Powered By Blogger

Monday, October 28, 2019

பண்டிகையைத் தாண்டி....!

நண்பர்களே,

பண்டிகையும் முடிந்து ஆளாளுக்கு ஊர் திரும்பும் படலங்களும் துவங்கியிருக்குமென்று நினைக்கிறேன் ! பட்சணங்களின் கனம் ஒரு பக்கமெனில், நமது 'தீபாவளி மலரையும்' கையோடு எடுத்து வந்திருந்தால் - அதுவொரு கிலோ எடையை ஏற்றியிருக்கும் உங்கள் பைகளுக்கு ! எது எப்படியோ - இதழ்களை புரட்டுவதைத் தாண்டி படிக்கவும்  நேரம் எடுத்துக் கொண்டிருக்கக்கூடிய நண்பர்களிடம் எனக்கு சில கேள்விகள் உள்ளன !! (மறுபடியுமா ?? என்ற அலறல் கேட்குதோ ??)

1 .கேரட் மீசை க்ளிப்டன் : 2020 ஸ்லாட்டைத் தக்க வைக்க ஆவன செய்துள்ளாரா ? 'விடுமுறையில் கொல்' - கொல்லென்ற சிரிப்புக்கு இடம் தராது போனாலும், did it make for fun reading ?

2 . மர்ம மனிதன் மார்டினினின் - "விசித்திர உலகம் இது !" : உங்களின் மனம்திறந்த ரேட்டிங் என்னவோ ? Unbiased please !

3 கிரிமினாலஜிஸ்ட் ஜூலியா : "ஒரு இல்லத்தின் கதை" : படிக்கத்  திணறியதா ? ரசித்ததா ? அல்லது படிக்கவே தோணலியா ?

4 டைலன் டாக் புது பாணி :  இது கலரில் வந்திருக்கலாமே ? என்ற  ஒன்றிரண்டு ஆதங்கங்கள் கண்ணில்பட்டன ; ஆனால் சுடும் வடைகள் சகலத்துக்கும் இனிப்பு ஜீரா சாத்தியப்படுவதில்லையே ? ஒரிஜினலாகவே இந்த சாகசம் black & white மாத்திரமே எனும் போது வர்ணங்களுக்கு நாமெங்கே போவதோ ? So இது பருப்புவடையாகவே தொடரும் ; இனிப்பு வடையாய் நஹி ! 

இந்தக் கதைக்கும், டைலன் 2.௦ பாணிக்குமான உங்கள் ரேட்டிங் ப்ளீஸ் ? 

மேற்படிக் கேள்விகளின் பின்னணி ஒவ்வொன்றிலும் நமக்கொரு சேதி ஒளிந்திருப்பதாலேயே இவற்றைப் பற்றிக் குறிப்பாய் வினவுகிறேன் ! So பதில்களை நீங்கள் சொல்லுங்கள் ; செய்திகளை நான் வெளிக்கொணர்கிறேன் !!

And நவம்பரின் இதர கதைகள்  சார்ந்த அலசல்களும் துவங்கட்டுமே folks ?

அப்புறம் சந்தா 2020 வண்டியானது F1 கார் வேகத்தில் தெறிக்கத் துவங்கியுள்ளது - துவக்க 3 தினங்களுக்கும் !! நம்மாட்களால் உங்கள் வேகங்களுக்கு ஈடு தர இயலவில்லை என்பதே நிஜம் ! ஆன்லைனில் தீபாவளி மலர் ஆர்டர்களுமே rocking என்பதால் ஆபீஸே அதகளம் ! நாளை (செவ்வாய்) பணிகள் வழக்கம் போல் resume ஆகிடும் எனும் போது உங்களின் சந்தா நம்பர்களை மின்னஞ்சல்களில் அனுப்பிடுவார்கள் ! இம்முறை front desk முற்றிலும் புதுசு என்பதால் சற்றே பொறுமை ப்ளீஸ் !!  Bye all ! See you around !

Sunday, October 27, 2019

பிரபஞ்சத்தின் பிள்ளை...!

நண்பர்களே,

வணக்கம். அனைவருக்கும் உளமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள் ! நலமும், வளமும், சந்தோஷமும் இல்லமெங்கும் மிளிரட்டும் இந்நன்னாளில் !!

சந்தோஷங்கள் பொங்கிட வேண்டியதொரு தீப ஒளி நாளில், தமிழகத்தின் ஒரு சிறுநகர மூலையில் ஒரு ஜீவ மரணப் போராட்டம் அரங்கேறி வருவது நெஞ்சைப் பிசைகிறது ! பிரபஞ்சத்திலுள்ள அத்தனை கடவுளர்க்கும் கைகூப்புவோம் : சிறுவன் சுர்ஜித் நலமாய் மீண்டு, துடித்துத் தவிக்கும் பெற்றோருக்கு தீர்க்காயுசான பிள்ளையாய் வாழ்வாங்கு வாழ்ந்திட வேண்டி !! புகைப்படத்தில் புன்னகைக்கும் அந்தப் பிள்ளையை பூமியின் பாதாளத்துக்குள் புதைய அனுமதித்த அந்த மடைமைக்கு வேறெந்த தண்டனையேனும்  ஆண்டவன் தந்து விட்டுப் போகட்டும் - அந்த மழலையின் ஆயுளை மட்டும் காவாய்க் கேட்டிடாது !! 

எத்தனையோ அதிசயங்கள் நிகழ்கின்றன நித்தமும் ; அதனில் இன்னொரு அசாத்திய அத்தியாயமாக இதனை நடத்திக் காட்ட பெரும் தேவன் மனிடோவை கேட்போமே நாமெல்லாம் ? நல்ல செய்தியோடு பொழுது விடியுமென்ற  நம்பிக்கையோடு விடைபெறுகிறேன் guys !! ஒரு அதிசயக் காலையாகப் புலரின் இங்கும் அதைக் கொண்டாடி மகிழ்வோம் ! 

Take care ....have a safe Diwali all !!  

Friday, October 25, 2019

பட்சணங்களும், சில வெள்ளைக் கொடிகளும் !

நண்பர்களே,

வணக்கம். கூப்பிடு தொலைவில் பண்டிகைப் பொழுது காத்திருக்க - ஆங்காங்கே சில பல கிலோ சுவீட்களும், காரங்களும் துவம்சமாகத் துவங்கியிருப்பது நிச்சயம் ! ஆண்டுக்கொருவாட்டியே தீபாவளி எனும் பொழுது போட்டுத் தாக்குங்கள் guys ! இப்போ இல்லாட்டி பின் எப்போ ?

பெரியதொரு மைசூர்பாகு டப்பி சைசுக்கு தீபாவளி மலர் காத்திருக்க - அத்தனை கவனத்தையும் அட்டவணையே விழுங்கிக் கொண்டது தவிர்க்க இயலா நிகழ்வே ! Anyways அந்த 'அட்டவணை படலம்' ஓவர் எனும் போது - மெது மெதுவாய் ரெகுலர் இதழ்களை அலசும் ரெகுலர் பணிக்குள் புகுந்திட இனி உங்களுக்கு நேரம் கிட்டிட வேண்டியதே அவசியம் ! விடுமுறைகளில் அவற்றைப் படிக்க சிலருக்கு சாத்தியமாகிடலாம் ; 'விடுமுறைகளில் தான் நான் சூப்பர் பிசியே' என்று முறுக்குப் புளிந்த  கையோடு, மைசூர்பாகுக்கு Youtube-ல் ரெசிபி தேடும் பலருக்கு மறுக்கா ஆபீஸ் பணிகள் துவங்கிடும் போது தான் நேரம் கிட்டிடலாம் ! So காத்திருப்போம் !

இடைப்பட்ட பொழுதுகளில் அட்டவணைகளின் அலசல்களை இங்கே தொடருவோம் ! போன பதிவில் 300+ பின்னூட்டங்களுக்கு அப்பால் சரியாய் கவனம் தர சாத்தியப்பட்டிருக்கவில்லை ; maybe அங்கே கேள்விகள் ஏதேனும் கேட்டிருந்த நண்பர்கள், அவற்றை இங்கே மறுக்கா போஸ்ட் செய்திட மெனெக்கெட்டால்  - நிச்சயம் பதில் தர முனைவேன் !! 

அப்புறம் தங்கத் தலைவனது ரசிகர்களுக்கு ஒரு small  request ! மீண்டும் "கேப்டன் டைகர்" அவதாரில் புதுசாய் ஒரு ஆல்பம் விரைவில் பிரெஞ்சில் வெளியாக உள்ளதாய்ச் சொல்லியிருந்தது நினைவிருக்கலாம் ! சமீபத்தில் அவற்றின் கோப்புகள் கிட்டின & முழுசையும்  செம ஆர்வத்தோடு புரட்டினேன் ! ஒன்றே ஒன்றை  மட்டும் தான் சொல்லத் தோன்றுகிறது : கார்சனின் நண்பரை இத்தனை காலமாய் செம குஷியாய் நீங்கள் ஒட்டி வந்துள்ளீர்கள் ; உங்களின் ரவுசுகளை டெக்ஸ் ரசிகர்களும்  செம sportive ஆக எடுத்து வந்துள்ளனர் !  நேரம் கிடைக்கும் பொழுது டெக்ஸ் ரசிகர்களிடம் அந்தக் கலையைக் கொஞ்சம் கொஞ்சமாய்க் கற்றறிந்து கொள்ள இனிமேல் நீங்களும் கூட முயற்சித்திட வேண்டி வரலாம் ! அதனால் இந்த தீபாவளிக்கே கூட தீய்ந்து போகாத நாலு முறுக்குகளையோ ; அதிரசங்களையோ வீடு தேடித் போய்க் கொடுத்தபடிக்கே - "ஊட்டிலே அத்தினி பேரும் நலமா பங்காளி ?" என்று பழக ஆறாம்பித்து விடுவது பொதுவான நலத்துக்குத் தேவலாம் என்பேன் ! ஆனாக்கா - அந்தப் பட்சணங்களைத்  தின்ன கையோடு புதுசா லடாய் ஆரம்பிச்சா - அதுக்கு கம்பெனி பொறுப்பேற்காது !! 

Bye guys !! See you around !! Enjoy the holidays !!

Thursday, October 24, 2019

வாத்தியாருக்கொரு பரீட்சை !!

நண்பர்களே,

வணக்கம். ஆண்டின் “அந்த” வேளையும் புலர்ந்து விட்டது ! ஒரே நேரத்தில் செம சுலபமாயும், செம குழப்பமாயும் ஒரு பணி அமைந்திட முடியுமாவென்று கேட்டால் – ”Oh yes முடியும் சாரே...! பன்முக ரசனைகளும், ஓராயிரம் எதிர்பார்ப்புகளும் கொண்டிருக்கும் ஒரு அன்பான வாசக வட்டத்தைப் பரிபூர்ணமாய்த் திருப்திப்படுத்தக் கூடியதொரு அட்டவணையை உருவாக்கித் தான் பாருங்களேன்!” என்பேன் ! இம்முறையும் no different...!


நாலைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரையிலுமே மொத்தமே 25+ புக்குகளை ஓராண்டின் முழுமைக்கும் வெளியிட்டு வந்த நாட்களில் இத்தனை பெரிய மண்டை பிய்ச்சிங்கிற்கு அவசியம் எழுந்திருக்கவில்லை ! இன்றியமையா லார்கோக்கள் ; டெக்ஸ்கள் ; லக்கி லுாக்குகள் ; XIII-கள் என் பாடை ரொம்பவே சுலபமாக்கி விட்டனர் தத்தம் ஆளுமைகளால் ! ஆனால் ஆண்டின் புத்தக எண்ணிக்கை எகிறத் துவங்க ; புது வரவுகள் - புது ஜானர்கள் என அறிமுகம் காணத் துவங்க – நடுராத்திரி எழுந்து பாயைப் பிறாண்டாத குறை தான் ! அதிலும் காத்திருக்கும் 2020-ல் லார்கோ வின்ச் புதுக் கதைகள் கிடையாது ; ஷெல்டன் தொடரிலும் நஹி ; அண்டர்டேக்கரிலும் இனி வெளிவந்தால் தானுண்டு என்ற சூழலில் அவர்களது அசரக் கால்தடங்களை ரொப்பிட ரொம்பவே குட்டிக்கரணம் அடித்துப் பார்த்தேன் ! சரியோ-தப்போ நிறைய விஷயங்களில் நீங்கள் ஒவ்வொருவருமே perfectionists ! ஆனானப்பட்ட வான் ஹாமேவே  பேனா பிடித்தாலுமே, ஒவ்வொரு கதையும் நமது எதிர்பார்ப்புகளைத் தொட்டு நின்றாக வேண்டும் ! “XIII” என்ற நம்பர்,  கதையின் ஏதோவொரு பிரேமில்  ஒரு கிட்டங்கியின் கதவு எண்ணாக வந்தால் கூட, அதனில் ஒரு அழகியலை எதிர்பார்க்கும் அன்புக் கூட்டம் நாம் ! ஒவ்வொரு லக்கியும், ஒவ்வொரு கிட் ஆர்டினும் பக்கத்துக்குப் பக்கம் நம்மை 'கெக்கே பிக்கே' என உருளச் செய்திட வேண்டும் ! காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சே ; but still இதை நான் சொல்லியே தீருவேன் : காமிக்ஸ் தரங்களை எடை போடுவதில் ; பாலையும், பானியையும் பிரித்திடும் அன்னப்பட்சித் திறன்களில் ; வெரைட்டியை வெறித்தனமாய் நேசிப்பதில் உங்களை விஞ்சியதொரு வட்டம் சத்தியமாய் இருக்க முடியாதென்பது எனது அசைக்க முடியா நம்பிக்கை ! ”ரைட்டு... சந்தா கடை விரிக்கிற முன்னாடியே மாப்பு செமத்தியா சாந்து பூச ஆரம்பிச்சுட்டான்டோய் !” என்று ஆங்காங்கே சில நக்கல்ப் புன்னகைகள் பூப்பது புரியாதில்லை ; ஆனால் மனதுக்கு நிஜமென்றுபடுவதை உரைக்க அந்த நக்கல்கள் தடையாகிடப் போவதில்லை ! கச்சேரி பண்ண வந்தால் அரங்கின் முன்வரிசை முதல் கடைசி வரிசையில் ஸ்டான்டிங்கில் நின்று வருவோர் வரை அத்தனை பேருமே விமர்சனச் சக்கரவர்த்திகள் ; விஷய ஞானம் கொண்டோர் என்பது தெரியும் போது பாட்டு வரமாட்டேன்கிறது...தொண்டையிலிருந்து புஸ்... புஸ்... என்று காற்று மட்டுமே வெளிப்படுகிறது ! So நிறைய – நிறைய அவகாசமெடுத்துக் கொண்டு ; நிறையவே கதைகள் / தொடர்களைப் பரிசீலித்து 2020 எனும் கச்சேரிக்குத் துவக்கம் தரக் தயாராகியுள்ளேன் ! Here goes!!


