Powered By Blogger

Monday, May 17, 2021

வில்லன்சுக்கொரு வணக்கம் !!

  நண்பர்களே,

வணக்கம். ஒரு லாக்டௌன் வாரம் ஓட்டமெடுத்திருக்க, இரண்டாம் வாரத்தின் முகப்பில் உள்ளோம் ! இப்போதெல்லாம் ஊடகங்களின் பக்கமாய்ப் போகவோ ; செல்லில் வந்து குவியும் breaking news-களை வாசிக்கவோ கை நடுங்குகிறது ! So, வீட்டிலுள்ளோருக்கும், பணியாட்களும் சுற்றுப்பட்டியில் எங்கேனும் தடுப்பூசி கிடைக்கிறதாவென்ற தேடலுக்கு மட்டுமே இப்போதெல்லாம் செல்போன் பயன்படுகிறது ! அதிலும் பலன் பூஜ்யமே எனும் போது, மல்லாக் படுத்திங் & விட்டம் முறைச்சிங் மட்டுமே  ! ஊசி போடுவதைத் தவிர்க்க ஜனம் ஓட்டமெடுத்த காலங்கள் மாறி, இன்றைக்கு "எனக்கு போடறியா இல்லியா ?" என்று அதே ஜனம் கதறுவது தான் கலியின் காமெடி போலும் ! Anyways,புலம்பிப் பிரயோஜனம் கிடையாதென்பதால், ஆகிற வேலையைப் பார்ப்போமென்று பணிகளுக்குள் புகுந்திடவே தோன்றுகிறது !

இந்த வாரத்துவக்கத்தை கொஞ்சம் வித்தியாசமாய் நகர்த்துவோமே என்று தோன்றியது ! லாக்டௌனின் ஏதோவொரு சமயத்தில் ஒரு comics பதிப்பகம் நடத்திய போட்டி நினைவுக்கு வர, அதையே இங்கே வடை சுட்டிருக்கிறேன் !!

வில்லன்கள் !! ஒவ்வொரு முறையுமே எதிராளி தாட்டியமாய் அமைந்திடும் போது அந்தக் கதை தெறிக்க ஆரம்பிப்பதை நாம் திரையிலும் சரி, நாவல்களிலும் சரி, பொம்மை புக்குகளிலும் சரி, நிறைய முறைகள் பார்த்திருப்போம் ! நமது இதழ்களை பொறுத்தவரையிலும் மாயாவியின் கலக்கலான வில்லன்கள் ; லாரன்ஸ் டேவிட்டின் வைரிகளான ஆ.கொ.தீ.க  ; காரிகனுடன் மோதும் டாக்டர் 7 ; ஜானி நீரோவின் யதார்த்த எதிரிகள் என்று துவக்க நாட்களில் வில்லன்களின் அணிவகுப்பு இருந்ததெனில், அது மெய்யாக டாப் கியர் போட்டது நமது ஸ்பைடர் சாரின் அறிமுகத்துக்குப் பின்னரே என்பேன் ! நியூ யார்க் நகரத்தையே கயிற்றைக் கட்டி இழுத்துப் போகும் கயவனிலிருந்து ; சோப்புநுரை வில்லன் ; செஸ் ஆட்ட வெறியன் ; டாக்டர் ஆர்கோ ; கல்லாக்கும் கல்நெஞ்சன் - என்று வில்லன்களின் ஆட்டங்களை வேறொரு ரேஞ்சுக்கு இட்டுச் சென்றதே நம்ம தானைத் தலைவர் தான் ! இதோ இந்த சமீப "சர்ப்பங்கள் சாபம்" இதழில் கூட ஸ்நேக்பாபு வில்லன் செய்யாத அட்டகாசமா ? அந்நாட்களில் ஸ்பைடரின் கதையினில் நமக்கு லயிப்பு தோன்றிட முக்கிய காரணமே அந்த ரக ரகமான வில்லன்கள் தானென்பேன் ! 

அப்பாலிக்கா டெக்ஸ் வில்லர் சந்தித்த மெபிஸ்டோ ; Mr P ..... மாடஸ்டி சந்தித்த கேபிரியல் ; லார்கோவின் ஏகப்பட்ட ஹை-டெக் எதிராளிகள் என்று வில்லன்களின் அத்தியாயம் விரிவாக்கம் கண்டு கொண்டேயும் சென்றுள்ளது ! அட, சீரியஸ் கதைகளில் கூட சில பல தருணங்களில் மொக்கைப்பீஸ்கள் வில்லன்களாகிடலாம் தான் ; ஆனால் கார்ட்டூன்களிலோ மறக்க இயலா பல வில்லன்கள் தலைக்காட்டியுள்ளனரே ?! லக்கி லூக்கின் சூப்பர் சர்க்கஸில் வரும் "சாறை சார்லி" ; "பொடியன் பில்லி" ; டால்டன் சகோதரர்கள் ; ஜெஸ்ஸி ஜேம்ஸ் - என்று நாம் பார்த்துள்ள ; சிரித்து நேசித்துள்ள வில்லன்கள் தான் ஒரு வண்டி இருப்பரே !!

ஓவராய் '70s ; '80s ; '90s என்றெல்லாம் பின்னே போய் தேடாது - 2000-க்குப் பின்பாய் வெளியான நமது இதழ்களுக்குள்ளிருந்தான மாண்புமிகு வில்லன்களை பட்டியலிட முயற்சிப்பின், ஓரளவுக்கு எல்லோருக்கும் நினைவிருக்கக்கூடும் !! (முக்கியமாய் எனக்கு !!) So ரொம்பவே ரசிக்கச் செய்த வில்லன்களாய் ; நாயகருக்கு செம tough fight தந்திட்டோராய் நீங்கள் யாரைப் பார்த்திடுவீர்களோ ?  என்று சொல்லுங்களேன் - அவர் தலைக்காட்டிய இதழின் brief சகிதம் ? 

ஒரு கொடூர வில்லன் ? ஒரு lovable வில்லன் ? என்று 2 தேர்வுகள் செய்திடலாம் folks ?

Bye all ...see you around !! Have another safe day !!

பி.கு : இது "comic வில்லன்" தேர்வு மாத்திரமே என்பதால், என்னை தேர்வு செய்திட நினைத்திடுவோர் மன்னிச்சூ guys !! 

