நண்பர்களே,
வணக்கம். ஒற்றை வாரத்துக்குள் மின்னும் மரணத்தின் புண்ணியத்தில் ஒரு திருவிழாவை வாழ்ந்து பார்த்ததொரு அனுபவத்தோடு தரைக்குத் திரும்புகிறேன் - இந்தப் பதிவோடு ! ஆனால் பாருங்களேன் - இதுவும் கூட விண்ணில் எழும்பும் ஒரு சுகமான அனுபவத்தைப் பற்றியது என்பதால் - காற்றில் மிதக்கும் பாக்கியம் அடியேனுக்கு இன்னும் கொஞ்ச காலம் தொடர்கிறது! தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது மே மாதத்து விண்ணில் ஒரு வேங்கையின் முன்னோட்டத்தின் பொருட்டே என்பதை இந்நேரம் நீங்கள் புரிந்திருப்பீர்கள் என்பதால் - let's get into it guys !
LADY SPITFIRE என்பது தான் நாம் இம்மாதம் காணக் காத்திருக்கும் பிரெஞ்சுக் கதைத்தொடரின் ஒரிஜினல் பெயர். இது இரண்டாம் உலக யுத்தத்தின் களத்தை மையமாகக் கொண்டதொரு பெண் பைலட்டின் சாகசம் ! கிராபிக் நாவல்கள் பாணிகளில் நிஜக் கதைகளின் தழுவல்களாக இல்லாது வழக்கமான மசாலாத் தூவல்களோடு, அட்டகாசமான சித்திரங்களோடும், அதிரடி ஆக்ஷனோடும் இருந்திடும் ! அதெல்லாம் சரி, உலகயுத்தக் கதை பற்றியதொரு முன்னோட்டப் பதிவின் தலைப்பில் "பால்யங்களுக்கு" வேலை என்னவோ என்ற கேள்வி உங்களைக் குடையும் பட்சத்தில் இதோ அதற்கான 'ஹி..ஹி..' ரகத்திலான பதில். உங்களது இளமைக்காலத்து காமிக்ஸ் நினைவுகள் கரெண்ட் கம்பிகளைத் தேடித்திரியும் இரும்புக்கையார்களையும், ஏற்நெற்றி கொண்ட சிலந்தி மனிதர்களையும் ; பயர் இஞ்சினுக்கு அடித்ததின் மிச்சப் பெயிண்டில் மூழ்கி எழுந்த உலோகத் தலையர்களையும் சுற்றிப் பிணைந்திருப்பின், அடியேனின் soooooooooooooooo loooooooooooooong ago பால்யத்தின் காமிக்ஸ் கனவுகளில் ஒரு பெரும் பகுதி இரண்டாம் உலக யுத்த களத்தில் தீரங்கள் பல செய்த மனிதர்களையும், மிஷின்களையுமே சார்ந்து இருந்து வந்தன ! எழுபதுகளில், நான் வளர்ந்த நாட்களில் - இங்கிலாந்தில் காமிக்ஸ் பிரவாகமெடுத்துப் பொங்கிக் கொண்டிருந்ததொரு தருணம் என்பதைப் பின்னாட்களில் உணர்ந்து கொள்ள முடிந்தது. கார்டூன்கள் ; புட்பால் கதைகள் ; சாகசக் கதைகள் ; ரொமான்ஸ் கதைகள் ; பெண்களுக்கான கதைகள் ; திகில் கதைகள் ; பாக்கெட் சைஸ் இதழ்கள் ; ஆல்பம்கள் ; வாரப் பத்திரிகைகள் ' ஆண்டுமலர்கள் என்று ரவுண்ட் கட்டி FLEETWAY & DC THOMSON பதிப்பகங்கள் அடித்து வந்தன golden age அது ! அன்றைய விலைகள் மிகவும் குறைச்சல் என்பதால் இவை இங்கிலாந்திலிருந்து சரளமாய் இறக்குமதி செய்யப்பட்டு, இந்தியப் பெருநகரக் கடைகளில் ஆரம்ப நாட்களிலும், ஒரு இடைவெளிக்குப் பின்னே பழைய புத்தகக் கடைகளிலும் கிடைப்பதுண்டு. என் தந்தையின் புண்ணியத்தில் எங்கள் வீட்டில் சதா நேரமும் ஒரு லாரி லோடு காமிக்ஸ் கிடக்குமென்பதால் - எனது நேரங்களில் பெரும்பங்கு அந்தக் கத்தைக்குள் குடியிருப்பதிலேயே செலவாகிடுவது வழக்கம்.
