நண்பர்களே,
வணக்கம். பீலா விடுவதில் நிறையவே நடைமுறைச் சிக்கல்கள் உண்டு தான்! சாமி அந்த ஆந்தை முழிகளை குத்துவாரோ – இல்லையோ, பீலாக்களின் மறுமுனையிலிருப்பது நீங்களாக இருப்பின், சூட்டோடு சூடாய் மூக்கில் குத்தி விட்டிருப்பீர்கள் ! “உலகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக” என்ற பில்டப்பைப் பண்ணிப்புட்டு – “வெடிக்க மறந்த வெடிகுண்டையோ”; “தூங்கிப் போன டைம்பாமையோ”; “துயில் எழுந்த பிசாசையோ” உங்கள் தலைகளில் கட்டி விட்டால் – குத்து விடும் உங்கள் முனைப்புகளில் தவறே இருக்காது தான்! ஆனால் இது தவிர்த்துமே ஒரு நடைமுறைச் சிக்கலுள்ளது – பீலாக்களின் பின்தொடார்ச்சியாய் ! அது தான் – மெய்யாலுமே ”புலி வருதுங்கோய்” என்று நான் கூவிட அவசியமாகிடும் நேரங்களில், நீங்கள் விடக்கூடிய மெகாக் கொட்டாவிகள் ! ‘அட… இந்தப் பளாபளா மண்டையனுக்கு பில்டப்பெல்லாம் பால்பன் சாப்பிடற மாதிரி ; இதுவுமே அந்த ரகம் தான் !‘ என்று நீங்கள் கருதினால் தவறு நிச்சயம் உங்கள் மீதிராது ! சரி… இப்போது இந்த ஆராய்ச்சிக்கு என்ன அவசியம் ? என்ற கேள்வியா.... அவசியம் எழுந்துள்ளதே – ”புலி வருதுடோய்; செம ஷார்ப் நகங்களுடன் செம தில்லாய் ஒரு புலி வருதுடோய்!” என்று நான் கூவிட! இது என்ன புதுக் கரடி ? என்று கேட்கீறீர்களா- சொல்கிறேனே...! காத்திருப்பது ஒரு சாதாப் புலியல்ல… கோட் & சூட் போட்டதொரு துப்பறியும் சூரப்புலி ! அதிலும் பழசின் கெத்தையும், புதுசின் பரபரப்பையும் ஒன்றிணைத்து நடைபோடக் காத்திருக்கும் புலனாய்வுப் புலி ! Without anymore ado – இது காத்திருக்கும் ரிப்போர்ட்டர் ஜானியின் டபுள் ஆல்பமான ”ஆதலினால் கொலை செய்வீர்” இதழுக்கான preview படலமே என்பதைப் போட்டு உடைத்து விடுகிறேனே !
கிட்டத்தட்ட கடந்த 100 மாதங்களாய், எனது நாட்கள் புலர்வதும், நிறைவுக்கு வருவதும் வண்டி வண்டியாய்க் கதைகளோடும், வண்டி வண்டியாய் தொடர்களோடும் தான் ! மொழிபெயர்ப்புப் பணி ; எடிட்டிங் ; ப்ரூஃப்ரீடிங் என்று ஏதேனும் சமாச்சாரங்களால், தினப்படி என் மேஜைகள் நிறைந்து நிற்கும்! So ஒரு புள்ளியில் – ‘ப்பா… இந்த மாசம் பின்னிப்புட்டோம்லே!! என்று ஹிட்டடித்ததொரு பராகுடாவையோ ; பிஸ்டலுக்குப் பிரியாவிடையையோ பார்த்தபடிக்குப் பல்லிளித்துக் கிடக்கும் சொகுசெல்லாம் நான்கே நாட்களைத் தாண்டிடாது ! அதற்குள் அட்டவணையின் அடுத்த மாதத்துக் கிங்கரப் பணி ரெடியாகக் காத்திருக்கும் ! And அடுத்த கத்தைக்குள் புகுந்திடும் நேரம் – மண்டைக்குள் எல்லாமே ஒருவித ‘மசமச‘ கலரில் தான் தோற்றமளிக்கும் ! ஒரு மாதம் நிறைவு காண்பதும், அடுத்தது துவங்குவதும் – கன்னியாகுமரியில் சமுத்திரங்கள் ஏதோவொரு புள்ளியில் ஒன்றிணைவது போல ஒன்றோடொன்று merge ஆகி நிற்கும் ! So நாளாசரியாய் ஒருவிதச் செக்குமாட்டு routine குடிகொண்டிருப்பது தவிர்க்க இயலாது போய்விடும் ! இடையிடையே ஒரு ”பந்தம் தேடிய பயணமோ” ; ஒரு “பிரிவோம் சந்திப்போமோ” பிரசன்னமாகும் போது தான் ஒரே ரகப்பணிகளுக்கு மத்தியிலுமே மண்டைக்குள் பல்ப் எரிவது சாத்தியமாகும் !
