நண்பர்களே,
வணக்கம். “மாதத்தின் முதல் தேதி” என்ற இலக்கை அடித்துப் பிடித்து மறுக்கா தொட்டு விட்டோம் என்பதில் அடியேன் ஹேப்பி அண்ணாச்சி ! மாதத்தின் 10-ம் தேதி; 15-ம் தேதி என்ற வெளியீட்டுத் தேதிகள் தவிர்க்க இயலா சமாச்சாரங்களாக அமைந்து விட்டிருப்பினும், பணியாற்ற உதவும் எனது ‘ரேடாருக்கு‘ அந்தத் தேதிகளோடு sync ஆக ரொம்பவே திணறியது ! தொடரும் மாதங்களில் எப்போதும் போலவே வண்டி சீராய்ப் பயணிக்க இந்த back to the 1st. உதவும் என்ற நம்பிக்கையோடு தொடர்கிறேன்… fingers crossed !
ஜனவரியின் புது புக்ஸ் உங்கள் கைகளில் எனும் போது இந்த வாரத்து focus அவற்றின் மீதே இருந்திட வேண்டுமென்பதால் “உசிலம்பட்டி போனேன் ; உளுந்தூர்பேட்டை போனேன்” என்று எதையாச்சும் மொக்கை போடப் போவதில்லை ! ஆகிருதியான ஆரிசியாவின் ஆத்துக்காரரே இம்மாதத்து ஒளிவட்டத்துச் சொந்தக்காரர் என்பதில் (எனக்கேனும்) சந்தேகங்கள் கிடையாதென்பதால் – பார்வைகளை அக்கட பிரதானமாய்ப் படர விடுவதில் பிழையிராது என்று தோன்றுகிறது ! ஏற்கனவே சொன்னது போல – போன வருஷமே தயாராகி; அட்டைப்படமும் ‘அனல் பறக்கும் கோடை மலர்‘ என்ற அடையாளத்தோடு அச்சாகிவிட்டிருந்தது ! So என்னைப் பொறுத்தமட்டிலும் ஜவஹர்லால் நேரு காலத்திலிருந்தே இந்த அட்டைப்படத்தைப் பார்த்து வருவதான feeling இருப்பதால், உங்களில் முதற்கட்ட சிலாகிப்புகளை வாசிக்கும் போது ‘அட… ஆமாம்லே?‘ என்று ஆர்வங்கள் மறுகிளர்வு கண்டு வருகின்றன ! ஒரிஜினல் டிசைனே ; ஆனால் வண்ண மெருகூட்டல் + பின்பக்க அதகள collage ; அப்புறம் அட்டைப்படத்து textures என எல்லாமே நமது டிசைனர் பொன்னனின் கைவண்ணங்களே ! ஏற்கனவே அறிவித்திருந்தபடி slipcase-ல் இம்மாதத்து 5 ஆல்பங்களையும் போட்டுத் தருவது தான் ஒரிஜினலான திட்டமிடல் ! So இந்த அட்டைப்பட டிசைனே டப்பியின் இரு தரப்புகளிலும் இருந்திருக்க வேண்டியது ! ஆனால் கொரோனா தாண்டவத்தின் விளைவாய் நிறையவே தாமதங்கள் நிகழக்கூடும் என்று மார்ச் ’20 நடுவாக்கிலேயே மண்டைக்குள் லேசாய் ஒரு பட்சி குரல் கொடுக்க, slipcase-க்கான ஆர்டர்களை திடுதிடுப்பென ரத்து செய்து விட்டோம் ! 5 பாகக் கதைகளின் ராயல்டி; அவற்றின் மொழிபெயர்ப்புகள்; தயாரிப்புச் செலவுகள்; இத்யாதிகள் என்ற பணமுடக்கங்களோடு slipcase-ல் ஒரு ஆகப் பெரும் தொகையை முடக்கிப் போட்டு வைக்கவும் கை உதறியதால் இறுதி நிமிடத்தில் hardcover தீர்மானத்துக்குத் தாவினேன் ! So லாக்டௌன் துவங்கும் தருணத்துக்கு ஒரு வாரம் முன்பாகவே அட்டைப்படத்தினை hardcover பைண்டிங்குக்குப் பொருந்தும் விதமாய் அச்சிட்டோம் ! ‘கோடை மலர்‘ என்ற எழுத்தைப் போடவா ? வேண்டாமா ? என்ற நெருடல் இருந்தது தான் ; ஆனால் ஏதேனுமொரு அதிசயம் நிகழ்ந்து தடைகளின்றி வண்டி ஓடிடச் சாத்தியமாகிடாதா ? என்ற நப்பாசையில் அதை நீக்கிடவில்லை ; நமக்குத் தான் ஸ்டிக்கர்களின் சகாயம் இருக்கவே இருக்கிறதே என்ற தைரியத்துடன் ?!
இந்த இதழினில் இன்னொரு highlight-ம் உண்டு; atleast if that can be called a highlight ! வழக்கமாய் சித்திரங்களில் சற்றே சென்சார் அவசியமாகிடும் வேளைகளில் தார் டப்பிகளைக் கையில் எடுத்துக் கொள்வோம் ; அல்லாங்காட்டி முரட்டு வசன பலூன்களை ‘பச்சக்‘ என strategic இலக்குகளில் சாத்தி விடுவோம் ! இம்முறை கூடியமட்டிலும் அதைத் தவிர்த்துள்ளோம் – படைப்பாளிகளின் வேண்டுகோளுக்கிணங்க ! இந்தத் தொடரின் பின்னணிகளில் விரச நோக்கங்கள் கிடையாதெனும் போது சித்திரங்களின் நயங்களை திரைபோட அவசியமிராதே ? என்று அவர்கள் வினவிய போது எனக்கே அவர்களது லாஜிக் புரிந்தது ! ‘பௌன்சர்‘; ‘பராகுடா‘ போன்ற கிடாவெட்டுக்களையே தாண்டிய நமக்கு – தோர்கலின் பிரியாணி விருந்து அத்தனை பெரிய சமாச்சாரமாகிடக் கூடாது என்று தீர்மானித்தேன் ! Of course – இதன் சாதக / பாதகங்கள் அலசிடப்படலாம் என்பதை யூகிக்க முடிகிறது தான் ; ஆனால் நகரும் காலகட்டத்தின் பிரதிபலிப்பாய் நம்மளவிற்கான மாற்றமாய் இதைப் பார்த்திட வேண்டியது தான் !
கதைகளின் பக்கமாய்ப் பார்வைகளை ஓட விட்டால் – ஓட்டைவாயனாய் எதையாச்சும் உளறி வைத்து, இன்னமும் படிக்கவே துவங்கியிருக்கா பெரும்பான்மையின் வாசிப்பு சுவாரஸ்யங்களைக் கெடுத்த புண்ணியம் எனதாகும் என்பதால் ‘மூச்‘ காட்டப் போவதில்லை ! ஒரேயொரு வரியில் 5 பாகங்களையும் sum up செய்வதாயின், தொடரின் நடுப்பகுதியினில் இருக்கும் நாம் – ஜுனியர் தோர்கலின் விஸ்வரூபங்களை சிறுகச் சிறுகப் பார்த்திடவுள்ளோம் என்று மட்டும் சொல்வேன் ! பால் மனம் மாறாப் பாலகனாய் இது நாள் வரைக்கும் நாம் பார்த்திருந்த ஜோலன் – தொடரும் காலங்களில் கதாசிரியர் வான் ஹாமின் கைவண்ணத்தில் என்ன மாதிரியான தாக்கங்களை ஏற்படுத்தவுள்ளான் என்பதே எனக்கு இங்கே நிரம்ப excitement–ஐ தருகிறது ! மேற்கொண்டு அலசல்கள் உங்களின் வாசிப்புகளுக்கு அப்புறமாய்!
இம்மாதத்தின் கார்ட்டூன் இதழ் என்னளவிற்கொரு personal favourite! ரொம்ப ரொம்ப ஆண்டுகளுக்கு முன்னே விகடன் குழுமத்திலோ; குமுதம் குழுமத்திலோ – ஏதேவொரு வாரப் பத்திரிகையினில் தொடர்கதையாக ஹெர்லக் ஷோம்ஸார் வெளிவந்த போதே இவருக்கு நான் ரசிகன் ! பின்நாட்களில் நமது லயனிலோ; மினி லயனிலோ இவரைக் களமிறக்கச் சாத்தியமான போது எனக்கு குஷியே! ஆனால் படைப்பாளிகளே ஒட்டுமொத்தமாய் சகல b&w கதைகளையும் வண்ணமயாக்கிடும் சேதி ஏழோ – எட்டோ ஆண்டுகளுக்கு முன்னால் காதில் விழுந்த போது, கடைவாயோரம் குற்றாலக் கசிவு துவங்கியது! Fleetway b&w படைப்புகளின் சித்திரங்களைப் பார்த்தோமேயானால் அடர் கறுப்பில் ஏகமாய் contrast தந்து வரைந்திருப்பார்கள்! So அவற்றை வர்ணமாக்கிடும் போது அத்தனை சோபிக்க வாய்ப்புகள் இருப்பதில்லை ! ஆனால் ஹெர்லக்கின் சித்திரங்களைப் பார்த்தால் கறுப்பின் பிரயோகம் ரொம்பவே மிதமாய் இருப்பதும், நிறையவே வெள்ளைப் பின்னணிகள் இருப்பதும் தென்படும்! கலரிங் செய்திட இந்த பாணி பிரமாதமாக இருந்திடுமெனும் போது – புது யுக டிஜிட்டல் கலரிங்கில் ஹெர்லக் மினுமினுப்பது உறுதியென்றுபட்டது எனக்கு ! அப்போதிலிருந்தே ஆர்வமாய்க் காத்திருந்தவனுக்கு நமது இதர கார்ட்டூன் நாயகர்களின் மித performance ஒரு opening-ஐ கண்ணில் காட்டியது ! So லியனார்டோ தாத்தா ; Smurfs ; பென்னி ; மந்திரியார் ஆகியோரின் விடைதரும் படலங்களுக்கு மத்தியில் – ஓசையின்றி இந்த ‘காத்தாடி ராமமூர்த்தி‘ lookalike நாயகரை உட்புகுத்த சாத்தியமாகிறது ! And ஆண்டுக்கொரு slot என்ற மரியாதையை இதுவரைக்குமாவது தக்க வைத்துக் கொண்டுள்ளார் ! என்ன ஒரே நெருடல் – ஹெர்லக்கோடு பவனி வரும் அந்த டாக்டரைக் கலாய்க்க அவசியமாகிடும் போதெல்லாம் நம் சிறுவட்டத்திலுள்ள மதிப்பிற்குரிய டாக்டர்கள் என் மனதில் ஒரு கணம் நிழலாடிடத் தவறுவதில்லை ! 'காமெடி' என்ற காரணத்துக்காக உன்னத சேவைகளில் உள்ளோரைக் கஷ்டப்படுத்திடும் தப்பைச் செய்கிறோமோ ? என்ற உறுத்தல் உள்ளுக்குள் தோன்றிடும் ! ஆனால் டெக்ஸுக்கு ஒரு கார்சன்; டைகருக்கு ஒரு ரெட்; பிரின்ஸுக்கு ஒரு பார்னே ; டாக்புல்லுக்கொரு ஆர்டின் போல இங்கே ஹெர்லக்குக்கு டாக்டர் வேஸ்ட்சன் தான் comic relief தரும் பொறுப்பேற்றிருக்கிறார் எனும் போது எனக்கு வேறு வழி தெரிவதில்லை ! So எங்கேனும் எல்லை மீறி இருப்பின், மன்னிச்சூ டாக்டர்ஸ் ! பகடிகளுக்கு அப்பாற்பட்ட மாமனிதர்கள் நீங்கள் என்பதில் ஏது ஐயம் ?!
