Powered By Blogger

Saturday, May 22, 2021

கேள்வி லேது...ஆனா கேள்வி உண்டு !

 நண்பர்களே,

வணக்கம். இனி கேட்க ப்ளஸ் 2 தேர்வாணையத்திடமே கேள்விகள் இல்லையாம் ; அவ்வளவையும் நாமே வாரிக் கொண்டு வந்து இங்கே கேட்டு வைத்து விட்டோமாம் ! ஆகையால் இன்றைய பதிவு கேள்விகளுடனானதல்ல ; உங்கள் பதில்களின் செயலாக்கமே !

ஒவ்வொரு விளிம்பு நிலை நாயகருக்கும் கிட்டிய ஓட்டுக்கள் முன்னே பின்னே இருந்திருக்கலாம் தான் ; ஆனால் பொதுவாய் பயணித்த சேதியானது பிசிறின்றி சீராகவே இருந்தது ! அதனைப் புரிந்து கொள்ள ராக்கெட் விஞ்ஞானிகளாக இருக்கத் தேவையில்லை தான் !!

ஒரு தொடரோ, நாயகரோ இனியும் நம் மத்தியில் வெற்றி காண வேண்டுமெனில் அவர் மரத்தைச் சுற்றி ஓடியாடிப் பாடினாலோ ; க்ளைமாக்சில் பிழிய பிழிய நடித்தாலோ மட்டுமே போதாது தான் ! லக்கியைப் போல சிரிக்க வைத்தாக வேண்டும் ; டைகரைப் போல மதியூகியாக இருந்திட வேண்டும் ; XIII-ஐப் போல நெஞ்சைத் தொடத் தெரிந்திருக்க வேண்டும் ; பிரின்சைப் போல சாகஸங்கள் சரளமாய் செய்திட வேண்டும் ; ட்யுராங்கோவைப் போல 'வெட்டு ஒண்ணு-துண்டு ரெண்டு' என ரகளை செய்திடத் தெரிந்திருக்கணும் ; ஜேசன் ப்ரைஸைப் போல அமானுஷ்யங்களையும் சமாளிக்கும் திறன் கொண்டிருக்க வேண்டும் ; லார்கோவைப் போல ஸ்டைலாக இருக்க வேண்டும் ; புதுயுக ஜேம்ஸ் பாண்டைப் போல கலக்கிட வேண்டும்  ! ஒற்றை வரியில் சொல்வதானால் - 'தல' போல சர்வமுமாய் இருந்திடத் தெரிந்திருக்க வேண்டும் ! So -  உசக்கே...ரொம்பவே உசக்கே பயணித்திருக்கும் நமது ரசனைகளுக்கு நியாயம் செய்திடும் திறன் கொண்டவரா ? என்ற புலனாய்வுகளின்றி இனி ஒரு புது வரவை உட்புகுத்திட்டால் LADY S-க்கும் ; ஜெரெமியாவுக்கும் ; கமான்சேவுக்கும் நேர்ந்திட்ட கதை தான் / கதி தான் என்பது புரிகிறது ! 

இது சர்வ நிச்சயமாய் ஒரு பெருமிதமான தருணமே ; simply becos நமது வாசக வட்டம் amongst the elitest of the elite என்பதை அப்பட்டமாய் உணர முடிகிறது ! இங்கே தரத்துக்கு துளித்தயக்கமுமின்றி அங்கீகாரம் உண்டென்பதை - "பிஸ்டலுக்குப் பிரியாவிடை"களுக்கும்  ; அர்ஸ் மேக்னாக்களும் ; "கண்ணான கண்ணே"க்களுக்கும் கிட்டியுள்ள வரவேற்பே பறைசாற்றும் ! (என்ன, சித்தே கார்ட்டூன்களுக்கும் 'ஜெ' போடவும் செய்தால் கோடி புண்ணியம் கூடிடும் தான் !!) So எனது தேர்வுகளில் கணிசமானவை பப்படங்களாகியிருப்பினுமே - இனி காத்திருக்கும் கதைத்தேர்வுகளின் சவால்கள் பன்மடங்கு ஜாஸ்தியாக இருந்திடுமென்ற எண்ணமே ஒரு த்ரில்லை உண்டாக்குகிறது ! இனி பிஸ்டலைப் பிடித்தோரெல்லாம் நம் மத்தியில் 'தல'யாகவோ, 'தளபதி'யாகவோ மிளிர்ந்திட இயலாதென்ற புரிதலோடு ; காலாவதியான இமேஜ்களோடு உலாப்போகும் நேற்றைய ஜாம்பவான்கள் இனியும் தம் இடங்களை taken for granted என எடுத்துக் கொள்ள இயலாது என்ற ஊர்ஜிதத்தோடு எனது தேடல்களை மீள்துவக்கம் செய்திடுவேன் ! 

புதுசாய்த் தேடுவது ஒரு பக்கமிருக்க , நடப்பு ஆண்டின் அட்டவணையில் உள்ளதொரு புது வரவே கூட இந்நொடியினில் மறுபரிசீலனைக்கு ஆட்பட வேண்டியிருக்கலாம் ! மேகி காரிசன் ! இலண்டனில் வீதிகளில் உலவும் இந்த போஷாக்கான துப்பறியும் பெண் புலி on her own rights தில்லான நாயகியே ! இதோ, இந்த ஊடக விமர்சனங்களைப் படித்துப் பாருங்களேன் - மேகியை அழகாய் சிலாகித்துள்ளனர் ! 

https://www.theguardian.com/books/2019/jun/25/maggy-garrisson-lewis-trondheim-stephane-oiry-review 

http://theslingsandarrows.com/maggy-garrisson/

ஆனால் சற்று முன்னே நான் மங்கு மாங்கென்று எழுதியிருந்த நமது நாயக சாமுத்ரிகா லக்ஷணங்களுக்கு அம்மிணி நூற்றுக்கு நூறு பொருந்துவரா ? என்ற கேள்வி என் முன்னே இந்த நொடியில் நிழலாடுகிறது ! மூன்றே ஆல்பங்கள் கொண்ட குறுந்தொடரிது எனும் போது சற்றே சகஜமான சூழல்களில் மேடம் நம் மத்தியில் அங்கீகாரம் பெற்றிடக்கூடும்  ! ஆனால் இன்றைய பொழுதுகளில் உங்கள் கவனங்களைப் பச்சக்கென்று ஈர்க்கும் firepower இவரிடம் குறைச்சலென்ற சூழலில், ஒரு புது வரவை இறுதி ஓவரில் பும்ராவின் பந்துவீச்சை  சந்திக்க அனுப்பி விடும் தவறை செய்திட தயக்கமே மேலோங்குகிறது ! So கதையை வாங்கி விட்டிருப்பினும் ; அதன் மொழிபெயர்ப்பும் ரெடியாகி விட்டிருப்பினும் - ஒற்றையாண்டுக்கு வெயிட்டிங் லிஸ்டில் அம்மணி பொழுதைச் செலவிடட்டுமே என்று தீர்மானித்துள்ளேன் ! 

