Powered By Blogger

Friday, January 01, 2021

ஜனவரியின் ஜாம்பவான் !

நண்பர்களே,

வணக்கம். உளமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !! புலர்ந்திருக்கும் இந்தப் புத்தாண்டு - அனைவருக்கும் அற்புத நலமும், வளமும், ஆரோக்கியமும், நீண்ட ஆயுளும் வழங்கிடும் அட்சயப் பாத்திரமாய் அமைந்திட, ஆண்டின் இந்த முதல் பதிவில் ஆண்டவனிடம் வேண்டிக் கொள்வோமே ? இடர்களும், இழப்புகளும் 2020-ன் சொத்துக்களாகவே இருந்து விடுமென்ற நம்பிக்கையுடன்,  தொடரவுள்ள புதுப் பொழுதுகளை புது உத்வேகங்களோடு அணுகிட நமக்கெல்லாம் புனித மனிடோ அருள் பாலிக்கட்டும் !!

ஆண்டின் முதல் பதிவு ; நமது பதிவு எண் 701-ம் கூட !! நல்ல காலத்துக்கு பதிவு எண் 700 என்ற மைல்கல் யார் கண்ணிலும் போன வாரம் பட்டிருக்கவில்லை !!  இல்லாங்காட்டி அதற்கொரு தபா - காலைத் தூக்கி வாய்க்குள் திணிக்கும் ஆர்வம் எனக்குத் துளிர் விட்டிருக்கக்கூடும் !! நவம்பரின் தீபாவளி மலரின் 672 பக்க மாரத்தான் ஓட்டத்துக்குப் பிற்பாடு-  "குண்டு புக்" என்றாலே லைட்டாக ஜெர்க் அடிப்பதும் மறுக்க இயலா உண்மை எனும் போது - புதுசாய் எதையாச்சும் இழுத்துப் போட்டுக்கொண்டிராத மட்டிலும் ஷேமமே என்று நினைத்துக் கொண்டேன் ! Moreso because  - ஏற்கனவே சொன்னது போல ஆண்டின் முதல் 3 மாதங்களிலும் சிலபல தாட்டியமான இதழ்களார்கள் காத்துள்ளனர் ! And அவர்களுக்கெல்லாம் தலையானவராய் நிற்பது ஜனவரியின் ஜாம்பவான் - தோர்கலின் 5 பாக ஆல்பம் ! So இந்தப் பதிவின் முதல் முன்னோட்டமாய் "ஒரு அழகிய அகதி"யைப் பார்ப்போமா ?  

இந்த இதழுக்கு ரொம்பவே unique ஆனதொரு அடையாளம் உண்டென்பேன் ! 2019-ல் பணிகள் துவக்கப்பட்டு ; 2020-ல் அவை நடைமுறை கண்டு, 2021-ல் தான் வெளிச்சத்தைக் காண நேரிடுகிறது !! Yup - கொரோனா ஆண்டின் கோடைமலருக்கென ஒரிஜினலாய்த் திட்டமிடப்பட்டிருந்ததால் 2019-ன் இறுதியிலேயே இதன் மொழிபெயர்ப்புப் பணிகளை நமது கருணையானந்தம் அவர்களிடம் ஒப்படைத்திருந்தேன் ! And தமிழாக்கமும் தயாராகி, 5 பாகங்களுக்குமான டைப்செட்டிங்கும் நிறைவுற்று, ஒரு பண்டலாய் மைதீன் என்னிடம் இந்தப் பக்கங்களைத் தந்தது, தேசமே மாடியில் நின்று கொட்டடித்த அந்த மார்ச் 2020-ன் மூன்றாம் வாரத்துக் காலையில் ! மொத்தமாய் 230 பக்கக் குவியலைப் பார்த்த போதே, 'கிர்ரென்று' தலை லைட்டாய் சுற்றியது தான்  ; ஆனால் மே 2020-ல் வெளியிடுவதாக திட்டமிடல் இருந்ததால் - அப்போதைய சுணக்கங்களறியா பணிவேகங்களுக்கு இயலாக்காரியமாய்த் தெரியவில்லை தான் ! அதே போல லாக்டௌன் என முதன்முதலில் அறிவிக்கப்பட்ட நொடியில் - இது ஏதோ பந்த்துக்கு நடத்தும் கடையடைப்பைப் போலிருக்குமென்ற நினைப்பில் - "ஹை..ஜாலி ; விடுமுறைகளில் எடிட்டிங்கை ஒரே அழுத்தில் முடித்து விடலாம் !" என்ற சந்தோஷப்பட்டேன் ! ஆனால் தொடர்ந்த நாட்களில் நிலவரம், கலவரமாவதும், அடைப்புகள் நீண்டிடுவதும் புலனான போது - "ரைட்டு...இந்த கோடை மலருக்கு சத்தியமாய் இது தோதுப்படாது !" என்று புரிந்தது  ! அந்த நொடியே உள்ளாற இருந்த சோம்பேறிமாடன் துள்ளிக் குதித்து, 230 பக்கங்களையும் பத்திரமாய் பார்சல் பண்ணி, வீட்டிலிருக்கும் என் மேஜையின் அடிதட்டுக்கு அனுப்பிவைத்திட்டான் ! தொடர்ந்த வாரங்களில் / மாதங்களில் - அட்டவணையை மார்ச் 2021 வரை நீட்டிக்கத் தீர்மானித்ததும், தோர்கல் ஜனவரிக்கு மாற்றம் கண்டதும்  நிகழ்ந்திட்டதால் - டிசம்பர் வரைக்கும் அந்த மூட்டை சொகுசாய் தூங்கி கொண்டேயிருந்தது ! " இனியும் தள்ளிப் போட முடியாதென்று" ஆன தருணமும்  ஒரு மாதிரியாய் புலர்ந்திட்ட போது, அடித்துப் பிடித்து உட்புகுந்தேன் - ஆரிசியாவின் ஆத்துக்காரருடனான பயணத்தினில் !! 

Phewwwwwwwww ......என்ன மாதிரியான பயணமும் அது ?!! 5 ஆல்பங்கள் ; ஆனால் அவற்றுள் இருப்பதோ 3 x ஒன்ஷாட் கதைகள் + ஒற்றை 2 பாக சாகசமே ! So கடவுளரின் தேசம் பாணியில் ஒரே முடிச்சோடு பயணிக்கும் கதைகள் இங்கே நஹி ! மாறாய் - இந்தத் தொடரின் துவக்கம் முதலாய் வந்து போயிருக்கும் நண்டு, நசுக்கிலிருந்து, பல்லி, பூரான் வரைக்கும் ஏகப்பட்ட உருப்படிகள் ஆங்காங்கே நுழைந்திடுகிறார்கள் ! So என்னைப் போல வெண்டைக்காய் லேகியத்தை விழுங்கும் அவசியம் கொண்டோராய் நீங்களுமிருப்பின், தோர்கலின் இதுவரைக்குமான ஆல்பங்கள் அனைத்தையும் கைக்கெட்டும் தூரத்தில் வைத்துக் கொண்டால்  நலமென்பேன் ! இல்லாங்காட்டியும் பெருசாய் குடிகள் ஏதும் மூழ்கிடாது ; on their own கதைகள் நகர்ந்திடவும் செய்கின்றன தான் ; ஆனால் இப்போது நாம் பயணிப்பது சித்தப்புவோடா ? மாம்ஸோடா ? தலையில் கல்லைத் தூக்கிப் போடுவது அப்புச்சியா ? அத்தாச்சியா ? என்ற புரிதலிருப்பின் இன்னும் கொஞ்சம் ரம்யமாக இருக்குமல்லவா ? So நினைவலைகளைத் தூசி தட்டித் தயார் நிலையில் வைத்துக் கொள்ளுங்களேன் folks ? 

