Powered By Blogger

Sunday, May 23, 2021

ஆலமரம் # 1

 நண்பர்களே,

வணக்கம். எனக்கும் இதுவொரு புது அனுபவமே ! வழக்கமாய் ஒரு பேப்பரையும், பேனாவையும் எடுத்து வைத்துக் கொண்டு, ஐந்து நிமிட மோட்டுவளைய ஆய்வுக்குப் பின்னால் பர பரவென எழுத ஆரம்பிப்பேன் - பக்க எண்ணிக்கை ; நாயகர் லிஸ்ட் ; விலை சார்ந்த costing என ! அப்புறமாய் கொஞ்ச நேரம் அந்தக் காகிதத்தையே உற்றுப் பார்த்திருக்க, அதனில் யாரையாச்சும் புறம்தள்ளி விட்டு, யாரையாச்சும் உள்நுழைந்த கையோடு - 'இது தான் அது !' என்று அறிவிக்கத் தயாராகி விடுவேன் ! அந்த "அது" தான் வெவ்வேறு தருணங்களிலான நமது ஸ்பெஷல் வெளியீடுகளாக இருந்து வந்துள்ளன  !! மில்லெனியம் சூப்பர் ஸ்பெஷலாக இருந்தாலும் சரி ; 1987-ன் தீபாவளி ஸ்பெஷலாக இருந்தாலும் சரி, சமீபத்தைய NBS ஆக இருந்தாலும் சரி, LMS ஆக இருந்தாலும் சரி, அவற்றின் பின்புலத் திட்டமிடலுக்கு எனக்கு எடுத்திருக்கக்கூடிய அவகாசம் மிஞ்சிப் போனால் 30 நிமிடங்களைத் தாண்டியிராது ! Maybe இரண்டாம் வருகையின் பின்னான 2 மேஜர் இதழ்களான NBS & LMS-க்கு சற்றே கூடுதலாய் நேரம் எடுத்திருக்கும் தான் - ஆனால் அந்த extra time ஆனது, பணிகளின் முழுப் பரிமாணங்களையும் சரியாய் எடைபோடவும், இடைப்படும் கால அவகாசத்தினுள் பணிகளை முழுசுமாய் முடிக்க முடியுமா ? என்றும் கணக்கிடவே தான் அவசியப்பட்டது ! மற்றபடிக்கு மேலோட்டத் திட்டமிடல் has never been too much of a process ! 

ஆனால் முதல்முறையாக இதோ - நமது முத்து காமிக்சின் 50-வது ஆண்டுமலரின் திட்டமிடலை ஒரு அணியாய்ச் செய்திட முனைகின்றோம் ! Of course என் மனதில் இதற்கென ஒரு blueprint உள்ளது தான் ; and இறுதி முடிவுகளும் எனதாகவே இருக்கவும் போகின்றன தான் ! ஆனால் ரசனைகளின் முக்கிய மாற்றங்களை நாம் அரவணைக்கும் இந்த crossroads தருணத்தில் ; ஆயுட்காலத்துக்கும் யாரும் கண்டிரா இடர்கள் சூழ்ந்து நிற்கும் இந்த சிரம நாட்களில் ; ஒவ்வொரு ரூபாயையும் ஒரு நூறு தடவைகள் சிந்தித்தே செலவிட வேண்டி வரும் இந்த இக்கட்டான பொழுதுகளில் - ஒரு 'எடுத்தோம் - கவிழ்த்தோம்' முயற்சி சுகப்படாதென்று தோன்றியது எனக்கு ! தவிர, ஒரு ஆண்டு மலர் சொதப்பினால் - அடுத்த வருஷத்தில் வட்டியும், முதலுமாய்ப் பின்னியெடுத்து விடலாம் தான் ! ஒரு கோடைமலர் கூவிடும் பட்சத்தில் ஒரு வின்டர் ஸ்பெஷல் போட்டு சமன் செய்து விடலாம் ! ஆனால் இதுவோ ஒரு ஆயுட்கால வாய்ப்பெனும் போது இங்கே சொதப்பிடின், அது நான் ஆயுளுக்கும் மறக்கவியலா ஒரு பிசகாகிப் போய்விடுமன்றோ ? தவிர, இது அரை நூற்றாண்டாய் உங்களின் அன்பினில் ஓடி வரும் வண்டி எனும் போது இங்கு உங்களின் பங்களிப்பின்றிப் போகலாமா ? So 'எல்லாப் புகழும் இறைவனுக்கே & கூட்டு முயற்சிக்கே' என்றபடிக்கு விஷயத்துக்குள் புகுந்திடுகிறேன் !

As I said before - தவணை தவணையாய் - திட்டமிடலின் ஒவ்வொரு process வழியேவும் உங்களை இட்டுச் செல்லவுள்ளேன் ! So 'இன்னும் கிடா வெட்டலியா ?' என்ற கவிஞரின் ஆர்வாங்கோ வேலைக்கு ஆகாதுங்கோ ! And ஒவ்வொரு நிலையிலும் - ஒவ்வொரு குறும்பதிவிலும் - எனது முன்மொழிவுகள், அவற்றின் பின்னான லாஜிக்ஸ் & உங்களின் மாற்றுக் கருத்துக்களை நான் யூகித்திருக்கக்கூடிய மட்டில் அவற்றில் நான் பார்த்திடும் சிக்கல்கள் - என சகலத்தையும் outline செய்திட முனைந்திடுவேன் ! So நீங்கள் பதிவுகளின் கடைசிப் பத்திகளை மட்டுமே மேயும் நண்பர்களாய் இருக்கும் பட்சத்தில், நிம்மதியாயொரு தூக்கத்தைப் போட்டு விட்டு, ஒரே மட்டாய் இறுதிப் பதிவுக்கு நேரடியாய் ஜம்ப் செய்திடல் நலமென்பன் ! பொறுமையே பலமெனும் நண்பர்கள் ஒவ்வொரு குறும்பதிவினிலும் தங்களின் அபிப்பிராயங்களை பகிர்ந்திடலாம் & அவற்றிற்கு பதில் சொல்லிட அவ்வப்போதே நானும் முனைவேன் ! So திட்டமிடலின் ஒவ்வொரு படியையும் ஏகோபித்த தீர்மானங்களோடு தாண்டிட முடியுமென்ற நம்பிக்கையினில் next ; and the next என்று பயணமாகிடுவதே திட்டம் ! புனித மனிடோ தான் இனி என் விரல்களையும், சிந்தைகளையும் வழிநடத்திட வேண்டும் !! Here we go :

