Powered By Blogger

Saturday, March 03, 2018

வரமா ? பாரமா ?

நண்பர்களே,

வணக்கம். மாதத்தின் இரண்டாம் வாரப் பதிவுகள் எப்போதுமே கொஞ்சம் tricky ! புது இதழ்களின் மீது ஒளிவட்டம் லயித்திட வேண்டுமேயென்ற ஆதங்கம்  ; இங்கு அவைசார்ந்த அலசல்கள் நடைபெறும் போது- 'வாங்குவோமா - வேண்டாமா ?' என்ற dilemma-வில் இருந்திடக்கூடிய வாசகர்களுக்கு  தெளிவு கிடைக்குமே என்ற அவா ;  தொடரும் மாதத்து இதழ்கள் பக்கமாய் வண்டியை இப்போதே விட்டால் - too early என்பது போலான உணர்வு - என நிறைய குட்டிக் குட்டியான எண்ணங்கள் தோன்றுவது வழக்கம் ! So என்ன எழுதுவதென்ற பிடுங்கல் பிரதானமாய்த் தோன்றுவதே இந்த இரண்டாம் வாரத்தில் தான் ! ஆனால் இம்முறையோ - கொஞ்ச காலமாகவே எனக்குள் ஓடிவருமொரு சிந்தனையை உங்களோடு பகிர்ந்திட இந்தப் பொழுதே apt என்று படுகிறது ! And இதுவொரு  'படித்தோம்-போயிட்டே இருந்தோம்' ரக ஜாலிப் பதிவல்ல folks ; உங்களின் கவனங்களையும், சிந்தனைகளையும் கோருமொரு பதிவு ! 

துவக்கம் முதலே நமது இதழ்களுக்கென ஒரு அடையாளமாய் அமைந்து போனது நம்மிடமுள்ள variety தான் என்பதில் எனக்கு ஐயங்கள் இருந்ததில்லை ! 

முத்து காமிக்ஸின் துவக்கத்தில் கோலோச்சியவர்கள் மூவர் - மாயாவி ; லாரன்ஸ்-டேவிட் & ஜானி நீரோ என்ற மும்மூர்த்திகள் ! பின்னாளில் ரிப் கிர்பி ; காரிகன் ; சார்லி ; விங் கமாண்டர் ஜார்ஜ் & சிஸ்க்கோ கிட் வரிசையாக ஆஜராகி வந்தனர் ! அதன் மத்தியில் வேதாளர் & மாண்ட்ரேக் & ஜான் சில்வர் அணிவகுப்பில் கலந்து கொண்டனர் ! So 1972-ல் துவங்கிய முத்து காமிக்ஸ் என் பொறுப்பிற்கு வந்து சேர்ந்த 1987 வரையிலான 15+ ஆண்டுகளில், பிரதான நாயகர்களெனப் பட்டியலிட்டால் - 11 big names மட்டுமே தேறும் ! Of course - ஒற்றை சாகசத்தில் அறிமுகமான மாடஸ்டி ; டாக்டர் கில்டெர் ; பிக் பென் போன்ற one shots உண்டு தான் ! ஆனால் அவர்களை சீரியஸான எண்ணிக்கையில் சேர்க்காவிடின் - அந்த 180 மாதப் பயணமானது பெரும்பாலும் 11 நாயகர்களோடே சாத்தியமாகியுள்ளது என்ற உண்மை புரிகிறது. இடையே தாமதங்கள் ; சுணக்கங்கள் என்று ஒரு கணிசமான அவகாசம் ஓடியிருந்ததில் இரகசியமில்லை & மறுபதிப்புகளின் புண்ணியத்தில் மாதங்கள் பல பயணித்திருந்ததிலுமே ஒளிவில்லை ! But எது எப்படியிருப்பினும் ஒரு மித வட்டத்தோடே அத்தனை பெரிய ஈர்ப்பை உருவாக்கிட அன்றைக்கு சாத்தியமாகியிருப்பின் - அது அந்த நாயகர்களின் வலிமைக்கும், அவர்களது கதைக்களங்களுக்குமான testimony என்பது நிச்சயம் ! 

ஆனால் லயன் குடும்பத்து நாயகர் அணிவகுப்பைப் பார்த்தோமென்றால், திருவிழாவில் பஞ்சு மிட்டாய் வாங்க நிற்கும் கூட்டம் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியாதென்பேன் !

மாடஸ்டி ; ஸ்பைடர் ; ஆர்ச்சி ; மீட்போர் ஸ்தாபனம் ; ஜான் மாஸ்டர் ; அதிரடி வீரர் ஹெர்குலஸ் ; லாரன்ஸ்-டேவிட் ; டெக்ஸ் வில்லர் ; இரட்டை வேட்டையார் ; இரும்புக்கை நார்மன் ; மார்ஷல் ; XIII ; சாகச வீரர் ரோஜர் ; கேப்டன் பிரின்ஸ் ; ப்ருனோ பிரேசில் ;  ரிப்போர்ட்டர் ஜானி ; கறுப்புக் கிழவி ; லக்கி லூக் ; சிக் பில் ; அலி பாபா ; அலாவுதீன் ; மதியில்லா மந்திரி ; இத்யாதி - இத்யாதி என முதல் 36 மாதங்களுக்குளாகவே ஒரு மினி பொதுக்கூட்டத்தை நடத்திப் பார்த்திருப்பது புரிகிறது ! இதனை தம்பட்டம் அடிக்கும் நோக்கிலோ, பாணியிலோ நானிங்கு குறிப்பிடவில்லை guys ; ஒரு நிகழ்வை விவரிக்கும் புள்ளி விபரமாக மாத்திரமே சொல்லி வைத்திருக்கிறேன் ! And பின்னாட்களில் நமது இரண்டாம் வருகைக்குப் பின்பாய் கட்சியில் புது உறுப்பினர் சேர்க்கை புது வேகத்தோடு தொடர்ந்துள்ளது - லார்கோ ; ஷெல்டன் ; smurfs ; பென்னி ; க்ளிப்டன் ; ட்யுரங்கோ ; தோர்கல் ; ப்ளூ கோட்ஸ் ; கமான்சே ; Lady S ;  டைலன் டாக் ; மேஜிக் விண்ட் ; ஜூலியா ; ஜில் ஜோர்டான் ; ட்ரெண்ட் ; etc etc என்று ! So ஒரு கணிசமான நாயக வட்டம் என்றைக்குமே நமது அடையாளமாக இருந்து வந்துள்ளனர் என்ற எனது துவக்க வரிகள் சரியாகத் தானே உள்ளன ? 

எனது இப்போதைய கேள்வி ரொம்பவே சிம்பிளானது : 

இந்த variety ஒரு வரமா ? அல்லது பாரமா ? என்பதே !! 

'நல்லாத் தானே போய்க்கிட்டிருந்தது ; ஏனிந்தத்  திடீர் கேள்வி ??" என்று உங்களுக்குத் தோன்றலாம் தான் ; ஆனால் இதுவொரு பொழுது போகா வினவல் அல்ல ! கீழ்க்கண்ட நம்பர்களை சித்தே பரிசீலனை செய்திடுங்களேன் ப்ளீஸ் :
 • ப்ருனோ பிரேசில் - 6 
 • டைலன் டாக் - 9 
 • மேஜிக் விண்ட் - 6  
 • கமான்சே - 18  
 • ஜில் ஜோர்டன் - 13 
 • லியனார்டோ - 4  
 • க்ரீன் மேனர் - 7  
 • CID ராபின்   - 31  
 • மதியிலா மந்திரி - 14  
 • வெய்ன் ஷெல்டன் - 16  
 • லார்கோ - 27  
 • மாடஸ்டி - 9 
 • கிளிப்டன் - 16 
 • டயபாலிக் - 9 

இவையெல்லாமே என்ன நம்பர்கள் என்று யோசிக்கிறீர்களா ?  சென்னைப் புத்தக விழாவில் மேற்படி நாயக / நாயகியர் தத்தம் வரிசைகளில் நம்மிடமுள்ள எல்லா ஆல்பங்களிலுமாய்ச் சேர்த்து ஈட்டியுள்ள sales figures ! உதாரணத்திற்கு ஷெல்டனில் நம்மிடம் 6 ஆல்பங்கள் உள்ளன என்றால் - அந்த ஆறிலும் சேர்த்து 16 பிரதிகளே விற்றுள்ளன என்று எடுத்துக் கொள்ள வேண்டும் ! இந்தியாவின் செல்வச் செழிப்பின் புள்ளிவிபரம் போலவே நமது (முக்கிய) புத்தக விழா விற்பனைகள் இருந்து வருகின்றன! அதாவது இந்தியாவின் மொத்த செழிப்பின் 70 %-ஐ கையில் வைத்திருப்பதோ அதன் 1 % ஜனத்தொகை தான் என்பது போல - நமது மொத்த விற்பனையின் முக்கால் பங்கைப் பொறுப்பேற்று நிற்கும் முதல் நிலை நாயகர்கள் தற்சமயத்துக்கு  இவர்கள் மாத்திரமே :
 • டெக்ஸ் வில்லர் 
 • மாயாவி & குழுவினர்
 • லக்கி லூக் 
 • சிக் பில்
 • பென்னி
 • கேப்டன் டைகர் (மின்னும் மரணம் & இரத்தக் கோட்டை)

அதற்கு அடுத்த நிலையில் நிற்குமொரு அணி - "மோசமில்லை" என்ற ரக விற்பனையினை நல்குபவர்கள் !  ஊர் சுற்றி பார்த்துவிட்டு பத்திரமாய் கிட்டங்கி திரும்பும் அணி # 3 இறுதியாய் ! ஆக இந்த மூன்று பிரிவுகள் இன்றைக்கு clearcut ஆகக் கண்ணில் படுகின்றன - புத்தக விழாக்களின் walk in வாசகர்கள் மத்தியில் !

நமது அடுத்த விற்பனை மார்க்கமான ஆன்லைன் ஸ்டோர் பற்றி அடுத்ததாய்ப் பார்வை ! இங்கேயோ - தேர்வுகளின் பாங்கு ரொம்பவே சிம்பிளாக உள்ளது !! 

* சகல டெக்ஸ் வில்லர் கதைகளும் !
* ரொம்ப selective ஆக கார்ட்டூன்கள் !
* மிகக் குறைச்சலான மறுபதிப்புகள் !

Of course - மாயாவியை ஆதர்ஷத்தோடு ஆலிங்கனம் செய்திடும் திடீர் வாடிக்கையாளர்கள் நிறையவே உண்டு தான் ; ஆனால் வேறெதையுமே அவர்கள் வாங்குவதில்லை என்பதைப் பார்க்கும் போதே - அங்கே தலைதூக்கி நிற்பது அந்த nostalgia factor மாத்திரமே என்பது புரிந்து விடும் ! So அவர்களிடம் வேறு ரசனைகள் பற்றிய தகவல்களை கிரகிக்க சாத்தியப்படுவதில்லை ! 

மூன்றாம் மார்க்கமாம் - ஏஜெண்ட்கள் வாயிலான விற்பனைகளில் அத்தனை தெளிவான stats கிடைக்க மாட்டேன்கிறது ! இங்கேயும் மாயாவி & டெக்ஸ் வில்லருக்கு சிகப்புக் கம்பளம் ! மற்றவர்கள் அங்கொரு மாதிரியும், இங்கொரு மாதிரியும் விற்பனை காண்பதுண்டு ! So ஒரு clear picture இங்கே சிரமமே !! 

நான்காம் மார்க்கமும் - நமக்கு பிராண வாயுவுமான சந்தாக்களின் பக்கமாய் கவனத்தைத் திருப்பும் போது - மேலோட்டமாய் all is well தான் !! சந்தா A + B + C + D என்ற கூட்டணிக்கே 95 % ஆதரவு எனும் போது நான் குதூகலிக்கத் தான் வேண்டும் ! ஆனால் Tier 2 -ல் உள்ள நாயகர்களின் இதழ்கள் வெளியாகும் மாதங்களில் எழும் சிற்சில சலனங்கள் நெருடலை ஏற்படுத்தாது இருப்பதில்லை ! இதோ இம்மாதமே அதற்கொரு அழகான உதாரணம் என்பேன் :

ஜில்லாரின் ஆல்பம் என்னைப் பொறுத்தவரையிலும் பிரமாதமான தேர்வே ; நிறைய பாராட்டுக்களையும் எட்டியுள்ளது தான் ; அதே சமயம் - "அய்யகோ!!" என்ற குரல்களும் உண்டு தானே ?

SMURFS-களை நான் ஆராதிக்கிறேன் ; ஆனால் அவர்கள் தலைகாட்டும் மாதங்களில் - "முடிலே சாமியோவ் !" என்ற கூக்குரல்கள் கேட்பதை நாம் மறுக்க இயலாது தானே ?! 

கமான்சே வெளியாகும் தருணங்களின் ஒரு மந்தகதியும் நாம் பார்த்தவர்களே ! ரின்டின் கேன் & ஜூலியா & கிளிப்டன் & மதியில்லா மந்திரியின் மாதங்களிலும் அதிருப்தி வெளிப்படுவதில் no secrets !!

இவை சகலமுமே ரசனை சார்ந்த விஷயங்களே எனும் போது - ஒரு கதையையோ, தொடரையோ ரசிக்க முடியவில்லை என எழும் குரல்களில் பிழை காண்பது பொருத்தமாகாது தானே ?   அவர்களுக்கு அது பிடிக்கவில்லை - simple as that !!

நான் உங்களிடம் கோருவது இதையே guys :

நம்மிடையே தற்போது நடைமுறையில் உள்ள நாயக / நாயகியரை உங்கள் கண்ணோட்டத்தில் TIER 1 ; TIER 2 & TIER 3 என்று பிரிப்பதாயின் - யாரை எங்கே பொருத்திப் பார்ப்பீர்கள் என்பதே !! 

நமது கிரிக்கெட் அணியினில் கூட இது போன்றதொரு சிஸ்டம் உண்டு ! 'தல' தோணி ; கோஹ்லி ; ரோஹித் சர்மா போன்ற பெரும் புள்ளிகள் டாப் லெவல் பட்டியலில் இருக்க, அவர்களுக்கான சம்பளங்களும், மரியாதைகளும் உச்ச பட்சம். அடுத்த நிலை ஆட்டக்காரர்கள் ; அதற்கப்புறமாய் இன்னொரு pool என்ற பிரிவுகள் அங்கே அமலில் உண்டு தானே ? அதையே நமது நாயகர்களிடம் செய்து பார்ப்போமே ?  

உங்கள் வசதிக்காக - இதோ தற்போதைய நமது ரேடாரில் உள்ளோரின் லிஸ்ட் :
 • லார்கோ
 • ட்யுராங்கோ
 • தோர்கல்
 • LADY S 
 • வெய்ன் ஷெல்டன்
 • ரிப்போர்ட்டர் ஜானி 
 • ஜில் ஜோர்டன் 
 • டெக்ஸ் வில்லர்
 • மர்ம மனிதன் மார்ட்டின்
 • CID ராபின்
 • மாடஸ்டி பிளைசி
 • லக்கி லூக் 
 • ப்ளூ கோட் பட்டாளம்
 • ரின்டின் கேன்
 • சிக் பில்
 • மதியிலா மந்திரி
 • Smurfs 
 • பென்னி
 • கிளிப்டன்
 • மாயாவி
 • CID லாரன்ஸ்-டேவிட்
 • ஜானி நீரோ
 • ஸ்பைடர்
 • சாகச வீரர் ரோஜர்
 • கேப்டன் பிரின்ஸ் 
 • அண்டர்டேக்கர் 
 • XIII 

இந்தப் பட்டியலுக்குள் உள்ளோரை மட்டும் உங்கள் பார்வைகளில் பாகுபடுத்திக் காட்டுங்களேன் guys ! 

"இல்லீங்கோ - எங்களுக்கு டெக்ஸும் ஒன்றே ; ரின்டின் கேனும் ஒன்றே ; காமிக்ஸ் நாயகர்களுக்குள் ஏற்ற / இறக்கங்கள் நஹி !"  என்ற கட்சியைச் சார்ந்தவர்களெனில் - அதையும் குறிப்பிடலாம் !  

Please note - இது விமர்சனங்களுக்கு அப்பாலான ஒரு கருத்து சேகரிப்பு மாத்திரமே ! So அவரவரது தேர்வுகளின் மீது வருத்தங்களோ / விமர்சனங்களோ வேண்டாமே - ப்ளீஸ் ! 

அதே போல  - "வேண்டாம் !" என்ற குரல்கள் ஒலிக்கத் துவங்கிய மறுநொடியே ஒரு தொடர் drop ஆகிடுமென்ற எதிர்பார்ப்புகளும் unrealistic ! ஒவ்வொரு தொடரிலும் நம்மிடம் கையிருப்புள்ள கதைகள் ; அவற்றுள் குறைந்த பட்சம் இத்தனை வெளியிட வேண்டுமென்ற ஒப்பந்த நிபந்தனைகள், நீங்கள் அறிந்திருக்கா விற்பனை சாதனைகள் என்று நிறையவே சமாச்சாரங்கள் இருக்கக்கூடும் ! So "அண்டா காக்கஸூம்...அபூ காக்கஸூம்...மூடிடு சீசேம் !" என்ற மறுநொடியே ஒரு நாயகருக்கோ / தொடருக்கோ மூடுவிழாவென்பது நடைமுறை சாத்தியமாகாது ! 

இன்றைய தகவல் கோரல் ஒரு எதிர்காலத்துத் திட்டமிடலும் உரம் சேர்க்கவே தானன்றி - இன்றே விதைத்து, இன்றே வளர்த்து ; இன்றே அறுவடை செய்து ; இன்றே சமைத்து ; இன்றே தொந்தியை ரொப்பிக் கொள்ளும் பொருட்டல்ல ! 

Variety நமக்கொரு வரமா ? பாரமா ? 

ஆரோக்கியமானதொரு அலசல் சாத்தியமாயின் மகிழ்வேன் ! And மௌனங்களைக் கலைத்திடவும் இதுவொரு அத்தியாவசியத் தருணம் மௌன நண்பர்களே !! Please do chip in !! 
Bye all ...See you around !! Have a lovely weekend !! லார்கோவோடு எனது ஞாயிறு தட தடக்கக் காத்துள்ளது !!

277 comments:

 1. Replies
  1. G P போன கீழயே வெக்க மாட்டீங்ளா.

   Delete
 2. வணக்கம் சார்...
  வணக்கம் நண்பர்களே...

  ReplyDelete
 3. இரவு வணக்கம் சார் மற்றும் நண்பர்களே.

  ReplyDelete
 4. இரவு வணக்கம் நண்பர்களே...!!!

  ReplyDelete
 5. @ஆசிரியர் சார்...

  கேப்டன் டைகரை நீங்கள் கேட்டுள்ள லிஸ்ட்ல காணோம்.