வழக்கம் போல ஜானர்களுக்கேற்ப கதைகளை ; சந்தாக்களை வகைப்படுத்தும் முயற்சி இம்முறையும் தொடர்கிறது ! And சந்தா: A மாமூலான Action & Adventure கதைகளைச் சுமந்து நிற்கின்றது ! நான் மேலே குறிப்பிட்ட 3 நாயகர்களுமே (Largo ; Shelton & Undertaker) சந்தா A-வில் குடித்தனம் செய்தவர்கள் என்ற விதத்தில் வெற்றிடத்தின் சிரமம் அங்கே தான் பிரதானமாய்த்  தென்பட்டது ! So அவர்கள் விட்டுச் சென்றுள்ள காலியிடத்தை man to man அதே பாணியிலான கதைகளால் நிரவல் செய்ய இயல்கிறதா ? என்று நானும் நிறையவே சர்க்கஸ் செய்து பார்த்து விட்டேன் ; not much luck ! 


லார்கோவை அப்படியே பல விஷயங்களில் ஒத்த clone போல உருவான இன்னொரு ப்ரான்கோ-பெல்ஜியத் தொடரை வாங்கிப் பரிசீலித்துப் பார்த்தேன் ! அதே போலான துவக்கம் ; அதே போலான கதையோட்டம் என்றிருந்தாலுமே உப்பும், உரைப்பும் குறைச்சலானதொரு பிரியாணியைப் சாப்பிட்ட உணர்வே மேலோங்கியது ! So இன்னொரு லார்கோ; இன்னொரு ஷெல்டன் என்றே சுற்றித் திரியாது, புதுசாய்; சுவாரஸ்யமாய் நம்மை மகிழ்விக்கக் கூடியோர் யார் உள்ளனர் ? என்று பார்வையை ஓடச் செய்தேன்! மூன்றோ; ஐந்தோ; ஆறோ பாகங்களில் நிறைவுறும் விதமாய் உள்ளது நமக்கு உதவிடவில்லை ! அவற்றைப் பிய்த்துப் பிய்த்து மாதம்தோறும் போட்டால் – என்னைப் பிய்த்துப் பிய்த்து ஜிம்மிக்குப் போட்டு விடுவீர்களெனும் போது – தொடர்கள் ruled out ! அமே சமயம் “பிஸ்டலுக்குப் பிரியாவிடை” 4 பாக ஆல்பத்தின் வெற்றியைப் பார்க்கும் போது ; அதனையே 4 மாதங்களது தொடர்கதையாய் வெளியிட்டிருந்தால் இதே ரீதியிலான தாக்கம் கிட்டியிருக்குமா ? என்ற கேள்விக்கும் ஒரு பெரிய ‘NO’ தான் பதிலானது ! So குறைந்தபட்சம் எட்டு தொடர்கள் (3 பாகம் முதல் 6 பாகத்திலானவைகள்) ‘டிக்‘ அடிக்கத் தயாராகயிருந்தாலுமே அவற்றைக் களமிறக்க ஸ்லாட்ஸ் ; பட்ஜெட் இடிக்கிறது!
To cut a long story short – நடப்பாண்டில் ஆக்ஷன் அவதாரில் திடுமென அறிமுகமாகி, தெறிக்கும் புதுயுக பாணியில் ஹிட்டடித்த DAMOCLES தொடரினை ஏகோபித்த கரகோஷங்களோடு நீங்கள் வரவேற்றதால் – சந்தா A-வில் முதல்த் தேர்வாய் அத்தொடரின் ஆல்பங்கள் 3 & 4-ஐ ஒன்றிணைத்து மெர்சலூட்டும் டபுள் ஆல்பமாக்கிடத் திட்டமிட்டுள்ளேன் ! ”பிழையிலா மழலை” – முதல் இதழான “நித்தமொரு யுத்தத்தை” விடவும் வேகத்தில் ; விறுவிறுப்பில் ; சென்டிமென்டில் இன்னொரு லெவலில் உள்ளதால் இதனை ரசித்திட நமக்குத் தயக்கங்களிலிராது என்று உறுதியாய் நம்ப முடிகிறது ! So the game starts with a Double Album!
சந்தா A-வில் இப்போதெல்லாம் இன்றியமையா அங்கமாய்ப் போய் விட்டோர் இருவர் ! இருவருமே ஜாஸ்தி பேசுவதில்லை என்பது அவர்களிடையேயான ஒற்றுமை ! முதலாமவர் பிரபஞ்சத்தின் புதல்வரெனில், பின்னவர் மௌனத்தின் புயல் ! So 2020-ல் தோர்கல் & ட்யுராங்கோவுக்குத் தலா ஒரு மெகா ஸ்லாட் வழங்கினேன் – எவ்வித  ரோசனைகளுமின்றி ! ட்யுராங்கோ as usual – 3 பாக அதிரடியின் தொகுப்போடு, ஹார்ட்கவரில் எனும் போது அங்கே எனக்குப் பெருசாய் வேலையிருக்கவில்லை – கதைக்கொரு பெயர் சூட்டுவதைத் தாண்டி ! “ஆறாது சினம்” ஜனவரியில், முத்து காமிக்ஸின் 48 -வது  ஆண்டுமலராய்த் தலைகாட்டிடும்!
தோர்கல் இப்போதெல்லாம் சூப்பர்ஸ்டார் status கொண்டிருப்பதால் எனது ஒரே யோசனை – how much is the right much ? என்பதே! சென்ற முறை 3 ஆல்பங்களைத் தொகுப்பாக்கினோம் ! இம்முறையுமே அப்படியே செய்திடலாமா ? என்ற யோசனையில் வண்டி ஓடிக் கொண்டிருந்த போது தான் நண்பர் காமிக் லவர் ராகவன் – காத்திருக்கும் 5 ஆல்பங்களுமே ஒரு மெல்லிய நூலிழையில் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டு பயணிப்பதைச் சுட்டிக் காட்டியிருந்தார் ! மூன்று ஆல்பங்களை 2020-ல் போட்ட பிற்பாடு 2021 வரை மீதத்தைத் தொங்கலில் விடுவது தோர்கலின் ஆரோக்கியத்துக்கு நல்லதோ – இல்லியோ; எனது ஆரோக்கியத்துக்குச் சத்தியமாய் சரிப்படாது என்பது புரிந்தது ! அப்புறமென்ன ? 5 ஆல்பங்கள் 'ஏக் தம்'மில் 2020-ன் கோடை மலராய் மலரவுள்ளன ! இங்கே ஒரு சின்ன வித்தியாசம் – இந்த 5 ஆல்பங்களும் தனித்தனி இதழ்களாய் ; அததன் ஒரிஜினல் ராப்பர்களோடு வெளிவந்திடும் – ஒரு ரம்யமான ; உறுதியான box-set-க்குள் அமரும் விதமாய். XIII இரத்தப்படலம் வண்ணத் தொகுப்புக்கு நாம் வழங்கிய அதே தரத்திலான box-set இந்தத் தோர்கல் சேகரிப்புக்கு ! இப்போதெல்லாம் பகோடா காதர் ஸ்பெஷலைக் கூட ஹார்ட்கவரில் நாம் போட ஆரம்பித்திருக்கும் நிலைகளில், இந்த box-set சற்றே வித்தியாசமாய் இருக்கட்டுமே என்று நினைத்தேன் ! Hope the decision sits well with you guys !


டபுள்; ட்ரிபிள்; அப்பாலிக்கா 5 பாகங்கள் என்று தெறிக்கும் டாப் கியரில் வண்டி ஓடத் துவங்கியிருக்க – அடுத்த இதழுமே 2 சாகஸங்களைத் தன்னில் கொண்ட இதழே ! இம்முறை அதனில் இடம்பிடித்திடவுள்ள நாயகர் ஒருவரே ; ஆனாலும் இருவர் போலத் தெரிவர் ! தெளிவாய்க் குழப்புறானே ? என்று பார்க்கிறீர்களா ?

- ரிப்போர்ட்டர் ஜானி 2.0

- க்ளாஸிக் ரிப்போர்டர் ஜானி

என இரு வார்ப்புகளிலான ஒரே நாயகரை ஒரே இதழில் இணைக்கும் ஆசை ஏதோவொரு பின்சாமத்தில் எனக்குள் எழுந்தது. சரி, படைப்பாளிகளிடம் கேட்டுப் பார்ப்போமே ? என்று மறுநாளே ஒரு மின்னஞ்சலையும் தட்டிவிட்டேன் ! எப்போதுமே ஊரோடு ஒத்துப் போகாது, கோக்குமாக்காய் எதையாச்சும் கேட்டு வைப்பது நமது வாடிக்கை தான் என்றாலும், இங்கே இரு தனித்தனி படைப்பாளிகள் டீம் செயல்பட்டு வருவதால் – இரு கதைகளையம் ஒன்றிணைக்க ஏகமாய் சம்மதம் அவசியப்பட்டது ! ஒரு வார அவகாசத்துக்குப் பின்னே – ‘அட... இது கூட நல்லாத்தான் இருக்குமோ ? Proceed!’ என்று நமக்குப் பச்சைக் கொடி காட்டினார்கள் ! So ரிப்போர்ட்டர் ஜானியின் “ஆதலினால் கொலை செய்வீர்” பழசு + புதுசு என்ற பாணிகளின் சங்கமத்தோடு வெளிவரக் காத்துள்ளது! இந்த ஆல்பத்தில் இடம் பெறவுள்ள புது ஜானி கதை செம வித்தியாசமானது என்பதால் ஒரு ஜாலியான அனுபவம் waiting என்பேன் ! நிலவரம் இப்படியிருக்க, திடீரென ‘மொக்கை பீஸ்கள் of 2019‘ பட்டியலில் ஜானி 2.0 பெயரும் அடிபடத் தொடங்கிய போது பகீரென்றிருந்தது ! ‘ஆஹா... அரும்பாடுபட்டு 2 தனித்தனி டீம் author-களின் ஒப்புதலையெல்லாம் முன்கூட்டியே வாங்கியது பலனின்றிப் போய் விடுமோ ? என்ற குழப்பம் உள்ளுக்குள் தலைதூக்கிய பிற்பாடு தான் அந்த உப-பதிவில் ‘ஜானி Vs ஜானி 2.0‘ என்ற கேள்வியை முன்நிறுத்தினேன் – ‘இரண்டுமே வேணும்‘ என்ற ரீதியிலேயே உங்களின் பெரும்பான்மை பதில்கள் இருக்கும் பட்சத்தில் தலை தப்பிடுமே என்ற ஆதங்கத்தோடு ! And பெரும் தேவன் மனிடோ நம்மைக் கைவிடவில்லை ; 'புரட்டாசி தான் முடிஞ்சதுலே...லெக் பீசும் வேணும் ; 65-ம் வேணும் " என்ற ரீதியில் இரண்டுக்குமே நீங்கள் 'ஜே' போட - நிம்மதி பெருமூச்சு என்னுள் ! கச்சிதமாய் நான் எதிர்பார்த்திருந்த பதிலையே  பலரும் பதிவிட்டிருக்க – here we are!!
டபுள்; ட்ரிபிள் என்று ஏகமாய்ப் போட்டுத் தாக்கினால் செரிமானத்துக்குச் சிக்கலென்று பட – சிங்கிள் ட்ராக்குக்கு ‘ஜம்ப்‘ செய்தேன் அடுத்ததாய் ! கிட்டத்தட்ட "ஏகோபித்த தேர்வு” என்ற ரீதிக்குப் புரமோஷன் கண்டுள்ள ட்ரெண்ட் தான் முதலில் மனதில் நிழலாடினார் ! “கனவே கலையாதே!” is from the TRENT vault ! 2020-ல் இவருக்கு ஒற்றை ஸ்லாட் மாத்திரமே ; simply becos இவரது தொடரினில் இன்னமும் காத்திருப்பன மூன்றே ஆல்பங்கள் தான் ! So தடதடவென இவரது கதைகளைப் போட்டுத் தீர்த்து விட்டால் சீக்கிரமே அடுத்த வெற்றிடம் உருவாகிடுமே என்ற பீதி தலைதூக்கியது! So ஒன்றே நன்றென்றேன் இந்தக் கனேடியக் காவலருக்கு!


Next on the singles list – நமது அபிமான ஞாபகமறதிக்காரர் ! செல்போன் டவர் மாதிரியான ஏவோவொன்றில் மனுஷன் பரபரவென ஏறிக் கொண்டிருக்கும் அட்டைப்படத்தோடு இந்தக் கதைக்கான கோப்புகள் வந்து சேர்ந்த போது பரபரவென புரட்டிப் பார்த்தேன் – எங்காச்சும் அந்நாட்களது கப்பல்கள் ; அந்நாட்களது பாவாடை மாதிரியான உடுப்பணிந்த மாந்தர்கள் தென்படுகிறார்களாவென்று ! அந்த ‘மேபிளவர்‘ முடிச்சை இன்னமுமே இறுகப் பிடித்துக் கொண்டு வலம் வருவதாக இருப்பார்களெனில் – “தெய்வமே... இந்த ஆட்டத்துக்கே நான் வரலை!” என்று கைகூப்பிடும் முடிவில் இருந்தேன் ! ஆனால் புண்ணியத்துக்கு அது மாதிரி எதுவும் தெரியக் காணோம் ; பரபரவென நவீன, சமகால நிகழ்வுகளோடே ஆல்பம் பயணிப்பதால் துளியும் தடுமாற்றமின்றி ‘டிக்‘ அடித்தேன் ! அதே கதாசிரியர் – அதே ஓவியர் டீம் எனும் போது அந்த இரண்டாம் சுற்றின் அதே ஜாடைகள் அழகாய் இதிலும் தொடர்கின்றன ! ஒரே திருஷ்டிப் பரிகாரமாய் எனக்குத் தென்பட்டது  கலரிங் பாணி மட்டுமே ! ‘சப்பக்... சப்பக்‘ என அடர் பிங்க்.... அடர் நீலம் என்று ஆங்காங்கே தெறிக்க விட்டுள்ளனர் ! ”2132 மீட்டர்”... ஒரு தொடரும் தேடலின் அடுத்த படி! அது சரி, ஒரு தொடரை இப்போது அவசரமாய் அட்டவணையினுள் நுழைக்கும் அவசியம்  என்னவோ ? என்கிறீர்களா ? பதில் பதிவின் பின்பகுதியில் காத்துள்ளது folks ! 