PHANTOM கதைகள் மீது அதீத மையல் கொண்டு வளர்ந்தவன், ஒரு கட்டத்துக்கு மேலே கொஞ்சம் கொஞ்சமாய் இந்த யுத்தகளக் கதைகளுக்குள் ஐக்கியமாகத் தொடங்கினேன். அதிலும், விமான யுத்தக் கதைகளில் ஏனோ தெரியவில்லை அப்படியொரு பிரமிப்பு தோன்றுவது வழக்கம். ரொம்பச் சீக்கிரமே அந்நாட்களது பிரிட்டிஷ் ; ஜெர்மானிய ; அமெரிக்கப் போர்விமானங்களின் பெயர்கள் எல்லாமே அத்துப்படியாகியது ! இன்றைக்குப் போல நொடியில் கூகிள் தேடல்களுக்கு வழியில்லாத சமயம் அதுவென்பதால் இது போன்ற offbeat தேடல்களுக்கு அவ்வளவாக வழி கிடையாது என்பதால் - you just had to read more to know more! அந்தப் பசியில், அந்தத் தேடலில் பிறந்தது தான் பிரிட்டிஷ் விமானப் படையில் ஒரு பாயும் புலியாய் செயல்பட்டு அசாத்தியமாய் சாதித்து வந்த ஸ்பிட்பயர் ரக விமானத்தின் மீதான காதல் ! நான் கண்ணிலே பார்த்திருக்கவே வாய்ப்பிலாததொரு உலகம் ; எனக்குத் துளி கூடப் பரிச்சயம் இல்லா மாந்தர்கள் ; கிஞ்சித்தும் தொடர்பில்லா ஒரு யுத்த களம் - ஆனால் அதற்குள்ளும் சுவாரஸ்யமாய் புகுந்திட முடிந்ததெனில் - அது அந்நாட்களது பிரிட்டிஷ் கதை சொல்லும் பாணிகளுக்கு ஒரு பறைசாற்று ! ஒவ்வொரு கதையிலும் வரும் விமானிகளோடு எனக்கு ஏதோ ஒரு நேசம் தோன்றியது ; ரட்-டட்-டட்-டட் என விமானத்தின் மிஷின்கன்கள் நாஜிக்களின் விமானங்களை நோக்கிச் சீறும் போது, அந்த விசையில் இருப்பது என் விரல்கள் என்பது போல் தோன்றும் ! "சொய்ன்ன்ன்ங்க்" என்று ஜெர்மானிய விமானங்கள் குண்டடிபட்டு சமுத்திரத்தை நோக்கி வீழும் போது 'செத்தாண்டா சைத்தான்!' என்ற உற்சாகம் பொங்கியெழும் ! ஜெர்மானியர்கள் என்றாலே எதிரிகள் என்பது போலான mindset சின்னவயதில் தோன்றியதாலோ-என்னமோ முதன் முதலாய் பிரான்க்பர்டில் புத்தக விழாவினில் பங்கேற்க ஜெர்மனி சென்ற போது கூட - வில்லன்களின் தேசத்துக்குப் போவது போலொரு லேசான உணர்வு இருந்தது !! காமிக்ஸ் வெளியிடத் தொடங்கிய பின்னர் யுத்தக் கதைகளை உங்கள் தலைகளில் 'பர பர' வென சுமத்தும் ஆர்வம் எனக்குள் மலையாய் இருந்தது தான் ! ஆனால் அந்தக் கதைவரிசைகளில் பெரும்பகுதி one -shots என்பதால் ஒரு நிலையான நாயகன் ; ஒரு அணி என்று இருப்பதில்லை ! So தெளிவான hero-oriented கதைகளுக்குப் பழகியிருந்த நமக்கு இது போன்ற random கதைகள் சரிப்படாது என்று மனதுக்குப் பட்டதால், "பெருச்சாளிப் பட்டாளம்" ; "மின்னல் படை" போன்ற ஹீரோக்கள் கொண்ட கதைத்தொடர்களைத் தாண்டி