Powered By Blogger

Saturday, May 29, 2021

சனிக்கிழமை ரவுண்டப் !

 நண்பர்களே,

வணக்கம். இந்த வாரத்தின் ஒரு நாளில் முக்கிய பிரெஞ்சு பதிப்பகங்களுடனானதொரு ZOOM மீட்டிங்கில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டியது ! கவலை தோய்ந்த முகங்களுடன், இங்குள்ள கொரோனா கொடும்தாண்டவம் பற்றியும், நமது தடுப்பூசி சாத்தியங்கள் பற்றியும் நிறைய நேரம் கேட்டுத் தெரிந்து கொண்டவர்கள், அக்கறையாய் நமது மார்க்கெட் நிலவரங்களையும் பற்றி விசாரித்தார்கள் ! கடைகளிலும், புத்தக விழாக்களிலும் பெரிய திண்டுக்கல் பூட்டுக்கள் தொங்குவதை பற்றியெல்லாம் ரொம்பவே விலாவாரியாய்ச் சொல்லி வைத்து, அவர்களது சங்கடங்களை மேற்கொண்டும் அதிகரிப்பானென்று, மேலோட்டமாய் மட்டுமே சொல்லி விட்டு - நமக்கு சுவாரஸ்யம் தரக்கூடிய விஷயங்களைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தேன் !

எனது முதல் கேள்வி, 'தளபதி' சாரின் இரண்டாம் (க்ளைமாக்ஸ்) ஆல்பம் எப்போது ரெடியாகும் என்பதாகவே இருந்தது ! "Not so good news" என்றார்கள் பதிலாய் ! தொடரினில் பணியாற்றி வரும் புது அணியின் ஓவியர் வேறு ஏதோவொரு project-ல் மும்முரமாய் இருப்பதால், 2022-ன் ஏதோவொரு தருணத்தில் ரெடியாகிடக்கூடும் என்று சொன்னார்கள் ! No dates as such ; ஆகையால் நமது 2022 அட்டவணையிலும் நம்பி, தைரியமாய் அறிவிக்க வழி தெரியக்காணோம் ! So  'தல' ஆண்டு # 75-ல் தான் தளபதியையும் கண்ணில் காட்ட இயலும் போலும் !!

எனது அடுத்த கேள்வி - மோனப்பார்வையாளரின் அடுத்த ஆல்பம் எப்போதென்பது குறித்தே இருந்தது ! XIII-ன் காத்திருக்கும் ஆல்பம் # 28 குறித்து இன்னமும் உறுதியான தேதிகளில்லை ; ஆனால் நடப்பாண்டின் இறுதிக்குள் இருந்திடுமென்று நம்பலாமாம் ! "2132 மீட்டரில்" (ஆல்பம் # 26) துவங்கிய அந்தத் 'திக் திக்' பயணம் - "நினைவோ ஒரு பறவை" (ஆல்பம் # 27) இதழினில் முற்றுப் புள்ளி காணும் கையோடு, மறதிக்கார XIII-ஐ வேறொரு திக்கில், இன்னொரு டபுள் ஆல்பப் பயணத்தில் இட்டுச் செல்லவுள்ளது போலும் ! இம்முறை (மறுக்கா) க்யூபாவுக்குப் பயணம் போகிறாராம் மனுஷன் ; அப்புறமாய்  ரஷ்யாவுக்கு ! திரும்பவும் ஜெயில்வாசம் அது, இதுவென்று ஜேசனைப் புரட்டியெடுக்க உள்ளனர் போலும் ! இந்த இரண்டாம் சுற்றின் ஓவியர் Jigounov சும்மாவே பட்டையைக் கிளப்புகிறவர், இதில் கதையோட்டம் தனது தாய் மண்ணான ரஷ்யாவுக்குச் செல்லும் போது ரகளை செய்வாரென்று எதிர்பார்க்கலாம் ! "RACE FOR A HACKER" என்ற தலைப்போடு உருவாகி வரும் புது ஆல்பத்தின் நெட்டில் கிட்டிய b&w பக்கப் பார்வை இதோ : 

நெட்டில் கண்ணில்பட்ட மேற்கொண்டான சில XIII சார்ந்த சில கொசுறுத் தகவல்களுமே சுவாரஸ்யமாய் இருந்தன :

சமீபமாய் வெளியான MEMORY RECHARGED ( "நினைவோ ஒரு பறவை" என நாம் வெளியிடவிருப்பது ) 160,000 பிரதிகள் பிரிண்ட்ரன் கொண்டதாம் ! (வான்ஸ் & வான் ஹாம் இணைந்து உருவாக்கிய துவக்க ஆல்பங்களெல்லாம் 4 இலட்சம் ரேஞ் !!) இது வரையிலும் ஒண்ணரைக் கோடி புக்ஸ் விற்றுள்ளனவாம் XIII-ன் தொடரினில் ! (நாம் சீக்கிரமே அச்சிடவுள்ள மறுப்பதிப்பைச் சேர்த்து "ஒண்ணரைக் கோடியும், முந்நூறும்" என்று தரவுகளைத் திருத்திக்கச் சொல்லணும் போலுமே !!

ரைட், on the subject of our reprint - போன வருஷம் துவங்கிய நமது XIII வண்ணத்தொகுப்பின் முன்பதிவு ரயிலானது, எக்ஸ்பிரஸாகத் துவங்கி, மெயிலாக மாறி, பின்னர் பேஸஞ்சர் வண்டியாய் உருமாற்றம் கண்டு, இப்போது தட்டுத் தடுமாறி இலக்கைத் தொட்டு விட்டுள்ளது ! நேற்றைக்கு முன்தினம் ஏஜெண்ட் ஒருவர் 50 பிரதிகளுக்கு ஆர்டர் செய்திட்டதால் ஒரு மாதிரி எல்லைக் கோட்டைத் தொட்டு விட்டுள்ளோம் ! So 210 முன்பதிவுகள் உங்களது & 100 ஏஜெண்ட்களினது ! பிந்தைய அந்த நம்பர் மட்டும் நமக்குக் கைதூக்கி விட்டிருக்காவிட்டால், இன்னும் ஒரு வருஷத்துக்கு நொண்டியடித்துக் கொண்டிருந்திருப்போம் என்பது உறுதி ! Anyways "ஷப்பாடி" என்ற பெருமூச்சோடு ஆபீஸ் திறக்கும் நாளை எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன் ! ஏற்கனவே ஜூன் இதழ்கள் சார்ந்த பணிகள் காத்திருக்கும் என்பதால் - ஆபீஸ் திறந்த உடன் அதனுள் பிஸியாகிடுவோம் ! அவை நிறைவு கண்ட பின்னே, XIII மறுபதிப்பின் பணிகளைக் கையில் எடுத்திட schedule - ஜூன் மாதத்தின் இரண்டாம் அல்லது மூன்றாம் வாரத்துக்குள் ! (லாக்டௌன் நீண்டிடும் பட்சத்தில், எல்லாமே தள்ளிப் போகும் தான் ) ஆகையால் அச்சுப் பணிகளினை நாங்கள் துவக்கும் வரையிலும், XIII முன்பதிவுகளுக்கான ஆன்லைன் லிங்க் தொடர்ந்திடவே செய்யும் ! So மஞ்சகொடி பிடிச்சபடிக்கே கூட்டம் கூட்டமாய்க் கிளம்புவதாக இருப்பின் - இப்போதே கிளம்பிட்டால் தான் உண்டுங்க சார்ஸ் ! Absolutely the last & final call ! 

