Powered By Blogger

Saturday, March 31, 2018

ஒரு தேசமே கொண்டாடுது !!

நண்பர்களே,

வணக்கம். இரவுக் கழுகாரின் 70-வது ஆண்டிது என்பதை டமாரம் அடிக்காத குறையாய் உங்கள் காதுகளில் போட்ட வண்ணம் உள்ளோம் ! அதே சமயம், இந்த நடப்பாண்டானது ஒரு கோஷ்டியின் 60-வது ஆண்டுமே என்பதை எப்படியோ 'மிஸ்' பண்ணிவிட்டோம் !! Oh yes - நமது நீலப் பொடியர்களின் 60-வது பிறந்தநாள் வருஷமிது ! 1958-ல் smurfs முதன்முறையாய்த் தலை காட்டியது Johann & Peewit என்றதொரு கார்ட்டூன் தொடரில். மறு வருஷமே தமக்கே தமக்கென ஒரு புதுப் பிரேத்யேகத் தொடரில் மிளிரத் துவங்கிவிட்டார்கள் ! So இந்த ப்ளூ குசும்பர்களுக்கு 60-வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லுவோமா ?

இங்கொரு சுவாரஸ்யமான தகவலுமுண்டு ! பெல்ஜிய நாட்டின் பயணிகள் விமான நிறுவனமானது  (Brussels Airlines) தங்கள் தேசத்துக் கலாச்சாரத்தின் மீது அளப்பரிய ஈடுபாடும், பெருமிதமும் கொண்டது !   பெல்ஜியத்தின் தலைசிறந்த நினைவுச்சின்னம் போலான சமாச்சாரங்களை அவ்வப்போது தங்களது விமானங்களின் வெளிப்பக்கத்தில் 'ஜம்மென்று' பெயிண்ட் செய்து பயணிப்பது வாடிக்கை ! டின்டின் இடம்பிடித்துள்ளார்  ; மாக்ரிட் என்றதொரு பிரசித்தி பெற்ற ஓவியருக்கும் அந்த வாய்ப்பு நல்கப்பட்டுள்ளது ; பெல்ஜிய கால்பந்தாட்ட வீரர்களுக்கு அந்த கெளரவம் கிட்டியுள்ளது ; கடந்த 13 ஆண்டுகளாய் பெல்ஜியத்தில் நடைபெற்றுவரும் Tomorrowland என்றொரு நடன நிகழ்ச்சியினை நினைவுகூரும் விதமாய் அதனையும் விமானத்தில் வரைந்துள்ளனர் ! அந்த வரிசையில் சென்றாண்டு புதிதாய் எதைத் தேர்வு செய்யலாமென்று ஒரு போட்டியை நடத்தியது பிரஸ்ஸல்ஸ் ஏர்லைன்ஸ் ! பொதுமக்களின் வாக்குகளும், ஒரு உச்ச ஜூரி குழுவுமே தீர்ப்பைச் சொல்லவிருந்தனர் !! இறுதியாய் பெல்ஜியத்தின் கலாச்சார வெளிப்பாட்டுக்கு நமது smurfs பொடியர்களே இம்முறை பொருத்தமானவர்களென்று தேர்வாயினர் !! இளம் இத்தாலிய டிசைனரான மார்த்தா மாஸ்ஸ்ல்லானி தான் இந்த ஐடியாவை முன்மொழிந்து - பரிசீலனைக்கொரு டிசைனையும் தயார் செய்தவர் ! ஏர்பஸ் A-320 ரக விமானத்தின் வெளிப்பக்கமும், உள்பக்கமுமே நமது smurfs கும்பல் அட்டகாசமாய் இடம்பிடித்திட, இந்த மார்ச் மாதம் முதல் அந்த smurf விமானம் விண்ணில் பறக்கத் துவங்கியுள்ளது ! பாருங்களேன் அந்தக் கண்கொள்ளாக் காட்சியை !! இந்தத் தேர்வில் நமது ஆதர்ஷ  smurfs-க்கு ஆதரவாய் இன்டர்நெட் மூலமாய் வோட்டளிக்கும் பெருமை நமக்குமே கிட்டியது ; 'சபக்' என்று ஒரே அமுக்கு பட்டனை !! And அந்த விமானத்தினை பெயிண்ட் செய்யும் அழகை இந்த வீடியோவில் (https://www.youtube.com/watch?v=NPlBD3A2hOM) பார்த்தால் smurfs கட்சியல்லாத நண்பர்களுக்கும் கூட இந்தக் சுட்டுவிரல் மனுஷர்கள் மீது பிரியம் எழக்கூடும் ! ஒரு தேசமே கொண்டாடி, தங்கள் கலாச்சாரத்தின் பெருமிதச் சின்னமாய் அவர்களைப் பார்ப்பதென்பது எத்தனை உயரிய கௌரவம் !!! நாமும் அந்த ரசிகக் கோடிகளில் ஒரு தக்கனூண்டு அங்கமென்பதை எண்ணி காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளலாம் !! 


https://www.youtube.com/watch?v=NPlBD3A2hOM

 டிசைனர் !!

சும்மாவே promotion-களில் ரவுண்ட் கட்டி அடிக்கும் ஜாம்பவான்கள் smurfs படைப்பாளிகள் ; இது ஒரு முக்கிய ஆண்டெனும் போது சும்மா விடுவார்களா ? சீனியரின் சிலை ; smurfs நோட்டுகள் ; நாணயம் ; பொம்மைகள் ; போட்டோ பிரேம்கள் என்று ஏதேதோ போட்டுத் தாக்கி வருகின்றனர் !! Phew....நாமோ இங்கே மதில் மேல் பூனைகளாய்க் குந்தியிருக்கிறோம் எனும் போது மெலிதான சங்கடம் உள்ளுக்குள் !! நம் எல்லோருக்குமே இவர்களைப் பிடித்துப் போய் விட்டிருந்தால் - ஆஹா....?!!  

Back to reality - ஏப்ரல் இதழ்களின் முதல் ரவுண்ட் விமர்சனங்கள் பெரும்பாலும் positive என்பதில் மகிழ்ச்சி ! இங்கு மாத்திரமன்றி, மின்னஞ்சல் மூலமாகவும் நமக்கு இப்போதெல்லாம் விமர்சனங்கள் பதிவாகி வருகின்றன !  And இன்னமும் விடாப்பிடியாய்க் கடுதாசி போடும் சில ஆர்வலர்களுமுண்டு ! So  சின்னதாகவோ, நீளமாகவோ குறிப்பிட்ட அந்த 8 வாசகர்களிடமிருந்து ஒவ்வொரு மாதமும் விமர்சனங்கள் தொடர்ந்த வண்ணமுள்ளன ! அவற்றில் ஒன்றிரண்டில் கொஞ்சம் கோங்குரா காரம் கலந்தே இருக்கும் என்றாலும், பாராட்ட வேண்டியவற்றை 'பச்சக்' எனப் பாராட்டவும் செய்திடுகிறார்கள் !  இங்கே நமது வலைப்பதிவின்கருத்துக்களும், அந்த மின்னஞ்சல் / உள்ளூரஞ்சல் கடிதங்களும் ஒத்துப் போயிருப்பின் - அம்மாதத்து விமர்சனங்கள் bang on target என்று எடுத்துக் கொள்ளலாம் ! And இம்மாதம் சொல்லி வைத்தது போல சகலமும் ஒத்துச் செல்கின்றன !! 

இம்மாதத்து surprise பெரிய இதழ்களல்ல - அந்த குட்டியூண்டு வண்ண TEX இணைப்பு தான் என்பது அப்பட்டம் ! இந்த வீரியம் மிகுந்த சிறுகதைகள்  டெக்சின் ஒரு புதுப் பரிமாணம் என்று சொன்னால் அது hype அல்ல ! இரண்டே இதழ்கள் இதுவரைக்கும் வெளிவந்துள்ளன ; so இதைக் கொண்டே ஒரு தீர்ப்பெழுதுவது jumping the gun என்று தோன்றலாம் தான் ; ஆனால் சில தருணங்களில் பானை முழுசையும் இலையில் கொட்டிக், கபளீகரம் செய்து தான் ருசியைப் பிரகடனம் செய்தாக வேண்டுமென்ற அவசியம் கிடையாது தானே ? "கடைசிப் பலி" - "டிடெக்டிவ் டெக்சின்" இன்னமுமொரு முகமே என்றாலும், இதன் 32 பக்கங்களுக்குக் கிட்டியுள்ள தாக்கம் - "பாலைவனத்தில் புலனாய்வின்" 110 பக்கங்களுக்குக் கிட்டியதை விடவும் கூடுதல் தானே ? ஒரு கதாசிரியர் full form-ல் இருக்கும் போது அவரிடம் டெக்ஸ் போலொரு ஹீரோ ஒப்படைக்கப்பட்டால் பக்க எண்ணிக்கைகள் ஒரு பொருட்டே அவ்வதில்லை போலும் ! இந்தாண்டு காத்துள்ள 4 சிறுகதைகளுமே - இன்னும் வெவ்வேறு பாணிகளில் இருப்பதால் - இந்த கலர் டெக்ஸ் இணைப்பானது, இந்தாண்டின் ஓட்டத்தினில் இன்னும் சில பல பெரியண்ணாக்களையும், மாமாக்களையும் பின்னுக்குத் தள்ளிடும் சாத்தியங்கள் பிரகாசமென்பேன் ! கடுகு...காரம்...என்று புளித்துப் போன உவமைகளை இங்கே பயன்படுத்துவானேன் -காலத்துக்கு ஏற்ற மாதிரி  புதுசாய் ஏதாச்சும் யோசிப்போமா ? பேட்டரி சிறுசானாலும், டாக்டைம் ஜாஸ்தி ? 

"பவளச் சிலை மர்மம்" பற்றிப் பேசுவதாயின், குடுகுடுப்பைக்காரன் அவதார் எடுக்கத் தான் வேண்டிவரும் - simply becos இது ஹிட்டடிக்கும் என்ற ஆரூடம் இந்த இதழின் கலர் கோப்புகளைப் பார்த்த நொடியிலேயே புலனாகிவிட்டது என்பதைச் சொல்லிட வேண்டி வரும் ! இது நீங்களே செய்த மறுபதிப்புத் தேர்வு என்பதாலும், ஆளாளுக்கு அரை டஜன் தபாவாவது படித்திருப்பீர்களென்பதாலும், அங்கே நான் புதிதாய்ச் சொல்லவோ, செய்யவோ அதிகமிராது என்பது புரிந்தது ! மெருகூட்டலுக்கு வாய்ப்பிருக்கும் ஒரே இடம் வண்ண அச்சில் தான் ! பொதுவாய் பிரான்க்கோ-பெல்ஜியக் கதைகளின் அச்சுப் பணிகளுக்கும், (இத்தாலிய) டெக்ஸ் அச்சுப் பணிகளுக்குமிடையே ஒரு மெகா வேறுபாடு இருப்பது வாடிக்கை ! FB படைப்புகளின் லேட்டஸ்ட் கலரிங் பாணிகள் மெர்சலாக்கும் ரகம் - இம்மாத லேடி S கதையில் நாம் பார்த்தது போல் ! அதே சமயம் சற்றே பழைய கதைகளுக்கு சும்மா அடர், பளீர் வர்ணங்களை போட்டுச் சாத்தவும் செய்திருப்பார்கள் ! சிக் பில் கிளாஸிக்ஸ் கூட அதற்கொரு உதாரணம் ! கொலைகாரக் காதலியின் முதலிரண்டு பக்கங்களை பாருங்களேன் - பின்னணிகள் பச்சை ; ப்ளூ என்று அடர் வர்ணங்களில் கண்ணைப் பறிக்கும் ! ஆனால் டெக்சின் கலரிங் பாணிகளிலோ பெரும்பாலும் நீல வானின் பளீர் ப்ளூ ; மின்னும் மஞ்சள் சட்டை என்றிருப்பினும் கண்ணுக்கு ஒரு இதம் தூக்கலாய் இருப்பது போல் எனக்குத் தோன்றும் ! இம்மாத "பளிங்குச் சிலை மர்மம்" டைப்செட்டிங் ஓடிக் கொண்டிருக்கும் போதே, கம்பியூட்டர் screen-களை  எட்டிப் பார்த்த நொடியே தீர்மானித்து விட்டேன் - ஒரு விருந்து காத்துள்ளதென்று ! அதகள ஆக்ஷன் ஒருபக்கம் ; வானவில்லின் ஜாலங்கள் இன்னொரு பக்கமெனும் போது - உங்கள் முகங்களில் சந்தோசம் படர்வதில் வியப்பேது ?

ஒரிஜினலாய் நான் திட்டமிட்டிருந்தது - உங்கள் favorite "ப.சி.ம." மறுப்பதிப்பையும், எனது favorite "சைத்தான் சாம்ராஜ்யம்" மறுப்பதிப்பையும் ஒன்றிணைத்து ஒரு வண்ண குண்டாக்குவதே ! So அதன் பொருட்டு "சை.சாம்." கோப்புகளும் முன்னமே வந்துவிட்டன ! ஆனால் சந்தாத் தொகை எகிறிக் கொண்டே போவதாய்த் தோன்றியதால் - உங்கள் favorite மட்டுமே களம் காண நேரிட்டது ! 

இம்மாதம் ஒரு "கிட் ஆர்டின்" மாதம் என்பதில் mixed reactions இருப்பதை உணர்கிறேன் ! கார்ட்டூன் காதலர்களுக்கு குஷியோ குஷி ; "கார்ட்டூனாஆஆ ??" எனக் கூடிய நண்பர்களுக்கு முகச்சுளிப்பு என்பதில் இரகசியமேது ? இங்கே எனக்கொரு சின்ன கேள்வி ! முன்பெல்லாம் - இந்த genre பிரிப்புகள் ; இத்தனை இதழ்கள் என்றெல்லாம் இல்லாத நாட்களில் முதல் மாதம் டெக்ஸ் வந்திருப்பார் ; அடுத்த மாதம் கறுப்புக் கிழவி ; தொடரும் மாதத்தில் சிக் பில் என்று அட்டவணை இருந்திருக்கும் ! அன்றைக்கெல்லாம் துளி கூட நெருடல்களின்றி கார்ட்டூன்களை அனைவருமே ரசிக்கத் தானே செய்தோம் ? ஆனால் இன்றைக்கு ரசனைகள்வாரியான சந்தாக்கள் என்றான பிற்பாடு - ஆக்ஷன் தவிர்த்த இதர genre-கள் ஒருவித நெளிவை நம்முள் ஒருசாராருக்குக் கொணரும் காரணம் என்னவாக இருக்குமோ ? Confusion .....! 