So அவர் காலி செய்திடும் அந்த 90 ரூபாய் ஸ்லாட்டை யாருக்கு ஒப்படைக்கலாம் என்பீர்கள் guys ? Of course 'தல' சிங்கிள் ஆல்பம் என்று பரிந்துரைக்கலாம் தான் ; ஆனால் இல்லத்துக்கு நாளைக்குப் பால் காய்ச்சும் முன்பாக,  எனக்கும் சேர்த்துப் பாயசம் போட இன்றைக்கே ஸ்லீப்பர் செல்லார் ஆஜராகிடுவார் என்பதால் இந்த slot டெக்ஸுக்குச் செல்லாது ! மாறாக லக்கி லூக்குக்கு ? தோர்கலுக்கு ?  அறிவிப்போடு நிற்கும் வேறு ஏதேனும் சாகசத்துக்கு ? அல்லது அம்மணி மேகியே களமிறங்கட்டுமா ? 

"கேள்வி லேது" என்று ஆரம்பித்து விட்டு, கேள்வியோடே முடிக்கிறாயே ? என்று  விளக்குமாற்றை நீங்கள் தேடிடும் நேரத்துக்கு நான் ப்ளூகோட் பட்டாளத்தோடு இணைந்து கொள்ளப் புறப்படுகிறேன் folks !  

நாளைக்கு காலையில் இயன்ற மட்டுக்குச் சீக்கிரமே ஆஜராக நான் ரெடி ! Maybe 7 a.m. ? உங்களின் பெரும்பான்மைக்கு எது சுகப்படுமோ - சொல்லுங்கள் !  Bye all....and a Safe Saturday to all !

226 comments:

 1. Replies
  1. வணக்கம் தோர்கல் சரவணாரே!🙏

   Delete
  2. தோர்கல் அந்த மீதி ஒன்றையும் சேர்த்து டபுள் ஆல்பம் போட்டிருங்க சார்....

   ஆர்க் முடிந்துவிடும்.

   Delete
  3. தோர்கல் அந்த மீதி ஒன்றையும் சேர்த்து டபுள் ஆல்பம் போட்டிருங்க சார்....

   Done....

   Delete
  4. தோர்கல் அந்த மீதி ஒன்றையும் சேர்த்து டபுள் ஆல்பம் போட்டிருங்க சார்....

   நீங்க நல்லா இருக்கணும் எஜமான்.

   Giants and The Cage இரண்டையும் இணைத்து ஒரே ஆல்பமாக வெளியிடவும் நன்றி.

   Delete
  5. தோர்கல் அந்த மீதி ஒன்றையும் சேர்த்து டபுள் ஆல்பம் போட்டிருங்க சார்....

   ஆர்க் முடிந்துவிடும்.

   குண்டு புக்கா வேணும் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை சார்🤷🏻‍♂️

   நீங்க ஒரு ஸ்லாட்டு வேணுமின்னு கேட்டதால
   இந்த வாய்ப்பை நீங்க பயன்படுத்திகலாமேன்னு சொல்லுறோம் சார்🙏🏼🙏🏼🙏🏼

   மறுபடி அடுத்து மெகா குண்டுபுக்கா போட ஓடீனிடம் வேண்டிக்கொள்கிறேன் 🙏🏼🙏🏼🙏🏼
   .

   Delete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
 3. ஹைய்யா புதிய பதிவு...

  ReplyDelete
 4. //நாளைக்கு காலையில் இயன்ற மட்டுக்குச் சீக்கிரமே ஆஜராக நான் ரெடி ! Maybe 7 a.m. ? உங்களின் பெரும்பான்மைக்கு எது சுகப்படுமோ - சொல்லுங்கள் ! //--ஆஹா.. திவ்யமாக சார். முத்து 50ன் திட்டங்கள் ஒரு முன்னோட்டத்தை அறிய 19 மணி நேரங்களே உள..

  ReplyDelete
  Replies
  1. நான் எல்லாம் இப்போ இருந்தே ready சார். 7 மணிக்கு double ஓகே தான் சார் எனக்கு. நாளைக்கு காலை 5 மணிக்கு எழுந்து விட வேண்டியதுதான்.

   Delete
 5. லக்கி லூக்குக்கு ? தோர்கலுக்கு ? அறிவிப்போடு நிற்கும் வேறு ஏதேனும் சாகசத்துக்கு ? அல்லது அம்மணி மேகியே களமிறங்கட்டுமா

  Lucky..Lucky..Lucky.. Lucky..Lucky..Lucky.. Lucky..Lucky..Lucky.. Lucky..Lucky..Lucky.. Lucky..Lucky..Lucky.. Lucky..Lucky..Lucky.. Lucky..Lucky..Lucky.. Lucky..Lucky..Lucky.. Lucky..Lucky..Lucky.. Lucky..Lucky..Lucky..

  ReplyDelete
  Replies
  1. லக்கிக்கு ஒரு 30 ஓட்டை சேர்த்தாச்சு ரம்மி :-) உங்களை மாதிரி இந்த மாதிரி நேர்மையா ஓட்டு போடுறவங்ஙள ரொம்ப பிடிக்கும். :-)

   Delete
 6. ////லூக்குக்கு ? தோர்கலுக்கு ? அறிவிப்போடு நிற்கும் வேறு ஏதேனும் சாகசத்துக்கு ? அல்லது அம்மணி மேகியே களமிறங்கட்டுமா ? ///

  ---காலியாகும் இந்த ஸ்லாட்டை தோர்கல் க்ளைமாக்ஸூக்கு ஒதுக்க என் ஓட்டு்.. ஏற்கனவே சந்தாவில் உள்ள ஓரு பாகம்+ இது 1= இரு பாக க்ளைமாக்ஸ் ஃபார் ஆழகிய அகதி யின் கடைசி கதை!

  ReplyDelete
 7. ////லூக்குக்கு ? தோர்கலுக்கு ? அறிவிப்போடு நிற்கும் வேறு ஏதேனும் சாகசத்துக்கு ? அல்லது அம்மணி மேகியே களமிறங்கட்டுமா ? ///

  ---காலியாகும் இந்த ஸ்லாட்டை தோர்கல் க்ளைமாக்ஸூக்கு ஒதுக்க என் ஓட்டு்.. ஏற்கனவே சந்தாவில் உள்ள ஓரு பாகம்+ இது 1= இரு பாக க்ளைமாக்ஸ் ஃபார் ஆழகிய அகதி யின் கடைசி கதை

  ReplyDelete
  Replies
  1. ////லூக்குக்கு ? தோர்கலுக்கு ? அறிவிப்போடு நிற்கும் வேறு ஏதேனும் சாகசத்துக்கு ? அல்லது அம்மணி மேகியே களமிறங்கட்டுமா ? ///

   ---காலியாகும் இந்த ஸ்லாட்டை தோர்கல் க்ளைமாக்ஸூக்கு ஒதுக்க என் ஓட்டு்.. ஏற்கனவே சந்தாவில் உள்ள ஓரு பாகம்+ இது 1= இரு பாக க்ளைமாக்ஸ் ஃபார் ஆழகிய அகதி யின் கடைசி கதை.

