நண்பர்களே,
வணக்கம். இந்த டிசம்பர் பிறந்தால் நமது வலைப்பக்கத்துக்கு 11 வயது பூர்த்தியாகிடப் போகிறது ! இந்த 130+ மாதங்களும், மொக்கைகளின் முழு குத்தகையினை நானே எடுத்து வைத்திருப்பதும் சரி, இக்கட காமிக்ஸ் சார்ந்த தகவல்களைத் தவிர்த்து வேறெதற்கும் இடம் இருப்பதில்லை என்பதும் சரி - நாமறிந்தது தான் ! So கலர் கலரான சொக்காய்களுடன் மரங்களைச் சுற்றிச் சுற்றி வந்து டூயட் பாடும் அந்நாட்களது வாலிப / வயோதிக கோலிவுட் ஈரோக்களைப் போல, குறிப்பிட்ட கால இடைவெளிகளில், நாமுமே ஒரே topic-ஐச் சுற்றிடுவது தவிர்க்க இயலா நிகழ்வாகிறது !
பீடிகைகள் போதுமெனில் - நான் சொல்ல வரும் விஷயம் இதுவே :
விடிய விடிய கண்முழிச்சி ; கண்ணில்படும் காமிக்ஸை எல்லாம் அலசி ; அவற்றுள் நம்மை லயிக்கச் செய்யக்கூடும் என்ற நம்பிக்கை தரக்கூடிய படைப்புகளை நம் கரைகளில் ஒதுங்கிடச் செய்ய ஆன அத்தினி குட்டிக்கரணங்களையும் போட்டு ; அப்பாலிக்கா முழிபிதுங்க மொழிபெயர்த்து ; ஒரு வண்டிப் பணிகளுக்குப் பின்னே புது வரவுகளை உங்கள் கைகளில் ஒப்படைத்து விட்டு ; அவற்றின் மீதான விமர்சனங்களுக்கென பதைபதைக்கும் நெஞ்சத்தோடு காத்திருந்து ; ஹிட்டா ? மிஸ்ஸா ? என்ற அலசல்களுடனே கிட்டங்கியில் ஒரு ஓரத்தை ரிசர்வ் செய்வது பரவலாய் நடைமுறையில் உள்ள நமது பாணி !
Thanks to you - நமக்கே இன்னொரு பாணியுமே உண்டு....!
அரைக்கால் டிரவுசர்களுக்கு ஜிப் வைத்துத் தைக்கும் காலங்களுக்கு முன்பாய், பெருசு பெருசான பட்டன்களோடு சுற்றி வந்த நாட்களில் ஹிட் அடித்த க்ளாஸிக் கதைகளைத் தேடிப் பிடிப்பது ; அவற்றை இன்றைய ரசனைகளுக்கேற்ப உயர் தரத்தில் தயாரிப்பது ; இயன்றால் மொழிபெயர்ப்பினில் மாற்றங்களைச் செய்வது, இல்லாங்காட்டி அன்றைக்கு அடித்த ஈயையே தேடிப் பிடித்து செம விசுவாசமாய் அடித்துத் தருவது ; ஒரு சுபயோக சுபதினத்தில் அந்த மறுபதிப்புகளை 'ஜம்'மென்று உங்களிடம் ஒப்படைத்து விட்டு, ஆபீஸ் ரூமில் 'தேமே' என்று குந்தியபடிக்கு நம்மாட்கள் அல்லு தெறிக்க உங்களின் ஆர்டர்களுக்குச் செவி சாய்க்கும் ரகளைகளைப் பராக்குப் பார்ப்பது & ஒரு சன்னமான கால அவகாசத்தில் "is gone ; போயிண்டே ; காலி ; ஸ்டாக் இல்லா !!" என்று கையைத் தட்டுவது தான் நடைமுறை # 2 !!
Yes, you guessed it.....நடைமுறை # 2-க்கு லேட்டஸ்ட்டாய் உயிரூட்ட, ஹாலந்திலிருந்து வந்திறங்கிய "சுஸ்கி & விஸ்கி" ஜோடியானது, இரண்டே வாரங்கள் கூட நமது விசாலமான கிட்டங்கிகளில் தாக்குப்பிடித்திருக்கவில்லை !! SOLD OUT !!!! ரொம்பச் சொற்பமான பிரதிகளே ஸ்டாக்கில் உள்ளன என்பதால் - காத்துள்ள புத்தக விழாக்களில் நமது ஸ்டால் விற்பனைகளுக்கென அவற்றைத் தக்க வைத்துவிட்டு ஷட்டரைப் போடுகிறோம் ! Oh yes - இதன் பிரிண்ட் ரன் குறைச்சலே ; and ஹாலந்திலிருந்து ரசிகர் மன்றங்கள் தூள் கிளப்பியது எதிர்பாராதொரு பூஸ்ட் தான் - but still இரண்டே வாரங்களுக்குள் கேட்டை சாத்துவதென்பது simply phenomenal !! So - "புதுசுடா..ரசனை உசத்துவோம்டா..... ...வெரைட்டிடா....புதுப்புது ஜானர்டா ..கி.நா.டா..." என்று கண்ணாடியில் பார்த்தபடிக்கே எனக்கு நானே யோசனைகள் சொல்லிக் கொள்ளும் பிராந்தன் படலத்து லேட்டஸ்ட் அத்தியாயத்துடன் - "சுஸ்கி & விஸ்கி" எண்ட முகம் முழுக்க கரியை ஜாலியாய் அப்பி !! திட்டமிடல்கள் துவக்க நாட்களின் போது - இந்தக் கதைகள் நமது இன்றைய ரசனைகளுக்கு ஒத்தே போகாதென்ற நினைப்பு என்னுள் ! தயங்கித் தயங்கித் தான் இந்த 2 கதைகளையே planning க்குக் கொண்டு வந்தேன் ! In fact - "பேரிக்காய்ப் போராட்டம்" இதழையும் சேர்த்து ரூ.500 க்கு - அந்த முக்கூட்டணி இதழை வெளியிடுவது தான் ஆரம்பத்திட்டம் ! ஆனால் பயம்...!!! Overkill ஆகிப் போகுமோ ? பட்ஜெட் சார்ந்த விமர்சனங்கள் பெரிதாகிடுமோ ? சொதப்பினால் ரொம்பவே பெரிய சொதப்பலாகிடுமோ ?? என்றெல்லாம் பயங்கள் தலைதூக்க - I settled for 2 albums !! இப்போது யோசித்தால் - அந்தக் கதையில் வரும் வில்சனை விடப் பெரிய மொக்கை பீஸாய் எனக்கு நானே தென்படுகிறேன் !!
ஏற்கனவே SMASHING '70s தனித்தடமானது, அதன் க்ளாஸிக் ஹீரோக்களை விட்டு என் முகரை முழுக்க அப்பி வரும் கரியை அழிக்கவே ஊரில் உள்ள லைப்பாய் சோப்பில் முக்கால்வாசியை வாங்கி வரும் நிலையில், இந்தச் சுட்டி ஜோடி அடித்துள்ள லூட்டியோ வேறொரு லெவல் ! And "இந்த க்ளாஸிக் நாயகர்களையெல்லாம் இனியும் கையாள மாட்டோம் ; only லேட்டஸ்ட் ஈரோ & ஈரோயினிகளுக்கு மட்டுமே நம்மள் கதவைத் திறப்போம் !!" என்று பிடிவாதமாய் இருந்தவன் நான் !!
And கூத்துக்கள் அத்தோடு முடிந்தபாடில்லை !! ஓசூர் ; கோவை ; ஈரோடு என்று உருண்டோடி வரும் நமது காமிக்ஸ் கேரவன் தந்து வரும் ஆர்டர் பட்டியலின் உச்சியினில் இருப்பவர் "லூயி கிராண்டேல்" என்றழைத்தால் - "உள்ளேன் ஐயா" என்று கைதூக்கிடும் இரும்புக்கை மாயாவியார் தான் ! "பாம்புத் தீவு" கிட்டத்தட்ட காலி ; "மர்மத்தீவில் மாயாவி" முடிஞ்சது ; "உறைபனி மர்மம்" கிட்டத்தட்ட வழித்துத் துடைத்தாச்சு !! ஈரோடு முடிந்த பிற்பாடு கரூர் ; அதன்பின்னே maybe மதுரை ; என்று புத்தக விழா circuit தொடர்ந்து செல்லும் நிலையில், "மாயாவி கையிருப்பில் இல்லை" என்றபடிக்கே புத்தக விழாக்களுக்குச் செல்வதென்பது, லங்கோடின்றி வீதிக்கு இறங்கி வருவது போலாகி விடும் போலும் !!
ஒண்ணுமே புரியல உலகத்திலே...என்னமோ நடக்குது...மர்மமா இருக்குது...!
என்று உள்ளுக்குள் பாடிக் கொண்டே இன்றைக்கு ரேக் # 3-ஐ மாட்ட வந்த பணியாட்களைப் பார்வையிட மாடிக்குப் போனால் - ஷெல்புகளில் திமிறிக் கொண்டுள்ளனர், நமது லேட்டஸ்ட் காளைகளும், கன்னியரும் !!
- லேடி S வேணுமா ? லம்ப்பா இருக்கு !!
- ஜூலியா வேணுமா ? ஜாலியா அம்மணி குந்தி இருக்கு !
- மேஜிக் விண்ட் வேணுமா ? மல்லாக்க படுத்திருக்கும் மனுஷனை தட்டி எழுப்பினால் போச்சு !
- மார்ட்டின் வேணுமா ? கணிசமா இருக்கு !
- ஷெல்டன் வேணுமா ? ஷெல்ப் நிறைய இருக்கு !
- கிராபிக் நாவல்ஸ் வேணுமா ? கிறங்கடிக்கும் எண்ணிக்கையில் இருக்கு !
- தோர்கல் வேணுமா ? நோகாமல் தர கட்டுக்கட்டாய் இருக்கு !
- SODA வேணுமா ? சர்பத்தோடு தாறோம் - குடிச்சிட்டே வாங்கிக்கோங்க !!
