Powered By Blogger

Thursday, January 26, 2012

தெரிந்த முத்து காமிக்ஸ் ..தெரியாத தகவல் !


விடுமுறையில் இன்னுமொரு mini பதிவு..!

உங்கள் அபிமான முத்து காமிக்ஸின் ஆரம்ப இதழ்களில் ஒரு சில, பிற தென்னிந்திய மொழிகளிலும் வெளிவந்ததுள்ளன..!

மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகியவற்றில்  வந்திட்ட பிரதிகளின் அட்டைப்படங்கள் இதோ !ஜாங்கிரியை பிய்த்துப் போட்டது போல் தோற்றமளிக்கும் எழுத்துக்களில் எவை எந்த மொழி என்பதை நீங்களே கண்டு புடிக்க முயற்சிக்கலாம் !

இரும்புக்கை மாயாவி; பாம்புத் தீவு ; Flight  731  இதழ்களின் அட்டைகள் இவை என்பதை நான் சொல்லவும் வேண்டுமா என்ன ? !!


ஒரு விடுமுறை நாள் படலம்..!


நண்பர்களே,

குடியரசு தின விடுமுறையில் , "மல்லாக்கப் படுத்து விட்டத்தைப் பார்க்கும் ஆராய்ச்சிப் படலம்" நடந்தேறிடும் சமயம் எங்கெங்கோ என் நினைவுகள் ஓடின.....! நமது காமிக்ஸ் பற்றி...பழைய வெளியீடுகள் பற்றி .. பழைய கதைதொடர்கள் பற்றி...random thoughts ... !

பழசை அசை போடுவதிலும் ஒரு விதமான குஷி உண்டு தானே..?!

'அந்த சிந்தனைகளையே ; எண்ணங்களையே ஒரு பதிவாக்கினால் என்ன ?' என்று தோன்றியது..! அதன் பலனே வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த MPVPAP -பாகம் 1  !

நிறைய காமிக்ஸ் இதழ்கள்..'ஹிட்" கதைகள்...பலதரப்பட்ட ரசனைகளில் காமிக்ஸ்கள் என்று நாம் பயணித்துள்ளோம் .! But 1990 களின் மத்தியில் "திகில் லைப்ரரி" என்ற பெயரில் ஒரு விதமான 'பாதி நாவல் - பாதி காமிக்ஸ்' முயற்சி ஒன்றினை நாம் மேற்கொண்டது எத்தனை பேருக்கு நினைவுள்ளதோ தெரியாது...! ஆனால் இன்னமும் 'பளிச் ' என்று என் நினைவில் நிழலாடும் இதழ்களில் அதுவும் ஒன்று என்று சொல்வேன் !  இதோ...திகில் லைப்ரரி- இதழ் 2 பற்றிய ஒரு மினி flashback !ஒரு வட்டத்துக்குள் சிக்கிடாமல் கொஞ்சமாச்சும் காமிக்ஸ் தாண்டியதொரு ரசனைக்குள் கால் பதித்திட வேண்டுமென எனக்குள்ளே ஒரு காய்ச்சல் இருந்திட்ட சமயம் அது...! தமிழ் புத்தக மார்க்கெட்டில் நிறைய நாவல்கள் வந்து கொண்டிருந்தன அப்போது..! பத்தோடு பதினொன்றாக இல்லாமல், ஆங்கிலத்தில் வந்திட்ட பிரபல crime நாவல் தொடர்களை தமிழில் செய்திட்டால் என்னவென்று நினைத்தேன்...!சின்ன வயதில் பிரபல எழுத்தாளரான Erle Stanley Gardner -ன் Perry Mason  கதைகளின் பெரிய ரசிகன் நான்...! இந்தக் கதைவரிசையில் ஏராளமான த்ரில்லர்கள் உண்டென்பதால் இவற்றிற்கான தமிழ் உரிமைகளைப் பெற்றிட முயற்சி செய்தேன். அமெரிக்காவில் உள்ள Random House என்ற நிறுவனத்தில் இதற்கான rights இருந்திட்டதால் அவர்களோடு மல்லுக்கட்டி உரிமைகளை வாங்கிட்டேன். சர்வதேச அரங்கில் வெற்றி பெற்றதொரு நாவல் என்பதால் அவர்கள் கேட்ட ராயல்டி தொகை ரொம்பவே அதிகம் ; so கொஞ்சம் முன்ஜாக்கிரதையாக ஒரே ஒரு கதைக்கு மட்டுமே பணம் அனுப்பி இருந்தேன். அந்தக் கதை தான் திகில் லைப்ரரி - Volume 1 ! எக்கச்சக்கமாய் மண்டையை கசக்கி, முடிந்தளவு சுவாரஸ்யமாக மொழிநடையை அமைத்து, இடையிடையே கொஞ்சம் சித்திரங்களையும் சேர்த்திட்டு ஒரு சுபயோக சுபதினத்தில் இதழினை வெளியிட்டோம். "சொதப்பல்" என்று சொல்ல முடியாது...பட் "சூப்பர்" என்றும் சொல்ல இயலா ஒரு விதமான mild response .... !