மூன்றாவது கேள்வி, அண்டர்டேக்கர் சார்ந்தது ! "வெள்ளைச் செவ்விந்தியன்" என்று நாம் ஜம்போ சீசன் 4-க்கென விளம்பரப்படுத்தியுள்ளது - இந்தத் தொடரின் ஆல்பம்ஸ் # 5 & 6 இணைந்த தொகுப்புக்கு ! அதனில் # 5 போன வருஷமே வெளிவந்திருக்க, க்ளைமாக்ஸ் பாகம் நடப்பாண்டினில் வெளிவந்திடுவது திட்டமிடல் ! இதிலும் ஏதேனும் சொதப்பிடுமோ என்ற பயத்தில் கேட்டு வைத்தேன் ! ஆனால் இது முழுசும் ரெடி என்றும், நமக்கு டிஜிட்டல் கோப்புகள் maybe அடுத்த வாரத்தில் அனுப்பலாம் என்றும் சொல்லியுள்ளனர் ! இதோ - தெறிக்கும் அதன் அட்டைப்படம் ! 

இந்தச் சுற்றோடு தொடர் முற்றுப்புள்ளி காணவுள்ளதா ? என்றும் கேட்டேன் ; no ..no ...ஆல்பம் # 7 ஓவியப்பணிகள் ஓடிக்கொண்டுள்ளன என்றார்கள் ! கொஞ்சம் கொஞ்சமாய் பிரான்க்கோ-பெல்ஜிய கௌபாய் காமிக்ஸ் உலகினில், கேப்டன் டைகர் (Lt Blueberry ) விட்டுச் சென்றுள்ள காலி இடத்தினை இந்த வெட்டியான் ஆக்கிரமித்து வருவதாகச் சொன்னார்கள் ! மகிழ்ச்சியாக இருந்தது !!  

அட்டைப்படத்தில் சரி, இதோ, பாரிஸின் மெட்ரோ ரெயில் நிலைய சுவற்றில் உள்ள போஸ்டர்களிலும் சரி, டைகருடனான ஒப்பீட்டோடே தயார் செய்துள்ளனர் படைப்பாளிகள் ! போஸ்டருக்கு அருகே நிற்பவர் அதன் ஓவியர் ரால்ப் மெயர் ! பாரிசில் உள்ள நம் நண்பர்கள் இக்கட ஒரு போட்டோ எடுத்தால் இங்கே நாமும் கெத்தாய்ப் போட்டுக் கொள்வோமல்லவா ? 

Before I sign out - இதோ நமது IT அணியின் (!!!) இன்றைய ரகளைகள் !! லக்கி லூக் போஸ்டர் - நண்பர் கிரியின் கைவண்ணம் !

Memes - பிரசாந்த் கார்திக்கினது !! கலக்குங்க guys !! Just awesome !! போகிற போக்கில் உங்கள் கைவண்ணங்களை parade செய்யவாவது நான் தினமும் பதிவு போட வேண்டி வரும் போலும் ! Keep rocking !!

Bye all...stay safe !! See you around !

173 comments:

 1. Replies
  1. தந்தான தானத்தந்தானே...

   தந்தான தானத்தந்தானே...


   எங்களுக்கும் காலம் வரும்

   காலம் வந்தால் வாழ்வு வரும்...

   Delete
 2. வந்திட்டேன் சார்
  .

  ReplyDelete
 3. வணக்கம் நண்பர்களே!

  ReplyDelete
 4. // XIII-ன் தொடரினில் ! (நாம் சீக்கிரமே அச்சிடவுள்ள மறுப்பதிப்பைச் சேர்த்து "ஒண்ணரைக் கோடியும், முந்நூறும்" என்று தரவுகளைத் திருத்திக்கச் சொல்லணும் போலுமே !!) //

  அப்போ முன்பதிவுகளுக்கு மட்டும்தானா சார்

  எக்ஸ்ட்ரா பிரிண்ட் கிடையாதா சார் 🙏🏼🙏🏼🙏🏼
  .

  ReplyDelete
  Replies
  1. அந்த ஏஜன்ட் ஆர்டர் 100 கடை விற்பனைக்கு என்று நினைக்கிறேன்

   Delete
  2. கடையில் விற்பனைக்கோ ; அவர்களிடமும் முன்பதிவோ - no idea ; ஆனால் நம் தலை தப்பிச்சமட்டுக்கு ஹேப்பி !!

   Delete
  3. தேவைப்படுவோர் உடனே பதிவு செய்தால் நலம்....இல்லன்னா அதிக விலை கொடுக்க நேரும்

   Delete
  4. ////தேவைப்படுவோர் உடனே பதிவு செய்தால் நலம்....இல்லன்னா அதிக விலை கொடுக்க நேரும்////

   ம்ஹூம்.. சிலரைத் திருத்த முடியாதுங்க ஸ்டீல்! கெளண்டரில் கிடைக்கும் டிக்கெட்டை விட்டுட்டு, எப்பவும் ப்ளாக்கில் வாங்கித்தான் படம் பார்ப்பாங்க!

   Delete
 5. கடந்த தீபாவளி With TEX முதல் கதையான யுத்த பூமியில் டெக்ஸ் படித்து விட்டு, மீள் வாசிப்பில் மெகா ட்ரீமில் வந்த சிவப்பாய் ஒரு சிலுவை கதையை படித்தேன். வடக்கு தெற்கு போரையும் ஆங்காங்கே ஞாபகப் படுத்தும் கதைக்களம். இதை ஏன் இன்னும் மறு பதிப்பில் யாரும் கேட்கவில்லை. மறுபதிப்பு செய்யப்பட வேண்டிய சிறந்த கதை. நண்பர்களின் எண்ணம் என்னமோ?

  ReplyDelete
  Replies
  1. எனக்கும் ரொம்பவே பிடிச்ச கதை !

   Delete
  2. இதை விட ஜினியர் கதைகள் நிறைய காத்திருக்கு கிறுக்கலாரே!!!

   Delete
  3. மறுபதிப்பு வர வேண்டிய கதைகளில் இது ரொம்பவும் ஜுனீயர். 1985-90களில் வந்த சில அட்டகாசமான டெக்ஸ் கதைகளே இன்னும் வரலையாம்...

   ஓவர் டூ STVR😃

   Delete

  4. இரண்டுமைல் வந்து வஞ்சகம்னோ என்னவோ வரும்..சரியா நினைவில் இல்லை.!

   சிலுவையை எரியவிட்டு கு க்ளாஸ் க்ளான் போர்வையில் ஏதோ செய்வார்கள்.!
   நல்ல விறுவிறுப்பான கதைதான்.. ஆனால் அதற்கு அப்பா தாத்தா கதைளெல்லாம் (நள்ளிரவு வேட்டை.. இரத்த நகரம்.. உள்ளிட்ட) இன்னும் மறுபதிப்புக்காக காத்திருக்கையில் இந்தக் கதை பொறுமையாய்த்தான் வரும்.!


   Delete
  5. ரீபிரிண்ட் என்னும்போது துவக்கத்தில் வந்த கதைகள் போடும்போதுதான் நிறைய வாசகர்களை சென்றடையும்.

   மத்திம கதைகள் அனைவரிடமும் இருக்கும்...கலக்சன் என்ற அம்சத்தை தாண்டி வாசிப்பது குறைவாக இருக்கும்.

