Powered By Blogger

Sunday, January 24, 2021

News 7

 நண்பர்களே, 

வணக்கம். புது வருஷமும் புலர்ந்து மூன்று வாரங்களும் ஓட்டமெடுத்து விட்டாச்சு ;  முன்னணியில் நிற்போருக்கு நம்பிக்கைகளோடு தடுப்பூசிகளை போட்டாச்சு ; கைச்சட்டைகளை மேலேற்றிக் கொண்டு "நாங்களும் ஊசியை போட்டுக்கிட்டோம்லே" என்று பீற்றிக் கொள்ளும் நேரமும் சீக்கிரமே புலர்ந்திடுமென்ற நம்பிக்கையும் பிறந்தாச்சு ; சர்க்கரை நோயுடன், ஏழோ-எட்டோ கழுதை வயசானதை சாதகமாக்கிக் கொள்ள மொதவாட்டியாய் ஒரு வாய்ப்பைப் பார்த்திட்டதில் 'ஹி..ஹி..' என்று இளித்தும் கொண்டாச்சு .....காலச் சக்கரங்கள் தான் என்னமாய் ஓட்டமெடுக்கின்றன என்று முன்னூத்திச் சொச்சமாவது தபாவாய் யோசித்தபடிக்கே மோவாயைத் தடவவும் செஞ்சாச்சு ! இத்தனை நிகழ்ந்துள்ள போது பிப்ரவரி இதழ்களின் பணிகளும் நம் பக்கத்தில் நிறைவுற்றிராதா - என்ன ? So மார்ச் திக்கில் பார்வைகளை நீளவிட்டபடிக்கே இந்த ஞாயிறு காலையின் பொழுதைத் துவக்குகிறேன் ! 

பிப்ரவரியைப் பொறுத்தவரைக்கும் its going to be an ARS MAGNA show for the major part ! உடன் ஒத்து ஊத வரும் வித்வான்களுள் 'தல'யுமே இருந்தாலுமே - 2 மினி / வண்ண சாகசங்கள் மட்டுமே அவரது canvas எனும் போது அதனில் பெரியதொரு பிக்காஸோ ஓவியத்தையோ ; சில்லுமூக்குகள் அள்ளுவிடும் பெரும் தக்காளிச் சட்னிக் காவியங்களையோ எதிர்பார்த்தல் நியாயமாயிராது ! And பிப்ரவரியின் இன்னொரு வித்வானோ (Rip Kirby)  - அவரது ரசிகரான நமது காரைக்கால் பிரசன்னாவைப் போலவே ஒரு ஜென்டில்மேன் தானெனும் போது, அங்குமொரு சாத்வீக வாசிப்பே சாத்தியமாகிடும் ! இதோ - for  starters கலர் டெக்சின் முதல் கதையின் preview : 

(சந்தா நண்பர்களுக்கு) விலையில்லா இந்த இதழுக்கு அட்டைப்படமென தனியாய் ஏதுமின்றி, கதையின் முதல்பக்கத்தையே வழக்கம் போல ராப்பராக்கிடவே உத்தேசித்திருந்தேன் ! ஆனால் 2020 அட்டவணையின் இறுதி TEX இதழ் ஒரு தலையில்லாப் போராளியாய்க் காட்சி தரக்கூடுமென்பதால், அவசர கதியில் தனியாயொரு ராப்பரை ரெடி செய்து வருகிறோம் ! So இதழின் நீளம் தாண்டி hopefully வேறு நெருடல்கள் இராதென்று நம்புவோம் ! அந்த அவசரத் தயாரிப்பையும், "கம்பி நீட்டிய குருவி"யின் ராப்பரையும் அடுத்த பதிவினில் கண்ணில் காட்டிடுவேன் ! So பிப்ரவரி சார்ந்த பெரும் முன்னோட்டங்கள் ஏதுமில்லை என்பதால், இந்த வாரம் அங்கும், இங்குமாய்ச் சிதறலான செய்திகளே பதிவின் சாரமாகிடவுள்ளன ! 

News # 1 : முதல் தகவல் - சந்தோஷம் + ஆச்சர்யம் கலந்த சேதி ! எப்போதுமே ஆண்டின் துவக்கத்தில் Spring catalogue என அவர்களது ஜனவரி, பிப்ரவரி & மார்ச் ரிலீஸ்களை விவரித்து படைப்பாளிகள் ஒரு மின்னஞ்சலைத் தட்டி விடுவது வாடிக்கை ! அதே போல் இம்முறையும் வந்திருந்த பல்வேறு நிறுவனங்களின் முன்னோட்டங்களைப் பார்த்திட்ட போதே அவை சகலத்திலும் கொஞ்சம் எக்ஸ்டரா உத்வேகம் இருப்பது போலவே தோன்றியது ! 'அடடே....லாக்டௌன் ; இரண்டாம் கொரோனா அலை என்பதன் மத்தியில் இந்த "பூஸ்ட்"-ன் இரகசியம் என்னவோ ?" என்று ஆர்வமாய்க் கேட்டு வைத்தேன் ! ஜாலியாய்ப் பதில் போட்டார்கள் - "ஆமாம்,,,பணிகள் சற்றே முடங்கி, சிரமங்களோடே நடைபெற்று வருகின்றன தான் ; ஆனால் சமீப வாரங்களில் விற்பனை பிய்த்துக் கொண்டு போகிறது ! So கூடுதலாய் titles ; கூடுதலாய்த் தயாரிப்பு என்று ரகளை பண்ணி வருகிறோம் !" என்று பதில் கிட்டியதைப் படித்த போது வியக்காது இருக்க முடியவில்லை ! அதிலும் நமது ARS மேக்னா கதாசிரியரின் அசுரப் படைப்பானது 2020-ல் வெளியாகி சகல வித பிரெஞ்சு விற்பனை ரெக்கார்டுகளையும் துவம்சம் செய்துள்ளதை பற்றி வாசித்த போது மனசுக்குள் ஒரு இனம்புரியா  ஆனந்தம் ! நாம் ஆயிரத்துச் சொச்ச பிரின்டரன்னில் கூத்தடித்துத் திரிந்தாலும், நாம் சார்ந்த துறை இத்தனை புஷ்டியாய் இருப்பதை எண்ணி குதூகலித்தேன் !

News # 2 : ARS MAGNA கதாசிரியர் (ஜேசன் ப்ரைஸ் ஆசிரியருமே) உருவாக்கியுள்ள அந்த சாதனை படைக்கும் இதழ் பற்றியும் பேசாது போகலாகாதே ?! So here goes "THE BOMB" !!! இரண்டாம் உலகயுத்தத்தினை சடுதியாக ஒரு முடிவுக்குக் கொணர்ந்ததில் ஜப்பானின் ஹிரோஷிமா மீது வீசப்பட்ட முதல் அணுகுண்டுக்கு ஒரு பிரதான பங்குண்டு என்பது வரலாறு ! அமெரிக்க குண்டுவீச்சு விமானம் 1945 -ல் வீசிய அந்த அழிவின் ஆயுதம் பற்றி தொடர்ந்துள்ள 75 ஆண்டுகளில் எண்ணற்ற ஆவணப்படங்கள் ; நாவல்கள் ; கதைகள் ; காமிக்ஸ்கள் ; டி-விதொடர்கள் ; திரைப்படங்கள் என வெளிவந்துள்ளன தான் - ஆனால் 2020-ல் - அணுகுண்டின் 75 வது anniversary-க்கென   காமிக்ஸ் கதாசிரியர் டிடியே ஸ்வைசென் உருவாக்கியுள்ள THE BOMB எனும் 450 பக்க கிராபிக் நாவலானது படைப்புலகினையே புரட்டிப் போட்டுள்ளது ! கடங்காவின் யுரேனியச் சுரங்கங்களில் துவங்கி, ஜப்பானின் விண்ணில், அழிவின் அஸ்திரமாய் முற்றுப் புள்ளி கண்ட இந்த அணுகுண்டின் பின்னணி நிஜங்களை ; போர் நிகழ்வுகளை ; அரசியல் அவசியங்களை அசாத்திய நுணுக்கங்களோடு ஆவணப்படுத்தி, டாகுமெண்டரி படம் போலல்லாது - செம சுவாரஸ்யமானதொரு படைப்பாய் உருவாக்கியுள்ளார் - in black & white !! போன வருஷமே மிரட்டலான இந்த ஆல்பத்தைப் பார்த்திருந்தேன் தான் ; ஆனால் இது இத்தனை பெரும் blockbuster ஆகிடுமென்று கனவிலும் எண்ணியிருக்கவில்லை ! ஆறாவதுவாட்டியாய் மறுபதிப்புக்குச் சென்றுள்ளது - இன்னமும் ஒரு வருஷம் முழுமையடைந்திருக்கா நிலையில் & கொரோனாவின் கொடுமைகளுக்கு மத்தியிலும் ! பற்றாக்குறைக்கு (பிரெஞ்சு) காமிக்ஸ் படைப்புகள் சார்ந்த விருதுகளில் கண்ணில்பட்ட சகலத்தையும் அள்ளிப்போட்டுக் கொண்டிருக்கிறது THE BOMB !! உலக வரலாற்றின் ஒரு மறக்கவியலா அத்தியாயத்தை போட்டுத் தாக்கும் இந்த மெகா ஆல்பத்தை தமிழில் வாசிக்க நீங்கள் தயாரா guys ? நீங்கள் ரெடியெனில் - நாமும் தக்கி முக்கியேனும் ரெடியாகிடலாம் ; not right away - but maybe in 2022 !


News # 3 : ஏனென்று சொல்லத் தெரியாது ; ஆனால் திடீர் திடீரென அசத்தலான படைப்புகள் கொத்துக் கொத்தாய்க் கண்ணில் பட்டிடுவதுண்டு ! இதே ஜோலியாய்த் தேடும் போது கண்ணில் மொக்கைப்பீஸ்களாய்த் தென்பட, எதிர்பாரா வேளைகளில் மாஸ்டர்பீஸ்களாய் இடறுவது கொஞ்ச வருடங்களாகவே தொடரும் கதையே - நம்மட்டிலாவது ! No different this time too - ஒன்றுக்கு - மூன்றாய் அழகான படைப்புகள் கண்ணில் பட்டுள்ளன ! 

முதலாவது - போன வருடத்து hits-களுள் ஒன்றான Zaroff பாணியிலான கானகத்தினில் அரங்கேறும் அசாத்திய வேட்டை சார்ந்த ஆல்பம் ! அங்கோ மனித வேட்டை ; இங்கோ புதையல் வேட்டை - ஏகப்பட்ட twists சகிதம் ! நமது பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளர் எப்போதுமே சிக் பில் கதைகளைத் தாண்டி எந்த ஆல்பத்துக்கும் பெரிதாய் நற்சான்றிதழ் தருபவர் நஹி !! (கிட் ஆர்டின்தான் அவரது alltime favorite -  (உட்ஸிட்டிக்காரர் தானுங்கோ!!) ஆனால் இந்த 6 மாதங்களில் தன்னிச்சையாய் 2 கதைகளுக்கு thumbs up தந்துள்ளார்  ! முதலாவது thumbs up - 2021 அட்டவணையினில் நாம் தீபாவளி மலராய் விளம்பரப்படுத்தியிருக்கும் புது கேப்டன் டைகர் ஆல்பத்தின் முதல் பாகத்துக்கு !  "இளம் டைகர் 10-15 வரைக்குமான ஆல்பங்களை படிக்குமாறு அவரிடம் கேட்டிருந்த நாட்களில் என் போனைப் பார்த்தாலே தெறித்து ஓடத்துவங்கியிருந்தார் - ஆனால் இந்த புது கேப்டன் டைகர் கதையைப் படுத்த கையோடு, ரொம்பவே சிலாகித்தார் ! அதன் பலனே - 2021 தீபாவளி மலரில் தட்டை மூக்காருக்கு இடம் !! (பாகம் 2 நடப்பாண்டின் ஜூலைக்குள் திட்டமிடலின்படியே வெளியாக வேண்டுமென்று என் மண்டைக்கோசரம் வேண்டிக் கொள்ளுங்கள் folks !!) இரண்டாவதாய் அவர் சிலாகித்துள்ளது - இந்தக் கானகப் புதையல் வேட்டை கதைக்கே !! சித்திரங்களும் அதகளப்படுத்த - மண்டையை உருட்டுகிறேன் - இதனை எங்கே நுழைப்பதென்ற யோசனையில் ! 

கண்ணில்பட்ட இரண்டாம் சுவாரஸ்யம் சற்றே late in the day !! இந்த ஆல்பம் 3 மாதங்களுக்கு முன்னர் என் பார்வையில் சிக்கியிருப்பின் - "வாண்டு ஸ்பெஷல்" நிஜமாகியிருக்கும் ! கார்ட்டூன் கிடையாது ; அதே சமயம் சீரியஸ் படைப்பும் நஹி ! நம் வீட்டிலுள்ள 8 - 12 வயதிலான பசங்களுக்கு ஜாலியாய் வாசிக்க / கதை சொல்ல கனஜோராய் அமைந்திருக்கக்கூடிய ஆல்பமிது ! வண்ணத்தில் ; அழகான ஆர்ட்ஒர்க் சகிதம் !! இதை நம் அட்டவைகளுக்குள் நுழைக்க maybe 2022-ல் தான் இனி திட்டமிடணும் போலும் - நீங்கள் இசைவு சொல்லும் பட்சங்களில் ! "வாண்டு ஸ்பெஷல் " - What say people ? ! 

சுவாரஸ்யம் # 3 - சற்றே நம்பிக்கை தருமொரு கார்ட்டூன் கவ்பாய் ! உடனடியாய் லக்கி லூக்கோடு ஒப்பீடுகளை வளர்த்துக் கொண்டோமெனில் இந்த நாயகர் தேறும் வாய்ப்புகள் பூஜ்யமாகிடும் தான் ! ஆனால் கிட் ஆர்டினையோ, லக்கியையோ போட்டு குழப்பிக்காது இந்தப் புது ஆசாமியை ரசிக்க முயன்றோமெனில், 2022 -ல் கார்ட்டூன் பஞ்சங்களுக்கு சன்னமான மருந்திட இவருக்கு சாத்தியமாகிடக்கூடும் ! இன்னமும் பக்கங்களை புரட்டுகிறேன் - புரட்டுகிறேன் - உங்களின் ரியாக்ஷன்ஸ் எவ்விதமிருக்குமென்று கணிக்கும் பொருட்டு ! 

News # 4 - இத்தாலியக் கரைகளிலிருந்து ! கருப்பு-வெள்ளை கிராபிக் நாவல்களில் நம்மை மிரட்டி வந்த போனெல்லியின் LE STORIE தொடரானது இதழ் # 100 என்ற மைல்கல்லைத் தொட்டுள்ளது ! இது நல்ல சேதி ! ஆனால் அந்த இதழோடு மங்களம் பாடி விட்டார்கள் என்பதே கேட்ட சேதி ! சரியாக 100 ஆல்பங்களோடு தொடர் நிறைவுற்றுவிட்டுள்ளது ! நமக்கு அங்கே தோண்டியெடுக்க இன்னமும் கணிசமான வாய்ப்புகள் உள்ள போதிலும், ஒரு வித்தியாச முயற்சி முற்றுப்புள்ளி காண்பதில் வருத்தமே !  

News # 5 - போனெல்லியின் 80-வது ஆண்டினில் நமது 'தல' "இளம்" தடத்திலும், க்ளாஸிக் தடத்திலும் ரவுண்டு கட்டி அடிக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன ! இதோ பிரான்க்கோ-பெல்ஜிய பாணிகளில் வண்ணத்தில் உருவாகி வரும் ஆல்பத்தின் preview :



சில சமயங்களில் 'தல' அக்கட பூமியில் தல தெறிக்கும் துரிதத்தில் பறப்பதைப் பார்க்கும் போது பொறாமையும், அவரது குருதையின் வாலைக்கூடப் பார்க்க இயலா நம் ஆற்றமாட்டாமையையும் எழுந்திடுவதுண்டு ! இது போன்ற நேரங்களிலெல்லாம் "தனி TEX தடம்" என்று மண்டைக்குள்ளொரு குரல் உரக்கக்கூவும் ! அப்பாலிக்கா இதர நாயரை அணிவகுப்பைப் பார்த்து சற்றே அடங்கி / அடக்கி கொள்வேன் ! Maybe 2022 'தல' தாண்டவம் exclusive தடத்தில் அரங்கேறிடணுமோ ? உங்கள் சிந்தனைகள் ப்ளீஸ் ?