'ஒரு முழு நீள நாவல் ' என்ற முயற்சி ஆரம்பத்திலேயே தள்ளாட ... இருக்கவே இருக்கு நமது காமிக்ஸ் கலவை என்று இதழ் # 2 பணியினைத் தொடங்கினேன்...இம்முறை எக்கச்சக்கமாய் பணம் அனுப்பி இன்னொரு அயல்நாட்டு உரிமையினைப் பெறும் ஜோலியே வேண்டாம் என்ற முடிவில், evergreen detective ஷெர்லோக் ஹோம்ஸ் நாவல்களில் ஒன்றை தேர்ந்தெடுத்து தமிழில் மொழிமாற்றம் செய்திட்டோம்."The Adventure of The Lion 's Mane " என்ற கதை அது ! கடலோரம் மர்மமாய், கோரமாய் மரணம் நிகழ்ந்திட ஹோம்ஸ் துப்பறிய முனைகிறார். வழக்கமாய் நாம் சந்திக்கும் ஒரு வில்லன் இந்தக் கதையில் கிடையாது...! கடலில் வசிக்கும் ஒரு விஷ ஜந்து தான் கொலையாளி ! 'சியானியா' என்ற இந்த கொலைகார ஜந்துவை ஹோம்ஸ் காலி செய்வதோடு இந்த குறு நாவலும் நிறைவு பெறுகிறது.

காமிக்ஸ் ஊறுகாய் சேர்த்திட 'புயல் ராத்திரி" என்று ஒரு திகில் சிறுகதை இந்த இதழின் முதல் பக்கங்களில் வந்திட்டது. எனக்கு மிகவும் பிடித்த சிறுகதைகளில் இதுவும் ஒன்று ! ஒரு தந்தையும் இளம் மகனும் பனியில் மீன்பிடிக்க ஒரு இரவில் செல்கின்றனர்...போகும் வழியில் , இருளில் ஒரு முதியவர் தன படகைத் தேடி செல்வதாக புலம்பிக் கொண்டே போவதை சிறுவன் கவனிக்கிறான். அவருக்கு உதவியாக இருக்கட்டுமே என்று பரிவோடு தங்கள் விளக்கை சிறுவன் அந்தக் கிழவரிடம் தந்து விட்டுப் போகிறான். இரவில், திடீரென புயல் வீச, தந்தையும் மகனும் ஒரு பனித் திட்டில் சிக்கிக் கொள்கின்றனர் ! மரணம் நிச்சயம் என்று கதிகலங்கிக் கிடக்கும் சமயத்தில் கடலோரமிருந்ததொரு பாழடைந்த கலங்கரை விளக்கிலிருந்து அதே முதியவர் வந்து ஒத்தாசை செய்கிறார் ! இரவில், குளிரில் சிறுவனுக்கு ஜுரம் தீயாய் அடிக்க பையனை அந்தப் புயலிலும் முதியவர் படகில் ஏற்றிச் சென்று கரை சேர்த்து காப்பாற்றுகிறார். விடியும் பொது சிறுவனின் தந்தை அந்த முதியவர் யாரென்று விசாரித்திட, அவர் ௫௦ ஆண்டுகள் முன்னே அந்த லைட் ஹவுசில் பணி புரிந்து, புயலில் மாண்டு போனவர் என்பது புலப்படுகிறது !  கருணை கொண்ட சிறுவனை காப்பாற்றிட வந்ததொரு ஆவியா ?? யார் அவர் ? என்ற கேள்வியோடு முடியும் touching story இது !கறுப்புக் கிழவியின் "என்றும் நடிகன்" + "காலக் கடலில் ஒரு பயணம்" என்று 2 அற்புதமான திகில் த்ரில்லர்கள் காமிக்ஸ் கோட்டாவை நிறைவு செய்கின்றன..!

