரிவியூ கலக்கலா இருக்குங்க சார் 👌🏼👍🏼🙏🏼
    .

    ReplyDelete
  53. Title: பார்னேவும் சர்வரும்.
    Description: சென்னை.துறைமுகம்.கழுகு ஆடி அசைந்து வந்தது.நின்றது.நங்கூரம் பாய்ச்சப்பட்டது.கழுகில் வந்த சரக்குகள் சரிபார்க்கப்பட்டது.சரக்குகள் பெறவேண்டியவர் வந்தார், பெற்றுக் கொண்டார் , ஏற்றிச் சென்றார்.பிரின்சும் ஜின்னும் கழுகுலேயே ஓய்வெடுப்பதாகக் கூறிவிட்டதால் தனியாய் நகரைச் சுற்றிப் பார்க்கவும் உணவு உண்ணவும் வெளியே கிளம்பினான் பார்னே.பகட்டான பட்டு உடைகள் உடலை அலங்கரிக்க ஒரு குட்டி நாட்டின் மன்னனாய் வெளிப்போந்தான் பார்னே.ஹோட்டல் சொர்க்கம் பார்னேவை தன் கம்பீரமான தோற்றத்தால் ஈர்க்க உள் நுழைந்தான் பார்னே.பார்னேவும் நிறைய டிப்ஸ் வாங்கத் துடித்த சர்வரால் 32 பற்கள் காட்டி வரவேற்கப்பட்டான்.அமரவைக்கப்பட்டான்.
    பார்னே; சாப்பிட என்ன இருக்கு?
    சர்வர் ;மட்டன் கப்ஸா,சிக்கன் கப்ஸா,கிரில் சிக்கன் ,தந்தூரி சிக்கன்,சிக்கன் கபாப் எல்லாம் இருக்கு சார்.
    பார்னே ;என்ன பிரியாணி இருக்கு?
    சர்வர்;மட்டன் பிரியாணி,சிக்கன் பிரியாணி, நாட்டுக் கோழி பிரியாணி,இறால் பிரியாணி,மீன் பிரியாணி ,காடை பிரியாணி,முட்டை பிரியாணி ,சாதா பிரியாணி இருக்கு சார்.
    பார்னே; புரோட்டா இருக்கா ?
    சர்வர் ;(மனதிற்குள் லேசான எரிச்சலுடன் ) மட்டன் கொத்து பரோட்டா,சிக்கன் கொத்து பரோட்டா,மட்டன் கைமா,சிக்கன் கைமா,சிலோன் பரோட்டா, பன் புரோட்டா,நெய் பரோட்டா ,வீச்சுப் பரோட்டா, முட்டை வீச்சுப் பரோட்டா,முட்டைக் கொத்து பரோட்டா, சில்லிப் பரோட்டா இருக்கு சார்.உங்களுக்கு என்ன பரோட்டா தரட்டும் சார்?
    பார்னே; மாவு ஐட்டம் என்ன இருக்கு ?
    சர்வர் ;(மனதிற்குள் கடுமையான எரிச்சலுடன் திட்டிக் கொண்டே) நெய் ரோஸ்ட்.,மசாலா தோசை, ரவா தோசை ,பொடி தோசை , காளான் தோசை,மட்டன் கறித்தோசை, சிக்கன் கறித்தோசை,முட்டை தோசை உங்களுக்கு என்ன தரட்டும் சார்?
    பார்னே; சைடு டிஷ் என்ன இருக்குப்பா ?
    சர்வர் ;(கொலை வெறியுடன் கூடிய கடுமையான எரிச்சலை அடக்கிக் கொண்டே) மட்டன் மிளகு சுக்கா, சிக்கன் சுக்கா, சிக்கன் 65, சிக்கன் போன்லெஸ்,ஃபிஷ் போன்லெஸ் ,காடை ரோஸ்ட், நெய் மீன் ரோஸ்ட் ,இறால் ரோஸ்ட் ,நாட்டுக் கோழி சாப்ஸ் , அயிரை மீன் குழம்பு , சிக்கன் சவர்மா, கார்லிக் சிக்கன் , சிக்கன் லாலிபாப், நண்டு மசால் ,நண்டு ப்ரை , இறால் தொக்கு , சிக்கன் ப்ரை ,செட்டிநாட்டு சிக்கன் இருக்கு சார்.உங்களுக்கு எது தரட்டும் சார்.?
    பார்னே ;சிங்கிள் பரோட்டா , சிங்கிள் ஆம்லெட் மற்றும் மட்டன் கிரேவி குழம்பு மாத்திரம் போதும்.
    சர்வர்; என்னா...............து சிங்கிள் பரோட்டா ,சிங்கிள் ஆம்லேட்டா............?
    "டொம் "னு சத்தம்.
    பார்த்தால் ....சர்வர் மயங்கிக் கிடக்கின்றதைக் கண்ட
    பார்னே வுடு ஜூட் .எஸ்கேப்.

    ReplyDelete
    Replies
    1. அடேங்கப்பாடிக்கப்பாடியோவ்!! சாப்பாட்டுல இம்புட்டு வெரைட்டி இருக்கா/!!!