  ReplyDelete
  Replies
  1. அந்தப் பட்டியலின் முதல் வரியைக் கவனியுங்கள் ப்ளீஸ் :

   // தற்போதைய நமது ரேடாரில் உள்ளோரின் லிஸ்ட் ://

   Delete
 6. விஜயன் சார், இந்த பதிவு நிறைய என்னை யோசிக்க வைத்துள்ளது. இரண்டு நாளில் எப்படியாவது எனது கருத்தை சொல்லி விடுகிறேன்:-)

  ReplyDelete
  Replies
  1. அட...பிளஸ் டூ பரீட்சைக்கே பிள்ளைகள் இவ்வளவு மெனெக்கெட்டிராது !!

   Delete
 7. அதிரடியாக விற்பனையாகும் நாயகர்களுடன் சற்று மந்தமாக விற்பனையாகும் நாயகர்களை இணைத்து காம்போவாக வெளியிடும் சாத்தியங்கள் உள்ளதா? கேள்வியில் தவறிருப்பின் மன்னிக்கவும்.

  ReplyDelete
  Replies
  1. கூட்டணி ஆட்சிகள் இனி சாத்தியமாகாது நண்பரே !

   Delete
  2. அருமையான கருத்து.

   Delete
 8. எல்லாம் சரிதான் விஜயன் சார். இந்த மாத புத்தகங்கள் எல்லாம் படிச்சாச்சு. அடுத்த மாத புத்தகங்கள் ஏதாவது ரெடியாகி இருந்தால் கொஞ்சம் அனுப்பி வையுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. மே மாத இதழ்கள் கூட தொடரும் வாரத்தில் தயாராகி விடும் !

   😀

   Delete
  2. விஜயன் சார்
   பேசாம ஒரு வருட புக்கையும்
   மொத்தமா அனுப்புங்களேன்.
   2019ஐ சொன்னேன்.

   Delete
  3. // மே மாத இதழ்கள் கூட தொடரும் வாரத்தில் தயாராகி விடும் .// அருமை சார்,மிக முன்னிலையில் சென்று கொண்டிருப்பது மகிழ்ச்சி.

   Delete
  4. ///மே மாத இதழ்கள் கூட தொடரும் வாரத்தில் தயாராகி விடும்///

   சூப்பர் சார்.!

   Delete
 9. Variety நிச்சயம் நமக்கொரு வரமே ..!
  வெகுசிலர் டெக்ஸ் வில்லர் வேண்டாம் என்பார்கள்., ஓரிருவர் ஸ்மர்ஃப்ஸ், ரின்டின் வேண்டாமென்பர்.! நானோ மாடஸ்டி வேண்டாமென்பேன். ..!
  இதையெல்லாம் பொருட்படுத்தாமல் விற்பனை, பெரும்பான்மையினர் நல்கும் வரவேற்பு .. முக்கியமாக முதலுக்கு மோசமில்லாமல் Variety யாக போட்டுத்தாக்குங்கள் சார்.!

  ஒன்றிரண்டு நாயகர்கள் சிலருக்கு அதிருப்தியை அளிக்க பல காரணங்கள்!? இருக்கலாம்.! அதையெல்லாம் தாண்டி காமிக்ஸ் காதல் நம் அனைவரையும் நல்வழி நடத்தும்.!!

  ReplyDelete
 10. Tier1:-

  டெக்ஸ் வில்லர்,கேப்டன் டைகர், லார்கோ, ஷெல்டன், டியூராங்கோ,சிக்பில், அண்டர்டேக்கர்,XIII,தோர்கல்,கேப்டன் பிரின்ஸ்.

  Tier2:-

  Lady S, ரிப்போட்டர் ஜானி, லக்கி லூக், ப்ளூகோட், ரின் டின் கேன், ஸ்மர்ஃப், பென்னி, க்ளிப்டன்

  Tier3:-

  ஜில் ஜோர்டன், மார்டின்,C.I.D.ராபின், மாடஸ்தி ப்ளைசி, மந்திரி, ஸ்பைடர், இரும்புக்கையார், லாரன்ஸ் & டேவிட், ஜானி நீரோ,ரோஜர்.

  ReplyDelete
  Replies
  1. மனமொத்த பிரிவு, இரண்டு மாற்றம் மட்டுமே. கீழே கமெண்ட் ( தட்டச்சு செய்ததற்கு நன்றி டெக்ஸ்

   Delete
  2. டெக்ஸ் ஜி மார்ட்டின் 1st அல்லது 2nd குரூப்பில் இருக்க வேண்டியவர் ஜி.......

   Delete
  3. ம்ம்....Tier3ல போடும்போதே யோசிச்சேன் யுவா.
   உங்களோடு சேர்த்து மார்டின் ரசிகர்கள் ஓரிருவர் கேட்டாங்க, ஏன் பட்டியல் 3ல்னு.

   புரமோசன் தந்துடலாம்...

   மார்டின் மூவ் டூ Tier2.🍉🍉... ஆனால் நல்லா ஃபெர்பார்ம் கொடுத்த தான் அடுத்த புரமோசன்.

   Delete
 11. வணக்கம், couple of things first.
  1, Reprints of golden era of lion, muthu, Lion mini, Thigil will help us to improve the sales.
  2, Graphic novels are boring to the core, it just kills the fun of reading comics.

  ReplyDelete
  Replies
  1. உங்களிடமுள்ள கேள்விதாள் வேறொரு பரீட்சைக்கு ஆனது சார் !

   Delete
  2. // Reprints of golden era of lion, muthu, Lion mini, Thigil will help us to improve the sales. //
   +1

   Delete
  3. அந்த "golden era " பற்றி நிறைய பேசி விட்டோம் நண்பரே ! இன்றைக்கு அந்நாட்களது பிரதிகளை எடுத்துப் பார்த்தால் - கண்ணில் படுவதெல்லாம் எழுத்துப் பிழைகள் ; மொழியாக்க குளறுபடிகள் & ரொம்பவே சுமாரான தயாரிப்புத் தரங்கள் தான் !

   அன்றைக்கு நிஜமாய் ஜொலித்தது நமது பால்யங்களும், அந்த கவலைகளற்ற நாட்களுமே !! அந்த வயதுக்கு, ரசனைக்கு அன்றைய நமது முயற்சிகள் ஒரு உச்சமாய்த் தெரிந்ததில் பிழையில்லை ; ஆனால் இன்றைக்கும் அதனுள் ஒரு மேஜிக் இருப்பதான எண்ணங்கள் ஒரு பிரமையே ! சின்ன உதாரணம் சொல்கிறேனே : ப்ருனோ பிரேசில் சாகசமான "முகமற்ற கண்கள்" ௧௯௮௭ -ல் தயாரான போது பிரமித்துப் போயிருந்தேன் அந்தக் கதைக்களத்தைப் பார்த்து ! சமீபத்தில் அதனையே வண்ணத்தில் ௨௫ ஆண்டுகளுக்கு அப்பால் மறுபதிப்பிடும் போது சிரிப்பே மேலோங்கியது - கதையின் கற்றுகுட்டித்தனத்தை எண்ணி !!

   இன்றைக்கும் அந்நாட்களின் bests தொடரவே செய்கின்றன - பிரின்ஸ் ஸ்பெஷல் ; டைகர் ஸ்பெஷல் ; ஜானி ஸ்பெஷல் ; சிக் பில் ஸ்பெஷல் ; லக்கி ஸ்பெஷல் என்று !

   So அன்றைய சகலங்களும் பொன் என்று சொல்ல மாட்டேன் ; மினுமினுக்கும் பால்யத்தோடு இணைந்த போது ஜொலிக்கும் effect கிட்டியது !

   Delete
  4. ///மினுமினுக்கும் பால்யத்தோடு இணைந்த போது ஜொலிக்கும் effect கிட்டியது !////---பால்யத்தில் பருகிய நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்...

   Delete
 12. Tier 1

  லக்கி லூக்
  சிக்பில்
  டெக்ஸ் வில்லர்
  ட்யூராங்கோ
  லார்கோ
  வேய்ன் ஷெல்டன்
  ரிப்போர்ட்டர் ஜானி
  தோர்கல்
  XIII

  ReplyDelete
 13. #####
  "இல்லீங்கோ - எங்களுக்கு டெக்ஸும் ஒன்றே ; ரின்டின் கேனும் ஒன்றே ; காமிக்ஸ் நாயகர்களுக்குள் ஏற்ற / இறக்கங்கள் நஹி !" என்ற கட்சியைச் சார்ந்தவர்களெனில் - #####
  This my choice sir..

  ReplyDelete
  Replies
  1. தட் "அம்மையப்பரே உலகம் ; பழம் எனக்கே" moment !!

   Delete
 14. Tier 2

  மார்டின் மிஸ்ட்ரீ
  லேடி S
  ஸ்மர்ஃப்ஸ்
  ப்ளூகோட்ஸ்
  அண்டர்டேக்கர்
  மதியில்லா மந்திரி
  கர்னல் க்ளிப்டன்
  கேப்டன் ப்ரின்ஸ்
  ஜில் ஜோர்டான்
  பென்னி
  CID ராபின்

  ReplyDelete
  Replies
  1. @கிஆக,
   ஸ்மர்ப்ஸ், ப்ளூகோட்ஸ், க்ளிப்டன் போன்றோருக்கு டயர் டூவா? உம்ம டயரை போகி அன்னிக்கு போட்டுக்கொளுத்த.. மனசாட்சி இல்லையா? பிச்சி பிச்சி!

   Delete
  2. ///ஸ்மர்ப்ஸ், ப்ளூகோட்ஸ், க்ளிப்டன் போன்றோருக்கு டயர் டூவா?///

   தப்புதான் சுவாமீ ..! டயர் ஒண்ணுலதான் இவுகள சொல்லியிருக்கோணும்.!

   கூட்டம் ஜாஸ்தியா இருக்குமோன்னு நினைச்சி இங்கன கோர்த்துவிட்டுடேன்.!

   பரிகாரம் பலகாரம் வேண்ணா பண்ணிப்போடுறேனுங் .. இவிகள டயர் ஒண்ணுல என்ற சார்பா ஏதிவிட்ருக ஆதி ..!

   Delete
 15. லார்கோ 1
  ட்யுராங்கோ 2
  தோர்கல் 2
  LADY S 1
  வெய்ன் ஷெல்டன் 1
  ரிப்போர்ட்டர் ஜானி 1
  ஜில் ஜோர்டன் 2
  டெக்ஸ் வில்லர் 1
  மர்ம மனிதன் மார்ட்டின் 1
  CID ராபின் 3
  மாடஸ்டி பிளைசி 2
  லக்கி லூக் 1
  ப்ளூ கோட் பட்டாளம் 1
  ரின்டின் கேன் 2
  சிக் பில் 1
  மதியிலா மந்திரி 2
  Smurfs 1
  பென்னி 1
  கிளிப்டன் 1
  மாயாவி 3
  CID லாரன்ஸ்-டேவிட் 3
  ஜானி நீரோ 3
  ஸ்பைடர் 4
  சாகச வீரர் ரோஜர் 3
  கேப்டன் பிரின்ஸ் 1
  அண்டர்டேக்கர் 1
  XIII 1

  ---

  நீங்க சொன்னமாதிரி..
  1 என்றால் Ac coach
  2 என்றால் SL coach
  3 என்றால் அன்ரிசர்வ்டு உக்கார இடமில்லாம தொத்திகினே போறது
  4 நான் சொல்ல விரும்பவில்லை. :-))))

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் சொல்லாவிட்டாலென்ன - நானே யூகிக்கிறேன் : ௪ என்றால் பாத்ரூமிலேயே டிக்கெட் எடுக்காமல் பயணிப்பதா ?

   Delete
  2. @எடிட்டர்,
   அதே! மூக்கை பொத்திக்குங்க.. :-)))))))))

   Delete
  3. @எடிட்டர்,
   ஒண்ணை விட்டுட்டேன் சார். கையோட கிராபிக் நாவல்களுக்கு பர்ஸ்ட் ஏசி போட்டுக்குங்க!

   Delete
 16. Cowboy genre stories, Thorgal, Largo, Martin, Reprints of lion, muthu comics are the most wanted stories. Cartoons take the next place

  ReplyDelete
 17. "இல்லீங்கோ - எங்களுக்கு டெக்ஸும் ஒன்றே ; ரின்டின் கேனும் ஒன்றே ; காமிக்ஸ் நாயகர்களுக்குள் ஏற்ற / இறக்கங்கள் நஹி !"

  +888 888 8888

  ReplyDelete
  Replies
  1. எட்டு, எட்டா காமிக்ஸ் புக்ஸ்களையும் பிரித்து வைத்து உள்ளீர்களா சார்???

   Delete
 18. Tier 1 A

  கிராபிக் நாவல்ஸ்

  Tier 2 A

  சுட்டி லக்கி
  ஜூலியா கெண்டல்
  டைலன் டாக்

  ReplyDelete
 19. Tier 3

  மாயாவி மாமா
  ஸ்பைடர் சித்தப்பா
  ஜானிநீரோ சகலை
  லாரன்ஸ் பங்காளி

  சாகஜ வீரர் ரோஜர் அண்ணாச்சி


  கடோசியா மாடஸ்டி மாமி ..!

  ReplyDelete
  Replies
  1. @கிஆக,

   மாடஸ்டி மாமியா? நீர் உதை வாங்காம போகப்போறதில்லை இன்னிக்கு!

   Delete
  2. ஆதி ..!

   முதல்ல அப்பத்தா ன்னு எழுதலாம்னு நினைச்சேன் ...ஹிஹி..!

   Delete
 20. Variety வரம் தான் சார் .. இன்னும் கூட புது ஹீரோஸ் சேர்க்கலாம் சார் .. ஆனால் அவர்கள் அனைவரும் அறிந்த heroes ஆக இருந்தால் நன்றாக இருக்கும் .. இந்த வருடம் James bond சேர்த்தது போல .. Superman , batman , avengers இந்த மாதிரி super heroes general ஆக அனைவருக்கும் தெரியும் .. இவை ஏதாவது இருந்தால் நம் list ல் புது வாடிக்கையாளர் களை book fair ல் attract பண்ண easy ஆ இருக்கும் ..

  ReplyDelete
 21. நம்ம காருக்கு 4 சக்கரம் உண்டே.
  Tier 4 .எங்கெ?
  அப்பறம் ஆட்டோவுக்கு 3 சக்கரம் என்ற
  சால்ஜாப்பு கூடாது.
  பற்றாகுறைக்கு ஸ்டெப்னி ( Tier 5)
  அவசியம்.
  இங்கே ஸ்டெப்னிக்கு வேறு அர்த்தம்
  கிடையாது.

  ReplyDelete
 22. Dear Editor,

  This is going to be a straight from the heart and mind answer from me considering your blogs on such things over the past 4-6 months:

  a) Frequently Publish your top 5 (those you listed in RED)
  b) Shut down your 14 that sells less than 20 copies at CBF - which is a good indicator of books purchased en-mass - yeah emotional decision but pragmatic
  c) The remaining titles - give ONE chance a year

  ReplyDelete
 23. எங்களுக்கு டெக்ஸும் ஒன்றே ; ரின்டின் கேனும் ஒன்றே ; காமிக்ஸ் நாயகர்களுக்குள் ஏற்ற / இறக்கங்கள் நஹி !" என்ற கட்சியை சார்ந்தவன் சார் நான்.

  நான் காமிக்ஸ் வெறியன் சார். அதனால் நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாது. எல்லா நாயகர்களும் ஏதாவது ஒருவகையில் எனக்கு பிடித்தவர்கள்.

  ReplyDelete
 24. விஜயன் சார், இந்த கேள்விகளை எல்லாம் பார்த்தால் 2019 காமிக்ஸ் அட்டைவணை ரெடியாகி கொண்டு இருக்கிற மாதிரி தெரியுது.

  ReplyDelete
  Replies
  1. அட்டவணைக்கு இது ரொம்பவே சீக்கிரம் நண்பரே ! இன்னமும் சில புதுமுகங்கள் களம் காண வேண்டியுள்ளன ( ட்ரெண்ட் ; மேக் & ஜாக் ) So அவர்களது performaன்ce ஐ பார்த்திட வேண்டும் ; மந்திரியார் ; ராபின் ; மாடஸ்டி போன்றோரை கவனமாய் கணித்திட வேண்டும் !

   Delete
  2. அட்டவணை பேச்சு இருக்கும் போதே இதையும் ஞாபகப்படுத்தி விடுகிறேன் சார், இந்த ஆண்டு டிசம்பரில் நீங்கள் வெளியிடப்போகும் டெக்ஸ் இடம்பெறும் இதழ் எண்ணம் 99;

   2019 ஜனவரியில் டெக்ஸ் இடம்பெறும் இதழ் 100. அதை மொத புக்கா 2019 டைரியில் எழுதி கொள்ளுங்கள் சார்...

   2014முடிய---61
   2015ல்------02
   2016ல்------12
   2017ல்------10

   மொத்தம்----85

   2018ல் பிளானிங்-

   சந்தா Bல்----07
   சந்தா Dல்----01
   கலர்டெக்ஸ்--06

   மொத்தம்----14

   ஆக மொத்தம்-99/2018டிசம்பரில்...

   Delete
 25. விஜயன் சார், வர வர ரொம்ப சீரியஸ் ஆனா பதிவாக போட்டு தாக்குறீங்க.

  கொஞ்சம் லைட்டா ஜாலியாக ஜம்போ காமிக்ஸ் பற்றி எழுதினால் நல்லா இருக்கும். கொஞ்சம் மனசு வைத்து அதைப்பற்றி வருகிற வாரமாவது எழுதுங்கள்.

  ReplyDelete
 26. //"இல்லீங்கோ - எங்களுக்கு டெக்ஸும் ஒன்றே ; ரின்டின் கேனும் ஒன்றே ; காமிக்ஸ் நாயகர்களுக்குள் ஏற்ற / இறக்கங்கள் நஹி !" என்ற கட்சியைச் சார்ந்தவர்களெனில்//

  நான் இந்த கட்சி சார்... நீங்கள் எந்த கதை வெளியிட்டாலும் படிப்பேன்.

  ReplyDelete
 27. 1. இந்த வருடத்தின் பெஸ்ட்
  ஜெரேம்யா

  2. சிறந்த அறிமுகம்
  ட்யுராங்கோ

  3. இந்த வருடத்தின் சொதப்பல்
  தீபாவளி டெக்ஸ்
  இன்னும் நான் இந்த புத்தகத்தை முழுவதும் படிக்க(முடிய)வில்லை என்பது கொசூறுச் செய்தி.

  4. சிறந்த அட்டைப்படங்கள் டாப் 3
  1. ட்யுராங்கோ
  2. ஜெரேம்யா
  3. இரத்தக்கோட்டை

  5. சுமாரன அட்டைப்படங்கள் பாட்டம் 3
  1. மரணத்தின் நிறம் பச்சை
  2. சில்வர் ஸ்பெஷல்
  3. மிஸ்டரி ஸ்பெஷல்

  6. 2017. ன் சிறந்த தருணம்
  விக்ரம் தம்பியின் கல்யாணத்தில் கலந்து கொண்டது

  7. கிராபிக் நாவல்
  இது வரை நன்றாக உள்ளது. ஆனால் கடைசியாக வந்த கதை என்னை கவரவில்லை.