கதைகளைப் பொறுத்தவரை - சிந்துபாத்தையெல்லாம் 'அப்டிக்கா ஓரமா போயி விளையாடு கண்ணு !' என்று சொல்லக் செய்துள்ளார் வான் ஹாம் ! சும்மா லோகம் விட்டு லோகம் ; காலம் விட்டு காலம் - என்று மனுஷன் நம்மை இட்டுச் செல்லும் ரங்க ராட்டினம் அசாத்தியமானது ! Oh yes - "சிகரங்களின் சாம்ராட்" பாணியில் இக்கடயும் ஒரு அத்தியாயம் உள்ளது - காலத்தினூடே ஆளாளுக்கு மினி பஸ் பிடித்து அடிக்கும் ஷண்டிங்குகளைச் சித்தரிக்கும் விதமாய் ! இரண்டு ஆண்டுகளுக்கு முன்பான ஜனவரியில் "சிகரங்களின் சாம்ராட்" புண்ணியத்தில் -  சலூன் போகாமலே ஆளாளுக்கு கற்றை கற்றையாய் இழந்த கேசங்களின் அளவுக்கு இம்முறை சேதாரம் இராது தான் ; ஆனால் இப்போதும் கூத்து காத்துள்ளது என்பேன் ! So - "காலையிலே ஆறு மணி இருக்கும் ; கோழி கொக்கரக்கோவ்ன்னு கூவுச்சு" ரேஞ்சுக்கு பொங்கல்வாக்கில் இங்கே அலசல்கள் அரங்கேறினால் ஆச்சர்யம் வேண்டாம் ! இங்கே நான் குறிப்பிட்டே ஆக வேண்டிய இன்னொரு highlight - நம் கருணையானந்தம் அவர்களின் தமிழாக்கமே !! அந்த க்ளாஸிக் டயலாக் பாணிகளுக்கு அவரது எழுத்துக்கள் கச்சிதமாய் set ஆகுமென்பதால் அட்டவணையை அறிவித்த கையோடு 5 பாகங்களையுமே அவரிடம் தள்ளி விட்டிருந்தேன் ! ஆங்காங்கே கொஞ்சம் பிசிறுகள் ; புரிதலில் பிழைகள் என்றிருந்தாலும் - by and large - இந்தப் பணி அசாத்தியமானதே ! கட்டி வைத்து என்னைச் சாத்தியிருந்தாலும் இந்தப் பணியினையோ ; ஸ்பைடரின் பணியினையோ - என்னால் கையிலெடுத்திருக்கக் கூட முடியாது ! எடிட்டிங்கில் - வசனங்களுக்கு வேகமூட்ட வேண்டிய இடங்களென்று எனக்குத் தோன்றிய தருணங்களிலெல்லாம், கணிசமாகவே மாற்றங்களை செய்திருந்தேன் தான் ; ஆனால் அதற்கும், முழுமையாய் மொழிபெயர்ப்பதற்கும் வண்டி வண்டியாய் வித்தியாசங்கள் உண்டல்லவா ? So பொறுமையாய் அவர் பிடித்திருந்த பேனா தடத்தின் மீது கொஞ்சம் நகாசு வேலைகளைச் செய்த கையோடு இந்த இதழின் பணிகளுக்கு "சுபம்" போட முடிந்த போது ரெண்டு கிலோ எடை குறைந்த மாதிரி ஒரு பீலிங்கு எனக்கு !! கொறிக்க எதையாச்சும் கிட்டக்க வைத்துக் கொண்டே புக் படிக்கும் பழக்கம் உங்களுக்கு உண்டெனில் - இந்த ஆல்பத்தை முடிக்கும் போது "குண்டாக" இருந்திடுவது இந்த ஆல்பம் மாத்திரமல்ல என்பதை உணர்வீர்கள் ! A Van Hamme கிளாசிக் !! 

 Moving on, ஜனவரியின் lightweight இதழ் "கானகமே காலடியில்" ! ஹெர்லாக் ஷோம்ஸ் & டாக்டர் வேஸ்ட்சன் ஆப்பிர்க்கக் கானகத்தில் அடிக்கும் கூத்துக்களில் டார்ஜானும் இணைந்து கொள்ள - முழுவண்ணத்தில் 50 பக்கங்கள் ஜாலியாய் ஓட்டமெடுக்கின்றன ! அட்டவணை 2020-ன் இறுதி கார்ட்டூன் இதழிது 😓!! ஒன்றரை நாளில் இதன் மொழிபெயர்ப்பை ஜிலோவென்று முடிக்க முடிந்தது ! இதோ - அதன் அட்டைப்பட preview : 


நமது கோகிலாவின் கைவண்ணமிது ! "ஓ.கே.வா ?" என்று கேட்டு இதனை படைப்பாளிகளுக்கு மின்னஞ்சலில் அனுப்பிய மூன்றாவது நிமிடத்தில் பதில் வந்தது - "💪💪💪" என்ற ஒற்றை வார்த்தையுடன் !! இந்த ஆல்பத்துக்குமே நீங்கள் அதே போல ரேட்டிங்ஸ் தந்திட்டால் - fantastic !!

இம்மாதத்தின் ஒரே black & white இதழான "கோழைகளின் பூமி " - போனெல்லி குழுமத்தின் படைப்பு ! வழக்கம் போலவே வித்தியாசமானதொரு காலகட்டம் ; in fact இம்முறை 1918 & 1939 என 2 வெவ்வேறு தருணங்கள் - ஆனால் ஒரே கதை மாந்தர்கள் இரு காலங்களிலும் ! பொருளாதார வீழ்ச்சியின் உச்சத்திலிருந்த அமெரிக்காவினில் அவர்களது வாழ்க்கை ; சிறுநகரில் அரங்கேறும் மர்மங்கள் என பயணிக்கின்ற ஆல்பம் இது ! வழக்கம் போல புக்கைப் படித்து கையோடு ; மலங்க மலங்க நான் முழித்து போலவே நீங்களும் முழிப்பது உறுதி ! கடைசிப் பக்கத்தினில் நான் எழுதியுள்ள குறிப்புகளை படித்த கையோடு மறுக்கா அந்த சிறுநகரத்தினுள் புகுந்திடுவீர்கள் என்பதும் உறுதி !! Judgement reserved !! மொழிபெயர்ப்பினில் ரொம்ப மொக்கை போட அவசியங்களின்றி சமாளிக்க முடிந்தது !! And எடிட்டிங்கில் மறுக்கா நோண்டும் வேலையும் எப்போதையும் போல் இம்முறையும் அரங்கேறியது !! ஆங்காங்கே கொஞ்சம் தத்துவங்கள் பொழிஞ்சா மேரி தோன்றிடும் பட்சத்தில் அது மூதறிஞர் முத்துவிசயனாரின் கைவண்ணமல்ல என்ற மட்டிற்கு நிம்மதி கொள்க - பெரும்பான்மை கதாசிரியரின் ஸ்கிரிப்ட் அவசியப்படுத்திய வரிகளே ! And இதோ அட்டைப்படம் + உட்பக்க preview : 



ஆக ஜனவரியின் முக்கூட்டணி இதுவே !! வெகு சீக்கிரமே.......... நீங்கள் எதிர்பார்ப்பதை விடவும் வெகு வெகு சீக்கிரமே - இவை உங்களின் வாசிப்பு நேரங்களைக் கோரிடவுள்ளன ! So இந்தப் புத்தாண்டினில்  கொஞ்சமாய் நேரத்தை தயார் செய்து கொள்ளுங்களேன் folks !! Bye for now !! Have a Blessed Year ahead all !! See you around !!

P.S : அப்பாலிக்கா ஆன்லைன் லிஸ்டிங்களும் ரெடிங்கோ ! 

https://lioncomics.in/product/2021-january-pack/

or

https://lion-muthucomics.com/latest-releases/662-2021-january-pack.html

196 comments:

  1. 2வது...

    🎇🎆🎆🎇🎇🎆🎆🎇🎇🎆🎆🎇🎇🎆🎆🎇🎇🎆
    நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்🌹🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐💐🎂🎂🎂🎂🎂🎂

    ReplyDelete
  2. ஆசிரியருக்கும் நண்பர்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் 2021 💐💐💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏
    Wishing you all a Happy and prosperous New year 2021 💐💐💐💐💐💐🙏🙏🙏

    ReplyDelete
  4. B & B ஸ்பெஷல் வரும்போதுதான் எங்களுக்கு புத்தாண்டே பிறக்கும்.

