Powered By Blogger

Sunday, May 23, 2021

ஆலமரம் # 2 !

 நண்பர்களே,

ஆலமரத்தடி # 2-க்கு நல்வரவு !! 1 + 1 = 11 என்று ஐன்ஸ்ட்டின் ரேஞ்சுக்கு ஒரு ஒப்புதலுக்கு நாம் வந்திருப்போமென்ற நம்பிக்கையில் முன்கூட்டியே டைப்படித்துள்ள பதிவு இது ! If in case 1 + 1 = 111 என்று யாரேனும் ஒரு அசாத்திய முன்மொழிவை தந்திருந்து, அந்த ஸ்பெஷல் இதழை  சிக்கலின்றிச் செயலாற்றிடும் மார்க்கத்தையும் சுட்டிக் காட்டியிருக்கும் பட்சத்தில், இந்தப் பதிவைக் கதாசிட வேண்டியது தான் ! Anyways - நமது தேர்வு எதுவாக இருப்பினும், இந்தப் பதிவின் பெரும் பகுதி will still hold good என்பதால், உள்ளே புகுந்து தான் பார்ப்போமே ?!

கதை.....or rather கதைகள் ....!! ஒரு புது இதழ் சார்ந்த திட்டமிடலின் இரண்டாம் படி இதுவே ! 

முன்னெல்லாம் என்னிடம் சிம்பிளாய் ஒரு ஸ்பெஷல் இதழ் formula இருப்பதுண்டு ! லயன் காமிக்ஸ் ஸ்பெஷல் என்றால் ஒரு ஸ்பைடரைப் போட்டுக்கோ ; முடிஞ்சா ஆர்ச்சியைச் சேர்த்துக்கோ ; அப்புறம் லக்கி லூக் ! மீதமுள்ள இடங்களில் கன்சாமி ; கோயின்சாமி ; கொயந்தசாமி என்று கைவசமுள்ள நாயகர்களில் இங்கி -பிங்கி-பாங்கி போட்டு தேர்வு செய்வது ! பின்னாட்களில் ஸ்பைடரின் இடத்தில் டெக்ஸ் வில்லர் ; இன்ன பிற சமாச்சாரங்கள் மாற்றமின்றித் தொடர்ந்திட்டன ! And இதுவே முத்து காமிக்ஸ் ஸ்பெஷல் எனில், மாயாவி ; ஜேம்ஸ் பாண்ட் ஆகியோரை நிலைகொள்ளச் செய்து கொண்டு, அவர்களை சுற்றிக் கும்மியடிக்க அடுத்த கட்ட ஹீரோக்களை டிக் அடிப்பேன் ! Again இங்கே பின்னாட்களில் கேப்டன் டைகர் முன்னிலை கண்டு வந்தார் !

இவை எல்லாமே நமது black & white ; நியூஸ்பிரிண்ட் ; சொற்ப விலைகள் என்ற கால கட்டங்களின் நடைமுறைகள் ! நாம் ஆட்டைத் தூக்கிக் குட்டியை போட்டாலும் சரி, குட்டியைத் தூக்கி ஆட்டோடு போட்டாலும் சரி - படைப்பாளிகள் நம்மைப் பெருசாய்க் கண்டு கொண்டதில்லை ! ஆனால் இன்றைக்கோ, நாமும் ஒரு சிறு அளவிற்காவது தரத்தில் மேன்மை கண்டுள்ளோம் & most importantly தகவல்கள் மின்னல் வேகத்தில் பூமியெங்கும் விரவிடும் நாட்களிவை ! So நமக்கு கதைகளை விநியோகம் செய்திடும் நிர்வாகம் நமது "கூட்டணி இதழ் கூத்துக்களை" கண்டும், காணாது விட்டாலுமே - ஏதோவொரு விதத்தில் கதாசிரியர்களுக்கோ, ஓவியர்களுக்கோ நமது இதழ்கள் சார்ந்த தகவல்கள் ஏதேனுமொரு ரூபத்தில் பயணிக்காதிருப்பதில்லை ! இதோ - போன வருஷத்து உலகளாவிய லாக்டௌன் சமயத்தில் நடந்ததொரு கூத்தை சித்தே பகிர்ந்திடுகிறேனே :

"நில் கவனி..வேட்டையாடு..!" (Zaroff) இதழ் போன வருஷம் மார்ச்சில் லாக்டௌன் சமயத்துக்கு just முன்னே வெளியானது நினைவிருக்கும் ! இந்த ஆல்பத்துக்கான உரிமைகளை நாம் ஓரிரு மாதங்களுக்கு முன்னே தான் வாங்கியிருந்தோம் ! In fact ஒரிஜினலை பிரெஞ்சில் வெளியான ஒரே மாதத்துக்குள் நாம் துண்டைப் போட்டு வைத்திருந்ததாக ஞாபகம் எனக்கு ! அந்நேரத்துக்கெல்லாம்  ஐரோப்பாவில் கொரோனா பரவல் வேகமெடுத்திருக்க, நமக்கு உரிமைகளை சந்தைப்படுத்திடும் குழுமம் பணியாட்களுக்கு Work from Home உத்தரவுகளைத் தந்திருந்தது ! So வீட்டிலிருந்தபடியே வேலை ஓடி வந்த நிலையில், ZAROFF ஆல்பத்தை தமிழுக்கு விற்பனை செய்துள்ள தகவலை அதன் கதாசிரியருக்கு கொஞ்சம் லேட்டாகவே தெரியப்படுத்தியுள்ளனர் ! அதன் மத்தியில் நாமிங்கே சடுதியாக இதழை வெளியிட்டிருக்க, அதன் அதகள சித்திரத் தரங்களும், கலரிங்கும் நம் மத்தியில் செமையாய்ப் பேசப்பட்டிருந்தது ! சற்றே ஓவராய் impress ஆகிப் போன நமது நண்பர்களுள் ஒருவர், நேரடியாய் ZAROFF ஓவியருக்கே தேடிப் பிடித்து  மின்னஞ்சலைத் தட்டி விட்டுள்ளார் - "ஆஹா..ஓஹோ..பேஷ்..பேஷ்..உங்க படைப்பு பிரமாதம்" என்று ! அவரோ தமிழில் இது மாதிரியொரு  திட்டமிடல் இறுதி செய்யப்பட்டதையே கவனித்திராதவர் ! நம் நண்பரின் சிலாகிப்பு மின்னஞ்சலைப் பார்த்த உடனே திடுக்கிட்டுப் போய்விட்டுள்ளார் - எவனோ, ஏதோவொரு கேள்விப்படா இந்திய மொழியில் தனது படைப்பை சூட்டோடு சூடாய் வடை சுட்டு விட்டான் போலுமென்று !! பதறிப் போய் உரிமைகளை சந்தைப்படுத்தும் கம்பெனிக்கு போன் அடித்து - "போச்சு...அதுக்குள்ளாற எவனோ சுட்டுட்டன் ; நம்ம புக்கைச் சுட்டுட்டன் !!" என்று கலங்கியிருக்கிறார் ! அப்புறமாய்த் தான் அவர்கள் விளக்கியுள்ளார்கள் - ZAROFF இதழை பிரெஞ்சுக்கு அப்பாற்பட்டதொரு வேற்று மொழியில் முதன்முதலில் வெளியிட்டுள்ளது தமிழில் தான் என்று ! செம குஷியாகிப் போனவர் 'அந்த புக்ஸை நான் உடனே பார்க்கணுமே !!' என்று துடித்திருக்க, இங்கேயோ அந்நேரம் தேசம் தழுவிய லாக்டௌன் & ஏர் மெயில் முழுசுமாய்க் கடைப்பூட்டி இருந்தது ! So அன்றைக்கே அவசரம் அவசரமாய் ZAROFF கதையின் முழு தமிழ் கோப்புகளையும் உயர் resolution pdf ஆக்கி அனுப்பி வைத்தோம் அவரது பார்வைக்கோசரம் ! And மறு மாதம் ஏர்மெயிலில் இதழ்களையும் அனுப்பி வைத்திருந்தோம் ; பார்த்து விட்டு பூரித்துப் போய்விட்டார் !

இதே போலத்தான் வெகு சமீபத்தில் நமது ARS MAGNA இதழின் வெளியீட்டின் சமயம், கதாசிரியர் + ஓவியர் கூட்டணி நம்மிடம் முன்கூட்டியே அட்டைப்படங்கள், உட்பக்க விபரங்களை அவர்களாகவே அணுகிக் கோரிப் பெற்றிருந்தனர் ! And அந்த ஆல்பத்தின் நமது அட்டைப்படத்தை நமக்கும் முன்பாகவே அவர்களது FB பக்கத்தில் அறிமுகம் செய்திருந்தனர் ! இதோ - போன மாசத்து நமது "கொரில்லா சாம்ராஜ்யம்" இதழின் அட்டைப்படத்தையுமே தங்களது Twitter பக்கத்தில் ரொம்ப ரொம்ப அட்வான்சாகவே பகிர்ந்தது படைப்பாளிகளே !   So தகவல் தொடர்புகளின் வலிமை முன்னெப்போதையும் விட அசாத்தியமான வீறு கொண்டு நிற்கும் இந்த நாட்களில் நமது trademark 'கதம்ப குண்டு' புக் பாணிகள் இன்று சாத்தியமாவதில்லை ! இது தான் இன்றைய கால கட்டங்களில் ஒரு ஸ்பெஷல் இதழினைத் திட்டமிடும் சமயம் தடுக்கும் ஸ்பீட் பிரேக்கராக்கும் ! 

So இப்போது யோசியுங்களேன் guys - ஆயிரத்துக்கு, ரெண்டாயிரத்துக்கு என இந்த மைல்கல் இதழுக்கு விலை நிர்ணயம் செய்து விட்டால் - அவற்றினுள் எந்தக் கதைகளைக் கொண்டு ரொப்புவதென்று ? பேந்தப் பேந்த முழிக்காத மாதிரியே முகத்தை வைத்துக் கொண்டு, கொஞ்சம் வேக வேகமாய் யோசனைக் குதிரைகளைத் தட்டி விட நீங்கள் முனையும்  அந்தக் காட்சி இங்கே என் மனத்திரையில் ஓடுதுங்கோ !! நீங்கள் விடைகளாக்கிடக் கூடிய சமாச்சாரங்களை யூகிக்க முயற்சிக்கட்டுமா இப்போது ?

Option # 1 : "இளம் டைகர் " !! இன்னும் 12 ஆல்பங்கள் தொங்கலில் உள்ள நிலையில் அவற்றை ஏக் தம்மில் வெளியிடலாம் !!

இது உங்க வேகமான மைண்ட்வாய்ஸ் !

