Powered By Blogger

Monday, October 07, 2019

போங்கும் ஒரு பண்டிகை தினமும் !

போங்கின் மன்னர்களுக்கு பண்டிகை தின நல்வாழ்த்துக்கள் ! 

பதிவின் இரண்டாம் பாகத்தை பாதி எழுதி வைத்திருக்கிறேன் தான் ; ஆனால் டைப்படிக்க இன்றைக்கு நம்மவர்கள் நஹி ! So நாளை தான் டைப்பிடிக்க இயலும் ! அதுவரையிலும் இன்றைய பொழுதை ஒப்பேற்ற என்ன செய்யலாம் ? 


முன்னே செய்வது போல் ஒரு கேள்வி - பதில் செஷன் வைத்துக் கொள்வோமா ?guys ?


*2020-ன் அட்டவணையின் மேலோட்ட கேள்விகள் !
*நடப்பாண்டு குறித்து ஏதேனும் வினாக்கள் !
*'இட்லிக்கு மல்லிச் சட்னி ஏன் ?' 

என்ற விஞ்ஞானரீதியிலான கேள்விகளையுமே கூடக் கேட்கலாம் ! இயன்றமட்டுக்கு பதில் சொல்லப் பார்க்கிறேன் ?

And I do have some general questions too ! கேட்டு வைக்க இன்றைய பொழுதை பயன்படுத்திக் கொள்ளலாமா ?

Do let me know guys ! Bye for now !1,031 comments:

 1. Replies
  1. ஒன்னுலேர்ந்தே ஆரம்பிச்சுட்டீங்களா?

   Delete
 2. Ha வெற்றி வெற்றி

  ReplyDelete
 3. மேலோட்ட கேள்வி ஒன்று
  2020 அட்டவணை என்று?

  ReplyDelete
  Replies
  1. சூப்பர் அருமையான முதல் கேள்வி .

   அட்டகாசமான முதல் பதில்.:-)

   Delete
 4. 4 சந்தா பிரிவுகளில் ஒன்று ஒன்றிலும் எத்தனை புத்தகங்கள்

  ReplyDelete
  Replies
  1. கேள்வியிலேயே பிழை நண்பரே !

   Delete
  2. எத்தனை பிள்ளையோ... சாரி அத்தனை பிழைகளை பொறுத்தருளி ஒரு பிழைக்கு ஒரு அறிவித்திராத புது புக் வழங்குவீராக என போங்கு குழு சார்பில் கேட்டுக் கொண்டு அமைகிறேன்.

   Delete
  3. அப்படி என்றால் இந்த முறை எத்தனை சந்தா வகைகள்?

   Delete
 5. எத்தனை புதியவர்கள் இந்த வருடம்?

  ReplyDelete
  Replies
  1. புதுசு என்ற ஒரே அளவீட்டை இனியும் தேர்வுகளுக்கொரு வலுவான முகந்திரமாக்கிடுவாதாகயில்லை சார் !

   ஜடாமுடி ஜனாதன் கற்பித்துள்ள பாடம் !

   Delete
  2. ///ஜடாமுடி ஜனாதன் கற்பித்துள்ள பாடம் !///

   பயபுள்ள 'வேட்டைக்காரன்'னு சொல்லி ஏமாத்திப்புடுச்சு! குடிகாரப்பய!!

   Delete
  3. பயபுள்ள 'வேட்டைக்காரன்'னு சொல்லி ஏமாத்திப்புடுச்சு! குடிகாரப்பய!!

   ######

   ஹாஹாஹா....:-))))))

   Delete
 6. எப்போதும் போலவே தோர்கள் muthu ஆண்டு மலர். Durango கோடை மலர் மற்றும் லக்கி லயன் ஆண்டு மலரிலா

  ReplyDelete
 7. எழுதி வைத்ததை போட்டோ எடுத்து போட்டால் கூட போதும்.. நாங்கள் எப்படியாவது decipher செய்து கொள்கிறோம்.. 🙏🏼🙏🏼🙏🏼

  ReplyDelete
 8. Replies
  1. மறுபதிப்பு (D) சந்தாவில் இல்லையெனும் போது கார்ட்டூன்(C) எண்ணிக்கையை கூட்டிவிடலாம் தானே? 6+6 =12 என...

   Delete
  2. கார்ட்டூன்கள் இன்னமுமே நம்மில் பலருக்கு இலையில் வைத்திடும் ஸ்வீட்டாகவே தொடர்கிறது சார் ! பிரியாணியாகவும் சாதமாகவும் அவை புரமோஷன் கண்டிட்டால் நம் கனவுகள் நிஜமாகிடும் !

   Delete
  3. அப்போது கார்ட்டூன் எண்ணிக்கை எத்தனை

   Delete
 9. தங்கத் தலைவனோட ஸ்பெசலில் மீதம் இருப்பது 12 ஆ அல்லது 13 ஆ? 12 என்பது எனது கணக்கு. 13 என ஆசிரியர் சொன்னதாக எனது நினைப்பு. அப்படின்னா அறிவிக்கப்பட்டுள்ள இது வரை வெளிவராத புதிய இளம் டைகரும் வந்துடுமா?

