நண்பர்களே,
வணக்கம். ஒவ்வொரு மாதமும்,இதழ்களை உங்களுக்கு despatch செய்திடும் நாள் வரையில் அட்டைப்படங்களை இங்கே உங்கள் கண்ணில் காட்டாது வைத்திருப்பதன் மூலம் ஒரு குட்டியான எதிர்பார்ப்பு + சுவாரஸ்யத்தை பில்டப் செய்திட முடியும் என்பது எனது எண்ணமாக இருந்து வந்துள்ளது ! ஆனால் இந்த ஒரு முறை அந்தக் கட்டுப்பாட்டிற்கு விலக்குத் தரலாமெனத் தோன்றியது ! இந்த "தயாள" சிந்தைக்குப் பின்னணிக் காரணங்கள் 4 ...!
ஒன்றுக்கு மூன்றாய் இம்மாதம் நம் இதழ்கள் வரவிருப்பதும் ; அவற்றில் ஒரு இதழுக்கு cover வடிவமைக்கும் பணியானது வாசகர்களின் கைகளில் என்பதும் நாம் அறிந்ததே ! So நண்பர்களின் அட்டைப்பட டிசைன் முயற்சிகள் ஒரு பக்கம் ; பாக்கி 2 இதழ்களுக்குமான நமது டிசைனிங் வேலைகள் மறுபக்கமென - கடந்த நாலைந்து நாட்களாய் நிறையவே ஜானிகளையும், இரவுக் கழுகாரையும் ; வியட்நாமின் மஞ்சள் முகத்தவர்களையும் பார்த்திட முடிந்ததால் - கொஞ்சமேனும் உங்களோடு அனுபவங்களைப் பகிர்ந்தால் தேவலை என்று தோன்றியது ! So இது காரணம் # 1 !
இதழ்கள் வெளியாகும் சமயம் வரை KBGD (KAUN BANEGA GRAPHIC DESIGNER ) போட்டியின் வெற்றியாளரை அறிமுகப்படுத்தாது இருக்கும் பட்சத்தில் - 3 இதழ்களின் வருகை + விமர்சனங்கள் + தீபாவளிப் பண்டிகையின் களேபரங்களில் அந்தத் திறமையாளரின் மீதான ஒளி வட்டம் முறையாய் பாய்ந்திட வாய்ப்புக் குறைந்திடக் கூடும் என்று மனதுக்குத் தோன்றியது ! 'ஆகையால் இப்போதே வெற்றியாளரையும், அவரது ஆக்கத்தையும் அறிமுகப்படுத்துவோமே !' என மண்டைக்குள் தோன்ற - அது காரணம் # 2 ஆனது !
இம்மாத டெக்ஸ் ஸ்பெஷல் பொருட்டு நண்பர்களிடையே நிறையவே எதிர்பார்ப்புகள் நிலவுவது புரிந்திட முடிகிறது ! இந்த இதழுக்கு முன் + பின் அட்டைகளை வடிவமைக்கும் பணியை நமது ஓவியர் மாலையப்பனிடம் ஒப்படைத்து இருந்தோம். துவக்கம் முதலே சின்னச் சின்னதாய் 2 டிசைன்களிலும் மாற்றங்கள் அவசியப்பட்டுக் கொண்டே இருந்தது ஒரு பக்கமெனில், அவரது பணி நிறைவுற்று - நமது டிசைனர் பொன்னனிடம் மெருகூட்டும் வேலைக்காக 2 படங்களும் சென்ற பொது, அங்கும் மந்த நிலையே ! முதல் சில முயற்சிகளில் எனக்குக் கொஞ்சமும் திருப்தி ஏற்படவில்லை ! இறுதியாக நானே சில-பல மாதிரிகளைக் குடைந்து எடுத்துக் கொடுத்து - அந்த வண்ண சேர்க்கையை முன்னட்டைக்குப் பயன்படுத்திப் பார்த்தோம் ; 'பளிச்' என பலன் தெரிய - நமது டெக்ஸ் தீபாவளி ஸ்பெஷலின் அட்டைப்பட flashback இது ! So அதைச் சொல்லி கொஞ்சமாய் காலரை தூக்கி விட்டுக் கொள்ளலாமே என்ற ஒரு நப்பாசை காரணம் # 3 !
