Powered By Blogger

Saturday, March 10, 2018

ஒரு மதியப் பதிவு !

நண்பர்களே,

வணக்கம். எக்கசக்கமாய்ப் பதிவுகளைப் போட்டுத் தாக்கியிருக்கிறேன் தான்; ஆனால் ‘ஜாலிக்காண்டி‘ என்பதைத் தாண்டி மெய்யாகவே அத்தியாவசியப்படும் பதிவுகள் அமையும் போது கிடைக்கும் ஒரு சன்னமான திருப்தி அலாதியானது! கொஞ்ச காலமாகவே என் மண்டைக்குள் குடைந்து வந்த இந்த variety சார்ந்த விஷயத்தைப் போன வாரத்துப் பதிவில் இறக்கி வைத்தது உள்ளுக்குள் லேசானது போன்ற உணர்வைத் தருகிறது! Oh yes - ஒற்றை ராத்திரியில் இதற்கொரு சகல ரோக-சர்வ நிவாரணத் தீர்வெல்லாம் சாத்தியமாகாது என்பது புரிகிறது; ஆனால் கொஞ்சமாகவேணும் கிடைத்துள்ள உங்களது ரசனைகள் பற்றிய insights – தொடரும் காலங்களின் திட்டமிடல்களுக்கு ஓரளவாவது உதவிடும் என்று நம்புகிறேன்! ‘ஓரளவாவது‘ என்று நான் நீட்டி முழக்கிடக் காரணங்கள் சில உள்ளன:

1. பிரதானமாய் – தத்தம் எண்ணங்களை / நாயகத் தேர்வுகளை இங்கே பதிவிட்டுள்ள நண்பர்களின் எண்ணிக்கை மிகக் குறைச்சலே! So இதனை ஒரு முழுமையான அபிப்பிராய வெளிப்பாடாய்ப் பார்த்திடல் சிரமமே! தொடரவிருக்கும் ஏப்ரல் இதழ்களோடு இதை வழங்கி, இன்டர்நெட்டுக்கு அப்பாலுள்ள வாசகர்களின் சிந்தனைகளையும் tap செய்திட முடிகிறதா என்பதைப் பார்த்தாக வேண்டும்! And இன்னமும் கூட இங்கே மௌனத்தையே தொடர்ந்திடும் நண்பர்களும், இந்த முறையேனும் மௌன விரதத்தைக் கலைக்க முற்பட்டால் சூப்பராக இருக்கும் ! 

2. பதிவாகியுள்ள பட்டியல்களை பரிசீலித்தால் – TIER 3-ல் டிக்கெட் எடுக்காமலே பயணிப்பவர்களாகத் தென்படுவது மாயாவி & மும்மூர்த்திகள்! கிட்டத்தட்ட 90% நண்பர்களின் எண்ணம் இதுவே! ஆனால் கடந்த 2+ ஆண்டுகளின் விற்பனையின் நம்பரில் முதலிடத்தில் குந்திக் கிடப்பது இந்தப் பல்செட் மாட்டும் பருவத்திலிருக்கும் பிரிட்டிஷ் ராஜகுமாரர்கள் தான்! அவர்கள் நினைத்தால் நாம் பயணிக்கும் இந்த ரயிலையே ஒரே செக்கில் கிரயம் பண்ண முடியும் தான் - ஆனால் நமது ரசனைப் பார்வைகளிலோ – ‘அப்டிக்கா ஓரமாப் போயி விளையாடுங்கப்பா‘ boys ஆகவே பின்தங்கிக் கிடக்கின்றனர்! So சில தருணங்களில் ரசனை / விற்பனை அளவுகோல்கள் - என்பன துருவங்களின் தொலைவிலும் இருக்கக் கூடும் போலும் என்பதையும் ஏற்றுக் கொண்டாக வேண்டி வருகிறது ! மண்டையைச் சொரிந்து கொண்டே நடை போடும் படங்கள் கொஞ்சம் ! 

கிட்டியிருக்கும் குறைச்சலான data-வைக் கொண்டு ஒரு தோராயமான picture-ஐ நிர்ணயிக்க முயற்சித்தால் பதில்களை விடக் கேள்விகளே மிகுந்திடுவது புரிகிறது! நான் பார்த்தமட்டிற்கு அழுந்தப் பதிவாகியிருக்கும் கருத்துக்கள் சில !

* பலரது Tier 3-ல் இடம் பிடிப்பது பலதரப்பட்ட கார்ட்டூன் நாயகர்களே என்பது முதல் stat! கொஞ்ச காலமாகவே ஸ்மர்ஃப்ஸ் வெளியாகும் வேளைகளில்; ரின்டின் ஆஜராகும் நாட்களில்; க்ளிப்டன் கதைக்கும் பொழுதுகளில்; மந்திரி மாவாட்டும் தருணங்களில், சன்னமாகவோ… சத்தமாகவோ சங்டக்குரல்கள் பதிவாகி வருவதில் இரகசியமில்லை! எனது கேள்வியானது- இது ஒருவித கார்ட்டூன் மீதான அலர்ஜியா ? அல்லது குறிப்பாய் இந்த நாயகர்கள் மீதான கடுப்ஸா? என்ன பண்ணினாலும் எனக்கு கார்ட்டூன் மட்டும் ரசிக்கவே மாட்டேன்குது சார்!‘ என்று என்னிடம் சொல்லியுள்ள நண்பர்கள் ஏராளம்! So தற்போதைய இந்த துவேஷமானது anti genre-ஆ ? anti hero-வா ? Maybe இவர்களுக்கு மாற்றாய் வேறு கார்ட்டூன் நாயகர்கள் தலைகாட்டினால் அதனில் உங்கள் reactions எவ்விதமிருக்குமோ ? சும்மா ஒரு curiosity -ல் தான் இதற்கான விடை தேட முனைகிறேனே தவிர, அடுத்தாண்டு கார்ட்டூன்களுக்கு முழுக்குப் போடும் எண்ணத்தில் அல்ல ! இன்றைய பொதுவான ரசனைகளுக்கும் - நாளைய தலைமுறையின் ஊக்குவிப்புக்கும் மத்தியில் பெரியதொரு லடாய் இன்றி நம் பயணம் தொடர்வது அவசியமென்பதால் - இயன்றமட்டிலும் அவரவர் எண்ணங்களை அறிந்திட ஆவல் ! So சற்றே வெளிச்சம் போடுங்களேன் guys - இந்தப் பாய்ண்ட் மீது?

* ரயிலின் பின்பக்கத்திலிருந்து ஒரே ஜம்பாய் முன்பக்கத்துக்குப் போனால் – ‘இப்போ என்னாங்கறே?‘ என்றபடிக்கு ஒரு வாட்டசாட்டமான மஞ்சளசட்டையர் அமர்ந்திருப்பது தெரிகிறது! “நீ மூணாம் பிறை கமல் மாதிரிக் குட்டிக் கர்ணம் அடிச்சுக்கோ; நாலாம் பிறை பரத் மாதிரி மண்டையிலெ கொட்டிக்கோ – உன் பாடு! ஆனாக்கா இங்கே அலுங்காமல் நான் சவாரியைச் தொடர்வேனாக்கும்!“ என்று அவர் சொல்லாமல் சொல்வது புரிகிறது !

++ஒரு லார்கோ ஆல்பத்தை உருவாக்க அவசியப்படும் குட்டிக்கரணங்களை நான் ஜெமினி ஸ்டூடியோ வாசலில் போய் போட்டிருந்தால், இந்நேரத்துக்கு யாராவது ஒரு ஸ்டண்ட் மாஸ்டரின் குழுவில் இடம் கிடைத்திருக்கும்! மொழிபெயர்ப்பில் துவங்கி வழிநெடுக களர்கிற பெண்டு சொல்லி மாளா ரகம்!

++ஒரு தோர்கல் ஆல்பத்தைத் தயாரிக்க முந்தைய பாகம்; பிந்தைய பாகம் என்று நெட்டுரு போட்டு வர வேண்டும்! அப்புறமாய் ஒரு லிட்டர் விளக்கெண்ணெய் வாங்கி வைத்துக் கொண்டு கண்ணயரும் ஒவ்வொரு தபாவும் நாலு சொட்டை உள்ளே போட்டுக் கொண்டாக வேண்டும் பணி செய்யும் போது!

++ஒரு இரத்தப் படலத்தை – அதுவும் அந்த இரண்டாம் மேஃபிளவர் சுற்றிலான கதைக்குள் புகுந்திடுவதெனில் க்ளுகோஸ் டப்பாக்கள் டஜன் கணக்கிலும், முகத்தில் தெளித்துக் கொள்ள குண்டு சோடாக்கள் ரெண்டு டஜனும் தேவைப்படும்!

ஆனால் இதெதெற்குமே அவசியங்களின்றி  ; “வந்தார்… சாத்தினார்… வென்றார்!“ என்பதே தனது பாணியாகக் கொண்டுள்ள நமது இரவுக் கழுகார் ஈட்டி வரும் ‘ஹிட்ஸ்‘ பற்றி நாமறிவோம்! எனது கேள்வி இவரது வெற்றி இரகசியம் பற்றியல்ல…! மாறாக- நமது ரசனைகளுக்கும், நமது வயதுகளுக்கும் மத்தியிலான equation-க்கு வலு உண்டா – இல்லையா? என்பது பற்றியே!

கொஞ்சம் விளக்குகிறேனே:

- "பேரிக்காய் போராட்டத்தை"“ 30 ஆண்டுகளுக்கு முன்பாய் சுஸ்கி & விஸ்கியில் ரசித்தோம்! ஆனால் இன்றைக்கோ நமது நீலப் பொடியர்களைக் கண்டு தெறித்து ஓடுபவர்களைப் பார்க்க முடிகிறது ! 

- “"காமெடிக் கர்னலை"“ எண்பதுகளின் இறுதிகளில் குலுங்கிச் சிரித்து அரவணைத்தோம்! ஆனால் அதே மீசைக்காரரை இன்றைக்குப் பார்த்த கணத்தில் ரிவர்ஸ் கியர் போடுவோரும் உண்டு தானே ? 

- புராதனம் சொட்டிய ‘செக்ஸ்டன் பிளேக்‘ கதைகள் அன்றைய b&w-ல், சாணித் தாளில் கூட ரசனைக்குரியதாய்பட்டன! ஆனால் அதே புராதனம் இன்றைக்குத் தள தள art பேப்பரில், முழு வண்ணத்தில் ஜில் ஜோர்டனின் ரூபத்தில் வலம் வரும் போது ஊரைக் காலி பண்ணிவிட்டு ஓட யத்தனிப்பது ஏனோ ?

- மீசையை முறுக்கிக் கொண்டு குள்ள மந்திரியார் ‘90-களில் நம்மிடையே ஜாலியாகக் கூத்தடித்தவர் தான்! ஆனால் இன்றைக்கோ அவர் பொருட்டு,நம்மவர்களில் ஒருசாராருக்கு ஜெலுசில் மாத்திரைகளை விழுங்கிட அவசியம் நேர்கிறது தானே?

"இதிலென்ன ஆச்சரியம் ? அந்த வயதுக்கு அது ரசித்தது! இப்போது ரசிக்கலை என்கிறீர்களா?" Super !! ஏற்றுக் கொள்கிறேன்!

ஆனால்… ஆனால்…......

வருடங்கள் 33 ஓடியிருப்பினும், ஆல்பங்கள் எக்கச்சக்கமாய் களமிறங்கியிருப்பினும் – இந்த மஞ்சள் சட்டை மாவீரரிடம் மட்டும் இந்த வயது சார்ந்த சமாச்சாரங்களெல்லாம் ஓரமாய் ஒதுங்கி விடும் மர்மம் தான் என்னவோ ? 1985-ல் ரசித்தோம் ; '95-ல் ஆராதித்தோம் ; 2005-ல் கொண்டாடினோம் ; 2015-ல் ஆர்ப்பரித்தோம் ! இங்கு மட்டும் அந்த "வயது-ரசனை" என்ற equation செயலிழந்து விடுகிறதே?! சில கதைகளை வயது பாகுபாடின்றி ரசிக்க முடிவதும் ; சிலவற்றை "இது குழந்தைப்புள்ளை மேட்டர்" என்று ஒதுக்க முற்படுவதும் ஏனென்று any thoughts ? Maybe “வயது சார்ந்த ரசனைகள்“ என்பதெல்லாம் ஒரு பிரமை தானோ? அல்லது டெக்ஸ் மாத்திரம் இந்த ஒப்பீடுகளுக்கு அப்பால் நிற்கும் ஒரு எஃகுப் பிறவியோ? ரசனைகளுள் ஒரு பொதுவான pattern தெரிகிறதென்று நினைக்கும் போது இத்தகையதொரு massive முரண் கண்ணில்படுகிறது!

ஆனால் துளியும் குழப்பமின்றிப் புலனாகும் விஷயமொன்றுள்ளது! அது தான் – “சேகரிப்பு“ என்ற பொழுதுபோக்கின் மீது குன்றி வரும் ஆர்வங்கள்! ஒட்டுமொத்தமாய் இது பொருந்துமோ - இல்லையோ ; ஒரு கணிசமான சதவிகிதத்துக்காவது இது தற்போது பொருந்தும் என்பதே எனது கணிப்பு ! Of course – இன்னமும் அந்நாட்களது சாணித் தாள் பிரதிகளைப் பழைய பேப்பர் கடைகளில் கண்டெடுக்கும் பரவசம் தொடரக்கூடும் தான் ; ஆனால் முன்போலான கொலைவெறிகளோடு தொடர்ந்திடுமா? என்பதில் I have my own doubts! ‘தொட்டுக்கோ – துடைச்சுக்கோ‘ என்று தட்டுத் தடுமாறி நமது இதழ்கள் வெளியான நாட்களில் – கண்ணில்படும் சகலத்தையும் வாங்கிட வேண்டுமென்ற அவா பரவலாக இருந்திருக்கலாம். ஆனால் இன்றைக்குத் திகட்டத் திகட்ட ஆல்ப மழை பொழியும் போது – பட்ஜெட்டுகள்; ரசனைகள்; நேர அளவுகோல்கள் என பல்வேறு factors முன்சீட்டை ஆக்கிரமிக்க – அந்தச் “சேகரிப்புக் கொலைவெறி“ பின்சீட்டின் ஓரத்துக்குத் தள்ளப்பட்டிருக்க வாய்ப்புகளுண்டு என்பதே எனது எண்ணம் ! எதுவும் சாஸ்வதமல்ல எனும் போது – இந்த சேகரிப்பின் நாட்டமும் எத்தனை காலம் தான் தழைத்திட முடியும்?!