   ஆர்டர் படி& வரவேற்பு படி வண்ண மறுபதிப்பாக்க வேண்டிய டெக்ஸ் கதைகள்... (சிறுகதைகள் & சுவாரஸ்யம் குறைவான கதைகள் நீங்கலாக)


   1.பழிக்குப் பழி-1987

   2.இரத்த முத்திரை-1988

   3.இரத்த வெறியர்கள்-1993

   4.இரும்புக் குதிரையின் பாதையில்-1994
   (லயன் சென்சுரி ஸ்பெசல்)

   5.பாலைவனப் பரலோகம்-1995
   (லயன் டாப்10 ஸ்பெசல்)

   6.நள்ளிரவு வேட்டை-1996

   7.மந்திர மண்டலம்-1999
   (மெபிஸ்டோ vs TeX)

   8.இரத்த நகரம்-1999

   9.எல்லையில் ஒரு யுத்தம்-2000
   (லயன் மில்லெனியம் ஸ்பெசல்)

   இந்த 9 கதைகளே காலத்தால் சீனியாரிடி படி வெயிட்டிங்ல உள்ளவை.
   இவற்றில் எது வந்தாலும் நல்ல ஹிட் அடிக்கும்...

   இவற்றை போட்டு விட்டு மற்ற கதைகள் மேல்பார்வையை செலுத்தலாம்...

   Delete
  6. // ரீபிரிண்ட் என்னும்போது துவக்கத்தில் வந்த கதைகள் போடும்போதுதான் நிறைய வாசகர்களை சென்றடையும் //

   மிகவும் சரி

   Delete
  7. லயன் 6வது ஆண்டு மலரான எவ்விதத்திலும் சுவாரஸ்யம் குறையாத "எமனுடன் ஒரு யுத்தம்" கதையை விட்டு விட்டீர்களே சகோ...

   Delete
 6. ////"2132 மீட்டரில்" (ஆல்பம் # 26) துவங்கிய அந்தத் 'திக் திக்' பயணம் - "நினைவோ ஒரு பறவை" (ஆல்பம் # 27) இதழினில் முற்றுப் புள்ளி காணும் கையோடு///---

  சோ, சுற்று 2 இங்கே முற்று பெறுகிறதா சார்???

  வரப்போவதை சேர்த்தா 7தான் ரொம்ப கம்மியா இருக்கே!!!!

  ReplyDelete
 7. ///, மறதிக்கார XIII-ஐ வேறொரு திக்கில், இன்னொரு டபுள் ஆல்பப் பயணத்தில் இட்டுச் செல்லவுள்ளது போலும் ! இம்முறை (மறுக்கா) க்யூபாவுக்குப் பயணம் போகிறாராம் மனுஷன் ; அப்புறமாய் ரஷ்யாவுக்கு ! திரும்பவும் ஜெயில்வாசம் அது, இதுவென்று ஜேசனைப் புரட்டியெடுக்க உள்ளனர் போலும் !///

  ---அந்தம்மா ஜேனட்டோடு குடும்பம் நடத்த வுடமாட்டானுகளோ!!!! கர்..புர்...!!!

  ReplyDelete
 8. Lucky luke போஸ்டர் blue கலரில் freshஆ சூப்பரா இருக்கு..

  அந்த மீம்ஸ் தான் இன்னும் கொஞ்சம் creativity அப்ளை பண்ணா நல்லா இருக்கும்...

  ReplyDelete
  Replies
  1. தம்பி பிரசாந்த் சும்மா நச்சுனு மீம்ஸ் போடக்கூடியவர்.. இது கன்டென்ட்க்கு ஏற்றவாறு இருக்கு...

   அவரோட வேறு லெவல் மீம்ஸ்லாம் பார்க்கனும்னா என்னை தொடர்பு கொள்ளுங்கள் நண்பரே...

   மை ஐடி... viji.comics@gmail.com

   Delete
  2. அவரோட வேறு லெவல் மீம்ஸ்லாம் பார்க்கனும்னா//

   ஹிஹி

   Delete
 9. /// தட்டுத் தடுமாறி இலக்கைத் தொட்டு விட்டுள்ளது ! நேற்றைக்கு முன்தினம் ஏஜெண்ட் ஒருவர் 50 பிரதிகளுக்கு ஆர்டர் செய்திட்டதால் ஒரு மாதிரி எல்லைக் கோட்டைத் தொட்டு விட்டுள்ளோம்//

  ----சிறப்பு வாழ்த்துகள் சார்.💐💐💐💐

  போன லாக்டவுன்ல ஆரம்பித்து இந்த லாக்டவுன்ல பயணம் கம்ப்ளீட் ஆகியுள்ளது.

  முதல் முறை(????) படிக்கப்போகும் நண்பர்களுக்கு வாழ்த்துகள்!

  ReplyDelete
 10. ///மூன்றாவது கேள்வி, அண்டர்டேக்கர் சார்ந்தது ! "வெள்ளைச் செவ்விந்தியன்" என்று நாம் ஜம்போ சீசன் 4-க்கென விளம்பரப்படுத்தியுள்ளது ///

  செம...செம... தொடர்ந்து நல்ல செய்திகளாகவே குவிந்துள்ளதே....

  நல்லபதிவு...😍😍😍

  ReplyDelete
  Replies
  1. கிராஃபிக் நாவலில் ஆரம்பித்து சந்தா A வந்து அங்கிருந்து இப்போது ஜம்போ வுக்கு தாவி விட்டார். அண்டர்டேக்கர் இந்த கதை மிக்க ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

   Delete
 11. XIII மீண்டும் மறு ரவுண்டில் தொடர்ந்து மகிழ்ச்சி

  ReplyDelete
 12. ////...ஆல்பம் # 7 ஓவியப்பணிகள் ஓடிக்கொண்டுள்ளன என்றார்கள் ///


  -போடறா வெடியை.....!!!

  பெரிய வெட்டி ஒரு பக்கம்..

  சின்ன வெட்டி ஒரு பக்கம்..

  நடுவே எங்களுக்கு கொண்டாட்டம்...

  ReplyDelete
  Replies
  1. // நடுவே எங்களுக்கு கொண்டாட்டம் //

   True!

   Delete
 13. மீம்ஸ் & போஸ்டர் செம...!!!

  கலக்குது நண்பர்களே!!!!

  ReplyDelete
 14. அண்டர்டேக்கர் & XIII திட்டமிட்ட படி வரும் என்பது மிகவும் மகிழ்ச்சி. தளபதியின் கதையும் அவரை போலவே தொங்களில் இருப்பது வருத்தம் அதோடு நமது ஜுன் புக்குகளும். உங்களது 'இன்று ஒரு தகவல்' பானி பதிவுகள் & காமிக்ஸ் வாட்ஸ்அப் குருப்பும் அந்த ஏமாற்றத்தை ரொம்பவே மட்டு படுத்துகின்றன.

  ReplyDelete
  Replies
  1. கிரி பட்டய கிளப்பிட்டிங்க...முத்து 50துக்கும் பின்னட்டைல அனைத்து முத்து நாயகர்களயும் நுழைக்க முடியுமான்னு பாருங்க....

   Delete
  2. Listம் கொஞ்சம் உதவியுடன் போஸ்டர் ரெடி செய்து விடலாம் சார்

   Delete
  3. லக்கிலூக் போஸ்டர்கள் அபாரம் சகோ 😍😍😍

   Delete
 15. சார் அட்டகாசப் பதிவு....அற்புதங்கள அள்ளித் தெளித்துள்ளீர்கள்...நம்ம xiiiக்கு ஓய்வே இல்லை என்பது சந்தோசமளிக்குது...க்யூபா...ரஷ்யான்னாலே நமக்குள்ள புது ரத்தம் பாயும்...நம்ம ஓவியர் ரஷ்யர் என்பது கூடுதல் மகிழ்ச்சி...பூந்து விளையாடப் போறார் அவுங்கூர்க்குள்ளாற..நினைவோ ஒரு பறவைய மறந்தே விட்டேன்

  ReplyDelete
  Replies
  1. அப்ப அடுத்தமாதம் பறவையோடதானோ....இப் பட்டய கிளப்பும் போவதுறுதி....300...பதிவுகள் இரண்டாம் மறுபதிப்பில்...இந்த நிலையில் இபவின் சாதனையே...