மாதத்தின் b&w இதழான அந்த கிராபிக் நாவல் பற்றி என்ன பேசவென்று தெரிய மாட்டேன்கிறது ! கதைக்குள் புகுந்திடாது எதையுமே பேச முடியாது என்பதால் – அந்நாட்களது உங்களது 'போஸ்ட்கார்ட் விமர்சன' பாணியையே நானும் கையில் எடுக்க வேண்டிப் போகிறது ! “அட்டைப்படம் சூப்பர்… கதையின் ஓட்டத்தில் தொய்வுகள் இராது; and ஏற்கனவே இது மாதிரியான சிறு நகர / சிறு கிராமப் புலனாய்வுத் த்ரில்லர்களை நாம் பார்த்துள்ளதாலும்; அமெரிக்கப் பொருளாதார வீழ்ச்சிகளின் தாக்கங்களுமே நமக்குப் புதிதல்ல எனும் போதும் – “கோழைகளின் பூமியில்” நடமாடச் சிரமங்கள் இராதென்றே சொல்வேன் ! Of course – அக்மார்க் ‘கி.நா.‘ எனும் போது கதை சார்ந்த தீர்ப்புகளே இங்கே பிரதானமாகும் என்பதால் judgement reserved !
Before I sign out – சமீபத்தைய அந்த கலர் டெக்ஸ் Vs Maxi லக்கி அலசல்கள் சார்ந்த update :
* வாக்குத் தந்தபடியே லக்கியின் ‘கௌபாய் எக்ஸ்பிரஸ்‘ MAXI மறுபதிப்புகளுக்கு ஏற்பாடுகள் சிக்கலின்றி நடந்தாகி விட்டன ! சென்னைப் புத்தகவிழா நடைமுறையாகிடும் பட்சத்தில், அங்கே களம் காண வாய்ப்புண்டு !
* ஆனால் ‘தல‘ வண்ண மறுபதிப்பின் உங்கள் தேர்வான ‘பழிக்குப் பழி‘ நடைமுறை காண்பதில் தான் சின்னதாய்ச் சிக்கல் ! இதன் வண்ணக் கோப்புகளுக்குப் பதிலாய் b&w கோப்புகளே நம்மை வந்து சேர்ந்துள்ளன ! அங்கே கொரோனா இரண்டாம் அலையின் லாக்டௌன் ; WFH என்ற சிரம சூழலில் இதற்கான வண்ணக் கோப்புகளைத் தேடிப் பிடித்து அனுப்ப நாழியாகும் ; எப்போதென்ற உறுதி சொல்ல முடியாது என்று சொல்லியுள்ளார்கள் ! தவிர, இது அவர்களது விடுமுறை சீஸனுமே ! So இப்போதே ‘ப.ப.‘ பார்த்தாக வேண்டுமெனில் b&w தான் சாத்தியம் !
* கலரில் தான் ‘தல‘ தரிசனம் தேவையெனில் ஏற்கனவே நாம் வாங்கி வைத்திருக்கும் “மரண முள்” ஒரு தற்போதைய சாத்தியம் ! இதுவுமே ஈரோட்டில் நீங்கள் ‘டிக்‘ அடித்திருந்த இதழே என்ற ஞாபகத்தில் 2020-ல் ஏற்கனவே வாங்கி வைத்திருந்தோம் ! And பக்க எண்ணிக்கை; விலைகள் – என எல்லாமே ரூ.150/- விலைக்கு ஒத்துப் போயிடும் - இதைத் தேர்வு செய்தோமெனில் ! பெட்ரோமேக்ஸ் லைட்டே தான் வேணுமெனில் பொறுமையாய்க் காத்திருக்கத் தான் வேண்டி வரும் !!
What say folks ?
Bye all… மீண்டும் சந்திப்போம்! Have a breezy weekend ! And ஜனவரி அலசல்களைத் துவங்கிடலாமே ?
Thorgal AMAZING
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteMe two
ReplyDeleteSuper edi
ReplyDeleteபழிக்குப் பழி
ReplyDeleteகானகமே காலடியில்
ReplyDeleteஷெர்லோக் மற்றும் வேஸ்டன் ஆபிரிக்கா கானகத்தில் கோமகன் டார்ஜானை காப்பாற்றும் வேலை கொடுக்கபடுகிறது! கோமகன் டார்ஜானை காப்பாற்றினார்களா என்பதை ஆபிரிக்கா கானகத்தில் பின்னணியில் சிரிக்க வைத்து கதை சொன்ன விதம் அருமை!
நமது மாறுவேட துப்பறியும் புலியை கானகத்தில் வழி நடத்தி செல்லும் வழிகாட்டியான ஐ யாம் சாரி (பெயர்) பணம் பறிக்கும் உத்தி சிரிக்க சிந்திக்க செய்தது. அதுவும் 20 நாட்களுக்கு முன்னால் கிளம்பிய கூட்டத்தை 2 நாளில் எப்படி பிடிக்கலாம் என சொல்லும் இடம் அட பாவிகளா இப்படியெல்லாம் ஏமாற்றி பணம் பறிக்க முடியுமா என சித்திக்க செய்தது.
அரச குடும்பம் என சொல்லும் அந்த துரையின் அரச பின்னணியை சொல்லும் அந்த தூரத்து சொந்தக்காரன் போன்ற வசனம் சிரிப்பை வரவைக்கும்! ஹார்டினை கட்டி இழுத்து செல்லும் இடத்தில் "என் கைகளை அவிழ்த்து விடுங்க! அப்புறம் இருக்கு கச்சேரி!" "அட ... நீங்க பகுதி நேர வித்தவனா" என சூழ்நிலையை மறந்து வேஸ்டன் சொல்லும் வசனம் செம டைமிங்!
அந்த கானகத்தில் புராதன நகரம் அந்த நகரில் இவர்களை பழி கொடுக்க நடக்கும் காமெடி செம, அதுவும் டாங்க்கி டூங்கி சூப்பர்! சிங்கத்துக்கும் காண்டாமிருகத்திற்கும் நடக்கும் சண்டை ரசிக்கலாம்!
இறுதியில் கோமகன் டார்ஜானை காப்பாற்ற அனுப்பியவரும் கொலை செல்ல அனுப்பியவரும் ஒன்றே என்ற சஸ்பென்ஸ் எதிர்பாரத திருப்பம்! அதற்க்கு அவர் சொல்லும் காரணமும் ஏற்றுகொள்வது போல் இருந்தது கதையின் பிளஸ்.
கதையில் வண்ணம் செம குளுமை! சித்திரம்கள் இதமான வண்ணத்துடன், கதையின் மாந்தர்களின் முகபாவனை என கதைக்கு வலிமை சேர்க்கும் விதம் இருந்தது!
கதையில் சிரிப்பு கொஞ்சம் குறைவுதான் என்றாலும் ஆசிரியர் தனது மொழி பெயர்ப்பில் சிரத்தை எடுத்து பல இடங்களில் சிரிப்பை வர வைத்துள்ளார்!
வருடத்தின் ஆரம்பம் இந்த சிரிப்பு பார்ட்டிகளுடன் இனிமையாக ஆரம்பித்து உள்ளது!
7
ReplyDelete8 good night
ReplyDeleteவணக்கம்
ReplyDelete10
ReplyDeleteவந்துட்டேன்
ReplyDeleteWill watching ...
ReplyDeleteஇந்த வருடத்தின் முதல் கேள்வி. நண்பர் கண்ணரின் ஆருயிர் அக்கா அமாயாவிற்கு தார்ச்சட்டிகளின் தாக்குதல் இருக்குமா???
ReplyDeleteகண்ணாரின் கர்சீப் உபயம் ... 😉😉😃
Deleteதார்ச்சட்டிகள் - ஒழிக ஒழிக!
Deleteதடம்மாறிய தலைவன்
ReplyDeleteஅடிமைபடுத்தி வைத்த வைகிங்களை சிறுவர்களான ஜோலனும் அவன் நண்பனும் காப்பாற்றும் அந்த sequence நம்பும்படியும் ரசிக்கும் படி இருந்தது! கதையின் இறுதி பக்கங்கள் கண்கலங்க செய்தது! தனது தாய் மற்றும் தங்கை ஓநாயை காப்பாற்ற தனியாக செல்ல படகில் பயணமாக இருக்கும் நேரத்தில் அவனின் நண்பன் மற்றும் நண்பனின் தங்கையும் உடன் சேர்த்து பயணம் செய்ய வரும் இடத்தில் உள்ள வசனங்கள் கண்கலங்க வைத்தது!
இந்த 5 பாக கதையை படித்து முடித்த பின்னர் தோர்கலை விட மனதில் அதிகம் வியாபித்து இருந்தது ஜோலன்தான்! சொல்லப் போனால் ஜோலன் எல்லா விதத்திலும் தோர்கலுக்கு கொஞ்சமும் சளைத்தவன் இல்லை என்பது போல் இருந்தது!
இந்த 5 பாக கதைக்கு மொழி பெயர்ப்பு மிக பெரிய ப்ளஸ், எளிமையாக புரிந்து கொள்ளும்படி இருந்தது! கருணையானந்தம் ஐயா அவர்களுக்கு பாராட்டுக்கள் மற்றும் ஒரு பெரிய பூங்கோத்து!
15
ReplyDelete///கலரில் தான் ‘தல‘ தரிசனம் தேவையெனில் ஏற்கனவே நாம் வாங்கி வைத்திருக்கும் “மரண முள்” ஒரு தற்போதைய சாத்தியம் ! ///----
ReplyDeleteஇப்போதைக்கு டிபன் பண்ணிப்போம்.
மீல்ஸ் பின்னாடி சாப்பிட்டுக்கலாம்.
மரணமுள்---க்கு ஒரு குத்து!😍
+1000
Deleteமரண முள் க்கு டபுள் ஓகே சார்...
Deleteநானும் வந்துட்டேன்.
ReplyDeleteமரண முள் okay sir..
ReplyDeleteஎனக்கு பழிக்கு பழி கருப்பு வெள்ளை யாக இருந்தாலும் பரவாயில்லை
ReplyDeleteசார் பழிக்குப்பழி கலர்லயே வரட்டும்...எனக்கு இந்தக் கதையைச் சொன்னவரும் மண்ணுக்குள் துயில்கிறார் ...எனத் துவங்கும் திகிலானதோ...அல்லது ஆர்வத்தை கிளப்பும் வரிகளோ கொண்ட அந்த மரணமுள்ள வண்ணத்ல போட்டுத் தாக்குங்க...ரெண்டு கத தெரிஞ்சாச்சு...போனா போவுது மூனாவதா கென்யாவ தாக்கிடுவம்
ReplyDeleteஇப்போதே ‘பழிக்குப்பழி.‘ பார்த்தாக வேண்டுமெனில் b & w தான் சாத்தியம் !
ReplyDelete( கலருக்காக காத்திருக்கலாம் விஜயன் சார் .. காத்திருப்பதென்பதில் பிரச்சனை ஏதும் இல்லை .. எனவே காத்திருக்கிறோம் .. கோடை மலர் 2021 ல் வந்தாலும் சந்தோசமே பீ ஹேப்பீ .. 😍😍😍😍😍 )
* கலரில் தான் ‘தல‘ தரிசனம் தேவையெனில் ஏற்கனவே நாம் வாங்கி வைத்திருக்கும் “மரண முள்” ஒரு தற்போதைய சாத்தியம் ! இதுவுமே ஈரோட்டில் நீங்கள் ‘டிக்‘ அடித்திருந்த இதழே என்ற ஞாபகத்தில் 2020-ல் ஏற்கனவே வாங்கி வைத்திருந்தோம் ! And பக்க எண்ணிக்கை; விலைகள் – என எல்லாமே ரூ.150/- விலைக்கு ஒத்துப் போயிடும் - இதைத் தேர்வு செய்தோமெனில் ! பெட்ரோமேக்ஸ் லைட்டே தான் வேணுமெனில் பொறுமையாய்க் காத்திருக்கத் தான் வேண்டி வரும் !!