      Delete
  54. Update To ஈ.வி.
    தங்கக கல்லறை, மரண நகரம் மிசௌரி, இரும்புக்கை எத்தன், இருளில் ஒரு இரும்புக குதிரை, கான்சாஸ் கொடூரன், இரத்தத் தடம், முடிந்து அட்லாண்டாவில் ஆக்ரோஷம் மறு மறு வாசிப்பு போய்க் கொண்டிருக்கிறது. என்ன மாதிரியான கதை, வேகம், சித்திரங்கள். செம்ம..செம்ம..

    ReplyDelete
    Replies
    1. ஆத்தாடியோவ்!! லிஸ்ட்டு பெரிசால்ல இருக்கு!!
      என்ஜாய் என்ஜாய் பத்து சார்! :)

      Delete
    2. முதலில தங்கக் கல்லறை மட்டும் தான் படிக்க எடுத்தேன். ஒரு பரபர ஆர்வம் பற்றிக் கொண்டதில் டைகர் புக்ஸ் அடங்கிய 3 அட்டைப் பெட்டிகளும் புத்தக அலமாரியில் இருந்து படுக்கை அருகில இடம்பெயர்ந்துவிட்டன. அப்புறம் கேட்கணுமா? தீயா வேல செய்யணும் குமாரு தான்.

      Delete
    3. டைகர் கதைகள்:-

      லெப்டினன்ட் ப்ளூபெர்ரி (தமிழில்: கேப்டன் டைகர்) கதை தொடர்கள் 1963ல்
      முதன் முறையாக
      வெளியிடப்பட்டன. இதில்
      இதுவரை 28கதைகள் இடம்பெற்று
      உள்ளன.இவை அனைத்தும்
      தமிழில் வந்துவிட்டன.

      1,2,3,4&5=இரத்தக்கோட்டை-5பாக
      கதை(ஒற்றை ஒற்றை பாகங்களில் கறுப்பு வெள்ளையில் முத்து காமிக்ஸ்ல போடப்பட்டு, ஆகஸ்ட் 2017ல் ஈரோடு விழாவில் ஒரே இதழாக வண்ண மறுபதிப்பாக வெளியிடப்பட்டது)

      6.தோட்டா தலைநகரம்-சிங்கிள்
      சாட்- வண்ண மறுபதிப்பு-2018மார்ச்.

      7,8,9&10=இரும்புக்கை
      எத்தன்& பரலோகப்பாதை-4பாக கதை.(முத்து 250ல் ஆரம்பிக்கப்பட்டு அந்தரத்தில் தொங்கி, வண்ணத்தில் 2013 மே மாதம் க்ளைமாக்ஸ் பாகங்கள் போடப்பட்டன.)

      11&12=தங்க கல்லறை-1&2 -இருபாக
      கதை(2012நவம்பரில் வண்ணமறுபதிப்பு)- என்னைப் பொறுத்து நெ1.ஆஃப் டைகர்.

      13to23=மின்னும் மரணம்-11பாக
      கதை- தி கிரேட் ஸ்டோரி ஆர்க் ஆஃப் டைகர். முத்துவில், லயனில் என ஆங்காங்கே போடப்பட்டு, 2015ஏப்ரலில் பிரமாண்டமான வண்ண மறுபதிப்பாக வெளியானது.

      24,25,26,27&28=என் பெயர்
      டைகர்-5பாக கதை-கி.நா. பாணியில் இருந்தாலும் கூட வசீகரிக்க ஏதோ உள்ளது.

      இத்தொடர் பெரிய வெற்றி
      பெற்றதை அடுத்து டைகரின்
      இளவயது நடப்புகளை கொண்ட
      யங்டைகர் சீரியஸ் 1989ல்
      வெளியிடப்பட்டது. அதில்
      இதுவரை 21கதைகள் வந்துள்ளன.
      தமிழில் 9கதைகள் 3பாக, இருபாக
      கதைகளாக வெளிவந்துள்ளன.
      இன்னமும் 12பாக்கியுள்ளன.

      இளம்டைகர்...
      1,2&3=இளமையில் கொல்-3பாக
      கதையாக லயன் கெளபாய் ஸ்பெசலில் வெளியானது.

      4.மரணநகரம் மிசெளரி(வைல்டு
      வெஸ்ட் ஸ்பெசல்sep2012-இருபாக கதையின் முதல் பாகம்)
      5.கான்சாஸ் கொடூரன்
      (முத்துNBS jan2013-இருபாக கதையின் க்ளைமாக்ஸ்)

      6.இருளில் ஒரு
      இரும்புக்குதிரை(முத்து NBS
      jan2013-அடுத்த இருபாக கதையின் முதல் பாகம்)
      7. வேங்கையின் சீற்றம்(டிசம்பர்
      2013-NBSல் வந்த இருபாக கதையின் க்ளைமாக்ஸ் சாகசம்)

      8.அட்லான்டா ஆக்ரோசம்
      9.உதிரத்தின்விலை...8&9-ஒரே
      இதழாக மார்ச்2014ல் வந்த இருபாக
      சாகசம்.