   அண்டர் டேங்கர் தொடர் இருப்பது எனக்கு இப க்கு இணையான மகிழ்ச்சியே....கலந்து கட்டி அடிக்கிறீங்க....
   இப்....அண்டர்டேக்கர் வேறேன்ன வேணும்...
   ட்யூராங்கோவும் வந்துச்சுன்னா அது விட ஏதும் வேண்டாம் வாழ்வில்...
   கென்யா...உயிரத் தேடி...ரூட்666...ஒநொஒதோவுந்தா

   Delete
 16. போஸ்டர்கள் ஆரம்பம் சிறப்பாக வந்துள்ளது இன்னும் மெருக்கேற்றினால் பட்டாசு தான்.

  பிரசாந்திடம் ஹீரோக்களை கிண்டல் செய்து கேளுங்கள் சார் இன்னும் சிறப்பாக வரும்.

  உங்களிடம் இன்னும் மெய்ன் பிக்சர் காண்பிக்கவில்லை

  ReplyDelete
 17. கிரி & பிரசாந்த் கார்த்திக் @ சும்மா தெறிக்க விடுறீங்க! செம திறமை! தொடரட்டும்!

  ReplyDelete
 18. // இலக்கைத் தொட்டு விட்டுள்ளது ! நேற்றைக்கு முன்தினம் ஏஜெண்ட் ஒருவர் 50 பிரதிகளுக்கு ஆர்டர் செய்திட்டதால் ஒரு மாதிரி எல்லைக் கோட்டைத் தொட்டு விட்டுள்ளோம் ! So 210 முன்பதிவுகள் உங்களது & 100 ஏஜெண்ட்களினது ! //

  Suuuuuuuuuuuuuuuper news!

  ReplyDelete
 19. This comment has been removed by the author.

  ReplyDelete
 20. நான் இப்ப எல்லாம் டெக்ஸ் மறுபதிப்பு என்றால் ரம்மி போடும் பாயச அளவை வைத்து தான் முடிவு செய்வேன்! ;-) அதாவது கோரிக்கை வைக்கலாமா வேண்டாமா என முடிவு செய்கிறேன் :-)

  ReplyDelete
 21. அண்டர்டேக்கர் அட்டை படம் செம செம வேற லெவல்! :-)

  ReplyDelete
  Replies
  1. முதலில் பார்க்கும் போது அண்டர்டேக்கர் துப்பாக்கியுடன் வருவது போல் தெரிந்த படம், முழுவதுமாக பார்க்கும் போது ரயில் பெட்டிகள் மேல் அண்டர்டேக்கர் துப்பாக்கியுடன் ஆக்ரோஷமாக ஓடிவர பின்னால் இன்னும் சிலர் அவரை துரத்த வானத்தில் கழுகு இன்னும் கொஞ்சம் கவனித்து பார்த்தால் குகைக்குள் இருந்து வெளிவந்த நிலையில் ரயில் இந்த துரத்தல் படலம்! செம!

   Delete
 22. அனைவருக்கும் வணக்கம்.

  ReplyDelete
 23. //இம்முறை (மறுக்கா) க்யூபாவுக்குப் பயணம் போகிறாராம் மனுஷன் ; அப்புறமாய் ரஷ்யாவுக்கு ! திரும்பவும் ஜெயில்வாசம் அது, இதுவென்று ஜேசனைப் புரட்டியெடுக்க உள்ளனர் போலும் //

  பாவம்யா அந்த மனுஷன் .. ஒரு முடிவுக்கு கொண்டு வாங்க .. இப்டி ஒரு மனுசன்க்கு நெசமாவே நடந்திச்சின்னா இந்நேரம் மெண்டல் ஆகி போய் சேர்ந்து இருப்பான் ..

  ReplyDelete
 24. கிரி & பிரசாந்த் கார்த்திக் @ சும்மா தெறிக்க விடுறீங்க! செம திறமை! தொடரட்டும்

  ReplyDelete
  Replies
  1. கிரி & பிரசாந்த் கார்த்திக் @ சும்மா தெறிக்க விடுறீங்க! செம திறமை! தொடரட்டும்..!!

   👏👏👏👏👏👏👏👏

   Delete
 25. ரௌத்திரம் கைவிடேல்-
  முதலில் ஒரு சிறிய வில்லன் என்றாலும் கீர்த்தி பெரியது அவனை அனுப்பியது யார் அவனுக்கு பின்னால் உள்ள அந்த அனகோண்டா யார்! இவர்களை எதற்கு ட்யூராங்கோ தேடுகிறார்! எப்பா மூன்று பாகமும் ஒரே நூலில் பயணித்தாலும் அங்கே நடக்கும் சம்பவங்கள் புதுமையானவை அந்த களங்கள் ரசிக்கும் படி உள்ளது! சித்திரங்கள் இந்த கதைக்கு மிக பெரிய பலம் என்பது பக்கம் 47 & 48 பார்த்தால் தெரியம் அதிலும் சண்டை காட்சிகள் என்றால் ஓவியர் சும்மா தெறிக்க விடுகிறார்!

  எல் கோப்ரா நமது நாயகனுக்கு எந்த விதத்திலும் குறைவில்லாத வில்லன் அவனை கையாளும் விதம் சூப்பர்!
  முக்கிய வில்லன் stainer வாழும் இடம் செம தேர்வு, இந்த மூன்றுபாக கதைக்கு மிக சரியான வில்லன்! தனது குறிக்கோளை அடைய இவன் போடும் திட்டம் அதனை நிறைவேற்ற தேர்ந்தெடுக்கும் ஆட்கள் செம! கிளைமாக்ஸில் ரயில் பெட்டியை சுற்றி நடக்கும் ஆடு புலியாட்டம் நன்றாக இருந்தது! வில்லனின் வலது இடது கரமாக வரும் ஹோல்ம்ஸ் & லாவான்ஸ்கி சிறப்பான படைப்பு இந்த மொத்த கூட்டத்தை வேட்டையாடி அவர்களுக்கு கிடைக்கும் இறுதி மரியாதையை அவர்கள் செய்த கொடுமைக்கு கிடைத்த சரியான மரியாதையாக தோன்றியது!

  கதையின் நடுவில் ஒரு செய்வித்திய பெண் மற்றும் அவளது காதலன்; அந்த காதலின் குறிக்கோள் மற்றும் சிந்தனை மிகவும் வித்தியாசமானது! ஒருகட்டத்தில் செய்விந்தியனுக்கும் ட்யூராங்கோகும் ஒற்றைக்கு ஒற்றை நடக்கும் என எதிர்பார்க்கும் இடத்தில் ஒரு ட்விஸ்ட்! அந்த செவ்விந்தியன் தனது இனத்தாருக்கு கடைசியில் செய்யம் தியாகம் பாராட்டக்குரியது!

  கதையில் வசனங்கள் நன்று, அவ்வளவாக பேசி நம்மை வசீகரித்த ட்யூராங்கோ வாழ்வில் இப்படி ஒரு பிளாஷ் back எதிர்பாராதது!

