Powered By Blogger

Wednesday, August 31, 2022

அறுபதிலும் சாகசம் வரும்...!

 நண்பர்களே,

வணக்கம். விநாயர் சதுர்த்தி தின நல்வாழ்த்துக்கள் ! கொழுக்கட்டைகளை படைத்த கையோடு நலமும், வளமும் வேண்டியொரு பிரார்த்தனையினையும் பண்ணிடுவோமே ஆனைமுகத்தோனிடம் ! கூரியர்வாலாக்கள் மட்டும் இந்தக் கொழுக்கட்டைக் காதலில் லயித்து நின்றிடாது, பட்டுவாடாக்களில் மும்முரம் காட்டிடும் பட்சத்தில், செப்டெம்பர் இதழ்கள் இன்றே உங்கள் இல்லங்களில் ஆஜராகியிருக்க வேண்டும் ! Fingers crossed !!

ரைட்டு...புது இதழ்கள் மூன்றின் preview-க்களைப் பார்த்தாச்சு எனும் போது இந்த விடுமுறைதினப் பதிவினில் அதே மாவை இன்னொருக்கா அரைக்க அவசியங்கள் லேது ! Maybe புக்ஸ் உங்களிடம் கிட்டி, அலசல்கள் துவங்கிய பிற்பாடு அவற்றின் பின்னணித் தகவல்கள் பற்றிப் பார்த்துக் கொள்ளலாமே என்று நினைத்தேன் ! And lest I forget ..இம்மாதம் முதலாய் நமது YouTube சேனலைத் தூசி தட்டுவதென்று தீர்மானித்துள்ளோம் ! டாக்டர் ஹரிஹரன் சார் முன்மொழிந்ததைப் போல புக்ஸ் சார்ந்த review-க்களை அந்தந்த மாதங்களில், நண்பர்களிடமே வீடியோப் பதிவுகளாய்ப் பெற்று upload செய்திடுவோம் ! இந்த முயற்சிக்கு crisp ஆனதொரு பிள்ளையார் சுழி போடும் பொறுப்பை டாக்டரிடமே ஒப்படைக்கவுள்ளோம் - so please do the honors sir ! மூன்று இதழ்களையும் வாசிக்க நேரம் எடுத்துக் கொண்டான பின்னே உங்களின் அபிப்பிராயங்களை வீடியோப் பதிவாய் நமக்கு மின்னஞ்சலில் அனுப்பிடுங்கள் ப்ளீஸ் ! நீங்கள் அனுப்பிடும் வீடியோவின் தலையில் அறிமுக images & வாலில் நமது இதழ்களை வாங்கிடும் வழிமுறைகள் பற்றிய ஒட்டுக்களை மட்டும் செய்துவிட்டு, நமது சேனலில் upload செய்து விடுகிறோம் ! இந்த முயற்சி எவ்விதம் pan out ஆகிறதென்று பார்த்திட செம ஆவலா வெயிட் சேஸ்தானு ! 

Moving on, "இளம் டெக்ஸ்" கதைகளை ஒரிஜினலின் template-படியே 64 பக்க இதழ்களாய்த் தொடர விட்டுப் பார்ப்போமா ?" என்ற வினாவுக்கு வழக்கம் போல் இப்டிக்கா & அப்டிக்கா அபிப்பிராயங்கள் பதிவாகியிருப்பதை பார்த்தேன் ! "மாற்றங்களே அபச்சாரங்கள் ; இந்த அழகில் 'தல' கதைகளிலே பரிசோதனைகளா ? புத்தி பேதலிச்சு போச்சுடா நோக்கு ....!" என்ற ரீதியிலான எண்ணங்களின் பின்னுள்ள 'டெக்ஸ்' காதல் புரிகிறது ! ஆனால் "எதிர்கட்சினாலே அடிதான் !" என்று ட்விட்டரில் டிரெண்ட் ஆனது போல், நான் சொல்ல வந்ததை உள்வாங்கிக் கொள்ள பொறுமை கிஞ்சித்துமின்றி, "மாற்றங்களை மறவாது மொத்தியெடுப்போம் !" என்ற pointblank refusals கொஞ்சம் வியப்பையே உண்டு செய்கின்றன - நாமிருக்கும் அகவைகளைக் கருத்தில் கொள்ளும் போது ! 

With each passing day - வாசிப்புக்கென நமக்குத் தோதுப்படும் அவகாசங்கள் மட்டுப்பட்டுக் கொண்டே செல்கின்றன என்பதில் இரகசியங்களே இல்லை ! சமீப காலமாகவே light reading பக்கமாய் வண்டி திரும்புவதற்கு இந்த நேரமின்மையை ஒரு பிரதம காரணமாய்ப் பார்க்கத் தோன்றுகிறது ! யதார்த்தம் இதுவே எனும் போது, sooner than later நம்முன்னே மூன்றே  options மட்டுமே இருக்க நேர்ந்தால் வியப்படைய மாட்டேன் ! 

Option # 1 : வாசிக்க நிறைய நேரமெடுக்கும் விதத்தில், நீண்டு செல்லும் புக்ஸை தவிர்த்தாக வேண்டும் ! அல்லது.....

Option # 2 : வாசிக்க வழங்கிடும் புக்சின் எண்ணிக்கையினைக் குறைத்தாக வேண்டும் !  அல்லது.....

Option # 3மேலே சொன்ன இரண்டுமே !!

"வாசிக்க எனக்கு நேரமில்லை ; அதனாலே இப்போல்லாம் காமிக்ஸ் வாங்குறதில்ல !" என்று தீராக் காமிக்ஸ் காதலர்களும் சொல்லிடக்கூடியதொரு பொழுது புலர்ந்து விடலாகாதே ! என்றதொரு ஆதங்கமே / முன்ஜாக்கிரதையே / பயமே / எண்ணமே போன பதிவில் நான் கேட்டு வைத்த வினாவின் பின்னணி ! ஆனால் "இல்லேடா தம்பி......என்ன ஆனாலும் காமிக்ஸ் வாசிப்புக்கான அவகாசத்தில் துண்டு விழவே செய்யாது ! நீ பிடுங்க நினைக்குறது தேவையில்லாத ஆணி !" என்ற ஆசுவாசமாய் உங்களின் பதில்களை எடுத்துக் கொள்ளலாம் என்றால் எல்லாமே ஓ.கே. தான் !! புனித மனிடோ காப்பாராக ! என்ன - ரெகுலர் டெக்ஸ் அவர்பாட்டுக்கு சவாரி செய்து கொண்டிருக்க, பரீட்சார்த்தமாய் "இளம் டெக்ஸை" சின்னதொரு விலையில் இணைத்தடத்தில் maybe ஓடச் செய்து பார்த்திருக்கலாம் தான் - காத்திருக்கும் 'தல' 75-ஆண்டுதனில் !! A chance gone down I guess !! 'அக்காங்...நீ புரியுறாப்லே போடலே !" என்ற விசனக் குரல்கள் இனி கேட்கும் என்பதுமே புரிகிறது தான் ; ஆனால் போன பதிவை கொஞ்சமே கொஞ்சமாய் பொறுமையுடன் அணுகியிருக்கவும், முழியாங்கண்ணன் இத்தனை பெரிய கோமாளியாய் இருக்க மாட்டானென்று நம்பிக்கை கொள்ளவும் நண்பர்களுக்கு சாத்தியப்பட்டிருப்பின், எனது வினாவுக்கான விடைகள் வேறாய் இருந்திருக்கக்கூடும் ! ஆனால் கண்கள் சிவக்க பொங்கியெழுந்த நண்பர்கள் அந்தச் சாத்தியக் கதவுகளை அறைந்து சாத்திவிட்டார்கள் எனும் போது its time to move on ! 

Jumping further ahead - ஒரு விடுகதை உங்களுக்கு :  

ஒரே வேளையில் ; ஒரே குடையின் கீழுள்ளோருக்கு ; ஒரே விஷயமானது - இரு முற்றிலும் மாறுபட்ட  ரியாக்ஷன்களைக் கொண்டு வரும் ! அது என்ன ?

நம்மள் கி 'பொம்ம புக்'  ரசிகர்களுக்கு பதில் நொடியில் புலனாகியிருக்கும் என்பதால் பில்டப்களின்றி விஷயத்துக்குள் புகுந்திடுகிறேனே ?! 

கிளாசிக் நாயகர்களின் (மறு)வருகையானது தான் நம் சிறுவட்டத்தின் ஒரு பகுதியினை ஆரவாரம் செய்யத் தூண்டிடும் விசையாகவும், இன்னொரு பகுதியினைப் பேஸ்தடித்து நிற்கச் செய்யும் சமாச்சாரமாகவும் இருக்கக்கூடும் என்பதில் ஏது சந்தேகம் ? Folks...without much more ado , welcome to :  

THE SUPREME '60s !!

நடப்பாண்டினில் தடதடத்து வரும் SMASHING '70s தடத்தின் இரண்டாவது சீசன் இது ! நிறைய புது (!!!) முயற்சிகள் செய்துள்ளோம் தான் ; எண்ணிலடங்கா குட்டிக்கரணங்கள் அடித்துள்ளோம் தான் ; எக்கச்சக்க நாயக / நாயகியரின் முதுகுகளில் உப்புமூட்டை போயிருக்கிறோம் தான் - ஆனால் எனது இத்தினி காலத்து வழுக்கைக் கபால சர்வீஸில் மெய்யாலுமே திகைத்து நிற்கச் செய்த விற்பனைத் தருணங்கள் எட்டோ / பத்தோ தான் ! 1986 லயன் கோடை மலர் ; 1987 லயன் தீபாவளி சூப்பர் ஸ்பெஷல் ; 1987  சூப்பர் சர்க்கஸ் ; மெகா ட்ரீம் ஸ்பெஷல் ; தங்கக் கல்லறை ; இரத்தப் படலம் தொகுப்புகள் ; கம்பேக் ஸ்பெஷல் ;  LMS & தளபதி combo என்று விரல் விட்டு எண்ணிவிடலாம் ரவுசு செய்த அத்தகைய வேளைகளை ! அவற்றின் ஒரு உசத்தியான இடத்தினை நடப்பாண்டின் SMASHING '70s இதழ்களுக்கும் தந்திடலாம் என்பேன் ! வேதாளர் ; ரிப் கிர்பி ; மாண்ட்ரேக் & காரிகன் என்ற இந்த 4 அமெரிக்க க்ளாஸிக் நாயகர்களின் தொகுப்புகளைக் கண்ணில் பார்க்காமலே - முன்கூட்டியே சந்தாவினில் இணைந்த நண்பர்களின் எண்ணிக்கை செம high எனில், புக் வெளியான பிற்பாடு சந்தாக்களில் இணைந்திட ஆவேசமாய் விழைந்தோர் இன்னொரு பெரிய எண்ணிக்கை ! இதோ இப்போதுவரையிலும் 3 இதழ்கள் வெளியாகியுள்ளன & ஆக்டோபரின் இறுதியில் நான்காவது இதழாய் காரிகனும் களங்காண்கிறார் - முதல் சீசனை நிறைவு செய்திட ! 

இந்தத் தனித்தடத்தை அறிவித்த சமயத்திலேயே நான் சொல்லியிருந்தது நினைவிருக்கலாம் - "வெற்றியோ-தோல்வியோ .....இந்த மெகா சைஸ் ; க்ளாஸிக் நாயகர்களின் தொகுப்பென்ற முயற்சியானது 2023-லும் தொடரும் " என்பது ! சொதப்பியிருந்தாலே உடனடியாய் மூட்டையைக் கட்ட முனைந்திருக்க மாட்டேன் எனும் போது - மிரட்டலான வெற்றிக்குப் பின்பாய் கேட்கவும் வேண்டுமா ? So இரண்டாம் சீசன் 2023-ல் துவக்கம் காண்கிறது - அதே சைசில் ; அதே தயாரிப்புத் தரங்களில் ; அதே விலைகளில் ! ஆனால் சிறிதாய் ஒரு மாற்றம் காணப்போகும் விஷயமொன்று உண்டு !! And அது தான் நாயகர்களின் களமானது !!

  1. வேதாளர் எப்போதும் போலிருப்பார் - கெத்தாய் ; கம்பீரமாய் !
  2. ரிப் கிர்பி வழக்கம் போல் மிளிர்வார் !
  3. காரிகன் கரெக்ட்டாக ஆஜராவார் ! 
  4. And விங் கமாண்டர் ஜார்ஜ் தனது க்ளாஸிக் கூட்டாளிகளோடு கரம்கோர்த்திடுவார் !
  5. And டிடெக்டிவ் சார்லி "நானும் வாரேன்..நானும் வாரேன் " என்று கரம் தூக்கிடுவார் !