சிக் பில் க்ளாசிக்ஸ் 2 மறுபதிப்புக் கதைகள் plus 1 புதுக் கதை என்று வந்திருப்பினும், எனக்கு எல்லாமே புதுசாகவே தெரிந்தன ! அந்த (குட்டிக்) கதை # 3 "எல்லாம் இவன் செயல்" தான் இந்த இதழின் best என்னைப் பொறுத்தவரைக்கும் ! வெறும் லெமன் ஜூஸ் குடித்துக் கொண்டே "என்ன ஸ்டெடியா இருக்கேன்னு பார்த்தியா ?" என்று சிலம்பும் கிட் ஆர்டினைப் போலான பார்ட்டிகள் ஒவ்வொரு நட்புவட்டத்திலும் உண்டு தானே ? அப்புறம் இன்னொரு கேள்வியுமே : சிக் பில் க்ளாசிக்ஸ் 3 அடுத்த வருஷத்துக்குத் தேவை என்பீர்களா ? அல்லது ஓராண்டு ப்ரேக் விடல் தேவலை என்பீர்களா ? சி.பி.3 க்கு 'ஜே' போடுவதாயின் - உங்கள் கதைத் தேர்வுகள் எவையாக இருக்குமோ ? 

அப்புறம் "நண்பனுக்கு நாலுகால்" செம breezy read என்று நினைத்தேன் நான் ! 30 பக்கத்தில் முடிக்காது, இதனையும் நார்மலான 44 பக்கங்களில் படைப்பாளிகள் திட்டமிட்டிருப்பின், இன்னுமே கதைக்கு வெயிட் கூடியிருக்குமென்று பட்டது ! And ரொம்பவே நண்டுகளாய் இல்லாது, ஒரு 12 வயது சுமார் பொடுசு உங்கள் வீட்டிலிருப்பின்,இதை படித்துப் பார்க்கச் சொல்லி கொடுங்களேன் - நிச்சயம் ரசிக்குமென்று எனக்குத் தோன்றுகிறது ! ஆர்டினின் அந்த அப்பாவித்தனமும், குடாக்குத்தனமும் யாரையும் சுண்டியிழுத்து விடாதா ? 

Last of the month - லேடி S !!   ஊர் சுற்றுவதைத் தாண்டி அம்மணி எதுவுமே செய்யக்காணோமே என்ற ஆதங்கம் நண்பர்களில் பலருக்கு இருப்பது புரிந்தாலும் - இந்தக் கதையினில் அவரொரு கருவியாய் மாத்திரமே சித்தரிக்கப்பட்டுள்ளதால் அடக்கி வாசித்திருப்பதாய் எனக்குப்பட்டது ! And அந்தச் சித்திரங்கள் ; கலரிங் அற்புதம் ; ஐரோப்பாவினில் நாமும் உலவியது போலான பீலிங்  என்பனவெல்லாம் பாசிட்டிவ்களாய்ப் பட்டன என் கண்களுக்கு ! உங்களின் thoughts ப்ளீஸ் ?

On the road ahead - ட்யுராங்கோவின் எடிட்டிங் பணிகள் ஓடி வருகின்றன ! இந்த விடுமுறை தினத்தில் அதனை முடித்து தொடரவுள்ள வாரத்தில் அச்சுக்குச் செல்ல வேண்டுமென்பது திட்டம் ! அட்டைப்படத்துக்கென பொன்னன் சூப்பராய் 2 டிசைன்களைத் தயார் செய்து தந்துள்ளார் ; அவற்றை இப்போதே கண்ணில் காட்டினால், இதழ் வெளியாகும் வேளைக்குள் பழசாகிப் போய் விட்டதொரு உணர்வு மேலோங்கக்கூடும் என்பதால் கோஷாப் பெண்ணாய் மூடாக்குக்குள்ளேயே தொடரட்டுமே ? இதோ உட்பக்கத்திலிருந்தொரு preview : 
And இதற்கு முன்பான பாகங்களிலிருந்து ஒரு கதைச் சுருக்கம் கோரியிருந்தது மறந்து விட்டதா guys ? யாராச்சும் கொஞ்சம் ஒத்தாசை செய்திடுங்களேன் - ப்ளீஸ் ?

Before I sign off : "ஜம்போ காமிக்ஸ்" சந்தாக்கள் செம விறுவிறு !! ஜூனில் முதல் flight என்பதால் இடைப்பட்ட 60 நாட்களுக்குள் சந்தாக்களை அனுப்பி வைத்து, நீங்களும் takeoff ஆகிடலாமே - ப்ளீஸ் ? And  வழக்கம் போல அன்பின் பிரவாகம் தொடர்கிறது ! நமது அனாமதேய அன்பர் - நண்பர்கள் யுவா கண்ணனுக்கும், கரூர் சரவணன் சாருக்கும் ஜம்போவின் சந்தாவை அன்பளிப்பாக்கியுள்ளார் ! மேற்கொண்டும் தொடரும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது ! இது தொடர்பாயொரு  சிறுகுறிப்பு மஹாஜனங்களே : நிறைய ஆசை இருப்பினும், நம்மள் கி  அடிமடியின் சுருக்குப் பையின் கனம் ரொம்பவே கம்மி என்பதால் நம்பள் யாருக்கும் சந்தாப் பரிசுகள் வழங்கும் நிலையில் இருக்கிறான் இல்லை ! So முகம்காட்ட விரும்பா ஒரு நண்பரின் தயாளத்தை எனதாகத் தவறாய் எடுத்துக் கொள்ள வேண்டாமே - ப்ளீஸ் ! 

ஏப்ரலில் விமர்சனங்களும், ஜம்போவின் சந்தாக்களும் தொடரட்டுமே ? Bye all ! See you around ! Wonderful Easter too !!

Wednesday, March 28, 2018

நான்காவது மாதத்தின் 4 !

நண்பர்களே,

வணக்கம். பூதக் கண்ணாடியைக்  கொண்டு தேடாத குறை  தான் ; ஆனால்  ஏப்ரல்  இதழ்களென்ற சமாச்சாரத்தைப் பற்றி, இண்டு இடுக்கில் கூட எதுவும் கண்ணில் தென்படக் காணோமே ? அதுக்கு மீறித் தட்டுப்படும் ஒன்றிரண்டுமே "பவளச் சிலை மர்மம்" பற்றிய சிலாகிப்புகள் மாத்திரமே !! JUMBO மீதான ஒளிவட்டத்துக்கு நன்றிகள் all ; ஆனால் ஏப்ரலின் பொட்டிகளைப் பிரித்திடவும் கொஞ்சம் நேரம் எடுத்துக் கொள்ளுங்களேன் ! காத்திருக்கும் விருந்து பிரியாணியோ ; நூடுல்சோ - தற்சமயம் இலையிலுள்ள full meals ஆறிப் போக அனுமதிக்கலாகாது தானே ? 
ஏப்ரல் இதழ்கள் பற்றி
  • முதல் பார்வையில் இம்மாத இதழ்களின் அட்டைப்பட ரேங்கிங்ஸ் பற்றித் தெரிந்து கொள்ள ஆசை ! 
  • தயாரிப்புத் தரங்கள் பற்றியும்,அதன் தர வரிசை பற்றியும் - please ? 
  • அதன் பின்பாய் படிக்க இயன்றுள்ள ஏதேனுமொரு april இதழ் பற்றியும் சொல்லிடலாமே ?

ஜம்போ புது வரவென்பதால் அது சார்ந்த விளம்பரங்கள் & அறிவிப்புகள் இங்கேயும் தொடரட்டுமே ? என்று பார்த்தேன் ! ஜம்போ சந்தா பற்றி உங்களது நட்பு வட்டாரங்களில் பகிர்ந்திடவும் முயற்சிக்கலாமே - ப்ளீஸ் ? Word of mouth விளம்பரங்கள் தானே, நமது முதுகெலும்பே ? ஜம்போவின் அயல்நாட்டுச் சந்தா கட்டணங்களை, தொடர்ச்சியான அரசு விடுமுறைகளின் முடிவுக்குப் பின்பாய் அறிவித்திட இயலும்.  ஏர்மெயில் கட்டணங்கள் ஏகமாய் மாற்றம் கண்டிருப்பதால் - தெளிவாக விசாரிக்க இந்த அவகாசம் தேவையாகின்றது !  So தொலைவில் வசிக்கும் அன்பர்கள் அதுவரையிலும் பொறுமை காத்திடக் கோருகிறேன் !

"பவளச் சிலை மர்மம்" - அட்டவணையில் அறிவிக்கப்பட்டதோ  மித சைசில் தான் என்பதை நாமறிவோம் ! புத்தக விழாக்களில் "நிலவொளியில் நரபலி"க்கு துணையாக இருக்கட்டுமே என்று எண்ணியிருந்தேன் ! ஆனால் அப்போதே வழக்கமான டெக்ஸ் சைஸ் தான் உங்கள் ஆதர்ஷம் என்பதைச் சுட்டிக் காட்டியிருந்தீர்கள் ! ஏற்கனவே நிர்ணயம் செய்யப்பட்டிருந்த  சந்தாத் தொகையினில் விலைகளை மறுபடியும் tweak செய்திடுவதெல்லாம் ஆகாத வேலை என்பதால் அப்போதைக்கு வாயைத் திறக்கவில்லை நான் ! ஆனால் இந்த இதழின் தயாரிப்புத் தருணம் நெருங்கிய சமயம் என்ன செய்வதென்ற சிந்தனை லேசாய் எழத் தான் செய்தது !  பெர்சனலாக எனக்கு அந்த "நி.ந.ப". சைஸ் ரொம்பவே compact & cute என்றுதான் பட்டது ! ஆனால் இந்த மறுபதிப்பு சார்ந்த விஷயங்களில் ஒவ்வொருவருக்குமுள்ள flashbacks ; அவற்றிற்கு நீங்கள் நல்கிடும் மதிப்புகள் ; அவற்றை நீங்கள் போற்றிப் பாதுகாக்கும் பாங்குகள் - என்பனவெல்லாம் முன்னின்று ஜிங்கு ஜிங்கென்று ஒரு குத்தாட்டம் போட்டன ! சரி....ஆனது ஆச்சு ; வழக்கமான சைஸிலேயே களமிறங்குவோமெனத் தீர்மானித்தேன் ! And அந்தத் தீர்மானத்தின் பொருட்டு இப்போது மகிழ்கிறேன் ! Maybe காத்திருக்கும் ஒன்றிரண்டு மும்மூர்த்தி reprints-களை "நி.ந.ப".சைசில் போட்டு ஈடு செய்ய முடிகிறதாவென்று பார்க்கலாம் ! இப்போதைக்கு "பவளச் சிலை மர்மம்" மிரட்டும் வர்ணங்களில் உங்களை குஷி கொள்ளச் செய்திருப்பதில் நாங்களும் ஹேப்பி !! இந்த இதழ் அச்சாகும் போதே எனக்குத் தெரியும் - இது கண்ணைப் பறிக்கும் ஜாலமாக அமையவுள்ளதென்று ! "சைத்தான் சாம்ராஜ்யம்" கூட இதே போல் ஜொலிக்கிறது - டிஜிட்டல் கோப்புகளில் !! வரிசையில் அடுத்தது அது தானே ?! 

டைனமைட் ஸ்பெஷலின் சமாச்சாரம் பற்றிக் கேட்கவே வேண்டாம் - simply stunning !! போட்டுத் தாக்குகிறது வர்ணக்  கலவை !! 

ஜம்போ பற்றிய தகவல்கள் இணையத்துக்கு வரா நண்பர்களின் காதுகளிலும் போட்டு வைக்க முயற்சியுங்களேன் - ப்ளீஸ் ? Bye all ;  See you around !! லக்கி லூக் & டால்டன்களோடு சவாரி செய்யப் புறப்படுகிறேன் ! 

அப்புறம் ஒரு கொசுறு : நேற்றைக்கொரு கார்ட்டூன் கதையின் மொழிபெயர்ப்பு வந்து சேர, அதனை மேலோட்டமாய்ப் படிக்க ஆரம்பித்தவன் சற்றைக்கெல்லாம் 44 பக்கங்களையும் மேய்ந்த பின்பே ஓய்ந்தேன் ! And சிரித்து மாளலை சாமி !! நிச்சயமாய் சிறார்களுக்கான கதையல்ல தான் ; நமக்குமே கோக்கு-மாக்கான அந்தக் களம் சரிப்படுமா ? என்று யோசித்துக் கொண்டுதானிருக்கிறேன் ! But - வெளியிடுவதென்று தீர்மானித்தால் - 2019-ன் ஜனவரியில் தரையில் உருளத் தயாராகிக் கொள்ளலாம் நாம் ! Bye !!









Tuesday, March 27, 2018

ஜம்போ !!

நண்பர்களே,

வணக்கம்.

சில மாதங்களாய் பில்டப்பிலேயே ஒட்டிய விமானத்தை - விண்ணில் பறக்க விடும் நேரம் நெருங்கிவிட்டது ! ஜூன் 2018 முதல் take off ஆகிடும் இந்தப் புது முயற்சியில் உங்களைச் சந்திக்கவிருக்கும் நாயகர்கள் இதோ : 
  • ஜேம்ஸ் பாண்ட் 007 
  • Young டெக்ஸ்
  • ஹெர்லக் ஷோம்ஸ்
  • ஜெரெமியா
  • ஒற்றைக் கண் ஜாக் 
  • மர்ம மண்டலம் (கம்பியூட்டர் மேக்ஸ் நினைவுள்ளதா ?)
  • மின்னல் மனிதன்
  • பன்முகப் பொடியன் !!
ஒவ்வொரு நாயகரின் விளம்பரத்திலும் அந்தந்தக் கதைகள் பற்றிய விபரங்கள் உள்ளதால் - நான் மேஜர் சுந்தர்ராஜன் ஆகி, சகலத்தையும் மறுக்கா repeat செய்திடத் தேவையிராதென்று நினைக்கிறேன்!! But ஒவ்வொரு நாயகர் பற்றியும் லேசாய் பின்னணிகள் !!

பிள்ளையார் சுழி போடவிருப்பதே நமது தலைமகன் TEX தான் எனும் போது - புதுசாய் நான் என்ன சொல்லப் போகிறேனென்று தோன்றலாம் தான் !! ஆனால் நாமிங்கு 'ஹலோ' சொல்லவிருப்பது துள்ளிப் பாயும் இளம் காளை டெக்சிடம் !! சட்டத்தால் தேடப்படும் ஒரு சூழல் இந்தச் சூறாவளியின் வாழ்விலும் நிலவியது ! டெக்சின் அந்தப் பரபரப்பான இளம் நாட்களை - கதாசிரியர் போசெலி தனது பிரத்யேக பாணியில் 240 பக்க நீளத்தில் சொல்லவிருப்பதே ஜம்போவின் முதல் flight ! ஒரு பனியிரவின் தீமூட்டத்தின் முன்னமர்ந்து, கார்சனுக்கும், கிட்டுக்கும் தனது flashback-ஐ டெக்ஸ் சொல்லும் அழகை மிஸ் பண்ணி விடாதீர்கள் folks !! ஒரு கொசுறுச் சேதியும் கூட : டெக்சின் அண்ணனையும் கூடிய விரைவில் ஜம்போவில் பார்த்திடப் போகிறீர்கள் !! 