    உடல் துணிமணிக்கு!
    உயிர் இளவரசிக்கு!

    -இளவரசி இளைஞர்படை.

    ReplyDelete
  5. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2021🥳
    குணசங்கரன்.த நன்செய் இடையார்

    ReplyDelete

  6. 🎇🎆🎆🎇🎇🎆🎆🎇🎇🎆🎆🎇🎇🎆🎆🎇🎇🎆
    நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்🌹🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐💐🎂🎂🎂🎂🎂🎂

    ReplyDelete
  7. வணக்கம் நண்பர்களே..

    ReplyDelete
  8. ஆசிரியரே புத்தாண்டு அறிவிப்பாக ஆன்லைன் புத்தகவிழாவின் சஸ்பென்ஸ் இதழ்களின் நாயகர்களையாவது சொல்லலாமே

    ReplyDelete
    Replies
    1. சஸ்பென்ஸ் நல்லது என எங்க அம்மா சொல்லி இருக்காங்க :-)🏃🏃🏃🏃

      Delete
    2. அதாவது சஸ்பென்ஸ் ஆக இருக்கட்டும்பா!😍😍😍😍

      Delete
  9. //சீக்கிரமே.......... நீங்கள் எதிர்பார்ப்பதை விடவும் வெகு வெகு சீக்கிரமே - இவை உங்களின் வாசிப்பு நேரங்களைக் கோரிடவுள்ளன ! So இந்தப் புத்தாண்டினில் கொஞ்சமாய் நேரத்தை தயார் செய்து கொள்ளுங்களேன் folks //
    அப்போ சிவகாசியில் இருந்தது பொட்டி கிளம்பியாச்சா பாஸ்???

    ReplyDelete
    Replies
    1. நல்ல கேள்வி!!!!!

      Delete
    2. அப்படித்தான் என நினைக்கிறேன் :-)

      Delete
    3. https://lioncomics.in/product/thorgal-oru-azhagiya-agathi/

      ஆன்லைன் லிஸ்டிங்ல தோர்கல் 49வது ஆண்டுமலர் காண்பிக்கிறது ்் எனவே கொரியர் புக்கிக் ஆகி இருக்கும். ஓடு்ங்க...ஓடுங்க கொரியர் ஆபீஸ்களுக்கு....😍😍😍😍

      Delete
  10. வணக்கம் நண்பர்களே! புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
  11. ஆசிரியருக்கும், நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  12. 17வது. ஆசிரியர், நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
    🎂🎁💐🌹🎊🎆🎉💥🌈🎇🍰

    ReplyDelete
  13. அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
  14. Happy New Year! Wish you the very best for 2021 🙏, Stay safe and healthy. 🙏

    ReplyDelete
  15. அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. சூப்பர் பதிவு சார். Happy New year 2021 to everyone.

    ReplyDelete
  17. அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. // இந்தப் புத்தாண்டினில் கொஞ்சமாய் நேரத்தை தயார் செய்து கொள்ளுங்களேன் folks // ஏற்கனவே நிறைய நேரம் தயார் செய்து வைத்து உள்ளேன் சார். நீங்க புத்தகங்களை மட்டும் அனுப்புங்கள்.

    ReplyDelete
  19. ஹைய்யா புதிய பதிவு......

    ReplyDelete
  20. // நீங்கள் எதிர்பார்ப்பதை விடவும் வெகு வெகு சீக்கிரமே - இவை உங்களின் வாசிப்பு நேரங்களைக் கோரிடவுள்ளன ! //

    வழி மேல் விழி வைத்து....!!!

    ReplyDelete
  21. Let this year sow the seeds of health and wealth
    HAPPY AND PROSPEROUS NEW YEAR

    ReplyDelete
  22. நண்பர்கள் அனைவருக்கும் இனியபுத்தாண்டு வாழ்த்துக்கள். கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  23. ஆசிரியருக்கும் நண்பர்களுக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 🌹🌹🌹

    ReplyDelete
  24. Wish you happy new year 2021

    😃😃😃💐💐💐💐💐🍧🍧🍧🍧🍧🍰🍰🍰😄😄😄😄😄😄👍👍👍👍👍

    ReplyDelete
  25. சார் மீண்டுமோர் அட்டகாச ஈர்க்கும் எழுத்துக்களால் பதிவு...அட்டப்படம் கானகத்துக்கேற்ப நிறத்தால் பச்ச'க்னு மனசோட ஒட்டிக்கிட ...தாலாட்டுப் பாடும் மரக்கிளையோடு எழுத்துக்கள் நீங்க சொன்னதோடு ஒப்பிடுகையில் டார்சான நினைவுறுத்த அட்டகாசம் இதான் டாப்னு எழுதிய மனசோட கீழ் போனா...டாப்பால அதுன்னு சோப்போட கழுவி ஊற்ற காத்திருக்கு கீழட்ட கோழைகள் பூமியோட...அந்த காலத்துக்கே அழைத்துச் செல்லும் கால எந்திரமாய்...அருமையான ஓவியம்...எழுத்துருவில் கவனம் செலுத்திருக்கலாமோ என கானக அட்டை கேக்க...மேல அதைப் பாக்க...அதான் டாப்போ ...டாப்ல இருக்கே...கீழ் பாத்தா இந்த அட்டை டீப்பா இருக்கேன்னு...கீழ் போனா...மேல போலன்னு சொல்லாம சொல்ல....தாண்டுனா தோர்கள் வண்ணப்பக்கம் நா வந்தா தட்டிருவன் ...உன்னல்ல டாப்பன்னு நீ சொன்ன டாப்பன்னு எச்சரிக்க... தட்டியெழுப்புறன் நா சொல்லியும் கேக்காம தூங்கிப் போன பரணிப்பயவுள்ளய..தீர்ப்பெழுத

    ReplyDelete
  26. ஆசிரியருக்கும் நண்பர்களுக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 🌹

    ReplyDelete
  27. இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள் சார் & நண்பர்களே 🙏🏼🙏🏼🙏🏼💫🌟✨
    .

    ReplyDelete
  28. ஆசிரியர் அவர்களுக்கும் உலகெங்கும் வாழும் தமிழ் காமிக்ஸ் வாசகப் பெருமக்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.!

    இப்படிக்கு..
    (இணைய விடுமுறையில் இருக்கும்..)

    ஒரே ஒரு தலீவர்
    ஒப்பற்ற தலீவர்
    தன்நிஜாரில்லா தலீவர்

    ReplyDelete
  29. ஆசிரியர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  30. சார் எழுநூறுக்கு சிறப்பு சேர்க்கும் விதமாய் அந்த சஸ்பென்ஸ் ஆன்லைன் திருவிழா மூனு புத்தகங்கள்ல ஒன்றான கென்யா அட்டையயாவது கண்ல காட்டலாமே

    ReplyDelete
  31. இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள் சார் & நண்பர்களே 🙏🏼🙏🏼🙏🏼💫🌟✨
    .

    ReplyDelete
  32. Goodmorning to all.. wish u very happy new year..Babu M..

    ReplyDelete
  33. இனிய ஆங்கிழ புத்தாண்டு நல்வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. ///ஆங்கிழ புத்தாண்டு///

      அவரோட 'கிளாஸ்' மேட்ஸ்க்கு வாழ்த்து சொல்றாரு போல..!

      Delete
    2. "தாத்தா" பூனை வெளில வந்துட்டா....😉😉😉😉

      Delete
  34. அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

    ReplyDelete
  35. அன்புள்ள வாசகர்களே. புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  36. அதோ அந்த விஷத்தைக் கக்கியபடியே பறந்துவரும் பள்ளிகளை ஆருஷியாவின் ஆத்துக்காரர் கொன்று குவித்து குள்ளமனிதர்களைக் காத்ததைப் போல, 2020ல் இவ்வுலகுக்கே சர்வநாசத்தை விளைவித்த கண்ணுக்குத் தெரியாத கிருமிகளை இப்புத்தாண்டில் புனித மனிடோ வேரறுத்து பெரியமனிதர்களான நம்மையெல்லாம் காத்தருளட்டும்!

    அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!!

    ReplyDelete
    Replies
    1. ///அதோ அந்த விஷத்தைக் கக்கியபடியே பறந்துவரும் பள்ளிகளை////

      நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்.
      :-)

      Delete
  37. Replies
    1. மூன்று புத்தகங்கள் ஒரே பதிவில் அவற்றின் முன்னோட்டம். செம. இங்க என்ன சொல்லுது புத்தகங்கள் எல்லாம் தாயார் என சொல்லுது :-)

      முதலில் படிக்க உள்ளது ஷெர்லாக் அடுத்து எங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் பிடித்த தோர்கல் இறுதியில் கோழைகளின் பூமி.

      ஆசிரியர் குடும்பம் மற்றும் நமது அலுவலக பணியாள நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

      நண்பர்களே, உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

      Delete
  38. இந்த பதிவுவை படிக்க ஆரம்பித்தும் தெரியவில்லை முடித்ததும் தெரியவில்லை ரொம்ப சின்ன பதிவோ? ஆசிரியர் ஆன்லைன் புத்தகங்கள் பணி காரணமாக சின்ன பதிவாக போட்டு இருப்பாங்களோ 🤔😁

    ReplyDelete
  39. நண்பர்கள் மற்றும் ஆசிரியருக்கு என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  40. ஷாப்பா, காலை வணக்கம். இப்ப தான் எழுந்தேன். அனைத்து காமிக்ஸ் மாமு, மச்சிகளுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  41. அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!!

    ReplyDelete
  42. 🎵🎵🎵
    அட..இனிமை நிறைந்த உலகம் இருக்கு.

    இதிலே நமக்கு கவலை எதற்கு.🎵🎵

    லவ்லி பேர்ட்ஸ்..🎵🎵🎵

    ReplyDelete
    Replies
    1. பாஆ...பாஆ...பாஆ....ஆஆஆஆஆ!!!🎵🎵🎵...🎵🎵🎵...

      Delete
    2. கமலா கல்யாணி வசந்தா வந்தாளாம்
      மூணும் மூணு பொண்ணுங்க..

      பார்வை மத்தாப்பு
      ஜாடை கித்தாப்பு
      மூணுக்கும் நாலரை கண்ணுங்க..

      ஒரு தட்டு
      ஒரு மொட்டு
      ஒரு மெட்டு
      ஒரு சிட்டு
      அந்த மூணுக்கும் நான் ஒருத்தன் மாப்பிள்ளே..

      ஒருத்தி BAவாம்
      ஒருத்தி MAவாம்
      இரண்டையும் சேத்தாக்கா
      அடுத்தது பாமாவாம்...

      ஜூஜ்ஜூ ஜுஜுஜூ
      ஜூஜ்ஜூ ஜுஜுஜூ
      ஜூஜ்ஜூ ஜுஜுஜூ
      ஜூஜ்ஜூ ஜுஜுஜூ

      Delete
    3. எவனோ சொன்னானாம்

      எவனோ கேட்டாளாம்

      அதைய நாம கேட்கணும்

      நமக்கு நாமே தான்

      கணக்கு ஒன்னே தான்

      சரியாய் போட்டு பாக்கணும்

      புது மனசு

      புது வயசு

      புது ரசனை

      எது பெரிசு

      நம் பொன் உலகம் நம் கையிலே

      ஹ ஹ ஹ

      திரும்பி வந்தாச்சு

      உலகம் பாத்தாச்சு

      எதையும் கேட்டாச்சு

      கவலை விட்டாச்சு

      பாஆ...பாஆ...பாஆ....ஆஆஆஆஆ!!!🎵🎵🎵...🎵🎵🎵...

      Delete
    4. ஏ டண்டனக்கா ஏ டணுக்குனக்கா
      வாடா ஏன் மச்சி
      வாழைக்காய் பச்சி
      உன் உடம்பை பிச்சி
      போட்டுடுவேன் பச்சி
      ஏ டண்டனக்கா ஏ டணுக்குனக்கா

      இதுக்கப்புறம் ஸ்டீல் பாத்துக்குவாரு

      Delete
  43. ⁨https://lioncomics.in/product/thorgal-oru-azhagiya-agathi/

    தோர்கல் ஆன்லைன் லிஸ்டிங்ல உள்ள தோர்கல் அட்டைபடம் பார்த்தா ஒரே ஹார்டு பவுண்டு போல இருக்கே😍😍😍😍😍😍😍😍

    ஐ.. ஜாலி..ஜாலி...

    ReplyDelete
  44. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!!

    ReplyDelete
  45. Happy new year to all the comics lovers....

    ReplyDelete
  46. இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்!!

    ReplyDelete
  47. Dtdc அலுவலகத்தில் இருந்து போன் வந்தது. நேரில் போய் அது என்ன பார்சல் என பார்த்து வாங்க போகிறேன் :-)

    ReplyDelete
  48. புத்தகங்கள் வந்து சேர்ந்தது சாக்லேட்டுடன் .. அட்டைப்படங்கள் அருமை சார். Thorgal Textured Cover is simply superb. நண்பர்கள் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. டெக்ஸ் இல்லா மாதம் சற்று வருத்தம்

      Delete
    2. Krishna V V - wait for surprise books announcement before conclusions :-)

      Delete
  49. நண்பர்கள் அனைவருக்கும் இனியபுத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  50. பரிசோதனை முயற்சியாக ST கூரியரில் இருந்து இந்த மாதம் DTDC கூரியருக்கு மாற்றி அனுப்பச் சொல்லி இருந்தேன் சார்,வெற்றிகரமாக கூரியர் வந்து விட்டது....!!!
    ஜெய் DTDC கூரியர்...
    யோசனையை உடனே நடைமுறைப்படுத்திய அலுவலகப் பணியாளர்களுக்கு நன்றியும் சொல்லியாச்சி...
    புத்தாண்டை இனிமையாகத் தொடங்கியாச்சி...

    ReplyDelete
  51. தோர்கல் முதல் புரட்டலில் அட்டகாசம்,இந்த மாத ஸ்டார் தோர்கல்தான்...!!!
    அட்டைப்படம் ப்பா அருமை...அசத்தல்...

    ReplyDelete
  52. ஹம்கோ கொரியர் நை ஆத்தா ஹே.!

    ReplyDelete
    Replies
    1. கூரியர் மட்டுமா வர மாட்டேங்குது ?

      Delete
    2. இந்த மாசம் நீ கொஞ்சம் மண்ட காய்பா...

      Delete
    3. ///கூரியர் மட்டுமா வர மாட்டேங்குது ?///

      ஹிஹி..

      அப்கோர்ஸ்... இந்தியும் நை ஆத்தா ஹே தான் சார்.! :-)

      Delete
    4. ///இந்த மாசம் நீ கொஞ்சம் மண்ட காய்பா...///

      என்னத்துக்குன்னேன்...?

      கூரியர் வந்த உங்களுக்கு சாய்ஸ் மூணே புக்ஸ்தான்..

      ஆனா..

      கூரியர் வராத எனக்கு சாய்ஸோ.. முன்னூறுக்கும் மேற்பட்ட புக்ஸ்..!

      போப்பா..!

      Delete
    5. K.ஆ.K சார் கூரியர் வந்தவர்களுக்கு சாய்ஸோ... முன்னூற்றி மூன்றுக்கும் மேற்பட்ட புக்ஸ் என்பதே சரியான கணக்கு..
      எனக்கு பொட்டி வந்தாச்சு முன்றும் 5தும் கையில கிடச்சாச்சு.

      Delete
    6. அப்படியில்லை சார்..