  8.2017.ன் காமிக்ஸ் அனுபவம்
  சூப்பர்-டூப்பர்

  ReplyDelete
 28. //"இல்லீங்கோ - எங்களுக்கு டெக்ஸும் ஒன்றே ; ரின்டின் கேனும் ஒன்றே ; காமிக்ஸ் நாயகர்களுக்குள் ஏற்ற / இறக்கங்கள் நஹி !" //எனது கருத்து இதுவே சார். என்னை பொறுத்த வரை variety ஒரு வரம் சார். முன்பை விட இப்போது வகைகள் எம்மிடம் கூடுதலாக உள்ளன என்று தோன்றுகின்றது . என்ன முன்பு போல மணி மணியாக கதைகள் இணைந்து கதம்பமாக வருவதில்லை . லயன் -முத்துவின் இருந்து வரும் துண்டு நோட்டீஸ் இனையும் விரும்புகின்றேன் .

  ReplyDelete
 29. Replies
  1. செயலரே..என்ன ஆச்சு..?

   அன்னிக்கு வந்தீங்க..

   அப்புறமா போனீங்க..

   அப்புறம் வரவே இல்லை..

   என்ன ஆச்சு...?!

   Delete
  2. எங்கிட்டாவது கருவாட்டு ககடைக்குள்ள
   பூந்திருப்பாரு.

   Delete
  3. கொஞ்சம் பிஸி தலீவரே! வேளைப்பளுவோடு, கலைத்துறை சார்ந்த விசயங்களும் நேரத்தை ஆக்கிரமிச்சுகிச்சுவிச்சு! வேலைகளை முடிச்சுட்டு சீக்கிரமே இங்ஙனக்குள்ள ஓடி வந்திடுவேன்! அதுவரைக்கும் சங்கத்தைக் கலைக்கிற வேலையில இறங்காம, அடுத்த கட்ட 'ஒற்றே வேப்பிலை' போராட்டத்துக்கு நாள் குறிங்க தலீவரே! போராட்ட களத்துல நீங்க நிக்கிற மிடுக்கைப் பார்த்துட்டு எதிரணித்தலைவர் சந்திரமுகியின் அரண்மனையிலே தனியா மாட்டிக்கிட்டு வெளியேவந்த வடிவேலு மாதிரி அதிர்ச்சியில உறைஞ்சு போயிடணும்! இம்மீடியட்டா ஏற்பாடு பண்ணுங்க தலீவரே!! :)

   Delete

  4. எங்கிட்டாவது கருவாட்டு ககடைக்குள்ள
   பூந்திருப்பாரு

   Delete
 30. Tier1
  Tex
  Xii
  Chikbill
  Lucky like
  Reporter johny
  Spider
  Penny
  Mathiyil la maathiri
  Thorkal

  Tier2
  Shelton
  Largo
  Bluecoat
  Mayavi
  Durango
  Rintincane
  Lady s
  Martin
  Undertaker

  Tier3
  Modesty
  Smurfs
  Jillar
  Roger
  Captain prince  ReplyDelete
 31. அருமையான பதிவு ஆசிரியரே

  ReplyDelete
  Replies
  1. அனைவரது ரசனையையும் நாடி பிடித்துப்பார்க்கும் பதிவு

   Delete
 32. எப்பவுமே Top 1 எப்போதும் ரசிக்கலாம்

  லார்கோ 1
  ட்யுராங்கோ 1
  கேப்டன் பிரின்ஸ் 1
  தோர்கல் 1
  xiii 1
  வெய்ன் ஷெல்டன் 1
  டெக்ஸ் வில்லர் 1
  மர்ம மனிதன் மார்ட்டின் 1
  CID ROBIN 1
  மாடஸ்டி பிளைசி 1
  லக்கி லூக் 1
  அண்டர் டேக்கர் 1

  Top 2. எப்பவாவது ரசிக்கலாம்

  சிக் பில் 2
  மதியில்லா மந்திரி 2
  பென்னி 2
  ரி.ஜானி 2

  Top 3. காலம் கடந்தும் ரசிப்பவர்களுக்கு

  மாயாவி 3
  CID லாரன்ஸ்-டேவிட் 3
  ஜானி நீரோ 3
  ஸ்பைடர் 3
  சாகச வீரர் ரோஜர் 3
  LAdy s 3
  ஜில் ஜோர்டன் 3

  Down 4. ரசிக்கவே சுத்தமாக விருப்பமில்லை

  க்ளிப்டன் 4
  ஸ்மர்ப்ஸ் 4
  ரின்டின்கேன் 4
  ப்ளூகோட் 4

  ReplyDelete
 33. வேட்டையாடு விளையாடு :

  இந்த அழகான குட்டியூண்டு பொடியர்களின் முகபாவங்களையும், இவர்களின் காளான் வீடுகளையும், அந்த கானகத்தையும் ஓவியமாய் ரசிப்பதே அலாதி சுகம்தான்.!

  இந்த நீண்டத்தொடரில்
  ஓரீரு ஸ்மர்ஃப்ஸைத் தவிர மற்ற அனைவரும் ஒரே மாதிரியான தோற்றத்தில் இருந்தாலுமேகூட, அவர்களுக்குள் வித்தியாசத்தை காட்டியிருப்பதில் கதாசிரியர் மற்றும் ஓவியர் வெற்றிப் பெற்றே இருக்கிறார்கள்.!

  இனி கதைக்குள் : நன்னாரிப்பழம் நன்னா புஷ்டியா வளரணுமேன்னு ஊட்டச்சத்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் சீனியர் சொதப்பி வைக்க, அந்த ஊட்டச்சத்தானது கொடூரமான விளைவுகளை தருகிறது. !
  அதை அழித்துவிடும்படி சொல்லியனுப்பும் சீனியரின் கட்டளையை சரிவர நிறைவேற்றாமல் சோம்பேறி ஸ்மர்ஃப்ஸும் சேர்ந்து சொதப்பிவிடுகிறார்கள்.!

  அதனால் சாதுவான ஒரு குட்டிப்பறவை கொடூரமான ராட்சசப் பறவையாக உருமாறி ஸ்மர்ஃப்வில்லாவையே துவம்சம் செய்கிறது. !
  அந்த ஆபத்திலிருந்து தப்பி, அசுரப் பறவையை மீண்டும் எப்படி பழையநிலைக்கு கொண்டு வருகிறார்கள் என்பதை சிரித்து (படித்து) தெரிந்துகொள்ளுங்கள்!

  கதை முழுக்க துண்டு கட்டிக்கொண்டு பேண்ட்டுக்கு அலையும் பொடியனின் வசனங்கள் செம்ம காமெடி.! ஓரிடத்தில் அந்த துண்டுக்கும் ஆபத்து வர, துண்டை மீட்க அவன் படும் பாடு இருக்கே ..ஹாஹாஹா..!! அதேபோல பறவையை மடக்கவேண்டி சீனியர் துண்டை கழட்டித்தரும்படி கேட்கும் போது " இந்த துண்டையும் கழட்டிட்டா, என்னோட மானமும் மத்தவங்களோட கண்ணும் மொத்தமா போயிடுமே சீனியர் "னு புலம்புவது சூப்பர் ரகளை.!

  ஆணி போல்ட்டாகலாம், போல்ட் ஆணியாகலாம். ஏன்னா ரெண்டுமே நீளமா இருக்கும்.! ஆனா போல்ட் எப்படிடா நட்டாகும். நட்டுதான் வட்டமா இருக்குமேன்னு மங்குணிக்கு சீனியர் விளக்கம் சொல்லி புலம்புவது , ஜீனியஸ் ஸ்மர்ஃப் ஒவ்வொருமுறையும் பல்பு வாங்குவது.. சாதூர்யமாக பறவையை வீழ்த்துவது முக்கியமாக அந்த குட்டி உலகின் அழகு என ரசிக்க சிரிக்க ஏராளம் உண்டு.!!

  வேட்டையாடு விளையாடு - வீரமாக நடையைப்போடு.

  காதல் படுத்தும் பாடு :

  நான்கே பக்கங்களில் ஒரு காதல் கலாட்டா.! ஸ்மர்ஃப்பியை வரவேற்க அவரவர் பாணியில் தயாராவது, ஸ்மர்ஃப்பிக்காக நிலவைப் பிடித்துவர பலவழிகளில் முயற்சி செய்வது என படிப்பற்கு நல்லதொரு கலகல காமெடித்தோரணம் இது!

  காதல் படுத்தும் பாடு - காமெடி படுத்தும் பாடு

  ரேட்டிங் 10/10

  ReplyDelete
  Replies
  1. இந்த பொடி மனித உலகைப் படைக்கவும் அசாத்திய கற்பனைத் திறன் வேணும்....

   நம்மையும் குழந்தைகள் போல குதூகலிக்கச் செய்யும் இவற்றை இன்றைய 40வயதுக்கான மனநிலையில் படித்தால் கடுப்படிக்கத்தான் செய்யும்.

   வாழ்க்கையின் பிக்கல் பிடுங்கள்களில் இருந்து சற்றே இளைப்பாற பொடியர்கள், பென்னி, ரின் டின் கேன் அவ்வப்போது தேவை. நாமும் அந்த பொடியர்களாகவே மாறிப்போவது திண்ணம்.

   Delete
 34. காகிதமும் கறுப்பு ஓநாயும் :


  நம்ம ரிப்போர்ட்டர் ஜானியோட கதைக்களங்களை, கொஞ்சம் காமெடி கலந்து கார்ட்டூன்களாக வரைந்தால் ஜில் ஜோர்டான் கிடைத்துவிடுவார் என்று சொல்வது பொருத்தமாக இருக்குமென்று நினைக்கிறேன்.!

  விலாசம் தவறி வந்த மிரட்டல் கடிதத்தை படித்துவிட்டு., சம்மந்தப்பட்ட நபரை எச்சரிக்கச் செல்கிறார் ஜோர்டான்.!

  குறிப்பிட்டதொரு மாடல் கார்கள் தொடர்ந்து திருடப்பட்டு வருகின்றன.!

  மிரட்டப்படும் நபரின் வீட்டில் தரைக்கடியில் காளான் படுக்கை சுரங்கம் இருக்கிறது. !

  அந்த ஊர் பாங்கிற்கு பலமில்லியன் பணம் அந்த சமயத்தில் வந்து சேர்ந்திருக்கிறது.!

  ஊருக்கு வெளியே திடீரென்று ஒரு வெடிமருந்து தொழிற்சாலை தொடங்கப்பட்டு, தடைசெய்யப்பட்ட பகுதி என்ற அறிவிப்புடன் இரவுபகலாக வெடிமருந்து சோதனை நடைபெறுகிறது. !

  இத்தனை சம்பவங்களும் எப்படி ஒரே புள்ளியில் சங்கமிக்கின்றன என்பதை நிறைய த்ரில்லுடனும் கொஞ்சம் காமெடியுடனும் அட்டகாசமாக சொல்லியிருப்பதே கதை.!

  ஜோர்டான் ஒருபுறம் சீரியஸாக துப்பறிய, அஸிஸ்டென்ட் லிபெல்லும், இன்ஸ்பெக்டர் க்ரௌட்டனும் சீரியஸாக காமெடி செய்ய, தனித்தனியாக தெரிந்த சம்பவங்கள் க்ளைமாக்ஸில் ஒன்றிணைய மொத்தத்தில் சுவாரஸ்யமான வாசிப்புக்கு கியாரண்டியான கதை.!

  காகிதமும் கறுப்பு ஓநாயும் - கார்ட்டூனும் டிடெக்டிவும்

  ரேட்டிங் 9/ 10

  ReplyDelete
 35. எனது பார்வையில்:

  Tier1: டெக்ஸ் வில்லர், தோர்கல், லக்கி லூக், சிக் பில், வெய்ன் ஷெல்டன், கேப்டன் பிரின்ஸ், டைகர்

  Tier2: ட்யுராங்கோ, லார்கோ, ரிப்போர்ட்டர் ஜானி, மாடஸ்டி பிளைசி, மர்ம மனிதன் மார்ட்டின், அண்டர்டேக்கர், XIII

  Tier3: CID ராபின், ப்ளூ கோட் பட்டாளம்,மதியிலா மந்திரி, மாயாவி, லாரன்ஸ்-டேவிட், ஜானி நீரோ, ஸ்பைடர்

  Tier4(if there z one):
  LADY S, ஜில் ஜோர்டன், ரின்டின் கேன், Smurfs, பென்னி, கிளிப்டன், சாகச வீரர் ரோஜர், ஜூலியா

  ReplyDelete
 36. தாங்கள் காமிக்ஸ் என்று எதை வெளியிட்டாலும் வாங்கி மகிழ்வேன்

  ReplyDelete
 37. Tier1:-

  டெக்ஸ் வில்லர்,கேப்டன் டைகர், லார்கோ, ஷெல்டன், டியூராங்கோ,சிக்பில், அண்டர்டேக்கர்,XIII,தோர்கல்,கேப்டன் பிரின்ஸ், மாடஸ்தி ப்ளைசி,மார்டின்.

  Tier2:-

  Lady S, ரிப்போட்டர் ஜானி, லக்கி லூக், ப்ளூகோட், ரின் டின் கேன், ஸ்மர்ஃப், பென்னி, க்ளிப்டன்

  Tier3:-

  ஜில் ஜோர்டன், C.I.D.ராபின், மந்திரி, ஸ்பைடர், இரும்புக்கையார், லாரன்ஸ் & டேவிட், ஜானி நீரோ,ரோஜர்

  ReplyDelete
 38. ஆசரியர் அவர்களுக்கு..

  அனைத்து நாயகர்களும் நான் விரும்புகிறேன் ..அனைத்தையும் படித்து ரசிக்கிறேன் என்பது எந்த அளவு உண்மையோ அதே அளவிற்கு இந்த இந்த நாயகர்களின் வருகை தரும் சமயம் ஏற்படும் உணர்வுகளின் மூன்று வகைகளையே உங்கள் பாணியில் கேட்டு உள்ளீர்கள் என நம்புகிறேன் .அதாவது இவர்களின் கதை சாகஸத்தை எதிர்பார்த்து எப்படா வரும் என எதிர்பார்த்து சில சமயம் சுமார் ரகத்தில் அமைந்தாலுமே கூட திரும்ப ஆவலுடன் காத்திருந்து படிக்க வைப்பவர்கள்..இரண்டாவது பிடித்த நாயகர்களே ஆனால் துள்ளி குதிக்க வைப்பவர்கள் அல்ல கதையை பொறுத்து சந்தோச படுத்துபவர்கள் ..படித்து முடித்தவுடன் குதிக்கவும் வைப்பார்கள் ..குப்புற வைக்கவும் வைப்பவர்கள்..மூன்றாம் நாயகர்கள் வருகிறார்கள்..எனவே படிக்கிறோம் என்ற நிலைப்பாடு ..எனவே எனது எண்ணபடி முதலாம் வரிசை ..இரண்டாம் வரிசை..மூன்றாம் வரிசை என்றே வரிசைபடுத்தி விடுகிறேன்.

  ReplyDelete
 39. தாங்கள் காமிக்ஸ் என்று எதை வெளியிட்டாலும் வாங்கி மகிழ்வேன்

  ReplyDelete
 40. முதலாம் வரிசை நாயகர்கள்..

  லார்கோ

  ட்யூராங்கோ

  லேடி s


  ஷெல்டன்


  டெக்ஸ்


  லக்கி


  சிக்பில்


  பென்னி


  பிரின்ஸ்


  அண்டர்டேக்கர்

  ReplyDelete
 41. லார்கோ 1
  ட்யுராங்கோ 1
  தோர்கல் 1
  LADY S 1
  வெய்ன் ஷெல்டன் 1
  ரிப்போர்ட்டர் ஜானி 1
  ஜில் ஜோர்டன் 2
  டெக்ஸ் வில்லர் 2
  மர்ம மனிதன் மார்ட்டின் 2
  CID ராபின் 1
  மாடஸ்டி பிளைசி 4
  லக்கி லூக் 1
  ப்ளூ கோட் பட்டாளம் 4
  ரின்டின் கேன் 3
  சிக் பில் 1
  மதியிலா மந்திரி 1
  smurfs 3
  பென்னி 3
  கிளிப்டன் 3
  மாயாவி 4
  CID லாரன்ஸ்-டேவிட் 4
  ஜானி நீரோ 4
  ஸ்பைடர் 4
  சாகச வீரர் ரோஜர் 3
  கேப்டன் பிரின்ஸ் 1
  அண்டர்டேக்கர் 1
  XIII 1

  ReplyDelete
  Replies
  1. I am subscriber so I do get all books, above I tried to rank it based on which one I will read first, second, etc..

   Delete
 42. இரண்டாம் வரிசை நாயகர்கள்..


  தோர்கல்

  ரிப்போர்ட்டர் ஜானி

  மார்ட்டின்

  ராபின்..

  மாடஸ்தி

  ப்ளூகோட்


  மதியில்லா மந்திரி


  ரோஜர்

  ReplyDelete
 43. மூன்றாம் இடத்தை பிடிப்பவர்கள்


  ரின்டின்

  சமர்ப்

  கிளிம்ப்டன்

  பதிமூன்று ..ஸ்பின் ஆப் படலங்கள்


  மும்மூர்த்திகளை பொறுத்தவரை இதுவரை மறுபதிப்பு காணா இதழ்கள் வந்தால் இரண்டாம் வரிசையிலும் ..மறுமறுபதிப்பாக வரும் பொழுது மட்டும் மூன்றாம் வரிசையிலும் வருகிறார்கள்.

  ReplyDelete
  Replies
  1. இது எனது எண்ண வெளிப்பாடே .அடுத்த வருடம் முதலே கூட நமது இதழ் நாயகர்களின் விற்பனையை பொறுத்தே தாங்கள் நாயகர்களை தேர்ந்தெடுக்கும் முறைகளை கொண்டு வரலாம் சார்..

   Delete
 44. Hai sir.My opinion....


  TIER1:-
  XIII
  டெக்ஸ்
  லார்கோ
  தோர்கல்
  LADY S
  வெய்ன் ஷெல்டன்
  ரிப்போர்ட்டர் ஜானி
  மார்ட்டின்


  TIRE2:-
  கேப்டன் பிரின்ஸ்
  அண்டர்டேக்கர்
  ட்யுராங்கோ
  ஜில் ஜோர்டன்
  மாடஸ்டி பிளைசி
  லக்கி லூக்
  ஜானி நீரோ


  TIRE3:-
  ப்ளூ கோட் பட்டாளம்
  ரின்டின் கேன்
  சிக் பில்
  மதியில்லா மந்திரி
  Smurfs
  பென்னி
  கிளிப்டன்
  மாயாவி
  CID லாரன்ஸ்-டேவிட்
  ஸ்பைடர்
  ரோஜர்
  CID ராபின்

  ReplyDelete
 45. "போஸ்டர் படலம்"

  டியர் எடிட்டர்,

  நீங்கள் நீண்ட நாட்களாக கேட்டுவரும் அந்த முக்கியமான 'விற்பனையை அதிகரிக்கசெயும் மந்திரம் என்ன' என்ற கேள்விக்கு எனக்கு தெரிந்த பதில்.