- SMURFS வேணுமா...சூப்பரா இருக்கு !
- க்ளிப்டன் வேணுமா ? கச்சிதமா இருக்கு ; கணிசமா இருக்கு !
- "வேதாளர் இருக்காரா ?" என்று கேட்டால் - "என்றா தப்பிதமா பேசுறே ?" என்று முறைக்கிறார்கள் நம்மாட்கள் !
- "ரிப் கிர்பி ஜார் இருக்காரா ?" என்று கேட்டுப் போட்டால் - "ஓதபடுவே...ஓடிப்பிடு ..." என்று சொல்லாமல் சொல்கிறார்கள் !
- "இந்த மேஜிக்லாம் பண்ணுவாரே அவராச்சும் ?" என்று கேட்டால் - "அப்டி ஓரமா போயிடு - வேலை நேரமும் அதுவுமா உசிரை வாங்கிக்கினு !!" என்ற மைண்ட்வாய்ஸ் கேட்கிறது !
1st
ReplyDeleteHi viji neengathan today First time First.!!! 😍😍
Deleteவாழ்த்துகள் சகோ💐
Delete🙏🏼🙏🏼🙏🏼
DeleteWarm welcome sister
Delete2nd
ReplyDeleteMe 2
ReplyDeleteMe 3
ReplyDelete4th
ReplyDeleteWaiting sir
ReplyDeleteWow My lucky No ..Today
DeleteHi..
ReplyDeleteஹைய்யா..மொத வாட்டி பத்துக்குள்ள...
ReplyDelete10க்குள்ள நம்பர் ஒண்ணு சொல்லு..
ReplyDeleteவணக்கம் 🙏 ஐயா
ReplyDeleteOld is Gold என்பது மீண்டும் நிரூபணமாயிருக்கிறது!!
ReplyDeleteவணக்கம் நண்பர்களே!
ReplyDeleteEdi Sir..
ReplyDeleteதிருச்சியில் செப்டம்பர் 16 முதல் புத்தக விழா ஆரம்பம்..😃
நம்ப கேரவனை மதுரைக்கு முன்பு அங்கே விடுங்கள்.👍
உள்ளேன் ஐயா
ReplyDeleteசுஸ்கி விஸ்கி சக்ஸஸ் மிகுந்த மகிழ்ச்சி சார்.
ReplyDeleteதயாரிப்பு தரம், வண்ணம், அட்டை எல்லாம் பிரமாதம்!!
ஆனாலும் விலை கொஞ்சம் அதிகம் என்ற எண்ணம் எழாமல் இல்லை சார்
சில காமிக்ஸ் குருப்புகளில் மினி லயனில் வந்த பழைய ராஜா ராணி ஜாக்கி
Deleteபயங்கர பயணம் இரண்டும் EACH 1500 விலை போகிறது நண்பரே அதுவும் பழைய காப்பி இரண்டு கலரில் மட்டுமே வந்தது அதனை பார்க்கும் போது புதிய சுஸ்கி விஸ்கி பல மடங்கு பெட்டராக தெரிகிறது
அருமையான ஒப்பீடு செந்தில் சத்யா!!
Deleteadeingappa, 1500 ah?
Deleteவணக்கம்
ReplyDeleteSuske Wiske rocks... Superb news ❤️ sir.
ReplyDeletePlease increase cartoon stories in next year.
Ini s/w regular nnu sollama sollirukar edi
Deleteசு/வி கம்ப்ளீட் கலக்சன் வெளியிட போறீங்களா டியர் எடி .. அதுக்கான சமிஞ்ஞை தானா இந்த போட்டோ ???
ReplyDeleteமினி பஸ் போல....டேங்கர் போல....கண்டெய்னர் போல மிரட்டுது
Deleteவணக்கம் folks
ReplyDelete50 ரூபாயில், வராத மாயாவி reprint போட்டு விடுங்க சார்
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteவணக்கம் நண்பர்களே 🙏🙏
ReplyDeleteஒவ்வொரு வரியுமே தெறியா இருக்கு எடிட்டர் சார் 😇😃😃😇
ReplyDeleteசிரிப்பு அலையடிக்குது 😁😁😁😁
டியர் எடி இந்த பதிவில் இன்று / கடந்த நாட்களில் ஈரோடு புக்பேரில் பர்சேஸ் பண்ணிண குட்டீஸ்களின் போட்டோக்களை இணைத்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன். 🙏🙏
ReplyDeleteசுஸ்கி விஸ்கி வெற்றிக்கு அதிகம் ஆசிரியரை விட பால்யத்து
ReplyDeleteநாஸ்டால்ஜியா மறவா வாசகர்களே காரணம் என்று தான் தோன்றுகிறது... இதே போல வரும் நாட்களில் எல்லா ரீப்ரிண்ட்களும் வெற்றி வாகை சூடிட இதற்கு வாசகர் விருப்பம் ஓட்டெடுங்கள் சார் சீக்கிரமே.
இதோ புதிதாய் படித்த செனாவின் கமண்டுகள் நண்பரே....நிச்சயம் தொடரும் இவ்வெற்றி என நம்புவோமாக
Deleteரீப்பீட்டு... ரீப்ரிண்ட் ரீப்பீட்டு...
ReplyDeleteரீப்ரின்ட்... சேல்ஸ்... ரிப்பீட்
Deleteஉள்ளேன் ஐயா..!!
ReplyDelete33rf
ReplyDelete33rd
Deleteஅன்பான நட்புறவுகளுக்கு இனிய இரவு வணக்கம்.
ReplyDeleteஉள்ளேன் ஐயா.
ReplyDeleteஅழகான அட்டகாசமான அருமையான பதிவு. கண்களில் ஆனந்தக் கண்ணீர் வரவைத்த பதிவு. மனம் முழுவதும் மகிழ்ச்சியால் நிறைந்திருக்கிறது. சுஸ்கி விஸ்கியின் வெற்றி எதிர்பார்த்தைக் காட்டிலும் சாதித்துவிட்டது. தரமான கதைகள் சொக்கவைக்கும் அழகினில் வந்தன.S70 வெற்றியும் நான் எதிர்பார்த்ததே.பெரிய வெற்றிகளைப் பெற வைத்த காமிக்ஸ் காதலர்களுக்கு என் பணிவான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
ReplyDelete((((#ராஜா_ராணி_ஜாக்கி! #மாண்ட்ரேக்_ஸ்பெஷல் - 1
ReplyDeleteஇம்முறை பார்சல் நல்ல கனம். முதலில் மாண்ட்ரேக் தான் வாசிக்க இருந்தேன்.. ஆனால் மறுபதிப்பாக வந்துள்ள சுஸ்கி & விஸ்கி முந்திக் கொண்டார்கள்.
மினிலயனில் வந்த இந்தப் புத்தகம் 90 களிலேயே கிடைப்பது அரிது. இந்நாளில் ஆயிரங்களில் செல்லக் கூடிய மதிப்பு மிகுந்த புத்தகங்களில் இந்த ராஜா ராணி ஜாக்கி மற்றும் பயங்கரப் பயணமும் ஒன்று என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு பிறகு இந்த பிள்ளைகளை மீண்டும் கண்டதில் மனதுக்கு மிகவும் மகிழ்வாக உள்ளது. அட்டைப்படம், பிரிண்டிங், பைண்டிங் என அனைத்தும் அருமை. இம்மாதம் வந்த இதழ்கள் அனைத்தின் அட்டைப்படமும் அருமை. (விரைவில் விற்றுத் தீரப்போகும் இதழாக இந்த ராஜா ராணி ஜாக்கி இருப்பின் ஆச்சரியமில்லை.)
அனைவருக்கும் காமிக்ஸ் புத்தகங்களை அன்பளித்து காமிக்ஸ் வாசிப்பை மென்மேலும் ஊக்குவிக்கும் நமது காமிக்ஸ் எனும் கனவுலகம் குழுவின் அட்மின் நண்பர்களுக்கு என் அன்பும் நன்றிகளும். 🙏🙏🙏
காமிக்ஸ் வாசிப்பை என்றும் நேசிப்போம்.))))
என் கணிப்பு தவறவில்லை. இரண்டே வாரத்தில் ஸ்டாக் அவுட் என எடிட்டர் அறிவிக்கிறார்.
மேலே உள்ளது ஆகஸ்ட் 1 ம் தேதி ராஜா ராணி ஜாக்கி வாசித்து முடித்த கையோடு முகநூலில் இட்டப்பதிவு. :)
நண்பருக்கு ஒரு கிலோ சர்க்கரை பார்சல் !
Deleteஅருமையான கணிப்பு! வாழ்த்துகள் நண்பரே!
Deleteஅப்ப இது வரை ரீப்ரிண்ட் காணாத இரும்புக்கை மாயாவியை லிஸ்ட் போட்டு அனுப்பலாமா? பறக்கும் பிசாசை கலர்ல தெறிக்க விடலாமா?
ReplyDeleteஅப்பறம் சுஸ்கி விஸ்கில அடுத்த ரெண்டு புத்தக ஆல்பத்துக்கு ரெடியாகலாமா?
சினிஸ்டர் 7, உயிரைத் தேடி எல்லாம் போட்டு வைச்சாத்தானே சென்னை புத்தக விழால மஜாவா இருக்கும். ஜனவரிக்கு இன்னும் 4 மாசந்தானே இருக்கு.
எல்லாருக்கும் விடியுது. எங்க யங் டைகருக்கு மட்டும் ஒரு வழியும் பொறக்க மாட்டேங்குது 😩😩😩
யெஸ் எல்லா வரிகளுக்கும்+1000. குறிப்பாக யங் டைகர்கு+10000
Deleteபறக்கும் பிசாசு இரு வண்ணத்ல அட்டை முதல் அட்டை வரை அப்படியே..
Deleteசுஸ்கி விஸ்கி மூனு கதை....
சினிஸ்டர் ஒசூருக்கு...