ஒரு திட்டமிடலின் முதல் படி - விலை நிர்ணயம் ! Of course - கண்ணைக் கவரும் டிசைனிலான ஒரு செருப்பை ஆசையோடு வாங்கிக் கொள்ளலாம் தான் ; சைஸ் சரியாக இருந்தாலும் சரி, இல்லாவிடினும் சரி,  அதை போட்டுக்கொண்டு அட்ஜஸ்ட் செய்தபடியே நடக்கப் பழகிக் கொள்ளவும் செய்யலாம் தான் ! மாறாக - Option 2 : கால் சைசுக்கு ஏற்ற செருப்புகள் எங்குள்ளன என்று தெரிந்து கொண்டு, அவற்றின் மத்தியிலிருந்து மட்டுமே நமது தேடல்களை வைத்துக் கொள்வது  ! So வாங்கிடுவது எந்த வர்ணத்தில் இருந்தாலும் சரி, எந்த டிசைனில் இருந்தாலும் சரி - நிச்சயமாய்க் காலைக் கடிக்காது, நோகச் செய்யாது என்ற மட்டிலும் உறுதி கொள்ளலாம் !  சந்தாக்கள் என்று பெரிதாய் இல்லாத முன்னாட்களிலும் சரி, அப்படியே சந்தாக்கள் அறிமுகமான பிற்பாடுமே ஆண்டின் சந்தா தொகைகள் இரண்டாயிரத்தின் அருகாமையிலேயே இருந்த நாட்களிலும் சரி - மனம் போன போக்கினில் விலைகளை நிர்ணயிப்பதில் தடை இருந்திராது ! ஆனால் இன்றைய சூழலை எனது பார்வையில் சற்றே அவதானிக்க முயலுங்களேன் ப்ளீஸ் :

1) .இதோ - இந்த ஏப்ரலின் இறுதி வரையிலுமே நடப்பாண்டுக்கான சந்தா சேகரிப்புகளின் வேட்டையில் உங்களின் பலரை பணம் கேட்டு குடலை உருவி வந்துள்ளோம் நாங்கள் ! 

2) பெரிதாய் ஓசையின்றி பின்னணியில் ஓட விட்டிருப்பினுமே - சுமார் 3000 ரூபாய்க்கு வேட்டு வைக்க "இரத்தப் படலம்" முன்பதிவுகள் இந்த மே இறுதி வரைக்கும் நடைமுறையில் இருந்திடும் !

3) And இன்னும் சரியாக நான்கே மாதங்கள் ஓடியிருக்கும் சூழலில் உங்களிடம் 2022-க்கான சந்தா அட்டவணையினை ஒப்படைத்த கையோடு - மறுபடியும் பணம் சார்ந்த கோரிக்கைகளோடு நச்சரிக்க வேண்டி வரும் ! 

4) அதாவது  - இந்த லாக்டௌன் இறுக்கங்களின் பலனாய் தற்போதைய இந்த இரண்டாம் அலை தமிழகத்தில் மட்டுப்படும் என்றும் ; மூன்றாம் அலையென்ற பூச்சாண்டி மெய்யாகாது என்ற நம்பிக்கைகளும் நிஜப்படும் பட்சங்களில் மட்டுமே ! If in case தற்போதைய லாக்டௌன் மேற்கொண்டும் நீட்டிக்கப்பட்டு, ஜூன் இதழ் - ஜூலைக்குத் தள்ளிப் போகும் சூழல்களில் - தொடர்ந்திடக்கூடிய திட்டமிடல்களில் ஏகம் will go for a toss ! 

ஆங்கிலத்தில் படித்திருப்போம் - "Plan for the best & Prepare for the worst !!" என்று ! அதன்படி 2022-ன் திட்டமிடலில் இடையூறுகளையும் தாங்கிடும் ஒரு சமயோசிதம் கலந்திருப்பது அத்தியாவசியம் தானே guys ?! இடர்புகும் ஒவ்வொரு ஆண்டிலும் ஒரு பரோபகாரப் பரமசிவமும், அன்பான அபிராமியும் நம்மைக் கைதூக்கி விடக் காத்திருப்பர் என்று எதிர்பார்க்கத் துவங்கினால், அது எனது திட்டமிடல்களின் உச்ச சொதப்பலாக மட்டுமே இருந்திட இயலும் ! So காத்திருக்கும் 2022-ன் சந்தாவினை ஒரு எட்டக்கூடிய எண்ணத்தில் நிலைகொள்ளச் செய்யும் பொறுப்பு அரூபமாய் என் தோள்களில் உள்ளது ! And அந்த சந்தாத் தொகையினில் :

a )முத்து 50 வது ஆண்டுமலர்

b ) லயன் TEX தீபாவளி மலர் 

c ) லயன் லக்கி ஆண்டு மலர் 

d ) ஒரு ஐந்தோ / ஆறோ டெக்ஸ் வில்லர் டபுள் ஆல்பங்கள் 

என்ற 4 தவிர்க்க இயலா பட்டியலுக்குள்ளான இதழ்கள் இடம்பிடித்தாக வேண்டுமல்லவா ?  ஒரு சிம்பிளான கணக்கைப் போடுங்களேன் இனி : 

தீபாவளி மலரை போன வருஷம் போலவே ரூ.400 சுமாருக்கு அமைத்து ; ஆண்டுமலரை ரூ.200 க்கு அமைத்து ; டெக்சின் டபுள் ஆல்பங்களுக்கு மட்டுமே தோராயமாய் ரூ.900 (ரூ.150 x 6) ஒதுக்கிடும் பட்சத்தில் - இந்த எட்டே இதழ்கள் மட்டுமே ரூ.1500 -ஐ விழுங்கி விடுகின்றன அல்லவா  ? 