இடைப்பட்டுள்ள இந்த ஒன்றரை மாத அவகாசத்தில் பிரெஞ்சில் உள்ள கதைகளை நமக்கு மொழிபெயர்த்துத் தரும் அம்மையாருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நடந்துள்ளது ! So பெரிய கட்டோடு கட்டிலில் ஓய்வெடுத்து வருபவரை கொஞ்ச காலத்துக்கு எழுதச் சொல்லித் தொந்தரவு செய்திட நாம் முனையவில்லை ! அவரோ, 'போர் அடிக்கிறது ; வாசித்துப் பார்க்கவாவது ஏதேனும் கோப்புகள் இருப்பின் அனுப்பித் தாருங்கள் !" என்று கேட்டிருந்தார் ! So அவருக்கு நான் அனுப்பியது இளம் புலியாரின் எஞ்சியிருக்கும் சாகஸங்களையே ! முதல் இரண்டு அத்தியாயங்களை எப்படியோ கடந்து விட்டவர், அப்பாலிக்கா ஒரு பெரிய வெள்ளைக் கொடியைப் பறக்க விட்டு விட்டார் - 'மிடிலே !!' என்று !! அப்புறமும் எனக்கே மனசு கேட்கவில்லை ; நெட்டிலும் கொஞ்சம் மெனெக்கெட்டு ஆழமாகவே தோண்டினேன் - இளம் புலியாரின் கதைகள் சார்ந்த அலசல்களைத் தேடி !! பிரான்சில் surf போடுவார்களா ? Rin போடுவார்களா ? என்பதை அங்கே வசிக்கும் நமது நண்பர்களிடம் கேட்டால் தெரிந்திடும் தான் ; ஆனால் இளம் புலியாரை அங்குள்ள வாசகர்கள் கையில் கிடைத்த அத்தனை வஸ்துக்களாலும் கழுவி ஊற்றியுள்ளனர் ! So 2 நாட்களுக்கு முந்தைய தீர்மானமே இங்கே தீர்ப்பாகிடும் guys : "பழம் பெருமைகள் - புது ஜாகைகளுக்கான உத்திரவாதங்களாக ; பாஸ்போர்ட்களாக இனி இருந்திடாது !!" So இளம் புலியாரை untick செஞ்சிடுங்கோ !! 

"வேற வழியே இல்லை ; வீட்டுக்குப் பாலும் காய்ச்சியாச்சு ! இன்னிக்கு முழியங்கண்ணனுக்கு பாயசம் போட்டுப்புட வேண்டியது தான் !!"

இது கூட ரம்மியின் தலைமையிலான "தளபதி நற்பணி மன்றத்தின்" மைண்ட்வாய்ஸ் !

Option # 2கேப்டன் டைகர் புது சாகசம் - 2 பாகம் கொண்டது வர வேண்டியிருக்குதுல்லே ? அதையும், தோர்களில் கொஞ்சத்தையும் சேர்த்து ஒரு குண்டு புக் ?

Again mindvoice !!

Sorry guys,  அந்தப் புது டைகர் கதையின் ஓவியர் வேறேதோ project-ல் பிஸியாம் ! 2019 முதல் தொங்கலில் நிற்கும் ஆல்பத்தின் க்ளைமாக்ஸ் பாகமானது 2022-ன் ஏதேனும் ஒரு பொழுதில் வெளியாகலாமாம் ; ஆனால் அதுவும் இப்போதைக்கு concrete அல்ல ! ஆகையால் அவரை இந்த ஸ்பெஷல் இதழில் பங்கெடுக்கச் செய்வது நடைமுறை சாத்தியம் நஹி !

Option # 3 எப்படியாச்சும் , யார் கையிலே காலிலெயாச்சும் விழுப்பா ! ஒரேயொருவாட்டி ஒரு கதம்ப குண்டு புக்குக்கு அங்கீகாரம் கேட்டுப் பாருப்பா !! 

இது எரிச்சல் கலந்த மைண்ட்வாய்ஸ் !

ரைட்டுங்கண்ணா ; கல்லை வீசிப் பார்ப்போம் ! வந்தா மாங்காய் ! போனா கல்லு !! ஆனா எந்தக் கதைகளையெல்லாம் ஒன்றிணைப்பதுங்கண்ணா ? லயனின் நாயகர்கள் ; முத்துவின் நாயகர்கள் - என 2 அரூபக் கோட்டுக்களுக்கு மதிப்பளித்துப் பார்த்தோமெனில் - முத்துவில் தலைகாட்டக் கூடியோர் பின்வரும் ஜனமே :

லார்கோ வின்ச்

SODA 

ரிப்போர்ட்டர் ஜானி

தோர்கல்

க்ளிப்டன்

ப்ளூகோட் பட்டாளம் 

சிக் பில் 

மதியில்லா மந்திரி 

ப்ருனோ பிரேசில் 

சொல்லுங்களேன் guys - இவர்களை ஏதோவொரு ரூபத்தில்  ஒன்றிணைத்து ஒரு கதம்ப இதழுக்கு permission வாங்கவே செய்கிறேனென்று...... அந்த இதழ் மெய்யாகவே நீங்கள் எதிர்பார்க்கும் blockbuster ஆகிடுமா ? லைட்டாக தலையைச் சொறியவே செய்வேன் - நான் உங்கள் இடத்தினில் இருக்கும் பட்சத்தில் !! தனித்தனியாய் வெளியாகும் வேளைகளில்  average என்றே மார்க்குகள் வாங்கிய ஹீரோக்கள் ஒற்றை புக்குக்குள் தஞ்சம் காணும் போது மாறிடக்கூடியது என்னவாக இருக்குமென்று யோசியுங்களேன் - ப்ளீஸ் ?  ஒவ்வொரு நாயகருக்கும் . தொடருக்கும் - நீங்கள் போடக்கூடிய ரேட்டிங்குகளை நான் கடந்த 5 நாட்களாய் உங்களிடமிருந்தே கோரிப்பெற்றது ஏனென்று இப்போது புரிந்திருக்குமென்று நினைக்கிறேன் guys ?! NBS வெளியான நாட்களில் நமக்கிருந்த advantages இவையெல்லாம் :

1 லார்கோ வின்ச் எனும் அசாத்திய நாயகன் !

2 வெய்ன் ஷெல்டன் என்றதொரு அறிமுக ஆக்ஷன் ஹீரோ !

3 தளபதி டைகரின் main தொடரில் புதுக் கதைகள் எஞ்சியிருந்தன !

4 And சகலத்தையும் விட பிரதானமாய் - அவை நாம் முழுசாய் காமிக்ஸ் பசிகளில் ஆழ்ந்து கிடந்த நாட்கள் ! வர்ணங்களோ நமக்கு அன்றைக்கொரு புதுமை !! So அத்தனை கதைகளை ஒன்றிணைத்த இதழானது நம்மை பிரமிப்பின் உச்சத்துக்கு இட்டுச் சென்றது ! 

நம்ம கோவை இரும்புக் கவிஞர் கூட, இந்த லாஜிக்கை மறுக்க மாட்டாரென்றே நினைக்கிறேன் ! So சுலபத்தில் கிட்டிய அந்த NBS வெற்றியின் formula  இன்றைக்கு செல்லுபடியாகாதே ! Consider these facts please :

1 .அதே லார்கோவின் தொடரில் புதுசாய் ஒரு ஆல்பம் உள்ளது தான் ; ஆனால் அதைக் கண்டு தெறித்தடித்து ஓட்டமெடுக்கிறோம் ! 

2 அன்றைக்கு ரொமான்டிக் ஆக்ஷன் நாயகராய்த் தென்பட்ட வெய்ன் ஷெல்டனோ இன்றைக்கு கிட்டங்கியைக் குத்தகைக்கு எடுத்திருக்கும் வில்லனாய்த் தென்படுகிறார் !

3 அன்றைக்கு "அட..டின்டின் பாணியில் சித்திரங்களா ?" என்று வியக்கச் செய்த ஜில் ஜோர்டனை ஊருக்குள்ளேயே சேர்க்க நீங்கள் இன்று தயாரில்லை !

4 மாயாவியாரைப் பற்றி no comments !

5 கோடஸ்டியாகியிருந்த மாடஸ்டி - இன்றைக்கு  "வளமாய்" வலம் வந்தாலுமே - சில பல டாக்டர்களைத் தாண்டி வசியமாகிட ஆளுண்டா நம் மத்தியில் ?

இவையே கால ஓட்டத்தின் தவிர்க்க இயலா மாற்றங்களெனும் போது - a குண்டு புக் is easier said than done these days !! 

யாரையாச்சும் கரண்டியை கொண்டே அப்பணும் போலிருக்குதே !!  

தொடரும் மைண்ட்வாய்ஸ் ! 

Option # 4 : ரைட்டு....கலந்து கட்டி ஹீரோக்களை அடிக்கத் தான் சுகப்பட மாட்டேங்குது ; தோர்கல் தொடர் மாதிரி எதையேனும் தேர்ந்தெடுத்து வரிசையாய் ஒரு ஐந்தாறு கதைகளை இணைத்து குண்டு புக்காக்கினால் ? 

சுலபமாய் செய்திடலாம் தான் ; ஆனால் தோர்கல் இன்னமும் நம் மத்தியில் ஒரு universal நாயகர் அல்லவே ?! அவரை மட்டுமே ஒரு மைல்கல் இதழின் தூண்களாக்குவது குருவி தலையில் மாடமாளிகை கட்ட முற்படுவது போலாகிடாதா ?

Option # 52019 ஈரோட்டில் "பிஸ்டலுக்குப் பிரியாவிடை" ஒரு முற்றிலும் புது இதழாய் ; எவ்வித ஸ்டார் நாயகரும் இல்லா முயற்சியாய், கதைக்கு மட்டுமே வெளிச்சம் பாய்ச்சிய இதழாய் களம்கண்டது ! உங்களுக்கு அது போலானதொரு முயற்சி இங்கேயும் ஓ.கே. வெனில் கென்யா ; ROUTE 66 ; போன்ற தொடர்கள் ; ப்ளஸ் இன்னமும் நிறைய புது 3 பாக ஆல்பங்கள் வெயிட்டிங் ! இது பற்றிய உங்களின் எண்ணங்கள் ப்ளீஸ் ? 

இப்போ மைண்ட்வாய்ஸ் அவசியப்படாதுங்கோ ; உரக்கவே ப்ளீஸ் ?

Option # 6 : போனெல்லியினில் உள்ள நாயகப் பெருமக்களை ஒரே இதழில் LMS போல நிறைத்திட permission கிட்டும் தான் ! 'தல' டெக்ஸை லயனின் ஆட்டக்காரராய் பார்த்தே பழகிப் போய்விட்டதால் - அவர் நீங்கலாய் :

மர்ம மனிதன் மார்ட்டின்

CID ராபின்

டைலன் டாக்

ஜூலியா 

அப்புறம் நாம் இன்னமும் பார்த்திரு சில (போனெல்லி) புதியவர்களான ZAGOR ; MISTER NO போன்றோரையும் ஒருங்கிணைத்து ஒரு டெக்ஸ் சைசிலான ஸ்பெஷல் இதழை தயாரிக்க இயலும் தான் ! அவர்களது ஸ்பெஷல் இதழ்கள் (இதழ் # 100 ; இதழ் # 250 போன்றவை)  கலரிலான சாகசங்களுடன் available எனும் போது இத்தகையதொரு தொகுப்பினை கலரிலும் நாம் திட்டமிட இயலும் ! 