   Delete
 8. // மாறாக லக்கி லூக்குக்கு ? தோர்கலுக்கு ? அறிவிப்போடு நிற்கும் வேறு ஏதேனும் சாகசத்துக்கு ? அல்லது அம்மணி மேகியே களமிறங்கட்டுமா ? //
  பொதுவா ஒரு பதிலை சொல்லி வெப்போம்,ஏதோ ஒன்னு போட்டுத் தள்ளுங்க சார்...

  ReplyDelete
 9. // நாளைக்கு காலையில் இயன்ற மட்டுக்குச் சீக்கிரமே ஆஜராக நான் ரெடி ! Maybe 7 a.m. //
  06.59 a.m...

  ReplyDelete
 10. ///இமேஜ்களோடு உலாப்போகும் நேற்றைய ஜாம்பவான்கள் இனியும் தம் இடங்களை taken for granted என எடுத்துக் கொள்ள இயலாது என்ற ஊர்ஜிதத்தோடு எனது தேடல்களை மீள்துவக்கம் செய்திடுவேன் ! ///

  ----அருமையான முடிவு ஆசிரியர் சார்.

  இப்பத்தான் ஆஸ்திரேலிய டீம் செலக்சன் சீஃப் ஆபீஸர் அவதராத்தை கையில் எடுத்து உள்ளீர்கள்.. இனி எல்லாம் ஜெயம்தான்....

  Horses for courses என்பதே இனி நலம் பயக்கும்...!!!

  ReplyDelete
 11. ///இமேஜ்களோடு உலாப்போகும் நேற்றைய ஜாம்பவான்கள் இனியும் தம் இடங்களை taken for granted என எடுத்துக் கொள்ள இயலாது என்ற ஊர்ஜிதத்தோடு எனது தேடல்களை மீள்துவக்கம் செய்திடுவேன் ! ///

  super sir!

  ReplyDelete
 12. I may say Maggy, but a big "What if?" about future piling up of stocks, loom in mind. You confirmed it's not gonna be tex, thus I am ok with Thorgal sir

  ReplyDelete
 13. லக்க்க்க்க்கீ லூஊஊஊக்

  ReplyDelete
  Replies
  1. அதான் நீயே ஊதிட்டியே மாமா!😉

   Delete
  2. முடிவு முன்கூட்டியே தெரியறச்சே.. நாமே முந்திக்கிட்டு ஊதிடுறதுதான் புத்திசாலித்தனம்னு பெரீவீங்க சொல்லியிருக்காங்க மாம்ஸ்.!

   Delete
  3. ஆமா...ஆமா.. இந்த மூத்தகுடி மஹியும் , தொல்குடி J வும் சொன்னா சரியாத்தானே இருக்கும்!

   Delete
  4. கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்தகுடிகளாச்சே..! தப்பாகுமா.?

   Delete
 14. புதிய அம்மணிக்கு தாராளமாக வாய்ப்பு கொடுக்கலாமே sir. எவ்வளவு நாளைக்கு மாடஸ்ட்டி மட்டுமே மகளிர் அணி சார்பாக போராடிகிட்டு இருப்பாங்க.

  ReplyDelete
  Replies
  1. என்னடா ஆதரவு வரலியேனு பார்த்தேன்.... கண்டிப்பா யாராவது ஒருத்தர் வந்துருவாங்க

   Delete
 15. மேகியே களமிறங்கட்டும். மேகி இல்லையென்றால், என்னுடைய ஓட்டு தோர்கலுக்கு.

  ReplyDelete
 16. //ஒரு தொடரோ, நாயகரோ இனியும் நம் மத்தியில் வெற்றி காண வேண்டுமெனில் அவர் மரத்தைச் சுற்றி ஓடியாடிப் பாடினாலோ ; க்ளைமாக்சில் பிழிய பிழிய நடித்தாலோ மட்டுமே போதாது தான் ! லக்கியைப் போல சிரிக்க வைத்தாக வேண்டும் ; டைகரைப் போல மதியூகியாக இருந்திட வேண்டும் ; XIII-ஐப் போல நெஞ்சைத் தொடத் தெரிந்திருக்க வேண்டும் ; பிரின்சைப் போல சாகஸங்கள் சரளமாய் செய்திட வேண்டும் ; ட்யுராங்கோவைப் போல 'வெட்டு ஒண்ணு-துண்டு ரெண்டு' என ரகளை செய்திடத் தெரிந்திருக்கணும் ; ஜேசன் ப்ரைஸைப் போல அமானுஷ்யங்களையும் சமாளிக்கும் திறன் கொண்டிருக்க வேண்டும் ; லார்கோவைப் போல ஸ்டைலாக இருக்க வேண்டும் ; புதுயுக ஜேம்ஸ் பாண்டைப் போல கலக்கிட வேண்டும் ! ஒற்றை வரியில் சொல்வதானால் - 'தல' போல சர்வமுமாய் இருந்திடத் தெரிந்திருக்க வேண்டும் ! So - உசக்கே...ரொம்பவே உசக்கே பயணித்திருக்கும் நமது ரசனைகளுக்கு நியாயம் செய்திடும் திறன் கொண்டவரா ?//
  சார் மேகி மேல் தயக்கமிருப்பத போல் படுவதால் அம்மணிய ஒன்றரையாண்டு பின்னே கவனிப்பமே

  ReplyDelete
 17. சார் அந்த மேகி கொஞ்சம் மேக்ஸி சைஸுல 'ஆண்ட்டி' ஃபீல் கொடுக்குது! சித்திரங்களும் செமி கார்ட்டூன் டைப்ல சுமாராத்தான் இருக்காப்ல இருக்கு! ஆனாலும் ஒரு கதையாவது படிச்சாத்தான் அம்மணியைப் பற்றி மேற்கொண்டு ஒரு முடிவுக்கு வரமுடியும்! ஆனாலும் இப்போதைக்கு ரிஸ்க்குல விட முடியாதுன்றதுனால, அந்த ஸ்லாட்டை (தமிழ்நாட்டில் அழிந்துவரும் இனமாகக் மாறிவரும் ) கார்ட்டூனுக்குக் கொடுக்கவும்! என்னுடைய தேர்வு SODA or மேக் & ஜேக்!

  ReplyDelete
  Replies
  1. ///அந்த ஸ்லாட்டை (தமிழ்நாட்டில் அழிந்துவரும் இனமாகக் மாறிவரும் ) கார்ட்டூனுக்குக் கொடுக்கவும்.///

   அதைவேற ஏன் தம்பி ஞாபகப்படுத்துறிங்க.. ஏற்கனவே நெஞ்சமெல்லாம் புண்ணாகி கெடக்குது.!

   Delete
  2. பரிதாபமாத்தான் இருக்கு கார்டூன் நிலை...

   ஹூம்.. ஒரு காலத்தில் முத்து 350க்கு கார்டூன் ஸ்பெசல்லாம் வெளியிட்ட நாமா இந்த நிலைக்கு வந்துள்ளோம்...!!ஓ..ஓ..!

   Delete
  3. தோர்கல் மட்டும் சாய்ஸ்ல இல்லேன்னா நானும் கார்ட்டூன் கட்சிதான்!