  ReplyDelete
  Replies
  1. இது சந்தா வில் வருமா இல்லை முன் பதிவுக்கு மட்டுமா

   Delete
  2. முன்பதிவு தாங்க குமார். இது சந்தாவில் சேராது.

   Delete
  3. மொத்தம் 21 அத்தியாயங்கள் கொண்ட தொடரில் நாம் பூர்த்தி செய்திருப்பது ஆல்பம் 9 சார் ! எஞ்சி நிற்பன ஒரு டஜன் !

   Delete
  4. இதுவரை வெளிவராத இளம் டைகர் கதைகளை அடுத்த EBFல் மொத்தமாய் வெளியிடுவதென மரத்தடி மீட்டிங்கில் ஏகமனதாக முடிவு செய்யப்பட்டதே நண்பர்களே?!!

   Delete
  5. // எனக்கு வேண்டியது இது தான்//
   முன்பதிவு தாங்க குமார். இது சந்தாவில் சேராது.

   Delete
 10. இந்த வருடம் 2 புத்தகங்கள் மட்டும் என்னை பொறுத்த வரையில் வெற்றி இல்லை
  1. சாத்தானின் சீடர்கள்
  2. நீரில்லை நிலமில்லை
  ஆனால் நிறைய பேருக்கு குளிர் கால குற்றங்கள் பிடிக்க வில்லை jeramiah வும் பிடிக்க வில்லை

  ReplyDelete
  Replies
  1. @ குமார்

   நீரில்லை.....நிலமில்லை

   செம மாஸான சஸ்பென்ஸ் த்ரில்லர்.
   கதையின் ஸ்டைலிஸான மேக்கிங் மட்டுமே நம்மிடையே அதற்கு வரவேற்பை ஏற்படுத்த இயலவில்லை.
   இந்த ஆண்டின் அட்ட ப்ளாப் கதைகளில் நித்திரை மறந்த நியூயார்க்கை முந்தி செல்ல எதனாலும் இயலாது.

   Delete
  2. இன்னொன்னை மறந்தீட்டீங்க போல குமார்..:-)

   Delete
 11. அடுத்த வருடக் கதைக்கான தலைப்புகளில் ஒன்றிரண்டை இங்கே எடுத்துவிடலாமே ப்ளீஸ்?!!

  ReplyDelete
  Replies
  1. ஒரு துளி துரோகம் !

   சதியின் மதி !

   பந்தம் தேடியொரு பயணம் !

   ஆதலால் கொலை செய்வீர் !

   Delete
  2. ஆஹா!! அனைத்து தலைப்புகளுமே சூப்பர்!!

   Delete
  3. எழுந்து நின்று விசிலடித்து...குத்தாட்டம்‌....போட்டாச்சு.....
   எம்மாடியோவ் என்ன தலைப்பு.

   Delete
  4. தலைப்புகள் கலக்கல் சார்.....

   Delete
  5. சார் இன்னொரு கேள்வி,நம் இதழ்களின் தலைப்பில் மெனக்கெடுவது உண்டா???
   அல்லது,கதையின் போக்கில் பார்த்து வைப்பீர்களா???

   Delete
  6. அனைத்து தலைப்புகளுமே அட்டகாசம் சார்..

   Delete
 12. அடுத்த வருடம் தோல்விகளை 0 ஆக்க முடியுமா?

  ReplyDelete
  Replies
  1. இரசனைகள் பலவிதம்,ஒவ்வொன்றும் என இருக்கும் வரை இந்த பிரச்சினை தொடரும்.அதே போல் வெற்றி,தோல்வியின் அளவுகோலே ஒவ்வொருவருடைய பார்வையில் மாறுபட்டே இருக்கும்......
   வேண்டுமெனில் படுதோல்வியை தவிர்க்க முயற்சிக்கலாம்....

   Delete
  2. டைகர் ரசிகர்கள் பார்வையில் டெக்ஸ் எல்லாம் படுதோல்விதான்!
   இதை எப்படி 0 ஆக்க முடியும்?????

   Delete
 13. அட்டவணையில் இடம் கிடைக்குமா என்று பரிதவிப்புடன் காத்திருந்த அந்த கடைசி ஆசாமி யார்? அவருக்கு சீட் கிடைத்ததா இல்லையா?

  ReplyDelete
  Replies
  1. அப்ப சீட் இல்லை.....

   Delete
  2. அடுத்த வருட ஈரோட்டு புத்தகத் திருவிழாவின் போது வாத்து வருவல் + ஈரோடு மு*** கடை சிக்கன் வேண்டுமா?? வேண்டாமா???

   Delete
  3. அந்த தொங்கல் நம்மிடையே அவருக்கு இடமுண்டா ? இல்லையா ? என்ற சந்தேகத்தின் பொருட்டல்ல ! நம்மோடு பயணிக்க அவரது படைப்பாளிகளுக்கு ஓ.கே.வா என்ற தெளிவு கிட்டிடும் பொருட்டே ! ஒரு முன்மொழிவை சமர்ப்பித்த கையோடு காத்துள்ளோம் !

