Powered By Blogger

Sunday, January 24, 2021

News 7

 நண்பர்களே, 

வணக்கம். புது வருஷமும் புலர்ந்து மூன்று வாரங்களும் ஓட்டமெடுத்து விட்டாச்சு ;  முன்னணியில் நிற்போருக்கு நம்பிக்கைகளோடு தடுப்பூசிகளை போட்டாச்சு ; கைச்சட்டைகளை மேலேற்றிக் கொண்டு "நாங்களும் ஊசியை போட்டுக்கிட்டோம்லே" என்று பீற்றிக் கொள்ளும் நேரமும் சீக்கிரமே புலர்ந்திடுமென்ற நம்பிக்கையும் பிறந்தாச்சு ; சர்க்கரை நோயுடன், ஏழோ-எட்டோ கழுதை வயசானதை சாதகமாக்கிக் கொள்ள மொதவாட்டியாய் ஒரு வாய்ப்பைப் பார்த்திட்டதில் 'ஹி..ஹி..' என்று இளித்தும் கொண்டாச்சு .....காலச் சக்கரங்கள் தான் என்னமாய் ஓட்டமெடுக்கின்றன என்று முன்னூத்திச் சொச்சமாவது தபாவாய் யோசித்தபடிக்கே மோவாயைத் தடவவும் செஞ்சாச்சு ! இத்தனை நிகழ்ந்துள்ள போது பிப்ரவரி இதழ்களின் பணிகளும் நம் பக்கத்தில் நிறைவுற்றிராதா - என்ன ? So மார்ச் திக்கில் பார்வைகளை நீளவிட்டபடிக்கே இந்த ஞாயிறு காலையின் பொழுதைத் துவக்குகிறேன் ! 

பிப்ரவரியைப் பொறுத்தவரைக்கும் its going to be an ARS MAGNA show for the major part ! உடன் ஒத்து ஊத வரும் வித்வான்களுள் 'தல'யுமே இருந்தாலுமே - 2 மினி / வண்ண சாகசங்கள் மட்டுமே அவரது canvas எனும் போது அதனில் பெரியதொரு பிக்காஸோ ஓவியத்தையோ ; சில்லுமூக்குகள் அள்ளுவிடும் பெரும் தக்காளிச் சட்னிக் காவியங்களையோ எதிர்பார்த்தல் நியாயமாயிராது ! And பிப்ரவரியின் இன்னொரு வித்வானோ (Rip Kirby)  - அவரது ரசிகரான நமது காரைக்கால் பிரசன்னாவைப் போலவே ஒரு ஜென்டில்மேன் தானெனும் போது, அங்குமொரு சாத்வீக வாசிப்பே சாத்தியமாகிடும் ! இதோ - for  starters கலர் டெக்சின் முதல் கதையின் preview : 

(சந்தா நண்பர்களுக்கு) விலையில்லா இந்த இதழுக்கு அட்டைப்படமென தனியாய் ஏதுமின்றி, கதையின் முதல்பக்கத்தையே வழக்கம் போல ராப்பராக்கிடவே உத்தேசித்திருந்தேன் ! ஆனால் 2020 அட்டவணையின் இறுதி TEX இதழ் ஒரு தலையில்லாப் போராளியாய்க் காட்சி தரக்கூடுமென்பதால், அவசர கதியில் தனியாயொரு ராப்பரை ரெடி செய்து வருகிறோம் ! So இதழின் நீளம் தாண்டி hopefully வேறு நெருடல்கள் இராதென்று நம்புவோம் ! அந்த அவசரத் தயாரிப்பையும், "கம்பி நீட்டிய குருவி"யின் ராப்பரையும் அடுத்த பதிவினில் கண்ணில் காட்டிடுவேன் ! So பிப்ரவரி சார்ந்த பெரும் முன்னோட்டங்கள் ஏதுமில்லை என்பதால், இந்த வாரம் அங்கும், இங்குமாய்ச் சிதறலான செய்திகளே பதிவின் சாரமாகிடவுள்ளன ! 

News # 1 : முதல் தகவல் - சந்தோஷம் + ஆச்சர்யம் கலந்த சேதி ! எப்போதுமே ஆண்டின் துவக்கத்தில் Spring catalogue என அவர்களது ஜனவரி, பிப்ரவரி & மார்ச் ரிலீஸ்களை விவரித்து படைப்பாளிகள் ஒரு மின்னஞ்சலைத் தட்டி விடுவது வாடிக்கை ! அதே போல் இம்முறையும் வந்திருந்த பல்வேறு நிறுவனங்களின் முன்னோட்டங்களைப் பார்த்திட்ட போதே அவை சகலத்திலும் கொஞ்சம் எக்ஸ்டரா உத்வேகம் இருப்பது போலவே தோன்றியது ! 'அடடே....லாக்டௌன் ; இரண்டாம் கொரோனா அலை என்பதன் மத்தியில் இந்த "பூஸ்ட்"-ன் இரகசியம் என்னவோ ?" என்று ஆர்வமாய்க் கேட்டு வைத்தேன் ! ஜாலியாய்ப் பதில் போட்டார்கள் - "ஆமாம்,,,பணிகள் சற்றே முடங்கி, சிரமங்களோடே நடைபெற்று வருகின்றன தான் ; ஆனால் சமீப வாரங்களில் விற்பனை பிய்த்துக் கொண்டு போகிறது ! So கூடுதலாய் titles ; கூடுதலாய்த் தயாரிப்பு என்று ரகளை பண்ணி வருகிறோம் !" என்று பதில் கிட்டியதைப் படித்த போது வியக்காது இருக்க முடியவில்லை ! அதிலும் நமது ARS மேக்னா கதாசிரியரின் அசுரப் படைப்பானது 2020-ல் வெளியாகி சகல வித பிரெஞ்சு விற்பனை ரெக்கார்டுகளையும் துவம்சம் செய்துள்ளதை பற்றி வாசித்த போது மனசுக்குள் ஒரு இனம்புரியா  ஆனந்தம் ! நாம் ஆயிரத்துச் சொச்ச பிரின்டரன்னில் கூத்தடித்துத் திரிந்தாலும், நாம் சார்ந்த துறை இத்தனை புஷ்டியாய் இருப்பதை எண்ணி குதூகலித்தேன் !

News # 2 : ARS MAGNA கதாசிரியர் (ஜேசன் ப்ரைஸ் ஆசிரியருமே) உருவாக்கியுள்ள அந்த சாதனை படைக்கும் இதழ் பற்றியும் பேசாது போகலாகாதே ?! So here goes "THE BOMB" !!! இரண்டாம் உலகயுத்தத்தினை சடுதியாக ஒரு முடிவுக்குக் கொணர்ந்ததில் ஜப்பானின் ஹிரோஷிமா மீது வீசப்பட்ட முதல் அணுகுண்டுக்கு ஒரு பிரதான பங்குண்டு என்பது வரலாறு ! அமெரிக்க குண்டுவீச்சு விமானம் 1945 -ல் வீசிய அந்த அழிவின் ஆயுதம் பற்றி தொடர்ந்துள்ள 75 ஆண்டுகளில் எண்ணற்ற ஆவணப்படங்கள் ; நாவல்கள் ; கதைகள் ; காமிக்ஸ்கள் ; டி-விதொடர்கள் ; திரைப்படங்கள் என வெளிவந்துள்ளன தான் - ஆனால் 2020-ல் - அணுகுண்டின் 75 வது anniversary-க்கென   காமிக்ஸ் கதாசிரியர் டிடியே ஸ்வைசென் உருவாக்கியுள்ள THE BOMB எனும் 450 பக்க கிராபிக் நாவலானது படைப்புலகினையே புரட்டிப் போட்டுள்ளது ! கடங்காவின் யுரேனியச் சுரங்கங்களில் துவங்கி, ஜப்பானின் விண்ணில், அழிவின் அஸ்திரமாய் முற்றுப் புள்ளி கண்ட இந்த அணுகுண்டின் பின்னணி நிஜங்களை ; போர் நிகழ்வுகளை ; அரசியல் அவசியங்களை அசாத்திய நுணுக்கங்களோடு ஆவணப்படுத்தி, டாகுமெண்டரி படம் போலல்லாது - செம சுவாரஸ்யமானதொரு படைப்பாய் உருவாக்கியுள்ளார் - in black & white !! போன வருஷமே மிரட்டலான இந்த ஆல்பத்தைப் பார்த்திருந்தேன் தான் ; ஆனால் இது இத்தனை பெரும் blockbuster ஆகிடுமென்று கனவிலும் எண்ணியிருக்கவில்லை ! ஆறாவதுவாட்டியாய் மறுபதிப்புக்குச் சென்றுள்ளது - இன்னமும் ஒரு வருஷம் முழுமையடைந்திருக்கா நிலையில் & கொரோனாவின் கொடுமைகளுக்கு மத்தியிலும் ! பற்றாக்குறைக்கு (பிரெஞ்சு) காமிக்ஸ் படைப்புகள் சார்ந்த விருதுகளில் கண்ணில்பட்ட சகலத்தையும் அள்ளிப்போட்டுக் கொண்டிருக்கிறது THE BOMB !! உலக வரலாற்றின் ஒரு மறக்கவியலா அத்தியாயத்தை போட்டுத் தாக்கும் இந்த மெகா ஆல்பத்தை தமிழில் வாசிக்க நீங்கள் தயாரா guys ? நீங்கள் ரெடியெனில் - நாமும் தக்கி முக்கியேனும் ரெடியாகிடலாம் ; not right away - but maybe in 2022 !