ரைட்டு - அப்புறமாய் அடுத்தாண்டினில் எப்படியேனும் உட்புகுத்த வேண்டிய 2 மெகா இதழ்கள் காத்துள்ளன - கென்யா & ஒற்றை நொடி-ஒன்பது தோட்டா ரூபத்தில் ! இரண்டுமே mass hits தரவல்ல இதழ்கள் எனும் போது - அவற்றுள் at least ஒன்றினை சந்தாவோடு இணைத்திட வேண்டும் ! So அதற்கென ரூ.600 ஒதுக்குங்களேன் ; ரூ.2100 பட்ஜெட் ஆச்சு ! அதாவது 9 இதழ்களுக்கு ரூ.2100 ஆச்சு and இன்னமும் முத்து ஆண்டுமலர் அதனில் சேர்க்கப்படவில்லை ! 

ரைட்டு - அடுத்த வருஷத்தினில்   மொத்தமே 30 புக்ஸ் மட்டுமே வெளியிடலாமென்று நாம் தீர்மானிக்கிறோம் என்றே வைத்துக் கொள்ளுங்களேன்  - அந்த மீத இதழ்களுக்கென குத்து மதிப்பாய் ரூ.2700 தேவைப்படக்கூடும் ! ஏற்கனவே ரூ.2100 + இந்த ரூ.2700 = ரூ.4800 ஆச்சா ? இனிமேல் போடுங்களேன் முத்து காமிக்ஸ் ஆண்டுமலர் 50-க்கென ஒரு பட்ஜெட்டை ? 

உங்களின் பரவலான பரிந்துரைகளுக்கு செவி சாய்க்கும் விதமாய் ஆயிரம், இரண்டாயிரமென போட்டுத் தாக்கினால் - மொத்த சந்தாத் தொகை இதுவரையிலும் இருந்திரா ஒரு உச்ச நம்பரைத் தொட்டு நின்றிடும் !ஸ்திரத்தன்மை துளியும் இல்லாவொரு மங்கலான ஆண்டினில், முன்னெப்போதும் இல்லாததொரு சந்தாத் தொகையினை நிர்ணயம் செய்து விட்டு - நண்பர்களின் பெரும்பான்மைக்கு காமிக்ஸ் வாசிப்பே ஒரு பளுவாகத் தென்படும் நிலையை உருவாக்குவது எவ்விதத்தினில் சமயோசிதமாக இருக்கக்கூடும் guys ? Of course - 2022-ல் ஆண்டவன் கருணைப் பார்வை நல்கி, பூமியெங்கும் பாலும், தேனும் ஓடச் செய்யக்கூடும் தான் ! காத்திருக்கும் ஆண்டு சுபிட்சத்தை அள்ளித் தரவும் கூடும் தான் ; ஆனால் நமது திட்டமிடல்களை இறுதி செய்து - பணம் கேட்டு உங்களிடம் நான் மண்டையைச் சொறிந்தபடிக்கே நிற்க வேண்டியதோ கண்மூடி, கண் திறப்பதற்குள் ஓடியிருக்கக்கூடிய  நான்கே மாதங்களில் எனும் போது - இன்றைய யதார்த்தங்களை மட்டுமன்றோ நாம் கணக்கில் கொண்டிட வேண்டி வரும் ? 

அட, ஆமாம்லே ...ஆப்பாயில் கண்ணன் சொல்றதிலேயும் ஒரு லாஜிக் தெரியுதே !!

இது இந்த நொடியில் வேண்டாவெறுப்பான உங்களின் மைண்ட்வாய்ஸ் ! 

சரி...ஜூட் ...சந்தாவோட சேர்த்தா தானே சிக்கலே ? 'சிவனே'ன்னு ஆயிரம், ஆயிரத்து சொச்சம் என்றொரு விலை நிர்ணயத்தோடு இப்போவே ஒரு முன்பதிவை ஆரம்பிடாப்பா  ; சிறுகச் சிறுக பணம் சேர்த்திடுவோம் ! சந்தாவில் இணைக்காமல் இதை தனித்த தடமாக்கிட்டால் சிக்கல் இல்லியே ? 

இதுவும் இப்போ உங்க உற்சாக  மைண்ட்வாய்ஸ் !

நம்ம பதிலுங்க அண்ணாச்சி :

a. ஒரு ஆயுட்கால landmark இதழினை அனைவருக்கும் சென்று சேரும் திட்டமிடலில் இணைத்திடாது, தட்கல் வரிசைக்குக் கொண்டு செல்வது நிஜமான நியாயமாகிடுமா ? முன்பதிவுகள், பின்பதிவுகள் என நாம் எத்தனை பிடாங்கு போட்டாலுமே, "ஐயோ...சிவாஜி செத்துட்டாரா ? யாருமே எனக்குச் சொல்லலியே ?" என்று பதறும் நண்பர்கள் நமக்குப் புதிதல்லவே ? கிட்டத்தட்ட 18 மாதங்களாய்  "இரத்தப் படலம் " black & white தொகுப்பினை கையில் குவித்து வைத்திருந்தது தெரியாமலே போனவர்கள் ; ஓராண்டாய் வண்ணத்தொகுப்பின் முன்பதிவுகள் நடந்ததை உணரவே செய்திடாத நண்பர்கள் - என்று இன்னமும் கொஞ்சப் பேர் இருப்பதனால் தானே இந்த அறுபத்தி ஏழாவது "இரத்தப் படலம்" மறுபதிப்பு அரங்கேறிடவுள்ளது ? இதே நிலவரம் "ஆண்டு மலர் 50-க்கும் நேராதென்று என்ன உறுதி guys ?