   Delete
  4. தோர்கல் மட்டும் சாய்ஸ்ல இல்லேன்னா நானும் கார்ட்டூன் கட்சிதான்! நன்றி SK

   Delete
 18. நாளை ஓர் திருமணத்துக்கு செல்வதால் ஆஜராக முடியுமா தெரியல...ஆனா தலை காட்டுவேன்...ஏமாத்திடாம /ஏமாந்திடாம நல்ல புஷ்டியான அறிவிப்பு தாருங்கள்

  ReplyDelete
  Replies
  1. ஏலே ஊரடங்கு நாளில் இன்னுமா ஊர சுத்துற? கவனமா இருல. தேவையில்லாமல் வெளியே போகாத மக்கா.

   Delete
  2. கல்யாணமா லாக் டவுன் முடியல 😭😭😭

   Delete
 19. அனைவருக்கும் வணக்கம் வைப்பது சின்னமனூர் சரவணர்ங்க...

  ReplyDelete
 20. // இனி காத்திருக்கும் கதைத்தேர்வுகளின் சவால்கள் பன்மடங்கு ஜாஸ்தியாக இருந்திடுமென்ற எண்ணமே ஒரு த்ரில்லை உண்டாக்குகிறது ! இனி பிஸ்டலைப் பிடித்தோரெல்லாம் நம் மத்தியில் 'தல'யாகவோ, 'தளபதி'யாகவோ மிளிர்ந்திட இயலாதென்ற புரிதலோடு ; காலாவதியான இமேஜ்களோடு உலாப்போகும் நேற்றைய ஜாம்பவான்கள் இனியும் தம் இடங்களை taken for granted என எடுத்துக் கொள்ள இயலாது என்ற ஊர்ஜிதத்தோடு எனது தேடல்களை மீள்துவக்கம் செய்திடுவேன் ! //

  இந்த முறை கிடைத்த இந்த தெளிவான முடிவுகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்...

  சார்... இனியும் Nostalgia என்னும் unicornஐ தொங்காமல்,... Horses for courses என்னும் தடமே நம் லயன் முத்துவுக்கு ஏற்றதென்பது இந்த கேள்வி படலத்தில் வெட்ட வெளிச்சமாகியுள்ளது...

  "I like Maggy’s self-sufficiency and lack of self-pity almost as much as I like her frank and distinctly lecherous ways with the opposite sex. She may not be able to solve every mystery, least of all the puzzle that is herself. But this unlikely gumshoe of the peeling Victorian terrace, the rattling tube train and the local boozer will always have a go, and sod any trouble it’s likely to bring her."


  ஆவலைத்தூண்டும் reviews for Maggy Garrison... சிவப்புக் கம்பள வரவேற்பு என்வரையில் சார்...

  அம்மணி மேகியே களமிறங்கினால்... மிக்க மகிழ்ச்சி சார்...

  ReplyDelete
 21. தோர்கலுக்கு மேகியின் ஸ்லாட்டை ஒதுக்கலாம் ஆசானே....

  ReplyDelete
 22. மேகியே வரலாம் சார்..அவ்விடம் காலி எனில் தோர்கல் வரட்டும் சார்.. அதோடு அழகிய அகதி முடிவு தெரியும்..

  ReplyDelete
 23. 7மணிக்குப் பதிவா ?! இன்னும் கொஞ்சம் முன்னால் போட்டா குறைந்தா போய்விடுவீர்கள்?!.

  போட்டுத் தாக்குங்கள் ஆசானே...

  ReplyDelete
 24. அந்த ஒரு ஸ்லாட்டை தோர்கலுக்கு தரலாம் என்பதே எ தா க

  ReplyDelete
 25. ///நாளைக்கு காலையில் இயன்ற மட்டுக்குச் சீக்கிரமே ஆஜராக நான் ரெடி ! Maybe 7 a.m. ? உங்களின் பெரும்பான்மைக்கு எது சுகப்படுமோ - சொல்லுங்கள் ! Bye all....and a Safe Saturday to all !///

  நாங்க ரெடியா இருப்போம் சார்! 50வது ஆண்டு மலருக்கான திட்டமிடல்கள் ச்சும்மா பட்டையக் கிளப்பணும்! இதுபோலவொரு மைல்கல் இதழ் மீண்டும் கிட்டிட இன்னும் பலப்பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமென்பதால், எந்த சமரசத்துக்கும் இடமளிக்காமல் இதை பிரம்மாண்ட இதழாய் அமைத்திட வேண்டும். ஆவனஞ்செய்யுங்கள் எடிட்டர் சார்.. ப்ளீஸ்!!!

  ReplyDelete
  Replies
  1. // 50வது ஆண்டு மலருக்கான திட்டமிடல்கள் ச்சும்மா பட்டையக் கிளப்பணும்! இதுபோலவொரு மைல்கல் இதழ் மீண்டும் கிட்டிட இன்னும் பலப்பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமென்பதால், எந்த சமரசத்துக்கும் இடமளிக்காமல் இதை பிரம்மாண்ட இதழாய் அமைத்திட வேண்டும். ஆவனஞ்செய்யுங்கள் எடிட்டர் சார்.. ப்ளீஸ்!!! //

   நிச்சயமாக சார் .... கொண்டாடப்பட வேண்டிய தருணம் என்பதில் மாற்று கருத்து இல்லை. எனவே ஒரு 1000 பக்க இதழ் .....

   Delete
  2. ஆறாயிரம்.... ஏழாயிரம்.....


   பிம்பிலிக்கா...பிலாப்பி....பாபா ...பிஸ்கோத்து

   ஏனோ கண்ணு முன்னால அந்த காமெடி சீன்தான் வந்து போகுது.

   Delete
  3. Sri @ ஹா..ஹா.. எங்கயோ இதை பார்த்து உள்ளமோ என நினைத்த வேளையில் ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.. செம செம..

   ஆயிரம்னு ஆரம்பிச்சேன்..... வெடிச்சிரிப்பு...😆😆😆

   Delete
  4. ##நிச்சயமாக சார் .... கொண்டாடப்பட வேண்டிய தருணம் என்பதில் மாற்று கருத்து இல்லை. எனவே ஒரு 1000 பக்க இதழ் .....##

   அதுவும் MAXI sizeல்

   Delete
 26. காலியாகும் இந்த ஸ்லாட்டை தோர்கல் க்ளைமாக்ஸூக்கு ஒதுக்க என் ஓட்டு்.. ஏற்கனவே சந்தாவில் உள்ள ஓரு பாகம்+ இது 1= இரு பாக க்ளைமாக்ஸ் ஃபார் ஆழகிய அகதி யின் கடைசி கதை

  ReplyDelete
 27. பதில் லேது ஆனால் பதில் உண்டு.. 😂😂😂😂😂
  நல்ல முடிவு ஆசிரியரே. அந்த இடத்தில் நண்பர்கள் கேட்பதுபோல் தோர்களின் இரண்டு சாகசங்களை சேர்த்து தரலாம்

  ReplyDelete
 28. மேகி கேரிசனுக்கே வாய்ப்பு தரலாம்.