   Delete
  4. //அடுத்த வருட ஈரோட்டு புத்தகத் திருவிழாவின் போது வாத்து வருவல் + ஈரோடு மு*** கடை சிக்கன் வேண்டுமா?? வேண்டாமா???//

   எனக்கென்றால் நஹி ! வாசக சந்திப்புக்கெனில் டபுள் நஹி !

   Delete
  5. மன்னிச்சு.. அது தானை தலைவியை கிண்டல் பண்ணியதற்காக ரவிக்கும் அமெரிக்க மாப்பிள்ளைக்கும் கொடுத்த ஆஃபர்..

   Delete
 14. இது வரைக்கும் நீங்கள் படித்த கதைகளில் தமிழில் கொண்டு வரவேண்டும் எனப் பிரியப்பட்டும் எங்களுக்கு பிடிக்காது என ஒதுக்கி வைத்துள்ள கதைகளில் டாப் 5 அல்லது 10 எவை?

  ReplyDelete
  Replies
  1. பட்டியல் இருக்கும் ஆஞ்சநேயர் வால் நீளத்துக்கு சார் !

   Delete
 15. * இளவரசிக்கு இடம்?!!

  * சந்தாவிலுள்ளவர்களுக்கு சர்ப்ரைஸ் கிஃப்டாக 'கலர் டெக்ஸ்' அடுத்த வருடமும் தொடர்கிறதா? அல்லது வேறு ஏதேனுமா?

  * லாயல்ட்டி பாய்ண்டுகள் பற்றிய விவரங்களை அறிந்து கொள்வது எங்ஙனம்?

  * 'மேக்ஸி லயன்' மறுபதிப்புகளுக்கு மட்டுமே என்றொரு பிம்பம் உருவாகியுள்ளதே?!!

  * அடுத்த வருடம் சுமாராக எத்தனை குண்டூஸ் காத்திருக்கிறது? (குண்டூ = குறைந்தபட்சமாக 300 பக்கங்கள்)

  ReplyDelete
  Replies
  1. *ஈரோட்டில் கைதூக்கியோர் பட்டியல் பெருசாய் இருந்ததே.. ?

   *இருக்கும்... வித்தியாசமாய் !

   *போன வருஷம் தந்த பாஸ்புக்கில் உள்ள points ப்ளஸ் புதுப்பிக்கும் சந்தாவின் புள்ளிகள் !

   *ஒற்றை செட் மட்டுமே வெளியாகியிருக்க யூகங்களாய் அபிப்பிராயங்கள் உலா வருவது இயல்பே !

   *வெள்ளித்திரையில் காண்க !

   Delete
  2. அவசியமான கேள்விகள்..

   அசத்தலான பதில்கள்..;-)

   Delete
 16. விண்வெளி பிசாசு வண்ணத்திலா அல்லது கருப்பு வெள்ளையா?? சாதாரண அட்டையா அல்லது ஹார்ட் பைன்ட் அட்டையா??

  ReplyDelete
  Replies
  1. இந்தக் கேள்வி கேட்க இன்றைக்கு கைமாறியுள்ள மொய் எவ்வளவோ ?

   Delete
  2. லெஃப்ட்ல ஒன்று;
   ரைட்ல ஒன்று!

   Delete
  3. +1 ஒரே ஒரு விண்வெளி பிசாசு சார்

   Delete
 17. மூன்று மாதத்திற்கு ஒன்றாக வருடத்திற்கு நான்கு குண்டு புத்தகங்கள் வெளியிட ஏதேனும் வாய்ப்பு உண்டா??

  ஜனவரி - சென்னை புத்தகத்திருவிழா
  மே - கோடை மலர்
  ஆகஸ்ட் - ஈரோடு புத்தகத் திருவிழா
  அக்டோபர்/ நவம்பர் - தீபாவளி சிறப்பிதழ்

  ReplyDelete
  Replies
  1. ஆசையெல்லாம் விட்டம் வரையல்ல ..வானம் வரைக்கும் விரி து நிற்கின்றன சார் ! பட்ஜெட்.. ?

   Delete
 18. அடுத்த வருடமாவது ஹார்ட் பவுண்ட் புத்தகங்கள் கூடுதலாக வர வாய்ப்புண்டா சார்?????

  ReplyDelete
  Replies
  1. 2020 ல் டெக்ஸ் குண்டு புக் ஸ்பெஷல் ஹார்ட் பைண்டிங்கில் வர வாய்ப்புண்டா?????

   Delete
  2. அடுத்த வருட டெக்ஸ் அட்டவணையில் மெபிஸ்டோ அல்லது யுமா சாகஸத்திற்கு வாய்ப்பு??????

   Delete
  3. அதில் எத்தனை டெக்ஸ்

   Delete
  4. நம்மவர் ஒரு முரட்டு ரேஞ்சராய்த் தொடரும் போதே ஓட்டுவோருக்கு - விட்டலாச்சார்யா ரேஞ்சில் களம் தருவது உசிதமாகுமா சார் ?

   Delete
  5. ///4 hardbound///----

   ஸ்பைடர் வில்லன் ட்ட அந்த 4கைகளை கடன் வாங்கி தட்டுகிறேன்.....!!!!