News # 6 : இதுவுமே 'தல' சார்ந்த தகவலே ! நடப்பாண்டின் உருவாக்கங்களுள் இளம் டெக்ஸ் - போனெல்லியின் இன்னொரு நெடுநாளைய நாயகரான Zagor-ஐ சந்திக்குமொரு கதையும் உருவாகி வருகிறது ! Zagor ஒரு கானகத்து சாகச நாயகர் & இவரது தொடரிலும் நூற்றுக்கணக்கான ஆல்பங்கள் உண்டு ! நடப்பாண்டில் நம் அட்டவணையில் உள்ள மர்ம மனிதன் மார்ட்டின் + டைலன் டாக் கூட்டணி போல, இந்த இளம் டெக்ஸ் + Zagor கூட்டணியையும் பார்த்திட ஆர்வம் உண்டோ ?  

News # 7 - இக்கட நம்மூரில் சுடச் சுட லக்கி லூக் போஸ்டர்களும் ; "மரண நடை" - டெக்ஸ் இதழ்களும் அதே அட்டைப்படத்தோடு  ஆர்வலர்களின் காமிக்ஸ் "காதல் வெளிப்பாடுகளாய் "  அரங்கேறிக்கொண்டிருக்க, உலகின் பிறிதொரு மூலையில்  டின்டின்ன்னின் ஓவியரான ஹெர்ஜ் என்றோ ஒரு யுகத்தில் வரைந்து மூலை சேர்த்திருந்த அட்டைப்பட டிசைனானது 3 .2 மில்லியன் யூரோக்களுக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது ! கிட்டத்தட்ட 28 .5 கோடி ரூபாய்ங்கோ அது ! This is the design : 

Alrite guys...பிரளயம் இதழினில் பணியாற்றக் கிளம்புகிறேன் ; வரிசைகோர்த்து நின்ற மெகா பணிகளுள் தற்போதைக்கு இதுவே இறுதியானது  என்பதால் இன்னொருக்கா 'தம்' கட்ட வேண்டியுள்ளது !! Bye for now.....see you around ! Have a sunny sunday !

Saturday, January 16, 2021

ஒரு பொம்மை புக்கின் விஸ்வரூபம் !!

நண்பர்களே,

வணக்கம். எங்கேயோ, எப்போதோ படித்தது நினைவுக்கு வருகிறது .... ! ரயிலிலோ , பஸ்ஸிலோ ஜன்னலோரம் குந்திக்கொண்டு ஒரு பாக்கெட் முறுக்கையோ ; சிப்ஸையோ கொறித்தபடிக்கே பராக்குப் பார்த்துச் செல்லும் போது, ஆங்காங்கே நிற்கும் மரங்களும், விளக்குக் கம்பங்களும் 'சர்ர் சர்ரென்று ' வேக வேகமாய் எதிர் திசையில் பயணம் ஆவது போலிருக்கும் தானே ? அதெல்லாம் நாம் உள்ளே தள்ளி கொண்டிருக்கும் முறுக்கிலோ ; சிப்ஸிலோ உள்ள எண்ணைமக்கின் உபயம் மாத்திரமல்ல ; theory of relative motion காரணமாகவும் என்று வேதியியலில் கற்றுத் தந்திருந்தார்கள் ! "பில்டப் பலம்மா கீதே ? இன்னிக்கு  என்ன மொக்கைக்கு இது முகாந்திரமோ ?"  என்ற யோசனையா ? வேறொன்றுமில்லை - சமீப காலமாகவே பொழுதுகளும், வாரங்களும், மாதங்களும், இந்த உவமைக்குப் பொருந்திப் போவது போலவே  பிரமைகள் எனக்கு ! தீபாவளி மாசம்...டிசம்பர்..ஜனவரி...என்று அட்டவணையின் இதழ்களெல்லாம், நெடு நெடுவென்ற மரங்களாய் ; கரண்ட் கம்பங்களாய் நிற்க, நமது காமிக்ஸ் ரயிலில் குந்தியபடிக்கே டாப் ஸ்பீடில் ஓட்டமெடுக்கும் போது - அவை சகலமும் பின்னோக்கி செம வேகமாய் travel செய்வது போல் தெரிகிறது !! நிஜத்தில் அவை சகலமும் அதனதன் இலக்கிலேயே தான் நிலைகொண்டுள்ளன ; முன்னே ஓடிக்கொண்டிருப்பது நாம் தான் என்பதை மண்டைக்குப் புரியச் செய்யத் திணறுகிறது ! "அது சரி, இதுலாம் இப்போ இன்னாத்துக்குபா ? ஐன்ஸ்டீன் பாணியில் இன்னாமோலாம் அள்ளி வுடுறியே - இன்னா மேட்டரு ?" என்ற கேள்வியா ? இருக்கே - இருக்கே - தற்சமயமாய்ப் பணியாற்றி வரும் ஆல்பங்களுள் மேற்படிக் கேள்விக்குப் பதில் உள்ளதே !! இன்னும் சொல்லப்போனால், ஐன்ஸ்டீனுக்குமே கூட இங்கு இடமுள்ளது !

ARS MAGNA !! அட்டவணையினில் இடம் பிடிக்காத போதிலும், MAXI வாண்டு ஸ்பெஷல் இதழ்கள் நடப்பாண்டுக்கு வேண்டாமே என்ற தீர்மானத்துக்குப் பின்பாய் திடு திடுப்பென உள்ளே புகுந்த இதழ் ! இவற்றின் உரிமைகளை வாங்கி கொஞ்ச காலம் ஆகி விட்ட  போதிலும் - "வாய்ப்பான தருணம் அமையட்டுமே" என்றபடிக்கு காத்திருப்பில் வைத்திருந்தேன் !  வாய்ப்பை எதிர்நோக்கியது மட்டுமே அந்தத் தள்ளிப்போடலுக்குக் காரணமாகிடாது ; செமத்தியான இந்த த்ரில்லருக்குப் பேனா பிடிப்பது மிரட்டலானதொரு அனுபவமாயிருப்பது சர்வ நிச்சயம் என்பது ஸ்பஷ்டமாய்ப் புரிந்திருந்ததுமே எனது தயக்கங்களுக்கொரு காரணம்  ! So "அப்பாலிக்கா பாத்துக்கலாம் !" என்றபடிக்கே காலத்தை தள்ளியிருந்தேன் ! ஆனால் நம்ம சின்னப்பம்பட்டி நடராஜனுக்குக் கிடைத்தது போலொரு திடு திடுப்பு வாய்ப்பு அர்ஸ் மேக்னாவிற்கும்  கிட்டுவது தவிர்க்க இயலா நிகழ்வாகிப் போன போது ஓடவும் வழியில்லை ; ஒளியவும் இடமில்லை ! நமது கருணையானந்தம் அவர்களிடம் பந்தை அடித்து விடலாமென சத்தமின்றி அனுப்பிய இரண்டாம் நாளே "இது எனக்கு சுகப்படறா மாதிரித் தெரியலையேப்பா  ; நீயே பாத்துக்கோயேன் !" என்ற போனும், அதன் மறு தினம் வாபஸ் கூரியரும் தான் பலனாகின ! 

'ரைட்டு...அடுத்து என்ன ?' என்ற யோசனைக்குள் மூழ்கிய வேளையில், பணி கோரி விண்ணப்பித்திருந்ததொரு அண்டை மாநிலத்து யுவதி நினைவுக்கு வந்திட, அவரது பணிமாதிரியினை மறுக்கா எடுத்துப் பார்த்தேன் ! "தேவலாமே...வார்த்தைப் பிரயோகங்கள் சற்றே வித்தியாசமாகவும், நன்றாகவும் உள்ளனவே ?!" என்று பட்டது ! So தொடர்ந்த நாட்களில் இந்த முப்பாக ஆல்பத்தின் முதல் பாகத்தின் முதல் பாதியை  - அதாவது துவக்க 23 பக்கங்களை மட்டும் அனுப்பி வைத்தேன் அவருக்கு ! கிட்டத்தட்ட 20 நாட்கள் அவகாசம் எடுத்துக் கொண்டு அவர் அனுப்பியிருந்த ஸ்கிரிப்ட் "மோசமில்லை ; தேற்றிக் கொள்ளலாம்" என்றிருக்க, குஷியில் மீத 23 பக்கங்களையும் அவருக்கு அனுப்பி வைத்தேன். இம்முறையோ ஒரு மாதம் எடுத்துக் கொண்டார் எனும் போதே எனக்கு லைட்டாக நெருடல் ; மீதமிருக்கும் 92 பக்கங்களை இவர் என்றைக்கு முடிப்பாரோ ? என்று ! இரண்டாவதாய் வந்த ஸ்கிரிப்ட் ரொம்பவே சுமார் என்றிருக்க, தலையில் கை வைத்து உட்கார்ந்து விட்டேன் ! கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்களை விரயம் செய்து விட்டோமே என்ற சங்கடத்தோடு முழித்துக் கொண்டிருந்தவனைப் பார்த்து மூன்று பாகங்களும் எக்காளமிட்டது போலிருந்தது ! எழுதி வந்திருந்த முதல் 46 பக்கங்களை செப்பனிடும் முயற்சியில் அரை நாளைச் செலவிட்ட போது பொறுமையைத் தொலைத்ததே புலனாகியது ! இந்த பல்டிகளை முயற்சிக்கும் நேரத்துக்கு மொத்தத்தையும் புதுசாய் எழுதிடுவது லேசு தான் என்று பட்டது ! இவை அத்தனையும் அரங்கேறிய சமயம் தேதி - ஜனவரி 5 ! 

144  பக்க ஆல்பத்தினை பிப்ரவரி முதல் தேதிக்கு ஹார்ட்கவர் சகிதம் உங்களிடம் ஒப்படைப்பதாயின், இனி பிசாசாய் பணிசெய்தாலன்றி கதைக்கு ஆகாதென்பது புரிந்தது ! Fresh ஆக அந்தப் பக்கங்களை எடுத்துக் கொண்டு, மறுக்கா ஒருவாட்டி படங்களை பராக்குப் பார்த்தபடிக்கே நகர்ந்த போது - ஒரு அசாத்தியக் கதைசொல்லியும், ரகளையான ஓவியரும் இங்கே கடைவிரித்திருப்பது கண்கூடாய்த் தெரிந்தது ! ஏற்கனவே நமது ஜேசன் ப்ரைஸ் 3 பாகத் தொடருமே இதே கதாசிரியர் + ஓவியர் கூட்டணி என்பது நினைவுக்கு வந்திட, அந்தக் கதையினில் பணியாற்றிய நினைவுகள் pleasant ஆக வந்து போயின !! எங்கிருந்தோ குடியேறிய வைராக்கியமும், எங்கிருந்தோ கிட்டிய ஆற்றலும் இணைந்திட இந்த மொத்தப் பணியையும் மூன்றரை தினங்களில் பூர்த்தி செய்தேன் ! யோசித்துப் பார்க்கும் போது, இந்தக் கதைக்குள் புகுந்த பின்னே நம்மையும் அறியாதே தொற்றிக் கொள்ளும் அசாத்திய பரபரப்பே என் பேனாவிற்கு றெக்கைகளைத் தந்துள்ளன என்பது புரிகிறது ! And அது முடிந்த சூட்டோடு சூடாய் ; பணி சார்ந்த நினைவுகள் உள்ளுக்குள் கனன்று கொண்டிருக்கும் போதே இந்தப் பதிவினையும் எழுதி முடித்தேன் ! 

To cut a long story short - இது எனக்கு நானே முதுகு சொரிந்து விட்டுக் கொள்ளும் தருணமே அல்ல ; on the contrary இந்த நொடியும் சரி, ஆல்பம் வெளியாகும் வேளையும் சரி, வரம் வாங்கி வந்திருக்கும் இந்தப் படைப்பாளிகளைக் கொண்டாடிடும்  வேளைகளாகவே முழுக்க முழுக்க இருந்திட வேண்டி வரும் ! இதன் பொருட்டே நான் மாமூலாய்ப் போடும் ஹாட்லைன் பல்லவியினை கூட அரைப் பக்கத்தோடு இந்த ஆல்பத்தில் முடித்துக் கொண்டு, கதாசிரியரே மனம் திறக்கும் முன்னுரைக்கு முன்னுரிமை தந்துள்ளேன் ! செர்பிய மொழியினிலே வெளியான அர்ஸ் மேக்னாவின் தொகுப்பிற்கு அவர் எழுதியிருந்த முன்னுரையைக் கேட்டு வாங்கி, மொழிபெயர்த்துத் தந்துள்ளேன் ! 

இந்தக் கதையைப் பற்றிச் சொல்வதானால் எங்கே ஆரம்பிப்பது ? எங்கே சிலாகிப்பது ? எங்கே எழுந்து நின்று கரவோசை எழுப்புவது ? என்ற குழப்பமே மிஞ்சுகிறது ! இதனை ஏற்கனவே வாசித்திருக்கும் நண்பர்களுக்கு இது மறு ஒலிபரப்பாய்த் தென்படலாம் தான் ; ஆனால் இந்தப் படைப்பினை எத்தினி பேர் ; எத்தினி இடங்களில் உச்சி மோர்ந்தாலும் தப்பில்லை என்றே நினைக்கச் செய்கிறது ! 

இரண்டாம் உலக யுத்தப் பின்னணி...நாஜிக்களிடம் சிக்கித் தவிக்கும் பெல்ஜியம்...அதன் ஜொலிக்கும் தலைநகர் பிரஸ்ஸல்ஸ்...இவையே இந்த 144 பக்க ரகளையின் backdrop ! ஜேசன் ப்ரைஸ் ஆல்பங்களில் 1920-களின் இலண்டனை கண்முன்னே ஓவியர் மிலன் இவனோவிக் கொணர்ந்திருந்தார்  எனில் - இம்முறை ப்ரஸ்ஸல்ஸின் கம்பீரத்தை அதகளமாய்ப் போட்டுத் தாக்கியுள்ளார் ! இந்த ஆல்பத்தின் உருவாக்கத்தைப் பற்றி கதாசிரியரும், ஓவியரும் பகிர்ந்து கொள்ளும் நினைவுகளை, கதையினைப் படித்து முடித்த பிற்பாடு வாசிக்கும் போது - பிரமிப்பில் உள்ளிழுக்கும் மூச்சை யோகப்பயிற்சியில் வெளிவிடுவது போலவே வெளிப்படுத்த வேண்டிப் போகிறது ! ஓவியர் என்னை மிரட்டியது ஒருபக்கமெனில் , கதாசிரியர் இன்னொரு extreme க்கு இட்டுச் சென்றார் என்றே சொல்லியாக வேண்டும் ! இந்த 144 பக்க ஆல்பத்தினூடே பயணித்த மூணரை நாட்களில் நான் கூகுளைத் துளாவிய ஒவ்வொரு முறைக்கும்  நூறு ரூபாய் தர அவசியமாகிப் போயிருந்தால், இந்நேரத்துக்கு கூகுளின் கடனை அடைக்க கன்னத்தில் மருவோடு - ஏதாவதொரு வங்கியில் கன்னக்கோல் வைக்க வேண்டி வந்திருக்கும் ! போர் நிகழ்வுகள்  ; தகரத்தைத் தங்கமாக்கும் ரசவாதக் கோட்பாடுகள் ; பிரஸ்ஸல்ஸின் வரலாறு ; லத்தீன் மொழியின் சொற்றொடர்கள் ; கிருஸ்துவ நம்பிக்கைகளினூடே பின்னிக் கிடக்கும் வரலாற்று நிஜங்கள் ; வேதியியல் ; ஜெர்மானிய தலைவர்களின் யுத்த யுக்திகள் ; Freemasons ; Lodges - என்று நான் கற்றறிய அவசியப்பட்ட சமாச்சாரங்கள் ஒரு நூறு !! எங்கேனும் குழப்பும் இடத்தில், ஆய்வு செய்திடச்  சோம்பல் கொண்டு, எதையேனும் நானாய்ப் பூசி மெழுகினால் அடுத்த பத்தாவது பக்கத்திலேயே அது குமட்டில் குத்தாய்த் திரும்பிட, மிரண்டே போனேன் ! விசித்திரமாய் முதல்வாசிப்புக்குத் தோன்றும் அத்தனை விஷயங்களுக்கும் பின்னே லாஜிக் சாயத்தை அனாயாசமாய்ப் பூசுவது ; வரலாற்றோடு, கற்பனைகளை இணைத்திடும் அந்த அற்புத லாவகம் ; கதையின் எந்தவொரு இடத்திலும் துளி கூட டெம்போ குறைந்திட அனுமதிக்கா ஸ்கிரிப்ட் ; எங்கெங்கோ சிகிச் சிதறி தெறிக்கும் புள்ளிகளின் சகலத்தையும் ஒற்றை இலக்கினில் அழகாய் ஒருங்கிணைக்கும் தேர்ச்சி - என கதாசிரியர் Alcante மூன்று அத்தியாயங்களிலும் அடித்திருக்கும் சிக்ஸர்களைக் கண்டு ரோஹித் ஷர்மாவே பொறாமை கொள்ளலாம் ! 