உயிரைக் தேடி ஈரோட்டு இறுதி நாள் விழாவுக்கு...கோவைக்கு சுஸ்கி போல
டைகர் இடத்துலே இப்போதைக்கு எல்லோரும் விரும்பும் பிற கதைகள் வரட்டும்...அப்புறமா டைகர் வந்துதான் தீரணும்
Delete@ M.P : //
Deleteஎல்லாருக்கும் விடியுது. எங்க யங் டைகருக்கு மட்டும் ஒரு வழியும் பொறக்க மாட்டேங்குது//
ஜிம்மி கூடப் போய் எங்கயாச்சும் தொண்டையை நனைச்சுப்புட்டு மட்டையாகிக் கிடப்பார் சார் - அதனால் கொஞ்சம் லேட்டாய்த் தானே விடியும் ?
///ஜிம்மி கூடப் போய் எங்கயாச்சும் தொண்டையை நனைச்சுப்புட்டு மட்டையாகிக் கிடப்பார் சார் - அதனால் கொஞ்சம் லேட்டாய்த் தானே விடியும் ??//
Deleteஹா ஹா ஹா! :))))))
///ஜிம்மி கூடப் போய் எங்கயாச்சும் தொண்டையை நனைச்சுப்புட்டு மட்டையாகிக் கிடப்பார் சார் - அதனால் கொஞ்சம் லேட்டாய்த் தானே விடியும் ??//
Delete😤😂
சார் சுஸ்கி விஸ்கியை பல்க்கா வாங்க புத்தக விழாக்களில் வருவாங்க. கொஞ்சம் அவங்ககிட்ட இருந்து மத்த வாசகர்களுக்காக எடுத்து வைங்க. அப்படித்தான் ஸ்டாக் அவுட் ஆகப் போகுதுன்னு தெரிஞ்சு விரட்டும் விதியை வாங்கிப் பதுக்கினாங்க. இங்கே மொத்தமா தீந்துடுச்சுன்னு தெரிஞ்ச உடனே கொள்ளை விலைக்கு இறக்கிடுவாங்க. சராசரி வாசகர்களுக்காக கொஞ்சம் நீங்களே ஸ்டாக்கை பதுக்கிடுங்க சார்.
ReplyDeleteநண்பரே அப்படி எத்தனை புத்தகங்க இனி வித்துட முடியும்........முடிஞ்சளவு வாசகர்களுக்கு ரீச் ஆகி இருக்காதா....இப்ப கடைல காசில்லன்னு அப்புறம் வாங்கலாம்னு நினைக்கும் நண்பர்கள் இருப்பார்களா....அப்படி பட்டோர் அதிக விலை தந்து வாங்குவார்களா....அந்த விலை இந்த விலை எல்லாம் வதந்திகள்....இவர்களா உருவாக்குவது....தேவைக்கு மேல் வச்சி ஆசிரியர் குடோன் வேணா நிரப்ப உதவலாம்....இப்ப நம்ம நண்பர்கள் கூட இரண்டுன்னு வாங்கியிருக்கலாம்....அளவான எண்ணிக்கையில் அதிக கதைகள்.....தேவைன்னா மறு மறுபதிப்புகள்....அதுவே புத்தக உலகின் தாரக மந்திரம்.....நிச்சயமா நம் சிறுவர்கள் வாங்குவது அதிகரிச்சா மறுபதிப்பு காணட்டும் இக்கதைகள்......
DeleteThis comment has been removed by the author.
Deleteஸ்டீல்...
Deleteநீங்க நீங்க தானா ? நான் நான் தானா ? உங்க பின்னூட்டம், பின்னூட்டம் தானா ?
பின்றீங்களே !!
@ M.P : இயன்றதைச் செய்வோம் சார் ; ஆன்லைன் லிஸ்டிங் கூட காலி பண்ணியாச்சு !!
Deleteசெந்தூரானின் ஊட்டமே எல்லாம் சார்
Deleteஸ்டீல். நீங்க அப்படியே வெள்ளந்தியாவே இருக்கீங்க. உங்களுக்கு நிலவரம் தெர்ல. நிலவரத்தை சொல்லி உங்களை ஏன் மாத்தனும் அப்படியே இருங்க. நல்ல விசயந்தான். நான் என்ன சொல்றேங்கறது எடிட்டருக்கு தெளிவாப் புரியும்.
Deleteசாரி. ஆசிரியர் மன்னிக்கவும்.
ReplyDeleteஇப்படிஒரு காட்சி என் கனவிலே. ஒரு படத்தின்டீசர் வெளியிடப்படுகிறது. ('' லயன் காமிக்ஸாரின் பெருமைமிகும் அறிமுகம்மாடஸ்டிபிளைசி முதன் முறையாக இந்தியாவில் திரைப்படமாக'தமிழில். '' லயன் எடிட்டரின் வேண்டுகோளுக்காக தமிழ் பாரம்பரியப்படிமாடஸ்டி பிளைசிக்கு படம் முழுவதும்சேலை காஸ்ட்யூம்) . ஒரு போஸ்ட்டரில்பிளைசி ஸ்லீவ்லெஸ் சர்ட்டில் சற்று மெல்லிய உடையில் காணப்பட
கையில் கரிச்சட்டியுடன் பாய்ந்து வருகிறார்எடிட்டர். . அடுத்தவினாடிமாடஸ்டி கருப்பு சர்ட்டுடன் காணப்படுகிறார் போஸ்டர்களில். வந்த எடிட்டர்அப்பாடி கலாச்சாரத்தைகாப்பாற்றி விட்டோம் நம்மளவிற்குஎன்றபடி மனதிற்குள் நினைத்தபடி நடையைக் கட்டுகிறார். படத்தின் சிறப்பம்சம் 16வயதினிலே டாக்டர் படத்தின் ஆரம்பத்தில் ஒரு கௌரவத் தோற்றத்தில். கரூர் ராஜ சேகரன்
சுஸகி விஸ்கியின் பேரிக்காய் போராட்டம் அல்லதுபுது கதை ஒன்றுஉடனடியாக வெளியிட வேண்டும். சார். ப்ளீஸ் இந்தவேகம் குறைவதற்குள் எங்கள் செல்லக்குட்டிகளை சீக்கிரமாகக் களமிறக்குங்கள். கரூர் ராஜ சேகரன்
ReplyDelete+1
Deleteநல்ல கோரிக்கை.
Deleteநூடுல்ஸ் போட சுலபம் சார் ; விருந்து சமைக்கவோ நேரம் தேவை !
Delete44 வது
ReplyDeleteஹைய்யா புதிய பதிவு...
ReplyDeleteYes sir! Many of our readers dont appear here (blog) otherwise it would have been easier to find what is wanted by the majority.
ReplyDeleteகரடியாய்க் கத்துவதில் நான் குறைகளே வைப்பதில்லை சார் ! இங்கே blog மாத்திரமன்றி புக்கிலுமே மாய்ஞ்சு மாய்ஞ்சு எழுதி வருகிறேன் !
DeleteIn fact சில வருடங்களுக்கு முன்னே ஓராண்டின் அத்தனை இதழ்களையும் கொண்டதொரு லிஸ்டை 2 வண்ணங்களில் அச்சிட்டு, அவற்றினில் அந்தந்த இதழ்களுக்கான மார்க் போடக் கோரியிருந்தேன் ! அவ்விதம் மார்க் போடப்பட்ட படிவங்களை நமக்குத் திரும்ப அனுப்பிடும் பொருட்டு, சுயவிலாசமிட்ட கவரில் தபால்தலைகளை ஓட்டியேவும் அனுப்பியிருந்தோம் ! So படிவத்தை நிறைத்தால் போதும் ; தபால்பெட்டிக்குள் போடும் வேலை மாத்திரமே மேற்கொண்டு இருந்திருக்கும் ; ஒவ்வொரு புக் சார்ந்த உங்களின் அபிப்பிபிராயங்களும் நம்மை எட்டி இருக்கும் !
ஆனால்...ஆனால்...நம்மைத் தேடி வந்த படிவங்கள் எட்டே எட்டு சார் !!
சூப்பர் சார்...
ReplyDeleteசுஸ்கி விஸ்கி பண்டல் யப்பா...,..
சுதந்திர தினத்துக்காக வெயிட்டிங்.
சுஸ்கி 500 விலைல புதுசு ரெண்டும்....பேரிக்காய் போராட்டமும் இணைந்து வரட்டுமே சார்
ReplyDeleteதோழர்கள் போன்ற பெரிய கதைகளை பிரிண்ட் ரன் குறைச்சலாய் விடுதலே நலம்.....நம்மை போன்ற காமிக்வெறியர்களை தவிர பிறர் வாங்குவது அரிது....மொத்த பண்டல் விலையை கணக்கிடும் போது....புதியவர்கள் வருவார்களா இத்தொகைக்கு
ReplyDeleteதோர்கள்
Delete// சுஸ்கி & விஸ்கி" ஜோடியானது, இரண்டே வாரங்கள் கூட நமது விசாலமான கிட்டங்கிகளில் தாக்குப்பிடித்திருக்கவில்லை !! SOLD OUT ! //
ReplyDeleteசிறப்பான தகவல்...
அப்ப அடுத்த சுஸ்கி,விஸ்கி சாகஸத்தை சீக்கிரமே அறிவிப்பதில் தடை ஏதுமில்லை...
// காத்துள்ள புத்தக விழாக்களில் நமது ஸ்டால் விற்பனைகளுக்கென அவற்றைத் தக்க வைத்துவிட்டு ஷட்டரைப் போடுகிறோம் ! //
ReplyDeleteநல்ல முடிவுதான்...
சிறப்பான வரவேற்பு இருப்பதால் அடுத்த சு & வி யை கொஞ்சம் பல்க்கா அடிக்கலாமே சார்...
// பேரிக்காய்ப் போராட்டம்" இதழையும் சேர்த்து ரூ.500 க்கு - அந்த முக்கூட்டணி இதழை வெளியிடுவது தான் ஆரம்பத்திட்டம் ! //
ReplyDeleteபோட்டிருந்தால் இன்னும் சிறப்பான கூடுதல் வரவேற்பை பெற்றிருக்கும் சார்...