அப்புறமாக - திகில் நிஜ சம்பவங்களை விவரிக்கும் இரண்டு கட்டுரைகளும் இந்த இதழில் இடம் பெற்றிருந்தன..! "ஒரு ஆவி அறிக்கை" என்ற பெயரில், 1882 -ல் ஒரு வீட்டில் நடந்த அமானுஷ்ய சம்பவங்களின் துல்லியமான பதிவைப் பற்றியும் ; "கேமரா பொய் சொல்லுமா ? " என்றதொரு கட்டுரையில் உலகில் ஆங்காங்கே எடுக்கப்பட்ட சில "ஆவி" ரூபங்களின் புகைப்படங்கள் பற்றியும் எழுதி இருந்தேன். இன்டர்நெட் ; சுலப research என்பதெல்லாம் இல்லாத அந்த சமயம் நிறைய ஆவி ; அமானுஷ்யம் பற்றிய புத்தகங்களை மும்முரமாய்ப் படித்து எழுதிய சமாச்சாரங்கள் அவை !

மொத்தத்தில் 'பிரமாதம்'  என்று சொல்லும் ரகத்தில் இதழ் அமையவில்லை என்ற போதிலும் "மோசம் இல்லை" என்றே எனக்குத் தோன்றியது..! எக்கச்சக்கமான நம்பிக்கையோடு இதழினை விற்பனைக்கு அனுப்பினோம் ... ! but - 'விற்பனை மந்தம்'  என்பதே வந்திட்ட பதில்!

 'இனி ஆணியே புடுங்க வேண்டாம்'  என்று அந்த "நாவல்" முயற்சிக்கு ஒரு சலாம் போட்டேன்! தெரிந்ததை மட்டுமே செய்தால் முதுகு தப்பிக்கும் ; இந்த உட்டலாகுடி வேலையெல்லாம் நமக்கு ஆகாது என்ற தீர்மானத்துக்கு வந்தேன்...! But  still எப்போவாச்சும் திகில் லைப்ரரி இதழ்களை எடுத்துப் பார்க்கும் போது "இன்னும் கொஞ்சம் விடாமுயற்சி செய்திருக்கலாமோ?" ன்னு தோணும்..! ஹ்ம்ம்ம் !                    

Tuesday, January 24, 2012

Our Bank info and some general stuff!

Hi folks,

Here's some general info :

Our Bank Details :

Name of Account : PRAKASH PUBLISHERS

Bankers : TAMILNAD MERCHANTILE BANK Ltd., Sivakasi Branch.

Account Number : 003150050421782

IFS Code : TMBL0000003

You can make online transfers for payments in excess of Rs.300.Saturday, January 21, 2012

விண்ணில் ஒரு குள்ள நரி....!


நண்பர்களே,

முத்து காமிக்ஸ் புதிய வெளியீடான "விண்ணில் ஒரு குள்ள நரி" தயார் !

விங்-கமான்டர் ஜார்ஜ் & ஏஜெண்ட் ரோஜர் மூர் கதைகள் கொண்ட Rs 10 விலையிலான இதழ் இது .. ! கொஞ்ச காலத்துக்கு இனி இந்த 1960 's நாயகர்கள் நம் இதழ்களில் தலை காட்டப் போவதில்லை என்பதால், இது ஒரு farewell என்று கூட சொல்லலாம் !

Comeback  ஸ்பெஷல் ; கொலைகாரக் கலைஞன் ; விண்ணில் ஒரு குள்ளநரி - ஆக மொத்தம் 3 இதழ்களையும் ஆர்டர் செய்திட வேண்டுமெனில் Rs .160 அனுப்பிட்டால் கூரியர் மூலம் புக்ஸ் வீடு தேடி வந்திடும்.