அந்த விதத்தில் பார்த்தால் 2020 has been quite decent ! க்ளாஸிக் ஜேம்ஸ் பாண்ட் கதைகள் ; டெக்ஸ் சாகஸங்கள்; டயபாலிக்; மாடஸ்டி தொடர்கள்; ட்ரெண்ட்; ட்யுராங்கோ என்ற சலனமற்ற பயணத்தின் மத்தியில் சில அதிர்வேட்டுக்கள் அவ்வப்போது பற்றித் தெறித்து வந்துள்ளன – தானே?!
- பிழையில்லா மழலை (Damocles)
- SODA
- 2132 மீட்டர்கள்
- பிரிவோம்… சந்திப்போம்!
- எதிரிகள் ஓராயிரம்
- பந்தம் தேடிய பயணம்
- கண்ணான கண்ணே!
- தனித்திரு… தணிந்திரு
என்று இம்முறை சற்றே வித்தியாசம் காட்டி நின்ற இதழ்களின் எண்ணிக்கை கணிசம் தானே ? வழக்கமான கதைகளில் பணியாற்றுவதை விடவும், இது போன்ற மாறுபட்ட களங்கள் கண்ணில்படும் போது உள்ளுக்குள் துளிர்விடும் ஒரு மெல்லிய உற்சாகமானது, பணிகளில் அயர்ச்சி தெரியாது செய்து விடுவது வழக்கம். ஆனால், ரொம்ப நாட்களுக்குப் பின்பாய், “அயர்ச்சியாவது - புண்ணாக்காவது; இந்த ஆல்பத்தை எழுதியே தீரணும்டோய்!” என்ற உத்வேகம் பொங்கியது இம்மாதம் தான் !
ரிப்போர்ட்டர் ஜானி ! 1986 முதல் இவருடனான நமது பரிச்சயம் தொடர்கிறது ! இந்த 34 ஆண்டுகளில் இவரது சாகஸங்களில் எத்தனையைப் போட்டிருப்போம் ? என்ற புள்ளிவிபரமெல்லாம் கைவசம் நஹி…ஆனால் சுமார் 30 இதழ்களிலான இவருடனான பயணத்தின் போது இரண்டே விஷயங்கள் மட்டுமே என்மட்டிற்கு மனதில் தங்கியுள்ளன : முதலாவது : மனுஷனின் கதைகளின் கடைசி இரண்டோ / மூன்றோ பக்கங்களில் ஒட்டுமொத்தப் புதிர்களையும் விடுவிக்க கதாசிரியர் மெனக்கெடும் பாணி ! பாசமானதொரு தாய், மசக்கையான பிள்ளைக்குச் சாப்பாட்டு ஐட்டங்களைத் திணியோ திணியென்று திணிக்கும் பாணியில் – ஜானியின் ஒவ்வொரு ஆல்பத்தின் இறுதிப் பக்கங்களிலும் கதாசிரியர் – ‘அந்தத் தடயம்… இந்தத் துப்பு… இங்கே விடைகள்… அங்கே கேள்விகள்‘ என்று திணித்துத் தள்ளுவதையும், அவற்றை முழுசாய், உருப்படியாய் புரிந்து கொண்டு பணியாற்றுவதற்கு நாக்குத் தள்ளுவதுமே நினைவில் நிற்கும் முதல் சங்கதி ! இரண்டாவது – அந்தக் கேரட் மண்டையுடனான பளீர் சிரிப்பு !