      புது புக்ஸ் பளபளன்னு கையில் இருக்கும்போது.. படிக்காத அதைவிட்டு.. ஏற்கனவே படிச்ச பழசை யாரும் தேடப்போவதில்லை.. எனவே கணக்கு மூணுதான்.!

      அப்படீன்னு..

      மனிதனின் ஆழ்மனத்து குணபண்புகள் அப்படிங்குற பேர்ல ஆராய்ச்சி மேற்கொண்ட ஜாக் க்ரோ (ஜாக் ஸ்பேரோவோட அண்ணன்) கண்டறிந்து சொன்ன உண்மை அது.!

      Delete
    7. ஜாக் "குரோ"---ம் தெரியுதய்யா ஆரு அதுன்னு!

      Delete
  53. டியர்ஸ்!

    இரண்டுநாட்களுக்கு முன்பு நண்பர் ஜெகத் குமாரின் அதிரவைக்கும் பதிவைத் தொடர்ந்து, கிட்டத்தட்ட அதே நிலைமையில் இருந்த மேலும் இரு நண்பர்களுக்கு இயன்றவர்கள் உதவிடக் கோரியிருந்தேன்!
    அன்புள்ளம் கொண்ட நண்பர்கள் இரண்டு பேர் உடனே அந்த நண்பர்களுக்கு புத்தாண்டு பரிசாக சந்தாவைச் செலுத்தி உதவியிருக்கின்றனர்!! உதவி செய்த நண்பர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை எனினும் அந்த நண்பர்களில் ஒருவர் இசையை பெயரில் கொண்டவர்! மற்றொருவர் நம்பரை பெயரில் கொண்டவர் & புரட்சித்தலைவரின் தீவிர ரசிகர்! (இதுக்குப் பேசாம பேரையே நேரடியாச் சொல்லியிருக்கலாம் ஹிஹி)

    பரிசளித்த நண்பர்களுக்கு நன்றிகளையும், பரிசு பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துகளும் உரித்தாகட்டும்!

    இந்தக் காமிக்ஸ் நேசம் நாளும் வாழ்க!

    ReplyDelete
    Replies
    1. உதவிய நல்உள்ளங்களுக்கு வாழ்த்துகள்💐💐💐💐💐💐

      யார் என யூகிக்க முடிந்தாலும் அவர்களது நல்ல மனங்கள் வாழ்க.

      சந்தா பரிசு பெற்ற நண்பர்கள் வாழ்வு இனிதாக அமைய கடவுள் அருள் வேண்டுகிறேன்🙏🙏🙏🙏

      Delete
    2. அருமை.. அருமை..!
      வாழ்த்துகளும்.. பாராட்டுகளும்..!

      Delete
    3. /// மற்றொருவர் நம்பரை பெயரில் கொண்டவர் & புரட்சித்தலைவரின் தீவிர ரசிகர்! (இதுக்குப் பேசாம பேரையே நேரடியாச் சொல்லியிருக்கலாம் ஹிஹி) ///

      ஊமைக்குசும்பு கேள்விப்பட்டிருக்கேன். இது பூனைக்குசும்பு.

      Delete
    4. @ 'பத்து' சார்

      நீங்க எப்படிவேணா வச்சுக்கங்க! ஆனா ரகசியங்களைக் காப்பாற்றுவதில் ஈவியை அடிச்சுக்க இங்கே ஆளில்லைன்றதை நீங்க புரிஞ்சுக்கிடணும்!

      Delete
    5. ரொம்பவே தெளிவாக...

      Delete
    6. உதவிய நல் உள்ளங்களுக்கு சிரம் தாழ்த்திய நன்றிகள்🙏🙏🙏🙏🙏🙏 பரிசு பெற்ற நண்பர்களுக்கு நல்வாழ்த்துக்கள்

      Delete
    7. உதவிய நண்பர்கள் இருவருக்கும் எனது நன்றிகளும் பாராட்டுகளும்.

      விஜய் @ special thanks to you.

      Delete
    8. ரகசியங்களை யாரிடம் சொல்லக்கூடாது என்பது நன்றாக தெரிந்து விட்டது எனக்கு :-) நன்றி ஈரோடு விஜய் :-)

      Delete
    9. Do we have any groups in whatsapp ?

      Delete
  54. டன்ட..டா....டன்..ட.டா...

    பார்சல் வந்தாச்சே....!!!

    🎆🎆🎆🎆🎆🎆

    ReplyDelete
  55. Sir... New year surprise... Courier received...

    ReplyDelete
  56. மனிதமும் புனிதமும்
    மலையாய் உயரட்டும்..!
    இடரும் இன்னலும்
    இனிமேலும் துளிராமல்.
    வளரும்,
    வெண்ணிலவாய்
    வருங்காலம் பிறக்கட்டும்..!
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.நமது லயன் காமிக்ஸ் உறவுகள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

    ReplyDelete
  57. நியூ இயர் அன்றே சர்ப்ரைஸ் ஆக ஸ்வீட்+புத்தகங்கள் அளித்து இன்ப அதிர்ச்சி தந்துட்டீர்கள் சார்.😍😍😍😍

    இந்த பணிகளின் காரணமாகவே கடந்த இரு பதிவுகளுக்கு பிறகு தாங்கள் தளத்தில் இருந்து ஆப்சென்ட் என புரிகிறது.

    குறுகிய காலத்தில் சஸ்பென்ஸ் அளிக்கும் தங்களது அணிக்கு நன்றிகள் சார்.🙏🙏🙏🙏🙏

    ReplyDelete
  58. பார்சலை பிரித்து தோர்கலை சந்தித்தாயிற்று....


    டெக்ஸின் ஆதிக்கத்திற்கு (என் மனிசில) அடுத்த இடத்தில் இரத்தப்படலம் & தோர்கல் இருக்கிறார்கள்.

    குண்டுபுக் ஆக ஒரே பைண்டிங்ல வழங்கியது அருமை சார்.

    குதூகலிக்கிறது மனசு...!!!

    என்னதான் ஹெர்லக் ஷோம்ஸ்சின் அட்டை படம் டஃப் கொடுத்தாலும்...டாப் தோர்கல் தான்...!!!,

    பின்அட்டை, முன் அட்டை, குண்டுபுக்கின் முதுகு பக்கம் என சகலமும் ஜோர்....

    10க்கு 10....

    ReplyDelete
    Replies
    1. வைகிங்குகளின் படகின் முகப்பை இருபக்கமும் பார்க்கும் போதே ஜிவ்வுனு இருக்கு!

      டெக்ஸ் தீபாவளிமலர்---என பார்க்கும் போதும் இதேமாதிரி இருக்கும். மீண்டும் அதே பரவசம்.

      தோர்கலுக்கும், ஆரிசியாவுக்கும் வழவப்பான மென்மையான ஸ்டிக்கர் ஃப்னிஷ்; தாக்க வரும் கரடிக்கு கரடுமுரடான சொரசொரப்பான பினிஷிங்!!! செமயாக இருக்கு!

      கண்களுக்கு குளிர்ச்சியான வர்ணசேர்க்கை இரு அட்டைகளிலும்.

      எனக்கு பிடித்த சாவிகாப்பாளினியை அட்டையில் போட்டு அசத்தி விட்டீர்கள்... நன்று..நன்று!!!

      கிரிஸ் ஆஃப் வல்நாரின் முறைப்பான பார்வை...அப்பப்பா!!!

      டாப் ஆஃப் த அபோவ் """ முத்து காமிக்ஸ் ஆண்டுமலர்49" ""!!

      Delete
    2. முத்து காமிக்ஸ் 49ன் பின்னே தெரியும் கோடைமலர் என்பதையும், பின்னாடி இருக்கும் 444 என்ற சிறு புள்ளியும் திருஷ்டி பொட்டாக இருக்கட்டும்.