மொத்தம் 5 க்ளாஸிக் நாயகர்கள் கொண்ட இந்த இரண்டாம் சீசனில் -  உங்களுக்கு பிரியமான நால்வரை மாத்திரம் தேர்வு செய்து கொள்ளவும் வாய்ப்பிருக்கும் ; இஷ்டப்பட்டால் ஐவரையுமே 'டிக்' அடிக்கவும் வாய்ப்பிருக்கும் ! So ஜனவரியில் துவங்கிடும் இந்த SUPREME '60s தடமானது நமது (முத்துவின்) க்ளாஸிக் நாயகர்களின் வட்டத்தைக் கிட்டத்தட்ட பூர்த்தி செய்திடும் என்பேன் ! இனி கபிஷுக்கும், விச்சு-கிச்சுவுக்கும் ; ராமு-சோமுவுக்குத் தொகுப்புகள் என்ற வேட்கை எழுந்தாலன்றி, பழம் நாயகர்கள் சார்ந்த கோரிக்கைகளுக்கு இடமிராது என்பேன் ! Here you go :


இந்த 2 புது அங்கிள்ஸ்  யாரென்று தெரிந்திரா சமீப வாசகர்களுக்கு மாத்திரமே தொடரும் 2 பத்திகளின் அறிமுகங்கள் :

விங்-கமாண்டர் ஜார்ஜ் / Johnny Hazard :

கம்யூனிஸ்ட் ரஷ்யா ஒரு வில்லன் கோஷ்டியாகவும், அமெரிக்காவின் அண்ணாத்தேக்கள் பூமியைக் காக்க அவதாரமெடுத்த வீர புருஷர்களாகவும் சித்தரிக்கப்பட்ட Cold War தினங்களில் கோலோச்சிய தொடர் இது ! "ஒற்றன் வெள்ளை நரி" மூலமாய் நமது 1970-களில் அறிமுகமான இந்த பைலட் நாயகரின் ஒரிஜினல் பெயர் Johnny Hazard ! வாய்க்குள் நுழைய இது சுகப்படாதென்று அந்நாட்களில் "விங் கமாண்டர் ஜார்ஜ்" என்று சீனியர் பெயர்சூட்டியிருக்க, நமக்கு அவ்விதமே பரிச்சயமாகி விட்டார் மனுஷன் ! 1944 முதல் 1977 வரை முப்பத்தி மூன்று வருஷங்களுக்கு பத்து உலக மொழிகளில் சாகசம் செய்து வந்த இந்த நாயகர் - பின்னாட்களில் நமது லயனிலும் தலைகாட்டியுள்ளார் என்பது நினைவிருக்கலாம் ! என்னைப் பொறுத்தவரைக்கும் க்ளாஸிக் (அமெரிக்க) நாயகர்களுள் செம விறு விறுப்பான அதிரடிக்காரர்களில் இவரும் ஒருவர் ! 1975 வாக்கில் முத்துவில் வெளியான "நெப்போலியன் பொக்கிஷம்" எனது all time favorites-களுள் ஒன்று !! இரண்டாம் தபா நம்மிடமே மறுபதிப்பு கண்டிரா சாகசங்களுள் சுவாரஸ்யமான ஒன்றோ, இரண்டோ மட்டும் விங்-கமாண்டர் ஜார்ஜ் ஸ்பெஷல்-1-ல் இடம்பெறும் ; பாக்கி அனைத்துமே நாம் ரசித்திரா புதுசுகளாகவே இருந்திடும் ! இரண்டாம் உலக யுத்தத்தின் போது விமானப்படையில் பணியாற்றிய ஜார்ஜ் எதிரி முகாமிலிருந்து தப்பிடுவதில் துவங்கும் தொடரானது கொஞ்ச காலத்துக்கு ஆசிய கண்டத்திலேயே உலவி வந்தது ! கதாசிரியர் என்ன நினைத்தாரோ தெரியலை, களத்தை ஐரோப்பாவுக்கு நகற்றிய போது கதைகளுக்கும் ஒரு பூஸ்ட் கிட்டியது ! So வி.க.ஜா. தொடரின் டாப் சாகசங்கள் 1950 முதலாய் தெறிக்க ஆரம்பித்தன ! நாம் தேர்வு செய்யவுள்ளதோ 1960-களின் top கதைகளை !! ஆமா....ஆமா....நீங்க பொறக்குறதுக்கு முன்னமே உருவான கதைங்க தான் ; நேரோ நேர்கோட்டுக் கதைங்க தான் ; ஆனால் பரபரப்புக்கு இம்மியும் பஞ்சம் வைத்திடா படைப்புகள் இவை !! Trust me on that guys !

டிடெக்டிவ் சார்லி  / Buz Sawyer :

46 வருடங்களாய் அமெரிக்க தினசரிகளில் வலம் வந்த இந்த பப்ளிமாஸ் கன்னத்து டிடெக்டிவுக்கு சீனியர் வைத்த பெயர் சார்லி ! "கடத்தல் இரகசியம்" முத்துவில் இவரது அறிமுக ஆல்பம் என்பது நமது 'பெருசுகள் பட்டாளத்துக்குத்' தெரிந்திருக்கும் ! இந்த முன்னாள் பைலட் (yes ....இவருமே ஒரு யுத்த நாட்களது பைலட் தான் !) ரொம்பவே endearing ஆனதொரு கதாப்பாத்திரம் என்பது இவரோடு அந்நாட்கள் முதலாய் அன்னம் தண்ணீர் புழங்கி வருவோர்க்கு தெரிந்திருக்கும் ! "குரங்கு தேடிய கொள்ளையர் புதையல்" ; "பேய்த் தீவு இரகசியம்" என்று  நம்மை மகிழ்வித்த சார்லியின் கதைகளுள் top - "சிறை மீட்டிய சித்திரக்கதை" என்பேன் !! அது மட்டும் மறுக்கா reprint கண்டிருக்கா பட்சத்தில் நிச்சயமாய் "டிடெக்டிவ் சார்லி ஸ்பெஷல்-1"-ல் இடம் பிடித்திருக்கும் ! இவரது கதைகள் சார்ந்த கோப்புகள் எனது லேப்டாப்பில் ஒரு வண்டி குவிந்து கிடக்க - அவற்றுள் புகுவது செம pleasant அனுபவமாய் உள்ளது ! ரொம்பவே சிம்பிளானதொரு கருவினைக் கையில் எடுத்துக் கொண்டு அதை அழகாய், லாவகமாய், ஆக்ஷன் கலந்து தருவதை கிராபிக் நாவல் ரசிகர்களும் ரசிக்காது போக மாட்டார்கள் என்பேன் ! So நடப்பாண்டினில் ரிப் நம்மை ஏகத்துக்குக் கவர்ந்தது போல், 2023-ன் SUPREME '60s இதழ்களும் சார்லி ஒரு standout performer ஆக இருந்தால் நான் வியப்பே கொள்ளமாட்டேன் ! கழுத்துப்பிடியாய் குவிந்து கிடைக்கும் அக்டோபர் - டிசம்பர் பணிகளை முடித்த கையோடு ஒரு ஜாலியான நாளில் சார்லியின் கதைத்தேர்வினைச் செய்திட உத்தேசித்துள்ளேன் ! 5 ஆண்டுகளின் குவியலிலிருந்து தேர்வு செய்திட வேணும் எனும் போது - செம வாசிப்பு எனக்கு waiting என்பது மட்டும் உறுதி !! 

So this is the broad outline for the classics in 2023 and இன்று முதலாக SUPREME '60s சந்தாக்கள் சேகரிப்பு துவங்கிடுகிறது !! நீங்கள் எல்லா 5 ஆல்பங்களையும் தேர்வு செய்திடும் பட்சத்தில் - பணம் அனுப்பிய கையோடு உங்கள் முகவரிகளை மட்டும் தெரிவித்தால் போதும் ! But ஏதேனும் நான்கை மட்டுமே நீங்கள் தேர்வு செய்திடும் பட்சத்தில் - 'எந்த நாயகரின் புக்  வேண்டாம் ?' என்பதை மறவாது குறிப்பிட வேண்டிவரும் ! உதாரணத்துக்கு வேதாளர் வேண்டாமெனில் "NO Vethalar" என்றொரு குறுந்தகவலை நமது ஆபீஸ் வாட்சப் நம்பர்களில் ஏதேனும் ஒன்றுக்கு (98423 19755 or 73737 19755) தட்டி விட வேண்டியிருக்கும் ! 

அப்புறம் - "PICK ALL 5 or ANY 4" என்பதைத் தவிர்த்து - "ஏதேனும் 3 மட்டும்" தேர்வு செய்திடவெல்லாம் வாய்ப்புகள் லேது ! So அவ்விதக் கேள்விகளை முன்வைத்து நம்மாட்களிடம் மல்லுக்கு நிற்க வேண்டாமே - ப்ளீஸ் ?! இப்போதெல்லாம் தினுசு தினுசான கோரிக்கைகளோடு நம்மாட்களை பந்தாடும் படலங்கள் தொடர்கதையாகி வருவதால் ஒவ்வொரு அறிவிப்பினையும் ரொம்பவே யோசித்துச் செய்ய வேண்டி வருகிறது ! Please do help make their jobs a wee bit easier guys !

இந்த அறிவிப்புகளைத் தாங்கிய leaflet இம்மாத கூரியர் டப்பியினில் இடம் பிடித்துள்ளது ! And தொடரும் நாட்களில் whatsapp தகவல்களாக இங்கு ஆஜராகாதோரையுமே எட்டிப் பிடித்திட முனைந்திடுவோம் ! நடப்பாண்டில் நாம் தொட்டுள்ள சந்தா நம்பரை SUPREME '60s-க்கென மறுக்கா repeat செய்திட மட்டும் சாத்தியமாகினால், எவரெஸ்ட் சிகரத்தை இன்னொருவாட்டி scale செய்த பரவசம் நமதாகிடும் ! புனித மனிடோவும் ஒடின் தேவனும் அருள் புரிவார்களாக !! 

And இதோ - நடப்பாண்டினில் காத்திருக்கும் இறுதி நாயகரின் ஸ்பெஷல் இதழின் முதல்பார்வை !! காரிகன் எப்போதுமே செம ஸ்டைலான நாயகரே & நமது சென்னை ஓவியரின் கைவண்ணத்தில், ஹாலிவுட் போஸ்டரின் reference-ல் செம கெத்தாய்க் காட்சி தருவதாய் எனக்குத் தோன்றியது ! வழக்கமான நகாசு வேலைகளை ஜூனியர் எடிட்டர் கவனித்துக் கொள்ள, காரிகன் சூப்பராய் டாலடிக்கவுள்ளார் ! கதைகளின் பணிகளும் 90% ரெடி ; so அக்டோபர் இறுதியினில் உங்களை சந்திக்க நமது FBI ஏஜென்ட் தவறாது புறப்பட்டிடுவார் !

அல்லாம் ரைட்டு - அடுத்த வருஷத்து SUPREME '60s தடத்தில் மாண்ட்ரேக்கை  காணோமே ? என்ற கேள்வியும் எழக்கூடும் என்பதால் - அந்தச் சிரமத்தை உங்களுக்கு வைத்திடாது முன்கூட்டியே பதில் சொல்லி விடுகிறேன் ! அவரது தீவிர ரசிகர்கள் அல்லாதோருக்கு மாண்ட்ரேக் மட்டும்  லைட்டாய் 'டர்ரை' உருவாக்கவல்லவர் என்பதால் அவரை இந்தச் சந்தாக்கூட்டணிக்குள் புகுத்தவில்லை ! So அவரது ஸ்பெஷல் மட்டும் ஏதேனுமொரு புத்தக விழா வேளையினில் வெளியாகிடும் - விரும்புவோர் அந்தத் தருணத்தில் வாங்கிக் கொள்ளும் விதமாக ! ஆக அரை டஜன் கிளாஸிக் நாயகர்களும் அணிவகுப்பினில் உண்டு !! So இவர்களைக் கொண்டாடுவதில் மட்டும் இனி மும்முரம் காட்டுவோமே - ப்ளீஸ் ? மாறாக ராவெல்லாம் கண்முழிச்சிருந்து, அடுத்து எந்த பூமர் அங்கிளை இட்டாருவது ? என்ற தேடல்களை நடத்திட வேணாமே !  2024 வரையிலும் இனி யாருக்கும் ஸ்லாட்ஸ் லேது !

And ரெகுலர் சந்தா சார்ந்த அறிவிப்பு அக்டோபர் 30 தேதிக்கு வரவுள்ளது என்பதால் இந்த SUPREME '60s சந்தா drive-க்கென 60 நாட்கள் அவகாசமிருக்கும் ! ரெகுலர் இதழ்களின் சந்தா அறிவிப்பு வெளியாகும் வேளையினில் இந்த க்ளாஸிக் நாயகர்களின் சந்தாவினையும் களத்தினில் தொடரச் செய்து, குழப்படியாக்க வேண்டாமென்று தோன்றுவதால் - SUPREME '60s-க்கான முன்பதிவு இந்த 2 மாதங்களுக்குள் மட்டுமே இருந்திடுவது தேவலாம் என்றுபடுகிறது ! And yes - 2 தவணைகளாய் இந்தச் சந்தாவினைச் செலுத்திடலாம் - SEPTEMBER '22 & JANUARY '23 என்ற மாதங்களில் ! 

புதுக்கதைகளுடனான பழையவர்களின் வருகை, க்ளாஸிக் காதலர்களுக்கு புளகாங்கிதத்தையும், சமகாலத்துப் படைப்புகளை விரும்பும் நண்பர்களுக்கு கிலியையும் ஏற்படுத்தும் என்பதில் no secrets !! "இனி இது தான் தலைவிதியா ? சன்னம் சன்னமாய் புது ஜானர்களெல்லாம் மலை ஏறி விடுமா ?" என்ற கேள்வியுமே தலைதூக்கிடும் என்பதில் எனக்கு ஐயமில்லை ! அதற்கான பதில் ரொம்பவே சிம்பிள் : இந்த க்ளாஸிக் நாயகர்களின் தொகுப்புகள் 2023-ல் ஈட்டக் காத்திருக்கும் வரவேற்பே, இவற்றின் எதிர்காலங்களைத் தீர்மானிக்கும் ! SMASHING '70s-க்கான தற்போதைய உத்வேகம் இந்த SUPREME 60s தடத்துக்கும் 2023-ல் தொடர்ந்திடுகிறதா ? என்பதைப் பொறுத்தே 2024 சார்ந்த தீர்மானங்கள் எடுக்கப்படும் ! 

In the meantime - ரெகுலர் சந்தாவினில் வழக்கம் போல பலதரப்பட்ட ஜானர்கள் விடாப்பிடியாய் இடம்பிடித்திடும் - including கிராபிக் நாவல்ஸ் ! So புதுமை விரும்பிகள் சங்கடம் கொள்ளத்தேவை இராது என்பதற்கு அடியேன் கியாரண்டி ! இந்த க்ளாஸிக் தடமானது - நம் சிறுவட்டத்தினுள்ளிருக்கும் ஒரு பெருவட்டத்தின் ஜனரஞ்சகத் தனித்தடம் என்பதால் அதற்கான மரியாதையினையும், பிரதிநிதித்துவதையும் வழங்கிடல் அத்தியாவசியம் என்றாகிறது  !  அதே சமயம் ரெகுலர் சந்தாக்களில் எப்போதும் போல variety ..color ...depth என எல்லாமும் இருக்கும், நல்லாவும் இருக்கும் ! Which means - புதியவை விற்பனையில் ஜெயித்திடும் வரையிலும் அவற்றின் இடங்களுக்கு எவ்வித ஆபத்துக்களும் இராது ! Rest assured on that guys ! 

ரைட்டு...கொழுக்கட்டைகள் வா..வா...என்று நாசிகளுக்கு SMS அனுப்பி வருவதால் இனி கிளம்பும் வழியைப் பார்க்கிறேன் - கெட்டபயல் டெட்வுட் டிக் வேறு காத்திருக்கிறான் மேஜையை முழுசாய் ஆக்கிரமித்தபடிக்கே ! புது புக்ஸ் இன்றைக்கு கைக்குக் கிடைக்கும் பட்சத்தில், unboxing & முதல் புரட்டல் படலத்தைக் கூட வீடியோப் பதிவுகளாக்கிடலாமே guys ? 

Bye all ...see you around !! Have a happy & relaxed day !!


Memes : நண்பர் MKS Ram

Saturday, August 27, 2022

ஒரு மழைநாள் மாலைப் பதிவு !