இக்கட ஒரு ஜனம் நிறைந்த கூட்டணி இருக்கக்கூடும் தான்  ; ஆனால் அது போன எலெக்ஷனின் "மக்கள் நலக் கூட்டணி" போலாகிடுமோ ? என்பதைச் சொல்ல வேண்டியவர்கள் நீங்களே ! So உங்களின் எண்ணங்கள் ப்ளீஸ் ?

Option # 7 : மாயாவி ; லாரன்ஸ் டேவிட் ; செக்ஸ்டன் பிளேக் ; 13 வது தளம் - போன்ற fleetway தயாரிப்புகளை சுலபமாய் ஒருங்கிணைக்கலாம் தான் ; வர்ணங்களுமே சாத்தியமே ! இன்னாண்றீங்க ?

இந்தக் கோமுட்டித் தலையன் கிட்டே இந்த வாரம் முழுக்க நாமே சொன்ன சமாச்சாரங்களை மறுக்கா மறுக்கா நினைவுபடுத்த வழி பண்ணுறானே ? சதிகாரா !!

Option # 8 : வேதாளன் ; மாண்ட்ரேக் ; ரிப் கிர்பி ; காரிகன் - என்ற பட்டாளம் ? 

எனது பதில் : பீரோவில் மாண்ட்ரேக் கதைகள் கடந்த 25 வருஷங்களாய்த் துயின்று வருகின்றன ; காரிகனுமே கால் நூற்றாண்டாய் ! வேதாளன் கதைகளுக்கு மறுக்கா உரிமைகள் வாங்கிட நமக்கு  சாத்தியப்படுகிறது என்று வைத்தே பார்த்தாலுமே - மெய்யாலுமே இந்த தூசி தட்டும் படலம் இந்த மைல்கல் தருணத்துக்குப் பெருமை சேர்க்கக்கூடும் என்கிறீர்களா ? 😕😕

Option # 9 : ரைட்டு - குண்டு புக் முயற்சியினில் வேறு ஏதாச்சும் செய்ய முடியுமாவென்று யோசித்தால் :

தோர்கல் 

சிக் பில்

ரிப்போர்ட்டர் ஜானி 

இந்த மூவரும் உங்களின் good புக்சில் உள்ள நாயகர்கள் ! Maybe இவர்கள் மூவரையுமோ ; அல்லது இருவரை மட்டுமோ ஒரு அடித்தளமாக்கிக் கொண்டு, இவர்களோடு கரம் கோர்க்க புதுசாய் பிராங்கோ-பெல்ஜிய நாயகர்களின் மத்தியில் தேடலைச் செய்து பார்த்தாலென்ன ? நாம் தேடும் commercial ஹிட் நாயகர்கள் - ஆக்ஷன் / டிடெக்டிவ் ஹீரோக்களாகவோ, அதிரடிக் கௌபாய்களாகவோ மட்டுமே தானிருந்திட வேண்டி வரும் ! கார்டூன்களே வேலைக்கு ஆகாதென்று போட்டுத் தாக்கி விட்டீர்கள் ; இருண்ட களங்கள் ; அமானுஷ்யங்கள் ; கிராபிக் நாவல்கள் இத்யாதிகளெல்லாமே இந்த நாட்களுக்கோ , இந்த ஸ்பெஷல் இதழுக்கோ பொருந்திடா சமாச்சாரங்கள் ! So that leaves us with the tried & tested secret agents or cowboys ! 

இதுவே முன்செல்லும் வழியென்று உங்களுக்குத் தோன்றினால், எனது shortlist-ல் உள்ள சில புது ஆக்ஷன் நாயகர்களை இந்த சிக் பில் / ஜானி / தோர்கல் கூட்டணியுடன் கைகோர்க்க வழியேதும் இருக்கக்கூடுமா என்று முட்டி மோதிப் பார்த்திடலாம் ! படைப்பாளிகள் இசைவு சொன்னால் சூப்பர் ; இல்லையென்று சொன்னால் புதுசாய் இன்னொரு ஆலமரத்தைத் தேட வேண்டி வரும் ; அல்லது slip case இருக்க பயமேன் ? என்று மனத்தைத் தேற்றிக் கொள்ள வேண்டி வரும் ! 

தற்போதைக்கு அதற்குள்ளெல்லாம் மண்டையை விட்டு சிராய்த்துக் கொள்ளாது - OPTION 9 உங்களுக்கு ஓ.கே.வா ? இல்லையா ? என்று மட்டும் பதிவிடுங்கள் ப்ளீஸ் ! அப்புறமாய் மற்றதை யோசித்துக் கொள்வோமே ?

Option # 10 : ஓவியர் ஹெர்மனின் படைப்புகளில் இன்னமும் நிறைய one shots உள்ளன guys ! 'தனித்திரு...தணிந்திரு' பாணியிலான offbeat கதைகள் - அவற்றின் பெரும்பான்மை ! சிலவற்றிற்கு அவரது மகன் பேனா பிடித்துள்ளார் ; ஒரு சிலவற்றுக்கு வான் ஹாம் ! Maybe ஒரு தொகுப்பாய் ஹெர்மனின் இந்த oneshots அனைத்தையும் இணைத்திட முயற்சிக்கவும் செய்யலாம் தான் ! செம வித்தியாசமான முயற்சியாக இருக்கக்கூடும் என்பது இங்குள்ள பாசிட்டிவ் ! ஆனால் எல்லாமே one shots ஆக இருந்திடும் & கதைக்களங்கள் பற்றி இந்த நொடியில் என்னுள் சன்னமான கதைச் சுருக்கங்களைத் தாண்டிப் பெருசாய் அலசல்கள் நஹி என்பது நெகட்டிவ் ! தவிர, ஹெர்மனின் படைப்புகளில் எப்போதுமே ஒரு மென்சோகம் இழையோடக்கூடும் என்பதுமே கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் ! சொல்லுங்களேன் - THE MASTER'S SPECIAL என்று போட்டுத் தாக்கலாமா ? 

So  "சாத்தியம்" என்ற அடையாளத்துடன் இப்போதைக்கு எனக்கு தோன்றிய options மேற்படிப் பத்தே ! இவை தவிர்த்து - நீண்டு செல்லும் ஒற்றைக் கதைச் சங்கிலியுடனான பயணங்களை  (ALONE மாதிரியானவை) முயற்சிப்போமா ? என்ற எண்ணம் அவ்வப்போது எட்டிப் பார்க்கும் தான் ! ஆனால் அந்த கதையோட்டங்களில் நாட்டம் இல்லாதோருக்கு இந்த இதழ் ஒரு மெகா மொக்கையாய்த் தோன்றிடக் கூடும் என்பதால் மேற்கொண்டு அந்த ரூட்டில் பயணிப்பதில்லை ! 

And உங்களுக்குத் தோன்றிடக்கூடிய practical முன்மொழிவுகள் most welcome too ! 

சூப்பர்மேனுக்கு try பண்ணலாம் ; ஸ்பைடர்மேனுக்கு try பண்ணலாமென்ற ரீதியிலான எண்ணங்களும் option-களாக இந்நொடியினில் உங்களுக்குத் தோன்றிடக்கூடும் தான் ! ஆனால் நடைமுறையில் அமெரிக்க சூப்பர் ஹீரோக்களோடு ஒத்துப் போக நாம் ரொம்பவே திணறுவோம் என்பதால் not worth the ஆராய்ச்சி ! அதுமட்டுமன்றி, இந்த கூட்டான்சோறு proposal-களெல்லாம் அவர்களுக்கு எட்டிக்காய்கள் !  அப்புறம் "இரத்தப் படலம் spin-off கதைகளை லைனாய் போட்டுத் தாக்கிடலாமென்று" பழனிக்கு உதிக்கப் போகும் சிந்தனை ; "விண்வெளிப் பிசாசு + Sinister 7 கதைகளை இணைத்து வண்ணத்தில் " என்று கவிஞரின் பரிந்துரை ;  etc etc என இங்கே பதிவாகாது போகாது தான் ! But இது கலாய்ப்சுக்கும் ; கனாக்களுக்குமான வேளையல்ல என்பது நண்பர்களுக்கும் தெரியும் என்பதால், அவர்களே அந்த முன்மொழிவுகளை சீரியஸாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்பேன் !  

ஆக - இனி பந்து உங்கள் தரப்பில் guys ! 

இங்கு ஒரு தீர்மானத்துக்கு நாம் வந்து விட்டோமெனில், அது சார்ந்த திக்கில் மேற்கொண்டு ஆக வேண்டியதை கவனிக்க நான் பிஸியாகிடுவேன் ! And மெயினான 2 பஞ்சாயத்துக்கள் முடிந்சூ எனில், காத்திருக்கும் மீத இரண்டு செம சுளுவானவை ; ஜாலியானவை !!

இன்னும் ரெண்டாஆஆஆ ??? என்ற உங்களின் கூக்குரல் நடையைக் கட்டியவனுக்குக் கேட்குது !!  

அவை இரண்டுமே சும்மா இம்மியூண்டுப் பதிவுகளே & அவற்றை நாளைக்குப் பார்த்துக்கலாம் ! இன்றைய இந்த 2 மெயின் சமாச்சாரங்களில் ஓரளவுக்கேனும் ஒப்புதல் கிடைக்கிறதா என்று பார்க்கலாம் ! Bye for now !! See you around tomorrow !!

365 comments:

  1. //"போச்சு...அதுக்குள்ளாற எவனோ சுட்டுட்டன் ; நம்ம புக்கைச் சுட்டுட்டன் !!"//

    :)))

    ReplyDelete
  2. சார் கென்யா, ஒற்றை நொடி ஒன்பது தோட்டா போன்றவற்றை வெளியிட சாத்தியக்கூறுகள் என்ன சார்???

    ReplyDelete
    Replies
    1. Oh yes...தேர்வு(கள்) அவையாகவே இருக்கும் பட்சத்தில் 2 ஸ்பெஷல் இதழ்களாய் பண்ணுவது ரொம்பவே சுலபம் தான் ! பணிகள் 75% முடிந்துள்ளன சார் !

      Delete
    2. அருமை சார். மிக பொருத்தமாக இருக்கும் சார்

      Delete
    3. இந்த மாதிரி யாராவது சொல்லு வாங்கன்னு அப்பவே எனக்கு தோனிச்சு ஆசிரியரே ஐந்து பாக இரண்டு கதையை எடுத்து போட்ட கதை முடிஞ்சிடும்....