‘டக்‘கென்று யோசித்துப் பார்க்கும் போது – ‘சிரித்த முகம்‘ என்ற அடையாளத்துக்கு அருகதையுள்ளோராய் எனக்குத் தோன்றுவதும் இரண்டே பேர் தான் : முதலாமவர் – ரிப்போர்ட்டர் ஜானி & இரண்டாமவர் ஜென்டில்மேன் டிடெக்டிவ் ரிப்கிர்பி ! பாக்கிப் பேரெல்லாம் இறுகிய முகங்கள்; முறைக்கும் ரகங்கள் என்றே சொல்வேன்! Give it a moment’s thought folks:
டிரெண்ட் : ஒரு கம்பீரமான முகம் – ஆனால் கொரோனாவுக்கு மருந்து தேடுவதும், கனேடியக் காவலரின் முகத்தில் புன்சிரிப்பைத் தேடுவதும் சமஅளவிற்குச் சிரமமான முயற்சிகள் தானே ?
ட்யுராங்கோ : ‘சி-ரி-ப்‘ என்று ஆரம்பிப்பதற்குள் சுட்டுத் தள்ளிவிட்டுத் தன்பாட்டுக்கு நடையைக் கட்டிவிட மாட்டாரா மனுஷன்?
SODA : "அட… போடா… மனுஷனுக்கிருக்கும் பிடுங்கல்களுக்கு இளிப்பு ஒன்று தான் குறைச்சல் ?" என்பாரோ ??
XIII : தெய்வமே… இந்த ஆட்டத்துக்கே ஞான் வரில்லா…!!
தோர்கல் : ரம்பயமான ஆணழகனே… ஆனால் போகும் திக்கெல்லாம் ஆரிசியாவை இட்டாண்டு போகின்றவரைச் சிரிக்கக் கேட்பது டூ மச்சோ ?
டெக்ஸ் : வெள்ளிமுடியாரைக் கலாய்த்தாதொழிய ‘தல‘ டெரர் பார்ட்டியன்றோ ?
மர்ம மனிதன் மார்டின் : ஆங்… அது வந்து… என்ன சொல்ல வர்றேன்னா…? சரி.. விடுப்பா....!
ஜேம்ஸ் பாண்ட் : 007 சிரித்திட என்ன அவசியமென்பதை அறியாதோரா நாம் ?
டயபாலிக் : வாணாம்… அழுதுருவேன் !
Of course கார்ட்டூன் பார்ட்டிகளையோ; மகளிரணியையோ இந்த அலசலுக்கு உட்படுத்துவது நியாயமாகாது என்பதால் அவர்களை ஆட்டத்துக்குச் சேர்த்திடவில்லை! So “புன்சிரிப்பு” என்ற நினைவுகளை எனக்குள் விதைத்து வைத்த வகையிலும் ரிப்போர்டர் ஜானி என்மட்டிற்கு memorable!
ஆனால் பணியாற்றும் போது, உராங்குட்டானாய் முழிக்கச் செய்பவரும் இவரே ! “சிகப்புப் பாதை” என்றதொரு பாக்கெட் சைஸ் b&w இதழினில் நான் அந்நாட்களில் போட்ட மொக்கை இன்றளவிற்கு மறக்கவில்லை ! ஆனால் – ஜானியின் இந்த இடியாப்ப template–ல் சின்னதாகவொரு மாற்றத்தை உணர முடிந்தது - சென்றாண்டினில் ! And that was because ஜானி 2.0 தொடருக்குப் புதுக் கதாசிரியர் Zidrou தந்திருந்த treatment ரொம்பவே refreshing ஆக இருந்தது. கதையின் ஓட்டத்தோடு ஒன்றிடுவதோ ; க்ளைமேக்ஸில் சிண்டைப் பிய்க்காது பயணிப்பதோ - பெரிய சிரமமாகவே தோன்றவில்லை ! அதனால் தான் Old is Gold என்பதில் தீரா நம்பிக்கை கொண்ட உங்கள் மத்தியில் – ‘என்ன தான் இருந்தாலும், பழசு தான் டாப்!‘ என்ற முணுமுணுப்பு உரக்கக் கேட்டு வந்தாலுமே, நடப்பாண்டில் நான் ஜானி 2.0 ஐ உட்புகுத்த ஆசைப்பட்ட்டேன் ! And even better - ஒரே இதழில் க்ளாஸிக் ஜானி Vs. புதுயுக ஜானி மோதிக் கொண்டால் ஒரு தீர்க்கமான முடிவு பிறக்குமென்று பட்டது ! அதன் பலனே ”ஆதலினால் கொலை செய்வீர்!”