( இப்படி சொல்லி தல டெக்ஸின் டுமீல் டமால் இல்லாத மொக்கை கதையான மரண முள்ளுக்கு முக்கியத்தை நீங்க தருவது போல் தெரிகிறது ..
அது எங்களுக்கு வேண்டாம் ... இத்தாலி கலர் பதிப்பிலேயே கலரில் மரண முள் பார்த்திட்டேன் ..
வேணாம் முடியலை .. ( வடிவேல் கண்டண்ட் ) ..
ஸோ
மரணமுள் கலரில் வருவதற்க்கு எதிர்ப்பு தெரிவிக்கிறேன் )
மரண முள் வரட்டுமே. சார்!
ReplyDeleteபழிக்கு பழி தோதுப்படறப்ப வரட்டும்..
பி & ஒயிட்டில் ப.பழி உடனே வர்றது விட வண்ணத்துல பொறுமையா வரட்டும்.
பொண்ணு வெறும் சல்வார்ல வர்றத விட பட்டுப்புடவை கட்டி வர லேட்டாகத்தானே செய்யும்?
இந்த காலத்து பெண்கள் அப்படி இல்லை அண்ணா ... 😉😉😉
Delete//இந்த காலத்து பெண்கள் அப்படி இல்லை அண்ணா ... 😉😉😉//
Deleteசம்பத்!! :-)))
பட்டு புடவையா? நாங்க மடிசார் புடவை கூட ரெடிமேட் தான் வாங்கறது. சினிமாவை நம்பாதீர்கள்.
Delete///பொண்ணு வெறும் சல்வார்ல வர்றத விட பட்டுப்புடவை கட்டி வர லேட்டாகத்தானே செய்யும்?///
Deleteரசணை ரசணை!! நீங்க ஒரு சிறந்த கலா ரசிகர் செனா அனா!! :)))
//பொண்ணு வெறும் சல்வார்ல வர்றத விட பட்டுப்புடவை கட்டி வர லேட்டாகத்தானே செய்யும்?//
Delete😂😂😂😂😂😂
சம்பத் அப்படி இந்தக்காலத்ல இல்லன்னாலுமே...புடவை தானே அழகு.....எனக்குப் புடவை வேணும்னு அடம் பிடிச்சி வாங்கிப் புடவை கட்டும் சிறு பெண் குழந்தைகளே பேரழகு...அந்த விறுவிறுப்பான திகில் கதைய கறுத்த போர்வை விலக்கி...வண்ணங்கள் கட்டிய புடவையில் பார்த்தால்....அடடா
Delete////பொண்ணு வெறும் சல்வார்ல வர்றத விட பட்டுப்புடவை கட்டி வர லேட்டாகத்தானே செய்யும்? ///
Deleteபாவாடை தாவணி கட்டுனா சீக்கிரமே வரலாம்...
எங்க ஊர்ல.. இல்ல எல்லா ஊர்லையும் ஒரு பழமொழி சொல்லுவாங்க..
Deleteகோழி குருடா இருந்தா என்ன, செவுடா இருந்தா என்ன, நமக்கு வேண்டியது கொழம்பு, லெக் பீஸு, சுக்கா, பிரியாணி எல்லாம் தானே..
பழிக்குப் பழி கலரில் மட்டுமே பார்க்க வெயிட்டிங் சார் (சிறிது தாமதமானாலும் பரவாயில்லை கலரிலே போடுங்க) இடையில மரணமுள் வந்தாலும் ஒகேதான் சார்! ஆக்ஷன் குறைவாக இருந்தாலும் இதுவொரு வித்தியாசமான கதைக்களம் அதுவும் கலர்ல மிரட்டலாக இருக்கும்
ReplyDelete//வித்தியாசமான கதைக்களம் அதுவும் கலர்ல மிரட்டலாக இருக்கும்//
Delete+1
அதே
Deleteவித்தியாசமான கதை களம்..//
Delete100% உண்மை.....டபுள் ஓகே for மரண முள் சார்...
கிரிஸ் வால்னர் என்ற வில்லியின் கதாபாத்திரம் சிறப்பாக உள்ளது. இந்த 5 பாக கதையில் மிகவும் முக்கியமானது இவளின் பங்களிப்பு.
ReplyDeleteசரியான எமகாதக வில்லி கிரிஸ்.
பழிக்குப் பழி கலரில் மட்டுமே பார்க்க வெயிட்டிங் சார் (சிறிது தாமதமானாலும் பரவாயில்லை கலரிலே போடுங்க).
ReplyDeleteமரணமுள் வேண்டாம் சார். கடந்த வருடம் இந்த கதையை மறுவாசிப்பு செய்தேன்.. முடியவில்லை. ப்ளீஸ் வேணாடாமே இந்த மரணமுள்.
பழிக்குப்பழி வரும் வரை காத்திருக்க நான் தயார்.
எல் இங்க வா...முள்ளெடுத்து விடுறேன்
Deleteஎனக்கு வேண்டாம் தம்பி :-)
DeleteThis comment has been removed by the author.
Deleteசத்தம் போடாம ஸ்டீல் சொல்றத கேளுல பரணித்தம்பி
Deleteமரண முள் டபுள் ok சார் நல்ல கதை
ReplyDeleteமரண முள்! சிறுவயதில் படித்துவிட்டு தூங்கும் வேளையில் அந்த ஸ்ஸ்... சத்தம் கேட்பதை போல உணர்ந்து பயந்ததை எண்ணிப் பார்க்கிறேன்...சமீபத்தில் மறுவாசிப்பு செய்தபோதும் அந்த உணர்வு எழுந்ததை மறுக்க முடியாது! இரத்தத்தை உறிஞ்சி அதே சிவப்பில் பூக்கும் அந்த விநோத ஜந்துவை வண்ணத்தில் காண கசக்குமா என்ன? வழக்கமான அடிதடி டமால் டுமீல் டெக்ஸ் கதைகளுக்கு மத்தியில் இதுபோன்ற வித்தியாசமான கதைகளும் கட்டாயம் வரவேற்பைப் பெறும்.கூடுதலாக அணியில் மோரிஸ்கோவும் இணையும் போது அந்த த்ரில் மீட்டர் உசரவே செய்கிறது. வெல்கம் மரணமுள்.
ReplyDeleteபழிக்குப் பழிஆகட்டும் மரண முள் ஆகட்டும் கழுகு வேட்டை ஆகட்டும் இரத்த நகரம் ஆகட்டும் இரத்த வெறியர்கள் ஆகட்டும் அதிரடி கணவாய் ஆகட்டும் எது போடுவதாயிருந்தாலும் கலரில் போடுங்கள் ஜயா,அதுவும் சீக்கிரமாகவே போடுங்கள் (என்னன்னா Tex கதைகள் தேவை என்பதை ஆசிரியர் புரிந்து கொள்ள)
ReplyDeleteகட்டாயமாக நோ பார் க.வெ. பழிக்குப்பழி, கலரிலேயே வரட்டும் சார்!
ReplyDeleteஇவ்வளவு நாள் காத்திருந்து விட்டோம். பழிக்குப்பழி வண்ணத்திலே வரட்டும்.
ReplyDeleteசமீபத்திய டெக்ஸ் மறுபதிப்புகள் அவ்வளவாக சோபிக்கவில்லை. வைக்கிங் தீவு மர்மம். இருளின் மைந்தர்கள் etc. மறுபதிப்பிற்கு ஏற்றக் கதைகள் மட்டுமே வெளிவரட்டுமே. சும்மா எதையாதவது போட்டு விடலாம் என மரணமுள் கண்ணுல காட்டி ரணகளமாக்கிடாதீங்கோ....
பழிக்குப் பழி பின்னர் பார்த்துக்கலாம் சார். தற்போது மரணம் முள் போடுங்கள்
ReplyDeleteஇரவு 10 மணிக்கு புகுந்த தோர்கல் உலகில் இருந்து இப்பொழுதுதான் வெளியே வந்தேன்.. இல்லை இல்லை இன்னும் அங்கேதான் உள்ளேன்... அருமை அட்டகாசம்..
ReplyDeleteதோர்கல் - Awesome...
இருக்கேன்...இல்ல...அது இத்தானா...என்னா மாயம்
Delete41வது
ReplyDelete//பழிக்குப் பழி கலரில் மட்டுமே பார்க்க வெயிட்டிங் சார் (சிறிது தாமதமானாலும் பரவாயில்லை கலரிலே போடுங்க).
ReplyDeleteமரணமுள் வேண்டாம் சார். கடந்த வருடம் இந்த கதையை மறுவாசிப்பு செய்தேன்.. முடியவில்லை. ப்ளீஸ் வேணாடாமே இந்த மரணமுள்.
பழிக்குப்பழி வரும் வரை காத்திருக்க நான் தயார்.// நன்றி PFB ஜி
//இவ்வளவு நாள் காத்திருந்து விட்டோம். பழிக்குப்பழி வண்ணத்திலே வரட்டும்.
சமீபத்திய டெக்ஸ் மறுபதிப்புகள் அவ்வளவாக சோபிக்கவில்லை. வைக்கிங் தீவு மர்மம். இருளின் மைந்தர்கள் etc. மறுபதிப்பிற்கு ஏற்றக் கதைகள் மட்டுமே வெளிவரட்டுமே. சும்மா எதையாதவது போட்டு விடலாம் என மரணமுள் கண்ணுல காட்டி ரணகளமாக்கிடாதீங்கோ....// நன்றி MH Mohideen சார்
இதே தான் சார் எனது கருத்தும்...
Sir, In my previous comments itself I have mentioned. Any Tex reprint ok except marana mul. It lacks Tex action and punch. Too much sci fi doesn't fit Tex genre. Please consider.
ReplyDeleteHave not received the books. Has it been sent?
ReplyDeleteHave not received the books. Has it been sent?
ReplyDeleteHave not received the books. Has it been sent?
ReplyDeleteமீண்டும் நாம் delivery யில் formku வந்ததில் மகிழ்ச்சி!
ReplyDelete+1...என்னால் தேதின்னாதா சரி
Deleteகோழைகளின் பூமி'
ReplyDeleteகலிஃபோர்னியாவிலிருக்கும் ஒரு ஊரிலிருந்து வெளியேறி, விதி வசத்தால் மீண்டும் அந்த ஊரில் டிடெக்டிவ்வாக (ஒரு கொலகாரனைத் தேடி) கால் வைக்கும் ஹேசல். தன் 21 ஆண்டு கடந்த காலத்தையும்,.தற்போதைய நிகழ்காலத்தையும் அசைபோட கதை யெனும் சக்கரம் சுழலுகிறது. கொலையாளியைக் கண்டுப் பிடித்தாரா? கொலையாளி யார்? அதற்கு காரணமென்ன...? ஹேசல் ஏன் அந்த ஊரிலிருந்து வெளியேறினார்? அதன் பின்னணியென்ன...? என பல தகவல்களை இக்கதை சொல்லக் காத்திருக்கிறது!
ஹேசல் & ஐசக் ஆதம நண்பர்கள் ஆனால் இருவரும் இரு துருவங்கள் எண்ணங்கள் செய்கைகளில் எல்லாம். இந்த எண்ணங்கள் செய்கைகள் அப்படியே உல்ட்டாவாக இருவருக்குள்ளும் மாறினால் ....?
ஊரையே ஆளுமையில் வைத்திருக்கும் பிராவிடென்ஸ், தன் கணவன் (மாதிரி) சொன்ன ஒரு சொல்லைக் கேட்டு மனம் மாறுவதும், ஹேசல் தன் தந்தையால், தாய்க்கு ஏற்பட்ட நிலையை எண்ணி வீட்டைவிட்டு வெளியேறி, அதற்கு காரணமான அவள் யாரென்று தெரியாமலே பிராவிடென்ஸை ................ செய்வது என நிறைய திருப்பங்கள்.