      Delete
    4. //இவர்கள் மட்டுமல்ல இதர பழைய நாயகர்கள் அனைவருக்கும் ஒரு சில பக்கங்கள் ஒதுக்கி அவர்களுடைய classic stills, அட்டைப்படங்கள், அவர்களை பற்றிய அந்நாளைய சிலாகிப்புகள், மெகா ஹிட் கதைகள், மறக்க இயலா பசுமையான தருணங்கள், என தாங்களும், மதிற்பிற்குறிய சீனியர் எடிட்டரும் கரம் கோர்த்து ஒரு tribute செய்து விடுங்கள். உடன் ஜூனியரையும் சேர்த்துக் கொண்டு மூன்று தலைமுறை காமிக்ஸ் பயணத்தை பகிர வேண்டும் என்பது எனது அவா.

      இதுவே பழமைக்கு நாம் கொடுக்கும் நன்றி கலந்த மரியாதை. நாம் அவர்களை என்றும் மறக்கவில்லை, பசுமையான் நினைவுகளுடன் கடந்து போகிறோம்.//
      இதை நானும் வரவேற்கிறேன்.நாயகர்களின் வசூல் சாதனை உட்பட விபரங்கள் சீனியர் எடியின் தனிப் பக்கங்களில். இருக்கட்டும்

      Delete
  3. படிக்கும் போது மண்டைல இருக்கும் கொஞ்ச முடியையும் பிச்சுக்கத்தோனுது ...முடிஞ்சா மேல சொன்ன எல்லா Option லேயும் Specical Book போட்ரலாம்...

    Jokes apart ...நடைமுறை சிக்கல்களை உணர்ந்து ..சென்னை புத்தக விழாவையும் (நடக்கும்னு நினைக்கிறேன்) கவனம் வைத்து ஓரு சிறந்த முடிவை நீங்களே எடுங்கள் சார்...புக் எப்படி வந்தாலும் Ok ...

    ReplyDelete
    Replies
    1. விலையும் கைய கடிக்காது...

      Delete
    2. ஆமா அது ரொம்ப முக்கியம்

      Delete
  4. வேதாளன் ; மாண்ட்ரேக் ; ரிப் கிர்பி ; காரிகன் - என்ற பட்டாளம் தானே சார் முத்து காமிக்ஸ்'ன அடையாளம்.

    பீரோவில் துயிலும் பெஸ்ட் மாண்ட்ரேக் கதை + காரிகன் + உரிமைகள் வாங்கிய வேதாளன் கதை + ரிப் கெர்ரி குண்டு புக்- இந்த தூசி தட்டும் படலம் இந்த மைல்கல் தருணத்துக்குப் கண்டிப்பாக பெருமை சேர்க்காமல் போகுமா என்ன சார்???

    ReplyDelete
  5. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  6. சார் 50வது ஆண்டு விழா மலரில் முதல் நாயகன் மாயாவி இல்லாமல் எப்படி?எனவே அவருடைய வண்ணப் படக்கதை ஒன்று வேண்டும்.பெரும்பான்மை இருக்கும் பட்சத்தில் அதை யோசித்து பாருங்கள்

    ReplyDelete
  7. என்னமோ பன்னுங்க சாமி... எனக்கு தலையெல்லாம் சுத்துது!
    எனக்கு புக் வந்தால் போதும்!!

    நான் கடேசியா வர்றேன்...

    ReplyDelete
    Replies
    1. ஹி...ஹி....ஹி.

      ஹா....ஹா....ஹா.

      எனக்கும் அப்படியே.

      நானும் அப்போதே ஜகா வாங்கிப்புட்டேன் சாரே.

      Delete
  8. நீங்க ஏதோ சொல்ல வர்றீங்கன்னு லேசா புரியது. ஆனா என்ன சொல்ல வர்றீங்கன்னு மரமண்டைக்கு சரியாஎட்டலே. இன்னும் ரெண்டு வாட்டி பதிவ படிக்கணும் போலிருக்கு.

    ReplyDelete
    Replies
    1. அதே தான்.. அதைத்தான் ஆசிரியர் சொல்லறாருன்னு நினைக்கிறேன்..

      Delete
  9. Option #4 தோர்கல்

    Not possible then

    option #5


    ReplyDelete
  10. தங்களின் எல்லா ஆப்சன்களையும் பார்த்தேன் சார்.

    ஆப்சன் 5 பெஸ்ட் ஆகத் தெரிகிறது.

    4ஸ்பெசல்கள்...சந்தாவில்...

    ஒவ்வொரு காலண்டுக்கும்1ரிலீஸ்....

    1.ஒற்றை நொடி ஒன்பது தோட்டா

    2.கென்யா

    3.ரூட்666

    4.தோர்கல்

    4யும் வைக்க ஒரு பெரிய சூட்கேஸ்!

    குண்டு குண்டு புக்காவும் இருக்கும்.
    வருடம் பூராவும் செலிபரேட் பண்ணியது போலவும் இருக்கும்.
    தங்களின் பணிகளும் உரிய அங்கீகாரம் பெறும்.
    எல்லாமே ஹிட்டாகவும் இருக்கும்.

    முத்து காமிக்ஸின் தற்போதைய நாயகர்களில் மாஸ் ஹிட்டுக்கு ஆளில்லை என்ற நிதர்சனம் இந்த வாரம் பூரா பார்த்துட்டோம்.

    பழைய ஆட்களை இந்த வேளையில் தூசு தட்டுவதும் சுகப்படாது.


    (குறிப்பு:- "லயன்-முத்து"-- என்றே இப்போதுலாம் சொல்லி பழகிட்டதால
    "வொய் நாட் டெக்ஸ்????"

    4ல் ஒன்றாக டெக்ஸ்னா அது ஹிட் உத்தரவாதம்!ஹி...ஹி..)

    ReplyDelete
    Replies
    1. டெக்ஸ் எடத்துல வேறயாரையாவது போட்டா... டெவி idea செம்மையா இருக்கும்...

      Delete
    2. Muthu Tex ஒரு குண்டு புக் போடுங்கள் சார் எல்லாம் சரியாக இருக்கும்.

      Delete
  11. ஙே. அங்க கமெண்ட் படிச்சிட்டிருக்கறதுக்குள்ளே இங்க அடுத்த பதிவு வந்துடுச்சு.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்... நானும் அங்கதான் இருந்தேன்....

      Delete
  12. Opion-6 கொஞ்சம் பெட்டர் இரகம்தான்,ஆனால் ஹிட் அடிக்குமான்னு தெரியலை,ஒரு மைல்கல் இதழுக்கு சரிப்படுமான்னு தெரியலை...

    ReplyDelete
  13. 1.தோர்கல் - fantasy(DOUBLE ALBUM )

    2.சிக் பில் - comedy

    3.ரிப்போர்ட்டர் ஜானி - crime

    4.டைகர் - இளமையில் கொல் (REMAINING TWO ALBUMS)..

    5.SODA OR HERMANN ONE SHOT ..

    இது இதழ் 1 ஒரே புக்காக ..

    இதழ் 2 .. ஒற்றை நொடி ஒன்பது தோட்டா ..

    ReplyDelete
    Replies
    1. வாவ்... லுக்ஸ் நைஸ். இளமையில் கொல்"- ஒரே கல்லில் 2 மேங்கோஸ்.

      Delete
    2. ஒரு மைல்கல் இதழிலாச்சும். மறுபதிப்புகள் பக்கமே போக வேணாமே நண்பர்களே ?

      Delete
  14. சார்... Option 3... அருமையாகத் தோன்றுகிறது... Thriller, comedy, action எல்லா varietyயும் possible... முத்து 50 க்கு ஏற்றதாக இருக்கும்...

    Option 4உம் OK... பிரியாவிடை, அர்ஸ் மேக்னா, அண்டர்டேக்கர் போன்ற ஏதாவது ஒரு சிறு தொடரை பிடித்தால்... அருமையாக இருக்கும்...

    ReplyDelete
  15. Option-9 இன்னும் கொஞ்சம் பெட்டர் இரகம் போல் இருக்கு,எனினும் முழு திருப்தி இல்லை...
    Option-5 பி.பி.வி போல் கதைக்களம் அசத்தும் எனில் முயற்சிக்கலாம்...

    ReplyDelete
  16. ஆண்டு முழுவதும் கொண்டாடப்பட வேண்டிய தருணம்! ஒற்றை இதழோடு நின்றுவிடக் கூடாது. 

    5 புக், ஒவ்வொரு புக்கும் 3 ஆல்ப அதிரடி, வருடம் முழுதும், நோ ஒர்க்லோடு. நோ பட்ஜெட் ஒர்ரீஸ்...

    தொடக்கமாக புக் #1,#2 ஒ.நொ.ஒ.தோ.(2×3) ஜனவரியில்..

    புக் #3 கோடை மலர் (முத்து) டிரிபிள் ஆல்பம் - தோர்கல்
    புக் #4 ஆகஸ்ட் ஸ்பெஷல் (முத்து) டிரிபிள் ஆல்பம் - ரூட் 66
    புக் #5 தீபாவளி ஸ்பெஷல் (முத்து) டிரிபிள் ஆல்பம் - கென்யா


    மொத்தம் 5 புக், 15 ஆல்பம், 1 ஸ்லிப் கேஸ், ஆண்டு முழுவதும் கொண்டாட்டம்!

    ReplyDelete
    Replies
    1. செம ஐடியாவா தெரியுது. இந்த வாத்யார் சொல்றது அந்த வாத்யாருக்கும் புடிக்கனும் மானிட்டோ.

      Delete
    2. கென்யாவும் ரூட் 666 ம் ட்ரிபிள் ஆலபங்கள் அல்ல என்று நினைக்கிறேன்.

      Delete
    3. ஆல்பங்கள் கூடக் குறைய வந்தாலும் 5 ஹார்டு பைண்ட் பக்ஸ் வித் ஸ்லிப் கேஸ்!

      Delete
    4. சரவணன் @ எனது எண்ணமும் இதுவே! I like this idea!

      விஜயன் சார்,
      இரண்டு மாதங்களுக்கு ஒரு முத்து 50 ஸ்பெஷல் இதழ் என போடலாம்! இதில் ஒன்-ஷாட் கதைகளை போடலாம்! இதில் தோர்கலுங்கு 3-4 கதைகள் கொண்ட புத்தகம் (இவருக்கு மட்டும் ஒன்-ஷாட் கதை என்பதில் இருந்து விலக்கு அளிக்கலாம்) முதல் மாதம் 2 பாக ஒன்- ஷாட் கதை என்றால் மூன்றாம் மாதம் 3 ஒன்-ஷாட் என திட்டமிடலாம்! Every alternative month we can plan like this, if it make sense!

      ஆசிரியரும் இந்த வருடத்தில் வரும் மற்ற புத்தகங்களின் எண்ணிக்கை மற்றும் குறைத்த பக்கங்கள் (ஒன்-ஷாட் கதைகளுக்கு வரும் பக்கங்களின்) அளவில் வைத்து கொண்டால் வேலை பளுவை சமன் செய்யமுடியும் என நினைக்கிறேன்!