Further on the singles list – ஒரு அறிமுகம் ! என்ன தான் ‘ஹிட்‘ நாயகர்கள்... அவர்களது அதிரடிகள் என்று நாம் பயணித்தாலுமே, அவ்வப்போது புதுசாய் நாயக / நாயகியரை சந்திக்கும் அனுபவங்களும் நமக்குப் பிடித்தமானவைகள் என்பதில் ரகசியமேது? ஒவ்வொரு அட்டவணையிலுமே ஏதேனுமொரு X-factor இருப்பது உங்களுக்குப் பிடிக்குமே என்ற எண்ணம் என்னுள் தவறாது எழுவதுண்டு ! அதன் பலனாய் சில ஜடாமுடி கார்ட்லேண்ட்கள் சோதிக்க நேர்வதும் உண்டு தான் ! இம்முறையோ அந்தப் புராதன ரக நாயகர்களைத் தொடாது – ஓரு நியூயார்க் போலீஸ் டிபார்ட்மெண்ட் (NYPD) டிடெக்டிவ்வை நமது அறிமுக நாயகராக்கியுள்ளோம் ! முழுக்கவே கார்ட்டூன் பாணியிலான சித்திரங்களில் சொல்லப்பட்டிருக்கும் ஒரு ஆக்ஷன் சாகஸமிது ! மனுஷனின் பெயர் SOloman DAvid ! முதற்பெயரில் முதலிரண்டு எழுத்துக்களையும் ; கடைசிப் பெயரின் முதலிரண்டு எழுத்துக்களையும் எடுத்து ‘SODA’ என்று இந்தத் தொடருக்குப் பெயரிட்டுள்ளனர் ! சிறு நகரிலிருந்து பிழைப்பு தேடி நியூயார்க் வரும் ஒரு மாஜி போலீஸ்காரரின் பிள்ளை தான் இந்த SODA. பணிக்காலத்தின் போதே தந்தை மரித்திருக்க – ‘ஆபத்து நிறைந்த போலீஸ்துறையே இனி நமக்கு வாணாம்!‘ என்பது விதவைத் தாயின் திட்டவட்டம். ஆனால் விதி யாரை விட்டது ? தாயும், பிள்ளையும் நியூயார்க்கிற்குக் குடியேறிடும் போது ஹீரோவுக்கு வேலை கிடைப்பதோ NYPD-ல் தான்! மம்மிக்கு விஷயம் தெரிந்தால் ‘பொசுக்கென நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சாய்ந்து விடுவாரோ என்ற பயத்தில், தானொரு சர்ச்சில் பாஸ்டராகப் பணிபுரிவதாய் உடான்ஸ் விடுகிறார் ! So காலையில் வீட்டிலிருந்து புறப்படும் போது பாதிரியின் உடுப்பில் போகும் மனுஷன், பரபரவென லிப்டிலேயே உடைமாற்றிக் கொண்டு தரைத்தளத்தைத் தொடும் போது டிடெக்டிவ் சோடாவாக மாறியிருப்பார் ! நியூயார்க்கின் குற்றம் மலிந்த வீதிகளில் இவர் செய்யும் ரகளைகளே 13 ஆல்பங்கள் கொண்ட இந்தத் தொடர் ! இதன் முதல் ஆல்பம் “திசை மாறிய தேவதை”யாக வெளிவரவுள்ளது ! புது நாயகர்... புது கதை பாணி...புது சித்திர பாணி என்பதால் உங்களது ரியாக்ஷன்கள் எவ்விதம் இருக்கக்கூடுமென்று அவதானித்த பிற்பாடு இவருக்கான ஸ்லாட்டை அதிகப்படுத்துவது பற்றி யோசிக்கலாமென்று நினைத்தேன். அவசர அவசரமாய் இரண்டு / மூன்று என்று இடமளித்து விட்டு அப்பாலிக்கா முழித்திட வேண்டாமே என்ற முன்ஜாக்கிரதை என்று வைத்துக் கொள்ளுங்களேன் !
Last on the list – இதுவுமொரு சிங்கிள் ஆல்பமே.... ஓவியர் வான்ஸின் கைவண்ணத்திலான ரிங்கோவின் ஆல்பம் # 2 ! இதன் முதல் ஆல்பம் டிசம்பருக்கென காத்திடலில் இருக்க, அதன் performance-ஐப் பார்த்த பிற்பாடு தொடரின் தலையெழுத்தைத் தீர்மானித்தல் not possible என்பதால் ரிங்கோ # 2-க்கு ஓரிடம் போட்டாச்சு ! ஏதேனுமொரு காரணத்தின் பொருட்டு டிசம்பரில் தலைகாட்டவுள்ள இந்த மனுஷன் அவ்வளவாய் சோபிக்கவில்லையெனில் 2020-ன் இவரது ஸ்லாட் வேறு யாருக்காவது வழங்கப்படும்! So இவர் மட்டுமே வெயிட்டிங் லிஸ்டில!


Thus ends சந்தா A-வின் திட்டமிடல் for 2020 ! இதழ்களின் எண்ணிக்கை எட்டாக இருந்தாலும் அவற்றினுள் புதைந்திருப்பன :

2+3+5+2+1+1+1+1 = 16 சிங்கிள் ஆல்பங்கள்!


So புத்தக எண்ணிக்கை அதீதமாய் இல்லாதுமே  – வாசிப்பில் குறையின்றி இருந்திடும் வகையில் திட்டமிட்டுள்ளோம் ! இது சுகப்படும் ஃபார்முலாவா ? ; சாத்து வாங்கிடவுள்ள ஃபார்முலாவா ? என்பதைக் காலம் தான் சொல்லும் ! ஏதோ பாத்து பண்ணுங்க சார்வாள் !!

 And இதோ - சந்தா B பக்கமாய்க் குதிரையை விடுகிறேன் ! As usual இது போனெலி நாயகர்களின் களமாகவே இருந்திடவுள்ளது ! And போனெலி எனும் போது அது 'டெக்ஸின் ராஜ்யமே' என்பதை நான் சொல்லவும் வேண்டுமா ? இங்குமே மொத்தம் 8 இதழ்கள் தான் ; ஆனால் டபுள் ; ட்ரிபிள் என்று கூட்டணிகள் இருந்திட – வலுவான வாசிப்புகளுக்கு உத்தரவாதம் உண்டு !


மொத்தமுள்ள 8 இதழ்களுள் ஏழு – டெக்ஸுக்கென ஒதுக்கீடு காண்கின்றன ! ஆட்டத்தைத் துவக்கவுள்ள “ஒரு துளி துரோகம்” டெக்ஸின் all time க்ளாசிக் கதைகளுள் ஒன்று ! ஒவ்வொரு தபாவும் நான் ‘பில்டப் பரமசிவம்‘ அரிதாரத்தைப் பூசுபவன் தான் ; காக்காய் வடை திருடிய கதையைக் கூட  ஸ்பீல்பெர்க் பட ரேஞ்சுக்கு பில்டப் தரக்கூடியவன் தான் ! ஆனாலும் க்ளாடியோ நிஸ்ஸியின் இந்தப் படைப்பை நீங்கள் மட்டும் ஆரவாரமாய் ரசிக்காது போனால் – இனிமேற்கொண்டு ‘பசைதடவிய பொன்னம்பலம்‘ அவதாரிலேயே வலம் வருவேன் ! அசாத்திய விறுவிறுப்பு ; மூச்சிரைக்கச் செய்யும் ஆக்ஷன் ; கதையின் க்ளைமாக்சில் யூகிக்கவே இயலா ட்விஸ்ட் என மனுஷன் ரகளை செய்துள்ளார் !  இந்தக் கதையைக் கலாய்க்க விரும்பும் நண்பர்களுமே சத்தமின்றி கைதட்டப் போவது நிச்சயம் !
தொடர்வன மேற்கொண்டும் 3 டபுள் ஆல்பங்களே!

- பந்தம் தேடியொரு பயணம்

- கண்ணே... கொலைமானே...!

- வானவில்லுக்கு நிறமேது!

ஆக 4 சாலிடான டபுள் ஆல்ப ஆக்ஷன் மேளாக்களைத் தொடர்ந்து 2 சிங்கிள் ஆல்பங்கள் தலைகாட்டவுள்ளன :

*ஒரு கசையின் கதை !

*கைதியாய் டெக்ஸ் வில்லர் ! – இது மர்ம வில்லன் மிஸ்டர் ‘P’ மறுக்கா தலைகாட்டிடவுள்ள சாகஸம் ! நம்மவரையே கைது செய்ய ஆணைகள் பறக்கச் செய்கிறான் இந்தப் பலமுக மன்னன் !

4 டபுள் + 2 சிங்கிள் என்றான பின்னே கடைசி TEX ஸ்லாட்டில் ஒரு தெறிக்கும் தீபாவளி ஸ்பெஷல் காத்துள்ளது – 2 MAXI டெக்ஸ் ட்ரிபிள் ஆல்பங்களோடு ! “ஒரு பனிவனப் படலம்” இப்போதெல்லாம் நமக்கு ரொம்பவே பரிச்சயமாகிப் போயுள்ள கனேடிய வனாந்திரத்தில் அரங்கேறும் வேட்டை ! மற்றொரு ட்ரிபிள் ஆல்பமோ – வடக்கு – தெற்கு யுத்தத்தினில் டெக்ஸும் பணியாற்றியதொரு முக்கிய தருணத்தின் கதை ! Again – டெக்ஸின் all time classic கதைகளுள் ஒன்று தான் “யுத்த பூமியில் டெக்ஸ்” ! அப்புறம் இந்த 672 பக்க தீபாவளி மலரோடு ‘MAXI லயன்‘ சைஸில் ஒரு 32 பக்க ‘கலர் டெக்ஸ்‘ சாகஸமும் இணைப்பாக வரவுள்ளது! தமிழ் சினிமாக்களின் தாக்கமா – டெக்ஸின் கதாசிரியர்களிடம் ? என்று கேட்கத் தோன்றும் வகையில் இந்த மினி சாகஸம் மெர்சலூட்டும் விதமாயுள்ளது ! பெரிய சைஸில் படித்துத் தான் பாருங்களேன் – முழு வண்ணத்தில்!
சந்தா B-ன் இறுதி இதழ் ஒரு டிடெக்டிவ் ஸ்பெஷல்!

- The Detective of the impossible – மர்ம மனிதன் மார்டின்

- The Detective of Nightmares – டைலன் டாக்

- The Detective of NYPD – C.I.D. ராபின்

மேற்படி மூவரும் கரம் கோர்த்து ஒரு சிங்கிள் இதழில் இணையவுள்ளனர் ! கொடியிடை ஜுலியா misses the bus for 2020 ! அதற்கொரு காரணமும் இல்லாதில்லை ; அது பற்றி இந்த வாரத்தின் போக்கில் பேசுவோமே ?


Thus ends சந்தா: B ! “டெக்ஸின் பீப்பீ ஊதவே இந்தச் சந்தாவா?” என்ற கேள்வி சில பல நண்பர்களின் மனங்களில் எழுந்திருப்பதும்; சில பல எரிச்சலான வதனங்களும் தற்சமயம் இங்கிருப்பதை உணர முடிகிறது! Keep reading guys – பதில்கள் தொடராது போகாது !

Next on the list – கார்ட்டூன் சந்தா : C : நடப்பாண்டைப் போலவே இம்முறையும் இங்கே 6 இதழ்களே – ஆனால் அந்த கார்ட்டூன் வறட்சியை நிவர்த்திக்க MAXI லயனும் ; இன்னுமொரு புதுத் திட்டமிடலும் காத்திருப்பதால், கார்ட்டூன் ரசிகர்கள் ஜாலியாய் வாசிப்பைத் தொடரலாம் !

எப்போதும் போல நமது ஒல்லிப்பிச்சான் “லக்கி லூக்” தான் கார்ட்டூன் சந்தாவின் அச்சாணியே ! And கடந்த 2 ஆண்டுகளைப் போலவே இம்முறையும் நமது லயன் ஆண்டுமலர் விழாவைச் சிறப்பிக்கவுள்ள ஜாம்பவான் இவரே ! "3 வருஷமாய் ஒரே பாணியா ? போரடிச்சிடாதா ? " என்ற கேள்வி எழலாம் தான் ; ஆனால் பெட்டி பார்னோவ்ஸ்கியோடு ஒரு ஆண்டுமலரைக் கொண்டாடிய பிற்பாடு - 'போதும்டா சாமி !' என்றுள்ளது ! So ஆண்டுமலருக்கு லக்கி என்ற பாணி தொடர்கிறது !

- பொன் தேடியதொரு பயணம் !

  &

- ஒரு கௌபாய் கலைஞன்!

என்ற 2 செமையான காமெடி மேளாக்களோடு லூட்டிகள் தொடரவுள்ளன ! மேலுள்ளதில் இரண்டாவது கதையின் மொழிபெயர்ப்பு நமது ஜுனியர் எடிட்டரின் கைவண்ணத்தில் நாலைந்து ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே  தயாராய்க் காத்துள்ளது ! ஏதேதோ காரணங்களால் அந்த ஆல்பத்தை வெளியிட இயலாது போக – ஜூ .எ.க்கு என் மீது லைட்டாய் கடுப்ஸ் ! ஒருவழியாய் 2020 ஜுலை அதற்கான வேளை என்று நிர்ணயம் கண்டுள்ளது !
கார்ட்டூன் சந்தாவின் இதர ஆட்டக்காரர்கள் ‘டக்…டக்‘கென்று தாமாகவே தம்மைத் தேர்ந்தெடுத்துக் கொண்டதால் இங்கே எனக்குப் பணிச்சுமை பூஜ்யமே!

- மேக் & ஜாக்

- சிக் பில்

- கர்னல் க்ளிப்டன்

- ப்ளூகோட் பட்டாளம்

- ஹெர்லக் ஷோம்ஸ்

என்று ஆளுக்கொரு ஸ்லாட்டை சுமூகமாய்ப் பங்கிட்டுக் கொள்ள கார்ட்டூன் சந்தா C சுலபமாய் ‘டிக்‘கானது ! 'உட்ஸிடியின் பெருந்தகைகளுக்கு ஒரு சீட் தானா ?' என்ற கேள்வி எழலாம் தான் ; பதில் பதிவின் பிற்பகுதியில் ! அப்புறம் மேற்படிப் பட்டியலில் கேரட்மீசை க்ளிப்டன் மட்டும் கொஞ்சமே கொஞ்சமாய் பார்டர்லைன் கேஸ் எனலாம் ! Ideally - இம்மாதத்து இதழ் உங்களை எட்டிப்பிடித்து ; உங்கள் ரியாக்ஷன்களை அறிந்த பிற்பாடு இவர் சார்ந்த தேர்வைச் செய்திருக்கணும் தான் ; ஆனால் ரிங்கோவின் கதையினில் போலவே அதற்கான அவகாசம் இங்குமே நஹி என்பதால் - மீசைக்காரர் தற்சமயத்துக்கு அட்டவணையினில் இடம்பிடிக்கிறார் ! ஆனால் இம்மாதத்து தேர்வில் மனுஷன் கோட்டைவிடும் பட்சத்தில், அவரது 2020 ஸ்லாட் மறுபரிசீலனைக்கு உட்படும் ! All the more reason for you to read & assess "விடுமுறையில் கொல்" !  Thus ends சந்தா: C !
ஆனால் கார்ட்டூன்களின் வீச்சு இந்த 6 இதழ்களோடு முற்றுப் பெற்றிடப் போவதில்லை ! தொடர்கின்ற ஆண்டின் MAXI லயன் திட்டமிடலில் :

2 x கார்ட்டூன் மறுபதிப்புகள்

             +

2 x வாண்டு ஸ்பெஷல்

காத்துள்ளன ! எப்போதோ செய்திட்ட promise தான் – ஆனால் நிச்சயம் நினைவிலிருந்து தப்பிடவில்லை ; 2020-ல் இரண்டு இதழ்கள் அழகான கார்ட்டூன்களோடு “வாண்டு ஸ்பெஷல்களாக” களமிறங்கிடவுள்ளன ! இவை உங்கள் இல்லத்துக் குட்டிகளுக்கு மட்டுமன்றி – உங்களுள் இருக்கக்கூடிய குட்டிகளுக்குமே பயன்படும் ! So 2020-ல் மொத்தம் 10 கார்ட்டூன் இதழ்கள் இருப்பதால் நடப்பைப் போன்ற வறட்சி நிச்சயமாய்த் தொடராதென்று நம்புவோம் ! Of course கார்ட்டூன்களுக்கான பிரதிநித்துவம் இன்னும் கூடுதலாயிருந்தால் நானும் மகிழ்ந்திருப்பேன் தான் ; ஆனால் கார்ட்டூன்கள் = வேப்பங்காய் என்ற எண்ணவோட்டம் இன்னும் நிறையவே நடைமுறையில் உள்ளதே ! மாதா மாதம் ஆன்லைன் ஆர்டர்களைப் பார்க்கும் போது ஆதங்கமாய் இருக்கும் – லக்கி லூக் நீங்கலாய் பாக்கி சிரிப்புப் பார்ட்டிகள் யாருமே அந்த வாசகர்களின் purchase list-களில் இடம்பிடிக்காது  போவதைப் பார்க்கும் போது ! So நமக்கான வரையறைகளுக்குள் வண்டியோட்ட முனைந்துள்ளேன் !