  குறுந்தொடர் என்பதால் முழுவதும் வெளியிடலாம்.

  அதற்காக தோர்கல் கதையை சிங்கிள் ஷாட்டாக வெளியிடமால்; முடிந்தவரை இரண்டு அல்லது மூன்று பாகங்களாகத் தரவும்.

  ஐம்பதாவது ஆண்டு மலர் வெளியீடு ஆசிரியர் எந்தவிதமாக திட்டமிட்டாலும் நிறைவே.தோர்கல் மீது மட்டும் தங்களுடைய கருணை பார்வையை செலுத்தவும்.

  மைல்கள் தருணம் என்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.

  அதிகபட்ச விலையில் மெகா இதழாக இருந்தாலும் வரவேற்கிறோம்.

  ஆண்டு முழுவதும் 12 சிறப்பிதழ்களாக வெளியிட்டாலும் வரவேற்கிறோம்.

  அலசலாம்,ஆராயலாம் எது சாத்தியமாக உள்ளதோ அதை நடைமுறைப்படுத்தலாம்.

  ReplyDelete
 29. தோர்கல் டபுள் ஷாட் அல்லது லக்கி சார்....

  ReplyDelete
 30. நாளைக்கு காலையில் இயன்ற மட்டுக்குச் சீக்கிரமே ஆஜராக நான் ரெடி ! Maybe 7 a.m. ? உங்களின் பெரும்பான்மைக்கு எது சுகப்படுமோ - சொல்லுங்கள்
  கரும்பு தின்ன கூலியா 5 மணிக்கே ஆஜாராயிடுறேன் (வேலை வெட்டி இல்லைங்கய்யா )

  ReplyDelete
  Replies
  1. என்ன தலைவரே அஞ்சு மணிக்கு என்ன பண்ண போறீங்க. திரும்ப அஞ்சு அஞ்சுக்கு தூக்கமா😂😂😂😂 என்ன

   Delete
 31. வேகு ஆவலுடன் நாளை எதிர்பார்த்து. காலை நாலரை மணிக்கு எழுந்திருக்கும் அதுதான். அலாரம் வச்சு எழுந்து விடுவோம் இல்ல... 😂😂😂

  ReplyDelete
 32. "அவர் காலி செய்திடும் அந்த 90 ரூபாய் ஸ்லாட்டை யாருக்கு ஒப்படைக்கலாம் என்பீர்கள் guys ? "

  Lucky Luke

  ReplyDelete
 33. // என்ன, சித்தே கார்ட்டூன்களுக்கும் 'ஜெ' போடவும் செய்தால் கோடி புண்ணியம் கூடிடும் தான் //

  அதே அதே சார். பார்த்து செய்யுங்கள் நண்பர்களே.

  ReplyDelete
  Replies
  1. நாமெல்லாம் “குறைந்த பட்ச எண்ணிக்கை முன்பதிவு அடைந்தால்” 5 ஆல்ப ரின்டின்கேன், மந்திரி, பென்னி கலெக்டர் எடிசன் போராட்டத்தை ஆரம்பிக்கலாம் பரணி. 2022 ல ஈபுவில ஆரம்பிச்சிடலாம்.

   Delete
  2. போராட்டம் நடுத்தும் அளவுக்கு நம்ப கோரிக்கை பெரியது இல்ங மகேந்திரன். நமது ஆசையை இங்கு அவ்வப்போது பின்னூட்டமிடுவோம் ஆசிரியர் தகுந்த ஆதரவு கிடைக்கும் போது அதனை செயல்படுத்தட்டும்.

   Delete
  3. நாம போராட்டம்னா என்ன பண்ணுவோம்னு தெரியாதா பரணி. தலீவரு விட்டு கடிதாசி போடலாம். அவ்வளவு தான்.

   Delete
  4. அவரு தூங்கி பல மணிநேரம் ஆகிவிட்டது. அவருக்கு ஆசிரியர் புது புது சாப்பாட்டை கண்ணில் காண்பித்து போராட்டத்தை நமத்து போகச்செய்து விடுகிறார்.

   அப்புறம் நம்ப தலைவர் எழுதிய கடிதங்களில் தான் ஆசிரியர் பஜ்ஜியில் உள்ள எண்ணெய்யை பிழிந்து எடுக்கிறாராம்:-)

   Delete
 34. // ஒற்றையாண்டுக்கு வெயிட்டிங் லிஸ்டில் அம்மணி பொழுதைச் செலவிடட்டுமே என்று தீர்மானித்துள்ளேன் //

  Bold move sir. Very good.

  ReplyDelete
 35. கார்ட்டூன்

  லக்கி

  or

  டாக்புல் ஆர்டின்

  ReplyDelete
 36. தோர்கல் அந்த மீதி ஒன்றையும் சேர்த்து டபுள் ஆல்பம் போட்டிருங்க சார்.

  ReplyDelete
  Replies
  1. தோர்கல் மற்றும் லக்கி-லூக் இருவருமே எனக்கு மிகவும் பிடித்தவர்கள்.

   கடந்த வருடம் தோர்கல் கோரோனா காரணமாக வரதா காரணத்தால் இந்த முறை தோர்கலுக்கு எனது ஆதரவு.

   Delete
 37. // "அவர் காலி செய்திடும் அந்த 90 ரூபாய் ஸ்லாட்டை யாருக்கு ஒப்படைக்கலாம் என்பீர்கள் guys ? " //

  // லக்கி லூக்குக்கு ? தோர்கலுக்கு ? அறிவிப்போடு நிற்கும் வேறு ஏதேனும் சாகசத்துக்கு ? அல்லது அம்மணி மேகியே களமிறங்கட்டுமா ? //

  எல்லோரும் ஏற்கனவே வந்துகிட்டு இருக்கிறவங்கதான். அறிமுகமாக இருக்கிறவங்களும் எப்படியும் வரத்தான் போறாங்க.

  நண்பர்களும் யாராவது ஒருவருக்கு ஆதரவு தரத்தான் போறாங்க.

  ஆளுக்கொரு கதையைக் கேட்கத்தான் போறாங்க.

  நீங்க எப்படியும் அதுல ஒரு கதையை வெளியிடத்தான் போறீங்க.

  நீங்க அந்த ஸ்லாட்ல எந்த கதையைப் போட்டாலும் நாங்க வாங்கத்தான் போறோம்.

  ஆமா.... இப்போ நான் என்ன சொல்ல வந்தேன்....?? ஆங்.... அது .. என்னன்னா....

  அந்த ஸ்லாட்ல
  மாடஸ்டியின் கிளாஸிக் கதை ஒன்றை (கழுகு மலைக் கோட்டை Reprint தரத்தில்) மறுபதிப்பாக வெளியிடுமாறு....

  ReplyDelete
 38. நீங்கள் நாளைய பதிவை எத்தனை மணிக்கு வேண்டும் என்றாலும் போடுங்கள் சார்.

  ReplyDelete
 39. தல ஒரு சிங்கிள் ஆல்பம் அல்லது நண்பர்களுக்காக thorgal double ஆல்பம் என் ஒட்டு.