      Delete
  59. ஆசிரியருக்கும், அவரது குடும்பத்தார்க்கும். ஏனைய அலுவலக நண்பர்களுக்கும், மற்றும் தளத்தில் தடதடக்கும் அனைத்து காமிக்ஸ் நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  60. நான் அப்படியே ஷாக்காயிட்டேன்.......
    வெள்ளை இளவரசி புத்தகங்களின் படங்களை போட்டதும்.....😲😲😲

    ReplyDelete
  61. சார் பதினொன்று கல்குடா வீட்ட விட்டு கெளம்புன....மாலை போய் பாக்கிறேன்...பகிர்கிறேன்...என் நம்பிக்கைய ஏமாத்தல....ஆனா நான் ஏமாந்துட்டேன்...சூப்பர் ஆசிரியரே

    ReplyDelete
  62. தொடர்ந்து உதவிக்கொண்டே இருக்கும்நண்பர்களின் மனிதத்துக்கு மிக்க நன்றி.வழிகாட்டியாக இருந்து பெற்றுக்கொடுக்கும் நண்பர்களுக்கும்நன்றி கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  63. புத்தகங்கள் வந்துவிட்டன. Really Surprise.

    ReplyDelete
  64. புக்கு வந்திடுச்சேஏஏஏஏஏய்ய்..,

    டேங்க்யூ ஆத்தா! ஹேப்பி நியூ இயர்!

    ReplyDelete
    Replies
    1. ஆப்புக்கோ ஆத்தா ஹை னா.?

      Delete
    2. @ 'ராக'வன் ஜி

      February books are as follows:
      1.ARS MAGNA
      2.Minnum sorgam ( color athikaari)
      3.kambi neettiya kuruvi ( Rip Kirby)

      Delete
    3. EV புரிந்தது புரிந்தது.

      Delete
    4. க்கும்.... ரகசியத்தை இதைவிட இருக்கமாக காக்க முடியாதப்பா...!!!

      நெம்பர் லாக்குக்கே சவால் விடுறாங்களே..!!!😉😉😉😉

      "பத்து"மணி ஆவுது போய் நாம சாப்பிடுவோம்.

      Delete
  65. அனைவருக்கும்
    அன்பான நேசங்களோடு
    இனிய புத்தாண்டு
    நல்வாழ்த்துகள் ... iii

    ReplyDelete
  66. சார் தோர்கள் அட்டைப்படம் இது வரை வந்த அட்டைப் படங்கள எல்லாம் தூக்கி சாப்ட்ருச்சி 5ஸ்டார் சாக்லேட்டோட...அந்த சொரசொரப்பான கரடி வளவளப்பான குதிரை...சூரியனாய் ஒளிக்கும் ஆண்டு மலர் பின்னட்டை ப்ரம்மாதம் இம்மாதம்...இரத்தப்படல அட்டய போலவே அசத்த...பின்னால் அணிவகுக்கிறார்கள் கானக அட்டையும்...அடிச்சு கிழிச்ச கோழைகளின் சட்டையும்...அருமை

    ReplyDelete
  67. Replies
    1. இம்மாத மும் மூனு தான்...அடுத்த மாதமுமே மூனுதா..‌ஆனா குறைவா தோனுவது எனக்கு மட்டுந்தானா

      Delete
    2. டெக்ஸ் சின்ன புக் கூட இல்லையா...

      Delete
    3. மூணு மூணாகவே தெரியுறது அத்தினி பேருக்குமே தான் ஸ்டீல் ! அதே மூணு மும்மூணாவோ ; மூனுக்கு கிட்டக்கவோ தெரிஞ்சா தான் பிரச்சனையே !

      Delete
    4. அட்டவணையிலே அறிவிச்சதே 8 டெக்ஸ் புக்ஸுங்கண்ணா ; அதே அட்டவணையை 15 மாதங்களுக்கு நீட்டிக்கிறச்சே என்ன ஆகும்னு யோசிங்கோ !

      Delete
    5. Steel @

      Jan Mid - 3 special-nu sonnaru - therefore 9 in 8 weeks ! Apdi paarunga boss.

      Delete
    6. /* அட்டவணையிலே அறிவிச்சதே 8 டெக்ஸ் புக்ஸுங்கண்ணா ; அதே அட்டவணையை 15 மாதங்களுக்கு நீட்டிக்கிறச்சே என்ன ஆகும்னு யோசிங்கோ ! */

      Gap maasathula ellaam online bookfair vechu oru Tex bukku potrulaamungaLaa? :-)

      Delete
    7. சார் இன்னும் சந்தாவில் மீதம் உள்ள புத்தகங்கள் 6(Detective Special, Dr.No, கம்பி நீட்டி ய குருவி, ARS மேக்னா, டெக்ஸ் Reprint maxi 6 க்கு , பிரளயம்). அதில் 2 மட்டுமே (ARS மேக்னா, கம்பி நீட்டி ய குருவி) அடுத்த மாதம் வெளி வந்தால் மீதம் உள்ள 4 புத்தகங்கள் மார்ச் மாதம் வெளி வருமா???

      Delete
    8. முதல் ஆன்லைன் bookfair Coimbatoreமாதிரியான ஒரு மிதநகர விழாவின் விற்பனையைக் காட்டிலும் கூடுதலான விற்பனையைக் கொணர்ந்த சொர்ண வாத்து சார் ! அதை மாசம் ஒருக்கா கண்ணில் காட்டினால் யாருக்கும் பலன் இராது !

      Delete
    9. பொறுமை சார் ; அறிவிப்புகள் உரிய வேளைகளில் வரும் !

      Delete
    10. // முதல் ஆன்லைன் bookfair Coimbatoreமாதிரியான ஒரு மிதநகர விழாவின் விற்பனையைக் காட்டிலும் கூடுதலான விற்பனையைக் கொணர்ந்த சொர்ண வாத்து சார் ! //

      மிகவும் மகிழ்ச்சியான விஷயம் சார்.

      Delete
    11. இன்று கைகளில் உள்ள/ இந்த மாத புத்தகங்களை ரசிப்போமே முதலில் நண்பர்களே.

      ஆண்டின் முதல் மாத புத்தகங்களை விமர்சனம் செய்வோம் விற்பனையில் சாதிக்க உதவுவோமே :-) 🙏

      Delete
  68. செம்ம சார்
    இன்ப அதிர்ச்சி என்பது இதுதானோ 😍

    புத்தாண்டை (புத்தகங்களுடன்)
    அருமையாக
    ஆரம்பித்துவைத்துள்ளீர்கள் மிக்க நன்றி சார் 🙏🏼🙏🏼🙏🏼
    .

    ReplyDelete
  69. கானகமே காலடியில் - ஐ யாம் ரைட் - ஐ யம் ஹேப்பி :-)

    நண்பர்கள் பலர் இன்னும் கதையை படித்து இருக்கமாட்டார்கள் என்பதால் விரிவான விமர்சனம் ஞாயிற்றுக்கிழமை.

    ReplyDelete
    Replies
    1. அப்புறம் இருக்கு கச்சேரி ... இவரு என்ன பகுதி நேர வித்துவானா :-)

      Delete
    2. ஐ யாம் ரைட் கானகத்தில் வழி காட்டி பணம் சம்பாதிக்கும் டெக்னிக் செம :-)

      Delete
    3. கோமகன் டார்ஜானை கொலை செய்ய ஒரு பக்கம் ஆளை அனுப்பி விட்டு மறுபக்கம் அதே நபரை காப்பாற்ற இன்னும் ஒரு நபரை அனுப்புவது ஏன். விரைவில் படியுங்கள் நண்பர்களே. வித்தியாசமான சிந்தனை. ரசிக்கும் படி இருந்தது.

      Delete
  70. Replies
    1. சரியாச் சொன்னீங்க PfB!! எடிட்டரும், அவருடைய டீமும் அயராது உழைத்து - நாம் எதிர்பார்க்காமல் நமக்கே நமக்கான அழகான புத்தாண்டுப் பரிசினை அளித்திருக்கிறார்கள்!! அதுவும் சுவீட், வாழ்த்துமடல் சகிதம் புத்தாண்டன்றே இப்பரிசுகள் கிடைக்கப்பெற்றது - ஐசிங் ஆன் த ரவுண்டுபன்!

