நண்பர்களே,
வணக்கம். When it rains ..it pours !! 'மழையைக் காணோமே' என்று வானத்தை வெறித்துப் பார்க்கும் நாட்கள் நிறையவே ஓடியிருக்க, திடீரென்று மடை திறக்கும் வானமானது ஊற்றோ ஊற்றென்று ஊற்றித் தள்ளுமாம் ! இல்லீங்கோ...எங்க ஊருக்கு மட்டும் தனிப்பட்ட முறையில் புயல், கியல் எதுவும் உருவாகியிருக்கவில்லை ; ஆகையால் நான் பெனாத்துவது வானம் வழங்கும் H2O கொடையினைப் பற்றியல்ல ; அதே வானத்தில் வசிக்கும் புனித தேவன் மனிடோ அருளும் காமிக்ஸ் மழையினைப் பற்றி !! Let me explain !!
"போன வருஷத்து லாக்டௌன் அனுபவம் இம்முறையும் தொடரலாகாது ; சோம்பேறியாய் உறங்கித் திரியாது , கிடைத்துள்ள அவகாசத்தினில் நடப்பு ஆண்டின் பணிகளை முன்கூட்டியே முடித்து வைக்கணும் ; இத்யாதி..இத்யாதி.. "என்ற தீர்மானங்களை என்ன தான் ஆவேசமாய் எடுத்திருப்பினும் - ஊடகங்களிலும், வாட்ஸப்பிலும் வந்து குவியும் ஊர் நடப்புகள் பணியின் மீது பெரிதாய் மையல் கொள்ள அனுமதிக்க மறுக்கின்றன ! இந்தக் கொடூரங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி விழும் வரையிலும் வேறெதிலும் concentrate செய்வது சுலபமே அல்ல என்பது புரிகிறது ! பற்றாக்குறைக்கு 1 மாத முழு அடைப்பு எனும் போது - அந்தப் பணிகளின் முனைப்பானது குட்டிக்கரணம் போட்டாலும் வர மறுக்கிறது ! பற்றாக்குறைக்கு இங்கே 3 வாரங்களாக பதிவுப் பக்கத்தினில் அடிக்க முடிந்துள்ள லூட்டிகள் ; பஞ்சாயத்துக்கள் செம ஜாலியாய் இருந்திருக்க, சோம்பேறி சொக்கப்பானாக வலம்வந்திட கூடுதலாயொரு காரணமும் ஆகிப் போச்சு !
ஆனால் இந்த ஓய்வினில் ஒரு silver lining இல்லாமலும் இல்லை ! வாசித்து வருகிறேன்...வாசித்து வருகிறேன்...வண்டி வண்டியாய் வாசித்து வருகிறேன் ! கோரி வருகிறேன்..கோரி வருகிறேன்...காமிக்ஸ் மாதிரிகளை மலை மலையாய்க் கோரி வருகிறேன் ! அவர்களும் சளைக்காது மெயிலில் நான் கேட்பனவற்றையெல்லாம் அனுப்பித் தர, வீட்டுக்குக் கொண்டு வந்து மாட்டி வைத்திருக்கும் பிரிண்டர் கண்ணீர் வீட்டுக் கதறும் வரையிலும் துவை துவையென்று துவைத்து எடுக்கிறேன் ! இது பீற்றலுக்கானதொரு statement அல்ல guys - ஆனால் நமது சேகரிப்பில் உள்ள கதைகளின் மாதிரிகளைக் கொண்டே அடுத்த 5 ஆண்டுகளுக்கு கண்ணை மூடிக்கொண்டே அட்டவணை போட்டு விடலாம் தான் ! Phew...!! அந்த வாசிப்பினில் கிட்டிய புதையல் பற்றியே இந்த ஞாயிறின் குட்டி மொக்கை !