இந்த இதழின் ஹை-லைட்டே வசனங்கள் தான். ஒவ்வொன்றும் சும்மா நச்சென்று இருக்கிறது. பேனா பிடித்த எடிட்டர் பூந்து விளையாடிவிட்டார். நிறைய இடங்களில் வசனங்கள் ரசிக்க முடிந்தது. கருத்துக்களுக்கும், தத்துவத்திற்கும் பஞ்சமேயில்லை. செம!
10 - 15 பக்கங்கள் நிகழ்காலத்திலும், அடுத்த 10-15 பக்கங்கள் கடந்த காலத்திலும் என மாறி மாறி கதாசிரியர் அலெக்சாண்ட்ரோ பிலோட்டா அட்டகாசப்படுத்தியுள்ளார். இவர் கை வண்ணத்தில் சில பல மார்ட்டின் மிஸ்ட்ரி & டைலன் டாக் கதைகளும் அடக்கம். (இவரின் ஒரு கதையை ஏற்கனவே நாம் க்ராபிக் நாவலில் படித்துள்ளோம்) இக் கதைக்கு ஓவியர் பியட்ரோ விட்ரானோவின் சித்திரங்கள் அதகளப்படுத்துகின்றன
மொத்தத்தில் அட்டகாசமான வாசிப்பு அனுபவம்.
//கருத்துக்களுக்கும், தத்துவத்திற்கும் பஞ்சமேயில்லை. செம!//
Deleteஹி ஹி !
சற்றே dark கதைக்களங்களுக்குப் பேனா பிடிப்பது கொஞ்சம் இலகுவான பணியே சார் ; இழையோடும் pathos நமது எழுத்துக்களை ஒரு மிடறு தூக்கலாகக் காட்டி விடுவதுண்டு !
Deleteபாராட்டுக்களுக்கு நன்றிகள் சார் !
ரசிச்சு படிச்சு விமர்சனத்தை எழுதியிருக்கீங்க மொய்தீன் ஜி! அருமை!!
Deleteமரண முள் o. K. . கரூர் ராஜ சேகரன்
ReplyDelete, பயணம் நீண்டுக்கிட்டே போனாக்கா பட்டுவாடாக்களும் அகண்டுக்கிட்டே இருக்கும் தானே ப்வானா மிருகங்கள் எப்போதுமே தங்கக் காசுகளைதின்னுவதுல்லே ப்வானாபோய்ச் சேர்ந்தாலும் தங்கம் பத்திரமாய் இருக்கும் கையி லே ஜாஸ்தி காசில்லாத ஆள்அவர் எக்கேடோ ஒழியட்டுமே சாமி. கடைசி வரை ப்வானா வுற்க்கு அர்த்தம் சொல் லவே இல்லைங்களே சார். கரூர் ராஜ சேகரன்
ReplyDeleteமுதலாளி என்பது மாதிரியான அர்த்தம் சார் !
Deleteராஜசேகரன் @ இது எல்லாம் ஒரு டூரிஸ்ட் கைடின் மனவோட்ங்ஙளை பிரதிபலிக்கும் வசனங்கள். நான் மிகவும் சிரித்து சிந்தித்த இடம்.
Delete51
ReplyDelete51
ReplyDeleteஅதிரடி கணவாய்
ReplyDeleteஅது பொறவு
Deleteபழிக்குப்பழி - வண்ணத்திலேயே வரட்டும் சார்!
ReplyDeleteமரணமுள் - வண்ணத்தில் பார்த்துவிட நீண்டநாள் ஆசை!
அதே,அதே ஈ.வி...
Deleteமொத்த கருத்தும்,
Deleteஒத்த கருத்தாய்,
மெத்த கருத்தாய்,
சுத்த கருத்தாய் இருக்கிறது...
பழிக்குப் பழி வண்ணத்திலே...
வாகான தருணத்திலே வாகனமேறி வரட்டுமே..
காத்திருப்பின் சுகம் காதலியின் வரவுக்கு மட்டும் பாத்தியமா என்ன.?
அடடே கவித,கவித...!!!
Deleteஹைய்யா புதிய பதிவு...
ReplyDelete// கலரில் தான் ‘தல‘ தரிசனம் தேவையெனில் ஏற்கனவே நாம் வாங்கி வைத்திருக்கும் “மரண முள்” ஒரு தற்போதைய சாத்தியம் //
ReplyDeleteஹைய்யா மரண முள் கலரில் அட்டகாசமா இருக்குமே....
சார் பழிக்கு பழி வண்ணத்தில் கிடைக்கும்போது மெதுவாக வாகான தருணத்தில் கூட இறக்கிக் கொள்ளலாம்...
இப்போது மரண முள்ளை களத்தில் இறக்கலாமே...!!!
வழிமொழிகிறேன்..!
Deleteவிழி வைக்கிறேன்
Deleteபழிக்குப் பழிஆகட்டும் மரண முள் ஆகட்டும் கழுகு வேட்டை ஆகட்டும் இரத்த நகரம் ஆகட்டும் இரத்த வெறியர்கள் ஆகட்டும் அதிரடி கணவாய் ஆகட்டும் எது போடுவதாயிருந்தாலும் கலரில் போடுங்கள் ஜயா,அதுவும் சீக்கிரமாகவே போடுங்கள்.
ReplyDeleteநண்பர் வெங்கடேஷின் இந்த கருத்தை கன்னா பின்னாவென்று கண்னை மூடிக் கொண்டு ஆதரிக்கிறேன்!
💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
Good morning all.
ReplyDelete💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
அருமை...
ReplyDeleteபழிக்கு பழி வண்ணத்திலேயே வரட்டும். காத்திருப்பது நமக்கு ஒன்றும் புதிதல்லவே.
ReplyDeleteஓசையின்றி இந்த ‘காத்தாடி ராமமூர்த்தி‘ lookalike நாயகரை உட்புகுத்த //ஹா ஹா ... சரியான உவமை.. இவரின் சாயல் தான்.. நீங்கள் திரைத்துறையில் இருந்திருந்தால் சரியான நகைச்சுவை திரைக்கதை ஆசிரியர் கிடைத்து இருப்பார் எடிட்டர் சார்.
ReplyDeleteகோலிவுட் தப்பிச்சூ சார் !
Deleteஇந்த ஒப்பீட்டை நானுமே ரொம்ப ரசித்தேன்! :)))
Deleteமரண முள் கவரில் வேணும் சார் புத்தக விழாவிலேயே வந்தால் இரட்டடிப்பு சந்தோஷம் 😍
ReplyDeleteபழிக்கு பழி கலரிலேயே வரட்டும்.. இப்போதைக்கு மரண முள் ஓகே சார் .. கழுகு வேட்டை வந்தாலும் மகிழ்ச்சி சார் மரண முள் பதிலாக ..
ReplyDeleteகழுகு வேட்டை ஏற்கனவே முடிவானது தானே,அனேகமாக ஏப்ரலில் களமிறக்கும்னு நினைக்கிறேன்...!!!
Deleteஅநேகமாக இல்லை. நிச்சயமாக ஏப்ரலில்.
Deleteலயன் டாப் டென் ஸ்பெஷல் புத்தகத்தில் வந்த டெக்ஸ் கதையை வண்ணத்தில் போடலாம்
ReplyDeleteசார் ; ஆசையிருக்கு ஓராயிரம் ! அவகாசம் உள்ளதா அதற்கு - என்று யோசிக்கவும் வேணுமே ?
Deleteபுது அட்டவணை ஏப்ரலில் துவக்கம் காணும் முன்னமே மார்ச்சில் ஏதோவொரு இதழை தயார் செய்தாக வேண்டிய சூழல் ! எண்ணி பத்தே நாட்களில் பிப்ரவரியின் பணிகள் நிறைவுற்றிருக்கும் ! So அதற்குள் மார்ச்சுக்கான கோப்புகள் கிட்டிடல் அவசியமன்றோ ?
அந்த கோணத்தில் யோசிக்க முயற்சிப்போமே சார் ?
அப்போ மரண முள் ஓகே சார்.
Deleteமரணமுன் வேண்டவே வேண்டாம்
ReplyDeleteமரணமுள் ஒன்றும் மோசமான கதையல்ல. ஹோபி பழங்குடியினரின் இரத்தத்தை முழுதாக உறிஞ்சி விட்டு, சருகாகி நிற்கும் அவர்களுடைய உடலுக்கு அருகிலேயே, செந்நிறத்தில் பூத்து, விரிந்து நிற்கும் அந்த காட்சிகள் முதுகுத்தண்டை ஜில்லிடச் செய்யும்.
ReplyDeleteமரணமுள் வண்ண மறுபதிப்பு வரட்டும் சார்.
பழிக்குப்பழி விரைவில் வண்ணத்தில் வந்தால் நன்று...
நன்றி
அருமை பூபதி அவர்களே..
Delete👏👏👏👏
///முதுகுத்தண்டை ஜில்லிடச் செய்யும்.////
Deleteயெஸ்ஸூ....!!
வண்ணத்தில் இன்னும் பலமடங்கு பயங்காட்டும் உருண்டைகள்.
ஊஊஊஊஊஊ...காற்றில் வருமே கீதம் பயமூட்ட
Deleteஅருமையா சொன்னீங்க பூபதி அவர்களே..
Delete👏👏👏👏
//‘கௌபாய் எக்ஸ்பிரஸ்‘ MAXI மறுபதிப்புகளுக்கு ஏற்பாடுகள் சிக்கலின்றி நடந்தாகி விட்டன ! //
ReplyDeleteஅப்ப ஆன்லைன் திருவிழாவிற்கு இல்லையா சார் ?!
மீத சஸ்பென்ஸ் இதழ்கள் என்னன்னு தெரியலையே...!!!
எதிர்பாராத எதிர்பாருங்கள் :-)
Deleteஅந்த மூன்றில் ஒரு இதழ் ஸ்டீல் க்ளா பொன்ராஜ் ஸ்பெஷலா இருக்குமோ?
மும்மூர்த்திகள் எதாவது ஒன்று வந்தாலும் வரலாம்.
Deleteஎல் அது வாய்ப்பில்லைன்னாச்சே...
Deleteதோர்கலுக்கு ஒரு தோர்கல் - வால்ஸ்ங் ஆப் நிகோர் என்பவனிடம் சாவிகளின் காப்பாளரிடம் இருக்கும் பெல்ட் ஒன்றை எடுத்து வரும் பணி ஒப்படைக்க படுகிறது; அந்த பெல்ட் எதற்க்கு தேவை அந்த பெல்ட் வால்ஸ்ங் ஆப் நிகோர் எப்படி கை பற்றினான் கதைக்கு ஏன் தோர்கலுக்கு ஒரு தோர்கல் என பெயர் வந்தது என்பதை மாயாஜாலம், தோர்கல் மற்றும் ஜோலன் உடன் விறுவிறுப்பாக 50 பக்கங்களில் பயணிக்கும் கதை இது, தொய்வில்லாமல் அடுத்து என என என வேகமாக சென்றது!
ReplyDeleteகதாசிரியரின் கற்பனைக்கு உயிர் கொடுத்து அதனை சித்திரமாக நமது கண்களுக்கு விருந்தாகிய ஓவியரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். முதல் சில பக்கங்களின் வண்ணம் அந்த சந்திப்பின் எண்ணத்திற்கு என்றது போல் இருந்தது.
தனது தாயை கொடியவர்களிடம் இருந்து காப்பாற்ற ஜோலன் எடுக்கும் அந்த சிறிய முயற்சி அவன் எதிர்காலத்தில் எப்படிபட்ட போராளியாக வருவான் என்பதற்க்கு ஒரு சாம்பிள் எனலாம்.
தோர்கலுக்கு ஒரு தோர்கல் - இரட்டிப்பு சந்தோசம்!
PFB எல்லா ட்விஸ்டையும் இப்பவே உடைச்சிடுவிங்க போல,எங்களுக்கும் கொஞ்சம் விட்டு வைங்க...
Deleteசரிங்கன்னா :-)
Deleteஅப்புறம் நான் முட்டையின் நுனி ஓட்டை மட்டும் தான் உடைத்தேன்.. அதுவே அதிகம் என்றால் சாரி.