And of course – ‘ஸ்மர்ஃப் ஒரு கதை கூட இல்லியா ? பென்னிக்கு ஒரு ஸ்லாட் கூட கிடையாதா ? என்ன புடலங்கா அட்டவணை  இது ?' என்று கண்கள் சிவக்க, உதடுகள் துடிக்க ‘படு ஏமாற்றம் !!‘ என்று பதிவிடத் துடிக்கும் விரலோன்களுக்குச் சின்னதொரு வேண்டுகோள் ! பதிவின் பிற்பகுதியில் உங்கள் ஆதங்கங்களுக்கான பதில்கள் உள்ளன ! So கொஞ்சம் வெயிட் புலீஸ் !


அடுத்த சந்தாப் பிரிவான D பக்கமாய் கவனம் பாயும் முன்பாய் MAXI லயனின் திட்டமிடலை விவரித்து முடித்து விடுகிறேனே – ப்ளீஸ் ? நடப்பாண்டின் Bestsellers பட்டியலொன்றைப் போட்டால் மிகக் குறுகிய அவகாசத்தினில் மிக அதிகம் விற்றுள்ள புக்குகளாய் MAXI லயன் 1 & 2 தான் இடம்பிடித்திடும் ! அந்த மெகா சைஸிலான TEX & லக்கி லூக் ஆல்பங்கள் கிட்டத்தட்ட தினமுமே ஆன்லைனில் விற்பனை கண்டிடும் சமாச்சாரங்கள் ! So இந்த பாணி தொடர்ந்திடும் – கீழ்கண்ட அட்டவணைப்படி :

ஜனவரி 2020 – சென்னைப் புத்தக விழா :

TEX x 2 (இருளின் மைந்தர்கள் – 2 பாகங்களாய்)

ஜுலை 2020 – கோவைப் புத்தக விழா 

லக்கி லூக் :

ஆகஸ்ட் 2020 – ஈரோட்டுப் புத்தக விழா :

வாண்டு ஸ்பெஷல் : 1

செப்டம்பர் 2020 – மதுரைப் புத்தக விழா :

கார்ட்டூன் மறுபதிப்பு

அப்பாலிக்கா ஏதேனுமொரு புத்தக விழா

வாண்டு ஸ்பெஷல் - 2

So புத்தக விழா நேரங்களில் அங்கே இவற்றை வாங்கிக் கொள்ளலாமென்று அபிப்பிராயப்படும் நண்பர்கள் அவ்விதமே செய்து கொள்ளலாம் ! அல்லது “எல்லாமே எனக்கு வீடு தேடி வந்தால் மதி ” – எனும் நண்பர்கள் சந்தாக்களோடு சேர்த்து MAXI லயனுக்குமே தொகைகளை அனுப்பிடலாம் ! "அப்பு...எனக்கு ‘வாண்டு ஸ்பெஷலும்‘ வேணாம் ; வடகம் ஸ்பெஷலும் வேணாம் !" என அபிப்பிராயப்படுவோர் can give it a skip !
So சந்தா A: 8 இதழ்கள் + சந்தா B: 8 இதழ்கள் + சந்தா C: 6 இதழ்கள் + MAXI லயன் - 6 இதழ்கள் = 28 இதழ்களுக்கான திட்டமிடல் ஆச்சு!

அப்பாலிக்கா சந்தா E நோக்கி வண்டியை விடுவோமா ? “சந்தா D என்னாச்சுங்கடா?” என்ற அறைகூவல் அண்ணாச்சிகளுக்கு சின்னதொரு வேண்டுகோள் மட்டும் – “புலீஸ் வெயிட்டிங் !

சந்தா E for Exotic Tales சென்றாண்டைப் போலவே இம்முறையும் கிராபிக் நாவல்களைத் தாங்கி, லயன் கிராபிக் நாவலின் லோகோவில் களம் காணும் ! Again – இங்கே 6 இதழ்களே – ஓவராய் இவற்றையும் உங்கள் தலைகளில் திணிக்கப் பயமாகவுள்ளது ! Too much of a good thing கூட ஆரோக்கியத்துக்கு உகந்ததல்லவே ? So “ஆண்டுக்கு 6” என்பது கி.நா.க்களுக்கு சுகப்படும் ஃபார்முலா என்று நினைத்தேன் ! அதன் முதல் இதழ் :

- XIII Spin-off : கால்வின் வேக்ஸ் – “சதியின் மதி” !! XIII-ன் ஆர்வலர்கள் இந்த ஸ்பின்-ஆஃப் தொடரிலுள்ள அத்தனையையும் தலையில் தாங்கிக் கூத்தாடினாலும், அதனில் சொற்பமே மெய்யான சுவாரஸ்யங்களைக் கொண்டுள்ளன என்பதில் ரகசியங்கள் கிடையாது ! அதிலும் “ஜுடித் வார்னர்” & “பெலிசிட்டி பிரவுன்” சார்ந்த ஸ்பின்-ஆஃப்கள் கண்ணைக் கூசச் செய்யும் 'அடல்ட்ஸ் ஒன்லி' ரகமாய் இருக்கின்றன ! 'ஆமா..இப்போல்லாம் பராகுடாவிலேயும், வஞ்சம் மறப்பதில்லை' இதழிலும் வராத சமாச்சாரங்களாக்கும் ?' என்று சில கழுத்துக்கள் வெட்டுவது புரிகிறது ! ஆனால் அங்கெல்லாம் A சமாச்சாரங்களோடு கதை பயணித்தது ; இங்கோ A மட்டுமே கதை என்பது போல் நகர்கிறது ! நம்மிடம் 'பெலிசிட்டி பிரவுனின்' மொழிபெயர்ப்பும், கோப்புகளும் உள்ள போதிலும் - வேண்டாமெனத் தீர்மானித்தேன் !   So XIII என்ற பெயரை மனதில் ஆழமாய் இருத்திக் கொண்டு படிப்போருக்குத் தாண்டி – பாக்கி casual readers-க்கு இவற்றை ரசிப்பது மிகச் சிரமமே என்பது தான் bottomline ! ஆனால் 13 ஆல்பங்கள் கொண்ட அந்த தொடரில் – ‘கால்வின் வேக்ஸ்‘ பற்றிய ஆல்பமானது நிஜமான தரத்தில் உள்ளதைக் காண முடிந்தது ! ஒட்டுமொத்த சதித்திட்டத்தின் நம்பர் 2 ஸ்தானம் இந்தக் கண்ணாடிக்காரருக்கே எனும் போது இவரை ஒரு ஸ்பின்-ஆஃபில் சந்திப்பதும் சுவாரஸ்யத்துக்குப் பஞ்சம் வைத்திடாதென்று நினைத்தேன்! So “சதியின் மதி” 2020-ன் அட்டவணையில் இடம்பிடிப்பதன் பின்னணி இதுவே! And in all probability – ஸ்பின் ஆஃப்களில் கடைசி முயற்சியும் இதுவாகத் தானிருக்கும் – நம்மளவிலாவது!

அப்புறம் சென்றாண்டே விளம்பரப்படுத்தப்பட்டு, அப்புறமாய் பராகுடாவின் இரண்டாவது ஆல்பத்துக்கு இடம் ஏற்படுத்தும் பொருட்டு தள்ளிச் சென்ற “பிரளயம்” – இந்தாண்டு உறுதிபட இடம்பிடிக்கிறது! 3 பாக – முழுவண்ண – மெர்சலூட்டும் அனுபவமிது !


தொடர்வன எல்லாமே black & white கிராபிக் நாவல்கள் ! பிரபல கதாசிரியர் Christophe Bec–ன் கைவண்ணத்திலொரு மிரட்டலான ஆல்பம் – “காலனின் கால்தடத்தில்” ! இதன் கதைச்சுருக்கம் “நீரில்லை நிலமில்லை”யை நினைவூட்டினாலும் இது முற்றிலும் வேறொரு விதத்திலிருக்கப் போகும் த்ரில்லர் ! கதைநடைபெறும் தீவுக்கு Bikini Island என்று பெயர் ! நான் ஆரம்பத்தில் அதையொரு உட்டாலக்கடித் தீவு ; கிளுகிளுப்புக்கோசரம் இந்தப் பெயர் என்று தான் நினைத்திருந்தேன் - https://en.wikipedia.org/wiki/Bikini_Atoll என்று விக்கிப்பீடியாவில் பார்க்கும் வரையிலும் ! மிரட்டும் த்ரில்லர் !

- “தனியே… தன்னந்தனியே” ஒரு திகில் த்ரில்லர் !

- “பனியில் ஒரு குருதிப்புனல்” – முற்றிலும் மாறுபட்டதொரு களத்தில் – ரொம்பவே மாறுபட்ட வாசிப்பு !

- “கோழைகளின் பூமி” – Yet another absorbing கி.நா.!ஆக சில பல பிரான்கோ-பெல்ஜிய ஆல்பங்கள்; சில பல இத்தாலிய ஆல்பங்களென இந்த சந்தா–E ன் ஓட்டத்துக்குத் துணை நிற்கப் போகின்றன ! Thus ends சந்தா E ! பராகுடா போல மிரட்டலான கி.நா.க்கள் எதுவும் இம்முறை கிடையாதா ? என்ற கேள்வி எனக்குமே கேட்கிறது ! ஸ்லாட்ஸ் பஞ்சம் ; பட்ஜெட்டில் விழும் துண்டு என சங்கைப் பிடிப்பதால் - விசாலமான திட்டமிடல்களை அடக்கியே வாசிக்க வேண்டியுள்ளது ! "தீபாவளி ஸ்பெஷல்" டெக்ஸைக் கூட குண்டு புக்காய் black & white-ல் மட்டுமே திட்டமிட்டுள்ளதும் இதன் காரணத்தாலேயே !

So ஒருவழியாய் சந்தா D பக்கமாய்ப் பார்வைகளை இனி நகர்த்துவோமா ? இந்தவாட்டி D for “DYNAMIC REPRINTS” என்ற சமாச்சாரமிருக்கப் போவதில்லை! In fact நாலைந்து ஆண்டுகளாய்த் தடதடத்து வரும் மறுபதிப்புப் படலங்கள் முன்பே நான் சொன்னது போல கொஞ்சமாய் பின்சீட் செல்லவுள்ளன ! MAXI லயனில் எப்படியும் 4 மறுபதிப்புகள் ஆண்டுதோறும் இடம்பிடித்திடுமென்ற நிலையில் மேற்கொண்டும் ஒரு சந்தாப் பிரிவை இதற்கென ஒதுக்கிடுவது அத்தனை ரம்யத்தைத் தரவில்லை எனக்கு ! பற்றாக்குறைக்கு “மரண வைரங்கள்” போன்ற மறுபதிப்புகள் வெளியாக நேரிடும் போது – ‘அந்நாட்களில் நாம் சிலாகித்தவை இன்றைக்கு இத்தனை டப்ஸாவாய்த் தெரிகின்றனவே?‘ என்று மிரளவும் நேரிடுகிறது! So ஒரு பரீட்சார்த்த முயற்சியாய் 2020-ல் we will take a clean break from reprints in excess ! பழமைவிரும்பிகளான உங்களுக்கு இது அத்தனை ரசிக்காதென்பதும் ; “கொரில்லா சாம்ராஜ்யம்” இல்லையேல் இச்ஜெகத்தினை அழித்திடலாமா ? குறைந்த பட்சமாய் உன் மூக்கிலாவது குத்திக் கொள்ளலாமா ? பழசையெல்லாம் மறக்கிற நீ உருப்பட வழி லேது !!" என்ற ரௌத்திரங்கள் எழுந்திடக் கூடுமென்பதுமே புரிகிறது ! ஆனால் புத்தக விழாக்களின் போது மட்டும் மாயாவி கதைகளில் ஒன்றிரண்டை வெளியிட்டுக் கொள்ளலாம் – அவற்றையும் சந்தாக்களில் ஒரு அங்கமாக்கிடாது என்பது தீர்மானம் ! மற்றபடிக்கு மும்மூர்த்திகள் அத்தனை பேருமே (லாரன்ஸ் – டேவிட் & ஜானி நீரோ & ஸ்பைடர்) செம ஆரோக்கியமாய் நமது கிட்டங்கியினில் குடித்தனம் செய்து வருவதால் அவர்களது எண்ணிக்கைகளை மேலும் எகிறச் செய்யும் ஆர்வமில்லை நமக்கு ! தவிர, இப்போதெல்லாம் ஓசையின்றி ஒரு மாற்றமும் நிகழ்ந்துள்ளது - முகவர்களின் ஆர்டர்களில் முன்பெல்லாம் மாயாவி & கோ.தவறாது இடம் பிடிப்பதுண்டு ! ஆனால் அந்த trend சிறுகச் சிறுக மறைந்து வருகிறது ! அப்புறம் ‘ரிப் கிர்பி / காரிகன் / சார்லி கிடையாதாக்கும் ?‘ என்ற குரல்கள் எப்போதும் போல, இங்குமங்கும் ஒலிப்பதையும் எதிர்பார்த்திட முடிகிறது ! Read on folks ! என்று  சொல்லிய கையோடு சந்தா D பற்றிப் பேசிட நுழைகிறேன் !