அது பற்றிப் பேசும் முன்பாய் - அதற்கு முன்னோடியாய் அமைந்திட்ட நிகழ்வு(கள்) பற்றி முதலில் ! முத்து காமிக்ஸ் ஆண்டுமலர் # 50 பற்றி கடந்த சில பதிவுகளில் செம அலசு அலசியிருந்தோம் அல்லவா ? அதன் முடிவில் உங்களில் கணிசமானோர்க்கு முழுசாய் திருப்தி நஹி ; ஒரு சிலருக்கு downright ஏமாற்றம் ; இன்னும் சிலருக்கோ - "இம்புட்டு தானாக்கும் ? இதுக்கு எதுக்குப்பு இந்த பில்டப் ?" என்ற கடுப்ஸ் என்று அழகாய்ப் புரிந்திருந்தது ! இந்த அலசல் இப்போ எதுக்கு ? என்ற ரீதியில் விசனங்களுமே விரவியிருந்ததை நான் கவனிக்கத் தவறிடவில்லை !
அந்தப் பதிவின் நோக்கங்கள் என்னளவில் இரண்டு ! யதார்த்தங்களின் வரையறைகளை ; தற்போதைய கதைகளின் தன்மைகளை ; அவற்றினுள் வூடு கட்டியடிப்பதன் சிக்கல்களை விளக்குவதும், உங்களின் வானளாவிய எதிர்பார்ப்புகளை சித்தே மட்டுப்படுத்திட முனைவதுமே நோக்கம் # 1 ஆக இருந்தது ! நோக்கம் # 2 - எனக்குள் ஒரு லேசான ப்ளூபிரிண்டாக உருவாகியிருந்த இதழின் template குறித்து உங்களின் எண்ணங்களை புரிந்திட முயற்சிப்பதே ! உத்தேசமாய் சில கதைகள் ; சில கூட்டணிகள் என்று ஒரு பென்சில் ஸ்கெட்ச் போட்டிருந்தேன் & உங்களின் அங்கீகாரங்கள் கிடைத்திடும் பட்சத்தில் அதனை சற்றே develop செய்து வர்ணமூட்டி, மெருகேற்றிட எண்ணியிருந்தேன் ! ஆனால் அன்றைய ரவுசுகளில் எனது 2 நோக்கங்களுக்குமே கிடைத்திருந்தது என்னமோ ஷெரிப் டாக்புல்லின் பாணியிலான கும்மாங்குத்துக்கள் தான் !!
"நிலவரங்கள் புரியுது ; கஷ்டங்கள் மன்சிலாயி ; சிக்கல்கள் செசுகொண்டி ; ஆனா "நீ என்னமோ பண்ணிக்கோ ; எதுவோ பண்ணிக்கோ - ஆடலும் பாடலும் போட்ட்டட்டே தீரணும் !!" என்ற உங்களின் எண்ணங்கள் வெளிப்பட்ட போதே எனது நோக்கம் # 1 பப்படமாகி இருந்தது ! ரைட்டு....அட்டவணையில் வேறு எங்காச்சும் கொஞ்சம் கைவைத்து இங்கே நிரவல் செய்ய முயற்சிக்கலாமென்று நினைத்துக் கொண்ட போது விழுந்த ரெண்டாம் கும்மாங்குத்து தாடையைச் சுளுக்கிக்க வைத்தது ! நான் மனதில் கொண்டிருந்த கதை சார்ந்த அவுட்லைன் நிறைய ; நிறையவே மெருகூட்டிடப்பட வேண்டுமென்பதை "குத்தடி குத்தடி...சைலக்கா.....குமட்டிலே குத்தடி சைலக்கா !" என்ற உங்களின் தாண்டவங்கள் புரியச் செய்தன ! மூக்கில் ஒழுகிய தக்காளிச் சட்னிகளை துடைக்க தலீவரின் அந்நாட்களது கடிதக் கணைப் பேப்பர்களைச் சுருட்டி எடுத்துக் கொண்டிருக்கும் போதே 'கெக்கே பிக்கே'வெனச் சிரிப்பு தான் எழுந்தது எனக்கு ! "ஆத்தி....ஆறு மாசம் முன்னமே வெறும் வாயாலே சுட்ட வடைக்கே இந்தச் சாத்து ; நான்பாட்டுக்குக் கமுக்கமா என்னோட ப்ளூபிரிண்டை நடைமுறைப்படுத்துறேன் பேர்வழின்னு ஒரு ஏப்ப சாப்பையான புக்கை மட்டும் ஜனவரி 2022-ல் இறக்கி விட்டிருந்தால் - கார்சன் நள்ளி எலும்பைக் கடிக்கிறது போல ஆளுக்கு அரை கிலோவைக் கடித்திருப்பார்களே !! "என்பதை நினைத்தேன் - சிரித்தேன் !!