122 comments:

  1. வெட்டியானுக்கு தண்ணிகாட்டிய டாக்டர். கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  2. தங்க கல்லறையில் வந்த கஸ்டாப் கேவல் என்கிற லக்னரே மிகவும் கொடூரமான வில்லனாக என்னுடைய தேர்வு சார் மேலும் lovable வில்லனாக லக்கி லுக் கதைகளில் வரும் டால்டன் சகோதரர்களின் ஆவ்ரெல் என்னுடைய தேர்வு சார்

    ReplyDelete
  3. அடிக்கடி முகமூடியை கழட்டிபயமுறுத்திய கிங்கோப்ரா

    ReplyDelete
  4. இது மேரி போட்டியெல்லாம் எடிட்டர் அறிவிப்பாருனு எதிர்பார்க்கல.


    மின்னும் மரணத்தில் வரும் ஜெனரல் கதாபாத்திரம்.மற்றும் ஸ்டீல் பிங்கர்ஸ்.

    இருளின் இராஜியத்தில் வரும் ஒரு சைக்கோ டாக்டர்.
    இரும்பு குதிரையில் தங்கப் புதையல்(டெக்ஸ் கதை).

    இந்த கதைகளில் வில்லன் பாத்திரம் நன்றாக இருக்கும்.
    கொடூரமான வில்லன் ஜெனரல் .


    லவ்வபிள் வில்லன் ஷெரிப் டாக்புல்.

    ReplyDelete
    Replies
    1. சார்...ஷெரிப் டாக்புல்ல வில்லன்னு சொல்லிப்புட்டீங்களே ? பூ...ஹூ...!!

      Delete
    2. அந்த மொட்டைத் தலையும்....மொளகா மூக்கும்....வெள்ளரிப் பழ மொகரையும் .....எப்பவும் கிட் ஆர்டினை ஒதைக்கிர வில்லத்தனத்தை என்னனு சொல்றதுங்க... எடிட்டர் சார்.

      அரபு தேசத்துக்கே கலீபாவாகனும்னு ஒருத்தர் சுத்தி வருவானே....அவரும் சிறந்த லவ்வபிள் வில்லன்.

      Delete
  5. வில்லன்கள் பலர் பட்டய கிளப்பினாலும் கொடூர வில்லன்னா....நம்ம மனம் இவன கொல்லுடான்னு ஓலமிடனும்...பாதிக்கப்பட்டவருக்கு மன வலி குறையக் கூடாதுன்னு நெறய வில்லன்கள் பாத்திருப்போம்தா....ஆனா உடல் வலியும் நேரமாக ஆக அதிகரிப்பு ...என்ன கொன்னுடுன்னு கெஞ்ச வச்சா ....அவன் எப்பேர் பட்ட வில்லனா இருப்பான்....அதேதான்....அந்த அண்டர்டேக்கர்ல டேக்கா கொடுக்கும் டாக்டரேதா...அவன் இல்லாதப்பமும் வலிக்கும்....அவன் அருகில் வந்தா கொல்லத் துடிக்கும்....கொன்னா நாயகி கதி ...என கிலி கொள்ளச் செய்த வில்லன விஞ்சுவாருண்டோ

    ReplyDelete
    Replies
    1. வில்லன் சிறுவயதில் தன் வாழ்வையே சீரழித்தான்....அவனால் நினைத்துப் பார்க்க உவ்வே எனும் இயலாத வாழ்க்கை வாழ்ந்தாச்சு.......ஆனால் மனம் நாடுவதோ அவனையே...அவனை பழிவாங்காமல் காதல் கொள்ளச் செய்யுதுன்னா....அந்த பரகுடா கொள்ளையனே மனங்கவர் வில்லன்...வில்லன்னாலும் எவ்ளோ ஈர்ப்பான விசயங்கள்

      Delete
  6. டாக்டர் ஜோனாஸ் க்ரோ

    ReplyDelete
  7. ரொம்ப கஷ்டமான போட்டி சார்.
    கொடூர வில்லன் - டாக்டர் நோ
    Lovable வில்லன் - ஆவ்ரெல்

    ReplyDelete
  8. மறுபடியும் முதலில் இருந்து1. அண்டர் டேக்கர்2வில்லன்டாக்டர் ஜோனாஸ் க்ரோ 2.லாரன்ஸ்&டேவிட்டின்வில்லன்.கிங்கோப்ரா 3.நில்கவனிவேட்டையாடுவிலெ வில்லனாக வேட்டையாட ஆரம்பித்துஇறுதியில்வேட்டையாடப்படும்போதுநம்மையும் தடதடக்கவைத்த அந்த ஜாக்குவார் வேட்டைக்காரர் அடுத்து லவ்வபிள் வில்லன்ஸ் இதோ 4பேர்டால்டன்ஸ் தேங்க்ஸ் (sriramsir)

    ReplyDelete
  9. கொடூரன்-பெளன்சர் வில்லன் ரால்டன்

    லவபிள் வில்லன்- ஆவ்ரெல் டால்டன்

    ReplyDelete
    Replies
    1. ரால்டன் & டால்டன் !

      செம்ம!

      Delete
  10. Mr.P வில்லனா ....Comedy piece இல்ல

    ReplyDelete
  11. வணக்கம் நண்பர்களே!

    ReplyDelete
  12. வாரத்தின் முதல் பதிவுக்கு நன்றிகள்

    ReplyDelete
  13. கொடுரமாக வில்லன் தங்கக் கல்லறை லக்னர்
    லவ்வபிள் வில்லன் டால்டன் பிரதர்ஸ் ஆவரேல்

    ReplyDelete
  14. புது வில்லன்களெல்லாம் ஞாபகம் வர மாட்டேங்கறாங்க சார்...

    டக்குனு ஞாபகம் வந்தது ஜோக்கர்தான்!

    ReplyDelete
    Replies
    1. வில்லி ? கிரிஸ் ஆப் வால்நார் ?

      Delete
    2. லவ்வபிள் வில்லி: கிரிஸ் ஆப் வல்நார்

      Delete
    3. அய்யோ, நான் டைப் பன்ற நேரத்தில...
      செம சார்...

      Delete
    4. இதை விட என்ன வேணும்... எடிட்டர் ஒவ்வொருத்தரோட ரசனையையும் எப்படி தெரிஞ்சு வச்சிருக்கார் பாருங்களேன்...

      Delete
    5. நம்ம சில்க் வில்லியா? If yes I vote her for option 2

      Delete
  15. வாழ்நாள் வில்லன் - லக்னர் (அ) கஸ்டாப் தங்கக் கல்லரை. இவருடைய வில்லத்தனம் புத்தகமாக படித்தாலும் மிரட்டியுள்ளது..

    நேர்மையான வில்லன் - எல் ம்வர்தோ (ஸ்பெல்லிங் கரிட்டா) கழுகு வேட்டை என்னதான் ஒரு வில்லனாக இருந்தாலும் அவருடைய நேர்மை பாரட்டுக்குறியது.