ஆனால் இங்கேயும் ஒரு நேரெதிர் முரணும் இருப்பதாகவே படுகிறது எனக்கு! ‘இஷ்டப்பட்டதை மட்டும் வாங்கிக் கொள்ளலாம்‘ என்ற ரக வாசகர்கள் சிறு அணியாகவோ; மித அணியாகவோ உருவாகி வருவது ஒரு பக்கமெனில் – ‘எல்லாத்தையும் வாங்கியே தீருவேன்‘ என்ற diehard ரசிகர்களிடமே அந்த முரணைக் காண்கிறேன்! கடந்த 5+ ஆண்டுகளின் 200+ வெளியீடுகளில், maybe மறுபதிப்புகள் நீங்கலாக – பாக்கி அத்தனை வெளியீடுகளையும் வாசித்து விட்டுள்ள நண்பர்களின் எண்ணிக்கை எத்தனையாக இருக்குமென்பது அறிந்திட ரொம்பவே ஆவல் எனக்கு! மாதந்தோறும் இதழ்களைத் தடவி, உச்சி மோர்ந்து ரசிப்பது; பக்கங்களைப் புரட்டுவது; ரொம்பவே பிடித்தமான நாயக / நாயகியரின் கதையாக இருப்பின் அதனை மட்டும் உடனே படித்து விடுவது; இதர வரவுகளை "அப்பாலிக்கா பார்த்துக்கலாம்" என்று பீரோவுக்குள் பத்திரப்படுத்துவது என்பதை - நடைமுறையாகக் கொண்டிருக்கும் நண்பர்கள் சித்தே கையைத் தூக்குங்களேன் ப்ளீஸ்? இங்கே நமது வலைப்பதிவிலோ; வாட்சப் க்ரூப்களிலோ; FB-யிலோ இதழ்கள் சிலாகிக்கப்படுவதோ / சாத்தப்படுவதோ அரங்கேறும் போது, வேக வேகமாய் பீரோ சாவியைத் தேடிப் பிடித்து அவற்றை வெளியே எடுத்துப் படிப்பது சகஜ நிகழ்வு தானே folks? 

எனக்கு இந்தச் சந்தேகம் எழுவது நிறைய வாசகர்களின் தொடர் மௌனத்தைத் தொடர்ந்தே! “டைப் அடிக்கத் தெரியாது / நேரமில்லை“ – என்ற மாமூலான காரணங்களைத் தாண்டி, "வாங்கிப் பத்திரப்படுத்துவதே பிரதானம்; அப்புறமாய் எப்போதாவது படிச்சுக்கலாம்”" என்றதொரு நடைமுறையுமே அவர்களது மௌனங்களின் பின்னணிகளோ ? என்று அவ்வப்போது எனக்குத் தோன்றுவதுண்டு ! அட இதுக்கோசரமாவது பதில் கொல்ல முயற்சிக்கலாமே மௌ-வா நண்பர்களே ? So சேகரிப்பில் குறைந்திடும் ஆர்வம் ஒரு பக்கம் எனில் ; “அட அதுபாட்டுக்கு பீரோவுக்குள் அழகாய் கிடந்து விட்டுப் போகட்டுமே” என்ற தயாளம் மறுபக்கம்; இந்த இரு தரப்புகளுக்கு நடுவே diehard வாசகர்கள் என்பதே இன்றைய வானவில்லின் composition என்பது என் பார்வை! என் அனுமானத்தில் பிழையிருப்பின் திருத்திடுங்களேன் ப்ளீஸ்!

கதை சார்ந்த ரசனைகளைப் பார்வையிடும் போது கௌபாய் genre என்றும் இளமையாய்த் தொடர்வது புரிகிறது! அதே போல ஆக்ஷன் அதிரடி நாயகர்களுக்கென இன்னமும் நமக்குள்ளே ஒரு இடம் காலியாக இருப்பதும் புரிகிறது! புதுப்புது பாணிகள்; கிராபிக் நாவல்கள் என்று நாம் என்னதான் கலந்துகட்டி அடித்தாலும் – அவற்றை முழுமனதோடு அரவணைப்போர் சிறுபான்மையே என்பது இன்னமும் bottom line தான்! ஒற்றை நாளில் நாமெல்லாம் கி.நா. காதலர்களாக மாறிப் போவோம் என்ற கற்பனைகளோ; அவை தான் அறிவுசார் ரசனைகள் என்ற மாயையோ நிச்சயமாய் என்னுள் கிடையாது! இன்றைக்கும் சலூனின் கூடத்தில் டெக்ஸ் யாரையாவது துவட்டி எடுக்கும் போது நம்மையும் அறியாமல் இரத்தம் வேகமாய் ஓட்டமெடுப்பது இயல்பு தானே? So ரசனைகளுக்கு ஒரு ஸ்கேல் வைத்து "இந்தந்தக் கதைகளை ரசித்தால் இத்தனை மார்க்; அந்தந்தக் கதைகளை ரசித்தால் அத்தனை மட்டுமே!" என்ற வாத்தியார் வேலை செய்திடும் எண்ணங்களெல்லாம் கையிருப்பில் இல்லை! அதற்காக - 'பழைய குருடி---கதவைத் திறடி' என்றபடிக்கு கிராபிக் நாவல் தடத்துக்கு அவசரமாய் மங்களம் பாடும் அபிப்பிராயங்களுமே லேது ! உங்கள் எண்ணங்களில் பரவலாய் வெளிப்பட்டு வரும் facts-களை முன்வைக்க மட்டுமே இந்த முனைவு ! So ஒவ்வொரு ஆண்டுமே சந்தா E தொடரவே செய்திடும் - முழு 12 இதழ் சந்தாவாக இல்லாவிடினும் ! 

இன்னமும் நிறையவே சேதிகளை உங்கள் “நாயகத் தரம் பிரித்தல் படலத்தில்” புரிந்து கொள்ள முடிந்தது! ஆனால் அதையே பெரும் பட்டியலாக்கி உங்கள் குடல்களை இதற்கு மேலும் பதம் பார்க்கத் தோன்றவில்லை என்பதால் கொஞ்சம் இலகுவான topic-கள் பக்கமாய் நகருவோமா?

இதோ ஏப்ரல் மாதத்து highlight மீதான முதல் பார்வை! சிக் பில் க்ளாசிக்ஸ் – 2-க்கான அட்டைப்படம் உருவானதே ஒரு ஜாலியான கதை! இதன் மீதான பணிகள் நடந்தது Valentine’s Day சமயத்தில் தான் என்பதாலோ என்னவோ – நமது ராப்பரிலும் காதல் ரசம் சொட்டோ சொட்டென்று சொட்டியது! ஒரிஜினல் டிசைன்களையே நமது டிசைனர் மெருகேற்றி என் கண்ணில் காட்டிய டிசைன்கள் ஏராளம்! அவற்றுள் நான் இறுதியாய் ‘டிக்‘ அடித்தது இதையே!

கிட் ஆர்டின் காதல் மன்னனாய் மாறும் அழகை உட்பக்கங்களிலுமே முழு வண்ணத்தில் ரசிப்பது ஒரு செம உற்சாக அனுபவமாய் இருக்கப் போவது நிச்சயமென்பேன்! ஹார்ட்கவருடன் இதழ் ‘தக தக‘ வென்று மின்னுவதை போல எனக்குப்பட்டது; ஆனால் “கராத்தே டாக்டர்” இதழைக் கூட ‘சூப்பரப்பு‘ என்று சிலாகித்தவன் நான் என்ற முறையில் – எனது ரசனைகளை, நானே சீரியஸாய் எடுத்துக் கொள்வதில்லை தான்! ஏப்ரல் பிறக்கும் முன்பாய் ‘சிக் பில் க்ளாசிக்ஸ்-2‘ உங்களை எட்டிப் பிடித்து விடுமெனும் போது – நீங்களே தீர்ப்பெழுதிடலாமே?

ஏற்கனவே சொன்னது போல – ஏப்ரலின் இதழ்கள் எல்லாமே ரெடி – டெக்ஸ் வில்லர் b&w நீங்கலாக! So சீ-க்-கி-ர-மே மாதயிறுதி நெருங்கினால் கூரியர் படையெடுப்பை ஆரம்பித்து விடுவோம்! அப்புறம் ஏப்ரல் இதழ்களில் இன்னொரு சுவாரஸ்யமும் இருந்திடப் போகிறது! ஓலைப்பாயை ஈரமாக்கும் ரின்டின் கேனைப் போல என் ஓட்டைவாயைத் திறந்து மாமூலாய் அது பற்றியும் இப்போதைக்கு மொக்கை போடாது – ஏப்ரல் வரை பொறுமை காத்திட நினைக்கிறேன்!

அப்புறம் “இரத்தப் படலம்” எக்ஸ்பிரஸ் ஒருபக்கம் ஜரூராய்த் தடதடத்து வருகிறது. கிட்டத்தட்ட பாதிப் பக்கங்கள் டைப்செட் செய்யப்பட்டுத் தயாராகிவிட்டன! Maybe ஏப்ரல் மத்திக்குள் முழுமையையும் பூர்த்தி செய்து மே இறுதியினில் அச்சுக்குத் தயாராகி விடுவோம் ! 

And அந்த “"புலன் விசாரணை"” வருமா – வராதா? என்ற குடைச்சலோடு அவ்வப்போது எனக்கு வாட்சப்பிலும், மின்னஞ்சல்களிலும் நினைவூட்டல்களை செய்து வரும் நண்பர்களும் இல்லாதில்லை! அதனை எங்கே- எப்போது- எவ்விதம்- என்ன விலையில் நுழைப்பது? என்ற ஆராய்ச்சிகளுக்குள் புகுவதற்கு முன்பாய் அதன் தயாரிப்புக்கென அவசியப்படக்கூடிய முயற்சிகளை மறுக்கா பரிசீலனை செய்வோமே என்று அந்தக் கோப்புகளை எடுத்துப் பார்த்தேன் நேற்றைக்கு! ஒன்றே ஒன்று மட்டும் தெளிவாய்ப் புரிந்தது – தலையணைகளின் உயரம் பற்றாது போயின் – அந்தக் குறையை நிவர்த்திக்க இந்த ஆல்பம் நிச்சயமாய் உதவும் என்று ! To cut a long story short – இதன் மொழிபெயர்ப்புக்கு மெனக்கெட நண்பர்கள் யாரேனும் தயாரெனில் “புலன் விசாரணையை” நிஜமாக்கிடும் சாத்தியங்களை சீரியஸாகப் பரிசீலனை செய்திட நானும் தயார்! And இத்தனை கடினப் பணியினை சும்மாக்காச்சு பண்ணச் சொல்லுவது நியாயமாகாது என்பதால் அதற்கென ரூ.10,000/- சன்மானமும் தந்திட ரெடி! 30 நாள் அவகாசமெடுத்துக் கொண்டு அந்தப் பணியை செய்து முடிக்க உங்களுள் யாருக்கேனும் திறமையும், பொறுமையும் இருப்பின் கைதூக்கிடலாமே ப்ளீஸ்? சத்தியமாய் இதன் மொழிபெயர்ப்புக்குள் முங்குநீச்சலடிக்க எனக்கு சக்தியில்லை guys! பக்கம் பக்கமாய், பத்தி பத்தியாய் நீண்டு செல்லும் கட்டுரைப் பக்கங்களை ஒரு ஆய்வாளன் போல அணுகிடும் வயதையெல்லாம் நான் கடந்து விட்டேன் for sure! இதனை எவ்விதம் எடுத்துக் கொண்டாலும் சரி ; மறுக்கா எங்கெங்கோ வைத்துத் துவைத்துத் தொங்கப் போட்டாலும் சரி - யதார்த்தம் இதுவே!  So புலமையும், பொறுமையும் ஒருங்கே கொண்டுள்ள நண்பர்கள் முன்வரின் – அவர்களது சிரமங்களை acknowledge செய்திடும் விதமாய் சன்மானம் + இதழின் முதல் பக்கத்திலும் பெயரைக் குறிப்பிட நாங்கள் ரெடி! இனி பந்து முற்றிலுமாய் உங்கள் தரப்பில்! உங்கள் கைகளிலுள்ள மட்டைகளால் அதை லாவகமாக அடித்தனுப்ப முனைவீர்களா? அல்லது அந்த மட்டைகளைக் கொண்டே மறுக்கா என் மண்டையைக் குறி பார்ப்பீர்களா? என்பதெல்லாம் உங்கள் பாடு !

Before I sign off – பிரான்கோ – பெல்ஜிய காமிக்ஸ் உலகிலிருந்து கொஞ்சமாய் லேட்டஸ்ட் சேதிகள்! நமது இத்தாலிய சூப்பர் ஸ்டார் டெக்ஸ் – பிரெஞ்சிலும் (மறுபடியும்) கால் பதிக்கவிருக்கிறார் – ஒரு வண்ண கிராபிக் நாவல் சாகஸம் மூலமாக! வெகு சீக்கிரமே ‘Montana’ என்ற ஆல்பம் பெல்ஜியத்தில் வெளியாகவுள்ளது!
And அந்த ஒற்றைக்கை அடாவடிப் பார்ட்டி பௌன்சரின் இருபாகப் புது ஆல்பமும் ரிலீஸ் ஆகிறது! இதோ அவற்றின் அட்டைப்படங்கள்! ஹ்ம்ம்ம்ம்ம்...!


Bye all! See you around! Have a super duper week-end !