ஐம்பதாவது ஆண்டு மலருக்கென ஏற்கனவே 2 ஆக்ஷன் / spy த்ரில்லர்ஸ் பாணியிலான கதைகள் கண்ணில்பட்டிருப்பதை விவரித்திருந்தேன் ! And 2 நாட்களுக்கு முன்பான வாசிப்பினில் கண்ணில்பட்ட இன்னும் இரு அதகள ஆக்ஷன் blocks செமத்தியாய் மெர்சலூட்டின !! அவற்றுள் முதல் தொடரானது ஒரு விதத்தில் எனக்கு முற்றிலும் புதிதல்ல தான் ; ஏற்கனவே பரிசீலனைக்கு மேஜை வந்து, அன்றைய சூழலில் "ஸ்லாட் காலி இல்லையென்ற" காரணத்தினால் waiting list-ல் அமைதி காத்து வரும் ஆக்கம் அது ! திரும்பவும் அதனைத் தோண்டி எடுத்து இம்முறை black & white பிரிண்ட்அவுட்களில் அல்லாது - கலரில், கம்பியூட்டர் ஸ்க்ரீனில் பார்த்த போது பிட்டம் நாற்காலியில் தங்கிட மறுத்தது !! முதல் பக்கத்தில் ஆரம்பிக்கும் ஆக்ஷன் ஐரோப்பாவின் சில பல அசாத்திய அழகிலான தலைநகரங்கள் வழியாய் "மின்னும் மரணம்" முன்பதிவு எக்ஸ்பிரஸின் அசாத்திய வேகத்தில் தட தடக்கிறது ! அசாத்திய சித்திரத் தரம் ; பின்னியெடுக்கும் கலரிங் ; ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்தின் பாணியிலான ஆக்ஷன் ; பிரமிப்பூட்டும் வேகம் என்று ரவுண்டு கட்டி அடிக்கிறது ! பற்றாக்குறைக்கு கதை நெடுகிலும் கண்களுக்குக் குளிர்ச்சியோ - குளிர்ச்சி ; அப்படியொரு குளிர்ச்சி ! இது வெளியாகிடும் நாளில் சிலபல "இளவரசிப் பேரவைகள்" ராவோடு ராவாய் அஸ்தமனம் கண்டு ; இங்கே லைனாக டாக்டர்கள், தொழிலதிபர்கள் ; செயலர்கள் ; சிஷ்யர்களென்று நிற்கவிருப்பது உறுதி ! And கதை !! லார்கோ sagas மிரட்டல் ரகமென்று எண்ணியிருந்த நம்மையெல்லாம் பார்த்து "ஹைய்யோ..ஹையோ..!!" என்று கெக்கெலி செய்கிறது இந்த stunner ! நாயகனோ - அகிலத்தையும் அடித்து, உடைத்து, துவம்சம் செய்திடும் ஆல்-இந்த-ஆல் தெரிந்த அழகேசன் அல்லவே அல்ல ; ஆனாலும் நம்மை தன்னோடு கட்டியிழுத்துப் பயணிக்கும் சூட்சமத்தைத் தெரிந்து வைத்திருக்கிறார் ! கதையைப் படித்து முடித்த வேளையில் என் முன்னே ஒரு கிழிந்த காகிதக் குவியல் இருப்பது தென்பட்டது ! அது வேறென்னவும் இல்லை ; இதற்கு முன்பாக நான் போட்டு வைத்திருந்த