b.அட - அத்தினி பேருக்கும் காதுக்குள்ளேயே போயி தகவலை ஓதிட எப்படியோ ஒரு வழியே கண்டு பிடித்து விடுவோமென்றே வைத்துக் கொள்ளுங்களேன் ; இன்னொரு நடைமுறைச் சிக்கலைப் பற்றிச் சொல்லி விடுகிறேனே ? ஆயிரம், இரண்டாயிரமென்ற விலைகளிலான இது வரைக்குமான நமது வெளியீடுகள் எல்லாமே மறுபதிப்புகளே - "இரத்தக் கோட்டை" ; "மின்னும் மரணம்" ; "இரத்தப் படலம்" என்று  ஏற்கனவே பூர்த்தி கண்டிருக்குமொரு  இதழை வேறொரு உயர்தர format-ல் மாற்றம் செய்து வழங்குவது மாத்திரமே அங்கே எனது பணிகளாக இருந்து வந்தன ! Not that those were easy tasks - ஆனால் அங்கே தயாரிப்புகளில் தான் மெனக்கெடல் அவசியமாகினவே தவிர, உருவாக்கங்களில் அல்ல ! 

c. ஆயிரம் ரூபாய்க்கொரு இதழ் என்று வைத்துக் கொண்டாலே - தோராயமாக 9 or 10 கலர் கதைகள் என்றாகிறது ; which means an approximate 460 - 475 pages ! இப்போதெல்லாம் எனக்குள்ள மிகப் பெரிய சவால் உங்களின் ரசனைகளை யூகிப்பதோ ; புதிதாய் கதைகளைத் தேடுவதோ ; அவற்றை தமிழுக்கு கொண்டு வருவதோ அல்லவே அல்ல ! மாறாக - திட்டமிடும் ஒவ்வொரு ஆல்பத்தையும்  இன்றைய உங்களின் எதிர்பார்ப்புகளுக்கு நியாயம் செய்யும் விதமாய் தமிழாக்கம் செய்து, வெளியிடுவதே !! 

இரண்டே பேர் கொண்ட நமது main translation டீமானது - வயதினில் ; மூப்பினில் பல முன்னணிக்கட்சிகளின் சமீபத்தைய இளைஞர் அணிகளை ஒத்தவையே என்பதில் ரகசியமேது ? கருணையானந்தம் அங்கிளின் classic நடை இன்றைய நமது மாறுபடும் கதைகளுக்கேற்ப மாறிடுவதில்லை ! அப்புறம் அவ்வப்போது நமக்கு ஆர்வத்தினில் உதவிடும் நண்பர்களின் மொழிபெயர்ப்புகள் இன்னமுமே raw ரகங்களே ! பட்டி டிங்கரிங் கண்டு அவர்கள் மொழிபெயர்த்திடும் ஆல்பங்கள் வெளிச்சத்தைக் காணும் சமயம், அவர்களின் ஒரிஜினல் மொழிபெயர்ப்புகளில் எத்தனை சதவிகிதம் புக்கினில் தங்கியிருக்குமென்பது அவர்களுக்கும், எனக்கும் மட்டுமே தெரிந்திருக்கும் ரகசியம் ! And கொஞ்ச காலமாய் நமக்கு ஓசையின்றி பேனா பிடித்து வரும் 3 பெண்மணிகளுமே still very much in the early phases of their careers with us ! அவர்கள் ஒவ்வொருவரது பணிகளையும் ஒவ்வொரு மாதமும் மாற்றியெழுதுவதில் செலவாவது நேரம் மாத்திரமல்ல ; ஏகமாய் உழைப்புமே ! 54 வயதில் எனக்குமே இளமை துள்ளிக் குதிக்கவில்லை எனும் போது, இப்போதெல்லாம்  இந்த மாதாந்திரப் பிரயத்தனங்கள், முந்தையதை விடவும் கடினமாகவே தென்படுகின்றன ஒவ்வொரு முறையும் ! இதை சத்தியமாய் பீற்றலான தொனியில் நான் சொல்ல முனையவில்லை ; ஆனால் எடிட்டிங்கிலும், மாற்றி எழுதுவதிலும் இப்போதெல்லாம் செலவாவது எக்கச்சக்க சிகப்பு ballpoint பேனாக்களே என்பதைச் சொல்லாது யதார்த்தத்தை உங்களுக்குப் புரியச் செய்ய வழி நஹி ! ப்ளூ பேனாவை விடவும், சிகப்பே இப்போதெல்லாம் ஜாஸ்தி செலவாவதை நிச்சயமாய் ஒரு ஆரோக்கியமான நிகழ்வாய் நான் பார்த்திடவில்லை ! So இது தான் வார்னிஷ் பூசா நிஜமெனும் போது - தொபுக்கடீரென ஆயிரம், ரெண்டாயிரமென்ற ஸ்பெஷல் இதழ்களுக்குள் புதுசாய்க் commit ஆக புஜம் பின்வாங்குகிறது ! அதுவும் - அட்டவணையில் உள்ள இதர இதழ்களும் வழக்கம் போலவே தொடர்ந்திடும் போதே இணைதடத்தில் இத்தனை தாட்டியமான இதழை உருவாக்குவதென்பது well beyond my means !! 

சரி, இப்போ என்ன தான் சொல்ல வர்றே ? 