அல்லது Rs .620 சந்தா கட்டினால், 2012 -இல் வரவிருக்கும் நமது எல்லா இதழ்களும் உங்களைத் தேடி வரும் !

Happy  reading !

Sunday, January 15, 2012

XIII - The Adventure Continues. .....


உஷார்..சற்றே நீளமானதொரு பதிவு !!


நண்பர்களே,

சென்னை புத்தகக் கண்காட்சியில் இந்தாண்டு நமது காமிக்ஸ்களை display செய்திட முடிவெடுத்த போது பெரியதொரு எதிர்பார்ப்பெல்லாம் கிடையாது..... விற்பனை ஆகிறதோ இல்லியோ, கொஞ்சமாவது ஒரு exposure கிடைக்குமே என்ற நம்பிக்கை மட்டுமே என்னுள்.அதுவும் இன்னொரு பதிப்பகத்துடன் ஸ்டால் பகிர்ந்து கொள்வதால், எவ்வளவு பிரதிகள் அங்கே எடுத்துச் செல்வது...எவ்வளவு விற்பனை ஆகும் என்றெல்லாம் சுத்தமாய் ஒரு கணக்கும் போடத் தெரியவில்லை என்பதே நிஜம்...!

முதல் நாள் 4600 ரூபாய் collection என்ற போது ,'சரி ...இது தான் ஒரு விற்பனை அளவுகோல் போல' என்று மனசுக்குள் சொல்லிக் கொண்டேன் !

ஆனால்.........

தொடர்ந்திட்ட நாட்களில் நீங்கள் காட்டிட்ட வரவேற்பு எங்களது wildest imaginationக்கும் அப்பாற்பட்டது !! அப்படியொரு ஆத்மார்த்தமான ; உற்சாகமான, துள்ளலான வரவேற்பு !

ஒவ்வொரு இரவும் நமது பணியாளர்கள் சொல்லும் 'கல்லாப்பெட்டி கணக்கை' விட, நான் மிக ஆவலாய் கேட்டிடுவது அன்றைய தினம் வந்திட்ட வாசக நண்பர்களின் பட்டியலை ...அவர்களது எண்ணங்களைப் பற்றியே !!

நம்மிடையே இருப்பது 'ஒரு பதிப்பகம்.....அதன் வாசகர்கள்' என்ற சராசரி உறவுச் சங்கிலி அல்ல என்பது எனக்கு முன்பே தெரியும் தான்..!ஆனால் கடந்த 10 நாட்களாய், அகன்ற விழிகளோடு நாங்கள் அனுபவித்து வரும் வெறித்தனமான இந்த அன்பு மழையை விவரித்திட, நான் கற்ற தமிழில் வார்த்தைகள் இல்லை !

"Thanks everybody " என்று கூலாக ஒரு கும்பிடு போட்டு விட்டு அடுத்த வேலையைப் பார்க்க நான் கிளம்பி விட்டால், 'ஆயுசுக்கும் தூர்தர்ஷன் டப்பிங் சீரியல்களைப் பார்க்கக் கடவது' என்ற தண்டனையை விட பாடாவதியான தண்டனைக்கு நான் தகுதியானவன் ஆகிடுவேன்...!!

So எங்களது நன்றிகளை வார்த்தைகளில் மட்டும் அல்லாது, செயலிலும்  காட்டிடுவதே எனக்குத் தெரியும் ஒரே வழி...!!

இந்த 2012 ஐ நம் காமிக்ஸ் பயணத்தில் ஒரு மறக்க முடியா phase ஆக செய்திட என் மண்டையில் மிச்சம் மீதி இருக்கும் சொற்பமான கேசத்தை பிய்த்துக் கொண்டு இருக்கிறேன்! நமது காமிக்ஸ்களைப் பொறுத்த வரை 1985 -'90 வரையிலான காலத்தை "Golden period " என்று நம் வாசகர்கள் எப்போதுமே சொல்லுவது உண்டு...God willing - வரவிருக்கும் மாதங்கள்.....ஆண்டுகள் அதனை தூக்கி சாப்பிடப் போகிறது ! Just sit back and enjoy the ride folks ... !  