திரும்பிப் பார்க்கையில் நாமெல்லாம் ஜீனியஸ் தான் சார் ; ஆனால் திட்டமிடல்கள் அரங்கேறிடும் அந்த ஆரம்ப வேளைகளில், எல்லாமே ஒரு ஹேஷ்யமான கணிப்பினில் ஓடிட வேண்டிடுவதே யதார்த்தம் ! எடுக்கவுள்ள தீர்மானங்களின் மைனஸ்கள் மட்டுமே அந்த நொடியினில் பிரதானமாய்த் தென்படும் !
Delete"ரிஸ்க் ரிஷிகேஷனை" விட "முன்ஜாக்கிரதை முன்சாமி" தேவலாம் என்ற பள்ளியில் தொழில்பாடம் கற்று வந்த தலைமுறையாச்சே சார் நான் !!
புரியுது சார்,ஒரு நம்பிக்கை தான் ஹி,ஹி...
Delete// மாயாவி கையிருப்பில் இல்லை" என்றபடிக்கே புத்தக விழாக்களுக்குச் செல்வதென்பது, லங்கோடின்றி வீதிக்கு இறங்கி வருவது போலாகி விடும் போலும் !! //
ReplyDeleteஅப்படின்னா புதிய டைட்டில்கள்,இதுவரை வெளியிடா மறுபதிப்புகள் ஏதேனும் இருந்தால் உடனடியாக களமிறக்கலாமே,இனிவரும் பு.வி க்கு தேவைப்படுமே...
"யார் அந்த மாயாவி" ரெடியாகி வருகிறார் சார் !
Deleteசென்னைக்குள்ளாக இன்னும் கொஞ்சம் ரெடி செய்திடலாம் !
இதுவரை வராத பதிப்பா சார் ?!
DeleteGood question Arivarasu.
Delete20 வருடங்களுக்கு முன்பாக, 2000-ம் ஆண்டு வாக்கில் மறுபதிப்பாக வந்த கதை இது. முத்து காமிக்ஸின் 100-வது வெளியீடாக வண்ணத்தில் வந்து அசத்திய கதையும் இதுவே!
Deleteஇதே போல 'ஒற்றைக்கண் மர்மம்' 'கண்ணீர் தீவில் மாயாவி', 'மந்திர வித்தை', 'மாயாவிக்கோர் மாயாவி', 'சதி வலையில் மாயாவி', 'மாயாவிக்கொரு சவால்', 'ஆழ்கடலில் மாயாவி', 'பறக்கும் பிசாசு', 'கொலைகாரக் குள்ள நரி', 'விண்வெளி ஒற்றர்கள்', 'விண்வெளி விபத்து', ஆகியவை யும் வந்தால் நன்றாக இருக்கும்.
தகவலுக்கு நன்றி...
Delete"யார் அந்த மாயாவி" தயவு செய்து மறுபதிப்பில் வராத கிளாசிக் கதைகளை மட்டும் கொடுங்கள் சார்.
Deleteசுஸ்கி & விஸ்கி - யை பொறுத்தமட்டில் பழமை என்ற வாதம்
ReplyDeleteபொருந்தாது என நினைக்கிறேன்.
சுவியை இப்போதுதான் முதலில் படிக்கிறேன்.முதல் வாசிப்பிலேயே மனம் கவர்ந்தார்கள்.
குழந்தைகள் பெரியவர்கள் துணையுடன் சாகசம் புரிவது நமது
நடப்பிலேயே இல்லாதது.
சுவி காலப் பரிமாணத்தை வென்று விட்ட படைப்பாகவே தோன்றுகிறது.
தொடர்ந்து வெற்றிநடை போடவல்ல படைப்பு எனப்படுகிறது.
தானாகவே படிக்ககூடிய பத்து - பன்னிரண்டு முதல் 15 வயது வரை உள்ள ஆண்- பெண் குழந்தைகள்
விரும்பி படிக்க வாய்ப்புகள் அதிகம்.
Agreed totally on this. There is a freshness w.r.t S-W !
Deleteஹாலந்தில் சு + வி. கிட்டத்தட்ட டின்டின் ரேஞ்சுக்கு கொண்டாடப்படும் ஒரு படைப்பு சார் ! மொழியே புரியாவிடினும் வெறும் சேகரிப்புக்கென ஏர் மெயில் காசுக்கும் தண்டம் அழுது வாங்கிட சு + வி ஆர்வலர்கள் நூற்றுக்கணக்கில் இருப்பதைக் கண்டு எனக்கே மிரட்சி !
DeleteMay 24 2021 post -Just now I have gone through sir. Our Classic heroes' actions speak louder than words
ReplyDeleteI mean we are all happy about the sales sir. Had it gone otherwise, the loss d have been yours. No one could have predicted this success. Muthu & Lion bw reprints( Rs.50) are just awesome ! Even holding them pleases me. Those who have bought them are really lucky !
ReplyDeleteநிஜம் தான் சார் ; இது தெறிக்கும் வெற்றியாக இருந்திருக்கக்கூடும் ; அல்லது செமத்தியான சொதப்பலாக இருந்திருக்கக்கூடும் ! நண்பர்களின் க்ளாசிக்ஸ் காதல் கரை சேர்த்து விட்டது !
Deleteஇந்த ஈரோடு புக் ஷோ நிறைய காமிக்ஸ் வாசகர்களை கவர்ந்துள்ளது சார்.
ReplyDeleteஆர்வமாக ஒவ்வொரு வாசகரும் தனக்கு பிடித்த நாயகர்களை தேடும் போது,அவர்களை பார்க்க மனதுக்கு நிறைவாக இருந்தது.
அதிலும் குறிப்பாக,
நண்பர் ஈரோடு மாரிமுத்து விஷால் அவர்கள் ஒவ்வொரு வாசகரிடமும் ,எது வேண்டும் என கேட்டு மிக அன்பான உபசரிக்கிறார்.
அவர் கேட்ட விதத்திலேயே, பலரும் தங்கள் தேடிவந்த காமிக்ஸ் கிடைக்கலை என்றால்,
மாரிமுத்து பரிந்துரைக்கும் காமிக்ஸ் வாங்கி செல்கின்றனர். முடிந்தவரை வந்தவர்களை வெறும் கையுடன் அனுப்புவதில்லை என்பதில் கவனமாக இருக்கிறார். மேலும் எந்தெந்த புக் இல்லை என்பதையும், தேவை எது எது என்பதையும்
தினமும் லிஸ்ட் எடுத்து ஆபிஸூக்கு தகவல் தந்து, வரும் புத்தகங்களையும் கவனமாக பார்வைக்கு வைக்கிறார். உடனுக்குடன் அவர் தரும் தகவல்கள் எங்களுக்கு உற்சாகமாக இருந்தது.
அருமையான பணி. வாழ்த்துக்கள் மாரிமுத்து நண்பரே ❤️. உங்களால் காமிக்ஸ் வாசகர்கள் அனைவருக்கும் உற்சாகம்.
இனிவரும் புத்தக திருவிழாக்களில்
நம் புக் ஸ்டாலில் நண்பரையும் நியமிக்கலாம்.
சுஸ்கி விஸ்கி அனைவருக்கும் பிடித்த ஒன்று+ இதுவரை மறுபதிப்பு செய்யாத கதை இது. சூப்பர் ஹிட் என்பது ஏற்கனவே எழுதப்பட்ட விடயம் சார்.
மொழிபெயர்ப்பு மிக நேர்த்தியாக இருந்தது.
உண்மையில் பழைய புக்கில் உள்ள சொற்களுக்கு, இந்த காலத்துக்கு தகுந்த முறையில் வசனங்கள் அருமையாக திருத்தப்பட்டுள்ளன. நண்பர் கண்ணனுக்கு வாழ்த்துக்கள்.
கண்டிப்பாக பழைய மொழிபெயர்ப்பு இருந்திருந்தால், கொஞ்சம் குழந்தைத்தனமாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
"பேரிக்காய் போராட்டம்" கதையை இதனுடன் விட்டிருந்தால் மெகா ஹிட் அடித்திருக்கும். 500 என்பது சரியான விலைதான் சார்.
மொழிபெயர்ப்பு செய்யும் போது,
அன்று அதனுடன் வந்த விளம்பரங்கள்+உங்களின் ஹாட்லைன்+ வாசகர் கடிதங்கள், இவைகளை இணைத்தால் மிக நன்றாக இருக்கும்.
இரும்புக் கை மாயாவியின் மறு பதிப்பாக வந்தவைகளையே திரும்ப மறுபதிப்பாக போடுவதை விட,
மறுபதிப்பாக வராத கதைகளை போடுங்கள் சார்.
"யார் அந்த மாயாவி,
மந்திர வித்தை,
ஒற்றைக்கண் மர்மம்,
சைத்தான் சிறுவர்கள்,
தவளை மனிதர்கள்,
கண்ணீர் தீவில் மாயாவி,
மாயாவிக்கோர் மாயாவி" இது போல்.
நன்றி.
நிஜமே சார் ; காமிக்ஸ் அறிந்த நண்பர்கள் ஸ்டாலில் இருக்கும் போது விற்பனையில் ஒரு உற்சாகம் தொற்றிக் கொள்வது கண்கூடு ! சென்னையில் ; கோவையில் ; திருப்பூரில் என இதனை ரசித்து வந்துள்ளோம் ! நம்மாட்களுக்கு இந்த பொம்ம பொஸ்தவங்கள், வெள்ளரிக்காய்கள் மாதிரித் தான் - ஒரு கூறு இவ்வளவு என்பதைத் தாண்டி அவர்களது கவனங்கள் வேறெங்கும் இருந்திட வாய்ப்புகளில்லை !! நான் அல்லாது - நமது டீமில் காமிக்ஸ் படிக்கும் நபர் ஒரேயொருவரே என்றால் நம்ப முடிகிறதா சார் ?