      அடுத்த 12பாகங்கள் கொண்ட இளம் டைகருக்காக ஆவலுடன் வெயிட்டிங். 4பாகங்கள் கொண்ட 3இதழ் அல்லது 6பாகங்கள் கொண்ட 2இதழ் என கதைகளின் முடிவுக்கு ஏற்ப வெளியிட்டால் நலம்.

      அதிலும் சமீபத்திய ஆங்கிலத்தில் வந்த 20ம் பாகமான கேட்டீஸ்பர்க் பார்த்தேன். அட டா ஸ்டன்னிங் ஓவியங்கள். டியூராங்கோவில் உள்ளது போன்ற கலரிங் நேர்த்தி. எப்போ வருமோஓஓஓஓஓ லயனில்.....!!!!

      டைகரின் முன்கதை கொண்டு
      இளம்டைகர் உருவாக்கப்பட்டது
      போல பின்கதைக்கு ஏதும்
      உண்டா என்றால் அதற்கும் "ஆம்"
      என்பதே பதில். சீக்வலாக மார்சல்
      டைகர் என்ற 3பாக டைகர்
      சாகசமும் வந்துள்ளது.

      தமிழில்...2014ஆகஸ்டில் லயன்
      மேக்னம் ஸ்பெசலில் வந்த முதல்
      பாகம்+2015மார்ச்சில் வந்த "
      வேங்கைக்கு முடிவுரையா" ல்
      இரண்டு பாகம் என 3ம்
      வந்துவிட்டன.
      அவ்வப்போது இங்கே கொஞ்சம்
      அங்கே கொஞ்சம் னு கொத்து
      புரோட்டா போட்டதால் கொஞ்சம்
      கன்பியூசன்.

      குறிப்பு: "அபாச்சே"----என் பெயர் டைகரில் வந்த ஜெரோனிமோ பற்றியும் அபாச்சேக்கள் பற்றியும் ஹைலைட் ஆக என் பெயர் டைகரில் இருந்து சில பக்கங்களை எடுத்து ஒரு இதழாக உருவாக்கியுள்ளனர். டைகரின் தாயகமான ப்ரென்சில் இது பாகம் "0" வாகவும், மற்ற நாடுகளில் பாகம் 29ஆகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


      பத்துசார்@ இந்த குறிப்புகள் உங்க டைகர் வாசிப்பு ஆர்டருக்கு துணை செய்யுமா பாருங்க....!!!

      Delete
    4. நன்றி சார். இதில் இளமையில் கொல் மூன்று பாகக் கதை படித்ததாக நினைவு இல்லை. மற்றவை எல்லாம் படித்துவிட்டேன். மின்னும் மரணம் டைகர் கதைகளில் மட்டுமல்ல, முத்து காமிக்ஸுக்கே மாஸ்டர்பீஸ். காமிக்ஸ் மணிமகுடத்தில பதிக்கப்பெற்ற கோஹினூர் வைரம்.
      இன்றைக்கு 1000 ரூ விலையில் அதை மறுபடி நிச்சயமாக வெளியிட முடியாது. நண்பர்களுக்கு நான் சொல்லும் ஒரு விஷயம்.சிறிது விலை அதிகம் என்று நீங்கள் நினைத்தாலும், (நிச்சயமாக இல்லைதான்) ஸ்பெஷல் பிரிண்ட் ரன் வெளியீடுகளை யோசனை செய்யாமல் வாங்கி விடுங்கள். தவறவிட்டால் அதன் பின்னர் நீங்கள் நினைத்தாலும் அவைகளை வாங்க முடியாது.
      வாசிப்பை நேசிப்போம்.

      Delete
    5. எடிட்டர் சார்..
      அந்த இளம் டைகர் கதைகள் வரும் வாய்ப்பு உள்ளதா?

      Delete
    6. ஹல்லோ...ஹல்லோவ்வ்..ஹல்லோவ். டவர் கிடைக்க மாட்டேங்குது சார் !

      Delete
  55. பாணா காத்தாடி !

    /* முத்துவின் ஆண்டுமலர் 50 பணிகளின் பெரும்பகுதி நிறைவுற்று விட்டாச்சு ! இன்னும் ஒரு 46 பக்க ஆல்பமும், filler pages-களுமே பாக்கி ! .. ஆனால் 1972 முதலே முத்து காமிக்ஸை வாசித்திருந்தால் மட்டுமே ஆச்சு என்றில்லை தான் ; நடுவே புகுந்தோர் ; சமீபமாய்ப் புகுந்தோருக்குமே இந்த இதழினில் நிச்சயம் இடமுண்டு */

    விரைவில்!

    Inspired by

    பத்துக்குள்ளே நம்பர் ஒண்ணு சொல்லு - என் நெஞ்சுக்குள்ள யார் என்று சொல்வேன்!

    அப்படின்னா பத்து சார்!

    ReplyDelete
  56. This comment has been removed by the author.

    ReplyDelete
  57. என் நெஞ்சுக்குள்ளே 'முத்து' சார்.

    ReplyDelete
    Replies
    1. பத்து சார்,

      உங்கள் பதிவைப் போலவே உங்கள் தலைப்பும் மிக மிக அருமை!

      காமிக்ஸ் எனும் மந்திரச் சுழல் அல்லது மாய நதி!