Next on the list, Bond.....James Bond !!

007 என்ற நம்பரே ஓராயிரம் கதைகள் சொல்ல வல்லது எனும் போது அவரைப் பற்றிச் சொல்லும் அவசியமேது ? நான் சொல்ல விழைவதெல்லாமே - இந்த லேட்டஸ்ட் பாண்ட் கதையின் பாணியைப் பற்றியே ! தெறிக்கும் ஆக்ஷன் ; ஒரு திரைக்கதைக்கு கொஞ்சமும் சளைக்கா களம் ; அந்த ட்ரேட்மார்க் ஜேம்ஸ் பாண்ட் தெனாவட்டு என்று இதுவரையிலும் நாம் காமிக்ஸ்களில் பார்த்திரா ஒரு hi tech அவதாரை இங்கே நாம் பார்த்திடவுள்ளோம் ! அமெரிக்க உருவாக்கம் என்பதால் - நமது இத்தாலிய / பிரான்க்கோ-பெல்ஜியப் பாணிகளிலிருந்து ரொம்பவே வித்தியாசப்பட்டு நிற்கும் கதையிது ! தற்போது நான் உலவி வருவது இவருடனே - ஹெல்ஸின்கியிலும், பெர்லினின் வீதிகளில் !! Bond is back !! And with a bang !!

ஒரு சீரியஸ் டிடெக்டிவ் பற்றிப் பேசிய கையோடு - ஒரு ஜாலி டிடெக்டிவ் பற்றியும் பேசிடுவோமே ? நமக்கு ஹெர்லக் ஷோம்ஸ் புதியவரல்ல தான் ; ஆனால் இதுவரையிலும் அவரை black & white-ல் ; சுமாரான தாளில், மாத்திரமே பார்த்திருப்போம் ! இப்போதோ மிரட்டலான முழு வண்ணத்தில், ஆர்ட்பேப்பரில் அழகாய் ரசித்திடவுள்ளோம் ! ஜாலியான 2 சாகசங்கள் - ஹெர்லக் ஷோம்ஸ் ,& டாக்டர் வேஸ்ட்சன்அடிக்கும் கூத்துக்களோடு பயணிக்கின்றன ! And ஒரு மாதத்துக்கு முன்பாகவே மொழிபெயர்ப்பை முடித்து வைத்திருக்கிறேன் - சீக்கிரமே களமிறக்கி விடும் ஆர்வத்தோடு ! But சின்னதொரு குறிப்பு guys : இது கார்ட்டூன் ரசிகர்களுக்கு மாத்திரமே சுகப்படும் இதழ் !! So கார்டூனைக் கண்டால் தெறித்து ஓடுபவராக நீங்களிருப்பின் - பை-பாஸைப் பிடித்து விடுங்களேன்- please !

ஜெரெமியா ! 

பெயரைக் கேட்டாலே சிலருக்கு அதிரும் ; சிலருக்கு மிரளும் என்பது புரிகிறது தான் ! ஆனால் ஒரு ஜாம்பவானுக்கு ஒரே ஆல்பமே பரீட்சைக் களமென்று தீர்மானிக்க மனம் ஒப்பவில்லை ! So உதை வாங்கினாலும் சரி, ஒரு புது துவக்கத்துக்கு வழி வகுக்கும் உத்தியாக இது அமைந்தாலும் சரி - "ஹெர்மன்" என்ற ஒற்றைப் பெயருக்காக இந்த ஆல்பத்தைத் திட்டமிட்டுள்ளேன் ! Again - பிரியப்பட்டோர் வாங்கிடலாம் ; "no thanks" என்போருக்கு அந்த நிராகரிக்கும் சுதந்திரம் கேள்விகளேயின்றி உண்டு ! 
Last in the list - காத்திருப்பது ஒரு பிரிட்டிஷ் காமிக்ஸ் மறுவருகை - The ACTION ஸ்பெஷல் ரூபத்தில் ! இங்கிலாந்தில் 1990-களின் இறுதிகள் வரைக்கும் இந்த நேர்கோட்டு ; black & white காமிக்ஸ்களின் ஆதிக்கம் அட்டகாசமாய் இருந்து வந்தது ! ஆனால் அப்புறமாய் ஒரு தொய்வு தலைகாட்டத் துவங்க - கொஞ்சம் கொஞ்சமாய் மார்க்கெட் காற்றாடத் துவங்கியது. போன வருஷம் லண்டன் சென்றிருந்த சமயமெல்லாம் - புத்தகக் கடைகளுக்குள் நுழையும் போது கண்ணீர் வராத குறை தான் ! காலமாய் நாம் பார்த்துப் பழகியிருந்த அத்தனை Fleetway சமாச்சாரங்களும் போயே போயிருந்தன ! ஆனால் ஒரு மறு வருகைக்கு அங்கொரு பதிப்பகம் தயாராகி வருவதை அறிந்த போது - 'அட' என்று சொல்லத் தோன்றியது ! நாம் அந்நாட்களில் திகிலில் வெளியிட்ட MISTY காமிக்ஸ் வாரயிதழில் தொடராய் ஓடிய கதைகளைத் தொகுத்து சில பல ஆல்பங்கள் ; அப்புறம் VALIANT வார இதழில் தலைகாட்டிய நாயகர்களின் சிறுகதைத் தொகுப்புகள் என்றெல்லாம் போட்டுத் தாக்கத் துவங்கி விட்டார்கள் ! அட்ரா சக்கை என்றபடிக்கே - நமது தேர்வுகளைச் செய்த கையோடு - "இவற்றை ஒருங்கிணைத்து ஒரே இதழாய்ப் போடலாமா ?" என்று கேட்டு வைத்தோம் ! "Why not ?" என்று அவர்களும் பச்சைக் கொடி காட்ட - ACTION SPECIAL தயார் ! நண்பர்கள் சில நாட்களுக்கு முன்பாய் "மர்ம மண்டலம்" மறுக்கா போடுவோமே ? எனக் கேட்ட போது நான் லேசாய்ப் புன்னகைத்துக் கொண்டது இதனாலே தான் ! ஒற்றைக் கண் ஜாக் ; மர்ம மண்டலம் ; மின்னல் மனிதன் ஆகியோரின் ஆக்ஷன் கதைகளின் தொகுப்புகள் + Faceache என்ற கார்ட்டூன் filler pages இந்த இதழினை நிறைவு செய்திடும் ! So அந்நாட்களது சுலப கதை பணிகளை மறுபடியும் சுவாசிக்க ஒரு வாய்ப்பு நம் பக்கம் ! 

So இதுவே ஜம்போவின் முதல் சுற்றின் 6 இதழ்கள் ! இவை வழக்கம் போல குறைவான பிரிண்ட்--ரன் ; சந்தாக்களுக்கு முன்னுரிமை என்ற template -ல் பயணித்திடும் ! இஷ்டப்பட்டதை வாங்கி கொள்ளும் சுதந்திரம் இங்கொரு plus ! ஆனால் நீங்கள் சந்தாவில் இணைந்திடும் போது முழுத் தொகையான ரூ.999 கட்டிடம் அவசியம் ! உங்கள் கணக்கில் முதல் சுற்றின் இறுதியில் எஞ்சியிருக்கும் தொகையினை  - அடுத்த சுற்றுக்கு முன் எடுத்துச் சென்றிடலாம் ! And ஜூன் முதல் பறக்கத் துவங்கும் ஜம்போ - நமது மாதாந்திரக் கூரியர் டப்பாக்களுக்குள் இடம்பிடித்திடும் !

ஜம்போவுக்கென இன்னும் சில திட்டமிடல்கள் நம்மிடம் உள்ளன ; ஆனால் இந்தாண்டின் ஆகஸ்ட் நெருக்கடியின் பொருட்டு ரொம்பவும் இழுத்து விட்டுக் கொள்ள வேண்டாமென முதல் சுற்றினை 6 இதழ்களோடு முடித்துக் கொண்டுள்ளோம் ! இந்த ஆறு இதழ்களுமே கிட்டத்தட்ட சென்றாண்டே நம் வசமுள்ளவை என்பதால் இவற்றை நடைமுறைப்படுத்த அப்போதிருந்தே பணிகளைத் துவக்கிவிட்டதால் - இப்போது அதிக மெனக்கெடத் தேவையின்றிப் போய் விட்டது !"பு.வி.மொழிபெயர்க்க நேரமில்லை உனக்கு  ; ஆனாக்கா இதை இப்போ எழுதியச்சாக்கும் ?" என்ற விசனங்கள் ; கச்சேரிகள் நிச்சயமாய் சில பல வாட்சப் க்ரூப்களில் இன்றே பறக்கும் என்பது நிச்சயம் ! But - சிரியா யுத்தத்தைத் தவிர பூலோகத்தின் பாக்கி சகல சங்கடங்களுக்கும் நானே சூத்ரதாரி என்ற எண்ணம் தீர்க்கமாய் சிலபல நட்புக்களின் மனதில் வேரூன்றி இருக்கும் போது - அதை மாற்றிட நமக்கேது ஆற்றல் ?

So இதுவே ஜம்போவின் துவக்கத் திட்டமிடல் ! "அது சரி - வழக்கமான பாணிக்கு புதுசாய் லேபில் ஏனாம் ?" என்ற கேள்வி எழக்கூடும் தான் ! போகப் போகச் சொல்கிறேன் folks - இதனில் இன்னும் என்ன திட்டமிட்டு வருகிறோமென்று !

அப்புறம் F & F சந்தா என்னாச்சு ? என்ற கேள்விக்கும் பதில் சொல்லி விடுகிறேன் ! பு.வி. பணிகளும் சேர்ந்து கொள்ளுமா ? இரத்தப் படலம் & டைனமைட் ஸ்பெஷல் இதழ்களின் பணிகள் எப்போது நிறைவுறும் ? என்ற தெளிவின்றி - இந்த கிராபிக் நாவல் சந்தாவையும் இழுத்து விட்டு அல்லல்பட தைரியம் எழவில்லை ! So ஒருமட்டாய் ஆகஸ்ட் schedule-களை முடித்து விட்டால் - ஆகஸ்டிலேயே F & F சந்தாவை அறிவித்து விடுவேன் ! அது ரொம்பவே பொறுமையோடு  செய்தாக வேண்டிய முயற்சி என்பதால் - இந்தத் தெளிவற்ற சூழலில் அதனையும் உட்புகுத்திட மனம் ஒப்பவில்லை ! எனது சூழலைப் புரிந்து கொண்டால் மகிழ்வேன் ! இல்லே...இதுக்குமே சாத்து தானென்றால் - அதிரட்டும் வாட்சப் க்ரூப்கள் !!

ஏப்ரல் கூரியர்கள் சகலமும் on the way ! ஆன்லைன் லிஸ்டிங்கும் ரெடி! http://lioncomics.in/monthly-packs/493-april-2018-pack.html

So நாளைய பொழுதை நம் இதழ்களோடு துவங்கிடலாம் ! Happy Reading ! Bye now ! 

Monday, March 26, 2018

புதனுக்கு "பொட்டி" !

நண்பர்களே,

வணக்கம். ஏப்ரலின் "பொட்டிகள்" கூரியரை நாடி நாளை மாலை புறப்படவிருக்கின்றன ! So புதனன்று எதிர்பார்த்திடலாம் - ஏப்ரலின் இதழ்களை !! இன்னமும் ரெண்டு நாள் கழித்தே புக்குகளை அனுப்பிட எண்ணியிருந்தோம் - ஆனால் தொடர் விடுமுறைகள் காத்திருப்பதால் மூடாக்குகளைப் பிரிக்கும் தீர்மானத்தை எடுக்க வேண்டிப் போனது ! Anyways -சிலபல  'கையப் புடிச்சி இழுத்தியா ?' பஞ்சாயத்துக்களில் விரயமாகிடும் நேரத்தை - புது இதழ்களுக்கு நல்கிடுவது நலமே என்பதால் வேகமாய் பேக்கிங் பணிகளைப் பார்த்து வருகிறோம் !

இந்தாண்டின் ஒரு கணிசமான தூரத்தை ஏற்கனவே நாம் கடந்துவிட்டுள்ளோம் - கொஞ்சம் அட்வான்சாகவே இதழ்களைத் தயாரித்ததன் பொருட்டு !! So ஜூலை இறுதியிலும், ஆகஸ்டின் துவக்கத்திலும் துவங்கிட வேண்டிய மறுஆண்டுக்கான சிந்தனைகள் - இம்முறை கொஞ்சம் சீக்கிரமே ! And as always - ஏகப்பட்ட புதுக் கதைகள் ; தொடர்கள் என்று வரவழைத்து மூக்குக் கண்ணாடியைப் போட்டுக் கொண்டு அவற்றுள் மேய்ந்து வருகிறேன் ! எத்தனை காலமானாலும், புதுக் கதைகளைப் பார்க்கும் நேரங்களின் அந்த 'ஜிலீர்' உணர்வு மட்டும் போகாது போலும் ; சமீப வாரங்களில் அவற்றை தவறாது உணர்ந்து வருகிறேன் ! இக்கணத்தில் எனது கேள்வி இது தான் :

2019-ல் நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்திடும்  genre ஏதுவாக இருக்கும் ? கீழ்க்கண்ட ரசனைகளும் எதற்கு எத்தனை சதவிகிதம் தந்தால் ஓ.கே. என்று படுகிறது ?

A . கௌபாய் 
B . ஆக்ஷன் & fantasy 
C . கார்ட்டூன்
D . டிடெக்டிவ்
E . கிராபிக் நாவல்
F . புதுசாய் ஏதாவது ?

புதன் காலையில் இன்னமுமொரு பதிவோடு சந்திக்கிறேன் folks ! (மார்ச்சில் பதிவு எண்ணிக்கை ஏற்கனவே எகிறிக் கொண்டுள்ளது !! Phew !!) Bye for now !!

Saturday, March 24, 2018

நெருங்குது ஏப்ரல்....!!