  1) போஸ்டர் - எனது சிறு வயதில் நான் காமிக்ஸ் வாங்க முக்கிய தூண்டுகோலாக இருந்த்தது, ஒவ்வொரு புத்தகம் வரும் போதும் கடையில் தொங்கும் அந்த பிரமாண்ட அட்டைப்பட போஸ்டர்களே. ஆனால் இப்போது சில(பல?) வருடங்களாக இந்த அட்டைப்பட போஸ்டர்களை நான் கடைகளில் பார்த்ததில்லை. ஆனால் நான் எனது நண்பன் மூலம் கேள்விப்பட்டது, இன்றும் இந்த போஸ்டர்களை நீங்கள் ஏஜெண்டுகளுக்கு அனுப்புவதும் (பளபள ஆர்ட் பேப்பரில் அச்சிட்டு), ஆனால் அதை அவர்கள் கடைகளில் தொங்கவிடாமல் இருப்பதும்.
  ஒரு தொலைபேசி அழைப்பு மட்டும் போதும் உங்கள் ஏஜெண்டுகளை தொடர்பு கொள்ள. சிறிய பேச்சு வார்த்தையில் நீங்கள் உங்கள் ஏஜெண்டுகளிடம் நமது காமிக்ஸ் அட்டைப்பட போஸ்டர்களை கடையில் பார்வையில் தொங்கவிடுமாறு வலியுறுத்தி சொல்லலாம்.
  மேலும் கடைகளின் அருகில் இருக்கும் நமது நண்பர்களும் அந்த கடைகளில் நமது காமிக்ஸ் போஸ்டர்களை தொங்கவிடச்சொல்லி வலியுறுத்தலாம். சந்தாவில் இருந்தாலும், இந்த கடைகளிலும் ஒன்றிரண்டு புத்தகங்களை 'போஸ்டர் பார்த்து வாங்குவதாக' சொல்லலாம்.
  மேலும் எனது நண்பன் கூறியதிலிருந்து (நான் பார்த்ததில்லை) நமது போஸ்டரில் எனக்கு தெரிந்த குறைபாடு என்னவென்றால், ஒரே போஸ்டரில் அந்த மாத வெளியீடுகளின் அனைத்து அட்டைப்படங்களையும் நீங்கள் அச்சிடுவது. இது பார்ப்பவரின் கவனத்தை ஈர்க்காது. எனவே 'WRAPPER OF THE MONTH' என்று நீங்கள் கருதுவதை பெரிதாகவும் மற்றவற்றை சிறிய அளவிலும் அச்சிட்டால் போஸ்டரை பார்ப்பவர்களின் கவனத்தை ஈர்க்கும் என்பது எனது கருத்து.
  (முன்னணி வர இதழ்களே தங்கள் அட்டைப்பட போஸ்டர்களை கடைகளில் தொங்கவிடுகின்றனர். இந்த் போஸ்டர்களே 'புத்தகங்களை வாங்காதவர்களையும் புத்தகம் வாங்க வைக்கும் தூண்டில்').

  நடைமுறை சிக்கல்: நமது நண்பர்களே போஸ்டர்களை தள்ளிக்கொண்டு போகும் அபாயம்.

  2) காமிக்ஸ் திருவிழா - ஒவ்வொரு மாதமும் 10 அல்லது 15 நாட்கள் ஏதாவது ஒரு மாவட்டத்தில் மட்டும் உங்களுக்கு நெருங்கிய ஒன்று அல்லது இரண்டு முகவர்களின் கடையில் 'காமிக்ஸ் திருவிழா' நடத்தலாம். இந்த கடைகளுக்கு மட்டும் அந்த நாட்களில் நமது பழைய வெளியிடுகளை அனுப்பி வைத்து விற்பனை செய்யச்சொல்லலாம் (குறைந்தபட்சமாக 5 % தள்ளுபடி என அறிவித்து). எந்த மாவட்டத்தில் மற்றும் எந்த கடையில் காமிக்ஸ் திருவிழா என்றும் நமது புத்தகங்களிலும் ஒரு மாதம் முன்னராக அறிவிக்கலாம். மேலும் காமிக்ஸ் திருவிழா நடக்கும் மாவட்டத்தில் மட்டும் உள்ள 'FM ரேடியோவில்' விளம்பரமும் செய்யலாம் (அந்த நாட்களுக்கு மட்டும்). FM ரேடியோவின் சத்தம் அண்டை வீட்டையும் அடையும் என்பதால் FM ரேடியோ விளம்பரமே கேபிள் டிவி விளம்பரத்தைவிட சிறந்தது என்பது எனது கருத்து.
  மேலும் CBF மற்றும் EBF -ல் நீங்கள் பயன்படுத்தும் மாயாவி, டெக்ஸ், ஸ்பைடர் கட்டவுட்களையும் இந்த கடைகளின் வாசலில் நிறுத்திவைக்க வேண்டுகோள் செய்யலாம்.

  நடைமுறை சிக்கல்: FM ரேடியோ விளம்பரத்திற்கு சிறிது பட்ஜெட் ஒதுக்க வேண்டும். மேலும் FM ரேடியோ விளம்பரத்தை ஒரு தரமான விளம்பர நிறுவனம் தயாரிக்க வேண்டும். இங்கும் நமது நண்பர்களே மாயாவி, டெக்ஸ், ஸ்பைடர் கட்டவுட்களை தள்ளிக்கொண்டு போகும் அபாயம் உண்டு. காமிக்ஸ் திருவிழா நடக்கும் கடைகளில் நமது புத்தகங்களை வைக்க இடம் இருக்கவேண்டும். காமிக்ஸ் திருவிழா புத்தகங்களை வைக்க தனியாக ஸ்டாண்ட் ஒன்றும் அந்த நாட்களுக்கு மட்டும் (முன்பு 'Landmark' -ல் வைத்ததுபோல) கொடுத்தால் கடைகளுக்கு நன்று. காமிக்ஸ் திருவிழாவிற்கு உங்கள் ஏஜெண்டுகளுக்கு புத்தகங்கள், கட்டவுட் மற்றும் ஸ்டாண்ட் எடுத்துச்செல்ல மற்றும் எடுத்துவர சிவகாசியிலிருந்து ஒருவர் ஒரே ஒரு ட்ரிப் அடிக்கவேண்டும்.

  3) துண்டு பிரசுரங்கள் - காமிக்ஸ் திருவிழா நடக்கும் இடங்களில் மட்டும் காமிக்ஸ் திருவிழா நடக்கும் நாட்களில் தினசரி செய்திதாள்களுடன் நமது காமிக்ஸ் திருவிழா பற்றிய துண்டு பிரசுரங்களை மாயாவி, டெக்ஸ், ஸ்பைடர் படங்களுடன் அச்சடித்து கொடுக்கலாம்.

  நடைமுறை சிக்கல்:
  துண்டு பிரசுரங்களை தினசரி செய்தித்தாள்களில் சரியாக வைக்கிறார்களா என்பதை கவனிக்க நமது ஏஜென்ட் மற்றும் நண்பர்களின் உதவியும் சிறுது தேவை.


  மேலே நான் சொன்னவற்றை நீங்கள் ஏற்கனவே நடைமுறைப்படுத்தியிருக்குறீர்களா என்பது எனக்கு தெரியவில்லை. எனவே எனது இந்த பதிவு.

  (காமிக்ஸை காமிக்ஸாக மட்டுமே ரசிப்பவன் நான். அதனால் எப்போதுமே நான் காமிக்சிற்கு மார்க் போடுவதும் விமர்சனம் செய்வதும் கிடையாது)

  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. அப்படியே நீங்களும் ஏதாவது ஐடியா குடுங்க பரணி.

   Delete
  2. நடைமுறை சாத்தியம் மற்றும் மிகவும் பயனுள்ள யோசனைகளாக தோன்றுகிறது. எடிட்டர் சார் இதில் கொஞ்சம் ஆவன செய்யலாம். என் முன்முடிவில் இல்லாமல் திடுமென வாங்கும் புத்தகங்கள் பெரும்பாலும் போஸ்டர் அட்ராக்‌ஷனால்தான்!

   பை தி வே,

   மைக் 1 (ஈவி)..
   மைக் 2 (கிஆக)..

   போஸ்டர் தொங்குற கடைகளை உடனடியாக அட்டாக் பண்றோம். கடைக்காரர் டீக்குடிக்க அசந்திருக்கிற நேரமாப் பத்து போஸ்டர பிச்சிகினு எஸ்கேப்பாவுறோம். திட்டத்தை நடைமுறை படுத்த டேட் பிக்ஸ் பண்ணவும்!!

   :-))))

   Delete
  3. Fine ஆதிதாமிரா. எனது நண்பன் (PhD holder & a College Professor) கடந்த 2 வருடங்களாக வந்த பளபள போஸ்டர் அனைத்தையும் சேகரித்து வைத்துள்ளார்.
   Just for your information :-)

   Delete
  4. + எனது நண்பன், மாத இறுதியில் மட்டுமே போஸ்ட்டர்களை தள்ளிக்கொண்டு வரும் நபர்.

   Delete
  5. இரண்டு வருட முந்தைய வெளியீடுகளுக்கு
   10% கழிவு என்று அறிவித்தால் பழைய
   புத்தகங்கள் விற்பனை அதிகரிக்க
   வாய்ப்புள்ளது.
   நல்ல யோசனைகள் செந்தில்வினாயகம்.
   இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன்.

   Delete
  6. நானும் எனது பதிவில் 'காமிக்ஸ் திருவிழாவில்' நமது பழைய வெளியீடுகளை மட்டுமே விற்பனைக்கு வைக்க யோசனை கூறியுள்ளேன் நண்பரே. பழைய வெளியீடுகளுக்கு மட்டும் தான் கழிவு என்று குறிப்பிட்டுள்ளேனே தவிர, அதே கடையில் இருக்கும் புதிய வெளியீடுகளுக்க NO கழிவு.

   Delete
  7. Dear Editor,
   எனது சொந்த ஊரான திருநெல்வேலியில் உள்ள முகவர் திரு. பாலமுருகன் (சக்தி லெண்டிங் லைப்ரரி) தனது சொந்த முயற்சியில் 'காமிக்ஸ் கலந்துரையாடல்' என்று எப்பொழுதாவது ஏற்பாடு செய்வது உண்டு. நீங்கள் 'காமிக்ஸ் திருவிழா' நடத்துவதாக அறிவித்தால் அவர் இதற்க்கு தனது முழு ஒத்துழைப்பையும் தந்து இந்த 'காமிக்ஸ் திருவிழாவை' ஒரு 'வெற்றித் திருவிழாவாக' ஆக்கித்தருவார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

   Delete
  8. அன்பு நண்பர் கணேஷ் அவர்களுக்கு,
   1) 'காமிக்ஸ் திருவிழா' என்பது நமது பழைய வெளியீடுகளுக்கு மட்டும்தான் என்று ஏற்கனவே எனது பதிவில் நான் குறிப்பிட்டுள்ளேன். 2) நான் குறிப்பிட்டிருப்பது 'காமிக்ஸ் திருவிழாவில்' தள்ளுபடி கொடுப்பது நன்றாக இருக்குமே என்பது மட்டுமே. எத்தனை சதவிகிதம் தள்ளுபடி என்பது எடிட்டர் முடிவு செய்யவேண்டிய ஒன்று.

   Delete
  9. செந்தில் விநாயகம் குடுத்து இருக்கும் எல்லா ஐடியா வும் மிகவும் அற்புதமானவை.

   1 போஸ்டர் : இது மிக மிக சாத்தியமான ஒன்று. போஸ்டர் மட்டும் மாதா மாதம் கடைகளில் தொங்க விட்டு இருந்தால், லயனின் மறு பிரவேசம் எனக்கு 2012லேயே தெரிந்து இருக்கும். ஆனால் எனக்கு லயன் மறு பிறப்பு எடுத்து இருப்பது எனக்கு தெரிந்த வருடமோ 2015 நவம்பர். அப்பொழுதிலிருந்து நான் வாங்கி சேகரித்து வருகிறேன். ஆனால் நெறய இதழ்கள் மிஸ் பண்ணி இருக்கிறேன்.

   2 FM ரேடியோ - அருமையான யோசனை

   3 துண்டு பிரசுரங்கள் - மிக சாத்தியமான யோசனை

   Delete
 46. சார்...

  நான் எல்லா நாயகர்களுக்கும் ரசிகன்தான்...எனினும் படிக்கையில் சிலிர்த்தவைகளை கொண்டு வரிசைப்படுத்தியிருக்கிறேன்...

  Tier1ல் இருந்து சதம் போட்டவர்களும் உண்டு.
  Tier3ல் இருந்து டக் ஆனவர்களும் உண்டு சார்..

  உப்பு ஊறுகாய் அப்பளம் கூட்டு சாம்பார் ரசம் சாதம் மோர் என சுவைகள் வேறாயினும் இலையில் எல்லாம் சேரும் போதுதான் சார் முழுமையான விருந்து..(நான் "வெஜிடேரியனாக்கும்")

  நாயகர்களை விட காமிக்ஸின் காதலன்..
  பொம்மை கதையா இருக்கணும் அவ்ளோதான் சார்...

  நன்றி..

  ReplyDelete
 47. Tex ( Red Indian Stories )
  Largo
  Durango
  XIII
  Martin Mystery
  Martin

  ReplyDelete
 48. Palaivanathil pulanaivu resembles of aaviyin aadukalam please sir avoid this type of stories.

  ReplyDelete
 49. -------
  TIER 1
  -------
  டெக்ஸ் வில்லர்
  வெய்ன் ஷெல்டன்
  லார்கோ
  ட்யுராங்கோ
  LADY S
  சிக் பில்
  ரிப்போர்ட்டர் ஜானி
  மர்ம மனிதன் மார்ட்டின்
  XIII
  அண்டர்டேக்கர்

  -------
  TIER 2
  -------
  மாயாவி
  CID லாரன்ஸ்-டேவிட்
  ஜானி நீரோ
  ஸ்பைடர்
  கேப்டன் பிரின்ஸ்
  CID ராபின்
  மாடஸ்டி பிளைசி
  லக்கி லூக்

  -------
  TIER 3
  -------
  மதியிலா மந்திரி
  Smurfs
  கிளிப்டன்
  ரின்டின் கேன்
  ப்ளூ கோட் பட்டாளம்
  ஜில் ஜோர்டன்
  தோர்கல்
  பென்னி
  சாகச வீரர் ரோஜர்

  ReplyDelete
 50. -------
  TIER 1
  -------
  டெக்ஸ் வில்லர்
  வெய்ன் ஷெல்டன்
  லார்கோ
  ட்யுராங்கோ
  LADY S
  சிக் பில்
  ரிப்போர்ட்டர் ஜானி
  மர்ம மனிதன் மார்ட்டின்
  XIII
  அண்டர்டேக்கர்

  -------
  TIER 2
  -------
  மாயாவி
  CID லாரன்ஸ்-டேவிட்
  ஜானி நீரோ
  ஸ்பைடர்
  கேப்டன் பிரின்ஸ்
  CID ராபின்
  மாடஸ்டி பிளைசி
  லக்கி லூக்

  -------
  TIER 3
  -------
  மதியிலா மந்திரி
  Smurfs
  கிளிப்டன்
  ரின்டின் கேன்
  ப்ளூ கோட் பட்டாளம்
  ஜில் ஜோர்டன்
  தோர்கல்
  பென்னி
  சாகச வீரர் ரோஜர்

  ReplyDelete

 51. TIER - 1

  டெக்ஸ் வில்லர்,
  வெய்ன் ஷெல்டன்,
  லார்கோ,
  ட்யுராங்கோ,
  சிக் பில்,
  ரிப்போர்ட்டர் ஜானி,
  மர்ம மனிதன் மார்ட்டின்,
  XIII,
  அண்டர்டேக்கர்,
  லக்கி லூக்,
  தோர்கல்.
  TIER - 2

  LADY S,
  கேப்டன் பிரின்ஸ்,
  பென்னி,
  மதியில்லா மந்திரி,
  Smurfs,
  ப்ளூ கோட் பட்டாளம்,
  ஜில் ஜோர்டன்.


  TIER - 3


  கிளிப்டன்,
  ரின்டின் கேன்,
  சாகச வீரர் ரோஜர்.
  மாயாவி,
  CID லாரன்ஸ்-டேவிட்,
  ஜானி நீரோ,
  ஸ்பைடர்,
  CID ராபின்,
  மாடஸ்டி பிளைசி.

  ReplyDelete
 52. // Variety நமக்கொரு வரமா ? பாரமா ? //
  வெரைட்டி நமக்கு கண்டிப்பாக வரமே,தேடுதல் இல்லாத எதுவும் சுவைக்காது,பல்வேறு ஜானர்களில் நுழைந்து நமக்கு பிடித்த வகைகளை இனம் பிரித்து அறிவதே சிறப்பு,இல்லையேல் மிகச்சிறந்த வகைகளை தவறவிடும் வாய்ப்பு கண்டிப்பாக உண்டு,குண்டுசட்டியில் குதிரை ஓட்டுவதில் என்ன சுவராசியம் இருந்திட முடியும்,எல்லாவற்றையும் தேடி சுவை பார்ப்போம்,பிடித்ததை தேர்ந்தெடுத்து நித்தமும்,நிதானமாய் சுவைப்போம்.

  ReplyDelete
 53. காலத்தை வென்றவன்.......

  *முத்து காமிக்ஸ் பட்டயை கிளப்பிய 1970களையும், 80களையும் சீனியர் நண்பர்கள் விவரிக்கையில் பொறாமையாக இருக்கும். அவர்களின் அந்த மகிழ்ச்சியான விவரிப்பில் பலசமயங்களில் நம்மையும் அந்த தருணங்களிற்கே அழைத்து சென்று விடுவார்கள்.

  *இரும்புக்கையாரோ, லாரன்ஸ் & டேவிட்டோ, ஜானி நீரோவோ ஏதாவது ஒரு நாயகரின் கதையொன்றை லைன் லைனா மாறி மாறி விவாதிப்பாங்க. அதிக முறை அவுங்க சிலாகிச்சது அந்த கொலைகாரக் கலைஞன் தான். தேமேனு அவுங்க பேசுவதை கண்டு விழித்துக் கொண்டே, நாம் காதுகளில் விடும் லேசான அல்ல, டார்க்கான புகைச்சலைக் கண்டு அவர்களின் கண்களில் சற்றே பெருமிதம் மிளிரும். அப்போதெல்லாம் நாமும் என்றாவது இதுபோல ஒரு நாயகனை காணுவோமா என்ற ஏக்க கனவு எழுந்து கலையும்.