இதுவும் உங்க சிண்டைப் பிய்க்கின்ற மைண்ட்வாய்ஸ் !! 

சிறப்பாகவும் இருக்கணும் ; சிரமின்றியும் இருக்கணும் - என்பதே தற்போதைய நிலவரமல்லவா ? இப்படிச் செய்து பார்ப்போமா ?

ஆண்டு மலர் # 50 மெயின் இதழை சந்தாவினிலேயே ஒரு அங்கமாக்குகிறோம் - ரூ.500 அல்லது ரூ.600 விலையினில் ! அவற்றில் எந்தக் கதைகள் போடலாம் / போட வேண்டாமென்ற பஞ்சாயத்துக்களை ஆலமரம் # 2-ன் கீழே, புதுசாயொரு ஜமுக்காளத்தில் குந்தியபடிக்கே பார்த்துக்கலாம் ! 

So இப்போதைக்கு in principle - மெயின் ஆண்டுமலர் இதழினை அவ்விதமாய்த் திட்டமிடுவது உங்களுக்கு ஓ.கே.வெனில்  - ஏற்கனவே பாதிக்  கிணறு தாண்டிய நிலையில் காத்திருக்கும் "ஒற்றை நொடி - ஒன்பது தோட்டா" இதழினை ஸ்பெஷல் இதழ் # 2 ஆக திட்டமிடலாம் ! தெறிக்க விடும் ஆக்ஷன் த்ரில்லர் எனும் போது தரம் பற்றிய விசாரங்கள் கிஞ்சித்தும் அவசியமாகிடாது ! And Book # 1 & Book # 2 - ஒரே slip case-ல் நுழைக்கும்  விதமாய் திட்டமிட்டால் - உங்களின் ஆசைகளின்படியே ரூ.ஆயிரத்துக்கு கூடுதலானதொரு விலையில் கிட்டத்தட்ட பத்தோ / பதினொன்றோ பாகங்கள் கொண்ட வாசிப்பு அனுபவங்கள் சாத்தியமாகிடும் ! இரண்டுமே hardcover books & இரண்டுக்கும் சேர்த்தான slipcase என்றால் கம்பீரத்திலும் பஞ்சமிராது ! ("மொத்தமா ரெண்டையும் ஒரே புக்கா போட்டுப்புடுங்க !! " என்ற மஹா சிந்தனை வேணாமே ப்ளீஸ் ; படைப்பாளிகள் ஊர்களில் துடைப்பங்கள் இல்லாவிட்டாலும் vacuum cleaner-களைத் தூக்கி என்னை அடித்து விடுவார்கள் !! ) And இந்த 2 புக் concept-ல்  இன்னொரு வசதியுமே செய்ய சாத்தியப்படும் : சந்தாவினில் இணைந்திடும் நண்பர்கள் இந்த book # 2 வேண்டும் / வேண்டாமென்று தேர்வு செய்யும் விதமாய் option கூட தந்திடலாம் தான் - பட்ஜெட்டை மட்டுப்படுத்தும் நோக்கமெனில் ! 

ஆனால் இதுவே இறுதி காணும் திட்டமிடலெனின், 2022-ன் ரெகுலர் புக்சின் எண்ணிக்கை கொஞ்சம் உதை வாங்கும் என்பதையும் இங்கே சொல்லி விடுகிறேன் guys ! பூவை புய்ப்பம் என்றாலும் பட்ஜெட் எகிறும் ; புஸ்ப்பம் என்றாலும் தான் ! But இப்போதைக்கு ஒரு மெகா மைல்கல் இதழ் சார்ந்த தீர்மானத்தைச் செய்து விட்டு அப்புறமாய் அடுத்த பஞ்சாயத்தை  அணுகிக் கொள்ளலாமென்று எண்ணியுள்ளேன் ! மெகாவாய் பட்ஜெட் எகிறாதுமே ஒரு decent அட்டவணையினை போட இப்போதே சில ரோசனைகள் in place ! ஆகையால் இந்த முதல் படியைத் தாண்டுவதில் நம்மிடையே ஏகோபித்த கருத்து நிலவிடும் பட்சத்தில் - we move on to ஆலமரம் # 2 !

உங்களுக்கு இந்த 1 +1 ஓ.கே.என்று பட்டால் 

1 + 1 = 11 

என்று ஒரு விஞ்ஞானபூர்வ பின்னூட்டத்தைப் போடலாம் ! ஓ.கே. அல்லவென்று பட்டால் - உங்களின் முன்மொழிவை present செய்திடலாம் ! ஒரு கோலி சோடாவைக் குடித்தபடிக்கே அதனை உள்வாங்கிக்கொள்ள முயற்சிப்பேன் ! 

இப்போதைக்கு கிளம்புறேன் ; next meet பண்ணுவோம் guys !! 

பி.கு : இது "குறும்பதிவா ??" அடங்கப்பா டேய்...டேய்..தாங்கலியே !! 

இதுவுமே உங்க மைண்ட்வாய்ஸ் தானுங்கண்ணா !! லீவு நாளில்லையா ? - உரக்கக் கேட்டுப்புடுச்சி !  Bye for now !!

92 comments:

 1. Replies
  1. 1+1 இஸிக்கோல்ட் 11

   Delete
  2. //இஸிக்கோல்ட்//

   ஹா ஹா :)))

   நானுமே சார் :)))

   Delete
 2. வணக்கம் நண்பர்களே!

  ReplyDelete
 3. Replies
  1. வாழ்த்துக்கள் ரம்மி !!

   Delete
 4. Replies
  1. தூங்கலீங்களாய்யா ?

   Delete
  2. காலை 5 மணிக்கே எழுந்து விடுவது வழக்கம் சார். லீவு நாட்களில் 5.30.