   Delete
  6. எப்படி வந்தாலும் குறை சொல்வோரை ஒன்றும் செய்ய முடியாதுதான் சார்,ஒன்றை முயற்சித்து,அது கலவையான விமர்சனங்களை பெற்றாலுமே விற்பனை சொல்லி விடுமே அதன் வெற்றியை,அதனால் ஒன்றாவது பரிசோதனை முயற்சியாக செய்து பார்ப்போமே.......

   Delete
 19. அடுத்த வருடம் சந்தாவில் மொத்தம் எத்தனை இதழ்கள்?

  ReplyDelete
  Replies
  1. அது அந்தக் கடாசி சீட்டுக்க்கான ஆசாமியின் வருகைக்கேற்ப அமைந்திடும் சார் !

   Delete
  2. அப்ப -1 போக மீதி சொல்லுங்களேன்

   Delete
 20. ///
  பதிவின் இரண்டாம் பாகத்தை பாதி எழுதி வைத்திருக்கிறேன் தான் ; ஆனால் டைப்படிக்க இன்றைக்கு நம்மவர்கள் நஹி ! So நாளை தான் டைப்பிடிக்க இயலும் ////

  ----- எழுதிய ஸ்க்ரிப்டை எனக்கு அனுப்புங்க சார்.

  நம்பள் டைப் அடித்து அனுப்பிடறோம்.

  ReplyDelete
  Replies
  1. மீதியை நீங்களே எழுதிடும் பட்சத்தில் டபுள் ஓ.கே. சார் !

   Delete
  2. தங்களது பதிவை படிக்கும் போதே குளிரில் வெட வெடக்குதுங் சார்.
   கண்ணு தானாக ரோட்டாகேப் பக்கம் போய் வந்தது!

   பயத்திலயே அதிகாலை 4மணி மேட்டர்லயே நம்ம சோலி காலி!

   காத்திருந்து படிக்கிறோம் சார்.

   சீட்டுகட்டை பார்த்து கை நடுங்கும் டைகர் போல தொடரும் பார்த்து நடுக்குது எங்களுக்கு...!!!!

   Delete
 21. இரும்புக்கை மாயாவி - குறைந்தபட்சம் புத்தகத் திருவிழாக்களை அலங்கரிக்கவாவது தேவைப்படுகிறார் என்று சமீப காலங்களிலும்கூட நிரூபிக்கப்பட்டிருக்கிறது என்பதால் - அடுத்தவருடம் அவரது மறுபதிப்புகள் தொடருமா?!!

  ReplyDelete
  Replies
  1. கொலு நவராத்திரிகளுக்கே எனும் போது அப்போது பார்த்துக் கொள்ளலாமே என்றுள்ளேன் !

   Delete
 22. பொங்கல் மலர் வர வாய்புண்டாங் சார்???

  ReplyDelete
  Replies
  1. ஸ்பெஷலாய் பதிவு நிச்சயம் சார் பொங்கலுக்கு !

   Delete
  2. பெசலு.. பதிவா....

   Delete
 23. தல தாண்டவம் பிரதி மாதம் உண்டு தானேங் சார்!???

  ReplyDelete
 24. இளம் டைகர் ஈரோட்டு ஸ்பெஷல் எனும்போது கென்யா, அமெரிக்காவுக்கு வாய்ப்பு எப்போது சார்?

  ReplyDelete
  Replies
  1. அப்படிக் கேளுங்க!

   Delete
  2. கோடை மலரில் ஒன்று
   தீபாவளிக்கு இன்னொன்று

   Delete
  3. பாக்கெட்களுக்குள் ஆழமாய்க் கைவிடச் சாத்தியப்படும் முதல் தருணத்தில் நண்பரே ! But வேறொரு விதத் திட்டமிடலும் உள்ளது ..பார்க்கலாம் !

   Delete
  4. @kumar

   தீபாவளிக்கு தல'யின் தாண்டவம் மட்டுமே இனி பிரதானமாய் இருந்திடும் எ.எ.க !! கடந்தகால அனுபவங்கள் சொல்லும் சேதி இது!

   Delete
 25. Sir what about Maxi, color tex,jumbo?

  ReplyDelete
  Replies
  1. எல்லாமே உண்டு..நல்லாவே உண்டு சார் !

   Delete
 26. குண்டு கலர் டெக்ஸ் ஏதும் உண்டா???

  ReplyDelete
 27. Sir what about Maxi,jumbo, colour tex, young tex,mefisto?

  ReplyDelete
 28. போன வருடமும், இந்த வருடமும்
  கருப்பு வெள்ளையில் தீபாவளி மலர் என்பதை மாற்றி 2020ல் கலரில் தரலாமே! வாய்ப்பு எத்தனை சதவீதம் %%%????

  ReplyDelete
 29. மேக்ஸிகள் எத்தனை???

  டெக்ஸ்....?

  லக்கி.....??

  ReplyDelete
  Replies
  1. மேக்ஸி லயன் இந்த ஆண்டு செம்மய்யா இருந்துச்சுங்களே.
   அந்த புத்தக தயாரிப்பும்,வண்ணச் சேர்க்கையும் ஆளையே அசரடித்தது.
   நன்றியும்,வாழ்த்துக்களும் ஜுனியருக்கு.💐💐💐.