310 comments:

  1. இதுவரை வந்த கதைகள் அனைத்தையும் படித்து முடித்து விட்டேன்...படிக்காத புத்தகம் எப்போதும் என் கண் பார்வையில் இருக்கும்... அது இன்னும் படிக்கவில்லையா என்று கேட்பது போல் தோன்றும்...

    ReplyDelete
  2. டெக்ஸ் கதைகள் பொன்னியின் செல்வன் நாவல் போல்...எந்த காலத்திலும் பொன்னியின் செல்வத்தை படிக்கலாம்... மற்ற சரித்திர நாவல்களை அப்படி யாரும் படிப்பது இல்லை... சாண்டில்யன், ஜெகசிற்பியன, அகிலன், நா பா, இன்னும் பலர் இருக்கலாம்... ஆனால் இன்னும் கல்கியின் பொன்னியின் செல்வன் செல்வாக்கு இழக்கவில்லை என்பதை மீண்டும் தொடராக வந்து, இப்போது தான் முடிந்தது. இன்னும் 20வருடங்கள் கழித்து... மீண்டும் பொன்னியின் செல்வன் தொடராக வரும்...அப்போதும் மக்கள் படிப்பார்கள்... அதை போல்தான் டெக்ஸ் கதையும்...பிறருடன் ஒப்பிடக்கூடாது...

    ReplyDelete
    Replies
    1. தவறு நண்பரே! சாண்டில்யன் சரித்திர நாவல்கள் இன்றும் சக்கைப் போடு போடுகின்றன.
      அவரின் பல சரித்திர நாவல்கள் 30 பதிப்புகளைத் தாண்டியும் விட்டன.கல்கி யின் பொன்னியின் செல்வன் மட்டும் தான் பல பதிப்புகள் கண்டுள்ளன,அதுவும் அவர் நூல்கள் அரசுடமையாக்கப்பட்டதால்.ஆனாலும் பொ செ சிறந்த படைப்பு தான்.ஆனாலும் இன்றும் விற்பனையில் சாண்டில்யன் சரித்திர நாவல்கள் அதிகம் சாதனை படைத்து வ௫கின்றன.

      Delete
  3. // நண்பர்கள் யாரேனும் தயாரெனில் “புலன் விசாரணையை” நிஜமாக்கிடும் சாத்தியங்களை சீரியஸாகப் பரிசீலனை செய்திட நானும் தயார்! //

    நான் முயற்சி செய்ய விரும்புகிறேன்.

    கார்த்திக் சோமலிங்கா/செல்வம் அபிராமி @ இதனை முயற்சிக்கலாமே?

    ReplyDelete
    Replies
    1. அருமை காத்திருக்கிறேன்

      Delete
    2. நான் கூட முயற்சி செய்ய போகிறேன் பரணி.

      Delete
    3. வாழ்த்துகள் பரணி சார்...

      Delete
  4. நானும் வந்துட்டேன்

    ReplyDelete
  5. We need the polanvisarani
    ......try it sir ...pls welcome the translater for the same...eagarly watching and waiting....

    ReplyDelete
  6. Chk Bill 1st Cover looking awesome!!!

    ReplyDelete
  7. மும்மூர்த்திகள் கதைகளை எந்த காரணம் கொண்டும் நிறுத்த வேண்டாம்.

    1. பழைய வாசகர்களை மெதுவாக நம் பக்கம் மீண்டும் இழுக்க இது ஒரு தூண்டில்.

    2. எளிய வாசிப்பில் முதல் இடம்.

    3. இவர்களின் கதைகளை தேடி அலையும் நண்பர்கள் அதிகம். நாம் மறுபதிப்பு செய்வதால் நியாயமான விலையில் அவர்களுக்கு கிடைக்கிறது. இதனால் கருப்பு மார்கெட்டில் பழைய புத்தகங்களின் விலை/டிமாண்ட் குறைய வாய்ப்புகள் அதிகம்.

    ReplyDelete
    Replies
    1. மும்மூர்த்திகளின் சாகசங்கள் எல்லாம் எப்பதான் முடியுமோ தெரியல,சீக்கிரம் வந்தா ஒரு பெரிய வேலை முடியும்,.

      Delete
    2. மும்மூர்த்திகள் வேண்டும் வேண்டும் எப்போதும் வேண்டும்

      Delete
    3. ///மும்மூர்த்திகளின் சாகசங்கள் எல்லாம் எப்பதான் முடியுமோ தெரியல,சீக்கிரம் வந்தா ஒரு பெரிய வேலை முடியும்,.///+10000...

      நிஜமாவே சில கதைகள்லாம் முடியல, சத்தியமா முடியல... இந்தாண்டு மாதிரியே மிக மிக மின்மம் ஸ்லாட் போதும் சார்....

      Delete
    4. ///நிஜமாவே சில கதைகள்லாம் முடியல, சத்தியமா முடியல... இந்தாண்டு மாதிரியே மிக மிக மின்மம் ஸ்லாட் போதும் சார்....///

      விடுங்க சார். நமக்கொரு நல்ல காலம் பொறக்காமலா போய்டும்?

      Delete
  8. மிக,மிக முன்கூட்டிய பதிவு மகிழ்ச்சி.

    ReplyDelete
  9. சிக்பில் முதல் அட்டையின் கொ.காதலியும்
    இ.அட்டை வி.ஹீரோவும் கலக்கல் ரகம்

    ReplyDelete
  10. சிக்பில் கிளாசிக் முதல் அட்டை சும்மா தகதகன்னு மின்னுது.

    ReplyDelete
  11. உங்க உத்தரவுக்காக காத்திருந்தோம் இந்த வார்த்தை போதும் விரைவில் உங்களை வந்தடையும்

    ReplyDelete
  12. எல்லாம் எடிட்டர் செயல்

    ReplyDelete
  13. மாதந்தோறும் இதழ்களைத் தடவி, உச்சி மோர்ந்து ரசிப்பது; பக்கங்களைப் புரட்டுவது; ரொம்பவே பிடித்தமான நாயக / நாயகியரின் கதையாக இருப்பின் அதனை மட்டும் உடனே படித்து விடுவது; இதர வரவுகளை "அப்பாலிக்கா பார்த்துக்கலாம்" என்று பீரோவுக்குள் "பத்திரப்படுத்துவது என்பதை - நடைமுறையாகக் கொண்டிருக்கும் நண்பர்கள் சித்தே கையைத் தூக்குங்களேன் ப்ளீஸ்?"

    *உள்ளேன் ஐயா*

    ReplyDelete
  14. கரும்பு தின்ன கூலியா. ! வாவ் அருமை சார்....!

    ReplyDelete
  15. யாராவது சாத்தியமாக்கிவிட்டார்கள் என்றால் அந்த பரிசுத்தொகை நிச்சயம் கிடைத்திடுமா? (ஐயோ அவ்வளவும் எனக்குத்தானா...? தருமி எபெக்ட்)

    ReplyDelete
  16. எடிட்டர் சார்!

    கொலைகாரக் காதலி - அட்டைப் படம் ரொம்பவே அருமை!! கலர்ஃபுல்லாக கண்களைக் கட்டிப்போடுகிறது! மிக அருமையாக டிசைன் செய்திருக்கும் நம் DTP குழுவினர்க்கு நம் வாழ்த்துகள்!!

    ஆனால், ஒரே ஒரு விசயம் இடிப்பதைப் போல உணர்கிறேன் சார்! அதாவது, புத்தகத் திருவிழாக்களில் ( + நமது வீட்டிலும் கூட) வாண்டுகள் இந்த 'உம்மா' சங்கதியை அட்டைப்படமாகக் கொண்ட புத்தகத்தை கையிலெடுக்க முனையும்போது பெற்றவர்கள் கொஞ்சமாச்சும் பதறிப்போய்விடும் வாய்ப்பு உண்டுதானே சார்? என்னதான் கார்ட்டூன் என்றாலும் உம்மா - உம்மா தானே? எடுத்த எடுப்பிலேயே இந்தப் புத்தகம் கண்ணில்பட்டுவிட்டால் குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு அப்படியே நைஸாக ஸ்டாலை விட்டு நழுவிவிடும் வாய்ப்புகளும் துளியாவது உண்டுதானே?

    உங்களுக்கு தெரியாதது ஒன்னுமில்ல எடிட்டர் சார். ஏதோ தோணிச்சு! சொல்லிட்டேன்!

    ReplyDelete
    Replies
    1. அப்போ, உள்ளேயுள்ள விசயத்தை அட்டையில போட்டு உண்மையை உரக்கச் சொல்லும் நம் எடிட்டரின் வெளிப்படைத் தன்மையை மாத்திக்கச்சொல்றீங்களா? குழந்தைகளை வளர்க்கும் பெற்றோரை ஏமாற்ற சொல்றீங்களா??? (உங்களுக்கு தெரியாதது ஒன்னுமில்ல நண்பர் விஜய். ஏதோ தோணிச்சு! சொல்லிட்டேன்! )

      Delete
    2. @ பொடியன்

      அருமையான கேள்வி பாஸ்!

      உள் பக்கங்களில் கதையோட்டத்தோடு அதை காணநேரிட்டால், கதையில் தெறிக்கும் காமெடி - அந்த 'உம்மா' உணர்வை ஓரளவுக்கு மட்டுப்படுத்திவிடும் வாய்ப்புண்டு என்பதை நீங்களும் அறிவீர்களே நண்பா?! தவிர, உள்பக்கங்களில் ஓவியத்தின் அளவு சிறிதாக இருக்குமென்பதும் மற்றொரு காரணம்!

      நமது புத்தங்களை வாங்கவரும் பொதுஜனத்திற்கு அட்டைப்படம் பிரதான காரணியாக இருப்பதை நிறைய புத்தகத் திருவிழாக்களில் பார்த்திருக்கிறேன் நண்பா! :)

      Delete
    3. அது உண்மைதான்... யாரும் வந்து கச்சேரியை ஆரம்பிக்க முன் நாமே தொடங்கி முடித்திடலாமென்றுதான் பின்னூட்டம் அப்படி போட்டேன்...

      Delete
    4. @ Podiyan

      லேசா மிரள வச்சுட்டீங்களே பாஸ்? :D

      Delete
    5. சரியாய் கூறியுள்ளீர் EV, அட்டை படத்தை பார்த்ததும், "நம் பசங்க இதை பார்த்ததும் என்ன நினைப்பார்கள், என்ன கேட்பார்கள், நாம் என்ன சொல்லி சமாளிப்பது" என்று தான் என் மனதில் எண்ணங்கள் தோன்றியது...

      Delete
    6. ஒரு நல்ல அட்டை படத்த கெடுக்கறதே வேளையா போச்சு

      😘😘😘

      Delete
    7. நாம நினைச்சதை செயலரு சொல்லிட்டாரா...!?

      Delete
  17. அவ்வளவு தானே
    இரண்டு பேருடைய முகத்திற்கு நடுவில்
    ரோஜாப் பூ பிளீஸ்.

    ReplyDelete
    Replies
    1. ஈ.வி
      டீ வியில வர்ற மானாட மண்டையாட கூத்த விடவா இது ஆபாசம்

      Delete
    2. ////அவ்வளவு தானே
      இரண்டு பேருடைய முகத்திற்கு நடுவில்
      ரோஜாப் பூ பிளீஸ்.///

      :D :D ஹா ஹா ஹா!! :))))))

      Delete
  18. எடிட்டர் சார்

    அந்த பு வி யில அப்டி என்னதான் இருக்குன்னு நான் ஒரே கை பாக்கலாம்னு நெனக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. இன்னும் சொல்கிறேன்.
      "அழுதாலும் பிள்ளை அவள் தானே பெற வேண்டும்"
      வெட்கங்கெட்ட தாயே.

      Delete
    2. உங்களுக்கு ஒரு குணம் உண்டு.
      அதை நான் பல தடவை உங்கள் பதிவுகள் முலம் கண்டதுண்டு.

      எங்கள் மொழி பெயர்ப்புகள் எப்படி எற்படையதாக இருந்தாலும் "அவை இறுதிக்கட்ட பரிசீலனைகளுக்குட்பட்டவையே" என்று இன்னமும் சிறப்பாக எங்களுக்கு வழங்க முயல்பவர் நீங்கள்.
      இதில் உங்கள் அளவு உங்கள் திருக்குமாரரும் இருக்க வாய்ப்பே இல்லை.
      மேலும் எம் போன்றோருக்கு மொழி பெயர்த்தல் என்பது சிரமமன்று.
      ஆயினும் நும் போன்றோருக்கு மாத்திரம் எந்த இடத்தில் எதை,எப்படி,எவ்வகைப்படுத்தி,படிப்பவர் கோணத்தில் சீர்தூக்கி,உணர்ச்சிகளை மிகைக்க -குறைக்க ,வாசகர் வட்டத்தினை திரும்பி பார்த்து திகைத்து ரசிக்க வைக்க இயலும்.
      இத்துணை வருட உழைப்புமே அதற்கு அருஞ் சான்று.

      Delete
    3. உங்கள் கருத்து புரிந்து கொள்ள முடிகிறது ஜி. ஆனால் ஏற்கெனவே கடும் நேர நெருக்கடியில் எடிட்டர் சார் உள்ளதால் இது நல்ல ஏற்பாடாகவும் தெரிகிறது. நம்ம நண்பர்களின் திறமைகளைப் பார்த்து வாயடைத்த தருணங்களும் நிறைய உண்டு. எனவே மொழி பெயர்ப்பிலும் பட்டையை கிளப்புவார்கள் என நம்புகிறேன்.

      Delete
    4. j : கனிவான வார்த்தைகளுக்கு நன்றிகள் சார் ; இது பற்றி இப்போது தான் கீழே ஒரு நீ-ள-ப் பின்னூட்டமிட்டேன் ! Scroll down ப்ளீஸ் !