DeleteSo நண்பர் மாரிமுத்து போன்றோரின் ஒத்தாசைகள் worth their weight in gold !!
பதிவை படிக்க படிக்க மகிழ்ச்சி ,ஆனந்தம் ,புன்சிரிப்பு என ஏதோதோ நிகழ்வுகள் சார்...:-)
ReplyDeleteஅப்ப வராமல் போய்விட்டதே என்று ஏங்கிய பேரிக்காய் போராட்டம் கண்டிப்பாக வெளிவரும் என்ற நம்பிக்கை வந்து விட்டது சார்..
ReplyDeleteமுன்கூட்டிய நன்றிகள்..:-)
தாரமங்கலத்தில் பழக்கடைகள் இப்புடியா அழிச்சாட்டியம் பண்ணுகின்றன - தலீவருக்குப் புடிச்ச பேரிக்காயைக் கூடக் கொண்டு வராமல் ? போராட்டத்தைக் கையில் எடுத்துப்புடலாம் !!
Deleteபெங்களூரில் இருந்து தலைவருக்கு பேரிக்காய் அனுப்பி விடலாம் சார். Imported from newzealand:-)
Deleteசீக்கிரமா அனுப்பிடுங்க சார் ; அவர்பாட்டுக்கு அவசரத்தில் வேப்பிலையையும் மறந்துப்புட்டு போராட்டத்தில் குதிச்சுப்புட்டார் என்றால் தாரை தாங்காது !
DeleteSir,
ReplyDeleteAs shared a few months ago - the pandemic stress - even though reduced now - keeps us to light reading mixed with a heavy dose of nostalgia, given the hardships we undergo to resume normalcy. That is why in the next 3 years you will still see a shoot up of sales with respect to classics. Probably 2025 Erode would be the time we will return to some semblance of experimentation that prevailed in 2014-15 timeline (hoping we do not hit another disaster by then).
Just taking it 1 book.....1 month at a time for now sir !
Deleteபழசோ - புதுசோ....விற்றால் சரி தான் !! ஏனெனில் விலைவாசிகள் எகிறும் பாங்கு இம்மி கூட மட்டுப்படக் காணோம் ; அதிலும் ஆண்டின் இறுதியில் காலெண்டர் சீசனுக்காக பேப்பர் மில்கள் ஆர்வத்தோடு வெயிட்டிங் .....சீசன் துவங்கிடும் நாளன்று டன்னுக்கு இத்தனை ஆயிரம் ஜாஸ்தி என்ற குண்டு வீசக் காத்திருப்பதாய் விநியோகிஸ்தர்கள் புளியைக் கரைத்து வருகின்றனர் !! இந்த அழகில் கிட்டங்கியினை இதற்கு மேல் ரொப்பும் எந்தவொரு முயற்சியுமே நம்மைப் போட்டுத் தள்ளி விடும் !
Sir - given the trends you might want to reprint Bottle Bootham and Yaar andha Mini Spider instead of Sinister 7 now. Sinister 7 can be targeted for some pongal or new year release later.
ReplyDeleteஉலகப்போரில் ஆர்ச்சியையும் பாட்டில் பூதம் கூட ஜோடி போடுலாம்ங்க ராக் ஜி.....
Deleteஎதை எதுக்கூட வேணா சேர்க்கலாம்.... ஒரே கண்டிசனு 30, 40வருடம் முன்பு வந்திருக்கணும்....
ஹை பாட்டில் பூதமா,வந்தா நல்லாதான் இருக்கும்...
Deleteஇரண்டுமே ரசிக்கச் செய்யும் கதைகள்.
Deleteஉலகப்போரில் ஆர்ச்சி மிகவும் ரசித்து நண்பர்களுடன் பல நாட்கள் பேசிய கதையிது.
//எதை எதுக்கூட வேணா சேர்க்கலாம்.... ஒரே கண்டிசனு 30, 40வருடம் முன்பு வந்திருக்கணும்..//
Deleteஇது ரிவர்ஸ் கியர் கூட இல்லீங்கோ ; வண்டியையே tow பண்ணி பின்னாடி இஸ்துகினு போறா மாரி கீது !!
வணக்கம் எடி சார்.
ReplyDelete'இரும்புக்கை மாயாவி'(முத்து காமிக்ஸ் முதல் இதழ்) ஏற்கனவே அறிவிப்புடன் நின்று போன இதழை இந்தவாரத்திலேயே வெளியிடலாம். இன்னும் மாயாவி கதைகள் பாக்கி இருக்கின்றன. கூடவே லாரன்ஸ் டேவிட் கதைகளும்!!
வாயு வேக வாசு, படகு வீடு மர்மம், தபால்தலை மர்மம் இவையெல்லாம் சிறுவர்கள் பெரியவர்கள் துணையுடன் சாகசம் புரிந்த கதைகள்தான். நகைச்சுவைதான் மிஸ்ஸிங்!!!
"தபால்தலை மர்மம்" நாலைஞ்சு வருஷங்களுக்கு முன்னே மறுபதிப்பு செய்ததாய் ஞாபகம் நண்பரே !
Deleteஆமாம் சார். இந்த நான்கு கதைகளும் வந்து விட்டது. இதில் வந்த பணத்தின் ஒரு பகுதி தொண்டு நிறுவனத்திற்கு நீங்கள் கொடுத்த ஞாபகம் உள்ளது.
Delete// எனது கேபினுக்குள் போனால் - மேஜை மீது 2023 அட்டவணை காற்றில் சல சலத்துக் கொண்டுள்ளது !! //
ReplyDelete2023 அட்டவணை சார்ந்த கேள்விகள் எதுவும் இல்லிங்களா ?!
கி.நா உண்டா ?!
டெக்ஸ் 75 ஸ்பெஷல் எப்போது ?!
2023 இல் டெக்ஸ் 75 ஐ கொண்டாட ஸ்பெஷல் இதழ்கள் எத்தனை ?!
எது உள்ளே,எது வெளியே ?!
போகிற போக்கிலே கோட்டைப் பூராவும் அழிச்சுப்புட்டு புதுசா பரோட்டாவுக்கு ஆர்டர் தரணும் போலும் சார் !
Deleteஅதே அதே அதைச் சொல்லத் தான் இருந்தேன்.
Deleteபரோட்டா வெர்ஷன் "2.0" விற்காக வெயிட்டிங் சார்,பார்த்து பண்ணுங்க,2023 டெக்ஸ் 75 ற்கு நியாயம் செய்யற விதமா இருக்கறது மிக முக்கியம்,இடர்ப்பாடுகள் பல இருப்பினும் அதையெல்லாம் தாண்டி கொண்டாட்டங்கள் இருக்குமாறு இதழ்கள் இருக்க வேண்டும்,சமரசம்,புளி ரசம்னு எதையாவது செய்து விட்டு பின்னாடி பீல் பண்ணுவதில் பிரயோஜனமில்லை,..
Delete"வரலாறு முக்கியம் அமைச்சரே"...!!!
// சுதந்திர தினத்தன்றொரு மினி பதிவோடு again ஆஜராகிடுகிறேன் ! //
ReplyDeleteஸ்பெஷல் அறிவிப்பு ஏதாவது வெளியிட்டு மினி பதிவை மினி வெடிகுண்டா மாத்திடுங்க சார்...
ஆமா ஆமா something special needed
Deleteஎனக்கு என்னவோ இந்த பதிவே மினி பதிவாகத்தான் தெரிகிறது.
Deleteநாளைய ஸ்பெஷல் பதிவுதான் வழக்கமான பதிவாக இருக்கப் போகிறது.
வந்தால் மகிழ்ச்சி...
Deleteஎனக்கும்தாம்ல
Delete// வாரத்தினில் ஒரு முழு செட் - சுமார் 285 புக்ஸ் கொண்ட 64 கிலோ காமிக்ஸ் கத்தை கடல் கடந்து பறந்துள்ளன - ஏர்மெயிலுக்கு மட்டுமே ஒரு ராட்சஸத் தொகையினை செலவிட்டு ! And இங்குள்ளதொரு திரையுலக டைரக்டரின் ஏற்பாட்டினில் தான் இது ! //
ReplyDeleteசெம செம.
சுஸ்கி விஸ்கி - கார்டூன் வறட்சியை நீக்க வந்த தொடர். வருடத்திற்கு 4 (2+2) கதைகள் என இதே தரத்தில் கொடுங்கள். விலையை பற்றி கவலை இல்லை.
ReplyDeleteஜோப்பியில் இருப்பதோ பத்தே ரூவா சார் ; நாமிருப்பதோ பொருட்காட்சியில் ! ஜயன்ட்வீலிலே ஏறிப்புட்டு ; பஞ்சு மிட்டாய் வாங்கிப்புட்டு ; டில்லி அப்பளத்தை கடிச்சிப்புட்டு ; கரும்புச் சாரைக் குடிச்சிட்டு ; ராட்டினத்திலே ரவுண்டடிச்சிட்டு ; பலூன் சுடும் கடையிலே ரவுசு பண்ணிட்டு, கிளம்பறச்சே சைக்கிள் ஸ்டாண்டில் டோக்கனுக்கு காசும் கொடுத்து விட்டு வீடு திரும்பணும் !!
DeletePhewwwwww !!
எல்லாம் மேலே உள்ளவர் பார்த்துக் கொள்வார் சார். No worries.
Deleteநம்பகமான விற்பனை இருக்க கவலை ஏன் சார்,புத்தக விழா ஸ்பெஷல்களாக சென்னை,ஈ.பு.வி என வருடம் இரண்டு முறை என வெளியிடலாம்...
Deleteசென்னை புத்தகத் திருவிழாவிற்கு இரும்புக் கை மாயாவியின் இதுவரை மறுபதிப்பு செய்யாத கதையை வெளியிடலாம். புத்தகத் திருவிழாவிற்கு வரும் பழைய ரசிகர்களை இது மகிழ்ச்சி அடையச் செய்யும்.