   Delete
 30. மேக்ஸியில் டெபுடன்ட் யார்????

  ReplyDelete
 31. Sir some of the story title you announced but not published yet? Otrai nodi onbathu thotta,

  ReplyDelete
 32. ஆசிரியருக்கு......

  ஆண்டு முழுவதற்கும் வெளியிடப்படும் அட்டவணையில் ""இடையில் "" ""தவிர்க்க இயலாத"" மாற்றங்கள் நிகழ வாய்ப்புகள் உண்டா?


  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பாக உண்டு

   Delete
  2. Nopes ! தலைப்புகள் மாறக்கூடும் சார் ; கதைகளில் மாற்றங்களிராது !

   Delete
 33. சந்தாக்கள் 5பிரிவுகள் இருக்கா???

  ReplyDelete
  Replies
  1. ஆமா சந்தா v for vaandus மறந்து விட்டேனே

   Delete
 34. கிராஃபிக் நாவல் பிரளயம் அடுத்த வருடம் இடம் பிடித்ததா

  ReplyDelete
 35. கால வேட்டையர் எந்த புத்தக விழாவில் வெளியிட எண்ணம் சார்?

  கடந்த ஆண்டு கோவை புத்தக திருவிழாவில் வெளியிடலாமா என்று கேட்டு இருந்ததாக ஞாபகம்....

  ReplyDelete
  Replies
  1. அதே அதே please Sir இந்த மாதம் வெளியிட்டாலும் ஓகே தான்

   Delete
  2. தோல்விகளை பூஜ்யமாக்க இயலுமா ? என்று கேட்ட கையோடு இப்படியொரு வினாவா ?

   Delete
 36. தங்கள் குழந்தைகளுக்காக தாய்மார்களின் நீண்டநாள் கோரிக்கையான 'பெரிய சைஸ் படங்கள் - பெரிய எழுத்துகள் - குறைவான வசனங்கள்' பாணியில் அடுத்தவருடமாவது ஒன்றிரண்டு புத்தகங்கள் வெளியாகிட வாய்ப்பிருக்கிறதாங் சார்?!! 'மேக்ஸி லயன்' மனது வைத்திடுமா?!!

  ReplyDelete
  Replies
  1. வாண்டூஸ் தனிச் சந்தா குறித்து...

   Delete
  2. 2 புக் V for vaandus this year

   Delete
  3. இந்த கேள்விகள் எல்லாம் ஆசிரியரே கேட்க சொல்லி ;நீங்கள் கேட்பது போல் ஒரு எண்ணம் உருவாகிறது.
   இதுல ஏதும் லோக்கல் பாலிடிக்ஸ் இல்லை என்பதை உறுதியாக நம்பலாங்களா?

   Delete
  4. ஷப்பா ...எப்டிலாம் சிந்தனைகள் ஓட்டமெடுக்கின்றன ??

   நானே கேள்விகளையும் எழுப்பி , நானே பதில்களும் சொல்வதொரு ரெகுலர் பாணி தானே பதிவுகளில் சார் ? இதற்கெதற்கு நான் ஆள் தேடப் போகிறேன் ?

   Delete
  5. ///இந்த கேள்விகள் எல்லாம் ஆசிரியரே கேட்க சொல்லி ;நீங்கள் கேட்பது போல் ஒரு எண்ணம் உருவாகிறது.
   இதுல ஏதும் லோக்கல் பாலிடிக்ஸ் இல்லை என்பதை உறுதியாக நம்பலாங்களா?///

   உறுதியாக நம்பலாம் நண்பரே!! ஒரு நாடகத்தை நடத்திதான் காமிக்ஸ் வாழ்க்கையை ஓட்டவேண்டுமென்ற நிலை எடிட்டருக்கு ஒருபோதும் ஏற்பட்டதில்லை!! இனியும் ஏற்படாது!!

   Delete
  6. நன்றாக சொன்னீர்கள் செயலரே...!

   Delete
  7. அப்படி கேட்கச் சொல்லி கேட்பதிலோ பெறும் பதிலிலோ என்ன சுவாரஸ்யம் தான் இருக்கப் போகிறது சார்.

   Delete
 37. தீபாவளிக்கு 5 ஸ்டாரா இல்ல ரவுண்டு பன்னா சார்

  ReplyDelete
  Replies
  1. இது கேள்வி !!!

   பன்னோடு பண்டிகை sir !

   Delete
  2. தேங்க்ஸ் சார்...

   அம்மூரு பன்னு டேஸ்டே தனி

   Delete
  3. @ J ji

   இங்கு கேட்கப்பட்ட கேள்விகளிலேயே வெகுவாக இரசிக்கப்பட்ட கேள்வி உங்களுடையதே.

   Delete
  4. எப்டியோ அல்லாத்துக்கும் பன்னு வாங்கி குடுத்தாச்சி சார்....

   Delete
 38. சார் அடுத்த வருடமாவது சிங்கத்தின் சிறுவயதில் இருக்கா ?? இல்லையா ??

  ReplyDelete
  Replies
  1. இன்றைய no.1 கேள்வி இதுதானுங்க சிவா!

   சார்.. பதில் ப்ளீஸ்!!

   Delete
  2. @ஈரோடு விஜய் அண்ணா..