  *டெக்ஸ் ஏற்கெனவே 1980களில் எஸ்டாபிளிஸான நாயகர். நாம பார்த்து வளர்ந்து யாராவது ஹிட் அடிப்பாங்களா என்ற கனவு தொடர்ந்து கொண்டே இருந்தது.
  அப்பத்தான் முத்து காமிக்ஸ்ல கேப்டன் டைகர் தோன்றும் "தங்க கல்லறை" னு ஒரு விளம்பரம் வெளிவந்தது.

  *கேப்டன்னா நமக்கு தெரிஞ்சி மரடோனாதான்; பொறகு ரொம்ப காலத்துக்கு அசாருதீன் தான் கேப்டனுக்கான மரியாதை பெற்றவர் மனசில். சும்மா மெரண்டு போயிட்டேன், தங்க கல்லறை படிச்சிட்டு. அடுத்த மாசமே இதன் க்ளைமாக்ஸ் படிக்கவும் இந்த கேப்டன் பய உடனடியாக அந்த கனவு நாயகனுக்கு செட் ஆயிட்டாரு. பலமுறை படித்த புத்தகங்கள்ல அதுவும் ஒன்னு.

  *இன்ஸ்டன்ட் காபி மாதிரி, இன்ஸ்டன்டா ஹிட் அடிச்ச நாயகர் மேல் ஒரு அபிமானம் ஒட்டிக்கொண்டது. அந்த நாயகருக்கு அடுத்தடுத்து நிகழ்ந்தது தான் பரிதாபம். கதையிலும் அடிபட்டு, போராடி மீள்வாறே அதே மாதிரி நிஜத்திலும் ஆகிப்போச்சுது டைகரோட நிலைமை.

  *தங்க கல்லறைக்கு அடுத்து, டைகரின் அடுத்த கதை இரும்புக்கை எத்தன்(முத்து250) வரவும் செம எதிர்பார்ப்பு. ஆனால் 2பாகத்தோட நிறுத்திபுட்டு மின்னும் மரணம்னு ஒன்ன கையில் எடுத்துபுட்டார் எடிட்டர் சார்.(குறுக்கால அந்த இரும்புக்கை எத்தனின் 2வது பாகத்தை எடிட்டர் சார் "காமிக்ஸ் எக்ஸ்பிரஸ்"னு, இன்னும் 3டாப் ஸ்டார்களான டெக்ஸ், இரும்புக்கையார்& லக்கிலூக்கோடு சேர்த்து- தலா3பக்கங்களில் வெளியிட்டு புரோட்டோ போடவும், பதிலுக்கு நம்ம ஆளுங்க அவரை கொத்து புரோட்டோ போட்டாங்க- அது தனி கதை).

  *அட மின்னும் மரணத்தைதான் முழுசா போட்டாரா, அதுவும் இல்லை. அதையும் அந்தரத்தில் விட்டுட்டு அடுத்ததை (இரத்தக்கோட்டை) ஆரம்பிச்சுட்டார். இப்படி பிச்சி பிச்சி கொத்து புரோட்டா போட்டாலும், அதையும் தாண்டி சாதித்து காட்டினார் டைகர்.
  .............................

  ReplyDelete
  Replies
  1. ............

   தோட்டா தலைநகரம்....

   *இந்த பின்னணியில், இந்த புரோட்டாக்களுக்கு நடுவே ஒரே ஒரே சிங்கிள் ஷாட்டாக வந்து வாணவேடிக்கை காட்டியதுதான் "தோட்டா தலைநகரம்". டைகரின் கதைகளுக்கு என எப்போதும் தனித்த மாஸான கதைக்களம் அமைக்கப்பட்டு இருக்கும். இம்முறை அதை உடைத்து, கெளபாய் கதைகளின் இலக்கணமான "தீம்" கடன் வாங்கப்பட்டு இருக்கும். ஒரு சிறிய நகரின் ஷரீப்பை போட்டுத்தள்ளிட்டு, பயத்தை கிளப்பி, ஜனங்களை ஏமாற்றி அனைவரது நிலங்களையும் ஆட்டயை போடும் ஆதிகால ஒற்றை லைன் கதை.

   *இந்த அரதப்பழசான(யோவ் கெளபாய் கதைகளே அரதப்பழசுதான்யானு நீங்கள் புலம்புவது சத்தமாகவே கேட்குது,நண்பர்களே) கதையை டைகரின் அத்துனை சமயோசித உத்திகளையும், வன்மேற்கின் வஞ்சக சூழ்ச்சிகளோடு மோதவிட்டு பரபரப்பாக நகர்த்தியதே இதன் வெற்றிக்கு முழு முதற்காரணம்.

   ---ஏற்கெனவே ஸில்வர் க்ரீக்கின் முக்கால் பங்கு நிலங்களை ஆட்டையை போட்டுவிட்டு மீதியையும் சுருட்ட எத்தணிக்கும் ஸாம் பாஸ்.

   ---ஸாமையும் அவனது அல்லைக்கை போக்கிரிகளையும் நகருக்குள் வரக்கூடாது என உத்தரவிட்ட ஷெரீப் ஹாரீசனை முதுகில் சுட்டுத்தள்ளும் பெட்ரோ.

   ---இந்த ஈனத்தனத்தை தட்டிக்கேட்காமல் கோழைத்தனமாக பிதற்றும் ஊர்ஜனங்கள்.

   ---ஹாரீசனின் கொலையை கோர்டில் சொல்லத்துடிக்கும் அழகு மயில் மிஸ் கேத்தி மார்ஸ்.

   ---எதேச்சையாக இந்த களேபரத்தில் சிக்கி, ஊர்ஜனங்களுக்கு உதவ, அருகேயுள்ள நவஹோ கோட்டையில் இருந்து டைகரை அழைத்து வரும் ஜிம்மி.

   ---கோட்டையில் டைகருக்கு பதில் வேறொரு ஆளை அனுப்ப முயலும் கர்னலின் முயற்சி.

   ---கர்னலிடம் ஜிம்மியை தனக்கு துணையாக அனுப்ப உத்தரவிட கேட்கும் டைகர் வாயிலாக நமக்கு சொல்லப்படும் வன்மேற்கின் எமெர்ஜென்சி நடப்புகள்.

   ---ஸில்வர் க்ரீக் நடப்புகளை ஜிம்மியிடம் இருந்து அறியும் டைகர், தங்களை கொல்ல வழியில் போக்கிரிகள் பதிங்கியிருக்கலாம் என யூகிப்பது.

   ---ஸில்வர் க்ரீக் வரும் வழியில் இரவில் தங்களை கொல்ல வரும் போக்கிரிகளை அபாச்சேக்களின் தந்திரத்தை உபயோகித்து மடக்கும் டைகரின் யுக்தி.

   ---ஜோவின் பாரில் தன்னை சுட்டுக்கொல்ல முயலும் ஸாமின் அடியாளை கண்ணாடியில் பார்த்து மடக்கும் டைகரின் சமயோசிதம்.

   ----ஒவ்வொரு முறை மிஸ் மார்ஸ் உதவிக்கு வரும்போதும் , அதை நிராகரித்து அவளது கொதிப்பை அதிகரித்து ரசிக்கும் டைகரின் ஏளனம்.

   ---ஹாரீசனை கொன்று விட்டு அசட்டுத்துணிச்சலோடு நகருக்குள் வரும் பெட்ரோவை கைது செய்யும் டைகரின் துணிகரம்.

   ---நகரக்காவலில் இருக்கும் ஜிம்மியை பெளர்பான் விஸ்கியை கொடுத்து மட்டையாக்கி, அவனையே பயன்படுத்தி மிஸ் மார்சை கடத்தும் போக்கிரிகளின் நரித்தந்திரம்.

   ---தன்னுடைய கூட்டாளிகளுக்கு கண்ணாடி மூலம் சிக்னல் தரும் ஜோவின் யுக்தி

   ---மிஸ் மார்ஸை கடத்தியவுடன் பொங்கியெழும் பொதுஜனம்.

   ---மார்ஸை மீட்க வரும் டைகரை போட்டுத்தள்ள, வழியில் வலைவிரிக்கும் பட்டி பாஸின் தந்திரம். அதை யூகித்து உறுதி செய்ய டைகர் கையாளும் யுக்தி.

   ---ஆளில்லா குதிரையை ஓடவிட்டு, மார்ஸை காப்பாற்ற வரும் டைகரை மடக்கி எத்தனுக்கு எத்தனாக மிளிரும் பட் பாஸ்; பட் பாஸை ஏமாற்றி கவனத்தை திருப்ப ஜக்கை எடுத்து கண்ணாடி ஜன்னலை உடைக்கும் மார்ஸ்.

   ---சிறையை தகர்த்து தப்ப நினைக்கும் போக்கிரகளுக்கு, சாவியை உடைத்து கடுக்கா தரும் ஜிம்மி.

   *அடேங்கப்பா பரபரப்பான கதையோட்டம் முழுதும் நிரம்பி வழியும் வன்மேற்கின் தந்திரங்கள், அதை முறியடிக்கும் யுக்திகள் என ஒவ்வொரு ப்ரேமும் செதுக்கப்பட்டு இருக்கும்.
   ஒவ்வொரு பேனலும் கதை சொல்லும் அசாத்திய சாகசம். தி பெஸ்ட் ஆஃப் த பெஸ்ட்ஸ் தான் இந்த தோட்டா தலைநகரம்.

   *நம்மோடு தோளோடு தோள் கொடுத்து நின்ற நண்பன் செயித்தால் வரும் பெருமிதம், டைகரின் ஒட்டுமொத்த சாதனையைப் பார்த்தால் நமக்கும் கிட்டும்.

   Delete
  2. டெக்ஸ் அபிமானியாக இருந்தாலுமே,
   டைகரின் கதைகளை விவரிக்கும் பாங்கு அலாதியானது சார்.

   நாயகர்கள் என்பதையும் தாண்டி கௌபாய்களின் மீதான நேசம் 'அட ' போட வைக்கிறது.

   Delete
  3. செம டெக்ஸ் விஜயராகவன் சார். வரிக்கு வரி ரசித்து எழுதி உள்ளீர்கள். என்னதான் டெக்ஸ் ரசிகராக இருந்தாலும் , கேப்டன் டைகர் இன் இதழினை விலாவரியாக விமர்சனம் செய்வது சூப்பர் . நான் ரசிக்கும் எழுத்துநடையில் உங்களதும் ஒன்று .

   Delete
  4. டெக்ஸ் விஜயராகவன் சார். வரிக்கு வரி ரசித்து எழுதி உள்ளீர்கள். என்னதான் டெக்ஸ் ரசிகராக இருந்தாலும் , கேப்டன் டைகர் இன் இதழினை விலாவரியாக விமர்சனம் செய்வது சூப்பர் .


   ###₹

   ப்ரபானந்த் சார் என்ன தான் டெக்ஸ் ரசிகர்களாக இருந்தாலும் நல்ல டைகர் கதையை நல்லாருக்குன்னு சொல்ற டெக்ஸ் ரசிகர்கள் அதிகம்...அதே சமயம் டைகர் ரசிகர்களாக இருப்பவர்கள்..   வேண்டாம் ...கம்முன்னு போடா பரணி ...திரும்ப கையை புடிச்சு இழுக்காதே...:-)

   Delete
  5. தலீவரே@

   ஒரு ஜென் துறவி ஆற்றில் குளிக்கும் போது, ஒரு தேள் தண்ணீரில் விழுந்து தத்தளித்ததாம். அதன் உயிரை காப்பாற்ற, அதை கையால் எடுத்து மரக்கிளையில் விட்டாராம்.அப்படி விடும்போது அவரது கையில் அந்த தேள் கொட்டியதாம்.

   மீண்டும் தண்ணீரில் தேள் விழ, மீண்டும் அவர் எடுத்து கிளயில் விட, மீண்டும் அது அவரை கொட்ட...

   சிலபல தடவை அதை கவனித்த மற்றொரு துறவி அதை ஏன் காப்பாற்றுகிறீர்கள் என கேட்க, அதற்கு முதல் துறவியின் பதில்:

   "கொட்டுவது தேளின் சுபாவம்;
   காப்பாற்றுவது என் சுபாவம்"

   Delete
 54. இவ்வளவு வெரைட்டியும் கண்டிப்பாக வரமே!! வருங்காலத்தில் கண்டிப்பாக மாற்றங்கள் நிகழும்.

  ReplyDelete
 55. காமிக்ஸ் என்று எதைப் போட்டாலும் படித்து ரசிப்பவன் நான். அதுவும் லயன் முத்து என்றால் எனக்கு அல்வா சாப்பிடுவது போல.

  ReplyDelete
 56. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. Here are my comments : -
   Tier 1 : -
   தோர்கல் – The best
   மர்ம மனிதன் மார்ட்டின் – The best
   டெக்ஸ் வில்லர் – Good but overdose
   லார்கோ – Very Good
   வெய்ன் ஷெல்டன் -Good
   ரிப்போர்ட்டர் ஜானி - Good
   CID ராபின் - Good
   கிளிப்டன் - Good
   கேப்டன் பிரின்ஸ் -Good
   அண்டர்டேக்கர் - Good

   Tier 2:-
   XIII -Good
   ட்யுராங்கோ - Good
   ஜில் ஜோர்டன் - Good
   LADY S - Good
   லக்கி லூக் - Good but not like before
   ப்ளூ கோட் பட்டாளம் - Good
   சிக் பில் - Good
   மதியிலா மந்திரி - Good

   Tier 3:-
   பென்னி - I do not like to read
   ரின்டின் கேன் – I do not like to read
   Smurfs - I do not like to read
   மாடஸ்டி பிளைசி - ok
   மாயாவி – No comments
   CID லாரன்ஸ்-டேவிட் - No comments
   ஜானி நீரோ - No comments
   ஸ்பைடர் - No comments
   சாகச வீரர் ரோஜர் - ok

   Delete
 57. ட்யூரங்கோ
  அண்டர்
  XIII
  TeX
  Lucky

  Tier 2:
  பிரின்ஸ்
  சிக்பில்
  ப்ளூகோட்
  மார்டின்
  மந்திரி

  Tier 3:
  ஜானி
  ஜோர்டன்
  Etc

  ReplyDelete
 58. Tier. 1

  டெக்ஸ் வில்லர்
  Xlll
  ட்யூராங்கோ
  ஷெல்டன்
  லார்கோ
  லேடி S
  தோர்கல்
  ரிப்போர்ட்டர் ஜானி
  மார்ட்டின்
  லக்கி லூக்
  சிக்பில்
  மாயாவி
  ஸ்பைடர்
  லாரண்ஸ் & டேவிட்
  ஜானி நீரோ
  பென்னி
  பிரிண்ஸ்
  அண்டர்டேக்கர்

  Tier. 2

  C.i.d. ராபின்
  மாடஸ்டி பிளைஸி
  ப்ளூகோட் பட்டாளம்
  ரின் டின் கேன்
  ஜில் ஜோர்டான்
  மதியில்லா மந்திரி
  கிளிப்டன்
  சாகச வீரர் ரோஜர்

  Tier.3

  ஸ்மர்ப்ஸ்

  ReplyDelete
 59. வெரைட்டி
  என்றும் எப்போதும் வரமே

  ReplyDelete
 60. என்னதான் ரசனைகள் ஆளுக்காள் மாறுபட்டவை எனினும், பலரின் கடைசி ரேங்கில் ஸ்மர்ப்ஸ், கிளிப்டன், ப்ளூகோட்ஸ் இருப்பது சற்றே வருத்தமளிக்கிறது.

  Smarfs பற்றி ஏற்கனவே பல தடவை பேசியாச்சு. ஒரு குழந்தை மனமும், நாமும் ஒரு smarf ஆக மாறும் தன்மையும் இருந்தால்தான் அதை ரசிக்க முடியும். அது சிரமமானதா என்பது எனக்கு புரியவில்லை. குழந்தைகளோடு விளையாடும் போது நாமும் குழந்தையாகிவிடுகிறோம். அதுவும் குறிப்பாக காமிக்ஸ் படிப்பவர்களுக்கு அது இயல்பிலேயே கைகூடி வரும் ஒரு ரசனை என நினைத்திருந்தேன். எனக்கெல்லாம் smarfvillaஇல் ஒரு வீடு எடுத்து செட்டில் ஆக வேண்டும் என கொள்ளை ஆசையாக இருக்கும்.

  போலவே ப்ளூகோட்ஸ்! போரின் அபத்தங்களை இப்படி பகடி பண்ணும் ஒரு படைப்பை என் வாழ்நாளில் வேறு எந்த வடிவத்திலும் பார்த்ததில்லை. (சினிமா, நாவல்கள்) அதுவும் அந்த உயரதிகாரிகள் கூடாரத்துக்குள் நடக்கும் டயலாக்குகள், நிகழ்வுகள் எல்லாம் அவல நகைச்சுவை.

  இந்த இரண்டிலுமே மொழிபெயர்ப்பை நம் குழு இன்னும் கவனமாக கையாள வேண்டும் என்பது என் கருத்து. வாசகர்களிடம் வரவேற்பு பெறாமல் போய்விடுமோ எனும் அச்சத்தில் கூடுதலாக காமெடி சேர்க்க முயற்சி செய்யலாம் எனும் எண்ணத்தில் வசனங்களில் இறங்கி அடித்துவிடக்கூடாது.. எஎக!

  கிளிப்டன் வேறு வகை. இப்போது வெளியே இருக்கிறேன். வீட்டில் இருந்தால் கதை உதாரணத்துடன் பக்க எண்ணுடன் கூற முடியும்.

  ஓவியங்களில் பல வகைகள் இருந்தாலும் ஜானி, கிளிப்டன் போன்ற கார்ட்டூன் வகை தனிரகம். இதில் கிளிப்டன் போன்ற ஒரு கச்சிதத்தை இதுவரை நம் தேர்வுகளில் கண்டதில்லை. சமீபத்தில் ஒரு கதையின் முதல் பக்கம்.. லாங் ஷாட்டில் கிளிப்டன் ஒரு தெருவில் நடந்து வருவார். அடுத்தடுத்த கட்டங்களில் அந்த தெரு க்ளோஸப்பிலும், வேறு வேறு கோணத்திலும் வரும். அங்கே ஒரு பெட்டிக்கடை இருக்கும். அதில் தொங்கவிடப்பட்ட போஸ்டர்கள் கூட ஒவ்வொரு கட்டத்திலும் அளவு, கோணம், காற்றின் அசைவு என அத்தனைத் துல்லியமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். ஓவிய ரசத்தின் உச்சம் எனவே கிளிப்டன் கதைகளை குறிப்பிடலாம். ஜானி, லக்கி, சிக்பில் இந்த வகைதான் எனினும் இந்த 100% துல்லியம் அவற்றில் கிடையாது.