வேறு களங்களுக்குள் வேகமாய் டைவ் அடிக்கும் தைரியம் இருந்திருக்கவில்லை ! (தப்பிச்சோம்டா சாமி என்ற மைண்ட் வாய்ஸ் கேட்குது !!) ஒரு மாதிரியாக எங்கெங்கோ நம் தேடல்கள் இட்டுச் சென்ற பின்னே, இந்த யுத்தக் கதைகள் மீதான ஒரு வேட்கை சன்னமாகிப் போனது ! அவ்வப்போது ஏதேனும் war backdrop -ல் கதைகள் தட்டுப்படும் பொழுது அவற்றைக் கொஞ்சம் கூடுதல் வாஞ்சையோடு பரிசீலனை செய்வேன் ; ஆனால் கதைகளில் ஒரு சுறுசுறுப்பு தட்டுப்படாவிட்டால் சத்தம் காட்டாமல் ஓரம் கட்டிவிடுவது வாடிக்கை. "வானமே எங்கள் வீதி" கதையிலும் வலுவாக இருந்ததால் சந்தோஷமாக அதனைத் தேர்வு செய்தேன் ! அந்த சமயம் தான் ஜூனியர் எடிட்டரின் தேடல்களில் இந்த LADY SPITFIRE கதை என் பார்வைக்கு வந்து சேர்ந்தது !
வித்தியாசமான சித்திரங்கள் ; எனது favorite ஸ்பிட்பயர் விமானங்களுக்கு கதையினில் ஒரு முக்கிய பங்கு ; பிரான்கோ பெல்ஜிய making என்ற விசிடிங் கார்டோடு இந்தக் கதை கைநீட்டிய பொழுது அந்தக் கரத்தைப் பற்றிக் குலுக்கும் ஆசையை தவிர்க்க இயலவில்லை. யுத்தப் பின்னணியில் பொதுவாக இங்கிலாந்தவர்கள் அல்லது அமெரிக்கர்கள் சாதிப்பது போல கதைகள் இருப்பதே பெரும்பான்மை ; ஆனால் இந்தக் களமோ - ஒரு பிரெஞ்சுப் பெண் பைலட் இங்கிலாந்தின் அணியில் இணைந்து சாகசம் செய்வது போன்ற கதையோட்டம் இருந்ததை ரசிக்க முடிந்தது ! தவிரவும், தடித் தடியான ஆம்பிளைப் பசங்களின் ஹீரோ அணிவகுப்புக்கு மத்தியில் ஒரு மென்மையான பெண் நாயகி அறிமுகம் ஆவதும் நம் கழகக் கண்மணிகளில் சிலருக்கு உற்சாகம் தரக் கூடும் என்றும் தோன்றியது ! So "விண்ணில் ஒரு வேங்கை" தமிழ் பேசும் நல்லுலக வானில் பறக்கத் தயாரானது இப்படித் தான் ! எங்கோ - எப்போதோ நடந்த யுத்தம் தான் எனினும், மனித குல வரலாற்றில் ஒரு மறக்க இயலா இரத்த அத்தியாயமாகிப் போன அந்த நாட்களை சிறிதேனும் தரிசிக்க முயற்சிப்பது வித்தியாசமான கதைத் தேடல்களுக்கு ஒரு குட்டிப் படியாகப் பார்ப்போமே ?
இதோ - "வி.ஒ.வே." இதழின் அட்டைப்படத்தின் first look ! ஒரிஜினலை முன்னட்டைக்கு அப்படியே பயன்படுத்தியுள்ளோம் - லேசான வர்ண முன்னேற்றத்தோடு ! பின்னட்டை நமது தயாரிப்பே ! படைப்பாளிகள் இந்த டிசைனைப் பார்த்து விட்டு ஒரு ஸ்மைலியை பதிலாக அனுப்பினார்கள் என்பதால் - I guess we got it right !
இதோ - இந்தத் தொடரின் படைப்பாளிகள் - கதாசிரியர் ; ஓவியர் ; கலரிங் ஆர்டிஸ்ட் என்ற வரிசையில் !