நண்பர்களே,


வணக்கம். LMS-ல் வெளியான டைலன் டாக்கின் சாகஸம் நமக்கு மறந்திராதென்று நினைக்கிறேன்! அந்தக் கதையின் அசாத்தியப் புள்ளியே ஒரு நிஜ மண்டலம்…இன்னொரு திரிசங்கு நிலை மண்டலம் என்பது தானே ?! எனக்குமே கூட இந்த வாரம் முதலாகவே இரட்டைக் கால மண்டலத்தில் பயணிப்பது போலவே ஒரு பீலிங்கு ! நடப்பு இதழ்கள் + மே மாதத்தின் ஒரு பாதி ஏற்கனவே தயாராகி மூடாக்குக்குள் துயில் பயில – நான் பணி செய்து வருவதோ ஜுன் மாதத்து லார்கோவிலும், ஜூலையின் லக்கி லூக்கிலும் ! நமது DTP அணியோ ஒட்டுமொத்தமாய் ஆகஸ்டின் டைனமைட் ஸ்பெஷல் + இ.ப. தொகுப்புக்குள் தொபுக்கடீரெனக் குதித்திருக்க – என் மேஜையில் தினமும் குவிவது ஜுன், ஜூலை & ஆகஸ்டின் பக்கங்களே! நாமிருப்பதோ மார்ச்சில் என்பதை அவ்வப்போது யாராவது நினைவுபடுத்தி வராது போனால் – இப்போதே “இரத்தப் படலத்துக்கு டப்பா செய்யக் கொடுக்கலியா ?கூரியரிலே சொல்லி வைச்சாச்சா ? “ என்று சவுண்ட் விட ஆரம்பித்து விடுவேன் போலுள்ளது !


Jokes apart – மெய்யாகவே இப்போதெல்லாம் ஒரு சின்ன உதறலோடே நாட்கள் நகர்கின்றன ! என்னதான் கடந்த ஐந்தாறு ஆண்டுகளின் அனுபவங்கள் முதுகெலும்பாகி நின்றாலும் – இம்முறை நாம் தலையைக் கொடுத்துள்ள 2 ப்ராஜெக்ட்களுமே அசாதாரண ரகத்திலானவை ! 

852 பக்கங்கள் + 777 பக்கங்கள் = 1629 பக்கங்கள் = 4 ஹார்ட்கவர் புத்தகங்கள் = ரூ.2900 = மலையளவு எதிர்பார்ப்புகள் = விண்ணளவுப் பொறுப்புகள் = டான்ஸ் ஆடும் பேஸ்மெண்ட் ! 

ஆக, மஜாவாக அறிவிப்புகளைப் போட்டோமா; தயாரிப்புப் பணிகளைப் பார்த்தோமா ; புக்குகளை கையிலேந்தி ரசித்தோமா ; வாயெல்லாம் பல்லாய் உங்கள் முன்னே ஆஜரானோமா என்பனவெல்லாம் எனது பகற்கனவுகளாய் மாத்திரமே இருந்திட முடியும் ! இப்போதைக்கும், ஆகஸ்டுக்கும் மத்தியில் முழுசாய் 4¼ மாதங்கள் எஞ்சியிருந்தாலுமே இந்த அவகாசம் போதுமா – இந்த மாரத்தான் பணிகளைத் திருப்தியாக நிறைவேற்றிட? என்பதை கணிக்கத் தெரியவில்லை ! தலைக்குள் வெவ்வேறு பொறுப்புகளும், பணிகளும் நீந்திக் கொண்டேயிருந்தாலுமே – “ஆகஸ்ட்” சார்ந்த பரபரப்பு தான் சகலத்தையும் ஓரம்கட்டி விட்டு முன்னே நிற்கின்றது!
திருத்தங்கள் செய்யப்படா பக்கங்கள்....!
இரத்தப் படலம்” மறு-மறு-பதிப்பே என்பதால் அங்கே என் பேனாவுக்குப் பெரிதாய் வேலைகளின்றித் தப்பிக்க சாத்தியமாகிறது ! ஆனால் 3 தனித்தனி ஆல்பங்கள் எனும் போது – 3 செட் அட்டைப்படத் தயாரிப்புகள் ; இமயத்தில் ஏறுவதை ஒத்த அச்சுப் பணிகள் ; ஹார்ட்கவர் ஆல்பங்களைத் திறந்தவுடன் எதிர்படும் அடர்வண்ணத்திலான தாட்கள் ; அப்புறம் சிலபல நகாசு வேலைகள் என்று தயாரிப்பின் சுமை, செம மிரட்டலாகவே உள்ளது ! அப்புறம் “Cinebook-ல் நம்ம XIII-ஐப் பார்த்தப்போ கண்ணுக்குக் கீழான கருவளையம் இவ்ளோ ஜாஸ்தியாக இல்லையே…?" என்ற ரேஞ்சுக்கு இதனை நண்பர்கள் அங்குலம் அங்குலமாய் அலசக் காத்துள்ளார்கள் எனும் போது – அந்த எதிர்பார்ப்புகளுக்கு ஈடுதரும் சக்தியும் ; துளியூண்டு குறை கண்ணில்பட்டால்கூட மொத்தமாய் Surf Excel கம்பெனியின் உற்பத்திகளை இங்கு திசைதிருப்பிடும் அவசியம் ஏற்படக்கூடுமென்ற ஞானமும் – எனது பேஸ்மெண்ட் நடனத்துக்கு ஜதி சொல்லி வருகின்றன ! ஆண்டவன் காப்பாராக !!! 


ஆனால் நானிந்தத் தருணத்தில் நமது DTP அணியின் பங்களிப்பைச் சிலாகிக்காது போனால் – நண்பர் XIII-ன் அம்னீஷியா எனக்குமே தொற்றி விட்டதாகத்தான் அர்த்தமாகிடும் ! ராக்கூத்தின் பலனாக – லார்கோவின் மொழிபெயர்ப்பை பேப்பரில் கொஞ்சமும் வாய்ஸ் ரெக்கார்டரில் கொஞ்சமுமாய் அனுப்பி வைத்தால் ; அடுத்த 2 மணி நேரத்திற்குகள் நான் அனுப்பிய சகலத்தையும் போட்டுத் தாக்கி பிரிண்ட்-அவுட்களை எடுத்துத் தயாராக வைத்திருப்பார்கள் ! “இரத்தப் படலம் அவசரம் ; இல்லே… இல்லே… ‘மேக் & ஜாக்‘ முடிச்சாகணும் ; no...அதை வச்சிட்டு ட்யுராங்கோவைப் பாருங்கம்மா…;ஙே… கலர் டெக்ஸ் இணைப்பு அவசரமாச்சே… அதை முடிச்சிடுங்க” என்று கள் குடித்த குரங்காட்டம் நான் எதை எதையாவது சொல்லிக் குழப்பி வைத்தாலும் – துளியும் அசராது அத்தனைக்கும் ஈடு தரும் பொறுமைசாலிகள் ! காத்திருக்கும் 4 வாரங்களுக்குள் இரத்தப் படலம் மொத்தத்தையும் ரெடி செய்து – அச்சுக்குக் கொண்டு போகும் தயார் நிலையில் வைத்திருக்க, மே துவக்கத்தை deadline ஆகக்கொண்டு பணி செய்து வருகிறோம் ! ஜுனில் அச்சு & பைண்டிங் ; ஜுலையில் பிரதிகள் well in advance தயாராக இருந்திட வேண்டும் என்றெல்லாம் கனவு கண்டு வருகிறேன் ! ஆனால் அதற்கு மத்தியில் ஒரு லட்சம் கூத்துக்கள் காத்திருப்பது நிச்சயம் எனும் போது, கனவுகள் மெய்ப்பட ஏகமாய் பெரும் தேவன் மணிடோவை வேண்டி நிற்கிறேன்.


“இத்தனை வாய் பேசுறான்...ஆனாக்கா டைனமைட் ஸ்பெஷல்” பற்றி வாய் திறக்கிறானா பாரேன் ; கல்லுளிமங்கன் !" என்ற மைண்ட்வாய்ஸ் கேட்கத் தான் செய்கிறது! ஆனால் – இம்முறையோ கடைசித் தருணம் வரை பெவிகால் சட்டிக்குள் வாயை மட்டுமன்றி, மொத்தமாய் மண்டையையே அமிழ்த்தி வைத்திருப்பதெனத் தீர்மானித்துள்ளேன் ! ”இரத்தப் படலம்” மறு-மறு பதிப்பே எனும் போது – இதழின் making-ஐ ரசிப்பதைத் தாண்டி, புதிதாய் அங்கே ஏதுமிருக்கப் போவதில்லை தான் ! So அதனுடன் அதிரச் செய்யக் காத்திருக்கும் டெக்ஸின் 70-வது பிறந்த நாள் மலரிலாவது இயன்றளவிற்குக் கொஞ்சம் சஸ்பென்ஸைக் கொணரலாமே என்று நினைத்தேன் ! So இதழைக் கையில் ஏந்தும் கணம் வரை – என்ன கதை? எத்தனை பக்கங்கள் ? இத்யாதிகளெல்லாமே under wraps இருந்து விட்டுப் போகட்டுமே?
அதிரடி இதழ்கள் பற்றிய topic-ல் இருக்கும் போது – கூப்பிடு தொலைவிலுள்ள “கோடை மலர் 18” பற்றியும் ! மீசையும்… தாடியும்…வழுக்கையும்…தொப்பையும் நம்மோடு பயணிப்பது சகஜமாகி விட்ட போதிலும், மனதளவில் நம்மில் பலர் இன்னும் பச்சாக்களே என்பதற்கு – இந்தக் “கோடை மலர்” என்ற வார்த்தைகள் உருவாக்கிடும் தாக்கத்தை உதாரணமாகச் சொல்லிடலாம் ! 30 ஆண்டுகளுக்கு முன்பாக முற்றிலும் வேறானதொரு உலகத்தில், பள்ளி விடுமுறைகளை மனதில் நிறுத்தி நாமடித்த குண்டுபுக்குக் கூத்துக்கள், நம்மில் பலருக்கும் இன்றளவும் பசுமை நினைவுகளாய்த் தொடர்வது கண்கூடு ! கவலைகளற்ற அந்த நாட்களை உங்களோடு சேர்ந்து அசைபோடும் வேளைகளில், எனக்குமே மனது இலகுவாகி விடுகிறதை மறுப்பதிற்கில்லை ! அப்போதெல்லாம் ஓராண்டு அட்டவணை…ஒரு மாமாங்கத்துத் திட்டமிடல் என்பதெல்லாம் வீசம்படிக்குக் கூடக் கிடையாது! காலையில் கட்டிலிலிருந்து வலப்பக்கமாய்  இறங்கினால் – ஆர்ச்சி கதை அடுத்த மாதத்திற்கு ; இடப்பக்கம் இறங்க நேரிட்டால் ஸ்பைடர் கதை என்பதே அப்போதைய ”விஞ்ஞானபூர்வமான தேர்வு வழிமுறைகள்”! ஒரு நீள சைஸ் பைண்டிங் செய்யப்பட்ட கோடு போட்ட கட்டுரை நோட்புக்கை என் மேஜையில் அடித்தட்டில் வைத்திருப்பேன் ! அதை எடுத்து, புதிதாய் ஒரு பக்கத்தைப் புரட்டும் கணத்தில் – மனதில் நிழலாடும் முதல் நாயகரே தொடரும் மாதத்து slot-ஐ ஆக்ரமிப்பது வழக்கம். 

ஆனால் ஏப்ரல் – மே மாதங்கள் நெருங்கி விட்டால் ஒட்டுமொத்தமாய் ஸ்பைடர் & ஆர்ச்சி மேனியா ஆட்கொள்ளத் துவங்கி விடும் ! ‘ஈஈஈஈஈஈ….‘யென்று இளிக்கும் ஒரு ஸ்பைடர் பெயிண்டிங்கை, சடுதியாய்ப் போட்டு வாங்கி விட்டு – அவரோடு பக்கவாத்தியம் வாசிக்கும் உருப்படிகளாக யாரைப் போடுவதென்ற யோசனையில் ஈடுபடுவது வழக்கம். அந்த நாட்களையெல்லாம் நினைவு கூர்ந்திடும் போது ‘பளிச்‘ சென்று முன்நிற்கும் ஒற்றைச் சிந்தனையானது – “என்ன மாதிரியான carefree நாட்களவை?” என்பதே !! ஒரு நூறு எழுத்துப் பிழைகளை அன்றைக்கு அனுமதித்திருப்போம் ; நயமான நியூஸ்பிரிண்டில் – வைக்கோல் கலரில் தான் இதழ்களின் பெரும்பான்மை அமைந்திருக்கும் ; பைண்டிங்கிலும் இந்தப் பக்கம் மேலே – மறுபக்கம் கீழே என்று கோக்குமாக்காக பணி செய்திருப்பார்கள்; கதைகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம் – நேர்கோட்டு – சுலபக் களங்கள் ; பல தருணங்களில் இலவச இணைப்பாய் ஒரு லோடு புய்ப்பங்களோடு ! ஆனால் இவை சகலத்தின் பிற்பாடுமே அன்றைக்கு பரிசாய் ஒரு நூறு போஸ்ட்கார்டுகள் கிட்டிடும் – “ஆஹா… ஓஹோ…” என்ற சிலாகிப்புகளோடு ! 20,000 பிரதிகள் ; maybe 20,000+ வாசகர்கள் என்ற போதிலும், அன்றைக்கு சகலமுமே ஒரு சந்தோஷப் பொழுதுபோக்காக மாத்திரமே பார்க்கப்பட்டது ! “அட… படிக்கப் போகிறோம்! பிடித்தால் மறுக்காவும் படிக்கப் போகிறோம்… நெருடினால் தாண்டிப் போகப் போகிறோம்” என்றிருந்தன அந்நாட்களது சிந்தனைகள் ! ‘இங்னக்குள்ளே நெருடுதோ ? எப்டினாலும்  இங்கே நெருடாமல் போகாதே ?‘ என்ற ஷெர்லக் ஹோம்ஸ் கண்ணோட்டங்கள் அன்றைக்குக் கிடையாது தானே ? Maybe இன்றைய விமர்சனப் பாணிகளும், பாங்குகளும் அப்போதே நிலவியிருப்பின் சத்தியமாய் அத்தனை அந்தர்பல்டிக்கள் அடிக்கும் “தெகிரியம்” எனக்கு அந்நாட்களில் வந்திருக்கவே செய்யாது ! So ”கோடை மலர்”களோடு நான் நேசமாய் நினைவு கூர்ந்து கொள்வது அந்தக் தளைகளில்லா நாட்களையுமே ! 

ஆனால் அந்த நாட்களுக்கும், வயதுகளுக்கும் அது சரிப்பட்டது ; maybe இன்றைக்குமே அதே சுதந்திரம் நிலவின் ”சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல்“ களாய்ப் போட்டுத் தாக்கி உங்களையெல்லாம் ஒருவழியாக்கியிருப்பேன் என்பதுமே வாஸ்தவமே ! இன்றைய விமர்சனப் பார்வைகள் எங்களுள் ஏகமாய் கவனங்களை விதைப்பதோடு – ஒட்டுமொத்தப் பணிகளுக்குமே ஒருவிதச் சவால்தன்மையை நல்குவதை உணர்கிறேன் ! விமர்சனங்களுக்கு இடம்தராது செயல்பட்டிட வேண்டுமென்ற உத்வேகம் ஒரு பக்கம் ; வியப்பில் உங்கள் புருவங்களை உயரச் செய்திட எவ்வளவு மெனக்கெட்டாலுமே தப்பில்லை என்ற எண்ணங்கள் மறுபக்கமென இன்றைய பொழுதுகள் ஓடுகின்றன ! ஏழு கழுதை வயதான இத்தருணத்தில், சவால்களில்லா பணிகள், நெய்யில்லாத பணியாரம் போலவே வசீகரமற்றுத் தோற்றமளிப்பதும் இந்த யுகத்தின் மகிமையே ! So சுதந்திர சுவாசத்தின் சுகந்தம் ஒரு தினுசெனில் ; மைக்ரோஸ்கோப்பின் ஆராய்வுப் பார்வையிலும் சாத்தியப்படும் சாகசங்களின்  த்ரில் இன்னொரு பக்கம் ! Moving with the times...!