      ஒரு விவாதத்திற்கு 'மந்திரச் சுழல்' தலைப்பு தான் சரி என்று சிலர் வாதாட நினைத்தாலும், என்னைப் பொருத்தவரை 'மாய நதி' மிகவும் பொருத்தமாக இருக்கிறது ; மனதை மயக்குவதாகவும் இருக்கிறது! முத்து காமிக்ஸ் இன்று தனது ஐம்பதாவது ஆண்டில் அடி எடுத்து வைத்து அன்றிலிருந்து இன்றுவரை, இனிமேலும் ஓடிக் கொண்டேதான் இருக்கப் போகிறது! காமிக்ஸ் எனும் மாய நதி - நமக்கான சொர்க்கபுரி!

      Delete
  58. "முத்துகாமிக்ஸ்" - பொன்விழா ஆண்டு லோகோவில்-
    முதல் image_தான் எனக்கு பிடித்திருக்கிறது.
    காரணம்-M-என்ற எழுத்தைச் சுற்றி வட்டம் என்பதுதான் முத்துகாமிக்ஸின்_தனி அடையாளம் என்று இருந்தாலும். அந்த வருடம் மட்டும் 50வது ஆண்டை சிறப்பித்து ஒரு கேடயம் வழங்கியது போலவும்- கிரீடம் வழங்கி சிறப்பித்தது போல் அருமையாக உள்ளது..
    எனவே, முதல் லோகோ-வே எனது விருப்பம். சார்..

    ReplyDelete
  59. பத்து சார் அவரது தம்பியைப் பற்றி நினைவு கூறியது எனக்கு எனது கடைசீ தாய்மாமனை நினைவுபடுத்தியது. முத்து காமிக்ஸ் முதல் 90 பைசா இதழிலிருந்து ஒரு பெட்டியில் சேர்த்து வைத்திருந்தார். நான் தஞ்சாவூரில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது அவற்றை எடுத்துப் படிப்பதுண்டு. நான் வைத்துக் கொள்ளட்டுமா என்று கேட்டால் விரட்டி விடுவார். படிப்பதற்கு மட்டுமே அனுமதி. இன்றளவும் அவை அவரது மகனிடம் உள்ளது. 

    இன்று தமிழகமே சிக்கித் தவிக்கும் அந்த தவறான பழக்கத்திற்கு அடிமையாகி 2008ம் வருடம் எங்களைப் பிரிந்து விட்டார். 2012ல் மட்டும் நமது மீள்வருகையின் போது அவர் இருந்திருந்தால் இன்று வரை அவருக்கு சந்தா செலுத்தியிருப்பேன். 50ம் ஆண்டு பிரதிகளின் ஒரு தொகுதி அவரது மகனைச் சென்றடையுமாறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

    --x--x--

    ஸ்ரீரங்கத்தில் முன்பு மொட்டை கோபுரமாய் இருந்த தற்போதைய ராஜகோபுரத்தின் அருகே புளிய மரத்தின் (!!) அடியே ஒரு கடையில் முத்து / ராணி பின்னர் லயன் காமிக்ஸ் / திகில் காமிக்ஸ் எல்லாம் தொங்கும் (தொங்குவது அ .. அது .. மட்டுமல்ல என்று சுற்றுப்புறத்தில் பேசுவார்கள்). மாலை வேளையில் சென்று வாங்க சற்று பயமாகத்தான் இருக்கும் :-) 
    நம்ம எடிட்டர் வேற ரத்த காட்டேரி மர்மம் அப்டீ இப்டீன்னு பேரு வைத்து நடுப்பகலிற்கு பின்னர் சென்று வாங்க முடியாமல் செய்துவிடுவார் வேறே :-) கடைசீயாய் அங்கே வாங்கியது 2008ல் சூ மந்திரக்காளி .. அப்புறம் கடையும் காணோம் .. புளிய மரமும் காணோம் .. நமது titles கூட சற்றே சாந்தமாய் வரத்துவங்கி விட்டது :-)

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. ஸ்ரீரங்கத்து நினைவலைகள் !

      Delete
  60. டியர் விஜயன் சார்,

    இந்த மாதம் "சித்திரமும் கொலைப் பழக்கம்" இதழ் எனக்கு வந்த பார்சலில் இல்லை! (அதைப் படித்து பாதிப்புக்குள்ளான நண்பர்கள் என்னைப் பொறாமையுடன் பார்ப்பது தெரிகிறது!)  2021-க்கான சந்தா மற்றும் ஜம்போ இவற்றிக்கு ₹5100 கட்டியிருந்தேன் - இந்த இதழ் சந்தாவில் இல்லையா? தவிர, எனக்கு India Post-ல் அனுப்பப்படுவதால், புத்தகங்கள் மிகவும் தாமதமாகத்தான் கிடைக்கின்றன. இம்மாத கன்சைன்மெண்ட் எண்ணை ட்ராக் செய்து பார்த்ததில், 11-ம் தேதி சிவகாசியில் இருந்து அனுப்பப் பட்டு, 14ம் தேதி டெலிவர் (பெங்களூரு) செய்யப்பட்டதாகக் காட்டுகிறது. கையில் கிடைத்ததென்னவோ கடந்த வாரம் தான்! அடுத்த மாதத்திலிருந்து கூரியரை மாற்றிக் கொள்ளும் வாய்ப்புண்டா சார்?