ரிப்போர்டர் ஜானி கதைகள் என்றைக்குமே நமது கருணையானந்தம் அவர்களின் பொறுப்பாக இருந்து வந்துள்ளதால், நான் பெருசாய் அதற்குள் தலைநுழைக்கப் பிரியப்பட்டதில்லை! இம்முறையும் அந்த routine–ல் மாற்றமிருக்கவில்லை ; 2 ஆல்பங்களையும் பிரெஞ்சு மொழிபெயர்ப்புகளோடு, லாக்டவுணுக்கு முன்னமே அனுப்பி விட்டிருந்தோம் ! And க்ளாஸிக் ஜானியின் தமிழாக்கம் இரண்டு வாரங்களில் டாணென்று வந்தும் சேர்ந்தது ! ஆனால் அந்த ஜானி 2.0 கதையின் சார்பாய் எனக்கு வந்தது அங்கிளிடமிருந்து போன் மட்டுமே : “இது அவ்ளோவா புரியலியேப்பா… கஷ்டப்பட்டு பத்துப் பதினைந்து பக்கங்களை எழுதிப் பார்த்தாச்சு – மேற்கொண்டு இழுக்க மாட்டேன்கிறதே!‘” என்று சொன்னார். ‘சரி… ரைட்டு… அதைத் திருப்பியனுப்பிடுங்க ; நிறைய நேரமிருக்குது… பார்த்துக்கலாம் !" என்று சொல்லி வைத்தேன் பந்தாவாய் ! ஆனால் லாக்டௌனோடு “சோம்பல்” எனும் புதுவரவும் இணைந்து கொள்ளுமென்பதை நான் எதிர்பார்க்கவேயில்லை தான் ! "அப்பாலிக்கா பார்த்துக்கலாம்…" என்றபடிக்கே நாட்களைக் கடத்த – ஒரு சுபயோக சுபதினத்தில் – அக்டோபர் வெளியீடு : ”ரிப்போர்டர் ஜானி” என்று எனது டயரி அறிவித்தது ! ஓடவும் முடியாது – ஒளியவும் முடியாது - என்றான பின்னே முதல் 10+ பக்கங்களின் தமிழ் டைப்செட்டிங் செய்யப்பட்ட pages & பாக்கியிருந்த 40+ பக்கங்கள் + பிரெஞ்சிலிருந்தான ஸ்க்ரிப்ட் என்று எடுத்துக் கொண்டு அமர்ந்த போது – வயிற்றைக் கொஞ்சமாய்க் கலக்கியது. நமது french மொழிபெயர்ப்பாளரோ பரீட்சைப் பேப்பரில் சுமார் 40 பக்கங்களுக்கு மணி மணியான கையெழுத்தில் ஆங்கில ஸ்க்ரிப்டை வெளுத்து வாங்கியிருக்க அதை வெறித்துப் பார்த்தபடிக்கே கொஞ்ச நேரத்தைக் கடத்தினேன்! For the umpteenth time அவரது ஆற்றலை எண்ணி வியக்காதிருக்க இயலவில்லை ! ‘எனக்கு ஒளிவட்டமே ஒத்துக்காது!‘ என்று ஒதுங்கிக் கொண்டு, பெரிதாய் சன்மானங்கள் சார்ந்த எதிர்பார்ப்புகளுமின்றி கடந்த 19 ஆண்டுகளாய் ஒரு தேர்ந்த இயந்திரமாய் பிய்த்து உதறி வருபவருக்கு வயது 67 என்றால் நம்ப முடியவில்லை தான்!