  ReplyDelete
 40. 'நின்று போன நிமிடங்கள்' ஜூலியாவின் Oneshot சாகசம் ...தற்கொலைக்கு முயலும் நபரை காப்பாற்ற ஓரு டிடெக்டிவ்வின் விடாமுயற்சியே கதை ...'கும்'......'டிஷ்யும்' ...'விஷ்' ...என அதிரடிகள் இல்லாத அதே நேரம் நம் பொறுமையையும் சோதிக்காத அழகான கதை...ஆனால் விற்பனையில் எந்த அளவிற்கு சாதித்தார் என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.

  Magicwind ன் 'ஆத்மாக்கள் அடங்குவதில்லை' மறுவாசிப்புக்கு உகந்த மிக அற்புதமான கதை ...இவரின் சாகசங்கள் பெரிய அளவிற்கு மோசம் என்று சொல்ல முடியாது ..ஆனால் விற்பனை? ???

  மேல் சொன்ன மகானுபாவர்கள் சில வருடங்களுக்கு முன்பு Tex என்ற Engineல Addtinal coach ah ஓரு குண்டு புக் ல வந்தாங்க...ஆனால் இப்போது அது போல வாய்ப்புபகள் உண்டா என்பது கூட தெரியாது.

  அதுனால புது அம்மணிக்கதையை ஒன்றுக்கு இரண்டு தடவை Check செய்யவும் Otherwise இருக்கவே இருக்கு நல்லா ஓடுற குதிரை Jollyjumper with lukkky ...

  ReplyDelete
 41. சார், மற்ற ஹீரோக்களாவது வாய்ப்பு கொடுத்து ரிஜக்ட் பண்ணீங்க. இந்த அம்மணிக்கு வாய்ப்பே கொடுக்காமல் ரிஜக்ட் பண்ணலாமா என கேட்டால் எப்படி?

  மேலும், நீங்கள் பதிவு செய்திருந்த லிங்க்-ல் உள்ள விமர்சனமும் நல்லபடியாக இருப்பதாகவே எண்ணம். எனவே, மேகி-க்கு பதிலாக தோர்கல்-லக்கிலூக் என்ற கேள்வியை நான் ரிஜக்ட் செய்கிறேன்.

  மேகிக்கு எனது ஓட்டு!

  (ஏற்கனவே இப்படித்தான் லேடி S-ம் வீட்டுக்கு அனுப்பப்பட்டார். என்னைப் பொறுத்தவரையில், அவரை மீண்டும் கொண்டு வருவீர்களா என்றொரு கேள்வியும் இருக்கிறது!)

  ReplyDelete
  Replies
  1. நிறுத்தவில்லை நண்பரே...இந்த இரண்டு வருடம் மட்டும் மிகச்சிறந்த கதைகள் அதாவது ஈர்ப்பான கதைகள் மட்டுமே...கென்யா...ஒநொஒதோ போல சிறப்பான காத்திருக்கும் கதைகள் ஏராளம்...இப்பத்தைக்கு அது போல கதைகளுக்கு வழி..

   Delete
 42. சார்,

  ஒரு ஸ்லாட் ஓபன் ஆனாலும் உடனே லக்கி தோர்கல் தான் அப்படினா மத்த ஸ்லாட் கிடைக்காத ஹீரோஸ் என்ன பண்ணுவாங்க?

  குண்டு கலர் புக் ஸ்லாட் எல்லாம் லக்கி தோர்களுக்கே போயிட்டா வெரைட்டி என்பதே இருக்காது சார்

  ReplyDelete
  Replies
  1. நேத்தைய பதிவு ஒன்ஸ் மோர் ரீடிங் ப்ளீஸ் !

   இனியும் variety என்ற ஒற்றை சமாச்சாரத்துக்காக வண்டி மாடுகள் ஜல்லிக்கட்டுக் காளைகளோடு போட்டியிட அனுமதிக்கப்படாது நண்பரே !

   Delete
 43. Thorgal 1+1= double Album my choice
  Thank you

  ReplyDelete
 44. தோர்கலா, மேகிகாரிசனா, லக்கி லூக்கா. வெரைட்டி என்றவிதத்தில் மேகிகாரிசன் ஓக்கே. கார்ட்டூன் வாழனும் என்ற நலல எண்ணத்தில் லக்கி கார்ட்டூன் தல. நண்பர்களுக்காகதோர்கல். கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
  Replies
  1. எனக்கு தலை சுத்துது சார்.... பேசாம மூன்றையுமே போடச் சொல்லிடலாம்...

   Delete
  2. எனக்குந்தா தல சுத்துது...மூன்றும் ஒன்னா போடனும்னா தோர்கள் மூன ஒன்னா போடலாம்.,அந்த ஒன்ன மூனா போடலாம்...மூனும் ஒம்பதாகலாம்..என்ன நாஞ்சொல்றது

   Delete
 45. போடுங்கமா ஓட்டு...
  தோர்கல் ஏஜியை பார்த்து..

  ReplyDelete
 46. தோர்கல் மீதி ஒன்றையும் சேர்த்து டபுள் ஆல்பம் எனது சாய்ஸ்...சார்...

  ReplyDelete
 47. இரண்டு வாரங்களாக தவிர்க்க இயலாத சூழல் காரணமாக, தளத்தின் பக்கம் வந்து, பதிவிட இயலவில்லை.
  கடந்த 8ம் தேதி ஆரம்பித்து தினம் ஒரு பதிவு. சூப்பர். எல்லா பதிவுகளையும் படித்தாயிற்று. கமெண்ட்டுகள் இன்னும் படிக்கவில்லை. படித்துவிடுவேன்.
  அப்புறம், இன்றைய கேள்விக்கு எனது பதில்.
  மேகி காரிசன் மூன்றே ஆல்பங்கள்தான் எனும்போது முடிந்தால் மூன்றையும் ஒன்றாக வெளியிட்டு அம்மிணி அக்கவுண்ட்ட பைசல் பண்ணிப்புடுங்க. வாய்ப்பு இல்லையெனில் தோர்கல் டபுள் ஷாட்டுக்கு என் ஒட்டு.

  ReplyDelete
 48. தோர்கல் தான் என்னோட விருப்பமும்

  ReplyDelete
 49. @ ALL : நாளைய பொழுது முழுத் தளர்வு என்பதால் காலை 6 மணி முதலே மார்கெட்டுக்குப் போகும் பொறுப்புகள் தொற்றிக் கொள்வது உறுதி ! So நமது அலசலை நாளை மறுநாள் வைத்துக் கொள்வோமே guys ? முற்றிலுமான லாக்டௌன் எனும் போது எல்லோருக்குமே Monday இலகுவாக இருக்கக்கூடும் தானே ?

  ReplyDelete
  Replies
  1. உண்மை சார்! நன்றி!

   Delete
  2. என்னாது திங்கள்கிழமையா? வேலை நாட்கள் சார். அதுவும் வீட்டில் இருந்து வேலை இன்னும் சிரம் சார்.

   சனி ஞாயிறு ஓகே. வீட்டு வேலை இருக்கும் ஆனால் சமாளிக்க முடியும்.