  என் கருத்தோடு ஒத்துப்போகும் மௌன வாசகர்கள் யாரும் இருந்தால் தயைகூர்ந்து குரல் கொடுக்கவும். இல்லையெனில் 2019ல் காணாமல் போகும் லிஸ்டில் இவர்கள் இருக்கப்போவதை நம்மால் தடுக்க முடியாமல் போகலாம்.

  ReplyDelete
  Replies
  1. //
   Please note - இது விமர்சனங்களுக்கு அப்பாலான ஒரு கருத்து சேகரிப்பு மாத்திரமே ! So அவரவரது தேர்வுகளின் மீது வருத்தங்களோ / விமர்சனங்களோ வேண்டாமே - ப்ளீஸ் !

   அதே போல - "வேண்டாம் !" என்ற குரல்கள் ஒலிக்கத் துவங்கிய மறுநொடியே ஒரு தொடர் drop ஆகிடுமென்ற எதிர்பார்ப்புகளும் unrealistic !
   //

   Delete
  2. அருமை ஆதி சார்.

   மிகச் சரியானபார்வையில் புளூகோட்ஸையும், கிளிப்டன் கதைகளையும் வகைப்படுத்தியுள்ளீர்கள்.

   இரண்டும் கதைத் தொடர்களிலும் ரசிக்க, சிலாகிக்க ஏகப்பட்ட விசயங்கள் கொட்டிக் கிடக்கின்றன.

   கார்டூனைப் பொறுத்தவகையில் நாம் இன்னும் லக்கியை தாண்டி   வரவில்லை என்றே நினைக்கிறேன்.

   பிடிக்காத கதை என்ற எண்ணத்தில் மேலோட்டமான வாசிப்பில், அதன்
   உண்மையான பேசுபொருளை இஇழந்துவிடுகிறோம் அல்லது மறந்து விடுகிறோம்.

   அதனால், உள்ளுக்குள் கிளிப்டன் அண்ணாச்சியையும், புளுகோட்ஸ் தோஸ்தையும் ரசிப்பவர்கள் முன்னால் வரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

   Delete
  3. @karthik,

   மறுநொடி காணாமல் போகாதுதான்.. ஆனால் மறுவருடம் என்னவாகும்னு தெரியாதல்லவா? ஏற்கனவே, டைலன், டயபாலிக் கதை என்னாச்சு என அனுபவமிருக்கிறதே நமக்கு!

   Delete
  4. ஆதி தாமிரா@
   யு ஆர் கரெக்ட்; எடிட்டர் சாரோட கேள்வியும், UEFA rankingம் ஒன்று தான். பதிலோ, ரேங்கோ முடிவாகும் அடுத்த வருடம் பாதிப்பில்லை. ஆனால் அதற்கடுத்த வருடம் இந்த விடைகள் தான் இங்கே ட்ராப்பை நிர்ணயிக்கும்; அங்கே சாம்பியின் லீக் குவாலிஃபிகேசனை முடிவு செய்யும்.

   Delete
  5. // Smarfs பற்றி ஏற்கனவே பல தடவை பேசியாச்சு. ஒரு குழந்தை மனமும், நாமும் ஒரு smarf ஆக மாறும் தன்மையும் இருந்தால்தான் அதை ரசிக்க முடியும். அது சிரமமானதா என்பது எனக்கு புரியவில்லை. குழந்தைகளோடு விளையாடும் போது நாமும் குழந்தையாகிவிடுகிறோம். அதுவும் குறிப்பாக காமிக்ஸ் படிப்பவர்களுக்கு அது இயல்பிலேயே கைகூடி வரும் ஒரு ரசனை என நினைத்திருந்தேன். எனக்கெல்லாம் smarfvillaஇல் ஒரு வீடு எடுத்து செட்டில் ஆக வேண்டும் என கொள்ளை ஆசையாக இருக்கும். //

   குழந்தைகளோடு விளையாடுபவர்கள் தங்களுடைய தனிப்பட்ட பொழுதுபோக்கிற்கு சற்று மாற்றான களங்களுடைய புத்தகங்களை / பொழுதுபோக்கை தேர்வு செய்வதை பார்த்திருக்கிறேன். அந்தவகையில்கூட சிலருக்கு ஸ்மர்ப்ஸ் பொருத்தமில்லாமல் போகக்கூடும். உணவு விஷயத்தில் வயதானவர்களுக்கு இட்லியும், இளையவர்களுக்கு பரோட்டாவும்தான் செட் ஆகும் என உறுதியாக சொல்லமுடியாதது போல காமிக்ஸ் படிப்போருக்கு குழந்தைத்தனமான கதைகள் செட் ஆகும் என உறுதியாக சொல்ல முடியாது. So no surprise here.

   தவிர சிக் பில் மற்றும் லக்கி லூக் கூட இங்கே (பழைய வாசகர்களிடம்) இன்றைக்கு வரவேற்கப்பட காரணம் நாஸ்டால்ஜியாவும் சிறு வயதில் கிடைத்த அறிமுகமுமே என்பது என் எண்ணம். ஒருவேளை ஸ்மர்ப்ஸ் சிறு வயதிலேயே அறிமுகப்பட்டிருந்தால் இன்றைக்கு அது லக்கி சிக்பில் போல வாசிக்க இயலும் பட்டியலில் இடம் பிடித்திருக்க கூடும்.

   Delete
  6. ஸ்மர்ப்ஸ் சிறு வயதிலேயே அறிமுகப்பட்டிருந்தால் இன்றைக்கு அது லக்கி சிக்பில் போல வாசிக்க இயலும் பட்டியலில் இடம் பிடித்திருக்க கூடும்.


   ######


   உண்மை தானோ....-)))

   Delete
  7. மறுநொடி காணாமல் போகாதுதான்.. ஆனால் மறுவருடம் என்னவாகும்னு தெரியாதல்லவா? ஏற்கனவே, டைலன், டயபாலிக் கதை என்னாச்சு என அனுபவமிருக்கிறதே நமக்கு!


   #######   ஆதி சார்....எல்லாம் அவன் செயல்...:-))))

   Delete
  8. அரிதாகவே ரசனைகள் ஒத்துப்போகும் மனிதர்களை பார்ப்போம், அந்த வகையில் உங்களுடனும் ஈவி சாருடனும் 100 சதவீதம் ஒத்துப்போகிறது என் ரசனையும்.... எனவே...+1..

   Delete
  9. Govindaraj Perumal : //அதனால், உள்ளுக்குள் கிளிப்டன் அண்ணாச்சியையும், புளுகோட்ஸ் தோஸ்தையும் ரசிப்பவர்கள் முன்னால் வரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.//

   Oh yes ...பிடிக்காததைச் சுட்டிக்காட்ட மௌனங்கள் கலைவது எத்தனை முக்கியமோ - அத்தனை முக்கியமே பிடித்ததைப் பதிவு செய்வதுமே !

   Delete
  10. ஆதி தாமிரா //ப்ளூகோட்ஸ்! போரின் அபத்தங்களை இப்படி பகடி பண்ணும் ஒரு படைப்பை என் வாழ்நாளில் வேறு எந்த வடிவத்திலும் பார்த்ததில்லை. (சினிமா, நாவல்கள்) அதுவும் அந்த உயரதிகாரிகள் கூடாரத்துக்குள் நடக்கும் டயலாக்குகள், நிகழ்வுகள் எல்லாம் அவல நகைச்சுவை.//

   +1

   Delete
  11. ஆதி தாமிரா//என்னதான் ரசனைகள் ஆளுக்காள் மாறுபட்டவை எனினும், பலரின் கடைசி ரேங்கில் ஸ்மர்ப்ஸ், கிளிப்டன், ப்ளூகோட்ஸ் இருப்பது சற்றே வருத்தமளிக்கிறது.//

   +111

   Delete
 61. Here are my ratings though I like variety:
  Tier - I
  டெக்ஸ் வில்லர்
  லக்கி லூக்
  சிக் பில்
  லார்கோ
  ரிப்போர்ட்டர் ஜானி
  கேப்டன் பிரின்ஸ்
  XIII
  Tier-2
  ட்யுராங்கோ
  தோர்கல்
  CID ராபின்
  மாடஸ்டி பிளைசி
  Smurfs
  மாயாவி
  CID லாரன்ஸ்-டேவிட்
  ஜானி நீரோ
  ஸ்பைடர்
  வெய்ன் ஷெல்டன்
  LADY S
  ஜில் ஜோர்டன்
  அண்டர்டேக்கர்
  Tier-3
  மர்ம மனிதன் மார்ட்டின்
  ப்ளூ கோட் பட்டாளம்
  ரின்டின் கேன்
  மதியிலா மந்திரி
  பென்னி
  கிளிப்டன்
  சாகச வீரர் ரோஜர்
  XIII-Spinoffs

  ReplyDelete
  Replies
  1. XIII-Spinoffs கட்டக் கடைசியா சார் ?! ஆவ்வ் !!

   Delete
 62. Tier I
  லார்கோ
  ட்யுராங்கோ
  தோர்கல்
  LADY S
  லக்கி லூக்
  ப்ளூ கோட் பட்டாளம்
  சிக் பில்
  Smurfs
  XIII

  TIER II
  வெய்ன் ஷெல்டன்
  ரிப்போர்ட்டர் ஜானி
  ஜில் ஜோர்டன்
  டெக்ஸ் வில்லர் - Moved to TIER II because of too much TEX. Else this would be Tier I
  ரின்டின் கேன்
  மதியிலா மந்திரி
  கிளிப்டன்
  அண்டர்டேக்கர்

  TIER III
  CID ராபின்
  பென்னி
  கேப்டன் பிரின்ஸ்

  TIER IV
  மாடஸ்டி பிளைசி
  ஸ்பைடர்
  மர்ம மனிதன் மார்ட்டின்
  CID லாரன்ஸ்-டேவிட்
  மாயாவி
  ஜானி நீரோ
  சாகச வீரர் ரோஜர்

  ReplyDelete
  Replies
  1. //டெக்ஸ் வில்லர் - Moved to TIER II because of too much TEX. Else this would be Tier I//

   :-)

   Delete
 63. எடிட்டர் சார்,
  கடந்த 5 வருடங்களாக சந்தா கட்டிதான் நான் காமிக்ஸ் வாங்கினேன். எல்லாமே கலெஷன்ல இருக்கு. கடந்த இரண்டு வருடங்களாக ஏகப்பட்ட கதைகள் வருவதால் விரும்பியதை மட்டும் வாங்குவோம் என்கிற மனநிலைக்கு வந்து, 2018ல் வெளிவந்ததில் 3 புக் மட்டுமே வாங்கினேன். உங்கள் கணிப்பில் உள்ள tier 1 நாயகர்கள்தான் என் விருப்பவும், டெக்ஸ் வில்லர் நீங்கலாக எனக்கு டெக்ஸ் அலுப்பு தட்டுகிறது.

  நேற்றுதான் 3 டைட்டில் வாங்கினேன் அதில் ஒன்று அந்த கிராஃபிக் நாவல் இங்கு எல்லாரும் கடித்து குதறியபின்பும் அதை வாங்கினேன் ☺ விலைதான் அதிகமோன்னு.. சார், one shot கிராஃபிக் நாவல்களை வெளியிடுங்கள் எப்போதும் என்னைமாதிரி ஒருசில ஆதரவு இருந்துகொண்டே இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. ரசனை வானவில்லில் தான் எத்தனை எத்தனை வர்ணங்கள் !!

   Delete
 64. முன்வரிசை :

  லார்கோ வின்ச்
  தோர்கல் ஏஜிர்சன்
  கேப்டன் டைகர்
  டெக்ஸ் வில்லர்
  XIII
  மார்டின்
  லக்கி லூக்
  புளுகோட்ஸ்
  கிளிப்டன்
  மதியில்லா மந்திரி

  நடுவரிசை :

  டியூராங்கோ
  அண்டர்டேக்கர்
  டைலன் டாக்
  ராபின்
  மாடஸ்டி ப்ளைசி
  கேப்டன் பிரின்ஸ்
  ஜானி
  சிக்பில்
  ஸ்மர்ப்ஸ்
  பென்னி
  ரின்டின்கேன்

  கடைசி வரிசை :

  மும்மூர்த்திகள்
  லேடி S
  வேய்ன் ஷெல்டன்
  ஜில் ஜோர்டன்

  ReplyDelete
 65. Tier 1 - I buy blindly
  லார்கோ
  ட்யுராங்கோ
  ரிப்போர்ட்டர் ஜானி
  ஜில் ஜோர்டன்
  டெக்ஸ் வில்லர்
  மாடஸ்டி பிளைசி
  ஸ்பைடர்
  கேப்டன் பிரின்ஸ்
  XIII

  Tier 2 - I buy for sure

  CID ராபின்
  மாயாவி
  CID லாரன்ஸ்-டேவிட்
  ஜானி நீரோ

  Tier 3 - I avoid

  தோர்கல்
  LADY S
  வெய்ன் ஷெல்டன்
  மர்ம மனிதன் மார்ட்டின்
  லக்கி லூக்
  ப்ளூ கோட் பட்டாளம்
  ரின்டின் கேன்
  சிக் பில்
  மதியிலா மந்திரி
  Smurfs
  பென்னி
  கிளிப்டன்
  சாகச வீரர் ரோஜர்
  அண்டர்டேக்கர்

  ReplyDelete
  Replies
  1. உங்களது 3 பிரிவுகள் சூப்பர் நண்பரே !!

   I buy blindly !!
   I buy for sure !!
   I avoid !!

   Delete
 66. Tier 1

  லார்கோ
  ட்யுராங்கோ
  தோர்கல்
  LADY S
  டெக்ஸ் வில்லர்
  மாடஸ்டி பிளைசி
  மாயாவி
  CID லாரன்ஸ்-டேவிட்
  ஜானி நீரோ
  ஸ்பைடர்
  கேப்டன் பிரின்ஸ்
  அண்டர்டேக்கர்
  XIII

  Tier 2

  சாகச வீரர் ரோஜர்
  மர்ம மனிதன் மார்ட்டின்
  CID ராபின்
  ரிப்போர்ட்டர் ஜானி

  Tier 3

  வெய்ன் ஷெல்டன்
  ஜில் ஜோர்டன்
  லக்கி லூக்
  ப்ளூ கோட் பட்டாளம்
  ரின்டின் கேன்
  சிக் பில்
  மதியிலா மந்திரி
  Smurfs
  பென்னி
  கிளிப்டன்
  ReplyDelete
 67. Tier 1:

  No.1 - மாயாவி
  No.2 - ஸ்பைடர்
  No.3 - மர்ம மனிதன் மார்ட்டின்
  No.4 - தோர்கல்
  No.5 - வெய்ன் ஷெல்டன்
  No.6 - லார்கோ
  No.7 - அண்டர்டேக்கர்
  No.8 - ரிப்போர்ட்டர் ஜானி
  No.9 - ட்யுராங்கோ
  No.10 - டெக்ஸ் வில்லர்

  Tier 2:

  No.11 - XIII
  No.12 - மாடஸ்டி பிளைசி
  No.13 - கேப்டன் பிரின்ஸ்
  No.14 - லக்கி லூக்
  No.15 - சிக் பில்
  No.16 - மதியிலா மந்திரி
  No.17 - ரின்டின் கேன்
  No.18 - பென்னி
  No.19 - கிளிப்டன்
  No.20 - ப்ளூ கோட் பட்டாளம்

  Tier 3:

  No.21 - LADY S
  No.22 - CID ராபின்
  No.23 - சாகச வீரர் ரோஜர்
  No.24 - CID லாரன்ஸ்-டேவிட்
  No.25 - ஜானி நீரோ
  No.26 - ஜில் ஜோர்டன்
  No.27 - Smurfs

  ReplyDelete
 68. சில வாரங்களாக நான் படித்து ரசித்த பழையது புதியது பதிவு இங்கே

  பழையது:

  புரட்சி தலைவன் பிரின்ஸ் - பிரின்ஸ் ஒரு விவசாயிகளின் புரட்சி வீரர்களுடன் சேர்ந்து பிரஞ்சன் என்னும் டான் உடன் போடும் சண்டை தான் கதை.

  தலை கீழை ஒரு தினம் - எல்லாமே தலை கீழாய் நடக்கும் ஒரு தினத்தன்று மோடி மஸ்தான் சுல்தானிருக்கு பதில் தான் சுல்தானாக அந்தர் பல்டி அடிக்கும் ஒரு சிரிப்பு மத்தாப்பு.
  மாயமாய் போன மணாளன் - ரிப் கிர்பி தன் நண்பரின் மகளை தேடி போகிறார். மகளோ தன் நிச்சியத்தின் அன்று மாயமாய் மறைந்த காதலனை தேடி செல்கிறாள். கிர்பி இருவரையும் கண்டு பிடித்தாரா என்பது தான் கதை. விறுவிறுப்பு இல்லாத போதும், போர் அடிக்காத கதை.

  தேடி வந்த தங்கச் சுரங்கம் - டாக் புள்ளிற்கு ஒரு தங்க சுரங்கத்தில் தங்கம் கிடைத்ததாக வந்த தகவலை கொண்டு எல்லோரும் அதை தேடி போகும் சாகசமே கதை.

  நட்புக்கு நிரமில்லை - கிட்டிற்கு சேவலியார் பட்டம் வழங்க ஒரு கருப்பு தூதன் வர, அவனை கொல்ல குக் க்ளாஸ் கும்பல் முயற்சிக்க. கிட் ஆர்ட்டின் அவனை காப்பாற்றுகிறான்.

  திகில் தீவு - சைமன் மற்றும் சிறந்த விளையாட்டு வீரர்கள் ஒரு தீவில் அகப்பட்டு கொள்கிறார்கள். அவர்கள் எப்படி அந்த திகில் தீவில் இருந்து தப்பிக்கிறார்கள் என்பதே கதை.

  புதியது:

  க்யூபா படலம் - டெக்ஸ் ஒரு ஆர்ட் பில்மில் நடித்தது போல இருந்தது. ஒரே போர்.

  கை சீவம்மா கை சீவு - செம விறு விருப்பு. கடைசி நேரத்தில் கொலையாளி யார் என்று தெரிந்தபோது அதிர்ச்சி.

  சிறையில் ஒரு சிட்டு குருவி - வழக்கமான மாடஸ்டி கதை.

  நள்ளிரவில் காலன் வருவான் - இந்த psychological திரில்லர் மிக நன்றாக இருந்தது.