   போன வருஷம் லாயல்டி பாய்ண்ட்ஸ் ன்னு சொல்லி அதுல சி.சி.வ இருக்குன்னு போட்டிருந்ததை பார்த்ததும் மொத்த சந்தாவும் கட்டினது வீண் போகலை ன்னு சந்தோஷபட்டா பொசுக்குன்னு யங் டெக்ஸ் கதையை போட்டு ஏமாத்திட்டார்..

   Delete
  3. அப்படி ஏமாந்தவங்க லிஸ்ட்டில் நானும் டாப் வரிசையில் உண்டுங்க சிவா!! ஆனா 'யங் டெக்ஸ்' ஏமாற்றவில்லை!!

   Delete
  4. போராட்டக் குழு தலீவர் proxy கொடுத்து அனுப்பியிருக்கிறாரோ ?

   Truth to tell மாதத்தின் ஒவ்வொரு சனியின் பெரும்பகுதியும் பதிவினைத் தயார் செய்திடும் முஸ்தீபுகளில் கரைந்து விடுகின்றன guys ! மாதயிறுதிகளின் போது ஏற்கனவே இதழ் தயாரிப்பின் end stages pressure ஒரு வண்டி சேர்ந்து கொள்ளும் ! இந்தச் சூழலில் மேற்கொண்டும் பேனா பிடிக்கும் உத்வேகத்தைத் திரட்ட வயசும் மனசும் ஒத்துழைக்க மாட்டேன்கின்றன ! மொழிபெயர்ப்புகளில் செப்பனிடும் பணிகள் ; மேம்படுத்திடும் அவசியங்கள் என்றைக்கு நேரத்தை இத்தனை விழுங்காது போகின்றனவோ - அன்றைக்குத் தான் கொஞ்சம் ரிலாக்ஸ் செய்திட சாத்தியம் எனக்கு !

   Delete
  5. உங்கள் பணிச்சுமை புரிகிறது சார்.. எங்களால் ஏதேனும் செய்ய முடிந்தால் செய்ய தயாராக இருக்கிறோம் .. 🙏🏼🙏🏼🙏🏼

   Delete
  6. காத்து இருக்கிறோம் சார்.🙏🙏🙏🙏🙏🙏🙏

   Delete
  7. சிக்கலே அங்கே தான் சார் ; இவற்றை நானே செய்தாலன்றி எனக்குத் திருப்தி கிட்டுவதில்லை ! இம்மாத 'வஞ்சம் மறப்பதில்லை ' இதழுக்குப் பேனா பிடிக்கும் போது எந்தெந்த இடங்களை நீங்கள் ரசிப்பீர்கள் என்பது முதற்கொண்டு என்னால் யூகிக்க முடிந்தது ; இன்று அவை சிலாகிக்கப்படும் போது பெருமிதம் என்பதை விட நிம்மதியே மேலோங்குகிறது - "ஆத்தாடியோவ் இதில் compromise
   செய்யாது பணியாற்றிவிட்டோமே என்று ! இந்தப் பணியின் ப்ளஸ் & மைனஸ் இதுவே !

   Delete
  8. வருத்ததுடனே ஆமோதிக்கிறோம் சார்ர..

   அதே சமயம் சி.சி வயதில் பற்றி ஒரே சந்தேகம் ..இறுதியாக கீழே கேட்கிறேன் சார்..

   Delete
 39. XIII spin-offகளில் மிகச் சிறந்ததை தேர்ந்தெடுத்து அடுத்த வருடம் ஒன்றே ஒன்றை மட்டுமாவது (ஜம்போவில்) வெளியிட வாய்ப்பிருக்கிறதா? (ஹிஹிஹி.. கொளுத்திப் போட்டாச்சு!)

  ReplyDelete
  Replies
  1. ஆமா ஆமா
   ஸ்பின் ஆப் ஸ்டோரி கண்டிப்பாக வேண்டும்..

   Delete
  2. தங்கள் கலகம் என்றும் நன்மையிலே முடியும் நண்பரே....

   Delete
  3. ////தங்கள் கலகம் என்றும் நன்மையிலே முடியும் நண்பரே....///

   'நாரத முனி'ன்றதை சொல்லாமச் சொல்லுறீங்களா பழனிவேல்?!! ;)

   Delete
  4. 😄😄😄 அப்படி சொல்லக்கூடாது நண்பரே....நன்மைதான் நமக்கு முக்கியம்

   Delete
  5. அவரு அதை விட இன்னும் கொஞ்சம் லோக்கலா ஒரு பேர் வைச்சிருந்தார் ! நாரதர்ன்னு டீசென்ட் ஆ முந்திக்கிட்டீங்க !

   Delete
  6. அய்யய்யோ கெடையாது சார்....

   Delete
 40. Replies
  1. வான்ஹாமே வோட ஒன்ஷாட் , கட்ஷாட், ஸ்கொயர் கட் இது மாதிரி ஏதாச்சும் மிச்சம் இருந்தா பாத்து போடுங்கள் சார்..