துலுக்கப்பட்டியில் துவங்கி, துபாய் வரைப் பயணமாகி விட்டேன் என்பதால் அப்படியே ஒரு யு-டர்ன் போட்டு, ஆரம்பித்த இடத்துக்கே திரும்பி விடுகிறேனே…?! 2017-ன் ஆரம்பமே அதகளமாகிப் போக பெருமளவு உதவிய ட்யுராங்கோ தான் காத்திருக்கும் மே மாதத்து கோடை மலரின் நாயகன் ! “மௌனமாயொரு இடிமுழக்கம்” தொடரின் ஆல்பங்கள் # 5, 6 & 7. கிட்டத்தட்ட 15 மாத இடைவெளிக்குப் பின்பாய் மனுஷன் களமிறங்கியிருந்தாலும் – துளி கூடத் தொய்வின்றி அவரோடு சாகஸங்களில் ஐக்கியமாகிட முடிகிறது ! And இந்த ஆல்பம் வெளியாகி, நீங்கள் படிக்கும் போதே நிச்சயமாய் ஒரு விஷயம் உங்கள் கவனங்களை ஈர்க்காது போகாது என்றுபடுகிறது ! அதுதான் – நாயகருக்குக் கதையின் ஓட்டத்தோடு கதாசிரியர் நல்கியிருக்கும் பரிணாம வளர்ச்சி ! சித்திரங்களிலும் சரி, கதையில் ட்யுராங்கோவின் பங்களிப்புகளிலும் சரி – ஒரு striking improvement தென்படுகிறது ! கதைகள் ஒவ்வொன்றுமே தனியாகப் படித்து ரசித்திடும் பாணியிலேயே அமைக்கப்பட்டிருந்தாலும் – முந்தைய பாகத்திலிருந்து மெல்லிய நூலொன்றை தொடர்ந்திடும் யுக்திகளும் கையாளப்பட்டுள்ளன ! So “சத்தமின்றி யுத்தம் செய்” இதழை ஒருவாட்டி எடுத்து அந்த இறுதிப் பாகத்தை லேசாகப் புரட்டிய கையோடு இந்தத் தொகுப்பினுள் புகுந்தால் இன்னும் அட்டகாசமாக ரசிக்குமென்பேன்! இங்கே சன்னமாய் உங்களது ஒத்தாசை தேவை guys - சின்னதொரு முன்கதைச் சுருக்கம் என்ற ரூபத்தில் ! 2 பக்கங்களுக்குள் அடங்கிடும் வகையில் crisp ஆகவொரு “ட்யுராங்கோ – இது வரை” ரெடி செய்து அனுப்பினீர்களெனில், சங்கச் செயலர் எனக்கு வெட்டவிருக்கும் Rs.40,000 மாலில் ஒரு பாதியை… ஆங்… மூணில் ஒரு பங்கை…. ம்ம்ம்ம்…. கால் வாசியையாவது…. சரி...சரி...….ஒரு கணிசமான இக்ளியூண்டையாவது உங்கள் பெயரில் fixed டெபாசிட்டாகப் போட்டு விடுவேன் ! ஒரு வார அவகாசத்துக்குள் முடியுமா guys ?


அதே போல – ட்யுராங்கோ பற்றி ஒரு கேள்வியுமே ! தொடரவிருக்கும் 2019-ல் இவரது சாகஸங்களை one shot சிங்கிள் ஆல்பங்களாக வெளியிட்டால் எவ்விதமிருக்கும் என்பீர்கள் ? ஒரே தொகுப்பாய் இதுவரையிலும் ரசித்து வந்திருக்கும் மனுஷனை – ஆண்டுக்கு 3 one shots என்றால் எவ்விதம் பார்த்திடுவீர்கள்? Just a random thought......!
சரி – ஒரு மௌன கௌ-பாயிலிருந்து அடுத்ததாய் நாம் தாவவிருப்பது – நமது அதகளக் கௌ-பாய் டெக்ஸ் பக்கமாய் ! ஏப்ரலில் TEX வெளியீடாக “காலனின் கானகம்” இதழினை அறிவித்திருந்தது நீங்கள் அறிந்ததே ! ஆனால்… ஆனால்… ஆனால்… இந்தக் கதைக்குள் புகுந்து, பணியாற்றி, வெளியேறினால், என் முகமெல்லாம் வெளுத்துப் போனது தான் மிச்சமாகயிருந்தது ! அற்புதமான artwork; அட்டகாசமான கதை ஆரம்பம்…டெக்சின் இன்னொரு 110 பக்க ஹிட் ! என்று குறியீடுகள் சகலமுமே பிரகாசமாய்த் தான் ஒளிர்ந்தன ! ஆனால் போறேன்…போறேன்… டெக்ஸோடு கானகத்துக்குள் போறேன்…சுடறேன்….சுடறேன்….சுடறேன்… அப்பாலிக்கா “சுபம்” போட்டு விட்டுக் கிளம்பறேன்… கிளம்பறேன் ! இந்தக் கதை more of a visual treat என்பதையும், சித்திரங்களை நாளெல்லாம் ரசித்துக் கொண்டேயிருக்கலாம் என்பதையும் புரிந்து கொள்ள முடிந்தது ! ஆனால் நாம் எதிர்பார்த்திடும் அந்த TEX டிரேட்மார்க் இங்கே குறைவு என்பதும் புரிந்தது ! So இதை வெளியிட்டு, விமர்சனங்களை நாமே வரவழைத்தது போலாக வேண்டாமேயென்று தீர்மானித்து – ‘காலனின் கானகத்தை‘த் தற்காகலிகமாவது ஒத்திப் போடுகிறோம் ! 

அதன் இடத்தில் “பவளச் சிலை மர்மம்” வண்ண TEX மறுபதிப்பு இடம்பிடித்திடவுள்ளது இம்மாதத்து கூரியர் டப்பாவுக்குள் ! Sorry guys – ஆனால் இரவுக் கழுகாருக்கென நம் மனங்களில் நாம் எழுப்பி வைத்துள்ள கோட்டைகளை – மத்திமமான எனது கதைத் தேர்வுகளின் பொருட்டு கோட்டைவிட என் மனம் ஒப்பவில்லை ! அட்டவணையில் இந்த ரூ.65/- ஸ்லாட்டை நிச்சயமாய் வேறொரு TEX அதிரடியைக் கொண்டு நிரப்பிடுவோம் ! And “காலனின் கானகம்” maybe ஏதேனும் புத்தக விழாக்களின் வெளியீடாக அமைத்துக் கொள்வது பற்றியும் யோசிக்கலாம் !  எத்தனை தான் கண்ணில் நல்லெண்ணெய்… விளக்கெண்ணெய்… என்றெல்லாம் விட்டுக் கொண்டு கதைத் தேர்வுகளைச் செய்திட முயன்றாலும் – இது போன்ற சொதப்பல்களைத் தவிர்ப்பது சிரமமாகவே இருந்து வருகிறது! மோவாயைத் தடவும் படங்கள் ஒரு டஜன்! And இதோ - "பவளச் சிலை மர்மத்தின்" வண்ண preview ! 33 ஆண்டுகளுக்கு முந்தையதொரு ஜூலையில் ஒரிஜினலாய் வெளியான இதழிது எனும் போது, எனக்கு கதை சுத்தமாய் நினைவில் நிற்கவே இல்லை ! So ஒரு பரபரப்பான ஆக்ஷன்   த்ரில்லரை புதுசாய் ரசித்த உணர்வே கிட்டியது ! வண்ணத்தில் மின்னுவதைப் பாருங்களேன் ? 
And இம்மாதத்து கூரியர் டப்பாவினுள் “கலர் டெக்ஸ்” இணைப்பும் இடம்பிடிக்குமென்ற சேதியோடு நான் கிளம்புகிறேன் ! So இம்மாதத்து இதழ்கள் சகலமுமே முழு வண்ணத்தில் தான் ; no black & whites at all !! இதற்கு முன்னரும் இது போல் மாதங்கள் ஏதேனும் அமைந்துள்ளனவா என்று நினைவில்லை ! உங்களுக்கு நினைவுள்ளதா folks ? 

தகிக்கத் தொடங்கி விடும் கோடைக்கு இதமாய் நமது first ever அதிரடியான 1986 கோடை மலரை எடுத்துப் புரட்டப் போகிறேன் நான் ! உங்களிடமும் அந்த இதழ் இருக்கும் பட்சத்தில் – சேர்ந்தே பயணித்துப் பார்ப்போமா – அதன் பக்கங்களினூடே?!
Bye all! See you around! Have a lovely weekend !

Thursday, March 22, 2018

வெண்டைக்காய்ப் பார்ட்டிகளா நீங்கள் ?

நண்பர்களே,

வணக்கம். பு.வி.யின் பொருட்டு சீரியஸும், ஜாலியுமாய்ப் பின்னூட்டங்கள் ஓடி வரும் இந்த கணத்தில் - இன்றைய பொழுதை ஈஸ்ட் டவுனில் நம்மவர் XIII -உடன் கழித்தேன்! Oh yes - "இரத்தப் படலம் - பாகம் 1-ன் உள்ளே மேலோட்டமாய்ப் புகுந்தவனுக்கு அதனை முழுவதுமாய் மேயாது விட மனம் ஒப்பவில்லை ! 32 ஆண்டுகளுக்கு முன்பாய் இந்தத் தொடரானது    இத்தனை பெரிய அடையாளத்தை நம் மத்தியில் விட்டுச் செல்ல வல்லது என்பதைக் கிஞ்சித்தும் அறியாதவனாய் இதனுள் நீச்சல் அடித்த நாட்களை இப்போது நினைத்துப் பார்க்கும் போது லேசான 'கெக்கே பிக்கே' தான் தோன்றுகிறது ! இன்றைய க்ரீன் மேனர்களும் ; நிஜங்களின் நிசப்தங்களும், அண்டர்டேக்கர்களும் நமது (காமிக்ஸ்) புரிதல்களை நிறையவே உசத்தி விட்டிருப்பது யதார்த்தம் ! ஆனால் அன்றைக்கோ - எனக்கு பரக்கப் பறக்க முழிக்க மட்டுமே தோன்றியது - இந்தக் கதைக்களத்தின் தன்மையைப் பார்த்து !  சம்மர் கிராப் அடித்த ஏதோவொரு ஜேம்ஸ் பாண்ட் பாணி ஹீரோ போலும் ;  செம fight சீன்ஸ் உள்ளன ; படங்களும் பிரமாதம் ; நிச்சயம் ஹிட் அடிக்குமென்ற யூகத்தில் திரிந்தவனுக்கு XIII தந்த அனுபவம் ஆயுளுக்கும் மறக்கவியலா ஒன்று ! இன்றைக்கும், இத்தனை காலத்துக்கும் பின்பாய் இந்த மனுஷன் இப்படியொரு தாக்கத்தை நம்முள் கொணர்கிறாரெனில் - திரைக்கதையின் வலிமைக்கு ஒரு மெகா சல்யூட் அடிப்பதைத் தாண்டி வேறென்ன செய்வது ?

எனக்கும் நமது நண்பர் XIII -க்கும் இதில் ஒத்துப் போகிறதோ இல்லியோ - அந்த ஞாபக மறதி விஷயத்தில் மட்டும் செமையாக ஒத்துப் போகும் ! So கதையின் முதல் பாகத்தினுள் புகுந்திடும் போது - முக்கிய கணங்கள் மட்டுமே நினைவில் தங்கி நிற்க, பாக்கி சகலமும் ரொம்பவே பிரெஷ்ஷாகத் தென்பட்டன! So என்னைப் போலவே இன்னும் நிறைய 'வெண்டக்காய்ப் பார்ட்டிகள்' நம்மிடையே இருக்கும் பட்சத்தில்  -காத்திருக்கும் XIII - The Collection ஒரு அசாத்திய வெற்றியைக் காணக் கூடுமென்பேன்! டப்ஸா விடாது சொல்லுங்களேன் பார்க்கலாம் - உங்களில் எத்தனை பேருக்கு இன்னமும் "இரத்தப் படலம்" முழுமையாய் நினைவில் உள்ளதென்று ? கோட்டை அழிச்சிடுங்க...முதல்லேருந்து பரோட்டா சாப்பிடலாம் !! 

அப்புறம் ஏப்ரலின் சந்தா C சார்பாய்க் களமிறங்கும் (புது) சிக் பில் & கோ.வின் அட்டைப்பட முதல்பார்வை இதோ ! As in recent times - ஒரிஜினல் ராப்பரே ; மெலிதான மெருகூட்டல்களோடு ! And உட்பக்கத்துப் preview -ம் கீழே உள்ளது !


Before I sign off, உங்களின் ஞாபகத் திறனுக்கு இன்னுமுமொரு சோதனை ! நமது recent ஆன சிலபல ஆண்டுகளுக்குள் இன்னொரு கதையிலுமே ஒரு பசு மாட்டுக்கென சீன்கள் சில இருந்தன ! எந்த இதழ் அது  ? அந்தப் பசுவின் பெயரென்ன ? சொல்லுங்கண்ணே - பிட் அடிக்காமல் ? 

Bye all !! See you around !

Sunday, March 18, 2018

உச்சமும், மிச்சமும்...!

நண்பர்களே,

வணக்கம். அன்பு நிறைந்த வாழ்த்துக்களும், TOP 3 / BOTTOM 3 என்ற பட்டியல்களும் ஒன்றிணைய -  ஒரே நாளில் மந்திர எண் 300-ஐ தொட்டுப் பிடித்திடுவது சாத்தியமாகியிருப்பதால் - இதோவொரு உ.ப. !! கடந்த மூன்று பதிவுகளிலுமே காலம் கற்றுத் தந்துள்ள சில பாடங்களை அமல்படுத்த முனைந்து வருகிறேன் ! And ரசனை ; தேர்வு ; ஹீரோக்கள் சார்ந்த பதிவுகளாய் அவை மூன்றுமே அமைந்து போனது ஒரு சந்தோஷத் தற்செயலோ / திட்டமிட்ட நற்செயலோ - நண்பர்கள் பலரும் மௌனங்களைக் களைய முன்வந்திருப்பது அழகான பலன் என்பேன்   ! 