   அப்புறம் எந்த நாள் பதிவு போட்டாலும் ஏதாவது ஒன்று இருக்கத்தான் செய்யும். எனவே அட்ஜஸ்ட் செய்து படித்து விடலாம் சார்.

   Delete
  3. இதான் சார் கடவுள் இருக்கார்ங்றது...நாள் தள்ளிப் போறது பிரச்சினையில்லை...விலையும் ஏறிப் போகனும்

   Delete
  4. நல்ல முடிவுதான் சார்! ஆசை தீர சுற்றிவிட்டு நாளை இரவு 9 மணிக்குள் நம் நண்பர்கள் வீடுகளுக்குள் அடைந்துகொண்டுவிடுவார்கள் என்பதால் பதிவை நாளை இரவு 10 மணி வாக்கில் போட்டால் கூட நன்றாகத்தான் இருக்கும் சார்!

   Delete
  5. என்னாது விஜய் ஆசை தீர சுற்றிவிட்டுட்டா. கொஞ்சம் இல்ல இல்ல அதிக கவனமாக இருக்க சாமீஈஈஈஈ.

   Delete
  6. நாளைக்கு பதிவு உண்டா சார்????

   Delete
  7. திங்கள் காலை எனக்கு ஞாயிறு மாலை. வீட்டு வேலையெல்லாம் முடிச்சுட்டு ஆஜராயிடறேன்.

   Delete
  8. ஞாயிறு மாலை 9 மணியா ? திங்கள் காலை 7 மணியா ? ஏதாச்சும் ஒன்றெனில் எது சுகப்படுமோ ?

   Delete
  9. நாளை இரவு 9 சரியாக இருக்கும் அனைவருக்கும் என நினைக்கிறேன். விடிய விடிய அலசிவிட்டு திங்கட்கிழமை காலை மெதுவாக எழுந்தரிக்கலாம் சார்.

   Delete
  10. இந்திய நேரம் மாலை 9 மணி சரியாவே இருக்குங்க சார்.

   Delete
  11. ஞாயிறு இரவு 9மணி சார்.🙏

   Delete
  12. ஞாயிறு இரவு 9 ஓகே ஓகே

   Delete
  13. நாளை இரவு 9 சரியாக இருக்கும் அனைவருக்கும் என நினைக்கிறேன். விடிய விடிய அலசிவிட்டு திங்கட்கிழமை காலை மெதுவாக எழுந்தரிக்கலாம் சார்.

   YES...

   Delete
  14. நாளை இரவு 9 மணிக்கு எனது ஓட்டு

   Delete
  15. 'தலீவர்'னு ஒரு பச்சை மண்ணு - இருட்டும் முன்னேயே தூங்கிப் போட்டிடும் என்பதை ஆராச்சும் ரோசனை பண்ணிப் பாத்தீங்களா ?

   Delete
  16. அப்போ night 7 மணி.

   Delete
  17. ///தலீவர்'னு ஒரு பச்சை மண்ணு - இருட்டும் முன்னேயே தூங்கிப் போட்டிடும் என்பதை ஆராச்சும் ரோசனை பண்ணிப் பாத்தீங்களா ?////

   சார் அந்தப் பச்சை மண்ணு இப்பல்லாம் நீல மண்ணா மாறிடுச்சுன்னு ஊருக்குள்ள பேசிக்கிடுறாங்க. அதனால நீங்க பதிவை நாளை இரவு 9 மணிக்கே போடுங்க சார்!

   Delete
 50. ட்யுராங்கோ இன்னும் ஒரு பாகம் இருப்பதாக தெரிகிறது
  17 Jessie (2017)

  ReplyDelete
  Replies
  1. அந்த பாகம் வராது என எடிட்டர் பதிவிட்டதாக நினைவு.

   Delete
  2. இல்லை ட்யூராங்கோ முடிஞ்சி...அதே ஆசிரியர் ட்யூராங்கோ போல் வேற ஆசாமிய விட்டிருக்கார்

   Delete
  3. கவிஞரே, ட்யுராங்கோவில் பாகம் 17 உண்டு தான் ; ஆனால் திடு திடுப்பென தொடருக்கே மங்களம் பாடி விட்டார்கள் !

   Delete
  4. ஓ...அப்ப 17 வர வாய்ப்புண்டா சார்...எப்படியும் விடாது தொடர்வார்கள்...என் நம்புவோமாக

   Delete
 51. Replies
  1. வாங்க நண்பரே...! உங்களுக்காகத்தான் வெயிட்டிங்!

   Delete
  2. அந்த டுராங்கோ 17 வது பார்ட் முத்து ஐம்பதில் எதிர்பார்க்கலாமா

   Delete
 52. காலியாகும் அந்த ஒன்றை ஸ்லாட்டை கார்டூன் ஒன்றுக்கு ஒதுக்கலாமே் சார்!

  ReplyDelete
 53. Lady S, ஜெரோமியா, கமான்சே போன்ற தொடர்கள் எனக்கு தனிப்பட்ட ரீதியில் பிடித்தவை சார்.

  ReplyDelete
  Replies
  1. எனக்கும்! ஜெரெமயா மை பேவரைட்!

   லேடி Sம் நல்ல தொடர்!

   Delete
  2. ஜரமையா, கமான்சே எனக்கும் பிடித்திருந்தன. வெகு ஜன ஆதரவில்லாத இந்த மாதிரி கதைகளை “குறைந்த பட்ச எண்ணிக்கை முன் பதிவு அடைந்தால்” என்னும் அடிப்படையிலாவது முயற்சி பண்ணும் காலம் வரும் என்று ஆசைப்படுகிறேன்.

   Delete
  3. ஆசைப்பட மட்டுமே சுகப்படும் சார் ! மேற்படி 2 தொடர்களுக்குமே வழங்கப்பட்ட கயிற்றின் நீளம் இதர நாயகர்களுக்கு வழங்கப்பட்டதை விடவும் ரெம்போ ரெம்போ ஜாஸ்தி ! அதன் பின்னேயுமே சோபிக்காது போவோர் "முன்பதிவு முயற்சிகளில் " மட்டும் சோபித்து விடுவர் என்று நம்பிட முகாந்திரங்கள் லேது !

   Delete
  4. ஆசைபடறதோட எங்க வேலை முடிஞ்சுதுங்க சார். நிறைவேத்தறது ஓடின் மற்றும் மானிடோவின் கையில் என்பது புரிகிறது.

   Delete
  5. ஜரமையா, கமான்சே எனக்கும் பிடித்திருந்தன. வெகு ஜன ஆதரவில்லாத இந்த மாதிரி கதைகளை “குறைந்த பட்ச எண்ணிக்கை முன் பதிவு அடைந்தால்” என்னும் அடிப்படையிலாவது முயற்சி பண்ணும் காலம் வரும் என்று ஆசைப்படுகிறேன்....முன்பதிவு முயற்ச்சிகள் கலாம் சார்....கதைகள் சரியில்லை எனும் காலம் வரையில் இலுப்பைப் பூ இனிக்காது போய்விடுமா என்ன

   Delete
 54. ஜெரோமியா, மற்றும் கமான்சே போன்ற தொடர்கள் எனக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் பிடித்தவை.