  அப்புறம் எதற்கு ட்யூராங்கோ இந்த வெறியாட்டம் ஆடுகிறார் என்பதை ஒரு பக்கத்தில் சொல்லி உள்ள கதாசிரியரை என்ன சொல்லி பாராட்டினாலும் தகும்! அந்த பக்கம் சொல்லும் கதை பலவிதம்!

  ட்யூராங்கோ - உன்னை நாங்கள் மிஸ் செய்கிறோம் வரும் ஆண்டுகளில்!

  ReplyDelete
  Replies
  1. இந்த நாயகனின் எல்லா கதைகளையும் ஹார்ட் பௌண்ட்ல் வெளியிட்டது மிக சிறப்பான முடிவு! இதற்கு மிகவும் தகுதியானவர்! இவரின் அனைத்து கதைகளும் சிறப்பானவை மிகவும் ரசிக்க செய்தது! சித்திரமும் சரி கதையில் உலாவிய கதாபாத்திரங்களும் சரி என்றும் பேசப்படுபவர்கள்!

   சரியான நேரம் கிடைக்கும் போது ட்யூராங்கோ கதைகள் அனைத்தையும் கண்டிப்பாக மறுவாசிப்பு செய்யவுள்ளேன்!

   Delete
  2. எல் தம்பி கண்டிப்பா தொடரும்னு பட்சி சொல்லுது...
   லார்கோக்கு அப்புறம் சேந்து வந்த வெட்டியானும்....அண்டர்டேக்கரும்தான அதற்கிணையான நாயகர்கள்

   Delete
  3. அந்த பட்சியை ஒரு பசியான நேரத்திலே குழம்பு வைச்சிடலாம் ஸ்டீல் ! ட்யுராங்கோ தொடருக்கு சுபம் போட்டு வருஷம் 5 ஆச்சு !

   Delete
  4. நமது மறு வருகைக்கு பிறகு வந்த மிகவும் சிறப்பான ஹிட் தொடர் இதுவே என்னளவில்.

   Delete
  5. இந்த தொடர் ஒரு மிக சிறப்பான தொடர். சூப்பர் விமர்சனம் பரணி

   Delete
  6. நமது மறு வருகைக்கு பிறகு வந்த மிகவும் சிறப்பான ஹிட் தொடர் இதுவே என்னளவில்....+1/0

   Delete
  7. நான் டியுராங்கோ மறுவாசிப்பு முடித்து, இப்போது லார்கோ ஆல்பம் 16 வரை முடித்துவிட்டேன். நாளை கடைசி ஆல்பம் படிக்கணும்.

   Delete
  8. லார்கோ எனக்கு அந்த அளவுக்கு பிடிக்க வில்லை ஆரம்பத்தில் நன்றாக இருந்தது. ஆனால் அதன் பின்னர் ஒரே டெம்ப்ளேட் கதை போர் அடிக்க ஆரம்பித்தது விட்டது என்னளவில்.

   Delete
  9. புரட்சியாரே அப்ப உலகம் சுற்றும் வாலிபனாய்ட்டன்னு சொல்லுங்க....

   போயாம்ல...லார்கோ ரண்டாஞ்சுற்று வரட்டும்

   Delete
  10. செம்மையான விமர்சனம் சகோதரரே

   Delete
  11. ரசிச்சுப் படிச்சிருக்கீங்க PfB!! மனதிலிருப்பதை வார்த்தைகளாக வடித்திருக்கும் விதம் மிக நேர்த்தியாக இருக்கிறது!! செமயான விமர்சனம்!! பாராட்டுக்கள்!!!

   Delete
  12. நேர்த்தியான விமர்சனம் PDB

   Delete
  13. எங்கவீட்டுப்பிள்ளை நாகேஷ் மாதிரி ஆயிடுச்சி.. சாரி PDB - PFB..!

   Delete
  14. ///சரியான நேரம் கிடைக்கும் போது ட்யூராங்கோ கதைகள் அனைத்தையும் கண்டிப்பாக மறுவாசிப்பு செய்யவுள்ளேன்!///

   மீ.. டூ..

   Delete
 26. மறதிக்கார XIII-ஐ வேறொரு திக்கில், இன்னொரு டபுள் ஆல்பப் பயணத்தில் இட்டுச் செல்லவுள்ளது போலும் ! இம்முறை (மறுக்கா) க்யூபாவுக்குப் பயணம் போகிறாராம் மனுஷன் ; அப்புறமாய் ரஷ்யாவுக்கு ! திரும்பவும் ஜெயில்வாசம் அது, இதுவென்று ஜேசனைப் புரட்டியெடுக்க உள்ளனர் போலும் ! //

  அட்டகாசமான செய்திகள் ஆசானே...கடந்த சில வாரங்களில் எங்களுக்கு வந்த மகிழ்ச்சியான செய்தி இதுவே...

  நினைவோ ஒரு பறவை பல்ஸை எகிர வைக்கிறது எப்போது பறவை பறக்கும் ஆசானே....??

  ReplyDelete
  Replies
  1. அடக்கடவுளே இன்னும் ஆறு மாசமா...?

   ஆசானே ஏதாவது முன்னமே வாய்ப்பு..??

   Delete
  2. இந்த வருடத்தின் நிச்சயமான ஹிட்களில் ஒன்று.

   Delete
  3. இந்த வருடத்தின் நிச்சயமான ஹிட்களில் ஒன்று.//

   நிச்சயமா நண்பரே...

   Delete
 27. நேற்றைக்கு முன்தினம் ஏஜெண்ட் ஒருவர் 50 பிரதிகளுக்கு ஆர்டர் செய்திட்டதால்//

  என்னுடையதும் 15லிருந்து 25 என மாற்றிக்கொள்ளவும் ஆசானே...

  ReplyDelete
  Replies
  1. மேலே ஆசான் சொனத கவனிக்கலயா..??

   நோ எக்ஸ்ட்ரா பிரிண்ட்...

   அதானால நண்பர்களே தயவுசெய்து தங்களது பிரதிக்கு முந்துங்கள் இனியும் காலதாமதம் வேண்டாம்..

   நிச்சயமா. முன்பதிவுக்கு மட்டுமே.. முந்துங்கள்... நண்பர்களே..

   Delete
 28. சமீபமாய் வெளியான MEMORY RECHARGED ( "நினைவோ ஒரு பறவை" என நாம் வெளியிடவிருப்பது ) 160,000 பிரதிகள் பிரிண்ட்ரன் கொண்டதாம் ! (வான்ஸ் & வான் ஹாம் இணைந்து உருவாக்கிய துவக்க ஆல்பங்களெல்லாம் 4 இலட்சம் ரேஞ் !!) இது வரையிலும் ஒண்ணரைக் கோடி புக்ஸ் விற்றுள்ளனவாம் XIII-ன் தொடரினில் ! (நாம் சீக்கிரமே அச்சிடவுள்ள மறுப்பதிப்பைச் சேர்த்து "ஒண்ணரைக் கோடியும், முந்நூறும்" என்று தரவுகளைத் திருத்திக்கச் சொல்லணும் போலுமே !!) //

  ம்ம்ம்... எங்க தலைவருக்கும் நாணயங்களும் பணத்தாள்களும் சிலைகளும் தபால்தலைகளும் சேகரிப்பாளர்களுக்கென பல பிரத்யேக பொருட்கள் வந்துள்ளது..

  ReplyDelete
 29. சார் பேசாம அண்டர்டேக்கரை முத்துவுக்கு ஒரு பணிமாறுதல் கொடுத்திடுவோமே...?