News # 3 : ஏனென்று சொல்லத் தெரியாது ; ஆனால் திடீர் திடீரென அசத்தலான படைப்புகள் கொத்துக் கொத்தாய்க் கண்ணில் பட்டிடுவதுண்டு ! இதே ஜோலியாய்த் தேடும் போது கண்ணில் மொக்கைப்பீஸ்களாய்த் தென்பட, எதிர்பாரா வேளைகளில் மாஸ்டர்பீஸ்களாய் இடறுவது கொஞ்ச வருடங்களாகவே தொடரும் கதையே - நம்மட்டிலாவது ! No different this time too - ஒன்றுக்கு - மூன்றாய் அழகான படைப்புகள் கண்ணில் பட்டுள்ளன ! 

முதலாவது - போன வருடத்து hits-களுள் ஒன்றான Zaroff பாணியிலான கானகத்தினில் அரங்கேறும் அசாத்திய வேட்டை சார்ந்த ஆல்பம் ! அங்கோ மனித வேட்டை ; இங்கோ புதையல் வேட்டை - ஏகப்பட்ட twists சகிதம் ! நமது பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளர் எப்போதுமே சிக் பில் கதைகளைத் தாண்டி எந்த ஆல்பத்துக்கும் பெரிதாய் நற்சான்றிதழ் தருபவர் நஹி !! (கிட் ஆர்டின்தான் அவரது alltime favorite -  (உட்ஸிட்டிக்காரர் தானுங்கோ!!) ஆனால் இந்த 6 மாதங்களில் தன்னிச்சையாய் 2 கதைகளுக்கு thumbs up தந்துள்ளார்  ! முதலாவது thumbs up - 2021 அட்டவணையினில் நாம் தீபாவளி மலராய் விளம்பரப்படுத்தியிருக்கும் புது கேப்டன் டைகர் ஆல்பத்தின் முதல் பாகத்துக்கு !  "இளம் டைகர் 10-15 வரைக்குமான ஆல்பங்களை படிக்குமாறு அவரிடம் கேட்டிருந்த நாட்களில் என் போனைப் பார்த்தாலே தெறித்து ஓடத்துவங்கியிருந்தார் - ஆனால் இந்த புது கேப்டன் டைகர் கதையைப் படுத்த கையோடு, ரொம்பவே சிலாகித்தார் ! அதன் பலனே - 2021 தீபாவளி மலரில் தட்டை மூக்காருக்கு இடம் !! (பாகம் 2 நடப்பாண்டின் ஜூலைக்குள் திட்டமிடலின்படியே வெளியாக வேண்டுமென்று என் மண்டைக்கோசரம் வேண்டிக் கொள்ளுங்கள் folks !!) இரண்டாவதாய் அவர் சிலாகித்துள்ளது - இந்தக் கானகப் புதையல் வேட்டை கதைக்கே !! சித்திரங்களும் அதகளப்படுத்த - மண்டையை உருட்டுகிறேன் - இதனை எங்கே நுழைப்பதென்ற யோசனையில் ! 

கண்ணில்பட்ட இரண்டாம் சுவாரஸ்யம் சற்றே late in the day !! இந்த ஆல்பம் 3 மாதங்களுக்கு முன்னர் என் பார்வையில் சிக்கியிருப்பின் - "வாண்டு ஸ்பெஷல்" நிஜமாகியிருக்கும் ! கார்ட்டூன் கிடையாது ; அதே சமயம் சீரியஸ் படைப்பும் நஹி ! நம் வீட்டிலுள்ள 8 - 12 வயதிலான பசங்களுக்கு ஜாலியாய் வாசிக்க / கதை சொல்ல கனஜோராய் அமைந்திருக்கக்கூடிய ஆல்பமிது ! வண்ணத்தில் ; அழகான ஆர்ட்ஒர்க் சகிதம் !! இதை நம் அட்டவைகளுக்குள் நுழைக்க maybe 2022-ல் தான் இனி திட்டமிடணும் போலும் - நீங்கள் இசைவு சொல்லும் பட்சங்களில் ! "வாண்டு ஸ்பெஷல் " - What say people ? ! 

சுவாரஸ்யம் # 3 - சற்றே நம்பிக்கை தருமொரு கார்ட்டூன் கவ்பாய் ! உடனடியாய் லக்கி லூக்கோடு ஒப்பீடுகளை வளர்த்துக் கொண்டோமெனில் இந்த நாயகர் தேறும் வாய்ப்புகள் பூஜ்யமாகிடும் தான் ! ஆனால் கிட் ஆர்டினையோ, லக்கியையோ போட்டு குழப்பிக்காது இந்தப் புது ஆசாமியை ரசிக்க முயன்றோமெனில், 2022 -ல் கார்ட்டூன் பஞ்சங்களுக்கு சன்னமான மருந்திட இவருக்கு சாத்தியமாகிடக்கூடும் ! இன்னமும் பக்கங்களை புரட்டுகிறேன் - புரட்டுகிறேன் - உங்களின் ரியாக்ஷன்ஸ் எவ்விதமிருக்குமென்று கணிக்கும் பொருட்டு ! 

News # 4 - இத்தாலியக் கரைகளிலிருந்து ! கருப்பு-வெள்ளை கிராபிக் நாவல்களில் நம்மை மிரட்டி வந்த போனெல்லியின் LE STORIE தொடரானது இதழ் # 100 என்ற மைல்கல்லைத் தொட்டுள்ளது ! இது நல்ல சேதி ! ஆனால் அந்த இதழோடு மங்களம் பாடி விட்டார்கள் என்பதே கேட்ட சேதி ! சரியாக 100 ஆல்பங்களோடு தொடர் நிறைவுற்றுவிட்டுள்ளது ! நமக்கு அங்கே தோண்டியெடுக்க இன்னமும் கணிசமான வாய்ப்புகள் உள்ள போதிலும், ஒரு வித்தியாச முயற்சி முற்றுப்புள்ளி காண்பதில் வருத்தமே !  

News # 5 - போனெல்லியின் 80-வது ஆண்டினில் நமது 'தல' "இளம்" தடத்திலும், க்ளாஸிக் தடத்திலும் ரவுண்டு கட்டி அடிக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன ! இதோ பிரான்க்கோ-பெல்ஜிய பாணிகளில் வண்ணத்தில் உருவாகி வரும் ஆல்பத்தின் preview :



சில சமயங்களில் 'தல' அக்கட பூமியில் தல தெறிக்கும் துரிதத்தில் பறப்பதைப் பார்க்கும் போது பொறாமையும், அவரது குருதையின் வாலைக்கூடப் பார்க்க இயலா நம் ஆற்றமாட்டாமையையும் எழுந்திடுவதுண்டு ! இது போன்ற நேரங்களிலெல்லாம் "தனி TEX தடம்" என்று மண்டைக்குள்ளொரு குரல் உரக்கக்கூவும் ! அப்பாலிக்கா இதர நாயரை அணிவகுப்பைப் பார்த்து சற்றே அடங்கி / அடக்கி கொள்வேன் ! Maybe 2022 'தல' தாண்டவம் exclusive தடத்தில் அரங்கேறிடணுமோ ? உங்கள் சிந்தனைகள் ப்ளீஸ் ?

News # 6 : இதுவுமே 'தல' சார்ந்த தகவலே ! நடப்பாண்டின் உருவாக்கங்களுள் இளம் டெக்ஸ் - போனெல்லியின் இன்னொரு நெடுநாளைய நாயகரான Zagor-ஐ சந்திக்குமொரு கதையும் உருவாகி வருகிறது ! Zagor ஒரு கானகத்து சாகச நாயகர் & இவரது தொடரிலும் நூற்றுக்கணக்கான ஆல்பங்கள் உண்டு ! நடப்பாண்டில் நம் அட்டவணையில் உள்ள மர்ம மனிதன் மார்ட்டின் + டைலன் டாக் கூட்டணி போல, இந்த இளம் டெக்ஸ் + Zagor கூட்டணியையும் பார்த்திட ஆர்வம் உண்டோ ?  

News # 7 - இக்கட நம்மூரில் சுடச் சுட லக்கி லூக் போஸ்டர்களும் ; "மரண நடை" - டெக்ஸ் இதழ்களும் அதே அட்டைப்படத்தோடு  ஆர்வலர்களின் காமிக்ஸ் "காதல் வெளிப்பாடுகளாய் "  அரங்கேறிக்கொண்டிருக்க, உலகின் பிறிதொரு மூலையில்  டின்டின்ன்னின் ஓவியரான ஹெர்ஜ் என்றோ ஒரு யுகத்தில் வரைந்து மூலை சேர்த்திருந்த அட்டைப்பட டிசைனானது 3 .2 மில்லியன் யூரோக்களுக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது ! கிட்டத்தட்ட 28 .5 கோடி ரூபாய்ங்கோ அது ! This is the design : 

Alrite guys...பிரளயம் இதழினில் பணியாற்றக் கிளம்புகிறேன் ; வரிசைகோர்த்து நின்ற மெகா பணிகளுள் தற்போதைக்கு இதுவே இறுதியானது  என்பதால் இன்னொருக்கா 'தம்' கட்ட வேண்டியுள்ளது !! Bye for now.....see you around ! Have a sunny sunday !

338 comments:

  1. ஹைய் முதல் கமெண்ட்...!!!

    ReplyDelete
  2. வணக்கம் நண்பர்களே!

    ReplyDelete
    Replies
    1. *THE BOMB !!
      நிச்சயம் வேண்டும் சார், நாங்க ரெடி!
      சரியான தருணத்தில் (விரைவிலேயே) களமிறக்குங்கள்!!