    கடந்த சில பல ஆண்டுகளாக சந்தா பெட்டிகளை திறந்து கூட பாராமல் அலட்சியமாக இருந்து விட்டதில், எனக்காக வேறு என்னென்ன ஆச்சரியங்கள் காத்துக் கிடக்கின்றனவோ?! இருப்பினும் அது குறித்து பெரிதாக அலட்டிக் கொள்ளும் முரட்டுச் சேகரிப்பாளர் மன நிலையைத் தாண்டி விட்டேன் என்றே நினைக்கிறேன்! :)

    ReplyDelete
    Replies
    1. அனுப்ப மறந்திருப்பார்கள் கார்த்திக் ; நாளைக்கு அனுப்பச் செய்கிறேன். And பெங்களூருவுக்கு அநேகமாய் எல்லோருமே DTDC தான் விரும்புகிறார்கள் ; மாற்றச் சொல்லிடலாமா ?

      Delete
    2. And Rs.5100 க்கு ஜாஸ்தி கட்டியிருக்கணும் என்று நினைக்கிறேன் ...

      Delete
  61. This comment has been removed by the author.

    ReplyDelete
  62. Edi ji,

    Top 8

    Jhonny Nero
    Lawrence and David,
    Steel claw
    Wing commander George
    Rip Kirby
    Mandrake
    Charlie sawyer
    Blueberry.
    ஆறாவது படிக்கும்போது,இங்கிலீஷ் மீடியம் படித்ததால் தமிழ் வரவில்லை என்று, என் அம்மா சொல்ல என் தாத்தா முதலில் வாங்கி கொடுத்தார் புத்தகம் முத்து காமிக்ஸ்,
    எனவே எனக்கு காமிக்ஸ் அறிமுகமானது எனது தாத்தா மூலமே.
    அதன்பிறகு ஆர்வம் தொற்றிக் கொள்ள ஈடுபாடோடு இன்றுவரை வாங்கி சேகரித்து வருகிறேன் இதன்மூலம் என் தாத்தாவின் மறைவிற்குப் பிறகும் அவரை என்னால் நினைவுகூர முடிகிறது.

    ReplyDelete
  63. என்னோட பத்தாவது வயதில் (ஒரு இருபது வருசத்துக்கு முன்னே) அப்பாவின் நண்பர் ஒருவர் மூலமாக அறிமுகமானது முத்து காமிக்ஸ். கத்தி முனையில் மாடஸ்டியை 50-60 தடவையாவது படிச்சிருப்பேன். நான் படித்துக் கொண்டிருந்ததை பார்த்த அவர் கழுகு மலைக் கோட்டை கதையைப் பற்றி சொல்லி வீட்டிற்கு அழைத்த சென்று இருந்த எல்லா முத்து காமிக்ஸ் (முத்து வார மலர் உட்பட) எல்லாத்தையும் அள்ளிக் குடுத்து விட்டார். முத்து கழுகு மலை கோட்டை உள்பட. அப்படித்தான் எனக்கு முத்து காமிக்ஸ் அறிமுகமானது. அந்த சமயத்தில் என்னை மிகவும் கவர்ந்த கதைகளில் மாயாவி, வேதாளர் மற்றும் லாரன்ஸ் & டேவிட் கதைகள்.

    முத்துவில் வெளி வந்த கதைகளில் என்னுடைய டாப் டென்:

    1. தங்கக் கல்லறை
    2. மின்னும் மரணம்
    3. ரத்தக் கோட்டை

    ReplyDelete
  64. எனது முதல் வாசிப்பு இரும்பு மனிதன்.நம்ம முத்து லயனுக்கு முன்னர் வந்தாலும் கிடைத்ததென்னவோ பின்னர்தான்.எங்க பழைய புத்தகக் கடைக்கு வந்த கதையான கட்டிப் போட்ட நிலையில் தவிக்கும் அந்த மாயாவிய குத்த வரும் கடிகார பொம்மை தாங்கி வரும் கதைதான் முதலில் படித்திருப்பேன் என நினைக்கிறேன் .அதுவும் பாதி கிழிந்த நிலையில் இருக்கலாம் ! வேறு கதையாகவும் இருக்கலாம் முத்துவின் வாசிப்பில் ! அசந்து போனது நினைவில் ! அது போல மாயாவி கதைகள் தொடர்ந்து வருமென தெரியாது. பின்னர் படித்ததில் வியக்க வைத்தது இன்றும் ரசிக்கும் களிமண் மனிதர்கள் .என்ன ஒரு கற்பனை . கதிரலை பாய்ச்சி தகர்க்க முடியாத களி மண்னும் , நம்மைப் போல் சிறு வயது மோரிசும் , பள்ளத்தில் வரும் லாரியை கதிரலை பாய்ச்சி நிப்பாட்டும் கார் டிரைவர் லூயிஸ் கிராண்டேலும் ,தன் மேல் பீச்சிய களிமண்ணை மின்சார சக்தியால் உதறும் இரும்புக் கையாரும் தூங்க விடாமல் சிறுவனான என்னை பிற கதைகளை தேடி குவிக்க கட்டாயப் படுத்தியதுன்னா மிகையல்லவே. இரும்புக்கை அட்டைகள்ல பாத்தாலே ஆர்வமா பிற வெளியீட்டுக் கதைகளையும் தேடித் திரிய வைத்து வாழ்வின் உச்சபட்ச சந்தோசத்தை தொட்ட நாட்களவை!