Deleteபரணி@ சாவி காப்பாளினி ஒரு பேணிலில் தோர்கல் உருவத்தில் வந்தது வல்ஸங் என அறிந்தவுடன் ஒரு அதிர்ச்சி பார்வையை வீசுவா! !😉
Delete@ ALL : Reg : Maxi Lucky vs TEX Color :
ReplyDeleteநண்பர்களே ; ஆசையிருக்கு ஓராயிரம் ! அவகாசம் உள்ளதா அவற்றை நடைமுறைப்படுத்த - என்று யோசிக்கவும் வேணுமே ?
2021 புது அட்டவணை ஏப்ரலில் துவக்கம் காணும் முன்னமே மார்ச்சில் ஏதோவொரு Rs.150 இதழை தயார் செய்தாக வேண்டிய சூழல் ! And எண்ணி பத்தே நாட்களில் பிப்ரவரியின் பணிகள் இங்கே நிறைவுற்றிருக்கும் ! So அதற்குள் மார்ச்சுக்கான கோப்புகள் கிட்டிடல் அவசியமன்றோ ? அத்தனை குறுகிய அவகாசத்தினுள் லாக்டௌன் நெருக்கடியில் உள்ளோரை நிர்ப்பந்தித்து கோப்புகளை வரவழைக்க வாய்ப்புகள் பூஜ்யத்துக்குப் பக்கமே !
இப்போதிருக்கும் choice ரொம்பவே சிம்பிள் : அட்டவணையில் வந்தாக வேண்டிய இதழ் - either லக்கியின் "கௌபாய் எக்ஸ்பிரஸ்" அல்லது - டெக்சின் "மரண முள்" ! இவை இரண்டுக்குமே கோப்புகள் கையில் உள்ளன எனும் போது இரண்டில் எது தேர்வானாலும் துரிதமாய்ப் பணியாற்ற இயலும் !
அந்த கோணத்தில் யோசிக்க முயற்சிப்போமே folks ?
And "போச்சு....நம்ப வைச்சு கழுத்தை அறுத்துப்புட்டே ! இதுக்கு தான் வாக்கெடுப்பு நடத்தினியாக்கும் ? " என்ற கண்சிவத்தல்களில் அர்த்தமிராது - நிலவரம் யார் கட்டுப்பாட்டிலும் இல்லை என்பதை உணர்ந்திட்டால் !!
Deleteமரண முள்
Deleteமரண முள்
Delete🕺🕺🕺🕺🕺
மரண முள்
Deleteமரண முள்
Deleteமரண முள்
Deleteஸ்பெஷல்ஸ்,புத்தகங்கள்,எதுவாக இருந்தாலும் ஒகே,அதில் ஒரு கதை டெக்ஸ் கதையாக இருந்தால் போதும்,ஒரே செட், ஒரே விலை இப்படி கொடுத்தாலும் ஒகே
ReplyDeleteஇப்போதிக்கு மரண முள்ளே போதும் 🙋
ReplyDeleteவிஜயன் சார், மரண முள்ளை வெளியிடுங்கள்.
ReplyDeleteமரண முள். நான் சிறு வயதில் படித்தே ேபாது எனக்குள் மிகவும் பயத்தை ஏற்படுத்தியது. தயவு செய்து அந்த புத்தகத்தை கலரில் வெளியிடுங்கள் சார். நான் மிகவும் ஆவலோடு எதிர் பார்க்கிறேன்
ReplyDeleteகோழைகளின் பூமி:
ReplyDeleteபொருளாதார வீழ்ச்சியும் அதைச் சார்ந்து விவாசாயிகள் மற்றும் எளிய மக்களின் உழைப்பைச் சுரண்டி கோலோச்சும் தனிநபர் ப்ராவிடென்ஸுன் ஆதிக்கமும் ஏற்படுத்தும் பாதிப்புகள் ஒருபக்கமாகவும்...
முன் வாழ்ந்த கிராமத்திற்கே சிறுவயது நினைவுகளுடன் கொலை வழக்கை புலனாய்வு செய்ய வரும் ஹேசல் மறுபக்கமாகவும் என இரு களத்தில் பயணிக்கும் கதையானது சிறு,சிறு உளவியல் கருத்துக்களையும்,சில கேள்விகளையும் நமக்கு வாசிப்பினிடையே விட்டுச்செல்கிறது...!!!
கிராம மக்களின் மிரட்சி மற்றும் மனப் பதட்டத்தின் வேரானது அவர்களின் பொருளாதாரத் தேவையும்,வாழ்வியல் தேவையுமேயாகும்...!!!
எனினும் பிராவிடென்ஸ்,கிராம மக்கள் இருவருக்குமே மனம் சார்ந்த நிம்மதிகள் கிடைப்பதில் சிக்கல்கள் நிலவுவது நகைமுரணான விஷயம்...
ஒப்பீட்டின் அடிப்படையில் கிராம மக்களின் சிக்கலும்,ப்ராவிடென்ஸியின் சிக்கலும் வேறு,வேறான வேர்களாகும்...!!!
ப்ராவிடென்ஸுடனான சந்திப்பில் ஐசக்,ஹேசல் இருவருக்கும் நிகழும் மாற்றங்கள் அவர்களுக்கிடையே விரவியிருந்த இருண்ட சிந்தனைகளை, எதிர்மறை எண்ணங்களை வெளியேற்றும் நிகழ்வாய் எடுத்துக் கொள்ளலாமா ?!
கதையின் பிரதான நாயகர்களாக எவரையும் எடுத்துக் கொள்ள தேவையில்லை,கதையே நாயகன்...!!!
பேசவும்,சிந்திக்கவும் நிறைய சிந்தனைகளை விட்டுச் செல்கிறது இந்த பூமி...!!!
மனிதமனங்களின் முரண்பாடுகளை மற்றொரு பரிமாணத்தில் அலசுகிறது இந்த பூமி...!!!
பின்பக்க குறிப்பு, நம்மை மீண்டும் மீள்வாசிப்பில் ஆழ்த்த துடிக்கிறது...!!!
சற்றே கவனம் பிசகினால் வாசிப்பில் இருண்ட எதிர்மறை சிந்தனைகள் நம்மை ஆக்ரமிக்கும் அபாயம் உள்ளதாக கூடத் தோன்றியது...!!!
வாழ்வின் கடினமான சூழலில் நம் மனத்திடத்தை இதுபோன்ற களங்களைக் கொண்டு கூட எடைப் போட்டுக் கொள்ளலாமோ...!!!
இச்சூழலில் இந்தக் களத்தின் நமது வாசகர்களிடையே இருவேறு சிந்தனைகளையும்,எண்ணவோட்டத்தையும் ஏற்படுத்தினால் அதில் வியப்பில்லை...!!!
வசனங்கள் வேற லெவல் சார்,
"எவனொருவன் சொற்பமான அவகாசமே இருந்தாலும்,வண்டி வண்டியாய் வாசிக்க முனைகிறானோ அவன் சர்வ நிச்சயமாய் புத்தகங்களில் எதையோ தேடியலைகிறான் என்று பொருள்"
"தனது வாழ்க்கைக்கோ,தன்னைச் சார்ந்தவர்களின் வாழ்க்கைகளுக்கோ அர்த்தங்களே கிடையாது என்று நினைப்பவனால்,சந்தோஷத்தை ஒருபோதும் உணரவே முடியாது ! வாழ்க்கையே ஒரு சுமையாகத்தான் தெரியும் !"
"யாரேனும் வந்து சங்கிலிகளை விடுவிக்கும் வரைக் காத்திருப்பவன் அடிமை மட்டுமல்ல-முட்டாளும் கூட"
"பிச்சைக்காரர்களுக்குத் தேர்வு செய்து பிச்சைகளை வாங்கச் சாத்தியப்படுவதில்லை பையா"
"கருணையின் ஒற்றைக் கீற்று ஏகப்பட்ட காயங்களுக்கு மருந்தாகிட முடியும் என்பது எனக்கு இப்போது தான் புரிகிறது !"
"பாலைவனம் சலனமின்றிப் பொறுமையாய்க் காத்திருந்தது..., பசி தீர்க்கத் தயாராகயிருக்கும் மிருகத்தைப் போல !! மனிதர்கள் கண்மூடி; நாகரீகங்கள் கரைந்து சென்று; இருளுக்குள் நினைவுகள் புதையுண்டு போயிடும் நாளை அது எதிர்நோக்கிக் காத்திருந்தது...!!"
எமது மதிப்பெண்கள்-10/10.
சில கேள்விகள் தொக்கி நிற்கின்றன...!!!???
Deleteஎழுதும் போது ஒரு பக்கத்து கவனம் அச்சுக்கான deadline மீதே இருந்தது சார் ; இதனை நான் எழுதத் துவங்கியதே ரொம்பவும் லேட் என்பதால் ! So 60 ம் பக்கமா ? 70 முடிஞ்சதா ? என்ற கோணத்திலேயே எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன !
Deleteஇப்போது நிதானமாய் உங்கள் பின்னூட்டங்களில் வாசிக்கும் போது தான் வரிகளின் வேகங்களை உணர முடிகிறது ! பொதுவாய் இந்த ரகத்திலான கி. நா .க்கள் ஒரு மொழிபெயர்ப்பாளனுக்குக் கிடைக்கும் ஜாக்பாட்களே ! அதனால் தான் இவற்றை ஒரு போதும் வேறு யாரிடமும் ஒப்படைக்க மனசு ஒப்புவதில்லை !
And thanks sir !
சூப்பர் கி.நா. வேகம் எடுக்க துவங்கியது
Deleteஇப்போதைக்கு உங்க விமர்சனம் பெண்டிங் வெச்சி கொள்கிறேன் ரவி.
புக் படித்து விட்டு வந்து விடுகிறேன்.
அட்டகாசமான விமர்சனம் அறிவரசு அவர்களே!!
Deleteநாளுக்கு நாள் உங்கள் எழுத்துத் திறமை கூடிக்கொண்டே போகிறது!!
தரமான சம்பவம்!!
//சமீபத்திய டெக்ஸ் மறுபதிப்புகள் அவ்வளவாக சோபிக்கவில்லை. வைக்கிங் தீவு மர்மம். இருளின் மைந்தர்கள் etc. மறுபதிப்பிற்கு ஏற்றக் கதைகள் மட்டுமே வெளிவரட்டுமே//
ReplyDelete+1
சார் இனி வரும் காலங்களில் மறுபதிப்புகளுக்கு பதிலாக புதிய டெக்ஸ்
கதைகளை வெளியிடலாமே. இவ்வழக்கம் தொடர்ந்தால் "பனிவனப் படலம்" வரை மறுபதிப்பிற்கு கோரிக்கைகள் வரும். அந்த இடத்தில் நாம் காணாத டெக்ஸ் கதைகள் மலையளவு குவிந்து கிடக்க ஏன் நாம் ரீபிரின்ட்களில் கவனம் செலுத்த வேண்டும்.
அதே போல் maxi size ல் வந்த "பிசாசுப்பண்ணை" நான் ஆவலுடன் எதிர்பார்த்து சற்று ஏமாற்றம் அடைந்த இதழ். அதிலும் விடாப்பிடியாக reprint களை தவிர்த்து புதிய லக்கி அல்லது ஒரிஜினலாக அதே சைஸில் உள்ள இதர நாயகர்களின் புதிய கதைகளை கொடுக்கலாமே சார்.
கொஞ்சமாய் யோசித்தால் இத்தீர்மானங்களின் பின்னணி புரியும் சார் !
Deleteகண்டிப்பாக யோசிக்கிறேன் சார். அடுத்த முறை நேரில் சந்திக்கும் போது தங்களுக்கு நேரம் கிடைக்குமாயின் இதன் பின்னனியை அறிந்து கொள்கிறேன்.
Deleteவிற்பனை நண்பரே....வாங்குவோரின் உண்மையான விருப்பத்தை அதுதானே உணர்த்துது
Deleteமண்ணின் பின்...