இன்னமும் எடிட்டிங்கில் ஒரு வண்டித் திருத்தங்கள், மாற்றங்கள் என செய்து வரும் எனக்கு - புதனுக்குள் இதனை அச்சுக்கு கொண்டு செல்வதே இந்த நொடியின் ஒற்றை இலட்சியம் ! தயாரிப்பும் சிறப்பாய் அமைந்து, மொழியாக்கமும் நெருடல்களின்றி கதையை முன்னெடுத்துச் செல்வதில் வெற்றி காணின், மெய்யாகவே ஒரு மெகாப் பெருமூச்சை விட்டே தீருவேன் ! கிராபிக் நாவல்களின் மொழிபெயர்ப்பினில் எதிர்ப்படும் இடர்கள் பழகி விட்டன ; ஆனால் ஒரு ஆக்ஷன் த்ரில்லரில் இத்தனை நாக்குத் தொங்கிடும் அவசியம் என்னவாக இருக்கக்கூடும் என்பதை ஆல்பத்தைப் படிக்கும் போது தான் புரிந்திட இயலும் ! Anyways - இந்த ஆல்பத்தினை உங்களிடம் ஒப்படைக்கும் வேளைக்கும், உங்களின் தீர்ப்புகளுக்குக் காத்திருக்கும் வேளைகளுக்கும் இப்போதிலிருந்தே காத்திருக்கத் துவங்கி விட்டேன் ! Fingers HUGELY crossed !! இதோ அதன் அட்டைப்பட முதல் பார்வை ! நிஜத்தைச் சொல்வதானால், இங்கு தான் இதற்கு முதல்பார்வை ; கதாசிரியரோ இதனை ஏற்கனவே தனது FB பக்கத்தில் அறிமுகம் செய்து விட்டிருக்கிறார் ! முழுக்கவே ஒரிஜினல் டிசைன்கள் தான் - முன் & பின் அட்டைகளுக்கு - கோகிலாவின் வர்ண மெருகூட்டல்களோடு ! 

ஹார்ட்கவரில், மாமூலான நகாசு வேலைகளோடு உங்களைச்சந்திக்கும் போது அட்டைப்படம் இன்னமும் ஒரு லெவல் அதிகமாய் மிரட்டக்கூடும் என்பேன் ! And இதோ உட்பக்க சித்திர + கலரிங் அதகளங்களின் ஒரு மினி சாம்பிள் :

இந்த ஒற்றைப் பக்கத்தினில் மட்டுமே அரங்கேறியுள்ள சித்திர ஜாலங்களை நண்பர் ராஜ் முத்துக்குமார் போன்ற ஓவியப் பார்வை கொண்டோர் விளக்கினால் ஒரு நாள் முழுக்கக் கேட்டுக் கொண்டிருக்கலாம் ; and இந்த சாகஸத்தின்138 பக்கங்களிலும்  சித்திர பிரமாண்டங்கள் காத்துள்ளன ! So "கதை சொல்லும் சித்திரங்கள்" என்ற வர்ணனை விஸ்வரூபம் காணுமொரு அழகான தருணம் பிப்ரவரியில் புலர்ந்திடும் போது - இந்த இதழை உங்கள்  வாசிப்புகளுக்கு எடுத்துக் கொள்ள சற்றே துரிதமாய் நேரங்களை ஒதுக்கிடக்  கோருவேன் !! A masterpiece deserves its fair share of attention !! 

ரைட்டு...குவிந்து கிடக்கும் எடிட்டிங் பணிகளுள் புகுந்திடப் புறப்படுகிறேன் நான் ! 

அப்புறம் ஒரு சின்ன தகவல் : நாளைய தினம் நமது ஆன்லைன் புக்பேர் மாலை நாலரை சுமாருக்கு நிறைவுறும் guys ; 4 நாட்களாய் ஆபீசே கதியெனக் கிடந்துள்ள நம்மவர்கள் நாளையாவது சற்றே விரைவாய் வீடு திரும்பட்டுமென நினைத்தேன் ! So நாளை ஆர்டர் செய்திட எண்ணியுள்ள நண்பர்கள் சற்றே சீக்கிரமே செய்து ஒத்துழைப்பின் சூப்பர் ! நாளைய தினம் எவ்விதம் இருப்பினும், இதுவரைக்குமான 3 தினங்களும் பிரமாதமே ! And by the way, "மரண முள்" தெறிக்க விட்டுக்கொண்டுள்ளது என்பது கொசுறுத் தகவல் ! Bye all ....see you around !! Have a lovely Sunday !

P.S : 2021-ன் சந்தாக்கள் துவங்கிட நடுவில் ஒற்றை மாதத்து (march) இதழ்கள் மாத்திரமே பாக்கியுள்ளன என்பதை நினைவூட்ட  அனுமதியுங்கள் - ப்ளீஸ் ! So இதுவரையிலும் சந்தா எக்ஸ்பிரஸில் டிக்கெட் போட்டிருக்கா நண்பர்கள், தொடரும் நாட்களில் அதற்கான ஏற்பாடுகளை செய்தால் மகிழ்வோம் !! Please guys !

Wednesday, January 13, 2021

விடிந்தால் பொங்கல் !!

 நண்பர்களே,

வணக்கம். ஈரமான போகி தின வாழ்த்துக்கள் ! வர்ண பகவான் அதிசயமாய் எங்கள் ஊரின் மீது பாசப்பார்வையை படர விட்டிருக்க, நேற்று பின்னிரவு முதலே மழையோ மழை ! காய்ந்த பூமிக்கு இதொரு வரமே என்றாலும், சகலத்தையும் கடைசி நிமிஷம் வரைக்கும் ஜவ்வு இழுத்தே பழகிப் போன நமக்கு - எதிர்பாரா இந்த விண்ணின் H2O கொடையானது, கொஞ்சம் திக்-திக் தான் ! இன்றைக்கு காலை வரையிலும் ஆன்லைன் புத்தக விழாவின் ஸ்பெஷல் இதழ்களின் அச்சுப் பணிகள் நீண்டிட, ஆளுக்கொரு மழைக்கோட்டை மாட்டிக் கொண்டே பைண்டிங்குக்கு காவடி எடுத்து வருகின்றனர் - நாளை காலைக்குள் அந்த 3 இதழ்களையும் பைண்ட் செய்து வாங்கிடும் முனைப்பில் ! So மப்பும் மந்தாரமுமாய் நாள் முழுக்க காட்சி தரும் வானத்தை - மறைந்த டைரக்டர் விசு சாரின் சகோதரர் கிஷ்முவைப் போலவே நோட்டமிட்டு வருகிறேன் !  சர்க்கஸ் செய்தேனும் - நாளைக் காலைக்கு மூன்று இதழ்களும் நமது ரேக்கில் அமர்ந்திருக்குமென்ற நம்பிக்கை இருப்பதால், அந்த மூன்றும் என்னவென்று பார்க்க இனி முனைந்திடுவோமா ? 

To start with - நம்ம கோவை ஸ்டீல் அள்ளி விட்டுக்கொண்டிருந்த ஆரூடங்களின்படி கென்யா ; உகாண்டா ; கவுந்தம்பாடி என்றெல்லாம் ஏதும் கிடையாது - இந்த புக்பேர் ஸ்பெஷல்களுள் ! அதற்குக் காரணங்கள் கணிசம் :

1.பத்தே நாட்களுக்கு முன்பாய் ரூ.450-க்கு தோர்கல் ; அடுத்த இரண்டே வாரங்களுக்குள் ரூ.300 விலையில் அர்ஸ் மேக்னா & தொடரும் மாதத்தில் "பிரளயம்" என சரமாரியாக biggies உள்ள பொழுதினில் உங்கள் வாங்கும் திறன்களையும், எங்களின் பணியாற்றும் ஆற்றல்களையும் ஏக நேரத்தில் படுத்திப் பார்க்க இஷ்டமிருக்கவில்லை ! And இன்னமும் சகஜ நிலை திரும்பியிருக்கா மார்க்கெட்டில் - நமது விற்பனையாளர்களும் சிரமங்களுக்கு ஆளாகிட  கூடாதன்றோ ?!  So பெருசாய், அதிரடியாய் எதையும் கையிலெடுக்க இது வேளையாகாது என்பது தெளிவாய்ப் புரிந்தது ! 

2. ரொம்பவே முக்கியமாய் - வலைக்கு அப்பாலுள்ள நண்பர்கள் ; அயல்நாட்டுச் சந்தாதாரர்கள் போன்றோர் - இந்த 'லெப்டுக்கா போயி ; ரைட்டுக்கா கை காட்டி, குப்புறக்கா பல்டியடிக்கும்' நமது  'திடீர் வெளியீடுகளை' கடுப்போடே பார்த்திடுகின்றனர் ! "உங்க எடிட்டர் கிட்டே வருஷத்துக்கு இன்ன இன்ன ஸ்பெஷல் இதழ்கள் ; என்னென்ன விலைகளில்னு கேட்டுச் சொல்லுங்களேன் ! மிடிலே !!" என்று சந்தா செலுத்தும் வேளைகளில் வரும் போன்கள் கணிசமே ! இங்கேயோ - "பீச்சாங்கை பக்கமா படுக்கையிலிருந்து எழுந்தா இன்னாரு ; சோத்தாங்கைப் பக்கமா எழுந்தாக்கா அன்னாரு !!" என்பதே நமது தேர்வுகளின் பின்னணிகள் எனும் போது - முன்கூட்டிய பெரும் திட்டமிடல்கள் எப்போதுமே சிரமமே ! 

3. And சகலத்தையும் விட முக்கிய காரணம் - எந்தவொரு இதழும் சந்தாவோடு இணைந்திருக்கா பட்சங்களில், அதனில் கையில் ஸ்டாக் தங்கி விடுகிறது ! சாகச வீரர் ரோஜரின் "நேற்றைய நகரம்" not bad at all என்ற மார்க்குகள் வாங்கியது தான் ; அறுபது ரூபாய் விலை தான் ; ஆனால் சந்தாவில் சேர்ந்திரா இதழ் எனும் போது - இதர books ஸ்டாக் நிலவரத்தை விடவும், இதனில் இருப்பு ஜாஸ்தி உள்ளது ! ஆகையால் இயன்றமட்டிலும் சந்தாவோடு link ஆகிடல் நம் தலைதப்பிக்க அத்தியாவசியமாகிறது ! அதே சமயம் ஒரு அசாதாரண பேரிடரின் தொடர்ச்சியால் ரெகுலர் புத்தக விழாக்கள் நடக்கத் துவங்கியிரா சூழலில், ஏதேனும் குட்டிக் குட்டிக் குட்டிக்கரங்களுமே அவசியமாகிப் போகின்றன - ஆர்வங்களைத் தக்க வைத்திடும் பொருட்டு ! So "சந்தாவினில் இடம் பெறாது போனாலும் - எப்படியும் விற்பனையில் சோடை போகாது " என்ற ரீதியிலான உத்திரவாதம் தரவல்ல இதழ்களை மட்டுமே தேர்வு செய்தாக வேண்டிப் போகிறது !

And மேற்படி உத்திரவாதம் தரக்கூடியோர் மூன்றே பேர் தான் - இன்றைய நிலவரப்படி ! அவர்கள் :

  • இரும்புக்கை மாயாவியார்
  • மஞ்சச் சட்டை டெக்ஸ் வில்லனார் 
  • இன்னொரு மஞ்சச் சட்டை லக்கி லூக்கியார் 
And பட்டியலில் முதலிரண்டு இடங்களில் உள்ளோர் ஆட்டோமேட்டிக் தேர்வுகளாகிப் போகின்றனர் ! இரும்புக்கை மாயாவியின் black & white தொகுப்பானது அடுத்த மாதம் இங்கிலாந்தில் மறுபதிப்பு காண்கிறது என்பதை ஏற்கனவே சொல்லிய ஞாபகம் உள்ளது ! அவற்றை நாமும் போட்டுத் தாக்கிடத் தீர்மானித்து ஏற்பாடுகளைச் செய்து வைத்திருந்ததால் - அந்தத் தொகுப்பின் முதல் கதையான "நியூயார்க்கில் மாயாவி" பெரிய சைசில் (NOT Maxi) மறுபதிப்பாகிறது ! இதோ - அதன் அட்டைப்பட & உட்பக்க preview : 



மாயாவி தொடரினில் பெரும்பான்மையை நாம் வெளியிட்டு முடித்திருக்கும் நிலையில், மறுபதிப்புகள் தவிர்க்க இயலாது போகின்றன ! And நம்மிடம் கைவசமுள்ள மாயாவி titles சொற்பமே எனும் போது இந்தத் தேர்வுக்கு யோசிக்க அவசியங்கள் எழவில்லை ! இக்கதைகள் Fleetway-ன் பெரிய சைஸ்களில் ஒரிஜினலாய் வெளியானவை என்பதால் - இன்றைக்கு வெட்டி, ஒட்டி, பிளாஸ்திரி போடும் ஆர்டிஸ்டுகள் இல்லா நிலையில் ஒரிஜினலின் சைஸிலேயே நாமும் வெளியிட்டுள்ளோம் ! அட்டைப்படம் - புது சென்னை டிசைனர் + நமது கோகிலா கூட்டணி ! இதோ - ஒரிஜினலாய் இந்தக் கதை ஸ்பெயினில் வெளியான சமயம் அவர்கள் வரைந்த டிசைனை reference கொண்டு சென்னை டிஜிட்டல் ஓவியர் தயாரித்துத் தந்த படமும், அப்பாலிக்கா நம்ம கலைக்கண்ணை முழுமூச்சில் ஈடுபடுத்தி கோகிலாவைக் கொண்டு மெருகூட்டித் தயாரித்த variants : 






இருக்கும் அத்தனை பேரையும் குடலை உருவி, இறுதியாய்த் தயாரித்த ராப்பரை - ஐந்தே நிமிடங்களில் படைப்பாளிகள் அங்கீகரித்த போது - "ஹை !!" என்றிருந்தது ! And ஏற்கனவே இந்தக் கதையானது எனக்குள் ஏகமாய் ஞாபகங்களை வரவழைத்த கதையும் எனும் போது கூடுதலாய் ஒரு மிடறு உற்சாகம் இருந்தது ! "சிங்கத்தின் சிறுவயதில்" தொடரினை நீங்கள் வாசித்திருக்கும் பட்சத்தில், 1985-ல் லண்டனில் நான் அடித்த கூத்துக்கள் ; அங்கே வாங்க சாத்தியமான Fleetway முந்தைய இதழ்கள் பற்றி ; அவற்றை ஒட்டு மொத்தமாய் ஊருக்குச் சுமந்து வருவது இயலாதெனும் போது - தேவையான பக்கங்களை மட்டுமே கத்திரித்துத் தொகுப்பாக்கியது பற்றி ; நான் தங்கியிருந்த ஹாஸ்டலில் இந்த வேலைகள் சாத்தியமாகாதென்பதால், இதற்கென இலண்டனில் விட்ட்டோரிய ஸ்டேஷனுக்கு அருகே ஒரு ரூம் போட்டு கத்திரி போட்டது - என சகலத்தைப் பற்றியும் எழுதியிருந்தேன் ! அந்தத் தொகுப்பினைப் பார்த்து ஆர்டர் போட்டு அந்நாட்களில் வந்து சேர்ந்ததே "நியூயார்க்கில் மாயாவி !" So இந்த இதழின் மறுபதிப்பு கொஞ்சமாய் ஆட்டோகிராப் சேரன் பாணிக்கு என்னை இட்டுச் சென்றது தான் ! ஆனால் வாசக ஜுரிக்களான உங்களைக் கவர்ந்தாலன்றி, எதுவும் பெரிதாய் பிரயோஜனம் இராதென்பதால் - தீர்மானம் உங்கள் கைகளில் ! 