   Delete
  2. கூடவே வில்லியம் வான்ஸ்ஸோடதும்

   Delete
  3. சிவா +1
   பழனி +1

   ஆமாம் சார்.. இரண்டு ஜாம்பவான்களையும் ரொம்பநாளாய் நாம் கண்டுக்காததைப் போல ஒரு ஃபீலிங்!!

   Delete
  4. ஜாம்பவான்களை சந்தித்தே வருகிறோம் ; ஆனால் ஒவ்வொருமுறையும் அவர்கள் படைத்திடுவன சகலமுமே கிளாசிக்ஸ் ரகங்களாக்கிடுவதில்லை என்பதாலேயே மனதில் தங்கிடவில்லை ! லார்கோவில் வான் ஹாம் தானே ; ஷெல்டனிலும் !

   Delete
 41. எதிர்வரும் வருட சந்தா 4500க்குள் தானே சார்?

  ReplyDelete
  Replies
  1. சின்ன வித்தியாசமே இருக்கும் சார் !

   Delete
  2. சென்ற வருட சந்தாவே ₹.5,000/- ஆயிற்றே,விலைவாசி உயர்வுகள், பேப்பர் விலை ஏற்றம்,அச்சுமை விலை ஏற்றம்,பொருளாதார மாற்றங்கள் போன்ற பன்முக பிரச்சினைகளை மனதில் கொண்டால்,போனவருடத்தை விட கொஞ்சம் கூடுதலாக்கினால் மட்டுமே புத்தகங்களின் எண்ணிக்கைக்கு ஆபத்தில்லை என்று நினைக்கிறேன்.....
   சந்தாவை கட்டுக்குள் வைத்தால் ஹார்ட் பைண்டிங்,வண்ண,குண்டு இதழ்களுக்கு ஆபத்து......
   எனது கணிப்பு சந்தா ₹.6,000/- இருந்தால் சரியாக இருக்கும்.....
   பார்ப்போம் ஆசிரியரின் திட்டம் என்னவென்று......

   Delete
 42. இடம்பிடித்த மறுபதிப்பு நாயகர்கள் சார்.....?

  ReplyDelete
  Replies
  1. பன்னிரெண்டுக்கும் , பதினான்கும் மத்தியவர் இல்லை என்பது மட்டும் நினைவுள்ளது பழனி !

   Delete
  2. அவரோட மறுபதிப்புதான் முடிஞ்சுதே சார்.... பழைய க்ளாசிக் ஹீரோக்களை தேர்ந்தெடுத்து ஒரு ஸ்பெசல் போடலாமே சார்....

   Delete
  3. போதும் பழைய சாதத்தை டெட்ராபேக்கில் அடைக்கும் முயற்சிகள் ! சில கதவுகளை இப்போதைக்குத் திறக்க உத்தேசமேயில்லை !

   Delete
 43. Sir any detective series in 2020
  🤔🤔🤔🤔

  ReplyDelete
  Replies
  1. ஜானி டிடெக்டிவ் தானே சார் ?!

   Delete
 44. சார், ஒரே ஒரு தடவை ஸ்பைடர் ஐ வண்ணத்தில் பார்க்க உதவுங்கள்.. pls.

  ReplyDelete
  Replies
  1. நடைமுறையாக்கிடுவதில் நிறைய சிக்கல்கள் உண்டு சார் ! Extremely tough !

   Delete
  2. Ok sir.. always waiting sir. Thanks..

   Delete
 45. அடுத்த வருடம் Science fiction கதை ஏதேனும் உண்டா???

  ReplyDelete
  Replies
  1. எதிர்பாரா sci-fi ஒன்றுள்ளது ; கதையெல்லாம் வாங்கியாச்சு ; ஸ்லாட் தான் தேடிடுகிறேன் sir !

   Delete
  2. நன்றி..

   தானைத் தலைவியின் நான்கில் ஒன்றை குறைத்துக் குறைத்துக் கொண்டு இதனை வெளியிடலாம் சார்.. 😍😍😍

   Delete
  3. ///தானைத் தலைவியின் நான்கில் ஒன்றை குறைத்துக் குறைத்துக் கொண்டு இதனை வெளியிடலாம் சார்.. 😍😍😍///

   ---வாய் விட்டு சிரச்சே புட்டன் அய்யா! 😂😂😂😂😂

   Delete
 46. This comment has been removed by the author.

  ReplyDelete
 47. ஏதேனும் ஒரு கதையினை ஆங்கிலத்திலும் தமிழிலும் நாமே வெளியிட வாய்ப்பு உண்டா சார்...?

  ReplyDelete
  Replies
  1. நாமே உருவாக்கினால் எல்லாமே சாத்தியமே பழனி !

   Delete
 48. Sir any idea about re reprint of Rathapadalam colour sir? Many friends missed the book sir..

  ReplyDelete
  Replies
  1. இரவல் தர நண்பர்கள் நிச்சயம் தயாராக இருப்பார்கள் சார் !

   Delete
 49. இந்த வருடம் லார்கோ இருக்கிறாரா சார்?

  ReplyDelete
  Replies
  1. லார்கோ தொடரில் புதிது வந்தால் தான் சார் !

   Delete
 50. நீங்கள் இரவில் வேலை செய்கிறீர்களா?