      அடுத்த வருட மொத்த புத்தகங்களின் எண்ணிக்கையை சுமார் 40 என்றால் அதில் 6 புத்தகங்கள் முத்து ஸ்பெஷல் 50 என திட்டமிடலாம்; இதில் ஒன்று தோர்கல் எனும் போது 5 புத்தகங்கள் நீங்கள் மேற்கொண்டு திட்டமிடலாம்! இப்போது இந்த 40 புத்தகங்களில் ரெகுலர் ஸ்பெஷல் புத்தகங்கள் இரெண்டு என மாறிவிடும் ( லயன் TEX தீபாவளி மலர் & லயன் லக்கி ஆண்டு மலர்)

      அப்புறம் முத்து 50 years தனி லோகோவுடன் அடுத்த வருடம் வரவுள்ள முத்து காமிக்ஸ் இதழ்கள் அனைத்திலும் முத்து 50-வது வருடம் என்று ஸ்பெஷல் எழுத்துக்களுடன் அல்லது டெக்ஸ் 70வதுக்கு உள்ள லோகோ போன்று ஒன்றுடன் வரச்செய்தால் நன்றாக இருக்கும்!

      Delete
    5. ஈரோடு ஸ்பெஷல் என்பதை இந்த முறை முத்து ஈரோடு special என மாற்றிவிட்டால் நீங்கள் பணியாற்ற உள்ள இதழ் முத்து 50 ஸ்பெஷல் இதழ்கள் 4 ஆகிவிடும்!

      Delete
    6. சிறு திருத்தம் சார்
      புக் 4 # 5 பாக ஆல்பம்
      புக் 5 # 5 பாக ஆல்பம்

      இதற்கு எடிட்டர் சார் ஓகே சொன்னால் எனக்கு மிக்க மிக்க மகிழ்ச்சி தான்.

      Delete
    7. குமார் @ ஆர்வம் புரிகிறது. Practically we are overloading our editor.

      Delete
    8. மாதமொருமுறை வரும்வரைக்குமே முழுநிலவுக்கு ரம்யம் என்பதை நினைவூட்டுகிறேன் guys !

      Delete
  17. ஆப்சன் 7


    OR


    ஆப்சன். 8

    ReplyDelete
  18. ஒரு மைல்கல் இதழுக்கு நிறைவாய்,பெரிதாய் திட்டமிடுவதில் உள்ள சிக்கலான சூழல் வருந்தத்தக்கது...
    உண்மையைச் சொல்ல வேண்டும் எனில் இங்கே உள்ள தேர்வுகள்,திட்டமிடல்கள் முழு திருப்தியை அளிக்கவில்லை, இந்தப் பிறவியில் கிட்டிய ஒர் அரிய வாய்ப்பை தவற விட்டுவிட்டு பின்னாளில் ஓய்வான ஒரு தருணத்தில் நாம் புலம்பும் சூழல் அமையாமல் இருந்தால் சரி...
    இது எனது தனிப்பட்ட கருத்தே...

    ReplyDelete
    Replies
    1. இந்தப் பிறவியில் கிட்டிய ஒர் அரிய வாய்ப்பை தவற விட்டுவிட்டு பின்னாளில் ஓய்வான ஒரு தருணத்தில் நாம் புலம்பும் சூழல் அமையாமல் இருந்தால் சரி...
      இது எனது தனிப்பட்ட கருத்தே...//

      +131313

      Delete
  19. 5....கென்யா ; ROUTE 66 ; போன்ற தொடர்கள் ; ப்ளஸ் இன்னமும் நிறைய புது 3 பாக ஆல்பங்கள் வெயிட்டிங் ! இது பற்றிய உங்களின் எண்ணங்கள் ப்ளீஸ் ?
    பட்டய கிளப்புமே....ஆனா இதோட அந்த ஒநொஒதோ சேர்ந்தா ....சார் என்ன சொன்னாலுஞ் சரி சிறப்பு மலர் சும்மா ஐயாயிரத்த தொடனும்....பிற கதைகள குறைங்க....டெக்ச மட்டும் வைங்க

    ReplyDelete
    Replies
    1. 50ம் ஆண்டு பவளவிழா மலருக்கு நியாயம் செய்வோம்....இரத்தப் படலம் வாங்குவோர்300தான....எப்படியும் இவர்கள் வாங்கப் போவது நிச்சயம்....அடிச்சு விளையாடும் தருணம்

      Delete
    2. ஒரு மலரின் விலை ரொம்ப அதிகமா போன சந்தா தாண்டி விற்பனை செய்வதும் கடினம். முத்து 50 வருடம் வரும் இதழ்கள் சந்தா தாண்டி நிறய ரசிகர்களை சென்றடைய வேண்டியது மிக மிக முக்கியம்.

      Delete
    3. // முத்து 50 வருடம் வரும் இதழ்கள் சந்தா தாண்டி நிறய ரசிகர்களை சென்றடைய வேண்டியது மிக மிக முக்கியம். //

      Agreed

      Delete
  20. ஆப்சன் 5. ரூட் 666. இந்தக் கதை செம பாஸ்ட்டான த்ரில்லர். அதுவும் ஒ. நொ. ஒ. தோ. வும் முத்து 50 ஐ அலங்கரிக்க சரியான இதழ்கள்.

    ReplyDelete
    Replies
    1. நாயகர்களை முக்கியமென்று நினைக்காது - கதைக்கே 'ஜெ ' எனில் நான் ரெடி சார் !!

      Delete
    2. #ஆப்சன் 5. ரூட் 66. இந்தக் கதை செம பாஸ்ட்டான த்ரில்லர். அதுவும் ஒ. நொ. ஒ. தோ. வும் முத்து 50 ஐ அலங்கரிக்க சரியான இதழ்கள் # கூடவே கென்யாவும் சேர்த்துக்குங்க

      Delete
    3. நானும் ரெடி தான் சார். பட்டாசான கதைகள் சார்.

      Delete
    4. அப்படீன்னா எனக்கும் ஓகே சார்..

      Delete
  21. Option 5 will be better.. முத்து தனது ஐம்பதாவது ஆண்டில் புது பரிணாமம் மூலம் புதிய வித்தியாசமான கதைகளங்களுடன் வருவது சிறப்பு...

    கதையே நாயகன் என்று வெளிவந்த அனைத்துமே ஹிட் தான்.

    ReplyDelete
  22. M.muthu.M.magical.M.magnetize .M.milestone.year special.

    50வது வருட கொண்டாட்ட இதழுக்கான தலைப்பு ரெடி சார்.

    ReplyDelete
    Replies
    1. முதலில் பரிசம் போட்டுப்போம் சார் ; அப்புறமாய் மண்டபம் பாத்துக்கலாம் !

      Delete
  23. எல்லா optionஉமே நல்லா இருக்கு... யோசிச்சு பாத்தா... Option 5... "முத்து 50" க்கு ஏற்புடையதா தோணுது...

    போறபோக்க பாத்தா இன்னைக்குள்ள நான் எல்லா optionஐயும் choose பண்ணிடுவேன் போலையே... !!?

    ReplyDelete
    Replies
    1. அப்படியே அந்த #7#8 பக்கம் ஒருவாட்டி போய்ட்டு வாங்க சார்..

      Delete
  24. என் தலைப்பு.... M50..

    ReplyDelete
  25. புத்தகப்ரியன் ஆப்சன் சூப்பர் சார்.கிர்பி, மாண்ட்ரேக். வேதாளன், காரிகன்,&சார்லி. ஆக்சன் கதைகளாக தேர்ந்தெடுத்து லாஜிக் ஓட்டை விமர்சனங்களுக்கு இடம் கொடுக்காமல்_மெல்லிய உணர்வுகளுக்காக ஹிட்டடித்த கதைகளாகதேர்ந்தெடுக்கலாம். கரூர்ராஜ சேகரன்

    ReplyDelete
  26. option #10 மட்டும் நிச்சயமா வேணாம் சார்..

    ReplyDelete
  27. ஆப்சன் 5 தவிர வேற எதுவும் சிறப்பாத் தெரியலீங்க எடிட்டர் சார். ஆனா என்ன ஆப்சன் 5 ல 5 புக்கு வருடம் முழுக்க வேறு வேறு சமயங்களில் வருவது போல் அமைந்தால் சிறப்பா இருக்கும். வருடம் 12-24 இதழ்கள் வருவதற்கு பதிலா 5-12 என சிறப்பிதழ்களா முயற்சி பண்ணலாம்.

    ReplyDelete
    Replies
    1. பன்னிரெண்டே ஸ்பெஷல் இதழ்கள் என்று திட்டமிடலாம் தான் சார் - ஆனால் இணைக்க இயலா ரெகுலர் நாயகர்களுக்கு 2022-ல் மொத்தமாக கல்தா தர வேண்டி வரும் ! எல்லாமே oneshots களாக இருக்க வேண்டிவரும் !

      Delete
    2. முன்னே இந்தக் கதைகளின் சிறப்பு தெரியாமல் போனாலும் வெளியாகும் போது இவை பரபரப்பை ஏற்படுத்தப் போவது உறுதி.

      Delete
    3. ஆனால் இணைக்க இயலா ரெகுலர் நாயகர்களுக்கு 2022-ல் மொத்தமாக கல்தா தர வேண்டி வரும் ! //

      When going gets tough gets going..

      விற்பனையில் சிறக்காத நாயகர்களை எல்லாம் கழட்டி விட்டுடலாங்க சார்.

      Delete
  28. முத்துவின் அடையாள நாயகர்களையும், இப்போதைய லேட்டஸ்ட் நாயகர்களையும் ஒரே இதழாகவோ அல்லது முந்தைய பதிவில் முன்மொழிந்ததைப் போல 2 இதழ்களாகவோ ஸ்லிப் கேஸில் கொடுக்கலாம். பழசு (Option 7# & #8 -புதுசு Option #5) காம்பினேஷன் வாய்ப்பில்லை என்றால், பழசுக்கே எனது ஓட்டு.

    அப்படி இரண்டையுமே கொடுக்க வாய்ப்பில்லை ஒன்று தான் ஆப்ஷன் என்றால் Option #-7 மற்றும் Option # 8 எனது தேர்வாக இருக்கும்.

    காரிகன், மாண்ட்ரேக், வேதாளன் (பழைய முத்து வேதாளர் கதைகளின் இன்றைய மதிப்பு 2000-க்கும் மேல்), ரிப்கிர்பி

    +

    முத்துவின் முதல் நாயகர்களான மாயாவி, லாரான்ஸ்-டேவிட், ஜானி நீரோ என ப்ளீட்வே கதைகள்


    ReplyDelete
    Replies
    1. எனது விருப்பமும் அதுவே நண்பரே...