புக் # 2-ன் தேர்வை சுலபமாக்கித் தந்தது நீங்களே ! இரவுக் கழுகார் தோன்றும் "மரண முள்" இதழினை சந்தாவிலான MAXI லயனில் இணைப்பது பற்றி ஓரிரு பதிவுகளுக்கு முன்பாய்க் கேட்டிருந்தேன் ! ஆனால் கொஞ்சமாய் ; ரொம்பக் கொஞ்சமாய் mixed reactions என்ற போதே லைட்டாகப் பின்வாங்குவதே தேவலாமென்று பட்டது ! So காலியான அந்த சந்தா MAXI லயனின் இறுதி ஸ்லாட்டில் "லக்கி லூக்கின் - கௌபாய் எக்ஸ்பிரஸ்" இதழை வெளியிடுவதே நலமென்று தீர்மானித்தேன் ! 'இஷ்டப்பட்டால் மாத்திரம் வாங்கிக்கலாம் ; no சந்தா சார்ந்த தலையில் திணித்தல்" என்ற பட்டியலுக்கு மரண முள் - வண்ண மறுப்பதிப்பை நகற்றத் தீர்மானித்தது இப்படித் தான் ! தீர்மானித்த நொடியே, மறுக்கா சென்னை டிசைனர் & மறுக்கா கோகிலாவின் குடல் உருவல்கள் துவங்கின !! இதோ அவற்றின் பலன் : 
முன்னட்டை - சென்னையார் + கோகிலா கூட்டணியின் தயாரிப்பு & பின்னட்டை போனெல்லியின் டெக்ஸ் போஸ்டரிலிருந்து சுட்ட வடை ! ஒரு லைட்டான திகில் feel இருக்கும் பொருட்டு பளீர் வர்ணங்களை பின்னணிக்கு வழங்கிடாது grey கலந்து வழங்கிட தீர்மானித்தேன் & அதன் பலனாய் அந்த "மரண முள்" சிகப்பு பளிச்சென்று கண்ணில் பட்டதாய் நினைத்தேன் ! தொடர்வது உட்பக்க வண்ண preview : 

கதையைப் பொறுத்தவரை - எனக்கு ரொம்பவே சுமாரான நினைவுகள் மட்டுமே தலையில் தங்கியிருக்க - புதிதாய்ப் படிப்பது போலவே இதனூடே பணியாற்றினேன் ! And ரொம்பவே crisp வாசிப்புக்கு அழகான இதழாய் எனக்குப் பட்டது ! கருணையானந்தம் அவர்களின் மொழிபெயர்ப்பு ; கதையோட்டம் ; கலரிங் - என எதிலுமே புராதனம் தட்டுப்படவில்லை எனும் போது நிஜமாகவே ரசிக்க முடிந்தது எனக்கு ! நீங்களும் ரசித்திட்டால் ஜூப்பர் தான் !

இதழ் # 3 - லக்கி லூக்காய் இருக்குமென்கின்ற யூகம் உங்களிடையே இருக்கும் போதிலும் நிஜம் அதுவுள்ள folks ! "கௌபாய் எக்ஸ்பிரஸ்' சந்தாவில் இடம்பிடிக்கவுள்ள இதழ் என்பதால், அதனை மாதத்தின் நடுவாக்கில் வெளியிடுவது நிச்சயமாய் சுகப்படாது ! So "கௌ.எ." மார்ச் முதல் தேதிக்கு கூரியர்களில் உங்கள் இல்லம் தேடி வந்திடும் ! தற்போதைய ஸ்லாட் # 3-ஐ தொட்டு நிற்பது light reading-க்கென கைவசமுள்ள நமது சட்டித்தலையன் ஆர்ச்சியே ! அந்நாட்களில் இந்த இரும்பு மனிதனை சிலாகித்த நண்பர்களில் ஒரு பகுதியினர்  இன்றைக்கு தெறித்து ஓட்டம்பிடிப்பது  நிஜமென்பதை நானறிவேன் ; ஆனால் இதனை ஒரு "வாண்டு ஸ்பெஷல்" இதழாய் ஒரு கணம் உருவகப்படுத்திப் பாருங்களேன் - நிச்சயமாய் உங்களின் குட்டீஸ்களுக்குக் கதை சொல்ல செம சாய்சாக இருந்திடக்கூடும் ! "ஆழ்கடலில் ஆர்ச்சி" - இது வரைக்குமான காதுல பூக்கடையாய் இல்லாது - ஒரு ஜாலியான   adventure கதை போல் பயணிக்கின்றது ! ஆர்ச்சிக்கு வசனங்கள் (!!!!) மட்டுமே அடியேனின் உபயம் ; பாக்கி எல்லாமே கருணையானந்தம் அவர்களின் கைவண்ணம் ! இதோ - மறுக்கா நமது சென்னை டிசைனரின் கைவண்ணத்தில் உருவான அட்டைப்பட முதல்பார்வை :



சாப்பாட்டுக் கூடையைத் தூக்கிப் போகும் பாணியில் போட்டை சுமந்து செல்லும் ஆர்ச்சியின் ராப்பரையும், துரிதமாய் படைப்பாளிகள் ஓ.கே. சொல்லி விட்டனர் ! So நமது சென்னை டிசைனர் + கோகிலா கூட்டணியின் இவ்வாரத்து ஹாட்ரிக் இது ! Crisp-ஆன இந்தக் கதையையும் தைரியமாய் வாங்கிப் படித்திட்டால், நிச்சயமாய் அறுபது ரூபாய் தண்டமென்ற எண்ணம் தோன்றிடாதென்பேன் ! Give it a try guys ? 

ஆக இவையே நாளை பகலில் நமது புத்தக ரேக்குகளில் புதுவரவுகளாய் இணைந்து கொள்ளவுள்ள இதழ்கள் ! Light reading என்பதோடு - இவற்றை எப்போது சுகப்பட்டாலும் வாங்கிக்கொள்ளலாம் ; வாசித்தும் கொள்ளலாம் என்ற advantage இருப்பதாய் நான் நினைத்தேன் ! Of course - "இதுக்கு தானாக்கும்  உன் பில்டப் ?" என்று முகத்தை வெட்ட நண்பர்கள் இல்லாது போக மாட்டார்கள் என்பதை யூகிப்பது சுலபமே ! ஆனால் பொறுமையாய் இத்தேர்வுகளின் பின்னணிகளை அலசினால் யதார்த்தம் புரியும் ! விண்ணில் கோட்டைகள் கட்டுவதெல்லாம் ஜாலங்களே ; மறுக்க மாட்டேன் தான் ! ஆனால் அததுக்கென ஒரு தருணம் அவசியமன்றோ ? So இதுவே நமது தற்போதைய திட்டமிடல் ! 

அப்புறம் இந்த 4 நாள் விழாவினில் பங்கேற்கும் நண்பர்கள் அனைவருக்கும் ஒரு குட்டியான லக்கி லூக் போஸ்டர் நம் அன்புடன் உண்டு ! உங்களின் work stations ; கம்பியூட்டர் டேபிள் ; பசங்களின் அறைச் சுவற்றில் - என எங்கேனும் ஒட்டிக் கொள்ளும் விதமிருக்கும் ! 

Bye all ....பொங்கல் நல்வாழ்த்துக்கள் !! தைத் திருநாள் சகல சதோஷங்களையும் நம் இல்லங்கள் தேடி வரச் செய்யட்டும் !! நான் பிப்ரவரியின் எடிட்டிங்குக்குள் குதிக்கக் கிளம்புகிறேன் ! See you around folks !! 

Sunday, January 10, 2021

தலயின் தலை !!

 நண்பர்களே,

வணக்கம். 2020-ன் அட்டவணையின் இறுதி மூன்று மாதங்களுக்கென - தோர்கல் ; அர்ஸ் மேக்னா & பிரளயம் - என மூன்று மெகா இதழ்களை ஒதுக்கி வைத்தருந்தது பற்றி ஏற்கனவே எழுதியிருந்தேன் ! அவ்வப்போது பணியாற்றச் சோம்பல் என்பதுமே அவற்றை ஒத்திப் போட்டே பயணித்ததன் பின்னணிக்கொரு காரணம் என்பதை மறுப்பதற்கில்லை ! But எது எப்படியோ, நாட்காட்டிகளின் சருகுத் தாட்கள் - 'க்றிஸ் ஆப் வல்நாரை' விடவும் இரக்கமற்றவை என்பதை ஆண்டின் துவக்கம் முதலாகவே உணர்ந்து வருகிறேன் ! 'லொடக் லொடக்' என சாவகாசமாய் பயணமாகும் பேஸஞ்சர் ரயிலைப் போல மாதத்தின் 10  தேதிகளிலும், 15 தேதிகளிலும் ஆஜராகிக் கொண்டிருந்த இதழ்களை மறுக்கா முதல் தேதிக்கென சீரமைக்க தோர்கல் & கோ.வோடு அடிக்க நேர்ந்த அந்தர்பல்டிக்களின் கிறுகிறுப்பே ஓய்ந்திருக்கா நிலையினில் - பிப்ரவரியின் கத்தை மேஜை மீது குவிந்து கிடக்க, அதற்குமிடையே - "ஆன்லைன் புத்தக விழாவுங்கோ ; நாங்க அதுக்கோசரம் தயாராக வேணும்ங்கோ !" என்று புதிதாய் ஒரு இடைச்செருகல் ! என்ன பண்ணுகிறோமோ இல்லையோ - இப்போதெல்லாம் பிரிண்ட் அவுட்களை எடுத்துக் குவிக்க நாங்கள் வாங்கித்  தள்ளும்  A4 பேப்பர் பாக்கெட்டுகளை - அந்நாட்களில் கடுதாசிக் கணைகள் தொடுக்க நம்ம தலீவர் கூட வாங்கியிருக்க மாட்டார் என்பேன் ! So பிப்ரவரியின் முதல் தேதிக்கென வந்திடவுள்ள இன்னொரு ஹார்ட்கவர் மெகா இதழ் & அதன் கூட்டணி மீதொரு கண் ; இடைப்பட்டுள்ள நமது ஆன்லைன் விழாவுக்கான 3 இதழ்கள் மீது இன்னொரு கண் - என all கண்ஸ் ஒரே பிசி ! இதுக்கோசரமே புனித மனிடோ தாராமுட்டை சைசுக்கு கண்களைத் தந்திருப்பாரோ ?

ஜனவரியின் முக்கூட்டணியின் இதுவரையிலான உங்கள் அலசல்கள் + விற்பனைகளைக் கொண்டு பார்க்கும் போது - the real surprise என்பது "கோழைகளின் பூமி" தான் ! தோர்கல்அடிக்கவுள்ளது சிக்ஸரே என்பது எப்போதோ தெரிந்த சேதியே ; என்மட்டில் புக்கின் தயாரிப்பு நயமாய் அமைகிறதா ? என்ற பயம் மாத்திரமே குடியிருந்தது ! அதுவும் பெருசாய் பிசகுகளின்றித் தயாராகி நின்ற போதே - " ரைட்டு...ஆண்டின் துவக்கம் சார்ந்த கவலைகள் அனாவசியம் !" என்று புரிந்து விட்டிருந்தது ! ஹெர்லக் ஷோம்ஸ் பற்றியும் என்னுள் ஒரு புரிதலிருந்து - கூரையிலேறிக் கூவிடும் வெற்றியாக இது இராது ; ஆனால் ஒரு 20 நிமிட வாசிப்பினில் மனதுகளை refresh செய்திட  நிச்சயம் தவறிடாது என்று ! And அது கச்சிதமாய் நிறைவேறியுள்ளதாய்த் தோன்றுகிறது - at least கார்ட்டூன் ஆர்வலர்களின் மத்தியினில் ! அநேகமாய் 2021 -ல் வெளியாகவுள்ள ஹெர்லக் ஆல்பத்துக்குப் பிற்பாடு, ஒரேயொரு சிங்கிள் சாகசம் மட்டுமே எஞ்சியிருக்கும் இத்தொடரினில் என்று நினைக்கிறேன் ! "கோழைகளின் பூமி" நிச்சயமாய் பேசப்படுமென்று யூகித்திருந்தேன் தான் ; ஆனால் விற்பனையிலுமே அது சாதித்திடுமென்பது நான் எதிர்பாரா ஒன்று ! And again - எனக்குள் கொஞ்சமாய் நெருடல்களிருந்தன - 'நிறைய loose ends தொங்கிக் கொண்டுள்ளனவே - அவற்றைக் கொண்டே இந்தக் கதையின் கழுத்துக்கு சுருக்கு மாட்டி விடுவீர்களோ ?' - என்று ! ஆனால் இந்தக் கருப்பு வெள்ளை கி.நா. பாணிகளுக்கு நீங்கள் செமையாய் sync ஆகி விட்டுள்ளீர்கள் என்பது ஸ்பஷ்டமாய்ப் புரிஞ்சூ ! So எதிர்நோக்கியுள்ள ஆண்டுகளில் ஏதேனுமொன்றில் - ஆறுக்கு ஆறு கி.நா. தேர்வுகளையும் இந்த போனெல்லி வரிசையிலிருந்தே அமைத்திடும் வாய்ப்பும் பிரகாசமோ ? 

And on the topic of கி.நா.ஸ் - ஒரு கனவு உள்ளுக்குள் கடந்த சில வாரங்களாகவே துளிர் விட்டு வருகிறது ! ஒரு ரொம்ப ரொம்ப வித்தியாசப் படைப்பு கண்ணில் பட்டது ! பணியினில் பெண்டை நயமாய்க் கழற்ற வல்லது என்பது பார்த்த மாத்திரத்திலேயே தெரிந்தது ! ஆனாலும்  அதை எப்படியேனும் தமிழுக்கு கொணரும் ஆசை ததும்புகிறது ! ஒரே சிக்கல் : இதனில் பணி செய்வதெனில் ஒரு ரெண்டோ / மூணோ வாரங்களுக்கு பாக்கி சகலத்துக்கும் டாட்டா காட்டி விட்டு, இதற்குப் பேனா பிடிப்பதில் முழுமூச்சாய் இறங்கிட வேண்டியிருக்கும் ! அந்த மாதிரியொரு அவகாச luxury வாய்க்கும் தருணத்தில் சத்தமின்றி இதனை நனவாக்கிட முனைய நினைத்துள்ளேன் ! Could be 2021 ..or  2022 ...or ....!! Fingers crossed !

இம்மாத தோர்கல் சிக்ஸர் ஒருபக்கமிருக்க ; காமெடிக்கோசரம் "கானகமே காலடியில்" இதழும் இருக்க - நிஜ காமெடி துவங்கியது வேறொரு ரூபத்தில் ! வரிசையாய் நமது ஏஜெண்ட்களுக்கு போன் போட்டு ஜனவரியின் பட்டியலை நம்மவர்கள் வாசித்தால் - "ம்ம்..அப்புறம் ?..அப்புறம் ?" என்ற கேள்விகளே ! "அப்புறம் ஒன்னும் இல்லேங்கண்ணா ; இந்த மாசம் மூணே புக் தான் !" என்று பதில் சொல்ல - "இன்னாது ? டெக்ஸ் கிடையாதா ? வருஷத்திலே மொத மாசத்திலேயே டெக்ஸ் கிடையாதா ? " என்ற கண்சிவத்தல்கள் மறுமுனைகளிலிருந்து !! "இல்லீங்க ; இந்த மாசம் தோர்கல்ன்னு பெரிய புக் ரெடியாகிருக்கு ; இது நல்லா இருக்கும் !" என்றால் - "என்னமோ போங்க !!" என்ற சலிப்புகளே ! இப்போதெல்லாம் நம்மவர்களே - அந்த மாதத்து புக்ஸ் என்னவென்று என்னிடம் கேட்க வரும் போது "டெக்ஸ் கிடையாதா சார் ?" என்று பீதியோடே வினவுகின்றனர் ! இன்னமும் 2 டெக்ஸ் வறட்சி மாதங்கள் காத்திருக்க, செத்தார்கள் நம்மவர்கள் !! இது தான் யதார்த்தம் ; இது தான் ஒரு மெய்யான தல தாண்டவம் என்பதை சிலபல அண்டா ஓனர்கள் புரிந்திட புனித தேவனிடம் கோரிக்கை வைப்போம் !  

And இந்தத் தல தாண்டவங்களின் இன்றைய தலைமகனுடன் இத்தாலியில் நிகழ்ந்துள்ளதொரு அளவளாவலின் தமிழாக்கமே இவ்வார பதிவின் highlight ! டெக்ஸ் வில்லரின் நடப்பு எடிட்டரும், அநேகமாய் அவரது தொடரின் maximum hits தந்திடும் ஜாம்பவானுமான திரு மௌரோ போசெல்லி அவர்கள் இணையத்தில் மனம் திறந்துள்ளார் !  

டெக்ஸ் வில்லர் : ஆற்றலின் மறு உருவம் ; நேர்மையின் சின்னம் ; விவேகம் ; வீரம் ; வேகம் என சகலத்திலும் முதல்வன் ! உருவில் இவர் அசுரனல்ல ; ஆனால் உணர்வுகளுள் கலந்து 72 ஆண்டுகளாய் உலகெங்கும் ஏகமாய் காமிக்ஸ் ரசிகர்களின் மனதில் கோலோச்சும் அசாத்தியன் !! 1948-ன் செப்டெம்பர் 30 முதலாய்த் துவங்கிய இவரது அதிரடிகள் - பல லட்சம் சித்திரங்களோடு ; பல நூறு சாகசங்களோடு கலக்கி வந்தாலும், இதன் பின்னணியில் உள்ள கதாசிரியர்கள் சொற்பமே ! பிதாமகர் போனெல்லி துவக்கியதை தமையன் செர்ஜியோ தொடர்ந்திட, இன்று அந்த ஜோதியைக் கையில் ஏந்தி நிற்கும் மௌரோ போசெல்லி பேசுகிறார் :

முதல் கேள்வி : டெக்ஸ் தொடரின் கதாசிரியர் ஆவது எப்படி ? அதற்கென என்ன மாதிரியான முன்னேற்பாடுகள் ; முஸ்தீபுகள் அவசியப்படும் ?  