      *கானகப் புதையல் வேட்டை கதை!
      ஜம்போ 2022 அல்லது ஏதாவது புத்தகவிழா சிறப்பிதழ்.

      *வாண்டு ஸ்பெஷல்!
      வடை போச்சே! ஈரோடு 2021 ல் ஒற்றை நொடி, ஒன்பது தோட்டாவுடன் இதுவும் வரட்டும் சார், ப்ளீஸ், சரியான தருணம் அது.

      *புது கார்ட்டூன் கவ்பாய்!
      வரவேற்கிறோம் சார், உங்கள் முடிவு சரியாக இருக்கும்.

      *டெக்ஸ் தனித்தடம்! பிற நாயகர்களுக்கான வாய்ப்பினை பாதிக்காத வகையில் அமையுமெனில் ஆரம்பிக்கலாம் சார், விற்பனை மற்ற இதழ்களின் வருகைக்கும் உதவியாக இருக்குமே!

      *Tex+ Zagor
      Zagor கதைகள் சிலவற்றை வெளியிட்டு அவருடனான அறிமுகத்தை ரசித்தபின்னரே இந்த Cross over முயற்சி நன்றாக இருக்கும் என எண்ணுகிறேன்.

      நன்றி சார்!
      நன்றி நண்பர்களே!!

      Delete
  3. இந்த முறை டெக்ஸ் வண்ண இதழின் சித்திரம் மற்றும் வண்ணக்கலவை நன்றாக உள்ளது. தற்சமயம் வரும் பிற நாயகர்களின் வண்ணக் கதைகளுக்கு போட்டி போடும் வகையில் அட்டகாசமாக உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. // பிரான்க்கோ-பெல்ஜிய பாணிகளில் வண்ணத்தில் உருவாகி வரும் ஆல்பத்தின் preview : //

      அப்புறம் இந்த கதை இந்த வருடம் நமது கைகளில் தவழ வாய்ப்புகள் உண்டா சார்.

      Delete
    2. நடப்பாண்டில் வாய்ப்புகள் கம்மி சார் !

      Delete
  4. இனிய பெண் குழந்தைகள் தின வணக்கம்

    ReplyDelete
  5. சார் செம்ம பதிவு சார். தகவல்களை வாரி இறைத்து இருக்கிறீர்கள். மறுக்கா ஒரு வாட்டி படித்து விட்டு வருகிறேன். முதலில் The Bomb க்கு double ஓகே சீக்கிரமே போட்டு விடுங்கள்

    ReplyDelete
    Replies
    1. // சார் செம்ம பதிவு சார். தகவல்களை வாரி இறைத்து இருக்கிறீர்கள். //
      சரிதான்,தகவல்கள் மிகவும் சுவராஸ்யமாகவும்,படிக்க மிக மகிழ்ச்சியாகவும் உள்ளது...

      Delete
  6. // விலையில்லா இந்த இதழுக்கு //

    மற்றவர்கள் இதனை வாங்க என்ன செய்ய வேண்டும் என்பதையும் இந்த இதழ் வெளிவரும் போது தெளிவாக சொல்லி விடுங்கள் சார்.

    ReplyDelete
  7. // இத்தனை நிகழ்ந்துள்ள போது பிப்ரவரி இதழ்களின் பணிகளும் நம் பக்கத்தில் நிறைவுற்றிராதா - என்ன ? ) //

    அதானே :-)

    ReplyDelete
  8. நான் ந்யூஸ் 4,5,6ஐ படிக்கலையே..

    ReplyDelete
    Replies
    1. உங்க ஊர் பள்ளிக்கூடங்களிலே மூணுக்கு பின்னே ஏழு தானுங்களோ ?

      Delete
    2. இவரு தூங்குயிருப்பாரு சார்...:-)

      Delete
  9. // டின்டின்ன்னின் ஓவியரான ஹெர்ஜ் என்றோ ஒரு யுகத்தில் வரைந்து மூலை சேர்த்திருந்த அட்டைப்பட டிசைனானது 3 .2 மில்லியன் யூரோக்களுக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது ! கிட்டத்தட்ட 28 .5 கோடி ரூபாய்ங்கோ அது ! //

    அடேங்கப்பா. கண்ண சுத்துகிறது சாமி :-)

    ReplyDelete
  10. // மர்ம மனிதன் மார்ட்டின் + டைலன் டாக் கூட்டணி போல, இந்த இளம் டெக்ஸ் + Zagor கூட்டணியையும் பார்த்திட ஆர்வம் உண்டோ ? //

    கண்டிப்பாக உண்டு சார்.‌ கேள்வி கேட்காமல் இதுபோன்ற கதைகளை போட்டு தாக்குங்கள் சார்.

    ReplyDelete
  11. // THE BOMB !! உலக வரலாற்றின் ஒரு மறக்கவியலா அத்தியாயத்தை போட்டுத் தாக்கும் இந்த மெகா ஆல்பத்தை தமிழில் வாசிக்க நீங்கள் தயாரா guys ? //
    ரெடியோ ரெடி சார்...!!!

    ReplyDelete
  12. // Maybe 2022 'தல' தாண்டவம் exclusive தடத்தில் அரங்கேறிடணுமோ ? உங்கள் சிந்தனைகள் ப்ளீஸ் ? //

    2021 சந்தா ஏப்ரல் முதல் ஆரம்பிக்க உள்ளது. முடிந்தால் டெக்ஸ் தனித்தடம் இந்த வருடமே ஆரம்பித்து விடலாமே சார்.

    ReplyDelete
    Replies
    1. டெக்ஸ் தனித்தடத்திற்கு 2022 வரை காத்திருக்க முடியாது என்பதால் இந்த கோரிக்கை சார்.

      Delete
    2. சந்தாக்களை அறிவித்து பாதி கிணறைத் தாண்டிடும் வேளையில் யூ-டர்ன் போடுவது சாத்தியப்படாது / சுகப்படாது சார் !

      Delete
    3. புரிகிறது சார். ஆனால் டெக்ஸ் விற்பனையில் முக்கிய அங்கம் எனும் போது டெக்ஸ் தனிதடத்தில் இந்த வருடம் ஒரு ஆறு இதழ்கள் மட்டும் என்று பிள்ளையார் சூழியை போட்டு வைக்கலாமே.

      Delete
    4. பரணியின் யோசனை கூட சிறப்பானதே,சூப்பர் 6 என்ற தனித் தடத்தை முன்பொருமுறை அறிவித்தது போல் ஏதேனும் யோசனையை நடைமுறைப்படுத்தலாமே...

      Delete
    5. இல்லை சார் ; ஏற்கனவே ரெகுலர் சந்தா ABCDE ன்னு ஒரு திக்கில் ; ஜம்போவின் 6 இன்னொரு திக்கில் ; நடுவாக்கில் புக் பேர் ஸ்பெஷல்ஸ் ; அப்பாலிக்கா இரத்தப் படலம் மறுபதிப்பு ; அதற்கப்புறமாய் "ஒற்றை நொடி ஒன்பது தோட்டா" முன்பதிவுகள் என்று ஏகமாய் உங்கள் பாக்கெட்களுக்கு பிளேடு காத்துள்ள நிலையில் அதனை மேலும் உக்கிரமாக்குவதில் உடன்பாடில்லை எனக்கு !

      Delete
    6. சரி சார் காத்திருக்கிறோம்...சீக்கிரமே நல்வாய்ப்பு கிட்டும் என்றும் நம்புகிறோம்...

      Delete
  13. // காமிக்ஸ் கதாசிரியர் டிடியே ஸ்வைசென் உருவாக்கியுள்ள THE BOMB எனும் 450 பக்க கிராபிக் நாவலானது படைப்புலகினையே புரட்டிப் போட்டுள்ளது ! //
    அட்றா சக்கை,அட்றா சக்கை,அட்றா சக்கை...


    // ஆறாவதுவாட்டியாய் மறுபதிப்புக்குச் சென்றுள்ளது - இன்னமும் ஒரு வருஷம் முழுமையடைந்திருக்கா நிலையில் //
    அட்றா சக்கை,அட்றா சக்கை,அட்றா சக்கை...

    ReplyDelete
  14. // முதலாவது - போன வருடத்து hits-களுள் ஒன்றான Zaroff பாணியிலான கானகத்தினில் அரங்கேறும் அசாத்திய வேட்டை சார்ந்த ஆல்பம் ! //

    அட்றா சக்கை,அட்றா சக்கை,அட்றா சக்கை...

    ReplyDelete
  15. //மண்டையை உருட்டுகிறேன் - இதனை எங்கே நுழைப்பதென்ற யோசனையில் ! //
    இருக்கவே இருக்கே சார் 2022,வாய்ப்பு கிடைச்சா 2021 ஈ.பு.வி யில் வெளியிட்டு விடுவோம் சார்...!!!

    ReplyDelete
    Replies
    1. ஒற்றை நொடி.ஒன்பது தோட்டா - ஈரோட்டுக்கென already waiting சார் !

      Delete
    2. பத்தாவது தோட்டாவா இதுவும் வந்தா இன்னும் அதிரிபுதிரியா இருக்கும்னு பட்சி சொல்லுது சார்...
      சிங்கிள் ஸ்லாட்தானே சார்,ஈ.பு.வி யில் ர.ப ஸ்பின் ஆப் மற்ற இதழ்களோடு வந்தமாதிரி இதுவும் ஒரு ஓரமா வரட்டுமே சார்...!!!