      Delete
    2. ஒரு பேரிடர் ஆண்டிலும் 46 + இந்த 3 - ஆக மொத்தம் 49 இதழ்களின் தயாரிப்பு சாத்தியமாகியுள்ளதை எனக்கே நம்ப முடியவில்லை தான் !!

      Delete
    3. 20 நாட்களில் 3 புத்தகங்களை அட்டகாசமான தரத்துடன் தயார் செய்து அனுப்பிய உங்களுக்கும் நமது அலுவலக பணியாள நண்பர்கள் அனைவருக்கும் ஒரு ராயல் சல்யூட்.

      நமது சிறிய டீம் மீண்டும் ஒரு முறை தங்கள் செயல்திறனை நிரூபித்துள்ளார்கள்.பாராட்டு பூங்கொத்துக்களை பிடியுங்கள்

      Delete
    4. நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும் சார் :-)

      Delete
    5. /* ஒரு பேரிடர் ஆண்டிலும் 46 + இந்த 3 */

      Dear Editor @

      இவ்வாண்டின் 3-4 புத்தகங்கள் பிடிக்காத genre கருதி நான் வாங்காத நிலையிலும் - வருடக் கடைசீ லீவு நாட்களில் படிக்கலாம் என்று உட்கார்ந்து எடுத்தால் சும்மா கன்னித் தீவு மாதிரி வரிசையாக முடிவே இல்லாமல் கதைகள் வந்துகொண்டே இருக்கின்றன .. so many releases actually this year ! Kudos to the team - and வெகு விரைவில் ஒரு break even ஆக மேலிருப்பவர் அருளட்டும் !

      Delete
    6. நன்றிகள் சார் ; பணிகளுக்கு மத்தியில் இருக்கும் போது ' இந்த மாசம் முடிஞ்சதா ? அடுத்தது என்ன ?' என்ற ரீதியிலேயே பொழுது ஓடி விடுகிறதெனும் போது யதார்த்தம் உள்ளிறங்க நேரம் இருப்பதில்லை ! ஆண்டின் இறுதி என்ற தருணத்தில் கணக்கெடுப்பாய் திரும்பிப் பார்க்கும் போது தான் நிஜமான நிலவரம் புரிகிறது !

      To top it all - இது கொரோனா ஆண்டாய் மட்டும் இல்லாது போயின் stagger செய்திருக்கும் இதழ்களுமே டிசம்பருக்குள் பூர்த்தி கண்டிருக்கும் ! Phewww !

      Delete
  71. க்ரெஸ்ஸி யுத்தத்திலே பங்கேற்ற இளவரசர் ப்ளாக்கின் பக்கத்தவீட்டுக்குநாலாவது தெருவிலிருக்கிற அவரோட ஒண்ணுவிட்ட சகலையின்தங்கச்சிபேரணுக்குக் குதிரைகளைப்பராமரிச்சவீரபரம்பரை.ஹெர்லக் ஷோம்ஸ். கதை நெடுக மெல்லிய நகைச்சுவையும் ஆசிரியரின் தனித்தன்மையான மொழிபெயர்ப்புநடையும். நல்ல ஒரு வாசிப்பு அனுபவத்தைக் கொடுக்கிறது. கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. அது செம காமெடி :-)

      Delete
    2. ஒரிஜினலில் ஹ்யூமர் ஒரு மிடறு குறைவே சார் ; கொஞ்சமாய் எக்ஸ்டரா நம்பர்களைச் சேர்த்திட விழைந்தேன் ! Of course - 'எஸ்டரா நம்பர் கேட்டேனா ?? ' என்ற கேள்விகள் எழுமென்பது தெரிந்த சமாச்சாரமே ; ஆனால் அதனைப் பெரிதாக தலைக்குக் கொண்டு செல்லவில்லை - இந்த ஆல்பத்திலாவது !

      Delete
    3. // அதனைப் பெரிதாக தலைக்குக் கொண்டு செல்லவில்லை //

      நன்று.

      Delete
  72. சார் கிடைச்ச கேப்ல தோர்கல் புத்தகத்தை புரட்டிப் படங்களை மட்டும் ரசிச்சேன்.. குளிர்ச்சின்னா குளிர்ச்சி - கண்ணுக்கு அப்படியொரு குளிர்ச்சி!! ஒரு கட்டத்துல என் கண்ணே ஐஸா மாறிடுச்சுன்னா பார்த்துக்கோங்களேன்!

    பார்வைக் கோணத்துக்கு ஊடால டயலாக் பலூன்களை கொண்டுவந்து நிறுத்தாம நீங்க விட்டுவச்சதே பெரிய ஆச்சரியம் தான்!! ஹிஹி!!

    கண்ணுக்கும், கருத்துக்கும், கற்பனைக்கும் நல்லதொரு விருந்து காத்திருப்பதை சில நிமிடப் புரட்டல்களிலேயே நன்றாக உணரமுடிகிறது.

    விருந்தைப் புசிப்பதற்கான நேரத்தை அமைத்துக்கொள்வது மட்டும்தான் பாக்கி!!

    ReplyDelete
    Replies
    1. ஓவரான சென்சாரை படைப்பாளிகள் விரும்பிடாது போகும் போது சிலபல ஐஸாகும் படலங்கள் சாத்தியமே !

      Delete
  73. அடுத்த இரண்டு நாட்களில் தோர்கலை முடிக்க வேண்டும். இல்லை என்றால் அலுவலக வேலை ஆரம்பித்த பிறகு படிப்பது தள்ளிப் போகிவிடும்.

    ReplyDelete
  74. ஷெர்லாக் கதை தொடரில் பிடித்தது கவரிங் என்னமோ தெரியலை மற்ற கார்டூன் கதைகளை விட இதன் சித்திரங்கள் வண்ணத்தில் மிகவும் அழகாக ரம்யமாக மனதிற்கு ஒரு புத்துணர்ச்சியை தருவது போல் உள்ளது.

    ReplyDelete
  75. /// அதுவும் சுவீட், வாழ்த்துமடல் சகிதம் புத்தாண்டன்றே ///

    எனக்கு கொரியர் பாக்ஸில் எந்த ஸ்வீட்டும் வரவில்லையே ?

    ReplyDelete
    Replies
    1. புத்தகங்கள் உடன் சாக்லேட் இருக்கும். மீண்டும் ஒருமுறை பாருங்கள்.

      Delete
    2. இல்லை. நோ ப்ராப்ளம்.

      Delete
  76. தோர்கலுக்கொரு தோர்கல் - ஆரம்பித்ததும் தெரியவில்லை முடிந்தும் தெரியவில்லை யப்பா என்ன ஒரு கற்பனை என்ன ஒரு வேகம். சூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. கதையின் இறுதியில் தோர்கல் குடும்பத்தை விட்டு பிரிந்து செல்கின்றார்... ஏன்... மீண்டும் இணைவாரா குடும்பத்துடன் என்ற கேள்விகளுடன் "கதிரவனின் கத்தியில்" படிக்கச் செல்கிறேன்.

      Delete
    2. முடிச்சாச்சு கதிரவனின் கத்தி ... முதல் கதை மாயாஜாலம் கலந்து இங்கும் அங்கும் ஷன்டிங் அடித்து மனதை கட்டிப்போட்டது என்றால் இந்த கதை புரட்சி விடுதலை என பயணித்தது இதில் ஒரு சஸ்பென்ஸ் உள்ளது. செம கதைப்பா இது.

      இரண்டு கதைகளும் அருமை. ஆண்டின் முதல் மாதம் அட்டகாசமான துவக்கம்.

      Delete
    3. குறை என தெரிந்தது இரண்டு கதைகளிலும் தென்படும் மூன்று எழுத்துப்பிழைகள்.

      Delete
  77. விஜயன் சார், முத்துக்காமிக்ஸ் ஆண்டு மலருக்கு தோர்கல் மிகச்சிறந்த தேர்வு.