    காமெடி வில்லன் - நம்ம டால்டன் சகோவை தாண்டி சிரிக்க வைத்தது பொடியன் பில்லி தான்.. அவரே சிறந்த காமெடி வில்லன் என்னை பொருத்தமட்டில்.

    காதல் வில்லன் - சிகாகுவா சில்க் மின்னும மரணம் மற்றும் மார்கோ பிஸ்டலுக்கு பிரியாவிடை.. காதல் வில்லன் மகளிருக்கு மட்டுமே...பிலீஸ்.


    திருந்திய வில்லன் - நில் கவனி வேட்டையாடு அவரு பேரு தொண்டை வரை நிக்குது பட்சே...


    இன்னும இரத்தப்படலம் படிக்காததால் அரசியல் வில்லன், ஏமாற்று வில்லன் ஒன் டைம் வில்லன் மற்றும் பலதரபட்ட வில்லன் மற்றும் வில்லிகளை கூற முடியவில்லை.

    இப்போதேக்கு இவ்வளவுதான் ஞாபகம் வருது எடி சார்...

    ReplyDelete
  16. கொடூர வில்லன் எனும் போது கழுகு வேட்டை தான் நினைவுக்கு வருகிறது.. சமீப இதழ் என்பதால் மட்டுமே அல்ல..
    அப்பாவி சுரங்க தொழிலாளிகளான மூன்று சகோதரர்களுக்கு எதிராக அந்த அதிகார வெறி பிடித்த மஞ்சள் சட்டை அதிகாரியே கொடூஊஊஊஊர வில்லன் பட்டத்திற்கான சரியான தேர்வு..

    ReplyDelete
    Replies
    1. ம.ச.அ க்கு equalஆ இன்னொரு வில்லன தேடுறது கஷ்டந்தான்... நண்பரே...

      Delete
  17. தங்க கல்லறையில் வந்த கஸ்டாப் கேவல் என்கிற லக்னரே மிகவும் கொடூரமான வில்லனாக என்னுடைய தேர்வு சார் மேலும் lovable வில்லனாக லக்கி லுக் கதைகளில் வரும் டால்டன் சகோதரர்களின் ஆவ்ரெல் என்னுடைய தேர்வு சார் நன்றி saran05thala. இது தான் எனது தேர்வும்.

    ReplyDelete
  18. 1. ஹீரோவுக்கு மிகவும் டஃப் கொடுத்த கொடூர வில்லன்(கள்)

    லக்னர் (கஸ்டாப் ஹேவல்)
    ஏஞ்சல் ஃபேஸ்
    அண்டர் டேக்கர் 2 வில்லன் டாக்டர்
    கார்சனின் கடந்த காலம் வில்லன்கள் - குறிப்பாக நணபன்,
    இரும்புக்கை மாயாவிக்கு எதிரான டாக்டர் ஸ்கார்ஸ்
    பெளன்சரின் கறுப்பு விதவை வில்லி
    நள்ளிரவு வேட்டை - எல்மரோ
    லார்கோ மற்றும் ஷெல்டனின் முதல் சாகஸ வில்லன்கள் (அதிலும் குறிப்பாக கடைசி பேனலில் ஷெல்டன் லாரியை வைத்து லிப்டுக்குள் இருக்கும் வில்லனை வதம் செய்வது மாஸ்)

    லவ்வபிள் - ஜோ டால்டன், ஆவ்ரெல் டால்டன், பொடியன் பில்லி, கோச் வண்டியின் கதையில் வரும் ஃபாதர் மற்றும் வழிப்பறி திருடன் (பெயர் மறந்துட்டது)

    ReplyDelete
  19. கொடூர வில்லன் என்றால் தங்கக் கல்லறை லக்னரை றக்க முடியுமா.?

    லவபிள் வில்லன் என்றால் எங்கேயும், எப்போதும் டால்டன்ஸ் தான்

    ReplyDelete
    Replies
    1. அடடே பெரும்பான்மை நமது ரசனையுடன் ஒத்து வருகிறதே. Good good

      Delete
  20. எல்லாருக்கும் வணக்கம் வைப்பது சின்னமனூர் சரவணர்ங்க.....

    ReplyDelete
  21. அண்டர் ேடேக்கெர்

    ReplyDelete
  22. பொடியன் பில்லி

    ReplyDelete
  23. கிெரிஸ் வல்நார்

    ReplyDelete
  24. ஸ்பைடரின் பல வில்லன்கள், டெக்ஸின் வில்லன்கள் இன்னும் பல நாயகரின் வில்லன்கள் நம்மை நிறைய கவர்ந்துள்ளனர் என்றாலும்..

    தங்கக் கல்லறையில் வந்த சூழ்ச்சிக்கார வில்லன் 'லக்னர்' (கஸ்டாப் ஹெவல்) என்றுமே மறக்க முடியாதவர், மற்றும் வாலி 'பிளவுண்ட்', 'க்ரேஸி கோலே'
    ஆகியோரும்.

    போலவே... இரும்புக்கை எத்தனில் வரும் 'ஸ்டீல் பிங்கர்ஸ்' உண்மையில் என்னை அசரடித்தவர். (இந்த கதையின் தொடர்ச்சி இனி காமிக்ஸ் எக்ஸ்பிரஸில் வரும் என்று அறிவித்து வாசகர்களின் ஏகோபித்த எதிர்ப்பை தாங்கள் சந்தித்து குட்டு வாங்கியது ஒரு மறக்கவியலா நினைவுங்க விஜயன் sir.)

    அடுத்து மின்னும் மரணத்தில் வந்த கமாண்டர் 'விகோ' 'கிம்பால்' 'பின்லே' கவர்னர் 'லோபெஸ்' மற்றும் டோனவன் என சொல்லிக்கொண்டே போகலாம்.

    அடுத்து இரத்தக் கோட்டை கதையில் இடம்பெற்ற இன்னும் ஒரு வலுவான வில்லன் ஒற்றைக் கண் 'குவானா' வும் என்னை அசரடித்தவர்.

    அதாவது மற்ற கதைகளின் வில்லன்கள் மிகுந்த செயற்கையாக ஏதோ பேருக்கு வில்லத்தனம் செய்வார்கள்.. ஆனால் டைகர் கதையில் இடம்பெற்ற இந்த எதிர் நாயகர்கள் அனைவரும் நாயகனுக்கு இணையாக உருவாக்க பட்டவர்கள் என்பது என் கருத்து.