      Delete
    5. ஜனார்த்தனன் ஜி
      புலன் விசாரணையை ஒரு கை பார்க்க என் வாழ்த்துக்கள்

      Delete
  19. ////இதன் மொழிபெயர்ப்புக்கு மெனக்கெட நண்பர்கள் யாரேனும் தயாரெனில் “புலன் விசாரணையை” நிஜமாக்கிடும் சாத்தியங்களை சீரியஸாகப் பரிசீலனை செய்திட நானும் தயார்! And இத்தனை கடினப் பணியினை சும்மாக்காச்சு பண்ணச் சொல்லுவது நியாயமாகாது என்பதால் அதற்கென ரூ.10,000/- சன்மானமும் தந்திட ரெடி! ///

    சார்...

    ஆளுக்குக் கொஞ்சமா காசு போட்டு நாங்க உங்களுக்கு 20,000 ரூபாய் கொடுத்துடறோம், நீங்களே பண்ணிடுங்களேன் ப்ளீஸ்? :D

    ReplyDelete
    Replies
    1. அதானே நடக்கப்போவுது... எதுக்கு வீணா காசெல்லாம் கலெக்ட் பண்ணிக்கிட்டு.... வாய்குள் கட்டைவிரலை நுழைக்கிறவர் இப்போ ரெண்டு காலையுமே நுழைத்திடப்போறார்... அவ்வளவுதானே...

      Delete
    2. இது இன்னும் அருமை ஜி

      Delete
    3. நேற்றைக்குத் தான் நமது கருணையானந்தம் அவர்களும், நானும் பேசிக் கொண்டிருந்தோம்.....!

      மார்டினின் கதையினில் பணி செய்த கையோடு எனக்கு போன் செய்திருந்தார் - "தலை கிறு கிறுவென்று சுற்றாத குறை தான்' என்று சொல்லிட !! "இடையே ஒரு 20 பக்கங்களில் சுத்தமாய்த் தலையும், புரியலை, வாலும் புரியலை - அவற்றை என்ன செய்வதென்று கொஞ்சம் பார்த்துக்கோப்பா !!" என்று என்னை உஷார்படுத்தினார் ! இங்கே நானோ - லார்கோவோடு அடித்து வரும் பல்டிகள் வேறொரு ரகம் என்பதைப் பற்றி அவரிடம் என் பங்குக்குப் புலம்பி வைத்தேன் ! மதம் சார்ந்த தீவிரவாதம் ; வழக்கமான லார்கோ பாணி business இடியாப்பங்கள் ; கதை நெடுக விரவிக் கிடைக்கும் அடல்ட்ஸ் ஒன்லி சமாச்சாரங்கள் என டிசைன் டிசைனாய் சிரமங்கள் / சவால்கள் மேலோங்கிக் கிடக்கின்றன ! ஆனால் இவற்றைச் சமாளிப்பதில் ஒரு த்ரில் கலந்த சுவாரஸ்யம் இருப்பதால் - 'தம்' கட்டிக் கொண்டு அனுதினமும் அதனுள் புகுந்திட சாத்தியமாகிறது !

      ஆனால் பு.வி. கதையே வேறு !! இங்கே ஒரு கதையே லேது என்பது தான் சிக்கலே !

      ப்ளஸ் டூ வணிகவியல் பாடத்தை நினைவுபடுத்தும் விதத்தில் பத்தி பத்தியாய் ; பக்கம் பக்கமாய் அமெரிக்க ராணுவக் குறிப்புகள் ; அரசியல் நிலவரக் குறிப்புகள் ; XIII தொடரின் players பற்றிய குறிப்புகள் என்று பயணிக்கும் ஆல்பமிது ! 110 பக்க ஆல்பத்தில் காமிக்ஸ் பக்கங்களின் எண்ணிக்கை 33 & கட்டுரை பாணி 53 பக்கங்கள் ! அந்த 33 பக்கங்களை எழுதிடுவது குழந்தைப் புள்ளை மேட்டர் ; அந்த 53 தான் சிண்டைப் பிய்க்கச் செய்யும் விஷயம் ! மண்டையில் ஒட்டிக்கொண்டிருப்பதை புதையலைப் போல பத்திரப்படுத்தி - அடுத்த 10 வருஷங்களை ஒப்பேற்றத் திட்டமிட்டிருப்பதை ஒரு வழி பண்ணி விடுவீர்கள் போலுள்ளதே ?

      End of the day - செய்யும் பணியில் சிரமங்கள் எத்தனை இருப்பினும் அவற்றைக் கையாள ஆற்றல் கிட்டுவதே - வாசித்திடும் வேளையில் உங்கள் முகங்களில் மலரக்கூடிய புன்னகைகளையும், கிட்டக்கூடிய மானசீகக் கைத்தட்டல்களையும் எண்ணியே ! CINEBOOK ஆங்கில இதழ்களை வாசிக்கும் தருணங்களில் அதன் மொழிபெயர்ப்பாளரை நோக்கி பெரிதாயொரு நமஸ்காரம் வைக்கத் தோன்றும் - கதையினை அவர் எடுத்துச் செல்லும் வரிகளின் அழகினை ரசித்து ! தமிழில் மொழிபெயர்க்கும் வேளையிலும் அதே போலொரு கதை சொல்லும் லாவகம் வரிகளில் தென்பட வேண்டுமென்ற உத்வேகத்தில் தான் கிடந்து மல்லுக் கட்டுகிறோம் ஒவ்வொரு தொடரோடும் ! அந்த அவா மட்டும் இல்லாவிடின் "நிஜங்கள் நிசப்தம்" போன்ற களத்தையெல்லாம் தொட்டிருக்க முனைந்திருப்பேனா ?

      இங்கே இப்போது பு,வி.க்குத் தேவைப்படுவது ஒரு எழுத்தாளர் மாத்திரமே ; கதை சொல்லியல்ல !!

      எனது ஆர்வம் பின்னதில் தானே நண்பர்களே ?

      Delete
    4. And ஒரு எழுத்தாளனுக்கு அவசியப்படும் skill sets க்கும் ; ஒரு கதை சொல்லிக்கான skill sets க்கும் நிரம்பவே வேறுபாடு உண்டென்பது எனது எண்ணம் !

      Delete
    5. எழுத்தாளன், கதை சொல்லி ரொம்பவே வித்தியாசம் உண்டுதான் சார்... ஆனால், இன்னும் கொஞ்சம் யோசித்தால், கதைசொல்லி எழுத்தாளனாக ஆவதை விடவும், எழுத்தாளர் கதை சொல்ல முயல்வது கடினம் என்பேன்..!

      Delete
  20. சிக்பில் கிளாசிக் இரண்டாவது அட்டை சூப்பர்
    ஆர்ட்டினின் முகபாவம் அருமை அட்டையை பார்த்தாலே வாங்கத் தோன்றும்

    ReplyDelete
    Replies
    1. ஆர்டினை எப்படிப் பார்த்தாலும் ரசித்திட முடியும் !! பெல்ஜியத்து செந்தில் ஆச்சே !!

      Delete
  21. Add the bouncer in graphic sandha sir...

    ReplyDelete
  22. Dear Editor sir, for me entire May month is holiday. So I am ready to do it.

    ReplyDelete
    Replies
    1. மே மாதம் அச்சுக்குச் செல்ல வேண்டிய மாதம் நண்பரே !

      Delete
    2. அப்ப பு.வி. வருவது கன்ஃபார்ம்;

      குத்தாட்டம் போடுங்கய்யா பு.வி. காதலர்களா...!!!

      எதில் என்பது மட்டுமே சஸ்பென்ஸ்; என் கணிப்பு F&Fல் 2வது இதழாக; இரத்த படலத்தோடு ஈரோட்டில்,

      ஓய் கிளா & கணேஷ் சார்& சாமிநாதன் சார்& ஆல் அதர் ஃப்ரண்ட்ஸ்@ கன்கிராட்ஸ்.

      Delete
    3. பு வி வேணும்னு சண்ட போட்ட கு- கிளாஸ்-கிளான் வாழ்க வளர்க.

      Delete
  23. அடேங்கப்பா எவ்ளோஓஓஓஓஓஓஓ பெரிய்ய்ய்ய்ய் பதிவு....

    ரொம்ப நாளைக்குப் பிறகு ஆசிரியர் சார் நல்ல மூடில் இருந்திருப்பார் போல, அப்படியே பக்கம் பக்கமா விசயங்களை கொட்டித் தள்ளிட்டார்...

    மதிய தூக்கம் தெளிஞ்சி பரணியோட லிங் பார்த்து வந்தா மீண்டும் ஒரு மதிய விருந்து... சூப்பர்...

    ReplyDelete
    Replies
    1. தலைவரே

      டெக்ஸ் + பிரான்கோ பெல்ஜிய கூட்டணி பாா்த்தீங்களா?

      இனி டைகா் வேளைய டெக்ஸே செய்வாரோ??

      Delete
    2. ஆமா ஆமா ஆமாம் பாஸ்...

      ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும். வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும்.

      பிரான்கோ பெல்ஜியம்னா பெரிய மஸ்கோத்தா...???அங்கயும் டெக்ஸ் ஒரு கை பார்ப்பார்....

      Delete
    3. எனக்கு பொதுவாகவே இத்தாலிய கதைகளில் விருப்பம் இல்லை!!

      அது போலவே கருப்பு வெள்ளையிலும் விருப்பம் இல்லை!!

      இனி டெக்ஸை பிரெஞ்சுகாரா்களின்
      கை-வண்ணத்தில் எதிா்பாா்க்கலாம்!!

      Delete
    4. //இனி டெக்ஸை பிரெஞ்சுகாரா்களின் கை-வண்ணத்தில் எதிா்பாா்க்கலாம்!!//

      Nopes ! 'தல' இன்றைக்கும், என்றைக்கும் தனது பாஸ்போர்ட்டை மாற்றிடப் போவதில்லை ! So இத்தாலியில் துவங்கும் நதியானது பிரான்சு பக்கமாயும் ஓடவிருக்கிறதே தவிர, புதுசாய் அங்கொரு ஊற்றிலிருந்து துவங்கிடப் போவதில்லையே !

      Delete
    5. பூம்ராவோட ஏர்க்கரை கடன் வாங்கி வீசிட்டீங்களே ஆசிரியர் சார்....

      Delete
  24. // கடந்த 5+ ஆண்டுகளின் 200+ வெளியீடுகளில், maybe மறுபதிப்புகள் நீங்கலாக – பாக்கி அத்தனை வெளியீடுகளையும் வாசித்து விட்டுள்ள நண்பர்களின் எண்ணிக்கை எத்தனையாக இருக்குமென்பது அறிந்திட ரொம்பவே ஆவல் எனக்கு //

    இந்த 5 ஆண்டுகளில் மறுபதிப்பு கதைகள் முதற் கொண்டு அனைத்து கதைகளையும் படித்து விட்டேன். முழுவதும் படிக்காத கதை கடந்த வருட தீபாவளி மலரான டெக்ஸ்ஸின் தலைவன் சகாப்தம் இன்னும் முழுவதும் படித்து முடிக்கவில்லை :-)

    ReplyDelete
  25. கரும்பு தின்ன கூலியா. ! வாவ் அருமை சார்....!

    ReplyDelete
  26. இதுவரை வந்த கதைகள் அனைத்தையும் படித்து முடித்து விட்டேன்..ஏப்ரல் மாதத்து புத்தங்கங்களை உடனே அனுப்பி வைத்தால் அதையும் படித்து விடலாம்...

    ReplyDelete
    Replies
    1. உங்களை போன்ற நண்பர்களையெல்லாம் clone செய்திட முடிந்தால் அட்டகாசமாய் இருக்குமே !!!

      Delete
  27. வரமா பாரமா :-
    என்னைப் போன்ற காமிக்ஸ் என்றால் எதையும் படிப்பவர்களுக்கு variety வரமே.

    அதேநேரத்தில் variety குறைந்த வாசக வட்டத்தைக் கொண்ட மிகக் குறைந்த விற்பனை கொண்ட பதிப்பகத்தாருக்கு (உங்களுக்கு) இது பாரமே. நமது வாசகர்கள் வட்டம் அதிகரித்து விற்பனை அதிகரித்தால் உங்களுக்கும் இது வரமாகி விடும்.

    வரும் காலங்களில் விற்பனை மற்றும் வாசகர்கள் அதிகரிக்க varietyயை கொஞ்சம் குறைந்துவிட்டு விற்பனையில் சாதனை படைக்கும் நாயகர்களை மட்டும் கொண்டு சந்தா உருவாக்க வேண்டும்.

    அதே நேரத்தில் நமது ரசனைகளை அடுத்த இடத்திற்கு எடுத்துச் செல்லும் கதைகளை limited edition முறையில் தொடர்ந்து வெளியிட வேண்டும். இதில் கார்டூன் கதைகளையும் வேண்டும் என்றால் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் கார்டூன் கதைகள் மாதம் ஒன்று ஏதாவது ஒரு வகையில் எனக்கு வேண்டும்.

    மும்மூர்த்திகள் தொடர்ந்து வரவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. //மும்மூர்த்திகள் தொடர்ந்து வரவேண்டும்.//

      சந்தாவினில் இனியும் அவர்களை இணைத்துப் பயணிப்பது முதலுக்கே மோசமாக்கிடும் சார் ! இந்தாண்டின் சந்தா D தலைதப்பியதே லக்கி ; சிக் பில் ; ரோஜர் ; பிரின்ஸ் ; கேப்டன் டைகர் என்ற பெயர்கள் கண்ணில் தட்டுப்பட்டதால் தான் என்பதில் எனக்குத் துளியும் சந்தேகமில்லை !

      இவர்கள் புத்தக விழா விற்பனைகளுக்கே !

      Delete
    2. // இவர்கள் புத்தக விழா விற்பனைகளுக்கே !//
      நல்ல முடிவு சார்,வரவேற்கத்தக்கது.

      Delete
  28. விஜயன் சார்,

    // அப்புறம் ஏப்ரல் இதழ்களில் இன்னொரு சுவாரஸ்யமும் இருந்திடப் போகிறது! ஓலைப்பாயை ஈரமாக்கும் ரின்டின் கேனைப் போல என் ஓட்டைவாயைத் திறந்து மாமூலாய் அது பற்றியும் இப்போதைக்கு மொக்கை போடாது – ஏப்ரல் வரை பொறுமை காத்திட நினைக்கிறேன்! //

    இப்போதே வாய்திறந்து சொல்லி விடுங்களேன்... பதிவு இன்னும் சுவாரசியமாக அமையும். ஏப்ரல் வரை பொறுமை எல்லாம் இல்லை.