ReplyDeleteபஞ்ச் பூதங்கள் ஒன்றோடொன்று தொந்தித்திருக்கும் உண்மைமறிந்தோர்க்கு மண்ணினுள் உறை கனலை அறியாதது வியப்புமில்லை.மனித பூத உடல்களில் உறையும் நினைவுக்கனல்களை வெளிச்சமிட்டுக் காட்டிடத் தான் சாத்தியமாவென்றால் முடியுமென்பதை அந்தச் செந்தீயின் வெளிச்சத்திலேயே ஊரறிய காட்டியுள்ளது கதாசரியரின் மனக்குமுறல்.
தன்னுள் முகிழ்த்திருக்கும் பன்முக திமிறல்களை வலிமிகுநடையில் தனி ஆவர்த்தனமிட்டு அரங்கேற்றியுள்ளார் கதாசிரியர் மட்டுமல்ல நம்மாசிரியருமே...
ஹேசலின் வலிமிகு இளமையில் பலமிகு சிதறல்களின் அணிவகுப்பும் ஐசக்கின் உள்ளுறை மனரணம் வாழ்விலறும் ஓலமும் இணைகிறது.இது ஒத்த எதிர்மறை நினைவாக்கமே.காதலின் எதார்த்த தோல்வி அவற்றின் வினையூக்கியென அதிஒளி வேகத்தில் புரிந்திடும் வேதிவினையானது வேதனையின் வினையாகிறது.
"தாயின் மரணத்தின் ரணமும்- தந்தையின் தகாத உறவின் பிறவி இழிவையும் மனதிலிருத்தி சுமக்கும் ஹேசலுக்கும் (இதை எதார்த்தமாக ஏற்காததற்கு ஹேசலின் காதலியின் பொறுத்துணர மறுக்கும் எடுத்தேன் கவிழ்த்தேன் முடிவும்)" - காதலியின் பிரிவு- "அற்ப பொய் காரணத்தை பகுத்தறிய முடியாதவளின் காதல் எவ்விதம் மெய்ப்படும் என்பதை யூகித்துணர முடியாத ஐசக்கின் மூளையின் மழுங்கலும் " கதையின் மர்ம முடிச்சுகள்...
நடந்த போனவற்றை துறக்க மறந்து திரியுமிருவரும் மீண்டும் 20 வருடங்கள் கழிந்தபின்பும் அழுகி நாற்றமெடுத்த நினைவுகளோடே சந்தித்தும் சிந்திக்க மறந்து போகின்றனர்.டிடெக்டிவ் ஹேசலும் - அவனோடு இணைந்து கொலை நிகழ்த்திய ஐசக்கும் சமைக்கும் நெருப்பை விட அக்னி நட்சத்திரங்களாக சினங்கொண்டு கனல் கக்கி ஒருவரையொருவர் எதிரேதிர் கொன்று கொள்கின்றனர்.கார்கதவருகிலொ போர்வையும் மரத்தினடியிலொரு போர்வையும் போர்த்தியருப்பினும் இவ்விரு பிரேதங்களும் துப்பாக்கிகளின் ரணச்சிதறல்ளே...
மற்ற கதை மாந்தர்கள் இக்கதையின் உட்பாத்திரங்களெனினும் புனைவுகள் தெளிவின் உச்சம்...
பற்பல உணர்வுகள் உங்களை கதைப் போக்கில் ஆட்டிப் படைத்திடுவது - கதாசிரியர் பிலோட்டா வெற்றி பெறுகிறார்.
ஓவியர் விட்ரானோ - விட்டேனா பார் என்று கதை மாந்தர் பண்புகளை முதலிரண்டு பக்கங்களில் எளிதே உணர்த்திவிடுகிறார்...
ஹஹ்ஹஹ்ஹா...
என்னவென்றால் இதையுணர 113 பக்கங்களை வென்றாக வேண்டும் நீங்கள்...
புத்தகங்களின் இணைதுணையான ஷெரீப் - பிராவிடென்ஸைக் கொன்ற கொலையாளிகளை - இருபதுவருடங்கள் கழித்து - கேஸ்கட்டை புதைத்து மூடுகின்றார்
.
மொழியாக்கம் அதன் சொற்கையாடல்களும் நன்று...
அப்படியென்றால் முலக்கதை எப்படிக் கையாளப்பட்டிருக்கும் என்பதை உங்கள் யூகத்திற்கு விட்டு உணர்த்துகிறேன்...
வாசித்தால் மட்டும் போதுமா...
யோசித்தால் உணரலாம்...
உங்கள்
J
ரூபாய் 80 செலவு மட்டுமே -வாழ்க்கை எப்படி வாழ்ந்திடக் கூடாதென்பதற்கு...
Deleteஅனல் பறக்கும் அலசல் சார் !
Delete'வேற லெவல்' வார்த்தைப் பிரயோகங்களுடன் அருமையான விமர்சனம் J ji! இந்தக் கதை உங்களை என்னென்னவோ பண்ணியிருப்பதை உங்கள் எழுத்துக்களே அழகாக எடுத்துரைக்கின்றன!
Deleteஜனா @ நல்ல விமர்சனம்.
Deleteமரண முள் !!!
ReplyDeleteஇம் மாதம் மூன்று புத்தகங்களுமே சத்தமின்றி பத்துக்கு பத்துமதிப்பெண்கள் பெற்றிருப்பது மகிழ்ச்சி
ReplyDeleteமரணமுள்......
ReplyDeleteநண்பர்களே@
TeXகதைனா ஆரம்பம் முதல் டுடு டுடுனு சுட்டுத் தள்ளுவதா???
கிடையாதல்லவா!
அரிசோனாவுல போறவன் வர்றவன் எல்லோரையும் சில்லுகளை சிதற வைப்பதா???
இல்லையே!
கும்...ணங்...சத்... மட்..மடார்..படார்னு சத்தம் வந்தா தான் டெக்ஸ் கதையா?
நிச்சயமாக இல்லையே!
டெக்ஸ் கதைனா இதான் என எந்த அளவுகோல் கொண்டு இலக்கணம் வகுப்பது???
டெக்ஸ் கதைல எல்லா வெரைட்டியும் உண்டு.
இதுவும் ஒரு வெரைட்டி அவ்வளவுதான்.
டெக்ஸ் கதைகள்னா அடிதடி மட்டுமே சாஸ்வதம் என்பதும் உண்மையல்ல.
மரணமுள் மாதிரியும் உண்டு!
850டெக்ஸ் கதைகள் வந்திருக்கு இத்தாலியில், அதில் இதுமாதிரி வெரைட்டி கதைகள் ஒரு 50இருக்கும். உடனே அதை டெக்ஸ் கதை மாதிரி இல்லைனு ஒதுக்க முடியாது தானே!
இந்த ஸ்டைல் ஒரு சிலருக்கு பிடிக்கல என்று வேணா சொல்லலாம்😊😊😊😊😊
சிலருக்கு பிடிக்காத இந்த ஸ்டைல் பலருக்கும் பிடித்து இருக்கு.
திடீரெனத் தோன்றும் விண்கல்.. பூமிப்பந்தை துளையிடுகிறது.. விண்கல்லை சுற்றி சில நாட்களில் மர்ம மரணங்கள் தொடர்கின்றன.. காரணம் யார்? கண்டறிய வரும் விஞ்ஞானிக்கு உதவியாக டெக்ஸ் வில்லரும் கார்சனும்.. அடுத்தடுத்த திகில் மரணங்கள்.. பரபரக்கும் திருப்பங்கள் நிறைந்த கதை..தவற விடாதீர்...
சும்மா ஸ்...ஸ்..ஸ்...னு அவை உயிர் குடிக்க கிளப்பும் போது பீதி நம்மையும் கவ்வும்...
உயிரை குடித்து சிவப்பாக பூக்கும் உருண்டை... அபாரமான சயின்ஸ்பிக்ஷன்!
ஆதரவு தாரீர் நட்புகளே!
🙏🙏🙏🙏🙏🙏🙏
நல்ல பாயிண்ட்ஸ் டெ.வி...
Deleteமுதல்முறை இந்த கதையைப் படித்து விட்டு இரவு தூக்கம் வராமல்,போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு உருண்டுபுரண்டதாக நினைவு...!!!
டெக்ஸ்,கார்ஸன் & மோரிஸ்கோவின் காம்பினேஷனில் அருமையான சாகஸம்...
முதுகுத் தண்டை சில்லிட வைக்கும் சாகஸம்...
வாசிப்பின் முடிவில் நமக்கு அருகே முள்ளுருண்டைகள் ஏதேனும் உள்ளதா என பார்க்காமல் இருந்தால்தான் வியப்பு...!!!
உண்மை...அருமை
DeleteTex Vijay, யப்பா என்ன ஒரு ஞாபகம் !
Deleteஎனக்கும் இந்தக் கதைதான் வேண்டும் :-)
mahadbt
ReplyDeleteஆச்சர்யம். அதிரடி சிரிப்புகள் இல்லை. ஆனால் இம்மாத மற்ற இதழ்களைவிட மனதில்பச்சக் கென்று ஒட்டிக் கொண்டுவிட்டார் ஹெர்லக் ஷோம்ஸ். கரூர் ராஜ சேகரன்
ReplyDeleteபச்சை வழியெங்கும் அதான்
Deleteநீண்டநாள் முத்து/லயன் காமிக்ஸ் வாசகர், முன்னால் முத்து/லயன் NewsAgent(அதிராம்பட்டினம்), வாசகர் ஹாஜா இஸ்மாயில் அவர்களின் தாயார் LM உம்மு ஸல்மா சமீபத்தில் இயற்கை எய்திவிட்டார். ஹாஜா இஸ்மாயில் அவர்களுக்கும், அவரது குடும்பத்துக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
ReplyDeleteஆழ்ந்த இரங்கல்
Deleteஎனது ஆழ்ந்த இரங்கல்.
Deleteஆழ்ந்த இரங்கல்
Deleteஆழ்ந்த இரங்கல்கள்
DeleteRIP ! ஆழ்ந்த இரங்கல்கள்..
Deleteஆழ்ந்த இரங்கல்கள்.
Deleteஆழ்ந்த இரங்கல்கள்
Deleteஆழ்ந்த இரங்கல்கள் மற்றும் பிரார்த்தனைகள்.
Deleteஆழ்ந்த இரங்கல்கள்.
Deleteநண்பர் ஹாஜா இஸ்மாயில் தாயார் காலமானார் என்பதை ஏற்கனவே முகநூலில் பதிவிட்டு இருந்தேன். அவரைப் பற்றி தெரியாத சில தகவல்களை பகிர விரும்புகிறேன். அதிராம்பட்டினத்தில் இஸ்லாமிய சமுதாயத்தில் முதன் முதலில் படித்த பெண்மணி அவர்தான். அவருக்கு தமிழ் உருது தவிர ஆங்கிலமும் நன்றாக பேசுவார் படிக்கவும் செய்வார். நமது காமிக்ஸ் புத்தகங்களில் மாடஸ்டி பிளைசி மற்றும் ஜானி நீரோ அவரின் மனம் கவர்ந்த பாத்திரங்கள். மேலும் லாரன்ஸ் டேவிட் மாயாவி வேதாளர் கதைகளையும் விரும்பிப் படிப்பார். ஹாஜா இஸ்மாயில் அவர்கள் எடுத்திருந்த காமிக்ஸ் ஏஜென்சி அவர் வெளிநாடு சென்றபின் 10 ஆண்டுகள் இவர்தான் திறம்பட நடத்தி வந்தார். பூந்தளிர் ஏஜென்சி இவர் எடுத்து நடத்தி வந்தார். உடல் நலம் இல்லாமல் இருந்த காலத்திலும் அவர் இறப்பதற்கு இரண்டு நாட்கள் முன்னர் கூட காமிக்ஸ் படித்து விட்டு தான் இறந்து இருக்கிறார். ஏற்கனவே சொன்னது போல் நமது காமிக்ஸ் ஒரு மூத்த வாசகியை இழந்து விட்டது. அவரின் ஆன்மா சாந்தி அடையட்டும். நண்பர் ஹாஜா இஸ்மாயில் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
Deleteஆழ்ந்த இரங்கல்கள்
Deleteஆழ்ந்த இரங்கல்கள்!