  ReplyDelete
 30. லக்கி லூக்கின் 75 ஆவது ஆண்டு மலரை எப்படியாவது சிறப்பிக்க வேண்டும். இப்போதைய சூழ்நிலையில் special இதழ்கள் சாத்தியபடாது என தெளிவுபடுத்தி விட்டீர்கள்.

  ஆனால் முந்தைய பதிவுகளில் அலசிய ஸ்டெர்ன் அல்லது மேகி கேரிசன் இடத்தை லக்கி லூக்கிற்கு ஒதுக்கினால் வரும் ஆண்டு மலரை 3 மூன்று கதைகளுடன் ஹார்ட் பவுண்டில் ரூ 300/- விலையில் ஓரளவு ஜமாய்த்து விடலாமே. 75 வது ஆண்டையும், நமது ஆண்டு மலரையும் சேர்த்தே கொண்டாடிடலாமே.

  அறிவித்த ரின்டின்கேன் கதையை நீக்கிவிட்டு 3 புதிய சாகஸங்களுடன் அல்லது 2 புதியது + ஒரு மறுபதிப்புடன் களம் காண ஏதாவது ஒரு வாய்ப்பி கிட்டுமா சார்.

  ஏற்கனவே லக்கியின் 70 வது ஆண்டை நமது தரப்பில் கொண்டாட miss செய்து விட்டோம். 75 வது ஆண்டையாவது மெருகூட்டுவோமே சார். ஒரு legendary நாயகரின் முக்கியமான தருணத்தில் ஆண்டாண்டு காலமாக கை கோர்த்து வரும் நாமும் நமக்கு முடிந்ததை செய்வோமே.

  இவ்வாறு ஒரு முயற்சி செய்யலாம் என்பது என் அவா. ஆனால் இதில் உள்ள சாதக பாதகங்களை அறிந்தவர் தாங்களே. மேற்கூரியவற்றை பரீசிலிக்க முடியுமா சார்.  ReplyDelete
  Replies
  1. முதலில் ஒரு திருத்தம் சார் ; அது ரின்டின் கேன் சாகசமல்ல ; லக்கி லூக்கின் கதையே - ஆனால் ரி.டி கே தான் கதையின் முக்கிய புள்ளி ! அதன் மெய்க்காப்பாளராக லக்கிக்கு உத்தியோகம் !

   அப்புறம் ஆண்டுமலர் அட்டைப்படம் ஒரு மாதம் முன்னமே அச்சிட்டாச்சு ! எக்கச்சக்கமாய் அட்டவணையினை நோண்டினாலொழிய இடையே பெரிதாய் எதையும் நுழைக்க சாத்தியமாகாது சார் !

   But still , நிலவரம் கொஞ்சம் தெளியட்டுமே - யோசிக்கலாம் ! Right now my head is a mess !

   Delete
  2. // But still , நிலவரம் கொஞ்சம் தெளியட்டுமே - யோசிக்கலாம் ! Right now my head is a mess ! // இது போதும் சார் இப்போதைக்கு நன்றி

   Delete
  3. ////ரி.டி கே தான் கதையின் முக்கிய புள்ளி ! அதன் மெய்க்காப்பாளராக லக்கிக்கு உத்தியோகம் !///

   'நல்லா புஷ்டியா இருக்கும் இந்த சார்வாளை இதுக்குமுன்னே எங்கயோ பார்த்திருக்கேன்! பார்க்க டீசன்ட்டா இருக்கார்.. ஆனா ஏன் கழுதை மேல உட்கார்ந்துட்டு வரார்னுதான் தெரியலை!'

   Delete
  4. அதே அதே விஜய். குண்டக்க மண்டக்க என மண்டைக்குள் பேசும் ரி.டி.கே மண்டையனை எனக்கு ரொம்ப பிடிக்கும்.

   Delete
 31. ஜூன் மாதத்தின் இரண்டாம் அல்லது மூன்றாம் வாரத்துக்குள் ! XIII முன்பதிவுகளுக்கான ஆன்லைன் லிங்க் தொடர்ந்திடவே செய்யும் ! So மஞ்சகொடி பிடிச்சபடிக்கே கூட்டம் கூட்டமாய்க் கிளம்புவதாக இருப்பின் - இப்போதே கிளம்பிட்டால் தான் உண்டுங்க சார்ஸ் ! Absolutely the last & final call ! //

  ஆசிரியரின் இறுதியான உறுதியான அறிவிப்பு எனவே இனியும் தாமதம் வேண்டாமே நண்பர்களே...முந்துங்கள்..

  ReplyDelete
  Replies
  1. நான் முந்தி விட்டேன் நண்பரே. அதையும் மீறி ஒன்று இரண்டு புத்தகங்கள் தேவை பட்டால் உங்களிடம் கிடைக்கும் அல்லவா????

   Delete
  2. கண்டீப்பா கிடைக்கும் நண்பரே..

   Delete
  3. இதென்ன கேட்டுட்டு....போய் எடுத்துட்டு வருவோம்//

   வா மக்கா நமக்கு இல்லாதது யாருக்கு...??

   Delete
 32. P. F. B. ட்யூராங்கோவிமர்சனம். மீண்டும் படிக்கத் தூண்டுகிறது. சூப்பர் சார். கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
 33. நண்பர் கிரிதரசுதன் இனுடைய போஸ்டர் மற்றும் நண்பர் கார்த்திக் இனுடைய மீம்ஸ் கலக்கல். லக்கியின் நமது எல்லா ஆல்பங்களையும் இணைத்து ஞாபகப்படுத்தியுள்ளது சிறப்பு.

  வெள்ளைச்செவ்விந்தியன் அட்டை அருமை. அதிலும் ஓடும் ரயிலின் மீது சேஸிங் சமீபத்தைய தொடரியை ஞாபகப்படுத்த தவறவில்லை. வெட்டியான் கலக்கல் நாயகர்தான் இருப்பினும் “தளபதி” வேறு லெவல் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.

  பாரிஸல் எந்த மெட்ரோ என்று விபரம் சார்? உடனே விசிட் அடிக்கிறேன்.

  ReplyDelete
 34. ரி.டி கே தான் கதையின் முக்கிய புள்ளி ! அதன் மெய்க்காப்பாளராக லக்கிக்கு உத்தியோகம் ! சார் இந்த கதையை எப்போது படிப்போம் என உள்ளது. விரைவில் தயார் செய்யுங்கள். எனது குழந்தைகள் இந்த கலைக்காக வெயிட்டிங். அவர்களுக்கு கதை சொல்ல நானும் தயார்.

  ReplyDelete
 35. நமது மறதிக்காருக்கு மங்களம் பாடாமல் , இரண்டாவது இனிங்ஸ், இனி க்யூபா பின்பு ரஸ்யா பின்னர் ஜெயில் வாசம் என்று ரவுண்டு கட்டி அடித்தது, அடிக்க இருப்பதும் எமது பாக்கியம். முன்பதிவு பூர்த்தியாக ஆவன செய்த அந்த ஏஜன்ட் புண்ணியவான் பிள்ளை குட்டிகளோடு நீடூழி வாழ்க.
  வாழ்த்துக்கள் சார்
  💐💐💐💐