    ReplyDelete
    Replies
    1. Jumbo வை விட, F&Fக்கான நேரம் இது....

      இதுவரை அறிவிக்கப்பட்டு உள்ள 36இதழ்களில் மாதம்4ஆக தாக்கிக் கொண்டே இருந்தா செப்டம்பரோட காலி 4சந்தாவும்...

      இதழ்களின் எண்ணிக்கை ஈடுகட்ட F&F தவிர்க்கவே முடியாத தாகிடும்.

      மேலும் பு.வி.ம் F&Fல் அறிவிக்கப்பட வாய்ப்பு நிறையவே இருப்பதாக தெரிகிறது... ஒரே மாசத்தில் யாரும் மொழி பெயர்த்துட்டா மொத இதழாக கூட வரலோமன்னோ...!!!

      Delete
    2. //இதுவரை அறிவிக்கப்பட்டு உள்ள 36இதழ்களில் மாதம்4ஆக தாக்கிக் கொண்டே இருந்தா செப்டம்பரோட காலி 4சந்தாவும்..//

      இதுவரையிலும் இதை யாருமே கவனிக்காததே ஆச்சர்யம் தான் எனக்கு !!

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
  29. ///* ரயிலின் பின்பக்கத்திலிருந்து ஒரே ஜம்பாய் முன்பக்கத்துக்குப் போனால் – ‘இப்போ என்னாங்கறே?‘ என்றபடிக்கு ஒரு வாட்டசாட்டமான மஞ்சளசட்டையர் அமர்ந்திருப்பது தெரிகிறது! “நீ மூணாம் பிறை கமல் மாதிரிக் குட்டிக் கர்ணம் அடிச்சுக்கோ; நாலாம் பிறை பரத் மாதிரி மண்டையிலெ கொட்டிக்கோ – உன் பாடு! ஆனாக்கா இங்கே அலுங்காமல் நான் சவாரியைச் தொடர்வேனாக்கும்!“ என்று அவர் சொல்லாமல் சொல்வது புரிகிறது !///--- தோட்டா தலைநகரில் ஜிம்மி போடுவாரே அந்த பெளர்பான் விஸ்கி, அதை டபுளா போட்ட மாதிரி ஜிவ்னு இருக்க்கு... மறுக்கா மறுக்கா இந்த பாயிண்டை வாசிப்பதை நிருத்தவே முடியலை...

    ReplyDelete
    Replies
    1. எப்பூடி டெ வி
      மின்னும் மரணத்தில டைகர் ஓட்ற ரயில்ல பாஞ்சி,அந்த பயல எஞ்சின் பாய்லருக்குள்ள அடிச்சி துவைக்கிறப்போ போய் விழறது மாதிரி தானே!!!!!!😊

      Delete
    2. Hi..hi...
      சிலுக்கை பார்த்த, அதாவது கானலாய் ஒரு காதல்ல மின்னல் ஓளில பார்த்த டைகர் மாதிரினும் சொல்லலாம் J ji....

      Delete
  30. ////வருடங்கள் 33 ஓடியிருப்பினும், ஆல்பங்கள் எக்கச்சக்கமாய் களமிறங்கியிருப்பினும் – இந்த மஞ்சள் சட்டை மாவீரரிடம் மட்டும் இந்த வயது சார்ந்த சமாச்சாரங்களெல்லாம் ஓரமாய் ஒதுங்கி விடும் மர்மம் தான் என்னவோ ? 1985-ல் ரசித்தோம் ; '95-ல் ஆராதித்தோம் ; 2005-ல் கொண்டாடினோம் ; 2015-ல் ஆர்ப்பரித்தோம் ! இங்கு மட்டும் அந்த "வயது-ரசனை" என்ற equation செயலிழந்து விடுகிறதே?! சில கதைகளை வயது பாகுபாடின்றி ரசிக்க முடிவதும் ; சிலவற்றை "இது குழந்தைப்புள்ளை மேட்டர்" என்று ஒதுக்க முற்படுவதும் ஏனென்று any thoughts ? Maybe “வயது சார்ந்த ரசனைகள்“ என்பதெல்லாம் ஒரு பிரமை தானோ? அல்லது டெக்ஸ் மாத்திரம் இந்த ஒப்பீடுகளுக்கு அப்பால் நிற்கும் ஒரு எஃகுப் பிறவியோ?////.----

    சின்ன வயசில் எங்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை சார். எனவே நாங்கள் கார்டூன்களை நின்று நிதானித்து ரசித்து ருசித்து வந்தோம். இன்று பொறுப்பான(?) குடும்பத் தலைவர்களாக இருக்கையில் அந்த நிதானம் சற்றே காணாமல் போய் விடுகிறது போல. நிதானம் இழந்த ஒரு சில மனங்களால் கார்டூன்களோடு ஒன்றமுடியலயோ என்னவோ...!!!

    அதே டெக்ஸைப் பொறுத்து, பொறுப்பு அதிகரிக்க அதிகரிக்க விருப்பு இன்னும் கூடுகிறது. காலை எழுந்ததில் இருந்து இரவு கண்ணயறும் வரை ஏராளமான தடவை விதிமீறல்களையும், ஒழுங்கற்ற மாந்தர்களையும் பார்த்து பார்த்து கொதித்த மனது, யாரையாவது பொரட்டி எடுக்க துடிக்குது.

    தல "டெக்ஸ்" அப்படி சில்லுகளை சின்னா பின்ன படுத்தும் போது நாமே அன்று சந்தித்த அசட்டையானவர்களை, (உதாரணமாக சிக்னலில் யாரும் இல்லைனா, சிகப்பு இருந்தாலும் போய்யானு பின்னாடி இருந்து கதறும் ஆள்; நடைபாதையில் குறுக்கே டூ வீலரை நிறுத்திட்டு போகும் நபர்; எந்தவித விதிமுறைகளையும் மதிக்காம ட்ரைவிங் பண்றவங்க இப்படி.........முடிவே இல்லாம) முகரையை பெயர்க்கும் ஆத்ம திருப்தி கிட்டுகிறது. இதற்காகவே மறுபடி மறுபடி டெக்ஸ் கதைகளை படிக்க தூண்டுது. எனக்குள் எழும் உணர்ச்சி இதுவே. இது இன்னும் கூடத்தான் செய்யும் போல...

    ReplyDelete
    Replies
    1. //தல "டெக்ஸ்" அப்படி சில்லுகளை சின்னா பின்ன படுத்தும் போது நாமே அன்று சந்தித்த அசட்டையானவர்களை முகரையை பெயர்க்கும் ஆத்ம திருப்தி கிட்டுகிறது. இதற்காகவே மறுபடி மறுபடி டெக்ஸ் கதைகளை படிக்க தூண்டுது. எனக்குள் எழும் உணர்ச்சி இதுவே. இது இன்னும் கூடத்தான் செய்யும் போல...//

      +1

      நேற்றைக்கு சென்னையில் நிகழ்ந்துள்ள கல்லூரி மாணவியின் பரிதாபத்தைப் பார்க்கும் போது தெருவுக்கொரு டெக்ஸ் இருந்தால் தேவலையென்றே தோன்றுகிறது சார் !

      Delete
    2. ///தெருவுக்கொரு டெக்ஸ் இருந்தால் தேவலையென்றே தோன்றுகிறது சார் !////---உண்மை சார்...

      சின்ன பெண்களாக இருந்த குழந்தைகள் இன்று வளர்ந்து பெரிய பிள்ளைகளாக பார்க்கும் போதில், இப்படி அற்ப காரணங்களால் அந்த பெண் பிள்ளைகளை இழந்து நிற்போரை செய்தியில் பார்க்கும் போது அடிவயிறு கலங்குது....

      Delete
  31. புத்தகம் வந்தவுடன் நான் முதலில் வாசிப்பது "தல" டெக்ஸ் வில்லர் தான்.
    மற்றகதைகள் மெதுவாக அந்தமாதத்திலேயே வாசித்துவிடுவேன் .
    எப்படியும் 15 தேதிக்குள் வாசித்துவிடுவேன்.
    ஸ்மார்ப் , ரின்டின்கேன், மதியில்லா மந்திரி கண்டிப்பாக தொடுவதே கிடையாது .
    கார்டூனில் ஏல்லாவற்றையும் கழிவு ஊத்தும் நண்பர்கள் லக்கிலூக், சிக்பில் குழுவை ரசிப்பது கண்கூடான உண்மை.
    ஆகவே நல்ல கதைகளை கண்டிப்பாக வரவேற்போம் .

    ReplyDelete
    Replies
    1. அப்டியே உல்டாவா போட்டுக்கோங்க நண்பரே!!

      நான் முதலில் படிப்பது காா்ட்டூன் தான்!!

      2016 EBFல் வாங்கிய டெக்ஸ் கதைகளில் 14ல் 4 மட்டுமே படித்திருக்கிறேன்!!

      ஏனோ டெக்ஸ் கதைகள் (குறிப்பாக கருப்பு வெள்ளை) கதைகள் படிக்க ஆா்வம் இன்றி பத்திரமாக பீரோவில் நித்திரையில் உள்ளன!!

      என்ன செய்யலாம்!!??

      அப்புறம் மாடஸ்டியை நினைத்தாலே பயமாக இருக்கிறது?!!

      என்ன செய்யலாம்!!??

      எனக்கும் கூட மீசைக்கார மாமா அலுப்பைத் தான் உண்டாக்குகிறாா்!

      ஆனால் ரின்டின்கேனும், ஸ்மா்ப்ஸ்ம் எனது டாப் 5ல் இருக்கிறாா்கள்!!

      என்ன செய்யலாம்??

      அதுபோல கி.நா.விற்கும் தீவிர ரசிகனாக விட்டேன்!!

      என்ன தான் செய்ய முடியும் ரசனைகள் பலவிதம்!!

      Delete
    2. எனக்கொரு மகா சிந்தனை சார் !! அமெரிக்க சூப்பர்-ஹீரோ தொடர்களில் அங்கிருந்து இங்கும் ; இங்கிருந்து அங்கும் நாயகர்கள் ஜம்ப் பண்ணுவது வாடிக்கையே !

      BATMAN கதைகளில் SUPERMAN ......
      AVENGERS கதைகளில் HULK இத்யாதி..இத்யாதி என்று !!

      அதே பாணியில் நாமுமொரு முயற்சி செய்தால் எப்படியிருக்கும் ? டெக்ஸுடன் smurfs பயணிக்க ; டைகரும், ரின்டின் கேனும் பேச்சுவாக்கில் உள்ளே நுழைய ; கிளிப்டனும் ராபினும் கைகோர்க்க என்று !!! யாருமே குறை சொல்ல முடியாதல்லவா ?

      Delete
    3. ///டெக்ஸுடன் smurfs பயணிக்க ; டைகரும், ரின்டின் கேனும் பேச்சுவாக்கில் உள்ளே நுழைய ; கிளிப்டனும் ராபினும் கைகோர்க்க என்று !!!///

      இதுபோல மகாசிந்தனை எனக்கும் பலமுறை உண்டாயிருக்குங்க சாா்!!

      நீங்க பாத்து மனசு வெச்சீங்கன்னா??!!

      Delete
    4. இந்தக் கூட்டணிக் கலவைக்கான ஆற்றல் கொண்ட ஒரே நபர் நமது கோவைக் கவிஞர் தான் ! மூச்சே விடாது இங்கே தடதடப்பது ஒரு கணமெனில், மறு நொடியே வட துருவத்தை நோக்கி ஜம்ப் பண்ணி, அங்கேயும் ஒரு கால் மணி நேரம் சாதகம் செய்யும் ஜாலம் அவருக்கு மட்டுமே அத்துப்படி !

      Delete
  32. பௌன்சர்ல ஜடோரவ்ஸ்கி மிஸ்ஸிங் போல தெரியுதே.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சார் ; முன்னேவே ஏதோவொரு பதிவில் இதைக் குறிப்பிட்டது போல் ஞாபகமுள்ளது ! லார்கோவின் தொடரை ஓவியரே கையில் எடுத்துச் செல்வது போல பவுன்சரிலும் இப்போது கதை-சித்திரம் Boucq பொறுப்பில் மட்டுமே !

      Delete
  33. கார்ட்டூன் & மறுபதிப்பு கதைகளை தவிர மற்ற அனைத்து கதைகளையும் படித்து விடுகிறேன் சார். அதுவும் முதலில் எப்போதும் படிப்பது டெக்ஸ் வில்லர் கதைகளையே.டைகர், டெக்ஸ் கதைகளில் சொல்லப்படாத வன்மேற்கின் நிஜ முகத்தை பவுன்சர் கதைகளில் சொல்லப்பட்ட விதம். கொடூரமாக இருந்தாலும் இவன் வேற மாதிரி என்கிற மாதிரியான உணர்வை தந்தது.இதனாலே இவருடைய கதைகளை மனம் மீண்டும் தேடுகிறது. நமது லயனில் இவர் வர வாய்ப்பிருக்கா சார்???

    ReplyDelete
    Replies
    1. வாங்க கலீல். தொடர்ந்து பதிவிடுங்கள்.

      Delete
    2. //டெக்ஸ் கதைகளில் சொல்லப்படாத வன்மேற்கின் நிஜ முகத்தை பவுன்சர் கதைகளில் சொல்லப்பட்ட விதம். கொடூரமாக இருந்தாலும் இவன் வேற மாதிரி என்கிற மாதிரியான உணர்வை தந்தது.இதனாலே இவருடைய கதைகளை மனம் மீண்டும் தேடுகிறது.//
      +1

      Delete
    3. Parani from Bangalore
      நன்றி பரணி ஜி!
      இனி தொடரும் மாதங்களில் இது தொடரும்.