    அப்புறம் அடுத்த வருடம் முத்து 50 வருட சிறப்பிதழில் தோர்கலுக்கு இது போன்று 5 பாக சாகசத்தை கொடுங்கள் என எனது குடும்பத்தினர் சார்பில் வேண்டுகோள் வைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. எனது வேண்டுகோளும் அதுவே

      Delete
    2. Muthu 50 should be 2 sets -

      a) one thorgal as above
      b) one combo box set of - maayavi+lawrence david + flower underwear fellow + rip kirby

      Delete
    3. Raghavan @ I too feel that there will be two books for Muthu 50 Special.

      Delete
  78. Breakfast சாப்பிட பிறகு ஒரு அழகிய அகதி கதையை படித்து முடிக்கிறேன் :-)

    ReplyDelete
  79. ஒரு அழகிய அகதி - யப்பா யப்பா என்ன கற்பனை தோர்கல் தனது கடந்த காலத்தை மறந்து விட்டார் எப்போது எப்படி தனது குடும்பத்துடன் சேர்வார் என அடுத்த இரண்டு கதைகளை இன்று எப்படியாவது படித்து முடிக்க வேண்டும்.

    ReplyDelete
  80. விடுதல்,
    ஒரே ஒரு தலைவர்.

    தொடுதல்,
    என்றும் இதயத்தில் இருக்கும் ஆசிரியர் அவர்களுக்கு.

    வழி:இரவி அவர்களின் இணைய வழி...

    பொருள்:இன்ப அதிர்ச்சி கொடுத்த இதழ்கள் பற்றி தகவல் தெரிவித்தல்-சார்பு.
    ----------
    ஆசிரியர் அவர்களுக்கு,
    புத்தாண்டின் தொடக்கத்திலேயே இனிப்புடன் கூடிய இதழ்களை அனுப்பிய ஆசிரியர் மற்றும் அவர்கள் குழுவினருக்கு கோடானு கோடி நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
    இதழ்களை நேற்று இரவே கைப்பற்ற இயன்றாலும்,அலுவலகத்தில் இருந்ததால் இனிப்பை எனது புதல்வன் ஆட்டையைப் போட்டு விட்டான்...
    எனினும் இதழ்கள் முதல் தேதியில் கைப்பற்றியதை விட வேறென்ன இனிப்பான செய்தி வேண்டும்...
    வார விடுப்பை வாசிப்பில் முடித்து விட்டு இன்னும் சில தினங்களில் இணையத்துடனும், விமர்சனத்துடனும் இங்கே வருகை புரிகிறேன்...

    பதுங்கு குழியில் இருந்து அனைவருக்கும் நன்றி வணக்கம்...!!!
    இப்படிக்கு
    ஒரே ஒரு தலைவர்.

    ReplyDelete
  81. கோழைகளின் பூமி. ஒரு கதையார்கோணத்திலிருந்து சொல்லப்படுகிறதோ அவரே கதையின் நாயகராகவோ, நல்லவராகவோ இருப்பதே பொதுவான வழக்கம். இங் கோ கதைமுடியும்போது அனைத்தும் மிக இயல்பாக மாறுகிறது. கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  82. முதல் தேதியே இதழ்கள் வந்தும் வெளியூரில் இருப்பதால் பார்த்து ரசிக்க - படிக்க இயலவில்லை..ii.ஆனாலும் உங்கள் உழைப்பு மிகவும் கடுமையானது தான் சார்...
    இருந்தாலும், 2021-யிலிருந்து அனைத்து விசயங்களையும் மீட்டெடுக்கும் முயற்சியில் ., தாங்களும் ஒரு ஆரம்பம் கொடுத்து துவக்கி வைத்ததற்கு எங்களது நன்றிகள்.சார்...ii

    ReplyDelete
  83. கோழைகளின் பூமி
    ஒரு டெம்ப்ளேட் கிராபிக் நாவல். நான் எதிர்பார்த்து போலவே கதையின் முடிவு இருந்தது.
    சபிக்கப்பட்ட பூமியில் இருந்து வெளியேறி ஒரு ஆபிசராக திரும்பி வருபவன் வீரனா? அல்லது தனது பிளாஷ்பேகிலிருந்து பயந்து ஓடியவன் கோழையா?
    சபிக்கப்பட்ட பூமியிலிருந்து ஓடாமல், கடினமான வாழ்க்கையை தனது விதியே என்று ஏற்றுக்கொண்டு, சூழ்நிலையின் அடிமையாக வாழ்பவன் கோழையா?
    அல்லது எவ்வளவு கஷ்டம் வந்தாலும் தனது ஊரிலிருந்து, தனது கடமையிருந்து விலகி ஓடாதிருப்பவன் வீரனா?

    பல சிரமங்களுக்கு பிறகும், நஷ்டமே ஏற்பட்டாலும் மீண்டும் சேற்றில் காலைவைத்து நாம் சோற்றில் கை வைக்க பாடுபடும் ஓவ்வொரு விவசாயியும் போற்றபட வேண்டிய வீரர்களே.🙏🙏🙏🙏🙏🙏🙏

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் விமர்சனம்.

      Delete
    2. இந்த விமர்சனமத்துக்கும் கதைக்கும் என்னப்பா சம்பந்தம்னும் யாரும் டவூட்டு கேட்ட எங்கிட்ட பதில் இல்ல சாமி :)

      Delete
  84. தடுமாறிய தலைவனால் குடும்பம் என்வாகிறது அந்த குடும்பத்தை தனையன் எப்படி காப்பாற்றுகிறான். சிறிய மற்றும் பெரிய ஜோலனின் குடும்ப பாசம் மற்றும் வீரம் மெய்சிலிர்க்க செய்கிறது. டைம் ட்ராவல் இரண்டாம் சாகசத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. Awesome.

    ReplyDelete
    Replies
    1. இரவு 10 மணிக்கு புகுந்த தோர்கல் உலகில் இருந்து இப்பொழுதுதான் வெளியே வந்தேன்.. இல்லை இல்லை இன்னும் அங்கேதான் உள்ளேன்... அருமை அட்டகாசம்..

      Delete
  85. தோர்கல் ஐந்து பாகங்களும் படித்து முடித்த பின்னர் ஏதோ கனவுலகில் காலையில் இருந்து மிதந்தது போல் இருக்கிறது.

    ReplyDelete
  86. மா துஜே ஸலாம் 
    மிகக்கடுமையான கதைக்களம் - கார்ட்டூன் பாணி சித்திரங்கள் பயணத்தை இலகுவாக்குகின்றன. இந்தாண்டின் மிகச்சிறந்த காமிக்ஸ்களில் ஒன்று என்ற போதும் இன்னமும் எனக்கு Marshal Sykes and SODA stand out.
    மா துஜே ஸலாம் படித்து முடித்தவுடன் தோன்றிய இரு எண்ணங்கள் :
    1) "அம்மா என்றால் அன்பு" என்ற அழகான தமிழ்ப் பெயர் சூட்டியிருக்கலாமே - title does not quite rhyme simply becos இசைப்புயல் அந்த வரிகளுக்கு வேறு emotions கொடுத்து ஒரு கால் நூற்றாண்டுகள் ஆகிவிட்டதென்பதால் 
    2) நமது பாரத மண்ணில் எப்போதும் இந்நிலை 'இனி' வராமல் இருக்க வேண்டுகிறேன் 

    ReplyDelete
  87. பிப்ரவரி மாதம் வரும் கலர் டெக்ஸ் இரண்டு கதைகள் கொண்ட தொகுப்பா அல்லது நான்கு கதைகள் உடையதா. இரண்டு விலைகளிலும் (60 or 120) விளம்பரங்கள் உள்ளதே. Any suggestions நண்பர்களே.

    ReplyDelete
    Replies
    1. பதிலுக்காக நானும் காத்திருக்கிறேன்

      Delete
  88. சார் இன்றோ நாளையோ பதிவு உண்டா????

    ReplyDelete
  89. எடிட்டரி்ன் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :)

    ReplyDelete
  90. ஜாம்பவான் தோர்கல் :-)

    ReplyDelete