 நண்பர்களே,

வணக்கம். அத்தி பூத்தாற்போல என்றைக்கேனும் ஒரு அதிசய மாதத்தினில் எங்களது பணிகள் சீக்கிரமே முடிந்து, அச்சும் சுருக்கென முடிந்து, பைண்டிங்கிலிருந்து புக்ஸ் வரக்காத்திருக்கும் போது 'தரின்னான்னா...' என்றபடிக்கே காலாட்டிக் கொண்டிருக்கும் சுகம் இருக்கிறதே - அடடடடா ....சொர்க்கமய்யா !!! அந்த அத்தி இந்த ஆகஸ்ட் இறுதியினில் நமக்கெனப் பூத்திருக்க, செவ்வாயன்று டெஸ்பாட்ச் செய்திடும் பொருட்டு நம்மாட்கள்  பரபரப்பாய் இயங்கி வரும் வேளைதனில், ஈ பாலக்காட்டு மாதவன் டியூன் போடுவதில் பிஸியாயிட்டு ! 

தாத்தாக்கள் & டேங்கோ இரண்டாம் வாரத்துவாக்கிலேயே ரெடியாகியிருக்க, டெக்ஸ் மாத்திரமே பெண்டிங் இருந்தார் ! And இம்முறையுமே டெக்சின் அட்டவணையினில் ஒரு சிறு மாற்றம் !! "நிழல்களின் ராஜ்ஜியத்தில்" ஆண்டின் இறுதி (டெக்ஸ்) ஸ்லாட்டுக்கு இடம்பெயர்ந்திட, "சொர்க்கத்தில் சாத்தான்கள்"  முந்திக் கொள்கிறது - இளம் டெக்சின் பெயரைச் சொல்லி ! So 128 பக்க சாகசமென்பதால் அதுவும் ஜல்தியாய் நிறைவுற்று - பைண்டிங்கில் தற்போதைக்குக் குந்தியுள்ளது ! இதோ - சின்னத் தல இதழின் preview : 

அட்டைப்படம் முன் & பின் - ஒரிஜினல்களே - நமது மாமூலான நோண்டல்களுடன் ! And இம்மாதமுமே செம clean artwork சகிதம் இந்த ஆல்பம் மிளிர்கிறது ! உலகைப் புரட்டிப் போடப்போகும் கதைக்களமெல்லாம் இல்லை தான் - ஆனால் செம breezy read என்பதில் ஐயங்களே கிடையாது ! 

இந்தப் புள்ளியினில் எனக்கொரு கேள்வியுள்ளது உங்களிடம் கேட்க :

இளம் டெக்ஸ் தொடரானது இத்தாலியில் தனித்தடத்தில்  அடித்து தூள் கிளப்பிக் கொண்டு பயணித்து வருகின்றது ! திரு மௌரோ போசெல்லி அவர்கள் உருவாக்கியுள்ள இந்த crisp தடத்தின் ஒவ்வொரு ஆல்பமும் 64 பக்கங்கள் மாத்திரமே & மாதம்தோறும் ஒரு புக் ரிலீஸ் ஆகிடுகிறது ! So 2 பாகக் கதைகள் ; 4 /6 பாகக் கதைகள் என்றெல்லாம் சரளமாய் கையிலெடுக்கும் கதாசிரியர்(கள்) நான்கோ ; ஆறோ மாதங்களில் அவற்றை அமர்க்களமாய் நிறைவும் செய்திடுகிறார்கள் ! தற்போது இத்தாலியில் வெளியாகியுள்ள இளம் டெக்ஸ் ஆல்பத்தின் நம்பர் 47 ! 

அடுத்த மாதத்து தீபாவளி மலரில் நாம் (கலரில்) தொடவுள்ள பாகங்கள் 10 - 13 ! இம்மாதத்து "சொர்க்கத்தில் சாத்தான்களோடு நாம் தொட்டிருப்பது நம்பர்ஸ் 14 & 15 ! So ஆண்டுக்கு நாலோ, ஐந்தோ 'சின்னத் தல' இதழ்களை நமது அட்டவணைகளுக்குள் புகுத்தினாலுமே - இத்தாலிய ஜெட் வேகத்துக்கு ஈடு தந்திட வாய்ப்பே இராது ! And கொஞ்ச காலம் கழித்துப் பார்த்தால் கண்ணுக்கே எட்டாத தொலைவினில் இந்தத் தொடர் முன்னேறியிருக்கும் - கதைகளின் எண்ணிக்கையினில் ! So my question is this : 

'மணந்தால் only மஹாதேவி ; கட்டிக்கினா only க்ரித்தி ஷெட்டி !!' என்ற நமது பாங்குகளில் இரகசியங்களே கிடையாதல்லவா ?  "கதைகளைப் பிரிச்சுப் போட்டாலே அடி தான் ; மொத்து தான் !" என்ற பழக்கத்தினை கல் தோன்றி, மண் தோன்றா 'காமிக்ஸ் எக்ஸ்பிரஸ்' நாட்களிலிருந்தே நீங்கள் கையில் எடுத்து வந்துள்ளீர்கள் ! In fact கீழடியில் நடப்பது போல் ஒரு அகழ்வாராய்ச்சியினை பின்னாட்களில் நமது காமிக்ஸிலும் செய்திட ஆராச்சும் முனைந்தால், நமது தொன்மையான மூ.ச.க்கள் அங்கு கணிசமாய்ப் புதைந்திருப்பதையும், கேசத்தை கணிசமாய்க் கொண்டிருந்த ஒரு ஆந்தையனை, தெளிய வைத்துத் தெளிய வைத்து அந்நாட்களிலேயே லேப்பி எடுத்ததற்கான வரலாற்றுச் சின்னங்களும் கிடைப்பது உறுதி ! (ஆத்தாடியோவ்.....இன்னா அடி !!) அதன் பின்பாய் "காலன் தீர்த்த கணக்கு" ; "துயில் எழுந்த பிசாசு" (!!!) போன்ற டெக்ஸ் ஆல்பங்களை அடுத்தடுத்த மாதங்களில் வெளியிட்டுள்ளோம் தான் ; ஜேசன் ப்ரைஸ் 3 பாக சாகசமுமே அந்த பாணியில் வெளியாகியுள்ளது தான் ! ஆனால் ஒவ்வொரு தபாவுமே - "இதை ஒரே குண்டு புக்காய்ப் போட்ருக்கலாமே ?" என்ற விசனக்குரல்கள் ஒலிக்காதில்லை ! 

கதைகளை அத்தியாயங்கள்வாரியாய்ப் பிரிப்பதென்பது உலகின் அனைத்து மார்க்கெட்களிலும் சர்வ சாதாரணமானதொரு நடைமுறை என்பதை நீங்களும் அறியாதவர்களல்ல தான் ; but still "கதையைப் பிரிச்சே - மொத டெட் பாடி நீ தானலே !" என்ற எச்சரிக்கைக்கு குரல்களை ஒலிக்கவிடத் தவறவுவதே இல்லை ! 

  • பிரான்க்கோ-பெல்ஜிய உலகினில் XIII தொடரானதை 1984-ல் துவக்கி - 2007 வரைக்கும் இழுத்திருந்தனர் - அந்த முதல் சுற்றின் 19 ஆல்பங்களை பூர்த்தி செய்திடவே ! Which meant - இந்த உச்ச சஸ்பென்ஸ் த்ரில்லரின் முடிச்சுகளைக் கண்டறிய 23 ஆண்டுகள் காத்திருக்க பிரெஞ்சு மக்களுக்கு அவசியப்பட்டிருந்தது ! 
  • தோர்கல் தொடர் துவங்கி 41 ஆண்டுகள் ஆகியுள்ளன & அவர்கள் தொட்டுள்ளதோ நம்பர் 39 தான் ! 
  • 1965-ல் ஜனனம் கண்ட (கதாசிரியர் சார்லியேவின்) தட்டைமூக்கார் டைகரின் அந்த க்ளாஸிக் முதல் சுற்றின் 23 ஆல்பங்கள் பூர்த்தி காண தேவைப்பட்ட அவகாசமோ கால் நூற்றாண்டு ! 

ஆனால் இங்கோ - "ஒரு பேமானி கதைகளைக் கொத்துக்கறி போட்டுப்புடுச்சி ! துண்டும் துக்கடாவுமாய்ப் போட்டுப்புட்டதால், இந்தத் தொடரின் ரெஜ்பெக்டே போச்சு !!" என்ற புகார் கால காலமாய் ஒலித்து வருவதில் இரகசியங்கள் லேது !! நமது கும்பகர்ண உறக்க நாட்களில், கதைகளின் துண்டாடல் உங்களுக்கு ரௌத்திரங்களை உற்பத்தி செய்திருப்பதன் பின்னணி perfectly understandable ! "இந்தக் கோமாளிப்பய அடுத்த புக்க அடுத்த திருவிழா நேரத்துக்குத் தானே வெளியிடும் ?" என்ற அந்நாட்களின் கடுப்ஸ் லாஜிக்கலானதொன்று தான் ! ஆனால் இன்றைக்கோ நிலவரம் முற்றிலும் வேறல்லவா ? நீங்கள் முதல் மாச டப்பியினைப் பிரிக்க நல்லதொரு நாளையும், பொழுதையும் தேடிக் கொண்டிருக்கும் போதே, கூரியர் தம்பி மறுமாதத்து புக்ஸ்களோடு கதவைத் தட்டிக் கொண்டிருப்பான் என்பதை நமது இரண்டாம் இன்னிங்ஸ் track record சொல்லிடும் ! So கதைகள் பாதியில் தொங்கலில் கிடந்து போகக்கூடுமே என்ற பயங்கள் இன்றைக்கு அவசியமே கிடையாது தான் ! ஆனாலும் தொகுப்புகளாய் ; குண்டு புக்குகளாய் ; இணைந்த ஆல்பங்களாய் மாத்திரமே வாசிப்பதென்ற அந்த அவாவினில் மாற்றங்களைக் காணோமே - why ? 

ஒரே புக்காய் வெளியிட்டாலன்றி வரவேற்பிராது என்ற பயத்தினூடே பயணிக்க நேர்வதால் நிறையத் தொடர்கள் பக்கம் தலை வைத்தே படுக்க நமக்கு முடிவதில்லை !  'மாதம் ஒரு பாகம்....மூன்று மாதங்களில் முடிந்திடும் ஒரு கதை ! மாதா மாதம் இதனை ரசிப்பதும், "அடுத்து என்ன ?" என்ற எதிர்பார்ப்போடு மறுமாசத்துக்குக் காத்திருப்பதும் ஓ.கே. தான் !" என்ற தகிரியத்தை நீங்கள் நமக்குத் தந்திடும் பட்சங்களில், இன்னமும் கணிசமான அமெரிக்க சமகாலப் படைப்புகளை களமிறக்கிட சாத்தியமாகிடும் ! அங்கே அவர்களது template - "ஒவ்வொரு இதழும் 28 பக்கங்கள் ; ஒரு கதை பூர்த்தியாவது சுமார் 6 இதழ்களில்" என்பதே ! ஆனால் அவற்றை ஒன்றிணைத்து நூற்றுச்சொச்சம் பக்கங்களில் ஒரே புக்காய் வெளியிட்டாலொழிய ரசிக்காது என்பது இக்கட நடைமுறை ! So படிக்கிறீர்களோ ; படம் பார்க்கிறீர்களோ - சகல முயற்சிகளுக்குமே தொகுப்புகள் மாத்திரமே தீர்வெனின் - சந்தாவின் பட்ஜெட் எகிறும் என்ற பயத்திலேயே நான் நழுவிடுவதே பலனாகிறது !

"4 மாசம் தொடராகிடும் பட்சத்தில், நடுவாக்கிலானதொரு புக் - நம்ம பாசமான சேகரிப்பாளர்களின் உபயத்தில் out of stock ஆகிப் போனா அப்புறம் கூடுதல் விலை கொடுத்து க்ரே மார்க்கெட்டில் தானே வாங்க வேண்டிப் போகும் மடஞ்சாம்பிராணி உடன்பிறப்பே ?" என்ற ஆதங்கங்கள் இங்கே ஒலிக்கலாம் தான் ! ஆனால் இன்றைக்கெல்லாம் அந்த நடைமுறைகள், லெமூரியா கண்டத்தினில் வேண்டுமானால் இருக்கக்கூடும் என்பதற்கு நமது ரயில்வண்டி நீளத்து ரேக்குகளும், பிதுங்கி வழியும் கிட்டங்கியுமே சாட்சி ! 

அதே போல - "புத்தக விழாக்களில் வாங்கும் casual readers - தெரியாமல் பாகம் 3 ஐ மட்டும் வாங்கிக்கினு போய் சிண்டைப் பிய்த்துக் கொள்ளும்    அபாயம் உண்டென்பதை நீ உணரவில்லையா கூமுட்டை உடன்பிறப்பே ?" என்ற உங்களின் செல்லமான வினாவும் எனக்குக் கேட்கிறது தான் ! புத்தக விழாக்களுக்குச் செல்லும் சமயங்களில் இத்தகைய அத்தியாயம் பிரியும் இதழ்களை ஒன்றிணைத்து கண்ணாடிக் கவர்களில் போட்டு pack ஆக விற்க முனைந்தால் அந்தச் சிக்கலையும் சரி செய்து விடலாமன்றோ ? 

So சொல்லுங்கண்ணே - இளம் டெக்ஸ் தொடரை மட்டுமாச்சும் அவர்களின் அந்த ஒரிஜினல் பாணியிலேயே - மாதமொரு 64 பக்க இதழ் ; தொடராய் ஓட்டமெடுக்கும் கதைகள் அவற்றின் போக்கிலேயே நிறைவுறட்டும் !" என்று - காத்திருக்கும் 'தல' 75 ஆண்டினில் முயற்சித்துப் பார்க்கலாமா ? What say ? 