      Delete
    3. // பத்தாவது தோட்டாவா இதுவும் வந்தா இன்னும் அதிரிபுதிரியா இருக்கும்னு பட்சி சொல்லுது சார் //

      +1

      Delete
    4. பத்தாவது தோட்டாவா இதுவும் வந்தா இன்னும் அதிரிபுதிரியா இருக்கும்னு பட்சி சொல்லுது சார்...
      சிங்கிள் ஸ்லாட்தானே சார்,ஈ.பு.வி யில் ர.ப ஸ்பின் ஆப் மற்ற இதழ்களோடு வந்தமாதிரி இதுவும் ஒரு ஓரமா வரட்டுமே சார்...!!!/// முயற்சி செய்யலாமா சார்?

      Delete
    5. // பத்தாவது தோட்டாவா இதுவும் வந்தா இன்னும் அதிரிபுதிரியா இருக்கும்னு பட்சி சொல்லுது சார் //

      +2 ஈரோட்டில் எத்தனை வெடிச்சாலும் மகிழ்ச்சி தான்.

      Delete
  16. // "வாண்டு ஸ்பெஷல்" நிஜமாகியிருக்கும் ! கார்ட்டூன் கிடையாது ; அதே சமயம் சீரியஸ் படைப்பும் நஹி ! நம் வீட்டிலுள்ள 8 - 12 வயதிலான பசங்களுக்கு ஜாலியாய் வாசிக்க / கதை சொல்ல கனஜோராய் அமைந்திருக்கக்கூடிய ஆல்பமிது ! வண்ணத்தில் ; அழகான ஆர்ட்ஒர்க் சகிதம் !! இதை நம் அட்டவைகளுக்குள் நுழைக்க maybe 2022-ல் தான் இனி திட்டமிடணும் போலும் - நீங்கள் இசைவு சொல்லும் பட்சங்களில் ! "வாண்டு ஸ்பெஷல் " - What say people ? ! //

    சார் இந்த வருடம்மே ஈரோடு புத்தகத் திருவிழாவில் இந்த கதையை புத்தகத் திருவிழா ஸ்பெஷல் என வெளியிடுங்கள் சார். ப்ளீஸ்.🙏

    ReplyDelete
    Replies
    1. "ஓ.நொ.ஓ.தோ." மெகா ஆல்பம் waiting sir !

      Delete
    2. சார் எங்களை போன்ற வாண்டுகளை இன்னும் எவ்வளவு நாட்கள் காக்க வைப்பீர்கள் சார். ஈரோடுட்டில் கொடுங்கள் சார். ஈரோடு தான் இதுபோன்ற புதிய முயற்சிகளுக்கு சிறந்த இடம் என்று உங்களுக்கு நன்றாக தெரியும் சார். ப்ளீஸ்.

      Delete
    3. //"ஓ.நொ.ஓ.தோ." மெகா ஆல்பம் waiting sir !//


      சார் அதவும் + இதுவும்... முயற்சிக்கலாமே...்

      Delete
    4. // இந்த வருடம்மே ஈரோடு புத்தகத் திருவிழாவில் இந்த கதையை புத்தகத் திருவிழா ஸ்பெஷல் என வெளியிடுங்கள் சார். ப்ளீஸ்.🙏
      //

      +1000

      Delete
  17. அதாகப்பட்டது

    ஏற்கனவே சொன்னதுதான்...

    நீங்க குடுக்கிற எல்லாமே தரமான நயமான வாசிப்பு வாழ்க்கைக்கு உத்தரவாதமான கதைகள் தான் எனும் போது எங்கள் அபிப்பிராயங்கள் இரண்டாம் பட்சம்...

    நீங்கள் குடுங்க..

    வாங்க நாங்களாச்சு...

    ReplyDelete
    Replies
    1. ஊர் கூடி தேர் இழுக்கும் குஷியே அலாதி தானே சார் ?

      Delete
  18. 'தல'ங்கிற போது தனி ஆவர்த்தனம் - சந்தா F

    ReplyDelete
  19. // Maybe 2022 'தல' தாண்டவம் exclusive தடத்தில் அரங்கேறிடணுமோ ? உங்கள் சிந்தனைகள் ப்ளீஸ் ? //
    அந்தநாள் எப்பொழுது புலர்ந்திடுமோ என்ற ஆதங்கத்தில் உள்ளேன் சார்...!!!
    இது ஒருவகையில் நம் காமிக்ஸ் எதிர்காலத்தின் கட்டாயமும் கூட...!!!

    ReplyDelete
    Replies
    1. ஆமா....ஆமா....+12345678910

      Delete
    2. ஆமாம்...ஆமாம்...ஆமாம் சார்...

      Delete
  20. // THE BOMB !! உலக வரலாற்றின் ஒரு மறக்கவியலா அத்தியாயத்தை போட்டுத் தாக்கும் இந்த மெகா ஆல்பத்தை தமிழில் வாசிக்க நீங்கள் தயாரா guys ? //

    கண்டிப்பாக. தாராளமாக வரட்டுமே.

    ReplyDelete
  21. // இந்த இளம் டெக்ஸ் + Zagor கூட்டணியையும் பார்த்திட ஆர்வம் உண்டோ ? //
    ஹைய்,ஒரு இதழ் முயற்சித்து பார்ப்போமே சார்,அசத்தினால் தொடர்வோம்...

    ReplyDelete
  22. // இந்தக் கானகப் புதையல் வேட்டை கதைக்கே !! சித்திரங்களும் அதகளப்படுத்த - மண்டையை உருட்டுகிறேன் //

    சூப்பர் சிக்ஸ் என ஒரு சந்தாவை ஆரம்பித்து அதில் நான்கு டெக்ஸ் மற்றும் இரண்டு புதிய கதைகள், அதில் ஒன்று இந்த கதை என போடலாம் சார் :-)

    :-)

    ReplyDelete
  23. அர்ஷ் மேக்னா - இதழை நான் மொழி பெயர்த்து உதவுகிறேன் என்று சொல்லியிருந்தேன் சார்...

    ஏனோ தெரியவில்லை... நீங்கள் பதிலே சொல்லவில்லை...

    ReplyDelete
    Replies
    1. அந்த atom bomb ஐ யாவது...

      Delete
    2. சாரி சார் ; ஒரு ஸ்கிரிப்ட்டை பட்டி டிங்கரின்க் பார்த்து நம் பாணிகளுக்குக் கொண்டு வருவதிலான சிக்கல்களை சமாளிக்க வர வர ரொம்பவே திணறுகுறது ! So இயன்றமட்டிலும் டின்கரிங்க் அவசியமாகிடாது என்ற ரீதியிலான கதைகளைத் தவிர்த்து வேறு எதையும் யாரிடமும் இப்போதெல்லாம் ஒப்படைப்பதே இல்லை சார் ! 40+ ஆண்டுகளாய்ப் பேனா பிடித்து வரும் நம் கருணையானந்தம் அவர்களுக்குமே இந்த பாலிசி தான் நடைமுறை !

      ARS MAGNA அநியாயத்துக்கு தெக்கேயும் , வடக்கேயும் இழுத்துச் செல்லும் ஆல்பம் & நெட்டில் ஒரு வண்டித் தேடல்களை அவசியப்படுத்திய பணி ! இதனை நான் ஒப்படைத்து ; உங்களையும் படுத்தி , அப்புறமாய் நானும் ஒருவாட்டி அத்தனையையும் சரி பார்க்க நேரமிருக்கவில்லை சார் ! தவிர இது ஏற்கனவே தமிழில் முயற்சித்திருக்கிறார்களாம் ; so வரிக்கு வரி ஒப்பீடுகளும் தவிர்க்க இயலாது போகும். இதில் கூட்டு முயற்சிகளெனில் இருவருக்குமே நெருடல்கள் மிஞ்சிடக்கூடும் !

      Delete
  24. //THE BOMB !! உலக வரலாற்றின் ஒரு மறக்கவியலா அத்தியாயத்தை போட்டுத் தாக்கும் இந்த மெகா ஆல்பத்தை தமிழில் வாசிக்க நீங்கள் தயாரா guys ?//

    YES .. இந்த வருட ஜம்போ ல போட்டு தாக்கிறலாம் சார் ..

    //Maybe 2022 'தல' தாண்டவம் exclusive தடத்தில் அரங்கேறிடணுமோ ? உங்கள் சிந்தனைகள் ப்ளீஸ் ?//

    YES SIR .. NEED TEX EVERY MONTH .. REGARDING SALES FACTOR AND POPULARITY .. முடிந்தால் 2021 லயே கொண்டு வரவும் .. MEFISTO வந்தால் இன்னும் மகிழ்ச்சி ..

    //இந்த இளம் டெக்ஸ் + Zagor கூட்டணியையும் பார்த்திட ஆர்வம் உண்டோ ?//

    YES SIR .. ஆனால் அதற்கு முன் ZAGORஐ அறிமுகப்படுத்தி அந்த SERIESல் 1-2 இதழ்கள் வந்தால் நன்றாக இருக்கும் ..

    ReplyDelete
    Replies
    1. //Maybe 2022 'தல' தாண்டவம் exclusive தடத்தில் அரங்கேறிடணுமோ ? உங்கள் சிந்தனைகள் ப்ளீஸ் ?//

      YES SIR .. NEED TEX EVERY MONTH .. REGARDING SALES FACTOR AND POPULARITY .. முடிந்தால் 2021 லயே கொண்டு வரவும் .. MEFISTO வந்தால் இன்னும் மகிழ்ச்சி ..