    நினைவில் இருந்து டைப்புகிறேன்... பாருங்கள் இந்த புத்தகங்களை வாசித்து ஆண்டுகள் பல ஆகியிருந்தாலும் இன்னும் நினைவில் உள்ளனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

    டைகர் கதையின் மீது உள்ள பெரும் பிரியத்தின் காரணமாக அதில் வரும் 'ஷினி' எனும் பாத்திரத்தின் பெயரை எனக்கு மகள் பிறந்த போது வர்ஷினி என்று பெயரிட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. // ஆனால் டைகர் கதையில் இடம்பெற்ற இந்த எதிர் நாயகர்கள் அனைவரும் நாயகனுக்கு இணையாக உருவாக்க பட்டவர்கள் என்பது என் கருத்து. // மிகச்சரி

      Delete
    2. உங்க காமிக்ஸ் காதல் ஆச்சர்யம் ஊட்டுகிறது!

      டைகரின் தாக்கம் வேறு லெவல். நிறைய பேரிடம் இதே அளவு தாக்கத்தை காணலாம்.

      Delete
    3. ///அதாவது மற்ற கதைகளின் வில்லன்கள் மிகுந்த செயற்கையாக ஏதோ பேருக்கு வில்லத்தனம் செய்வார்கள்.. ஆனால் டைகர் கதையில் இடம்பெற்ற இந்த எதிர் நாயகர்கள் அனைவரும் நாயகனுக்கு இணையாக உருவாக்க பட்டவர்கள் என்பது என் கருத்து.///

      மிகச் சரி! நான் நெனைச்சேன்! நீங்க சொல்லீட்டிங்க நண்பரே!

      Delete
    4. அருமையான டைகர் வில்லன்கள் தொகுப்பு .

      Delete
    5. அருமை ராஜ்குமார்.

      Delete
  25. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  26. மறுக்கவே முடியாது சார் எனது சாய்ஸ்.
    மிரட்டலான வில்லன் மங்கூஸ்
    லவ்வபில் வில்ல(லி)ன் இரினா...

    ReplyDelete
  27. கொடூர வில்லன்;

    அறுவை சிகிச்சை நிபுணன்... Quint... என்னைப் பொருத்தவரை Undertakerல் வரும் இவனே "கொடூர வில்லன்" பட்டத்துக்கு ஏற்றவன்... மிக அறிவுஜீவியான, இரக்கமற்ற, ஏறக்குறைய பித்து பிடித்த Quint characterஐ என்னால் "Angel of Death" Joseph Mengele உடன் ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை... தனது அறிவை, தனது கோணல்தனமான கொள்கைக்காக, குதர்க்கமாக, ஒரு sadistic fervourஉடன் உபயோகப்படுத்தும் Quintஏ என்னளவில் கொடூர வில்லன்...

    Lovable வில்லன்:

    இது ஒரு tossup... பொடியன் பில்லிக்கும், Averellக்கும் இடையே... மயரிழையில் loveable வில்லன் பட்டத்தை தட்டிப் பறிப்பவர்... என் செல்ல Averell...

    ReplyDelete
  28. வில்லன் எல்லாம் டக்குன்னு நினைவு வரவில்லை சார்.

    ஆனால் காரிகன் கதை எனில் டாக்டர் செவன் இருந்தால் மிகவும் எதிர்பார்ப்பேன்..

    எனவே எனக்கு பிடித்த வில்லன் டாகடர் செவன்

    ReplyDelete
  29. கொடூர வில்லன் - ரகுவரன் , லவ்லி வில்லி - வரலெக்ஷ்மி.. ஓ இது out-of-syllubus பதிலா?

    அண்டர்டேக்கர் 2 வில் வரும் டாக்டர் ஒரு கொடுரமான வில்லன், லவ்லி வில்லன் நம்ம மதியில்லா மந்த்திரி

    ReplyDelete
  30. ///ஒரு கொடூர வில்லன் ? ஒரு lovable வில்லன் ? என்று 2 தேர்வுகள் செய்திடலாம் folks ?///

    கொடூரவில்லன் - கஸ்டாப் (போலி லக்னர்)
    Lovable வில்லன் - டால்டன் சகோஸ்

    ReplyDelete
    Replies
    1. கொடூர வீல்லன் - ராக்கி டர்பின் (இரத்த தாகம், ஓநாய் வேட்டை)

      லவ்வபிள் வில்லன் - ரே க்ளம்மன்ஸ் (கார்சனின் கடந்த காலம்)

      Delete
    2. கொடூர வில்லன் - ஒற்றைக்கண் குவானா (இரத்தக்கோட்டை)

      லவ்வபிள் வில்லன் - மட்டன் மர்டாக் (வில்லனுக்கொரு வேலி)

      Delete
    3. ரே கிளம்மன்ஸ் செம.

      நட்புக்காக தன் உயிரையும் கொடுக்கும் இடத்தில் லவபிள் ஆனா தங்கத்தில் பங்கு தராமல், கூடவே புதைத்து வைத்ததை தோண்டியவர்களையும் கொல்லும் இடத்தில் கொடூரவில்லன்.

      Delete
    4. ரே கிளம்மன்ஸ் lovable வில்லன் அல்ல மிகவும் கொடூரமான வில்லன். நமக்கு அவன் மேல் பட்சாதாபம் ஏற்படுவது டோனாவால் தான். அந்த கதையில் வரும் ஒவ்வொரு வருமே அட்டகாசமான வில்லன்கள் தான்.

      Delete
    5. நண்பனுக்காக ....எதையும் செய்வேன்னு கார்சன்ட சொல்வானே....கார்சன காப்பாத்துவது....நெனச்சா கொன்னிருக்கலாம்...சாகவிட்டிருக்கலாம் குதிரையால் இழுபடட்டும்னு...மகளுக்காக....அதை விட டெக்ஸ் மகன காக்க உயிர பணயம் வைத்து சாகுமிடம்...நெனச்சா மகள காப்பாத்திட்டு ஒடிருக்கலாம்

      Delete
    6. Kumar salem@

      லவ்வபிளா இருக்கிறதுக்கு நல்லவனா இருக்கணும்னு அவசியமில்லை குமார்.!
      ரே க்ளம்மன்ஸ் மாதிரி ஒரு எத்தனை வேறெந்த கதையிலும் பார்த்ததேயில்லை.!