சந்தாக்களின்றி நம் பயணமில்லை என்று மூச்சுக்கு முன்னூறு தபா ஒப்பிப்பது பற்றாது - உங்களுக்கு மெய்யாகவே என்ன வேண்டுமென்ற தேடலுக்கும் மெனக்கெட்டிட வேண்டும் என்ற ஞானோதயம் எனக்குள் அழுந்த எழுந்தது இந்த பிப்ரவரி & மார்ச் மாதங்களின் துவக்கங்களிலேயே ! ஜனவரியில் தோர்கல் ஹார்டகவர் ; நிஜங்கள் நிசப்தம் கி.நா ; டெக்சின் "கணவாய் யுத்தம்" இத்யாதி என அதகளப் பந்திவிரிக்க, எல்லோருக்கும் ஏதேனும் கிடைத்த திருப்தி தென்பட்டது ! ஆனால் come பிப்ரவரி & மார்ச் - 'ரின்டின் கேனா ? smurf-ஆ ? ஜில் ஜோர்டானா ? என்ற நெளிதல்கள் தலைகாட்டிய போதுதான் நெருடல் துவங்கியது எனக்கு ! Not that it hasn't happened before - ஆனால் இம்முறை அது கவனத்தைக் கோரும் விதமாய் அடுத்தடுத்த மாதங்களில், ஒருசேர அமைந்து போனதே வேறுபாடோ - என்னவோ ?!  அதற்காக கார்ட்டூன் அணி ஒட்டுமொத்தமாய் ஜார்கண்ட் பக்கமாய் தேசாந்திரம் கிளம்பிடும் என்றெல்லாம் சொல்ல மாட்டேன் ; இருப்போரில் மறுவாய்ப்புக்கு யார் அருகதை கொண்டுள்ளார்களென்று பரிசீலனை செய்வோம் ; அப்புறமாய் புதுசாய் (கார்ட்டூன்) தொடர்களை முயற்சிப்போம் (மேக் & ஜாக் போல) ! அவர்களுள் யாரேனும் தேறாமலா போய் விடுவார்கள் ? 

Make no mistake - ரின்டின்னோ ; நீலக் குட்டிப்பசங்களோ ; ஜில்லாரோ நமது சான்றிதழ்களால் குறைந்தோ-உயர்ந்தோ போகக் காத்திருக்கும் புதுமுகங்களல்ல !! ஒவ்வொருவரும் சில பல இலட்சம் விற்பனை ; வர்ணனை கண்டுள்ள சாதித்த நாயகர்களே ! So நமது thumbs down அவர்களது படைப்புகள் மீதானதொரு விமர்சனமாகிட இயலாது தான் ! அதே சமயம் - ரசனை எனும் அளவுகோல்கள் ஆளாளுக்கு மாறுபடும் போது - "இது எனக்கு லயிக்கலை !!" என்று உரிமையோடு சொல்லும் நண்பர்களிடமும் தவறில்லை என்பதும் புரிகிறது ! So நம்மளவுக்கு யாரை விசனமின்றி ரசிக்க இயல்கிறதோ - அவர்களோடே குடித்தனம் நடத்துவோமே என்று தோன்றுகிறது ! End of the day - உங்களின் சந்தோஷங்கள் தானே நமது இலக்கே ? 

Oh yes - 2019-ல் நிறைய கல்தாக்கள் on the cards என்பதில் சந்தேகமில்லை !! ஆனால் ஒரு  நாயகர் ஒரு potential கல்தாவிலிருந்து தப்பவும் செய்திருப்பதும் உங்கள் புண்ணியத்திலேயே  !

நமது நரைமீசை ஷெல்டன் புத்தகவிழா விற்பனைகளில் அவ்வளவாய் கம்பு சுத்திய பாடைக் காணோம் என்பதால் அடுத்த வருஷத்தில் அவரை ஓரம் கட்டினால் தேவலை என்றொரு எண்ணம் எனக்குள் துளிர்விட்டிருந்தது நிஜமே ! ஆனால் இங்கே உங்களின் பெரும்பான்மையின் TOP 3-க்குள் மனுஷன் குத்துக்கல்லாட்டம் இருப்பதைப் பார்த்த கணமே அவரது லேட்டஸ்ட் ஆல்பத்தினை வரவழைத்து மொழிபெயர்ப்பிற்கும் அனுப்பியாச்சு ! So உங்கள் மௌனக் கலைவுகளின் முதல் வெற்றி இதுவென்பேன் !
அதே சமயம் உங்கள் அபிப்பிராயங்களை ஓரளவுக்கு அறிந்த பிற்பாடுமே,  இணைதடத்திலேயே வண்டி ஓட்டுவதும் தொடர்ந்திடவே போகிறது ! எப்படி என்று கேட்கிறீர்களா ?

உங்களின் Bottom 3 பட்டியலைப் பார்க்கும் போது நிறைய கார்ட்டூன் கோஷ்டிகளும் ; ஜெரெமியாவும் ; டைலன் டாகும், மேஜிக் விண்டும் இடம்பிடித்திருப்பது புரிகிறது ! அவர்களுள் ஜெரெமியா நீங்கலாய் மற்ற அனைவருக்குமே நிறைய வாய்ப்புகள் தந்துள்ளோம் என்பதால் - அவர்கள் சார்ந்ததொரு தீர்மானம் எடுத்திட முகாந்திரங்களாவது உண்டு ! But  ஜெரெமியா ஒரே ஆல்பத்தோடு பரண் செல்வது பொருத்தமாயிராது என்பதே எனது gutfeel ! ஒத்துக் கொள்கிறேன் - முதல் தொகுப்பின் கதைகள் தேம்ஸ் நதிக்குத் தீ வைத்திடவில்லை தான் ; அட...தேம்ஸ் வரைப் போவானேன் - நம்மூர் தட்டான் ஊரணியைக் கூட அவை பற்றியெரிய செய்யவில்லை தான் !  ஆனால் ஹெர்மன் எனும் ஜாம்பவானின் portfolio-வில் ஒரு பிரதான இடம்பிடிக்கும் தொடருக்கு இன்னொரு வாய்ப்புத் தராது மறுக்க மனம் ஒப்பவில்லை ! Maybe அடுத்த 3 ஆல்பங்கள் இணைந்த இரண்டாம் தொகுப்பிலுமே, சொதப்பல் தான் பலனாகிப் போயின் - இருக்கவே இருக்கு நமது விசாலப் பரண் !! என்ன ஒரே வித்தியாசம் - ஜெரெமியா-2 தலையில் திணிப்பாய் இருந்திடாது ! இஷ்டப்பட்டால் வாங்கிடலாம் என்ற சுதந்திரம் அங்கிருக்கும் ! அது எப்படி ? என்கிறீர்களா - சீக்கிரமே விடை கிட்டும் ! 
Before I sign off - முந்தைய பதிவில் கேட்ட அதே கேள்விகளை இங்கேயும் copy paste செய்கிறேன் - இன்னமும் அவற்றிற்கு பதில் சொல்லியிரா நண்பர்களின் பொருட்டு ! Let's keep it going guys !!

And  அன்பால் நனைத்த நண்பர்கள் சகலருக்கும், சார்ந்தோருக்கும் உளமார்ந்த நன்றிகள் !! Bye for now !! 
-----------------------------------------------------------------------------------------------------------
கேள்விகளோ கேள்விகள் - பதிவிலிருந்து : 

ரசனை”; “நாயகர்களின் தரவரிசைகள்” என்று சீரியஸாக கடந்த 2 வாரங்களைக் கடந்திருக்க – அதன் தொடர்ச்சியாய் எனக்குள் எழுந்து நின்ற கேள்விகளை கேட்பதோடு பதிவைத் துவங்கிட நினைக்கிறேன் ! தற்போது நம்மிடையே active ஆக உள்ள நாயகர்களுள் யாருக்கு எந்த க்ளாசில் டிக்கெட் வழங்குவது ? என்பது பற்றி வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டீர்கள் ! இப்போது நான் கோருவது - நமது 2012 -ன் மறுவருகைக்குப் பின்பாய் அறிமுகம் கண்டுள்ள நாயக / நாயகியருள் - TOP  1 - 2 -3 என்ற இடங்களை யாருக்கு வழங்குவீர்களென்பதையே ! Please note : டெக்ஸ் வில்லர் ; டைகர் ; மாயாவி ; பிரின்ஸ் போல ஏற்கனவே சுற்றி வந்து கொண்டிருந்த & தற்போதும் சுற்றி வந்து கொண்டிருக்கும் நாயகர்களை ஆட்டத்துக்கே சேர்த்திட வேண்டாமே ? முற்றிலும் புதுசாய் இந்த 6+ ஆண்டுகளில் நம்மிடையே உலாவத் துவங்கியுள்ளவர்களில், உங்களின் TOP 3 தேர்வுகளைச் சொல்லுங்களேன் ? 

இதோ - உங்கள் வசதிக்காக - இந்த 74 மாதங்களில் நாம் பார்த்திருக்கும் புதியவர்களின் லிஸ்ட் : (விடுதல்கள் இருப்பின் சொல்லுங்களேன் !!)
  1. லார்கோ வின்ச்
  2. வெய்ன் ஷெல்டன் 
  3. டேஞ்சர் டயபாலிக்
  4. கமான்சே 
  5. ஸ்டீல்பாடி ஷெர்லாக் 
  6. ஜில் ஜோர்டன் 
  7. மேஜிக் விண்ட்
  8. டைலன் டாக்
  9. ஜூலியா 
  10. ரின்டின் கேன்
  11. பௌன்சர் 
  12. ஜேசன் ப்ரைஸ்
  13. அண்டர்டேக்கர்
  14. ஜெரெமியா
  15. டிடெக்டிவ் ஜெரோம் 
  16. ப்ளூ கோட் பட்டாளம்
  17. கர்னல் கிளிப்டன்
  18. SMURFS 
  19. பென்னி 
  20. லியனார்டோ 
  21. தோர்கல் 
  22. லேடி S
  23. ட்யுராங்கோ

நானிதைக் கோரிட "சும்மாக்காச்சும்" என்பதைத் தாண்டியொரு காரணமுள்ளது ! ஒரு நாயகரை / நாயகியை அறிமுகம் செய்திடுவது சுலபம் ; அவர்களது தொடர்கள் உங்களது ஈர்ப்பைத் தக்க வைப்பது தான் கடினம் என்பதை நடைமுறையில் பார்த்து வருகிறேன் ! Very clearly - அந்நாட்களைப் போல யாரைக் கொணர்ந்தாலும் ரசிக்கும் வயதிலோ, ரசனை விளிம்புகளிலோ நாமிப்போது இல்லை ! So இனி வரும் நாட்களில் ஒரு புதியவரை கையைப் பிடித்து நம்பக்கமாய் இழுத்து வரும் முன்பாய் ஒன்றுக்கு நாலு தடவை நான் யோசிக்கத் தேவைப்படுமென்பது புரிகிறது ! So உங்களது பட்டியலில் பரவலாய் உசக்கே இருப்பது யார் ? என்று தெரிந்து கொள்வது எனக்கு நிச்சயம் உதவும் என்றெண்ணுகிறேன் ! So please do pick your Top 3 !

கேள்வி # 2 : TOP 3 யாரென்று அடையாளம் காட்டி விட்டு - "உப்மா 3 ' யாரென்று சொல்லாது போவது முறையாகாதே ? So இந்தப் புதியவர்கள் பட்டியலுள் உங்களது Bottom 3 யாரென்பதையும் சொல்லி விடுங்களேன் ? அவ்வப்போது வனவாசம் போகும் நாயகர்கள் சில காலத்து கடும் உறக்கத்துக்குப் பின்பாய் நம்மிடையே புனர்ஜென்மம் எடுப்பது உண்டெனும் போது  - யாரை தொடர் உறக்கத்திலேயே ஆழ்த்திடல் நலமென்று தெரிந்து வைத்திருப்பதும் தேவலாம் தானே ? 


கேள்வி # 3 : Comeback ஸ்பெஷல் துவக்கம், இப்போது வரை சுமார் 230 இதழ்கள் வெளிவந்திருக்கும் என்பது ஒரு மொட்டைக் கணக்கு ! சட்டென்று உங்களை நினைவு கூர்ந்திடச் சொன்னால் இவற்றுள் மனதுக்கு வரும் முதல் 3 இதழ்கள் எவையாக இருக்குமோ ? 'டப்'பென்று பதில் ப்ளீஸ் ? No ஆழ்ந்த சிந்தனைஸ் !!  உங்கள் மனக்கண்ணில் அவை இடம்பிடிக்க காரணம் எதுவென்பதல்ல முக்கியம் இங்கே  ! கதையின் பொருட்டோ ; தயாரிப்பின் பொருட்டோ ; சேகரிப்பின் பொருட்டோ - எதன் காரணமாய் அவை உங்கள்  மனதுகளில்  நிழலாடினாலும் பரவாயில்லை - just let us know please !

"ஆங்...ஒண்ணுமே நினைவில்லியே கண்ணு ....மச மசன்னு என்னமோ கலர் கலரா மட்டுமே மண்டையிலே ஓடுது.....அப்பாலிக்கா ஒண்ணுமே நிக்கலியே  !!" என்று பதிலளிக்கும்  அணியாக இருப்பினும் no issues (?!!!) இதற்கான பதிலை -  "Only மச மச " என்று சொன்னாலும் போதும் ! 

கேள்வி # 4 : இந்த 230-க்கு முந்தைய சுமார் 500 + இதழ்களை தேடித் திரிந்து, பழைய பேப்பர் கடைகளுக்கு படையெடுக்கும் அலாவுதீன் கில்ஜிக்கள் சொற்பமாகவேணும் இன்னமும் உண்டென்பதில் ஐயமில்லை ! எனது கேள்வியானது : தற்போதைய இந்த 230 + இதழ்களுள் நீங்கள் தேடித் திரியும் out of print ஆல்பங்கள் எவையேனும் உண்டா ? என்பதே ! அலாவுதீன் கில்ஜி ரேஞ்சுக்கு இறங்கிப் படையெடுக்காவிடினும், நம்ம ஸ்டீல் பாடி ஷெர்லாக் ரேஞ்சுக்காச்சும் எந்த இதழையாவது தேட முற்படுகிறீர்களா ? 

கேள்வி # 5 : அந்தக் காலம் போல வருமா ?" என்பது நமக்கெல்லாம் ஏதேதோ விதங்களில் பிடித்தமான டயலாக்கே !! "சூடா பஜ்ஜி சாப்பிட்டுக்கிட்டே படிச்ச இதழ்" ; "10 கிலோமீட்டர் சைக்கிள் மிதிச்சுப் போய் வாங்கிட்டு வந்த புக்கு" ; "பைக்குள்ளாற மறைச்சு வய்சு ஸ்கூலிலே படிச்ச இதழ் " என்று ஏதேதோ காரணங்களின்  பொருட்டு நமக்கு வாஞ்சையான இதழ்களை பத்திரப்படுத்தி, அவ்வப்போது மறுவாசிப்புப் போடும் பழக்கம் நிறைய பேருக்கு இருக்கலாம் ! அல்ல எனது இப்போதைய வினவில் !! நான் கேட்பதெல்லாம் - "இந்த நடப்பு bunch -ல் ; அதாவது இந்த 230 + இதழ்களுள் மறுவாசிப்புக்கென உங்களைத் தூண்டியுள்ள இதழ்களின் பட்டியல் ப்ளீஸ் ? இங்கேயுமே ஒரு FIRST 3 என்று இருந்தால் போதும் !!