And, எப்போதும் போலவே - இதோ உட்பக்கங்களின் டீசரும் ! அந்த சித்திர பாணி ; வர்ணக் கலவைகள் டாலடிப்பதோடு - சமீப காலமாய் தவிர்க்க இயலாது போய் விட்ட "இச்சக்..பச்சக்" கலாச்சாரமும் தொடர்வதைப் பார்க்கலாம் ! பாருங்களேன் - இந்த "இ..ப.." வியாதி 'தல'யின் கதைகளைக் கூட விட்டு வைக்கவில்லை !! (அது சரி, 2012 முதலாய் இது வரை நாம் வெளியிட்டுள்ள கதைகளுள் "இ.ப" தலைகாட்டுவது எத்தனை இதழ்களில் (!!) என்ற கணக்கை எடுத்து வரலாற்றுக்குப் பெருமை சேர்ப்போமா ?)
காடு, மேடு, பள்ளமென தளபதியோடும், பௌன்சரோடும் சுற்றித் திரிந்த இடைவெளியில், விண்ணில் பறக்கும் இந்த அனுபவம் ரொம்பவே relaxed ஆக இருந்ததை உணர முடிந்தது ! மொழிபெயர்ப்பிலும், துளி கூடச் சிரமமின்றி , ஜாலியாய் சுற்றி வர முடிந்தது! தளபதியின் மெகா இதழ் அசுரத்தனமாய் நிற்கும் போது இது போன்ற நார்மல் இதழ்கள் துக்கடவாகத் தோற்றம் தருவது தவிர்க்க இயலாது தான் ; but I still have a feeling this Lady will do fine !!
அப்புறம் தளபதியின் ஸ்பெஷல் தடபுடலாய் தயார் ஆனது முதலாய் அடுத்த மண்டைக்குடைச்சல் குடி கொள்ளத் துவங்கி விட்டது - 'தல'யின் ஸ்பெஷல் துளியும் விடுதலின்றி தூள் கிளப்பியாக வேண்டுமே என்று ! இம்முறை தேர்வாகியுள்ள 3 டெக்ஸ் கதைகளுமே ஒன்றுக்கொன்று தொடர்பில்லாப் பாணிகள் என்பதால் - மூன்றையும் ஒரு சேர வண்ணத்தில் பார்க்கப் போவது ஒரு அதிரடி அனுபவமாக இருக்குமென்பது உறுதி ! மூன்றிலுமே, டீம் டெக்ஸ் முழு பலத்தோடு பிரசன்னமாவதால், சுவாரஸ்ய மீட்டர் உச்சத்தில் நிற்பது நிச்சயம் ! And by the way - தல தாண்டவமாடும் இந்த லயன் இதழ் # 250-க்கு ஒரு பொருத்தமான பெயராக suggest பண்ணுங்களேன் ? ஏதேனும் ஒரு 'பளிச்' பெயர்சூட்டும் நண்பருக்கு ஒரு வித்தியாசமான பரிசு இம்முறை ! டெக்சின் கதாசிரியர் போசெல்லியிடம் ஆடோகிராப் பெற்றோரு டெக்ஸ் இதழை வரவழைத்துத் தருவதாக உள்ளோம் ! So அந்த சிந்தனைக் குதிரைகளை தட்டி விடலாமே guys ?
சென்ற பதிவின் பெரும்பான்மைத் தீர்மானம் கார்ட்டூன் ஸ்பெஷல் மட்டுமாவது இந்தாண்டுக்கே இருக்கட்டுமே என்றிருப்பதால் - OH YES !! என்று தலையாட்டுகிறேன் ! இந்தாண்டில் காமெடி கோட்டா சற்றே பலவீனமாய் இருப்பது நிஜமே என்பதால் - ஒரு ஜாலி-ஜாலி இதழைத் தயாரித்தால் போச்சு ! திட்டமிடலுக்கு அவகாசம் எடுத்துக் கொள்கிறேன் - அட்டகாசமான அறிவிப்போடு வரும் பொருட்டு ! அதன் மத்தியில் இந்த கார்ட்டூன் ஸ்பெஷல் இதழுக்கும் ஒரு பெயரை யோசித்து வையுங்களேன் ? See you around folks ! Have an awesome day!