    ReplyDelete
    Replies
    1. அதன் பின்னர் ரசிச்சது மாயாவதியின் இருவண்ண பறக்கும் பிசாசு . இன்றும் கையில் உள்ள பொக்கிசம் .கருப்பு முகமூடி அணிந்த ஜிப்ரால்மர் ஆவியும் ,சர்க்கஸ் மாந்தர்களும் , ஆவி பலி வாங்கும் வித்தைக்காரர்களும் மறக்க இயலா வாசிப்பனுபவம் தான் .

      Delete
    2. லாரன்ஸ் டேவிட் தோன்றும் விண்ணில் மறைந்த விமானங்கள் .அதில் பெரிய விமானம் வாய்பிளந்து விமானங்கள விழுங்குவதும் விமானியாக லாரன்ஸ் மயக்க ஊசி போட்டு உயிர் பிழைத்து அகொதீகவினரை எதிர்த்து போராடி மாயாவிய தாண்டி ரசிக்க வைத்த கதை

      Delete
    3. கவிஞரே...அது வான்வெளிக் கொள்ளையர் !

      Delete
    4. //அதன் பின்னர் ரசிச்சது மாயாவதியின் இருவண்ண பறக்கும் பிசாசு .//

      எதுக்கும் கொஞ்ச நாளுக்காச்சும் U.P. பக்கமா போவாதீங்க ஸ்டீல் !

      Delete
    5. //எதுக்கும் கொஞ்ச நாளுக்காச்சும் U.P. பக்கமா போவாதீங்க ஸ்டீல் !//

      :-)))

      Delete
    6. ஓய் வான் வெளிக் கொள்ளையரின் அகொதீகப்பா...

      Delete
    7. மாயாவியாதிட்ட போட்டுக் கொடுத்தாச்சி...

      Delete
  65. My Muthu Top 10

    1. மின்னும் மரணம் (டைகர்)
    2. தங்க கல்லறை (டைகர்)
    3. Never Before Special
    4. என் பெயர் டைகர் (டைகர்)
    5. ஆதலினால் அதகளம் செய்வீர் (லார்கோ)
    6. இனி எல்லாம் மரணமே (மார்டின்)
    7. ஒரு நிழல் நிஜமாகிறது (லார்கோ)
    8. கடவுளரின் தேசம் (தோர்கல்)
    9. சிகரங்களின் சாம்ராட் (தோர்கல்)
    10.இரத்தக்கோட்டை (டைகர்)

    ReplyDelete
  66. அது 1972.
    அருப்புக்கோட்டை பந்தல்குடி ரோடு திருச்சுழி ரோடு ஜங்ஷன்ல - செந்தூரான் கடை (இன்றும் முகவராகஇருக்கிறார்) இருக்கும்.டௌசர் போட்டுட்டு திரிந்த காலம். டூவீலர்களே அரிது.நடந்து தான் எங்கும் போகவேண்டும்.அந்த கடையில் தான் வாழ்க்கையின் முதல் காமிக்ஸ் தரிசனம்.பாதாள நகரம் - முதல் காமிக்ஸ்.
    எனது பாட்டியார் வெற்றிலை பாக்கு போடும் பழக்கமுள்ளவர்.அதனால் நாலணா (25 பைசா) கொடுத்து வெற்றிலை பாக்கு வாங்கி வரச் சொல்லுவார்.இருபது பைசாக்கு வெற்றிலை பாக்கு வாங்கி வரச் சொல்லுவார் (சுண்ணாம்பு வாங்கி வர மறந்து விடுவேன்). ஆனால் மீதி ஐந்து பைசா சேர்த்து வைப்பேன்.கடைக்காரரிடம் ஒரு டீல் போட்டிருந்தேன்.அண்ணாச்சி நான் அஞ்சஞ்சூ பைசாவா சேர்த்து வைத்திருக்கேன்.என்னிடம் எண்பது பைசா இருக்கு.பாதாள நகரம் வாங்க ஆசையா இருக்கு என்றேன். உடனே எதுவும் பேசாமல் பாதாளநகரம் என் கைக்கு வந்துவிட்டது.மீதி பத்து பைசா இரண்டு நாளில் செட்டில் செய்தேன்(அண்ணாச்சி பாக்கி குடுத்திட்டேன் - அண்ணாச்சி பாக்கி குடுத்திட்டேன் என்று இரண்டு தடவை சொன்னது இன்றும் பசுமை).