      Delete
    4. a. kaleel Ahamad : எனக்குமே பவுன்சரில் ஒரு ஈர்ப்பு உண்டு சார் !

      ஆனால் # 8 & 9 அநியாயத்துக்கு ஆபாசத்தோடே பயணித்த ஆல்பங்கள் என்பதால் அவற்றைத் தொடத் துணிவில்லாது போனது !

      இந்த புது ஆல்பங்கள் (# 10 & 11 ) இரு நாட்களுக்கு முன்னரே அங்கு ரிலீஸ் ஆகியுள்ளன ! இவை எவ்விதமுள்ளன என்பதைப் பரிசீலித்திட வேண்டும் ! தாக்குப் பிடிக்கும் எல்லைகளுக்குள் இவையிருக்கும் பட்சத்தில் நிச்சயமாய் நமது இதழ்களில் தலை காட்டாது போகாது !

      Delete
    5. நன்றி சார்
      பவுன்சர் வரவுக்காக. (திருப்திகரமாக இருக்குமென்றே எண்ணுகிறேன்)

      Delete
  34. Tex ரசனைக்கான enathu பதில்.டெக்ஸ் கதைகள் mgr Padam மாதிரி.எப்போதும் ரசிக்கலாம்.மற்றவை அப்படி அல்ல.

    ReplyDelete
  35. பீரோவில் பூட்டிவிட்டு பின்பு சமயம் வரும் போது படிக்க இருப்பவர்களில் நானும் ஒருவனே.

    காரணம் பல இருப்பினும் எனக்கு முதல் காரணம் இன்று எனது பொழுது போக்கிற்கு காமிக்ஸ் மட்டும் அல்லாது ஆங்கில நாடடகங்கள் என பல நுழைந்துவிட்டன.

    ஆகையால் டெக்ஸ் தவிர மற்ற கதைகள் படிக்க சற்று நாள் ஆகிறது ஆகையால் மற்றவர்கள் போல உடனே கருத்துக்கள் சொல்ல முடிவதில்லை.

    ஆனால் இதுவரை வந்த 90% கதைகள் படித்துவிட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. சார்...இன்றைய சூழலில் (காமிக்ஸ்) வாசிப்புக்கென இத்தனை அவகாசம் ஒதுக்க முடிவதே பெரிய விஷயம் ! குடும்பம் ; பணி..இதர பொழுதுபோக்குகள் என போட்டிக்கு heavyweights ஏகமாய் இருக்கும் போது - இந்த ஆர்வங்கள் தங்கினாலே மகிழ்ச்சி தான் !

      Delete
  36. ஆசிரியருக்கு,
    இப்போ வாசகர்களின் டிசைனிங் திறமைகளைக் காட்ட வாய்ப்புகள் வழங்குவதை கைவிட்டுட்டீங்களே சார்?

    ReplyDelete
    Replies
    1. பாவம் சார் அவர்கள் ....முட்டுச் சந்துக்களின் குத்தகை எங்களோடே போகட்டுமே ?

      மொழிபெயர்ப்பினில் அவ்வப்போது உதவிடும் நண்பர்களுக்கு கூட இப்போதெல்லாம் credit தருவதில்லை ; simply becos பணியின் தன்மையினை உணர அவகாசம் எடுத்துக் கொள்ளாதே அவற்றை ஓரம் கட்ட நிறையப் பேர் தயாராகி விடுகின்றனர் ! So வம்பு எதற்கு ? என்ற கதையாய் எல்லாவற்றையும் நாமே, நமக்குத் தெரிந்த மட்டுக்குச் செய்யப் பழகிக் கொள்ளுகிறோம் !

      Delete
  37. சார் அருமை . கொலைகாரக்காதலிய கிட் வரயும் போது விழுந்து , புரண்டு சிரித்தது நினைவில் .❤.இப புலன்விசாரனை வேண்டி பாடலாம்னு இருந்தேன்
    . வேலையில்லாம பன்னிட்டீங்க...

    ReplyDelete
    Replies
    1. கொலைப் படைக்கிணையாய் என் தேடல் ரேடாரில் இருந்த கொலைகாரக்காதலியின் அட்டை அசத்தல்...முதலட்டை அருமை . முன்னட்டயா இரண்டாம் அட்டய மாற்றினாலும் அழகு . புலன் விசாரணை தலையில்லா போராளி சைசுல வந்தா அட்டகாசமா ,வித்தியாசமா ஜொலிக்கும்...ப்ளீஸ்...ப்ளீஸ் சார்....தொடரும்

      Delete
    2. ஏதாச்சும் கோபம், வருத்தம் என்றிருந்தால் பேசித் தீர்த்துக் கொள்வோமே கவிஞரே ? நானே ஒரு காக்கா முட்டை கவிஞன் ; ஆனால் எனக்கே முடில...

      Delete
  38. //அதே பாணியில் நாமுமொரு முயற்சி செய்தால் எப்படியிருக்கும் ? //
    வித்தியாசமான கலவையாகவும் இருக்கும்,இருந்தாலும் பதம் தப்பினால் கஷ்டம்தான்,அப்படி சாகசத்தை யோசிக்கிறதே கஷ்டம்தான்,ஆனால் அதற்கு களம் வாகாய் அமைந்தால் செமையா இருக்கும்.

    ReplyDelete
  39. கூரியர் வருகிறதா என்று வாசலிலேயே தேவுடு காத்துக் கிடந்தது பீரோவிலே பூட்டி வைத்து பூச்சிகளுக்கு உணவாக்கவா?அட்டைப் பெட்டியை அழகாய்ப் பிரிக்கின்ற சோலியெல்லாம் அறவே கிடையாது.கையில் கிடைச்ச பிளேடை வைச்சி சர்ரக் சர்ரக் ..புத்தகங்களை கைப்பற்றி முதலில் படிப்பது..கார்ட்டூன் கதை இருந்தால் அதே...அப்புறம்தான் தலே .தளபதி எல்லாம்.அத்தனை புத்தகத்தையும் ஒரே மூச்சில் படித்துவிட்டு கி .நா இருந்தால் புரியும் வரை மறுபடி மறுபடி படி..கார்சனின் கடந்த காலம் எல்லாம் எத்தனை முறை மனப்பாடமாய்ப் படித்து கிடந்த காலங்கள் உண்டு .இன்றைக்கும் நமது காமிக்ஸ் தாகத்திற்கு இந்த நான்கு புத்தகங்கள் பற்றாது என்று கூறிக்கொள்கிறேன் யுவர் ஹானர்

    ReplyDelete
    Replies
    1. சங்கத்து நிதி நிலைமை கொஞ்சம் தேவலாம் என்றிருக்கும் போது உங்களுக்கு - உங்களை போலவே இருக்குமாறு ஒரு சிலை செய்து வைத்து விடுகிறேன் சார் !

      Delete
    2. உங்களுக்கு - உங்களை போலவே இருக்குமாறு ஒரு சிலை செய்து வைத்து விடுகிறேன் சார் !

      ######

      :-))))))

      Delete
  40. நீண்ட பதிவு ..சுவையான பதிவு முன்கூட்டியே...

    பிற செய்திகளுக்கு புகும் முன்னர் சிக்பில் அட்டைப்படம் இரண்டும் செம கலக்கலாக தோன்றுகிறது என்பது மறுக்க முடியா உண்மை எனினும் அந்த இரண்டாம் அட்டை கூடுதல் அழகு.முதல் அட்டை நமக்கு இன்னும் அழகாக படுமாறு இருப்பினும் புத்தக காட்சிகளில் கார்ட்டூனை தேடும் தமது புதல்வர்களுக்கு இந்த அட்டைப்படத்தை பார்த்து ஏதோ காதல் கதையோ என நினைத்து வாங்கி கொடுக்க மறுப்போர்களோ என்ற எண்ணம் தலைதூக்காமல் இல்லை.

    மற்றபடி ...


    அழகு...:-)

    ReplyDelete
  41. எனது கேள்வியானது- இது ஒருவித கார்ட்டூன் மீதான அலர்ஜியா ? அல்லது குறிப்பாய் இந்த நாயகர்கள் மீதான கடுப்ஸா...

    #####

    கார்ட்டூன் அலர்ஜி என்று சொல்ல முடியவில்லை சார் என்னை பொறுத்தவரை...காரணம் புதிதாய் அறிமுகமான பென்னியை காண மனம் கூதுகலமடைகிறதே லக்கி ,சிக்பில்லை போல...:-)

    ReplyDelete
    Replies
    1. நள்ளிரவுப் பின்னூட்டமா தலீவரே ?

      Delete
    2. இன்னும் அரை மணி நேரம் நள்ளிரவுக்கு உள்ளது சார்..ஆனாலும் உங்கள் முன்கூட்டிய வருகைகாகவும்..நண்பர்களின் கருத்துகளை காணவும் இன்றைய நள்ளிரவை ஒரு மணிநேரம் தள்ளி வைக்கிறேன்..:-)

      Delete
  42. மும்மூர்த்திகளின் மறுபதிப்பு பற்றி..

    என்னை பொறுத்தவரை இதன் நாயகர்கள் மீண்டும் மீண்டும் வருகை தருவதை விட ஒரே கதை மீண்டும் மீண்டும் வந்ததாலோ இவர்களின் ஆர்வத்தை தடை போட வைத்துள்ளதோ என தோன்றுகிறது.அதிக மறுபதிப்பு காணா இதழ்கள் உடனடி விற்பனையில் சாதித்துள்ளதை படித்த நினைவு. கண்டிப்பாக காமிக்ஸ் க்ளாசிக்ஸ் இதழில் வராத கதைகளாக மறுபதிப்பு அதிகம் இடம்பெறுமாயின் மீண்டும் சாதிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு.

    ReplyDelete
    Replies
    1. அழகாய் சொன்னீர் பரணீதரன்!

      Delete
    2. எனது கருத்தில் ஒத்த எண்ணம் கொண்ட தங்களுக்கு நன்றிகள் குணா சார்..:-)

      Delete
  43. வணக்கம் எடிட்டர் சார்!
    கார்ட்டூன்ளில் புதிய நாயகர்களை அறிமுகப்படுத்தலாம்!

    பழைய டெக்ஸ் கதைகளின் வீரியம் தற்போதைய டெக்ஸ் கதைகளில் ஒரு மாற்று குறைவு தான்!

    அடுத்த வருடத்திலே மும்மூர்த்திகளையும் கூர்மண்டையனையும் முழுமையாய் போட்டு முடித்து வையுங்கள்.. !

    அப்புறம்....
    எது அதிகம் விற்பனையாகிறதோ அதற்கு முக்கியத்துவம் கொடுங்கள்!

    பிரதிகள் கையில் கிட்டியவுடன் அனைத்தையும் வாசித்துவிடும் பழக்கம் உள்ளவன் நான்!

    நிறைகளை விட உள்ள குறைகளை சுட்டிக்காட்டுபவனே(குத்திக் காட்டுபவன் அல்ல)உண்மையான வாசகன்!!

    ஒரு பதிப்பகம் தொடர்ந்து வீறு நடை போட உண்மையான விமர்சனங்களே நிதர்சனங்கள்!!

    ReplyDelete
    Replies
    1. சார்...வாசகர்கள் வாசகர்களே ! அதில் உண்மையானவர்கள் ; போலியானவர்கள் என்ற பாகுபாடெல்லாம் நமக்கெதற்கு ?

      Delete
  44. திரு. எடிட்டர், ஜம்போ காமிக்ஸ் கிராபிக் நாவல் அறிவிப்பு எப்போது வரும். கிராபிக் நாவலில் 3 கொவ் பாய் கதையை சேர்த்து வெளியிடுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. கி.நா.வில் கௌ.பா.யா ?

      ஆஆவ்வ் !!

      Delete
  45. இதுவரை வந்த அனைத்து கதைகளையும் படித்து விட்டேன். ஆனால் ஒரு குறிப்பிட்ட கதைகள் மட்டும் மறு வாசிப்பிற்கு வரும். அவற்றுள் சில டெக்ஸ், டைகர், லக்கி, அனைத்து கார்ட்டூன் கதைகள், ஆர்ச்சி, இரட்டை வேட்டையர், சாகசத் தலைவி, ஜூனியர் லயன், லார்கோ, ஷெல்டன், லேடி எஸ், இன்னும் பல..

    கண்டிப்பாக veraity ஒரு வரம் சார்.

    இங்கே (மான்செஸ்டர்) இருக்கும் காமிக்ஸ் கடைகளுக்கு சென்றால் இன்னும் எத்தனை ஹீரோக்கள், கதைகள் நாம் இன்னும் தொடாமல் இருக்கிறோம் என நினைக்கும் போது மலைப்பாக இருக்கும். ஆனால் நம் சிறிய வாசக வட்டத்தை நினைத்து பெருமையாகவும் இருக்கும்.

    இன்னும் பல ஆண்டுகள் பல முயற்சிகளை நீங்கள் செய்ய வேண்டும். மூச்சு உள்ள வரை காமிக்ஸ் படிக்க வேண்டும்.

    Hats off to you, your team and our readers.

    As usual my request you to publish more cartoon stories sir...

    A BIG Thank you all...

    ReplyDelete
    Replies
    1. தொலைவிலிருக்கும் போது தான் நம்மூர் ஐட்டங்கள் இன்னமும் வசீகரமாய்த் தெரியும் சார் ! காராச்சேவு ; மைசூர்பாகு ; பரோட்டா என்பனவெல்லாம் எட்டத்தில் இருக்கும் சமயம் ஏற்படுத்தும் ஜலப் பிரவாகமே தனி தானே ? நமது காமிக்ஸும் அந்தப் பட்டியலில் !

      Delete
    2. ஆனால் நான் பாணாம்பட்டு கிராமத்தில் இருந்த போதும், சென்னையில் இருந்த போதும், ஹைதராபாத்தில் இருந்த போதும், இப்போது UK வில் இருக்கும் போதும் மாறாதது காமிக்ஸ் நேசம் மட்டுமே சார். என்ன ஒன்று புத்தக திருவிழா சந்திப்புகளையும் எனது segarippugalaiyum மிஸ் செய்கிறேன்...