கடந்த 6 மாதங்களுக்கு முன்பாகவே ஜுனியர் எடிட்டரின் suggestion-களில் ஒன்று எனக்குள் குடைந்து கொண்டிருந்தது ! மறுபடியும் ஏஜெண்டுகள் மூலமாய் இன்னமும் சற்றே கூடுதலான வாசகர்களைச் சந்திக்க முயன்றாலென்னவென்பதே ஜுனியரின் முன்மொழிவு ! அதாவது தற்போதைய புக் ஸ்டோர்ஸில் மட்டும் தான் என்றில்லாது – சிறு கடைகளிலும் முன் போல நமது காமிக்ஸ் இதழ்களைக் கிடைக்கச் செய்திட ஒரு வழி தேடிடுவது ! அது குறித்து நமது முகவர்களிடமும் மேலோட்டமாய்ப் பேசிப் பார்த்த போது – ஒரேயொரு புக்காவது மாதா மாதம் சில்லறைக்கடை விற்பனையாளர்களுக்கு ஏதுவாய் அமைந்தால் முயற்சித்துப் பார்க்கலாமென்று அபிப்பிராயப்பட்டனர் ! அங்கே இந்த ஆர்ட்பேப்பர் ; ஜிகினா வேலைகளெல்லாம் அவசியமாகிடாது ! சின்ன விலை ; ஜனரஞ்சகக் கதைகள் ; black & white என்பதே அங்கே template ! அப்போது முதலே அதனை மனதில் அசைபோட்டதன் பலனே தற்போதைய 2020-ன் திட்டமிடலில் சந்தா D–யாக பிரதிபலித்து நிற்கிறது ! மாதமொன்று ; ஆண்டுக்கு 12 இதழ்கள் ; black & white format; விலை ரூ.40/- என்ற template இந்த D for Delightful Light Reading-ல் நடைமுறை கண்டிடும்!


இவற்றிற்கான பக்க எண்ணிக்கை 64 என்று தீர்மானமான போதே அந்த எண்ணிக்கையினுள் நுழையக்கூடிய black & white கதைகள் எவையென தலைக்குள் ஒரு தேடல் துவங்கியது! தலைக்குள் தொடங்கிய தேடலுக்கு ‘தல‘யே பதிலான போது ‘sweet surprise’! சென்றாண்டு முதலாய் இளம் TEX-ன் கதைவரிசை ஒன்றினைப் பிரத்யேகமாய் TEX WILLER என்ற லேபிலின்  கீழே போனெலி வெளியிட்டு வருகின்றனர் ! ஒவ்வொரு கதையும் 64 பக்க நீளமே ; ஆங்காங்கே நிறைவுறுபவையே ! முதல் 4 கதைகளும் அதே பாணியில் – ஆல்பம் 5 & 6 மட்டும் தொடர்களாகி, 128 பக்கங்களில் முற்றுப் பெறுகின்றன ! So இந்தத் தொடரின் முதல் 4 கதைகளையும் நமது சந்தா D க்கு இட்டுச் சென்றால் – crisp reading & அதே சமயம் ஒரு வலுவான நாயகர் என்ற கூட்டணி சாத்தியமாகிடுமே எனத் தோன்றியது! அதன் பலனே “எதிரிகள் ஓராயிரம்” & இதர Young Tex கதைகள் ! அதே அற்புதமான ஒரிஜினல் அட்டைப்படங்களோடு – 64 பக்கங்களில் இவை 2020-ல் விற்பனை கண்டிடும்! சின்ன விலைகள்; classy நாயகர் ; fingers crossed !


அப்புறமாய் ஈரோட்டில் நான் செய்திருந்த promise மறந்திருக்கவில்லை ! நண்பர் “டேஞ்சர் டயபாலிக்” 2 ஆக்ஷன் packed சாகஸங்களில், compact சைஸில் வரவுள்ளார் ! இதற்கான ஏற்பாடுகளின் இறுதிக்கட்டத்தில் தற்போதிருக்கிறோம் ! கதைத் தேர்வினில் – "எங்கேனும் கிழவிகள் தென்படுகிறார்களா ?!" என்பதைத் தான் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றித் தேடினோம் – ஜுனியரும், நானும் ! கிழவிகளின் சங்குகளுக்கு ஆபத்தில்லையெனில், நமது வாசிப்புகளுக்கும் சேதமில்லை என்ற ஃபார்முலாவில் இந்த இத்தாலிய சூப்பர் ஸ்டாருக்கு 2 ஸ்லாட்ஸ் !

பெரும்பாலும் இது போன்ற black & white சுருக்கமான பக்க format-களுக்கு முழுநீள ஆல்பங்களை விடவும் newspaper strips தான் சுகப்படும் என்பது அனுபவப் பாடம் ! அப்போது தான் இளவரசிக்கு ஒற்றை slot வாக்குறுதி நினைவுக்கு வந்தது ! So மாடஸ்டியின் புதியதொரு சாகஸம் சந்தா D-ன் இதழ் # 7 ஆகிறது ! "எதிர்காலம் எனதே" இளவரசியின் எதிராளிக்கு கொஞ்சமாய்த் துணிப்பஞ்சத்தைச் சித்தரிக்கவுள்ள ஆல்பம் என்பதைச் சொல்லியே தீர வேண்டும் நான் !

மாடஸ்டியினை விநியோகம் செய்திடும் அதே இலண்டன் ஏஜென்ஸியே ஜேம்ஸ் பாண்டின் black & white strips-களையும் சந்தைப்படுத்தி வருகிறார்கள் ! இவற்றைத் தான் வாங்கிட அந்நாட்களில் ராணி காமிக்ஸுக்கும், நமக்குமிடையே tug of war நடந்திடும் ! ஆனால் அவர்கள் முந்திக் கொண்டதால் நம்மால் ஈடு தந்திட இயலவில்லை ! இன்று சுமார் 35 ஆண்டுகள் கடந்திருக்க, அந்த ஜேம்ஸ் பாண்ட் கதைகளை மறுபடியும் தமிழில் விநியோகிக்க அவர்கள் ஆர்வம் காட்டிய போது – எனக்குமே ஓ.கே. என்றே தோன்றியது ! Yes of course – ராணி காமிக்ஸில் ஏற்கனவே வெளியான கதைகளை நாமும் repeat செய்திட சாத்தியப்படலாம் தான் ; ஆனால் நம் பாணியிலான மொழிபெயர்ப்புகள் ; வடிவமைப்புகள்; வாசிக்கும் போதொரு fresh feel-ஐத் தந்திடக்கூடுமென்ற நம்பிக்கையில் இந்தக் கதைகளுக்கான உரிமைகளையும் வாங்கிவிட்டேன் ! ஆனால்....ஆனால்...தலைக்குள் திடீர் திடீரென மாறுபட்ட சிந்தனைகள் ஓடத்துவங்கின !! "நாங்க எக்ஸ்டரா நம்பர் போடச் சொன்னோமா ? 'சிவனே'ன்னு போற ரூட்டை வுட்டுப்புட்டு இந்த பழசுக்குள் மண்டையை நுழைப்பானேன் ? " என்று இங்கே நீங்கள் லைனாக நின்று டபுள் கொட்டு வைப்பது போலவே தோன்றிட - "ஆத்தாடியோவ்...விஷப்பரீட்சையே வாணாம் !! மருவாதியா மஹாராசர்களிடமே கேட்டுப்புடலாம் !" என்று ஞானோதயம் பிறந்தது ! அதன் பின் தொடர்ந்தது தான் உங்களுக்குத் தெரியுமே ? ஜேம்ஸ் பாண்டின் ஆளுமை ஒரு பக்கமெனில், அவற்றைப் படித்தே இன்றைக்கு அடுத்த லெவல் வாசிப்புகளுக்கு graduate ஆகியுள்ள உங்களுக்கு அந்தத் தொடர் மீதான மையல் குன்றியிராதென்றெல்லாம் எனக்குத் தெரிந்திருந்ததே ! ஆனால் சில தனிமையான ராப்பொழுதுகளில் மனசுக்குரங்கானது "சொய்ங்க்...சொய்ங்...' என்று விளையாட ஆரம்பித்து விடுகிறது ! அத்தருணங்களில் தலீவரின் கடுதாசிக் கணைகளெல்லாம் கூட Laser guided missiles போல மிரட்டுவதுண்டு ! So உங்களிடமே கேட்டு விட்டால், சன்னமாய் சஸ்பென்ஸ் உடைந்தது மட்டுமே பலனாயிருக்கும் ; ஆனால் உங்கள் அபிப்பிராயங்களைக் கேட்காது நான்பாட்டுக்கு  அறிவித்து விட்டு - அப்பாலிக்கா மொத்து வாங்க நேரிட்டால் ரூம் போட்டு சுவற்றில் முட்டிக்க வேண்டியிருக்குமே என்றுபட்டது ! And you know the rest !!

ஒன்றுக்கு, இரண்டாய் ஜேம்ஸபாண்டை டிக்கடித்து விட்டு - லிஸ்டைப் பார்த்தால் :

4 YOUNG டெக்ஸ்
2 டயபாலிக்
1 மாடஸ்டி
2  ஜேம்ஸ் பாண்ட் 

என்று 9 இதழ்களின் திட்டமிடல் ரெடியாக நின்றது ! அப்போது தான் GUN LAW என்றதொரு daily strip நினைவுக்கு வந்தது ! ஷெரீப் டில்லன் என்ற நாயகருடன் பயணிக்கும் கௌபாய்த் தொடரிது ! அதையும் ஓ.கே. செய்திட புக் எண்ணிக்கை 10 -ஐத் தொட்டு நின்றது !


அதே ஏஜென்ஸியின் yet another கதைத் தொடரானது AXA ! சிக்கனமான துணிகளோடு ; அவ்வப்போது அவற்றிற்கும் விடுதலை தந்து விட்டு 2080-ல் உலா வரும் இந்த அழகுப் பெண்மணியின் சாகஸங்கள் இங்கிலாந்தில் THE SUN வாசகர்களிடையே ரொம்பவே பிரசித்தம் ! கொஞ்சம் தோர்கலைப் போல ; கொஞ்சமாய் சாம்சனை போல சாகசம் செய்து வரும் இந்தப் பெண்மணியின் கதைகளை வெளியிட்டுப் பார்க்கச் சொல்லி  ரொம்ப காலமாகவே நம்மை கேட்டுள்ள போதிலும், நான் ஓட்டமெடுத்துள்ளேன்! ஆனால் இம்முறையும் அவர்கள் கோரிய போது எனக்கு மறுப்புச் சொல்ல மனமில்லை ! So உரிய சென்ஸார்களோடு இந்த ஒற்றை சாகஸத்தை மட்டும் களமிறக்கிப் பார்த்தால் என்னவென்று தோன்றியது ! அந்த எண்ணத்தோடு AXA -வின் முதல் கதையையும் வாங்கி விட்டோம் ; அட்டவணையில் சந்தா D-யின் ஆல்பம் # 11 ஆக இதை டிக்கும் செய்தும் விட்டேன் !  இவருக்குத் தமிழில் வேறு ஏதாவதொரு பெயர் சூட்டுவோமா ? என்ற ரோசனைக்குள்ளும் புகுந்திருந்தேன் - ஆக்ஸா பிளேடு; ஸ்க்ரூ டிரைவர் என்பது ஒரு தினுசாக பட்டதால் ! ஆனால் அத்தனையையும் மீறி உள்ளுக்குள் ஒரு பீதி குடிகொண்டிருந்தது ! அவ்வப்போது கதையின் strip களைப் பர பரவெனப் புரட்டுவேன் ; ஒரு தினுசான திருட்டு முழி முழிப்பேன் ! என்னத்தை சென்சார் செய்தாலும் அம்மணியை ஒழுங்குப் புள்ளையாக்குவது நட்வாக் காரியமோ ? என்ற பயம் போட்டுத் தாக்கியது ! 2 நாட்களுக்கு முன்பு, 'கடைசியாய் ஒரு மாற்றத்தைச் செய்துவிட்டு அட்டவணையை அச்சுக்கு அனுப்பியதாக' எழுதியிருந்தேனல்லவா ? அது வேறெதுவுமல்ல - AXA-வை களமிறக்க தைரியமின்றி அந்த ஸ்லாட்டுக்கு இன்னொரு ஜேம்ஸ் பாண்ட் 007 கதையையே டிக் செய்தது ! ஜேம்ஸ் பாண்டின்  "டாக்டர் நோ"  இடம்பிடித்த பின்னணி இது தான் ! AXA - பயமா கீதுக்கா  !!
யாருக்கு ஒதுக்குவதென்று யோசித்த போது தான் கைவசமுள்ள ரிப் கிர்பி கதைகளும், காரிகன் கதைகளும் நினைவுக்கு வந்தன ! காரிகனின் கதையானது பின்னாட்களில், புது ஓவியர்களை, கதாசிரியர்களையும் கொண்டு உருவாக்கப்பட்டதென்பதால் அந்த க்ளாஸிக் காரிகனின் தரம் மிஸ்ஸிங் என்று நினைத்தேன் ! அப்புறமென்ன - அந்த ஒரிஜினல் ஜென்டில்மேன் டிடெக்டிவ் ரிப் கிர்பி கடைசி ஸ்லாட்டைத் தனதாக்கிக் கொண்டார் !! நாற்பது ரூபாய்க்கு நிச்சயம் இவர் சோடை போகப்போவதில்லை என்று நினைத்தேன் !!
ஆக 500 ருபாய்க்கு அனுசரித்த தொகைக்குள் 12 இதழ்களை அடக்கிடும் திட்டமிடலோடு சந்தா D will go on stream! ஓராண்டுக்குப் பரீட்சார்த்த ரீதியில் இவற்றை முகவர்கள் மூலமும் விற்பனை செய்திட முயற்சிப்போம் ! Of course – சந்தாக்களில் & ஆன்லைனிலும் உண்டு தான் ! சந்தைப்படுத்தும் முயற்சிகள் வெற்றி கண்டால் 2021-ல் இன்னும் வேகமாய்த் தொடர்ந்திடுவோம் ! இல்லாங்காட்டி ப்ரிண்ட்ரன் குறைப்பு + விலையேற்றம் + அத்தியாவசியக் கதைகள் மாத்திரமே தக்க வைத்தல் என்ற மாற்றங்களோடு செயல்படத் தொடங்குவோம் ! தண்ணீருக்குள் இறங்காமலே நீச்சல் பயில சாத்தியப்படாதென்பதால் குதித்துத் தான் பார்ப்போமே ஆழத்தினுள் !