      அக்காலங்களில் எம்ஜியாருக்காக மட்டுமல்ல எம்ஆர் ராதாவுக்காக படம் பார்த்தவர்களும் ஏராளம் உண்டு.! நான் எம் ஆர் ராதா ரசிகன் குமார்.. எனவே எனக்கு ரே க்ளம்மன்ஸ் பிடித்திருந்தது.! :-)

      Delete
    7. // லவ்வபிளா இருக்கிறதுக்கு நல்லவனா இருக்கணும்னு அவசியமில்லை குமார்.! // agreed

      Delete
    8. ///நண்பனுக்காக ....எதையும் செய்வேன்னு கார்சன்ட சொல்வானே....கார்சன காப்பாத்துவது....நெனச்சா கொன்னிருக்கலாம்...சாகவிட்டிருக்கலாம் குதிரையால் இழுபடட்டும்னு...மகளுக்காக....அதை விட டெக்ஸ் மகன காக்க உயிர பணயம் வைத்து சாகுமிடம்...நெனச்சா மகள காப்பாத்திட்டு ஒடிருக்கலாம்////

      அத்தனையும் முத்தான பாய்ண்ட்கள் ஸ்டீல்.!
      கார்சனின் கடந்த காலத்தில் ஒவ்வொரு கேரக்டரும் அப்படியே மனதில் பதிந்துள்ளனர்.!
      அதிலும் ரே க்ளம்மன்ஸ்... செம்ம கேரக்டர்..😍😍

      Delete
    9. Mika sari anna "Ray" than enoda fav a double face or two face like a coin....... Apram athula vara david boon vaako tolan epdi ellarum sema characters

      Delete
  31. 1.ராக்கி டர்பின் - இரத்த தாகம் ..

    2.மெபிஸ்டோ .. கிட் மற்றும் கார்ஸனை டெக்ஸ்க்கு எதிராக நிற்க வைத்தவன் ..

    3.லக்னர் - கதையின் மையமே அவன்தான் ..

    4.டாக்டர் quint - அண்டர்டேக்கர் 2 .. Most sadist of all ..

    Lovable னா .. டால்டன் bros, ம.இ.மந்திரி ..

    ReplyDelete
  32. ##ஒரு கொடூர வில்லன் ? ஒரு lovable வில்லன் ? என்று 2 தேர்வுகள் செய்திடலாம் folks ?####



    ஒரு கொடூர வில்லன் சந்தேகமமே இல்லாமல் நம்ம மங்கூஸ் தான்..

    வில்லனுக்கு உரிய ஆஜானுபாகுவான உருவம், வசனங்கள் , எதுவும் இல்லாமல் நம்ம 13 ன்றை விரட்டி,
    சென்ற இடம் எல்லாம் சாத்தான் போல ரத்த சுவடுகளை பதிப்பது இந்த வயதான கிழம் என்றால் யார் தான் நம்புவார்கள்...


    லவ்வுபிள் வில்லன்...

    அந்த எளிய மனிதனின் வாழ்வில் ஒவ்வொரு செயலும் தோல்வி,

    போகுமிடம் எல்லாம் புறக்கணிப்பும் & அவமானங்களும்,

    அனைவரையும் சிரிக்க வைக்க முயற்சித்தவன் வாழ்க்கை,
    நாள் முழுதும் அழுது கொண்டே தான் இருந்தது..

    விதியின் சந்தர்ப்ப வசத்தால் கொடூர வில்லன் ஆகி போனவன் இவன்...

    நமது இதழ்களில் இவரது கதைகள் ஒரு சில தான் வெளிவந்துள்ளது இருந்த போதிலும் பரிதாபத்துக்குரிய லவ்வுபிள் ஜீவன் ஜோக்கர் மட்டுமே..

    ReplyDelete
  33. 1.மெபிஸ்டோ
    2.டால்டன் சகோதரர்கள்

    ReplyDelete
  34. கொடூர வில்லன் ::
    தங்கக் கல்லறை - லக்னர்.

    பாதாள போராட்டம் - நெமோ.

    அமைதியான வில்லன் :: மங்கூஸ்.

    லவ்வபிள் வில்லன் ::
    டால்டன் பிரதர்ஸ் ஆவரேல்.
    மதியில்லா மந்திரி.

    ReplyDelete
  35. ஒரு கொடூர வில்லன் ?

    மெபிஸ்டோவும்
    Mr. P யும்
    தந்தையையும் மகனையும் எதிரெதிரே நிற்கவைக்ககூடிய திறமை 💪🏼

    ஒரு lovable வில்லன் ?

    பி பி வி
    மார்கோவை விட பொருத்தமானவர் இருக்கக்கூடுமோ 🤷🏻‍♂️😍🥰
    .

    ReplyDelete
  36. சிரிப்பு வில்லன் : பொடியன் பில்லி
    சிறப்பு வில்லன் : த. கோ. லக்னர்

    ReplyDelete
  37. அதாவது தங்க கல்லறை.

    ReplyDelete


  38. 🤣🤣🤣🤣🤣

    அந்த பின்குறிப்பு
    சான்சே இல்ல சார் செம்ம 😇
    .

    ReplyDelete
    Replies
    1. நானும் நோட் செய்தேன். ஆனால் நீங்க சொல்லிடீங்களே??

      Delete
  39. ஸ்பைடர் வில்லன்களில் அனைவரும் பிடிக்கும் என்றாலும் கொஞ்சம் அதிகம் பிடித்தது வில்லன்கள் பெயர் தெரியாததால் புத்தகங்கள் பெயர்

    பழி வாங்கும் பொம்மை
    சைத்தான் விஞ்ஞானி
    பாட்டில் பூதம்
    நீதி காவலன் ஸ்பைடர்

    தல டெக்ஸ்

    கழுகு வேட்டை
    காரசனின் கடந்த காலம்
    டிராகன் நகரம்
    நள்ளிரவு வேட்டை

    டைகர் லிஸ்ட் பக்காவாக மேலே ராஜ் போட்டிருக்கிறார்.

    ReplyDelete
  40. கொடூர வில்லன் தங்கக் கல்லறை லக்னர் &
    அண்டர்டேக்கர் பாகம் 2 ல் வரும் டாக்டர் சார்!

    Lovable Villain ஆவ்ரெல் சார்!

    எப்பொழுதும் பிடிப்பது ஸ்பைடரின் சாகசத்தில் வரும் அனைத்து வில்லன்களும் சார்!

    ReplyDelete
  41. // ஒரு கொடூர வில்லன் ? //

    அண்டர் டேக்கரில் வரும் அந்த டாக்டர் வில்லன்...
    செய்யற வில்லத்தனத்தை இரசிச்சி கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இல்லாமல் சிரித்துக் கொண்டே செய்யும் கொடூரங்கள் எல்லாம் சான்ஸே இல்ல...