      Delete
  29. யாரு யவருன்னே தெரியாதவர்கள் முத்து ஸ்பெஷலில் வேண்டாம் சார்... option #5 No sir

    ReplyDelete
    Replies
    1. Agree, it has to be a கதம்ப குண்டு புக்

      Delete
  30. option #7 #8 கலந்துகட்டி அடிக்கலாம் சார் முத்துவுக்கு சிறப்பு செய்த அவர்களை விட சிறந்தவர்கள் யார்..? ஆசானே.. லாஜிக்க என்ன சகலத்தையும் கலட்டிவைக்கக்கூட நான் தயார் ஆசானே...

    ReplyDelete
  31. dear editor sir

    the option which contains KENYA AND OTRAI NODI ONBATHU THOTTA and etc may be better it seems.Till now it is leading in fans opting. isnt it?

    J

    ReplyDelete
    Replies
    1. Because it will be easier as you had told in the blog . then why not?

      Delete
    2. So option 5 is the best option.

      Delete
    3. More over the KENYA , OTRAI NODI ONBATHU THOTTA are long pending in the publishing que.Though it may not be a valid compulsion , the ease of stress of MUTHU 50 AND sales aspect without filling godown must be taken into account here. So ultimately we will land with MANJAL SATTAI MAAVEERAN only.
      The TEX Groups satisfaction and market assessment during corona all must be taken into account.
      What is the 50 MUTHUs pulse here goes with compromising of comprised in one .

      Rest lies in hands of SACRED MAUNITO

      J

      Delete
    4. Yes of course , then it will be without tex as there is no OTHER choice to success. ALL other options are godown fillers except TEX.

      Delete
  32. ஆசானே தங்களின் இரண்டு பதிவுகளையும் படித்தேன்.27 ஆண்டுகளுக்கு முன் கல்லூரியில் BSC Chemistry படித்த போது முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் தலையணை சைஸில் இருந்த organic chemistry bookஐப் பார்த்து பார்த்து பயந்து மண்டை காஞ்சது தான் நினைவிற்கு வருகிறது.

    எனக்கே இப்படினா உங்களுக்கு ?

    பொன் விழாச் சிறப்பிதழை எப்படித் தந்தாலும் ஏற்றுக் கொள்கின்றேன்.

    ஆசிரியருக்கும் நண்பர்களுக்கும் நன்றிகள்.

    ReplyDelete
  33. இரத்தப் படலம் spin-off கதைகளை லைனாய் போட்டுத் தாக்கிடலாமென்று" பழனிக்கு உதிக்கப் போகும் சிந்தனை//

    நிச்சயமா மாட்டேன் சார்.இது முத்து50 அல்லவா..

    ReplyDelete
  34. என் சாய்ஸ் option.5.

    ReplyDelete
  35. சார் இதெல்லாம் நல்லாலை ஆமா..ஒண்ணாவது ஆலமரத்துல நான் பதில் எழுதிட்டு இருந்தா அதுக்குள்ள நீங்க ரெண்டாவது ஆலமரத்துக்கு வந்திட்டீங்க..:-(

    ReplyDelete
    Replies
    1. நீங்க வேற சார் மூனாவது ஆலமரமே இந்நேரம் ரெடியாகியிருக்கும்...

      Delete
    2. தல எனக்கும் இதே கதி தான்.

      Delete
  36. எனது சாய்ஸ்(1)மாண்ட்ரேக்_நள்ளிரவு நாடகம். (2.) சார்லி _ஒரு காவலனின் கதை(3) கிர்பி_காணாமல் போனவாரிசு. (4)மாயாவி_பிளாக் மெயில். இதெல்லாம் ஒருஆர்வக் கோளாறு ஆப்சன் சாத்தியமே இல்லாத விசயம்னு நல்லாத் தெரியும்தான். சாரி மன்னிச்சூ. கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  37. இது மரம் ஒன்றுக்கான கருத்து சார்..

    இந்த முறை வினாவையும் ,பதீலையும் நீங்களே கூறிவிட்டீரகள் சார்...

    1+1= 11

    ஓகே சார்...


    மகிழச்சியே...கண்டிப்பாக சந்தாவில் தான் முத்து 50 இணைந்து வர வேண்டும்...


    என்ன ஒன்று ஒரே குண்டாக இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும்..

    என்னுடைய சிறிய கருத்து என்னவெனில் முத்து 50 வெளிவரும் மாதம் வேறு இதழ்களை இணைக்காமல் ஒரே குண்டாக ,ஒரே கதம்ப இதழாக வெளியிட்டால் கூட இன்னும் சிறப்பாக இருக்குமே சார்..

    ReplyDelete
    Replies
    1. :49:00 GMT+5:30
      வேறு இதழ்களை இணைக்காமல் என நான் கூற வருவது மாதம் மூன்றோ ,நான்கோ இதழ்கள் மாதா மாதம் வருகிறது ..முத்து 50 மாதத்தில் அந்த முத்து 50 இதழ் ஒன்று மட்டுமே ஹெவியாக வந்தால் பட்ஜெட்டும் உதைக்காமல் ..வருட ,இதழ்களும் குறையாமல் இருக்குமே சார்..

      இது எனது யோசனை மட்டுமே சார்..

      Delete
    2. இனி ரெண்டாவது மரத்துக்கு ...ஓடி வரேன் சார்..:-)

      Delete
  38. ஆப்சன் 7 & 8 - why this கொலவெறி?

    ReplyDelete
    Replies
    1. முத்துவோட வேர்களே அவர்கள்தானே மஹிஜி..இந்த நல்லநாளில் அவர்களை மறந்தால் எப்படி...

      Delete
    2. முத்து வை இப்ப தாங்கறது விழுதுகள் தான்!

      Delete
    3. 25 வருஷ தூசு ஒரு லோடு தேறும் பழனி ....பராலியா ?

      Delete
    4. முத்துவின் எல்லா நாயகர்களுக்கும் ஸ்லிப்கேஸ்ல இடம் குடுத்துடலாம் பழனி.

      Delete
    5. 25 ஆண்டுகள் ஆச்சுது அவங்க ரிட்டையர்டு ஆகி. அப்பவே எடுபடல.. இப்போது இந்த தங்கத் தருணத்தில் போட்டு????

      Delete
    6. அந்நாட்களில் ஏஜெண்ட்களிடம் போன் போட்டு மாதாந்திர புக்கின் விபரத்தைச் சொல்லி ஆர்டர் கேட்பார்கள் நம்மாட்கள் ! "அந்த மந்திரவாதி புக் போடற மாசத்தில் போனே போடாதீங்க சாமியா !!" என்று மெய்யாலுமே சொல்லியுள்ளனர் ஏஜெண்ட்கள் ! அன்றைக்கு உள்ளே படுக்கப் போட்டது மாண்ட்ரேக்கை ! பெர்சனலாக எனக்கு ரொம்பவே பிடிக்கும் அந்த மனுஷனை ! ஆனால் no பருப்பு வேகிங் !

      Delete
  39. அம்மாடியோவ்!! என்னவொரு ஆழமான அலசல் பதிவு!!

    ReplyDelete
    Replies
    1. நீட்டி முழக்கும் பதிவு சார் !!

      Delete
  40. விஜயன் சார்,
    கதம்ப இதழ்கள் மூன்று கதைகளை இணைந்து (ப்ரின்ஸ்/பெட்டி) கொடுத்த இதழ் NBS அளவு (சாரி பக்கத்தில் கூட போக முடியாது) இல்லை! எனவே எந்த கதை (புதுசு அல்லது பழைய நாயர்கள் கதை) என்றாலும் தனி தனி கதைகளாக போடுங்கள்!

    ReplyDelete
    Replies
    1. தனித்தனியாக தான் மாதம் முழுவதும் வருகிறதே தலைவரே...??

      Delete
    2. option 5 போல சொல்கிறேன் பழனி!

      Delete
  41. வேதாளர் கதைகள் மீது எப்போதும் ஒரு கண் வைத்திருங்கள் ஆசிரியர் அவர்களே!
    வருங்கால வாசகர் தூண்களை உருவாக்கிட வேதாளர் மட்டுமே சாத்தியப் படுவார்!

    ReplyDelete
    Replies
    1. அவர் எப்போ சார் கட்டிடக்கலை விற்பன்னர் ஆனார் ?

      Delete
  42. முதல் இரண்டு அத்தியாயங்களை எப்படியோ கடந்து விட்டவர், அப்பாலிக்கா ஒரு பெரிய வெள்ளைக் கொடியைப் பறக்க விட்டு விட்டார் - 'மிடிலே !!' என்று !! அப்புறமும் எனக்கே மனசு கேட்கவில்லை ; நெட்டிலும் கொஞ்சம் மெனெக்கெட்டு ஆழமாகவே தோண்டினேன் - இளம் புலியாரின் கதைகள் சார்ந்த அலசல்களைத் தேடி !! பிரான்சில் surf போடுவார்களா ? Rin போடுவார்களா ? என்பதை அங்கே வசிக்கும் நமது நண்பர்களிடம் கேட்டால் தெரிந்திடும் தான் ; ஆனால் இளம் புலியாரை அங்குள்ள வாசகர்கள் கையில் கிடைத்த அத்தனை வஸ்துக்களாலும் கழுவி ஊற்றியுள்ளனர்

    ######

    இதை படிக்கும் பொழது கூட ஏதும் தோன்றவில்லை சார்..ஆனால் இதை எனது ஆருயிர் ஸ்லீப்பர்செல் படித்து கொண்டிருக்கும் பொழுது அவரின் முகத்தினை நினைத்து பார்த்தேன் ஒரே சிப்பு சிப்பா வந்துருச்சு சார்..:-)

    ReplyDelete
  43. So இளம் புலியாரை untick செஞ்சிடுங்கோ

    தேங்க்ஸ் சார்...


    எனக்கு மிகவும் பிடித்த கதை தங்க கல்லறை ,மின்னும் மரணம் என்பது பின்குறிப்பு..

    ReplyDelete
  44. எப்படியாச்சும் , யார் கையிலே காலிலெயாச்சும் விழுப்பா ! ஒரேயொருவாட்டி ஒரு கதம்ப குண்டு புக்குக்கு அங்கீகாரம் கேட்டுப் பாருப்பா !!

    இது எரிச்சல் கலந்த மைண்ட்வாய்ஸ் !

    கரீட்டு சார்...:-)

    ReplyDelete
  45. மெய்யாகவே நீங்கள் எதிர்பார்க்கும் blockbuster ஆகிடுமா ? லைட்டாக தலையைச் சொறியவே செய்வேன் - நான் உங்கள் இடத்தினில் இருக்கும் பட்சத்தில் !!

    இதுவும் கரீட்டு சார்..:-(

    ReplyDelete
  46. இத்தனை ஆப்ஷன்ஸ் கொடுத்தால் நிச்சயமாக கொயப்பமாகத்தான் இருக்கும்.