      இங்கும் இதழ்கள் வருவதனால் பிழைப்பு ஓடிக் கொண்டிருக்கிறது...

      முதல் இரண்டு இடங்களில் இருந்த போது நமது பழைய இதழ்களின் தேடுதல் அதிகமாக இருந்தது... பின்பு அனைத்தும் கிடைத்ததும் (நிறைய முயற்சிகளுக்குப்பின்) ஆங்கில இதழ்களை சேகரிக்க ஆரம்பித்தேன்... அழகு தமிழில் படிக்கும் சுகம் ஆங்கிலத்தில் இல்லை சார்..

      வளர்க உங்கள் தொழில் (ஒரு சுய நலம்தான்). நன்றி சார்.

      Delete
  46. போன பதிவில் நாயகர்களை ரசனை படி பிரித்து இருந்தாலும் கண்டிப்பாக அனைத்து இதழ்களையும் வாங்கிவிடுவேன் என்பதோடு கண்டிப்பாக மும்மூர்த்தி மறுபதிப்புகள் வரை கண்டிப்பாக அந்த வாரமே படித்து விடுவேன் சார்..( வாரமே அதிகம் எனக்கு..)..படிக்காமல் பீரோவில் பூட்டி வைப்பது எல்லாம் இல்லை சார்...


    ஆ..ஆனால்...ஆனால்...

    பரணி காமிக்ஸ் வரலாற்றில் இதுவரை பாதிவரை படித்து ஒன்றும் புரியாமல் இன்னமும் அப்படியே பத்திரமாக வைத்திருக்கும் ஒரு இதழ்

    "நி " யில் ஆரம்பிக்கும் ஒரு "கி " இதழ் சார்..

    மன்னிக்க வேண்டுகிறேன்..:-(

    ReplyDelete
  47. // அப்புறம் ஏப்ரல் இதழ்களில் இன்னொரு சுவாரஸ்யமும் இருந்திடப் போகிறது! ஓலைப்பாயை ஈரமாக்கும் ரின்டின் கேனைப் போல என் ஓட்டைவாயைத் திறந்து மாமூலாய் அது பற்றியும் இப்போதைக்கு மொக்கை போடாது – ஏப்ரல் வரை பொறுமை காத்திட நினைக்கிறேன்!

    #####


    ஜம்போ....?!

    ReplyDelete
  48. கார்டூன் பற்றிய உங்களது கேள்விக்கு விடை தெரியவில்லை தான்.

    என்னை பொறுத்தவரை லக்கி மற்றும் கிட் ஆர்டின் ரசிக்க முடிந்த வரை மற்றவர்களை ரசிக்க முடியவில்லை .. காரணம் புரியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. எனக்குமே புரியாத புதிரே !!

      Delete
  49. ஆனால் துளியும் குழப்பமின்றிப் புலனாகும் விஷயமொன்றுள்ளது! அது தான் – “சேகரிப்பு“ என்ற பொழுதுபோக்கின் மீது குன்றி வரும் ஆர்வங்கள்! ஒட்டுமொத்தமாய் இது பொருந்துமோ - இல்லையோ ; ஒரு கணிசமான சதவிகிதத்துக்காவது இது தற்போது பொருந்தும் என்பதே எனது கணிப்பு

    #######


    உண்மை சார்...ஆரம்பத்தில் நமது இதழ்களை முழுமையாக சேகரிக்க விசாரிக்க..அலைய அத்துனை மெனக்கெட்டேன்.ஆனால் இப்பொழுது மாதாமாதம் தவறாமல் வந்து விடும் நமது இதழ்களால் பழைய இதழ்களை நாடி தேடி ஓடுவதும் இல்லை..விசாரிப்புகளும் இல்லை..தானாக கிடைக்கும் சமயம் வாங்குவது உண்டு அவ்வளவுதான்..:-)

    ReplyDelete
  50. பெளன்சர்...நமக்கு ஏற்றபடி கண்டிப்பாக கொண்டு வாருங்கள் சார்.!

    ReplyDelete
    Replies
    1. அது நம்மள் கி கை மேலே கிடையாதே தலீவர் ஜி ? படைப்பாளிகள் எவ்விதம் உருவாக்கியுள்ளனரோ - அவ்விதமே பவுன்சர் இருக்கப் போறான் ! அவனுக்கேற்ப நாம் தான் வளைந்து கொடுத்தாக வேண்டும் !

      Delete
    2. அப்டினாலும் பரவால சார் ..அட்ஜஸ்ட் பண்ணி படிச்சுகிறோம். அங்கே எப்படி வந்தாலும் இங்கே சரீயா கொடுத்துருவீங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.
      பெளன்சரின் வன்முறையிலும் ஒரு வசீகரம் ஈர்த்து விட்டதே சார்..என்ன செய்ய..?

      Delete
  51. எனது வேலையின் காாரணமாக நேரமின்மமையும் தமிழில் டைப் செய்ய கஸ்டமாக உள்ளதாளே இங்கு மெளன பார்வையளனாய் உள்ளேன் மற்றபடி எனக்கும் ஆதங்கமே இங்கு பதிவிட முடியாததர்கு....

    ReplyDelete
    Replies
    1. அட...இருக்கவே இருக்கு ஆங்கிலம் ?

      Delete
    2. தமிழே தள்ளாட்டம் எ.சார் இருந்தாலும் முயற்சி பன்ரேன் சார்

      Delete
  52. புலன் விசாரணைக்கு பத்தாயிரம் பொற்காசுகள் .

    ச்சே...இப்படின்னு தெரிஞ்சு இருந்தா அப்பவே இங்கிலீசு படிச்சு இருப்பேன்..

    வட போச்சே...:-(

    ReplyDelete
  53. //கடந்த 5+ ஆண்டுகளின் 200+ வெளியீடுகளில், maybe மறுபதிப்புகள் நீங்கலாக – பாக்கி அத்தனை வெளியீடுகளையும் வாசித்து விட்டுள்ள நண்பர்களின் எண்ணிக்கை எத்தனையாக இருக்குமென்பது அறிந்திட ரொம்பவே ஆவல் எனக்கு! //

    டியர் விஜயன் சார்...

    இதுவரையில் வந்துள்ள அத்தனை வெளியீடுகளையும் மறுபதிப்புகள் உட்பட படித்து விட்டேன் சார் ... ஆனால் அனைத்து புத்தகங்களையும் உடனே படிக்க நேரம் அமைவதில்லை (சில புத்தகங்கள் விதிவிலக்கு - தோர்கள், இரத்தகோட்டை, சர்வமும் நானே போன்றவை)

    புத்தக மீள்வாசிப்பு என்பது அவ்வப்பொழுது நடைபெறுகிறது :) அதில் டெக்ஸ், டைகர், தோர்கள், மந்திரியார், லுக்கிலுக், லார்கோ, மார்ட்டின் போன்றோருக்கே முன்னுரிமை. பெரும்பான்மை பகல் நேர இரயில் பயணங்களில் இவர்களே துணை.

    கார்ட்டூன் எனக்கு பிடித்து உள்ளது ... நிறைய நண்பர்களுக்கு கார்ட்டூன் பிடிக்கவில்லை என்பது ஆச்சரியமே ...

    திருப்பூர் ப்ளுபெர்ரி (எ) நாகராஜன்

    ReplyDelete
    Replies
    1. //நிறைய நண்பர்களுக்கு கார்ட்டூன் பிடிக்கவில்லை என்பது ஆச்சரியமே ...//

      ஆச்சர்யமூட்டும் நிஜம் சார் !

      Delete
  54. இந்த கண்ணு வேற அதுக்குள்ள மசமசங்கது...:-(

    ReplyDelete
    Replies
    1. செயலாளரை கஷாயம் போட்டுத் தரச் சொல்லிப் பாருங்களேன் ?

      Delete
    2. செயலரை மேலேஏஏ பாத்தது அப்புறமா ஆளை காணோம் சார்..-)

      Delete
  55. ஆனால் கண்டிப்பாக ஒன்று சார்..

    நமது உடலுடனே ஒட்டி விட்ட இந்த நவீன கைபேசி மட்டும் இல்லயெனில் கண்டிப்பாக நமது காமிக்ஸ் இதழ்கள் சில நண்பர்களால் பீரோவில் பூட்டி வைத்நிருக்க முடியாது..படித்த நண்பர்கள் மறுமறு வாசிப்புக்கும் மறுதலீக்க முடிந்திருக்காது..!

    ReplyDelete
  56. வணக்கம் நண்பர்களே... நீண்ட இடைவெளிக்கு பின்பு மறுபடி சந்திக்கின்றேன்... எனது பாட்டியின் திடீர் இறப்பு காரணமாக வீட்டில் PC மூடி வைக்க வேண்டிய கட்டாயம்... அதனால் இங்கு வர நேரமும் வசதியும் கிடைக்கவில்லை... விஜயன் சார் whats app group என்று சொன்னார்... அப்படி இருப்பின் முடிந்தால் என்னையும் அதில் சேர்த்து கொண்டால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்...
    My No- +94776237440

    ReplyDelete
  57. Dear sir, u r right. Nowadays I don't buy all issues every month, nor do I read all books I buy. Secondly cartoon stories now are not/do not seem to be funny as they were once. In my opinion u r good at reading our minds sir.

    ReplyDelete
  58. ஒவ்வொரு மாதமும் ...புத்தகங்கள் கைக்கு கிடைத்த..மூன்று அல்லது நான்கு நாட்களில் படித்துவிடுவேன்.காசு கொடுத்து வாங்கும் புத்தகத்தை...வாசிக்காமல் வெறுமனே வைத்திருப்பது...அந்த புத்தகத்திற்கு செய்யும் அவமரியாதை..! அந்த தவறை செய்யாமலிக்க..பிடிக்காத புத்தகங்களை வாங்காமலிருப்பதே உத்தமம்.

    அப்படி வாங்காமல் தவிர்த்ததில் ஒன்று நிஜங்களின் நிசப்தம்.நான் கி.நா.க்களை புறந்தள்ளுபவனுமல்ல.சென்ற வருடத்தின் அதகள ஹீரோ அண்டர்டேக்கரையும் மற்ற கி.நா.க்களையும் ரசித்துப்படித்தேன்.
    இந்த ....யுத்தம்..யுத்தம் சார்ந்த கி.நா.க்கள் ரொம்பவே நோகடித்துவிடுகின்றன.ஒ.சி.சு..., விண்ணில் ஒரு வேங்கை..பாதைகளும்..பயணங்களும்...போன்ற கதைகளெல்லாம்...முடியலை சாமி...!

    ஸ்மர்ஃப்ஸ்...ரின் டின் கேன்..கிளிப்டன்..ஸடீல் பாடி ஷெர்லக்...போன்றோர்களின் கதைகள் .கார்ட்டூன்களின் மீதே வெறுப்பை உண்டாக்கின.மந்திரியாரைப்பொறுத்தவரை...முன்பு பக்க நிரப்பிகளாக க/வெள்ளையில் வந்தாலும் ரசிக்க முடிந்தது.இப்போது தொகுப்புகளாக ஒரே டெம்ப்ளேட்டில் வாசிக்க லேசாய் சலிப்பு தட்டுகிறது.ஆனாலும் மந்திரியார் என் பிரியத்திற்குரியவரே.....!லக்கி...சிக்பில்..ப்ளூகோட்...எப்பவும் கலக்குவார்கள்

    ReplyDelete
  59. மும்மூர்த்திகளின் கதைகள் எதுவும் மோசமில்லை.காமிக்ஸ் க்ளாஸிக்ஸில் வந்த கதைகளே மீண்டும் மீண்டும் வருவது எரிச்சலை உண்டுபண்ணுகிறது.இதுவரை மறுபதிப்பாகாத கதைகள் வந்தால் சிறப்பாக இருக்கும்.

    ReplyDelete
  60. கார்டூன் புதுவருவுகளில் புளூ கோட் மட்டுமே எனக்கு பிடித்தவை மற்றவை சலிப்பையே தருகிறது..

    ReplyDelete
  61. வாசிப்பில் எப்போதும் முதலிடம் இரவுக்கழுகாருக்கே...!

    ReplyDelete
  62. அனைத்துக் கதைகளையும் ஒரு தடவை படித்து விடுவேன். டெக்ஸ், கார்ட்டூன், பிறகு மற்றவை என படித்து விடுகிறேன். சில சமயங்களில் படித்தவற்றையே மறுபடி படிக்கவும் நேரிடும். வாரத்தில் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் காத்திருப்பு அறைகளில் செலவளிப்பதால் வாசிப்பிற்கு காமிக்ஸைத்தான் எடுத்து செல்வது வழக்கம்.

    ReplyDelete
  63. I read all the stories on the same day i receive the book. Repeat reading are 1. All Captain Tiger.
    2. All Graphics novel.
    3. Some selective Cartoon.

    ReplyDelete
  64. வென்பனியில் செங்குருதி A class ரகம் .மிகவும் ரசித்து படித்தேன்.

    ReplyDelete
  65. செவ்விந்தியர் மற்றும் டெக்ஸ் அன். கோ கதைகள் ஏன் போடுவது இல்லை சார்?

    ReplyDelete
  66. அனைவருக்கும் என் இனிய இரவு வணக்கம்.

    ReplyDelete
  67. ஸ்மர்ப்ஸ் வே.வி வெற்றிகரமாக 10 நாளாக போய்க் கொண்டிருக்கிறது. முதல் 20 பக்கத்தை எங்க வீட்டு பொடியன் தாண்டவில்லை. தினமும் முதலில் இருந்து சொல்ல சொல்கிறான். ஸ்மர்ப்பி எங்கே என் கேட்டவனிடம் அவள் பாட்டி வீட்டுக்கு போய் விட்டாள் என்றால் பாட்டி ஸ்மர்ப்பா என புதிய ஸ்மர்ப்பை உருவாக்கி விட்டான் :-)

    ReplyDelete
    Replies
    1. க்க்கராவ் என்று தினமும் கத்த வேண்டியிருக்கிறது. சீனியர் அந்த பறவையின் இறக்கையை விங் சூப் செய்து சாப்பிட்டு விடுவேன் என சொல்வது அவனுக்கு செம காமெடி.