"அக்காங்...முதவாட்டி படிக்கவே நேரத்தை காணோம்...இதிலே மறுக்காவா  ?? சும்மா போவியா ?"  என்ற பதில் கொண்டுள்ள அணியா நீங்கள் ? No worries - உங்கள் பதிலை : "No மறுக்கா !!" என்று போட்டாலும் போதும் ! 

Last Question : நமது சட்டித் தலையன் ஆர்ச்சியிடன் அந்தக் கால இயந்திரத்தை ஆட்டையைப் போட்ட கையோடு, குடு குடுவென்று காலத்தில் முன்னோக்கிச் செல்வது மட்டும் சாத்தியமாகின் - இன்றிலிருந்து இன்னுமொரு 5 ஆண்டுகள் கழித்து நாமெல்லாம் எப்படியிருப்போம் / எங்கிருப்போமென்று கண்கூடாய்ப் பார்த்திடவே செய்யலாம் ! இன்னும் டாலடிக்கும் மண்டையோடும், காது வரை நீளும் வாயோடும் நான் சுற்றித் திரிவேன் என்ற மட்டில் நிச்சயம் ! ஆனால் நம்மிடம்  ஒரு கால இயந்திரம் இல்லை எனும் போது - கற்பனை + ஆழ்சிந்தனை   என்ற இரண்டையும் கொண்டு - 2023 -ல் நமது காமிக்ஸ் ரசனைகள் ; வாசிப்புகள் ; தேர்வுகள் எவ்விதமிருக்கக் கூடுமென்று யூகித்துத் தான் சொல்லுங்களேன் - ப்ளீஸ் ? இன்றைக்கொரு 10 ஆண்டுகளுக்கு முன்பாய் ஒரு பௌன்சரை நம்மிடையே கனவில் கூட உருவாக்கப்படுத்தியிருக்க இயலாது தானே ? ஒரு லார்கோ பாணிக்  கதையை நாம் ஆர்வத்தோடு ஏற்றிருப்போமென்ற யூகங்கள் தான் இருந்திருக்க முடியுமா ? So ரசனைகளில் நிகழ்ந்திடும் மாற்றங்கள் ஓசையின்றி நம்மிடையே படர்ந்துள்ளன ! 5 years down the line - அந்த ரசனை மாற்றங்கள் எவ்விதம் இருக்கக் கூடுமென்ற யூகங்கள் ? Please note : இதுவொரு ஜாலியான / சிரத்தையான யூகமாய் மாத்திரமே இருந்திடட்டுமே  !!
-----------------------------------------------------------------------------------------------------------
காத்திருக்கும் LADY S-ன்பிரிவியூ ! 

Saturday, March 17, 2018

கேள்விகளோ கேள்விகள் !!

நண்பர்களே,


வணக்கம். இருட்டாய், ஒரு நீளமான டப்பி போலொரு உருவமாம்  ; அதற்குள்ளேயோ ஒரு முன்னூற்றிச் சில்லறை ஜனங்களாம் ; அத்தனை பேரும் குந்திக் கொண்டே ஏதேதோ ஒரு லோகத்தில் சஞ்சாரம் செய்ய, அந்த டப்பியோ 'ஜொய்ங்கென்று' 35000 அடி உசரத்துக்கு பறந்து சென்று  ஒட்டுமொத்தப் பேரையும் கண்டம் விட்டு கண்டம் இட்டுச் செல்லுமாம் ஒரு 18 மணி நேரத்துக்கு ! Welcome to பிட்டத்தைப் பதம் பார்க்கும் அமெரிக்காவுக்கொரு விமானப் பயணம் ! Oh yes – பஞ்சாப் நேஷனல் வங்கி போல் யாராவதொரு பரோபகாரியின் சகாயமாவது எனக்கும் கிட்டியிருப்பின், இதே பயணத்தை நானுமே சொகுசாய், கட்டையைக் கிடத்தியபடிக்கே மேற்கொண்டிருக்க முடியும் தான்; ஆனால் இங்கேயொரு புது நாலு சக்கர வண்டி வாங்கும் கிரயத்தை பிசுனஸ் க்ளாஸ் டிக்கெட்டுக்குக் கூசாமல் கேட்பதால் “நான் குந்திக்கினே பிரயாணம் பண்ணிக்கிறேங்க சார்!” என்போரின் கட்சியிலேயே ஆயுட்கால உறுப்பினராகி விட்டேன் !  நமது மிஷினரி இறக்குமதி பணியின் பொருட்டு திடுதிப்பென ஒரு பயணம் அவசியமாக, சிக்கிய ரெண்டு ஸ்வெட்டர்களை மட்டும் மூட்டை கட்டிக் கொண்டு புறப்பட வேண்டிப் போனது! சாமத்தில் மூன்று மணிக்கு விமானம் கிளம்ப, சற்றைக்கெல்லாம் லைட்களை அணைத்து விட்டு ‘தூங்குங்க மக்கா!‘ என்று சொல்லாமல் சொல்லிட, ஆளாளுக்கு இஷ்டப்பட்ட கனவுகளுக்குள் புகுந்து விட்டனர்! ஆனால் எனக்கோ குறுக்கு ஒரு பக்கம் நோவெடுக்க, பிட்டம் இன்னொரு பக்கம் பின்னியெடுக்க, சுற்றுமுற்றும் பார்வையைச் சுழல விட்டேன்! மூணாவது வரிசையில் அமர்ந்திருந்தவரின் முன்னிருந்த தம்மாத்துண்டு டி.வி.யில் விஜய் சேதுபதி செம குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்தார்! சைடிலோ – தெலுங்குப் படம் மாதிரி ஏதோவொரு காரசாரமான ஐட்டம் ஓடிக் கொண்டிருந்தது. முன்வரிசையிலிருந்தவரோ ஏகாந்தமாய் குறட்டை விடத் தொடங்கியிருக்க, எனக்குப் பொறாமையாக இருந்தது – 'எப்படிங்காணும் கண்ணை மூடின நொடியே துபாய்க்குப் போய்விட முடிகிறது – உறக்கத்தில் ??' என்று ! சரி, நாம தான் தூங்கினாலுமே, கண்ணு ரெண்டுமே பாதி திறந்திருக்கிற மாதிரியே இருக்குமே – குழப்பத்தில் தூக்க தேவதை நம்மளை பை-பாஸ் செய்து போயிருப்பதில் வியப்பில்லை தான் ! என்று எனக்கு நானே சமாதானம் சொல்லிக் கொண்டு flight mode–ல் கிடந்த என் செல்போனை எடுத்து உருட்ட ஆரம்பித்தேன். கடைசியாக நமது வலைப்பக்கத்தில் எட்டிப் பார்த்த போது வாசித்திருக்க முடிந்திராப் பின்னூட்டங்களை சாவகாசமாய் படித்துக் கொண்டேயிருந்த போது – ‘அட… இதுக்கு இப்படிப் பதில் சொல்லியிருக்கலாமோ? – அதுக்கு அப்படி reply பண்ணியிருக்கலாமோ?‘ என்ற ஞானோதயங்கள் மாறி மாறி மின்னலடித்தன! ஒரே பக்கமாய் சப்பணமிட்டிருந்ததில் கால் சேலாக மரத்துப் போயிருக்க லேசாக நடக்கலாமே என்றபடிக்கு இருட்டுக்குள் மெதுவாய் நடைபோட்டேன்! நடுவாக்கிலிருந்த pantry பகுதியினுள் இரண்டு ஏர் ஹோஸ்டஸ் பெண்மணிகள் ஜாலியாகக் கதை பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது! “வண்டியிலே ஏறினவுடனேயே குடிக்க ஜுஸ் இத்யாதிகள் தான் தந்தோம்லே – அதுக்குள்ளாற பசிச்சிடுச்சா?" என்பது போல அவர்களுள் ஒருவர் லுக்கு விட, அடுத்தவரோ – ஓரத்திலிருந்த சிறு திண்டை சுட்டிக் காட்டினார். ரெண்டு டிரேக்களில் பிஸ்கட்களும், வேர்கடலை பாக்கெட்டுகளும் பரப்பியிருக்க, பக்கத்தில் ஜுஸ் டப்பிகளும், பெப்ஸி, கோக் ஐட்டங்களும் இருப்பது தெரிந்தது. ‘அடடே முழிச்சிருக்கிறதிலே இப்டிக்கா சலுகையா?‘ என்றபடிக்கே ரெண்டு பிஸ்கட்டையும், கொஞ்சம் தக்காளி ஜுஸையும் ஊற்றிக் கொண்டு என் இடத்துக்குத் திரும்புவதற்குள் பார்த்தால் – ‘அய்… என்னமோ சாப்பிட இருக்குதுடோய்‘" என்று ஒரு எட்டுப் பத்து பேர் எழுந்து pantry பக்கமாய் திபு திபுவென்று வேக நடை போடுவது தெரிந்தது! இலவசங்கள் மீதான நமது அளப்பரிய காதலை ஆகச் சரியாகக் கணித்து வைத்ததன் பலனாய்த் தான் அந்த வேளையிலுமே  பிஸ்க்கெட்டுகளை ரெடியாக  தட்டில்  போட்டு வைத்திருந்தார்கள் போலும் என்பதை உணர்ந்த கணமே - அந்த அம்மணிகள் தீர்க்கதரிசனத்துக்கு லேசான ஏப்பத்துடன் ஒரு 'ஜே' போட்டு வைத்தேன் !!  சரி…. நம்மைப் போன்ற ராக்கோழிகளுக்குப் பஞ்சம் இல்லை போலும் என்றபடிக்கே ஜன்னல் மூடிகளை லேசாக மேலே ஏற்றி விட்டு வெளியே எட்டிப் பார்த்தேன்! கும்மிருட்டு; காரிருள்; இருள் போர்வை என்று சொல்வோமே – அது ஒட்டுமொத்தமாய் கலவையாக்கியது போல ஒரு அடர்கறுப்பு ! ‘ச்சை… இரயில்லே; பஸ்சிலேனாக்கா – ஜன்னல் வெளியே ஏதாச்சும் பராக்குப் பார்த்திட்டிருக்கலாம்‘ என்று தோன்றியது!' அத்தனை பேரும் ஒரு மாதிரியாய் தூக்கத்தில் லயித்துக் கிடக்க, எனக்கோ படம் பார்க்கவும் பிடிக்கவில்லை! மறுக்கா போய் ஜூஸ் ரொப்ப முனைந்தால் - "இவன் குடுத்த காசை ஜூஸ்லேயும், பிஸ்கெட்லேயுமே கழிச்சிடறே தீர்மானத்திலே  வந்திருப்பானோ ?" என்று அம்மணிகள் நினைத்திடக் கூடுமே என்ற சங்கோஜம் !! சரி.... விமானத்திலுள்ள பொழுதுபோக்கு திரையில் செஸ் ஆடிப் பார்ப்போமே - என்று அந்த கேமை தேடித் பிடித்து ஆரம்பித்தால், அதற்கான ரிமோட்டில் பட்டன்கள் ஒவ்வொன்றும் நாயடி-பேயடி வாங்கியிருப்பது தெரிந்தது ! குதிரையை நகற்ற முயல்வதற்கு பாகுபலியே வந்தால் தான் ஆச்சு போல என்றபடிக்கு ஒவ்வொரு பட்டனோடும் மல்யுத்தம் செய்து அலுத்துப் போக  அதை அணைத்துவிட்டு மறுபடியும் மண்டையைப் பிறாண்ட ஆரம்பித்தேன் !! "ஆஹா...… சனியிரவு எழுத வேண்டிய பதிவை ஒரு நாலைந்து நாள் அட்வான்ஸாக பண்ணி விடலாமே !" என்று தோன்றிட, சத்தமில்லாமல் என் பைக்குள்ளிருந்த நோட்டை  தேடித் துளாவி எடுத்து வைத்துக் கொண்டேன் ! So சில நூறு மக்களின் ஏகாந்த உறக்கத்தின் மத்தியில், உருவான பதிவே இன்றைய அத்தியாயத்தின் ஆரம்பப்  பகுதி !

ரசனை”; “நாயகர்களின் தரவரிசைகள்” என்று சீரியஸாக கடந்த 2 வாரங்களைக் கடந்திருக்க – அதன் தொடர்ச்சியாய் எனக்குள் எழுந்து நின்ற கேள்விகளை கேட்பதோடு பதிவைத் துவங்கிட நினைக்கிறேன் ! தற்போது நம்மிடையே active ஆக உள்ள நாயகர்களுள் யாருக்கு எந்த க்ளாசில் டிக்கெட் வழங்குவது ? என்பது பற்றி வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டீர்கள் ! இப்போது நான் கோருவது - நமது 2012 -ன் மறுவருகைக்குப் பின்பாய் அறிமுகம் கண்டுள்ள நாயக / நாயகியருள் - TOP  1 - 2 -3 என்ற இடங்களை யாருக்கு வழங்குவீர்களென்பதையே ! Please note : டெக்ஸ் வில்லர் ; டைகர் ; மாயாவி ; பிரின்ஸ் போல ஏற்கனவே சுற்றி வந்து கொண்டிருந்த & தற்போதும் சுற்றி வந்து கொண்டிருக்கும் நாயகர்களை ஆட்டத்துக்கே சேர்த்திட வேண்டாமே ? முற்றிலும் புதுசாய் இந்த 6+ ஆண்டுகளில் நம்மிடையே உலாவத் துவங்கியுள்ளவர்களில், உங்களின் TOP 3 தேர்வுகளைச் சொல்லுங்களேன் ? 