போசெல்லி : அடிப்படையில் நமது கதாநாயகனை உள்வாங்கிக் கொள்ள - அவரைப் படைத்த பிதாமகரின் ஆக்கங்களை ஒன்று விடாமல் வாசித்திட வேண்டியது அத்தியாவசியம் ! ஷெர்லாக்  ஹோம்ஸின்புதுக் கதைகளை எழுதிடுவதானால் - சர்.ஆர்தர் கோனன் டாயில் எழுதியவற்றை மனப்பாடமாய் அறிந்திருக்க வேண்டிவரும் தானே ? டெக்ஸைப் பொறுத்தவரை - பிதாமகரின் படைப்புகளை உள்வாங்கிய பின்னே, தொடர்ந்திட்ட முக்கிய கதாசிரியர்களின் சுவடுகளை நாம் பின்பற்றிடவும் வேண்டி வரும் ! இன்றைக்கு டெக்ஸுக்குப் புதிதாய்க் கதை எழுதுவோர் க்ளாடியோ நிஸ்ஸியின் படைப்புகளையோ ; எனது கதைகளையோ உதாசீனப்படுத்திட இயலாது ! தற்போதைய டெக்ஸ் கதை டீமில் உள்ளோர் : நான், பஸ்க்வாலே ருஜு ; ஜியான்பிராங்கோ மான்பிரெடி ; ஜாக்கோபோ ரவ்ச் ; கிளாடியோ நிசி மற்றும் எனது உதவியாளன் ஜியோர்ஜியோ கியூஸ்ப்ரெடி மட்டுமே ! ஒரு விதத்தில் எனது சகாக்களை விட எனக்கு இந்தப் பணி சுலபமே - ஏனெனில் நான் அவர்களை விட வயதில் மூத்தவன் (நிஸ்ஸி நீங்கலாக) ! ஆகையால் டெக்ஸ் கதைகளுடனான பரிச்சயம் எனக்கு நீண்டு செல்கின்றது ! எலிமெண்டரி ஸ்கூலில் இருக்கும் நாட்களிலிருந்தே எனக்குப் பெரியவர் G.L. போனெல்லியைத் தெரியும் ! எனது மதியப் பொழுதின் பெரும்பான்மை அவரது பணிக்கூடத்திலேயே கழிந்திருக்கின்றன ; அவரது மகன் என்நண்பன் என்பதால்  - அவனோடு ஒட்டித் திரியும் சாக்கில் பெரியவர் டெக்ஸ் கதைகளில் பணியாற்றுவதை ஏகப்பட்ட நாட்கள் தரிசித்திருக்கிறேன் ! So எனக்குள்ளே டெக்ஸ் ஆழமாய் வேரூன்ற அது உதவியது ! கதை சொல்லும் பாணியினில் நான் அவரிடமிருந்து மாறுபட்டிருந்தாலும், அடிப்படையில் அவர் உருவாக்கிய அந்தக் கதாப்பாத்திரத்தை நன்றாகவே புரிந்திருந்தேன் ! நாம் செல்லவுள்ள கதையின் நாயகன் நமக்குள் குடியிருக்க வேண்டியது தான் அடிப்படைத் தேவை ! 

கேள்வி # 2 : டி-வி. தொடர்களில் ஒவ்வொரு எபிசோடுக்கும் கதை எழுதுவோர் ஒருவித wiki-யை ; தொடரும் ஆசிரியர்கள் தவறாது பின்பற்ற வேண்டிய தகவல்கள் அடங்கிய ஒரு களஞ்சியத்தை உருவாக்கிக் கொள்வர் என்று கேள்விப்பட்டுள்ளோம் ! கதையின் ஓட்டம் ; அதை உருவகப்படுத்திய விதங்கள் ; கதாப்பாத்திரங்களின் தன்மைகள் என்றெல்லாம் அதில் குறிப்பெடுத்திருப்பார்கள் என்று கேள்விப்பட்டுள்ளோம் ! டெக்ஸுக்கு அது போல் ஏதேனும் "களஞ்சியம்" உண்டா ? உங்களது கதாசிரிய டீமின் உபயோகத்துக்கு என ஏதேனும் பிரேத்யேகமாய் உண்டா ?

உண்டு ! டெக்ஸுக்கென ஒரு குட்டியான களஞ்சியம் உண்டு ! ஒரு மதியப்பொழுதில் நான் எழுதிய அந்த நாலோ ஐந்தோ பக்கங்களை மற்ற கதாசிரியர்களும் கையில் வைத்திருப்பர் ! ஒரு டெக்ஸ் கதையின் உருவாக்கத்தில் எவையெல்லாம் மீறிடக் கூடா மரபுகள் ? என்பது பற்றி அதனில் இருக்கும் ! 

டெக்ஸ் கதைகளுக்குப் பேனா பிடிப்பேன் என்றெல்லாம் நான் கற்பனை கூடக் கண்டதில்லை ! காமிக்ஸ் உருவாக்கிட எண்ணியிருந்தேன் தான் ; ஆனால் இது எதிர்பாராது எனக்கு கிடைத்த வாய்ப்பு ! எனக்கு 30 வயதான போது வாழ்க்கையில் ரொம்பவே சிரமப்பட்டுக் கொண்டிருந்தேன் ; அப்போது பெரியவர் போனெல்லி என்னைத் தனது உதவியாளராக ஏற்றுக் கொண்டு எனக்குப் பெரும் சகாயம் செய்திருந்தார் ! பின்னாட்களில் அவரது மனைவிக்குச் சொந்தமான போனெல்லி நிறுவனத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிட்டியது ! பெரியவருடனான எனது நெருக்கம் டெக்ஸை உயிர்ப்போடு வைத்திருக்க எனக்கு ரொம்பவே உதவியது ! எனக்கு முந்தய டெக்ஸ் எடிட்டரான கிளாடியோ நிஸ்ஸிக்கு எனக்கு கிட்டியிருந்த அதிர்ஷ்டங்கள் வாய்த்திருக்கவில்லை ! ஆகையால் அவர் அத்தனை டெக்ஸ் கதைகளையும் நெட்டுரு போட வேண்டியது அவசியமாகியிருந்தது ! ரொம்பவே கடினமான காரியம் தான் ; ஆனால் அதனை பிரமாதமாகச் செய்து காட்டினார் நிஸ்ஸி ! அவரது டெக்ஸ் கதைகளுமே இந்த நாயகரை எவ்விதம் முன்னெடுத்துச் செல்வது ? என்பதற்கான உதாரணங்கள் ! நானும் அவரும் கதை சொல்லும் விதங்களில் நிரம்பவே வேறுபட்டோர் என்றாலும் - கதாநாயகனை அழகாய், எவ்வித நெருடல்களுமின்றி நடத்திச் செல்வதில் இருவருக்குமே வெற்றி என்பேன் ! 

கேள்வி # 3 : சரி, நடைமுறைகளின் பக்கமாய் இனி நகர்வோம் ! லாக்டௌன் நாட்களில் பதிவொன்றைப் பார்த்த போது - நீங்கள் டைப்ரைட்டரில் கதையை டைப் செய்வது போலிருந்தது ! முழுக்கவே டிஜிட்டல் யுகமாகி விட்ட இந்நாட்களில் நீங்கள் இன்னமும் டைப்ரைட்டர் பார்ட்டி தானா ?  

பெரியவர் போனெல்லி காலத்துக்கு ஏற்ற தொழில் நுட்பங்களோடு பயணித்தவர் ; ஒலிவெடி லெட்டரா 33 என்ற டைப்ரைட்டரை பயன்படுத்துவார் டெக்ஸ் கதைகளை டைப் அடிக்க ! அவரைப் பார்த்து நானுமே அதில் பழகிப் போனேன் ! கம்பியூட்டர்களில் டைப் அடிப்பதை விட இது கொஞ்சம் சுலபமாய் இருப்பதாய் எனக்குத் தோன்றுகிறது ! இதில் அடிப்படையில் உள்ள வசதி - முந்தைய பக்கங்களை  ; கதையின் துவக்கங்களை நான் review செய்திட நினைத்தால் பக்கங்களைத் தரையில் போட்டு நொடியில் படித்து விட முடியும் ! கதை வளர வளர, கதாபாத்திரங்கள் அந்த நொடியில் எங்கிருக்கிறார்கள் ; என்ன மாதிரியான மாற்றங்களுக்கு கதையின் ஓட்டத்தில் ஆளாகியிருக்கிறார்கள் ? என்பதையெல்லாம் எனக்கு நானே நினைவூட்டிக் கொள்ள இது ரொம்பவே உதவிடுகிறது ! உதாரணத்திற்கு நானிப்போது பக்கம் 130 -ல் இருந்தாலுமே, துவக்கங்களை நினைவு கூர்ந்துகொண்டே தான் எழுதுவேன் !

அப்புறம் எழுதுவதில் இன்னொரு சூட்சுமமும் உண்டு !! வழக்கமாய் எந்தவொரு தருணத்திலும் நான் 15 முதல் 20 கதைகள் வரைக்கும் ஒரே வேளையில் துவக்கி எழுதிக் கொண்டிருப்பது வாடிக்கை ! GL போனெல்லி இந்த பாணியைக் கடைபிடித்துப் பார்த்துள்ளேன் - ஒரே சமயத்தில் 4 வெவ்வேறு டெக்ஸ் சாகசங்கள் ஓடிக்கொண்டிருக்கும் அவரிடத்தில் ! டைலன் டாக் கதைகளைக் கையாண்ட கதாசிரியர் டிஸியானோ ஷ்லாவியும் இதைச் செய்திடுவார் ! கடந்த 30 ஆண்டுகளாய் நான் இந்த பாணியையே கடைப்பிடித்து வருகிறேன் ! சில சமயங்களில் எனக்கே இது எவ்விதம் சாத்தியமாகிறதென்ற மலைப்பு இருப்பதுண்டு ; ஆனால் என்னுள் உள்ள எழுத்தாளனை உயிர்ப்போடு வைத்திருக்க உதவிடுவது இதுவே !

அப்புறம் ஒரு கதையை நான் நேரடியாய் முடித்திடுவதும் கிடையாது ! இது கூட ஷ்லாவியிடம்   நான் கற்றுக் கொண்டதே ! கதையை க்ளைமேக்ஸுக்கு அருகாமையில் நிறுத்திக் கொள்வேன் - மேற்கொண்டு எவ்விதம் நகரலாம் என்ற எனது யோசனைகளை நோட்ஸ்களாக மட்டும் எழுதி வைத்துக் கொண்டு ! ஆர்டிஸ்டும் படம் போடத்துவங்கி - க்ளைமாக்ஸ் வரைக்கும் முடித்து விட்டு - "மீதம் எப்போ ரெடியாகும் ?" என்ற கேட்பார் ! அதன் பின்னே பணியைத் தொடர்வேன்; அதற்குள் என்னுள் அந்தக் கதையினை நேர்த்தியாய் முடிக்கும் தெளிவு இருக்கும் !

இந்த பாணி அத்தனை பேருக்கும் ஒத்துப் போவதில்லை தான் ! க்ளாடியோ நிஸ்ஸி நிதானமாய் எழுதுபவர் ; ஒட்டு மொத்த ஸ்கிரிப்ட்டையும் கத்தையாக என்னிடம் ஒப்படைப்பார் ! ஆனால் ஓய்வுக்குள் புகும் முன்னே, டெக்சின் தீவிர கதாசிரியராக அவர் இருந்த நாட்களை எண்ணெய் போலவே ஒரே தருணத்தில் ஏகப்பட்ட கதைகளுக்குள் தலை நுழைத்தே கிடப்பார் ! 20 வருடங்களாய் இவ்விதம் பணியாற்றியது, அவரது ஆரோக்கியத்துக்கு பங்கம் ஏற்படுத்தியதை வாசகர்கள் அறிவர் ! 

பஸ்க்வாலே ருஜு கூட இந்த பாணிக்காரர் தான் ; ஆனால் ஒரு நேரத்துக்கு நாங்கோ ; ஐந்தோ கதைகளுக்கு மேலாய் துவங்கிட வேண்டாமே என்று என்னிடம் அடிக்கடி சொல்லுவார் ! அதற்கு மேலாய் இழுத்து விட்டால் குழம்பிப் போய்விடுவோம் என்பது அவரது பயம் ! அவர் Ipad களில் எழுதுபவர் என்பதால், எங்கேனும் பயணம் செல்லும் போதுமே எழுதுவதைத் தொடர்வதுண்டு ! ஆனால் எனக்கு என் ஸ்டுடியோவில் இருந்தால் தவிர எழுத சாத்தியப்படாது ! ஒரு கதைக்குள் ஊன்றி ; கவனம் தந்து ; கானை நகர்த்த எனக்கு என் பணிக்கூடமே சுகப்படும் ! வீட்டுக்கு மாளிகைகளை வாங்கிப் போக மறந்து, திட்டுக்கள் வாங்கிய நாட்கள் நிறைய ; ஆனால் ஒரு டெக்ஸ் கதையின் முடிச்சைத் தவற விட்டதில்லை ! 

எழுத்தென்பது பழகப் பழக மெருகேறும் சமாச்சாரம் எனும் போது - நாட்களின் ஓட்டத்தோடு நமக்கே ஒரு வேகம் கிட்டி விடும் ! இன்றைக்கு டெக்ஸுக்கு கதை எழுத வரும் புதியவர்களின் ஸ்கிரிப்ட் என்னிடம் எடிட்டிங்கிற்கு வரும் போது - ஒவ்வொரு வசனத்துக்குமே அவர்கள் நிரம்ப நேரம் எடுத்து, யோசித்து எழுதியிருப்பது புலப்படும் ! நானோ, போனெல்லியோ ; மர்ம மனிதன் மார்டினின் கதாசிரியராக காஸ்டெல்லியோ இவ்விதம் யோசிப்பதில்லை ; கதாப்பாத்திரங்கள் எங்களோடு நேரடியாய்ப் பேசுவது போல் உணர்வோம் ; நேரடியாய் அடித்துக் கொண்டே போவோம் ! 

ஒருமுறை ஒரு டெக்ஸ் மினி சாகசத்துக்கு கதை எழுதிக்கொண்டிருந்தேன் ; அதற்கான ஆர்ட்டிஸ்ட் ரொம்பவே மெதுவாய் படம் போட, எனக்குப் பொறுமையின்றி பக்கம் 10 -ல் நிறுத்தி விட்டு வேறு பணிக்குள் புகுந்து விட்டேன் ! ரொம்ப காலம் கழித்து ஆர்ட்டிஸ்ட் மீத ஸ்கிரிப்ட்டைக் கேட்ட போது - "ஆண்டவா - இவ்வளவு காலம் கழித்து அந்தக் கதையை எப்படிக் கையாள்வதோ ?" என்ற கலக்கத்தோடு அமர்ந்தேன் ; ஆனால் எனது உள்ளுணர்வுகள் அந்தக் கதையை அடுத்த 2 மணி நேரங்களுக்குள் எடுத்துச் சென்று பூர்த்தியடையச் செய்தன ! என்னையும் அறியாமலே கதாபாத்திரங்கள் தாமாகவே கதையை வழிநடத்திடுவதை உணர்ந்தேன் ! எனக்காக வேறு யாரோ எழுதித் தந்தது போல் அன்றைக்கு உணர்ந்தேன் ! கலைவடிவங்களில் ; குறிப்பாய் இசைத்துறையில் உள்ளோருக்கு இது நன்றாகவே புரியும் என்பேன் ; ஒவ்வொரு நோட்ஸிலும் இசையமைப்பாளர் யோசித்துக் கொண்டிருக்க மாட்டார் ; திடீரென தோன்றும் inspiration வழிநடத்திடும் அவரை ! எங்களை போல காமிக்ஸ் உருவாக்கும் சாமான்யர்களுக்கும் இதுவே நடைமுறை ; கதைகள் திடீரென தாமரை உயிர் கொண்டு ஓட்டமெடுப்பதுண்டு ! 

கேள்வி # 4 : டெக்ஸ் கதைகள் உற்பத்திச் சங்கிலி பற்றிச் சொல்லுங்களேன் ?

ஒரு கதாசிரியர் டெக்ஸுக்கு புதிதாய் கதை துவக்குகிறாரெனில், அதன் மையத்தை விவரித்து எனக்கு அனுப்பிடுவார் ; என் பார்வையிலான அதன் சாதக-பாதகங்களை அலசுவோம் ! ஏதேனும் நெருடல் எனக்கிருந்தால், கலந்து பேசி அவற்றை நேர் செய்வோம் ! அப்புறமாய் அவர் எழுத ஆரம்பித்து, சில மாதங்களுக்குப் பின்னே பூர்த்தி கண்ட ஸ்கிரிப்ட்டை எனக்கு அனுப்பிடுவார் ! அப்போது ஏதேனும் இடறினால், நானாகவே மாற்றி அமைத்திடுவேன் ! ஆனால் பொதுவாய் அவ்விதம் அதிகம் நேர்வதில்லை ; பேனா பொடிப்போர் எல்லோருமே இன்று ரொம்பவே ஆற்றல் நிரம்பியவர்கள் எனும் போது ! 