      Delete
  68. விஜயன் சார்!
    கார்ட்டூன் கதைகளை வெறுக்க காரணம்
    மொழி பெயர்ப்பு இயல்பாக இல்லாமல் தமிழ் சினிமா வசனங்களை ஸ்மர்ப்பும்,ரின்டின்கேனும் மற்ற கார்ட்டூன் கேரக்டர்களும் தற்போதைய கதைகளில் பேசுவதே!ப்ளூபெர்ரியை டைகர் என்றால் சரி!ஆனால் டைகரோ ஜிம்மியோ தற்போதைய தமிழ் சினிமாவை ஞாபமூட்டும் வசனங்களை பேசுவது நன்றாக இல்லை.தற்போதைய கார்ட்டூன்
    கதைகளில் இவை ரொம்பவே அதிகம்!

    ReplyDelete
  69. நான் இரத்த படலம் "புலன் விசாரணை" மொழி பெயர்க்க விரும்புகிறேன்.
    எனக்கு digital copy அனுப்பி னால் போதும். நான் print out எடுத்து கொள்வேன்.

    ReplyDelete
    Replies
    1. செம்ம
      கணேஷ் குமார்
      வாழ்த்துக்கள்

      Delete
    2. வாழ்த்துகள் திரு.... வந்து, உங்க பேர் என்ன..? மறந்து போச்சே..! ஓ மை காட்..! இந்த XIIIன்னாலே இப்படித்தானோ..?

      Jokes apart, வாழ்த்துகள் கணேஷ் குமார்..!

      Delete
    3. சூப்பர்... நல்லா பண்ணுங்க கணேஷ்...

      கணேஷ் மேல பந்தயம் ஒரு "இரும்புக் கை எத்தன்& இரத்த தடம்" 4 பாக செட்-1.

      Delete
  70. டெக்ஸ் வில்லரை எப்பொழுதுமே பிடித்திட எவ்வளவோ காரணங்கள் இருந்தாலும் அதில் ஒரு சில
    அஞ்சாமை
    ஆண்மை தவறேல்
    தவறிழைத்தோரை நையைப்புடைத்தல்
    கண்ணியம் தவறேல்
    அதிகாரவர்க்கமாகினும் அடங்காமை என சொல்லிக் கொண்டே போகலாம் எனக்கு மிகவும் பிடித்தது அந்த ஒற்றைக்கு ஒற்றை நிற்க்கும் தைரியமே அந்த அடி தடி ரணகளத்திலும் கிண்டலான சிரிப்பூட்டும் வசனங்கள் உதாரணம் ஒக்லஹோமா வில் அடாவடி வக்கீலை துவைக்கும் போது அலறல் கேட்டு வரும் அடியாட்களிடம் புல் தடுக்கி பீரோ மீது விழுந்து விட்டார் என கூறுமிடமும் டெக்சை அடிக்க போய் தவறுதலாக வக்கீலையே தாக்கிய அடியாளிடம் அவர் உன் வக்கீல் பீஸ் தகறாரோ என்று கேட்குமிடமும் இப்போது நினைத்தாலும் சிரிப்பு அடக்க முடியாமல் வரும் டெக்ஸ் ஒரு கமர்ஷியல் ஹீரோ என்பதால் என்றுமே கை தட்டி ரசிக்கத்தான் தோன்றுகிறது எப்போதுமே டெக்ஸைத்தான் முதலில் படிப்பேன் ரசிப்பேன்

    ReplyDelete
  71. மும்மூர்த்திகளை ஓரங்கட்ட நினைப்பது கஷ்டமாக உள்ளது ஆர்ச்சி வருவதற்க்குள் மறு பதிப்புகள் மலையேறிவிடும் போலிருக்கிறது

    ReplyDelete
  72. நான் மறு பதிப்புகள் கர்ட்டூன்கள் எல்லாவற்றையும் படித்து விடுவேன்
    இதில் சில கிராபிக் நாவல்களைத்தான் படிக்காமல் ஓரங்கட்டி வைத்திருக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. ((கர்ட்டூன்கள்)) கார்ட்டூன்கள்

      Delete
  73. /*
    பிரதானமாய் – தத்தம் எண்ணங்களை / நாயகத் தேர்வுகளை இங்கே பதிவிட்டுள்ள நண்பர்களின் எண்ணிக்கை மிகக் குறைச்சலே! So இதனை ஒரு முழுமையான அபிப்பிராய வெளிப்பாடாய்ப் பார்த்திடல் சிரமமே!
    */


    ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் சார். இங்குள்ள பெரும்பான்மையான வாசகர்களின் கருத்து consistentடா சில வகை கிராபிக் கதைகள், சில கார்ட்டூன் கதைகளுக்கு எதிராகவே உள்ளது. விற்பனை நிலவரமும் இதையே உணர்த்துவதாக உள்ளது.

    முதல் தோர்கல் இதழ் அவ்வளவாக சுகப்படாட்டாலும் பின்னர் வந்த இதழ்கள் என்னை ஒரு die hard தோர்கல் fan ஆக மாற்றிவிட்டன. ஆனால் எவ்ளோ முயற்சி எடுத்தாலும் சில கார்ட்டுன் கதைகள் சில பக்கங்களையே தாண்ட முடிய வில்லை. ஜூலியா மற்றும் லேடி Sம் இதே ரகமே.

    32 pages டெக்ஸ் இதழ்களே பல வாசகர்கள் முழு சந்தா இந்த வருடம் செலுத்தியதற்கு காரணமாக இருக்கலாம். அடுத்த வருடம் சோர்வடைந்து selective சந்தா எடுக்க வாய்ப்பு அதிகம். Time to move on Sir. தயவு கூர்ந்து கடந்த பதிவின் வாசகர் கருத்துக்களை அடுத்த வருட அட்டவணைக்கு consider பண்ண வேண்டுகிறேன். நன்றி.

    ReplyDelete
  74. 'புலன்விசாரணை' மொழிபெயர்ப்பு சர்ச்சை(!! ஹிஹி) குறித்து, நண்பர்களுக்கு:

    மொழிபெயர்ப்பில் பலப்பல ஆண்டுகள் புலமை பெற்றிருக்கும் நம் எடிட்டரோ, திரு.கருணையானந்தமோ கூட இதைக் கையிலெடுக்க தயங்குவதிலிருந்தே இந்த மொழிபெயர்ப்பின் கடினத் தன்மையை நண்பர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்! புலன்விசாரணையை மொழிபெயர்ப்பது கார்ட்டூன்களை மொ.பெ போல எளிதான காரியமல்ல!!

    *அமெரிக்காவின் வரலாறு, புவியியல், பொருளாதாரம், அரசியல் உள்ளிட்டவைகளை ஓரளவுக்காவது தெரிந்து வைத்திருக்க வேண்டும்!
    *இரத்தப் படலத்தின் முந்தைய பாகங்களின் கதை + கதை மாந்தர்களைப் பற்றிய தெளிவான புரிதல் வேண்டும்!
    * வெறுமனே மொழிபெயர்ப்பு மட்டுமன்றி, வாக்கியங்களை சுவையாக அமைத்திடும் கலை தெரிந்திருக்க வேண்டும் ( அதாவது, சுவாரஸ்யமான எழுத்துநடை)
    * ஒருமாத காலத்துக்குள் மொத்த மொழிபெயர்ப்பையும் முடிக்கும் அளவுக்கு உங்களுக்கு நேரம் கிடைக்க வேண்டும்!
    * ஒன்றிற்கும் மேற்பட்ட நண்பர்கள் மொழிபெயர்ப்புப் பணியை மேற்கொண்டால், தேர்வான மொழிபெயர்ப்புத் தவிர மற்றவர்கள் ஏமாற்றமடையாமல் இருக்கவேண்டும்! (உங்களது ஒருமாத உழைப்பு வீணாகிடும்போது அதை தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும்!)
    * உங்கள் மொழிபெயர்ப்பு தேர்வாகி, புத்தகமாக வெளியான பின்னேயும்கூட "என்னய்யா மொழிபெயர்த்திருக்காங்க., நாலு வரிகூட படிக்க முடியலை. இவங்களையெல்லாம் மொழிபெயர்க்கச் சொல்லி யாரு அழுதா? என் பணம் வேஸ்ட். இனி தமிழ் காமிக்ஸ் உருப்படாது" என்று கொட்டப்படும் வசவுகளை தாங்கிக்கொள்ளும் மனவுறுதி வேண்டும்!

    உங்கள் ஆர்வத்திற்கு தடைபோடும் நோக்கமல்ல இது, நண்பர்களே!! மிகமிக அழகாக மொழிபெயர்த்து வெற்றிக்கொடி நாட்டும் நண்பர்களும் நம்மிடையே உண்டுதான்!(அவர்கள் யாரென்பதும் நமக்கு தெரியும்). அந்தக் குறிப்பிட்ட நண்பர்களில் யாரேனும் இதை கையாளும்பட்சத்தில் - எல்லாம் சுகமே!

    அனுபவம் ஏதுமின்றி, வெறும் ஆர்வத்தினால் மட்டுமே கைகளை உயர்த்தும் நண்பர்கள் நான் மேற்கூறியவைகளை பலிசீலிப்பது நல்லது!

    பொதுமக்கள் நலன் கருதி வெளியிடுவோர்:
    ஈனா வினா
    ஈனா

    ReplyDelete
    Replies
    1. +11111
      யோசிக்க வேண்டிய கருத்து.

      Delete
    2. யோசிக்கும் படங்கள் பத்து...!

      Delete
  75. One more obligation....hard cover binding for pulanvisaranai...it is our golden product ...or add it with xiii set thank you sir

    ReplyDelete
  76. விஜயன் சார் அவர்களுக்கு, வணக்கம். நான் அருண்கமல் - சென்னைப் புத்தகவிழாவில் முதல் நாளிரவு சந்தித்தோம். நீங்கள் வாராவாரம் பதிவுகள் போடும்போது, மகிழ்ந்ததும், இடையில் தடை நேர்ந்தபோது வருந்திப், பின் மீண்டு வந்ததும் மகிழ்ந்து கொண்டாடிக்கொண்டதும் (மற்றவர்களுடன் சேர்த்து) அடியேனுமே..!

    கார்ட்டூன் பற்றிய உங்கள் கேள்விக்கு என் கருத்து...
    நான் குழந்தைப் பருவத்தில் இருந்தபோது, எல்லாப் படக்கதைகளும் பிடித்தன. பின்னர் ரசனைகள் சற்றே விரிவடைந்தபோது கார்ட்டூன் என்பதன் எல்லைகளும் மாறின. ஆனால், (ஓரு அவசிய முன் குறிப்பு: இது என் கருத்து மட்டுமே..!) வீட்டில் வாண்டுகள் வந்து கார்ட்டூன்களைவிடவும் லூட்டிகள் அடிக்கையில், ஷெரீஃப் டாக்புல் போலவே ரத்தம் மண்டைக்கேறிக் கத்தத் தொடங்க ஆரம்பித்துவிட்டோம். அதனாலோ என்னவோ, இப்போதைய குழந்தைகளின் பெருவிருப்பமான கார்ட்டூன் சேனல்கள் போலவே இருக்கும் கார்ட்டூன் கதைகள் ரசிக்கவில்லையோ ("எப்பப்பாரு என்ன கார்ட்டூன் சேனல்? அதுவும் அந்த மூஞ்சிகளும் ட்ராயிங்கும்... (மைன்ட் வாய்ஸ்: எங்க லயன் காமிக்ஸ்ல கார்ட்டூன் எவ்ளோ அழகா இருக்கும் தெரியுமா..?) என்று நம் வீட்டுக் குழந்தைகளைத் திட்டாதவர் யார்?) என்னவோ..? (நானெல்லாம் எல்லாத்துக்கும் ஓக்கே தான். ஆனா, இந்த மறு பதிப்புத்தான்...) இது ஒரு 'இப்படி இருக்கலாமோ?' ரக அலசல் தான்.

    அப்புறம், அந்த வயது சார்ந்த ரசனை ஈக்குவேஷன் விவகாரம்... எல்லாவற்றையுமே சரியாத்தான் சொன்னீங்க. ஆனால், விதி என்று ஒன்று உருவாகும்போதே, விதிவிலக்கு என்ற ஒன்றும் வரத்தான் செய்யும். இல்லையா சார்..? டெக்ஸும், இன்ன பிற கௌபாய் நாயகர்களும் அப்படியே..! மேலும் நம் பால்யங்களில் வந்த திரைப்படங்களில், நாயகனின் "அநீதி கண்டு பொங்கல், மற்றும் வில்லன்களைப் 'பொங்கல்' வைத்தல்" என்பதைக் கண்டு விசிலடித்துப் பார்த்து ரசித்தவர்கள் தாமே நாமும். அதனாலேயே நமக்குக் கௌபாய்கள் கூடவரும் தோழர்களாயும், கார்ட்டூன்கள் கூடைல போடவேண்டியவர்களாயும் - அங்கயும் நம்ம கௌபாய் சிக்பில் & கோ கெலிக்கிறாங்க சார் - மாறிப்போனது கண்கூடு..!

    கடைசியாக,

    புவியில் ஒரு தனியன் XIII-இன் பு.வி வருவதில் பெருமகிழ்வு..!

    ReplyDelete
  77. எடிட்டர் சார்...

    ஃபைனல் ரேட் 30,000 ரூபாய்! என்ன சொல்றீங்க? :D

    ReplyDelete
  78. I have read and enjoyed all books published since comeback special.
    There are good books and there are great books.Nothing else.No other category of lion comics.If story z not good, artwork is and if both are not good editors passionate translation is.
    Variety z not luxury but essential for me to enjoy even routine books.
    Regards
    Arvind

    ReplyDelete
  79. இன்றைய ஞாயிறு பதிவு இனிதான் வருமா செயலரே...?.

    ReplyDelete