   Delete
 5. 2ண்டு புக் பஞ்சாயத்தை விட்டுட்டு, முதல் புக் கதைகள் என்ன என்ற பஞ்சாயத்து வரும் போது ஆஜர் ஆகிறேன் நான். பை :)

  ReplyDelete
 6. ஓகோ அப்படி போகுதா :-)

  ReplyDelete
  Replies
  1. உங்கள் ஊரில் மணி இப்ப என்ன சாரே :-)

   Delete
 7. 1 + 1 = 11 (ஒண்ணும் ஒண்ணும் ரெண்டுன்னு சொன்ன சாரே, மூணு ஆனது என்ன கணக்கு என்று ஒரு பாடல் இருப்பதையும் நினைவு‘படுத்துகிறோம்’ சார்!)

  ReplyDelete

 8. 1 + 1 = 11

  1 + 1 = 11


  1 + 1 = 11


  1 + 1 = 11

  ஸ்ஸப்பா!! பதிவைப் படிக்கும்போது திக்திக்கு ஆகிடுச்சு எனக்கு! வேர்த்துப் போச்சுன்னா பார்த்துக்கோங்களேன்! எங்கே 50வது ஆண்டு மலரை 50 பக்கங்களில் 50 ரூவாய்க்கு முடிச்சுடுவீங்களோன்னு நினைச்சுப் பயந்துட்டேன்!

  இந்த ///1 + 1 = 11 ///ஐ பார்த்ததுக்கப்புறம் தான் மூச்சே வத்துச்சு!

  ஊஊஊப்ப்ப்ப்!!!

  ReplyDelete
 9. கிடா வெட்டு காது குத்துதல் அப்புறம் அதற்கு அப்புறம் தான்ல பிரியாணி பொன்ராசுசுசு. பொறுமையா இருலே :-)

  ReplyDelete
 10. சார்.. இந்தப் பதிவு மொத்தம் எத்தனை பாகங்களைக் கொண்டதுங்க சார்? அதாவது, மொத்தம் ஆலமரங்களின் எண்ணிக்கை?!!

  ReplyDelete
 11. Atleast 10 kadaigal aandumalaril vendum endru aasai aanal ungal villakkangalai paditha pinbu ketka mudiyavillai so in curr situation my vote for

  1+1=11

  ReplyDelete
 12. Dear Editor
  I understand the problem that u face.
  Yes the economic situation looks grim.
  It may remain so for next year too.
  But what we are looking at is 50th year special.Mind blowing acheivement for our small institution.
  So i would propose u to go ahead with usual sandha 30 to 36 books which gives us 3 comic books per month barely.
  Start pre booking for muthu special at 1500 rupees and selecting good stories.Release the special once minimum guarentee pre bookings are done.It need not be January.And we expect ur hardwork in translation as its such a special occasion.Collect names of our friends who will be ready to prebook and get a rough estimate number now.ONOT may be one of the stories in 50th year special but please add more.This is a dream special.It will pull through with reasonable planning.
  Regards
  Thanks
  Arvind

  ReplyDelete
  Replies
  1. ///But what we are looking at is 50th year special.Mind blowing acheivement for our small institution.///

   அதே அதே!!

   Delete
 13. Also it is really sad that combo specials could not be done like before.
  Not even for this 50th year edition Sir?
  Nothing beats our Combo specials.
  Regards
  Arvind

  ReplyDelete
 14. பதிவை பாதி படித்து விட்டேன் நம்ப ஆசிரியர் ரொம்ப யோசித்து எழுதி இருக்கிறார் :-)

  ReplyDelete
 15. அடேயப்பா பெ..பெ...பெரிய்ய்ய பதிவு... பார்த்துட்டு வாறேன்🙏

  ReplyDelete
 16. படிச்சிட்டு வருவோம்

  ReplyDelete
 17. சார், உங்கள் தொலைநோக்கு பாராட்ட பட வேண்டியது.நீங்கள் எடுத்துள்ள நிலைப்பாடு மிகவும் சரியே.1+1=11என வரவேற்கிறேன்.
  அதிலும் ஒற்றை நொடி ஒன்பது தோட்டா மிகவும் எதிர் பார்க்கிறேன்.பெயரே அதிரி புதிரியாக உள்ளதே

  ReplyDelete
 18. 1+1 = 11

  50வது ஆண்டு என்பது ஒரு இதழோடு் முடிந்து விடுவதில்லை. ஆண்டு முழவதும் 50வது ஆண்டை நினைவுபடுத்தும் விதமாக ஏதாவது ஸ்பெசலாக செய்யுங்கள் சார். லயன் சந்தாவின் பட்ஜெட்டைக் குறைத்து முத்துவின் பட்ஜெட்டை அதிகரித்து வரும் வருடம் முத்துவை முன்னிலைப்படுத்தும் விதமாய்.

  நாங்க தோணுனதை சொல்றோம்; கம்பேனிக்கு எது கட்டுபடியாகுதோ அதை செய்யுங்கள். 🙏🙏🙏

  ReplyDelete
 19. ரொம்ப குழப்புது மறுபடியும் படிச்சிட்டு வாரேன்..

  ReplyDelete
 20. ஆசைக்கு அளவுகோல் இல்லை... ஆனால் நடைமுறை சிக்கல்களை நோக்கும் போது..

  1+1 2 இல்லை 11 என ஒப்புக்கௌள்ள வேண்டி உள்ளது.

  ReplyDelete
 21. அரைமனதாக 1+1= 11 என ஏற்றுக்கொள்கிறேன் சார்..
  ஸ்பெஷல் இதழ் #1 அறிவிப்பை பொறுத்து எனது முழு எண்ணத்தை கூறுகிறேன் சார்...