ReplyDelete// சுஸ்கி & விஸ்கி" ஜோடியானது, இரண்டே வாரங்கள் கூட நமது விசாலமான கிட்டங்கிகளில் தாக்குப்பிடித்திருக்கவில்லை !! SOLD OUT ! //
ReplyDeleteசிறப்பு. மிகச் சிறப்பு.
இரும்புக் கை மாயாவி கலர்ல சென்னைக்கு வரட்டும் சார்
ReplyDeleteவிஜயன் சார், புதிய கதை தொடர்களை வழக்கம் போல் தொடர்ந்து வெளியிடுங்கள். உங்கள் தேடுதல் வேட்டையை சந்தோஷமாக தொடருங்கள். பழமை வெற்றி பெற்றாலும் புதிய கதை தொடர்களை வருங்கால இளைய தலைமுறைகள் ரசிக்கும் நாட்கள் வெகு தொலைவு இல்லை என்பதற்கு ஈரோட்டில் வந்த புதிய இளம் வாசகர்கள் கூட்டமே இதற்கு சாட்சி.
ReplyDeleteமுடிந்தால் புதிய கதை தொடர்களின் பிரிண்ட் ரன்னை கொஞ்சம் குறைந்து கொள்ளலாம். இது பலவகையில் உங்களுக்கு உதவியாக இருக்கும் என நினைக்கிறேன்.
/* புதிய கதை தொடர்களை வழக்கம் போல் தொடர்ந்து வெளியிடுங்கள் */
DeleteWhy? கண்காட்சியில் வசூலாகும் பணங்கள் எல்லாம் ஷெல்ப் செய்து இந்த புக்ஸை அடுக்கி வைக்கவா? :-) He He !! We should play to the times not emotions !
ரேக்கிலே புக்...புக்கு வித்து ரேக்கு...! இதுவும் டார்வினின் பரிமாண வளர்ச்சித் தத்துவத்தின் ஒரு பகுதி தானோ ?
Deleteரயில்வண்டி நீளத்துக்கு கம்பீரமாய் நிற்கும் 3 வரிசை ரேக்குகளுக்கு இப்போ வெளிச்சம் போறாதுன்னு LED லைட்டிங் வேலைகள் நடக்குது ! ஒரு சுண்டல் வண்டி...அப்புறம் ஒரு பானி பூரி கடைன்னு அக்கட போட்டுப்புட்டால் - "குடவுனில் கேளிக்கை" என்று ஜமாய்ச்சுப்புடலாம் !!
சார் அப்படியே ஒரு சீவல் ஐஸ் வண்டியையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
Deleteஎல்லாம் வளர்ச்சியின் ஒரு அங்கம் தானே.
Delete" "சுஸ்கி & விஸ்கி" எண்ட முகம் முழுக்க கரியை ஜாலியாய் அப்பி !! திட்டமிடல்கள் துவக்க நாட்களின் போது - இந்தக் கதைகள் நமது இன்றைய ரசனைகளுக்கு ஒத்தே போகாதென்ற நினைப்பு என்னுள் ! தயங்கித் தயங்கித் தான் இந்த 2 கதைகளையே planning க்குக் கொண்டு வந்தேன் "
ReplyDeleteஇந்த கதைகள் கண்டிப்பாக வெற்றியடையும் என்று உங்களை நம்ப வைக்க நாங்கள் பட்ட பாடு இருக்கே Sir அது இறைவனுக்கே வெளிச்சம்
பழமை விரும்பிகள் பட்டம்,
நாசியில் தூசி, விற்பனை நடைமுறை தெரியாமல் குழந்தைதனமான கதைகளை கோருபவர்கள் என்ற கேலி கிண்டல்கள்,
ஆனால் இவையனைத்தையும் தாண்டி நல்ல விசயங்களை நகைச்சுவையுடன் சொல்லும் தரமான கதைகள் தோற்காது என்ற எனது நம்பிக்கை மெய்யானது மிகவும் மகிழ்ச்சி
Smurf ம் மிகத்தரமான கதைகளே Negative விமர்சனங்களே அதன் விற்பனை குறைவுக்கு காரணம்
இதே போன்று இரட்டை வேட்டையர், புயல் வேக இரட்டையர், செக்ஸ்டன் பிளேக்,கறுப்பு கிழவி, மின்னல் படை, அதிரடிப்படையினரின் தரமான கதைகளை வெளியிட்டால் வெற்றி நிச்சயம் Sir
பட்டியலை வாசிக்கும் போதே கண்ணைக் கட்டுதே சார் ?
Deleteவிற்பனை விபரங்களை பார்க்கும் போது இதைவிட கண்ணைக்கட்டும் Sir 😄😄😄😄
Deleteநமது பயணம் முன்னோக்கி இருக்கும் நேரத்தில் பழமை விரும்பிகளையும் அரவணைத்து செல்வோம். கூடிய விரைவில் அவர்களும் புதிய தலைமுறை ரசிகர்களும் இன்றைய கதைகளை ரசிக்கும் வாசகர்களாக வலம் வருவார்கள்.
ReplyDeleteபோகிற போக்கை பார்த்தால் இனிமேல் பிஸ்டலுக்கு பிரியாவிடை, ஏ ஆர் எஸ் மேக்னா, பராகுடா போன்ற மாஸ் கதைகள் வரவே முடியாத சூழல் ஏற்பட்டு விடும் போல. எடிட்டர் சொல்கிற மாதிரி மொத்த வண்டியும் மொத்த ரசனையும் 25 ஆண்டுகள் பின்னோக்கிப் போய்க் கொண்டிருக்கிறதே...
ReplyDelete25 ஆண்டுகளா ? மாயாவியெல்லாம் 50 ஆண்டுகளுக்கு முன்பான பார்ட்டி சார் & சு.வி. கூட 35 ஆண்டுகளுக்கு முந்தையவர்கள் !!
Deleteபுத்தகத்தை படிக்காமலேயே நாஸ்டாலஜியா காரணத்துக்காக வாங்குபவர்களின் பின்னால் புது படைப்புகளை படிப்பவர்களின் கூட்டமும் நிற்கும் நிலை ஏற்பட்டு விடுமோ.. புனித மானிடோ தான் காக்க வேண்டும்
ReplyDeleteகணிசமான எனது ஆதங்கமும் அதுவே சார் !!
Deleteசார்... நான் இந்த கதைகளை மறுபதிப்பு கேட்கவில்லை!
Deleteநீங்கள் இதனை செட்டாக வெளியிட்டு அதனில் கிடைக்கும் தொகையை நல்ல விஷயத்துக்காக செலவிட்டதும் தெரியும்.
மேலே நண்பர் ஒருவர் கீழ்கண்ட வரிகளை பகிர்ந்திருந்தார்.
//குழந்தைகள் பெரியவர்கள் துணையுடன் சாகசம் புரிவது நமது
நடப்பிலேயே இல்லாதது.//
இதற்காக நான் எழுதியதே அது!
//குழந்தைகள் பெரியவர்கள் துணையுடன் சாகசம் புரிவது நமதுநடப்பிலேயே இல்லாதது.//
Deleteநீங்கள் சொல்லியிருப்பது சரிதான்..வா.வே.வாசு போன்றவற்றை மறந்துவிட்டேன்.
// கணிசமான எனது ஆதங்கமும் அதுவே சார் !! // என்னையும் சேர்த்து கொள்ளவும்.
Deleteஎன்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
Deleteஸ்மாஷிங் 70 ஸ்பெஷல் - மாண்ட்ரேக்!
ReplyDeleteஇந்த மாத மாண்ட்ரேக் ஸ்பெஷலில் 3 கதைகள் இதுவரை படித்துள்ளேன்! இந்த முதல் 3 கதைகளைப் பொறுத்த வரையில், மாயாஜாலத்தை விட ஆக்ஷனுக்கு அதிகம் மெனக்கெட்டு கதைகளை தேர்ந்தெடுத்துள்ளார் எடிட்டர். அதுவும் கூட ரசிக்கும் படியாகவே உள்ளது. மாண்ட்ரேக்கும் லொதாரும் முதன் முறை சந்திக்கும் அந்த கதை அசத்தலோ அசத்தல். மாண்ட்ரேக்கின் மாயாஜாலத்தை லொதர் ரசிப்பதும், லொதாரின் வலிமையை மாண்ட்ரேக் வியப்பதுமாக முத்திரை பதித்த கதையாக முதல் கதை இருக்கிறது!
இரண்டு மற்றும் மூன்றாம் கதைகள் - உண்மையைச் சொன்னால் சான்ஸே இல்லை! பெயருக்கேற்றபடி தன்னிடம் உள்ள கள்ளத்தனத்தை வெளியே தெரிய சான்ஸ் தராத வில்லன் சான்ஸ். மாயாஜாலம், உடல் வலிமை எதுவாக இருந்தாலும் சரி ஒரு கை பார்க்க முடியும் என்று வில்லத்தனத்தில் மிளிர்கிறார் இந்த சவாலான வில்லன். மாண்ட்ரேக் கதைகளில் 8-க்கு பிறகு, வலிமையான வில்லனாக இந்த சான்ஸ் தான் தோன்றுகிறான் எனக்கு.
4ம் கதை: இருளின் விலை இரண்டு கோடி - மையிருட்டில் மாயாஜாலம் எடுபடுமா என்பதே கேள்வி. ஏற்கனவே முத்து காமிக்ஸில் வந்த கதையாக இருக்கும் போல தெரிகிறது. ஒருமுறை படித்து விட்ட பின்னர், விமர்சனம் வரும்.
வேதாளர், ரிப் கிர்பி வரிசையில், மாண்ட்ரேக் கதைகளும் சிக்சர் அடித்துள்ளன என்பதை இங்கே தெரிவித்துக் கொள்கிறேன். மிஸ் பண்ணிட்டா வருத்தப்படுவீர்கள்!
யார் அந்த மாயாவி!:
ReplyDelete20 வருடங்களுக்கு முன்பாக, 2000-ம் ஆண்டு வாக்கில் மறுபதிப்பாக வந்த கதை இது. முத்து காமிக்ஸின் 100-வது வெளியீடாக வண்ணத்தில் வந்து அசத்திய கதையும் இதுவே!