      //இந்த இளம் டெக்ஸ் + Zagor கூட்டணியையும் பார்த்திட ஆர்வம் உண்டோ ?//

      YES SIR .. ஆனால் அதற்கு முன் ZAGORஐ அறிமுகப்படுத்தி அந்த SERIESல் 1-2 இதழ்கள் வந்தால் நன்றாக இருக்கும் ..////



      +12345678910

      Delete
  25. ##நீங்கள் ரெடியெனில் - நாமும் தக்கி முக்கியேனும் ரெடியாகிடலாம் ; not right away - but maybe in 2022 !###
    2021 ஈரோடு book fairக்கு நாங்க ரெடி

    ReplyDelete
    Replies
    1. ஈரோடும் , புக்பேரும் ரெடியாவதல்லவா முதல் அவசியம் சார் ?

      Delete
    2. ஆமாமா...

      ஈரோட்ல ரோடெல்லாம் போட்டாங்கெளா

      Delete
  26. //THE BOMB !! உலக வரலாற்றின் ஒரு மறக்கவியலா அத்தியாயத்தை போட்டுத் தாக்கும் இந்த மெகா ஆல்பத்தை தமிழில் வாசிக்க நீங்கள் தயாரா guys ? நீங்கள் ரெடியெனில் - நாமும் தக்கி முக்கியேனும் ரெடியாகிடலாம் ; not right away - but maybe in 2022 !//

    +1234567890

    ReplyDelete
    Replies
    1. உங்க புது மொபைல் நம்பரா ஜி இது :-) ரொம்ப ஃபேன்ஸியா உள்ளது :-)

      Delete
  27. // இந்தக் கானகப் புதையல் வேட்டை கதைக்கே !! சித்திரங்களும் அதகளப்படுத்த - மண்டையை உருட்டுகிறேன் // இன்னும் ஒரு இனிப்பான செய்தி.....

    ReplyDelete
  28. // மர்ம மனிதன் மார்ட்டின் + டைலன் டாக் கூட்டணி போல, இந்த இளம் டெக்ஸ் + Zagor கூட்டணியையும் பார்த்திட ஆர்வம் உண்டோ ? //

    கண்டிப்பாக உண்டு சார்.‌ கேள்வி கேட்காமல் இதுபோன்ற கதைகளை போட்டு தாக்குங்கள் சார்.

    ReplyDelete
  29. //போன வருடத்து hits-களுள் ஒன்றான Zaroff பாணியிலான கானகத்தினில் அரங்கேறும் அசாத்திய வேட்டை சார்ந்த ஆல்பம் ! அங்கோ மனித வேட்டை ; இங்கோ புதையல் வேட்டை - ஏகப்பட்ட twists சகிதம் !//


    தட்கல் ஆப்சன் ஏதாவது இருந்தால் 2021 ல் வெளியிட முயற்சிக்கலாமே சார்...

    ReplyDelete
    Replies
    1. // தட்கல் ஆப்சன் ஏதாவது இருந்தால் 2021 ல் வெளியிட முயற்சிக்கலாமே சார்... //
      இந்த ஆப்சன் நன்றாக உள்ளதே. சந்தா தட்கல். I like it.

      Delete
    2. // தட்கல் ஆப்சன் ஏதாவது இருந்தால் 2021 ல் வெளியிட முயற்சிக்கலாமே சார்.. //
      அட இந்த ஐடியா நல்லா இருக்கே...

      Delete
  30. வாண்டூ ஸ்பெஷல். ...

    எனக்கு இப்பதா 14 முடிஞ்சி 13 நடக்குது...

    அதால நீங்க ‌...ம் க்விக்...

    ReplyDelete
  31. The Bombe and Tex Exclusive eagerly waiting sir.

    ReplyDelete
  32. 3. வாண்டு ஸ்பெஷல் ஆஹா ஆஹா
    4. புது கௌபாய் ஓகே ஓகே
    5. 100 புத்தகங்கள் உடன் கிராஃபிக் நாவல் தடம் முடிந்தது வருத்தமே..

    ReplyDelete
  33. கலர் டெக்ஸ் சும்மா கண்ணை பறிக்கிறது சீக்கிரமே போட்டு தாக்குங்கள் சார்.

    ReplyDelete
  34. அனைத்துமே சந்தோசமான சேதிகள்...அனைத்துக்குமே வரவேற்பு கொடுக்க நாங்கள் ரெடி...இந்த வருடமே ஆனாலும் நீங்கள் ரெடியா ..:-)

    அப்பறம் 22 ல் ஆவது டெக்ஸ் தனி சந்தா ( 12 மாத முழுவதுமாக ) தண்டவாளத்தை தயார் செய்து விடுங்கள் சார்..

    ReplyDelete
    Replies
    1. ICF ஆவடியில் சொல்லி வைச்சுப்புடலாம் தலீவரே ! இந்திய ரயில்வேவுக்கே கோச் செய்பவர்கள், நம்ம காமிக்ஸ் எக்சிபிரசுக்கு ஒரு டெக்ஸ் கோச் செஞ்சு தராமலா விட்ருவாங்க ?

      Delete
    2. தலைவர் சொன்னா சரி...

      Delete
    3. //
      ICF ஆவடியில் சொல்லி வைச்சுப்புடலாம் தலீவரே ! இந்திய ரயில்வேவுக்கே கோச் செய்பவர்கள், நம்ம காமிக்ஸ் எக்சிபிரசுக்கு ஒரு டெக்ஸ் கோச் செஞ்சு தராமலா விட்ருவாங்க //

      ஹா ஹா :-)

      Delete
    4. டெக்ஸ் தனி சந்தா ஓகே ஓகே

      Delete
    5. குமார் சாரே சொல்லிட்டாரு சார்....:-)

      Delete
  35. /போன வருடத்து hits-களுள் ஒன்றான Zaroff பாணியிலான கானகத்தினில் அரங்கேறும் அசாத்திய வேட்டை சார்ந்த ஆல்பம் ! அங்கோ மனித வேட்டை ; இங்கோ புதையல் வேட்டை - ஏகப்பட்ட twists சகிதம் !//


    மிக மிக மிக ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் சார்..



    ReplyDelete
  36. சார், ஒ.நொ.ஒ.தோ.வோடு Zarof பாணியிலான வண்ண இதழையும் ஈரோடு விழாவில் வெளியிடலாமே?!

    ReplyDelete
  37. சார் சென்னை புத்தக விழாவில் நமக்கு ஸ்லாட் உண்டா????

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு இன்னும் ஒரு கேள்வி

      அறிவித்த வாண்டு ஸ்பெஷல் க்கான இதழ்கள் இந்த வருடம் ஏதேனும் புத்தக விழாவில் வெளிவர வாய்ப்பு உண்டா??? நீங்கள் ஏற்கனவே இதற்கான உரிமையை வாங்கி விட்டோம் என்று கூறி இருந்தீர்கள்

      Delete
    2. உண்டு எனில் அதற்கு தனி ஸ்பெஷல் இதழ் ஏதும் உண்டா சார்..ஆவலுடன் வெயிட்டிங்...

      Delete
    3. நம் கைகளில் இல்லாத தீர்மானம் சார் அது ; வழக்கம் போல் விண்ணப்பிப்போம் - இடம் கிட்டினால் மகிழ்வோம் !

      Delete
    4. //அறிவித்த வாண்டு ஸ்பெஷல் க்கான இதழ்கள் இந்த வருடம் ஏதேனும் புத்தக விழாவில் வெளிவர வாய்ப்பு உண்டா???//

      No sir ! ஏற்கனவே சொன்னது தான் ; சந்தாக்கள் / முன்பதிவுகளோடு இணைந்திரா முயற்சிகளில் விழும் ஸ்டாக் ஏகம் !

      Delete
    5. ///
      No sir ! ஏற்கனவே சொன்னது தான் ; சந்தாக்கள் / முன்பதிவுகளோடு இணைந்திரா முயற்சிகளில் விழும் ஸ்டாக் ஏகம் !///
      --விழா ஸ்பெசல்கள்ன்னா அது பெரிய ஆளுங்கள்து தான் என புரிகிறது..

      எதிர்பார்ப்புகளை,

      டெக்ஸ்...
      லக்கி...
      சிக்பில்...
      ஸ்பைடர்...
      ஆர்ச்சி...
      இரும்பு...னு அமைச்சிகிடுறோம்.

      Delete
  38. மகா சங்கமம் காமிக்ஸிலும் அரங்கேறுவது சந்தோசமான விசயமே. எப்படியோ எங்களுக்கு ஒரு அதிகப்படியானடெக்ஸ் வருவதுமே சந்தோசமான விசயமே. முதல் முறையாகபலநாட்களுக்கு முன்பேஈரோடு புத்தகவிழாஸ்பெசல் பற்றி அறிவித்திருப்பதுமே சந்தோசமான விசயமே. விதி விலக்குபி. பி வி

    ReplyDelete
    Replies
    1. ஈரோடு புத்தக விழா க்கு வெயிட்டிங். ஒற்றை நொடி ஒன்பது தோட்டா மட்டும் தானா சார்???

      Delete
    2. ///விதி விலக்குபி. பி வி///

      ----ஒரு குளிரான நாளில் இன்னொரு ட்ரை பண்ணுங்க ஜி.

      பி.பி.வி. நிச்சயமாக கவரும்!

      Delete
    3. வீட்டிலே மொச்சைப்பயறு சுண்டலா ஸ்டீல் ?

      Delete
    4. // பாம போட வாய்ப்பிருப்பதாக பட்சி ஆரூடம் சொல்லுதே //

      // வீட்டிலே மொச்சைப்பயறு சுண்டலா ஸ்டீல் ? //

      சார் :-)

      Delete
  39. சார் புத்தக விழா விற்பனை குறித்த சிறப்புத் தகவல்கள் ஏதேனும் உண்டா,
    தீபாவளி வித் டெக்ஸ் பறந்துடுச்சா ?!
    சுவாரஸ்யமான நிகழ்வுகள் ஏதேனும் ?!