DeleteRip..
Delete140th
ReplyDeleteமரணமுள் ok sir
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
Deleteசார் இருண்டகண்டம்
ReplyDeleteஆப்பிரிக்கான்னதுமே நம்மயுமறியாம ஓர் ஈர்ப்பு வந்திடுவது உண்மைண்ணாலுமே அதுக்கு ஈடு கொடுக்குது கதையுமே.அட்டகாச விறுவிறுப்புத் தோரணம் வழிநெடுக பச்சைப் பசேலென....நம்ம ஊதாப்பொடியர்கள பாத்த சந்தோசம்....மகிழ்ச்சி...இது வரை நா படிச்ச கார்ட்டூனிலேயே....அதேதான்....கண்கள் எனக்கே காது குத்துதே ரசனை மிகு வரிகள்....துவக்கத்திலேயே கொலையாளியை தூண்டுபவனை அந்த உடை காட்டி சந்தேகப்படுத்த ....கதை செல்லச் செல்ல அந்த நினைவை மழுங்கடித்து கட்சித் அவன்தான்....ஆங்காங்கே நகைச்சுவை கூ/தூவல் அடர்த்தியில்லா பச்சைப் பசேல் காடுமழகே என தங்குதடையின்றி பயணித்தேன்....காண்டா வந்து சிங்கத்த விரட்டுவதும்....ஒட்டகச்சிவிங்கியா மாறி தேடுவதும் கார்ட்டூனுக்கே உரிய அழகிய சிந்தனைக் காட்சிகள்....
...அந்த பழங்குடிகளும்...துவக்க குடில்களும்...வழியெங்கும் காடு மட்டுமா...வலை வீசுவதும் அங்கே நீங்க வார்த்தைகள வலை விரித்தும் ரசனை....36 ம்ம் பக்கம்... உன்னிப்பாக கவனிக்கனுமோ...பலிபீடத்துக்கு...கசாப்பு கடைக்கு குஷியாக ...போகுமாடு...உள்ளே நடப்பதை பாத்துப்புட்டா உசிரே போனாலும்....மயில் இறகு...கட்டாயப்படுத்தனும் போல....ஹஹஹஹஹஹஹஹ
Deleteமனதுக்குள் இனம் புரியாத ஈர்ப்பும்....ஆப்பிரிக்கா மீதான மையலும் கூடுது
பத்துக்கு பத்தாயிரம் போதாதே மதிப்பிட
DeleteDear Editor,
ReplyDeleteRegarding Marana MuL - the actual decision to be taken is if it looks good in color other the album depicting a popular story. Some of the recent reprints of Tex, when they looked good in color the story was somewhat stale to present times and when the story looked good the colors looked from a different era.
If the story vs color criteria does not provide a good balance, the option we have is:
a) Print the Lucky album -cowboy express or whatever
b) Cut a 150 Tex album and merge it with the budget of another book that is least likely to get published (like the single Thorgal album slotted for 2021 which you were unsure about - combine the budgets -150+80 and print a worthwhile album for this slot)
கூரிய்ரை கைப்பற்றி அப்படியே வைத்தாகிவிட்டது. இனிமேல்தான் பிரிக்கவே வேண்டும்.!
ReplyDeleteஎல்லோரும் இம்மாத கதைகளை அலசிக்கொண்டிருக்க..,
நானோ
முகநூல் , மெமரீஸ் ஆன் திஸ் டே என்று நினைவுபடுத்திய ஒரு விமர்சனத்தை மறுபதிப்பு செய்கிறேன்.!
காரணம்.. இப்போது அதே விமர்சனத்தை படித்தபோது அக்கதை ஏற்படுத்திய தாக்கத்தை இப்போதும் உணரமுடிகிறது.!
விமர்சனம் கீழே...
நிஜங்களின் நிசப்தம் :
Deleteஎப்படி ஆரம்பிப்பது, எதைச் சொல்வது, எதை விடுவது என்றே தெரியாத மனநிலை .... எத்தனை எழுதினாலும் இக்கதை ஏற்படுத்திய தாக்கத்தை முழுதாக வெளிப்படுத்திட முடியுமாவென தெரியவில்லை. ..!
முதல் பாராட்டுகள் இந்த Landscape design க்கு .. ஒரிஜினல் சாதரணமாக இருந்திருக்கக்கூடும்., அதை வித்தியாசப்படுத்தி கவனத்தை ஈர்க்கும் வகையில் கொடுத்திருப்பது தூள் ஐடியா..!
"பனிபொழிவு அதிகமாக இருந்த பின்னிரவு நேரம் ... மங்கலான நிலவொளி ...ஒதுக்குப்புறத்திலிருக்கும் என்னுடைய வீட்டிலிருந்து தொலைவில் அமைதியாக தோற்றமளித்த கிராமத்துக்குச் சென்றுகொண்டிருந்தேன் ..!
அங்கே நிலவியிருந்த அசாதாரண சூழல் என்னை திகைப்புள்ளாக்கியது ..ஏதோ அசம்பாவிதம் நடந்திருக்குமென யூகிக்க முடிந்தது .. ஒவ்வொரு முகமும் என்னையும் என் வருகையையும் ரசிக்கவில்லை என்பது குரோதம் நிறைந்த பார்வைகளில் தெரிந்துகொள்ள முடிந்தது ..! அவர்கள் இடைக்கச்சையில் சொருகியிருந்த கத்திகளும் என்னை மிரட்டும் தொணியில் இருப்பதாகவே பட்டது.. "
இப்படி காட்சிகளின் சூழ்நிலை விளக்கமோ, கதாப்பாத்திரங்களின் தன்னிலை விளக்கமோ எதுவுமே எழுத்துகளில் கொடுக்கப்படாமல் சித்திரங்களின் வாயிலாக விவரிக்கட்டுள்ளது அற்புதம்.! நமக்கு முற்றிலும் மாறுபட்ட பாணி ..அதேசமயம் விரும்பத்தக்க வரவேற்க்கத்தக்க பாணியும் கூட..!
இன்னும் பல இடங்களில் வரிகளில் ஒரு சம்பவமும் சித்திரங்களில் வேறு சம்பவமும் ஒரே சமயத்தில் சொல்லப்பட்டு இருப்பது சுவாரஸ்யமான யுக்தியாக தோன்றுகிறது .. உதாரணத்திற்கு பனிப்படலம் மூடிய ஏரியில் பனியை உடைத்து ப்ரோடெக் மீன் பிடிக்கும் சம்பவம் சித்திரங்கள் வாயிலாகவும் அதே கட்டங்களில் அந்த ஊருக்கு புதியவனான ஆண்டெரர் பற்றிய விசயங்களை எழுத்துகள் மூலமாகவும் சொல்லியிருப்பது..!
இந்த கதைக்கு வசனங்களும், மொழிபெயர்ப்பும் மிகவும் பாந்தமாக பொருந்தி வந்திருப்பது கூடுதல் சிறப்பு .. பல இடங்களில் வாவ் சொல்லத் தோன்றியது .. உதாரணமாக மேயர் ஆர்ஷ்யர் தன்னுடைய பன்றி மந்தையின் வாழ்க்கைமுறையை சொல்லி மறைமுகமாக ப்ரோடெக்குக்கு தங்களுடைய வாழ்வியலின் கட்டாயத்தை வெளிப்படுத்தி அவனை மிரட்டும் இடத்தை சொல்லலாம். .மேலும் ப்ரொடெக் தன்னுடைய குழந்தையிடம் பேசும் வசனம் .. அப்புறம் கமாண்டர் சொல்லும் பட்டாம்பூச்சி கதை .. ..(இன்றைய சமுதாயத்தின் நிலையை அப்பட்டமாக வெளிப்படுத்தியது இந்த பட்டாம்பூச்சி கதை .. கதாசிரியருக்கு சபாஷ்) .. மேயருக்கும் ஆண்டெரருக்கும் இடையே நடக்கும் உரையாடல் ... இதைப்போல இன்னும் நிறைய இடங்கள்., எல்லாவற்றையும் சொல்ல வேண்டுமெனில் முழுக்கதையையும் இங்கே எழுதவேண்டியதாகிவிடும்.
ப்ரோடெக்கின் வாயிலாக அதாவது அவனுடைய எண்ணங்களாக சொல்லப்பட்டு இருக்கும் இக்கதையில் அவனுடைய கனவில் வரும் அந்த திறந்தவெளி சிறைக்காவலர்கள் மற்றும் கிராமத்தை ஆக்கிரமித்த சிப்பாய்களின் முகம் அகோரமாக மனிதமுகம் போலல்லாமல் கழுகினைப் போன்று வரையப்பட்டு இருக்கும். (பின்னனியில் பிணந்தின்னி கழுகளும் இடம்பெற்று இருக்கும்) ..அதாவது அக்கொடூரர்களுக்கு மனிதகுணங்களே இல்லையென ப்ரோடெக் நினைத்திருக்கக்கூடும் எனவே அவனுடைய கனவிலும் எண்ணங்களிலும் அவர்கள் அகோரமாக சோம்பிக்களைப் போல உருவகப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். ..பாராட்டத்தக்க அம்சங்களில் இதுவும் ஒன்று.!
ப்ரோடெக்கின் மனைவி எமேலியா .. ..யாருடனும் பேசாமல் எப்போதும் ஒரே பாட்டை முணுமுணுத்துக் கொண்டிருக்கும் அந்தப் பெண்ணின் அந்நிலைக்கான காரணம் தெரியவரும்போது கிராமத்தினர் மேல் ஆத்திரம் வரும். . ஆனால் ஓரிடத்தில் அவர்கள் தங்கள் இயலாமையையும் வாழ்ந்தாக வேண்டிய கட்டாயத்தையும் விவரிக்கும்போது பரிதாபமே மிஞ்சுகிறது ..!
ஊர்மக்களுக்கு பாவன்னிப்பு வழங்கும் பாதிரியாரின் மனநிலையும், ப்ரோடொக்கின் நண்பன் டயோடேமின் குற்ற உணர்ச்சிகளும், விடுதி காப்பாளரின் மனக்குமுறலும் அக்கிராமத்தினரின் அவல வாழ்க்கையை வெளிப்படுத்துகின்றன!
~~ தொடரும் ~~
Deleteஅடுத்து ஆண்டெரர் .. ..புதிதாக ஊருக்குள் நுழையும் ஆசாமி ..தான் யாரென்றும் .. வருகையின் நோக்கம் என்னவென்றும் தெரிவிக்காமலும்...பெயரைக்கூட சொல்லாமலும் அடுத்தடுத்து செய்யும் காரியங்களால் ஊராரின் கோவத்துக்கு ஆளாகி மடிந்தும் போகிறான் ..! போதாக்குறைக்கு, உர்ராங் உட்டான்களைப்போல முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு திரியும் ஊராருக்கு மத்தியில், எப்போதும் புன்னகை தவழும் முகத்துடனும், குதிரைகளிடம் கூட நட்பு பாராட்டி பாட்டுப்பாடிக்கொண்டே மகிழ்ச்சியாக இருக்கும் ஆண்டெரரைப் பார்த்து கடுப்பாகியிருக்கவும் வாய்ப்பு இருக்கிறது..! அதனாலேயே முதலில் அவனுடைய குதிரைகளை கொன்று வன்மத்தை காட்டுகிறார்கள்.!
என்னுடைய கணிப்புப்படி ஆண்டெரர் அந்த சிப்பாய்களுக்கு இரையாக்கப்பட்ட இளம்பெண்களில் ஒருத்தியின் உறவினனாக இருக்கலாம்.! அல்லது அந்த சிப்பாய்கூட்டத்தில் ஒருவனாக கூட இருக்கலாம். .