ப்ளூபிரிண்ட்களை என்னையும் அறியாமலே, கதையின் வாசிப்பினூடே கிழித்திருந்ததன் பலன் !! என்ன ஒரே சிக்கல் - கதையின் ஓட்டமும் சரி, வசன நடையும் சரி - செம contemporary ! இங்கே மொழிபெயர்ப்பில் குறுக்கு கழன்று விடுமென்பதில் இம்மியும் ஐயமில்லை எனக்கு ! தொடரும் நாட்களில் இதற்கான உரிமைகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டியது முதல் வேலை ; அப்புறமாய் இந்தப் பணியின் தீவிரத்தை எண்ணி இப்போதிலிருந்தே உதறும் வலது புஜத்தை சித்தே தாஜா செய்திட வேண்டும் ! Is going to be a mountain to climb for sure !!
ரொம்ப ரொம்ப காலம் ஆகி விட்டது - ஆற்றல் நிறைந்த ஆக்ஷன் / spy த்ரில்லர் ரக நாயகர்களைப் பார்த்து ; ஆனால் இங்கு சமீபத்தில் எனக்கோ ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று பேர் கண்ணில் பட்டுள்ளனர் எனும் போது -அடை மழையோடு ஒப்பிடுவதில் தப்பில்லைதானுங்களே ?
And இதில் கொடுமை இன்னமும் பாக்கியுள்ளது ! புதிதாய் உருவாகி வரும் ஒரு ஆக்ஷன் த்ரில்லரின் advance preview files என இன்னொரு ஆல்பத்தின் பக்கங்களும் 2 வாரங்களுக்கு முன்னே வந்திருந்தன ! And அதுவும் கிஞ்சித்தும் சளைக்கா அதிரடி ரகம் ! நாம் அதிகம் பார்த்திரா ஒரு தேசத்தின் canvas தான் இந்த ஆல்பத்தின் பின்னணி ! புது நாடு ; புது ஜனம் ; புது ஆக்ஷன் ; புது கதையோட்டம் ; புதுச் சித்திர பாணி ; புது எல்லாமே இங்கே !! முதல் பாகம் மட்டுமே வந்திருக்க, அதனைப் பராக்குப் பார்த்ததிலேயே ஒரு பிஸ்லெரி பாட்டில் ஜொள் ஓடியிருக்க, அவசரமாய் ரெண்டு லிட்டர் பாட்டிலுக்கும், இரண்டாம் பாகக் கோப்புகளுக்கும் கோரிக்கையினை வைத்துள்ளேன் ! அவை வந்தான பின்னே ; பரிசீலித்த பின்னே - மறுக்கா ப்ளூபிரிண்ட் போடணும் - புதிய திக்கினில் ! "அட்டவணை போடறேன்" என்று வருஷா வருஷம் கிழிக்கும் காகிதம் ஒரு பக்கமெனில், இப்போது புதிதாய் இந்தத் திட்டமிடலும் சேர்ந்து கொள்ள - சீக்கிரமே TNPL மில்லில் உற்பத்தி வேகத்தைக் கூட்டினார்களென்றால் தமிழகம் தப்பிக்கும் என்று மட்டுமே தோன்றுகிறது !! It simply pours !!!