    ReplyDelete
    Replies
    1. தீபாவளி டெக்ஸ் போயிண்டே சார் ! It's gone !

      Delete
    2. ஆன்லைன் புத்தக விழா நிகழ்வுகள் பற்றி சொல்லுங்கள் சார்??? மரண முள் சூப்பர் ஹிட் போலவே?????

      Delete
    3. // தீபாவளி டெக்ஸ் போயிண்டே சார் ! It's gone ! //
      அடடே,இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே...
      தல தலவலிக்கு மருந்தாய் இருப்பது மகிழ்ச்சி...

      Delete
    4. வெகு விரைவில் விற்றுத்தீர்ந்த டெக்ஸ் இதழ் என்ற பெருமையை பெற்றுள்ளது... செம....

      Delete
    5. ரெம்போ சீக்கிரமே ஆயிரம், ரெண்டாயிரமென 'ஏலேலோ ஐலசா ' குரல்கள் ஒலித்தால் வியப்படைய மாட்டேன் தான் !

      Delete
    6. ////ரெம்போ சீக்கிரமே ஆயிரம், ரெண்டாயிரமென 'ஏலேலோ ஐலசா ' குரல்கள் ஒலித்தால் வியப்படைய மாட்டேன் தான் !////

      --- படக்குனு ஒரு 500்காபிக்களை போடுங்க ஆசிரியர் சார்.

      சென்னை விழாவில், ஈரோடு விழாவில் வாங்கவென்றே நிறைய பேர் காத்திருப்புது உறுதி.

      பொறுவு போஸ்டரே 200னா,
      தலை புக்குக்கு......???

      Delete
  40. ///2020 அட்டவணையின் இறுதி TEX இதழ் ஒரு தலையில்லாப் போராளியாய்க் காட்சி தரக்கூடுமென்பதால், அவசர கதியில் தனியாயொரு ராப்பரை ரெடி செய்து வருகிறோம் !///---

    மகிழ்ச்சி! தலையின் தலை தப்பிச்சி!

    ReplyDelete
  41. சார் அந்த பாம....வாண்டு ஸ்பெசல இந்த வருடமே காட்டிடுங்க.....கானக வேட்டை புதையலாய்....அடி தூள்...இந்த மூன்றும் ஸ்பெஷலா நுழைக்க வாய்ப்பிருந்தா யோசிக்க வேண்டாம்.....பேர் சூப்பர் சிக்ஸ்....

    ReplyDelete
    Replies
    1. டைகர் மகிழ்ச்சி....மீண்டு விடுமோ பரபரப்பு....
      டெக்ஸ் இதென்ன கேள்வி...மேலும் தனித்தடம் இளம் டெக்சுக்கும் விடலாமே...
      சாகர் வரட்டுமே...பாத்துடுவோம் ஓர் கை

      Delete
  42. ///நமக்கு அங்கே தோண்டியெடுக்க இன்னமும் கணிசமான வாய்ப்புகள் உள்ள போதிலும், ஒரு வித்தியாச முயற்சி முற்றுப்புள்ளி காண்பதில் வருத்தமே ! ////

    --- இதைவிட இன்னும் சிறம்பான புதிய முயற்சிகள் வரக்கூடுமல்லவா...!!!

    பிரிவுதான் வளர்ச்சி என்பதுபோல ஒன்றின் முடிவே மற்றதன் தொடக்கம்!

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது சரி தான் டெக்ஸ். முடிவே ஆரம்பம்

      Delete
  43. /// Maybe 2022 'தல' தாண்டவம் exclusive தடத்தில் அரங்கேறிடணுமோ ? உங்கள் சிந்தனைகள் ப்ளீஸ் ?////

    ---சிந்திக்கவே வேணாம்னேன்.... மாதம் ஒரு டெக்ஸ் பார்த்தாச்சி 2016லயே!!!

    அதைவிட சிறப்பான புதிய தனித்தடத்தில் குதிரையை வுடுங்கோ!!

    மாதம் ஒரு கலர் டெக்ஸ்+ ஒரு கருப்பு வெள்ளை டெக்ஸ்!

    ஒரு ரெகுலர் டெக்ஸ்+ ஒரு யங் டெக்ஸ்!

    ReplyDelete
    Replies
    1. 3 மாதத்திற்கு ஒரு முறையாவது கலர் டெக்ஸ்.வருடத்திற்கு 4. Young Tex 2 reprint கலர் 2 ரெகுலர் டெக்ஸ் 4 ஓகே வா

      Delete
    2. ரீபிரிண்ட்கள் இனி ஏதாவது விழா சமயத்தில் மட்டுமே இருக்கும் என நினைக்கிறேன்.

      4கலர் டெக்ஸ்+ 2 யங் டெக்ஸ்+ 6ரெகுலர் டெக்ஸ் என ஃபார்முலாவை சற்றே ஆல்டர் பண்ணிகிடலாம்.

      Delete
    3. இப்போ தான் பொண்ணு பாக்கவே புரோக்கர் கிட்டே சொல்லியிருக்கு ; அதுக்குள்ளாற கண்ணாலம் பண்ணி வெச்சு ; குழந்தையும் பெத்து, மொட்டைக்கு ஏற்பாடும் பண்ணி, கிடா வெட்டுக்கு சந்தையிலே ஆட்டையும் ஓட்டிட்டு வந்தாச்சு போலிருக்குதே !

      Delete
    4. மாப்பிள்ளைக்கு 36 வயுசு சார்... மொத பொண்ணையே அமுக்கி பரிசம் போட வேண்டிய அவசரம்....

      Delete
  44. ///! நடப்பாண்டில் நம் அட்டவணையில் உள்ள மர்ம மனிதன் மார்ட்டின் + டைலன் டாக் கூட்டணி போல, இந்த இளம் டெக்ஸ் + Zagor கூட்டணியையும் பார்த்திட ஆர்வம் உண்டோ ? ////

    --- இதையும் போட்டு வுடுங்க... ஃபுல் மீல்ஸ்க்கு பிறகு ஒரு பீடா மாதிரி!!!!

    ReplyDelete
  45. 28.5ரை கோடியாஆஆஆஆஆஆஆ.....

    அடேங்ப்ப்பா....!!!!

    நம்ம லக்கி போஸ்டரும் அடுத்த நூற்றாண்டில் ஒரு, ஒரு லட்சத்துக்காச்சும் போகாது😉😉😉😉

    ReplyDelete
    Replies
    1. இந்த நியூஸ் நானும் பார்த்தேன். எப்படியாவது ஒரு original art cover வாங்கி வைக்கணும்...

      Delete
    2. ரின் டின் ரசிகர் நீங்கள்... என்றாவது கனவு நனவாகட்டும்.💐

      Delete
    3. ரின் டின் -> டின் டின் என படிக்கவும்.

      Delete
  46. விஜயன் சார், 100 le storie கதைகளில் நீங்கள் வெளியிட எதிர்பார்க்கும் கதைகள் எத்தனை இருக்கும்?

    ReplyDelete
    Replies
    1. நான்கில் ஒன்று நமக்கு சுகப்படலாமென்ற குருட்டுக் கணக்குப் போட்டால் 25 தேறணும் ; அவற்றுள் நாம் ஏற்கனவே வெளியிட்டிருக்கக்கூடியது ஒரு எட்டோ - ஒன்பதோ இருக்கக்கூடும் ! கழித்துக் கொண்டு கணக்குப் பாருங்களேன் நண்பரே !

      Delete
  47. டியர் எடி,

    Bomb கதையினை பற்றி ஆன்லைனில் பல விமர்சனங்கள் ஓகோ என்று படித்தேன். கண்டிப்பாக அதை அரங்கேற்றங்கள்... மெகா சைஸ் என்பதால் 2022 க்கு காத்திருக்க வேண்டியதாக இருந்தாலும் நலமே.

    லக்கி போல இன்னொரு கார்ட்டூன் கதைக்கு எப்பவும் போல வரவேற்பே. கூடவே அந்த டெக்ஸ்-ஜகோர் கூட்டணி களம் இறக்க கண்டிப்பாக முயலுங்கள். புதையல் வேட்டை கதைக்கும், டபுள் ஓகே. 2021 ஜம்போவில் இவை இடம்பிடிக்குமா?

    சென்னை புத்தக கண்காட்சி பிப்ரவரி மாதம் நடத்த அனுமதி கிடைத்திருக்குதாமே .... லயன், முத்து ஸ்டால் இந்த வருடம் உண்டா ?! பதிவில் அதை பற்றி சுட்டிகாட்டவில்லை என்பதால் கேள்வி.

    ReplyDelete
    Replies
    1. சென்னை புத்தக விழாவினில் status quo சார் ; எப்போதும் போல் வாய்ப்புக்கு முயற்சிப்போம் ! கிட்டிடும் பட்சத்தில் நிச்சயம் பங்கேற்போம் !

      Delete
    2. /புதையல் வேட்டை கதைக்கும், டபுள் ஓகே. 2021 ஜம்போவில் இவை இடம்பிடிக்குமா?//

      நடப்பாண்டில் இதற்கான பட்ஜெட் லேது சார் ஜம்போவில் !

      Delete
    3. No worries, Edi. 2022 க்கான திட்டமிடல் இன்றே தொடங்கியது என்று எடுத்து கொள்ள வேண்டியதுதான்.

      கொரோனா முடக்கத்திற்கு பின் நடைபெறபோகும் பெரிய நிகழ்ச்சி என்பதால் சென்னை புத்தக கண்காட்சிக்கு போட்டி அதிகமாக இருக்க போவது உறுதி. கிடைத்தால் அதிரடிதான். காத்திருப்போம், அவர்கள் முடிவை எதிரநோக்கி.