”ரைட்டு. 67-ல் அவர் செய்வதை - 53-ல் நீ செய்யாட்டி என்ன புடலங்காய்க்குப் பீற்றிக்கணும்?” என்று என்னை நானே கேட்டுக் கொண்டு, கதைக்குள் புகுந்தேன். கருணையானந்தம் அங்கிள் குறிப்பிட்டிருந்தது சரி தான் என்பது சீக்கிரமே புரிந்தது. முதல் பத்துப்-பதினைந்து பக்கங்களில் தமிழ் ஸ்க்ரிப்ட் கோர்வையே இன்றி – இலக்கின்றிப் பயணிப்பது புரிந்தது ! ஆனால் ஏதோ ஒருவித ஈர்ப்பு கதையின் ஓட்டத்தில் தென்படுவதை உணர முடிந்தது ! முதல் 10 பக்கங்களின் பெரும்பகுதியை மாற்றியமைத்த கையோடு, தொடர்ந்தவற்றை பிரெஷ்ஷாக எழுத ஆரம்பித்தேன் ! ஆங்கிலத்தில் ஒரிஜினல்கள் இல்லாத பட்சங்களில் கதைகளை முழுசாய்ப் படித்து விட்டு எழுத ஆரம்பிக்கும் பொறுமைகள் என்றைக்குமே இருந்ததில்லை எனும் போது – இந்த முறையும் அதனில் மாற்றங்கள் இருந்திடவில்லை ! Take it as it comes என சிறுகச் சிறுக வண்டி நகர, நகர – எனக்கு இந்தப் புதுக் கதாசிரியர் மீதான ஈர்ப்பு கூடிக் கொண்டே போனது!
ஜானியின் அந்த பளீர் புன்னகையினையோ ; நமக்குப் பரிச்சயப்பட்டு விட்டுள்ள அந்த youthful தோற்றத்தையோ, புது ஓவியர் Simon VAN LIEMT பறித்துக் கொண்டு விட்டிருந்தாலும், இந்த ஜானி 2.0க்கு சற்றே கரடு முரடான லுக்ஸ் + சற்றே mature வதனம் ரொம்பவே பொருத்தமாய் இருப்பதாய் எனக்குப்பட்டது ! பற்றாக்குறைக்கு இது நாள் வரைக்கும் மில்க் பிகிஸ் சாப்பிடும் ரேஞ்சிலேயே ஜானி – நாடீன் உறவு சித்தரிக்கப்பட்டிருக்க, இங்கோ 'வேலு மிலிட்டரி' பாணியில் கதாசிரியர் அதனை மாற்றியமைத்திருக்க – மாமூலான ஜானி கதைகளிலிருந்து ரொம்பவே மாறுபட்ட feel !
கதை ஓட்டமெடுக்க, எனக்குள்ளேயும் ஒரு வேகம் தொற்றிக் கொண்டது ! எப்போதும் போலவே இங்கேயும் கதை நெடுக சந்தேகத்தின் பார்வைகளை ஈர்க்கும் ஜனம் படையெடுத்திடுவது தொடர்ந்தது & கதையின் களமோ நமக்கு நிறைய விதங்களில் relate செய்து கொள்ளும் விதத்திலிருக்க – என்றைக்கும் இல்லாத திருநாளாய் – முகரை முழுக்கப் புன்னகையோடே கதையின் முழுமைக்கும் பணியாற்றியுள்ளேன் ! இந்த ஆல்பம் வெளியான பின்னே புரியும் - அதற்கான காரணம் ! And true to the original template – கதையின் க்ளைமேக்ஸில் ஒரு மந்தை மக்களை நிறுத்தி வைத்து ஜானி தனது புலனாய்வின் போக்கை விளக்க ஆரம்பித்த வேளையில் – ‘மறுபடியுமா? இங்கேயுமா ?‘ என்று லைட்டாக ஜெர்க் அடித்தது தான் ! ஆனால் இம்முறையோ, ஸ்படிகக் கண்ணாடியாய் அத்தனை முடிச்சுகளும் ஏக் தம்மில் அவிழ்ந்திட – எழுந்து நின்று பெல்ஜியம் இருக்கும் மேற்கு திசை நோக்கிக் கைதட்டத் தோன்றியது ! ரொம்பச் சுலபமானதொரு கதைக்கருவைக் கையிலெடுத்துக் கொண்டு அதனை கதாசிரியர் 54 பக்கங்களில் சொல்லியுள்ள ஸ்டைல் அமர்க்களமாய்பட்டது! Maybe – just maybe இது பணி முடிந்த நொடியின் உற்சாக மிகுதியால் சற்றே ஜாஸ்தியான ரியாக்ஷனாகவும் இருக்கலாம் தான் ; ஆனால் இது மெய்யாலுமே “புலி வருது moment” தான் என்று என் gut feel சொல்கிறது ! பணி முடித்து விட்டு, இறுதிக்கட்ட எடிட்டிங்கில் இதை எழுதும் போது ஈடுபட்டிருக்கிறேன் & இப்போதுமே கதையின் freshness என்னுள் தொடர்கிறது !