    " இன்னும் கொஞ்ச நாளில் இந்த உலகமே எனக்கு அடிமை " என்று வில்லன் ஷேக் பேசிய வசனம் இன்றும் மனப்பாடம்.பாதாள நகரம் கையில் வந்ததும் உலகமே எனக்கு கையில் வந்த பிரமை.அந்த சிறு வயதின் பெரீய்ய சந்தோஷத்தில் மிதந்த கணம் பசுமரத்தாணி நண்பர்களே.அதனில்ஸநனைந்தவர்களுக்கே தெரியும்.
    அடடா!!!அதை நண்பர்களிடம் காட்டி பெருமைப்பட்டது என்ன வீரியம்.இண்டர்வெல்ல அதை எனது (ஆறாப்பு)நண்பன் கதிர்வேலு ரகசியமாக களவாண்டதை மாரியப்பன் என்னிடம் சொல்லிவிட அவனது அறிவியல் கணக்கு புத்தகத்தை எடுத்து கதறவிட்டதும் திரும்ப வாங்கி அவனை மன்னித்ததும் தனிக்கதை.

    இப்படியாக ஆரம்பித்தது காமிக்ஸ் வரலாறு.அதன்பின் வந்த பல முத்து காமிக்ஸ்கள் சேகரித்ததும் அதை ரகசியமாக வீட்டு பரணில் சேர்த்தேன். பல முந்தைய காமிக்ஸ்களும் இரும்புக்கை மாயாவி அடுத்தடுத்து நகர டிரங்க் பெட்டிக்குள் வந்தமர்ந்தன.
    தீவை மீட்டிய தீரன் வரை கலெக்ஷனில் ஜொலித்தன.1980ல் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலை கல்லூரியில் B.Scகெமிஸ்ட்ரி படித்த போதும் தொடர்ந்து மதுரை மருத்துவக் கல்லூரியில் பார்மசி டிப்ளமா முடித்த போதும் என்னுடன் தொடர்ந்து பயணித்த துணைவர்கள். ஒரு தலை ராகம் பிய்த்துக் கொண்டு ஓடிய கஜலட்சுமி தியேட்டரில் இன்டர்வெல்லில் காமிக்ஸ் படித்ததும் ஞாபகம்.அன்று தொடங்கிய இந்த ஆனந்த போதை இன்றும் தொடர்கிறது...
    நடுவில் காமிக்ஸ் வராமல் நின்றுவிட்ட பொழுதிலும் மனம் தளரவில்லை.விடாமல் கடைகளில் கேட்டு அலைந்ததுண்டு.
    தொடர்ந்து எந்த ஊருக்குச் சென்றாலும் ஆங்காங்குள்ள பஸ் ஸ்டாண்ட் கடைகளில் தேடுவது இயல்பாய் நடக்கும்‌(அனிச்சை செயல்).

    எந்த விழாக்களுக்குச் சென்றாலும் தயங்காமல் காமிக்ஸ் படிப்பதும் மீட்டிங்குகளிலும் டேபிளில் குண்டு புக்குகளை தவறாமல் இடம் பிடிக்கச் செய்து விடுவேன்.
    இந்த இரத்தப்படலத்திற்கு பணத்தை கட்டிவிட்டு அண்ணாச்சியை நூறுமுறைக்கு மேல் பிறாண்டி எடுத்ததும் தனிக்கதை.அதுமட்டுமல்ல.குடந்தைக்கு குடி பெயர்ந்த போது நோக்கியா செல்போன் அறிமுகமாகி BPL சிம் போட்டு ஆரம்பித்த பேச்சு இன்றளவும் தொடர்கிறது.
    ஒருமுறை சிவகாசிக்கு நேரில் சென்று அனைத்து இழந்த புத்தகங்களையும் மொத்தமாக வாங்கிய வரலாற்று நிகழ்வும் உண்டு.ஆசிரியரை பார்க்க முடியாமல் ஏமாந்தது தனி.ஆனால் மனிதர் எப்படி இருப்பார் என்று கற்பனையில் நினைத்தபடியை டீவியில் பார்த்தது நம்ப முடியாத சத்தியம்(அலுவல் ஐஸ்).
    பிறகு மீண்ட வருகையிலிருந்து தொடர்கதை.

    ReplyDelete
    Replies
    1. எழுபதுகளை கண்முண்ணே கொணர்ந்து விட்டீர்கள் சார் ! உங்கள் (சமீப) போட்டோவும் ப்ளீஸ் ?

      Delete
    2. அவுல் ஐஸ் என்றால் கோபித்துக் கொள்வாரோ பிரிய எடிட்டர்.பிறகு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஈரோடு புத்தக விழாவில் கலந்து கொண்டதும் டெக்ஸ் வில்லருக்கு இருபத்தைந்தடி உயரத்தில் பேனர் கட்ட நம்ம ஈரோட்டு பூனையை நச்சு எடுத்ததை அவரிடமே கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்...
      இரத்தப்படலம் மறுபதிப்பில் பதிமூன்றின் பேனரடித்து அதில் அபிமான டெக்ஸையும் கேப்டன் டைகரையும் இடம் பெறச் செய்ததும் , புலன் விசாரணையை வரிவிடாமல் மொழி பெயர்த்ததும் அதற்காக எடிட்டரின் கையால் வாங்கிய ஆறாயிரம் ருபாய் செக்கை இன்றுவரை மாற்றாமல் காத்து வருவதும் தனிக்கதை.பிறகு பிளாக்கில் இறங்கி களத்தை கலக்கி வருகிறேன்...