ஒரு வருஷத்துக்கும் முன்னேயே கதைகளில் நாங்கள் பயணித்து வருவோம் ; ஆர்டிஸ்ட்களுக்குத் தான் கூடுதலாய் அவகாசம் தேவைப்படும் ! ஒரு 350 பக்க டெக்ஸ் MAXI ஆல்பமேனில் அதற்கு வழக்கமாய் 3 வருஷங்களுக்கு மேலாகிடும் ! ஏற்கனவே சொன்னது போல நான் 'ஏக் தம்மில்' எல்லாம் இதனை எழுதிட மாட்டேன் ; மூன்றாண்டுகளின் ஓட்டத்தோடு எனது கதையும் சிறுகச் சிறுக மலர்ந்து செல்லும் ! ஒரு யோசனையை 36 மாதங்களுக்கும் அதிகமாய் தலைக்குள் அசை போடும் போது அது ரொம்பவே அழகாய் மெருகேரிடுவதை உணர முடிகிறது எனக்கு ! 

சில தருணங்களில் ஒரே மாதிரியான கதைக்கருக்களை வெவ்வேறு கதாசிரியர்கள் கையில் எடுத்திருக்கவும் கூடும் ; ஆனால் கூடிய மட்டுக்கு அதனைத் தவிர்க்க முனைவோம் ! புதுசு புதுசாய் கருக்களை கண்டறியும் ஆற்றல் இல்லாதோர் எங்களது டீமில் இருக்க இயலாதே ! சில கதாசிரியர்களுக்குள், குறிப்பிட்டதொரு எண்ணிக்கைக்கு மேலாய் கதைகள் இராது ; ஒரு கட்டத்துக்கு மேல் வறட்சியில் ஒதுங்கி விடுவார்கள் ! ஆனால் என்னைப் போலவும் எழுத்தாளர்கள் உண்டு ; உலகத்தை உலுக்கும் விதமாய் இல்லாவிட்டாலும், ஏதேதோ புது உத்திகளைக் கண்டறிந்து தொடரை நகற்றிப் போய்க் கொண்டேயிருப்போம் ! 


தொடர்கிறது !!

ரொம்ப காலத்துக்கு டெக்ஸ் கதைகள் மாதாந்திர கதைவரிசையில் மட்டுமே வெளிவந்து கொண்டிருந்தன ! எழுபதுகளின் காமிக்ஸ் உச்ச நாட்களில், இத்தாலியெங்கும் தழைத்திருந்த சிறு புத்தக ஸ்டால்களின் உபயத்தில் பல தச்சத்தில் நின்றது விற்பனை ! ஆனால் காலப்போக்கில் விற்பனைகள் அந்த உச்சத்தைத் தக்க வைத்திடத் திணறிட, டெக்ஸ் மேலும் சில பாணிகளில் களமிறங்குவது அவசியமானது ! இந்த சூட்சமங்கள் செர்ஜியோ போனெல்லிக்கு அத்துப்படி ; மாக்ஸி டெக்ஸ் ஆல்பங்கள் ; டெக்ஸ் ஸ்பெஷல்ஸ் ; சிறுகதைகள் - என ரவுண்டு கட்டி அடிக்கும் வித்தைகளை அவிழ்த்து விட்டார் ! சிறுகதைகள் கொண்ட COLOR டெக்ஸ் பரீட்சர்த்தமும் செர்ஜியோவுடனானதொரு முயற்சியே ! புதுக் கதாசிரியர்களையும் ; ஸ்கிரிப்ட் ரைட்டர்களையும் கண்டறிய அந்தக் களம் எங்களுக்கு உதவியது ! பிரெஞ்சு ஹார்ட்கவர் ஆல்பங்களின் பாணிகளையுமே பரிசோதிக்க முனைந்தோம் - கதைகளுக்கும் புது லே-அவுட் ; புது கதைசொல்லும் யுக்திகளென்று வழங்கி ! 

இளம் டெக்ஸ் கதைகளைப் பிரதானப்படுத்தும் யோசனையானது - தற்போதைய போனெல்லி GM சிமோன் ஐரோல்டியினது!"டெக்சின் கதையை துவக்கத்திலிருந்து சொன்னாலென்ன ? " என்று ஒரு நாள் என்னிடம் கேட்டார் ! நான் ஏற்கனவே இளம் டெக்சின் கதைகளில் அந்நேரத்துக்கு பணியாற்றியிருந்தேன் தான் (காற்றுக்கென்ன வேலி ? சிங்கத்தின் சிறுவயதில்) ; ஆனால்  இளம் டெக்ஸை ஒரு மாதாந்திரத் தனி இதழாய் கொண்டு செல்வதென்பது நட்வாக் காரியமாய் எங்களுக்கு துவக்கத்தில் தென்பட்டது ! ஆனால் ஒரு ஓய்வான மத்திய சிந்தனையில் அதை நனவாக்கிட இயலும் தான் என்று தீர்மானிட்டேன் ! ரொம்பவே விறுவிறுப்பான ; பரபரப்பான கதை சொல்லும் பாணியோடு, இளம் டெக்ஸை துள்ளிப் பாயும் சிறுத்தையாய் அமைக்க முடிந்தது ! பெரியவர் போனெல்லி மெது மெதுவாய்த் தொட்டுச் சென்றிருந்த டெக்சின் இளம் பிராயங்களை சிதைத்திடாது - அதையொட்டியே கதைகளை அமைக்கும் தீர்மானமானது டெக்ஸ் பாரம்பரியத்தை மதித்ததாகவும், புது வாசக ரசனைகளுக்கு தீனி போட்டதாகவும்  இருக்கக் கண்டோம் ! இளம் டெக்சில் கொஞ்சம் பழமையும் உண்டு ; புதுமையும் உண்டு ! 

கேள்வி # 5 : இளம் டெக்ஸ் கதையின் ஓட்டத்தோடு நாயகர் முதிர்ச்சியடைவதையும் காட்ட முற்படுகிறீர்கள் ! இளம் டெக்ஸ் - யதார்த்த டெக்ஸை சந்திக்கும் புள்ளி வரைக்கும் இத்தொடரைக்  கொண்டு செல்ல உத்தேசித்துள்ளீர்களா ? 

இளம் டெக்சின் முடிவினில், என்னுடைய முடிவும் கலந்திருக்கக்கூடும் ! ஒரு குறிப்பிட்ட வயது வரைக்கும் தானே எனது பணிக்காலம் இருந்திட சாத்தியம் ? அதே சமயம், இந்தப் புதுத் தொடரானது காலாகாலத்துக்கும் பயணிக்கவும் கூடும் ! முதல் 6 வருஷங்களுக்கான கதைகளை நான் தயார் செய்து வைத்துவிட்டேன் ! போக்கிரியாய்த் துவங்கிடுபவர்,  மெது மெதுவாய் சட்டத்துக்கு உதவிடும் ஆற்றலாளராய் இளம் டெக்ஸ் பரிணாம வளர்ச்சி காண்பதை கதைகளின் போக்கில் உணர்ந்திட இயலும் ! நடுவே கிட் கார்சனுடனான சந்திப்பு ; ரேஞ்சர் ஆகிடுவது என்ற முக்கிய மைல்கல்களும் இடம்பிடித்திடும் ! ரெகுலர் டெக்ஸ் கதைகளில் வந்து சென்றுள்ள வில்லன்களை இளம் டெக்ஸ் சந்திப்பதும் நிகழும் ! 

பெரியவர் GL போனெல்லி - டெக்சின் இளம் பிராய நாட்கள் பற்றி விரிவாய்ச் சொல்ல முனையவில்லை எனும் போது - இத்தொடரை கணிசமாய் நீட்டிச் செல்ல நிறையவே வாய்ப்புகள் உண்டு ! ரெகுலர் தொடரில் ஆரம்ப ஆல்பங்களில் இளம் டெக்ஸ் சர சரவென முதிர்ந்து, பெரியவராவதாய் சித்திரத்திருப்பார் GL போனெல்லி ! அந்த கேப்பில் இளம் டெக்ஸ் கதைகளுக்கானதொரு தங்கச்சி சுரங்கமே இருப்பதாய் நான் உணர்கிறேன் ! ஆகையால் இளம் டெக்ஸுக்கு நீண்ட எதிர்காலம் இருக்கலாம் தான் ; ஆனால் எல்லாமே விற்பனைகளைப் பொறுத்தது ! தற்சமயத்துக்கு விற்பனை செம வேகம் ! 

2020 முதலாய் டெக்ஸுக்கென கிருஸ்துமஸ் ஸ்பெஷல் இதழ்களும் திட்டமிட்டுள்ளோம் ! 2020 டிசம்பரில் வெளியாகியுள்ள இந்த ஆல்பம் சோலோவாய் டெக்ஸுக்கு கவனம் தந்திடுகிறது ! 2021 க்கென நான் திட்டமிட்டுள்ள ஸ்பெஷலில் 2 முக்கிய போனெல்லி கதாப்பாத்திரங்கள் சந்தித்துக் கொள்வர் ! ஆனால் "புதுமையைப் புகுத்துகிறேன் ; மாற்றங்களைச் செய்கிறேன் பேர்வழி !" என்று நொண்டிக் கொண்டே இருப்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது ! ஓவர் அலம்பல் ஆரோக்கியத்துக்கு நல்லதில்லை !

கேள்வி # 6 : கதைகளில் தொடரும் உப பாத்திரங்கள் ; வில்லன்கள் பற்றிச் சொல்லுங்களேன் ? 

எந்தவொரு தொடருக்குமே - தொடர்ந்திடும் கதை மாந்தர்கள் முக்கியம் ; ஒருவித பிணைப்பை வாசகர்களுக்கு ஏற்படுத்த இவர்கள் உதவிடுவர் ! 1960-களில் மெபிஸ்டோ மீள்வருகை செய்வது உற்சாகத்தைக் கொணரும் சம்பவங்களாய் அமைந்தன ! கடைசியாய் 2002-ல் க்ளாடியோ நிஸ்ஸியின் கைவண்ணத்தில் வந்த மெகா மெபிஸ்டோ சாகசமானது ஆல்பம் 501 to 504 வரை ஓடியது ! அதற்கொரு தொடர்ச்சியை வழங்குவது அத்தனை சுலபமான காரியமல்ல ! ஆகையால் மெபிஸ்டோவின் மைந்தன் யமாவை களமிறக்கும் யோசனை உதித்தது எனக்கு ! "யமாவின் முத்திரை" ஓவியர் சிவிடெல்லியின் கைவண்ணத்தில் சமீபமாய் உருவானது இந்தப் பின்னணியில் தான் ! தொடரும் காலத்துக்கென ஒரு கதையை உருவாக்கி வருகிறோம் ; அது பட்டையைக் கிளப்புகிறதோ - இல்லையோ ; நீ-ண்-டு செல்லவிருப்பது உறுதி ! தோராயமாய் 6 அல்லது 7 பாகங்கள் கொண்டிருக்கவுள்ள இந்த மெபிஸ்டோ கதைக்கு சிவிடெல்லியும், இன்னொரு ஓவியக்கூட்டணியும் பணியாற்றவுள்ளார்கள் ! 

சற்றே இரண்டாம் நிலையிலான கதை மாந்தர்களும் தொடர்வதுண்டு ; சிறு நகர ஷெரீஃகள் ; மிஸ்டர் P போல ! இது போல நிறைய தொடரும் உபபாத்திரங்கள் இருப்பது - கதைத்த தேடல்களில் எங்களுக்குப் பெரிதும் உதவுவதையும் நான் குறிப்பிட்டாக வேண்டும் தான் ! 

கேள்வி # 7 : டெக்சுக்கோ, அவரது துணைகளுக்கோ வயதாவது போல் தெரிவதே இல்லை ! ஆனால் அவ்வப்போது நிஜ வான்மேற்கு வரலாற்றினில் இங்கும் அங்கும் அவர்கள் உலா செல்வதைக் காண்கிறோம் ! வெவ்வேறு கால கட்டத்துக்கு இவர்கள் பயணமாகினாலும், நெருடல்களின்றி அவர்களை சித்தரிக்க முடிவது எவ்விதம் ? 

ஒரு கற்பனைக் கதாப்பாத்திரம் எனும் போது ஆங்காங்கே கொஞ்சமாய் லாஜிக்கின் எல்லைகளை தொட்டுப் பயணிப்பது நிகழ்வதுண்டு ! கதைகளின் தேவைக்கேற்ப சில நிஜ வரலாறுகளை கொஞ்சமாய் முன்னேயும், பின்னேயும் இழுத்துக் கொள்வோம் தான் ! டெக்சின் சாகசங்கள் அரங்கேறுவது தோராயமாய் 1880 வாக்கில் ! ஆனால் கோச்சைஸ் அதற்கு முன்பாகவே இரண்டு விட்டிருந்தார் ; so அவரை கதைகளுக்குள் புகுத்திட விழைந்திடும் வேளைகளில் வரலாற்று timeline -ஐ சற்றே மாற்றிக் கொள்ள வேண்டி வரும் ! அதே போல 1880 வாக்கில் கமான்சே இன மக்களோ ; செயன்னீ இன மக்களோ ஒரு ஆபத்தாக இருந்ததில்லை - அடக்கிடப்பட்டிருந்தனர் ! ஆனால் டெக்ஸ் சாகசங்களில் நாங்கள் அந்த வரையறைகளை லேசாய் மாற்றிக் கொள்வோம் ! இன்றைக்கு, இயன்ற மட்டிலும் வரலாற்றோடு ஒன்றிடும் முயற்சிகளை மேற்கொள்கிறோம் ! முன்னாட்களில் ஜில் போனெல்லி உருவாக்கிய கதைகளுள் ஒரே யுத்தத்தில் இரு வெவ்வேறு வயதிலான டெக்ஸ் வில்லர்கள் இடம் பிடிக்கும் முரணெல்லாம் அரங்கேறியிருந்தது ! இன்றைக்கு கூடியமட்டும் அவற்றைத் தவிர்க்க முனைகிறோம் ! 

எங்கேனும் ஒரு நகருக்கு டெக்ஸ் ரயில் ஏறிப் போவதாய்க் கதை அமைக்கும் முன்பாய் - அந்நாட்களில் அந்த ஊருக்கு ரயில் வசதி இருந்ததா ? என்பதை அறிந்திட முயற்சிக்கிறோம் ! ஆனால் எல்லா நேரங்களிலும் அது வேலைக்கு ஆவதுமில்லை தான் ! உதாரணத்துக்கு, டெக்ஸை அலாஸ்காவில் சாகசம் செய்திட இட்டுப் போகும் முயற்சியில் அவரை ஸ்காக்வே நகர் வழியாகப் பயணிக்கச் செய்திருந்தோம் ! ஆனால் தங்க வேட்டை சூடு பிடித்த பிற்பாடே ஸ்காக்வே நகரே பிறந்திருந்தது ! ஆகையால் சில முரண்களுக்கு நாங்கள் கண்களை மூடிடவே தேவைப்படும் ! 

கேள்வி # 8 : டெக்ஸ் இதர மீடியாவினில் தலைகாட்டும் வாய்ப்புகள் பற்றி ? சின்னத்திரையிலோ ; வெள்ளித்திரையிலோ 'தல' தலைகாட்டுவாரா ? 

இதனைத் தீர்மானிக்க போனெல்லியில் ஒரு தனிப் பிரிவு உள்ளது ! ஆனால் இங்கு சிக்கல்கள் நிறையவே ! டெக்ஸ் ஒரு வெஸ்டர்ன் கதை ஜானர் ! காமிக்ஸ் அல்லாத இன்றைய மீடியாவினில் இந்த ஜானருக்குப் பெரிதாய் வரவேற்புகள் கிடையாது ! சில பல முயற்சிகள் நடந்துள்ளன தான் ; ஆனால் வெற்றி கிட்டியிருக்கவில்லை ! என்னைப் பொறுத்தவரைக்கும் ஒரேயொரு விஷயம் தான் பிரதானமானது ! ஒவ்வொரு திரைப்பட டைரக்டருமே, தனது படத்தின் கதாப்பாத்திரத்தை தன் பார்வையில் பார்த்திடவே விழைவார் ! அதனை கூட்டுவது, குறைப்பதும் தனது சுதந்திரமாய் அமைந்திட வேண்டுமென்று விரும்புவார் ! ஆனால் டெக்சின் கதாசிரியர்களான நங்கள், எங்களின் டெக்ஸாகவே அவர் எப்போதும் இருந்திட விரும்புகிறோம் ! திரைக்கு வந்த பின்னே, இத்தனை காலமாய் நாம் பார்த்து ரசித்திரா ஒரு புது டெக்ஸ்சாக பார்க்க நேர்ந்தால், அது நெருடும் தானே ? 1985-ல் இந்த சங்கடம் நேர்ந்திடவே செய்தது - "TEX and The Lord of the Abyss" திரைப்படத்தினில். ! GL போனெல்லியே இதற்கு திரைக்கதையில் இணைந்து பணியாற்றியிருந்தும், எதிர்பார்த்தது கிட்டவில்லை ! 