Before I wind up - புத்தக விழா news !! கரூரில் வரும் திங்கள் வரைக்கும் நிலைகொண்டுள்ளது நமது காமிக்ஸ் கேரவன் ! ஈரோட்டின் வேகங்கள் இங்கு சாத்தியமல்ல என்றாலும் - decent sales இது வரையிலும் ! Icing on the cake : ஏகமாய் பள்ளி & கல்லூரி மாணாக்கர்களை புத்தக விழாவிற்கு இட்டு வருகின்றனர் & அவர்களும் செம ஜரூராய் நமது ஸ்டாலில் ஆஜராகிடுகின்றனர் ! வருகை தருவோரில் பத்திலொருவர் காமிக்ஸ் மீது அபிமானம் கொள்ள இதுவொரு வாய்ப்பாய் அமைந்தாலும் நமக்கு உவகையே ! And கேக்கின் மீதான cherry பழம் - இன்றைக்கு கொட்டித் தீர்த்த மழை காரணமாய் அரங்கே சகதிக் காடாய்க் காட்சி தரும் நிலையில், செப்பனிடும் பணிகளை மேற்பார்வை செய்திட வந்திருந்த மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நமது ஸ்டாலுக்கு செம வாஞ்சையோடு வருகை புரிந்தது  ! பால்யம் முதலே அவர் நமது காமிக்ஸ் வாசிகரென்ற தகவலை அண்ணாச்சியுடன் பகிர்ந்து கொண்டது மட்டுமன்றி - "வேதாளன் கதைகளைக் காணோமே ?" என்றும் வினவியுள்ளார் !! இந்த பொம்ம புக் நேசம் துரும்புகளிலும் இருக்கும், தூண்களிலும் இருக்குமென்பதை உணரச் செய்த yet another day !! தகவலை என்னோடு பகிர்ந்த நம்ம அண்ணாச்சியின் குரலில் கொப்பளித்த உற்சாகத்தை ஒரு பாட்டிலில் அடைத்து வைக்க முடியுமெனில் அட்டகாசமாய் இருந்திடும் ! நமது இதழ்களின் முகமாய் எண்ணற்றோருக்கு இருந்து வரும் அண்ணாச்சியின் அத்தியாயங்களில் இன்றைய சந்திப்பு லேட்டஸ்ட் !! குட்டியாய் ஒரு இடைவெளிக்குப் பின்பாய் நமது bookfair கேரவன் இன்னும் நிறைய இலக்குகளில் பயணிக்கவுள்ளது எனும் போது அண்ணாச்சியின் உற்சாகங்களும் தொடரட்டும் என்பேன் !

அப்புறம் நமது YEAR END Specials முன்பதிவுகள் செம விறு விறுப்பாய்ப் பயணித்து வருகின்றன ! இதுவரையிலும் செய்திருக்கா பட்சத்தில் இன்றைக்கே நம்மிடமோ, உங்கள் ஊர் முகவரிடமோ புக்கிங் செய்திடலாமே - ப்ளீஸ் ? (கார்த்திக் : டப்பிக்குள் இவற்றையும் சேர்த்துக்க reminder !!)

நன்றி : நண்பர் கிரி !!

அப்புறம் இன்னொரு தகவலுமே guys :

உலகப் பிரசித்தி பெற்ற ஆஸ்டெரிக்ஸ் & ஒபெலிக்ஸ் தொடரினைத் தமிழில் போட என்றைக்கேனும் முடிகிறதோ - இல்லையோ, அவர்களின் ஆங்கில இதழ்களின் full set நம்மிடம் இப்போது விற்பனைக்கு உள்ளது ! மொத்தம் 34 புக்ஸ் கொண்ட இந்தத் தொடர் நமது ஆன்லைன் ஸ்டோர்களில் லிஸ்டிங் ஆகியுள்ளது ! ரொம்பவே competitive விலைகளில் உள்ள இந்த இதழ்களை முயற்சித்துப் பார்க்கலாமே ?



Bye all...see you around ! Have a cool weekend ! 



Sunday, August 21, 2022

காலை எழுந்தவுடன் கடுங்காப்பி !

 நண்பர்களே,

வணக்கம். அக்கா பையனுக்குத் திருமணம் ; அதுவும் குற்றாலத்தில் ! So சனிக்கிழமை காலங்கார்த்தாலே 'விலாவை சிறப்பிக்கக்' கிளம்பிடும் முன்பாய் ஒரு க்விக் "உள்ளேன் ஐயா" போட நினைத்தேன் !! Unfortunately - அது வேலைக்கு ஆகவில்லை ! So இதோ - கல்யாணத்துக்கு கிளம்பும் முன்னே அதிகாலையில் எனது அறையின் பால்கனியிலிருந்து லொட்டு லொட்டென்று டைப்பி வருகிறேன் - சாலையின் மறுபுறம் இப்போதே பிசியாக இயங்கிவரும் டீக்கடையொன்றைப் பராக்குப் பார்த்தபடிக்கே ! மாடுகள் கண்முழிக்கும் முன்னமே, இங்கே மக்கள் கூடிவிடும் மாயம் என்னவென்ற யோசனை தான் ஓடுகிறது தலைக்குள் ! "காலை எழுந்தவுடன் காபி" என்பது பலருக்கும் ஆயுட்காலப் பழக்கங்களாய் இருப்பது ஜகஜம் தான் ; ஆனால் இம்மி கூட சர்க்கரையோ, பாலோ சேர்க்காத கடுங்காப்பி ? மேற்கத்திய நாடுகளில் சாயாவோ ; காபியோ - செம ஸ்ட்ராங்காய் ; dark ஆகக் குடிப்பது வாடிக்கை ! ஆனால் இனிக்க இனிக்க சகலத்தையும் உள்ளே தள்ளிப் பரிச்சயப்பட்டிருக்கும் நமக்கோ அது கொஞ்சம் கஷ்டம் தான் ! But ருசிகளைப் பரிசீலிக்கும் நாவோடு நாம் தயாராக இருப்பின் - அந்தக் கடுங்காப்பியிலும், கட்டஞ்சாயாவிலும் ஒரு சுவை இருப்பது புலனாகாது போகாது !! 'இன்னாடா டேய்...டீ மாஸ்டர் ரேஞ்சுக்குப் பின்றியே ?" என்கிறீர்களா ? காரணமுள்ளது - becos காத்திருப்பதொரு கடுங்காப்பி அனுபவம் - உபயம் நம்ம தாத்தாஸ் !

போன வருஷத்தின் சூப்பர்ஹிட் இதழ்களுள் ஒன்றான "அந்தியும் அழகே" நமக்கு அறிமுகம் செய்து வைத்தது ரொம்பவே மாறுபட்ட 3 நாயகர்களை ! செமத்தியான சிலாகிப்புகளை பரவலாகவும் , பாசமான / நேசமான நெஞ்சங்களின் "தாறுமாறு தக்காளிச்சோறு" விமர்சனங்களை ஆங்காங்கே க்ரூப்களிலும் ஈட்டிய சாதனையாளர்கள் இந்தப் பல்போன பெருசுகள் ! In fact விமர்சனங்களின் உஷ்ணம் கூடக்கூட, இக்கட சேல்ஸ் பிய்த்துக் கொண்டு சென்றது ! அதே நடைமுறை தாத்தாக்களின் ஆல்பம் # 2-க்கும் தொடர்ந்திடும் பட்சத்தில், ஒரு சூப்பர்ஹிட் செப்டெம்பர் வெயிட்டிங் என்பேன் - becos போன வருஷம் நாம் பார்த்த தாத்தாக்களின் அந்த அறிமுக இதழ் வெறும் டிரெய்லர் தான் ! மெயின் பிக்சரே இந்த ஆல்பம் # 2 முதலாய்த் தான் ! Make no mistake -  கும்மிருட்டான ரூமுக்குள், தப்பித்தவறிக் கூட வெளிச்சக் கீற்றுக்கள் ஏதும் புகுந்திடக்கூடாதென கதாசிரியர் வில்பிரிட் லுபானோ பியூஸ் கட்டையையும் பிடுங்கி, தூர வீசி விட்டிருக்கிறார் ! So காத்திருப்பது செம டார்க்கான ; செம அடர்த்தியான ஒரு வாழ்க்கைப் பயணத்தின் சித்தரிப்பு ! ஆகையால் சமீப மாதங்களில் நேர்கோட்டுக் களங்களில் சைக்கிள் விட்டுப் பழகி, "ஹை..ஜாலி...ஜாலி.." என்று கைதட்டி வரும் நண்பர்கள் - திடு திடுப்பென ஒரு முழு லோடு பலாப்பழ லாரியில், கொடைக்கானல் மலையினில் ஏறும் அனுபவத்தினை எதிர்கொள்ளவுள்ளனர் ! அதே சமயம் மாண்ட்ரேக் ஆரஞ்சு பழங்களை பிழிவதைப் பார்த்து நொந்து நிற்கும் நண்பர்களுக்கு இங்கொரு கோங்குரா காரமுடனான மீல்ஸ் ஆறுதல் தரக்கூடும் ! எது எப்படியோ - காத்திருக்கும் "துள்ளுவதோ முதுமை" - வாழ்க்கையின் விளிம்பில் நின்று வரும் முதிய நண்பர்களுடனானதொரு பயணம் ! "எங்க வூட்டுப் பெருசுகளைக் கட்டி மேய்க்கவே தாவு தீருது..இந்தக் கொள்ளையிலே காமிக்ஸிலும் பெருசுகளா ? கிழிஞ்சது போ !" என்று அலறிடக்கூடிய நண்பர்கள் இந்த இதழினை skip செய்திடும் வாய்ப்பினை ஏற்கனவே தந்துள்ளோம் ! 

But surprise ...surprise ....இந்த இதழுக்கு "no" சொல்லியுள்ளோர் இதுவரைக்கும் வெறும் எட்டே பேர் தான் and இன்னமும் ஆகஸ்ட் 23 வரை அதற்கென அவகாசமுள்ளது ! So "தொண்ணூறு ரூபாய்க்குப் பிடிச்ச கேடு" என்ற பறைசாற்றலை செப்டெம்பர் முதல் வாரத்தில் FB-யில் செய்திடக் காத்திருக்கும் ஆர்வலர்ஸ் & கோ. இந்த அவகாசத்தைப் பயன்படுத்திக் கொள்ள எண்ணினால், அந்தத் தொகைக்கொரு credit voucher தந்திடுவோம் ! பின்னாட்களில் சந்தாக்களிலோ ; புத்தக விழாக் கொள்முதல்களிலோ ; ஆன்லைன் பர்சேஸ்களிலோ அதனை ஈடு செய்து கொள்ளலாம் ! "அஸ்கு..பிஸ்க்கு....அது எப்புடி...? நாங்க புக்கை வாங்கத்தான் செய்வோம் ; அப்பாலிக்கா போட்டு துவைக்கத் தான் செய்வோம் !" எனும் அணியா ? Thanks in advance for the impending smash hit sales !!

தாத்தாஸ் கதைகளின் அந்தக் கடுங்காப்பி ஸ்டைலின் ஒரு முக்கிய அம்சம் - அவர்களுக்குள்ளான அந்த சம்பாஷணைகளும்.... நக்கல்... குதர்க்கங்கள்...எவன் எக்கேடு கெட்டொழிஞ்சால் எனக்கென்ன ? என்ற பாணியிலான வசன நடையும் தான் ! நிஜத்தைச் சொல்வதானால் என்னை இந்தத் தொடருக்குள் ஈர்த்த முக்கிய காரணி அந்த வசன நடை தான் என்பேன் ! இங்கிலீஷில் அந்த துவக்க ஆல்பத்தைப் படிக்கும் போதே - "தெய்வமே...எந்த விளக்குமாற்றுச் சாத்து வாங்கினாலும் பரவாயில்லை - இந்தத் தொடரை தமிழுக்குக் கொணர்ந்தே தீரணுமே !" என்ற உத்வேகம் உள்ளுக்குள் ஊற்றடித்தது !  இதன் தமிழாக்கம் சார்ந்த பணிகள் மனுஷனை உண்டு-இல்லை என்றாக்கி விடுமென்பதும் அப்போதே ஸ்பஷ்டமாய்ப் புரிந்தது ! But இந்த funky தொடரை உங்களுக்கு அறிமுகம் செய்திடும் ஆர்வத்தில் முதல் ஆல்பத்தில் உருண்டு, புரண்டு பணியும் செய்தாச்சு ; அதைத் தொடர்ந்து வருஷம் ஒன்று உருண்டோடியும் போச்சு ; and அடுத்த ஆல்பத்தின் பணிகள் துவக்கும் நேரமும் வந்தான போது தான் அத்தியாயம் இரண்டினை முழுமையாய் வாசிக்க முடிந்தது ! And boy .....திக்கான டிகாக்ஷனை மட்டுமே டபராவில் ஊற்றிக் குடிக்கும் ஒரு உணர்வு மேலோங்குவதைத் தவிர்க்கவே இயலவில்லை, becos இந்த பாகம் # 2 - பியரோ மேயோ தாத்தாவின் வாழ்க்கைப் பயணத்தை மட்டுமன்றி, குண்டு மில்சே தாத்தாவின் திரும்பிப் பார்க்கும் படலத்தோடும் பயணிக்கின்றது ! And பற்றாக்குறைக்கு சுற்றுப்புறச் சூழல் மீதான தனது அக்கறையினை மீண்டுமொருமுறை கதாசிரியர் செம அழுத்தமாய்ப் பதிவு செய்கிறார் ! முதல் ஆல்பத்தில், புள்ளைத்தாய்ச்சி சோபி வாயிலிருந்து பிரவாகமெடுக்கும் அக்னி வார்த்தைகளில் அந்த வேகம் தென்பட்டதெனில், இங்கே அது கதையின் இறுதி 3 பக்கங்களை ஆக்கிரமித்துக் கொள்கிறது ! 

மொழிபெயர்ப்பினைப் பொறுத்தவரையிலும், வரிகளுக்கு குஷன் போட்டு விடும் பாணியை தலைமுழுகி கொஞ்ச காலமாகி விட்டதென்பதால் -  ஒரிஜினலின்  கோங்குரா காரத்துக்கு கடிவாளம் போட்டிட நான் முனையவே இல்லை !  So செம raw வரிகள் நிறைய இடங்களில் இருப்பதைப் பார்த்திடப் போகிறீர்கள் !! நிறையவே புருவ உயர்த்தல்கள் ; நிறையவே கலாமிட்டி ஜேன் பாணியிலான @#%* வாழ்த்துக்கள் பலனாகிடக்கூடும் என்பது அப்பட்டமாய்ப் புரிந்தாலும், இந்தத் தாத்தாக்களுக்கென கதாசிரியர் சிருஷ்டித்துள்ள ஸ்டைலை விசுவாசமாய்ப் பின்பற்றிடுவது என்பதில் தீர்மானமாய் இருந்தேன் ! So முட்டுச்சந்துக்கள் பல காத்திருப்பது கண்ணுக்குத் தெரிந்தாலும் - எல்லாப் புகழும் கதாசிரியருக்கே !! என்றபடிக்குப் பணியாற்றியுள்ளேன் ! ஒரு வண்டிக்கதைகளில் இது வரையிலும் பயணம் பண்ணியுள்ளேன் தான் ; but this must count amongst the toughest so far ! "இந்த பில்டப் படலத்தைக் கேக்குறப்போவே கண்ணைக் கட்டுதே...இந்தப் புண்ணாக்கையெல்லாம்  எங்க தலைகளில் கொட்டுவானேன் ?" என்ற கேள்வி உங்களின் கணிசமானோரின் உள்ளங்களில் ஓடக்கூடும் தான் ! நிஜத்தைச் சொல்வதானால், இந்தக் கேள்விக்கான பதில் சொல்லத்தெரியவில்லை எனக்கு ! பொதுவாகவே வாசிப்பில் நான் ரசித்தவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ளும் அவாவே எனது (புதுத்) தேர்வுகளின் பொதுவான பின்னணிகள் ! And இங்கேயும் அதுவே கதையின் பின்னணிக் கதை ! காமிக்ஸ் வாசிப்பின் ஒரு extreme பாணியுமே இந்தியாவின் # 1 காமிக்ஸ் வாசக வட்டத்துக்கு  ஒவ்வாது போகாதென்று தலைக்குள் ஒரு குரல் கேட்டது ! அதை நடைமுறைப்படுத்தும் முயற்சியே இந்த தாத்தாசுடனான பயணம் ! திட்டுங்கள் என்னை, but ஒருக்கா வாசித்திட மட்டும் தயங்காதீர்கள் ப்ளீஸ் ! 