  ReplyDelete
 36. ஒரு ரேண்டம் செலக்டட் புக்.. மறு பதிப்பாக வாங்கியது. ஒரு பக்கா சைஃபை திரில்லர். அப்பபா அட்டைப்படமே அசத்தல். சிகப்பு நிற பிண்ணனியில் இளம்பச்சை நிற உடையில் அந்த சூப்பர் ஹீரோ பறந்து வரும் காட்சியிலிருந்து கண்களை அகற்றவே முடியவில்லை.
  ஒரு சூப்பர் வில்லன் கிட்டத்தட்ட தாணோசையே மிஞ்சும் அளவுக்கு. ஆம் உண்மையிலியே எல்லா கிரகங்களிலிருந்தும் வரும் எதிரிகளை தனி ஒருவனாக வீழ்த்திடும் ஹீரோ. கற்பனை கூட செய்து பார்த்து இருக்க முடியாத விஞ்ஞான முயற்சிகளை கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு முன்னரே முயற்ச்சித்த மாமேதை. வாய்ஸ் ரெககனைசேசன், மிகவும் நவீன படுத்தப்பட்ட ஒரு கவச உடை, அதை விடவும் நவீனமான ஒரு வாகனம்.. அவெஞ்சர்ஸ்களையே தூரமாக போய் விளையாட சொல்லும் அறிவியல் புனைவு மற்றும் ஆக்சன்.  பரபரவென பக்கங்களை புரட்ட செய்யும் ஆக்சன் திரில்லர் : சைத்தான் விஞ்ஞானி

  ReplyDelete
  Replies
  1. அருமையான விமர்சனம் ரம்மி

   Delete
  2. ஸ்பைடர் இருக்க பயமேன்😍

   Delete
  3. ஊப்ப்!! நான்கூட அதிகாரியப்பத்திதான் ஏதோ எசகுபிசகா எழுதியிருக்கீங்கன்னு நினைச்சுட்டேன்!

   Delete
  4. ஓ.. அந்தகாலத்து காமெடி கதையா.?

   Delete
  5. அருமையான விமர்சனம் சகோ, எந்த வகையிலும் ஹாலிவுட் தரத்திற்கு குறையாத கதை சைத்தான் விஞ்ஞானி... இது போன்ற விமர்சனம் வராததால் தானோ ஸ்பைடர் கதைகள் உறக்கம் காண்கின்றனவோ என்னவோ...? இந்த சைத்தான் விஞ்ஞானி உண்மையில் பரிதாபத்திற்கு உரிய வில்லன் தான்... ஏனெனில் ஸ்பைடர் போன்ற குற்றவாளியை நல்லவனாக மாற்றும் ஆராய்ச்சியில் தானே ஸ்பைடரை மிஞ்சிய குற்றவாளியாக மாறுவோம் என்று நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார் அந்த பலிகடவான
   விஞ்ஞ்சானி. ஸ்பைடர் கதைகள் ஒவ்வொன்றும் ஒரு ரகம்... அதில் இது ஸ்பைடர் வில்லனாகவும் ஹீரோவாகவும் அதகளப்படுத்தும் ஒரு சூப்பர் டூப்பர் ஹிட் கதை...

   Delete
  6. ஸ்பைடர் கதைகளை ரசிக்க முடியாத அளவுக்கு என் மூளை இன்னும் கெட்டு போய் விடவில்லை என்பது இன்றுவரையிலும் எனக்கு மகிழ்ச்சிக்குரிய விஷயம் தான்.

   Delete
  7. எனக்கு மிகவும் பிடித்த கதை.
   கற்பனையின் உச்சம்.
   தெளிவான சித்திரங்கள்.

   Delete
  8. ரம்மி ரசித்து சொல்லியிருக்கிறார்.

   Delete
  9. உதய்க்கு ரொம்ப சந்தோசமாக இருக்குமே!👍

   Delete
  10. இல்லாமலா சார்

   Delete
  11. கண்டிப்பாக சகோ

   Delete
 37. மீம்ஸ் மற்றும் போஸ்டர்கள் சிறப்பாக இருந்தன.

  வாழ்த்துகள் படைத்தவர்களுக்கு.

  ReplyDelete
 38. இரத்தப் படலம் மறு மறுக்காப் பதிப்பு வருகை புரிவது உறுதியானது கண்டு மிகவும் மகிழ்ச்சி.

  ReplyDelete
 39. தல டெக்ஸ் வில்லரின் ;

  1.இரும்புக் குதிரையின் பாதையில்.

  2.பாலைவனப் பரலோகம்.

  3.சிகப்பாய் ஒரு சிலுவை.

  4.பனிக்கடல் படலம்.

  போன்ற கதைகள் மீண்டும் மறுபதிப்பாக வர வாய்ப்பு ஏதும் உண்டுங்களா சார்?

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. சிகப்பாய் ஒரு சிலுவை - இது என்ன புது கதையாக இருக்கு! எப்ப வந்தது!!

   Delete
  3. சிகப்பாய் ஒரு சிலுவை - லயன் மெகா ட்ரீம் ஸ்பெஷலில் வந்த கதை பரணி சார்.

   லயன் மெகா ட்ரீம் ஸ்பெஷல் - 186.

   Delete
  4. மில்லெனியத்தில் வந்த

   எல்லையில் ஒரு யுத்தம்

   Delete
  5. நன்றி நண்பர்களே

   Delete
 40. ஒருவாரம் முழுவதும் இங்கு பிஸியாக இருந்த நண்பர்கள் எல்லாம் இன்று வழக்கமான பதிவுகிழமை என்பதால் வெளியே ரவுண்டு அடிக்க போய்விட்டார்களோ? :-)

  ReplyDelete
  Replies
  1. இருக்கலாம் நண்பரே..

   Delete
  2. கேள்வி பதில் மாதிரி ஒண்ணும் இல்லீங்களே பரணி. இப்போதைக்கு எல்லாரும் லார்கோ போட்டிக்கு வேற பரீட்சைக்கு படிக்கிற மாதிரி படிச்சிகிட்டு இருக்காங்கக. .

   Delete
  3. ////எல்லாரும் லார்கோ போட்டிக்கு வேற பரீட்சைக்கு படிக்கிற மாதிரி படிச்சிகிட்டு இருக்காங்கக. .///

   :))))

   Delete
  4. This comment has been removed by the author.

   Delete
  5. ஓப்பன் புக் பரீட்சையா? ஆல் தி பெஸ்ட் நண்பர்களே.

   Delete
 41. அட்டை படம் பட்டய கிலப்புது

  ReplyDelete
 42. Replies
  1. நீங்க என்ன பாத்தீங்களாம், ஸ்டீல்?!!

   Delete
  2. ///மேலே வெள்ளைச் செவ்விந்தியன உத்து பாத்தீங்களா யாரும்///

   ஆம்பள பசங்களை உத்துப்பாக்குற வழக்கம் எங்களுக்கு கிடையாது ஸ்டீல்.! நீங்களே சொல்லிடுங்க.!

   Delete
 43. வெள்ளைச் செவ்விந்தியன் அட்டை படம் பார்க்க சூப்பரா இருந்தாலும், பூட்ஸ் காலோடு பனிபடர்ந்த ஓடும் இரயில் பொட்டியின் மேல் நடப்பது... வாய்ப்பில்லை சார், அவரு தாவி வேற குதிக்க போறார்.. அப்பறம் இந்த வெட்டியானுக்கு இன்னொரு வெட்டியான் வேலை செய்ய வேண்டும்.
  அந்த மலையின் நிழலும் இவரின் நிழலும் ஒத்து போகவில்லை

  ReplyDelete
  Replies
  1. ///அந்த மலையின் நிழலும் இவரின் நிழலும் ஒத்து போகவில்லை///

   வாவ்!! என்னமா நோட் பண்றீங்க!!!