    // ஒரு lovable வில்லன் ? //

    தோர்கல்-கிரிஸ் ஆப் வால்நார்...

    ReplyDelete
    Replies
    1. ///தோர்கல்-கிரிஸ் ஆப் வால்நார்..////

      ----ஆமா...ஆமா...😉

      Delete
    2. // ஒரு lovable வில்லன் ? //

      //தோர்கல்-கிரிஸ் ஆப் வால்நார்...//

      வாங்க... வாங்க....

      Delete
    3. "கிரிஸ் மேல கிரஸ்" னு சொல்லிட்டு ஒருத்தர் வருவாரே...

      இன்னும் காணலையே??

      Delete
  42. கொடூர‌வில்லன் - லக்னர் (டைகர்), ஜோக்கர் (பேட்மேன்), El Murdo (Tex)

    திமிர் & தலைக்கனம் பிடித்த வில்லன் - ஸ்பைடர்

    Lovable வில்லன்கள் - பொடியன்‌ பில்லி, ப்ளாக் ஸ்கெலெட் (சிக்பில் & கோ), ஸ்பைடர் குள்ளன்

    வில்லி - One Only: Chihuahua Pearl @ சிகுவாகுவா சில்க்

    ReplyDelete
  43. பிடிக்காத வில்லன் டௌகால் பிடித்த வில்லன் டயபாலிக்

    ReplyDelete
  44. கொடூர வில்லன்கள்
    1. லக்னர் - தங்கக்கல்லரை
    2. ஏஞ்சல்ஃபேஸ் - மின்னும் மரணம்
    3. மன்கூஸ் - இரத்தப்படலம்

    Lovable வில்லன்கள்

    1. ஆவ்ரெல் டால்டன்
    2. பொடியன் பில்லி
    3. ஸ்பைடர் & டயபாளிக்

    பரிதாப வில்லன்

    1. மதியில்லா மந்திரி

    ஊவ்வ்வே வில்லன்

    1. டாக்டர் quint - அண்டர்டேக்கர் 2

    MGR பட பானி வில்லன்கள்

    நம்ம அதிகாரி டெக்ஸ் கதைகளில் வரும் அனைவரும்

    ReplyDelete
    Replies
    1. ///MGR பட பானி வில்லன்கள்

      நம்ம அதிகாரி டெக்ஸ் கதைகளில் வரும் அனைவரும்///

      ஹாஹாஹா!

      Delete
    2. // MGR பட பானி வில்லன்கள்

      நம்ம அதிகாரி டெக்ஸ் கதைகளில் வரும் அனைவரும் //

      எப்படி எல்லாம் உதாரணம் சொல்றாங்க. சூப்பர்.

      Delete
  45. தோர்கலின் மாயாஜால உலகம் – பகுதி-4

    வைகிங் கடவுளர்களும் அவர்களின் உலகங்களும்

    தோர்கல் தொடரில் இரண்டாம் உலகம், மூன்றாம் உலகம், அசுரர் உலகம் என்றெல்லாம் கதைகள் பயணிக்கும். கதாசிரியர் வான் ஹாம் இத்தொடரை வைகிங் (ஸ்கேண்டிநேவியன்) புராணங்களின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட களத்தின் மீதுதான் உருவாக்கினார். அப்படியிருக்க இந்த புராணங்கள் குறித்த சில அடிப்படை தகவல்களை நாம் தெரிந்து கொண்டோமேயானால் இத்தொடரினை எளிதாக புரிந்து கொண்டு அதனைப் பின்பற்றி நல்ல வாசிப்பு அனுபவத்தை பெற இயலும் என்பது நிதர்சனம்.

    அதே சமயத்தில் ஸ்கேண்டிநேவியன் புராணமானது எண்ணற்ற கதைகளையும், கிளைக் கதைகளையும், சிக்கலான முடிச்சுகளையும், அளப்பரிய தகவல்களையும் தன்னகத்தே கொண்டது. அவை அனைத்தையும் தெரிந்துகொண்ட பின்னரே தோர்கலை படிக்க வேண்டும் என்றால் அது சாத்தியமில்லாத ஒன்று. எனவே தோர்கல் தொடருக்கு அவசியமான சில தகவல்களை மட்டும் இங்கே காண்போம்.

    உலகங்கள் உருவான கதை:

    தொடக்கத்தில் இந்த பிரபஞ்சம் இன்னுங்ககாப் (GINNUNGAGAP) என்னும் சூனியமாக இருந்தது. எங்கும் வெறுமையான இருள் மட்டுமே கோலொச்சிக் கொண்டிருந்தது. திடீரென கால ஓட்டம் தொடங்கி இரண்டு பேருலகங்களான நிப்ல்ஹேம் (NIFLHEIM) என்ற பனி உலகமும் அதற்கு நேரெதிராக முஸ்ப்ல்ஹேம் (MUSPELHEIM) என்ற நெருப்பு உலகமும் பரிணமித்தன.

    இரண்டு உலகங்களும் பெருகி வளர்ந்து ஒன்றையொன்று எதிர்கொண்ட போது பனி உருக ஆரம்பித்தது. பனியிலிருந்து இமிர் (YMIR) என்ற அசுரனும் ஆதும்பலா (AUDHUMBALA) என்ற பசு உருவத்திலான ஓர் உயிரினமும் உருவாகிறார்கள். இமிரின் வியர்வையிலிருந்து அசுரர்கள் உருவாயினர். ஆதும்பலா மூலமாக பனிப்பாறையிலிருந்து ப்யூரி (BURI) என்ற கடவுளின் மூதாதையர் வெளிப்படுகிறார். அவர் வழியில் வரப்பெற்றவர்களே ஓடினும் (ODIN) அவருடைய சகோதரர்களான விலி (VILI) மற்றும் விய் (VE) இருவரும்.

    இமிரின் வழியாக அசுரகுலம் தழைத்தோங்குகிறது. அசுரர்களின் வளர்ச்சியைத் தடுக்க நினைத்த ஓடினும் அவரது சகோதரர்களும் இமிர் உறக்கத்தில் இருக்கும்போதே அவனைக் கொன்று விடுகின்றனர். அவனுடைய இரத்த வெள்ளத்தில் அனைத்து அசுரர்களும் அழிந்துவிட அதிலிருந்து தப்பி பிழைக்கும் பெர்ஜெல்மிர் (BERGELMIR) மற்றும் அவனது துணை மூலமாகவே பிற்கால அசுர இனம் உருவாகிறது.