 Thus ends the planning for சந்தா: D!
 இதன் பின்னே காத்திருப்பதோ ஜம்போவின் சீஸன் 3 தான்! அது சார்ந்த கதை இறுதிப்படுத்துதல் இன்னமுமே நேரமெடுக்கும் என்பதால் மார்ச் 2020 வரை பொறுத்திருங்கள் ! இப்போதைக்கான surefires மூன்று மாத்திரமே :

- ஜேம்ஸ் பாண்ட் version 2.0

- தி Lone ரேஞ்சர்

- Old Pa Anderson – ஹெர்மனின் one-shot படைப்பு
இதுவே காத்துள்ள புத்தாண்டின் திட்டமிடல் – ஒட்டுமொத்தமாய் ! இவை நீங்கலாய் ஈரோடு 2020-க்கென இளம் டைகர் தொகுப்பு & maybe something else (!!) மட்டுமே நமது ரேடாரில் இருந்திடும் ! அவற்றிற்கான முன்பதிவுகள் ஏப்ரல் 2020-க்கு மேலே எனும் போது இன்னும் நிறையவே அவகாசமுள்ளது ! Truth to tell – அது குறித்து சிந்திக்கவே எனக்கு இன்னமுமே அவகாசம் கிட்டியிருக்கவில்லை ! So எனது முதல் priority ஆன இந்த 2020 அட்டவணையை உங்கள் கைகளில் ஒப்படைத்த பிற்பாடே வேறெதற்குள்ளும் என் சிந்தனைகள் போயிடும் !
சரி… அட்டவணை பற்றிய விபரங்களைத் தந்தாச்சு ! What next? வழமை போல – கேள்வியும் - நானே; பதிலும் நானே தானே ? எத்தனை வல்லிய லாஜிக்கோடு திட்டமிட்டாலும் – இது ஏன் வரில்லா ? இது ஏன் வந்தூ ? என்ற கேள்விகள் காத்திருப்பது நிச்சயம் ! So கேட்கும் சிரமங்களையும், எனக்கு ஆங்காங்கே பதில் சொல்லும் சிரமங்களையும் தவிர்க்கவே இந்த ஏற்பாடு !

 கேள்வியும் ஞானே… பதிலும் ஞானே…!


1. சந்தா A-வில் XIII-ன் அடுத்த பாகத்தை (2132 metres) இப்போதே ‘கொள்ளை போகுது‘ என்று களமிறக்கும் அவசியம் என்னவோ ? சாவகாசமாய் அதன் இதர ஆல்பங்கள் வெளியான பிற்பாடு – சுற்றின் மொத்தத்தையும் வெளியிட்டிருக்கலாமே ?

- பொதுவாய் ஒரு சுற்றானது நிறைவுற நாலைந்து ஆண்டுகளை எடுத்துக் கொள்ளும் என்பதை அனுபவத்தில் பார்த்திருக்கிறோம் ! அதற்குள் Cinebook-ல் நிச்சயமாய் ஆங்கில பதிப்பு வெளிவந்திடும் ; அது வந்த சற்றைக்கெல்லாம் சேவை மனப்பான்மை கொண்ட நண்பர்கள் ஸ்கேன்லேஷனிலும் வடை சுட்டு விடுவது நிச்சயம் ! So நாம் ஆற அமர வெளியிடத் தயாராவதற்குள்ளாய் இதெல்லாமே வரலாறாய் மாறிப் போயிருக்கலாம் ! So சூட்டோடு சூடாய் வெளியிட நினைத்தேன் !


2. கேப்டன் பிரின்ஸ் மறுபதிப்பைக் காணோமே ?

- 2020-ல் MAXI லயனில் டெக்ஸிற்கு 2 ஸ்லாட்கள் ; கார்ட்டூன் 2 ஸ்லாட்கள் என்று ஒதுக்கியுள்ளேன் ! இது  நிச்சயமாய் 2021-ல் மாற்றம் கண்டிடும் ! அந்நேரம் நமது பரட்டைத்தலை கேப்டனின் சுவாரஸ்யமான கதை(கள்) மட்டும் மறுபதிப்பு கண்டிடும் ! So இந்தாண்டுக்கு ஃப்ரீயா விடுங்களேன் ப்ளீஸ் !


3. கேப்டன் டைகரின் புது ஆல்பம் வெளியாவதாய் சொல்லியும், அதனை அட்டவணையில் நுழைக்காதது ஏனோ ?

- இந்த முதல் ஆல்பமே நிறைய தாமதத்தோடு – கிட்டத்தட்ட ஒன்றேகாலாண்டுத் தாமதத்திற்குப் பின் வெளியாகியுள்ளது. அதன் க்ளைமேக்ஸ் பாகமும் இதே போல தாமதம் கண்டால் ஒற்றை பாகத்தைப் போட்ட கையோடு, தொங்கலில் விட்டது போலிருக்குமே ?! So காத்திருந்து பாகம் 2 ரெடியாகும் சமயமாய் இரண்டையும் சேர்த்து ஒரு புக்காக்கிடத் தீர்மானித்துள்ளேன் !


4. லார்கோ வின்ச்சின் புது சாகஸத்தின் இரண்டாம் பாகமும் இந்தாண்டு நவம்பர் இறுதியில் வெளிவர உள்ளதே? அப்பறமும் அவருக்கு இடத்தைக் காணோமே ?

- வாழ்க்கையில் முதன்முறையாக ஒரு கதையை மொழிபெயர்ப்பின் சிரமங்களை முன்நிறுத்தி அதனைத் தேர்வு செய்திட நான் தயங்கியது லார்கோவின் latest சாகஸத்தின் பொருட்டே! சில மாதங்களுக்கு முன்பாகவே அந்த முதல் அத்தியாயக் கோப்புகளை வரவழைத்துப் படித்துப் பார்த்த போது வியர்த்து விறுவிறுத்து விட்டது! கதாசிரியர் வான் ஹாம் இத்தொடரிலிருந்து வி்டை பெற்றிருக்க ஓவியரான ப்ரான்ஸே போ ஒத்தாசைக்கு எரிக் கியேகொமெடி எனும் நாவலாசிரியரையும் இணைத்துக் கொண்டு உருவாக்கியுள்ள ஆல்பமிது ! கதை ரொம்பவே – ரொம்பவே குழப்பமாய் ஓடுவது ஒரு பக்கமெனில், மொழிபெயர்ப்பிற்கு இந்த ஆல்பம் தெறிக்க விடும் சிரமங்களை முன்நிறுத்தும் என்ற புரிதலும் இன்னொரு பக்கம் !! இரண்டாவது பாகமும் வெளியாகி ‘கதை தேறும்‘ என்ற நம்பிக்கையை விதைத்தாலொழிய இந்த சாகஸத்தை handle with care என்றே அணுகிட உள்ளோம் ! கதாசிரியர் வான் ஹாம் எனும் இமயத்தை இன்னும் ஜாஸ்தியாய் miss செய்திடத் தோன்றுகிறது !


5. மர்ம மனிதன் மார்ட்டினுக்கு ஒற்றை slot தானா ?

- இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல அடுத்த ஓரிரண்டு நாட்களின் அவகாசத்தை வழங்கிடுங்களேன் guys ?! சுலபமாய் பதில் சொல்லிடுகிறேன் இவ்வார சனிக்கிழமைக்குள்!


6. ஒரேயொரு Smurf கூடக் கிடையாதா ? ஒற்றை பென்னி கூடக் கிடையாதா ? என்ன கண்றாவி திட்டமிடலிது ?

- “ஒரேயொரு கடலைமுட்டாய் எடுத்துக்கிறேனே அண்ணாச்சி!” என்று பல தடவைகள் பஸ் ஸ்டேண்ட் கடைகளில் உள்ள பெட்டிக்கடையில் பாட்டிலுக்குள் கைவிட்டிருப்போம் தான் ! ஆனால் அதே பாணி – கதைக் கொள்முதல்களில் எடுபடாது போவதே சிக்கல் ! ஒரு காண்டிராக்ட் எனும் போது "குறைந்தபட்சத் தொகை இத்தனை ; குறைந்தபட்ச கதை எண்ணிக்கை இத்தனை” என்றெல்லாம் உண்டு ! நினைவூட்டிப் பாருங்கள் – நாம் முதல் சுற்றில் 8 ஸ்மர்ஃப்ஸ் + 2 பென்னி = மொத்தம் 10 கதைகளை வெளியிட்டிருந்தோம் ! மேற்கொண்டும் கதைகள் வாங்கிட வேண்டுமெனில் repeat தான் ! கையில் 10 கதைகளை வைத்துக் கொண்டு வருஷத்துக்கு இதிலொன்று – அதிலொன்று என்று அடுத்த 5 வருஷங்களை ஓட்டிட நாம் தயாராகயிருந்தாலுமே படைப்பாளிகளின் சம்மதங்கள் கிட்டிடாது ! So முன் போல active ஆக வெளியிடத் தயாரில்லா நிலையில் ஸ்மர்ஃப்ஸ் & பென்னிக்கு மனதில் மட்டுமே இடம் ! Sad but true...!

7. ஆனாக்கா வருஷத்துக்கு ஒரேயொரு சிக் பில் ; ஒரேயொரு மேக் & ஜாக்; ஒரேயொரு ப்ளூகோட்-லாம் வெளியிட முடியுதே ? அது எப்புடியாம் ?

- அவை சகலமுமே ஒற்றைக் குடையின் கீழே சந்தைப்படுத்தப்படும் தொடர்கள். வெவ்வேறு பதிப்பங்களைச் சார்ந்த கதைகளாக இருந்தாலும், அவற்றை விநியோகம் செய்திடும் ஏஜென்ஸி ஒன்றே ! So ஆண்டுக்கு அவர்களிடம் ஏராளமாய் நாம் கொள்முதல் செய்வதால் இந்த சலுகை சாத்தியமாகிறது.

ஆனால் ஸ்மர்ஃப்ஸ் நிறுவனத்திடமோ நாம் வாங்கிடக்கூடிய ஒரே கதைகள் ஸ்மர்ஃப் & பென்னி ! So இங்கும் அங்கும் வேற்றுமையுண்டு !


8. மஞ்சள் சட்டை மாவீரர் தொடர்ந்து ஆக்ரமிப்பு செய்து வருகிறாரே?

- ரயிலில் தத்கல் டிக்கெட்டுக்குக் கட்டணங்கள் கூடுதலாய் தருகிறோம் தானே ? ஆலயங்களில் ஸ்பெஷல் தரிசனங்களுக்கோசரம் கூடுதலாய் பணம் தருவதும் நடைமுறை தானே ? அந்தப் பணமெல்லாம் எதற்குப் பயனாகிறது ? வேறு எதற்கு – ஒட்டுமொத்த ரயில்வே மேம்பாட்டுக்கும் ; ஒட்டுமொத்த ஆலய நிர்வகிப்புக்கும் தானே ?

அதே போலத் தான் TEX எனும் அசுரரின் ஆக்ரமிப்புகளும் ! அவர் பெயரைச் சொல்லி நாம் ஈட்டிடும் வெற்றிகளும், விற்பனைகளுமே, இதர இதழ்களின் சக்கரங்களைச் சுழல அனுமதிக்கின்றது ! So இவரால் தான் பலருக்கும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்பதைப் போலொரு மாயை வேறு எதுவுமே இருக்க இயலாது ! நிஜத்தைச் சொல்வதானால் இவரே இன்னபிற நாயகர்களின் க்ரியா ஊக்கி ! 'வெகுஜன ரசனை' எனும் மீட்டரில் கடந்த 34 ஆண்டுகளாய் நம் மத்தியில் சாதனை செய்து வரும் இவரை கொண்டாடவில்லையென்றால் கூடப் பரவாயில்லை - தூற்ற வேண்டாமே புலீஸ் ? 


9. 2020-க்கான புத்தக எண்ணிக்கை ஓவராய் தெரியுதே ?

- ரூ.40/- விலையிலான கதைகள் எல்லாமே crisp one-shots ! மாதந்தோறும் கூரியரை உடைத்த தினமே படிக்கவல்ல 64 page இதழ்கள் ! நடைமுறையில் பாருங்கள் – இந்த காம்போ ; இந்த எண்ணிக்கை ஓவராய்த் தெரியவே தெரியாது !


10. கார்ட்டூன் வறட்சி தொடர்கிறதே ?

இங்கொரு நிஜத்தை நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது ! தற்சமயம் உள்ள 6 கார்ட்டூன் நாயகர்களில், லக்கி லூக் ஒருவரைத் தாண்டி, பாக்கி அத்தனை நாயகர்களின் சமாச்சாரங்களிலுமே கொஞ்சமாய் நெருடல்கள் உள்ளன - ஏதோவொரு காரணத்தின் பொருட்டு ! 

க்ளிப்டன் : மனுஷனின் தொடரினில் 23 கதைகள் இப்போது வரையிலும் உள்ள போதிலும், அவற்றுள் filter out செய்தால் தேறுவன பாதியை அனுசரித்த எண்ணிக்கையே ! ஆனால் இவற்றையுமே  outright சிரிப்பு மேளாக்களாய்ப் பார்த்திடாது - ஒரு light hearted ஆக்ஷன் த்ரில்லராய்ப் பார்த்தாலொழிய இவை பெருசாய் மிளிரப் போவதில்லை என்பதே bottomline ! 

ஹெர்லாக் ஷோம்ஸ் : மொத்தமே 10 கதைகள் கொண்ட இத்தொடரில் நாம் 7 கதைகளை வெளியிட்டாச்சு ; அநேகமாய் 2021 -ல் நாம் இவரது கடைசி கதையை வெளியிட்டிருப்போம் ! 

மேக் & ஜாக் : கணிசமான கதைகள் இங்குள்ளன ; பெர்சனலாக எனக்கு ரொம்பவே பிடித்துள்ள தொடரும் தான் !! ஆனால் நீங்களும் ஏகோபித்த ஆதரவு தந்தாள் இந்த ஜோடிக்கு கொஞ்சம் கூடுதல் வாய்ப்புகள் பற்றி யோசிக்கலாம் ! What say guys ?

ப்ளூகோட் பட்டாளம் : Ditto மேலுள்ள அதே வரிகள் ! கிட்டத்தட்ட 60 + கதைகள் கொண்ட இத்தொடரை ஆண்டுக்கு ஒன்று என்ற ரீதியிலேயே நாம் கையாண்டு வருகிறோம் ! இவர்களுக்கும் slot எண்ணிக்கை புரமோஷன் பற்றி சிந்திக்கலாமா ?

சிக் பில் & கோ : இங்கு கதைகளின் எண்ணிக்கைக்குப் பஞ்சமே கிடையாது தான் ; ஆனால் பின்னே செல்லச் செல்ல கதைகள் ரொம்பவே தள்ளாட்டம் காண்பதைப் பார்த்துள்ளோம் ! And ஆரம்பத்துக் கதைகளின் artwork ரொம்பவே புராதன ரகம் எனும் போது அங்கேயும் கொஞ்சம் filter செய்திட வேண்டிவருகிறது ! So மத்தியிலுள்ள கதைகளுள் பார்த்துப் பார்த்து தேர்வு செய்தாலன்றி நாம் எதிர்பார்த்திடும்  கெக்கே பிக்கே சாத்தியப்படப் போவதில்லை ! 