  ஏற்கனவே தங்கள் தந்தையார் இது குறித்து விசனப் பட்டிருக்கிறார் தவிர நாமளும் ஜாமக் கோடாங்கி வயதை தாண்டிவிட்டோம் என்பதை நினைவூட்டுகிறேன்

  ReplyDelete
  Replies
  1. உடம்பும் அவ்வப்போது நினைவூட்டுகிறது சார் ! கொஞ்சம் கொஞ்சமாய்க் குறைத்து வருகிறேன் !

   Delete
 51. சிவகாசியில் காமிக்ஸ் மியூசியம் போல் அமைக்க சாத்தியக்கூறுகள் உண்டோ சார்?

  ReplyDelete
  Replies
  1. அட.. மியூசியம் வைக்குமளவுக்கு நம்மிடம் என்ன அரிய பொருட்கள் உள்ளன சார் ?

   Delete
  2. காமிக்ஸ்ல மியூசியம் வெக்கற அளவுக்கு அரிய பொருள் ஏதுமில்லீங்க ஆசானே.

   காமிக்ஸ்ல நீங்க எங்களுக்கு கிடைச்சதே அரியது.
   தளத்தின் நண்பர்களும் அவர்களுக்குள் இழையோடும் அன்பும் அரிதினும் அரிதானது.

   இதை மட்டும் நாங்கள் ஒவ்வொரூவருமே மனதில் பத்திரமாக பாதுகாப்போம்.

   இதை மியூசியத்தில் வைத்தால் களவாடிருவாக.
   திருட்டு புள்ளிங்கோ உள்ள ஊரு இது.

   Delete
 52. ப்பா புது பதிவு போட்டு லோட் மோருக்கே வர போகுதா என்னடா பரணி இது...:-(

  ReplyDelete
 53. இளம் டைகர் கதைக்கு முன்பதிவு எப்போது தொடக்கம்?

  மார்ட்டின் கதைகள் அடுத்த வருடம் எத்தனை வரும்?

  போனெல்லியில் சாகோர், மிஸ்டர் நோ, நாதன் நெவர் போன்ற யாராவது எதிர்காலத்தில் தமிழ் பேச வாய்ப்புள்ளதா??

  ReplyDelete
  Replies
  1. ஒவ்வொன்றாய் ! முதலில் தீபாவளி மலர் ; அப்புறம் அட்டவணை ; புதுச் சந்தாக்கள் ; அப்புறம் ஜம்போ சீசன் 3 !

   Delete
 54. சந்தா செலுத்துவோர் கார்ட்டூனுக்கும் சேர்த்தே சந்தா செலுத்த வேண்டும் என்ற கட்டாயம் வரும் ஆண்டிலும் தொடர்கிறதா சார்? விருப்பமில்லாமல் அதற்கும் சேர்த்து சந்தா செலுத்த வேண்டியுள்ளது.

  ReplyDelete
  Replies
  1. இப்போதே அந்த option உண்டு சார் !

   Delete
 55. லார்கோவை போல் மாடர்ன் ட்ரெண்டில் எதேனும் சீரிஸ் கண்ணில் அகப்பட்டதா ?

  ReplyDelete
  Replies
  1. மாடர்ன் - யெஸ் ! லார்கோ தரம் - நோ !

   Delete
  2. அட ஆண்டவனே....

   Delete
 56. ஒரு விடுமுறை தினத்தன்று சோம்பல் முறிக்கவும் , குடும்பத்தோடு நேரம் செலவிடவுமே சாத்தியப்படும் ! மிஞ்சிப் போனால் பத்துப் பேர் இங்கே என்னோடு காப்பி ஆத்திடுவார்கள் என்று எதிர்பார்த்திருந்த எனக்கு இதுவொரு செம surprise guys !!

  பின்னியெடுத்து விட்டீர்கள் ! இனி வயிற்றுக்கு பெட்ரோல் போட்டுவிட்டுக் கட்டையைக் கிடத்தலாமே ? மிச்சம் மீதியிருப்பின் கச்சேரியை மாலைக்கு வைத்துக் கொள்வோமா ?

  ReplyDelete
 57. ஜம்போ 3ல் கதைகளின் எண்ணிக்கை கூட வாய்ப்பு ஏதாவது உள்ளதாங் சார்???

  வழக்கமான 6+ வெயிட்டிங்ல உள்ள அந்த கென்யா, அமெரிக்கா, அண்டார்டிகா, ஆஸ்திரேலியா, ஸ்காண்டினேவியானு ஏதாவது 2 ஐட்டங்களை சேர்த்து போடலாமே சார்!

  ReplyDelete
 58. உங்கள் பளு புரிகிறது சார்..எனிவே..

  இதுவரை வந்த சிங்கத்தின் சிறுவயதில் மட்டுமாவது ஒரு தொகுப்பாக அடுத்த வருடமாவது கொண்டு வர பாருங்களேன் ப்ளீஸ் சார்..

  ( தொடர் முடியாமல் எப்படி தொகுப்பு என்ற பதில் மட்டும் வேண்டாம் சார்..மீண்டு (ம்) வருகை தொடரை தொகுப்பு இரண்டுக்கு அப்பொழுது போராடி கொள்கிறோம் சார்..

  ReplyDelete