இதோ - உங்கள் வசதிக்காக - இந்த 74 மாதங்களில் நாம் பார்த்திருக்கும் புதியவர்களின் லிஸ்ட் : (விடுதல்கள் இருப்பின் சொல்லுங்களேன் !!)
  1. லார்கோ வின்ச்
  2. வெய்ன் ஷெல்டன் 
  3. டேஞ்சர் டயபாலிக்
  4. கமான்சே 
  5. ஸ்டீல்பாடி ஷெர்லாக் 
  6. ஜில் ஜோர்டன் 
  7. மேஜிக் விண்ட்
  8. டைலன் டாக்
  9. ஜூலியா 
  10. ரின்டின் கேன்
  11. பௌன்சர் 
  12. ஜேசன் ப்ரைஸ்
  13. அண்டர்டேக்கர்
  14. ஜெரெமியா
  15. டிடெக்டிவ் ஜெரோம் 
  16. ப்ளூ கோட் பட்டாளம்
  17. கர்னல் கிளிப்டன்
  18. SMURFS 
  19. பென்னி 
  20. லியனார்டோ 
  21. தோர்கல் 
  22. லேடி S
  23. ட்யுராங்கோ

நானிதைக் கோரிட "சும்மாக்காச்சும்" என்பதைத் தாண்டியொரு காரணமுள்ளது ! ஒரு நாயகரை / நாயகியை அறிமுகம் செய்திடுவது சுலபம் ; அவர்களது தொடர்கள் உங்களது ஈர்ப்பைத் தக்க வைப்பது தான் கடினம் என்பதை நடைமுறையில் பார்த்து வருகிறேன் ! Very clearly - அந்நாட்களைப் போல யாரைக் கொணர்ந்தாலும் ரசிக்கும் வயதிலோ, ரசனை விளிம்புகளிலோ நாமிப்போது இல்லை ! So இனி வரும் நாட்களில் ஒரு புதியவரை கையைப் பிடித்து நம்பக்கமாய் இழுத்து வரும் முன்பாய் ஒன்றுக்கு நாலு தடவை நான் யோசிக்கத் தேவைப்படுமென்பது புரிகிறது ! So உங்களது பட்டியலில் பரவலாய் உசக்கே இருப்பது யார் ? என்று தெரிந்து கொள்வது எனக்கு நிச்சயம் உதவும் என்றெண்ணுகிறேன் ! So please do pick your Top 3 !

கேள்வி # 2 : TOP 3 யாரென்று அடையாளம் காட்டி விட்டு - "உப்மா 3 ' யாரென்று சொல்லாது போவது முறையாகாதே ? So இந்தப் புதியவர்கள் பட்டியலுள் உங்களது Bottom 3 யாரென்பதையும் சொல்லி விடுங்களேன் ? அவ்வப்போது வனவாசம் போகும் நாயகர்கள் சில காலத்து கடும் உறக்கத்துக்குப் பின்பாய் நம்மிடையே புனர்ஜென்மம் எடுப்பது உண்டெனும் போது  - யாரை தொடர் உறக்கத்திலேயே ஆழ்த்திடல் நலமென்று தெரிந்து வைத்திருப்பதும் தேவலாம் தானே ? 


கேள்வி # 3 : Comeback ஸ்பெஷல் துவக்கம், இப்போது வரை சுமார் 230 இதழ்கள் வெளிவந்திருக்கும் என்பது ஒரு மொட்டைக் கணக்கு ! சட்டென்று உங்களை நினைவு கூர்ந்திடச் சொன்னால் இவற்றுள் மனதுக்கு வரும் முதல் 3 இதழ்கள் எவையாக இருக்குமோ ? 'டப்'பென்று பதில் ப்ளீஸ் ? No ஆழ்ந்த சிந்தனைஸ் !!  உங்கள் மனக்கண்ணில் அவை இடம்பிடிக்க காரணம் எதுவென்பதல்ல முக்கியம் இங்கே  ! கதையின் பொருட்டோ ; தயாரிப்பின் பொருட்டோ ; சேகரிப்பின் பொருட்டோ - எதன் காரணமாய் அவை உங்கள்  மனதுகளில்  நிழலாடினாலும் பரவாயில்லை - just let us know please !

"ஆங்...ஒண்ணுமே நினைவில்லியே கண்ணு ....மச மசன்னு என்னமோ கலர் கலரா மட்டுமே மண்டையிலே ஓடுது.....அப்பாலிக்கா ஒண்ணுமே நிக்கலியே  !!" என்று பதிலளிக்கும்  அணியாக இருப்பினும் no issues (?!!!) இதற்கான பதிலை -  "Only மச மச " என்று சொன்னாலும் போதும் ! 

கேள்வி # 4 : இந்த 230-க்கு முந்தைய சுமார் 500 + இதழ்களை தேடித் திரிந்து, பழைய பேப்பர் கடைகளுக்கு படையெடுக்கும் அலாவுதீன் கில்ஜிக்கள் சொற்பமாகவேணும் இன்னமும் உண்டென்பதில் ஐயமில்லை ! எனது கேள்வியானது : தற்போதைய இந்த 230 + இதழ்களுள் நீங்கள் தேடித் திரியும் out of print ஆல்பங்கள் எவையேனும் உண்டா ? என்பதே ! அலாவுதீன் கில்ஜி ரேஞ்சுக்கு இறங்கிப் படையெடுக்காவிடினும், நம்ம ஸ்டீல் பாடி ஷெர்லாக் ரேஞ்சுக்காச்சும் எந்த இதழையாவது தேட முற்படுகிறீர்களா ? 

கேள்வி # 5 : அந்தக் காலம் போல வருமா ?" என்பது நமக்கெல்லாம் ஏதேதோ விதங்களில் பிடித்தமான டயலாக்கே !! "சூடா பஜ்ஜி சாப்பிட்டுக்கிட்டே படிச்ச இதழ்" ; "10 கிலோமீட்டர் சைக்கிள் மிதிச்சுப் போய் வாங்கிட்டு வந்த புக்கு" ; "பைக்குள்ளாற மறைச்சு வய்சு ஸ்கூலிலே படிச்ச இதழ் " என்று ஏதேதோ காரணங்களின்  பொருட்டு நமக்கு வாஞ்சையான இதழ்களை பத்திரப்படுத்தி, அவ்வப்போது மறுவாசிப்புப் போடும் பழக்கம் நிறைய பேருக்கு இருக்கலாம் ! அல்ல எனது இப்போதைய வினவில் !! நான் கேட்பதெல்லாம் - "இந்த நடப்பு bunch -ல் ; அதாவது இந்த 230 + இதழ்களுள் மறுவாசிப்புக்கென உங்களைத் தூண்டியுள்ள இதழ்களின் பட்டியல் ப்ளீஸ் ? இங்கேயுமே ஒரு FIRST 3 என்று இருந்தால் போதும் !!

"அக்காங்...முதவாட்டி படிக்கவே நேரத்தை காணோம்...இதிலே மறுக்காவா  ?? சும்மா போவியா ?"  என்ற பதில் கொண்டுள்ள அணியா நீங்கள் ? No worries - உங்கள் பதிலை : "No மறுக்கா !!" என்று போட்டாலும் போதும் ! 

Last Question : நமது சட்டித் தலையன் ஆர்ச்சியிடன் அந்தக் கால இயந்திரத்தை ஆட்டையைப் போட்ட கையோடு, குடு குடுவென்று காலத்தில் முன்னோக்கிச் செல்வது மட்டும் சாத்தியமாகின் - இன்றிலிருந்து இன்னுமொரு 5 ஆண்டுகள் கழித்து நாமெல்லாம் எப்படியிருப்போம் / எங்கிருப்போமென்று கண்கூடாய்ப் பார்த்திடவே செய்யலாம் ! இன்னும் டாலடிக்கும் மண்டையோடும், காது வரை நீளும் வாயோடும் நான் சுற்றித் திரிவேன் என்ற மட்டில் நிச்சயம் ! ஆனால் நம்மிடம்  ஒரு கால இயந்திரம் இல்லை எனும் போது - கற்பனை + ஆழ்சிந்தனை   என்ற இரண்டையும் கொண்டு - 2023 -ல் நமது காமிக்ஸ் ரசனைகள் ; வாசிப்புகள் ; தேர்வுகள் எவ்விதமிருக்கக் கூடுமென்று யூகித்துத் தான் சொல்லுங்களேன் - ப்ளீஸ் ? இன்றைக்கொரு 10 ஆண்டுகளுக்கு முன்பாய் ஒரு பௌன்சரை நம்மிடையே கனவில் கூட உருவாக்கப்படுத்தியிருக்க இயலாது தானே ? ஒரு லார்கோ பாணிக்  கதையை நாம் ஆர்வத்தோடு ஏற்றிருப்போமென்ற யூகங்கள் தான் இருந்திருக்க முடியுமா ? So ரசனைகளில் நிகழ்ந்திடும் மாற்றங்கள் ஓசையின்றி நம்மிடையே படர்ந்துள்ளன ! 5 years down the line - அந்த ரசனை மாற்றங்கள் எவ்விதம் இருக்கக் கூடுமென்ற யூகங்கள் ? Please note : இதுவொரு ஜாலியான / சிரத்தையான யூகமாய் மாத்திரமே இருந்திடட்டுமே  !!

So இந்தக் கேள்விகளோடு நடைமுறைக்கு ஜம்ப் பண்ணுவோமா ? இதோ - ஏப்ரலின் நமது இரவு கழுகாரின் அடுத்த சிங்கிள் ஆல்பத்தின் அட்டைப்பட முதல்பார்வை & உட்பக்க பிரிவியூ !! இம்முறையும் ஒரு சூப்பர் -டூப்பர் சித்திர விருந்து காத்துள்ளது - அட்டகாச இளமையான டெக்ஸோடு !! பாருங்களேன் : 

முன்னட்டை நமது ஓவியரின் கைவண்ணம் ; பின்னட்டை - ஒரிஜினல் ! அடுத்தடுத்து படுக்கை வச ராப்பர் வேண்டாமே என்று எண்ணியதால் - இம்முறை ஒரிஜினலுக்கு பின்சீட் ! 

அப்புறம் "புலன்விசாரணை" மொழிபெயர்ப்புக்  குறித்து மேற்கொண்டும் 4 விண்ணப்பங்கள் !! ஆனால் அவ்வளவு உழைப்பு வியர்த்தமாகிடலில் எனக்கு உடன்பாடில்லை ! So சென்ற பதிவின்படி 3 நண்பர்கள் மட்டுமே களமிறங்கிடுவர் ! திங்கட்கிழமை அனைவரது கைகளிலும் அந்தப் பக்கங்கள் இருந்திடும் !! Good luck !!!

இதோ - லேட்டஸ்ட் முன்பதிவுப் பட்டியல் on the way ! Maybe இதிலும் உங்கள் பெயரைக் காணோமெனில் - திங்கட்கிழமை ஒரு மின்னஞ்சலை மட்டும் தட்டி விடுங்களேன் ப்ளீஸ் ? இன்னமும் பதிவு செய்திருக்கா நண்பர்கள் - அடுத்த list-க்குள் உட்புக முயற்சிக்கலாமே ?





Bye all ! Have a lovely Sunday !!

Sunday, March 11, 2018

ஒரு மதிமுக கேள்வி !!

நண்பர்களே,

வணக்கம். ரொம்ப நாளாகி விட்டதல்லவா - ஒரே நாளில்  பின்னூட்ட எண்ணிக்கை முன்னூறைத் தாண்டி ?  "ஜானி ஒரு கராட்டே வெட்டு வெட்டினார் !" போன்ற வசனங்களைப் படிப்பதை விடவும் - அந்த Load more மூட்டைக்குள் புகுந்து புகுந்து comment களைப் படிப்பது மகா சிரமம் என்பதாலும் ; கம்பெனி விதிகளின்படி 300 ஐத் தாண்டும் போதே உப-பதிவு ஆஜராவது அவசியம் என்பதாலும், here I am !! ஒற்றை நாளில் ஒரு போதி மரத்தைத் தேடிப் பிடித்து புது ஞானத்தை உட்புகுத்திக் கொள்வதெல்லாம் நிஜத்தில் சாத்தியமாகாது என்றாலும், உங்களின் ரசனைகள் சார்ந்த மனம் திறப்புகள் நிறையவே insights வழங்கியுள்ளது என்பேன் !! இதற்காகத் தான் மௌனங்கள் வேண்டாமே guys என்று தொடர்ச்சியாய் பதிவுக்குப் பதிவு கூவி வருகிறேன் ! என்ன தான் உங்கள் நாடிகளை அறிய நான் தலை கீழாய் நின்று தண்ணீர் குடித்தாலுமே - அதுவொரு தேர்ந்த யூகமாய் மட்டும் தானே  இருக்க முடியும் ?! உங்களிடமிருந்தே விடைகள், பதில்கள் பிரவாகமெடுக்கும் போது - என் பணியின் பிணிகள் திடு திடுப்பென்று மட்டுப்பட்டுப் போய் விடுகின்றனவே ? So keep rocking & keep those thoughts flowing all !!

சரி..உப பதிவுக்கு கொஞ்சம் உற்சாகமூட்ட ஏப்ரலின் இன்னொரு அட்டைப்படத்தைக் கண்ணில் காட்டுவோமென்று நினைத்தேன் ! So இதோ நமது மதிமுக அழகி (அதை பிரித்து கட்சிப் பெயராய் வாசித்திட வேண்டாமே - ப்ளீஸ் ?!) தனது ஆல்பம் # 4 சகிதம் நம்மை சந்திக்க வரயிருப்பதன் preview ! சமீபத்தைய பயணிகளின் நீட்சியாய் அதே ஒரிஜினல் டிசைன் ; வர்ணங்களில் மட்டுமே நாத்து டின்கரிங்கோடு ! கதையைப் பொறுத்தவரையிலும் வழக்கமான வான் ஹாம் த்ரில்லர் ; சிலபல மாமூலான templates சகிதம் ! ஆனால் சித்திரங்களும், வர்னகி சேர்க்கைகளும் ஒரு புது உயரத்தில் இந்த ஆல்பத்தில் இருப்பதாய் எனக்குத் தோன்றியது ! And அச்சிலுமே தக தகக்கின்றன உட்பக்கங்கள் ! 
But இந்த யுவதியின் சார்பிலுமே சில வினவல்கள் அத்தியாவசியம் என்று படுகிறது எனக்கு ! LADY S நம் ரசனைகளுள் ஏற்படுத்தியுள்ள தாக்கமானது இரு வெவ்வேறு துருவங்களில் தொலைவில் இருப்பதை உங்களில் எத்தனை பேர் கவனித்தீர்களா - தெரியலை ! நிறைய பேரின் TIER 1-ல் இருக்கிறார் அம்மணி ; இல்லாங்காட்டி நேராக TIER 3-ல் குந்திக் கிடக்கிறார் இன்ன பிற நண்பர்களின் பட்டியல்களில் !! இவரை சிலாகிக்க காரணங்கள் புரிகிறது ; but ஓரம்கட்ட அவசியப்படும் (உங்களின்)  முகாந்திரங்கள் பற்றிப் பேசிடுவோமா ப்ளீஸ் ? தயக்கங்களின்றி, LADY S மீதான உங்கள் பார்வைகளை முன்வைத்திடலாமே ? 

Bye guys !! அப்புறம் - முந்தைய பதிவில் மதியத்துக்கு மேலாய் நீங்களிட்ட பின்னூட்டங்களுள் எனது  பதில் அவசியமாகிடக்கூடியவற்றை இங்கே கொணர்ந்து பதில் போடுகிறேன் கொஞ்ச நேரத்தில் !!