இதோ - இதழின் அட்டைப்படம் + உட்பக்க preview !! 


ரைட்டு..இதற்கு மேலும் நான் தாமதித்தால் "தாய் மாமாவைக் காணோம் !" என்று மைக்கில் குரல் கொடுத்து விடுவார்கள் என்பதால் நடையைக் கட்டுகிறேன் ! கிளம்பும் முன்பாய் - இதோ இம்மாதத்தில் என்னைப் பிழிந்தெடுத்த பணி # 2 பற்றிய preview-ம் !

டேங்கோ !!! முத்து ஐம்பதாவது இதழில் அறிமுகமான ஒற்றை வேங்கை !! இங்கே நாயகர்கள் மூவர் என்பேன் ! முதலாவது டேங்கோ ; இரண்டாவது அந்த ஓவியர் ; மூன்றாவது அந்தக் கலரிங் ஆர்ட்டிஸ்ட் ! உலகின் exotic மூலைகளைத் தேடிப் பிடித்து அவற்றை இந்தக் கதைகளின் பின்புலங்களாக்கிடும் பாணி இம்முறையும் தொடர்கிறது ! And இந்த தபாவோ நாம் மேற்கிந்தியத் தீவுகளின் ஒரு மூலைக்குப் பயணமாகிடவுள்ளோம் ! கதை என்னமோ ஒரு அரைக்கால் வரியில் அடக்கிடக்கூடிய சமாச்சாரமே ; ஆனால் அதை அந்த நீலக்கடலின் துணையோடு, மிரட்டும் ஆங்கிள்களிலான சித்திரங்களுடன் சொல்லியுள்ள விதம் அள்ளுகிறது ! பொதுவாய் இது போலான கதைகளில் பணியாற்றுவதில் பெருசாய் மொக்கைகள் போட முகாந்திரங்கள் இருந்திடாது தான் ; ஆனால் இங்கோ கதாசிரியர் Matz-க்கு வசனங்களில் கதையை நகர்த்துவத்தைக் காட்டிலும் background voiceover-களில் கதை சொல்லவே பிடிக்கிறது என்பதால் அவரது ஸ்டைலிலேயே நானும் பேனா பிடிக்க முயற்சிக்க வேண்டிப் போனது ! So நிறைய இடங்களில் "இதெல்லாம் எக்ஸ்டரா நம்பரா ?உன்ர வேலையாடா முழியான்கண்ணா ?" என்ற சந்தேகங்கள் உங்களுக்கு எழக்கூடும் தான் ! But rest assured - சகலமும் ஒரிஜினலில் கதாசிரியர் டயல் பண்ணியிருந்த நம்பர்கள் மாத்திரமே !! And அதுவே பெண்டைக் கழற்றித் தந்து விட்டது - 68 பக்க நீளத்தில் ! டேங்கோ - நீலக்கடல்களின் நில்லா நாயகன் !! "சிவந்த மண்" - as exotic as they come !!


Bye folks....see you around ! Have a cool Sunday !

Monday, August 15, 2022

வந்தார்கள்...வென்றார்கள்..!

 நண்பர்களே,

வணக்கம். அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் !! பிள்ளைகள் பள்ளிகளிலிருந்து பத்திரமாய்க் கொண்டு வந்திருக்கக்கூடிய மிட்டாய்களை லவட்டி வாயில் போட்டபடிக்கே செல்லை நொண்டிக் கொண்டிருக்கக்கூடிய இந்த விடுமுறைப் பொழுதினை இன்னும் ஜாலியானதொரு வேளையாக்கிட இதோ உங்களுக்கென சில கேள்விகளும்...அறிவிப்புகளும்...! 

கேள்விகளோடு கச்சேரியினை ஆரம்பிப்போமா ? இயன்றமட்டிலும் இவற்றிற்கு பதிலளிக்க அனைவருமே நேரம் எடுத்துக் கொண்டால் நிரம்ப மகிழ்வேன் - simply becos உங்களின் பதில்களே காத்திருக்கும் 2023-ன் நமது வாசிப்பு அனுபவங்களுக்கு உரம் சேர்த்திடவுள்ளன !! So here goes :

கேள்வி 1 .பழசா ? புதுசா ? என்ற கே.பி.சுந்தராம்பாள் காலத்துக் கேள்வி ஒவ்வொரு காலகட்டத்திலும் மண்டையை உசத்தியிருப்பதும், இயன்றமட்டுக்கு "புதுசே ஜெயம் நோக்கிய பாதை !!"  என்று சாதித்தபடிக்கே நகர்ந்திட நான் முற்படுவதிலும் இரகசியங்களே இல்லை ! ஆனால்...ஆனால்...நமது இரண்டாவது இன்னிங்சின் முதல் தசாப்தம் பூர்த்தியாகியிடவுள்ள வேளைதனில் ஒரு clearcut pattern பதிவாகி இருப்பதை மறுக்கவே இயலாது ! 

2012 துவக்கம் முதல் இப்போது வரைக்கும் தோராயமாய் 430 புக்ஸுக்கு அருகாமையில் வெளியிட்டிருப்போம் என்பது ஒரு உருட்டுப்பொதிக் கணக்கு ! (முத்து ; லயன் ; சன்ஷைன் ; ஜம்போ ; லயன் கிராபிக் நாவல் ; லயன் லைப்ரரி) இவற்றுள் நம்மிடம் கிட்டத்தட்ட 65 சதவிகிதம் இப்போதும் ஸ்டாக்கில் உள்ளன ! காலியாகியுள்ள புக்ஸ் எவை ? சூப்பர் ஹிட் அடித்துள்ள புக்ஸ் எவை ? என்று மேலோட்டமாய் ஒரு பரிசீலனை செய்தால் கிட்டிடும் ரிஸல்ட்ஸ் ரொம்பவே சுவாரஸ்யம் !! சூப்பர் ஹிட்ஸ் பட்டியலொன்று போடுவதாயின் இதோ - இதுபோல் இருந்திடும் :

**NBS 2013

**LMS 2014 

**இரத்தப் படலம் வண்ணத்தொகுப்பு(கள்)

**மின்னும் மரணம் (வண்ணத்தொகுப்பு)

**இரும்புக்கை மாயாவி - ALL BOOKS 

**'தல' டெக்ஸ் வில்லர் - in particular - டைனமைட் ஸ்பெஷல் ; சர்வமும் நானே ; லயன் 250 ; தீபாவளி with டெக்ஸ் ; கார்சனின் கடந்த காலம் ; நிலவொளியில் நரபலி etc etc   

**ஒல்லியார் லக்கி லூக் - ALL BOOKS 

**கழுகுமலை கோட்டை - பாக்கெட் சைஸ் + கலர் 

**வேதாளர் ஸ்பெஷல் - 1 

**ரிப் கிர்பி ஸ்பெஷல் - 1 

**சுஸ்கி & விஸ்கி ஸ்பெஷல் - 1 

**நிஜங்களின் நிசப்தம் (கிராபிக் நாவல்)

Of course - இந்தப் பட்டியலில் சிலபல விடுதல்கள் இருக்கலாம் தான் ; இந்தப் பதிவை டைப்பிடிக்கும் நொடியினில் எனக்கு மண்டைக்குள் உலாற்றிய பெயர்கள் மாத்திரமே மேலுள்ளவை ! And இவை தவிர்த்த நூற்றுக்கணக்கான அட்டகாச இதழ்களும் உண்டு தான் - லார்கோவின் prime books ; தோர்கலின் மறக்கவியலா இதழ்கள் ; மா துஜே ஸலாம் ; பிரிவோம்..சந்திப்போம்...போன்ற ஜம்போ one shots ; பவுன்சர் ;  ட்யுராங்கோ போன்ற cult classics ;  மார்ட்டினின் "மெல்லத் திறந்தது கதவு ; ARS MAGNA ; கென்யா - போல !! ஆனால் "அடிபிடி அதகள விற்பனை" என்ற அடையாளங்களை அவற்றிற்கு வழங்கிட இயலாது தான் !! So "வந்தார்கள்...வென்றார்கள்" என்ற லிஸ்டுக்குள் புகுந்திருக்கும் புக்சின் பெரும்பான்மை - மறுபதிப்புகளே ; அல்லது டெக்ஸ் & லக்கி என்ற 35 ஆண்டுகால ஜாம்பவான்களின் ஆக்கங்களே !! 

இந்தப் பத்தாண்டுகளில் நாம் சந்தித்துள்ள புது நாயக/ நாயகியரின் பட்டியலை என்றைக்கேனும் ஒரு வாசக சந்திப்பு தினத்தினில் எழுதிப்பார்க்க முனைந்தால், நிச்சயமாய் மிரட்சி மேலோங்கும் தான் - for the sheer numbers & varieties !! பவுன்சரை ரசிக்கின்றோம் ; ரூபினை சிலாகிக்கின்றோம் ; ட்யுராங்கோவை வரவேற்கின்றோம் தான் .....ஆனால் ....ஆனால்...டிரவுசர் போட்ட நாட்களின் நாயகர்கள் ஆஜராகும் வேளைகளில் பிரவாகமெடுக்கும் அந்த வேகத்தை பார்த்திட முடிவதில்லையே ? 

நடப்பாண்டே இதற்கொரு prime example : முத்துவின் ஐம்பதாவது இதழுக்கென கிட்டத்தட்ட 4 மாதங்கள் உழைத்தோம் - ஒரு வண்டி புதுக்கதைகளோடும், நாயகர்களோடும் ! பிரமாதமாய் விற்பனை கண்டது தான் ; சிறப்பாய் வரவேற்கவும்பட்டது தான் - ஆனால் ஒரு சோப்புசொக்காய் போட்ட முகமூடிக்காரர் "வேதாளர்" என்ற பெயருடன் black & white-ல் வந்தார் - அரைநூற்றாண்டுக்கு முன்பான க்ளாஸிக் கதைகளோடு .....அவரது வதனத்தைப் பார்த்த நொடியில் நீங்கள் ஆரவாரமாய் சிதறவிட்ட சில்லறைகளை, ஆல்பாவும் , சிஸ்கோவும் ; டேங்கோவும் 'ஆ'வென்று பராக்குத் தான் பார்த்தார்கள் !! இதோ - இந்த மாதத்தினில் கூட SMASHING 70 s க்கு சந்தா கட்டிடும் நண்பர்களுக்கு பஞ்சமே இல்லை !! 'சிவனே' என்று முத்துவின் ஐம்பதாவது ஆண்டுமலருக்கு வேதாளரையும், ரிப்பையும், காரிகனையும் ஒன்றிணைத்தொரு 600 பக்க மெகா ஆல்பத்தை வெளியிட்டிருந்தால் விசில்கள் விண்ணைத் தொட்டிருக்குமோ ? 

I agree, SMASHING 70s தயாரிப்புத் தரம் சூப்பர் தான் ; மெகா சைசில் வேதாளரும், ரிப் கிர்பியும் மிளிர்கிறார்கள் தான் - ஆனால் நயன்தாராவையும், சமந்தாவையும் நேரில் பார்த்த உற்சாகங்கள் இக்கட பதிவாவது unmistakeably clear !! அதே நேரத்தினில் கிஞ்சித்தும் தயாரிப்புத் தரங்களில் சோடை போயிரா FFS-க்கு நம்ம லெஜெண்டார் ரேஞ்சுக்கே வரவேற்பெனும் போது உங்களின் உள்ளக்கிடக்கு பிரிய மாட்டேன்கி !! வாசகப் பெருந்தகையான நீவிர் சொல்ல வரும் மேட்டர் தான் இன்னா நைனாஸ் ? கொயப்பக் கதைகள் படிக்க நேரமில்லை என்கிறீர்களா ? பொறுமைகள் லேது என்கிறீர்களா ? சிம்பிளா , ஜிலோன்னு ஓடற வண்டி தான் சொகப்படும் என்கிறீர்களா ? கொரோனா சார்ந்த ஒரு விஷயமாய் மாத்திரமே நான் இந்த phenomenon-ஐப் பார்த்திடவில்லை - becos இந்த செமத்தியான ஹிட்ஸின் பெரும்பகுதி 2020-க்கு முன்னானவைகளே !So கொஞ்சம் புரியச் செய்யுங்களேன் ப்ளீஸ் ?

கேள்வி # 2 : சூப்பர்ஹிட் அடித்திருக்கும் இந்த வருடங்களது வேதாளர் ; ரிப் கிர்பி & சுஸ்கி-விஸ்கி இதழ்களில் நீங்கள் மெய்யாலுமே வாசித்திருக்கக்கூடியது எத்தனை சதவிகிதமாக இருக்கும் ?

  • Option A : இன்னா சகோ - முழுசையும் கர்ச்சு குடிச்சிட்டேன்லே ?
  • Option B : அது வந்து மாமூ...புல்லீங்க இஸ்கூல் போக ஆரம்பிச்சதிலேர்ந்து நேரம் சித்தே டைட்.... ஒரு பாதிக் கதைகளை படிச்சிருப்பேன் !
  • Option C : ஒரே மேகமூட்டமா இருக்கா ; its so windy ...அட்டைப்படம்லாம் மாஸ்யா...புக்கு மேக்கிங் இன்னா மெரி கீது தெர்மா ? எவ்ளோவாட்டி புரட்டி..புரட்டி படம் பாத்திருப்பேன் தெர்மா ? அது வந்து என் ஒன்னுவிட்ட அத்திம்பேர் ரிட்டையர் ஆகுறதுக்குள்ளே படிச்சி முடிச்சிடுவேன் !!

மேற்படி மூன்றுக்குள் நீங்கள் எங்கே என்பதை கூச்சமின்றிப் பகிர்ந்திடுங்களேன் ப்ளீஸ் ? வாசிப்புகளன்றி, வெறும் பீரோக்களின் அலங்காரங்களாய் நமது இதழ்கள் தொடர்வதில் எனக்குத் துளியும் ஏற்பு நஹி guys ; அதற்குப் பதிலாய் புக்சின் எண்ணிக்கைகளைக் கம்மி பண்ணிவிட்டு, உங்களுக்கு வாசிக்க உரிய அவகாசம் தந்து விட்டாவது போகலாம் !