கேள்வி # 9 : ஒரே நேரத்தில் ஏகப்பட்ட கதைகளை எழுதி வருவது பற்றிச் சொன்னீர்களே ; தற்சமயமாய் உங்கள் மேஜையில் குவிந்து கிடப்பன என்னவோ ?

தற்போதைக்கு டெக்ஸ் மாதாந்திரத் தொடர் + இளம் டெக்ஸ் + Dampyr கதைத்தொடர்களில் நான் ஈடுபட்டுள்ளேன் ! அனைத்திலுமாய்ச் சேர்ந்து - 20 கதைகள் ஓடிக்கொண்டுள்ளன ; டெக்ஸுக்கு 15 ; பாக்கி Dampyr-க்கென ! அப்புறம் மற்ற டெக்ஸ் கதாசிரியர்கள் அனுப்பிடும் ஸ்கிரிப்ட்களை நானும், எனது அசிஸ்டண்டுமாய் வாசித்து, சரி பார்த்து, சரி செய்து வருகிறேன் ! 

ஆர்டிஸ்ட்கள் தரும் பென்சில் ஸ்கெட்ச்களும் என் மேஜையை நிறைத்துள்ளன ! ஓவியர் நமது கதை மாந்தர்களை சரி வர புரிந்து கொண்டிருக்கிறாரா ? நாம் உருவாக்கப்படுத்தியுள்ள விதங்களில் கதை பயணிக்கிறதா ? என்பதையெல்லாம் சரி பார்த்திட வேண்டிவரும் !ஒவ்வொரு பிரேமுமே ஒரு கதையின் வெற்றிக்கு ஜீவநாடியெனும் போது எங்கும் கோட்டை விடலாகாதில்லையா ? சித்திரங்களும் ; கதையும் கச்சிதமாய்க் கைகோர்க்கும் வேளையில் ஒரு கதை சுலப ஹிட்டாகிறது ! 

கேள்வி # 10 : ஓவியர்களை பற்றி பேசுவோமா ? டெக்சின் ஓவியராகிட என்ன தகுதிகள் தேவையோ ? 

இதற்கான பதில் + இன்னும் கேள்விகள் + இன்னும் பதில்கள் - என போசெல்லி அதகளம் தொடர்ந்திடும் - உபபதிவினில் or அடுத்த பதிவினில் ! இதற்கு மேலாய் டைப்படிக்க இப்போதைக்கு திராணி நஹி ! ஒன்று மட்டும் சொல்லிடலாம் - ஈ ஆள் மனுஷன் அல்லா ; தேவுடு !! Phewwwwww !!

Bye folks...see you around ! அர்ஸ் மேக்னா அழைக்கின்றது ! Have a fun Sunday !!

Saturday, January 02, 2021

அலசல்கள் ஆரம்பிக்கட்டுமே ?

நண்பர்களே,

வணக்கம். “மாதத்தின் முதல் தேதி” என்ற இலக்கை அடித்துப் பிடித்து மறுக்கா தொட்டு விட்டோம் என்பதில் அடியேன் ஹேப்பி அண்ணாச்சி ! மாதத்தின் 10-ம் தேதி; 15-ம் தேதி என்ற வெளியீட்டுத் தேதிகள் தவிர்க்க இயலா சமாச்சாரங்களாக அமைந்து விட்டிருப்பினும், பணியாற்ற உதவும் எனது ‘ரேடாருக்கு‘ அந்தத் தேதிகளோடு sync ஆக ரொம்பவே திணறியது ! தொடரும் மாதங்களில் எப்போதும் போலவே வண்டி சீராய்ப் பயணிக்க இந்த back to the 1st. உதவும் என்ற நம்பிக்கையோடு தொடர்கிறேன்… fingers crossed !

ஜனவரியின் புது புக்ஸ் உங்கள் கைகளில் எனும் போது இந்த வாரத்து focus அவற்றின் மீதே இருந்திட வேண்டுமென்பதால் “உசிலம்பட்டி போனேன் ; உளுந்தூர்பேட்டை போனேன்” என்று எதையாச்சும் மொக்கை போடப் போவதில்லை ! ஆகிருதியான ஆரிசியாவின் ஆத்துக்காரரே இம்மாதத்து ஒளிவட்டத்துச் சொந்தக்காரர் என்பதில் (எனக்கேனும்) சந்தேகங்கள் கிடையாதென்பதால் – பார்வைகளை அக்கட பிரதானமாய்ப் படர விடுவதில் பிழையிராது என்று தோன்றுகிறது ! ஏற்கனவே சொன்னது போல – போன வருஷமே தயாராகி; அட்டைப்படமும் ‘அனல் பறக்கும் கோடை மலர்‘ என்ற அடையாளத்தோடு அச்சாகிவிட்டிருந்தது ! So என்னைப் பொறுத்தமட்டிலும் ஜவஹர்லால் நேரு காலத்திலிருந்தே இந்த அட்டைப்படத்தைப் பார்த்து வருவதான feeling இருப்பதால், உங்களில் முதற்கட்ட சிலாகிப்புகளை வாசிக்கும் போது ‘அட… ஆமாம்லே?‘ என்று ஆர்வங்கள் மறுகிளர்வு கண்டு வருகின்றன ! ஒரிஜினல் டிசைனே ; ஆனால் வண்ண மெருகூட்டல் + பின்பக்க அதகள collage ; அப்புறம் அட்டைப்படத்து textures என எல்லாமே நமது டிசைனர் பொன்னனின் கைவண்ணங்களே ! ஏற்கனவே அறிவித்திருந்தபடி slipcase-ல் இம்மாதத்து 5 ஆல்பங்களையும் போட்டுத் தருவது தான் ஒரிஜினலான திட்டமிடல் ! So இந்த அட்டைப்பட டிசைனே டப்பியின் இரு தரப்புகளிலும் இருந்திருக்க வேண்டியது ! ஆனால் கொரோனா தாண்டவத்தின் விளைவாய் நிறையவே தாமதங்கள் நிகழக்கூடும் என்று மார்ச் ’20 நடுவாக்கிலேயே மண்டைக்குள் லேசாய் ஒரு பட்சி குரல் கொடுக்க, slipcase-க்கான ஆர்டர்களை திடுதிடுப்பென ரத்து செய்து விட்டோம் ! 5 பாகக் கதைகளின் ராயல்டி; அவற்றின் மொழிபெயர்ப்புகள்; தயாரிப்புச் செலவுகள்; இத்யாதிகள் என்ற பணமுடக்கங்களோடு slipcase-ல் ஒரு ஆகப் பெரும் தொகையை முடக்கிப் போட்டு வைக்கவும் கை உதறியதால் இறுதி நிமிடத்தில் hardcover தீர்மானத்துக்குத் தாவினேன் ! So லாக்டௌன் துவங்கும் தருணத்துக்கு ஒரு வாரம் முன்பாகவே அட்டைப்படத்தினை hardcover பைண்டிங்குக்குப் பொருந்தும் விதமாய் அச்சிட்டோம் ! ‘கோடை மலர்‘ என்ற எழுத்தைப் போடவா ? வேண்டாமா ? என்ற நெருடல் இருந்தது தான் ; ஆனால் ஏதேனுமொரு அதிசயம் நிகழ்ந்து தடைகளின்றி வண்டி ஓடிடச் சாத்தியமாகிடாதா ? என்ற நப்பாசையில் அதை நீக்கிடவில்லை ; நமக்குத் தான் ஸ்டிக்கர்களின் சகாயம் இருக்கவே இருக்கிறதே என்ற தைரியத்துடன் ?!

இந்த இதழினில் இன்னொரு highlight-ம் உண்டு; atleast if that can be called a highlight ! வழக்கமாய் சித்திரங்களில் சற்றே சென்சார் அவசியமாகிடும் வேளைகளில் தார் டப்பிகளைக் கையில் எடுத்துக் கொள்வோம் ; அல்லாங்காட்டி முரட்டு வசன பலூன்களை ‘பச்சக்‘ என strategic இலக்குகளில் சாத்தி விடுவோம் ! இம்முறை கூடியமட்டிலும் அதைத் தவிர்த்துள்ளோம் – படைப்பாளிகளின் வேண்டுகோளுக்கிணங்க ! இந்தத் தொடரின் பின்னணிகளில் விரச நோக்கங்கள் கிடையாதெனும் போது சித்திரங்களின் நயங்களை திரைபோட அவசியமிராதே ? என்று அவர்கள் வினவிய போது எனக்கே அவர்களது லாஜிக் புரிந்தது ! ‘பௌன்சர்‘; ‘பராகுடா‘ போன்ற கிடாவெட்டுக்களையே தாண்டிய நமக்கு – தோர்கலின் பிரியாணி விருந்து அத்தனை பெரிய சமாச்சாரமாகிடக் கூடாது என்று தீர்மானித்தேன் ! Of course – இதன் சாதக / பாதகங்கள் அலசிடப்படலாம் என்பதை யூகிக்க முடிகிறது தான் ; ஆனால் நகரும் காலகட்டத்தின் பிரதிபலிப்பாய் நம்மளவிற்கான மாற்றமாய் இதைப் பார்த்திட வேண்டியது தான் !

கதைகளின் பக்கமாய்ப் பார்வைகளை ஓட விட்டால் – ஓட்டைவாயனாய் எதையாச்சும் உளறி வைத்து, இன்னமும் படிக்கவே துவங்கியிருக்கா பெரும்பான்மையின் வாசிப்பு சுவாரஸ்யங்களைக் கெடுத்த புண்ணியம் எனதாகும் என்பதால் ‘மூச்‘ காட்டப் போவதில்லை ! ஒரேயொரு வரியில் 5 பாகங்களையும் sum up செய்வதாயின், தொடரின் நடுப்பகுதியினில் இருக்கும் நாம் – ஜுனியர் தோர்கலின் விஸ்வரூபங்களை சிறுகச் சிறுகப் பார்த்திடவுள்ளோம் என்று மட்டும் சொல்வேன் ! பால் மனம் மாறாப் பாலகனாய் இது நாள் வரைக்கும் நாம் பார்த்திருந்த ஜோலன் – தொடரும் காலங்களில் கதாசிரியர் வான் ஹாமின் கைவண்ணத்தில் என்ன மாதிரியான தாக்கங்களை ஏற்படுத்தவுள்ளான் என்பதே எனக்கு இங்கே நிரம்ப excitement–ஐ தருகிறது ! மேற்கொண்டு அலசல்கள் உங்களின் வாசிப்புகளுக்கு அப்புறமாய்!

இம்மாதத்தின் கார்ட்டூன் இதழ் என்னளவிற்கொரு personal favourite! ரொம்ப ரொம்ப ஆண்டுகளுக்கு முன்னே விகடன் குழுமத்திலோ; குமுதம் குழுமத்திலோ – ஏதேவொரு வாரப் பத்திரிகையினில் தொடர்கதையாக ஹெர்லக் ஷோம்ஸார் வெளிவந்த போதே இவருக்கு நான் ரசிகன் ! பின்நாட்களில் நமது லயனிலோ; மினி லயனிலோ இவரைக் களமிறக்கச் சாத்தியமான போது எனக்கு குஷியே! ஆனால் படைப்பாளிகளே ஒட்டுமொத்தமாய் சகல b&w கதைகளையும் வண்ணமயாக்கிடும் சேதி ஏழோ – எட்டோ ஆண்டுகளுக்கு முன்னால் காதில் விழுந்த போது, கடைவாயோரம் குற்றாலக் கசிவு துவங்கியது! Fleetway b&w படைப்புகளின் சித்திரங்களைப் பார்த்தோமேயானால் அடர் கறுப்பில் ஏகமாய் contrast தந்து வரைந்திருப்பார்கள்! So அவற்றை வர்ணமாக்கிடும் போது அத்தனை சோபிக்க வாய்ப்புகள் இருப்பதில்லை ! ஆனால் ஹெர்லக்கின் சித்திரங்களைப் பார்த்தால் கறுப்பின் பிரயோகம் ரொம்பவே மிதமாய் இருப்பதும், நிறையவே வெள்ளைப் பின்னணிகள் இருப்பதும் தென்படும்! கலரிங் செய்திட இந்த பாணி பிரமாதமாக இருந்திடுமெனும் போது – புது யுக டிஜிட்டல் கலரிங்கில் ஹெர்லக் மினுமினுப்பது உறுதியென்றுபட்டது எனக்கு ! அப்போதிலிருந்தே ஆர்வமாய்க் காத்திருந்தவனுக்கு நமது இதர கார்ட்டூன் நாயகர்களின் மித performance ஒரு opening-ஐ கண்ணில் காட்டியது ! So லியனார்டோ தாத்தா ; Smurfs ; பென்னி ; மந்திரியார் ஆகியோரின் விடைதரும் படலங்களுக்கு மத்தியில் – ஓசையின்றி இந்த ‘காத்தாடி ராமமூர்த்தி‘ lookalike நாயகரை உட்புகுத்த சாத்தியமாகிறது ! And ஆண்டுக்கொரு slot என்ற மரியாதையை இதுவரைக்குமாவது தக்க வைத்துக் கொண்டுள்ளார் ! என்ன ஒரே நெருடல் – ஹெர்லக்கோடு பவனி வரும் அந்த டாக்டரைக் கலாய்க்க அவசியமாகிடும் போதெல்லாம் நம் சிறுவட்டத்திலுள்ள மதிப்பிற்குரிய டாக்டர்கள் என் மனதில் ஒரு கணம் நிழலாடிடத் தவறுவதில்லை ! 'காமெடி' என்ற காரணத்துக்காக உன்னத சேவைகளில் உள்ளோரைக் கஷ்டப்படுத்திடும் தப்பைச் செய்கிறோமோ ? என்ற உறுத்தல் உள்ளுக்குள் தோன்றிடும் ! ஆனால் டெக்ஸுக்கு ஒரு கார்சன்; டைகருக்கு ஒரு ரெட்; பிரின்ஸுக்கு ஒரு பார்னே ; டாக்புல்லுக்கொரு ஆர்டின் போல இங்கே ஹெர்லக்குக்கு டாக்டர் வேஸ்ட்சன் தான் comic relief தரும் பொறுப்பேற்றிருக்கிறார் எனும் போது எனக்கு வேறு வழி தெரிவதில்லை ! So எங்கேனும் எல்லை மீறி இருப்பின், மன்னிச்சூ டாக்டர்ஸ் ! பகடிகளுக்கு அப்பாற்பட்ட மாமனிதர்கள் நீங்கள் என்பதில் ஏது ஐயம் ?!

மாதத்தின் b&w இதழான அந்த கிராபிக் நாவல் பற்றி என்ன பேசவென்று தெரிய மாட்டேன்கிறது ! கதைக்குள் புகுந்திடாது எதையுமே பேச முடியாது என்பதால் – அந்நாட்களது உங்களது 'போஸ்ட்கார்ட் விமர்சன' பாணியையே நானும் கையில் எடுக்க வேண்டிப் போகிறது ! “அட்டைப்படம் சூப்பர்… கதையின் ஓட்டத்தில் தொய்வுகள் இராது; and ஏற்கனவே இது மாதிரியான சிறு நகர / சிறு கிராமப் புலனாய்வுத் த்ரில்லர்களை நாம் பார்த்துள்ளதாலும்; அமெரிக்கப் பொருளாதார வீழ்ச்சிகளின் தாக்கங்களுமே நமக்குப் புதிதல்ல எனும் போதும் – “கோழைகளின் பூமியில்” நடமாடச் சிரமங்கள் இராதென்றே சொல்வேன் ! Of course – அக்மார்க் ‘கி.நா.‘ எனும் போது கதை சார்ந்த தீர்ப்புகளே இங்கே பிரதானமாகும் என்பதால் judgement reserved !

Before I sign out – சமீபத்தைய அந்த கலர் டெக்ஸ் Vs Maxi லக்கி அலசல்கள் சார்ந்த  update :

* வாக்குத் தந்தபடியே லக்கியின் ‘கௌபாய் எக்ஸ்பிரஸ்‘ MAXI மறுபதிப்புகளுக்கு ஏற்பாடுகள் சிக்கலின்றி நடந்தாகி விட்டன ! சென்னைப் புத்தகவிழா நடைமுறையாகிடும் பட்சத்தில், அங்கே களம் காண வாய்ப்புண்டு !