  ஒரு கணவாய் யுத்தம் - அட அட அட... நான் டெக்சின் தீவிர விசிறி கிடையாது, ஆனால் இந்த கதை முதல் பக்கத்தில் இருந்தே கலக்கல். 2018 started with a bang

  ReplyDelete
 69. Tier 1
  டெக்ஸ் வில்லர்
  மாடஸ்டி பிளைசி
  XIII
  மர்மமனிதன் மார்டின்
  CID ராபின்
  ட்யுராங்கோ
  LADY S
  LARCO
  வெய்ன் ஷெல்டன்
  கேப்டன் பிரின்ஸ்
  ரிப்போர்ட்டர் ஜானி
  லக்கிலூக்
  தோர்கல்
  Tier 2
  ஜில் ஜோர்டன்
  சிக்பில்
  லாரன்ஸ் டேவிட்
  ஜானி நீரோ
  சாகச வீரர் ரோஜர்
  கிளிப்டன்
  பென்னி

  Tier3
  அண்டர்டேக்கர்
  மதியில்லா மந்திரி
  ஸ்பைடர்
  மாயாவி
  ரின்டின் கேன்
  ஸ்மார்ப்
  ப்ளூகோட்பட்டாளம்

  இதில் அடியோடு நீக்க வேண்டியது

  ஸ்மார்ப்
  ரின்டின் கேன்

  எனக்கு தெரிந்து மேலே நான் குறிப்பிட்ட இரண்டும் யாரும் ஆதரிப்பதில்லை அதனை சந்தாவில் சேர்த்து வருவது வருந்த தருவது என்ன செய்ய .....

  தலைவி மாடஸ்டி யை தொடர்ந்து ஒதுக்குவதும் வருந்த வேண்டியது....


  ReplyDelete
 70. என் நண்பேன்டா எனது மகளுக்கு கதை சொல்லும் போது கவனித்தது.

  பக்கம் 24 பாலைவனத்தில் வெயிலில் மயங்கிய ரின் டின் கனவு காணும் போது ரின் டின் முகத்தை பச்சோலி உடம்பிற்கும் பச்சோலி முகத்தை ரின் டின் உடம்பிற்கும் மாற்றி வரைந்து இருப்பார்கள். இதனை முதலில் வாசிக்கும் போது கவனிக்கவில்லை.. எனது மகள்தான் இதனை கவனித்து சொன்னால்.

  நம்மில் எத்தனை பேர் இதனை கவனித்து ரசித்தீர்கள் என தெரியவில்லை.

  ReplyDelete

 71. நம்மளோட வெரைட்டி நமக்கு வரமே...ABCDன்னு எல்லா சந்தாவும் கட்டி விடுவதுதான் பழக்கம். எதையும் விட்டதும் இல்லை. விடப் போறதும் இல்லை.

  Tier 1 : எத்தனை புது கதை இருந்தாலும் முதலில் படிப்பது + மறு வாசிப்புகளுக்கு அதிகம் உள்ளாவது.

  கேப்டன் டைகர் (என்னுடைய டாப் பத்துல #1 ஹீரோ)
  டெக்ஸ் வில்லர் (என்னுடைய டாப் பத்துல #4 ஹீரோ)
  லக்கி லுக் (என்னுடைய டாப் பத்துல #2 ஹீரோ)
  சிக் பில்
  ரின்டின் கேன்
  மதியிலா மந்திரி
  பென்னி

  Tier 2: கண்டிப்பாக படிப்பது + மறு வாசிப்புகளுக்கும் உள்ளாவது.
  லார்கோ
  ட்யுராங்கோ
  தோர்கல்
  LADY S
  வெய்ன் ஷெல்டன்
  அண்டர்டேக்கர்
  கிளிப்டன்
  ப்ளூ கோட் பட்டாளம்

  Tier 3: கண்டிப்பாக படிப்பது + மறு வாசிப்புகளுக்கு நிறைய நேரம் இருக்கும் போது உள்ளாவது.
  XIII (என்னுடைய டாப் பத்துல #3 ஹீரோ)
  ரிப்போர்ட்டர் ஜானி
  ஜில் ஜோர்டன்
  மர்ம மனிதன் மார்ட்டின்
  CID ராபின்
  சாகச வீரர் ரோஜர்
  கேப்டன் பிரின்ஸ்

  Tier நாலு: ஒருக்கா படிக்கவே நாக்குத் தள்ளுவது
  மாடஸ்டி பிளைசி
  மாயாவி
  CID லாரன்ஸ்-டேவிட்
  ஜானி நீரோ
  ஸ்பைடர்

  இப்படி ஹீரோக்களாக பிரித்தாளும் கதைகளின் பொருட்டு அதிக வாசிப்புகளுக்கு உள்ளாகும் கதைகளில் XIII, சில ராபின், மார்ட்டின் கதைகளை குறிப்பிடலாம்.

  ReplyDelete
  Replies
  1. இதுல டியர் 1 கவனிச்சா அவை பெரும்பாலும் வாசிக்க இலகுவான நேர்கோட்டு கதைகளே. பயணங்களின் போது காத்திருப்பு நேரங்களின் போது என வாசிக்க அதிகம் எடுக்கப்படுவதன் காரணம் இக்கதைகளின் இலகுத்தன்மையே.

   Delete
  2. ///மறு வாசிப்புகளுக்கு அதிகம் உள்ளாவது.///

   ///மறு வாசிப்புகளுக்கும் உள்ளாவது.///

   ///மறு வாசிப்புகளுக்கு நிறைய நேரம் இருக்கும் போது உள்ளாவது///...

   ஏனுங் ஷெரீப் அய்யா ஒரு சந்தேகம்,

   மறு வாசிப்பே பொழுதுக்கும் செய்துட்டிருந்தா,ஆபீஸ்ல வேலை வேலைனு ஏதாவது செய்ய நேரம் இருக்கும்ங்களா...!!!

   Delete
  3. ஹி..ஹி... ஆறு மாதத்திறகு ஒரு தடவை புக் கிடைச்சா மறு வாசிப்பு மட்டும் தான் பெரும்பாலும் பண்ண முடியும்.

   Delete
 72. டெக்ஸ் கதைகள் ,லக்கிலூக் போன்ற கதைகள் குளுக்கோஸ் மாதிரி எளிமையான கதைகள்.வாயில்போட்டவுடன் கரைந்து எனர்ஜி கொடுத்துவிடும்.!!ஆகாவே ஜாலியான வாசிப்புக்கு நான் இவைகளையே தேர்ந்து எடுக்கின்றேன்.!


  மாடஸ்டி போன்ற கதைகள் மட்டன்பிரியாணிமாதிரி.!செரிக்க லேட்டாகும்...ஆனால் சும்ம நச்சுன்னு எனர்ஜியை கொடுக்கும்.!செரிமானம் குறைவானவர்களுக்கு செரிக்காது.அதனால் எல்லோருக்கு ஒத்துவருவது இல்லை.!

  கி.நா.பீஸா,பர்க்கர் மாதிரி....யூத்களுக்கு மட்டுமே பிடிக்கிறது.!என்னை போன்று ஜங்க் புட் ஒத்துக்கொள்ளாதவர்களுக்கு அலர்ஜியை கொடுக்கிறது.!!!

  ReplyDelete
  Replies
  1. மாடஸ்தி சார்....நானும் உங்க கட்சில இருந்தவன் தானே.. நி.நி தவிர ஆரம்ப கிராபிக் நாவல் வரிசை எல்லாம் அட்டகாசமா இருக்கு...எனக்காக படிச்சு பாருங்க :-)

   Delete
  2. /// நி.நி தவிர ஆரம்ப கிராபிக் நாவல் வரிசை எல்லாம் அட்டகாசமா இருக்கு...எனக்காக படிச்சு பாருங்க :-)///

   தலீவரே .. :):):)

   Delete
  3. எனக்கொரு ஆசை !! மடிப்பாக்கத்தையும், தாரமங்கலத்தையும் நெடுஞ்சாலை போட்டு இணைத்த கையோடு - இந்தப் பக்கமும், அந்தப் பக்கமும் ஆளுக்கொரு நி.நி. கிராபிக் நாவலைக் கையில் கொடுத்து வாக்கிங் அனுப்ப வேண்டும். நடு வழியில் இருவரும் சந்தித்துக் கொள்ளும் போது என்ன பேசுகிறார்கள் என்பதை நாம் ஓரமாய் நின்று கேட்டுப் பார்த்தால் எப்படியிருக்கும் ?

   Delete
 73. லயன் - முத்து LOGO வோட
  எதுவந்தாலும் வாங்குவேன்
  எதுவந்தாலும் வாங்குவேன்
  எதுவந்தாலும் வாங்குவேன்.

  ReplyDelete
  Replies
  1. ஆமா...ஆமா ..ஆமா...நானும்...:-)

   Delete
  2. நன்றிகள் சார் !!

   வாங்குவது stage 1
   படிப்பது stage 2
   ரசிப்பது stage 3

   இந்த இயல்பான செயல்பாட்டை அப்படியே குப்புறப் போட்டீர்களெனில் நான் வரிசைப்படுத்திடக் கோரும் TIER 1 : TIER 2 & 3 ரெடி !! யோசித்துப் பாருங்களேன் !

   Delete
 74. எங்கள் வீட்டு பொடியனுக்கு இந்த மாதம் வந்த வேட்டையாடு விளையாட்டு ரொம்ப பிடித்து விட்டது. இது வரை மூன்று முறை கதை சொல்லியாச்சு.

  பறவை பெரிதானதைப் பார்த்தவுடன் கேட்ட கேள்வி எப்படி இது மீண்டும் குட்டியாகி குட்டா மாறும். எப்படி இப்படி இந்த வயதில் யோசிக்கிறான் என ஆச்சரியப் பட்டேன்.

  அதேநேரத்தில் பகல் கனவு ஸ்மர்ப்ஸ் எங்கே என் கேட்டான் (விண்வெளியில் ஒரு பொடியன்) அவன் ஊருக்கு போய் விட்டான் என சமாளித்தேன்.

  இவராக புதிய ஸ்மர்ப்ஸ் உருவாக்குகிறார்.. அதில் சில அலுப்புமூஞ்சி ஸ்மர்ப்ஸ், மாமா ஸ்மர்ப்ஸ், மண்டையன் ஸ்மர்ப்ஸ்.

  ஸ்மர்ப்ஸ் அவன் மனதிற்குள் புகுந்து விட்டாரகள்.

  கடந்த மாதம் ரின் டின் படித்த பின் எனது மகள் அடுத்த ரின் டின் கதை எப்போது வரும் எனக் கேட்டபோது அடுத்த வருடம் என சொன்னேன்.

  ரின் டின் மற்றும் ஸ்மர்ப்ஸ் எங்கள் வீட்டில் ஒருவராகி விட்டார்கள்.

  ReplyDelete
  Replies
  1. ///எங்கள் வீட்டு பொடியனுக்கு இந்த மாதம் வந்த வேட்டையாடு விளையாட்டு ரொம்ப பிடித்து விட்டது.///--சூப்பர்....காமிக்ஸ்களின் எதிர்காலம் வளமானதாக இருக்கும் என்ற நம்பிக்கை துளிர்க்கிறது.

   ///இது வரை மூன்று முறை கதை சொல்லியாச்சு///--- 4வது முறையாவது ரைட்டா சொல்லிடுங்க பரணி...ஹி...ஹி..

   Delete
  2. அவன் கண்ணில் புத்தகம் பட்டுவிட்டால் கதை சொல்லச் சொல்லி விடுவான்.

   Delete
  3. பரணி சார்....இந்த கதை எனக்கு பிடித்து உள்ளதோ இல்லையோ ஆனால் சுட்டிகளுக்கு உங்களை போன்ற பெரியவர்கள் ( ஹீஹீ...நான் சிறுவன் ..)கதை சொல்வதற்கு அவர்கள் ரசிக்க வைப்பதற்கான கதை என்பது மறுக்க முடியா உண்மை..ஆசிரியர் அறிவித்த விடுமுறை நாளில் அந்த இதழின் கதையை தான் எனது சுட்டிகளுக்கு சொல்ல ஆவலுடன் காத்திருக்கிறேன்..:-)

   Delete
  4. கார்ட்டூன் கதைகள் இன்றைய குழந்தைகளை காமிக்ஸ் வாசிக்க அவர்களின் புத்தகம் படிக்கும் பழக்கத்தை வளர்க்க! அதனை நாம் தாம் அவர்களுக்கு ஊட்டி விட வேண்டும். இன்றைய குழந்தைகள் டிவி மொபைல்லுக்கு அடிமை, நாமும் அவர்கள் நம்மை தொந்தரவு செய்யாமல் இருந்தால் போதும் என்று இதனை (இதில் உள்ள தீமையை) கண்டு கொள்ளாமல்
   (கெட்டு போக) விட்டு விடுகிறோம்.

   புத்தக வாசிப்பை குழந்தைகளுக்கு ஏற்படுத்தி கொடுப்பது பெற்றோரின் கடமை!

   இந்த கார்ட்டூன் கதைகளை உங்கள் குழந்தைகளுக்கு சொல்லுங்கள், இந்த கம்ப்யூட்டர் உலகத்தில் இதன் மூலமாவது நாம் அவர்களுடன் கொஞ்சம் நேரம் செலவழிப்போமே? அவர்களுக்கு பிடித்திருக்கிறதா என்பதை பற்றி இங்கு எழுதுங்கள்! நாம் வளர்த்த குழந்தைகள் நமக்கு பிடிக்கிறது பிடிக்கவில்லை என்பது இரண்டாம் பட்சம்!

   Delete
  5. உண்மையே...எனது அலைபேசியில் இருந்த கேம் வழிமுறைகள் .செயல்பாடுகளை பற்றி எனக்கு தெரியாத அனைத்தையும் எனது வாரிசு எனக்கு கண்டுபிடித்து சொல்கிறான் அதில் உள்ள விளையாட்டுகளுக்கு அடிமையானவர்கள் போல அலைபேசியை கட்டிபிடிப்பது போல புத்தகத்திற்கு அவர்கள் மயங்குவதில்லை என்பதை உணர்ந்து கொண்டு பல மாதங்களுக்கு முன்னரே எனது அலைபேசியில் எந்த கேம்களையும் வைக்க கூடாது என முடிவெடுத்து அனைத்தையும் அழித்த காரணத்தாலும் ..வேறு எந்த கேம் வகைகளையும் அலைபேசியில் வைக்காத காரணத்தால் இப்பொழுது நானே அலைபேசியை கொடுத்தால் கூட அவர்கள் சீண்டுவதில்லை...

   Delete
  6. ///இந்த கம்ப்யூட்டர் உலகத்தில் இதன் மூலமாவது நாம் அவர்களுடன் கொஞ்சம் நேரம் செலவழிப்போமே?///
   அருமையாக சொன்னீர்கள் பரணி. அட்லீஸ்ட் இப்படி வாய்ப்பை உருவாக்கியாவது குழந்தைகளோடு நேரத்தை செலவிடனும்.

   Delete
  7. //
   கார்ட்டூன் கதைகள் இன்றைய குழந்தைகளை காமிக்ஸ் வாசிக்க அவர்களின் புத்தகம் படிக்கும் பழக்கத்தை வளர்க்க! அதனை நாம் தாம் அவர்களுக்கு ஊட்டி விட வேண்டும். இன்றைய குழந்தைகள் டிவி மொபைல்லுக்கு அடிமை, நாமும் அவர்கள் நம்மை தொந்தரவு செய்யாமல் இருந்தால் போதும் என்று இதனை (இதில் உள்ள தீமையை) கண்டு கொள்ளாமல்
   (கெட்டு போக) விட்டு விடுகிறோம்.

   புத்தக வாசிப்பை குழந்தைகளுக்கு ஏற்படுத்தி கொடுப்பது பெற்றோரின் கடமை!
   //
   +1

   Delete
  8. ///இந்த கார்ட்டூன் கதைகளை உங்கள் குழந்தைகளுக்கு சொல்லுங்கள், இந்த கம்ப்யூட்டர் உலகத்தில் இதன் மூலமாவது நாம் அவர்களுடன் கொஞ்சம் நேரம் செலவழிப்போமே? அவர்களுக்கு பிடித்திருக்கிறதா என்பதை பற்றி இங்கு எழுதுங்கள்! நாம் வளர்த்த குழந்தைகள் நமக்கு பிடிக்கிறது பிடிக்கவில்லை என்பது இரண்டாம் பட்சம்!///

   Well said Pfb ..!!

   Delete
  9. ஒவ்வொரு புத்தக விழாவிலும் சிக்கிடும் இளம் தந்தையரிடம் நான் ஓதி வருவது : "புள்ளைங்களுக்கு கதை சொல்லுங்க - ப்ளீஸ் !!"என்ற மந்திரத்தையே ! Maybe அதை நான் சொல்லும் போது குல்பி ஐஸ் விற்பவர் அடிக்கும் (விளம்பர) மணி போல் அவர்களுக்குத் தோன்றிடலாம் - but நான் என்றைக்குமே mean பண்ணியது (நமது) காமிக்ஸை மட்டுமே மனதில் கொண்டல்ல ! அம்புலிமாமாவோ ; அமர் சித்ர கதாவோ ; டிங்கிலோ ; டின்டினோ - எதைக் கையில் ஏந்தினீர்களெனிலும் ஆந்தைவிழியன் ஹேப்பி அண்ணாச்சி !

   Delete
  10. PFB : //இந்த கார்ட்டூன் கதைகளை உங்கள் குழந்தைகளுக்கு சொல்லுங்கள், இந்த கம்ப்யூட்டர் உலகத்தில் இதன் மூலமாவது நாம் அவர்களுடன் கொஞ்சம் நேரம் செலவழிப்போமே? அவர்களுக்கு பிடித்திருக்கிறதா என்பதை பற்றி இங்கு எழுதுங்கள்!//

   ஆண்டினில் ஏப்ரல் & மே மாதங்களின் இரண்டாம் சனிக்கிழமைகளிலிந்த வெள்ளோட்டத்தைச் செய்து பார்த்தாலென்ன guys ? "கதை சொல்லும் நேரமிது" என்று இதனை promote செய்திடுவோம் ! உங்கள் சுட்டிகளோடு ஒரு selfie அனுப்புங்கள் ; அவற்றை தொடரும் FB பக்கத்திலும் நமது இதழிலும் பிரசுரிக்க நாங்கள் ரெடி ! கதை சொல்ல நீங்கள் ரெடியா ?

   Delete
  11. PFB : //இவராக புதிய ஸ்மர்ப்ஸ் உருவாக்குகிறார்.. அதில் சில அலுப்புமூஞ்சி ஸ்மர்ப்ஸ், மாமா ஸ்மர்ப்ஸ், மண்டையன் ஸ்மர்ப்ஸ்.//

   இது தான் இந்தத்தொடரின் நிஜ வெற்றி !! அந்த இளம் மனதுக்குள் புகுந்திடுவதற்கு ஒரு விசேஷ சாவி தேவையாச்சே !!

   Delete
 75. வரமா?சாபமா? என்றுதான் எல்லாரும் எழுதுவார்கள்?
  வரமா?பாரமா? என மாற்றி அழகாக பதிவுக்கு தலைப்பு வைத்து இருக்கிறீர்கள்... அருமை

  ReplyDelete
  Replies
  1. சார்....பிடித்ததோ-பிடிக்காததோ - காமிக்ஸ் என்றைக்குமே ஒரு சாபமாகிட முடியாதல்லவா ?