இதே போல
'ஒற்றைக்கண் மர்மம்'
'கண்ணீர் தீவில் மாயாவி',
'மந்திர வித்தை',
'மாயாவிக்கோர் மாயாவி',
'சதி வலையில் மாயாவி',
'மாயாவிக்கொரு சவால்',
'ஆழ்கடலில் மாயாவி',
'பறக்கும் பிசாசு',
'கொலைகாரக் குள்ள நரி',
'விண்வெளி ஒற்றர்கள்',
'விண்வெளி விபத்து',
ஆகியவை யும் வந்தால் நன்றாக இருக்கும்.
கொள்ளைக்கார பிசாசு,
Deleteவிண்வெளி கொள்ளையர்,
களிமண் மனிதர்கள்,
பிளாக் மெயில் இதனையும் சேர்த்துக் கொள்ளுங்கள் நண்பரே!
ஆசிரியர் மைண்ட்வாய்ஸ்.....!
போதும்..போதும்...லிஸ்ட் பெருசா போய்க்கொண்டு இருக்கே!
இவை எல்லாத்துக்குமே....வண்ணமோ இருவண்ணமோ சேத்துக்கங்க
Deleteபூபதி சகோவின் கோரிக்கையை ஆதரிக்கின்றேன். வரவேற்கின்றேன்.
Deleteஅப்டியே மானே ..தேனே..பொன்மானேன்னும் போட்டுக்குவோமா ஸ்டீல் ?
Deleteஅப்படியே கண்ணைக் கட்டுது என்பதையும் சேர்த்து கொள்ளுங்கள்:-)
Deleteசரி சார்....ஜங்கிள் புக்கும் சேத்துக்குவம்.....
Deleteஎல தம்பி ஒழுங்கா சாப்புடுல
நீ போடுற பொங்கலை சாப்பிட்டால் இப்படித்தான் ஆகும்லே :-)
Deleteநான் இன்று பதிவிட்ட பல பின்னூட்டங்களை காணவில்லை. சுந்தர் பிச்சை சார் இதனை கொஞ்சம் சரி செய்யுங்கள்.
ReplyDeleteநன்றி சார்.
Deleteவிஜயன் sir... தற்போது 2, 3 வயது குழந்தைகளை ஈர்க்கும் வண்ணம் வரும் பீன்ஸ் கொடியில் ஜாக், சின்ட்ரெல்லா போன்றவை எல்லாம் நமது வாகர்களின் பெரும்பான்மையை கவரவில்லை என்றே நினைக்கிறன். ஆகையால் அந்த வரிசையில் மேலுள்ள சிறு குழந்தை கதைகளை நீக்கி விட்டு அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் அங்கிள் ஸ்க்ரூஜ் கதைகளை தொடர்ந்தால் நம் வாகர்கள் அனைவரின் வரவேற்பும் நிச்சயம் கிடைக்கும்.. (அந்நாளில் அங்கிள் ஸ்குரூஜ் மினிலயனில் பட்டையை கிளப்பியது இதற்கு சான்று.)
ReplyDeleteசார் ...நீங்களும்,நானும் முடிவெடுத்து விட்டால் போதுமா ? படைப்பாளிகள் என்றொரு நதிமூலத்தின் இசைவல்லவா முதற்படி ?
Deleteஅதுவும் டிஸ்னி எனும் 225 பில்லியன் டாலர் குழுமமே அதன் சொந்தக்காரர்கள் எனும் போது - அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம்ம்ம்ம் ரேஞ்சுக்கு ஆர்டர் செய்யவாச்சும் இயலுமா ? நாக்குத் தொங்கிப்போகச் செய்யும் பணி சார் அது !
225 பில்லியன் டாலர் = ரூ.1,79,16,75,00,00,000
Deleteகுழந்தைகளுக்கான இந்த வெளியீடுகள் 50 விலைக்குள் சற்றே சிறிய அளவில் இருந்தால் வரவேற்பு பெற வாய்ப்புகள் இருக்கும் சார். இது எனது தனிப்பட்ட கருத்து மட்டுமே!
Deleteஇதுவரை மறுபதிப்பே வராத மாயாவி கதைகள் வெளியிட்டால் எனக்கு இரண்டு செட் வேண்டும்.
ReplyDeleteஐயா,
ReplyDeleteமாண்ட்ரேக்
அதிகாரிக்கு போட்டியா வந்திடுவாரு போலிருக்கு...!
இந்தக் 8 கதைய படிப்பதே பெரிய சிரமம் போல தெரியுது...!
நோ மார்க்
தயாரிப்பு தரம் சூப்பர்...!
ஆனாக்கா உள்ளே சரக்கு காலி டப்பா...!
இதுவரை பல முயற்சிக்கு பிறகு 3 கதை படிச்சிருக்கேன்!
பல முயற்சிகளா ? 😀😃
Deleteமிதுன் காலை நேரத்தில் படித்து பாருங்கள் கண்டிப்பாக பிடிக்கும். எளிதான ஆனால் ரசிக்கும் படியான கதைகள்.
Deleteமாண்ட்ரேக் கதைகளில் மாயாஜாலம், வசியம் என்ற விஷயங்களை மட்டும் தேடாமல், நேர்கோட்டு கதைகளாக எடிட்டர் அள்ளிக் கொடுத்துள்ளார். பெரிய அளவில் முயற்சிகள் எதுவும் செய்யாமலேயே இந்த கதைகளை படித்து விட முடியும் சகோ! அதுவும் இந்த ஸ்மாஷிங் ஸ்பெஷலில் வந்துள்ள முதல் கதை ஏ1 ரகம். மறுபடியும் சொல்றேன் - மிஸ் பண்ணிடாதிங்க!
DeleteDear Editor
ReplyDeleteI read SW for the first time.It was an instant classic.
Would love to get non republished Spider,Archie ,Wing commander George,Irummbukai norman for next year if possible.Want a 4-5 story reprint digest for each .
It's okay to succumb to some nostalgia in the current scenario as it seems to be flavour of the season.
S70s have become big hit too.
Also next year should fair and squarely centre on Tex.After this decades comeback I have loved Largo,Sheldon ,Thorgal,Graphic novels
Like green manor,Pistolukku piriya vidai etc but the flavour now seem to be straight path, light hearted stories.
Can't pinpoint one particular reason though
Regards
Arvind
I too wish the same, bro
Delete🙏
Deleteஈரோடு புத்தகத் திருவிழாவில் நமது ஸ்டாலில் பம்பரமாக சுழன்று வரும் மாரிமுத்து மற்றும் கோவிந்தராஜ் இருவருக்கும் எனது நன்றிகள். உங்கள் சேவை பாராட்டுக்குரியது. நமது ஸ்டாலில் விற்பனைக்கு உதவி வரும் மற்ற ஈரோடு நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.
ReplyDeleteமாண்ட்ரேக் :- லொதார் ஒரு பிரஸிடன்ட், தனது பதவியை துறந்து விட்டு மாண்டரேக் உடன் பணிபுரிகிறார் என்பது புதிய விஷயம். லொதார் பற்றிய பல விபரங்களை சுவாரசியமாக சொல்லி உள்ளார்கள். அருமை.
ReplyDeleteஎடிட்டர் சார், இரும்புக்கை மாயாவி தோன்றும் பழைய கதைகளை(கலரில்) மறு பதிப்பு வெளியிடுங்கள் . நல்ல விற்பனை ஆகும்.
ReplyDeleteடியர் எடி, அமர்க்களமான செய்தி.... 💪
ReplyDeleteசுஸ்கி விஸ்கி கண்டிப்பாக ஜெயிக்கும் என்றுபல வருடங்களாக பாயை பிராண்டி உங்களை தொந்தரவு செய்தவர்களில் நானும் ஐக்கியம் என்பதால், மிகவும் பூரிப்புடன் இருக்கிறேன்.
சுஸ்கி விஸ்கி 300 இதழ்கள் வருடத்திற்கி 3 இதழ் கலெக்ஷனாக, இனி ஒவ்வொரு வருடமும் பாரக்கலாம் தானே ?!?!?! 🥰🙂
இப்படிக்கு எதிர்பார்ப்புகளுடன் உங்கள் கடைகோடி வாசகர்களில் ஒருவன்.👍
ஈரோடு திருவிழா சென்று விட்டு ஊர் திரும்பிக் கொண்டு உள்ளேன் நட்புகளே.....
ReplyDeleteஞாயிறு நல்ல கூட்டம்....
நிறைவான எண்ட்ரி...
நல்லதொரு விற்பனையும்...
புதிய நண்பர்கள் நிறைய நம்ம வட்டத்தில் இணைந்து உள்ளனர்...
இன்று குழந்தைகளுக்கு காமிக்ஸ் வாங்கித்தரும் பெற்றோர்களை கையெடுத்து கும்பிட தோணுது....
வருங்கால நம்பிக்கை தூண்கள் இவர்கள் என்பதில் மாற்றுக்கருத்தேயில்லை....
புத்தக விழாவில் மட்டுமே வாங்கும் புக்ஃபேர் வாடிக்கையாளர்களில் இருந்து இந்த மழலையர் வேறுபட்டுக் காண்கின்றனர்... இப்போது ஒவ்வோரு வரும் தனது தனிப்பட்ட ரசனைக்கு வாங்கித்தர கேட்டு பர்சேஸ் செய்கின்றனர்...
பீன்ஸ் கொடி முதல் 13வது தளம் வரை அனைத்து ஜானர்களும், குழந்தைகளின் தேர்வுகளில்...
வருங்காலத்தை பற்றிய எந்தவித சந்தேகமும் இல்லாமல் நம்பிக்கை கொள்ளலாம்....😍
சூப்பர் நண்பரே
Deleteசெம செம. மகிழ்ச்சி:-)
Delete,டெக்ஸ் ,சுஸ்கி விஸ்கி மட்டுமல்லாமல் பெரும்பாலான நாயகர்களும் ஈரோட்டில் கலக்கி கொண்டு வருகிறார்கள் என்பதை அறிய முடிகிறது ..சூப்பர்..!