கேள்வி # 3 : "பழசு தான் புளகாங்கிதம்" என்பதே இந்த நொடியின் flavour ஆகத் தென்பட்டு வரும் வேளையினில் - இந்தக் கோரிக்கைகளை once & for all பைசல் பண்ணிவிட்டாலென்ன ? என்றுமே தோன்றுகிறது !! கொலைப்படை ; ஜான் மாஸ்டர் ; மனித எரிமலை ; வேட்டையர் ; என்ற ரேஞ்சில் இன்னமும் யாரெல்லாம் உங்களின் கனவுகளில் கானா பாடி வருகிறார்கள் guys ? கவிஞருக்கு கொஞ்சமாய் க்ளோரோபார்ம் கொடுத்து ஓரமாய்ப் படுக்க வைத்த கையோடு உங்களின் பழசுகள் சார்ந்த wishlist ஒன்றைப் போடுங்களேன் - தம் கட்டி அவற்றினை ரெகுலர் தடங்களுக்கு பாதிப்பின்றி ; முன்பதிவு சேனலில் வெளியிடத் திட்டமிட இயலுமா என்று பார்க்கலாம் ! காயாத கானகத்தே நின்றுலாவும்.......!!! ஓஓஓஓஓ.!!

And கேள்விகள் முடிந்தன என்பதால் இதோ அறிவிப்புகள் : மாங்கு மாங்கென்று டைப்படிப்பதற்குப் பதிலாய் விளம்பரங்களில் விஷயத்தைச் சொல்லி விடுகிறேனே : அக்டோபர் துவக்கம் - காத்திருக்கும் 3 ஸ்பெஷல் வெளியீடுகளின் பட்டியல் இதோ :



அக்டோபர், நவம்பர் & டிசம்பர் என - மாத்துக்கொரு  ஸ்பெஷல் இதழ் வீதம் இவை மூன்றுமே வெளிவரவுள்ளன ! வரிசைக்கிரமம் முன்னே, பின்னே மாறிடலாம் - but இதழ்களில் மாற்றங்கள் இராது ! இவை மூன்றுமே முன்பதிவுகளுக்கான இதழ்கள் மாத்திரமே ! 

PICK ALL 3 எனில் கூரியர் கட்டணங்கள் நஹி   - ரூ.650 (தமிழகத்தினுள்) & ரூ.700 (வெளி மாநிலம்)

PICK ANY 2 எனில் - இதழ்களின் விலைகள் + ரூ.50 

PICK ANY 1 எனில், ஆன்லைன் லிஸ்டிங்கில் வாங்கிடலாமே - ப்ளீஸ் ?

கையிலுள்ள கதைகளில் ஒரு குட்டியூண்டு பகுதியினை நடப்பாண்டிலேயே இறக்கி வைக்க முனையும் இந்த முயற்சிக்கு - எப்போதும் போலவே உங்களின் ஆதரவுகளை எதிர்நோக்கியிருப்போம் !! ஒரே நேரத்தில் ஓவராய்ப் போட்டு உங்களையும், முகவர்களையும் திண்டாடச் செய்ய வேண்டாமென்ற எண்ணத்தினில் அட்டவணையினை அக்டோபர் ; நவம்பர் & டிசம்பர் என திட்டமிட்டுள்ளோம் ! முன்பதிவுகள் செய்திடவுமே அவகாசமிருக்கும் என்பதால் - hope it works well !!

ரைட்டு...கிளம்புகிறேன் guys !! இன்று மாலை நமது ஈரோட்டுப் புத்தக விழாக் குழு நண்பர்களின் முன்னெடுப்பினில் ஒரு ஆன்லைன் மீட்டிங் திட்டமிடப்பட்டுள்ளது ! மாலை 4-30 to 5-30 என ஒரு மணி நேரம் மாத்திரமே !! அதற்கான லிங்கை நண்பர் ஸ்டாலின் அனைவருக்கும் அனுப்பி வைப்பார் (எனக்கே இன்னும் வரலீங்கோ !!) ; கலந்து கொள்ள முயற்சியுங்களேன் ப்ளீஸ் all ? அப்பாலிக்கா அந்த ஆன்லைன் மீட்டிங்கின் போது சமீபத்தில் வந்த கென்யா இதழிலிருந்து கேள்விகளும் கேட்கப்படும் ; top மார்க்குகள் பெற்றிடும் 5 நண்பர்களுக்கு இந்த ஸ்பெஷல் முன்பதிவு இதழ்கள் மூன்றுமே நமது பரிசுகளாகிடும் ! அல்லது....மிகக் குறைவான VARIANT கவர் சகிதமாக கென்யா இதழே பரிசாகிடும் ! சாய்ஸ் வெற்றி பெறுவோரது !!


Google Meet joining info

Video call link: https://meet.google.com/spi-ffhi-bvr

So lets get cracking folks !!  Bye all...see you around !!

Saturday, August 13, 2022

ரிப்பீட்டு...

 நண்பர்களே,

வணக்கம். இந்த டிசம்பர் பிறந்தால் நமது வலைப்பக்கத்துக்கு 11 வயது பூர்த்தியாகிடப் போகிறது ! இந்த 130+ மாதங்களும், மொக்கைகளின் முழு குத்தகையினை நானே எடுத்து வைத்திருப்பதும் சரி, இக்கட காமிக்ஸ் சார்ந்த தகவல்களைத் தவிர்த்து வேறெதற்கும் இடம் இருப்பதில்லை என்பதும் சரி - நாமறிந்தது தான் ! So கலர் கலரான சொக்காய்களுடன் மரங்களைச் சுற்றிச் சுற்றி வந்து டூயட் பாடும் அந்நாட்களது வாலிப / வயோதிக கோலிவுட் ஈரோக்களைப் போல, குறிப்பிட்ட கால இடைவெளிகளில், நாமுமே ஒரே topic-ஐச் சுற்றிடுவது தவிர்க்க இயலா நிகழ்வாகிறது ! 

பீடிகைகள் போதுமெனில் - நான் சொல்ல வரும் விஷயம் இதுவே : 

விடிய விடிய கண்முழிச்சி ; கண்ணில்படும் காமிக்ஸை எல்லாம் அலசி ; அவற்றுள் நம்மை லயிக்கச் செய்யக்கூடும் என்ற நம்பிக்கை தரக்கூடிய படைப்புகளை நம் கரைகளில் ஒதுங்கிடச் செய்ய ஆன அத்தினி குட்டிக்கரணங்களையும் போட்டு ; அப்பாலிக்கா முழிபிதுங்க மொழிபெயர்த்து ; ஒரு வண்டிப் பணிகளுக்குப் பின்னே புது வரவுகளை உங்கள் கைகளில் ஒப்படைத்து விட்டு ; அவற்றின் மீதான விமர்சனங்களுக்கென பதைபதைக்கும் நெஞ்சத்தோடு காத்திருந்து ; ஹிட்டா ? மிஸ்ஸா ? என்ற அலசல்களுடனே கிட்டங்கியில் ஒரு ஓரத்தை ரிசர்வ் செய்வது பரவலாய் நடைமுறையில் உள்ள நமது பாணி ! 

Thanks to you - நமக்கே இன்னொரு பாணியுமே உண்டு....!

அரைக்கால் டிரவுசர்களுக்கு ஜிப் வைத்துத் தைக்கும் காலங்களுக்கு முன்பாய், பெருசு பெருசான பட்டன்களோடு சுற்றி வந்த நாட்களில் ஹிட் அடித்த க்ளாஸிக் கதைகளைத் தேடிப் பிடிப்பது ; அவற்றை இன்றைய ரசனைகளுக்கேற்ப உயர் தரத்தில் தயாரிப்பது ; இயன்றால் மொழிபெயர்ப்பினில் மாற்றங்களைச் செய்வது, இல்லாங்காட்டி அன்றைக்கு அடித்த ஈயையே தேடிப் பிடித்து செம விசுவாசமாய் அடித்துத் தருவது ; ஒரு சுபயோக சுபதினத்தில் அந்த மறுபதிப்புகளை 'ஜம்'மென்று உங்களிடம் ஒப்படைத்து விட்டு, ஆபீஸ் ரூமில் 'தேமே' என்று குந்தியபடிக்கு நம்மாட்கள் அல்லு தெறிக்க உங்களின் ஆர்டர்களுக்குச் செவி சாய்க்கும் ரகளைகளைப் பராக்குப் பார்ப்பது & ஒரு சன்னமான கால அவகாசத்தில் "is gone ; போயிண்டே ; காலி ; ஸ்டாக் இல்லா !!" என்று கையைத் தட்டுவது தான் நடைமுறை # 2 !!

Yes, you guessed it.....நடைமுறை # 2-க்கு லேட்டஸ்ட்டாய் உயிரூட்ட, ஹாலந்திலிருந்து  வந்திறங்கிய "சுஸ்கி & விஸ்கி" ஜோடியானது, இரண்டே வாரங்கள் கூட நமது விசாலமான கிட்டங்கிகளில் தாக்குப்பிடித்திருக்கவில்லை !! SOLD OUT !!!! ரொம்பச் சொற்பமான பிரதிகளே ஸ்டாக்கில் உள்ளன என்பதால் - காத்துள்ள புத்தக விழாக்களில் நமது ஸ்டால் விற்பனைகளுக்கென அவற்றைத் தக்க வைத்துவிட்டு ஷட்டரைப் போடுகிறோம் ! Oh yes - இதன் பிரிண்ட் ரன் குறைச்சலே ; and ஹாலந்திலிருந்து ரசிகர் மன்றங்கள் தூள் கிளப்பியது எதிர்பாராதொரு பூஸ்ட் தான் - but still இரண்டே  வாரங்களுக்குள் கேட்டை சாத்துவதென்பது simply phenomenal !!   So - "புதுசுடா..ரசனை உசத்துவோம்டா..... ...வெரைட்டிடா....புதுப்புது ஜானர்டா ..கி.நா.டா..." என்று கண்ணாடியில் பார்த்தபடிக்கே எனக்கு நானே யோசனைகள் சொல்லிக் கொள்ளும் பிராந்தன் படலத்து லேட்டஸ்ட் அத்தியாயத்துடன் - "சுஸ்கி & விஸ்கி" எண்ட முகம் முழுக்க கரியை ஜாலியாய் அப்பி !! திட்டமிடல்கள் துவக்க நாட்களின் போது - இந்தக் கதைகள் நமது இன்றைய ரசனைகளுக்கு ஒத்தே போகாதென்ற நினைப்பு என்னுள் ! தயங்கித் தயங்கித் தான் இந்த 2 கதைகளையே planning க்குக் கொண்டு வந்தேன் ! In fact - "பேரிக்காய்ப் போராட்டம்" இதழையும் சேர்த்து ரூ.500 க்கு - அந்த முக்கூட்டணி இதழை வெளியிடுவது தான் ஆரம்பத்திட்டம் ! ஆனால் பயம்...!!! Overkill ஆகிப் போகுமோ ? பட்ஜெட் சார்ந்த விமர்சனங்கள் பெரிதாகிடுமோ ? சொதப்பினால் ரொம்பவே பெரிய சொதப்பலாகிடுமோ ?? என்றெல்லாம் பயங்கள் தலைதூக்க - I settled for 2 albums !! இப்போது யோசித்தால் - அந்தக் கதையில் வரும் வில்சனை விடப் பெரிய மொக்கை பீஸாய் எனக்கு நானே தென்படுகிறேன் !!

ஏற்கனவே SMASHING '70s தனித்தடமானது, அதன் க்ளாஸிக் ஹீரோக்களை விட்டு என் முகரை முழுக்க அப்பி வரும் கரியை அழிக்கவே ஊரில் உள்ள லைப்பாய் சோப்பில் முக்கால்வாசியை வாங்கி வரும் நிலையில், இந்தச் சுட்டி ஜோடி அடித்துள்ள லூட்டியோ வேறொரு லெவல் ! And "இந்த க்ளாஸிக் நாயகர்களையெல்லாம் இனியும் கையாள மாட்டோம் ; only லேட்டஸ்ட் ஈரோ & ஈரோயினிகளுக்கு மட்டுமே நம்மள் கதவைத் திறப்போம் !!" என்று பிடிவாதமாய் இருந்தவன் நான் !! 

And கூத்துக்கள் அத்தோடு முடிந்தபாடில்லை !! ஓசூர் ; கோவை ; ஈரோடு என்று உருண்டோடி வரும் நமது காமிக்ஸ் கேரவன் தந்து வரும் ஆர்டர் பட்டியலின் உச்சியினில் இருப்பவர் "லூயி கிராண்டேல்" என்றழைத்தால் - "உள்ளேன் ஐயா" என்று கைதூக்கிடும் இரும்புக்கை மாயாவியார் தான் ! "பாம்புத் தீவு" கிட்டத்தட்ட காலி ; "மர்மத்தீவில் மாயாவி" முடிஞ்சது ; "உறைபனி மர்மம்" கிட்டத்தட்ட வழித்துத் துடைத்தாச்சு !! ஈரோடு முடிந்த பிற்பாடு கரூர் ; அதன்பின்னே maybe மதுரை ; என்று புத்தக விழா circuit தொடர்ந்து செல்லும் நிலையில், "மாயாவி கையிருப்பில் இல்லை" என்றபடிக்கே புத்தக விழாக்களுக்குச் செல்வதென்பது, லங்கோடின்றி வீதிக்கு இறங்கி வருவது போலாகி விடும் போலும் !!  

ஒண்ணுமே புரியல உலகத்திலே...என்னமோ நடக்குது...மர்மமா இருக்குது...! 

என்று உள்ளுக்குள் பாடிக் கொண்டே இன்றைக்கு ரேக் # 3-ஐ மாட்ட வந்த பணியாட்களைப் பார்வையிட மாடிக்குப் போனால் - ஷெல்புகளில் திமிறிக் கொண்டுள்ளனர், நமது லேட்டஸ்ட் காளைகளும், கன்னியரும் !! 

  • லேடி S வேணுமா ? லம்ப்பா இருக்கு !! 
  • ஜூலியா வேணுமா ? ஜாலியா அம்மணி குந்தி இருக்கு ! 
  • மேஜிக் விண்ட் வேணுமா ? மல்லாக்க படுத்திருக்கும் மனுஷனை தட்டி எழுப்பினால் போச்சு ! 
  • மார்ட்டின் வேணுமா ? கணிசமா இருக்கு ! 
  • ஷெல்டன் வேணுமா ? ஷெல்ப் நிறைய இருக்கு ! 
  • கிராபிக் நாவல்ஸ் வேணுமா ? கிறங்கடிக்கும் எண்ணிக்கையில் இருக்கு ! 
  • தோர்கல் வேணுமா ? நோகாமல் தர கட்டுக்கட்டாய் இருக்கு ! 
  • SODA வேணுமா ? சர்பத்தோடு தாறோம் - குடிச்சிட்டே வாங்கிக்கோங்க !!
  • SMURFS வேணுமா...சூப்பரா இருக்கு !
  • க்ளிப்டன் வேணுமா ? கச்சிதமா இருக்கு ; கணிசமா இருக்கு ! 