* ஆனால் ‘தல‘ வண்ண மறுபதிப்பின் உங்கள் தேர்வான ‘பழிக்குப் பழி‘ நடைமுறை காண்பதில் தான் சின்னதாய்ச் சிக்கல் ! இதன் வண்ணக் கோப்புகளுக்குப் பதிலாய் b&w கோப்புகளே நம்மை வந்து சேர்ந்துள்ளன ! அங்கே கொரோனா இரண்டாம் அலையின் லாக்டௌன் ; WFH என்ற சிரம சூழலில் இதற்கான வண்ணக் கோப்புகளைத் தேடிப் பிடித்து அனுப்ப நாழியாகும் ; எப்போதென்ற உறுதி சொல்ல முடியாது என்று சொல்லியுள்ளார்கள் ! தவிர, இது அவர்களது விடுமுறை சீஸனுமே  ! So இப்போதே ‘ப.ப.‘ பார்த்தாக வேண்டுமெனில் b&w தான் சாத்தியம் !

* கலரில் தான் ‘தல‘ தரிசனம் தேவையெனில் ஏற்கனவே நாம் வாங்கி வைத்திருக்கும் “மரண முள்” ஒரு தற்போதைய சாத்தியம் ! இதுவுமே ஈரோட்டில் நீங்கள் ‘டிக்‘ அடித்திருந்த இதழே என்ற ஞாபகத்தில் 2020-ல் ஏற்கனவே வாங்கி வைத்திருந்தோம் ! And பக்க எண்ணிக்கை; விலைகள் – என எல்லாமே ரூ.150/- விலைக்கு ஒத்துப் போயிடும் - இதைத் தேர்வு செய்தோமெனில் ! பெட்ரோமேக்ஸ் லைட்டே தான் வேணுமெனில் பொறுமையாய்க் காத்திருக்கத் தான் வேண்டி வரும் !! 

What say folks ? 

Bye all… மீண்டும் சந்திப்போம்! Have a breezy weekend ! And ஜனவரி அலசல்களைத் துவங்கிடலாமே ?

Friday, January 01, 2021

ஜனவரியின் ஜாம்பவான் !

நண்பர்களே,

வணக்கம். உளமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !! புலர்ந்திருக்கும் இந்தப் புத்தாண்டு - அனைவருக்கும் அற்புத நலமும், வளமும், ஆரோக்கியமும், நீண்ட ஆயுளும் வழங்கிடும் அட்சயப் பாத்திரமாய் அமைந்திட, ஆண்டின் இந்த முதல் பதிவில் ஆண்டவனிடம் வேண்டிக் கொள்வோமே ? இடர்களும், இழப்புகளும் 2020-ன் சொத்துக்களாகவே இருந்து விடுமென்ற நம்பிக்கையுடன்,  தொடரவுள்ள புதுப் பொழுதுகளை புது உத்வேகங்களோடு அணுகிட நமக்கெல்லாம் புனித மனிடோ அருள் பாலிக்கட்டும் !!

ஆண்டின் முதல் பதிவு ; நமது பதிவு எண் 701-ம் கூட !! நல்ல காலத்துக்கு பதிவு எண் 700 என்ற மைல்கல் யார் கண்ணிலும் போன வாரம் பட்டிருக்கவில்லை !!  இல்லாங்காட்டி அதற்கொரு தபா - காலைத் தூக்கி வாய்க்குள் திணிக்கும் ஆர்வம் எனக்குத் துளிர் விட்டிருக்கக்கூடும் !! நவம்பரின் தீபாவளி மலரின் 672 பக்க மாரத்தான் ஓட்டத்துக்குப் பிற்பாடு-  "குண்டு புக்" என்றாலே லைட்டாக ஜெர்க் அடிப்பதும் மறுக்க இயலா உண்மை எனும் போது - புதுசாய் எதையாச்சும் இழுத்துப் போட்டுக்கொண்டிராத மட்டிலும் ஷேமமே என்று நினைத்துக் கொண்டேன் ! Moreso because  - ஏற்கனவே சொன்னது போல ஆண்டின் முதல் 3 மாதங்களிலும் சிலபல தாட்டியமான இதழ்களார்கள் காத்துள்ளனர் ! And அவர்களுக்கெல்லாம் தலையானவராய் நிற்பது ஜனவரியின் ஜாம்பவான் - தோர்கலின் 5 பாக ஆல்பம் ! So இந்தப் பதிவின் முதல் முன்னோட்டமாய் "ஒரு அழகிய அகதி"யைப் பார்ப்போமா ?  

இந்த இதழுக்கு ரொம்பவே unique ஆனதொரு அடையாளம் உண்டென்பேன் ! 2019-ல் பணிகள் துவக்கப்பட்டு ; 2020-ல் அவை நடைமுறை கண்டு, 2021-ல் தான் வெளிச்சத்தைக் காண நேரிடுகிறது !! Yup - கொரோனா ஆண்டின் கோடைமலருக்கென ஒரிஜினலாய்த் திட்டமிடப்பட்டிருந்ததால் 2019-ன் இறுதியிலேயே இதன் மொழிபெயர்ப்புப் பணிகளை நமது கருணையானந்தம் அவர்களிடம் ஒப்படைத்திருந்தேன் ! And தமிழாக்கமும் தயாராகி, 5 பாகங்களுக்குமான டைப்செட்டிங்கும் நிறைவுற்று, ஒரு பண்டலாய் மைதீன் என்னிடம் இந்தப் பக்கங்களைத் தந்தது, தேசமே மாடியில் நின்று கொட்டடித்த அந்த மார்ச் 2020-ன் மூன்றாம் வாரத்துக் காலையில் ! மொத்தமாய் 230 பக்கக் குவியலைப் பார்த்த போதே, 'கிர்ரென்று' தலை லைட்டாய் சுற்றியது தான்  ; ஆனால் மே 2020-ல் வெளியிடுவதாக திட்டமிடல் இருந்ததால் - அப்போதைய சுணக்கங்களறியா பணிவேகங்களுக்கு இயலாக்காரியமாய்த் தெரியவில்லை தான் ! அதே போல லாக்டௌன் என முதன்முதலில் அறிவிக்கப்பட்ட நொடியில் - இது ஏதோ பந்த்துக்கு நடத்தும் கடையடைப்பைப் போலிருக்குமென்ற நினைப்பில் - "ஹை..ஜாலி ; விடுமுறைகளில் எடிட்டிங்கை ஒரே அழுத்தில் முடித்து விடலாம் !" என்ற சந்தோஷப்பட்டேன் ! ஆனால் தொடர்ந்த நாட்களில் நிலவரம், கலவரமாவதும், அடைப்புகள் நீண்டிடுவதும் புலனான போது - "ரைட்டு...இந்த கோடை மலருக்கு சத்தியமாய் இது தோதுப்படாது !" என்று புரிந்தது  ! அந்த நொடியே உள்ளாற இருந்த சோம்பேறிமாடன் துள்ளிக் குதித்து, 230 பக்கங்களையும் பத்திரமாய் பார்சல் பண்ணி, வீட்டிலிருக்கும் என் மேஜையின் அடிதட்டுக்கு அனுப்பிவைத்திட்டான் ! தொடர்ந்த வாரங்களில் / மாதங்களில் - அட்டவணையை மார்ச் 2021 வரை நீட்டிக்கத் தீர்மானித்ததும், தோர்கல் ஜனவரிக்கு மாற்றம் கண்டதும்  நிகழ்ந்திட்டதால் - டிசம்பர் வரைக்கும் அந்த மூட்டை சொகுசாய் தூங்கி கொண்டேயிருந்தது ! " இனியும் தள்ளிப் போட முடியாதென்று" ஆன தருணமும்  ஒரு மாதிரியாய் புலர்ந்திட்ட போது, அடித்துப் பிடித்து உட்புகுந்தேன் - ஆரிசியாவின் ஆத்துக்காரருடனான பயணத்தினில் !! 

Phewwwwwwwww ......என்ன மாதிரியான பயணமும் அது ?!! 5 ஆல்பங்கள் ; ஆனால் அவற்றுள் இருப்பதோ 3 x ஒன்ஷாட் கதைகள் + ஒற்றை 2 பாக சாகசமே ! So கடவுளரின் தேசம் பாணியில் ஒரே முடிச்சோடு பயணிக்கும் கதைகள் இங்கே நஹி ! மாறாய் - இந்தத் தொடரின் துவக்கம் முதலாய் வந்து போயிருக்கும் நண்டு, நசுக்கிலிருந்து, பல்லி, பூரான் வரைக்கும் ஏகப்பட்ட உருப்படிகள் ஆங்காங்கே நுழைந்திடுகிறார்கள் ! So என்னைப் போல வெண்டைக்காய் லேகியத்தை விழுங்கும் அவசியம் கொண்டோராய் நீங்களுமிருப்பின், தோர்கலின் இதுவரைக்குமான ஆல்பங்கள் அனைத்தையும் கைக்கெட்டும் தூரத்தில் வைத்துக் கொண்டால்  நலமென்பேன் ! இல்லாங்காட்டியும் பெருசாய் குடிகள் ஏதும் மூழ்கிடாது ; on their own கதைகள் நகர்ந்திடவும் செய்கின்றன தான் ; ஆனால் இப்போது நாம் பயணிப்பது சித்தப்புவோடா ? மாம்ஸோடா ? தலையில் கல்லைத் தூக்கிப் போடுவது அப்புச்சியா ? அத்தாச்சியா ? என்ற புரிதலிருப்பின் இன்னும் கொஞ்சம் ரம்யமாக இருக்குமல்லவா ? So நினைவலைகளைத் தூசி தட்டித் தயார் நிலையில் வைத்துக் கொள்ளுங்களேன் folks ? 

கதைகளைப் பொறுத்தவரை - சிந்துபாத்தையெல்லாம் 'அப்டிக்கா ஓரமா போயி விளையாடு கண்ணு !' என்று சொல்லக் செய்துள்ளார் வான் ஹாம் ! சும்மா லோகம் விட்டு லோகம் ; காலம் விட்டு காலம் - என்று மனுஷன் நம்மை இட்டுச் செல்லும் ரங்க ராட்டினம் அசாத்தியமானது ! Oh yes - "சிகரங்களின் சாம்ராட்" பாணியில் இக்கடயும் ஒரு அத்தியாயம் உள்ளது - காலத்தினூடே ஆளாளுக்கு மினி பஸ் பிடித்து அடிக்கும் ஷண்டிங்குகளைச் சித்தரிக்கும் விதமாய் ! இரண்டு ஆண்டுகளுக்கு முன்பான ஜனவரியில் "சிகரங்களின் சாம்ராட்" புண்ணியத்தில் -  சலூன் போகாமலே ஆளாளுக்கு கற்றை கற்றையாய் இழந்த கேசங்களின் அளவுக்கு இம்முறை சேதாரம் இராது தான் ; ஆனால் இப்போதும் கூத்து காத்துள்ளது என்பேன் ! So - "காலையிலே ஆறு மணி இருக்கும் ; கோழி கொக்கரக்கோவ்ன்னு கூவுச்சு" ரேஞ்சுக்கு பொங்கல்வாக்கில் இங்கே அலசல்கள் அரங்கேறினால் ஆச்சர்யம் வேண்டாம் ! இங்கே நான் குறிப்பிட்டே ஆக வேண்டிய இன்னொரு highlight - நம் கருணையானந்தம் அவர்களின் தமிழாக்கமே !! அந்த க்ளாஸிக் டயலாக் பாணிகளுக்கு அவரது எழுத்துக்கள் கச்சிதமாய் set ஆகுமென்பதால் அட்டவணையை அறிவித்த கையோடு 5 பாகங்களையுமே அவரிடம் தள்ளி விட்டிருந்தேன் ! ஆங்காங்கே கொஞ்சம் பிசிறுகள் ; புரிதலில் பிழைகள் என்றிருந்தாலும் - by and large - இந்தப் பணி அசாத்தியமானதே ! கட்டி வைத்து என்னைச் சாத்தியிருந்தாலும் இந்தப் பணியினையோ ; ஸ்பைடரின் பணியினையோ - என்னால் கையிலெடுத்திருக்கக் கூட முடியாது ! எடிட்டிங்கில் - வசனங்களுக்கு வேகமூட்ட வேண்டிய இடங்களென்று எனக்குத் தோன்றிய தருணங்களிலெல்லாம், கணிசமாகவே மாற்றங்களை செய்திருந்தேன் தான் ; ஆனால் அதற்கும், முழுமையாய் மொழிபெயர்ப்பதற்கும் வண்டி வண்டியாய் வித்தியாசங்கள் உண்டல்லவா ? So பொறுமையாய் அவர் பிடித்திருந்த பேனா தடத்தின் மீது கொஞ்சம் நகாசு வேலைகளைச் செய்த கையோடு இந்த இதழின் பணிகளுக்கு "சுபம்" போட முடிந்த போது ரெண்டு கிலோ எடை குறைந்த மாதிரி ஒரு பீலிங்கு எனக்கு !! கொறிக்க எதையாச்சும் கிட்டக்க வைத்துக் கொண்டே புக் படிக்கும் பழக்கம் உங்களுக்கு உண்டெனில் - இந்த ஆல்பத்தை முடிக்கும் போது "குண்டாக" இருந்திடுவது இந்த ஆல்பம் மாத்திரமல்ல என்பதை உணர்வீர்கள் ! A Van Hamme கிளாசிக் !! 

 Moving on, ஜனவரியின் lightweight இதழ் "கானகமே காலடியில்" ! ஹெர்லாக் ஷோம்ஸ் & டாக்டர் வேஸ்ட்சன் ஆப்பிர்க்கக் கானகத்தில் அடிக்கும் கூத்துக்களில் டார்ஜானும் இணைந்து கொள்ள - முழுவண்ணத்தில் 50 பக்கங்கள் ஜாலியாய் ஓட்டமெடுக்கின்றன ! அட்டவணை 2020-ன் இறுதி கார்ட்டூன் இதழிது 😓!! ஒன்றரை நாளில் இதன் மொழிபெயர்ப்பை ஜிலோவென்று முடிக்க முடிந்தது ! இதோ - அதன் அட்டைப்பட preview : 


நமது கோகிலாவின் கைவண்ணமிது ! "ஓ.கே.வா ?" என்று கேட்டு இதனை படைப்பாளிகளுக்கு மின்னஞ்சலில் அனுப்பிய மூன்றாவது நிமிடத்தில் பதில் வந்தது - "💪💪💪" என்ற ஒற்றை வார்த்தையுடன் !! இந்த ஆல்பத்துக்குமே நீங்கள் அதே போல ரேட்டிங்ஸ் தந்திட்டால் - fantastic !!

இம்மாதத்தின் ஒரே black & white இதழான "கோழைகளின் பூமி " - போனெல்லி குழுமத்தின் படைப்பு ! வழக்கம் போலவே வித்தியாசமானதொரு காலகட்டம் ; in fact இம்முறை 1918 & 1939 என 2 வெவ்வேறு தருணங்கள் - ஆனால் ஒரே கதை மாந்தர்கள் இரு காலங்களிலும் ! பொருளாதார வீழ்ச்சியின் உச்சத்திலிருந்த அமெரிக்காவினில் அவர்களது வாழ்க்கை ; சிறுநகரில் அரங்கேறும் மர்மங்கள் என பயணிக்கின்ற ஆல்பம் இது ! வழக்கம் போல புக்கைப் படித்து கையோடு ; மலங்க மலங்க நான் முழித்து போலவே நீங்களும் முழிப்பது உறுதி ! கடைசிப் பக்கத்தினில் நான் எழுதியுள்ள குறிப்புகளை படித்த கையோடு மறுக்கா அந்த சிறுநகரத்தினுள் புகுந்திடுவீர்கள் என்பதும் உறுதி !! Judgement reserved !! மொழிபெயர்ப்பினில் ரொம்ப மொக்கை போட அவசியங்களின்றி சமாளிக்க முடிந்தது !! And எடிட்டிங்கில் மறுக்கா நோண்டும் வேலையும் எப்போதையும் போல் இம்முறையும் அரங்கேறியது !! ஆங்காங்கே கொஞ்சம் தத்துவங்கள் பொழிஞ்சா மேரி தோன்றிடும் பட்சத்தில் அது மூதறிஞர் முத்துவிசயனாரின் கைவண்ணமல்ல என்ற மட்டிற்கு நிம்மதி கொள்க - பெரும்பான்மை கதாசிரியரின் ஸ்கிரிப்ட் அவசியப்படுத்திய வரிகளே ! And இதோ அட்டைப்படம் + உட்பக்க preview : 



ஆக ஜனவரியின் முக்கூட்டணி இதுவே !! வெகு சீக்கிரமே.......... நீங்கள் எதிர்பார்ப்பதை விடவும் வெகு வெகு சீக்கிரமே - இவை உங்களின் வாசிப்பு நேரங்களைக் கோரிடவுள்ளன ! So இந்தப் புத்தாண்டினில்  கொஞ்சமாய் நேரத்தை தயார் செய்து கொள்ளுங்களேன் folks !! Bye for now !! Have a Blessed Year ahead all !! See you around !!

P.S : அப்பாலிக்கா ஆன்லைன் லிஸ்டிங்களும் ரெடிங்கோ ! 

https://lioncomics.in/product/2021-january-pack/

or

https://lion-muthucomics.com/latest-releases/662-2021-january-pack.html