    இமிரின் உயிரற்ற உடலின் பாகங்களில் இருந்து ஓடின் முதலான மூன்று சகோதரர்களும் நிலம், கடல், ஆகாயம், நட்சத்திரம் இன்னபிற உயிர்கள் அனைத்தையும் படைக்கின்றனர். மேலும்…

    1) ஏசிர் (AESIR) கடவுளர்களான தாங்கள் வாழ அஸ்கார்ட் (ASGARD)
    2) மனிதர்கள் (HUMAN) வாழ பூமியாகிய மிட்கார்ட் (MIDGARD)
    3) வாநிர் (VANIR) கடவுள்களுக்கான வானாஹேம் (VANAHEIM)
    4) அசுரர்களின் (GIANTS) இருப்பிடமாக யோடுன்ஹேம் (JOTUNHEIM)
    5) எல்ப்களின் (ELVES) உலகமாக ஆல்ஃப்ஹேம் (ALFHEIM)
    6) குள்ளர்களின் (DWARFS) உலகமாக ஸ்வார்ட்ஆல்ஃப்ஹேம் (SWARTALFHEIM)
    7) இறந்தவர்களின் நரகலோகமாக ஹெல்ஹேம் (HELHEIM)

    என்னும் ஏழு உலகங்களையும் உருவாக்குகின்றனர். ஆக மொத்தம் ஒன்பது உலகங்களும் இக்த்ரசில் (YGGDRASIL) என்ற பிரபஞ்ச மரத்தின் கிளைகளாலும் வேர்களாலும் தாங்கப்படுகிறது (பார்க்க இணைப்புப் படம்). இந்த உலகங்கள் பல்வேறு பெயர்களாலும் அழைக்கப் படுகின்றன. எனவே பொதுவான பெயர்களே இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.

    அஸ்கார்டை பிற உலகங்களோடு இணைக்க பைஃப்ராஸ்ட் (BIFROST) என்னும் வானவில் பாலம் அமைந்துள்ளது. மிட்கார்டை சுற்றிலும் மிகப்பரந்த கடல் பரப்பு சூழ்ந்துள்ளது. அதில் மிகப்பெரிய பாம்பு (THE MIDGARD SERPENT) சுற்றி வருகிறது.

    இக்த்ரசிலும் ஒன்பது உலகங்களும் பேரழின்போது (RAGNORAK) அழிக்கப்படும் என கூறப்படுகிறது. இதுவே உலகங்களின் முடிவாக இருக்கும். மேலும் அஸ்கார்டில் உள்ள வால்ஹல்லா (VALHALLA) வில் போர்க்களத்தில் இறந்த மானுடவீரர்கள் ஓடினின் விருந்தில் கலந்துகொண்டு பேரழின் போது அவர் பொருட்டு அசுரர்களை எதிர்த்து போரிட காத்திருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

    கடவுளர்களும் முக்கியமான பிற உயிரினங்களும்:

    கடவுள்கள் ஏசிர் (AESIR) மற்றும் வாநிர் (VANIR) என இருவகையினராக பிரிக்கப் படுகிறார்கள்.

    1) ஒடின் (ODIN) – முதன்மைக் கடவுள், கடவுளரின் அரசன்
    2) ஃபிரிக் (FRIGG) – ஓடினின் மனைவி, கடவுளரின் அரசி
    3) தோர் (THOR) – ஓடினின் மகன், இடி மின்னல் தேவன்
    4) லோகி (LOKI) – ஓடினின் மற்றொரு மகன், சேட்டைக் கடவுள்
    5) வால்கைரி (VALKYRIE) - போர்க்களத்தில் இறந்த வீர்ர்களை வால்ஹல்லாவில் சேர்க்கும் தேவதைகள்
    6) நிதோக் (NITHOGG) – நிப்ல்ஹேமை பாதுகாக்கும் டிராகன்
    7) யோர்முன்காண்டர் (JORMUNGANDR) – மிட்கார்டை சுற்றியுள்ள கடலில் வாழும் மிகப்பெரிய பாம்பு

    தோர்கலைத் தொடரில் பயணிக்க இதுமட்டிலுமான வைகிங் புராண தகவல்கள் போதுமென்று நினைக்கிறேன். கூடுதல் விவரங்கள் தேவைப்படும் ஆல்பங்களில் அதுகுறித்து அறிந்து கொள்வோம்.

    நன்றி நண்பர்களே!

    தொடரும்...

    ReplyDelete
    Replies
    1. சிறப்பான தொகுப்பு நண்பரே👌👌👌

      ///கடவுள்கள் ஏசிர் (AESIR) மற்றும் வாநிர் (VANIR) என இருவகையினராக பிரிக்கப் படுகிறார்கள்.//

      ---வித்தியாசம் என்ன??

      ---இந்த 7கடவுளர்களில் 5,6&7 க்கு பணி தெரிகிறுது. முதல் 4வரும் அஸ்கார்டா??

      Delete
    2. வித்தியாசம்னு பார்த்தா பெருசா ஒன்னுமில்லை நண்பரே...
      எல்லாம் நம்ம சைவம் வைணவம் மாதிரி தான்!

      வேணும்னா இப்படி சொல்லலாம்...


      ஏசிர்கள் முதன்மைக் கடவுள்கள், வீரம், உடல்திறன், போர் இவற்றால் பெயர் பெற்றவர்கள். ஓடின்,ஃபிரிக்,தோர்,...

      வாநிர்கள் இரண்டாம் நிலை கடவுள்கள். சற்றே வலிமை குறைந்தவர்கள். ஃபிரெயா,ஃபிரெயர்,...

      இருவருக்கும் போர் நடந்தது, அதன் விளைவாக தங்களுக்குள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து இடம் மாற்றி கொண்டது என கதை நீளும். நம்மை பொறுத்தவரை இருவருமே கடவுள்கள். அவ்வளவுதான்.

      ஆமாம் நண்பரே, நான்கு பேரும் அஸ்கார்டியன்ஸ் தான்.

      Delete
    3. Very good தோர்கல் அலசல் சரவணன். பாராட்டுக்கள்.

      Delete
    4. அருமை நண்பரே...வாநிர் கடவளுக்காக வானாஹேம்....நம்ம வான்ஹேமா இருக்குமோ

      Delete
  46. The Good the Bad and the Ugly
    திரைப்படத்தைப் பற்றிய ஒரு விமர்சனம் உண்டு. அதாவது Bad ம் Ugly யும் விட அதிகம் பேரைக் கொன்றது Good தான். அப்படிப் பாத்தா நம்ம அதிகாரி கொன்றது எத்தனைப் பேருன்னு எண்ணத்தான் முடியுமா? .Ok ஒரு கொடூர வில்லனைச் சொல்வது மிகவும் கடினம். ஆனால் lovable வில்லன்ஸ் டால்டன்ஸ்தான்!