ReplyDeleteசார் வண்ணத்ல பெரிய சைசுல மாயாவி ...ஸ்பைடர்...ஆர்ச்சி....லாரன்ஸ்....நான்கு கதைக ஹார்டு பௌண்டுல .வந்தா......நெனச்சாலே புல்லரிக்குதே
ReplyDeleteபுல்லரித்தது என்றால் பையனை விட்டு சொறிஞ்சுக்கோ. அதைவிட்டு இங்கே வந்து புல்லரிக்கிறது பல்லறிக்கிறது இடுப்பபறிக்கிறது என இங்கு வந்து சொல்லாதே :-)
Delete1.யார் அந்த மினி ஸ்பைடர்
ReplyDelete2. யார் அந்த ஜுனியர் ஆர்ச்சி
3. உலகப் போரில் ஆர்ச்சி
மூன்றும் ஒரே தொகுப்பாக கலர்ல
வண்டி ஒட்டத்துல பின்னால பார்த்து மட்டும் ஒட்டுவதை நிறுத்துலே
Deleteஎனக்கு மிகவும் ஃபேவரிட் கதைகள் இவை...
Deleteநீங்கள் கேட்டது போல் வந்தால் நானும் ஹேப்பி...
சினிஸ்டரும் பாட்டில் பூதமும் குண்டா கோடை மலர் போல 70 சைசுல ....கருப்பு வெள்ளைல
ReplyDeleteபழைய கோடைமலரை எடுத்து படிச்சுக்கோலே.
Deleteகுடுல
Deleteஉங்க வீட்டு பீரோவில் உள்ளதை எடுத்து படிச்சுக்கோலே.
Deleteஇல்லன்னுதான கேக்குறேன்...85...86ஐ
Deleteவீட்டில் கொடுப்தை சாப்பிட்டுகிற மாதிரி கிடைப்பதை கொண்டாடுலே மக்கா :-)
Deleteஇரும்பு மனிதன்
ReplyDeleteகொலைப் படை
இரு வண்ண இரு இதழும் அட்டை டூ அட்டை பழமை மாறாம ஒரு விளம்பர பக்கமும் விட்டுப் போகாம
ஆஹா எனது முழு ஆதரவும் உண்டு ( பழங்காமிக்ஸ் விற்பனையில் மிக அதிக விலைக்கு விற்கப்படும் இதழ்கள் இவைகள்தான்)
Deleteசு'தந்திரமான கேப்போம்
Deleteஇந்த கோரிக்கையை ஆசிரியரிடம் சில பல முறைகள் கேட்டுள்ளேன். இதுவரை நல்ல பதில் கிடைக்கவில்லை.
Deleteகொலைப்படை, இரும்பு மனிதன் இரண்டு புத்தகங்களும் மிகவும் ரேர் ஆகி விட்டன. ஆசிரியர் ஒருமுறை, 1984இல் வெளிவந்த அதே அட்டை மற்றும் பேப்பரில் fascimile பிரதியாக வெளியிட்டால் சேகரிப்பாளர்களின் பேரவா நிறைவேறும்...
சார் நள்ளிரவு பன்னெண்டுக்கு சுதந்திரம் கிடைச்சா வரலாறு சொல்லுது....இன்னும் 3 மணி நேரத்துல சுதந்திர தினம் வர இருப்பதால் அந்நேரத்துக்கு பதிவிட்டா....ஆரஞ்சு மிட்டாய் சுவைல காமிக்ஸ் கொடிய ஏத்துனா தலை நிமிர்த்தி பாப்போம்....நல்ல அறிவிப்பா தந்து....உயிரைக் தேடி....சினிஸ்டருக்கெல்லாம் விடுதலை தந்து எங்க வீட்டுக்கு சுதந்திரமா அனுப்பும் அறிவிப்பு வெளியிட்டா....
ReplyDeleteஉனக்கு எப்போது சுதந்திரமாலே மக்கா :-)
Deleteபறக்கும் பிசாசு போன்ற மறுபதிப்பு செய்த இதழ்களை மீண்டும் மீண்டும் போட வேண்டாம். பழைய கிளாசிக் கதைகள் கருப்பு வெள்ளையில் தான் அழகு.
ReplyDeleteஅது இருவண்ணம்ல....ஆரஞ்சு பச்சை வெள்ளை ஊதான்னு தேசிய கொடி கலர்ல நெறஞ்சு கிடக்கும் மக்கா....இதான தருணம்
Deleteஐயா சாமி மறுக்கா மறுக்கா இந்த கிளாசிக் கதை மறுபதிப்பு வேண்டாம். ஆளை விடுங்க சாமிங்களா.
Deleteஎல் தம்பி இது மறுக்கா வரலல
Deleteஇரும்புக்கை மாயாவியிடம் ஏற்படும் ஈர்ப்பு வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. எனக்கு பிடித்த சூப்பர் ஹீரோக்கள் என்று மார்வல்,DC யில் இன்று நிறைய இருக்கலாம். ஆனால் எனக்கு முதலில் அறிமுகமான சூப்பர் ஹீரோ மாயமாக மறையும் ஆற்றல் படைத்த & இரும்புகையை வைத்து பல வித்தைகள் செய்யும் மாயாவியார் தான்.
ReplyDeleteஅவர் கதைகளை முடிய முடிய விட்டுவிடாமல் புத்தக திருவிழாக்களுக்கென்று மட்டும் பதிப்பித்து களமிறக்குங்கள். கடந்த நாலு தலைமுறையை போலவே சூப்பர் ஹீரோக்களில் ஒன்றிப்போயுள்ள இன்றைய தலைமுறையையும் லூயிஸ் கிராண்டேல் இலகுவாக ஈர்ப்பார்.
லயனு தேசமே சினிஸ்டரில்லையா
ReplyDeleteஆஅ..ஆஅஆஅ.ஆ..அ..அ.ஆ.
ஆஅ..ஆஅஆஅ.ஆ..அ..அ.ஆ.
லயனு தேசமே சினிஸ்டரில்லையா
முத்துமன்றமே கலரில் இல்லையா
பீரோவின் சிறைகளில்
சினிஸ்டர் பரிதவிக்கிறான்
காமிக்ஸ் தேவி புதுநலப் புலிகளின்
மணி அடிக்கிறாள் மணி அடிக்கிறாள்
கதைய மீட்க்கவா..பால்யம் காக்கவா.
கதைய மீட்க்கவா..பால்யம் காக்கவா.
ஆஹா அ..ஆஹா அஆஹா அ.
ஆஹா அ..ஆஹா அஆஹா அ.
ஆ..அ..அ.ஆ.ஆஅ..
ஸ்பைடரும் ஆர்ச்சிம் வாங்கிய ரசிகர்கள்
திருடர் சிலர் உரிமையில்லை
திருடர் சிலர் உரிமையில்லை
ஆ..அ..அ.ஆ.ஆஅ..
கதையுண்டு குறைவில்லை
எங்கட்கு நிறைவில்லை
புதுமைக்கு பொறுமை இல்லை
புதுமைக்கு பொறுமை இல்லை
ஆ..அ..அ.ஆ.ஆஅ..
விற்பனையின் அருமையில் அழகிய சுஸ்கிமயில்
வைக்க்கவும் முடியவில்லை
வைக்கவும் முடியவில்லை
ஆ..அ..அ.ஆ.ஆஅ..
இளமையும் கரைந்தது இருவண்ணம் நரைத்தது
கொலைப்படை கிடைக்கவில்லை
கொலைப்படை கிடைக்கவில்லை
ஆ..அ..அ.ஆ.ஆஅ..
புதுமை என்கின்ற மாயப் பேய் ஒன்று
ஸ்பைடரை தடுக்கின்றதே
ஸ்பைடரும் தப்பித்து கள்வன் கோட்டைக்குள்
தஞ்சம் கேட்கின்றதே.
லயனு தேசமே சினிஸ்டரில்லையா
முத்துமன்றமே கலரில் இல்லையா
ஆஹா அ..ஆஹா அஆஹா அ.
ஆஹா அ..ஆஹா அஆஹா அ.
ஆ..அ..அ.ஆ.ஆஅ..
காமிக்ஸ் தேசத்தைக் காக்கின்ற ஸ்பைடர்கள்
பீரோவில் ஒளிந்திருப்பார்..
பீரோவில் ஒளிந்திருப்பார்..
ஆ..அ..அ.ஆ.ஆஅ..
புதுமையை நண்பர்கட்குக்
காட்டியே கொடுப்பவர்
ஷெல்ஃபுக்குள் நிறைந்திருப்பார்..
ஷெல்ஃபுக்குள் நிறைந்திருப்பார்..
ஆ..அ..அ.ஆ.ஆஅ..
அதிரடி லயனினில்
அற்புத கதைகள்கள் தேங்குதடா
அற்புத கதைகள்கள் தேங்குதடா
ஆ..அ..அ.ஆ.ஆஅ..
ஸ்பைடரின் ஜெட்டினில் ஏற்றிய ஹெலிகார்
வான் வரை ஏறுதடா..
வான் வரை ஏறுதடா
ஆ..அ..அ.ஆ.ஆஅ..
இவைகளை வாங்க இன்று ஆசிரியர் தந்த
விலைகள் தான் கொஞ்சமா..
பீரோவில் இன்று பூட்டித் தடுக்கின்றன்ற
நிலைமைதான் மாறுமா..
லயனு தேசமே சினிஸ்டரில்லையா
முத்துமன்றமே கலரில் இல்லையா
பீரோவின் சிறைகளில்
சினிஸ்டர் பரிதவிக்கிறான்
லயனு தேசமே சினிஸ்டரில்லையா
முத்துமன்றமே கலரில் இல்லையா
சரி ஆரம்பித்து விட்டது. தூங்க வேண்டியதுதான்.
Deleteஇன்னும் இரண்டே மணிநேரம்
ReplyDelete199
ReplyDelete