  ReplyDelete
 22. முத்து 50க்கு என ஸ்பெஷல் லோகோ டிசைன் செய்து வருடம் முழுவதும் 5 (அ) 6 இதழ்கள் (ஒரே சைசில்) வெளியிடலாம். கடைசியாக / முதலில் அனைத்தும் கொள்ளும் விதமாய் ஒரு ஸ்லிப் கேஸ் தகதகவென்று. ஆண்டு முழுவதும் கொண்டாடப்பட வேண்டிய தருணம்! ஒற்றை இதழோடு நின்றுவிடக் கூடாது. எ.எ.க.

  ReplyDelete
  Replies
  1. அதில் வேண்டுமானால் (2புக் × 3 பாக) ஒ.நொ.ஒ.தோ சேர்த்தூ விட்டால் மீதி 3 அ 4 புத்தகம் சந்தாவிலேயே போட்டு விடலாம்.

   Delete
  2. 5 (அ) 6 புக், ஒவ்வொரு புக்கும் 3 ஆல்ப அதிரடி, வருடம் முழுதும், நோ ஒர்க்லோடு. நோ பட்ஜெட் ஒர்ரீஸ்...

   Delete
  3. தொடக்கமாக புக் #1,#2 ஒ.நொ.ஒ.தோ.(2×3) ஜனவரியில்...

   Delete
  4. புக் #3 கோடை மலர் (முத்து) டிரிபிள் ஆல்பம்
   புக் #4 ஆகஸ்ட் ஸ்பெஷல் (முத்து) டிரிபிள் ஆல்பம்
   புக் #5 தீபாவளி ஸ்பெஷல் (முத்து) டிரிபிள் ஆல்பம்

   Delete
  5. மொத்தம் 5 புக், 15 ஆல்பம், 1 ஸ்லிப் கேஸ், ஆண்டு முழுவதும் கொண்டாட்டம்!

   Delete
 23. சார்...

  நமக்கு முக்கியம் "முத்து 50".... இந்த இதழின் சிறப்பு திரும்ப கிடைக்கப் போவதில்லை... அதனால் கட்டாயமாக சாந்தாவில் நுழைக்க வேண்டும்...

  முத்து 50 ஐ சிறப்பாக plan செய்து விட்டு... மிச்ச மிருக்கும் சந்தா தொகையில் இயன்றதை இணைக்கலாம்... நீங்கள் கூறுவது போல்... அடுத்த சந்தாவில் 25-30 புத்தகங்கள் இடம் பெற்றாலும் போதும்... முத்து 50 சிறப்பாக இருத்தல் வேண்டும்... இது என் கருத்து..

  ReplyDelete
  Replies
  1. சாந்தா இல்லை சந்தா... மன்னிக்கவும்..

   Delete
  2. அதே சார்..சந்தாவில் சில இதழ்கள் குறைந்தாலும் இந்த இதழ் மெகாஹிட்டடிக்க வேண்டும் சார்..ஒரே இதழ் ஒரே குண்டு இதுவே எனது எண்ணம்...

   Delete
  3. யெஸ் சார்... டாக்டர் AKK ன் கருத்தை ஏற்றுக் கொள்கிறோம்.

   விளிம்பு, ஓரமாக இருப்பதுனு கட்டிங் பண்ண பலதும் இருக்கு!

   "டிரிம்மிடு சந்தாவில் ஃபெண்டாஸ்டிக் முத்து50"

   Delete
  4. டாக்டர் சாரின் கருத்தை வரிக்கு வரி ஆமோதிக்கின்றேன்.

   Delete
  5. ஒரு தோராய சந்தா கணக்கையுமே தந்துள்ளேனே சார் - கவனிக்கவில்லையா ?

   Delete
 24. ஏற்கெனவே ஸ்பெசல் #1#2 என மேக்னம் ஸ்பெஷல் இதழில் மேக்னம் மட்டுமே ஹிட் அந்த 2வது இதழ் காணாமல்போனது போல் இந்த #1#2 இதழில் ஆகிவிடக்கூடாது சார்.மனதில் பட்டதை சொல்கிறேன்.. உங்களுக்கு தெரியும் ஆசானே...நண்பர்களின் கருத்தை ஆராய்ந்து நல்ல முடிவாக எடுங்கள்...ஏனில் முத்து#50 வெறும் எண்ணிக்கை அல்ல..மறக்க இயலா மைல்கல்..

  ReplyDelete
 25. 1+1 = 11


  இந்த சூழலில் இதை விட சிறப்பாக பண்ண இயலாது... அருமை சார்.

  500விலையில் ஒரு ஸ்பெசல் என்பது பர்ஃபெக்ட்😍

  ReplyDelete
 26. முடிந்தவரை ஒரே ஸ்பெசல் குண்டு அணுகுண்டைவிட சிறப்பாக முத்து#50 வரவேண்டும் என்பதே எனது வருப்பம் ஆசானே....

  ReplyDelete
 27. ஹைய்யா புதிய பதிவு...

  ReplyDelete
 28. You can increase the sales by making it available in book shops especially in railway stations and in amazon.

  Increase in sales will decrease the cost of book which will be profitable to company

  ReplyDelete
  Replies
  1. தமிழக ரயில்நிலையங்களில் நீங்கள் கடைசியாய் புக் வங்கியது எப்போது நண்பரே ? தொண்ணூறு சதவிகித ஸ்டேஷன்களில் காண்டிராக்ட் புதுப்பிக்கப் படவே இல்லை !

   Delete
  2. Every time I visit chennai, i used to buy books for my son at chennai railway station. I get only english comics there.
   If it is not possible please sell it in Amazon. We will buy the book based on our interest.

   Delete
 29. வந்துட்டேன் படு தாமதமாய்....