   Delete
 76. நிச்சயமாக வெரைட்டி ஒரு வரம்தான் சார். அதுவே எங்களுக்கு ஒவ்வொரு மாதமும் எதிர்பார்பை ஆர்வத்தை உண்டுபண்ணுகிறது

  ReplyDelete
 77. I didn't buy this month books, since I didn't find anything suitable for my taste :(

  next month to see... Am a selective reader with conscious on budget.

  Though it is a great effort from Editor side to translate such kind of comic books every month, buying depends on my personal interest...
  Money also matters

  ReplyDelete
  Replies
  1. ஆமாம். இதை ஆசிரியர் கவனத்தில் கொள்ளவேண்டும். செலவிடும் தொகை குறைவானதாயிருக்கும்போது தெரிவிலும் நெகிழ்வுத் தன்மையை வாசகர்கள் கைக்கொள்வர். அதாவது, தமக்குப் பிடிக்காத நாயகர்களின் கதையாகவிருந்தாலும் வாங்கிக வைத்துக்கொள்ளலாம் பின்னர் வாசித்துப் பார்ப்போம் என வாங்கும் நிலை இருந்தது. விலை என்பது முக்கிய ஃபாக்டராக உள்ளபோது, தெரிவுகளுக்கு அதிக கவனம் செலுத்தவேண்டி ஏற்படுகிறது. இது, தரப்படுத்தலாக வந்து சில கதைகளை தவிர்க்க வைத்துவிடுகிறது. தியேட்டரில் என்ன படம் போட்டாலும் போய்ப் பார்க்கும் காலமிருந்தது. இன்று, அது பெரும்பாலும் குறைந்து, பிடித்த கதாநாயக நாயகியர் அல்லது இயக்குநர் படம் என்று குறுகிவிட்டது. எகிறும் ஏனைய அடிப்படை செலவுகளின் அழுத்தமும் ஒரு காரணி.

   Delete
  2. இது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயமே - அடுத்த மாதம் நான்கு புத்தகங்களில் இரண்டு சிக்-பில் எனும்போது எனக்கு சிக்-பில் கதைகள் பிடிக்காததால் வாங்கப்போவதில்லை. லேடி S நமது சென்னை ஸ்டாலில் ஆங்கிலத்தில் வாங்கியதே இன்னும் திறக்க வில்லை எனும்போது நான் அடுத்த மாதம் வாங்குவது tex மட்டுமே !

   Delete
  3. Mahesh Kumar : சார்...நன்றிகள் முதலில் !! வாங்குகிறீர்களெனில் ஏனென்பதையும், வாங்காது போனால் அதன் காரணத்தையும் தெரிந்திட நான் எப்போதுமே ஆவலாய் இருப்பதுண்டு !

   பிடிக்காத சமாச்சாரங்களெனினும், அவற்றை நாசூக்காய் ஒரு கோடிட்டுக் காட்டும் பொருட்டாவது இங்கு நண்பர்கள் மௌனத்தைக் கலைப்பது அவசியம் ! நான்பாட்டுக்கு "மௌனம் சம்மதம்" என்று வண்டியை அதே பாதையில் எடுத்துச் செல்வதும் மதியீனம் தானே ? உங்கள் தேர்வுகளை, ரசனைகளை - உங்கள் கண்ணோட்டத்தில், நயமாகச் சொல்லுங்கள் நண்பர்களே !தொடர்ந்திட வேண்டியவற்றை என்னிடம் விட்டு விடுங்கள் !

   Delete
  4. Podiyan : //ஆசிரியர் கவனத்தில் கொள்ளவேண்டும். செலவிடும் தொகை குறைவானதாயிருக்கும்போது தெரிவிலும் நெகிழ்வுத் தன்மையை வாசகர்கள் கைக்கொள்வர். அதாவது, தமக்குப் பிடிக்காத நாயகர்களின் கதையாகவிருந்தாலும் வாங்கிக வைத்துக்கொள்ளலாம் பின்னர் வாசித்துப் பார்ப்போம் என வாங்கும் நிலை இருந்தது.//

   நேரம் கிட்டும் போது - variety என்ற மரத்தை நாடி நான் டூயட் பாடி வரும் காரணத்தை யூகிக்க முயற்சித்துத் தான் பாருங்களேன் நண்பரே ?!

   உறுதியாய் விற்பனையாவது இவை தான் என்பது தெளிவாய்த் தெரியும் போது - TEX ; லக்கி ; சிக் பில் ; மார்ட்டின் ; டைகர் ; மாயாவி + ஒருசில hot heroes களை மட்டுமே பயப்படுத்திக் கொண்டு நான் பாட்டுக்கு நிம்மதியாய் பிழைப்பை ஓட்டிடுவேனே ?

   மொழிபெயர்ப்பில் சிரமம் லேது - இவையெல்லாமே நேர்கோட்டுக் கதைகள் எனும் பொழுது ; பணியில் அழுத்தம் குறைச்சல் - இவையெல்லாமே உங்கள் ரசனைக்கு உகந்தவைகள் எனும் போது ; விற்பனையில் சுணக்க வாய்ப்புகள் கம்மி - எல்லாமே box office நாயகர்கள் என்பதால் !

   அப்புறமும் இந்த variety தேடல் எதற்காக இருக்கக்கூடுமென்று யோசித்துப் பாருங்களேன் ?

   Delete
 78. வெரைட்டி நிச்சயம் சாபம்தான்.!


  மாடஸ்டியை போல் தினமும் புதுப்புது சவால் , அனுபவம் த்ரில்லீங்கை, ரசிப்பவர்கள் எண்ணிக்கையில் மிகமிக குறைவு.! என்னைப்போன்ற செக்குமாடு போல்.ஒரே வட்டத்தில் ,அரைத்த மாவை அரைப்போமா.?துவைத்த துணியை துவைப்போமா ? என்ற மனோபாவத்தினர் மெஜாரிட்டியாக உள்ளோம்.ஆகவே புது வெரைட்டி சாபமே.!!!

  இது என்னுடைய தனிப்பட்ட கருத்து.!

  ReplyDelete
 79. *** வேட்டையாடு விளையாடு ****

  ஓவ்!! இந்த குட்டியூண்டு உயிரினங்களின் வாழ்க்கையில்தான் எத்தனை எத்தனை சாகஸங்கள்!!

  சீனியர் ஸ்மர்ஃப் தயாரித்த மருந்து ஒன்று எதிர்பாரா வகையில் எதிர்விளைவுகளையே பலனாக்க, அந்த மருந்துக் குப்பியை கண்காணாத இடத்தில் புதைத்துவிட்டுவருமாறு உத்தரவிடுகிறார் சீனியர். மருந்தை எடுத்துச் செல்லும் பொடியர்களின் அஜாக்கிரதையால், அந்த மருந்து அசம்பாவிதமாக ஒரு குட்டிப் பறவையின் வாயில் விழுந்துவிட, மருந்தின் வீரியத்தால் ராட்சத உருவெடுத்துப் பறந்துவரும் அப்பறவை ஸ்மர்ஃப் வில்லாவையே துவாம்சம் செய்துவிடுகிறது. அதனிடமிருந்து உயிர்தப்ப கைவிடப்பட்ட பழைய கோட்டையில் தஞ்சம் புகுகின்றனர் சீனியர் தலைமையிலான நமது ஸ்மர்ஃப் குழு! தொடர்ந்து அரங்கேறும் சம்பவங்களும், ரகளைகளுமே வயிறுகுலுங்கச் சிரிக்க வைத்திடும் மீதக் கதை!

  இந்த ஸ்மர்ஃப் படைப்பாளிகளுக்கு எங்கிருந்துதான் இப்படியாப்பட்ட கதைக்களங்கள் கிடைக்குதோ... பின்னிப் பெடலெடுக்கிறார்கள்!! குழந்தைகளும், குழந்தை மனம் கொண்ட பெரியவர்களும் குதூகலித்துப் படிக்க, பார்த்து ரசிக்க, மனம் விட்டு சிரிக்க ஏராளமான சங்கதிகள் கொட்டிக்கிடக்கின்றன இதில்!

  ஆங்கிலத்தில் இத்தொடரை நான் படித்ததில்லை; எனினும் எட்டுஊருக்கு கேட்குமளவுக்கு சத்தமாகச் சொல்லுவேன் - "தமிழில் இருக்குமளவுக்கு தரமான நகைச்சுவையோடு வேறு எந்த மொழியிலும் வெளியாகியிருக்க சாத்தியமே இல்லை!" என்று!

  'பொடி பாஷை'யை அளவாக, தேவைப்படும் இடங்களில் மட்டும் பயன்படுத்தியிருப்பது அழகுக்கு அழகு சேர்கும் மற்றொரு சிறப்பு!

  குட்டிக்கதையான 'காதல் படுத்தும் பாடு' நான்கே பக்கங்கள் எனினும் நாற்பது முறை சிரிக்க வைத்துவிடுகிறது!

  ஐ லவ் ஸ்மர்ஃப்!

  என்னுடைய ரேட்டிங் : 10/10  ReplyDelete
  Replies
  1. ///இந்த ஸ்மர்ஃப் படைப்பாளிகளுக்கு எங்கிருந்துதான் இப்படியாப்பட்ட கதைக்களங்கள் கிடைக்குதோ... பின்னிப் பெடலெடுக்கிறார்கள்!! குழந்தைகளும், குழந்தை மனம் கொண்ட பெரியவர்களும் குதூகலித்துப் படிக்க, பார்த்து ரசிக்க, மனம் விட்டு சிரிக்க ஏராளமான சங்கதிகள் கொட்டிக்கிடக்கின்றன இதில்!///

   ப்ளஸ்ஸோ ப்ளஸ் 1

   Delete
  2. மார்வல் மற்றும் பிரெஞ்ச் நிறுவனம் வெளியிட்ட 13, சினிபுக் வெளியிட்ட தோர்கல், யூரோகிட்ஸ் வெளியிட்ட லக்கிலூக் மற்றும் ஆங்கில இத்தாலிய டெக்ஸ்வில்லரின் சில புத்தகங்கள் வைத்திருக்கிறேன். நம்ம தரம் எதற்கும் சளைத்ததல்ல. ஆர்ட் காகிதத்தில் படிக்கும் போது கண்ணாடியில் க்ளேர் அடிப்பது மட்டுமே சிரமமாக உள்ளது. மத்தபடி நம்ம புக்குதேன் அட்ராக்கடிவா இருக்கு.

   Delete
  3. @ MP : சார்..காக்கைக்குத் தன் குஞ்சு moment #

   மார்வல் & சினிபுக் இன்னொரு லெவல் !!

   Delete
  4. ஈரோடு விஜய் //இந்த ஸ்மர்ஃப் படைப்பாளிகளுக்கு எங்கிருந்துதான் இப்படியாப்பட்ட கதைக்களங்கள் கிடைக்குதோ... பின்னிப் பெடலெடுக்கிறார்கள்!! //

   அவர்களது சித்திரக்கூடத்தில் ஒரு 30 நிமிடங்களை செலவிட்ட போதே எனக்கு இந்தப் படைப்பாளிகளின் டீம் மீது ஒரு பிரமிப்பு ஏற்பட்டது !! கதை டீமின் பணிகளை பராக்குப் பார்த்தாலும், மொழி பிரச்னை காரணமாய் நமக்கு ஏதும் புரியாதென்பதால் ஓவியர்களோடே நேரத்தை செலவிட்டேன் ! என்னுடன் பேசிக் கொண்டும், ஜாலியாய் அரட்டையடித்துக் கொண்டும் கிட்டத்தட்ட ஒரு முழுப் பக்கத்தை அரை மணி நேரத்திற்குள் ஓவியர் rough பென்சில் ஸ்கெட்ச் போட்டு முடித்திருந்தார் !! நாலைந்து மாதங்களுக்கொரு புது ஆல்பம் என்ற அசுர வேகம் !! வரம் வாங்கி வந்த படைப்பாளிகள் !!

   Delete
 80. அதுசரி இந்த மாத விமர்சனத்தையே காணோம்.??

  பனிரெண்டு வருடங்களாக தொடர்ச்சியாக சந்தா கட்டி வாங்கிவருகிறேன்.!இம்முறை கட்ட தாமதமாகிவிட்டது.! முதல் இரண்டு மாதங்களளில் எனக்கு பிடிக்காத கதைகளான தோர்கல் ரின்டின் டபுளாக என் கலெக்ஷனில் சேருவதை விரும்ப வில்லை.

  நேற்று தி.நகர் கடைக்கு சென்றேன் ஏழாம்தேதி வர சொல்லி உள்ளார்கள். சந்தா கட்டாவிட்டால் சென்னையில் ரொம்போ கஷ்ட்டம்.!!!

  அப்படியே இந்த மாத புத்தகத்தை விமர்சனம் செய்தால் நன்றாக இருக்கும்.!!!

  ReplyDelete
  Replies
  1. சார்...தொடரும் ஆண்டினில் உங்கள் சிரமங்களை மட்டுப்படுத்திடவும் ஒரு யுக்தி காத்திருக்கும் பாருங்களேன் !

   Delete
 81. எனக்கு அனைவரும் ஒரே தராசில்தான்.
  ஆசிரியர் எந்தக் கதை/நாயகர் வெளியிட்டாலும் பேதமின்றி வாங்குவேன்

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள் சார் ; வாங்குவதோடு, படிக்கவும் ரசிக்கவும் செய்தால் இன்னும் சூப்பர் !

   Delete
 82. 1. உங்கள் பார்வையில் ‘Album of the Year 2017’ எதுவோ? (ஒற்றை முதல் பரிசு மட்டுமே சாத்தியம் என்பதால் “"ஆங்… இது… அப்புறம் அது… அப்பாலிக்கா இதுவுமே"” என்ற தேர்வுகள் வேண்டாமே ?!)

  ட்யூராங்கோ...அடுத்த பாகங்கள் ஜனவரி-2018 என்று சொன்னதாக ஞாபகம்...!?!? eagerly waiting.

  2. உங்கள் பார்வையில் “அறிமுகம் of the Year”?

  ட்யூராங்கோ

  3. உங்கள் பார்வையில் ”சொதப்பல் of the Year” 2017?
  (இங்கேயும் ஒற்றை சாய்ஸ் மட்டுமே ப்ளீஸ்)

  அந்த மஞ்சள் சட்டைக்காரரின் சில இதழ்கள் ....சொன்னால் கும்மியடித்து விடுவார்கள்...!?

  4. அட்டைப்படங்களுள் உங்களது Top3 ?
  காந்தக்கண்ணழகியின் S ஒன்று மற்றும் S இரண்டு (ஸ் ஸ் ..யப்பா)...அப்புறம் அந்த உடைந்த மூக்காரின் கோட்டை.

  5.மிகச் சுமாரான அட்டைப்படங்களின் பட்டியலுமே ப்ளீஸ்? The Bottom 3 ?
  CID லாரன்ஸ்...மரணத்தின் நிறம் பச்சை...மற்றும் மார்டினின் மிஸ்ட்ரி ஸ்பெஷல்

  6. 2017-ன் “Top Moment” – உங்களைப் பொறுத்தவரை ?
  ஒன்றா ரெண்டா...இரத்தக் கோட்டை...இரத்தப் படலம் அறிவிப்பு ...ஒரு தலைவன் ஒரு சகாப்தம் வடிவமைப்பு...ஜுனியர் எடியின் promotion...நண்பர்கள் ராஜசேகருக்கு உதவியது....அப்புறம் அந்த புலன் விசாரணையை முன்னிட்டு உங்களை சேரநாட்டு ரகசிய மூலிகை வைத்தியம் எடுக்க வைத்தது...(அதையும் 'வரும் ஆனா வாராது' என்கிற ரீதியில் நீங்கள் வைத்திருப்பது...கம்பெனிக்கு கட்டு படியாகுமெனில் 'எவ்வளவோ செஞ்சிட்டோம் இத செய்யமாட்டோமா' என்று சொல்லி/செய்து விடுங்களேன்)

  7. லயன் கிராபிக் நாவல் (சந்தா E)– உங்கள் பார்வையில்?
  சந்தா E வரும் மாதங்களில் ஒரு surprise element இருப்பதாகவே படுகிறது. ஆறை பன்னிரெண்டாக்கினால் ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ...இரட்டிப்பு சந்தாசமே...மன்னிக்கவும் சந்தோசமே .

  8. 2017 – ஒட்டுமொத்தமாய் என்ன மாதிரியான அனுபவம் என்பீர்கள்?
  (a) சூப்பர்-டூப்பர் (b) தேவலாம்! (c) ஹாவ்வ்வ்!

  (d)போலாம் ரைட்...எப்பொழுதும் போல் ஒவ்வொரு சாதனையும் ஒரு படிக்கல்லே என நீங்கள் எடுத்துக்கொள்வது...அதே போல் ஒவ்வொரு கல்லடியும் அடிக்கல்லே (strong basement) என நீங்கள் கருதும் "அந்த ஒரு நொடி" (அப்பாடா title வந்தாச்சு).

  ReplyDelete
  Replies
  1. //
   ட்யூராங்கோ...அடுத்த பாகங்கள் ஜனவரி-2018 என்று சொன்னதாக ஞாபகம்...!?!? //

   May'18 sir....

   Delete
 83. உள்ளதை உள்ளபடி சொல்வதாய் இருந்தால் ரேடாரில் வராத டைலன் டாக் ,கமான்சே இரண்டு கதைகளும் வரும்போது மட்டும் கொஞ்சமே கொஞ்சம் பிடிக்காமல் போகும் ..மற்றபடி அனைத்து கதைகளும்,கதா நாயக நாயகிகளும் ஓகே ஓகே டபிள் ஓகேதான் .

  ReplyDelete
  Replies
  1. சார்...பெர்சனலாக அவை எனக்குப் பிடித்த தொடர்களே ; but பெரும்பான்மை நண்பர்களுக்கு அவை அயர்ச்சியை ஏற்படுத்தியதாலும், விற்பனையில் பின்தங்கியதாலும் கல்தா தர வேண்டிப் போனது !

   Delete
 84. Tier 1
  ------------
  லார்கோ
  ட்யுராங்கோ
  தோர்கல்
  LADY S
  வெய்ன் ஷெல்டன்
  ரிப்போர்ட்டர் ஜானி
  டெக்ஸ் வில்லர்
  மாடஸ்டி பிளைசி
  ப்ளூ கோட் பட்டாளம்
  சிக் பில்
  மதியிலா மந்திரி
  கேப்டன் பிரின்ஸ்
  அண்டர்டேக்கர்
  XIII
  லக்கி லூக்


  Tier 2
  ------------
  Smurfs
  மர்ம மனிதன் மார்ட்டின்
  கிளிப்டன்
  பென்னி
  ஜில் ஜோர்டன்
  ரின்டின் கேன்


  Tier 3
  -----------
  CID ராபின்
  மாயாவி
  CID லாரன்ஸ்-டேவிட்
  ஜானி நீரோ
  ஸ்பைடர்
  சாகச வீரர் ரோஜர்

  ReplyDelete