    இரண்டு விரலை நீட்டி,இரண்டில் ஒன்ன தொடச் சொன்னாலே முக்கால் மணி நேர ரோசனை பன்னுவம்.


    மெதுவா புரிஞ்சுக்கிட்டு ,பதில் சொல்றனுங்கோ.



    ReplyDelete
    Replies
    1. சாரே...குயப்பங்களில் தான் அலைச்சல்களும்,அடச்சீ...அலசல்களும். தெளிவும் பிறக்கும்னு மூதறிஞர் டாக்புல் சொல்லியிருக்கார் ! நான்பாட்டுக்கு இரண்டே options மட்டும் தந்து தேர்வு செய்யச் சொன்னால் - "இவ்ளோ தானா ??" என்று பொங்குவர் நம்மவர்கள் !

      அப்புறம் இன்னமும் தேர்வுக்களங்கள் முடியலீங்கோ !

      Delete
    2. இன்னும் இருக்கா??? நெஞ்சை பிடித்து கொண்டு சுவற்றின் மேல் சாயும் படங்கள் 100.

      Delete
  47. Option # 7 : மாயாவி ; லாரன்ஸ் டேவிட் ; செக்ஸ்டன் பிளேக் ; 13 வது தளம் - போன்ற fleetway தயாரிப்புகளை சுலபமாய் ஒருங்கிணைக்கலாம் தான் ; வர்ணங்களுமே சாத்தியமே ! இன்னாண்றீங்க ?

    #####

    ஐயோ சாமீ ஆள விடுங்க .

    ReplyDelete
    Replies
    1. இவர்கள் மட்டுமல்ல இதர பழைய நாயகர்கள் அனைவருக்கும் ஒரு சில பக்கங்கள் ஒதுக்கி அவர்களுடைய classic stills, அட்டைப்படங்கள், அவர்களை பற்றிய அந்நாளைய சிலாகிப்புகள், மெகா ஹிட் கதைகள், மறக்க இயலா பசுமையான தருணங்கள், என தாங்களும், மதிற்பிற்குறிய சீனியர் எடிட்டரும் கரம் கோர்த்து ஒரு tribute செய்து விடுங்கள். உடன் ஜூனியரையும் சேர்த்துக் கொண்டு மூன்று தலைமுறை காமிக்ஸ் பயணத்தை பகிர வேண்டும் என்பது எனது அவா.

      இதுவே பழமைக்கு நாம் கொடுக்கும் நன்றி கலந்த மரியாதை. நாம் அவர்களை என்றும் மறக்கவில்லை, பசுமையான் நினைவுகளுடன் கடந்து போகிறோம்.

      அதை விடுத்து அவர்களே தொகுப்பாக வந்தால் பிடரியில் கால் அடிக்க ஓடும் படம் நூறு.

      Delete
  48. அய்யையோ இங்கேயும் தோர்கல்லா?
    10 optionla 4 option தோர்கல். 😩

    Option #6 or #7 or #8 will be good.

    ReplyDelete
  49. Option 9 - Franco Belgium kunddu book, this will be perfect. We need all 4 then it will give a complete meal very similar to NBS
    Adventure - Thorgal
    Comedy - Chik Bill
    Thriller - Reporter Jhonny
    New story - surprise

    Option 6 - If we can add a comedy story with the list you had provided, this can also become a very good alternative.

    Option 5 - Only if above 2 options are not possible.

    All other options are either not possible (as you had mentioned the reasons already) or those stories had seen their peak days already.

    ReplyDelete
  50. Option # 8 : வேதாளன் ; மாண்ட்ரேக் ; ரிப் கிர்பி ; காரிகன் - என்ற பட்டாளம் ?

    #####

    இது ஆசையாவும் இருக்கு..மும்மூர்த்தி மாதிரி ஆயிருமோன்னு ஒரு டவுட்டாவும் இருக்கு..என்ன சொல்றது..?!

    ReplyDelete
  51. இருவரை மட்டுமோ ஒரு அடித்தளமாக்கிக் கொண்டு, இவர்களோடு கரம் கோர்க்க புதுசாய் பிராங்கோ-பெல்ஜிய நாயகர்களின் மத்தியில் தேடலைச் செய்து பார்த்தாலென்ன

    இது எனக்கு ஓகே சார்...இதுதான் எனக்கு சிறப்பாக தெரிகிறது..:-)

    ReplyDelete
    Replies
    1. ஹை...இன்னுமா தூங்கலை தலீவரே ?

      Delete
    2. இப்படிப்பட்ட சிறப்பான தேர்வு நேரத்தில் தூக்கம் வருமாங் சார்..அதுவுமில்லாம அஞ்சு மணிக்கு எந்திரிக்குற வேலையெல்லாம் ஒரு வாரத்துக்கு இல்லீயே சார்..ஜாலியா ஒன்பது மணிக்கு கூட எந்திரிக்கலாம்..:-)

      Delete
  52. Option # 8 : வேதாளன் ; மாண்ட்ரேக் ; ரிப் கிர்பி ; காரிகன் - என்ற பட்டாளம் ?

    This will be very interesting book, we should definitely try for some other occasion as I can see there are lot of fans for these heroes (Rib Kirby and Mandrake my favs) but not worth for Muthu 50

    ReplyDelete
    Replies
    1. மாண்ட்ரேக் கதைகளை 25 ஆண்டுகளாக தூசு படியவிட்டிருப்பது ஏனென்று யோசியுங்கள் சார் !

      Delete
  53. //இந்தக் கோமுட்டித் தலையன் கிட்டே இந்த வாரம் முழுக்க நாமே சொன்ன சமாச்சாரங்களை மறுக்கா மறுக்கா நினைவுபடுத்த வழி பண்ணுறானே ? சதிகாரா !! //

    சிரிச்சு மாளலை!
    😆😆😂🤣😂😅😁😄

    ReplyDelete
  54. சார் கென்யா அப்புறம் ஒற்றை நொடி ஒன்பது தோட்டா ok

    ReplyDelete
    Replies
    1. பார்க்கலாமே சார் - நண்பர்களின் பெரும்பான்மை என்ன அபிப்பிராயப்படுகின்றனர் என்று !

      Delete
  55. Option 4 - Only Thorgal - No
    Agree with your assessment single hero for a milestone book - பத்தாது

    ReplyDelete
  56. சார் எனது சாய்ஸ்,

    Option 5

    இதில் "The BOMB" கதையை நுழைக்க வாய்ப்பிறுக்கிறதா.

    ReplyDelete
    Replies
    1. முடியாதென்றில்லை சார் ; ஆனால் அதற்குப் பேனா பிடிக்க அசாத்தியப் பொறுமையும் , அவகாசமும் தேவைபடும் !

      Delete
  57. வாழ்த்துகளுக்கு நன்றி சார் & நண்பர்களே..

    ReplyDelete
  58. ஆத்தாடி

    எம்புட்டு யோசிச்சிருக்கீங்க வேற லெவல் சார் 👍🏼💐💐💐

    முத்து 50ம்வருட இதழ் கலக்கபோவது உறுதி 👍🏼💪🏼💪🏼💪🏼🙏🏼
    .

    ReplyDelete
    Replies
    1. இன்னுமே யோசிக்க நிறைய உள்ளது சார் ! பையிலிருப்பது பத்தணாவே என்றாலும் நமது எதிர்பார்ப்புகள் LIC உசரமல்லவா ? யாருமே ஏமாற்றமும் கொள்ளலாகாது ; சிரமமும் படக்கூடாது எனும் போது still loads to do !

      Delete
  59. Opt # 5 சார்.
    எதை தேர்வு செய்வது என்று சிண்டை பிய்த்து கொள்ளாத குறைதான். இந்த ஒரு மைல்கல் இதழுக்கே இப்படி என்றால்...... அப்பப்பா! உங்கள் நிலை

    ReplyDelete
    Replies
    1. என்றைக்கு சார் சுலபமான வேலைகளில் த்ரில் இருந்துள்ளது ?

      Delete
  60. சார் ஆலமரம் #3 ரெடியா ...Ppl looking for more options ...இப்படியே தொடர்ந்தா இன்னைக்கு Ngt சிறப்பா போய்ரும்

    ReplyDelete
    Replies
    1. இல்லை சார் ...காத்திருக்கும் ஆலமரங்களில் பங்களிப்புகள் உங்களதாகவே இருந்திடும் ! இங்கே இன்னும் கொஞ்சம அவகாசம் தருவோம் !

      Delete
  61. Option 5,6,8,10. இதில் எதுனாலும் o. K
    Zagor & வேதாளர் மாண்ட்ரேக் நாவில் ஜலம் ஊர செய்கிறார்கள்

    ReplyDelete
    Replies
    1. அண்ணா...பரீட்சைப் பேப்பரில் ஏதாச்சும் ஒன்றை மட்டுமே டிக் அடிக்கலாம் !

      Delete
    2. பெரிய பேருல்ல அது நாலா பிச்சு, ஒவ்வொரு பேருக்கும் ஒரு option எடுத்துக்குங்க..

      Delete
  62. ஆப்சன் 5 புதுஸ்சா இருக்கு சார்.வெரைட்டியாகவும் இருக்கு சார்.

    ReplyDelete
  63. Hello editor sir, I am not sure whether this has been discussed in any of your previous post. Have you ever considered 'Wanted' western series by Rocca & Giroud?

    ReplyDelete
    Replies
    1. Yes...quite awhile back ! These stories haven't been preserved in digital files by the creators !

      Delete
  64. //Option # 7 : மாயாவி ; லாரன்ஸ் டேவிட் ; செக்ஸ்டன் பிளேக் ; 13 வது தளம் - போன்ற fleetway தயாரிப்புகளை சுலபமாய் ஒருங்கிணைக்கலாம் தான் ; வர்ணங்களுமே சாத்தியமே ! இன்னாண்றீங்க ?//

    &

    //Option # 8 : வேதாளன் ;மாண்ட்ரேக் ; ரிப்கிர்பி ;காரிகன் - என்ற பட்டாளம் ? //

    இவர்கள் மட்டுமல்ல இதர பழைய நாயகர்கள் அனைவருக்கும் ஒரு சில பக்கங்கள் ஒதுக்கி அவர்களுடைய classic stills, அட்டைப்படங்கள், அவர்களை பற்றிய அந்நாளைய சிலாகிப்புகள், மெகா ஹிட் கதைகள், மறக்க இயலா பசுமையான தருணங்கள், என தாங்களும், மதிற்பிற்குறிய சீனியர் எடிட்டரும் கரம் கோர்த்து ஒரு tribute செய்து விடுங்கள். உடன் ஜூனியரையும் சேர்த்துக் கொண்டு மூன்று தலைமுறை காமிக்ஸ் பயணத்தை பகிர வேண்டும் என்பது எனது அவா.

    இதுவே பழமைக்கு நாம் கொடுக்கும் நன்றி கலந்த மரியாதை. நாம் அவர்களை என்றும் மறக்கவில்லை, பசுமையான் நினைவுகளுடன் கடந்து போகிறோம்.