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
 44. ///பாரிசில் உள்ள நம் நண்பர்கள் இக்கட ஒரு போட்டோ எடுத்தால் இங்கே நாமும் கெத்தாய்ப் போட்டுக் கொள்வோமல்லவா ? ///

  அதுக்காக.. இதுவும் பாரிஸ்தாம்ணே என்று, பாரிஸ் கார்னரில் எடுத்த போட்டோக்களை அனுப்பவேண்டாமென கேட்டுக்கொள்கிறோம்.!

  ReplyDelete
  Replies
  1. பாரிஸ் போக வேணாம். “பாரீ” ல போய் எடுக்க சொல்லுங்க.

   Delete
 45. ஞாயிறு காலை வணக்கம் நண்பர்களே.

  ReplyDelete
 46. விமர்சனம் சூப்பர்ரம்மி ஜி நீங்க அதிகாரி கதையை தவிர மத்த கதையையும் படிப்பீங்களா

  ReplyDelete
 47. முத்து 50 தலைப்பு பற்றிய என் (தாமதமான) கருத்து.

  முத்து பொன்விழா ஆண்டு மலர் - இதுதான் பொருத்தமான மற்றும் கம்பீரமான தலைப்பாக எனக்கு தோன்றுகிறது. காமிக்ஸ் வட்டத்தை தாண்டியவர்களுக்கும் நமது 50 வருட சாதனை புரிந்திடும் வண்ணம் தலைப்பு இருந்திட வேண்டும்.

  FABULOUS FIFTY ஸ்பெஷல், MUTHU MAGNIFICENT SPECIAL போன்ற ஆங்கில தலைப்புகளை உப தலைப்பாக வைத்திட்டு முத்து பொன்விழா ஆண்டு மலர் என்பதையே மலரின் தலைப்பாக இருக்க வேண்டும் என்பது என் வேண்டுகோள்

  ReplyDelete
  Replies
  1. + 111111

   The english titles can be subtitles - முத்து பொன்விழா ஆண்டு மலர் can be main line.

   Delete
 48. லக்கி-லூக் காமெடி கதையில் ஜாலி ஜம்பர் பேசுவது போல் உருவாக்கியது பிடிக்கும்.

  கதையில் வரும் கதாபாத்திரங்கள் ஏதோவொரு வகையில் நம்மை சிரிக்க செய்யும் படி அமைத்தது. அதுவும் வில்லன் என்றால் அவர்கள் கண்டிப்பாக ஏதோ ஒரு வகையில் சிரிப்பை வரவழைக்கும் விதம் இருப்பார்கள்; இதில் செவ்விந்திய தலைவராகட்டும் இல்ல டால்டன் சகோதரர்களாகட்டும் யாரையும் கதாசிரியர் விட்டு வைப்பதில்லை.

  ஊருக்குள் நடக்கும் பிரதான பிரச்சனைகளை நையாண்டி செய்வதில் லக்கி கதைக்கு நிகர் வேறு ஏதும் இல்லை என்னைப்பொறுத்தவரை.

  அப்புறம் இவரின் ஒல்லி குச்சி உடம்பு பிடிக்கும். 75 வயதிலும் உடம்பை எப்படி சிக் என வைத்துள்ளார் :-)

  ஆல் டைம் ஃபேவரிட்
  புரட்சி தீ
  சூப்பர் சர்க்கஸ்
  பூம் பூம் படலம்
  படா பட்டிி?
  வில்னுக்கொரு வேலி?
  பரலோகத்துக்கு ஒரு பாலம்
  தாயில்லாமல் டால்டன் இல்லை
  கலாமிட்டி ஜேன்
  பொடியன் பில்லி

  ReplyDelete
 49. சார் பெல்கோ புக் ஸ்டோர் ரத்தப் படலம்புக் வருமா

  ReplyDelete
 50. டியர் சார்,
  லக்கிலூக்-இந்த வருட ஆண்டு மலரில் இரண்டு (புதிய)கதைகளாக கிடைத்துவிடுகிறதுதான்.
  ஆனால், வழக்கமாக 'லக்கிலூக் , -ற்கு ஒரு மறுபதிப்பு உண்டே ..அதை கொஞ்சம் ேதர்வு ெசய்து வைத்துக் ெகளள்ளலாமே.
  எனது சாய்ஸ்-தாயில்லாமல் டால்டன் இல்லை. தான்.(இதிலும் ரின்டின்ேகன்தான் அதகளம் செய்யும்.)

  ReplyDelete
 51. சார் 

  நமது ஆஸ்தான நாயகர்களில் ஒருவரான லக்கி லூக்ன் 75ம் ஆண்டு என்பதனை எப்படியாவது சிறப்பாக கொண்டாடிட வேண்டும் சார். சில நண்பர்கள் கூறுவது போல ஒரு 5-6 புக் collection போடலாம் சார். பரிசீலனை செய்யவும்.

  The Lion Lucky 75 Special. 

  ReplyDelete
  Replies
  1. எனக்கும் ஆசைதான். ஆனால் இந்த கொரோனா காலகட்டத்தில் பணம் எல்லோருக்கும் ஒரு பிரச்சினை என்பதால் கேட்க வேண்டாம் என கைகளை கட்டி போட்டு உள்ளேன்.

   மூன்று புத்தகங்கள் கொண்ட பாக்ஸ் செட் முன்பதிவுக்கு என அறிவித்தால் எனக்கு சம்மதமே. இதில் மூன்று புத்தகங்கள் வாங்கும் நண்பர்களுக்கு பாக்ஸ் செட் மற்றும் தனித்தனியாக வாங்க விரும்பும் நண்பர்களுக்கு தனித்தனியாக கொடுக்கும் படி விற்பனை ஆப்ஷன் கொடுக்கலாம்.

   ஆசிரியர் சார் இது எனது ஆசை மட்டுமே.

   Delete
  2. இந்த கொரோனா காலகட்டத்தில்//

   அதே..அதே.. பரணி. கேள்விப்படும் நியூசுகளைப் பாத்தா ஈபுவி கூட சாத்தியமான்னு தெரியலை. லாக்டவுன் எப்ப முடியும்னு தெரியலை. அதனாலயே எதும் கேக்க சங்கடமாயிருக்கு.

   The Lion Lucky 75 Special//
   😍😍😍. லக்கிக்கு இந்த வருசம் அவ்வளவு லக்கில்லை போல ராக்ஜி ☹️

   Delete
  3. நமக்கு முன்னாலிருக்கும் நமது முத்து பொன்விழா மலர தூள் கிளப்பணும்...அதுக்கு லக்கி கதைகள குறச்சாலும் கூட சம்மதமே...ட்யூராங்கோ போல முத்துக்கள் வரனும்....அதனால் நம்ம விழா கொண்டாட்டம் களை கட்டட்டும்....அவர்களின் கொண்டாட்டத்தப் பாத்து ரசிப்போம்....இது எனது தனிப்பட்ட கருத்து

   Delete
  4. கூழுக்கும் ஆச...மீசைக்குமாச...இதே எனது நிலை...ஏதாச்சும் ஒன்ன இழக்க தயாராவ வேண்டியதுதான்

   Delete
 52. வெட்டியானுடன் நாமும் படம் எடுப்பதற்கு “மும்பரனாஸ்” மெட்ரோ இல் உள்ளதாக விபரம் அறிந்து போனேன் சார். என் காலகஷ்டம். திருத்த வேலைகளுக்காக பூட்டியுள்ளனர். மீண்டும் முயற்சிப்பேன்.

  ReplyDelete
 53. ரவுண்ட் அப் என பதிவு போட்டு விட்டு ஆசிரியரும் அந்த லார்கோ போட்டிக்கு தயாராகி கொண்டு இருக்கிறாரோ? :-)

  ReplyDelete
 54. எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே!

  ReplyDelete