  ReplyDelete
  Replies
  1. ஜெரோமியா, மற்றும் கமான்சே போன்ற தொடர்கள் எனக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் பிடித்தவை.////

   +123456789...

   Delete
 55. கலகலப்பு பட சந்தானம் காமெடி மாடுலேசனில் வாசிக்கவும் ஏன் வாத்தியாரே இந்த தோர்கல் மற்றும் லக்கி-லூக் கதை இரண்டையும் ஸ்பெஷலாக தரமுடியுமா :-)

  ReplyDelete
 56. // variety என்ற ஒற்றை சமாச்சாரத்துக்காக வண்டி மாடுகள் ஜல்லிக்கட்டுக் காளைகளோடு போட்டியிட அனுமதிக்கப்படாது நண்பரே ! //

  நன்றி சார். குறைந்தது அடுத்த இரண்டு வருடங்களுக்கு மட்டும் இதே முறையில் தொடரலாம் சார்.

  ReplyDelete
 57. விஜயன் சார் @ நாளை ஊரடங்கு முழுமையான தளர்வு என்பதால் நமது புத்தகங்கள் அச்சுக்கு செல்லும் வாய்ப்புகள் உண்டா?

  ReplyDelete
  Replies
  1. தளர்வு கடைகளுக்கு சார் !

   Delete
  2. ஓகே. சில தனியார் அலுவலகங்கள் 50% ஊழியர்கள் உடன் மதியம் இரண்டு மணிவரை இயங்கி வருவதை கேள்விப்பட்டேன் சார். நமக்கு அந்த தளர்வுகள் கிடையாதா.

   Delete
 58. நமது இதழில் வந்த ஜூலியா கதைகளில் "நின்று போன நிமிடங்கள்" one of the best. ஜூலியாவின் மற்ற கதைகளும் நன்றாக இருந்தது ஆனால் விற்பனையில் சாதிக்கவில்லை எனும் போது ஆசிரியர் எடுத்த முடிவு மிகவும் சரியானது.

  ReplyDelete
 59. மேகியின் விமர்சனங்கள் நன்றாகவே இருக்கிறது. கதையை பற்றி முழுமையாக தெரியாதாதால் முடிவெடுக்க முடியவில்லை. மேகி வந்தாலும் OK அல்லது தோர்கல் or லக்கியை கொணர்ந்தாலும் சந்தோசமே.

  ஆனால் எனது தனிப்பட்ட கோரிக்கை யாதெனில் "கண்ணாண கண்ணே" வருவதற்காக வழி விட்ட "காலனின் கால் தடத்தில்" (டைட்டில் சரியா என்று தெரியவில்லை) கிராபிக் நாவலை அப்படியே தொங்கலில் விட்டு விட்டோமே. இது உரிய தருணமாக எனக்கு படுகிறது. ஒருவேளை இப்போது இல்லையெனில் இனி எப்போது சார்.

  ReplyDelete
 60. மேகி அல்லது தோர்கல்

  ReplyDelete
 61. எடிட்டர் சார்

  புது முகம் மேகியை முயற்சித்துப் பார்க்கலாம் என்று தோன்றுகிறது!

  ReplyDelete
 62. தோர்கல் டபுள் ஷாட் அல்லது மேகி காரிசன் .. மேகினா மூன்று ALBUMS ஒரே புக்காக வெளியிடவும் ..

  ReplyDelete
  Replies
  1. ஜோப்பியில் தொண்ணூறை மட்டுமே வைத்துக் கொண்டு முந்நூறுக்கு ஆசைப்பட்டால் ஆகுமா நண்பரே ?

   Delete
  2. அப்படின்னா தோர்கல் வரட்டும் சார் அந்த slot ல ..

   Delete
 63. அன்பு எடிட்டர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

  மேகி ஓக்கே

  ReplyDelete
 64. London இன் சிவகாமி தேவியாருக்கே (மேகி) எனது ஓட்டு

  ReplyDelete
 65. Lion Comics22 May 2021 at 20:50:00 GMT+5:30

  ஞாயிறு மாலை 9 மணியா ? திங்கள் காலை 7 மணியா ? ஏதாச்சும் ஒன்றெனில் எது சுகப்படுமோ ?


  ஆசிரியரின் கேள்வி ....

  ReplyDelete
  Replies
  1. உங்க வசதிப்படி எப்போ வேணா சார்🙏🏼🙏🏼🙏🏼

   12 மணிநேரமாவா பர்ச்சேஸ் பண்ணப்போறோம் 🤷🏻‍♂️

   ஒரு 1-2 மணி நேரமே போதுமானது சார்


   எப்போன்னு ஆவலுடன் காத்திருக்கிறோம் சார்
   .

   Delete
 66. //So அவர் காலி செய்திடும் அந்த 90 ரூபாய் ஸ்லாட்டை யாருக்கு ஒப்படைக்கலாம் என்பீர்கள் guys ?//

  சந்தேகமே வேண்டாம் சமீபத்தில் ஹிட்டடித்த கால்வின் வாக்ஸ் போல ஆலன் ஸ்மித் அல்லது ஜோனதன் ப்ளை நிச்சயம் ஜொலிக்கும்..ஆசானே..இல்லையெனில் தொங்கலில் இருக்கும் ஒரே ஒரு கமான்சே வை போட்டு தொடரை நிவர்த்தி செய்வோம்...

  ReplyDelete
  Replies
  1. இது சிலபஸில் இல்லாத ஆப்சன் பழனி ;-)

   Delete
  2. கமான்சே தொடரில் இன்னும் ஒண்ணே ஒண்ணு தான் பாக்கியென்று எவ்விட கேட்டறிந்தீர்களோ பழனி ? மொத்தம் 15 ஆல்பங்கள் கொண்ட தொடரது ; நாம் வெளியிட்டுள்ள 9 தவிர்த்தே இன்னும் 6 உள்ளன !

   Delete
  3. ரைட்டு விடுங்க...ஆசானே..

   Delete
  4. இது சிலபஸில் இல்லாத ஆப்சன் பழனி//

   கேட்டு வைப்போமே காலம் கனியாதோ XIII MYSTERY க்கு..BFP

   Delete
  5. அந்த 6 ம் முன்பதிவுக்கு மட்டும் சொல்லீ Special edition ஆ வெளியிட முடியுமா. நல்ல தொடர்ஐ முடிச்சு வச்ச சந்தோஷம் கிடைக்கும்

   Delete
 67. ஞாயிறு 21:00 க்கே என் வோட்டு....

  ReplyDelete
 68. Replies
  1. இன்று இரவுதான் பதிவு நண்பரே.

   Delete
  2. // Lion Comics22 May 2021 at 20:50:00 GMT+5:30

   ஞாயிறு மாலை 9 மணியா ? திங்கள் காலை 7 மணியா ? ஏதாச்சும் ஒன்றெனில் எது சுகப்படுமோ ?

   ஆசிரியரின் கேள்வி ....//

   Delete
  3. பதிவு வந்தால் மட்டும் போதும்.

   காத்திருப்போம்.

   Delete
 69. எனக்கு திங்கள் கிழமை சார்...:-)

  ReplyDelete