    அதை விடுத்து அவர்களே தொகுப்பாக வந்தால் பிடரியில் கால் அடிக்க ஓடும் படம் நூறு.

    ReplyDelete
    Replies
    1. //
      இவர்கள் மட்டுமல்ல இதர பழைய நாயகர்கள் அனைவருக்கும் ஒரு சில பக்கங்கள் ஒதுக்கி அவர்களுடைய classic stills, அட்டைப்படங்கள், அவர்களை பற்றிய அந்நாளைய சிலாகிப்புகள், மெகா ஹிட் கதைகள், மறக்க இயலா பசுமையான தருணங்கள், என தாங்களும், மதிற்பிற்குறிய சீனியர் எடிட்டரும் கரம் கோர்த்து ஒரு tribute செய்து விடுங்கள் //

      நல்ல ஐடியா

      Delete
    2. சார்..முதலில் மாப்பிள்ளை யாரு ? பொண்ணு யாரு ? என்ற பஞ்சாயத்துக்களை முடித்துக் கொள்வோமே ? அப்பாலிக்கா சமையலுக்கு யார் ? மேடை அலங்காரத்துக்கு யார் ? என்ற அலசல்களை ஜாலியாய் வைத்துக் கொள்ளலாம் !

      Delete
    3. யெஸ். செம ஐடியா.

      Delete
    4. சூப்பர் ஐடியா திரு

      Delete
    5. But you can make a note of this idea please sir.

      Delete
  65. Option # 5 : 2019 ஈரோட்டில் "பிஸ்டலுக்குப் பிரியாவிடை" ஒரு முற்றிலும் புது இதழாய் ; எவ்வித ஸ்டார் நாயகரும் இல்லா முயற்சியாய், கதைக்கு மட்டுமே வெளிச்சம் பாய்ச்சிய இதழாய் களம்கண்டது ! உங்களுக்கு அது போலானதொரு முயற்சி இங்கேயும் ஓ.கே. வெனில் கென்யா ; ROUTE 66 ; போன்ற தொடர்கள் ; ப்ளஸ் இன்னமும் நிறைய புது 3 பாக ஆல்பங்கள் வெயிட்டிங் ! இது பற்றிய உங்களின் எண்ணங்கள் ப்ளீஸ்

    #####

    பெரிய்ய்ய்ய கதையாய் பிஸ்டலுக்கு பிரியா விடை போல் சூப்பர் கதையாக இருந்தால் இதற்கே எனது ஓட்டு சார்..

    ReplyDelete
  66. Date :23 May 2021


    Dear respected Sir,

    Just got an idea, I am eating now, please give me 30 minutes time to post a comment here..


    Regards,

    Yours sincerely,

    UDAYAKUMAR

    ReplyDelete
  67. ஐயோ, போனெல்லி ஸ்பெஷல்னு பீதியை கெளப்பறீங்களே!

    ReplyDelete
  68. //Option # 7 : மாயாவி ; லாரன்ஸ் டேவிட் ; செக்ஸ்டன் பிளேக் ; 13 வது தளம் - போன்ற fleetway தயாரிப்புகளை சுலபமாய் ஒருங்கிணைக்கலாம் தான் ; வர்ணங்களுமே சாத்தியமே ! இன்னாண்றீங்க ?//

    நான் இவர்களின் Diehard fan கிடையாது இருந்தாலும் நடப்பு நிலையை கருத்தில் கொண்டு எனது பொன்னான ஆதரவை வேறு வழி இல்லாமல் இவர்களுக்கு தெரிவிக்கிறேன் ...

    List ல உள்ள மற்ற கதைகள் (kenya ..thorhal e.t.c ) எல்லாமே ஓரு வாகான தருணத்தில் நிச்சயம் வரும் ...Hence i vote for option 6 ...கதை கொஞ்சம் Crisp ah இருந்தா நல்லாருக்கும்...

    ReplyDelete
    Replies
    1. //Option # 6 : போனெல்லியினில் உள்ள நாயகப் பெருமக்களை ஒரே இதழில் LMS போல நிறைத்திட permission கிட்டும் தான் ! 'தல' டெக்ஸை லயனின் ஆட்டக்காரராய் பார்த்தே பழகிப் போய்விட்டதால் - அவர் நீங்கலாய் //

      இது வேண்டவே வேண்டாம் ...இது Lion Comics ன் குண்டு புக் Template ...இதை முத்து வோடு சேர்த்து குழப்ப வேண்டாம் சார் ...Please

      Delete
  69. Option : 5 super

    (ஒ.நொ.ஒ.தோ + கென்யா + 3 பாக புதுசுகள்)

    மாத புத்தகங்களில் எண்ணிக்கையை இரண்டாக குறைத்துவிட்டால் சூப்பரா இருக்கும்!

    ReplyDelete
    Replies
    1. எல்லா கதவுகளும் திறந்தே உள்ளன சார் - மாதம்தோறும் இரண்டே புக்ஸ் என்பது உட்பட !

      Delete
    2. 6 டெக்ஸ், 2 லக்கி, 1 சிக்பில் ஆக மொத்தம் 9 + 15 இதர ஹீரோக்கள்!

      24 கதைகள்! ம்ம்ம்..

      Delete
  70. Option # 5 + (Plus)

    விஜயன் சார்,

    இதுவரை வெளிவந்துள்ள முத்து காமிக்ஸ் வெளியீடுகள் அனைத்தின் அட்டைப் படங்கள் 1+1

    அதாவது 1 = நம் முத்து காமிக்ஸில் வந்த அட்டைப் படங்கள் + 1 = ஒரிஜினல் அட்டைப்படங்கள் ; ஒற்றைத் தாளில் முன் பக்கம் பின் பக்கம் என ; வெளியீட்டு எண்களோடு ; மாதம் வருடம் முதற்கொண்டு ; ஆர்ட் பேப்பரில் ; முழு வண்ணத்தில் - ஒரு தொகுப்பாக ஹார்ட் பவுண்டிங்ல் போட்டால் எப்படி இருக்கும்?!

    Just an idea 🙏

    ReplyDelete
    Replies
    1. இல்லை சார் ; இதற்குத் தேவைபடும் உழைப்பு ஒரு மெகா புக்குக்குப் பேனா பிடிப்பதை விடவும் ஜாஸ்தியிருக்கும் ! And இதுவொரு memorabilia வாக மட்டுமே இருந்திடும் - வாசிப்பின் இடத்தை நிரவிடாது !

      Delete
    2. Okay Sir!


      //And இதுவொரு memorabilia வாக மட்டுமே இருந்திடும் - வாசிப்பின் இடத்தை நிரவிடாது !//

      Option # 5

      //ஓ.கே. வெனில் கென்யா ; ROUTE 66 ; போன்ற தொடர்கள் ; ப்ளஸ் இன்னமும் நிறைய புது 3 பாக ஆல்பங்கள் வெயிட்டிங் !//


      Option 5 + (Plus Pro)

      இதுவரை வெளிவந்துள்ள முத்து காமிக்ஸ் வெளியீடுகள் அனைத்தின் அட்டைப் படங்கள் 1+1

      என்பதே என் கருத்து! படிப்பதற்கு ஒன்று ; கொண்டாடுவதற்கு ஒன்று!

      முத்து Comics Golden Jubilee ! 50 years of celebration!

      முடியாது என்று கூறிவிட்டீர்கள். புரிதலுக்காக மட்டுமே இந்த விளக்கம்!

      Delete
  71. சார்...

    உங்களுக்கு தெரிந்திருக்கும்... Yann-Romain Hugaultன்... "The Grand Duke"... 6 பாகங்கள்... இரண்டாம் உலகப் போர்... Pilots... Dog fights... காதல்.. Suspense... Thriller... முக்கியமாக அழுகாச்சி காவியம் கிடையாது... நமக்கு ஒத்து வருமா சார்... !!?

    ReplyDelete
    Replies
    1. சத்தியமாக ஒத்து வராது சார் !

      Delete
  72. சார்.. தனிப்பட்ட முறையில் என்னோட Option #5!

    ஆனால், இந்தப் பொன்விழா மலரில் முத்துவில் ஆண்டாண்டு காலங்கள் ஆட்சி செலுத்திய மாயாவி, லா & டே, பூப்போட்ட டவுசர் உள்ளிட்டோருக்கு முறையே ஒவ்வொரு கதையாவது வாய்ப்பளித்து (புதுக்கதைகள் ஏதுமில்லையெனில் தேர்ந்தெடுக்கப்பட்ட மறுபதிப்புகளையாவது வண்ணத்தில்) சிறப்பிப்பது பழைய வாசகர்களையும் மகிழ்ச்சிப்படுத்துமே!

    ஆகவே என்னுடைய ஆலோசனை..

    option # 5 & option #7 - இரண்டு குண்டூஸ்!!

    ReplyDelete
    Replies
    1. சந்தாவில் வருவது ஷ்யூர் ஹிட் கதைகளாக இருக்கோனும் செயலரே. நல்ல நாளிலேயே தடுமாறும் இவர்களை இந்த சிரம காலத்தில் கொண்டாரனுமா?

      Delete
    2. யோசிச்சு பாத்தா ஈ. விஜய் சொல்றதிலேயும் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்யுது...!!!

      Delete
  73. ஓற்றை நொடி ஒன்பது தோட்டா & கென்யா ஓகே சார்

    ReplyDelete
  74. தங்களுக்கு தெரியாத சட்டம் இல்லை யுவர் ஆனர்!நீங்களே முடிவு செய்து அறிவியுங்கள்.எங்கள் ஆதரவு உண்டு!

    ReplyDelete
  75. ஒரே கொயப்பமாகீது நால ஆலமரத்த பாத்துட்டு யோசிப்போம்.
    அல்லாருக்கும் குட்டூ நைட்டூ.

    ReplyDelete
  76. Option # 5 : 2019 ஈரோட்டில் "பிஸ்டலுக்குப் பிரியாவிடை" ஒரு முற்றிலும் புது இதழாய் ; எவ்வித ஸ்டார் நாயகரும் இல்லா முயற்சியாய், கதைக்கு மட்டுமே வெளிச்சம் பாய்ச்சிய இதழாய் களம்கண்டது ! உங்களுக்கு அது போலானதொரு முயற்சி இங்கேயும் ஓ.கே. வெனில் கென்யா ; ROUTE 66 ; போன்ற தொடர்கள் ; ப்ளஸ் இன்னமும் நிறைய புது 3 பாக ஆல்பங்கள் வெயிட்டிங் ! இது பற்றிய உங்களின் எண்ணங்கள் ப்ளீஸ் ? /// எனது தேர்வு ஆப்ஷன் 5 .சார்.

    ReplyDelete
  77. Option 7 க்கு இது வரையிலான ஆதரவு (என்னுடைதையும் சேர்த்து) 6

    ReplyDelete