4-வதும் , பிரதான காரணமும் - இம்மாத இதழ்களோடு வரக் காத்திருக்கும் 2014-க்கான அட்டவணையே ! தொடரும் 12 மாதங்களது schedule ; நாயகர்கள் பட்டியல் ; என 2014-க்கான நமது பயணத் திட்டம் அதனில் இருக்கும் ! அந்த அறிவிப்புகள் கொண்டு வரவிருக்கும் விவாதங்கள், அபிப்ராயங்கள், கலந்துரையாடல்கள் et al நிச்சயம் வண்ணமயமாய் இருந்திடும் என மனதுக்குத் தோன்றுவதால் - அந்த வேளையில் இந்த அட்டைப்படங்கள் ஓரம் தள்ளப்பட வாய்ப்புண்டு என்று நினைக்கத் தோன்றியது ! So இப்போதே அட்டையினை (at least 2 cover களை மட்டுமாவது) unveil செய்வதில் தவறில்லை எனத் தீர்மானித்தேன் !
முதலில் KBGD போட்டியில் பங்கேற்ற நண்பர்களுக்கு ஒரு மிகப் பெரிய நன்றி சொல்லியாக வேண்டியது எனது கடமை ! நிறையப் பேர் இதனில் பங்கு கொள்வது சாத்தியமாகாது என்றாலும், கலந்து கொண்டோர் மிகுந்த ஆர்வத்தோடு தங்கள் திறமைகளைக் காட்டியது ரொம்பவும் நிறைவாக இருந்தது ! இதோ பாருங்களின் நண்பர் கர்ணனின் படைப்புகள் :
இது தவிரவும் இன்னும் 2 டிசைன்களை ஏக துரிதமாய் அனுப்பி இருந்தார் நண்பர் !! இதற்கென அவர் எத்தனை நேரத்தையும், உழைப்பையும் செலவு செய்தாரோ - தெரியவில்லை !! Thank you ever so much sir !!!
தொடர்வது நண்பர் Podiyan அவர்களது அற்புதமான கைவண்ணம் ! Great job !!
தொடர்வது நண்பர் ஆதி தாமிராவின் கைவண்ணம் ! ரொம்பவே வித்தியாசமான முயற்சிகள் !! Really really cool stuff...!
And இது நண்பர் கொமாரபாளையம் அருணாச்சலத்தின் ஆக்கம் ! Beautiful work - குறிப்பாகப் பின்னட்டை !! Great work !!
இறுதியாக - நண்பர் ரமேஷ் குமாரின் கைவண்ணம் :
முன் + பின் அட்டைகள் ஒரு சேரப் பார்க்கும் போது நண்பர் ரமேஷ் குமாரின் கைவண்ணம் - மற்றவர்களின் படைப்புகளை விடக் குட்டியானதொரு வித்தியாசத்தில் முன்னே நிற்பதை எனக்கும், எங்களது டீமுக்கும் தோன்றியதால் - KBGD -ன் வெற்றியாளராக ரமேஷ் குமார் தேர்வு செய்யப்படுகிறார் ! வாழ்த்துக்கள் நண்பரே - உங்களுக்கொரு சிவகாசிப் பட்டாசு பார்சல் பரிசாகக் காத்துள்ளது ! அட்டகாசமான முயற்சிகள் எடுத்துக் கொண்ட இதர நண்பர்கள் அனைவருக்கும் நம் நன்றிகளோடு - அன்பின் அடையாளங்களாய் ஒரு சின்ன wrist watch பரிசாக அனுப்பிடப்படும் ! Thanks a ton all !!
இறுதியாய் - நமது இரவுக் கழுகாரின் அட்டைப்பட டிசைன் இதோ !
|
Back cover's original ! |
முன்னட்டையில் நிற்கும் டெக்ஸ் + பின்னட்டை - இரண்டுமே மாலையப்பனின் கைவண்ணங்கள் ! முனட்டையினில் வண்ணச் சேர்கை + மெருகூட்டல் - பொன்னனின் பங்களிப்பு ! பினட்டையை இன்னும் கொஞ்சம் fancy ஆக்குவதை விட - ஒரிஜினலை ஒத்த அதே look தேவலாம் எனத் தோன்றியது எனக்கு ! ஆகையால் பின்னட்டையில் மாலையப்பன் all the way ! விடை பெறும் முன்னே - ஒரே ஒரு குறிப்பு மட்டும் !
இரவுக் கழுகாரின் இதழின் முதுகு கனத்தைக் கவனித்தீர்களா guys ? :-) Take care all !! See you soon !