இதழ் வெளியான பின்னே, இதற்கென கொஞ்சம் அவகாசங்களை ஒதுக்கிட நம் எல்லோருக்குமே சாத்தியப்பட்டால் – ஒரு செம ஜாலி அலசல் அரங்கம் வெயிட்டிங் என்பேன் ! இது போன்ற ஆல்பங்கள் அடிக்கடி கிட்டுவதில்லை எனும் போது – too good to miss out on ! அதே போல – இந்தக் கதையின் பணி என் கைக்கு வந்தது யதேச்சையாகத் தான் என்றாலும் – இப்போது அதை எண்ணி மகிழ்கிறேன் ! தினமும் வேலைகள் வாய்த்திடும் தான், ஆனால் இத்தகைய அனுபவங்கள் ஆடிக்கும், அமாவாசைகளுக்குமே தான் வாய்த்திடும் ! So நடப்பாண்டின் நினைவில் நிலைத்திடக் கூடிய இதழ்களின் பட்டியலில் இந்தக் கதையும் இடம்பிடிக்குமென்ற நம்பிக்கையோடு இதோ இந்த ஆல்பத்தின் previews பக்கமாய்த் திருப்புகிறேன் :
Front & Back - ஒரிஜினல் டிசைன்களே; 6 மாதங்களுக்கு முன்னரே கோகிலா மெருகூட்டியவை ! And இதோ – உட்பக்கங்களது preview :
And மாறுபட்ட களங்களின் படலம் இந்த இதழோடு ஓய்ந்திடாது! ஜம்போவின் “
மா…துஜே சலாம்” ஆல்பத்தின் முதல் half-ல் பயணம் பண்ணிக் கொணடிருக்கிறேன் & பார்த்தமட்டிற்கு இதுவுமே செம refreshing களம் ! அது பற்றி – அடுத்த ஞாயிறு ! (ஷப்பா…. ஆனாலும் நீங்க ரெம்போ பாவம் தான்!) Before I sign out - இந்த வாரத்தில் கேட்க நினைக்கும் கேள்விகள் :
1 "சிரித்த முகம்" என்ற அடையாளத்துக்கு உங்கள் பார்வைகளில் best suited யாரோ ? கார்ட்டூன் நாயகர்கள் அல்லாது ?
2 ரிப்போர்ட்டர் ஜானியின் தொடரினில் இதுவரையிலும் best எது ? உங்கள் பார்வையினில் ?
3 சந்தாவில் அல்லாதோரில் யாரெல்லாம் ஜானியை கடையில் வாங்குவதுண்டு ? வாங்குவதில்லை ?
Bye all! See you around....! Stay safe !!
P.S : ஆன்லைன் புத்தக விழாவின் பொருட்டு 2 இதழ்கள் தயாராகி வருகின்றன ! அணு குண்டா ? ஆயிரம்வாலாவா ? என்ற ரேஞ்சுக்கான கற்பனைகள் வேண்டாமே ப்ளீஸ் ? And நமது கைவசமுள்ள புக்சின் ஸ்டாக் விபரம் - pdf file ஆக நம்மவர்கள் வைத்துள்ளனர் ; வாட்சப்பில் (98423 19755) கேட்டு வாங்கிக்கொள்ளலாம் - ஆர்டர் செய்திட உதவிடுமெனில் ! நடப்பாண்டின் புக்ஸ் + Cinebook இதழ்களுக்கு 10% & பாக்கி அனைத்துக்கும் 20% !