    ReplyDelete
  47. கொடூர வில்லன் - தங்ககல்லறையில் வரும் லக்னர்
    loveable வில்லன் - ஆவ்ரல்்டால்டன், மதியில்லா மந்திரி

    ReplyDelete
  48. ஹீரோயிஸம் என்பதெல்லாம் நிஜத்திற்கு ஒவ்வாத விஷயங்கள்! குழந்தைத்தனமானது!!

    எப்போதுமே "சூழ்நிலைகள்" தான் மிகப்பெரிய வில்லன்கள்! அது கொடுக்கும் வலியையும், வேதனையையும் எதிர்கொள்ளத்தான் மிகப்பெரிய போராட்டம் தேவைப்படுகிறது!

    மிக நெருக்கடியான "சூழ்நிலைகள்" எப்படி எதிர்கொள்ளப்படுகிறது எனும் படிப்பினையை கொடுப்பது தான் ஒரு கதையினுடைய நோக்கமாக இருக்க முடியும்! அது நமது நிஜ வாழ்க்கையையும் பலப்படுத்த உதவும்!!

    ஒரு கதையை படிப்பதன் மூலமாக ஒரு முழு வாழ்க்கையின் அனுபவத்தைப் பெறுகிறோம்! 500 கதைகளை (தரமான) படிப்பது என்பது இந்த ஒரு பிறவியிலேயே 500 முறை வாழ்ந்ததற்கு ஒப்பானதாகும்!

    சூப்பர் ஹீரோ - சூப்பர் வில்லன் என்பதில் எல்லாம் பெரிதாக நாட்டம் இல்லை!

    நாம் எல்லோருமே சூழ்நிலை கைதிகள் தான்!

    நாம் நம்மை எப்படி வெளிப்படுத்திக் கொண்டாலும், நமது தொழில், உறவு, நட்பு இவற்றிற்குள்ளேயே எத்தனை விதமான நாடகங்களை நடத்துவோம் என்பது நம் தனிப்பட்ட "மனதிற்கு" தெரியும்!

    சூழ்நிலைகளை விட பெரிய வில்லன்கள் கிடையாது என்னும் போது ஹீரோவோ, வில்லனோ எனது முதல் தேர்வு "கிராபிக் நாவல்" போன்ற கதைகள்!

    ReplyDelete
    Replies
    1. அப்பாலிக்கா உலக வாழ்க்கை முறையை நையாண்டியாக எடுத்துரைக்கும் "கார்ட்டூன்ஸ்"!!!

      Delete
    2. டால்டன்ஸ், கார்காமெல், மதிமந்திரி

      Delete
    3. // சூழ்நிலைகளை விட பெரிய வில்லன்கள் கிடையாது //

      உண்மையான வரி!

      Delete
    4. வித்தியாசமான எண்ணம். ஆனால் நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை மிதுன்.

      Delete
    5. அருமை மிதுன் அப்படியே எனக்கு என்ன கருத்துக்கள் உண்டோ அதை அப்படியே பிரதிபலித்து இருக்கிறீர்கள். கிராஃபிக் நாவல், கார்ட்டூன் இரண்டுக்கும் ஜே ஜே

      Delete
  49. நேற்று பதிவை படித்தவுடன் என்ன எழுத என தோன்றவில்லை. நண்பர்கள் பின்னூட்டத்தை படித்த பிறகு அட இவ்வளவு வில்லன்களா என ஆச்சரியம். நண்பர்கள் ஒவ்வொரு தேர்வும் ஒரு ரகம், மிகசிறந்த தேர்வுகள் அவர்களின் காமிக்ஸ் காதலை வெளிப்படுத்தும் விதமாக உள்ளது. பாராட்டுக்கள் நண்பர்களே.

    எனது சாய்ஸ் வில்லன்/வில்லி கதாபாத்திரங்கள்

    தங்ககல்லறை - லக்னர். தங்கத்திற்காக இவன் ஆடும் ஆட்டம் சான்ஸே இல்லை.

    அண்டர் டேக்கர் - டாக்டர் கதாபாத்திரம் மிகவும் ரசித்த கதாபாத்திரம். யாராவது அவரிடம் வரும் போது ஆக இந்த மனுஷன் இவர்களை என்ன செய்ய போகிறானா என்ற பதைபதைப்பு மனதை ஆக்ரமிப்பு விடும்.

    இரத்த படலம் - மங்குஸ். பெயர்தான் காமெடியாக தெரியும் ஆனால் செய்வது எல்லாம் இரத்தத்தை உறைய வைக்கும் செயல்கள்.

    தோர்கல் - கிரிஸ் ஆப் வால்னர்; நீ நல்லவலா இல்லை கெட்டவலா என யூகிக்க முடியாத கதாபாத்திரம்.

    ReplyDelete
  50. //கிரிஸ் ஆப் வால்னர்; நீ நல்லவலா இல்லை கெட்டவலா என யூகிக்க முடியாத கதாபாத்திரம்//

    அதுதான் சக்சஸ்!

    ReplyDelete
  51. வில்லனுக்காகவே படைக்கப்பட்ட கதைத்தொடர் மதியில்லா மந்திரி மட்டுமே.



    முழுக்க முழுக்க வில்லன் மட்டுமே பிரதான கதாபாத்திரம்.

    நவ இரசங்களையும் வெளிப்படுத்தி ""கலீபா""ஆகனுங்கற மந்திரியாருடைய குரூரமான செயல்கள் ஒவ்வொன்றும் தனி இரகம்.

    இந்த தொடரில் கதைகள் வெளியிடாதது சற்று வருத்தமே.

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் வருத்தமே ஶ்ரீ...

      Delete
    2. மதியில்லா மந்திரி போடுற குயுக்தியான திட்டங்களும் அவை சுவாரசியமான முறையில் தோல்வியடைவதையும் நகைச்சுவையுடன் சொல்லியிருப்பார்கள்.விற்பனையில் சோபிக்காததால் ஆசிரியர் நிறுத்திவிட்டார்.மிக வருத்தம் தான்.என்ன செய்வது.

      Delete
  52. Editor's new post priyatels.rush to read it!

    ReplyDelete
  53. terror villians- General Golden Mane-தங்கத்தலையன், மங்கூஸ், Barracuda villians, a pedophile villian in some graphic novel, policeman in that African american graphic novel

    sweet villians- Carcamel, don in mack and jack, Jesse james, billy the kid, chihuahua pearl

    ReplyDelete