      Delete
  48. The bomb கதையின் பின்னணி சுவாரசிய நிரம்பியுள்ளது.2022 வரை பொறுக்க வேண்டுமோ!

    ReplyDelete
    Replies
    1. அது 2020 -ல் வெளியானதெனும் போது ஏற்கனவே ஓராண்டு போயிண்டே சார் ; நாம் சூட்டோடு சூடாய் வெளியிடும் நிலைமையிலா இருந்தோம் 2020 -ல் ?

      அதுமட்டுமன்றி இதன் 450 பக்கங்கள் - ஓராயிரம் ஆய்வுகளை அவசியப்படுத்திடும் மொழிபெயர்ப்புப் பணியாக இருந்திடுமென்பது சர்வ நிச்சயம் ! இதர பணிகளை அதற்கேற்ப கொஞ்சம் இலகுவாய் அமைத்துக் கொண்டொரு ஓய்வான பொழுதில் தான் இதற்குள் தலையை நுழைப்பது பற்றியே யோசிக்க முடியும் சார் ! நிறையவே lead time இதற்கு தேவையாகிடும் !

      Delete
  49. Please consider "THE BOMB" as a special book for this year

    ReplyDelete
    Replies
    1. இப்போ தான் மேலே பதிலிட்டுள்ளேன் - பாருங்களேன் !

      Delete
  50. ////(பிரெஞ்சு) காமிக்ஸ் படைப்புகள் சார்ந்த விருதுகளில் கண்ணில்பட்ட சகலத்தையும் அள்ளிப்போட்டுக் கொண்டிருக்கிறது THE BOMB !! உலக வரலாற்றின் ஒரு மறக்கவியலா அத்தியாயத்தை போட்டுத் தாக்கும் இந்த மெகா ஆல்பத்தை தமிழில் வாசிக்க நீங்கள் தயாரா guys ?////

    கி.நா பாணியில் அல்லாது ஜனரஞ்சக ஹிட்டடிக்கும் எனும்பட்சத்தில் 2022ல் முத்து காமிக்ஸின் பொன்விழா ஆண்டு மலராக இந்தக் கதையை முயற்சிக்கலாமாங் சார்?

    அது சரிப்படாது எனில் சீக்கிரமே ஒரு ஸ்பெஷல் இதழாகக் களமிறக்குங்கள் சார். இத்தனை விருதுகளை அள்ளிக்குவித்துவரும் இக்கதையை இம்மீடியட்டாகப் படித்துத்தள்ளிவிட ஆசையோ ஆசை!

    ReplyDelete
    Replies
    1. //// 2022ல் முத்து காமிக்ஸின் பொன்விழா ஆண்டு மலராக இந்தக் கதையை முயற்சிக்கலாமாங்///

      ---நல்ல அகுடியாவாக இருக்கும் போலயே!!!!

      ஒரு தோர்கல் (தற்போதைய தலைகாப்பான் தனயன் கதையின் க்ளைமாக்ஸ் 2பாகங்கள்)+

      இந்த 450பக்க ஆட்டம் பாமையும் கூட்டாக களம் இறக்கினா சனவரி 2022ல முத்து 50 தங்கவிழா ஜொலிக்குமே!

      புதுமைக்கு தோர்கல் கலரு....
      பழமைக்கு கரும்பு பாமு....

      இதையும் லேசா ரோசனைல சேர்த்து கொள்ளுங்கள் ஆசிரியர் சார்.

      (டியூராங்கோ இல்லை என்ற குறையே தெரியாம இயரை ஆரம்பித்து விடலாம்)

      Delete
    2. //நல்லாதானிருக்கு...ஆனா இந்த வருடமேன்னா//--- அதான் நடைமுறையில் உள்ள சிக்கல்களை எடிட்டர் சார் சொல்லி இருக்காரே.

      அடுத்த ஆண்டு எதிர்பார்ப்போம்.

      Delete
    3. //நல்லாதானிருக்கு...ஆனா இந்த வருடமேன்னா//

      Yes Sir... LA BOMBE எதிர்ப்பார்ப்பை ஏகமாய் எகிற செய்கிறது சார்.

      Delete
  51. LA BOMBE போன்றே ILLUMINATI பற்றிய Graphic novel இருந்தால் அதையும்விரைவில் வெளியிடுங்கள் விஜயன் சார்....

    ReplyDelete
    Replies
    1. +1
      இதையும் ஒரு கை பார்த்துபுடலாம்.

      இலுமினாட்டி பற்றிய லேசா படிச்சாலே சுவாரஸ்யமா இருக்கு...

      Delete
    2. இல்லுமினாட்டி கதையை தான் ஆசிரியரின் முயற்சியில் நாம் சிறுவயது முதலே அறியாமலே படித்து வருகிறோமே நண்பரே. ஆம், அற்புதமான XIII கதையில் அவர்களை தான் இலைமறைகாயாக, பல இடங்களில் வெளிப்படையாக தோலுரித்து காட்டியிருப்பார், கதாசிரியர் வான் ஹாம்மே... சரித்திர நிகழுவுகளோடு ஒப்பிட்டு பாருங்கள்... உண்மைகள் அப்பட்டமாக புரியும். அசாத்திய படைப்பு இரத்தப்படலம் சார்.

      Delete
  52. எடிட்டர் சார்,

    நீங்கள் பல முக்கிய காமிக்ஸ்களைப் பற்றி இங்கே பேசினாலும், ரிப் கிர்பி என்று பார்த்தவுடன் ஹை ஜாலி என்று அப்படியே நின்றுவிட்டேன்.

    Tex தனித் தடம் OK
    Bomb - டபுள் ஓகே

    பிரான்க்கோ பெல்ஜிய formatல் வந்த தலைவன் ஒரு சகாப்தம் கதை நன்றாகவே இல்லை. பார்ப்போம் புதுக்கதை எப்படி இருக்கப்போகிறதென்று

    பல நாயகர்கள் ஒன்று சேர்ந்த கதை என்றாலே கொஞ்சம் தயக்கமாக இருக்கிறது என்னை பொறுத்த மட்டில். அதையும்தான் பார்ப்போமே !

    ReplyDelete
  53. 2022 டெக்ஸ் தனிதடம் உறுதி என தெரிகிறது. அதில் வருடத்திற்கு ஒரு 18 கதைகள் என வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் :-)

    அதே போல் இங்கு உள்ள புதிய கதைகளில் ஏதேனும் இரண்டு ஈரோடு புத்தகத் திருவிழா ஸ்பெஷல் என சந்தாவில் சேராத இதழ்கள் என வெளிவரும் வாய்ப்புகள் அதிகம் என மனது சொல்கிறது. பார்க்கலாம் இறுதியில் ஆசிரியர் என முடிவு எடுக்கிறார் என :-)

    ReplyDelete
    Replies
    1. // 2022 டெக்ஸ் தனிதடம் உறுதி என தெரிகிறது. //
      ஆமா இந்த வருஷம் விட்டதை அடுத்த வருஷம் பிடிச்சே தீரனும்...

      Delete
    2. 2022 டெக்ஸ் தனிதடம் உறுதி என தெரிகிறது. அதில் வருடத்திற்கு ஒரு 18 கதைகள் என வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் :-)//

      ஏலே..நம்ம பரணியாலே டெக்ஸுக்கு வருசத்துக்கு 18 கதை கேக்கறது? 😲

      Delete
    3. ஆமா ஆமா ஷெரீப் ஐயா....!!!!

      KS தனிதடத்துக்கு ஓகே பண்றாரு...
      PFB 18 கேட்கிறார்....!!!

      மாற்றங்கள் உருவாகும் நேரம்.....

      Delete
    4. அது நான் தாங்க எஜமான். கடைகளில் விற்பவர்களுக்கு டெக்ஸ் இன்றியமையாதவராகி விட்டார். இதன் மூலம் தமது காமிக்ஸ் பலரை சென்றடையும். அவர்கள் மற்ற நாயகர்கள் கதையை படித்து நமது காமிக்ஸ் வட்டம் பெரியதாக வாய்ப்புகள் அதிகம்.

      எனவே டெக்ஸ் அதிகம் வரட்டும் தனிதடத்தில். அதேநேரம் டெக்ஸ் தனிதடத்தில் வரும் போது அந்த இடத்தில் நமக்கு புதிய கதைகள்/கதைகளங்கள் கிடைக்க தரிசிக்க வாய்ப்புகள் அதிகமாகும்.

      Delete
    5. அப்புறம் அந்த மனுசனுக்கு (டெக்ஸ்) தனிதடம் போட்டு கொடுத்து விட்டால் மற்றவர்கள் இடத்தை அவர் அபகரிக்க தேவையில்லாமல் போய் விடும் :-)

      அடிக்க வரதுக்குள்ள ஸ்டீல் ஆட்டோவில் ஏறி ஐ ஆம் எஸ்கேப் :-)

      Delete
  54. ரிப் கிர்பி மிக மிக நீண்ட இடைவெளிக்கு. ஆர்வத்துடன் காத்துக்கொண்டு இருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த நாயகர்களில் இவரும் ஒருவர்.

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் எனக்கும்.

      Delete
    2. நோக்கம் கூட அவரது அசால்டான ஸ்டைல் பிடிக்கும்...

      ஒரு கதையில் அவர் கோல்ப் ஆடுவாரு...கடைசீல அவருக்கே நம்பிக்கை இருக்காது செயிப்போம்னு...டெஸ்மண்ட் உத்து பார்த்து (ஜோலன் மாதிரி)பந்தை உள்ள உழுந்திடும்... ரிப்பே ஒரு நிமிடம் ஆடி போயீடுவாரு... அது செம சீக்குவன்ஸ்...