 பின்குறிப்பு

புத்தகக் கண்காட்சி முடிவடைய இன்னும் 3  நாட்கள் உள்ள போதிலும் இந்தப் பகுதியை இப்போதே எழுதிடும் அவசியமென்ன என்று எண்ணிடலாம்...but மனதில் பட்டதை அப்போதே எழுத்தாக்கிப் பார்ப்பதும் ஒரு சுகமான திருப்தி தானே ! THANKS GUYS  .....THANKS FOR EVERYTHING !!!   பொங்கல் நல்வாழ்த்துக்கள் !!

பின்குறிப்பு -2 :

இந்தப் பதிவுக்குத் துளியும் சம்பந்தமில்லா ஒரு ஆசாமியின் சித்திரம் இங்கே ஏன் என்று நீங்கள் யோசிக்கலாம்...அது பற்றி அடுத்த பதிவில் !                               
       

Friday, January 06, 2012

Come back tomorrow for the COMEBACK SPECIAL please !


நண்பர்களே,

Timing சரியாக அமைந்திட்டதால் rhyming -ஆக இந்தத் தலைப்பை வைப்பதை தவிர்த்திட முடியவில்லை !! COMEBACK ஸ்பெஷல்-ன் முதல் 40 பிரதிகள் நாளை சென்னை புத்தகக் கன்ன்காட்சியில் விற்பனைக்குக் கிடைக்கும் ...Happy  Reading  ! 6th.January'12

Sunday, January 01, 2012

முத்து காமிக்ஸ் - 40 Not out .. ..!


நண்பர்களே,

நமது முத்து காமிக்ஸின் வயது 40 !

'70 களின் துவக்கத்தில், என் தந்தையின் inititativeல் -ஆரம்பித்த இந்த சித்திரக் கதைப் பயணம் இன்று வரை தொடர்வது உங்கள் அன்பினால் மட்டுமே...!

ஒரு முழு நீள அயல்நாட்டு சித்திரக் கதை என்ற concept இன்றைக்கு ஒரு பெரிய சமாசாரம் அல்ல தான்..but நாற்பது ஆண்டுகளுக்கு முன்னே அது ஒரு trailblazer என்று தான் சொல்ல வேண்டும்..... !

தரமான கதைகள்...உயிரோட்டமுள்ள சித்திரங்கள்..தெளிவான மொழிபெயர்ப்பு ...என்று அன்று போட்டிட்ட ஒரு கோட்டின் மேல் தான் இன்றளவும் நாம் சவாரி செய்கிறோம் என்று சொல்வேன் !

ஓட்டும் வண்டிகள் வேண்டுமானால் இப்போது நவீனமானதாகவோ ; வித்தியாசமானதாகவோ இருக்கலாம் ; but அடித்தளம் அன்று போடப்பட்டதே !

"இரும்புக்கை மாயாவி" என்ற தலைப்புடன் தொண்ணூறு காசு இதழாக வந்திட்ட அந்த முதல் வெளியீடு - பின்னர் நம் காமிக்ஸ் க்ளாசிக்சில் மறுபதிப்பு செய்யப்பட்ட ஒன்று என்பதால், இளம் வாசகர்கள் கூட அதனைப் படித்திருப்பார்கள்..!.இன்றைக்கும் அந்த முதல் இதழின் அட்டைப் படத்தை பார்க்கும் போது ஒரு வித மரியாதை.. ஒரு வித பொறாமை..ஒரு ஏக்கத்தை என்னுள் ஏற்படுத்தும் !

எத்தனையோ hi tech  கதைத் தொடர்களை ; ஹீரோக்களை அறிமுகப் படுத்தும் வாய்ப்பு எனக்குக் கிட்டியுள்ள போதும் - மாயாவி போல் இன்றளவுக்கும், நம் எல்லார் மனதிலும் ஒரு நீங்கா impact  எற்படுத்தியதொரு தொடரை நான் சந்தித்தது இல்லை என்பது தான் நிஜம்.

துவக்கம் முதலே நம் முத்து காமிக்ஸ் படித்திட்ட நமது longstanding வாசகர்கள், இந்தப் பதிவில் தங்களது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டால் நன்றாக இருக்குமென்று மனதுக்குப் பட்டது.. !

Our premier readers ..please do grace this page with your memories ....... ?!