எல்லாம் சரி தான் ; இப்போ 'இதுக்கு ஸ்லாட் கூட்டலாமா ? அதுக்கு இடம் சாஸ்தி பண்ணலாமா-ன்னு ' கேட்டு என்னத்தை சாதிக்கப் போறோமாம் ? என்ற மைண்ட்வாய்ஸ் கேட்காதில்லை !! Trust me folks - பதில்களை மாத்திரம் சொல்லுங்கள் ; அப்புறமாய் மற்றதை என்னிடம் விட்டு விடுங்கள் !! 2020 ஒரு கார்ட்டூன் மேளாவாகாது போகாது !!

11."ஜெரெமியா' அவ்ளோ தானா ? 

மொத்தம் 6 ஆல்பங்கள் ; கிட்டத்தட்ட ரூ.500 பணம் என்று ஜெரெமியா தொடரினுள் பயணித்துள்ளோம் ! ஆனால் அவற்றின் பலன்கள் என்னவென்பதில் ஏது இரகசியம் ? 20 /80 என்பதே இவருக்கான ஆதரவு - எதிர்ப்பு நிலைப்பாடெனும் போது மேற்கொண்டும் அந்த ரூட்டில் பயணிக்க தம்மில்லை !! ஒரு கோடும் போட்டு, ரோடும் போடலாம் நான் ; ஆனால் அந்த சாலையில் பயணிப்பது உங்களுக்கு சுகப்பட்டாலொழிய அதனில் traffic இராது தானே ?12.கென்யா..அமெரிக்கா..கோப்பநாயக்கன்பட்டி என்று ஏதேதோ உதார் விட்ட பிற்பாடு பேச்சையும் காணோம் ; மூச்சையும் காணோமே ?`

நிஜத்தைச் சொல்வதானால் 2019-ன் ஈரோட்டு ஸ்பெஷலாகவே கென்யாவைக் கொணர எண்ணியிருந்தேன் ! கதைகளும் வாங்கியாச்சு ; மொழிபெயர்ப்பும் செய்தாச்சு ! ஆனால் இதை ஏற்கனவே ஸ்கேன்லெக்ஷனில் வடை சுட்டிருப்பதாய் நண்பர்கள் சொன்ன போது என் வேகம் மட்டுப்பட்டுப் போனது ! அப்புறமாய்த் தான் 'பிஸ்டலுக்குப் பிரியாவிடை' திட்டமிடல் எல்லாமே !

சரி, கென்யாவையும், அந்த அமெரிக்கா கதையையும், 2020 ஈரோட்டுக்காவது கொண்டு சென்றிட வேண்டியது தானென்று எண்ணியிருந்தேன் !! ஆனால் ஈரோட்டில் நீங்கள் ஒட்டுமொத்தமாய் இளம் டைகர் கதைகளை போட்டுத் தாக்கிடும் யோசனையைச் சொன்ன போது உங்கள் ஆர்வங்களுக்குத் தடைப் போட மனசு கேட்கவில்லை ! 'சரிங்க ஆபீசர்ஸ் !' என்றபடிக்கே "இளம் டைகர்" தொகுப்புக்கு தலையாட்டினேன் ! So 2020 ஈரோட்டுக்கும் கென்யா சாத்தியமில்லை தான் ! ஜம்போ சீசன் 3 க்குள் நுழைப்பதாயின் - பட்ஜெட் எகிறி விடுகிறது ; 'ஆண்டுச் சந்தா ஆயிரத்துக்கு கீழே ; வருஷத்துக்கு ஆறே இதழ்கள்' என்ற அந்த template-ஐ மாற்றிடவும்  மனசில்லை !! ஆக ஏதேனுமொரு முன்பதிவு இதழாய் மட்டுமே கென்யாவையும் ; LIST 66 என்ற அந்த  5 பாக (அமெரிக்கா) த்ரில்லரையும்  வெளியிட்டிட இயலும் போலும் ! ஒரேடியாக இப்போதே அத்தனை மாவுகளையும் பிசைந்து கொண்டிராமல் - தற்சமயத்துக்கு ஆண்டுச் சந்தாச் சப்பாத்திகளை மட்டுமே போட்டு முடிப்போம் என்று தோன்றுகிறது ! அப்பாலிக்கா சந்தர்ப்பங்கள் கைகூடி வரும் நேரம் ஒவ்வொன்றாய்ப் பார்த்துக் கொள்வோமென்று நினைத்தேன் !! 
தவிர ஓராண்டின் காமிக்ஸ் சார்ந்த செலவினங்கள் எகிறிக் கொண்டே செல்வதில் நிறையவே நெருடுகிறது ! இதற்காகவாவது இம்முறை நாம் முயற்சிக்கவுள்ள சந்தா D concept வெற்றி கண்டால் தேவலாம் என்று படுகிறது ! விற்பனை எண்ணிக்கை கூடிடும் பட்சத்தில் விலைகள் தாமாய்க் கீழே வந்திடுமன்றோ ? Fingers crossed !! 

இவையெல்லாம் நீங்கலாய் - இன்னமுமே ஒரு டஜனுக்குக் குறைச்சலில்லா அட்டகாசமான  3 / 5 பாக சாகசங்கள் என்று கைவசமுள்ளன தான் !! அவற்றையும் அவ்வப்போது எனது லேப்டாப்பில் பார்த்தபடிக்கே மோவாயில் கைவைத்திருப்பேன் - 'இவற்றுக்கு வேளை எப்போது பிறக்குமோ ?' என்று ! 'ஆங்..பழைய சேம்சு பாண்டர் ; மஞ்ச சட்டைக்காரரை எல்லாம் குறைச்சுப்புட்டா கிடைக்கும் அந்த இடத்திலே போடலாமுலப்பு ?' என்ற சிந்தனைச் சிதறல்கள் காதில் விழாதில்லை ; ஆனால் இவை எல்லாமே நெடுந்தொடர்கள் என்பதால் ஒவ்வொன்றுக்கும் "பிஸ்டலுக்குப் பிரியாவிடை" போலான exclusive slots அவசியப்படும் ! அவ்விதமின்றி பிரித்துப் போட்டால் கதைகளின் வீரியம் குன்றியது போலாகி விடும் ! அரவமிலா பின்னிரவுகளில் திடீரென்று ஒரு ஞானோதயம் பிறப்பதுண்டு - ஓராண்டின் சந்தாவில் 'எல்லாமும் புதுசு !' என்ற அதிரடியோடு களம் கண்டாலென்னவென்று !! எழுந்து உட்கார்ந்து மடக் மடக்கென்று ஒரு டம்பளர் தண்ணீரைக் குடித்துவிட்டுப் படுத்து விடுவேன் !

ஜாலியானதொரு வேள்விக்கு இன்னமும் கொஞ்சமே கொஞ்சமாய் கூடுதல் விற்பனை என்ற ஊக்கம் மாத்திரம் கிட்டின், விலைகளெனும் நெருடல்களை சற்றே சீர் செய்து இன்னமும் பெரியதொரு கேன்வாஸில் சித்திரம் தீட்டிடச்  சாத்தியப்படுமே என்ற ஆதங்கம் தான் பெருமூச்சிடச் செய்கிறது   !! இன்னும் நிறைய வாசகர்களை ; நிறையக் குடும்பங்களை காமிக்ஸின் சுவை சென்றடையின் எத்தனை ரம்யமாக இருக்கும் ?  If only ......

O.k. guys....என் மதிக்கு உட்பட்ட தேர்வுகளை ; பட்ஜெட் எனும் கட்டுப்பாடுகளின் மீதும் ஒரு முட்டைக்கண்ணைப் பதித்தபடிக்கே செய்துள்ளேன் ! இதனில் உங்களுக்கு திருப்தியும் இருக்கலாம் - நெருடல்களும் இருக்கலாம் தான் ! உங்களின் ஆதர்ஷ நாயகரோ,  நாயகியோ இந்த அட்டவணையில் இடம் பிடித்திருக்கவில்லை எனில் அதன் பொருட்டு கோபம் வேண்டாமே ப்ளீஸ் ? கடுமையான NEET தேர்வைத் தாண்டினாலொழிய எத்தனை பெரிய அப்பாடக்கருக்கும் சீட்  கிடையாதென்று உறுதியாய் நிற்கும் வாசக வட்டத்தின் தீர்மானங்களே எனது தேர்வுகளையும் / நிராகரிப்புகளையும் நிர்ணயம் செய்கின்றன ! ஆகையால் பெரும்பான்மையின் தீர்ப்புக்கு இசைவு சொல்லிடுவோமே ?

Before I sign out - இன்னொரு வேண்டுகோளுமே ப்ளீஸ் :

ஊஞ்சலில் குந்தியபடிக்கே ஒரு கிளாஸ் டீயை உற்றுப் பார்த்துக் கொண்டேயிருப்பார் ஆராய்ச்சியாளர் செந்தில் ! தீவிரமாய் இந்த ஆங்களிலிருந்து ; அந்த கோணத்திலிருந்து என்று ஆராய்ச்சி ஓடிக்கொண்டிருக்கும்  !! 'அது என்னடா நாயே ? ஒரு டீயை இவ்ளோ நேரம் பாத்துக்கிட்டிருக்கே ?' என்று மூதறிஞர் கவுண்டர் கடிந்து கொள்வார் ! அந்த சீனையே கடந்த ஒரு மாசமாய் ஆபீஸிலும், வீட்டிலும் ஓராயிரம் தபா நடத்தாத குறை தான் ! அட்டவணையை பிரிண்ட் அவுட் எடுத்து முறைத்து முறைத்துப் பார்ப்பது ; இதை அடிப்பது ; அதை நுழைப்பது என்று ஏதேதோ குரங்குக்கூத்துக்கள் அரங்கேறியுள்ளன இந்த அட்டவணையின் பின்னே !! So நீங்களுமே நிதானமாய், நிறையவே நேரம் எடுத்துக் கொண்டு இதனை உள்வாங்கிக்கொள்ள முயற்சித்திடலாமே ப்ளீஸ் ? உங்களுக்கு எங்கெங்கு நெருடல்கள் தென்படுகின்றனவோ அவற்றைத் தெளிவாய்ச் சுட்டிக் காட்டி - "இதை இப்படிச் செய்திருக்கலாம் !" என்று suggest செய்திட்டால் அடுத்தவாட்டிக்காவது எனக்குப் பயனாகும் அல்லவா ?

எது எப்படியோ - முழு ஆண்டுத் தேர்வை வாத்தியாரே எழுதிவிட்டு மாணாக்கர்களின் மதிப்பீட்டுக்காகக் காத்திருக்கும் அந்த ஜாலியானபடலம் yet again !! ஏதோ பார்த்துப் பண்ணுங்க மாணாக்கார்ஸ் !!

Bye folks !! Thank you for taking the time to read this !!! And thank you ever so much for being an absolutely awesome audience !! Bye for now !! 

Monday, October 21, 2019

நின்னுக் கோரி வர்ணும்...

நண்பர்களே,

வணக்கம். அது என்ன கணக்கோ தெரியலை ; போன வருஷத்து அட்டவணைப் பதிவும் இதே 27 பக்கங்களைத் தான் ஆக்கிரமித்தது !! மாங்கு மாங்கென்று எழுதி முடித்த கையோடு, தெறித்து ஓடும் DTP பணியாளர்கள் மத்தியில் அதைப் பங்கிட்ட கையோடு - இறுதியாய் ஒரேயொரு சன்னமான மாற்றத்தையும் செய்த கையோடு அட்டவணையையும் அச்சுக்கு அனுப்பியாச்சு ! இங்கே ஆளாளுக்குக் கொடுத்து வரும் பில்டப்பைப் பார்த்தால் கொஞ்சம் மிரட்சியாகவே உள்ள போதிலும் ஒவ்வொரு பிரிவினிலும் நான் செய்துள்ள தேர்வுகளின் லாஜிக் உங்களுக்குத் புரியாது போகாதென்ற நம்பிக்கையோடு - ரவுண்ட் பன்னுக்கு ஆர்டர் சொல்லியாச்சு !! 

"ஐநூத்துச் சொச்சம் பன்னைக் கொண்டு என்ன செய்யப் போறீங்க ? ஏதாச்சும் பள்ளிக்கூட மீட்டிங்கா ?" என்று பேக்கரியில் கேட்க - சரியாக அப்போது பாத்து "இக்கட கீறதெலாம் ஆடுங்கோ ; மாடுங்கோ !" என்று நண்பர் ஒருவர் கண்டுபிடித்துத் தந்தது நினைவுக்கு வர - "இல்லீங்கண்ணா ; நம்ம பண்ணையிலே உள்ள மாடுகளுக்கு உங்க பன் தந்தாக்கா அவையெல்லாமே செமத்தியா பாட்டு பாட ஆரம்பிச்சுடுது ! சூப்பர் சிங்கர் போட்டிக்கு கூட்டிட்டு போலாமேன்னு ஒரு நப்பாசை தான் !" என்றபடிக்கே அட்வான்ஸைக் கையில் திணித்தோம்  ! ஆகையால் விசாலக்கிழமை ஆங்காங்கே "நின்னுக் கோரி வர்ணும் !! வர்ணும் !!" என்ற சாதகப்பயிற்சிகளோடு பொழுதைக் கழிப்பீர்கள் என்ற நம்பிக்கை உண்டு ! இப்போதே தொண்டர்களை...சீய்...தொண்டைகளை சரி செய்ஞ்சுக்கோங்கன்னா !

சந்திப்போம் புதன் நள்ளிரவுக்கு மேலாய் ! Bye all !!See you around !!

Saturday, October 19, 2019

அக்டோபரில் நவம்பர் !

நண்பர்களே,

வணக்கம். இப்போதெல்லாமே சனிக்கிழமைகள் ஆகிப் போனால் நமது DTP அணிக்குக் குளிர் ஜுரம் வராத குறை தான் ! இல்லாங்காட்டி ஆளாளுக்கு கன்னத்தில் மரு; காதிலே கடுக்கன் என்று எதையாச்சும் பொருத்திக் கொண்டு, வடக்கே போகும் முதல் ரயிலில் தொற்றிக் கொள்ள வழியிருக்கிறதா ? என்று பார்க்கத் தொடங்கி விடுகிறார்கள் ! நான் பாட்டுக்கு 18 பக்கம் ; 20 பக்கமென்று பதிவுகளைப் போட்டுத் தாக்கி அனுப்பிட, அவற்றை வெறுமனே ‘லொட்டு லொட்‘டென்று தட்டித் தர வேண்டியவர்களின் பாடுகள் மெய்யாலுமே பாவம் தான் ! எது எப்படியோ – இந்த வாரம் அவர்களும் பிழைத்தார்கள் ; நீங்களும் பிழைத்தீர்கள் ; எனது பதிவானது crisp-ஆன இங்கிலீஷ் திரைப்படத்தைப் போல ‘நறுக்‘கென்று இருந்திடப் போகிறது ! இந்தச் சிக்கனத்துக்கு விஷயப் பஞ்சம் காரணமென்று சொல்ல மாட்டேன் – ஏனெனில் முட்டுச் சந்தில் போய் மொத்து வாங்கி வருவதைக் கூட உப்பு ; காரம் ; புளி சேர்த்து சும்மா ‘ஜிலோ‘வென அவிழ்த்து விடும் டகுல்பாஜி வேலை தான் நமக்கு அத்துப்படியாச்சே ?! So இவ்வாரப் பதிவின் நீளச் சுருக்கத்திற்குக் காரணங்களே வேறு !