PHANTOM கதைகள் மீது அதீத மையல் கொண்டு வளர்ந்தவன், ஒரு கட்டத்துக்கு மேலே கொஞ்சம் கொஞ்சமாய் இந்த யுத்தகளக் கதைகளுக்குள் ஐக்கியமாகத் தொடங்கினேன். அதிலும், விமான யுத்தக் கதைகளில் ஏனோ தெரியவில்லை அப்படியொரு பிரமிப்பு தோன்றுவது வழக்கம். ரொம்பச் சீக்கிரமே அந்நாட்களது பிரிட்டிஷ் ; ஜெர்மானிய ; அமெரிக்கப் போர்விமானங்களின் பெயர்கள் எல்லாமே அத்துப்படியாகியது ! இன்றைக்குப் போல நொடியில் கூகிள் தேடல்களுக்கு வழியில்லாத சமயம் அதுவென்பதால் இது போன்ற offbeat தேடல்களுக்கு அவ்வளவாக வழி கிடையாது என்பதால் - you just had to read more to know more! அந்தப் பசியில், அந்தத் தேடலில் பிறந்தது தான் பிரிட்டிஷ் விமானப் படையில் ஒரு பாயும் புலியாய் செயல்பட்டு அசாத்தியமாய் சாதித்து வந்த ஸ்பிட்பயர் ரக விமானத்தின் மீதான காதல் ! நான் கண்ணிலே பார்த்திருக்கவே வாய்ப்பிலாததொரு உலகம் ; எனக்குத் துளி கூடப் பரிச்சயம் இல்லா மாந்தர்கள் ; கிஞ்சித்தும் தொடர்பில்லா ஒரு யுத்த களம் - ஆனால் அதற்குள்ளும் சுவாரஸ்யமாய் புகுந்திட முடிந்ததெனில் - அது அந்நாட்களது பிரிட்டிஷ் கதை சொல்லும் பாணிகளுக்கு ஒரு பறைசாற்று ! ஒவ்வொரு கதையிலும் வரும் விமானிகளோடு எனக்கு ஏதோ ஒரு நேசம் தோன்றியது ; ரட்-டட்-டட்-டட் என விமானத்தின் மிஷின்கன்கள் நாஜிக்களின் விமானங்களை நோக்கிச் சீறும் போது, அந்த விசையில் இருப்பது என் விரல்கள் என்பது போல் தோன்றும் ! "சொய்ன்ன்ன்ங்க்" என்று ஜெர்மானிய விமானங்கள் குண்டடிபட்டு சமுத்திரத்தை நோக்கி வீழும் போது 'செத்தாண்டா சைத்தான்!' என்ற உற்சாகம் பொங்கியெழும் ! ஜெர்மானியர்கள் என்றாலே எதிரிகள் என்பது போலான mindset சின்னவயதில் தோன்றியதாலோ-என்னமோ முதன் முதலாய் பிரான்க்பர்டில் புத்தக விழாவினில் பங்கேற்க ஜெர்மனி சென்ற போது கூட - வில்லன்களின் தேசத்துக்குப் போவது போலொரு லேசான உணர்வு இருந்தது !! காமிக்ஸ் வெளியிடத் தொடங்கிய பின்னர் யுத்தக் கதைகளை உங்கள் தலைகளில் 'பர பர' வென சுமத்தும் ஆர்வம் எனக்குள் மலையாய் இருந்தது தான் ! ஆனால் அந்தக் கதைவரிசைகளில் பெரும்பகுதி one -shots என்பதால் ஒரு நிலையான நாயகன் ; ஒரு அணி என்று இருப்பதில்லை ! So தெளிவான hero-oriented கதைகளுக்குப் பழகியிருந்த நமக்கு இது போன்ற random கதைகள் சரிப்படாது என்று மனதுக்குப் பட்டதால், "பெருச்சாளிப் பட்டாளம்" ; "மின்னல் படை" போன்ற ஹீரோக்கள் கொண்ட கதைத்தொடர்களைத் தாண்டி வேறு களங்களுக்குள் வேகமாய் டைவ் அடிக்கும் தைரியம் இருந்திருக்கவில்லை ! (தப்பிச்சோம்டா சாமி என்ற மைண்ட் வாய்ஸ் கேட்குது !!) ஒரு மாதிரியாக எங்கெங்கோ நம் தேடல்கள் இட்டுச் சென்ற பின்னே, இந்த யுத்தக் கதைகள் மீதான ஒரு வேட்கை சன்னமாகிப் போனது ! அவ்வப்போது ஏதேனும் war backdrop -ல் கதைகள் தட்டுப்படும் பொழுது அவற்றைக் கொஞ்சம் கூடுதல் வாஞ்சையோடு பரிசீலனை செய்வேன் ; ஆனால் கதைகளில் ஒரு சுறுசுறுப்பு தட்டுப்படாவிட்டால் சத்தம் காட்டாமல் ஓரம் கட்டிவிடுவது வாடிக்கை. "வானமே எங்கள் வீதி" கதையிலும் வலுவாக இருந்ததால் சந்தோஷமாக அதனைத் தேர்வு செய்தேன் ! அந்த சமயம் தான் ஜூனியர் எடிட்டரின் தேடல்களில் இந்த LADY SPITFIRE கதை என் பார்வைக்கு வந்து சேர்ந்தது !
வித்தியாசமான சித்திரங்கள் ; எனது favorite ஸ்பிட்பயர் விமானங்களுக்கு கதையினில் ஒரு முக்கிய பங்கு ; பிரான்கோ பெல்ஜிய making என்ற விசிடிங் கார்டோடு இந்தக் கதை கைநீட்டிய பொழுது அந்தக் கரத்தைப் பற்றிக் குலுக்கும் ஆசையை தவிர்க்க இயலவில்லை. யுத்தப் பின்னணியில் பொதுவாக இங்கிலாந்தவர்கள் அல்லது அமெரிக்கர்கள் சாதிப்பது போல கதைகள் இருப்பதே பெரும்பான்மை ; ஆனால் இந்தக் களமோ - ஒரு பிரெஞ்சுப் பெண் பைலட் இங்கிலாந்தின் அணியில் இணைந்து சாகசம் செய்வது போன்ற கதையோட்டம் இருந்ததை ரசிக்க முடிந்தது ! தவிரவும், தடித் தடியான ஆம்பிளைப் பசங்களின் ஹீரோ அணிவகுப்புக்கு மத்தியில் ஒரு மென்மையான பெண் நாயகி அறிமுகம் ஆவதும் நம் கழகக் கண்மணிகளில் சிலருக்கு உற்சாகம் தரக் கூடும் என்றும் தோன்றியது ! So "விண்ணில் ஒரு வேங்கை" தமிழ் பேசும் நல்லுலக வானில் பறக்கத் தயாரானது இப்படித் தான் ! எங்கோ - எப்போதோ நடந்த யுத்தம் தான் எனினும், மனித குல வரலாற்றில் ஒரு மறக்க இயலா இரத்த அத்தியாயமாகிப் போன அந்த நாட்களை சிறிதேனும் தரிசிக்க முயற்சிப்பது வித்தியாசமான கதைத் தேடல்களுக்கு ஒரு குட்டிப் படியாகப் பார்ப்போமே ?
இதோ - "வி.ஒ.வே." இதழின் அட்டைப்படத்தின் first look ! ஒரிஜினலை முன்னட்டைக்கு அப்படியே பயன்படுத்தியுள்ளோம் - லேசான வர்ண முன்னேற்றத்தோடு ! பின்னட்டை நமது தயாரிப்பே ! படைப்பாளிகள் இந்த டிசைனைப் பார்த்து விட்டு ஒரு ஸ்மைலியை பதிலாக அனுப்பினார்கள் என்பதால் - I guess we got it right !
இதோ - இந்தத் தொடரின் படைப்பாளிகள் - கதாசிரியர் ; ஓவியர் ; கலரிங் ஆர்டிஸ்ட் என்ற வரிசையில் !
Author : Sebastien Latour |
Artist : Vicanovic Maza |
Coloring Artist : Clement Sauve |
பிழை திருத்தங்கள் போடா பக்கமிது ! |