இவை தவிரவும், இன்னமும் வாசிப்புக்கோசரம் லைனில் உள்ள கதைகள் கத்தையாய்க் காத்திருக்க, தொடரும் நாட்களில் இன்னும் என்னவெல்லாம் காத்துள்ளனவோ - தாவாங்கட்டைக்குக் கீழே பிஸ்லெரி பாட்டில்களோடு வெயிட்டிங் !! So இன்னமும் என்ன காத்துள்ளது நமக்கு ? கதைகளின் கூட்டணியானது எவ்விதமிருக்கும் ? விலை என்னவாக இருக்கும் ? இறுதி காணவுள்ள கதைகள் எவையோ ? என்பதையெல்லாம் தொடரும் நாட்களிலும், வாரங்களிலும் - சிறுகச் சிறுக இறுதி செய்திட முனைவேன் ! Still miles & miles & miles to go in the planning !!
இந்த நொடியில் இன்னொருக்கா தரையில் உருண்டு புரண்டு சிரிக்கத் தோன்றுகிறது - "எல்லாமே டிராமா ; முன்கூட்டியே எடுத்த முடிவுகளைக் கொண்டு ஆடும் பொம்மலாட்டங்கள் !" என்ற ரீதியிலான விஞ்ஞானபூர்வக் கண்டுபிடிப்பினை எண்ணி ! இந்த நொடியில் "சுட்டீஸ் கார்னர்" பகுதியைத் தாண்டி வேறெந்தப் படைப்புமே தனக்கான இடத்தை துண்டு போட்டுப் பிடித்திருப்பதாக யாருக்கேனும் உறுதிபடத் தோன்றினால், அவர் nostradamus-க்கு சவால் விட்டுக் கொண்டிருக்க வேண்டியவர் ! யார் நம்பினாலும் சரி, நம்பாது போனாலும் சரி - சாயம் பூசா நிஜமிதுவே !
இந்தப் பயணத்தில் நான் எப்போதுமே மனதில் தோன்றுவதை அப்படியே செயலாக்கி விட்டு, அப்பாலிக்கா தான் அதன் சாதக-பாதக விளைவுகளை எண்ணி சந்தோஷம் கொள்வதோ, மண்டையைச் சொரிவதோ உண்டு ! Has been no different this time ; ஆனால் இம்முறையோ ஒரு மெகா நிம்மதிப் பெருமூச்சு என்னுள்ளே ! ஓட்டைவாய் உலகநாதனாய் ; நீண்ட பதிவு நித்தியானந்தனாய் இம்முறை இருந்துள்ளமையை எண்ணி நிச்சயமாய் நான் சந்தோஷம் கொள்கிறேன் !! ஜெய் கைலாஷா !!
சகலமும் இறுதி கண்ட பின்பாய், நவம்பரின் மத்தியிலிருந்து முத்துவின் இந்த ஸ்பெஷல் இதழின் டிரெய்லர்களை ஒன்றன் பின் ஒன்றாய்க் களமிறக்க எண்ணியுள்ளேன் ! So அக்டோபர் முதலாய் நமது IT அணியினை பிசியோ பிசியாக்கிட உத்தேசம் ! And இதோ பாருங்களேன் - நம்மள் கி லேட்டஸ்ட் IT அணியின் ஜாயிண்ட் !! மேலுள்ளவையும், கீழே தொடர்பனவும் யாருடையதென்றெல்லாம் நான் சொல்ல மாட்டேன் ; அவருக்கும் விளம்பரங்களே பிடிக்காதென்பதால் memes-களில் பெயரெல்லாம் போட்டிருக்க மாட்டார் தான் ; அகஸ்மாத்தாய் ABC எழுதிப் பழகும் முனைப்பில் சில பல எழுத்துக்களை இனிஷியல் போல ஆங்காங்கே பதிந்திருந்தால் அது அகஸ்மாத்தாயே அணுகிடப்பட வேண்டிய விஷயம் மட்டுமே என்று சொன்ன கையோடு கிளம்புறேனுங்கோ ; reading waiting !!
Bye all !! See you around !! Safe days ahead !!