ஆனால் ...ஆனால்...
  • "வேதாளர் இருக்காரா ?" என்று கேட்டால் - "என்றா தப்பிதமா பேசுறே ?" என்று முறைக்கிறார்கள் நம்மாட்கள் !
  • "ரிப் கிர்பி ஜார் இருக்காரா ?" என்று கேட்டுப் போட்டால் - "ஓதபடுவே...ஓடிப்பிடு ..." என்று சொல்லாமல் சொல்கிறார்கள் !
  • "இந்த மேஜிக்லாம் பண்ணுவாரே அவராச்சும் ?" என்று கேட்டால் - "அப்டி ஓரமா போயிடு - வேலை நேரமும் அதுவுமா உசிரை வாங்கிக்கினு !!" என்ற மைண்ட்வாய்ஸ் கேட்கிறது !
ரைட்டு...குனிந்த தலை நிமிர நேரமின்றி பிசியாக இருக்கும் நம்மாட்களை நொய்யு பண்ண வேண்டாமென எனது கேபினுக்குள் போனால் - மேஜை மீது 2023 அட்டவணை காற்றில் சல சலத்துக் கொண்டுள்ளது !! "கார்ட்டூன் வறட்சி...கார்ட்டூன் போதலை " - என்ற குரல்கள் அவ்வப்போது கேட்பதை நாமறிவோம் ; இனிமேலும் அவ்வித எண்ணங்கள் வெளிப்படுமாயின் அடியேனிடம் ரெடிமேடாக ஒரு பதில் உள்ளது ! சிரிப்புக் கதைகளும் வோணாம் ; சிரிப்பு நாயகர்களும் வோணாம் - இதோ இந்த ஆந்தை முழியனை மட்டும் ஒரு தபா பாருங்கோ - கெக்கே பிக்கே என்று சிரிப்பு பீறிட்டுக் கொண்டு வரும் !! எண்ட குருவாயூரப்பா !!

And News from Erode

புது இடம்...மழை பெய்து சாலைகள் மோசமாய்க் கிடக்கு ; பழைய இடம் போல பஸ் ஸ்டாண்டுக்கு பக்கமும் கிடையாது ; பொஸ்தவ விழா சேல்ஸ் இந்தவாட்டி எப்பிடி இருக்கப்போதோ ? என்ற கேள்வி நிறைய பதிப்பகங்களின் உள்ளங்களில் இருந்திருக்கும் தான் இம்முறை ! ஆனால் மக்களை வாசிக்கச் செய்யும் கலையில் மகுடம் சூட்டிக் கொள்ளவல்ல மக்கள் சிந்தனைப் பேரவை பின்னணியினில் இருக்கும் போது கவலைகளுக்கு இம்மி கூட அவசியங்களில்லை என்பதை yet again புரிந்து கொண்டோம் !! சும்மா ரகளை பண்ணி வருகின்றனர் - ஈரோடு & சுற்றுப்பட்டு நகர்களின் நண்பர்கள் ! நாக்குத் தள்ளிப் போய்க் கிடந்தவர்களுக்கு கோவையில் சுடச் சுட டிபன் கிட்டியதெனில், ஈரோட்டில் அறுசுவை லன்ச் !! ஈரோட்டு விழாவிற்கு இன்னமும் மூன்று தினங்களிருக்க, அவற்றுள் இரண்டு விடுமுறைகளெனும் போது அத்தனை பதிப்பகங்களையும் போல நாமுமே இஷ்ட தெய்வங்கள் சகலரையும் வேண்டிக் காத்திருக்கிறோம் - விற்பனையின் ஏறுமுகம்  தொடந்திட வேண்டுமென்று !! ஜெய் புனித மனிடோ...ஜெய் ஜெய் ஈரோட்டு நண்பர்கள் ....ஜெய்யோ ஜெய் ஈரோட்டு M.G.R !!

And  ஈரோட்டில் விழா முடிந்த கையோடு - அருகாமையிலுள்ள கரூருக்கு கேரவன் நகர்கிறது ! நம்மவர்கள் அக்கட கணிசமாய் உள்ளனர் எனும் போது - அங்கேயும் நமக்கு ஒத்தாசைகளுக்கு வாசக பாகுபலிஸ்  கிட்டிடுவர்  என்பதில் ஐயங்களே இல்லை எனக்கு ! Fingers crossed !!

விற்பனை எனும் டாபிக்கில் இருக்கும் போது இன்னொரு துக்கடா சேதியுமே : ஓசையின்றி கோலிவுட்டிலோ ; அல்லது ஏதோவொரு வுட்டிலோ கதை டிஸ்கஷன்களுக்கு நமது காமிக்ஸ்கள் பயன் கண்டு வருகின்றன என்றே தோன்றுகிறது ! இந்த வாரத்தினில் ஒரு முழு செட் - சுமார் 285 புக்ஸ் கொண்ட 64 கிலோ காமிக்ஸ் கத்தை கடல் கடந்து பறந்துள்ளன - ஏர்மெயிலுக்கு மட்டுமே ஒரு ராட்சஸத் தொகையினை செலவிட்டு ! And இங்குள்ளதொரு திரையுலக டைரக்டரின் ஏற்பாட்டினில் தான் இது ! So கூடிய விரைவிலேயே நமது நாயகர்களின் ஜாடைகளில் யாராச்சும் வெள்ளித்திரையினில் குத்தாட்டம் போடுவதை பார்க்கலாம் போலும் !! இயவரசியை, கார்வினோடு டூயட் பாட விடாதவரைக்கும் ஷேமமே !!

Bye all...சுதந்திர தினத்தன்றொரு மினி பதிவோடு again ஆஜராகிடுகிறேன் ! Enjoy the long weekend !! See you around !!


Sunday, August 07, 2022

தொடரும் ஒரு காதல் கதை !

 நண்பர்களே,

வணக்கம். போதி தர்மர் காலத்திலிருந்தே நமது வலைப்பக்கத்துப் பதிவுகளை எழுதி வருவது போலொரு பீலிங்கு எனக்கு ரொம்ப காலமாகவே ! தொடரும் இந்த வாரயிறுதிப் பழக்கத்தினில் ஒரு நடைமுறைச் சிக்கல் உண்டு !! ஒரு சமாச்சாரத்தை ஏதேனும் ஒரு பதிவினில் நான் ஏற்கனவே எழுதிவிட்டு, அதைச் சுத்தமாய் மறந்த கையோடு, மறுக்கா எங்கேனும் அதைப் பற்றியே எழுதி வைத்து பல்ப் வாங்கும் ஆபத்தே என்னை மிரட்டும் அந்தச் சிக்கல் ! ஆனால் நமது பொம்ம புக் பயணத்தினில், சில அட்டவணைகள் அட்சர சுத்தமாய் அதே பொழுதுகளில், சீராகத் தலைகாட்டுவதே இயல்பு எனும் போது, நானுமே அவற்றைப் பற்றி மறுக்கா மறுக்கா எழுதுவது தவிர்க்க இயலாதே போகிறது ! And இந்த நொடிதனில் நமது ஒட்டுமொத்த கவனக் குவிவும் ஈரோட்டுப் புத்தக விழாவின் மீதே எனும் போது - at the risk of sounding repetetive - அக்கட உலா செல்லல் அத்தியாவசியமாகிறது !

ஈரோடு !!! 

சில பொறாமைக்கார 'பன் நேசர்கள்' காதுகளில் புகை விட்டுத் திரியும் ஆபத்து மாத்திரம் இல்லையெனில் - கவிஞர் முத்துவிசயனார் இந்த நொடிதனில் தலைதூக்கி - "ஈரோடே ..... நீ வரவேற்கிறாய் எங்களைச் சீரோடே !!" என்ற ரீதியில் கவிதை மழையாய்ப் பொழிந்து தள்ளியிருக்கும் வாய்ப்புகள் செம bright !! பாவம்....அவர் காதுகளைக் கருகச் செய்யும் புண்ணியம் நமக்கு வேண்டாமே என்ற தயாள சிந்தையின் காரணத்தினால், ஆடிப்பெருக்குக்குப் பெருக்கெடுக்கும் காவிரியைப் போலாய் பொங்கிடும் கவிதைகளை உள்ளுக்குள்ளேயே போட்டு அடக்கிட வேண்டியதாகிப் போகிறது !!  Jokes apart, "ஆகஸ்ட்" என்றவுடனே இப்போதெல்லாம் நமக்கு நினைவுக்கு வருவது சுதந்திரதின விழாவின் ஆரஞ்சுச்சுளை முட்டாயும் ; ஈரோட்டுப் புத்தக விழாவும் தானே ? And அந்தப் புத்தக விழாவின் பெயரைச் சொல்லி, நண்பர்களின் ஒரு பெரும் திரளை அங்கே சந்திப்பதென்பது - 2013 முதலாய் நமக்கொரு அட்டகாசமானதொரு வாடிக்கையாகி விட்டுள்ளதல்லவா ? 

குறுக்கும், நெடுக்கும் பயணிக்கும் பல ரயில்கள் ஈரோட்டின் வழியாகவே செல்லும் எனும் போது, அது வரையிலும் ஈரோட்டுடனான எனது பரிச்சயம் - பிஸியான அந்த ரயில் நிலையத்தோடும், அங்குள்ள கடைகளில் செக்கச் செவேரென்று செங்கல்கட்டியாட்டம் அடுக்கிக் கிடக்கும் அல்வாக்களை மிரட்சியோடு பராக்குப் பார்ப்பதோடும் முடிந்திருந்தது ! முதன்முறையாய் 2013-ல் அந்த VOC பார்க் மைதானத்துப்  புத்தக விழாவினில், சொற்பமான நண்பர்கள் அணியினை மரத்தடியினில் சந்தித்தது இன்னமும் நினைவில் 'பளிச்' என்றுள்ளது ! தொடர்ந்த ஆண்டுகளில் - தொடர்ந்த நினைவலைகள் ஒவ்வொன்றுமே செம ரம்யம் என்பேன் !! குறிப்பிட்டுச் சொல்வதானால் :

  • 2014-ல் LMS ரிலீஸ் சார்ந்த கும்மிகள் !! 
  • 'தல' vs 'தளபதி' என்ற அப்போதைய செமத்தியான ரகளைகள் !
  • "மின்னும் மரணம்" முழுவண்ணத் தொகுப்பின் அறிவிப்பு !
  • நண்பர் சிபியின் பிறந்தநாளுக்கு மரத்தினடியில் கேக் வெட்டிய பொழுது !
  • முதன்முதலாய் LE JARDIN ஹோட்டலில் ஒரு தம்மாத்துண்டு ஹாலை வாடகைக்கு எடுத்துக் கொண்டு நமது வாசகச் சந்திப்பினை நடத்தியது !
  • தொடர்ந்த ஆண்டினில் எழுத்தாளர் சொக்கன் சாரை நமது விழாவுக்கு சிறப்பு விருந்தினராய் அழைத்து வந்த வேளை !
  • இரத்தப் படல ரிலீஸ் & அது சார்ந்த ரவுசோ ரவுசுகள் !!
  • கொரோனா எனும் கொடூரன் குறுக்கிடும் முன்பாய் 2019-ல் தெறிக்க விட்ட உற்சாகங்களுடனான சந்திப்பு !  
  • பின்மாலைப்பொழுதுகளிலும், முன்னிரவுகளிலும் அங்குள்ள அந்த மரங்களுக்கே காதில் தக்காளிச் சட்னி கசியும் ரேஞ்சுக்கு நீண்டு சென்ற எண்ணற்ற நமது காமிக்ஸ் அளவளாவல்கள் ; கும்மாளங்கள் !!
இன்னமும் அந்தக் கொரோனா பூதம் பாட்டிலுக்குள் முழுமையாய் அடங்கிப் போயிருக்கவில்லை என்பதால் 2020 ; 2021 & 2022 என ஹாட்ரிக் அடித்துள்ளோம் - ஈரோட்டு சந்திப்புகளுக்கு கல்தா தந்த வகையினில் ! God Willing - 2023-ல் ; நமது 'தல' டெக்சின் 75-வது பிறந்தநாள் ஆண்டினில், விட்டதையெல்லாம் பிடிக்கும் வாய்ப்புகள் பிறக்குமென்று நம்புவோமாக !! Fingers crossed, an year in advance !!

Back to reality, வெள்ளி மாலையில் புதியதொரு இலக்கில் துவங்கிய புத்தக விழாவினில் நமக்கு மிதமான விற்பனை தான் ! ஆனால்...ஆனால்...சனிக்கிழமை காத்திருந்த விற்பனைச் சுனாமிக்கு வெள்ளி ஒரு அமைதியான முன்னுரை மட்டுமே என்பது தாமதமாகத் தான் புரிந்தது !! இந்த மாதிரியான மிரட்டலான விற்பனை நம்பர்களை சென்னைப் புத்தக விழாக்களில் மட்டுமே இதற்கு முன்பாய்ப் பார்த்திருக்கிறோம் ! போன வாரத்து கோவைப் புத்தக விழாவின் வாரயிறுதிகளில் செம brisk சேல்ஸ் எனும் போது, அந்த நம்பரை ஈரோட்டிலும்  தொட்டு விட சாத்தியப்படுமா ? என்ற வினா என்னுள் சத்தமின்றிக் குந்தியிருந்து ! அந்த நம்பரைத் தொட்டுப்புட முடிஞ்சா மாடி கிட்டங்கிக்கு இன்னொரு ரேக் செய்ய அட்வான்ஸ் தந்துப்புடலாமே !! என்ற ஆசை உள்ளுக்குள் அலையடித்தது ! இரண்டு வெவ்வேறு மாடிகளில் இங்கே கொஞ்சம், அங்கே கொஞ்சமென்று இறைந்து கிடக்கும் இதழ்களை சேகரித்து ஒட்டுக்கு ஒரே இடத்தில் ஒழுங்காய் அடுக்கிக் கொடுத்து விட்டால், நம்மாட்களின் பெண்டுகள் கழறுவது சற்றே மட்டுப்படுமே என்ற ஆதங்கம் தான் !! சனியும் புலர்ந்தது ; விழாவின் பிரதான நாளும் துவங்கியது & சுனாமியின் தாக்கமும் தான் !! 