      Delete
    3. க்ளாமர்லயும் அவரை அடிச்சிக்க முடியாது... அவர் கூட வர்ற குட்டிங்க எல்லாமே சும்மா கிண் தான்...

      அதுவும் ஓரு கதையில் பெல்லி டான்ஸ் ஆடும் குட்டி ஒண்ணு வரும். செம அடுப்பு... தலைவரே சொக்கி போயிடுவாரு....செம டயலாக் ஒன்று வருமே...ஆங்,
      "ஷாரியின் அசைவுகள் ரிப்பை கிறங்கச் செய்தன.."! --- சரியான டயலாக்!

      ரிப்பையும் அந்த புள்ளையையும் பிரமீடுகுள்ள வெச்சி சாத்தி புடுவானுங்க...

      சோலி ஓவர்னு பார்க்கும் போது ஓரு குட்டி பையன் வந்து காப்பாத்துவான்!!!

      ரிப்பின் அமைதியான ஸ்டைல் எப்போதும் பிடிக்கும்...தவறாமல் முன்னலாம் ஸ்பெசல் இதழ்களில் இடம் வாங்கிப்புடுவாரு...!!!

      இந்த கம்பி நீட்டிய குருவி"- அவருக்கு ஒரு ரீ எண்ட்ரி தந்தா மகிழ்ச்சி.

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. U.K. @ & ப்ளூ@ நாம கொஞ்சம் ஃபுட்பால் ரசிகன். 5 மணிக்கு ISL லீகில் JFC vs HFC பார்த்து கொண்டே டைப் பண்ணினேன். அதனால் ஸ்பெல்லிங் மிஸ்டேக்... சரிபார்க்காம விட்டடுட்டேன்.

      பெல்லி டேன்ஸ் ஆடும் பெண்களுக்கு இயற்கையாகவே இடை நளினமாக இருக்கும். இங்கே ஷாரிக்கும் அதேபோல....

      "இடுப்பு" என்பது "அடுப்பு" என டைப் ஆகிட்டது.!!

      நினைவாற்றல் பற்றிய பாரட்டுக்கு நன்றிகள்.

      சில நண்பர்கள் உடன் ஒப்பிடுகையில் பெரிதாக இல்லை... ஏதோ டக்குனு சில கதைகள் மனசில் ஒட்டி கொள்ளும்...

      டெஸ்மண்ட் அந்த கோல்ப் பாலை பாக்கெட் பண்ணும் நிகழ்வு போல ஏதாவது ஒரு காரணம் இருக்கும்....!!!

      Delete
  55. “THE BOMB” டபுள் ஓகே சார். சித்திரங்கள் துல்லிதம்

    “கானக புதையல் வேட்டை “ வாகான தருணத்தில் உள்ளே நுளையுங்கள் சார் . ஆவலுடன் வெயிட்டிங்

    “வாண்டு ஸ்பெஷல்” அடுத்த வருட காட் லொக்கில் கட்டாயம் இடம்பிடிக்கட்டும் சார்.

    புது கார்டூன் கவ்பாய் - அறிமுகப்படுத்துங்கள் சார்.

    “டெக்ஸ் தனித்தடம்” - என்று ஆரம்பித்தால் தற்போதைய அவரது இதழ்களின் இடத்தில் புது இதழ்களை நுளைக்கலாமே

    “டெக்ஸ்+ Zagor” சில இதழ்களை முன்னோட்டமாக வெளியிட்டு பார்க்கலாம் சார்.

    நீங்கள் எந்த இதழ் வெளியிட்டாலுமே, நாங்கள் வாங்குவோம் சார்.

    ReplyDelete
    Replies
    1. வந்து சேர்ந்த 2020 வெளியீடுகளில் எத்தனையைப் படிக்க முடிந்துள்ளது சார் ?

      Delete
    2. ரசித்து படிப்பதில் இது வரை 4 முடிந்து விட்டது சார். இதில் புஸ்டியான ஒன்று இதழ் அடக்கம் சார்.

      Delete
  56. ரிப் கிர்பி ஒரு ஸ்பெஷல் ரிவ்யூ சார் ப்ளீஸ்.டெஸ்மாண்டைப்பார்த்து யுகங்களாகிறது. . கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. டெஸ்மாண்ட்டுக்கு நானுமே ரசிகன் சார் - அந்த முன்மண்டையின் பொருட்டு மாத்திரமல்ல !

      Delete
  57. டெக்ஸ் தனித்தடம் மற்றும் யங் டெக்ஸ் + zagor கூட்டணிக்கு டபுள் ஓகே சார்

    ReplyDelete
  58. நல்ல தகவல்கள் ஏழும் இனித்தன.450 பக்க கிராபிக் நாவல் THE BOMB இப்பொழுதே படிக்க ஆசையாய் இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. அதற்கென நிறையவே தயாராகிக் கொள்ளணும் சார் - நானும் சரி ; நீங்களும் சரி !

      Delete
  59. "கருப்பு-வெள்ளை கிராபிக் நாவல்களில் நம்மை மிரட்டி வந்த போனெல்லியின் LE STORIE தொடரானது இதழ் # 100 என்ற மைல்கல்லைத் தொட்டுள்ளது ! இது நல்ல சேதி ! ஆனால் அந்த இதழோடு மங்களம் பாடி விட்டார்கள் என்பதே கேட்ட சேதி ! "

    மனதிற்கு மிகவும் பிடித்தமான கதை தொடர் சார்... நின்று போனது வருத்தம் அளிக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. 100 உள்ளதே என்று சந்தோஷப்பட்டுக் கொள்வோம் சார் !

      Delete
  60. /* ஆனால் அந்த இதழோடு மங்களம் பாடி விட்டார்கள் என்பதே கேட்ட சேதி ! */ - With due respects even in the 9 we had only 2-3 were page turners sir - rest of them took some effort to read. This could be a commercial decision as well sir !

    ReplyDelete
    Replies
    1. வாய்க்கும் நேரங்களிலெல்லாம் படிக்க முடியாது....ஆனா நிச்சயமா சரியான தருணங்கள் வாய்க்கும் போது நம்மள ஒரு பார்வை ஏளனமாயோ பெருமிதமாயோ பாக்க உதவலாம்

      Delete
    2. இத்தாலிய மார்க்கெட் ரொம்பவே வித்தியாசமானது சார் ! போனெல்லியின் வெவ்வேறு நாயக / நாயகியரின் விற்பனை சார்ந்த stats கொஞ்ச காலம் முன்னேவே கண்ணில் பட்டது - made for very surprising reading !

      எதிர்பாராததை எதிர்பார்க்கலாம் அவர்களின் விற்பனைகளில் !

      Delete
  61. Hello Raghavan Sir,
    Yeah I agree those graphic novels are very hard to read and digest those real life facts.. But I think differently, those graphic novels are the great output from the reading of lot of humanity life message books and unique experience of authors. When we read BW graphic novels, we study lot of people Psychology, also we can measure our own mindset to correct our mistakes. It is not for entertainment but surely help us to learn life messages and to respect other people's heart.

    ReplyDelete
    Replies
    1. தவறான மனங்களுக்கு இது சரின்னும் படலாம்....இதான் மிகச் சரி தவறுன்னு உலகத்ல ஏதுமில்லை...அவரவர் பார்வையில் மனம் கட்டும் கூத்துக்களின் கூத்தாடி நாமே...சப்போர்ட்டா அப்ப எது தேவையோ அதை எடுத்துக்குவோம் உதாரணத்துக்காக....அனுபவிப்போம் கதைகளையும்....அது காட்டும் மனநிலைகளயும்

      Delete
  62. #ஆழ்கடலில்_ஆர்ச்சி

    இம்முறை ஆர்ச்சி அதகளம் செய்து விட்டது .. #ஆர்ச்சி ஃபேன்ஸ் க்காகவே உருவாக்கப்பட்ட கதை போலும் ..

    மிக மிக நீண்ட நாள் கழித்து நானும் ஆர்ச்சியின் இக்கதையை படித்து குழந்தையானேன் என்றால் அது மிகையில்லை .
    அதோடு ஆர்ச்சியின் வாயாடல்கள் பிரமாதம் .

    வசனங்களுக்கு 10/10 ..
    கதைக்கு 10 க்கு/20 ..
    நமம்ம சட்டித்தலையன் ஆர்ச்சியின்
    கிண்டல் கேலிகளுக்கு மதிப்பீடே இல்லை ..

    கொடுக்கிற காசுக்கு அருமையான கதையை கொடுத்துள்ளார் .. #நம்_எடி..

    + பரபப்பாக போகிறது கதை
    புக்கை படிக்க ஆரம்பித்தால் கீழே வைக்கவே மனம் வராது ..

    ReplyDelete
    Replies
    1. பையனுக்கு இதைக் கதை சொல்லிப் பாருங்கள் சம்பத் ; பிடித்திட வாய்ப்புகளுண்டு !

      Delete
  63. ஆழ்கடலில் ஆர்ச்சி - எனது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்து இருந்தது. மிகவும் ஆர்வமுடன் அதேநேரம் ஆர்ச்சியின் பஞ்ச் டயலாக்கை ரசித்தார்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஒரிஜினலில் ஆர்ச்சி மௌனவிரததில் தான் சுற்றி வரும் சார் ; ரொம்பவே பின்னாட்களது சாகசங்களில் தான் திருவாய் மலரச் செய்திருந்தார்கள் !

      Delete