      Delete
    3. சமீப போட்டோவா.

      இப்பிடியா பழி வாங்குவீங்க...அவுல்னு சொன்னதுக்கு

      Delete
  67. ஆசிரியருக்கும் காமிக்ஸ் நண்பர்களுக்கும் இனிய வணக்கம் 🙏
    முத்து எனக்கு அறிமுகமானது 1979ல்
    முதலில் படித்தது இரும்புக்கைமாயாவின்புக்தான் அன்றிலிருந்து இன்றுவரை மறக்கவியலா அங்கமாகிவிட்டது வாழ்வில். முத்து லயனில் வந்த அனைத்தும் பிடித்தாலும் முத்துவில் டைகரும்,லயனில் அதிகாரியும் முதலிடத்தை தட்டிச்செல்வதை தவிர்க்கவே முடியவில்லை!. யுத்தகாலங்களிலும் குண்டு மழைகளுக்கு மத்தியிலும் புக் வாங்கவேண்டும் என வீட்டுக்கு தெரியாமல் நண்பனுடன் களவாக சென்று புக் வாங்கி வரும் வழியில் குண்டு வீச்சின் போது மணலில் விழுந்து படுத்ததும்,அருகாமையில் குண்டு விழுந்து வெடித்ததில் ஏற்பட்ட மணல் வீச்சில் உடல் முழுவதும் மணலால் மூடப்பட்டதும், எழுந்த பின்பு முதலில் புக்கிலுள்ள மணலை தட்டிபுக் பத்திரமாக இருக்கா எனப்பார்த்து பரவசப் பட்டதும் மறக்கவிலாநினைவுகள்.
    அதிகாரியின் தோட்டா பாய்வதைபோல், (இங்கு) நேரிலே பார்த்த அனுபவம் நிறையவே உண்டு.

    பலதடவை ஆபத்திலிருந்தும் தப்பி வந்தது முத்து,லயன் படிக்கத்தான் என நினைக்கிறேன்.

    "சொத்து" எதுவெனக்கேட்டால்
    "கெத்தாக" சொல்வேன்
    "முத்து"வென.

    நண்பர்களின் விமர்சனங்கள், அரட்டைகள் அற்புதம்
    -அன்புடன் சர்மா


    ReplyDelete
    Replies
    1. பிரமிக்கச் செய்யும் நினைவலைகள் நண்பரே ; உங்களின் போட்டோ ப்ளீஸ் !

      Delete
  68. பாணா காத்தாடி ! 1

    சென்னைவாசிகளின் பொற்காலம் அது! எத்தனை எத்தனையோ விளையாட்டுகள் ; பொழுதுபோக்குகள் ; சொர்க்கம் எனத் திரிந்த நாட்கள் - ஒற்றை நாளில் சுற்றித்திரிய வெறும் 17 மணி நேரம் தானே இருக்கிறது என்று வருந்திய நாட்கள் கொஞ்சம் நஞ்சமல்ல!

    உலகப் பொருளாதாரமயம் என்றால் என்னவென்றே தெரியாத காலம் அது! உணவை நினைத்துக் கவலை இல்லை - ஏனென்றால் நீராகாரம் கூட அமிர்தமென இனித்தது! பணத்தை நினைத்துக் கவலை இல்லை - ஏனென்றால் ஒரு பைசாவிற்குக் கூட தின்பண்டம் கிடைத்தது! உடுத்தும் உடையை நினைத்துக் கவலை இல்லை - ஏனென்றால் சட்டையில்லாத உடம்பே கம்பீரமாகத் தோன்றியது! பார்த்தது அனைத்துமே பரவசமாகத் தோன்றியது ; கேட்டது அனைத்துமே இன்பமாக இருந்தது!

    ஒரு தெருவுக்கு பத்து வீடுகள் தான் இருக்கும் ; ஓடி வந்து பல்ட்டி அடிக்க மணல் குவியல்கள் ஆங்காங்கே குவிந்து இருக்கும் ; இரவில் காவு வாங்கக் காத்திருக்கும் புது வீட்டின் கடக்கால்கள் சிறுவர்களின் தலையளவு ஆழத்துடன் அந்திமாலையில் மிரள வைக்கும் - எவரும் எதற்குமே அஞ்சியது இல்லை ; எவருக்கும் எதுவுமே வருத்தியதுமில்லை!

    Location : Bharathi Street, Gandhi Nagar, Saligramam, Chennai 600093

    Timeline : 1986

    தொடரும்!

    ReplyDelete
  69. நினைவலைகள தொடர்ந்து வந்தால்,
    நேரமெல்லாம் கனவலைகள்..
    கனவலைகள் வளர்வதற்கு
    காமிக்ஸ் எனும் மலர்க்கணைகள்.

    அனைவரது பால்ய காமிக்ஸ் நினைவுகளை தட்டியெழுப்ப பிள்ளையார்சுழி போட்டதில் எனக்கு மகிழ்ச்சியே.
    நண்பர் மேலே பதிவிட்டது போல், முத்து என்றாலே டைகர் என்பது மறுக்க முடியாத உண்மை.

    ReplyDelete