"கோவையின் விற்பனை நம்பரை தொ-டு-வ-தா ? போவியா நீ.....அதை நான்காய் மடித்து ஜோப்பியில் நாங்க வைத்துக் கொள்வோமாக்கும் !" என்று ஈரோட்டு நண்பர்கள் தெறிக்க விட்டுள்ளனர் ரெகார்ட் படைக்கும் ஒரு விற்பனைத் தொகையுடன் !! அதிலும் ஒற்றை நண்பரின் கொள்முதல் மட்டுமே ரூ.18,000-க்குக் கொஞ்சம் குறைச்சல் !! And surprise ..surprise ...குடும்பத்தோடு வருகை தந்திருந்த அந்த நண்பரின் காமிக்ஸ் காதலுக்கோ, தெறிக்கவிட்ட மெகா கொள்முதலுக்கோ அவரது இல்லத்தரசி தடா போட்டிருக்கவில்லை !! நண்பரின் காமிக்ஸ் வேட்கைக்கொரு பெரும் thumbs up எனில், அவரது மறுபாதிக்கும், புதல்விக்கும் நமது மெகா சல்யூட் ! "இந்தக் காசுக்கு 2 பட்டுப்புடவைகள் வாங்கி இருக்கலாமே பாவி மனுஷா !!" என்று சொக்காயைப் புடித்து உலுக்கிடக்கூடிய  யதார்த்த மனைவியருக்கு மத்தியில் சகோதரி is quite a difference !! அவருமே நமது பொம்ம புக் உலகினில் உலவிப் பழகியவராக இருந்தால் வியப்படைய மாட்டேன் தான் !! Thank you to the family who made our day !!!

And இங்கே நமது நண்பர்கள் அட்டகாசமாய் உருவாக்கியுள்ளதொரு வாட்சப் குழுவின் பங்களிப்பினை நான் சிலாகிக்காது போனால் - ஸ்பைடரின் அசிஸ்டண்டாகி, ஆயுசுக்கும் தானைத் தலைவரிடம் மிதிபடும் விதி எனதாகிடக்கூடும் !   நண்பர்களின் privacy களுக்கு இம்சை கொடுக்க வேண்டாமே என்று சும்மா எட்டி மட்டும் பார்த்து விட்டு, நான் வெளியேறியிருந்த சமயமே நூற்றிச் சொச்சம் அங்கத்தினர்கள் இருந்தனர் அந்த க்ரூப்பில் ! ஸ்டாலில் நமது பண்டல்களை உடைக்கும் நேரத்திலிருந்து, அண்ணாச்சி லுங்கி கட்டிக்கொண்டு புக்ஸை அடுக்கும் நேரலை வரைக்கும் சுடச் சுட அங்கே போட்டோக்களாகவும், வீடியோக்களாகவும், ஜாலியான மீம்ஸ் சகிதம் தெறித்துக் கொண்டிருந்தது ! And விழா துவங்கிய பொழுது முதலாய் உள்ளூரிலும், அருகாமைகளில் உள்ள நண்பர்களும், தம்வீட்டு விசேஷத்தை முன்னின்று நடத்தும் உத்வேகத்தோடு ஸ்டாலுக்குப் படையெடுத்து வருவது கண்கொள்ளாக் காட்சி ! அதிலும் பாகுபலி 3 ஷூட்டிங்குக்கு லீவு சொல்லி விட்டு, நமது ஸ்டாலில் போட்டுத் தாக்கிவரும் அந்த மீம்ஸ் மன்னர் காட்டி வரும் அக்கறை - simply stunning ! ஒட்டுமொத்த பாசிட்டிவ் சிந்தனைகளின் வலிமை என்னவென்பதை ஒருங்கிணைந்து கண்முன்னே காட்டி வருகிறார்கள் நண்பர்கள் அத்தனை பேருமே !! தூரத்தில் இருந்தாலும் கூட, அவரவரால் இயன்ற விதங்களில் அந்தக் குழுவினை உயிர்ப்போடு வைத்திருந்து, உற்சாகங்கள் இம்மியும் குன்றிடாது பார்த்துக் கொள்கின்றனர் ! என்றேனும் ஒரு தூரத்து தினத்தில் - "இந்த பொம்ம புக் பயணத்தில் என்னடாப்பா சம்பாரிச்சே ?" என்று யாராச்சும் கேட்கும் பட்சத்தில், இம்மியும் யோசிக்காது  - "அன்பைச் சம்பாரிச்சோமுங்க சார் ! நல்ல மனுஷங்களின் அக்கறைகளைச் சம்பாரிச்சோசோமுங்கண்ணா ! எதிர்பார்ப்புகள் இல்லாத அரவணைப்புகளைச் சம்பாரிச்சோம் சார் !!" என்று சொல்வேன் ! அந்த மூன்று "அ"-க்களுக்குமே அந்நேரத்துக்குள் GST போட்டுத் தாக்கியிராதிருக்க இப்போவே புனித மனிடோவிடம் ஒரு மகஜரைப் போட்டு வைப்போம் !! Thanks a ton guys !! ஈரோட்டில் நாம் ஈட்டக்கூடிய ஒவ்வொரு ரூபாயிலும், உங்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பும் ஏதேனுமொரு ரூபத்தில் இருக்குமென்பது நிச்சயம் !! இன்னமும் 10 நாட்கள் காத்திருக்க, வர்ண பகவான் மட்டும் சற்றே மனம் இளகினால் ஈரோட்டில் இந்தாண்டு ஒரு புது அத்தியாயம் எழுதிடல் சாத்தியமாகிடும் என்பது உறுதி !! 

And இன்றைய விற்பனையின் தளபதிகள் பரிச்சயமான அதே முகங்களே !! "மாயாவி...மாயாவி....ஓ மை மாயாவி !!" என்று மாயாவி புக்ஸை அள்ளிக்கொள்ளும் நோஸ்டால்ஜியா நேசர்கள் ; அதன் பின்பாய் "டெக்ஸோடு தெறி" என்று 'தல'யை வேட்டையாடும் அணி பிரதானமென்றால் - கார்ட்டூன் பார்ட்டிஸ்களும் மஞ்சள் நகரில் உற்சாகமாய் புது இல்லங்கள் தேடிப் பயணித்துள்ளனர் ! கணிசமான குடும்பங்கள் இன்று நம் ஸ்டாலுக்கு வருகை தந்திருக்க, லக்கி லூக் ; smurfs என்று வாண்டுகள் ஆளுக்கொரு புக்கைத் தூக்கிப் போவதை நண்பர்களின் போட்டோ updates தெரிவிக்கின்றன ! அது மட்டுமன்றி "பீன்ஸ்கொடியில் ஜாக்"  & இன்றைக்கு ஸ்டாலுக்கு வந்து சேர்ந்த சிண்ட்ரெல்லாவும் குட்டிகளின் கொள்முதல் லிஸ்ட்களில் !!!

And before I forget - சனி பகலில் சிண்ட்ரெல்லா சந்தா புக்ஸ் அனுப்பியாச்சூ ! திங்களன்று உங்கள் வீட்டுக் குட்டீஸ்களிடம் ஒப்படைத்திடலாம் folks !! 

ஸ்டாலில் எவையெல்லாம் காலியோ, அவற்றினில் மேற்கொண்டு புக்ஸ் அனுப்பிட சனிக்கிழமை மாலையில் நம்மாட்கள் கிட்டங்கியிலிருந்து அள்ளி வந்த வேளையில் நான் அங்கு தானிருந்தேன் !! அந்த டைட்டில்களை கொஞ்ச நேரம்  மௌனமாகப் பார்த்துக் கொண்டேயிருந்தேன் !! மாயாவி....லாரன்ஸ்-டேவிட்....லக்கி லூக்....டெக்ஸ் வில்லர்....கென்யா...பீன்ஸ்கொடியில் ஜாக்....Alpha ....கலவையாய் கொஞ்சம் கார்ட்டூன்ஸ் !! No அர்ஸ் மேகினா....No கி.நா......No ஷெல்டன்....No லேடி S .....No மர்ம மனிதன் மார்ட்டின்....No அழுத்தமான கதைகள் !! இப்டிக்கா திரும்பினால் கூரியருக்கென போட்டு அடுக்கியிருந்த டப்பிக்களில் கணிசமாய் வேதாளர் boxes ..ரிப் கிர்பி boxes ...மாண்ட்ரேக் boxes ...! கையில் மிஞ்சியிருந்த டப்பிக்களை வேறேதோ புக்ஸ் அனுப்பிட நம்மாட்கள் பயன்படுத்துகிறார்கள் போலும் என்றெண்ணி - "இந்த டப்பாக்களில் வேற புக்ஸ் அனுப்பாதீங்க ; அதுபாட்டுக்கு உள்ளே இருக்கட்டும்" என்றேன் !! "ஊஹூம்...இவற்றினுள் உள்ள அனைத்துமே SMASHING 70s புக்ஸ் தான் சார் ; இன்னமும் Smashing-க்கு தினமும் புதுசா சந்தா கட்டுறாங்க சார் ; அந்தந்த box லேயே வைச்சு அனுப்புறோம் !!" என்று நம்மவர்கள் பதில் சொன்ன போது எனக்கு மறுக்கா மண்டை blank ஆகிப் போனது !! 

"மூக்கை முன்னூறு தபா சுத்துற கதைகளை எதுக்குடா தேடித்திரியுறே ? எதை பிரியமா வாங்குறாங்களோ - அதைச் சிவனேன்னு போட்டுப்புட்டு போக வேண்டியது தானே ? ரசனையை உசத்துறேன் ; ரசத்துக்கு பொடி போடுறேன்னு எதுக்கு உனக்கு இந்த வேண்டாத வேலை ?" என்று என்முன்னே குந்தியிருந்த மாண்ட்ரேக் சார் கேட்பது போலவே இருந்தது !!  இந்தப் புள்ளிகளை நிறையவாட்டி இந்தக் கடைசிப் பத்தாண்டுகளில் பார்த்தாச்சு தான் & இதே கேள்விகளை ஏகப்பட்டவாட்டி என்னையே கேட்டுக் கொண்டும் விட்டாச்சு தான் ! ஆனால் அவையெல்லாமே இந்த SMASHING '70ஸ்க்கு முன்பான பொழுதுகள் !! இம்முறை இந்த க்ளாஸிக் நாயகர்கள் + high quality books என்ற கூட்டணியிலான சந்தாப் பிரிவு மாற்றி எழுதியிருப்பது எக்கச்சக்கச் சந்தா இலக்கணங்களை :

**4 இதழ்களையும் சேர்த்து வாங்கினால் மட்டுமே சந்தா என்றோம் - வேதாளர் நீங்கலாய் மீதப் பேர் கிட்டங்கிக்குக் குடி வந்திடப்படாதே என்ற பயத்தினில் !! 

**வேதாளருக்குப் பணம் செலுத்தும் போதே - ரிப் கிர்பிக்கும் அட்வான்ஸ் அவசியமென்றோம் முகவர்களிடம் - அதே பய முகாந்திரத்தினில் ! 

ஆனால்...ஆனால்...நீங்கள் தெறிக்க விட்டிருக்கும் வாணவேடிக்கைகளில் எங்கள் மூஞ்சிகளில் முழுக்கக் கரி ! வேதாளருக்குச் சவாலிட்டார் ரிப் கிர்பி ! ரிப்புக்கு tough தருகிறார் மாண்ட்ரேக் !! "காரிகன் எப்போ ??" என்று நம்மவர்களை இப்போதெல்லாம் அதட்டுகிறார்கள் முகவர்கள் !! 

இன்னொரு பக்கமோ Soda ; சர்பத் என்ற இதழ்களை மாங்கு மாங்கென்று பணியாற்றித் தயாரித்து அதே முகவர்களிடம் கொண்டு போனால்,,"சரி...சரி...5 புக் அனுப்பி வையுங்க...அடுத்த மாசமா காசு தர்றேன் !" என்கிறார்கள் ! சத்தியமாய்த் தெரிலீங்கோ இந்த நொடியில் எது சரியென்று !! 

And yes - இந்த செம ஹிட் பட்டியலில் இம்மாதத்து சுஸ்கி & விஸ்கியையுமே சேர்த்துக்கோங்கோ ப்ளீஸ் ! தீபாவளியை தரிசிக்கும் வரைக்கும் இந்த dutch ஜோடி நம் கிட்டங்கிகளில் இருந்தால் நான் ரொம்ப ரொம்ப வியப்பு கொள்வேன் ! And அதே கதை தான் - வேதாளர் + ரிப் + மாண்ட்ரேக் ஆல்பங்களுக்குமே !! நடப்பாண்டின் இறுதிக்கு முன்பாய் இவர்கள் மூவருமே சிவகாசிக்கு விடைதந்திருப்பார்கள் என்பது நிச்சயம் !! இவர்கள் அனைவருக்கும் மத்தியிலான பொதுவான அம்சங்கள்  என்னவென்று ஆராய பெரியதொரு ராக்கெட் விஞ்ஞானமெல்லாம் அவசியமாகிடாது !!

  • *அனைவருமே க்ளாஸிக் நாயக / நாயகியர் !
  • *அனைவருமே பால்யங்களின் நினைவூட்டிகள் !
  • *நேர்கோடே எங்கள் மூச்சு !" என்போர் இவர்கள் சகலரும் !
  • *அட்டகாசத் தயாரிப்புத் தரங்கள் !
  • *சேகரிக்க அழகான இதழ்கள் !
  • *ஹார்ட்கவர்ஸ் !
இதோ - மேஜை மீது குவிந்து கிடக்கும் தொடரும் மாதங்களது tough stories பக்கமாய்ப் பார்வை தன்னிச்சையாய் ஓடுகின்றது !! 2023-ன் இறுதி செய்யப்பட்ட அட்டவணை பக்கமாகவும் ஒரு துரிதப் பார்வை நீள்கிறது !  பார்த்த கையோடு கண்ணாடி முன்னே போய் நின்றால், ரின்டின் கேனுக்குச் சித்தப்பு போலொரு பேமானி மண்டையன் தான் அங்கே தென்படுகிறான் !! அவ்ரெல் டால்டன் கூட அந்த பேமானி மண்டையனை விட விவேகமானவனாக தென்படுகிறான் இந்த நொடியினில் ! என்ன சொல்கிறீர்கள் folks அந்த அனுமானத்தினைப் பற்றி ?

க்ளாசிக்ஸ் காதல் தான் topic எனும் நிலையில் இதோ - நெடுநாள் அறிவிப்பாய் தொடர்ந்து வரும் இன்னொரு classy கிளாசிக் !! சீக்கிரமே உங்களை சந்திக்கத் தயாராகி வருகிறது !!



சீக்கிரமே முன்பதிவு விபரங்களோடு உங்களை சந்திக்கிறேன் ! Adios for now amigos !! See you around ! Have a rocking Sunday !!

Photos from Erode :