  ReplyDelete
 30. இவ்வளவு பெரிய பதிவை போட்டு நீட்டி முழக்கி சொல்வதற்கு பதில் நீங்களே ஒரு முடிவை எடுத்துட்டு சொல்லி இருக்கலாம் சார்...
  முத்து 50 ஆம் ஆண்டுமலரை பொறுத்தமட்டில் பதிவு மட்டும்தான் பெரிதாய் இருக்கும் போல...
  ஏற்கனவே முடிவெடுத்திங்க போல...
  எது வந்தாலும் சரி,எப்படி வந்தாலும் சரி,இனி சொல்ல ஒன்றுமில்லை...

  ReplyDelete
  Replies
  1. இந்த நொடி வரையிலும் எந்தவொரு தீர்மானமும் எடுத்திடவில்லை நான் - நீங்கள் நம்பினாலும், நம்பாவிட்டாலுமே !

   Delete
 31. SERGIO BONELLI ல் 80 வது ஆண்டு என்பதை அனைத்து இதழ்களில் போடுவது போல் நமது முத்து அனைத்து இதழ்களில் ஸ்பெஷல் லோகோவோடு வரவேண்டும்...

  ReplyDelete
 32. ஆஹா....சூப்பர் சார்....இதோடு கென்வாயவயும் சேத்து கிட்டா மெகா இதழாயிடுமே...ஆனா பாத்து பன்னுங்க 5000 த்ல பாதியாவது

  ReplyDelete
  Replies
  1. 50ம் ஆண்டு பவளவிழா மலருக்கு நியாயம் செய்வோம்....இரத்தப் படலம் வாங்குவோர்300தான....எப்படியும் இவர்கள் வாங்கப் போவது நிச்சயம்....அடிச்சு விளையாடும் தருணம்

   Delete
 33. முத்து 50 என்பது ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் இதழ். 1999-ல் இருந்து 2012-க்குள் ஒவ்வொரு ஆண்டும் மொத்தமாகவே 24 புத்தகங்கள் வந்திருக்காது. மாதம் குறைந்தது 3 புத்தகங்கள் வந்து கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், அந்த நிலை இப்போது ஏற்படாது எனலாம்.

  எனவே, மாதம் 4 புத்தகங்கள் - 3 புத்தகங்கள் என்பதற்கு பதிலாக, முத்து 50-ஐ புஷ்டியான இதழாக வெளியிடலாம். 6 மாத காலத்திற்கு மாதம் 2 இதழ்கள் வந்தாலும் பரவாயில்லை.

  (இந்த ஆலமரத்தில் பட்ஜெட் பற்றி மட்டுமே கேட்டிருப்பதால், ஆலமரம் 2-ல் ஹீரோக்பளைப் பற்றி உண்டா...)

  ReplyDelete
 34. படிக்கும் நமக்கே இப்படி கண்ணை இந்த கட்டு கட்டுச்சுன்னா இம்புட்டு விஷயத்தையும் யோசிச்சு எழுதுன ஆசிரியருக்கு என்ன ஆகி இருக்குமோ??? ஹ்ம்ம்

  ReplyDelete
 35. புதுப் பதிவும் வந்துடுச்சு...

  ReplyDelete
 36. அனைவருக்கும் முத்து 50 கிடைக்கவேண்டும்..
  சந்தா வும் கட்டுக்குள் இருக்க வேண்டும்..
  முத்து 50 ம் ஆகச்சிறப்பாக வரவேண்டும்..

  இதெல்லாம் கணக்கு பண்ணிட்டு பாத்தா,

  1+1=11 சரிதானுங்கோ..

  ReplyDelete
 37. எடிட்டரின் அடுத்த ஆலமரப் பதிவும் ரெடி நண்பர்களே!!

  ReplyDelete
 38. மன்னிக்க வேண்டுகின்றேன்.

  முத்து காமிக்ஸ் 50

  ReplyDelete
  Replies
  1. ஆண்டு இதழைச் சிறப்பாகத் தர வேண்டுகின்றேன்.

   Delete
  2. எனது கருத்து 1+1=11 சிறப்பான 2 புத்தகங்கள். அதில் ஒன்று ஒற்றை நொடி ஒன்பது தோட்டா.

   Delete
 39. பொன் விழாச் சிறப்பிதழை மிகச் சிறப்பாகத் தந்துவிட்டு மாத இதழ்களை இரண்டாகத் தந்தால் போதும் என்கின்றேன்.

  ReplyDelete
  Replies
  1. இது அட்டகாசமான யோசனை.

   Delete
 40. இந்த முறை வினாவையும் ,பதீலையும் நீங்களே கூறிவிட்டீரகள் சார்...

  1+1= 11

  ஓகே சார்...


  மகிழச்சியே...கண்டிப்பாக சந்தாவில் தான் முத்து 50 இணைந்து வர வேண்டும்...


  என்ன ஒன்று ஒரே குண்டாக இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும்..

  என்னுடைய சிறிய கருத்து என்னவெனில் முத்து 50 வெளிவரும் மாதம் வேறு இதழ்களை இணைக்காமல் ஒரே குண்டாக ,ஒரே கதம்ப இதழாக வெளியிட்டால் கூட இன்னும் சிறப்பாக இருக்குமே சார்..

  ReplyDelete
  Replies
  1. வேறு இதழ்களை இணைக்காமல் என நான் கூற வருவது மாதம் மூன்றோ ,நான்கோ இதழ்கள் மாதா மாதம் வருகிறது ..முத்து 50 மாதத்தில் அந்த முத்து 50 இதழ் ஒன்று மட்டுமே ஹெவியாக வந்தால் பட்ஜெட்டும் உதைக்காமல் ..வருட ,இதழ்களும் குறையாமல் இருக்குமே சார்..

   இது எனது யோசனை மட்டுமே சார்..

   Delete
 41. ஒற்றை நொடி ஒன்பது தோட்டாவை வரவேற்கிறேன் சார்.. 1கூட்டல் ஒண்ணு சமம்தானுங்க அதால 11 ஓக்கே..

  ReplyDelete