- To start with தீபாவளி மலர் & இதர நவம்பர் இதழ்கள் ஒரு மாதிரியாய் அச்சுக்குக் கிளம்பி விட்டதால், அவற்றுள் என்னளவிலான பணிகள் ஓவர் ! ஆனால் கேட்லாக் 2020-ல் ‘படங்களை மாற்று… தலைப்பை மாற்று‘ என்று ‘ஆட்றா ராமா… தாண்ட்றா ராமா‘ கூத்து இன்னமுமே படு மும்முரமாய் அரங்கேறி வருகிறது ! சில கடைசி நிமிட ஞானோதயங்களைச் செயல்படுத்திடவும் ; இடிக்கும் பட்ஜெட்களைச் சமாதானம் செய்திடவும் இந்த ஞாயிறு எனக்கு ரொம்பவே அவசியப்படும்!

- அதை விடப் பெரிய காரணம் – காத்துள்ள 'அட்டவணை பதிவினை‘ எழுத எனக்கும் ; அதை டைப்படிக்க நண்பர் குருமூர்த்திக்கும் கொஞ்சமாவது ஜீவன் மிஞ்சியிருக்க வேண்டுமென்பதால் இந்தப் பதிவில் அடக்கி வாசிக்க முற்படுகிறேன் ! போன வருஷத்து அட்டவணை அறிவிப்பு 25 பக்க நீளத்தை ஆக்கிரமித்தது நினைவுள்ளது ! பேசாமல் டைப்படிக்காது Youtube-ல் ஒரு வீடியோவாகப் பதிவு செய்து போட்டு விடலாமா? என்ற எண்ணம் கூட தலைதூக்கியது! ஆனால் நம்ம ஆந்தைவிழிகளைப் பார்த்துத் தெறித்தோடுவது ஒரு பக்கமாயிருப்பின் ; சுகப்படும் போதெல்லாம் வாசிக்கும் வசதி, அசைபோடும் வசதி அங்கே சாத்தியமாகாது என்பதால் ‘பழைய குருடி… கதவைத் திறடி‘ பாணியே இம்முறையும் ! So ஒரு புது Writing Pad தயார் – இந்த ஞாயிறை அத்தோடு செலவிட நான் தான் தயாராகணும்!

சரி… நீட்டி முழக்கியே பதிவின் பாதியைத் தொட்டு நிற்கக் கூடாதென்பதால் – இதோ இந்த ஒற்றைப் பதிவிலேயே நவம்பரின் 3 இதழ்களுக்குமான preview படலம் ! வேறு ஏதேதோ கதைகள் விட்டே அக்டோபரின் இத்தனை தேதிகளைக் கடத்திட சாத்தியப்பட்டிருப்பதால் இந்த வாரம் ஒட்டுமொத்த ட்ரெய்லர் படலம் !

சந்தேகமின்றி இம்மாதத்து highlights ஆக அமையப் போவது நமது (குண்டு) லயன் தீபாவளி மலரும், எங்கள் ஊரின் ரவுண்ட் பன்னுமே எனும் போது பிள்ளையார் சுழியைப் போடுவதும் அங்கிருந்தே என்றால் தானே பொருத்தம் ? போன வருஷத்து ‘டைனமைட் ஸ்பெஷல்‘ பெரும்பான்மையான பக்கங்களை வண்ணத்திலும், பாக்கியினை b&w-லும் கொண்டிருந்தது நினைவிருக்கலாம் ! இந்தவாட்டி அத்தகைய luxury சாத்தியம் நஹி ; பட்ஜெட்டில் விழுந்த துண்டின் காரணமாய் ! To be fair – இம்முறையிலான 5 கதைக் காம்போவில்,  டெக்ஸ் நீங்கலாக பாக்கிக் கதைகள் எதுவுமே வண்ணத்தில் இல்லையெனும் போது – நாம் ஆசைப்பட்டிருந்தாலும் வண்ணத்துக்குப் பிரதானம் தந்திருக்க இயன்றிராது ! So இதழின் பருமனையே இம்முறை ப்ளஸ் பாய்ண்டாக எடுத்துக் கொண்டு, கதைகள் பக்கமாய் கவனத்தைத் திருப்புவோமா ?

இதோ – தீபாவளி மலரின் அட்டைப்பட முதல் பார்வையுமே ! ஒரிஜினல் போனெலி அட்டைப்பட சித்திரத்தில் – பின்னணி வர்ணங்களில் மட்டும் கூட்டல் – குறைத்தல் செய்துள்ளோம் - வழக்கம் போல சில நகாசு வேலைகளோடு ! And பின்னட்டை – ஒவ்வொரு கதைக்குமென ஒரிஜினல் ராப்பருடன் ! 
ஆட்டத்தை ஆரம்பிப்பவர் நமது மஞ்சள் சட்டை மாவீரரே! 1969-ல் பெரியவர் போனெலியின் பேனாவினிலும், மூத்த ஓவியர் அரெலியோ காலெபினியின் தூரிகைகளிலும் பிறந்ததொரு 157 பக்க சாகஸம் தான் இம்முறை நம் வாசிப்புக்குத் தீனி போடவுள்ள முதல் கதையானது ! வழக்கம் போலவே நேர்கோட்டுக் கதையே & வழக்கம் போலவே துவக்கம் முதலே டெக்ஸின் நண்பரும் ; கார்சனின் நண்பரும் இணைந்தே கதை நெடுகப் பயணிக்கிறார்கள்! ரொம்ப dramatic ஆன கருவெல்லாம் இம்முறை கிடையாது ; ஆனால் தெளிந்த நீரோடை போலான கதையை ஒரு சர்க்கஸின் பின்னணியில்; காலெபினியின் அற்புதச் சித்திரங்களில் ரசிக்கும் அனுபவம் நிச்சயமாய் கவர்ந்திடும் என்று நம்புகிறேன்! இதோ – உட்பக்க ட்ரெயிலர் ! 
கதை நம்பர் 2 – மர்ம மனிதன் மார்டினின் “விசித்திர உலகமிது !” ம.ம.மா.வின் களங்கள் எப்போதுமே offbeat ஆனவை ; சிந்தனைகளைத் தூண்டும் ரகத்திலானவை என்பதை நாமறிவோம் ! இம்முறையும் அதனில் மாற்றமில்லை ; ஆனால் விஞ்ஞான ரீதிகளில் நம் சிந்தைகளைக் கிளறிடாது – மனிதாபிமான ரீதியில் யோசிக்கச் செய்திடவுள்ள கதையிது ! A word of caution : ‘இனியெல்லாம் மரணமே‘ ; ‘கனவின் குழந்தைகள்‘ ரேஞ்சுக்கு ஆழத்தையோ; அழுத்தத்தையோ எதிர்பாராது உட்புகுந்தீர்களெனில் மகிழ்வீர்கள் ! And இதோ இந்த சாகஸத்தின் ட்ரெயிலருமே ! இந்த சாகஸத்தில் ஒரு கூத்தும் உண்டு ; நம் நாயகரை ஒன்றுக்கு இரண்டாய்க் காதலிகள் விரட்டி விரட்டி சரசமாட முற்படுகின்றனர் !! மார்டினுக்கு வந்த வாழ்வு !!
கதை நம்பர் 3 – ‘டைலன் டாக் 2.0‘! முற்றிலும் புதிய கதாசிரியர்கள் ; ஓவியர்கள் ; முற்றிலும் வித்தியாசமான treatment என்று டைலன் டாக் இந்தப் புது அவதாரில் இத்தாலியில் கலக்கி வருகிறார் ! ஆல்பம் # 399 முற்றுப் பெற்று, ஆல்பம் # 400-க்கு கால் பதிக்கவுள்ள டை.டா.க்கு திருமணம் அரங்கேறவுள்ளது - அந்த மைல்கல் இதழில் !! திருமண விழா celebration-க்கென வாசகர்களுக்கு போனெலி ஏதேதோ வழங்கிடவுள்ளது !  அவரது துவக்க ஆண்டுகளது பாணிகளிலிருந்து நிரம்பவே வேறுபட்டு நிற்கும் இந்த சாகஸத்தின் கதையோட்டமும் செம ஸ்டைலிஷ்! தட தட வென ஓட்டமெடுத்து இறுதி 4 பக்கங்களில் ஒரு வித்தியாசமான க்ளைமேக்ஸில் கரைந்திடும் இந்த சாகஸத்தினை நீங்கள் எவ்விதம் ரசிப்பீர்களெனப் பார்த்திட பெரும் ஆவலாயிருப்பேன்! DD with a difference ! 

கதை # 4 நமது நியூயார்க் போலீஸின் C.I.D. ராபின்! வழக்கம் போலவே ஒரு மிகையிலா ; யதார்த்தமான ; இயல்பான போலீஸ்ப் புலனாய்வைக் கண்முன்னே கொண்டு வரும் பாணி இந்த 92 பக்க சாகஸத்திலும் தொடர்கிறது ! தொடர் கொலைகள் ; அவற்றின் பின்னணிகளை மோப்பம் பிடித்துச் செல்லும் ராபின் & டீம் இந்தக் கதையின் highlights ! இதோ – இவரது ட்ரெயிலருமே!
கதை # 5 – நமது பென்சிலிடை ஜுலியா தான்! “ஒரு இல்லத்தின் கதை” அவரது வழக்கமான template-ல் பயணிக்கும் ஒரு சுவாரஸ்யமான வாசிப்பு  ! இடையிடையே கொஞ்சம் வாழ்வியல் தத்துவங்கள் ; ஜுலியாவின் காதல் வாழ்க்கை என்று செல்லும் இந்தக் கதையின் மொழிபெயர்ப்பு ரொம்பவே பதம் பார்த்து விட்டதென்பேன் ! கதைகளை முடித்து அச்சுக்கு அனுப்பும் பரபரப்பினில் இதனுள் புகுந்தால், செமத்தியான ஸ்பீட் பிரேக்கர் ! தட்டுத் தடுமாறி ; சிலபல ராக்கூத்துக்களை நடத்திய பிற்பாடே ஜுலியாவை அச்சில் பார்க்க சாத்தியமானது ! ஏதேனும் அவசரத்திலிருக்கும் தருணங்களில் இதனை வாசிக்க முனைந்திட வேண்டாமே ப்ளீஸ் ! நிதானமாய்; நிறையவே நேரம் தந்து வாசிக்க முனைந்தால் நிச்சயம் இது தித்திக்கும் ! Here you go with the previews :

அத்தோடு இன்னொரு சேதியுமே!

‘தீபாவளி மலர்‘ இதழினை தீபாவளிக்கு முன்பாய்ப் பெற்றிட விரும்பும் பட்சத்தில் – அதற்கான முன்பதிவு லிங்க்கை நமது ஆன்லைன் தளங்களில் நாளை ஏற்படுத்திடவுள்ளோம் ! So சந்தாப் பிரதிகளை அனுப்பிய மறுதினம் முதலாய் இவற்றையும் டெஸ்பாட்ச் செய்திடவுள்ளோம் ! Go for it guys!

Moving on, நவம்பரின் கலர் கோட்டாவினை பூர்த்தி செய்திட ஆஜராவோர் இரு முதியவர்களே ! முன்னவர் கதாசிரியர் வான் ஹாமின் நரைமுடி வேய்ன் ஷெல்டன் எனில் பின்னவர் கேரட் மீசைக் க்ளிப்டன் 

ஷெல்டனின் “துரோகமே துணை” ஒரு அக்மார்க் தமிழ் சீரியல் போல இங்கும், அங்கும் வளைந்து, மூச்சிரைக்கும் வேகத்தில் பயணிக்கும் ஆக்ஷன் த்ரில்லர் ! கதை நெடுக வந்திடும் சிலபல இத்தாலிய மாஃபியா பார்ட்டிகளின் பெயர்களை மட்டும் ஞாபகங்களில் இருத்தி வாசித்தீர்களெனில் ஒரு அதிரடி வாசிப்பு க்யாரண்டி ! வேய்ன் ஷெல்டன் தொடரின் இறுதி ஆல்பமிது – இப்போதைக்காவது ! 2017-ல் இது வெளியான பிற்பாடு இதுவரையிலும் அடுத்த ஆல்பம் பற்றிய தகவல்களில்லை ! ‘நிச்சயம் தொடரும்‘ என்றே சொல்லியிருந்தார்கள் என்பதால் காத்திருக்க வேண்டியது தான் !

கேரட் மீசை க்ளிப்டன் “விடுமுறையில் கொல்” எனும் செம breezy read-ல் வலம் வரவுள்ளார் – ஆண்டின் கார்ட்டூன் கோட்டாவினை பூர்த்தி செய்திடும் பொருட்டு ! எப்போதும் போலவே ஒரு மர்மம் ; சன்னமாய் ஆக்ஷன் ; இடையிடையே கோணாங்கித்தனங்கள் என்று ஓட்டமெடுக்கும் சாகஸம் இதுவும் ! கதை நெடுகவுள்ள அழகான வர்ணச் சேர்க்கையினை அச்சில் பார்க்கும் போது சும்மா ஜில்லென்று உள்ளது ! வாசிப்பிலும் அந்த ரம்யம் தென்பட்டால்  – க்ளிப்டனும் ஹேப்பி; நானுமே ஹேப்பி!

ஆக மேற்படி 3 இதழ்கள் + 2020 கேட்லாக் + ஓரத்திலிருக்கும் இடைவெளிக்குள் நெளிந்து, வளைந்து புகுந்திடும் ரவுண்ட் பன் என இம்மாதத்து கூரியர் டப்பிகள் இருந்திடும் ! ரவுண்ட் பன் – செவ்வக பன்னாகவோ ; நீள்வடிவ பன்னாகவோ உருமாற்றம் கண்டு உங்களை அடைந்திடும் பட்சத்தில் கம்பெனியைத் திட்டாதீங்கோ என்றபடிக்கு விடை பெறுகிறேன் guys ! புதன் நள்ளிரவுக்கு அனுசரித்து அட்டவணையோடு ஆஜராகிறேன் !

Bye for now guys ! Have a festive weekend ! See you around !!

P.S : ஒரு அவசரக் கேள்வி ! உங்களின் பதில்கள் அவசரமாய்த் தேவை ! அந்நாட்களில் ராணி காமிக்ஸில் வெளியான ஜேம்ஸ் பாண்ட் கதைகளின் உரிமையும் தற்போது நம்மிடம் உள்ளது ! கறுப்பு - வெள்ளையில் மித விலைகளில் ஒன்றிரண்டை நமது வழக்கமான பாணிகளில் ; நமது மொழியாக்கத்தில் வெளியிட்டால் ஓ.கே வா ?

ONLINE LISTINGS :

http://www.lion-muthucomics.com/home/430-november-20119-pack.html