ஏனெனில் ஊராருக்கு ஆண்டெரார் காட்டும் ஓவியக் கண்காட்சியில் குற்றவாளிகளுடன் ஒரு இளம்பெண்ணின் ஓவியமும் இடம்பெற்று இருக்கும்..பழைய நிகழ்வுகள் சிலதும் இருக்கும். . அதன் பின்னரே ஆண்டெரர் ஊராரின் கடும்கோபத்திற்கு ஆளாகிறான். . இவனை விட்டுவைப்பது ஆபத்து என்றே அவனை முடித்துவிடுகிறார்கள். .!
இக்கதையை படித்து முடிக்க ஆறுமணி நேரம் ஆயிற்று எனக்கு ..!
இக்கதை ஏற்ப்படுத்திய உணர்வுகளில் பத்து சதவீதத்தைக்கூட விமர்சனமாக எழுதமுடியவில்லை என்பதே நிஜம் ..!
பொதுவாக யுத்தம் என்றாலே வெற்றி தோல்வி மட்டுமே பேசப்படும்.! வியட்நாம் போரையே நிறுத்த முக்கிய காரணமாக இருந்தது ஒரு பாதிக்கப்பட்ட சிறுமியின் புகைப்படம்தான் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்.! அதைப்போல போரால் ஏழைஎளிய மக்களுக்கு ஏற்படும் இன்னல்களும் வாழ்க்கைத்ததர மாற்றங்களும் பெரும்பாலும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.. அப்படியொரு கையாலாகாத மக்களின் கையறு நிலையை அருமையானதொரு மாறுபட்டதொரு உணர்வுக்குவியலோடு சொல்லியிருப்பதே நிஜங்களின் நிசப்தம் ..!
நிஜங்களின் நிசப்தம் - இயலாமைகளின் மௌணம்.
இந்தக் கதை இலங்கைக்கு வரவேயில்லை நண்பரே. தமிழகத்திலேயே விற்று முடிந்து விட்டது. வாங்க முடியாமல் போனது மிகவும் கவலையாக இருந்தது. விஜயன் சாரிடம் மீள்பதிப்புக் கேட்ட போது சாத்தியமில்லை என்று கூறிவிட்டார். 😭
DeleteWow! Super!!!
Delete👏👏👏
மிகவும் நேர்த்தியான விமர்சனம்.
Deleteஇரத்தத்திலும் சதையிலும் காமிக்ஸ்களால் ஊறின ஒருத்தராலதான் இப்படி விமர்சனம் எழுத முடியும் !
Hat's off KOK
அட்டகாசமான, நேர்த்தியான, ஆத்மார்த்தமான விமர்சனம் KOK!! ஆன்டெரர் கதாபாத்திரத்தை நீங்கள் உள்வாங்கியிருக்கும் விதம் - அருமை!! உங்களுடைய விமர்சனம் மறுபடியும் கதையை ஒருவாட்டிப் படிக்கத் தூண்டுகிறது!!
Deleteநன்றி நட்பூஸ்...!!
Deleteநன்று கண்ணா.
Deleteதங்களின் விமர்சனத்திற்காகவே மீண்டும் ஒரு முறை படித்து பார்க்கிறேன் கண்ணரே...
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteமரணமுள் ஆகஸ்ட் 2019 ஈபுவியில் இரண்டாம் இடம் பெற்றது நினைவிற்கு வருகிறது. அது தான் ரெடியா இருக்கு உரிமம் வாங்கியாச்சுன்னா மரணமுள் வருவது ஓகே.
ReplyDeleteநாங்கெல்லாம் பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுங்கற ஆளுக. எனவே பழிக்குப் பழி கலரில் தான் வேண்டும். ஆனா 2021 ல எப்படியாவது கண்ணில காட்டிடுங்க.
முதல் இடம் கழுகு வேட்டை. அது 2021 சந்தாவில் இருப்பது ஓகே.
Delete///இப்போதிருக்கும் choice ரொம்பவே சிம்பிள் : அட்டவணையில் வந்தாக வேண்டிய இதழ் - either லக்கியின் "கௌபாய் எக்ஸ்பிரஸ்" அல்லது - டெக்சின் "மரண முள்" ! இவை இரண்டுக்குமே கோப்புகள் கையில் உள்ளன எனும் போது இரண்டில் எது தேர்வானாலும் துரிதமாய்ப் பணியாற்ற இயலும் !///
ReplyDeleteஹாஹாஹா! 😂😂😂!
🐄🤠 🚂 🚃
🎶🎶 "தனிமையே என் துணைவன்"🎶🎶
// "தனிமையே என் துணைவன்" //
Delete+1
“மரண முள்” இனை முன்பு படிக்கும்போது தல இன் வித்தியாசமான முள்ளந்தண்டை சில்லிட வைத்துவிட்டது நிஜம். இப்போது கலரில் வந்தால் இன்னும் அழகாக இருக்குமே! மரண முள் கலரில் வந்தால் நன்றாக இருக்குமே.............
ReplyDelete
ReplyDelete///இப்போதிருக்கும் choice ரொம்பவே சிம்பிள் : அட்டவணையில் வந்தாக வேண்டிய இதழ் - either லக்கியின் "கௌபாய் எக்ஸ்பிரஸ்" அல்லது - டெக்சின் "மரண முள்" ! இவை இரண்டுக்குமே கோப்புகள் கையில் உள்ளன எனும் போது இரண்டில் எது தேர்வானாலும் துரிதமாய்ப் பணியாற்ற இயலும் !///
இது இரண்டில் ஒன்று தான் என்றால் லக்கி வரட்டும்.
லக்கி வரட்டும் +1
Delete///இது இரண்டில் ஒன்று தான் என்றால் லக்கி வரட்டும்.///
Deleteமச்சானின் பெருந்தன்மையான மனசுக்காக டெக்ஸே வரட்டும்.!
மாப்பிள்ளையின் பெருந்தன்மைக்காக இரண்டுமே வரட்டும்
Deleteமரண முள் வரட்டும் சார்
ReplyDeleteநம்ம PFB சொன்னது நூற்றுக்குநூறு சரி..!
ReplyDeleteதோர்கல் அட்டையே கட்டிப்போட்டு விட்டது. அட்டகாசமான மேக்கிங்..!
எங்ஸலன்ட் எடிட்டர் சார்.! 49 ஆவது ஆண்டுமலரை அதகளப்படுத்திட்டிங்க..!
49க்கே இந்த லெவல்னா., 50ஆவது பொன்விழா மலரை நினைச்சா இப்பவே ஜிவ்வுன்னு இருக்கே..!
ஆமாம்ல...ஐயம் வெயிட்டிங்...:-)
Deleteஒரு அழகிய அகதி
ReplyDeleteஎப்போதுமே தோர்கல் எனது ஃபேவரைட் ஹீரோ. அதுவும் இந்த கதையை படித்ததும் அதைவிட அதிகம் பிடித்து விட்டது.
முதலில் புத்தகத்தின் தரம் ஹார்ட் பவுண்ட் அட்டையும் சரி அதில் நீங்கள் செய்து இருக்கும் நகசு வேலைகளும் அற்புதம். அட்டகாசமான making.
இப்போது கதைக்கு வருவோம். மொத்தம் 5 பாகம் அதில் 4,5 ஒரே கதை. ஒவ்வொரு கதையும் வேற வேற வேற லெவல். கிரிஸ் ஆப் வல்நார் மாதிரி ஒரு வில்லி பார்க்கவே முடியாது. அதுவும் அந்த கடைசி இரண்டு பாகங்கள் அப்ப்பா மலைக்க வைக்கிறது. என்ன டுவிஸ்ட் என்ன டர்ன், கடவுளரின் தேசம், சிகரங்களின் சாம்ராட் க்கு என்ற இரண்டு சிக்ஸர் களுக்கு பிறகு தோர் கல் அடித்த 3 வது பந்து ஸ்டேடிய த்தை விட்டே வெளியே சென்று விட்டது.
சிறுவன் ஜோலன் தன் தந்தையை விட திறமை வாய்ந்தவன் என்பதை தெளிவாக உணர்த்திய கதை.
இந்த வருடத்தின் ஆரம்பமே அமர்க்களம். 2021இன் ஃபர்ஸ்ட் புக் இந்த வருடத்தின் பெஸ்ட் புக் இதுவே.
தீபாவளி வித் டெக்ஸ் க்கு நீங்கள் அளித்த மதிப்பெண் 175/10.
இந்த கதைக்கு எனது மதிப்பெண் 1000/10.
இந்த புத்தகத்தை படிக்க இரவல் கொடுத்து உதவிய நண்பர் CP பிரபு அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
Deleteஏன் இரவல் நண்பரே...?!
Deleteஎனது புத்தகம் சேலம் சென்று விட்டது தலைவரே. எப்படியாவது படித்தே ஆகவேண்டும் என்ற ஆவலை கட்டுப்படுத்த இயலவில்லை எனவே இரவல்.
Delete***** கோழைகளின் பூமி *******
ReplyDeleteஆரம்பப் பக்கங்களில் 'ஆஹா.. ஒரு அட்டகாசமான டிடெக்டிவ் ஸ்டோரி' என்று நினைக்கவைத்து, பிற்பாடு 'ஹிஹி அதெப்படி?!! நான் கி.நா-வாக்கும்' என்று நமட்டுச் சிரிப்புடன் உணர்த்தி, இறுதியில் ஒரு க்ரைம் தில்லருக்கான ட்விஸ்டுடன் முடிந்து நம்மை "பார்ர்ரா.. இந்த படைப்பாளிகள!!" என்று வியப்பில் ஆழ்த்தும் படைப்பு!!
கடேசி பக்கத்தில் நம் எடிட்டர் கேட்டுக் கொண்டதற்கிணங்க கதையை ஒரு மறுக்கா வாசிப்புச் செய்தால் கதையின்/படைப்புத் திறனின் வீரியத்தை நம்மால் உணர்ந்திடமுடியும்! நேரம் கிடைக்காதவர்கள் முதல் 20 பக்கங்களையாவது மறுவாசிப்புச் செய்து அதை உணர்ந்திடலாம்!!
சிலபல வசனங்கள் எல்லாம் வேற லெவல்!!
இது.. இதுக்காண்டிதான் நான் கி.நா'க்களை நேசிக்கிறேன்!
என்னுடைய ரேட்டிங் : 10/10
அருமை...செயலர...அவர்களே...
Deleteகோழைகளின் பூமி எனக்குமே பிடித்த கதை என்பதால் இதே விமர்சனத்தை எனது பெயரிலும் படித்து விடலாம் ..
மேலும் இது போன்ற கிராபிக் நாவல்களில் இது போல் தெளிவான சித்திரங்களும் கதையில் இன்னமும் ஒன்ற வைக்கிறது என்பதையும் இணைத்து கொள்ளவும்..
தோர்கல் ஆண்டுமலர் இன்று தான் படிக்க ஆரம்பிக்க போகிறேன்..ஆனால் அதற்கு முன் இதழின் தரத்திற்கும் ,தெளிவான அழகான சித்திரங்களுக்கும் ,அசத்தலான அச்சுத்தரத்திற்கும் பலமான பாராட்டுதல்களை இப்பொழுதே சொல்லி கொள்கிறேன் சார்..
ReplyDeleteசூப்பர்..சூப்பர்..சூப்பர்...
மறுபதிப்பு இதழ் எது வருகை தருமாயினும் எனக்கு ஓகே சார்..என்ன டாக்டர் சுந்தர் சார் தான் பல வருடங்களாய் பழிக்கு பழிக்காக பழியாய் கிடக்கிறார்..:-)
ReplyDeleteஅவருக்காகவது கோப்புகள் விரைந்து வர வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்..
அறிவரசு ரவி..ஜே இருவரின் கிராபிக் நாவல்களின் விமர்சனமும் A 1.
ReplyDeleteபாராட்டுக்கள்...